ஸ்ரீ ராமானுஜ நூற்றந்தாதி பாசுரமும்- ஸ்ரீ ஆழ்வார் பாசுரங்களும் –4-என்னைப் புவியில் ஒரு பொருளாக்கி-

பெரிய ஜீயர் உரை –

இப்படி இவர் திரு உள்ளத்தைக் கொண்டாடினவாறே –
இன்னமும் துர் வாசனையாலே இந் நெஞ்சு தான் நழுவ நிற்குமாகில் உம்முடைய-நிஷ்டைக்கு ஹானி வாராதோ -என்ன
சர்வரும் விரும்பி விவேகித்து அனுபவிக்கும் படி-ஸ்ரீ பாஷ்யமும் கீதா பாஷ்யமும் அருளி-விவேக்கும் படி-
எம்பெருமானார் தாமே நிர்ஹேதுகமாக அங்கீகரிக்கப் பெற்ற-எனக்கு ஒரு ஹானியும் வாராது -என்கிறார் –

இப்படி மூன்று பாட்டு அளவும் தம்முடைய அபிநிவேச அதிசயத்தை சொல்லினால் –இது ஸ்வகதமாக வந்தது –
அத்யந்த பாரதந்த்ரமான ஸ்வரூபத்துக்கு சேருமோ -பரகதமாக வந்ததே யாகிலும்-
அதுக்கு பிரச்யுதி இல்லையோ என்ன அருளிச் செய்கிறார்-

அடிக் கீழ் சேர்த்த நெஞ்சு -நின்றவா நில்லாது பண்டைய பழக்கம் தலை தூக்கி அந்நிலை யினின்றும்
நழுவி விடில் -உம் நிலை என்னாவது என்ன –
எம்பெருமானார் நிர் ஹேதுக கிருபையாலே கண்டு கொண்டேன் –
என்னைப் பண்டை வல் வினை வேர் அறுத்து தம் பாதத்தினை என் சென்னியில்
வைத்திடலால் எனக்கு ஒரு குறையும் வர வழி இல்லை என்கிறார் –

முன் பாசுரங்களில் எம்பெருமானார் தம் பெருமை பாராட்டாது பழகும் தன்மையில்
ஈடுபட்ட நெஞ்சு அவர் அளவோடு நில்லாது அவர் அடியார் திறத்திலும் என்னை இழுத்து சென்று
ஈடுபடுத்தியது என்று தமக்கு ஆசார்யன் இடம் உள்ள அபிமானத்தை காண்பித்தார் –
இதில் நிர்ஹேதுகமாக தம் மீது ஆசார்யன் செலுத்தும் அபிமானத்தை காட்டுகிறார் –
முன்பு ஓன்று அறியேன் எனக்கு உற்ற பேரியில்வே-என்று உபாயம் தெரிய வில்லை என்றார் –
இப்பொழுது உபாயம் எம்பெருமானாரே என்று தெளிந்து காட்டுகிறார்-

என்னைப் புவியில் ஒரு பொருளாக்கி மருள் சுரந்த
முன்னைப் பழ வினை வேர் அறுத்து ஊழி முதல்வனையே
பன்னப் பணித்த இராமானுசன் பரன் பாதமும் என்
சென்னித் தரிக்க வைத்தான் எனக்கு ஏதும் சிதை வில்லையே -4 –

ஊழி முதல்வனையே –
காலோபலஷித சகல பதார்த்தங்களுக்கும் காரண பூதனான சர்வேஸ்வரனையே–
காலோபலஷிதமான சர்வ கார்ய வர்க்கத்துக்கும் பிரதான காரண பூதனான சர்வேஸ்வரனை –
புறம்புண்டான பற்றுக்களை அடைய வாசனையோடு விடுகையும் –
எம்பெருமானே தஞ்சம் என்றுபற்றுகையும் -என்றும் சொல்லுகிற படியே
இச் சேதனருடைய ப்ராப்தி பிரதிபந்தங்கள் எல்லாவற்றையும் விடுவித்து

முதல்வனையே –
என்கிற ஏவ காரத்தால் அநந்ய யோக அவ்யச்சேதம் பண்ணினபடி –
பன்னப் பணித்த –
சர்வரும் விரும்பி –விவேகித்து -அனுபவிக்கும் படி பண்ணி –
சர்வரும் விவேகித்து அனுசந்திக்கும்படி ஸ்ரீ பாஷ்யம் -கீதா பாஷ்ய-முகேன அருளி செய்த-சர்வோத்க்ருஷ்டரான எம்பெருமானார்

முதல்வனையே –
ஜகத் காரணத்வம்-அந்நிய யோக விவச்சேதம் –
முதல் முதல்வன் அபின்ன நிமித்த உபாதான காரணம் –
முதல்வனையே–
அவனையே பன்னப் பணித்த -இராமானுஜன் -என்றவாறு –
பன்னுதல்-விவேகித்தல் –
இராமானுஜர் -எம்பெருமானார் -அபியுக்தோக்தியாலும் -அந்வய வ்யதிரேகங்களாலே சொன்ன கட்டளையாலே –
தம்மை சகல ஜகத் காரண பூதரான எம்பெருமான் திருவடிகளிலே ஆஸ்ரயிப்பித்த எம்பெருமானார்

ஊழி முதல்வனையே பன்னப் பணித்த –
ஊழி -எனபது பிரளயமாய் -அதற்க்கு உள் பட்ட பொருள் அனைத்துக்கும் உப லஷணமாய்-
எல்லா பொருள்களுக்கும் காரணமான சர்வேஸ்வரனை சொல்லுகிறது – ஊழி முதல்வன் -என்னும் சொல் –
அவனையே ஆராய்ந்து த்யானம் செய்து உய்யும்படியாக எம்பெருமானார் பணித்தது ஸ்ரீ பாஷ்யத்திலே –
ஸ்ரீ மா முனிகள் ஸ்ரீ பாஷ்யம் மட்டுமே காட்டி அருள ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் ஸ்ரீ பாஷ்யம் ஸ்ரீ கீதா பாஷ்யம் இரண்டையும் காட்டி அருளுகிறார் –
காரணப் பொருளை ஆராய வேண்டும் என்று தொடங்குவது பிரதம சூத்தரம் ஆதலின்-அதனை விளக்கும் ஸ்ரீ பாஷ்யமும் அதனையே பணிப்பதாயிற்று –
முதலினையே -என்னாது முதல்வனையே -என்று உயர் திணையாக கூறினது –
பல பொருள்களாக கடவேன் -என்று படைப்பது பிரதான தத்துவமாகிய அசேதன பொருளுக்கு இயையாது –
பரம சேதனான சர்வேஸ்வரனுக்கு இயையும் எனபது தோற்றதற்கு என்க –
இதனால் காரணமாய் இருத்தல் பிரமத்துக்கு இயையும் என்பதை கூறும்-சமன்வய அத்யாயத்தின் பொருள் கருதப் பட்டதாய் ஆகிறது

பன்ன -என்பதால்-
முதல்வனையே ஆராயும்படி அம் முதன்மை -காரணத்வதை -யை உறுதிப்படுத்துவதால் -பிறர் கூறும் குற்றங்களால் பாதிக்க படாமை
கூறும் இரண்டாவதான-அவிரோத அத்யாயத்தின் பொருள் கருதப் படுகிறது –
இனி பன்னுதல் விவேகித்து -அனுசந்தித்தலாதலின் உபாயம் தோற்றலின்-மூன்றாவதான -சாதன அத்யாயத்தின்
பொருளையும் இங்கேயே கருதுவதற்கும் இடமுண்டு –
இனி பன்னுதல்-நெருங்குதலாய் -பர பிரமத்தை கிட்டுதல் -கூறுவதாக-கொண்டு இங்கேயே
நான்காவதான பல அத்யாயத்தின் பொருளையும் கூறுவதாக-கருதுவதற்கும் இடம் உண்டு –

ஊழி முதல்வனையே பன்ன –
காரணப் பொருளையே சிந்திக்கும் படி -என்றபடி –ஏ-பிரி நிலையின் கண் வந்தது-
காரிய பொருளான பிரம்மா முதலியோரினின்றும் பிரித்துக் காட்டுகிறது –

பணித்த இராமானுசன் பரன் –
படைத்தவனைப் பன்னும்படி பணித்தவர் ஆதலின் -இராமானுசனை –பரன் -என்கிறார்
யஸ்மாத் தத் உபதேஷ்டா ஸௌதஸ்மாத் குரு தரோ குரு -உபதேசம் பண்ணுகிற
ஆசார்யன் உபதேசிக்கப் படும் எம்பெருமானை விட மிக மேம்பாடு உடையவன் –என்றபடி பணித்த ஆசார்யனை பரன் என்கிறார் –

இராமானுசன் பரன் –
ஆக்கை கொடுத்து அளித்த ஊழி முதல்வன் இவர்க்குப் பரன் அல்லன் –
ஆவி -ஆத்ம தத்வம் -கொடுத்து அளித்த இராமானுசனே இவர்க்குப் பரனாக தோன்றுகிறார்
அறிவினால் பொருள் ஆக்கினாரே இவரை-நித்ய சம்சாரிகளாய் இருந்த தங்களை நித்ய சூரிகளுக்கு ஒப்பப் பொருள் ஆககினமை
கண்டு பரன் எனப் பற்றினர் ஆழ்வார்கள் ஊழி முதல்வனை –
அவனாலும் ஆகாது கை விடப் பட்ட தம்மை -விண்ணுளாரிலும் சீரிய ஒரு பொருளாக
இப்புவியில் ஆக்கினமை கண்டு எம்பெருமானாரையே பரன் எனப் பற்றுகிறார் அமுதனார் –

என்னைப் புவியில் ஒரு பொருளாக்கி –
அவஸ்துவான என்னை லோகத்திலே-ஒரு வஸ்துவாம் படி பண்ணி –
வஸ்து உபாதேயம்-ஆளவந்தார் துளி கடாக்ஷம் பெற்று-
என்னை –
பூர்வ காலத்திலே அசத்தாக -பொருள் அல்லாத என்னை-
புவியில்-
இருள் தரும் மா ஞாலத்தில்
ஒரு பொருளாக்கி –
ஒரு வஸ்துவாகும் படி பண்ணி -ப்ரஹ்ம வித்துக்களிலே அத்வதீயனாக பண்ணி-

என்னையும் –
அஞ்ஞானம் -காரணம் -அநாதி கால கர்மம் -நீர் நுமது என்று இவர் வேர் முதல் மாய்த்து –

என்னைப் புவியில் ஒரு பொருள் ஆக்கி-
அடியேன் வாய் வார்த்தையாக கூட சொல்ல தெரியாமல் இருந்த என்னை –
பகவத் விஷயத்துக்கும் -கூட ஆள் ஆகாதபடி உலகியல் இன்பத்திலே உழன்ற படியால்
பெரியோர்களால் ஒரு பொருளாக மதிக்கத் தகாத என்னைக் கூட எங்கனம் பொருள் ஆக்கினாரோ எம்பெருமானார் என்று வியக்கிறார் –
ப்ரஹ்மத்தை பற்றி அறிவில்லாதவன் அசத்- அதாவது இல்லாதவன் ஆகிறான் -என்கிறது வேதம் –
இன்று உருவாக்கப் பட்டு மிக உயர்ந்த நிலையில் வைக்கப் பட்டு உள்ள அமுதனார் முன்பு தாம் உருமாய்ந்து
படு குழியில் கிடந்தமையை புரிந்து பார்த்து வியக்கிறார்
எம்பெருமானைப் பற்றுதல் அறிவின் முதல் நிலை –
அந்நிலையினை எம்பெருமான் அருளினால் எய்தினவர் ஆழ்வார் –
பொருள் அல்லாத என்னைப் பொருள் ஆக்கி அடிமை கொண்டாய்-என்று வியக்கிறார் அவர் –
எம்பெருமானாரை பற்றுதல் அறிவின் முதிர் நிலை –
அந்நிலையை எய்தினவர் வடுக நம்பி –
எம்பெருமானார் அடியார்கள் அளவும் பற்றுதல் அறிவின் முதிர்ச்சிக்கு எல்லை நிலம் –அந்நிலையை எய்தி விட்டார் அமுதனார் –

பொருளானார் ஆழ்வார்
மேலோர் ஆசைப் படும் பொருள் ஆனார் வடுக நம்பி
மணவாள மா முனிகள்-உன்னை ஒழிய ஒரு தெய்வம் மற்று அறியா-மன்னு புகழ் சேர் வடுக நம்பி -தன்னிலைமை-
என் தனக்கு நீ தந்து எதிராசா -எந்நாளும்-உன் தனக்கே ஆள் கொள்ளு உகந்து -என்று
வடுக நம்பியைப் போலே தம்மையும் பொருளாக்கி ஆள் கொள்ள வேணும் என்று பிரார்த்திப்பது காண்க –
அமுதனாரோ மேலோர்க்கும் வாய்த்தற்கு அரிதான நிலையை எய்தினவர் ஆதலின்-ஒப்பற்ற பொருள் ஆனார் –

ஒரு பொருள்-
ஒப்பற்ற பொருள்
சீரிய பேறு உடையாரான ஆழ்வான் திருவடிக் கீழ் சேர்த்து எம்பெருமானார்
பொருளாக்கினமையின் அமுதனார் ஒப்பு இல்லாத பொருள் ஆனார் -என்க-
கூரத் ஆழ்வான் சரண் கூடி –இராமானுசன் புகழ் பாடி -ஆள் செய்வதாக -மொழியைக் கடக்கும் –என்னும் பாசுரத்தில்
அமுதனார் அருளி செய்வது இங்குக் கருத தக்கது –
இவ் ஒப்பற்ற நிலையும் ஒரு குறிப்பிட்ட இடத்தில் மாத்ரம் அன்று –உலகு எங்கும் -என்பார் புவியில் -என்கிறார் –
இனி இருள் தரும் மா ஞாலத்திலே என்னவுமாம் –

மருள் சுரந்த முன்னைப் பழ வினை வேர் அறுத்து –
இந் நிலையினின்றும் நழுவாத வண்ணம் -என் கர்ம சம்பந்தத்தை அறுத்ததோடு அன்றி –வாசனையாகிய வேரையும் களைந்து எறிந்தார் -என்கிறார் –
வாசனை யாவது -கர்மம் மீண்டும் தளிர்க்கும் படி மனத்தில் ஒட்டிக் கொண்டு இருக்கும்
பண்டைப் பழக்கத்தின் நுண்ணிய நிலைமை -சம்ஸ்கார விசேஷம் -பல்வகை பிறப்புகளுக்கும்
காரணமாகிய இக்கர்ம சம்பந்தம் அஞ்ஞானத்தால் ஏற்படுவதாலின்-மருள் சுரந்த -என்கிறார் –
மருள் சுரந்த –
மருளாலே சுரக்கப் பட்ட என்றபடி –மருளாவது -பொருள் அல்லாதவற்றை பொருள் என்று உணர்தல் –
இனி மருளை சுரந்த வினை என்னலுமாம் –
முன்பு அவித்தை வினைக்கு ஹேதுவாயிற்று -இப் பொழுது வினை அவித்யைக்கு ஹேது வாகிறது –
மருளால் வினை -எனபது விதையால் மரம் -எனபது போன்றது –வினையால் மருள் எனபது மரத்தால் விதை எனபது போன்றது –
முடிபு அநாதி எனபது தவிர வேறு இல்லை –அதனைக் கூறுகிறார் -முன்னைப் பழ வினை -என்று
முன் -பழைமை -இரண்டும் ஒரே பொருளை சொல்வன –இவ் இரு சொற்களும் மீ மிசை எனபது போலே மிக்க பழைமையை உணர்த்தி –
அநாதி -என்னும் கருத்தை உள் கொண்டு உள்ளன –வினைகள் நீங்கினும் அவற்றை செய்த பழைய வாசனை மீண்டும்
செய்யத் தூண்டுமாதலின் அதனையும் போக்கினார் என்னும் கருத்துப் பட -வேர் அறுத்து -என்றார் –
வேர் எனபது வாசனையை –
வாசனையை வேராக உருவினை செய்யவே -வினை மரம் எனபது பெற்றோம் –இது ஏக தேச உருவகம் –

மருள் -தெருளுற்ற ஆழ்வார்கள் –அடியேனை சொல்லாமல் -என்னை -அசன்னேவ பவதி –
புவி -சம்சார சாகரம் -கருணை கடல் -தயா சிந்து -பக்தி வெள்ளம் -புறம்பு உண்டான பற்றுக்களை –சேஷி பக்கல் –
காரணத்து த்யேயா -சென்னியில் தரிக்க வைத்தான் -பரகத ஸ் வீ காரம் -பாண்டியர் குல பதி-
பரன் மேன்மை
வைத்தான் ஸுலப்யம்
என் சென்னியில் ஸுசீல்யம்-

மருள் சுரந்த முன்னைப் பழ வினை வேர் அறுத்து
அவித்யா சம்வர்த்திதமாய் -அநாதி ஆகையாலே-மிகவும் பழையதாய்ப் போருகிற கர்மங்களை ஸ வாசனமாகப் போக்கி
மருள் சுரந்த முன்னை பழ வினை
அநாதி -அவித்யா கர்மா வாஸநா ருசி பிரகிருதி-சம்பந்தாத்மகமாய் இருந்துள்ள புண்ய பாப ரூபமான கர்மங்களை
வேரறுத்து -வேர் கிடந்தால் திரியட்டும் அங்குரித்து வளர்ந்து வரும் என்று-சமூலோன்மூலனகமாக சேதித்து

பரன் பாதமும் என் சென்னித் தரிக்க வைத்தான்
தம்முடைய திருவடிகளையும் என் தலையிலே தரிக்கும்படி வைத்து அருளினார் –ஆன பின்பு-எனக்கு ஒரு ஹானியும் இல்லை-
அன்றிக்கே –
பரன் பாதமும் என் சென்னித் தரிக்க வைத்தான் -என்று பரன் -என்கிற இத்தை மேலே- கூட்டி –
சர்வஸ்மாத் பரனான சர்வேஸ்வரனுடைய திருவடிகளையும் என் சென்னியிலே-தரிக்க வைத்தான் என்னவுமாம்
பரன் பாதம் என் தன் சென்னித் தரிக்க வைத்தான் – என்று பாடமுமாம்
பன்னுதல்-ஆராய்தல்-சிதைவு -அழிவு –

பரன் பாதமும் என் சென்னித் தரிக்க வைத்த
சர்வோத்கர்ஷ்டரான எம்பெருமானார்-
என்னுடைய சிரச்சிலே தரிக்கும்படி தம்முடைய ஸ்ரீ பாதத்தை -இவ் விஷயத்திலே பரத்வ புத்தி-பண்ணினவர் ஆகையாலே –
பரன் பாதம் -என்கிறார் –
அன்றிக்கே –
சர்வ ஸ்மாத் பரனுடைய ஸ்ரீ பாதத்தை நான் சிரச்சிலே தரிக்கும் படி -என்னவுமாம்
வைத்தான் —
நிர்ஹேதுகமாக –பரகத ச்வீகாரமாக தானே வைத்தான் -இப்படி ஸ்வரூப அநு ரூபமான பேற்றை-
நான் பெறும் படி உபகரித்தான் -என்றபடி –
எம்மா வீட்டுத் திறமும் செப்பம் நின்-செம்மா பாத பற்ப்புத் தலை சேர்த்து ஒல்லை-கைம்மா துன்பம் கடிந்த பிரானே அம்மா-
அடியேன் வேண்டுவது ஈதே -என்று மயர்வற மதி நலம் அருளப் பட்ட ஆழ்வாரும் பிரதம-பர்வத்தில் அருளிச் செய்தார் இறே –
இப்படி ஆன பின்பு

பாதமும் என் சென்னித் தரிக்க வைத்தான் –
பாதமும் -உயர்வு சிறப்பு உம்மை
என் -என்று தம் இழிவை எல்லாம் எண்ணிப் பார்க்கிறார்
இகழ்வாய தொண்டனேன் சென்னியில் பரன் பாதம் வைத்து அருளினாரே -இது என்ன பெறா பேறு
என்று பேருவகை கொள்கிறார் அமுதனார் –
ஆச்சார்யர்களுக்கு அருள் மிகுந்தால் தன் திருவடிகளை-அண்டினவர்கள் தலை மீது வைப்பார் போலும் –
மருளாம் இருளோடு மத்தகத்து தன் தாள் அருளாலே வைத்தவர் -என்று அனுபவித்து அறிந்த-அருளாள பெருமாள் எம்பெருமானார்
ஞான சாரத்தில் அருளி இருப்பது இங்கு அறிய தக்கது –

தரிக்க -தாங்க
இதனால் வைத்ததும் திருவடியை எடுக்காமல் நெடு நேரம் வைத்து இருந்த சுகத்தை அனுபவித்து பேசுவது தெரிகிறது –
இனி –தரிக்க -என்பதற்கு
இவர் தலை மேல் வைக்காமையினால் நிலை கொள்ளாது துடித்த
திருவடிகள் நிலை நிற்று தரிப்புக் கொள்ளும்படி என்று பொருள் கூறலுமாம்
இதனால் தம் பேறாக எம்பெருமானார் இவர் திரு முடியில் திருவடி விதமாய் தெரிகிறது
இவ்விடத்தில் தளிர் புரையும் திருவடி என் தலை மேலவே -என்னும் திருமங்கை மன்னன் ஸ்ரீ சூக்தியையும்
என் தலை மேலவே தளிர் புரையும் திருவடி -இவர் தலையிலே ஸ்பர்சித்த பின்பு தளிர் புரையும் திருவடி யாயிற்று –
அல்லாத போது திருவடிகள் சருகு ஆனால் போலே இருக்கை –என்னும் வ்யாக்யானதையும் நினைக –

இனி ஒரு பொருளாக்கி அந்நிலை புறம்பே போய்க் கெடாது ஒழிய வேணும் என்று
அமுதனாரை தம்மடிக் கீழ் வைத்துக் கொண்டார் என்று கருதலுமாம் .இங்கு
அருள் செய்து அடியேனைப் பொருளாக்கி உன் பொன்னடிக் கீழ்ப் புக வைப்பாய் -என்னும்
திருவாய் மொழி அனுசந்திக்க தக்கது -பொருள் ஆனாரை வைத்துக் கொள்ளும் ஸ்த்தானம்
பொன்னடிக் கீழ்ப் போலே காணும் -எனபது அவ்விடத்திய சுவை மிகு ஈடு வியாக்யானம் .
பரன் -என்று எம்பெருமானார் மேன்மையையும்
பாதம் வைத்தான் -என்று எளிமையையும்
என் சென்னியில் தரிக்க வைத்தான் -என்று சீலமும் அருளும் தோற்றுகின்றன –
எம்பெருமானார் தாமாகவே வந்து தமது நிர்ஹேதுக கிருபையால் தம் திருவடிகளை-
சென்னியில் தரிக்க வைத்து உய்வித்தல் அரங்கமாளி விஷயத்திலும் கண்டு அறிந்ததாம் –

இனி –பரன் -என்பதை
இராமானுசனுக்கு அடை மொழி யாகக் கொள்ளாது மேலே கூட்டிப் பரன் பாதமும் –
பரம-புருஷனாகிய ரெங்க நாதன் திருவடிகளையும் என்று கூறலுமாம்
இப்பொழுது-சர்வேஸ்வரனுடைய திருவடிகளையும் என் சென்னியிலே தரிக்கும்படியாக எம்பெருமானார் வைத்தார் என்றதாயிற்று
பரம புருஷனான ரெங்க நாதனும் எம்பெருமானாருக்கு-வசப்பட்டு இருத்தலின் -அவன் திருவடிகளை வைத்து அருளுவதாக அமுதனார் அருளி செய்கிறார்
இதனை அடி ஒற்றியே வேதாந்த தேசிகனும் நியாச திலகத்தில்
தத்தே ரங்கீ நிஜமபி பதம்-தேசிகாதே சகான்க்க்ஷீ-அரங்கன் ஆசார்யன் கட்டளையை எதிர்பார்ப்பவனாய்
தன் பதத்தையும் தருகிறான் –என்று அருளி உள்ளார்
இங்கு கட்டளைப் படி நடப்பதால் ஆசார்யனுக்கு அரங்கன் விதேயனாக கூறப் பட்டு இருப்பது-கவனிக்க தக்கது –
இங்கே தேசிகன் எனபது எம்பெருமானாரையே –
குரு ரிதி சபதம் பாதி ராமானுஜார்யே -என்று-குரு என்னும் சொல் எம்பெருமானார் இடம் பொலிவுறுகிறது –
மற்றவர் இடம் அன்று -என்றபடி
எம்பெருமானாரே தேசிகர் என்க –

தேசிகோ மே தயாளு -என்று முன்னும் -தேசிகா தேச காங்கி-என்று பின்னும் சொல்லைக் கையாண்டு
இடையே லஷ்மன முனி என்று எம்பெருமானாரைக் குறிப்பிடுவதால் தேசிக என்னும் சொல்
அவரையே குறிப்பிடுவதாக கொள்வது ஏற்புடையதாகும் -ஆகவே தேசிக ஆதேசம் -கட்டளை
எனபது ராமாநுஜார்ய திவ்ய ஆக்ஜையையே -நிஜம் அபிபதம் எனபது பரம பதத்தை கூறும்
என்று கொண்டாலும் -தனது திருவடியையும் -என்னும் பொருளும் ஒவ்வாதது அன்று –
ஏற்புடையதே -மோ ஷதை தரும் போதும் தலையில் திருவடித் தாமரையை வைப்பதாக கூறப்பட்டு-இருப்பதும் இங்கு உணர தக்கது –
அரங்கன் செய்ய தாள் இணையோடு ஆர்த்தான் -என்று மேலே இவர் அருளி செய்வதற்கு ஏற்ப
பரன் என்பதற்கு-ரங்க நாதன் என்று பொருள் உரைக்கப் பட்டது –

திருப்பாதம் என்னாது பாதம் என்றது -தலையில் வைபதர்க்கு முன்பு அதற்க்கான-சீர்மை அறியாமையினால் என்க –
இனி சென்னியில் வைத்த பாதத்தை தரிப்பது குணம் கண்டு அன்று –
சத்தா பிரயுக்தம் -இயல்பாக அமைந்தது -என்னும் கருத்துடன் அங்கனம் கூறினார் ஆகவுமாம்-
பரன் பாதம் என்று ப்ராப்தி -சம்பந்தம் கூறப் பட்டது
ஆழ்வார் ஆள வந்தார் போன்ற மேலோர் முடிகளில் போலே எம்பெருமானார் அருளினால் அமுதனார்
முடியிலும் பரன் பாதம் விளங்குவதாயிற்று-பரன் பாதம் என் தன் சென்னி -என்றும் ஒரு பாடம் உண்டாம்

எனக்கு ஏதும் சிதைவு இல்லையே
எம்பெருமானார் தாமே ஏற்றுக் கொண்டமையின் எனக்கு ஒரு குறையும் வர வழி இல்லை-என்றபடி-
நான் முயலின் அன்றோ சிதைவு எனக்கு நேருவது எனபது கருத்து

எனக்கு ஏதும் சிதைவில்லையே
பரகத ஸ்வீகார பாத்திர பூதனான -எனக்கு ஏதேனும் ஒரு ஹானி உண்டோ –சிதைவு –அழிவு
சிதைவு இல்லையே -ஆகையால் எனக்கு ஒரு குறையும் இல்லை என்கிறார் –

இவர் அடியே பிடித்து பாட்டுக்கள் தோறும்
சரணாரவிந்தம் -என்றும் -கமலப் பதங்கள் -என்றும் –பாதம் -அடி -என்றும் இடை விடாதே வாய் விட்டுப் புலம்புகிறார்
மோருள்ளதனையும் சோறேயோ-ஆகிலும் இவர் தம்முடைய காதல் இருக்கும்படி –
ஒரு கால் சொன்னதை ஒன்பதின் கால் சொல்லிக் கொண்டு போந்தார் என்கை-

ஸ்ரீ கீதா பாஷ்யத்தில் ஸ்ரீ ஸ்வாமி ஸ்ரீ ஆளவந்தாருக்கு அருளிச் செய்த தனியன்
யோ நித்ய அச்யுத பதாம் புஜ யுக்ம ருக்ம வ்யாஹாமோஹதஸ் ததிராணி த்ருணாய மேனே
அஸ்மத் குரோர் பகவதோஸ்ய தயைக சிந்தோ ராமானுஜஸ்ய சரனௌ சரணம் ப்ரபத்யே —

த்யான வித்வஸ்த அசேஷ கல்மஷ
அழிக்கப்பட்ட அனைத்து பாபங்களையும் கொண்ட -என்பதால்
ஒரு முறை கடாக்ஷ லேசத்தாலே பலவிதமான பாபங்களும் அழிக்கப் பட்டன –
அதன் பின்னர் இடைவிடாமல் அந்த ஸ்ரீ ஆளவந்தாருடைய திருவடித் தாமரைகளையே எண்ணி இருப்பதால்
அவை வாசனையோடு முழுமையாக நீக்கப் பட்டன -என்றவாறு

வஸ்துதாம்
வஸ்துவாக இருத்தல் –
அஸ்தி ப்ரஹ்மேதி சேத் வேத சந்த மேநம் ததோ விது –தைத்ரியம் -2-6-1-ப்ரஹ்மத்தை அறிந்து கொண்டவன்
என்றால் அவனை இருக்கிறவனாக அறிகிறார்கள்
அஹம் வஸ்துதாம் உபயாத
நான் அடைந்துள்ளேனா -என்ற வியப்பால் அருளிச் செய்கிறார்
இப்படியாக தனது அநிஷ்டங்களும் அப்ராப்தங்களும் நீங்கப்பெற்று இஷ்டப் பிராப்தி அருளியதற்கு
மனம் வாக்கு காயம் -முக்கரணங்களாலும் ஏவப்பட்டு நமஸ்காரம் செய்கிறார்
இதைக் கேட்பவர்களுக்கும் அநேக மங்களங்களும் உண்டாகும்
இத்தால் ஆச்சார்ய வந்தனம் குரு பரம்பரயா த்யானம் பூர்வகமாக பக்தி செய்ய வேண்டும்
என்று உணர்த்தப்பட்டது

யதா பதாம் —அம்போருஹம் தாமரை திருவடிகளை தியானித்து
அசேஷ கல்மஷம்
வஸ்துத்வத்வம் அடைந்தேன் -இரண்டும்
த்யாநேன–கண்டு -இடைவிடாமல் நினைப்பதே-விமல சரீர சேவையால்
ஸ்ரீ ஆளவந்தாரை குறித்து மட்டும்

விஷயா விநிவர்தந்தே நிராஹாரஸ்ய தேஹிந–.
ரஸவர்ஜம் ரஸோப்யஸ்ய பரம் தரிஷ்ட்வா நிவர்ததே––ஸ்ரீ கீதை -৷৷2.59৷৷

விஷயங்களில் இருந்து இந்திரியங்களை இழுத்த ஜீவனுக்கு விஷயங்கள் நீங்குகின்றன
ஆனால் விஷயங்களில் ஆசை நீங்குவது இல்லை –
ஞான யோக நிஷ்டனுக்கு மேலான ஆத்ம ஸ்வரூபத்தைக் கண்டவுடன் இவ்வாசையும் நீங்குகிறது
ஆத்ம தரிசனத்தால் இந்திரியங்கள் அடக்கலாம் -ஏக ஆஸ்ரய தோஷம் –

ஆத்மாவை கண்டாலே போகும்
முயன்றாலும் -இந்திரியங்கள் மனத்தை இழுத்து செல்லும்
அன்யோன்ய ஆஸ்ரயம் வரும்
இத்தை போக்க அடுத்த ஸ்லோகம்

யததோ ஹ்யபி கௌந்தேய புருஷஸ்ய விபஷ்சத.–
இந்த்ரியாணி ப்ரமாதீநி ஹரந்தி ப்ரஸபம் மந—৷৷2.60৷৷

இந்திரியங்கள் அடக்கி ஆத்ம தர்சனம் -என்கிறான் –
பிரத்யனம் செய்தாலும் –இந்திரியங்கள் பலமானவை -மனசை பலாத்காரமாக இழுக்கும் –

இந்திரியங்களை விலக்கி என்னிடம் செலுத்து -த்யானம் பண்ண பண்ண சத்வ குணம் வளர்ந்து
ஸூபாஸ்ரயமான திவ்ய மங்கள விக்ரஹத்தை வைத்து
அதே போலே திருவடித் தாமரை த்யானம்
வஸ்துத்வம் அடைந்தது -அடுத்த நிலை
இருப்பு -தன்மையுடன் -ஸத்வித்யா பிரகரணம் -சங்கல்பித்து ஸ்ருஷ்ட்டி செய்தது -சங்காத்வம்-உள்ளே புகுந்து
தேறி இருத்தல் -சஸாபி ராம –பரிஷத் கத சனையி அனுபவிக்க ஆசை உடன் –
பூ சத்தாயாம் சத்தை பெற ஸ்ரீ ராமாயணம் கேட்க இறங்கி

பொருள் அல்லாத என்னை பொருள் ஆக்கி அடிமை கொண்டாய்
தமியேனுக்கு அருளாய் முந்திய பாசுரம்
அறிவித்து சத்தாக ஆக்கி
வஸ்துவை உருவாக்கி உஜ்ஜீவனமும் கொடுத்து
அசந்நேவ பவதி–
நான்கு நிலைகள் பார்த்தோம்
1-இருத்தல் 2-நிலை பெருத்து இருத்தல் -3-பகவத் ஞானம் -4-கைங்கர்யம்

மருள் சுரந்த முன்னை வினை -சூழலாக அஞ்ஞானம் கர்மா இரண்டும் உண்டே –
வேர் அறுத்து அசேஷ -சவாசனமாக ருசி யுடன் போக்கி
பன்ன பணித்த –ஆராய -பரன் பாதம் சென்னியில் தரிக்க வைத்தான்
பொருள் ஆக்குதல் இல்லை -ஒரு பொருள் -அத்விதீயமாய் -ஒருத்தி மகனாய் போலே
சேஷ பூதனாக அறிந்து அடிமை
ஆச்சார்ய நிஷ்டை வடுக நம்பி நிலை
அமுதனார் -அதுக்கும் மேலே -அன்பு செய்யும் சீரிய பேறுடையார் அடிக்கீழ் –
இந்த தனித்தன்மை ஒரு பொருள் பாகவத சேஷத்வம்

———–

இன்று என்னைப் பொருள் ஆக்கி தன்னை என்னுள் வைத்தான்
அன்று என்னைப் புறம் போகப் புணர்த்தது என் செய்வான்
குன்று என்னத் திகழ் மாடங்கள் சூழ் திருப் பேரான்
ஓன்று எனக்கு அருள் செய்ய உணர்த்தல் உற்றேனே–10-8-9-நிதானப் பாட்டு இந்த ஸ்ரீ திருவாய் மொழிக்கு

இன்று என்னை அங்கீ கரிக்கைக்கும்- முன்பு என்னை பாராமுகம் செய்தமைக்கும் காரணம் என்
என்று கேட்க வேண்டி இருந்தேன் – இது தனக்குத் தானே சிந்தித்தலில் நோக்கு –
அன்றிக்கே
ஸ்ரீ சர்வேஸ்வரன் தன்னை ஸ்ரீ பரமபததுக்கு கொடு போகையில் விரைகிறபடியைக் கண்டு
இன்று என் அளவு அல்லாதபடி த்வரிக்கிற -விரைகிற தேவர் இதற்கு முன்பு பல காலம் விட்டு ஆறி இருந்தமை எங்கனே
என்று அவனைக் கேட்கிறார் -என்னவுமாம் –
அன்றிக்கே
மூன்றாவது அவதாரிகை அதி சங்கையிலே நோக்கு –
இப்படி விரைகிறமை மெய்யாகில் முன்பு விட்டு ஆறி இருக்கக் கூடாது -என்கிறார்-

நத்வாம் இஹஸ்த்தாம் ஜாநீதே ராம கமல லோசனே தேநத்வாம் நாநயதி ஆஸூ சசீமிவ புரந்தர -சுந்தர -36-33-
ஸ்ரீ பிராட்டி ஸ்ரீ திருவடியைப் பார்த்து அருளியது –

நத்வாம் இஹஸ்த்தாம் ஜாநீதே-
தேவரீர் இங்கு இருப்பதனை பெருமாள் அறிய வில்லை -என்கிறபடியே
நடுவே சிலர் சொல்லும்படி ஆயிற்று எழுந்து அருளிய இடம் அறியாமையாலே
ஆறி இருந்தார் இத்தனை போக்கி -அறிந்தால் ஒரு ஷாணம் ஆறி இருப்பாரோ –
இது தான் என் வார்த்தை கொண்டு அறிய வேண்டுமோ –
கமல லோசனே-
உம்முடைய கண் அழகே அன்றோ பிரமாணம் –
ராம-
அவரை அறியாது ஒழிய வேண்டுமோ –
சிரஞ்ஜீவதி வைதேஹீ யதிமாசம் தரிஷ்யதி ந ஜீவேயம் ஷணம் அபி விநாதாம் அஸி தேஷணாம்-சுந்தர 66-10-
கருத்த கண்களை உடைய சீதையைப் பிரிந்து ஒரு ஷணம் கூட உயிர் வாழேன் -என்றே அன்றோ அவர் இருப்பது –
ராம கமல லோசனே –
அவரை அறியாமையும் இல்லை –
உம்மை நீர் கண்ணாடிப் புறத்திலும் கண்டு அறியாமையும் இல்லை –
கமல லோசனே —
அன்றிக்கே
யார் எதிராகத் தான் இக்கண் சிவப்பும் சீற்றமும் எல்லாம் -என்னுதல்
பிரணய ரோஷத்திலே நோக்கு-என்னுதல் –

இவர் கேட்ட இதற்கு காரணம் காணாமையாலே-நிருத்தரானாய் – விடை அளித்தால் அற்றவனாய்
உமக்கு மேல் செய்ய வேண்டுவது என் -என்ன
ப்ரீதி முன்னாக அடிமை செய்யப் பெற்றேன் இதுவே இன்னம் வேண்டுவது -என்கிறார்
அவன் தானே செய்தான் -என்னும் அன்று
அவனுக்கு வைஷம்யமும் -உயர்வு தாழ்வு காண்டலும்-நைர்க்ருண்யமும்- அருள் பெற்ற தன்மையும்-சர்வ முக்தி பிரசங்கமும் –
எல்லார்க்கும் மோஷம் கொடுத்தலும்-என்னும் இவை வாராவோ -என்னில்
இத் தலையில் ருசியை அபேக்ஷித்து -விரும்பிச் செய்கையாலே அவனுக்கு அவை உண்டாக மாட்டா
அதுவே காரணம் என்று ஈஸ்வரன் அதனைச் சொன்னாலோ என்னில்
அது உபாயம் ஆக மாட்டாது-பல வ்யாப்த மானது – பலத்தோடு கூடி இருப்பது அன்றோ உபாயம் ஆவது
இந்த ருசி அதிகாரியின் உடைய ஸ்வரூபம் ஆகையாலே-அவனுக்கு விசேஷணம் ஆம் இத்தனை
உபாயம் ஸஹ காரி நிரபேஷம் -வேறு துணையை விரும்பாதது ஆகையாலும்
இந்த ருசி உபாயம் ஆக மாட்டாது
ஆக
இது உபாயம் ஆகாமையாலே இவர்க்கு இல்லை என்னவுமாம்
சர்வ முக்தி பிரசங்கம் பரிஹார்த்தமாக -நீங்குவதற்காக அவனுக்கு உண்டு -என்னவுமாம் –

உற்றேன் உகந்து பணி செய்ய உன பாதம்
பெற்றேன் ஈதே இன்னம் வேண்டுவது எந்தாய்
கற்றார் மறை வாணர்கள் வாழ் திருப் பேராற்கு
அற்றார் அடியார் தமக்கு அல்லால் நில்லாவே–10-8-10-

——————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருமலை நல்லான் சக்கரவர்த்தி ஸ்ரீ ராம கிருஷ்ண ஐயங்கார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருவரங்கத்து அமுதனார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ ஆழ்வார்கள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: