ஸ்ரீ ராமானுஜ நூற்றந்தாதி பாசுரமும்- ஸ்ரீ ஆழ்வார் பாசுரங்களும் –10- மன்னிய பேரிருள் மாண்ட பின் இத்யாதி —

ஸ்ரீ பெரிய ஜீயர் அருளிய உரை அவதாரிகை–
ஸ்ரீ பேயாழ்வார் திருவடிகளை ஸ்துதிக்கும் ஸ்வபாவரான ஸ்ரீ எம்பெருமானார்-விஷயத்திலே சிநேக யுகதர் திருவடிகளை
சிரசா வஹிக்குமவர்கள்-எல்லா காலத்திலும் சீரியர் என்கிறார் –

ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் அருளிய உரை அவதாரிகை –
கீழ் இரண்டு பாட்டாலும் ஸ்ரீ பொய்கை யாழ்வார் ஸ்ரீ பூதத் தாழ்வார் ஆகிற இருவராலும் எடுக்கப் பட்ட
பரி பூர்ண தீபமான திவ்ய பிரபந்தங்கள் இரண்டாலும் -லோகத்திலே ஒருவராலும் பரிகரிக்க அரிதாம் படி
வ்யாப்தமாய் நின்ற அஞ்ஞானம் ஆகிற அந்தகாரம் நசித்த பின்பு
தாம் ஸ்ரீ திருக் கோவலூரில் வீற்று இருந்த ஸ்ரீயபதியை சாஷாத் கரித்து -அந்த லாபத்தை எல்லார்க்கும் திவ்ய பிரபந்த ரூபேண -உபதேசிக்கும்
ஸ்ரீ பேய் ஆழ்வாருடைய ச்ப்ர்ஹநீயமான திருவடிகளை ஸ்துதிக்கிற ஸ்ரீ எம்பெருமானார்-விஷயமான ப்ரீதியாலே பரிஷ்கரிக்க பட்டவர்களுடைய
ஸ்ரீ பாதங்களை தம்தாமுடைய தலை மேல் தரிக்கும்-சம்பத்தை உடையவர்கள் சர்வ காலத்திலும் ஸ்ரீ மான்கள் -என்கிறார் .

ஸ்ரீ அமுத உரை–ஸ்ரீ திருமலை நல்லான் சக்கரவர்த்தி ஸ்ரீ ராம கிருஷ்ண ஐயங்கார் ஸ்வாமிகள்-அருளிய அவதாரிகை
ஸ்ரீ பேய் ஆழ்வார் -இருள் நீங்கியதும் -தாம் கண்ட இறைக் காட்சியினைத் தம் திவ்ய பிரபந்தத்தால் காட்டும்
வள்ளன்மைக்காக-அவர் திருவடிகளைப் போற்றும் ஸ்ரீ எம்பெருமானார் திறத்து அன்புடையார் திருவடிகளை
தலையில் சூடும் திருவாளர்கள் எல்லா காலத்திலும் சிறப்புடையோர் ஆவர் என்கிறார் –

மன்னிய பேரிருள் மாண்ட பின் கோவலுள் மா மலராள்
தன்னோடு மாயனைக் கண்டமை காட்டும் தமிழ்த் தலைவன்
பொன்னடி போற்றும் இராமானுசற்கு அன்பு பூண்டவர் தாள்
சென்னியில் சூடும் திரு உடையார் என்றும் சீரியரே – 10-

பத உரை –
மன்னிய -நிலை நின்ற
பேர் இருள் -அறியாமை என்னும் பெரிய இருள்
மாண்ட பின் -ஒழிந்த பிறகு
கோவலுள்-திருக் கோவலூரில்
மா மலராள் தன்னோடும் -மலரில் தோன்றிய பெரிய பிராட்டியாரோடு கூட
ஆயனை -இடையனான ஆயனார் என்னும் எம்பெருமானை
கண்டமை -தாம் பார்த்தமையை
காட்டும் -தம் திவ்ய பிரபந்தத்தால் காட்டிக் கொடுக்கிற
தமிழ் தலைவன் -தமிழுக்கு தலைவரான பேய் ஆழ்வார் உடைய
பொன்னடி -பொன் போலே விரும்பத் தக்க திருவடிகளை
போற்றும் – புகழும் இயல்பினரான
இராமானுசனுக்கு -எம்பெருமானார் திறத்து
அன்பு பூண்டவர் -பக்தியை அணியாக கொண்டவர்களுடைய
தாள் -திருவடிகளை
சென்னியில் -தலையில்
சூடும் -சூட்டிக் கொள்ளும்
திரு உடையார் -செல்வம் படைத்தவர்கள்
என்றும் -எப்பொழுதும்
சீரியர் -சிறப்புடையார் ஆவர்-

பேர்க்கப் பேராத படி நின்ற அஞ்ஞானம் ஆகிற மகா அந்தகாரம் ஆனது
முற்பாடரான ஆழ்வார்கள்-இருவரும் ஏற்றின திரு விளக்காலே நிச் சேஷமாக போன பின்பு
நீயும் திரு மகளும் -முதல் திருவந்தாதி -86-–என்கிற பாட்டின் படியே திருக் கோவலூரிலே -திரு மகளாருடனே கிருஷ்ண அவதாரத்திலே
ஆஸ்ரித பவ்யத்தை அடங்கலும் தோற்றும்படி வந்து நின்ற சர்வேஸ்வரனை-சாஷாத் கரித்த பிரகாரத்தை
திருக் கண்டேன் -இத்யாதியாலே தர்சிப்பித்த தமிழுக்கு-தலைவரான பேய் ஆழ்வாருடைய ச்ப்ருஹநீயமான திருவடிகளை புகழும்
ஸ்வபாவரான எம்பெருமானார் விஷயத்தில் பிரேமத்தை தங்களுக்கு ஆபரணமாக-தரித்து இருக்குமவர்களுடைய திருவடிகளை
செவ்விப் பூ சூடுவாரைப் போலே-தங்கள் சிரச்சிலே தரிக்கும் சம்பத்தை உடையவர்கள் சர்வ காலத்திலும் சீரியர் –
போற்றுதல் -புகழ்தல்
அன்பு பூண்டவர் என்றது -அன்பிலே பூட்சியை உடையவர்கள்-அதிலே ஊன்றி இருக்குமவர்கள் என்னவுமாம் .

இவர் தம் திரு உள்ளத்தைக் குறித்து அவனை சாஷாத் கரித்து அனுபவிக்க பெற்றிலை இறே என்று சொன்னது
பொறுக்க மாட்டாமல் -இவர் இருந்த இடத்திலேயே பிராட்டியும் தானுமாக வந்து நெருக்க -அத்தைக் கண்டு அனுபவிக்கிறார் –
நீயும் திருமகளும் நின்றாயால் குன்றேடுத்துப்
பாயும் பனி மறுத்த பண்பாளா வாசல்
கடை கழியா யுள் புகாக் காமர் பூங்கோவல்
இடை கழியே பற்றி இனி —86-

மூன்றிலும் இருள் -புற இருள் -இதயத்து இருள்- பேர் இருள் —
நெருக்கு உகந்த ஆயன் இன்றும் மன்னி ஆழ்வார்கள் இருந்த இடை கழி ஸ்பர்சம் உகந்து-சேவை சாதிக்கிறான் –
விண்ணுளாரிலும் சீரியர்-பேராளன் பேரோதும் பெரியவர்களே சீரியரே–
தமிழ் -என்றாலே அமுது –பிராட்டி -திருவில் தொடக்கி திருவில் முடித்தார் -தமிழ் தலைவன்-அதனாலே திரு உடையார் –
பாதம் இந்த பாசுரத்திலும்-அடியார் அடியார் போலே –
பகவான்-ஸ்ரீ யபதி -ஆழ்வார் -எம்பெருமானார் -அவர் மேல் ஸ்நேக உக்தர்கள் –அவர் திருவடி சென்னியில் சூடும் பக்தர்கள் -என்றபடி –
நழுவி விழுந்தாலும் அடியார் இடம் தானே –

மன்னிய பேர் இருள் –
தத்வ ஞாநேனவினா -மற்று ஒன்றால் போக்குகைக்கு அரியதாய் -ஆத்மாவைப் பற்றிக் கிடக்கிற அஞ்ஞானம் ஆகிற அந்தகாரம் –
அவிவேக கநாந்த திந்முகே பஹூதாசந்தத துக்க வர்ஷிணி பகவன் பவதுர்பினே – என்று சொல்லுகிற இருளானது-

மாண்ட பின்
இந்த பேய் ஆழ்வாருக்கு முன்னே ஞான தீபத்தை எடுத்தருளின-பொய்கை ஆழ்வார் பூதத் ஆழ்வார் ஆகிற இருவராலேயும் நசிப்பித்த பின்பு
கு சப்த்த ஸ்த்வன்தகாரச்யாத்-ரூ சப்தத ஸ்தன் நிரோதக -அந்தகார நிரோதித்வாத் குரு ரித்யபிதீயதே – என்னும்படி
அஞ்ஞான அந்தகாரத்தை சவாசனமாக போக்கின பின்பு
கோவலுள் மா மலராள் தன்னொடும் –
ஒண் டொடியாள் திரு மகளும் நீயுமே நிலா நிற்ப -என்றும்
அகலகில்லேன் இறையும் என்று அலர்மேல் மங்கை உறை மார்பா -என்றும்
ருக்மிணீ க்ரிஷ்ணஜனநீ -என்கிறபடியே புருஷகார பூதையான -பெரிய பிராட்டியார் உடனே –

கண்டு கேட்டு உற்று மோந்து உண்டு உழலும் ஐங்கருவி
கண்ட இன்பம், தெரிவரிய அளவில்லாச் சிற்றின்பம்,
ஒண் தொடியாள் திருமகளும் நீயுமே நிலா நிற்ப,
கண்ட சதிர் கண்டொழிந்தேன்; அடைந்தேன் உன் திருவடியே–4-9-10-பேற்றினைப்
பிரீதி அதிசயத்தாலே ‘விட்டது இது; பற்றினது இது’ என்று வியக்தமாக – விளக்கமாக அருளிச் செய்கிறார் இதில்.

அகல கில்லேன் இறையும் என்று அலர் மேல் மங்கை உறை மார்பா!
நிகரில் புகழாய்! உலக மூன்றுடையாய்? என்னை ஆள்வானே!
நிகரில் அமரர் முனிக் கணங்கள் விரும்பும் திரு வேங்கடத்தானே!
புகல் ஒன்றில்லா அடியேன் உன்னடிக் கீழ் அமர்ந்து புகுந்தேனே–6-10-10-

தம்முடைய அபேக்ஷிதம் சடக்கெனச் சித்திக்கைக்காக ஸ்ரீ பெரிய பிராட்டியாரைப் புருஷகாரமாகக் கொண்டு
ஸ்ரீ திரு வேங்கட முடையான் திருவடிகளிலே சரணம் புகுகிறார்.
மேலே ஒன்பது திருப் பாசுரங்களாலும் சரண்யனான ஸ்ரீ சர்வேஸ்வரனுடைய ஸ்வரூபத்தைச் சொன்னார்.
இதில் தம்முடைய ஸ்வரூபம் சொல்லிச் சரண் புகுகிறார்.
கீழில்
அடியேன்” என்றும்,
அருவினையேன்” என்றும் தம்முடைய ஆகிஞ்சந்யத்தையும், சேஷத்வத்தையும்,
அவனுடைய சரண்யதைக்கு உறுப்பாகச் சொல்லிக் கொடு போந்தார்.
இங்கு அது தன்னையே பேற்றுக்கு உடலாகச் சொல்லிச் சரணம் புகுகிறார்.
இத் திருப் பாசுரத்தை, ஸ்ரீ துவயத்தில் பதங்களோடு ஒக்க யோஜித்துத் தலைக் கட்டக் கடவது

அலர் மேல் மங்கை” என்கையாலே, “ஸ்ரீ” என்ற சொல்லின் பொருளும்,
அகலகில்லேன்” என்கையாலே, “மத்” என்ற சொல்லின் பொருளும்,
உறை மார்பா” என்கையாலே, நித்ய யோகமும்,
நிகரில் புகழாய் என்றது முதல் “திருவேங்கடத்தானே” என்றது முடிய “நாராயண” என்ற சொல்லின் பொருளும்,
புகல் ஒன்றில்லா அடியேன் என்கையாலே, உத்தமனால் (உத்தமன் – தன்மையிடம்) போதருகின்ற அதிகாரியும்,
உன்னடிக் கீழ்” என்கையாலே, “சரணௌ” என்ற சொல்லின் பொருளும்,
அமர்ந்து புகுந்தேனே” என்கையாலே,“பிரபத்யே” என்ற சொல்லின் பொருளும் கூறி யுள்ளதைத் தெரிவித்தபடி.

சரணம்” என்ற சொல்லின் பொருளைத் தெரிவிக்கும் பதம் திருப் பாசுரத்தில் இல்லையே? எனின்,
புகுந்தேன்” என்றதனால்-சரணம்” என்ற சொல் கோல் விழுக் காட்டாலே வருவது ஒன்றாம்
ஆதலின், தனியே கூறிற்றிலர் என்க.

அதில் அர்த்த ப்ராப்தமான -அர்த்தத்தால் போதருகின்ற ‘அஹம்’ என்ற சொல்லின்
பொருளை இங்கு ‘அடியேன்’ என்கிறது.

மன்னிய பேரிருள் மாண்ட பின் –
மன்னிய இருள்-
அநாதி காலமாகப் புறத்தே உள்ள பொருளைப் பற்றியும்
இதயத்தே உள்ள பொருளைப் பற்றியும் ஏற்பட்ட அறியாமை என்னும் இருள்
இதுகாறும் நிலைத்து நின்றமை பற்றி -மன்னிய இருள் –என்றார் –
பேரிருள்-
எக்காரணத்தாலும் அசைக்க முடியாத திண்மை வாய்ந்து இருத்தலின் -பேரிருள் –என்றார் –
பேராத திண்மை வாய்ந்த இந்தப் பெரிய இருள் -பொய்கையாரும் பூதத்தாரும் ஏற்றிய விளக்கின் ஒளியால் பேர்ந்து ஒழிந்தது –
பேரிருள் முன்பு பண்புத் தொகையாய்ப் பெருமை-வாய்ந்து இருந்தது-
இப்பொழுது அந்தப் பேரிருள் வினைத் தொகையாய் பேர்கின்ற இருளாய் மாண்டது –
இவ்விருளுக்கு ஆதி இல்லை -அந்தம் உண்டு -மன்னிய இருள் ஆதி இல்லாதது –
பேர்கின்ற இருள் அந்தம் உள்ளது –
இருளை மாண்டதாகக் கூறவே மீண்டு வாராது அடியோடு ஒழிந்தமை பெற்றாம்-

ஆயன் –
இடையனாகப் பழகும் பண்புடன் அவதரித்தவன் -திருக் கோவலூர் எம்பெருமான் அப்பண்பு தோன்ற
எழுந்து அருளி இருத்தலின் -ஆயனார் -என்று பேர் பெற்றான் என்க –தம்பி வளைக்காரி அன்றோ –-
கற்புடைய மடக்கண்ணி காவல் பூண்ட -மங்களா சாசனம் -ஹாரத்தி பண்ண ஆலத்தி எடுக்கும் அக்கா வளை சப்தம் –ஆயன் –
கண்ணன் இடையன் -இவனும் இடை கழியில் சேவை சாதித்து -இடையன் -இடைப்பட்டவன் -நெருக்கு உகந்த படியால் இடையன் –
ஆஸ்ரித பவ்யன்-
ஆயன்- போற்றும் படி வந்து நின்ற சர்வேஸ்வரனை-
மா முனிகள்- மனுஷ்யச்ய பராத்பரன் என்பர்

மாயனை
கிருஷ்ணனாய் அவதரித்து -ஸ்வ ஆஸ்ரிதரான பாண்டவர்களுக்கு கழுத்திலே ஓலையைக் கட்டிக் கொண்டு போந்த தூதவ்த்யமும் –
அர்ஜுனன் தன் காலாலே ப்ரேரிக்க பண்ணின சாரத்தியம் ஆகிற நிஹீன க்ர்த்தயங்களை பண்ணுகையும்
ஆயுதம் எடேன் என்று ஆயுதம் எடுக்கையும் -பகலை இரவாக்கையும் -கோவர்த்தன உத்தாரணம் பண்ணுகையும் –
அர்ஜுனனை நித்ய விபூதிக்கு அருகே கொண்டு போகையும் -அவனுக்கு சரம உபாயத்தை உபதேசிக்கையும் -ஆகிய
இவ் ஆச்சர்ய குணங்களை உடையனனான சர்வேஸ்வரனை –

கண்டமை –
அவ் அந்தகாரத்தை போக்கின -ஞான தீபத்தாலே தாம் சாஷாத் கரித்து-அந்தப் பிரகாரத்தை எல்லாம் காட்டும் –
திருக் கண்டேன் பொன் மேனி கண்டேன் திகழும் அருக்கன் அணி நிறமும் கண்டேன்
செருக் கிளரும் பொன் ஆழி கண்டேன் புரி சங்கம் கைக் கண்டேன் என் ஆழி வண்ணன் பால் இன்று –
என்று தொடங்கி தாம் இட்டருளின திவ்ய பிரபந்தத்தாலே காட்டி யருளும் –

அநிஷ்டம் தொலைந்தால் தானே இஷ்டம் பிறக்கும் என்று காட்ட –
தனக்கு தான் ரஷணம் எண்ணம் போன பின்பு தான்
இத்தை எல்லாம் தான் மன்னிய பேர் இருள் மாண்ட பின்பு என்கிறார் –
பின்பு இஷ்ட பிராப்தி -தாம் மா மலராள் தன்னோடு மாயனை கண்டு–புருஷ காரம் பூதை உண்டே..

திவளும் வெண் மதி போல் திரு முகத்தரிவை செழும் கடல் அமுதினில் பிறந்த
வவளும் நின்னாகத்திருப்பது மறிந்தும் ஆகிலும் ஆசை விடாளால்
குவளை யங்கண்ணி கொல்லியம்பாவை சொல்லு நின் தாள் நயந்திருந்த
விவளை உன் மனத்தால் என் நினைந்து இருந்தாய் இடவெந்தை யெந்தை பிரானே–-பெரிய திருமொழி–2-7-1-

அவளும் .நின் ஆகத்து இருப்பதும் அறிந்தும்
இங்கே –மூன்று உம்மை தொகை-
ஆகிலும் ஆசை விடாளால் ..நிச்சயம் நடக்கும்..என்ற உறுதி உண்டே அவளும் நின் ஆகத்தில் இருப்பது கண்ட பின்பு
திரு மகளும் நீயும் நிலா நிற்ப கண்ட சதிர் கண்டு சிற்றின்பம் ஒட்டேன் -ஆழ்வார்..
பூவினை மேவிய தேவி மணாளனை -திருவிருத்தம் பாசுரம் போலே ….
தீ வினைக்கரு நஞ்சை நல் வினைக்கின்ன முதத்தினை
பூவினை மேவிய தேவி மணாளனை புன்மை எள்காது
ஆவினை மேய்க்கும் வல்லாயனை அன்றுலகீரடியால்
தாவின வேற்றை எம்மானை எஞ்ஜான்று தலைப் பெய்வனே – திரு விருத்தம்– 89- – –

கோவலுள்— –கண்டமை காட்டும் –
திருக் கோவலூரில் முதல் ஆழ்வார்கள் ஆகிய இம் மூவரும் சிறியதோர் இடை கழியில்
மழைக்காக ஒரு நாள் இரவில் நெருங்கி நிற்கும் பொது எம்பெருமான் தானும் பிராட்டியுமாக வந்து –
நீயும் திருமகளும் நின்றாயால்–குன்று எடுத்துப் பாயும் பனி மறைத்த பண்பாளா -வாசல்
கடைகழியா உள் புகாக் காமரு பூம் கோவல்-இடை கழியே பற்றி இனி -முதல் திருவந்தாதி – 86-என்றபடி
உள் புகாமலும் வெளி ஏறாமலும் இவர்களை நெருக்கி-உராய்ந்து -பேரின்பம் எய்தி –
மெய்ம்மறந்து நிற்கப் –பொய்கையாரும் பூதத்தாரும் விளக்கு ஏற்ற -இருள் நீங்கியதும்
பேயாழ்வார் கண்டு மகிழ்ந்து -தாம் கண்ட காட்சியை –
திருக் கண்டேன் பொன் மேனி கண்டேன் -திகழும்-அருக்கன் அணி நிறமும் கண்டேன் -செருக்கிளரும்
பொன்னாழி கண்டேன் புரி சங்கம் கைக் கண்டேன்-என்னாழி வண்ணன் பால் இன்று –என்று தொடங்கும்
தம் திவ்ய பிரபந்தத்தால் காட்டுகிறார் -என்க-

மா மலராள் தன்னோடும் ஆயனை
மா மலராளோடு கூடியதனால் -இகழ்வு பாராது ஆவினை மேய்க்கும் ஆயனாக காட்சி தருகிறான் சர்வேஸ்வரன் –
மாதவோ பக்தவத்சல -மலராள் கொழுநன் ஆதலின் பக்தர்கள் இடம் வாத்சல்யம் -குற்றமும்
நற்றமாய்த் தோற்றும் பண்பு -உடையவன் ஆகிறான் -என்னும் சகஸ்ரநாமம் காண்க –

கண்டமை சொல்லும் என்னாது –காட்டும் என்கிறார் –
ஆழ்வார் சொல்லும் திறம் கேட்பதாக மட்டும் அமையாமல் நேரே பார்ப்பதாக இருப்பது தோன்ற
சிறந்த கவிதை -விஷயங்களை கண் எதிரே கொணர்ந்து நிறுத்தும் -என்ப –
இதனால் தமிழ் தலைவனுடைய தமிழ் -வண் தமிழாய் அமைந்து உள்ளமையைப் புலப் படுத்தினார் ஆயிற்று –

உண்டும் உமிழ்ந்தும் கடந்தும் இடந்தும் கிடந்தும் நின்றும்
கொண்ட கோலத்தொடு வீற்றிருந்தும் மணம் கூடியும்
கண்ட ஆற்றால் தனதே உலகு என நின்றான் தன்னை
வண் தமிழ் நூற்க நோற்றேன் அடியார்க்கு இன்ப மாரியே–4-5-10–வண் தமிழ் நூற்க நோற்றேன் –என்றார் நம் ஆழ்வாரும்-
அவ்விடத்துக்கு அமைந்த ஈட்டு ஸ்ரீ சூக்தி –4 5-10 – – இங்கு நினைவு கூரத் தக்கது –
வண் தமிழ் ஆவது பழையதாக செய்தவை இவர் பேச்சாலே -இன்று செய்த செயல் ஸ்பஷ்டமாயிருக்கை –
சிர நிர் வ்ருத்தம ப்யேதத் ப்ரத்யஷ மிவ தர்சிதம் -பால காண்டம் -என்று
நெடும் காலத்துக்கு முன்பு இது நிகழ்ந்து இருந்தும் நேரில் நிகழ்வது போலே காட்டப் பட்டது –
கண்டவாற்றால் -என்று பிரத்யட்ஷமாய் இருக்கிறது இறே-ஈட்டு ஸ்ரீ சூக்தி இங்கு

ஸ்ரீ வேதாந்த தேசிகன் -ரத்னா வளியில் – –
பிரத்யக் ப்ரத்யஷ யேந்ந ப்ரதி நிய தர மா சந்நிதானம் நிதானம் -என்று
லஷ்மி நித்ய சான்னிந்த்யம் செய்யும் வைத்த மா நிதியை உள் கண்ணுக்கு புலன் ஆக்கும் -என்று
திருவாய் மொழியை ப்ரத்யக் தத்த்குவத்தையும் பிரத்யட்ஷமாக காட்டுவதாக-அருளி செய்து இருப்பதும் இங்கு அறியத் தக்கது –
கம்பன் சடகோபர் அந்தாதியில் –
செய்யோடருவிக் குருகைப் பிரான் திரு மாலை நங்கள்-கை யோர் கனி எனக் காட்டித் தந்தான் -என்பதும் காண்க –

தமிழ்த் தலைவன் –
பாலேய் தமிழர் என்றும் -இன் கவி பாடும் பரம கவிகள் –என்றும்
மயர்வற மதி நலம் அருளப் பெற்ற நம் ஆழ்வாராலே கொண்டாடப்பட்ட -திராவிட சாஸ்திர ப்ரவர்த்தகரில்
மூல பூதரான பேய் ஆழ்வார் உடைய

தமிழ்த் தலைவன் –
மா மலராளோடும் ஆயனாம் பரதத்துவத்தையும் காட்டும்படி வண் தமிழில் கவி பாடும் வல்லமை
படைத்துள்ளமை பற்றி திரு நாமம் குறிப்பிடாமல் பெரு மதிப்பு தோற்ற –தமிழ்த் தலைவன் -என்கிறார் .
தமிழ் மொழி இவர் இட்ட வழக்காம்படி வசப்பட்டு உள்ளது எனபது கருத்து –
இதனால் அமுத கவியாகிய ஆசிரியர் கவி அமுதத்தை மாந்தி நுகர்ந்து இன்புற்றமை வெளிப்படுகிறது –

பொன்னடி போற்றும் –
பிரபன்ன ஜனங்களுக்கு எல்லாம் ச்ப்ர்ஹநீயமான திருவடிகளை
மங்களா சாசனம் பண்ணுகிற -சேஷத்வ அநு ரூபமாக -அடிமை தொழில் செய்கை தவிர்ந்து –
ச்ப்ர்ஹநீயம் ஆகையாலே பிரேம பரவசராய் கொண்டு மங்களா சாசனம் பண்ணத் தொடங்கினார் காணும் –
போற்றுதல்-புகழ்தல் –

பொன்னடி போற்றும் –
உலகமளந்த பொன்னடியில் ஈடுபாடு மட்டுப்பட்டு –தமிழ்த் தலைவன் பொன்னடியில்
மிகவும் ஈடுபட்டுப் போற்றுகிறார் எம்பெருமானார் –
அச்சுதன் பதாம் புஜமாம் பொன் மீது வ்யாமோஹம் கொண்டு மற்றவைகளை தருணமாக
மதிக்கும் எம்பெருமானார் -தமிழ்த் தலைவன் பொன்னடியைப் போற்றுகிறார் –

யோ நித்ய -அச்சுதன் திருவடி தவிர மற்ற எல்லாம் புல்-அப்புறம் காட்டி கொடுத்த பின்பு .
தமிழ் தலைவன் பொன் அடி-அச்சுதன் திருவடி தவிர புல்-முதல் நிலை -இவர் காட்டவே கண்டதால்
சரம பர்வ நிலைக்கு வந்தார் ஸ்வாமி –என்றவாறு
ஸ்ரீ வைஷ்ணவ லாபமே பேய் ஆழ்வார் மூலம் தானே.
விஷ்ணுவால் வைஷ்ணவன் ஆக முடியாது
ஸ்ரீ தேவியால் ஸ்ரீ வைஷ்ணவன் ஆக முடியாதே
பூமா தேவி நீளா தேவி நித்யர் ஆழ்வார் ஆசார்யர் நம் போல்வார் தானே மிதுனத்தில் கைங்கர்யம்
செய்து ஸ்ரீ வைஷ்ணவர் என்று பட்டம் பூண்டு மகிழலாம்

இப்போது மா மலராளோடு கூடி ஆயனாய் எளிமை பட்ட பரம் பொருளைக் காட்டித் தந்த
பரம உபகாரம் அங்கனம் போற்றும்படி செய்கிறது –

பொன்னடி-பத பிரயோகம் -அருளிச் செயல்களில் –
உலகு ஏழும் புகக் கரந்த திரு வயிற்றன் பொன்னடியே யடை நெஞ்சே-பெரிய திருமொழி -6-9-5-

ஸ்ரீ ரெங்கம்-கோயில் –பொது நின்ற பொன் அம் கழல்
திருமலை –பூவார் கழல்
பெருமாள் கோயில் -துயரறு சுடர் அடி
திரு நாராயண புரம் –திரு நாரணன் தாள்
செம் பொற் கழலடி செல்வா பலதேவா –

உன் பொற்றாமரை அடியே போற்றும் பொருள் கேளாய் –

வில்லிபுத்தூர் உறைவான் தன் பொன்னடி காண்பதோர் ஆசையினால் –

உலகம் அளந்த பொன்னடியே அடைந்து உய்ந்தேன் அணி பொழில் திருவரங்கத்தம்மானே

பொன் அம் கழற்கே மனம் துழாய் மாலாய் வரும் –

மேல் எடுத்த பொன்னார் கனை கழற்கால் ஏழ் உலகும் போய் கடந்து —

அது நன்று இது தீது என்று ஐயப்படாதே
மது நின்ற தண் துழாய் மார்வன் -பொது நின்ற
பொன்னங்கழலே தொழுமின் முழுவினைகள்
முன்னம் கழலும் முடிந்து ——–88–மூன்றாம் திருவந்தாதி -88 – என்று உபதேசிக்கிறார் பேய் ஆழ்வார்
அங்கனம் உபதேசித்து எம்பெருமானைக் காட்டும் தமிழ்த் தலைவன் பொன்னடிகளைப் போற்றுகிறார் எம்பெருமானார் –

பொன் போலே எல்லோராலும் விரும்ப தக்கது
ஆதலானும் -பொன் கிண்டியில் தண்ணீர் அந்தணர் அந்தியர் அந்நியர் என்கிற வேறுபாடு இன்றி
பயன் படுவது போலே எல்லோரும் காணும் வண்ணம் அமைந்த வண் தமிழ் நூலால் காட்டி உபகரித்தலின்
அதிகாரி நியமம் இல்லாமல் பயன் படுதலானும் திருவடி போற்றத் தக்கது என்பார் –பொன்னடி என்றார் –
அடி திருமேனிக்கு உப லஷணமாய்-பேய் ஆழ்வாரைக் கருதுகிறது –
பொன் கிண்டி போன்றவர் பேய் ஆழ்வார் -தண்ணீர் போன்றது மூன்றாம் திருவந்தாதி -என்று உணர்க –

இராமானுசற்கு –
எம்பெருமானார் விஷயமான அன்பு பூண்டவர் தாள்-ப்ரீதியை தங்களுக்கு ஆபரணாம் படி அலங்கரித்து கொண்ட-
மகாத்மாக்களுடைய திருவடியை –

சென்னியில் சூடும்
தம்தாமுடைய சிரச்சிலே செவ்விப் பூவை சூடுவாரைப் போலே தரிக்கும்
திரு வுடையார்
சது நாகவரஸ் ஸ்ரீமான் -லஷ்மனோ லஷ்மி சம்பன்ன -அந்தரிஷகதஸ் ஸ்ரீ மான் –என்கிற சம்பத்துக்கு
சீமா பூமியான சம்பத்தை வுடையவர்கள் –

என்றும் சீரியரே
ததீய ப்ராவண்யத்தை உடையார் ஆகையாலே -அவர்கள் கால தத்வம் உள்ள அளவும்-ஸ்ரீ மான்கள்
ஸ்ரீ மத் பாகவாத அர்ச்சானாம் பகவத பூஜா விதேருத்தம -ஸ்ரீ விஷ்னோரவம நநாத் குருதர –
ஸ்ரீ வைஷ்ணவோல்லன்கனம்-தீர்த்த அச்யுத பாத ஜாத்குரு தர -தீர்த்த ததீயாங்கிரிஜா –
தாஸ்மான் நித்யமதந்த்ரி தீப வசதா தே ஷாம சமாராதனே -என்றும்
தஸ்மாத் குரு தரம் ப்ரோக்த ததீயாராதனம் நர்ப மம மத் பக்த பக்தேஷூ ப்ரீதி ப்யதி காபவேத்
தஸ்மாத் மத் பக்த பக்தாச பூஜா நீயா விசேஷத -என்றும்
திருமால் அடியார்களை பூசிக்க நோற்றார்கள் -என்று ஆழ்வாரும் அருளிச் செய்தார் இறே
அப்படியே வாசா யதீந்திர -என்று தொடங்கி -பாதானுசிந்தநபர சத்ததபவேயம் -என்று-இது
ஒன்றையே பார்த்து அருளினார் ஜீயரும்-

அன்பு பூண்டவர் –
பேய் ஆழ்வாரைப் போற்றும் இராமானுசன் திறத்து கொண்ட அன்பு -ஆசார்ய பக்தி –
மூன்றாம் திருவந்தாதியில் பேய் ஆழ்வார் காட்டும் ஆயனைக் காணச் செய்து –
ப்ரஹ்ம வித்துக்களாய்க் குழையும் வாண் முகம் வாய்ந்து பொலி உறச் செய்தலின்-பொலிவு ஊட்டும்
அணியாக உருவகம் செய்யப் படுகிறது –
பூண்டவர் என்பதால் அன்பு பூணும் அணி எனபது பெறப்படும் –
தெய்வத்தின் இடத்தில் போலே குருவினிடத்திலும் எவனுக்கு பக்தி உள்ளதோ-அவனுக்கு
பொருள் பிரகாசிக்கும் எனபது சாஸ்திரம் –
இனி ஞான பக்தி வைராக்யங்களை ஆன்ம தத்துவத்துக்கு அணிகளாக வருணிக்கும் மரபு பற்றி-
அன்பு பூண்டவர் -என்றார் என்னலுமாம் –
இனி அன்பு பூண்டவர் -என்றது
அன்பிலே பூட்சியை உடையவர்கள்-அதிலே ஊன்றி இருக்குமவர்கள் என்னலுமாம் -என்று மணவாள மா முனிகள்
உரைத்து இருப்பதும் இங்கு அறியத் தக்கது –

தான் சென்னியில் சூடும் திரு உடையார் –
நாட்டிலே திரு உடை மன்னர் சென்னியில் முடி சூடுவர் –
எம்பெருமானார் உடைய அடியார் அடியார் ஆகிய திரு உடை மன்னரோ –சென்னியிலே அடி சூடுவர் —
முன்னவர் சென்னியில் சூடிய முடி யாவர்க்கும் அடங்காத சுதந்தரத்தின் சீர்மையை தெரிவிக்கும் –
பின்னவர் சூடிய அடியோ -இயல்பாக அமைந்தது பரி போகாது நிலை நிற்கும் பாரதந்திரியம் என்னும்
செல்வம் உடைமையை தெளி உறக் காட்டும் –
பகவானுக்கும் அவனை சார்ந்தவருக்கும் பர தந்த்ரமாய் இருத்தல் ஜீவான்மாவுக்கு இயல்பாய் அமைந்த செல்வம் என்க –
பார தந்திரியமாவது பகவானுக்கும் அடியாருக்கும் உள் பட்ட வடிவமும் இருத்தலும் இயங்குதலும் வாய்ந்து இருத்தல் –

ஸ்வ தந்திரனான இராம பிரான் முடி சூடி அரசு அமர்ந்தான் –
அவன் தம்பி பரதன் -தன் பார தந்திரியம் பறி போகாமல் காப்பதற்காக அவ் விராம பிரான் அடி சூட அவாவுகின்றான் –
யாவன் சரணவ் ப்ராது பார்த்திவ வ்யஞ்ச நான்விதவ்-சிரஸா தார யிஷ்யாமி நமே சாந்திர் பவிஷ்யதி -என்று
அரசர்க்கு உரிய சங்கு சக்கரம் முதலிய அடையாள ரேகைகள் உடன் கூடின உடன் பிறந்தான் –
இராம பிரான் -உடைய திருவடிகளை தலையாலே தாங்காத வரையிலும் என் தாபம் தீராது –என்னும்
பரதனது பேச்சாலே அவனது அவாவினை அறிகிறோம் –
வாங்கு சிலை இராமன் தம்பி யாங்கவன்–அடி பொறை யாற்றி னல்லது
முடி பொறை யாற்றலன் படி பொறை குறித்தே -என்னும்-பழம் தமிழ் பாடல் இங்கு நினைவுறல் பாலது –
இராமன் தம்பி அவ் இராமனுடைய திருவடிகள் ஆகிற வல்லன் அல்லன் -என்கிறது இப் பாடல் –
அரசு அமர்ந்தான் அடி சூடும் அரசை யல்லால்-அரசாக எண்ணேன் மற்றரசு தானே -என்று
குலசேகர பெருமாள் அருளியதும் இங்கு அறியத் தக்கது –
பரதனும் குலசேகரப் பெருமாளும் சூடிய அடிமுடி -பகவான் திறத்து அவர்கட்க்கு உள்ள பாரதந்திரிய செல்வத்தை புலப்படுத்தும் –
நீள் முடியாய் – பகவத் கைங்கர்ய சாம்ராஜ்யம் அவர்கள் கைப் பட்டு இருப்பதைக்-காட்டுகிறது –
அமுதனார் காட்டும் அவர்கள் சென்னியில் சூடிய அடி முடியோ –
பகவானைக் காட்டித் தரும் ஆசார்யனான எம்பெருமானார் அளவோடு நில்லாது –
அவர்க்கு அன்பு பூண்டவர் திறத்தும் அவர்கட்கு உள்ள பார தந்திரிய செல்வதை புலப்படுத்தும்
துளங்கு நீள் முடியாய் -பாகவத கைங்கர்யத்தின் முடிவு எல்லையாய் -பரம புருஷார்த்தமான ஆசார்ய பக்த கைங்கர்ய
சாம்ராஜ்யமே -அவர்கள் கைப் பட்டு இருப்பதைக் காட்டுகிறது

திரு உடையார் –
திரு -செல்வம்
பாரதந்திரியமே செல்வம் -என்க –
பரமனைப் பயிலும் திரு -பரதன் போல் வாராது-அதன் முழு வளர்சியாலான பாகவத பாரதந்திரியத்தின்
முடிவு எல்லை அளவும் செல்லும்
ஆசார்ய பக்த பாரதந்திரியம் எனப்படும் திரு -இராமானுசற்கு அன்பு பூண்டவர் தாள் சென்னியில் சூடும் அவரது

என்றும் சீரியரே
எக்காலத்திலும் சிறந்தவர்களே
பரமனைப் பயிலும் திருவுடையாரினும் இராமானுசற்கு அன்பு பூணும் திரு உடையாரினும்-சிறந்தவர்கள் -என்றபடி –
சென்னியில் சூடும் திரு உடையாரே நிலை நின்ற மிகப் பெரும் செல்வத்தர் எனபது கருத்து
பரமனைப் பயிலும் திரு -அவன் அடியார் அளவும் படராமையின் அளவு பட்டு சிறுத்தது
இராமானுசற்கு அன்பு பூணும் திரு -தம்மை முதன்முதலில் தத்தவ உணர்வை ஊட்டி திருத்தி –
ஆயனைக் காட்டித் தரும் மகோ உபகாரத்தை முன்னிட்டு நேர்ந்ததையும் —
அடியார் அனைவரையும் இன்புருத்துவதாயும் -அமைதலின் —
பரமன் அடியார் அளவும் படர்ந்து பெருமை பெற்று இருப்பினும் –
இராமானுசற்கு அன்பு பூண்டவர் -ஆசார்யன் அடியார் அளவும் –வளராமையின் முழு வளர்ச்சியை பெற்று இலது –
அன்பு பூண்டவர் தாள் சென்னியில் சூடும் திருவோ -இனிப் படர வேண்டிய மேல் எல்லை வேறு இல்லாமையின்
முழு வளர்ச்சி பெற்ற பெரும் செல்வம் ஆகின்றது என்று உணர்க –

இங்கு ஆச்சார்யா ஹிருதயம் -முதல் சூரணை
-அறிவிலா மனிசர் உணர்வு என்னும் சுடர் விளக்கு ஏற்றி
பிறங்கு இருள் நீங்கி மேல் இருந்த நந்தா வேத விளக்கை கண்டு நல்லதும் தீயதும்
விவேகிக்கைக்கு மறையாய் விரிந்த துளக்கமில் விளக்கில் கொளுத்தின ப்ரதீபமான
கலைகளை நீர்மையினால் அருள் செய்தான்
பிறங்கு இருள் நிறம் கெட என்றும்
பின் இவ் உலகினில் பேர் இருள் நீங்க என்றும்
என்று சொல்லுகிற படியே மிகுந்த அஞ்ஞான அந்த காரம் போய்
மேல் இருந்த நந்தா விளக்கை கண்டு
வேதார்த்த விழுப் பொருளின் மேல் இருந்த விளக்கு என்றும்
நந்தா விளக்கு என்றும்
வேத விளக்கினை என்றும்
சொல்லுகிற படியே
மறையார் விரிந்த விளக்கை என்றும்
துளக்கமில் விளக்கமாய் என்றும்வேதாந்த விழுப் பொருளின் மேல் இருந்த விளக்கு-பெரிய ஆழ்வார்
நந்தா விளக்கே -திரு மங்கை ஆழ்வார்
மிக ஞான மூர்த்தியாய வேத விளக்கினை கண்டு -நம் ஆழ்வார்
மூன்றையும் சேர்த்து மேல் இருந்த நந்தா வேத விளக்கை கண்டு –
இவை அன்றே நல்ல இவை அன்றே தீய -நம் ஆழ்வார்
சதச்தீச விவேக்தும் -பட்டர்
மிக்கானை மறையாய் விரிந்த விளக்கை -திரு மங்கை ஆழ்வார்
தோன்று சோதி மூன்றுமாய் துளக்கமில் விளக்கமாய் -திரு மழிசை ஆழ்வார்
இந்த சூர்ணையில்
ஞானம் ஒரு விளக்கு
எம்பெருமானை ஒரு விளக்கு
அ காரம் ஒரு விளக்கு
சாஸ்திரம் ஒரு விளக்கு-பிரதீபமான -(மானம் பிரதீபமிவ காருணிகோ ததாதி -பட்டர் )
கலைகளை -விசேஷ்யம் -கலைகளும் வேதமும் நீதி நூலும் -என்றும் –
பன்னு கலை நால் வேதம்-என்றும் திரு மங்கை ஆழ்வார் மறையாய் விரிந்த விளக்கு-எம்பெருமானை
பெரிய வாச்சான் பிள்ளை வியாக்யானம்

பகவத் பாரதந்த்ரியம் -செல்வம்
பாகவத பாரதந்த்ரியம் -ஆச்சார்ய பாரதந்த்ரியம் -பெரும் செல்வம் –
ஆச்சார்ய பக்த பாரதந்திரியம் மிகப் பெரும் செல்வம் –என்றது ஆயிற்று –
ஏனைய திரு உடையார் போல் அல்லாது-இனி மேலும் பெற வேண்டிய செல்வம்
இல்லாமையின் இந்நிலையிலேயே நிலை நிற்றல் பற்றி என்றும் சீரியர் -என்கிறார்-

ஆயன் திருவடி சூடினாலும் விபத்து தான்..
சில காலத்தில் தான் சீரியர் பரதன் 14 வருஷம்.
ஆழ்வாரும் ஒரு வினாடி வூழி போல
.10 மாசம் சீதையே பிரிய நேர்ந்ததே
பகல் பொழுது கோபிகள் பிரிந்து -மாடு மேய்க்க போனவன் வரும் வரை -காலை பூசல் மாலை பூசல் பதிகம் –
10 வருஷம் தேவகி பிரிந்து இருந்தாள்-என்றும் சீரியரே –
பரத ஆழ்வான் -சீதை பிராட்டி –கோபிமார்கள் -நம்மாழ்வார் -போல்வாரை பிரிந்து துடிக்கப் பண்ணுவான் -அவன்

தமிழ் தலைவன் பொன் அடி போற்றும் இராமனுசன்/ராமானுசர்க்கு அன்பு பூண்டவர் தாள் சென்னியில் சூடும் திரு உடையார்/
மாயன் இல்லை– ஆழ்வார் இல்லை– ஸ்வாமி இல்லை –ஸ்வாமி மீது அன்பு பூண்டவர் இல்லை —
அன்பு பூண்டவர் தாள் சென்னியில் சூடுபவர்–எல்லா காலத்திலும் சீரியர்
மதுர கவி ஆழ்வார் –ததீய சேஷத்வம் அசைக்க ஒண்ணாதது

—————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருமலை நல்லான் சக்கரவர்த்தி ஸ்ரீ ராம கிருஷ்ண ஐயங்கார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருவரங்கத் தமுதனார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: