ஸ்ரீ யதிராஜ விம்சதி – ஸ்லோகம்–10- -ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் ஸ்வாமிகள்/ஸூத்த சத்வம் ஸ்ரீ தொட்டாசார்யா ஸ்வாமிகள்–வியாக்யானம்–

ஸ்ரீ எறும்பியப்பா அருளிச் செய்த தனியன்

ய ஸ்துதிம் யதிபதி பிரசாதிதீம் வ்யாஜஹார யதிராஜ விம்சதிம்
தம் பிரபன்ன ஜன சாதகாம்புதம் தௌமி சௌம்ய வர யோகி புங்கவம் –

————–

பகவத் பாகவத ஆச்சார்ய விஷயங்களை அநு வர்த்திகைக்கு உண்டான மநோ வாக் காய ரூப கரண த்ரயத்தையும் கொண்டு
அவ்விஷயங்களை பரிதவித்து -அதில் ஒரு பயமும் இன்றிக்கே விலக்ஷணர் நடுவில் அனுவர்த்தியாத மாத்திரம் அன்றிக்கே
அநவரதம் அபராதமே பண்ணிக் கொண்டு போருகையால் உண்டான வியஸன அதிசயத்தால் அருளிச் செய்கிறார் –

தேவரீர் சம்பந்திகளை வஞ்சிக்கும் மாத்ரம் அன்றிக்கே தேவரீர் தம்மையும் வஞ்சிக்கப் பெற்றேன் என்கிறார் –
ஹா ஹந்த ஹந்த-இத்யாதியால் –

ஹா ஹந்த ஹந்த மநஸா க்ரியயா ச வாசா
யோ அஹம் சராமி சததம் த்ரிவித அபசாரான்
ஸோஅஹம் தவா ப்ரியகர ப்ரியக்ருத் வதேவ
காலம் நயாமி யதிராஜ ததோஸ்மி மூர்க்க –10-

ஸ்ரீ யதி ராஜனே… ஆ ஆ ஐயோ ஐயோ.. நான் மனத்தாலும் செய்கையாலும் சொல்லாலும் சர்வ காலத்திலும் மூன்று வித
அபசாரங்களையும் செய்து கொண்டு உமக்கு பிரியத்தை செய்பவன் போல நடித்திக் கொண்டு
கால ஷேபம் செய்து கொண்டு இருக்கிறேன் ..ஆகையால் நான் மூர்க்கன் .

ஹா ஹந்த ஹந்த மநஸா
பகவத் பாகவத ஆச்சார்யர்களை அனுசந்திக்கக் கண்ட மனஸ்ஸூ படும் பாடே

ஹா ஹந்த ஹந்த-
வீப்சையால் விஷாதிசயம் தோற்றுகிறது-
தாம் அத்தலையில் கரண த்ரயத்தாலும் பண்ணுகிற அபராதங்களையும் வஞ்சனைகளையும் பார்த்து –
அவற்றை விண்ணப்பம் செய்வதற்கு முன்பே துக்கம் இரட்டித்து ஐயோ என்கிறார் –
அபராதங்களைச் செய்வது உபகாரக விஷயத்திலே யாகையாலே பொறுக்க மாட்டிற்று இலர்

க்ரியயா
க்ரியா சப்தத்தால் க்ரியா ஹேதுவான காயத்தை லஷிக்கிறது –

ச வாசா
உத்தேஸ்யங்களைக் குறித்து அஞ்சலி பிரணாமாதி அனுகூல விருத்தி பண்ணுகைக்கும் –
தத் குணங்களைப் புகழுகைக்குமாகக் கண்ட காயமும் வாக்கும் அபராதங்கள் பண்ணி அநர்த்தப்படுவதுக்கு உறுப்பாவதே –

மநஸா க்ரியயா ச வாசா –
சகாரம் சமுச்சயார்த்தகம் -அது தானும் ஒரு கரணத்தால் அன்றிக்கே கரண த்ரயத்தாலும் செய்யப் பெற்றேன்

மநஸா க்ரியயா ச
பிரமாதிகமாக அன்றிக்கே சங்கல்ப பூர்வமாயிற்றுச் செய்வது

வாசா
நினைத்த போதே சொல்லில் அறிந்து பரிஹரிப்பார்கள் என்று நினைத்து செய்த பின்பாயிற்று சொல்லுவது

வாசா
அது தானும் கூட மாயோ -பிறர் அறிந்ததும் என் வாயாலே காணும்

மநஸா க்ரியயா ச வாசா –
வாசா யதீந்திர மநஸா வபுஷா ச யுஷ்மத் பாதாரவிந்த யுகளம் பஜதாம் -என்கிறதுக்கு
எதிர் தட்டாய் கிடீர் அடியேன் செய்து இருப்பது –

சததம் –
ஸ்வரூப அனுரூபமான விருத்தியில் அந்வயித்தவருக்கு கால விசேஷத்தில் விச்சேதம் வருகை
அஸஹ்யமானால் போலே யாய்த்து அந்த அபதார கரணத்திலும் கால விசேஷத்தால் உண்டான விச்சேதம் அஸஹ்யமான படி –

சராமி –
என்கிற வர்த்தமான நிர்த்தேசத்தாலே சர்வ அவஸ்தையிலும் அபராதம் அனுவர்த்திக்கிறபடி –

யோ அஹம் –
பாபிஷ்ட ஷத்ர பந்துச -என்கிறபடியே பாபம் செய்கையிலே பிரசித்தனான அடியேன் —
யோ வஜ்ர பாத -இத்யாதிகளாலே
ய சப்தம் பிரசித்த பராமர்சி இறே

யோ அஹம் –
இப்பிரசித்தியை இட்டு நிரூபிக்கும் படி காணும் அடியேன் இருப்பது

சராமி –
அனுதாபம் பிறந்து க்லேசிக்கிற தசையிலும் அபராதங்களை செய்கையை தவிருகிறிலேன்

சததம் –
தம்தாம் பிரசித்தியை ஒரு நாளும் கை விடார்கள் இறே –
அபராதங்கள் தான் எவை என்ன –

த்ரிவித அபசாரான்
ஓர் ஒரு விஷயத்தில் அபராதமே அதி க்ரூரமாய் இருக்க மூன்று அபராதங்களிலும் அந்வயித்த படி –
அது தான் கதி பய அபதாரத்திலே ஸூவறுகை அன்றிக்கே-நாநா வியாபாரங்களிலும் அந்வயித்த படியைப்
பற்ற பஹு பவன பிரயோகம் பண்ணுகிறது
அஹம் சர்வம் கரிஷ்யாமிக்கு எதிர் தட்டு இருக்கிறபடி

த்ரிவித அபசாரான்-
மூன்று வகைப் பட்டு இருந்துள்ள அபசாரங்களைக் காணும் அபராதங்கள் இருப்பது என்கிறார் –
அவை யாவன -அக்ருத்ய கரண க்ருத்ய அகரண -பகவத் அபசாரமும் -பாகவத அபசாரமும் -அசஹ்ய அபசாரமும் -என்று –

நிஷித்தங்களை நாலு விதமாகச் சொல்லா நிற்க இங்கு அபராதங்களை மாத்ரம் சொல்லுகிறது –
விதி நிஷேதங்கள் இரண்டும் பகவத் ஆஜ்ஞா ரூபங்கள் ஆகையாலே
தத் அதிக்கிரமம் பகவத் அபசாரத்திலே சேரும் என்னும் அபிப்ப்ராயத்தாலே யாதல்
அக்ருத்ய கரணாத்ய பேஷயா பகவத் அபசாராதிகள் க்ரூரங்கள் ஆகையாலே அவற்றினுடைய அனுஷ்டானத்தைச் சொன்ன போதே
தத் அனுஷ்டானம் கிம்புனர் நியாய சித்தம் இறே என்னும் அபிப்ராயத்தாலே யாதல் –

அங்கன் அன்றிக்கே
மனசேத்யாதிக்கு சேர கரண பேத நிபந்தனமான கார்ய பேதத்தை திரு உள்ளம் பற்றி த்ரிவித அபசாரம் என்கிறார் ஆகவுமாம்
அப்போதைக்கு ஒரொரு அபசாரங்களை கரண த்ரயத்தாலும் அனுஷ்டித்தேன் என்று பொருளாகக் கடவது-

ஸோஹம்
அபராத பண்ணின கையில் அராத இந்த பாபிஷ்டன்

ஸோஅஹம் –
கீழ்ச் சொன்னபடியே அபராதங்களைச் செய்யா விடில் சத்தை பெறாத அடியேன்

தவா ப்ரியகர
ஸ்வரூப அனுரூபமான விருத்தியிலே அன்வயித்து வாழ வேணும் என்று இதுக்கு கிருஷி
பண்ணிக் கொண்டு போகும் தேவரீருக்கு
பண்ணின கிருஷியைப் பாழாக்கி அநிஷ்ட கரனாய்ப் போருமவன்-

ப்ரியக்ருத் வதேவ
அர்த்த சித்தி இதுவாய் இருக்க -பகவத் பாகவத ஆச்சார்ய விஷயங்களில் இவன் அத்தனை
ப்ரேமம் உடையாரும் கைங்கர்ய ருசி உடையாரும் இல்லை -ஆன பின்பு இவனே நமக்குப் பிரிய கரன் -என்று
தேவரீரும் நினைக்கும்படி யாய்த்து வர்த்திப்பது –

தவ-
1-சத்யம் சத்யம் புனஸ் சத்யம் எதிராஜோ ஜகத் குருர் -ச ஏவ சர்வ பூதா நாம் உத்தர்த்தா நாஸ்தி சம்சய -என்கிறபடியே
சர்வ உத்தாரகரான தேவரீருக்கு என்னுதல்-

2-வ்யச நேஷூ மனுஷ்யாணாம் ப்ருசம் பவதி துக்கித –என்கிறபடியே
பர துக்கம் பொறுக்க மாட்டாத ம்ருது பிரக்ருதிகரான தேவரீருக்கு என்னுதல்

அப்ரியகர –
உபகாரத்தைப் பார்த்தாலும் -சௌகுமார்யத்தைப் பார்த்தாலும் பிரியமே செய்யத் தக்க விஷயத்தில் அப்ரியத்தைச் செய்யா நின்றேன் –
சிஷ்யன் ஆசார்யன் உகப்பிலே ஊன்றிப் போரும் என்கைக்கு எதிர்தட்டாய் யாயிற்று அடியேன் நிலை என்கிறார்

அப்ரியகர-
நெஞ்சாலும் அபிரியம் நினைக்க ஒண்ணாத விஷயத்தில் கிடீர் அடியேன் அபிரியத்தை காயிகமாகச் செய்வது என்கிறார்
ஆகில் நம் முன் நிற்கும் விரகு என் என்ன

ப்ரியக்ருத் வத் –
தேவரீர் திரு உள்ளம் அறிய தேவரீருக்கு அபிரியம் செய்தேனே யாகிலும் -அது தேவரீர் திரு உள்ளத்தில் தட்டாத படி
தேவரீர் திரு உள்ளத்தாலே பிரியம் செய்வான் போலே வர்த்தித்தேன் –
அது கொண்டு தேவரீர் திரு முன்பே நிற்கலாய்த்து என்கிறார் –
ராவணன் சந்நியாசி வேஷத்தைக் கொண்டு பிராட்டியை வஞ்சித்தால் போலே அடியேன் சாத்விக வேஷத்தைக் கொண்டு
தேவரீரையும் வஞ்சித்தேன் என்று கருத்து

ஏவம் காலம் நயாமி
இப்படி க்ரித்ருமமான பரிமாற்றத்தால் காலத்தைக் கழியா நின்றேன்

ஏவம் காலம் நயாமி –
இப்படி ஆசார்ய அபசாரம் பண்ணாது ஒழியில் அடியேனுக்கு காலம் செல்லாது என்கிறார்

கால மேவம் நயாமி
குணானுபவ கைங்கர்யங்களே போது போக்கு ஆகையும்-முமுஷுப்படி -என்கிறபடியே குணானுபவ கைங்கர்யங்களாலே
போக்கத் தக்க காலத்தைக் கிடீர் அடியேன் அவ் விஷயங்களை வஞ்சித்து அதுவே யாத்ரையாகப் போக்குகிறது என்கிறார் –

யதிராஜ ததோஸ்மி மூர்க்க
ரக்ஷண சாமர்த்தியமும் உடைய தேவரீரும் சன்னிஹிதராய் இருக்க இவ் வஸ்து அபராதத்திலே கை கழிகையாலே
என்னத்தனை மூர்க்கர் இல்லை என்கிறார் –

யதி ராஜ-
இவர் இப்படி விண்ணப்பம் செய்தவாறே இவர் செய்த அபராதங்களை தம் திரு உள்ளத்திலே தட்டாமல்
ஸ்வ அபராதங்களை அறிந்து அனுபவித்து பிராப்த விஷயத்தில் அவற்றை விண்ணப்பம் செய்யும் படி ஓர் அதிகாரியும் உண்டாவதே -என்று
இவர் திரு உள்ளம் உகந்து இருக்கும் படி இருக்கும் இருப்பைக் கண்டு -யதி ராஜ -என்று சம்போதிக்கிறார்-

அன்றிக்கே –
இவர் அனுதாபத்தைக் கண்டு இவர் இவ் வபசார கரணத்தில் நின்றும் மீண்டாராகும் விரகு ஏதோ வென்று
தம் திரு உள்ளத்தில் ஓடுகிற படி தோற்ற இருக்கும் இருப்பைக் கண்டு ஆஸ்ரித விஷயத்தில் உஜ்ஜீவன யத்னமே யன்றோ
தேவரீருக்கு புகர் என்று -ஸ்ரீ யதி ராஜ -சப்தத்தாலே சம்போதிக்கிறார் ஆகவுமாம் –

இப்படி சாநுதாபமாக ஸ்வ அபராதங்களை விண்ணப்பம் செய்த பின்பும் அபசாரங்களிலே அன்வயிக்கிற படியைக் கண்டு –
அபசாரங்கள் என்று அறிந்து வைத்து அவற்றில் அன்வயிக்கப் பெறுவதே என்று
ததோஸ்மி மூர்க்க —
ஆகாது என்று அறிந்து வைத்து அவை தன்னையே செய்கையால் இறே அடியேன் மூர்க்கன் ஆகிறது என்கிறார் –

————————————————————————–———————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ ஸூத்த சத்வம் தொட்டாசார்யா ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் . –

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: