சங்கு சக்கரம் அங்கையில் கொண்டான்
எங்கும் தானாய் நங்கள் நாதனே –1-8-9-
சங்கு சக்கரம் அங்கையில் கொண்டான்
சிலரை வசீகரிக்க நினைத்தவர்கள் -கையிலே மருந்து கொண்டு திரியுமா போலே
அவதாரங்கள் தோறும் திவ்ய ஆயுதங்களோடு வந்து அவதரிக்கும்
திவ்யாயுதங்கள் எல்லாம் அவதாரங்களிலும் உண்டோ என்னில் எங்கும் உண்டு
ராஜாக்கள் கறுப்புடுத்துப் புறப்பட்டால் அந்தரங்கர் அபேஷித்த தசையிலே முகம் காட்டுகைக்கா பிரியத் திரிவார்கள் –
அது போலே தோற்றாதாயும் நிற்பார்கள்
கூராழி வெண் சங்கு ஏந்தி வாராய் என்னும் இவர்களுக்கு அப்படி இறே தோற்றுவது
கையினார் சுரி சங்கு -காட்டவே கண்டார் திருப் பாண் ஆழ்வார்
சங்குச் சக்கரம்
வெறும் புறத்திலே ஆலத்தி வழிக்க வேண்டும் கையிலே திவ்ய ஆயுதங்களைத் தரித்தான்
—————–
பூவியில் நால் தடம் தோளன் பொரு படை யாழி சங்கேந்தும்
காவி நன் மேனிக் கமலக் கண்ணன் என் கண்ணினுள் உளானே –1-9-8-
பூவியில் நால் தடம் தோளன்
1-பூவால் அல்லது செல்லாத படி ஸூகுமாரமாய் -கல்ப தரு பணைத்தால் போலே நாலாய்ச் சுற்றுடைத்தாய்
இருக்கிற திருத் தோள்களை உடையவன் –சுந்தரத் தோள் உடையான் -சர்வ பூஷண பூஷணாயா-
2-பூவியல் -பூவாலே அலங்க்ருதமான தோள் என்னுதல் –
3-பூவை ஒழியச் செல்லாத சௌகுமார்யத்தை உடையவன் என்னுதல்
பொரு படை
பணைத்து பூத்த கல்பக தரு போலே யாயிற்று -யுத்தத்துக்கு பரிகரமான திவ்ய ஆயுதங்களைத் தரித்தால் இருக்கும் படி
பொரு படை –
யுத்த சாதனங்கள் ஆனவை -கற்பக -கிளைகள் தோள்கள் -போலே திவ்யாயுதங்கள்
யாழி சங்கேந்தும்-காவி நன் மேனிக்
அவ்வாயுதங்களாலே விரோதியைப் போக்கி அனுபவிக்கும் வடிவு அழகு
நன் மேனி –
காவி வடிவு அழகுக்கு உபமானமாக நேர் நில்லாமையாலே –நன் மேனி -என்கிறார் –
சந்திர காந்தானாம் –அதீவ ப்ரீதி தர்சனம்- ராமம் போலே காவி நல் மேனி –
————–
பொருமா நீள் படை ஆழி சங்கத்தொடு
திருமா நீள் கழல் ஏழ் உலகும் தொழ
ஒரு மாணிக் குறளாகி நிமிர்ந்த அக்
கரு மாணிக்கம் என் கண் உளதாகுமே –1-10-1-
த்ரி விக்கிரம அபதானத்தால் சர்வ லோகத்தையும் உபகரித்தால் போலே -அத்தைக் காட்டி எனக்கு உபகரித்தான்
பொருமா நீள் படை ஆழி சங்கத்தொடு-ஆழி எழ –
இவையும் எழுந்து ஆர்பரிக்க -விரோதி நிரசன சீலமாய்-
ஹர்ஷத்தால் வளருமே நிரசனதுக்கு பின்பு -அதிசய உத்க்ருஷ்டம் –
மா -பெருத்து —நீள் -மனத்தால் வளர்ந்து –திரு விக்ரஹமும் வளர்ந்து -சிருஷ்டி பிரயோஜனம் பெற்றோமே –
—————–
விட்டிலங்கு மதியம் சீர் சங்கு சக்கரம் பரிதி விட்டிலங்கு முடி யம்மான் மது சூதனன் தனக்கே –2-7-5-
விட்டிலங்கு மதியம் சீர் சங்கு
விட்டிலங்குகிற பிரகாசத்தை உடைய சந்தரனைப் போலே யாயிற்று ஸ்ரீ பாஞ்ச ஜன்யம்
சீர் சங்கு –
பகவத் பிரத்யாசத்தியாலே வந்த ஐஸ்வர்யம் –உண்பது சொல்லில் உலகளந்தான் வாயமுதம்
கண் படை கொள்ளில் கடல் வண்ணன் கைத்தலத்தே –
பிரசாதத்தைச் சூடி கைப்புடையிலே கிடப்பாரைப் போலே அவன் வாயாலே ஊட்ட உண்டு –
வடிவை பாராத் திருக்கையிலே சாயும் அத்தனை
சீர் சங்கு
உன் செல்வம் சால அழகியது -என்னும்படி வாயது கையதான ஐஸ்வர்யம் இறே –
சக்கரம் பரிதி –
கண்டதில் மின்னிற்று ஒன்றை உபமானமாகச் சொல்லும் அத்தனை இறே –
ஆதித்யனைப் போலே அன்றே திரு வாழி வாழ்வான் இருப்பது
(பத்ம பர்வத சந்த்ர -உபமானம்–கீழே விசேஷித்து சொல்லி இங்கு -விசேஷணம் சொன்னாலும்
திருச் சக்கரத்துக்கு நிகர் ஆகாதே –
ஆக சொல்லாமல் -கண்டத்தில் மின்னும் ஒன்றை சொல்லி விட்டார் அத்தனை )
———————
செய்யேல் தீ வினை என்று அருள் செய்யும் என் கையார் சக்கரக் கண்ண பிரானே –2-9-3-
கையும் திரு வாழியும் பொருந்தி இருக்கும் இருப்பைக் கண்டாயே
நம் பவ்யத்தை கண்டாயே-நம்மை அனுபவிக்கை அழகியதோ
ஷூத்ர விஷயங்களில் பிரவணனாய் அனர்த்தப் படுக்கை அழகியதோ -என்று
கையில் திரு வாழியையும் பவ்யதையும் காட்டி யாயிற்று இவருடைய விஷய பிராவண்யத்தைத் தவிர்த்தது –
சாஸ்திர ப்ரதா நாதிகளால் அன்று -ஐயப்பாடு அறுத்து –ஆதரம் பெருக வைத்த அழகன் –
—————–
விடலில் சக்கரத் தண்ணலை –2-9-11-
மோஷ ஆனந்தம் பிரதம் இத் திருவாய்மொழி
விடலில் சக்கரத் தண்ணலை-விடாமல் -ஆழியை விட்டால் தானே உம்மை விடுவேன் -அச்சுதன் அன்றோ
விடலில் சக்கரத் தண்ணலை –
வீடு தானே பிராப்யம் –ஸ்வார்த்த -கந்த ரஹிதமான ததேக பாரதந்த்ர்யம் —
நாம் விடுகிறோம் என்று அதிசங்கை பண்ணுகிறது என் –
நாம் ஒருவரையும் விடோம் காணும் -என்று திருக் கையில் திரு வாழியைக் காட்டினான் –
விடலில் சக்கரத் தண்ணலை —
ஒரு காலும் விடாத திரு வாழியைக் கையிலே உடைய சர்வேஸ்வரனைக் கவி பாடிற்று
மேவல் விடலில் வண் குருகூர்ச் சடகோபன் சொல்
ஒருவரையும் விடாத -அவன் ஸ்வபாவத்தாலே கிட்டி-
—————
மழுங்காத வைந் நுதிய சக்கர நல் வலத்தையாய்
தொழும் காதல் களிறு அளிப்பான் புள்ளூர்ந்து தோன்றினையே –3-1-9-
மழுங்காத வைந் நுதிய சக்கர நல் வலத்தையாய்
சத்ரு சரீரங்களிலே படப்பட சாணையில் இட்டால் போலே புகர் பெற்று வாரா நிற்குமாயிற்று திரு வாழி
மழுங்கக் கடவது அன்றியே கூரிய முனையை யுடைய திரு வாழியை –
வடிவார் சோதி வலத்துறையும் -என்னும்படி வலவருகே யுடையையாய் –
நல் வலத்தையாய் தோன்றினையே
கையில் திரு வாழி இருந்தது அறிந்திலன்
அறிந்தான் ஆகில் இருந்த விடத்தே இருந்து அத்தை ஏவிக் கார்யம் கொள்ளலாம் இறே
ஆர்த்த நாதம் செவிப் பட்டவாறே -தன்னை மறந்தான் -கையும் திரு வாழியுமான தன்னை –
தான் ரஷகன் என்பதை மறக்க வில்லை –
நினைத்தாலும் இருந்த இடத்திலே இருந்து துக்க நிவ்ருத்தி பண்ண ஒண்ணாது
தொழும் காதல் களிறு ஆயிற்று
கையும் திரு வாழியுமான அழகு காண ஆசைப்பட்டு இருக்கிறவன் ஆயிற்று –
————–
சங்கு சக்கரத்தின் என்கோ சாதி மாணிக்கத்தையே!–3-4-3-
‘இச் சேர்த்திக்கு என் வருகிறதோ!’ என்று இடமல்லாத இடத்திலும் அச்சத்தாலே ஐயங்கொள்ளுகிற
பிரேமத்தின் முடிவெல்லையிலே
நிற்கின்றவர்களுடைய வயிற்றெரிச்சலைத் தவிர்ப்பன திவ்விய ஆயுதங்கள் அல்லவோ?
‘வயிற்றெரிச்சலைத் தவிர்ப்பதற்குத் திவ்விய ஆயுதங்கள் காரணம் ஆமோ?’ எனின்,
‘வடிவாய் நின் வல மார்பினில் வாழ்கின்ற மங்கையும் பல்லாண்டு’ என்னா,
‘சுடராழியும் பல்லாண்டு’ என்னாநின்றார்களன்றோ?
—————
நாதனை ஞாலமும் வானமும் ஏத்தும் நறுந்துழாய்ப்
போதனைப் பொன்னெடுஞ் சக்கரத்து எந்தை பிரான் தன்னை–3-7-3-
பொன் போன்று அழகியதாய், அழகுக்கும் ஆபரணத்துக்கும் மிடுக்குக்கும்
தனக்கு அவ்வருகு இன்றியே இருப்பதாய், இனிமையாலே அளவு இறந்து இருப்பதான திருவாழியை உடையனாய்,
அவ்வழியாலே என்னை எழுதிக்கொண்ட உபகாரகனை. ‘ஆயின், பலகால் திருவாழியைச் சொல்லுவான் என்?’ எனின்,
இராஜகுமாரர்களுக்குப் பிடிதோறும் நெய் வேண்டுமாறு போன்று, இவரும் ‘ஆழிப்பிரான்’ என்பது,
‘பொன் நெடுஞ்சக்கரத்து எந்தை பிரான்’ என்பதாய் அடிக்கடி கையும் திருவாழியுமான சேர்த்தியை அனுபவிக்கிறார்.
—————
அளிக்கும் பரமனைக் கண்ணனை ஆழிப் பிரான் தன்னை–3-7-6-
‘நாயுதாநி – ஆயுதங்கள் உனக்காக இல்லை’ என்கிறபடியே, தன்னோடு ஆயுதத்தோடு வாசி அற
‘பக்தாநாம் – பக்தர்களுக்காகவே’ என்று இருக்குமவனை
————
வலந்தாங்கு சக்கரத்து அண்ணல் மணிவண்ணற்கு ஆள் என்று உள்
கலந்தார் அடியார் தம்மடியார் எம் அடிகளே.–3-7-9-
‘வடிவாய் நின் வல மார்பினில் வாழ்கின்ற மங்கையும் பல்லாண்டு’ என்றவர்,
‘வடிவார் சோதி வலத்து உறையும் சுடர் ஆழியும் பல்லாண்டு’ என்னுமாறு போன்று,
இவரும் மேற் பாசுரத்திலே‘திருமார்பனை’ என்றார்; இங்கே ‘வலந்தாங்கு சக்கரம்’ என்கிறார்.
அந்தப்புரத்துக்கு காவல் வேண்டுமே -இதனால் நம்மாழ்வார் பெரியாழ்வார் -இப்படி அருளிச் செய்கிறார்கள் –
வலப்பக்கத்தே தரிக்கப்பட்ட திருஆழியை உடையனாய் அதற்குப் புகலிடமான நீலமணி போலே சிரமத்தைப் போக்குகின்ற
வடிவழகையுடைய அறப்பெரியவனுக்கு.
ஆள் என்று உள் கலந்தார் அடியார்தம் அடியார் என் அடிகளே –
‘சொரூப ஞானம் முன்பாக ‘அடிமை செய்கையே பிரயோஜனம்’ என்று இருக்குமவர்களுடைய அடியார் எனக்கு ஸ்வாமிகள்,’ என்கிறார்.
விருத்தவான் அபிமானத்திலே ஒதுங்கும் இதுவே அன்றோ வேண்டுவது? அவர்கள் அவனிலும் உத்தேஸ்யர் ஆவர்கள் அன்றோ!
அத்யந்த நிஹீனாக இருந்தாலும் -வ்ருத்தவான்கள் -வலக்கை ஆழியான் -பற்றியவர்கள் -மகாத்மா உடைய பிரபாவத்தால் பாபம் ஒட்டாதே-
————
ஆவியே! ஆரமுதே;என்னை ஆளுடைத் தூவி அம் புள்ளுடையாய்!சுடர் நேமியாய்!
பாவியேன் நெஞ்சம் புலம்பப் பல காலும் கூவியும் காணப்பெறேன் உன கோலமே.–3-8-7-
அழகுக்கும் விரோதிகளை அழிப்பதற்கும் தானேயாக இருக்கும் கருவியை உடையவன்;
இதனால், ‘வரும் வழியில் எவையாகிலும் தடைகள் உளவாகிலும் கைம் மேலே தீர்த்துக் கொண்டு
வருகைக்குக் கருவி உண்டு,’ என்பதனைத் தெரிவித்தபடி.
————–
வாய் கொண்டு மானிடம் பாடவந்த கவியேன் அல்லேன்;
ஆய் கொண்ட சீர் வள்ளல் ஆழிப் பிரான் எனக்கே உளன்;–3-9-9-
இக்குணங்களைக் காத்து ஊட்ட வல்ல கருவியை உடையவன்.
எனக்கே உளன் –
என் கவிக்கே தன்னை விஷயம் ஆக்கினான்.
ஆழிப்பிரான் –
தானும் தன் ஆயுதமுமாய் இருக்கிற இருப்பை நான் கவி பாடலாம்படி எனக்கு விஷயம் ஆக்கினான்.
‘வலக் கை ஆழி இடக்கைச் சங்கம் இவையுடை மால் வண்ணனை,
மலக்கு நா உடையேற்கு மாறு உளதோ இம்மண்ணின் மிசையே’ என்பர் பின்னும்.
————–
சன்மம் பலபல செய்து வெளிப்பட்டுச் சங்கொடு சக்கரம் வில்
ஒண்மை யுடைய உலக்கை ஒள் வாள் தண்டு கொண்டு –3-10-1-
‘ஸ்ரீ சத்துருக்நாழ்வான், அப்போது தாய் மாமனான யுதா ஜித்தினுடைய வீட்டிற்குச் செல்லுகின்ற ஸ்ரீ பரதாழ்வானால்
அழைத்துச் செல்லப்பட்டார்,’ என்கிறபடியே, இறைவனை விட்டுப் பிரியாத ஒற்றுமையைத் தெரிவிப்பார், ‘சங்கொடு’ என்கிறார்.
‘நல்லாரைக் காத்தற்கும் பொல்லாரைப் போக்கற்கும் சங்கு ஒன்றே போதியதாக இருக்க, சக்கரத்தையும் கொண்டு வந்தான்’ என்பார்,
‘சங்கொடு சக்கரம்’ என்கிறார். -ஸ்ரீ பரத ஆழ்வான் திருச்சங்கு அம்சம் ஸ்ரீ சத்ருன ஆழ்வான் திருச்சக்கர அம்சம் –
ஒரு கொத்துக்கு ஒருவரைக் கொண்டு வருதலோடு அமையாது, வில்லையும் கொண்டு வந்தானாதலின், ‘சக்கரம் வில்’ என்கிறார்.
ஆதித்யானாம் -விஷ்ணு போலே -ஒரு கொத்துக்கு ஓன்று சொல்லி இல்லாமல் -அது அர்ஜுனனுக்கு சரி- ஆழ்வாருக்கு போதாதே
கருதும் இடம் பொரும்படி ஞானத்தாலே மேம்பட்டிருப்பவர்களாதலின், ‘ஒண்மையுடைய உலக்கை’ என்கிறார். ஒண்மை – அறிவு.
கையில் திவ்விய ஆயுதங்களைக் கண்டால், ‘இவற்றைப் போருக்குக் காரணமாகத் தரித்துக் கொண்டிருக்கிறான்,’ என்று
இருப்பர்கள் சமுசாரிகள்; அவ்வாறு அன்றி, நித்தியசூரிகள், ‘அழகிற்குக் காரணமாகத் தரித்துக் கொண்டிருக்கிறான்’ என்று இருப்பர்கள்;
இவரும் அவர்களிலே ஒருவர் ஆகையாலே, -விண்ணுளாரிலும் சீரியர் -அழகிற்குக் காரணமாகவே கொண்டு, ‘ஒள்வாள்’ என்கிறார். ஒண்மை – அழகு.
‘ஒரு கற்பகத் தரு பணைத்துக் கணுத்தோறும் அரும்பினாற்போலே ஆயிற்று வடிவும் திவ்விய ஆயுதங்களும் சேர்ந்த சேர்த்தி இருப்பது,’ என்றபடி.
ஆக, இங்கு நின்றும் போவார்க்கு அடையத் தக்கவர்களான நித்திய சூரிகளோடே கூட வந்து அவதரிக்கிறான் என்பதனையும்,
அவ்வாறு அவதரிப்பதுவும் கண்டு அனுபவித்த பின்னர், ‘அடியார்கள் குழாங்கனை உடன் கூடுவது என்றுகொலோ!’ என்று
பிரார்த்திக்க வேண்டாதபடி அவர்களோடே கூடக் காட்சி கொடுக்கைக்காக என்பதனையும் தெரிவித்தபடி.
————-
சங்கு என்னும்; சக்கரம் என்னும்; துழாய் என்னும்;
இங்ஙனே சொல்லும் இராப்பகல் என் செய்கேன்?–4-2-9-
நீ அண்மையில் இருப்பவள் அன்றோ?
தெரிந்த மட்டு அதனைச் சொல்லிக் காணாய்’ என்ன, கைமேலே சொல்லுகிறாள் :–கேட்ட உடனே சொன்னாள்
சங்கு என்னும் –மலையை எடுத்தாற்போலே பெரு வருத்தத்தோடே சங்கு என்னும். அது பொறுத்தவாறே,
சக்கரம் என்னும் – மீளவும் மாட்டுகின்றிலள், சொல்லவும் மாட்டுகின்றிலள்.
இரண்டற்கும் நடுவே கிடக்கிற மாலையை நினைத்து,-துழாய் என்னும் –
————
கால சக்கரத்தொடு வெண் சங்கம் கை ஏந்தினாய்!
ஞால முற்றும் உண்டு உமிழ்ந்த நாராயணனே!’ என்று என்று,–4-3-6-
பகைவர்களுக்குக் கூற்றுவனான திருவாழியோடேகூட, நீலநிறம் பொருந்திய
திருமேனிக்குப் பரபாகமான வெண்மையை யுடைத்தான ஸ்ரீ பாஞ்சஜன்யத்தை, வெறும்புறத்திலே ஆலத்தி வழிக்க வேண்டும் படியிருக்கிற
அழகிய திருக்கையிலே பூ ஏந்தினாற்போலே ஏந்தினவனே! ஸ்ரீ பாஞ்சஜன்யத்துக்கு வெளுப்புத் தன்மை ஆனாற்போலே,
திருவாழிக்குப் பகைவர்களை அழித்தலும் தன்மையாய் இருக்குமாதலின், ‘காலசக்கரம்’ என்கிறார்,
————-
கூனற் சங்கத் தடக்கை யவனை, குடமாடியை,
வானக் கோனைக் கவிசொல்ல வல்லேற்கு இனி மாறு உண்டோ?–4-5-9-
சங்கு சக்கரம் கதை இவற்றைத் தரித்தவனாய் வந்து அவதரித்தாய்,’ என்று சொல்லும்படியாயிற்று இருந்தது என்றபடி.
‘அஞ்சலி செய்தவராய் வணக்கத்துடன் இருக்கின்ற’ என்கிற இளைய பெருமாளைப் போலே, பகவானுடைய அனுபவத்தால்
வந்த மகிழ்ச்சியாலே சரீரத்தை வளைத்துக் கொண்டிருப்பவன் ஆதலின், ‘கூனல் சங்கம்’ என்கிறது. என்றது,
‘வாயது கையதுவாக அனுபவிக்கின்றவன் அன்றோ?’ என்றபடி.
‘உண்பது சொல்லில் உலகளந்தான் வாயமுதம்; கண்படை கொள்ளல் கடல்வண்ணன் கைத்தலத்தே;
பெண் படையார் உன்மேல் பெரும் பூசல் சாற்றுகின்றார்; பண் பல செய்கின்றாய் பாஞ்ச சன்னியமே!’-என்ற நாய்ச்சியார் திருமொழிப்
பாசுரத்தை அடியாகக்கொண்டு எழுந்தது.–‘வாயது கையது’ என்பது, சிலேடை.
உரிமை நிலை நாட்டி -வாரணமாயிரம் -இப்பொழுது அத்தை கேட்கிறாள் -கற்பூரம் நாறுமோ –
சங்கரய்யா உன் செல்வம் சால பெரியதே -நிகர் உனக்கு யார் -என்கிறாள்
——————-
சக்கரத்து அண்ணலே! என்று தாழ்ந்து, கண்ணீர் ததும்ப,
பக்கம் நோக்கி நின்று, அலந்தேன்; பாவியேன் காண்கின்றிலேன்;–4-7-10-
சக்கரத்தையுடைய சுவாமியே!’ என்று சொல்லி அனுபவிக்கப் பெறாமையாலே கீழே விழுந்து
சக்கரத்து அண்ணலே என்று தாழ்ந்து –
‘திருவாழியைக் காட்டி என்னை எழுதிக்கொண்டவனே!’ என்று இவ் வார்த்தையோடே தரைப்பட்டு.
————-
ஆட்செய்து ஆழிப் பிரானைச் சேர்ந்தவன், வண் குருகூர் நகரான்,–4-10-11-
அடிமை செய்து சர்வேசுவரனைக் கிட்டினவர். முறையிலே சர்வேசுவரனைப் பற்றினவர் ஆயிற்று இவர்
தான் விருத்தவானாய்க் காணும் இவரை விருத்தியிலே சேர்ப்பித்தது.
கையில் திருவாழி சேர்ந்தாற்போலே ஆயிற்று இவரும் சேர்ந்தபடி.
கெடு மரக்கலம் கரை சேர்ந்தாற்போலே இருத்தலின் ‘சேர்ந்த’ என்கிறார்.
——————
கையார் சக்கரத்து என் கரு மாணிக்கமே! –5-1-1-
வெறும் புறத்திலே ஆலத்தி வழிக்க வேண்டும்படியான கையிலே திருவாழியைத் தரித்தானாயிற்று.
இது தான் ஆபரணமுமாய் வினைத் தலையில ஆயுதமுமாய் அன்றோ இருப்பது.
ஒரு கைக்குப் படையாய்-யுத்தத்துக்கு – இருக்குமே யன்றோ?
கூரார் ஆழி வெண் சங்கு ஏந்தி வாராய்” என்று அநுகூலர்க்கு ஆசைப் படுகைக்கு உடலாய்,
விரோதிகளைத் துணிக்கைக்கும் உடலாய் ஆயிற்று இருப்பது.
——————
அம்மான் ஆழிப் பிரான் அவன் எவ்விடத்தான்? யான் ஆர்?–5-1-7-
சர்வேச்வரன்- கையும் திருவாழியுமான அழகை நித்திய சூரிகளுக்குக் காட்சி கொடுத்துக் கொண்டிருக்குமவன்.
அவன் எத்தகைய பெருமை பொருந்திய நித்திய சூரிகளால் ஆராதிக்கப்படுமவன்.
நித்திய சம்சாரிகளுக்கும் இவ்வருகாய் இருந்தேன் யான்.
பிள்ளையமுதனார், ‘அம்மான் ஆழிப்பிரான்’ என்று மேலே காட்டி, ‘யான் ஆர்’ என்று குறையச் சொல்லிக் காட்டுவர்.
————–
தேவார் கோலத் தொடும் திருச் சக்கரம் சங்கினொடும்
ஆஆ! என்று அருள் செய்து அடியேனொடும் ஆனானே.–5-1-9–
பிரகிருதி சம்பந்தம் இல்லாத திவ்விய உறுப்புகளோடும் அவ் வுறுப்புக்களில் சேர்ந்த திவ்விய ஆயுதங்களோடுங்கூட வந்து,
ஐயோ! ஐயோ! என்று என் பக்கலிலே கிருபையைச் செய்து என்னோடே வந்து கலந்தான்.-ஆவா என்று ஆராய்ந்து அருளினான் –
“கையில் ஆழ்வார்களோடு பொருந்தினாற் போலே என்னோடே வந்து கலந்தான்” என்று ஆளவந்தார்
அருளிச் செய்தாராகத் திருமாலை யாண்டான் பணிப்பர்.
இதனை எம்பெருமானார் கேட்டருளி இங்ஙனேயாக அடுக்கும்,
‘கூரார் ஆழி வெண்சங்கு ஏந்தி வாராய்’ -திருவாய். 6. 9 : 1.-என்றாயிற்று இவர் ஆசைப்பட்டிருப்பது;
ஆசைப்பட்டபடியே திவ்விய ஆயுதங்களோடே வந்து கலந்தான்” என்று அருளிச் செய்தார்.
இவர் தாம் பூ வேளைக்காரரைப் போலே, இவை காணாத போது கை மேலே முடிவார் ஒருவரே யன்றோ.
பூ வேளைக்காரர் – அரசர்களுக்கு அவ்வக்காலங்களில் பூ இடாவிடில் குத்திக் கொண்டு முடியுமவர்கள்.
இவை காணாத போது’ என்றது, இவற்றைக் கைமேலே காணாத போது என்றபடி.
கைமேலே முடிவார்” என்பதற்குப் போரிலே முடிவார் என்பது வேறும் ஒரு பொருள்.
ஸ்வரூபத்திற்குத் தகுதியாகச் சேஷியாகவே வந்து கலந்தான் என்பார் ‘அடியேனொடும் ஆனானே’ என்கிறார்.
அப்ராகிருதமாய் அழகியதான திருமேனியோடே திருவாழியோடும் ஸ்ரீ பாஞ்ச சன்னியத்தோடும் பொருந்தினாற்போலே,
அப்ராகிருத விக்கிரகத்தோடே என்னோடே வந்து கலந்தான் என்பது, ஸ்ரீ-ஆளவந்தாருடைய திருவுள்ளக் கருத்து.
“அடியேனொடும்” என்ற உம்மையாலே, கையில் ஆழ்வார்களோடு சேர்ந்தார்போலே என்னோடும் சேர்ந்தான் என்றபடி.
——————-
கொன்று உயிர் உண்ணும் விசாதி பகை பசி தீயன எல்லாம்
நின்று இவ் வுலகில் கடிவான் நேமிப் பிரான் தமர் போந்தார்-5-2-6-
கையும் திருவாழியுமான அழகிலே தோற்றிருக்குமவர்கள் வந்தார்கள்.
நேமிப் பிரான் தமர்-ஸ்ரீ ஆளவந்தார் நிர்வாஹத்திலே நித்திய சூரிகள்.-
எம்பெருமானார் நிர்வாஹத்திலே ஸ்ரீ வைஷ்ணவர்கள்.
—————–
யாமடல் ஊர்ந்தும் எம் ஆழி அங்கைப் பிரானுடைத்
தூமடல் தண்ணத் துழாய் மலர் கொண்டு சூடுவோம்–5-3-10-
யாம்
முதலில் சொல்லி
ஆழி அம் கைப் பிரான் –
பின்னால் சொல்லி -பிரணவம் -அகாரம் சொல்லித் தானே மகாரம் –
பிரணவத்தை விட இங்கே நன்றாக அருளிச் செய்த படி –கேட்டு திருந்த வேண்டியது ஜீவாத்மா தானே
ராஜ புருஷன் -சப்தம் முன்னால் இருந்தாலும் சேவகனுக்கு முக்கியம்
எம் ஆழி அம் கைப் பிரானுடைத் தூ மடல் தண் அம் துழாய் மலர் கொண்டு சூடுவோம்-
எம் பிரான்’ என்றதனால் நாராயண சப்தார்த்தம் சொல்லப்படுகிறது.
இவனைக் கொண்டு அன்றோ அவனை நிரூபிப்பது.
அகாரம் நாராயணம் நடுவில் மகாரம் விளங்குகிறார் -அவனை இட்டே சேஷன்-
இவன் கைங்கர்யம் செய்யச் செய்ய நாராயணன் -பெருமை பெருகிறானே –
அவன் கையும் திருவாழியுமாகப் புறப்பட்டாற்போலே அன்றோ நான், கையும் மடலுமாகப் புறப்பட்டால் இருப்பது என்பாள்
இரண்டும் அமோகம் -வீணாகாதே –ஈஸ்வரத்வம் திரு ஆழி காட்டும் –
பிரணயித்வம் மடல் காட்டுமே – தேஜோ கரம் இரண்டும் இருவருக்கும்
நான் கையும் மடலுமாகப் புறப்பட்டால், அஞ்சி எதிரே வந்து தன்கையில் ஆபரணத்தை வாங்கி என் கையிலே இட்டு,
தன் தோளில் மாலையை வாங்கி என் தோளிலே இட்டானாகில் குடி இருக்கிறான்;
இல்லையாகில் எல்லாங்கூட இல்லை யாகின்றன. -உபய ஸ்வரூபமும் அழியும் என்றவாறு –
ஆபரணம் என்பதால் இங்கு ஆழி -மோதிரம் என்றபடி -திவ்யாயுதமும் திவ்யாபரணம் தானே அநு கூலர்களுக்கு –
————-
தூப் பால வெண் சங்கு சக்கரத்தன் தோன்றானால் – 5-4-7-
இருளைப் போக்கும் போது சந்திர சூரியர்கள் சேர உதித்தாற் போன்று இருக்கின்ற
திவ்விய ஆயுதங்களை யுடையவன் வருகின்றிலன்.
அந்தச் சந்திர சூரியர்கள் வேணுங்காணும் இந்த இருளைப் போக்கும் போது.
ஆங்கத் திகிரி சுடரென்றும் வெண்சங்கம் வானில் பகரும் மதி என்றும் பார்த்து” -மூன்றாந் திருவந். 67.-என்று
சொல்லக் கடவதன்றோ.
பண்டே இவள் கை கண்டு வைத்தமையன்றோ இவை தாம்.
இருளோடே சீறு பாறு என்று போக்குவான் ஒருவனும்,
இருளோடே கண்கலந்து நின்று போக்குவான் ஒருவனுமாயிற்று.
தூய்மையை ஸ்வபாவமாகவுடைத்தான வெண்சங்கு ஆதலின் ‘தூப்பால வெண்சங்கு’ என்கிறாள்.
அன்றிக்கே, பால் என்பது, இடமாய், குறைவற்ற இடத்தை யுடைத்தான வெண்சங்கு என்னுதல்;
“பெரு முழக்கு” என்றும், “நன்றாக நிரம்பின மத்தியினின்றும் வெளிக் கிளம்பின ஒலியையுடைய
ஸ்ரீபாஞ்ச சன்னியம்” என்றும் சொல்லப்படுவது அன்றோ.
ஆயின், ‘தூய்மை’ என்ற சொல் குறைவறுதல் என்றபொருளைக் காட்டுமோ? எனின்,
‘அவன் இவ்வர்த்தத்தில் குறைவற்றவன்’ என்று சொல்ல வேண்டுவதனை ‘அவன் இவ்வர்த்தத்திலே தூயன்காண்’ என்று
வழங்கும் வழக்கு உண்டே அன்றோ. இலக்ஷணை இருக்கிறபடி.
அன்றிக்கே, தூய்மையாலும் வெண்மையாலும், வெளுப்பின் மிகுதியைச் சொல்லுகிறதாகவுமாம்;
அப்போது வேறுசொல் இடையில் வரலாகா. வந்திருப்பதனால், அவ்வாறு பொருள் கூறுதல் பொருத்தம் அன்று.
———————
கை வந்த சக்கரத்து-5-4-8
இந்தத் துன்பத்தைப் போக்குவதற்குச் சாதனம் இல்லாமல் தான் இருக்கிறானோ?
அழையா திருக்கச் செய்தேயும் நினைவறிந்து கையிலே வந்திருக்கும் திருவாழியை யுடையவன்.
“பாவஜ்ஞேந – மாய்-கருத்து அறிந்து காரியம் செய்யும் சாதனத்தை யுடையவன் என்றபடி.
கைவந்த சக்கரத்து என்பதற்கு, அற விதேயமான சாதனத்தையுடையவன் என்னலுமாம்.
“ஸ்ரீ ராமபிரானுக்கு வலக்கை போன்றவர்” என்கிறபடியே, விதேயமாய்க் காரியம் செய்யும் சாதனத்தையுடையவர் என்றபடி.
“பாவஜ்ஞேந-கிருதஜ்ஞேந –தர்மஜ்ஞேந–த்வயா புத்ரேண-தர்மாத்மா-ந ஸம்விருத்த: பிதா மம
—————-
எங்ஙனேயோ அன்னை மீர்காள்! என்னை முனிவது நீர்!
நங்கள் கோலத் திருக்குறுங்குடி நம்பியை நான் கண்ட பின்
சங்கி னோடும் நேமி யோடும் தாமரைக் கண்களோடும்
செங்கனி வாய் ஒன்றினோடும் செல்கின்றது என் நெஞ்சமே.–5-5-1-
தண்ணீர் போன பின்னர் அணையைக் கட்டுதல் அன்றோ நீங்கள் செய்கிறது என்றபடி.
மீட்கப் போகாதேபடி இப்போது வந்தது என்? என்ன,
கை மேலே ஒரு முகத்தாலே தான் அகப் பட்டபடியைச் சொல்லுகிறாள் மேல்:
சங்கினோடும் நேமியோடும் தாமரைக் கண்களோடும் செங்கனி வாய் ஒன்றினோடும் செல்கின்றது என் நெஞ்சமே –
இதனால், நீங்கள் ஹிதம் சொல்லுவது நெஞ்சுடையார்க் கன்றோ என்கிறாள் என்றபடி.
சங்கினோடும் –
செங்கமல நாண் மலர் மேல் தேன் நுகரும் அன்னம் போல்” என்கிறபடியே, கரு நிறமான திரு மேனிக்குப் பரபாகமான
வெளுத்த நிறத்தையுடைத்தான ஸ்ரீ பாஞ்சசன்யத்தோடும்,
நேமி யோடும் –
இந்தக் கைக்கு இது ஆபரணமானால், வேறு ஒன்று வேண்டாதே தானே ஆபரணமாகப் போரும்படி இருக்கிற திருச் சக்கரத்தோடும்,
————–
நிறைந்த சோதி வெள்ளம் சூழ்ந்த நீண்ட பொன் மேனியொடும்
நிறைந்து என்னுள்ளே நின்றொழிந்தான் நேமி அம் கை உளதே.–5-5-7-
நேமி அம் கை உளதே-
வடிவழகு எல்லாம் ஒரு தட்டும், கையுந் திருவாழியுமான அழகு ஒரு தட்டுமாயாயிற்று இருப்பது. என்றது,
அவன் கையில் திருவாழி பிடித்திலனாகில் நான் பழி பரிஹரித்து மீளேனோ?
அவன் கையில் திருவாழி இருக்க, என்னாலே பழிக்கு அஞ்சி மீளப்போமோ? என்றபடி.
————–
அறி வரிய பிரானை ஆழி அம் கையனையே அலற்றி
நறிய நன் மலர் நாடி நன் குருகூர்ச் சடகோபன் சொன்ன-5-5-11-
ஆழி அம் கையனையே அலற்றி –
“சங்கினோடும் நேமியோடும்” என்று, தொடங்கின படியே தலைக் கட்டுகிறார்.
அவனைக் கை விடாமல் -இடைவிடாமல் -அநுபவித்ததித்தனை இதற்கு முன்பெல்லாம்;
இதில், கையும் திருவாழியுமான அழகை யாயிற்று உருவச் சொல்லிக் கூப்பிட்டது.
—————
சங்கு சக்கரத்தாய்! தமியேனுக்கு அருளாயே.–5-7-2-
சங்கு சக்கரத்தாய் –
அங்ஙன் கண்ணழிவு சொல்லலாமோ? ஒரோ கைக்குப் படை அன்றோ கூட நிற்கிறது என்கிறார்.
அங்கு ஒரே கையில் ஒரே வில்-
இங்கு, “இலக்குமணனே! வில்லைக் கொண்டு வா” என்னவேண்டும் குறை உண்டோ.
பிறர் கை பார்த்திருக்கவேண்டும் குறை உண்டோ இங்கு.
பரிகரங்களை அழைத்துக் காரியம் கொள்ளவேண்டும்படியோ உனக்கு இருக்கிறது.
1-நீ அண்மையிலிருப்பவன் அல்லாமையோ,-நீ சந்நிஹிதன் —
2-நீ ஆற்றலுடையவன் அல்லாமையோ,
3-உனக்குப் பரிகரம் இல்லாமையோ,
4-பரிகரம் தான் கை கழிய நின்றோ,-
சங்கு சக்கரத்தாய் -இதுவே நிரூபகம் – எதனாலே தான் இழக்கிறது?
—————–
களைவாய் துன்பம் களையா தொழிவாய் களை கண் மற்றிலேன்
வளைவாய் நேமிப் படையாய்! குடந்தைக் கிடந்தாய்! மாமாயா!–5-8-8-
வளைவாய் நேமிப்படையாய்-
பார்த்த இடம் எங்கும் வாயான திருவாழியை ஆயுதமாகவுடையவனே!
களையாதொழிகைக்குச் சொல்லலாம் கண்ணழிவு உண்டோ? என்பார் ‘நேமிப்படையாய்’ என்கிறார்.
என்றது, ‘பரிகரம் இல்லை என்னப் போமோ; கைகழிந்து போயிற்று, இனிப் படை திரட்ட வேண்டும்’ என்னும் கண்ணழிவு உண்டோ? என்றபடி.
தொழுவித்துக் கொள்ளும் கைக்கு பரிகரம் உண்டு -சங்கு சக்கரம் ஏந்தும் கையான் -தொழும் கைக்கு அஞ்சலி பரிகரம் உண்டே
வில் கை வீரன் வெறும் கை வீரன் -அகிஞ்சனன் -நம-என்பதே முமுஷுக்கு வீரத்தனம் –
உன் கையில் ஆயுதத்துக்கு வாய் இல்லாத இடம் உண்டோ, அது வாய் படைத்த பிரயோஜனம் பெற வேண்டாவோ? என்பார் ‘வளைவாய்’ என்கிறார்.
மா ஸூ ச சொல்ல வேண்டாமோ -வாய் படைத்த பிரயோஜனம் இது அன்றோ –
நேமிப் படையாய் களைகண் மற்றிலேன் –
அப்படி இருப்பது என் கையில் ஓர் ஆயுதம் உண்டோ, பிறர் கையில் ஓர் ஆயுதம் உண்டோ, உன் கையில் ஆயுதம் இல்லையோ.
—————–
திருவல்லவாழ் சுழலின் மலி சக்கரப் பெருமானது தொல்லருளே.–5-9-9-
பகைவர்களை அழிக்க வேண்டும் என்னும் விரைவாலே மிகவும் சுழன்று வாரா நின்றுள்ள திருவாழியையுடைய சர்வேச்வரன்.
அன்றிக்கே, சுழலின் மலி சக்கரம் என்பதற்கு, சுழல்வது போலத் துளங்கா நின்றுள்ள சக்கரம் என்னுதல்.
————-
கை கொள் சக்கரத் தென் கனி வாய்ப் பெருமானைக் கண்டு
கைகள் கூப்பிச் சொல்லீர் வினையாட்டியேன் காதன்மையே.–6-1-1-
கைகொள் சக்கரத்து-
செந்நெலின்படியாயிருக்கை. கைக்கெல்லாம் தானே ஆபரணமாயிருக்கை.
நெல் வயலை மறைத்து உயர்ந்து இருப்பது போலே திருக்கையை இடமாக கொண்ட திருச் சக்கரம்
இராஜபுத்திரர்கள் கையில் இடைச்செறி கடைச்செறிகட்குத் தோற்றிருக்குமாறு போலே,
திருவதரத்தில் பழுப்புக்கும் கையும் திருவாழியுமான சேர்த்திக்குமாயிற்று இவள் எழுதிக்கொடுத்தது.
——————–
கறங்கு சக்கரக்கை க் கனி வாய்ப் பெருமானைக் கண்டு
இறங்கி நீர் தொழுது பணியீர் அடியேன் இடரே.–6-1-3-
பகைவர்களை அழிக்கும் விரைவாலே சுழன்று வாராநின்றுள்ள திருவாழியைக் கையிலேயுடையனான சர்வேசுவரனை. -பூர்வர் நிர்வாகப்படி –
அன்றிக்கே,–பட்டர் நிர்வாகப்படி –
இத்தலையைத் தோற்பித்துக் கொண்டோம் என்னும் மேன்மை தோற்ற, ஆயுதத்தைச் சுழற்றிப் புன்முறுவல்செய்து இருக்கிறபடியாகவுமாம்.
——————
ஆற்றல் ஆழி யங்கை அமரர் பெருமானைக் கண்டு
மாற்றம் கொண்டருளீர் மையல் தீர்வதொரு வண்ணமே.–6-1-6-
செய்யப் பெற்றிலோம்’ என்று நோவுபட்டு இருப்பான் ஒருவனுமாய்,
அவர்கள் இரக்ஷணத்துக்குக் கருவியான திருவாழியைக் கையிலே யுடையனாய்,
நான் காண ஆசைப்பட்ட கையும் திருவாழியுமான அழகை விருப்பமில்லாதார்க்குக் காட்சி கொடுத்துக் கொண்டிருக்குமவனை.
அன்றிக்கே,
‘ஆற்றல்’ என்பதனைத் திருவாழிக்கு அடைமொழியாகக் கொண்டு,
அடியார்களைக் காப்பாற்றுவதில் அவனைக் காட்டிலும் கிருபையை யுடைய திருவாழியைக் கையிலே யுடையவனை என்னுதல்.
அன்றியே,
‘ஆற்றல்’ என்பதனை, அவன் தனக்கே அடையாகக்கொண்டு,
பிரிவுக்குச் சிளையாதே ஆறியிருப்பானாய்க் கையும் திருவாழியுமான சர்வேசுவரனை என்று பட்டர் அருளிச்செய்வர்.
—————-
கரு வண்ணம் செய்யவாய் செய்யகண் செய்யகை செய்யகால்
செரு ஒண் சக்கரம் சங்கு அடையாளம் திருந்தக் கண்டே.–6-1-7-
செரு ஒண் சக்கரம் சங்கு –
இவ் வடிவழகை யெல்லாம் காத்து ஊட்டவற்றனவுமாய், அஸ்தாநே பய சங்கை பண்ணி யுத்தோந்முகமாய்,
கை கழியப் போய் நின்று ரக்ஷிப்பதும், கை விடாதே வாய்க் கரையிலே நின்று ரக்ஷிப்பதுமான திவ்விய ஆயுதங்கள்.
கிட்டினாரை ‘இன்னார் என்று அறியேன்’ என்று மதி மயங்கப் பண்ணுவிக்கும் திவ்விய ஆயுதங்கள் ஆதலின் ‘ஒண்’ என்கிறாள்.
——————-
வலக்கை ஆழி இடக்கைச் சங்கம் இவை யுடை மால்வண்ணனை
மலக்கு நாவுடையேற்கு மாறுளதோ இம்மண்ணின் மிசையே?–6-4-9-
இவ்விடத்தைப் பட்டர் அருளிச் செய்யா நிற்கச் செய்தே கஞ்சனூரில் இருந்தவரான வண்டு வரைப்பெருமாள் என்பவர்,
மால் வண்ணனை ‘மலக்கு நாவுடையேன்’ என்ன அமையாதோ?
‘வலக்கை ஆழி இடக்கைச் சங்கம் இவையுடை’ என்று விசேடித்ததற்குக் கருத்து என்? என்ன,
“சோளேந்திர சிங்கனை உளுக்காக்கப் பண்ணுகிறேன் என்கிறார் காணும்” என்று அருளிச்செய்தார்.
‘சோளேந்திர சிங்கன்’ என்பது, நம் பெருமாளுடைய யானை. உளுக்காக்க – இருக்கும்படி. என்றது
சர்வேசுவரனாகிற மத்த யானையானது பணிந்து கொடுக்கும்படி செய்கிறேன் என்கிறார் என்றபடி.
அறப் பெரியவனுக்கு லக்ஷணம் அன்றோ சங்க சக்கரங்கள்.
—————
தவள ஒண்சங்கு சக்கரமென்றும் தாமரைத் தடங்கண் என்றும்
குவளை ஒண்மலர்க் கண்கள் நீர்மல்க நின்று நின்று குமுறுமே.–6-5-1-
தவளம் ஒண் சங்கு –
கரிய நிறமுடைய திருமேனிக்குப் பரபாகமான வெண்மையை யுடைத்தாய்,
“உண்பது சொல்லில் உலகளந்தான் வாயமுதம்” என்கிற அழகை யுடைத்தான சங்கு. சக்கரம் –
அங்ஙனம் ஒரு விசேடணம் இட்டுச் சொல்ல வேண்டாத அழகை யுடைய சக்கரம். என்றும் –
‘இவற்றைக் காண வேணும்’ என்னுதல்;
‘இவற்றோடே வர வேணும்’ என்னுதல் சொல்ல மாட்டுகின்றிலள் பலக் குறைவாலே.
திவ்வியாயுதங்களையும் கண்ணழகையும் காட்டியாயிற்று இவளைத் தோற்பித்தது.
—————–
சங்குவில் வாள்தண்டு சக்கரக் கையற்கு
செங்கனி வாய்ச்செய்ய தாமரைக் கண்ணற்கு
கொங்கலர் தண்ணந் துழாய் முடி யானுக்குஎன்
மங்கை இழந்தது மாமை நிறமே.–6-6-2-
சங்கம் வில் வாள் தண்டு சக்கரம் என்னும் ஐந்து ஆயுதங்களையும் தரித்த திருக் கரங்களை யுடையவனுக்கு
பஞ்சாயுதங்களையும் ஒருசேர அருளிச் செய்திருத்தல் காண்க.
திருவுலகு அளந்தருளின காலத்தில் திவ்விய ஆயுதங்கள் முதலியவைகளின் அழகிலே அகப்பட்டுத்
தன்னுடைய அழகிய நிறத்தை இழந்தாள்
ஸ்ரீபஞ்சாயுதங்களின் சேர்த்தி அழகிலே ஆயிற்று இவள் ஈடுபட்டது.
பரம ஸ்வாமி திருமால் இரும் சோலை மூலவர் பஞ்சாயுதம் உடன் சேவை உண்டே –
இவளுடைய ஓர் ஆபரணம் வாங்குகைக்கு எத்தனை ஆபரணம் பூண்டு காட்டினான்?
கைக்கு மேல் ஐந்துங் காட்டிக்காணும் இவளுடைய ஆபரணம் வாங்கிற்று.
புரடு கீறி ஆடுகிற அளவிலே -தாயக் கட்டம் -அஞ்சுக்கு இலக்காக -ஒரு கை இருக்க -கை மேல் அஞ்சு போட்டு வெட்டுகிறேன் போலே –
ஆபரண கோடியிலும் ஆயுத கோடியிலும் இரு புடை மெய்க் காட்டின அன்றோ இவைதாம்.–உபய கோஷ்டி –
————
கறங்கிய சக்கரக் கையவ னுக்கு என்
பிறங்கிருங் கூந்தல் இழந்தது பீடே.–6-6-3-
பகைவர்களை அழிக்கவேண்டும் விரைவாலே எப்பொழுதும் சுழலாநின்றுள்ள திருவாழியைத் திருக்கையிலே யுடையவனுக்கு:
தான் ரக்ஷகனான அளவன்றியே, பரிகரமும் ரக்ஷணத்திலே முயற்சியோடு கூடி இருக்கிறபடி.
அவன் கைப்பிடித்தார் எல்லாரும் ரக்ஷணத்திலே விரைவுடையராயன்றோ இருப்பது.
ஸ்ரீ பாஞ்சஜன்ய ஆழ்வானும், “ஒரு வினை உண்டாகவற்றே, நாம் வாய்க்கரையிலே நின்று
ஓசையை விளைத்து வினை தீர்க்க” என்று பிரார்த்தியா நிற்கும்.
————–
கையமர் சக்கரத்து என் கனிவாய்ப்பெரு மானைக் கண்டு
மெய்யமர் காதல் சொல்லிக் கிளிகாள்! விரைந்தோடி வந்தே.–6-8-2-
எப்போதும் கை கழலா நேமியானாய் இருத்தலின் ‘கையமர் சக்கரம்’ என்கிறது.
கையும் திருவாழியுமான அழகினைக் காட்டுவது முறுவலைக் காட்டுவதாய் என்னைத் தனக்கே உரிமை ஆக்கினவன்.
திருவாழிக்கு முற்றூட்டு ஆயிற்றுத் திருக்கை; தமக்கு முற்றூட்டு திருப்பவளம்.
அவன் ஜீவனத்தை நித்யமாக்கினான், என் ஜீவனத்தைக் காதா சித்கமாக்கினான்.
அவனுக்கே கையடைப்பு ஆயிற்றே. கைமேலே இடுமே.
———————
கூரார் ஆழி வெண்சங் கேந்திக் கொடியேன்பால்
வாராய்! ஒருநாள் மண்ணும் விண்ணும் மகிழவே.–6-9-1-
ஸ்ரீ பாஞ்சஜன்யத்தில் வெண்மைபோன்று திருவாழியில் கூர்மையும் இவர்க்குக் கவர்ச்சியாயிருக்கிறபடி
பகைவர்களைத் துணிக்கத் துணிக்கச் சாணையில் ஏறிட்டாற்போலே கூர்மை மிக்கிருத்தலின் ‘கூர்ஆர் ஆழி’ என்கிறது.
அசாதாரண விக்கிரஹத்துக்கு லக்ஷணமோ தான் கையும் திருவாழியுமாயிருக்கை.
—————-
கூறாய் நீறாய் நிலனாகிக் கொடு வல்லசுரர் குலமெல்லாம்
சீறா எரியும் திருநேமி வலவா! தெய்வக் கோமானே!–6-10-2-
நீ கைகழலா நேமியானாய்இருக்கிறதற்கும் என் தீவினைகள் கிடக்கைக்கும் என்ன சேர்த்தி உண்டு?
தடை இல்லதா சக்தியையுடைய திவ்விய ஆயுதங்களானவை இவனுடைய பாபங்கள் எல்லாவற்றையும்
போக்கிக் காப்பாற்றக் கூடியனவாயிருக்கும்.
அவனாலே வருமவற்றையும் போக்கக் கூடியனவாயிருக்கும்.
அருளார் திருச்சக்கரம் அன்றோ-திருவிருத்தம், 33.-
பண்டே அவனைக் கை கண்டிருப்பவர்கள் அன்றோ. –
வரம் ததாதி வரத–அவன் அருள் மறுத்தபோதும் இங்குத்தை அருள்மாறாதே அன்றோ இருப்பது.
ஆகையாலே, அவன் திருவருளைப் பெற்றவர்கள் திருவாழியில் கூர்மையை அன்றோ
தங்களுக்குத் தஞ்சமாக நினைத்திருப்பது.
———————-
கன்னலே! அமுதே! கார்முகில் வண்ணனே!கடல்ஞாலம் காக்கின்ற
மின்னு நேமியினாய்!வினையேனுடை வேதியனே!–7-1-2-
மின்னு நேமியனாய் –‘இயற்றி-யத்னம்- உண்டு என்னா, சங்கற்பத்தால் நோக்குமவனோ?
ஆசிலே வைத்தகையும் நீயுமாயன்றோ நோக்குவது? -ஆசு -பிடி -ஆயுதம்
‘அருளார் திருச்சக்கரத்தால் அகல் விசும்பும் நிலனும் இருளார் வினை கெடச் செங்கோல்
நடாவுதிர்,’ திருவிருத்தம், 33.– என்னக் கடவதன்றோ?
உருவின வாள் உறையில் இடாதே அன்றோ நோக்குவது?
விளங்காநின்றுள்ள திருவாழி. -கிருபையால் மிக்கு இருக்கும் திரு ஆழி
————–
கங்குலும் பகலும் கண்துயில் அறியாள் கண்ண நீர் கைகளால் இறைக்கும்;
‘சங்கு சக்கரங்கள்’ என்று கை கூப்பும்; ‘தாமரைக் கண்’ என்றே தளரும்–7-2-1-
கண்ணநீரை மாற்றினால் கண்களாலே காண வந்து தோற்றும் படியை நினையா நின்றாள்.
சொல்லா நின்றாள் என்ன வில்லை –விலக்கின பின்பு சேவை சாதிப்பானே -அத்வேஷம் மாத்திரம் போதுமே –
‘தவள ஒண் சங்கு சக்கரம்’ திருவாய்மொழி, 6. 5:1.-என்று திவ்விய ஆயுதங்களோடு காண அன்றோ இவள் தான் ஆசைப்பட்டிருப்பது!
‘தேநைவ ரூபேண சதுர்ப் புஜேந’ என்பது, ஸ்ரீகீதை, 11.46.
‘கையினார்சுரி சங்கு அனல் ஆழியர் நீள்வரைபோல் மெய்யனார் –என்பது, அநுசந்தேயம். ( அமலனாதிபிரான்.7.)
உகவாத கம்ஸன் முதலாயினோர்களுக்கு அன்றோ இரு தோளனாக வேண்டுவது’
‘நான்கு தோள்களையுடைய அந்த உருவமாகவே ஆகக் கடவீர்’ என்றான் அன்றோ காண ஆசைப்பட்ட அருச்சுனன்?
‘கூரார் ஆழி வெண்சங்கு ஏந்தி வாராய். என்னக் கணிசித்து,திருவாய். 6. 9:1. கணிசித்து-விரும்பி.-
வலி இல்லாமையாலே தலைக்கட்ட மாட்டாதே, விடாயன் கையை மடுத்துத் தண்ணீரை வேண்டுமாறு போலே,
குறையும் அஞ்சலியாலே தலைக்கட்டா நின்றாள்.சங்கு சக்கரங்கள் ஏந்தி வாராய் முடிக்க முடியாமல் –
சங்கு சக்கரம் சொல்லி தாமரைக் கண் -திரு மேனி முழுவதும் திருக் கண்கள் அகப்படுத்த -அர்ச்சை அன்றோ —
———–
‘கடல்வண்ணா! கடியை காண்’ என்னும்;‘வட்டவாய் நேமி வலங்கையா!’ என்னும்–7-2-4-
‘சங்கு சக்கரங்கள்’ என்று சொல்லும் நிலையும் போயிற்று,
இப்போது கண்களுக்கு விஷயம் அன்றிக்கே இருக்கச் செய்தேயும், அவற்றினுடைய அமைப்பு, புத்தியிற்படிந்ததாய் இருக்கிறபடி.
பிடித்த இடம் எங்கும் வாயாக இருத்தலின், ‘வட்டவாய்’ என்கிறது.
இதனால், ‘விரோதியைப் போக்கப் பரிகரம் இன்றிக்கே இருக்கிறாய் அன்றே?’ என்கிறாள் என்றபடி.
————-
‘வெய்ய வாள் தண்டு சங்கு சக்கரம் வில் ஏந்தும் விண்ணோர் முதல்!’ என்னும்–7-2-6-
திவ்ய ஆயுதங்கள் பகைவர்களை அழிப்பதற்கு உடலாக இருக்குமாறு போலே
காதலிகளை அழிக்கைக்கும் உடலாக இருக்குமன்றோ உகப்பாரையும் உகவாதாரையும் ஒக்கத் தோற்பிக்குமவை?
முன்னே கை கண்டு வைக்கிறவை அன்றோ?
காணவே பகைவர்கள் மண்ணுண்ணும்படியான திவ்ய ஆயுதங்களைத் தரித்திருக்கிற நீ
என் விரோதிகளைப் போக்கி முகங்காட்டாது ஒழிவதே!
திவ்விய ஆயுதங்களினுடைய சேர்த்தியால் வந்த அழகினைக் காட்டி நடத்த, அதுவே ஜீவனம் ஆயிற்று அந்நாடு கிடப்பது.
இல்லையாகில், அங்கே வினை உண்டாகத் தரித்திருக்கிறான் அன்றோ?
———————–
வெள்ளைச் சுரிசங்கொடு ஆழி ஏந்தித் தாமரைக் கண்ணன் என் நெஞ்சினூடே
புள்ளைக் கடாகின்ற ஆற்றைக் காணீர்!–7-3-1-
‘தவள ஒண்சங்கு சக்கரம்’ -திருவாய். 6. 5:1.-என்றும்,
‘கூரார் ஆழி வெண்சங்கு’ திருவாய். 6. 9:1.-என்றும்,
‘சங்கு சக்கரங்கள் என்று கைகூப்பும்’ -7. 2:1.-என்றும் கையும் திருவாழியுமான அழகு கைவிடாதே இவரைத் தொடருகிறபடி.
முகில் வண்ணன் அன்றோ? அந்த நிறத்துக்குப் பரபாகமான வெளுப்பையும் சுரியையுமுடைத்தான ஸ்ரீபாஞ்சஜன்யத்தையும்,
அங்ஙனம் ஒரு விசேடணம் இட்டுச் சொல்ல வேண்டாதபடியான அழகையுடைத்தான திருவாழியையும் ஏந்தி,
தாமரைக் கண்ணன்–‘தாமரைக் கண் என்றே தளரும்’ என்றது. பின் நாட்டுகிறபடி.
திருமேனிக்குத் திவ்விய ஆயுதங்கள் பிரகாசகமாய் இருக்குமாறு போலே,
ஆத்தும குணங்களுக்குத் திருக்கண்கள் பிரகாசகமாய் இருக்கிறபடி. என்றது,
‘அகவாயில் தண்ணளி எல்லாம் கண்வழியே அன்றோ தோற்றுவது?’ என்றபடி.
பகைவார்களுக்குத் திவ்விய ஆயுதங்களோடு ஒக்கத் திருக்கண்களும் விரோதியாய்த் தோற்றுமாறு போலே அன்றோ,-
அழல விழித்தான் அச்சோ அச்சோ
அனுகூலர்க்குத் திருக்கண்களைப் போன்று திவ்விய ஆயுதங்களும் அழகுக்கு உடலாகத் தோற்றுகிறபடி?
திருக்கண்களோடே திவ்விய ஆயுதங்களையும் திவ்விய ஆயுதங்களோடே திருக்கண்களையும் சேர்த்து அனுபவிப்பர்கள்.
தாமரை சூரிய சந்திரன் பார்த்து -சேர்ந்தே அருளிச் செய்வார் -நாடு பிடிக்க பார்க்க ஆழ்வார்கள் தடை -என்றுமாம் –
ஆயுதங்களோடே திருக்கண்களைக் கூட்டுகிறது, தோற்பித்தபடிக்கு;
‘உனக்குத் தோற்றோம்’ என்னப் பண்ணுமன்றோ? கண்களோடு திவ்விய ஆயுதங்களைக் கூட்டுகிறது அழகுக்கு.
ஜிதந்தே புண்டரீகாஷா -செய்ய கண்ணா செஞ்சுடர் ஆழி-திருக்கண்களை சொல்லியும் ஆழ்வார்களை சொல்லுவதும் உண்டே
இவ்விடத்தே நிலாத்துக் குறிப் பகவர் வார்த்தையை அருளிச் செய்வர் சீயர். -ஸ்ரீ வைகுண்ட நாதனுக்கு இரண்டு தோள்களா நான்கு தோள்களா —
கைக்கு ஆழ்வார்கள் ஆபரணமாய் இருக்குமாறு போலே ஆயிற்று, முகத் திருக் கண்கள் ஆபரணமாய் இருக்கும்படியும்.
‘திருக்கண்டேன் பொன்மேனி கண்டேன் திகழும் அருக்கன் அணிநிறமும் கண்டேன்-செருக்கிளரும்
பொன் ஆழி கண்டேன் புரிசங்கம் கைக்கண்டேன், என் ஆழி வண்ணன்பால் இன்று’-என்று வடிவழகைப் போன்று
திவ்விய ஆயுதங்களும் ஆபரணமாய் அழகியனவாயன்றோ இருப்பன?
ஆழ்வார்கள் தாம் அவனைக் கை செய்திருக்கையாலே ஆபரணகோடியிலே இருப்பார்கள்.
கை செய்தல் –- அலங்கரித்தல்.-சகாயம் செய்தல் -யுத்தம் செய்தல்
—————-
முழங்கு சங்கக் கையன் மாயத்து ஆழ்ந்தேன் அன்னையர்காள்! என்னை என் முனிந்தே.–7-3-4-
வேத ஒலியானது ஸ்ரீபாஞ்சஜன்யத்தைக் கிட்டி எதிர் ஒலி எழா நிற்கும்.
————-
ஆழி அம் கையனை ஏத்த வல்லார் அவர் அடிமைத் திறத்து ஆழியாரே.–7-3-11-
கையும் திருவாழியுமான அழகிலே இவர் அகப்பட்ட படியைத் தெரிவித்தபடி.
அல்லாத அழகுகள் ஒருபடியும் இது ஒரு படியுமாய் இருக்கை; இது கை மேலே அனுபவித்துக் காணலாமே.
அடிமைக் கூட்டத்தில் திருவாழியின் தன்மையை யுடையவர் என்னுதல்;-திறம் -வர்க்கம் சமூகம் என்றபடி –
அடிமை இடையாட்டத்தில் ஒருவரால் மீட்க ஒண்ணாதபடி உட்புகுவர் என்னுதல்.திறம்-யத்னம் –ஊற்றம்-என்றபடி
————
ஆழி எழச் சங்கும் வில்லும் எழத் திசை
வாழி எழத் தண்டும் வாளும் எழ அண்டம்
மோழை எழ முடி பாதம் எழ அப்பன்
ஊழி எழ உலகங் கொண்ட வாறே.–7-4-1-
ஆழி எழ – ‘மூன்று உலகங்களையும் காற்கீழே இட்டுக்கொள்ள வேணும்’ என்னும் கறுவுதல் உள்ளது சர்வேஸ்வரனுக்கே அன்றோ?
அந்த எண்ணம் இன்றிக்கே இருக்கச் செய்தேயும் அவனுக்கு முன்பே பரிகரம் முற்பட்டபடி.
‘காட்டுக்குப் போம்’ என்று நியமித்தது பெருமாளையேயாயிருக்க. இளைய பெருமாள் முற்பட்டாற்போலே.
ஆழி எழ –-தோற்றத்திலே அரசு போராயிற்று; ஹேதி ராஜன் அன்றோ? திவ்விய ஆயுதங்களுக்கெல்லாம் பிரதானம் அன்றோ திருவாழி?
பரிகரம் நிற்க மஹாராஜர் இராவணன் மேலே பாய்ந்தாற்போலே;
ஆழி எழ –‘ஆயிரக் காதம் பறப்பதன் குட்டி ஐந்நூற்றுக் காதம் சிறகு அடிக் கொள்ளும்’ என்னுமாறு போலே முற்கோலி வளர்ந்தபடி.
சிறகடிக் கொள்ளுகையாவது, பின்பு தூரப் பரப்பதற்குத் தகுதியாம்படி இளமையிலே பயிலுதல்.
அச்சங்கொள்ளுதற்கு இடம் அல்லாத இடத்திலும் பயப்படக் கூடியவர்கள், அஞ்சத்தக்க இடத்தைக் கண்டால் வாளா இரார்களே அன்றோ?
பயசங்கை இல்லாத இடத்திலும் அஞ்சும்படி செய்கிறது விஷய வைலக்ஷண்யம் அன்றோ?
இவன் வளர்ந்தருளுகைக்குக் கணிசித்தபடியைக் கண்டு, ‘தனியாக ஒண்ணாத’ என்று அஞ்சித் திருவாழியாழ்வான் ஒரு கையிலே ஏறினார்.
சங்கும் வில்லும் எழ- தூசி ஏறினவர்கள் பொரப் புக்கவாறே நின்ற இளவணி கலங்கி மேலே நடக்குமாறு போலே,இளவணி-காலாள்.
மற்றை ஆழ்வார்களும் மற்றைக் கைகளிலே ஏறினார்கள்.
அன்றிக்கே, ‘இரை பெறாத இடத்தே இருந்து சீறுபாறு என்னக்கூடியவர்கள் இரையுள்ள இடத்தில்
ஒருவருக்கு ஒருவர் விட்டுக்கொடார்கள் அன்றோ?’ என்னுதல்;
இனத்திலே ஒருவன் வாழ்வதனைக் கண்டவாறே உறவினர்கள் கூட்டம் வந்து மேல் விழுமாறு போலே,
மற்றைத் திவ்விய ஆயுதங்களும் மேல் விழுந்தபடி என்னுதல்.
‘இடங்கை வலம்புரி நின்று ஆர்ப்ப-இரண்டாந். 71.
எரி கான்று அடங்கார் ஒடுங்குவித்தது ஆழி-
அவனைப்போல் ஆர்த்துக் கொள்ளுதற்குக் காலம் அற்று நெருப்பினை உமிழ்ந்துகொண்டு
நமுசி முதலானவர்களை வாய்வாய் என்றது திருவாழி.
விடம் காலும் தீவாய் அரவுகிடந்த இடத்தே கிடந்து பகைவர்கள் மேலே விஷமாகிய நெருப்பினை
உமிழுமத்தனை அன்றோ திருவனந்தாழ்வானாலாவது?
—————
சித்திரத் தேர் வலவா!திருச் சக்கரத் தாய்!அருளாய்–7-8-3-
திருச்சக்கரத்தாய் –பகலை இரவாக்கும் பரிகரத்தையுடையவனே!
————
ஆளுமாளார் ஆழியும் சங்கும் சுமப்பார் தாம்
வாளும் வில்லும் கொண்டு பின் செல்வார் மற்றில்லை–8-3-3-
ஆபரணமான திவ்ய ஆயுதங்கள் -அவனுடைய மிருதுத் தன்மையினாலே
மலை எடுத்தாப் போலே சுமையாகத் தோன்றுகிறது இவர்க்கு
பகைவர்களுக்கு ஆயுதங்களாய் -அனுபவிப்பார்க்கு ஆபரணமாய் இருக்கிறவை –
தாம் —தம்மைப் பார்த்துக் கொள்ள வேண்டாவோ
எப்போதும் கை கழலா நேமியான் அன்றோ –
அவனுக்கு நிரூபகங்களான இவை சுமையோ -என்ன-இவருக்கு அடையாளமாகவும் தோன்றும் –
இப்படி சுமப்பதாகவும் பண்ணும் -நீயே தான் இப்படி எல்லாம் பாட வைக்கிறாய்-
——–
இதுவோ பொருத்தம் மின்னாழிப் படையாய் ஏறு மிருஞ் சிறைப்புள்
அதுவே கொடியா வுயர்த்தானே–8-5-9-
மேகத்திலே மின்னினாப் போலே அடியார்கள் உடைய-விரோதிகளை அழித்தலையே இயல்பாக உடைய
திரு ஆழியைப் படையாக உடையவனே -என்றது-
அத் திரு ஆழியைக் கொண்டு என்னுடைய தடைகளின் மேலே செலுத்தினால் ஆகாதோ -என்றபடி –
————–
எங்கும் திகழும் எரியோடு செல்வது ஒப்ப செழும் கதிர் ஆழி முதல்
புகழும் பொரு படை ஏந்தி –8-9-3-
பரப்பு மாறிக் கொண்டு பிரகாசிக்கின்ற நெருப்போடு கூட-நடந்து சொல்லுமாறு போலே ஆயிற்று
ஆயுதங்களால் வந்த புகரும்-திருமேனியும் இருக்கிறபடி –
புகழும் பொரு படை -செழும் கதிர் ஆழி முதல்-ஏந்தி –போர் செய்கின்ற மிக்க ஒளியை உடைத்தான
திரு ஆழி முதலான அழகிய ஆயுதங்களை ஏந்திக் கொண்டு –
புகழும் படை -என்றது-ஞானம் உடைய திரு ஆழி முதலான ஆயுதங்களாலே-புகழப் பட்ட வெற்றி ஒலியை உடைய பெருமானே –என்கிறபடியே
ஹேதிபி சேதனாவத்பி உதீரித ஜெயஸ்வனம் – இரகுவம்சம் -10-
ஆழி எழ சங்கும் வில்லும் எழ போலே -அழகிய ஆயுதங்களால் புகழப் படுகின்ற எம்பெருமான் –
——————–
மையார் கருங்கண்ணி கமல மலர்மேல்
செய்யாள் திரு மார்வினில் சேர் திருமாலே
வெய்யார் சுடர் ஆழி சுரி சங்கம் ஏந்தும்
கையா உனைக் காணக் கருதும் என் கண்ணே–9-4-1-
இவள் கையில் உள்ள விளையாட்டுத் தாமரைப் பூ அவனுக்கு-இனிதாக இருக்குமா போலே ஆயிற்று
அவன் கையில் திவ்ய ஆயுதங்கள் இவளுக்கு இனியவை இருக்கிறபடி-பிராட்டியை கூறி திவ்ய ஆயுதங்களை அருளுவதால் –
ஸ்ரீ குணரத்ன கோசம் -47 ஸ்லோகம் -இது போலே
இவள் உகப்புக்காக அடியார்கள் உடைய பகைவர்களை அழியச் செய்கைக்கு காரணமாய்
காட்சிக்கு இனியதாய் இருக்கும் ஆயிற்று –
பகைவர்கள் மேல் மிக வெம்மையை உடைத்தாய்-புகரோடு கூடி இருக்கிற திரு ஆழி –
இருக்கும் தோற்றப் பொலிவே அமைந்து -வேறு ஒரு கார்யம் கொள்ள வேண்டாதே-
வைத்த கண் வாங்காதே கண்டு கொண்டு இருக்கும் படியான-ஸ்ரீ பாஞ்ச ஜன்யம் –
ஏந்தும் கையா –வெற்று ஆயுதங்களையே அன்று –வெறும் திருக் கரங்களையே அன்று –
இரண்டின் உடைய சேர்த்தியை யாயிற்று இவர் ஆசைப் படுகிறது-
கூர் ஆழி வெண் சங்கு ஏந்தி வாராய் -6-9-1- என்னுமவர் அன்றோ
——————
பணி நெஞ்சே நாளும் பரம பரம்பரனை
பிணி ஒன்றும் சாரா பிறவி கெடுத்து ஆளும்
மணி நின்ற சோதி மது சூதன் என் அம்மான்
அணி நின்ற செம்பொன் அடல் ஆழியானே–10-4-7-
அனுபவிப்பார்க்கு விரோதிகளையும் போக்கி-திருக் கைக்குத் தானே ஆபரணமாய்-
அனுபவிப்பார்க்கு விரும்பத் தக்கதான-வடிவை உடைய திரு ஆழியைக் கையிலே உடையவன் -என்றது –
அனுபவத்துக்கும் தானேயாய்-விரோதிகளை அழிப்பதற்கும்-தானே யான கருவியை உடையவன் -என்றபடி –
———-
ஆழியான் ஆழி யமரர்க்கும் அப்பாலான்
ஊழியான் ஊழி படைத்தான் நிரை மேய்த்தான்
பாழி யம் தோளால் வரை எடுத்தான் பாதங்கள்
வாழி என் நெஞ்சே மறவாது வாழ் கண்டாய்–10-4-8-
ஆழியான் –பரத்வ சின்னமான திரு ஆழியைக் கையிலே-உடையவன் –
ஆழி யமரர்க்கும் அப்பாலான் – அத் திரு வாழி ஆழ்வானைப் போன்று-பெருமிதத்தை உடைய நித்ய சூரிகளுடைய
ஸ்வரூபம் ஸ்திதி-முதலானவைகள் தன் அதீனமாய் இருக்குமவன் –
————–
அருள் பெறுவார் அடியார் தன் அடியனேற்கு ஆழியான்
அருள் தருவான் அமைகின்றான் அது நமது விதி வகையே
இருள் தரும் மா ஞாலத்துள் இனிப் பிறவி யான் வேண்டேன்
மருள் ஒழி நீ மட நெஞ்சே வாட்டாற்றான் அடி வணங்கே–10-6-1-
சர்வேஸ்வரன் நம் பக்கல் முழு நோக்காக நோக்கி மிக்க அருளிச் செய்வானாகா பாரியா நின்றான் –
திரு வாழியை ஒரு கண்ணாலே பார்ப்பது –
இவரை ஒரு கண்ணாலே பார்ப்பது -ஆகா நின்றான் –
விடல் இல் சக்கரத்து அண்ணலை மேவல் விடல் இல் -2-9-11–என்கிறபடியே-
கையில் திரு ஆழியை விடல் அன்றோ உம்மை விடுவது -என்னா நின்றான்-
அவர்களை இட்டுத் தன்னை நிரூபிக்க வேண்டும்படி-இருத்தலின் -ஆழியான் -என்கிறார் –
—————-
மெய்ந்நின்ற கமழ் துளவ விரை ஏறு திரு முடியன்
கைந்நின்ற சக்கரத்தன் கருதுமிடம் பொருது புனல்
மைந்நின்ற வரை போலும் திரு உருவ வாட்டாற்றாற்கு
எந்நன்றி செய்தேனோ என்நெஞ்சில் திகழ்வதுவே–10-6-8-
கருதுமிடம் பொருது -கைந்நின்ற சக்கரத்தன் –
குறிப்பினை அறிகின்றவன் ஆகையாலே-சர்வேஸ்வரன் திரு உள்ளத்தின் கருத்து அறிந்து
போரிலே புக்கு எதிரிகளை அழியச் செய்து வெற்றி கொண்டு –
————–
ஸ்ரீ கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதிகேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ அழகிய மணவாளப் பெருமாள் நாயனார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய வாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நஞ்சீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருக் குருகைப் பிரான் பிள்ளான் திருவடிகளே சரணம்
ஸ்ரீ மதுரகவி ஆழ்வார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-