ஸ்ரீ பாஷ்யம்–ஸ்ரீ ஆழ்வார் ஸ்வாமிகள்- -இரண்டாம் அத்யாயம்-அவிரோத அத்யாயம் -முதல் பாதம் -ஸ்ம்ருதி பாதம் -10-அதிகரணங்கள்/முதல் அதிகரணம் -ஸ்ம்ருதி அதிகரணம் – -இரண்டு ஸூத்ரங்கள்/ இரண்டாவது- யோக ப்ரத் யுக்தி அதிகரணம்-ஒரே ஸூத்ரம் / மூன்றாவது-விலக்ஷணத்வ அதிகரணம்-9-ஸூத்ரங்கள்–

முதல் அத்யாயம் –முதல் பாதம் -11- / இரண்டாம் -6- / மூன்றாம் -10-/ -நான்காம் பாதம் -8- ஆக -35-அதிகரணங்கள்
இரண்டாம் அத்யாயம்- முதல் பாதம் -10-/ இரண்டாம் -8-/ மூன்றாம் -7-/ நான்காம் -8- /-ஆக-33-அதிகரணங்கள்
மூன்றாம் அத்யாயம்- முதல் பாதம் -6-/ இரண்டாம் -8-/ மூன்றாம் -26-/ நான்காம் -15- /-ஆக-55-அதிகரணங்கள்
நான்காம் அத்யாயம் -முதல் பாதம் -11-/ இரண்டாம் –11-/ மூன்றாம் -5-/ நான்காம் –6–ஆக-33-அதிகரணங்கள்
-மொத்தம் -156-அஷோர்மி-அதிகாரண சாராவளீ ஸ்லோகம் –

இரண்டாம் அத்யாயம் -முதல் பாதம் -ஸ்ம்ருதி பாதம் -10-அதிகரணங்கள் -இரண்டும் எட்டும் –
முதல் இரண்டில் ஸ்ம்ருதி விசாரம் -மேல் எட்டில் யுக்தி விசாரம் -ஸ்ம்ருதி உபக்ரமம் என்பதால் ஸ்ம்ருதி பாதமானது
ஜகத் உபாதானத்வமும்-ஜகத் நிமித்தத்வமும் பலித்தன
1-/-2-/-3-/6 -/-7-/-9-அதிகரணங்கள் உபாதாளத்வ ஸ்தாபனம்
8–/-10-நிமித்தத்வ ஸ்தாபனம்
4-சிஷ்ட பரிக்ரஹ /-5-போக்த்ராபாத்த்யதிகரணங்கள் உபய ஸ்தாபனம்

அதவா –
முதல் ஆறில் உபாதானத்வத்தில் விரோதி பரிக்ரஹம் என்றும்
மேல் நான்கில் நிமித்தத்வத்தில் விரோதி பரிஹாரம் என்றும் கொள்ளலாம்

——————-

பூர்வத்விகம்–விஷய த்விகம் –சித்த த்விகம் –/ உத்தர த்விகம் –விஷயி த்விகம் -ஸாத்ய த்விகம்
சமன்வய அத்யாயம் / அவிரோத அத்யாயம் /சாதன அத்யாயம் /பல அத்யாயம் –

————

பிரதம அத்யாயம் ஜகத் ஏக காரணம் பர ப்ரஹ்மம்
ப்ரத்யக்ஷ அசேதனம் -பின்ன -சேதனம் -மோக்ஷ அவஸ்தை வரும் வரை சரீரத்துடன் கூடியே ஜீவாத்மா –
அதுக்கு முன் அவஸ்தை ஸூஷ்மம்–மூன்றாம் அத்யாயம் சொல்லும்
காரண சரீரம் அதிலும் ஸூஷ்மம் உண்டு என்பர்
மோக்ஷம் அடைந்தபின்பும் -சரீர விசிஷ்டம் -கைங்கர்யத்துக்கு
அவிஸ்தார ஸூ கம்பீர ஸ்ரீ ஸூக்திகள்-விசேஷணங்களை மீண்டும் மீண்டும் அருளிச் செய்து
அபரிமித குண சாகரம் -வேதாந்த சித்தம் –

சமன்வயம் பண்ணின பின்பு விரோதங்கள் இல்லை என்று காட்ட வேண்டுமே
ஸ்ம்ருதி பாதம்
தர்க்க பாதம்
வியல் பாதம்
பிராண -பாதம்

சுருதி ஸ்ம்ருதி இதிஹாச புராணங்கள் —
vedic-classic-literature-
வேதம் -சம்ஹிதா பாகம் -ஆரண்யம் பாகம் –
வேதம் ரிஷிகளுக்கு அந்தரங்க கோசாரம் -மந்த்ர த்ரஷ்டா ரிஷி தர்சநாத் –
ஸ்ம்ருதி –ஸ்மர்தியே–நினைத்து -வேத யுக்தமாக -நினைவு படுத்தும் -வேதார்த்தம் விஸ்தாரணம் –
ஆர்ஷ சாஹித்யம் ரிஷிகள் புத்தி பூர்வகமாக எழுதினார்கள்
சுருதி ஸ்ம்ருதி விரோதம் வந்தால் சுருதி தான் பிரதானமாக கொள்ள வேண்டும்
கபில ஸ்ம்ருதி பிரக்ருதியே ஜகத் காரணம்

———–

2-1-1. ஸ்ம்ருதி அதிகரணம் –இரண்டு ஸூத்ரங்கள்
சூத்ரம் : ஸ்ம்ருதி அநவகாச தோஷ பிரஸங்க : இதி சேத் ந அந்ய ஸ்ம்ருதி அநவகாச தோஷ பிரஸங்காத்.– || 2.1.1 ||

கீழ் முதல் அத்யாயத்தில் வேதாந்த பிரதிபாதிதமான
ஜகத் காரண வஸ்து
சேதன அசேதன விலஷணமான பர ப்ரஹ்மம் என்று அறுதி இடப்பட்டது
ஜகத் காரணத்வம் நன்கு திருடி கரிக்கப் படுகிறது
கம்பம் நட்டு ஆட்டிப் பார்ப்பது போலே
முதல் பாதத்தில் சாங்க்யர் தோஷங்கள் பரிஹரிக்கப் படுகின்றன
முன் அத்யாயத்தில் நிரீச்வர சாங்க்யர்களும் சேஸ்வர சாங்க்யர்களும் நிரசிக்கப் பட்டனர்
அதில் நிரீச்வர சாங்க்யன்-கபில ஸ்ம்ருதி விரோதத்தைக் காட்டி
ப்ரஹ்மம் ஜகத் காரணம் அன்று என்று வாதிப்பது ஓன்று உண்டு
அத்தை நிராகரிக்க இந்த அதிகரணம் –

சம்ருத்ய நவகாச தோஷ பிரசங்க இதி சேத்-
சேதன அசேதன விலஷணமான ப்ரஹ்மம் ஜகத் காரணம் என்று கொண்டால்
பிரதானம் காரணம் என்று சொல்கிற கபில ஸ்ம்ருதி அப்ரதானமாய் விடுமே என்னில்

ந-அப்படி சொல்லக் கூடாது
அந்ய ஸ்ம்ருத்ய நவகாச தோஷ பிரசங்காத்- ப்ரஹ்ம காரணத்வத்தை சொல்லுகிற
மற்ற ஸ்ம்ருதிகள் அப்ரமாணமாய் விடும் ஆதலால் -எனபது சூத்ரத்தின் பொருள்
பரசராதி மகரிஷிகள் ஸ்ம்ருதிகள் எல்லாம் அப்ரமாணமாய் விடுவது விட
கபிலர் ஒருவர் ஸ்ம்ருதி ஒன்றை அப்படி ஆக்குவதே யுக்தம் –

இங்கே பூர்வ பஷம் –
சதேவ சோமய இதமக்ர ஆஸீத் -ஸ்வ தந்திர பிரதான காரணத்வத்தில் தாத்பர்யமா
ப்ரஹ்ம காரணத்வத்தில் தாத்பர்யமா
கபில காண்டம் ஞான மார்கத்தில் தத்தவங்களை விசதீகரிக்க தோன்றது

மனு பரசாராதி உக்திகளுக்கு பிரதானம் -இவை பலிஷ்டம் ஆகையாலே –
ப்ருஹஸ்பதியையும் ஸ்ருதிகள் கொண்டாடி இருக்கையாலே
அவர் இயற்றிய லோகாயுதத்தை கொண்டு ஸ்ருதியின் பொருளை நிர்ணயிப்பார் உண்டோ-இல்லையே

யாகம் -அத்தி மரம் நேராக தொட்டுக் கொண்டு உத்காய -சாம கானம் பண்ண வேண்டும் -சுருதி
ஸ்ம்ருதி -அத்தி மரம் துணியால் மூடி -என்கிறது -கீழே ஸ்பர்சம் நேராக தொடச் சொல்லி -விரோதம் வந்தால் சுருதி வாக்யமே பிரதானம்
ஆனால் இங்கு விரோதம் ஸ்பஷ்டமாக இல்லாமல் -வேதாந்த அர்த்தம் அறிந்து கொள்வது துர்லபம்
கபிலர் பரம ரிஷி -ஸ்ம்ருதிக்கு விரோதம் வந்தால் -எல்லா நியமங்களுக்கு அபவாதம் -exception-கொண்டு
ஸ்ம்ருதி தள்ள வேண்டும் என்ற நியமத்துக்கும் சில இடங்களில் தள்ள வேண்டும்
ஸ்ம்ருதிக்கு பிரதானம் இங்கு கொள்ள வேண்டும்
ஆஷேபம் -சமாதானம் இரண்டுமே ஸூத்ரத்தில்

வேதமும் கபிலர் பரம ஆப்தர் -மோக்ஷம் மோக்ஷ சாதனம் -பரம ப்ரதிபாதனம்
மனு -ஸ்ம்ருதி பலவும் சொல்லும் கபில ஸ்ம்ருதி முழுவதுமே பரம ப்ரதிபாதனம் என்பதால் இதுக்கு மிக பிரதான்யம் உண்டே
மூன்று பாகங்கள்
1–ஸ்மரித்யநவகாஷ தோஷ ப்ரஸங்க
2–இதி சேத் ந
3–அந்ய ஸ்மரித்யநவகாஷ தோஷ ப்ரஸங்காத்

மனு ஸ்ம்ருதிக்கு பெரிய ஸ்தானம் -வேதமே மனு ஸ்ம்ருதி பேஷஜம் என்றும் கபிலரையும் புகழ்ந்து சொல்லும்
வேதத்தால் -அறியலாம் -வேதத்தால் இல்லை பக்தியால் அறியலாம் கீதை -பக்திக்கு பிரதானம் சொல்லும் பிரகரணம்
வேதம் மோக்ஷம் சாதனம் -கங்கா நதி நீராட போகும் பொழுது போகும் சாதனத்தில் ஆழ்ந்து
சாத்யத்தில் நோக்கு இல்லாமல் இருக்கக் கூடாதே
ஸாத்யத்திலே புத்தி செலுத்தி சாதனா புத்தி தவிர வேணுமே -ஸ்ரீ ராமானுஜர் ஸ்ரீ ஸூக்தி உண்டே –
சுருதிகள் ஸ்ரீ விஷ்ணு புராணம் -ஸ்ரீ விஷ்ணுவாலேயே உண்டு பண்ணப்பட்டு ஸ்ரீ விஷ்ணுவிலே -அவனும் ஜகத் ரூபம்
ஆபஸ்தம்பர் ஸூத்திரமும் -இத்தை ஸ்பஷ்டமாக சொல்லும்
கபில ஸ்ம்ருதி -கொண்டு இவை அனைத்துக்கும் அநவகாசம் உண்டாகுமே –

முதல் அத்யாயத்தால் நிகில ஜகதேக காரணம் பரம்பிரஹ்ம வேத வேதாந்த வேத்ய சித்தம் என்பது.
அதாவது எல்லா உபநிஷத் வாக்கியங்களும் அந்த பரமாத்மாதான் ஜகத் காரணம் என்று ஐக்கிய கண்டத்தோடு சொல்வதாக நிரூபிக்கப்பட்டது.
இரண்டாவது அத்யாயம் அவிரோத அத்யாயம் –
சம்பவனீய ஸமர்த்த பிரகார தூர்தர்சன பிரஸ்தாவம். இதுவே இரண்டு அத்யாயத்துக்கான சங்கதி.
முதல் இரண்டு அத்யாயமும் சித்தமான பரமாத்மாவைப் பற்றிச் சொல்வதால், இதற்கு சித்த துவிகம் என்றும்
அதற்கு மேற்பட்ட செய்ய வேண்டிய சாதனம் – தியானம் , உபாசனம், வேதனம் எப்படிச் செய்ய வேண்டும்
என்று சொல்கிற அத்யாயம் 3 ஆவது அத்யாயம் – ஸாதனாத்யாயம் .
அதனால் அடையக் கூடிய பலத்தைப்பற்றிக் கூறும் அத்யாயம் 4 வது அத்யாயம் – பலாத்யாயம் ஆகிய
இவை இரண்டு அத்தியாயமும் ஸாத்யத்துவிகம் எனப்படும். பலம் எனப்படுவது இங்கு மோக்ஷ ரூபம் பலமாம்.

வேத வேதாந்த சித்தமான பிரஹ்மம் ஜகத் காரணம் என்று அறியுமிடத்து, அந்த பிரஹ்மம் எப்படிப் பட்டது என்றக்கால்,
பிரத்யக்ஷ, அநுமான சப்த பிரமாணங்களால் சுலபமாக தெரிந்து கொள்கிற விஷயங்களான அசேதன வஸ்துக்கள்.
அவை நம் கண் கை காது நாக்கு மூக்கு ஆகிய ஐம்புலன்களால் கண்டு, தொட்டு, கேட்டு, சுவைத்து முகர்ந்து உணரக்கூடியவைகளாய் ,
ஸ்தூல சரீராவிசிஷ்ட ஜீவாத்மாவுக்கும், அதற்கு அந்தரகதமான ஸூக்ஷ்ம காரணா சரீரத்தோடான வியுக்த (முக்த) ஆத்மாவுக்கும்
விலக்ஷணமானது பிரஹ்மம். நிகில நிரஸ்த அபுருஷார்த்த கந்தம். அனந்த ஞானானந்தைக தானத்வம், அபரிமித உதார குண சாகரம்,
நிகில ஜகதேக காரணம். ஸர்வாந்தராத்ம பூதம் . இப்படிப்பட்ட பிரஹ்மம் வேதாந்த வேத்ய சித்தம் என்பதே.

2வது அத்தியாயத்தில் 4 பாதங்கள்.
1. ஸ்ம்ருதி பாதம்.
2. தர்க்க பாதம்.
3, வியத் பாதம்.
4. பிராண பாதம்.

ஸம்ஹிதா, பிராம்மண, அரண்யக, உபநிஷத் ரூபமான வேதம் அபௌருஷேயம்.
ரிஷி திருஷ்டம். மந்திர தர்சனாத் திரஷ்டாக்களால் (Discover) வெளியிடப் பட்டவை.
ஸ்மிருதிகள் ஹார்ஷம். ஸ்மிர்யதே இதி ஸ்மிருதி : (Rememberance).
இதிஹாச, புராணங்களும் – ரிஷி பிரணீதம் – வேத அனுப்பந்திகள்.

ஸ்மிருதி இதிஹாச புராணாப்யாம் வேதம் ஸமுபப்ரம்மயேத் – என்று வேதத்துக்கு அங்கங்கள் ஸ்மிருதியும், இதிஹாச புராணங்களும்.
வேதத்துக்கு விருத்தமான ஸ்மிருதி பாகங்கள், நமக்கு அனபேக்ஷம்.
அப்படியான விரோதம் இருப்பதாக சங்கை பண்ணி , அது இல்லை என்று சொல்ல வந்த அத்தியாயம் இந்த அவிரோதாத்யாயம். அதாவது
சாங்கிய மதத்தை அனுசரித்த காபில ஸ்மிருதியில் பிரக்ருதிதான் ஜகத் காரணம் என்று பேசப்படுகிறதே.
ஸர்வம் வாக்கியம் சாவதானம், அசதி வாக்யதே –
Each sentence is an assertive sentence. If assertiveness is further added like –
ப்ரகிருதிஹி ஜகத் காரணம் – it becomes doubly assertive. அ .து.
பிரக்ருதிரேவ ஜகத் காரணம் என்பதன் மூலம், பரமாத்மா ஜகத் காரணம் அன்று என்பதாக தேறும்.

கீழே பரமாத்மா ஏவ ஜகத் காரணம். ப்ரகிருதியோ, ஜீவாத்மாவோ இல்லை என்பதாக நிர்ணயித்து இருக்க,
காபில ஸ்ம்ருதி ப்ரக்ருதிதான் ஜகத் காரணம் என்பதால் , ஸ்மிருதிக்கும் ஸ்ருதிக்கும் விரோதம் வருகிறதே ?
அப்படி விரோதித்தால், அந்த ஸ்மிருதிக்கு பிராமண்யம் கிடையாது . அந்த அம்சத்தைக் கைவிட வேண்டும் என்பதும் –
எங்கனே? என்றால்

ஒளதம்பரீம் ஸ்ப்ருஷ்ட்வா உத்காயேத் – யஜ்ன பிரகிரியையில் சில இடத்தில் ஒளதம்பரீம் – அத்தி மரத்தை (உதும்பரம்)
தொட்டுக் கொண்டு சாம காயனம் பண்ண வேண்டியது – என்று வேதத்தில் சொல்லி இருக்க அதை விளக்க வந்த
ஸ்மிருதி வாக்கியம் ஒளதம்பரீம் ஸர்வா வேஷ்டயித்வா – அதை முழுவதுமாக சுற்றி மூடி இடவேண்டும் – என்கிறதே.
விரோதஸ்ய அனபேக்ஷம் ஸியாத் – ஸ்மிருதி சொன்னதை விட்டு, வேதம் சொன்னதை செய்வது – என்கிற
மீமாம்ஸா நியாயப்படி பார்க்கில், ஸ்ருதி வாக்கியமே பலீயம். இதில் சங்கை ஏதுக்கு ?
இப்படி அல்பமாக தள்ளக்கூடிய விஷயம் அன்று, கபில முனியினுடைய சாங்கிய மதம்.
காரணம். அவர் சாட்சாத் பகவத் அவதார ரூபமான ரிஷியானபடியாலே ,
ஸ்ருதியைக் காட்டிலும் ஸ்மிருதிக்கே பிராதான்யம் சொல்லலாம்படி அன்றோ உள்ளது?

ஸர்வே நியமாஹா ஸ அபவாதா : – Every Rule has an exception and that Exemption proves the Rule – என்பது.

ஸ்ம்ருதி அநவகாச தோஷ பிரஸங்க : – இது ஆக்ஷேபம். பரமாத்மா ஜகத் காரணம் என்கிற ஸ்ருதி வாக்கியத்துக்கு,
சாங்கிய ஸ்ம்ருதி விரோதிக்கிறதே என்றால்
இதி சேத் ந – நிராகாரணம் – அப்படி சங்கிப்பது தவறு.
அந்ய ஸ்ம்ருதி அநவகாச தோஷ பிரஸங்காத் – இது சித்தாந்தம் / சமாதானம் –

கர்ம காண்டம் எதுவும் தள்ளுபடி இல்லாமல், பூர்ணமாக ஒப்புக்கொள்வதோடு, அந்த கபிலமுனிவரை
வேத, இதிஹாச, புராணங்கள் அனைத்தும் கொண்டாடுவதையும் நோக்குங்கால் ,
ஆப்த தமரான அவருடைய வார்த்தைகளை அன்னாரிப்பது எப்படி? மோக்ஷம், மோக்ஷ சாதனம் இரண்டையும் காட்டிக்கொடுக்கிற
கபில ஸ்மிருதியை ஒதுக்கி விட்டால் அல்ப ஸ்ருதர்களாக நாம் ஆகமாட்டோமா?
எனவே, வேத விருத்தமான விஷயங்களைக் கொண்டிருந்தாலும் , அபவாத திருஷ்டியில் (exception rule படி)
ஸ்ருதியைக் காட்டிலும் கபில ஸ்ம்ருதிக்கே பிராதான்யம் என்பது பூர்வ பக்ஷம் –

அவாந்தர பிரச்னம் :
கபில ஸ்ம்ருதியை அப்படியே ஏற்றுக் கொண்டால் , நாராயண ஜகத் காரணத்வம் சொல்லி ஸ்ருஷ்டியாதிகளைச் சொல்லுகிற
மனு ஸ்மிருதியைக் காட்டிலும், கபில ஸ்ம்ருதி பிரபலம் என்று எப்படிச் செய்வது என்கிற ஆக்ஷேபம் வருகிறதே
மனு ஸ்மிருதி தாய விபாகம் – சொத்து உரிமை இத்யாதி சாதாரண தர்மங்களை பற்றியும் சொல்லுகிறது.
காபில ஸ்மிருதியோ கேவலம் தத்வ விஷயமான கிரந்தம். எனவே தத்வ விஷயத்தைப் பார்க்கில்,
கபில ஸ்மிருதியே, மனு ஸ்மிருதியைக் காட்டிலும் ஆதரணீயம் என்பதாக பூர்வ பக்ஷிகள் தங்களுக்கு அனுகுணமாக சொல்கிற சமாதானம்.

சித்தாந்தம்.

அந்ய ஸ்மிருதி :
பகவான்தான் ஜகத் காரணம் என்று சொல்கிற ஸ்ருதிகள் –
மநு ஸ்மிருதி – ஆசீதிதம் தமோ பூதம் இத்யாரம்பா ஸ்வயம்பூ பகவான் வியக்த்தோ வியஞ்ச
கீதை – அஹம் கிருத்னஸ்ய ஜகத : பிரபவ பிரளயஸ் ததா ; அஹம் ஸர்வஸ்ய பிரபவ: மத்தஸ் சர்வம் பிரவர்த்ததே
பாரதம் – நாராயணோ ஜகன் மூர்த்தி: அநத்தாத்ம ஸநாதன : தஸ்மாத் அவியக்தம் உத்பன்னம்
த்ரிகுணம் திவஜஸத்தமா அவியக்தம் புருஷே ப்ரஹ்மந் நிஷ்கிரியே பிரலீயதே
விஷ்ணு புராணம் – விஷ்ணோசகாஸாத் உத்பூதம் ஜகத் தத்ரைவச ஸ்திதம் ஸ்திதி ஸம்யமக கர்தாஸௌ ஜகதோஸ்ய ஜகத் யஸ :
ஆபஸ்தம்பர் – பூப் பிராணின ஸர்வ ஏவமுவாஹ யஸ்ய நஹந்மானஸ்ய விகல்மஷஸ்ய . . . .
தஸ்மாத் காயா பிரவந்தி ஸர்வே ஸமூலம் ஸாஸ்வதிகஸ்ய அநித்ய :
இப்படியுள்ள ஸத் கார்ய வாக்கியங்களுக்கு, காபில ஸ்மிருதியை ஏற்றுக்கொண்டால், அநவகாசமாகிற மஹா தோஷம் ஏற்பட்டு,
மந்வாதி ஸ்மிருதிகள் அபிராமணமாய் போய்விடும். ஆகவே காபில ஸ்மிருதியையே உபேக்ஷிகக் கடவது .

வேதாந்த வாக்கியங்கள் எப்படிப்பட்டவை என்றால், பிரத்யக்ஷ , அநுமான , சாப்த போதங்களால் அறியமுடியாத
விஷயத்தைப் பற்றி தெரிவிப்பதாக அமைந்தவை யாகும்.
அல்ப ஸ்ருதர்களான நமக்கு அத்தோடு, வேதாந்த வாக்கியங்களை விளக்கக் கூடிய உப ப்ரஹ்மணங்களும் அவசியமாகின்றன.
உப ப்ரஹ்மணங்களாவன ரிஷிகளுக்கு சமாதி நிலையில் உணர்ந்து வெளியிடப் பட்டவையேயாகும்.
வேதார்த்தம் அறுதி இடுவது ஸ்ம்ருதி இதிஹாச புராணங்களாலே -ஸ்ரீ பிள்ளை லோகாச்சார்யார் –
சமாதி (அ ) துரீய தசை தான் – ந ஜாக்ருத, நைவ ஸுஷுப்தி மூர்ச்சா, ந ஜீவிதம் நோ மரணம் விசித்திரம் – என்பதாக
விசித்திரமான தசை -சமாதி—ஜாக்ருத ஸ்வப்ன ஸூஷூப்தி -மூர்ச்சா -இந்திரியங்கள் மனஸ் எல்லாம் அடங்கி-
சங்கராச்சாரியார் சொன்ன படிக்கு அது ஒரு எண்ண அலைகள் (யோஜனை) அற்ற விழித்த நிலை.
ஞானம் , ஞேயம் , ஞாதா என்கிற திரிபுடி லய -beyond imagination- பகுத்தறிய முடியாத அஹமர்த்த லய ஸ்திதியே – சமாதி ஸ்திதி.

யத் மனசா தியாயதி தத் வாசா வததி – என்பதற்கு இணங்க, பேச்சும், எழுத்தும், செயலும் முதலில் புத்தி பிரேரிதமாகக் கடவது.
அப்படியல்லாமல் வேதம் அபௌருஷேயம் என்றால், திரஷ்டாவான ரிஷியின் புத்திக்கதீதமாக கேட்டு உணரப்பட்டு, வெளியிடப்பட்டதாகும் –
Revealed to and by them. பகவானுடைய அருளாலே ரிஷிகளின் புத்திக்கு கோசரமானதே ஸ்ருதி எனப்படும்.

ஸ்ருதி – ஸ்ருத்யுக்தார்த்த : ஸ்மர்யதே இதி ஸ்மிருதி.
சுருதி எனப்பட்ட வேதத்தால் என்ன சொல்லப் பட்டதோ அதை ஸ்மர்யதே இதி ஸ்மிருதி :
வேதத்தில் சொல்லப் பட்டவைகளை நினைவில் கொண்டு, அதை விளக்க வந்ததே ஸ்மிருதிகள் எனப்படும்.
நூற்றுக்கணக்கான ஸ்ம்ருதிகள் பராசர மனு இத்யாதி –ராஜ தர்மம் ஆஸ்ரம தர்மம் பல விஷயங்கள் உண்டே –

இதிஹாசம் – இதீக ஹாஸா – இப்படி நடந்தது என்று பேசுமவை.
வேத பிராச்சேதஸாத் ஆஸீத் சாஷாத் ராமாயணமாத்மநா –என்றும்
பாராத பஞ்சமோ வேத: என்றும் -கிருஷ்ணஸ்ய கதா மஹா பாரதம்-
பிரமேயாவதாரம்போலே ஆயித்து பிராமண அவதாரமும்.
ஆத்மாநம் மாநுஷம் மந்யே ராமம் தசராத்மஜம் என்று பகவான் தன் பராவர ஸ்வரூபத்தை மறைத்துக் கொண்டு
மனுஷ்யனாகவே அவதரித்தபடி.
கிருஷ்ணாவதாரமோ என்னில் மனுஷ்யனைப் போலே அவதரித்தபடி.
வேதங்களில் த்ரிவிக்ரம அவதாரமே பிரதானம் -வாமன அவதாரம் ஸ்பஷ்டமாக இல்லை –

புராணங்கள் – புராபி நவம் .
உப ஸர்கஸ்ச பிரதி ஸர்கஸ்ச வம்ஸோ மன்வந்திராணி ச வம்சாநுசரிதம் பூராநோ பஞ்ச லக்ஷணம்.
இவை அனைத்தும் ஹார்ஷ சாகித்யம். ரிஷிகளாலே பண்ணப்பட்டவை.
ஸ்ரீ விஷ்ணு புராணம் -organic-paint-போன்ற பலவும் உண்டே-

இதிஹாச புராணாப்யாம் வேதம் சமுப ப்ரஹ்மயேத் என்று மகரிஷிகளின் புத்தி கொண்டு ரசனை செய்யப்படவை.
வேதம் அபௌருஷேயம். புத்தி ரசனைக்கு உட்படாதவை.
வால்மீகி பிரணீதம் ராமாயணம் என்று சொல்வதுண்டு.
ஆனால் காயத்ரி மந்திர திரஷ்டா விச்வாமித்திர ரிஷி என்று வழக்கு உண்டே தவிர
காயத்ரி மந்திர கர்தா விஸ்வாமித்ர : என்று சொல்வதில்லை.
ஸ்ருதி பிரதிபன்னார்த்த விசதீகரணம் உபப்ரஹ்மணம் என்று வேதங்களில் சொல்லப்பட்ட அர்த்தங்களை
விளக்கவோ, விவரிக்கவோ வந்தவை ஸ்ம்ருதி, இதிஹாச புராணங்கள் .
காபில ஸ்மிருதி வேத விருத்தமான அர்த்தங்களை சொல்வதால், அதைக் கொண்டு வேதார்த்த விசதீகரணம் செய்யப் போகாது.
உபேக்ஷணீயம்–உதாசீனம் -பிரமாணமாகக் கொள்ளக் கூடாது –

கபிலரும் ரிஷி தானே என்றால். அவர் ஆப்தர் – ஆப்த தரர் எனலாம் அவ்வளவே. அவருடை வார்த்தை
சம்பூர்ணமாக அனுப்பாதேயம் என்று சொல்லப் போகாது.
அனுக்தம் , அவிருத்தம் அந்யதோ கிராஹ்யம் என்கிற விதிக்குச் சேர எவை எவை நம்முடைய சித்தாந்தங்களுக்கு
ஒத்துப் போகுமே அந்த அளவே ஏற்புடைத்து. ஆனால் மந்வாதி ஸ்மிருதிகள் ஆப்த தமம் என்பதால் அவை பூர்ணமாகவே உபாதேயம்.

ஆப்த : என்றால் எதார்த்த வாதி மட்டுமில்லை. யதா திருஷ்டார்த்த வாதியும் கூட.
சத்தியம் பேசுவது மட்டுமல்ல. பிரியமானதை மட்டும் சொல்லாது, அப்பிரியமானாலும் உள்ளதை உள்ளபடி சொல்லுகை.
யதார்த்த வக்தா. யதாதிருஷ்டார்த்த வக்தா. யதார்த்த தர்சித்தவே சதி யதார்த்தவக்துத்வம் ஆப்த தமத்வம்.

தர்மஜ்ஞ சமயம் பிரமாணம் வேதாஸ் ச என்பதில், முதலில் தர்மஜ்ஞ சமயம் ஏவ பிரமாணம்.
தர்மஜ்ஞ : பராங்குச பரகால யதி வராப்ய : – பகவத் ஸாஷாத்காரம் பண்ணினவர்கள் வாழ்வும் வாக்கும் நமக்கு முதலில் பிரமாணம்.
தத்வ தர்சிகளாய், அவர்கள் தரிசித்த தத்துவத்தை யதா பிராகாரம் அப்படியே பேசுமவர்கள் ஆப்த தமர்கள்.
அது நம் ஆழ்வார் ஆச்சாரியர்கள் அல்லால் வேறு எவர்?

——————–

ஸூத்ரம் : இதரேஷாம் ச அநுபலப்தே : 2-1-2

மந்வாதி ரிஷிகள் – யத் வை மநு அவததி தத் பேஷஜம் என்கிற கணக்கிலே –
மனு, பராசர, வியாச மகரிஷிகள், தங்கள் யோக பலத்தால், பராவர தத்வங்களை உள்ளது உள்ளபடியே அறிந்து பேசிய
தங்களுடைய சாஸ்திரங்களில், -ஸூ யோக மகிமையால் ஜீவ பர யாதாம்யா ஞானம் அடைந்தவர்கள் -இதரேஷாம்-
ச காரம் து சப்தார்த்தம் -நிகில ஜகத் பேஷஜம் -இவை நமக்கு -மனு நாராயணன் அவதாரம்- –
சாங்கிய பக்ஷமான பிரகிருதி ஜகத் காரணம் என்பதைத் தள்ளி,
பிரஹ்மம் ஜகத் காரணம் என்று காட்டியுள்ள படியால், பிரஹ்மம் மட்டுமே ஜகத் காரணம் என்கிற அவர்கள் பக்ஷத்தை
மட்டுமே கைக் கொள்வது அவசியமாகிறது.

மனுஷ்யாணாம் சகஸ்ரேஷு கஸ்சித் யததி ஸித்தயே
யாததாமபி சித்தானாம் கசச்சின் மாம் வேத்தி தத்வத: (கீதை)
ஆயிரக் கணக்கான மநுஷ்யர்களில் யாரோ ஒருவர் என்னை அடைய முயல்கையில், அவர்களில்
யாரோ ஒருவர்தான் வெற்றி காண்கிறார்கள்.-மநுஷ்யர்கள் தான் மூன்று வகை.
என்னை அடைய வேண்டும் என்கிற விருப்பம் காட்டாதவர்கள் பலர். அவர்களில்
என்னை அடைய வேண்டும் என்கிற விருப்பம் உள்ள சிலர். அப்படி விரும்பி
சித்தி பெற்ற சிலருள், என்னை உள்ளபடி அறிந்தவர்கள் ஒரொருவரே. – என்பதாக.

இதிலிருந்து சித்தி பெற்றவர்களுள்ளும் தத்வதஹா அறிந்தவர்கள் என்றும் ,
மேம் போக்காக அறிந்தவர்கள் என்றும் தாரதம்யம் உண்டு என்று
ஸ்ரீ ராமானுஜர் மட்டும் ஸ்ரீ கீதா பாஷ்யத்தில் இந்த வாசியைக் காட்டி அருளுகிறார் – –
முதல் ஆழ்வார்களுக்கு மூவருக்கு மட்டுமே ஒரே மாதிரி ஒரே சமயத்தில் யோக அனுபவம் -சாஷாத்காரம் –
அவர்கள் பாசுரங்கள் கொண்டு இத்தை அறிகிறோம் –

இது போலே -கபிலரும் ஞானி தான். இருந்தாலும், மநு , பராசர, வியாசாதிகள் உபாதேய தமர்கள் என்பது கொண்டு,
சாங்கிய சாஸ்திரம் உபேக்ஷணீயம்.
ஒருவேளை கபில முனியை விரோதிக்கக் கூடாது என்பதாக நினைத்து , மந்வாதி வாக்கியங்களை உபேக்ஷித்தால்,
விருஸ்சிக பயா பலாயமானஸ்ய வியாக்ர முகே பதநம் – தேள் கடிக்கு பயந்து புலியின் வாயில் விழுந்தபடி –
சிறிய தோஷத்தை பரிகரிக்கப் போய் பெரியதான தோஷத்தை சூழ்த்து கொள்வதிலே முடியும்.
சாங்கிய பக்ஷத்தை இத்தனை கடாகண்டிதமாக மறுப்பதற்கு காரணம் –

கிலேச அதிக தரம் தேஷாம் அவியக்தா ஸக்த சேதஸாம்
அவ்யக்தாஹி கதிர் துக்கம் தேஹவத் பிரவாப்யதே (கீதை 12-5)

அவ்யக்த மார்க்கமான ஞான மார்கம் துஷ்கரமானது. வேதாந்த யோக மார்கமாகிற பக்தி மார்கமே ஸுகரமானது.
இதை வலியுறுத்துகின்ற இந்த கீதா ஸ்லோகத்தின் அடிப்படையில் , பிரகிருதியிலும் பகவத் தத்துவத்தை பார்க்கிற சுத்த ஜீவாத்மாவுக்கு ,
பிரக்ருதி – புருஷ த்விதத்வ சாங்கியம் ஏற்புடைத்தாயினும், அல்ப ஸ்ருதர்களான நம் போல்வாருக்கு அது க்லேசாவகம்.
இதையே ஸ்வாமி தேசிகனும்
பக்திரேவ முக்தேர் உபாய : ஸ்ருதி ஸத விஹித: ஸா கதி: ப்ரீதிரூபா – அதனால் நமக்கெல்லாம் பகவத் பக்தி மார்க்கமே உபாயம்.
இதுவே பிரஹ்ம சூத்திரம் முழுவதுக்குமான ஸ்வாபதேசார்த்தமும் கூட.
ஞானம் முற்றி அனைத்திலும் ப்ரஹ்மம் பார்க்கும் த்ருஷ்டியில் -யோக மார்க்கம் ஆகிய பக்தி மார்க்கம் தள்ள வேண்டியது இல்லை என்றாலும்
மிகவும் துர்லபம் -ஆகவே உதாசீனமாக கொண்டு -நம் போல்வார்க்கு பக்தி ஒன்றே -என்று காட்டும் இந்த ஸ்லோகம்
ஸ்ரீ உ .வே .கொத்த மங்கலம் வரதாச்சார்யர் ஸ்வாமி ஆச்சார்யர் கிருபையால் இந்த விளக்கங்கள் –

———————

யோக ப்ரத் யுக்தி அதிகரணம் : 2-1-2
சூத்ரம் : ஏதேந யோக: ப்ரத் யுக்த : : 2-1-3 :

சங்கதி :
ஏதேந –
கீழ் அதிகரணத்தில் சாங்கிய ஸ்மிருதி நிராகரணம் பண்ணப்பட்ட அளவிலே, யோக சாஸ்திரமும் நிராகரிக்கப் பட்டதாகவே கொள்ள வேண்டும் .
அதனால், பிரஹ்மம் ஜகத் காரணம் என்கிற பக்ஷம் ஒன்றே ஏற்கத் தக்கது. இதற்கு என தனியாக ஒரு அதிகரணம் ஆக எதற்கு? என்றால்
பிரகிருதி அதிகரணத்தில் சொல்லப்பட்டது போல் யோக சாஸ்திரம், சாங்கிய சாஸ்திரத்தினின்றும் வேறு பட்டது.
பரமாத்மாவை அந்தராத்மாவாக கொள்ளாத -பிரக்ருதியே உபாதான காரணம் -என்பதில் யோக சாங்க்ய மாதங்களில் ஒற்றுமை இருவருக்கும் –
நிமித்த காரணம் மாத்திரமே ப்ரஹ்மம் என்பர்-
யோக சாஸ்திரத்தில் ஈஸ்வர தத்வத்தை ஒப்புக் கொள்ளவதோடு இரண்டிற்கும் இன்னும் சில அடிப்படை வித்யாசங்கள் உண்டு.
அதனால், யோக சாத்திரத்தை மறுக்க வேண்டி தனி அதிகரணம் தேவைப்பட்டது.
கிலேச, கர்ம விபாக ஆஷ: அபரா திருஷ்ட : புருஷ விசேஷ: ஈஸ்வர:
அவித்யா அபிநிவேச ராக துவேஷங்கள் – கிலேசம்.
சமாதி ஸ்திதி ஈஸ்வர பிரமிதாமா என்பது நம்முடைய சம்பிரதாயத்திலும் ஏற்றுக் கொள்ளப்பட்ட விஷயம்.
தாது -யுஜிர் யோகே to unite என்று பகவானோடே ஜீவாத்மா ஸம்ஸ்லேஷிப்பதைச் சொல்கிறது.
அதனால் யோக என்பது சமாதி ஸ்திதியை உணர்த்துவது.
கீதா அத்யாயம் யோக சப்தம் -பர்யாயம் -பல அர்த்தங்கள் உண்டே –

யோக ப்ரத் யுக்த :
என்பது யோக ஸ்மிருதிகளைக் குறிக்கும். பதஞ்சலி மஹரிஷியுடைய பாதஞ்சலம் என்கிற யோக சூத்ர காரிகையை அல்ல.
காரணம் ஈஸ்வர தத்வத்தை ஏற்றுக் கொண்டாலும் அவனுடைய பூர்ண ஸ்வரூபத்தை ஒத்துக் கொள்ளாது
உபாதான காரணத்தை மறுக்கிறபடியால்-ஹேய குணங்கள் இல்லை என்பதோடு நிறுத்தி,
கல்யாண குணங்கள் உண்டு என்று சொல்லாமல் விட்டதும் அந்த யோக காரிகைக்கு தோஷம்.
நம்முடைய சம்பிரதாயத்தில், ஹேய பிரத்யநீக கல்யாணைக தானத்வமாகிற உபய லிங்க விசிஷ்டனாகவே –
பகவத் ஸ்வரூபமானது நிரூபிக்கப் படுகிறது. -உபய லிங்கத்வம் தானே பூர்ண நிரூபகம் ப்ரஹ்மத்துக்கு –
அந்த அம்சத்தில், வேதம் சொன்னவற்றோடு சம்பூர்ணமாக ஒத்துப் போகாத காரணத்தால்,
யோக சூத்திரங்களும் அநுத்தேஸ்யம் என்றபடி.

அஷ்டாங்க யோகஹத்தில் 7 அங்கங்கள், 8 வதான சமாதி என்பது அங்கியாகும். ஸ்ரீ பகவத் ராமானுஜருக்கு இதில் பூர்ண சம்மதம் உண்டு.
ஸ்ரீ வைகுண்ட கத்யத்தில் . . .ஜ்ஞான யோகேந திருஷ்டிவா என்பதாக ஜ்ஞான யோகத்தால் சாஷ்த்கரிக்கக் கூடியது ஸ்ரீ வைகுண்டம் என்கிறார்.
நாதாயா முனே -ச விஜயதே யமுன முனி-தஸ்மை ராமாநுஜார்யாய பரம யோகிநே –என்று ஒரு யோகியாகவே செல்லப்படுகிறார்.
ஸ்ரீ நாதமுநி -ஸ்ரீ யாமுனமுநி-ஸ்ரீ ராமாநுச முநி -(ஸ்ரீ வரவர முநி)-என்கிற முநித்ராய சம்பிரதாயம் நம்முடையது.

அடுத்து, புராணங்களை பார்க்கில், ஹிரண்ய கர்பன் என்கிற பிரம்மா தமோ குணம் பிராசுர்யனாய் இருந்த போது உபகரித்த,
( எழுதியவர் வியாசராக இருந்தாலும் -) ராஜஸ, தாமச புராணங்கள் நமக்கு அனுத்தேஸ்யம்.
முக் குணங்களில், தமோ குணத்தால் தூக்கம் போன்றவைகள் நமக்கு ஏற்படுகின்றன
கோப தாபங்கள், ஆசா பாசங்கள் ரஜோ குணத்தால் சம்பவிக்கின்றன.
பொதுவாக, ஸத்வமும் தமஸும் தனியே காரியம் செய்யாது.
ரஜஸோடு தமஸ் சேர்ந்தால் கெட்ட காரியங்களும், ரஜஸோடு சத்வம் சேர்ந்தால் நல்ல காரியங்களும் மேற்கொள்வோம் என்பது நியதி.
அப்படி தேவதாந்திர பார்மயத்தை சொல்கிற ராஜஸ, தாமச புராணங்கள் அப் பிரமாணம்.

சாங்கியம் – யோக : பஞ்சராத்ரம் – வேதா: பாசுபதம் — ததா ஆத்ம பிரமாணம் — ஏதாநி ந ஹந்தவ்யாநி ஹேதுபிஹி.
பாசுபத ஆகமும் பிரமாணம் என்கிறார் ஸ்ரீ பாஷ்யகாரர்-
இவைகளில் சொல்லப்பட்ட தர்க்கங்கள், அறிவியல் விதிகள், கோட்பாடுகளை (Theories) யுக்திகளை காரணம் காட்டி (Logic)
ஸம்பூர்ணமாக தள்ளிவிடக் கூடாது. கிராஹ்யமான அம்சத்தை எடுத்துக் கொண்டு , விருத்தமான அம்சங்களை மட்டும் தள்ள வேண்டியது .

அந்த வகையில், யோக சாஸ்திரத்தைக் கொண்டு வேதார்த்த நிர்ணயம் , கீழ் சொன்ன கரணங்களுக்காக, செய்யப் போகாது.
அது வேத உப ப்ரஹ்மண அநர்ஹம்

—————-

விலக்ஷணத்வ அதிகரணம் : 2-1-3 :

( ஸ்ருஷ்டிக்கு பிரயோஜனம் என்ன -தனக்காக பண்ணுகிறான் என்றால் –
அவாப்த ஸமஸ்த காமத்வத்துக்கு கொத்தை வருமே –
நமக்காச் செய்கிறான் என்றால் எதற்க்காக துக்கமயமாக பண்ண வேண்டும்-இது பற்றிய விசாரம்
பூர்வ பக்ஷத்தையே ஸூத்ர ரூபமாக இங்கு அருளிச் செய்கிறார் -)

ஸூத்ரம் : ந விலக்ஷணத்வாத் அஸ்ய ததாத்வம் ச ஸப்தாத் : 2-1-4 :

ப்ரஹ்மணி ஜகத் காரணத்வா வாதிநீநாம் ஸ்ருநீநாம் ஸமன்வய : என்கிற ரீதியிலே,
ஒவ்வொரு ஸ்ருதி வாக்கியத்தையும் எடுத்துக்கொண்டு, இதில் சந்தேகத்துக்கு இடம் இருக்கிறது.
பரமாத்மாதான் ஜகத் காரணம் என்று சொல்ல முடியாது. ஏனென்றால் பிரக்ருதி, ஜீவாத்மா, ஆகாசம் என்று பலவற்றைக் காட்டி
இதுவே ஜகத் காரணம் என்று சொல்லும்படியான வேதத்தில் இருக்கின்ற வாக்கியங்களின் விசாரம் முதல் அத்யாயத்தில்.

இந்த 2 வது அவிரோத அத்தியாயத்தில்
ஸ்மிருதிக : யுக்திதஸ்ய பிராஹ்மண : ஜகத் காரணத்வம் ந விருத்யதே – அதாவது
ஸ்மிருதி வாக்கியங்கள், யுக்தி இரண்டாலும் பகவத் ஜகத் காரணத்வத்தை நிராகரிக்க முடியாது என்பதான விஷயம் நிரூபிக்கப் படுகிறது.

இது தவிர, இரண்டு அத்யாயத்துக்கும் அதிகரண கிரமத்திலும் வித்யாசம் இருப்பதைப் பார்க்கலாம்.

தர்க்கத்துக்கு அனுகுணமான சாங்கிய ஸ்மிருதி போல் அல்லாமல், மந்வாதி ஸ்மிருதிகள் தர்காத் அநநுகுணம் .
எனவே உப பிரஹ்மணம் என்ற வகையில் அதைக் கொண்டு வேதார்த்த விஸதீகரணம் பண்ணப் போகாது.
காபில ஸ்மிருதியைக் கொண்டே பண்ண வேண்டும் என்பது ஆக்ஷேபம்.

ந –
அப்படி இல்லை.
அஸ்ய விலக்ஷணத்வாத் –
இந்த பிரபஞ்சம் அஜ்ஞானம், துன்பம், ஹேய குணங்களோடான ஒவ்வாமை யோடு கூடினது.
இதற்கு எதிர் தட்டாக பிரஹ்மம் ஜ்ஞானானந்த மயனாய் ஹேய பிரதிபடனாய், கல்யாண குண விசிஷ்டனாய்
அத்யந்த விலக்ஷணனான படியாலே , இரண்டுக்கும் காரண-காரிய பாவம் சொல்ல முடியாது என்பதை
பூர்வ பக்ஷ உத் ஸூத்ரமாக எடுத்துக் கொள்ள வேண்டாத படிக்கு, இங்கு குறிப்பிட்டு சொல்கிறார்.
உத் ஸூத்திரம் பூர்வ பக்ஷ வெளிப்படையாக ஸூத்ரமாக இல்லாது போனாலும், அதை சங்கதிகளால் தருவித்துக் கொள்வது.
இப்படி நேர் விரோதமான ஸ்வரூப, ஸ்வபாவங்களோடு இருக்கிற பரமாத்மா தான் இந்த ஜகத்துக்குக் காரணம்
என்று எப்படி சொல்வது ? என்பது ஆக்ஷேபம்.

காரண குணாநாம் கார்யே சங்கிராமந்தி என்பது வசனம்.
கறுத்த மண் கொண்டு பானை பண்ணினால் பானையும் கறுப்பாகவே இருக்குமே-
பானைக்கு மண் காரணம். பிண்டத்வா ரூபமான மண் தீர்த்தம் எடுக்க பயன்படுமோ என்றால் முடியாது.
அது பானை என்கிற ஆகாரத்தை அடைந்த போதே அதில் தீர்த்தத்தை எடுக்கவோ, குடிக்கவோ, சேமிக்கவோ முடியும்.
அதே பானை உடைந்து சில்லு என்கிற ஆகாரத்துக்கு மாறும் போதும் தீர்த்தம் எடுக்க முடியாது.
மூன்று நிலையிலும் அது மண் என்கிற தன்மையில் வித்யாசம் இல்லை.
அதுவே சம்பூர்ணமான வைலக்ஷண்யத்தோதோடு கூடிய இரண்டு வஸ்துக்களுக்கு காரண காரிய பாவம் சொல்லப் போகாது.
பிரகிருதத்தில், பிரஹ்மம் ஆனந்த மயம் என்றும் ஜகத்தோ துக்க மயமானது என்றும் சொல்லப்படுகிறது.
இந்த இரண்டுக்கும் காரண காரியம் எப்படி சொல்ல முடியும்? என்பது கேள்வி.

துவா ஸூபர்நௌ ஸயுஜௌ ஸகாயௌ சமானம் விருக்ஷம் பர்ஷஸ்வ ஜாதே
தாயோர் அந்ய : பிப்பலம் ஸ்வாந்தபி அனஸ்நந் அந்ய : அபிஜாத : – என்கிற விஷயத்தையே இங்கு
ஸமாநே விருக்ஷே புருஷோ நிமக்ந : அனீஷயா ஸோசதி புக்யமாந : மோகத்துக்கு உட்பட்டு சோகத்தை- துக்கத்தை அனுபவிக்கிறான்.
அநீஷஸ்ச ஆத்மா புஜ்யதே போக்த்ரு பாவாத் -> தான் போக்தா என்கிற பிரமத்தாலே பந்தத்துக்கு ஆளாகிறான்.
விருக்ஷம் – சரீரம்.
இரண்டு பக்ஷிகள் – ஜீவாத்மா – பரமாத்மா. பரஸ்பரம் 2 பக்ஷிகளுக்கும் ஸ்நேகம் உண்டு.
நவ வித பக்தி–சஹா ஸூஹ்ருத் – -ஸூஹ்ருதம் சர்வ பூதா நாம் -என்று சர்வ பூதங்களுக்கும் அவனுக்கும் உண்டே –
ஸயுஜௌ – ஸமான குண யோக : = ஸாயுஜ்யம் . நிரஞ்ஜன : பரமம் ஸாம்யம் உபயிதி.
குணாஷ்டக யோகம். அபஹ33த பாப்மாத்வம் விஜர ; விமிருத்யு விஸோக: விஜிகித்ஸ: விபிபாஸத்வம்
ஸத்ய காம: சத்யகாம: சாந்த சங்கல்ப: என்கிற 8 விதமான ஸாம்யத்வம்.

இப்படி ஜீவாத்மா துக்கத்துவதோடு இருக்க, அசித்துக்கு சோகத்தவம் இல்லை யானாலும், அநேக தோஷ விசிஷ்டத்தவம் உண்டு.
இந்த இரண்டும் கூடி இருக்கிற ஜகத்தைக் காட்டிலும் பரமாத்மா அத்யந்த விலக்ஷணன் . யத் த்வி கார்யம் தத் தஸ்மாத் விலக்ஷணம்.
மண்ணுடைய காரிய பாவம் பானை, அடுப்பு etc .
தங்கத்தினுடைய கார்யம் வளையல், மோதிரம் etc .
இப்படி சாம்ய பாவத்தைக் கொண்டு காரண காரிய பாவம் தெரிந்து கொள்ளலாமாக, அத்யந்த விலக்ஷண வஸ்துக்கள் இரண்டிற்கும்
காரண-காரிய பாவத்தை எப்படிச் சொல்வது ? ஆக பிரஹ்மம் எப்படி ஜகத்துக்கு உபாதானம் ஆகும்? என்பது கேள்வி.
யத் த்வி கார்யம் தத் தஸ்மாத் அவிலக்ஷணம். யதா ம்ருத் ஸுவர்ணாதி கார்யம் கட ருசகாதி .
பரமாத்மா தான் ஜகத்துக்கு உபாதான காரியம் என்றால், இவ்வளவு வைலக்ஷண்யம் இருக்கக் கூடாது.
ஸாலக்ஷண்யம் தான் இருக்க வேண்டும்.

இப்படி தர்க விரோதமான ஒன்றை மநு ஸ்மிருதி சொல்வதால்,
ஹார்ஷம் தர்மோபதேசம் ச வேத சாஸ்த்திர அவிரோதிநா
யஸ் தர்கேண அனுசந்தஸ்தே ஸ தர்மம் வேத – தர்கானு கிருஹீதமாக இருப்பதே தர்மம். ந இதர :
ஹார்ஷம்- ரிஷி ப்ரோக்தமான உபதேசம்
தர்மம் என்றால் என்ன ? -அமரகோசம் படி-தர்மஸ்து த்ரயீ விதி – வேதத்தாலே இதை செய் இதை செய்யாதே என்று
சொல்லப்பட்டவைகள் எவையோ அவையே தர்மம்.
வேத பிரதிபாத்ய : பிரயோஜனவா தர்த : தர்ம :
தர்மத்தை எப்படி புரிந்து கொள்ள வேண்டும் என்றால், அது தர்க்கத்தாலே பிரதிபாத்யமானாதாக விளங்க வேண்டும்.

த்வஷத் அன்னம் ந போஃதவ்யம் துவஷந்தம் நைவ போஜயேத் – என்பது தர்மம்.
பிள்ளை விரோதியின் கிரகத்தில் போஜனம் பண்ணி வந்தவனாக, தந்தை விஷம் புங்க்ஸ்வா என்று சொல்லி சாடினால்,
பிள்ளை செய்தது விஷத்தை சாப்பிடுவதைக் காட்டிலும் அவத்யமானது –
சத்ரு கிருஹே ந புங்க்ஸ்வா என்பது தான் பொருள். விஷத்தை சாப்பிடுவாய் என்பது அல்ல.

தர்க்கம் அப்பிரதிஷ்டாநாத் – என்று கீழ் சொன்னதற்கும் இதற்கும் பரஸ்பரம் விரோதம் தோற்றுகிறதே என்றால்,
தர்க்கம் ஒன்றே முடிவானது அல்ல என்பது அங்கு தேறின அர்த்தம். it is not final என்றபடி
இங்கு சொல்வது தர்க்கத்தினுடைய சக காரத்தைக் கொண்டே தர்ம நிர்ணயம் பண்ண வேண்டும் என்பதாக.
எனவே விரோதம் எதுவும் இல்லை.

நைஷா தர்க்கேண மதிராபணீயா – வேதம். தர்க்கத்தை உதாசீனப்படுத்துவதோ, அது ஒன்றையே அவலம்பித்து இருப்பதோ தவறு.
பிராமண அனு க்ராஹக தர்க்கம் உபாதேயம்.தர்க்கம் ஸஹ காரியே – முழு பிரமாணம் இல்லை-co operate-role-
த்ரீண் கிரமாண் விக்ரம்ய பலீ வீர்ய ஹரோ ஹரி : பலி சக்ரவர்த்தி அபகரித்த ஸ்ரீ மஹா விஷ்ணு மூன்று அடி வைத்தது போலே
இங்கு சொல்லப்பட்ட ஹரி சப்தம் மஹா விஷ்ணுவைக் குறிக்கும்.
நரஹரி என்பது நிருசிம்மனை – ஹரி = சிம்மம் – என்ற அர்த்தத்தில் வருவது. இப்படி ஹரி என்கிற சப்தம்
ஹரி : = கபி : என்பது போல 16 வகை பொருள்,
இடத்துக்குத் தகுந்தாப் போல் தர்கானுகிருஹீதமான அர்த்தத்தையே கொள்ள வேண்டும். சப்த பிரமாணத்தில் இப்படியாக,
பிரத்யக்ஷ பிரமாணத்தில் – இருட்டில் உலர்ந்து வாடிய மரத்தை பார்த்து
ஸ்தாணுவா மனுஷ்யோவா என்கிற பிரமம் ஏற்பட்டுமாயின், அப்போதும்
தர்க்கத்தினுடைய (logic) சக காரத்தாலே கை, கால்கள் – கிளை தழைகள் அம்சம் கொண்டு
மனுஷ்யன் தான் -மரம் தான் என்கிற நிர்ணயத்துக்கும் வர முடியும். அனுமான பிரமாணத்திலும் இது போலவே ஆகக் கடவது.

எப்படி சப்த பிரமானத்துக்கு அர்த்த நிர்ணயம் பண்ணும் போது, தர்க்கத்தினுடைய சகாயம் தேவையோ அது போல
ஜகத்துக்கு உபாதான காரணம் பரமாத்மாவான, பிரக்ருதியா என்கிற கேள்வி வரும் போது,
பிரகிருதி என்று சொன்னால் அது ஏற்புடைத்து (logical). காரணம் பிரகிருதி த்ரிகுண மயம். ஜகத்தும் த்ரிகுண மயம்.
தோஷமற்ற பரமாத்மாவிடம் இருந்து தோஷமுள்ள ஜகத்து எப்படி வர முடியும்?
அத்யந்த விலக்ஷணமான இரண்டு வஸ்துகளில் ஒன்று மறொன்றுக்கு காரணம் என்று சொல்வதுதான் பொருத்தது (illogical).

ஸ்ரவணம், மனனம், நிதித்யாஸனம், தர்சனம் என்கிற ரீதியில் முதலில், ஸ்ருதி வாக்கியங்களைக் கொண்டு
பிரஹ்மத்தைப் பற்றிய விஷயங்களை நன்றாக கேட்க வேண்டும். கேட்பதோடு நில்லாமல் இதைக் கொண்டு இது,
இப்படியான படியாலே இது என்பதாக தர்க்க ரீதியிலான யுக்திகளைக் கொண்டு மனனம் பண்ண வேண்டும்.
மனனம் ச யுக்தி விரலுனுசிந்தனம் மனனம். மத்வா ச சததம் தியேய : காரண புராஸ்ரமான ஜ்ஞானத்தைக் கொண்டு
அந்த பரமாத்மா விஷய ஸ்வரூப குண சேஷ்டிதங்களை தியானிக்க வேண்டும் .
ஸ்ரவணம், மனனம், தியானம் இந்த மூன்றால் நமக்கு ஏற்படுகிற யோகம் தான் பகவத் சாஃஷாத்காரம்.

ஆகமேன அநுமானேன தியானாப்யாஸ ரஸேநச
த்ரிதாப்ய கல்பயன் பிரஹ்ஞான் பவதே யோகமுத்தமம்||– உதயநாசார், ஜ்ஞான குஸுமாஞ்சரி.
ஆகமம் என்பது வேத பாகம். அநுமானம் என்பது தர்க்ககம். இந்த இரண்டைக் கொண்டுமான த்யான அப்யாஸத்தால்
ஏற்படும் ரஸம் தான் பகவத் சாஷாத்காரமான யோகம் என்கிற
இந்த நியாயத்தைக் கொண்டு பார்த்தாலும், தர்க்கத்துக்கு அநாநுசிதமான வாதம் எடுபடாது என்பதாக பூர்வ பக்ஷம்-

அடுத்த ஸூத்திரமும் பூர்வ பக்ஷம் ஸூத்ரமாகவே அமைகிறது.

—————–

விலக்ஷணத்வ அதிகரணம் : 2-1-3 :
ஸூத்ரம் : அபிமாநி வ்யபதேசஸ் து விசேஷ அநுகதிப்யாம் : 2-1-5 :

தீபாவளி – ஒரு விளக்கைக் கொண்டு பல தீபங்களை ஏற்றலாம்.
நாசயாம் ஆத்ம பாவஸ்தா ஜ்ஞான தீபேந பாஸ்வதா – என்று கீதையில் சொன்னபடி
முதலாழ்வார்கள் ஏற்றிய ஜ்ஞான விளக்கைக்கு கொண்டு பதின்மர் பெற்ற பகவத் சாஃஷாத்காரமும்
அதன் மூலமாக கிடைக்கிற மோக்ஷமாகிற பிரயோஜனத்தை நாமும் பெற ஹேதுவான நாள் இந்த தீபாவளித் திருநாள்.
குருப்ய : அர்த்த : ஸ்ருத : தத் பிரயுக்தைஸ்ச ஸப்தைஹி யோஜித : – ஸ்ருத பிரகாசிகா
ஆசாரியன் மொழிந்த வற்றை அவர் சொன்ன சப்தங்களாலேயே சொல்லப் போவதாக
ஸ்ருத பிரகாசிகா-பல -வியாக்யானங்களுக்கும் இல்லாத இந்த பெயர் இதுக்கு மட்டுமே இப்படி நேராக அமைந்தது –

அமந்திரம் அக்ஷரம் நாஸ்தி நாஸ்தி மூலம் அநௌஷதம்
அயோக்கிய புருஷோ நாஸ்தி யோஜக: தத்ர துர்லப :

அக்ஷரங்கள் மந்திரமாவதும்,–மூலிகை ஒளஷதமாவதும்;–புருஷன் யோக்கியவானாவதும்
இந்த அக்ஷரங்கள் சேர்ந்தால் மந்திரம் என்றும்; இந்த வியாதிக்கு இது மூலிகை என்றும்,
தன் தீக்ஷையால் அல்பனை தேவனாக்குவதும் செய்ய வல்ல யோஜனா பிரபாவசாலியான ஆசாரியன் துர்லபம்
கிடைத்தற்கு அரிய வரம். வைகுந்தம் புகுவது மண்ணவர் விதியே – அப்படிப்பட்ட
குரோர் அங்கிரி பத்மே மன்ஸ்சேத் நலக்னம் ததகிம் ததகிம் ததகிம் தத்தகிம் ? — சங்கரர்.
இது நம்முடைய ஸம்பிரதாயத்துக்கே மிகவும் பொருத்தமானது. காரணம்

ராமாநுஜாங்கிரி சரணோஸ்மி குல பிரதீப :
அஸீத் ஸ யாமுன முநே ஸச நாத வம்ஸய
வம்ஸ பராங்குச முநேர் ததஸோபி
தேவ்யா தாஸ வரதாப்பிய ததைக்ஷண — கூரத்தாழ்வான்.
என்று ஆச்சாரிய சம்பந்தம் ஒன்றாலேயே நாம் மோக்ஷத்தை அடைய வல்லோம் என்றுள்ள படியாலே.

லௌகீகம், வைதிகம், பாராமர்த்திக விஷயமான மோக்ஷம் எதுவானாலும் ஒரு ஆசாரிய கடாக்ஷம் மிகவும் அவசியம்.
வக்கீலானாலும், வைத்தியர், வைதிகர் எவரானாலும் முதலில் ஒரு அனுபவசாலியான குருவிடத்தில் இருந்து கற்ற பிறகே
அந்தந்த தொழிலில் முன்னுக்கு வரமுடியும். மோக்ஷ விஷயத்திலும் அவ்வளவே.

தர்க்க பூயிஷ்டமான பிரகரணம் இது -இந்த ஸ்ம்ருதி பாதமும் அடுத்த தர்க்க பாதமும் – –
முதல் இரண்டு பூர்வ பஷ ஸூத்ரங்கள் இந்த அதிகரணத்தில் –

ஸூத்ரம் : அபிமாநி வ்யபதேசஸ் து விசேஷ அநுகதிப்யாம் : 2-1-5 :

பர பிரஹ்மம், பர மாத்மா என்பது எதுவோ அது இந்த ஜகத்துக்கு நிமித்த காரணம் என்று சொன்னால் அது பலருக்கும் சம்மதம்.
ஆனால், அதுவே ஜகத்துக்கு உபாதான காரணமும் கூட என்பதிலே தான் பல விசம வாதங்கள் எழுகின்றன.
பானைக்கு மண் போல, புடவைக்கு பட்டு நூல் போல, ஆபரங்களுக்கு கட்டித் தங்கம் போலே
கண்டு, உற்று, முகர்ந்து உணரக் கூடிய ஜகத்துக்கு பரமாத்மா என்றால்,
அவனைப் பற்றி மண்ணைப் போன்றோ, நூலைப் போன்றோ, கட்டித் தங்கத்தைப் போன்றோ
புரிந்து கொள்ள முடிகிறதா என்றால் இல்லை என்றே சொல்ல வேண்டும்.
ஸப்தத்தஸ்ச அதிகம்யம், சாஸ்த்ரைஸ்ச அதிகம்யம், சாஸ்திர யோநித்வாத் என்கிற கணக்கிலே
வேத வேத்யன், வேதப் பிரதி பாத்யனான படியால் வேதத்தைக் கொண்டே அறிய வேண்டும்.
அனுமான பிரமாணத்தை உபோத்பலகமாக வேண்டுமானால் வைத்துக் கொள்ளலாம்.

ஸத் சித் ஆனந்த ரூப :சின்மய : என்றெல்லாம் ஓதுகிறது உபநிஷத்.
பகவத் ராமானுஜரும் பகவத் சப்தம் வரும்போ தெல்லாம் அகில ஹேய பிரத்யநீக கல்யாணைக தாந : என்றே குறிப்பிடுகிறார்.
நிரஸ்த ஸமஸ்த தோஷ கந்த : என்று இருக்கிற பகவானிடத்தில் இருந்து தோஷ மயமான இந்த ஜகத்து எப்படி உண்டாகும்?
பகவான் ஜ்ஞான மயன். ஜகத்து அஜ்ஞான மயம்.
பகவான் ஆனந்த மயன். ஜகத்து துக்க மயம்.
பகவான் நிரஸ்த நிகில தோஷ கந்த ரஹித : ஜகத்து தோஷ பூயிஷ்டமானது.
இப்படி இரண்டுக்கும் அத்யந்த வைலக்ஷண்யம் உள்ள படியாலே
ந –
இந்த ஜகத் ஸ்ருஷ்டிக்கு பகவான் உபாதான காரணம் ஆக முடியாது.
இது எப்படி தெரிகிறது என்றால்

ததா ச சப்தாத் –
வேதத்திலே சொல்லப்பட்டுள்ள படியால் என்பது கீழ் ஸூத்திரத்தில் காட்டப்பட்டது.
அடுத்து தர்க நிரூபிதமல்லாத ஜ்ஞானம் ஏற்புடைத்தல்ல. தர்க அதீதமான விஷயம் உண்டு என்றாலும்,
தர்க்கத்துக்கு விருத்தமான விஷயமும் கூட அஸ்வீகாரம். ஆகவே
ஸர்வத்ரைவ தர்கா அனுக்ரஹா அபேக்ஷ. (supportive logic and not the one aimed to disprove Vedic theory)
யஸ் தர்க்கேண அனுசந்தஸ்தே ச தர்மம் வேத – மநு ஸ்மிருதி என்ற இதுக்கும்
நைஷா தர்கேண மதிரா அபநேயா என்கிற இரண்டுக்கும் விரோதம் தெரிகிறதே , இதில் எதை கொள்வது என்றால்,
பகவத் சாஷாத்காரம் லக்ஷியம். மோக்ஷ பிராப்தி லக்ஷியம். அதிலிருந்து விலக்குவதான தர்க்கம் தியாஜ்யம்.
பௌத்த சமணர்களுடைய தர்க்கம் இத்தகையதே. -இவை துஸ் தர்க்கம் –
மேலும் புத்தி சாதுர்யாதிசயத்தை (intellectual prowess) வெளிக்காட்டப் பயன் படும் தர்க்கம் அதுவும் அநுசித்தம்.

அவாந்தர பிரச்னம் :
காரணத்தைக் காட்டிலும் காரியம் வேறு படுகிறது என்பதற்காகவே, இரண்டுக்கும் காரண-காரிய பாவம் இல்லை என்பது தவறு.
உறங்கும் போதோ, மயக்க நிலையிலோ ஒருவனுக்கு சைதன்யம் இல்லை என்று எப்படி சொல்வதற்கில்லையோ
அது போல அசித்துக்கும் சைதன்யம் உண்டு, அநதீவியக்கத்தமாக மற்றவர் புத்திக்கு கோசரமாகா விட்டாலும் –
வேதார்த்த விருத்தமான தர்க்கம் துஸ் தர்க்கம் என்பதாக.
அத்யந்த விலக்ஷணதை ஒன்றாலேயே காரண-காரிய பாவத்தை இல்லை செய்யப் போகாது.

இதற்கு சாங்கியர்கள் சொல்கிற பதில் –
கட, படாதிகளில் எப்பவும், எந்த விதத்திலும் அபிவியக்தமாகாத சைதன்யத்தை அசித்து என்றே கொள்ள வேண்டும்.
ஆகவே சைதன்யமுடைய பிரஹ்மம், சைதன்யம் அற்ற கட, படாதி அசித்துக்கு உபாதான காரணமாக முடியாது என்பது பூர்வ பக்ஷம்

அவாந்தர பிரச்னமாக விசிஷ்டாத்வைதிகள் கேட்ட கேள்விக்கு சாங்கியர் சொன்ன பதிலுக்கு மேல்
கிளைக் கேள்வியாக மற்றுமொரு ஆக்ஷேபம்.
அதாவது குடம், மடக்கு இவைகளின் காரணமான களி மண்ணிலுள்ள பிண்டத்வா அவஸ்தை காரியமான
குடம், மடக்கு, சராவம் இவைகளில் எப்படி இல்லையோ அது போல
காரண வஸ்துவின் எல்லா அம்சங்களும், காரிய வஸ்துவில் இருக்க வேண்டும் என்கிற நியமில்லை.
ஏந கேந அம்ச சாரூப்பியம் -காரண காரியங்களில் இருந்தால் போதுமே -ஸர்வதா சாரூப்பியம் தேவை இல்லையே
அந்த கணக்கில், அஸ்தித்வமாகிற தன்மை ப்ரஹ்மத்திடத்திலே போல் பிரக்ருதியிலும் உண்டு.
இந்த ஸாலக்ஷணத்தைக் கொண்டு , ஜகத் காரணம் பிரஹ்மம் என்று சொல்வது பொருத்தம் தானே என்பதாக –
யதா சேதனாது அசேதானாது கேஸ, ரோமா, தந்த, நகாதிஷு ஜாயந்தே.
யாதா அசேதனாது கோமயாது அசேதனாது விருஷ்டிக : ஜாயந்தே .
அரிசி, மாவு இவைகளில், ஸ்வேனஜம் (due to heat) என்கிற புழு, (சக்காம்) பூச்சிகள் உண்டாவது போலே.
சேதனமான எட்டுக்கால் பூச்சி உமிழ் நீரிலிருந்து சிலந்தி வலை என்கிற அசேதன வஸ்து உண்டாவது போலே என்னவுமாம்.
காரண கார்ய பொருள்கள் வாசி -மண் பானை போல் இல்லாததும் இவை திருஷ்டாந்தம் –
இவை எல்லாம் analogy –என்றே கொள்ள வேண்டும் -அரிசியில் புழு இத்யாதி வருவது ப்ரஹ்மத்தாலேயே ஒழிய அசேதனத்தால் அல்ல –

non resemblance is not a reason for brahmam to be the sole cause for pirapanjam –

ஏன ஸ்வபாவேந காரண பூதம் வஸ்து , வஸ்தந்தராத் வியாவிருத்தம் தஸ்ய ஸ்வபாவஸ்ய
தத் காரியேத் கார்யஸ்ய காரண ஸாலக்ஷிண்யம்.
அப்படியானால் கூட அசேதனமான சரீரத்தில் இருந்து அசேதனமான நகம், பல், மயிர் உண்டாகின்றனவே ஒழிய,
சேதனமான ஆத்மாவில் இருந்து அல்லவே. அது போல,
ஊர்ணநாபி-spaider- வாய் எச்சில் அசேதனமானது. அது கொண்டு கட்டுகிற சிலந்தி வலை அதுவும் அசேதனமானது.
எனவே சொல்லப்பட்ட உதாரணங்கலிலிருந்து சேதனத்திலிருந்து தான் சைதன்யமுடையவைகள் உண்டாகும் என்பதாக
தேறுகிறது என்று சாங்கியர்கள் வேதாந்திகளின் வாயை அடைத்தனர்.

வேதமும் இதைத் தானே சொல்கிறது.
அஞ்ஞானம் -துக்கம் -தோஷம் -பிரபஞ்சத்தில்
ஞான மயம் -ஆனந்த மயம் -அகில ஹேய பிரத்ய நீகம் கல்யாணைக தானம் -நேர் விபரீதம்
விஜ்ஞானம் ச அவிஜ்ஞானம் ச சத்யம் ச அநிருதம் ச சத்தியம் அபவது என்பதாக பூர்வ பக்ஷம்-
இந்த எதிர் உத்தரத்துக்கு மேற்பட மீண்டும் ஒரு பிரச்னம் வேதாந்திகள் பக்ஷத்தில் இருந்து.
அதாவது எந்த வேதம் சத்தியத்தில் இருந்து அசத்தியம் உண்டாகாது என்றதோ,
அதே வேதமானது அசத்தியத்துக்கும் சைதன்ய பாவம் உண்டு என்று சொல்கின்றனவே ?
அபோ வா ஆகாமயந்தா – ஜலமானது ஆசைப் பட்டது.
தம் ப்ரதிவ்ய ப்ரவீத் – அவனுக்கு பூமியானது சொல்லிற்று.
என்பன போன்ற வேத வாக்கியங்கள், அசேதனமான பூமி, நீர் இவைகளுக்கு சைதன்ய பாவத்தை ஏறிட்டுச் சொல்லி யுள்ளனவே?
சிவனுக்கு மாமனாரான ஹிமாலய பர்வத்ததோடு ரிஷிகள் பேசினார்கள் – குமார சம்பவம்.
மைனாக பர்வத்த்தோடே ஹனுமான் பேசினார். சமுத்திர ராஜனோடே ராமன் பேசினான் – இராமாயணம்.
இவைகளிலிருந்து ஜகத்தும் சம்பூரணமாக சைதன்யம் உடையது என்று தெரிகிறது அல்லவா?
ஆகவே சைதன்யமுடைய பிரஹ்மம் ஜகத்துக்கு காரணம் என்று சொன்னால் தப்பு வாராதே என்ன
அப்படி இல்லை என்பதை ஸூத்ர ரூபமாக

அபிமாநி வ்யபதேசஸ் து விசேஷ அநுகதிப்யாம் –

மலை பேசித்து, நதி பேசித்து. சமுத்திரம் பேசித்து என்பதெல்லாம் அந்தந்த அசேதன வஸ்து
அபிமானிநி தேவதை பேசியதாகக் கொள்ள வேண்டும்.
அசேதனம் வஸ்துதா பேசிப் பார்த்ததில்லை யாகையாலே. eg. New Delhi gave fitting reply to Pakistan’s accusations என்றால்
அங்கு ஆட்சியாளர்களுடைய கருத்து பரிமாற்றம் என்பது தானே பொருள். New Delhi, Pakistan இரண்டும் அசேதனமாயிற்றே.
Figurative speech (அ ) இடவாகுபெயராக – உலகம் என்பதற்கு, உலகத்தில் உள்ளோர் என்று பொருளில் படுமா போலே .

வாக் பூத்வா அநுபிராவிஸது–ஆதித்ய சக்ஷுர் பூத்வா அக்ஷிணி பிராவிஸது வாயு பிரானோ பூத்வா நாசேத் பிராவிஸது
இங்கு விசேஷ: என்பது விசேஷ்யத்தில் பர்யவசிக்கும்.-வாகாதி அபிமானிநி தேவதை பேசியதாகக் கொள்ள வேண்டும்-

ஆக,
ஜகத : அசேதனத்வேந விலக்ஷணத்வாத் பிரஹ்ம காரியத்வ அநுபபத்தே :
தர்க்கத்தை அனுசரித்த வேத வாக்கியங்களும் இந்த ஜகத்துக்கு பிரதானம் தான் காரணம் என்று வேதாந்தத்திலும்
ஒதப் படுகிறது என்கிற இது பூர்வ பஷ வாக்கியமான ஸூத்திரம்.

——————-

விலக்ஷணத்வ அதிகரணம் : 2-1-3 :மேலே பர ப்ரஹ்மமே உபாதானம் என்று சித்தாந்த ஸூத்ரங்கள்-
ஸூத்ரம் : த்ருஸ்யதே து : 2-1-6 :

கதா – சர்ச்சை; விசாரம் –வாதம் -ஜல்பம் –விதண்டா வாதம் -நியாஸ சாஸ்திரம் கௌதம வாத பஞ்சதி-
சமய பந்தம் – Terms of reference . usually in logical debates, it will be agreed that the parties to debate
agree to popular believes, unless it stand to be refuted or corrected by valid proof.
ஜ்ஞானம் – ஸர்வம் வியவகார ஹேது : ஞானம் -சம்வித் -16-பர்யாய சப்தங்கள் -இருப்பைக் காட்டிக் கொடுக்கும்
ஞானம் beyond-language–அனுவாதம் -சப்தம் கொண்டு உணர்த்துவது-
யதார்த்தம் -உள்ளதை உள்ளபடி அறிக்கை
அறிந்தததை – பாதகம் இல்லாமல் இருந்தால் -அதுவே யதார்த்த ஞானம்
அயதார்த்தர்தம் -பிரமை
புத்தி. ஒரு பொருள் உள்ளது என்பதை கண்ணால் பார்த்தும்,
கைகளால் தொட்டும் அல்லது முகர்ந்து சுவைத்து கேட்டு உணரப்படுகிறது. ஆக, அதன் இருப்பை உணர்வது புத்தி தான்.
அயம் லேகனி – இது பேனா என்கிற ஜ்ஞானம் , தான் மட்டுமல்லாது மற்றவராலும் நம்பப்படுமானால்,
அது யதார்த்த ஜ்ஞானம். உள்ளதை உள்ளபடி அறிக்கை.
கயிற்றைப் பார்த்து பாம்பு என்று நினைத்து, இல்லை அது கயிறு தான் என்று வாஸ்தவ ஸ்தியை உணர்வது என்பதில்,
பாம்பு என்கிற நினைவு பிரமை என்றும் அது பிற்பாடு திருத்திக் கொள்ளப் படுவதால்
அது அயதார்த்த ஜ்ஞானம் — பிரமம் = விஸம்வாதி பிரவர்தி ஜனக ஜ்ஞானம் .

பரஸ்சத பரிக்ஷோதாது பரஸ்தாதிபி : வாதிஹிபி : உபலம்ப பலே ஸ்தேயம். ததாதோ கிம் லபிஷ்யதே?
உபலம்பம் = un-contradicted popular belief — ஸ்வாமி தேசிகன்.
மனோத்பன்னம் ஜ்ஞானம் பிரமா, ஸம்வாதி பிரவ்ருத்தி ஜனக விலகத்வாத் —
பாலைவனத்தில் தீர்த்தம் தேடித் போனவன், சோலையைக் (Oasis) கண்டவுடன் அங்கு சென்று நீர் அருந்துவதை விட்டு
அது கானல் நீரோ என்று விக்கிப்பனோ/ஆராய்ச்சி செய்வனோ? இல்லை யல்லவா.
அதுபோல – கோமயத் விருஷ்டிகோ உத்பத்தி -விருஷ்டிகம் = கிருமி, கீடம் . கிருமி மார்ஷிகா – மார்ஷிகா = தேன் .
அசித்தான மாட்டு சாணத்தில் இருந்து சைதன்யமுடைய கிருமி, கீடம் உண்டாவதைப் போல ,
பிரகிருதி ஜகத் காரணம் என்பதான சர்ச்சையில், விஜ்ஞான அறிவைக் கொண்டு இந்த உதாரணம் தவறு
ஸ்ரீ பாஷ்யத்தில் அஜ்ஞான வாதம் என்? எப்படி? வந்தது என்று சொல்லக் கூடாது.
காரணம் பொதுவாக அக்காலத்தில் நம்பப்பட்டதான சாணத்தில் இருந்து தேள் உண்டாகிறது என்பதை ,
சமய பந்த அனுசரித வாதமாகவே கொள்ள வேண்டும்.

பிரத்யய ஸர்வோபி மித்யா , பிரத்யயித்வா ஸ்வாப்ந பிரத்யேவது – நமக்கு ஏற்படுகிற அனைத்து ஜ்ஞானமும் –
ஸ்வப்ந தர்சனம் போலே – பிராந்தியாத்மகம் என்று பௌத்தர்கள் சொல்வது.ஞானமே பிராந்தி யாத்ம்யகம் -புத்தர்கள்
ஸ்வப்னம் -சட்டி பானையில் மாவு -தரித்ரன் கதை –
அத்வைதிகளும் ஒரு விதத்தில் இதை ஏற்றுக் கொள்கின்றனர்.

ஸமர்த்தியா – சாது சப்தம் . மத்வாச்சாரியார் ஒரு இடத்தில் அதை
ஸமர்தயித்வா என்பதாக-அசாது சப்தம்- வியாகரண விருத்தமாக சொல்லி இருக்கிறார்.
அதற்கு வியாக்கியானம் செய்ய வந்த அவர் சிஷ்யர்களில் ஒருவர் அது தவறான பிரயோகம் இல்லை.
தான் ஒரு ரிஷி என்பதைக் காட்டிக் கொள்ள, ஹார்ஷ பிரயோகமாக எழுதினர் என்பதாக விளக்கம் தந்தார் .
ஆனால் அது உண்மையில் அபாணிணீயமே.

இது போல நம்முடைய பூர்வாச்சார்யார்கள் ஏதாவது இடறிச் சொன்னது உண்டா? என்றால்,
ஸ்வாமி தேசிகன் தத்வ முக்தா கலாபத்தில் – பூ பிரமண வாத பகுதியில்,
பூமியை சூரிய சந்திர தாரகைகள் சுற்றி வருவதாக காட்டுகிறார்.
இது தற்கால விஜ்ஞான இயல்படி தவறு.
ஆனால் அந்த காலத்தில் பொதுவான நம்பிக்கை அதுவே ஆகையால், குற்றம் சொல்ல முடியாது.

முடிவாக கூறப் போனால் , சொல்லப்பட்ட உதாரணத்தைக் காட்டிலும்,
அத்தால் விவரிக்கப்பட்ட அத்யாத்ம விஷய சந்தேசமே கிராஹ்ய உசிதம்.

——————

ஸூத்ரம் : 2-1-6 த்ருஸ்யதே து ::

அக்நி என்கிற தத்வம் வார்த்தை என்பதாக மாறி வாய்க்குள் போயிற்று.
சூரியனானவன் பார்வையாக மாறி கண்ணுக்குள் பிரவேசித்தான்.
இது எப்படி சாத்தியம் என்றால் அந்தந்த வஸ்துக்களுக்கு அபிமாநி தேவதை பிரவேசித்தாக கொள்ளவேண்டும் என்பதாக

அபிமாநி வ்யபதேஸஸ் து விசேஷ அநுகதிப்யாம்- ஸூத்ரம் 2-1-5 ல் பூர்வ பக்ஷம் பார்த்தோம்.

இனி சித்தாந்த சூத்திரங்கள்:
த்ருஸ்யதே து –
து சப்தம் பூர்வ பக்ஷத்தை மறுப்பதாகும். ஸாலக்ஷிண்யம் இல்லாத காரணத்தால்
ஜகத்துக்கும் – பிரஹ்மத்துக்கும் காரிய – காரண பாவம் சொல்ல முடியாது என்பது கிடையாது.
த்ருஸ்யதே –
அபவாதங்கள் (exceptions) பார்க்கிறபடியாலே. சில இடங்களில் காரியத்தில், காரணம் தென்படுகிறது.
கட, பட , ஸ்வர்ண ஆபரணாதிகள். சில இடத்தில் புலப்படுவதில்லை.
கோமயத்தில் கிருமி. அரிசி மாவில் சக்காம் பூச்சி. ஊர்ணநாபியும் சிலாந்திக் கூடும். ஒன்று யதார்த்தம். மற்றோன்று விதி விலக்கு.
இரண்டுமே அனுபவத்தில் காணக் கிடைக்கிற படியால் விலக்ஷணயோர் காரிய காரண லக்ஷணாத் – அபவாத உதாரணத்தின் படி,
ஸாலக்ஷிண்யம் இல்லாத ஜகத்துக்கு, பிரஹ்மம் காரணம் ஆகக் கடவது.

பிரஹ்மம் சித் வஸ்து. அதனிடத்திலிருந்து சித் அம்சமுடைய காரியம் – ஸாலக்ஷிண்யத்தோடே – வெளிப்பட்டது என்றால். சரிதான் .
அது போலவே பிரஹ்மத்திடத்தில் அசித் அம்சம் இருக்க, அது – விலக்ஷண அம்சமுடைய – பிரக்ருதியாக வெளிப்பட்டது என்று சொல்வது சரிதான்.
பதார்தத்வம் – என்கிற குணம் உலகத்தில் எல்லாப் பொருள்களிலும் இருப்பது. அந்த வகையில் ஸாலக்ஷிண்யம் என்பது
எல்லா அம்சத்தில் இல்லா விட்டாலும் இந்த பதார்த்தத்வம் என்கிற அம்சத்தில் எல்லா பொருள்களிலும் இருக்கக் கூடியதே.
பதார்தத்வமாவது வாச்யத்தவம் (namability) ஞேயத்வம் (knowability) இது எல்லா வஸ்துக்களும் பொதுவான தர்மம்.
பெயரில்லாத பொருளே இல்லை. பொருள் இல்லாமல் பெயரும் இல்லை.
இந்த நாம ரூப அவினா பாவ சம்மபந்தம் அஸ்தித்வ பிரதீதி.
இல்லாத பொருளான முயல் கொம்பு, ஆகாச தாமரை என்கிற பொருள் கிடையாதாகையால், தனிப்பட பெயரும் இல்லை.
Every day is not a Sunday. But Sunday is a day.

நாமத்துக்கு பாணினீய வியாகரணம். ரூப வியாகரணம்
கணாத பாதராயணே நியாய சூத்திரமும், வேதாந்த சூத்திரமும்.
நமக்கும்,பரமாத்மாவுக்கும் வாச்யத்வம், ஞேயத்வம் இரண்டும் உண்டு.
அதனாலேயே நாமும், பரமாத்மாவும் ஒன்று என்று சொல்லி விடலாமா? என்றால் முடியாது.
பல அம்சங்கள் பொதுவானாலும், ஒரு அம்சத்தில் வேறுபாட்டு கண்டாலும் சாம்யம் சொல்லப் போகாது.
உத்ஸர்கம் = general rule . அபவாதம் = exception , exemption . ஆக, காரிய காரண பாவத்துக்கு உத்ஸர்க நியமம் வேண்டியது தான்.
ஆனாலும் அதற்கு அபவாதங்கள் உண்டு. பிரஹ்மம் விலக்ஷண ஜகத்துக்கு உபாதான காரணம்தான், இந்த அபவாத தர்சனத்தாலே.

——————–

த்ருச்யதே–non resemblance is not detterant for a cause to become effect of some thing

ஸூத்ரம் :: 2-1-7 அஸத் இதி சேத் ந, ப்ரதிஷேத மாத்ரத்வாத் ::

ஸத் காரிய வாதம் vs அஸத் காரிய வாதம் :
சாங்கியன், வேதாந்தி vs பௌத்தன், தார்கிகன்.
(உபாதான) காரணே காரியம் ஸூக்ஷ்ம ரூபேண பூர்வமேவ ஸது. =
காரியம் (The effect ) காரணத்தில் (exits in the cause) முன்னமே (ஸூக்ஷ்ம ரூபத்தில் = before it manifests)
இருக்கிறது என்பது ஸத் காரிய வாதம்– எண்ணை எள்ளில் இருப்பதுபோல.
நல்லெண்ணை வேண்டி மணலை செக்காடுவார் உண்டோ? காரணத்தில் இல்லாதது காரியத்தில் வெளிப்படாது என்பது இதன் பொருள்.
அவ்விதத்தில் எள்ளு எண்ணைக்கு உபாதானம்.
இக்ஷு ஸூத்ர திலா தைலம் மர்த்தனம் குண வர்த்தனம். கரும்பையும், எள்ளையும் நைய தகைத்தால் அல்லது
ரஸம், எண்ணை ஒட்டின்றி வெளிப்படாது போலே , வேலையாட்களையும் கண்ணும் கருத்துமாக ஆதரித்தால் அன்றி வேலை சிறப்பாக முடியாது.
பௌத்தர்களுடைய அஸத் காரிய வாதம் இங்கு பிரசக்தமில்லை. தார்க்கிகர்கள் சொல்லுகிற அஸத் காரிய வாத மாவது :
மண் உருண்டையில் கட, ஸராவ கஜ, சிம்ம உருவங்கள் முன்னமே இருப்பது தான் வெளிப்படுகிறது என்றால்,
கடம் செய்யாமல் கஜமோ சிம்மமோ செய்வானாகில், மற்ற கட, ஸராவங்கள் எங்கே போயிற்று?
தார்க்கிகள் இந்த மாதிரி கேள்விகள் எழுப்பி சத் கார்ய வாதம் தப்பு என்பர்
புத்தர்கள் அசத் கார்ய வாதம் வேறே காரணம் -சர்வ சூன்ய வாதிகள்-

அஸத் இதி சேத் –
இப்படி காரிய காரண பாவத்துக்கு ஸாலக்ஷிண்யம் இருக்க வேண்டும் என்பது அவசியம் இல்லை என்றால்,
நீங்கள் அஸத் காரிய வாதத்தை ஏற்றுக் கொண்டதாக ஆகுமே? என்று தார்கிகன் ஆக்ஷேபிக்க
ந –
அப்படிக் கிடையாது.
ப்ரதிஷேத மாத்ரத்வாத் –
ஜகத்து காரியம். பிரஹ்மம் காரணம். இது இரண்டுக்கும் விலக்ஷண பாவத்தை – காரியமே வேறு, காரணமே வேறு
என்பதாக ஏற்றுக் கொண்டால், காரியம் காரணத்தில் ஸூக்ஷ்ம ரூபத்தில் இருக்கிறது என்கிற, வேதாந்த சாஸ்திரத்துக்கு உயிரான,
ஸத் காரிய வாதம் பொய்த்துப் போகும். அத்தால் பரிணாம வாதம் சொல்ல முடியாது. அதனால் என்ன? என்றால்
ஸூத். 1-4-26 – ஆத்ம க்ருதே:
ஸூத். 1-4-27 – பரிணாமாத்
என்கிற முதல் அத்யாயம், 4 ஆம் பாதம் இரண்டு ஸூத்ரங்களுக்கும் விரோதம் வரும்.
தார்க்கீகர்களுடையது ஆரம்ப வாதம்.

அத்யாய வேதாந்தம் vs நியாய வேதாந்தம் – Attempt to learn without exposure to Niyaya Theories.
பகவத் விஷய காலக்ஷேபம் vs நிர்மூல காலக்ஷேபம் – without knowing the திருவாய்மொழி Pasurams.

கிம் நாம காரணத்வம்? – காரிய நியத பூர்வ வ்ருத்தி காரணம்.
கிம் நாம காரியத்வம்? – பிராஹ பாக பிரதியோகித்தவம் காரியத்வம்.
தர்க்க சாஸ்திரத்தின் படி காரணம் 3 வகைப்படும்.
ஸமவாயி காரணம்.
அஸமவாயி காரணம்
நிமித்த காரணம்.
வேதாந்த சாஸ்த்திரத்தின் படி காரணங்கள்
உபாதான காரணம்
நிமித்த காரணம்
சஹகாரி காரணம்.
உத்பத்தி மத்வேத் து நாசவத்வம். That which has come into existence will meet destruction. இதையே காதாசித்கம் –
கதாசித் வித்யமானத்வே சதி கதாசித் அவித்யாமனத்வம் என்பர் . தோற்றம் முடிவு உடைய அநித்திய வஸ்து விசாரம்.
வஸ்துவினுடைய தோற்றம் மறைவு சொல்லும் போது எள்ளில் இருந்து எண்ணை கிடைப்பது என்பது பரிணாமம் .
காரணத்தில் இருப்பது காரியமாக வெளிப்படுது பரிணாமம் .
Compound / Mixture / Assembled item
பல பாகம் / பகுதி / உறுப்புகளோடு
தோற்றம் / படைப்பு / உண்டாவதற்கு முன்
ஸூக்ஷ்ம ரூபத்தில் அந்த பொருளாகவே இன்னொரு காரணத்தில் இருந்தது என்று எப்படிச் சொல்வது?
ஏனென்றால், பல காரணத்தில் இருந்து தோன்றிய பல அவயவ-அவயவி ஸம்மேளனம் தானே அது ? என்கிறது ஆரம்ப வாதம்.
இப்படியாக யுக்தி ஜால ஜடிலம் இந்த காரண காரிய விஷயம்.

———————

ஸூத். 2-1-8 :: அபீதௌ தத்வத் பிரஸங்காத் அஸமஞ்சஸம் ::

திலேப்ய : தைலம் நது ஸிகதாப்ய : திலத்தில் தைலம் ஸூக்ஷ்ம ரூபமாக முன்னமே இருக்கிறது என்பது தான் ஸத் காரிய வாதம்.
அபீதௌ = பிரளயம் – ஸ்ருஷ்டிக்கு பூர்வரங்கம் (precurser) பிரளயம். பிரளயத்துக்கு பூர்வரங்கம் ஸ்ருஷ்டி.
ஸது ஏவ சௌம்ய! இதம் அக்ரே ஆஸீத் – ஸ்ருஷ்டிக்கு பூர்வ காலத்திலே , இந்த ஸத் சப்த வாச்சயமான தத்வம் ஒன்றே இருந்தது.
ஏகமேவ அத்வைதம்
ஆத்மவா இதம் ஏகயேவா அக்ர ஆஸீத் ந அந்யத் கிஞ்சந மிஷது
அக்ரே – என்பதற்கு long back என்றும் பொருள் படும் . distant future என்றும் பொருள் படும்.
ஆஸீத் என்கிற பூதகால கிரியா பதத்தோடு சேர்ந்த வருமானால் வெகு காலத்துக்கு முன்பாக என்று பொருள் படும்.
பவிஷ்யத் கால பிரயோகமானால், வருங்காலத்தை குறிக்கும். (முந்தே இந்தே-இவை கன்னடத்தில் தமிழ் மாறி இருக்குமே )
ஒருவேளை, அது அபிவியக்கத்த மாவதற்கு முன்பாகவே ஸூக்ஷ்ம ரூபத்தில் – தைலம் எள்ளில் – இருக்கிறது, என்று சொன்னால்

தத்வத் பிரஸங்காத் அஸமஞ்சஸம் –
சில அனு பபத்திகள் வந்து சேரும் என்பதாக பூர்வ பக்ஷம்
அதாவது ஸ்வர்ண இவ குண்டல கதாஹா விசேஷாஹா இதி கார்ய கதா அம்ஸார்த்தா பிரஹ்மணி பிரஸக்தேவ –
ஆபரண பொன்னை உருக்கி எடுக்கும் போது செப்பு கலந்த பொன் தானே கிடைக்கும்.
அதுபோல தோஷ பூயிஷ்டமான ஜகத்து பிரளயத்தில் ப்ரஹ்மத்தோடு சங்ககமிக்கும் போது,
அந்த தோஷம் பிரஹ்மத்துக்கும் தட்டாமல் போகாதே ? . இது
யஸ் ஸர்வஜ்ஞ சர்வ விதுஹு
யஸ்ய ஜ்ஞான மயம் தப : – முண்டகோபநிஷத்
அபகத பாப்மா விஜரோ விமிருத்யுஹு – சாந்தோக்ய உபநிஷத்
ந தஸ்ய கார்யம் கரணம் ச விஞ்யதே நதத் ஸமஸ்யாத் அப்யதிகத் திருஸ்யதே – ஸ்வேதா ஸ்வேதர உபநிஷத்
தாயோர் அந்யத் பிப்பலம் ஸ்வாத் அத்தி அனஸ்நந் அந்யோ அபிஸாகஷீதி
என்று நிர்துஷ்ட பிரஹ்மமாக சொல்கிற வேதாந்த வாக்யங்களுக்குச் சேராதே?
ஆகையால் ஜகத்துக்கு பிரஹ்மம் உபாதான காரணம் ஆக முடியாது என்பதாக பூர்வ பக்ஷம்- பிரபல ஆக்ஷேபம்.

மாயாம் து பிரக்ருதிம் வித்யாம் மாயினம் து மஹேஸ்வரம் :

மாயை உலகின் முதல் தனி வித்தேயாய்
சேயை வயிற்றுடை தாயைப்போல் — இவையாவும்
கூறு கொள் உன் பொன் மேனிக் கேறா விகாரமதைக்
கூறுவார் மாய மயக்கு.

ஆத்ம-பரமாத்ம சாஷாத்காரம் என்பது ஆத்ம பரமாத்ம யதாத்ம்ய ஜ்ஞானம் .
அதைப் பெறுவது என்பது அத்தனை சுலபமானது அல்ல. அதுவே இல்லாமல்

விஷ்ணோர் லோக: வீக்ஷிதோவா தத கிம் ?
ஸம்போர் லோக: சாஸிதோவா தத கிம் ?
பிராதுர் லோகா லங்கிதோவா தத கிம் ?
ஏன ஸ்வாத்மா ஸாக்ஷிதோ ந பூத்? — ஆதி சங்கரர்.

சிருஷ்டியின் போது காரியத்தைக் காட்டிலும் காரணம் விலக்ஷணமாக இருக்கலாம் என்பதை ஒருவேளை ஒத்துக் கொண்டாலும்,
மீண்டும் பிரளயத்தின் போது காரியங்கள் காரணத்தில் லயம் அடையும்போது, இப்போது மணக்கிடைக்கிற வைஷம்யம் ,
பிரஹ்மத்திடத்தில் சங்கமிக்குமே , அது அந்த பிரஹ்மத்துக்கு தோஷம் ஆகாதோ? என்கிற பூர்வ பஷ ஆக்ஷேபதத்துக்கு , விசிஷ்டாத்வைதிகள்
அவாந்தர உத்தரமாக குறிப்பிடுவது –
எப்படி சரீரத்துக்குண்டான ஸ்த்ரீத்வம், பும்ஸத்துவம், நபும்சகத்வம் சரீரத்துக்கு மட்டுமேயாய் – அதாவது
ஒரு புருஷன் மரணமடைந்து மறுபடி பிறப்பதாகில், புருஷனாகவே பிறக்க வேண்டும் என்கிற நியமம் இல்லையாய் –
இந்த லிங்க பேதங்கள் ஆத்மாவிடத்தில் கிடையாது என்பது போல,
பிரஹ்மத்துக்கு சரீரமாக இருக்கிற சிதசித் வஸ்து தோஷங்கள், ஆத்மாவான பிரஹ்மத்தின் பக்கல் தட்டாது என்ன
சாங்கியர்கள் பலவிதமான ஆக்ஷேபங்களைக் காட்டி ஜகத்துக்கும்-பிரஹ்மத்துக்கும் சரீர-சரீரி பாவத்தை சொல்லப் போகாது என்பதாக
விசிஷ்டாத்வைதி சொன்ன சமாதானத்தை நிராகரித்தனர்.

1. லோகத்தில் சரீரம் என்றால், அது பாஞ்ச பௌதிகமாய் இருக்கிறதை பார்க்கையாலே, பிரஹ்மத்துக்கு ஆத்மா சரீரம் என்றால்,
ஜீவாத்மா பாஞ்ச பௌதிகமா? இல்லையே.
2. வேதங்களில் பல இடங்களில், பிரஹ்மம் அசரிரீ யாகத்தானே சொல்லுகிறது –அபாத பாநெள ஜவ நா கிருஹீதா – கடோபநிஷத்
3. ஆத்மந : போகாயதனம் சரீரம். ஆத்மா அநுபவங்களை பண்ண சரீரம் அதற்கு அவசியம்.
அந்த சரீரம் ஸ்தூல சரீரமாக, ஸூக்ஷ்ம சரீரமாக, காரண சரீரமாக இருக்கலாம்.
பொறி இந்திரியங்கள் (Motor organs) ஜ்ஞான இந்திரியங்கள் (Sense organs) கொண்டு தான் பாப-புண்யங்களின் அநுபவம் அதற்கு சாத்தியம்.
ஆனால் அசித்தானது திருண, காஷ்ட ஸ்வரூபமாயும்
சித்து எனப்படுகிற ஆத்மா ஞான ஸ்வரூபமாயும்
அவைகளுக்கு இப்படிப்பட்ட இந்திரிய அமைப்பு இல்லையாய் , அவை பரமாத்மாவுக்கு சரீரம் என்று எப்படி சொல்வது?

தேக-ஆத்ம (அ ) சரீர-சரீரி பாவம் என்று சொல்லும்போது, சரீரம் என்பதற்கு பொருள் என்ன?
சரீரம், தேஹ: வர்ஷ்மம், வபு: விக்ரஹம் என்று பல சொற்களால் குறிக்கப் படுவது உடல் .
ஆனால் தாது பாடத்தைக் கொண்டு பார்க்கும்போது அவை பலவிதமாக பொருள் படுகின்றன.
திஹ – உபசயே என்று வளரக்கூடியது. குழந்தைப் பருவம் முதல் யுவா பருவம் வரை அது வளர்ந்து செல்கிறது.
சுமார் 25 வயது வரையான – அந்த காலத்துக்கு உண்டான உடலுக்கு தேகம் என்று பெயர்.
சீர்யதே – இதி சரீரம். பிறகு 45 வயத்துக்கு மேற்பட்ட அது அபக்ஷீயதே என்று குறைய – நலிவடையத் தொடங்குகிறது.
எனவே இந்த காலத்திலான உடலை சரீரம் என்கிறோம்.
இப்படி இந்த சொற்கள் உடலினுடைய வேறு வேறு dimention பற்றி சொல்கின்றன.

நியாய ஸூத்ரத்தின் படி சரீரம் என்றால் –
சேஷ்டா, இந்திரிய, ஆத்ம ஆஸ்ரய : சரீரம். அதாவது உயிரோடு கூடி நடையாடுவது (that which has activity).
கர்ம-ஞான இந்திரியங்களுக்கு இருப்பிடமாக இருப்பது சரீரம் என்பதாக. மற்றுமொரு விளக்கம் –
ஆத்மந : ஸுக – துக்க போகாயதனம் சரீரம்.
சரீரம் என்கிற உபகரணம் இல்லாமல் எந்த ஆத்மாவும் சுக, துக்கங்களை அனுபவிக்க முடியாது.
நஹவை ஸசரீரஸ்ய ஸத : பிரயாப்பிரியயோர் அபஹதிர் அஸ்தி
அசரீரம் வா அனந்தம் வா பிரயா ப்ரியேண ஸ்ப்பிரத :
எப்படி சுக துக்கங்களை அனுபவிக்க ஒரு சரீரம் அவஸ்யமாகிறதோ,
அதுபோல சரீர சம்பந்தம் இருக்கும் வரை சுக துக்கானுபவம் விலகாது.
நமக்கு உள்ளது ஸ்தூல சரீரம். மரண காலத்தில் தேகத்தை விட்டு இந்த ஆத்மா பிரிந்து செல்லும்போது அது ஸூக்ஷ்ம சரீரமாய்,
நரகானுபவம் பண்ண நாரகீ (=நரக சம்பந்தி) சரீரமும், ஸ்வர்கானுபவம் பண்ண திவ்ய யாதநா சரீரமும் பெறுக்கிறான்.
காரண சரீரம் ? சரீராத்ம வாதம் – சரீரமே ஆத்மா – தேக அதிரிக்த ஆத்மா இல்லையாக நம்புவது.
தேகாத்ம வாதம் – நில புலன்களில் வைக்கும் அதீத பற்று. தான் இறப்பதாயினும், சொந்த வீட்டில் இறக்க வேண்டும்
என்பது போன்ற நினைவு. அப்படி யில்லாமல் அதற்கு ஹானி ஏற்பட்டால், பிராணன் விடும்படியான பற்று.
புத்ராத்மா வாதம் – பிள்ளையை தன் சரீரத்திப் போலே நேசிப்பது.
பரகாய பிரவேசம் – மண்டல மிஸ்ரர் Vs. ஆதி சங்கரர்

ஆதி சங்கரருக்கு முன்னோடியான குமாரித்த பட்டர், பௌத்தர்களோடு பௌத்தனாக இருந்து கொண்டு,
அவர்களுடய தர்க சாஸ்திர யுகத்திகளைக் கற்று, பிறகு அவர்களோடு வாதம் செய்து
அத்வைத சித்தாந்தத்தை முன்நிறுத்தினார் என்பதாக ஒரு வரலாறு.
அவருடன் வாதம் செய்ய சங்கரர் சென்றபோது, அவர் , தாம் செய்த குரு துரோகத்துக்கு பிராயச்சித்தமாக,
குஸா – அக்நியுள் (நெல் உமியைப் பரப்பி, அக்கினியை மூட்டி அதனுள் இறங்கி, பிராணத் தியாக பண்ணுவது) பிரவேசிக்க கிடக்க,
தன் சிஷ்யனான மண்டல மிஸ்ரரிடம் வாதம் செய்து தினவு அடங்கலாம் என்று சொல்ல,
சங்கராச்சாரியாரும் அவரிடத்தில் சென்றபோது, அவர் உமக்கு ஸ்த்ரீ ஸம்யோக அனுபவம் உண்டா? என்று கேட்டு அதில்லையாகில்,
அதை தெரிந்து வாரும் என்று சொல்ல, சங்கரரும் ஒரு மிருத ராஜாவுடைய சரீரத்தில் பரகாய பிரவேசம் பண்ணி,
ராணியோடே போகங்களை அனுபவித்து, பிறகு திரும்பி வந்து அவரோடே வாதிட்டு வென்றார் என்பதாக
சங்கர விஜயம் என்கிற நூலில் கதை சொல்லப் படுகிறது. இப்படி எல்லாம் செய்வது என்பது சித்தி பெற்றவர்கள் சாமர்த்தியமாகும்.

இத்தகைய சித்தி எல்லாம், ஆத்மாவுக்கு ஹானி என்பதாக சொல்ல வந்த இடத்தில்
ஜென்ம, ஒளஷத, மந்த்ர, தபஸ் ஸமாதி கா சித்தைய : ஸமாநௌ உபசர்கா: என்பதாக யோக சூத்ரம் காட்டுகிறது. அது நிற்க.
பகவானுக்கு, சுக துக்கங்கள் கிடையாது என்று சொல்கிற பக்ஷத்தில்,
சித்தும்-அசித்தும் அவனுக்கு சரீரம் என்று சொல்வது எப்படிப் பொருந்தும்?
சுக-துக்க போகாயதனம் சரீரம் என்று அல்லவோ சரீரத்துக்கான லக்ஷணம் சொல்லப் படுகிறது.
இப்படிப்பட்ட காரணங்களால், சிதசித்துக்கள் பகவானுக்கு சரீரமாகின்றன என்று செல்லுவது ஒவ்வாது என்பதாக சாங்கியர்களுடைய ஆக்ஷேபம்.

இதற்கு விசிஷ்டாத்வைதிகள் சரீர லக்ஷணத்தை
யதிச்சா தீன ஸ்வரூப ஸ்திதி பிரவிருத்தி யது தத் தஸ்ய சரீரம்
என்பதாக விளக்கிக் கூற , அதுவும் சரிப்படாது என்பதாக சாங்கியர்கள் கூறும் காரணங்கள் மீண்டும்
1. உயிர் கொல்லி நோய்களால் பாதிக்கப் பட்டவனுடைய வியாபாரங்கள், அவனுடய ஆத்மாவினுடைய பிரேரிதமடியாக
இல்லாது, எதிர்மறையாக செயல் படுவதும்;
2. மிருத சரீரத்தில் ஆத்மாவானது புறப்பட்டு சென்ற பிறகு, அதனுடைய சத்தா பிரவிருத்திகள் அதன் அதீனத்தில் இல்லையாய்,
அத்தை சரீரம் என்றே சொல்லுகிற படியாலும் –
3. ஜீவன யோனி யந்தம் (heart beat), உஸ்வாச நிஸ்வாசங்கள் (breathing) etc ஒருவனுக்கு கர்மாதீனாய் பரமாத்மதீனம், ஆத்மாதீனம் அன்று.
4. ந ஹன்யதே ஹன்யமானே என்று நித்தியமான வஸ்துவுக்கு காரணம் உண்டா?
ஜீவாத்மா, பரமாத்மாவுக்கு சரீரம் என்ற கணக்கிலே அவனுக்கு ஆதீனம் என்று எப்படி ஆகும்?
5. போஜ ராஜன் கதையில், விக்ரமாதித்யன் சிம்மாசனத்தின் படியில் இருந்த சால பஞ்சிகா என்கிற பதுமை பேசியதாக வருகிறதே –
உங்களுடைய விளக்கத்தின்படி – அது எப்படி கூடும்?
6. வேதமும் பிரஹ்மத்துக்கு சரீரம் கிடையாது என்பதை
அசரீரம் சரீரேஷு அநவஸ்தேஸ் அவஸ்திதம் என்றும்
அபாணி பாதௌ ஜவனோ க்ருஹீதா – ஸ்வேதாஸ்வேதர உபநிஷத்தும்
சொல்லுகிற படியால் சித்தசித் தத்துவங்கள் பகவானுக்கு சரீரம் என்று சொல்வது அநுபபன்னம் என்கிற
பூர்வ பஷ ஆக்ஷேபங்களை நிராகரிக்கும் வண்ணம் ஸூத்ரகாரர் வாக்கியம்

——————–

ஸூத்ரம் : 2-1-9 : ந து த்ருஷ்டாந்த பாவாத் ::

Philosophy without Religion is lame
Religion without Philosophy is blind.
Plato, Aristotle Philosophies are unconnected to Religion.
Christianity and Islam are Religions without Philosophy.
Advaita philosophy speaks of Pala without Sadhana while-அஹம் ப்ரஹ்மாஸ்மி சாதனம் வராதே-
Dwaita philosophy is only a copy of Bhagavath Ramanuja’s Srivaishnavam
combining both philosophy (ஸாஸ்திரம்) and Religion (ஸம்பிரதாயம்) to be crowned as Philosophy of Religion.
ஸ்ரீ பாஷ்யம் ஒரு சமுத்திரம் -பல விஷயங்களையும் ஆழ்ந்து அனுபவிக்கப் பெறுகிறோம் –
ஸ்ரீ வைஷ்ணவம் – விசிஷ்டாத்வைதம் -வாசி அறிய வேண்டும் -சம்ப்ரதாயம் சித்தாந்தம் -இவை இரண்டும்-

சூத்ரம் : 2-1-9 : ந து த்ருஷ்டாந்த பாவாத் ::

நைவம் அஸாமஞ்சஸ்யம் .
கீழே சொன்ன அனுபபத்திகள் ப்ரஹ்மத்தின் விஷயத்தில் எடுபடாது. காரணம் பரமாத்ம வஸ்து அத்யந்த விலக்ஷணமானது.
இப்படிப் பட்டது என்று சப்தங்களை இட்டு சொல்லி விட முடியாது.
அப்படி வார்த்தைகளால் சொல்லுகிற பக்ஷத்தில் அவை திக் தர்சன மாத்திரமே ஒழிய அந்த பரமாத்மாவைப் பற்றி
முழுதுமாக சொல்லி முடிக்கப் போகாது.

அவி விபக்த நாம ரூபம் -ஆகவே சத்தாகவே ப்ரஹ்மம் இருந்தது என்கிறது
ஏகமேவ அதிவீதியம் – அவிபக்த நாம ரூபம் ஸத் ஸப்த வாச்ய பிரஹ்மம் கிரமேண
ஆத்ம க்ருதே : பரிணாமாது என்று பரிணாமத்தை அடைகிறது என்பதை உதாரணம் கொண்டு விளக்கும்போது
மண், நூல், தங்கம் என்று கடபடாதி அசேதனமான வஸ்துக்களைக் கொண்டு கோடி காட்டுகிற திருஷ்டாந்தத்தில் உள்ள
எல்லா அம்சங்களும், திராஷ்டாந்திகமான பரம சேதனனான பரமாத்ம விஷயத்தில் பொருந்தாது.
நம்முடைய அளவுபட்ட புத்தியைக் கொண்டு அபரிமிதமான பரமாத்ம வஸ்துவை தெரிந்து கொள்வது என்பது முடியாது.

ந மாம்ச க்சக்ஷுஹு அபிவீக்ஷதே தம் என்று பேசப்பட்ட அந்த பிரஹ்மத்தை சாஷாத்கரிக்க
தபஸா பிரஹ்ம விஜிக்ஞாஸஸ்வா – இங்கு தபஸாவது நெஞ்சென்னும் உட்கண்ணால் காணும் உணர்வு.
பக்தியா அனன்யா ஸக்கியா அஹம் ஏவம் விதோர்ஜுணா ஜ்ஞாதும் – கீதை .
நாஹம் வேதைஹி ந தபஸா ந து இஜ்யயா
யமே யேந வ்ருணுதே தேந லப்யா
நாயமாத்மா பிரவசநேன லப்ய : ந மேதயா ந பஹுநா ஸ்ருதேந
என்கிற வசனங்கள் ஒன்றுக்கு ஒன்று விரோதம் போல தோற்றினாலும், அதிகாரி பேதேந யாருக்கு எந்த சந்தர்பத்தில்
சொல்லப்பட்டன என்பதை பொருத்து அனைத்துமே பிரமாணம்.

பிரக்ருதத்தில், தோஷ பூயிஷ்டமான சித்தும் அசித்தும் பகவானுக்கு சரீரம் என்று சொல்கிற பக்ஷத்தில்,
அதனுடைய சங்கோச, விகாச தோஷங்கள் ஆத்மாவான பகவானுக்கு தட்டாதோ? என்கிற பூர்வ பக்ஷம் ஆக்ஷேபத்துக்கு
அவை அந்வயிக்காது என்பதை சரீர-ஆத்ம உதாரணத்தை இட்டே பரிகரிக்கலாகிறது.

தேவ, மநுஷ்ய சரீரத்துக்குண்டான ஷட் பாவ விகாரங்கள் எப்படி க்ஷேத்ரஜ்ஞனான ஆத்மாவில் பரிணமிப்பது இல்லையோ அதே போல
ஞானாநந்தங்களான ஆத்ம குணங்கள் அதன் சரீரத்துக்கு கிடையாதோ அங்கனே ஸ்ருஷ்டி, லய காரிய காரண பாவங்கள்
பகவத் சரீரமான சித் அசித்துக்கு அந்வயிப்பது அன்றி, அவருடைய ஆத்ம ஸ்வரூபத்துக்கு இல்லையாய் அநித்யத்வாதி தோஷங்கள்
பரமாத்மா விஷயத்தில் பிரஸக்தமில்லை . அதாவது சரீரகத தர்மங்கள் ஆத்மாவிலும், ஆத்மகத தர்மங்கள் சரீரத்துக்கும் அந்வயிப்பதில்லை.

பூர்வ பக்ஷம் சொல்கிற சரீர ஸ்வரூபங்கள் கிருமி, கீடங்கள், பசு, பக்ஷிகள், நரர்கள் விஷயத்தில் ஒருபட இல்லையாய்
கர்மானுகுணமாக விவித ஆகாரத்தில் உள்ளதைப் பார்க்கிறோம். பகவானோ கர்மாதீதன். கர்மத்யக்ஷன் என்ற காரணத்தால்
சுக துக்க போகாயதனம் சரீரம் என்கிற வின்யாசம் பகவத் விஷயத்தில் சேராது. தவிர
ஈஸ்வரஸ்ய இச்சா கிருஹீத அபிமத உரு தேஹ : என்று அவனுடைய திருமேனி அபிராக்ருத திவ்ய மங்கள விக்ரஹம்.
அத்தால் கர்மபல போக ரூபமாக இருக்கிற சுகதுக்கங்கள் அவனைத் தீண்டுவதில்லை.
ஸ ஏகதா பவதி த்ரிதா பவதி பஞ்ச நவதாஸ்ச ஏகாதச ஸ்ம்ருத : என்று முக்தாத்மாக்களும் வேண்டுரு கொள்கிற காம்ய ரூபம் உண்டு.
கர்ம பல அபாவம் உண்டு என்று சொல்லப் பட்டிருக்கிற படியால் பூர்வ பக்ஷம் சொல்லுகிற சரீர லக்ஷ்ணம்
அவர்கள் விஷயத்தில் பொருந்தாது என்றால், பகவத் விஷயத்தில் சொல்லவும் வேண்டுமோ?
ந பூத பௌவ்ய சங்காதம் ஸ்தான : தேஹாஸ்ய பரமாத்மாந : — பரமாத்மாவுடைய தேஹம்
பாஞ்ச பௌதிகமான கூட்டறவு அல்ல என்பதாக — ஸ்ரீ விஷ்ணு புராணம்.

இந்திரியாஸ்ரயத்வம் சரீரம் என்று சொல்லப் போனால் , அகல்யை கல்லாக்கிக் கிடக்கிற போது அவளுக்கு இந்திரியங்கள்
இருந்ததாகத் தெரிய வில்லை. தேவ, மனுஷ்ய, திர்யக், ஸ்தாவர சரீரம் அனைத்தும் கர்மாதீனமாக கிடைக்கிற பூத சரீரம் ஆனாலும்,
பாப, புண்ய தாரதம்யமடியாக தேவர்களுக்கு புண்ய சரீரமும், மநுஷ்யர்களுக்கும் விலங்குகளுக்கும் பாப புண்ய மிஸ்ரமான சரீரமும் என்றாலும்,
மநுஷ்யர்களுக்கு வாக் இந்திரியம் புண்யத்தின் மேலீட்டாலும் , விலங்களுக்கு அது இல்லாமை பாபங்களின் மேலீட்டாலுமாய்,
தாவரங்கள் முழுவதும் பாப சரீரமாய், இந்திரிய வர்ஜிதங்களாய் படைக்கப்பட்டவைகளாகும்.

இதற்கு ஏற்ப நிஸ்கிருஷ்ட சரீர லக்ஷணம் சொல்லுகிற எம்பெருமானார்
யஸ்ய சேதநஸ்ய யத் திரவ்யம் ஸர்வாத்மநா ஸ்வார்த்தே நியந்தும், தாரயிதும் ச ஸக்யம் –
தத் சேஷதைக ஸ்வரூபம் ச – தத் தஸ்ய சரீரம் – என்கிறார்.
ஸ்வார்த்தே-for his own sweet will-
நியந்தும், தாரயிதும்- control and sustain-

சித் தத்வம், அசித் தத்வம் பகவானுக்கு சரீரமென்பது இந்த லக்ஷணத்தின் படி சம்பூர்ணமாக எப்படிப் பொருந்துகிறதோ
அதுபோலவே பத்தாத்ம சரீரத்துக்கும் பொருந்தக் கூடியதே, ஆனால் மனுஷ்ய சரீரத்துக்கு உண்டான
பிணி, மூப்பு, இறப்பு இவை க்ஷேத்ரஜ்ஞனான ஆத்மாவின் நியமத்தில் இல்லையே என்றால்,
அது கர்ம பிரதிபந்தகத்தால் அந்த சக்தி சாமர்த்தியம் அளவுபட காண்கிறது என்பதே உண்மை.
சந்த்ரகாந்தா மணி -அக்னி -தஹிக்காதே -தகிக்கும் சக்தி உண்டே
ரோகம் வந்த சரீரம் ஆத்மாவால் நியமிக்க முடியாதது இது போலே -exception-

மிருகத்தினுடைய லக்ஷணம் சொல்லும் போது தனிப்பட்ட அடையாளத்தை சொன்னால் போதும். –
மாட்டுக்கு கழுத்துக்கு கீழ் உள்ள தொங்கு சதை- சாஸ்னா .
யானைக்கு தும்பிக்கை.
இப்படி லக்ஷணங்களைச் சொல்லும் போது 3 விதமான தோஷங்கள் வர வாய்ப்பு உண்டு. அவை
அதிவியாப்தி -கொம்பு உடையது மாடு என்றால் மான், ஆடு இவைகளுக்கும் கொம்பு உள்ளது. எனவே இத்தகைய லக்ஷ்ணம் over pervasive .
அவியாப்தி -கருப்பு வர்ணம் லக்ஷ்ணம் என்றால், வெளுப்பு இன்னும் பல பல வர்ணங்களில் மாடு உண்டு . எனவே இது non-inclusive
அஸம்பவம் – கொம்பு உடையது முயல் என்றால் அது non-existent .

ஆத்மன: ஸுக துக்க போகாயதனம் சரீரம் என்று சொல்கிற விவரணம் அவியாப்தி தோஷத்தோடு கூடியது .
சரியான லக்ஷ்ணம் தான் என்ன என்றால் பகவத் ராமாநுஜர் காட்டுவது

யஸ்ய சேதநஸ்ய யத் திரவ்யம் ஸர்வாத்மநா ஸ்வார்த்தே நியந்தும், தாரயிதும் ச ஸக்யம் – தத் சேஷத்தைக ஸ்வரூபம் ச – தத் தஸ்ய சரீரம் –
ஸர்வம் பரம புருஷேண ஸர்வாத்மநா ஸ்வார்த்தே நியாமியே தார்யம் , தத் சேஷத்தைக ஸ்வரூபம் —என்கிறார்.
ஸ்வார்த்தே – தனக்காக – out of His sweet Will – அப்படியானால் அவனுடைய அவாப்த ஸமஸ்தகாம்தவம் என்னாகும்?
இல்லை. நமக்காக, என்றால் – ஜகத்தை துக்க மயமாக ஏன் ஸ்ருஷ்டிக்க வேண்டும் ? என்ற கேள்வி பிறக்கிறது.
இவர்களுக்கான பதில் மேலே சொல்லப் பட்டாலும்

ந தே ரூபம் ந ச ஆகார: ந ஆயுதாநி ந அஸ்பதம் . .. .என்று ஜிதந்தே ஸ்தோத்திரத்தில் சொல்லப் பட்டுள்ளதே –
அப்படி இருக்க சித் அசித் வஸ்துக்கள் அவனுக்கு சரீரம் என்று சொல்வது எப்படிப் பொருந்தும்? என்றால்
அச் சரீரம் என்றது நமக்குப்போல் கர்ம நிபத்த சரீரம் அவனுக்கு இல்லை என்று தான் கொள்ள வேண்டும்.
அவனுடையது அகர்ம க்ருத திவ்யம் சரீரம். திவ்ய மங்கள விக்ரகம் – திருமேனி என்றே அழைக்கப் படுகிறது.
காரணம். அவனுடையது இச்சா கிருஹீத அபிமத உரு தேஹ : . ராம கிருஷ்ணாதி அவதாரங்களில் அவன் பிறக்கும் போதும்
அவன் தன் திவ்யமான திருமேனியோடுதான் பிறக்கிறான் என்பது சம்பிரதாயம்.

மனுஷ்ய தேகம் கொண்டு சாதனம் பண்ணி பகவானைக் கிட்டலாம் என்ற ஒரு விஷயம் தவிர இவனுக்குடைய சக்தி சாமர்த்தியங்கள்
மிக மிக அற்பமானது. மநுஷ்யனுடைய பிறப்பு, இறப்பு, எங்கு, யாருக்கு பிள்ளையாக பிறக்க வேண்டும் என்பது போன்ற விஷயங்கள்
நம் ஆதீனத்தில் இருக்கிறதா? இல்லை.
அப்படி பார்க்கும் போது மனுஷ்ய சரீரம்தான் ஹேயமானது. ஆவி பிரிந்த ஆக்கையில் எறும்பு ஓட்டப் போகாது.
ஆதுவே சரீர வியோகமான ஆத்மாவுக்கு , பகவத் சங்கல்பமடியாக, எல்லா லோகங்களுக்கும் போக்க கூடிய சக்தி உண்டு.
மரணம், தகனம் ஓர் இடத்தில். உத்தர கிரியை வேறிடத்தில் என்றால், மறித்த ஆத்மா காரியம் செயக் கூடிய இடத்துக்கு
வரக்கூடுமா என்றால். முடியும். நிஸ்கிருஷ்ட ஆத்மாவுக்கு தேச கால தடைகள் இல்லை. It is out of Time and Space shackles.
பரம பதத்தில் இருப்பது போலே என்றால், அப்படி இல்லை. சம்ஸார மண்டலத்தில் எங்கு, எப்போது வேண்டுமானாலும்
செல்ல சாமர்த்தியம் உண்டு. ஒரு உடலில் இருக்கும் போது அதே ஆத்மாவுக்கு அந்த சக்தி கிடையாது.
அந்த திருஷ்டியில் தேகம் ஆத்மாவுடைய சக்தியை மட்டு படுத்துகிறது என்று தான் சொல்ல வேண்டும்.

———————-

ஸூத்ரம் ; 2-1-10 : ஸ்வ பக்ஷ தோஷாஸ்ச :

இப்படி பிரஹ்மம் தான் ஜகத் காரணம் என்று சொல்வதில் தோஷம் கிடையாது என்று நிரூபித்தது ஒரு புறம் இருக்க-.
பூர்வ பஷ சாங்கியர்கள் சொல்லுகிற பிரக்ருதி ஜகத் காரணம் என்று சொல்கிற அவர்கள் மதத்திலும் விசேஷமான தோஷங்கள் உண்டு என்பதாக.
பிரக்ருதி தத்துவத்தையும், அது பரிணமிக்கிறது என்பதை நாமும் ஒத்துக்க கொண்டாலும்,
அது பிரஹ்மாதிஷ்டிதம் என்கிற நம்முடைய சித்தாந்தத்தை அவர்கள் ஏற்பதில்லை.
அசேதனமான பிரதானம் ஜகத்தாக பரிணமிப்பதற்கான பிரவ்ருத்தி அதற்குள் எப்படி ஏற்படக் கூடும்?
காரணம் பிரவ்ருத்தி சைதன்ய காரியம். சேதன தர்மம்.

அதற்கு சாங்கியர்கள் சொல்லுகிற வாதம் –
பிரக்ருதி மேல் புருஷ சாந்நித்யமும், புருஷன் மேல் பிரக்ருதி அத்யாசமும் பிரவ்ருத்திக்கு காரணம் என்பதாக. இது ஏற்கத் தக்கதில்ல.
காரணம் இப்படி சொல்லிக் கொண்டு போனால், இதுவா அதுவா, இது சரியில்லை என்றால்
அடுத்து அது என்னவாகும் என்கிற விகல்பிய தோஷம் தான் மிஞ்சும்.
மொத்தத்தில் எப்படிச் சொன்னாலும், ஸ்வ பக்ஷ தோஷமாகிற அசேதனமான பிரக்ருதிக்கு சேதன காரியமான
பிரவிருத்தி யாரால் வந்தது என்பதை உக்திகளைக் கொண்டு விவரிக்க முடியாதாகையால்,
பிரகிருதி ஸ்வதந்திரமாக பரிணாமத்தை அடைகிறது என்பது ஒவ்வாது.

யஸ்ய சேதநஸ்ய யத் திரவ்யம் ஸர்வாத்மநா ஸ்வார்த்தே நியந்தும், தாரயிதும் ச ஸக்யம் – தத் சேஷத்தைக ஸ்வரூபம் ச – தத் தஸ்ய சரீரம் –
என்கிற சரீர லக்ஷ்ணத்துக்குச் சேர
ஸர்வம் பரம புருஷேண ஸர்வாத்மநா ஸ்வார்த்தே நியாம்யம், தார்யம், தத் சேஷத்தைக ஸ்வரூபம் ஸர்வம் சேதனா சேதனம் தஸ்ய சரீரம்.
பரமத நிராகரண பூர்வக ஸ்வமத விவஸ்தாபனம் என்கிற ரீதியில்
பரம் பிரஹ்ம அதுதான் ஜகத்துக்கு உபாதான காரணம் , நிமித்த காரணம். இந்த வாதத்தில் தோஷம் இல்லை என்பது மட்டுமல்ல.
பூர்வ பஷகளான சாங்கிய மதத்தில் தோஷம் இருக்கிற காரணத்தாலும் –. சாங்கிய மதத்தில் தோஷம் இருக்கு.
வேதாந்த மதத்தில் தோஷம் கிடையாது என்பது மட்டுமல்ல. குணமும் உண்டு என்பதால் வேதாந்த மதமே ஆதரணீயம்.

மேலே தர்க்க பாதத்தில் இது மீண்டும் விரிவாக உண்டு –
ஸர்வதா இல்லாத ஒன்றுமே இல்லையே
உளன் எனில் உளன் -உளன் அலன் எனில் உளன் –
முயல் கொம்பு இல்லை என்றால் முயலுக்கு கொம்பு இல்லை -முயல் உண்டு கொம்பு உண்டு –
ப்ரஹ்மம் கிடையாது என்று சொல்ல மாட்டார்கள் -நீங்கள் எந்த வஸ்துவை ஜகத் காரணம் என்கிறீர்களா
அதை நாங்கள் மூல பிரகிருதி என்கிறோம் –
அந்த பக்ஷத்தை இந்த குறைகளைக் காட்டி நிரசிக்கிறார்
இத்தால் நம் மதத்தில் தோஷம் இல்லை- குணங்கள் உண்டு- உங்கள் மதத்தில் தோஷம் உண்டு -என்று காட்டி அருளுகிறார்

அவர்கள் மதத்தில் உள்ள தோஷம் தான் என்ன என்றால்
பிரதான காரண வாதைஹி ஜகத் பிரவர்த்திம் நோப பத்யதே.
ஈக்ஷத் அதிகரணத்தில் இந்த விஷயம் சொல்லப்பட்டதே.
ததைக்ஷத –
தது என்று பொதுவான சொல்லால் குறிப்பிட்டதால் பிரக்ருதியா? பிரஹ்மமா? என்கிற ஆக்ஷேபம் வர –
அவ்விடத்தில் விவரிக்கப் பட்ட படி ஈக்ஷணம் என்பது சேதன தர்மம். பிரகிருதி என்பது அசேதனம் என்று
சாங்கியர்களும் ஒத்துக் கொண்ட விஷயம். அசேதன வஸ்துவுக்கு ஈக்ஷணம், பிரவர்த்தனம் ஆகியவை கிடையாதே என்ன
வத்ச விவரத்தி நிமித்தம் யதா க்ஷீரஸ்ய புருஷ விமுக்தி நிமித்தம் ததா பிரதானஸ்ய –
எப்படி ஒரு குழந்தையின் வளர்ச்சிக்கு அசேதனமான மாதாவின் பால் காரணமாகிறதோ அதுபோல அசேதனமான பிரக்ருதியிலும்
பிரவிருத்தி ஏற்படுகிறது என விளக்குகின்றனர். இந்த வாதமும் ஏற்புடைத்தல்ல.
காரணம் கட்டாந்தரையில் கற்பாரையின் மேல் அதே பாலைப் பொழிந்தால் , அது வளருமமோ ?
குழந்தை சேதனமான வஸ்து என்பதால் வளர்ந்ததே ஒழிய, பாலுக்கு பிரவர்த்திக்கிற சக்தி உண்டு என்பதால் அல்ல –
ஆக பிரவ்ருத்தி என்பது பிரக்ருதியில் உண்டாகிறது என்பதை தர்க்கத்தால் நிரூப்பிக்க முடியாது என்பதே நம்முடைய பதிலாக இருக்கும்.
இதுவே சாங்கிய மாதத்துக்கான ஸ்வ தோஷம் என்பதால்
பிரதான காரண வாதே ஜகத் பிரவர்த்திம் நோபபத்யதே . எந்த காரணத்தைக் கொண்டு பிரகிருதி என்பதில் பிரவர்த்தி உண்டாயித்து
என்ற கேள்விக்கு அவர்கள் பதில் சொல்ல முடியாது.

———————

சூத்ரம் 2-1-11 : தர்க அபிரதிஷ்டாநாத் அபி :

தர்காபிரதிஷ்டாநாத் என்று கீழே ஒரு ஸூத்தரத்தில் சொன்னதையே இங்கு மீண்டும்
தர்க்கத்தினால் மட்டும் ஒன்றை சாதித்து விட முடியாது என்பது ஏன் ?
பிரஹ்மம் தான் ஜகத் காரணம் என்று நீங்கள் எப்படி சொல்கிறீர்கள் ? என்றால் சாஸ்திர யோநித்வாத் என்று கீழேயே வந்தது.
அதன்படிக்கு வேதம் தான் பிரமாணம்.
யாதோ வா இமாநி பூதாநி ஜாயந்தே யேந ஜாதாநி ஜீவந்தி யப் பிரயம் அபிசந்தீதி தத் விஜிக்ஞாசஸ்வா தத் பிரஹ்மேதி
இப்படி சொல்லுகிற உங்கள் மத்தத்தில் பல அனுபபத்திகளை கீழேயே சொன்னோம்.
தர்க்கப்பட்டி உங்கள் வேதாந்த வாதம் நிற்காது. எங்களுடைய பிரதான காரண வாதம் தர்க்கத்தோடு ஒத்துப் போவது.
கடவுள் மனித்தனைப் படைத்தானா என்பதை விட, மனிதன் தான் கடவுளை படைத்தான் தன் சுய நலத்துக்காக
என்கிறவர்கள் உலகில் பலர் உள்ளார்களே – என்றால்
வேதாந்தம் ஆரம்பத்திலேயே சொல்கிறது ஸ்ரத்தஸ்ய சௌம்யா! என்பதாக.

பகவானுடைய அஸ்தித்வத்தை அப்படி ஒரு தத்வம் உண்டா? என்கிறவர்களுக்கு -ரிஷிகள் சொல்வது :
அஸ்தீத் யேவோ பல தவ்ய : தத் ஸ்வபாவேந சோபயோ :
அஸ்தீத் யேவோ பலத் யஸ்ய தத் ஸ்வபாவப் பிரசீததி –என்கிற சிஷ்டர்கள் வசனம் பரிகிராஹ்யம்.
சிஷ்டர்கள் தான் யார் என்றால்?
பல சாதனதா அம்சே கிராஹ்ய யோக்யா: சிஷ்டா :
இந்த காரியத்துக்கு இப்படியான பலம் என்று யாருக்கு பிராந்தி இன்றி தெரிந்து வழி காட்ட வல்லார்களோ அவர்கள் சிஷ்டர்கள்.

மஹா பாரதத்தில் யக்ஷ பிரச்சனம் முடிவில் சில கேள்விகள்:
கோ மோததே?
கிம் ஆஸ்ச்சர்யம்?
கப் பந்தா : ? (which is the path to fulfillment?) என்பதற்கு

தர்கா அப்பிரதிஷ்டா : ச்ருதயோ விபின்நா :
நைகோ ரிஷிஹி யஸ்ய மதம் பிரமாணம்
தர்மஸ்ய தத்வம் நிஹிதம் குஹாயம்
மஹா ஜனா : யேநஸ்ய கதா : ஸ பந்தா :

தர்க்கத்தால் எல்லாவற்றையும் சாதிக்க முடியாது.
வேத வாக்கியங்கள் ஒன்றுக்கொன்று முரண்பட தோன்றுகின்றன.
ரிஷிகள் வாக்கியங்களோ என்னில் , கபில மதம் வேதாந்திகளுக்கு அ பிரமாணம். ஜைமினி மதம் தவறு என்று நாமும் ,
பாதராயண மதம் தவறு என்று சாங்கியர்களும் இப்படி ரிஷிகள் சொல்வது தடஸ்தர்களுக்கு நிர்வேதம்.
அதனால் ரிஷிகள் வாக்கியங்கள் பரிதியாஜ்யமா என்றால் இல்லை.
அவர்களுக்கிடையான அபிப்ராய பேதங்கள், அதிகாரி பேதத்தைப் பார்க்க ஏற்பட்டவை என்று விளங்கிக் கொள்ள வேண்டும்.
சாங்க்ய மார்க்கம் -ஞான மார்க்கவும் உண்டே-அவ்யக்த உபாசனம் இது-யோகம் -பக்தி மார்க்கம்-

யேத் வக்ஷரம் அநிர்தேஸ்யம் அவ்யக்தம் பர்யுபாஸதே – கீதா 12.3
தே ப்ராபநுவந்தி மாமேவ ஸர்வ பூத ஹிதே ரதா : – 12.4

ஜ்ஞான யோகம் என்பது அவியக்தோபாசனம் .
யத் ஸாங்க்யைர் பிராப்தியதே ஸ்தானம் தத் யோகம் அபிகம்யதே – அவர்களும் என்னையே வந்தடைகிறார்கள். ஆனால்

கிலேஸோ அதிகரஸ் தேஷாம் அவ்யக்தாஸக்த சேதஸாம்
அவ்யக்தாஹி கதிர் துக்கம் தேஹவத் பிரவாப்யதே – கீதை 12.5

அதுவோ கிலேச கரம் துக்க மிஸ்ரம் என்பதால் நாமதற்கு ஆளல்லர்.
ஸுலப , ஸுகர உபாயம் பக்தி தான் என்று கீதை மேலே செல்லுகிறது.

அப்படியானால் என் செய்வது ? என்றால், தர்மம் ஸூக்ஷ்மமானது . ஆக
மஹா ஜனா : யேநஸ்ய கதா : ஸ பந்தா : – என்பதாக நம் பூர்வாச்சார்யர்கள் பரிகிருஹீதமான வழி
அதுவே உத்தமமான மார்கம் -என்பதாக தர்ம ராஜா பதில். அது இங்கு விவக்ஷிதம்.
மொத்தத்தில், சாங்கிய மதம் தர்க்கத்துக்கு இணக்கமாக உள்ளது என்றால் கூட அது நமக்கு ஏற்புடைத்தல்ல.
பக்திரேவ முக்திர் உபாய : என்பதே வேதாந்த சித்தமான அர்த்தம்.

பௌத்த, க்ஷபணர்கள்
அவுலோக்யர் – அக்ஷபாதர் -வைசேஷிகர்
கபிலர் – சாங்கியர்கள்
பதஞ்சலி – யோக பகஷம்
இவர்கள் சொல்லுகிற தர்க்கத்திலும் பரஸ்பர வியாகாதங்கள் உண்டு.
எனவே வேத பிராமாணிகமான ஸித்தாந்தம் , விஞ்ஞானத்தில் உள்ளது போல , மாறுதலுக்கு உட்பட்டது அல்ல.
Scientific theories are accepted until they are disproved and a valid new theory is propounded.
But Vedic Truths are not subject to change, just by Logical denial.
That is the conclusive view point here in this Sutra.
தர்கஸ்ய அப்ரதிஷ்டிதம் -வேதாந்தமே ப்ரதிஷ்டிதம்-ithuve final say –

தத்வ ஞானார்த்தம் ஊக: தர்க :
இப்படியானால் இப்படித் தான் இருக்க வேண்டும்
இப்படி இல்லாமல் போனால் இப்படி இருக்க முடியாது .–என்று அன்வய, வியதிரேக முகேண சாதிப்பது தர்க்கம் .
ந -அர்த்தங்கள் ஆறு உண்டே -முன்பே பார்த்தோம் –

ஸ்தாணுர் வா புருஷோ வா – என்று இருட்டில் தூணைப் பார்த்து மனுஷ்ய உருவமாக கண்டு பயப்படுவது –
ஸம்சய – சந்தேகப் படுவது இயற்கை. மநுஷ்யனுடைய கை கால் போன்ற உலர்ந்த கிளைகளோடு தூரத்தில் நிற்கிற
காய்ந்த மரத்தைப் பார்த்து கர காரணாதி மத்வத்தோடு ஆன புருஷனாக –
ஒரு சமயம் மனுஷ்யனாக இல்லை ஒரு சமயம் மரமாக தோற்றுவது – டோலாயா விக்ஷேபணம் – ஊஞ்சல் ஆட்டத்தைப் போல –
மனதில் இதுவா அதுவா என்கிற துணுக்குறுதல் – சந்தேகத்தோடான பயம் ஏற்பட்டுதல் இயற்கை.
அப்போது சில ஊகத்தின் அடிப்படையில் – அசைவற்ற நிலை, ஸ்தான பரிமாணம் இவைகளைக் கொண்டு –
மனுஷ்யன் இல்லை மரம் தான் என்று நிஸ்சய்த புத்திக்கு வருவது தர்கம். அல்லது வியாப்யா ஆரோபேண வியாபக ஆரோப : தர்க :

ஸ்தாணுர் வா புருஷோ வா – என்கிற உதாரணத்தில்
யதி புருஷத்வம் நஸ்யாத்
கரகாணாதி மத்வம் நஸ்யாத்
கை கால்கள் தெரிகிற படியால்
இது புருஷனாகத் தான் இருக்க வேண்டும்
என்கிற அன்யோன்ய ஆஸ்ரயணம் – invariable concomitance – அனுபவத்தைக் கொண்டு
இது புருஷன் தான் (மரம் இல்லை) என்று மனதுக்குள் இதுவோ -அதுவோ இல்லை இத்தால் இது – என்ற எண்ண பரிமாற்றம் தர்கம்.
if it is not so, then it is to be like this.
if it is so, then it is to be like this–என்கிற Thought process is Logic. -இதுவே தத்வம்

ஆனுமானிக ஈஸ்வரனை – தர்க்கத்தைக் கொண்டு இந்த ஜகத்துக்கு, பானைக்கு குயவன் போலே ,
ஆடைக்கு நெய்பவன் போலே , ஆபரணத்துக்கு பொற் கொல்லன் போலே அஸ்மதாதி விலக்ஷண ஸ்ருஷ்டி கர்தா உண்டு.
அவன் தான் ஈஸ்வரன் என்று – நாஸ்திகர் களோடு வாதம் பண்ணும் போது இந்த தர்கம் அவசியமாகிறது.
உதயனாசார் என்கிற ஆசார்யன் , ஸ்ருதி வாக்கியங்கள் எதுவும் மேற்கோளாக காட்டாது,
தர்க்கத்தாலேயே பௌத்தர்களுடைய வாதங்களை நிராகாரணம் பண்ணி ஈஸ்வரன் உண்டு என்பதை
நியாய குஸுமாஞ்சலி என்கிற கிரந்தத்தில் காட்டியுள்ளார்.
வேத பிராமாண்யத்தை ஒத்துக் கொள்ளாத பௌத்தர்கள் விஷயத்தில் அது சரியானாலும்,
வேத பிராமண்யத்தை ஒத்துக் கொள்பவர்கள் விஷயத்தில், பகவானுடைய அஸ்தித்வத்தை சொல்ல
தர்க ரீதியான வாதம் பயன்படுத்தப் போகாது. காரணம் தர்கா அப்பிரதிஷ்டானது.

ஆர்ஷம் தர்மோபதேசம் ச வேத சாஸ்திர அவிரோதிணா தர்க்கேன யஹா அநுரோத கர்த்தே ஸ தர்மம் வேத, ந இதர : — மநு.

வேத அனுபந்தியான தர்க்கம் – கௌதம, கணாத நியாய, வைசேஷிக சாஸ்திரம் –
லோக அனுபவத்துக்கு அனுகுணமான தர்க்கம் நமக்கு ஏற்புடைத்து.
தர்க பாதத்தில் நியாய, வைசேஷிக பக்ஷங்களைக் பகவத் ராமானுஜர் கண்டிக்கிறார் என்று இருப்பதால்,
அவை பிரமாணமாக எப்படிக் கொள்வது என்றால்
கண்டனம் = அபூரணத்வ ஆரோபணம் = exposing the partial view limitations.
தர்க்கத்தை விடக் கூடாது. எல்லா விஷயத்துக்கும் தர்க்கம் பிரதானம் என்பதும் கூடாது. ஏனென்றால்
ஸ்ரோதவ்ய ஸ்ருதி வாக்யேப்ய :
மந்தவ்யஸ் ச உபபத்திபிஹி
மத்வா ச ஸததம் தியேய : ஸ்ரவணம் மனனம் நிதித்யாஸனம் அதன் பிறகு தர்சனம் என்ற கிரமத்தில்
மந்தவ்ய : ஸ்தானத்தில் தர்க்கம் வருகிறது
மனனம் ச யுக்திபிஹி அனுசிந்தனம்
கேட்ட விஷயத்தை தர்க்கத்தினுடைய சக காரத்தாலே மனனம் பண்ண வேண்டும் என்பதாக.
பகவத் விஷயம் ஹ்ருதயத்துக்குச் சம்பந்தப் பட்டது. தர்க்கம் புத்திக்கு சம்பந்தப் பட்டது.
தர்க்கத்துக்கு ஒட்டாத விஷயம் பிரமாணமாகாது. மனத்துக்குகந்த பகவத் விஷயத்தை புத்தி கொண்டு
தர்க ரீதியாக சாதிக்க முயல்வது என்பது ஒவ்வாது என்பதே இவை மொத்தத்துக்கும் கருத்து.

கண்டனம் –கண்ட–பகுதி -அபூர்ணத்வ -partial-view-ஒத்துக் கொள்ளப்படுவது-partiality- அரைகுறை –
வேதத்துக்கு ஒத்த தர்க்க வாதங்களையே கொள்வது
உபநிஷத் எல்லாம் கேள்வி பதில்கள் -சிஷ்யர்களையே தூண்டி ஆலோசனை பண்ண வைப்பார்கள்
ப்ரஸ்ன உபநிஷத் –ஆறு சிஷ்யர்கள் -யாதாத்ம்ய ஆத்ம ஞானம் பெற்றால் சோகங்கள் நீங்கும்

———————

சூத்ரம் : 2.1.12 : அந்யதா அநுமேயம் இதி சேத் ஏவம் அபி அநிர்மோக்ஷ பிரஸங்க :

தர்க்க ரீதியாக பிரக்ருதி காரண வாதம் தான் பிரதிஷ்டிதமாகிறது என்று சாக்கியர்கள் சொன்னாலும் கூட ,
அந்த மதத்தின் படி மோக்ஷம் சித்திக்காது. எதனாலே என்றால்
உத் ஸ்ருங்கலமான (தான் தோனித் தனமாக) ஒருவன் சொன்னதை
இன்னொருவன் தன் தர்க்க குசலத்தையினால் இல்லை செய்ய சாத்யதை உள்ள படியாலே.
மனு சொல்வதெல்லாம் மருந்து.
வேதாஸ் சாஸ்திரம் பரம் நாஸ்தி என்றும் வேத நெறிக்கு மாற்று கருத்து எதுவும் என்றும் உண்மைக்குப் புறம்பானவையே.
எனவே அதீந்திரியமான பகவத் விஷயத்துக்கு சாஸ்திரமே பிரமாணம்.
அதீந்த்ரிய வஸ்து ப்ரஹ்மம் -சாஸ்திரம் ஏவ பிரமாணம் -தத் உப ப்ரஹ்மணமாக தர்க்கமும் அவசியம்

தது உப ப்ரஹ்மணாய தர்க்க : உபாதேய :
எது போலே என்றால்
பீஜ பிரஹரணார்த்தம் கண்டக சாகா ஆவாரணவது – வாத்ஸாயன நியாய பாஷ்யம்.
பசுக்கள் பயிரை மேயாமல் இருக்க முள் வேலி காப்பு போலே தர்க்கம். அப்படி இல்லாத தர்க்கம் துஸ் தர்க்கம் ,
பௌத்த, ஜைனர்கள் வாதம் போலே ஆத்ம ஹானி.
அதுபோல சாங்கியர்களும் தர்க்கத்தாலேயே சாதிக்கிற எதுவும் வேத விரோதமாய், நமக்கு அது ஏற்புடைத்து அல்ல.
இத்தால் ஜகத்து என்பது பிரஹ்மத்தைக் காட்டிலும் விலக்ஷணம் என்று தோன்றினாலும்,
அந்த பிரஹ்மம் தான் ஜகத்துக்கு உபாதான காரணம் என்பதில் எந்த தோஷமும் கிடையாது என்பது நிரூபிதமாகிறது.

———

ஸ்ரீ கொத்தி மங்கலம் வரதாச்சார்யர் ஆலம் வித்து -அணிமா –ஸாஸ்த்ர யோனிதவாத –
சாஸ்திரம் விஞ்ஞானம் -அர்த்தமும் உண்டே -வேதாந்தமும் விஞ்ஞானம் தானே -பஹுஸ்யாம் பிரஜாயேதி–
இதம் சர்வம் ப்ரஹ்மம் -ஆத்மக்ருதே -தன்னையே பண்ணிக் கொண்டதே –
மாத்மர்-ஆத்மா -பிரகிருதி -ப்ரஹ்ம சக்தி -தனி வஸ்து –
நமக்கு தன்னுள்ளே இருக்கும் வஸ்து -பிரகிருதி -விபாகம் அநர்ஹம்
ஆலமரத்து விதைக்குள் சகலமும் அடங்கி இருப்பது போலே ப்ரஹ்மம் –
பூம வித்யை அஹம் ஏவ சர்வம் –
அஹம் ப்ரஹ்மாஸ்மி -கடல் ஞாலம் செய்தேனும் யானே என்னும் –
அஹம் ஓன்று ப்ரஹ்மம் ஓன்று இரண்டும் நமக்குத் தானே -அத்வைதிகளுக்கும் வராதே
நிர்விசேஷம் சாமான்யம் -ஆத்மா நமக்காக பரமாத்மா இடம் இறங்கி நமக்காக வருகிறது
ப்ரஹ்மமே மூன்றாகிறது தத்வ த்ரயம் -சொல்லும் பொழுது தத்வம் -போக்தா போக்தா பிரேரிதா சர்வம் த்ரிவிதம் ப்ரஹ்மம்
ச அவயவமா நிர்வயவமா -மூன்றாக பிரிவது எப்படி
லோக விலக்ஷணன் -சுருதி சப்த மூலத்வாத் -ஆத்மா நிரவயமமா ச அவயமமா –
அஹங்காரம் -உள்ள மனஸூ-இரும்பு கட்டடம் -ராமகிருஷ்ண பரம ஹம்சர்
ஆத்மாவில் விசித்திர சைத்தன்யம் -அவையாவும் உண்டா இல்லையா -ரஹஸ்யமாக –
ஏகம் பீஜம் -உள்ள சாமர்த்தியம் எல்லா பீஜத்திலும் உண்டே -மரமாக இருக்கும் பொழுதே
அஸ்வத் வ்ருஷ த்ருஷ்டாந்தம் -ச அவயமாமா நிர் அவயவமமா
பூர்ணஸ்ய பூர்ணம் ஆதாய -இதனாலே வந்தது -விசித்திரமான வஸ்து
வேதாந்தம் படித்தாலே வைராக்யம் வளரும் –

சம்ப்ரதாயம் -பேதேவா அபேதவா கடகத்வா ஸர்வஸ்ய -சமஞ்சசம்
ந சத் ந அசத் ந சத் அசத் உபயம் அஉபயம் சதுர் கோடி வினீர் முக்தம் தத்வம் -ஆத்மவித்தும் விது –நான்கையும் தாண்டியது ப்ரஹ்ம தத்வம்
சூன்யம் -பரகால ஸ்வாமி -வீர சூன்ய ஸ்ரீ விஷ்ணு சஹஸ்ர நாம -குண சூன்யம் தோஷ சூன்யம் -விசேஷணம் சேர்த்து வியாக்யானம்
ஒன்றும் இல்லை -அவர்கள்– எல்லாம் உள்ளவன் அவன் நமது -ச விசேஷ அத்வைதம் நம்மது –

சத்யம் ஞானம் அநந்தம் -வ்யாவ்ருத்தம் சொல்ல வந்தது என்பர் -அத்வைதிகள் –
ராமானுஜரும் சத்யம் ப்ரதானே ஜகத் வ்யாவ்ருத்தி -நிருபாதிக சத்தா யோகி ப்ரஹ்ம–un -conditional-
சதத விகாரா அவஸ்தும் அசேதனம்-காதாசித்க சத்தா -சோபாதிகம் இவை -உபாதியாக கொண்ட ஜீவாத்மா – –
ஜந்மாதி அதிகரணம் நியமனத்தில் -சத்யம் -அசேதனம் -சத்ய தரம் ஜீவாத்மா -சத்ய தமம் பரமாத்மா -தாரதம்யாம் உண்டே
ஞானத்தில் தாரதம்யம் போலே -குணத்திலும் தாரதம்யம் -தாரதம்ய அபாவம் பிரளயம் –
சமஷ்டி ஜீவன் -சதுர்முகன் -ஏகத்துவம் -வியஷ்ட்டி பஹுத்வம்
காவேரி கங்கா தீர்த்தம் -நதியில் குழாயில் வருவத்துக்கும் வாசி உண்டே –
பாரமார்த்திகம் ப்ரஹ்மம் -சத்யதமம்–அது போலே ஜீவாத்மாவும் ஜகத்தும் ஆக முடியாதே –
அல்ப சத்யம் தொடங்கி பரம சத்யம் போகிறோம்

குழந்தை -pure–natural-life–சத்யதமம் -ஆகவே தெய்வம் போலே -innocent-முக்த ஸ்வபாவம் -தெய்வபலன் இருக்குமே
புத்தி வளர வளர மாயை சூழ்ந்து -குழம்புகிறோம்-
பஜம்–உபாசனம் -பக்தி -அனுக்ரஹம் பெற க்ரஹிக்க வேணுமே -இதை புரிந்து கொள்ளவே கோயில் குளங்கள் –
மனஸ் சுத்தி -இந்திரிய சுத்தி -புத்தி சுத்தி -பெற – அஹம் ப்ரஹ்மாஸ்மி சாயுஜ்யம் -ஐக்கியம் இல்லையே –
சத்யம் அஹிம்சை இத்யாதி –தெய்விக சம்பத்தை வளர்த்துக் கொள்ள வேண்டுமே

———————————————————

ஸ்ரீ கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ ஆழ்வார் ஸ்வாமிகள்  திருவடிகளே சரணம் .
ஸ்ரீ ஸ்ருதி பிரகாசர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ போதாயனர் -வ்ருத்தி காரர் – ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பாதராயணர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: