ஸ்ரீ பெரிய ஜீயர் அருளிய உரை ––அவதாரிகை –
இப்படி இவர் தமக்கு அநந்யார்ஹர் அளவிலே ஊன்றினவாறே ஸ்ரீ எம்பெருமானார் -இவர் நெஞ்சுக்கு தம்மை –
சர்வ காலமும் -விஷயம் ஆக்கிக் கொடுக்க -பாபிஷ்ட்டனான என் நெஞ்சிலே புகுந்து அருளின இது –
தேவரீர் பிரபாவத்துக்கு அவத்யம் அன்றோ என் நெஞ்சு தளரா நின்றது என்கிறார்
ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் அருளிய உரை–அவதாரிகை-
இப்படி இவர் தமக்கு அனந்யார்ஹர் பக்கலிலே பிரதி பத்தி பண்ணின வாறே ஸ்ரீ எம்பெருமானார்
இவருடைய நெஞ்சு -குற்றமே சர்வ காலமும் விஷயமாக்கிக் கொடுக்க -பாபிஷ்டனான என் நெஞ்சிலே
புகுந்து அருளின இது –தேவரீருடைய பிரபாவத்துக்கு அவத்யம் அன்றோ என்று என் நெஞ்சு தளரா நின்றது-என்கிறார் –
ஸ்ரீ அமுது விருந்து-ஸ்ரீ திருமலை நல்லான் சக்கரவர்த்தி ஸ்ரீ ராம கிருஷ்ண ஐயங்கார் ஸ்வாமிகள்-அருளிய உரை–அவதாரிகை–
தன்னை மேவும் நல்லோர் திறத்து மிகவும் ஸ்ரீ அமுதனார் ஈடுபாடு கொண்டு இருப்பது கண்டு ஸ்ரீ எம்பெருமானார் இவர் நெஞ்சுக்கு
தன்னை எக்காலத்திலும் விஷயம் ஆக்கிக் கொடுக்க -கொடிய பாவியான என்னுடைய நெஞ்சிலே புகுந்தது
தேவரீர் மகிமைக்கு மாசு விளைவிக்குமே என்று தனிப்பட்ட என் மனம் தளர்ச்சி அடைகின்றது -என்கிறார் –
கொள்ளக் குறைவற்று இலங்கிக் கொழுந்து விட்டு ஓங்கிய உன்
வள்ளல் தனத்தினால் வல் வினையேன் மனம் நீ புகுந்தாய்
வெள்ளைச் சுடர் விடுமுன் பெரு மேன்மைக்கு இழுக்கு இது என்று
தள்ளுற்று இரங்கும் இராமானுச என் தனி நெஞ்சமே -27-
பத உரை –
இராமானுசா -எம்பெருமானாரே
கொள்ள -வேண்டுவோர் வேண்டியதைக் கொள்ளும்படி
குறைவு அற்று -குறைவு படாது
இலங்கி-விளங்கி
கொழுந்து விட்டு-புதுமை பெற்று
ஓங்கிய -வளர்ச்சி யடைந்த
உன் வள்ளல் தனத்தினால்-தேவரீர் உடைய கொடைத் திறத்தினால்
வல் வினையேன்-பெரும் பாவியான என்னுடைய
மனம்-நெஞ்சிலே
நீ புகுந்தாய் -தேவரீர் வந்து புகுந்து அருளினீர்
இது -புகுந்த இது
வெள்ளை-தூயதும்
சுடர் விடும் -பிரகாசிப்பதுமான
உன் பெருமைக்கு -தேவரீர் உடைய அளவிறந்த ப்ரபாவத்துக்கு
இழுக்கு என்று -குறை என்று
என் தனி நெஞ்சம்-என்னுடைய தனிப்பட்ட மனம் ஆனது
தள்ளுற்று– தளர்ந்து
இரங்கும் -ஈடுபடுகின்றது –
வேண்டுவார்க்கு வேண்டுவது எல்லாம் கொள்ளலாம் படி ஒரு குறைவு அற்று இருப்பதாய் –
கொடுக்கப் பெற்றால் -உஜ்ஜ்வலமாய் -மேன்மேலும் இளகிப் பதித்து -வளர்ந்து இருப்பதான –தேவரீர் உடைய ஒவ்தார்யத்தாலே –
மகா பாபியான என்னுடைய மனசிலே தேவரீர் உடைய-பெருமை பாராதே -வந்து புகுந்து அருளிற்று –
வசிஷ்ட்டன் சண்டாளச் ரேணியில் புகுந்தால் போல்
இப்படிப் புகுந்த விது-பரி சுத்தமாக விளங்கா நின்று உள்ள -தேவரீர் உடைய -நிரவதிக -பிரபாவத்துக்கு –அவத்யம் என்று
ஒரு துணை இன்றிக்கே -தனிப்பட்டு இருக்கிற என்னுடைய நெஞ்சானது தளர்ந்து-ஈடுபடா நின்றது –
தள்ளுதல்-தளர்தல்
இரங்கும்-ஈடுபாடு –
நிரபேஷமாக–தண்மை பார்க்காமல் -தன் பேறாக-சரம புருஷார்த்தம் –அடியார்க்கு ஆட்படுத்திய விமலன் –
நீர் அடியேன் உள்ளம் வர உமக்கும் இழுக்கு ஆகுமே -என்று கலங்கும் என் தனி நெஞ்சம்
கொள்ளக் குறைவற்று –
வேண்டுவார் வேண்டுவதை எல்லாம் கொண்டாலும் ஒரு குறைவு இன்றிக்கே –
குறைப்பட்டு இராதே -மகா மேருவானாலும் நித்ய வாசம் பண்ணத் தொடங்கினால் நாளுக்கு நாள் குறைப்பட்டு அழிந்து போம் இறே
இங்கு அப்படி அன்றிக்கே புஷ்கலாவர்த்தகாதி-மேகங்கள் பருகினாலும் சமுத்திர ஜலம் குறைப்பட்டு இராதே
நிச்சலமாய் பூரணமாய் இருக்குமாப் போலே
இலங்கி –
இந்தப் பிரபாவத்தாலே -ஆவிரபூத் ராமானுஜ திவாகர -என்றால் போல் அத்யுஜ்வலமாய் –
கொள்ளக் குறைவற்று இலங்கி –
விரும்பியவர் கொடுத்து வாங்க வேண்டாது -தாம் தாம் விரும்பியதை இஷ்டப்படி தாமே எடுத்துக் கொள்ளலாம் படி
குறைவற்று நிறைந்து உள்ளது -வள்ளல் தனம் -என்றபடி –
இனி கொள்ளக் கொள்ளக் சிறிதும் குறைவு படாதது என்னலுமாம் –
முகில்கள் எவ்வளவு பருகிடினும் நெடும் கடல் போலே தன் நீர்மை குன்றாதது -என்க –
கோரினவர் கொள்வதை தன் பேறாக கொண்டமை –இலங்கி -என்றதனால் தோன்றுகிறது –
கொழுந்து விட்டு ஓங்கிய
சமுத்ரத்துக்கும் இவருடைய வள்ளல் தனத்துக்கும் ஒரு வாசி உண்டு –
அது அதி கம்பீரமாய் பொருந்தி இருந்தபடியே இருக்கும் -இது வள்ளல் ஆனால் -லோகத்திலே-
இவருடைய க்ருபா விஷய பூதர் எல்லாம் வாங்கிக் கொண்டு போனதால் -அதுவே ஹேதுவாக-
பிரகாசித்து -பல்லவித்து -பரம பத பர்யந்தமாக படரா நிற்கும் -இப்படி ஓங்கி வளரா நிற்க –
உன் வள்ளல் தனத்தினால்
இவர் தாம் தம்முடைய அவதார தசையே பிடித்து எல்லாருக்கும்
பகவத் ஸ்வரூப ரூப குண விபூதிகளை -அறியாதன அறிவித்து -என்கிறபடியே -விசதமாக தெளியும்படி-உபதேசித்து –
இப்படி பண்ணினோமே என்று ஆறி இருக்கை அன்றிக்கே -சர்வரும் சர்வ காலமும் அனுசந்தித்து உஜ்ஜீவிக்கும்படி –
ஸ்ரீ பாஷ்ய கீதா பாஷ்யாதி பிரபந்தங்களை பண்ணியருளி உபகரித்தார் இறே –
க்ரந்த கரணத்தை வள்ளல் தனம் என்பாரோ என்னில் –
தத்வே நயஸ் சித் அசித் ஈஸ்வர தத் ஸ்வபாவ-போகாபவர்க்க ததுபாயக தீருதாரா -சந்தர்சயன் நிரமிமீத புராண ரத்னம் -என்று
ஸ்ரீ ஆள வந்தாரும் அருளிச் செய்தார் இறே –
உன் வள்ளல் தனத்தினால் –
லோகத்தில் கர்ண சிபி மாந்தாதிகள் வதாந்யராய் அநேகம் பேருண்டு -அவர்கள்
சகாசத்தில் பாத்ரனான அரத்தி வந்தால் அர்த்தங்களைக் கொடுப்பார்கள் என்று பிரசித்தமாய் இருக்கும் –
அப்படி அன்றே தேவரீர் உடைய வள்ளல் தனம் -அர்த்தித்வ நிரபேஷமாக-பாத்ரா பாத்ரங்களை பாராதே –
ஆகிஞ்சன்ய அநந்ய கதித்வங்களையே பற்றாசக் கொண்டு -பரம புருஷார்த்தத்தையே கொடுக்க கடவதாக இருக்கும் –
இப்படிப் பட்ட தேவரீர் உடைய ஔதார்யத்தாலெ —வள்ளலுடைய மகாத்மயம் சொன்னீரே -இது உமக்கு தெளிந்தபடி
என் என்னில் –
நான் புறம்பே எங்கே யாகிலும் சென்று கர்ணா கரணியாய் கேட்டு தெளிந்தேனோ இது –
இது ஸ்வபாவத்தால் வந்தது அன்றோ -என்கிறார் –
கொழுந்து விட்டு ஓங்கிய உன் வள்ளல் தனத்தினால் –
கடல் நீர்மை குன்றாமல் இருக்கும் -அவ்வளவு தான் –
வள்ளல் தனமோ -மேலும் மேலும் புதுமை பெற்று ஓங்கி வளருகின்றது –
இராமானுசன் என்னும் கார் -தன் வள்ளன்மையால் -தன்னைக் காட்டி – நான் கண்டு -உயரும்படி செய்தது என்றார் கீழ்-
இங்கே காட்டியதோடு அமையாமல் -நெஞ்சத்திலே தன்னை நிரந்தரமாக நிலை நாட்டியதன் மூலம் –
அவ் வள்ளல் தன்மை கொழுந்து விட்டு ஓங்கினமை புலன் ஆகிறது -என்கிறார் –
ஏனையோர் வள்ளல் தனம் தன்னையும் மனைவியையும் தவிர மற்றவைகளை அள்ளிக் கொடுக்கும் அளவோடு நிற்கும் –
இவ் வள்ளல் தனமோ தன்னையே என்னுள் புகுத்துவது வரையிலும் –வளர்ந்து உள்ளது –
இவ் வேறுபாடு தோற்ற உன் வள்ளல் தனம் என்றார் –
இனி விரும்பியதை வழங்கும் ஏனையோர் வள்ளல் தனத்தினும்
விருப்பத்தையும் விளைவித்து – வழங்கும் வேறுபாடு தோற்ற உன் வள்ளல் தனம் என்கிறதாகவுமாம்-
கொள்ளக் குறை படும்..புஷ்கலா மேகங்கள் பருகினாலும் -1-சமுத்திர ஜலம் குறையாது போல.பூர்ணம் –
2-அசையாது–3- கரை காண முடியாது —4-பெருமை தாண்ட முடியாது ஆழம் காண முடியாது
பாஷ்யம்–5- பொருள் கலக்க முடியாது ..இலங்கி-தான் பேறாக செய்தல்–ஸ்ரீ ராமானுஜ திவாகரன்-ஒளி விடுகிறான்.
பொன்னி சூழ் அரங்கமேய பூவை வண்ண மாய கேள்
என்னதாவி என்னும் வல் வினையினுள் கொழுந்து எழுந்து
உன்ன பாதம் என்ன நின்ற ஒண் சுடர்க் கொழு மலர்
மன்ன வந்து பூண்டு வாட்டமின்றி எங்கும் நின்றதே –ஸ்ரீ திருச்சந்த விருத்தம்-119–
இயக்கறாத பல் பிறப்பில் என்னை மாற்றி இன்று வந்து
துயக் கொண் மேக வண்ணன் நண்ணி என்னிலாய தன்னுளே
மயக்கினான் தன் மன்னு சோதி யாதலால் என்னாவி தான்
இயக்கொலா மறுத்தறாத வின்ப வீடு பெற்றதே —ஸ்ரீ திருச்சந்த விருத்தம்–120-
வல்வினையேன் மனம் –
நன்மை என்று பேரிடலாவதொரு தீமையும் இன்றிக்கே ஒழிந்தாலும் –
திருவடி தன திரு நாமம் மறந்தும் புறம் தொழா மாந்தர் -என்கிறபடி -தடஸ்தனாய் இருந்தேனோ –
நான் அறியும் படியே மகா கோரமான பாபங்களை பண்ணினேனே -இப்படி பாபிஷ்டனான என்னுடைய மனசிலே –
பந்தாயா விஷயா சங்கீ ப்பட்ட- என்ன பட்ட மனசிலே
நீ புகுந்தாய்
உபய விபூதி சாம்ராஜ்யத்துக்கு அபிஷேகம் பண்ணப்பட்ட தேவரீர் புகுந்தீர் –
உம்மை என் மனசுக்கு விஷயம் ஆக்கியே நிறுத்தினீர் -என்றபடி –
இத்தைப் பார்த்தால் அத்யந்த பாபிஷ்டனான நான் எங்கே –
ஸ்ரீ விஷ்ணு லோக மணி மண்டப மார்க்க தாயீ-என்னும்படியா அப்ரதிம பிரபாவத்தை உடைய தேவரீர் எங்கே –
இது சேராச் சேர்த்தி யன்றோ –
சண்டாள வாடிகைக்குள்ளே வசிஷ்டர் புகுந்தால் போலே -இது அதிசாகாச பிரவ்ர்த்தயாய் இருக்கும் -என்றபடி –
வல் வினையேன் மனம் நீ புகுந்தாய் –
கண்டு உயரும்படி செய்ததில் திருப்தி யற்று -என் உள்ளே குடியே புகுந்து விட்டார் –
அவ்வளவு வாத்சல்யம் எம்பெருமானாருக்கு
என்னைக் கண்டு அருவருத்து அகல வேண்டியவர் அவர்
கிட்ட நெருங்க ஒட்டாத மகா பாபம் பண்ணினவன் நான் -அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ் –
அப்பாபங்கள் தடையாக வில்லை -வரவேற்க வைத்த பொருள்களாக அவை தோற்றின அவருக்கு –
அன்பு அறிவை மறைத்து விட்டது -வசிஷ்ட்ட பகவான் சேரியிலே புகுவது போலே என்னுள்ளே புகுந்து
விட்டார் அவர் -என்கிறார் –
மயர்வு அற என் மனத்தே மன்னினான் தன்னை
உயர் வினையே தரும் ஒண் சுடர்க் கற்றையை
அயர்வு இல் அமரர்கள் ஆதிக் கொழுந்தை என்
இசைவினை என் சொல்லி யான் விடு வேனோ?–-ஸ்ரீ திருவாய் மொழி-1-7-4-
மறுப்பும் ஞானமும் நான் ஓன்று உணர்ந்திலன்
மறக்கும் என்று செந்தாமரைக் கண்ணோடு
மறப்பற என்னுள்ளே மன்னினான் தன்னை
மறப்பனோ இனி யான் என் மணியை ––ஸ்ரீ திருவாய் மொழி1-10-10–
இராமானுச –
எம்பெருமானாரே –
வெள்ளைச் சுடர் –
லோபோகாரமாய் -ஸ்ரமஹரமான சந்திர தேஜச்சுக்கும்-ஒரு களங்கம் உண்டு –
அப்ராக்ருதமாய் -பகவத் கடாஷ விசேஷத்தாலே வந்தது ஆகையாலே தேவரீருடைய தேஜஸ் அப்படிப் பட்டது அன்றே –
அடியார்க்கு என்னை ஆட்படுத்த விமலன் -என்கிறபடி ஸ்ரீ ஆழ்வானை இட்டு என்னை திருத்துவித்து –
அவருக்கு சேஷ பூதனாம்படி க்ர்பை பண்ணி -அருளுகையாலே -அதி நிர்மலமாய் இருக்கும் -என்றபடி –
இப்படிப் பட்ட தேவரீர் உடைய பராபிபவன சாமர்த்தியம் ஆகிற தேஜசை –
தம்மையே தமர்க்கு நல்கும் தனிப் பெரும் சுடர்
அடியார்க்கு அடியவர் என்றதும்–ஸ்ரீ எம்பெருமானாரும்–நெஞ்சு முற்றும் வந்து விளங்கினார்.
விடும் –
லோகத்திலே மாம்பழம் இருக்கிற தோப்பை கொள்ளையாக விடும் தார்மிகரைப் போலே –
ச்வசி தாவதூத பரவாதி வைபவா -என்று கொண்டாடும்படி -ஸ்வ ஆஸ்ரிதர்க்கு முற்றூட்டாக கொடுத்து அருளுகிற –
உன் பெரு மேன்மைக்கு இழுக்கு இது என்று –
நிகமஜலதி வேலா பூர்ண சந்த்ரர் ஆகையாலே -எல்லாருக்கும்-ஒக்க பவ்யராய் இருக்கும் தேவரீர் உடைய
மகத்தான அப்ரதிம வைபவத்துக்கு அவத்யம் -என்று கொண்டு
இழுக்கு இது என்று
ஸ்ரீ பிராட்டி தன்னுடைய க்ருபையை வெளி இடுகைக்காக ராவணன் பவனம்- புகுந்தால் போலே –
அது லோகத்தாருக்கும் ஈஸ்வரனுக்கும் அசஹ்யமாய் இருந்தால் போலே –
அவரும் இவருடைய திரு உள்ளத்தில் புகுந்து நின்றால் -அது அவருடைய மேன்மைக்கு அசஹ்யமாய் –
அதுக்கு அவத்யம் விளைவிக்கும் என்று காணும் இவருடைய அத்யாவசாயம்
வெள்ளை சுடர் –இழுக்கு இது என்று –
என் சிறுமையையும் -தன் பெருமையையும் -ஒப்பிட்டு பாராதே உட் புகுந்தது அவருக்கு இழுக்காய் முடியுமே என்று பயப்படுகிறார் –
தான் மிக உயர்வது பற்றி ஸ்ரீ அமுதனார் மகிழ் உற வில்லை –
ஸ்ரீ எம்பெருமானார் பெருமைக்கு மாசு நேர்ந்து விடல் ஆகாதே என்று கலங்குகிறார் –
தான் கீழ் நிலையிலே இருந்தாலும் போதும் -மாசுணாத மேன்மை உடன் எம்பெருமானார் வாழ்ந்து கொண்டு இருப்பதே
தனக்கு தேவை என்கிறார்-அமுதனார் –
அவரது கீழ்மை கறுத்ததாம் -அதாவது மாசு படிந்ததாம் –ஸ்ரீ எம்பெருமானாரது மேன்மையோ வெளுத்ததாம் -மாசற்றதாம் –
கீழ்மை மங்கியது மேன்மை சுடர் விடுவதாயிற்று -இரண்டும் ஒரு விதத்தில் மட்டும் ஒத்து உள்ளன –
கீழ்மையும் அளவு அற்றது -மேன்மையும் அளவு அற்றது –
மேட்டில் இருந்து படு பள்ளத்தில் இறங்கினால் மாசு படியாதா –
மங்கி விடாதா -பெரு மேன்மை என்று பயப்படுகிறார் –
அறவே பாபம் அற்றவர் -மகா பாபி அகத்திலே தங்கினால் மதிப்பை இழந்து விட மாட்டாரா -என்கிறார் –
என் தனி நெஞ்சமே –
மனசிலே-ஒரு க்லேசம் உண்டானவாறே -தனக்கு ஆப்தராய் இருப்பாரோடு சொன்னால் செய்தது சரமகமாய் இருக்கும் –
அதுக்கு நமக்கு ஒரு சகாய பூதர் உண்டோ –
இப்படி பயப்படுகைக்கு தன போல்வார் ஒருவரும் இல்லாமையாலே அத்வதீயமான மனஸ் என்னவுமாம் –
இந்தப் பிரகாரமான மனச்சானது –
தள்ளுற்று இரங்கும் –
தளர்ந்து ஈடுபடா நின்றது -என்று போர நிர்வேதப்படுகிறார் –ஆய்த்து –
தள்ளுதல்-தளும்புதல் – இரங்கும் -ஈடுபாடு –
என் தனிநெஞ்சமே –
இத்தனை நாளும் நான் பண்ணின பிரதி கூல்யத்துக்கு தன்னோடு சதர்சர் இல்லை என்று இருக்கிற-
என்னுடைய மனஸ்ஸூ என்றவும் –
தள்ளுற்று -..தனி நெஞ்சமே –
அச்சத்தால் தள்ளாடிய நெஞ்சம் துணையாக -தேற்றுவார் இன்றி தத்தளிக்கிறது என்கிறார் –
இனி –
ஸ்ரீ எம்பெருமானார் தாமே வந்து வல் வினையை லஷ்யம் செய்யாது புகுந்த
நெஞ்சம் வேறு ஓன்று இன்மையின் –தனி நெஞ்சம் -என்றார் ஆகவுமம் –
இனி
தமக்கு வரும் சீர்மைக்கு மகிழாது -பிறருக்கு நேரும் இழுக்குக்காக தள்ளாடும் நெஞ்சம்-மற்று ஓன்று இன்மையின் –
தனி நெஞ்சம்-என்றார் ஆகவுமாம்
—————————————————————————
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருமலை நல்லான் சக்கரவர்த்தி ஸ்ரீ ராம கிருஷ்ண ஐயங்கார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருவரங்கத் தமுதனார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .
Leave a Reply