அரங்கனே தரங்க நீர் கலங்க வன்று குன்று சூழ்
மரங்கள் தேய மா நிலம் குலுங்க மா சுணம் சுலாய்
நெருங்க நீ கடைந்த போது நின்ற சூரர் என் செய்தார்
குரங்கை யாள் உகந்த வெந்தை கூறு தேற வேறிதே –21-
பதவுரை
குரங்கை |
– |
வானரப்படைகளை |
ஆள் உகந்த எந்தை ! |
– |
உகந்த ஆட்கொண்ட நாயனே! |
அரங்கனே |
– |
ஸ்ரீஅரங்கநாதனே! |
அன்று |
– |
(துர்வாஸ மஹர்ஷியின் சாபத்தினாலே தேவர்கள் செல்வமிழந்து வருந்தி உன்னைச் சரணம் பற்றி நின்ற) அன்று |
தரங்கம் நீர் கலங்க |
– |
அலைகளையுடைய ஸமுத்ரமானது கலங்கவும் |
மா நிலம் குலங்க |
– |
பெரிய பூமியானது குலுங்கவும் |
மாகணம் நெருங்க கலாய் |
– |
வாஸுகி யென்னும் நாகத்தை அழுந்தச் சுற்றி |
நீ கடைந்த |
– |
(கடலை) நீ கடைந்தருளின காலத்திலே |
நின்ற |
– |
அருகே நின்று கொண்டிருந்த |
சூரர் |
– |
மிக்க பராக்ரமசாலிகளென்று பேர்பெற்ற தேவாஸுர ப்ரப்ருதிகள். |
என் செய்தார் |
– |
என்ன காரியம் செய்தார்கள் |
இது |
– |
இவ்விஷயத்தை |
வேறு |
– |
விசேஷித்து |
தேற |
– |
நான் தெரிந்து கொள்ளும்படி |
கூறு |
– |
அருளிச் செய்யவேணும். |
அரங்கனே தரங்க நீர் கலங்க வன்று –
அரங்கனே அன்று துர்வாச மஹா ரிஷியின் சாபத்தால் தேவர்கள் செல்வம் இழந்து வருந்தி
உன்னை சரணம் அடைந்த போது-
அலைகள் உடைய சமுத்ரம் கலங்கவும்
குன்று சூழ் மரங்கள் தேய –
மந்திர மலை சூழ் மரங்கள் தேயவும்
மா நிலம் குலுங்க
பெரிய பூமியானது குலுங்கவும்
மா சுணம் சுலாய் நெருங்க-
சர்ப்ப ஜாதி -வாசுகி என்னும் -நாகத்தை அழுத்திச் செற்ற
நீ கடைந்த போது நின்ற சூரர்
கடல் நீ கடைந்து நீ அருளின காலத்திலேயே அருகே நின்ற பராக்கிரம சாலிகள் என்ற பேர் பெற்ற தேவ அசுர பிரக்ருதிகள்
என் செய்தார் இது வேறு தேற கூறு
என்ன செய்தார்கள் என்று இவ் விஷயத்திலே நான் தெரிந்து கொள்ளும் படி விசேஷித்து அருளிச் செய்ய வேணும்
தானே அசகாசனாய்க் கடைந்து -தேவர்களும் அசுரர்களும் கடைந்தார்கள் என்று விஜய பெயர் பெறும் படி கொடுத்து அருளினாய்
குரங்கை யாள் உகந்த வெந்தை
வானர படைகளை வகுத்து -அது கொண்டு நாயகனாய் ராவணனைத் தொலைத்தது எல்லாம் தனது சேஷ்டிதங்கள் என்றாலும்
வானரங்கள் இலங்கையை தவிடு பொடி ஆக்கினார்கள் என்ற பெயர் வாங்கிக் கொடுத்து அருளினாய்-
என்ன ஆஸ்ரித பஷ பாதம் என்கிறார்-
இந்திரன் முதலிய தேவர்களின் வேண்டுகோளுக்கிணங்க மந்தர மலையை மத்தாக நாட்டி-
வாஸுகி நாகத்தைக் கடை கயிறாகச் சுற்றிக் கடல் கடைந்த போது தேவர்கள் அசுரர்கள் முதலியோர்
தாங்கள் கயிற்றை வலித்துக் கடைவதாகக் கைவைத்து க்ஷண காலத்திற்குள் இளைத்துப்போய் கைவாங்கினவாறே ‘
நீங்கள் வெறுமனே இருங்கள்’ என்று அவர்களைச் சுகமாக உட்காரவைத்து விட்டு
எம்பெருமான் தானே அஸஹாயனாய்க் கடைந்து தலைக் கட்டியிருக்கச் செய்தேயும்
“தேவதைகள் கடல்கடைந்தார்கள்” என்று நாட்டார் தேவதைகளுக்கு விஜயப் புகழ் கூறுமாறு அவர்களை அபிமாநித்ததும், –
அதிமாநுஷக்ருத்யங்களைச் செய்து இராவணனைத் தொலைத்ததெல்லாம் தன்னுடைய திவ்ய
சேஷ்டிதமாயிருக்கச் செய்தேயும். ‘வாநர வீரர்கள் இலங்கையைப் பொடிபடுத்தினார்கள்’ என்று உலகத்தார்
அவர்கள் தலையிலே விஜயப்புகழை ஏறிட்டுகூறுமாறு அவர்களை அபிமாநித்ததும்-
என்ன ஆசரித பக்ஷபாதம்! என்று விஸ்மப்படுகிறார்கள்.
கடல் கடைந்தவிதம் மிகவும் பயங்கரமாயிருந்தது என்கைக்காக,
“தரங்க நீர் கலங்க, குன்றுசூழ் மரங்கள் தேய, மாநிலம் குலுங்கக் கடைந்தபோது” என்கிறார்.
ஸர்ப்பஜாதிக்கு வாசகமாகிய மாசுணம் என்றசொல் இங்கு வாஸுகி யென்று சிறப்புப் பொருளைத் தந்தது.
கலாய் = சுலாவி என்றபடி: சுலாவுதல்- சுற்றுதல்.
இப்படி நீ கடைந்த காலத்திலே, “நாங்கள் பராக்ரமசாலிகள்” என்று செருக்கி மார்புதட்டிக் கிடப்பவர்களான தேவர்கள்
“கடலில் நின்றும் அமுதம் கிளர்ந்து வருவது எப்போதோ!” என்று தாங்கள் உணவு பெறுங்காலத்தை எதிர்பார்த்து
அக்கடலையே நோக்கிக் கொண்டிருந்தது தவிர ஸமுத்ரமதந காரியத்துக்கு உறுப்பாக ஒரு காரியமும் செய்யவில்லை;
செய்ததுண்டாகில் பிரானே! நீயே சொல்லிக்காண்; மந்தரமலைக்கு அதிஷ்டநமா யிருந்தார்களா?
வாஸுகிக்கு நல்லசக்தியுண்டாம்படி வரமளித்தார்களா?
அல்லது கடை கயிற்றைத்தான் சற்றுப்பிடித்து வலித்தார்களா? என்னதான் செய்தார்கள்?
அவர்கள் செய்தது ஒன்றுமில்லை.
(அப்படி யிருக்கச்செய்ததேயும் ‘தேவர்கள் கடல் கடைந்தார்கள்’ என்று நாடெங்கும் புகழும்படி
அவர்களை அபிமாநித்தது என்ன ஆச்ரித பக்ஷபாதம்! என்ற வியப்பு உள்ளுறை.)
—————————————————————————
பண்டும் இன்றும் மேலுமாய் பாலனாகி ஞாலம் ஏழும்
உண்டும் மண்டி ஆலிலைத் துயின்ற வாதி தேவனே
வண்டு கிண்டு தண் துழாய் அலங்கலாய் கலந்த சீர்ப்
புண்டரீகப் பாவை சேரு மார்ப பூமி நாதனே –22-
பதவுரை
பண்டும் இன்றும் மேலும் ஆய் |
– |
மூன்று காலங்களிலும் கைவிடாதே நின்று ரக்ஷித்தருளுமவனாகையாலே |
ஞானம் எழும் |
– |
உலகங்களையெல்லாம் |
மண்டி உண்டு |
– |
(ப்ரளய வெள்ளம் கொள்ளாதபடி) விரும்பி அமுது செய்து |
ஓய் பாலன் ஆகி |
– |
ஒப்பற்ற சிறு குழந்தையாய் |
ஆலிலை துயின்ற |
– |
ஆலந்தளிரிலே கண்வளர்ந்தருளின |
ஆதிதேவனே ! |
– |
மூல புருஷனே! |
வண்டு |
– |
வண்டுகளானவை |
கிண்டு |
– |
(மதுவுக்காக வந்து) குடையும்படியான |
தண்துழாய் அலங்கலாய் |
– |
குளிர்ந்ததிருத்துழாய் மாலையை அணிந்தவனே! |
சீர் கலந்த புண்டரீக பாவை சேரும்மார்ப! |
– |
அழகு சேர்ந்த தாமரை மலரிற்பிறந்த பெரிய பிராட்டியார் வந்து புணரும்படியான திருமார்பையுடையவனே! |
பூமி நாதனே! |
– |
பூமிப்பிராட்டிக்கு நாதனே! (என்று ஈடுபடுகிறார்.) |
பண்டும் இன்றும் மேலுமாய்-
மூன்று காலத்திலும் -சிருஷ்டி காலத்து முன்பும் -சிருஷ்டி காலத்திலும் -பிரளய காலத்திலும்
கை விடாமல் ரஷித்து அருளி
ரக்ஷகத்வம் முக்காலத்திலும் குறைவற்றது என்பதையே பேண்டும் இன்றும் மேலும் என்கிறார்
ஸ்ருஷ்டிக்கு முன்பும் ஸ்ருஷ்டியின் பொழுதும் பிரளய காலத்திலும் என்றுமாம்
ஓர் பாலனாகி ஞாலம் ஏழும் உண்டும் மண்டி –
அத்விதீயமான சிறு குழந்தையாய் -பிரளய வெள்ளம் கொள்ளாத படி உலகங்களை எல்லாம் விரும்பி அமுது செய்து
ஆலிலைத் துயின்ற வாதி தேவனே-வண்டு கிண்டு தண் துழாய் அலங்கலாய் கலந்த சீர்ப்-
புண்டரீகப் பாவை சேரு மார்ப பூமி நாதனே –
ஒருவரையும் விலக்காமல் அனைவரையும் திரு வயிற்றிலே கொண்டவன் ஆஸ்ரிதர் பக்கல் கொள்ளும்
பஷ பாதம் வியப்பு அல்ல –என்கிறார் –
புண்டரீகப் பாவை சேரு மார்ப பூமி நாதனே –-ஸ்ரீ யபதி அன்றோ –
பிறந்த இடமான தாமரையும் கொதிக்கும்படியான திரு மார்பு –
அவளைத் தண்ணீர் தண்ணீர் என்னப் பண்ணும் திரு மார்பு-
எல்லா வுலகங்களையும் கொள்ளை கொள்ளவந்த ப்ரளய காலத்திலே
வஸிஷ்ட சண்டாள விபாகம் பாராமல் எல்லாரையும் திருவயிற்றிலே வைத்து நோக்கின உனக்கு
ஆச்ரியதர்கள் விஷயத்திலே வாத்ஸல்யமுள்ளமை ஒரு வியப்போ? என்கிறார் இப்பாட்டில்.
அநாச்ரிதர்கள் என்று ஒருவரையும் விலக்காமல் ஆச்ரிதர்களோடு மையமாகவே அவர்களையும் வயிற்றிற் கொண்டவன்
ஆச்ரித விஷயத்தில் காட்டும் பக்ஷபாதம் உண்மையில் வியப்பன்றே.
எம்பெருமானுடைய ரக்ஷகத்வம் மூன்று காலங்களிலும் குறையற்ற தென்கிறார்-
பண்டும் இன்றும் மேலும் என்று.
பண்டும் என்றது ஸ்ருஷ்டிக்கு முற்காலத்திலே என்றபடி.
இன்றும் என்றது- ஸ்ருஷ்டிகாலத்தைச் சொன்னபடி.
மேலும் என்றது ப்ரளய காலத்தைச் சொன்னபடி.
ஸ்ருஷ்டிக்கு முற்காலத்தில் எம்பெருமானுடைய ரக்ஷகத்வம் எப்படிப்பட்ட தென்னில்;
ஒன்று ஒன்றிலே லயிக்கிறதென்று சொல்லிக்கொண்டு வருமிடத்து இறுதியாக
“துக்ஷ†*** என்று சொல்லியிருக்கையாலே தன் பக்கலிலே ஏறிட்டுக்கொண்டு நோக்கும் விதம் அறியத்தக்கது.
ஸ்ருஷ்டி தசையில் எல்லா வுயிர்கட்கும் ஏககாலத்தில் கரண களே பரங்கள் கொடுத்தருளியதும்,
ப்ரளய தசையில் அனைத்தையும் வயிற்றிலே வைத்து நோக்கியதும் ரக்ஷண ப்ரகாரஙக்ள்
—————
வால் நிறத்தோர் சீயமாய் வளைந்த வாள் எயிற்றவன்
ஊனிறத் துகிர்த் தல மழுத்தினாய் உலாய சீர்
நானிறத்த வேத நாவர் நல்ல யோகினால் வணங்கி
பால் நிறக் கடல் கிடந்த பத்ம நாபன் அல்லையே –23-
பதவுரை
வால் திறந்து |
– |
வெளுத்த நிறத்தையுடைய |
ஓர் சீயம் ஆய் |
– |
ஒப்பற்ற நரசிங்க மூர்த்தியாயவதரித்து |
வளைந்த வாள் வயிற்றினன் |
– |
வளைந்தும் ஒளிபெற்றுமிருக்கிற பற்களையுடையனான இரணியனுடைய |
ஊன் நிறத்து |
– |
சரீரத்தில் மர்ம ஸ்தானத்திலே |
உதிர் தலம் அழுத்தினாய் |
– |
கை நகங்களை அழுத்தினவனே! |
உலாய சீர் |
– |
உலகமெங்கும் உலாவுகின்ற சீர்மையையுடைய |
கால் நிறத்த வேதம் |
– |
உதாத்தம், அநுதாத்தம், ஸ்வரிதம்,ப்ரசயம் எனகிற நால்வகை ஸ்வரங்களையுடைய வேதங்களை |
நாவர் |
– |
நாவிலே உடையவர்கள் (ச்ரோத்ரியர்கள்) |
நல்ல யோதினால் |
– |
விலக்ஷணமான உபாயத்தினாலே |
வணங்கு |
– |
வணங்குவதற்கு இடமான |
பால்நிறக் கடல் |
– |
திருப்பாற் கடலிலே |
கிடந்த |
– |
பள்ளிகொண்டருளின |
பற்பநரபன் அல்லையே |
– |
பத்மநாபன் நீயேயன்றோ |
வால் நிறத்தோர் சீயமாய் –
வெளுத்த நிறத்தை உடைய ஒப்பற்ற நரசிம்ஹ மூர்த்தியாக திருவவதரித்து
ஸ்வரூபம் மட்டும் இன்றி நிறத்தையும் மாற்றிக் கொண்டானே என்கிறார்-
காளமேக ஸ்யாமளானாய் இருந்தும் வெண்ணிறமாக்கிக் கொண்டாயே –
யுக வர்ண கிரமம் ஆஸ்ரிதர் விரும்பும் வர்ணம் கொள்பவனே
வால் நிறத்து -வாண் நிறத்து என்று திவ்யமான தன்மை என்றும் கொள்ளலாம்
வளைந்த வாள் எயிற்றவன்-
வளைந்தும் ஒளி பெற்ற பற்களையும் உடைய ஹிரண்யனை
ஊனிறத் துகிர்த் தல மழுத்தினாய்
மர்ம ஸ்தானத்தில் -ஹிருதயத்தில் திருக் கை நகங்களை அழுத்தினவனே
உலாய சீரநானிறத்த வேத நாவர்
எங்கும் உலாவுகின்ற சீர்மையை உடைய -நான்கு ஸ்வரங்கள் -உதாத்தம் அனுதாதம் ஸ்வரிதம் பிரசயம் -உடைய வேதங்களை –
நாவர் -நாவிலே உடையவர்கள் -ஸ்ரோத்யர்கள்
நல்ல யோகினால் வணங்கி-பால் நிறக் கடல் கிடந்த பத்மநாபன் அல்லையே
மனுஷ்ய திர்யக் ஜாதிகள் இரண்டையும் ஏக விக்ரஹமாக்கி தூணிலே தோன்றிய விந்தையை அருளுகிறார்
ப்ரளயகாலத்து ஆபத்தைப்போக்கி வடதளசாயியாக அமைந்தது மிகவும் அற்புதமான செயல் என்று
அதிலே ஈடுபட்டுப் பேசினார் கீழ்ப்பாட்டில்.
இது அகடிதகட நாஸாமர்த்தியமானது நரசிங்கவுருவங்கொண்ட ஸாமர்த்தியத்தின் முன்னே ஒரு பொருளாக மதிக்கத்தக்கதோ?
****** என்கிறபடியே சரீரத்தில் ஏகதேசத்தை மநுஷ்ய ஸஜாதீயமாக்கியம் ஏகதேசத்தைத் திர்யக் ஸஜுதியமாக்கியும்
இப்படி இரண்டு ஜாதியை ஏகவிக்ரஹமாக்கித் துணிலேவந்து தோன்றிய வித்தகம் ஸாமாந்யமானதோ?
இதனைப் பரிசோதிக்க வல்லார்? என்கிறார் இப்பாட்டில்.
வால் நிறத்தோர் சீயமாய் = புருஷோத்தமன் தன்ஸ்ரூபத்தை அழித்து ஸிம்ஹஸஜா தீயனது போலவே
காளமேகம்போன்ற தன்நிறத்தையும் மாற்ற வெண்ணிறத்தை ஏறிட்டுக்கொள்வதே! என்று ஈடுபடுகிறார்.
வால் வெண்மை.
இனி, வான் நிறம்” எனப் பிரித்து, திவ்யமான தன்மையையுடைய என்று பொருள் கொள்ளுதலும் நன்றே.
சீயம் = சிங்கம்.
“வளைந்தவா ளெயிற்றவன்” என்றதனால் இரணியனுடைய பயங்கரமான வடிவுடைமை தோன்றும்.
ஊன்நிறம்- சரீரத்தின் மர்மஸ்தாநம்- ஹ்ருதயமென்க.
உகிர்த்தலம் என்ற விடத்து, “தலம்” என்றது வார்த்தைப்பாடு. ‘உலாய” என்றது ‘உலாவிய’ என்றபடி.
————–
கங்கை நீர் பயந்த பாத பங்கயத்து எம் அண்ணலே
அங்கை யாழி சங்கு தண்டு வில்லும் வாளும் ஏந்தினாய்
சிங்கமாய தேவ தேவ தேனுலாவு மென் மலர்
மங்கை மன்னு வாழு மார்ப வாழி மேனி மாயனே –24-
பதவுரை
கங்கை நீர் |
– |
கங்கா தீர்த்தத்தை |
பயந்த |
– |
உண்டாக்கின |
பாத பங்கயத்து எம் அண்ணலே |
– |
தீருவடித் தாமரையையுடைய எம்பெருமானே! |
அம் கை |
– |
அழகிய திருக்கையிலே |
ஆழி சங்கு தண்டும் வில்லும் வாளும் |
– |
பஞ்சாயுதாழ்வாரக்ளை |
ஏந்தினாய் ! |
– |
ஏந்திக் கொண்டிருப்பவனே! |
சிங்கம் ஆய |
– |
நரஸிம்ம மூர்த்தியாயவதரித்த |
தேவ தேவ! |
– |
தேவாதி தேவனே; |
தென் உலாவும் மெல்மலர் மங்கை |
– |
தேன் பொருந்திய ஸுகுமாரமான தாமரைப் பூவிற் பிறந்த பிராட்டி |
மன்னிவாழும் மார்ப |
– |
(அப்பூவை விட்டு வந்து) பொருந்தி வாழும்படியான திருமார்பையுடையவனே! |
ஆழி மேனி |
– |
கடல் போன்ற திருமேனியையுடைய |
மாயனே |
– |
ஆச்சர்ய பூதனே! (என்று ஈடுபடுகிறார்.) |
கங்கை நீர் பயந்த பாத பங்கயத்து எம் அண்ணலே
கங்கை தீர்த்தம் உண்டாக்கிய திருவடித் தாமரையை உடைய எம்பெருமானே
அங்கை யாழி சங்கு தண்டு வில்லும் வாளும் ஏந்தினாய்-
அழகிய திருக்கைகளிலே பஞ்சாயுத ஆழ்வார்களையும் ஏந்திக் கொண்டு இருப்பவனே-
சிங்கமாய தேவ தேவ
நரசிம்ஹ மூர்த்தியாய் திருவவதரித்த தேவாதி தேவனே –
தேனுலாவு மென் மலர் மங்கை மன்னு வாழு மார்ப –
தேன் பொருந்திய சுகுமார பூவினில் பிறந்து அத்தை விட்டு வந்து பொருந்தி வாழும் படியான திரு மார்பு உடையவனே
வாழி மேனி மாயனே-
கடல் போன்ற திருமேனி உடைய ஆச்சர்ய பூதனே -என்கிறார்
அஹங்கார்களில் தலைவனான ருத்ரருக்கும் ஸ்ரீ பாத தீர்த்தம் தந்து அருளினாய்
கால தாமதம் இராமல் எப்போதும் திவ்ய ஆயுதம் தரித்துக் கொண்டு இருப்பவனே
இத்தை ஒரு நொடியிலே அங்கே அப்பொழுதே தோன்றி வெளியிட்டாய் நரசிம்ஹ மூர்த்தியாய் –
இப்படிப்பட்ட கல்யாண குணங்களில் தோற்று பெரிய பிராட்டியார் மன்னிக் கிடக்கிறார்
உனது திருமேனியை சேவித்த கண்கள் குளிர்ந்து தாப த்ரயங்கள் அற்றதே-
கரும் கடலைக் கண்டவாறே கண்களும் குளிர்ந்து சகல தானங்களும் ஆறுமே –
அஹங்காரிகளில் தலைவனான ருத்ரனுக்கும் ஸ்ரீபாத தீர்த்தத்தை தந்தருளி
அவனைப் பாவனஞ் செய்தருளினவனன்றோ நீ; ****** என்றபடி-
இடர்ப்பட்டு வரும் அடியார்களைத் துயர்நீக்கி ரக்ஷிப்பதில் காலதாமதம் நேரிடாமைக்காகப்
பஞ்சாயுதாழ்வார்களை எப்போதும் திருக்கையிலே எந்திக் கொண்டிருப்பவனன்றோ நீ:
அந்த ஆச்ரிதரக்ஷண சீக்ஷையை இருஸமய விசேஷத்திலே நரசிங்கமாய்த் தோன்றி வெளியிட்டவனன்றோ நீ;
இப்படிப்பட்ட குணங்களுக்குத் தோற்றுப் பெரிய பிராட்டியார் உன்னை விடமாட்டாதே எப்போதும் மார்பில் மன்னியிருக்கின்றாள் அன்றோ;
கருங்கடலைக் கண்டவாறே கண்களுங் குளிர்ந்து கைல தாபங்களும் ஆறவதுபோல உன் திருமேனியை ஸேவித்தவாறே
என் கண்கள் குளிர்ந்த தாபத்ரயமும் ஆறம்படியா யிரா நின்றதே! என்று ஈடுபடுகிறார்.
————-
வரத்தினில் சிரத்தை மிக்க வாள் எயிற்று மற்றவன்
உரத்தினில் கரத்தை வைத்து உகிர் தலத்தை ஊன்றினாய்
இரத்தி நீ யிது என்ன பொய் யிரந்த மண் வயிற்றுளே
கரத்தி யுன் கருத்தை யாவர் காண வல்லர் கண்ணனே –25-
பதவுரை
வரத்தினில் |
– |
(பிரமன் கொடுத்த) வரத்திலே |
சிரத்தை மிக்க |
– |
அதிகமான நம்பிக்கையுடையவனாய் |
வாள் எயிறு |
– |
வாள் போன்ற (பயங்கராமன) கோரப்பற்களையுடையவனான |
மற்றவன் |
– |
ஆச்ரித சத்ருவான இரணியனுடைய |
உரத்தினில் |
– |
மார்விலே |
கரத்தை வைத்து |
– |
திருக்கைகளை வைத்து |
உகிர்த்தலத்தை |
– |
நகரங்களை |
ஊன்றினாய் |
– |
அழுத்திக் கொன்றாய்; |
நீ |
– |
இப்படிப்பட்ட நீ |
இரத்தி |
– |
(ஒரு ஸயம் மாவலியிடத்தே சென்று) யாசிக்கிறாய்; |
இது என்ன பொய் |
– |
இது என்ன இந்திரஜாலம்! |
இரந்த மண் |
– |
யாசித்துப்பெற்ற உலகத்தை |
வயிற்றுளே கரத்தி |
– |
(ஒரு கால்) திருவயிற்றுக்குள்ளே ஒளித்து வைக்கிறாய்; |
கண்ணனே! கண்ணபிரானே! |
||
உன் கருத்தை |
– |
(இப்படியெல்லாம், செய்கிற) உன்னுடைய கருத்தை |
யாவர் காண வல்லர் |
– |
யார்கண்டறிவல்லார்! (யாருமில்லை.) |
வரத்தினில் சிரத்தை மிக்க வாள் எயிற்று மற்றவன்
பிரமன் கொடுத்த வரத்தில்-அதிகமான நம்பிக்கை உடைய வாள் போன்ற பயங்கரமான கோர பற்களைக் கொண்ட
ஆஸ்ரித சத்ருவான ஹிரண்யன்
உரத்தினில் கரத்தை வைத்து உகிர் தலத்தை ஊன்றினாய்
மார்பினில் திருக் கரத்தை வைத்து திரு நகங்களால் அழித்துக் கொன்றாய்
இரத்தி நீ யிது என்ன பொய்
இப்படிப்பட்ட நீ ஒரு சமயம் மாவலியிடம் சென்று -யாசிக்கிறாய் -இது என்ற ஜாலம்
யிரந்த மண் வயிற்றுளே கரத்தி யுன் கருத்தை யாவர் காண வல்லர் கண்ணனே
யாசித்துப் பெற்ற உலகத்தை ஒரு கால் திரு வயிற்றிலே ஒழித்து வைக்கிறாய்
அநந்ய பிரயோஜனனான பிரகலாதனுக்கு உதவி அருளினாய்
பிரயோஜனாந்த பரனான இந்த்ரனுக்காக யாசக வேஷம் பூண்டு -இது என்ன மாயம்
அப்படி இந்த்ரன் அளவு ஆபி முக்கியம் இல்லாத சம்சாரிகளையும் திரு வயிற்றிலே வைத்து ரஷித்து அருளினாய் –
இது என்ன இந்த்ரஜாலம் -அபார சக்தி யுக்தன் என்று ஸ்ரீ நரசிம்மனாயும்
அசக்தன் என்று வாமனனாயும்
சர்வஞ்ஞன் சர்வசக்தன் என்று பிரளய ரக்ஷகனாம் மாறி மாறிக் காட்டி அருளும் உள் கருத்தை
நீயே எனக்கு அருள வேணும்
அநந்யப்ரயோஜநனான (உன் அநுக்ரஹந்தவிர வேறொன்றையும் பயனாகக் கருதாதவனான) ப்ரஹ்லாதாழ்வானுடைய
விரோதியைக் கழித்தருளினாய் என்பது ஒருபுறமிருக்கட்டும்;
ப்ரயோஜநாந்தரபரனான இந்திரனுக்காக யாசக வேஷம் பூண்டு வந்தாயே இதென்ன மாயம்?
அவ்வளவேயோ? இந்திரனளவு ஆயிரமுக்யமுமில்லாமல் விமுகரான ஸம்ஸாரிகரீ… ப்ரளயாபத்திலே திருவயிற்றில் வைத்து ரக்ஷித்தாயே,
இதற்குத்தான் என்ன கருத்து?
பாரமார்த்திகனான ஆச்ரிதனையும் க்ருத்ரிமனான ஆச்ரிதநாமத்தாரியையும் ராவண ஹிரண்யாதிகளின் வரிசையிலே கணக்கிடத்தக்க ஸம்ஸாரிகளையும் ஒரு ஸமயமாகக் காத்தருள்கின்ற உன்னுடைய உட்கருத்து என்ன?
நீயே எனக்கருளிச் செய்ய வேணுமென்கிறார்.
நீ நரஸிம்ஹாவதார மெடுத்தவற்றைப் பார்த்தாலோ ‘அபார சக்தியக்தன்’ என்று தோன்றுகிறது;
அடுத்தபடியாக, இந்திரனது வேண்டுகோளுக்கிணங்கி வாமநனாய் வந்து யாசகம் செய்தவாற்றைப் பாரத்தாலோ ‘அசந்தன்’ என்று தோற்றாநின்றது;
ப்ரளயாபத்துக்கு உதவுந்தன்மையைப் பார்த்தாலோ ‘இவனுக்கு மேற்பட்ட ஸர்வஜ்ஞனும் ஸர்வசக்தனும் எவ்வுலகத்திலுமில்லை’ என்று என்னும்படியாயிருக்கிறது.
இப்படி சக்தியையும் அசக்தியையும் மாறி மாறிக் காட்டிக்கொண்டு நீ பலபலமாயச் செயல்கள் செய்வதற்குக் கருத்து எதுவோ?
எனக்குத் தெரிய வருளிச் செய்யவேணுமென்கிறார்- என்றுங் கொள்ளலாம்.
——————
ஆணினோடு பெண்ணுமாகி அல்லவோடு நல்லவாய்
ஊணோடு ஓசை யூறுமாகி யொன்றலாத மாயையாய்ப்
பூணு பேணு மாயனாகிப் பொய்யினோடு மெய்யுமாய்க்
காணி பேணு மாணியாய்க் கரந்து சென்ற கள்வனே –26-
பதவுரை
ஆணினோடு பெண்ணும் ஆகி |
– |
புருஷஜாதி, ஸ்த்ரீஜாதி என்ற இரண்டு சாதிக்கும் ப்ரவர்த்தகனாய் |
அல்லவோடு நல்ல ஆய் |
– |
மேற்சொன்ன இரண்டு ஜாதியிலும் சேராத நபும்ஸக பதார்த்தங்களென்ன இம்மூன்று வகுபபிலும் சிறந்தவையென்ன இவற்றுக்கெல்லாம் நிர்வாஹகனாய் |
ஊணொடு ஓசை கூறும் ஆகி |
– |
ரஸம், சப்தம், ஸ்பர்சம் முதலிய விஷயங்களுக்கு நியாமகனாய் |
என்று அலாத மாயை ஆய் |
– |
உலகிலுள்ள எல்லாப் பொருளாகவும் பரிணமிக்கின்ற ப்ரக்ருதிக்கு நிர்வாஹகனாய் |
பூணி பேணும் |
– |
பசுக்களை மேய்கிக்கிற |
ஆயன் ஆகி |
– |
இடையனாய் |
பொய்யினோடு மெய்யும் ஆய் |
– |
பொய்யரான துர்யோதநரதிகன் பக்கலிலே பொய்யனாய் மெய்யரான பாண்டவர் பக்கலிலே மெய்யனாய் |
காணிப்பேணும் மாணி ஆய் |
– |
(மூவடி) நிலத்தை ஆசைப்பட்ட பிரமசாரியாகி |
கரந்து சென்ற கள்வனே! |
– |
(மஹாபலியின் யாக பூமியிலே) க்ருத்ரிமமாக எழுந்தருளின் மாயனே! |
உன்னை யார் மதிக்கவல்லர்! |
– |
உன்னை அளவிடக்கூடியவர்கள் யார்? |
ஆணினோடு பெண்ணுமாகி அல்லவோடு –புருஷ ஸ்த்ரீ ந பும்சக மூன்று ஜாதிக்கும் பிரவர்த்தனாய்
நல்லவாய் இவற்றில் சிறந்தவைக்கு எல்லாம் நிர்வாஹகானாய்
ஊணோடு ஓசை யூறுமாகி -ரசம் சப்தம் ஸ்பர்சம் முதலிய விஷயங்களுக்கு நிர்வாஹகனாய்
லீலா விபூதியை விஸ்தாரப் படுத்த ஆணினோடு பெண்ணுமாய் அவர்களுக்குள் அந்தர்யாமியாகவுமாகி
சம்பந்தம் ஏற்படுத்தி நிர்வஹிப்பவன்
நல்ல வாய் –
உலகில் சிறப்பு பெற்ற வஸ்துக்கள் அவனது தோற்றம் மிக வீறு பெற்று இருக்கும்
யொன்றலாத மாயையாய்ப்
உலகத்தில் உள்ள எல்லா பொருள்களாகவும் பரிணமிக்க பிரக்ருதிக்கு நிர்வாஹகனாய்
பூணு பேணு மாயனாகிப்
பசுக்களை மேய்க்கும் இடையனாகி
பொய்யினோடு மெய்யுமாய்க்
பொய்யர்களான துரியோதனாதிகளுக்கு பொய்யனாகவும் -மெய்யர்களான பாண்டவர்கள் பக்கம் மெய்யனாகவும்
காணி பேணு மாணியாய்க் கரந்து சென்ற கள்வனே
மூவடி நிலம் ஆசைப்பட்டு ப்ரஹ்மசாரியாய் -மகா பலியின் யாக சாலையில் க்ருத்ரிமாக எழுந்து அருளின மாயனே
சங்கல்ப ஏக தேசத்தாலேயே சர்வத்தையும் பண்ணவல்லனாய் இருந்தும் ஆஸ்ரித -சாது -பரித்ராணத்துக்காக
தேவ சஜாதீயமாக்கியும்
கோபால சஜாதீயமாக்கியும்
அவதரித்துப் பண்ணின ஆச்சர்ய சேஷ்டிதங்களை யார் நினைக்க வல்லார்
எல்லாவற்றிற்கும் நிரவாஹகனான நீ நித்யஸூரி போக்யமான உன்வடிவை ஆச்ரிதர்கட்கான தேவஸஜாதீயமாக்கியும்
கோபாலஸஜா தீயமாக்கியும் அவதரித்துப் பண்ணின ஆச்சரியசேஷ்டைகளை யார் அறியவல்லார் என்கிறார்.
வாமநாவதாரும் க்ருஷ்ணாவதாரமும் ஒருபுடை ஒத்திருக்கையாலே அவ்விரண்டவதாரங்களையும் சேர்த்து அநுஸந்திக்கின்றாரென்ப.
ப்ரஜைகளை அதிகப்படுத்தி லீலாவிபூதியை விஸ்தாரமாக்க வேணுமென்ற திருவுள்ளத்தினால்
ஸ்த்ரீஜாதிகளையும் புருஷ ஜாதியையும் ஏராளமாகப் படைத்து அவற்றிலே தான் அந்தராத்மாவாய் நின்று
பரஸ்பர ஸம்பந்தத்தை உண்டு பண்ணி இவ்வகையாலே நிர்வஹிக்கின்றான் என்ற கருத்து ஆணினோடு பெண்ணுமாகி என்பதற்கு,
ஆனால் ஒன்றுக்கு முதவாத … ஸகநுயாதிக்கு எம்பெருமான் நிர்வாஹகனல்லனோவென்ன,
அதற்கும் இவனே நிர்வஹாகனென்கிறது
அல்லவோடு என்று. அல்ல= ஸ்த்ரீஜாதியும் புருஷாஜாதியுமாகாதவை;
அவையாவன- நபும்ஸகவ்யத்திகள்.
நல்லவாய்= நல்ல பார்த்தங்களாகையாவதென்னென்னில்;
பகவத்கீதையில் பத்தாவது அத்யாயத்தில் ****** அதாவது- எந்த எந்த வஸ்துவானது செல்வம் மிக்கதாயும் அழகுமிக்கதாயும் நற்காரியங்களில் முயற்சிமிக்கதாயும் விளங்குகின்றதோ அவ்வப்பொருளெல்லாம் எனது தேஜஸ்ஸின் ஏகதேசத்தினுடைய இயைபுகொண்டதென அர்ஜுனே! நீ தெரிந்துகொள்! என்று அருளிச் செய்தபடி
உலகத்திலுள்ள ஸர்வபதார்தங்களிலும் சிறப்பு பெற்றவஸ்துக்களில் எம்பெருமானுடைய தோற்றம் மிக்க வீறுபெற்றிருக்குமென்கை.
இதனால், ஹேமமானவஸ்துக்களில் எம்பெருமானுடைய தோற்றம் இல்லையென்றபடி யல்ல;
எல்லாவற்றிலும் ஸமாமாந்யமாகத் தோற்றமிருந்தாலும் சிறந்தவஸ்துக்களில் தோற்றம் அதிசயித்திருக்குமென்க.
ஒன்றலாக மாயையாய் = ஒன்றலாத – ஒன்று அல்லாத; பலவாகப் பரிணமிக்கக்கூடிய என்றபடி,
எல்லாப் பொருளுமாய்க்கொண்டு பரிணமிக்கக்கூடியது ப்ரக்ருதிதத்வமேயாகையாலும், ****** என்றபடி
மாயையென்று ப்ரக்ருதிதத்வத்துக்குப் பேராகையாலும், ஸர்வவஸ்துவாயும் பரிணமிக்கவல்ல ப்ரக்ருதி
தத்துவத்துக்கு நியாமகனானவனே! என்று பொருளுரைக்கப்பட்டது.
அன்றியே, மாயை என்று ஆச்சர்யத்தையும், சொல்லுவதுண்டாதலால், ஒன்றிரண்டு வஸ்துக்களுக்கு மாத்திரம் நிர்வாஹகையன்றிக்கே ஸகலப்தார்த்தங்களையும் சேதநனுடைய கர்மாநுகூலமாக நிர்வஹிக்கவல்ல ஆச்சர்யத்தையுடைவனே! என்றதாகவுமாம்.
ஸங்கல்பத்தினாலேயே ஸகலத்தையும் நிர்வஹிக்கவல்லனா யிருக்கச் செய்தேயும் ஸாது பரித்ராணத்துக்காக
அஸாதாரணவிக்ரஹத்தை *** ஸஜாதீயமாக்கிக்கொண்டு அவதரித்து, தன்னைப்பேணாமல்
பசுக்களைப் பேணினானென்கிறது பூணிபேணுமாயனாகி என்றும் அப்படி ஸ்ரீக்ருஷ்ணனாய்த் திருவவதரித்து ரக்ஷித்தருளுங்காலத்துப் பொய்யராயிருந்த துரியோன தநாதிகளுக்குத்தானும் பொய்யனேயாகவும்,
மெய்யராயிருந்த பாண்டவர்கட்குத்தானும் மெய்யனேயாகவு மிருந்தபடியைச் சொல்லுகிறது பொய்யினோடு மெய்யுமாய் என்று.
———–
விண் கடந்த சோதியாய் விளங்கு ஞான மூர்த்தியாய்
பண் கடந்த தேசமேவு பாவ நாச நாதனே
எண் கடந்த யோகினோடு இரந்து சென்று மாணியாய்
மண் கடந்த வண்ணம் நின்னை யார் மதிக்க வல்லரே –27-
பதவுரை
விண் கடந்த சோதியாய் |
– |
விபுவான மூலப்ரக்ருதி உனக்குள்ளேயாம்படி அதனை அதிக்ரமித்த ஸ்வாம்ப்ரகாசனே! |
விளங்கு |
– |
ஸ்வயம்ப்ரகாசனான |
ஞானம் |
– |
ஜீவாத்மாவை |
மூர்த்தியாய் |
– |
சரீரமாக வுடையவனே! |
பண்கடந்த தேசம் மேவு |
– |
வேதங்களாலும் அளவிட முடியாத பரமபதத்திலே நித்யவாஸம் பண்ணுமவனாய் |
பாவநாச நாதனே! |
– |
ஹேயப்ரத்யநீகனான ஸர்வேச்வரனே! |
எண் கடந்த யோகினோடு |
– |
எண்ணமுடியாத ஆச்சர்ய சக்தியோடு கூடினவனாய்க் கொண்டு |
மாணி ஆய் |
– |
வாமனாய் |
இரந்து சென்று |
– |
(மூவடிமண் வேணுமென்று) யாசித்துச் சென்று |
மண் கடந்த வண்ணம் |
– |
பூமியை யளந்துகொண்ட விதத்தையும் |
நின்னை |
– |
உன்னையும் |
ஆர் மதிக்க வல்லர் |
– |
அளவிடக்கூடியவர்கள் யார்? |
விண் கடந்த சோதியாய்
விபுவான மூல பிரகிருதி உனக்கு உள்ளே ஆகும் படி அத்தனை அதி ரமித ஸ்வயம் பிரகாசம் உடையவனே
சுரர் அறி அரு நிலை விண் -எட்ன்று மூல பிரக்ருதியை விண் சப்தத்தால் போலவே இங்கும்
விளங்கு ஞான மூர்த்தியாய்-
ஸ்வயம் பிரகாசமான ஜீவாத்மாக்களை சரீரமாக கொண்டவனே
பண் கடந்த தேசமேவு –
வேதங்களால் அளவிட முடியாத பரம பதத்தில் நித்யம் வாசம் பண்ணி அருளுபவனே
பாவ நாச நாதனே
ஹேய பிரத்ய நீக சர்வேஸ்வரனே
எண் கடந்த யோகினோடு இரந்து சென்று மாணியாய்-
எண்ண முடியாத ஆச்சர்ய சக்தியோடு இருக்கும் வாமனாய்
இரந்து சென்று மண் கடந்த வண்ணம் நின்னை யார் மதிக்க வல்லரே-
யோகி -யோகம் -உபாயத்துக்கும் கல்யாண குணத்துக்கும் –
நல்ல உபாயம் அறிந்து கொண்ட கோல உருவம் அன்றோ –
“விண்கடந்தசோதியாய்!” என்றது- விபுவான மூலப்ரக்ருதியானது உனக்குள்ளேயாம்படியான
ஸ்வரூவைபவத்தையுடைய ஸ்வயம்ப்ரகாச வஸ்துவானவனே, என்றபடி.
விண் என்றால் ஆகாசமென்று பொருளாமே யல்லது மூலப்ரக்ருதியென்று பொருளாகக் கூடுமோவென்னில்; ஆம்;
ப்ருஹதாரண்யக உபநிஷத்திலே ஐ(ரூ-அ-எ ***” என்றவிடத்தில் ஆகாச சப்தத்தை மூலப்ரக்ருதிபரமாக வியாக்கியானித்துள்ளார்கள்;
“சுரரறிவருநிலை விண்” என்று திருவாய்மொழியிலும் விண் என்று மூவப்ரக்ருதியை அருளிச்செய்திருக்கிறார்.
“விளங்கு ஞான மூர்த்தியாய்” என்றது – ஸ்யம்ப்ரகாசமாய் ஜ்ஞாநசப்தவாச்யமான ஆத்மஸ்ரூபத்தை சரீரமாகவுடையவனே! என்படி.
ஆக, முதலடியிலுள்ள இரண்டு ஸம்போதநங்களாலும் எம்பெருமானுக்கு ‘துணோ ***” என்று சொல்லப்பட்டுள்ள
விபுத்வ ஹூக்ஷ்மத்வங்கள் சொல்லப்பட்டனவென்க.
“விண்கடந்த சோதியாய்” என்ற முதல் ஸம்போதநத்தில் *** என்னுமிடம் சொல்லுகிறது;
விளங்கு ஞானமூர்த்தியாய்” என்ற இரண்டாவது ஸம்போதநத்தில் *** என்னுமிடம் சொல்லுகிறது.
(பண் கடந்த இத்யாதி.) பண் என்று ஸ்வரத்துக்குப் பேராகிலும் இங்கு ஸ்ரப்ரதமான வேதத்தை லக்ஷணையால் குறிக்கும்.
பண்கடந்த = வேதத்தை அதிக்ரமித்த- வேதத்திற்கு விஷயமாகாத என்கை;
வேதங்களாலே பரிச்சேதிக்க முடியாத அப்ராக்ருத ஸ்தலமான பரமபதத்திலே நித்யவாஸம் செய்தருள்கின்ற பரமபுருஷனே!
பாவநாசநாதன் – வட மொழித்தொடர். ஆக இரண்டு அடிகளம் ஸம்போதநமாய் முடிந்தன;
இனி பின்னடிகளில் உலகளந்த சரிதம் அளவிட முடியாத ஒப்பற்றதொரு சரிதமென்கிறார்.
யோக = யோஹ’ என்ற வடசொல் ‘யோகு’ எனக் குறைந்து கிடக்கிறது.
யோக மென்று கல்யாண குணத்துக்கும் உபாயத்துக்கும் பெயர்.
இங்கு அவ்விரண்டுபொருளும் ஆகலாம். யாசகவேஷத்துக்கும் உபாயத்துக்கும் பெயர்.
இங்கு அவ்விரண்டுபொருளும் ஆகலாம்.
யாசகவேஷத்தோடு எழுந்தருளச் செய்வதேயும் மற்றபடி கல்யாண குணயோகத்தில் குறையில்லை யென்கை.
மஹாபலியின் செருக்கை யடக்குவதற்கு நல்ல உபாயமறிந்து செய்து செயலாதலால் உபாயப்பொருளும் பொருந்துமென்க
———————–
படைத்து பார் இடந்து அளந்து உண்டு உமிழ்ந்து பௌவ நீர்
படைத்து அடைத்து அதில் அதில் கிடந்து முன் கடைந்த பெற்றியோய்
மிடைத்த மாலி மாலிமான் விலங்கு காலனூர் புகப்
படைக்கலம் விடுத்த பல் படைத் தடக்கை மாயனே –28-
பதவுரை
பௌவம் நீர் |
– |
(அண்டங்களுக்குக் காரணமான) ஏகார்ணவத்தை |
படைத்து |
– |
ஸ்ருஷ்டித்து |
படைத்த |
– |
(பிறகு, அண்டப்ரஹ்மஸ்ருஷ்டி பூர்வமாக) ஸ்ருஷ்டிக்கப்பட்ட |
பார் |
– |
பூமியை |
இடந்து |
– |
(ஸ்ரீவராஹமூர்த்தியாய் அண்டபித்தியில் நின்றும்) ஒட்டுவித்தெடுத்து |
அளந்து |
– |
(த்ரிவிக்ரமனாய்) அளந்து |
உண்டு |
– |
(ப்ரளயகாலத்தில்) திருவயிற்றில் வைத்து நோக்கி |
உமிழ்ந்து |
– |
(ப்ரளயங்கழிந்த பின்பு) வெளிப்படுத்தியும். |
பௌவம் நீர் |
– |
(இலங்கைக்கு அழகான) கடலை |
அடைத்து |
– |
ஸேதுகட்டித் தூர்த்து. |
முன் அதில் கிடந்து |
– |
முன்பொருகால் அக்கடலிற் கண்வளர்ந்தருளி |
கடைந்த |
– |
(ஒருகால் அமுதமெடுப்பதற்காக அதனைக்) கடைந்தருளின |
பெற்றிபோய்! |
– |
(இப்படிப்பட்ட அளவற்ற பெருமைகளையுடையவனே! |
மிடைத்த |
– |
செருக்கி வந்த |
மாலி |
– |
மாலி என்றகிற ராக்ஷஸனென்ன |
விலங்கு மான் மாலி |
– |
அதிக்ஷுத்ரனான ஸுமாலியென்னும் ராக்ஷஸனென்ன இவர்கள் |
காலன் ஊர் புக |
– |
யமலோகம் போய்ச் சேரும்படியாக |
படைக்கலம் விடுத்த |
– |
ஆயுதங்களை ப்ரயோகித்தருளின |
பல் படை தடகை மாயனே! |
– |
பலவகைப்பட்ட திவ்யாயுதங்களை விசாலமான திருக்கையிலே யுடையனான பெருமானே! (உன்னையார் மதிக்கவல்லர்? என்று கீழ்ப்பாட்டின் க்ரியைக் கூட்டிக்கொள்வது) |
படைத்து பார் இடந்து அளந்து உண்டு உமிழ்ந்து பௌவ நீர் படைத்து அடைத்து
பௌவ நீர் -அண்டங்களுக்கு காரணமான ஏ காரணவத்தை சிருஷ்டித்து பிறகு அண்ட பிரம்ம சிருஷ்டி பூர்வகமாக
சிருஷ்டிக்கப் பட்ட பூமியை
ஸ்ரீ வராஹ மூர்த்தியாய் அண்ட பித்தியில் நின்றும் ஒட்டு விடுத்து எடுத்து
திருவிக்ரமனாய் அளந்து பிரளய காலத்தில் வயிற்றில் வைத்து நோக்கி
பிரளயம் கழிந்த வாறே வெளிப்படுத்தியும் –
அடைத்து -சேது கட்டி தூர்த்து
அதில் கிடந்து முன் –
முன் அதில் கிடந்தது -முன்பு ஒரு கால் அதன் முன்னே கண் வளர்ந்து அருளி
அதில் கடைந்த பெற்றியோய்
ஒரு கால் அமிர்தம் பெறுவதற்காக கடைந்து அருளிய -இப்படிப்பட்ட அளவற்ற பெருமைகளை உடையையாய்
மிடைத்த மாலி மாலிமான் விலங்கு காலனூர் புகப் படைக்கலம் விடுத்த பல் படைத் தடக்கை மாயனே
செருக்கி வந்த மாலி என்னும் ராஷசனும் அதி சூரனனான ஸூ மாலி என்னும் அரக்கனும் யம லோகம் சேரும் படி
அதி ஷூத்ரர்களான மாலி மாலி மான் விலங்கு என்று மூவரையும் என்னவுமாம் –
ஆயுதங்களைப் பிரயோகித்த பலவகைப் பட்ட திவ்ய ஆயுதங்களை விலாசமான திருக் கரங்களிலே உடைய எம்பெருமானே
உன்னை யார் நினைக்க வல்லார்
“மாலிமான்” என்றதை ‘மான் மாலி’ என்று மாற்றி அந்வயித்து ஸுமாலியென்று பொருள்கொள்ளப்பட்டது.
‘ஸு’ என்பதன் ஸ்தாநத்தில் மான் என்றது மஹாந் என்பதன் விகாரம்.
அன்றி, ‘மாலியவான்’ என்பவனை ‘மாலி மான்’ எனக் கூறிக்கிடப்பதாகவுங் கொள்ளலாம்.
அங்ஙனுமன்றி, மாலி, மாலி, மான் விங்கு- மாலியென்ன, சுமாலியென்ன, மாரீச மாயாமிருகமென்ன
இவர்கள் காலனூர்புக- என்று முரைக்கலாம்.
விலங்க என்றது மாலி சுமாலிகட்கு அடைமொழியானபோது, அதிக்ஷுத்ரர்களான என்று பொருள் கொள்க.
இப்பாட்டில் வினைமுற்று இல்லையாகிலும் கீழ்ப்பாட்டோடேயாவது மேற்பாட்டோடேயாவது கூட்டிக் கொள்ளலாம்.
———————————————————————————-
பரத்திலும் பரத்தையாதி பௌவ நீர் அணைக் கிடந்தது
உரத்திலும் ஒருத்தி தன்னை வைத்து உகந்தது அன்றியும்
நரத்திலும் பிறத்தி நாத ஞான மூர்த்தி யாயினாய்
ஒருத்தரும் நினாது தன்மை இன்னதென்ன வல்லரே –29-
பதவுரை
நாத |
– |
ஸ்வாமிந்! |
ஞானம் மூர்த்தி ஆயினாய் |
– |
ஜ்ஞாநஸ்வருபியானவனே! |
பரத்திலும் பரத்தை ஆகி |
– |
பராத்பரனாயிராநின்றாய். |
ஒருத்தி தன்னை |
– |
ஒப்பற்ற பெரிய பிராட்டியாரை |
உரத்தில் |
– |
திருமார்பிலே |
வைத்து |
– |
பிரியாமல் அணையவைத்து |
உகந்து |
– |
மகிழ்ந்து |
பௌவம் நீர் அணை கிடந்து |
– |
திருவாற்கடலாகிய சயநத்திலே கண்வளர்ந்தருளி |
அது அன்றியும் |
– |
இப்படிகளாலே ஆச்ரிரக்ஷணம் செய்வது மல்லாமல் |
நரத்திலும் |
– |
ஹேயமான மானிட சாதியிலும் |
பிறத்தி |
– |
வந்து பிறக்கின்றாய்; |
நினாது தன்மை |
– |
உன்னுடைய அநுக்ரஹ ஸ்வபாவத்தை |
ஒருத்தரும் |
– |
யாராகிலும் |
இன்னது என்ன வல்லரே? |
– |
இப்படிப்பட்டதென்று பரிச்சேததிக்க ஸமர்த்தர்களோ? (யாருமில்லை.) |
பரத்திலும் பரத்தையாதி -பரா பரனாய் இருந்தாய்
பௌவ நீர் அணைக் கிடந்தது-திருப் பாற் கடலிலே கண் வளர்ந்து அருளி
உரத்திலும் ஒருத்தி தன்னை வைத்து உகந்தது -திரு மார்பிலே ஒப்பற்ற பெரிய பிராட்டியை
பிரியாமல் அணைய வைத்து மகிழ்ந்து
அன்றியும் நரத்திலும் பிறத்தி -அதுவும் அன்றியும் மனுஷ்ய சஜாதீயமாக திருவவதரித்து
நாத ஞான மூர்த்தி யாயினாய் ஒருத்தரும் நினாது தன்மை இன்னதென்ன வல்லரே
மேன்மைக்கும் எளிமைக்கும் எல்லை நிலமாய் இருக்கும் உன் தன்மையை அருளுகிறார்
பராத்பரன் ஷீராப்தி நாதன் ஸ்ரீ யபதித்வம் -பரத்வ பரமாகவும்-எளிமைக்கும்-
ராம கிருஷ்ணாதி அவதாரங்கள் – எளிமைக்கும் எல்லை நிலம்-
மேன்மை எல்லை காண முடியாதாப் போலே நீர்மையும் எல்லைகாண வொண்ணாதபடி யிருக்குமாற்றை அநுபவித்து ஈடுபடுகிறார்.
க்ஷீரஸாகரசாயித்வமும் லக்ஷ்மீபதித்வமும் பராத்பரத்வ ப்ரகாசகமாதலால் “பரத்திலும் பரத்தையாதி” என்றதற்கு உபபாதகமாக அவ்விரண்டையும் அருளிச்செய்தார்.
பெரியவாச்சான்பிள்ளை வியாக்கியனத்திற்கு அரும்பதவுரை வரைந்த வொருவர்- “பரத்தையாதி யென்றது- ‘பரத்தையாகி’ என்று பாடமாக வேணுமென்று கண்டு கொள்வது” என்றெழுதிவைத்தது மறுக்கத்தக்கது.
ஆதி என்பது ‘ஆ’ என்னும் வினைப்பகுதியடியாப் பிறந்த நிகழ்கால முன்னிலை யொருமை வினைமுற்று என்பதை அவர் அறிந்திலர்.
ஆதி= ஆகின்றாய் என்றபடி.
பரத்தை = முன்னிலை; படர்க்கையில் பரத்தன் என்றாம். மேற்பட்ட வஸ்துக்களிலும் மேற்பட்ட வஸ்துவாக இராநின்றா யென்கை.
நரத்திலும் பிறத்தி = ராமகிருஷ்ணாதிரூபேண மனுஷ்ய ஜாதியிலும் பிறக்கின்டறா யென்கை.
நினாது = நினது என்றதன் நீட்டல்.
————————————————————————————
வானகமும் மண்ணகமும் வெற்பும் ஏழ் கடல்களும்
போனகம் செய்து ஆலிலைத் துயின்ற புண்டரீகனே
தேனகம் செய் தண்ணறு மலர்த் துழாய் நன் மாலையாய்
கூனகம் புகத்தெறித்த கொற்ற வில்லி யல்லையே –30-
பதவுரை
வானகமும் |
– |
வானுலகத்திலுள்ளளாரயும் |
மண்ணகமும் |
– |
மண்ணுலகத்திலுள்ளாரையும் |
ஏழ் வெற்பும் |
– |
ஸப்தகுலபர்வதங்களையும் |
ஏழ் கடல்களும் |
– |
ஸப்தஸாகரங்களையும் |
போனகம் செய்து |
– |
அமுது செய்து |
ஆல் இலை துயின்ற |
– |
ஆலந்தளிரிலே கண்வளர்ந்தருளின் |
புண்டரீகனே! |
– |
தாமரை போன்ற அவயவங்களையுடைய பெருமானே! |
தேன் செய் அகம் |
– |
தேன் நிறைந்த உட்புறத்தை யுடைத்தாய் |
தண் |
– |
குளிர்ந்ததாய் |
நறு |
– |
பரிமளிதமான |
மலர் துழாய் |
– |
திருத்துழாயை |
கல் மாலையாய்! |
– |
நல்லமாலையாக அணிந்தவனே! (நீ) |
கூன் |
– |
(கூனியினுடைய) கூனானது |
அகம் புக |
– |
உள்ளே யொடுங்கும்படி |
தெறித்த |
– |
விட்டெறிந்த |
கொற்றம் வில்லி அல்லையே |
– |
வெற்றி வில்லை யுடையவனான்றோ |
போனகம் செய்து -அமுது செய்து
தேனகம் செய் -தேன் செய் அகம் தேன் நிறைந்த உட் புறத்தை யுடைய-
புண்டரீகனே –தாமரை போன்ற அவயவங்களை உடையவனே
————–
கால நேமி காலனே கணக்கிலாத கீர்த்தியாய்
ஞாலம் ஏழும் உண்டு பண்டோர் பாலனாய பண்பனே
வேலை வேவ வில் வளைத்த வெல் சினத்த வீர நின்
பாலராய பத்தர் சித்தம் முத்தி செய்யு மூர்த்தியே –31-
பதவுரை
காலநேமி காலனே! |
– |
காலநேமியென்னும் அஸுரனதுக்கு யமனானவனே! |
கணக்கு இலாத கீர்த்தியாய் |
– |
எண்ணிறந்த புகழையுடையவனே! |
பண்டு |
– |
முன்பொருகால் (ப்ரளய காலத்திலே) |
ஞாலம் எழும் உண்டு |
– |
ஏழுலகங்களையும் அமுது செய்து |
பாட்டு |
– |
மின்னறதெயிற்றரக்கன் வீழ |
ஓர் பாலன் ஆய |
– |
ஒரு சிறுகுழந்தைவடிவமெடுத்த |
பண்பனே! |
– |
ஆச்சர்யபூதனே |
வேலைவேவ |
– |
கடல்நீர் வெந்து போம்படி |
வில்வளைத்த |
– |
வில்லை வளைத்த. |
வெல் சினத்த வீர! |
– |
எதிரிகளை வென்றேவிடும்படியான சீற்றத்தையுடைய வீரனே! |
நின்பாலர் ஆய பக்தர் சித்தம் |
– |
உன்பக்கல் அன்பு பூண்டவர்களின் சித்தத்தின்படி |
முத்தி செய்யும் |
– |
(அவர்கட்கு) மோக்ஷம் தந்தருள்கிற |
மூர்த்தியே! |
– |
ஸ்வாமியே! |
கால நேமி -ராவணின் மாதுலன் –
வேலை வேவ -கடல் நீர் வெந்து போகும் படி
வில் வளைத்த வெல் சினத்த வீர -சிலர் கோபம் கொஞ்ச நேரம் சென்ற பின்பு தீரும் –
இவனது சினம் ஜயித்ததின் பின்பே தீரும் என்கிறார்
நின்பாலராய -உன்னிடத்து உள்ளவர்கள்
பத்தர் சித்தம் முத்தி செய்யு மூர்த்தியே –
மூர்த்தி -திவ்ய மங்கள விக்ரஹம் -வடிவு அழகைக் காட்டி தன் பக்கலில் ஆழம் கால் படுத்திக் கொள்ளுவான்
அன்பு பூண்டவர்களின் சித்தம் படி அவர்களுக்கு மோஷம் தந்து அருளிய ஸ்வாமியே
காலநேமி என்பவன் இராவணனுடைய மாதுலன்; இவன், தாரகாசுர யுத்தத்தில் எம்பெருமானாற் கொல்லப்பட்டவன்.
வேலை- கடற்கரைக்குப் பெயர்; இலக்கணையால் கடல்நீரைக் குறிக்கும்.
வெல்சினந்தவீர! = சிலருடைய கோபம் காலக்ரமத்தில் தன்னுடையே சாந்தமாவதுண்டு;
அங்ஙனன்றியே ஸமுத்ரராஜன்மீது பெருமாளுக்குண்டான கோபம் வெல்சினமாய்த்து;
வென்றாலன்றித் தீராத பாதச்சாசையிலே ஒதுங்கிவர்த்திக்கிற பக்தர்கள் என்கை.
முத்திசெய்தல்- வேறு விஷயங்களில் ஆசையற்றதாகச் செய்தல்.
மூர்த்தி- ஸ்வாமி; திவ்யமங்கள விக்ரஹமாகவுமாம்;
வடிவழகைக் காட்டித் தன் பக்கல் ஆழங்காற்படுத்திக் கொள்ளுமவனே! என்றவாறு
————-
குரக்கினப் படை கொடு குரை கடலின் மீது போய்
அரக்கர் அரங்க வெஞ்சரம் துரந்த வாதி நீ
இரக்க மண் கொடுத்து அவற்கு இரக்கம் ஒன்றும் இன்றியே
பரக்க வைத்து அளந்து கொண்ட பற்ப நாபன் அல்லையே –32-
பதவுரை
குரங்கு இனம் படைகொடு |
– |
வாநகர்களின் திரளான சேனையைத் துணைகொண்டு |
குரை கடலின் மீது போய் |
– |
கோஷிக்கின்ற கடலில் (அணைகட்டி) எழுந்தருளி |
அங்கு |
– |
அவ்விலங்கையிலுள்ள |
அரக்கர் |
– |
ராவணாதி ராக்ஷஸர்கள் |
அரங்க |
– |
அழியும்படி |
வெம் சரம் |
– |
தீக்ஷ்ணமான அம்புகளை |
துரந்த |
– |
அவர்கள் மேல் பிரயோகித்த |
ஆதி |
– |
வீரர்களில் தலைவன் |
நீ |
– |
(எம்பெருமானே;) நீயே காண்க; |
இரக்க |
– |
நீ வாமநனாய்ச் சென்று யாசிக்க |
மண்கொடுத்தவற்கு |
– |
உனக்கு மூவடி நிலம் தானங் கொடுத்த மஹாபலிக்கு |
இருக்க |
– |
குடியிருப்பதற்கு |
ஒன்றும் இன்றியே |
– |
ஒருசாண்நிலமும் மிகாதபடி |
பரக்க வைத்து |
– |
(திருவடியை) மிகவும் விஸ்தாரமாக வைத்து |
அளந்து கொண்ட |
– |
(மூவுலகங்களையும்) ஸ்வாதீகப்படுத்திக் கொண்ட |
பற்பபரதன் அல்லையே |
– |
தாமரைபோன்ற திருவடிகளையுடைய பெருமானும் நீயே காண். |
குரக்கினப் படை கொடு -வானரங்களில் திரளான சேனை கொண்டு
குரை கடலின் மீது போய்-கோஷிக்கின்ற கடலில் -சேது அணை கட்டி எழுந்து அருளி
அரக்கர் அரங்க வெஞ்சரம் துரந்த வாதி நீ-இலங்கையிலே ராவணன் போன்றாரை அழிக்கும் படி
பரக்க -விஸ்தீரமாக அளந்து மா வுலகமும் ஸ்வீகாரமாகக் கொண்டார்-
இரக்கம் ஓன்று இன்றியே -என்றும்- இருக்க ஒன்றும் இன்றியே-என்றும் -பாட பேதம்-
யாசகவேஷத்தைப் பூண்டுகொண்டு சென்று யாசிப்பதும், பிறகு யாசகங் கொடுத்தவனுக்குக் குடியிருக்க
ஒரு அடிநிலமும் மிகாதபடி ஸர்வஸ்வாபஹாரம் பண்ணுவதும் உனக்குத்தான் ஏற்றிருக்குமென்கிறார் போலும்.
“இரக்கமொன்று மின்றியே” என்றே பெரும்பாலும் பாடம் வழங்கும்; பெரியவாச்சான்பிள்ளை யருளிச்செய்த வியாக்கியானத்தில்
“பூமியில் அவனுக்கு ஒரு பதயாஸமும் சேஷியாதபடி” என்றருளிச் செய்திருந்தலால்
“இருக்க ஒன்றுமின்றியே” என்று பாடமிருந்திருக்க வேணுமென்று பெரியோர் கூறுவர்.
“இரக்கமொன்றுமின்றியே” என்ற பாடத்திலும் வியாக்கியான வாக்கியத்தைப் பொருந்தவிடலாமென்பர்.
இதில் ஆக்ரஹமுடையோமல்லோம்
————–
மின் நிறத்து எயிறு அரக்கன் வீழ வெஞ்சரம் துரந்து
பின்னவருக்கு அருள் புரிந்து அரசளித்த பெற்றியோய்
நன் நிறத்து ஓர் இன்சொல் ஏழை பின்னை கேள்வ மன்னு சீர்ப்
பொன்னிறத்த வண்ணனாய புண்டரீகன் அல்லையே –33-
பதவுரை
மின் நிறத்து எயிறு அரக்கன் |
– |
மின்னல் நிறத்தையொத்த பற்களையுடையனான இராவணன் |
வீழ |
– |
மாளும்படி |
வெம் சரம் |
– |
கொடிய அம்புகளை |
துரந்து |
– |
அவன் மேல் பிரயோகித்து (அவனை முடித்தருளி) |
பின்னவற்கு |
– |
அவனது தம்பியான விபீடணனுக்கு |
அருள் புரிந்து |
– |
க்ருபை செய்தருளி |
அரசு அளித்த |
– |
பட்டாபிஷேகம் செய்து வைத்த |
பெற்றியோய்! |
– |
பெருமானே! |
நல் சிறத்து |
– |
நல்ல நிறத்தையுடையவளாய் |
ஓர் இன் சொல் |
– |
ஒப்பற்ற மதுரமான வாக்கையுடையவளாய் |
ஏழை |
– |
உன்பக்கல் சாபல்யமுடையவளான |
பின்னை |
– |
நப்பின்னைப் பிராட்டிக்கு |
கேள்வி |
– |
நாயகனானவனே! |
மன்னு சீர் |
– |
நித்யளித்த கல்யாண குணங்களையுடையனாய் |
பொன் நிறந்த வண்ணன் ஆய |
– |
பொன்போன்ற திவ்யமங்கள விக்ரஹத்தையுடையனான |
புண்டரீகன் அல்லையே |
– |
புண்டரீகாக்ஷனென்பவன் நீயே காண் |
மின் நிறத்து எயிறு அரக்கன் -மின்னலை ஒத்த பற்களை உடைய ராவணன்
பின்னை கேள்வ -நப்பின்னை நாயகனாய்
இராவணனைக் கொன்றொழித்து ஸ்ரீவிபீஷணாழ்வானை இலங்கையரசனாக்கி
அருள் புரிந்தவாற்றைச் சொல்லிப் புகழ்கிறார் முன்னடிகளில்.
இராவணன் பார்க்கும் போதே பயங்கரமான வடிவுடையவன் என்பது தோன்ற மின்னிறத்தெயிற்றரக்கன் என்கிறார்.
வீழ – விழ என்பதன் நீட்டல். பின்னவன் – தம்பி. வெற்றி – பெருமை.
—————-
ஆதி யாதி யாதி நீ ஓர் அண்டம் ஆதி ஆதலால்
சோதியாத சோதி நீ யது உண்மையில் விளங்கினாய்
வேதமாகி வேள்வியாகி விண்ணினோடு மண்ணுமாய்
ஆதியாகி ஆயனாய மாயம் என்ன மாயமே –34-
பதவுரை
ஆதி ஆதி ஆதி நீ |
– |
மூன்று விதமான காரணமும் நீயே யாகிறாய்: |
ஒரு அண்டம் ஆதி |
– |
அண்டத்துக்குட்பட்ட ஸகல பதார்த்தங்களுக்கும் நிர்வாஹகனுமாகிறாய்; |
ஆதலால் |
– |
இப்படியிருக்கையாலே |
சோதியாத சோதி நீ |
– |
பரீக்ஷிக்கவேண்டாத பரம்பொருள் நீ நீயேயாகிறாய்; |
அது உண்மையில் |
– |
அந்த சோதியானது ப்ரமாணஸித்தாமகையாலே |
விளங்கினாய் |
– |
(வேறொன்றாலன்றிக்கே) தானாகவே நீ விளங்குகின்றாய்; |
வேதம் ஆகி |
– |
வேதங்கட்கு நிர்வாஹகனாய் |
வேள்வி ஆகி |
– |
யஜ்ஞ்களாலே ஆராத்யனாய் |
விண்ணினோடு மண்ணும் ஆய் |
– |
உபய விபூதிக்கும் நியாமகனாய் |
ஆதி ஆகி |
– |
இப்படி ஸர்வகாரண பூதனாயிருந்து வைத்த |
ஆயன் ஆய மாயம் |
– |
இடையனாய்ப் பிறந்தாமயம் |
என்ன மாயம் |
– |
என்ன ஆச்சரியமோதான். |
ஆதி யாதி யாதி நீ
உபாதான சககாரி நிமித்த முக் காரணங்களும் நீயே
ஓர் அண்டம் ஆதி –
அண்டத்துக்கு உட்பட சகல பதார்த்தங்களுக்கும் நிர்வாஹகன்
ஆதலால்
சோதியாத சோதி நீ –
பரீஷிக்க வேண்டாத பரம் பொருள் நீயே-நாராயணா பரஞ்சோதி அன்றோ-
யது உண்மையில் விளங்கினாய்-
அந்த ஜோதி பிரமாண சித்தம் -வேறு ஒன்றாலும் அன்றிக்கே தானாகவே விளங்கிற்றே
வேதமாகி வேள்வியாகி-
வேதங்களுக்கு நிர்வாஹகனாய் யாகங்களால் ஆராத்யனாய்
விண்ணினோடு மண்ணுமாய்-
உபய விபூதிக்கும் நிர்வாஹகனாய்
ஆதியாகி ஆயனாய மாயம் என்ன மாயமே –
இப்படி சர்வ காரண பூதனாய் இருந்து ஆயனாய மாயம் என்ன மாயமே
உலகத்தில் ஒரு காரியம் பிறக்கவேணுமானால் அதற்கு மூன்று வகையான காரணங்கள் உண்டு:
உபாதாநகாரணம், ஸஹகாரிகாரணம் , நிமித்தகாரணம். குடம் என்கிற
ஒரு காரியம் பிறக்க வேண்டுமிடத்து மணல் உபாதான காரணமென்றும்,
சக்கரம் தடி தண்ணீர் முதலியவை ஸஹகாரிகாரணமென்றும்,
குயவன் காலம் அத்ருஷ்டம் முதலியவை நிமித்த காரணமென்றும் கொள்ளப்படும்;
அப்படியே ஜகத்தாகிற காரியத்துக்கு மூவகைக் காரணங்கள் அமையவேண்டுமே.
அவற்றில் எம்பெருமான் எவ்வகைக் காரணமாகிறானென்றால், மூவகைக் காரணமும் இவனொருவனே யென்கின்றார்
ஆதியாதியாதிநீ என்று. ஆதி என்றது காரணம் என்றபடி.
ஆதிசப்தத்தை மூன்று தடவைப் பிரயோகித்ததனால் மூவகைக் காரணமும் நீயே என்றதாகிறது.
ஓரண்டமாதி = அண்டமென்றது ஜாத்யேக வசநமாகக் கொள்ளத் தக்கது.
அண்டராசிகளை ஸ்ருஷ்டித்து அவற்றுள் பிரமன் முதல் எறும்பளவான ஸகல பதார்த்தங்களையும் ஸ்ருஷ்டித்து
அவற்றுக்கு அந்தர்யாமியாயிருக்கிறாய் என்றபடி.
இவ்விடத்தில் ஆதி என்றது- ஆகின்றாய் என்னும் பொருளையுடையதான நிகழ்கால முன்னிலை யொருமைவினைமுற்று.
ஆ- பகுதி; தி- விகுதி.
ஆதலால் சோதியாத சோதி நீ = கார்யவர்க்கங்களிலே ஒருவனாயிருந்தால்
நீ பரஞ்சோதியா அன்றா என்று சோதித்துப் பார்க்க வேண்டியதாகும்;
அப்படியன்றியே ஸகல ஜகத் காரண பூதனாக அமைந்தயாகையினால் ஜ்யோதிச் சப்த வாச்யன் நீதான் என்று
எளிதாக நிர்ணயிக்கலாயிராநின்றது என்படி.
ஜகத் காரண பூதமான பொருள் எதுவோ அதுதான் உபாஸிக்கத் தகுந்ததென்றும்
அதுதான் பருங்சோதியென்றும் தோந்தங்களிற் கூறப்பட்டிருத்தலால்
உன்னைப் பற்றி சோதிக்க வேண்டிய வருத்தமில்லையென்கிறார். “***- என்றது காண்க.
————————————————————————–
அம்பு உலாவு மீனுமாகி யாமையாகி யாழியார்
தம்பிரானுமாகி மிக்க தன்பு மிக்க தன்றியும்
கொம்பு அராவு நுண் மருங்குல் ஆயர் மாதர் பிள்ளையாய்
எம்பிரானும் ஆய வண்ணம் என் கொலோ எம் ஈசனே –35-
பதவுரை
என் இசனே |
– |
எம்பெருமானே! (தேவரீர்) |
ஆழியார் தம் பிரானும் ஆகி |
– |
திருவாழியாழ்வானையுடைய பரமபுருஷனாயிருந்து வைத்து |
அம்பு உலாவும் மீனும் ஆகி |
– |
ஜலத்தில் உலாவுகின்ற மீனாகியும் |
ஆமை ஆகி |
– |
ஆமையாகியும் (அவதரித்து) |
மிக்கது |
– |
அதிசயத்தை அடைந்தருளிற்று |
அன்பு மிக்கது |
– |
மிகுந்த அன்பையும் காட்டியருளிற்று; |
அன்றியும் |
– |
இதற்கு மேலும் |
கொம்பு அராவு நுண்மருங்குல் ஆயர் மாதர் பிள்ளை ஆய் |
– |
வஞ்சிக்கொம்பு போலும் அரவு போலும் நுட்பமான இடையையுடைய இடைப் பெண்ணுக்குப் பிள்ளையாய்ப் பிறந்து |
எம்பிரானும் ஆய வண்ணம் என் கொல் |
– |
எம்பிரானுமாக நின்ற நிலையும் என்ன அற்புதம்!. |
ஆழியான் தம்பிரான் ஆகியும் -சக்கரக்கையனாய் -பராத்பரனாய் இருந்தும்
அம்பு உலாவு மீனுமாகி -ஜலத்தில் உள்ள மீனுமாகியும்
மிக்க தன்பு மிக்க தன்றியும்-மிகுந்த அன்பையும் காட்டியும் அருளி
பல பிறப்பாய் ஓளி வரும் முழு நலம் -எனவே மிக்கதாய் –
கொம்பு அராவு நுண் மருங்குல் ஆயர் மாதர் பிள்ளையாய்
கொம்பு போலேயும் பாம்பு போலவும் நுட்பமான இடை உடைய இடை பெண்ணின் பிள்ளையாய் பிறந்து
“ஆழியார் தம்பிரானாகியும் அம்புலாவு மீனுமாகி ஆமையாகி” என்று அந்வயித்துக் கொயாள்ள வேணுமென்பர்.
சக்கரத்தாழ்வாரை அடக்கி ஆளுமவன் என்றால் பரத்வத்திற்கு அதனில் மேற்பட்ட லக்ஷணமில்லை;
சக்கரக்கையன் என்பதும் பராத்பரன் என்பதும் பரியாயமாகக் கொள்ளத்தக்கவை;
ஆகவே, “ஆழியார் தம்பிரானாகியும்” என்றது- பாரத்பரனா யிருந்துவைத்தும் என்றபடியாம்-
பரத்வத்தைப் பேணாமல் மீனாவும் ஆமையாயும் பிறந்தவாறு என் கொல்? என்கிறார்.
மிக்கது = இப்படி க்ஷûத்ரயோநிகளிற் பிறந்ததைப் பாவிகள் தாழ்வாக நினைத்தாலும்
ஞானிகள் “பி பிறப்பாயொளிவரு முழுநலம்” என்று- பிறக்கப் பிறக்க ஒளிவளர்வதாக அருளிச் செய்வராகையாலே
அப்படியே இவருமருளிச் செய்கிறார்.
மிக்கது- தாழ்ந்து பிறந்தாலும் மேன்மையே விளங்க நின்றீர் என்கை.
இது முன்னிலைப் பொருளில் வந்த படர்க்கை; ***- என்று வடநூலார் பிரயோகிப்பதுபோல:
இப்பிரயோகம் கௌரவாதி சயத்தைக் காட்டும். அன்புமிக்கது என்ற விடத்தும்
இங்ஙனமே. தாழ்பிறந்தாகிலும் அடியார்களின் காரியத்தைக் குறையறச் செய்து முடிக்க
வேணுமென்னும் அன்பினால் இப்படி பிறந்தாய் என்று கருத்து.
———————————————————————————
ஆடகத்த பூண் முலை யசோதை யாய்ச்சி பிள்ளையாய்ச்
சாடுதைத்த தோர் புள்ளதாவி கள்ளதாய பேய் மகள்
வீட வைத்த வெய்ய கொங்கை ஐய பாலமுது செய்
தாடகக் கை மாதர் வாய் அமுதுண்டது என் கொலோ –36-
பதவுரை
ஆடகந்தபூண் முலை |
– |
ஸ்வர்ணமயமான ஆபரணங்களையணிந்த ஸ்தமங்களையுடையளான |
அசோதை ஆய்ச்சி பிள்ளை ஆய் |
– |
யசோதையென்னும் கோபிகைக்கு புத்திரனாய்ப் பிறந்தருளி |
சாடு உதைத்து |
– |
சகடாசுரனைத் திருவடிகளால் உதைத் தொழித்து |
ஓர் புள்ளது அவி கள்ள தாயபேய் மகள் |
– |
சிறு குழந்தைகளை அனுங்கப் பண்ணுவதொரு பறவையின் வடிவுகொண்டு வந்தருத்ரிம மாதாவாகிய பூதனையானவள் |
வீட |
– |
நீ உயிர்விட்டு மாளும்படி |
வைத்த |
– |
உன் திருப்வளத்திலே வைத்த |
வெய்ய கொங்கை |
– |
(விஷம் தீற்றின) கொடிய முலையிலுள்ள |
ஐய பால் |
– |
ஸூக்ஷ்மமான பாலை |
அமுதுசெய்து |
– |
உறிஞ்சியுண்டு |
ஆடகம் கை மாதர் |
– |
பொன்வளைகள் அணிந்த கைகளையுடைய ஸ்த்ரீகளினுடைய |
வாய் அமுதம் உண்டது |
– |
அதரத்திலுள் அமுதத்தைப் பருகினது |
என்கொல் |
– |
என்ன வித்தகம்! |
ஆடகத்த பூண் முலை –
ஸ்வர்ண மயமான ஆபரணங்களை அணிந்த ஸ்தனங்களை உடையவளான
யசோதை யாய்ச்சி பிள்ளையாய்ச்-சாடுதைத்த தோர் புள்ளதாவி கள்ளதாய பேய் மகள்-
சகடாசுரனை திருவடிகளால் உதைத்து ஒழித்து -சிறு குழந்தைகளை அணுகப் பண்ணும் பறவை வடிவும் கொண்டு
க்ருத்ரிமான தாய் வடிவம் கொண்டு வந்த பூதனை உயிர் விட்டு மாளும் படி
தாடகக் கை மாதர்-பொன் வளைகள் அணிந்த மாதர்கள்
வாய் அமுதுண்டது என் கொலோ -அதரத்தின் அமுதத்தை பருகினது –
உன்னையும் ஓக்கலையில் கொண்டு தமில் மருவி உன்னோடு தங்கள் கருத்தாயின செய்து வரும் கன்னியரும் மகிழ
என்றபடி இவனை இடுப்பில் எடுத்துக் கொண்டு
தங்கள் தங்கள் மனைகளுக்கு கொண்டு போக அவர்களின் வாய் அமுதத்தை உண்பான் –
பூதனை பக்கலில் உண்ட விஷத்துக்கு இந்த அமிர்தம் பரிகாரமோ என்கிறார் –
ஆடக்கை மாதர்வா யமுதமுண்டது என்கொல்? =
“உன்னையும் ஒக்கலையிற் கொண்டு தமில்மருவி உன்னோடுதங்கள் கருத்தாயின செய்துவருங் கன்னியரும் மகிழ” என்றபடி
திருவாய்ப்பாடியிலுள்ள கன்னிகைகள் இவனை யிடுப்பில் எடுத்துக்கொண்டு தங்கள் தங்கள் மனைகளிலே கொண்டுபோக,
யௌவந தசையைப் பரிக்ரஹிந்து வித்தகனாய்க்கலந்து அவர்களது வாயமுகத்தை உண்பன்; அதனைச் சொல்லுகிறார்.
ஆடகக்கை மாதர் என்றது- பொன்வளைகளாலே அலங்கரிக்கப்பட்ட கையையுடைய பெண்கள் என்றபடி.
(ஆடகம் என்ற காரணச்சொல் காரியத்திற்கு இலக்கணையால் வாசகமாயிற்று.)
கண்ணபிரான் பிடிக்கும் கையென்றும், கண்ணபிரான் அணைக்குங் கையென்றும் அலங்கரிப்பவர்களாம்.
வாயமுதமுண்டது என்கொல்! = பூதபக்கல் உண்ட விஷத்திற்கு இவ்வமுதம் பரிஹாரமோ? என்றவாறு
——————
காய்த்த நீள் விளங்கனி உதிர்த்து எதிர்ந்த பூங்குருந்தம்
சாய்த்து மா பிளந்த கைத்தலத்த கண்ணன் என்பரால்
ஆய்ச்சி பாலை உண்டு மண்ணை யுண்டு வெண்ணெய் உண்டு பின்
பேய்ச்சி பாலை உண்டு பண்டு ஓர் ஏனமாய வாமனா –37-
பதவுரை
காய்ந்த |
– |
காய்கள் நிறைந்ததும் |
நீள் |
– |
உயர்த்தியையுடையதுமான |
விளங்கனி |
– |
(அஸுராவிஷ்டமான) விளாமரத்தின் கனிகளை |
உதிர்த்து |
– |
உதிரச்செய்து (அவ்வசுரனைக் கொன்று) |
எதிர்த்த பூ குருந்தம் |
– |
எதிரிட்ட வடிவங்கொண்டு வந்த கேசியென்னுமசுரனை இரு துண்டமாகப் பிளந்து |
சாய்த்து |
– |
முடித்து |
மா பிளந்த |
– |
குதிரை வடிவங்கொண்டு வந்த கேசியென்னுமசுரனை இரு துண்டமாகப் பிளந்த |
கைத் தலத்த |
– |
திருக்கைகளையுடைய |
கண்ணன் என்பர் |
– |
கண்ணன் என்று (உன்னை அறிவுடையார்) சொல்லுவார்கள். |
ஆய்ச்சி பாலை |
– |
யசோதைப் பிராட்டியினுடைய முலைப்பாலை |
உண்டு |
– |
அமுது செய்து |
வெண்ணெய் உண்டு |
– |
நவநீதத்தை அமுத செய்து |
பேய்ச்சிபாலை உண்டு |
– |
பூசதனையினுடைய முலைப்பாலை உண்டு |
பின் |
– |
கல்ப்பத்தின் முடிவில் |
மண்ணை |
– |
பூமியை |
உண்டு |
– |
திருவயிற்றிலே வைத்து |
பண்டு |
– |
கல்பத்தின் ஆதியிலே |
ஓர் ஏனம் ஆய |
– |
ஒப்பற்ற வராஹருபியாய் அவதரித்த |
வாமனா |
– |
வாமந மூர்த்தியே! |
காய்த்த நீள் விளங்கனி உதிர்த்து –
காய்கள் நிறைந்தும் உயர்த்தியையும் உடைய -அசூர விசிஷ்டமான விளா மரத்தின்-
கனிகளை உதிரச் செய்து -அவனைக் கொண்டு
எதிர்ந்த பூங்குருந்தம் சாய்த்து-
எதிர்த்த அழகிய குருந்த மரத்தில் உள்ள அசுரனை முடித்து
மா பிளந்த –
குதிரை வடிவு கொண்டு வசந்த கேசி என்னும் அசுரனை இரண்டு துண்டாக பிளந்த
கைத்தலத்த கண்ணன் என்பரால்
திருக் கைகளை உடைய கண்ணன் என்று அறிவுடையார் சொல்லுவார்கள்
ஆய்ச்சி பாலை உண்டு –
யசோதைப் பிராட்டி உடைய முலையில் பால் உண்டு
மண்ணை யுண்டு வெண்ணெய் உண்டு பின்-பேய்ச்சி பாலை உண்டு
பாலை உண்டு வெண்ணெய் உண்டு பின் மண்ணை உண்டு -கல்பத்தின் முடிவில் பூமியைத் திரு வயிற்றிலே வைத்து
பண்டு ஓர் ஏனமாய வாமனா –
கல்பத்தின் ஆதியிலே ஒப்பற்ற வராஹ ரூபமாகி -திருவவதரித்த வாமன மூர்த்தியே
—————————————————————–
கடம் கலந்த வன் கரி மருப்பு ஒசித்து ஓர் பொய்கை வாய்
விடம் கலந்த பாம்பின் மேல் நடம் பயின்ற நாதனே
குடம் கலந்த கூத்தனாய கொண்டல் வண்ண தண் துழாய்
வடம் கலந்த மாலை மார்ப காலநேமி காலனே –38-
பதவுரை
கடம் கலந்த |
– |
மதஜலத்தால் வ்யாப்தமான |
வன் கரி |
– |
வலிய (குவலயாபீடமென்ற) யானையினுடைய |
மருப்பு |
– |
கொம்பை |
ஒசித்து |
– |
முறித்தெறிந்து |
ஓர் பொய்கை வாய் |
– |
ஓர் மடுவின் துறையிலே |
விடம் கலந்த பாம்பின் மேல் |
– |
விஷமனான காளியநாகத்தின் மேல் |
நடம் பயின்ற |
– |
நர்ததனம் செய்தருளின |
நாதனே! ஸ்வாமியே! |
||
குடம் கலந்த கூத்தன் ஆய |
– |
குடக்கூத்தாடின |
கொண்டல் வண்ண! |
– |
காளமேகம் போன்ற கண்ணபிரானே! |
தண் துழாய் வடம் கலந்த மாலை மார்ப |
– |
குளிர்ந்த திருத்துழாய் வடத்தோடு கூடன மாலையை அணிந்த திருமார்பையுடையவனே! |
காலநேமி காலனே! |
– |
காலநேமியென்னும் அசுரனுக்கு ம்ருத்யுவானவனே! (என்று ஈடுபடுகிறார்.) |
கடம் கலந்த –
மத ஜலத்தால் வ்யாப்தமான
வன் கரி –
வலிய குவலையா பீடம் என்னும் யானையை
மருப்பு ஒசித்து-
கொம்பை முறித்து எறிந்து
ஓர் பொய்கை வாய்-
ஒரு மடுவின் துறையிலே
விடம் கலந்த பாம்பின் மேல் –
விஷ மயமான காளியன் நாகத்தின் மேலே
நடம் பயின்ற நாதனே-
நடனம் செய்து அருளின ஸ்வாமியே
குடம் கலந்த கூத்தனாய கொண்டல் வண்ண-
குடக் கூத்தாடின கார் மேகம் போன்ற நிறம் உடைய கண்ண பிரானே
——————————————————————
வெற்பெடுத்து வேலை நீர் கலக்கினாய் அதன்றியும்
வெற்பெடுத்து வேலை நீர் வரம்பு கட்டி வேலை சூழ்
வெற்பெடுத்த இஞ்சி சூழ் இலங்கை கட்டழித்த நீ
வெற்பெடுத்து மாரி காத்த மேக வண்ணன் அல்லையே –39-
பதவுரை
வெற்பு எடுத்து |
– |
மந்தர பர்வதத்தைக்கொண்டு |
வேலை நீர் |
– |
கடல் நீரை |
கலக்கினாய் |
– |
கலங்கச் செய்தாய் |
அது அன்றியும் |
– |
அதுவு மல்லாமல் |
வெற்பு எடுத்து |
– |
மலைகளைக்கொண்டு |
வேலை நீர் |
– |
(தெற்குக்) கடலிலே |
வரம்பு கட்டி |
– |
திருவணையைக்கட்டி |
வேலைசூழ் |
– |
கடலாலே (அகழாகச்) சூழப்பட்டதாயும் |
வெற்பு எடுத்த இஞ்சி சூழ் |
– |
மலையான மதினாலே சூழப்பட்டதாயுமுள்ள |
இலங்கை |
– |
லங்கையினுடைய |
கட்டு |
– |
அரணை |
அழித்த |
– |
அழியச் செய்த |
நீ |
– |
தேவரீர் |
வெற்பு எடுத்து |
– |
கோவர்த்தனமலையைக் குடையாக வெடுத்து |
மாரி காத்த |
– |
மழையைத் தடுத்த |
மேகம் வண்ணன் அல்லையே |
– |
காளமேக நிபச்யாமரன்றோ! |
வெற்பெடுத்து வேலை நீர் கலக்கினாய் –
மந்திர பர்வதத்தைக் கொண்டு கடல் நீரைக் கலங்கச் செய்தாய்
அதன்றியும்
வெற்பெடுத்து வேலை நீர் வரம்பு கட்டி –
மலைகளைக் கொண்டு தெற்குக் கடலில் அணை கட்டினாய்
வேலை சூழ் வெற்பெடுத்த இஞ்சி சூழ் இலங்கை கட்டழித்த நீ-
கடலாலே அழகாக சூழப் பட்ட -திரிகூட பர்வத மலையாலும் சூழப் பட்ட இலங்கையை -அரணை அழியச் செய்த தேவரீர்
வெற்பெடுத்து மாரி காத்த மேக வண்ணன் அல்லையே-
கோவர்த்தன மலையைக் குடையாக எடுத்து மழையைக் காத்த காள மேக சியாமளன் தானே என்கிறார்
————-
ஆனை காத்து ஓர் ஆனை கொன்று அதன்றி ஆயர் பிள்ளையாய்
ஆனை மேய்த்தி ஆ நெய் உண்டியன்று குன்றம் ஒன்றினால்
ஆனை காத்து மை யரிக்கண் மாதரார் திறத்து முன்
ஆனை யன்று சென்று அடர்த்த மாயம் என்ன மாயமே –40-
பதவுரை
ஆனை காத்து |
– |
கஜேந்த்ராழ்வானைக் காத்தருளி |
அது அன்றி |
– |
அவ்வளவேயல்லாமல் |
ஆயர்பிள்ளை ஆய் |
– |
கோபாலகுமாரனாகி |
ஓர் ஆனை கொன்று |
– |
குவலயாபீடமென்ற ஒரு யானையைக் கொன்று |
ஆனை |
– |
பசுக்களை |
மேய்த்தி |
– |
மேய்த்தருளா நின்றாய்; |
ஆ நெய் |
– |
பசுக்களின் நெய்யை. |
உண்டி |
– |
அமுது செய்யா நின்றாய்; |
அன்று |
– |
இந்திரன் விடாமழை பெய்வித்தகாலத்தில் |
குன்றம் ஒன்றினால் |
– |
கோவர்த்தநமென்ற ஒரு மலையைக் கொண்டு |
ஆனைக் காட்டு |
– |
பசுக்களை ரக்ஷித்து |
மை அரி கண் மாதரார் திறந்து |
– |
மையணிந்து செவ்வரி படர்ந்த கண்ணையுடையளான நப்பின்னைப் பிராட்டிக்காக |
அன்று |
– |
அக்காலத்திலே |
முன்சென்று |
– |
அவளெதிரே நின்று |
ஆனை அடர்ந்த மாயம் எருதுகளேழையுங் கொன்ற ஆச்சரியம் |
||
என்ன மரயம் |
– |
என்ன ஆச்சரியம்! |
ஆனை காத்து ஓர் ஆனை கொன்று-
ஸ்ரீ கஜேந்திர ஆழ்வானைக் காத்து -குவலயா பீடம் என்ற யானையைக் கொன்று
அதன்றி ஆயர் பிள்ளையாய்-ஆனை மேய்த்தி –
பசுக்களை மேய்த்து அருளினாய்
ஆ நெய் உண்டியன்று குன்றம் ஒன்றினால் ஆனை காத்து-
பசுக்களின் நெய் அமுதத்தையும் உண்டு அருளினாய் –
இந்த்ரன் மழை பெய்வித்த அந்த காலத்தில் கோவர்த்தன மலை கொண்டு-பசுக்களைக் காத்து அருளினாய்
மை யரிக்கண் மாதரார் திறத்து முன் ஆனை யன்று சென்று அடர்த்த மாயம் என்ன மாயமே –
மை அணிந்து செவ்வரி படர்ந்த நப்பின்னை பிராட்டிக்காக –
அக்காலத்திலே அவள் எதிரிலே சென்று ஏழு எருதுகளையும் கொன்றது என்ன ஆச்சர்யம்
ஆ –ஆன் -இரண்டுமே பசுவுக்கு பெயர் –
இரண்டாமடியில், ஆனை= ஆன் ஐ; ஆன்- பசு ஜாதி; ஐ- இரண்டாம் வேற்றுமையுருபு.
மேய்த்தி. உண்டி = முன்னிலையொருமை வினைமுற்றுக்கள்.
மூன்றாமடியில் “ஆனைக்காத்து” என்று ஸந்தியாகவேண்டுமிடத்து ‘ஆனைகாத்து’ என இயல்பாக நின்றது எதுகை நயம் நோக்கியென்க.
ஆ என்றும் ஆன் என்றும் நோக்களுக்குப் பெயர்.
——————————————————————————————
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ உ வே P.B.A -ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருமழிசை பிரான் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்
Leave a Reply