ஸ்ரீ யதிராஜ விம்சதி – ஸ்லோகம்–14- -ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் ஸ்வாமிகள்/ஸூத்த சத்வம் ஸ்ரீ தொட்டாசார்யா ஸ்வாமிகள்–வியாக்யானம்–

ஸ்ரீ எறும்பியப்பா அருளிச் செய்த தனியன்

ய ஸ்துதிம் யதிபதி பிரசாதிதீம் வ்யாஜஹார யதிராஜ விம்சதிம்
தம் பிரபன்ன ஜன சாதகாம்புதம் தௌமி சௌம்ய வர யோகி புங்கவம் –

————-

இப்போதும் பய அனுதாபாதிகளும் அற்று பாபார்ஜனத்தின் நின்றும் மீளாதபடியை யுடையனாய்
சரீர நிவ்ருத்தியிலும் அபேக்ஷை இன்றிக்கே இருக்கவும் நம்மாலே தத் ஹேது வான பாபங்களைப் போக்கு என்றால்
போக்கப் போமோ –
ஆன பின்பு நீர் தாமே உம்முடைய ரக்ஷணத்துக்கு ஒரு வழி பார்க்க வேணும் காணும் என்ன –
தோஷமே வேஷமான எனக்கு தேவரீர் கிருபை ஒழிய வேறு கதி இல்லை-என்கிறார் மேல் இரண்டு ஸ்லோகத்தாலே –

அதில் முதல் ஸ்லோகத்திலே
சர்வஞ்ஞாரான ஸ்ரீ கூரத்தாழ்வான் ஸ்ரீ வரதராஜ ஸ்தவாதிகளிலே அருளிச் செய்த தோஷங்களுக்கு எல்லாம்
ஏக ஆஸ்ரயமான அடியேனுக்கு தேவரீர் கிருபை ஒழிய வேறே கதி இல்லை என்கிறார்

கீழ் அல்ப அபி என்று தொடங்கி-இவ்வளவும் வர –
தம்முடைய ஆகிஞ்சன்யத்தையும் -அபராத பூயஸ்தையையும் விண்ணப்பம் செய்து

மேல் இரண்டு ஸ்லோகங்களாலே-
தம்முடைய அநந்ய கதித்வத்தை விண்ணப்பம் செய்கிறார் –

அதில் இஸ் ஸ்லோகத்திலே –
இவர் அல்ப அபி -முதலாக இவ்வளவும் வர தம்முடைய தோஷ பூயஸ்வத்தை விண்ணப்பம் செய்தவாறே
நீரும் ஸ்ரீ ஆழ்வான் போல்வாரில் ஒருவர் என்ன
அங்கன் அன்று அடியேன் -மெய்யே நீசன் ஆகையாலே அடியேனுக்கு தேவரீர் கிருபை ஒழிய
மற்று ஒரு கதி இல்லை என்கிறார் –வாசா மகோசர மஹா -இத்யாதியாலே

வாசா மகோசர மஹா குண தேசி காக்ர்ய
கூராதி நாத கதிதாகில நைச்ய பாத்ரம்
ஏஷா அஹமேவ ந புநர் ஜகதீத் ருசஸ் தத்
ராமாநுஜார்ய கருணைவது மத கதிஸ் தே –14–

பரிசுத்தமான மனம் உடைய ஸ்ரீ ஆளவந்தார் ,கூரத் ஆழ்வான் , பட்டர் மூவராலும் சொல்ல பட்ட நீச தன்மைகளும்
இப் பூ மண்டலதிலே இன்றே என் இடத்தில் மிக்க விரிவாய் இருக்கிறது –
ஆகையால் யதிகட்க்கு இறைவனே உம் கிருபை தான் எனக்கு கதி..

வாசா மகோசர மஹா குண தேசி காக்ர்ய கூராதி நாத கதிதாகில நைச்ய பாத்ரம்
மொழியைக் கடக்கும் பெறும் புகழான் -என்கிறபடி இவ்வளவு என்று வாக்கால் பரிச்சேதிக்க ஒண்ணாத படி இருப்பதாய்
நிஸ் சீமமான ஞான சக்த்யாதி கல்யாண குணங்களை யுடையராய் –
தன் திறத்திலே தீரக் கழிய அபராதம் பண்ணின நாலூரானையும் ஸ்ரீ பெருமாளோடு ஒரு தலையாக மன்றாடி ரஷிக்கும்
பரம கிருபாவான் ஆகையால் -ஆச்சார்ய ஸ்ரேஷ்டராயும் உள்ள ஸ்ரீ கூரத்தாழ்வான் அருளிச் செய்த
அந்த நைச்யத்துக்கும் பாத்திரம் கீழ்ச் சொன்ன ஸ்வ பாவத்தை யுடைய நான் ஒருவனுமேயாய் இருக்கும்

வாசா மகோசர –
யதா வாசோ நிவர்த்தந்தே –என்றும் –
மொழியைக் கடக்கும் -என்கிறபடியே ப்ரஹ்மானந்தம் போலே வாக்காலே பரிச்சேதித்துச் சொல்ல அரியவைகளாய்

மஹா –
அப்ராப்ய மநஸா சஹா-என்றும் –
பெரும் புகழான் -என்கிறபடியே மனசாலும் பரிச்சேதித்து அறிய ஒண்ணாதவைகளாய் இருக்கிற

குண –
தயாதி குணங்களை உடையவராய் –
ஸ்ரீ உடையவர் காலத்திலே ஒரு நாள் வரையிலே ஸ்ரீ ஆழ்வானை கதளீ தளக்ருந்த நத்திலே நியமிக்க –
அவரும் அது செய்யப் புக்கு -ஆயுத ஸ்பர்சத்தாலே ஜலம் பொசியக் கண்டு மூர்ச்சித்தார் என்று பிரசித்தம் இறே –
இப்படியே யாயிற்று மற்றைய குணங்களும் இருப்பன

ப்ரஹ்ம குணம் போலே தத் ஆஸ்ரித குணங்களும் அபரிச்சின்னங்களோ என்ன -ஆம் அபரிச்சின்னங்களே
ச ஏகோ ப்ரஹ்மண ஆனந்த ஸ்ரோத்ரி யஸ்ய சாஹா மஹா தஸ்ய –தைத் -ஆனா -என்றும்
ஈறில் இன்பத்து இரு வெள்ளம் யான் மூழ்கினன் -3-6-8-என்று ப்ரஹ்மத்துக்கு உண்டான ஆனந்தம் நிஷ்காமனான
ஸ்ரோத்ரியனுக்கும் உண்டு என்று இறே வேத புருஷன் சொல்லி வைத்ததும் –

தேசி காக்ர்ய-
யோ வைதாம் ப்ரஹ்மணோ வேத அம்ருதே நாவ்ருதாம் புரீம் –என்றும் –
விண்ணை வாழ்த்துவர் -என்கிறபடியே
தாம் அத்தேச விசேஷத்தை அறிந்து அதன் வை லஷண்யத்தைப் பிறருக்கும் உபதேசிக்குமவர்களில் தலைவராய் இருக்கிற

இவருக்கு தேசிகரில் தலைமையாவது –
அர்வாஞ்சோ யத் பத சரசிஜ த்வந்த்வம் ஆஸ்ரித்ய பூர்வே மூர்த்த்னா -யஸ் யாந்வய முபகதா தேசிகா முக்தி மாபு
ஸோ அயம் ராமானுஜ முநிரபி ஸ்வீய முக்திம் கரஸ்தாம் யத் சம்பந்தாத மநுத கதம் வர்ண்யதே கூர நாத -என்கிறபடியே
ஸ்வ சம்பந்த மாத்ரத்தாலே பூர்வாபர குருத் தாரகரான ஸ்ரீ எம்பெருமானாரும் இவர் சம்பந்தம் கொண்டு பேறு
தப்பாது என்று அறுதி இடலாய் இருக்கை –

அன்றிக்கே
உடையவருக்கு ஸ்ரீ பாஷ்ய கரண சஹ காரித்வத்தால் வந்த தலைமை யாகவுமாம்-
சிஷ்ய ஆசார்ய லஷண சீமா பூமியாகையாலே வந்த தலைமை யாக வுமாம் – –

ஏஷா அஹமேவ ந புநர் ஜகதீத் ருசஸ் தத்–
ஆராய்ந்து பார்த்தால் இஜ்ஜகத்தில் இப்படிப்பட்ட தோஷத்தை யுடையவன் ஒருவனும் இல்லை

கூராதி நாத –
ஸ்வ அவதாரத்தாலே அவ்வூரை சநாதமாக்கி அதுவே தமக்கு நிரூபகமாம் படி இருக்கிற ஸ்ரீ கூரத் ஆழ்வானாலே

கதிதாகில -கதித அகில –
கதித -ஷோதீயா நபி -ஸ்ரீ ஸ்தவம் -5- இத்யாதி களாலே அருளிச் செய்யப் பட்டவை களாய் –
கதித -என்கையாலே
அவர் அருளிச் செய்தார் அத்தனை போக்கி அவர்க்கு இது இல்லை என்கிறது –
அகில -அவர் அருளிச் செய்ததில் ஓன்று குறையாத

நைச்ய பாத்ரம்
நீசதைக்கு கொள்கலன் -இங்கு நீசத்தை யாவது -அஹங்காரம் –
இது தான் தேஹாத்ம அபிமான ரூபமாயும்-
ஸ்வா தந்திர அபிமான ரூபமாயும் –
சேஷத்வ அபிமான ரூபமாயும் –
கர்த்ருத்வ அபிமான ரூபமாயும் -இருக்கையாலே -அகில -என்கிறது –

ஏஷா அஹமேவ-
இச்சரீர விசிஷ்ட அடியேன் -இந் நிர்தேசத்தாலே -ஸ்வ நைச்யத்தில் பூர்வ சரீர சமாப்தமாதல் –
உத்தர சரீர சமாப நீயமாதல் இல்லை என்கிறது

அஹமேவ
மற்று ஒருவர் இல்லை

ஏஷா அஹமேவ-
மாரீசன் மிருக வேஷத்தை தரித்தால் போலே சரணாகத வேஷத்தைத் தரித்த அடியேன் -என்கிறார்

ந புநர் ஜகதீத் ருச-
இப்படிக்கு ஒத்தவன் இஜ் ஜகத்திலே கிடையாத மாத்ரம் அன்றிக்கே –
சதுர் தச புவனங்களிலும் -அண்டாந்தரங்களிலும் கிடையாது என்கிறார் –
அவ்யயாநாம் அநேகார்த்த கதவம் ஆகையாலே -ஈத்ருச புன -என்று –
ஸ்வ சத்ருசனுடைய ஸ்வ இதர வ்யாவ்ருத்தியைச் சொல்லுகிறது –

அதாவது
தம்மைப் போலே பரி பூர்ண நைச்ய பாத்ரமும் அன்றிக்கே ஸ்வ இதரரைப் போலே அல்ப நைச்ய பாத்ரரும் அன்றிக்கே
கிஞ்சின் ந்யூநையான நைச்ய பாத்ரமுமாய் இருக்கை –
குணாதிகம் இறே உபமானம் ஆவது —
தத் பரிபூர்ண நைச்ய பாத்ரம் அடியேனான படியாலே அடியேனுக்கு புகலிடம் தேவரீருடைய கிருபையே என்கிறார் –

ராமாநுஜார்ய கருணைவது மத கதிஸ் தே –
தேவரின் கிருபைக்கு வயிறு நிறையும்படிக்கு ஈடான தோஷ பூர்த்தி எனக்கு உண்டாகையாலே
தேவரீர் கிருபையே எனக்குப் புகல்

ஆர்ய
இவ்விஷயம் தேவரீர் அறியாமல் அடியேன் விண்ணப்பம் செய்ய வேணுமோ
மோக்ஷ ஏக ஹேதுவான சாதுர்யத்தை யுடைய சதுர அஷரியான திருநாமம் போதாதோ

ந சேத் ராமாநுஜேத் அக்ஷரா சதுரா சதுர் அக்ஷரீ -என்னக் கடவது இறே –

ஸ் தத் ராமாநுஜார்ய கருணைவது மத கதிஸ் தே —
அடியேனொத்த பரிபூர்ண நைச்ய பாத்ரம் ஜகத்தில் கிடையாமையாலே தேவர் கிருபைக்கு புகுமிடம் அடியேன் என்கிறார்

ராமாநுஜார்ய –
ந கச்சின் ந அபராதயாதி என்னும் ஸ்ரீ பிராட்டியை அனுசரித்து திருவவதரித்து –
அடியேனுடைய நைச்சயம் அடியேனுடைய சொல் கொண்டு அறிய வேண்டாதபடி
ஸ்வதஸ் சர்வஜ்ஞ்ஞர் ஆனவரே என்று சம்போதிக்கிறார்
நீர் பரிபூர்ண நைச்ய பாத்ரமாகும் காட்டில் உமக்கு நம் கருணை புகலிடமாக வேண்டியது என் என்ன

ராமானுஜ
தம் திறத்தில் தீரக் கழிய அபராதங்களை செய்த ராஷசிகளை ஸ்ரீ திருவடி சித்ர வதம் பண்ண உத்யோகிக்க
அப்போது அவனோடு மறுதலைத்து-
கார்யம் கருணமார்யேண -என்று குற்றமே -பச்சையாக ரஷிக்கும் ஸ்ரீ பிராட்டியை அனுசரித்து அன்றோ
ஸ்ரீ தேவரீர் திரு வவதரித்தது என்கிறார் –

ஆர்ய
ஸ்ரீ தேவரீர் கிருபை பண்ணுகைக்கு போரும்படியான நைச்யதையை அறிக்கைக்கு ஈடான சர்வஜ்ஞதையை
ஸ்ரீ உடையவர் அன்றோ ஸ்ரீ தேவரீர் என்கிறார் –
இத்தால் ஸ்ரீ தேவரீர் கிருபை பண்ணுகைக்கு இவனுக்கு மேற்பட தண்ணியன் இல்லை என்னும் படியான விஷயம்
வேண்டி இருந்தாலும் அடியேனை கிருபை செய்து அருள வேணும் -என்கிறார் –
ஸ்ரீ தேவரீர் கிருபையைப் பார்த்தாலும் அடியேனை கிருபை செய்து அருள வேண்டும்

கருணை வது மத கதிஸ் தே –
தய நீரைக் கண்டால் தயை பண்ணி யல்லது தரிக்க மாட்டாத ம்ருது பிரக்ருதிகரான ஸ்ரீ தேவரீருடைய

கருணை வது
தய நீரை ஒழிய தனக்கு விஷயம் கிடையாத கிருபை தானே

மத் கதி –
தேவரீர் கிருபைக்கு போரும்படி குற்றங்களைச் செய்யும் அடியேனுக்கு புகலிடம் என்கிறார் –

தே கருணை வ –
ஸ்ரீ ஈஸ்வரன் கிருபை போலே ஸ்வா தந்தர்ய அபிபூதம் அன்றிக்கே தண்ணளி விஞ்சி இருக்கும் ஸ்ரீ தேவரீருடைய கிருபையே
அநந்ய கதிகனான அடியேனுக்கு உபாயம் என்கிறார் ஆகவுமாம்

மத் கதிஸ்து தே கருணை வ –
அடியேனுடைய சாதனம் -சாதா நாந்தர-விலஷணம் என்கிறார் –

கர்ம ஜ்ஞான பக்திகள்
அஹங்கார கர்ப்பங்களாய்-சேதன சாத்யங்களாய்
அபாய பாஹூளங்களாய் -விளம்ப பல பிரதங்களாய் -ஸ்வரூப விரோதிகளாயும் இருக்கும் –

பிரபத்தி –
நிரஹங்காரமாய்-ஸ்வதஸ் சித்தமாய் -அபாய கந்த ரஹிதமாய்-அவிளம்ப பல பிரதமுமாய் -ஸ்வரூப அனுரூபமுமாய்
இருந்ததே யாகிலும் ஈஸ்வர ஸ்வா தந்த்ர்ய கர்ப்பமாய் -பய ஜனகமாய் இருக்கும்

அடியேனுடைய உபாயம்
அஹங்கார கர்ப்பம் அன்றிக்கே ஈஸ்வர ஸ்வா தந்த்ர்யத்தாலே வரும் பயமும் இன்றிக்கே இருக்கும் –
அது யத் ரூபம் என்னில்

தே கருணை வ –
ஸ்ரீ ஈஸ்வர கருணையை உள் கொண்டு இருக்கும் ஸ்ரீ தேவரீருடைய கருணையே வடிவாய் இருக்கும் என்கிறார்
ஸ்ரீ ஆசார்யன் ஈஸ்வர பர தந்த்ரன் யாகிலும் ஸ்ரீ ஈஸ்வரனுக்கு அபிமத விஷயம் ஆகையாலும்
ஸ்ரீ ஆசார்ய கிருபை ஸ்வா தந்த்ர்ய பராஹதி கந்தம் இன்றிக்கே –
ஸ்ரீ ஈஸ்வர கருணா கர்ப்பமாய் இருக்கும் என்கிறது –

———————————————————————–———————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ ஸூத்த சத்வம் தொட்டாசார்யா ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: