Archive for March, 2020

ஸ்ரீ ராமானுஜ நூற்றந்தாதி பாசுரமும்- ஸ்ரீ ஆழ்வார் பாசுரங்களும் –8-வருத்தும் புற இருள் மாற்ற-இத்யாதி —

March 24, 2020

ஸ்ரீ பெரிய ஜீயர் அருளிய உரை —அவதாரிகை —
ஆழ்வான் திருவடிகளில் சம்பந்த பலத்தை அனுசந்தித்து -இது உண்டான பின்பு
நமக்கு அசக்ய அம்சம் ஒன்றும் இல்லை -என்று சமாஹிதராய் நின்றார் கீழ் –
இனி மேல் எல்லாம் ஸ்தோத்ரம் பண்ணுகிறார் —
பொய்கை ஆழ்வார் அருளி செய்த திவ்ய பிரபந்தத்தை திரு உள்ளத்திலே வைத்து கொண்டு இருக்கும்
பெருமையை உடைய எம்பெருமானார் எங்களுக்கு நாதன் என்கிறார் –

ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் அருளிய உரை -அவதாரிகை –
இவ்வளவும் ஸ்தோத்ர உத்போகாதம் –இனி மேல் எல்லாம் ஸ்தோத்ரம் பண்ணுகிறார் –
லோகத்தாருடைய அஞ்ஞான அந்தகாரத்தை நிவர்திப்பித்து –அவர்களுக்கு ஹேய உபாதேய விவேகத்தை உண்டாக்கி –
உபகரிப்பதாக ஞான தீபத்தை எடுத்து பொய்கை ஆழ்வார் அருளிச் செய்த திவ்ய பிரபந்தத்தை –
தம்முடைய-திரு உள்ளத்திலே ஸூ பிரதிஷ்டிதமாம்படி வைத்த பெருமை உடையரான எம்பெருமானார்-நமக்கு நாதர் என்கிறார் –

ஸ்ரீ திருமலை நல்லான் சக்கரவர்த்தி ஸ்ரீ ராம கிருஷ்ண ஐயங்கார் ஸ்வாமிகள் அருளிய உரை -அமுத விருந்து —அவதாரிகை –
எம்பெருமானார் பெருமைகளில் ஆழ்வார்கள் சம்பந்தமே சிறந்து விளங்குவது ஆதலின்
அதனைப் பேச முற்பட்டு பொய்கை ஆழ்வார் அருளி செய்த திவ்ய பிரபந்தத்தை தம்
சிந்தையிலே அனுசந்தித்து கொண்டே இருக்கும் பெருமையை கூறி –
அத்தகைய எம்பெருமானார் எங்களுக்கு இறைவர் -என்கிறார் –

வருத்தும் புற இருள் மாற்ற எம் பொய்கைப் பிரான் மறையின்
குருத்தின் பொருளையும் செம்தமிழ் தன்னையும் கூட்டி ஒன்றத்
திரித்து அன்று எரித்த திரு விளக்கைத் தன் திரு உள்ளத்தே
யிருத்தும் பரமன் இராமானுசன் எம் இறையவனே -8 –

பத உரை –
வருத்தும் -வருத்தத்தை உண்டு பண்ணும்
புற இருள் -புறத்தே -வெளியே -உள்ள பொருள்களை பற்றிய அறியாமையை
மாற்ற -போக்க
எம் பொய்கை பிரான் -எங்களுடைய பொய்கை ஆழ்வார் என்னும் உபகாரகர்
மறையின் குருத்தின் -வேதாந்தனுடைய
பொருளையும் -அர்த்தத்தையும்
செம் தமிழ் தன்னையும் -செவ்விய தமிழ் சொல்லையும்
கூடி -இணைத்து
ஒன்ற -ஒன்றாய் சேரும்படியாக
திரித்து -திரியாக்கி
அன்று -திருக் கோவலூர் இடை கழியிலே நெருக்குண்ட வேளையில்
எரித்த -எறியும் படி செய்த
திரு விளக்கை -வையம் தகளியா என்று தொடங்கும் திவ்ய ப்ரபந்தம் ஆகிய திரு விளக்கை
இருத்தும் -வைத்து கொண்டு இருக்கும்
பரமன் -பெருமை வாய்ந்தவரான
இராமானுசன் -எம்பெருமானார்
எம் இறைவன் -எங்களுக்கு தலைவர் ஆவார் –

———-

பீஷ்ச்மாத்வாத பவதே பீஷோதேதி சூர்யா –இத்யாதிப் படியே -பகவத் ஆக்ஜாஅனுசாரிகளாய் இருக்கிற-வஸ்துக்களிலே
ஸ்வதந்திர புத்தியைப் பண்ணுவித்து -அவ் விஷயமான பாதகத்வ பிரதிபத்தியாலே-
சேதனரை வருந்த பண்ணுமதாய்-ப்ரத்யக்கான ஆத்மாவும் -தத் அந்தராத்மாவான ஈஸ்வரனும் –போல் அன்றிக்கே –
சஷூர் விஷயமாக கொண்டு -புறம்பே தோற்றுவிக்கிற விபூதியை விஷயீ கரித்து-இருக்கும் -அஞ்ஞான அந்தகாரத்தை போக்கும்படியாக –
பிரபன்ன குல உத்தேச்யராய் பரம உபகாரகரான பொய்கையார் –
வேதாந்தினுடைய அர்த்தத்தையும் –நடை விளங்கு தமிழான சொல்லையும் –கூட்டித் தன்னிலே சேரும் சம்பந்திப்பித்து
திரு விடை கழியிலே -சர்வேஸ்வரன் வந்து –நெருக்கின போது –
வையம் தகளியா -முதல் திரு வந்தாதி – 1-என்று தொடங்கி பிரகாசிப்பித்த-திரு விளக்கை தம்முடைய திரு உள்ளத்தில்
வைத்து கொண்டு இருக்கும் நிரதிசய பிரபாவரான-எம்பெருமானார் எங்களுக்கு நாதர் –

பொற் கால் இட்ட ஆழ்வார் அன்றோ பொய்கை ஆழ்வார் –கரும்பு -தேசிகன் -சாறு தானே மூன்று அந்தாதிகள் –
வருத்தும் இருள் -பிராவண்யம் விஷயாந்தரங்களில் விளைத்து பகவத் திரோதானம் -தமஸ்-அல் வழக்கு –
தேவதாந்த்ர -பிரயோஜனாந்தர -அல்பம் அஸ்திரம் -பகவத் அனுபவம் அநந்தம் ஸ்திரம் –

வருத்தும் புற இருள் மாற்ற –
வருத்தும் -என்கிறது இருளுக்கு விசேஷணம்-வருத்தத்தை பண்ணக்-கடவதான இருள் என்றபடி –
பகவத் ஸ்வரூப திரோதானம் -ஆயிரம் சூரியன் ஒளி பரம பதம் -அத்தை இருளாக்கும் திரு வாழி –
அத்தை இருளாக்கும் அவன் தேஜஸ் -அத்தையே மறைக்க வல்ல புற விருள் –
வருத்தும் புற இருள் –
பராக் விஷயம் காட்டும் உள்ளே உள்ளவனை மறைக்கும் –
பாஹ்ய விஷய ப்ராவண்யத்துக்கு உடலான அஞ்ஞானம் –
அது தான் லோகத்தில் வருத்தங்களைப் பண்ணக் கடவதாய் இருக்குமே
நிஷித்த விஷயங்களில்-சந்தனானவன் அவனுக்கு அவற்றை பெறும் போதும் -பெற்ற பின்பும் –
ஐஹிக ஆமுஷ்மிகங்களிலும் சில துக்கங்கள் உண்டு இறே –
ஒரு வேச்யா சந்தனானவன் –அவளுக்கு ஒரு வியாதி ப்ராப்தமாய்
பிராண சம்சயம் வந்தவாறே -இவள் பிழைத்தால் ஆகில் நான் அக்னி பிரவேசம் பண்ணுகிறேன்
என்று சூத்திர தேவதை காலில் விழுந்து -அப்படியே செய்தான் என்று லோக பிரசித்தம் இறே –
சில ஐஹிக பலங்களைக் குறித்து சூத்திர தேவதைகளை ஆராதிக்கப் போனால் –
ஆட்டை அறுத்து தா என்றும் -உன் தலையை அறுத்து தா என்றும் -செடிலாட்டம் பண்ணச் சொல்லியும் –
அதி கோரமான பூஜைகளை அபேஷிக்க -அப்படியே அவனும் பண்ணிக் கண்டு போவான் இறே –
ராவணன் தன் தலைகளை அறுத்து ருத்ரனை ஆராதித்தான் என்றும் பிரசித்தம் இறே –
ராஜாவுக்கு ஒருவன் புத்ரனைக் கொடுத்து -அந்த புத்ரனை விநாசம் பண்ணி -யாகம் பண்ண வேண்டும் என்று சொல்ல –
அந்த ராஜாவும் அப்படியே பண்ணி அபதானம் பிரசித்தம் இறே –
மோத்தூளன ஜடாதாரண மலலேபன சூராகும்பச்ஸ்தாபன நக்னத்வோர்த்த்வ பாஹூத்வாதி ரூபமான வருத்தத்தை த்ருஷ்டத்திலும்
நரக அனுபவ ரூபமான வருத்தத்தை ஆமுஷ்மிககத்திலும் -பண்ணக்-கடவதாய் இறே -பாஹ்ய விஷய
ப்ராவண்யத்துக்கு உடலான அஞ்ஞானம் இருப்பது –புற இருள் –
பிரத்யஷமான ஆத்மாவையும் -தத் அந்தர்யாமியான ஈஸ்வரனையும் போல் அன்றிக்கே –
அவ் இருவரிலும் காட்டிலும் -பாஹ்யராய் -பிரகிருதி வித்தராய் -அபரிசுத்தராய் -சர்வேஸ்வரனாலே-பிராப்தமான ஐஸ்வர்யத்தை பெற்றும் –
ரஜஸ் தமோத்ரேகத்தாலே-அத்தை மறந்தும் –அஹங்கார க்ரச்தராய் போருகிற சாமான்ய தேவதைகளை சூத்திர பலங்களுக்காக ஆராதித்தவாறே –
சாபேஷரானவர்களை யாசிக்கப் பண்ணும் அஞ்ஞான அந்தகாரம் என்னவுமாம் –

மாற்ற -அத்தை சாவசனமாக போக்குகைக்காக –

வருத்தும் புற இருள் மாற்ற –
இருள் எனபது இருட்டு போலப் பொருள்களை உள்ளவாறு அறிய ஒட்டாத அஞ்ஞானத்தை –
மேல் பாசுரத்தில் –இதயத்து இருள் -என்று இதயத்தில் உள்ள உள் பொருளைப் பற்றி பேசுவதால்
இங்கு வெளியே உள்ள கட்புலனாகும் பொருளைப் பற்றி இருளைப் –புற இருள் -என்று கொள்ளல் வேண்டும் –
பொய்கையார் எரித்த திரு விளக்குக்குப் போவது இருட்டு அன்று –
புறத்தே உள்ள பொருளைப் பற்றிய இருள் என்று தான் கொள்ளல் வேண்டும் –
அறியாமை-உள்ளே இருக்கும் ஆத்மாவினிடத்தில் உள்ளதே அன்றி -புறத்தே இருத்தற்கு உரியது ஆகாது –
இங்கனம் இதயத்து இருள் -என்னும் இடத்திலும் அறியாமை இதயத்தில் இருப்பது அன்று –
இதயத்தில் உள்ள ஜீவ பரமாத்மாக்களைப் பற்றிய அறியாமையே அது என்று கொள்ள வேண்டும் –
கொள்ளவே கண்ணுக்கு புலனாகும் அசேதனப் பொருளைப் பற்றிய அறியாமை -புற இருள் -என்றும் –
நெஞ்சு என்னும் உள் கண்ணுக்கு புலனாகும் ஜீவான்மையையும் -அதனுள் உள்ள பரமான்மாவையும்
பற்றிய அறியாமை அக இருள் -அதாவது –இதயத்து இருள்-என்றும் கூறப் பட்டது ஆகிறது –
கட்புலனாகும் கதிரவன் முதலிய பொருள்களை இறைவன் ஆணைக்கு உள்பட்டு இயங்கும்
அவையாய் இருப்பினும் -தாமாகவே இயங்கும் சுதந்திரப் பொருள்களாக கொள்வதே புற இருள் -என்க-

காற்று இறைவனுக்கு பயந்து வீசுகிறது -சூர்யன் பயந்தே உதிக்கிறான் -என்று வேதம் ஓதுகிறது –
அறியாமைக்கு உள் பட்டவர்கள் இறைவன் ஆணை இன்றிச் சுதந்திரமாக காற்று முதலிய வற்றால்
கேடு நேருவதாக கருதி வருந்துகின்றனர் –
அங்கனம் வருந்துவதற்குப் புற இருள் காரணமாய் இருத்தல்-பற்றி –வருத்தும் புற இருள் -என்கிறார் –
பொய்கை ஆழ்வார் பூமியை நெய் உடைய விளக்கின் அகலாகவும் -கடலை நெய்யாகவும் –
கதிரவனை விளக்காகவும் -தாம் கண்டு -அவற்றை இறைவனால் படைக்கப் பட்டு அவன்
ஆணைக்கு உள்பட்ட பொருள்களாக காட்டி -புற இருளை போக்கடித்து விடுகிறார் –
தகளி போலே ஒருவனால் ஆக்கப் பட்டு இருத்தல் வேண்டும் -என்று வையமும் தன்னைப் படைத்தானைக் காட்டுகிறது –

கடல் நீர் பெருக்கு வந்து சேரினும் -சேராவிடினும் -தந் நீர்மை குன்றாது இருத்தலானும் -கரை கடவாது கட்டுப் பட்டு இருத்தலானும் –
ஒருவனால் ஆக்கப் பட்டு அவன் ஆணைக்கு உள்பட்டு இருப்பது தெரிகிறது –
கதிரோன் காலம் கடவாது உதித்தளால் ஒருவன் கட்டளையை கடவாமல் இருப்பது தெரிகிறது –
விளக்கு -தன்னையும் காட்டி -பிற பொருளையும் காட்டுவது போலே
இந்த விளக்கு -தன்னைப் படைத்து ஆணைக்கு உள்படுத்திய இறைவனையும் காட்டுகிறது –
காட்டவே படைக்கப் பட்டவைகள் படைத்தவனுக்கு உரியவை -தாமாகவே இயங்கும் திறன் அற்றவை –
ஆகவே -இறைவன் ஆணை இன்றி எந்தப் பொருளும் நமக்கு கேடு பயப்பன அல்ல -என்னும் தெளிவு நமக்கு பிறக்கிறது –
பிறக்கவே எந்தப் பொருளினாலும் நேரும் கேடு பற்றி வருந்துவதற்கு இடம் இல்லாமல் போய் விடுகிறது –
இதனை சொல்லுகிறார் -வருத்தும் புற இருள் மாற்ற -என்று-

ஊனக் குரம்பையினுள் புக்கிருள் நீக்கி
ஞானச் சுடர் கொளீஇ நாடோறும் ஏனத்
துருவா யுலகிடந்த ஊழியான் பாதம்
மருவதார்க்கு உண்டாமோ வான் —முதல் திருவந்தாதி- -91-

வினை வல் இருள் என்னும் முனைகள் வெருவிப் போம்
சுனை நல் மலர் இட்டு நினைமின் நெடியானே––ஸ்ரீ திருவாய் மொழி–10-5-10-

காருணிகனான சர்வேஸ்வரன் –
அறிவிலா மனிசர் உணர்வு என்னும் சுடர் விளக்கு ஏற்றி-
பிறங்கு இருள் நீங்கி
மேல் இருந்த நந்தா வேத விளக்கை கண்டு
நல்லதும் தீயதும்-விவேகிக்கைக்கு
மறையாய் விரிந்த துளக்கமில் விளக்கில் கொளுத்தின ப்ரதீபமான-கலைகளை
நீர்மையினால் அருள் செய்தான்–-ஸ்ரீ ஆச்சார்ய ஹிருதயம்—சூர்ணிகை 1..

அறிவில்லா மனுஷர் -திருமாலை பாசுரம்
அஞ்ஞான தமோ உக்தரான சேதனர்-தமஸ்-இருளை போக்கும் பொருட்டு –
பிரகிருதி ஆத்ம விவேகம் போன்றவை இல்லாமல் –அநாதி அவித்யா -அஞ்ஞான அந்தகாரத்தாலே அபிபுத்தராய் -சம்சாரத்தில் உழன்று

உணர்வு என்னும் சுடர் விளக்கு ஏற்றி —
உணர்வு என்னும் விளக்கு ஏற்றி -என்றும்
சுடர் விளக்கு ஏற்றி என்றும் பிரித்து –

உய்த்து உணர்வு என்னும் ஒளி கொள் விளக்கு ஏற்றி வைத்து அவனை நாடி வலைப் படுத்தேன் –மெத்தெனவே
நின்றான் இருந்தான் கிடந்தான் என் நெஞ்சத்து பொன்றாமை மாயன் புகுந்து -மூன்றாம் திரு அந்தாதி -94-
பாசுரப்படி உணர்வு என்னும் ஒளி கொள் விளக்கு ஏற்றி-

அன்பே தகளியா ஆர்வமே நெய்யாக இன்புருகு சிந்தை இடு திரியா -நன்புருகி
ஞான சுடர் விளக்கு ஏற்றினேன் நாரணற்கு ஞானத் தமிழ் புரிந்த நான் -இரண்டாம் திரு அந்தாதி -1-
பாசுரப்படி– ஞான சுடர் விளக்கு ஏற்றி-

ஞானமாகிய விளக்கு தன்னையும் பர பிரகாசம் -எண்ணெய் திரி -இவற்றால் உண்டான அழுக்கு இல்லாமல்
ஞானம் ஆகிற கொழுந்து விட்டு எரியும் விளக்கு -என்றவாறு-
தினிங்கின தேஜஸ் -ஞானம் ஆகிற உத்கல தீப பிரகாசம்
ஸ்வ பர பிரகாசத்வம் -விளக்குக்கு -ஞானம் நம்மையும் பிறரையும் காட்டும் -ஸ்வ பாவ சாம்யம்

——————————

பிறங்கு இருள் நீங்கி –
தொல்லை நான் மறைகளும் மறைய பின்னும் வானவர்க்கும் முனிவர்க்கும் நல்கி பிறங்கு இருள் நிறம் கெட-
ஒரு நாள் அன்னமாய் அன்று அங்கு அருமறை பயந்தான் அரங்க மா நகர் அமர்ந்தானே –பெரிய திருமொழி-5-7-3-
பாசுரப்படி-பிறங்கு இருள் நிறம் கெட – என்றும்-

துன்னிய பேர் இருள் சூழ்ந்து உலகை மூட மன்னிய நான்மறை முற்றும் மறைந்திட பின்னிவுலகினில் பேர் இருள் நீங்க
அன்று அன்னம் தானானே அச்சோ வச்சோ அருமறை தந்தானே அச்சோ வச்சோ –பெரியாழ்வார் — 1-8-10-
பாசுரப்படி-பேர் இருள் நீங்க-என்றும்
சொல்லுகிற படியே மிகுந்த அஞ்ஞான அந்த காரம் போய்-

——————————

மேல் இருந்த நந்தா வேத விளக்கை கண்டு –

மாலிருஞ்சோலை என்னும் மலையையுடைய மலையை நாலிரு மூர்த்தி தன்னை நால் வேதக் கடல் அமுதை மேலிரும் கற்பகத்தை
வேதாந்த விழுப் பொருளின் மேல் இருந்த விளக்கை விட்டு சித்தன் விரித்தனவே -பெரிய ஆழ்வார்-4–3–11-
பாசுரப்படி -மேல் இருந்த விளக்கு -என்றும் –

நந்தா விளக்கே அளத்தற்கு அரியாய் நர நாரணனே கரு மா முகில் போல் எந்தாய் எமக்கே அருளாய் என நின்று
இமையோர் பரவும் இடம் —-நாங்கூர் மணி மாடாக கோயில் வணங்கு என் மனனே -பெரிய திருமொழி -3-8-1-
பாசுரப்படி -நந்தா விளக்கு -என்றும் –

மிக்க ஞான மூர்த்தியாய வேத விளக்கினை என் தக்க ஞானக் கண்களால் கண்டு தழுவுவனே –திருவாய் -4-7-10-
பாசுரப்படி -வேத விளக்கினை -என்றும் –

வேதாந்தங்களில்
சர்வ ஸ்மாத் பரனாக பிரகாசியா நிற்ப்பானுமாய்
நித்தியமாய்
ஸ்வயம் பிரகாசமான
ஞானத்தை ஸ்வரூபமாக உடையவனுமாய்
வேதை க சமதி கம்யனுமான தன்னை
என் தக்க ஞானக் கண்களால் கண்டு
என்கிற படியே ஞான சஷுசாலே தர்சித்து-

எம் பொய்கைப் பிரான்
பொய்கையில் அவதாரம் செய்தமை பற்றி பொய்கை ஆழ்வார் என்று பேர் பெற்றார் –
தம் ஒருவர் பொருட்டு அன்றிக்கே -தம்முடைய சம்பந்தி சம்பந்திகள் பொருட்டும்-வந்து அவதரித்தார் என்று காணும் இவருடைய அபிநிவேசம்
எம் பொய்கை –
என்னுடைய-கோடியான பிரபன்ன ஜனங்களுக்காக –காஞ்சி நகரத்திலே -பொய்கை என்னும் பேரை உடைத்தான
புண்டரீக சரஸ்சிலே – அவதரித்து -அது தன்னையே நிரூபகமான திரு நாமமாக உடையரான
அஞ்ஞான அந்தகார நிவர்த்தகமாய் -ப்ரதீபம் போலே தத்வார்த்த பிரகாசமாய் இருக்கிற
திவ்ய பிரபந்தத்தை நிர்மித்து உபகரித்த உபகாரகர் –
செம் தமிழில் -வேதாந்த பொருளை -தந்து உபகரித்தலின்-பிரான்-எனப்பட்டார் –
பிரான்-உபகாரகன்
அவ் உபகாரத்தின் பயனைத் துய்த்தலின் -பிரபன்ன குலத்தவர் அனைவரையும்
தம்மோடு சேர்த்து கொண்டு –எம் -பொய்கைப் பிரான் என்று நன்றி தோற்றக் கூறுகிறார்-

மறையின் குருத்தின் பொருளையும்
வேதாந்த அர்த்தங்களையும்-
மறை-வேதம் -அதன் குருத்து -உபநிஷதம்
மரத்தில் குருத்து போலே -வேத மரத்தில் உண்டான -குருத்து முக்கியப் பகுதியான வேதாந்தம் -என்க –
வேதத்தின் பிரிவுகள் உலகில் -சாகை -கிளைகளாகப் பேசப் படுதலின் வேதம் மரமாக உருவகம்-செய்யப் படுகிறது –
மகாதோ வேத வ்ருஷச்ய மூல பூதஸ் சநாதன-ஸ்கந்த பூதா ருகா த்யாஸ் தே சாகாபூதாஸ் ததாபரே -கீதை -15 1- – என்று
கிருத யுக வேதம்-பிரிவு படாத ஒரே வேதம் ஆதலின் பெரிய மரமாகவும் -கிருத யுக தர்மத்தை கூறும் பகுதி மூலமாகவும் –
அதாவது -வேராகவும்-ருக் முதலானவை அடித் தண்டாகவும் –
மற்றவை கிளைகளாகவும் -கூறப் படுவதும் இங்கு நினைவுறத் தக்கது –

செந்தமிழ் தன்னையும் –
இவருடைய பிரபந்தத்துக்கு செம்மையாவது -தத்வ ஹித புருஷார்த்தங்களை-அடைவே பிரதிபாதிக்கும் அளவில்
ஆதி மத்திய அவசானங்களிலே ஏக ரூபமாய் இருக்கை –
தமிழ் தன்னையும் -திராவிட ரூபமான திவ்ய ப்ரபந்தம் தன்னையும்-கூட்டி -வேதாந்த அர்த்தங்களையும் –
நடை விளங்கு தமிழான சொல்லையும் தன்னிலே சேரும்படி சந்தர்ப்பமாக்கி-
செம்மையான தமிழ் –
தமிழுக்கு செம்மையாவது -எளிதில் பொருள் விளங்கும் படி யாய் இருத்தல் –
மறையின் குருத்தின் பொருளையும் -செம் தமிழ் தன்னையும் -ஒன்றாய் இணைத்து –திரியாக்கி எடுத்ததாகக் கூறுவதின் கருத்து –
வடமொழி வேதத்தின் பொருள் வேறு மொழியினால் பேசப்படுகிறது என்று தோற்றாமல்-
முதல் திருவந்தாதி -என்னும் செம்தமிழ் வடிவமாகவே வேதம் அமைந்து இருக்கிறது என்று தோன்றுகிறது என்னவுமாம் –

ஒன்றத் திரித்து
அவ் இரண்டையும் ஒன்றுக்கு ஓன்று சேரும்படி ஒப்புவித்து-
பூதத் தாழ்வார் தம் விளக்குக்கு திரியாக சிந்தையை உருவகம் செய்தது போலே
பொய்கை ஆழ்வார் திரியாக எதையும் உருவகம் செய்ய வில்லை –
அமுதனார் மறைக் குருத்தின் பொருளையும் செம் தமிழையும் ஒன்றாய் திரியாகத் திரித்து –
அவ் விளக்குக்குத் திரியை உபயோகப் படுத்தினதாக நயம் படக் கூறுகிறார் –

அன்று –
திருக் கோவலூரிலே-ஒரு ராத்திரி அந்தகாரத்திலே முதல் ஆழ்வார்கள் மூவரும் வந்து –
அதி சங்குசிதமான ஒரு திரு இடை கழியிலே-ஒருவரை ஒருவர் அறியாமல் நிற்க –
இவர்களை சம்ச்லேஷிக்கைக்காக -ஆயனார் வந்து மூவர் நடுவிலும் புகுந்து-அவர்களை நெருக்கின சமயத்திலே

எரித்த திரு விளக்கை
வையம் தகளியாய் வார்கடலே நெய்யாக வெய்ய கதிரோன் விளக்காக -என்று
சதுர்தச புவநாத்மகமான லோகம் எல்லாம் தகளியாகப் பண்ணியும் –
ஜல தத்தவத்தை எல்லாம் ஒருபடியாக கொண்ட சப்த சமுத்ரங்களை நெய்யாகப் பண்ணியும்
தீஷன கிரணனான சூர்யனை விளக்காக சேர்த்தும்
லோகத்தில் இருந்த பதார்த்தங்கள் என்றும் பிறி கதிர் படாதபடி எல்லாவற்றையும் பிரகாசிக்கும் படி
இட்டு அருளின திவ்ய பிரபந்த ரூப தீபத்தை என்றபடி –

தம் திரு உள்ளத்தே இருத்தும் –
அத் தீபத்தை சிநேக நிர்பரமான தம்முடைய திரு உள்ளத்திலே-ஸ்தாவர பிரதிஷ்டையாம்படி நிறுத்த வல்ல

பரமன் –
என்று சொல்லப்படும் படி பெருமை உடையரான இராமானுசன் -எம் பெருமானார்
எம் இறைவனே
எம் நாதனே -ஸ்வாமி என்றபடி-

தம் உள்ளத்தே இருத்தும் பரன் –
கண்ணன் மனோவிருத்திக்கு விஷயமாய் இருந்து கொண்டு தன்னைப் பற்றிய ஞானம் ஆகிற ஒளிரும் விளக்கினால்
அஞ்ஞானம் என்னும் கர்மத்தால் விளைந்த இருளைப்-போக்கடிப்பதாக கீதையில் – 10-11 கூறுகிறான் –
அஹம் அஞ்ஞானம் தம நாசயாம் யாத்மா பாவச்த்த-ஞாநதீபேன- பாஸ்வதா -என்பது கீதை
எம்பெருமானார் பொய்கை ஆழ்வார் ஏற்றின திவ்ய ப்ரபந்தம் என்னும் பிரகாசிக்கும் விளக்கை
அணையாதபடி தன் அகத்தே வைத்து -மற்றவர்க்கும் அந்நிலையை உண்டாக்கி இருளைக் கடிகிறார்-

தன் திரு உள்ளத்தே -என்னாது -தம் -என்று பன்மையில் கூறினமையால்
தம்மை சேர்ந்தவர்களுடைய திரு உள்ளத்திலும் இருத்தினமை புலனாகிறது –
ஆகவே இருளைப் போக்கும் குருவாதலின்-எம்பெருமானாரை-பரமன் -என்கிறார் –
குருரேவ பரம் பிரம -குருவே பரம் பொருள் -என்றபடி -எம்பெருமானாரே பரமனாயினார் -என்க –
எம் இறைவன் –
தம்மைப் போன்ற சரம பர்வ நிஷ்டர்களையும் சேர்த்து -எங்களுக்கு இறையவன் -என்கிறார் –

—————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருமலை நல்லான் சக்கரவர்த்தி ஸ்ரீ ராம கிருஷ்ண ஐயங்கார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருவரங்கத் தமுதனார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

ஸ்ரீ திரு நாராயண புரம் -ஸ்ரீ மேல் கோட்டை -ஸ்ரீ யாதவ கிரி மஹாத்ம்யம் -/ ஸ்ரீ யாதவகிரியில் ஸ்ரீ உடையவர் கைங்கர்யமான ஜீரண உத்தாரணம்- /ஸ்ரீ யதிகிரீச ஸூப்ரபாதம் —

March 23, 2020

ஸ்ரீ ராமானுஜர் அபிமானித்து ஒரு நாயகமாய் -பாசுரம் இதில் சமர்ப்பித்து அருளினார் –

ஒரு நாயகமாய் ஓட உலகு உடன் ஆண்டவர்
கரு நாய் கவர்ந்த காலர் சிதைகிய பானையர்
பெரு நாடு காண இம்மையிலே பிச்சை தாம் கொள்வர்
திரு நாரணன் தாள் காலம் பெறச் சிந்தித்துய்ம்மினோ.–4-1-1-

செல்வ நாரணன் என்ற சொல் கேட்டலும்
மல்கும் கண் பனி நாடுவன் மாயமே
அல்லும் நன் பகலும் இடைவீடு இன்றி
நல்கி என்னை விடான் நம்பி நம்பியே–1-10-8-

எண் பெருக்கு அந் நலத்து, ஒண் பொருள் ஈறு இல
வண் புகழ் நாரணன், திண் கழல் சேரே-1-2-10-

சூழ் விசும்பு அணி முகில் தூரியம் முழக்கின
ஆழ்கடல் அலைதிரைக் கை எடுத்து ஆடின
ஏழ் பொழிலும் வளம் ஏந்திய என் அப்பன்
வாழ் புகழ் நாரணன் தாமரைக் கண்டு உகந்தே ––10-9-1-

*வண்புகழ் நாரணன் :- ஸ்நபனபேரர், (திரு நாராயண பகவான் பக்கத்தில்) நித்ய திருமஞ்ஜனம் கண்டருளிகிறார்.
*வாழ் புகழ் நாரணன், பலி செல்வர், செல்வப் பிள்ளை ஸந்நிதியில் ஸேவை ஸாதிக்கிறார்.
பகவத் ராமானுஜர் விரும்பி பல வருஷங்கள் வாசம் செய்த தலம் மேல்கோட்டை.
மேலும் இத்தல மூலவரும் உற்சவ மூர்த்தியும் அவர் திருக்கரங்களினாலேயே பிரதிஷ்டை செய்யப்பட்ட சிறப்பு உடையது.
அவர் சரம உபதேசத்திலும் இங்கே குடில் கட்டி நித்ய வாசம் செய்து படிப்படியாக வளர உபதேசித்து அருளினார் –
மூலவர் திரு நாரணன் ஒரு கரத்தில் அபய முத்திரையுடன், மற்ற மூன்று கரங்களில்
சங்கு, சக்கரம், மற்றும் கதையை ஏந்தியும் காட்சியளிக்கின்றார்

நம்மாழ்வாரின் திருவாய்மொழியில்
செல்வ நாரணன், திருநாரணன். வண் புகழ் நாரணன், வாழ் புகழ் நாரணன் என்று நான்கு திருநாமங்களையும் அனுபவிக்கலாம்.

கோயில் எனப்படும் திருவரங்கமும், திருமலை என்கிற திருப்பதியும், பெருமாள் கோயில் எனப் போற்றப்பெறும் காஞ்சிபுரமும்,
மேல்கோட்டை என அழைக்கப்பட்டு வரும் திருநாராயணபுரமும் வைணவச் சிறப்புடைய தலங்களாகும்.
தக்ஷிண பத்ரி என்று கொண்டாடப்படுகிறது -தல வ்ருஷம் -இலந்தை

பங்குனி மாதம் புஷ்ய (பூச) விழா
இராமன் முடிசூட்டு விழாவைக் காண தசரதருக்குக் கிடைக்காத பேறு இராமானுஜருக்கு கிடைத்தது.
வைர முடி சேவை பங்குனி மாதம் புஷ்ய (பூச) நக்ஷத்ரத்தில் மிக விமர்சையாக அனுஷ்டிக்கப்படுகிறது.
பக்தர்கள் பல்வேறு இடங்களிலிருந்து வருகின்றனர். இதைத் தவிர ராஜமுடி, (க்ருஷ்ண ராஜமுடி) சேவையும் கொண்டாடப்படுகிறது.

முதலில் கருடாழ்வார் கோயிலைச் சுற்றி வலம் வருகின்றார்.
பிறகு வைரமுடி பல்லக்கில் ஏற்றப்பட்டு கோயிலைச் சுற்றி வருகின்றது.
இந்த வைரமுடி கிரீடத்தை மாண்டயா கஜானாவிலிருந்து சகல மரியாதையுடன் கலெக்டர் கொண்டு வருவார்.
வருடத்துக்கு ஒரு முறை மட்டுமே இந்த கிரீடம் பெருமாளுக்கு அணிவிக்கப்படுகிறது.
கருடன் கொண்டு வந்த அற்புத வைரமுடியை அணிந்து கொண்டு பல்லக்கில் வெளியே வருகிறார் சம்பத குமாரர்.
தாயார்களுடன் கருட சேவை சாதிப்பது இங்கு ஒரு தனி சிறப்பு.

மேல்கோட்டை இந்தியாவின் கர்நாடகம் மாநிலத்தில் அமைந்துள்ள மாண்டியா மாவட்டத்தில்
பாண்டவபுரா தாலுக்காவில் இருக்கும் ஒரு கிராமம் ஆகும்.

பன்னிரண்டாம் நூற்றாண்டு முற்பகுதியில் சோழர்கள் ஆட்சியில் வைணவ மகாசாரியர் ஸ்ரீ இராமானுசர்
இங்கு பன்னிரண்டு வருடம் தங்கியிருந்துள்ளார். அவரின் முயற்சியால் மண்ணில் புதையுண்ட
செல்லப்பிள்ளை (கன்னடத்தில் செலுவ நாராயணா) கோயில் அடையாளங் காணப்பட்டு ஹொய்சாள அரசன்
விஷ்ணுவர்த்தன் என்பவன் உதவியோடு நிர்மாணம் செய்து “திருநாராயணபுரம்” என அழைக்கும்படி அருளினார்.
ஊரின் உள்ளே நுழையும்போதே அழகிய சிறு குன்றும் அதன் மேல் ஒரு கோட்டை கோவிலும்,
குன்றின் அடிவாரத்தில் சகல பாவங்களை தீர்க்கும் கல்யாணி புஷ்கரணியும் காணப்படுகிறது.
அந்த குன்றின் மேல் கோட்டை கோவிலில் நரசிம்ஹ பெருமாள்.

அச்சமயம் தொலைந்ததாக சொல்லப்பட்ட இக்கோவிலின் உற்சவமூர்த்தி,டெல்லியை ஆண்டு வந்த முகலாய அரசரின்
அரண்மனையில் இருப்பது தெரிந்து அங்கு சென்று பார்க்க,
பெருமாளை அந்த அரசரின் மகள் வைத்து விளையாடிக்கொண்டிருப்பது தெரிந்தது.
ராமனுஜர் அந்தப்பெண்னிடம் பெருமாளை தரும்படி கேட்க அவள் கொடுக்க மறுத்து விட்டாள்.
உடனே ராமனுஜர் பெருமாளை பார்த்து “ செல்லப்பிள்ளை வா” என்று அழைக்க பெருமாளும்,
“சல்! சல்!” என கொலுசு ஒசை படுத்த நடந்து ராமானுஜரிடம் வந்ததாக சொல்லப்படுகிறது.
பெருமாளை பிரிந்து இருக்க முடியாத அந்தப் பெண்னும் அவருடனே மேலக் கோட்டைக்கு வந்து விட்டதகவும்
அவர் அதன் பின்னர் துலுக்க நாச்சியார் என்று அழைக்கப்பட்டதாகவும் சொல்லப்படுகிறது..
இராமானுஜர் சந்நிதிக்கு முன்னாள் உற்சவமூர்த்தியை நாச்சியாருடன் எழுந்தருளச் செய்து வைரமுடி அணிவித்து
விழா கொண்டாடுகின்றனர். இராமன் முடிசூட்டு விழாவைக் காண தசரதருக்குக் கிடைக்காத பேறு இராமானுஜருக்கு கிடைத்தது.

கூப்பிட்ட குரலுக்கு ஓடி வந்த கோவிந்தனின் இந்த செய்கை “யதிராஜ சம்பத்குமார வைபவம்’ என்ற பெயரில்
உற்சவமாக உடையவரின் அவதாரத் தலமான ஸ்ரீபெரும்புதூரில் இன்றைக்கும் கொண்டாடப் படுகின்றது).
செல்லப்பிள்ளை, சம்பத்குமார், ராமப்பிரியர் என்று பெயர்கள் கொண்டு வாத்சல்யத்துடன் அழைக்கப்படும் இந்த விக்ரகத்தின் திருமேனி.

திருநாராயணபுரத்தில் தனிச்சந்நிதி கொண்டிருக்கும் தாயாரின் திருநாமம் யதுகிரி நாச்சியார் கருவறையில்
மூலவர் பாதத்தின் கீழ் பூமிதேவி, வரநந்தினி நாச்சியார் சிலா திருமேனிகள் அலங்கரிக்கின்றன.

வைர முடி சேவை பங்குனி மாதம் மிக விமர்சையாகக் கொண்டாடப்படுகிறது
பிரஹலாதனின் மகன் விரோதசனன் பாற் கடலுக்குச் சென்று வைரமுடியை கொண்டு வந்து பாதாள லோகத்தில்
மறைத்து வைத்து விடுகிறான். கருடன் அதை மீட்டுக் கொண்டு வரும் போது கண்ணனின் வேய்ங்குழல் நாதம் கேட்டு
அவனுக்கு அணிவித்து விடுகிறார்.
கிருஷ்ணன் அதைப் பிறகு இந்த உற்சவ மூர்த்திக்கு அணிவித்து விடுகிறான்.
கலியுகத்தில் அதை வருடத்தில் ஒருநாள் பங்குனி உத்திரத்தன்று அணிவித்து அழகு பார்க்கிறார்கள்.
கருடனுக்கு வைநதேயன் என்றொரு பெயர் உண்டு. இந்த முடி பெரிய திருவடியின் பெயரால் வைநமுடி என்று வழங்கப்பட்டுப்
பின்னாளில் வைரமுடி என்று மருவியதாகவும் ஐதீகம்.
அந்த கருடன் கொண்டு வந்த வைர முடியில் கருடனில் பெருமாள் பங்குனி மாதம் புஸ்ய நட்சத்திரத்தன்று சேவை சாதிப்பதே
மேல்கோட்டை வைர முடி சேவை என்று சிறப்பித்து கூறப்படுகின்றது.

திருநாராயணபுரத்தின் வேறுபெயர்கள் பத்மகூடா, புஷ்கரா, புத்மசேகரா ,அனந்தமாயா , யாதவகிரி,
நாராயணாத்ரி, வேதாத்ரி , வித்யா (ஞான) மண்டல், தக்ஷிணபத்ரி,
யதி(து)ஶைலம், என்று பல பெயர்களில் அழைக்கப்பட்டுள்ளது.

மேல்கோட்டைக்கு செல்ல முடியாதவர்கள் அதே போன்ற வைரமுடி சேவை நடத்தப்படும் சென்னையில்
மயிலை மாதவப்பெருமாள் ஆலயம், பாரிமுனை வரதாமுத்தியப்பன் தெருவில் உள்ள வரதராஜபெருமாள் ஆலயம்,
அயனாவரம் செல்லப்பிள்ளை ராயர் கோயில், பள்ளிக்கரணை ஜல்லடம்பேட்டையில் உள்ள முத்து திருநாராயணன் கோயில்
போன்ற இடங்களில் தரிசிக்கும் பேற்றினைப் பெறலாம்.

திருநாராயணபுரத்தின் சிறப்புகள்
புராணங்களில் மேல் கோட்டை–1. பத்மகூடா, 2. புஷ்கரா, 3. புத்மசேகரா ,4.அனந்தமாயா , 5. யாதவகிரி,
6. நாராயணாத்ரி, 7. வேதாத்ரி ,8. வித்யா (ஞான) மண்டல், 9. தக்ஷிணபத்ரி என்று பல பெயர்களில் அழைக்கப்பட்டுள்ளது.
யதுகிரி பர்வதத்தில் அமைந்துள்ள இத்தலம் ஒரு மலை வாசஸ்தலம்.
இத்தலத்தில் இரண்டு முக்கிய கோயில்கள்., பல மடங்கள், புனித தீர்த்தங்கள், மற்றும் பல தர்ம சாலைகளும் உள்ளன.

பெருமாள் தம் கருணையினால் அர்ச்சா ரூபமாக எழுந்தருளி அருள் பாலிக்கும் நான்கு திருத்தலங்கள்
தென்னிந்தியாவில் நாற்கோணமாக அமைந்துள்ளன அவையாவன

1. தெற்கு திசை ஸ்ரீரங்கம்-(தமிழ்நாடு) ஸ்ரீ ரங்கநாதன்.
2. கிழக்கு திசை – காஞ்சீபுரம், ஸ்ரீ வரதராஜன்.
3. வடதிசை-திருப்பதி (ஆந்திரா) திருவேங்கடவவன்.
4. மேற்கு திசை-மேல் கோட்டை- திருநாராயணபுரம்.

தலம்-நான்கு யுக ப்ரஸித்தி

இவ்வளவு சிறப்புப் பெற்ற இந்த திவ்யஸ்தலம் திருநாராயணபுரம் நான்கு யுகங்களும் ப்ரஸித்தி பெற்றது.
க்ருத யுகத்தில் ஸநத்குமாரரால் நாராணாத்ரி என்றும்,
த்ரேதா யுகத்தில் தத்தாத்ரேயரால் வேதாத்ரி என்றும்
த்வாபர யுகத்தில் ஸ்ரீபலராமன் கிருஷ்ணரால் யாதவாத்ரி என்றும் வழங்கப்பட்டது.
இக்கலியுகத்தில் யதிராஜரால் யதிஸ்தலமென்றும் வழங்கப்படுகிறது.

தலம்–மண்டபம்
மேலும் ஸ்ரீரங்கத்தை போக மண்டபமென்றும்,
திருமலையை புஷ்ப மண்டபமென்றும்
பெருமாள் கோயிலை தியாக மண்டபமென்றும்
திருநாராயணபுரத்தை – ஞான மண்டபமென்றும் பெரியோர்கள் கூறுவர்.

தலம்–அழகு
மேலும் “நடை அழகு” ஸ்ரீரங்கம் எம்பெருமானுக்கு ப்ரஸித்தம்.
திருவேங்கடமுடையான் அமுது செய்யும் ப்ரஸாதங்களில் “வடை” ப்ரஸித்தம்.
பெருமாள் கோயிலில் பேரருளாளனுக்கு ஸமர்ப்பிக்கப்படும் ” குடை” மிகப் பெரியது.
திருநாராயணனுக்கே “முடி” (கிரீடம்) உரிய அழகுப் பொருத்தமாக விளங்குகிறது.

தலங்களில்_அழகு….

அரங்கனுக்கு_நடையழகு….-ஸ்ரீரங்கம் ஸ்ரீரங்கநாதரின் நடையழகு சேவை….

வரதனுக்கு_குடையழகு… காஞ்சி வரதராஜப் பெருமாளின் திருக்குடை…–கொடை அழகு என்றுமாம் –பேர் அருளாளன் அன்றோ –

அழகருக்கு_படையழகு….-கள்ளழகருடன் மதுரைக்கு வரும் படை….

மன்னாருக்கு_தொடையழகு… ஸ்ரீவில்லிப்புத்தூர் ரங்கமன்னாருக்கு ஆண்டாள் சூடிக்கொடுக்கும் மாலை….(தொடை_மாலை)

அமுதனுக்கு_கிடையழகு–குடந்தை ஆராவமுதன் பள்ளிகொண்ட(கிடை)திருக்கோலம்..

நாரணர்க்கு_முடியழகு.. திருநாராயணபுரத்து செல்லப்பிள்ளையின் வைரமுடி சேவை…

திருமலையான்_வடிவழகு… திருப்பதி வேங்கடவனின் தோற்றம் அதியற்புத அழகு–வடை அழகு என்பர்

சாரதிக்கு_உடையழகு…. திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாளின் ரதசாரதி உடையலங்காரம் அழகு…

இந்த ராமாநுஜரின் அபிமான ஸ்தலத்தில் இரண்டு திருக்கோவில்கள்
மலை மேல் கோட்டையில் அமைந்துள்ளன அவை நரசிம்மர் ஆலயம், இரண்டாவது நாராயணர் ஆலயம்.
நாராயணர் ஆலயத்தில் மூலவர் :- திருநாராயணன், -சங்க சக்ர, கதை, முதலியவைகளுடன் நின்ற திருக்கோலம்,
மேற்கே திருமுக மண்டலம், சரணங்களில் பீபீ நாச்சியார் (வெள்ளி கவசத்துடன்) சரணங்களில் வணங்கிய முடி.

உத்ஸவர் :- ஸம்பத்குமாரர்,
இதர பெயர்கள் – ராம ப்ரியர், செல்வ பிள்ளை, செல்வ நாராயணன்.
தாயார்– யதுகிரி நாச்சியார், மேலும் பூமி தேவி, வரநந்தினி நாச்சியார்.
தீர்த்தம்– கல்யாணி தீர்த்தம், வேத புஷ்கரிணி, தனுஷ் கோடி தீர்த்தம், முதலிய 8 தீர்த்தங்கள்.
விமானம்– ஆனந்தமய விமானம்
இத்த்லத்தில் எழுந்தருளியிருக்கும் இதர மூர்த்திகள் :

வைர முடி சேவை
அன்றைய நாளில் கருடன் கொணர்ந்த வைரத்தாலான கிரீடம் செல்லப் பிள்ளைக்கு சாற்றப்பட்டு,
தங்கத்தாலான கருடன் மீது மாட வீதிகளில் உபய நாச்சிமார்களுடன் எழுந்தருள செய்யப்படுகிறது.
வைர முடியை பகலில் காண இயலாது என்ற நம்பிக்கையின் கண் இவ் வைர முடி சேவை இப்போதும்
இரவுப் பொழுதிலே தொடங்கி விடியும் முன் முடிக்கப்பட்டுவிடுகிறது.
மேலும் வைரமுடி சாற்றும் போதும் பிரதான அர்ச்சகர் தன் கண்களை மெல்லிய துணியால் கட்டிய பின்னரே வைரமுடியை
அதற்குண்டான பெட்டியிலிருந்து வெளியில் எடுக்கிறார்.

கருடனுக்கு வைநதேயன் என்ற பெயரும் உண்டு.
எனவே கருடனால் கொணரப்பட்டது “வைநதேய முடி” என்றழைக்கப்பட்டு,
“வைநமுடி” என சுருங்கி பின்னர் “வைரமுடி” என மருவியுள்ளது.

இந்த புஷ்கரணி சகல பாபங்களையும் நீக்க வலிமையுள்ளது. அதனால் அதன் நீரை தலையில் சிறிது தெளித்துக் கொண்டு
அதை சுற்றியுள்ள மணடபங்களையும் அதில் காணப்படும் சிற்பங்களையும் பார்த்து ரசித்து விட்டு
அங்கு அந்த குன்றின் மேல் உள்ள யோக நரசிம்மர் கோவிலுக்கு செல்லலாம்–

கிருமி கண்ட சோழன் என்ற அரசன் சைவ மதப்பற்றினால் ராமானுஜருக்கு பல தொல்லைகள் கொடுத்தான்.
இதனால் கூரத்தழ்வாரின் ஆலோசனைப்படி இராமானுஜர் வெள்ளை சாத்தி, தமிழ்நாட்டைவிட்டு கர்நாடக தேசத்துக்கு வந்தார்.
அப்போது ஜைன மதத்தை ஆதரித்து வந்த விட்டல தேவராயன் என்ற மன்னன் இந்த இடத்தை ஆண்டு வந்தான்.
அவனது மகளுக்கு சித்தபிரம்மை பிடித்திருந்தது. அதனை நீக்க ஜைனத் துறவிகளால் முடியாமல் போக, ராமானுஜர் உதவியால் அது நீங்கியது.
இதைக் கண்ட பிட்டிதேவன் ஜைன மதத்தைத் துறந்து, ஸ்ரீவைஷ்ணவன் ஆனான்.
ராமானுஜர் அவனுக்கு விஷ்ணு வர்தனன் என்ற பெயரைச் சூட்டினார்.
இந்த மன்னன் மேல்கோட்டை கோயிலுக்குப் பல உதவிகள் செய்துள்ளான். உதயகிரி மலையில் திருக்கோவிலைக் கட்டியவன் இவனே.

திருமண்
மேல்கோட்டையிலிருந்து 20 கிமீ தூரத்தில் இருக்கும் தொண்டனூர் ஏரி ராமானுஜர் ஏற்படுத்தியது.
அவர் தொண்டனூரில் வசித்து வந்த போது அவரது நெற்றியில் அணியும் திருமண் தீர்ந்துவிட,
அன்று இரவு அவர் கனவில் பெருமாள் தோன்றி, திருநாராயணபுரத்துக்கு செல்லும் வழியைச் சொல்லி
அங்கு ஒரு புற்றில் இருக்கிறேன் என்றும் தன்னை வெளியே கொண்டு வரவேண்டும் என்று கூறினார்.
ராமானுஜர் திருநாராயண புரத்துக்கு அங்கு வேதபுஷ்கரணியில் குளித்து விட்டு திருமண் அணிந்துக் கொண்டு,
கல்யாணி குளத்துக்கு பக்கத்தில் இருந்த எரும்புப் புற்றை, ஊர் மக்கள் உதவியுடன் பால், மற்றும் தீர்த்தத்தைக் கொண்டு கரைத்தார்.
திருநாராயணர் திவ்ய மங்கள விக்ரஹத்தை ராமானுஜர் பிரதிஷ்டை செய்தார். ராமானுஜருக்கு இங்கே திருமண் கிடைத்தால்
இன்றும் மேல்கோட்டையில் திருமண் விஷேசமாக விற்கப்படுகிறது.

திருக்குலத்தார்
ஒருமுறை உற்சவ மூர்த்தியான செல்லப்பிள்ளையை தில்லி முகலாய மன்னனிடமிருந்து ஸ்ரீ இராமானுசர் மீட்டுக் கொண்டு வரும் வழியில்
எதிர்ப்பட்ட கள்ளர் கூட்டத்திடமிருந்து இப்பகுதியை சேர்ந்த தாழ்த்தப்பட்ட மக்கள் போராடி
உற்சவ மூர்த்தியையும் ஸ்ரீ இராமானுசரையும் காத்தனர்.
இதற்கு நன்றி நவிலும் வண்ணம் இராமானுசரின் ஆணைக்கிணங்க, இன்றும் தேர்த் திருவிழாவின் அடுத்த நாளிலிருந்து
மூன்று நாட்கள் “திருக்குலத்தார் உற்சவம்” மிகப் பிரம்மாண்டமாய் கொண்டாடப்பட்டு வருகிறது.

இங்கிருக்கும் கல்யாணி தீர்த்தம் எனும் அழகிய குளம் பழமையான மண்டபங்கள் சூழ அழகுடன் காட்சித் தருகிறது.
திருத்தொண்டனூர், ஸ்ரீரங்கப்பட்டினம் ஆகியன அருகில் இருக்கும் வைணவத் தலங்களாகும்.
ஈஸ்வர சம்ஹிதையின்படி, பகவான் தனது வராஹ அவதாரத்தில் பூமியை பிரபஞ்சக் கடலில் இருந்து தூக்கியபோது,
அவரது உடலிலிருந்து சிதறிய நீர்த் துளிகளிலிருந்து கல்யாணி குளம் உருவானது.
மத்ஸ்ய புராணத்திலிருந்து, பகவான் விஷ்ணுவின் சேவகரான கருடன், இப்பிரபஞ்சத்தினுள் உள்ள விஷ்ணுவின்
திருத்தலமான ஸ்வேத-தீபத்திலிருந்து வெள்ளை நிற களிமண்ணைக் கொண்டு வந்து இக்குளத்தை வடிவமைத்தார்

இந்த கிராமத்தில் உள்ள ஊரின் தெரு முழுக்க தமிழ் மணம். அக்ரஹாரத்தின் பெரும்பாலான வீடுகளில் பெயர்ப் பலகைகள்,
“ஸ்ரீரங்கம் ராகவாச்சாரி, ஸ்ரீரங்கம் சீனிவாச அய்யங்கார்” என்று ஸ்ரீரங்கம் என்று ஊரின் பெயரும்
பலரது வீட்டில் தமிழிலேயே இன்றும் எழுதப்பட்டிருக்கிறது.
சோழர்கள் காலத்தில் ஸ்ரீரங்கத்தில் இருந்து பல குடும்பங்கள் இடம் பெயர்ந்தன. அவற்றில் ஐம்பதுக்கும் மேற்பட்ட
குடும்பங்கள் மேல்கோட்டைக்கு வந்தன.

இங்குள்ள கல்யாணி தீர்த்தத்திலிருந்து 400 படிகள் ஏறினால் மலைக்கோட்டை யோகநரசிம்மரைத் தரிசிக்கலாம்.
இவரது சன்னதிக்குச் செல்ல ஒன்பது படிக்கட்டுகள் உள்ளன.
யோகநரசிம்மரின் கட்டளைப்படி நவக்கிரகங்கள் இங்குப் படிகளாக இருப்பதாக ஐதீகம்.
நரசிம்மரைத் தரிசித்தவர்க்கு கிரகதோசம் அனைத்தும் நீங்கிவிடும் என்பது ஐதீகம்.
மலையில் இராமானுசரின் பாதம் உள்ளது.
இங்குள்ள கல்யாணி தீர்த்தம், வராக அவதாரத்தின் போது உருவானது.
மாசிமாதத்தில் கங்கை இந்தத் தீர்த்தத்துக்கு வருவதாக ஐதீகம்.
தீர்த்தக்கரையில் பிந்துமாதவன், நாராயணன், இலட்சுமிநரசிம்மர், மாருதி சன்னதிகள் உள்ளன.

இங்குள்ள நரசிம்மரின் விக்ரஹம் மாமன்னர் பிரஹலாதரால் பிரதிஷ்டை செய்யப்பட்டது என்பதை நாரதீய புராணத்தின்படி அறியலாம்
இவ்விடத்தில் தவம் புரிந்து வந்த விஷ்ணு சித்தன் என்ற துறவியைக் காணவந்த பிரஹலாதர் நரசிம்மரை இங்கு பிரதிஷ்டை செய்துள்ளார்.

—————

ஸ்ரீ யாதவ கிரி மஹாத்ம்யம் –

ஸ்ரீ யபதியாய்-அவாப்த ஸமஸ்த காமனாய்-ஸமஸ்த கல்யாண குணாத்மகனாய் -சர்வேஸ்வரனாய் உள்ள ஸ்ரீமந் நாராயணன்
வைகுண்டேது பரே லோகே ஸ்ரியா சார்த்தம் ஜகத் பதி ஆஸ்தே விஷ்ணுர் அசிந்த்யாத்ம பக்தைர் பாகவத ஸஹ-என்னும்படி
ஸ்ரீ வைகுண்ட லோகத்தில் அனந்த வைனதேயாதி நித்யர்களாலும் முக்தர்களாலும் சேவிதனாய் இருந்தாலும்
அண்டாந்தர வர்த்திகளான ப்ரஹ்மாதிகளுக்கும் வாங் மனஸ்ஸூ களுக்கு அகோசரனாய் இருக்கிற படியால்
இந்த பூமியில் வாழும் மனுஷ்யாதிகளும் தன்னை சேவித்து க்ருதார்த்தர்களாக வேண்டும் என்று தனது பரம கிருபையால்
ராம கிருஷ்ணாதி விபவ அவதாரங்களைச் செய்தாலும்
அவஜாநந்தி மாம் மூடா மானுஷீம் தனும் ஆஸ்ரிதம் -என்கிறபடியே அந்த ஸூலபன் விஷயத்திலும் பக்தி செய்யாது இருக்க
நம்மை எல்லாம் வசமாக்கிக் கொள்ளுகைக்காகப் பின்னானார் வணங்கும் சோதியான அர்ச்சாவதாரத்தை ஸ்வீ கரித்து-
இந்த ஸ்ரீ யாதவாத்ரி -மேல்கோட்டை திவ்ய தேசத்தில்
உடையவருடைய மங்களா சாசனத்தால் மிகவும் உகந்து இருந்து-செல்வ நாரணன் என்றும் திரு நாரணன் என்றும்
பெயர் பெற்று பிரகாசித்துக் கொண்டு இருக்கின்றான் –
இதனால் திரு நாராயண புரம் என்னும் திவ்ய நாமம் இந்த திவ்ய தேசத்துக்கு பிராப்தம் ஆயிற்று –

வரலாற்றின் தோற்றுவாய்
பூர்வம் கலியுக ஆரம்பத்தில் வியாஸாதி மஹரிஷிகள் எல்லாரும் வடபத்ரிக்குச் சென்று
கலி பிரவேசம் இல்லாத க்ஷேத்ரம் எது என்று நாராயண ரிஷியைக் கேட்கச்
சுருக்கமாக அவராலே சொல்லப்பட்ட யாதவ கிரி மஹாத்ம்யத்தைக் கேட்டு
அதை விஸ்தாரமாகச் சொல்ல வேண்டும் என்று பிரார்த்தித்தார்கள் –
அதற்கு நாராயண ரிஷி -நாரதர் வருவார் -அவர் அதை விஸ்தாரமாகச் சொல்லுவார் -என்று நியமித்து மறைந்து விட்டார்
அப்பொழுதே அங்கு வந்த நாரதரை வ்யாஸாதிகள் கேட்டதற்கு நாரதர் யாதவகிரி மஹாத்ம்யத்தை
விஸ்தரித்ததின் சாராம்சம் கீழே விவரிக்கப்படுகிறது

நான்முகன் பிறப்பு –
சர்வேஸ்வரனான எம்பெருமான் பிரளய காலத்தில் ஆத்ம வர்க்கங்கள் எல்லாம் அசேதனத்தோடே ஒப்பாக இருக்கிறபடியைக் கண்டு –
தனது பரம கிருபையால் அவற்றுக்கு சரீர இந்த்ரியங்களைக் கொடுத்து ஸ்ருஷ்ட்டி செய்வதற்காக முதலில்
தனது திரு நாபி கமலத்தில் நான்முகனை ஸ்ருஷ்டித்து -அவனுக்கு பிரணவம் -அஷ்டாக்ஷரம் -நான்கு வேதங்கள் -எல்லாவற்றையும்
உபதேசித்து இந்தப் பிரகாரம் பிரபஞ்சத்தை ஸ்ருஷ்ட்டி செய் என்று நியமித்தான் –

தேவாதிகள் பிறப்பும் நான்முகன் அர்ச்சாவதார மூர்த்தியை ஆசைப்பட்டதும் –
அந்த நான்முகன் அவற்றை எல்லாம் ஆவ்ருத்தி செய்து -அர்த்தங்களைப் பாவித்துக் கொண்டு –
தாதா யதா பூர்வமகல்பயத்–என்கிறபடியே பூர்வ கல்பத்தின் படியே -ஸூர-நர -திரியக்-ஸ்தாவரங்கள் -என்கிற
நான்கு வர்க்கங்களையும் ஸ்ருஷ்டித்துத் தான் நித்தியமாக ஆராதனம் செய்வதற்கு
பகவானுடைய திரு உள்ளத்தில் உகந்து இருக்கும் அர்ச்சா மூர்த்தி வேண்டும் என்று த்யான சக்தனாய் இருக்கும் பொழுது
கர்ண அபிருதமான வாத்யங்களின் ஓசை கேட்டு கண் திறந்து பார்த்த சமயம் –
ஆனந்தமய திவ்ய விமானம் -திரு நாராயணன் விமானம் -தென்பட்டது –

முன்னம் வாத்யம் வாசிப்பவர்களையும்-பின்னர் முறையே கோஷ்டிகளையும்-
அந்த கோசடிகளை செவ்வனே நிற்க வைக்கும் மணியக்காரர்களையும் –
அனந்த கருட விஷ்வக்ஸேனர் முதலான நித்ய ஸூரிகளையும்-
சத்திரம் சாமரம் விசிறி முதலான உபசாரங்களைச் சமர்ப்பிக்கும் கைங்கர்ய பரர்களையும் –
ஆனந்தமய திவ்ய விமானத்தையும் -அதற்கு வலது பக்கம் ஸூதர்சன ஆழ்வாரையும் –
இடது பக்கம் பிராட்டியையும் நடுவில் திரு நாராயணனையும் சேவித்தான்
இப்படி தான் நினைத்த பொழுதே தான் ஆசைப்பட்டபடி ஸ்ரீ வைகுண்டத்தில் இருந்து பகவான் அர்ச்சாவதாரமாக எழுந்து
அருளியதைப் பார்த்து ஆனந்த சாகரத்தில் மூழ்கி பின்பு ஸமாஹிதனாய் ஓடுவது விழுவது தொழுவது நர்த்தனம் செய்வது
உத்தரீயத்தை மேலே தூக்கி எறிவது சிரிப்பது ஆனந்த பாஷ்பம் விடுவது ஸ்தோத்ரம் செய்வது முதலான ஆனந்த வியாபாரங்களைச்
செய்து கொண்டு சேனை முதலியார் எழுந்து அருளிப் பண்ணிக் கொடுத்த அந்த திரு நாராயண மூர்த்தியைத் தனது
தர்ம பத்தினியான சரஸ்வதி தேவி யுடன் சேர்ந்து அநேக கல்பங்கள் வரையிலும் ஆராதித்துக் கொண்டு வந்தான்

திரு நாராயணன் சத்யலோகத்தில் இருந்து பூ லோகத்துக்கு எழுந்து அருளியது –
இப்படி இருக்கும் பொழுது நான்முகனுக்கு மானஸ புத்ரனாயும் சிஷ்யனாயும் இருக்கிற சனத்குமாரர்
இந்த ஆனந்தமய விமான மத்யஸ்தனான திரு நாராயணனை இந்த புவியில் தான் கை தொழுது வர வேண்டும்
என்று நான்முகனைப் பிரார்த்தித்தான் –
அவன் அந்தத் திரு நாராயணனை அந்தப் பகவான் நியமனப்படியே எழுந்து அருள பண்ணிக்க கொடுத்தான்
சனத்குமாரர் சத்யலோகத்தில் இருந்து மேரு பர்வதத்துக்கும் அங்கு இருந்து கைலாசத்திற்கும்
எழுந்து அருளப் பண்ணிக் கொண்டு வந்தார் –
அங்கே எல்லாம் தேவதைகள் முதலானவர்-அஞ்சலி பிரார்த்தனை தண்டனிடுகை முதலானவற்றை சமர்ப்பித்தார்கள்-
அந்த ஹிமவானில் இருக்கும் வடபத்திரியிலே மூன்று நாள்கள் ஆராதனம் செய்து அங்கு இருந்து தென் திசைக்குப் புறப்பட்டு வந்து
நான்முகனாலேயே முதலிலே குறிப்பிடப்பட்ட கல்யாணி தீர்த்தம் முதலான அஷ்ட தீர்த்தங்கள் -சப்த ஷேத்ரங்கள் கூடின
வேத பர்வதம் -வேதாத்ரி -என்கிற யாதவாத்ரியிலே கிழக்கு முகமாக பாஞ்சராத்ர பிரகாரமாக
அந்த திவ்ய விமானத்தை பிரதிஷ்டை செய்தான் –

யாதவாத்ரி இருக்கும் இடம் -மஹிமை முதலியவை –
யாதவாத்ரியான ஸஹ்ய பர்வதத்துக்குக் கிழக்கிலும் -காவேரிக்கு வடக்கிலும் -சாஷாத் ஆதிசேஷ அவதாரமாக –
பகவானுக்கு ஸ்ரீ வைகுண்டத்தில் காட்டிலும் மிகவும் உகந்து இருக்கும் நிலமாய் -தென் பத்ரி -என்றும்
சுற்றுப்புறம் இரண்டு யோஜனை வரையிலும் -ஸ்ரீ வைகுண்ட வர்த்தக க்ஷேத்ரம் -என்று பிரசித்தமாய் –
திரு எட்டு எழுத்தின் பொருளான ஸ்ரீ மந் நாராயணனுக்கு ஆஸ்ரயமாய் இருக்கின்றது –
பூர்வம் கிருத யுகத்திலே தத்தாத்ரேய பகவான் இந்த மலையிலே மறைகளை எல்லாம் பிரவசனம் செய்ததால் -வேத பர்வதம் -என்றும்
த்ரேதா யுகத்திலே திரு நாராயணன் ஆனந்தமய விமானத்தோடே இங்கே எழுந்து அருளினை போது நாராயணாத்ரி -என்றும் வழங்கப் பட்டது –
த்வாபர யுகக் கடைசியிலே கண்ணன் முதலான யாதவர்கள் வந்து சேவித்ததால் -யாதவாத்ரி -என்று பெயராயிற்று –
கலி யுகத்தில் ஆதிசேஷ அவதாரமான ஒரு சந்நியாசி வந்து ஜீரணோத்தாரணம் செய்வதனால் -யதி சைலம் -என்று பெயராகும் –
இப்படிப்பட்ட யாதவாத்ரியிலே -மேல்கோட்டையிலே -சனத்குமாரர் திரு நாராயணனுடைய திவ்ய விமானத்தை பிரதிஷ்டை செய்வித்தான் –

ஸ்ரீ செல்வப்பிள்ளை திருவவதார க்ரமம்-
நான்முகன் தனது மகனான ஸநத்குமாரனுக்குத் திரு நாரணனை எழுந்து அருளப் பண்ணிக் கொடுத்த பின்பு
திரு நாராயணனைப் பிரிந்ததால் மிகவும் அவசன்னன் ஆனான் –
அதைப் பார்த்து ஸ்ரீ மந் நாராயணன் தனது திரு மார்பில் இருந்து ஸ்ரீ பூ ஸமேதமான ஒரு திரு மூர்த்தியை ஆவிர்பாவம் செய்து கொடுத்தான் –
நான்முகன் அவனைத் தொழுது கொண்டு வாரா நிற்க ஒரு கால் சக்கரவர்த்தி திருமகன் லப்த்வா குலதனம் ராஜா -என்கிறபடியே
ஸ்ரீ விபீஷண ஆழ்வானுக்கு பெரிய பெருமாளை எழுந்து அருளப் பண்ணிக் கொடுத்த பின்பு
தன்னகத்தில் திருவாராதனத்துக்கு அர்ச்சாவதார இல்லாமையால் இழவு பட்டு இருக்கும் சமயம் இந்த மூர்த்தியை
நான்முகன் சக்கரவர்த்தி திருமகனுக்கு எழுந்து அருளப் பண்ணிக் கொடுத்தான் –
அது முதல் -ஹ்ருத உத்பவன் -என்ற திருநாமம் உடைய இவருக்கு -ராம பிரியன் -என்ற திருநாமம் ஆயிற்று –

செல்லப்பிள்ளை கண்ணன் திரு மாளிகைக்கு சேர்ந்த க்ரமம்
சக்கரவர்த்தி திரு மகன் -அன்று சராசரங்களை வைகுந்தத்து ஏற்றி -என்றபடியே
திரு அயோத்யையில் இருந்த சராசரங்கள் எல்லாவற்றையும் கூட்டிக்கொண்டு தன்னுடைச் சோதிக்கு சேரும் பொழுது
இந்த ராம பிரியாணி திருவடி கையிலே கொடுத்தான் –
அவன் சக்கரவர்த்தி திருமகன் திருக்குமாரரான குசா மஹாராஜனுக்குக் கொடுத்தான் –
குசன் தனது பெண் குழந்தையான கனக மாலினிக்கு ஸ்த்ரீதனமாகக் கொடுத்தான் –
அந்த கனக மாலினி யது வம்சத்தில் யது சேகரன் என்கிற வரனைக் கைப்பிடித்ததால் -அந்த வம்சக் க்ரமத்தாலே
ஸ்ரீ ராமபிரியன் கண்ணனுடைய திரு மாளிகையிலும் சேவையைக் கைக் கொண்டு நின்றான்

வைரமுடி சரித்திரம்
ஒரு கால் விரோசனன் என்கிற அசுரன் -தனது தகப்பனாக ப்ரஹ்லாதன் விஷயத்தில் தேவதைகளுக்கு இருக்கும்
விஸ்வாசத்தைப் பற்றித் தானும் அவர்களோடே கூட பாற்கடலில் பள்ளி கொண்ட அநிருத்த பகவானை சேவித்துக் கொண்டு இருந்து –
பகவான் யோகத்துயில் கொண்டு இருக்கும் பொழுது யாரும் இல்லாத சமயத்தில்
பகவானுடைய கிரீடத்தைப் பறித்துக் கொண்டு பாதாள லோகம் சேர்ந்தான் –
பிறகு அந்தரங்க கைங்கர்ய பரர்கள் பகவானுடைய திருமுடியைக் காணாமல் -இது விரோசனன் செய்த தீம்பு என்று சங்கித்து
ஸ்ரீ கருடாழ்வானை அனுப்பினார்கள் –
வைநதேயன் பாதாள லோகம் சென்று விரோசனனை ஜெயித்து அநிருத்தனனுடைய கிரீடத்தை மீட்டுக் கொண்டு
மகா வேகத்துடன் வாரா நின்றான் –

வைரமுடியை கண்ணனுக்கு சமர்ப்பித்தது –
இப்படி பெரிய திருவடி ஆகாச மார்க்கத்தில் வரும் பொழுது தன்னுடைய கதி தடைப்பட்டதைப் பார்த்து விஸ்மதனாய்-
நான்கு பக்கமும் பார்த்தாலும் ஒன்றும் புலப்படாமல் கீழே பூமியைப் பார்த்தான் –
மயில் பீலிகளாலும் குஞ்சா மணிகளாலும் அலங்க்ருதனாய் வேணு கானம் பண்ணிக் கொண்டும் பிருந்தாவனத்தில்
ஆநிரைகளைக் காத்துக் கொண்டும் இருக்கிற கோபாலனைக் கண்டான் –
பரம ஆனந்த பூரிதனாய் -இவனால் தான் என்னுடைய கமனம் நழுவிற்று -என்று நிச்சயித்து –
பகவானுடைய கருத்தின் படியே அந்தக் கிரீடத்தை கண்ணனுடைய சிரஸ்ஸிலே சமர்ப்பித்தான்-
அநேக யோஜனை விஸ்தாரமான அந்த முடியானது பகவானுடைய சங்கல்பத்தாலே கண்ணனுடைய சிரஸ்ஸுக்குத் தகுதியாக மாறி விட்டது –
பிறகு கண்ணனை ப்ரதக்ஷிண நமஸ்காரங்களைப் பண்ணி வணங்கி கருடன் பாற் கடல் சேர்ந்தான் –
அங்கு எல்லாருக்கும் இந்த விஷயத்தைச் சொல்ல அவர்களும் ஆனந்தித்தார்கள் –

கண்ணன் செல்லப்பிள்ளைக்கு வைரமுடியை சமர்ப்பித்தது –
கண்ணன் தனது க்ருஹ அர்ச்சையான ராமப் பிரானுக்கு -அந்த முடியை சமர்ப்பித்தான் –
அது அவனுடைய சங்கல்பத்தாலே செல்வப்பிள்ளைக்குத் தகுதியாக போக்யமாய்த் தலைக்கட்டிற்று –
இவ்விதமாக வைரமுடியைச் சாற்றி ராமப் பிரியனை நித்ய ஆராதனம் செய்து கொண்டு இருந்தான் –
இப்படி இருக்கும் பொழுது ஒரு சமயம் நம்பி மூத்தபிரான் தீர்க்க யாத்திரைக்காக எழுந்து அருளினை காலத்தில்
இந்த நாராயணாத்ரிக்கு வந்து கல்யாணி தீர்த்தத்தில் அவகாஹித்து ஆனந்த மய திவ்ய விமான மத்யஸ்தரான
திரு நாராயணப் பெருமாளைச் சேவிக்க -தம்முடைய க்ருஹ அர்ச்சையான ராமப் பிரியனைப் போலவே இருக்கிறார் -என்று
அறிந்து ஸ்ரீ மத் துவாரகைக்கு எழுந்து அருளி
தென் திசையில் தென் பத்ரி -என்னும் நாராயணாத்ரியில் நம்முடைய ராமப் பிரியனைப் போலவே இருக்கும்
ஒரு பெருமாள் இருக்கிறார் -என்று சொன்னார் –
கண்ணன் இதை ஒப்புக் கொள்ளாமல் -நம்பி மூத்தபிரான் யாதவர்கள் எல்லாரையும் அழைத்து
தானே ஸ்ரீ ராமப் பிரியனையும் எழுந்து அருளப் பண்ணிக் கொண்டு நாராயணாத்ரிக்கு வந்து திரு நாராயணன் முன்பே
எழுந்து அருளப் பண்ணி எல்லாரும் சேவித்து இருவரும் ஒரே ரூபத்தை உடையவர்கள் என்று சம்மதித்து ஆனந்தித்தார்கள் –

நாராயணாத்ரிக்கு யாதவாத்ரி என்ற பெயர் வந்தது –
இப்படி யாதவர்கள் எல்லாரும் ஸ்ரீ ராமப் பிரியனை அங்கேயே எழுந்து அருளப் பண்ணி அந்தந்த உத்சவ காலங்களில்
தாங்களும் அங்கேயே சென்று உத்ஸவாதிகளை நடத்தி வந்த படியால் இந்த மலைக்கு யாதவாத்ரி என்று அது முதல் திரு நாமம் ஆயிற்று –
இப்படி திரு நாராயணன் -செல்வப்பிள்ளை இருவரும் ஒரே இடத்தில் மூல பேரராயும் உத்சவ பேரராயும்
நம்முடைய பாக்ய அதிசயத்தாலே சேர்ந்தார்கள் –

கல்யாணி தீர்த்தத்தின் மஹிமை
ஆதி வராஹன் ஸ்ரீ பூமிப்பிராட்டியை எடுத்து வந்த பொழுது அந்த சிரமத்தால் திரு மேனியில் உண்டான
வியர்வையானது -கல்யாணி தீர்த்தமாய் பரிணமித்தது –
ஸ்நாந மாத்ரத்தால் எல்லாருடைய பாவத்தையும் போக்கும் கங்கை எல்லா தீர்த்தங்களோடும் சேர்ந்து வந்து தன்னுடைய
சகல பாபங்களையும் போக்கிக் கொள்வதற்காக வருஷம் தொறும் பால்குன மாசத்தில் இந்த கல்யாணி தீர்த்தத்தில் வாசம் செய்கிறாள் –
பின்னும் இந்தத் தீர்த்தத்தின் கரையிலே பண்ணின தபஸ் தானம் முதலான புண்ய கார்யங்கள் எல்லாம்
இதர புண்ணிய க்ஷேத்ரங்களில் பண்ணுவதை விட மிகுதியான பலன்களைக் கொடுக்கும் –

ஸூ சரித உபாக்யானம்
வயது முதிர்ந்த ஏழையான ஸூ சரிதன் என்னும் ஒரு அந்தணன் தீர்த்த யாத்ர பரனாய் இருந்தான் –
அவன் இந்த யாதவாத்ரியையும் கல்யாணி தீர்த்தத்தையும் பற்றிக் கேட்டது இல்லை –
இரண்டு பிள்ளைகளுடனும் பத்னியுடனும் கங்கா ஸ்நானத்துக்குச் சென்றான் –
ஆனால் கங்கா நதி கண்ணுக்கு இலக்காக வில்லை -கங்கையில் ஸ்நானம் செய்து கொண்டு இருந்தவர்கள்
இது தான் கங்கை -என்று சொன்னாலும் கங்கை அவனுக்குத் தென் படாததால் ஸூ சரிதன் மிகவும் வருந்தினான் –
அப்பொழுது ஒரு பெண் வந்து ஐயா அந்தணரே-கல்யாணி தீர்த்தத்தில் குளித்திருப்பீரா என்று கேட்க –
ஸூ சரிதன் அந்த பெயரையே கேட்டு இருந்தது இல்லையே என்றான் –
அங்கே சென்று ஸ்நானம் செய்து விட்டு வாரும் என்றாள் அந்தப்பெண் –
அந்தணர் -எனக்கு அங்கே செல்ல சக்தி இல்லை -அப்படியே சென்றாலும் மறுபடியும் இங்கே திரும்பி வர முடியும்
என்கிற நம்பிக்கையும் இல்லை -என்ன
அந்தப்பெண்ணும் -ஆனால் கல்யாணி என்று நீங்கள் நால்வரும் மூன்று முறை அனுசந்தானம் செய்து
இங்கேயே கங்கையில் ஸ்நானம் செய்யுங்கோள்-என்றாள் –
இப்படி கன்யா ரூபமாகக் கங்கையின் வார்த்தையைக் கேட்ட பிறகு தான் அந்த அந்தணனுக்கு கங்கா நதி கண்ணுக்கு இலக்காயிற்று –
மூன்று தரம் கல்யாணி என்று சொல்லி ச பரிகரமாக கங்கையில் மூழ்கினான் ஸூ சரிதன் –
எழுந்து இருந்து பார்த்ததும் கல்யாணியாய் இருந்தது –
அங்கு இருந்தவர்கள் தீர்த்தத்தில் இருந்து எழுந்து வரும் நால்வரையும் பார்த்து ஆச்சர்யத்தாலே அவர்கள் வரலாற்றைக் கேட்டார்கள் –
ஸூ சரிதன் நடந்த விஷயம் எல்லாவற்றையும் சொல்லி இது என்ன இடம் என்ன தீர்த்தம் என்று கேட்க –
இது யாதவாத்ரி -கல்யாணி தீர்த்தம் -என்று அவர்கள் சொல்ல –
அந்த தீர்த்தத்தின் மஹிமையைக் கண்டும் கேட்டும் விஸ்மிதராய்க் கொண்டு ஸூ சரிதனும் அவன் பார்யா புத்திரர்களும்
அங்கேயே நித்ய வாசம் செய்து கொண்டு இருந்தார்கள்

யாதவாத்ரியில் ஸூ சரிதனுக்கு மூன்றாவது பிள்ளை பிறக்க -நாராயணன் என்று திரு நாமம் சாற்றினான் –
குழந்தையின் ஏழு எட்டு வருஷங்களுக்கு உள்ளாக அந்த தேசத்தில் ஷாமம் ஓன்று ஏற்பட்டது –
கஷ்டத்தைப் பொறுக்க முடியாமல் பத்னியுடைய நிர்பந்தத்துக்கு இணங்கி ஸூ சரிதன் இரண்டு பிள்ளைகளையும் கூட்டிக் கொண்டு
தமிழ் நாட்டு அரசனைப் பார்க்கப் போனான் -நான்கு ஆறு மாச காலம் காத்து இருந்து நகர வாசத்தின் கஷ்டத்தை எல்லாம் அனுபவித்து
கடைசியில் பெரிய பிரயத்தனம் செய்து அரசனைப்பார்த்து கொஞ்சம் த்ரவ்யத்தை வாங்கிக் கொண்டு திரும்பினான் –
யாதவகிரியில் ஸூ சரிதனின் மூன்றாவது மகன் நாராயணன் -அம்மா மிகவும் பசிக்கிறது -எனக்குக் கொஞ்சம் பிரசாதம் கொடு –
என்று தாயைக் கேட்டான் -அவள் ஒரு பாத்திரத்தில் பிரசாதம் கொடுத்தாள் –
இது பகவானுக்கு அமுதம் செய்யப்பட்டது அன்று என்று சொல்லி தான் சாப்பிடாமல் திரு நாராயணன் திரு முன்பே சமர்ப்பித்து
பக்தியுடன் நீ இதை அமுது செய் என்று சொல்லிக் கொண்டு வெளியிலே நின்று இருந்தான் –
திரு நாராயணன் பிராட்டியோடே கூட வந்து பிரசாதத்தை அமுது செய்து விட்டான் –

குழந்தை வெறும் பாத்திரத்தைப் பார்த்து மிகவும் சந்தோஷத்துடன் தாய் அருகே சென்று –
அம்மா நீ கொடுத்த பிரசாதத்தை பகவான் அமுது செய்து விட்டார் -எனக்கு மிகவும் பசிக்கிறது -வேறு பிரசாதம் கொடு என்று கேட்டான் –
அதற்கு அவள் -அர்ச்சா மூர்த்தியான பகவான் அமுது செய்வானா -பூனைக்குட்டி சாப்பிட்டு இருக்கும் –
இந்த ஷாமத்தில் இப்படிச் செய்தால் மீண்டும் உனக்குத் தர முடியுமா -பிச்சை எடுத்துச் சாப்பிடு போ -என்று சொல்லிக்
கையில் ஒரு பாத்திரத்தைக் கொடுத்து அனுப்பினாள்-
அக் குழந்தை அங்குள்ள வீடுகளுக்கு எல்லாம் போனான் -அவன் பிச்சைக்காக எங்கு எங்கு போனானோ
அந்த அந்த க்ருஹங்களில் பிராட்டியே வந்து பிச்சையாக பிரசாதத்தைக் கொடுத்தாள் –
குழந்தை தன் அகத்திலே போய் தாய் கையிலே தான் சம்பாதித்த பிக்ஷையைக் கொடுத்தான் –
உடனே அவை ரத்னங்களாக மாறின -அதைப் பார்த்த தாய்க்கு ஆசை பிறந்தது –

மறுபடியும் மறுபடியும் அனுப்பினாள் –இப்படி எட்டுத் தடவை தன் பிள்ளையை பிக்ஷைக்கு அனுப்பினாள் –
உலகிற்கு எல்லாம் தாயான பிராட்டி ஏழு தடவை ரத்ன பிக்ஷை கொடுத்து-எட்டாவது தடவையில் அன்ன பிக்ஷையாகக் கொடுத்தாள் –
இருவரும் அன்னத்தைச் சாப்பிட்டு திருப்தி அடைந்தார்கள் -ஏழு தரம் கிடைத்த ரத்ன பிக்ஷையாலே பிறவாத திருப்தி
இந்த அன்ன பிக்ஷை – பிரசாதத்தாலே – பிறந்தது –
இதுவரையிலும் கவலை இல்லாமல் இருந்த இவர்கள் தனம் கிடைத்ததும் கொஞ்சமும் உறங்க வில்லை –
அந்த தனத்தையே காத்து இருந்தார்கள் -அவ்வளவில் அரண்மனையில் இருந்து
ஸூ சரிதன் கொஞ்சம் த்ரவ்யத்தை எடுத்து க் கொண்டு தன் இரண்டு பிள்ளைகளுடன் வரும் பொழுது வழியில்
திருடர்கள் அவனை அடித்துக் கையில் இருந்ததை எல்லாம் பறித்துக் கொண்டு போனார்கள் –
அப்பொழுது ஸூ தர்சன் திரு நாராயண புரம் திவ்ய தேசத்தில் இருந்து புருஷோத்தமனான நாராயணன் கொடுக்கும்
பரம புருஷார்த்தத்தை விட்டு அனர்த்தத்தை விளைவிக்கும் அர்த்தத்தை ஆசைப்பட்டு புருஷ அதமனான மானிடனை ஆஸ்ரயித்தேனே –
நரக வாசமாகிற நகர வாசத்தைப் பண்ணினேனே-எனக்கு இந்த தண்டனை போதாது -என்று வருத்தப்பட்டுக் கொண்டு வந்து
வீட்டில் பார்த்த போது எல்லாம் ரத்னமயமாக இருக்க -குழந்தையை கேட்டதற்கு -குழந்தை அவனுக்கு எல்லாவற்றையும் சொல்லவே –
நிர்ஹேதுகமான பகவானுடைய கடாக்ஷத்தை ஆச்சர்யத்துடன் நினைத்து நினைத்து அந்தப் பணத்தாலே
பகவத் பாகவத கைங்கர்யத்தைப் பண்ணா நின்றான் –

அப்படி நித்ய ததீயாராதனம் செய்யும் இவனுடைய ஐஸ்வர்யத்தைக் கண்டு -சில திருடர்கள் -இவற்றைப் பறிக்க வேண்டும்
என்று வைஷ்ணவ வேஷத்தைப் பூண்டு கல்யாணி தீர்த்தத்தில் ஸ்நானத்தை நித்யமும் செய்து கொண்டு
பன்னிரண்டு திருமண் காப்பையும் சாத்தி -துளசி நளினாக்ஷ மாலைகளையும் தரித்து திரு நாராயணனை
தினமும் சேவித்துக் கொண்டு வந்தார்கள் -இப்படி ஸூ சரிதன் திரு மாளிகையில் பாகவத ஸ்ரீ பாத தீர்த்தத்தையும்
பகவத் பிரசாதத்தையும் ஸ்வீ கரித்துக் கொண்டு -ஐஸ்வர்யத்தை அபகரிக்க சமயம் பார்த்திருந்த திருடர்களுக்கு –
இந்த சத் சங்கத்தாலும் நல்ல வேளையினாலும்-கர்மம் கழிந்து –நல்ல ஞானமும் -ஞானத்தால் பச்சாதாபமும் பிறந்து –
ஸூ தரிசனை தண்டனிட்டு -உம்முடைய பணத்தைப் பறிக்க வந்த மகா பாபிகள் நாங்கள் –
எங்களுடைய பாபத்திற்குத் தகுதியாக ப்ராயச்சித்தத்தை நியமித்து -எங்களைக் காப்பாற்ற வேண்டும் -என்று பிரார்த்தித்தார்கள் –
அப்பொழுது ஸூ தரிசன்-தனம் மதீயம் தவ பாத பங்கஜம் -என்னும்படி திரு நாராயணன் திருவடிகள் என்கிற
அழியாத செல்வம் தான் என்னுடைய ஐஸ்வர்யம்
அது யாராலும் திருட முடியாது -என்று ஞான உபதேசம் செய்து -அவர்களுக்கு எல்லாம் மோக்ஷ சாம்ராஜ்யத்தை அனுக்ரஹம் செய்தான் –
இப்படி திருடர்களுக்கே மோக்ஷம் கிடைத்த பொழுது ஸூ சரிதனுக்கும் பகவத் அபிமுக்யம் உள்ளவர்களுக்கும் சொல்ல வேண்டா விறே-

சதுர்வேதி உபாக்யானம் –
முன்பு நான்கு வேதங்களையும் ஓதியதால் சதுர்வேதி என்றும் -பெயர் பெறுகைக்காக வந்தவர்களுக்கு எல்லாம் சோறு இடுகிறதால்
சர்வாதித்யன் என்னும் பெயருடையவனாயும் -த்ரவ்ய ஆர்ஜனத்தில் சதுரனாயும்-டம்பத்திற்காக யாகங்களைச் செய்கிறவனாயும் –
கேவல நாஸ்திகனாயும் உள்ள ஒரு ராஜ புரோகிதன் இருந்தான் –
ஒரு நாள் அவன் நான்கு அந்தணர்களைச் சேர்த்துக் கொண்டு ஸ்ரார்த்தம் பண்ணிக் கொண்டு இருக்கும் சமயத்தில்
யாதவாத்ரி நிவாசியான ஹரிராதன் என்கிற விருத்த ப்ராஹ்மணன் தன் குழந்தையை அழைத்துக் கொண்டு
சதுர்வேதி இருந்த ஊருக்கு வந்தான் –

வழி நடந்த ஆயாசத்தாலேயும் பசி தாகம் இவைகளினாலேயும் ரொம்பவும் ஸ்ரமப்பட்டு-சதுர்வேதியின் குணங்களை அறியாமல்
அவன் வீட்டுக்கு வந்தான் –
ஹரிராதன் திரு நாராயணன் திருவடிகளில் இருந்த திருத் துழாயைக் கொடுக்க –
சதுர்வேதி -நம் வீட்டிலேயே வேண்டின திருத் துழாய் தோட்டங்கள் இருக்கின்றன -இஷ்டம் இருந்தால் உபநயனம்
இல்லாத இந்த சிறு பையன் கையில் கொடு என்றான் –
ஹரிராதன்-பையனுக்கு அதிகப்பசி -கொஞ்சம் பிரசாதங்கள் கொடு என்று கேட்க –
சதுர்வேதி -நீ அந்தணன் அல்லவா என் வீட்டில் இன்றைக்கு ஸ்ரார்த்தம் என்பது தெரியாதா -என்றான் –
கொஞ்சம் அரிசியாவது கொடு என்றான் ஹரிராதன் –என்ன பிசாசத்தைப் போல் தொந்தரவு செய்கிறாய் -என்று
சதுர்வேதி கால்கள் தளர்ந்து போய் இருந்ததால் நிற்க முடியாமல் அங்கே முற்றத்தில் உட்கார்ந்த அந்தணச் சிறுவனை
கழுத்தைப் பிடித்து அப்பால் தள்ளிக் கதவை அடைத்தான் -கால் கதவுக்குள் அகப்பட்டுக் கொண்டதால் கீழே விழுந்த
அந்த பாலன் மிகவும் நொந்து நீ பாழாய்ப் போ என்று சபித்தான் –
அப்பொழுது ஹரிராதன் அக்குழந்தையைப் பார்த்து -அப்படிச் சொல்ல வேண்டாம் அப்பா -என்று புத்தி சொல்லி
ஏழு தடவை கோவிந்த நாம உச்சாரணம் செய்து விட்டு அந்தக் கிராமத்தில் இருந்து புறப்பட்டான் –

சமீபத்தில் உபாதானம் பண்ணி ஜீவித்துக் கொண்டு இருந்த விஷ்ணு ராதன் என்ற ஏழை பிராமணன்
இவர்கள் கஷ்டத்தைப் பொறுக்க மாட்டாது நடுப்பகல் நேரமாய் இருந்தாலும் தன் வீட்டுக்கு அழைத்துப் போய்
குழந்தையை தெளியப் பண்ணி வைத்து பகவந் நிவேதனம் செய்து -ஆனந்தமாகப் பிரஸாதஸத்தைப் பரிமாறினான்-
ஹரி ராதன் தன் குழந்தையுடன் உண்ண உட்கார்ந்து இருந்த பொழுது -ஒரு த்ரிதண்ட தாரியான சந்நியாசி
நான்கு சிஷ்யர்களுடன் வர ஏழு பெரும் சம பங்க்தியிலே உட்கார்ந்து அமுது செய்தார்கள்
அன்றிலிருந்து விஷ்ணு ராதன் வீட்டில் தளிகைப் பாத்திரங்கள் எல்லாம் அக்ஷயமாயிற்று –
அவர்கள் உண்ட இடத்தில் நிதி அகப்பட்டது –
அந்த சந்நியாசி தான் தத்தாத்ரேயர் திருவவதாரம் பண்ணி வந்த பகவான் -சிஷ்யர்கள் நாலு வேதங்கள் –
பாகவதர் அமுது செய்யும் இடத்தில் பகவான் பின்னாலேயே இருக்கிறான் என்கிறது இதனாலே தெரிய வரும் –
இப்படி யாதவாத்ரி வாசியான ஹரிராதனை ஆராதித்ததாலே விஷ்ணு ராதனுக்கு அமோகமான ஐஸ்வர்யம் உண்டாயிற்று –

இது நிற்க -ஹரி ராதனைத் தள்ளிக் கதவடைத்த சதுர்வேதி வீட்டில் நிமந்தரணக்காரர் வரும் முன் பாம்பு பாலில் விஷத்தை உமிழ்ந்தது –
அவர்கள் குடித்து இறந்தார்கள் -அவர்கள் புத்திரர்கள் போய் தங்கள் அரசன் இடத்தில் எங்கள் தகப்பனாரைச் சதுர்வேதி கொன்றான் –
என்று முறையிட ராஜபடர்கள் வந்து சதுர்வேதியை மர்ம ஸ்தானங்களில் அடித்தலால் அவன் முடிந்தான்-
தங்களையும் இப்படியே சாக அடிப்பார்கள் என்ற பயத்தால் அவனுடைய நான்கு பிள்ளைகளும் காட்டுக்கு ஓடினார்கள் –
அவர்களில் ஒருவன் பாழும் கிணற்றில் விழுந்தான் -ஒருவன் மரத்தில் ஏறி விழுந்தான் -ஒருவன் புலிக்கு இறையானான் –
இப்படியே நான்கு பிள்ளைகளும் மாண்டனர் -சதுர்வேதியின் மனைவி கழுத்தில் கயிற்றைக் கட்டிக் கொண்டு உயிர் நீத்தாள் –
இரண்டு பெண் பிள்ளைகளும் கதவை சாத்தி நெருப்பை மூட்டி உயிர் நீத்தார்கள் –
இப்படி வெகு விரைவிலேயே அந்தக் குழந்தையின் சாபப்படி எல்லாரும் இறந்தார்கள் –

பிறகு யமபடர்கள் சதுர்வேதியின் காலிலே பாசத்தைக் கட்டி யமதர்ம ராஜனிடம் இழுத்துக் கொண்டு போனார்கள் –
சதுர்வேதி தர்மராஜனைப் பார்த்து -நீ மிகவும் அநியாயம் செய்கிறாய்-சங்கமாக நான்கு வேதங்களையும் ஓதினேன்-
வருஷங்கள் தோறும் யாகங்கள் செய்து கொண்டே இருந்தேன் -அதிதிகளுக்கு எல்லாம் அன்னதானம் செய்து கொண்டே இருந்தேன் –
இப்படி தார்மிகனான எனக்கு யாதனைகளை நீ விதிக்கலாமோ-என்று கேட்டான்
அதுக்கு தர்மராஜன் -நீ செய்தது எல்லாம் உண்மைதான் -ஆனால் பணம் திரட்டவும் டம்ப அர்த்தமாகவும்
நீ எல்லாவற்றையும் செய்தாய் அல்லவா -பகவத் ஆராதன ரூபமாக நீ ஏதாவது செய்தது உண்டோ -சொல் -அது கிடக்கட்டும் –
அந்த யாதவாத்ரி வாசியான அந்தணன் உன் அகத்துக்கு வந்த பொழுது நீ செய்தது எல்லாம் நினைத்தாயா –
உனக்கு இவ்வளவு போதாது -அநேக நரகங்களை நீ அனுபவிக்க வேண்டி இருந்தது -ஆனால் அந்த ஹரிராதன் உன் அகத்தில்
இருந்து புறப்படும் பொழுது ஏழு தரம் கோவிந்த நாம உச்சாரணம் செய்ததனுடைய மகிமையினால்
நரக பாதைகள் உனக்கு இல்லாமல் போயிற்று -நீ ச குடும்பனாக பிரம்ம ரஷஸ்சாகப் போ –
உன் அகத்தில் நிகமந்த்ரணம் இருந்தவர்கள் பெரும் கழுகுகள் ஆவார்கள் -என்று சபித்தான் –

உடனே சதுர்வேதி யமனைத் தண்டன் இட்டு -என்னுடைய அபராதங்களை மன்னிக்க வேண்டும் –
இந்த சாபத்திற்கு அவதியைத் தெரியப்படுத்த வேணும் -என்று பிரார்த்திக்க –
யமன் -சில விஷ்ணு பக்தர்களுடைய தர்சனம் ஆனவுடன் சாபம் நீங்கும் -என்று அனுக்ரஹித்தான்
அந்த நிமிடமே சதுர்வேதி ச பரிவாரனாக அந்த ஜன்மத்துக்கு தகுதியான வேஷ பாஷா ரூபாதிகளை உடைத்தான்
ப்ரஹ்ம ரஜஸ்ஸாய் விந்திய பர்வதக் காட்டிலே விழுந்தான் -அநேக வருஷங்கள் இப்படி இருக்க –
ஒரு சமயம் காஷ்மீர தேச யாத்ரீகர்கள் சிலர் தென் தேசங்களில் யாத்திரை செய்து கொண்டு யாதவாத்ரியிலே
கல்யாணி சரஸ்ஸிலே ஸ்நானத்தைச் செய்து திரு நாராயணனை சேவித்து வழி நடந்து வரும் பொழுது அவ்விடம் வந்து சேர்ந்தார்கள் –
அவர்களில் இரண்டு பாகவத உத்தமர்களையும் துணையில் அநேக வைஷ்ணவர்களையும் ப்ரஹ்ம ரஜஸ்ஸான சதுர்வேதி பார்த்தான்-
அவர்கள் எல்லாரும் திருவடி சோதித்துக் கொண்டு நின்று இருந்த தீர்த்தத்தைக் குடித்து –
அவர்கள் அமுது செய்து கீழே விட்ட பிரசாத சேஷங்களை உண்டதும் அந்த ப்ரஹ்ம ரக்ஷஸ்ஸுக்கு
பூர்வ ஜென்மத்தினுடைய நினைவு உண்டாயிற்று –
நமன் சொல்லிய நம் சாப விமோசகர்கள் இவர்கள் தான் என்று தெரிந்து ஒதுங்கி நின்று அவர்களைத் தண்டன் இட்டான் –
தன்னுடைய வரலாற்றை எல்லாம் சொல்லி அனுக்ரஹிக்க வேண்டும் என்று பிரார்த்திக்க பரம தயாளுக்களான அவர்கள்
அவனுக்கு ஞான உபதேசம் செய்து -நீ யாதவாத்ரி வாசியான பாகவதர் இடத்தில் அபசாரப்பட்டதினால் வந்த
இந்தக் கஷ்டங்களை வாசத்தினாலேயே நீக்கிக் கொள்ளல் வேண்டும் –
நீ அங்கே போய் அந்த மலையை ப்ரதக்ஷிணம் செய்து கொண்டு அங்குள்ள பாகவதர்கள் ஸ்ரீ பாத தூளியை
சிரஸ்ஸா வகித்து உன்னுடைய பாபங்களைப் போக்கிக் கொள்–
அங்குள்ள பகவான் கிருபையால் இந்த சாபம் கிரமமாக நீங்கும் என்று நியமித்துப் போனார்கள் –

உடனேயே அந்த ப்ரஹ்ம ரஜஸ்ஸூ ச பரிவாரமாக யாதவாத்ரிக்குச் சென்று அப்படியே செய்து கொண்டு இருந்த பொழுது
திரு நாராயணன் தன் த்வார பாலர்களான ஜெய விஜயர்களை அழைத்து -ப்ரஹ்ம ரஷஸ்ஸான சதுர்வேதியை கிரமமாக
அஷ்ட தீர்த்தங்களில் ஸ்நானம் செய்வித்து -மறுபடியும் அந்தண ஜென்மம் பெறுவித்து
திருக் கல்யாணியில் ஸ்நானம் செய்வித்து -ஸமாஸ்ரயணத்தைச் செய்து ச பரிவாரனாக வைஷ்ணவன் ஆக்கி
நம்மிடம் அழைத்து வாருங்கோள்-என்று நியமித்தான் -ஜெய விஜயர்களும் அப்படியே செய்த பின்பு-
திரு நாராயணன் ச பரிவாரமாக வந்த சதுர்வேதியைத் தன் கிருபையால் கடாக்ஷித்து
தன்னுடைச் சோதியான பரமபதத்தை கொடுத்து அருளினான் –

இப்படி யாதவாத்ரியில் நித்ய வாசம் செய்யும் பாகவதர்கள் இடத்தில் அபசாரம் செய்தவர்களுக்கு வரும் கஷ்டத்தையும் –
அந்தப் பாகவதர்களாலே அதனுடைய பரிஹாரத்தையும் நாரதர் வியாசாதிகளுக்கு உரைத்தார்

நாளீ ஜங்கன் உபாக்யானம் –
ஒரு கால் தத்தாத்ரேயரும் சாண்டில்யரும் கல்யாணி தீர்த்த கரையிலே ஸாஸ்த்ர அர்த்த விசாரங்களைச் செய்து கொண்டு
இருக்கும் பொழுது திக் விஷயம் செய்து வந்த தத்தாத்ரேய சிஷ்யர்கள் தங்கள் வரும் பொழுது
காட்டிலே பார்த்த ஆச்சர்யத்தை அவர்களிடம் சொன்னார்கள் –
ஒரு பெரிய புலியானது ஒரு வேடனைத் துரத்திக் கொண்டு போயிற்று –அவன் ஒரு மரம் ஏறினான் -அங்கே ஒரு குரங்கு இருந்தது –
அந்தப்புலி குரங்கைப் பார்த்து வேடனைத் தள்ளிவிட்டு என்று கேட்க -என் வீட்டுக்கு வந்தவனைத் தள்ள மாட்டேன் என்றது குரங்கு –
பிறகு குரங்கு உறங்குகின்ற பொழுது புலி வேதனைப் பார்த்து அதைத் தள்ளி விடு -நான் உன்னை விட்டுப் போவேன் என்று சொல்லிற்று –
பாவியான வேடன் குரங்கைத் தள்ளி விட்டான் -புலி குரங்கைப் பார்த்து -இப்பொழுதும் உன்னை விடுகிறேன் –
உன்னைத் தள்ளின க்ருதக்னனான வேடனைத் தள்ளிவிட்டு என்று சொல்லிற்று –
அதற்கு அந்தக் குரங்கு -இப்பொழுது அந்த வேடனைத் தள்ளாது இருப்பேனா -என்று சொல்லி மரத்தில் ஏறிப் போய் –
என் வீட்டுக்கு வந்தவனை எப்படி இருந்தாலும் தள்ள மாட்டேன் -நீ உன் வழியைப் பார்த்துக் கொள் -என்று சொல்லி விட்டது –
திர்யக்கான ஜென்மங்களிலும் இப்படிப்பட்ட தர்மம் உண்டா-என்ன ஆச்சர்யம் -என்று விண்ணப்பித்தார்கள்-

சாண்டில்யர் சரணாகத ரக்ஷணம் என்கிற இந்த தர்மம் தான் எல்லா தர்மங்களிலும் மேலானது –
இது பசுக்களிடமும் கூட இருக்கும் -இதைக் காட்டிலும் ஆச்சர்யமான மாற்று ஒரு சம்பவம் சொல்லுகிறேன்
கேளுங்கள் என்று சொல்லத் தொடங்கினார் –

ஒரு காட்டிலே ஒரு மரத்திலே -நாளீ ஜங்கன் -என்கிற அன்னம் இருந்தது -அந்த இடத்துக்கு
ரொம்ப ஏழையும் நீசனமுமான ஒரு ப்ராஹ்மணன் பசி தாகம் வெளி நடந்த களைப்பு -எல்லாவற்றாலும் மிகவும் கஷ்டப்பட்டு வந்தான் –
அந்த அன்னமானது மிகவும் ஆதரவுடன் சர்வ உபசாரங்களையும் செய்து-அவன் கஷ்டத்தை எல்லாம் விசாரித்துக் கருணையால்
ஐயா -எனது தோழனான அரக்கர் அரசு அருகில் இருக்கிறான் -அவனைப் பார்த்து நான் சொன்னதாக சொல்லி
உனக்கு வேண்டிய பணத்தை வாங்கிக் கொண்டு போ -என்று சொல்லிற்று –
அவன் மிகவும் சந்தோஷத்துடன் அன்னம் கூறிய இடத்துக்குச் சென்று தமக்கு முடிந்த வரையிலும் பணத்தைத் தூக்கிக் கொண்டு
வந்த வழியாகவே வந்தான் -வரும் பொழுது அந்த அன்னம் படுத்து இருந்தது கண்டு பசித்து இருந்த இவன்
அந்த அன்னத்தைக் கொன்று சமைத்து சாப்பிட்டு பின்பு வழி நடந்தான் –
பிறகு அரக்கர் அரசன் அனுப்பின ஆட்கள் வந்து பார்த்த பொழுது அந்த அன்னம் தென் படவில்லை –
கீழே பார்த்த பொழுது அதன் சிறகுகள் முறிந்து விழுந்து இருப்பதைக் கண்டார்கள் –
அந்தப் பாவியே இதைச் செய்து இருக்க வேண்டும் என்று யோசித்து அந்த ப்ராஹ்மணனைத் தேடி வர –
அவனுடைய முக பாவம் பயம் மிச்சம் வைத்து இருந்த மாமிசம் இவற்றைப் பார்த்து இவனே இந்தத் தொழிலைச் செய்து
இருக்க வேண்டும் என்று நிச்சயித்து -அவனைக் கொன்றார்கள் –

அந்த நாளீ ஜங்கன் என்கிற அன்னம் தன்னுடைய ஸூஹ்ருத்தத்தாலே ஸ்வர்க்கத்துக்குப் போயிற்று –
அந்த அந்தணன் நரகத்துக்குப் போனான் -அந்த அன்னம் தேவதைகளைப் பிரார்த்தித்து நரகத்தில் இருந்து அந்த அந்தணனை
துணையாகவே ஸ்வர்க்கத்துக்கு அனுபவித்தது-
பாருங்கள் -நீங்கள் சொன்ன சம்பவத்தில் குரங்கு சாகவில்லை -நான் சொன்னதில் அன்னத்துக்கு உயிரே போயிற்று –
ஆனாலும் லோகாந்தரத்திலும் வேறு ஒரு உடல் பெற்ற போதும் அந்த அந்தணனைக் காப்பாற்றிற்று –
அது வானரம் -இது பக்ஷி-சரணாகத சம்ரக்ஷணம் என்கிற தர்மம் இப்படிப்பட்டது –
இப்படி இருக்கும் பொழுது சர்வஞ்ஞனாய் -சர்வ சக்தனாய் -சர்வ ஸ்வாமியாய் -ஸ்ரீயபதியான எம்பெருமான் இடத்தில்
இந்த சேதனன் ஸ்வரூப ஞானத்தைப் பெற்று சரணம் அடைந்தானே யானால் பலத்திலே சம்சயம் கிடையாது –
என்று சாண்டில்யர் உரைத்தார் –

இந்த சமயத்தில் வேத வ்யாஸ ரிஷிக்குத் தந்தையாயும் தத்துவங்களை யதாவத்தாக அறிந்து இருக்கிறவராயும் உள்ள
பராசர மகரிஷியும் அவருடைய சிஷ்யரான மைத்ரேயரும் அங்கே வந்து தத்தாத்ரேயர் சாண்டில்யர்களுக்குத் தண்டன் இட்டு
அவர்களாலே ஸத்காரத்தை அடைந்தனர் —
பின்னர் தத்தாத்ரேயர் -நீங்கள் இங்கே வந்தது என் -என்று கேட்க -பராசரர் -நான் வடபத்ரிக்குச் சென்ற போது
நாராயண ரிஷி -பராசரர் நீர் தென் பத்ரியான நாராயணாத்ரிக்குச் சென்று தத்வ ஹித புருஷார்த்தங்களை நன்றாக உரைக்கும்
புராண ரத்னமும் -சர்வ பிரமாணமுமான ஸ்ரீ விஷ்ணு புராணத்தை மைத்ரேயருக்கு பிரவசனம் செய்யும் என்று நியமித்தார் –
அதற்காக இங்கே வந்தேன் -என்றார்
இப்படி நான்கு பேரும் இந்த திவ்ய தேசத்தில் பகவானை அநேக காலம் சேவித்துக் கொண்டு இருந்தார்கள் –

சப்த ஷேத்ரங்கள் –
ஸ்ரீ கல்யாணி தீர்த்தத்தின் கிழக்கே மலையின் மேலே ஸ்ரீ யோக நரஸிம்ஹர் ப்ரஹ்லாத ஆழ்வானுக்குப் ப்ரத்யக்ஷமாய்
சாந்நித்யம் பண்ணி எல்லோருக்கும் எப்பொழுதும் வேண்டியவற்றை எல்லாம் அனுக்ரஹித்துக் கொண்டு இருக்கிறார் –
இது நரஸிம்ஹ க்ஷேத்ரம்

இந்த மலையின் கீழே கிழக்குக் கரையிலே ஸ்ரீ வராஹ க்ஷேத்ரம் செய்கிறது -இங்கு விரதம் தானம் ஜாபாதிகளைச் செய்தால்
சீக்கிரமாக சித்தியை அடையலாம் -இங்கே ஸ்ரீ வராஹ நாயனார் ஸ்ரீ பூமிப் பிராட்டியை ஏந்தி வந்து
தன் தொடையில் மேல் உகந்து வைத்து -ஸ்லோக த்வயம் -என்கிற ஸ்ரீ வராஹ சரம ஸ்லோகத்தை அவளுக்கு உபதேசித்தார் –

இந்த கல்யாணி தீர்த்தத்தின் தென் கரையில் இளைய பெருமாளாலே நிர்மாணம் செய்யப்பட்ட பர்ணசாலையிலே
சக்கரவர்த்தி திருமகன் வாசம் செய்து கொண்டு இருந்தான் -ஆகையால் ஸ்ரீ காரண்ய க்ஷேத்ரம் என்ற பெயர் ஆயிற்று –
இந்த இடத்தில் உள்ள திருத் துழாய் கட்டைகளால் ஆன மணி மாலைகளைத் தரித்தால் விசேஷமாகும்

இந்த தீர்த்தத்தின் மேற்குக் கரையிலே அஞ்ஞானத்தைப் போக்குமாதான ஞானஸ்வத்தம் என்கிற அரச மரம் இருக்கிறது –
அதன் கீழே சுகர் புண்டரீகர் ருக்மாங்கதன் அம்பரீஷன் ப்ரஹ்லாதன் ஆகிய ஐந்து பாகவதர்களும் தவம் செய்து
பகவானை சாஷாத் கரித்தார்கள் -ஆகவே பஞ்ச பாகவத க்ஷேத்ரம் ஆகிறது இது

இதன் மேற்கில் சிறிய தூரத்தில் தார்ஷ்ய க்ஷேத்ரம் என்கிறது இருக்கிறது –
அதில் பகவானுடைய நியமனப்படி பெரிய திருவடி ஸ்வேத தீபத்தில் இருந்து திரு மண் காப்பு கொண்டு வந்து வைத்தான் –
அது அன்றைக்கும் அக்ஷமாய் இருக்கும் -அந்த ஸ்வேத ம்ருத்திகையினால் யார் ஒருவர் திருமண் காப்பை
சாத்திக் கொள்வார்களோ அவர்கள் -அபராஜித -என்கிற திவ்ய வைகுண்ட கதியை அடைவார்கள் –

அடுத்த இரண்டு ஷேத்ரங்கள் தீர்த்தங்கள் பற்றி பின்பு விவரணம் வரும் –

அஷ்ட தீர்த்தங்கள் –
நாஸ்திகரும் வேத பாஹ்யரும் குத்ருஷ்டிகளும் வேதங்களைத் தூஷிக்க -வேத உதாரணம் செய்வதற்காக
பகவான் தத்தாத்ரேய அவதாரம் செய்து நான்கு வேதங்களை நான்கு சிஷ்யர்களாகவும் –
அங்க உப அங்கங்களை சிஷ்ய ப்ரசிஷ்யர்களாகவும் செய்து கொண்டு அவர்களுக்கு வேத அர்த்தங்களையும் எல்லாவற்றையும்
யாதவ கிரியில் உள்ள இத்தீர்த்தத்தின் கரையில் உபதேசித்தார் –
ஆகையால் இத் தீர்த்தத்துக்கு – வேத புஷ்கரணி -என்று பெயர்-
இந்த புஷ்கரணியின் கரையிலே இருக்கும் சிலையின் மேல் காஷாய வஸ்திரத்தை வைத்து தத்தாத்ரேயர் பரிக்ரஹித்ததனால் –
அந்த சிலைக்கு பரிதான சிலா -என்று பெயர் வந்தது -பரிதாபம் -என்றால் உடுத்திக் கொள்ளும் வஸ்திரம் –

தர்ப்ப தீர்த்தம் –
இந்த தீர்த்தத்தின் கரையிலே விளைந்த தர்ப்பங்களால் தத்தாத்ரேயர் தம்முடைய நித்ய அனுஷ்டாநங்களைச் செய்து கொண்டு இருந்தார் –
உயிர் போகும் காலத்தில் இந்த தர்ப்பங்களாலான ஆசனத்தில் இருந்து உயிர் விட்டால் மோக்ஷம் தவறாது –
இந்த தீர்த்தத்தின் கரையிலே சாண்டில்ய பகவான் ப்ரபன்னனுடைய பாஞ்ச காலிக அனுஷ்டானத்தையும் –
பகவத் சாஸ்திரமும் பகவத் ஆராதனத்துக்கு முக்கிய ப்ரமாணமுமான பாஞ்சராத்ர சாஸ்திரத்தையும் பிரவசனம் செய்தார் –

தர்ப்ப தீர்த்தத்தின் வடக்கே பலாச தீர்த்தம் உள்ளது -விச்வாமித்ர சாபத்தால் சண்டாளரான புத்ரர்களுக்கு இங்கே
ஸ்நானத்தால் சாப விமோசனம் ஆயிற்று –
இந்த தீர்த்தத்துக்கு மேற்கே யாதவி என்னும் ஆறு பெருகும் –
இதன் கரையிலே யாதவேந்திரன் என்னும் அரசன் யாகம் செய்து ஸ்வர்க்கம் அடைந்ததால் இந்த பெயர் –

பலாச தீர்த்தத்துக்கு வடக்கே பத்ம தீர்த்தம் உள்ளது -இதில் பிறந்த தாமரை புஷ்பத்தால் திரு நாராயணனை
நித்ய அர்ச்சனம் செய்து கொண்டு இருந்தார் சனத்குமாரர் -அதனாலே இந்தப் பெயர் –
இங்கே விளையும் தாமரை மணிகளைக் கழுத்திலே தரிப்பவர்கள் ஸ்ரீ வைகுண்டத்தில் திவ்ய அப்சரஸ்ஸூக்கள்
கையினால் மாலை சாற்றிக் கொள்வார்கள் –

இதற்கு வடக்கில் மைத்ரேய தீர்த்தம் –ஸ்ரீ பராசரர் ஸ்ரீ மைத்ரேயருக்கு ஸ்ரீ விஷ்ணு புராணம் உபதேசித்த ஸ்தானம்
தென் திசையார் சிஷ்யருடைய பெயராலே மைத்ரேய தீர்த்தம் என்றும் இதையே வடதிசையார்
பரசார தீர்த்தம் என்று ஆச்சார்யர் பெயரால் சொல்லுவார்கள் –

மைத்ரேய தீர்த்தத்தின் வடக்கே நாராயண தீர்த்தம் -இதன் சமீபத்தில் யார் சரம ஸம்ஸ்காரத்தை அடைகிறார்களோ
அவர்களுக்கு அதுவே சரம சரீரமாகும் –
இதன் கரையில் விஷ்ணு சித்தர் என்கிற ப்ரஹ்மச்சாரி ஸ்ரீ மன் நாராயணனை சாஷாத் கரித்து
விஷ்ணு சித்தர் நாராயணாத்ரியில் பிறந்து மாணியாய் இருந்து சாங்க வேத அத்யயனம் பண்ணி –
தாயும் தாமப்பனும் கல்யாணம் செய்விக்க யத்னம் செய்யும் அளவிலே நைமிசாரண்யம் போய் உக்ரமாக தவம் செய்தார் –
அங்கெ ஒரு அரசன் வந்து தனக்கு ஒரு ஆண் குழந்தை இல்லாதபடியால் தன பெண்ணையும் ராஜ்யத்தையும் கொடுப்பதாக அழைத்தான் –
அதற்கு இவர் -உன் பெண்ணை ரத்னத்தால் ஸ்ருஷ்ட்டி செய்து இருக்கிறாயா -மல மூத்திர ரத்த மாம்ஸாதிகளாலே நிறைந்த
தோல் பை அல்லவா -உன் ராஜ்ஜியம் பஹு கிலேசகரமான நரகம் அல்லவா -என்று சொல்லி விட்டார் –
பிறகு இந்திரன் இவன் தாபத்தை கெடுப்பதற்காக அப்சரஸ்ஸூக்களை அனுப்பினான் –
விஷ்ணு சித்தர் அவர்களை குரங்குகள் போல் ப்ரவர்த்திப்பதால் குரங்குகள் ஆவீர் என்று சபித்தார் –
பிறகு இந்திரன் பிரார்த்தித்து இவர்களுக்கு சாப விமோசனம் பண்ணிக் கொண்டு போந்தான் –
ருத்ரன் வந்து என்ன வரம் வேண்டும் என்று கேட்க எனக்கு மோக்ஷம் வேண்டும் என்றான் -எனக்கு அதுக்கு
அதிகாரம் இல்லை என்று சொல்லிப் போந்தான் –
நான்முகன் வந்து என் லோகத்தை உனக்குத் தருகிறேன் என்று சொல்ல -உன்னையும் ஸ்ருஷ்டித்து இந்த அதிகாரத்தைக் கொடுத்து
வைத்து இருக்கிற ஸ்ரீமன் நாராயணனைத் தவிர மாற்று ஓர் தெய்வம் உண்டோ -தயவு செய்து போய் வாரும் என்றான் –

பிறகு சன்மார்க்க தேசிகன் -என்கிற ஆச்சார்யர் வந்து இவனுக்கு அஷ்டாக்ஷர திருமந்திரத்தை உபதேசித்து –
குழந்தாய் நீ நாராயணாத்ரியில் சென்று தவம் செய் என்று சொல்ல
மறுபடியும் இந்த நாராயணாத்ரிக்கு வந்து நாராயண தீர்த்தத்தில் நித்ய கர்மாநுஷ்டானங்களைச் செய்து கொண்டு
அதன் கரையில் இருக்கும் நயன ஷேத்ரத்தில் தவம் செய்து கொண்டு இருந்து பெரிய திருவடி மேல் திவ்ய மஹிஷீ
பரிஜன பரிச்சத்தங்களோடே சேவை சாதித்த ஸ்ரீமன் நாராயணனை சாஷாத் கரித்து க்ருதார்த்தனாய் அவனது பரம கிருபையால் மோக்ஷம் அடைந்தான் –
நயனீதி நயனம் -தன்னை ஆஸ்ரயித்தவர்களை மோக்ஷத்தில் சேர்க்கும் என்கிற அர்த்தத்தை கொண்டு நயன க்ஷேத்ரம் என்கிற பெயர் –
இங்கு கேசவனுடைய சாந்நித்யம் இருப்பதால் மந்த்ர சித்திகள் விரைவில் வளரும் -விஷ்ணு சித்தரும் இங்கே தான் தவம் செய்தார் –

த்ரிவிக்ரம அவதாரம் –
உலகம் அளந்த பொழுது மேல் நீட்டின திருவடியை நான்முகன் குண்டிகை -கமண்டல -தீர்த்தத்தால் கழுவ –
அப்பொழுது கங்கை பிறந்தாள்-
ஸ்ரீ வைகுண்டத்தில் இருந்து நித்ய முக்தர்கள் விரஜா தீர்த்தம் கொண்டு திருவடி தொழுத போது சில துளிகள்
இந்த நாராயணாத்ரியின் வடக்கே விழுந்து பெருகின –
அதற்கு வைகுண்ட கங்கை என்னும் பெயர் ஆயிற்று -இதன் கரையிலே பக்தி சாரார் என்கிற யோகீஸ்வரர்
தவம் செய்து மோக்ஷத்தை அடைந்தார் –

இப்படி அஷ்ட தீர்த்தங்களையும்-சப்த ஷேத்ரங்களையும் சொல்லி நாரத பகவான் வ்யாஸாதிகளுக்கு யாதவகிரி மஹாத்ம்யத்தை
விசதீ கரித்து இந்த திவ்ய தேசத்திலே கலி பிரவேசம் இல்லை என்றும்
இந்த இடம் தான் தியானத்துக்கு ஏகாந்தமாய் இருக்கும் என்றும் சொல்லியதைக் கேட்டு வ்யாஸாதிகள் எல்லாரும்
அந்த யாதவாத்ரிக்குச் சென்று நேராக அந்த மகிமைகளை சேவிக்க வேண்டும் என்னும் த்வரையாலே
நாரதரையும் கூட்டிக் கொண்டு பிரயாணம் செய்தார்கள் –

வழியில் கங்கையில் ஓர் இடத்தில் ஏறி வரும் பொழுது பெரும் காற்று அடித்து என்ன செய்தாலும் நடத்த முடியாமல்
ஓடம் கடல் சேரும் வழியே சென்றது –
அதைப் பார்த்த ரிஷிகள் எல்லாரும் -நாம் இனி யாதவாத்ரியைச் சேரும் வழியை அறிய மாட்டோம் -என்று நிராசரானார்கள் –
அப்பொழுது பகவத் ஆவேச அவதாரமான வியாசர் ஓடத்தை நடத்துபவர்களைப் பார்த்து –
உங்கள் கையில் இருக்கும் சாதனங்களை எறிந்து விடுங்கள் என்றும்
ரிஷிகளைப் பார்த்து–நீங்கள் எல்லாரும் கண்ணைப் புதைத்து பகவானையே த்யானம் செய்யுங்கோள் என்று நியமித்தார் –
அவர்களும் அப்படியே செய்ய ஓடம் ஸூகமாக் அக்கரை சேர்ந்தது -ரிஷிகள் எல்லாரும் ஆச்சர்யப்பட்டு
கண்ணைத் திறந்து பார்த்து என்ன ஆச்சர்யம் என்ன
வியாசர் -ப்ரபன்னனுக்கு ஆகிஞ்சன்யமும் அநந்ய கதித்வமும் வேண்டும் என்பதற்கு இதுவே சான்று -என்று அறிவித்தார் –
அவனாலே தான் பேறு என்றும் -நம் கைம்முதல் ஒன்றும் இல்லை என்றும் அறிய வேண்டும் என்றும் கருத்து –

அங்கு இருந்து புறப்பட்டு -அநேக தேசங்களையும் ஆறுகளையும் மலைகளையும் காடுகளையும் தாண்டி வந்து
ஆங்கு ஆங்கு தர்ம உபதேசம் செய்து கொண்டு தங்களுக்கு உத்தேசியமான யாதவாத்ரிக்குச் சென்று அங்கு இருக்கும்
தீர்த்தங்களில் ஸ்நானம் செய்து பாபங்களைத் தொலைத்து -ஸ்ரீ மத் ஆனந்த மய திவ்ய விமான மத்யஸ்தனான –
ஸுவ்ந்தர்ய ஸுவ்குமார்ய-ஸுவ்சீல்ய-ஸுவ்லப்ய -லாவண்யாதி குணங்களால் பரம போக்யனான திரு நாராயணனை சேவித்து –
வாங் மனஸ் அகோசரமான ஆனந்தத்தால் பூர்ணர் ஆனார்கள் –
சிலர் சிந்தயந்தி போலே பகவானை சேவித்த பொழுதே பாபங்களைத் தொலைத்து மோக்ஷத்தை அடைந்தார்கள் –
சிலர் சுபாஸ்ரயமான அந்த அர்ச்சா மூர்த்தியை மனசால் நினைத்து தம் தம் இடங்களில் சேர்ந்தார்கள் –
மற்றும் சிலர் அந்த திவ்ய மங்கள விக்ரஹத்தை விட்டுப் பிரியாமல் அங்கேயே யாதவாத்ரியிலே
நித்ய வாசம் செய்து கொண்டு இருந்தார்கள் –

இப்படி பராத்பரனாய் இருக்கிற திரு நாராயணன் சர்வ ஸூலபனாய் -சர்வ சேவ்யனாயும் கேட்டவர்களுடைய
இஷ்ட அர்த்தங்களை அனுக்ரஹித்துக் கொண்டு தன் மஹிமையை பக்தர்கள் இடத்தில் பிரகடனம் செய்து கொண்டு
பரமானந்த பூர்ணனாய் பிரகாசித்துக் கொண்டு இருந்தான்

நாரதீய புராண அந்தர் கதமான யாதவகிரியின் மஹாத்ம்யம் முற்றிற்று –

————

ஸ்ரீ யாதவகிரியில் ஸ்ரீ உடையவர் கைங்கர்யமான ஜீரண உத்தாரணம்- –

கலி யுகத்தில் இரண்டு மூன்று ஆயிரம் சம்வத்சரங்கள் கழிந்த பின்பு பகவத் சங்கல்பத்தின் படியே உண்டான
ஏதோ ஒரு காரணத்தால் இந்த யாதவாத்ரியில் இருந்தவர்கள் அழிந்து போய் மிலேச்ச ராஜாக்கள் பிரபலமாய் இருந்த பொழுது
யோகிகளான ரிஷிகள் எல்லாரும் இந்த பிரஜைகளின் துராச்சார ஞானாதிகளைப் பார்த்து மிகவும் கவலைப்பட்டு
ஒருவர் கண்ணுக்கும் இலக்காமல் மானஸ ஆராதனம் செய்து கொண்டு இருந்தார்கள் –
அப்பொழுது இந்த ஆனந்த மய திவ்ய விமானமானது மரம் புல் புதர் புற்று இவைகளால் மூடிப் போயிற்று –
பகவானுடைய சங்கல்பத்தின் படியே ஸ்ரீ பெரும்புதூரிலே அவதாரம் செய்த ஸ்ரீ உடையவர் சோழ ராஜன் பண்ணின
ஹிம்சை காரணமாக மேல் நாட்டுக்கு எழுந்து அருளி தொண்டனூரிலே இருந்து -பெட்டில தேவன் -என்கிற ஜைன ராஜனை
ஞான உபதேசத்தாலும் பஞ்ச ஸம்ஸ்காராதிகளாலும் வைஷ்ணவன் ஆக்கி விஷ்ணு வர்த்தன்-என்ற பெயர் இட்டு
அங்கே எதிரிகளாய் வந்த ஜைனர்களை வாதத்தால் ஜெயித்து விஜய த்வஜம் எடுத்தார் –

தொண்டனூரில் இருக்கும் பொழுது அவரிடம் இருந்த திருமண் காப்பு தீர்ந்து விட்டது -அது பற்றி சிந்தித்துக் கொண்டு
இருக்கும் சமயத்தில் த்யானத்தில் திரு நாராயணன் வந்து -என்னுடைய நியமத்தின் படியே
பெரிய திருவடி ஸ்வேத தீபத்தில் இருந்து திருமண் காப்பை இங்கே கொண்டு வந்து வைத்து இருக்கிறான் –
அதைக் கண்டு எடுத்து உபயோகித்துக் கொள்ளும் -இந்தக் கல்யாணி தீர்த்தத்தின் கரையில் இருக்கிற
என் சந்நிதியையும் ஜீரண உத்தாரணம் செய்யும் என்றும் சொன்னார் –
இந்த விஷயத்தை அரசருக்கும் சிஷ்யர்களுக்கு தெரிவித்து விஸ்மிதராய் -சிஷ்யர்களுடன் வடக்கே புறப்பட்டு
புக முடியாத காட்டிலே புகுந்து -அந்த யாதவாத்ரியைச் சேர்ந்து -வேத புஷ்கரணி தீர்த்தத்தில் ஸ்நானம் செய்து –
பரிதான சிலா ஷேத்ரத்தில் -த்ரிதண்ட காஷாய பரிக்ரஹம் பண்ணி திரு நாராயணனைத் தேடி வந்தார் –
எத்தனை தேடியும் இருக்கிற இடம் அகப்படாமல் த்யான சக்தராய் இருந்த பொழுது
என்ன யோஜனை -இந்தத் திருத்துழாய் செடிகளின் வழியே வந்தால் இங்கே வடக்கே கல்யாணி தீர்த்தத்தின் –
நைருத்யத்தில்-தென் மேற்கில் பெரும் புற்றையும் அதன் மேல் பெரிய திருத்துழாய் செடியையும் காண்பீர் –
அதற்க்கு உள்ளே நான் இருக்கிறேன் -கல்யாணி தீர்த்தத்தின் மேற்கே திருமண் காப்பு அகப்படும் -எழுந்திரும் என்று அனுக்ரஹித்தான் –

அதே வழியில் வந்து கல்யாணி தீர்த்தத்தில் ஸ்நானம் செய்து தார்ஷ்ய ஷேத்ரத்தில் இருக்கும் திருமண் காப்பை எடுத்து
சாத்திக் கொண்டு முன்பு கூறின படியே பெரும் புற்றையும் அதன் மேல் பெரிய திருத்துழாய் புதரையும் பார்த்து
பெறு மகிழ்ச்சியுடன் புற்றையும் சோதித்து -அதற்குள் ஆனந்தமய திவ்ய விமானத்தையும் அதன் நடுவில்
கர்ப்ப க்ருஹத்தில் திரு நாராயணனுடைய திவ்ய மங்கள விக்ரஹத்தையும் சேவித்து ஆனந்தம் என்கிற பெரிய பாற் கடலில் மூழ்கி
தம்மைப் போலே திரு நாராயணனையும் பால் குடங்களாலே அபிஷேகம் செய்வித்தார் –
பின்னையும் அவரை சேவித்து ஆனந்த பரவசராய் நம்மாழ்வாருடைய கருத்தை அறிந்து –
ஒரு நாயகமாய் -திருவாய் மொழியை திரு நாரணனுக்கே தகுதியாய் இருக்கிறது என்று சமர்ப்பித்தார் –
இப்படி தம் திருக் கையாலே மூன்று நாள் ஆராதித்து திரு வாராதனத்துக்காக ஸ்ரீ ரெங்கத்தில் நன்றாக பாஞ்ச ராத்ர ஆகமத்தை
அறிந்த ஸ்ரீ ரெங்கராஜ பட்டர் என்னும் அர்ச்சகரை வரவழைத்து சாத்விக சம்ஹிதா பிரகாரமாக
ஸம்ப்ரோஷணாதிகளைச் செய்வித்து நித்ய ஆராதனம் செய்து கொண்டு இருந்தார் –

இவருக்குத் தகுதியாய் இருக்கிற உத்சவ மூர்த்தி எங்கே இருக்கிறார் -என்று சிந்திக்கும் சமயத்தில் –
டில்லீசன் இடத்தில் நம் உத்சவ மூர்த்தி இருக்கிறார் -அங்கே சென்று அழைத்து வாரும் -என்று திரு நாராயணன் நியமிக்க
உடையவர் டில்லிக்குப் போய் அரசன் இடம் தம் கருத்தைச் சொல்ல -அவன் சொல் படி தாமே போய் விக்கிரகங்களுக்கு
சமூகத்தில் தேடிய போதும் ராமப் பிரியன் என்கிற உத்சவ மூர்த்தி அகப்பட வில்லை –
மறுபடியும் யோசிக்கிற பொழுது அந்த ராமப் பிரியன் வந்து அரசனுடைய அந்தப்புரத்தில் அரசன் மகளுடன்
போகத்தில் இருக்கிறேன் -என்னை அழைத்துக் கொள்ளும் என்று சொன்னார் –
அனந்தரம் உடையவர் அரசனிடம் போய் -எமது பெருமான் உன் அந்தப்புரத்தில் இருப்பார் -என்று கூற –
அரசன் உடனே இவரை உள்ளே அழைத்துச் சென்று
உமது பெருமாள் இங்கே இருந்தால் கூப்பிட்டு அழைத்துக் கொள்ளும் என்றான் –
உடனே உடையவர் என் ராமப்பிரியனே வா என்று அழைக்க -ராமப்பிரியன் இரண்டு மூன்று வயது குழந்தை போலே
சர்வ ஆபரணங்களாலும் அலங்க்ருதனாய்
திருக்காலில் சதங்கை ஓசையுடன் வந்து -என் தந்தையே -என்று சொல்லி உடையவர் மடியிலே அமர்ந்தான்
அப்போது உடையவர் -என் செல்வப்பிள்ளையே -சம்பத்குமாரா -என்று அழைத்து ஆனந்தக்கடலில் மூழ்கினார் –
இதைப் பார்த்த அரசன் ஆச்சர்யத்துடன் சத்திரம் சாமரம் வஸ்திர ஆபரணங்கள் முதலான ஸமஸ்த உபசாரங்களை
செல்வப்பிள்ளைக்கு சமர்ப்பித்து உபசரித்து பல்லக்கில் எழுந்து அருள ப் பண்ணி உடையவரையும் மிகவும் மரியாதையுடன் ஆதரித்து
அவருடன் எல்லா விருதுகளையும் அனுப்பிக் கொடுத்தான் –
அந்த அரசனின் மகள் செல்வப்பிள்ளையை விட்டு இருக்க மாட்டாமல் தானும் புறப்பட்டாள் –

இப்படி உடையவர் யதிராஜ சம்பத்குமாரனை மிகவும் வைபவத்துடன் எழுந்து அருளப் பண்ணிக் கொண்டு வந்து
நித்ய உத்சவ -பஷ உத்சவ-மாச உத்சவ -சம்வத்சர உத்ஸவாதிகளையும் ப்ரஹ்ம உத்ஸவாதிகளையும் நடத்திக் கொண்டு வந்து
யதிராஜ மடம் என்கிற மடத்தை ஸ்தாபித்து ஸ்ரீ பாஷ்யாதி கிரந்தங்களை கால ஷேபம் சொல்லிக் கொண்டு
திரு நாராயணன் செல்வப்பிள்ளை இவர்களுக்கு சர்வவித கைங்கர்யங்களையும் சர்வ காலங்களிலும் நடத்திக் கொண்டு
தன்னுடைய அழகிய மணவாளனுடைய பிரிவையும் மறந்து பன்னிரண்டு சம்வத்சரம் இந்த யாதவகிரியில் எழுந்து அருளி இருந்தார்

அப்போது உடையவர் அந்த ஆனந்தமய திவ்ய விமானத்தைச் சுற்றி அழகான கோயில் கட்டி வைத்தார் –
அனந்தரம் குடை சாமரம் விசிறி வெற்றிலை பாக்கு பெட்டி காளாஞ்சி கண்ணாடி கரகம் முதலான சகலவித கைங்கர்யங்களுக்கும்
சோழியரை அழைப்பித்து ஸ்ரீ ரெங்கத்தில் இருந்து திரு நாராயணப் பெருமாள் அரையரை விண்ணப்பம் செய்வதற்காகவும்
பல்லாண்டு பாடுவதற்காகவும் அழைத்து கைங்கர்யங்களை நடப்பித்துக் கொண்டு போந்தார் –
அவர்களுக்கு ஐம்பத்து இருவர் என்ற பெயர் கொடுத்து அருளினார் –
அவர்களை சாம்யங்கள் என்று நான்காகப் பிரித்து கிரமமாக திருவனந்த புர தாசர் மேலாக தாசர் திருக்குறுங்குடி தாசர் யதிராஜ தாசர்
என்ற தாஸ்ய நாமங்களைக் கொடுத்து அவர்களுக்கு விருது முதலானவைகளைக் கொடுத்து ஞான உபதேசம் செய்து
செல்வப்பிள்ளையை நீங்கள் கிணற்றின் கரையில் இருக்கும் குழந்தையைப் பார்த்துக் கொள்ளுவது போலே
பய பக்தியோடு ஜாக்ரதையாக பார்த்துக் கொண்டு எப்பொழுதும் மங்களா சாசனம் செய்து கொண்டு இருக்க வேணும் என்று எச்சரித்து
தன் வஸ்துவை பிறர் கையில் ஒப்புவித்து வைப்பது போலே இவர்கள் இடம் செல்வப்பிள்ளையைக் கொடுத்தார்
உடையவர் திரு நாராயணனுக்கும் செல்வப்பிள்ளைக்கும் யாதொரு குறைகளும் இல்லாத படி ஏற்பாடுகளைச் செய்தார் –

உடையவர் ஒரு நாள் கல்யாணி தீர்த்தத்தில் ஸ்நானத்திற்காக சென்று இருந்த போது ஸ்ரீ ரெங்கத்தில் இருந்து வந்த –
மாருதிச் சிறியாண்டான்-என்கிறவர் தண்டன் இட்டு-
தேவரீர் திருவரங்கத்தில் இருந்து இந்தப்பக்கம் எழுந்து அருளினை பிறகு கூரத்தாழ்வானுக்கும் பெரிய நம்பிக்கும் கண்ணை வாங்கின
பாவியான அந்த சோழ ராஜன் கழுத்திலே புண்ணால் புழுத்து மாண்டான் –என்று விண்ணப்பம் செய்தார்
இதைக் கேட்டவுடனே -இந்த வராஹ நாயனார் திரு மேனி வியர்வை தீர்த்தம் கல்யாணி என்ற பெயர் ரூடமாய் இருந்தது –
இப்போது லௌகிகம் ஆயிற்று -இப்போது நல்ல செய்தி செவிப்பட்டது -ஆகவே இது கல்யாணி தீர்த்தம் என்று சொல்லி
ஸ்நானம் செய்து மலையிலே யோக நரசிம்மனையும் சேவித்து -ஸ்வாமிந் உம்முடைய யோக அப்யாஸத்தை விட்டுக் கேட்க வேணும் –
அடியேன் சாளக்ராமத்தில் சோழ ராஜன் விஷயமாக பிரார்த்தித்து இருந்தேன் -பரம தயாளுவாகவும் தீன பந்துவாகவும் இருக்கிற நீர்
இப்பொழுது ச பலமாக்கினீர் -என்று விண்ணப்பம் செய்தார் –

பிற்பாடு தமக்கும் ஸ்ரீ ரெங்கநாதனுக்கும் சரணாகதி கத்ய ரூபமான சம்வாதம் நடந்த பொழுது –
யாவத் சரீரபாதம் அத்ரைவ ஸ்ரீ ரெங்க ஸூகமாஸ்வ -என்று அழகிய மணவாளன் நியமித்தத்தை நினைத்து –
சோழன் முடித்தான்-இங்கே அவசியம் செய்ய வேண்டியவை எல்லாம் செய்து முடித்தாயிற்று –
இனி கோயிலுக்குப் போக வேண்டும் என்று உத்தேசித்து திரு நாராயணனை நியமனம் கேட்டார்-
திரு நாராயணன் இஷ்டம் இல்லாமல் நிருத்தரனாய் இருந்தான் –
இவரும் புத்ர வாத்சல்யத்தாலே செல்வப்பிள்ளையை விட்டு இருக்க மாட்டாமல் போக முடியாமல் இருந்தார் –
ஐம்பத்து இருவர்களும் உடையவர் திருவடிகளைப் பிடித்து -தேவரீர் எங்களுக்குப் பெருமாள் –
தேவரீருக்கு செல்வப்பிள்ளை பெருமாள் -எங்கள் பெருமாளைப் பார்த்துக் கொள்வது எங்கள் கடைமை –
உம்முடைய பெருமாளை தேவரீர் தான் பார்த்துக் கொள்ள வேண்டும் நீர் எங்கே போனாலும்
நாங்களும் அங்கேயே வருவோம் என்று விண்ணப்பித்தார்கள்-
இந்த மூன்று வித தடங்கல்களால் -அந்தப்பக்கம் ஸ்ரீ ரெங்கநாதன் நியமனம் -இந்தப்பக்கம் திருநாராயணன் நியமனம் –
எனக்கும் விட்டுப் போக முடியாது -ஐம்பத்து இருவரும் இங்கே இருந்து கிளம்பினால் இவ்வளவு செய்தும் சிறிதும்
பிரயோஜனம் இல்லாமல் போய் விடும் என்று உடையவர் யோசித்து ஒன்றும் சரியாக தோன்றாமல் –
இரண்டு இடத்திலும் நாமே இருந்தே இருக்க வேண்டும் -என்று நிச்சயித்து நல்ல மேதாவியான ஒரு சிற்பியை வரவழைத்து
தம்முடைய திருமேனியைப் போலவே ஒரு குறை இல்லாமல் ஒரு விக்ரஹத்தைச் செய்வித்து –
அந்த விக்ரஹத்தை பாஞ்சராத்ர ஸாஸ்த்ர ஆகமத்தில் சொல்லுகிற பக்த விக்ரஹ பிரதிஷ்டா க்ரமத்தாலே பிரதிஷ்டை செய்வித்து
பிராண பிரதிஷ்டை செய்யும் பொழுது தம்முடைய யோக சக்தியின் மகிமையால் தாமே அந்த விக்ரகத்தில் சாந்நித்யம் செய்து
ஐம்பத்து இருவருக்கும் விஸ்வாசம் பிறப்பதற்காகத் தாமே அப்பாலே நின்று திரைக்குள்ளே இருக்கும் விக்ரஹத்தாலே பேச –
இங்கே இன்று நாம் விபவ அவதாரம் போல் இருக்கிறோம் -தெரிந்ததா -நீங்கள் உங்களுடைய
கைங்கர்யங்களில் சிரத்தையுடன் இருங்கள் என்று நியமித்து
திரு நாராயணன் தான் ஐம்பத்து இருவர் நம் போல்வார் எல்லாருக்கும் சந்தோஷமாம் படிக்கு
இங்கேயே நித்ய வாசம் செய்து கொண்டு இருக்கிறார் –

இப்பொழுதும் இன்றைக்கும் நித்தியமாக திரு நாராயணனுக்கு செல்வப்பிள்ளைக்கும் சர்வவித்த கைங்கர்யங்களையும்
தாமே செய்து கொண்டு த்ருடமான மஹா விஸ்வாசம் இருக்குமவர்களுக்கு தம்முடைய விசித்திர சக்தியைக் காண்பிபித்துக் கொண்டு
கலி புருஷனாலே தோஷம் ஏற்பட்டாலும் அதை போக்கிக் கொண்டு சேதனருக்காக திரு நாராயணன் இடத்தில் தாம் புருஷகாரித்து
ப்ரபத்தியும் செய்து கொண்டு எழுந்து அருளி இருக்கிறார் –
இது எப்படித்தெரியும் என்றால் –
பகவத் அனுபவத்தால் பரமானந்த பூர்ணதையையும்
ஆனந்த பரிவாஹ ரூபமான புன்சிரிப்பையும்
த்ருணீக்ருத ஜகத்த்ரயராய் இருக்கிற காம்பீர்யத்தையும்
லோகம் எல்லாம் உஜ்ஜீவிக்க வேண்டும் என்று கிருபா மாத்ர ப்ரசன்னாச்சார்யராய் இருக்கும்
அத்திருமுக பிரசாதத்தையும் தேஜஸ்ஸையும் ஸுவ்லபயங்களையும்
ப்ரத்யக்ஷமாக இந்த மாம்ச சஷுஸ்ஸூக்களுக்கும் தெரிவிக்கும் அந்த திவ்ய மங்கள விக்ரஹத்தை சேவித்தால் அவருடைய
ஸமஸ்த கல்யாண குணங்களும் விபவ அவதார சாம்யங்களும் நிதர்சனம் ஆகும்
இப்படி இருந்து இப்பொழுதும் திரு நாராயணன் சேவைகளை இன்றும் நடத்திக் கொண்டு வருகிறார் நம்முடைய உடையவர் –

————–

ஸ்ரீ யதிகிரீச ஸூப்ரபாதம் –

ஸ்ரீ மந் யதுஷிதி ப்ருதீச ஹரே முராரே
நாராயண ப்ரணத ஸம்ஸ்ருதி தாரகாங்க்ரே
ஸ்ரீ மந் திராயத மநோஜ்ஞ விசால வஷ
ஸ்ரீ யாதவா சலபதே தவ ஸூப்ர பாதம் -1-

ஆதவ் க்ருதே கமல ஜன்மநி சத்ய லோகே
த்வா அப்யர்ச்சிய தத்தவதிபோ வை குமாரகாயா
தேநா வதீர்ய வஸூதா க்ருத சந்நிதான
ஸ்ரீ யாதவா சலபதே தவ ஸூப்ர பாதம் -2-

இந்த்ரா நாலாந்தக நீர்ப்பூத்ய பயோதிராஜை
நித்யம் ஸமீரணதா நாதிபசர்த முக்யை
சம் ஸேவ்யமான சரணாம்புஜ திவ்ய தாமம்
ஸ்ரீ யாதவா சலபதே தவ ஸூப்ர பாதம் —3-

ஸ்ரீ ஸைன்ய நாயக பராங்குச நாத ஸூரி
பத்மாஷ ராம யமு நார்ய ஸூ பூர்ணவர்யை
ஸ்ரீ லஷ்மணாகில வரார்ய மதார்ய முக்யை
நித்யார்ச்சித அங்க்ரிக விபோ தவ ஸூப்ரபாதம் -4-

அஷ்டாஷராண்யபி ஸூ தீர்த்த மிஷேண வேத
தர்பாப்ஜயா தவ பலாச பராசராத்யை
நாராயண அச்யுத வநாக்ய சரித்பிருச்சை
சேவ்யத் பதாம் புஜ யதூத்தம ஸூப்ர பாதம் -5-

ஷேத்ரை படாஸ்ம நரஸிம்ஹ மஹீத்ர சம்வி
தச்வத்த தார்க்ஷய நயநாதி வராஹ முக்யை
சீதாடவி ப்ரப்ருதி ஸ்ரித திவ்ய தாமம்
ஸ்ரீ யாதவா சலபதே தவ ஸூப்ர பாதம் -6-

மந்த்ரார்த்த முத்கிரதி தே மம நாத வஷ
பாதவ் த்வயஸ்ய பரமார்த்த முதா ஹரந்தவ்
ஸ்லோகார்த்தமீச விவ்ருணோதி தவைஷ ஹஸ்தவ்
ப்யேவம் ஸமீரண யதூத்தம ஸூப்ர பாதம் -7-

யத் கௌதுகம் தவ கஜேந்திர விபத்விநோதே
யா ச த்வரா த்ரூபதஜா பரிபாலநேவா
தத் ரூபயா த்வரிதயா பவ சிந்து மக்நம்
மாம் தாரயேஹ யதுசைலமணே ப்ரபாதம் -8-

ப்ராதஸ் ஸூ நிச்சலமதிர் யதுசைல பந்தோ
யே வா படேதனுதிநம் யதி ஸூப்ர பாதம்
தஸ்மை விஹங்கத கமலா சஹாயா
நாராயண பரகதிம் ஸூலபம் ப்ரஸூத-9-

ஜய ஜய ஸூப்ர பாதம் அரவிந்த லோசந தே
ஜய ஜய யாதவாத்ரி சிகர உஜ்ஜ்வல தீப ஹரே
ஜய ஜய பாஷ்யகார க்ருத மங்கள பக்த நிதே
ஜய ஜய தேவ தேவ விநதா நபி நந்தயன்-10-

கல்யாணி விலசத்யதுகிரி நாராயணாத்ரி கல்பதரோ
சம்பத்குமார பவதே நித்ய ஸ்ரீர் நித்ய மங்களம் பூயாத் -11-

ஸ்ரீ ரெங்க மங்கள மணிம் கருணா நிவாஸம்
ஸ்ரீ வேங்கடாத்ரி சிகராலய காள மேகம்
ஸ்ரீ ஹஸ்தி சைல சிகர உஜ்ஜ்வல பாரிஜாதம்
ஸ்ரீசம் நமாமி சிரஸா யது சைல தீபம் –

———————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ யதுகிரி நாத வல்லி சமேத ஸ்ரீ திரு நாராயணன் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் ஸ்ரீ பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ ராமானுஜ நூற்றந்தாதி பாசுரமும்- ஸ்ரீ ஆழ்வார் பாசுரங்களும் –7-மொழியைக் கடக்கும் பெரும் புகழான்- இத்யாதி —

March 19, 2020

ஸ்ரீ பெரிய ஜீயர் உரை –அவதாரிகை –
இப்படி தம்முடைய அயோக்யதையை பார்த்து -நமக்கு இது துச்சகம் -என்று மீள நினைத்தவர் –
ஸ்ரீ ஆழ்வான் திருவடிகளில் சம்பந்தமுண்டான பின்பு எனக்கு அசக்ய அம்சம் ஒன்றும் இல்லை -என்று-
ஸ்தோத்ரத்திலே பிரவ்ருத்தர் ஆகிறார் –

ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் அருளிய உரை– அவதாரிகை –
கீழ்ப் பாட்டிலே ஞான பக்த்யாத்யா அனுபவ ரூபமான தம்முடைய அயோக்யதையை-நினைத்து பிரபந்த ஆரம்பத்திலே பிற்காலித்து-
இப்பாட்டிலே-ஆழ்வான் திருவடிகளின் சம்பந்தம் ஆகிய ராஜ குல மகாத்ம்யத்தை அனுசந்தித்து –
இப் பிரபந்த உத்யோகம் கடினம் அல்ல –சுலபமாயே யாய் இருக்கும் என்று-அதிலே ஒருப்படுகிறார் .

ஸ்ரீ அமுது விருந்து–ஸ்ரீ ராம கிருஷ்ண ஐயங்கார் ஸ்வாமிகள் -அருளிய உரை அவதாரிகை-
துதிக்கத் தகுதி இன்மையின் எனக்குத் துதித்தல் அரிய செயல் என்று மீண்டவர் -இப் பொழுது –
ஆழ்வான் திருவடி சம்பந்தம் உண்டான பின்பு தகுதி இன்மை அப்படியே நிற்குமோ ?-
அது நீங்கி விட்டமையின் எனக்கு அரியது ஒன்றும் இல்லை என்று மீண்டும் துதிக்க இழிகிறார் –

மொழியை கடக்கும் ராஜ குல மகாத்மயம் உண்டு-ஆழ்வான் சம்பந்தம் கிடைத்த பெருமை.
உயிர் ஆன பாசுரம் . இது இந்த பிரபந்தத்துக்கு-ஆச்சார்யர் சிஷ்யர் இருக்கும் முறை ஆழ்வான் காட்டி கொடுக்கிறார்
இவருக்கு ஆசார்ய சிஷ்ய லஷண பூர்த்தி இரண்டுமே உண்டு ..-தேசிய அக்ரேஸர் -என்றார் மா முனிகள் வாசா மகோசர ஸ்லோகத்தால் –
-திரு வடி கிட்டிய பலம்..அல்லா வழி-கடத்தல்-இனி வருத்தம் இல்லை என்கிறார் இத்தால் –

மொழியைக் கடக்கும் பெரும் புகழான் வஞ்ச முக்குறும்பாம்
குழியைக் கடக்கும் நம் கூரத் ஆழ்வான் சரண் கூடிய பின்
பழியைக் கடத்தும் இராமானுசன் புகழ் பாடி அல்லா
வழியைக் கடத்தல் எனக்கு இனி யாதும் வருத்தம் அன்றே -7-

பத உரை –
மொழியைக் கடக்கும் -பேசி முடிவு கட்ட முடியாதபடி பேச்சிற்கு அப்பால் பட்ட
பெரும் புகழான் -பெரிய புகழ் வாய்ந்தவரும்
வஞ்சம்-வஞ்சிக்கிற –அதாவது -ஏமாற்றுகிற
முக்குறும்பாம் -மூன்று குற்றங்கள் ஆகிற
குழியை -விழப் பண்ணுகிற குழியை
கடக்கும் -விழாமல் தப்பை கடந்து சென்றவரும் ஆகிய
நம்-நமக்கு ஸ்வாமி யான
கூரத்து ஆழ்வான் -கூரம் என்னும் ஊரை சேர்ந்த கூரத் ஆழ்வான் உடைய
சரண்-திருவடிகளை
கூடிய பின் -அடைந்ததற்குப் பிறகு
பழியை-பழி போல் அனுபவித்தே தீர வேண்டிய பாபச் செயலை -அதனில் விழுந்து விடாத படி –
கடத்தும் -தாண்டுவிக்கும்
இராமானுசன் -எம்பெருமானார் உடைய
புகழ்-குணங்களை
பாடி-துதித்து
அல்லா வழியை -தகாத வழிகளை
கடத்தல்-விழாது தப்பி செல்லுதல்
எனக்கு -பாடிய எனக்கு
யாதும் -ஒன்றும்
வருத்தம் அன்று -அரியதாகாது
மொழியைக் கடக்கும் பெரும் புகழான் –
தான் ஆஸ்ரயித்த ஆழ்வானை வணங்குகிறார் –
புகழ்-குணம்-

————–

பேச்சுக்கு நிலம் இல்லாத பெரிய புகழை உடையராய் -ஆத்ம அபஹாரத்தை விளைப்பதாய் —
தனித் தனியே பிரபலமாய்க் கொண்டு மூலை அடியே நடத்துவதான –
அபிஜன / வித்யா / வ்ருத்தங்கள்-ஆகிற படு குழியைக் கடந்து இருப்பாராய்-
நமக்கு நாதரான கூரத் ஆழ்வான் உடைய திருவடிகளை ஆஸ்ரயித்த பின்பு

மொழியைக் கடக்கும் பெரும் புகழான் –
ஒரு சப்தத்தை இட்டு வர்ணிக்க அரியதாய் -நித்ய அபி வ்ருத்யங்களாய்-கொண்டு –பரம பதத்தளவும்
பெருகி வருகிற கல்யாண குணங்களை உடையவன் –
மொழியை கடக்கும் பெரும் புகழ் என்பதால் மேலே பாசுரம் ஆழ்வான் மேல் பாட முடியாது .இந்த பிரபந்தத்திலே

உணர்ந்து உணர்ந்து உணரிலும் இறை நிலை உணர்வது அரிது உயிர்காள்-1-3-6-

எப்பால் யாவர்க்கும் நலத்தால் உயர்ந்து உயர்ந்து அப்பால் அவன் எங்கள் ஆயர் கொழுந்தே -1-7-2-

தன் முடிவு ஓன்று இல்லாத தண் துழாய் மாலையானை -2-6-8-

ஒட்டு உரைத்து இவ்வுலகு யுன்னைப் புலவு எல்லாம் பெரும்பாலும் பட்டுரையாய்ப் புற்கென்றே காட்டுமால் பரஞ்சோதி -3-1-2-

வஞ்ச முக்குறும்பாம் –
வஞ்சக ஹேதுக்களாய்-ததீய விஷயத்திலே ஸ்வ சாம்ய புத்திகளையும்-
ஸ்வ ஸ்மின் ஆதிக்ய புத்திகளையும் பிறப்பித்து -ஸ்வரூப நாசங்களாய் இருந்துள்ள –
அபிஜன வித்யா வ்ருத்தங்கள் ஆகிற அஹங்கார த்ரயமும் -ஜகத் பிரதாரகங்களான இம் மூன்றும் ஆகிற-குழியை கடத்தும் –
குரங்கு பைத்தியம் பிடித்து தேள் கொட்டி மது குடித்து படும் பாடு போலே அன்றோ இக்குழிகள் படுத்தும் பாடு –
திருக் கச்சி நம்பி –பெரும் தேவி தாயார் செல்வந்தர் வார்த்தை கெட்டு -மனம் வருந்தி –
துரந்து ராமானுஜர் அடி பணிந்த கீர்த்தி உண்டே

தம்முடைய அபிமான அந்தர் பூதரை அந்த படு குழியில் விழாதபடி தம்முடைய-உபதேசத்தாலே-
தத்வ ஹித புருஷார்த்த யாதாம்ய ஞானத்தை பிறப்பித்து -அதில் நின்றும்-கடத்துமவன் –
கடத்துகை -தாண்டுவிக்கை –
குழியைக் கடக்கும் -என்று
பாடமான போது -இம் மூன்றுமாகிய படு குழியை கடந்து இருக்குமவர்-என்றபடி-

நம் கூரத் ஆழ்வான்
நம்முடைய கூரத் ஆழ்வான்
இவரை உத்தரிப்பிக்கைக்கு காணும்-அவருடைய அவதாரம் -ஆகையால் இறே நம் கூரத் ஆழ்வான் என்கிறார் .
கூரம் என்னும் திவ்ய தேசத்துக்கு-நிர்வாஹரான ஸ்வாமி உடைய திரு நாமத்தை வஹித்தவர் –
எம் கூரத் ஆழ்வான் -என்றும் பாடம் சொல்லுவார்கள் –

சரண் கூடிய பின் –
இப்படிப் பட்ட வைபவத்தை உடையரான -ஆழ்வான் உடைய திருவடிகளை –ஆஸ்ரயித்த பின்பு
இப்படிப் பட்ட ராஜ குல மகாத்ம்யத்தை நான் பெற்ற பின்பு –

பழியை கடத்தும் –
இவ்வளவாக நான் மூலை யடியே நடந்து போகையாலே வந்தேறி யாய் –
லோக கர்ஹிதமாய் -தம்முடைய குண கீர்த்தனம் பண்ணுகைக்கு விரோதியான என்னுடைய பாபத்தை சவாசனமாக நிவர்திப்பிக்கும்

ஆழ்வான் இடம் உள்ள குணங்கள் மொழியை கடந்து உள்ளன–பெருமை வாய்ந்தனவுமாயும் உள்ளன –
இதனை அடி ஒற்றி யதிராஜ விம்சதியில்
வாசா மகோசர மகா குணா -பேச்சுக்கு நிலம் ஆகாத பெரும் குணம் -வாய்ந்தவர் கூரத் ஆழ்வான் –என்கிறார் மணவாள மா முனிகள் –
வானிட்ட கீர்த்தி வளர் கூரத் ஆழ்வான் -என்பர் பிள்ளை பெருமாள் ஐயங்கார் –
மொழியைக் கடந்தமை -மனத்தைக் கடந்தமைக்கும் உப லஷணம்
பரப் ப்ரஹ்மத்தின் உடைய ஆநந்த குணம் வாக்குக்கும் மனத்துக்கும் எட்டாதது என்று உபநிஷத் கூறுகிறது-
அது போன்றவைகளே மற்றைக் குணங்களும்-அத்தகைய குணங்கள் பர பிரமத்திற்க்கே உரியவைகளாய் இருக்க
ஆழ்வானை மொழியைக்-கடக்கும் பெரும் புகழானாக வருணிப்பது எங்கனம் பொருந்தும் எனில் -கூறுதும் –

பர ப்ரஹ்மத்தின் உடைய ஆனந்தம் சம்சார விஷய அனுபவங்களில் பற்று அற்ற ஸ்ரோத்ரியனுக்கும் உண்டு
என்று அவ் உபநிஷத்தே ஓதி இருத்தலின்
பர ப்ரஹ்மத்தின் ஆனந்தமும் மற்றைக் குணங்களும்-பற்று அற்ற ஸ்ரோத்ரியான ஆழ்வானுக்கும் உண்டு என்று உணர்க
பர ப்ரஹ்மத்தை ஒக்க அருள் பெற்றவர் ஆழ்வான் என்க-
நான் பெற்ற பேறு நாலூரானும் பெற வேண்டும் -என்று பகைவர் திறத்தும் காட்டும் கிருபை-முதலிய
ஆழ்வான் குணங்கள் எவரால் அளந்து பேச முடியும் ?
ஆசார்யரான எம்பெருமானார் தம் கருணை முழுவதற்கும் கொள்கலமாய் மேல் ஓங்கும் தன்மை
ஆழ்வானுக்கு உரிய தனிப் பெருமையாய் அவர் பெருமையை மொழிக்கு எட்டாதது ஆக்கி விடுகிறது –
அடியார்கள் பலர் இருப்பினும் எம்பெருமான் அருள் முழுவதும் ஆழ்வாருக்கே உரித்தாய்த்து போலே –
சீடர்கள் பலர் இருப்பினும் எம்பெருமானார் அருள் முழுதும் ஆழ்வானுக்கே உரித்தாய்த்து என்க –
பலர் அடியார் முன்பருளிய பாம்பணை அப்பன் – என்னும் இடத்து
பகவத் விஷய வ்யாக்யானத்தில் காட்டப் பட்ட-ஐதிஹ்யத்தால் இவ் உண்மையை உணர்க –
ஸ்ரீ பாஷ்ய நூல் இயற்ற எம்பெருமானார்க்குப் பேருதவியாய் இருந்து-அதனை ஈடு படுத்திக் கொடுத்து
அவர் அருளுக்கு-இலக்கானமை ஆழ்வானுக்கே உரிய பெரும் புகழாம்–
அக்ர்யம் யதீந்திர சீஷ்யாணாம் ஆத்யம் வேதாந்த வேதினாம் -எம்பெருமானார் சீடர்களில் முன் நிற்பவர் –
வேதாந்தம் அறிந்தவர்களில் முதல்வர் -என்பது காண்க –

வஞ்ச முக்குறும்பாம் குழியைக் கடக்கும்
வஞ்ச முக்குறும்பு -வஞ்சத்தை விளைக்கின்ற முக்குறும்பு என்று விரிக்க –
இரண்டாம் வேற்றுமை வுருபும் பயனும் உடன் தொக்க தொகை –
வஞ்சம்-வஞ்சனை -ஏமாற்றம் -அதாவது
ஒரு பொருளை மற்று ஒரு பொருளாகவோ அன்றி-மற்று ஒரு விதமாகவோ காண்பது –
ஆன்மா அல்லாத உடல் என்னும் பொருளை மற்று ஒரு பொருளான ஆத்மவாகக் காண்பதும் –
இறைவனுக்கு பரதந்த்ரமாக இருக்கும் ஆன்மா என்னும் பொருளை ஸ்வ தந்த்ரமாய் மற்று ஒரு-விதமாக காண்பதும் வஞ்சமாம் என்க-
இந்த வஞ்சத்தை விளைப்பன மூன்று குறும்புகள்-

வஞ்ச-வஞ்சன பர-
வ்ருத்யா பசுர் நரவபு த்வஹம் ஈத்ருசோபி-ஸ்ருத்யாதி சித்த நிகிலாத்ம குணாஸ்ரயோயம்
இத்யாதரேண க்ருதி நோபி மித ப்ரவக்தும் -அத்யாபி வஞ்சன பரோத்ர யதீந்திர வர்த்தே-ஸ்ரீ யதிராஜ விம்சதி –-7-

குறும்பு -குற்றம் -அதாவது அஹங்காரம் –
அஹங்காரம் என்று ஒரு சொல்லால் குறிப்பிடப் படினும் ஒன்றை ஓன்று எதிர்பாராது தனித்தனியே-வஞ்சத்தை
விளைத்தலின் குறும்புகள் மூன்று வகைப் பட்டன –
குலத்தால் வரும் அஹங்காரம் –கல்வியால் வரும் அஹங்காரம் –நடத்தையால் வரும் அஹங்காரம்-என்பன அம்மூன்று வகைகள் –
இவற்றை குழியாக உருவகம் செய்கிறார் –
தம்முள் அகப்பட்டாரை அதோகதிக்கு-உள்ளாக்கி மேலான நிலையை அடைய ஒட்டாமல் செய்தல் பற்றி –

மக்கள் தோற்றக் குழி தோற்றுவிப்பாய் கொல் என்று இன்னம்
ஆற்றங்கரை வாழ் மரம் போல் அஞ்சுகின்றேன்-11-8-1-
கொள்ளக் குறையாத இடும்பைக் குழியில் தள்ளிப் புகப் பெய்தி கொல் என்று அதற்கு அஞ்சி
வெள்ளத்திடைப் பட்ட நரியினம் போலே உள்ளம் துளங்கா நிற்பான் ஊழி முதல்வா -11-8-5-
தூராக் குழி -அன்றோ சம்சாரம் –

குல செருக்கு –
தன்னை மேம்பட்டவனாயும் -பாகவோத்தமர் உள் பட ஏனையோரைக் கீழ் மக்களாகவும்-கருதச் செய்து
தேஹாத்மா அபிமானத்தை விளைத்து அதோகதிக்கு உள்ளாக்குகிறது –
கல்விச் செருக்கு –
அங்கனமே மற்றவரை தாழ்வாக நினைக்க செய்து தன்பால் அந்தர்யாமியாய்-எழுந்து அருளி உள்ள எம்பெருமானை
அறிகிலாத் தன்மையில் -அசேதனப் பொருளோடு ஒப்ப ஓதப்படும்-தன்னை -ஆத்மா ஸ்வரூபத்தை–
பேர் அறிவாளனாகவும் அதனால் எல்லாம் செய்ய வல்லவனாகவும்- மதிக்க செய்து இறைவனுக்கே பர தந்த்ரனாகிய தன்னை
ஸ்வ தந்த்ரனாக மயங்கப் பண்ணி-அதோகதிக்கு உள்ளாக்குகிறது –
நடத்தை -அதாவது -ஒழுக்கத்தால் -வரும் செருக்கு –
தானே உயர்ந்தவன் -ஏனையோர் இழுக்கமுற்றவர்-என்று எண்ணச் செய்து இருமையிலும் தாமே உறு பயனைப் பெற வல்லவன்
என்று பர தந்த்ரனாகிய-தன்னை ஸ்வ தந்த்ரனாக மயங்க செய்து அதோகதிக்கு உள்ளாக்குகிறது –

ஆழ்வான் உயர் குலத்தினராயும் -கல்வியில் கரை கண்டவராயும் -நல் ஒழுக்கம்-வாய்ந்தவரையும் இருப்பினும் -இவற்றால் வரும்
செருக்குக்கு இடம் தராமையின்-இக் குழிகளைக் கடந்தவர் என்கிறார் –

நம் கூரத் ஆழ்வான்
என்னும் இவ் இடத்தில் உள்ள சொல் தொடரில் –
கூரம் என்பதால் குலச் சிறப்பும் அறிவில் ஆழம் உடைமையைக் காட்டும்
ஆழ்வான் என்பதால் கல்விச் செருக்கும் – இரட்டுற மொழிதலால் அச் சொல்லாலேயே அறிவின் பயனாய
இறை அனுபவத்தில் ஆழம்-உற்றமை தோற்றுதலால் அறிவுக்கு தக்க படி ஒழுகுதலும் தோன்றுகின்றன –
பின்பற்ற தக்க நாதனாம் உறவு முறையைக் காட்டும் நம் -என்பதால் -அந்த ஒழுக்கத்தின் சிறப்புத் தோன்றுவதும் காண்க
வேதம் ஓதிய ஸ்ரோத்ரியனாகவும் – பிரம்மத்தில் நிஷ்டை உடையவனாகவும் –
அதாவது ஞானமும் அனுஷ்டானமும் உள்ளவனாகக் குரு இருத்தல் வேண்டும் என்கிறது வேதம் –
இதனால் ஆசார்யனுக்கு வேண்டிய லஷணம் ஆழ்வான் இடம் அமைந்து இருப்பதாக காட்டினார் ஆயிற்று –

ஆபஸ்தம்பர் -அபிஜன வித்யா சமுதேதம் சமாஹிதம்சம் ச்கர்தாரம் ஈப்சேத்–என்று
குடிப்பிறப்பு கல்வி இவைகளோடு கூடினவனும் -மனத்தில் ஓர்மை உடையவனுமான ஆசார்யனைப் பெற விரும்புக –
என்று இம்மூன்றும் ஆசார்யனுக்கு உரியனவாகக் கூறி இருப்பது கவனிக்கத் தக்கது –
மனத்தின் ஒர்மையை கூறினார் ஆபஸ்தம்பர் -ஒழுக்கம் உடைமையைக் கருதுகிறார் இங்கு ஆசிரியர் –
ஓர்மைப் படும் மனத்தை அடக்கினார்க்கு அல்லது ஒழுக்கம் வாய்க்க்தாதலின் ஒழுக்கம் உடைமையில்
ஒர்மைப்படும் படியான மன அடக்கம் அடங்கும் என்க -எமது நல் ஒழுக்கத்தை பின் பற்றுக -என்று
உபநிஷத்தில் சிஷ்யனை நோக்கி ஆசார்யன் கூறுவதும் இங்கே நினைக்க தக்கது –

சரண் கூடிய பின் -என்று அடுத்துக் கூறுவதற்கு ஏற்பவும் முக்குறும்பை கடந்தமையை –
அதாவது -செருக்கு அற்று -குலம் கல்வி ஒழுக்கம் -ஆகிய இம்மூன்றும் உடைமையை ஆசார்ய-லஷணமாக
வியாக்யானம் செய்வது நேர்மை உடையதாகும் –
மணவாள மா முனிகள் -அபிஜன வித்யா வ்ருத்தங்கள் ஆகிற படு குழியை -என்று உரை அருளி உள்ளார் –
சிலர் வ்ருத்ததுக்கு-ஒழுக்கத்துக்கு -பதில் செல்வத்தை சேர்ப்பார் –
ஆழ்வானும் ஸ்ரீ வைகுண்ட ஸ்தவத்தில்-வித்யா தன அபிஜன ஜன்ம மதேன -என்று
செல்வ செருக்கை தான் கூறி உள்ளார் –ஒழுக்கத்தை சொல்லவில்லை –
ஆயினும் இவ்விடத்தில் செல்வச் செருக்கை சொல்லுவது ஏற்ப்புடைதாகுமா எனபது சிந்தித்ததற்கு உரியது –
பொன் வட்டில் தனை எறிந்த புகழுடன் ஸ்ரீ ரங்கத்தில் உஞ்ச விருத்தி பண்ணிக் கொண்டு இருக்கும் போது அன்றோ-
அமுதனார் ஆழ்வான் சரண் கூடியது –
ஸ்ரீ வைகுண்ட ஸ்தவத்தில் நைச்ய அனுசந்தானமாக கூறியது-பழைய நிலையை பொறுத்ததாகும் –

குழியைக் கடத்தும்
என்றும் ஒரு பாடம் உண்டு -அப்போது தம் சரண் கூடினாரையும் இப்படு குழியில்-விழாமல் தண்டு விப்பார் எனபது பொருள்

சூழ் கண்டாய் என் தொல்லை வினையை அறுத்துன்னடி சேறும்
ஊழ் கண்டிருந்தே தூராக் குழி தூர்த்து எனை நாளகன்றிருப்பன்
வாழ் தொல் புகழார் குடந்தைக் கிடந்தாய்! வானோர் கோமானே!
யாழி னிசையே! அமுதே! அறிவின் பயனே! அரிஏறே!–5-8-6-

எம் கூரத் ஆழ்வான் –
என்று பாடம் ஓதுவாரும் உண்டு
கூரத் ஆழ்வான் –
கூரம் என்னும் ஊரைச் சேர்ந்த ஆழ்வான் —அவதாரம் செய்த ஊராதலின் அதனையும் சேர்த்து அனுசந்திக்கிறார் –
ஏகாந்திகளை கிராம குலாதிகளால் குறிப்பிடலாகாது-எனபது வைகுந்தமாகும் தம்மூரெல்லாம் –எனப்படும்
பெருமை வாய்ந்த ஆழ்வான் போல்வார் இடத்தில் இல்லை என்க –
தம் அவதாரத்தாலே-அவ்வூரையும் வைஷ்ணவ ஸ்தலம் ஆக்கும் வீறு படைத்தவர் அல்லரோ அவர் –
கூரத் ஆழ்வான் என்பதை கூராதி நாதா -என்று மொழி பெயர்க்கிறார் மணவாள மா முனிகள்.
ஆழ்வான் என்பதற்கு தலைவன் என்று பொருள் கொண்டார் போலும் அவர் .
உண்மை அறிவிலும் -இறை அனுபவத்திலும் -மேம்பட்ட நிலையில் உள்ளவர்களை ஆழ்வார்கள் என்பர் –
வயற்றிலே பிறந்தவளாயினும் ராஜ மகிஷியாகப் பட்டம் கட்டினால் ஆழ்வார் என்று இறே சொல்லுவது –என்பர் பெரிய வாச்சான் பிள்ளை
திரு நெடும் தாண்டகம் -11 – பாட்டு வ்யாக்யானத்தில் ..
மதி நலம் அருளப் பெற்ற ஆழ்வார்களைப் போலே அருளி செயல்களில் ஆழ்ந்த அறிவும் அனுபவமும்-வாய்ந்துள்ளமை பற்றி
ஆழ்வான் -என்று பின்னர் பலர் வழங்கப் பட்டனர் –

ஆழ்வானது குலம் பெருமை வாய்ந்தது –
இறை உணர்வும் அனுபவமும் இக்குலத்துக்கு பரம்பரையாக வரும் சொத்து –
இவருடைய தந்தையாரும் மதிநலம் அருளப் பெற்ற ஆழ்வார்களைப் போன்று இறை அனுபவத்தில்-திளைப்பவராக இருந்தார் –
இப்பொழுது தந்தையும் மகனுமாக இரண்டு கூரத் ஆழ்வார்கள் ஆயினர்.
வேற்றுமை தெரிவதற்காக தந்தையைக் கூரத் ஆழ்வார் என்றும் மகனைக் கூரத் ஆழ்வான் என்றும்-வழங்கி வந்தனர் .
ஆழ்வான் இளமையில் தன தாயை இழக்க -இவரது பாகவத லஷணத்தை கண்ட தந்தையான ஆழ்வார் –
மறு மணம் புரிந்து கொண்டால் மகனுக்கு தீங்கே பாகவத அபசாரமாக முடியும் என்று மறுமணம் செய்து கொள்ளாமலே இருந்தாராம் –
பாகவத அபசாரம் நேராமைக்காக இல்லறம் நடத்த வாழ்க்கை துணை இல்லாமலும் துறவு பூனாமலும் அவர் இருந்து
ஆழ்வானைப் பேணினார் -பாகவதரைப் பேணும் விசேஷ தர்மத்துக்காக சாமான்ய தர்மத்தை துறந்த-மகா பாகவதோத்தமர் அவர் –
ஆழ்வானது இயற் பெயர் ஸ்ரீ வத்ஸ சிஹ்ன மிஸ்ரர் -எனபது –திரு மறு மார்பன் -என்றபடி –
சரண் கூடிய பின் –
சரண்-திருவடிகள் / கூடுதல்-சேர்த்தல் /திருவடிகளை பற்றிய பின் என்றபடி
கூடிய பின் எனக்கிது யாதும் வருத்தமன்று என்று கூட்டுக

——-

பழி போலே அவஸ்யம் அனுபோக்த்யமான பாப கர்மங்களிலே மக்னர் ஆகாதபடி-நிஸ்தரிப்பிக்கும்
எம்பெருமானார் உடைய-திவ்ய குணங்களை ப்ரீதி ப்ரேரிரிதராய் கொண்டு-பாடி
ஸ்வரூபம் அனுரூபம் இல்லாத மார்க்கங்களை தப்புகையாலே எனக்கு இனி ஒன்றும்-அருமை இல்லை –

குழியைக் கடத்தும் -என்று பாடம் ஆன போது
தம்முடைய அபிமான அந்தர்பூதரையும்-இப் படு குழியில் விழாமல் கடத்தும் அவர் -என்கை –
எம் கூரத் ஆழ்வான் -என்றும் பாடம் சொல்லுவார்கள்-

ஆச்சார்யர் சிஷ்ய லக்ஷணம் பூர்ணர் -ராஜ குல மஹாத்ம்யம்
குலம் கல்வி செல்வம் ஒழுக்கம் -குரங்கு பைத்தியம் தேள் கொட்டி கள்ளும் குடித்து -பழி பாவம் காரண கார்யம் –
குலம் ரூபம் வயோ வித்யா தனஞ்ச மத யந்தமும் -ஐந்தும் -இருந்தாலும் கல்வி தனம் குலம் செருக்கு மிக கொடியவை அன்றோ –

இராமானுசன் –
எம்பெருமானார் உடைய –
புகழ் பாடி –

திக்குற்ற கீர்த்தி இராமானுசனை என் செய்வினையாம்
மெய்க்குற்றம் நீக்கி விளங்கிய மேகத்தை மேவும் நல்லோர்
எக்குற்றவாளர் எது பிறப்பே எது இயல்வாக நின்றோர்
அக்குற்றம் அப்பிறப்பு அவ்வியல்வே நம்மை ஆள் கொள்ளுமே –26- –

ஈந்தனன் ஈயாத இன்னருள் எண்ணில் மறைக் குறும்பைப்
பாய்ந்தனன் அம்மறைப் பல் பொருளால் இப்படியனைத்தும்
ஏய்ந்தனன் கீர்த்தியினால் என் வினைகளை வேர் பறியக்
காய்ந்தனன் வண்மை இராமானுசற்கு என் கருத்து இனியே – 77 –

பெரியவர் பேசிலும் பேதையர் பேசிலும் தன் குணம் கட்கு
உரிய சொல்லென்றும் உடையவன் என்று என்றென்று உணர்வில் மிக்கோர்
தெரியும் வண் கீர்த்தி யிராமானுசன் மறை தேர்ந்து உலகில்
புரியு நன் ஞானம் பொருந்தாதவரைப் பொரும் கலியே – – 87- –

வளர்ந்த வெங்கோப மடங்க லொன்றாய் அன்று வாளவுணன்
கிளர்ந்த பொன்னாகம் கிழித்தவன் கீர்த்திப் பயி ரெழுந்து
விளைந்திடும் சிந்தை யிராமானுசன் என்தன் மெய்வினைநோய்
களைந்து நன்ஞானம் அளித்தனன் கையில் கனி என்னவே – – 103 –

அங்கயல் பாய் வயல் தென்னரங்கன் அணியாக மன்னும்
பங்கய மா மலர்ப் பாவையைப் போற்றுதும் பத்தி யெல்லாம்
தங்கிய தென்னத் தழைத்து நெஞ்சே நம் தலை மிசையே
பொங்கிய கீர்த்தி இராமானுசனடிப் பூ மன்னவே – – 108-

ஏய்ந்த பெரும் கீர்த்தி இராமானுச முனிவன்-
தமிழ் மறைகள் ஆயிரமும் மொய்ம்பால் வளர்த்த இதத்தாய் -இராமானுசன் என்னும்படியான-
அவருடைய கல்யாண குணங்களை –
இப் ப்ரபந்தம் முகேன கீர்த்தனம் பண்ணி –

பழியைக் கடத்தும் இராமானுசன்
பழி -பாவம்
பழி அஞ்சிப் பாத் தூண் உடைத்தாயின் -குறள்-இல்வாழ்க்கை -என்னும் இடத்திலும்
பாவம் என்னும் பொருளில் பழி என்னும் சொல் வழங்கப் பட்டுள்ளமை காண்க –
செயற்பாலதொரு மரனே ஒருவற்கு உயர்பாலதோரும் பழி -திரு குறள்-அறன் வலி வுறுத்தல் –
என்னும் இடத்தில் அறனுக்கு எதிர் சொல்லாக பழி என்னும் சொல் வழங்கப் பட்டு உள்ளது அறன் -நல் வினை
பழி -தீ வினை
பழிக்கப் படுவதனைப் பழி என்றார் -என்பர் பரிமேல் அழகர்
மணவாள மா முனிகள் பிராரப்த கர்மத்தையும் தொலைக்க வல்லவர் என்னும் கருத்துப் பட-
பழியை உவமை ஆகு பெயராக கொண்டு -பழி போலே அவஸ்யம் அனுபோக்தவ்யமான –அனுபவித்தே தீர வேண்டிய
பாப கர்மங்கள்-என்று உரை அருளி உள்ளார் –
தீச் செயலில் முழுகி அழுந்தாதபடி கை தூக்கி விடுதலின் –பழியைக் கடத்தும் இராமானுசன் -என்றார் –
ச்ருத்யக்ர வேத்ய நிஜ திவ்ய குண ஸ்வரூப -பிரத்யஷதாம் உபகத இஹ ரங்க ராஜ –
வஸ்ய சதா பவதி தே யதிராஜ தஸ்மாத் -சக்த ஸ்வ கீய ஜன பாப விமோசன் த்வம் –ஸ்ரீ யதிராஜ விம்சதி –17-
சக்தஸ் ஸ்வ கீய ஜன பாப விமோசன த்வம் -என்று -தன்னை சேர்ந்த மக்களின் பாபங்களைப்-போக்குவதில் வல்லவர்
தேவரீர் -என்றார் மணவாள மா முனிகளும் -யதிராஜ விம்சதியில் –

இனி
பழி பாவம் கை யகற்றிப் பல் காலும் நின்னை
வழி வாழ்வார் வாழ்வராம் மாதோ -வழுவின்றி
நாரணன் தன் நாமங்கள் நன்குணர்ந்து நன்கேத்தும்
காரணங்கள் தாமுடையார் தாம்———பழி பாவம் கையகற்றி -இரண்டாம் திருவந்தாதி – -20 -என்னும் இடத்தில் போலே
காரணம் இன்றி வரும் நிந்தையை பழி என்னலுமாம் –
பாவம் செய்யா விடினும் செய்ததாக ஏறிட்டு கூறும் அபவாதம் பழி என்க
அப்பழி என்னும் குழியில் விழுந்து உழலாது தன்னை அண்டினவர்களைக்-காப்பாற்றுகிறாராம் எம்பெருமானார் –
பெரும்பாலும் ஒழுக்க நெறியினின்றும் பிறழ்ந்தார்கே பழி-நேரிடக் கூடும் –
இழுக்கத்தின் எய்துவர் எய்தா பழி -என்றார் வள்ளுவனாரும்–
இயல்பாகவே ஒழுக்கம் கெட்டவர்கள் ஒரு குறிப்பிடப் பட்ட பாவம் செய்யா விடினும்
பகைமையாலோ -வேறு ஏதுக்களினாலோ பிறர் அதனை அவர் மீது ஏறிடின்-ஒக்கும் என்று உலகம் ஒப்புகிறது –
அத்தகைய பழி யினுக்கும் உள்ளாகாது தம்மை அண்டினோரைக் காத்து விடுகிறாராம்
எம்பெருமானார் -முன்பு எத்தகைய நிலையில் இருந்தாலும் எம்பெருமானாரை பற்றினவர்கள் நெறி தவற கில்லார்-எனபது
உலகம் கண்டு அறிந்த உண்மை யாதலின் அவரை அண்டினவர்களுக்கு பழி எய்தாது என்க –
ஆசாரே ஸத்தாபயத்யபி -என்றபடி ஒழுக்கத்தில் நிலை நிறுத்துவது ஆசார்யன் கடமை அன்றோ –
நம்மை நம் வசத்தே விடுமே சரணம் என்றால் -என்றபடி
சரண் அடைந்தவரை அவர்கள் இஷ்டப்படி-நடக்குமாறு விட்டுக் கொடுக்காதவர் எம்பெருமானார் என்க –
புகழ் பாடி
புகழ் -குணம்
குணங்களை அனுபவிப்பது உள் அடங்காது பாட்டாக வெளிப்பட்ட படி

அல்லா வழியை கடத்தல்
என்னுடைய அபத ப்ரவர்தியை தப்புகை –
அன்றிக்கே –
கர்ப்ப-யாம்ய தூமாதிகளை ஆக்ரமிக்கையால் என்னுதல் –
எம்பெருமானார் உடைய திருவடிகளைக் கிட்டி அனுபவிக்கையில் -என்றபடி –

எனக்கு இனி யாதும் வருத்தம் அன்றே
எனக்கு இனி –
இப்படி எம்பெருமானார் உடைய-கைங்கர்யத்தில் அதி கரித்து க்ர்தார்த்தனான எனக்கு -இத்தனை நாளும் சில உபத்ரவம்
உண்டாய் இருந்தாலும் -இன்று முதலாக மேலுள்ள காலம் எல்லாம்-யாதும் -எந்த விஷயத்திலே யாகிலும்
வருத்தம் அன்றே –
அசாத்தியமானது இல்லை-
அல்லா வழியை என்று –
அம் மார்க்கங்கள் அதி ஹேயங்கள் ஆகையாலே -திருப் பவளத்தாலே
இன்னது என்று நிர்தேசிக்க அருவருத்து -சாமான்யேன அருளிச் செய்கிறார் .
அல்லா வழியை கடத்தல் எனக்கு இனி யாதும் வருத்தம் அன்றே –
சகல பாப விமோஷன பூர்வகமான பரம பதத்தை பெருகையிலும் இவருக்கு ஒரு-கண் அழிவு இன்றிக்கே
அத்யந்த சுலபமாய் காணுமிருப்பது –
வைகுந்த மா நகர் மற்றது கையதுவே -என்னக் கடவது இறே –

அல் வழக்கு ஒன்றும் இல்லா அணி கோட்டியர் கோன் அபிமான துன்கண் செல்வனைப் போலே -11-

அல்லா வழியைக் கடத்தல்
அல்லாத வழி அல்லா வழி
ஈறு கெட்ட எதிர் மறைப் பெயர் எச்சம் நல் வழி அல்லாதது அல் வழி
இராமானுசன் புகழ் பாட அவர் இவன் பழியைக் கடத்தவே அப்பழி அடியாக நேரும்
அல் வழியைக் கடப்பது அமுதனாற்கு எளிதாகி விடுகிறது –

எனக்கு இனி யாதும் வருத்தம் அன்றே
எனக்கு –
சரண் கூடிப் புகழ் பாடி அல் வழியைக் கடக்கும் தகுதி வாய்ந்த எனக்கு-
சரண் கூடும் போது தாம் ஒரு பொருளாகத் தோற்றாமையின் தம்மைக் கண்டிலர் –
அதனால் -நான் -சரண் கூடிய பின் -என்றிலர் கீழே –
இப்பொழுது தாம் ஒரு பொருளாகி விட்ட படியால் எனக்கு வருத்தம் அன்று -என்கிறார்
இனி-சரண் கூடிப் பாடிப் பழியைக் கடந்த பின் .
பழியை-பாபத்தை -கடக்கவே மதியின்மையும் பக்தியின்மையும் நீங்கி நல்ல நெஞ்சாகி
விட்ட படியால் அல்லா வழியை எளிதில் கடந்து விடுகிறார் –
முழுதும் பெரும் கீர்த்தியை மொழிந்திட முடியாவிடினும் இயன்ற அளவு-களிப்புடன் பாடி உயர்வு பெற முற்படுகிறேன் என்றார் ஆயிற்று –

ஆழ்வான் என்று இவர் அருளி செயலில் ஈடுபட்டதை மெச்சி நம் ஆழ்வானோ என்று-உகந்து
எம்பெருமானாரே சாத்திய திருநாமம் –
ஆழ்வார்களை போல ஆழங்கால் பட்டவர்..பக்தி பாரவஸ்யத்தாலே ஆச்சார்யர் ஞான ஆதிக்யத்தாலே இடை பட்டு ஆழ்வான் ..
தாம் பெற்ற பேறு நாலூரனுக்கும் வரதன் இடம் கேட்டு பெற்று கொடுத்த மகா குணம் உண்டே –
அடியேன் உள்ளான் -ஞாதவ்யமா சேஷத்வமா ஆத்மாவுக்கு முக்கிய குணம் –ஸ்ரீ பாஷ்யம் எழுதி அருளிய பொழுது ஸ்வாமி இடமே வாதாடி –
சிறிது நாள் அவர் மடத்தில் வெளியில் இருந்து-பின் உள்ளே சென்று – ஸ்வாமி தாள் விலகாமல் இருந்த மகிமை
உடையவர் உடமையை எங்கு வைத்தால் என்?-என்றாரே
சிஷ்ய லஷண பூர்த்தி/ ஸ்ரீ பாஷ்யம் எழுத சக காரியம்..எங்கள் ஆழ்வான் எழுதியதும் ஆழ்வான் போல இருகிறதே என்றார்
பாம்பின் வாயில் தவளை இருந்து கதற அதையும் ரஷகன் இருப்பதை இதுவும் உணர்ந்ததே என்றார் ஆழ்வான் .
பாகவதர்களை மதித்து – -சு சாம்ய புத்திகளை- சமம் என்று கூட நினைக்க கூடாது ..
ஞானி எண்ணம் வர சேஷத்வம் குறைந்து விட கூடாது –
அனுஷ்டானம் நன்றாக இருக்கிறது என்று எண்ணாமல் கர்ம பண்ணத்தான் நாம்– கர்ம பலத்துக்கு அவனே அதிகாரி.என்று உணர வேண்டும்
பலத்துக்கும் ஹேது நாம் இல்லை ..செய்யாமை இல்லை..-நாம் தான் செய்கிறோம் என்ற நினைவு தான் கூடாது ..
எதிர் பொங்கி மீதளிக்கும் கன்றுகள் போல் எம்பெருமானார் சிஷ்யரில் பிரதான கூரத் ஆழ்வான் போல்வார் –
குழியை கடத்தும் ..அன்றிக்கே கடந்தும் ..
ப்ரஹ்மம் போல பெரியவன் தன்னை அண்டியவரையும் பெரியவனாக ஆக்குபவன்
நம்-
இவரை-அமுதனாரை – உத்தரிக்க தானே ஆழ்வான் அவதாரம்.
ஆழ்வாரும் கடல் கடைந்தது கஜேந்திர மோஷம் எல்லாம் அவருக்கு என்று அருளியது போல

பாம்பணை மேல் பாற்கடலுள் பள்ளி யமர்ந்ததவும்
காம்பணை தோல் பின்னைக்கா ஏறு உடன் எழ செற்றதுவும்
தேம்பணைய சோலை மராமரம் ஏழு எய்ததுவும்
பூம்பிணைய தண் துழாய் பொன் முடியம் போரேறே –திருவாய் மொழி -2-5-7-

வேத மாதா வுக்கு மங்கள சூத்திரம் போல ஆழ்வான் அருளிய ஸ்ரீ சூக்திகள் எல்லாம் –
பாவங்களை கடக்கும்-ராமானுஜர் பெருமை ஆழ்வான் சரண் அடைந்த தன் பின் பேச முயல்கிறார் இனி மேல்
எம்பெருமானாரே தனது …உத்தரீயம் மேலே போட்டு கூத்தாடினாரே கூரத் ஆழ்வான் சம்பந்தம் உடைய-அனைவருக்கும்
பரம பதம் நிச்சயம் என்று அருளிய பின்-
வழி இல்லா வழி –அல்லா வழி -வாயால் அதை சொல்ல கூடாது
பேதை பாலகன் அது ஆகும் போல.-அருவருத்து –-எனக்கு இனி யாதும் வருத்தம் அன்றே

சகல பாப விமோசன பூர்வகமாக பரம பதத்தை பெறுவதிலும் கண் அழிவு இன்றி சுலபமான-
வைகுண்ட மா நகர் கையில் . மதுரகவி சொன்ன சொல் .வைகுந்தம் காண்மினே-என்று
ஆசார்ய அபிமானமே உத்தாரகம் என்று காட்டி அருளிய மகா குணம் உண்டே ..

வாசா யதீந்திர மநஸா வபுஷா ச யுஷ்மத் –பாதாரவிந்த யுகளம் பஜதாம் குருணாம்
கூராதி நாத குருகேச முக ஆத்ய பும்ஸாம் -பாதா நு சிந்தன பர சததம் பவேயம் ––ஸ்ரீ யதிராஜ விம்சதி –3-

வாசாம் அகோசர மஹா குண தேசிக அக்ர்ய-கூராதி நாத கதித அகில நைச்ய பாத்ரம்
ஏஷ அஹம் ஏவ ந புநர் ஜகதி ஈத்ருசஸ் -தத் ராமாநுஜார்ய கருணைவ து மத் கதிஸ்தே–14-

—————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருமலை நல்லான் சக்கரவர்த்தி ஸ்ரீ ராம கிருஷ்ண ஐயங்கார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருவரங்கத் தமுதனார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

ஸ்ரீ ராமானுஜ நூற்றந்தாதி பாசுரமும்- ஸ்ரீ ஆழ்வார் பாசுரங்களும் –6- இயலும் பொருளும் இசையத் தொடுத்து இத்யாதி ..-

March 18, 2020

ஸ்ரீ பெரிய ஜீயர் உரை-அவதாரிகை-
பத்தி ஏய்ந்த வியல்விதென்று என் பாவினக் குற்றம் காண கில்லார் -என்றார் கீழ்.
அந்த பக்தி தான் தமக்கு உண்டோ என்று பார்த்த இடத்தில் -அதுவும் விஷய அனுகுணமாக-தமக்கு இல்லாமையாலே-
ஸ்தோத்ர யுக்தரான தம்மை கர்ஹிக்கிறார் –

ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் ஸ்வாமிகள் அருளிய உரை அவதாரிகை –
கீழில் பாட்டிலே மந்த மதிகள் -பழி சொன்னார்கள் ஆகில் -அதுவே தமக்கு பூஷணம் என்றார் –
இப்பாட்டிலே -என்னைப் பார்த்து-கீழ்ப்பாட்டிலே ப்ரஸ்துதரான அஞ்ஞர் சொல்லும் பழிக்கு ஒரு படி-சமாதானம் பண்ணிக் கொண்டு போன தாம் –
என்னைப்பார்த்தால் -சர்வ லோக பிரசித்தரான எம்பெருமானார் உடைய வைபவத்துக்கு தகுதியாய்-இருந்துள்ள
பக்தி பிரேமங்களில் ஒன்றாகிலும் என் பக்கலிலே இல்லை -ஆனாலும் -அவர் தம்மை-ஏத்துவதாக உத்சாஹியா நின்றேன் –
எத்தனை சாஹசம் பண்ணத் தொடங்கினேன் என்று – கர்ஹிக்கிறார் –

அமுது உரை அவதாரிகை-ஸ்ரீ திருமலை நல்லான் சக்கரவர்த்தி ஸ்ரீ ராம கிருஷ்ண ஐயங்கார் ஸ்வாமிகள்
அன்பர் பக்தி பாட்டு என்று என் பாவினக் குற்றம் காணகில்லார் –ஆதலின் புகழ் முழுதும் உள் பொதியத் துதிப்பேன் என்று ஊக்கம் மிக்கவராய்
முற்பட்டுத் துதிக்கப் பட-வேண்டிய எம்பெருமானாருடைய ரூப குணாதிகளிலே நாட்டம் செலுத்தினார் –
அவை எம்பெருமானார்-அருளால் அளவிடற்கு அரியனவாய் விரிந்து கிடந்தமை தெரிந்தது இவர்க்கு -பீடு வாய்ந்த இவற்றை பற்றிப் பாடுவதற்கு
ஏற்ற பக்தி தம்மிடம் உண்டோ என்று பார்த்தார் –
பாட வேண்டிய விஷயமோ மிகப்பெரியது .பாடுவதற்கு வேண்டிய பக்தியோ இல்லை என்று சொல்லலாம்படி மிக சிறியது .
அங்கனம் இதனை ஆராய்ந்து என் நெஞ்சம் இதனில் ஈடுபட்டது என்று தம்மை இகழ்ந்து-துதிப்பதினின்றும் மீளுகிறார் –

இனிய கவிஞர்கள் கூட நேரே நின்று பேச இயலாது –அன்பினால் மயங்கி வாழ்த்த தொடங்கி-விடுகின்றனரே –
அத்தகைய எம்பெருமானார் புகழையோ
பக்தி இல்லாத நான் பேசத் துணிவது ?-இது சாஹசச் செயல் அன்றோ என்பது கருத்து .
இதனில் துணிந்து இறங்கிய நான்- செய்யத் துணியாத செயல் உண்டோ -எனபது குறிப்பு எச்சம் –

சாகசச் செயல் என்று கை வாங்குகிறார்–மீண்டும் கலக்கம் ஆசை வளர வளர –தன்னை பார்க்கில்-விலகி- அவரை பார்க்கில் உந்த-
இது யாவதாத்மா பாவி -ஞானம் வளர விலகி பக்தி வளர பாட-ஆழ்வார்கள் போலே -பலம் தேற மீண்டும் வருவார்.

இயலும் பொருளும் இசையத் தொடுத்து ஈன் கவிகள் அன்பால்
மயல் கொண்டு வாழ்த்தும் இராமானுசனை மதியின்மையால்
பயிலும் கவிகளில் பக்தி இல்லாத வென்பாவி நெஞ்சால்
முயல்கின்றனன் அவன் தன் பெரும் கீர்த்தி மொழிந்திடவே – 6 –

பத உரை –
ஈன் கவிகள் -இனிய கவி வாணர்கள்
இயலும் -சொல்லும்
பொருளும் -அச் சொல்லின் பொருளும்
இசைய -பொருந்தும்படி
தொடுத்து -வரிசைப் படுத்தி
அன்பால்-அன்பினாலே
மயல் கொண்டு -மயங்கி
வாழ்த்தும் -பல்லாண்டு பாடும்
இராமானுசனை -எம்பெருமானாரை
பயிலும் -பேசி செறிந்து இருக்கும்
கவிகளில் -பாடல்களில்
பக்தி இல்லாத -பக்தி இல்லாமல் இருக்கிற
என் பாவி நெஞ்சால்-எனது கொடிய நெஞ்சால்
அவன் தன் -அவ் எம்பெருமானாரை சேர்ந்த
பெரும் கீர்த்தி -பெரும் புகளை
மொழிந்திட -பேசி விடுவதாக
மதி யின்மையினால்-அறிவு இல்லாதபடியால்
முயல்கின்றனன் -முயற்சி செய்து கொண்டு இருக்கிறேன்–

சப்தமும் – அர்த்தமும் பொருந்தத் தொடுத்த் விலஷணரான கவிகள்-பிரேமத்தாலே அறிவு இழந்து ஏத்தா நின்று உள்ள எம்பெருமானாரை –

இயலும் -சப்தமும்–பொருளும் -அர்த்தமும் -சமுச்சயத்தாலே ராகமும் -இசைய -பொருந்தும்படி
தொடுத்து -பிரதிபாதகத்துக்கும் -பிரதி பாத்யத்துக்கும் -ஒரு குறை இல்லாதபடி சந்தர்ப்பித்து –
ஈன் -அவதரிப்பித்து -பிரபந்த நிர்மாணம் பண்ணுகிற கவிகள் -விலஷணமான கவிகள் –அன்பால்-பிரேம பிரகர்ஷத்தாலே –
மயல் கொண்டு -அறிவு அழிந்து -ஞான விபாக கார்யமான-அஞ்ஞானம் தலை எடுத்து
வாழ்த்தும் –
வாழி எதிராசன் வாழி எதிராசன் வாழி எதிராசன் என வாழ்த்துவார்-வாழி என வாழ்த்துவார் வாழி என வாழ்த்துவார் வாழி என வாழ்த்துவார்
தாழ் இணையில் தாழ்த்துவார் விண்ணோர் தலை –என்றும் –
அறு சமய செடி யதனை அடி அறுத்தான் வாழியே -என்று தொடங்கி-அதில் மிகு நல் பெரும் பூதூர் அவதரித்தான் வாழியே -என்றும்
சீராரும் எதிராசார் திருவடிகள் வாழி -என்று தொடங்கி-இனி திருப்போடு எழில் ஞான முத்தரை வாழியே -என்றும் –
வாழியரோ தக்கோர் பரவும் தடம் சூழ் பெரும் பூதூர் முக்கோல் பிடித்த முனி -என்றும்
இப்படி அவர்களாலே மங்களா சாசனம் பண்ணப்படும் –இராமானுசனை –எம்பெருமானாரை

இயலும் பொருளும் இசையத் தொடுத்து –
அந்தந்த இடத்தில் கூறப்படும் பொருளுக்கு ஏற்ப சொற்கள்
இன்புற அமையும் ஈன் கவிகள்-தம் கவிதைகளிலே –இன் கவி பாடும் பரம கவிகளான-முதல் ஆழ்வார்கள் கவிதைகளிலே-இதனை நாம் காணலாம்
பெருகு மத வேழம் -என்று தொடங்கும் பாசுரத்தை நாம் இதற்க்கு-உதாரணமாக கொள்ளலாம்-

பெருகு மத வேழம் மாப்பிடிக்கு முன்னின்று
இரு கண் இள மூங்கில் வாங்கி -அருகிருந்த
தேன் கலந்து நீட்டும் திருவேங்கடம் கண்டீர்
வான் கலந்த வண்ணன் வரை–இரண்டாம் திருவந்தாதி–75-

ஊடல் கொண்ட பிடிக்கு -அது திரும்பும் பக்கம் எல்லாம் தான் போய் முன் நின்று-பெருகு மத வேழம் இள மூங்கிலை அருகில் இருந்த தேனில்
கலந்து ஊடல் தீர்க்க கொடுப்பதற்காக-கெஞ்சி கை நீட்டி கொண்டே இருப்பதாக கூறும் பொருளுக்கு ஏற்ப அங்கே சொற்கள் அமைந்து
இருக்கும் அழகு அறிந்து இன்புறத் தக்கது –
ஊடலின் வன்மை தோன்ற பிடிக்கு முன் நின்று நீட்டும்-என்னும் சொல் தொடரில் வல் எழுத்து மிக்கும்
கெஞ்சிக் கொடுக்கும் பாவம் துலங்க இரு கண் இள-மூங்கில் வாங்கிப் பெருகு மத வேழம் அருகு இருந்த தேன் கலந்து –என்னும் சொல் தொடரில்
மெல் எழுத்து மிக்கும் அமைந்துள்ள அழகு கண்டு இன்புறுக-
குற்றம் இன்றி அழகு வாய்ந்த சொற்களும் பொருள்களும் இயைந்து நிற்றலே காவியத்தின் இலக்கணமாம் –

சமத்க்ருதி ஜனக சப்தார்த்த காவ்யம் என்பர் -வட நூலார் -மனத்துக்கு இன்பம் பயக்கும் சொல் பொருள் காவியம் -என்றபடி ..
தொடுத்து என்னும் சொல் –
வல்லவன் மாலையில் பூத் தொடுப்பது போலச் சொற்கள் யையும் படி-கோப்பதை கூறுகிறது ..
நறிய நல் மலர் நாடி -என்று நம் ஆழ்வாரும் சொற்களை மலராக கூறினமை காண்க –
பாடிக் கொடுத்தாள் நல் பா மாலை சூடிகே கொடுத்தாள்-நாச்சியாரும்
கலியன் ஒலி மாலை நிலையார் பாடல் பாடப் பாவம் நில்லாவே –
இப்பாசுரத்திலே சொல் என்னும் பொருளில் இயல் என்னும் சொல்லை அமுதனார் தொடுத்து இருப்பதைக் காண்க .
இச் சொல் அன்றி வேறு எந்தச் சொல்லை வழங்கினும் இங்கு இசையாமை காண்க .

ஈன் கவிகள் அன்பால் மையல் கொண்டு வாழ்த்தும் இராமானுசன் —
கேட்கும் பொழுதே சுவை ததும்ப பாடும் அவர்கள் ஈன் கவிகள்…இன் கவிகள் என்பதன் நீட்டல் விகாரம் .-இனி
ஈனுகின்ற கவிகள் என்று வினைத் தொகை-ஆகலுமாம் ..-ஈனுதல்-உண்டு பண்ணுதல் -அதாவது அழிவற்ற காவிய உலகினைப் படைத்தல் .
ஈன் கவிகள் ஆழ்வான் போன்றவர்கள்..அவர்கள் எம்பெருமானாரை பாடுகின்றனர் ..
வள்ளல்களை ஏனைய கவிகள் செல்வம் பெறுவதற்காக பாடுவதைப் போலே அவர்கள் பாடவில்லை-அன்பினாலே பாடுகின்றனர் –
ஏனையோர்களை செல்வம் பாடுவிக்கிறது ..அன்பு பாடுவிக்க திருமாலை பாடினர் ஆழ்வார்கள் என்னும் கவிகள்–
அவ் அன்பினால் அவர்கள் அதிகம் கலங்கி விட வில்லை.ஆகையால் அவாவில் அந்தாதிகள் ஆயிரம் பாட முடிந்தது .
உலகம் படைத்தான் கவியாய அவர்கள் உலகம் படைத்தவன் புகழ் மேல-மருள் இன்றி தெருள் கொள்ள சொன்னது ஆயிரம்.
ஈன் கவிகளாகிய ஆழ்வான் போல்வார்களோ -அன்பு பாடுவிக்க -எம்பெருமானாரை பாடினர் –
அவ் அன்பு மேன்மேல் பெருகா நின்று ஆழ்வார்களைப் போல் பாடி முடிக்க இயலாமல் செய்து விடுகிறது .
மயல் கொண்ட அவர்கள் ஆசார்யனாய் தம்மை காத்து அருளும் எம்பெருமானாரை தாம்-காப்பதாக கருதத் தொடங்கி விடுகின்றனர்
தொடங்கவே -குழந்தைகளை பெற்றோர்-ஆசீர்வதிப்பது போலே வாழ்த்த தலைப் படுகின்றனர் -அன்பு படுத்தும் பாடு இது —
தொடங்கின புகழ் பாட்டை வாழ்த்துப் பாட்டாக தலைக் கட்ட செய்கிறது .அது.

எம்பெருமானாரை ஆர்த்தி உடன் துதிக்க புகுந்த மணவாள மா முனிகளை
இவ் அன்பு-தொடக்கத்திலேயே வாழ்த்திக் கொண்டு போய் நிறுத்தும் விசித்திரம் இங்கு நினைவிற்கு வருகிறது –
வாழி எதிராசன் வாழி எதிராசன்-வாழி எதிராசன் என வாழ்த்துவார் -வாழி என
வாழ்த்துவார் வாழி என வாழ்த்துவார் தாள் இணையில்-தாழ்த்துவார் விண்ணோர் தலை -ஆர்த்தி பிரபந்தம்
இங்கே அன்பு பெருகிப் பரம பக்தியால் மயங்கி வாழ்த்துச் சுழியில் அகப்பட்டு-
அடியார் அடியார் அடியார் தம் வாழ்த்துவரை ஆழ்ந்து ஒருவாறு வெளிப்பட்டு தெளிந்து திரும்பி விடும் அதிசயம் கவனிக்க தக்கது –
பெரியோரை சிறியோர் வாழ்த்தும் போது மயங்கித் தானே யாக வேண்டும் .ஆகையால் -மயல் கொண்டு வாழ்த்தும் -என்கிறார்
மயல் கொண்டவர்கள் கவிகள் -கட்குப் புலன் ஆகாதவையும் அறிவுக் கண் கொண்டு-காண வல்லார் அல்லீரோ கவிகள் ?
அத்தகைய அறிஞர்க்கு மயக்கம் எங்கனம் பொருந்தும் ?
இதற்க்கு விடை அளிக்கிறது –அன்பால்-என்பது-
அன்பினால் வந்த மயக்கம் -வினைப் பயனால் வந்தது அன்று என்பது குறிப்பு –
அறியாத பிள்ளைகளும் அன்பினால் சிறு பேர் அழைத்தனவோம் சீறி அருளாதே –
ஆரா அமுதே! அடியேன் உடலம் நின் பால் அன்பாயே
நீராய் அலைந்து கரைய உருக்குகின்ற நெடுமாலே!
சீரார் செந்நெல் கவரி வீசும் செழு நீர்த் திருக் குடந்தை
ஏரார் கோலம் திகழக் கிடந்தாய் கண்டேன் எம்மானே–5-8-1-உன் அழகாலே என்னை உருக்குகின்ற நீ கண் வளர்ந்தருளக் கண்டேன்;

பயிலும் கவிகளில் –
இராமானசனைப் பயிலும் கவிகளில் என்று கூட்டுக –கவி இங்கே கவிதை -பாட்டு
ஈன் கவிகள் என்னும் இடத்தில் கவிகள் என்றது கவி புனைபவர் என்றபடி –
இன் கவி பாடும் பரம கவிகள் -என்னும் இடத்தில் இரு பொருளினும் கவி என்னும் சொல்-வழங்கப் பட்டுள்ளமை காண்க –

பெரிய ஆழ்வார் ஜடாயு போல்வார் பொங்கும் பரிவால் பல்லாண்டு ஸ்ரீமான் அருளியது போல்
வேண்டிய வேதங்கள் ஓதி விரைந்து கிளி அறுத்தான்–கண்டதும் சேவித்து பல்லாண்டு என்றாரே
ஜடாயு-ஆயுஷ்மான்-முதலில்..பிராணன் போய் கொண்டு இருக்கும் பொழுது .
இயம் சீத மம சுதா தர்ம சாரித வர்தந்தாம் -சொல்ல வந்தவர் நடுவில் -பத்ரந்தே–ஜனகன் –. பிரேமத்தின் கார்யம் -தட்டு மாறி கிடக்கும்
காயம் பட்ட உடம்பை காட்ட வந்த ரிஷிகளும் சக்கரவர்த்தி திருமகனை கண்டதும் –மங்களானாம் – உண்ண வந்து வாயை மறந்தார்களே
அன்பால் -பிரேமத்தால்.. மயல் கொண்டு -அறிவு அழிந்து-அறிவு முதிர முதிர பக்தி வரும்– பக்தி மிக அறிவு அழியும்.
ரஷகனை ரஷிக்க பாரிப்பார்கள் – ஞான முதிர்ந்த நிலை-மயல் கொண்டு-ஞானம் கனிந்து தானே பக்தி..
அல்லாதாருக்கு சத்தா சம்ருத்திகள் தர்சன அனுபவ கைங்கர்யங்களாலே-இவர்க்கு மங்களா சாசனத்தாலே -ஸ்ரீ வசன பூஷண ஸ்ரீ சுக்தி 257- –
பெரும் கீர்த்தி மொழிய வர மாட்டார்கள்….அறு சமய செடி அறுத்து வைத்தான் வாழியே–
இயல் சாத்து பல்லாண்டு ..பாடிக் கொண்டு இருக்கிறோம் நாமும்-

வாழி திருக் குருகூர் வாழி திரு மழிசை
வாழி திரு மல்லி வள நாடு -வாழி
சுழி பொறித்த நீர்ப் பொன்னித் தென்னரங்கன் தன்னை
வழி பறித்த வாளன் வலி–ஸ்ரீ வகுளா பரண பட்டர் அருளிச் செய்த தனியன்

திரு நாடு வாழி திருப் பொருநல் வாழி
திரு நாட்டுத் தென் குருகூர் வாழி திரு நாட்டுச்
சிட்டத்தமர் வாழி சடகோபன்
இட்டத் தமிழ்ப் பா விசை–ஸ்ரீ பராங்குச தாசர் அருளிச் செய்த தனியன்

வாழியரோ தென் குருகை வாழியரோ தென் புதுவை
வாழியரோ தென் குறையல் மா நகரம் -வாழியரோ
தக்கோர் பரவும் தடம் சூழ் பெரும் பூதூர்
முக்கோல் பிடித்த முனி–ஸ்ரீ பிள்ளை இராமானுச தாசர் அருளிச் செய்த தனியன்-

ஊழி தொறும் ஊழி தொறும் உலகம் உய்ய
உம்பர்களும் கேட்டு உய்ய அன்பினாலே
வாழி எனும் பூதம் பேய் பொய்கை மாறன்
மழிசையர் கோன் பட்டர் பிரான் மங்கை வேந்தன்
கோழியர் கோன் தொண்டர் துகள் பாணன் கோதை
குல முனிவன் கூறிய நூல் ஓதி வீதி
வாழி என வரும் திரளை வாழ்த்துவர் தம்
மலரடி என் சென்னிக்கு மலர்ந்த பூவே –ஸ்ரீ பின்பு அழகராம் பெருமாள் ஜீயர் அருளிச் செய்த தனியன்

தஞ்சமாக பற்றுகையும் பேறு தப்பாது என்று துணிந்து இருக்கையும் பேற்றுக்கு துவரிக்கையும் போல..
சப்தம் கேட்கும் பொழுதே ஆனந்தம் பூர்வாசார்யர் வியாக்யான சொல் -இசைய தொடுத்தார்கள்..கோர்த்து இல்லை
தொடுத்து-ரத்னம் கோர்த்தல் புஷ்பம் தொடுத்தல் போலே -கவிகள் புனைந்து –
ஸ்ரீ வசன பூஷணம் -கோர்தாரே-பூர்வர்கள் அருளிய வசனங்கன்களைக் கொண்டே -உடைக்க முடியாது
ஆச்சார்ய ஹிருதயமும் அப்படியே ஸ்ரீ சூக்திகளை கொண்டே புனையப் பட்ட பிரபந்தம்
பாசுரப்படி ஸ்ரீ ராமாயணமும் அப்படியே அருளி செயல் ஸ்ரீ சூக்திகள் கொண்டு புனைய பட்டது

இயலும் பொருளும் இசைய தொடுத்து –
சொல்லும் பொருளும் பொருந்தும் படி வரிசைப் படுத்தி
வாக் அர்த்தம் போல பார்வதியும் சிவனும் -உள்ளார்கள்– என்றானே – காளிதாசன்
இசையும் -சங்கீதமும் அமைத்து என்றுமாம்

————-

பிரதிபாதகத்வேன செறிந்து இருப்பதான கவிகளில் பக்தி இன்றிக்கே இருக்கிற-என்னுடைய பாபிஷ்டமான மனச்சாலே-அவருடைய நிரவதிக கீர்த்தியை
பேசுவதாக அறிவு கேட்டாலே உத்சாஹியா நின்றேன் .இப்படி துச்சக பிரவ்ருதியிலே-இழிந்த மூர்கனான நான் இனி எத்தை செய்யேன் என்று கருத்து –
பாவி நெஞ்சால் அவன் தன் பெரும் கீர்த்தி மொழிந்திட -என்றது இப்படி இருந்துள்ள-மனசோடு கூடிக் கொண்டு அவருடைய கீர்த்தியை பேசுவதாக என்கை-
பயிலுதல் -செறிதல் / முயல்தல் -உத்சாஹித்தல்-

சப்த ஸ்வரம் –இயல் பொருள் கானம் -/மாஸாஹாச பறவை
பெரும் கீர்த்தி -அளவு படுத்தி பாட வந்த மதியின்மை -வாழ்த்தாமல்-

மதி இன்மையால் –
அவருடைய கல்யாண குண வைபவத்தை அறியாமல்
பயிலும் –அடைவு கெடச் சொல்லும்
கவிகள்-கவிளிலே -பாட்டுக்களில்
அன்றிக்கே –பயிலும் கவிகள்-
எம்பெருமானாருடைய கல்யாண குணங்களையே-
சர்வ காலமும் அனுபவியா நிற்கும் ஆழ்வான் ஆண்டான் எம்பார் தொடக்கமானார்-திறத்திலே என்னவுமாம்-
மங்களாசாசனம் பண்ணாமல் கீர்த்திமை பாட வந்த மதியின்மை யும் உண்டே
பக்தி இல்லாத –
சம்யஜ்ஞானம் இல்லாவிடிலும் மூட பக்தி தானே என் மனசிலே உண்டோ என்னில் —அந்த பக்தியும் என் மனசில் இல்லை –
பாவி நெஞ்சால்
ஞான பக்தியாதிகள் இன்றிக்கே ஒழிந்தாலும்-மனச்சு பரி சுத்தமானால்-க்ரமேன இவற்றை உண்டாக்கிக் கொள்ளலாம் இறே –
அந்த சுத்தி இல்லாமையாலே என் மனசு-அத்யந்தம் பாபிஷ்டமாய்த்து இருப்பது -இப்படிப் பட்ட மனசிலே

நோற்ற நோன்பு இலேன் நுண் அறிவிலேன்
மனத்திலோர் தூய்மை இல்லை வாயிலார் இன் சொல் இல்லை –

மதியின்மையினால்-
மதியின்மையினால் முயல்கின்றனன்-என்று இயையும்–
ஈன் கவிகளே மயங்கும் போது-நான் இதனில் இறங்குவது அறியாமையினாலே தானே என்கிறார் .
இனி -பெரும் கீர்த்தி மொழிந்திட என்று மேலே சொல்லுவதால் –
அளவற்ற கீர்த்தியை என் பேச்சினால் அளவு படுத்த முயல்வது அறியாமையினால் அன்றோ ? என்னலுமாம்.
இனி வாழ்த்தும் இரமானுசனைக் கீர்த்திமை பாட முயல்வது அறியாமையாலே -என்னலுமாம்-
இனி பக்தி உள்ள நெஞ்சினால் அன்றிப் பக்தி இல்லாத பாவி நெஞ்சால் முயல்வது அறியாமையாலே-என்றது ஆகலுமாம் –
மதியின்மை வெட்கம் இன்மைக்கும் உப லஷணம் –
மஹ்யம் ந மோஸ்து கவயே நிரபத்ரபாய -என்று-வெட்கம் கேட்ட கவியான எனக்கு நமஸ்காரம் -என்று ஆளவந்தார் ஸ்ரீ சூக்தியை நினைவு கூர்க –
பக்தி இல்லாத என் பாவி நெஞ்சால்-
பக்தி இருந்தால் பெரும் கீர்த்தியை மொழிந்திட நெஞ்சு இடம் தந்து இராது-அது இன்மையால் முயல வேண்டியது ஆயிற்று
நெஞ்சில் பக்தி இல்லாமைக்கு ஹேது அது பாவியாய் இருத்தல்
ஆல் என்பது ஓடு என்னும் பொருளில் வந்ததாக கொண்டு நெஞ்சோடு என்னலுமாம் ..

ஈன் கவிகள் அன்பினால் வாழ்த்துவர்
பக்தி இல்லாத நெஞ்சுடன் கூடிய யானோ -பெரும் கீர்த்தியை மொழிந்திட முயல்கின்றேன் –
அன்பினாலான மயல் ஈன் கவிகள் உடையது –
இயல்பான அறியாமை என்னது –
வாழ்த்தல் அன்பினால் ஆகிய மயலால் வந்தது
மொழிந்திட முயலுதல் பக்தி இல்லாத நெஞ்சுடன் கூடிய என் அறியாமையால் வந்தது -என்றபடி –

அவன் தன் பெரும் கீர்த்தி மொழிந்திடவே
அவன்தன் –
அடையார் கமலத்தலர் மகள் கேள்வன்
கை யாழி என்னும் -படையோடு நாந்தகமும் படர் தண்டும் ஒண் சாரங்க வில்லும்-புடையார் புரி சங்கமும் இந்தப் பூதலம் காப்பதற்கு என்று
இடையே இராமானுச முனி யாயின-இந் நிலத்தே -என்று தம்மாலேயும் –
ஆன்ற தமிழ் மறைகள் ஆயிரமும் ஈன்ற முதல் தாய் சடகோபன் -மொய்ம்பால் வளர்த்த-இதத்தாய் இராமானுசன் -என்று மற்றும் உள்ள
ஆசார்யர்களாலும் கொண்டாடப்பட்டு பிரசித்தரான வருடைய –
பெரும் கீர்த்தியும் –
அவருடைய கீர்த்தியும் அவருக்கு உறுதியாக காணும் இருப்பது
ஏய்ந்த பெரும் கீர்த்தி –எண் திசையும் ஏத்தும் எதிராசன் -என்கிற படியே-மகா தனமான கீர்த்தியை
மொழிந்திடவே –
ஞான பக்திகள் இல்லாத என் மனசிலே -வாசா கைங்கர்யமாக -க்ரந்தீகரித்து
சமர்ப்பிக்க கடவேன் என்று -முயல்கின்றனன் -உத்சாஹியா நின்றேன்
எத்தனை சாஹசம் பண்ணா நின்றேன் என்று ஸ்வ நைச்யத்தை அனுசந்திக்கிறார் ஆய்த்து –

அவன் தன் பெரும் கீர்த்தி –
அவன் கீர்த்தி என்னாது அவன் தன் கீர்த்தி -என்றது -எம்பெருமானார் ஒருவர்க்கே பெரும் கீர்த்தி-சொந்தமானது என்றபடி-
பெரும் கீர்த்தி –
பேசி அளவிட முடியாத கீர்த்தி –திக்குற்ற கீர்த்தி என்பர் பின்னும் இவரே
ஏய்ந்த பெரும் கீர்த்தி இராமானுச முனி -என்றதும் காண்க –
படி கொண்ட கீர்த்தி இராமாயணம் என்னும் பக்தி வெள்ளம் குடி கொண்ட கோயிலான ராமானுஜன் கீர்த்தி அன்றோ –
இந்த பெரும் கீர்த்தியினால் அன்றோ ஏன் வினைகளை வேர் பறியக் காய்ந்தனன் இராமானுசன் -77-
பஞ்ச ஆயுதங்களே வந்து அவதரித்து
ஆதி சேஷன் தானே
விஷ்வக்சேனரும் இவரே
பார்த்த சாரதியே தானே
இதனால் தான் அவன் தன் பெரும் கீர்த்தி –
பெரும் கீர்த்தி- பெரிய கோவில் பெரிய பெருமாள் -பெரிய பிராட்டியார்
பெரிய தளிகை பெரிய திருநாள் எல்லாம் ஸ்ரீ ரெங்கத்தில்..அது போல் பெரும் கீர்த்தி –
தன்னுடைய அனைத்தும் எம்பெருமானாருக்கு அருளி -உடையவர் -பட்டமும் சாத்தி-பள்ளி கொண்டு அருளி இருக்கின்றானே
எண் திசையும் அறிய இயம்புகேன்-என்கிறார் ஆழ்வார் பெருமையை மதுர கவி ஆழ்வார்
சுவாமியை பார்த்துக் கொண்டே அனுபவித்துக் கொண்டே இருக்க வேண்டுமே -அனுபவித்து பேச முடியாது

முன்னர்ப் பேரியல் நெஞ்சு-என்று கொண்டாடப் பட்ட நெஞ்சு -இப் பொழுது
பக்தி இல்லாத என் பாவி நெஞ்சு -என்று இகழ்ந்து உரைக்கப் படுகிறது
பூரியர் தொடர்பை நீக்கிச்-சீரிய பேறு உடையார் அடிக் கீழ் சேர்த்தது பேரியல்வாகத் தோன்றி முன்னர் அங்கனம் கூறினார் –
எம்பெருமானாரோடு அன்றி அன்பர் அளவும் செலுத்தும் பக்தியும் எம்பெருமானார் பெருமையை-பார்க்கும் பொழுது ஒரு சரக்காக தோற்றாமையாலே
பக்தி இல்லாத பாவி நெஞ்சு -என்கிறார் இங்கு –
அஞ்சிறைப்புள் என்றும் வெஞ்சிறைப்புள் என்றும் என்று அருளிச் செய்வது போலே-
வயிறிலாள் என்னும் இடத்தில் போலே பக்தி இல்லாமை சொற்ப பக்தி என்னும் கருத்தில் கூறப்பட்டது –
தகுதி அற்ற தான் மொழிந்திட முற்பட்டதன் மூலம் -பக்தி இல்லாத நெஞ்சாலும் பேசும் திறத்தது-எம்பெருமானார் பெருமை -என்னும் இழுக்கை
தேடித் தருதலின் நெஞ்சைப் பாவி என்கிறார் –இது அமுதனார் நைச்ய அநுசந்தானம் செய்து கொண்ட படி –
மதி இன்மையால்- பெரும் கீர்த்தியை முயல் கின்றேன்-குறைத்திடவே-
மதி இன்மை –வாசிக கைங்கர்யமாக பேசினேன்
மதி இல்லை பெரும் கீர்த்தி மொழிந்திட பக்தி இன்மை பாவி- சேர்த்து சேர்த்து பார்த்து அர்த்தம் கொள்ள வேண்டும்

உள்ளத்தே உறையும் மாலை யுள்ளுவார் உணர்வு ஓன்று இல்லாக்
கள்ளத்தேன் நான் உன் தொண்டாய்த் தொண்டுக்கே கோலம் பூண்டு
உள்ளுவார் உள்லிற்று எல்லாம் உடன் இருந்து அறுதி என்று
வெள்கிப் போய் என்னுள்ளே நான் விலவறச் சிரித்திட்டேனே–திரு மாலை – 31 பாசுரத்தில்-உன்னுடன் சேர மாட்டேன் என்கிறார்.

தாவி அன்று உலகம் எல்லாம் தலை விளாக் கொண்ட வெந்தாய்
சேவியேன் உன்னை அல்லால் சிக்கென செங்கண்மாலே
ஆவியே அமுதே என் தன் ஆர் உயிர் அனைய எந்தாய்
பாவியேன் உன்னை அல்லால் பாவியேன் பாவியேனே –-35-அயோக்யன் என்று அகலாதபடி தன நீர்மையைக் காட்டி சேர விட்டுக் கொண்டான்

மழைக்கன்று வரை முன் ஏந்தும் மைந்தனே மதுரவாறே
உழைக்கன்றே போல நோக்கம் உடையவர் வலையில் பட்டு
உழைக்கின்றேற்கு என்னை நோக்காது ஒழிவதே யுன்னை என்னே
அழைக்கின்றேன் ஆதி மூர்த்தி அரங்க மா நகர் உளானே –36–இதில் –தம்முடைய அயோக்யதை கழிந்தவாறே
ப்ராப்யத்தில் த்வரை மிக்கு
யோக்யரைக் கொண்டு போய் அடிமை கொள்ளும் தேசத்து ஏறக் கொடு போக வேண்டி இருந்தார்
அது செய்யக் கண்டிலர்
அதுக்கடி இவரை அகலாமே சேர விடுக்கைக்கு தான் பட்ட பாடு அறியுமவன் ஆகையாலே
ஆமம் அற்றுப் பசி மிக வேணும் என்று பேசாது இருந்தான் –
விஷயங்கள் நடமாடும் தேசத்தில் இருந்து கிலேசப்பட்டே போம் இத்தனை ஆகாதே -என்று
பிராப்யத்தில் த்வரையாலும்
விரோதியில் அருசியாலுமாக
பெரிய பெருமாள் கண் வளர்ந்து அருள அரிதாம்படியாகவும்
கேட்டார் எல்லாரும் நீராம்படியாகவும் பெரும் மிடறு செய்து கூப்பிடுகிறார் –

வளவேழ் உலகின் முதலாய வானோர் இறையை அரு வினையேன்
களவேழ் வெண்ணெய் தொடு உண்ட கள்வா!’ என்பன் பின்னையும்
தளவேழ் முறுவல் பின்னைக்காய் வல்லான் ஆயர் தலைவனாய்
இளவேறு ஏழும் தழுவிய எந்தாய்!’ என்பன் நினைந்து நைந்தே–1-5-1—நித்திய ஸூரிகட்கு -அனுபாவ்யனானவனை –
அனுபவிக்கப்படும் பொருளானவனை,மனம் வாக்குக் காயங்களால் தூஷித்தேன் ’ என்கிறார்.

நினைந்து நைந்து உள் கரைந்து உருகி இமையோர் பலரும் முனிவரும்
புனைந்த கண்ணி நீர் சாந்தம் புகையோடு ஏந்தி வணங்கினால்
நினைந்த எல்லாப் பொருள்கட்கும் வித்தாய் முதலிற் சிதையாமே
மனஞ்செய் ஞானத்து உன் பெருமை மாசூணாதோ மாயோனே–1-5-2-நெஞ்சால் நினைந்தும், வாயால் பேசியும், உடலால் நைந்தும், –
தப்பச் செய்தேன் ’ என்றார் கீழ் பாசுரத்தில்;
தப்பச் செய்தேன் ‘ என்ற இடம் தப்பச் செய்தேன் என்கிறார் இப் பாசுரத்தில்;-‘யாங்ஙனம்?’ எனின்,
சண்டாளன் ‘ஒத்து -வேதம் போகாது’ என்று தான் சொல்லப் பெறுவனோ?
அவ்வாறே அன்றோ நான் அயோக்கியன் என்று அகலுகையும்?
ப்ரேமார்த்த சித்தரான -அன்பினால் நனைந்த மனத்தையுடைய ப்ரஹ்மாதிகள் அன்றோ அதுதான் சொல்லப் பெறுவர்!
‘நான் தப்பச் செய்தேன்- என்று அகலுமதில், கிட்டி நின்று பரிமாறுதல் நன்று அன்றோ?’ என்று,
கீழ் நின்ற நிலையையும் நிந்தித்துக் கொண்டு அகலுகிறார்.

மா யோனிகளாய் நடை கற்ற வானோர் பலரும் முனிவரும்
நீ யோனிகளைப் படை என்று நிறை நான்முகனைப் படைத்தவன்
சேயோன் எல்லா அறிவுக்கும் திசைகள் எல்லாம் திருவடியால்
தாயோன் எல்லா எவ்வுயிர்க்கும் தாயோன் தானோர் உருவனே–1-5-3-நினைந்தும் பேசியும் நைந்தும் தப்பச் செய்தேன்,’ என்றார் முதற்பாட்டில்;
தப்பச் செய்தேன் என்ற இடம் தப்பச் செய்தேன் என்றார் இரண்டாம் பாட்டில்;
‘நீர் நம்முடைய மேன்மையைப் பார்த்து அங்ஙனம் நெகிழப் போகாதே, நாம் தாழ நின்று எல்லாரோடும் பொருந்தும்
சீல குணத்தையும் ஒரு கால் பாரீர்,’ என்று திரு உலகு அளந்தருளின சீல குணத்தை காட்டிக் கொடுக்க,
அதனை நினைந்து அகல மாட்டாதே, அணுகவுமாட்டாதே, நடுவே நின்று,அணாவாய்த்துக் காலம் கழிக்கிறார்.
‘அவனை ஒழிய அப்படிக் காலம் கழிக்க வல்லரோ?’ என்னில்,
சீர் கலந்த சொல் நினைந்து போக்கும் போது போக்க வல்லரே;
சீல குண அநுசந்தானத்தால் போக்கலாமன்றே?

அர்ஜுனன் .காண்டீபம் கீழ போட–கீதாசார்யன் 700 ஸ்லோகங்கள் பாட வேண்டி இருந்தது அங்கு
இங்கு ஆழ்வான் கீர்த்தியால் அடுத்த பாசுரம் தொடங்கி வருத்தம் நீங்கப் பட்டார்-
உபாய ஸூந்யதையை வெளியிட்டு அருளி -ஆழ்வான் அபிமானத்தாலே இந்த திவ்ய பிரபந்தம் பாடப்பெற்றதை அருளிச் செய்கிறார் –

—————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருமலை நல்லான் சக்கரவர்த்தி ஸ்ரீ ராம கிருஷ்ண ஐயங்கார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருவரங்கத் தமுதனார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

ஸ்ரீ அருளிச் செயல்களில்– ஒரே பாசுரத்தில் -பரத்வ வ்யூஹ விபவ அர்ச்சை அந்தர்யாமி -ஐந்தும் உள்ளவை –

March 17, 2020

விண் மீதிருப்பாய்! மலை மேல் நிற்பாய்! கடற் சேர்ப்பாய்!
மண் மீதுழல்வாய்! இவற்றுள் எங்கும் மறைந் துறைவாய்!
எண் மீதியன்ற புற அண்டத்தாய்! என தாவி
உண் மீதாடி உருக் காட்டாதே ஒளிப்பாயோ!–6-9-5-என்று

குன்றில் நின்று வான் இருந்து நீள் கடல் கிடந்தது மண்
ஓன்று சென்று அது ஒன்றை உண்டு ஓன்று இடந்து பன்றியாய்
நன்று சென்ற நாள் அவற்றுள் நல் உயிர் படைத்து அவர்க்கு
அன்று தேவு அமைத்து அளித்த வாதி தேவன் அல்லையே -ஸ்ரீ திருச்சந்த விருத்தம்-–48-இப்படி பல பாசுரங்களும் உண்டே

——————–

ஸ்ரீ முதல் ஆயிரம்

விண்ணின் மீது அமரர்கள் விரும்பி தொழ மிறைத்து ஆயர்பாடியிலே வீதி யூடே
கண்ணன் காலிப் பின்னே எழுந்து அருள கண்டு இள ஆய்க் கன்னிமார் காமுற்ற
வண்ண வண்டு அமர் பொழில் புதுவையர் கோன் விட்டு சித்தன் சொன்ன மாலை பத்தும்
பண்ணின்பம் வரப் பாடும் பத்தர் உள்ளார் பரமான வைகுந்தம் நண்ணுவரே–ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி -3 4-10 –

பைய அரவின் அணை பாற்கடலுள் பள்ளி கொள்கின்ற பரம மூர்த்தி
உய்ய உலகு படைக்க வேண்டி யுந்தியில் தோற்றினாய் நான்முகனை
வைய மனிசரை பொய் என்று எண்ணி காலனையும் உடனே படைத்தாய்
ஐய இனி என்னைக் காக்க வேண்டும் அரங்கத்து அரவணைப் பள்ளியானே – 4-10 5-

மாயவனை மதுசூதனனை மாதவனை மறையோர்கள் ஏத்தும்
ஆயர்கள் ஏற்றினை அச்சுதனை அரங்கத்து அரவணைப் பள்ளியானே
வேயர் புகழ் வில்லி புத்தூர் மன் விட்டு சித்தன் சொன்ன மாலை பத்தும்
தூய மனத்தனராகி வல்லார் தூ மணி வண்ணனுக்கு ஆளர் தாமே – 4-10 10-

பனிக்கடலில் பள்ளி கோளைப் பழக விட்டு ஓடி வந்து என்
மனக்கடலில் வாழ வல்ல மாய மணாளா நம்பீ
தனிக்கடலே தனிச் சுடரே தனி உலகே என்று என்று
உனக்கு இடமாய் இருக்க என்னை உனக்கு உரித்து ஆக்கினையே -5 4-9 –

———-

மாயனை -மன்னு வட மதுரை மைந்தனை-
தூய பெருநீர் யமுனைத் துறைவனை –
ஆயர் குலத்தினில் தோன்றும் அணி விளக்கை
தாயைக் குடல் விளக்கம் செய்த தாமோதரனை –
தூயோமாய் வந்து நாம் தூ மலர் தூவித் தொழுது
வாயினால் பாடி மனத்தினால் சிந்திக்கப்
போய பிழையும் புகுதருவான் நின்றனவும்
தீயினில் தூசாகும் செப்பேலோர் எம்பாவாய்––ஸ்ரீ திருப்பாவை–5-

நாட்டைப் படை என்று அயன் முதலா தந்த நளிர் மா மலருந்தி
வீட்டைப் பண்ணி விளையாடும் விமலன் தன்னைக் கண்டீரே
காட்டை நாடித் தேனுகனும் களிறும் புள்ளும் உடன் மடிய
வேட்டை யாடி வருவானை விருந்தாவனத்தே கண்டோமே —14-9-

பருந்தாள் களிற்றுக்கு அருள் செய்த பரமன் தன்னைப் பாரின் மேல்
விருந்தா வனத்தே கண்டமை விட்டு சித்தன் கோதை சொல்
மருந்தாம் என்று தம் மனத்தே வைத்துக் கொண்டு வாழ்வார்கள்
பெருந்தாள் உடைய பிரான் அடிக்கீழ் பிரியாது என்றும் இருப்பரே–14-10-

—————-

வன் பெரு வானகம் உய்ய அமரர் உய்ய
மண் உய்ய மண் உலகில் மனிசர் உய்ய
துன்பம் மிகு துயர் அகல அயர் ஒன்றில்லா
சுகம் வளர அக மகிழும் தொண்டர் வாழ
அன்போடு தென் திசை நோக்கி பள்ளி கொள்ளும்
அணி அரங்கன் திரு முற்றத்து அடியார் தங்கள்
இன்ப மிகு பெரும் குழுவு கண்டு யானும்
இசைந்த உடனே என்று கொலோ விருக்கும் நாளே ?–பெருமாள் திருமொழி-+ —1-10-

——–

ஏக மூர்த்தி மூன்று மூர்த்தி நாலு மூர்த்தி நன்மை சேர்
போக மூர்த்தி புண்ணியத்தின் மூர்த்தி எண்ணில் மூர்த்தியாய்
நாக மூர்த்தி சயநமாய் நலம் கடல் கிடந்தது மேல்
ஆக மூர்த்தி யாய வண்ணம் என் கொல் ஆதி தேவனே –-ஸ்ரீ திருச்சந்த விருத்தம்–17-

விண் கடந்த சோதியாய் விளங்கு ஞான மூர்த்தியாய்
பண் கடந்த தேசமேவு பாவ நாச நாதனே
எண் கடந்த யோகினோடு இரந்து சென்று மாணியாய்
மண் கடந்த வண்ணம் நின்னை யார் மதிக்க வல்லரே –27-

குன்றில் நின்று வான் இருந்து நீள் கடல் கிடந்தது மண்
ஓன்று சென்று அது ஒன்றை உண்டு ஓன்று இடந்து பன்றியாய்
நன்று சென்ற நாள் அவற்றுள் நல் உயிர் படைத்து அவர்க்கு
அன்று தேவு அமைத்து அளித்த வாதி தேவன் அல்லையே -ஸ்ரீ திருச்சந்த விருத்தம்-–48

————-

அமலனாதிபிரான் அடியார்க்கு என்னை ஆட்படுத்த
விமலன் விண்ணவர் கோன் விரையார் பொழில் வேங்கடவன்
நிமலன் நின்மலன் நீதி வானவன் நீண் மதிள் அரங்கத்தம்மான் திருக்
கமல பாதம் வந்து என் கண்ணினுள்ளன ஒக்கின்றதே ——1-

——————————–

ஸ்ரீ பெரிய திருமொழி

பள்ளியாவது பாற் கடல் அரங்கம் இரங்க வன் பேய் முலை
பிள்ளையாய் உயிர் உண்ட வெந்தை பிரானவன் பெருகுமிடம்
வெள்ளியான் கரியான் மணி நிற வண்ணன் என்று எண்ணி நாள் தொறும்
தெள்ளியார் வணங்கும் மலைத் திரு வேம்கடம் அடை நெஞ்சே –1-8-2-

கண்ணா யேழ் உலகுக்கு உயிராய வெங்கார் வண்ணனை
விண்ணோர் தாம் பரவும் பொழில் வேங்கட வேதியனை
திண்ணார் மாடங்கள் சூழ் திரு மங்கையர் கோன் கலியன்
பண்ணார் பாடல் பத்தும் பயில்வார்க்கு இல்லை பாவங்களே—1-9-10-

சோத்த நம்பி யென்று தொண்டர் மிண்டித் தொடர்ந்து அழைக்கும்
ஆத்தனம்பி செங்கணம்பி ஆகிலும் தேவர்கெல்லாம்
மூத்த நம்பி முக்கண்ம்பி யென்று முனிவர் தொழு
தேத்தும் நம்பி யெம்பெருமான் எவ்வுள் கிடந்தானே—2-2-6-

உடம்புருவில் மூன்று ஒன்றாய் மூர்த்தி வேறாய்
உலகுய்ய நின்றானை அன்று பேய்ச்சி
விடம்பருகு வித்தகனைக் கன்று மேய்த்து
விளையாட வல்லானை வரை மீ கானில்
தடம்பருகு கருமுகிலைத் தஞ்சைக் கோயில்
தவ நெறிக்கோர் பெரு நெறியை வையம் காக்கும்
கடும்பரி மேல் கற்கியை நான் கண்டு கொண்டேன்
கடி பொழில் சூழ் கடல் மல்லைத் தல சயனத்தே –2-5-3-

பேணாத வலி யரக்கர் மெலியவன்று
பெரு வரைத் தோளிற நெரித்தன்ற வுணர்கோனை
பூணாகம் பிளவெடுத்த போர் வல்லோனைப்
பொரு கடலுள் துயிலமர்ந்த புள்ளூர்தியை
ஊணாகப் பேய் முலை நஞ்சுண்டான் தன்னை
உள்ளுவார் உள்ளத்தே யுறைகின்றானை
காணாது திரி தருவேன் கண்டு கொண்டேன்
கடி பொழில் சூழ் கடல் மல்லைத் தல சயனத்தே–2-5-7-

அருமா நிலம் அன்று அளப்பான் குறளாய் அவுணன் பெரு வேள்வியில் சென்று இரந்த
பெருமான் திரு நாமம் பிதற்றி நுந்தம் பிறவித் துயர் நீங்குதும் என்னகிற்பீர்
கருமா கடலுள் கிடந்தான் உவந்து கவை நா அரவின் அணைப் பள்ளியின் மேல்
திருமால் திரு மங்கையோடாடு தில்லைத் திருச் சித்ரகூடம் சென்று சேர்மின்களே–3-2-4-

உலகம் ஏத்தும் ஒருவன் என்றும் ஒண் சுடரோடு உம்பர் எய்தா
நிலவும் ஆழிப் படையான் என்றும் நேசன் என்றும் தென் திசைக்குத்
திலதம் அன்ன மறையோர் நங்கைத் தேவ தேவன் என்று என்று ஓதிப்
பலரும் ஏச என் மடந்தை பார்த்தன் பள்ளி பாடுவாளே–4-8-8-

கண்ணன் என்றும் வானவர்கள் காதலித்து மலர்கள் தூவும்
எண்ணன் என்றும் இன்பன் என்றும் ஏழு உலகுக்கு ஆதி என்றும்
திண்ண மாடு நீடு நாங்கைத் தேவ தேவன் என்று என்று ஓதிப்
பண்ணின் அன்ன மென் மொழியாள் பார்த்தன் பள்ளி பாடுவாளே–4-8-9-

எந்தாதை தாதை அப்பால் எழுவார் பழ வடிமை
வந்தார் என் நெஞ்சினுள்ளே வந்தாயைப் போகல் ஒட்டேன்
அந்தோ என் ஆர் உயிரே அரசே அருள் எனக்கு
நந்தாமைத் தந்த வெந்தாய் நறையூர் நின்ற நம்பீயோ-7-2-6-

பண்ணின் இன் மொழி யாழ் நரம்பில் பெற்ற பாலையாகி இங்கே புகுந்து என்
கண்ணும் நெஞ்சும் வாயும் இடம் கொண்டான் கொண்ட பின் மறையோர் மனம் தன்னுள்
விண்ணுளார் பெருமானை எம்மானை வீங்கு நீர் மகரம் திளைக்கும் கடல்
வண்ணன் மா மணி வண்ணன் எம் அண்ணல் வண்ணமே அன்றி வாய் யுரையாதே -7-3-7-

உடையானை யொலி நீர் உலகங்கள் படைத்தானை
விடையானோடே அன்று விறலாழி விசைத்தானை
அடையார் தென்னிலங்கை அழித்தானை யணி யழுந்தூர்
உடையானை அடியேன் அடைந்து உய்ந்து போனேனே –7-6-3-

பெரியானை யமரர் தலைவற்கும் பிரமனுக்கும்
உரியானை உகந்தான் அவனுக்கும் உணர்வதனுக்கு
அரியானை அழுந்தூர் மறையோர்கள் அடி பணியும்
கரியானை அடியேன் கண்டு கொண்டு களித்தேனே -7-6-6-

திருவுக்கும் திருவாகிய செல்வா தெய்வத்துக்கு அரசே செய்ய கண்ணா
உருவச் செஞ்சுடராழி வல்லானே உலகுண்ட ஒருவா திரு மார்பா
ஒருவருக்கு ஆற்றி உய்யும் வகை அன்றால் உடன் நின்று ஐவர் என்னுள் புகுந்து ஒழியாது
அருவித் தின்றிட அஞ்சி நின்னடைந்தேன் அழுந்தூர் மேல் திசை நின்ற அம்மானே —7-7-1-

வானார் மதி பொதியும் சடை மழுவாளி யொடு ஒருபால்
தானாகிய தலைவனவன் அமரர்க்கு அதிபதியாம்
தேனார் பொழில் தழுவும் சிறு புலியூர் சல சயனத்
தானாயனது அடி அல்லது ஓன்று அறியேன் அடியேனே -7-9-4-

சேயோங்கு தண் திருமாலிரும் சோலை யுறையும்
மாயா வெனக்கு உரையாய் இது மறை நான்கினுளாயோ
தீயோம்புகை மறையோர் சிறுபுலியூர்ச் சலசயனத்
தாயோ வுனதடியார் மனத்தாயோ வறியேனே –7-9-7-

எங்களுக்கு அருள் செய்கின்ற வீசனை வாசவார் குழலாள் மலி மங்கை தன்னை
பங்கனைப் பங்கில் வைத்து உகந்தான் தன்னைப் பான்மையைப் பனிமா மதி யந்தவள்
மங்குலைச் சுடரை வடமா மலை யுச்சியைநச்சி நாம் வணங்கப் படும்
கங்குலைப் பகலைச் சென்று நாடிக் கண்ண மங்கையுள் கண்டு கொண்டேனே -7-10-3-

திருத்தனைத் திசை நான்முகன் தந்தையைத் தேவதேவனை மூவரில் முன்னிய
விருத்தனை விளங்கும் சுடர்ச் சோதியை விண்ணை மண்ணினைக் கண்ணுதல் கூடிய
அருத்தனை யரியைப் பரி கீறிய அப்பனை யப்பிலார் அழலாய் நின்ற
கருத்தனைக் களிவண்டு அறையும் பொழில் கண்ண மங்கையுள் கண்டேனே –7-10-7-

குன்றால் மாரி பழுதாக்கிக் கொடியேர் இடையாள் பொருட்டாக
வன் தாள் விடை ஏழு அன்று அடர்த்த வானோர் பெருமான் மா மாயன்
சென்றான் தூது பஞ்சவர்க்காய்த் திரிகால் சகடம் சினம் அழித்துக்
கன்றால் விளங்காய் எறிந்தானூர் கண்ண புரம் நாம் தொழுதுமே -8-6-9-

செற்றவன் தென்னிலங்கை மலங்கத் தேவபிரான் திரு மா மகளைப்
பெற்றும் என்னெஞ்சகம் கோயில் கொண்ட பேரருளாளன் பெருமை பேசக்
கற்றவன் காமரு சீர்க் கலியன் கண்ணகத்தும் மனத்தும் அகலாக்
கொற்றவன் முற்றுலக ஆளி நின்ற குறுங்குடிக்கே என்னை யுய்த்திடுமின் -9-5-10-

பண்ணுலா மென் மொழிப் பாவைமார் பணை முலை யணைது நாம் என்று
எண்ணுவார் எண்ணமது ஒழித்து நீ பிழைத்து உய்யக் கருதினாயேல்
விண்ணுளார் விண்ணின் மீதியன்ற வேங்கடதுளார் வளங்கொள் முந்நீர்
வண்ணனார் வல்ல வாழ் சொல்லுமால் வல்லையாய் மருவு நெஞ்சே –9-7-4-

மூவரில் முன் முதல்வன் முழங்கார் கடலுள் கிடந்து
பூவள ருந்தி தன்னுள் புவனம் படைத்து உண்டு உமிழ்ந்த
தேவர்கள் நாயகனைத் திரு மால் இருஞ்சோலை நின்ற
கோவலர் கோவிந்தனைக் கொடியேரிடை கூடுங்கொலோ–9-9-1-

தானவன் வேள்வி தன்னில் தனியே குறளாய் நிமிர்ந்து
வானகமும் மண்ணகமும் அளந்த திரி விக்கிரமன்
தேனமர் பூம் பொழில் சூழ் திரு மாலிருஞ்சோலை நின்ற
வானவர் கோனை இன்று வணங்கித் தொழ வல்லள் கொலோ –9-9-5-

பார்த்தனுக்கு அன்று அருளிப் பாரதத்தொரு தேர் முன்னின்று
காத்தவன் தன்னை விண்ணோர் கரு மாணிக்க மா மலையை
தீர்த்தனைப் பூம் பொழில் சூழ் திரு மாலிருஞ்சோலை நின்ற
மூர்த்தியைக் கை தொழவும் முடியும் கொலோ என் மொய் குழற்கே –9-9-8-

பூங்குருந்து ஒசித்தானை காய்ந்த அரிமாச் செகுத்து அடியேனை ஆளுக
ஈங்கு என்னுள் புகுந்தான் இமையோர்கள் தம் பெருமான்
தூங்கு தண் பலவின் கனித்தொகு வாழையின் கனியொடு மாங்கனி
தேங்கு தண் புனல் சூழ்த் திருக் கோட்டியூரானே –9-10-8-

துளக்கமில் சுடரை அவுணன் உடல்
பிளக்கும் மைந்தனைப் பேரில் வணங்கிப் போய்
அளப்பில் ஆரமுதை அமரர்க்கு அருள்
விளக்கினைச் சென்று வெள்ளறை காண்டுமே–10-1-4-

தளர்ந்திட்டு இமையோர் சரண் தா வெனத் தான் சரணாய் முரணாயவனை உகிரால்
பிளைந்திட்டு அமரர்க்கு அருள் செய்துகந்த பெருமான் திருமால் விரி நீருலகை
வளர்ந்திட்ட தொல் சீர் விறல் மா வலியை மண் கொள்ள வஞ்சித் தொரு மாண் குறளாய்
அளந்திட்டவன் காண்மின் இன்று ஆய்ச்சியரால் அளை வெண்ணெய் யுண்டாப்புண்டு இருந்தவனே -10-6-4-

முன்னுலகங்கள் ஏழும் இருள் மண்டி யுண்ண முதலோடு வீடும் அறியாது
என்னிது வந்தது என்ன விமையோர் திசைப்ப எழில் வேதம் இன்றி மறைய
பின்னையும் வானவர்க்கும் முனிவர்க்கும் நல்கி இருள் தீர்த்து இவ்வையம் மகிழ
அன்னமதாய் இருந்து அங்கு அற நூல் உரைத்தவது நம்மை யாளும் அரசே –11-4-8-

————-

பாயிரும் பரவை தன்னுள் பருவரை திரித்து வானோர்க்
காயிருந் தமுதம் கொண்ட வப்பனை யெம்பிரானை
வேயிருஞ்சோலை சூழ்ந்து விரி கதிரிரிய நின்ற
மாயிருஞ்சோலை மேய மைந்தனை வணங்கினேனே –திருக் குறும் தாண்டகம் –3-

மூவரின் முதல்வனாய யொருவனை உலகம் கொண்ட
கோவினைக் குடந்தை மேய குரு மணித் திரளை இன்பப்
பாவினைப் பச்சைத் தேனைப் பைம்பொன்னை யமரர்சென்னிப்
பூவினைப் புகழும் தொண்டர் என் சொல்லிப் புகழ்வர் தாமே –திருக் குறும் தாண்டகம் –7-

————

நீரகத்தாய் நெடு வரையின் உச்சி மேலாய்
நிலாத் திங்கள் துண்டத்தாய் நிறைந்த கச்சி
ஊரகத்தாய் ஒண் துறை நீர் வெக்கா வுள்ளாய்
உள்ளுவார் உள்ளத்தாய் யுலகமேத்தும்
காரகத்தாய் கார் வனாத்துள்ளாய் கள்வா
காமரு பூம் காவிரியின் தென்பால் மன்னு
பேரகத்தாய் பேராது என் நெஞ்சின் உள்ளாய்
பெருமான் உன் திருவடியே பேணினேனே –திரு நெடும் தாண்டகம்–8-

அன்று ஆயர் குலமளுக்கு அரையன் தன்னை
அலை கடலைக் கடைந்த அம்மான் தன்னைக்
குன்றாத வலி யரக்கர் கோனை மாளக்
கொடுஞ்சிலை வாய்ச் சரம் துரந்து குலங்களைந்து
வென்றானைக் குன்றெடுத்த தோளினானை
விரிதிரைநீர் விண்ணகரம் மருவி நாளும்
நின்றானைத் தண் குடந்தை கிடந்த மாலை
நெடியானை அடி நாயேன் நினைந்திட்டேனே –29-

மின்னு மா மழை தவழும் மேக வண்ணா
விண்ணவர் தம் பெருமானே அருளாய் என்று
அன்னமாய் முனிவரோடு அமரர் ஏத்த
அருமறையை வெளிப்படுத்த அம்மான் தன்னை
மன்னு மா மணி மாட மங்கை வேந்தன்
மானவேல் பரகாலன் கலியன் சொன்ன
பன்னிய நூல் தமிழ் மாலை வல்லார் தொல்லைப்
பழ வினையை முதலரிய வல்லார் தாமே -30-

—————————-

ஸ்ரீ திருவாய் மொழி–

தானோர் உருவே தனி வித்தாய்த் தன்னின் மூவர் முதலாய
வானோர் பலரும் முனிவரும் மற்றும் மற்றும் முற்றுமாய்த்
தானோர் பெருநீர் தன்னுள்ளே தோற்றி அதனுள் கண்வளரும்
வானோர் பெருமான் மா மாயன் வைகுந்தன் எம் பெருமானே–1-5-4-

வினையேன் வினை தீர் மருந்தானாய்! விண்ணோர் தலைவா! கேசவா!
மனை சேர் ஆயர் குல முதலே! மா மாயவனே! மாதவா!
சினை ஏய் தழைய மரா மரங்கள் ஏழும் எய்தாய்! சிரீதரா!
இனையாய்! இனைய பெயரினாய்! என்று நைவன் அடியேனே–1-5-6-

பிரான் பெரு நிலம் கீண்டவன் பின்னும்
விராய் மலர்த் துழாய் வேய்ந்த முடியன்
மரா மரம் எய்த மாயவன் என்னுள்
இரான் எனில் பின்னை யான் ஒட்டுவேனோ?–1-7-6-.

உடன் அமர் காதல் மகளிர் திருமகள் மண் மகள் ஆயர்
மட மகள் என்று இவர் மூவர் ஆளும் உலகமும் மூன்றே
உடன் அவை ஓக்க விழுங்கி ஆலிலைச் சேர்ந்தவன் எம்மான்
கடல் மலி மாயப் பெருமான் கண்ணன் என் ஓக்கலையானே –1-9-4-

அமரர் தொழப் படுவானை அனைத்து உலகுக்கும் பிரானை
அமர மனத்தினுள் யோகு புணர்ந்து அவன் தன்னோடு ஒன்றாக
அமரத் துணிய வல்லார்கள் ஒழிய அல்லாதவர் எல்லாம்
அமர நினைந்து எழுந்து ஆடி அலற்றுவதே கருமமே–3-5-9-

மூவர் ஆகிய மூர்த்தியை முதல் மூவர்க்கும் முதல்வன் தன்னைச்
சாவம் உள்ளன நீக்குவானைத் தடம் கடல் கிடந்தான் தன்னைத்
தேவ தேவனைத் தென் னிலங்கை எரி எழச் செற்ற வில்லியைப்
பாவ நாசனைப் பங்கயத் தடங் கண்ணனைப் பரவுமினோ–3-6-2-

ஏக மூர்த்தி இரு மூர்த்தி மூன்று மூர்த்தி பல மூர்த்தி
ஆகி ஐந்து பூதமாய் இரண்டு சுடராய் அருவாகி
நாகம் ஏறி நடுக் கடலுள் துயின்ற நாராயணனே!உன்
ஆக முற்றும் அகத்து அடக்கி ஆவி அல்லல் மாய்த்ததே–4-3-3-

விண் மீதிருப்பாய்! மலை மேல் நிற்பாய்! கடற் சேர்ப்பாய்!
மண் மீதுழல்வாய்! இவற்றுள் எங்கும் மறைந் துறைவாய்!
எண் மீதியன்ற புற அண்டத்தாய்! என தாவி
உண் மீதாடி உருக் காட்டாதே ஒளிப்பாயோ!–6-9-5-

மாலரி கேசவன் நாரணன் சீ மாதவன் கோவிந்தன் வைகுந்தன் என்று என்று
ஓலமிட வென்னைப் பண்ணி விட்டிட்டு ஒன்று முருவுஞ் சுவடுங் காட்டான்
ஏல மலர்க் குழல் அன்னைமீர்காள் ! என்னுடையத் தோழியர்காள் ! என் செய்கேன் ?
காலம் பல சென்றும் காண்ப தாணை உங்களோடும் எங்களிடை இல்லையே–8-2-7-

கொண்டல் வண்ணா குடக்கூத்தா வினையேன் கண்ணா கண்ணா -என்
அண்ட வாணா வென்று என்னை ஆளக் கூப்பிட்டு அழைத்தக்கால்
விண் தன் மேல் தான் மண் மேல் தான் விரி நீர்க் கடல் தான் மற்றுத் தான்
தொண்டனேன் உன் கழல் காண ஒரு நாள் வந்து தோன்றாயே–8-5-6-

அமரராய்த் திரிகின்றார் கட்கு ஆதிசேர் அனந்த புரத்து
அமரர் கோன் அர்ச்சிக்கின்று அங்கு அகப்பணி செய்வர் விண்ணோர்
நமர்களோ சொல்லக் கேண்மின் நாமும் போய் நணுக வேண்டும்
குமரனார் தாதை துன்பம் துடைத்த கோவிந்தனாரே–10-2-6-

திருமால் இரும் சோலை மலையே திருப் பாற் கடலே என் தலையே
திருமால் வைகுந்தமே தண் திரு வேங்கடமே எனது உடலே
அருமா மாயத்து எனது உயிரே மனமே வாக்கே கருமமே
ஒருமா நொடியும் பிரியான் என் ஊழி முதல்வன் ஒருவனே–10-7-8-

————-

இயற்பா —

இடந்தது பூமி எடுத்தது குன்றம்
கடநதது கஞ்சனை முன்னஞ்ச கிடந்ததுவும்
நீரோத மா கடலே நின்றதுவும் வேங்கடமே
பேரோத வண்ணர் பெரிது —- முதல் திருவந்தாதி-—39–

உணர்வாரார் உன் பெருமை ஊழி தோறு ஊழி
உணர்வாரார் உன் உருவம் தன்னை உணர்வாரார்
விண்ணகத்தாய் மண்ணகத்தாய் வேங்கடத்தாய் நால் வேதப்
பண்ணகத்தாய் நீ கிடந்த பால் ——-68-

உளன் கண்டாய் நன்னெஞ்சே உத்தமன் என்றும்
உளன் கண்டாய் உள்ளுவார் உள்ளத்து உளன் கண்டாய்
வெள்ளத்தில் உள்ளானும் வேங்கடத்து மேயானும்
உள்ளத்தில் உள்ளான் என்று ஓர் ——99-

ஓரடியும் சாடுதைத்த வொண் மலர்ச் சேவடியும்
ஈரடியும் காணலாம் என்நெஞ்சே ஓரடியில்
தாயவனைக் கேசவனைத் தண் துழாய் மாலை சேர்
மாயவனையே மனத்து வை ———100-

—————

சென்றதிலங்கை மேல் செவ்வே தன் சீற்றத்தால்
கொன்றது ராவணனை கூறுங்கால் -நின்றதுவும்
வேயோங்கு தண் சாரல் வேங்கடமே விண்ணவர் தம்
வாயோங்கு தொல் புகழான் வந்து—–இரண்டாம் திருவந்தாதி–25—

மனத்துள்ளான் வேங்கடத்தான் மா கடலான் மற்றும்
நினைப்பரிய நீள் அரங்கதுள்ளான்-எனைப்பலரும்
தேவாதி தேவன் எனப்படுவான் முன்னொரு நாள்
மாவாய் பிளந்த மகன் —-28-

வெற்பு என்று இரும் சோலை வேங்கடம் என்று இவ்விரண்டும்
நிற்பென்று நீ மதிக்கும் நீர்மை போல் -நிற்பென்று
உளம் கோயில் உள்ளம் வைத்து உள்ளினேன் வெள்ளத்து
இளம் கோயில் கை விடேல் என்று –54-

தமருள்ளும் தஞ்சை தலை யரங்கம் தண் கால்
தமருள்ளும் தண் பொருப்பு வேலை -தமருள்ளும்
மா மல்லை கோவல் மதிள் குடந்தை என்பரே
ஏவல்ல வெந்தைக்கு இடம் –70-

அத்தி யூரான் புள்ளை யூர்வான் அணி மணியின்
துத்தி சேர் நாகத்தின் மேல் துயில்வான் -முத்தீ
மறையாவான் மா கடல் நஞ்சுண்டான் தனக்கும்
இறையாவான் எங்கள் பிரான் –96-

எங்கள் பெருமான் இமையோர் தலைமகன் நீ
செங்கண் நெடுமால் திரு மார்பா -பொங்கு
பட மூக்கின் ஆயிர வாய்ப் பாம்பணை மேல் சேர்ந்தாய்
குட மூக்கில் கோயிலாகக் கொண்டு–97-

இறை எம்பெருமான் அருள் என்று இமையோர்
முறை நின்று மொய் மலர்கள் தூவ -அறை கழல
சேவடியான் செங்கண் நெடியான் குறளுருவாய்
மாவலியை மண் கொண்டான் மால் –99-

மாலே நெடியானே கண்ணனே விண்ணவர்க்கு
மேலா வியன் துழாய்க் கண்ணியனே -மேலாய்
விளவின் காய் கன்றினால் வீழ்த்தவனே என்தன்
அளவன்றால் யானுடைய வன்பு –100-

—————–

மனத்துள்ளான் மா கடல் நீருள்ளான் மலராள்
தனத்துள்ளான் தண் துழாய் மார்வன் சினத்துச்
செரு நருகச் செற்று உகந்த தேங்கோத வண்ணன்
வரு நரகம் தீர்க்கும் மருந்து –-மூன்றாம் திருவந்தாதி–3–

சிறந்த வென் சிந்தையும் செங்கண் அரவும்
நிறைந்த சீர் நீள் கச்சி யுள்ளும் உறைந்ததுவும்
வேங்கடமும் வெக்காவும் வேளுக்கைப் பாடியுமே
தாங்கடவார் தண் துழாயார் ——–26–

சேர்ந்த திருமால் கடல் குடந்தை வேங்கடம்
நேர்ந்த வென் சிந்தை நிறை விசும்பும் -வாய்ந்த
மறை பாடகம் அனந்தன் வண்டுழாய்க் கண்ணி
இறைபாடி யாய இவை —-30–

பாற் கடலும் வேங்கடமும் பாம்பும் பனி விசும்பும்
நூற் கடலும் நுண்ணூல தாமரை மேல் -பாற் பட்டு
இருந்தார் மனமும் இடமாகக் கொண்டான்
குருந்து ஒசித்த கோபாலகன் ——-32-

பண்டெல்லாம் வேங்கடம் பாற்கடல் வைகுந்தம்
கொண்டு அங்கு உறைவாற்குக் கோயில் போல் -வண்டு
வளம் கிளரும் நீள் சோலை வண் பூங்கடிகை
இளங்குமரன் தன் விண்ணகர் —–61-

———-

அவன் என்னை யாளி யரங்கத் தரங்கில்
அவன் என்னை எய்தாமல் காப்பான் -அவன் என்ன
துள்ளத்து நின்றான் இருந்தான் கிடக்குமே
வெள்ளத்து அரவணையின் மேல்—–நான்முகன் திருவந்தாதி –30-

நாகத்தணைக் குடந்தை வெக்கா திரு எவ்வுள்
நாகத்தணை யரங்கம் பேரன்பில் –நாகத்
தணைப் பாற் கடல் கிடக்கும் ஆதி நெடுமால்
அணைப்பார் கருத்தானாவான்–36-

————

நீல தட வரை மேல் புண்டரீக நெடும் தடங்கள்
போல பொலிந்து எமக்கு எல்லா இடத்தவும் பொங்கு முந்நீர்
ஞாலப் பிரான் விசும்புக்கும் பிரான் மற்றும் நல்லோர் பிரான்
கோலம்கரிய பிரான் எம்பிரான் கண்ணின் கோலங்களே -39-

வாசகம் செய்வது நம் பரமே தொல்லை வானவர் தம்
நாயகன் நாயகர் எல்லாம் தொழுமவன் ஞால முற்றும்
வேயகமாயினும் சோராவகை இரண்டே யடியால்
தாயவன் ஆய்க்குலமாய் வந்து தோன்றிற்று நம்மிறையே – -61 –

வேதனை வெண் புரி நூலனை விண்ணோர் பரவ நின்ற
நாதனை ஞாலம் விழுங்கும் நாதனை ஞாலந்தத்தும்
பாதனைப் பாற்கடல் பாம்பணை மேல் பள்ளி கொண்டு அருளும்
சீதனையே தொழுவார் விண்ணுளாரிலும் சீரியரே – – -79 –

ஈனச் சொல்லாயினுமாக எறி திரை வையம் முற்றும்
ஏனத்துருவாய் யிடந்த பிரான் இரும் கற்பகம் சேர்
வானத்தவர்க்கும் அல்லாதவர்க்கும் மற்று எல்லாயவர்க்கும்
ஞானப் பிரானை யல்லால் இல்லை நான் கண்ட நல்லதுவே – – 99- –

—————-

கல்லும் கனைகடலும் வைகுந்த வானாடும்
புல்லென்று ஒழிந்தன கொல் ஏ பாவம் வெல்ல
நெடியான் நிறம் கரியான் உள் புகுந்து நீங்கான்
அடியேனது உள்ளத்தகம்––பெரிய திருவந்தாதி–68-

கார் கலந்த மேனியான் கை கலந்த வாழியான்
பார்களந்த வல்வயிற்றான் பாம்பணையான் -சீர் கலந்த
சொல் நினைந்து போக்காரேல் சூழ் வினையின் ஆழ் துயரை
என்னினைந்து போக்குவார் இப்போது –86-

—————

இராமானுஜ நூற்றந்தாதி

இறைஞ்சப்படும் பரன் ஈசன் அரங்கன் என்று இவ்வுலகத்
தரம் செப்பும் அண்ணல் இராமானுசன் என் அருவினையின்
திறம் செற்று இரவும் பகலும் விடாது என் தன் சிந்தை உள்ளே
நிறைந்து ஒப்பற விருந்தான் எனக்காரும் நிகர் இல்லையே – 47- –

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

————-

ஸ்ரீ ராமானுஜ நூற்றந்தாதி பாசுரமும்- ஸ்ரீ ஆழ்வார் பாசுரங்களும் –5-எனக்கு உற்ற செல்வம் இராமானுசன் –

March 14, 2020

பெரிய ஜீயர் உரை –

இப்படி எம்பெருமானார் உடைய விஷயீகார தார்ட்யத்தை அருளி செய்த அநந்தரம் –
அவர் திரு நாமங்களை சொல்லுவோம் -என்று முன்பு உபக்ரமித்த படியே –
ஸ்தோத்ரம் பண்ணுவதாக-உத்யோகித்தவர் -அதில் நிரவத்யமாக செய்கை அரிது ஆகையாலே
லாஷணிகர் நிந்திப்பார்களே-என்று நிவ்ருத்ய உன்முகராய்
மீளவும் தாமே சித்த சமாதானம் பண்ணிக் கொண்டு பிரவ்ருத்தர் ஆகிறார் –

பிள்ளை லோகம் ஜீயர் அருளிய உரை

கீழ்ப் பாட்டிலே எம்பெருமானார் தம்மை நிர்ஹேதுகமாக விஷயீகரித்தார் என்று கொண்டாடினார் -இதில் –
அந்த ப்ரீதியாலே ப்ரேரிதராய்க் கொண்டு -அவருடைய குண கீர்த்தனம் பண்ண உத்யோகித்து –
குத்ருஷ்டிகளாய் இருப்பார் இதில் ஏதேனும் ஒரு குற்றத்தை ஆரோபித்து -தூஷித்தார்கள் ஆகில் –
அதுவே எனக்கு பூஷணம் -என்று சொல்லா நின்று கொண்டு –இதன் ரசம் அறிந்தவர்கள்-குணமாக விரும்புவார்கள் -என்கிறார் .

அமுது விருந்து –

எம்பெருமானார் தாமாகவே என்னை அபிமானித்த படியால் -இந்நிலையினின்றும்-நான் நழுவ வழி இல்லை என்றார் கீழே –
இனி -சொல்லுவோம் அவன் நாமங்களே -என்று தொடங்கின படியே துதி செய்ய இழிந்தாராய்-
இலக்கணம் வல்லவர்கள் இத் துதியில் குற்றம் குறை கண்டு பழி ப்பார்களே என்று மீண்டு-மறுபடியும் எம்பெருமானாற்கு அன்பர்கள்
பக்தன் சொன்னது -என்று இதில் குற்றம் குறை காண-இயலாது என்று தேறித் தோத்திரம் செய்ய முற்படுகிறார் –

———-

எனக்கு உற்ற செல்வம் இராமானுசன் என்று இசையகில்லா
மனக்குற்ற மாந்தர் பழிக்கில் புகழ் அவன் மன்னிய சீர்
தனக்குற்ற அன்பர் அவன் திரு நாமங்கள் சாற்றும் என் பா
இனக்குற்றம் காணகில்லார் பத்தி ஏய்ந்த இயல்விது என்றே -5 –

———-

எனக்கு ஸ்வரூப அனுரூபமான சம்பத்து எம்பெருமானார் என்று இசையாத மநோ தோஷத்தை உடைய மனுஷ்யர் –
நிந்தித்தார்கள் ஆகில்-அது ஸ்துதியாம் இத்தனை –அவருடைய நித்ய சித்த கல்யாண குணங்களுக்கு தகுதியான
பிரேமத்தை உடையவர்கள் –பக்தி யோடு கூடின பிரவ்ருத்தியை உடையது -என்று -அவருடைய திருநாமங்களை சொல்லா நின்ற –
என்னுடைய-சந்தஸ் சமூஹத்தினுடைய குற்றத்தை காண மாட்டார்கள்-
இயல்வு -பிரவ்ருத்தி /இயல்வு இது என்றது -இயல்வை உடையது என்றபடி
பத்தி ஏய்ந்த வியலிது-என்ற பாடம் ஆன போது-இது பக்தி யோடு கூடிய சொல் என்று கொண்டு-குற்றம் காண கில்லார் என்கை-
பா -சந்தஸ் / இனம் -சமூஹம்
மயங்கி அவர்கள் நல்லது பாரார் -இவர்கள் மயங்கி தீமை பாரார் –

———–

எனக்குற்ற செல்வம் –
அப்ராப்தமாய் அதி தீஷணமாய் அநித்தியமான தனம் போல் அன்றிக்கே –
சரம பர்வமாய் -தத் யாதாத்ம்ய பூதமாய் -அவதாரண பரத்வ பரதிபத்தி பூர்வகமாகவே நிஷ்கர்ஷிக்கப் பட்டதாய் –
எனக்கு ஸ்வரூப ப்ராப்தமாய் இருந்துள்ள சம்பத்து-ஸ்ரீ நிதி -தயா நிதிம்-சர்வ லோக -ஸூ ஹ்ருத்

இராமானுசன் என்று –
தந்தை நல் தாய் தாரம் தனயர் பெரும் செல்வம் என் தனக்கு நீயே எதிராசா –என்கிறபடி
எம்பெருமானாரே தம் தாமுக்கு மகா நிதி என்று அத்யவசித்து –
தத் அந்ய சம்பத்துக்களை எல்லாம் அசத் கல்பமாக த்ரணீ கரித்து -நாம் அவருடைய குண கீர்த்தனம் ஒன்றுமே
பண்ணக் கடவோம் என்று கணிசித்து இருக்க –

எனக்கு உற்ற செல்வம் இராமானுசன்-
உற்றான் என்று உள்ளத்து வைத்தருள் செய் கண்டாய் கற்றார் சேர் கண்ண புரத்துறை யம்மானே -பெரிய திருமொழி- –8-10-5-

உற்றேன் உகந்து பணி செய்ய உன பாதம்
பெற்றேன் ஈதே இன்னம் வேண்டுவது எந்தாய்
கற்றார் மறை வாணர்கள் வாழ் திருப் பேராற்கு
அற்றார் அடியார் தமக்கு அல்லால் நில்லாவே–ஸ்ரீ திருவாய் மொழி-–10-8-10-

எனக்குற்ற செல்வம் இராமானுசன் –
இராமானுசரே செல்வம் –யாருக்கு
மாந்தர் அனைவருக்கும் தான் ஒவ் ஒருவனும் இராமானுசன் உடன் தொடர்பு கொண்டு அதற்கு ஏற்ப ஒழுகின்
செல்வமாய் உபயோகப் படுகிறார் இராமானுசர் –

செல்வம் எப்படி உலகில் உபயோகப் படுகிறது ?
செல்வமுண்டு எனில் போகும் உயிரும் நிற்கும் -இராமானுசர் சம்பந்தம் உண்டு எனில்
பிறவி துயரால்-நசிக்கும் ஆன்ம தத்துவம் -உயிர் -சத்தை பெற்று தளிர்க்கும் -கையில் உள்ள பெரும் செல்வதை ஒருவன் இழக்க நேரிட்டால்
அந்நிலையிலே உடனே அவன் உயிரை விட்டு விடுகிறான் –இராமானுசனை அங்கனமே பிரிய நேர்ந்து உயிரை விட்டவர் பலர் ஆவர் –
கணியனூர் சிறியாச்சான் இராமானுசனை சேவிக்க எழுந்து அருளும் போது வழியில்
திருவரங்கத்தில் இருந்து வந்து கொண்டு இருந்த ஒரு வைஷ்ணவர் வாயிலாக எம்பெருமானார் திரு நாட்டுக்கு
எழுந்து அருளின செய்தியைக் கேட்டதும் அப்படியே -எம்பெருமானார் திருவடிகளே தஞ்சம் -என்று
மூச்சடங்கிப் பொன்னுடம்பு எய்தியதாக கூறும் ஐதிஹ்யம் இங்கு அறிய தக்கது –
இராமானுசனைப் பிரிந்தவர் அனைவரும் உயிர் துரவாமைக்கு ஹேது -அன்பில் உள்ள ஏற்றத் தாழ்வு அன்று -பகவானுடைய சங்கல்பமே என்க
எம்பெருமானார் தர்சனம் மேலும் தழைக்க-வேண்டும் என்பதற்காக அவர்கள் முடியாதவாறு பகவான் சங்கல்பித்தான் -என்க
எம்பெருமானார்-திரு நாட்டுக்கு எழுந்து அருளியதை கேட்டு மரம் ஏறி விழுந்து முடிய முயன்ற சிலரை நோக்கி –அனந்தாழ்வான் –
கேட்டும் போகாத உயிர் மரம் ஏறி விழுந்தால் போகாது காண் -என்று-கூறியதாகச் சொல்லப்படும் ஐதிஹ்யத்தில் இவ் உண்மை பொதிந்து கிடக்கிறது –

செல்வம் தான் பயன் ஆவதோடு -பயனைப் பெறுதற்கு சாதனமும் ஆவது போலே-
எம்பெருமானார் தாம் ப்ராப்யர் ஆவதுடன் -பெறத் தக்க பேறாவதுடன் –
ப்ராபகமும் -சாதனமுமாய் இருத்தல் பற்றி செல்வகமாக உருவகம் செய்கிறார்
கூரத் ஆழ்வான் -எனக்கு உற்ற செல்வம் என்று-இராமானுசனைப் பற்றி நிற்கும் பெரும் செல்வர் என்றும் –
தாம் அன்னார் தம் புதல்வர் என்றும் பெருமிதத்துடன் கூறிக் கொள்கிறார் பட்டர் தமது சஹஸ்ரநாம பாஷ்யத்திலே –
ஜாதோ லஷ்மண மிச்ர சம்ச்ரயதநாத் ஸ்ரீ வத்ஸ சிஹ்நாத் ருஷே -எனபது அவர் திரு வாக்கு –

ஏனைய செல்வம் கெட்ட அஹங்கார மமகாரங்கள் என்னும் நெருப்பிலே விழுந்து உயிர்-மாய்வதர்க்கும் ஹேதுவாகக் கூடும்
ஆதலின் அது உற்ற -ஸ்வரூப அனுரூபமான -செல்வமாகாது –
இராமானுச செல்வமோ -அங்கன் உயிர் மாய்வதற்கு ஹேதுவாகாத தோடு உயிர் சத்தை பெற்று-
தரித்து நிற்பதற்கும் ஹேதுவாதல் பற்றி உற்ற செல்வம் -ஆயிற்று –
இச் செல்வமும் அஹங்கார மமகாரங்களை உண்டு பண்ணும் .
ஆயின் அவை கெட்டவை அல்ல -நல்லவையே –
சாத்விக அஹங்கார மமகாரங்கள் என்றபடி.இத்தகைய அஹங்காரம் ஆழ்வார்களுக்கும் தோன்றி –
எனக்கு ஆர் நிகர் நீள் நிலத்தே -என்றும் –
என் மதிக்கு விண்ணெல்லாம் உண்டோ விலை -என்றும் -அஹங்கார மமகாரங்கள் பேசுவதைக் காண்கிறோம்
ஆர் எனக்கு இன்று நிகர் சொல்லில் -என்று இவ் அமுதனாரும்
இல்லை எனக்கு எதிர் இல்லை எனக்கு எதிர் இல்லை எனக்கு எதிரே -என்று எம்பாரும்-
எம்பெருமானார் சம்பந்தத்தால் அஹங்கரிக்கபதை பார்க்கிறோம் –

இங்கும் உற்ற செல்வமாகிய இராமானுசன் சம்பந்தத்தால் தோற்றிய சாத்விக மமகாரம் வெளிப்பட –
எனக்கு உற்ற செல்வம் -என்று நயம் சுவை பயப்பது காண்க –
இந்த செல்வத்திற்கு தானும் ஒரு பங்காளி என்கிற மனப் பான்மையில் இல்லாது-
முழுதும் தானே துய்ப்பவனாதல் வேண்டும் என்னும் மனப் பாரிப்பு தோன்ற
எனக்கு உற்ற செல்வம் எனப் பட்டது -காண்க –

செல்வம் இராமானுசன் –
பண்டைய இராமானுசன்-லஷ்மணன்-லஷ்மனோ லஷ்மி சம்பன்ன -என்று செல்வம்-படைத்தவனாக கூறப் பட்டான்
இன்றைய இராமானுசனோ செல்வமாகவே கூறப் படுகிறார் –
த்ருணீகருத விரிஞ்ச்யாதி நிரந்குச விபூதய –ராமானுஜ பத்தாம் போஜ சமாச்ரயண சாலின -என்று
இராமானுசன் திருவடித் தாமரையை பற்றி விளங்கும் அவர்கள் பிரம்மா முதலியோர்களுடைய எல்லை அற்ற
செல்வங்களை தருணமாக-அலஷ்யமாக – கருதுமவர்கள் ஆவர் -என்றபடி –
மற்றை பெரும் செல்வங்களை எல்லாம் புறக் கணிக்கும் படி அன்றோ இச் செல்வம் இருக்கிறது –
பெரும் செல்வம் நீயே எனக்கு எதிராசா -என்றார் மணவாள மா முனிகளும்

———-

அடங்கெழில் சம்பத்து, அடங்கக் கண்டு ஈசன்
அடங்கெழில் அஃது என்று, அடங்குக உள்ளே—ஸ்ரீ திருவாய் மொழி–1-2-7-

எனக்குற்ற -சாத்விக அஹங்காரம் –
என் செய்ய தாமரைக்கண்ணன் –
என் தூதாய் –
என் நீல முகில் வண்ணர்க்கு
என் அம்மான்
என் மாணிக்கச் சோதியை
என் அமுதம்

செல்வம்
எந்தை எம்பெருமான் என்று வானவர் சிந்தையுள் வைத்துச் சொல்லும் செல்வனையே–1-10-7-

அடங்கெழில் சம்பத்து, அடங்கக் கண்டு ஈசன்
அடங்கெழில் அஃது என்று, அடங்குக உள்ளே—ஸ்ரீ திருவாய் மொழி–1-2-7-

அபிமான துங்கச் செல்வனைப் போலே
நானும் உனக்கும் பழ வடியேன்-
செல்வச் சிறுமீர்காள்
நீங்காத செல்வம் நிறைந்து
செல்வா பலதேவா
திருத்தக்க செல்வமும் சேவகமும் யாம் பாடி
செங்கண் திருமுகத்துச் செல்வத் திருமாலால் எங்கும் திருவருள் பெற்று

நாகணை மிசை நம் பிறர் செல்வர் பெரியார்
செங்கோலுடைய திருவரங்கச் செல்வனார்
ஊனேறு செல்வத்து உடன் பிறவி யான் வேண்டேன் –
ஆனாத செல்வத்து அரம்பையர்கள் தற்சூழ வானாலும் செல்வமும் மண்ணரசும் யான் வேண்டேன்
இன்பமரும் செல்வமும் இவ்வரசும் யான் வேண்டேன்
கோனாகி வீற்று இருந்து கொண்டாடும் செல்வறியேன்
நின்னையே தாள் வேண்டி நீள் செல்வம் வேண்டாதான் தன்னையே தான் வேண்டும் செல்வம் போல் மாயத்தால் –

பயிலும் சுடரொளி மூர்த்தியைப் பங்கயக் கண்ணனைப்
பயில இனிய நம் பாற் கடற் சேர்ந்த பரமனைப்
பயிலும் திரு வுடையார் எவரேலும் அவர் கண்டீர்
பயிலும் பிறப்பிடைதோறு எம்மை ஆளும் பரமரே–3-7-1-

இசைய கில்லா மனக்குற்ற மாந்தர் –
சம்மதிக்க மாட்டாதபடியான மநோ தோஷத்தை உடைய மந்த மதிகள் –

பழிக்கில் –
இவர்கள் குணங்களை அறிய மாட்டாதே -தோஷத்ர்க்குகள் ஆகையால் –
துஸ் தர்க்கங்களாலும் சாஹித்யத்தாலும் குதர்ஷ்டி கல்பமாகிற தோஷங்களையே ஏறிட்டு நிந்தித்தால்-
அவர்கள் அஞ்ஞர் ஆகையாலே -மாந்தர் -என்கிறார்

பழிக்கில் புகழ்
வ்யாப்தங்களான காம்ய கர்மங்களை-இழந்தார் என்று இறே அவர்கள் பழி சொல்வது -அவை தன்னை ஆராய்ந்தால் –
சாதனாந்தரங்களின் தோஷம் அறியாதவர்கள் சொல்லும் பழி ஆகையாலே அதுவே நமக்கு புகழாம் –
ததீய வைபவத்தை அறியாதவர்கள் சொல்லும் பழி யாகையாலே எனக்கு அதுவே புகழாம் –தூஷணம் பூஷணம் ஆகுமே –

கூரத் ஆழ்வான் -கோயிலுக்குள் செல்லாமல் போன ஐதிகம்-அபாகவதன் புகழ்ந்தால் கொள்ளார்களே –
ஞானம் அனுட்டானமிவை நன்றாகவே வுடையனான குருவை அடைந்தக்கால்-மாநிலத்தீர் –
தேனார் கமலத் திரு மாமகள் கொழுநன் தானே வைகுந்தம் தரும் -என்றும்
உய்ய நினைவுண்டால் உம் குருக்கள் தம்பதத்தே வையும் அன்பு தன்னை இம் மாநிலத்தீர்
மெய்யுரைக்கேன் பையரவின் மாயன் பரமபதம் உங்களுக்காம் கை இலங்கு நெல்லிக் கனி -என்றும் –
சொல்லப் படும் விஷயத்தில் இறே அவர்கள் பழி சொல்வது .-
அதுவே புகழாய்த்தலை கட்டும் -இத்தனை –
அலகை முலை சுவைத்தார்கு அன்பர் அடிக்கன்பர் -திலதமெனத் திரிவார் -தம்மை உலகர்
பழி தூற்றில் துதியாகும் –என்றும் சொல்லக் கடவது இறே .

அவன் மன்னிய சீர் தனக்குற்ற அன்பர் –
அவன் -என்ற பிரசித்தரான எம்பெருமானார் –
மன்னிய சீர் -நித்ய சித்தங்களாய்- ஸ்வாபாவிகங்களாய் -ஞான சக்தி தொடக்கமான கல்யாண குணங்கள்
தனக்கு உற்ற அன்பர் -தனக்கு தகுதி யான பிரேமத்தை உடைய ரான மகாத்மாக்கள்

அவன் திருநாமங்கள் சாற்றும் எம் பாவினக் குற்றம் –
அவர் விஷயமான -பக்தி சந்தூஷணம் பண்ண -தத் ப்ரேரிரதனாய் கொண்டு –
அவருடைய திருநாமங்கள் பக்த்ய ரூபேண சமர்பிப்பதாக என்னாலே சொல்லப்பட்ட சந்தஸ்-சமூகத்திலே அவத்யத்தை -அன்றிக்கே –
அவருடைய திரு நாமங்களை சொல்லா நின்றுள்ள -என்னுடைய சப்த சமூகத்திலே குற்றத்தை-என்னவுமாம் –
பா-சந்தஸ் இனம்-சமூகம்

காணகில்லார் –
வத்சல ஸ்வபாபர் ஆகையாலே -தோஷ அதர்சிகளாய் போவார்கள் –கில்லார் -சமர்த்தர் அல்லாதவர்
மந்த மதிகள் ஆனவர்கள் -தம்தாமுடைய அறிவு கேட்டாலே இவன் காம்ய கர்ம பரித்யாகம் பண்ணினான் என்றும் –
லஷணத்தில் குறைச்சலாக சொன்னான் என்றும் -இப்படியான தோஷங்களை காண கில்லார் -என்றபடி –
அதற்க்கு மூலம் ஏது என்ன –

பக்தி தேய்ந்த இயல்வு இது என்றே
பக்தியோடு கூடின வ்ர்த்தியை உடையது -என்னவுமாம் –இயல்வு -பிரவர்த்தி –ஏய்தல் -கூடுதல்-

இசைய கில்லா மனக்குற்ற மாந்தர்
உலகில் காணும் செல்வதை அன்றி மற்று ஒன்றை செல்வமாகக் கொள்ளார் அறிவிலா மாந்தர் –
கண்டதை அன்றி புறக் கண்ணால் காணாததை ஏற்கும் திறன் அவர்களுடைய அறிவுக்கு இல்லை –
சாஸ்த்ரத்தை புகட்டி -சாஸ்திர கண்ணால் காணும்படி மற்று ஒரு செல்வதை நிரூபித்து இசைய வைத்தாலும்
அவர்களுடைய மனக் குற்றம் இசைய ஒட்டுகிறது இல்லை –
மனத்தில் மாசு உடையார்க்கு சாஸ்திரத்தின்-பொருள் மனத்தில் பதியாது அன்றோ
ஒரு கால் மனக் குற்றம் சிறிது மாறிச் சாஸ்திரத்தின் பொருளாகிய-எம்பெருமானை செல்வமாக இசையினும்
சாஸ்திரத்தின் உள் பொருளாகிய ஆசார்யனை-இராமானுசனை –செல்வமாக இசையவே மாட்டார்கள் .அதற்க்கு காரணம்
அவர்கள் பகவத் பிரசாதத்தால் முழுதும் மனக் குற்றம் நீங்கித் தூய்மை பெறாமையே –
புலமை மட்டும் போதாது -பகவானுடைய அனுக்ரகமும் வேண்டும் –சாஸ்திரத்தின் உள் பொருளை காண்பதற்கு –

ஸ்ரீ உய்யக் கொண்டார் -என்பவர்க்கு ஸ்ரீ உடையவர் பிரபத்தியில் இறங்கும் படி செய்வதற்கு சரம ஸ்லோக அர்த்தத்தை
அருளி செய்த போது -சொன்ன பிரபத்தி விஷயம் நன்றாக இருக்கிறது -ஆயினும் பக்தி நெறியை
விட்டு பிரபத்தி நெறியில் இறங்க எனக்கு விருப்பம் வர வில்லை -என்று அந்த ஸ்ரீ உய்யக் கொண்டார் கூறினாராம் –
அதற்கு ஸ்ரீ உடையவர் -வித்வான் ஆகையாலே இசைந்தாய்-பகவத் பிரசாதம் இல்லாமையாலே
ருசி பிறந்தது இல்லை -என்று அருளிச் செய்தாராம்
அது போல சாஸ்திரங்கள் மூலம் எவ்வளவு-இசைவித்தாலும் மனக்குற்ற மாந்தர்
இராமானுசனை உற்ற செல்வமாக இசைய கில்லார் என்கிறார் –
எனவே அழியும் செல்வதை தவிர அழிவற்ற செல்வமாக எம்பெருமானை மதிக்காத சம்சாரிகள் ஆயினும் சரி
எம்பெருமானை தவிர எம்பெருமானாரை செல்வமாய் மதிக்காத முதல் நிலையில் -பிரதம பர்வத்தில் –
உள்ள வித்வான்கள் ஆயினும் சரி –
மனக்குற்றம் உடையவர்களே -என்பது ஸ்ரீ அமுதனார் திரு உள்ளம் .

பழிக்கில் புகழ்-
சம்சாரிகள் -அறிவிலிகள்-உலகில் கருத்து வேறுபாடு இன்றி எல்லோராலும் ஒப்புக் கொள்ளப் பட்ட-செல்வதை விட்டு
ஸ்ரீ எம்பெருமானாரையே செல்வமாகத் தானே பற்றிக் கொண்டு கவி புனைந்து-உழலு கிறானே –
இது என்னமதி ஈனம் என்று பழிப்பர் அன்றோ –
இதுவும் உண்மையில் ஸ்ரீ அமுதனாரைப்- புகழ்ந்ததாகவே முடிகிறது –
புகழாவது பண்பு உடையனாய் நல்லோரால் அறியப் படுத்தல் –
ஸ்ரீ எம்பெருமானார் சம்பந்தம் நல்லார் ஏற்கும் உயர்ந்த பண்பு அன்றோ -அது எங்கனம் பழிப்பது ஆகும் –

ஸ்ரீ கண்ணன் குணங்களை சிலர் ஏசினர் -ஆயினும் புகழ் களாகவே அக்குணங்கள் இன்றும் மிளிர்கின்றன –
நாஸ்திகர் -ஸ்வர்க்கம் பெரும் நோக்குடன் வேள்வி புரிவோரைச் சாஸ்திரம் சொல்லுகிறது என்று
கண்ணுக்கு தெரியாத ஸ்வர்க்கத்தை இருப்பதாக நம்பி அரும்பாடு பட்டுப் பெற விழைகின்றனரே என்று-பழிக்கின்றனர் .
பயன் கருதி வேள்வி புரிவோர் பயன் கருதாது சாஸ்திர நெறியில் ஒழுகி பரமனை வழி படும்-உபாசகர்களை
இன்புறும் ஸ்வர்க்கத்தை வேண்டாம் என்று விட்டு விட்டு
எங்கோ வீட்டு இன்பம் பெறப் போகிறார்களாமே என்று பழிக்கிறார்கள் –
அவர்கள் நினைவில் அவை பழிப்புகள் ஆயினும் -உண்மை நிலையில்-அவை புகழ்சிகள் அன்றோ –

அங்கனம் உபாசகர்கள் எம்பெருமானாரை செல்வமாக பற்றி கவி புனைதலை பழிப்பினும்-அது புகழாகவே முடிகிறது என்க –
அறிவிலிகளோ -வித்வான்களோ -பழிப்பதற்கு ஹேது – விஷயத்தில் உள்ள குற்றம் அன்று –
அவர்கள் மனத்தில் உள்ள குற்றமே எனபது தோன்ற -மனக்குற்ற மாந்தர் பழிக்கில் புகழ் -என்றார் .
மனக்குற்ற மாந்தர் பழிக்கில் புகழாவது போல புகழின் பழித்ததாகும் எனபது ஸ்ரீ அமுதனார் கருத்து –
கவி புனைதலையே அவர்கள் பழிப்பவர் ஆதலின் -இக்கவிகளை அவர்கள் ஆராய மாட்டார்கள் -அதுவே-இந்நூலுக்கு தனி சிறப்பு
அவர்கள் ஆராய்ந்து குணம் கண்டு புகழினும் அசிஷ்ட பரிக்ரகம் -தகுதி அற்றோர்–புகழாமல் இருப்பது பலிக்காமல் இருப்பதாகும் என்றும்

ஸ்ரீ நம் ஆழ்வார் பெரிய திருவந்தாதியில் –
புகழ்வோம் பழிப்போம் புகழோம் பழியோம்
இகழ்வோம் மதிப்போம் மதியோம் -இகழோம் மற்று
எங்கள் மால் செங்கண் மால் சீறல் நீ தீ வினையோம்
எங்கள் மால் கண்டாய் இவை —2- -என்று அருளிச் செய்து இருப்பது இங்கு நினைவு கூறத் தக்கது

புகழ்வோம் பழிப்போம்
ஒருவராலும் புகழ்ந்து முடிக்க முடியாத உன்னை-அற்ப ஞானிகளான நாங்கள் புகழ்வோம் ஆகில்-
அயோக்யர் புகழ்வது புகழ்ச்சி அன்று ஆதலால் உன்னை நாங்கள் பழித்தவர்கள் ஆக ஆகி விடுவோம் –
ஆசார ஹீனன் வசிஷ்டர் நல்ல ஆச்சார்ய சீலர் -என்னுமா போலே
புகழோம் பழியோம் –
இந்த உண்மையைத் தெரிந்து கொண்டு புகழாது இருந்தோம் ஆகில் உன்னைப் பழித்தவர்களாக ஆக மாட்டோம் –
மேல் அருளிய அர்த்தத்தையே ஸ்பஷ்டமாக அருளிச் செய்கிறார்-

இதனை அடி ஒற்றி பட்டர் ஸ்ரீ ரெங்கராஜ ஸ்தவத்திலே-
ஸ்துதம் பரி நிந்திதம் பவதி நிந்திதம் ஸ்துதம் -துதிக்கப் பட்டது நிந்திக்க பட்டதாகிறது –நிந்திக்கப் பட்டது துதிக்கப் பட்டதாகிறது -என்றார்.

புகழ்வாய் பழிப்பாய் நீ பூந்துழா யானை
இகழ்வாய் கருதுவாய் நெஞ்சே -திகழ் நீர்க்
கடலும் மலையும் இருவிசும்பும் காற்றும்
உடலும் உயிரும் ஏற்றான் ——முதல் திருவந்தாதி–73-

புகழ்வாய் பழிப்பாய்–புகழிலும் புகழ் -பழிக்கிலும் பழி
நீ பூந்துழா யானை-பழித்தல் இகழ்தல் செய்யப் போமோ -என்கிறது –
இகழ்வாய் கருதுவாய்–இகழிலும் இகழ்-கருதிலும் கருது —
என் நெஞ்சே -நாட்டுக்குச் சொல்கிறேனோ -உனக்கு அன்றோ –

அலகை முலை சுவைத்தாற்கு அன்பர் அடிக்கு அன்பர்-திலதம் எனத் திரிவார் தம்மை –
உலகர் பழி தூற்றில் துதியாகும் தூற்றாதவர் இவரைப்-போற்றிலது புன்மையே யாம் –என்னும் ஞான சாரப் பாடலும் –

அலகை – பேய் வடிவு கொண்ட பூதனை / போற்றுதல்-துதித்தல்/புன்மை-பழி தூற்றுதல் /–

ந்யாச வித்யைக நிஷ்டாநாம் வைஷ்ணவானாம் மகாத்மானாம்–ப்ராக்ருத அபிஷ்டுதிர் நிந்தா நிந்தா ஸ்துதிரி திஸ்மருதா -என்று
சரணா கதி நெறியையே பற்றி நிற்கும் மகாத்மாக்களான வைஷ்ணவர்களை பாமர மக்கள் துதிப்பது நிந்தையாகும் –
நிந்திப்பது துதிப்பதாக கருதப் படும் -என்னும் ஸ்லோகமும் இக் கருத்துக் கொண்டனவே –

அவன் மன்னிய சீர் தனக்குற்ற அன்பர் –
மன்னிய சீர்-
எம்பெருமானார் இடம் உள்ள குணங்கள் வந்தேறின வல்ல –இயல்பாய் அமைந்தவை என்பார் -மன்னிய சீர் -என்றார் –
சீர் பெரியதுமாய் அன்பு சிறியதுமாய் அல்லாது சீருக்கு ஏற்ற பெருமை வாய்ந்தது அன்பு .அன்பு-பக்தி
சீரிய விஷயத்தின் கண் உள்ள அன்பே பக்தி என்க-
அன்பர்
என்று பக்தியையே நிரூபகமாகக் கூருகையாலே ஜாதி குலம் முதலியன-பொருள் படுத்த தக்கன வல்ல என்று தோன்றுகிறது
செல்வம் உடைமைக்கு வர்ண ஆஸ்ரமங்கள்-வேண்டுவன அல்லவே –
இராமானுசனாம் செல்வம் உடைமைக்கும் அவை வேண்டுவன அல்ல என்க –
கீழே செல்வம் என்று இராமானுசனைக் கூறி இங்குச் சீர் தனக்கு உற்ற அன்பர் என்கையாலே
பொன்னின் மாற்று உயர்வுக்கு ஏற்ப அதனை விரும்புவது போல சீருக்கு ஏற்ப அன்புருகின்றனர் –
என்னும் கருத்து நயம்பட விளங்குவது காண்க .
பொன்னை இகழ்ந்து புல்லிய விருகங்கள் புல்லுகந்தால் மன்னர் எடுப்பதைப் பொன்னலதே-என்று-வேதாந்த தேசிகன் பணித்த படி
மனக்குற்ற மாந்தர் என்னும் மிருகங்கள் இராமானுச செல்வதை-இசைகிலாது புல்லிய செல்வமாம் புல்லை யுகந்தாலும்
ஆழ்வான் போன்ற வாசி அறியும் மன்னர்கள் இப் பொன்னையே பேணுகின்றனர் -என்க

அவன் திரு நாமங்கள் சாற்றும் என் பா வினக் குற்றம் காண கில்லார் –
மனக்குற்ற மாந்தர் போல எம்பெருமானார் விஷயமாக கவி புனைதலை அன்பர் பழிக்க-மாட்டார்கள் -கொண்டாடுவார்கள்
இனி பாக்களிலே இறங்கி குற்றம் காணலாம் -அதுவும்-செய்கிலர் -ஏன் எனில் அவர்கள் பேணும்
எம்பெருமானாரின் திரு நாமங்களை இப்பாக்கள் சாற்றுகின்றன –
விஷய கௌரவத்தை -நுதலப்படும் பொருளின் மாண்பை -பார்த்து ஆதரிப்பர் –
சொல்லின் தகைமை யில்-நாட்டம் கொள்ளார் என்பது கருத்து –
மாந்தர் மனக் குற்றத்தால் மதி மயங்கி எம்பெருமானார் சீர்மை காண்கிலார் –
அன்பர் மதி மயங்கி அவரைப் பற்றி பாக்களில் உள்ள குற்றங்களை காண்கிலார் .
பாவினம் என்று பாவின் இனமான கலித் துறையை கூறிற்றாகவுமாம்-

பத்தி ஏய்ந்த இயல்விது என்று –
இக் கவி புனைந்தது பக்தியோடு கூடிய செயல் என்ற காரணத்தால் குற்றம் காண கில்லார் என்றபடி –
இயல்விது என்று காண கில்லார் என்று இயைக்க இயல்விது-குறிப்பு வினை முற்று /இயல்விது -இயல்வினை உடையது
இயல்வு -இங்கே கவி புனைதல்

அன்பர் காண கில்லார்
அன்புடைய ராதலின் காண கில்லார் என்னும் கருத்துடைய அடை கொளியாதலின்-கருத்துடை யடைகொளி-அணியாம்
திரு நாமங்கள் சாற்றும் -என்னும் அடை சொல் திரு நாமங்கள் சாற்றுதலின் குற்றம் காண கில்லார்
என்னும் கருத்துடைய தாதலின் -கருத்துடை யடை மொழி -அணியாம்-இதனைப் பரிகரா லன்காரம் என்பர் வட நூலர் .

அன்புடைமை / திரு நாமங்கள் சாற்றுதல் / பக்தி ஏய்ந்த இயல்வு / –இம் மூன்றும் குற்றம்-காண கில்லாமைக்கு ஹேதுக்களாம்-
புலைமை காட்டத் தீட்டப் பெற்ற கவிகள் ஆயின் அவற்றின் குற்றம் குறைகளை ஆராயலாம்
இவைகளோ பக்தி ரசம் உள்ளடங்காதபடி வெளியே வழிந்த சொற்களால் ஆயவை-
இவற்றில் பக்தியைப் பார்க்க வேணுமே தவிர குற்றம் காண ஒண்ணுமோ என்று அன்பர்-விட்டு விடுவர் என்றதாயிற்று
பத்தி ஏய்ந்த இயலிது-என்றும் பாடம் உண்டு-அப்பொழுது பக்தியோடு கூடிய சொல் என்று பொருளாம்–

——————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருமலை நல்லான் சக்கரவர்த்தி ஸ்ரீ ராம கிருஷ்ண ஐயங்கார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருவரங்கத்து அமுதனார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ ஆழ்வார்கள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

ஸ்ரீ ராமானுஜர் ஸ்ரீ மா முனிகள் தர்மி ஐக்யம்–குரு பரம்பரை பிரபாவம் –

March 13, 2020

ஸ்ரீ ஆளவந்தார் பஞ்ச ஆச்சார்யர்கள் மூலம் ராமானுஜருக்கு அருள் புரிய நியமித்தது போலவே
ஸ்ரீ பிள்ளை லோகாச்சார்யார் ஸ்ரீ மா முனிகளுக்கு அருளிச் செய்ய இவர்களுக்கும் நியமித்து அருளினார் –
திருக்கண்ண மங்கை தாசர் – திருப்புட குழி ஜீயர் –விளாஞ்சோலை பிள்ளை
அழகிய மணவாள தாசர் நால்வரும் பிள்ளை லோகாச்சார்யார் சிஷ்யர்கள்
தாசர் பெண்பிள்ளை -ஸ்ரீ ரெங்க நாயகி -கோமடத்தான் –
திகழக் கிடந்தான் திரு நாவீறு உடைய பிரான் தாதர் அண்ணன் -வாத்சல்யமே திரு நாவில் –
ஆராவமுதன் மூலமே நாலாயிரம் -திராவிட சுருதி தர்சகாயா நம
நாலூரான் பிள்ளான் பகவத் விஷய காலஷேபம் -ஆய் ஸ்வாமிக்கும் திருவாய் மொழிப்பிள்ளைக்கும்-திரு நாராயண புரத்தில் ஞான மண்டபம்

ஆளவந்தார் நடமினோ போலே இவரையும் திருவனந்தபுரம் நடக்க வைக்கவே
விளாஞ்சோலைப்பிள்ளை மூலம் ரஹஸ்ய த்ரயார்த்தம் -சொத்தை கொடுத்து –
வேதகப்பொன் போலே இவரையும் பாவனம் ஆக்கி தன்னுடைச் சோதிக்கு செல்ல
திருவனந்த புரம் -பெருமாள் பிரசாதம் விளாஞ்சோலைப்பிள்ளைக்கு அருளிய ஐதிக்யம் –
திருப்பாண் ஆழ்வார் அரங்கன் திருவடி சேர்ந்தால் போலே விளாஞ்சோலை பிள்ளையும் திருவடி சேர்ந்தார் –
நலம் திகழ் நாராயண தாசர் -விளாஞ்சோலைப்பிள்ளை –

கோமடத்தான் வம்சம் -மா முனிகள் -ஆழ்வார் திரு நகரி திரு அவகாரம் -யதிராஜர் புநர் அவதாரம்
கோமடத்தாழ்வான் -74-சிம்ஹாசானாபதிகளில் ஒருவர்
சிக்கில் கடாரம் -தாய் வீடு -இங்கு ஆழ்வாரை சேவிக்க வந்த இடத்தில் அவதாரம் –1370-ஐப்பசி மூலம் -சுக்ல பக்ஷம் சதுர்த்தி வியாழக்கிழமை
சாதாரண வருஷம் இது
அடுத்த பரிதாபி வருஷம் -வைகாசி 17-நம்பெருமாள் திரும்ப ஸ்ரீ ரெங்கம்-48-வருஷங்கள் பின்பு –
திருக் கோஷ்ட்டியூர் நம்பி திரு மாளிகையில் இருந்த பவிஷ்யாச்சார்யார் திவ்ய மங்கள விக்ரஹம்
திருவாய் மொழிப்பிள்ளை பூமியில் இருந்து இடர்ந்து மா முனிகள் உடன் ஆழ்வார் திருநகரியில் பிரதிஷ்டை
நம்மாழ்வார் பிரதிஷ்டையும் இவரே
வைகாசி விசாகம் திரு அவதாரம் -கொந்தகை குந்தி என்னும் மதுரை பக்கம் அவதாரம்
வைகாசி அஷ்டமி தன்னுடைச்சோதி

பூ பாலன் ராயர் –மூல ஸ்தானம் ஆஸ்தானம் நம்பெருமாள்
சேர பாண்டியன் -உத்சவத்துக்கு எழுந்து அருளிய ஸ்தானம்

யதிராஜ விம்சதி -ஆர்த்தி பிரபந்தம் அருளி -எம் ஐயன் இராமானுசன் -மா முனிகள் திருக்குமாரர் திரு நாமம் -சாத்தி அருளினார்
பராங்குச தாசர் பெரிய நம்பி இடம் ராமானுஜர் -சடகோப தாசர் திருவாய் மொழிப்பிள்ளை தாசர் மா முனிகள்

அழகிய வரதர் பூர்வாஸ்ரம திரு நாமம் –ராமானுஜ ஜீயர் திருநாமம் – -பொன்னடிக்கால் ஜீயர் இவரே –
ஸ்ரீ வர மங்கை தாயார் -திருமலையில் -இருந்தாராம் -அழகிய வரதர் எழுந்து அருளப்பண்ணி
தோத்தாத்ரி வான மா மலை எம்பெருமானின் மணவாட்டி –
கனு உத்சவம் இங்கே எழுந்து அருளி உத்சவம் இன்றும் –
பதச்சாயா இவர் -எம்பார் ராமானுஜர் போலவே –

கோட்டூர் அண்ணர்—பிள்ளை லோகாச்சார்யார் சகர் –24000-படி வியாக்யானம் -இவருக்கு ஈடு இல்லையே -திரு மெய்யம் க்ஷேத்ரம்–
துவளில் மா மணி –ஆழ்வார் பிரபாவம் -சொல்லும் திருவாய் மொழி –மா முனிகள் சாதிக்க -கேட்டு –
பின்னை கொல்–பிறந்திட்டாள்-திருவிடவெந்தை அவளும் -இவளை -பர கால நாயகி பிரபாவம் -இருவரைப் பற்றிய திருவின் ஏற்றம் உண்டே –

ஆளவந்தார் -திருமலைக்கு வந்த சமயம் திருமலை நம்பி -ஆகாச கங்கை தீர்த்தம் கொண்டு வராமல் –
அருகில் உள்ள அழகப்பிரானார்-கிணறு தீர்த்தம் -பிராட்டி உடன் ஏகாந்தம் -தொண்டை மான் சக்கரவர்த்தி —
பங்காரு பாவி கிணறு –மழையே மழையே பாசுரம் -அழகப்பிரானார் மங்களாசாசனம் உண்டே-

ராமர் மேடை -குருவித்துறை -க்ருதமாலா -வாஸிஷ்டர் ராமாயணம் -மதுரைக்கு அருகில் விஸ்வம்பரர் முனிவர் ஆசைப்பட்டு சேவை –
விபீஷணர் சரணாகதி -படை எடுப்பு சமயம் சமர்ப்பிக்க -தேவை இடாதவரை உள்ள பிரதிஷ்டை ராமானுஜர்

காஞ்சியில் கிடாம்பி ஆச்சான் வம்சர்-கிடாம்பி நாயனார் இடம் -யதோத்தகாரி சன்னதி மா முனிகள் உபதேச முத்திரை சாதிக்கிறார்
ஸ்ரீ ரெங்கத்திலும் உபதேச முத்திரை -ஈடு சாதித்ததால்
கிடாம்பி நாயனார்-இடம் ஸ்ரீ பாஷ்யம் அதிகரித்து- ஈடு அர்த்தம் இவர் அவருக்கு சாதித்து -தனது அவதார ரஹஸ்யம் -காட்டி -அருளி –

சடகோபர் தாசர் -சடகோபர் ஜீயர் ஏழாவது பட்டம் -எம்பெருமானார் ஜீயர் இடம் சந்நியாசி தீக்ஷை பெற்றார் -ஆஸ்ரம ஸ்வீகாரம் –

ஆட்க்கொண்ட வில்லி ஜீயர் மடம்-இவர் கந்தாடை ஆண்டான் ஆச்சார்யர் –இது தான் மா முனிகள் மேடம் இன்று –
திருமலை ஆழ்வார் -திரு மண்டபம் -ரஹஸ்யம் விளைந்த மண் உண்டே

ஆளவந்தார் படித்துறை
கிழக்கே -தவராசன் படித்துறை
கிழக்கே -மா முனிகள் திருவரசு
கிழக்கே -ஸ்ரீ ரெங்க ராமானுஜர் ஜீயர் திருவரசு

கந்தாடை ஐயங்கார் -முதலியாண்டான் வம்சத்தார் -வாதூல குலம்-மணியக்காரர் ஸ்ரீ ரெங்கம் –
கோயில் அண்ணன் -மா முனிகள் ஆஸ்ரயித்து –
ஆஸ்ரம ஸ்வீ காரம் வேண்டாம் -இந்த வம்சம் -ராமானுஜரும் மா முனிகளும் -வியவஸ்தை
திரு மஞ்சனம் அப்பா இந்த வம்சம் –அப்பாய்ச்சியார் பெண் ஆய்ச்சி-சிற்று அண்ணர்-பத்னி –
அப்பாய்ச்சியார் அண்ணா அவள் திருக்குமாரர் -ராஜ குல மஹாத்ம்யம் –
தேவராஜ தோழப்பர் தீர்த்த கைங்கர்யம் அன்று ஸ்வப்னம் சிங்கரையர் விருத்தாந்தம் –

மா முனிகள் தீர்த்தம் ஆடும் பொழுது கூடவே வருவார்
கோவிந்த தாசர் என்பர் -பட்டர் பிரான் ஜீயர் 74-சிம்ஹாசனப்பதிகளில் ஒருவரான -அரண புரத்து ஆழ்வான் வம்சம் இவர்
பகவன் நியமனம் -கோயில் அண்ணனுக்கும் ஸ்வப்ன வ்ருத்தாந்தம் –
ஆய்ச்சி கையால் பிரசாதம் பெற்ற பெரு என்று உணர்ந்தார் —
சுத்த சைவம் திருப்புலியூர் அண்ணன் ஸ்வாமியும்-120-பேர்கள் அண்ணன் ஸ்வாமியுடன் – மா முனிகளை அடைந்து
ஆஸ்ரயம்-வானமா மலை ஜீயரை முன்னிட்டு –

ஆய்ச்சியர் திருக்குமாரர் -வான மா மலை ஜீயர் இடம் பஞ்ச சம்ஸ்காரம் -அப்பாச்சியார் அண்ணா திரு மாளிகை –
ஐயன் ராமானுஜன் -திருக்குமாரர் -ஜீயர் நாயனார் -அவதாரம் –
பெரியாழ்வார் ஐயன் -இவர் சகோதரர் –
திருக்குருகூர் திருக்குறுங்குடி -கைங்கர்யம் மா முனிகள் ஆஜ்ஜைப் படியே -பட்டயம் வாசிப்பர் இன்றும் –

தேவராஜா குரு -எறும்பி அப்பா முந்திய திரு நாமம் -ஐயர்கள் அப்பா இவர் தந்தை –
இவரும் மா முனிகள் உடன் சேர்ந்து ஸ்ரீ பாஷ்யம் கேட்ட ஐதிக்யம்

——————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

ஸ்ரீ கம்ப ராமாயணமும் ஸ்ரீ அருளிச் செயல்களும் -ஸ்ரீ யுத்த காண்டம் – —

March 12, 2020

ஸ்ரீ சீதா ராம ஜெயம்

கடவுள் வாழ்த்து

ஒன்றே’ என்னின், ஒன்றே ஆம்; ‘பல’ என்று உரைக்கின், பலவே ஆம்;
‘அன்றே’ என்னின், அன்றே ஆம்; ‘ஆமே’ என்று உரைக்கின், ஆமே ஆம்;
‘இன்றே’ என்னின், இன்றே ஆம்; ‘உளது’ என்று உரைக்கின், உளதே ஆம்;
நன்றே, நம்பி குடி வாழ்க்கை! நமக்கு இங்கு என்னோ பிழைப்பு? அம்மா!

ஓன்று எனப் பல வென அறிவரும் வடிவினுள் நின்ற நன்று எழில் நாரணன் –திருவாய்– 1-3-7-

உளன் எனில் உளன் அவன் உருவம் இவ்வுருவுகள்
உளன் அலன் எனில் அவன் அருவம் இவ்வருவுகள்
உளன் என இலன் என இவை குணமுடையின்
உளன் இரு தகைமையோடு ஒழிவிலன் பரந்தே-1-1-9-

நீ சொன்ன சொல்லிலும் உளன் -ஹிரண்ய வதை படலம்

—————–

இரணியன் பெயரை ஆசிரியன் ஓதச் சொல்ல, சிறுவன் ‘ஓம் நமோ நாராயணாய!’ என்று உரைத்தல்
‘ஓதப் புக்க அவன், “உந்தை பேர் உரை” எனலோடும்,
போதத் தன் செவித் தொளை இரு கைகளால் பொத்தி,
“மூ தக்கோய்! இது நல் தவம் அன்று” என மொழியா,
வேதத்து உச்சியின் மெய்ப் பொருட் பெயரினை விரித்தான். –இரணியன் வதைப் படலம்–22

‘”ஓம் நமோ நாராயணாய!” என்று உரைத்து, உளம் உருகி,
தான் அமைந்து, இரு தடக் கையும் தலைமிசைத் தாங்கி,
பூ நிறக் கண்கள் புனல் உக, மயிர்ப் புறம் பொடிப்ப,
ஞான நாயகன் இருந்தனன்; அந்தணன் நடுங்கி, 23-

வேதாந்த விழுப்பொருளின் மேலிருந்த விளக்கை விட்டு சித்தன் விரித்தனனே –பெரியாழ்வார் -4-3-1-

‘”காடு பற்றியும், கனவரை பற்றியும், கலைத் தோல்
மூடி முற்றியும், முண்டித்தும், நீட்டியும், முறையால்
வீடு பெற்றவர், ‘பெற்றதின் விழுமிது’ என்று உரைக்கும்
மாடு பெற்றனென்; மற்று, இனி என், பெற வருந்தி? 31

‘”எனக்கும் நான்முகத்து ஒருவற்கும், யாரினும் உயர்ந்த
தனக்கும் தன் நிலை அறிவு அரும் ஒரு தனித் தலைவன்
மனக்கு வந்தனன்; வந்தன, யாவையும்; மறையோய்!
உனக்கும் இன்னதின் நல்லது ஒன்று இல்” என உரைத்தான். 33–

தனக்கும் தன் தன்மை அறிவரியானை தடம் கடல் பள்ளி அம்மானை -8-4-6-

‘அன்னை நீ; அத்தன் நீயே; அல்லவை எல்லாம் நீயே;
பின்னும் நீ; முன்னும் நீயே; பேறும் நீ; இழவும் நீயே;
என்னை, “நீ இகழ்ந்தது” என்றது எங்ஙனே? ஈசன் ஆய
உன்னை நீ உணராய்! நாயேன் எங்ஙனம் உணர்வேன், உன்னை–வருணன் அடைக்கலப் படலம்–

அத்தனாகி அன்னையாகி ஆளும் எம்பிரானுமாகி –திருச்சந்த விருத்தம் -115-

பெற்ற தாய் நீயே பிறப்பித்த தந்தை நீ
மற்றையார் யாவாரும் நீ -பேசில் -எற்றேயோ
மாய மா மாயவளை மாய முலை வாய்வைத்த
நீ யம்மா காட்டும் நெறி —-5–

—————

‘”காமமும் வெகுளியும் முதல கண்ணிய
தீமையும், வன்மையும், தீர்க்கும் செய்கையான்
நாமமும், அவன் பிற நலி கொடா நெடுஞ்
சேமமும், பிறர்களால் செப்பற்பாலவோ?–இரணியன் வதைப் படலம்—73–

நீயும் நானும் இந் நேர் நிற்கில் மேல் மற்றோர்
நோயும் சார் கொடான் நெஞ்சமே! சொன்னேன்
தாயுந் தந்தையுமாய் இவ் வுலகினில்
வாயும் ஈசன் மணி வண்ணன் எந்தையே–1-10-6-

——————

‘”உள்ளுற உணர்வு இனிது உணர்ந்த ஓசை ஓர்
தெள் விளி யாழிடைத் தெரியும் செய்கையின்,
உள் உளன்; புறத்து உளன்; ஒன்றும் நண்ணலான்;
தள்ள அரு மறைகளும் மருளும் தன்மையான். 75

பால் என்கோ! நான்கு வேதப் பயன் என்கோ! சமய நீதி
நூல் என்கோ! நுடங்கு கேள்வி இசை என்கோ! இவற்றுள் நல்ல
மேல் என்கோ! வினையின் மிக்க பயன் என்கோ! கண்ணன் என்கோ!
மால் என்கோ! மாயன் என்கோ வானவர் ஆதியையே–3-4-6-

பண்ணினைப் பண்ணில் நின்றதோர் பான்மையை –பெரிய திருமொழி 7-10-9-

————

கருமமும், கருமத்தின் பயனும், கண்ணிய
தரு முதல் தலைவனும், தானும், ஆனவன்
அருமையும் பெருமையும் அறிய வல்லவர்,
இருமை என்று உரைசெயும் கடல்நின்று ஏறுவார். 64-

கருமமும் கரும பலனும் ஆகிய காரணன் தன்னைத்
திரு மணி வண்ணனைச் செங்கண் மாலினைத் தேவ பிரானை
ஒருமை மனத்தினுள் வைத்து உள்ளம் குழைந்து எழுந்து ஆடிப்
பெருமையும் நாணும் தவிர்ந்து பிதற்றுமின் பேதைமை தீர்ந்தே–3-5-10-

——————

இராவணன் இராமனைக் காணலும், துன்னிமித்தம் தோன்றுதலும்
தோரணத்த மணி வாயில்மிசை, சூல்
நீர் அணைத்த முகில் ஆம் என நின்றான்,
ஆரணத்தை அரியை, மறை தேடும்
காரணத்தை, நிமிர் கண் எதிர் கண்டான்.–இராவணன் வானரத் தானை காண் படலம்— 17-

ஆரணத்து அமுது -திருமாலே பரம் பொருள் என்கிறார் –

தாமே தனி நாயகர் ஆய், ‘எவையும்
போமே பொருள்’ என்ற புராதனர் தாம்,
‘யாமே பரம்’ என்றனர்; என்ற அவர்க்கு
ஆமே? பிறர், நின் அலது, ஆர் உளரே?–இரணியன் வதைப் படலம்—109

‘”ஆதிப் பரம் ஆம் எனில், அன்று எனலாம்;
ஓது அப் பெரு நூல்கள் உலப்பு இலவால்;
பேதிப்பன; நீ அவை பேர்கிலையால்;
வேதப் பொருளே! விளையாடுதியோ? 110–

வணங்கும் துறைகள் பல பல வாக்கி மதி விகற்பால்
பிணங்கும் சமயம் பல பல வாக்கி அவையவை தோறு
அணங்கும் பல பல வாக்கி நின் மூர்த்தி பரப்பி வைத்தாய்
இணங்கு நின்னோரை இல்லாய் நின் கண் வேட்கை எழுவிப்பனே –திரு விருத்தம் -96

—————–

சாணிலும் உளன்; ஓர் தன்மை, அணுவினைச் சத கூறு இட்ட
கோணினும் உளன்; மா மேருக் குன்றினும் உளன்; இந் நின்ற
தூணினும் உளன்; நீ சொன்ன சொல்லினும் உளன்; இத் தன்மை
காணுதி விரைவின்” என்றான்; “நன்று” எனக் கனகன் நக்கான்.–இரணியன் வதைப் படலம்-124

“உம்பர்க்கும் உனக்கும் ஒத்து, இவ் உலகு எங்கும் பரந்துளானை,
கம்பத்தின் வழியே காண, காட்டுதி; காட்டிடாயேல்,
கும்பத் திண் கரியைக் கோள் மாக் கொன்றென, நின்னைக் கொன்று, உன்
செம்பு ஒத்த குருதி தேக்கி, உடலையும் தின்பென்” என்றான். 125

‘”என் உயிர் நின்னால் கோறற்கு எளியது ஒன்று அன்று; யான் முன்
சொன்னவன் தொட்ட தொட்ட இடம்தொறும் தோன்றான் ஆயின்,
என் உயிர் யானே மாய்ப்பல்; பின்னும் வாழ்வு உகப்பல் என்னின்,
அன்னவற்கு அடியேன் அல்லேன்” என்றனன், அறிவின் மிக்கான். 126

இரணியன் தூணை அறைய, நரசிங்கம் தூணிடைத் தோன்றிச் சிரித்தல்
‘நசை திறந்து இலங்கப் பொங்கி, “நன்று, நன்று!” என்ன நக்கு,
விசை திறந்து உருமு வீழ்ந்ததென்ன, ஓர் தூணின், வென்றி
இசை திறந்து உயர்ந்த கையால் எற்றினான்; எற்றலோடும்,
திசை திறந்து, அண்டம் கீறச் சிரித்தது, செங் கண் சீயம். 127

பிரகலாதனின் பெருமகிழ்ச்சிச் செயல்
‘”நாடி நான் தருவென்” என்ற நல் அறிவாளன், நாளும்
தேடி நான்முகனும் காணாச் சேயவன் சிரித்தலோடும்,
ஆடினான்; அழுதான்; பாடி அரற்றினான்; சிரத்தில் செங் கை
சூடினான்; தொழுதான்; ஓடி, உலகு எலாம் துகைத்தான், துள்ளி. 128

அளந்திட்ட தூணை யவன் தட்ட ஆங்கே
வளர்ந்திட்டு வாள் உகிர்ச் சிங்க யுருவாய்
உளந்திட்டு இரணியன் ஒண் மார்வகலம்
பிளந்திட்ட கைகளால் சப்பாணி பேய் முலை யுண்டானே சப்பாணி -ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி-–1-6-9-

எங்கும் உளன் கண்ணன் என்ற மகனைக் காய்ந்து
இங்கில்லை யால் என்று இரணியன் தூண் புடைப்ப
அங்கு அப்பொழுதே அவன் வீயத் தோன்றிய என்
சிங்கப்பிரான் பெருமை யாராயும் சீர்மைத்தே –ஸ்ரீ திருவாய் மொழி -–2-8-9-

ஸ்ரீ நரசிம்ம பெருமாளை நான்முகன் ஸ்தோத்ரம்
நின்னுளே என்னை நிருமித்தாய்; நின் அருளால்,
என்னுளே, எப் பொருளும், யாவரையும் யான் ஈன்றேன்;
பின் இலேன்; முன் இலேன்; எந்தை பெருமானே!
பொன்னுளே தோன்றியது ஓர் பொற்கலனே போல்கின்றேன்.” –இரணியன் வதைப் படலம்-160-

என்னுளே, எப் பொருளும், யாவரையும் யான் ஈன்றேன்–மத்தஸ் சர்வம் அஹம் சர்வம் –

————–

கொல்லேம், இனி உன் குலத்தோரை, குற்றங்கள்
எல்லை இலாதன செய்தாரே என்றாலும்;
நல்லேம், உனக்கு எம்மை; நாணாமல், நாம் செய்வது
ஒல்லை உளதேல், இயம்புதியால்” என்று உரைத்தான். –இரணியன் வதைப் படலம்-168

பிரகலாதன் வேண்டிய வரமும், சிங்கப் பெருமான் அருளும்
‘”முன்பு பெறப்பெற்ற பேறோ முடிவு இல்லை;
பின்பு பெறும் பேறும் உண்டோ ? பெறுகுவெனேல்,
என்பு பெறாத இழி பிறவி எய்தினும், நின்
அன்பு பெறும் பேறு அடியேற்கு அருள்” என்றான். 169

‘அன்னானை நோக்கி, அருள் சுரந்த நெஞ்சினன் ஆய்,
“என் ஆனை வல்லன்” என மகிழ்ந்த பேர் ஈசன்,
“முன் ஆன பூதங்கள் யாவையும் முற்றிடினும்,
உன் நாள் உலவாய் நீ, என் போல் உளை” என்றான். 170-

என்னானை என்னப்பன் எம்பெருமான் உளனாகவே –திருவாய் –3-9-1-

மஹாபலி –வாணன் -பிழை பொறுத்து அருளினான் -இவனுக்கு அளித்த வரத்தினால் –

—————-

உண்டு, உரை உணர்த்துவது, ஊழியாய்!’ எனப்
புண்டரீகத் தடம் புரையும் பூட்சியான்,
மண்டிலச் சடை முடி துளக்கி, ‘வாய்மையாய்!
கண்டதும் கேட்டதும் கழறுவாய்’ என்றான்.–வீடணன் அடைக்கலப் படலம்— 48–

மாயக் கூத்தா வாமனா வினையேன் கண்ணா கண் கை கால்
தூய செய்ய மலர்களா சோதித் செவ்வாய் முகிழதா
சாயல் சாமத் திருமேனி தண் பாசடையா தாமரை நீள்
வாசத் தடம் போல் வருவானே ஒரு நாள் காண வாராயே—8-5-1-

புண்டரீகத் தடம் புரையும் பூட்சியான்–தாமரை நீள் வாசத் தடம் போல் வருவானே–

—————

காலம் அன்று, இவன் வரு காலம்” என்பரேல்,
“வாலிதன் உறு பகை வலி தொலைத்தலால்,
ஏலும், இங்கு இவற்கு இனி இறுதி” என்று, உனை
மூலம் என்று உணர்தலால், பிரிவு முற்றினான். 91–திருவடி வார்த்தை –

அனுமன் கூறியன கேட்டு உவந்து, இராமன் வீடணனை ஏற்றுக்கொள்வது பற்றி எடுத்துரைத்தல்
மாருதி அமுத வார்த்தை செவி மடுத்து, இனிது மாந்தி,
‘பேர் அறிவாள! நன்று நன்று’ எனப் பிறரை நோக்கி,
‘சீரிது; மேல் இம் மாற்றம் தெளிவுறத் தேர்மின்’ என்னா,
ஆரியன் உரைப்பதானான்; அனைவரும் அதனைக் கேட்டார். 103–

இடைந்தவர்க்கு, “அபயம், யாம்!” என்று இரந்தவர்க்கு, எறி நீர் வேலை
கடைந்தவர்க்கு, ஆகி, ஆலம் உண்டவற் கண்டிலீரோ?
உடைந்தவர்க்கு உதவான் ஆயின், உள்ளது ஒன்று ஈயான் ஆயின்,
அடைந்தவர்க்கு அருளான் ஆயின், அறம் என் ஆம்? ஆண்மை என் ஆம்? 108

‘பேடையைப் பிடித்து, தன்னைப் பிடிக்க வந்து அடைந்த பேதை
வேடனுக்கு உதவி செய்து, விறகிடை வெந் தீ மூட்டி,
பாடுறு பசியை நோக்கி, தன் உடல் கொடுத்த பைம் புள்
வீடு பெற்று உயர்ந்த வார்த்தை வேதத்தின் விழுமிது அன்றோ? 109

‘போதகம் ஒன்று, கன்றி இடங்கர் மாப் பொருத போரின்,
“ஆதிஅம் பரமே! யான் உன் அபயம்!” என்று அழைத்த அந் நாள்,
வேதமும், முடிவு காணா மெய்ப் பொருள் வெளி வந்து எய்தி,
மா துயர் துடைத்த வார்த்தை மறப்பரோ, மறப்பிலாதார்? 110–

சீதையைக் குறித்ததேயோ, “தேவரைத் தீமை செய்த
பேதையைக் கொல்வேன்” என்று பேணிய விரதப் பெற்றி?
வேதியர், “அபயம்!” என்றார்க்கு, அன்று, நான் விரித்துச் சொன்ன
காதையைக் குறித்து நின்ற அவ் உரை கடக்கல் ஆமோ? 115

‘காரியம் ஆக! அன்றே ஆகுக! கருணையோர்க்குச்
சீரிய தன்மை நோக்கின், இதனின் மேல் சிறந்தது உண்டோ?
பூரியரேனும் தம்மைப் புகல் புகுந்தோர்க்குப் பொன்றா
ஆர் உயிர் கொடுத்துக் காத்தார், எண் இலா அரசர் அம்மா! 116

ஆதலான், “அபயம்!” என்ற பொழுதத்தே, அபய தானம்
ஈதலே கடப்பாடு என்பது; இயம்பினீர், என்பால் வைத்த
காதலான்; இனி வேறு எண்ணக் கடவது என்? கதிரோன் மைந்த!
கோது இலாதவனை நீயே என்வயின் கொணர்தி’ என்றான். 117

இவன் முன்னிட்டும் அவர்களை அவன் முன்னிட்டும் என்னும் இடம் அபய பிரதானத்திலும் காணலாம் -ஸ்ரீ வசன பூஷணம்
இருவரும் சரணாகதர்களை விடோம் என்று அன்றோ விப்ரதிபத்தி பண்ணுகிறார்கள் காணும் -ஸ்ரீ பட்டர்

”பஞ்சு” எனச் சிவக்கும் மென் கால் தேவியைப் பிரித்த பாவி
வஞ்சனுக்கு இளைய என்னை, “வருக!” என்று அருள் செய்தானோ?
தஞ்சு எனக் கருதினானோ? தாழ் சடைக் கடவுள் உண்ட
நஞ்சு எனச் சிறந்தேன் அன்றோ, நாயகன் அருளின் நாயேன்? 123-அபயம் அளித்தது குறித்து வீடணன் மகிழ்தல்-

சுரி குழல் கனிவாய்த் திருவினைப் பிரித்த கொடுமையில் கடுவிசை அரக்கன் –பெரிய திருமொழி -5-7-7-

மின்மினி ஒளியின் மாயும் பிறவியை வேரின் வாங்க,
செம் மணி மகுடம் நீக்கி, திருவடி புனைந்த செல்வன்
தம்முனார், கமலத்து அண்ணல் தாதையார், சரணம் தாழ,
எம்முனார் எனக்குச் செய்த உதவி’ என்று ஏம்பலுற்றான். 135

மின்னின் நிலையில மன்னுயிர் ஆக்கைகள் –மின்மினி ஒளியின் மாயும் பிறவி
அடி சூடும் அரசு

ஆழியான் அவனை நோக்கி, அருள் சுரந்து, உவகை கூர,
ஏழினோடு ஏழாய் நின்ற உலகும் என் பெயரும் எந் நாள்
வாழும் நாள், அன்று காறும், வாள் எயிற்று அரக்கர் வைகும்
தாழ் கடல் இலங்கைச் செல்வம் நின்னதே; தந்தேன்’ என்றான். 139

விளைவினை அறியும் மேன்மை வீடணன், ‘என்றும் வீயா
அளவு அறு பெருமைச் செல்வம் அளித்தனை ஆயின், ஐய!
களவு இயல் அரக்கன் பின்னே தோன்றிய கடமை தீர,
இளையவற் கவித்த மோலி என்னையும் கவித்தி’ என்றான். 142

குகனொடும் ஐவர் ஆனேம் முன்பு; பின், குன்று சூழ்வான்
மகனொடும், அறுவர் ஆனேம்; எம்முழை அன்பின் வந்த
அகன் அமர் காதல் ஐய! நின்னொடும் எழுவர் ஆனேம்;
புகல் அருங் கானம் தந்து, புதல்வரால் பொலிந்தான் நுந்தை.’ 143-

தென் இலங்கை மன்னன் சிரம் தோள் துணி செய்து
மின் இலங்கு பூண் விபீடணன் நம்பிக்கு
என் இலங்கு நாமத்து அளவும் அரசு என்ற
மின் இலங்கு ஆரற்க்கு ஓர் கோல் கொண்டு வா
வேம்கட வாணற்க்கு ஓர் கோல் கொண்டு வா -ஸ்ரீ பெரியாழ்வார் திரு மொழி–2 6-9 –

அந்தரிக்ஷ கத ஸ்ரீமாந் –விபீஷணன் நம்பி – –

குரை கடலை அடல் அம்பால் மறுக வெய்து
குலை கட்டி மறு கரையை அதனால் ஏறி
எரி நெடு வேல் அரக்கரோடும் இலங்கை வேந்தன்
இன் உயிர் கொண்டவன் தமிபிக்கு அரசும் ஈந்து
திரு மகளோடு இனிது அமர்ந்த செல்வன் தன்னை
தில்லை நகர் திரு சித்ர கூடம் தன்னுள்
அரசு அமர்ந்தான் அடி சூடும் அரசை அல்லால்
அரசு ஆக எண்ணேன் மற்று அரசு தானே— பெருமாள் திருமொழி -10-8-

நடு இனிப் பகர்வது என்னே? நாயக! நாயினேனை,
“உடன் உதித்தவர்களோடும் ஒருவன்” என்று, உரையா நின்றாய்;
அடிமையின் சிறந்தேன்’ என்னா, அயிர்ப்பொடும் அச்சம் நீங்கி,
தொடு கழல் செம்பொன் மோலி சென்னியில் சூட்டிக் கொண்டான். 144–வீடணன் இராமன் திருவடியைச் சூட்டிக்கொள்ளுதல்-

மருளுறு மனத்தினான் என் வாய்மொழி மறுத்தான்; வானத்து
உருளுறு தேரினானும், இலங்கை மீது ஓடும் அன்றே? –
தெருளுறு சிந்தை வந்த தேற்றம் ஈது ஆகின், செய்யும்
அருள் இது ஆயின், கெட்டேன்! பிழைப்பரோ அரக்கர் ஆனோர்? 124

இரக்கம் தோன்ற விபீஷணன் சொல்லுவதை கண்ணன் மீது பழியைக் கேட்கப் பெறாத ஆயர்கள் –
கெட்டேன்-விஷாத அதிசயத்தாலே -துக்க மேலீட்டால் கை நெரித்து சொல்லும் வார்த்தையை பெரியாழ்வார்

வாளாவாகிலும் காணகில்லார் பிறர் மக்களை மையன்மை செய்து
தோளால் இட்டவரோடு திளைத்து நீ சொல்லப்படாதவன செய்தாய்
கேளார் ஆயர் குலத்தவர் இப்பழி கெட்டேன் வாழ்வு இல்லை நந்தன்
காளாய் உன்னை அறிந்து கொண்டேன் உனக்கு அஞ்சுவன் அம்மம் தரவே -3 1-8 –

மருக்கிளர் தாமரை வாச நாண் மலர்
நெருக்கிடு தடம் என இருந்த நீதியான்
திருக்கிளர் தாமரை பணிந்த செம்மலை
இருக்க வீண்டு எழுந்தேன் இருந்த காலையில் –வாசத்தடம் போல் இருந்த இராமனை விபீடணன் வணங்கினான் –

கரு மாணிக்க மலை மேல் மணித் தடந்தாமரைக் காடுகள் போல்
திரு மார்பு வாய் கண் கை உந்தி காலுடை யாடைகள் செய்ய பிரான்
திருமால் எம்மான் செழு நீர் வயல் குட்ட நாட்டுத் திருப் புலியூர்
அரு மாயன் பேரன்றிப் பேச்சிலள் அன்னைமீர் இதற்கு என் செய்கேனோ–8-9-1-கறுத்த மாணிக்கத் தடாகம் அன்றோ அவன்

மாயக் கூத்தா வாமனா வினையேன் கண்ணா கண் கை கால்
தூய செய்ய மலர்களா சோதித் செவ்வாய் முகிழதா
சாயல் சாமத் திருமேனி தண் பாசடையா தாமரை நீள்
வாசத் தடம் போல் வருவானே ஒரு நாள் காண வாராயே—8-5-1-

பொருள் மற்று எனக்கும் ஓர் பொருள் தன்னில் சீர்க்கத்
தரு மேல் பின்னை யார்க் கவன் தன்னைக் கொடுக்கும்
கரு மாணிக்கக் குன்றத்துத் தாமரை போல்
திரு மார்வு கால் கண் கை செவ்வாய் யுந்தியானே–8-7-6-

தாள தாமரைத் தட மணி வயல் திரு மோகூர் -10-1-1–

———————-

தருண மங்கையை மீட்பது ஓர் நெறி தருக!’ என்னும்
பொருள் நயந்து, நல் நூல் நெறி அடுக்கிய புல்லில்,
கருணை அம் கடல் கிடந்தனன், கருங் கடல் நோக்கி;
வருண மந்திரம் எண்ணினன், விதி முறை வணங்கி.–இராமன் புல்லில் அமர்ந்து, வருண மந்திரத்தைத் தியானித்தல்-

ஞாலத் தூடே நடந்தும் நின்றும் கிடந்திருந்தும்
சாலப் பல நாள் உகந்தோறு உயிர்கள் காப்பானே!
கோலத் திரு மா மகளோடு உன்னைக் கூடாதே
சாலப் பல நாள் அடியேன் இன்னும் தளர்வேனோ?–6-9-3-

கிடந்தது -எம்பெருமான் கடலை நோக்கித் தரைக்கிடை கிடந்தத்தை எடுத்துக்காட்டாக நம்பிள்ளை –
இந்த கம்பர் பாடலை எடுத்துக் காட்டு அருளுகிறார்
கடல் தன்னை போர அளவுடைத்தாக நினைத்து இருக்குமாயிற்று
வேல் வெட்டிப்பிள்ளைக்கு நம்பிள்ளை அருளிச் செய்த வார்த்தையை ஸ்மரிப்பது –ஸ்ரீ வசன பூஷணம்
யோக்யனனுக்கு யோக்யதை சம்பாதிக்க வேண்டா –
நின்ற நிலையிலே அதிகரிக்கலாம் இத்தனை என்னுமது என்று அருளிச் செய்த வார்த்தை

———-

மாரியின் பெருந் துளியினும் வரம்பு இல, வடித்த,
சீரிது என்றவை எவற்றினும் சீரிய, தெரிந்து,
பார் இயங்கு இரும் புனல் எலாம் முடிவினில் பருகும்
சூரியன் கதிர் அனையன சுடு சரம் துரந்தான்.–இராமன் கடலின்மேல் அம்பு விடுதல்-

உற்று ஒரு தனியே, தானே, தன்கணே, உலகம் எல்லாம்
பெற்றவன் முனியப் புக்கான்; நடு இனிப் பிழைப்பது எங்ஙன்?
குற்றம் ஒன்று இலாதோர்மேலும் கோள் வரக் குறுகும்’ என்னா,
மற்றைய பூதம் எல்லாம், வருணனை வைத மாதோ.–பூதங்கள் வருணனை வைதல்-

தன்னுளே திரைத்து எழும் தரங்க வெண் தடம் கடல்
தன்னுளே திரைத்து எழுந்து அடங்குகின்ற தன்மை போல்
நின்னுளே பிறந்து இறந்து நிற்பவும் திரியவும்
நின்னுளே அடங்குகின்ற நீர்மை நின் கண் நின்றதே ––ஸ்ரீ திருச்சந்த விருத்தம்–10-

நவை அறும் உலகிற்கு எல்லாம் நாயக! நீயே சீறின்,
கவயம் நின் சரணம் அல்லால், பிறிது ஒன்று கண்டது உண்டோ?
இவை உனக்கு அரியவோதான்; எனக்கு என வலி வேறு உண்டோ?
அவயம், நின் அவயம்!’ என்னா, அடுத்து அடுத்து அரற்றுகின்றான்.-இராமனைத் திருவடியில் விழுந்து, வருணன் அபயம் வேண்டுதல்

அன்னை நீ; அத்தன் நீயே; அல்லவை எல்லாம் நீயே;
பின்னும் நீ; முன்னும் நீயே; பேறும் நீ; இழவும் நீயே;
என்னை, “நீ இகழ்ந்தது” என்றது எங்ஙனே? ஈசன் ஆய
உன்னை நீ உணராய்! நாயேன் எங்ஙனம் உணர்வேன், உன்னை?’

அத்தனாகி அன்னையாகி யாளும் எம்பிரானுமாய்
ஒத்து ஒவ்வாத பல் பிறப்பு ஒழித்து நம்மை ஆட்கொள்வான்
முத்தனார் முகுந்தனார் புகுந்து நம்முள் மேவினார்
எத்தினால் இடர் கடல் கிடத்தி ஏழை நெஞ்சமே –ஸ்ரீ திருச்சந்த விருத்தம்–115-

ஸ்ரீ சரம ச்லோகார்த்தம் சொல்லும் பாசுரம்
இத்தையும் வார்த்தை அறிபவர் -பாசுரத்தையும் முமுஷுப்படி முடிவில் எடுத்துக் காட்டி அருளுகிறார்
நம்முள் ஒரு நீராகப் பொருந்தி இருக்கிறார் மட நெஞ்சமே சோகப் படாதே என்கிறார்-

சர்வேஷயமேவ லோகா நாம் பிதா மாதா ச நாராயண –சாந்தோக்யம்

உலகுக்கோர் முந்தைத் தாய் தந்தையாய் –திருவாய் -5-7-7-

மாதா பிதா பிராதா நிவாஸா சரணம் ஸூஹ்ருத் கதி நாராயண –ஸூபால உப நிஷத்

எம்பிரான் என்னுடைச் சுற்றம் எனக்கு அரசு என்றும் வாழ் நாள் –பெரிய திருமொழி 1-1-6-

தாயாய் தந்தையாய் மக்களாய் மாற்றுமாய் முற்றுமாய் -7-8-1-

பெற்ற தாய் நீயே பிறப்பித்த தந்தை நீ
மற்றையார் யாவாரும் நீ -பேசில் -எற்றேயோ
மாய மா மாயவளை மாய முலை வாய்வைத்த
நீ யம்மா காட்டும் நெறி —-பெரிய திருவந்தாதி–5–

—————

ஆய்வினை உடையர் ஆகி, அறம் பிழையாதார்க்கு எல்லாம்
ஏய்வன நலனே அன்றி, இறுதி வந்து அடைவது உண்டோ?
மாய் வினை இயற்றி, முற்றும் வருணன்மேல் வந்த சீற்றம்,
தீவினை உடையார்மாட்டே தீங்கினைச் செய்தது அன்றே. 17–வருணன் வேண்டியபடி, இராமன் மருகாந்தாரத்து அவுணரை அழித்தல்-

பெருமையும் சிறுமைதானும் முற்றுறு பெற்றி ஆற்ற
அருமையின் அகன்று, நீண்ட விஞ்சையுள் அடங்கி, தாமும்
உருவமும் தெரியாவண்ணம் ஒளித்தனர், உறையும் மாயத்து
இருவரை ஒருங்கு காணும் யோகியும் என்னல் ஆனான். 25– யோகியின் உவமை ஒற்றர்களுக்கு

ஆரணத்து அமுதை அம்மறை தேடு காரணத்தை நிமிர் கண் கொடு கண்டான் -இராமபிரானை ராவணன் கண்டமை

இவன் இராமன் எனத்தன் மேனியே யுரைக்கின்றது –

கண்டவாற்றால் தனதே உலகென நின்றான் தன்னை
வண் தமிழ் நூற்க நோற்றேன் அடியார்க்கு இன்ப மாரியே 4-5-10-

பெய்த காவு கண்டீர் பெருந்தேவுடை மூவுலகு-6-3-5-அனைத்தும் அவன் அதீனம்

—————

காட்டிலே கழுகின் வேந்தன் செய்தது காட்டமாட்டேன்;
நாட்டிலே குகனார் செய்த நன்மையை நயக்கமாட்டேன்;
கேட்டிலேன் அல்லேன்; இன்று கண்டும், அக் கிளி அனாளை
மீட்டிலேன்; தலைகள் பத்தும் கொணர்ந்திலேன், வெறுங் கை வந்தேன். சுக்கிரீவனது மறு மொழி

மெய்ந்நின்ற கமழ் துளவ விரை ஏறு திரு முடியன்
கைந்நின்ற சக்கரத்தன் கருதுமிடம் பொருது புனல்
மைந்நின்ற வரை போலும் திரு உருவ வாட்டாற்றாற்கு
எந்நன்றி செய்தேனோ என்நெஞ்சில் திகழ்வதுவே–10-6-8-

பெரிய திருவுடையாரைப் போலே தடையோடே முடிந்தேனோ –திருவடியைப் போலே த்ருஷ்டா சீதா என்று வந்தேனோ
ஆஞ்ஞா அணுவார்த்தனம் பண்ணினேனாம் படி விகித கர்மங்களை அனுஷ்டித்தேனோ –
என்ன நன்மை செய்தெனாக என்நெஞ்சில் புகுந்து பின்பு பெறாப் பேறு பெற்றால் போலே விளங்கா இருப்பதுவே –ஈடு –

————

பூத நாயகன், நீர் சூழ்ந்த புவிக்கு நாயகன், இப் பூமேல்
சீதை நாயகன், வேறு உள்ள தெய்வ நாயகன், நீ செப்பும்
வேத நாயகன், மேல் நின்ற விதிக்கு நாயகன், தான் விட்ட
தூதன் யான்; பணித்த மாற்றம் சொல்லிய வந்தேன்’ என்றான்–அங்கதன் தன்னை யாரென அறிவித்தல்-

அறம் கடந்தவர் செயல் இது’ என்று, உலகு எலாம் ஆர்ப்ப,
நிறம் கரிந்திட, நிலம் விரல் கிளைத்திட, நின்றான்-
இறங்கு கண்ணினன், எல் அழி முகத்தினன், தலையன,
வெறுங் கை நாற்றினன், விழுதுடை ஆல் அன்ன மெய்யன்

நின்றவன் நிலை நோக்கிய நெடுந்தகை, இவனைக்
கொன்றல் உன்னிலன், ‘வெறுங் கை நின்றான்’ எனக் கொள்ளா;
‘இன்று அவிந்தது போலும், உன் தீமை’ என்று, இசையோடு
ஒன்ற வந்தன வாசகம் இனையன உரைத்தான்: 250–

ஆள் ஐயா! உனக்கு அமைந்தன மாருதம் அறைந்த
பூளை ஆயின கண்டனை; இன்று போய், போர்க்கு
நாளை வா’ என நல்கினன் -நாகு இளங் கமுகின்
வாளை தாவுறு கோசல நாடுடை வள்ளல். –இராமன் அறிவுரை கூறி, ‘இன்று போய், நாளை வா’ எனல்

காற்றிடைப் பூளை கரந்தன வரந்தை யுறக் கடல் அரக்கர் தம் சேனை
கூற்றிடைச் செல்லக் கொடுங்கணை துரந்த கோல வில்லி ராமன் தன கோயில்
ஊற்றிடை நின்ற வாழையின் கனிகள் ஊழ்த்து வீழ்ந்தன வுண்டு மண்டிச்
செற்றிடைக் கயல்கள் உகள் திகழ் வயல் சூழ் திருவெள்ளியங்குடி யதுவே –பெரிய திருமொழி-–4-10-6-

ரஞ்சநீயஸ்ய விக்ரமை
ச சால சாப சமுமோச வீர
வெறும் கை வீரன்

வாரணம் பொருத மார்பும், வரையினை எடுத்த தோளும்,
நாரத முனிவற்கு ஏற்ப நயம் பட உரைத்த நாவும்,
தார் அணி மவுலி பத்தும், சங்கரன் கொடுத்த வாளும்,
வீரமும், களத்தே போட்டு, வெறுங் கையே மீண்டு போனான்.-கும்பகருணன் வதைப் படலம்—1-

ஆனதோ வெஞ் சமம்? அலகில் கற்புடைச்
சானகி துயர் இனம் தவிர்ந்தது இல்லையோ?
வானமும் வையமும் வளர்ந்த வான் புகழ்
போனதோ? புகுந்ததோ, பொன்றும் காலமே? 79

‘கிட்டியதோ, செரு? கிளர் பொன் சீதையைச்
சுட்டியதோ? முனம், சொன்ன சொற்களால்,
திட்டியின்விடம் அன்ன கற்பின் செல்வியை
விட்டிலையோ? இது விதியின் வண்ணமே! 80

திட்டியின் விஷம் -என்று சீதா பிராட்டியை குறிக்கிறார் –

எஞ்சலில் இலங்கைக்கு இறை எங்கோன் தன்னை முன் பணிந்து எங்கள் கண் முகப்பே
நஞ்சு தான் அரக்கர் குடிக்கு என்று நங்கையை அவன் தம்பியே சொன்னான்
விஞ்சி வானவர் வேண்டிற்றே பட்டோம் வேரிவார் பொழில் மா மயிலன்ன
அஞ்சலோதியைக் கொண்டு நடமின் அஞ்சினோம் தடம் பொங்கத்தம் பொங்கோ -பெரிய திருமொழி-–10-2-4-

—————–

நீர்க் கோல வாழ்வை நச்சி, நெடிது நாள் வளர்த்துப் பின்னைப்
போர்க் கோலம் செய்து விட்டாற்கு உயிர் கொடாது, அங்குப் போகேன்;
தார்க் கோல மேனி மைந்த! என் துயர் தவிர்த்தி ஆகின்,
கார்க் கோல மேனியானைக் கூடிதி, கடிதின் ஏகி, 155-

கார்க்கோடல் பூக்காள் கார்க்கடல் வண்ணன் எம்மேல் உம்மைப்
போர்க் கோலம் செய்து போர விடுத்து அவன் எங்குற்றான்
ஆர்க்கோ வினி நாம் பூசல் இடுவது அணி துழாய்த்
தார்க்கோடும் நெஞ்சம் தன்னைப் படைக்க வல்லேன் அந்தோ–10-1-

போர்க் கோலம் செய்து –
இந்த்ரஜித் வதத்துக்கு இளைய பெருமாளை பெருமாள் அலங்கரித்து புறப்பட விட்டால் போலே
தன்னை முடிக்கைக்கு இவற்றை ஒப்பித்துப் போர விட்டான் என்று இறே இருக்கிறாள்
அங்கு பிரணயிநியைப் பிரித்தாரை முடிக்கைக்காக புறப்பட விட்டான் -சக்கரவர்த்தி திரு மகன்
இங்கு பிரணயிநியை முடிக்கைக்கு கிருஷ்ணன் தனது தீம்பாலே இவற்றை வர விட்டான் என்றாய்த்து நினைத்து இருக்கிறது
செய்து –
இவற்றுக்கு நிறம் கொடுத்தான் அவன் இறே
கிருஷ்ண ஏவ ஹிலோகா நாம் உத்பத்திரபி சாப்யய -பார -சபா -38-23-

————

வணங்கினான்; வணங்கி, கண்ணும் வதனமும் மனமும் வாயும்
உணங்கினான்; உயிரோடு யாக்கை ஒடுங்கினான்; ‘உரைசெய்து இன்னும்
பிணங்கினால் ஆவது இல்லை; பெயர்வது; என்று உணர்ந்து போந்தான்.
குணங்களால் உயர்ந்தான், சேனைக் கடல் எலாம் கரங்கள் கூப்ப. 168-

கண்டனன்-வதனம், வாய், கண், கை, கால் எனப்
புண்டரீகத் தடம் பூத்து, பொன் சிலை
மண்டலம் தொடர்ந்து, மண் வயங்க வந்தது ஓர்
கொண்டலின் பொலிதரு கோலத்தான் தனை. 279–கும்பகருணன் இராமனைக் காணுதல்–

மாயக் கூத்தா வாமனா வினையேன் கண்ணா கண் கை கால்
தூய செய்ய மலர்களா சோதித் செவ்வாய் முகிழதா
சாயல் சாமத் திருமேனி தண் பாசடையா தாமரை நீள்
வாசத் தடம் போல் வருவானே ஒரு நாள் காண வாராயே—–ஸ்ரீ திருவாய் மொழி–8-5-1-

————–

அவ்வழி, கருணன் செய்த பேர் எழில் ஆண்மை எல்லாம்
செல்வழி உணர்வு தோன்றச் செப்பினம்; சிறுமை தீரா
வெவ் வழி மாயை ஒன்று, வேறு இருந்து எண்ணி, வேட்கை,
இவ்வழி இலங்கை, வேந்தன் இயற்றியது இயம்பலுற்றாம்:–மாயா சனகப் படலம்— 1–

செல்வழி உணர்வு தோன்றச் செப்பினம்–ஞானக் கண் கொண்டு சொன்னமை —

எனக்கு உயிர் பிறிதும் ஒன்று உண்டு என்று இரேல்,-இரக்கம் அல்லால்
தனக்கு உயிர் வேறு இன்றாகி, தாமரைக் கண்ணது ஆகி,
கனக் கரு மேகம் ஒன்று கார்முகம் தாங்கி, ஆர்க்கும்
மனக்கு இனிது ஆகி, நிற்கும் அஃது அன்றி-வரம்பு இலாதாய். 24–மனதுக்கு இனியான்–சீதா பிராட்டி மூலம் கம்பர்

————

இத் தன்மை எய்தும் அளவின்கண், நின்ற இமையோர்கள் அஞ்சி, ‘இது போய்
எத் தன்மை எய்தி முடியும்கொல்?’ என்று குலைகின்ற எல்லை இதன்வாய்,
அத் தன்மை கண்டு, புடை நின்ற அண்ணல்-கலுழன் தன் அன்பின் மிகையால்,
சித்தம் நடுங்கி இது தீர, மெள்ள, இருளூடு வந்து தெரிவான்,- 243–கருடன் வருகை-நித்ய கைங்கர்யம் செய்வதை கம்பர் அருளுகிறார்

எழுவாய், எவர்க்கும் முதல் ஆகி, ஈறொடு இடை ஆகி; எங்கும் உளையாய்,
வழுவாது எவர்க்கும் வரம் ஈய வல்லை; அவரால் வரங்கள் பெறுவாய்;
தொழுவாய், உணர்ச்சி தொடராத தன்மை உருவாய் மறைந்து, துயரால்
அழுவாய் ஒருத்தன் உளைபோலும்!-ஆர், இவ் அதிரேக மாயை அறிவார்? 252–கருடன் ஸ்துதி-

எங்கும் உளையாய்–என்றது
கரந்த சில்லிடம் தோறும் இடம் திகழ் பொருள் தோறும் கரந்து எங்கும் பரந்துளன் இவையுண்டா கரனே -1-1-10-

தாழ் குழலார் வைத்த தயிர் உண்ட பொன் வயிறு இவ்வேழு உலகு உண்டும் இடமுடைத்தால் சாழலே –பெரிய திருமொழி -11-5-3-

உன் ஒக்க வைத்த இருவர்க்கும் ஒத்தி; ஒருவர்க்கும் உண்மை உரையாய்;
முன் ஒக்க நிற்றி; உலகு ஒக்க ஒத்தி; முடிவு ஒக்கின், என்றும் முடியாய்;
“என் ஒக்கும், இன்ன செயலோ இது?” என்னில், இருள் ஒக்கும் என்று விடியாய்;
அந் நொப்பமே கொல்? பிறிதேகொல்?-ஆர், இவ் அதிரேக மாயை அறிவார்? 253-

உன் ஒக்க வைத்த இருவர்க்கும் ஒத்தி; ஒற்றை விடையனும் நான்முகனும்
உன்னை அறியாப் பெருமையோனே –பெரிய திருமொழி 4-10-4-

முன் ஒக்க நிற்றி;
முதலாவார் மூவரே அம்மூவருள்ளும் முதலாவான் முந்நீர் வண்ணன் –முதல் திரு -15 –

முதலாம் திருவுருவம் மூன்று என்பர் ஒன்றே
முதலாகும் மூன்றுக்கும் என்பர் முதல்வா
நிகரிலகு காருருவா நின்னகத்தன்றே
புகரிலகு தாமரையின் பூ ––பெரிய திருவந்தாதி– 72-

—————–

வாணாள் அளித்தி, முடியாமல்; நீதி வழுவாமல் நிற்றி;-மறையோய்!
பேணாய், உனக்கு ஓர் பொருள் வேண்டும் என்று; பெறுவான் அருத்தி பிழையாய்;
ஊண் ஆய், உயிர்க்கும் உயிர் ஆகி நிற்றி; உணர்வு ஆய பெண்ணின் உரு ஆய்,
ஆண் ஆகி, மற்றும் அலி ஆதி!-ஆர், இவ் அதிரேக மாயை அறிவார்? 254-

ஊண் ஆய் –உண்ணும் சோறு பருகு நீர் தின்னும் வெற்றிலை எல்லாம் கண்ணன் 6-7-1-

———

சொல் ஒன்று உரைத்தி; பொருள் ஆதி; தூய மறையும் துறந்து, திரிவாய்;
வில் ஒன்று எடுத்தி; சரம் ஒன்று எடுத்தி; மிளிர் சங்கம் அங்கை உடையாய்;
“கொல்” என்று உரைத்தி; கொலையுண்டு நிற்றி; கொடியாய்! உன் மாயை அறியேன்;
அல் என்று, நிற்றி; பகல் ஆதி!-ஆர், இவ் அதிரேக மாயை அறிவார்? 257-

நறை செய் பொழில் மழை தவழும் நந்தி புர விண்ணகரம் நண்ணி யுறையும்
உறை கொள் புகராழி சுரி சங்கமவை அங்கை யுடையானை ஒளி சேர்
கறை வளரும் வேல் வல்ல கலியன் ஒலி மாலை யிவை ஐந்தும் ஐந்தும்
முறையிலிவை பயில வல வடியவர்கள் கொடு வினைகள் முழுதகலுமே–-பெரிய திருமொழி–5-10-10–

————

அங்கதன் ஆர்த்தனன், அசனி ஏறு என,
மங்குல் நின்று அதிர்ந்தன வய வன் தேர் புனை
சிங்கமும் நடுக்குற; திருவின் நாயகன்
சங்கம் ஒன்று ஒலித்தனன், கடலும் தள்ளுற. 45–அங்கதன் ஆர்ப்பும், ஸ்ரீ யபதி இராமனின் சங்கநாதமும்–

எந்தை இறந்தான்” என்றும் இருந்தேன்; உலகு எல்லாம்
தந்தனென் என்னும் கொள்கை தவிர்ந்தேன்; தனி அல்லேன்;
உய்ந்தும் இருந்தாய் நீ என நின்றேன்; உரை காணேன்;
வந்தனென், ஐயா! வந்தனென், ஐயா! இனி வாழேன்! 202

‘தாயோ நீயே; தந்தையும் நீயே; தவம் நீயே;
சேயோ நீயே; தம்பியும் நீயே; திரு நீயே;
போயோ நின்றாய்; என்னை இகந்தாய்; புகழ் பாராய்,
நீயோ; யானோ, நின்றனென்; நெஞ்சம் வலியேனால். 203-

பாவஜ்ஜேந க்ருதஜ்ஜேந தர்மஜ்ஜேந ச லஷ்மண
த்வயோ புத்ரேண தர்மாத்மா ந சம்வ்ருத்த பிதா மம –ஆரண்ய -16-29-

———————

அரக்கர் குலத்தை வேரறுத்து, எம் அல்லல் நீக்கியருள்வாய்” என்று
இரக்க, எம்மேல் கருணையினால், ஏயா உருவம் இவை எய்தி,
புரக்கும் மன்னர் குடிப் பிறந்து போந்தாய்! அறத்தைப் பொறை தீர்ப்பான்,
கரக்க நின்றே, நெடு மாயம் எமக்கும் காட்டக்கடவாயோ? 220–

இதுவோ பொருத்தம் மின்னாழிப் படையாய் ஏறு மிருஞ் சிறைப்புள்
அதுவே கொடியா வுயர்த்தானே என்று என்று ஏங்கி யழுதக்கால்
எதுவே யாகக் கருதுங்கொல் இம் மா ஞாலம் பொறை தீர்ப்பான்
மதுவார் சோலை உத்தர மதுரைப் பிறந்த மாயனே—8-5-9-

கண்ணன் அல்லால் இல்லை கண்டீர் சரண் அது நிற்க வந்து
மண்ணின் பாரம் நீக்குதற்கே வட மதுரைப் பிறந்தான்
திண்ண மா நும் உடைமை உண்டேல் அவன் அடி சேர்த்து உய்ம்மினோ
எண்ண வேண்டா நும்மது ஆதும் அவன் அன்றி மற்று இல்லையே–9-1-10—

அண்டம் பலவும், அனைத்து உயிரும், அகத்தும் புறத்தும் உள ஆக்கி,
உண்டும் உமிழ்ந்தும், அளந்து இடந்தும், உள்ளும் புறத்தும் உளை ஆகிக்
கொண்டு, சிலம்பி தன் வாயின் கூர் நூல் இயையக் கூடு இயற்றி,
பண்டும் இன்றும் அமைக்கின்ற படியை ஒருவாய்-பரமேட்டி! 222-

ஒரு சிலந்திக்கு உண்டான ஸ்வ பாவம் சர்வ சக்திக்குக் கூடாது ஒழியாது இறே –தத்வத்ரயம் –

————-

நாராயண நரர் என்று இவர் உளராய், நமக்கு எல்லாம்
வேராய், முழு முதல் காரணப் பொருளாய், வினை கடந்தோர்;
ஆராயினும் தெரியாதது ஒர் நெடு மாயையின் அகத்தார்;
பாராயண மறை நான்கையும் கடந்தார்; இவர் பழையோர்; –நிகும்பலை யாகப் படலம்—140–

எங்கானும் ஈது ஒப்பதோர் மாயமுண்டே நர நாரணனாய் யுலகத் தற நூல்
சிங்காமை விரித்தவன் எம்பெருமான் அதுவன்றியும் செஞ்சுடரும் நிலனும்
பொங்கார் கடலும் பொருப்பும் நெருப்பும் நெருக்கிப் புகப் பொன் மிடறத்தனை போது
அங்காந்தவன் காண்மின் இன்று ஆய்ச்சியரால் அளை வெண்ணெய் யுண்டு ஆப்புண்டு இருந்தவனே—பெரிய திருமொழி–10-6-1-

—————

மறைகளே தேறத் தக்க, வேதியர் வணங்கற்பால,
இறையவன் இராமன் என்னும் நல் அற மூர்த்திஎன்னின்,
பிறை எயிற்று இவனைக் கோறி’ என்று, ஒரு பிறை வாய் வாளி
நிறை உற வாங்கி விட்டான் – உலகு எலாம் நிறுத்தி நின்றான். –இந்திரசித்து வதைப் படலம்–51–

இராவணன் சங்கம் ஊத, திருமாலின் சங்கம் தானே முழங்குதல்
கண்ட சங்கரன் நான்முகன் கைத் தலம்
விண்டு அசங்க, தொல் அண்டம் வெடித்திட,
அண்ட சங்கத்து அமரர்தம் ஆர்ப்பு எலாம்
உண்ட சங்கம் இராவணன் ஊதினான். 28

சொன்ன சங்கினது ஓசை துளக்குற,
‘என்ன சங்கு?’ என்று இமையவர் ஏங்கிட,
அன்ன சங்கைப் பொறாமையினால், அரி-
தன்ன வெண் சங்கு தானும் முழங்கிற்றால். 29-

ஐயன் ஐம் படை தாமும் அடித் தொழில்
செய்ய வந்து அயல் நின்றன; தேவரில்
மெய்யன் அன்னவை கண்டிலன், வேதங்கள்
பொய் இல் தன்னைப் புலன் தெரியாமைபோல். 30–

இராமனை வேத முதல்வனோ என இராவணன் கருதுதல்
‘வென்றான்’ என்றே, உள்ளம் வெயர்த்தான், ‘விடு சூலம்
பொன்றான் என்னின் போகலது’ என்னும் பொருள் கொண்டான்;
ஒன்று ஆம் உங்காரத்திடை உக்கு, ஓடுதல் காணா
நின்றான், அந் நாள் வீடணனார் சொல் நினைவுற்றான். 134

சிவனோ? அல்லன்; நான்முகன் அல்லன்; திருமாலாம்
அவனோ? அல்லன்; மெய் வரம் எல்லாம் அடுகின்றான்;
தவனோ என்னின், செய்து முடிக்கும் தரன் அல்லன்;
இவனோதான் அவ் வேத முதல் காரணன்?’ என்றான். 135-

இராவணனது கையை இராமன் அறுக்க, அதுவும் முன்போல் முளைத்தல்
‘விழுத்தினன் சிரம்’ எனும் வெகுளி மீக்கொள,
வழுத்தின, உயிர்களின் முதலின் வைத்த ஓர்
எழுத்தினன், தோள்களின் ஏழொடு ஏழு கோல்
அழுத்தினன்-அசனி ஏறு அயிர்க்கும் ஆர்ப்பினான். 154–

உயிர்களின் முதலில் வைத்த ஓர் எழுத்தினை -அக்ஷராணாம் அகாரேப்ஸ்மி

அயன்படை இராவணனது மார்பில் பாய, அவன் உயிர் இழத்தல்
காலும் வெங் கனலும் கடை காண்கிலா,
மாலும் கொண்ட வடிக் கணை, மா முகம்
நாலும் கொண்டு நடந்தது, நான்முகன்
மூல மந்திரம் தன்னொடு மூட்டலால். 194

ஆழி மால் வரைக்கு அப்புறத்து அப்புறம்,
பாழி மாக் கடலும் வெளிப் பாய்ந்ததால்-
ஊழி ஞாயிறு மின்மினி ஒப்புற,
வாழி வெஞ் சுடர் பேர் இருள் வாரவே. 195

அக் கணத்தின் அயன் படை ஆண்தகை
சக்கரப் படையோடும் தழீஇச் சென்று,
புக்கது, அக் கொடியோன் உரம்; பூமியும்,
திக்கு அனைத்தும், விசும்பும்; திரிந்தவே. 196-

கை நின்ற சக்கரத்தன் கருதும் இடம் பொருது-10-6-8–

மிக்க பெரும் புகழ் மாவலி வேள்வியில்
தக்கது அன்று என்று தானம் விளக்கிய
சுக்கிரன் கண்ணை துரும்பால் கிளறிய
சக்கரக் கையனே அச்சோ அச்சோ சங்கம் இடத்தானே அச்சோ அச்சோ -1-8-7-

—————-

கோலம் புனையாது, இங்கு இருந்த தன்மையில் வருதலே தக்கது என சீதை கூறல்
‘யான் இவண் இருந்த தன்மை, இமையவர் குழுவும், எங்கள்
கோனும், அம் முனிவர்தங்கள் கூட்டமும், குலத்துக்கு ஏற்ற
வான் உயர் கற்பின் மாதர் ஈட்டமும், காண்டல், மாட்சி;
மேல் நினை கோலம் கோடல் விழுமியது அன்று – வீர!’ 27–ஸ்நாநம் ரோஷ ஜனகம்-அஸ்நாதா த்ரஷ்டும் இச்சாமி

ஓங்காரப் பொருள் தேருவோர்தாம் உனை உணர்வோர்;
ஓங்காரப் பொருள் என்று உணர்ந்து, இரு வினை உகுப்போர்;
“ஓங்காரப் பொருள் ஆம்”, “அன்று” என்று, ஊழி சென்றாலும்,
ஓங்காரப் பொருளே பொருள் என்கலா உரவோர். 97–

கைகேயின் மேல் தணியாத தயரதன் சினமும் இராமன் உரையால் நீங்குதல்
‘ஊன் பிழைக்கிலா உயிர் நெடிது அளிக்கும் நீள் அரசை
வான் பிழைக்கு இது முதல் எனாது, ஆள்வுற மதித்து,
யான் பிழைத்தது அல்லால், என்னை ஈன்ற எம் பிராட்டி-
தான் பிழைத்தது உண்டோ ?’ என்றான்; அவன் சலம் தவிர்ந்தான். 117

எவ் வரங்களும் கடந்தவன் அப் பொருள் இசைப்ப,
‘தெவ் வரம்பு அறு கானிடைச் செலுத்தினாட்கு ஈந்த
அவ் வரங்களும் இரண்டு; அவை ஆற்றினாற்கு ஈந்த
இவ் வரங்களும் இரண்டு’ என்றார், தேவரும் இரங்கி. 118

இராமன் விரும்பிய இரு வரத்தையும் அளித்து, தயரதன் விண் ஏகுதல்
வரம் இரண்டு அளித்து, அழகனை, இளவலை, மலர்மேல்
விரவு பொன்னினை, மண்ணிடை நிறுத்தி, விண்ணிடையே
உரவு மானம் மீது ஏகினன்-உம்பரும் உலகும்
பரவும் மெய்யினுக்கு உயிர் அளித்து, உறு புகழ் படைத்தோன். 119

தேவர்கள் ‘வேண்டும் வரம் கேள்’ என, இராமன் வரம் வேண்டுதல்
கோட்டு வார் சிலைக் குரிசிலை அமரர் தம் குழாங்கள்
மீட்டும் நோக்குறா, ‘வீர! நீ வேண்டுவ வரங்கள்
கேட்டியால்’ என, ‘அரக்கர்கள் கிளர் பெருஞ் செருவில்
வீட்ட, மாண்டுள குரங்கு எலாம் எழுக!’ என விளம்பி, 120

பின்னும் ஓர் வரம், ‘வானரப் பெருங் கடல் பெயர்ந்து,
மன்னு பல் வனம், மால் வரைக் குலங்கள், மற்று இன்ன
துன் இடங்கள், காய் கனி கிழங்கோடு தேன் துற்ற,
இன் உண் நீர் உளவாக! என இயம்பிடுக’ என்றான். 121

தேவர்கள் வரம் அருள, மாண்ட குரங்குகள் உயிர் பெற்றெழுந்து இராமனை வணங்குதல்
வரம் தரும் முதல் மழுவலான், முனிவரர், வானோர்,
புரந்தராதி, மற்று ஏனையோர், தனித் தனிப் புகழ்ந்து ஆங்கு,
‘அரந்தை வெம் பிறப்பு அறுக்கும் நாயக! நினது அருளால்
குரங்குஇனம் பெறுக!’ என்றனர், உள்ளமும் குளிர்ப்பார். 122

முந்தை நாள் முதல் கடை முறை அளவையும் முடிந்த
அந்த வானரம் அடங்கலும் எழுந்து, உடன் ஆர்த்து,
சிந்தையோடு கண் களிப்புற, செரு எலாம் நினையா,
வந்து தாமரைக் கண்ணனை வணங்கின, மகிழ்ந்து. 123

கும்பகன்னனோடு இந்திரசித்து, வெங் குலப் போர்
வெம்பு வெஞ் சினத்து இராவணன், முதலிய வீரர்
அம்பின் மாண்டுள வானரம் அடங்க வந்து ஆர்ப்ப,
உம்பர் யாவரும் இராமனைப் பார்த்து, இவை உரைத்தார்; 124

பதினான்கு ஆண்டுகள் முடிந்ததை தேவர்கள் இராமனுக்கு உணர்த்தி, நீங்குதல்
‘இடை உவாவினில் சுவேலம் வந்து இறுத்து, எயில் இலங்கைப்
புடை அவாவுறச் சேனையை வளைப்பு உறப் போக்கி,
படை அவாவுறும் அரக்கர் தம் குலம் முற்றும் படுத்து,
கடை உவாவினில் இராவணன் தன்னையும் சுட்டு. 125

‘”வஞ்சர் இல்லை இவ் அண்டத்தின்” எனும் படி மடித்த
கஞ்ச நாள் மலர்க் கையினாய்! அன்னை சொல் கடவா,
அஞ்சொடு அஞ்சு நான்கு என்று எணும் ஆண்டு போய் முடிந்த;
பஞ்சமிப் பெயர் படைத்துள திதி இன்று பயந்த. 126

‘இன்று சென்று, நீ பரதனை எய்திலை என்னின்,
பொன்றுமால் அவன் எரியிடை; அன்னது போக்க,
வென்றி வீர! போதியால்’ என்பது விளம்பா,
நின்ற தேவர்கள் நீங்கினார்; இராகவன் நினைந்தான். 127–

எண் இல் கோடி இராமர்கள் என்னினும்,
அண்ணல் நின் அருளுக்கு அருகு ஆவரோ?
புண்ணியம் எனும் நின் உயிர் போயினால்,
மண்ணும் வானும் உயிர்களும் வாழுமோ? 73

————–

திருமுடி சூட்டு படலம்-

இராமன் தம்பியரோடு நந்தியம் பதியை அடைந்து, சடை நீக்கி, நீராடி கோலம்கொள்ளுதல்
நம்பியும் பரதனோடு நந்தியம்பதியை நண்ணி,
வம்பு இயல் சடையும் மாற்றி, மயிர் வினை முற்றி, மற்றைத்
தம்பியரோடு தானும் தண் புனல் படிந்த பின்னர்,
உம்பரும் உவகை கூர, ஒப்பனை ஒப்பச் செய்தார். 1

தம்பிமாருடன் இராமன் அயோத்தி புகுதல்
ஊழியின் இறுதி காணும் வலியினது உயர் பொன் தேரின்,
ஏழ் உயர் மதமா அன்ன இலக்குவன் கவிதை ஏந்த,
பாழிய மற்றைத் தம்பி பால் நிறக் கவரி பற்ற,
பூழியை அடக்கும் கண்ணீர்ப் பரதன் கோல் கொள்ளப் போனான். 2

தேவரும் முனிவரும் மலர் மழை பொழிதல்
தேவரும் முனிவர் தாமும் திசைதொறும் மலர்கள் சிந்த
ஓவல் இல் மாரி ஏய்ப்ப, எங்கணும் உதிர்ந்து வீங்கிக்
கேவல மலராய், வேறு ஓர் இடம் இன்றிக் கிடந்த ஆற்றால்,
பூ எனும் நாமம், இன்று இவ் உலகிற்குப் பொருந்திற்று அன்றே. 3-

வசிட்டன் இராமனுக்குத் திருமுடி புனைதல்
அரியணை அனுமன் தாங்க, அங்கதன் உடை வாள் ஏந்த,
பரதன் வெண் குடை கவிக்க, இருவரும் கவரி பற்ற,
விரி கடல் உலகம் ஏத்தும் வெண்ணெய் மன் சடையன் வண்மை
மரபுளோன் கொடுக்க வாங்கி, வசிட்டனே புனைந்தான், மௌலி. 16

வெள்ளியும் பொன்னும் ஒப்பார் விதி முறை மெய்யின் கொண்ட
ஒள்ளிய நாளின், நல்ல ஓரையின், உலகம் மூன்றும்
துள்ளின களிப்ப, மோலி சூடினான்-கடலின் வந்த
தெள்ளிய திருவும், தெய்வப் பூமியும், சேரும் தோளான். 17

வாழிய, சீர் இராமன்! வாழிய, சீதை கோமான்!
வாழிய, கௌசலேசை மணி வயிற்று உதித்த வள்ளல்!
வாழிய, வாலி மார்பும் மராமரம் ஏழும் சாய,
வாழிய கணை ஒன்று ஏவும் தசரதன் மதலை வாழி! 21-3

இராவணன் தன்னை வீட்டி, இராமனாய் வந்து தோன்றி,
தராதலம் முழுதும் காத்து, தம்பியும் தானும் ஆகப்
பராபரம் ஆகி நின்ற பண்பினைப் பகருவார்கள்
நராபதி ஆகி, பின்னும் நமனையும் வெல்லுவாரே. 21-4

——————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ கம்பநாட்டு ஆழ்வார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

ஸ்ரீ கம்ப ராமாயணமும் ஸ்ரீ அருளிச் செயல்களும் -ஸ்ரீ ஸூந்தர காண்டம் – —

March 12, 2020

ஸ்ரீ சீதா ராம ஜெயம்

கடவுள் வாழ்த்து

அலங்கலில் தோன்றும் பொய்ம்மை அரவு என, பூதம் ஐந்தும்
விலங்கிய விகாரப் பாட்டின் வேறுபாடு உற்ற வீக்கம்,
கலங்குவது எவரைக் கண்டால்? அவர், என்பர் – ‘கை வில் ஏந்தி,
இலங்கையில் பொருதார் அன்றே, மறைகளுக்கு இறுதி ஆவார்!’–
ஷட்பாவ விகாரம் -தேவாதி பிறப்பு ஒழிக்க -வேதாந்த ஸித்தமான ஸ்ரீ ராமபிரானை சரண் அடைவோம் –

————–

மாவொடு மரனும், மண்ணும், வல்லியும், மற்றும் எல்லாம்,
போவது புரியும் வீரன் விசையினால், புணரி போர்க்கத்
தூவின; கீழும் மேலும் தூர்த்தன; சுருதி அன்ன
சேவகன் சீறாமுன்னம் சேதுவும் இயன்ற மாதோ! –கடல் தாவு படலம்–19-

வேறு கொண்டு உம்மை யான் இரந்தேன்; வெறி வண்டினங்காள்!
தேறு நீர்ப் பம்பை வட பாலைத் திருவண் வண்டூர்
மாறில் போர் அரக்கன் மதிள் நீறு எழச் செற்றுகந்த
ஏறு சேவகனார்க்கு என்னையும் உளள் என்மின்களே–6-1-10-

ஏறு சேவகனார் -எதிரிகள் மேலிட்ட வீரப்பாட்டுக்குக் குறை சொல்ல முடியாத -வீரர்கள் கொண்டாடிய வீரம் அன்றோ –

———-

ஊறு கடித்து உறுவன ஊறு இல் அறம் உன்னாத்
தேறலில் அரக்கர் புரி தீமை அவை தீர
ஏறும் வகை யாண்டைய இராம வென எல்லாம்
மாறும் அதின் மாறு பிறிது இல் என வலித்தான்–கடல் தாவு படலம்-88-

குலம் தரும் செல்வம் தந்திடும்
அடியார் படு துயராயின வெல்லாம்
நிலம் தரும் செய்யும் நீள் விசும்பு அருளும்
அருளோடு பெரு நிலம் அளிக்கும்
வலம் தரும் மற்றும் தந்திடும்
பெற்ற தாயினும் யாயின செய்யும்
நலம் தரும் சொல்லை நான் கண்டு கொண்டேன்
நாராயணா வென்னும் நாமம் –1-1-9-

ஸ்ரீ ராம நாம சங்கீர்த்தநமே தக்க உபாயம் –

நன்மையையும் செல்வமும் நாளும் நல்குமே
திண்மையும் பாவமும் சிதைந்து தேயுமே
சென்மமும் மரணமும் இன்றித் தேயுமே
இம்மையே ராம என்று இரண்டு எழுத்தினால் –பாசுரமும் ஒப்பு நோக்குக –

———-

அருந்தவன் சுரபியே ஆதி வானமா
விரிந்த பேருதயமே மடி வெண் திங்களா
வருந்தலின் முலைக் கதிர் வழங்கு தாரையாச்
சொரிந்த பால் ஒத்து நிலவின் தோற்றமே –ஊர் தேடு படலம் –56-

ஆகாயமே அரும் தவ முனிவரான வசிஷ்ட முனியின் காம தேனு –
சந்திரன் உதிக்கும் இடம் பால் உள்ள மடி-
சாந்தன் பால் சுரக்கும் முலை
நிலவின் கிரணங்களே பாலின் தாரை –
இதே வருணனை

வால் வெண்ணிலா வுலகாரச் சுரக்கும் வெண் திங்கள் என்னும்
பால் விண் சுரவி சுர முதிர்மாலை பரிதி வட்டம்
போலும் சுடர் ஆழிப் பிரான் பொழில் ஏழும் அளிக்கும்
சால்பின் தகைமை கொலாம் தமியாட்டி தளர்ந்ததுவே ––திரு விருத்தம்-73-

மாலைக் காலத்துக்கும் பிறைச் சந்திரனுக்கும் வருந்தும் பராங்குச நாயகியைத் தனியே விட்டு இருத்தல்
காக்கும் இயல்பினனான எம்பெருமானின் தன்மையின் பெருமையோ -என்றவாறு –

—————–

எண் உடை அனுமன் மேல் இழிந்த பூ மழை
மண்ணிடை வீழ்கில மறித்தும் போகில
அண்ணல் வாள் அரக்கனை அஞ்சி ஆய் கதிர்
விண்ணிடைத் தங்கின போன்ற மீன் எலாம்–

திருவடி மேல் தேவர்கள் சொரியும் கற்பக மலர்கள் தரையில் விழாமல் இராவணன் இடத்தில்
அச்சம் காரணமாகவே வானத்திலே விளங்கா நிற்கின்றன -நக்ஷத்திரங்கள் –

இறை முறையான் சேவடி மேல் மண்ணளந்த வந்நாள்
மறை முறையால் வானாடர் கூடி –முறை முறையின்
தாது இலகு பூத் தெளித்தால் ஒவ்வாதே தாழ் விசும்பின்
மீதிலகித் தான் கிடக்கும் மீன்–61–

திரிவிக்ரமனாக வளர்ந்த காலத்தில் சிவந்த திருவடி மேலே தேவர்கள் கூடி மலர்களைத் தெளித்தால் போலே
வானத்தில் நக்ஷத்திரங்கள் விளங்குகின்றன –
உலகப் பொருள்களை எம்பெருமான் விஷயமாகவே காண்பர் ஆழ்வார்கள் –
நாம் அதில் இருந்து மீள இயலாமல் அழுந்திக் கிடப்பது போலே
எம்பெருமான் விஷயத்தில் ஈடுபட்டு ஆழ்ந்து மூழ்கிக் கிடப்பார்கள் என்று
ஸ்ரீ சிறியாத்தான் ஸ்ரீ -நம்பிள்ளைக்கு பணிக்கும் –

—————————————–

பெரிய நாள் ஓளி கொள் நாநாவித மணிப் புத்திப் பத்தி
சொரியுமா நிழல்கள் ஆங்குச் சுற்றலால் காலின் தோன்றல்
கரியனாய் வெளியனாகிச் செய்யனாய்க் காட்டும் காண்டற்கு
அரியனாய் எளியனாய் தன் அகத்துறை அழகனே போல் –ஊர் தேடு படலம்

ரத்தினங்கள் பதிக்கப் பெற்ற சுவர் வரிசைகள் வெளியிடும் ஒளிகள் திருவடி மேல் வீச
வெண்மை நிறம் செந்நிறம் அடைந்தாள் போலே
இராமனும் பரதனும் கருநிறம் -சத்ருக்கனன் வெண்ணிறம் -இளைய பெருமாள் செந்நிறம் உடையவர்களாயும்–இருப்பார்கள்
கிருத யுகத்தில் -சத்வ குணம் -வெண்மை -திரேதா யுகம் -ரஜோ குணம் -செந்நிறம் –
துவாபர யுகம் -ரஜோ தமோ குண மிஸ்ரம் -சிவப்பும் நீலமும் இன்றி பசுமை நிறம் -கலியுகம் -தமோ குணம் மிக்கு கரு நிறம் —
என்பதால் திருவடி நிறத்துக்கு திருமாலை உவமை சொன்னார் –
தம்மையே சிந்திப்பார்க்கு தம்மையே ஓக்க அருள் புரிபவன் ஆகையால் ஸ்ரீ ராம சிந்தனையே உடைய திருவடிக்கு
உட் கிடந்த வண்ணமே புறம்பேயும் காட்டி அருளினான் -ஆகவே திருமாலை உவமையாகக் கூறினார் –

பாலின் நீர்மை செம்பொன் நீர்மை பாசியின் பசும்புறம்
போலு நீர்மை பொற்புடைத் தடத்து வண்டு விண்டுலா
நீல நீர்மை யென்றிவை நிறைந்த கால நான்குமாய்
மாலின் நீர்மை வையகம் மறைந்ததென்ன நீர்மையே ––ஸ்ரீ திருச்சந்த விருத்தம்–44-

திரு வடிவில் கரு நெடுமால் சேயன் என்றும்
த்ரேதைக் கண் வளை யுருவேத் திகழ்ந்தான் என்றும்
பெருவடிவில் கடல் அமுதம் கொண்ட காலம்
பெருமானைக் கரு நீல வண்ணன் தன்னை
ஒரு வடிவத் தோர் உருவன் என்று உணரலாகாது
ஊழி தோறு ஊழி நின்று ஏத்தல் அல்லால்
கருவடிவில் செங்கண்ண வண்ணன் தன்னைக்
கட்டுரையே யார் ஒருவர் காண்கிற்பாரே–திரு நெடும் தாண்டகம்–-3-

—————

பத்துடை அடியவர்களுக்கு எளியவன் பிரர்களுக்கு அரிய வித்தகன் –ஸ்ரீ திருவாய் –1-3-1-

என்றேனும் கட் கண்ணால் காணாத அவ்வுருவை
நெஞ்சு எனும் உட் கண்ணால் காணும் உணர்ந்து –ஸ்ரீ பெரிய திருவந்தாதி -28-

காண்டற்கு அரியனாய் எளியனாய்த் தன் அகத்துறை அழகன் போல் –காட்சிப் படலம் -234-

—————

புக்கு நீங்கினன் இராகவன் கழல் எனப் புகழோன் –எங்கும் பறந்து சென்று மீண்ட திருவடி -இராகவன் கழல் -தானே

‘பளிக்கு வேதிகைப் பவளத்தின் கூடத்து, பசுந்தேன்
துளிக்கும் கற்பகப் பந்தரில், கருநிறத்தோர்பால்
வெளித்து வைகுதல் அரிது’ என, அவர் உரு மேவி,
ஒளித்து வாழ்கின்ற தருமம் அன்னான்தனை உற்றான்.–ஊர் தேடு படலம்—134

விபீஷணஸ்து தர்மாத்மா-ந து ராக்ஷஸ சேஷ்டித–என்றதையே தர்மம் அன்னான் -என்கிறார் –

————-

கரிய நாழிகைப் பாதியில் காலனும் வெருவி ஓடும் அரக்கர் தம் வெம் பதி —

இரவு பாதி ராத்ரியை -கரிய நாழிகைப் பாதியில் என்றது

கரிய நாழிகை ஊழியில் பெரியன கலியுமாறு அறியேனே –ஸ்ரீ பெரிய திரு மொழி -8-5-6-

—————-

எள் உறையும் ஒழியாமல் யாண்டையுளும் உளனாய், தன்
உள் உறையும் ஒருவனைப்போல், எம் மருங்கும் உலாவுவான்;
புள் உறையும் மானத்தை உற நோக்கி அயல் போவான்,
கள் உறையும் மலர்ச் சோலை அயல் ஒன்று கண்ணுற்றான். 232–

எங்கும் உளன் கண்ணன் -என்றும்

திட விசும்பு எரி வளி நீர் நிலம் இவை மிசை படர் பொருள் முழுவதுமாய் அவையவை தோறும்
உடல் மிசை உயிர் எனக் கரந்து எங்கும் பரந்துளன் -1-1-7-என்றும்
உள்ள பாசுரங்களை தழுவி அருளிச் செய்கிறார்

—————-

அரிய மஞ்சினோடு அஞ்சனம் முதல் இவை அதிகம்
கரிய காண்டலும், கண்ணின் நீர் கடல் புகக் கலுழ்வாள்;
உரிய காதலின் ஒருவரோடு ஒருவரை உலகில்
பிரிவு எனும் துயர் உருவு கொண்டாலன்ன பிணியாள்.–காட்சிப் படலம்—7–

உருவுடை வண்ணங்கள் காணில் உலகு அளந்தான் என்று துள்ளும் -4-4-8-
கரும் பெரும் மேகங்கள் காணில் கண்ணன் என்று ஏறப் பறக்கும் -4-4-9-
மைப்படி மேனியும் –திரு விருத்தம் -94-

————-

ஆழ நீர்க் கங்கை அம்பி கடாவிய
ஏழை வேடனுக்கு, ‘எம்பி நின் தம்பி; நீ
தோழன்; மங்கை கொழுந்தி’ எனச் சொன்ன
வாழி நண்பினை உன்னி, மயங்குவாள்.–காட்சிப் படலம்–23–

வாழி நண்பினை–நட்புக்குப் பல்லாண்டு பாடுகிறார் —

ஏழை ஏதலன் கீழ் மகன் என்னாது இரங்கி மற்று அவர்க்கு இன்னருள் சுரந்து
மாழை மான் மட நோக்கி யுன் தோழி உம்பி யெம்பி என்று ஒழிந்திலை உகந்து
தோழன் நீ எனக்கு இங்கு ஒழி என்ற சொற்கள் வந்து அடியேன் மனத்து இருந்திட
ஆழி வண்ண நின்னடி இணை அடைந்தேன் அணி பொழில் திருவரங்கத் தம்மானே ––பெரிய திருமொழி-5-8-1-

அன்னவன் உரை கேளா, அமலனும் உரைநேர்வான்;
‘என் உயிர் அனையாய் நீ; இளவல் உன் இளையான்; இந்
நன்னுதலவள் நின் கேள்; நளிர் கடல் நிலம் எல்லாம்
உன்னுடையது; நான் உன் தொழில் உரிமையின் உள்ளேன்.’–குகப் படலம்–42

‘துன்பு உளதுஎனின் அன்றோ சுகம் உளது? அது அன்றிப்
பின்பு உளது; “இடை, மன்னும் பிரிவு உளது” என, உன்னேல்;
முன்பு உளெம், ஒரு நால்வேம்; முடிவு உளது என உன்னா
அன்பு உள, இனி, நாம் ஓர் ஐவர்கள் உளர் ஆனோம்; –குகப் படலம்–43

——————–

ஏக வாளி அவ்விந்திரன் காதல் மேல் போக ஏவி அது கண் பொடித்த நாள்
காக முற்றும் ஓர் கண்ணில் வாக்கிய ஏக வென்றியைத் தலை மேல் கொள்வாள் –காட்சி படலம் —

சித்ர கூடத்து இருப்பச் சிறு காக்கை முலை தீண்ட
அத்திரமே கொண்டு எறிய அனைத்துலகும் திரிந்தோடி
வித்தகனே இராமா ஓ நின் அபயம் என்று அழைப்ப
அத்திரமே அதன் கண்ணை அறுத்ததும் ஓர் அடையாளம் –பெரியாழ்வார் -3-10-6-

——————–

கண்டனன் கற்பினுக்கு அணியைக் கண்களால்

அணங்கு அனாளை கண்ண நீர்க் கடலில் கண்டேன்

மூவகை உலகையும் முறையின் நீக்கிய
பாவி தன் உயிர் கொள்வான் இழைத்த பண்பு இதால்;
ஆவதே; ஐயம் இல்; அரவணைத் துயிலின் நீங்கிய
தேவனே அவன்; இவள் கமலச்செல்வியே.-காட்சிப் படலம்– 62-

அரவணைத் துயிலின் நீங்கிய தேவனே அவன்–ஷீராப்தி தானே அவதார கந்தம்
வேரி மாறாத பூ மேல் இருப்பவளாகிய திருமகளின் அவதாரமே இவள் —

———

‘”கேழ் இலாள் நிறை இறை கீண்டதாம் எனின்,
ஆழியான் முனிவு எனும் ஆழி மீக்கொள,
ஊழியின் இறுதி வந்துறும்” என்று உன்னினேன்;
வாழிய உலகு, இனி வரம்பு இல் நாள் எலாம்! 67-

ஆழியான் ஆழி அமரர்க்கு அப்பாலான்
ஊழியான் ஊழி படைத்தான் நிரை மேய்த்தான் -10-4-8-

————–

பேண நோற்றது மனைப் பிறவி, பெண்மைபோல்
நாணம் நோற்று உயர்ந்தது, நங்கை தோன்றலால்;
மாண நோற்று, ஈண்டு இவள் இருந்தவாறு எலாம்
காண நோற்றில, அவன் கமலக் கண்களே! 69–

இராம பிரானின் திருக்கண்கள் இவளது தவக் கோலத்தை காண பாக்யம் பெறவில்லையே -என்றவாறு

மையார் கருங்கண்ணி கமல மலர் மேல்
செய்யாள் திரு மார்வினில் சேர் திருமாலே
வெய்யார் சுடர் ஆழி சுரி சங்கம் ஏந்தும்
கையா உனைக் காணக் கருதும் என் கண்ணே–9-4-1-

ஸ்ரீ யப்பதியை திவ்ய ஆயுத திவ்ய ஆபரண விசிஷ்டமாக சேவிக்கப் பெற்ற
பராங்குச நாயகியுடைய திருக்கண்களின் அத்விதீயம் –

கண்ணைக் கொண்டே கண்ணைக் காண இருக்குமா போலே –
காண்கைக்கு சாதனமான கண்ணும் காணப்படும் விஷயமும் அவனே –

கண்டனன் கற்பினுக்கு அணியைக் கண்களால் –

—————–

அங்கண் மா ஞாலமும் விசும்பும் அஞ்ச வாழ்-இலங்கை

அங்கண் மா ஞாலம் அஞ்ச அங்கு ஓர் ஆள் அரியாய் –பெரிய திரு -1-7-1-

——————–

கரு மேக நெடும் கடல் காரணையான்
தருமே தனியேன் எனது ஆருயிர் தான்
உருமேருமிழ் வெஞ்சிலை நாண் ஒலி தான்
வருமே உரையாய் வழியே விதியே –உருக்காட்டு -3 —

கரு ஞாயிறு போல்பவர்

கண் தாமரை போல் கரு ஞாயிறு என

திருமேனிக்கு இருள் உவமை -நாண் ஒலி இவை ஆழ்வார் பாசுரங்களில் –

தானோர் இருள் அன்ன மா மேனி –பெரிய திருவந்தாதி -26-

இருள் விரி நீலக் கரு ஞாயிறு –திரு விருத்தம் -17-

பூங்கொள் திரு முகத்து மடுத்தூதிய சங்கு ஒலியும் சாரங்க வில் நாண் ஒலியும்
தலைப்பெய்வது எஞ்ஞான்று கொலோ –நாச் -9-9-

————————-

என நினைத்து, எய்த நோக்கி, ‘இரங்கும் என் உள்ளம்; கள்ளம்
மனன் அகத்து உடையர் ஆய வஞ்சகர் மாற்றம் அல்லன்;
நினைவுடைச் சொற்கள் கண்ணீர் நிலம் புக, புலம்பா நின்றான்;
வினவுதற்கு உரியன்’ என்னா, ‘வீர! நீ யாவன்?’ என்றாள்.–உருக் காட்டு படலம்- 28

புன் தொழில் அரக்கன் கொண்டு போந்த நாள், பொதிந்து தூசில்
குன்றின் எம் மருங்கின் இட்ட அணிகலக் குறியினாலே,
வென்றி யான் அடியேன் தன்னை வேறு கொண்டு இருந்து கூறி,
“தென் திசைச் சேறி” என்றான்; அவன் அருள் சிதைவது ஆமோ? –உருக் காட்டு படலம்–34–

வேறு கொண்டு உம்மை யான் இரந்தேன்; வெறி வண்டினங்காள்!
தேறு நீர்ப் பம்பை வட பாலைத் திருவண் வண்டூர்
மாறில் போர் அரக்கன் மதிள் நீறு எழச் செற்றுகந்த
ஏறு சேவகனார்க்கு என்னையும் உளள் என்மின்களே–6-1-10-

திக்குகள் தோறும் முதலிகளைப் போக விடா நிற்கச் செய்தே திருவடி கையில் திருவாழி மோதிரம்
கொடுத்து விட்டாப் போலே காணும் -அவற்றிலும் இவ்வண்டினங்கள் இவள் பக்கலிலே தாழ நிற்பவனே வாயிற்று –
வேறு கொண்டு இவற்றை இரக்க வேண்டுவான் என் என்னில்
பதஸ்தம் ஆகையால் -அந்த மற்றப் பஷிகளை விட கால்கள் அதிகமானதால்
வேறு கொண்டு இவற்றைத் தூது போக இரக்கிறாள்–ஈடு –

—————-

‘முத்தம் கொல்லோ? முழு நிலவின் முறியின் திறனோ? முறை அமுதச்
சொத்தின் துள்ளி வெள்ளி இனம் தொடுத்த கொல்லோ? துறை அறத்தின்
வித்து முளைத்த அங்குரம்கொல்? வேறே சிலகொல்? மெய்ம் முகிழ்த்த
தொத்தின் தொகைகொல்? யாது என்று பல்லுக்கு உவமை சொல்லுகேன்? –உருக் காட்டு படலம்–53–

என்று நின்றே திக ழும் செய்ய ஈன் சுடர் வெண் மின்னுக் கொல்?
அன்றி என் ஆவி அடும் அணி முத்தங் கொலோ? அறியேன்
குன்றம் எடுத்த பிரான் முறுவல் எனது ஆவி அடும்
ஒன்றும் அறிகின்றிலேன் அன்னைமீர்!எனக்கு உய்விடமே–7-7-5-

————–

நீண்டு, குழன்று, நெய்த்து, இருண்டு, நெறிந்து, செறிந்து, நெடு நீலம்
பூண்டு, புரிந்து, சரிந்து, கடை சுருண்டு, புகையும் நறும் பூவும்
வேண்டும் அல்ல என, தெய்வ வெறியே கமழும் நறுங் குஞ்சி,
ஈண்டு சடை ஆயினது என்றால், மழை என்று உரைத்தல் இழிவு அன்றோ? –உருக் காட்டு படலம்–57–

திரண்டு எழு தழை முகில் வண்ணன் செங்கமல மலர் சூழ் வண்டினம் போலே
சுருண்டு இருண்ட குழல் தாழ்ந்த முகத்தால் ஊதுகின்ற குழலோசை வழியே
மருண்டு மான் கணங்கள் மேய்கை மறந்து மேய்ந்த புல்லும் கடை வாய் வழி சோர
இரண்டு பாடும் துலுங்கா புடை பெயரா வெழுது சித்திரங்கள் போலே நின்றனவே –ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி–3-6 9- –

குழல் இருண்டு சுருண்டு ஏறிய குஞ்சி கோவிந்தனுடைய கோமள வாயில்
குழல் முழஞ்சுகளினூடு குமிழ்த்துக் கொழித்து எழுந்த அமுதப் புனல் தன்னை
குழல் முழவம் விளம்பம் புதுவைக் கோன் விட்டுசித்தன் விரித்த தமிழ் வல்லார்
குழலை வென்ற குளிர் வாயினராகி சாதி கோட்டியில் கொள்ளப் படுவாரே –ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி–3 6-11 – –

————-

‘”மீட்டும் உரை வேண்டுவன இல்லை” என, மெய்ப் பேர்
தீட்டியது; தீட்ட அரிய செய்கையது; செவ்வே,
நீட்டு இது” என, நேர்ந்தனன்’ எனா, நெடிய கையால்,
காட்டினன் ஓர் ஆழி; அது வாள் நுதலி கண்டாள்.–உருக் காட்டு படலம்- 63–

வாங்கினள்; முலைக் குவையில் வைத்தனள்; சிரத்தால்
தாங்கினள்; மலர்க் கண்மிசை ஒற்றினள்; தடந் தோள்
வீங்கினள்; மெலிந்தனள், குளிர்ந்தனள்; வெதுப்போடு
ஏங்கினள்; உயிர்த்தனள், இது இன்னது எனல் ஆமே? –உருக் காட்டு படலம்– 66

மோக்கும்; முலை வைத்து உற முயங்கும்; ஒளிர் நல் நீர்
நீக்கி, நிறை கண் இணை ததும்ப, நெடு நீளம்
நோக்கும்; நுவலக் கருதும், ஒன்றும் நுவல்கில்லாள்;
மேக்கு நிமிர் விம்மலள்; விழுங்கலுறுகின்றாள். –உருக் காட்டு படலம்–67-

மைத்தகு மா மலர்க் குழலாய் வைதேவீ விண்ணப்பம்
ஒத்த புகழ் வானரக் கோன் உடன் இருந்து நினைத் தேட
அத்தகு சீர் அயோத்தியர் கோன் அடையாளம் இவை மொழிந்தான்
இத்தகையால் அடையாளம் ஈது அவன் கை மோதிரமே––ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி -3-10-8-

திக்கு நிறை புகழாளன் தீ வேள்விச் சென்ற நாள்
மிக்க பெரும் சவை நடுவே வில்லிறுத்தான் மோதிரம் கண்டு
ஒக்குமால் அடையாளம் அனுமான் என்று உச்சி மேல்
வைத்துக் கொண்டு உகந்தனளால் மலர்க் குழலாள் சீதையுமே–-ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி-3-10-9-

க்ருஹீத்வா ப்ரேஷமானா சா பர்த்து கர விபூஷணம் -பர்த்தாராம் இவ ஸம்ப்ராப்தா
கீஜான முதிதா ஸ்வத் –ஸூந்தர -என்கிறபடியே
அத் திருவாழி மோதிரத்தை வாங்கி அதினுடைய கௌரவமும் -தன்னுடைய ஆதரமும் தோற்றத் தலை மேல் வைத்துக் கொண்டு –
பின்னை அத்தைக் கையிலே ஏந்தி -வைத்த கண் மாறாமல் பார்த்துக் கொண்டு இருக்கையாலே –
அத் திருவாழி மோதிரத்தோடே சேர்ந்த திரு விரலையும் -அத்தோடு சேர்ந்த -திருக் கையையும் –
அத்தோடு சேர்ந்த திருத் தோள்களையும் நினையா நின்று கொண்டு
அவ்வழியாலே திருமேனி எல்லாவற்றையும் நினைத்து பாவநா ப்ரகரஷத்தாலே பெருமாள் அலங்கரிக்கப் பூ முடித்து
ஒரு படுக்கையிலே இருந்தால் போலே தோன்றி பிராட்டி மிகவும் ப்ரீதையானாள் என்று
ஆச்சர்யப்பட்டு அருளிச் செய்கிறார் -ஆல்-ஆச்சர்யம் —

க்ருஹீத்வா ப்ரேஷமானா சா–ராவணன் மாயையால் வந்ததோ என்னும் பயத்தால் வந்ததோ என்னும் -முற்படக் கண்
வைக்க மாட்டாதே இருந்தாள்-
அத்தலையாலே வந்தது என்று தெளிந்த பின்பு கண் மாற வைக்க அரிதாம்படியாய் இருந்தாள்
சா ப்ரேஷமானா பஸ்ய தேவி -என்று கொண்டு முன்பு பார்வைக்கு க்ருஷி பண்ண வேண்டும்படி இருந்தவள்
தானே கண் மாற வைகைக்கு கிருஷி பண்ண வேண்டும்படி இருந்தாள் –
பர்த்து கர விபூஷணம் -அணி மிகு தாமரைக் கை இறே–ஆபரணத்துக்கு ஆபரணம் காணும் –
இத்தோடு சேர்ந்த விரலையும் தோளையும் நினைத்தாள் –
அந்நினைவு அவர் அக்கரையில் ஆளாகவும் இடையிலே கடல் கிடக்கிறதாதாகவும் அறிந்திலள் –
ஒரே படுக்கையிலே கூட இருந்ததாகவே நினைத்தாள்-ஒரு சூது சதுரங்களிலே தோற்றுத் தன் கையிலே இருந்ததாக நினைத்தாள்
பர்த்தாராம் இவ–நநீத சமாதியாலே இவள் உணர்ந்தாள் என்படக் கடவள் என்று வாலமீகி இவ என்கிறான்
ஜானகி -சோக ஹர்ஷங்களுக்கு விளையாத குடிப்பிறப்பு
அப்படியேயாயிற்று இவனும் இவற்றைப் பெற்ற பின்பு
சம்சாரி முக்தன் ஆனால் அவனுக்குடைய லீலா உபகரணமும் போக உபகரணமும் சமமாகத் தோற்றக் கடவது –நம்பிள்ளை ஈடு –

–——————-

‘பாழிய பணைத் தோள் வீர! துணை இலேன் பரிவு தீர்த்த
வாழிய வள்ளலே! யான் மறு இலா மனத்தேன்என்னின்,
ஊழி ஓர் பகலாய் ஓதும் யாண்டு எலாம், உலகம் ஏழும்
ஏழும் வீவுற்ற ஞான்றும், இன்று என இருத்தி’ என்றாள். 72–

சிரஞ்சீவியாக பிராட்டி ஆசீர்வாதம் –
பாழி-இடமுடைமை விசாலம் என்றும் வலிமை என்றும் –

பாழி யம் தோளுடைப் பற்ப நாபன் –

ஆழியான் ஆழி யமரர்க்கும் அப்பாலான்
ஊழியான் ஊழி படைத்தான் நிரை மேய்த்தான்
பாழி யம் தோளால் வரை எடுத்தான் பாதங்கள்
வாழி என் நெஞ்சே மறவாது வாழ் கண்டாய்–10-4-8-

——————-

தேண்டி நேர் கண்டேன்; வாழி! தீது இலன் எம் கோன்; ஆகம்
பூண்ட மெய் உயிரே போக, அப் பொய் உயிர் போயே நின்ற
ஆண்தகை நெஞ்சில் நின்றும் அகன்றிலை; அழிவு உண்டாமோ?
ஈண்டு நீ இருந்தாய்; ஆண்டு, அங்கு, எவ் உயிர் விடும் இராமன்? — 77–

பொங்கும் பிரிவால் பல்லாண்டு வாளி என்கிறார் திருவடி –
அங்கு எவ்வுயிர் விடும் இராமன் -இன்றியாமை –

ஏறு சேவகனார்க்கு என்னையும் உளள் என்மின்களே-6-1-10-

மாஸாதூர்த்தவம் ந ஜீவிஷ்யே
ந ஜீவேயம் க்ஷணம் அபி –

———————

தன்னை ஒன்றும் உணர்ந்திலாதான் -86-

தனக்கும் தன் தன்மை அறிவரியான்-8-4-6-

ஸ்வத சர்வஞ்ஞனான தன்னாலும் தன்னைப் பரிச்சேதிக்கப் போகாது

—————-

‘சுருங்குஇடை! உன் ஒரு துணைவன் தூய தாள்
ஒருங்குடை உணர்வினோர், ஓய்வு இல் மாயையின்
பெருங் கடல் கடந்தனர் பெயரும் பெற்றிபோல்,
கருங் கடல் கடந்தனென், காலினால்’ என்றான். 97–

திருவடி பற்றிய மஹிமையினாலே கடலைக் கடந்தேன் -திருவடி —

பிறவிப் பெருங்கடல் நீந்துவார் நீந்தார்
இறைவன் அடி சேராதார் -திருக்குறள் –

தைவீஹ்யேஷா குணமயீ மம மாயா துரத்யயா
மா மேவ யே பிரபத்யந்தே மாயம் ஏதாம் தரந்திதே –ஸ்ரீ கீதை -7-14-

—————

அண்ணற் பெரியோன், அடி வணங்கி, அறிய உரைப்பான், ‘அருந்ததியே!
வண்ணக் கடலினிடைக் கிடந்த மணலின் பலரால்; வானரத்தின்
எண்ணற்கு அரிய படைத் தலைவர், இராமற்கு அடியார்; யான் அவர்தம்
பண்ணைக்கு ஒருவன் எனப் போந்தேன்; ஏவல் கூவல் பணி செய்வேன். 114

நினைப்பான் புகில் கடல் எக்கலின் பலர்
எனைத்தோர் யுகங்களும் இவ்வுலகு ஆண்டு கழித்தவர் -4-1-4–

கடலின் மணலை உவமை –

—————–

பொன் பிறங்கல் இலங்கை, பொருந்தலர்
என்பு மால் வரை ஆகிலதேஎனின்,
இற்பிறப்பும், ஒழுக்கும், இழுக்கம் இல்
கற்பும், யான் பிறர்க்கு எங்ஙனம் காட்டுகேன்? –சூடாமணிப் படலம்–17–

‘விற் பெருந் தடந் தோள் வீர! வீங்கு நீர் இலங்கை வெற்பில்,
நற் பெருந் தவத்தள் ஆய நங்கையைக் கண்டேன் அல்லேன்;
இற் பிறப்பு என்பது ஒன்றும், இரும் பொறை என்பது ஒன்றும்,
கற்பு எனும் பெயரது ஒன்றும், களி நடம் புரியக் கண்டேன். –திருவடி தொழுத படலம்—29–

—————-

‘அல்லல் மாக்கள் இலங்கையது ஆகுமோ?
எல்லை நீத்த உலகங்கள் யாவும், என்
சொல்லினால் சுடுவேன்; அது, தூயவன்
வில்லின் ஆற்றற்கு மாசு என்று, வீசினேன். –சூடாமணிப் படலம்—18–

சரைஸ்து சங்குலாம் க்ருத்வா லங்காம் பரபலார்த்தந
மாம் நயேத்யதி காகுத்ஸதா தத் தஸ்ய சத்ருசம் பவேத் –ஸூ ந்தர -39 –40-

வேறும் உண்டு உரை; கேள் அது; மெய்ம்மையோய்!
ஏறு சேவகன் மேனி அல்லால், இடை
ஆறும் ஐம் பொறி நின்னையும், “ஆண்” எனக்
கூறும்; இவ் உருத் தீண்டுதல் கூடுமோ? 19-

ஏறு சேவகனார்க்கு என்னையும் உளள் என்மின்களே -6-1-10-

ஏறு சேவகன் -சத்ரு கோஷ்டியிலும் ஏறும்படியான ஆண் பிள்ளைத்தனம் -சத்ரோ பிராக்யாத வீரஸ்ய

—————-

தீர்விலேன் இனி இது ஒரு பகலும் சிலை
வீரன் மேனியை மானும் இவ்வீங்கு நீர்
நாரா நாண் மலர்ப் பொய்கையை நண்ணுவேன்
சோருமாருயிர் காக்கும் துணியினால் -25-

பொய்கை உவமை ஒப்புமை –

மாயக் கூத்தா வாமனா வினையேன் கண்ணா கண் கை கால்
தூய செய்ய மலர்களா சோதித் செவ்வாய் முகிழதா
சாயல் சாமத் திருமேனி தண் பாசடையா தாமரை நீள்
வாசத் தடம் போல் வருவானே ஒரு நாள் காண வாராயே—8-5-1-

ராம கமல பத்ராஷ சர்வ சத்வ மநோ ஹர–
அக்ஷம்–சரீரம் என்றும் இந்திரியம் நிகண்டு -இந்திரிய காயயோ —

கமலம் போலும் இந்திரியம் -கண் -அக்கமலத்தின் இலை போலும் திருமேனி –

தக்கிலமே கேளீர்கள் தடம் புனல் வாய் இரை தேரும்
கொக்கினங்காள் குருகினங்காள் குளிர் மூழிக் களத்து உறையும்
செக்கமலத்து அலர்போலும் கண் கை கால் செங்கனி வாய்
அக்கமலத்து இலைபோலும் திரு மேனி அடிகளுக்கே–9-7-3-

—————

அரசு வீற்று இருந்து ஆளவும் ஆய் மணி
புரசை யானையின் வீதியில் போகவும்
விரத கோலங்கள் காண விதியிலேன்
உரை செய் தென் பல ஊழ் வினை உன்னுவேன்–

எந்தை, யாய், முதலிய கிளைஞர் யார்க்கும், என்
வந்தனை விளம்புதி; கவியின் மன்னனை,
“சுந்தரத் தோளனைத் தொடர்ந்து, காத்துப் போய்,
அந்தம் இல் திரு நகர்க்கு அரசன் ஆக்கு” என்பாய். 38-

குங்குமம் அப்பிக் குளிர் சாந்தம் மட்டித்து
மங்கல வீதி வலம் செய்து மண நீர்
அங்கு அவனோடும் உடன் சென்று அங்கு ஆனைமேல்
மஞ்சனமாட்டக் கனாக் கண்டேன் தோழீ நான்–நாச்சியார் திரு மொழி – –6-10-

சிந்துரச் செம்பொடிப் போல் திரு மால் இருஞ்சோலை எங்கும்
இந்திர கோபங்களே எழுந்தும் பரந்திட்டனவால்
மந்திரம் நாட்டி யன்று மதுரக் கொழுஞ்சாறு கொண்ட
சுந்தரத் தோளுடையான் சுழலையில் நின்றுய்தும் கொலோ––நாச்சியார் திரு மொழி – 9-1-

—————-

எந்தை நின் சரணம் சரண் என்ற இதனால்
முந்து நின் குறையும் பொறை தந்தன முந்துன்
சந்தம் ஓன்று கொடித் திரள் கண்கள் தமக்கே
வந்த ஓர் நல் மணி வந்து நிற்க என வைத்தும் வைப்பாய் –சூடாமணிப் படலம்

ஏக வாளி யவ் விந்திரன் காதல் மேல்
போக ஏவி அது கண் பொடித்த நாள்
காகம் முற்றும் ஓர் கண்ணில் ஆக்கிய
ஏக வென்றியைத் தன் தலை மேல் கொள்வாள் –காட்சி படலம் –28-

சித்ர கூடத்து இருப்பச் சிறு காக்கை முலை தீண்ட
அத்திரமே கொண்டெறிய வனைத்துலகும் திரிந்தோடி
வித்தகனே இராமா ஓ நின்னபயம் என்று அழைப்ப
அத்திரமே அதன் கண்ணை யறுத்ததும் ஓர் அடையாளம் –3-10-6-

————–

ஐயனும், அமைந்து நின்றான், ஆழியான் அளவின் நாமம்
நெய் சுடர் விளக்கின் தோன்றும் நெற்றியே நெற்றியாக,
மொய் மயிர்ச் சேனை பொங்க, முரண் அயில் உகிர்வாள் மொய்த்த
கைகளே கைகள் ஆக, கடைக் கூழை திரு வால் ஆக.–சம்புமாலி வத படலம்-21-

திரு மண் காப்புக்கு நெய்யாகவும் தீப ஜ்வாலை ஸ்ரீ சூரணமாகவும் உருவகப்படுத்தி
அருளிச் செய்கிறார் கம்பநாட்டாழ்வார்-

அண்ணல் அவ்வரியினுக்கு அடியவர் அவன் சீர்
நண்ணினவர் எனும் பொருள் நவையறத் தெரிப்பான்
மண்ணினும் விசும்பிலும் மருங்கிலும் வலித்தார்
கண்ணிலும் மனத்தினும் தனித்தனி கலந்தான் –36-சாம்யா மோக்ஷம் பொருளில் அருளிச் செய்கிறார்

—————-

வாரணம் காக்க வந்தான் அமரரைக் காக்க வந்தான்

ஈண்டுப் பிறந்தான் தன் பொற் பாதம் ஏத்துவார் பிறப்பு அறுப்பான் —

பரித்ராணாய ஸாதூநாம் விநாசாயா துஷ்க்ருதாம் -தர்ம சமஸ்தான நார்த்தாய சம்பவாமி யுகே யுகே -ஸ்ரீ கீதை -4-8–

———

‘அஞ்சலை, அரக்க! பார் விட்டு அந்தரம் அடைந்தான் அன்றே,
வெஞ் சின வாலி; மீளான்; வாலும் போய் விளிந்தது அன்றே;
அஞ்சன மேனியான்தன் அடு கணை ஒன்றால் மாழ்கித்
துஞ்சினன்; எங்கள் வேந்தன், சூரியன் தோன்றல்’ என்றான். 79-வாலி மடிந்த செய்தியை அனுமன் தெரிவித்தல்

நொய்ய பாசம் புறம் பிணிப்ப, நோன்மை இலன்போல் உடல் நுணங்கி
வெய்ய அரக்கர் புறத்து அலைப்ப, வீடும் உணர்ந்தே, விரைவு இல்லா
ஐயன், விஞ்சைதனை அறிந்தும் அறியாதான் போல், அவிஞ்சை எனும்
பொய்யை மெய்போல் நடிக்கின்ற யோகி போன்றான்; போகின்றான். 117–அகமகிழ்வுடன் அனுமன் அவர்க்கு அடங்கி, உடன் போதல்-

————–

எய்தினன் அனுமனும்; எய்தி, ஏந்தல்தன்
மொய் கழல் தொழுகிலன்; முளரி நீங்கிய
தையலை நோக்கிய தலையன், கையினன்,
வையகம் தழீஇ நெடிது இறைஞ்சி, வாழ்த்தினான். 22-

பிராட்டி உள்ள திசையை நோக்கி தொழுதனன் திருவடி –
பரதனும் திசை நோக்கித் தொழுகின்றனன் -சித்ரகூடத்தில் இராமனைக் காண வரும் பொழுது
இன்றும் மஞ்சள் குழி உத்சவத்தில் திருமங்கை ஆழ்வார் திருவரங்கம் தென் திசை தொழும் வைபவத்தை சேவிக்கலாம்

————–

சீதையைக் கண்டு வந்த செய்தியை அனுமன் இராமனிடம் கூறுதல்

‘கண்டனென், கற்பினுக்கு அணியை, கண்களால்,
தெண் திரை அலை கடல் இலங்கைத் தென் நகர்;
அண்டர் நாயக! இனி, துறத்தி, ஐயமும்
பண்டு உள துயரும்’ என்று, அனுமன் பன்னுவான்: 25

‘உன் பெருந் தேவி என்னும் உரிமைக்கும், உன்னைப் பெற்ற
மன் பெரு மருகி என்னும் வாய்மைக்கும், மிதிலை மன்னன் –
தன் பெருந் தனயை என்னும் தகைமைக்கும், தலைமை சான்றாள்-
என் பெருந் தெய்வம்! ஐயா! இன்னமும் கேட்டி’ என்பான்: 26′

பொன் அலது இல்லை பொன்னை ஒப்பு என, பொறையில் நின்றாள்,
தன் அலது இல்லைத் தன்னை ஒப்பு என; தனக்கு வந்த
நின் அலது இல்லை நின்னை ஒப்பு என, நினக்கு நேர்ந்தாள்;
என் அலது இல்லை என்னை ஒப்பு என, எனக்கும் ஈந்தாள். 27

‘உன் குலம் உன்னது ஆக்கி, உயர் புகழ்க்கு ஒருத்தி ஆய
தன் குலம் தன்னது ஆக்கி, தன்னை இத் தனிமை செய்தான்
வன் குலம் கூற்றுக்கு ஈந்து, வானவர் குலத்தை வாழ்வித்து,
என் குலம் எனக்குத் தந்தாள்; என் இனிச் செய்வது, எம் மோய்? 28

‘விற் பெருந் தடந் தோள் வீர! வீங்கு நீர் இலங்கை வெற்பில்,
நற் பெருந் தவத்தள் ஆய நங்கையைக் கண்டேன் அல்லேன்;
இற் பிறப்பு என்பது ஒன்றும், இரும் பொறை என்பது ஒன்றும்,
கற்பு எனும் பெயரது ஒன்றும், களி நடம் புரியக் கண்டேன். 29

சூடாமணி பெற்ற இராமனது நிலை

பை பையப் பயந்த காமம் பரிணமித்து உயர்ந்து பொங்கி,
மெய்யுற வெதும்பி, உள்ளம் மெலிவுறு நிலையை விட்டான்;
ஐயனுக்கு, அங்கி முன்னர், அங்கையால் பற்றும் நங்கை
கை எனல் ஆயிற்று அன்றே – கை புக்க மணியின் காட்சி! 47

பொடித்தன உரோமம்; போந்து பொழிந்தன கண்ணீர்; பொங்கித்
துடித்தன, மார்பும் தோளும்; தோன்றின வியர்வின் துள்ளி;
மடித்தது, மணி வாய்; ஆவி வருவது போவது ஆகித்
தடித்தது, மேனி; என்னே, யார் உளர் தன்மை தேர்வார்? 48

——————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ கம்பநாட்டு ஆழ்வார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

ஸ்ரீ கம்ப ராமாயணமும் ஸ்ரீ அருளிச் செயல்களும் -ஸ்ரீ கிஷ்கிந்தா காண்டம் – —

March 12, 2020

ஸ்ரீ சீதா ராம ஜெயம்-

ஸ்ரீ கடவுள் வாழ்த்து –

மூன்று உரு எனக் குணம் மும்மை ஆம் முதல்,
தோன்று உரு எவையும், அம் முதலைச் சொல்லுதற்கு
ஏன்று உரு அமைந்தவும், இடையில் நின்றவும்,
சான்று உரு உணர்வினுக்கு உணர்வும், ஆயினான்.

சேதன அசேதனங்கள் சமஸ்தமும் அவனது சரீரமே –

சொல்லினால் தொடர்ச்சி நீ சொலப்படும் பொருளும் நீ
சொல்லினால் சொலப்படாது தோன்றுகின்ற சோதி நீ
சொல்லினால் படைக்க நீ படைக்க வந்து தோன்றினார்
சொல்லினால் சுருங்க நின் குணங்கள் சொல்ல வல்லரே –ஸ்ரீ திருச்சந்த விருத்தம்–11-

சொல்லுவான் சொல் பொருள் தானவையாய் –அனைத்துக்கும் அவனே நிர்வாஹகன் –
சொல் பொருள் ஆளீர் சொல்லுகேன் வம்மின்
சூழ் புனல் குடந்தையே தொழுமின்
நற்பொருள் காண்மின் பாடி நீர் உய்மின்
நாராயணா என்னும் நாமம் -1-1-7-

வெண் சங்கம் ஓன்று ஏந்திய கண்ணா நின் தனக்கும் குறிப்பாகில் கவியின் பொருள் தானே 7-10-10-

வழி பட்டு ஓட அருள் பெற்று மாயன் கோல மலர் அடிக்கீழ்
சுழி பட்டு ஓடும் சுடர்ச் சோதி வெள்ளத்து இன்புற்று இருந்தாலும்
இழி பட்டு ஓடும் உடலினில் பிறந்து தன் சீர் யான் கற்று
மொழி பட்டு ஓடும் கவி அமுதம் நுகர்ச்சி உறுமோ முழுதுமே–-ஸ்ரீ திருவாய் மொழி–8-10-5-

————–

கவள யானை அன்னாற்கு அந்தக் கடி நறு கமலத்
தவளை ஈய் கலமாவது செய்தும் என்று அருளித்
திவள வண்ணம் கடிருநடை காட்டுவ செங்கண்
குவளை காட்டுவ விழி இதழ் காட்டுவ குமுதம் -17-

வள வெழும் தவள மாட மதுரை மா நகரம் தன்னுள்
கவள மால் யானை கொன்ற கண்ணனை அரங்க மாலை –திருமாலை-45-

——-

அரைசும், அவ் வழி நின்று அரிது எய்தி, அத்
திரை செய் தீர்த்தம், முன் செய் தவம் உண்மையால்,
வரை செய் மா மத வாரணம் நாணுற,
விரை செய் பூம் புனல் ஆடலை மேயினான். 35

கங்கை திருவடி மாத்ர சம்பந்தத்தால் ஏற்றம் -இங்கு திருமேனி முழுவதும் உள்ள சம்பந்தத்தால் ஏற்றம்

———-

ஆடினான் அன்ன மாய் அரு மறைகள் பாடினான்
நீடு நீர் முன்னை நூல் நெறி முறையின் நேமி தாள்
சூடினான் முனிவர் தொகுதி சேர் சோலை வாய்
மாடு தான் வைகினான் ஏறி கதிரும் வைகினான் -37-

வில் நெறி முறையின் படி–மிக்க நீர்மை அமைந்த வேத நெறி படி அரக்யாதிகளைச் செய்து முடித்தான் –
அன்னமாய் அன்று அங்கு அரு மறை பயந்தான் அரங்க மா நகர் அமர்ந்தான் –பெரிய திருமொழி 5-7-3-

—————-

அனுமன் மறைந்து நின்று சிந்தித்தல்
அஞ்சனைக்கு ஒரு சிறுவன், அஞ்சனக் கிரி அனைய
மஞ்சனைக் குறுகி, ஒரு மாணவப் படிவமொடு,
‘வெஞ் சமத் தொழிலர், தவ மெய்யர், கைச் சிலையர்’ என,
நெஞ்சு அயிர்த்து, அயல் மறைய நின்று, கற்பினின் நினையும்: –அனுமப் படலம்–4

‘தேவருக்கு ஒரு தலைவர் ஆம் முதல் தேவர் எனின்,
மூவர்; மற்று, இவர் இருவர்; மூரி வில் கரர்; இவரை
யாவர் ஒப்பவர், உலகில்? யாது, இவர்க்கு அரிய பொருள்?
கேவலத்து இவர் நிலைமை தேர்வது எக் கிழமை கொடு? 5-

இராம இலக்குவர்பால் அன்பு மிக, ‘இவர்களே தருமம்’ என்று அனுமன் துணிதல்
என்பன பலவும் எண்ணி, இருவரை எய்த நோக்கி,
அன்பினன், உருகுகின்ற உள்ளத்தன், ஆர்வத்தோரை
முன் பிரிந்து, வினையர்தம்மை முன்னினான் என்ன நின்றான் –
தன் பெருங் குணத்தால் தன்னைத் தான் அலது ஒப்பு இலாதான். 9

‘துன்பினைத் துடைத்து, மாயத் தொல் வினைதன்னை நீக்கி,
தென் புலத்து அன்றி, மீளா நெறி உய்க்கும் தேவரோதாம்?
என்பு எனக்கு உருகுகின்றது; இவர்கின்றது அளவு இல் காதல்;
அன்பினுக்கு அவதி இல்லை; அடைவு என்கொல்? அறிதல் தேற்றேன். 13

வண்டமரும் வனமாலை மணி முடி மேல் மண நாறும் என்கின்றாளால்
உண்டிவர் பால் அன்பு எனக்கு என்று ஒரு காலும் பிரிகிலேன் என்கின்றாளால்
பண்டிவரைக் கண்டறிவது எவ் ஊரில் யாம் என்றே பயில்கின்றாளால்
கண்டவர் தம் மனம் வழங்கும் கண்ண புரத் தம்மானைக் கண்டாள் கொலோ –பெரிய திருமொழி-–8-1-9-

இராமன் அனுமனைப் பாராட்டி, இலக்குவனுக்கு உரைத்தல்
மாற்றம் அஃது உரைத்தலோடும், வரி சிலைக் குரிசில் மைந்தன்
தேற்றம் உற்று, இவனின் ஊங்குச் செவ்வியோர் இன்மை தேறி,
‘ஆற்றலும், நிறைவும், கல்வி அமைதியும், அறிவும், என்னும்
வேற்றுமை இவனோடு இல்லையாம்’ என, விளம்பலுற்றான்: 17

‘”இல்லாத உலகத்து எங்கும், இங்கு இவன் இசைகள் கூரக்
கல்லாத கலையும், வேதக் கடலுமே” என்னும் காட்சி
சொல்லாலே தோன்றிற்று அன்றே? யார் கொல் இச் சொல்லின் செல்வன்?-
வில் ஆர் தோள் இளைய வீர! – விரிஞ்சனோ? விடைவலானோ? 18-

இலக்குவன் உரை கேட்ட அனுமன் இராமனது திருவடிகளை வணங்குதல்<
என்று, அவன் தோற்றம் ஆதி இராவணன் இழைத்த மாயப்
புன் தொழில் இறுதி ஆக, புகுந்து உள பொருள்கள் எல்லாம்,
ஒன்றும் ஆண்டு ஒழிவுறாமல், உணர்த்தினன்; உணர்த்தக் கேட்டு,
நின்ற அக் காலின் மைந்தன், நெடிது உவந்து, அடியில் தாழ்ந்தான். 29–

——-

அனுமனின் விடை
மஞ்செனத் திரண்ட கோல மேனியை மகளிர்க்கு எல்லாம்
நஞ்செனத் தகைய வாகி நளிர் இரும் பனிக்குத் தேம்பா
கஞ்சமொத்த லர்ந்த கண்ண யான் காற்றின் வேந்தன்
அஞ்சனை வயிற்றின் வந்தேன் நாமமும் அனுமன் என்பேன் —

மகளிர்க்கு எல்லாம் -நஞ்செனத் தகைய வாகி–கண்ட பெண்களுக்கு நஞ்சு –
ஏழையர் ஆவி உண்ணும் இணைக் கூற்றங் கொலோ அறியேன்
ஆழியங் கண்ண பிரான் திருக் கண்கள் கொலோ அறியேன்
சூழவும் தாமரை நாண் மலர் போல் வந்து தோன்றுங் கண்டீர்
தோழியர் காள்!அன்னைமீர்! என் செய்கேன் துயராட்டியேனே–7-7-1-

————

அனுமன் ராமபிரானை புகழ்ந்து சுக்ரீவன் இடம் கூறினமை
உளை வயப் புரவியான் உதவ உற்ற ஒரு சொலால்
அளவில் கற்புடைய சிற்றவை பணித்தருளால்
வளை யுடையப் புணரி சூழ் மகிதலத் திருவெலாம்
இளைவர்க் குதவி இத்தலை எழுந்து அருளினான் -46-

விற் பெரு விழவும் கஞ்சனும் மல்லும் வேழமும் பாகனும் வீழ
செற்றவன் தன்னைப் புரமெரி செய்த சிவனுறு துயர் களை தேவை
பற்றலர் வீயக் கோல் கையில் கொண்டு பார்த்தன் தன் தேர் முன்னின்றானை
சிற்றவை பணியால் முடி துறந்தானைத் திருவல்லிக்கேணிக் கண்டேனே-2-3-1-

மாற்றுத் தாய் சென்று வனம் போகே என்றிட
ஈற்றுத் தாய் பின் தொடர்ந்து எம்பிரான் என்று அழ
கூற்றுத் தாய் சொல்ல கொடிய வனம் போன
சீற்றம் இலாதானைப் பாடிப் பற
சீதை மணாளனைப் பாடிப் பற -3 9-4 –

————-

அடியினால் உலகு அளந்தவன் அண்டத்துக்கு அப்பால்
முடியின்மேல் சென்ற முடியன ஆதலின், முடியா
நெடிய மால் எனும் நிலையன; நீரிடைக் கிடந்த
படியின்மேல் நின்ற மேரு மால் வரையினும், பரிய; 9-மராமரங்கள் நின்ற காட்சி

படி வட்டத் தாமரை பண்டுலகம் நீரேற்று
அடி வட்டத்தால் அளப்ப நீண்ட -முடிவட்டம்
ஆகாயமூடறுத்து அண்டம் போய் நீண்டதே
மா காயமாய் நின்ற மாற்கு ——–13-

————–

ஏழு மா மரம் உருவி, கீழ் உலகம் என்று இசைக்கும்
ஏழும் ஊடு புக்கு உருவி, பின் உடன் அடுத்து இயன்ற
ஏழ் இலாமையால் மீண்டது, அவ் இராகவன் பகழி;
ஏழு கண்டபின், உருவுமால்; ஒழிவது அன்று, இன்னும். 16

ஏழு வேலையும், உலகம் மேல் உயர்ந்தன ஏழும்,
ஏழு குன்றமும், இருடிகள் எழுவரும், புரவி
ஏழும், மங்கையர் எழுவரும், நடுங்கினர் என்ப –
'ஏழு பெற்றதோ இக் கணைக்கு இலக்கம்?' என்று எண்ணி. 17-

வையம் நீ வானும் நீ மற்றும் நீ மலரின் மேல்
ஐயன் நீ ஆழி நீ ஆழி வால் அமலன் நீ
செய்ய தீ அனைய அத்தேவு நீ நாயினேன்
உய்ய வந்து உதவினாய் உலகம் முந்து உதவினாய்-சுக்ரீவன் ஸ்துதி

நீராய் நிலனாய்த் தீயாய்க் காலாய் நெடு வானாய்
சீரார் சுடர்கள் இரண்டாய் சிவனாய் அயனானாய் -6-9-1-

தீயாய் நீராய் நிலனாய் விசும்பாய் காலாய்
தாயாய் தந்தையாய் மக்களாய் மற்றுமாய் முற்றுமாய்
நீயாய் நீ நின்றவாறு இவை என்ன நியாயங்கள் -7-8-1-

வானர வீரர்களின் மகிழ்ச்சி
ஆடினார்; பாடினார்; அங்கும் இங்கும் களித்து
ஓடினார்; உவகை இன் நறவை உண்டு உணர்கிலார்;-
'நேடினாம் வாலி காலனை' எனா, நெடிது நாள்
வாடினார் தோள் எலாம் வளர, மற்று அவர் எலாம். 21

ஓடுவார் விழுவார் உகந்து ஆலிப்பார்
நாடுவார் நம்பிரான் எங்குற்றான் என்பார்
பாடுவார்களும் பல்பறை கொட்ட நின்று
ஆடுவார்களும் ஆயிற்று ஆய்ப்பாடியே––ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி–1-1-2-

தேறினன் அமரர்க்ககொல்லாம் தேவாரம் தேவரன்றே
மாறி இப்பிறப்பில் வந்தார் மானுடராகி மன்னோ
ஆறு கொள் சடிலத்தானும் அயனும் என்று இவர்களாதி
வேறுள குழுவை எல்லாம் மானுடம் வென்றது அம்மா —

முதலாவார் மூவரே அம்மூவருள்ளும் முதலாவான் மூரி நீர் வண்ணன் –முதல் திருவந்தாதி -15-

———-

அத்தா இது கேள் என ஆரியன் கூறுவான் இப்
பித்தாய விலங்கின் ஒழுக்கினைப் பேசலாமோ
எத்தாயர் வயிற்றினும் பின் பிறந்தார்கள் எல்லாம்
ஒத்தால் பரதன் பெரிதுத்தமனாதல் உண்டோ -வாலி வதைப் படலம்-இராமன் வியந்து இளவலுக்குக் கூறுதல்

கண்ணுற்றான் வாலி நீலக்கார் முகில் கமலம் பூத்து
மண்ணுற்று வரிவில் ஏந்தி வருவதே போலும் மாலை
புண்ணுற்றதனைய் சோரிப் பொறியோடும் பொடிப்ப நோக்கி
எண்ணுற்றாய் என் செய்தாய் என்று ஏசுவான் இயம்பலுற்றான்

திருச் செங்குன்றூரில் திருச் சிற்றாறு அதனுள் கண்ட அத் திருவடி என்றும்
திருச் செய்ய கமலக் கண்ணும் செவ் வாயும் செவ் வடியும் செய்ய கையும்
திருச் செய்ய கமல வுந்தியும் செய்ய கமலை மார்பும் செய்ய வுடையும்
திருச் செய்ய முடியும் ஆரமும் படையும் திகழ வென்ன சிந்தை யுளானே–8-4-7-

தூ நீர் முகில் போல் தோன்றும் நின் சுடர் கொள் வடிவும் கனி வாயும்
தே நீர்க் கமலக் கண்களும் வந்தென் சிந்தை நிறைந்த வா
மாநீர் வெள்ளி மலை தன் மேல் வண் கார் நீல முகில் போலே
தூ நீர்க் கடலுள் துயில்வானே எந்தாய் சொல்ல மாட்டேனே—8-5-4-

——————

மும்மை சால் உலகுக்கு எல்லாம் மூல மந்திரத்தை, முற்றும்
தம்மையே தமர்க்கு நல்கும் தனிப் பெரும் பதத்தை, தானே
இம்மையே, எழுமை நோய்க்கும் மருந்தினை, 'இராமன்' என்னும்
செம்மை சேர் நாமம் தன்னை, கண்களின் தெரியக் கண்டான். 79

'வாய்மையும், மரபும், காத்து, மன் உயிர் துறந்த வள்ளல்
தூயவன், மைந்தனே! நீ, பரதன்முன் தோன்றினாயே!
தீமைதான், பிறரைக் காத்து, தான் செய்தால் தீங்கு அன்று ஆமோ?
தாய்மையும் அன்றி, நட்பும், தருமமும், தழுவி நின்றாய்! 84-

மா வலச் சூலியார் வாழ்த்துநர்க் குயர் வரம்
ஓவலுற்று உதவள் நின் ஒரு தனிப் பெயர் இயம்பு
ஆவலிப்புடைமையாலாகும் அப்பொருளை யாம்
தேவ -நின் கண்டேற்கு அரிது எனோ தேரினே —

நன்மையையும் செல்வமும் நாளும் நல்குமே
தின்மையும் பாவமும் சிதைந்து தேயுமே
சென்மமும் மரணமும் இன்றித் தீருமே
இம்மையே ராம என்ற இரண்டு எழுத்தினால் –காப்புச் செய்யுள்

குலம் தரும் செல்வம் தந்திடும்
அடியார் படு துயராயின வெல்லாம்
நிலம் தரும் செய்யும் நீள் விசும்பு அருளும்
அருளோடு பெரு நிலம் அளிக்கும்
வலம் தரும் மற்றும் தந்திடும்
பெற்ற தாயினும் யாயின செய்யும்
நலம் தரும் சொல்லை நான் கண்டு கொண்டேன்
நாராயணா வென்னும் நாமம் –1-1-9-

சரணமாகும் தன தாள் அடைந்தார்க்கு எல்லாம்
மரணமானால் வைகுந்தம் கொடுக்கும் பிரான் -9-10-5-

காவலில் புலனை வைத்துக் கலி தன்னைக் கடக்கப் பாய்ந்து
நாவலிட்டுழி தருகின்றோம் நமன் தமர் தலைகள் மீதே
மூவுலகுண்டு உமிழ்ந்த முதல்வ நின் நாமம் கற்ற
ஆவலிப்புடைமை கண்டாய் அரங்க மா நகருளானே

நமனும் முற்காலனும் பேச நரகில் நின்றார்கள் கேட்க
நரகமே சுவர்க்கமாகும் நாமங்களுடைய நம்பி

பேர் ஆயிரம் கொண்ட பீடு உடையான்

ஸ்ரீ ராம ராம ராமேதி ரமே ராமே மநோ ரமே
சஹஸ்ர நாம தத் துல்யம் ராம நாம வராநநே

கம்ப நாடன் உரை செவியில் சாற்று பூம் கொம்ப நாடன் கொழுநன் இராமப் பேர்–தனியன்

ஸ்ரீ ராமா என்று ஒரு கால் உரைத்தார் உன் தன்
திரு நாமம் ஆயிரத்துக்கு இல்லையாம் என்றே
நீராரும் சடையான் பாகத்து உமைக்கு நிகழ்த்திடில்
அம்மந்திரத்துக்கு இணை ஓன்று உண்டோ -தனிப்பாடல் –

————-

கோ இயல் தருமம், உங்கள் குலத்து உதித்தோர்கட்கு எல்லாம் –
ஓவியத்து எழுத ஒண்ணா உருவத்தாய்! – உடைமை அன்றோ?
ஆவியை, சனகன் பெற்ற அன்னத்தை, அமிழ்தின் வந்த
தேவியை, பிரிந்த பின்னை, திகைத்தனை போலும், செய்கை! 86-

முன்பு, நின் தம்பி வந்து சரண் புக, "முறை இலோயைத்
தென் புலத்து உய்ப்பென்" என்று செப்பினன்; செருவில், நீயும்,
அன்பினை உயிருக்கு ஆகி, "அடைக்கலம் யானும்" என்றி
என்பது கருதி, அண்ணல், மறைந்து நின்று எய்தது' என்றான். 125–

இராமனைத் துதித்து, வாலி ஓர் வரம் வேண்டுதல்
'ஏவு கூர் வாளியால் எய்து, நாய் அடியனேன்
ஆவி போம் வேலைவாய், அறிவு தந்து அருளினாய்;
மூவர் நீ! முதல்வன் நீ! முற்றும் நீ! மற்றும் நீ!
பாவம் நீ! தருமம் நீ! பகையும் நீ! உறவும் நீ! 129

யாவரும் எவையுமாய் இருதுவும் பயனுமாய்
பூவி நல் வெறியும் ஒத்து ஒருவரும் பொதுமையாய்
யாவன் நீ யாவது என்று அறிவினார் அருளினார்
தாவரும் பதம் எனக்கு அருமையோ தனிமையோய்–

யாவையும் யாவரும் தானாய் –திருவாய் 3-4-10–

மற்று இனி உதவி உண்டோ ? – வானினும் உயர்ந்த மானக்
கொற்றவ! – நின்னை, என்னைக் கொல்லிய கொணர்ந்து, தொல்லைச்
சிற்றினக் குரங்கினோடும் தெரிவு உறச் செய்த செய்கை,
வெற்று அரசு எய்தி, எம்பி, வீட்டு அரசு எனக்கு விட்டான். 133

நிற்கின்ற செல்வம் வேண்டி நெறி நின்ற பொருள்கள் எல்லாம்
கற்கின்றது, இவன் தன் நாமம்; கருதுவது இவனைக் கண்டாய்;
பொன் குன்றம் அனைய தோளாய்! பொது நின்ற தலைமை நோக்கின்,
எற் கொன்ற வலியே சாலும்; இதற்கு ஒன்றும் ஏது வேண்டா. 140

கற்பார் ராமபிரானை அல்லால் மற்றும் கற்பரோ
புற்பா முதலாப் புல் எறும்பாதி ஓன்று இன்றியே சராசரம் முற்றவும்
நற்பால் அயோத்தியில் வாழும் சராசரம் முற்றவும்
நற்பாலுக்கு உய்த்தனன் நான்முகனார் பெற்ற நாட்டுளே–7-5-1–

———-

நெய் அடை நெடு வேல் தானை நீல் நிற நிருதர் என்னும்
துய் அடை கனலி அன்ன தோளினன், தொழிலும் தூயன்;
பொய் அடை உள்ளத்தார்க்குப் புலப்படாப் புலவ! மற்று உன்
கையடை ஆகும்' என்ன, இராமற்குக் காட்டும் காலை, 158-

மெய்யானாகும் விரும்பித் தொழுவார்க்கு எல்லாம்
பொய்யனாகும் புறமே தொழுவார்க்கு எல்லாம் -9-10-7-

மெய்யர்க்கே மெய்யானாகும் விதியிலா என்னைப் போலே
பொய்யர்க்கே பொய்யனாகும் புட் கொடியுடைய கோமான் –திருமாலை -15-

இராமன் அங்கதனுக்கு உடைவாள் அளித்தலும், வாலி விண் ஏகுதலும்
தன் அடி தாழ்தலோடும், தாமரைத் தடங் கணானும்,
பொன் உடைவாளை நீட்டி, 'நீ இது பொறுத்தி' என்றான்;
என்னலும், உலகம் ஏழும் ஏத்தின; இறந்து, வாலி,
அந் நிலை துறந்து, வானுக்கு அப் புறத்து உலகன் ஆனான். 159

————

தீர்த்தனும் கவிகளும் செறிந்து நம்பகை
பேர்த்தன இனி எனப் பேசி வானவர்
ஆர்த்தென ஆர்த்தன மேகமாய் மலர்
தூர்த்தன ஒத்தன துள்ளி வெள்ளம் -19-

ஓவாத் துயர்ப் பிறவி யுட்பட மற்று எவ்வெவையும்
மூவாத் தனி முதலாய் மூவுலகும் காவலோன்
மாவாகி யாமையாய் மீனாகி மானிடமாம்
தேவாதி தேவ பெருமான் என் தீர்த்தனே –2-8-5-

தீர்த்தன் உலகளந்த சேவடி மேல் பூந்தாமம்
சேர்த்தி யவையே சிவன் முடி மேல் தான் கண்டு
பார்த்தன் தெளிந்து ஒழிந்த பைந்துழாயன் பெருமை
பேர்த்தும் ஒருவரால் பேசக் கிடந்ததே –2-8-6-

தீர்த்தனுக்கு அற்ற பின் மற்று ஓர் சரணில்லை என்று எண்ணித் தீர்த்தனுக்கே
தீர்த்த மனத்தனனாகிச் செழுங் குருகூர்ச் சடகோபன் சொன்ன
தீர்த்தங்கள் ஆயிரத்துள் இவை பத்தும் வல்லார்களைத் தேவர் வைகல்
தீர்த்தங்களே என்று பூசித்து நல்கி யுரைப்பர் தம் தேவியர்க்கே–7-10-11-

————

வழை துறு கானயாறு மா நிலக் கிழத்தி மக்கட்கு
உழைத்துறு மலை மாக் கொங்கை சுரந்த பால் ஒழுக்கை ஒத்த
விழை வுறு வேட்கை நாளும் வேண்டினார்க்கு தவ வேண்டிக்
குழை தோறும் கனகம் தூங்கும் கற்பகம் நிகர்த்த கொன்றை -34-

காரார் வரைக் கொங்கை –சிறிய திருமடல்

மழைக் கூந்தல் தென்னன் உயிர் பொறுப்பும் தெய்வ வடமலையும் என்னும்
இவையே முலையா வடிவமைத்த –பெரிய திருமடல் —

அழைக்கும் கரும் கடல் வெண் திரைக்கே கொண்டு போய் அலர்வாய்
மழைக் கண் மடந்தை யரவணை ஏற மண் மாதர் விண் வாய்
அழைத்து புலம்பி முலை மலை மேல் நின்றும் ஆறுகளாய்
மழைக் கண்ண நீர் திருமால் கொடியேன் என்று வார்கின்றதே –திரு விருத்தம் – 52-

—————

என்ன இத்தகைய பன்னி ஈடழிந்து ஏங்குகின்ற
தன்னை ஒப்பானை நோக்கித் தகை அழிந்து அயர்ந்த தம்பி
நின் எத்தகையவாக நினைந்தனை நெடியோய் என்னாச்
சென்னியில் சுமந்த கையன் தேற்றுவான் செப்பலுற்றான் -64-

தன் ஒப்பாரில் அப்பன் -6-3-9-

———–

நஞ்சம் அன்னவரை நலிந்தாலது
வஞ்சம் அன்று மனு வழக்கு ஆதலால்
அஞ்சில் ஐம்பதில் ஓன்று அறியாதவன்
நெஞ்சில் நின்று நிலாவ நிறுத்துவாய் -5-

அஞ்சில் அறியாதார் ஐம்பதிலும் தாம் அறியார்
என் சொல் எனக்கோ எதிராசா -நெஞ்சம்
உன்ன தாள் ஒழிந்த வற்றியே யுகக்க இன்றும்
அனுதாபம் அற்று இருக்கையால் —–ஆர்த்தி பிரபந்தம் —38-

—————-

தன்னைத்தான் உணரத்தீரும் தகை அறு பிறவியின்பது
என்னத்தான் மறையும் மற்றத் துறைகளும் இசைத்தார் எல்லாம்
முன்னைத் தான் தன்னை ஓரா முழுப்பிணி அழுக்கின் மேல்
பின்னைத் தான் பெறுவது அம்மா நறவுண்டு திகைக்கும் பித்தோ -92-மது உண்ட மயக்கத்தால்

ஆவியை அரங்கமாலை அழுக்கு உடம்பு எச்சில் வாயால்

பொய்ந்நின்ற ஞானமும் அழுக்கு உடம்பும் –திருவிருத்தம் -1-

————-

பச்சிலை, கிழங்கு, காய், பரமன் நுங்கிய
மிச்சிலே நுகர்வது; வேறுதான் ஒன்றும்
நச்சிலேன்; நச்சினேன் ஆயின், நாய் உண்ட
எச்சிலே அது; இதற்கு ஐயம் இல்லையால். 113-

போனகம் செய்த சேடம் தருவரேல் புனிதம் அன்றே

உடுத்துக் கலைந்த நின் பீதாக வாடை உடுத்துக் காலத்தது உண்டு
தொடுத்த துழாய் மலர் சூடிக் கலைந்த சூடும் இத்தொண்டர்களோம்

சேஷாசநர் -த்வதீய புக்த உஜ்ஜித சேஷ போஜிநா -ஆளவந்தார் –

———–

சுக்கிரீவன் இராமன் சேவடி பணிதல்
கண்ணிய கணிப்ப அருஞ் செல்வக் காதல் விட்டு,
அண்ணலை அடி தொழ அணையும் அன்பினால்,
நண்ணிய கவிக் குலத்து அரசன், நாள் தொறும்
புண்ணியன் – தொழு கழல் பரதன் போன்றனன். 124

நம்மால் போற்றத் தரும் புண்ணியன்

————

கோடுறுமால் வரையதனைக் குறுதிரேல் உம் நெடிய கொடுமை நீங்கி
வீடு உறுதி ஆதலினால் விலங்குதிர் அப்புறத்து நீர் மேவு கொண்ட
நாடு உறுதிர் உற்று அதனை நாடி அதன் பின்னை நளி நீர்ப் பொன்னிக்
கேடுறு தண் புனல் தெய்வத்திரு நதியின் இருகரையும் சேர்திர் மாதோ –29-

வேங்கடங்கள் மெய் மேல் வினை முற்றவும்,
தாங்கள் தங்கட்கு நல்லனவே செய்வார்,
வேங்கடத்து உறைவார்க்கு நம என்னல்
ஆம் கடமை அது சுமந்தார்கட்கே–3-3-6-

————

கொண்டலின் குழவி, ஆம்பல், குனி சிலை, வள்ளை, கொற்றக்
கெண்டை, ஒண் தரளம், என்று இக் கேண்மையின் கிடந்த திங்கள்-
மண்டலம் வதனம் என்று வைத்தனன், விதியே; நீ, அப்
புண்டரிகத்தை உற்ற பொழுது, அது பொருந்தித் தேர்வாய். 58-பிராட்டி அவயவ வர்ணனை –

'காரினைக் கழித்துக் கட்டி, கள்ளினோடு ஆவி காட்டி,
பேர் இருட் பிழம்பு தோய்த்து, நெறி உறீஇ, பிறங்கு கற்றைச்
சோர் குழல் தொகுதி என்று சும்மை செய்தனையது அம்மா! –
நேர்மையைப் பருமை செய்த நிறை நறுங் கூந்தல் நீத்தம்! 59-

கோளிழைத் தாமரையும் கொடியும் பவளமும் வில்லும்
கோளிழைத் தண் முத்தமும் தளிரும் குளிர் வான் பிறையும்
கோளிழை யாவுடைய கொழுஞ்சோதி வட்டங்கொல்? கண்ணன்
கோளிழை வாண் முகமாய்க் கொடியேன் உயிர் கொள்கின்றதே––ஸ்ரீ திருவாய் மொழி-7-7-8-

———————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ கம்பநாட்டு ஆழ்வார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்