ஸ்ரீ யதிராஜ விம்சதி –ஸ்லோகங்கள்–1-6 -ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் ஸ்வாமிகள் வியாக்யானம்–

ஸ்ரீ எறும்பியப்பா அருளிச் செய்த தனியன்

ய ஸ்துதிம் யதிபதி பிரசாதிதீம் வ்யாஜஹார யதிராஜ விம்சதிம்
தம் பிரபன்ன ஜன சாதகாம்புதம் தௌமி சௌம்ய வர யோகி புங்கவம் –

பிரவேசம்
தொண்டர்க்கு அமுது உண்ணச் சொல் மாலைகள் சொன்னேன் -என்கிறபடியே பூ ஸூ ரர்களான ஸ்ரீ வைஷ்ணவர்களுக்கு
போக்யமாக திருவதரித்த திருவாய் மொழியிலே அவகாஹித்து
அதில் சாஸ்த்ரார்த்த ரசம் பாவ ரசம் இவற்றை அனுபவித்து தத் ஏக நிஷ்டராய் -தத் வ்யாதிரிக்த சாஸ்திரங்களை
த்ருணவத் பிரதிபத்தி பண்ணி இருக்கையாலே திருவாய் மொழி அமுத தாத்பர்ய அர்த்தத்தையே தமக்கு நிரூபகமாக உடையராய்
ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளில் கைங்கர்யமே அனைவரதும் செய்து கொண்டு போரும் ஸ்ரீ திருவாய் மொழிப் பிள்ளை
ஸ்ரீ திருப் பாதத்தில் ஆஸ்ரயித்து திராவிட வேத அங்க உப அங்கங்களான ஸமஸ்த திவ்ய பிரபந்த தாத்பர்யங்களையும்
அவர் உபதேசத்தால் லபித்து
மிக்க வேதியர் வேதத்தின் உள் பொருளான சரம பர்வத்தில் நிஷ்டராய்
சேஷித்வ சரண்யத்வ ப்ராப்யத்வங்கள் மூன்றும் திருவாய் மொழிப் பிள்ளை இடம் அன்வயித்து தத் ஏக நிஷ்டராய்
எழுந்து அருளி இருக்கிற ஸ்ரீ ஜீயரை ஸ்ரீ பிள்ளை தாமே உகந்து ஸ்ரீ உடையவர் திருவடிகளில் காட்டிக் கொடுக்கையாலே
அவர் திருவடிகளில் மிகவும் பிரவணராய் தத் குண வேஷ்டிதங்களைப் பேசி அனுபவிக்கும் படியான தசை பிறந்து
தத் வைபவத்தைப் பேசுகிற இவர்
சரம உபாய நிஷ்டரான சரம அதிகாரிகளுக்கு அநவரதம் அநுசந்தேயங்களான சரம அர்த்தங்களை
இப்பிரபந்த முகேந வெளியிடா நின்று கொண்டு
ஸ்வ அபேக்ஷித்ங்களையும் அவர் திருவடிகளில் அபேக்ஷித்துத் தலைக் கட்டுகிறார் –

இதில் முதல் ஸ்லோகத்தாலே
ஆழ்வார் திருவடிகளில் ப்ரேம புஷ்கல்யத்தையும்-ஸ்வ அபிமான அந்தர் ஹுதருடைய ஸ்வ பாவங்களைப் போக்கி
ரஷிக்கும் படியையும் பேசா நின்று கொண்டு
தொடங்கின ஸ்தோத்ரம் தடையற நடக்கத் தக்கதாக உடையவர் திருவடிகளில் விழுகிறார்

ஸ்ரீ மாதவங்க்ரி ஜலஜ த்வய நித்ய சேவா
பிரேமா விசாஸய பராங்குஸ பாதபக்தம்
காமாதி தோஷஹர மாதமபதாஸ் ரிதாநாம்
ராமாநுஜம் யதிபதிம் ப்ரணமாமி மூர்த்நா —-1-

ஸ்ரீ மாதவங்க்ரி ஜலஜ த்வய நித்ய சேவா
திருமாலே நானும் உனக்குப் பழ வடியேன்-என்கிறபடியே மிதுன சேஷத்வமே ஸ்வரூபம் ஆகையால்
ஸ்வரூப அனுரூபமான புருஷார்த்தமும் மிதுன விஷய கைங்கர்யமாகவே இருக்கும் –
திருமாற்கு அரவு –சென்றால் குடையாம்-என்று நித்ய ஸூ ரிகளில் தலைவரான திருவனந்த வாழ்வான்
அவனும் அவளுமான சேர்த்தியிலே கிஞ்சித்க் கரிக்கும் என்று சொல்லிற்று –
அந்த கருந்தலையில் வாசனையால் இறே-தொடர்ந்து குற்றேவல் செய்யப் போந்த இடத்திலும் –
பாவாம்ஸ்து சக வைதேஹ்யா-என்றும்
அஹம் சர்வம் கரிஷ்யாமி என்றும் அவர் அவரைப்பார்த்து பிரார்த்தித்தது
அப்படியே ஆழ்வாரும் –
அடிமை செய்வார் திருமாளுக்கே என்றும்
கோலத் திரு மா மகளோடு உன்னைக் கூட என்றும்
மிதுனமே கைங்கர்ய பிரதிசம்பந்தியாக அருளிச் செய்தார் இறே

பிரேமா விசாஸய பராங்குஸ பாதபக்தம்
ஆகையால் ஸ்ரீ யபதியான எம்பெருமான் திருவடித் தாமரைகளில் நித்ய கைங்கர்யத்தில் ஆசையால் கலங்கின
திரு உள்ளத்தை உடையரான ஆழ்வார் திருவடிகளில் ப்ரேமமே தமக்கு நிரூபகமாய் உடையவராய் இருக்குமவர் என்கிறது –
மாயா வசஸ் வத்தாலே ஸ்ரீ யபதித்தவம் ஸ்ரீ யமாகையாலே ஸ்ரீ சஸ்தம் ஓவ்பவாரிகம்
சீ மாதவன் கோவிந்தன் என்று ஆழ்வார் அருளிச் செய்த திவ்ய ஸூக்தியை உட் கொண்டாய்த்து இவர் இப்படி அருளிச் செய்தது

உடையவருக்கு வைபவம் சொல்லுகிற அளவில் ஞான பக்தி வைராக்யங்களை இட்டுச் சொல்லுகை அன்றிக்கே
ஆழ்வார் திருவடிகளில் சம்பந்தத்தையே இட்டுச் சொல்லுகைக்கு அடி –
மாறன் அடி பணிந்து உய்ந்தவன் -என்று பிள்ளை அமுதனார் அருளிச் செய்த திவ்ய ஸூக்தி ஆய்த்து –
அங்க்ரி சப்தத்தால்
திவ்ய மங்கள விக்ரஹ யோகம் சொல்கிறது –
ஜலஜ சப்தத்தால்
திருவடிகளின் போக்யதையைச் சொல்கிறது –
உன் இணை அடித் தாமரைகள் -என்கிறபடி இரண்டு தாமரைப் பூவை ஒழுங்கு படி நிரைத்து வைத்தால் போலே
இருக்கிற சேர்த்தி அழகைச் சொல்கிறது
சேவா சப்தத்தால்
சேஷ விருத்தியைச் சொல்கிறது

நித்ய சப்தத்தால்
ஒழிவில் காலம் எல்லாம் -என்கிறபடி யாவதாத்மா பாவி என்னும் இடம் சொல்கிறது
இது தான் உடனாய் மன்னி வழுவிலா அடிமை செய்ய வேண்டும் என்று சொன்ன
சர்வ தேசத்திலும் சர்வ காலத்திலும் சர்வ அவஸ்தைகளிலும் பண்ணக் கடவ சர்வவித கைங்கர்யங்களுக்கும் உப லக்ஷணம்
ஏவம்விதமான கைங்கர்யத்தைப் பெற வேணும் என்னும் ப்ரேம பாரவஸ்யத்தாலே யாயத்து
சிந்தை கலங்கி திருமாலே என்று அழைப்பன்-என்று இவர் கூப்பிட்டது
நாடு அடங்க அன்ன பாநாதிகளுக்கு வாய் புலற்றிக் கூப்பிடா நிற்க கைங்கர்யத்தால் அல்லது செல்லாமல் கூப்பிட்டு
அலமாக்கிற இவர் படி உபய விபூதியிலும் வ்யாவருத்தமாய் இருக்கையாலே
இப்படி இருக்கிற ஆழ்வாருடைய ஸ்வ பாவத்தில் வித்தராய்
இவருடைய திருவடிகளில் நிரவதிக ப்ரேம யுக்தராய் யாயத்து எம்பெருமானார் இருக்கும் படி

காமாதி தோஷஹர மாதமபதாஸ் ரிதாநாம் ராமாநுஜம் யதிபதிம் ப்ரணமாமி மூர்த்நா —–
பகவத் கைங்கர்ய விரோதியான சப்தாதி ரூப ப்ராவண்ய விஷயமான காமமும்
ஆதி சப்தத்தாலே
சங்க்ருஹீதைகளான பகவதேக ரஷ்ய விரோதியான அர்த்த திருஷ்ணையும்
தத் ஏக சேஷத்வ விரோதியான அகங்காரமும் முதலான துர் குணங்களை -தம்முடைய திருவடிகளை ஆஸ்ரயித்தவர்களுக்கு
ஸ்வ உபதேச அனுஷ்டங்களாலும் ஸ்வ கடாக்ஷ விசேஷங்களாலும் ச வாசனமாகப் போக்குமவர் -என்கை

ராமானுஜம்
ந சேத் ராமாநுஜேத் ஈஷா சதுரா சதுர் அக்ஷரீ -காமவஸ்யாம் பிரபத்யந்தே ஜந்தவோ ஹந்தமாத்ருஸா–என்று
அறிவுடையார் ஈடுபடும்படி மோக்ஷ ஹேதுவான திரு நாமத்தை உடையவர் என்கை –
யதி பதிம்
ஜிதேந்த்ரியரான சன்யாசிகளுக்குத் தலைவர் ஆனவர் என்கை –
இத்தால் கீழ்ச் சொன்ன ஆச்ரித தோஷ நிவர்த்தகத்துக்கு அடியான குண யோகம் சொல்லுகிறது

ப்ரணமாமி -என்கிற மாத்திரமே அமைந்து இருக்க ப்ரணமாமி மூர்த்நா
என்கிறது விஷய வைபவத்தை அனுசந்தித்து மாநஸமான பிரணவ மாத்திரத்தில் நிற்கை அன்றிக்கே
தம்முடைய ஆதார அதிசயத்தாலே நிர்மமராய் திருவடிகளில் தலையை மடுக்கிறார் என்னும் இடம் தோற்றவே-

————————

இப்படி தொடங்கின ஸ்தோத்ரம் நிர்விக்னமாகத் தலைக் கட்டுகைக்காக அவர் திருவடிகளை ஆஸ்ரயித்து
அத்தாலே நிறம் பெற்றவராய்க் கொண்டு எம்பெருமானாருடைய பகவத் பாகவத ப்ரேம புஷ்கல்யத்தையும்-
ஆஸ்ரித ஜனங்களுக்கு சரம ப்ராப்யராய் இருக்கும் படியையும் சொல்லி சாதரமாக ஏத்துகிறார் –

ஸ்ரீ ரங்க ராஜ சரணாம் புஜ ராஜ ஹம்சம்
ஸ்ரீ மத் பராங்குச பதாம் புஜ ப்ருங்க ராஜம்
ஸ்ரீ பட்ட நாத பரகால முகாப்ஜ மித்ரம்
ஸ்ரீ வத் சிஹ்ன சரணம் யதிராஜ மீடே –2-

ஸ்ரீ ரங்க ராஜ சரணாம் புஜ ராஜ ஹம்சம்

பகவத் விஷயத்தில் வந்தால் வெளிறான அம்சத்தைக் கழித்து சாரமான அம்சத்திலே யாயத்து இருப்பது –
பர வ்யூஹங்கள் நித்ய முக்தருக்கும் முக்த பிராயருக்கும் முகம் கொடுக்கும் இடமாகையாலும்
விபவ அந்தர்யாமிகள் புண்யம் பண்ணினாருக்கும் உபாசகருக்கும் முகம் கொடுத்து நிற்கிற நிலையாகையாலும்
அவ்வோ நிலைகளுக்கு ஓரொரு குறைகள் உண்டு
அடியோமுக்கே எம்பெருமான் அல்லீரோ -என்று பரத்வாதிகளுக்கு ஆளாகாத பிற்பாடாருக்கும் முகம் கொடுத்து நிற்கும்
அர்ச்சாவதாரத்துக்கு சொல்லலாவது குறை ஒன்றும் இல்லையே
இப்படி நீர்மைக்கு எல்லை நிலமான அர்ச்சா ஸ்தலங்களுக்கு எல்லாம் வேர் பற்றான ஸ்ரீ கோயில் நிலையிலே யாயத்து
ஸ்ரீ எம்பெருமானார் ஆழங்கால் பட்டு இருப்பது –
ஆகையால் ஸ்ரீ பெரிய பெருமாள் திருவடிகளில் மிக்க போக்யதையை அனுசந்தித்து
சரஸ சஞ்சரணம் பண்ணும் படி சொல்கிறது –
பரமபத ஐஸ்வர்யத்தையும் சிராங்கிக்கும் படியான விபவ ஐஸ்வர்யத்தை யுடைத்தாய் –
ரதிங்கத-என்கிறபடியே சர்வஞ்ஞனான சர்வேஸ்வரனையும் ஸ்வ போக்யத்தையாலே ஆழங்கால் படுத்தும் படி
நிரதிசய போக்யமான திருவரங்கத் திருப்பதியை –
அரங்கமாளி-என்கிறபடியே -ஸ்வ அதீனமாக ஆண்டு கொண்டு போருகையாலே வந்த பெருமையை யுடைய
அரங்கத்தம்மான் திருக்கமலப் பாதத்தில் அலையெறிகிற மது ப்ரவாஹத்திலே சிறகு அடித்துக் கொண்டு வர்த்திக்கிற
ஹம்ஸ ஸ்ரேஷ்டராய் உள்ளவரை -என்கை –
பொன்னரங்கம் என்னில் மயலே பெருகும் இராமானுசன் –என்னும்படி இறே
இவ்விஷயத்தில் இவருக்கு உண்டான ப்ராவண்யம் –

ஸ்ரீ மத் பராங்குச பதாம் புஜ ப்ருங்க ராஜம்-

இனி பாகவத விஷயத்தில் வந்தாலும் -ஸ்வ யத்னத்தால் ஈஸ்வரனைப் பெறப் பார்க்கும் ப்ரபத்தியிலே
அன்வயித்து இருக்கச் செய்தேதங்கள் ஸ்வீ காரத்தை சாதனமாக கொள்ளுமவர்களையும்
அவனே உபாயமாகக் கொள்ளா நிற்கச் செய்தேயும் பெற்ற பொது பெறுகிறோம் என்று ஆறி இருக்கிறவர்களையும்
மகிழ்ந்து ப்ராப்ய பிராபகங்கள் இரண்டும் அவனே என்கிறதை அத்யவசித்து -இப்போதே பெற்று அனுபவிக்க வேணும்
என்னும் அபிநிவேசத்தாலே கண்ணும் கண்ணீருமாய் யாய்த்து இருக்கும்படியான ஆர்த்தியை உடையராய்
பர வ்யூஹாதி ஸ்தலங்களில் காட்டில்-கண்டியூர் அரங்கம் -இத்யாதிப்படியே
ஸ்ரீ கோயில் முதலான அர்ச்சா ஸ்தலங்களில் ஆழங்கால் பட்டு இருக்கும்
ஆழ்வார்கள் அளவிலே யாய்த்து திரு உள்ளம் ஊன்றி இருப்பது

ஆகையால் கைங்கர்ய அபிநிவேசம் ஆகிற ஸ்வரூப அனுரூபமான சம்பத்தை உடையவராய்
நிரங்குச ஸ்வ தந்த்ரனான ஈஸ்வரனையும்
ஈஸ்வரோஹம் என்று இருக்கும் சம்சாரிகளையும்
ஸ்வ ஸூக்தி விசேஷங்களாலே வசீகருதராய் தலை சீய்க்கும் படி பண்ணுகையாலே பராங்குசர் என்னும்
திரு நாமத்தை யுடையராய் இருக்கிற ஆழ்வார்களில் தலைவரான ஸ்ரீ நம்மாழ்வாருடைய பரம போக்யமான திருவடிகளில்
போக்யதா அனுசந்தானமே நித்ய ஜீவனமாய் யுடையவர் என்கை –

கீழே பராங்குச பாத பக்தம்-என்று அவர் பக்கல் ப்ரேமத்தை உடையவர் என்கிற மாத்திரம் சொல்லிற்று –
இங்கு அந்த ப்ரேம அனுரூபமாக அவர் திருவடிகளில் போக்யத்தையுள் புக்கு அனுபவிக்கும் படி சொல்கிறது –
அல்லாத ஆழ்வார்களில் காட்டில் நம்மாழ்வாருக்கு உண்டான வ்யாவ்ருத்தி தோற்ற அவர்களோடே கூட அநுஸந்திக்குமது
மாத்திரம் போராது என்று தனியே முற்பட அனுசந்தித்தார்
இப்போது அவர்களோடு கூட அனுசந்தித்து அருளுகிறார் –
பெரிய பிராட்டியாரை அல்லாத நாய்ச்சிமாரோடு கூட அநுஸந்தியா நிற்கச் செய்தேயும் முந்துறவே
ஸ்ரீ யபதி -என்று அவள் வ்யாவ்ருத்தி தோற்ற உடையவர் அனுசந்தித்து அருளினால் போலே
அல்லாத ஆழ்வார்களில் இவருக்கு அவயவ பூதர் என்னும்படி இறே இவருடைய ஏற்றம் –

ஸ்ரீ பட்ட நாத பரகால முகாப்ஜ மித்ரம்-

மங்களா சாசன ரூபமாக ஐஸ்வர்யத்தை உடையவராய் ப்ராஹ்மண உத்தமரான ஸ்ரீ பெரியாழ்வாருடையவும்
பாஹ்ய குத்ருஷ்டிகள் ஆகிற பிரதிபக்ஷங்களுக்கு ம்ருத்யு பூதரான ஸ்ரீ திரு மங்கை ஆழ்வாருடையவும்
திருமுக மண்டலம் ஆகிற தாமரையை அலர்த்தும் ஆதித்யன் -என்கை –
ஆளுமாளார் -என்கிறவன் தனிமை தீர ஆள்கள் சேர்த்து அருளுகையாலும்
பாஹ்ய குத்ருஷ்டிகளைக் கிழங்கு எடுத்துப் பொகடுகையாலும் இவரைக் கண்ட போதே அவர்கள் திரு முகம் அலர்ந்த படி –

ஸ்ரீ வத் சிஹ்ன சரணம் யதிராஜ மீடே

கீழே -காமாதி தோஷஹர மாதமபதாஸ் ரிதாநாம்-என்று சாமாந்யேந திருவடிகளை ஆஸ்ரயித்தவர்களுக்கு
உபாய பூதர் என்னும் இடம் சொல்லிற்று –
இங்கு அவர்கள் எல்லாரும் ஒரு தட்டும் தாம் ஒரு தட்டுமாம் படியான ஏற்றத்தை யுடையராய்
சிஷ்ய வர்க்க க்ரமத்துக்கு சீமா பூமியான ஸ்ரீ கூரத்தாழ்வானுக்கு
ப்ராப்ய -பிராபகங்களாக இரண்டுமே தாமேயாக இருக்கும் படி சொல்கிறது

யதிராஜமீடே-
இப்படி ஸ்ரீ ஆழ்வார்கள் உகந்த விஷயமான ஸ்ரீ பெரிய பெருமாள் அளவிலும்
ஸ்ரீ முகில் வண்ணன் அடியை அடைந்து அருள் சூடி உய்ந்த ஸ்ரீ ஆழ்வார்கள் விஷயத்திலும்
தத் தத் விஷய அனுரூபமான ப்ரேம பூர்த்தியை யுடையராய்
ஆஸ்ரிதருக்கு ப்ராப்ய ப்ராபக பூதருமாய் இருக்குமவர் என்று ஸ்துதிக்கிறேன் என்கிறார்

——————-

நம்மைப் பற்றினாருக்கு ப்ராப்ய பிராபகமும் நாமேயாகச் சொன்னீரே –
நம்மைப் பற்றி நிற்கிற உமக்கும் இது ஒவ்வாதோ என்று ஸ்ரீ எம்பெருமானார் திரு உள்ளமாக –
எனக்கு அங்கன் அன்று-
தேவரீர் திருவடிகளையே ப்ராப்யமும் பிராபகமுமாகக் கொண்ட ஸ்ரீ கூரத்தாழ்வான் முதலாமவர் திருவடிகளே
ப்ராப்யமும் பிராபகமுமாகப் பற்றி இருக்குமவனாக வேணும் என்று
எம்பெருமானார் திருவடிகளில் பிரார்த்தித்து அருளுகிறார் –

வாசா யதீந்திர மநஸா வபுஷா ச யுஷ்மத்
பாதார விந்த யுகளம் பஜதாம் குருணாம்
கூராதி நாத குருகேச முகாத்ய பும்ஸாம்
பாதாநுசிந்தன பரஸ் சத்தம் பவேயம் –3-

ப்ரத்யக்ஷ குரவே ஸ்துத்யா -என்கிறபடியே பகவத் விஷயத்தில் உபகரண ஆச்சார்யர்களை
ஸ்துதிக்கைக்கும் ஸ்மரிக்கைக்கும் வணங்குகைக்கும் யாய்த்து இவனுக்கு அடியிலே
வாங் மனஸ் காயங்களை அடியிலே உண்டாக்கிற்று –
விசித்ரா தேக சம்பத்தி-இத்யாதிப்படியே சர்வேஸ்வரன் தன்னை ஆஸ்ரயிக்கக் கொடுத்த கரணங்களைக் கொண்டு
அந்ய பரராய் திரிகிற இவ்விபூதியிலே பகவத் ஸமாச்ரயண மாத்திரத்தில் துவளுகை அன்றிக்கே
அத்தையும் பிரதம அவதி என்று கழித்து சரம அவதியான ஆச்சார்ய விஷயத்தில் கரண த்ரயத்தையும் விநியோகிக்கும்
படியான ஏற்றத்தை உடைய இவர்கள் சிலரே என்று வித்தராய் அவர்கள் திருவடிகளைப் பற்றுகிறார் –

வாசா
வாய் அவனை அன்றி வாழ்த்தாது -என்று பிரதம பர்வ நிஷ்டர் பகவத் விஷயம் அல்லது மற்ற ஒரு விஷயத்தை
ஏத்தாதாப் போலே இவர்களும் வகுத்த விஷயம் ஒழிய மற்ற ஒன்றை ஏத்தாத படி –
அவர்களுக்கு வ்யாவ்ருத்தம் தேவதாந்த்ரம் -இவர்களுக்கு பகவத் விஷயம் -நாவ கார்யம் -என்றவர்கள் இறே இவர்கள்
மநஸா
மந பூர்வோ வாக் உத்தர -என்கிற நியமம் இல்லையாய்த்து இவர்களுக்கு –
வாய் திறக்க இவ்விஷயத்தில் அல்லது வாய் திறக்காதது போலே நெஞ்சுக்கும் விஷயம் அது அல்லது
வேறே இல்லையாய்த்து இவர்களுக்கு –
திருக் கோட்டியூர் நம்பியை -உமக்கு தியானத்துக்கு விஷயம் எது என்று கேட்ட பின்
அவர் அருளிச் செய்த திரு வார்த்தையை நினைப்பது –

வாசா மனசா வபுஷா ச
என்று தம் கரணங்களின் ப்ராவண்ய அதிசயத்தைச் சொல்கிறது –

யுஷ்மத் பாதார விந்த யுகளம் பஜதாம்
இவர்கள் வேப்பங்குடி நீர் இருக்கிற படி-
இவ்வாத்மாவுக்கு வகுத்த சேஷியான தேவரீருடைய நிரதிசய போக்யமாய் சேர்த்தி அழகை யுடைத்தான திருவடிகளை
ப்ராப்யமாகவும் ப்ராபகமாகவும் நிரந்தரமாக ஸேவிக்குமவர்களுடைய-
நித்யம் யதிவர சரணவ் சரணம் மதீயம்-என்று ஆழ்வார் திருவடிகளே ப்ராப்யமாகவும் ப்ராபகமாகவும்
பரமாச்சாரியார் அருளிச் செய்தார் இறே
திருவடிகளை வாக்காலே பஜிக்கை யாவது தத் வைலக்ஷண்யத்தை புகழுகை
மனஸ்ஸாலே பஜிக்கையாவது -திருவடிகளை நெஞ்சால் நினைக்கை-
சரீரத்தாலே பஜிக்கையாவது ப்ரணமாமிக்கு விஷயம் ஆக்குகை –

பாதாநுசிந்தன பரஸ் சத்தம் பவேயம்
அவர்கள் தேவரீருடைய பாதாரவிந்தங்களை அநுவரதம் த்யானம் பண்ணுமா போலே
இவ்வநுஸந்தானம் காதாசித்கமாகை அன்றிக்கே நித்தியமாக வேணும் என்கிறது –
அநு விந்தனம்-என்ற பாடமான போது-அநுஸ் யூதம் விந்தனம் -என்று கொள்ளும் போது சதத சப்தம் சங்கதமாகாது
அநு -ஹித அர்த்தத்திலேயாய் கிருஷ்ண அநு ஸ்மரணம்-என்னும் இடத்தில் போலே
தத் விஷயத்வ சேஷத்வ அனுசந்தானத்தைச் சொல்கிறது –
உன் தொண்டர்கட்கே அன்பு உற்று இருக்கும் படி என்னை ஆக்கி அங்கு ஆட் படுத்தே -என்கிற அர்த்தத்தைச் சொல்கிறது –
இவருக்கு இவ்விஷயத்தில் உண்டான பாவ பந்தத்தில் ஊற்றம் அவரவர் திருவடிகளில் பிரார்த்திக்கை
அவர் இடமே பிரார்த்திக்கும் படி யாய்த்து

——————————

எம்பெருமானார் திருவடிகளுக்கு இப்படி அவிநா பூதராய்-அவரை அல்லது அறியாத ஸ்ரீ கூரத்தாழ்வான் போல்வாருடைய
திருவடிகளில் சேஷத்வத்தையும் பிரார்த்தித்து அருளி -அவர்கள் அளவில் ஊற்றத்தாலே-அவர்கள் உகந்த விஷயமான
ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளில் கரண த்ரயமும் ப்ரவணமாம் படி பண்ணி அருள வேணும்
என்று அவரைப் பிரார்த்தித்து அருளுகிறார் –

நித்யம் யதீந்திர தவதிவ்ய வபுஸ்ருதௌ மே
சக்தம் மநோ பவது வாக் குண கீரத்த நே சௌ
க்ருத்யம் ச தாஸ்ய கரணம் து கரத் வயச்ய
வ்ருத்யந்த ரேஸ்து விமுகம் கரணத்ர யஞ்ச –4-

நித்யம் யதீந்திர தவதிவ்ய வபுஸ்ருதௌ மே-சக்தம் மநோ பவது மே மநோ -தவதிவ்ய வபுஸ்ருதௌ-நித்யம் -சக்தம்-பவது —
அநாதி காலம் இதர விஷயங்களில் பழகிப் போந்த என்னுடைய மனஸ்ஸானது தேவருடைய திவ்ய மங்கள விக்ரஹத்திலே
சர்வகாலமும் மண்டி விஷயாந்தர ஸ்மரணத்துக்கு ஆளாகாத படி நன்றாக எய்வதாகவும் –
உந்தன் மெய்யில் பிறங்கிய சீர் அன்றி வேண்டிலேன் -என்கிறபடி
மனஸ்ஸுக்கு ஸூபாஸ்ரயமான அவலம்பனம் தேவரீருடைய திவ்ய மங்கள விக்ரகமே யாக வேணும் என்கை –

வாக் குண கீரத்த நே சௌ–பவது –
இதுக்கு முன் பஹுர் விஷயங்களை ஜல்பித்துப் போந்த வாக்கு தேவருடைய கல்யாண குணங்களையே வர்ணித்துக் கொண்டு
பேசுகையில் சகிதமாக வேணும் என்கை –

க்ருத்யம் ச தாஸ்ய கரணம் து கரத் வயச்ய
அந்ய வ்ஷயங்களுக்கு நிஹீன வ்ருத்தி செய்து போந்த கைகள் இரண்டுக்கும் க்ருத்யம் தேவருடைய நித்ய கைங்கர்யம் ஆவதாக –

வ்ருத்யந்த ரேஸ்து விமுகம் கரணத்ர யஞ்ச –
தேவரீர் விஷயத்தில் கரண த்ரயமும் அபிமுகமானாலும் விஷயாந்தரங்களில் வைமுக்யம் இல்லாத போது
இது நிலை நில்லாது என்று பார்த்து
புறப் பூதமான வை லக்ஷண்யத்தை யுடைய ஹேய விஷயங்களை நினைக்கை தொழுகை சொல்லுகை யாகிற வியாபாரத்தில்
நின்றும் கரண த்ரயமும் முகம் மாறுவதாக
இத்தனை நையும் மனம் உன் குணங்களை யுன்னி -இத்யாதிப்படியே
கரண த்ரயத்துக்கும் ஸ்ரீ எம்பெருமானார் விஷயத்தில் ப்ராவண்யத்தை இதர நிவ்ருத்தி பூர்வகமாக
பிரார்த்தித்து அருளி

னார் ஆய்த்து –

——————

எம்பெருமானே சேஷியும் உபாயமும் உபேயமும் என்று சாஸ்திரங்கள் சொல்லா நிற்க –
நீர் நம்மையும் நம் உடையாரையும் சேஷிகளும் உபாய பூதராகவும் சொல்லா நின்றீர்-
அது என் கொண்டு நீர் சொல்லுகிறது என்று ஸ்ரீ எம்பெருமானார் நினைவாக
சகல ஸாஸ்த்ர ரூபமான திருமந்திரம் இதுக்கு மூல பிரமாணம் –
அதில் பிரதிபாதிக்கிற அர்த்தத்துக்கு அனுரூபமான நிஷ்டையையும்
தத் பலமான தேவரீர் திருவடிகளில் அனுபவத்தையும் தந்து அருள வேணும் என்று அபேக்ஷிக்கிறார் –

அஷ்டாஷராக்ய மநுராஜ பத த்ரயார்த்த
நிஷ்டாம் மமாத்ர வித ராத்ய யதீந்திர நாத
சிஷ்டாக்ர கண்ய ஜன சேவ்ய பவத் பதாப்ஜே
ஹ்ருஷ்டா அஸ்து நித்யமனுபூய மமாஸ்ய புத்தி –5-

அஷ்டாஷராக்ய மநுராஜ பத த்ரயார்த்த நிஷ்டாம் மமாத்ர வித ராத்ய யதீந்திர நாத
ஓம் இத்ய ஏக அக்ஷரம் -நம இதை த்வே அக்ஷரே -நாராயணாய இதி பஞ்ச அக்ஷராணி –
இத் அஷ்டாக்ஷரம் மனு ஸ்வசகாய த்ரீ வேதி -என்று
திருமந்திரம் எட்டு திரு அக்ஷரமாய் மூன்று பதமாய் இருக்கும் என்னும் இடம் சுருதி சித்தம் –
மனு சப்தம் -மந்த்ர வாசி
மனு ராஜம் -என்றது மந்த்ர ராஜம் என்றபடி –
திரு மந்திரத்துக்கு ராஜாவாகையாவது -வேதங்களும் ரிஷிகளும் வைதிக புருஷர்களும் ஏக கண்டமாக பரிக்ரஹிக்கையாலும் –
அர்த்த பூர்த்தியாலும் -தானே ஸ்வ தந்திரமாய்க் கொண்டு சகல பலன்களையும் கொடுக்க வற்றாகையாலும் –
உபாயாந்தார சஹகாரியாகையாலும் -தன்னை ஒழிந்த வியாபக அவியாபக சகல பகவான்-மந்திரங்களிலும்
உத்க்ருஷ்டமாய் இருக்கை–

பத த்ரயங்களின் அர்த்தமாவது –
ஆத்மாவினுடைய அநந்யார்ஹ சேஷத்வம் -அநந்ய சரணத்வம் -அநந்ய போக்யத்வம் -இவைகளும்
தத் பிரதிகோடியான சர்வேஸ்வரனுடைய சேஷித்வ சரண்யத்வ ப்ராப்யத்வங்களும் –
அநந்யார்ஹ சேக்ஷத்வாதி ஆகாரத் த்ரயமும் தத் விஷயத்தில் போலே ததீய விஷயத்திலும் உண்டாய் இறே இருப்பது
ஆகை இறே திருமந்திரம் கற்ற ஸ்ரீ திருமங்கை ஆழ்வாரும்-
நின் திரு எட்டு எழுத்தும் கற்று நான் உற்றதும் உன் அடியார்க்கு அடிமை -என்று அருளிச் செய்தது –
இப்படி சாமான்யேன ததீயருக்கு எல்லாம் தத் சம்பந்தம் மூலமாக சேஷித்வாதிகள் உண்டாகையாலே
ததீய விஷயமாக நிர்ஹேதுகமாக அடியிலே தன்னை அங்கீ கரித்து அருளி
இவ்வவஸ்யா பன்னனான ஸ்வாச்சார்ய விஷயத்திலும் சேஷித்வாதிகள் அனுசந்திக்கக் குறையில்லை –

ஆகையால் பத த்ரயத்திலும் சொல்லுகிற அர்த்தங்களில் சரம பர்வ பர்யந்தமான நிஷ்டையை –
இதில் அபேக்ஷை உடைய அடியேனுக்கு
இவ்வர்த்தத்தில் ருசி உடையாரைக் கிடையாத இவ்விபூதியிலே இப்பொழுதே தந்து அருள வேணும் –
பெரு விடாய்ப் பட்டு -தண்ணீர் தண்ணீர் -என்று துடிக்கிறவனுக்கு இவ்விடத்தில் இப்பொழுதே விடாய் தீர்க்க வேணும் இறே –
நீர் நம்மை அபேக்ஷித்தால் இப்படி உமது அபேக்ஷை செய்ய வேணும் ஹேது என் என்ன சொல்கிறது மேல்

நாத – என்று –
இத்தலையில் சொல்லலாவதொரு ஹேது இல்லை -இவ்வாத்மாவுக்கு வகுத்த சேஷியான தேவர் –
இது நம்முடைமை அன்றோ -என்று இச் சம்பந்தமே ஹேதுவாக செய்து அருள வேணும் -என்கை –

சிஷ்டாக்ர கண்ய ஜன சேவ்ய பவத் பதாப்ஜே ஹ்ருஷ்டா அஸ்து நித்யமனுபூய மமாஸ்ய புத்தி –
சிஷ்டர் ஆகிறார் -ஞான அனுஷ்டான பூர்ணராய் கண்ணழிவு அற்ற ப்ராப்ய ருசியை உடையவர்கள் –
அவர்களுக்கு அக்ர சரண்யர் ஆகிறார் ஸ்ரீ கூரத்தாழ்வான் போல்வார் -இப்படி இருந்தவர்களால் நிரந்தரம்
அனுபவிக்கப்படா நிற்பதாய் இருக்கிற வகுத்த சேஷியான தேவரீருடைய பரம போக்யமான திருவடிகளை –
இந்த ப்ராப்யம் பெறா விடில் தரியாத படியான இந்த என்னுடைய சிந்தையானது
யதா மநோ ரதம் அனுபவித்துக் களிப்பதாக
உனது அடிப்போதில் ஒண் சீராம் தெளி தேன் உண்டு அமர்ந்திட வேண்டி நின் பால் அதுவே போந்தது
என் நெஞ்சம் என்னும் பொன் வண்டு- என்ற ஐஸ்வர்யத்தைப் பிரார்த்தித்த படி –

——————–

ப்ராப்ய ருசியை யுடையராய் -புறம்புள்ள பாக்யங்களில் நசையற்ற ஸ்ரீ கூரத்தாழ்வான் போல்வார் அன்றோ
நம்மை அனுபவிப்பவர்களாகச் சொன்னீர் -உமக்கும் இரண்டும் உண்டோ-என்ன –
ஏகதேசமும் ப்ராப்ய ருசி அற்று இருக்கிறபடியையும் –
இதர விஷய ருசி கொழுந்து விட்டு வளருகிற படியையும் விண்ணப்பம் செய்து
இவ்விரண்டுக்கும் அடியான பாபத்தைப் போக்கி அருள வேணும் என்று பிரார்த்திக்கிறார்

அல்பா அபி மே ந பவதீயபதாப்ஜ பக்தி
சப்தாதி போக ருசிரந்வஹா மேத தேஹா
மத் பாபமேவ ஹி நிதான மமுஷ்ய நாந்யத்
தத் வாரயார்ய யதிராஜ தயைக சிந்தோ –6-

அல்பா அபி மே ந பவதீயபதாப்ஜ பக்தி-
தேவரீர் திருவடித் தாமரைகளில் பூர்ண பக்தி இல்லாத மாத்திரம் அன்றிக்கே அத்யல்ப பக்தியும்
இதர விஷய ப்ரவணனான எனக்கு இல்லை –
ஆனுகூ-ல்ய லேசம் இல்லை என்றாலும் பிரதிகூல நிவ்ருத்தி தான் உண்டாக வேணும் இறே –
அதுவும் எனக்கு இல்லை என்கிறார் –

சப்தாதி போக ருசிரந்வஹா மேத தேஹா-
தேவரீர் திருவடிகளில் அனுபவத்துக்கு விரோதியான சப்தாதி விஷய அனுபவ ரஸ்யதை வர்த்திஷ்ணுவாய்ச் செல்லா நின்றது –
இத்தால் த்ருதீய பதார்த்த நிஷ்டா விரோதி சொல்லிற்று –
இவ்விரண்டும் அடி எது என்ன

மத் பாபமேவ ஹி நிதான மமுummஷ்ய நாந்யத்
ப்ராப்த விஷய ப்ராவண்ய அபாவத்துக்கும் அபிராப்த விஷய ப்ராவண்யத்துக்கும் காரணம் பாபியான என்னுடைய துஷ் கர்மம் இறே
அவதாரணத்தாலே ஹேத்வந்தரத்தைக் கழிக்கிறது
ஹி-சப்தம் இவ்வர்த்தத்தினுடைய ப்ரஸித்தியைச் சொல்கிறது
நாந்யத் –
ஈஸ்வர ஸ்வா தந்தர்யம் இதுக்கு ஹேது அன்று -அவன் உஜ்ஜீவனத்துக்கு ஹிருஷீ பண்ணுகிறவன் ஆகையால் –
உம்முடைய கர்ம தோஷத்தால் வந்ததாகில் நம்மால் செய்யலாவது உண்டோ என்ன
என் செய்யலாவது இல்லையோ -அத்தை அடியேன் அளவில் கிட்டாதபடி தகைந்து அருள வேணும்
நாம் அதுக்கு சக்தரோ என்ன

தத் வாரயார்ய யதிராஜ தயைக சிந்தோ –
ஆர்ய-
செய்யும் விரகு அறிகைக்குஎன்று த் தக்க அறிவு இல்லையோ
யதி ராஜ
அறிந்தபடி செய்ய வல்ல சக்தி இல்லையோ
ஜிதேந்த்ரியர்களான சன்யாசிகளுக்குத் தலைவர் ஆகையால் அபிமான அந்தர்பூத்தருடைய பாபத்தைப்
போக்குதற்கு சக்தியில் குறை இல்லை
தயை ஏக சிந்த்யோ
அந்த ஞான சக்திகளை ரக்ஷண உபயோகியாக நடத்தும் கிருபைக்கும் சங்கோசமும் உண்டோ
அஸ்ய தயை ஏக சிந்த்யோ -என்று விசேஷஜ்ஞர் ஆழங்கால் படும்படி அன்றோ கிருபா பிராஸூர்யம்
ஏக சப்தத்தால் காரணாந்தரங்களை தடவிப் பிடிக்க வேண்டும் படி சொல்கிறது

——————-————————————————————-

ஸ்ரீ கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் . –

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: