ஸ்ரீ திருச்சந்த விருத்தம்-1-20- -ஸ்ரீ உ வே -PBA -ஸ்வாமிகள்–ஸ்ரீ திவ்யார்த்த தீபிகை –

ஸ்ரீ திருக் கச்சி நம்பி அருளிச் செய்த தனியன்

தருச்சந்த பொழில் தழுவு தாரணியின் துயர் தீரத்
திருச்சந்த விருத்தம் செய் திரு மழிசைப் பரன் வருமூர்
கருச்சந்தும் காரகிலும் கமழ் கோங்கு மண நாறும்
திருச்சந்ததுடன் மருவு திருமழிசை வளம் பதியே –

தருச்சந்த பொழில் தழுவு தாரணியின் -விருக்ஷங்களினுடைய அழகை யுடைய சோலைகளாலே சூழப்பட்ட
பூமியில் உள்ளவர்களுடைய
துயர் தீர–துக்கம் தீரும் படியாக
திருச்சந்த விருத்தம் செய் திரு மழிசைப் பரன் வருமூர்-திருவவதரித்த திவ்ய தேசம் ஏது என்றால்
கருச்சந்தும் -பெருமை பொருந்திய சந்தன மரங்களும்
காரகிலும் -கறுத்த அகில் கட்டைகளும்
கமழ் கோங்கு –மணம் மிக்க கோங்கு மரங்களும்
மண நாறும்-பரிமளம் வீசப் பெற்றதாய்
திருச்சந்ததுடன் மருவு -பெரிய பிராட்டியார் அபி நிவேசத்துடன் பொருந்தி வாழப் பெற்றதான
திருமழிசை வளம் பதியே –செல்வம் மிக்க திவ்ய தேசம்

தாரணியின் துயர் தீர ..திருமழிசை வளம் பதியே
”கண்டியூர் அரங்கம் மெய்யம் கட்சி பேர் மல்லை என்று மண்டினார் உய்யல் அல்லால் மற்றையார்க்கு உய்யலாமே போல .
“பதியே பரவி தொழும் தொண்டர் தமக்கு கதியே போல
திரு நறையூர் மணி மாடம் சேர்மின்களே
விண்ணகரம் வெக்கா விரி திரை நீர் வேங்கடம் –
சமன் கொள் வேங்கடமே -போலே திவ்ய தேசமே பரம ப்ராப்யம்

———-

திரு அவதார ஸ்தலம் பாடுகிறார் –

உலகும் மழிசையும் உள்ளுணர்ந்து தம்மில்
புலவர் புகழ்க் கோலால் தூக்க -உலகு தன்னை
வைத்து எடுத்த பக்கத்தும் மா நீர் மழிசையே
வைத்து எடுத்த பக்கம் வலிது

சர்வஞ்ஞராகிய சதுர் முகர் விஸ்வகர்மாவைக் கொண்டு துலாக்கோலால் நாட்டி
வசிஷ்டர் பார்க்கவர் போன்றோருக்கு எடுத்துக் காட்டிய விருத்தாந்தம் -புராண சித்தம் –
புலவர் -பார்க்கவாதி மஹரிஷிகளான மஹா கவிகள் -என்பர் ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர்
புகழ்க்கோல்-பெருமையை விளக்கும் துலாக்கோல்
திருமழிசையின் அநந்ய அசாதாரணமான ஏற்றம் சொல்லிற்று ..மஹீஷா சார ஷேத்ரம்
ஜகன் நாதன் இறே அங்கே நித்ய வாஸம் பண்ணுகிறது –
சிந்தயேத் ஸ ஜகந்நாதம் விஷ்ணும் ஜிஷ்ணும் சநாதனம் -என்னக் கடவது இறே
அத்தாலே வைத்தெடுத்த பக்கம் வலிதாய்த்து

————-

எழுத்து அசை சீர் தளை அடி தொடை -இந்த ஆறு உறுப்புக்களையும் கொண்டு
வெண்பா -ஆசிரியப்பா -கலிப்பா -வஞ்சிப்பா -என்ற நான்கு பா இனங்களுக்கும்
துறை தாழிசை விருத்தம் -மூன்று இனங்கள் யாப்பு இலக்கணத்தில் உண்டு
இது எழு சீர்க் கழி நெடில் அடி ஆசிரிய விருத்தத்தில் அமைந்த திவ்ய பிரபந்தம்
ஓன்று முதல் ஆறு சீர்கள் மாச்சீர்கள் ஏழாவது விளாச் சீர்
தான தான தான தான தான தான தானனா –சந்தங்களில் அமைத்தது -சந்த விருத்தம் என்றும்
கவி விருத்தம் என்றும் சொல்வர் –

ஒரு பிறவியில் இரண்டு குலங்கள்-யது குலம் ஆய்க்குலம் கண்ணனைப் போலவே
ரிஷி குலம் பிரம்பு அறுத்த தாழ்ந்த குலம் இவரும்
சர்வேஸ்வரன் மயர்வற மதிநலம் அருளி சர்வத்தையும் காட்டிக் கொடுக்க நெடும் காலம் இவ்விபூதியிலே இருந்து
ஸ்ரீ மன் நாராயணனுடைய பரத்வத்தை பலவாறும் அருளிச் செய்த இடத்தும் சம்சாரிகள் திருந்தக் காணாமையாலே
அவனது பெருமையை வாய் வேறுவப்பெற்ற தமது பாக்யத்தை அவன் திரு அருளால் பெற்றதை பேசி அருளுகிறார் இதில்

————-

பூநிலாய ஐந்துமாய் புனல் கண் நின்ற நான்குமாய்
தீநிலாய மூன்றுமாய் சிறந்த கால் இரண்டுமாய்
மீநிலாய தொன்றுமாகி வேறு வேறு தன்மையாய்
நீநிலாய வண்ண நின்னை யார் நினைக்க வல்லீரே –1-

பூநிலாய ஐந்துமாய் -பூமியில் தங்கி இருக்கிற சப்தாதி -சப்த ஸ்பர்ச ரூப ரச கந்தங்கள்-ஐந்து குணங்களுக்கும் நிர்வாஹகனாய்
புனல் கண் நின்ற நான்குமாய்-நீரிலே உள்ள -சப்த ஸ்பர்ச ரூப ரசங்கள்-நான்கு குணங்களுக்கும் நிர்வாஹகனாய்
தீநிலாய மூன்றுமாய் -தேஜஸ்ஸிலே உள்ள -சப்த ஸ்பர்ச ரூப-மூன்று குணங்களுக்கும் நிர்வாஹகனாய்
சிறந்த கால் இரண்டுமாய்-சர்வ பிராணிகளுக்கும் ஜீவன ஹேது வாகையாலே ஸ்ரேஷ்டமான வாயுவில் உள்ள
சப்த ஸ்பர்சங்கள் இரண்டு குணங்களுக்கும் நிர்வாஹகனாய்
மீநிலாய தொன்றுமாகி -ஆகாசத்தில் உள்ள சப்த குணம் ஒன்றுக்கும் நிர்வாஹகனாய்
வேறு வேறு தன்மையாய்-பரஸ்பரம் விலக்ஷணமான தேவாதி பதார்த்தங்களும் அந்தராத்மாவாய்
நீநிலாய வண்ண –கார்ய காரண வர்க்கத்தில் நிற்கும் பிரகாரத்தை உடையனாய்-நீ நிற்கிற படியையும்
நின்னை –சித் அசித் விசிஷ்டமாய் கொண்டு ஜகத் உபாதான காரணமாய் நிற்கிற உன்னையும்
யார் நினைக்க வல்லீரே –ஸூவ ப்ராயத்தினால் யார் தான் சிந்தித்து அறியக் கடவர்

பூ நிலாய ஐந்து .”பிராக்ருத சிருஷ்டி அருளுகிறார் ..பூமிக்கு ஐந்து குணங்களும்(மணம் ரசம் , ரூபம் ,ஸ்பர்சம் சப்தம் )
புனல் =நீருக்கு நான்கும் ,தீ -தேஜஸ் மூன்றும் ,வாயு (சிறந்த கால் =சர்வ பிராணிகளுக்கும் ஜீவன ஹேது )இரண்டும்
ஆகாசத்துக்கு மீநிலாயது )ஒன்றும் -சப்தம் மட்டும் ..இப்படி பஞ்ச பூதங்களும் குணங்களும் அவன் இட்ட வழக்காக இருக்கும்
”வேறு வேறு தன்மையாய் நீர் நிலய வண்ணம் நின்னை “என்று விலஷணமாய் இருக்கும் யாவற்றுக்கும் ஆத்மாவாக இருக்கிற படியையும்
உன்னையும் “யார் நினைக்க வல்லார் யாராலே ஸ்வ பிரயத்தனத்தால் நினைக்க முடியும் என்கிறார்-

ஆகாசாத் வாயு -வாயோர் அக்னி -அக்நேர் ஆப -அத்ப்ய ப்ருத்வீ–தைத்ரியம்

ஆகாசத்தில் சப்தம் ஒன்றும்
காற்றில் -சப்தம் ஸ்பர்சம்
தீயில் -சப்தம் ஸ்பர்சம் ரூபம்
புனல் கண் -சப்தம் ஸ்பர்சம் ரூபம் ரசம்
பூமியில் -சப்தம் ஸ்பர்சம் ரூபம் ரசம் கந்தம்

ஆத்மாக்கள் ஞாத்ருத்வாதிகளால் ஒன்றாக இருந்தாலும் கர்மாதீனமாக தேவாதி உபாதிகள் இருப்பதால்
வேறு வேறு தன்மையாய் உண்டே

இது வேதாந்த பிரமாணம் கைப்படாத குத்ருஷ்டிகளுக்கோ -பேதாபேதிகளுக்கோ –மாயா வாதிகளுக்கோ நினைக்க ஒண்ணாதே
பரமாணுக்களே -உபாதான காரணம் -என்னும் வைசேஷிகர் நினைக்க வல்லர் அல்லர்
பிரதானமே -உபாதான காரணம் -என்னும் -சாங்க்யர் நினைக்க வல்லர் அல்லர்
நிமித்த உபாதனங்களுக்கு பேதம் சொல்லும் சைவர் நினைக்க வல்லர் அல்லர் –
சித் அசித் ஈஸ்வர தத்வ த்ரயமும் பரஹம பரிணாமம் என்னும் பேத அபேத வாதிகள் நினைக்கவோ –
நிர்விசேஷ சிந் மாத்ரம் ப்ரஹ்மம் தத் வ்யதிகரங்கள் அபரமார்த்தங்கள் என்னும் மாயாவாதிகள் நினைக்கவோ –
வேதாந்த ப்ரேமேயம் கைப்பட்டார் ஒழிய ஆர் நினைக்க வல்லர்
பாஹ்ய குத்ருஷ்டிகளால் நினைக்க ஒண்ணாது -என்கிறார் –

அண்டங்களுக்குக் காரணமாய் குணங்களோடு கூடிய நிலம் நீர் தீ கால் விசும்பெனும் ஐம்பூதங்கட்கு அந்தராத்மாவாய்  நிற்கிற நீயே உபாதாந காரணம்;

இப்பரமார்த்தமானது வேதாந்தப்ரமேயம் கைப்படாத பாஹ்ய குத்ருஷ்டிகளுக்கு நெஞ்சில்புக வழியில்லையென்கிறது, இப்பாட்டு,

இது எம்பெருமானை முன்னிலையாக்கிச் சொல்லும் பாரசுமாயிருத்தலால் விளி வருவித்துக் கொள்ளப்பட்டது.

இப்பாட்டின் முன் இரண்டரையடிகளால் பிராக்ருத ஸ்ருஷ்டி சொல்லப்படுகிறது,

ஸாதாரனமாய் ப்ருதிவிக்கு மனம் குணமென்றும்,

அப்புக்கு ரஸம்குணமெனறும்,

தேஜஸ்ஸுக்கு ரூபம் குணமென்றும்,

வாயுவுக்கு ஸ்பர்சம் குணமென்றும்,

ஆகாசத்திற்கு  சப்தம் குணமென்றும்

இங்ஙனே ஒவ்வொரு பூதத்திற்கு ஒவ்வொன்று குணமாகச் சொல்லப்பட்டிருந்தாலும், ‘

காரணவஸ்துவிலுள்ள குணங்கள் காரியத்தில் வந்து சேருகின்றன’ என்ற நியாயப்படி

பூமிக்கு ஐந்து குணங்களும்,

ஜலத்திற்கு நான்கு குணங்களும்,

தேஜஸ்ஸுக்கு மூன்று குணங்களும்,

வாயுவுக்கு இரண்டு குணங்களும் உண்டு.

கைத்திரீயோப நிஷத்தில்- “ஆகாசாத்வாயு; வாயோரக்நி; அக்நேராப: அத்ப்ய: ப்ருதீவீ,” என்று

ஆகாசத்தில் நின்றும் வாயுவும்,

வாயுவில் நின்றும், அக்நியும்,

அக்நியில் நின்றும் ஜலமும்,

ஜலத்தில் நின்றும் ப்ருதிவியும் உண்டாவதாக ஓதப்பட்டிருக்கின்றது.

ஆகாசத்தில் நின்றும் பிறக்கிற வாயுவானது தன் குணமாகிய ஸ்பர்சத்தோடு கூட ஸ்வ காரணமான ஆகாசத்தின் குணமாகிய சப்தத்தையும் உடைத்தானதாம்.

வாயுவின் நின்றும் பிறக்கிற அக்நியானது தன்குணமாகிய ரூபத்தோடு கூட ஸ்வகாரணமான வாயு வினிடத்துள்ள சப்தஸ்பர்சங்களையும் உடைத்தானதாம்.

அக்நியில் நின்றும் பிறக்கிற ஜலமானது தன்குணமாகிய ரஸத்தோடுகூட ஸ்வகாரணாமன அக்நியிடத்துள்ள சப்தஸ்பர்சரூபங்களையும் உடைத்தானதாம்.

ஜலத்தில் நின்றும் பிறக்கிறபூமியானது தன் குணமாகிய கந்தத்தோடுகூட ஸ்வகாரணமாக ஜலத்திலுள்ள சப்தஸ்பர்ரூபரஸங்களையும் உடைத்ததானதாம்.

ஆகவே, பூமியானது ஐந்து குணங்களை உடைத்தானதாகவும்,

ஜலமானது நான்கு குணங்களை உடையதாகவும்,

அக்நியானது மூன்று குணங்களையுடையதாகவும்,

வாயுவானது இரண்டு குணங்களையுடையதாகவும்,

ஆகாசமானது ஒரு குணத்தை உடையதாகவும் ஆயிற்று.

இந்த ப்ரக்ரியையைத் திருவுள்ளம் பற்றியே “பூநிலாயவைந்தும்” இத்யாதிகள் அருளிச்செய்யப்பட்டனவென்க.

இப்படி ஒரு பூதத்தில் நின்றும் மற்றொரு பூதமுண்டாவதாகச் சொல்லப்பட்ட ப்ரக்ரியை தவிர,

தந்மாத்ரத்தில் நின்றும் தந்மாத்ரம் பிறக்கை,

பூதத்தில் நின்றும் தந்மாத்ரம் பிறக்கை முதலிய ப்ரகாராந்தரங்களும் உண்டாயினும்,

அதுவுமன்றி, பஞ்சீகரண ப்ரக்ரியையாலே எல்லாப்பூதங்களிலும் எல்லாக் குணங்களுமே ஏற்றத்தாழ்வாக இருக்குமென்கிற கோட்பாடு முண்டாயினும்,

இங்கே *ஆகாசாத் வாயு:* என்று கீழே உதாஹரிக்கப்பட்ட ச்ருதிச் சாயையாலே அருளிச் செய்யப்பட்டிருக்கிறதென்றுணர்க.

இந்தப்ரக்ரியை ஸ்ரீவிஷ்ணு புராணத்திலும் (முதல் அம்சம், இரண்டாமத்தியாயம், ச்லோ 50.) ஸ்பஷ்டம்.

(1). பூமியில்- சப்தம், ஸ்பர்சம், ரூபம், ரஸம், கந்தம்

(2) புனற்கண் -சப்தம், ஸ்பர்சம், ரூபம், ரஸம்.

(3) தீயில்- சப்தம், ஸ்பர்சம், ரூபம்.

(4) காற்றில் – சப்தம், ஸ்பர்சம்.

(5) ஆகாயத்தில்- சப்த மொன்றே.

ஆக இப்பஞ்சபூதகுணங்கள் எம்பெருமானாயிருக்கையாவதென்? எனில்;

பஞ்சபூதங்கள் எப்படி எம்பெருமானிட்ட வழக்காயிருக்கின்றனவோ,

அப்படியே அவற்றின் குணங்களும் அவ்வெம்பெருமாளிட்ட வழக்காயிருக்கின்றனவென்றவாறு.

“வேறு வேறு தன்மையாய்” என்றது அண்டத்துக்கு உட்பட்டவையாய் ஒன்றுக்கொன்று விலக்ஷணங்களாயுள்ள தேவாதி பதார்த்தங்கட்கெல்லாம் ஆத்மாவாயிருக்கும்படியைச் சொல்லுகிறது.

ஆத்மாக்கள் அனைவரும் ஜ்ஞாத்ருத்வாதிகளாலே வேற்றுமையின்றி ஒரு படிப்பட்டிருந்தாலும் கர்மாதீநமாக வருகிற தேவத்வமநுஷ்யத்வாதிகளாகிற உபாதிகள் வெவ்வேறுபட்டனவாதல்பற்றி “வேறு வேறு தன்மையாய்” எனப்பட்டதென்ப.

ஆர் நினைக்கவல்லர்? என்றது- நினைக்கவல்லார் ஒருவருமில்லை யென்ற குறிப்பு.

பேதாபேதிகள் நினைக்கவோ?

நிர்விசேஷவஸ்துவ்யதிரிக்தங்கள் அபரமார்த்த மென்னும் மாயாவாதிகள் நினைக்கவோ? என்கிறார்.

—————

ஆறும் ஆறும் ஆறுமாய் ஓர் ஐந்தும் ஐந்தும் ஐந்துமாய்
ஏறு சீர் இரண்டும் மூன்றும் ஏழும் ஆறும் எட்டுமாய்
வேறு வேறு ஞாநமாகி மெய்யினோடு பொய்யுமாய்
ஊறோடு ஓசையாய ஐந்துமாய் வாய மாயனே –2-

“ஆறும் ஆறும் ஆறு மாய “..
முதல் ஆறு
அந்தணர்கள் ஆறு கர்மாக்களை —அத்யயனம் (தான் ஓதுதல் ),அத்யாபனம் (ஓதுவித்தல் )
யஜனம் தான் வேள்வி செய்தல் ),யஜனம் (பிறரை வேள்வி செய்வித்தல் ),தானம் (தான் கொடுப்பது )
ப்ரதிக்ரஹம் (பிறர் தருவதை வாங்கி கொள்ளுதல் ) இந்த கருமங்களுக்கு அவன் நிர்வாஹகன் .
முதல் ஆறு, வேதமோதல் முதலான தொழில்களைச் சொல்வது. படிப்பது, கற்பது, படிக்க வைப்பது, கற்பிப்பது,
கொடுப்பது, பெறுவது என்று ஆறு செயல்கள் சொல்லப்படுகின்றன

அடுத்து ருது ஆறு —
வசந்தம் ,க்ரீஷ்மம் ,வர்ஷ ,சரத் ,ஹேமந்தம் ,சிசிரம் –இந்த ருதுக்களும் அவன் பிரவர்தகன்.
அவை கார்; கூதிர், முன்பனி, பின்பனி, இளவேனில், முதுவேனில் ஆகியன.

அடுத்த ஆறு
யக்ஜம் –ஆக்ஞேயம் ,அக்நீஷோமீயம் ,வுபாம்சுயாஜம் ,ஐந்தரம் ,இரண்டு ஐந்த்ராஞ்ஞம் —
ஆக்னேயம் முதலிய யாகங்கள். வேதம் ஓதல், வேள்வி வளர்த்தல், திருப்பலி கொடுத்தல்,
தானம் செய்தல் போன்று யாகங்கள் செய்பவர்கள் அனுஷ்டிக்கத் தக்க ஆறு செயல்கள்.
இவற்றில் முதல் மூன்றும் பவுர்ணமியில் செய்யப்படும் யாகங்கள் -பவுர்ணமாஸம் என்றும்
அடுத்த மூன்றும் அமாவாசையில் செய்யப்படும் யாகங்கள் என்பதால் தர்சம் என்றும்
இவை ஆறும் ஸ்வர்க்க பலத்துக்காக செய்யப்படுவதால் தர்ச பவுர்ணமாஸம் என்று ஒரே பெயராகச் சொல்லப்படும்
இவனே சர்வ தேவதைகளுக்கும் சரீரியாய் இருந்து தானே சர்வ யஜ்ஞா போக்தாவாகிறான்

அடுத்து ஐந்து
யஜ்ஞம் தேவ ,பித்ரு ,பூத ,மனுஷ ,ப்ரஹ்ம –பஞ்ச மஹா யக்ஜம் அருளுகிறார்
பஞ்ச யஜ்ஞா போக்தாவும் இவனே

அடுத்த ஐந்து -பிராணன ,அபான ,வ்யான ,வுதான ,சமான .பஞ்ச ஆஹுதிகள் ..
இவை ஐந்தும் அந்தர்யாமியான இவனுக்கு ஆராதனம்
அடுத்த ஐந்து
பஞ்ச அக்னிகள் –கார்ஹா பதியம் ,ஆஹஅவநீயம் ,தஷினாக்னி ,சப்யம் ,ஆவசட்யம் …இவற்றை சரீரமாக கொண்டவன் .

ஏறு சீர் இரண்டுமாய்
மிக்க அதிசயத்தை வுடைய ஞானம் , விரக்தி இரண்டையும் தர வல்லவன் .
அவனை மட்டும் நோக்கும் ஞானமும் , கடை அற பாசங்கள் விடுகை யாகிய வ்ரக்தியும்
மால் பால் மணம் சுழிப்ப மங்கையர் தோள் கை விட்டு
கடையறப் பாசங்களைக் கை விட்டு
ஒண் தாமரையாள் கேள்வன் ஒருவனையே நோக்கும் உணர்வு
இவை இரண்டுமே முக்கியம் என்பதால் ஏறு சீர் -ஆகின்றன –

“மூன்றும் “-
கீழ் சொன்ன ஞான விரக்திகள் பயனாக பெரும்
பரபக்தி பரஞான ,பரம பக்தி –
அல்லது
ஐஸ்வர்ய ,கைவல்ய ,பகவத் ப்ராப்திகளையும் .

அடுத்து “ஏழும் ” என்று
விவேகாதிகள் ஏழையும் ..
விவேகம் (ஜாதி ஆஸ்ரய நிமித்த திஷ்ட தோஷங்கள் இல்லாத அன்ன சுத்தியால் உண்டாகும் காய சுத்தி )
விமோஹம் காமம் ,க்ரோதம் இல்லாமை ),
அப்யாசம்-(ஸூப ஆஸ்ரயமான வஸ்துவில் பலகாலம் பரிசீலனம் பண்ணுகை )
க்ரியை-(பஞ்சம மஹா யஜ்ஜாதிகளை -நித்ய நைமித்திக கர்ம அனுஷ்டானம் )
கல்யாணம் -( சத்யம் ஆர்ஜவம் தயை அஹிம்சை பிறர் அபசாரங்களில் கண் வையாமை போன்றவை )
அனவசடம் (சோக நிமித்தம் ,-மனசை மழுங்காது இருத்தல் )
அனுடர்ஷம் (சந்தோஷத்தால் தலை கால் தெரியாமல் பொங்காது இருக்கை )
எம்பெருமானை சிந்திக்க வேண்டிய மன தெளிவுக்கு இந்த விவேகாதி சப்தம் எல்லாம் தேவை –

அடுத்த ஆறும் –
ஞான பால ஐஸ்வர்யம் வீர்யம் சக்தி தேஜஸ் குணங்கள் இவற்றுக்கும் நிர்வாஹகன் அவன் ”

எட்டும் “ என்று –
அபஹத பாபமா -பாபம் சம்பந்தம் அற்றவன் -விஜரஹ -கிளத் தன்மை அற்று நித்ய யுவாவாய் இருப்பவன்
விமிருத்யு மரணம் அற்றவன் -விசோக-சோகம் அற்றவன் – விஜிகத்சக பசி அற்றவன் -அபி பாஷா தாகம் அற்றவன்
சத்ய காம சத்ய சங்கல்ப ,ஆகிய எட்டு குணங்களும் தம்மைத் தொழும் அடியார்க்குத் தர வல்லவன்
தம்மையே ஓக்க அருள் செய்யுமவன் அன்றோ

வேறு வேறு ஞானமாகி –
வணங்கும் துறைகள் பல பல வாக்கி -கள்ள வேடத்தைக் கொண்டு போய் புறம் புக்க வாறும் என்று
புத்த அவதாரமும் ஆனவனே

மெய்யினோடு பொய்யுமாய் –
மெய்யர்க்கு மெய்யனாகும் விதி இல்லா என்னைப் போலே பொய்யர்க்கே பொய்யனாகும் .
“புள் கொடி உடைய கோமான் போலே ஆஸ்திகர்களுக்கு தனது மெய்யான ரூபம் நாஸ்திகர்களுக்கு காட்டித் தராமலும்
முமுஷுக்களுக்கு அவனையே தந்து -மற்றவர்களுக்கு சூத்திர பலமும் தந்து ,தள்ளி நிற்பவன்

ஊறோடு ஓசையாய ஐந்துமாய் வாய மாயனே நின்னை யார் நினைக்க வல்லரே –
ஸ்பர்சம் சப்தம் மற்றும் ரூபம் ரசம் கந்தம் ஐந்தையும் அவனாவது
உண்ணும் சோறும் பருகும் நீறும் தின்னும் வெற்றிலையும் எல்லாம் கண்ணன் -போலே ..
“கண்டு கேட்டு உற்று மோந்து உண்டு உழலும் ஐம்கருவி .கண்ட .இன்பம் எம்பெருமான் தானே
மெய்ப்பொருள் கண்டார்க்கு சர்வவித போக்யமும் அவனே
ஆயர் ஏறே மெய் பொருள் கண்டார்க்கு –ஆய- மாய மாயனே -நம்மிடையே வந்து -திவ்ய மங்கள விக்ரஹத்தை
சம்சாரி சஜாதீயமாக்கி வந்து பிறந்து அருளிய ஆச்சர்யம்

————

முன் இரண்டு அடிகளால் லீலா விபூதியையும் -அடுத்து நித்ய விபூதியையும் சொல்லி
தனக்கு நிர்ஹேதுக கிருபையைக் காட்டி அருளியதைச் சொல்கிறார்

ஐந்தும் ஐந்தும் ஐந்துமாகி அல்லவற்றுள் ஆயமாய்
ஐந்தும் மூன்றும் ஒன்றுமாகி நின்ற வாதி தேவனே
ஐந்தும் ஐந்தும் ஐந்துமாகி யந்தரத்து யணைந்து நின்று
ஐந்தும் ஐந்துமாய நின்னை யாவர் காண வல்லரே —3-

பதவுரை

ஐந்தும்

ஆகாசாதி பூதங்கள் ஐந்தும்
ஐந்தும்

ஜ்ஞாநேந்திரியங்கள் ஐந்தும்
ஐந்தும்

கருமேந்திரியங்கள் ஐந்தும்
ஐந்தும்

தந்மாத்ரைகள் ஐந்தும்
மூன்றும்

ப்ரக்ருதி, மஹாந், அஹங்காரம் என்ற மூன்றும்
ஒன்றும்

மநஸ்ஸாகிய ஒன்றும்
ஆகி

(ஆக இப்படிப்பட்ட இருபத்தினாலு தத்துவங்கட்கு) நிர்வாஹகனாய்
அல்ல வற்றுளாயும் ஆய் நின்ற

கீழ்ச்சொல்லப்பட்ட அசித்துப் போலன்றியே சேதநராயுள்ளவர்கட்கும் அந்தர்யாமியாய் எழுந்தருளியிருக்கிற
ஆதிதேவனே!

முழு முதற்கடவுளே!
அந்தரத்து அணைந்து! நின்று

பரமபதத்திலே பொருந்தி நின்று
ஐந்தும் ஐந்தும் ஐந்தும் ஆகி

அப்ராக்ருத பஞ்சசக்திகளுக்கும் ஜ்ஞாநேதிரியங்களைந்துக்கும், கருமேந்திரியங்களைந்துக்கும் நிர்வாஹகனாய்
ஐந்தும் ஐந்தும் ஆய நின்னை

சப்தாதிபோக்யங்களைந்துமாய், போகஸ்தாகம், போகோபகரணம், வைகுந்தத்தமர் முனிவர் முக்தர் என்ற ஐந்து வகுப்புகட்கு நியாமகனுமா யெழுந்தருளியிருக்கிற உன்னை.
யாவர் காண வல்லர்

யார் அறியவல்லர்? (யாருமறியகில்லார்.)

ஐந்தும் ஐந்தும் ஐந்தும் –முதல் ஐந்து –பஞ்ச பூதங்கள்–அடுத்த ஐந்து –ஞான இந்திரியங்கள்
அடுத்த ஐந்து கர்ம இந்திரியங்கள் –
அல்ல வற்றுள் நின்று -இப்படிச் சொன்ன அசித் போன்று இல்லாமல் சித் எல்லா வற்றிலும்
அந்தர்யாமியாய் இருந்து நிர்வகிக்கும்
மூன்றும் ஒன்றும் ஆகி -பிரகிருதி -அவிபக்த தமஸ் -அக்ஷரம் போன்ற அவஸ்தைகளைக் கொண்ட பிரகிருதி –
அதில் இருந்து குண வைஷம்யம் அடியாக பிறக்கும் விகாரங்களான மஹானும்
அதில் நின்றும் பிறக்கிற அஹங்காரம் -ஆகிய மூன்றும் – மனசாகிய ஒன்றும்
ஐந்தும் -தன் மாத்ரைகள் ஐந்தும் ஆகி -இப்படி 24 தத்துவங்களுக்கும் நிர்வாஹகனாய் ஆகி
ஆதி தேவனாய் -முழு முதல் கடவுளாய்
அந்தரத்து அணைந்து நின்று -பரமபதத்தில் பொருந்தி இருந்து –
ஐந்தும் ஐந்தும் ஐந்துமாகி -அப்ராக்ருத பஞ்ச சக்திகளுக்கும் ஞான இந்திரியங்களுக்கும்
கர்ம இந்திரியங்களுக்கும் – நிர்வாஹகனாய்
ஐந்தும் -சப்தாதி போக்யங்கள் ஐந்துமாய்
ஐந்துமாய-போக ஸ்தானம் போக உப கரணங்கள் -வைகுந்தத்தது அமரரரும் முனிவரும் முக்தர் என்கிற ஐந்து வகுப்புக்களும் –
நியாமகனாய் எழுந்து அருளி இருக்கிற உன்னை யார் நினைக்க வல்லவர் என்கிறார்
லீலா விபூதி விசிஷ்டானாயும் நித்ய விபூதி விசிஷ்டானாயும் -திவ்ய மங்கள விக்ரஹத்தையும் நீ எழுந்து அருளி இருக்கும் இருப்பை
நிர்ஹேதுக கிருபையால் நீ காட்டி அருள நான் எளிதில் கண்டால் போலே காணக் கூடியவர்கள் யாரும் இல்லையே –

லீலாவிபூதி விசிஷ்டனாயும் நித்யவிபூதி விசிஷ்டனாயும் நீ எழுந்தருளியிருக்குமிருப்பை நிர்ஹேதுக க்ருபையாலே எனக்கு நீ காட்டியருள நான் எளிதிற்கண்டாப்போல் ஸ்வஸரமர்த்தியத்தாற் காணக்கூடியவர்கள் யாருமில்லை யென்கிறார்.

முன்னிரண்டடிகளால் லீலாவிபூதியோகமும், பின்னிரண்டடிகளால் நித்யவிபூதியோகமும் அருளிச்செய்யப்படுகின்றன.

முதலடியில், ஐந்தும்- ப்ருதிவி. அப்பு, தேஜஸ், வாயு, ஆகாசம் (நிலம் நீர் தீ கால்விசும்பு) என்ற பஞ்சபூதங்கள்.

ஐந்தும் = த்வக்கு, சக்ஷûஸ், ச்ரோத்ரம், ஜிஹ்வா, க்ராணம் (செவ் வாய் கண் மூக்கு உடல்) என்ற பஞ்சஜ்ஞாநேந்திரியங்கள்.

ஐந்தும்- வாக்கு’ பாணி, பரதம், பாயு, உபஸ்தம் (வாய்,கை, கால், குதம்,குறி)என்ற பஞ்சகர்மேந்திரியங்கள்.

இரண்டாமடியில், ஐந்தும் = சப்ததந்மாத்ரை, ஸ்பர்சதந்மாத்ரை,ரூபதந்தமாதரை, ரஸதந்மாத்ரை, கந்ததந்மாத்ரை என்னும் பஞ்சதந்மாத்ரைகள்.

மூன்றும் = அலிபக்ததமஸ்ளென்றும் அக்ஷரமென்றும் சில அவஸ்தைகளை யுடைந்தாயிருக்கிற ப்ரக்ருதி (1), அந்தப்ரக்ருதியில் நின்றும் குணவைஷம்யமடியாகப் பிறக்கிற விகாரங்களுள் முதலதான மஹாக் (2), அந்த மஹத்தத்வத்தில் நின்றும் பிறக்கிற அஹங்காரம் (3), ஆக மூன்று,

ஒன்று- மநஸ்ஸு. ஆக இருபத்தினாலு தத்துவங்கள் சொல்லப்பட்டன. (முதலடியில் பதினைந்து; இரண்டாமடியில் ஒன்பது, ஆக-24.)

ஆகிநின்ற என்ற ஸாமாநாதிகரண்யம்- இத் தத்துவங்களுக்கும் எம்பெருமானுக்குமுள்ள ஸம்பந்தங்களெல்லாவற்றையும் உளப்படுத்தியதாம்.

அல்லவற்றுளாயுமாய்- இப்படி இருபத்தினாலாக வகுக்கப்பட்ட ப்ரக்ருதியிலே ஸம்ஸ்ருஷ்டரான ஜீவாத்மாக்களுக்கு அந்தர்யாமியாய் என்றபடி,

அல்லாவை என்றால் ஜீவாத்மாக்களை எங்ஙனே குறிக்கும்படியென்னில்; அல்லவை என்பதற்கு ‘அப்படியாகாதவை’ என்று பொருள்.

ப்ரகரணாநுகுணமாக ‘அசித்தாகாதவை’ என்று பொருளாய் அசேக்நவ்யாவ்ருத்தரான சேதநர்களைக் குறிக்கிறபடி.

இனி பின்னடிகளில், திவ்யமங்களவிக்ரஹத்தையும் நித்யவிபூதியோகத்தையும் தமக்குக் காட்டித்தந்தருளினபடியை அருளிச்செய்கிறா.

(1) ஐந்தும் = *** ***  பஞ்சசக்திகளாவன – “*** ***  என்று சொல்லப்படுகிறவையாய் நித்யவிபூதியிலுள்ளவையான பஞ்சபூதங்கள். வாஸுதேவனுடைய திவ்யமங்களவிக்ரஹம் பஞ்ச சத்திமயமென்று வேதாந்த நூற்கொள்கை.

ஐந்தும், ஐந்தும், ஐந்தும் – அப்ராக்ருதங்களான ஜ்ஞாநேந்திரியங்கனைந்தும், கருமேந்திரியங்களைந்தும், சப்தாதி போக்யங்களைந்தும். ஐந்தும் = ***  நங்களென்ற வகுப்பு (1), ஜொஹொவதுரணங்களென்ற வகுப்பு (2), “வைகுந்தத்தமரரும் முனிவரும்” என்ற இரண்டு வகுப்புகள் (4), முக்தர் என்ற வகுப்பு (50)- ஆ க ஐந்து கோடிகள்.

அந்தரம் = ஆகாசம்; பரமாகாசமெனப்படுகிற பரமபதம்.

————

மூன்று முப்பத்தாறினோடு ஓர் ஐந்தும் ஐந்தும் ஐந்துமாய்
மூன்று மூர்த்தியாகி மூன்று மூன்று மூன்று மூன்றுமாய்
தோன்று சோதி மூன்றுமாய் துளக்கமில் விளக்கமாய்
என் தன் ஆவியுள் புகுந்தது என் கொலோ வெம் மீசனே –4-

பதவுரை

மூன்று முப்பது

முப்பத்து மூன்று ஹல்லெழுத்துகட்கும்
ஆறினொரு ஒரு ஐந்தும் ஐந்தும்

பதினாறு அச்செழுத்துகட்கும்
ஐந்து

ளகாராதி பஞ்சாக்ஷரங்கட்கும்
ஆய்

நிர்வாஹகனாய்
மூன்று மூர்த்தி ஆகி

ருக்கு, யஜுஸ், ஸரமம் னஎ“கிற வேதத்ரய ஸ்வரூபியாய்
மூன்று மூன்று மூன்று மூன்றும் ஆய்

த்வாதசாக்ஷரீ ப்ரதி பாத்யனாய்
மூன்று தோன்று சோதி ஆய்

மூன்று ட்அஷரமாகிய ப்ரணவத்திலே விளங்கும் ஜ்யோதிரிமயனாய்
துளக்கம் இல் விளக்கம் ஆய்

என்று மழிவற்ற விளக்காகிய அகாரத்துக்கு வாச்யனாய்
எம் ஈசனே

எமக்கு நிருபாதிக சேஷியாயிருப்பவனே!
என்று

(என் காரியங்களையெல்லாம் நீயே உன் தலைச்சுமையாக) ஏறிட்டுக்கொண்டு
என் ஆவியுள்

என்னுடைய ஹ்ருதயத்தினுள்ளே
புகுந்தது

புகுந்திருப்பது
என் கொல்?

என்ன நீர்மை!

மூன்று முப்பது –33 ஹல் எழ்த்து
ஆறினொடு ஒர் ஐந்தும் ஐந்தும் –16 அச்சு எழுத்துகள்–
ஐந்தும் – ளகராதி பஞ்சாட்ஷரம்
ஆய் –நிர்வாஹகானாய்
மூன்று மூர்த்தி ஆகி நின்று “-ரிக் ,யஜுர் ,சம வேத வேத திரைய ஸ்வரூபியாய்-
ப்ரதிபாத்யன்–ப்ரவர்த்திப்பித்தவன் என்றுமாம்

மூன்று மூன்று மூன்று மூன்றும் ஆய –த்வாதச அஷரீ பரதி பாத்யனாய் ..”ஒம் நமோ வாசுதேவாய “.

தோன்று சோதி மூன்றுமாய் ”-மூன்று தோன்று சோதியாய் என்று மூன்று அஷரம்-பிரணவம் -தோன்றும் ஜோதி ..’

துளக்கம் இல்லா விளக்கம் “-அழிவற்ற விளக்காக –
அ ” காரம் ..ஓம்காரத்தில் திகழ்கின்ற ஜோதி மயன் ஓம்கரோ பகவன் விஷ்ணு போல
சகலத்துக்கும் காரணம் தனக்கு காரணம் அற்றவன் ஆதலால்
துளக்கமில்லா விளக்கு என்றார் .

எம் ஈசனே “-எனக்கு நிருபாதிக சேஷியனவானே
என்று -எனது காரியங்களை நீயே உன் தலைச் சுமையாய் ஏறிட்டு கொண்டு .

என் ஆவியுள் புகுந்தது என் கொல் “.-என்ன நீர்மை வேதங்கள் மந்த்ர ரஹஸ்யங்களை தேவரீர் உண்டாக்கி வைத்தும் –
அவ்வழியாலே உபாசியாமல் இருக்க
தேவரீரே அடியேனுடைய அஞ்ஞான அசக்திகளைக் கண்டு அறிந்து நிர்ஹேதுகமாக ஹ்ருதயத்தில் எழுந்து அருளி
ஸ்வரூபத்தை சாஷாத்கரிப்பித்து என்னை இடைவிடாமல் அடிமையும் கொண்டு அருளி உபகரித்தமை என்ன நீர்மை –

வேதங்களையும் மந்த்ர ரஹஸ்யங்களையும் தேவரீர் உண்டாக்கி வைத்திருக்கச் செய்தேயும் அடியேன் அவ்வழியாலே அறிந்து உபாஸியாதே யிருக்க தேவரீரே அடியேனுயைட ஹ்ருதயத்தினுள்ளே புகுந்தெழுந்தருளியிருக்கிறவிது என்ன நீர்மை! என்று ஈடுபட்டுப் பேசும் பாசுரம், இது.

மூன்று மூர்த்தியாகி = ருக்கு, ஸாமம், யஜுஸ் என்று மூன்று உருக்கொண்ட வேதங்களுக்கு ப்ரதிபாத்யன் (அல்லது) ப்ரவர்த்தகன் என்றபடி,

மூன்று மூன்று மூன்று மூன்றுமாய் = நாலுமூன்றுகள் கூடியப் பன்னிரண்டாய், “ஓம் நமோ பகவதே வாஸுதேவாய’ என்கிற தவ்யாதசாக்ஷரியாலே ப்ரதிபாத்யன் என்றதாகிறது.

தோன்று சோதி மூன்றுமாய் = ‘மூன்று தோன்று சோதியாய்’ என்று மொழிமாற்றி இயைக்கவேணும்.

மூன்றிலே தோன்றுகிற சோதியாய் என்றபடி.

மூன்று என்கிறது- மூன்று திருவக்ஷரமான ப்ரணவத்தை.

இது ஸம்ஹிதாகாரத்தாலே ஏகாக்ஷரமாயிருந்தாலும் உட்பிரிவிலே அ, உ, ம் என மூன்று திருவக்ஷரமாய் மூன்று அர்த்தங்களைப் பிரதிபாதிக்கவற்றாயிருக்குமிறே.

இப்படிப்பட்ட ஓங்காரத்திலே திகழ்கின்ற ஜ்யோதிர்மயன் எம்பெருமானிறே.

“ஓங்காரோ பகவாந் விஷ்ணு.” என்றதும் காண்க.

துளக்கமில் விளக்கமாய் = அந்த ப்ரணவத்திலே ப்ரதமாக்ஷரமான அகாரத்தைத் “துளக்கமில்விளக்” கெள்கிறது.

ஸகல வேதங்கட்குக் காரணமான ப்ரணவத்துக்குங் காரணமாய், தனக்கொரு காரணமற்றிறே அகாரமிருப்பது.

ஆகையாய் துளக்கமற்ற விளக்குப் போன்றதாய்த்து.

ஆக இவ்வழியாலே நான் அறிந்து உபாஸிப்பதற்கு நீ விஷயமாக வேண்டியிருக்க,

அங்ஙனாகாதே நீயே எனது அஜ்ஞாக அசக்திகளைக் கண்டறிந்து இப்படிப்பட்ட உன் ஸ்வரூபத்தை

எனக்கு ஸாக்ஷாத்கரிப்பித்து என்னை இடைவிடாது அடிமைகொண்டனையே! என்கிற உருக்கம் ஈற்றடியில் தோற்றும்.

————

வேதங்களும் மந்திர ரஹஸ்யங்களும் இருக்க -யாவர் காண வல்லரே -என்று எம்பிரான் கேட்க
அந்தராத்மாவாகவும் ஜகத் காரணத்வத்தாலும் -சகல ஆதாரமாய் இருக்கும் ஸ்வ பாவத்தை –
சமுதாய ரூபமாக அறியலாமே தவிர
தேவரீர் எனக்கு காட்ட நான் அலகு அலகாக கண்டால் போலே ஒருவருக்கும் காண முடியாதே என்கிறார்-

நின்று இயங்கும் ஒன்றிலா உருக்கள் தோறும் ஆவியாய்
ஒன்றி உள் கலந்து நின்ற நின்ன தன்மை இன்னதென்று
என்றும் யார்க்கும் எண்ணிறந்த வாதியாய் நின்னுந்தி வாய்
அன்று நான்முகன் பயந்த வாதி தேவன் அல்லையே –-5-

பதவுரை

நின்று

ஸ்தாவரமாயும்
இயங்கும்

ஜங்கமமாயுமிருக்கிற
ஒன்று அலா ருக்கள் தோறும்

பலவகையான சரீரங்கள் தோறும்
ஆவி ஆய்

ஆத்மாவாய்
ஒன்றி

பொருந்தி
உள் கலந்து நின்ற

பரிஸமாப்ய வர்த்தியாநின்ற
நின்ன

உன்னுடைய
தன்மை

ஸ்வபாவம்
இன்னது என்று

இத்தகையதென்று
என்றும்

எக்காலத்திலும்
யார்க்கும்

எப்படிப்பட்ட ஞானிகட்கும்
எண் இறந்த

சிந்திக்க முடியாதிருக்கிற
ஆதியாய்

ஆதிகாரணபூதனனான எனம்பெருமானே! (நீ)
அன்று

முற்காலத்திலே
நின் உந்திவாய்

உனது திருநாபியில்
நான் முகன்

சதுர்முகப்ரஹ்மாவை
பயந்த

படைத்த
ஆதிதேவன் அல்லையே

முழு முதற் கடவுளல்லையோர்.

நின்று -ஸ்தாவரமாயும் -நிலை பேராமல் நிற்கும் மலை போன்றவை
இயங்கும் -அசையக் கூடிய பசு பக்ஷி யாதி ஜங்கமமாயும் இருக்கிற
ஒன்றிலா உருக்கள் தோறும் ஆவியாய்-பலவகை சரீரங்கள் தோறும் ஆத்மாவாய்
ஒன்றி -பொருந்தி
உள் கலந்து நின்ற நின்ன தன்மை -பரிசமாப்யா வர்த்தியா நின்ற உன்னுடைய ஸ்வ பாவம்
இன்னதென்று-இத்தகையது என்று
என்றும் -எக்காலத்திலும்
யார்க்கும் -எப்படிப்பட்ட ஞானியர்க்கும்
எண்ணிறந்த -சிந்திக்க முடியாது இருக்கிற
வாதியாய் நின்னுந்தி வாய்-ஆதி காரண பூதனான எம்பெருமானே நீ உனது திரு பாபியிலே
அன்று நான்முகன் பயந்த வாதி தேவன் அல்லையே -முற்காலத்தில் சதுர்முகனைப் படைத்த முழு முதல் கடவுள் அன்றோ

எம்பெருமான் ஆழ்வாரை நோக்கி “ஆழ்வீர்! நம்மை உள்ளபடி அறிவிக்கவற்றான வேதங்களும் மந்த்ரஹஸ்யங்களும் பலபல உண்டாயிருக்க ‘யாவர் காணவல்லரே’ என்பானேன்?” என்ன;

அந்தர்யாமித்வத்தாலும் ஜகதேக காரணத்வத்தாலும் ஸகலாதாரனாயிருக்கிற ஸ்வபாவத்தை

ஸ்தூலத்ருஷ்டியாலே ஸமுதாயருபே அறியில் அறியலாமத்தனையொழிய,

தேவரீர் காட்ட நான் அலகலகாகக் கண்டாற்போலே ஒருவர்க்குங் காண முடியாதென்கிறார்-

இதில் நின்று என்னு- நிலைபேராதே நிற்கும் மலை முதலிய ஸ்தாவர பதார்த்தங்களைச் சொல்லுகிறது;

இயங்கும் என்று- அசையக்கூடிய பசுபக்ஷ்யாதி ஜங்கம பதார்த்தங்களைச் சொல்லுகிறது;

இயங்கும் என்று- அசையக்கூடிய பசுபக்ஷ்யாதி ஜங்கம பதார்த்ங்களைச் சொல்லுகிறது.

ஒன்று அலா = ஒன்று அல்லாத என்றாய், பலபலவென்றபடி.

நின் உந்திவாய் இத்யாதி. தேவரதி ஸகலபதார்த்தங்களும் அழிந்து கிடந்த அக்காலத்தில் உன்னுடைய திருநாபிக் கமலத்திலே பிரமனைப் படைத்த ஜகதேக காரணனல்லையோ நீ

உந்திவாய் = வாய்- ஏழனுருபு. நான் முகன் + பயந்த, நான்முகற்பயந்த.

—————-

உலகத்தில் ஒன்றுக்கு ஓன்று தாரகமாய் இருக்கும் பொருள்களுக்கும் இவனே தாரகம் என்கிறார்
இத்தால் அரவணை மேல் பள்ளி கொண்ட பெருமானே என்று விளிக்கிறார் —

நாகம் ஏந்து மேரு வெற்பை நாகம் ஏந்து மண்ணினை
நாகம் ஏந்து மாகம் மாகம் ஏந்து வார் புனல்
மாகம் ஏந்து மங்குல் தீ ஓர் வாயு ஐந்து அமைந்து காத்து
ஏகம் ஏந்தி நின்ற நீர்மை நின் கணேயியன்றதே –6-

நாகம் ஏந்தும் ஆக–திரு அனந்தவாழ்வானாலே தரிக்கப் பட்ட திருமேனியை யுடைய எம்பெருமானே
நாகம் ஏந்து மேரு வெற்பை -ஸ்வர்க்க லோகத்தை தரிக்கிற மேரு பர்வதத்தையும்
தனது தேஜஸ்ஸாலேயே தரிக்கிறது என்பர்
நாகம் ஏந்து மண்ணினை–திருவனந்தாழ்வான்-அல்லது திக்கஜங்களால் தரிக்கப்பட்ட பூமியையும்
நாகம் -சர்ப்பத்துக்கும் யானைக்கும் –
மாகம்–பரம பதத்தையும்
மாகம் ஏந்து வார் புனல்–ஆகாசத்தால் தரிக்கப்பட்ட கங்கையையும்
மாகம் ஏந்து மங்குல் -ஆகாசத்தால் தரிக்கப்பட்ட மேக மண்டலத்தையும்
தீ ஓர் -ஓர் தீ -வைச்வானர அக்னியையும்
வாயு ஐந்து -பஞ்ச வ்ருத்தி பிராணங்களையும்
அமைந்து காத்து-பொருந்தி ரஷித்து அருளி
ஏகம் ஏந்தி நின்ற நீர்மை -எல்லாவற்றையும் ஒரு வஸ்துவே தரித்துக் கொண்டு நிற்கிறது என்று
உபநிஷத்துக்களில் சொல்லப்பட்டுள்ள ஸ்வ பாவம் –
நின் கணேயியன்றதே-உன்னிடத்தில் தான் இருக்கின்றது –

கைலவஸ்துக்களுக்கும் எம்பெருமான் அந்தர்யாமியாயிருந்து கொண்டு அனைத்துக்கும் ஆதாராமகிறான் என்னுமர்த்தம் கீழ்பாட்டிற் சொல்லப்பட்டது;

உலகத்தில் ஒன்றுக்கொன்று தாரகங்களாகத் தோற்றும் பதார்த்தங்கட்கும் இம்வெம்பெருமானே தாரகன் என்கிறது இப்பாட்டு.

இரண்டாமடியிலுள்ள “நாகமேந்துமாக!” என்பது ஸம்போதகம். அரவணைமேற் பள்ளிகொண்ட பெருமானை! என்று விளித்தபடி.

மேருபர்வதம் ஸ்வர்க்கத்தை எங்ஙனே தரிக்கிறதென்றால், தன் சிகரத்திலுள்ள தேஜ்ஸ்ஸின் வழியாலே என்பர்.

முதலடியின் முதலிலுள்ள நாகம்- நாசா” என்ற வடசொல்லிகாரம். ***- ***-  என்பது ச்ருதி.

அதற்கு மேல் நாகம்- நாஹா என்ற வடசொல் விகாரம். அந்த பதத்திற்கு ஸர்ப்பமென்றும், யானையென்றும் இரண்டு பொருள்களுண்டு . இரண்டு பொருளும் இங்கு ஏற்கும்.

பூமியானது ஆதிசேஷனாலும், திக்கஜங்களாலும் தாங்கப்படுவதால். இரண்டாவடியிலுள்ள நாகமும் – நாஹா என்ற வடசொல் விகரம் (“நாகமேந்துமாகன்” என்பதன் அண்மைவிளி.)

இரண்டாமடியில், மாகம் இரண்டும் ஹோவா என்ற வடசொல் விகாரம்.

முதல் மாகம்- பரமாகாசவாசகம்.

இரண்டாவது மாகம்- ப்ரஸித்தாகாசவாசகம்.

மூன்றாமடியிலுள்ள மாகமும்- ஹோவா. என்ற வடசொல் விகாரமே.

ஏகமேந்தி நின்ற நீர்மை- “***- ***- ” என்றிவை முலான வேதாந்த வாக்கியங்களில் ஓதப்பட்டுள்ள அர்த்தம் உன் பக்கலில்தான் பொருந்தியிரா நின்றதென்றபடி.

ஏகம்- வன்கம்.

நின் கண்= கண்- எழலுருபு.

——————–

ஓன்று இரண்டு மூர்த்தியாய் உறக்கமோடு உணர்ச்சியாய்
ஓன்று இரண்டு காலமாகி வேலை ஞாலமாயினாய்
ஓன்று இரண்டு தீயுமாகி ஆயனாய மாயனே
ஓன்று இரண்டு கண்ணினானும் உன்னை ஏத்த வல்லனே –7-

பதவுரை

ஒன்று இணர்டு மூர்த்தி ஆய்

ப்ரதாநமான ஒரு மூர்த்தியும் அப்ரதாநமான இரண்டு மூர்த்தியுமாய்
உறக்கமோடு உணர்ச்சி ஆய்

அஜ்ஞாநத்துக்கும் ஸத்ஜ்ஞானத்துக்கும் நியாமகனாய்
ஒன்று இரண்டு காலம் ஆகி

மூன்று காலங்களுக்கும் நிர்வாஹனாய்
வேலை ஞாம் ஆயினாய்

கடல்சூழ்ந்த பூமண்டலத்துக்கு ப்ரவத்தகனாய்
ஒன்று இரண்டு தீயும் ஆகி

மூன்று அக்நிகளுக்கும் நிர்வாஹனாய்
ஆயன் ஆய

கோபாலஸஜாதீயனாய் அவதரித்த
மாயனே!

ஆச்சர்யபூதனான எம்பெருமானே!
ஒன்று இரண்டு கண்ணினாலும்

முக்கண்ணனான சிவபிரானும்
உன்னை

உன்னை
ஏந்த வல்லனே

துதிக்க வல்லவனே!

ஓன்று இரண்டு மூர்த்தியாய் –பிரம்மா ருத்ரன் இவர்களை சரீரமாகக் கொண்டு அவர்களுக்கும் நிர்வாஹகன் –
முனியே நான் முகனே முக்கண் அப்பா போலே
ஓன்று பிரதானம் -இரண்டு அப்ரதானம்

உறக்கமோடு உணர்ச்சியாய்-அஞ்ஞானத்துக்கும் ஞானத்துக்கும் நியாமகனாய்
உறக்கம் -என்றது அஜ்ஞ்ஞானத்தை –
அஜ்ஞ்ஞானம் அன்யதா ஜ்ஞானம் விபரீத ஜ்ஞானம் சம்சயம் மறப்பு எல்லாம் -உறக்கம் தானே –
ஸ்வரூப யாதாம்யத்தை சிலருக்கு உள்ளபடி சாஷாத் கரிக்கச் செய்பவனும்
திரிமூர்த்தி சாம்யம் வ்யாமோஹாதிகளாலே சிலரை மயங்கச் செய்பவனும் இவனே

ஓன்று இரண்டு காலமாகி-இறந்த நிகழ் எதிர் காலங்கள் -முக்காலங்களுக்கும் நிர்வாகனாய் -சாதாரண அர்த்தம் –
சாத்விக ரஜஸ் தமஸ் காலங்களுக்கும் கடவன் என்றபடி

வேலை ஞாலமாயினாய் –கடல் சூழ்ந்த பூ மண்டலத்துக்கு ப்ரவர்த்தனாகி

ஓன்று இரண்டு தீயுமாகி –ஆஹவநீயம் -கார்த்தபத்யம் தஷிணாக்னி என்ற மூன்று அக்னிகளுக்கும் நிர்வாஹகன் .

ஆயனாய-கோபால சஜாதீயனாய் திருவவதரித்த

ஓன்று இரண்டு கண்ணினானும் உன்னை ஏத்த வல்லனே –
ருத்ரனும் துதிக்க வல்லவன் அல்லன் என்கிறார் –

ப்ரஹ்ருத்ராதிகளைச் சரீரமாகக்கொண்டு அவர்களுக்கு நியாமகனாய் என்கிறது முதலடைமொழி.

முனியே நான்முகனே முக்கண்ணப்பா” இத்யாதிகளிற்போல இங்கும் ஸாமாநாதிகரண்யம் சரீர சரீர பாவத்தைப் பற்றியதாம்.

உறக்கமோடு உணர்ச்சியாய்= இலக்கணையால் அஜ்ஞானத்தை உறக்கமென்கிறது.

ஞானமற்றவனுக்கு உறக்கம் தவிர வேறு தொழிலிலாமை அறியத்தக்கது.

அஜ்ஞாகம், அந்யதாஜ்ஞாநம், விபரீதஜ்ஞாகம், ஸம்சயம், மறப்பு இவையெல்லாம் உறக்கமேயாம்.

உறக்கத்துக்கும் உணர்ச்சிக்கும் எம் பெருமான் நிர்வாஹகனாகையாவ தென்னென்னில்;

தன் ஸ்வரூப யாதாத்மியத்தைச் சிலர்க்கு உள்ளபடி ஸக்ஷாத்கரிக்கச் செய்பவனும் தானே; த்

ரிமூர்த்திஸாம்ய வ்யாமேஹாதிகளாலே சிலரை மயங்குபவனும்தானே என்கை.

ஒன்றிரண்டு காலமாகி = இறந்தகாலம், நிகழ்காலம், எதிர்காலம்  என்று மூன்று காலங்களுக்கும் நிர்வாஹகன் என்பது ஸாமாந்யமான அர்த்தம்.

ஸத்வகுணம் மிகும்படியான ஸாத்விககாலத்துக்கும்,

ரஜோகுணம் மிகும்படியான ராஜஸ காலத்துக்கும்,

தமோகுணம் மிகும்படியான தாமஸகாலத்துக்கும் கடவன் என்கை விசேஷார்த்தம்.

—————–

ருத்ரனுக்கு மட்டும் இல்லை -உபய விபூதியில் உள்ளார் அனைவருக்கும் முடியாது என்கிறார்

ஆதியான வானவர்க்கும் அண்டமாய வப்புறத்து
ஆதியான வானவர்க்கும் ஆதியான வாதி நீ
ஆதியான வான வாணர் அந்த கால நீ யுரைத்தி
ஆதியான கால நின்னை யாவர் காண வல்லரே –8-

பதவுரை

ஆதி ஆன கால

ஆதிகாலத்துக்கு நிர்வாஹகனானவனே!.
ஆதி ஆன

ஜக்த்ஸ்ருஷ்டி முதலினவற்றுக்குக் கர்த்தாக்களான
வானவர்க்கும்

(பிரமன் முதலிய) தேவதைகட்கும்.
அண்டம் ஆய அப்புறத்து ஆகி ஆன வானவர்க்கும்

அண்டமென்று பெயர் பெற்ற அப்பரமபதத்திலுள்ள ப்ரதாநகர்களான நித்யஸூரிகளுக்கும்
ஆதி ஆன

நிர்வாஹகனான
ஆதி

அதிபதி
நீ

நீயாகிறாய்;
ஆதி ஆன

ஜகத்துக்குக் கடவர்களாக ஏற்பட்டிருக்கிற
வானம் வாணர்

(பிரமன் முதலிய) மேலுலகத்தவர்களினுடைய
அந்த காலம்

முடிவு காலத்தை
நீ உரைத்தி

நீ அருளிச்செய்ய நின்றாய்.
ஆதி காலம ஆன நின்னை

ஆதிகாலத்துக்கு நிர்வாஹகனான உன்னை.
யாவர் காணவல்லர்

பரிச்சேதிக்க வல்லார் யார்?

ஆதியான வானவர்க்கும் –
பிரம்ம -தஷ பிரஜாபதிகள்- சப்த ரிஷிகள்- த்வாசதச ஆதித்யர்கள் -சிருஷ்டி கர்த்தாக்கள் -இந்த்ரன் -சதுர்தச மனுக்கள்-
ஸ்திதி கர்த்தாக்கள் -ருத்ரன் -அக்னி- எமன் இவர்கள் போன்ற சம்ஹார கர்த்தாக்கள் போன்றறோரை இத்தால் சொல்லிற்று .

அண்டமாய வப்புறத்து ஆதியான வானவர்க்கும் –
நித்ய ஸூரிகளுக்கும்

ஆதியான வான வாணர் அந்த கால நீ யுரைத்தி-
ஜகத்துக்கு கடவர்களாக ஏற்படுத்தி இருக்கும் மேல் உலகத்தவரின் முடிவு காலத்தை நீ அருளிச் செய்கிறாய்

ஆதியான கால நின்னை யாவர் காண வல்லரே
ஆதி காலம் ஆன நின்னை என்று மாற்றி ஆதி காலத்துக்கு நிர்வாஹகனான உன்னை யாவர் காண வல்லரே –என்கிறார்-

உபயவிபூதியிலுமுள்ள ஸகல பதார்த்தங்களினுடையவும் ஸத்தாதிகள் தானிட்ட வழக்காகப்பெற்ற உன்னை ருத்ரன் ஒருவனையோ பரிச்சேதிக்கமாட்டான்? உபயவிபூதியிலும் பரிசேதிக்க வல்லர் இல்லையென்கிறார்.

ப்ரஹ்மா, தக்ஷப்ரஜாபதிகள், ஸப்தரிஷிகள், ஆதித்யர்கள் ஆகிய இவர்கள் ஸ்ருஷ்டி கர்த்தாக்கள்; இந்திரன், சதுர்த்தச மநுக்கள் ஆகிற இவர்கள் ஸ்திதிகர்த்தாக்கள்; ருத்ரன், அக்நி, யமன் முதலானவிவர்கள் ஸம்ஹாரகர்த்தாக்கள், ஆகிய இவர்களைச் சொல்லுகிறது- முதலடியில்

“ஆதியானவானவர்” என்று. ‘அண்டமாயவப்புறத்தாதி யானவானவர்’- நித்யஸூரிகள்.

“அண்டமாள்வதாணை” “அண்டம்போ யாட்சி அவர்க்கதறிந்தோமே” இத்யாதிகளில் அண்ட சப்தம் பரமபதவாசகமாக வருதல் காண்க.

இவ்விடத்துப் பெரியவாச்சர்ன்பிள்ளை வியாக்கியானத்தில் “அண்டசப்தவாச்யமான “லீலாபூதிக்கு அப்புறத்தில் அண்ட சப்தவாச்யமான பரமபதத்தில் வர்த்திக்கிற” என்பது சுத்தபாடம்.

ஜகத்துக்கு நிர்வாஹமான காலதத்துவமும் அவம்பெருமாளிட்ட வழக்கென்கிறது- மூன்றாமடி.

எம்பெருமான் ப்ரவர்த்திப்பித்த சாஸ்த்ரங்களிலே ***-***- இத்யாதிகளாலே ப்ரஹ்மாதி தேவர்களுக்கு அவஸாநகாலம் கூறப்பட்டிருந்தலால் “அந்தகாலம் நீயுரைத்தி” எனப்பட்டது.

அந்த காலம் = *** என்ற வடசொல் விகாரம். ப்ரஹ்மாதிகளுடைய ஆயுஸ்ஸுக்கு ஓர் எல்லை ஏற்பட்டிருப்பதாலும் எம்பெருமானுக்கு அது இல்லாமையாலும் இவனே முழுமுதற் கடவுள் என்பது ஸ்பஷ்டம்.

ஆதி ஆன காலம்நின்னை = ஆதி காலம் ஆன நின்னை என மாற்றியுரைக்கப்பட்டது;-

கார்யரூபமான ஜகத்துக்களெல்லாம் லயமடைந்து போனவளவிலே ***- என்றபடி ஆதிகாலத்துக்கு நிர்வாஹகனாயிருந்த உன்னை என்றவாறு.

————

தாதுலாவு கொன்றை மாலை துன்னு செஞ்சடைச் சிவன்
நீதியால் வணங்கு பாத நின்மலா நிலாய சீர்
வேத வாணர் கீத வேள்வி நீதியான கேள்வியார்
நீதியால் வணங்குகின்ற நீர்மை நின் கண் நின்றதே –9-

பதவுரை

தாது உலாவு

தாதுகள் உலாவுகின்ற
கொன்றை மாலை

கொன்னைப்பூ மாலையையும்
துன்னு செம் சடை

நெருங்கிய சிவந்த சடையையுடைய
சிவன்

ருத்ரன்
நீதியால்

முறைமைப்படி
வணங்கு

வணங்கப்பெற்ற
பாத

திருவடிகளையுடையவனே!
நின்மலா!

நிர்மலஸ்வரூபியே!
நிலாய சீர்வேதம் வாணர்

நிரம்பிய குணங்களையுடைய வைதிகர்களென்ன
கீதம்

வேள்வியார்

ஸாமகானம் மிகுந்த யஜ்ஞயாகங்களை நடத்துமவர்களென்ன

நீதி ஆன கேள்வி யார்

சிரமப்படி ச்ரவண மநநங்களை ச் செய்கிற மஹான்களென்ன (இவர்கள்)
நீதியால்

சாஸ்த்ரவிதிப்படி
வணங்கு நின்ற நீர்மை

வணங்குகைக்கு உரிய தன்மை.
நின் கண்ணே நின்றது

உன் பக்கலில்தான் உள்ளது.

தாதுலாவு கொன்றை மாலை துன்னு செஞ்சடைச் சிவன்
பிரயோஜனாந்தரர்களில் முதல்வரான சிவனும்

நீதியால் வணங்கு பாத நின்மலா–
அநந்ய பிரயோஜனரான வைதிக உம்பர்களும் உன்னையே ஆஸ்ரயிக்கிறார்கள்
நீயே சர்வ சமாஸ்ரயணீயன் என்கிறார்

நிலாய சீர் வேத வாணர்–
நிரம்பிய கல்யாண குணங்கள் உடைய வைதிகர்கள்

கீத வேள்வியார் –
சாம வேத ஞானம் உடையவர் முகுந்த யாக யஜ்ஞங்கள் நடத்துபவர்கள் .

நீதியான கேள்வியார்-
க்ரமப்படி ஸ்ரவண மனனநாதிகளை செய்பவர்கள் –

ப்ரயோஜநாந்தரபார்களில் முதல்வனான சிவனும் அநந்யப்ரயோஜநரான வைதிகோத்தமர்களும் உன்னையே ஆச்ரயிக்கக் காண்கையாலே நீயே ஸர்வ ஸாச்ரயணீயன் என்கிறார்.

—————-

காரணந்து த்யேயா -காரண வஸ்துவே உபாஸ்யம் என்கிறார் இதில்

தன்னுளே திரைத்து எழும் தரங்க வெண் தடம் கடல்
தன்னுளே திரைத்து எழுந்து அடங்குகின்ற தன்மை போல்
நின்னுளே பிறந்து இறந்து நிற்பவும் திரியவும்
நின்னுளே அடங்குகின்ற நீர்மை நின் கண் நின்றதே –10-

பதவுரை

தன்னுள்ளே திரைத்து

தன்னிலே கிளர்ந்து
எழும்

பரவுகின்ற
தரங்கம்

அலைகளையுடைத்தாய்
வெண்தடம்

வெளுத்த ப்ரதேசங்களையுடைத்தான
கடல்

கடலானது
தன்னுள்ளே  திரைத்து எழுந்து

தனக்குள்ளே கிளர்துலாவி
அடங்குகின்ற தன்மைபோல்

(மறுபடியும்) சாந்தமாவதுபோல.
நிற்பவும்

ஸ்தாவரஜங்கமரூபமான ப்ரபஞ்சமெல்லாம்
நின்னுள்ளே

உன் ஸ்வரூபத்துக்குள்ளே
பிறந்து

உத்பந்தமாய்
இறந்து

லாபமடைந்து
நின்னுள்ளே அடக்குகின்ற நீர்மை

(இப்படி) உன் ஸ்வரூபத்துக்குள்ளேயே ஒடுங்கிப்பொருகைக்கு உரிய தன்மை
நின் கண்ணே நின்றது

உன் பக்கலில் தான் உள்ளது.

தன்னுளே திரைத்து எழும்-
பகவத் சங்கல்பத்தால் தோன்றி உள்ளதும் பின்பு அழிவதும் அவனது ஸ்வரூபத்தில் பிறந்து லயிப்பது
கடலில் அலைகள் தோன்றி அழிவது போலேவே
தரங்கம் -அலைகள்-

நிற்பவும் திரியவும்–
நிற்பனவும் திரிவனவும் -ஸ்தாவர ஜங்கம ரூபமான பிரபஞ்சம் எல்லாம்

நின்னுளே பிறந்து இறந்து-உன் ஸ்வரூபத்துக்கு உள்ளே உத்பன்னமாய் லயம் அடைந்து
நின்னுளே அடங்குகின்ற நீர்மை நின் கண் நின்றதே-உன் ஸ்வரூபத்துக்கு உள்ளே
ஒடுங்கிப் போக உரிய தன்மை உன் பக்கத்திலே தான் உள்ளது –

அதர்வசிகையிலே “*** “  – என்று ஓதப்பட்டிருக்கிறது. ‘

ஜகத்துக்கு எது உபாதாநகாரண்மோ அதுதான் உபாஸ்யம்’ என்பது அந்த ச்ருதிவாக்யத்தின் பொருள்.

அப்படி உபாதாக காரணத்வ ப்ரயுக்தமான ஆச்ரயணியத்துவமும் எம்பெருமானிடத்தே யுள்ளது என்கிறது இப்பாட்டு.

அலையெறிவு ஓய்ந்துகிடந்த கடலானது வாயுஸஞ்சாரத்தாலே எங்கும் அலையெறியப்பெற்று,

மீண்டும் காற்று ஓய்ந்தவாறே அவ்வலையெறிவு அடங்கி, கடலானது சாந்தமாவதுபோல- என்பது முன்னடிகளின் கருத்து.

பின்னாடிகளிற் கூறப்படும் அம்சத்திற்கு இது த்ருஷ்டாந்தம்.

தார்ஷ்டாந்திகத்தில் வாயுவின் ஸ்தானத்திலோ பகவத் ஸங்கல்பத்தைக்கொள்க.

ஸங்கல்பமில்லாதபோது பகவத்ஸ்வரூபம் சாந்தமாயிருக்கும்.

***- என்றாற்போன்ற ஸங்கல்பம் உண்டானவாறே ஸ்தாவர ஜங்கமாத்மகமான ப்ரபஞ்சங்கள் தோன்றுதலும்

பின்பு அழிதலுமான அவஸ்தைகளையடைந்து கடைசியாக

***- என்றபடி எம்பெருமானளவிலே உயஸம்ஹ்ருதங்களாய்ப் போகிறபடியை சொல்லுகிறது.

நிற்பவும் திரிபவும்- நிற்பனவும் திரிபனவு மென்றபடி.

—————

பிரஜாபதி பசுபதிகள் இவனுக்கு புத்ரராகவும் பரனாகவும் சுருதி சொல்லுமே –
ஸ்ருஜ்யர்-அஞ்ஞர்-ஆஸ்ரயணீயர் ஆக மாட்டார்களே

சொல்லினால் தொடர்ச்சி நீ சொலப்படும் பொருளும் நீ
சொல்லினால் சொலப்படாது தோன்றுகின்ற சோதி நீ
சொல்லினால் படைக்க நீ படைக்க வந்து தோன்றினார்
சொல்லினால் சுருங்க நின் குணங்கள் சொல்ல வல்லரே –11-

பதவுரை

சொல்லினால்

வேதாந்த சாஸ்த்ர முகத்தாலே
தொடர்ச்சி நீ

(ஏகாந்திகளுக்கு) உறவை உண்டு பண்ணுமவன் நீ;
சொலப்படும் பொருளும் நீ

(சில புராணாதிகளில் ஆச்ரயணீயராகச்) சொல்லப்படுகிற தேவாதி பதார்த்தங்களுக்கு அந்ராத்மா நீ;
சொல்லரினால் சொல்லப்படாது தோன்றுகின்ற சோதி நீ சொல்லினால்

நீ காட்டிக்கொடுத்த வேதத்திற் சொல்லியபடி
படைக்க

(உலகங்களை) உண்டாக்குவதற்காக
நீ படைக்க வந்து தோன்றினார்

உன்னாலே ஸ்ருஷ்டிக்கப்பட்டு வந்து பிறந்தவர்களான ப்ரஹ்மாதிகன்
சொல்லினால்

சப்தங்களைக் கொண்டு
சுருங்க

சுருக்கமாவாவது
நின் குணங்கள்

உனது கல்யாண குணங்களை
சொல்லவல்லரே.

வர்ணிக்க சக்தர்களோ? (அல்லர்.)

சொல்லினால் –
வேதாந்த சாஸ்திர முகத்தால்

தொடர்ச்சி நீ-
ஏகாந்திகளுக்கு .உறவை உண்டுபவன் நீ

சொலப்படும் பொருளும் நீ-
சில புராணங்களில் சொல்லப் படும் தேவாதி அனைத்துக்கும் அந்தர்யாமி நீயே .

சொல்லினால் சொலப்படாது தோன்றுகின்ற சோதி நீ-
வேதத்தால் சொல்ல முடியாது என்று தோன்றுகின்ற தேஜஸ் சப்த வாக்யனும் நீயே .

சொல்லினால் படைக்க நீ படைக்க வந்து தோன்றினார்-
நீயே காட்டிக் கொடுத்த வேதத்தில் சொல்லிய படியே உலகத்தை உண்டாக்கிய உன்னாலேயே சிருஷ்டிக்கப் பட்டு
வந்து பிறந்த பிரம்மா முதலானோர்

சொல்லினால் –
சப்தங்களைக் கொண்டு

சுருங்க நின் குணங்கள் சொல்ல வல்லரே –
சுருக்கமாக வாவது -உனது கல்யாண குணங்களை வர்ணிக்க சக்தர்களோ

***- ப்ரஹ்ருத்ராதிகள் ஆச்ரயணீரல்லர்களென்றும் எம்பெருமானொருவனே ஆச்ரயணீயனென்றும் சொல்லிவிடலாமோ?

வேதங்களில் ***-***- இத்யாதிகளான சில வாக்கியங்கள் சிலபாரம்யத்தையும்

***- இத்யாதிகளான சில வாக்யங்கள் ப்ரஜாபதி பாரம்யத்தையும் சொல்லிக்கிடக்கின்றனவே;

அவர்கள்- ஆச்ரயணீயராகத் தடையென்ன? என்று சிலர்க்கு சங்கையுண்டாக

அந்த ப்ரஜாபதி பசுபதிகள் எம்பெருமானுக்குப் புத்ரபௌத்தர்களான வேதங்கள் முறையிடா நிற்பதுந் தவிர,

அவர்கள் எம்பெருமானுடைய திருக்கல்யாண குணங்களை விரிவாகப் பேசமாட்டாமையன்றிக்கே

சுருக்கமாகவும் பேசமுடியாதவர்களென்று ப்ரமாண ப்ரஸித்தமாயிருக்க,

இப்படி ஸ்ருஜ்யர்களாகவும் அஜ்ஞர்களாயுமுள்ள அவர்கள் ஆச்ரயணீயராகைக்கு ப்ரஸக்தியேயில்லை யென்றாயிற்று.

————–

உலகு தன்னை நீ படைத்தி யுள் ஒடுக்கி வைத்தி மீண்டு
உலகு தன்னுளே பிறத்தி ஓர் இடத்தை அல்லை ஆல்
உலகு நின்னொடு ஒன்றி நிற்க வேறு நிற்றி ஆதலால்
உலகு நின்னை உள்ள சூழல் யாவர் உள்ள வல்லரே –12-

பதவுரை

உலகு தன்னை

லோகங்களை
நீ படைத்தி

நீ ஸ்ருஷ்டியாகின்றாய்;
உள் ஒடுக்கி வைத்தி

(நித்யஸநமித்திகாதி ப்ரளயாபத்துக்களிலே அவ்வுலகங்களைத்) திருவயிற்றினுள்ளே ஒடுங்கவைத்து நீயே நோக்கா நின்றாய்.
மீண்டு

அதுமன்றியில்
உலகு தன்னே

இவ்வுலகத்தினுள்ளே
பிறத்தி

வந்து அவதரியா நின்றாய்;
ஓர் இடத்தை அல்லை

ஓரிடத்தை இருப்பிடமாகவுடையை என்று நிர்ணயிக்க முடியாதவனாயிரா நின்றாய்;
உலகு

ப்ரபஞ்சம் முழுதும்
நின்னொடு ஒன்றி நிற்க

(சரீரியான) உன்னோடு (சரீரமாய்) அணைந்து நிற்க
வேறு நிற்றி

அஸாதாரண விக்ரஹகத்தோடு கூடி வ்யாவ்ருத்தனாயிரா நின்றாய்;

ஆதலால்:

உலகில்

லோகத்திலே
குழல் உள்ள நின்னை

ஆச்சரியமான படிகளையுடைய உன்னை
யாவலர் உள்ள வல்லவர்

அறியவல்லாரார்?

 

உலகு தன்னை நீ படைத்தி-
ஜகத் காரண பூதனாய் நின்று நோக்கும் அளவே அன்று
வேறு நிற்றி -அசாதாரண விக்ரஹத்தோடு கூடி வந்து திருவவதரித்து நோக்குகின்ற உன் படிகளை
சூழல் உள்ள நின்னை-ஆச்சர்யமான படிகளை உடைய உன்னை
அறிய வல்லார் யாரும் இல்லை என்கிறார்-

ஜகத்காரணபூதனாய்நின்று நோக்குமளவே யன்றிக்கே அஸாதாரண விக்ரஹத் தோடுங் குடிவந்தவதரித்து நோக்குகின்ற உன்படிகளை அறியவல்லார் ஆருமில்லை யென்கிறார்.

நான்காமடியை, சூழல் உள்ள நின்னை  உலகில் யாவருள்ளவல்லர்” என மாற்றி அந்வயித்துக்கொள்க.

ஆச்சர்யமான படிகளையுடைய உன்னை லௌகிக புருஷர்களில் அறியவல்லார் ஆருமில்லை யென்க.

இனி, நின்னை என்பதற்கு ‘உன்னிடத்திலே’ என்று பொருள்கொண்டு உன்னிடத்திலே உள்ள சூழலை ஆர் அறியவல்லார்? என்னவுமாம்.

படைத்தி-, வைத்தி, பிறத்தி, நிற்றி= இவை முன்னிலை யொருமை வினை முற்றுக்கள்.

—————-

இன்னை என்று சொல்லலாவது இல்லை யாதும் இட்டிடைப்
பின்னை கேள்வன் என்பர் உன் பிணக்கு உணர்ந்த பெற்றியோர்
பின்னையாய கோலமோடு பேருமூரும் ஆதியும்
நின்னை யார் நினைக்க வல்லர் நீர்மையால் நினைக்கிலே –13-

பதவுரை

இன்னை என்று

‘நீ இப்படிப்பட்டவன்’ என்று
சொல்லலாவது

சொல்லக்கூடியது
யாதும் இல்லை

ஒரு படியுமில்லை;
உன் பிணக்கு உணர்ந்த பெற்றியோர்

உன்னுடைய அவதாராதி விஷயங்களில் ஆச்ரிதர்க்கும் அநாச்சரிதர்க்கு முள்ள விவாதத்தை அறிந்திருக்கும் மஹான்கள் (உன்னை)
ஆதியும்

(விக்ரக்ஷபரிக்ரக்ஷம் பண்ணினதற்குக்கு) காரணத்தையும்
நீர்மையால் நினைக்கில் (அல்லது)

உன்னுடைய கிருபையினாலே நீ அறிவிக்க இறியுமதெழிய
இட்டிடை பின்னை கேள்வன் என்பர் நின்னை

நுண்ணிய இடையை யுடையளான நப்பின்னைப்பிராட்டிக்கு வல்லபனானகக் கூறுவர்கள்; உன்னுடைய
பின்னை ஆய கோல மோடு

ஸர்வவிலக்ஷணமான திவ்விய மங்கள விக்ரக்ஷத்தையும்
பேரும் ஊரும்

திருநாமங்களையும் திவ்யஸ்தானங்களையும்
ஆர் நினைக்க வல்லர்

(மற்றைப்படி) அறிய வல்லாரார்?

 

“இன்னை என்று சொல்லலாவது இல்லை-
நீ இப்படிப் பட்டவன் என்று சொல்லக் கூடியது ஒரு படியும் இல்லையே

உன் பிணக்கு உணர்ந்த பெற்றியோர்-
உன்னுடைய திருவவதாரத்து விசேஷங்களை ஆஸ்ரிதர்களுக்கும் அநாஸ்ரிதர்களுக்கும்
உள்ள விவாதத்தை அறிந்த மகான்கள்

இட்டிடைப் பின்னை கேள்வன் என்பர் –
நுண்ணிய இடையை உடைய நப்பின்னை பிராட்டியாருக்கு வல்லபனாக கூறுவார்கள்

பின்னையாய கோலமோடு-
சர்வ விலஷணமான திவ்ய மங்கள விக்ரஹத்தையும்

பின்னையாய கோலம் –
மானிட ஜாதிக்கும் கீழாக திரியும் ஜாதியில் வந்து திருவவதரித்து -என்றும் கொள்ளலாம்

பேருமூரும் ஆதியும்-
திரு நாமங்களையும் -திவ்ய தேசங்களையும் விக்ரஹ பரிக்ரஹம் பண்ணியதற்கு காரணத்தையும்

நின்னை யார் நினைக்க வல்லர் நீர்மையால் நினைக்கிலே-
நீர்மையால் நினைக்கில் அல்லது நின்னை யார் நினைக்க வல்லர் -ஒழிய மற்றப்படி யாராலும் அறிய முடியாதே-

ஆதி அம் ஜோதி உருவை அங்கு வைத்து இங்குப் பிறந்த

பிணக்காவது-ஆஸ்ரியர்கள் பேரும் ஓர் ஆயிரம் பிற பல உடைய எம்பெருமான் -என்றும்
அநாஸ்ரிதர்கள் பேரும் ஓர் உருவமும் உள்ளதில்லை என்பர் –

எம்பெருமானுடைய வைலக்ஷண்யத்தையும் அவதார ரஹஸ்யங்களையும் அவன் தானே காட்டிக் கொடுக்கில் காணுமதொழிய ஸ்வப்ரயத்நத்தாலே ஆர்க்கும் காணமுடியாதென்கிறார்.

“ஆகியஞ்சோதியுருவை அங்கு வைத்திருங்குப்பிறந்த” என்றபடி

தன்படிகளில் ஒன்றும் குறையாமே எல்லாவற்றோடுங் கூடிவந்து திருவவதரித்து நிற்கிற நிலையிலே

உன் படிகளில் ஏதாவதொருபடியையும் பரிச்சேதித்து அறிய முடியாதென்பது முதலடியின் கருத்து.

உன்னாலே *மயர்வர மதிநல மருளப்பெற்ற உன் விஷயங்களை யெல்லாம் நன்கறிந்துள்ள மஹான்கள்

“மிதுநமே ஆச்ரசணீயம்” (அதாவது பெருமாளும் பிராட்டியுமாக இருவருமான சேர்த்தியிலே அடிமை செய்கை முறை)

என்று சொல்லுவார்கள்- என்பது இரண்டாமடியின் கருத்து.

பிணக்காவது – “பேருமோருருவமும் உளதில்லை” என்று அநாச்ரிதர்கள் கூறுவதும்,

“பேருமோராயிரம் பிறபலவுடைய வெம்பெருமான்” என்று ஆச்ரிதர் கூறவதுமான இப்படிப்பட்ட விவாதம்:

இதனையறிந்தவர்களென்றால், அநாச்ரிதர்கள் கூறுவது அஸம்பத்தமென்றும் ஆச்ரிதர்கள் கூறுவதே பொருத்தமுடைத்தென்றும் சோதித்தறிந்தவர்களென்கை.

“பிள்ளையாயகோலம்” என்றது- இதர வ்யாவ்ருத்தமான விக்ரஹமென்றபடி.

அன்றி, மானிட சாதிக்கும் ” பிற்பட்டதான் (ஹேயமான) திர்யக்காதி ஜாதியிலேயான திருமேனி யென்னவுமாம்.

“***- என்று கீதையிலே அறிவித்தாப்போலே நீறே அறிவிக்கில் அறியுமத்தனையொழிய மற்றைப்படியாக அறியமுடியாதென்பது ஈற்றடியின்கருத்து.

இப் பாட்டின் முடிவில் நினைக்கிலே என்றவிடத்து அல்லது என்று கூட்டிக் கொள்ளவேணுமென்பர்.

—————

தூய்மை யோகமாயினாய் துழாய் அலங்கல் மலையாய்
ஆமையாகி ஆழ் கடல் துயின்ற வாதிதேவ நின்
நாமதேயமின்ன தென்ன வல்லமல்ல வாகிலும்
சாம வேத கீதனாய சக்ர பாணி அல்லையே –14-

பதவுரை

தூய்மை யோகம் ஆயினாய்

ஸம்ஸாரிகள் அழுக்குடம்பு நீங்கிப் பரிசுத்தமான அப்ராக்ருத சரீரம் பெறும்படி அருள் செய்யுமவனே!
துழாய் அலங்கல் மழையாய்

திருத்துழாய்மாலை யணிந்துள்ளவனே!
ஆமை! ஆகி! ஆழ்! கடல்! துயின்ற! ஆதிதேவ!

கூர்மருபியாய் ஆழ்ந்த கடலிலே திருக்கண் வளர்ந்தருளின ஆதி தேவனே!
நின் நாமதேயம்

உனது திருநாமங்களுக்கு வாச்யமான குசேஷ்டிதங்கள்
இன்னது என்ன

இன்னின்னவை யென்று சொல்ல
வல்லம் அல்ல ஆகிலும்

யாம் ஸமர்த்தர்களல்லோ மாயிலும்
சாம வேத கீதன் ஆய

ஸாமவேதத்திலே ப்ரதிபாதிக்கப்பட்டவனான
சக்ர பாணி அல்லையே

கையிலே திருவாழி யணிந்த பரமபுருஷன் நீயேயிறே (என்று சொல்லவல்லோம்)

தூய்மை யோகமாயினாய் –
சம்சாரிகள் அழுக்கு உடம்பு நீங்கி அப்ராக்ருத சரீரம் பெறும் படி அருள் செய்பவன்

நின் நாமதேயமின்ன தென்ன வல்ல மல்ல வாகிலும்–
உனது திரு நாமங்களுக்கு வாச்யமான திருக் கல்யாண குண சேஷ்டிதங்கள்
உனது எண்ண முடியாத பல பல திருக் கல்யாண குணங்களையும் இன்புறும் விளையாட்டுக்களையும் இவை இவை என்று
பகுத்து சொல்ல அடியேன் சமர்த்தன் அல்லேன் என்றாலும்
நீ பரிஹரித்து அருளின ஸ்ரீ கூர்ம விக்ரஹம் –திருக்கையில் திருவாழியுமான சேர்த்தியை சாம வேதத்தில் அருளிய
அதி ரமணீய ஹிரண்மய விக்ரஹம் என்று அறிந்தேன் என்கிறார் —

“நம் அவதாரரஹஸ்யத்தை நீர் அறிந்தபடி யென்?” என்று எம்பெருமான் திருவுள்ளமாக,

“ப்ரயோஜநாந்தர பரர்க்காக இதர ஸாஜாதீயராகத் திர்யக் யோநியிலே திருவவதரித்தருளின தேவரீருடைய குண சேஷ்டிதங்களை அடியேன் பரிச்சேதித்து அறியமாட்டேனேலும் அவ்வழக்கு ***- என்றறிந்தேன்” என்கிறார்.

தூய்மை யோகமாயினாய்! = அசித் ஸம்ஸர்க்கத்தாலே அசுத்தனான ஸம்ஸாரிக்கு உன் “க்ருபையாலே அந்த அசித்ஸம்ஸர்வர்க்கத்தை யறுத்து நித்யஸூரிகளோடே சேர்த்து உன்னை அநுபவிப்பிக்கவல்ல சுத்தியோகத்தையுடையவனே! என்ற படி.

(நின்நாமதேயம் இத்யாதி.) நாமதேயமாவது- குணங்களையும், சேஷ்டிகளையும் சொல்லுகிற திருநாமம். ஆயினும் இச்சொல் இங்கு இலக்கணையால் திருநாமவாச்யமான குணசேஷ்டிதஙக்ளையே சொல்லக்கடவ’தாமென்பர்.

“நின்னாமதேயமென்று-வாச்யமான குணசேஷ்டிதங்களை ***-கமான சப்தத்தாலே லக்ஷிக்கிறது” என்ற வியாக்கியான ஸூக்தி காண்க.

உன்னுடைய எண்ணில் பல்குணங்களையும் இன்புறு மிவ் விளையாட்டுகளையும் இவை யிவையென்று பகுத்துச் சொல்ல அடியேன் அமஸமர்த்தனேயாகிலும் என்றவாறு.

சாமவேதநீதனாய சக்ரபானியல்லையே = நீ பரிக்ரஹித்தருளின் கூர்மவிக்ரஹம் ஸாமாக்யமானதல்லவென்றும் ஸாக்ஷாரத் ***- மாய்க் கையுந்திருவாழியுமான அதிரமணீய ஹிரண்மய விக்ரஹம் என்றும் அறிந்தேனென்கை

————-

அங்கமாறு வேத நான்கு மாகி நின்று அவற்றுளே
தங்குகின்ற தன்மையாய் தடம் கடல் பணைத் தலை
செங்கண் நாகணைக் கிடந்த செல்வ மல்கு சீரினாய்
சங்க வண்ண மன்ன மேனி சாரங்க பாணி யல்லையே –15-

பதவுரை

அங்கம் ஆறும்

சீக்ஷை முதலிய ஆறு அங்கங்களென்ன
வேதம் நான்கும்

(அங்கியான) நான்கு வேதங்களென்ன (இவற்றுக்கு)
ஆகி நின்று

ப்ரவர்த்தகனாய் வேதங்களினுள்ளே
தங்குகின்ற தன்மையாய்

ஸுப்ரதிஷ்டிதமாயுள்ள ஸ்வரு பஸ்வாபங்களையுடையவனே!
தடம் கடல்

மஹா ஸமுத்திரத்திலே
பணம் தலை செம் கண் நாக அணை

படங்களின் தலையிலே சிவந்த கண்களை யுடையனான தீருவனந்தாழ்வானாகிற அணையிலே
கிடந்த

கண்வளர்ந்தருளுகிற
மல்குசெல்வம் சீரினாய்

நிறைந்த செல்வத்தையும் குணங்களையுடையவனே!
சஙக வண்ணம் அன்னமேனி

சங்கினுடைய வர்ணம் போன்ற திருமேனியையுடையனாய் (கிருதயுகத்தில் திருவவதரித்து)
சாரங்கபாணி அல்லையே

(த்ரேதாயுகத்தில் இக்ஷ்வாகு குலத்திலே) கையும் வில்லுமாய் வந்து பிறந்தவன் நீயேயன்றோ?

 

அங்கமாறு–
சீஷை வியாகரணம் சந்தஸ் நிருக்தம் ஜ்யோதிஷம் கல்பம் என்ற ஆறு வேத அங்கங்களும்
அஷரங்களை உச்சரிக்க வேண்டியவற்றை சிஷை சொல்லும்
பிரகிருதி பிரத்யங்களின் பாகுபாடு வியாகரணத்தில்
அர்த்த விவேகம் சொல்லும் .நிருக்தம்
காலங்களை ஜ்யோதிஷமும்
வைதிக கர்மங்களை அனுஷ்டிக்க வேண்டிய முறைகளை கல்பமும் சொல்லும் –

இந்த ஆறு அங்கங்களும் நான்கு வேதங்களுக்கும் உண்டு -இவற்றால் அவனுடைய ஸ்வரூப ஸ்வ பாவங்கள் சொல்லப்படும் .

அவன் தான் –மா கடல்
திருப் பாற் கடலில்-
பணைத் தலை-செங்கண் நாகணைக் கிடந்த.-
பணங்களின் தலையில் சிவந்த கண்களை உடைய திரு அனந்தாழ்வான் என்னும் அணையில் பள்ளி கொண்டு இருக்கும் .

மல்கு செல்வம் சீரினாய்.”-
நிறைந்த செல்வத்தையும் குணங்களையும் கொண்ட

சங்க வண்ண மன்ன மேனி-
சங்கின் வண்ணம் போன்ற திருமேனியை உடையவன்-கருத யுகத்தில் திருவவதரித்து

சாரங்க பாணி யல்லையே –
த்ரேதா யுகத்தில் இஷ்வாகு குலத்திலே திருக்கையிலே திருச் சார்ங்கம் என்னும் கோதண்டம் கொண்டு
வந்து திரு வவதரித்த நீயே அன்றோ -என்கிறார்-

வேதங்கட்கும் அவற்றின் அங்கங்கட்குமே விஷயமாகவல்ல ஸ்வரூப ஸ்வபாவங்களையுடைய நீ

ஆச்ரிதர்களை அநுக்ரஹிக்கைக்காகத் திருப்பாற்கடலிலேயே திருக்கண் வளர்ந்தருளி,

அதுதானும் பரதசை யென்னும்படி அங்கு நின்னும் புறப்பட்டு ஆச்ரிதர் உகந்த ரூபத்தையே

உனக்கு ரூபமாகக் கொண்டு வந்தவதரித்தாய் என்கிறார்.

அங்கம் ஆறும் = சீக்ஷை, வ்யாகரணம், சந்தஸ், நிருக்தம், ஜ்யோதிஷம், கல்பம் என வேதாங்கள் ஆறு.

அச்சுக்கள், ஹல்லுக்கள் என்னும் அக்ஷரங்களை உச்சரிக்க வேண்டிய முறைகளும்,

அவை ஒன்றோடொன்று சேர வேண்டும் முறைகளும் சீக்ஷையில் சொல்லப்படும்;

ப்ரக்ருதி ப்ரத்யயங்களின் பாகுபாடும், அவற்றின் அர்த்தவிவேகமும் வியாகரணத்திலும் நிருக்தியிலும் நிர்ணயிக்கப்படும்;

காயத்ரீ, த்ரிஷ்டுப், ஜகதீ இத்யாதி ***-சந்தங்களில் கூறப்படும்;

வேதோக்கர்மங்களைக் காலமறிந்து அநுஷ்டிக்க வேண்டுகையாலே அக்காலங்களை யறிவிக்கும் ஜ்யோதிஷம்:

ஆச்வலாயநர், ஆபஸ்தம்பர் முதலிய மஹர்ஷிகளால் செய்யப்படட் கல்பங்களில்

வைதிக கருமங்களை அநுஷ்டிக்க வேண்டிய முறைமைகள் விளக்கப்படும்.

இப்படிப்பட்ட ஆறு அங்கங்களோடு கூடிய வேதங்கள் நான்கு. ருக், யஜுஸ், ஸாமம், அதர்வணம் என்பன.

ஆக இந்த ஸாங்கவேதங்களாலும் எம்பெருமானுடைய ஸ்வரூபஸ்பாவங்களே ப்ரதிபாதிக்கப்படுகின்றமை

ஒன்றரை யடிகளாற் கூறப்பட்டதாயிற்று.

———–

தலைக் கணத் துகள் குழம்பு சாதி சோதி தோற்றமாய் –
நிலைக் கணங்கள் காண வந்து நிற்றியேலும் நீடிரும்
கலைக் கணங்கள் சொல் பொருள் கருத்தினால் நினைக்கொணா
மலைக் கணங்கள் போல் உணர்த்தும் மாட்சி நின் தன் மாட்சியே —-16 –

பதவுரை

தலைக்கணம்

முதன்மைபெற்ற தேவகணமென்ன
துகள்

க்ஷுத்ரமான ஸதாவரகணமென்ன
குழம்பு சாதி

மிச்ரயோனிகளான மநுஷ்ய திர்யக்ஜாதிகளென்ன இவற்றிலே
சோதி

அப்ராக்ருதமான தேஜஸ்ஸோடே கூட
தோற்றம் ஆய்

திருவவதரித்து
நிலைக்கணகங்கள் காண

(தேவாதிகள் மாத்திரமே யன்றியே) ஸ்தாவரங்களும் (உன்னை) அனுபவிக்கும்படி
வந்து நிற்றி

வந்து நிற்கிறாயாகிலும்
ஏலும் நீடு  இரும் கலை கணங்கள்

நித்தியமாய் விரிந்தவையான வேதசாஸ்திர ஸமூஹங்கள்
சொல் பொருளினால்

அபிதாநவ்ருத்தியாலும்
கருத்தினால்

தாம்பர்ய வ்ருத்தியாலும்
நினைக்க ஒணா

(உன் பெருமைகளை) நினைக்கவும் மாட்டாமல்
மலை கணங்கள் போல் உணர்த்தும் மாட்சி

பர்வத ஸமூஹஙக்ள்போல் அபரிச்சேத்யமாக அறிவிக்கும் வைலக்ஷண்யமானது
நின் தன் மாட்சியே

உன்னுடைய வைலக்ஷண்ய மென்னுமித்தனை

தலைக்கணம் –
முதன்மை பெற்ற தேவ கணங்கள்

துகள் –
ஷூத்ரமான ஸ்தாவர கணங்கள்-
குப்ஜ மரமாய் -சிறிய மரமாயும் திருவவதாரம் செய்ததை புராணம் கூறும் –

குழம்பு சாதி –
மிஸ்ர யோநிகளான மனுஷ்ய ஜங்கம ஜாதிகள் இவற்றிலே ”

சோதி தோற்றமாய் –
அப்ராக்ருத தேஜஸ் உடன் திரு வவதரித்து

நிலைக் கணங்கள் காண வந்து நிற்றியேலும்-
தேவர்கள் மட்டும் இல்லாது அனைவரும் அனுபவிக்கும் படியாக வந்து நிற்பாயாகிலும்
நிலைக் கணங்கள்-அசையாமல் நிலை நிற்கும் ராசிகள் -ஸ்தாவர சமூகங்கள்

நீடிரும் கலைக் கணங்கள் –
நித்தியமாயும் விரிந்தும் உள்ள வேத சாஸ்திர சமூகங்கள்

சொல் பொருள் கருத்தினால் –
அபிதான வ்ருத்தியாலும் தாத்பர்ய வ்ருத்தியாலும்

நினைக்கொணா-
உனது பெருமைகளை நினைக்கவும் மாட்டாமல் .
மலைக் கணங்கள் போல் உணர்த்தும் மாட்சி-
பர்வத சமூகங்கள் போலே அபரிச்சேத்யமாக அறிவிக்கும் வைலஷண்யம்

நின் தன் மாட்சியே –
உன்னுடைய வைவைலஷண்யம் எத்தனை

திருப்பாற்கடலில் நின்றும் தேவ மதுஷ்பாதி யோநிகளிலே அவதரித்து ரக்ஷிப்பது மாத்திரமே யன்றி

ஸ்தாவர பர்யந்தமான நால்வகை ஸ்ருஷ்டிகளிலும் அவதரித்து நீ உன்னை ஸர்வாநுபயோக்யனாக, ஆக்கினாலும்

சாஸ்த்திரங்களானவை பரிச்சேதித்து அறியமாட்டாதபடியன்றே உன்னுடைய அவதார வைக்ஷைண்ய மிருப்பது என்கிறார்.

மநுஷ்யாதிகளுக்கு மேற்பட்ட தேவகணத்தைத் தலைக் கணமென்கிறது

க்ஷுத்ரகணங்களாகிய ஸ்தாவராதிகளைத் துகள்கண மென்கிறது. மநுஷ்ய கணங்களும் திர்யக்கணங்களும் குழம்பு சாதி யெனப்படும்.

தேவகணங்கள் புண்யயோநியாய், ஸ்தாவரங்கள் பரபயோநியாய் இருப்பது போன்றியே மநுஷ்ய திர்யக்ஜாதிகளிரண்டும் புண்யபாப மிச்ரயோநிகளாகையாலே குழம்புசாதி என்கை உசிதம்;

ஆக இந்நான்கு யோநிகளிலும் *** என்றபடி அப்ராக்ருத திவ்யளம்ஸ்தாகத்தோதே பிறந்தருளின படியைக் கூறுவது முதலடி.

ஸ்தாவரஜாதியில் எம்பெருமான் பிறந்தனை யுண்டோவென்னில் உண்டு;

கும்ஜாம்ரமாய் (-அதாவது சிறியதொரு மாமராய்)த் திருவவதரித்த வரலாறு புராண ப்ரஸித்தம்.

இப்படி திருவதரித்து, நிலைக்கண்கள் காணவந்து நிற்றியேலும் = தேவாதிகள் மாத்ரமில்லாமல் ஸ்தாவரங்களும்கூட உன்னை அநுபவிக்கும்படி நீ வந்து நின்றாயாகிலும்,

நிலைக் கணகங்கள் – அசையாமல் நிலைநிற்கும் ராசிகள், ஸ்தாவர ஸமூஹங்கள்.

நீ இப்படி தாழநின்றாலும் வேதம் முதலிய சாஸ்த்ரங்களானவை உன் வைபவத்தை ஒருபடியாலும் பரிச்சேதிக்கமாட்டாமல்,

பர்வத ஸமூகங்களை வர்ணிக்கப்புகுந்த வொருவன் அவற்றைப் பரிசேசதித்து வர்ணிக்கமாட்டாதே

ஒரு ஸமுதாய ரூபேண வர்ணிக்குமாபோலே வர்ணிக்குமித்தனை யல்லது வேறில்லை யென்கிறார்

நீடிருங் கலைக்கணகங்கள் இத்யாதியால்

——————-

ஏக மூர்த்தி மூன்று மூர்த்தி நாலு மூர்த்தி நன்மை சேர்
போக மூர்த்தி புண்ணியத்தின் மூர்த்தி எண்ணில் மூர்த்தியாய்
நாக மூர்த்தி சயநமாய் நலம் கடல் கிடந்தது மேல்
ஆக மூர்த்தி யாய வண்ணம் என் கொல் ஆதி தேவனே –17-

பதவுரை

ஆதி தேவனே

ஸர்வகாரண பூதனான பெருமாளே!
ஏகமூர்த்தி ஆய்

(பரமபதநிலயனான) பரவாஸு தேவமூர்த்தியாய்
மூன்று மூர்த்தி ஆய்

ஸங்கர்ஷண, ப்ரத்யம்ந, அநிருத்தர்களாகிற மூன்று மூர்த்தியாய்
முதலாயிரம்

திருச்சந்த விருத்தம்
நாலு மூர்த்தி ஆய்

ப்ரதாநம், புருஷன், அவ்யக்தம், காலம் என்னுமிவற்றை சரீரமாகக்கொண்ட நாலு மூர்த்தியாய்
நன்மை சேர் போகம் மூர்த்தி ஆய்

விலக்ஷணமாய்ப் போகத்தக்கு அர்ஹமான மூர்த்தியாய்
புண்ணியத்தின் மூர்த்தி ஆய்

புண்யமே வடிவுகொண்டதொரு மூர்த்தியாய்
எண் இல் மூர்த்தி ஆய்

(இப்படி) எண்ணிறந்த (பல பல) மூர்த்தியாய்
நலம் கடல்

நல்ல திருப்பாற்கடலில்
நாகம் மூர்த்தி சயனம் ஆய் கிடந்து

திருவனந்தாழ்வானுடைய திருமேனியைப் படுக்கையாக வுடையவனாய்க் கண் வளர்ந்தருளி
மேல்

அதுக்குமேலே
ஆக மூர்த்தி ஆய வண்ணம்

அடியார்கள் உகந்த உருவமாகிய அர்ச்சரவதாரமாய் அவதரித்த தன்மை
என் கொல்

என்னாயிருந்தது.

ஏக மூர்த்தி
பரமபத நிலையனான பர வாஸூ தேவ மூர்த்தியாய்

மூன்று மூர்த்தி யாய் –
சங்கர்ஷன பிரத்யுமான அநிருத்தன் ஆகிய மூன்று மூர்த்திக்களுமாய்

நாலு மூர்த்தி யாய்
பிரதானம் புருஷன் அவ்யக்தம் காலம் என்னும் இவற்றை சரீரமாகக் கொண்ட

நன்மை சேர் போக மூர்த்தி யாய் –
விலஷணமாய் போகத்துக்கு அர்ஹ்யமான மூர்த்தியாய்

புண்ணியத்தின் மூர்த்தி யாய்
புண்யமே வடிவு கொண்ட தொரு மூர்த்தியாய்

எண்ணில் மூர்த்தியாய்-
இப்படி எண்ணிறந்த பல பல மூர்த்தியாய்

நாக மூர்த்தி சயநமாய் நலம் கடல் கிடந்தது –
நல்ல தொரு பாற் கடலிலே திரு வநந்த ஆழ்வான் திரு மேனியைப் படுக்கையாகக் கொண்டு கண் வளரும்

மேல்
அதற்கும் மேலே

ஆக மூர்த்தி யாய வண்ணம் –
அடியார்கள் உகந்த உருவமாகிய அர்ச்சாவதாரமும் எடுத்த தன்மையை

என் கொல் ஆதி தேவனே ––
தமர் உகந்த உருவம் அவ்வ்ருவம் தானே போலே ஆதி தேவனே இது என்ன விந்தை என்கிறார் –

ஆதி காரணமாய் இருக்கும் நீ கார்ய வர்க்கத்துக்கு உள்ளே அதி ஸூத்ரனாய் இருப்பான் ஒரு சேதனனுடைய
அதீனமாய் இருப்பது என்ன வித்தகம் –

பரவாஸுதேவ மூர்த்தியா யிருந்துகொண்டு நித்யவிபூதியை நிர்வஹித்தும்,

வ்யூஹம் முதலாக ஸ்தாவரஜந்மபர்யந்தமாகத் திருவவதரித்து லீலாவிபூதியை நிர்வஹித்தும் போருகிற இவை

ஓரொன்றே சாஸ்த்ரங்களுக்கு அவிஷமாயிருக்க,

அதுக்குமேலே* தமருகந்த தெவ்வுரு மவ்வுருவந்தானாய் ஸர்வஸுலபனாய் ஸர்வ ஸஹிஸ்ணுவாய்

ஸர்வஜுஸமாராத்யனாய் அர்ச்சாவதார ரூபியாய்த் தன்னை அமைத்துநின்ற தன்மை என்னே! என்று

அது தன்னிலே உள் குழைகின்றார்.

“மேல் ஆகமூர்த்தியாய வண்ணம் என்கொல்!”- கீழ்க்கூறிய பற்பல திருவுருவங்களை ஏற்றுக் கொண்டதுமல்லாமல்

இப்படிப்பட்ட ஊர்வாத்மா பரதந்த்ரமான தொரு நிலைமையை ஏற்றுக்கொண்டவிது என்ன

ஸௌலப்ப பரமகாஷ்டை! என உள்குழைகிறபடி

ஆதிதேவனே! = ஜகத்துக்கெல்லாம் ஆதிகாரணமாயிருக்கிற நீ கார்யவர்க்கத்துக்குள்ளே

அதிக்ஷûத்ரனாயிருப்பானொரு சேதானுடைய விருப்பத்துக்கிணங்கி நடப்பது என்ன வித்தகம்! என்று கேட்கிறபடி-

——————————-

நாக மூர்த்தி சயனமாய் -என்றும் –
தடம் கடல் பணை தலை செங்கன் நாகனைக் கிடந்த -என்றும்- அருளிச் செய்த அநந்தரம்
அதிலே ஆழம் கால் பாட்டு அடுத்த பாசுரம் அருளுகிறார்

விடத்த வயோராயிரம் ஈராயிரம் கண் வெந் தழல்
விடுத்து விள்விலாத போக மிக்க சோதி தொக்க சீர்
தொடுத்து மேல் விதாநமாய பௌவ நீர் அராவணைப்
படுத்த பாயில் பள்ளி கொள்வது என் கொல் வேலை வண்ணனே –18-

பதவுரை

வேலை வண்ணனே

கருங்கடல் வண்ணனான எம்பெருமானே!
விடத்த

விஷத்தையுடைத்தான
ஒரு ஆயிரம் வாய்

ஓராயிரம் வாய்களினின்றும்
இரு ஆயிரம் கண்

ஈராயிரம் கண்களினின்றும்
வெம் தழல்

வெவ்விய தழலை
விடுத்து

புறப்படவிட்டுக்கொண்டு,
வீழ்வு இலாத போகம்

ஒரு காலும் விச்சேதமில்லாத பகவநறுபவத்தையுடையனாய்
மிக்க சோதி

மிகுந்த ஜ்யோதிஸ்ஸையுடையனாய்
விதானம் ஆய்

மேற்கட்டிபோன்ற படங்களினுடைய
மேல்

மேற்புறத்திலே
தொக்க

திரள்திரளாயிருக்கிற
சீர்

அழகை
தொடுத்து

தொடுத்து
பௌவம் நீர்

ஸமுத்ரஜலத்திலே
படுத்த

படுக்கையாக அமைந்த
அரா அணை பாயல் பள்ளி கொள்ளது

திருவனந்தாழ்வானாகிய சயகத்திலே பள்ளிகொண்டருளும் தன்னை
என் சொல்

எத்திறம்!

விடத்த வயோராயிரம்-
விடாத்தை உடைய ஆயிரம் வாயில் என்றும்

ஈராயிரம் கண் வெந்தழல்-விடுத்து-
ஈராயிரம் கண்கள் என்றும் வெவ்விய தழலை புறப்பட விட்டுக் கொண்டு

விள்விலாத போக
ஒரு காலும் விச்சேதம் இல்லாத பகவத் அனுபவத்தை உடையானாய்

மிக்க சோதி
மிகுந்த ஜ்யோதிசை உடையனாய்

தொக்க சீர்
திரள் திரளாக இருக்கும் அழகை

தொடுத்து மேல் விதாநமாய
தொடுத்து மேல் புறத்திலே மேல் கட்டி போன்ற படங்கள் உடைய

பௌவ நீர் அராவணைப் படுத்த பாயில் பள்ளி கொள்வது என் கொல் வேலை வண்ணனே –
சமுத்திர ஜலத்தில் படுக்கையை அமைத்த திரு வநந்த ஆழ்வான் சயனத்திலே பள்ளி கொண்டு அருளும் தன்மை எத்திறம் –

ஆங்கு ஆரவாரமது கேட்டு அழல் உமிழும் பூங்கார அரவு -போலே

விள்விலாத போகம் –
சென்றால் குடையாம் இருந்தால் சிங்காசனமும் நின்றால் மரவடியாம் நீள் கடலுள் என்றும் புணையாம்
அணி விளக்காம் பூம் பட்டாம் புல்கும் அரவாம் திருமாற்கு அரவு –

பகவத் அனுபவம் மாறாமல் இருப்பதால் மிக்க சோதி -என்கிறார்-

கீழ் “நாக மூர்த்தி சயனமாய்” என்றும்

“தடங்கல்பணத்தலைச் செங்கணாகணைக் கிடந்த” என்றும்

க்ஷீரஸநகரசயநம் ப்ரஸ்துதமானவாறே திருவுள்ளம் அங்கே ஆழங்காற்பட்டு

அந்நிலையிலே அபிநிவேசாதிசயம் தோற்ற அருளிச் செய்கிறார்.

“விடத்தவாயொராயிர மிராயிரங்கண் வெந்தழல் விடுத்து” என்னுமளவால்

“ஆங்காரவாரமது கேட்டு அழலுமிழும் பூங்காரரவு” (என்முகன் திருவந்தாதி.) என்ற அர்த்தத்தை அருளிச்செய்தபடி.

ஆபத்து நேருவதற்கு ப்ரஸந்தியற்ற இடத்திலுங்கூட ஆதராதி சயத்தினால் ஆபத்தை அதிசங்கித்துக் காப்பிடுந்தன்மை

நித்யஸுரிகளுக்கெல்லாம் உண்டாயிருக்கச் செய்தேயும் திருவனந்தாழ்வானுக்கு அது விசேஷித்திருக்குமாய்த்து.

வீழ்வு இலாத போகம் = “சென்றால் குடையாம் இருந்தால் சிங்காசனமாய் நின்றால் மாவடியாம். நீள்கடலுள்-

என்றும், புணையாமணிவிளக்காம் பூம்பட்டாம் புக்கு மணையாந் திருமாற்கரவு.” என்றபடி

பஹுமுகாமகத்திருமால் திறத்தில் கிஞ்சித்கரிக்கும் தன்மையினால் பகவதநுபவமாகிற போகததிற்கு எப்போதும் விச்சேதமில்லாதவன் என்கை.

மிக்க சோதி = பகவதநுபவம் மாறாதே செல்லுமவர்கட்கு விலக்ஷணமானதொரு ஜேஸ்ஸு உண்டாகக் கடவதிறே;

அதனைச் சொல்லுகிறது.

கீழ்ப் பாட்டில் “பௌவநீரராவணைப் படுத்தபாயல் பள்ளிகொள்வதென்கொல்?” என்று-

ஏதுக்காகத் திருப்பாற்கடலில் கண்வர்ளந் தருளாநின்றாய்? என்று எம்பெருமானை நோக்கி வினவிய ஆழ்வாரைக்குறித்து

அப்பெருமான் “ஆழ்வீர்! ஸம்ஸாரிகளை ரக்ஷிப்பதற்காகத்தான் நாம் இக்கிடை கிடைக்கிறோம்” என்றருளிச்செய்ய;

அதுகேட்ட ஆழ்வார், ‘பஹுமுகமாக ஸம்ஸாரிசேதநர்களை ரக்ஷித்தருளின நீ ரக்ஷணக்ருத்யத்திலே இன்னும் சேஷம் வைத்திருக்கிறாயோ?

பண்டை எல்லாம் செய்தருளிற்றே! ஆயிருக்க, ஒன்றும் செய்யாதவன் போலவும்

இன்னும் பல செய்யக் கூடியவன் போலவும் திருப்பாற் கடலிலே வந்து கண்வளர்ந்தருள்வது என்னோ? என்கிறார்.

“புள்ளதாகி வேதான்கு மோதினாய்” என்று- ப்ரமாணத்தைக் கொடுத்தபடியையும்,

“புள்ளின்வாய் பிளந்து” என்று – ப்ரமேயபூதனான தன்னைக் கொடுத்தபடியையும் சொல்லிற்றாயிற்று.

இப்படிப்படட் ரக்ஷணம் என்றைக்கோ செய்யப்பட்டதாகில் இன்றைக்கும் மேலுள்ள காலத்துக்கும் என்னாயிற்று? என்று

சங்கிப்பார்க்கு இடமறும்படியருளிச் செய்கிறார்

புட்கொடியித்யாதி, தான் ரக்ஷணத்தொழிலொன்றிலேயே தீக்ஷிதன் என்பது தோன்றக் கொடிகட்டிக் கிடக்கிறபடி

ஆபத்து அடைந்தவர்கள் அனைவரும் தன்பக்கலிலே வந்து காரியங் கொள்ளும்படி ரக்ஷண தர்மத்தைத்

தெரிவிக்கைக்காகவிறே பெரிய திருவடியை தவ்ஜமாகக் கொண்டிருக்கிறது.

கருடனை த்வஜமாகக் கொண்ட மாத்திரத்தால் என்னாகும்? என்று சங்கிப்பார் தெளியுமாறு அருளிச் செய்கிறார். புள்ளையூர்தி என்று.

ஆச்ரிதர்கட்கு ஆபத்து நேர்ந்தால் பறவையேறிக் கடிதோடிக் காப்பிடுமவன் யல்லாமல்;

புன்னை ஊர்தி- ஆச்ரிதர் ஆபந்நராய் இருந்தவிடங்களிலே வந்து உதவுகைக்கு அவனை வாஹநமாகக்

கொண்டு நடந்தா நின்றாய்,  என்கை. ஊர்தி- ஊர்கின்றாய் என்றபடி.

“புட்கொடிப் பிடித்த பின்னரும்” என்று இப்போதைய பாடமிருந்தாலும்

“புட்கோடிப் பிடித்தி பின்னரும்” என்றே ப்ராசீகமும் சுத்தமுமான பாடமென்று அழகிய மணவாளச் சீயர் அருளிச் செய்யக் கேட்டிருக்கை.

ஊர்தி என்றது போலவே பிடித்தி என்றதும் ‘பிடிக்கின்றாய்’ என்ற பொருளுடைய முன்னிலை யொருமை நிகழ்கால வினைமுற்று.

ஆகவே, “புள்ளதாகி வேத நான்குமோதினாய்,அதன்றியும் புள்ளின்வாய் பிளந்து புட்கொடிபிடித்தி, பின்னரும் புள்ளையூர்தி” என்றிங்ஙனே மூன்று வாந்யார்த்தமாகக் கொள்ளுதல் சிறக்குமென்க.

பின்னரும் என்னது- அன்றியும் (***) என்றபடி

ஆதலால் என்றது- இப்படியெல்லாம் செய்திருக்கச் செய்தேயும் என்றபடி-

அர்த்த ஸ்வாரஸ்யத்துக்கான சப்தத்தை செருக்குவது உசிதமேயாமென்க.

இப்படி பஹுமுகமாக ரக்ஷகத்வத்தை வெளிப்படுத்திக்கொண்டு ரக்ஷணைக தீக்ஷிதனாய் எழுந்தருளியிருக்கச் செய்தேயும்

திருப்பாற்கடலிலேவந்து குளிரிலே கிடப்பதேன்? என்று *** பெரியவாச்சான் பிள்ளை வியாக்கியானத்தில்

இப்பாட்டின் அந்வயக்ரமம் சிறிது மாறுபட்டிருப்பினும் ஸுகு மாரமதிகளின் ஸௌகரியத்துக்காக இங்ஙனே யாம் உரைத்தோமென்றுணர்க.

கீழும் மேலும் இங்ஙனே யாமெழுது மிடங்களில் இதுவே ஸமாதாகமென்று கொள்க.

கடல் புள்ளிள் பகை மெய் கிடத்தல் காதலித்தது என்கொல்?- என்று மாற்றி அந்வயித்துக்கொள்க.

நித்யஸுரிகளில் தலைவராயும் எம்பெருமானுக்கு அந்தரங்க கிங்கரர்களாயுமுள்ள

பெரிய திருவடி திருவநந்தாழ்வான்களுக்கு உண்மையில் பகைமையென்ன ப்ரஸக்திதானுமில்லையேயாகிலும்

கருடஜாதிக்கும் ஸர்ப்பஜாதிக்கும் உலகவியற்கையிலே பகைமை காணப்படுவதுபற்றி “புள்ளின்பகை” என்று அருளிச் செய்தார்.

வியாக்கியானத்திலும்- “ஸாயாமர்ய த்ருஷ்டியால் பார்த்தால் திருவடிக்கு ஸஹஜத்ருவென்னலாயிருக்கிற

திருவனந்தாழ்வான்மேலே” என்று அருளிச்செய்துள்ளமை காண்க.

————————————————-

புள்ளதாகி வேத நான்கும் ஓதினாய் அதன்றியும்
புள்ளின் வாய் பிளந்து புட் கொடி பிடித்த பின்னரும்
புள்ளை ஊர்தி யாதலால் என் கொல் மின் கொள் நேமியாய்
புள்ளின் மெய்ப் பகைக் கடல் கிடத்தாழ் காதலித்ததே –19-

பதவுரை

மின்கொள்  நேதமியாய்

தேஜஸ்வியாய் விளங்காநின்றுள்ள திருவாழியையுடைய பெருமானே!
புள் அது ஆகி

ஹம்ஸரூபியாய் அவதரித்து
வேதம் நான்கும்

நான்கு வேதங்களையும்
ஓதினாய்

உபதேசித்தருளினாய்,
அது அன்றியும்

அதுவுமல்லாமல்,
புள்ளின் வாய் பிளந்து

(உன்னை விழுங்குவதாக வாயைத் திறந்துகொண்டு வந்த) பகாஸுரனுடைய வாயைக் கிழித்து (அவனை முடித்து விட்டு)
புள்கொடி பிடித்த பின்னரும்

பெரிய திருவடியை த்வஜமாகப் பிடித்ததுமல்லாமல்
புள்ளை

அப்பெரிய திருவடியை
ஊர்தி

வரஹநமாகக்கொண்டு செல்லா நின்றாய்
ஆதலால்

இப்படி பலவகையான ரக்ஷணோபாயங்களைச் செய்தருளா நிற்கச் செய்தேயும்
கடல்

திருப்பாற்கடலிலே
புள்ளின் பகை மெய்

கருடஜாதிக்குப் பகையென்று தோற்றும்படியான திருவளர் தாழ்வானுடைய திருமேனியிலே
கிடத்தல்

பள்ளிகொள்வதை
காதலித்தது

விரும்பிப்போவதாகிய
என்கொல்

என்ன திருவுள்ளத்தாலே?

புள்ளதாகி வேத நான்கும் ஓதினாய் –
ஹம்ச ரூபனாய் திருவவதரித்து நான்கு வேதங்களையும் உபதேசித்து அருளினாய்

அதன்றியும் புள்ளின் வாய் பிளந்து –
அதுவும் அல்லாமல் பகாசுரனாய் -உன்னைக் கொல்ல வந்த பஷியின் வாயைப் கிழித்துக் கொன்று

புட் கொடி பிடித்த பின்னரும
பெரிய திருவடியை த்வஜமாக பிடித்ததும் அல்லாமல்

புள்ளை ஊர்தி யாதலால்
அந்த பெரிய திருவடியை வாகனமாயும் கொண்டு இப்படி பல பல ரஷண உபாயங்களைச் செய்து அருளி

என் கொல் மின் கொள் நேமியாய் புள்ளின் மெய்ப் பகைக் கடல் கிடத்தாழ் காதலித்ததே –
திருப்பாற் கடலிலே கருட ஜாதிக்கு பகை என்றும் தோற்றும்படியான திரு வநந்த ஆழ்வான் உடைய திரு மேனியிலே
பள்ளி கொள்வதை விரும்பிப் போர்வதான இக்கார்யம் என்ன திரு உள்ளம்
திருப் பாற் கடலிலே சயனித்து இருப்பது எதற்கு என்று வினவ
சம்சாரிகளை ரஷிக்க என்ன
முன்பே ஹம்சமாக வேதம் அனைத்தும் உபதேசித்து அருளினாய் என்ன –

இத்தால் பிரமாணம் கொடுத்து அருளி –
புள்ளின் வாய் கீண்டு –பிரமேய பூதமான தன்னை ரஷித்து அருளியும் சர்வ ரஷகன் என்று கொடி கட்டி பறை சாற்றிக் கொண்டு
ஆஸ்ரிதற்கு ஆபத்து வந்தால் பெரிய திருவடியை வாகனாமக் கொண்டு வந்தும் ரஷித்து அருளுகிறான் என்றவாறு-

புள்ளதாகி வேத நான்கும் ஓதினாய் -பிரமாணத்தைக் கொடுத்தபடி
புள்ளின் வாய் பிளந்து-ப்ரமேயபூதனான தன்னைக் கொடுத்தபடி
புட் கொடி பிடித்த–ரக்ஷணத்தில் தீஷிதனான படி
புள்ளை ஊர்தி–ரக்ஷணத்துக்கு கடிது ஓடி வரும் படி

கீழ்ப் பாட்டில் “பௌவநீரராவணைப் படுத்தபாயல் பள்ளிகொள்வதென்கொல்?” என்று- ஏதுக்காகத்

திருப்பாற்கடலில் கண்வர்ளந் தருளாநின்றாய்? என்று எம்பெருமானை நோக்கி வினவிய ஆழ்வாரைக்குறித்து

அப்பெருமான் “ஆழ்வீர்! ஸம்ஸாரிகளை ரக்ஷிப்பதற்காகத்தான் நாம் இக்கிடை கிடைக்கிறோம்” என்றருளிச்செய்ய;

அதுகேட்ட ஆழ்வார், ‘பஹுமுகமாக ஸம்ஸாரிசேதநர்களை ரக்ஷித்தருளின நீ ரக்ஷணக்ருத்யத்திலே இன்னும் சேஷம் வைத்திருக்கிறாயோ?

பண்டை எல்லாம் செய்தருளிற்றே! ஆயிருக்க, ஒன்றும் செய்யாதவன் போலவும்

இன்னும் பல செய்யக் கூடியவன்போலவும் திருப்பாற் கடலிலே வந்து கண்வளர்ந்தருள்வது என்னோ? என்கிறார்.

“புள்ளதாகி வேதான்கு மோதினாய்” என்று- ப்ரமாணத்தைக் கொடுத்தபடியையும்,

“புள்ளின்வாய் பிளந்து” என்று – ப்ரமேயபூதனான தன்னைக் கொடுத்தபடியையும் சொல்லிற்றாயிற்று.

இப்படிப்படட் ரக்ஷணம் என்றைக்கோ செய்யப்பட்டதாகில் இன்றைக்கும் மேலுள்ள காலத்துக்கும் என்னாயிற்று?

என்று சங்கிப்பார்க்கு இடமறும்படியருளிச் செய்கிறார் புட்கொடியித்யாதி,

தான் ரக்ஷணத்தொழிலொன்றிலேயே தீக்ஷிதன் என்பது தோன்றக் கொடிகட்டிக் கிடக்கிறபடி

ஆபத்து அடைந்தவர்கள் அனைவரும் தன்பக்கலிலே வந்து காரியங் கொள்ளும்படி ரக்ஷண தர்மத்தைத் தெரிவிக்கைக்காகவிறே

பெரிய திருவடியை தவ்ஜமாகக் கொண்டிருக்கிறது.

கருடனை த்வஜமாகக் கொண்ட மாத்திரத்தால் என்னாகும்? என்று சங்கிப்பார் தெளியுமாறு அருளிச் செய்கிறார். புள்ளையூர்தி என்று.

ஆச்ரிதர்கட்கு ஆபத்து நேர்ந்தால் பறவையேறிக் கடிதோடிக் காப்பிடுமவன் யல்லாமல்;

புன்னை ஊர்தி- ஆச்ரிதர் ஆபந்நராய் இருந்தவிடங்களிலே வந்து உதவுகைக்கு அவனை

வாஹநமாகக்கொண்டு நடந்தா நின்றாய்,  என்கை. ஊர்தி- ஊர்கின்றாய் என்றபடி.

“புட்கொடிப் பிடித்த பின்னரும்” என்று இப்போதைய பாடமிருந்தாலும் “புட்கோடிப் பிடித்தி பின்னரும்” என்றே ப்ராசீகமும் சுத்தமுமான பாடமென்று அழகிய மணவாளச் சீயர் அருளிச் செய்யக்கேட்டிருக்கை.

ஊர்தி என்றது போலவே பிடித்தி என்றதும் ‘பிடிக்கின்றாய்’ என்ற பொருளுடைய முன்னிலையொருமை நிகழ்கால வினைமுற்று.

ஆகவே, “புள்ளதாகி வேத நான்குமோதினாய்,அதன்றியும் புள்ளின்வாய் பிளந்து புட்கொடிபிடித்தி, பின்னரும் புள்ளையூர்தி” என்றிங்ஙனே மூன்று வாந்யார்த்தமாகக் கொள்ளுதல் சிறக்குமென்க.

பின்னரும் என்னது- அன்றியும் (***) என்றபடி

ஆதலால் என்றது- இப்படியெல்லாம் செய்திருக்கச் செய்தேயும் என்றபடி- அர்த்த ஸ்வாரஸ்யத்துக்கான சப்தத்தை செருக்குவது உசிதமேயாமென்க.

இப்படி பஹுமுகமாக ரக்ஷகத்வத்தை வெளிப்படுத்திக்கொண்டு ரக்ஷணைக தீக்ஷிதனாய் எழுந்தருளியிருக்கச் செய்தேயும்

திருப்பாற்கடலிலேவந்து குளிரிலே கிடப்பதேன்? என்று *** பெரியவாச்சான் பிள்ளை வியாக்கியானத்தில்

இப்பாட்டின் அந்வயக்ரமம் சிறிது மாறுபட்டிருப்பினும் ஸுகு மாரமதிகளின் ஸௌகரியத்துக்காக இங்ஙனே யாம் உரைத்தோமென்றுணர்க.

கீழும் மேலும் இங்ஙனே யாமெழுது மிடங்களில் இதுவே ஸமாதாகமென்று கொள்க.

கடல் புள்ளிள் பகை மெய் கிடத்தல் காதலித்தது என்கொல்?- என்று மாற்றி அந்வயித்துக்கொள்க.

நித்யஸுரிகளில் தலைவராயும் எம்பெருமானுக்கு அந்தரங்க கிங்கரர்களாயுமுள்ள

பெரிய திருவடி திருவநந்தாழ்வான்களுக்கு உண்மையில் பகைமையென்ன ப்ரஸக்திதானுமில்லையேயாகிலும்

கருடஜாதிக்கும் ஸர்ப்பஜாதிக்கும் உலகவியற்கையிலே பகைமை காணப்படுவதுபற்றி “புள்ளின்பகை” என்று அருளிச் செய்தார்.

வியாக்கியானத்திலும்- “ஸாயாமர்ய த்ருஷ்டியால் பார்த்தால் திருவடிக்கு ஸஹஜத்ருவென்னலாயிருக்கிற திருவனந்தாழ்வான்மேலே” என்று அருளிச்செய்துள்ளமை காண்க.

————————————————-

கூசமொன்றுமின்றி மாசுணம் படுத்து வேலை நீர்
பேச நின்று தேவர் வந்து பாட முன் கிடந்ததும்
பாச நின்ற நீரில் வாழும் ஆமையான கேசவா
ஏசவன்று நீ கிடந்தவாறு கூறு தேறவே –-20-

பதவுரை

முன்

அநாதிகாலமாக.
வேலைநீர்

ஸமுத்ரஜலத்திலே
கூசம் ஒன்றும் இன்றி

சிறிதும் கூசாதே
மாசுணம்

திருவனந்தாழ்வானை
படுத்து

படுக்கையாக விரித்து
பேச நின்று தேவர் வந்து பாடக் கிடந்ததும்

ஸ்தோத்தரம் பண்ணுவதற்கென்று அமைந்த ப்ரஹ்மாதி தேவர்கள் வந்து பாடும்படி சமநித்தருளினபடியையும்
அன்று

தேவர்களுக்காகக் கடல் கடைந்த அக்காலத்தில்
பாசம் நின்ற நீரில் வாழும் ஆமையான கேசவா (என்று) ஏச நீ கிடந்த ஆறும்

“வருண பாசங்கள் கிடக்கிற கடலிலேவாழ்கின்ற ஆமையென்னும் க்ஷுத்ர ஜந்துவாகப் பிறந்த கேசவனே!” என்று (அவிவேகிகள்) ஏசும்படி கிடந்தபடியையும்
தேற

அடியேன் நன்குதெரிந்து கொள்ளும்படி
கூறு

(எனக்கு) அருளிச் செய்யவேணும்.

 

கூசமொன்றுமின்றி மாசுணம் படுத்து வேலை நீர்
சிறிதும் கூசாதே -திரு வநந்த ஆழ்வானைப் படுக்கையாக விரித்து -சமுத்திர ஜலத்தில்

பேச நின்று தேவர் வந்து பாட முன் கிடந்ததும்
ஸ்தோத்ரம் பண்ணுவதற்கு என்று -அமைந்த -ப்ரஹ்மாதிகளும் வந்து பாடும் படி அநாதி காலமாக
சயனித்து இருந்து அருளியதையும்

அன்று –
தேவர்களுக்கு கடல் கடைந்த அன்று

பாச நின்ற நீரில் வாழும் ஆமையான கேசவா
வருண பாசங்கள் கிடக்கிற கடலிலே வாழுகின்ற ஆமை என்னும் ஷூத்ர சஜாதீயனாக திருவவதரித்த கேசவனே

ஏசவன்று நீ கிடந்தவாறு
அறிவிலிகள் ஏசும்படி கிடந்த படியும்

தேற கூறு –
அடியேன் நன்கு தெரிந்து கூறும்படி எனக்கு அருளிச் செய்ய வேணும்

நீர்மைக்கு எல்லை பாற் கடல் சயனம்
மேன்மைக்கு எல்லை கடல் கடைந்தது
இவற்றைப் பிரித்து எனக்கு அருளிச் செய்ய வேணும் என்கிறார்
எல்லா அவதாரங்களிலும் பரத்வ சௌலப்யங்கள் இரண்டுமே கலந்தே இருக்குமே –

பாசம் நின்ற நீர் –
பரம பதத்தை விட இந்த பாற் கடலிலே சயனம் போக்யமாய் இருக்கை –
ஆஸ்ரித ரஷணத்துக்காக வென்றே –கூப்பாடு கேட்கும் இடம் அன்றோ-
எல்லா அவதாரங்களில் பரத்வ ஸுவ்லப்யங்கள் ஒன்றுக்கு ஓன்று தொழாதே வீறு பெற்று இருக்குமே

ஆனி மாத சுக்ல பக்ஷ துவாதசி ஸ்ரீ கூர்ம ஜெயந்தி

ஜலாராசிக்ம்க்கு அதிஷ்டான தேவதை வருணனுக்கு ஆயுதம் பாசம் -பாசன் என்று வருணனைச் சொல்வர்

பரமபதத்தில் காட்டில் பாசம் மிக்கு உறங்குவான் போலே யோகு செய்கிறானே திருப் பாற் கடலிலே

ப்ரயோஜநரந்தபரரான நான்முகன் முதலானோர் எந்தத் திருப்பாற்கடலிலே

திருக்கண்வளர்ந்தருளுகிற மேன்மைதானே நீர்மைக்கு எல்லை நிலமாயிராநின்றது;

அமரர்க்கு அமுதமளிக்கக் கடல் கடைந்தபோது மந்தரமலையைத் தாங்குவதற்காக ஆமையாக உருவெடுத்த

நீர்மைதானே மேன்மைக்கு எல்லை நிலமாயிராகின்றது;

இவற்றைப் பிரித்து என்நெஞ்சிலே நன்குபடும்படி அருளிச்செய்யவே அருளிச்செய்யவேணுமென்கிறார்.

க்ஷீரஸாகரசயநவ்ருத்தாந்தம் முன்னடிகளில் கூறப்படுகிறது;

கூர்மாவதாக வ்ருத்தாந்தம் பின்னடிகளில் கூறப்படுகிறது.

க்ஷீரஸாகரசயநம் பரத்வப்காசகமாயினும் ப்ரயோஜநாந்தாபர்களும் வந்து கிட்டித் துதிக்கலாம்படி

எம்பெருமான் தன்னை அமைத்துக்கொண்டு கிடக்கிறபடியை நோக்கினவாறே

“இப்படியும் ஒரு எளிமை உண்டோ?” என்று உள்குழையும்படி யிருந்தலாலும்,

ஆமையாய்ப்பிறந்த பிறவி எல்லார்க்கும் ஏசுகைக்கிடமாயிருந்தாலும்

தேவதே வாதி தேவனான பரமபுருஷன் *** “பின் பிறப்பாய் ஒளிவரு முழுநலம்” இத்யாதிப்படியே

தண்ணிய பிறவியிற் பிறந்த விடத்தும் பரத்வம் குன்றாமற் பொலியநிற்பதே! என்று ஈடுபடும்படியாயிருத்தலாலும்,

மற்றுள்ளார்க்குப் பரத்வம் தோன்றுமிடத்தில் எளிமையும்,

எளிமை தோன்றுமிடத்தில் பரத்வமும் இவ்வாழ்வார்க்குத் தோன்றாநின்ற தாய்த்து.

எல்லா அவதாரங்களிலும் பரத்வஸௌலப்யங்கள் ஒன்றுக்கொன்று தோலாதே வீறு பெற்றிருக்குமென்பதுவே இப்பாட்டின் உள்ளுறை.

ஸௌலப்யத்தோடு இணங்காத பரத்வமும், பரத்வத்தோடு இணங்காக ஸௌலப்யமும்

ஒருபொருளாக மதிக்கத்தக்கவையல்ல வாகையால் இரண்டொடுங் கூடி நிற்கும் நிலையே மெச்சத்தக்காதென்க.

பாசம் நின்ற  நீரில்- ஜலராசிக்கு அதிஷ்டாக தேவதை வருணனாகையாலும்,

அவ்வருணனுக்குப் பாசம் ஆயுதமாகையாலும் “பாசம் நின்ற நீர்” எனப்பட்டது.

“பாசன் நின்ற” என்றும் பாடமுண்டாம்; பாசன் =வருணன்.

இனி, “பாசம் நின்ற நீரில்” என்பதற்கு, “பரமபதத்திற்காட்டில் ப்ரேமஸ்தலாமன கடலிலே” என்றும் பொருள் அருளிச்செய்வர்.

பாசம் என்றது ஆசை;

‘பரமபத்திற்காட்டிலும் இந்த நீர்நிலமே நமக்கு போக்யமான இடம்’ என்று எம்பெருமான் ஆசைப்படத்தக்க நீர் என்றபடி.

———————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ உ வே P.B.A -ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருமழிசை பிரான் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: