ஸ்ரீ எம்பெருமானும் ஸ்ரீ எம்பெருமானாரும் -ஸ்ரீ பெரிய ஜீயர் அருளிய ஸ்ரீ இராமானுஜ நூற்றந்தாதி வியாக்யானம்–

1. எம்பெருமான் படி:

‘அடல் கொண்ட நேமியன் ஆருயிர் நாதன், அன்று ஆரணச்சொல்
கடல் கொண்ட ஒண்பொருள் கண்டளிப்ப, பின்னும் காசினியோர் இடரின் கண் வீழ்ந்திட..36.’

எம்பெருமான், கிருஷ்ணாவதாரத்தில் உபநிஷத் ஸாரமாகிய பகவத் கீதையைத் தானே உபதேசித்தான்.
அவ்வுபதேசன் அர்ச்சுனனைத் தவிர மற்ற யாருக்கும் பயன்படவில்லையே என்று வருத்தப்பட நேர்ந்தது.
அர்ஜுனனுக்கும் பூர்த்தியாகப் பயன்பட்டிருக்குமோவென்று சந்தேகிக்கவும் இடமுளது.

1. எம்பெருமானார் படி:

‘ தானுமவ்வொண்பொருள் கொண்டு அவர் பின் படரும் குணன், எம் இராமானுசன் தன் படியிதுவே’.-36-

ஆனால், எம்பெருமானாரோ எம்பெருமான் உபதேசித்தும் பயனளிக்காத அந்தக் கீதையைக் கொண்டே
உலகோர்களெல்லாரையும் திருத்தித் திருமகள் கேள்வனுக்கு ஆளாக்கினார்.

அடல் கொண்ட நேமியன் ஆருயிர் நாதன் அன்று ஆரணச் சொல்
கடல் கொண்ட ஒண் பொருள் கண்டு அளிப்ப பின்னும் காசினியோர்
இடரின் கண் வீழ்ந்திட தானும் அவ் ஒண் பொருள் கொண்டு அவர் பின்
படரும் குணன் எம் இராமானுசன் தன் படி இதுவே -36 –

ஸ்ரீ பெரிய ஜீயர் அருளிய வியாக்யானம் –
விரோதி நிரசன சக்தியை உடைத்தான திரு வாழியை உடையனாய் -சகல ஆத்மாக்களுக்கும்-சேஷியானவன்-
அஸ்த்தானே சிநேக காருண்யா தர்ம அதர்ம தியாகுலனாய் -கீதார்த்த சங்க்ரஹம் -கொண்டு-அர்ஜுனன் சோகா விஷ்டனான அன்று –
அவனை வ்யாஜீகரித்து -பெரும்கடலிலே மறைந்து கிடக்கும்
பெரு விலையனான -ரத்னங்கள் போலே வேத சப்தமாகிற சமுத்ரத்துக்கு உள்ளே
ஒருவருக்கும் தெரியாதபடி -மறைந்து கிடக்கிற விலஷனமான அர்த்தங்களை -தர்சித்து –சகல சேதனருடைய
உஜ்ஜீவன அர்த்தமாக ஸ்ரீ கீதா முகேன உபகரித்து அருள –
பின்னையும் பூமியில் உள்ளவர்கள் சம்சாரதுக்கத்தில் அழுந்தி தரைப்பட-தாமும் முன்பு
சர்வேஸ்வரன் அருளி செய்த அந்த விலஷனமான அர்த்தத்தைக் கொண்டு இது கைக் கொள்ளும் அளவும் –
அவர்களைப் பின் தொடரா நின்ற குணத்தை உடையராய் இருப்பராய் –எங்களுக்கு தம்மை முற்றூட்டாக தந்த
எம்பெருமானார் உடைய ஸ்வபாவம் இது –
ஆருயிர் நாதன் என்று ஆரணச் சொல் கடல் கொண்ட ஒண்பொருள் கண்டு அளிப்ப –என்று பாடமான போது –
அடல் கொண்ட நேமியனான சர்வேஸ்வரனே ஆத்மாக்களுக்கு சேஷி என்று கொண்டு –வேதத்தில் மறைந்து கிடக்கிற அர்த்தத்தை
தர்சித்து -ஸ்ரீ கீதா முகேன அருளி செய்த -என்ற பொருளாக கடவது –
அடல்-மிடுக்கு
காசினி-பூமி
இடரின் கண் -என்றது -இடரின் இடத்திலே என்கை-
படி -ஸ்வபாவம்–

ஸ்ரீ கீதா பாஷ்யம் அருளி -ஸ்ரீ கீதா சாரம் சரம ஸ்லோகம் அர்த்தம் பெற 18 தடவை திருக் கோஷ்டியூர் நம்பி இடம் பெற்று
அதன் ஏற்றம் நமக்கு காட்டி அருளி -ஆசை உடையோர் அனைவருக்கும் உபதேசித்து அருளி -வேத கடல் கொண்ட வஸ்து –
கீதாச்சார்யர் -இரண்டாவது கடல் கடைந்து அ மிர்தம்–சர்வ உபநிஷத் பசு –கன்றுக்கு குட்டி அர்ஜுனன் கீதை பால் –
நமக்கு –பின்னும் -கருட வாஹனனும் நிற்க -நாம் நம் கார்யம் செய்து கொண்டே இருக்க –
அத்தை கடைந்து -கீதா சாரம் -ஸ்வாமி அருளி -தானும் -அவனே ஸ்வாமியாக ஆவிர்பவித்து –
அவர் கண் படரும் குணன் -சம்சாரிகளை விடாமல் -திவ்ய தேசங்கள் எல்லாம் -நீர் நம்மை விட்டாலும் நான் உன்னை விட்டேன் –
எங்கும் இருப்பார் -பராகால பராங்குச யதிராஜர் எல்லா கோயில்களிலும் பிரதிஷ்டை உண்டே –
தத்வ ஹித புருஷார்த்தங்கள் அனைத்தும் நமக்கு தெளிய அருளி –18 சொல்லி அத்தாலே கலங்கிய அர்ஜுனனுக்கு
சரணாகதி சாஸ்திரம் வழங்கி –சர்வ தரமான இத்யாதி – சோகம் போக்கி என்றுமாம் –
அங்கு ஒருவன் -இங்கே நாம் அனைவரும் -அதனாலே தானும் -ஸ்வாமி –பின்னும் தானும் -அவ் ஒண் பொருள் கொண்டு –
இரண்டு உம்மை தொகை -ஸ்வாமி பெருமை காட்ட -கலி யுகம் -பாப பிரசுரம் -தோஷம் பூயிஷ்டர் நாம் –

————-

2. எம்பெருமான் படி:

‘மண் மிசை யோனிகள் தோறும் பிறந்து எங்கள் மாதவனே, கண்ணுற நிற்கிலும் காணகில்லா உலகோர்களெல்லாம்..41-‘

இந்நிலவுலகில் அநேக அவதாரங்களை எம்பெருமான் எடுத்தும் அவன் திவ்விய சொரூபத்தை அறிந்து ஜனங்கள் திருந்தவில்லை.
(‘அவஜானந்தி மாம் மூடா:’) என்னை மூடர்கள் அவமானப்படுத்துகிறார்கள் என்று வருந்தும்படி நேர்ந்தது.

2. எம்பெருமானார் படி:

(அந்த உலகோர்களெல்லாம்) ‘அண்ணல் இராமானுஜன் வந்து தோன்றிய அப்பொழுதே,
நண்ணரு ஞானம் தலைக்கொண்டு நாரணர்க்கு ஆயினரே’.41-

ஆனால், எம்பெருமானாருடைய அவதாரம் எம்பெருமானுடைய அவதாரத்தைக் காட்டிலும் சிறந்தது.
ஏனெனில் எம்பெருமானார் அவதரித்த பின்னர் ஸம்ஸாரிகள் அறிவுக்குத் தக்கபடி ஞானத்தைப் புகட்டி
எல்லாரையும் ஞானவான்களாக்கிப் பகவானுக்கு அடிமைகளாக்கினார்.

மண் மிசையோநிகள் தோறும் பிறந்து எங்கள் மாதவனே
கண்ணுற நிற்கிலும் காணகில்லா உலகோர்கள் எல்லாம்
அண்ணல் இராமானுசன் வந்து தோன்றிய வப்பொழுதே
நண்ணரு ஞானம் தலைக் கொண்டு நாரணற்கு ஆயினரே – 41-

ஸ்ரீ பெரிய ஜீயர் அருளிய உரை – வியாக்யானம் –
எந்நின்ற யோனியுமாய்ப் பிறந்தாய் -திரு விருத்தம் – 1- என்கிறபடியே பூமியிலே
மனுஷ்ய திர்யகாதி யோநிகள் தோறும் அவதரித்து -நமக்கு நாதனான ஸ்ரீய பதியே
நமாம்ச சஷூ ரபி வீஷதேதம் -என்கிற தன்னைக் கண்ணுக்கு விஷயம் ஆக்கிக் கொண்டு நிற்கிலும் –
இவன் நமக்கு சேஷி என்று தர்சிக்க மாட்டாத லௌகிகர் எல்லாரும்
ஆஸ்ரிதருடைய இழவு பேறுகள் தம்மதாம் படியான -ச்வாமித்வ-ப்ராப்தியை உடையரான எம்பெருமானார் வந்து –
பாஷ்ய கரணாதி களாலே பிரகாசரான அக்காலத்திலே -ஸ்வ யத்னத்தாலே
துஷ்ப்ராபமான ஜ்ஞானமானது அதிசயித்து –சகல சேதன அசேதனங்களும் பிரகாரமாக
தான் பிரகாரியாய் இருக்கையாலே நாராயணா என்னும் திரு நாமத்தை உடையவனுக்கு-சேஷம் ஆனார்கள்
தோன்றல்-பிரகாசித்தல்
அதவா
தோன்றிய அப்பொழுதே -என்றது ஆவிர்பவித்த அப்பொழுதே என்னவுமாம்
அந்தப் பஷத்திலும் அப்பொழுதே என்றது அவதரித்து அருளின அக்காலத்திலே -என்றபடி
அல்லது தத் ஷணத்திலே என்ன ஒண்ணாது இறே
கண்ணுற நிற்க்கையாவது-சஷூர் விஷயமாக நிற்கை
ஞானம் தலைக் கொள்ளுகையாவது -ஞானம் அதிசயிக்கை-

நாராயணன் என்று பேர் கொண்டவருக்கு ஆளாக்கினார் -இவனே பர ப்ரஹ்மம் என்று யார் என்று காட்டி அருளினார் –
திரிபுரா தேவியார் வார்த்தை
அடியேன் -சொல்லாதார் இடத்தில் சொல்லாதே என்றாரே அந்த ராமானுஜர் பெருமாள் இடமும் -கடல் அரசன் இடம் –

————————–

3. எம்பெருமான் படி:

‘ஞானம் கனிந்த நலங்கொண்டு நாடொறும் நைபவர்க்கு, வானம் கொடுப்பது மாதவன்..66-.’

எம்பெருமான் யாவரொருவர் ஞானத்தினால் பக்தி, பரபக்தி, பரமபக்தி என்னும் நிலைகளையடைந்து ஸம்ஸாரத்தில்
இருப்புக் கொள்ளாமல் துடிதுடிக்கிறார்களோ அவர்களைச் சிரமப்படுத்தியே அவர்களுக்கு மோக்ஷமளிக்கிறான்.

3. எம்பெருமானார் படி:

‘வல்வினையேன் மனத்தில், ஈனங்கடிந்த இராமானுசன் தன்னை எய்தினார்க்கு அத்தானம் கொடுப்பது
தன், தகவென்னும் சரண் கொடுத்தே’.-66-

ஆனால், எம்பெருமானாரோ கிருபாமாத்திரப் பிரஸந்நாசாரியராகையால் ஒரு அதிகாரமும் பெறமுடியாத அடியார்களையும்,
அவர்களுடைய பாபங்களைப் போக்கி அவர்களைத் தம் திருவருளால் திருத்தி அவர்களும் மோக்ஷம் அடையும் படிச் செய்வார்.

ஞானம் கனிந்த நலம் கொண்டு நாடொறும் நைபவர்க்கு
வானம் கொடுப்பது மாதவன் வல்வினையேன் மனத்தில்
ஈனம் கடிந்த விராமானுசன் தன்னை எய்தினர்க்கத்
தானம் கொடுப்பது தன் தகவென்னும் சரண் கொடுத்தே -66 –

ஸ்ரீ பெரிய ஜீயர் அருளிய உரை – வியாக்யானம் –
ஸ்ரீய பதியான சர்வேஸ்வரன் மோஷம் கொடுப்பது -ஜ்ஞான விபாக ரூபமான பிரேமத்தை உடையராய் –
அந்த பிரேம அநுரூபமாக தன்னை ப்ராபித்து -அநுபவித்து -அவ்வனுபவ ஜனித ப்ரீதி காரித-கைங்கர்யம் செய்வது
எப்போதோ என்கிற ப்ராப்ய த்வரையாலே
ஒரு பகல் ஆயிரமூழி-திருவாய் மொழி -10 3-1 – – யாய்க் கொண்டு நாடொறும் சிதிலராமவர்களுக்கு –
மகா பாபியான என்னுடைய மனசிலே தோஷத்தை போக்கி அருளின எம்பெருமானார்
தம்மை யடைந்தவர்களுக்கு –வானம் -என்று சொன்ன அந்த ஸ்த்தானம் கொடுத்து அருளுவது -தம்முடைய கிருபை என்று
சொல்லப்படுகிற சாதனத்தை அவர்களுக்கு கைம்முதலாகக் கொடுத்து
இது ஒரு மோஷ பிரதனம் இருக்கும் படியே என்று கருத்து .
ஞானம் கனிந்த நலம் -என்றது -ஜ்ஞானத்தின் உடைய பக்வ தசையான
ப்ரேமம் -என்றபடி ./நலம் -ச்நேஹம் .
தாதாமி புத்தி யோகம் -திருவடிகளில் விழாமல் -கிருபையால் கூட்டிச் செல்பவர் திருவடிகளில் –ஞானம் பக்தி கொடுத்தது அனுபவிக்க –
ஆசை பிராப்யத்தில் ருசி வளர பண்ண /தகவு -கிருபை -/ உத்தாராக ஆச்சார்யர் அன்றி நம் ஸ்வாமி –
ஞானம் கனிந்து -பக்தி ஞான விசேஷம் -நலம் -பக்தி ரூபா பன்ன ஞானம் கொண்டு -மாதவன் கொடுக்க -இனி இனி கதறியபின் –
ஷேமுஷி பக்தி ரூபா -மதி நலம்–நைபவர்க்கு அவன் எய்தினவர்களுக்கு நம் ஸ்வாமி –கிருபை உந்த –
பிராட்டி ஸ்தானத்தில் ஸ்வாமி கிருபை -கிருபா பரதந்த்ரர் ஸ்வாமி -கொண்டு -அங்கு
இங்கு கொடுத்து –நெடும் வாசி -நினைவு கூட வாராத படி -கிருபையையை கொடுத்து -ஞான பலாதிகள் சொல்லி –
மோக்ஷ பிரதத்வம் -சரண முகுந்தத்வம் -சிரமம் இல்லாமல் நம் போல்வாருக்கும் -ஸ்வாமி அருளுகிறார் –

—————-

4. எம்பெருமான் படி:

‘சிந்தையினோடு கரணங்கள் யாவும் சிதைந்து முன்னாள், அந்தமுற்றாழ்ந்தது கண்டு அவையென்றனக்கன்றருளால்,
தந்தவரங்கனும் தன் சரண் தந்திலன்..69.’

பிரளய காலத்தில் கரணங்களே பரங்களின்றி இருந்த சேதனர்களுக்குச் சிருஷ்டி காலத்தில் அவைகளைக் கொடுத்துச்
சேதனர்களை ஸம்ஸாரத்தில் தள்ளி தன் சுயநலத்தைக் கருதித் தன் லீலாரஸத்திற்குச் சேதனரை எம்பெருமான் ஆளாக்குகிறான்.

4. எம்பெருமானார் படி:

‘தானது தந்து, எந்தை இராமானுசன் வந்தெடுத்தனன் இன்று என்னையே’.-69-
ஆனால், எம்பெருமானாரோ தாய் போல் பிரியபரராய், தந்தைபோல் ஹிதபரராய் பகவானுடைய திருவடிகளைக் காட்டிக் கொடுத்து
நம்மை ஸம்ஸாரத்திலிருந்து உத்தரிப்பித்தார். ஆகவே, எம்பெருமானாருடைய பரமகிருபை ஏற்றத்தையுடையதாகும்.

சிந்தையினோடு கரணங்கள் யாவும் சிதைந்து முன்னாள்
அந்தமுற்றாழ்ந்தது கண்டு அவையென் தனக்கு அன்றருளால்
தந்த வரங்கனும் தன் சரண் தந்திலன் தானது தந்து
எந்தை இராமானுசன் வந்து எடுத்தனன் இன்று என்னையே – 69- –

ஸ்ரீ பெரிய ஜீயர் அருளிய உரை – வியாக்யானம் –
ஸ்ருஷ்டே-பூர்வ காலத்தில் பிரதான கரணமான மனச்சோடே கூட சர்வ கரணங்களும்
அழிந்து நாசத்தை அடைந்து -அசித் விசேஷமாம் படி தரைப்பட்ட படி கண்டு -அந்தக்
கரணங்களை அசித் கல்பனாய் கிடக்கிற எனக்கு -அக்காலத்திலே –
கரண களேபரைர் கடயிதும் தயமாநமநா -ஸ்ரீ ரெங்கராஜ ஸ்தவம் -2-41 – – என்கிறபடியே
கேவலக் கிருபையாலே -உபகரித்து அருளின பெரிய பெருமாளும் –
கரணங்களைத் தந்தவோபாதி -தம்முடைய சரணங்களைத் தந்திலர்-
எம்பெருமானார் எனக்கு ஜனகராய்க் கொண்டு வந்து -அரங்கன் செய்ய தாளிணை யோடார்த்தான் – -52 –என்னும்படி –
தாம் அந்தத் திருவடிகளை தந்து அருளி-சம்சார ஆர்ணவ மக்னனான என்னை இன்று-எடுத்து அருளினார் -இது ஒரு உபகாரமே ! என்று கருத்து ..
தான் தந்து -அது -அரங்கன் திருவடிகள் / தனது திருவடிகள் -அத்ரபரத்ர ஸாபிதருவதற்கு அவன் திருவடிகள் அவரது இல்லையே –
உடையவர் இடமே எல்லா சொத்துக்களும் -/ உபாய உபேயங்களாக தன்னுடைய திருவடிகளை தந்து என்றுமாம் –
சிந்தை -கரணங்கள் -தனி மதிப்பு மனஸ் என்பதால் தனியாக எடுத்து -அரங்கனுக்கு -இங்கே வந்த பின்பும் தன் சரண் கொடுக்க வில்லையே –
இங்கே வந்ததே ரக்ஷிக்க என்று விருது வூதி –ஸ்வாமியை வரவழைத்த அரங்கன் -அமுத்தனாரை கைக் கொள்ள –
ஆழ்வான் ஆண்டான் போல்வார் இல்லையே அமுதனார் -அவர்கள் போலே தாமே சென்று ஸ்வாமியை பற்ற
ஆச்சார்ய சம்பந்தம் பெற்றாள் தானே கொடுக்க முடியும் -இரண்டு காரணங்கள் தாராமைக்கு –
பிரளய ஆர்ணவத்தில் இருந்து அரங்கன் உதாரணம் பண்ண சம்சார ஆர்ணவத்தில் இருந்து இவர் –
அவன் விபசரிக்க கரணங்களைக் கொடுக்க ஸ்வாமி கைங்கர்யம் பண்ண அருளினார் –
என்னையே எடுத்தனர் -நீசனேன் -என்னை எடுத்தால் லோகங்கள் எல்லாம் எடுத்தது போலே தானே-
தனது திருவடிகளை தந்தது தானே கூரத் தாழ்வானை இட்டு என்னை உத்தரித்தது –

————

5. எம்பெருமான் படி:

‘தேரார் மறையின் திறமென்று மாயவன் தீயவரைக், கூராழி கொண்டு குறைப்பது..74.’

எம்பெருமான் தன் ஆஞ்ஞா ரூபமான வேதங்களின் கட்டளைப்படி நடவாதவர்களைத் தம் சக்கராயுதத்தைக் கொண்டு நிரஸிப்பான்.

5. எம்பெருமானார் படி:

‘கொண்டலனைய வண்மை ஏரார் குணத்து எம் இராமானுசன் அவ்வெழில் மறையில் சேராதவரைச் சிதைப்பது
அப்போதொரு சிந்தை செய்தே’.–74-

ஆனால், எம்பெருமானாரோ பாஹ்யர்களையும் குத்ருஷ்டிகளையும் வாதப் போரில் அப்போதப்போது
திருவுள்ளத்தில் உதிக்கின்ற நல்ல யுக்திகளைக் கொண்டு கண்டித்துவிடுவர்.

தேரார் மறையின் திறமென்று மாயவன் தீயவரைக்
கூராழி கொண்டு குறைப்பது கொண்டலனைய வண்மை
ஏரார் குணத் தெம்மி ராமானுசன் அவ் எழில் மறையில்
சேராதவரைச் சிதைப்பது அப்போதொரு சிந்தை செய்தே – -74- –

ஸ்ரீ பெரிய ஜீயர் அருளிய உரை – வியாக்யானம் –
நித்யத்வ அபௌருஷேயத்வ யுக்தமாய் -பிரத்யஷாதி பிரமாண விலஷணமாய் -சமஸ்த சேதன ஹித அஹித ஜ்ஞாபகமாய் –
தம்முடைய சாசனா ரூபமாய் -இருந்துள்ள வேதத்தின் உடைய பிரகாரத்தை நிரூபிக்கிறிலர்கள் என்று
ஆச்சர்ய ஞான சக்திகனான சர்வேஸ்வரன் அஞ்ஞாதி லங்கன சீலரான துஷ்டரை சேதித்து அருளுவது –கூரிய திரு ஆழியாலே –

சர்வ விஷயமாக உபகரிக்கும்படியாலே மேகத்தோடு ஒக்க -சொல்லலாம்படியான ஔதார்யத்தை உடையவராய் –
அனுத்தமமான கல்யாண குணங்களை உடையவராய் – நமக்கு சேஷிகளாய் இருக்கிற எம்பெருமானார் –
அந்த விலஷணமான வேதத்தில் -அப்ராமணிய புத்தியாலும் – அயதார்த்த பிரதிபத்தியாலும் -பொருந்தாத நிலை உடையவர்களை
பங்கயத்து அருளுவது -தாதாத் விகைகளான யுக்திகளாலே -ஈதொரு வீர்யம் இருக்கும் படியே -என்று கருத்து .
குறைக்கை-சேதிக்கை
சிதைக்கை-அழிக்கை-
அப்போதொரு சிந்தை செய்கையாவது -அப்போதொரு விசாரத்தைப் பண்ணுகை.
திருவாழி எதிர் பார்ப்பான் அவன் -இவர் யுக்தி மாத்ரத்தால் -உண்ணும் குலத்தில் பிறந்து –
தசரத கோபாலர் 18 நாடான் -மாதவன் /-திர்யக் காலில் விழுந்தும் ,-ஸ்தம்பத்தில் இருந்து ஆவிர்பவித்தும்..-
இப்படி எல்லாம் உயர்ந்த செயல்களை செய்தும் –அலங்கிரித்த சிரை சேதம்-சம்சாரிகளை போல பல தடவை பிறந்து-
பால்ய சேஷ்டிதங்களாலே விரோதி நிரசனம்-கண்ணன் -பெருமாள் போலே வில் வித்யை இத்யாதி கற்ற பின் இல்லாமல் –
அவனும் ஆழி உதவியால் – ராமானுஜர் அப்போது ஒரு சிந்தை செய்தே -அவ வப்போது ஒவ்வொரு சிந்தை –
யதாயத்தா தர்ம -தலை குனிவு சொல்லிப் போந்தத்தை இவர் சிந்தை செய்தே – யுக்தி சாதுர்யத்தால் மட்டுமே –

———-

பரனும் பரிவிலனாம் படி பல்லுயிர்க்கும்
விண்ணின் தலை நின்று வீடளிப்பன் எம்மிராமானுசன்
மண்ணின் தலத் துதித்துய் மறை நாலும் வளர்த்தனனே – – -95 – –

ஸ்ரீ பெரிய ஜீயர் அருளிய உரை – வியாக்யானம் –
இவர் பரிவுடன் ஒப்பிட்டால் எம்பெருமானுக்கும் ஒப்பாகாதே-அதி மானுஷ சேஷ்டிதங்கள் -மோக்ஷ ஏக ஹேதுவாக
இந்த மண்ணின் தோஷம் தட்டாமல் -செய்த உபகாரங்கள் -வேதம் வளர்த்து -இதுவே -தர்மம் சமஸ்தானம் –
ஆத்மா யதாம்யா ஞானம் வந்து ருசி பிறந்து -கர்மங்களை போக்க பிரபத்தி பண்ண வைத்து -இத்யாதி
அவன் உள் நின்று -இவர் வெளியில் பயம் இல்லாமல் -இரா மடம் ஊட்டுவரைப் போலே -அவன்–
இவரோ சேதனருடைய ஸ்வா தந்த்ரயதிற்கு அஞ்சாது கண் காண வந்து உய்விக்கிறார் .
அவனோ பரன் -அந்நியன் -இவரோ எம் இராமானுசன் –அவன் சர்வ வியாபகம் -உள் நின்று -அதிசயம் இல்லையே –
இவரோ விண்ணின் தலை நின்று உதித்து –
விலை பால் போல அவன் பரிவு தாய் போல் ஸ்வாமி பரிவு-அது தத்வ வசனம் இது தத்வ தரிசினி வாக்கியம்-
அன்னமாய் அற மறை நூல் பயந்தான்-கொடுத்தான் அவன்– வளர்த்தார் ஸ்வாமி-பெற்ற தாய் அவன் வளர்த்த இதத் தாய் ஸ்வாமி –

ஸ்ரீ விஷ்ணு லோக மணி மண்டப மார்க்க தாயீ -தாடீபஞ்சகம்-

கையில் கனி என்னக் கண்ணனைக் காட்டித் தரிலும் உன்தன்
மெய்யில் பிறங்கிய சீரன்றி வேண்டிலன் யான் நிரயத்
தொய்யில் கிடக்கிலும் சோதி விண் சேரிலும் இவ்வருள் நீ
செய்யில் தரிப்பன் இராமானுச என் செழும் கொண்டலே – – -104 –

ஸ்ரீ பெரிய ஜீயர் அருளிய உரை – வியாக்யானம் –

—————

எம்பெருமானாருடைய ஜீவதசையில் நேர்ந்த முக்கிய சம்பவங்களின் காலக்குறிப்பு

1. ஜனனம்: கி.பி. 1017
2. யாதவப்பிரகாசரிடம் படித்தது: கி.பி. 1033
3. ஸ்ரீரங்கம் முதல் தடவை (ஆளவந்தாரைச் சேவிக்கச்) சென்றது: கி.பி. 1042
4. ஸந்யஸித்தது: கி.பி. 1049
5. சோழனுடைய இம்சைக்கு அஞ்சி மைசூர் பிராந்தியம் சென்றது: கி.பி. 1096
6. விட்டலதேவனென்னுமரசனை தம் சித்தாந்தத்தில் சேர்த்துக் கொண்டு விஷ்ணுவர்த்தனனென்று நாமமிட்டது: கி.பி. 1098
7. மேல்கோட்டையில் ஸ்ரீநாராயணப்பெருமாளை எழுந்தருளப் பண்ணியது: கி.பி. 1100
8. மேல்நாட்டிலிருந்தது (வரை): கி.பி. 1116
9. ஸ்ரீரங்கம் திரும்பியது: கி.பி. 1118
10. திருநாட்டை அலங்கரித்தது: கி.பி. 1137

மொத்த ஆயுள்கால வருடங்கள்: 120

எம்பெருமானாருடைய திருநாமங்களின் குறிப்பு

திருநாமங்களும் சாற்றினவர்களும்:

1. இராமாநுஜர் – திருமலைநம்பி
2. இளையாழ்வார் – திருமலைநம்பி
3. எதிராசர் – பகவான் வரதன் (பேரருளாளன்)
4. உடையவர் – அழகிய மணவாளன் (ஸ்ரீ ரங்கநாதன்)
5. எம்பெருமானார் – திருக்கோட்டியூர் நம்பி
6. ஸ்ரீபாஷ்யகாரர் – ஸரஸ்வதிதேவி
7. அப்பனுக்குச் சங்காழி அளித்த பெருமான் – திருவேங்கட சம்பவம்
8. நங்கோயிலண்ணர் – கோதையார் (ஸ்ரீ ஆண்டாள்)

மஹான்களுடைய பெருமையைச் சொல்லியிருக்கும் பாசுரங்களின் குறிப்பு

1. ‘பரமனை, பயிலும் திருவுடையார் யவரேலும் அவர் கண்டீர், பயிலும் பிறப்பிடை தோறு எம்மையாளும் பரமரே’

2. ‘பரமனை, பணியுமர் கண்டீர், நாளும் பிறப்பிடைதோறு எம்மையாளுடை நாதரே’

3. ‘எந்தை பிரான் தன்னை, பாதம் பணிய வல்லாரைப் பணியுமவர் கண்டீர், ஓதும் பிறப்பிடைதோறு எம்மையாளுடையவர்களே’

4 ‘அவனடியாரடியே கூடுமிதுவல்லால் விடுமாறென்பதென்? அந்தோ! வியன்மூவுலகு பெறிலுமே’

5. ‘அவனடியார் சிறுமாமனிசராய் என்னை ஆண்டார் இங்கே திரியவே’

6. ‘பெரியார்க்கு ஆட்பட்டக்கால் பெறாத பயன் பெறுமாறு’

7. ‘உன் தொண்டர்கட்கே, அன்புற்றிருக்கும்படி, என்னையாக்கி அங்காட்படுத்தே’

8. வில்லி புதுவை விட்டுசித்தர் தங்கள் தேவரை, வல்லபரிசு வருவிப்பரேல் அது காண்டுமே’

9. ‘தென்குருகூர் நம்பியென்றக்கால், அண்ணிக்கும் அமுதூறும் என்னாவுக்கே’

————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ திருமலை நல்லான் சக்கரவர்த்தி ஸ்ரீ ராம கிருஷ்ண ஐயங்கார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருவரங்கத் தமுதனார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: