ஸ்ரீ ராமானுஜ நூற்றந்தாதி பாசுரமும்- ஸ்ரீ ஆழ்வார் பாசுரங்களும் –11- சீரிய நான் மறைச் செம் பொருள் செம் தமிழால் அளித்த இத்யாதி —

ஸ்ரீ பெரிய ஜீயர் அருளிய உரை ––அவதாரிகை –

ஸ்ரீ திருப் பாண் ஆழ்வார் திருவடிகளை சிரஸா வஹிக்கும் ஸ்ரீ எம்பெருமானாரைத் தங்களுக்கு
அபாஸ்ரயமாகப் பற்றி இருக்கும் அவர்களுடைய கார்ய வை லஷண்யம் இந்த லோகத்தில்
என்னால் சொல்லித் தலைக் கட்ட ஒண்ணாது-என்கிறார் –

ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் அருளிய உரை–அவதாரிகை-

இவ்வளவாக மூன்று பாட்டாலும் -ஸ்ரீ முதல் ஆழ்வார்கள் மூவருடைய சம்பந்தத்தை உடைய
ஸ்ரீ எம்பெருமானாரை கொண்டாடி -இப்பாட்டிலே -தமக்கு இவ்வளவாம் அதிகாரம் உண்டாகும்படி -முதல் அடியிலே
தம்மை விஷயீ கரித்த ஸ்ரீ பெரிய பெருமாளுடைய திருவடிகளிலே –திரு அவதாரமே பிடித்து -இடைவிடாதே –
நிரவதிக பிரவணராய் -இசைகாரர் -என்று ஸ்ரீ நம் ஆழ்வாரால் கொண்டாடப் பட்ட மகா வைபவத்தை உடையரான –
ஸ்ரீ திருப் பாண் ஆழ்வார் திருவடித் தாமரைகளிலே -நிரவதிக பிரவணரான -ஸ்ரீ எம்பெருமானாரை ஆஸ்ரயித்தவருடைய
அனுஷ்டானம் -இந்த மகா பிருதிவியிலே -என்னால் சொல்லித் தலைக் கட்ட போகாது -என்கிறார் –

ஸ்ரீ அமுது விருந்து-ஸ்ரீ திருமலை நல்லான் சக்கரவர்த்தி ஸ்ரீ ராம கிருஷ்ண ஐயங்கார் ஸ்வாமிகள்-அருளிய உரை–அவதாரிகை–

ஸ்ரீ திருப் பாண் ஆழ்வார் திருவடிகளைத் தலையால் தாங்கும் ஸ்ரீ எம்பெருமானாரைச் சார்வாக கொண்டவர்கள் உடைய
அனுஷ்டானத்தின் சிறப்பு இவ்வுலகில் என்னால் சொல்லித் தலைக் கட்ட ஒண்ணாது என்கிறார் –

பெயரையும் வூரையும் பல ஸ்ருதியும் இன்றி அருளிய ஐவரையும் சொல்ல வந்தவர் –
முதல் மூவரும் -திரு மழிசை ஆழ்வாரும் திரு பாண் ஆழ்வாரும்.-அயோநிஜராக தோன்றினார்
நெல் கதிரில் தோன்றி .மூவரும் போல…அதனால் நால்வரையும் சேர்த்தார்.
இந்த வாசி அறிவதற்காக திரு மழிசை ஆழ்வாரை அப்புறம் பாடினார்-பாலேய் தமிழர் இசைகாரர் -என்ற கிரமத்தாலும்-
கார்த்திகை ரோகிணி உறையூரில் -திரு பாண் பெருமாள்-

சீரிய நான் மறைச் செம் பொருள் செம் தமிழால் அளித்த
பாரியிலும் புகழ்ப் பாண் பெருமாள் சரணாம் பதுமத்
தாரியல் சென்னி யிராமானுசன் தன்னைச் சார்ந்தவர் தம்
காரிய வண்மை என்னால் சொல்ல ஒண்ணாது இக்கடலிடத்தே – 11-

பத உரை –

சீரிய -சிறப்பு வாய்ந்த
நான் மறை -நான்கு வகைப் பட்ட வேதத்தினுடைய
செம் பொருள்-நேரிய பொருளை
செம் தமிழால் -செவ்விய தமிழ் நூலினாலே
அளித்த -அருளிச் செய்த
பாண் பெருமாள் -திருப் பாண் ஆழ்வார் உடைய
பதுமத்தார் -தாமரைப் பூ
இயல்-அலங்கரிக்கிற
சென்னி -திரு முடியயுடைய
இராமானுசன் தன்னை -எம்பெருமானாரை
சார்ந்தவர் தம் -பற்றி நிற்பவர்களுடைய
காரிய வண்மை -நெறிப்பட ஒழுகும் மாட்சியை
இக்கடல் இடத்து -இந்த கடல் சூழ்ந்த உலகத்தில்
என்னால் சொல்ல ஒண்ணாது -என்னால் சொல்லித் தலைக் கட்ட இயலாது

பகவத் ஸ்வரூப ரூப குண விபூதிகளை உள்ளபடி பிரதிபாதிக்கையால் வந்த சீர்மையை உடைத்தாய்
ருகாதி பேதத்தாலே நாலு வகை பட்டு இருந்துள்ள வேதத்தின் உடைய ஸ்வ ரசமான அர்த்தத்தை
நடை விளங்கு தமிழால்( -பெருமாள் திருமொழி -1 – 10- )-உபகரித்து அருளின வராய்-
பூமியில் வர்த்தியா நின்று உள்ள கீர்த்தியை உடைய திருப் பாண் ஆழ்வார் திருவடிகள் ஆகிற
தாமரைப் பூவாலே அலங்க்ருதமான திரு முடியை உடைய எம்பெருமானாரை
அபாஸ்ரயமாக பற்றி இருக்கும் அவர்களுடைய அநுஷ்டான வைலஷண்யம்
இந்த கடல் சூழ்ந்த பூமியில் என்னால் சொல்லித் தலைக் கட்ட ஒண்ணாது

இக்கடல் இடத்தே இராமானுசன் தன்னைச் சார்ந்தவர் -என்று அன்வயித்து –
பகவத் சமாஸ்ரயணத்துக்கு கூட இசைவார் இல்லாத இந்த லோகத்திலே -அதனுடைய எல்லை
நிலத்து அளவும் வந்து எம்பருமானாரை ஆஸ்ரயிக்க பெற்றவர்கள் -என்னவுமாம் –

பாரியல் -என்ற இடத்தில் இயல்தல் -நடத்தல்
தாரியல்-என்கிற இடத்தில் இயல்தல்-அலங்கரித்தல்
தார்-பூ
காரியம் -க்ருத்யம்
காரியல் வண்ணம் -என்று பாடமான போது -காரி யினுடைய இயல்வை உடைத்தான ஒவ்தார்யம் -என்கை
அதாவது ஜல ஸ்தல விபாகம் பாராதே அது வர்ஷிக்குமா போலே -சர்வ விஷயமாக-எம்பெருமானாருடைய திவ்ய குணங்களை வர்ஷிக்கை –

சீரிய -விசேஷணம் –
1-நான் மறைக்கும் –2-செந் தமிழுக்கும் -3–பாரியிலும் புகழுக்கும் -4- பாண் பெருமாளுக்கும் -5-சரணத்துக்கும் –
6- பதுமத்தாரியல்லுக்கும் -7–சென்னிக்கும் –8-இராமானுஜருக்கும் -9–தன்னைச் சார்ந்தவர்களுக்கும் –
8-அவர்களின் காரிய வண்மைக்கும் -கொள்ளலாமே –
அ சாரம்-அல்ப சாரம்-சாரம் -சாராதரம்-தள்ளி – சாரதமம் கொள்ள வேண்டுமே அதுவே -செம் பொருள் –
கர்த்தவ்யம் பகவத் – ஆச்சார்ய -பாகவத கைங்கர்யங்கள் –
கூரத் ஆழ்வான் /முதலியாண்டான் /திருக் குருகை பிரான் பிள்ளான் – அனந்தன் ஆண் பிள்ளை – போன்றோர் வைபவம்-
காரியல் வண்மை-மேகம் போன்ற ஸ்வ பாவம் -திருப்பாண் ஆழ்வார் திருவடி சம்பந்தத்தால் பெற்ற ராமானுஜன் தன்னை
சார்ந்தவர்களுக்கு அருளிய – காரேய் கருணை வள்ளல் அன்றோ -அமுதனார் திரு உள்ளம் படி நாமும் இருக்க வேண்டுமே
ராமானுஜர் அடியவர் என்று பேர் கொண்டால் -பொறுப்பு நமக்கும் வருமே-
ஆச்சார்யர் திருவடி ஒத்து பிரசாதம் சென்னியில் நித்யம் சூடிக் கொள்கிறோம் –
நம்பாடுவான் -குலமே திருப் பாண் ஆழ்வார்-

சீரிய நான் மறைச் செம் பொருள் –
சாஹி ஸ்ரீ ரம்ர்தாசதாம் -என்று சத்துக்களுக்கு சம்பத்தாய் -ரிக் யஜுஸ் சாம அதர்வண ரூபேண
நாலு வகைப் பட்டு இருக்கிற -வேதங்களில் வைத்துக் கொண்டு
அசாரம் -அல்ப சாரம் – சாரம் -சார தரம் -த்யஜேத் –
பஜேத் சார தர -சாஸ்திர -ரத்னாகர இவாம்ர்தம் -அனுப்யச்ய-மகாத்ப்யஸ் ச சாஸ்த்ரேப்யோ-என்றும் –
சுருதி பத விபரீத ஷ்வேவகல்ப ஸ்ருதவ்ச பிரகிருதி புருஷ யோக பிரபாக சோனதத்ய-ததிஹா விபுத குப்த
ம்ர்த்யு பீதாவி சின்வந்த்யுபு நிஷதம்ர்தாப்த்தே ருத்ம சாரமார்யா – என்றும் சொல்லுகிறபடியே –
உபாதேய -சார தமமாய் -இருந்துள்ள திரு மந்த்ரத்தின் உடைய பிரக்ருதியான -பிரணவத்தினுடைய –
அவயவங்களான -அகார உகார மகாரங்களுடைய அர்த்த விசேஷங்களை செந்தமிழால்-
அமலனாதி பிரான் என்றும் -உவந்த உள்ளத்தனாய் -என்றும் -மந்தி பாய் வட வேங்கட மா மலை என்றும் –
தம்முடைய பிரபந்த ஆதி யான மூன்று பாட்டுக்களுடைய முதல் அடியிலே -சார தம அர்த்த விசேஷ பிரதி பாதங்களாய் இருக்கையாலே
சகல வேத சாரம் என்று -ச்லாக்கிக்கப் படுகிற -அஷரத்தையும் கூட்டி சந்தர்ப்பித்த பிரபந்தத்தாலே –

சீரிய நான்மறைச் செம் பொருள் –
ருக் யஜுர் சாம அதர்வணம் -என்று வேதம் நான்கு வகை பட்டது என்கை –
அந்த வேதத்துக்கு சீர்மையாவது –
பரம் பொருளின் ஸ்வரூபம் -ரூபம்-குணம்-விபூதி -இவைகளை உள்ளபடி விளங்க வைத்தல்-
ஸ்வரூபம் பகவானது திவ்யாத்ம தத்துவம்
ரூபம் –அவனது மாசூணாச் சுடர் உடம்பு
குணம்-ஆன்ம தத்துவத்தைப் பற்றி நிற்கும் அறிவு -ஆற்றல்-கருணை முதலிய பண்புகளும் –சுடர் உடம்பை பற்றி நிற்கும்
அழகு மென்மை இளமை முதலியவைகளும்
விபூதி -பரம பதமும் -இவ் உலகங்களுமாகிய இறைவனுடைய சொத்து –

இனி பிரத்யஷம் -அநுமானம்-எனப்படும் ஏனைய பிரமாணங்களை விட -யாராலும் ஆக்கப்படாது -சொல் வடிவமாய் அமைந்த
மறை சிறந்த பிரமாணமாய் இருத்தலைச் சீர்மையாகக் கொள்ளலுமாம் –
திடவிசும்பு எரிவளி நீர்நிலம் இவைமிசைப்
படர்பொருள் முழுவதும் ஆய்அவை அவைதொறும்
உடல்மிசை உயிர்எனக் கரந்துஎங்கும் பரந்துளன்
சுடர்மிகு சுருதியுள் இவைஉண்ட சுரனே.—1-1-7- சுடர் மிகு சுருதி -என்று-நம் ஆழ்வார் அருளியதும் காண்க
செம் பொருள் –பண்புத் தொகை -செம்மையான பொருள் என்று விரிக்க –
பொருளுக்கு செம்மையாவது -போக்கிலேயே இடர் படாது விளங்குதல் -ஸ்வ ராசர்தம்-என்பர் வட மொழியில்

அளித்த –
சர்வரையும் ரஷித்து அருளினவராய் –

செம் தமிழால் பாண் பெருமாள்-
நான்கு வகைப்பட்ட மறைகளும் வட மொழியில் கூறும் செம் பொருளை செம் தமிழ் அமைத்தஒரு திவ்ய பிரபந்தத்தாலே அருளி செய்தார்
திருப் பாண் ஆழ்வார் -நால் வகையில் விரிந்து கிடக்கும் வட மொழி மறைகளில் நாம் உணர வேண்டிய செவ்விய பொருளை
செம் தமிழால் அமைந்த பத்துப் பாட்டுக்களே கொண்ட-
அமலனாதி பிரான் -என்னும் திவ்ய பிரபந்தத்தாலே காட்டி அருளி பேருதவி புரிந்தவர் திருப் பாண் ஆழ்வார் -என்க-

வேதியர் தாம் விரித்து உரைக்கும் விளைவுக்கு எல்லாம் விதையாகும் இது வென்று விளம்பினோமே – என்று
வேதாந்த தேசிகன் முனி வாஹன போகத்தில் அனுபவித்து அறிந்து பேசுவதை இங்கு நினைவு கூறுக –
செம் தமிழ்
பொருள் விளங்கும் நடையிலே அமைந்த தமிழ் செம் தமிழ் எனப்படும் –
திடர் விளங்கு கரை பொன்னி நடுவு பாட்டு
திரு வரங்க தரவணையில் பள்ளி கொள்ளும்
கடல் விளங்கு கரு மேனி அம்மான் தன்னை
கண்ணார கண்டு உகக்கும் காதல் தன்னால்
குடை விளங்கு விறல் தானை கொற்ற ஒள் வாள்
கூடலர் கோன் கொடை குலசேகரன் சொல் செய்த
நடை விளங்கு தமிழ் மாலை பத்தும் வல்லார்
நலம் திகழ் நாரணன் அடி கீழ் நண்னுவாரே—1-11- நடை விளங்கு தமிழ் மாலை -எனபது பெருமாள் திருமொழி – 1-11-

செஞ்சொல் மறையவர் சேர் புதுவைப்பட்டன் சொல் -1-3-10–
பட்டர் பிரான் சொன்ன பாடல் சீர் மலி செந்தமிழ் வல்லார் தீவினை யாதும் இலரே -2-5-10-
இன்னிசையால் சொன்ன செஞ்சொல் மாலை ஏத்த வல்லார்க்கு இடம் வைகுந்தமே–பெரிய திருமொழி -2-8-10-

பாரியலும் புகழ்
அகண்டமான பூ மண்டலத்தில் வியாபித்த கல்யாண குணங்களும் கீர்த்தியையும் உடையவராய்-
இயலுதல்-நடத்தல் –

பாண் பெருமாள்
இசைகாரர் -என்கிறபடியே -தந்த்ரீ லயைகளை அடைவே அறிந்து -ஏதத் சாமகாயன் நாஸ்தே – என்றால் போலே –
பெரிய பெருமாளுக்கு உகப்பாம் படி -இனிதாகப் பாடுமவர் ஆகையாலே -அந்த இசையை
நமக்கு -நிரூபகமாக உடையவராய் -மகானுபாவரான -திருப் பாண் ஆழ்வாருடைய –

பார் இயலும் புகழ்
இயலுதல் -நடத்துதல் –அதாவது புகழ் பூமியில் பரவுதல் –
அரும்பாடு பட்டு பெற வேண்டிய பொருள் ஆகிய வேதத்தின் செம் பொருளை -எல்லாருக்கும் புரியும்படி -சுருக்கமாக –
செம் தமிழால் -அளித்தமைபற்றி இப் புகழ் பாரினில் இயல்கின்றது என்க –

அமலனாதி பிரான் -என்கிற முதல் பாசுரத்திலே –
ஆதி -என்று காரணமான பரமாத்மா ஸ்வரூபமும்
விண்ணவர் கோன் -என்பதனால் நித்ய சூரிகள் சேவிக்கும் பர ரூபமும் –
வேம்கடவன் -என்பதனாலும் -அரங்கத்தம்மான் -என்பதனாலும் அர்ச்சாரூபமும் –
அமலன் நிமலன் -முதலிய சொற்களினால் ஹேய ப்ரத்ய நீகத்வம் -மாசு நீக்கித் தூய்மை படுத்துதல் -முதலிய குணங்களும்
கமல பாதம் -என்பதனால் திரு மேனிக்கு உண்டான அழகும் மென்மை குளிர்ச்சி முதலிய குணங்களும்
நீதி வானவன் -என்பதனால் -பரம பதமாகிய நித்ய விபூதி செல்வமும்
அடியார்க்கு என்னை ஆள் படுத்த -என்பதனால் லீலா விபூதி என்னும் இவ் உலக செல்வமும்-சேரச் சொல்லப் பட்டு உள்ளமை காண்க –

பாண் பெருமாள்-
ஆழ்வார்கள் பதின்மருள் குலசேகரரும் பாணருமே -பெருமாள் -என்று நூல்களில் வழங்கப் படுகின்றனர்
குலசேகரர்-அருளி செய்த திருமொழி -பெருமாள் திருமொழி -என்று வழங்கப் படுவது காண்க
இங்கே அமுதனார் -பாண் பெருமாள்-என்று வழங்குகிறார் திருப் பாண் ஆழ்வாரை –

இவரை அடி ஒற்றி இவர் குலத்தவரான ஐயங்கார் திருவரங்கத் தந்தாதியில் –
வையம் புகழ் பொய்கை பேய் பூதன் மாறன் மதுரகவி
யையன் மழிசை மன் கோழியர் கோன் அருள் பாண் பெருமான்
மெய்யன்பர் காற் பொடி விண்டு சித்தன் வியன் கோதை வெற்றி
நெய்யங்கை வேற் கலியன் தமிழ் வேத நிலை நிற்கவே –-அருள் பாண் பெருமாள் -என்கிறார் –

வேதாந்த தேசிகன் முனி வாஹன போகத்தில் –
காண்பனவும் உரைப்பனவும் மற்று ஓன்று இன்றி
கண்ணனையே கண்டு உரைத்த கடிய காதல்
பாண் பெருமாள் அருள் செய்த பாடல் பத்தும்
பழ மறையின் பொருள் என்று பரவுகின்றோம்
வேண் பெரிய விரி திரை நீர் வையத்துள்ளே
வேதாந்த வாரியன் என்று இயம்ப நின்றோம்
நாம் பெரியோம் அல்லோம் நாம் அன்றும் தீதும்
நமக்கு உரைப்பார் உளர் என்று நாடுவோமே–கண்ணனையே கண்டு உரைத்தக கடிய காதல் பாண் பெருமாள் -என்று
அருளி இருப்பதும் அறியத் தக்கது –

பாணர் குலத்தினில் சேர்ந்தவர் ஆதலால் இவருக்கு பாணர் -என்ற பெயர் ஏற்ப்பட்டது -என்பர்
பாண்-இசைப் பாட்டு -அதனைப் பாடுதலின் பாணர் எனப் பட்டோர் அக்குலத்தினர் –
கையில் யாழ் ஏந்தி இசைத்து வள்ளல்கள் இடம் பரிசு பெறுவது இவர் தம் தொழில் –
இனிது தூது இசைத்து தலைவின் ஊடல் நீக்கி பிரிவாற்றாத தலைவனஈனைத்து இன்புறச் செய்வதும் இவர்கள் தொழிலாம்
நீணிலா முற்றத்து நின்றிவள் நோக்கினாள்
காணுமோ கண்ண புரம் என்று காட்டினாள்
பாணனார் திண்ணம் இருக்க வினி யிவள்
நாணுமோ நன்று நன்று நறையூரர்க்கே –பெரிய திரு மொழி -8-2-2-
பாணனார் திண்ண மிருக்க இனி இவள் நாணுமோ -– என்னும் திரு மங்கை மன்னன் திரு வாக்கும் –
தலை மகன் பிரிந்தால் எதிர் தலையிலே உண்டான மறத்தைப் போக்கி சேர விடுகைக்காக பாணனை கொடுத்து வர விடும் –
அவர்களும் இனிய சொற்களாலே அவர்கள் நெஞ்சிலே மறத்தைப் போக்கி சேர விடுவார்கள்-என்று பெரிய வாச்சான் பிள்ளை
அதனுடைய வியாக்யானமும் இங்கு அறிய தக்கன –
திருமங்கை மன்னன் திரு வாக்கில் பாணன் -என்னாது பாணனார் -என்று சிறப்பு தோற்ற அருளி செய்து இருப்பது குறிக் கொள்ளத் தக்கது –
உலகியலில் சேர்த்து வைக்கும் பாணன் அல்லன் இங்கே குறிப்பிடப் படுமவன் –
ஆன்ம இயலில் தலைவன் ஆகிற பரமாத்மாவோடு தலைவியாகிய ஜீவாத்மாவை சேர்த்து வைக்கும் ஆசார்யனே இங்கு
பாணனார் -என்று குறிப்பிடப் படுகிறான் எனபது திருமங்கை மன்னன் திரு உள்ளக் குறிப்பு –
இத் திருமங்கை மன்னனுக்கு ஆசார்யன் திரு நறையூர் நம்பி -ஆகவே -பாணனார் -என்று தாய்ப் பேச்சில்
குறிப்பிட படுபவர் திரு நறையூர் நம்பியே –
இதனை கடைசி அடியில் -நன்று நன்று நரையூரர்க்கே -என்று தாய் வெளிப்படையாக சொல்லுகிறாள்-
பெரிய வாச்சான் பிள்ளை இதனையும் தெளிவாக -தம் வ்யாக்யானதிலே காட்டி உள்ளார் –
இங்கு பாணனார் ஆகிறார் சேதனருக்கு ஸ்வா தத்ரியத்தால் வந்த மறத்தைப் போக்கி -சேஷத்வ ஞானத்தை உணர்த்தி சேர விடும்
ஆசார்யன் இறே -பாணனார் -என்கிறாள் காணும் இவள் -எனபது வியாக்யான ஸ்ரீ ஸூக்தி –

நம் பாண் பெருமாள்
பாணர் குலத்திலே பிறந்தவர் அல்லர் -உறையூரில் நெல் கதிரில் தோன்றி பாணர் குலத்தான் ஒருவனால் வளர்க்கப் பட்டார் –
அம்மரபுக்கு ஏற்ப கையிலே யாழ் ஏந்தி -அரங்க செல்வனாரை பாண் பாடி பரிசில் பெற்றார் –
இவர் பெற்ற பரிசில் மோஷம் –
அமலனாதி பிரானில் முதன்முதலாக மோஷம் கொடுப்பவன் என்னும் கருத்துடன் -அமலன் – என்கிறார் -வேதாந்த தேசிகன் –
அமலன் -என்கிறது மல பிரதிபடன் -என்றபடி –
இத்தால் மோஷ ப்ரதத்வம் சொல்லிற்று ஆயிற்று –என்று முனி வாஹன போகத்திலே அருளி செய்துள்ளமை காண்க –
பெருமாள் திருவடி வாரத்தில் கையும் வீணையுமாய் நின்று
பாண் பாடிப் பரிசிலாகப் பெருமாளோடு இரண்டற ஒன்றி விட்டமை பற்றி இவரும் பெருமாள் ஆயினார் போலும் –
இனி நான் மறை செம் பொருளை செம் தமிழால் அளித்து சேதனருக்கு ஸ்வா தத்ரியத்தால் வந்த மறத்தை போக்கி –
சேஷத்வ ஞானத்தை உணர்த்தி -பரமாத்மாவோடு சேர விடும் ஆசார்யனைப் பற்றி -பாண் பெருமாள்-என்கிறார் ஆகலுமாம் –

சரணாம் பதுமத் தாரியல் சென்னி –
குரு பாதம் புஜாத்யாதேத் -பவத் பதாப்ஜே ஹ்ர்ஷ்டாச்து நித்யமனுபூய மமாச்யபுத்தி – என்றும் சொல்லுகிறபடியே –
போக்ய தமமான பாத பத்மத்தாலே -கிரீடாதி சிரோ பூஷனங்களாலே -தம்தாமுடைய சிரச்சுக்களை –
அலங்கரித்து கொள்ளுவாரைப் போலே -அலங்கரிக்கப்பட்ட -உத்தம அங்கத்தை உடையவராய் –

சரணாம் பதுமத்தாரியல் சென்னி –
பாணனார் ஆசார்யர் ஆதலின் -அவர் திருவடிகளை தலையால் தாங்குகிறார் எம்பெருமானார் –
லோக சாரங்க மகா முனிகள் தோளினாலே தாங்கினார் நம் பாணரை –
எம்பெருமானாரோ தலையிலே வைத்து கொண்டாடுகிறார் -அவரை –
நம் பாணனார் கண்ணின் உள்ள அரங்கத் தம்மான் திருக் கமல பாதங்கள் எம்பெருமானார் சென்னியை அலங்கரித்தன –
நம் பாண் பெருமாள் சரணாம் பதுமம் –
சரண் ஆம் பதுமத்தார் -திருவடி யாகிய தாமரைப் பூ /தார் -பூ /இயலுதல்-அலங்கரித்தல்
துறவியும் பூணும் தாமரைப் பூ இது –

இராமானுசன் தன்னை –
இப்படி ததீய ப்ராவண்ய சீமா பூமியான எம்பெருமானாரை-சார்ந்தவர் தம் –ஆபாஸ்ரயமாய் பற்றி இருக்குமவர்களுடைய

காரிய வண்மை
சமயநியத யாசா சாதுவ்ர்த்யா -என்கிறபடியே சம்ப்ரதாய சித்தமாக கொண்டு –
கர்த்தவ்யம் ஆசார்ய கைங்கர்யமும் – பகவத் கைங்கர்யமும் -என்று உபதேசிக்கப்பட்ட அனுஷ்டான
சவ்ஷ்டவம் -சர்வ பிரபன்ன ஜனங்களுக்கும் இது ஒன்றுமே கர்த்தவ்யம் என்று தெரியும்படி
வெளிச் செறிப்பாக பண்ணினவர்கள் ஆகையாலே -அவர்களுடைய இப்படிப்பட்ட ஔ தார்யத்தை -என்றபடி .

என்னால் சொல்ல ஒணாது இக்கடலிடதே –
சதுச்சமுத்திர பரிவேஷ்டிதமான பூலோகத்திலே அவர்களுடைய பிரபாவத்தை உள்ளபடி அறிய மாட்டாதே
என்னால் சொல்லி தலைக் கட்ட அரிதாய் இருக்கும்
பதுமத்தார் -தாமரை புஷ்பம் /-இயல்தல் -அலங்கரித்தல் /கார்யம் -க்ர்த்தயம்–

அன்றிக்கே
இக்கடலிடத்தே –
என்கிற வாக்யத்தை –இராமானுசன் தன்னைச் சார்ந்தவர் தம் -என்கிற வாக்யத்தோடு கூட்டி அன்வயித்த போது –
பகவத் சமாஸ்ரயணத்துக்கும் கூட இசைவார் இல்லாத இருள் தரும் மா ஞாலத்திலே –
அதனுடைய எல்லை நிலமான எம்பெருமானார் திருவடிகளை ஆஸ்ரயிக்க பெற்றவர்களுடைய
பிரபாவம் என்னால் சொல்லி தலைக் கட்ட அரிதாய் இருக்கும் என்றபடி .
காரியல் வண்மை -என்ற பாடமான போது –
கார் வர்ஷூகவலாகம்-அதினுடைய இயலாவது ஜல ஸ்தல விபாகம் பாராதே ஏக ரூபமாக வர்ஷிக்கை –
வண்மை –
அம் மேகம் போலே சர்வ விஷயமாகவும் எம்பெருமானாருடைய திவ்ய குணங்களை வர்ஷிக்கை யாகிற ஔ தார்யத்தை -என்றபடி ..

இராமானுசன் தம்மை சார்ந்தவர் தம் காரிய வண்மை -என்றது
போதாயன வ்ருத்தியை சஸக்ருத் தர்சனத்தாலே ஆநு பூர்வியாக கிரஹித்தும்
கிருமிகண்டன் சதச்சிலே சென்று குத்ருஷ்டிகளை பிரசங்க முகத்தாலே ஜெயித்தும் நிர்வாஹராய் இருந்துள்ள ஆழ்வானும்

எம்பெருமானார் மேல் நாட்டில் -திக்விஜயம் பண்ணி யருளி கோயில் ஏற எழுந்து அருளிய போது –
மார்க்கத்திலே ஒரு அக்ரஹாரத்திலே-மாயாவாதிகள் வித்வான்கள் அநேகம் பேர் திரண்டு இருக்க –அவர்களை கடாஷித்து –
எல்லாரையும் ஸ்ரீ வைஷ்ணவராம்படி திருத்த வேணும் என்று திரு உள்ளம் பற்றி – ஆண்டானை கடாஷித்து –
நீர் போய் அவர்களை ஸ்நானம் பண்ணுகிற துறையிலே நித்யம் ஸ்ரீ பாதத்தை விளக்கிக் கொண்டு வாரும் -என்று அருளிச் செய்ய –
அவரும் அப்படியே பண்ண -பின்பு அத் தீர்த்த பானத்தாலே அந்த மாயாவாதிகள் எல்லாருக்கும் துர் வாசனை போய் –
ஆபி முக்கியம் பிறந்து -எம்பெருமானார் திருவடிகளிலே ஆஸ்ரயித்தார்கள் -என்று குரு பரம்பரா ப்ரபாவத்தில் சொல்லப்பட்ட முதலி ஆண்டானும் –

சகல வேதாந்த சாரமான திருவாய் மொழிக்கு வியாக்யானம் பண்ணின பிள்ளானும் –

திரு வேங்கடமுடையான் விஷயமாக -ஒழுவில் காலம் எல்லாம் உடனாய் மன்னி வழுவிலா அடிமை செய்ய வேண்டும் –
என்று ஆழ்வார் பிரார்த்தித்து அருளின கைங்கர்யங்களைப் பண்ணிக் கொண்டு போந்து -தாமாக ஒரு தடாகம்
நிர்மாணம் பண்ணுகிற போது -திருவேங்கடமுடையான் தாமாகவே தம்மோடு ஒக்க மண் தட்டை சுமந்து கொண்டு
வந்து சகாயம் பண்ணும்படி அப்ரதிமப்ரபாவரான அனந்த்தாழ்வானும் –

ஒரு நாள் வரையில் எம்பெருமானாருடைய கோஷ்டிக்கு போரும்படியாக ததீயாராதனம் பண்ணின பருத்தி கொல்லை யம்மாள் தேவிகள்
முதலானவர்களுடைய பிரபாபத்தை பாசுரம் இட்டு சொல்லப் போமோ -வாசாமகோசரம் -என்றபடி –

இராமானுசன் தன்னை சார்ந்தவர் தம் காரிய வண்மை –
அரங்கத் தம்மான் தன்னைக் காட்டப் பட்டதனால் கண்டு வாழ்ந்தார் பாணர் –
பாணர் அடி முதல் முடி வரை தாம் கண்டதை பாட்டினால் காட்ட -எம்பெருமானார் கண்டு
பிறருக்கும் அரங்கத் தம்மானுடைய அவ் அரும் கட்சியை அப் பாட்டினாலேயே காட்டிக் கொடுத்தார் –
அரங்கனை தமக்கு காட்டிய பாணர் சரணங்களை தலை மேல் புனைந்தார் எம்பெருமானார் –
அத்தகைய எம்பெருமானார் பாணர் பாட்டினாலேயே அரங்கனைக் காட்டித் தருதலின் -ஆசார்யராகிய அவரையே
தமக்கு சார்வாக கொண்டனர் சில சால்புடையோர் –
அவர்கள் அங்கனம் கொண்டதோடு ஆச்சார்யா அபிமான நிஷ்டையில் வழுவாது -ஒழுகி நிலை நிற்றல் அமுதனாருக்கு
மிக்க வியப்பும் நயப்பும் தருகிறது –
காரியம்-
அனுஷ்டானம் -அதாவது ஆச்சார்யா அபிமான நிஷ்டை வழுவாது ஒழுகுதல்-
வண்மை-
ஒவ்தார்யம் -சிறப்பு என்றபடி –வள்ளன்மையை சொல்லாது
எண் பெருக்கு அந் நலத்து, ஒண் பொருள் ஈறு இல
வண் புகழ் நாரணன், திண் கழல் சேரே–திருவாய் மொழி 1-2 10- – -என்னும் இடத்தில் போலே சீர்மையைக் குறிக்கிறது
எம்பெருமானார் பாணர் பாட்டால் அரங்கனைக் காட்டக் கண்ட அவர் சிஷ்யர்கள் வழியாக
பின்புள்ளாரும் கண்டு உகந்தமை வேதாந்த தேசிகன் திரு வாக்கால் நமக்கு புலன் ஆகிறது –
பா வளரும் தமிழ் மறையின் பயனே கொண்ட
பாண் பெருமாள் பாடியதோர் பாடல் பத்தில்
காவலுனும் கணவனுமாய் கலந்து நின்ற
காரணனைக் கருத்துற நான் கண்ட பின்பு -முனி வாஹன போகம் -என்பது அவர் தம் திரு வாக்கு –
இதில் தமிழ் மறையின் பயனே கொண்ட -என்பதனால் குரு முகமாய் அறிய வேண்டிய ப்ரபந்தம் என்பது காட்டப் பட்டது ஆயிற்று –
பாடல் பத்தில் கருத்துறக் கண்டமை கூறவே பாண் பாட்டால் குரு முகம் ஓதியவர்-காண்பது புலனாதல் காண்க –

காரியல் வண்மை -என்றுமொரு பாடம் உண்டு
அப்பொழுது காரினுடைய இயல்பை உடைத்தான வள்ளன்மை என்று பொருள் படும் .அதாவது
மேகம் நீர் நிலம் என்ற வேறுபாடு இன்றி மழை பொழிவது போலே எம்பெருமானாரை சார்ந்தவர்களும்
வேண்டுபவர் வேண்டாதவர் என்ற வேறு பாடு இன்றி எம்பெருமானார் திவ்ய குணங்களை பொழியும் வள்ளன்மை -என்றபடி –

என்னால் சொல்ல ஒண்ணாது இக் கடல் இடத்தே –
காரிய வண்மையை தெரிந்து கொண்டேனே அன்றி -அதனை என்னால் சொல்லித் தலைக் கட்ட இயலாது என்கிறார் –
இயலாமை இவர் குறை அன்று –
காரிய வண்மையின் சீர்மை-என்னால் –
இராமானுஜர் புகழை சொல்ல வந்த என்னாலும் இவர்கள் கார்ய வன்மை சொல்ல ஒண்ணாது -விஷயத்தின் சீர்மை -இருக்கும் படி –
அப்படி பட்டது –கடல் இடம் -கடலை உடைய உலகம் -கடல் சூழ்ந்த பூமி -என்றபடி
கடல் இடத்தே சொல்ல ஒண்ணாது என்று இயையும்
இனி இக்கடல் இடத்தே இராமானுசன் தன்னை சார்ந்தவர் என்று பொருள் கொள்ளலுமாம்
அப்பொழுது பகவானை பற்றுவதற்கு கூட இசைவார் இல்லாத இவ் உலகிலே அதனுடைய
எல்லை நிலத்தளவும் வந்து எம்பெருமானாரைப் பற்றி நிற்கும் பெற்றிமை வாய்ந்தவர்கள் என்றது ஆயிற்று –

—————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருமலை நல்லான் சக்கரவர்த்தி ஸ்ரீ ராம கிருஷ்ண ஐயங்கார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருவரங்கத் தமுதனார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: