ஸ்ரீ யதிராஜ விம்சதி – ஸ்லோகம்–13- -ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் ஸ்வாமிகள்/ஸூத்த சத்வம் ஸ்ரீ தொட்டாசார்யா ஸ்வாமிகள்–வியாக்யானம்–

ஸ்ரீ எறும்பியப்பா அருளிச் செய்த தனியன்

ய ஸ்துதிம் யதிபதி பிரசாதிதீம் வ்யாஜஹார யதிராஜ விம்சதிம்
தம் பிரபன்ன ஜன சாதகாம்புதம் தௌமி சௌம்ய வர யோகி புங்கவம் –

————–

இப்படி பாபார்ஜன பூமியாய் தத் பலமான துக்க அனுபவத்துக்கும் ஸ்தானமான சரீரத்தில் இருப்பைத் தவிர்த்துக் கொள்ள
மாட்டீரோ என்று ஸ்ரீ எம்பெருமானாருக்குத் திரு உள்ளமாக
என்னுடைய பாப அதிசயத்தாலே சரீர நிவ்ருத்தியில் அபேக்ஷை பிறக்கிறது இல்லை –
தாத்ருச பாவத்தை தேவரீர் தாமே சீக்கிரமாக போக்கி அருள வேணும் என்கிறார் –

இவர் -நார்ஹ -என்றவாறே என் தான் இப்படி கிலேசிப்பது -நீர் சம்சாரத்தில் வர்த்திதிலீரோ —
அதில் தாப த்ரயங்களால் வரும் துக்கங்களைக் கண்டு அருசி பிறவாதோ-
பிறந்தால் அது யோக்யதை யன்றோ என்ன –
அடியேனுக்கு இதில் வரும் துக்க அனுபவம் கண்டும் அருசி பிறவாமை மாத்ரம் இன்றிக்கே
மேன்மேலும் ருசி அபிவிருத்தமாகா நின்றது -என்கிறார் –தாபத்ரயீஜநி ததுக்க–இத்யாதியால் –

தாபத்ரயீ ஜநித துக்க நிபாதி நோ அபி
தே ஹஸ்தி தௌ மம ருசிஸ்து ந தந் நிவ்ருத்தௌ
ஏதஸ்ய காரண மஹோ மம பாப மேவ
நாத த்வமேவ ஹர தத் யதிராஜ சீக்ரம் –13-

ஆத்யாத்மிகம்,ஆதிதைவிகம் ,ஆதி பெளவ்திகம் மூன்றிலும் விழுந்தி வருந்தினாலும் எனக்கு சரீரம் இருப்பதிலே ஆசை
இதற்கு என் பாபமே காரணம் -என் நாதனே ஸ்ரீ யதி ராஜரே அந்த பாபத்தை விரைவில் போக்கி அருள வேணும்..

தாபத்ரயீ ஜநித துக்க நிபாதி நோ அபி–
இதிலே அனுபவிக்கிற துக்கம் தான் ஓன்று இரண்டாய் -அத்தைக் கழித்துக் கொள்ளாது ஒழிகிறதோ
கர்மம் ஏகவிதமாகில் இறே தத் பலமான துக்கமும் ஏக விதமாய் இருப்பது –
கர்ம அநு குணமாக அனுபாவ்யமான துக்கம் ஆத்யாத்மிகாதி ரூபேண த்ரிவிதமாய் இருக்கும்

இதில் ஆத்யாத்மிகம் தான் சாரீரம் என்றும் மாநசம் என்றும் இரண்டு வகையாய் இருக்கும்
சாரீரம் தான் ஜ்வராதி வியாதிகளால் அநேக விதமாய் இருக்கும் –
மாநசம் காம க்ரோதாதிகளால் வருகிற வியசனம்

ஆதி பௌதிகமாவது -மிருக பக்ஷியாதிகளால் வரும் வியசனம்

ஆதி தைவிகமாவது-சீதோஷ்ணாதிகளால் வரும் வியசனம்

இப்படி மூவகைப்பட்ட தாப சமூகங்களால் உண்டான துக்க சாகரத்தில் உத்தர உத்தரம் அவகாஹியா நிற்கச் செய்தேயும்
தே ஹஸ்தி தௌ மம ருசிஸ்து ந தந் நிவ்ருத்தௌ-
சர்வம் மா ஸூபம்-என்கிற லௌகிகர் படியும் கடந்து இருக்கிற தூக்காஸ்பதமான சரீரத்தைக் குறைவற
நோக்கிக் கொள்ளுகையிலே யாய்த்து இப்போது ருசி
து
லௌகிகர் படியில் தமக்கு உண்டான விசேஷம்

ந தந் நிவ்ருத்தௌ-
அந்த ருசி இதனுடைய நிவ்ருத்தியிலும் ஒருக்கால் உண்டாய்த்து ஆகில் இத்தை விடுவித்துக் கொள்ளலாய்த்துக் கிடீர்

தாபத்ரயீ-
ஆத்யாத்மிக ஆதி தைவிக ஆதி பௌதிக -பேதேன மூன்று வகைப் பட்டு இருந்துள்ள
தாபங்களுடைய த்ரயத்தாலே என்னுதல் –
சமூஹத்தாலே என்னுதல் ‘
இவைகள் தான் ஓர் ஒன்றே அநேக விதமாய் இருக்கும் இறே –

ஆத்யாத் மிகங்களாவன-தன்னிடத்திலே உண்டாமாவை -அவை யாவன –
அபேஷித அலாபத்தால் வரும் மான்ஸ வ்யாதிகளும் -ஜ்வராதிகளால் வரும் சரீர வ்யாதிகளும் –

ஆதி தைவிகங்கள் ஆவன -இவனை அறியாமல் தைவ யத்னத்தால் வரும் அசநிபாதாதிகள்

ஆதி பௌதிகங்கள் ஆவன சர்ப்ப தம்சாதிகளால் வரும் நலிவுகள் -இப்படி இருந்துள்ள தாப த்ரயத்தாலே

ஜநித-
உண்டாக்கப் பட்டு இருந்துள்ள -இத்தால்- காரண வைசித்ர்ர்யத்தோடு ஒக்கும் கார்ய வைசித்ர்யமும் என்கிறது

ஜனித -என்று –
பூதார்த்தே க்த பிரத்யயமாய் -அத்தால் துக்காம்சத்தில் ஜன்யமானமாதல் –
ஜ நிஷ்யமாணமாதல் இல்லை என்கிறது –
இத்தால் ருசி பிறவாமைக்கு சாமக்ரீவைகல்யம் சொல்ல ஒண்ணாது என்கிறது

அன்றிக்கே –
ஆதி கர்மணி -க்த -பிரத்யயமாய் ஜன்யமான என்னவுமாம் –
இத்தால் துக்கம் உண்டாய் கழிந்ததும் அன்றிக்கே உண்டாகப் போகிறதும் அன்றிக்கே இடைவிடாமல் உண்டாகிறது
ஆகையாலும் சாமக்ரீவைகல்யம் சொல்ல ஒண்ணாது என்கிறது –

துக்க நிபாதி நோ அபி –
இப்படி பஹூ விதமாய் இருந்துள்ள துக்கங்களில் அதின் கரை காணாமல் விழா நின்றேனே யாகிலும் –
இத்தால் துக்க அனுபவம் இல்லாமையை இட்டு அருசி பிறவாமையைச் சொல்ல ஒண்ணாது என்கிறது –

நி -என்கிற உப சர்க்கத்தாலே
ஸூக பிராந்த்யா வரும் துக்கம் அன்றிக்கே துக்கத் வேன வரும் துக்க அனுபவத்தைச் சொல்லுகிறது

அதில் வர்த்தமான நிர்த்தேசத்தாலே –
துக்கம் உண்டாய் கழிகிறது போலே அன்றாய்த்து -துக்க அனுபவம் உண்டாகிற படியும் என்கிறது

அன்றிக்கே –
துக்கம் போலே உண்டாய் கழிந்தது அன்றிக்கே துக்க அனுபவம் உண்டாகா நின்றது என்கிறது –

ஏதஸ்ய காரண
இதுக்கு காரணம் நான் பண்ணின பாபமே அன்றோ ஐயோ

ஏதஸ்ய காரண மஹோ மம பாப மேவ-நாத த்வமேவ ஹர தத் யதிராஜ சீக்ரம் –
நாத
இது அநாத வஸ்துவாய்த் தான் இங்கனம் எளிவரவு படுகிறதோ

மம-
தேஹமே ஆத்மா என்று இருக்கும் அடியேனுக்கு என்னுதல்-
துக்க அனுபவமே நிரூபகமான அடியேனுக்கு என்னுதல்

தேஹஸ்தி தௌ ருசி-
துக்க அனுபவ மூலமான தேஹத்தினுடைய இருப்பிலே கிடீர் ருசி உண்டாகிறது

மம -தேஹஸ்தி தௌ ருசி–
துக்க அனுபவ மூலம் என்று அறிந்தவதில் ருசி ஒருவருக்கும் பிறவாது -அடியேனுக்கு அங்கன் அன்றிக்கே
அதினுடைய சம்பந்தாதால் உண்டான துக்கங்களை அனுபவியா நிற்கச் செய்தேயும் அதில் ருசி உண்டாகிறது என்கிறார்

மம –ருசி–ஸ்து – தே ஹஸ்தி தௌ –
அநிவ்ருத்தமான பாதகத்தில் அருசி பிறவா விடிலும் உபேஷை யாகிலும் உண்டாகக் கூடும் இறே-
அடியேனுக்கு அங்கன் அன்றிக்கே பாதக சம்ரஷணத்தில் கிடீர் ருசி உண்டாகிறது என்கிறார் –

தந் நிவ்ருத்தௌ-
துக்க ஹேதுவான தேஹத்தினுடைய நிவ்ருத்தியில் ருசி உண்டாகிறது இல்லை -துக்க ஆரம்பகமான சரீரத்தில் அருசி
பிறக்கக் கூடும் இறே -அதுவும் இல்லை என்கிறார்-

துக்க நிபாதி நோ அபி மம ருசி ஸ் து தே ஹஸ்தி தௌ-
அடியேனுடைய ருசி லோக விலஷணை கிடீர் -மற்ற எல்லாருடையவும் ருசியானது துக்க ஹேது வாமதில் நின்றும்
நிவ்ருத்தை யாகா நிற்க அடியேனுடைய ருசியானது துக்க ஹேதுவாமதில் அபிவிருத்தமாகா நின்றது என்கிறார் –

மம ருசி ஸ் து தே ஹஸ்தி தௌ –
தேஹாத்ம அபிமானியான அடியேனுடைய சம்பந்தி நியாய இதர விஜாதீயையான ருசி தேஹத்தினுடைய
இருப்பிலே உண்டாகா நின்றது என்கிறார்
ஸ்வ விஷயத்தில் அருசி ஒருவருக்கும் உண்டாகாது என்று கருத்து –

இப்படி பாதகமான சரீரத்தில் அருசி பிறவாமைக்கு அடி என் என்ன
ஏதஸ்ய காரண மஹோ மம பாப மேவ –
இவ்விரண்டுக்கும் அடி அடியேனுடைய பண்ணி வைத்த பாபம் என்கிறார்
ஏவம் சம் ஸ்ருதி சக்ரஸ்தே ப்ராம்யமாணே ஸ்வ கர்மபி ஜீவே துக்காகுலே

மம பாபம்
பிறர் பண்ணினதன்று

பாபமேவ
கர்மம் அடியான பகவத் சங்கல்பம் இறே சம்சார பிரவர்த்தகம் –
அங்கன் அன்றிக்கே கேவல கர்மமாய்த்து சம்சார பிரவர்த்தகம் என்கிறது
பரம தயாளுவான ஈஸ்வரன் பரம துக்க ஜனகமான சரீரத்தில் ருசி பிறக்கும் படி பண்ணுவனோ -என்கிறார்
அன்றிக்கே –
யதிவா ராவண ஸ்வயம் -என்றவன் பிரதிகூல்யர் பக்கல் ஆபி முக்யம் கொண்டு ரஷிக்கையில் க்ருத சங்கல்பனாய் இருக்க –
ந நமேயம் -என்னும் படி இறே என் பாபம் இருப்பது என்னவுமாம்

அஹோ –
ஸ்வ தோஷத்தினுடைய பலாதிக்யத்தைக் கண்டு அஹோ என்று ஆச்சர்யப் படுகிறார் ஆதல் –
துக்கப் படுகிறார் ஆதல்
நீர் இப்படி ஆச்சர்யப் படுவது -துக்கப் படுவதாக நின்றீர் ஆகில் உம்முடைய பாப நிவ்ருத்திக்கு யத்நிப்பாரா என்ன

நாத த்வமேவ ஹர தத் –
இத்தலையில் இழவு பேறுகள் தன்னதாம்படியான சம்பந்தமுடைய தேவரீரே
அப்பாபத்தைப் போக்கி அருள வேணும் என்கிறார்

நாத
ஆருடைமை அழிகிறது -ஆருடைமைக்கு ஆர் பிரார்த்திக்கிறது என்னவுமாம் –

த்வம்
பாபத்தை போக்கும் விரகு அறியும் தேவரீர்

த்வமேவ –
அடியேன் அறியில் தவிர்த்துக் கொள்ளுவேன்
ஆகையாலே அடியேன் அறியாமல் தேவரீரே போக்கி யருள வேணும் என்கிறார்

த்வமேவ
த்யஜ -வ்ரஜ -என்னும் தேவை இடாதே –
பவேயம் சரணம் ஹி வா -ஸூந்தர -58-56-என்னுமவள் கோடியிலே யான தேவரீரே என்றுமாம் –

நாத த்வமேவ ஹர தத் –
எதிர் தலையிலே ஒரு பச்சை இன்றிக்கே தேவரீர் அறிந்த சம்பந்தமே ஹேதுவாக ரஷிக்கும் தேவரீரே என்னவுமாம்

த்வமேவ ஹரதத்
தேவரீரை அகலுகைக்கு அடியான தேஹத்தில் ருசியை உண்டாக்கும் போது அடியேன் பாபமே
அசாதாராண காரணம் ஆகிறாப் போலே
அத்தைப் போக்கும் போது தேவரீரே யாக வேணும் என்னுமாம்

த்வமேவ
சமிதை பாதி சாவித்திரி பாதி போலே அடியேனும் தேவரீரும் யாகாமல் நிரபேஷரான தேவரீரே என்னவுமாம்

தத் –
மமைவ துஷ்க்ருதம் கிஞ்சித் மஹதஸ்தி ந சம்சய -ஸூந்தர -38-47–என்கிறபடியே பிரதமம் அல்பத் வேன ஜ்ஞாதமாய்
பல அனுபவ தசையில் பஹூத மத்வேன ஜ்ஞாதமான பாபத்தை என்னவுமாம் –
இப்படி இவர் விண்ணப்பம் செய்தவாறே ப்ராப்தி உண்டாகிலும் பாப நிவ்ருத்திக்கு சக்தர் அன்றோ வேண்டுவது என்ன

த்வமேவ ஹர தத் யதிராஜ சீக்ரம்
இஸ் சம்பந்தத்தைப் பார்த்து சர்வத்தையும் ஸூபமாக விரும்புகிற இவன் மென்மேலும் அனர்த்தத்தை விளைத்துக் கொள்ளும்
என்று சடக்கென அந்த பாபத்தை போக்கி அருள வேணும் -என்கிறார் –

யதிராஜ-
பாப நிவர்த்தந சக்தி யன்றோ தேவரீருக்கு ஔஜ்ஜ்வல்ய கரம் என்கிறார் –
அன்றிக்கே
இப்படி இவர் விண்ணப்பம் செய்த வாறே இவருடைய பாப நிவ்ருத்தியிலே யத்நித்தமை தோற்ற இருக்கும் இருப்பைக் கண்டு
இது வன்றோ தேவரீருக்கு பிரகாசகரம் என்கிறார் ஆகவுமாம் –

சீக்ரம் –
அத்தலையில் பிராப்தியையும் சக்தியையும் கண்டு சீக்ரம் -என்று ஸ்வீகரிக்கிறார்
அன்றிக்கே –
நின்றவா நில்லா நெஞ்சினை யுடையேன் -என்கிறபடியே தேஹாத்ம அபிமானியாய் தேஹத்தினுடைய இருப்பிலே
ருசி பிறக்கைக்கு அடியான பாபத்தை யுடைய அடியேனுக்கு
இவ்வாபி முக்யம் இருக்கும் காலத்திலேயே தேவரீர் இப்பாபத்தை போக்கி யருள வேணும் என்கிறார் –
இப்போது இவர் ஆபிமுக்யத்தை சொல்லுகிறது அவர் பண்ணும் ரஷணத்துக்கு ஹேதுவாக அன்று –
அது புருஷார்த்தமாகைக்காக -புருஷனாலே அர்த்திக்கப் படுமது இறே புருஷார்த்தம் –

யதிராஜ சீக்ரம்
அத்தலையில் வைராக்யத்தால் வந்த புகரைக் கண்டு அது தமக்கு உண்டாக வேணும் என்று பதறுகிறார் ஆகவுமாம்
ஆசாரே ஸ் தாபயத்யபி -என்கிறபடியே சிஷ்யனை தன் தலையிலே நிறுத்துகையும் ஆசார்ய க்ருத்யம் இறே –
மோஷமும் பரம சாம்யா பத்தி இறே

சீக்ரம் ஹர -என்று
பாப நிவ்ருத்தி பிரார்த்தனை யன்றோ சாப்தமாகத் தோற்றுகிறது-ஸ்வரூப பிராப்தி யன்றே என்னில் –
1-அது அப்படி யாகிலும் -தேஹத்தில் ருசி ஜனகமான பாபம் கழியவே தேஹத்தில் ருசி கழியும்
2-அது கழியவே ருசி நிர்விஷயமாய் இராமையாலே -ஆத்ம விஷயத்தில் ருசி உண்டாம் –
3-அது உண்டானவாறே ஸ்வரூப அநுரூப சித்த உபாய ஸ்வீகாரம் உண்டாம்
4-அத்தாலே ஸ்வரூபம் நிறம் பெரும் –
5-ஆகையாலே விரோதி நிவ்ருத்தியை பிரார்த்தித்த போதே
தன்னடையே ஸ்வரூப ஆவிர்பாவம் பிரார்த்தித்ததாய் விடும் –

———————————————————————–———————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ ஸூத்த சத்வம் தொட்டாசார்யா ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: