ஸ்ரீ வால்மீகி கூறும் ஸ்ரீ ராமரின் திரு வம்ச வ்ருக்ஷம்.
1) ப்ரம்மாவின் பிள்ளை மரீசி
2) மரீசியின் பிள்ளை காஸ்யபன்.
3) காஸ்யபரின் பிள்ளை சூரியன்.
4) சூரியனின் பிள்ளை மனு.
5) மனுவின் பிள்ளை இக்ஷாவக:
6) இக்ஷாவகனின் பிள்ளை குக்ஷி.
6) குக்ஷியின் பிள்ளை விகுக்ஷி.
7) விகுக்ஷியின் பிள்ளை பாணு
8) பாணுவின் பிள்ளை அரண்யகன்.
9) அரண்யகனின் பிள்ளை வ்ருத்து.
10) வ்ருதுவின் பிள்ளை த்ரிசங்கு.
11) த்ரிசங்குவின் பிள்ளை துந்துமாரன் (யவனாஸ்யன்)
12) துந்துமாரனின் பிள்ளை மாந்தாதா.
13) மாந்தாதாவின் பிள்ளை சுசந்தி.
14) சுசந்தியின் பிள்ளை துருவசந்தி.
15) துருவசந்தியின் பிள்ளை பரதன்.
16) பரதனின் பிள்ளை ஆஷிதன்.
17) ஆஷிதனின் பிள்ளை சாகரன்.
18) சாகரனின் பிள்ளை அசமஞ்சன்
19) அசமஞ்சனின் பிள்ளை அம்சமந்தன்.
20)அம்சமஞ்சனின் பிள்ளை திலீபன்.
21) திலீபனின் பிள்ளை பகீரதன்.
22) பகீரதனின் பிள்ளை காகுஸ்தன்.
23) காகுஸ்தனின் பிள்ளை ரகு.
24) ரகுவின் பிள்ளை ப்ரவருத்தன்.
25) ப்ரவருத்தனின் பிள்ளை சங்கனன்.
26) சங்கனின் பிள்ளை சுதர்மன்.
27) சுதர்மனின் பிள்ளை அக்நிவர்ணன்.
28) அக்நிவர்ணனின் பிள்ளை சீக்ரவேது
29) சீக்ரவேதுவுக்கு பிள்ளை மருவு.
30) மருவுக்கு பிள்ளை ப்ரஷீக்யன்.
31) ப்ரஷீக்யனின் பிள்ளை அம்பரீஷன்.
32) அம்பரீஷனின் பிள்ளை நகுஷன்.
33) நகுஷனின் பிள்ளை யயயாதி.
34) யயாதியின் பிள்ளை நாபாகு.
35) நாபாகுவின் பிள்ளை அஜன்.
36) அஜனின் பிள்ளை தசரதன்.
36) தசரதனின் பிள்ளை ராமர்.
—————
ஸ்ரீ இராமாயண சுருக்கம் -16-வார்த்தைகளில் –
“பிறந்தார் வளர்ந்தார் கற்றார் பெற்றார்
மணந்தார் சிறந்தார் துறந்தார் நெகிழ்ந்தார்
இழந்தார் அலைந்தார் அழித்தார் செழித்தார்
துறந்தார் துவண்டார் ஆண்டார் மீண்டார்”
விளக்கம்:
1. பிறந்தார்:
ஸ்ரீராமர் கௌசல்யா தேவிக்கு தசரதரின் ஏக்கத்தைப் போக்கும்படியாக பிறந்தது.
2.வளர்ந்தார்:
தசரதர் கௌசல்யை சுமித்திரை கைகேயி ஆகியோர் அன்பிலே வளர்ந்தது
3.கற்றார்:
வஷிஷ்டரிடம் சகல வேதங்கள் ஞானங்கள் கலைகள் முறைகள் யாவும் கற்றது.
4.பெற்றார்:
வஷிஷ்டரிடம் கற்ற துனுர்வேதத்தைக் கொண்டு விஸ்வாமித்ரர் யாகம் காத்து விஸ்வாமித்ரரை மகிழ்வித்து பல திவ்ய அஸ்திரங்களை பெற்றது.
5.மணந்தார்:
ஜனகபுரியில் சிவனாரின் வில்லை உடைத்து ஜனகர்-சுனயனாவின் ஏக்கத்தை தகர்த்து மண்ணின் மகளாம் சீதையை மணந்தது.
6.சிறந்தார்:
அயோத்யாவின் மக்கள் மற்றும் கோசல தேசத்தினர் அனைவர் மனதிலும் தன் உயரிய குணங்களால் இடம் பிடித்து சிறந்து விளங்கியது.
7.துறந்தார்:
கைகேயியின் சொல்லேற்று தன்னுடையதாக அறிவிக்கப்பட்ட ராஜ்ஜியத்தை துறந்து வனவாழ்வை ஏற்றது.
8. நெகிழ்ந்தார்:
அயோத்தியா நகரின் மக்களின் அன்பைக் கண்டு நெகிழ்ந்தது.
குகனார் அன்பில் நெகிழ்ந்தது.
பரத்வாஜர் அன்பில் நெகிழ்ந்தது.
பரதரின் அப்பழுக்கற்ற உள்ளத்தையும் தன் மீது கொண்டிருந்த பாலனைய
அன்பினையும் தன்னலமற்ற குணத்தையும் தியாகத்தையும் விசுவாசத்தையும் கண்டு நெகிழ்ந்தது.
அத்ரி-அனுசூயை முதல் சபரி வரையிலான சகல ஞானிகள் மற்றும் பக்தர்களின் அன்பிலே நெகிழ்ந்தது.
சுக்ரீவர் படையினரின் சேவையில் நெகிழ்ந்தது.
விபீஷணரின் சரணாகதியில் நெகிழ்ந்தது.
எல்லாவற்றுக்கும் மேலாக ஆஞ்சநேயரின் சேவையைக் கண்டு, ‘கைம்மாறு செய்ய என்னிடம் எதுவுமில்லை.
என்னால் முடிந்தது என்னையே தருவது’ எனக் கூறி ஆஞ்சநேயரை அணைத்துக் கொண்டது.
9.இழந்தார்:
மாய மானின் பின் சென்று அன்னை சீதையை தொலைத்தது.
10.அலைந்தார்:
அன்னை சீதையை தேடி அலைந்தது.
11.அழித்தார்:
இலங்கையை அழித்தது.
12.செழித்தார்:
சீதையை மீண்டும் பெற்று அகமும் முகமும் செழித்தது.
ராஜ்ஜியத்தை மீண்டும் பெற்று செல்வச் செழிப்பான வாழ்க்கைக்கு திரும்பியது.
13.துறந்தார்:
அன்னை சீதையின் தூய்மையை மக்களில் சிலர் புரிந்து கொள்ளாத நிலையில் மக்களின் குழப்பத்தை நீக்குவதற்காக அன்னை சீதையை துறந்தது.
13.துவண்டார்:
அன்னை சீதையை பிரிய நேர்ந்தது சீராமருக்கு மிகுந்த வலியை தந்தது. அந்த வலி அவரை சில காலம் மனதளவில் துவள செய்தது.
15.ஆண்டார்:
என்ன தான் மனதினுள் காயம் இருந்தாலும் மக்களுக்கு செய்ய வேண்டிய கடமைகள் அனைத்தையும் குறைவற செய்து
மக்கள் உடலால், மனதால் ஆரோக்கியமானவர்களாகவும் செல்வச் செழிப்புடன் வாழும்படியும் பார்த்துக் கொண்டது.
16.மீண்டார்:
பதினோறாயிரம் ஆண்டுகள் நல்லாட்சி செய்து மக்கள் அனைவரையும் ராமராகவும் சீதையாகவும் மாற்றி
தன்னுடனே அழைத்துக் கொண்டு தன் இருப்பிடமான வைகுண்டம் மீண்டது”.
————
உக்ரம் வீரம் மஹா விஷ்ணும் ஜ்வலந்தம் சர்வதோ முகம்
ந்ருஸிம்ஹம் பீஷணம் பத்ரம் ம்ருத்யு ம்ருத்யும் நமாம்யஹம்
ஸ்ரீ நரசிம்மரின் பல திருநாமங்கள்
1. அகோபில நரசிம்மர்
2. அழகிய சிங்கர்
3. அனந்த வீரவிக்ரம நரசிம்மர்
4. உக்கிர நரசிம்மர்
5. கதலி நரசிங்கர்
6. கதலி லக்ஷ்மி நரசிம்மர்
7. கதிர் நரசிம்மர்
8. கருடாத்ரிலக்ஷ்மி நரசிம்மர்
9. கல்யாண நரசிம்மர்
10. குகாந்தர நரசிம்மர்
11. குஞ்சால நரசிம்மர்
12. கும்பி நரசிம்மர்
13. சாந்த நரசிம்மர்
14. சிங்கப் பெருமாள்
15. தெள்ளிய சிங்கர்
16. நரசிங்கர்
17. பானக நரசிம்மர்
18. பாடலாத்ரி நரசிம்மர்
19. பார்க்கவ நரசிம்மர்
20. பாவன நரசிம்மர்
21. பிரஹ்லாத நரசிம்மர்
22. பிரஹ்லாத வரத நரசிம்மர்
23. பூவராக நரசிம்மர்
24. மாலோல நரசிம்மர்
25. யோக நரசிம்மர்
26. லட்சுமி நரசிம்மர்
27. வரதயோக நரசிம்மர்
28. வராக நரசிம்மர்
29. வியாக்ர நரசிம்மர்
30. ஜ்வாலா நரசிம்மர்
————–
ஸ்ரீ ராமபிரான் அருளிச் செய்த ஸ்ரீ நரசிம்ம பஞ்சாம்ருத ஸ்தோத்ரம்
ஸ்ரீ அஹோபிலம் நாரஸிம்ஹம் கத்வா ராம பிரதாபவான்
நமஸ்க்ருத்வா ஸ்ரீ நரஸிம்ஹ மஸ்தவ்ஷீத் கமலாபதிம்
கோவிந்த கேசவ ஜனார்த்தன வாஸூ தேவ ரூப
விஸ்வேச விஸ்வ மது ஸூதன விஸ்வரூப
ஸ்ரீ பத்ம நாப புருஷோத்தம புஷ்கராஷ
நாராயண அச்யுத நரஸிம்ஹ நமோ நமஸ்தே
தேவா சமஸ்தா கலு யோகி முக்யா
கந்தர்வ வித்யாதர கின்ன ராஸ்ச
யத் பாத மூலம் சததம் நமந்தி
தம் நாரஸிம்ஹம் சரணம் கதோஸ்மி
வேதான் சமஸ்தான் கலு சாஸ்த்ர கர்பான்
வித்யாம் பலம் கீர்த்தி மதீம் ச லஷ்மீம்
யஸ்ய ப்ரஸாதாத் புருஷா லபந்தே
தம் நாரஸிம்ஹம் சரணம் கதோஸ்மி
ப்ரஹ்மா சிவஸ்த்வம் புருஷோத்தமஸ்ச
நாராயணோசவ் மருதாம் பதிஸ் ச
சந்த்ரார்க்க வாய்வாக்நி மருத் காணாஸ் ச
த்வமேவ தம் த்வாம் சததம் ந தோஸ்மி
ஸ்வப் நபி நித்யம் ஜகதாம சேஷம்
ஸ்ரஷ்டா ச ஹந்தா ச விபுரப்ரமேய
த்ராதா த்வமேகம் த்ரிவிதோ விபின்ன
தம் த்வாம் ந்ருஸிம்ஹம் சததம் நதோஸ்மி
இதி ஸ்துத்வா ரகு ஸ்ரேஷ்ட பூஜயாமாச தம் ஹ்ரீம்– ஸ்ரீ ஹரிவம்ச புராணம் – சேஷ தர்மம் -47- அத்யாயம்
———————
ஒருமுறை துளசிதாசரை தனது அரசவைக்கு வரவழைத்த முகலாயப் பேரரசர் அக்பர், நீர் பெரிய ராமபக்தர்,
பல அற்புதங்களைச் செய்கிறீர் என்கிறார்களே… எங்கே, ஏதாவது ஒரு அற்புதத்தைச் செய்து காட்டும்” என்றார்.
நான் மாயாஜாலக்காரன் அல்ல; ஸ்ரீராமரின் பக்தன் மட்டுமே!” என்று துளசிதாசர் சொல்ல, கோபப்பட்ட அக்பர், அவரைச் சிறையில் அடைத்தார்.
‘எல்லாம் ஸ்ரீராமனின் சித்தம்’ என்று கலங்காமல் சிறை சென்ற துளசிதாசர், தினமும் ஆஞ்சநேயர் மீது ஒரு போற்றிப் பாடல் இயற்றி வழி பட்டார்.
இப்படி நாற்பது பாடல்களை எழுதியதும், திடீரென எங்கிருந்தோ வந்த ஆயிரக்கணக்கான வானரங்கள் அரண்மனையில் புகுந்து தொல்லை செய்ய ஆரம்பித்தன.
படை வீரர்கள் எவ்வளவோ முயன்றும் விரட்ட முடியவில்லை.
அக்பரிடம் சென்ற சிலர், ‘ராமபக்தரான துளசிதாசரைக் கொடுமைப்படுத்துவதால் ஆஞ்சநேயருக்குக் கோபம் வந்திருக்கிறது.
துளசிதாசரை விடுவித்தால் பிரச்னை நீங்கிவிடும்’ என்று ஆலோசனை அளித்தனர்.
அதையடுத்து, துளசிதாசரை விடுவித்து வருத்தம் தெரிவித்தார் அக்பர். மறுகணமே, வானரப் படைகள் மாயமாய் மறைந்தன.
துளசிதாசர் சிறையில் இருந்தபோது பாடிய போற்றிப் பாடல்கள்தான் ‘ஸ்ரீ அனுமன் சாலிஸா’.
இதைத் தினமும் பாராயணம் செய்தால், துன்பங்கள் நீங்கும்; நன்மைகள் தேடி வரும்!
மாசற்ற மனத்துடனே ஸ்ரீராமனைப் பாட குருநாதனே துணை வருவாய்
வாயுபுத்ரனே வணங்கினேன் ஆற்றலும் ஞானமும் வரமும் தர வந்தருள்வாய் ஸ்ரீஹனுமானே
ஸ்ரீஹனுமான் சாலீஸா (தமிழில்)
ஜயஹனுமானே..ஞானகடலே,
உலகத்தின் ஒளியே..உமக்கு வெற்றியே (1)
ராமதூதனே..ஆற்றலின் வடிவமே,
அஞ்ஜனை மைந்தனே..வாயு புத்திரனே, (2)
மஹா வீரனே..மாருதி தீரனே..
ஞானத்தை தருவாய்..நன்மையை சேர்ப்பாய்.. (3)
தங்க மேனியில் குண்டலம் மின்ன,
பொன்னிற ஆடையும்..கேசமும் ஒளிர (4)
தோளிலே முப்புரிநூல் அணிசெய்ய,
இடியும்..கொடியும்..கரங்களில் தவழ.., (5)
சிவனின் அம்சமே..கேசரி மைந்தனே..
உன் ப்ரதாபமே..உலகமே வணங்குமே.. (6)
அறிவில் சிறந்தவா..சாதுர்யம் நிறைந்தவா,
ராம சேவையே..சுவாசமானவா.. (7)
உன் மனக் கோவிலில் ராமனின் வாசம்,
ராமனின் புகழை கேட்பது பரவசம் (8)
ஸ்ரீ ராம லக்ஷ்மண..ஜானகி.., ஸ்ரீராம தூதனே மாருதி
உன் சிறுவடிவை சீதைக்கு காட்டினாய்,
கோபத் தீயினில் லங்கையை எரித்தாய் (9)
அரக்கரை அழித்த பராக்ரம சாலியே,
ராமனின் பணியை முடித்த மாருதியே.. (10)
ராமன் அணைப்பிலே ஆனந்த மாருதி,
லக்ஷ்மணன் ஜீவனை காத்த சஞ்சீவி.. (11)
உனது பெருமையை ராமன் புகழ்ந்தான்,
பரதனின் இடத்திலே உன்னை வைத்தான், (12)
ஆயிரம் தலைக் கொண்ட சே-ஷனும் புகழ்ந்தான்,
அணைத்த ராமன் ஆனந்தம் கொண்டான் (13)
மூவரும்..முனிவரும்..ஸனக ஸனந்தரும்.
நாரதர் சாரதை ஆதிசே-ஷனும்.. (14)
எம..குபேர..திக்பாலரும்..புலவரும்..
உன் பெருமைதனை சொல்ல முடியுமோ.. (15)
சுக்ரீவனை ராமனிடம் சேர்த்தாய்,
ராஜ யோகத்தை அவன் பெற செய்தாய். (16)
ஸ்ரீ ராம லக்ஷ்மண..ஜானகி.., ஸ்ரீராம தூதனே மாருதி
இலங்கையின் மன்னன் விபீஷணன் ஆனதும்
உன் திறத்தாலே..உன் அருளாலே.. (17)
கதிரவனை கண்ட கவி வேந்தனே
கனியென விழுங்கிய ஸ்ரீஹனுமானே, (18)
முத்திரை மோதிரம் தாங்கியே சென்றாய்,
கடலை கடந்து ஆற்றலை காட்டினாய் (19)
உன்னருளால் முடியாதது உண்டோ
மலையும் கடுகென மாறிவிடாதோ (20)
ராம ராஜ்யத்தின் காவலன் நீயே,
ராமனின் பக்தர்க்கு எளியவன் நீயே, (21)
சரண் அடைந்தாலே ஓடியே வருவாய்,
கண் இமை போல காத்தே அருள்வாய் (22)
உனது வல்லமை சொல்லத் தகுமோ,
மூவுலகமும் தொழும் ஸ்ரீஹனுமானே.. (23)
உன் திருநாமம் ஒன்றே போதும்
தீய சக்திகள் பறந்தே போகும். (24)
ஸ்ரீ ராம லக்ஷ்மண..ஜானகி.., ஸ்ரீராம தூதனே மாருதி
ஹனுமனின் ஜபமே பிணிகளைத் தீர்க்குமே
துன்பங்கள் விலகுமே..இன்பங்கள் சேர்க்குமே. (25)
மனம்,மெய்,மொழியும் உந்தன் வசமே
உன்னை நினைத்திட எல்லாம் ஜெயமே, (26)
பக்தர்கள் தவத்தில் ராம நாமமே,
ராமனின் பாதமே..உந்தன் இடமே. (27)
அடியவர் நிறைவே கற்பகத் தருவே,
இறையனுபூதியை தந்திடும் திருவே. (28)
நான்கு யுகங்களும் உன்னைப் போற்றிடும்
உன் திருநாமத்தில் உலகமே மயங்கும். (29)
ஸ்ரீராமன் இதயத்தில் உந்தன் இருப்பிடம்
ஞானியர் முனிவர்கள் உந்தன் அடைக்கலம். (30)
அஷ்ட சித்தி நவநிதி உன் அருளே
அன்னை ஜானகி தந்தாள் வரமே (31)
ராம பக்தியின் சாரம் நீயே
எண்ணம் எல்லாமே ராமன் ஸேவையே (32)
ஸ்ரீ ராம லக்ஷ்மண..ஜானகி.., ஸ்ரீராம தூதனே மாருதி
ஹனுமனைத் துதித்தால் ராமனும் அருள்வான்
பிறவா வரம் தந்து பிறவியைத் தீர்ப்பான் (33)
ராம நாமமே வாழ்வில் உறுதுணை
அந்திம காலத்தில் அவனின்றி யார் துணை (34)
என் மனக் கோவிலில் தெய்வமும் நீயே
உனையன்றி வேறொரு மார்க்கமும் இல்லையே (35)
நினைப்பவர் துயரை நொடியில் தீர்ப்பாய்
துன்பத்தைத் துடைத்து துலங்கிட வருவாய் (36)
ஜெய..ஜெய..ஜெய..ஜெய ஸ்ரீஹனுமானே
ஜெகத்தின் குருவே..ஜெயம் தருவாயே (37)
“ஹனுமான் சாலீஸா” அனுதினம் பாடிட
பரமன் வருவான் ஆனந்தம் அருள்வான் (38)
சிவபெருமானும் அருள் மழை பொழிவான்
இகபர சுகங்களை எளிதில் பெறுவான் (39)
அடியவர் வாழ்வில் ஹனுமனின் அருளே
துளஸீதாஸனின் பிரார்த்தனை இதுவே (40)
ஸ்ரீ ராம லக்ஷ்மண..ஜானகி.., ஸ்ரீராம தூதனே மாருதி
——————-
ஸ்ரீ பிராரத்நா பஞ்சகம்
யதீஸ்வர ஸ்ருணு ஸ்ரீமன் கிருபயா பரயா தவ
மம விஜ்ஞாபனம் இதம் விலோகய வரதம் குரும்-1–
யதிகளின் தலைவரே! கைங்கர்ய ஸ்ரீயை உடையவரே! பரமமான க்ருபையோடே (அடியேனுடைய)
ஆசார்யரான நடாதூர் அம்மாளைப் பார்த்து, அடியேனுடையதான இந்த விண்ணப்பத்தை
தேவரீர் திருச் செவி சாற்றி யருள வேணும்.
அநாதி பாப ரசிதாம் அந்தக்கரண நிஷ்டிதாம்
யதீந்த்ர விஷய சாந்த்ராம் விநிவாசய வாசநாம் -2-
எண்ணற்ற காலங்கள் பாவங்களையே செய்து, அதன் வாசனையானது என்னுள்ளே ஊறிக் கிடக்கிறது.
யதிராஜரே! இதனால் நான் தவறுகளைத் தொடர்ந்தபடி உள்ளேன். இவ்விதம் இருக்கின்ற உலக விஷயங்களில்
இருந்து எனது புலன்களை மீட்கவேண்டும்.
அபி பிரார்த்தய மாநாநாம் புத்ர ஷேத்ராதி சம்பதாம்
குரு வைராக்யம் ஏவ அத்ர ஹித காரிந் யதீந்த்ர -3-
யதிராஜரே! நான் உம்மிடம் புத்திரன், வீடு, செல்வம் முதலானவற்றைக் கேட்கக் கூடும். ஆனால் அவற்றை விலக்கி,
நீவீர் எனக்கு வைராக்யத்தை அளிக்கவேண்டும் – காரணம் எனது நன்மையை மட்டுமே அல்லவா நீவிர் எண்ணியபடி உள்ளீர்.
யத் அபராதா ந ஸ்யுர் மே பக்தேஷு பகவத் அபி
ததா லஷ்மண யோகீந்த்ர யாவத் தேகம் பிரவத்தய -4-
யதிராஜரே! முக்தி அடியும் வரையில், இந்த உடலுடன் இங்கு வாழும் நான், ஒருபோதும்
பகவானையோ அவனது அடியார்களையோ அவமானப்படுத்திவிடக்கூடாது.
ஆ மோக்ஷம் லஷ்மணாய த்வத் பிரபந்த பரிசீலநை
காலக்ஷேப அஸ்து ந ஸத்பிஸ் ஸஹவாஸம் உபேயுஷாம் -5-
லக்ஷ்மணமுனியே! இந்த உடல் பிரியும் காலம்வரை நான் உமது ப்ரபந்தங்களையே ஆராய்ந்தபடி,
அவற்றையே காலக்ஷேபம் செய்தபடி எனது பொழுதைக் கழிக்கவேண்டும்.
பல சுருதி
இத் ஏதத் சாதரம் வித்வாந் ப்ரார்த்தநா பஞ்சகம் படந்
ப்ரபானுயாத் பரமாம் பக்தி யதிராஜா பாதாப்ஜயோ
யதிராஜரின் திருவடிகளின் மீது வைக்கப்பட்ட இந்த ஐந்து விண்ணப்பங்களை யார் ஒருவர் பக்தியுடன்
படிக்கிறார்களோ, அவர்கள் எம்பெருமானாரின் திருவடிகளின் மீது மேலும் பக்தி பெறுவர்.
—————————–
ஸ்ரீ கொங்கில் ஆச்சான் திருமாளிகை -55-மங்கம்மா நகர் -ஸ்ரீ ரெங்கம்
ஸ்ரீ ராமானுஜர் சிஷ்யர்களுக்கு பஞ்ச சம்ஸ்காரம் பண்ணி அருளிய சங்கு சக்கரங்ககளையும்
ஸ்ரீ ராமானுஜர் ஸ்ரீ பாதுகைகளையும்
ஸ்ரீ நரசிம்மர் சாளக்ராமமும் இன்றும் சேவிக்கலாம் –
——————
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ ஹனுமத் சமேத ஸ்ரீ சீதா ராம சந்த்ரன் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ லஷ்மீ நரஸிம்ஹர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .
Leave a Reply