ஸ்ரீ நம்மாழ்வார் பற்றிய தனிப்பாடல் திரட்டு–

திரு வழுதி வள நாடர்-பிள்ளை -அறம் தாங்கியார் -பிள்ளை சக்ர பாணியார் -பிள்ளை அச்சுதர்-பிள்ளை –
செந்தாமரைக் கண்ணர் -பிள்ளை செங்கண்ணார் -பிள்ளை பொற் காரியார் பிள்ளை காரியார் -பிள்ளை நம்மாழ்வார்
திருமால் அறம் காக்கும் யோகிகள் போலே அல்லும் பகலும் உறங்காப் புளி தானும் உண்டு

அண்ட கோளத்தார் அணுவாகிப்
பிண்டம் பூத்த பேர் எழில் ஒருமை
ஈர் உயிர் மருங்கின் ஆருயிர் தொகுத்து
நித்திலத்தன்ன வெண் மணல் பரப்பி
வேரும் தானே வித்தும் இன்றித் தானே
தன் வலி அறியாத் தொன் மிகு பெரு மரம்
மூ வழி முப்பழம் முறை முறை தருதலின்
ஓன்று உண்டு ஒண் சுவை தருவது மற்றது
கலீல் எழுந்து கடலில் அழுந்து
அறு கால் குரவன் நீர் அற விளைக்கும்
நிறை பொழில் குப்பை தறு கட்பு ஒன்றுவித்து
அறு கோட்டாமா விளைக்கும் நாடான்
அவனே தலையிலி அவன் மகள் முலையிலி
தானும் ஈனாள் ஈனவும் படாள்
எழுவர் மூவர் சிறுவரைப் பயந்தனள்
அவள் இவள் அவள் என்று அறிதல்
துகளறு காட்சிப் புலவரது கடனே

ஈய் ஆடுவதோ கருடற்கு எதிரே
இரவிக்கு எதிர் மின்மினி ஆடுவதோ
நாயாடுவதோ உறு வெம் புலி முன்
நரி கேசரி முன் நடையாடுவதோ
பேயாடுவதோ அழகு ஊர்வசி முன்
பெருமான் வகுளாபரணன் அருள் கூர்ந்து
ஓவாது உரை ஆயிரம் மா மறையின்
ஒரு சொல் பொறுமோ உலகில் கவியே–சங்கப்புலவர்கள்

சேமம் குருகையோ செய்ய திருப்பாற் கடலோ
நாமம் பராங்குசனோ நாரணனோ தாமம்
துளவமோ வகுளமோ தோள் இரண்டோ நான்கும்
உளவோ பெருமான் உனக்கு –சங்கப்புலவர்கள்

நீயே அறிவை நின் அகத்தே நிற்கும் நேமி யங்கை
யாயே அறியும் மாற்றார் அறிவார் அடியோங்களுக்குத்
தாயே பொருநைத் திருக் குருகூர் தமிழ்க் காரி பெற்ற
செயே நினது திருவாய் மொழியின் செழும் பொருளே –சங்கப்புலவர்கள்

ஐம் பொருளும் நால் பொருளும் முப்பொருளும் பெய்தமைத்த
செம்பொருளை எம்மறைக்கும் சேட் பொருளைத் தண் குருகூர்
சேய் மொழியது என்பர் சிலர் யான் இவ்வுலகின்
தாய் மொழியது என்பன் தகைந்து–ஒவ்வையார் -இடைக்காதர்

சேய் மொழியோ வாய் மொழியோ செப்பில் இரண்டும் ஓன்று அவ்
வாய் மொழியை யாரும் மறை என்ப –வாய் மொழியால்
ஆய் மொழிகள் சால உள எனினும் அம் மொழியின்
தாய் மொழி என்பன் யான் தகைந்து–ஒவ்வையார் -இடைக்காதர்

வாய்க்கும் குருகைத் திரு வீதி எச்சிலை வாரி யுண்ட
நாய்க்கும் பரமபதம் அளித்தாய் அந்த நாயோடு இந்தப்
பேய்க்கும் இடம் அளித்தால் பழுதோ பெருமான் மகுடம்
சாய்க்கும் படிக்குக் கவி பாடும் ஞானத் தமிழ்க் கடலே —

இதுவோ திரு நகரி ஏதோ பொருநல்
இதுவோ பரமபதத்து எல்லை இதுவோ தான்
வேதம் தமிழ் செய்து மெய்ப்பொருட்க்கும் உட் பொருளாய்
ஓதும் சடகோபன் வூர் –எம்பெருமானார்

நின் கண் வேட்க்கை எழுவிப்பனே–திரு விருத்தம் -96-என்றவர் தாமே
ஏ பாவம் பரமே -என்று கிலேசித்து-அகலிடத்தை ஆராய்ந்து அது திருத்தலாவதே –பெரிய திருவந்தாதி -25-என்று கை வாங்கி
யானும் என் நெஞ்சும் இசைந்து ஒழிந்தோம் –பெரிய திருவந்தாதி -26–என்று திரிகால ஞார்கையாலே
கலியும் கெடும் கண்டு கொண்மின் -என்று அருளிச் செய்தார்

மைப்படி மேனியும் செந்தாமரைக் கண்ணும் வைதிகரே
மெய்ப்படியால் உன் திருவடிச் சூடும் தகைமையினார்
எப்படி யூராமி லைக்கக் குருட்டாமிலைக்கும் என்னும்
அப்படி யானும் சொன்னேன் அடியேன் மற்று யாது என்பனே — திருவிருத்தம்– 94-

தாராயுடையாய் அடியேற்கு உன் தாளிணை யன்பு
பேரா யுலகம் புக்கார் அடியார் புறமே போந்தேன் யான்
ஊராமி லைக்கக் குருட்டாமிலைத் தாங்கு உன் தாளிணை யன்புக்
காரா யடியேன் அயலே மயல் கொண்டு அழுகேனே –திருவாசகம்

ஈன்றோள் இருக்க மணை நீராட்டி –திருவாசிரியம்
பெற்ற தாய் இருக்க மணை வெந்நீர் ஆட்டுதிரோ –பெரிய திருமொழி

பரிமேல் அழகர் இறை மாட்சி -அதிகார அவதாரிகையில் -திருவுடை மன்னரைக் காணில் திருமாலைக் கண்டேனே
என்று பெரியாரும் பணித்தார் -என்று நம்மாழ்வாரை பெரியார் என்றே குறிப்பிடுகிறார்
பற்று அற்ற கண்ணே -349-குறள் உரையில் –
அற்றது பற்று எனில் உற்றது வீடு -என்றும்
ஆரா இயற்கை -370-குறள் உரையில் –
களிப்பும் கவர்வும் அற்றுப் பிறப்புப் பிணி மூப்பு இறப்பு மற்று ஒளிக் கொண்ட சோதியுமாய்
உடன் கூடுவது என்று கொலோ -என்ற பாடலின் கருத்தை
களிப்புக் கவர்வுகளும் பிறப்புப் பிணி மூப்பு இறப்புகளும் முதலாயின இன்றி உயிர் நிரதிசய இன்பத்ததாய் நிற்றலின்
வீட்டினைப் பேரா இயற்க்கை என்றும் அஃது அவா நீத்த வழிப் பெறுதல் ஒரு தலையாகலின் அந்நிலையே தரும்
என்றும் கூறினார் என்ற சொற்களால் கூறிவிட்டு
நன்றாய் ஞானம் கடந்து போய்-என்ற பாடல் முழுமையும் தந்து என்பதுவும் இக்கருத்தே பற்றி வந்தது -என்றும் எடுத்துக் காட்டுகிறார்

என்னில் மிகு புகழார் யாவரே-என்ற ஆழ்வார் அருளிச் செயலைப் போலவே
காரைக்கால் அம்மையார் யானே தவம் உடையேன் -என்கிறார்

மாயா வாய் மொழி உரை தர வலந்து வாய் மொழி யோடை மலர்ந்த -பரிபாடல் –
மாயா வாய் மொழி -நித்தியமான வேதம் -பரிமேல் அழகர்

திருக் கோனேரி தாஸ்யை-என்பவர் திருவாய் மொழி வாசக மாலை -என்ற ஒரு திரட்டு நூல்-
ஏட்டுப்பதிவில்- பதின்மூன்றாம் நூற்றாண்டில்
இதில் -164-பாடல்கள் -பதிகம் தோறும் உள்ள முதல் பாட்டும் சில உயிரான பாட்டும் முதல் பாட்டான
உயர்வற உயர்நலம் உடையவன் என்பதுடன் இயைந்து பொருள் அமைந்து இருப்பதை விளக்கி உள்ளார்

திருக்கோனேரி தாஸ்யை-வைணவப் பெண்மணியான இவர், திருவாய்மொழி வாசகமாலை என்ற நூலை எழுதினார்.
இந்நூல் நம்மாழ்வார் அருளிய திருவாய்மொழியில் தேர்ந்தெடுத்த 164 பாடல்களுக்கு வியாக்கியானம் போல அமைந்துள்ளது.
வாசகமாலை ஆசிரியர் தம் நூலில் ஒவ்வொரு பதிகத்திலும் முதல் பாட்டையோ அல்லது முதல் பாட்டும் மற்றொரு பாட்டும்
ஆக இரு பாட்டுக்களையோ எடுத்துக் கொண்டு, அவற்றுக்குத் திருவாய்மொழியின் முதல் பாடலுக்குத் தகுந்தவாறு பொருள் கூறுகின்றார்.
திருவாய்மொழிப் பாசுரங்கள் அனைத்திலும் சொல்லப்பட்ட பொருள் முதல் பாசுரத்தின் பொருளே என விவரிக்கின்றார்.
இவ்வாறு இவர் 100 பகுதிகளாக விவரிப்பதால் இந்த நூல் விவரண சதகம் என்று பெயர் பெற்றது.
நாலாயிரப் பிரபந்த உரைகள் போல இந்நூலும் மணிப் பிரவாள நடையில் அமைந்துள்ளது.
பல வடமொழி நூல்கள் இதில் எடுத்துக் காட்டப்பட்டுள்ளன. பல பழமொழிகளைக் கூறுகின்றார் ஆசிரியர்.

நீல வரை இரண்டு பிறை கவ்வி நிமிர்ந்தது ஒப்ப -நச்சினார்க்கு இனியார் தொல்காப்பியம் உரையில்
பிறை கவ்வி மலை நடக்கும் என்று இருப்பது அறியத் தக்கது

ஊரவர் கவ்வை எருவாக அன்னை சொல்
நீராக நீளும் இந் நோய் –திருக்குறள் -1147-
ஊரவர் கவ்வை எரு இட்டு அன்னை சொல் நீர் படுத்து –ஈர நெல் வித்தி முளைத்த நெஞ்சப் பெரும் செய்-5-3-4-
புணைவன் பிறவிக் கடல் நீந்துவார்க்கே
பிறவிக் கடல் நீந்துவார் -திருக்குறள் -10-

கோலமே தாமரைக் கண்ணது ஓர் அஞ்சன நீலமே நின்று எனது ஆவியை ஈர்கின்ற
செல்லமே சென்று செல்லாதன முன்நிலாம்
காலமே உன்னை எந்நாள் கண்டு கொள்வேன்

மேலை வானவரும் அறியாதோர்
கோலமே எனை ஆட் கொண்ட கூத்தனே
ஞாலமே விசும்பே இவை வந்து போம்
காலமே உன்னை என்று கொல் காண்பதே–திருவாசகம்

தீர்த்தன் உலகளந்த சேவடி மேல் பூந்தாமம்
சேர்த்தி யவையே சிவன் முடி மேல் தான் கண்டு
பார்த்தன் தெளிந்து ஒழிந்த பைந்துழாயன் பெருமை
பேர்த்தும் ஒருவரால் பேசக் கிடந்ததே –2-8-6-

செங்கண் நெடியான் மேல் தேர் விசயன் ஏற்றிய பூ
பைங்கண் வெள்ளேற்றான் பால் கண்டாற்றால் -முத்தொள்ளாயிர ஆசிரியர்

வம்மின் புலவீர்!நும் மெய் வருத்திக் கை செய்து உய்ம்மினோ!
இம் மன் உலகில் செல்வர் இப்போது இல்லை நோக்கினோம்;
நும் இன் கவி கொண்டு நும் நும் இட்டா தெய்வம் ஏத்தினால்
செம்மின் சுடர்முடி என் திரு மாலுக்குச் சேருமே–3-9-6-

யாதொரு தெய்வம் கொண்டீர் அத்தெய்வமாகி ஆங்கே மாதொரு பாகனார் தாம் வருவர் -சிவா ஞான சித்திப் பாடல்
தம்மையே புகழ்ந்து இச்சை பேசினும் சார்வினும் தொண்டர்த் தருகிலாப் பொய்மையாளரைப் பாடாதே
எந்தை புகலூர் பாடுமின் புலவீர்காள் -சுந்தரர் -திருப் புகலூர் பதிகம்

தின்னும் வெற்றிலை –
அக்காலத்திலே வெற்றிலை உண்டே
அம்மென் திரையலோடு அடைக்காய் -சிலப்பதிகாரம்

———

சடகோப திவ்ய சரிதம்-119-பாடல்களில் -ஸ்ரீ தேவராஜ ஐயங்கார் சென்ற நூற்றாண்டில் அருளிச் செய்துள்ளார்
அவற்றில் சில-

பேர் உறும் ப்ரபந்தமதில் பிரான்
நாரணன் என்றதும் உயிர் நாடிடும்
சீரும் அன்னவன் செய்கும் உபாயமும்
ஏர் கொள் நாடினை ஈதலும் ஓதினான்

பண் அமைந்த அப் பா முதல் பத்தினில்
கண்ணனே பரன் என்று கழறி மற்று
எண்ணும் ஓர் இரண்டு எவ்வுயிர்கட்க்கும் அவ்
வண்ணலே இனியான் என்று அறைந்தனன்

பின்னும் மூன்றினில் பேர் அருளாளன் குணம்
தன்னையே உயிர் சாற்றிடும் என்றதும்
உன்னும் நான்குள் உயிர் அவன் தன்னையே
மன்னும் என்றதும் வாய்ப்ப விளம்பினான்

ஏயும் ஐந்தினில் எம்பெருமானே உ
பாயமாம் உயிர்க்கு என்று பகர்ந்த பின்
ஆயும் ஆறினில் ஆருயிர் உய்குவான்
மாயவன் செய் உபாயம் வழங்கினான்

மற்றும் ஏழினில் மாயனைச் சேருதற்கு
உற்றிடும் பல் விரோதம் உரைத்து நல்
சொல் இகழ்ந்திடு எட்டில் சொல் விரோதிகள்
அற்றிடும் என்று அறைந்தனன் நன்றிரோ

பாகு நேர் ஒன்பதில் திருவாளானால்
ஆகும் லாபம் அறைந்து ஒரு பத்தில் தான்
சோக மோகம் தொலைத்தவர் வாழ் திரு
மாக மாநிலம் வைகியது ஓதினான்

நான்காம் பத்து கேட்டு அருளி பொலிந்து நின்ற பிரான் திரு உள்ளம் உகந்து சடகோபருக்கு ஒரு விருது அருளினான்
இத்திருவாய் மொழியினை மாறனும் உகந்து அங்கு இயம்பலும் அச்சுவை செவியால் இனிது மாந்தி
வித்தகன் நம் பொலிந்து நின்ற பரன் நெஞ்சம் வியந்து அதற்கோர் கைம்மாறு விருது ஈவான் தண்
சித்தமதில் உன்னியனத் துவசம் வண்டார் செய்ய மகிழ்த் தொடையலும் அச் செவ்வியோன் பால்
மத்தகசத் தறு கண் அறச் செய்தேவர் ஈந்து வாக்குல பூஷணன் எனப் பேர் வழங்கப் பெற்றான்

————

மகிழ்மாறன் திருவவதாரச் சரிதை -பிள்ளைத் தமிழில்

அங்கண் வழுதி வள நாடர் குலத்து ஆரமுதாம் எங்கள் பெருமானை எம்பெருமான் காக்கவே
ஏனோர்க்கும் பெம்மானை எம்பெருமான் காக்கவே
அந்தாமரை போன்று அலர்ந்த திரு முகத்து எம்மைந்தா திருக்கண் மலரை மலர்த்துகவே
மாறா திருக்கண் மலரை மலர்த்துகவே
பெற்ற பசு மஞ்சள் பொடி நாவின் மேல் தடவக் கற்றவர் தம் கண்ணே கனிவாய் திறந்து அருளே
காரி தரு மாறா கனிவாய் திறந்து அருளே
இருமைக்கும் எம்முயிர் பேர் இன்பமுறத் தந்த அருமைப் புதல்வா என் அம்ம பருகவே ஆராவமுதே என் அம்ம பருகவே
முத்திக்கு வித்தாம் முதல் கனியை கண்டு உள்ளத்தே தித்திக்கும் தெள்ளமுதே செங்கீரை யாடுகவே
செஞ்சொல் தமிழுக்கு அரசே செங்கீரை யாடுகவே
சேமத்தால் வந்து உதித்தாய் சேய மகிழ் மாறன் என்னும் தாமத்தாய் நாமத்தாய் தாலேலோ தாலேலோ
தத்வ ஞானப் புதல்வா தாலேலோ தாலேலோ
யான் என்று எனது என்று இழிந்தார்க்கு இடியேறு தான் என்று அவதரித்தாய் சப்பாணி கொட்டுகவே
தாள் தாமரைக் கரத்தால் சப்பாணி கொட்டுகவே
புதல்வா குறுங்குடி வாழ் புண்ணியா புத்தேளிர் முதல்வா மழலையின் வாய் முத்தம் தருகவே
மூரல் எழுப்பி யுன் வாய் முத்தம் தருகவே
விண்ணிற்கு வித்தாம் விதியுடையாய் ஈண்டு இம்மண்ணனிற்கு வித்தாக வாழ்வே வருகவே
மாணிக்கக் கிண்கிணித் தாள் வாழ்வே வருகவே
பேதித்த ஒன்பதுடன் பின்பு ஒரு பதாயுதித்த ஆதிச் சுடர் இவனோடு ஆடவா அம்புலியே
அன்பன் உயிர் காண் இவனோடு ஆடவா அம்புலியே
அழுத கண்ணீர் மாற்ற அருள் புரிந்தே வந்த வழுதி வள நாடா மாணித் தொட்டில் ஆடுகவே
வண் குருகூர் மாறா மணித் தொட்டில் ஆடுகவே

———-

பாடுவது எல்லாம் பராங்குசனை நெஞ்சத்தால்
தேடுவது எல்லாம் புளிக் கீழ் தேசிகனை -ஓடிப் போய்
காண்பது எல்லாம் நங்கையிரு கண் மணியை யான் விரும்பிப்
பூண்பது எல்லாம் மாறன் அடிப்போது —

பாராத கல்விப் பிரபந்தப் பொருள் அனைத்தும்
நேராக முன் வந்து நிற்குமே -தேராது
தே வீறு கொண்ட திருமாலை முத்தமிழ் தேர்
நா வீறு அனைத்து உதித்த நாள்

அருமறை துணிந்த பொருள் முடிவை இந்த சொல் அமுது ஒழுகுகின்ற தமிழினில் விளம்பி
அருளிய சடகோபர் சொல் பெற்று உயர்ந்தன அரவணை விரும்பி அறி துயில் அமர்ந்த
அணி திரு அரங்கர் மணி திகழ் முகுந்தர் அழகிய மணவாளர் கொற்றப் புயங்களே –ஸ்ரீ பிள்ளைப் பெருமாள் ஐயங்கார்

மறை நாலும் வடித்துத் தெளித்து ஆயிரம் பன்னு தமிழ் பாடிய பஷத்தர் கஸ்தூரிப்பொட்டு அணிவோர் தொழு நெடுமாலே –
வண் தமிழ் ஆயிரமும் செய்து உடல் பொய் என்கிறார் தம் திருவாய் மொழி கொண்டு அருளும் நெடுமாலே
புலவோர்க்கு வேதம் தமிழ் எனவே செய் குருகூர்க்குள் வாழும் திரு மகிழ் மாறர் புகழ் தீர்த்தனே பங்கய முக சேவை அருள்வாயே
மிகுத்த நான்மறையினை விந்தையாகிய தமிழ்ச் சொல் ஆயிரம் வடி கொண்ட நீடிரு விருத்த நூறோடு தமிழ் அந்தாதி செய்யொரு நூலும்
விளைந்த ஆசிரியம் யது என்ற ஏழும் இவ்விதத்திலே உரை செய்து நங்கை பாலகர் விதித்தா பா எனு மணி தொங்கல் சூடிய நெடுமாலே
வேரி வகுளத் தொடை பிறங்க ஞான முழு முத்திரைக் கை கொண்ட வீறர் குருகைப் பதிக்கு இலங்கு மகிழ் மாறர்
வேத மறையைத் தனிப் பிரபந்தம் ஆயிரம் வடித்து எடுத்த தொங்கல் மேவு பிரதித் தலத்தில் நின்ற பெருமானே — குரவை இராமானுஜ தாசர் திருப்புகழ்

ஸ்ரீ பராங்குச நாடகம் -ஸ்ரீ மாறன் அலங்காரம் –ஸ்ரீ மாறன் அகப்பொருள் ஸ்ரீ மாறன் பா வினம் –
திருக் குருகைப் பெருமாள் கவிராயர் -16-நூற்றாண்டு

தென்னம் பொதியம் தரு பொருநைத் தென் கரையின்
மன்னும் புளிக் கீழ் வளர் தரு வொன்று -இன்னமிர் தொத்து
ஆன்ற சுவைத் தீங்கனி யோர் ஆயிரமும் தண்ணளி கூர்ந்து
ஈன்று அளித்த தன்பால் எமக்கு

முத்தமிழ் -சித் அசித் ஈஸ்வரந் -மூன்றும் கூறும் தமிழ் வேதம் திருவாய்மொழி

மறை முரசம் தாமம் மகிழ் வழுதி நாடர்
துறை பொருநை வெற்பூர் துடரி உறை குருகை
யஞ்சம் பராங்குசம் வெள்ளானை கொடியாணை மா
பஞ்ச கலி யாணன் பரி-தசாங்கம்

1- வழுதி நாடர் துறை பொருநை
2-3-4-வெற்பும் ஊரும் துடரியும் உறை யுளாம் குருகா புரியும்
5- பரி -பஞ்ச கலி யாணன்
6- மா -வெள்ளானை
7- ஆணை -ஸ்ரீ பராங்குசம்
8- கொடி–அன்னம்
9- தாமம் -மகிழ்
10-முரசு – மறை –

கைக்கு அணி ஓன்று ஈகை கருத்திற்கு அணி ஞானம்
மெய் செவிகட்க்கு ஏற்ற அணி மேதகு நூல் -உய்த்தறிதல்
சென்னிக்கு அணி மாறன் சேவடி மேல் கொண்டு இறைஞ்சல்
என்னுக்கு அணி வேறு இனி

முத்திரைக் கைம் மாறன் மொழிந்த தமிழ் வேதப்
புத்தமிர்தை யுண்டு இன்புறுவேனை பத்தர்கள்
வேறு தமிழ் கேட்பிப்பான் வேட்கு மனம் கேட்கிலதை
சீறும் எனது இன்பச் செவி

சித்திரை மாதத்து உதித்தான் ஆடீரூசல்
திரு மகிழ் மாறனைப் பணிவோம் ஆடீரூசல்
பத்தர் இருதயத்து உறைவோன் ஆடீரூசல்
பதினோரு பாட்டில் இனிதுரைத்தான் ஆடீரூசல்
உத்தம முக்குணம் கடந்தான் ஆடீரூசல்
உபநிடதம் பகுத்து உணர்ந்தோம் ஆடீரூசல்
வைத்த மா நிதியை அனுதினமும் போற்றும் மதுரகவி யாழ்வாரே ஆடீரூசல்

மாறன் வேதம் ஆயிரம் தமிழும் எழுதி அந்நாள் மேன்மை பெறு மதுரகவி வியப்பைப் பாட –ஸ்ரீ ரெங்க நாயகரூசல்

மட்டோலிடும் தொங்கல் வகுள மணம் நாறு தோள் மாறன் வண் தமிழ்ப் படுத்தி
வசைவிட்டுறையும் முனி தன்னாலும் எழுத ஒணா மறை நாலும் எழுதுவிக்கப்
பட்டோலை எழுதி ஆங்கு அவனை ஈரைந்து கவி பாடி
நெடுமால் தன்னையும் பாடாத மதுரகவி இரு தாள் துதிக்கும் என் நா

உபய வேதங்களையும் கிருஷ்ணைக்கு வடக்குக் கீர்வாண தேசம் ஆகையால் பகவான் கங்கா தீரத்தில்
ஸ்ரீ வியாசராய் அவதரித்து கீர்வாண வேத பிரசரம் செய்து அந்த வேத அர்த்தங்களையே இதிகாசமாகிய
பாரத புராணங்களாக அருளிச் செய்தார்
கிருஷ்ணைக்கு தெற்குத் திராவிட தேசமாகையாலே அந்த பகவான் தாமிரபரணி தீரத்தில் ஸ்ரீ பராங்குச பகவானாய் அவதரித்தது –
திராவிட வேதத்தை வெளிப்படுத்தி அவ்வர்த்தத்தை விபவ அவதாரத்தில் ஸ்ரீ மதுரகவிகளுக்கும்
அர்ச்சாவதாரத்தில் ஸ்ரீ மந் நாத முனிகளுக்கும் அருளிச் செய்து அது பரம்பரையாய் ஸ்ரீ பாஷ்யகாரர் பர்யந்தமாக
உபதேசமாய் வந்து அவர் தம்முடைய சிஷ்யராகிய திருக் குருகைப் பிரான் பிள்ளான் முதலானவர்களுக்கும் உபதேசித்து –

வரும் பொருநைத் துறையாட பெறுவேனாகில்
வடமூலைக் கருடன் அடி பணிவேனாகில்
அரும்பு மணிக் கோபுரத்துள் புகுவேனாகில்
ஆதி நாதன் சரண் தொழுவேனாகில்
விரும்பு திருப் புளி நீழல் வலமாய் வந்து
உன் மெய்ஞ்ஞான முத்திரைக் கை காண்பேனாகில்
தரும் புவியில் இப்பிறப்பே வேண்டுகின்றேன் சடகோபர் யதிராசா தம்பிரானே

பொய்கை பூதம் பேயாழ்வார் பொருநர் சடையர் போர் ஏறு
மெய் கொள் வேதம் தமிழ் செய்வார் விதியார் கமலப் பா காலர்
மை கொள் சோலை மழிசையார் கோன் மண்டங்குடிக் கோன் மறை மன்னன்
துய்ய பாணன் எதிராசன் துயரில் பாதம் துணை நமக்கே

சீராரும் திருவரங்கம் ரெங்கநாதர் திகழ் உறையூர் அமர்ந்த பிரான் நின்ற நம்பி —
தஞ்சையில் வாழ் நீலமேகர்–அன்பில் வடிவு அழகப் பெருமாள் கண்டீர்
ஏராரும் கரம்பனூர் உத்தமன் வாழ் இயம்ப வெள்ளறை செந்தாமரைப் பூம் கண்ணர்
தாரார் புள்ளம் பூதங்குடி வல் வில் ராமர் தகு திருப்பேர் வாழ் நாராயணர் தாம் தாமே

பெரியதோர் வைகுந்தம் பரமபத நாதர்
திருப் பாற் கடலில் வாழ் சிங்காத்ரி நாதர்
திரு அயோத்தியில் வாழ் ரகுநாதர் என்க
பெரு மதுரையில் வாழ் முகுந்தனார்
பெரிய திருவாய்ப்பாடி கிருஷ்ணனார்
மருவுடை துவாரகையில் மன்னனார் என்க
வந்து தென் துவாரகையில் மன்னனார் ஆனார்

சோழ மண்டல நாற்பத்து இரண்டுடன் துய்ய பாண்டிய பதினெட்டும் சொல்லியே
வாழு மா மலையாளம் ஈர் ஏழுடன் மன்னர் போற்றிய வாழ் தொண்டை மண்டலம் ஏழு மூன்றும் எதிர் ஆறும் இரண்டுடன்
இதன் வடக்குப் பதினொன்றும் பாற் கடல் ஆழியான் பதி நூற்று எட்டும் ஓதுவார்க்கு அன்று செய்வினை அன்றே அகலுமே

வேதம் ஓதிய வேதியர்க்கு ஓர்மழை
நீதிமன்னர் நெறியினுக்கு ஓர்மழை
மாதர் கற்புடை மங்கையர்க்கு ஓர்மழை
மாதம் மூன்று மழைஎனப் பெய்யு மே.- விவேகசிந்தாமணி

செந்தீ முதல்வர் அறம் நினைந்து வாழ்தலும்
வெஞ்சின வேந்தன் முறை நெறியில் சேர்தலும்
பெண்பால் கொழுநன் வழிச் செலவும் இம்மூன்றும்
திங்கள் மும் மாரிக்கு வித்து – திரிகடுகம்

ஆறாகி இருதடங்கள் அஞ்சன வெம்புனல் சோர அளகம் சோர
வேறான துகில் தகைந்த கைசோர மெய்சோர வேறோர் சொல்லும்
கூறாமல் கோவிந்தா கோவிந்தா என்று அரற்றிக் குளிர்ந்து நாவில்
ஊறாத அமிழ்து ஊற உடல்புளகித்து உள்ளமெலாம் உருகினாளே.- வில்லிபாரதம் 2:2:247

கனைத்திளம் கற்றெருமை கன்றுக்கு இரங்கி நினைத்து முலைவழியே நின்று பால்சோர நனைத்தில்லம் சேறாக்கும்
ஒப்பு

1. சேல் உண்ட ஒண்கனாரின் திரிகின்ற செங்கால் அன்னம்
மால் உண்ட நளினப்பள்ளி வளர்த்திய மழலைப் பிள்ளை
காலுண்ட சேற்று மேதி கன்று உள்ளிக் கனைப்பச் சோர்ந்த
பாலுண்டு துயிலப் பச்சைத் தேரை தாலாட்டும் பண்ணை.- கம்பர் .பால.1:2:13

2. மோட்டெருமை வாவிபுக முட்டுவரால் கன்றென்று
வீட்டளவும் பால்சொரியும் வெண்ணெயே – நாட்டில்
அடையா நெடுங்கதவும் அஞ்சல் என்ற சொல்லும்
உடையான் சடையப்பன் ஊர் – கம்பர் (தனிப்பாடல்)

திங்களும் ஆதித்தியனும் எழுந்தாற்போல் அங்கண் இரண்டு
ஒப்பு
1. பசுங்கதிர் மதியமொடு சுடர்கண்ணாக இயன்ற எல்லாம் பயின்றகத் தடக்கிய
வேதமுதல்வன் என்ப தீதறவிளங்கிய திகிரியோனே – நற்றிணைக் கடவுள் வாழ்த்து

2. திங்களும் செங்கதிரும் கண்களாக – தண்டபாணிசுவாமிகள்

3. சுட்டும் விழிச் சுடர்தான் கண்ணம்மா சூரிய சந்திரரோ – பாரதியார்

—————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: