ஸ்ரீ ராமானுஜ நூற்றந்தாதி பாசுரமும்- ஸ்ரீ ஆழ்வார் பாசுரங்களும் -1-பூ மன்னு மாது பொருந்திய மார்பன்–

ஸ்ரீ ராமானுஜ நூற்றந்தாதி பாசுரமும் ஸ்ரீ ஆழ்வார் பாசுரங்களும் -பூ மன்னு மாது பொருந்திய மார்பன்–

பூ மன்னு மாது பொருந்திய மார்பன் புகழ் மலிந்த
பா மன்னு மாறனடி பணிந்து உய்ந்தவன் பல்கலையோர்
தாம் மன்ன வந்த விராமானுசன் சரணார விந்தம்
நாம் மன்னி வாழ நெஞ்சே சொல்லுவோம் அவன் நாமங்களே -1 –

பூவிலே பிராட்டி மன்னி கிடக்க
அவள் மன்னியது மார்பில்
மார்பன் புகழ் மலிந்த பா
பா மன்னு மாறன்
மாறன் திருவடியில் மன்னி ராமனுஜன்
பல்கலையோர் தாம் மன்ன வந்த இராமானுசன்
இராமானுசன் சரணார விந்தம் நாம் மன்னி வாழ
வாழ நெஞ்சே சொல்லுவோம் அவன் நாமங்களே
தொழுது எழு மனனேபோல -நெஞ்சே சொல்லுவோம் நாமங்களே

பேறு ஓன்று மற்றும் இல்லை நின் சரண் அன்றி அப் பேறு அளித்தற்கு
ஆறு ஒன்றும் இல்லை மற்றச் சரண் அன்றி -என்று மேலே – -45 இவர் தாமே-
அருளிச் செய்து இருப்பது கவனித்தற்கு உரியது –
ஆக ஸ்ரீ எம்பெருமானார் திரு நாமங்களை சொல்வது-சாதனமாக மாட்டாது –
போக ரூபமானது என்பது உணரத் தக்கது –

ஸ்ரீ இராமானுச நாமம் ஒன்றுமே பாட்டுத் தோறும் சொல்லப் பட்டு இருப்பினும் -நாமங்கள்
என்று பன்மையில் கூறியது நிர் வசன பேதத்தாலே -ஒரு நாமம் பலவாய் தோற்றுதல் பற்றி என்க –
ஸ்ரீ ராமானுஜருக்கு -11 திருநாமங்கள் –
ஸ்ரீ திருமலை நம்பி சாத்திய திருநாமம் 1-இளைய ஆழ்வார் முதலில்
ஸ்ரீ பெரும் புதூர் ஆதி கேசவ பெருமாள் சாத்திய திரு நாமம் -2–பூத புரீசர்
ஸ்ரீ நம் பெருமாள் சாத்திய திரு நாமம்-3–உடையவர்
ஸ்ரீ தேவ பெருமாள் சாத்திய திரு நாமம்-4–எதி ராஜர்
ஸ்ரீ திருவேங்கடம் உடையான்–சாத்திய திரு நாமம்-5-தேசிகேந்த்ரன்
ஸ்ரீ சாரதா தேவி சாத்திய திரு நாமம்-6- ஸ்ரீ பாஷ்ய காரர்
ஐந்து ஆச்சார்யர்கள் சாத்திய திரு நாமங்கள் ஐந்து
ஸ்ரீ பெரிய நம்பி சாத்திய திரு நாமம் -7-ராமானுஜர்–தாஸ நாமம்
ஸ்ரீ திரு கோஷ்ட்டி நம்பி சாத்திய திரு நாமம்-8- எம்பெருமானார்
ஸ்ரீ பெரிய திருமலை நம்பி சாத்திய திரு நாமம்-9–கோவில் அண்ணன்
திரு மாலை ஆண்டான் சாத்திய திரு நாமம்-10- சட கோபன் பொன் அடி
ஸ்ரீ ஆழ்வார் திரு அரங்க பெருமாள் அரையர் சாத்திய திரு நாமம் -11–லஷ்மண முனி
ஆக 11 திரு நாமங்கள் –12-யதீந்த்ரர் மற்றும் பல .இருந்தும்
ஸ்ரீ ராமானுச திரு நாம சங்கீர்த்தனமே அமையும்.

ஓர் ஆயிரமாய் உலகு அளிக்கும் பேர் -என்றது காண்க –
எம்பெருமான் திரு நாமங்களில் -நாராயணன் என்னும் திரு நாமம் போன்றது
எம்பெருமானார் திரு நாமங்களிலோ -ராமானுஜன் -என்னும் திரு நாமம் -என்க —

இனி நாமங்கள் என்பது இப் ப்ரபந்தத்தில் உள்ள பாசுரங்களை கூறலுமாம் –
நாமங்கள் குணங்களையும் செயல்களையும் கூறுவது போலே -பாசுரங்கள்
அவைகளை கூறுதலின் பாசுரங்கள் நாமங்கள் எனப்பட்டன -என்க —

நாமங்க ளாயிரமுடைய நம் பெருமானடி மேல்
சேமங்கொள் தென் குருகூர்ச் சடகோபன் தெரிந்துரைத்த
நாமங்க ளாயிரத்துள் இவை பத்தும் திருவல்ல வாழ்
சேமங்கொள் தென்னகர் மேல் செப்புவார் சிறந்தார் பிறந்தே–5-9-11–
திருவாய் மொழி ஆயிரம் பாசுரங்களையும் -நாமங்கள் ஆயிரம் – என்றார் நம் ஆழ்வார் –
அவனுக்கு திரு நாமங்கள் போலே குண சேஷ்டிதாதிகளுக்கு பிரதிபாதகமான ஆயிரத்திலும் –என்பது
அவ்விடத்து வியாக்யான ஸ்ரீ ஸூக்தி

———-

பூ மன்னு மாது பொருந்திய மார்பன்-

அகல கில்லேன் இறையும் என்று அலர் மேல் மங்கை உறை மார்பா!
நிகரில் புகழாய்! உலக மூன்றுடையாய்? என்னை ஆள்வானே!
நிகரில் அமரர் முனிக் கணங்கள் விரும்பும் திரு வேங்கடத்தானே!
புகல் ஒன்றில்லா அடியேன் உன்னடிக் கீழ் அமர்ந்து புகுந்தேனே–6-10-10-

பனி மலராள் வந்து இருக்கும் மார்பன் -என்றார் திரு மங்கை ஆழ்வார்

பொலிந்து இருண்ட கார் வானிலே மின்னே போல்-மார்பில் திரு இருந்தது பொருந்தி உள்ளது

பாசுர படி சேர்த்தி திரு நாமங்கள்
எழில் திரு மார்பர்
எழிலார் திரு மார்பர்
செய் அவள் நின் அகலம்
திரு வுடையாள் மணவாள
சீதை மணாளா
அரவிந்த பாவையும் தானும்
மாதவன்
தோடுலா மலர் மங்கை தோள் இணை தோய்ந்த
அல்லி மா மலர் மங்கை நாதன் அரங்கன்
அல்லி மலர் திரு மங்கை கேள்வ திரு மகளோடு இனிது அமர்ந்த செல்வன்
மங்கை மன்னி வாழு மார்பா
திரு கலந்து சேரு மார்பா
வல்லி நாண் மலர் கிழத்தி நாத அல்லி மாதர் புல்க நின்ற ஆயிரம் தோளான்
மலி மாட மங்கை தன் கொழுநன்
அன்று ஆயர் குல கொடியோடு அணி மா மலர் மங்கை யோடு அன்பு அளாவி
பார் வண்ண மட மங்கை பனி நன் மா மலர் கிழத்தி நீர் வண்ணன்மார்வத்தில்
இருவர் அடி வருடும் தன்மையான்
ஆயர் பூம் கொடிக்கு இன விடை பொருதவன்

பூ ஆர் திரு மா மகள் புல்கிய மார்பா மென் தோள் ஆய்சிக்கு அன்பனாய்
வில் ஏர் நுதல் வேல் நெடும் கண்ணியும் நீயும்
அம் புருவ வரி நெடும் கண் அலர் மகளை வரை அகலத்து அமர்ந்து
திரு வாழ் மார்பன்
திரு வுக்கும் திரு ஆகிய செல்வா
பந்தார் மெல்விரல் நல்வளை தோளி பாவை பூ மகள் தனோடும் வுடனே வந்தாய்
செம் கமல் திரு மகளும் புவியும் செம் பொன் திருஅடி இன் இணை வருட
புவி மடந்தைதனை இடந்து புல்கி எயிற்று இடை வைத்து அருளிய எம் ஈசன்
திரு மாமகள் மருவும் சிறுபுலியூர் சலசயனத்து அருமா கடலமுது
வாசவார் குழலாள் மலை மங்கை தன் பங்கன் திரு மங்கை மணாளன்
வடி தடம் கண் மலர் அவள் வரை ஆகத்துள் இருப்பள்
மடப் பாவை சீர் ஆளும் வரை மார்பன்
மார்வில் திருவன்
மடமகள் குயமிடை தடவரை அகலம் அது வுடையவர்
புலமனு மலர்மிசை மலர்மகள் புணரிய நிலமகள் என இன மகளிர்கள் இவரோடும்
வல மனு படை வுடை மணி வண்ணர் மகள் செவ்வி தோய வல்லான்
திரு மா மகளுக்கு இனியான்
குல மா மகளுக்கு இனியான்
நில மா மகளுக்கு இனியான்
நானில நங்கை மணாளா
மண் மகள் கேள்வன் மலர் மங்கை நாயகன்
திரு மறு மார்பன்
திரு மா மகள் தன் கணவன்
குநிலல வரையன் மடப் பாவை இடப் பால் கொண்டான்
பாவை மாயன் மொய் அகலத்து வுள் இருப்பாள் அன்று ஆயர் குல மகளுக்கு அரையன்
மலர் மகள் நின் ஆகத்தாள்
தாமரையாள் கேள்வன்
பனி மலராள் அங்கம் வலம் கொண்டான்
ஒரு வல்லி தாமரையாள் ஒன்றிய சீர் மார்வன்
பவள வாய் பூ மகளும் பன்மணி பூணாரம் திகழும் திரு மார்பன்
பூ மங்கை கேள்வன்
மின்னே போல் தோன்றி மலிந்து திரு இருந்த மார்வன்
பொன் பாவை கேள்வா திருவோடு மருவிய இயற்கை
பூ மேய செம் மாதை நின் மார்வில் சேர்வித்து
ஒரு மதி முகத்து மங்கையர் இருவரும் மலரன அம்கையின் முப்பொழுதும் வருட
அரி துயில் அமர்ந்தனன் மலர் மகள் விரும்பும் நம் அரும் பெறல் அடிகள்
மான் ஏய் நோக்கி மடவாளை மார்வில் கொண்டாய் மாதவா
திரு மகளார் தனிக் கேள்வன்
மலராள் மணவாளன்
தன்வுள் கரக்கும் வுமிழும் தடம் பெரும் தோள் ஆரத் தழுவும் பார் என்னும் மடந்தையை மால் செய்கின்ற மால்.
அல்லி மலர் மகள் போக மயக்குகள் ஆகியும் நிற்கும் அம்மான்
கமல திரு மாதினை தடம் கொள் தார் மார்பினில் வைத்தவர்
மைய கண்ணாள் மலர் மேல் வுறைவாள் வுறை மார்பினன்
மணி மாமை குறைவிலா மலர் மாதர் வுறை மார்வன்
கூந்தல் மலர் மங்கைக்கும் மண் மடங்தைக்கும் குல ஆயர் கொழுந்துக்கும் கேள்வன்
ஒசிந்த ஒண் மலராள் கொழுநன்
திரு மா மகள் கேள்வா
அலர் மேல் மங்கை வுறை மார்பா
என் திரு மகள் சேர் மார்வன்
திரு எயிற்றால் இடந்து நீ கொண்ட நில மகள் கேள்வன்
உரு வேழும் தழுவி நீ கொண்ட ஆய மகள் அன்பன்
என் திரு மார்பன்
என் மலை மகள் கூறன் அமர் வென்று உருப்பிணி நங்கை அணி நெடும் தோள் புணர்ந்தான்
திரு அமர் மார்வன்
வடிவிணை இல்லா மலர் மகள் மற்றை நில மகள் பிடிக்கும் மெல் அடியை
மையார் கரும் கண்ணி கமல மலர் மேல் செய்யாள் திரு மார்வினில் சேர் திரு மால்
கொடியேர் இடை கோகனகதவள் கேள்வன்
வடிவேல் தடம் கண் மடப் பின்னை மணாளன்
மணாளன் மலர் மங்கைக்கும் மண் மடங்தைக்கும்
மானை நோக்கி மடப்பின்னை தன் கேள்வன்
அல்லி மாதர் அமரும் திரு மார்பினன்
வாள் கெண்டை ஒன் கண் மடப்பின்னை தன் கேள்வன்
திகழ்கின்ற திரு மார்பில் திரு மங்கை தன்னோடும்
கோல மலர் பாவைக்கு அன்பாகிய என் அன்பேயோ
மா மலராள் நாயகன்-
குரு மா மணிப் பூண் குலாவித் திகழும் திரு மார்பு இருந்தவா காணீரே
எம் தம்பிரானார் எழில் திருமார்வற்கு

வடிவாய் நின் வல் மார்பினில் வாழ்கின்ற மங்கையும் பல்லாண்டு
அல்லி அம் பூ மலர் கோதாய்
மை தகுமா மலர் குழலாய்
அரவிந்த பாவை
நாயகப் பெண் பிள்ளாய்
நந்த கோபாலன் மரு மகள்
நப்பினை
கந்தம் கமழும் குழலி
பந்து ஆர் விரலி
திருவே

தோடு வுலா மலர் மங்கை அல்லி மா மலர் மங்கை
பாசி தூர்த்த பார் மகள் அல்லி மலர் திரு மங்கை
செவ் வரி நல் நெடும் கண் சீதை
ஆயர் மங்கை
மன்னு மா மலர் கிழத்தி
வைய மங்கை
ஆயர் பின்னை
ஆயர் தம் கொழுந்து
பந்து இருக்கும் மெல் விரலாள் பாவை பனி மலராள்
அன்று ஆயர் குலக் கொடி
அணி மா மலர் மங்கை
பார் வண்ண மட மங்கை
பனி நல் மலர் கிழத்தி
செழும் கடல் அமுதினில் பிறந்த அவள்
மின் நின் நுண் இடை மடக் கொடி
திரு மால் திரு மங்கை
பூ மங்கை
புல மங்கை
புகழ் மங்கை
தெய்வ திரு மா மலர் மங்கை
திரு மடந்தை
மண் மடந்தை
வாள் நெடும் கண் மலர் கூந்தல் மைதிலி
வார் ஆறும் இளம் கொங்கை மைதிலி
பூ வார் திரு மா மகள்
மாழை மான் மட நோக்கி
போதார் தாமரை யாள்
அம் புருவ வரி நெடும் கண் அலர் மகள்
செம் கமல திரு மகள்
பார் வண்ண மட மங்கை
பனி மலர் மேல் பாவை
திரு மகள் மண் மகள் ஆய் மகள்
செய்ய நெடு மலராள்
கமல திரு மாது
கோவை வாயாள்
பூவின் மிசை மங்கை
கூந்தல் மலர் மங்கை
குல ஆயர் கொழுந்து
வடிவு இணை இல்லா மலர் மகள்
கோல மலர்ப் பாவை
பூ மன்னு மாது
வெறி தரு பூ மகள்
கமலத்து அலர் மகள் கேள்வன்
மா மலராள்-

மார்பன் புகழ் மலிந்த பா-
உயர்வற உயர் நலம் உடையவன் -அயர்வறும் அமரர்கள் அதிபதி
திட விசும்பு எரி வளி நீர் நிலம் இவை மிசை-
படர் பொருள் முழுவதும் ஆய் அவை அவை தொறும்
உடல் மிசை உயிர் எனக் கரந்து எங்கும் பரந்துளன்-
சுடர் மிகு சுருதியுள் இவை உண்ட சுரன் –
நீர் தொறும் பரந்துளன் பரந்த வண்டமிதென -என்றும்
ஒன்றும் தேவும் உலகும் உயிரும் மற்றும் யாதும் இல்லா அன்று-
நான்முகன் தன்னோடு தேவர் உலகோடு உயிர் படைத்தான் -என்றும்
உலகமுண்ட பெருவாயா வுலப்பில் கீர்த்தி யம்மானே –என்றும்
புணரா நின்ற மரம் எழ அன்று எய்த ஒரு வில் வலவாவோ-
புணரேய் நின்ற மரமிரண்டின் நடுவே போன முதல்வாவோ -என்றும்
நோலாதாற்றேன் உனபாதம் காண வென்று நுண்ணுர்வில்-
நீலார் கண்டத்தம்மானும் நிறை நான்முகனும் இந்திரனும் -என்றும்
செந்தாமரைக்கண் செங்கனிவாய் நால் தோள் எந்தாய் எனது உயிரே -என்றும்
முனியே நான்முகனே முக்கண் அப்பா -என்றும்
சூழ்ந்து அகன்று ஆழ்ந்து உயர்ந்த முடிவில் பெரும் பாழேயோ-
சூழ்ந்து அதனில் பெரிய பர நன் மலர் சோதீயோ
சூழ்ந்து அதனில் பெரிய சுடர் ஞான இன்பமேயோ -என்று தலைக் கட்டுகையாலே
உயர்வற -என்று தொடங்கி-உயர்ந்தே -என்னும் அளவும் –
ஆதி மத்திய அவசானங்களிலே-ஒருபடிப்பட்ட கல்யாண குணங்களால் ஏற்பட்ட-பா

உயர் நலம் உடையவன் என்று குண அனுபவத்திலே இழிந்து-ஈறில வண் புகழ் -என்று முதலிலும்
உலப்பில் கீர்த்தி -என்று இடையிலும் -சுடர் ஞான இன்பம் -என்று முடிவிலும்-
திருவாய் மொழியில் புகழ் -குணம் மலிந்து இருத்தல் காண்க –

புகழ் -மலிந்த –
நலம் உடையவன் என்று ஆரம்பித்து 1000 கல்யாண குணங்கள் காட்டி யது ஒரே பா- திரு வாய் மொழி-தானே-
தொண்டர்க்கு அமுது உண்ண சொல் மாலைகள் சொன்னேன் -என்றும் -தாமே ஸ்லாக்கிக்கும்படியான
திருவாய் மொழியிலே
அரங்கர் வண் புகழ் மேல் ஆன்ற தமிழ் மறைகள் ஆயிரமும் ஈன்ற முதல் தாய் சடகோபன்-
குழல் மலிய சொன்ன ஓர் ஆயிரம் இறே –

பா மன்னு மாறனடி
வழி பட்டு ஓட அருள் பெற்று மாயன் கோல மலர் அடிக்கீழ்
சுழி பட்டு ஓடும் சுடர்ச் சோதி வெள்ளத்து இன்புற்று இருந்தாலும்
இழி பட்டு ஓடும் உடலினில் பிறந்து தன் சீர் யான் கற்று
மொழி பட்டு ஓடும் கவி அமுதம் நுகர்ச்சி உறுமோ முழுதுமே–8-10-5-

மா மலராள் புணர்ந்த பொன் மார்பனையும் அவனைப் பிரதிபாதிப்பதாகத்-திருவாய் மொழியையும் –
உணர்ந்த மெய்ஞ்ஞானியர்

மாறன் அடி பணிந்து உய்ந்தவன் -என்பதை
மணவாள மா முனிகள்-பராங்குச பாத பக்தம் –என்று வட மொழியில் மொழி பெயர்த்தார்
பக்தம் -உணவு

நம் ஆழ்வார் உள்ள இடமே போம் வழியாய் யமைந்தது –
எம்பெருமான் உள்ள இடம்-கல்லும் முள்ளுமான வழி என்னும் கருத்து பட
வைணவன் ஒருவன் சொல்வதாக-திரு விருத்தத்தில் புனத்தயலே வழி போகும் அருவினையேன் -என்னும் இடத்து
ஆழ்வார் உய்த்து உணர வைத்த பொருளை எம்பெருமானார் கைக் கொண்டு உய்வு பெற்றார் என்க –

புனமோ புனத் தயலே வழி போகும் அரு வினையேன்
மனமோ மகளிர் நும் காவல் சொல்லீர் புண்டரீகத்து அம் கேழ்
வனமோர் அனைய கண்ணான் கண்ணன் வானாட மெரும் தெய்வத்
தினம் ஓர் அனையீர் களாய், இவையோ நும் இயல்வுகளே –23–

புனம் போலே தம் மனமும் இவர்கள் ரஷிக்க வேண்டியதை நாயகன் சொல்கிறான் –
தம் முகத்தை அவர்கள் பார்க்கும் பொருட்டு இவர்கள் இருக்கும் இடத்தின் சமீபத்தில் தடுமாறித் திரிந்தமை தோற்ற –
புனத் தயலே வழி போகும் அரு வினையேன்-என்கிறான்
பாகவதர் ஆழ்வார் பக்கல் தமது நெஞ்சு துவக்குண்ட படியைச் சொல்லுதல் உள்ளுறை பொருள்
விண்ணுளாரிலும் சீரியர் -உபாயாந்தரராய் வேறு வழியில் செல்வாரையும் திருத்த வல்லவர் அன்றோ நீர்
தெய்வத்தினம் ஓர் அனையீர் களாய்,-நித்ய ஸூரிகள் திரள் போலே அன்றோ ஆழ்வார்

சரணாரவிந்தம் –
பாத பங்கயமே தலைக்கு அணியாய் -என்றும் –
உன் பாத நிழல் அல்லால் மற்று ஓர் உயிர்ப் பிடம் நான் எங்கும் காண்கின்றிலேன் பெரியாழ்வார் திருமொழி –-5-3-4
பருப்பதத்துக் கயல் பொறித்த பாண்டியர் குல பதி போல்
திருப்பொலிந்த சேவை என் சென்னியின் மேல் பொறித்தாய் -பெரியாழ்வார் திருமொழி –-5-4-7
தொழுது முப்போது முன்னடி வணங்கித் தூ மலர் தூயத் தொழுது ஏத்துகின்றேன் நாச்சியார் திருமொழி–1-9-
கழலிணை பணிந்து அங்கோர் கரி அலற -நாச்சியார் திருமொழி-1-10

மெய் தழும்ப தொழுது ஏத்தி இன்புறும் தொண்டர் சேவடி ஏத்தி வாழ்த்தும் என்நெஞ்சமே-பெருமாள் திருமொழி —-2-4-
வட வேங்கடத்தான் தன் பொன்னியலும் சேவடிகள் காண்பான் புரிந்து இறைஞ்சி -4-11-
தரு துயரம் தடையேல் உன் சரண் அல்லால் சரண் இல்லை -5-1-
எங்குப் போய் உய்கேன் உன் இணை யடியே யடையல் அல்லால்-5-5-
அடி சூடும் அரசை அல்லால் அரசாக வெண்னேன் மற்றரசு தானே -10-7-

அறிந்து அறிந்து வாமனன் அடியினை வணங்கினால்
செறிந்து எழுந்த ஞானமோடு செல்வமும் செறிந்திடும் –திருச் சந்த விருத்தம் –-74-
வேங்கடம் அடைந்த மாலை பாதமே அடைந்து நாளும் உய்ம்மினோ -81-
புனித நின் இலங்கு பாதம் அன்றி மற்றோர் பற்றிலேன் எம் ஈசனே -90-
பரந்த சிந்தை ஒன்றி நின்று நின்ன பாத பங்கயம் நிரந்தரம் நினைப்பதாக நீ நினைக்க வேண்டுமே -101-
உன்ன பாதம் என்ன நின்ற ஒண் சுடர்க் கொழு மலர் மன்ன வந்து பூண்டு வாட்டமின்றி எங்கும் நின்றதே -119-

கற்றினம் மேய்த்த வெந்தை கழலிணை பணிமின் நீரே -திருமாலை —-9
பாரில் நின் பாத மூலம் பற்றினேன் பரம மூர்த்தி -29-

கடி மலர்க்கமலங்கள் மலர்ந்தன விவையோ -திருப்பள்ளி எழுச்சி -11

நீள் மதிள் அரங்கத்தம்மான் திருக் கமல பாதம் வந்து என்
கண்ணினுள்ளன வொக்கின்றதே -அமலனாதி பிரான் ––1

மேவினேன் அவன் பொன்னடி மெய்ம்மையே -கண்ணி நுண் சிறு தாம்பு –2

கார் வண்ணம் திருமேனி கண்ணும் வாயும் கைத்தலமும் அடி இணையும் கமல வண்ணம் –திரு நெடுந்தாண்டகம்-18

செங்கண் மால் நற்றாமரை மலர்ச் சேவடியை வானவர் கை கூப்பி நிரை மலர் கொண்டு ஏத்துவரால் நின்று-முதல் திருவந்தாதி – -21

சொல்லுவோம் அவன் நாமங்களே
தேவு மற்று அறியேன் -என்று அநந்ய பரராய் கொண்டு அவருடைய திரு நாமங்களைச் சொல்லுவோம்

மனு முதல் கூறுவதும் -தீதில் சரணாகதி தந்த தன் இறைவன் தாளே
அரணாகும் என்னும் அது -என்று-அருளாள பெருமாள் எம்பெருமானார் அருளிச் செய்தார்

பூ மகள் கோன் தென்னரங்கன் பூம் கழற்கு பாதுகமாய்-தாம் மகிழும் செல்வச் சடகோபர் தேமலர்தாட்கு ஏய்ந்து
இனிய பாதுகமாம் எந்தை இராமானுசனை வாய்ந்து எனது-நெஞ்சமே வாழ் -என்று இறே ஜீயரும் அருளிச் செய்தது –

வேதம் ஒரு நான்கின் உள் பொதிந்த மெய் பொருள்-தீதில் சரணாகதி தந்த இறைவன் தாள்–மா முனியும் ஆர்த்தி பிர பந்தம்-

பூ மகள் கோன் தென் அரங்கன் பாதுகமாய்-தாம் மகிழும் செல்வ சடகோபர் ஏய்ந்து– வாய்ந்து என் நெஞ்சமே வாழ–சொல்வது போல..

நெஞ்சே சொல்லுவோம் அவன் நாமங்களே –
இராமானுச நூற்று அந்தாதியை அனுசந்திக்க இசைந்த நெஞ்சைக் கூட்டிக் கொண்ட படி –

சொல்லுவோம் அவன் நாமங்களே
துணை தேட்டத்தில்-
எம்பெருமானாரின் கல்யாண குண சாகரத்தில் இழிய துணை வேண்டுமே -நீர் ஆட போதுவீர் போதுமினோ
-செஞ்சொல் கவிகாள் உயிர் கத்து ஆட செய்மின் -ஆழ்வார் எச்சரிக்கிறார்

——————

இந்த பாசுரத்தில் -பூமன்னு மாது பொருந்திய மார்பன் -என்பதனால்–அலர்மேல் மங்கை உறை மார்பா -என்பதும் –
புகழ்-என்பதனால்-நிகரில் புகழாய் -என்று தொடக்கி கூறப்படும் குணங்களும் தோற்றுகையாலே –
திருவாய் மொழி திருவேம்கடம் உடையானை பற்றியது என்பது அமுதனார் திரு உள்ளம் என்று தோற்றுகிறது –
த்வய விவரணம் திருவாய் மொழி என்று கூறும் ஆசார்யர்களுக்கும் இதுவே திரு உள்ளமாய் இருக்கலாம்-

முதல் மூன்று பத்துக்கள் த்வய மந்த்ரத்தின் பிற் பகுதியை விவரிகின்றன -என்றும்
அடுத்த மூன்று பத்துக்கள் அம்மந்த்ரத்தின் மூர் பகுதியை விவரிக்கின்றன என்றும்
மேல் உள்ள மூன்று பத்துக்கள் முறையே-உபாயத்துக்கு உறுப்பான குணத்தையும் –நசை அற்றமையையும்
எம்பெருமானோடு நமக்கு இயல்பாக உண்டான தொடர்பையும் -சொல்லுகின்றன என்றும்
இறுதிப் பத்து வீடு பெற்றமையைக் கூறுகிறது என்றும் விளக்குகின்றனர் ஆசார்யர்கள் –

மந்த்ரத்தில் பிற் பகுதியில் ஸ்ரீ மானான நாராயணனுக்கு எல்லா அடிமையும் செய்ய வேணும் என்கிறது –
அதனையே திரு வேம்கடத்தில் திரு வேம்கடம் உடையானுக்கு -வழு இலா அடிமை செய்ய வேண்டும் நாம் –என்கிறார் நம் ஆழ்வார்
மந்த்ரத்தின் முற் பகுதி ஸ்ரீ மானான நாராயண னுடைய திருவடிகளை தஞ்சமாக பற்றுகிறேன் -என்கிறது –
அதனையே -அலர்மேல் மங்கை உறை மார்பா உன் அடிக் கீழ் அமர்ந்து புகுந்தேனே -என்கிறார் நம் ஆழ்வார் –
இதனால் மந்த்ரத்தில் ஸ்ரீ மன் நாராயணன் என்பது அர்ச்சாவதார எம்பெருனாகிய திரு வேம்கடம் உடையானையே-என்பது
நம் ஆழ்வார் திரு உள்ளம் என்பது தெளிவு –

பூ மன்னு மாது–என்பதால் ஸ்ரீ சப்தமும்
பொருந்திய -என்பதால் நித்ய யோகத்தையும் -காட்டும் -மதுப் ப்ரத்யயமும்-
புகழ் மலிந்த என்பதால் குணம் உடைமை கூறும் நாராயண சப்தமும் –
மார்பன் -என்பதால் திரு மேனிக்கு உப லஷணமான சரண சப்தமும் –
பணிந்து -என்பதால்-சரணம் பிரபத்யே -என்னும் சப்தங்களும் –
உய்ந்தவன் -என்பதால் பிற் பகுதியில் கூறும் பயனும் தோன்ற அமுதனார் சொற்களை-அமைத்து உள்ளமை காண்க –

சரம பர்வ ப்ரபந்தம் என்பது தோன்ற எம்பெருமானை அடி பணிவதாக கூறாது-
எம்பெருமான் பாவில் மன்னும் மாறன் அடி பணிந்ததாக அமுதனார் அருளிய-நயம் வியந்து இன்புறத் தக்கது
மந்த்ரத்தின் தாத்பர்யம் தோன்ற-மாறன் அடி பணிந்து –என்றார் அமுதனார் -என்க –

இனி திருவாய் மொழியை –
அரங்கர் வண் புகழ் மேல் ஆன்ற தமிழ் மறைகள் ஆயிரமும் -என்ற பட்டர் நிர்வாகத்தின் படி –
அமுதனாரும் கருதுவதாக கொள்ளலுமாம் –
தொடக்கத்தில் பூ மன்னு மாது பொருந்திய மார்பன் -என்று பொதுப்பட அருளி செய்ததற்கு ஏற்ப
முடிவில்-தென் அரங்கன் அணியாக மன்னும் பங்கய மா மலர்ப்பாவை -என்று சிறப்பித்து காட்டுதல் காண்க –
என் திருமகள் சேர் மார்பனே என்னும் என்னுடை யாவியே -என்று நம் ஆழ்வாரும்
தென் திருவரங்கம் கோயில் கொண்டானை திருவாய் மலர்ந்து இருப்பது ஈண்டு அறிய தக்கது –
முகில் வண்ணன் அடி மேல் சொன்ன சொல் மாலை யாயிரத்து இப்பத்தும் வல்லார் -என்னும் இடத்து –
பெரிய பெருமாள் திருவடிகளிலே திருவாய் மொழி ஆயிரமும் சொல்லிற்று -திரு மோகூர்க்கு ஈத்த பத்து –
திரு வேம்கடதுக்கு இவை பத்து -என்று பிரித்துக் கொடுத்த இத்தனை —
பெருமாள் திருப் பலகையில்-அமுது படியில் மற்றைத் திருப்பதிகள் நாயன்மார்க்கும் அளந்து கொடுக்குமா போலே
என்று -பிள்ளை-அருளி செய்வர் -என்று ரச கனமாக அமைந்த ஈடு வியாக்கியானம் இங்கு அனுசந்தித்து இன்புறத் தக்கது –

பூ மன்னு மாது -அம்ருத மயமான பாசுரம்
அண்ணல் செய்து -விண்ணவர் அமுது உண -சக்கை -அமுதில் வரும் –பெண்ணமுதம் தான் கொண்டான்
மாது பொருந்திய மார்பன் -அப்பொழுதைக்கு அப்பொழுது என் ஆராவமுதன்
மார்பன் புகழ் மலிந்த பா -திருவாய் மொழி –பக்தாம்ருதம் -தொண்டர்க்கு அமுது உண்ண சொல்மாலைகள் சொன்னேன்
பா மன்னு மாறன் -இன்ப மாரி-அண்ணிக்கும் அமுதூறும் என் நாவுக்கே –
மாறன் அடி பணிந்து உய்ந்த ராமானுஜன் -ராமானுஜன் எனக்கு ஆரமுதே –
பிராட்டி -பகவான் -பா -ஆழ்வார் -எம்பெருமானார் -பஞ்சாம்ருதம் கொடுத்த அமுதக்கவி -ஆறு சுவைகளும் அமுதம் –

———————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருமலை நல்லான் சக்கரவர்த்தி ஸ்ரீ ராம கிருஷ்ண ஐயங்கார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருவரங்கத்து அமுதனார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ ஆழ்வார்கள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: