Archive for December, 2019

ஸ்ரீ கீதா பாஷ்ய மங்கள ஸ்லோகம் -/ ஸ்ரீ கீதா யோக ஸாஸ்த்ர உபோத்காதம் / ஸ்ரீ தாத்பர்ய சந்திரிகை -/ஸ்ரீ வாதி கேசரி ஸ்வாமிகள் அருளிச் செய்த வெண்பா-

December 13, 2019

ஸ்ரீ கீதா பாஷ்ய மங்கள ஸ்லோகம் –

யத்பதாம் போருஹ த்யாநா வித்வஸ்த அசேஷ கல்மஷ
வஸ்துதாம் உபயாத அஹம் யாமுநேயம் நமாமி தம் –

எந்தத் திருவடித் தாமரைகளைப் பணிந்து த்யானம் செய்வதன் மூலம் -தன்னுடைய -என்று எம்பெருமானார் –
பாபங்கள் நீங்கப் பெற்றதோ -எதன் மூலம் இந்த உலகினில் நான் ஒரு பொருளாக மதிக்கப்பட்டு உள்ளேனோ
அந்தத் திருவடிகளைக் கொண்ட ஸ்ரீ யாமுநாச்சார்யாரை நான் வணங்குகிறேன் –

ஸ்ரீ கீதா பாஷ்யம் -தடங்கல் இல்லாமல் நிறைவு பெறவும் -உலகில் பரவவும் தமது ஆச்சார்யரை நமஸ்கரிக்கிறார்
ஸ்ரீ கீதார்த்த ஸங்க்ரஹம் அருளிச் செய்த ஸ்ரீ ஆளவந்தாரை ஸ்துதிக்கும் மங்கள ஸ்லோகம்

யத் -என்னும் பதம்
எந்த -என்று பிரசித்தமான -ஆச்சார்ய குண பூர்த்தி உள்ள மேன்மையைக் காட்டும்
பத -அம் போருஹ-
தாமரை மலர் போன்ற என்ற உதாஹரணம் -அந்த திருவடிகள் அனுபவிக்க வல்லவை
அந்த த்யானம் மகிழ்வோடு இணைந்து உள்ளதால் பக்தி என்றும் கூறப்படும்
த்யான
துரோணாச்சார்யாருக்கு ஏகலைவன் போலே தான் ஸ்ரீ ஆளவந்தாருக்கு என்றத்தைக் காட்டும்

த்யான வித்வஸ்த அசேஷ கல்மஷ
அழிக்கப்பட்ட அனைத்து பாபங்களையும் கொண்ட -என்பதால்
ஒரு முறை கடாக்ஷ லேசத்தாலே பலவிதமான பாபங்களும் அழிக்கப் பட்டன –
அதன் பின்னர் இடைவிடாமல் அந்த ஸ்ரீ ஆளவந்தாருடைய திருவடித் தாமரைகளையே எண்ணி இருப்பதால்
அவை வாசனையோடு முழுமையாக நீக்கப் பட்டன -என்றவாறு

வஸ்துதாம்
வஸ்துவாக இருத்தல் –
அஸ்தி ப்ரஹ்மேதி சேத் வேத சந்த மேநம் ததோ விது –தைத்ரியம் -2-6-1-ப்ரஹ்மத்தை அறிந்து கொண்டவன்
என்றால் அவனை இருக்கிறவனாக அறிகிறார்கள்
அஹம் வஸ்துதாம் உபயாத
நான் அடைந்துள்ளேனா -என்ற வியப்பால் அருளிச் செய்கிறார்
இப்படியாக தனது அநிஷ்டங்களும் அப்ராப்தங்களும் நீங்கப்பெற்று இஷ்டப் பிராப்தி அருளியதற்கு
மனம் வாக்கு காயம் -முக்கரணங்களாலும் ஏவப்பட்டு நமஸ்காரம் செய்கிறார்
இதைக் கேட்பவர்களுக்கும் அநேக மங்களங்களும் உண்டாகும்
இத்தால் ஆச்சார்ய வந்தனம் குரு பரம்பரயா த்யானம் பூர்வகமாக பக்தி செய்ய வேண்டும்
என்று உணர்த்தப்பட்டது

ச சாசார்ய வம்சோ ஜ்ஜேயோ பவதி ஆசார்யாண மஸாவஸாவித்யா வித்யா பகவத்தஸ் –
ரஹஸ்ய ஆம்நாய ப்ராஹ்மணம் -என்று இப்படியாக உள்ள ஆச்சார்யர்களின் பரம்பரையில்
இன்ன ஆச்சார்யர் இன்ன தன்மை உள்ளவர் என்று எம்பெருமான் முடிய உள்ள அனைவரையும் பற்றி
அறிய வேண்டும் என்று ஸ்ருதியிலிலும் கூறப்பட்டது –

——————————

அதன் பின்னர் தனது விருப்பமான பரதேவதையான எம்பெருமானின் ஸ்வரூபம் -அழகான திருமேனி -குணங்கள் –
ஐஸ்வர்யங்கள் ஆகியவற்றை எண்ணியபடி இருப்பதாலும் -அவற்றைக் கூறியபடி இருப்பதாலும் –
சற்றும் இடையில் அழிவற்ற மங்களத்தைச் செய்தபடி உள்ளார் –
ஸ்ரீ ஆளவந்தார் அருளிச் செய்த
ஸ்வ தர்ம ஜ்ஞ்ஞான வைராக்ய சாத்ய பக்த்யேக கோசர
நாராயண பரம் ப்ரஹ்ம கீதா சாஸ்திரே சமீரித– – ஸ்ரீ கீதார்த்த சங்க்ரஹம்-1-இந்த ஸ்லோகத்தை அடியொட்டி
தன்னால் வ்யாக்யானம் செய்யப்படுகின்ற ஸ்ரீ கீதா சாஸ்திரத்துக்கு உள்ள அனைத்து ஆழ் பொருளையும் –
அவற்றின் ஸ்வபாவங்களோடு காண்பிக்கிறார் –

இந்த ஸ்ரீ கீதா சாஸ்திரம் தகுந்த பிரமாணம் என்று உணர்த்துவதற்காக -ஸ்ரீ கீதையை அருளிச் செய்த
எம்பெருமானுக்கு உள்ள ஸ்வபாவிதமான சர்வஞ்ஞத்வம் -தயை -சகல ஆஸ்ரித சர்வ ரக்ஷண ஏக சிந்தை –
சங்கல்ப லவ லேசத்தாலே அனைத்தையும் செய்யும் திறல் -சர்வ சக்தித்வம் -ஆகிய பலவும் உள்ளமையைக் காட்டி
விஸ்வசநீயன்-இதுவே ஸ்வயம் பிரமாணம் என்று காட்டி அருளுகிறார்
சதுர்வித புருஷார்த்தங்கள் -அவற்றை அடையும் உபாயம் -பரம புருஷார்த்தமான பகவல் லாபார்த்தியின் மஹிமை –
பர ப்ரஹ்ம ஸ்வரூபம் இவற்றையும் காட்டி அருளுகிறார்
சங்கரர் போன்று இல்லாமல் இந்த ஸாஸ்த்ர உபதேசம் பொருந்தும் என்றும் காட்டி அருளுகிறார்

ஸ்ருதி வாக்கியங்கள் -பலவற்றையும் எடுத்துக் காட்டி –
இவனே த்ரிவித காரண வஸ்து –
வியாபக தோஷம் தட்டாதவன் –
காரண வஸ்துவை தியானிக்க வேண்டும்
ஸமஸ்த இதர விலக்ஷணன்
சர்வம் கல்விதம் ப்ரஹ்ம –
பஹுஸ்யாம்
போக்தா பாக்யம் ப்ரேரிதா
பேத அபேத கடக சுருதிகள் கொண்டும் சர்வ சாகா ப்ரத்யய நியாயம் கொண்டும் சாமான்ய விசேஷ நியாயம் கொண்டும் –
மயக்கங்களை வேருடன் அறுத்து யாதாம்ய அர்த்தங்களை ஸ்தாபிக்கிறார்
அனைத்துக்கும் உள்ளும் புறமும் இருந்து -நியமனம் தாரகம் சேஷி -ஸ்ருஷ்டியாதிகள் லீலா வியாபாரம்
தேரோட்டியாக தாழ நிற்பதும் அடியார்களுக்காக
அர்ஜுனனை வியாஜ்யமாகக் கொண்டு தன்னை அடையும் மார்க்கங்களைக் காட்டவே ஸ்ரீ கீதா யோக சாஸ்திரம்
அவனது ஸ்வரூபம் நீங்கலாக மற்ற அனைத்தும் நாரா சப்தார்த்தம் –
அனைத்துக்கும் ஆதாரமாயும் அந்தர்யாமியாயும் உள்ள ஸ்வரூபத்தைக் காட்டி அருளுகிறார் –

—————

ஸ்ரீ கீதா பாஷ்ய அவதாரிகை
ஸ்ரீ யபதி–நிகில ஹேய ப்ரத்ய நீக கல்யாணை கதாந்ர-ஸ்வ இதர ஸமஸ்த வஸ்து விலக்ஷண அனந்த ஞான ஆனந்த ஏக ஸ்வரூபம் –
ஸ்வபாவிக அனவதிக அதிசய ஞான பல ஐஸ்வர்ய வீர்ய சக்தி தேஜஸ் ப்ரப்ருத்ய அசங்க்யேய கல்யாண குண கண மஹோ ததி-
ஸ்வ அபிமத அநுரூப ஏக ரூப அசிந்த்ய திவ்ய அத்புத நித்ய நிரவத்ய நிரதிசய உஜ்வல்ய ஸுந்தர்ய
ஸுகுமார்ய லாவண்ய யவ்வனத்தி அனந்த குண நிதி -திவ்ய ரூப
ஸ்வ உசித விவித விசித்திர அனந்த ஆச்சர்ய நித்ய நிரவத்ய அபரிமித திவ்ய பூஷண
ஸ்வ அநு ரூப அசங்க்யேய அசிந்த்ய சக்தி நித்ய நிரவத்ய நிரதிசய கல்யாண திவ்ய திவ்யாயுத
ஸ்வாமி மத் அநு ரூப நித்ய நிரவத்ய ஸ்வரூப ரூப குண விபவ ஐஸ்வர்ய சீலாத்யா அனவதிக அதிசய அசங்க்யேய கல்யாண குண ஸ்ரீ வல்லப
ஸ்வ சங்கல்ப அநுவிதாயி ஸ்வரூப ஸ்திதி ப்ரவ்ருத்தி பேதச அசேஷதைகரதி ரூப
நித்ய நிரவத்ய நிரதிசய ஞான கிரியை ஐஸ்வர்யாத்
அனந்த குண கணா அபரிமித ஸூரிபிர் அனவரத அபிஷ்ருத சரண யுகல
வாங்மனச அபரிச்சேதய ஸ்வரூப ஸ்வபாவ
ஸ்வ உசித விகித விசித்திர அனந்த போக்ய போக உபகரண போக ஸ்தான சம்முத்த அனந்த ஆச்சர்ய அனந்த மஹா விபவ
அனந்த பரிமாண நித்ய நிரவத்ய அஸாக்ஷர பரம வ்யோம நிலய
விவித விசித்திர அனந்த்ய போக்ய போக்த்ரு வர்க்க பரி பூர்ண நிகில ஜகத் உதய விபவ லய லீல
பரம் ப்ரஹ்ம புருஷோத்தம பர நாராயண
ப்ரஹ்மாதி ஸ்தவாரந்த அகிலம் ஜகத் ஸ்ருஷ்ட்வா
ஸ்வரூபேண அவஸ்தித தக்ஷ ப்ரஹ்மாதி தேவ மனுஷ்யானாம் த்யான ஆராத்யானாம் கோசார
அபார காருண்ய ஸுசீல்ய வாத்சல்ய உதாரய மஹோ ததி ஸ்வ மே ரூபம் தத் தத் சஜாதீய ஸம்ஸ்கானம் ஸ்வ ஸ்வபாவம் அஜஹதேவ குர்வன்
தேஷூ தேஷூ லோகேஷ் வவதீர்ய அவதீர்ய தைஸ்தைராராதித தத் அதிஷ்டான ரூபம் தர்மார்த்த காம மோஷாக்க்யம் பலம் பிரயச்சன்
பூபார அவதாரனதேசேன அஸ்மதாதீநாம் அபி ஸமாச்ரயணித்வாய அவதிர்யோர்வ்யாம் சகல மனுஷ நயன விஜயதாம் கத
பராவர நிகில ஜன மநோ நயன ஹாரி திவ்ய சேஷ்டிதானி குர்வன் பூதநா சாக்கடை யமார்ஜுன அரிஷ்ட ப்ரிலம்ப தேனுக காலீய கேசீ
குவலாயாபீட சாணூர முஷ்டிக தோசல கம்சாதீன் நிஹத்ய
அனவதிக தயா ஸுஹார்த்த அநு ராக கர்ப்ப அவலோகந ஆலாபம்ருதை-விஸ்வமாப் யாயியின் நிரதிசய ஸுந்தர்ய ஸுசீல்யாதி குண கணா
விஷ்ட தாரேண அக்ரூர மாலாகாராதீந் பரம பாகவதான் பூதான் க்ருத்வா

—————

ஸ்ரீ யபதி
உபய லிங்க விசிஷ்டன் -அகில ஹேயபிரத்யநீகன் கல்யாணை ஏக குணாத்மகன் –
ஏஷ நாராயண ஸ்ரீமாந் ஷீரார்ணவ நிகேதன-நாக பர்யங்கம் உத்ஸ்ருஜ்ய ஹ்யாகாதோ
மதுராம் புரீம் –ஸ்ரீ ஹரி வம்சம் -ஸ்ரீ விஷ்ணு பர்வம் -54-50–
அர்தோ விஷ்ணுர் இயம் வாணீ –ஸ்ரீ விஷ்ணு புராணம் —அவன் வார்த்தை மூலமாக அறியப்படுபவன் –
அந்த வார்த்தையாக ஸ்ரீ மஹா லஷ்மி
நிகிலேத -சமஸ்தருக்கும் ஸமஸ்த ஹேயங்களை நீக்கும் சாமர்த்தியம்
நிரவதிக அதிசய அஸங்க்யேய ஞான பல ஐஸ்வர்யாதிகள் உடையவன்
ஸ்வ இதர ஸமஸ்த இதர வஸ்து விலக்ஷணன்
ஓத்தார் மிக்கார் இலையாய மா மாயன்

நித்யம் விபும் சர்வகதம் -முண்டகம்
விஸ்வமே வேதம் புருஷ –
அனைத்து இடங்களிலும் -அனைத்து காலத்திலும் -அனைத்துக்கும் அந்தர்யாமியாய் இருப்பதால்
த்ரிவித -தேச கால வஸ்து பரிச்சேத ரஹிதன் –
அனுகூல ஞானமே ஆனந்தம் -ஞானானந்த மயன்-
ஆனந்த ஞான மயன்-சொல்லாமல் ஞானத்தை முதலில் -சொன்னது
இத்தைத் தவிர வேறு ஒன்றையும் அறிய வேண்டியது இல்லை என்பதைக் காட்டவே –
இரண்டு பதங்களும் ஸ்வரூபத்தை விளக்க வந்தவை
ஸ்வாபாவிக -நிரதிசய ஞான பல ஐஸ்வர்யம் வீரம் சக்தி தேஜஸ் கொண்டவன் –

குணங்களும் திவ்ய மங்கள விக்ரஹமும் ஸ்வரூபத்துக்கு விசேஷணங்கள்
விக்ரகங்களைத் தரிப்பதும் ப்ரவர்த்திப்பதும் கல்யாண குணங்களைக் காட்டி அருளவே -என்பதால்
குணங்களை முதலில் அருளிச் செய்கிறார்
அவற்றிலும் ஞானாதி ஆறு குணங்களும் மற்றவற்றுக்கும் ஊற்றுவாய்
தவ அனந்த குணஸ் யாபி ஷட் ஏவ பிரதம குணா யைஸ்த்வயேவ ஜகத் குஷாவந்யே அப்யந்தர் நிவேசிதா–என்று
இவை ஆறும் முதன்மை -இவற்றால் அன்றோ திரு வயிற்றில் வைத்து ரக்ஷித்தாய்

வ்யூஹ மூர்த்திகளான சங்கர்ஷணன் ப்ரத்யும்னன் அநிருத்தன் -மூவருக்கும் இரண்டு இரண்டு பிரதானங்கள்
அனைத்து பொருள்களையும் அனைத்து விதமாக எப்போதும் பார்த்தபடி உள்ளான்-ஞானம்
பார்த்தபடி உள்ள அனைத்தையும் தாங்கியபடி உள்ளான் -பலம்
தாங்கியபடி உள்ள போதே அவற்றை நியமிக்கிறார் -ஐஸ்வர்யம்
தாங்கியும் நியமித்தும் இருந்தாலும் தனக்கு விகாரம் அற்று உள்ளான் -வீர்யம்
சேர இயலாதவற்றையும் எளிதாகச் சேர்த்துக் காட்டுகிறான் -அகடி கடநா சக்தி
இவற்றுக்கு யாரிடமும் எந்த உதவியும் எதிர்பாராமல் -தான் யாருக்கும் அடி பணியாமல் -அனைத்துக்கும் ஸ்வாமி -தேஜஸ்
முக்தருக்கு இவன் அருளால் இவை கிட்டும் இவனுக்கே ஸ்வாபாவிகம்

அநவதி கத்வம் –
மேற்பட்ட எல்லை இல்லாமல் –
பராஸ்ய சக்திர் விவிதை ஸ்ரூயதே ஸ்வாபாவிகீ ஞான பல க்ரியா ச -ஸ்வேதாஸ்வரம் –6-8-

அஸங்க்யேய -எண்ணிக்கை அற்ற
யதா ரத்நானி ஜலதேர அஸங்க்யேயநி புத்ரக -ததா குண ஹ்ய அநந்தஸ்ய அஸங்க்யேயோ
மஹாத்மந –ஸ்ரீ வாமன புராணம் -74-40-
கல்யாண -பதம்
அவனுக்கு குணங்கள் இல்லை என்கிற சுருதிகள் தாழ்ந்த குணங்கள் இல்லை என்பதையே காட்டும்
உத்சர்க்க அபவாத நியாயம் –
அனைத்து ஹோமங்களும் ஆஹவநீய அக்னியில் சேர்க்க வேண்டும் என்றும் அஸ்வமேத யாகத்தில்
பதே ஜுஹோதி -என்று மீமாம்சத்தில் பதிஹோமத்தை குதிரையின் காலடிச் சுவடில் செய்ய வேண்டும் –
நியாயம் இதே போலே

மேலே ரூப வர்ணனை
ஸ்வ அபிமத -அநு ரூப தனக்கு ஏற்ற -அவிகாராய -எங்கும் காணப்படாத -அத்புத -நித்ய -தோஷம் அற்ற –
தேஜோ ரூப -அழகிய ஸுகந்த்ய-மென்மையான-இனிய இளமை மிக்க -திவ்ய மங்கள விக்ரஹம்
காரண ஸ்ருதி -உபாசனை ஸ்ருதி -அஸ்திர பூஷண அத்யாய ஸ்ருதி வாக்கியங்களில் உள்ளவை போலே
அபிமத அநு ரூப ஏக ரூப
முரண்பாடுகள் அற்று -விரும்புமாயும் ஏற்கத்தக்கதாயும் -வ்யூஹம் விபவங்களிலும்
ஆதி அம் சோதி உருவை அங்கு வைத்து இங்குப் பிறந்தவன்
தாழ்ந்த குணங்கள் இல்லாமை -ஆனந்தம் அளிக்கும் -மோக்ஷ பிரதத்வம் —
முமுஷுக்களால் ஆஸ்ரயிக்கலாம் படி அன்றோ திருவவதார திவ்ய ரூபம் –
அசிந்த்ய
எண்ண இயலாது
அவயவங்களுடன் சேர்ந்தே அவதரித்தாலும் -அழியாதவனாக -நெஞ்சுக்கும் கண்ணுக்கும்
அளவிட்டு அறிய முடியாதவன் –
திவ்ய
விசித்திரம் -பரமபதம் போலே அப்ராக்ருதம் -பிரகிருதியின் பரிமாணம் இல்லையே
அத்புத
ஆச்சார்யமான -அப்பொழுதைக்கு அப்பொழுது ஆராவமுதன்
ஆலிலை கண்ணன் -விஸ்வரூப தர்சனம் –
நித்ய
அழிவற்ற –
காலத்துக்கு உட்படாத –
நித்யா லிங்கா ஸ்வபாவ சம்சித்திர் இந்திரிய ஆகார அங்க ப்ரத்யங்க வ்யஞ்ஜ நவதீ –ரஹஸ்ய ஆம் நாயம் -என்று
காலத்தினால் அளவு படாதது -ஆண் பெண் அடையாளம் அற்றது -இச்சா பரிக்ருஹீதம் –
நமது இந்திரியங்கள் போல் அங்க உப அங்கங்கள் கொண்டவன்
நித்ய சித்தே ததாகாரே தத் பரத்தவே ச பவ்ஷ்கர-யஸ் யாஸ்தி சத்தா ஹ்ருதயே தஸ்யாஸவ்
சந்நிதிம் வ்ரஜேத்-ஸ்ரீ பாஞ்ச ராத்ர ஸ்ரீ பவ்ஷ்கர சம்ஹிதை -என்று
நித்தியமாக அவரது ரூபத்தில் மேன்மையைக் குறித்து யார் நித்தியமாக உள்ளான் என்று எண்ணுகிறானோ
அவன் அருகில் உள்ள இருப்பை பகவான் அடைகிறான் –இவனும் அவனது சாமீப்யம் அடைகிறான்
நிரவத்ய
தோஷம் அற்ற -மூப்பு இத்யாதிகள் இல்லாமை

மேலே உபாஸ்ய குணங்களின் வர்ணனை
நிரதிசய-எல்லை அற்ற
ஸுவ்ந்தர்ய
ஸுவ்கந்த்ய
சர்வ கந்த சர்வ ரஸ
புஷ்பஹாஸ
ஸூ குமாரோ மஹா பல –ஆரண்ய -19-14-
லாவண்யம் -சமுதாய சோபை
விஸ்வ மாப்யாயயந் காந்த்யா பூர்ணேந்த்வயுத துல்யயா –சாத்விக சம்ஹிதை -2-70-பல பூர்ண சந்த்ர சமமான
தேஜஸ்ஸாலே உலகை நிறைவு பெறச் செய்தது –
பூயிஷ்டம் தேஜ ஏவாத்பிர் பஹுலா பிர்ம்ருதூக்ருதம் சஷுர் ஆனந்த ஜனநம் லாவண்யம் இதி கத்யதே –
அஹிர் புத்ன்ய சம்ஹிதை –52-ஆனந்தம் அளிக்கும் பிரகாசம் லாவண்யம்
யவ்வன
யுவா குமார -யுயஸ்ய குமாரி

மேலே திவ்ய ஆபரணங்களின் வர்ணனை
இவையும் எண்ணிக்கை அற்ற -அபிமத அநு ரூப -அத்புத -அழிவற்ற -அப்ராக்ருதம்
அதே போலே திவ்ய ஆயுதங்களும்
எண்ணிக்கை அற்ற -அபிமத அநு ரூப சக்தி பொருந்தி அழிக்க முடியாத
குறைபாடுகள் இல்லாத திவ்ய அப்ராக்ருத மங்களம் அழிக்க வல்லவையாய் இருப்பன
ஆயதாச்ச ஸூ வ்ருத்தாச்ச பாஹவா பரிகோபமா சர்வ பூஷண பூஷார்ஹா –கிஷ்கிந்தா -3-15-
நாநா வித -விவித -விசித்திர -கிரீட ஹாராதிகள்
எல்லை அற்ற ஆச்சர்யமான -எண்ணிக்கையிலும் -ஒவ் ஒன்றிலும் நாநா விதம் -அபரிமித அளவற்ற -அசிந்த்ய சக்தி

மேலே ஸ்ரீ மஹா லஷ்மீ வல்லபன் -ஸ்வ அபிமத அநு ரூப -நித்ய -ஸ்வரூப ரூப குண -விபவ ஐஸ்வர்ய சீலாதி
ஸ்வரூபஸ்ய நித்யத்வம்
ஸ்வரூபம் நிரவத்யம்
ஸ்வரூபம் அநு ரூபத்வம்
ஸ்வரூபம் நித்யத்வம்
அஸ்யா தேவ்யா யதா ரூபம் தஸ்யேயம் அஸி தேஷணா–ஸூந்தர -15-51-
விஷ்ணோர் தேஹ அநு ரூபாம் வை கரோத் யேஷாத் மநஸ் தனும்–ஸ்ரீ விஷ்ணு புராணம் 1-9-145-
விக்ரஹ குணா நாம் நித்யத்வம்
கநக நகத் யுதீ யுவ தஸாம் அபி முக்த தஸாம் –ஸ்ரீ குணரத்ன கோசம் -29-
தேவ திர்யக் மனுஷ்யேஷு புந் நாம பகவான் ஹரி ஸ்த்ரீ நாம் நீ லஷ்மீர் மைத்ரேய நாநாயோர்
வித்யதே பரம் –ஸ்ரீ விஷ்ணு புராணம் -1-8-35-
அஸ்யே ஸாநா ஜகதோ விஷ்ணு பத்னீ -யஜுர்வேதம்
ஈஸ்வரீம் சர்வ பூதானாம் -ஸ்ரீ ஸூக்தம்
துல்ய சீல வாயோ வ்ருத்தாம் -ஸூந்தர -13-5-
உபய அதிஷ்டானம் ஸைகம் சேஷித்வணம்-இருவரும் சேர்ந்தே மிதுன சேஷி
வ்யாபகாவதி சம்ச்லேஷா தேக தத்துவ மிவோதிதவ் -இருவரும் சேர்ந்தே வியாபித்து
ஸ்ரீ வல்லபன்

மேலே திவ்ய நித்ய ஸூரிகளுடைய சேர்த்தி
தனது சங்கல்பத்துக்கு அநு ரூப ஸ்வரூபம் சதி ப்ரவ்ருத்தி -கைங்கர்ய ஸ்ரீ -எண்ணற்றவர்கள்
சரா நாநா விதாச்சாபி தநு ராயத விக்ரஹம் அந்வ கச்சந்த காகுத்ஸ்தம் சர்வே புருஷ விக்ரஹ –உத்தர -109-7-
ஜகத் வியாபார வர்ஜம் ப்ரகரணாத சந்நி ஹிதத் வாச்சா –ஸ்ரீ ப்ரஹ்ம ஸூத்ரம் -4-4-7-
சதா பஸ்யந்தி ஸூரயா தத் விப்ராசோ விபன்யவோ ஜாக்ருவாம்ச சமிந்ததே –ஸ்ரீ புருஷ ஸூக்தம்
அநவரத அபிஷ்டுத சரண யுகளம்–எப்போதும் வணங்கப்பட்ட திருவடிகள்

அவனது ஸ்வரூபமும் ஸ்வ பாவமும் வாக்காலும் மனசாலும் கூற இயலாதபடியே இருக்கும் –
யஸ்யாமதம் தஸ்ய மதம் மதம் யஸ்ய ந வேத ச அவ்விஞ்ஞாதம் விஞானதாம் அவிஞாநதாம் –கேந உபநிஷத் -2-3-
ஸோ அங்க வேத யதி வா ந வேத
யதோ வாசோ நிவர்த்தந்தே அப்யாஸ மனசா ஸஹ–என்றும் சொல்லி
தத் விஜிஜ்ஞாஸஸ்வ –தைத்ரியம் -அறிவை ஆசை கொள்வாயாக
மனசா து விசுத்தேன–மநு ஸ்ம்ருதி தூய மனசாலே அறியலாம்
ப்ரஹ்ம வித் –
ஆனந்தம் ப்ரஹ்மணோ வித்வான்
இத்யாதி வாக்யங்களுக்குள் விரோதம் இல்லை
காட்டவே கண்டு -போலே

மேலே ஸ்ரீ வைகுண்ட வர்ணனை
தனக்கு ஏற்றதும் -அத்புதம் -எண்ணற்ற போகப்பொருள்கள் -போக உபகரணங்கள் -போக ஸ்தானம் –
ஐஸ்வர்யங்கள் -நிரதிசய ஆனந்தமயம் -தோஷம் அற்ற -மங்கள ரூபம்
ஸ்வ உசித–யாதி -அநந்த -ஆச்சர்ய -விபவ -அநந்த பரிணாம -நித்ய -நிரவத்ய –
சுத்த சத்வ மயம் -பரம் -தத் அக்ஷரம்

மேலே லீலா விபூதி வர்ணனை
யதோ வா இமாநி பூதாநி –தைத்ரியம்
ஜந்மாத் யஸ்ய யாத –ஸ்ரீ ப்ரஹ்ம ஸூத்ரம்-1-1-2-
விவித விசித்திர -அநந்த -போக்ய-இமாநி -இந்த என்று கையாலே காட்டும்படி –
யாராலும் செய்ய இயலாத –
மேக உதய சாகர சந்நி வ்ருத்திர் இந்தோ பாக ஸ்புரிதாநி வாயோ வித்யுத் பாங்கோ கத முஷ்னாரஸ்மே
இங்கு நிகில -என்று நான்முகாதிகளும் ஸ்ருஷ்யர்களே என்று காட்டி அருளுகிறார்
உதய -பாதத்தால் தானே நேரடியாகவும் இவனைக் கொண்டும் ஸ்ருஷ்ட்டி
விபவ -பதம் -தனது அவதாரம் -அந்தர்யாமியாய் செய்யும் செயல்கள்
லய நித்ய நைம்மித்திகாதிகள்
த்ரிவித காரணமும் இவனே
பஹு ஸ்யாம் ப்ரஜாயேய –சாந்தோக்யம்
ஸூஷ்ம சித் அசித் விசிஷ்ட ப்ரஹ்மமே உபாதானம்
தனக்கு விகாரம் இல்லாமல் -இதனாலே லீலா -சப்த பிரயோகம்

இப்படிப்பட்ட ஸ்ரீ மந் நாராயணன் பர ப்ரஹ்மம் புருஷோத்தமன்
சத் -ப்ரஹ்ம -ஆத்மா -பொது சொற்களும் இவனையே சொல்லும்
நாராயண பரம் ப்ரஹ்ம -தைத்ரியம் -ஒட்டியே —
நாராயண பரம் ப்ரஹ்ம கீதா சாஸ்திரே சமீரித– -1-ஸ்ரீ கீதார்த்த ஸங்க்ரஹம் ஸ்லோகம்
அர்ஜுந உவாச
பரம் ப்ரஹ்ம பரம் தாம பவித்ரம் பரமம் பவாந்.–
புருஷம் சாஸ்வதம் திவ்யமாதி தேவமஜம் விபும் -ஸ்ரீ கீதை —৷৷10.12৷৷
யஸ்மாத் க்ஷரமதீதோஹம் அக்ஷராதபி சோத்தம–
அதோஸ்மி லோகே வேதே ச ப்ரதித புருஷோத்தம–ஸ்ரீ கீதை —৷৷15.18৷৷
ஏஷ நாராயண ஸ்ரீ மாந் -ஸ்ரீ ஹரி வம்சம்

ப்ரஹ்மாதி ஸ்தாவராந்தம் அகிலம் ஜகத் ஸ்ருஷ்ட்டி
ஏகோ ஹ வை நாராயண ஆஸீத் ப்ரஹ்ம ந ந ஈச–மஹா உபநிஷத் -1-1-1-
தத்ர ப்ரஹ்மா சதுர்முக்கோ
யோ ப்ராஹ்மாணம் விததாதி பூர்வம் யோ வை வேதாம்ச் ச ப்ரஹினோதி தஸ்மை –ஸ்வேதாஸ்வர -6-18-

ப்ரஹ்மாதி தேவர்களும் மனிதர்களும் சாஸ்திரத்தில் காட்டியபடி உபாஸனாதிகளைப் பண்ணி தன்னை அடையாமல் இருக்க
தானே அவதரித்து -வாத்சல்யம் -ஸுசீல்யம் -ஸுலப்யம் -தாயாதி குணங்களைக் காட்டி –
அவர்களைத் தன்னை ஆராதிக்கப் பண்ணி அறம் பொருள் இன்பம் வீடு போன்ற புருஷார்த்தங்களை விரும்பிய படியே அளிக்கிறான்
ஸ்வேநேத்யாதிநா அகோசர -ஸ்வரூபத்துடன் கிருபை அடியாக அவதரித்ததும் இழந்தே போகிறார்கள்
யைர் லக்ஷணை ரூபேதோ ஹி ஹரி ரவ்யுக்த ரூபத்த்ருத் யைர் லக்ஷணைர பேதோ ஹி வ்யக்த ரூப தசா யுவான் -என்று
எம்பெருமானுக்கு புலப்படும் நிலை புலப்படாத நிலை இரண்டும் உண்டே –
தத் உபர்யபி பாதராயண சம்பவாத் -1-3-25-ப்ரஹ்ம உபாசனை தேவர்களுக்கும் உண்டே

சமஸ்தா சக்தயச்சைதா ந்ரூப யத்ர ப்ரதிஷ்டிதா தத் விஸ்வ ரூப வைரூப்யம் ரூபம் அந்யத்தரேர்
மஹத் –ஸ்ரீ விஷ்ணு புராணம் -6-7-70-என்று தொடங்கி
ஸமஸ்த சக்தி ரூபாணி தத் கரோதி ஜனேஸ்வர தேவ திர்யக் மனுஷாக்யா சேஷ்டா வந்தி ஸ்வ லீலையா -6-7-71-
இத்தால் ஆதி அம் சோதி உருவுடனே இங்கு அவதரிக்கிறார் -இதையே ஸ்வமேவரூபம் -என்கிறார் இங்கும்
நைஷ கர்ப்பத்வ மாபேதே ந யோந்யா ம வஸத் பிரபு -சபா பர்வம் -61-32-
ந தஸ்ய பிராக்ருதா மூர்த்திர் மாம்சமே தோஸ்தி சம்பவா-வாயு புராணம் -34-40-
ந பூத சம்க சமஸ்தாநோ தேஹோ அஸ்ய பரமாத்மா

அஜோபிஸந் நவ்யயாத்மா பூதாநாம் ஈஸ்வரோபிஸந்.—
ப்ரக்ருதிம் ஸ்வாமதிஷ்டாய ஸம்பவாம் யாத்ம மாயயா—৷৷4.6৷৷

யதா யதா ஹி தர்மஸ்ய க்லாநிர் பவதி பாரத—
அப்யுத்தாநம தர்மஸ்ய ததாத்மாநம் ஸருஜாம் யஹம்—৷৷4.7৷৷

பரித்ராணாய ஸாதூநாம் விநாஸாய ச துஷ்க்ருதாம்.–
தர்ம ஸம்ஸ்தாபநார்தாய ஸம்பவாமி யுகே யுகே—৷৷4.8৷৷

ஜந்ம கர்ம ச மே திவ்யமேவம் யோ வேத்தி தத்த்வத–
த்யக்த்வா தேஹம் புநர் ஜந்ம நைதி மாமேதி ஸோர்ஜுந—৷৷4.9৷৷

இந்த கீதா ஸ்லோகார்த்தத்தை திரு உள்ளத்தில் கொண்டே
ஸ்வ ஸ்வ பாவம் அஜஹதே வேதி –தேஷு தேஷூ லோகேஷு அவதீர்ய அவதீர்ய தைஸ்த ஆராராதித–
அவதாரம் செய்து அவதாரம் செய்து ஆராதிக்கப்பட்டவன்
ச உ ஸ்ரேயான் பவதி ஜாயமான–அவதரிக்க அவதரிக்க மேலாக உள்ளான்
யஸ்த அவதார ரூபாணி சமர்ச்சந்தி தேவவ்கச அபஸ்யந்த பரம் ரூபம் –ஸ்ரீ விஷ்ணு புராணம் -1-19-80-
உயர்ந்த ஸ்வரூபத்தை பார்க்காமல் அவதார திருமேனியை தேவர்கள் வணங்குகிறார்கள்
தத் தத் இஷ்டா நிரூபம் -விரும்பியவற்றை அளிக்கிறான்
தஸ்மிந் ப்ரசன்னே கிம் இஹஸ்த்ய அலப்யம் ஸ்ரீ விஷ்ணு புராணம் -1-17-91-கடாக்ஷம் இருந்தால்
அடைய முடியாதது ஏதும் இல்லையே
தன்னை ஆஸ்ரயிக்கவும் பூ பாரம் குறைக்கவும் அவதாரம்
அஸ்மாதாதீநாம் அபி -நம் போல்வாருக்கும் ஆஸ்ரயிக்கலாமே
நிகில ஜன -அனைத்து உயிர்களுக்கும்
திவ்ய சேஷ்டித
உண்ணும் சோறு பார்க்கும் நீர் தின்னும் வெற்றிலை எல்லாம் கண்ணன் -தாரகம் போஷகம் போக்யம்
மத் ஸ்வரூப சேஷ்டித அவலோகந ஆலாபாதிதாநே ந தேஷாம் பரித்ராணாய தத் விபரீதா நாம் விநாசாய
ச ஷீணஸ்ய வைதிகஸ்ய தர்மஸ்ய மத் ஆராதன ரூபஸ்ய ஆராத்ய ஸ்வரூப பிரதர்ஸேன ஸ்தாபனாய
ச தேவ மனுஷ்யாதி ரூபேண சம்பவாமி யுகே யுகே -பரம பாகவதர்களுக்காகவே திருவவதாரம்

பூர்வ சரிதங்கள் அனைத்துக் இந்த ஸ்ரீ கீதா உபதேசத்துடன் இணைத்துக் காண்பித்து அருளுகிறார்
பாண்டு தனய யுத்த ப்ரோத்ஸாஹன வ்யாஜேந –
இங்கு வ்யாஜேந -என்றது –
அஸ்தான ஸ்நேக காருண்ய தர்ம அதர்ம தியாகுலம்
பார்த்தம் ப்ரபன்ன முத்திச்ய சாஸ்திரர் அவதரணம் க்ருதம்–ஸ்ரீ கீதார்த்த ஸங்க்ரஹம் -5-உத்திச்ய -பத ப்ரயோகத்தால்
ஸ்வ விஷய -வேதாந்த உதத மோக்ஷ சாதனயா -பரம புருஷார்த்த முக்கிய பலனுக்காகவே உபதேசம்
பக்தி யோகம் ஒன்றையே உபதேசம் -ஞான யோகமும் கர்ம யோகமும் அதுக்கு அங்கங்கள்
வைராக்கியமும் ஞான நிஷ்டை கர்ம நிஷ்டைக்குள் அடங்கும்
ச பகவான் புருஷோத்தம ஸர்வேச்வரேச்வர கிருஷ்ண ஜகத் உபக்ருதிம் அர்த்ய ஆஸ்ரித வாத்சல்ய விவஸ
ஜெகதாம் உபகராயா –ஸ்ரீ விஷ்ணு புராணம்
ஜகத் உபக்ருதிம் அர்த்யம் கோ விஜேதும் சமர்த்த
பார்த்தம் ரதி நாம் ஆத்மாநம் ச சாரதிம் இதி -சர்வலோக சாஷிகம் இதி
இதை அறியாமல் -புறக் கண்ணும் அகக்கண்ணும் இல்லாமல் த்ருதராஷ்ட்ரன் கேள்வி
த்வாம் சீல ரூப –ஸ்ரீ ஸ்தோத்ர ரத்னம் -15-
சுத்த பாவம் கதோ பக்த்யா சாஸ்த்ராத் வேத்மி ஜனார்த்தன -உத்யோக -68-5-
வ்யாஸ பகவானின் அனுக்ரஹத்தால் நேராக அனைத்தையும் சஞ்சயன் பார்த்து பதில் உரைக்கிறான்

——————-

ஸ்ரீ ஆளவந்தார் அருளிச் செய்த- ஸ்ரீ கீதார்த்த சங்க்ரஹம்

ஸ்வ தர்ம ஜ்ஞ்ஞான வைராக்ய சாத்ய பக்த்யேக கோசர
நாராயண பரம் ப்ரஹ்ம கீதா சாஸ்திரே சமீரித– -1-

ஜீவனுக்கு உரிய தர்ம-கர்ம – ஞானங்களால் -மற்றும் வேறு விஷயங்களில் பற்று இல்லாத நிலையாலும்
பக்தி யோகம் கை கூடும் –
இப்படி பக்தி யோகத்துக்கு மட்டும் இலக்காகும் பர ப்ரஹ்மம் ஸ்ரீ மன் நாராயணன்
ஸ்ரீ பகவத் கீதையில் நன்றாக அருளிச் செய்யப் பட்டுள்ளன –

———————————-

ஸ்ரீ கீதார்த்த சங்க்ரஹ ரக்ஷை -ஸ்ரீ தேசிகன் –

மாநத்வம் பகவன் மத்ஸ்ய மஹத பும்சஸ் ததா நிர்ணய
திஸ்ரஸ் சித்தய ஆத்ம சம்வித கிலாதீசாநத் தத்வாஸ்ரயா
கீதார்த்தஸ்ய ச சங்க்ரஹ ஸ்துதியுகம் ஸ்ரீ ஸ்ரீ சயோரித்ய மூன்
யத் க்ரந்தா நனுசந்ததே யதிபதி ஸ்தம் யாமுநேயம் நும —

ஸ்ரீ எம்பெருமான் சித்தாந்தம் ஆகிய பாஞ்ச ராத்ர சாஸ்திரத்துக்கு கீழே உள்ள பலவும் பிரமாணமாக உள்ளன –
அவை யாவன –ஆகம ப்ராமண்யம் -மஹா புருஷ நிர்ணயம் -ஆத்ம சித்தி -சம்வித் சித்தி -ஈஸ்வர சித்தி ஆகிய சித்தி த்ரயம்
கீதார்த்த ஸங்க்ரஹம் -சதுஸ் ஸ்லோஹீ -ஸ்தோத்ர ரத்னம் ஆகிய எட்டும்
இவை அனைத்தையும் யாதிபதியான எம்பெருமானார் எந்த ஆளவந்தாரது அஷ்ட கிரந்தங்கள் என்று
நித்ய அனுசந்தானம் செய்தாரோ அந்த யாமுனாச்சார்யரை ஸ்தோத்ரம் செய்கிறோம்

ஸ்ரீ மத் வேங்கட நாதேந யதா பாஷ்யம் விதீயதே
பகவத் யாமுநேய யுக்தி கீதா ஸங்க்ரஹ ரக்ஷணம்

ஸ்ரீ எம்பெருமானாரது ஸ்ரீ கீதா பாஷ்யத்தை ஒட்டி கீதார்த்த ஸங்க்ரஹத்துக்கு
ஸ்ரீ மத் வேங்கட நாதரால் ரக்ஷை செய்யப்படுகிறது

————-

தத்வம் ஜிஜிஞ்ஞாசமாநாநாம் ஹேதுபிஸ் சர்வதோமுகை -தத்வமேகோ மஹா யோகீ ஹரீர்
நாராயண பர –சாந்தி பர்வம் -347–83-
உண்மையான வஸ்து என்பதை அறிய வேண்டும் என்னும் ஆசை உள்ளவர்களுக்கு -அனைத்து இடங்களிலும்
நீக்கமற வ்யாபித்துள்ள காரணங்களால் -அனைத்து கல்யாண குணங்களும் நிறைந்த உயர்வான ஸ்ரீ ஹரியான
ஸ்ரீ மந் நாராயணன் ஒருவனே உண்மையான வஸ்து ஆவான்

ஆலோட்ய சர்வ சாஸ்த்ராணி விசார்ய ச புன புன இத மேகம் ஸூ நிஷ் பன்னம் த்யேயோ
நாராயணஸ் சதா –நரசிம்ஹ புராணம் -18–34-
அனைத்து சாஸ்திரங்களையும் ஒன்றாகச் சேர்த்துப் பார்த்து மீண்டும் மீண்டும் ஆராய்ந்தால் நாராயணன் ஒருவனே
எப்போதும் த்யானிக்கப் பட வேண்டியன் என்பது நிச்சயம் ஆகிறது –
இப்படியாக உள்ள பல பிரமாணங்கள் மூலமாக மஹரிஷிகள் வேதாந்த சாஸ்திரங்கள் அனைத்துக்கும்
சாரமாக உள்ள தத்வ ஹிதங்களை முடிவு செய்தனர்
அனைத்து உபநிஷத்துக்கள் சாரமாக ஸ்ரீ மத் பகவத் கீதை உள்ளது –
இதில் தத்வம் ஹிதம் ஆகிய இரண்டுமே கூறப்படுகிறது என்பதை ஸ்ரீ ஆளவந்தார்
ஸ்ரீ கீதார்த்த ஸங்க்ரஹத்தில் நிரூபிக்கப் பட உள்ளார்
இந்த இரண்டிலும் தத்துவமே முக்கியம் என்பதை சாரீரக சாஸ்திரம் முதல் ஸூத்ரம் உரைப்பதால்
ஸ்ரீ ஆளவந்தாரும் முதல் ஸ்லோகத்திலே தத்துவமே முக்கியம் என்கிறார்

ஸ்வ தர்மங்கள் -சாஸ்திரம் சொல்லிய வர்ணாஸ்ரம தர்மம் –
ஸ்வே ஸ்வே கர்மண்ய பிரத சாம் சித்திம் லபதே நர -18-45-என்று தங்கள் தங்கள் கர்மங்களில்
ஈடுபாடு உடையவர்கள் பக்தி சித்தியை அடைகிறார்கள் –

ஞானம் -சேஷத்வ ஞானம் என்றபடி -சேஷத்வமே ஸ்வபாவம் என்று அறிவதே ஞானம்

வைராக்யம்-இதர விஷயங்களில் பற்று அற்ற தன்மை
பரமாத்மநி யோ ரக்தோ விரக்தோ அபரமாத்மநி இதை முமுஷோ–நாரத பரிவ்ராஜக உபநிஷத் –என்று
மோக்ஷத்தில் ஆசை கொண்டவனின் ஸ்வ பாவம் பரமாத்மாவிடம் ஆசையும் இதர விஷய ஆசையின்மையும் உள்ளவனே முமுஷு
த்ருஷ்டா அநுச்ரவிக விஷய வித்ருஷ்ணஸ்ய வசீகார சம்ஞ்ஞா வைராக்யம் – பாதாஞ்சலயோக சாஸ்திரம் -1-15–என்று
கண்களால் பார்க்கப்படும் விஷயங்கள் -வேதங்களால் கேட்கப்படும் இவ்வுலக பயன்கள் ஆகியவற்றில் ஆசை இல்லாதவனுக்கு
வசீகரம் என்பது வைராக்யம் என்றே பொருள் அளிப்பதாக உள்ளது –
காரணம் வைராக்யம் இருந்தால் தான் மோக்ஷம் கை கூடும் -இது இல்லை என்றால் மோக்ஷம் கிட்டாது என்பதை உணர்த்தவே –
தோஷங்களின் அடிப்படையான ஆசையை விலக்கினால்-
ஆசையைப் பற்றியபடி உண்டாகும் கோபம் போன்றவற்றையும் வைராக்யம் நீக்கி விடுமே

இவற்றில் வர்ணாஸ்ரம தர்மமும் ஞானமும் முறையே
கர்ம யோகமாகவும் ஞான யோகமாகவும் இருந்தபடி ஆத்ம சாஷாத்காரத்தை உண்டாக்கும்
அதன் மூலமாக பக்தி யோகத்துக்கு சாதனங்களாக உள்ளன
இந்தக் கருத்தையே ஸ்ரீ ஆளவந்தார் ஆத்ம சித்தியில் –
உபய பரிகர்மித ஸ்வாந்தஸ்ய ஐகாந்திக ஆத்யந்திக பக்தி யோக லப்ய-என்று அருளிச் செய்தார்
கர்ம யோகம் ஞான யோகம் இரண்டாலும் தூய்மை பெற்ற மனம் உடையவனும்
ஒரே நிச்சயம் கொண்டதாக மரண காலம் வரையில் செய்யக் கூடியதான பக்தி யோகம் உண்டாகும்

சாஷாத்காரம் போலவும் -தைலதாராவத் இடைவிடாத நினைவும் -அன்றாடப் பழக்கங்களால்
சத்வ குணம் ஓங்கி வளருவதால் பக்தி யோகமும் வளரும்
ரஜஸ் தமஸ் இரண்டும் இதற்கு பிரதிபந்தங்களாகும் -இவற்றுக்குக் காரணம் வினைகள் –
இவற்றை நீக்கி சத்வ குணத்தை ஒங்கச்செய்து பக்தி யோகத்துக்கு ஸ்வ தர்மமும் ஞானமும் உதவுகின்றன
இதனால் ஆத்மாவின் உண்மையான ஸ்வரூபத்தைப் பற்றிய ஞானம் மூலமாக
பலன்களை எண்ணிக் கர்மங்களைச் செய்வதைக் கை விட்டு
பகவத் கைங்கர்ய -ஆராதனை ரூபமாகவே நித்ய நைமித்திக கர்மங்களைச் செய்வதால் பக்தி யோகம் வளரும்
ஸ்வ தர்மம் ஞானம் மூலம் பக்திக்கு பின்னரும் பலன் உண்டு
இப்படி இவை உதவுவதை எண்ணியே
இயாஜ சோ அபி ஸூ பஹூன் யஞ்ஞான் ஞான வ்யபாசர்ய ப்ரஹ்ம வித்யாம் அதிஷ்டாய தர்தம்
ம்ருத்யு மவித்யயா –ஸ்ரீ விஷ்ணு புராணம் -6-6-12–
என்று ஸ்ரீ பராசர மகரிஷி -கேசித்வஜன் என்ற அரசன் ஞானத்தை அடிப்படையாகக் கொண்டவனாய்
ப்ரஹ்ம வித்யை கை கூடப் பெற்று கர்மங்கள் மூலமாக பக்தி யோகத்துக்குத் தடையாக உள்ள
பாவங்களைக் கடப்பதற்காக பல யஜ்ஞங்களை இயற்றினான் என்கிறார் –

உயர்ந்தவர்களைக் கண்டால் உகப்பது -பக்தி ஆகிறது –
ஸ்நேஹ பூர்வம் அநு த்யானம் பக்திரித்ய பிகீயதே–லிங்க புராணம் உத்தர காண்டம் -9-19-என்று
விஸ்வாசத்துடன் இடைவிடாமல் செய்கின்ற தியானமே பக்தியாகிறது –
வேதனம் உபாசனம் த்யானம் -மூலம் பக்தி –என்று பொதுவாகவும் விசேஷமாகவும் உண்டே –
அறிவு ஞானமும் உபாசனம் பொருளிலே பிரயோகம் –
பிருஹத் உபநிஷத் -பகவான் யார் ஒருவனைத் தான் விரும்பும் குணங்களைக் கொண்டவனாக ஆக்குகிறானோ
அவனாலே மட்டுமே பரம புருஷனை அடைய முடியும்
எம்பெருமானால் தனக்குப் பிடித்தவனாக ஆக்கப்படும் தன்மை பக்தியால் மட்டுமே வரும் –
ஆகவே பக்தியே இந்த வேதனம் உபாசனம் த்யானம் -போன்ற அனைத்துப் பதங்களாலும் கூறப்படுகிறது –
எனவே ஸ்ருதியும் ஞானம் தவிர வேறே உபாயம் இல்லை என்றும்

பக்த்யா த்வநந்யயா ஸக்ய மஹமேவஂவிதோர்ஜுந.–
ஜ்ஞாதும் த்ருஷ்டும் ச தத்த்வேந ப்ரவேஷ்டும் ச பரந்தப—৷৷11.54৷৷

எதிரிகளைத் தவிக்கச் செய்யும் அர்ஜுனா நீ என்னை எப்படிக் கண்டு இருக்கிறாயோ அவ்வண்ணம் உள்ளபடி
நான் வேதங்களைக் கொண்டும் காண முடியாதவன் – தவத்தைக் கொண்டும் காண முடியாதவன் –
தானத்தைக் கொண்டும் காண முடியாதவன் – யாகத்தைக் கொண்டும் காண முடியாதவன் –
நான் ஸ்வயம் பிரயோஜன பக்தியாலேயே இவ்வண்ணமாக உள்ளபடி சாஸ்த்ரங்களால்
அறிவதற்கும் காண்பதற்கும் அடைவதற்கும் கூடியவன்
வேதத்தாலோ தபஸாலோ –யாகங்களாலும் முடியாதே -பக்தி ஒன்றை தவிர -அறிவதற்கும் காண்பதற்கும் அடைவதற்கும் –
பக்தி இல்லாத வேதம் தபஸ் யாகம் தானம் மூலம் அடைய முடியாதே
பக்தி ஒன்றாலே முடியும் -எதிரிகளை தப்பிக்க செய்பவன் -பரந்தப –
அறிய பார்க்க அடைய -உண்மையாக -இந்த உருவத்தை பார்க்க பக்தி ஒன்றே –
பர பக்தி பர ஞானம் பரம பக்தி ஞான தரிசன பிராப்தி அவஸ்தைகள் –

எனவே சுருதி ஸ்ம்ருதி வாக்யங்களுக்குள் எந்த வித முரண்பாடும் இல்லை-
இதையே பக்தியேக கோசார -என்று பக்திக்கு மட்டுமே பலனாக உள்ளவன் என்கிறார் –ஸ்ரீ ஆளவந்தார் இந்த ஸ்லோகத்தில்
பக்திக்கு மட்டுமே அவன் பலனாக உள்ளான் -இத்தால் கர்மமும் இணைந்தே மோக்ஷத்துக்கு காரணம் என்ற வாதமும்
ஞானான் மோக்ஷம் என்ற வாதமும் நிரசிக்கப்படுகிறது
இங்கு -கோசரன் -என்றது -பலனாக அடையும்படியாக அவன் உள்ளான் என்றபடி –
பக்தி ஏக லப்ய புருஷே புராணே–ஸ்ரீ கருட புராணம் -219-34- என்று பக்தி ஒன்றால் மட்டுமே
அடையக்கூடியவனாக எப்போதும் உள்ள பரம புருஷன் உள்ளான்
ஆத்ம சித்தியிலும் பக்தி யோக லப்ய–பக்தி யோகத்தினால் மட்டுமே அடையாத தக்கவன் என்பதும் உண்டே
உபாயமாகவும் -உபேயமாகவும் -ஆஸ்ரயமாகவும்-அவன் ஒருவனே
ப்ரயோஜனாந்தம் கொண்டு விலகிப் போகாமல் இருக்கவே ஏக பத பிரயோகம்
ஏக -பக்திக்கு அவன் ஒருவனே விஷயம் –
பூமா வித்யை போன்றவை எல்லை அற்ற மேன்மையுடன் கூடிய உயர்ந்த பரம புருஷார்த்தம் அவனே என்று காட்டும் –
பரம புருஷார்த்த லக்ஷண மோக்ஷ சாதனதயா வேதாந்த உதிதம்
ஸ்வ விஷயம் ஞான கர்ம அநு க்ருஹீத பக்தி யோகம் அவதாரயாமாச -ஸ்ரீ கீதா பாஷ்யம்-என்று
உயர்ந்த புருஷார்த்தமாகிய மோக்ஷத்துக்கு சாதனம் என்று வேதாந்தங்களில் கூறப்பட்டதும்
தன்னையே பற்றியதும்
ஞானம் மற்றும் கர்மங்களால் ஏற்படுவதும் ஆகிய பக்தியைப் பற்றி ஸ்ரீ கிருஷ்ணன் உபதேசித்தான்
அன்றிக்கே
கோசார -என்று எல்லை அற்ற ஐஸ்வர்யம் கொண்டவன் -அதனால் நமது பக்திக்கு உடையவன் என்றுமாம் –

ஐகாந்திகையாக இருப்பதையே ஏக -சப்தம் –
ஐகாந்திகையாக இருத்தல் என்றால் -உயர்ந்த தத்வம் தாழ்ந்த தத்வம் வேறுபாடுகளை அறிந்த பின்னர்
எங்கு பக்தி செய்ய வேண்டுமோ அங்கு நிலை நிறுத்தி -மற்ற விஷயங்களைப் பற்றாமல் –
ஒரே விஷயத்தையே பற்றியபடி இருத்தலே –

ஆத்யந்திகை -புருஷார்த்தங்களிலே தாழ்ந்தவை உயர்ந்தவை ஆகியவை பற்றி அறிந்து கொண்டு —
அவனே புருஷார்த்தம் என்று இருக்கை-அவனை மட்டுமே அனுபவித்து அதற்கு
மேல் எல்லை இல்லை என்று ஈடுபாட்டுடன் இருத்தலே ஆகும்

ப்ரஹ்ம -போன்ற பொதுச் சொற்கள் -மஹா உபநிஷத் போன்றவற்றில் கூறப்பட்டதும் -மறுக்கப் படாததும் –
வேறே அர்த்தம் கொள்ள முடியாததுமான -நாராயண –என்பதன் விசேஷமான பதத்தின் பொருளையே குறிக்கும்
இதை உணர்த்தவே ஸ்ரீ ஆளவந்தார் முதல் ஸ்லோகத்தில் –
நாராயண பரம் ப்ரஹ்ம-என்று பொதுவாகவும் விசேஷமாகவும் அருளிச் செய்கிறார்
நாராயண அநுவாகத்தில் -நாராயண பர ப்ரஹ்ம -என்று நாராயண சப்தம் வேறுபாடு இல்லாமல் உள்ளது போலே தோன்றினாலும்
முன் பின் வாக்கியங்களில் வேறுபாடு தோன்ற உள்ளதாலும் –
மற்ற சாகைகளில் பிரித்தே கூறப்பட்டதாலும் இங்கும் விசேஷம் பொது என்று பிரித்தே கொள்ள வேண்டும் –
அனைத்து ப்ரஹ்ம வித்யைகளிலும் உபாஸிக்க வேண்டிய விசேஷமான தத்வம் முன்பே வேதங்களில் நிச்சயிக்கப் பட்டதால்
பரத்வம் பற்றி முழங்கும் நாராயண அநு வாகத்தில் கூறப்பட்ட ஸ்ரீமந் நாராயணனே
இந்த ஸ்ரீ கீதா சாஸ்திரத்திலும் பரக்கப் பேசப்படும் பொருளாகிறான் –
விஸ்வமே வேதம் புருஷ –தைத்ரியம் -11-2- அனைத்து வஸ்துக்களும் புருஷன் என்று கூறப்பட்டது போன்று

அர்ஜுந உவாச-
பஸ்யாமி தேவாம்ஸ் தவ தேவ தேஹே–ஸர்வாம்ஸ் ததா பூத விஸேஷ ஸங்காந்.–
ப்ரஹ்மாணமீஸம் கமலாஸ நஸ்தம்-ருஷீம்ஸ்ச ஸர்வாநுரகாம்ஸ்ச தீப்தாந்—৷৷11.15৷৷

அர்ஜுனன் கூறினான் -தேவனே உனது தேகத்தில் எல்லா தேவர்களையும் காண்கிறேன் –
அவ்வண்ணமே எல்லா பிராணி வகைகளின் கூட்டங்களையும் -பிரமனையும் –
உந்தித் தாமரையில் வீற்று இருக்கும் பிரமனுக்கு அடங்கி நிற்கும் சிவனையும் எல்லா ரிஷிகளையும்
ஒளி வீசும் பாம்புகளையும் காண்கிறேன் –
பார்த்தேன் -தேவ சப்தம் இங்கு ஆதேயம் –உலகு எல்லாம் தாங்கி -தேவர்கள் அத்தனை பேரையும் –
இந்த்ராதிகள் இங்கு -நான்முகன் மேலே -பூதங்கள் விசேஷ -கூட்டங்கள் அனைத்தையும் பார்த்தேன் –
பிராணி வகைகள் பல அன்றோ -கற்றுக் கறவை கணங்கள் பல அன்றோ பல பஹு வசனங்கள் இதில் -அதே போலே –
பூத விஸேஷ ஸங்காந்-நான் முகன் உந்தித் தாமரையில் ருத்ரன் ரிஷிகள் -பாம்புகள் -சேர்த்து சொல்லி -வாசி இல்லையே –
அவன் திருமேனியில் -இருப்பதால்

பரமாத்மாவுடன் சேர்த்துக் கூறப்பட்டதும் –நாரா -என்னும் சொல்லின் பொருளாக உள்ள
நான்முகன் -சிவன் -இந்திரன் -உள்ளிட்டவர்கள் -அவனால் நியமிக்கப்படுகிறவர்கள் -என்று
ப்ரஹ்மாணமீஸம் கமலாஸ நஸ்தம்-உள்ளது
எல்லாமே அவனது விபூதியே-என்றே நாராயண அநு வாகத்தில் நாராயண பர ப்ரஹ்ம -என்று உள்ளது -இதையே
ஸ்வாபாவிக அனவதிக அதிசய ஏசித்ருத்வம் நாராயண த்வயி ந ம்ருஷ்யதி வைதிக –க ப்ரஹ்ம சிவ
சதமக பரம கராடித்யேத அபி யஸ்ய மஹி மார்ணவ விப்ருஷஸ்தே -ஸ்தோத்ர ரத்னம் -11-என்று
இவர்களைக் காட்டிலும் மேலான-கர்மவசப்படாத -முக்தர்களும் இவனது பெருமை என்னும் கடலின் துளியாகவே இருக்க
இவனது ஸ்வ பாவிக மேன்மையான ஐஸ்வர்யத்தை எந்த வைதிகம் பொறுக்க மாட்டான் என்கிறார்

சம்வித் சித்தியில் -அத்விதீயம் —என்னும் ஸ்ருதிக்கு வியாக்யானமாக –
யதா சோழ நிரூப சம்ராட் த்விதீயோ அஸ்தி பூதலே இதை தத் துல்ய ந்ருபதி நிவாரண பரம் வச-
ந து தத் புத்ர தத் ப்ருத்ய கலத்ராதி நிஷேதகம் ததா ஸூர அஸூர நர ப்ரஹ்ம ப்ரஹ்மாண்ட சதகோடய
கிலேச கர்ம விபாகாத்யைர் அஸ்ப்ருஷ்டஸ்ய அகிலேசிதுஸ் –
ஜ்ஞாநாதி ஷாட் குண்ய நிதேர் அசிந்த்ய விப வஸ்ய தா விஷ்ணோர் விபூதி மஹிம சமுத்ரத்ரப் ச விப்ருஷ-உஎன்று
சோழ அரசன் தனக்கு சமமாக யாரும் இல்லாதவன் -ஸார்வ பவ்மனாக உள்ளான் -என்றது
அவனுக்கு நிகராக வேறு அரசர்கள் உள்ளனர் என்னும் கருத்தை நீக்குவதிலேயே முக்கிய நோக்கம் –
புத்ரர்கள் வேலையாட்கள் பத்னி போன்றவர்கள் அவனுக்கு இருப்பதை நீக்குவதில் இல்லையே
அதே போலே அத்விதீயம் என்றது
அகில ஹேயபிரத்ய நீக்க ஸமஸ்த கல்யாண குண நிதி -அப்ரமேய -வாக்குக்கும் மனசுக்கும் எட்டாத மேன்மை –
ப்ரஹ்மாண்டங்கள் கொண்ட லீலா விபூதியும் நித்ய விபத்தியும் கொண்டவன் -என்றதே ஆகும்
இதனாலே பரம் ப்ரஹ்ம புருஷோத்தமோ நாராயண –
மஹா புருஷ நிர்ணயம் என்னும் கிரந்தத்தில் ஸ்ரீ ஆளவந்தார் இத்தை அருளிச் செய்கிறார் –

இப்படி பரம் ப்ரஹ்ம இரண்டையும் ஸ்ரீ யபதி தொடங்கி
ஸ்ரீ கீதா பாஷ்யமும் -பரம் ப்ரஹ்ம புருஷோத்தமோ நாராயண – என்று விளக்கி
ஸ்ரீ தாத்பர்ய சந்திரிகையும் இத்தை விளக்கும் – –
பரம் என்னும் விசேஷணம் இல்லாமலேயே ப்ரஹ்மம் -என்றாலே பர ப்ரஹ்மத்தை –
அனைத்தையும் விட பெரியதாகவும் அனைத்தையும் தம்மை ஓக்க பெரியதாக ஆக்கும் திறமையையும் குறிக்கும் –
இருந்தாலும் அவனது லவ கேசம் உள்ளதால் ப்ரஹ்மம் என்று சிலரை உபசாரமாக சொல்வதும்
உண்டாததால் பரம் விசேஷணம் –
மும்மூர்த்திகளை விட வேறே ஓன்று உயர்ந்த வஸ்து உள்ளது போன்ற வாதங்களைத் தள்ளவே
இங்கு பரம் விசேஷணம் என்றுமாம்

ஸ்ரீ கீதை -தத்வம் ஹிதம் -உண்மை -நன்மை -இரண்டையும் உள்ளபடி உபதேசிப்பதால் ஸ்ரீ கீதா சாஸ்திரம்
உபநிஷத்துக்கு சமமாக இருப்பதாலே பெண்பாலில் வழங்கப்படுகிறது –
அத்ர உபநிஷதம் புண்யம்
கிருஷ்ண த்வைபாயனோ அப்ரவீத் -ஆதி பர்வம் -1-279–என்று மஹா பாரத்தில் தூய்மையான உபநிஷத்தாகிய
ஸ்ரீ கீதையை ஸ்ரீ வியாசர் கூறினார் –
கற்றவர்களும் –
யஸ்மின் ப்ரஸாதே ஸூ முகே கவயோ அபி யே தே சாஸ்த்ராண்யசா ஸூரிஹ தான் மஹிமா ஆஸ்ரயாணி
கிருஷ்னேந தேன யதிஹ ஸ்வயம் ஏவ கீதம் சாஸ்த்ரஸ்ய தஸ்ய சத்ருசம் கிமி வாஸ்தி சாஸ்திரம் —என்று
எந்த ஸ்ரீ கிருஷ்ணன் அனுக்ரஹம் காரணமாக பல கவிகளும் அவனுடைய மஹிமையைப் பற்றிய சாஸ்திரங்களை
இந்த உலகில் கூறி வருகிறார்களோ -அந்த ஸ்ரீ கிருஷ்ணனால் எந்த ஸ்ரீ கீதை இந்த உலகில் தானாகக் கூறப்பட்டதோ
அந்த ஸ்ரீ கீதா சாஸ்திரத்துக்கு நிகரான சாஸ்திரம் என்ன உள்ளது-என்றனர் –
பாரதே பகவத் கீதா தர்ம சாஸ்த்ரேஷூ மாநவம் வேதேஷூ பவ்ருக்ஷம் ஸூ க்தம் புராணேஷூ ச வைஷ்ணவம் —என்றும்
ஐந்தாம் வேதமான மஹா பாரதத்தில் கீதை உள்ள பகுதியே பிரதான்யம் -என்றும் உரைக்கப் பட்டது –

சமீரித-நன்றாக கூறப்பட்டது என்றபடி
மயர்வு அறுத்து -அஞ்ஞானம் சம்சயயம் விபர்யயம் -இல்லாமல் -அறியாமை சந்தேகம் விபரீத ஞானம் வராமல் தடுத்து
ப்ராப்யமும் ப்ராபகமாகவும் -அடையாக கூடியவன் -அடையச் செய்பவன் –
த்ரி வித காரணமாயும் –சகல இதர வஸ்துக்களும் ஒரே அத்புத அகில காரணன் –
ஸ்திதி சம்ஹாரம் ஸ்ருஷ்டி-அனைத்தையும் செய்து அருளி -தாரகன் -நியாமகன் -சேஷி -வேத ப்ரதிபாத்யன் –
அகில ஹேய ப்ரத்ய நீகன்-அமலன் -ஆதி பிரான் -விமலன் -நிமலன் நிர்மலன் -புருஷோத்தமன் –
சமன்வய ஸூத்ரத்தில் படியே -எல்லையற்ற மேன்மையைக் கொண்ட பரம புருஷார்த்தம் -சம் -சமீரித- என்றுமாம்
இப்படி இந்த முதல் ஸ்லோகம் மூலமாக ஸ்ரீ கீதா சாஸ்திரத்தின் ஆழ்ந்த பொருள் சுருக்கமாக உணர்த்தப் பட்டது –

———–

ஸ்ரீ வாதி கேசரி ஸ்வாமிகள் அருளிச் செய்த வெண்பா-

கண்ணா நீ பார்த்ததற்கு காத்தற்கு இனிதுரைத்த
திண்ணார் திறம் அருளும் சீர் கீதை எண்ணாரு
நன்பொருளை எங்கட்க்கு நாதா அருளுதலால்
புன் பொருளில் போகா புலன் -1-

மாதவனும் மா மாது மாறனும் வண் பூதூர் வாழ்
போத முனி யுந்தந்தம் பொன்னடி கண் –மீதருள
வுச்சி மேல் கொண்டே யுயர் கீதை மெய்ப்பொருளை
நச்சி மேல் கொண்டு யுரைப்பன் நான் –2-

நாதன் அருள் புரியு நல் கீதையின் படியை
வேதம் வகுத்த வியன் முனிவன் –பூ தலத்துப்
பாரதத்தே காட்டும் பதினெட்டு ஒத்தும் பகர்வேன்
சீர் தழைத்த வெண்பாத் தெரிந்து –3 —

வேதப் பொருளை விசயற்குத் தேர் மீது
போதப் புகன்ற புகழ் மாயன் -கீதைப்
பொருள் விரித்த பூதூர் மன் பொன்னருளால் வந்த
தெருள் விரிப்பனன் தமிழால் தேர்ந்து –4-

தேயத்தோர் உய்யத் திருமால் அருள் கீதை
நேயத்தோர் எண்ணெய் நிறைவித்துத் –தூய
தெருள் நூலதே பெரிய தீபத்தை நெஞ்சில்
இருள் போக ஏற்றுகேன் யான் –5-

சுத்தியார் நெஞ்சில் அத் தொல் கரும ஞானத்தால்
அத்தியாது ஒன்றை அறந்துறந்தோர்–பத்தியால்
நண்ணும் பரமணாம் நாரணனேநல் கீதைக்கு
எண்ணும் பொருளாம் இசைந்து –6—-முதல் சங்க்ரஹண ஸ்லோகார்த்தம் –

———————————-

ஜ்ஞான கர்மாத்மிகே நிஷ்டே யோக லஷ்யே ஸூ ஸம்ஸ்க்ருதே
ஆத்மாநுபூதி சித்த் யர்த்தே பூர்வ ஷட்கே ந சோதிதே — –2-

ஜீவாத்ம சாஷாத்காரம் -யோகத்தை அடையும் விதத்தையும் -ஆத்ம அனுபவத்தை அடையும் விதத்தையும்-
பகவத் விஷய ஞானம்-இதர விஷய வைராக்யம் -இவற்றால் அலங்கரிக்கப் பட்ட ஞான கர்ம யோகங்கள்
முதல் ஆறு அத்தியாயங்களில் அருளிச் செய்யப் பட்டன

அடுத்துள்ள மூன்று ஸ்லோகங்களால் மூன்று ஷட்கங்களின் அர்த்தங்களை சுருக்கமாக அருளிச் செய்கிறார் –
ஞான நிஷ்டை என்பது ஞான யோகம் -கர்ம நிஷ்டை என்பது கர்ம யோகம் –
அந்த அந்த அதிகாரிகள் தங்களால் செய்யத்தக்க யோகத்தில் நிலையாக நிற்பதே நிஷ்டையாகும்
அல்லது பலன் உண்டாகும் வரையில் உறுதியாகப் பிடிக்கப்பட்ட உபாய அனுஷ்டானம் என்பதாகும் –

இவற்றின் ஸ்வரூபங்களைக் குறித்து
கர்ம யோகஸ்த பஸ் தீர்த்த தான யஜ்ஞாதி சேவனம்
ஜ்ஞான யோகோ ஜிதஸ் வாந்தை பரி ஸூ த்தாத்மநி ஸ்திதி –23-
கர்ம யோகஸ் தபஸ் தீர்த்த –கர்ம யோகம் என்பது -தபமும் தீர்த்த யாத்திரையும் மேலே காட்டுகிறார் –
யோக லஷ்யே–கர்ம யோகம் செய்த பின்னர் -ஞான யோகம் கை கூடப்பெற்று அதன் மூலமாக
ஆத்ம சாஷாத்காரம் பெறுகிறான் என்பது இரண்டாவது அத்தியாயத்தில் கூறப்பட்ட வரிசையாகும்
ஞான யோகத்தின் போது பழக்கம் இன்மை காரணமாக இடையிலே உண்டாகும் விளையும் தவறுகளால்
அதனைக் கை விட்டு ஆத்ம சாஷாத்காரம் அடைவது வரை
ஆத்ம ஞானத்தை தன்னுள்ளே அடக்கிய கர்ம யோகத்தில் சிலர் இழியக் கூடும்
இத்தகைய கர்ம யோகம் மூலமாக உலகில் சிஷ்டர்கள் என்று பிரசித்தி பெற்றவர்கள் சிலர் உள்ளனர்
மேலும் சிலர் தங்களுடைய அனுஷ்டானத்தையே பிரமாணம் என்று கொண்டு
மற்றவர்களும் அதைப் பின்பற்றும்படியாக உள்ளார்கள்
தவறுகள் இல்லாமல் எளிதாகச் செய்யக் கூடிய உபாயத்தை மீது மட்டுமே ஆசை கொண்டவர்கள் உள்ளனர் –
இவர்கள் அனைவருக்குமே ஞான யோகம் இல்லாமல் கர்ம யோகத்தால் ஆத்ம சாஷாத்காரம்
கை கூடும் என்று மூன்றாம் அத்யாயம் தெரிவிக்கிறது

ஸ்லோகத்தில் உள்ள -யோக லஷ்யே-என்பதில் உள்ள யோகம் என்னும் பதம் –
ஆசனம் பிராணாயாமம்- உள்ளிட்ட அங்கங்களைக் கொண்டதும் – ஆத்ம அவலோகநம் என்ற பெயர் உள்ளதும் ஆகிய
ஆத்மாவை நேரில் காண்பதற்காக மனதை ஆத்மாவிடம் நிலையாக செலுத்தியபடி இருத்தல் –
இவ்விதம் நிலையாக நிற்கும் மனம் மூலம் ஆத்மாவைக் காணுதல் என்பதே யோகம் என்று இங்கு உள்ளது
அதாவது ஆத்ம சாஷாத்காரம் என்பதாகும் –
ஆகவே இடைவிடாமல் ஆத்மாவையே நினைத்தபடி உள்ள இந்த யோகத்திற்குக் காரணமான ஞான யோகம் வேறு –
யோகத்தின் பலனாகிய ஆத்ம சாஷாத்காரம் வேறு -பலனைக் காட்டிலும் யோகம் வேறு என்பதை உணர வேண்டும்

ஸூ ஸம்ஸ்க்ருதே––எம்பெருமானுக்கு ஆதி பணிந்தது -சேஷத்வ ஞானத்துடனும் -பகவத் ப்ரீதிக்காகவே செய்வதாக –
வேறே ப்ரயோஜனாந்தர புத்தி இல்லாமல் –தனக்கே யாக -என்றபடி
சேஷிக்கு அதிசயமும் ஆனந்தமும் பிரயோஜனம் என்ற உணர்வுடன்-செய்யும் நிலை –

ஸுகமாத்யந்திகம் யத்தத் புத்தி க்ராஹ்ய மதீந்த்ரியம்.–
வேத்தி யத்ர ந சைவாயம் ஸ்திதஸ் சலதி தத்த்வத—৷৷6.21৷৷
இந்திரியங்களுக்கு அப்பால் பட்டதாகவும் -ஆத்ம புத்தியினாலேயே அறியத் தக்கதாயும் ப்ரஸித்தமானதுமான
துன்பம் கலவாத ஆத்ம சாஷாத்கார ஸூகத்தை எந்த யோக அப்யாஸத்தில் அனுபவிக்கிறானோ –
எந்த யோக அப்யாஸத்தில் இருக்கும் இந்த யோகீ அத்தன்மையில் இருந்து ஒரு போதும் நழுவுவது இல்லையோ –

ஆத்மாநுபூதி சித்த் யர்த்தே —
ஸூ கம் ஆத்யந்திகம் யத்தத் –என்று கூறுவதற்கு ஏற்ப புலன்களால் அனுபவிக்கும் சிற்றின்பங்களை விட உயர்ந்தது –
தன்னைத் தவிர உள்ள மற்ற இன்பங்களில் பற்று அற்ற சிந்தனையை அளிக்க வல்ல ஆத்ம சாஷாத்காரம் என்னும்
உயர்ந்த பலனை அளிக்க வல்லதாகும் என்றே பொருள் –

பூர்வ ஷட்கே ந சோதிதே –என்று முன்னமே விதிக்கப் பட்டன
இரண்டாம் அத்யாயம் ந த்வே வாஹம் -வரை உள்ள -11-ஸ்லோகங்கள் முடிய இதே பொருள் என்பதால்
தனியாக ஒரு ஸங்க்ரஹ ஸ்லோகம் அமைக்கப் பட வில்லை

இப்படியாக இந்த கீதார்த்த ஸங்க்ரஹ ஸ்லோகம் மூலம் -முதல் ஆறு அத்தியாயங்கள் தாழ்வான ஜீவனைப் பற்றிக்
கூறுகின்றன -என்பதும் -பரம்பரையாக பலனை அளிக்கின்ற உபாயத்தை உரைக்கின்றன என்பதும் ஆகும் –

ஸ்ரீ வாதி கேசரி ஸ்வாமிகள் அருளிச் செய்த வெண்பா-இரண்டாம் சங்க்ரஹண ஸ்லோகார்த்தம் –

ஞானம் கர்ம நலம் சேர் நிலையதனை
யான மன யோகத்தார் யாய்நது இங்கு -ஊனம் அறத்
தன்னாருயிர் உணரும் தன்மையினை நல் கீதை
முன் ஓர் ஆறு ஒத்தும் ஓதும் முயன்று –7–

———————————————————

மத்யமே பகவத் தத்தவ யாதாத்ம்யாவாப்தி சித்தயே
ஜ்ஞான கர்மாபி நிர்வர்த்த்யோ பக்தி யோக பிரகீர்த்திதே –3-

மத்திய ஆறு அத்தியாயங்களில் ஞான கர்ம யோகம் மூலம் உண்டாக வல்ல
பர ப்ரஹ்மத்தின் உண்மையான அனுபவம் பெற-ஞான கர்ம யோகங்களால் சாதிக்கப்படும் –
பக்தி யோகம் விரிவாக அருளப்படுகிறது –
ஞானம் த்யானம் உபாசனம்-மூலமே அடையலாம் – -உபநிஷத் சொல்லும்
தமேவ வித்வான் –அம்ருத இஹ பவதி -ஞான யோகத்தால்
ஸ்ரோதவ்யா கேட்டு மந்தவ்ய -நினைத்து -நிதித்யாஸவ்ய -தைல தாராவத் -தியானாதால்
உபாசனம் –ஞானம் வந்து -வேறு ஓன்று நினைவு இல்லாமல்
இங்கு பக்தி –உபாசனத்தில் அன்பு காதல் வேட்கை -கலந்து -வேறு வேறு நிலைகள் –
ஸ்நேஹம் பூர்வம் அநு த்யானம் -பக்தி என்றவாறு –
பீதி இல்லாமல் -பக்தியுடன் திரு – ஆராதனம் –
கேள்விகள் இல்லாமல் -அனுபவம் -இங்கு -கீழே ஞானத்துக்கு கேள்விகள் -தர்க்க ரீதியாக பதில்கள் உண்டு –
7–8–9-பக்தி யோகம் முடியும்–பக்தர் ஏற்றம் -பக்தி பெருமை -பற்றி சொல்லி கடைசியில்
ஒரே ஸ்லோகத்தால் பக்தி யோகம் கௌரவம் தோன்ற -பீடிகை கீழ் எல்லாம் –
மீண்டும் சொல்கிறேன் -கேளு ஆரம்பித்து –9-அத்யாயம் -சொல்ல வந்தால் தடுக்க வில்லையே சொல்கிறேன் -என்பான் –
மேகம் தானே வர்ஷிக்குமே – –

நடுவில் உள்ள ஆறு அத்தியாயங்கள் மிகவும் உயர்ந்த வஸ்துவைப் பற்றியும் –
நேரிலே பலனை அளிப்பதுமான உபாயம் பற்றியும் கூறுகின்றன –
கடந்த ஸ்லோகத்தில் -பூர்வ ஷட்கேந -இதில் மத்யம ஷட்கேந –
பகவான் -என்ற பதம் -நடு ஆறு அத்தியாயங்களில் கூறியபடி -சர்வத்துக்கும் காரணமாய் –
அகில ஹேயபிரத்ய நீகனாய் கல்யாணை கதனனாய் உள்ள பர ப்ரஹ்மத்தையே சொல்லும் –
பூஜ்ய பதார்த்த யுக்தி பரிபாஷா சமன்வித -சப்தோ அயம் நோபசாரேண த்வன் யத்ர
ஹ்யுபசாரத –ஸ்ரீ விஷ்ணு புராணம் 6-5-77-என்கிற பதங்கள்
பகவான் இவனுக்கே ஸ்வாபாவிகம்-மற்றறவர்களுக்கு உபசாரமாக அன்றோ சொல்வது
ப்ரஹ்மம் பதமும் அவனையே குறிக்கும் –
ஸ்ரீ பாஷ்யத்தின் தொடக்கத்திலேயே எம்பெருமானார் இதனாலே ப்ரஹ்ம பத பிரயோகம் –
பகவத் பக்தர்கள் பாகவதர்கள் -அவர்களால் பக்தி செய்யப்படும் பரமாத்மாவுக்கு பகவான் என்றே பெயர் –
பகவாநேவ தத்வம் –பகவான் ஆகிற வஸ்து –ப்ரமாணங்களால் காட்டப்படும் வஸ்து –
இதுவே பகவத் தத்வம் எனப்படுகிறது –

யாதாத்ம்யாவாப்தி சித்தயே-
இந்த ஸ்லோகத்தில் உள்ள -யாதாத்ம்யாவாப்தி சித்தயே-பதங்கள்
பக்த்யா த்வநந்யயா ஸக்ய மஹமேவஂவிதோர்ஜுந.–
ஜ்ஞாதும் த்ருஷ்டும் ச தத்த்வேந ப்ரவேஷ்டும் ச பரந்தப—৷৷11.54৷৷என்றபடி கூறப் பட்ட பொருளை அளிக்கிறது –
பக்திக்கு பலனாக ஐஸ்வர்யாதிகள் இல்லாமல் அவனே உள்ளான் –என்கிறது –
அவனது திவ்ய ஸ்வரூபம் தேச கால வஸ்து -த்ரிவித பரிச்சேதமும் இல்லாமல் எங்கும் நிறைந்த ஸ்வரூப ஆகும்
அவாப்தி-
அனுபவித்தல் -நிரவதிக அதிசய ஆனந்தமாக அனுபவித்தல் -இதுவே உயர்ந்த பலன் -அனுபவித்தல் சித்தி என்றும்
அனுபவத்தை அடைதல் சித்தி என்றுமாம் –

ஜ்ஞான கர்மாபி நிர்வர்த்த்யோ-
ஞான யோகம் மற்றும் கர்ம யோகம் ஆகியவற்றால் உண்டாகக் கூடிய -என்று ஸ்லோகத்தில் கூறியதால்
முதல் ஷட்கம் -நடுவில் உள்ள ஷட்கம்-என்றுள்ள ஷட்கங்களின் வரிசையானது காரணத்துடன் கூறப்பட்டது –
இதை அடி ஒட்டியே ஏழாவது அத்தியாயத்தின் தொடக்கத்தில் –
பரம ப்ராப்ய பூதஸ்ய பரஸ்ய ப்ரஹ்மணோ நிரவத் யஸ்ய மஹா விபூதே–ஸ்ரீ மதோ நாராயணஸ்ய
ப்ராப்தயுபாய பூதம் தத் உபாசனம் வக்தும் தத் அங்க பூத ஆத்மஞான பூர்வக கர்ம அனுஷ்டான சாத்யம்
ப்ராப்து -பிரத்யகாத்மநோ யாதாம்ய தர்சனம் யுக்தம் -என்று ஸ்ரீ எம்பெருமானார் -அருளிச் செய்கிறார் –
முதல் ஆறு அத்தியாயங்கள் கொண்ட ஷட்கம் மூலமாக அனைவரின் குறிக்கோளாக உள்ளவனும் –
பர ப்ரஹ்மமாக உள்ளவனும் -தோஷங்களால் பீடிக்கப்படாமல் உள்ளவனும் –
அனைத்து உலகுக்கும் ஒரே காரணமாக உள்ளவனும் -அனைத்தையும் அறிந்தவனும்-
அனைத்திற்கும் ஆத்மாவாக உள்ளவனும் -தடையில்லாத ஸத்யஸங்கல்பம் கொண்டவனும் –
உபய விபூதி நாதனும் -ஆகிய ஸ்ரீ மந் நாராயணனை அடையும் உபாயமான அவனைக் குறித்து
உபாசனம் கூறப்பட்டது -இத்தகைய உபாசனத்துக்கு அடிப்படையாக உள்ளதும் –
ஆத்ம ஞானம் என்பதுடன் இணைந்த கர்ம யோகத்தின் மூலமாக அடையப்படும் ஆத்ம சாஷாத்காரம்
என்பது உபாயமாகக் கூறப்பட்டது -என்று அருளிச் செய்தார்

அடுத்துள்ள இரண்டாது ஷட்கம் மூலமாக பர ப்ரஹ்மமாகிய பரம புருஷனின் ஸ்வரூபமும் –
பக்தி என்னும் பதத்துக்குப் பொருளாக அந்தப் பரம புருஷனின் உபாசனமும் கூறப்படுகிறது –

யதம் ப்ரவ்ருத்திர் பூதாநாம் யேந ஸர்வமிதம் ததம்.–
ஸ்வ கர்மணா தமப்யர்ச்ய ஸித்திம் விந்ததி மாநவ—৷৷18.46৷৷

எந்தப் பரம புருஷனிடம் இருந்து எல்லாப் பொருள்களுக்கும் உத்பத்தி முதலான செயல்கள் அனைத்தும் விளைகின்றதோ-
எந்தப் பரம புருஷனாலே இந்தப் பொருள்கள் அனைத்தும் வியாபிக்கப் பட்டுள்ளதோ அந்தப் பரம புருஷனை
தனக்கு உரிய வர்ணாஸ்ரம கர்மத்தால் ஆராதனம் செய்து மேலான ப்ராப்யமான என்னை அடைகிறான் –
முக்தி -அடைகிறான் -எவன் இடம் இருந்து ஜீவ ராசிகள் உத்பத்தியோ அடைகின்றனவோ வியாபிக்க பட்டு இருக்கிறதோ
அந்த பரம் பொருளை -அர்ச்சனை பண்ணி -வர்ணாஸ்ரம கர்மாக்களில் புஷபம் அர்ச்சனை -பிரித்து விட்டு –

ப்ரஹ்ம பூத ப்ரஸந்நாத்மா ந ஸோசதி ந காங்க்ஷதி–
ஸமஸ் ஸர்வேஷு பூதேஷு மத் பக்திம் லபதே பராம்–৷৷18.54৷৷

என்னைத் தவிர்ந்த வேறு எப்பொருளைப் பற்றியும் வருந்துவது இல்லை – வேறு ஒன்றை விரும்புவதும் இல்லை –
என்னைத் தவிர்ந்த மற்ற எல்லாப் பிராகிருதப் பொருள்களிலும் பற்று அற்று இருக்கையில் ஒத்தவனாய்
மேலான என் விஷயமான பக்தியை அடைகிறான் –

இந்த அர்த்தமானது -இந்த இரண்டு ஸ்லோகங்களிலும் சுருக்கமாக கூறப்பட உள்ளது –
பக்தி என்னும் பதம்
உபாயம் என்று பொருள் தருவதால் –பக்தி யாகிற யோகம் பக்தி யோகம் என்கிறதாகிறது
யோகம் என்னும் பதம் த்யானம் என்னும் பொருள் தரும் போது பக்தி என்னும் த்யானம் என்றதாயிற்று –
இவ்வாறு கூறும் போது த்யானம் என்னும் பதம் இடைவிடாமல் நினைத்தலையே சொல்லும்
பக்தி என்பது ப்ரீதியுடன் நினைத்தலையே உணர்த்தும் -எனவே பக்தியாகிற த்யானம் எனலாம்

ப்ரகீர்தித-மேலானதாக -என்பதன் மூலம்
பக்தி ஸ்வரூபம்
அதன் அங்கம்
அதன் விஷயம்
அதன் பலன் -ஆகியவை அனைத்தும் உயர்வாகவே உள்ளன என்று கூறப்பட்டது –

ஸ்ரீ வாதி கேசரி ஸ்வாமிகள் அருளிச் செய்த வெண்பா-மூன்றாம் சங்க்ரஹண ஸ்லோகார்த்தம் –

உள்ளபடி இறையை உற்று எய்த முற்று அறம் சேர்
தெள்ளறிவில் வந்து திகழ் பத்தி –வெள்ள
நடையாடும் யோகத்தை நாதன் அருள் கீதை
இடை ஆறு ஒது ஓதும் எடுத்து –8–

————————————————————————

பிரதான புருஷ வ்யக்த சர்வேஸ்வர விவேச நம்
கர்ம தீர் பக்திரித்யாதி பூர்வ சேஷோ அந்தி மோதித –4-

பிரதான புருஷ வ்யக்த சர்வேஸ்வர விவேச நம் -மூல பிரகிருதி ஜீவன் -பிரக்ருதியில் இருந்து உண்டாகும்
மஹான் போன்றவை -சர்வேஸ்வரன் -பற்றியும் –
கர்ம தீர் பக்திரித்யாதி -பூர்வ சேஷோ அந்தி மோதித –கர்ம ஞான பக்தி யோகங்களில் எஞ்சி உள்ளவற்றையும்
முதல் மூன்றால் -தத்வ ஞானம் விசாரம் — அடுத்த மூன்றால் அனுஷ்டானம் பண்ணும் முறைகள் –
சொல்லி முடித்ததும் பெரிய சோகம் -அர்ஜுனனுக்கு -ஆராய்ந்து பார் -சரியானதை பண்ணு பொறுப்பை தலையில் போட்டான் –
கீழே ஒன்றும் தெரிதா சோகம் –
இங்கு இவன் பெருமையை அறிந்த பின்பு வந்த சோகம் -சரம ஸ்லோகம் சொல்லி -சோக நிவ்ருத்தி-

பிரதான புருஷ வ்யக்த சர்வேஸ்வர
பிரதானம் அல்லது பிரகிருதி -என்பது அனைத்து லோகங்களுக்கும் காரணமாக உள்ள
ஸூஷ்ம -அசேதன -ஜடப் பொருள் ஆகும்
புருஷன் என்னும் ஜீவாத்மா -மேலே கூறப்பட்ட அசேதனங்களுடன் தொடர்பு கொண்டவனும்
அதனுடன் சேராமல் உள்ள தூய்மையான முக்தாத்மாக்களும் ஆவர்
வ்யக்த
பிரகிருதியின் செயல் -என்பது மஹான் தொடக்கமான பஞ்ச பூதங்கள் வரை உள்ள விசேஷங்களும்
அவற்றால் உண்டாகும் -தேவர்கள் -மனிதர்கள் -விலங்குகள் தாவரங்கள் -என்றுள்ள சரீரங்களும் ஆகும்

சர்வேஸ்வரன் என்பது –
உத்தம புருஷஸ் த்வந்ய பரமாத்மேத் யுதாஹருத–
யோ லோக த்ரய மாவிஸ்ய பிபர்த் யவ்யய ஈஸ்வர–৷৷15.17৷৷

எவன் ஒருவன் அசித் பக்த ஜீவன் முக்தாத்மா என்னும் மூன்று பொருள்களையும் வியாபித்து –
அவற்றைத் தாங்குகிறானோ -அவன் அழிவற்றவனாய் -அனைத்தையும் நியமிப்பவனாய் –
பரமாத்மா என்று சாஸ்திரங்களில் சொல்லப்படுபவனாய் –
இக்காரணங்களால் மிக மிக மேலான புருஷனாய் இருப்பவன் -முற்கூறிய
ஷர அக்ஷர புருஷர்களைக் காட்டிலும் வேறுபட்டவன்
இவர்களை காட்டிலும் வேறு பட்ட புருஷோத்தமன் -பாரமான ஆத்மா -லோக த்ரயம் –
சித் அசித் ஈஸ்வரன் தத்வ த்ரயங்கள் -சூழ்ந்து தங்குகிறான்
ஸ்வாமி -நியமனம்-ஈசான சீலன் நியமன சாமர்த்தியம் – -வியாபிக்கிறான் -தரிக்கிறான் -தங்குகிறான் –
மற்றவை வியாபிக்கப்படும் – தாங்கப்படும்- நியமிக்கப் படும்
என்று கூறுவதற்கு ஏற்ப உள்ள புருஷோத்தமனை குறிக்கும் –

சர்வேஸ்வரன் -என்பதால்
அவன் உண்டு உமிழ்ந்த தாழ்ந்த ஈஸ்வரர்கள் விலக்கப்பட்டனர்
சர்வேஸ்வரன் –
அஜஸ் சர்வேஸ்வரச்சித்த -ஸ்ரீ விஷ்ணு சஹஸ்ர நாமம் -என்ற திரு நாமம் இதனாலே கொண்டவன் –
விவேச நம்-
பகுத்தறிவு –இப்படிப்பட்ட வஸ்துக்களைப் பிரித்து உணர்த்த வல்ல தர்மம் ஆகும்
இதன் மூலமாக அந்தப் பொருள்களை வெவ்வேறானவை என்று தெளிகின்ற விவேகம் பெறலாம்
என்றும் பொருள் கொள்ளலாம் –
கர்ம தீர் பக்திரித்யாதி–
என்பதன் மூலம் -கர்மயோகம் – ஞானயோகம் – பக்தியோகம் -ஆகியவற்றின் ஸ்வரூபங்கள் தெரிவிக்கப்படுகிறது
ஆதி சப்தத்தால்
இவற்றைச் செய்யும் முறையும் சாஸ்த்ர விதி நிஷேதங்கள் எல்லாம் குறிக்கும்
பூர்வ சேஷ –
எஞ்சியவை என்றவாறு –எஞ்சியவற்றை கூறி -விவரித்து -புநர் யுக்தி இல்லாமல் தெளிவாக்கப்படுகிறது –

இந்த ஸ்லோகம் ஸ்ரீ எம்பெருமானாரால் ஸ்ரீ கீதா பாஷ்யத்தில் -13- அத்யாயம் தொடக்கத்தில் தெளிவாக விவரிக்கிறார்
பூர்வஸ்மிந் ஷட்கே
பரம ப்ராப்யஸ்ய பரஸ்ய ப்ரஹ்மணோ பகவதோ வாஸூ தேவஸ்ய
ப்ராப்த் யுபாய பூத பக்தி ரூப பகவத் உபாசந அங்க பூதம் ப்ராப்துஸ் –
பிரத்யகாத்மநோ யாதாத்ம்ய தர்சனம் -ஞான யோக கர்ம யோக லக்ஷண நிஷ்டாத்வய சாத்யம் யுக்தம் –
மத்யமே
ச பரம ப்ராப்ய பூத பகவத் தத்துவ யாதாத்ம்ய தன் மாஹாத்ம்ய ஞான பூர்வக
ஐகாந்திக ஆத்யந்திக பக்தி யோக நிஷ்டா ப்ரதிபாதிதா-
அதிசய ஐஸ்வர்ய அபேக்ஷமாணாம் ஆத்ம கைவல்ய மாத்ர அபேக்ஷமாணாம் ச பக்தி யோகஸ்
தத்தத் அபேக்ஷித சாதனமிதி சோக்தம்-
இதா நீ முபரிதநே து ஷட்கே
ப்ரக்ருதி புருஷ தத் சம்சர்க்க ரூப பிரபஞ்சேஸ்வர தத் யாதாம்ய
கர்ம ஞான பக்தி ஸ்வரூப தத் உபாதான பிரகாரச்ச ஷட்கத்வ யோதிதா விசோத்யந்தே –என்று
அருளிச் செய்தார் இறே

முதல் ஷட்கத்தில்
பர ப்ரஹ்மமாகவும் -அனைவராலும் அடையப்படும் பொருளாகவும் உள்ள வாஸூ தேவனை ஆராதிப்பதே
ஜீவனின் உண்மையான தன்மை எனப்பட்டது
இது ஞான யோகம் மற்றும் பக்தி யோகம் ஆகிய வழிகளில் அடையப்படும் எனப்பட்டது –
அடுத்து நடு ஷட்கத்தில்
பரம் பொருளான பகவானைப் பற்றி அறிதல்
அவனை முன்னிட்டு பலன் கருதாத பக்தி யோகத்தில் நிலைத்தல் ஆகியவை கூறப்பட்டன
மேலும் ஐஸ்வர்யம் மற்றும் கைவல்யம் விரும்பியவர்களுக்கு அவர்கள் விரும்பிய பலனை
அடைவிக்க வல்லது பக்தி யோகமே எனப்பட்டது
இறுதி ஷட்கத்தில்
கீழே கூறப்பட்ட பலவற்றையும் விவரித்து –
மூல ப்ரக்ருதி -ஜீவன் -இவை இரண்டும் கூடிய ஸ்தூல உலகம் -சர்வேஸ்வரன் –
இவர்களைப் பற்றிய ஞானம் -கர்ம யோகம் ஞான யோகம் பக்தி யோகம் இவற்றினுடைய ஸ்வரூபம் –
இவற்றைக் கிட்ட உதவும் உபாயங்கள் ஆகியவை விவரிக்கப் படுகின்றன

இதில் பூர்வ த்ரிகம் உத்தர த்ரிகம் -என்று பிரித்து -16-அத்யாய தொடக்கத்தில்
அதீதே நாத்யா யத்ரயேண ப்ரக்ருதி புருஷயோர் விவி பக்த்யோஸ் ஸம்ஸ்ருஷ்ட யோச்சி யாதாம்யம்
தத் சர்க்க வியோக யோச்ச
குண சங்க தத் விபர்யய ஹேது கரத்வம் –சர்வ பிரகாரேண அவஸ்திதயோ –
ப்ரக்ருதி புருஷயோர் பகவத் விபூதித்வம் விபூதி மதோ
பகவதோ விபூதி பூதாதசித்வஸ்துந–அசித் வஸ்து நச்ச பத்த முக்த உபாய
ரூபா தவ்ய யத்வ வ்யாபந பரண ஸ்வாம்யைரர்த் தாந்தரதயா
புருஷோத்த மத்வே நச யாதாம்யம் ச வர்ணிதம் —என்று அருளிச் செய்கிறார் எம்பெருமானார் –

அசித் என்ற பிரகிருதி -சித் என்ற ஜீவன் ஆகிய இரண்டும் -சேர்ந்துள்ள போதும் பிரிந்துள்ள போதும்
அவற்றின் தன்மைகள் என்ன என்று கூறப்பட்டது –
அவை இரண்டும் சேர்ந்து இருப்பது என்பது குணங்களில் உண்டாகும் பற்றுதல் என்பதும்
பிரிந்து இருப்பது என்பது குணங்களில் பற்று நீங்குவதின் மூலம் என்பதும் கூறப்பட்டது –
சித் மற்றும் அசித் ஆகியவை எந்த நிலையில் உள்ள போதிலும் அவை எம்பெருமானின் செல்வங்களே
என்று கூறப்பட்டது
பந்தப்பட்ட நிலை -முக்தி பெற்ற நிலை -ஆகிய நிலைகளில் உள்ள ஷர அஷர புருஷர்களைக் காட்டிலும்
எம்பெருமான் உயர்ந்தவன் ஆவான்
அவன் அழியாமல் எங்கும் உள்ளவனாக அனைத்தையும் நியமித்த படி உள்ளதால் புருஷோத்தமன்
எனப்படுகிறான் என்று கூறப்பட்டது -என்பதாகும்

ஆக இந்த மூன்றாவது அத்தியாயத்தின் முதலில் உள்ள மூன்று அத்தியாயங்கள்
சித் அசித் ஈஸ்வரன் என்கிற தத்துவங்களை ஆராய்வதாகவும்
அடுத்து உள்ள மூன்று அத்தியாயங்கள்
கர்மயோகம் முதலானவற்றைச் செய்ய வேண்டிய முறைகளை ஆராய்வதில் நோக்கம் கொண்டவை
என்ற வேறுபாடு அறிய வேண்டும் –

ஸ்ரீ வாதி கேசரி ஸ்வாமிகள் அருளிச் செய்த வெண்பா-நான்காம் சங்க்ரஹண ஸ்லோகார்த்தம் –

கருமம் அறிவு அன்பு இவற்றின் கண்ணார் தெளிவில்
வரும் சித் அசித் இறையோன் மாட்சி -யருமை யற
என்னதான் அன்று அந்த எழில் கீதை வேதாந்தப்
பின்னாறு ஒது ஓதும் பெயர்ந்து –9-

—————————————————————-

ஸ்ரீ தேசிகன் அருளிச் செய்த ஸ்ரீ கீதார்த்த சங்கிரகம் —

சீரொன்று தூப்புல் திருவேங்கடமுடையான்
பாரொன்றச் சொன்ன பழ மொழியுள் -ஓரொன்று
தானே அமையாதோ தாரணியில் வாழ்வார்க்கு
வான் ஏறப் போம் அளவும் வாழ்வு –

கட்டப் பொருள் விரித்த காசினியில் நான்மறையில்
இட்டப் பொருள் இயம்பும் இன் பொருளைச் -சிட்டர் தொழும்
வேதாந்த தேசிகனை மேவுவார் தங்கள் திருப்பாதம்
புயம் அடியேன் பற்று –1-

கீதை மொழிந்து அருளும் வேதாந்த தேசிகனார் பாதாரவிந்த மலர் பற்று –2-

கருமமும் ஞானமும் கொண்டு எழும் காதலுக்கோர் இலக்கு என்று
அருமறை உச்சியுள் ஆதரித்தோதும் அரும் பிரமம்
திருமகளோடு வரும் திருமால் என்று தான் உரைத்தான்
தருமம் உகந்த தனஞ்சனயனுக்கு அவன் சாரதியே –1-

———————

ஸ்ரீ கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ தேசிகன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ வாதி கேசரி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ ஆளவந்தார் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

ஸ்ரீ ஆளவந்தார் அருளிச் செய்த- ஸ்ரீ கீதார்த்த சங்க்ரஹம்-ஸ்ரீ கீதார்த்த ரக்ஷை – ஸ்ரீ தாத்பர்ய சந்திரிகை-முதல் அத்யாய சாரம் –

December 12, 2019

ஸ்வ தர்ம ஜ்ஞ்ஞான வைராக்ய சாத்ய பக்த்யேக கோசர
நாராயண பரம் ப்ரஹ்ம கீதா சாஸ்திரே சமீரித– -1-

ஜீவனுக்கு உரிய தர்ம-கர்ம – ஞானங்களால் -மற்றும்
வேறு விஷயங்களில் பற்று இல்லாத நிலையாலும் பக்தி யோகம் கை கூடும் –
இப்படி பக்தி யோகத்துக்கு மட்டும் இலக்காகும் பர ப்ரஹ்மம் ஸ்ரீ மன் நாராயணன்
ஸ்ரீ பகவத் கீதையில் நன்றாக அருளிச் செய்யப் பட்டுள்ளன –

———————————-

ஜ்ஞான கர்மாத்மிகே நிஷ்டே யோக லஷ்யே ஸூ ஸம்ஸ்க்ருதே
ஆத்மாநுபூதி சித்த் யர்த்தே பூர்வ ஷட்கே ந சோதிதே — –2-

ஜீவாத்ம சாஷாத்காரம் -யோகத்தை அடையும் விதத்தையும் –
ஆத்ம அனுபவத்தை அடையும் விதத்தையும்-பகவத் விஷய ஞானம்
இதர விஷய வைராக்யம் -இவற்றால் அலங்கரிக்கப் பட்ட ஞான கர்ம யோகங்கள்
முதல் ஆறு அத்தியாயங்களில் அருளிச் செய்யப் பட்டன

—————————————————————-

அஸ்தான ஸ்நேக காருண்ய தர்ம அதர்ம தியாகுலம்
பார்த்தம் ப்ரபன்ன முத்திச்ய சாஸ்திரர் அவதரணம் க்ருதம்–5-

காட்டக் கூடாத இடத்தில் ஸ்நேஹம் -காருண்யம் -தர்ம அதர்ம விவேகம் இல்லாமல் –மூன்று தோஷங்கள் –

தகாத உறவினவர்கள் இடமும் நண்பர்கள் இடமும் உண்டாகும் அன்பு மற்றும் இரக்கம் காரணமாக
தர்ம யுத்தம் என்பதை அதர்மம் என்று கருதும் மயக்கம் உண்டானது –
இப்படியாகக் கலக்கம் கொண்டவனும் -தன்னைச் சரணம் புகுந்தவனுமாகிய அர்ஜுனனைக் குறித்து
ஸ்ரீ கீதா சாஸ்திரத்தின் முதல் அத்யாயம் உண்டானது –

ஸ்ரீ கீதா சாஸ்திரத்தின் முக்கியமான பொருளும்
மூன்று ஷட்கங்களாகப் பிரித்து ஒவ் ஒன்றின் முக்கிய பொருளும்
நான்கு ஸ்லோகங்களில் அருளிச் செய்த பின்
அடுத்து -18-ஸ்லோகங்களால் ஒவ் ஒரு அத்தியாயத்தின் பொருளும் சுருக்கமாக உரைக்கப்பட்டுள்ளன –
அர்ஜுனன் துயரம் கொள்வதும் அத்தை பகவான் போக்குவதும் முதல் இரண்டு அத்தியாயங்களின் பொருள்கள்
முதல் அத்தியாயமும் இரண்டாம் அத்யாயம் -11-ஸ்லோகம் வரையில் அருஜனின் சோகம்
இத்தை ஒரு ஸ்லோகத்தால் மேலே காட்டி அருளுகிறார்

இரண்டாம் அத்யாயம் -9- ஸ்லோகத்தில் ஸ்ரீ கீதா பாஷ்யம்
ஏவம் அஸ்தாநே சமுபஸ்தித ஸ்நேஹ காருண்யாப்யாம ப்ரக்ருதிம் கதம் க்ஷத்ரியானாம் யுத்தம் பரம தர்மம்
அப்ய தர்மம் மந்வாநம் தர்ம புபுத்சயா ச சரணாகதம் பார்த்தம் உத்திச்ய ஆத்ம யாதாத்ம்ய ஞாநேந
யுத்தஸ்ய பாலாபிசந்தி ரஹிதஸ் யாத்ம ப்ராப்த்யுபாய தஜ் ஞாநேந ச விநா அஸ்ய மோஹோ ந ஸாம்ய தீதீ
மத்வா பகவதா பரம புருஷேண அத்யாத்ம ஸாஸ்த்ர அவதரணம் க்ருதும் தத் உக்திம்-
அஸ்தான ஸ்நேக காருண்ய தர்ம அதர்ம தியாகுலம் பார்த்தம் ப்ரபன்ன முத்திச்ய சாஸ்திரர் அவதரணம் க்ருதம்-

வரக்கூடாத நேரத்தில் உண்டாகிய பாசம் -யுத்தம் செய்வது ஷத்ரிய தர்மம் என்ற போதிலும் யுத்தம் செய்வதை
அதர்மமாக நினைத்தல் -பகவான் இடம் சரணம் என்று புகுந்து தனக்கு உண்டான வழியை உபதேசிக்கும் படி கூறுதல் –
இப்படிப்பட்ட சூழ்நிலையில் அர்ஜுனன் இருந்தான் –
அவனைப்பார்த்த பகவான் தனது மனதில் -இவனுக்கு ஆத்மாவைப் பற்றிய ஞானம் பிறக்க வேண்டும் –
எந்த விதமான பற்றும் பலனும் எதிர்பாராமல் இப்போது போர் புரிவதன் மூலம் இவனுக்கு ஆத்ம ஞானம் பிறக்கும் –
அதன் பிறகே இவனுக்கு மயக்கம் நீங்கும் என்று எண்ணினான் –
இந்தக்கருத்தையே ஸ்ரீ ஆளவந்தார் இந்த ஸ்லோகத்தில் அருளிச் செய்கிறார்

தகாத இடத்தில் அன்பு -தயை -ஆகியவற்றின் காரணமாக -தர்மத்தில் அதர்மம் என்னும் எண்ணம் உண்டாகியது
என்பது ஸ்ரீ எம்பெருமானாரின் ஸ்ரீ கீதா பாஷ்ய சிந்தனை –
இதனை ஸ்ரீ கீதா பாஷ்யத்தில் முதல் அத்தியாயத்தில் -பந்து ஸ்நேஹ பரயா ச க்ருபயா
தர்ம அதர்ம பயேந ச அதிமாத்ர சன்ன சர்வாங்க –என்று
உறவினர்கள் மேல் கொண்ட ப்ரீதியாலும் அதிகமான கருணையாலும் தர்மத்தை அதர்மம் என்று எண்ணியதால் உண்டான
பயம் காரணமாகவும் ஒடுங்கிய உடல் உறுப்புக்களைக் கொண்டவனாய் -என்று இருப்பதன் மூலம் அறியலாம்
தர்ம அதர்ம பயாகுலம் -என்று படித்து -கயிற்றை பாம்பு என்று என்னும் பயம் போலே -என்று கொள்ள வேண்டும்
உத்திச்ய-ஒரு காரணமாக வைத்தபடி என்னும் பொருள்
ஸ்ரீ கீதா பாஷ்ய தொடக்கத்தில் பாண்டு தநய யுத்தப்ரா உத்ஸாஹந வ்யாஜேந –பாண்டுவின் புத்ரனை
யுத்தத்தில் உத்ஸாஹப்படுத்த வேண்டும்
ப்ரபன்னன் -தன்னைக் குறித்து சரணாகதி செய்தவன் –
அஸ்ய மோஹோ ந ஸாம்ய தீதீ மத்வா-அர்ஜுனனின் மயக்கம் தீராது –

இரண்டாம் அத்யாயம் -11-ஸ்லோகம் வரை இந்த கருத்தே என்பதால் ஸ்ரீ ஆளவந்தார்
இந்த ஸங்க்ரஹ ஸ்லோகத்தில் முதல் அத்யாயம் என்று குறிக்க வில்லை

———-

நித்யாத்மா சங்க கர்மேஹா கோசரா சாங்க்ய யோகதீ
த்வதீய ஸ்திததீ லஷா ப்ரோக்தா தந்மோஹ சாந்தயே –6-

சாங்க்ய யோகம் -உண்மையான அறிவு -ஆத்மாவை பற்றி –பற்றுதல் இல்லாத கர்ம யோகம் பண்ண –
மோகம் மயக்கம் தீர்க்க -ஞான யோகி-கலக்க மாட்டாத-ஸ்திரமான புத்தி யுடன் -செய்வதை உபதேசிக்கிறார் –
ஞான யோகம் அடைய கர்ம யோகம் -ஆத்மாவின் நித்யத்வம் சொல்லி –உபதேசிக்கிறார் –

இதுக்கு ஸ்ரீ கீதா பாஷ்யம்
ஏவம் ஆத்ம யாதாம்யம் யத்தாக் யஸ்ய ச கர்மணஸ் தத் பிராப்தி சாதன தாமஜாநதச் சாரீராத்மா ஞாநேந மோஹிதஸ்ய
தேந ச மோஹிந யுத்தாந் நிவ்ருத்தஸ்ய மோஹ சாந்தயே நித்யாத்ம விஷயா சாங்க்ய புத்திஸ் தத் பூர்விகா
ச அஸங்க கர்ம அனுஷ்டான ரூப கர்ம யோக விஷயா புத்தி ஸ்தித ப்ரஞ்ஞதா யோக சாதன பூதா த்வீதிய அத்யாயே ப்ரோக்தா-என்று
ஆத்மாவின் உண்மை நிலை -இத்தகைய ஆத்மாவை அடைய ஷத்ரியர்களுக்கு யுத்தமே உபாயம் போன்றவற்றை
அர்ஜுனன் அறியாமல் இருந்தான் -மேலும் அவன் இந்த மயக்கம் காரணமாக யுத்தத்தில் இருந்து வெளியேறவும் முயற்சித்தான் –
எனவே அவனுக்கு சாங்க்யம் என்ற ஞானம் அல்லது ஆத்மாவைப் பற்றிய அறிவு போதிக்கப் பட்டது –
மேலும் யோகம் அல்லது பலனில் விருப்பம் இல்லாது கர்மம் இயற்றும் மார்க்கமும் விளக்கப்பட்டது –
இவை இரண்டும் அசைக்க இயலாத ஞானத்தை உண்டாக்குகிறது –
இதையே ஸ்ரீ ஆளவந்தார் ஸங்க்ரஹ ஸ்லோகத்தில் அருளிச் செய்கிறார் –

——————-

கருமமும் ஞானமும் கொண்டு எழும் காதலுக்கோர் இலக்கு என்று
அருமறை உச்சியுள் ஆதரித்தோதும் அரும் பிரமம்
திருமகளோடு வரும் திருமால் என்று தான் உரைத்தான்
தருமம் உகந்த தனஞ்சனயனுக்கு அவன் சாரதியே –1-

உகவை அடைந்த உறவுடையார் பொரலுற்ற அந்நாள்
தகவுடன் அன்பு கரை புரளத் தருமத் தளவில்
மிக உளம் அஞ்சி விழுந்து அடி சேர்ந்த விசயனுக்கோர்
நகையுடன் உண்மை யுரைக்க அமைந்தனன் நாரணனே —2-

மிகவும் கர்வம் கொண்டு இருந்த பந்துக்களான துரியோதனன் உள்ளிட்டவர்கள் பாண்டவர்களுடன்
யுத்தம் தொடங்கிய நேரத்தில் மிகுந்த கருணை காரணமாக அன்பு கரை புரண்டு ஓட-யுத்தம் என்பது
தர்மம் என்ற போதிலும் அச்சம் கொண்டு ஸ்ரீ கிருஷ்ண பகவானின் திருவடித் தாமரைகளில் அர்ஜுனன் விழுந்தான் –
அவனைப்பார்த்த ஸ்ரீ மந் நாராயணனாகிய ஸ்ரீ கிருஷ்ணன் புன்னகை பூத்தபடி உண்மையை உரைக்க நின்றான் –

———————–

த்ருதராஷ்ட்ர உவாச–
தர்ம க்ஷேத்ரே குரு க்ஷேத்ரே ஸம வேதா யுயுத்ஸவ–
மாமகா பாண்டவாஷ்சைவ கிமகுர்வத ஸஞ்ஜய—-৷৷1.1৷৷

த்ருதராஷ்ட்ரன் வாக்யத்துடன் தொடங்கி சஞ்சயன் வாக்யத்துடன் முடியும் -ஸ்ரீ கீதை –
என் பிள்ளைகள் –பாண்டு பிள்ளைகள் –கிம் அர்குவத -என்ன பண்ண -யார் வெல்ல போகிறார் -மனசில் வைத்து கேட்கிறான்-
அதார்மிகர்-தம் பிள்ளைகள் -க்ஷேத்ர சம்பந்தம் -நல்ல புத்தி வந்ததோ -ஆசை இருக்கலாமோ -க்ஷேத்ர மகிமையால்
தர்ம புத்திரர்கள் காண்டீபம் போட்டு விட்டு சண்டை போட்டு பெரும் ராஜ்யம் வேண்டாம் என்று போய் விட்டார்களோ –
கிம் அகுர்வத -எனக்கு வேண்டியதாக என்ன பண்ணுகிறார்கள் -என்றபடி –
மாமர -மமகாராம் தோற்ற பேசி -பாண்டவர் ஒதுக்கி வைத்து பேசி

தர்ம க்ஷேத்ரே –தர்மம் செய்வதற்கு ஏற்றதான இடம் -என்பதன் மூலம் யுத்தம் என்னும் யஜ்ஞம் இயற்றுவதற்கான
இடம் என்று உணர்த்தப் படுகிறது –
குரு க்ஷேத்ரே –பாண்டவர்களுக்கும் த்ருதராஷ்ட்ர புத்ரர்களுக்கும் தங்கள் உறவினர்களுடன் கூடியுள்ளதான
காரணமாக வெகுமானம் செய்ய வேண்டியதான இடம்
ஸம வேதா யுயுத்ஸவ–ஒருவருக்கு ஒருவர் விரோதம் கொண்டபடி யுத்தத்திற்கு அணி வகுத்து நிற்கின்ற
ச மற்றும் ஏவ -இரண்டு பாதங்களும் ஒரே பொருளை உணர்த்தும்
இவ்வுலகில் அனைத்து அரசர்களும் இந்த இரண்டு வகுப்பினருக்கும் உதவி செய்யும் விதமாக கூடியபடியால்
இந்த இருவருமே முக்கியமானவர்கள் என்று உணர்த்தியபடி

—————-

ஸஞ்ஜய உவாச–
த்ருஷ்ட்வா து பாண்டவாநீகம் வ்யூடம் துர்யோதநஸ் ததா.—
ஆசார்யமுப ஸங்கம்ய ராஜா வசநமப்ரவீத்—-৷৷1.2৷৷

அரசனான துரியோதனன் அணிவகுக்கப்பட்ட பாண்டவர்களின் சேனையைப் பார்த்து பின்பு
துரோணாச்சார்யரை அணுகிப் பின் வரும் சொற்களைக் கூறினான்

பஸ்யைதாம் பாண்டு புத்ராணாமாசார்ய மஹதீம் சமூம்.—
வ்யூடாம் த்ருபத புத்ரேண தவ ஸிஷ்யேண தீமதா—৷৷1.3৷৷

உம்முடைய சீடனும் அறிவாளியும் துருபதனின் மகனுமான திருஷ்டத்யும்னனால்
அணி வகுக்கப் பெற்றதாய் மிகப் பெரியதான இந்த பாண்டு புத்திரர்களின் சேனையைப் பாரும்
திருஷ்டத்யும்னன் -பாண்டவர் சேனாபதி -உம் சிஷ்யன் -குத்தி பேசி -பாண்டு புத்ரர்களுக்கு நீர் ஆச்சார்யர்

துரோணரைக் கொல்வதற்காக –யாஜர் மற்றும் உபாயகர் -இரண்டு அந்தணர்களை வைத்து
பாஞ்சால அரசன் துருபதன் யாகம் செய்ததன் விளைவாக பிறந்தவனே திருஷ்டத்யும்னன்
கிருஷ்ணை என்னும் திரௌபதியும் இந்த யாகத்திலேயே தோன்றினாள்

அத்ர ஷூரா மஹேஷ்வாஸா பீமார்ஜுந ஸமா யுதி—
யுயுதாநோ விராடஸ்ச த்ருபதஸ்ச மஹாரத—-৷৷1.4৷৷

இந்தப் பாண்டவ சேனையிலே பெரிய வில்லாளிகளும் போரில் பீமார்ஜுனர்களுக்கு இணையானவர்களும்
ஸூரர்களுமான யுயுதானனும் –சாத்யகியும் -விராட அரசனும் பெரும் தேராளியான துருபதனும் உள்ளனர்

த்ருஷ்டகேதுஷ் சேகிதாந காஸிராஜஷ்ச வீர்யவாந்—
புருஜித் குந்திபோஜஸ் ச ஷைப்யஸ்ச நரபுங்கவ—-৷৷1.5৷৷

த்ருஷ்ட கேதுவும் சேகி நாதனும் வீர்யமுடைய காசி ராஜனும் புருஜித்தும்
குந்தி போஜனும் மனிதருள் சிறந்த சிபி வம்சத்து அரசனும் உள்ளனர்
த்ருஷ்ட கேது-சேதி நாட்டு மன்னன் -இவன் சிசுபாலனின் புத்ரன் –
சேகி நாதன் -வ்ருஷ்ணி வம்சம் –
புருஜித்தும் குந்தி போஜனும் -இருவரும் குந்தியின் உடன் பிறந்தவர்கள் –
சிபி வம்சத்து அரசன்-சைப்யன் – இவரது மகளான தேவிகாவை யுதிஷ்ட்ரர் மணந்தார்

யுதாமந்யுஸ்ச விக்ராந்த உத்தமௌஜாஸ்ச வீர்யவாந்.—
ஸௌபத்ரோ த்ரௌபதேயாஸ்ச ஸர்வ ஏவ மஹாரதா—৷৷1.6৷৷

யுதா மன்யுவும் வீர்யமுடைய யுத்த மவ்ஜனும் சுபத்ரையின் மகனான அபிமன்யவும்
திரௌபதியின் பிள்ளைகளான இளம் பாண்டவர்களும் எல்லாரும் பெரிய தேராளிகளாக உள்ளனர்
யுதா மன்யுவும் – யுத்த மவ்ஜனும்-இருவரும் சகோதரர்கள் -இவர்கள் உறங்கும் போது அஸ்வத்தாமாவால் கொல்லப்பட்டனர்
இளம்-உப பாண்டவர்கள் -பிரதிவிந்த்யன் -ஸூத சோமன் -ச்ருதகர்மா -சதாநீகன் -ஸ்ருதசேனன்-ஆகியவர்கள்
இவர்கள் உறங்கும் பொழுது அஸ்வத்தாமாவால் கொல்லப் பட்டனர் –

அஸ்மாகம் து விஸிஷ்டா யே தாந்நிபோத த்விஜோத்தம.-
நாயகா மம ஸைந்யஸ்ய ஸம்ஜ்ஞார்தம் தாந் ப்ரவீமி தே—৷৷1.7৷৷

அந்தணர் தலைவரே நம்மிடையோ என்னில் என்னுடைய சேனையின் தலைவர்களாக
எவர்கள் உள்ளனரோ அவர்களை உமக்கு நன்கு அறிவதற்காகக் கூறுகிறேன் -கேட்பீராக
த்விஜோத்தம-இரு பிறவி அந்தணர் –

பவாந் பீஷ்மஸ்ச கர்ணஸ்ச க்ருபஸ்ச ஸமிதிஞ்ஜய–
அஷ்வத்தாத்மா விகர்ணஸ்ச ஸௌமதத்திஸ் ததைவ ச—-৷৷1.8৷৷

துரோணராகிய நீரும் பீஷ்மரும் கருணனும் போரில் வெற்றியடைய கிருபரும்
அஸ்வத்தாமாவும் விகர்ணனும் சோமதத்ததின் மகனும்
முதலில் நீர் -துரோணாச்சார்யரை சொல்லி –
சோமதத்ததின் மகன்-பூரிசிரவஸ்-சந்தனு மஹாராஜனின் மூத்த சகோதரரின் பேரன்
கிருபாச்சார்யர் -சரத்வர் மஹரிஷியின் புதல்வர் -சந்தனு மஹாராஜர் கிருபையால் வளர்ந்ததால் கிருபர் என்னும் பெயர்
அஸ்வத்தாமன் துரோணரின் புத்ரன்
விகர்ணன் த்ருதராஷ்ட்ரனின் நூறு புத்ரர்களில் ஒருவன் -இவன் ஒருவனே திரௌபதிக்காக சபையில் பேசினவன்

அந்யே ச பஹவம் ஷூரா மதர்தே த்யக்த ஜீவிதா–
நாநா ஸஸ்த்ரப்ரஹரணா ஸர்வே யுத்தவிஷாரதா—৷৷1.9৷৷

மற்றும் சூரர்கள் பலரும் உள்ளனர் -அவர்கள் எனக்காக உயிரையே விட்டு இருப்பவர்கள் –
பல அஸ்த்ரங்களையும் ஆயுதங்களையும் உடையவர்கள் -எல்லாரும் போரில் வல்லவர்கள்
யுத்த நீதி அறிந்தவர்கள் –

அபர்யாப்தம் ததஸ்மாகம் பலம் பீஷ்மாபிரக்ஷிதம்–
பர்யாப்தம் த்விதமேதேஷாம் பலம் பீமாபிரக்ஷிதம்—৷৷1.10৷৷

ஆகையால் பீஷ்மரால் காக்கப்படும் நமது பீடை அவர்களை வெல்லப் போகாது –
இந்தப் பாண்டவர்களின் படையோ எனில் நம்மை வெல்லப் போதுமானது –
நம்முடைய சேனை அளவில் அடங்காத –பீஷ்மரால் -அங்கு சின்னது பீமனால் –அச்சம் தோன்ற பேசுகிறான் –
மேலே அச்சம் போக்க சங்க நாதம் பீஷ்மர் வருவதால் -பீஷ்மர் -பீமன் ப்ரதிஞ்ஜை அறிவான்-
அபரியாப்தம் -போதாது –அவர்கள் சைன்யம் போதும் என்றவாறு

அயநேஷு ச ஸர்வேஷு யதாபாகமவஸ்திதா–
பீஷ்மமேவாபிரக்ஷந்து பவந்த ஸர்வ ஏவ ஹி—৷৷1.11৷৷

நீங்கள் அனைவருமே வ்யூஹத்தினில் நுழையும் எல்லா வழிகளிலும் உங்கள் பகுதிகளைக்
கை விடாமல் நிற்பவர்களாய் பீஷ்மரையே சூழ்ந்து நின்று காப்பாற்றுங்கள்-என்று துரியோதனன் கூறினான்
பீஷ்மரை ரஷித்தால் நாம் வாழலாம் -என்கிறான் -திருவடி இருந்தால் நாம் வாழலாம் ஜடாயு கேட்டது போலே –

—————

இந்த ஸ்லோகங்களுக்கு ஸ்ரீ பாஷ்யம்
பீமனால் காக்கப்படும் பாண்டவர்களின் சேனையை துரியோதனன் பார்த்தான் -பீஷ்மரால் காக்கப்படும் தனது சேனையையும் பார்த்தான் –
பின்னர் தனது ஆச்சார்யரான துரோணரிடம் -கௌரவர்களான நம்மை அழிக்கத் தயாராக உள்ள பீமனால் ரஷிக்கப் படும் சேனை
கௌரவர்களை அழிக்கப் போதுமானது -ஆனால் பாண்டவர்களை வெற்றி கொள்ள நமது சேனை போதாது -என்றான் –
இதன் மூலம் அவன் மனம் வருத்தம் வெளிப்பட்டது

இதுக்கு தாத்பர்ய சந்திரிகை –
இப்படியாக துரியோதனனின் வெற்றி குறித்து அறிய வேண்டும் என்னும் ஆசையால் த்ருதராஷ்ட்ரன் சஞ்சயன் இடம்
முதல் ஸ்லோகத்தில் உள்ளபடிக் கேட்டான் –
இதற்கு சஞ்சயன் -யத்ர யோகேஸ்வர க்ருஷ்ணோ யத்ர பார்த்தோ தநுர்தர–
தத்ர ஸ்ரீர் விஜயோ பூதிர் த்ருவா நீதிர் மதிர் மம–৷৷18.78৷৷- இறுதி ஸ்லோகத்தில் பதில் உரைக்கும் பொருட்டு –
நடுவில் நடைபெற்ற அனைத்தையும் உரைக்கிறான் –
இரண்டாம் ஸ்லோகத்தில் -த்ருஷ்ட்வா து பாண்டவாநீகம் வ்யூடம்-என்றதன் மூலம் துரியோதனனின் மன உறுதி
குலைவதற்கான காரணம் உணர்த்தப்பட்டது –
து -பதம் அவனது தைர்யம் நழுவியதைக் காட்டும் –
ஸம்ஜ்ஞார்தம்-1-7- நன்கு அறிவதற்காகக் கூறுகிறேன் -என்றது பெயர்களைத் தெரிந்து கொள்ளும் பொருட்டு என்றவாறு –
பாஷ்யத்தில் அந்தர் விஷன்னோ அபவத் -மனதில் துக்கம் நிறைந்தவனானான் -என்று காட்டப்பட்டது
அபர்யாப்தம் ததஸ்மாகம் 1-10-தனது சேனை பலம் குறைந்ததாக துரியோதனன் எண்ணுகிறான் என்பது இல்லை
தங்கள் சேனை பதினோரு அக்ஷவ்ஹினி-அவர்கள் சேனை ஏழு அக்ஷவ்ஹினி-
நமது சேனையை நாசம் செய்ய அவர் சேனை போதாது என்று அர்த்தம் என்றும் சிலர் சொல்வர்

ஆனால் அப்படி அல்ல -அவர்களைக் கொள்ள மாட்டேன் என்று பீஷ்மர் சபதம் -பீமனோ அனைவரையும் கொல்வேன் என்று சபதம் –
அவர்கள் சேனையை -மஹதீம் சமூம்.1—3-பெரிய சேனை என்று வர்ணித்தான் -தீமதா—சேனாதிபதியை புத்திமான் என்றும் வர்ணித்தான் –
மேலும் -அத்ர ஷூரா மஹேஷ்வாஸா-1-4-ஸர்வ ஏவ மஹாரதா—৷৷1.6৷৷-என்றும் வர்ணித்தான் –
தனது சேனையில் மதர்தே த்யக்த ஜீவிதா–-எனக்காக உயிரையே விட்டு இருப்பவர்கள் –-என்றானே ஒழிய
வெல்வார்கள் என்று சொல்லவில்லையே
மேலும் தஸ்ய ஸஞ்ஜநயந் ஹர்ஷம் குரு வ்ருத்த பிதாமஹ– ஸிம்ஹ நாதம் விநத்யோச்சை ஸங்கம் தத்மௌ ப்ரதாபவாந்—৷৷1.12৷৷
பீஷ்மர் அந்த துரியோதனனுக்கு மகிழ்ச்சியை உண்டாக்கும் பொருட்டு பலமாக ஸிம்ஹ நாதம் செய்து சங்கை ஊதினார்-என்பதால்
முன்பு துக்கப்பட்டது தெளிவு –
இதுவே இந்த ஸ்லோகார்த்த ஸ்வாரஸ்யம்
மஹா பாரதத்தில் -அகாராதீ நி நாமாநி அர்ஜுனத் ரஸ்த சேதச –என்று அ தொடங்கும் பெயர்களால் அச்சம் என்றானே –

————-

தஸ்ய ஸஞ்ஜநயந் ஹர்ஷம் குரு வ்ருத்த பிதாமஹ–
ஸிம்ஹ நாதம் விநத்யோச்சை ஸங்கம் தத்மௌ ப்ரதாபவாந்—৷৷1.12৷৷

பெரு வீரம் உள்ளவரும் குரு வம்சவத்தர்களில் சிறந்தவரும் பாட்டனாருமான பீஷ்மர் அந்த துரியோதனனுக்கு
மகிழ்ச்சியை உண்டாக்கும் பொருட்டு பலமாக ஸிம்ஹ நாதம் செய்து சங்கை ஊதினார்

தத ஸங்காஸ்ச பேர்யஸ்ச பணவாநககோமுகா–
ஸஹஸைவாப்யஹந்யந்த ஸ ஸப்தஸ்துமுலோபவத்—৷৷1.13৷৷

பிறகு சங்கங்கள் பேரிகைகள் பணவங்கள் ஆநகங்கள் கோ முகங்கள் முதலிய பல வாத்தியங்களும்
உடனேயே முழங்கப்பட்டன -அந்த ஒலியானது ஆகாசம் வரை மிகப் பெரியதாக ஆயிற்று

தத ஸ்வேதைர்ஹயைர் யுக்தே மஹதி ஸ்யந்தநே ஸ்திதௌ—
மாதவம் பாண்டவஸ்சைவ திவ்யௌ ஸங்கௌ ப்ரதத்மது—-৷৷1.14৷৷

பின்பு திருமகள் மணவாளான ஸ்ரீ கண்ணனும் பாண்டுவின் புதல்வனான அர்ஜுனனும்
வெள்ளைக் குதிரைகள் பூட்டிய பெரிய தேரில் இருப்பவர்களாய் திவ்யமான தங்கள் சங்குகளை ஊதினார்கள்
அடியைத் தொடர்ந்து எழும் ஐவர் கட்க்காய் -அன்று பாரதப் போர் முடியப் -பரி நெடும் தேர் விடும் கோன் –இராமா -51-

பாஞ்சஜந்யம் ஹரிஷீகேஷோ தேவதத்தம் தனஞ்சய —
பௌண்ட்ரம் தத்மௌ மஹா ஸங்கம் பீமகர்மா வ்ருகோதர—৷৷1.15৷৷

ஹ்ருஷீகேசனான ஸ்ரீ கண்ணன் பாஞ்ச ஜன்யம் என்னும் பெரும் சங்கை ஊதினான்
தனஞ்சய-அர்ஜுனன் தேவதத்தன் என்னும் சங்கை ஊதினான்
பயங்கரமான செயல்களை யுடைய வ்ருகோதர-பீமன் பௌண்ட்ரம் என்னும் பெரும் சங்கை ஊதினான்

ஸிம்ஹ நாதம் விநத்ய –ஓதந பாகம் பசதி–கடல் ஓசை எழுந்தது போலே ஸிம்ஹ நாதம் செய்தார்
பீஷ்மரின் ஸிம்ஹ கர்ஜனை சங்கின் ஒலிகளுடன் கலந்து என்றவாறு
ஸர்வேச்வரேச்வர பார்த்த சாரதி -அன்பின் காரணமாக தன்னை தாழ விட்டுக் கொண்டான் என்றபடி
மாதவ -பத பிரயோகம்–இப்படி பரத்வ ஸுலப்யங்களுக்கு நிதானம் பிராட்டியோட்டை சம்பந்தமே
பாண்டவர்கள் வெல்வார் என்று சஞ்சயன் திரு உள்ளத்தைக் காட்டும்
ஸ்யந்தநே ஸ்திதௌ—1-14-தேரில் அமர்ந்தபடி பொதுவாக இருந்தாலும் தேர் ஓட்டுபவனும் யஜமானனும் அமர்ந்து இருந்தமையைச் சொல்லும் –
திவ்யௌ ஸங்கௌ–ஸ்வேதைர்ஹயைர்-1-14-வெண்மை -மூ உலகங்களையும் வெல்வதற்கு ஏற்ப என்றவாறு
திவ்ய -சங்குகளின் மேன்மையைச் சொன்னவாறு –

அநந்தவிஜயம் ராஜா குந்தீபுத்ரோ யுதிஷ்டிர—
நகுல ஸஹதேவஸ்ச ஸுகோஷமணி புஷ்பகௌ—৷৷1.16৷৷

குந்தியின் பிள்ளையும் அரசனுமான தர்ம புத்ரன் அனந்த விஜயம் எனும் சங்கையும்
நகுலனும் சகதேவனும் முறையே ஸூ கோஷம் மணி புஷ்பகம் எனும் சங்கை ஊதினார்கள்

காஸ்யஸ்ச பரமேஷ்வாஸ ஷிகண்டீ ச மஹாரத–
த்ருஷ்டத்யும்நோ விராடஸ்ச ஸாத்யகிஸ் சாபராஜித—৷৷1.17৷৷

சிறந்த வில்லாளியான காசி ராஜனும் மஹா ரதனான சிகண்டியும்
த்ருஷ்டத்யும்னனும் விராடனனும் போரில் தோல்வி அடையாத சாத்யகியும்

த்ருபதோ த்ரௌபதேயாஸ்ச ஸர்வதஸ் ப்ருதிவீபதே.—
ஸௌபத்ரஸ்ச மஹாபாஹு ஸங்காந்தத்மு ப்ருதக் ப்ருதக்—৷৷1.18৷৷

துருபதனும் திரௌபதியின் புதல்வர்களும் நீண்ட கையை யுடைய அபிமன்யுவும்
எல்லாப் பக்கங்களிலும் தனித்தனியாக தம் தம் சங்குகளை ஊதினார்கள்

ஸ கோஷோ தார்தராஷ்ட்ராணாம் ஹ்ருதயாநி வ்யதாரயத்.–
நபஸ்ச ப்ருதிவீம் சைவ துமுலோ வ்யநுநாதயந்—৷৷1.19৷৷

ஆகாசம் பூமி முழுவதும் எதிரொலிக்கச் செய்ததான ஓன்று சேர்ந்த அந்த சங்கு நாதம்
திருதராஷ்டரனின் புதல்வர்களுடைய ஹ்ருதயங்களைப் பிளந்தது
மனசை உளுக்கும் படி -சஞ்சயன் முதல் பதில் -மறைத்து -மேலே மீண்டும் சொல்லுவான் –

ப்ருதக் ப்ருதக்—৷৷1.18৷৷–தனித்தனியே சங்க நாதம் -ஒவ் ஒன்றே இவர்கள் நெஞ்சை உலுக்கப் போதுமானதாய் இருக்க –
வ்யதாரயத்.–நெஞ்சை நன்றாகப் பிளப்பதைச் சொல்லிற்று
ஸர்வேஷாம் ஏவ பவத் புத்ராணாம் –உறுதியான மனம் கொண்டவன் யாருமே இல்லை என்றது –
தனது புத்திரர்கள் வெல்ல வேண்டும் என்ற எண்ணம் கொண்டவனுக்கு ஏவம் -இப்படியாக சஞ்சயன் சொன்னார் என்கிறது

அத வ்யவஸ்திதாந் த்ருஷ்ட்வா தார்தராஷ்ட்ராந் கபித்வஜ–
ப்ரவ்ருத்தே ஸஸ்த்ர ஸம்பாதே தநுருத்யம்ய பாண்டவ—৷৷1.20৷৷
கபி- திருவடி கொடி –

அர்ஜுந உவாச–
ஹரிஷீகேஷம் ததா வாக்யமிதமாஹ மஹீபதே—
ஸேநயோருபயோர் மத்யே ரதம் ஸ்தாபய மேச்யுத—৷৷1.21৷৷

திருதராஷ்டரனே -பிறகு ஹனுமக் கொடியோனான அர்ஜுனன் போர் தொடங்கிய அளவில்
முன் அணியில் நிற்கும் திருதராஷ்ட்ர புத்திரர்களை நோக்கி வில்லை எடுத்துக் கொண்டு
அப்போது ஹ்ருஷீகேசனான ஸ்ரீ கண்ணனை நோக்கி பின் வரும் வார்த்தையைச் சொன்னான்
அச்சுதனே இரண்டு சேனைகளும் நடுவில் என்னுடைய தேரை நிறுத்துவாயாக
ராஜாவே -அடியார் -தோள் கண்டார் தோளே காணும் படி -பும்ஸாம் சித்த திருஷ்ட்டி அபகாரம் –
இரண்டாவது பதில் இதில் –
கண்ணன் இவன் சொல்வதை செய்கிறான் -யார் ஜெயிப்பார் சொல்லவும் வேண்டுமோ

யாவதேதாந் நிரீக்ஷேஹம் யோத்து காமாநவஸ்திதாந்.—
கைர்மயா ஸஹ யோத்தவ்யமஸ்மிந் ரணஸமுத்யமே—-৷৷1.22৷৷

இந்தப் போர் முயற்சியில் என்னால் எவர் ஒருவருடன் போர் புரிய நேருமோ யுத்தம் செய்யும் ஆசையுடன்
அணி வகுத்து நிற்கும் இந்த எதிரிப்படை வீரர்களை நான் எது வரையில் காண்கிறேனோ —
அது வரை தேரை நிறுத்துவாயாக

யோத்ஸ்யமாநா நவேக்ஷேஹம் ய ஏதேத்ர ஸமாகதா–
தார்தராஷ்ட்ரஸ்ய துர்புத்தேர்யுத்தே ப்ரியசிகீர்ஷவ —৷৷1.23৷৷

தீய அறிவை யுடைய துரியோதனனுக்குப் போரிலே இனியதைச் செய்ய விரும்பியவர்களாய் எவர்கள் இப்போர் களத்தில்
வந்து கூடி இருக்கிறார்களோ போர் புரிய போகின்ற அவர்களை நான் காண்பேன் -என்று அர்ஜுனன் கூறினான்
துர் புத்தி உள்ளவர்கள் -தர்ம க்ஷேத்ரம் இங்கு அன்றோ நிற்கிறார்கள்

ஸஞ்ஜய உவாச
ஏவமுக்தோ ஹரிஷீகேஷோ குடாகேஷேந பாரத.—
ஸேநயோருபயோர் மத்யே ஸ்தாபயித்வா ரதோத்தமம் —৷৷1.24৷৷

பீஷ்மத்ரோண ப்ரமுகத ஸர்வேஷாம் ச மஹீக்ஷிதாம்.—
உவாச பார்த பஸ்யைதாந் ஸமவேதாந் குரூநிதி—৷৷1.25৷৷

சஞ்சயன் கூறினான்
பாரத குலத்தில் உதித்த திருதராஷ்ட்ரனனே –ஹ்ருஷீகேசனான ஸ்ரீ கண்ணன் தூக்கத்தை வென்ற
அர்ஜுனனால் இவ்வாறு கூறப்பட்டவனாய்
இரண்டு சேனைகளுக்கும் நடுவில் பீஷ்ம த்ரோணர்களுக்கும் எல்லா அரசர்களுக்கும் முன்னிலையில் சிறந்த தேரை நிறுத்தி
குடாகேசன்-அர்ஜுனா இங்குக் குழுமி உள்ள குரு வம்சத்து உதித்தவர்களைப் பார் என்று கூறினான் –
ஆஸ்ரித வாத்சல்ய விவஸ்திதம் -தேரோட்டியாக அமைத்து -கூடாரை வெல்லும் சீர் –
கூடுவாருக்கு தோற்பான் -கட்டுண்ணப் பண்ணும் பெரு மாயன்
பீஷ்மர் த்ரோணாராதி முன்னால் வேன்டும் என்னும் என்று நிறுத்துகிறான் —

தனக்குச் சாரதியாக அமர்ந்துள்ள ஹ்ருஷீகேசனை நோக்கினான் -சரணாகத வாத்சல்யன் –
ஸ்வாபாவிக ஞானம் பலம் சக்தி தேஜஸ் ஐஸ்வர்யம் வீரம் இவற்றின் இருப்பிடம்
சங்கல்ப லவலேசத்தாலே அனைத்தையும் செய்ய வல்லவன் -ஸ்ருஷ்ட்டி ஸ்திதி சம்ஹாரம் லீலையாக செய்பவன்
இந்த்ரியங்களுக்கி நாதன் -உள்ளும் புறமும் வியாபித்து நியமித்து தங்கி சேஷியாக இருப்பவன்
க்ரீடயா ஹ்ருஷ்யதி வ்யக்தமீச சந் ஸ்ருஷ்ட ரூபயா ஹ்ருஷீகேசத்வமீசத்வம் தேவத்வம் சாஸ்ய தத் ஸ்புடம் அவிகாரி தயா
ஜூஷ்டோ ஹ்ருஷிகோ வீர்ய ரூபயா ஈஸஸ் ஸ்வா தந்தர்ய யோகேந நித்யம் ஸ்ருஷ்ட்யாதி கர்மணி ஐஸ்வர்ய வீர்ய ரூபத்வம்
ஹ்ருஷீ கேஸத்வம் உச்யதே –அஹிர்புத்ன்ய சம்ஹிதை -53-44-/46-
அச்யுத-பத பிரயோகம் சரண் அடைந்தவர்களை நழுவ விடாதவன்
அப்படிப்பட்ட சர்வேஸ்வரன் அன்றோ அர்ஜுனன் உத்தரவு இடும்படி தன்னை தாழ்த்திக் கொண்டான்
அனைவரையும் நியமிக்க வல்ல சர்வேஸ்வரன் தன்னை நியாமகனாக ஏறிட்டுக் கொண்டானே
ஸ்வ சாரத்தியே அவஸ்திதம் -அனைவரது இந்திரியங்களை வசப்படுத்தி உள்ளவனுக்கு குதிரைகளை அடக்குவது பெரிய செயலோ
பீஷ்மர் துரோணர் மற்றவர் பார்த்துக் கொண்டு இருக்க அவர்களைக் கண்டு கொள்ளாமல் இவன் விருப்பத்துக்கு ஏற்ப
நீ வெல்லப்பட வேண்டியவர்களைப் பார் என்று கண்ணன் மறைமுகமாக அர்ஜுனன் இடம் கூறினான் –
வ்யவஸ்திதாந்-1-20-என்பதை விசேஷித்து யுயுத்ஸூந் -யுத்தம் செய்ய -என்றே கொள்ள வேண்டும்
இதையே யோத்து காமாநவஸ்திதாந்.-1-22-என்று விளக்குகிறார்
கபித்வஜ–1-20-லங்கா தஹன வானர த்வஜ -ராவண அரக்கர்கள் போலே நடுங்குவார்கள் என்பதைக் காட்டும்
பஸ்யைதாந் ஸமவேதாந் -1-25-வெற்றியின் இருப்பு இவ்விதம் -என்றவாறு

தத்ரா பஸ்யத் ஸ்திதாந் பார்த்த பித்ரூநத பிதாமஹாந்.–
ஆசார்யாந் மாதுலாந் ப்ராத்ரூந் புத்ராந் பௌத்ராந் ஸகீஂ ஸ்ததா—৷৷1.26৷৷

ஸ்வ ஸூராந் ஸுஹ்ருதஸ்சைவ ஸேநயோருபயோரபி.–

பிறகு அங்கு அர்ஜுனன் இரண்டு சேனையிலும் இருக்கும் பெரிய சிறிய தந்தையர் பீஷ்மர் முதலிய
பாட்டன்மார் துரோணர் முதலிய ஆச்சார்யர்கள் மாமன்மார் அண்ணன் தம்பிகள் பிள்ளைகள் பேரன்கள்
நண்பர்கள் மாமனார் நன்மை செய்தவர்கள் ஆகியோரைப் பார்த்தான்

தாந்ஸமீக்ஷ்ய ஸ கௌந்தேய–ஸர்வாந் பந்தூந வஸ்திதாந்–৷
க்ருபயா பரயாவிஷ்டோ விஷீதந்நித மப்ரவீத்.৷1.27৷৷

குந்தியின் மகனான அந்த அர்ஜுனன் போர் முனையில் நிற்கும் உறவினர்கள் அனைவரையும் நன்கு பார்த்து
மிகக் கருணையினால் நிறைந்தவனாய்த் துன்புற்று பின்வரும் வார்த்தைகளை ஸ்ரீ கண்ணன் இடம் கூறினான்

அர்ஜுந உவாச-
த்ருஷ்ட்வேமம் ஸ்வஜநம் கிருஷ்ண யுயுத்ஸும் ஸமுபஸ்திதம்—৷৷1.28৷৷

ஸீதந்தி மம காத்ராணி முகம் ச பரிஸூஷ்யதி.–
வேபதுஸ்ச ஸரீரே மே ரோமஹர்ஷஸ்ச ஜாயதே—৷৷1.29৷৷

அர்ஜுனன் கூறினான்
கண்ணா போர் புரிய விரும்பியவராய் முன்னே நிற்கும் இந்த உறவினரைப் பார்த்து
என்னுடைய கை கால் முதலிய அவயவங்கள் மெலிகின்றன-முகம் வாடுகிறது -என் உடலில் நடுக்கம் ஏற்படுகிறது –
மயிர்க் கூச்சம் உண்டாகிறது -கருணையால் பீடிக்கப் பட்டு கண்ண நீர் –
பூமிக்கு ஆனந்தம் செல்வம் கொடுப்பவன் கிருஷ்ண -சப்த பிரயோகம் இங்கு-

காண்டீவம் ஸ்ரம் ஸதே ஹஸ்தாத் த்வக்சைவ பரிதஹ்யதே—
ந ச ஷக்நோம்ய வஸ்தாதும் ப்ரமதீவ ச மே மந—৷৷1.30৷৷

என் கையில் இருந்து காண்டீபம் எனும் என் வில் நழுவுகிறது -என் தோல் முழுவதும் எரிகிறது –
நிலையாக நிற்பதற்கும் வல்லமை அற்றவனாக இருக்கிறேன் -என் மனமும் சுழல்வது போல் உள்ளது –

நிமித்தாநி ச பஸ்யாமி விபரீதாநி கேஸவ.—
ந ச ஸ்ரேயோ அநுபஷ்யாமி ஹத்வா ஸ்வஜநமாஹவே —৷৷1.31৷৷

கேசவனே தீமையைக் குறிக்கும் கெட்ட சகுனங்களையும் நான் பார்க்கிறேன் –
போரில் உறவினரைக் கொன்று நற்பயனை நான் காண்கின்றிலேன்
துர் நிமித்தங்கள்- கேசவ சப்தம் இங்கு -ப்ரஹ்மாதிகளுக்கும் நியாந்தா —

ந காங்க்ஷே விஜயம் கிருஷ்ண ந ச ராஜ்யம் ஸுகாநி ச.–
கிம் நோ ராஜ்யேந கோவிந்த கிம் போகைர் ஜீவிதேந வா—৷৷1.32৷৷

கண்ணா போரில் வெற்றியையோ -அரசையோ -சுகங்களையோ -நான் விரும்ப வில்லை
கோவிந்தன் எங்களுக்கு அரசினால் என்ன பயன் –
போகங்களினாலோ உயிருடன் இருப்பதனாலோ என்ன பயன்
கோவிந்த -சப்தம் -கன்றுகளுக்கு ரக்ஷகனாய் இருந்து வைத்து -பந்துக்களுக்குத் தீமை செய்ய தூண்டவோ

யேஷாமர்தே காங்க்ஷிதம் நோ ராஜ்யம் போகாஸ் ஸுகாநி ச–
த இமேவஸ்திதா யுத்தே ப்ராணாம் ஸ்த்யக்த்வா தநாநி ச—৷৷1.33৷৷

எவர்கள் பொருட்டு எங்களுக்கு அரசும் போகங்களும் சுகங்களும் விரும்பப் படுகின்றனவோ
அவர்கள் இப்போரில் உயிர்களையும் செல்வங்களையும் விடுவதற்குத் தயாராக நிற்கிறார்கள்
கைங்கர்யம் பண்ண வேண்டியவர்கள் அங்கே இருக்க –

ஆசார்யாஸ் பிதரஸ் புத்ராஸ் ததைவ ச பிதாமஹா–
மாதுலாஸ் ஸ்வ ஸூராஸ் பௌத்ராஸ் ஸ்யாலா ஸம்பந்தி நஸ்ததா—৷৷1.34৷৷

ஆச்சார்யர்கள் தந்தையர் பிள்ளைகள் பாட்டன்மார்கள் மாமன்மார்கள் மாமனார்கள் பேரர்கள்
மைத்துனர்கள் சம்பந்திகள் அனைவரும் இங்கு எதிரில் நிற்கின்றனர்

ஏதாந் ந ஹந்துமிச்சாமி க்நதோபி மதுஸூதந.–
அபி த்ரைலோக்ய ராஜ்யஸ்ய ஹேதோஸ் கிம் நு மஹீக்ருதே–৷৷1.35৷৷

மது ஸூதனனே எம்மைக் கொல்லுகிறவர்களாயினும் மூ உலக அரசுக்காகவும் இவர்களை நான் கொல்ல விரும்பவில்லை
பூ வுலகுக்காக இவர்களைக் கொல்ல விரும்பவில்லை என்பதைச் சொல்லவும்வேண்டுமோ
கொல்வதற்கு ஆசை இல்லை -இவர்கள் கொல்ல வந்தாலும் –
மது சூதன சப்தம் இங்கு -மூன்று உலகும் கொடுத்தாலும் வேண்டாம் –

நிஹத்ய தார்தராஷ்ட்ராந்ந கா ப்ரீதி ஸ்யாஜ்ஜநார்தந–
பாபமே வாஸ்ரயே தஸ்மாந் ஹத்வை தாநாததாயிந—৷৷1.36৷৷

ஜனார்த்தனனே திருதராஷ்டர புத்திரர்களைக் கொன்று நமக்கு என்ன மகிழ்ச்சி உண்டாகப் போகின்றது
இந்தப் படு பாவிகளைக் கொன்றால் நம்மைப் பாவம் தான் வந்தடையும்
ஜனார்த்தன -நல்லதே செய்பவன் அன்றோ –

தஸ்மாந்நார்ஹா வயம் ஹந்தும் -தார்தராஷ்ட்ராந் ஸ்வ பாந்தவாந்.–
ஸ்வஜநம் ஹி கதம் ஹத்வா ஸுகிந ஸ்யாம மாதவ—৷৷1.37৷৷

மாதவா ஆகவே நாங்கள் நம் உறவினரான திருதராஷ்ட்ர புத்திரர்களைக் கொல்ல வல்லவர்கள் அல்லோம்
உறவினரைக் கொன்று எப்படி சுகமுடையவர்களாக ஆவோம்
மாதவ -ஸ்ரீ யபதியாய் இருந்து வைத்து -அமங்களம் செய்யத் தூண்டுவதோ –

யத்யப்யேதே ந பஸ்யந்தி லோபோ பஹத சேதஸ–
குலக்ஷய க்ருதம் தோஷம் மித்ர த்ரோஹே ச பாதகம்—-৷৷1.38৷৷

கதம் ந ஜ்ஞேயமஸ்மாபி பாபாதஸ்மாந் நிவர்திதும்–
குலக்ஷயகரிதம் தோஷம் ப்ரபஸ்யத்பிர் ஜநார்தந—৷৷1.39৷৷

ஜனார்த்தனனே ராஜ்யத்தில் பேராசையினால் மதி இழந்த இந்த துரியோதனாதியார் குலத்தின் அழிவினால்
உண்டாகும் பாவத்தையும் நண்பர்களுக்குத் தீங்கு இழைப்பதினால் உண்டாகும் பாவத்தையும் காணவில்லையானாலும்
குலத்தின் அழிவினால் உண்டாகும் தீங்கை நன்கு காண்கின்றவர்களான எங்களால்
இப்பாவங்களில் நின்றும் மீள்வதற்கு எப்படி அறியாமல் இருக்க முடியும் –
குலம் அழியும் -தோஷம் கிட்டும் -மித்ர துரோகம் -அவர்கள் பார்க்க வில்லை -லோபம் பேராசையால் –
குல நாசம் நாங்கள் செய்ய மாட்டோம் -பாபம் போக்கத் தானே கார்யம் செய்ய வேன்டும்-

குலக்ஷயே ப்ரணஸ்யந்தி குலதர்மா ஸநாதநா–
தர்மே நஷ்டே குலம் க்ருத்ஸ்நம தர்மோபிபவத்யுத—৷৷1.40৷৷

குல நாசத்தினால் பழைமையான குல தர்மங்கள் சனாதன தர்மம் மாண்டு போகும்
தர்மம் அழிந்தால் குலம் முழுவதையும் அதர்மம் சூழ்ந்து குலத்தை வெல்கிறது

அதர்மாபிபவாத் க்ருஷ்ண ப்ரதுஷ்யந்தி குலஸ்த்ரிய–
ஸ்த்ரீஷு துஷ்டாஸு வார்ஷ்ணேய ஜாயதே வர்ண ஸங்கர—৷৷1.41৷৷

வ்ருஷ்ணீ குலத்தில் உதித்த கண்ணனே -அதர்மம் சூழ்ந்து கொள்வதால் குலப் பெண்கள் மிகவும் கெடுகின்றனர்
குலப் பெண்கள் கெட்டுப் போன அளவில் நான்கு வர்ணக் கலப்பு உண்டாகும்
ஸ்த்ரீகள் -கெட்டால் -வர்ணாஸ்ரமம் தர்மம் போகும் –

ஸங்கரோ நரகாயைவ குலக்நாநாம் குலஸ்ய ச.–
பதந்தி பிதரோ ஹ்யேஷாம் லுப்த பிண்டோதகக்ரியா—৷৷1.42৷৷

வர்ணக் கலப்பு குலத்தை அழித்தவர்களுக்கும் குலத்திற்கும் நரக வாசம் ஏற்படவே காரணம் ஆகிறது
இவர்களுடைய பித்ருக்களும் பிண்டக் கிரியை உதக கிரியை –சிரார்த்தம் -தர்ப்பணம் -ஆகியவற்றை
இழந்து கீழ் உலகில் வீழ்கின்றனர்
நரகம் நிச்சயம் -பித்ருக்கள் -பிண்ட பிரதானம் செய்ய முடியாமல் தலை குப்புற விழும் படி ஆகும்

தோஷைரேதை குலக்நாநாம் வர்ண ஸங்கரகாரகை-
உத்ஸாத்யந்தே ஜாதிதர்மா குலதர்மாஸ்ச ஸாஸ்வதா—৷৷1.43৷৷

குல நாசம் செய்தவர்களின் இந்த வர்ணக் கலப்பு ஏற்படுகின்ற குற்றங்களினால்
நிலையானவைகளான ஜாதி தர்மங்களும் குல தர்மங்களும்-சனாதன தர்மங்களும் அழிகின்றன

உத்ஸந்ந குல தர்மாணாம் மநுஷ்யாணாம் ஜநார்தந-
நரகேநியதம் வாஸோ பவதீத் யநுஸூஸ்ரும—৷৷1.44৷৷

ஜனார்த்தனனே குல தர்மம் அடியோடு அழியப் பெற்ற மனிதர்களுக்கு நரகங்களில்
எப்போதும் வாசம் ஏற்படுகிறது என்று கேள்விப் படுகின்றோம் -நரக வாஸம் நிச்சயம் –

அஹோ பத மஹத் பாபம் கர்தும் வ்யவஸிதா வயம்–
யத் ராஜ்ய ஸுகலோபேந ஹந்தும் ஸ்வஜந முத்யதா—৷৷1.45৷৷

அந்தோ பாவம் நாம் பெரும் பாவம் செய்ய முனைந்து விட்டோம் -ஏன் என்னில்
ராஜ்ய சுகத்துக்கு ஆசைப்பட்டு நம் உறவினர்களையே கொல்லத் துணிந்து விட்டோம் –
அநியாயம் -பெரிய பாபம் செய்ய அன்றோ -ராஜ்யம் சுகம் பேராசையால் வந்தோம் –

யதி மாம ப்ரதீகாரம ஸஸ்த்ரம் ஸஸ்த்ர பாணய–
தார்தராஷ்ட்ரா ரணே ஹந்யுஸ் தந்மே க்ஷேமதரம் பவேத்–৷৷1.46৷৷

போரில் பழி வாங்காதவனாய் ஆயுதம் அற்றவனான என்னை ஆயுதத்தைக் கையில் ஏந்திய
திருத்ராத்ட்ரா புத்திரர்கள் கொல்வார்கள் ஆகில் அதுவே எனக்கு மிகவும் நன்மையாகும்
என்று அர்ஜுனன் கூறினான்
நான் சண்டை போடாமல் -ஓடினாலும் -என்னை கொன்றாலும் நல்லதே

ஸஞ்ஜய உவாச–
ஏவமுக்த்வார்ஜுந ஸம்க்யே ரதோபஸ்த உபாவிஸத்–
விஸ்ருஜ்ய ஸஸரம் சாபம் ஷோக ஸம் விக்ந மாநஸ—৷৷1.47৷৷

சஞ்சயன் கூறினான்
இவ்வாறு கூறி அம்புடன் கூடிய வில்லைக் கை விட்டு துன்பத்தால் துவளும் மனமுடையவனாய்
போரில் தேரின் மேல் அர்ஜுனன் அமர்ந்து விட்டான் -என்று சஞ்சயன் கூறினான்
ரதம் நடுவில் அமர்ந்து அழ -வில் கீழே விழ -சோகம் பீடித்து -நீர் தளும்ப -சோகம் பட்டு நிற்கிறான் –

மிகவும் பரந்த மனம் உடையவன் -கருணை உடையவன் -உறவினர்களை விரும்புபவன் -தர்மத்தின் வழியில் நிற்பவன் அர்ஜுனன்
இவர்களோ என்னில் அரக்கு மாளிகையில் தீ வைத்து மேலும் பல முறை பல வஞ்சனை செயல்களைச் செய்தவர்கள் –
இருந்தாலும் அவர்கள் மேல் இரக்கமும் கருணையும் அன்பும் கொண்டான் -தர்மத்துக்குப் பயந்தான் –
நான் போர் புரிய மாட்டேன் என்று வில்லைக் கை விட்டான் -கலங்கிய மனத்துடன் தேரில் அமர்ந்தான் –

ந காங்க்ஷே விஜயம்-1-32-வெற்றிகளை துச்சமாக எண்ணுபவன் –
மஹா மந –பெரிய மனம் படைத்தவன் –
க்ருபயா பரயாவிஷ்டோ-1-28-கருணையால் பீடிக்கப்பட்டவன்
அக்னி தோ கரதச்சைவ சஸ்த்ர பாணிர்தநாபஹ -க்ஷேத்ர தார ஹரச்சைவ -ஷடதே ஆத தாயிந -என்று
தீ வைத்தவன் -விஷம் வைப்பவன் -ஆயுதம் தங்கி அழிக்க வருபவன் -செல்வத்தை அபகரித்தவன் -நிலத்தை அபகரித்தவன் –
மற்றவன் மனைவியை அபகரித்தவன் -ஆறு பேர்களும் ஆத தாயிகள்
ஆத தாயி நமாயாந்தம் ஹந்யா தேவா விசாரயன் -நாத தாயிவதே தோஷ ஹந்துர் பவதி கம்சனை –மனு ஸ்ம்ருதி -8-351-
தன்னை அழிக்க வரும் ஆததாயியை எந்த யோசனை இன்றி அழிக்க வேண்டும் -எந்தப்பாவமும் உண்டாகாது
பரம புருஷ சஹாயா -துணையாகக் கொண்ட என்றும் ஸ்ரீ கீதா யோக சாஸ்திரம் வெளியிட வியாஜ்யமாக என்றுமாம்
வில்லையும் அம்பையும் கீழே போட்டு தேர் எஜமானன் அமர வேண்டிய இடத்தை விட்டு கீழ்த் தட்டில் அமர்ந்தான்

———————————

ஸ்ரீ கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ வேதாந்த தேசிகன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ ஆளவந்தார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

ஸ்ரீ கீதா பாஷ்யம் -தமிழ் மொழி பெயர்ப்பு -–ஸ்ரீ பரம ஹம்ஸ விஞ்ஞான யோகம் — -7-அத்யாயம் தொடக்கம் -சங்கதி –

December 11, 2019

ஸ்ரீ யபதி-அடைய வேண்டியது -நிரதிசய அளவில்லா பேரின்பம் அடைய -அதுக்கு த்யானம் வேண்டும் – –
ஸ்ரீ கிருஷ்ண பகவான் முதல் ஆறு அத்யாயங்களினால் அந்த தியானத்துக்கு வேண்டிய ஜீவாத்மா சாஷாத்காரமும்
அதுக்கு ஜீவாத்மாவின் யாதாம்ய உள்ளபடியான ஞானம் வேண்டும் என்றும்
அந்த உள்ளபடி ஞானம் வர கர்மங்களைச் செய்ய வேண்டும் என்றும் முதல் ஆறு அத்தியாயங்களில் -அருளிச் செய்து
நடுவில் உள்ள ஆறு அத்தியாயங்களில் -அடைய வேண்டிய பகவானின் ஸ்வரூபத்தையும்
பக்தி என்று சொல்லப்படுகிற தியானத்தையும் அருளிச் செய்கிறார்
இந்த சங்கதி -18-அத்யாயம் -46-ஸ்லோகம் தொடங்கி -9-ஸ்லோகங்களால் அருளிச் செய்கிறார்

ஸ்வே ஸ்வே கர்மண்ய பிரத ஸம் ஸித்திம் லபதே நர–
ஸ்வ கர்ம நிரத ஸித்திம் யதா விந்ததி தச் ஸ்ருணு–৷৷18.45৷৷

கேள் -தங்கள் தங்கள் கர்மங்களில் ஆசை நிலை நின்று மோக்ஷம் அடைகிறார்கள் –
கர்மங்களில் நிலை நின்றவன் சித்தி அடைவது எப்படி
2-அத்யாயம் தொடங்கிய இடம் மீண்டும் இங்கு -கர்ம யோகம் பண்ணி –

யதம் ப்ரவரித்திர் பூதாநாம் யேந ஸர்வமிதம் ததம்.–
ஸ்வ கர்மணா தமப்யர்ச்ய ஸித்திம் விந்ததி மாநவ—৷৷18.46৷৷

முக்தி -அடைகிறான் -எவன் இடம் இருந்து ஜீவ ராசிகள் உத்பத்தியோ அடைகின்றனவோ – வியாபிக்க பட்டு இருக்கிறதோ
அந்த பரம் பொருளை -அர்ச்சனை பண்ணி -வர்ணாஸ்ரம கர்மாக்களில் புஷபம் அர்ச்சனை -பிரித்து விட்டு –

ஷ்ரேயாந் ஸ்வ தர்மோ விகுண பரதர்மாத் ஸ்வநுஷ்டிதாத்–
ஸ்வபாவ நியதம் கர்ம குர்வந்நாப்நோதி கில்பிஷம்–৷৷18.47৷৷

வர்ணாஸ்ரமமே கர்மா யோகம் -14-வகை கீழே பார்த்தோம் தீர்த்த யாத்திரை போல்வன –
பரிணமித்து பரம பக்தி வரை -உயர்ந்தது
தன் கர்மா உயர்ந்தது -குறைவாக செய்யப் பட்டாலும் இதுவே உயர்ந்தது –
பர தர்மம் ஞான யோகம் -நன்றாக அனுஷ்ட்டிடிக்கப் பட்டத்தை விட -இதுவே பழகியது —

ஸஹஜம் கர்ம கௌந்தேய ஸதோஷமபி ந த்யஜேத்–
ஸர்வாரம்பா ஹி தோஷேண தூமேநாக்நிரிவாவரிதா–৷৷18.48৷৷

தோஷம் -இங்கு உடம்பு வருத்தம் ஞான யோகம் இந்திரியம் அடக்குவது கஷ்டம் -இதுவே சகஜம் –
ஆயாசம் வந்தாலும் விட முடியாதே
எதை ஆரம்பித்தாலும் கர்ம ஞான -அக்னியில் புகை போலே ஆயாசம் இருக்குமே

அஸக்த புத்தி ஸர்வத்ர ஜிதாத்மா விகதஸ் பரிஹ–
நைஷ்கர்ம்ய ஸித்திம் பரமாம் ஸந்யாஸேநாதி கச்சதி–৷৷18.49৷৷

ஞான யோகம் மூலம் அடையும் தியான நிஷ்டையும் கர்ம யோகத்தால் கிட்டும் –
கர்ம யோகத்துக்குள் ஞான பாகம் உண்டே
கர்மம் என்னது இல்லை பலன் என்னது இல்லை ஞானமே தியானத்தின் மூட்டும் –
நைஷ்கர்ம்ய ஸித்திம் -தியாகத்தால் கிட்டும் -த்ரிவித தியாகம் -சந்நியாசம் –

ஸித்திம் ப்ராப்தோ யதா ப்ரஹ்ம ததாப்நோதி நிபோத மே–
ஸமாஸேநைவ கௌந்தேய நிஷ்டா ஜ்ஞாநஸ்ய யா பரா–৷৷18.50৷৷

புத்த்யா விஷுத்தயா யுக்தோ தரித்யாத்மாநம் நியம்ய ச–
ஷப்தாதீந் விஷயாம் ஸ்த்யக்த்வா ராகத்வேஷௌ வ்யுதஸ்ய ச–৷৷18.51৷৷

விவிக்த ஸேவீ லக்வாஷீ யத வாக் காய மாநஸ–
த்யாந யோக பரோ நித்யம் வைராக்யம் ஸமுபாஷ்ரித–৷৷18.52৷

அஹங்காரம் பலம் தர்பம் காமம் க்ரோதம் பரிக்ரஹம்–
விமுச்ய நிர்மம ஷாந்தோ ப்ரஹ்ம பூயாய கல்பதே–৷৷18.53৷৷

ப்ரஹ்மபூத ப்ரஸந்நாத்மா ந ஷோசதி ந காங்க்ஷதி–
ஸம ஸர்வேஷு பூதேஷு மத்பக்திம் லபதே பராம்–৷৷18.54৷৷

சாஷாத்காரம் பற்றி -புத்தி -உண்மையான கலக்கம் அற்ற புத்தி சாத்விக த்ருதி
சப்தாதி விஷயாந்தரங்கள் -விருப்பு வெறுப்பு தொலைத்து -ஏகாந்தமான இடத்தில் -குறைந்த உணவு உண்டு
அடக்கப்பட்ட வாக்கு காயம் மனஸ்-த்யான யோகம் -நித்ய வைராக்யம் கொண்டு அஹங்காரம் பலம் வாசனை –
கர்வம் பேராசை கோபம் உறவுகளை விட்டு-நிர்மம -சாந்தமாக ஆத்மாவே இனியது ப்ரஹ்மம் ஆத்ம அனுபவம் பெறுகிறான் –
என்னை தவிர வேறு ஒன்றில் விருப்பம் இல்லாமல் -சம புத்தி கொண்டு என் பக்தியையும் பெறுகிறான் –
ஆத்ம சாஷாத்காரம் -உண்மை அறிவை பெற்று த்யானம் -பரமாத்மாவுக்கு சரீரம் சேஷ பூதன் நினைக்க நினைக்க -மாறுவான்
ஞான ஆனந்த மயன் விட சேஷத்வமே பிரதானம் -இது முதல் படி -பக்தியில் மூட்டும் –
என் விஷயமான உயர்ந்த பக்தியை அடைகிறான் -மனஸ் கலங்காமல் -என்னையே நினைத்து –
மற்றவை பற்றி நினைக்காமல் விரும்பாமல் -சமமாக ஜீவராசிகளை நினைத்து
எட்டு காரணங்கள்-
1 -ஈஸ்வரன் என்று புரிந்து -ஆட்சி செலுத்துபன் அவனே –
2-காரண வஸ்துவை த்யானம் பண்ண சுருதிகள் சொல்லுமே -நிகில ஜகத் உதயலய லீலா –
3-நிரஸ்த நிகில தோஷ அகில ஹேய ப்ரத்ய நீகம் கல்யாண ஏக குணாத்மகம் பரம பாவ்யம் பவித்ராணாம் -மங்களங்களுக்கு இருப்பிடம்
4- அனவதிக அதிசய -இதம் பூர்ணம் -சர்வம் பூர்வம் –
5-அழகுக்கு குறை இல்லையே அம்ருத லாவண்ய சாகரம் அன்றோ
6-ஸ்ரீ யபதி -மூவர் ஆளும் உலகமும் மூன்று -நடுவாக வீற்று இருக்கும் நாயகன்
7-புண்டரீக நாயகன் -கீழே லாவண்யம் இங்கு ஸுந்தர்யம்-
அமலங்களாக விழிக்கும் -கமலக் கண்ணன் -தூது செய் கண்கள் -ஜிதந்தே புண்டரீகாஷா
8-ஸ்வாமி -இந்த காரணங்களால் –
தன்னடையே பரமாத்மா சிந்தனைக்கு கூட்டி செல்லும் -தேகமே எல்லாம் என்ற நினைவு மாறுவது தான் கஷ்டம் —

உபநிஷத்துக்களில் –
சில இடங்களில் ஞானான் மோக்ஷம் -அவனைப் பற்றிய அறிவினால் அவனை அடைய வேண்டும் –
இன்னும் ஒரு இடத்தில் அவனது நினைவினால் அவனை அடைய வேண்டும் என்கிறது
இன்னும் ஒரு இடத்தில் இடைவிடாத நினைவினால் அவனை அடையலாம் என்கிறது
ஞானம் அறிவு -ஸ்ம்ருதி நினைவு -நித்யாஸனம் -இடைவிடாத நினைவு –சாஷாத்காரம் —
இவை அனைத்தும் பர்யாயச் சொற்கள் –
இதே போலே வேதத்தில் நாலுகால் பிராணியைக் கொண்டு யாகம் செய் என்றும்
இன்னும் ஒரு இடத்தில் வெள்ளாட்டின் வயிற்றில் இருக்கும் வினையை ஹோமம் பண்ணுவதற்குத்
தகுந்த மந்த்ரத்தைச் சொல்லு என்று அத்த்வர்யு ஹோதாவை ஏவுகிறான் என்றும் சொல்லுகிறது –
இதனால் நாலு கால் பிராணி வெள்ளாடு என்று மீமாம்சையில் நிர்ணயம் -சாமான்ய விசேஷ நியாயம் –
அதே நியாயம் இங்கும் -அறிவு என்றது பொதுச் சொல் -அதில் அடங்கினது நினைவு -இதுவும் பொதுச் சொல் –
இதனுள் அடங்கினது இடைவிடாத நினைவு -அது கண்ணால் பார்ப்பது போலே தெளிவாக இருக்கலாம் –
அல்லது -தெளிவு இல்லாமல் இருக்கலாம் –
ஆகவே இந்த பொதுச் சொற்களுக்கு எல்லாம் கண்ணாலே பார்ப்பது போல் தெளிவாய் இடைவிடாமல் நினைப்பது என்றே பொருள்

மேலும் வேதத்தில் ஒரு இடத்தில் -பெரியவர்கள் இடத்தில் பகவானைப் பற்றி கேட்க வேணும் என்றும் –
கேட்ட சங்கதியை யோசிக்க வேணும் என்றும் – பிறகு பகவானை த்யானம் செய்ய வேண்டும் என்றும் –
தியானத்தால் அவனை அடையலாம் என்றும் சொல்லி இருக்கிறது
இன்னும் ஒரு இடத்தில் பகவானைக் கேட்பதினாலும் -யோசிப்பதினாலும் –த்யானம் பண்ணுவதினாலும் அடைய முடியாது
பின்னை எப்படி அடையலாம் என்றால் அவன் -எவனைக் கூப்பிடுகின்றானோ அவனால் தான் அவனை அடைய முடியும் –
அவனுக்குத் தான் அவன் தன்னைக் காட்டுவன்-என்று சொல்லி இருக்கிறது –
இப்படியும் வேதம் சொல்லுகிறதே -நாம் எத்தை செய்வது -த்யானம் செய்வதா –
வெறுமனே இருந்து அவன் எப்போது கூப்பிடுவான் என்று இருப்பதா –
அன்யோன்ய ஆஸ்ரயம் -ராமன் கிருஷ்ணன் -இருவர் -ஒருவர் மற்றவருக்கு தன் மேல் மிக்க பிரியம் இருந்தால்
கூப்பிடுவான் -இவன் அவன் இடம் ப்ரீதி வைத்தான் ஆகில்,அவன் இவன் இடம் மிக்க பிரியம் வைப்பான் –
ஆகவே இடைவிடாத நினைவு மட்டும் போதாது -பிள்ளை பெண்டாட்டிகள் மேல் பிரியம் வைப்பது போலே
ப்ரீதி உடன் இடைவிடாமல் நினைத்தால் அவனுக்கு நம் மேல் மிக ப்ரீதி உண்டாகும் –
அப்போது அவன் நம்மைகே கூப்பிடுவான் –
எனவே ப்ரீதியுடன் இடைவிடாமல் தியானித்தால் அவனை அடையலாம் என்று கொண்டால்
அனைத்தையும் சமன்வயப்படுத்தலாமே

பகவானுக்கு நம்மிடத்தில் அளவில்லாத ப்ரீதி இருக்கிறது -இன்றோ நேற்றோ அல்ல -அநாதியாய் இருக்கிறது –
நாமோ அநாதி காலமாக அவனை அறியாமலே இருந்தோம் –
அதுக்கும் மேலே அக்ருத்ய க்ருத்யங்களைச் செய்தும் கிருத்ய அக்ருத்யங்களையும் செய்தும்
அவனுக்கு மிக வருத்தம் கொடுக்கும் படி அன்றோ வேலைகளைச் செய்து கொண்டே இருக்கிறோம்
இப்படி இருக்கும் பொழுது -பெரியோர்கள் மூலம் அவனை அறிந்து கொஞ்சம் ப்ரீத்தியை அவன் இடம் பண்ணினால்-
அவனது தயையினால் நம்மிடம் அளவில்லாப் ப்ரீதி வைத்து தன்னிடம் நம்மைச் சேர்த்துக் கொள்கிறான் –
இப்படி ப்ரீதியுடன் -கண்ணாலே காண்பது போலே தெளிவாய் -இடைவிடாமல் நினைப்பதையே பக்தி என்றும் –
பக்தி யோகம் என்றும் சொல்கிறது –

ஜ்ஞான கர்மாத்மிகே நிஷ்டே யோக லஷ்யே ஸூ ஸம்ஸ்க்ருதே
ஆத்மாநுபூதி சித்த்யர்த்தே பூர்வ ஷட்கே ந சோதிதே — ஸ்ரீ கீதார்த்த ஸங்க்ரஹம்–2-

ஜீவாத்ம சாஷாத்காரம் -யோகத்தை அடையும் விதத்தையும் -ஆத்ம அனுபவத்தை அடையும் விதத்தையும்-
பகவத் விஷய ஞானம் -இதர விஷய வைராக்யம் -இவற்றால் அலங்கரிக்கப் பட்ட
ஞான கர்ம யோகங்கள் முதல் ஆறு அத்தியாயங்களில் அருளிச் செய்யப் பட்டன –

மத்யமே பகவத் தத்தவ யாதாத்ம்யாவாப்தி சித்தயே
ஜ்ஞான கர்மாபி நிர்வர்த்த்யோ பக்தி யோக பிரகீர்த்திதே -ஸ்ரீ கீதார்த்த ஸங்க்ரஹம்–3-

மத்திய ஆறு அத்தியாயங்களில் ஞான கர்ம யோகம் மூலம் உண்டாக வல்ல பர ப்ரஹ்மத்தின் உண்மையான அனுபவம் பெற-
ஞான கர்ம யோகங்களால் சாதிக்கப்படும் -பக்தி யோகம் விரிவாக அருளப்படுகிறது –
ஞானம் த்யானம் உபாசனம்-மூலமே அடையலாம் – -உபநிஷத் சொல்லும்
தமேவ வித்வான் –அம்ருத இஹ பவதி -ஞான யோகத்தால்
ஸ்ரோதவ்யா கேட்டு மந்தவ்ய -நினைத்து -நிதித்யாஸவ்ய -தைல தாராவத் -தியானாதால்
உபாசனம் –ஞானம் வந்து -வேறு ஓன்று நினைவு இல்லாமல்
இங்கு பக்தி –உபாசனத்தில் அன்பு காதல் வேட்கை -கலந்து -வேறு வேறு நிலைகள் –
ஸ்நேஹம் பூர்வம் அநு த்யானம் -பக்தி என்றவாறு –
பீதி இல்லாமல் -பக்தியுடன் திரு – ஆராதனம் –
கேள்விகள் இல்லாமல் -அனுபவம் -இங்கு -கீழே ஞானத்துக்கு கேள்விகள் -தர்க்க ரீதியாக பதில்கள் உண்டு –
7–8–9-பக்தி யோகம் முடியும்–பக்தர் ஏற்றம் -பக்தி பெருமை -பற்றி சொல்லி கடைசியில்
ஒரே ஸ்லோகத்தால் பக்தி யோகம் கௌரவம் தோன்ற -பீடிகை கீழ் எல்லாம் – மீண்டும் சொல்கிறேன் -கேளு
ஆரம்பித்து –9-அத்யாயம் -சொல்ல வந்தால் தடுக்க வில்லையே சொல்கிறேன் -என்பான் -மேகம் தானே வர்ஷிக்குமே – –

————–

ஏழாவது அத்தியாயத்தில்
த்யானம் பண்ண வேண்டிய பகவானின் ஸ்வரூபத்தை உண்மையையும்
உடம்புடன் சேர்ந்து இருப்பதால் அந்த உண்மை நமக்கு மறந்து இருக்கிறது என்றும்
அந்த மறதியைப் போக்க அவனைகே கெஞ்சிக் கேட்டுக் கொள்ள வேணும் என்றும்
அவனைத் த்யானம் செய்பவர்களின் பிரிவுகளையும் –
அவர்களில் பகவான் தானே வேண்டும் என்று த்யானம் செய்பவர்களின் உயர்த்தையையும் அருளிச் செய்கிறார்

ஸ்வ யாதாத்ம்யம் ப்ரக்ருத்யாஸ்ய திரோதிஸ் சரணாகதி
பக்தபேத ப்ரபுத் தஸ்ய ஸ்ரைஷ்ட்யம் சப்தம உச்யதே -ஸ்ரீ கீதார்த்த ஸங்க்ரஹம்-11-

1–ஸ்வ யாதாத்ம்யம்-தன்னுடைய இயற்கையான தன்மை -பெருமைகள் –12-ஸ்லோகங்கள் வரை
2– ப்ரக்ருத்யாஸ்ய திரோதிஸ்–மாயை -பிரகிருதி -தடுப்பு சுவர் -`13–14-ஸ்லோகங்கள்
3— சரணாகதி –மேலே -18-அத்யாயம் சரணாகதி வேறே -இங்கு பிரக்ருதி திரை போக்க –
அவனை பற்றிய உண்மையான ஞானம் பிறக்க
4—பக்தபேத–வருபவர் நான்கு வகை – வராதவர் நான்கு வகை
5— ப்ரபுத் தஸ்ய ஸ்ரைஷ்ட்யம்–மிகவும் பிடித்த பகவத் லாபார்த்தி ஞானி பக்தன் –

—————-

ஸ்ரீ பகவாநுவாச

மய்யாஸக்தமநா பார்த யோகம் யுஞ்ஜந்மதாஷ்ரய–
அஸம் ஷயம் ஸமக்ரம் மாம் யதா ஜ்ஞாஸ்யஸி தஸ் ஸ்ருணு৷৷—7.1৷৷

என்னிடத்தில் உயர்ந்த ப்ரீதி இருப்பதனால்
என்னுடைய ஸ்வரூப -குணங்கள் -சேஷ்டிதங்கள் -விபவங்கள்-இவற்றை விட்டுப் பிரிந்தால்
அரை க்ஷணம் கூடத் தங்க முடியாமல் இருப்பதால் எப்போதும் என்னையே நினைத்துக் கொண்டும்
என்னாலே எப்போதும் தூக்கப்பட்டும் இருந்து கொண்டு என்னைத் த்யானம் செய்ய ஆரம்பிக்க சந்தேகம் இல்லாமல்
என்னுடைய எல்லா சங்கதிகளையும் எப்படிச் சொன்னால் நீ அறிவாயோ அந்த மாதிரிச் சொல்லுகிறேன் –
நீ ஜாக்ரதையாகக் கேள் -என்று ஸ்ரீ கிருஷ்ண பகவான் அருளிச் செய்கிறான்

தஸ் ஸ்ருணு-நன்றாக கேளு -முக்கிய விஷயம் என்பதால் உசார் படுத்துகிறான்
மய்யாஸக்தமநா -என்னிடமே செலுத்திய மனசை உடையவனாய் –
என்னை விட்டு க்ஷணம் காலமும் பிரிய அசக்தனாய் -தரியாதவனாய் –
என்னை நெகிழக்கிலும் என்னுடைய நல் நெஞ்சை -அகல்விக்க தானும் கில்லான்-ஆழ்வார்களாதிகளையே சொல்கிறான்
மால் கொள் சிந்தையராய் -மாலே ஏறி மால் அருளால் -அருளிச் செய்த –
மத் ஆஸ்ரய –என்னை அடைந்து -பக்தி யோக நிஷ்டானாய் –
யோகம் யுஞ்ஜந்–பக்தி யோகம் ஆரம்பிக்கும்
சந்தேகம் இல்லாமல் பூர்ணமாக உனக்கு தெரியும் படி சொல்கிறேன் -முதல் மூன்று ஸ்லோகங்கள் அவதாரிகை

ஜ்ஞாநம் தேஹம் ஸவிஜ்ஞாநமிதம் வக்ஷ்யாம் யஷேஷத-
யஜ்ஜ்ஞாத்வா நேஹ பூயோந் யஜ்ஜ்ஞாதவ்ய மவஸிஷ்யதே৷৷—7.2৷৷

நான் உனக்கு என் விஷயமான இந்த ஞானத்தை விசேஷ ஞானத்தோடு கூட முழுவதும் கூறுகிறேன் –
எந்த இந்த அறிவை அறிந்த பின் என் விஷயத்தில் மறுபடியும் அறிய வேண்டியது
வேறு ஒன்றும் மிகுதி இல்லையோ -அந்த ஞான விஞ்ஞானங்களைக் கூறுகிறேன்
திடப்படுத்த -உனக்காக ஞானம் -விசேஷித்த ஞானத்தை சொல்கிறேன் —
விவித விருத்த விசேஷ விசித்திர ஞானம், விஞ்ஞானம் -இங்கு விசேஷ ஞானம்
ஸ்வரூப நிரூபக தர்மம் -முதல் அறிய –இயற்கையை விவரிக்க -வியாவர்த்திக்க -இவற்றைச் சொல்லி –
லக்ஷணம் -அடையாளம் -இன்னான் -ஞானம் -இது -நிரூபித்த ஸ்வரூப விசேஷணங்கள் மேலே –
இனையான்-அருமை பெருமைகள் -விஞ்ஞானம் இது -வைபவம் அறிய -வேத வாக்கியங்களை கொண்டு -சொல்லுகிறேன் –
யத்தை தெரிந்து கொண்டால் வேறு ஒன்றை அறிய வேண்டாமோ அத்தை உனக்கு சொல்கிறேன் –

மநுஷ்யாணாம் ஸஹஸ்ரேஷு கஸ்சித் யததி ஸித்தயே.–
யததாமபி ஸித்தாநாம் கஸ்சிந் மாம் வேத்தி தத்த்வத–৷৷—7.3৷৷

சாஸ்திரங்களைக் கற்கத் தகுதி படைத்தவர்களுக்குள் ஆயிரக் கணக்கானவர்களில் ஒருவனே
பயனை அடையும் வரையில் முயல்கின்றான் –
பயனை அடையும் வரையில் முயல்கின்றவர்களுக்குள் ஆயிரக் கணக்கானவர்களில்
ஒருவனே என்னை உள்ளபடி அறிகிறான்
பக்தனை கொண்டாடிக்கிறான் –மனுஷ்யர் -விசேஷணம் இல்லாமல் -அனைவரும் அதிகாரிகள்
அதில் யாரோ ஒருவன் தான் என்னை உள்ளபடி தெரிந்து அடைகிறான் -துர்லபம் –வாக்குக்கும் மனசுக்கும் எட்டாதவன் –
யாரும் ஒரு நிலைமையன் என அறிவரிய எம்பெருமான் —அவனே காட்டக் காணலாம் –
யாரும் ஒரு நிலைமையன் என அறிவெளிய எம்பெருமான் –

————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ சதுஸ் ஸ்லோகீ—ஸ்ரீ நிகமாந்த தேசிகன் ஸ்வாமிகள் அருளிச் செய்த வியாக்யானம் –

December 10, 2019

ஸ்ரீ மத் கிருஷ்ண சமாஹ்வாய நமோ யாமுன ஸூநவே
யத் கடாஷைக லஷ்யாணாம் ஸூலப ஸ்ரீ தரஸ் சதா –

—————-

ஸ்வ சேஷ சேஷார்த்தோ நிரவதிக நிரப்பாத மஹிமா
பலாநாம் ததா ய பலம் அபி ச சரீரகமித
ஸ்ரியம் தத் சத்நிஸீம் தத் உபசதந த்ராச சமநீம்
அபிஷ்டவ்தி ஸ்துத்யாம் அவிதத மதிர் யாமுந முனி –

ஸ்ரீ யபதி -சர்வேஸ்வரன் -ஓத்தார் மிக்கார் இலாய மா மாயன் -சர்வபல ப்ரதன்-தானே பலத்தை அனுபவிப்பவன் –
சரீர சாஸ்த்ரத்தால் பிரதி பாதிக்கப்படுபவன் -அவனை உபாசிப்பதில் அச்சத்தைப் போக்கி
அருளுபவளான ஸ்ரீ பெரிய பிராட்டியாரை -க ஸ்ரீ ஸ்ரீய -என்றபடி திருவுக்கும் திருவாகிய செல்வன் அன்றோ-
ஸ்ரீ ஆளவந்தார் ஸ்தோத்ரம் பண்ணி அருளுகிறார்

———————————————

காந்தஸ் தே புருஷோத்தம
பணி பதிஸ் சய்யா ஆசனம் வாஹனம்
வேதாத்மா விஹகேச்வரோ
யவ நிகா மாயா ஜகன் மோஹிநீ
ப்ரஹ்மே ஸாதி ஸூ ராவ் ரஜஸ்
சத யிதஸ் த்வத் தாஸ தாஸீ கண
ஸ்ரீரித் யேவ ச நாம தே பகவதி
ப்ரூம கதம் த்வாம் வயம்–1-

————————–

காந்தஸ் தே புருஷோத்தம—-
காந்தன் -அனைத்து விதத்திலும் சேரும்படி உள்ளவன் என்றபடி -பிரியமாக உள்ளவன் –
தே -அனைத்து மங்களுக்கும் காரணமாக
ப்ரமாணங்களிலே கூறப்படும் உனக்கு
காந்தஸ் தே -இரண்டாலும் தேவதேவ திவ்ய மஹிஷீம்-ஸ்ரீ சரணாகதி கத்யம் -என்றது கூறப்பட்டது

புருஷோத்தம –
த்வவ் இமவ் புருஷவ் லோகே –ஸ்ரீ கீதை -15-16-என்றபடி இதர ஸமஸ்த விலக்ஷணன் என்பதால்
இந்த திருநாம பிரயோகம் –இங்கு பல சமாசங்கள் கொண்டு விளக்கலாம்
அவதாரத்திலும் நாரீணாம் உத்தம –ஸ்ரீ பாலா -1-27-
இவ்வாறு அவனது சம்பந்தம் மூலமாகவே இவளுக்கு உத்க்ருஷ்டம்

பணி பதிஸ் சய்யா ஆசனம் வாஹனம் வேதாத்மா விஹகேச்வரோ
பணி பதிஸ் சய்யா–அவனுக்கு விபூதிகளால் வந்த மேன்மை இவளுக்கும் உண்டு என்பதால்
நித்ய ஸூரீகள் அனைவரும் இவளுக்கும் சேஷபூதர்கள் என்கிறார்
பணி பதி என்பதன் மூலம் நறுமணம் மேன்மை குளிர்ச்சி விசாலம் உயர்த்தி -தன்மைகளைச் சொல்லி

கல்பாந்தே யஸ்ய வக்த்ரேப்ய விஷ அநல ஸிக உஜ்ஜ்வல –சங்கர்ஷண ஆத்மகோ ருத்ரோ நிஷ்கர்ம்ய அத்தி ஜகத் த்ரயம் –
ஆஸ்தே பாதாள மூலஸ்த சேஷ அசேஷ ஸூரார்ஜித-தஸ்ய வீர்யம் பிரபாவம் ச ஸ்வரூபம் ரூபம் ஏவ ச –
ந ஹி வர்ணயிதும் சக்யம் ஞாதும் வா த்ரிதசை அபி -ஸ்ரீ விஷ்ணு புராணம் –2-5-21-

பிரளயத்தின் போது ஆதி சேஷன் வாயில் இருந்து விஷம் நிறைந்த அக்னி வெளிவர -அதன் ஜ்வாலையில் ஒளியில்
சங்கர்ஷண ரூபியான ருத்ரன் பிரகாசித்தபடி இருந்து மூன்று லோகங்களை விழுங்க –
இப்படி ஆதி சேஷன் பூ மண்டலங்களை சிரஸூக்கு அலங்காரமாக கொண்டு தேவர்கள் வணங்க பாதாளத்தின் அடியில் உள்ளான் –
அவனது வீர்யம் மேன்மை ஸ்வரூபம் ரூபம் இவற்றை தேவர்களால் அறிவதும் உரைப்பதும் அரிது என்றபடி

தயா ஸஹ ஆஸீநம் அநந்த போகிநீ -ஸ்ரீ ஸ்தோத்ர ரத்னம் -39-
ஆசனம் வாஹனம்-இத்தை காகாஷி நியாயம் போலே இரண்டு இடங்களிலும் சேர்த்துக் கொள்ள வேண்டும்
போக ப்ரியா போகவதீ போகீந்த்ர சயன ஆசன என்றும்
அஜிதா ஆகர்ஷனி நீதி கருடா கருடாஸனா -ஸ்ரீ லஷ்மீ சஹஸ்ர நாமம் -என்று யாராலும் வெல்லப்படாத பகவானை
தன் வசம் கொண்டவள் -கருடை என்னும் திரு நாமம் கொண்டவள் -கருடனை இருக்கையாகக் கொண்டவள் – என்றும் உண்டே

வேதாத்மா விஹகேச்வரோ-
வஹேயம் யஜ்ஜம் ப்ரவிசேயம் வேதாந் –என்கிறபடி
யஜ்ஜ்ங்களில் வஹித்து வேதங்களில் புகுந்து -வேதங்களுக்கு ஆதாரமாக -ஸ்வரூபமாக உள்ள திருவடி
இப்படி அனைத்து வேதங்களுக்கும் அபிமான தேவதை என்பதால் பெரிய திருவடியையே சர்வஞ்ஞன் –
அமிர்தத்தை கொண்டு வந்ததால் சர்வ சக்தி பலம் இத்யாதி குணங்கள் வெளிட்டு அருளினான்
விஹகேஸ்வர-என்றது
சத்ய ஸூபர்னோ கருட தார்க்ஷ யஸ்து விஹகேஸ்வர –ஸ்ரீ சாத்வத சம்ஹிதை -என்றபடி
பஞ்ச பிராணங்களுக்கும் அபிமான தேவதை -என்றவாறு

பணி பதி விஹகேஸ்வர
இத்தால் இருவரும் பரஸ்பர விரோதம் இல்லாமல் ஒரே நேரத்தில் வணங்கும்படி உள்ளவள்
கைமுதிக நியாயத்தால் இத்தால் முக்தர்களையும் சொல்லி அனைவரும் சாமரம் போன்று இருப்பார்கள் என்றதாயிற்று
சேஷ சேஷாசநாதி சர்வம் பரிஜனம் –ஸ்ரீ வைகுண்ட கத்யம் –
இத்தால் நித்ய விபூதி இவளுக்கு சேஷ பூதம் என்றதாயிற்று

யவ நிகா மாயா ஜகன் மோஹிநீ
லீலா விபூதியில் அசித் வர்க்கமும் இவளுக்கு சேஷ பூதம் என்றதாயிற்று
யவநிகா –திரை -பகவத் ஸ்வரூப திரேதாநகரீம் -ஸ்ரீ கத்யம் -திவ்ய தம்பதிகள் இருவரையும்
பிரகிருதி மறைத்து இருப்பத்தை அருளிச் செய்தபடி-
மாயா -என்றது
மாயாம் து ப்ரக்ருதிம் வித்யாத் –ஸ்வேதர -4-10-மாயை என்பதால் பிரக்ருதியைச் சொன்னவாறு
ஜகன் மோஹிநீ
பிரகிருதி பல விசித்திர ஸ்ருஷ்டிகளுக்கு சாதனமாக இருந்து வியக்க வைப்பதாலும்
ஜீவ பர தத்வம் பற்றி விபரீத ஞானத்துக்கு காரணம் என்பதும் சபித்தாதிகளால் விசித்திரமாக
போக்ய புத்தியைப் பிறப்பிப்பதாலும் இவ்வாறு கூறப்பட்டது
இப்படி பிரக்ருதியால் மயங்கி கர்ம வசப்பட்டு உள்ள அனைவரும் ஸ்ரீ மஹா லஷ்மிக்கு சேஷ பூதர்களே
கைமுதிக நியாயத்தாலே அனைவரும் சேஷ பூதர் என்றதாயிற்று

ப்ரஹ்மே ஸாதி ஸூ ராவ் ரஜஸ் சத யிதஸ் த்வத் தாஸ தாஸீ கண
ஏதவ் த்வவ் விபுதஸ்ரஷ்டவ் –சாந்தி பர்வம் 350-10-என்று இருவருமே அவனிடம் இருந்தே உண்டானார்கள்
இவர்களும் அக்னி இந்திரன் போன்றவர்களே என்று உணர்த்தவே வ்ரஜ -குண -போன்ற பாதங்கள் பிரயோகம்
சதயித-பத்னிகளுடன் என்று அருளிச் செய்தாலும்-தாஸீ -என்பதும் பத்தினிகள் என்றதே ஆகும் –
ஸ்ரீரித் யேவ ச நாம தே
இவை அனைத்தையும் உணர்த்த இவளுக்கே உரித்தான திரு நாமங்கள் போதும் என்றதாயிற்று
ஸ்ரயந்தீம் ஸ்ரியமாணாம் ச ஸ்ருண்வதீம்
பகவதி ஸ்ருணதீம் –ஸ்ரீ அஹிர்புத்ன்ய சம்ஹிதை -21-8-என்று தான் சென்று அடைந்துள்ள மற்றவர்களால்
அடையப்படுகின்றதும் கேட்கப்படுவதும் ஆகிய பாபங்களை விலக்குகின்ற என்றும்
ஸ்ருணாதி நிகிலம் தோஷம் ஸ் ரீணாதி ச குணை ஜகத் ஸ் ரீயதே ச அகிலை நித்யம்
ஸ்ரேயதே ச பரம் பதம் –அஹிர்புதன்ய சம்ஹிதை -51-62-என்று அனைத்து விதமான தோஷங்களையும் போக்குகிறாள் –
தனது கல்யாண குணங்களால் லோகத்தை நிரப்புகிறாள் -அனைவராலும் எப்போதும் அந்தப்படுகிறாள் –
எப்போதும் பகவானை அண்டி நிற்கிறாள் -என்னக் கடவது இறே-
நிஸ் சங்கல்பா நிராஸ்ரயா–ஸ்ரீ லஷ்மீ சஹஸ்ர நாமம் -18—சங்கல்பம் இல்லாதவள் -ஆதாரம் அற்றவள் போன்ற திரு நாமங்கள்
ஸ்ரயதே ச பரம் பதம் -அஹிர்புத்ந்ய சம்ஹிதை -51-62-என்று கூறப்பட்ட பிரமாணத்துக்கு விரோதம் ஏற்படாமல்
இருப்பதற்காக அர்த்தம் கொள்ளப்படுவதாகும்

அகலங்கா அம்ருத தாரா -17-களங்கம் அற்றவள் -பகவானை ஆதாரமாகக் கொண்டவள் –
அம்ருத என்று பகவானையே சொன்னவாறு
இதனாலே அவன் ஸ்ரீ நிவாஸன் என்று ஸ்ரீ தரன் என்றும் கொண்டாடப்படுகிறான்
யத அஹம் ஆஸ்ரய ச அஸ்யா மூர்த்தி மம ததாத் மிகா –ஸ்ரீ ஸாத்வத சம்ஹிதை -என்று எந்த ஒரு காரணத்தால்
நான் இவளுக்கு ஏற்ற இடமாக உள்ளேனோ அதன் விளைவாக எனது இந்த திருமேனி அவளையே
தனது ஸ்வரூபமாகக் கொண்டதாய் உள்ளது –
எந்த சொல்லைச் சேர்ப்பதன் மூலம் மற்ற அனைத்தைக் காட்டிலும் மிக உத்க்ருஷ்டமாக எண்ணுகிறோமோ
அந்தச் சொல்லே எனது திரு நாமம் ஆகும் -என்ற கருத்தே -ஸ்ரீ இதி -ஏவ -என்பதால் கூறப்பட்டது

பகவதி
எந்தவித தோஷங்களும் இல்லாமல் அனைத்து மங்களமான கல்யாண குணங்களுக்கு இருப்பிடம் என்பதை
உணர்த்தவே -பகவதே -என்று ஸ்லோகத்தில் கூறப்பட்டது –

ப்ரூம கதம் த்வாம் வயம்–
இவ்விதமாக பல மேன்மைகளைக் கொண்ட இவளை உள்ளது உள்ளபடி ஸ்துதிக்க இயலாது என்கிறார் –
த்வாம்
கீழே உரைத்த படி ஸ்ரீ மஹா விஷ்ணுவுக்கு பத்னியாகவும் அவனைத் தவிர உள்ள மற்ற அனைவருக்கும் ஸ்வாமிநி யாயும் –
அவற்றுக்கு ஏற்ற படியான திரு நாமங்களைக் கொண்டவளாயும் பிரசித்தி பெற்றவளாக
ந தே வர்ணயிதும் சக்தா குணாந் ஜிஹ்வாபி வேதச –ஸ்ரீ விஷ்ணு புராணம்- 1-9-133-என்று
நான்முகனுடைய வாக்குகள் கூட சக்தி அற்றவை
வயம்
அளவுபடுத்தப்பட்ட ஞானம் மற்றும் சக்தி கொண்டவர்கள் –
ப்ரஹ்மாத்யா சகலதேவா முந யச்ச தபோதனா த்வாம் ஸ்தோதும் அபி நேகாநா -த்வத் பிரசாத லபம் விநா —
உனது அனுக்ரஹம் இன்றி உன்னை ஸ்துதிக்க சக்தி அற்றவர்கள் –
தாமும் இந்த கோஷ்ட்டி என்று உணர்த்தவே பன்மை பத பிரயோகம்
கதம் ப்ரூம
உன்னை முழுமையாக வர்ணிப்பது இயலாது
அளவுபட்டு உரைப்பதும் சரி இல்லை -என்று பொருள்

தே –த்வாம்
ஒரு சிலர் அனைத்தையும் ஸ்ருஷ்டிப்பவனாகிய பகவானால் அதிஷ்டானம் செய்யப்படும் பிரக்ருதியே
ஸ்ரீ மஹா லஷ்மி ஆவாள் -என்று கூறுகிறார்கள் –
வேறு சிலர் பகவானுடைய -இருப்பு -அஹங்காரம் -பிரகாரம் -சக்தி -வித்யை -இச்சை-மற்றும் அனைத்தையும்
அனுபவிக்கும் தன்மை ஆகியவையே ஸ்ரீ மஹா லஷ்மீ என்று கூறுகிறார்கள்
ஸ்ரீ சாஸ்திரங்களில் -ஸ்ரீ அஹிர்புத்ந்ய சம்ஹிதை ஸ்ரீ லஷ்மீ தந்திரம் -இவற்றில் இவ்வாறு கூறப்படுவதாக கூறுகிறார்கள்
அந்த சாஸ்த்ரங்களே ஸ்ரீ மஹா லஷ்மி சேதன வஸ்து ஆவாள் என்று முரண்பாடு
இன்றி உரைக்கப் பட்டதால் அவர்களும் அவர்களுடைய கருத்துக்களும் தள்ளப்படுகின்றன
ஸ்ரீ மஹா லஷ்மீ சேதன வஸ்துவே என்று காட்டவே தே -உனக்கு என்றும் த்வாம் உன்னை என்றும் பதங்கள் பிரயோகம்
அவனுடைய இருப்பாகவே இவள் உள்ளாள் என்பது போன்ற கருத்துக்கள்
இவளிடம் அவனுக்கு அந்தரங்கமான விசேஷம் உண்டு என்றும் இவள் விசேஷமாக உள்ளாள் என்பதாலும் கூறப்படுகின்றன
தே -யவனிகா -உனக்குத் திரை
இவள் பிரக்ருதியைக் காட்டிலும் வேறு பட்டவள் -தே -யவனிகா -உனக்குத் திரை -என்பதன் மூலம் உணர்த்தப்பட்டது
பிரகிருதி என்ற சொல்லால் கூறப்பட்டாள்-என்பதால் மட்டுமே முக்குண பிரகிருதி இவளே ஆவாள் என்பது சரி இல்லை
வாஸூ தேவ பரா ப்ரக்ருதி -வாஸூ தேவனே உயர்ந்த பிரகிருதி என்றும்
ப்ரக்ருதிச் ச ப்ரதிஜ்ஞா த்ருஷ்டாந்த அநுப ரோதாத் –ஸ்ரீ ப்ரஹ்ம ஸூத்ரம் -1-4-23– ப்ரஹ்மமே உபாதான காரணம் போன்று
பகவானையே இவ்வாறு கூறப்பட வேண்டியதாகும் என்பதால் ஸ்ரீ மஹா லஷ்மியே பிரகிருதி என்பது பொருத்தம் அல்ல-

ஆகவே -ஜகத் உத்பாதிகா சக்தி தவ ப்ரக்ருதி இத்யாதே ச ஏவ நாம ஸஹஸ்ரைஸ் து லஷ்மீ
ஸ்ரீ இதி கீர்த்யதே–ஸ்ரீ ஸநத்குமார சம்ஹிதை -இந்த ஜகத்தை உத்பத்தி செய்யக் கூடிய உனது சக்தியே
இங்கு பிரகிருதி என்று கூறப்படுகிறது -ஆகவே பல நாமங்களாக ஸ்ரீ லஷ்மீ என்று கூறப்படுகிறது -என்றும்
மூல ப்ரக்ருதி ஈஸாநீ -ஸ்ரீ லஷ்மீ சஹஸ்ர நாமம் -55-அவளே மூல ப்ரக்ருதி அனைத்தையும் நியமிப்பவள் என்றும்
ப்ரக்ருதி புருஷாச்ச அந்ய த்ருதீயோ ந இவ வித்யதே –ஸ்ரீ ஸநத்குமார சம்ஹிதை -பிரகிருதி புருஷன் இருவரையும்
தவிர மூன்றாவது ஏதும் அறியப்பட வில்லை -என்றும் உள்ள நான்முகன் சொற்கள் அனைத்தும்
ஸ்ரீ மஹா லஷ்மீ மற்றும் ஸ்ரீ நாராயணன் இருவரும் பிரகிருதி மற்றும் புருஷன் என்பதான வெவ்வேறாக உள்ள
விபூதிகளுக்கு அபிமானி தேவதைகளாக உள்ளனர் என்கிற கருத்தில் சொல்லப்பட்டவை

ரஹஸ்ய ஆம்நயத்தில்-பிரகிருதி மற்றும் ஸ்ரீ லஷ்மீ ஆகிய இருவரிடம் வித்யா என்கிற பதம் பயன்படுத்தப் பட்டுள்ளது –
என்று கூறப்படுகிறது -இதன் பின்னரும் இந்த இருவருக்கும் ஸ்வரூப ஐக்கியம் உண்டு என்று கூறுதல் கூடாது –
அதாவது சத்வ குணம் நன்கு வளர்ந்து அதன் மூலமாக வித்யைக்கு காரணமான சூழல் ஏற்படுவதால்
ப்ரக்ருதியைக் குறித்து வித்யா என்ற சொல் கூறப்பட்டது –
ஆனால் ஸ்ரீ மஹா லஷ்மீ வித்யையை அளிப்பவள் என்பதால் அவள் விஷயத்தில் இந்த சொல் பயன்படுத்தப் படுகிறது-

ஒரு சிலர் இருப்பு முதலியவற்றுடன் கூடியுள்ள பகவானே ஸ்ரீ லஷ்மீ என்று கூறப்படுகிறான் என்றும் –
ஒரு சிலர் ஸ்திரீயாக உள்ள நித்தியமான ஒரு சரீரம் கொண்ட பலவான் ஸ்ரீ லஷ்மீ என்று கூறப்படுகிறான் என்றும்
ஒரு சிலர் அசுரர்களை மயக்குவதற்காக மோகினி ரூபம் எடுத்தது போன்று தனது இன்பத்திற்காக ஒரு சில நேரங்களில்
அவன் பெண் வடிவை ஏற்கிறான் -அந்த ரூபத்துடன் உள்ள பகவானே ஸ்ரீ மஹா லஷ்மீ ஆவாள் என்றும் கூறுகிறார்கள்
இந்தக்கருத்துக்கள் அனைத்தும் ஸ்ரீ மஹா லஷ்மீயைக் காட்டிலும் வேறாக உள்ள ஜீவாத்மாக்கள் என்று கூறும்
அந்த சாஸ்த்ரங்களாலே தள்ளப்படுகின்றன

உத்தர நாராயண அநுவாகத்தில்-ஹ்ரீச்ச தே லஷ்மீச்ச பத்ந்யவ் -என்று
ஸ்ரீ பூமா தேவியும் ஸ்ரீ மஹா லஷ்மீயும் பத்னிகள் ஆவார்கள் என்பதாகக் கூறும் சுருதிகள்
பர்த்தா மற்றும் பத்னி ஆகிய இவருடைய ஸ்வரூபமும் வெவ்வேறு என்று கூறுகின்றன –
இங்குள்ள -காந்த –தே -என்பதிலும் பிரித்தே கூறப்பட்டது காணலாம் –

ஒரு சிலர் பகவானுடைய ஸ்வரூபத்தில் உள்ள ஒரு பகுதியே பரஸ்பரம் இன்பத்தை அனுபவிக்கும் விதமாக
தனியான ஒரு பெண் பாகத்தை அடைகிறது -இதுவே ஸ்ரீ லஷ்மீ என்ற சொல்லிற்கான பொருள் ஆகும் –
இவ்விதம் கூறுவதின் மூலம் பேத அபேத ஸ்ருதிகளை சமன்வயப் படுத்துவர் –
இந்தக் கருத்து ப்ரஹ்ம ஸ்வரூபம் பிரிக்க இயலாது என்பதால் தள்ளப்படும்
ஆனால் ஸ்ரீ ப்ரஹ்ம புராணத்தில் -நர நாரீ மயன் ஹரி -என்று
ஸ்ரீ ஹரி புருஷனாகவும் ஸ்திரீயாகவும் உள்ளான் என்று உள்ளதே என்னில்
ஸ்ரீ ஸநத்குமார சம்ஹிதையில் -ஜ்யோத்ஸ்நேவ ஹிம தீதே -சந்திரனுக்கு நிலவு போன்றது -ப்ரகாசத்துக்கு ஆதாரமாக உள்ள
வஸ்துவை ப்ரகாசமயமாக உள்ளது என்னுமா போலே ஸ்வரூபங்களில் பேதம் கொள்ள இடம் அளிக்காமல் பொருள் கொள்ள வேண்டும்
இதன் மூலம் விதையாக உள்ளவற்றின் முளைக்கக் கூடிய பகுதிகள் தனியாக வளர்கின்றன –
இதே போன்று காரியப் பொருள்களாக பரிணாமம் அடைவதற்கு உபாதான காரணமாக உள்ள உபாதான காரணமாக உள்ள
ப்ரஹ்ம ரூபத்தின் ஒரு பகுதியே -தனது ஸ்வ பாவத்தால் தனியாகப் பிரிந்து ஸ்ரீ லஷ்மீ என்றதாகிறது
என்று கூறப்படும் கருத்தும் தள்ளப்படுகிறது –
மேலும் ப்ரஹ்ம ஸ்வரூபத்தில் மாற்றம் ஏற்படுவது இல்லை என்று
ஸ்ரீ ப்ரஹ்ம ஸ்வரூபத்தில் நிரூபிக்கப் பட்டதால் இந்தக்கருத்து நிராகரிக்கப் பட்டது

ஒரு சிலர் கூறுவது -வேறு ஒரு காரணப் பொருளுடன் சேர்ந்துள்ள ஒரு பாகமானது முற்றிலுமாக வேறுபட்டு நிற்கிறது -என்பதாகும் –
ஒரு நதியில் இருந்து குடத்தின் மூலமாக எடுக்கப்பட்ட நீரை வேறு ஒரு இடத்துக்குப் பிரிக்கப்பட்டு எடுத்துச் செல்ல இயலும் –
அதற்கு தனிப்பெயர் கூறப்படுவது இல்லை –
ஆனால் குடத்துக்குள் காணப்படும் ஆகாசத்துக்கு குடாகாசம் -என்று தனிப்பெயரே வழங்கப் படுகிறது
அதனைப் போன்றே சரீரம் முதலான உபாதிகள் உள்ள போது -அவயவங்கள் அற்றதான ப்ரஹ்மத்தின் ஸ்வரூபத்தில்
உபாதியுடன் சேர்ந்த பாகங்கள் அல்லாமல் -மற்ற பகுதிகளானவை அந்த உபாதிகளுடன் சேரும் போது
முன்பு இன்பங்களை அனுபவித்த பாகம் இருப்பது இல்லை –
ஆகவே முன்பு அனுபவிக்கப்பட்ட இன்பங்களை அந்த பாகங்கள் எண்ணி இருப்பது பொருந்தாது –
ஆனால் அந்த பாகங்கள் அனைத்தும் ஒரே ஜாதியைச் சேர்ந்த அம்சங்கள் என்பதால் ஓர் அம்சத்தால் அனுபவிக்கப்பட்ட அனைத்தும்
மற்ற அம்சங்களுக்கும் பொருந்தும் அல்லவோ என்ற கேள்வி எழலாம் –
இவ்விதம் கொண்டால் பவ்தர்களுடைய கருத்து தொனிக்கும் என்பதால் நித்தியமான ஜீவாத்மா என்பதை ஏற்க இயலாமல் போய் விடும் –
இது மட்டும் அல்லாமல் பகவானுடைய அவதாரம் என்று கூறுபவர்களும்
ஸ்வரூபத்தை மாறுதல்கள் யாகும் என்று கூறுபவர்களும்
ஸ்ரீ லஷ்மிக்கு நித்தியமான திருமேனி உள்ளது என்று உரைக்கும் பிரமாணங்களால் தள்ளப்படுகிறார்கள் –
இவை அனைத்தும் இந்த ஸ்லோகத்தில் பிரித்து குறைக்கப்பட்டு இருப்பதால் வெளிப்படு கிறது
ஸ்ரீ வாக்ச நாரீணாம் –ஸ்ரீ கீதை -11-34-பெண்களில் கீர்த்தியும் ஸ்ரீ மஹா லஷ்மியும் வாக்கும் நானே ஆவேன் -என்றுள்ள
இடங்களில் சேர்த்துக் கூறப்பட்டது காணலாம்
இங்கும் முன்பு கூறப்பட்டது போன்று ஸ்வரூபம் வெவ்வேறாக உள்ள போதிலும் –
சேஷன் -சேஷி -என்கிற சம்பந்தத்தைக் காரணமாக் கொண்டு உரைக்கப் பட்டது என்று கருத்து

விஷ்ணோர் ஸ்ரீ அநபாயிநீ–ஸ்ரீ விஷ்ணு புராணம் -1-8-17- என்றுள்ள வாக்கியங்கள் மூலம் பேதம் வெளிப்பட்டது
இப்படிச் சொல்லும் போது ஸ்ரீ மஹா லஷ்மியும் கர்மவசப்பட்டவள் ஆகிறாள் என்று ஆகுமே என்னில் அது அப்படி அல்ல
ஆதித்யாநாம் அஹம்—ஸ்ரீ கீதை -10-21-
வ்ருஷ்ணீநாம் வா ஸூ தேவ -10-37-
அநந்தா அஸ்மி நாகாநாம் வைநயேதச்ச பஷீணாம் -10-29–இவ்வாறு பிரித்து உரைக்கலாமே ஒரே ஜாதியாக இருந்தாலும்
இத்தால் ஸ்ரீ மஹா லஷ்மி நித்யருக்குள் அதிகர் என்றும் சர்வேஸ்வரன் ஸ்வரூபம் வேறு பட்டது என்றும் தெளிவாகும்
அவனது ரூபத்தில் பாதி இவளது என்பதும் உண்டே

அடுத்து ஸ்ரீ விஷ்ணு வைபவ அதிகாரத்தில்
த்வம் யாத்ருச அஸி கமலாம் அபி தாத்ருசம் தே தாரா -வதந்தி யுவயோ ந து பேத கந்த மாயா விபக்த யுவதீ தநும்
ஏகம் ஏவ த்வாம் மாதரம் ச பிதரம் ச யுவா நாம் ஆஹு –நீ எவ்வாறு ஆகிறாயோ அதே போலே ஸ்ரீ மஹா லஷ்மியும்
உனது பத்நியாக ஆகிறாள் என்று கூறுகிறார்கள் –
உங்களுக்கு பேத வாசனை என்பது இல்லை -மாயையால் பிரிந்துள்ள பெண் சரீரத்தைக் கொண்ட இளமையாக உள்ள உன்னையே
தாய் மற்றும் தந்தை என்றும் கூறுகிறார்கள் –என்று கூறப்பட்டுள்ளதே என்று கேட்பதும் சரியில்லை –
அவர்கள் இவருடைய விருப்பம் காரணமாகவே சரீரத்தை மட்டுமே ஒன்றாக சேர்த்தபடி உள்ளது பொருந்தும் என்பதாலும்
ஆகவே ஸ்வரூபத்தில் ஒற்றுமை இல்லை என்றாலும் இது பொருந்தும் என்பதால்
ஒரே சரீரமாக உள்ளது என்பது ஸ்ருதிகளுக்கு முரணாக உள்ளது என்பதும் பொருந்தாது
ஆனால் ஒரே பரமாத்மாவே அனைத்தையும் செய்ய இயலும் என்று உள்ள போது வேறு ஒரு ஆத்மா உள்ளது என்று
ஏற்பதால் என்ன பயன் உள்ளது -என்று கேட்பதும் சரியில்லை
ஸ்ரீ விஷ்ணு ஸ்ம்ருதியானது -99-6-
ஆஸ்ரம்ய ஸர்வாந்து யதா திரிவோகீம் திஷ்டத் வயம் தேவ வர அஸிதாஷீ ததா ஸ்திதா த்வம் வரதே தாதாபி –என்று
சர்வ வ்யாபியான அவனைப் போலே சர்வ அபீஷ்டங்களையும் கொடுக்கும் அஸீ தேக்ஷிணையாய் உள்ள நீயும் உள்ளாய் –
என்பது போன்றும் உள்ளவை காணலாம்
ஸ்ரீ விஷ்ணு புராணம் -1-8-35-ந அநயோ வித்யதே பரம் -என்றும்
அஹிர் புத்ன்ய சம்ஹிதை 3-26–ஏக தத்வம் இவ உதிதவ் –என்று ஸ்ரீ பகவத் சாஸ்திரமான ஸ்ரீ பாஞ்சராத்திலும்
இவர்களுடைய ஸ்வரூபம் ஒன்றே என்ற வாதம் தள்ளுபடியாகும்
வசனங்களை மட்டும் ஆதாரமாகக் கொண்டால் அனைத்து ஆத்மாக்களும் ஒன்றே எனக் கொள்ளலாம்
ஆனால் இவ்விதம் கொள்ளுதல் கூடாது அல்லவோ
ஜீவாத்மாக்கள் அனைவரும் வெவ்வேறு ஆனவர்களே ஆவர் என்பதை ஏற்காதவர்கள் ஸ்ரீ பாஷ்யாதிகளில் தள்ளப்பட்டனர்
இங்கும் திவ்ய தம்பதிகளுக்கும் ஒருவருக்கு ஒருவர் உள்ள பேதமும் நிலை நாட்டப்பட்டது –
இத்தால் லஷ்மி நாராயணன் இருவரும் ஒருவரே வாதமும் தள்ளப்பட்டது
பிராட்டி இடம் திருவடி சுக்ரீவனும் பெருமாளும் ஒன்றாகவே ஆனார் என்று சொல்லியது போலே உரைப்பர்
மேலும் நிர்விசேஷ சின் மாத்ர ப்ரஹ்மத்தின் ஸ்வரூபத்தை மறைத்துள்ள உண்மையற்ற மாயை என்பதான விசேஷத்தை
அடைந்ததாகவும் ப்ரஹ்மத்தின் பிரதிபிம்பத்தை கொண்டதாகவும் உள்ள வஸ்துவே லஷ்மி போன்ற வாதங்களும் தள்ளப்படும்

மேலும் நிர்விசேஷ சின்மாத்ர ப்ரஹ்மத்தின் ஸ்வரூபத்தை மறைத்துள்ள உண்மை அற்ற மாயை என்பதான
விசேஷத்தை அடைந்ததாகவும் ப்ரஹ்மத்தின் பிரதிபிம்பத்தைக் கொண்டதாகவும் உள்ள வஸ்துவே
லஷ்மீ என்று கூறப்படுகிறாள் என்பர் சிலர்
ஆனால் இப்படி மறைக்கப்பட்ட ஸ்வரூபம் கொண்ட ப்ரஹ்மம் -மற்றும் அதற்கு ஒரு மறைவு ஆகிய இரண்டுமே
தள்ளப்படுவதால் அந்தக்கருத்து நிரசனம்
மாயை மஹா லஷ்மி மற்றும் அவளுடைய நாயகன் இருவரையும் தவிர மற்ற அனைத்து லோகங்களையும்
மயக்கியபடி உள்ளது என்பதாலும் மேலே உள்ள கருத்து தள்ளப்பட்டது –

ஸ்ரீ மஹா லஷ்மியின் பார்வையை அவளுக்கு வசப்பட்ட செயல்களைக் கொண்ட ப்ரக்ருதி திரையைப் போலே
மறைக்கும் என்பது தப்பான வாதம் –
பாபங்கள் காரணமாகவே ஷேத்ரஞ்ஞர்கள் ப்ரக்ருதியான மாயையில் சிக்கி ஞான சுருக்கம் அடைகிறார்கள்
யுக கோடி சஹஸ்ராணி விஷ்ணும் ஆராத்ய பத்மபூ புந த்ரை லோக்ய தாத்ருத்வம் ப்ராப்த வாந் இதி சுச்ரும —
என்பதால் ப்ரஹ்மாதிகளும் கர்மவசப்பட்டவர்களே
அவர்கள் பத்னிகளும் கர்ம வசப்பட்டவர்கள் –
மஹா லஷ்மியும் அவர்களுடன் கூடி ஸஹ படிதமாக இருப்பதால் இவளுக்கும் ஞானம் சங்கோசம் என்பர் –
கீர் தேவதா இதி கருடத்வஜ வல்லப இதி –கனகதாரா ஸ்தோத்ரம் -10-என்று உள்ளதே –

இவ்வாறு கூறுவது பொருத்தம் அல்ல –
அவர்கள் மூவரையும் ஒன்றாகச் சேர்த்து சாமானாதி கரண்யமாகப் படித்தது ஏன் என்றால்
யத் தத் விபூதி சத்வம் –ஸ்ரீ கீதை -10-41-எது எது சிறப்பாக உள்ளதோ -விபூதி அத்தியாயத்தில் கூறப்பட்ட
நியாயம் மூலமே கொள்ள வேண்டும்
தாபநீய உபநிஷத்தில் க்ருத ஸூக்தத்தில் -மஹா லஷ்மியிடம் அந்த சொற்கள் அனைத்தும் அர்த்தத்தை
சிறப்புக்கள் மற்றும் அவற்றைத் தனது விபூதியாகக் கொண்டவன் என்ற காரணம் –
என்பதால் கூறப்பட்டதாக உரைக்கப் பட்டத்தைக் காணலாம்
காயத்ரீ கல்பத்தினைப் பொறுத்த வரை மஹா லஷ்மியின் செல்வமாகிய காயத்ரீ தேவதைக்கே
பல்வேறு ஸந்த்யைகளிலே வைஷ்ணவீ முதலானவர்களுக்குத் தகுந்த வாஹனம் ரூபம் போன்றவற்றை
ஏற்கும் சக்தி உள்ளது -என்று மேன்மையைக் கூறுவதில் கருத்து
த்ரு ஹிணாதிஷு கேஷாம் சித் ஈஸ்வர வ்யக்திதா பிரமாத் தத் பத்நீஷ்வபி லஷ்ம்யாம்ச வாதஸ் ஸ்ருத்யாதி பாதித–என்று
இவர்களே ஈஸ்வரர் என்ற பிரமம் உண்டாகி இவர்கள் பத்தினிகள் லஷ்மியின் அம்சம் உள்ளது –
இதனால் சுருதிகள் பாதிக்கப் படலாம் என்பதால் இக்கருத்தை சுருதிகள் தள்ளுகின்றன -என்ற கருத்து உண்டே
இவர்கள் இருவரும் மஹா லஷ்மிக்கு வசப்பட்டவர்களே

——————308

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ நிகமாந்த தேசிகன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ ஆச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ ஆளவந்தார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ கீதா பாஷ்ய-ஸ்லோகம்–யத்பதாம் போருஹ த்யாநா -ஸ்ரீ வேளுக்குடி ரெங்கராஜன் ஸ்வாமிகள் உபன்யாச சுருக்கம் —

December 3, 2019

ஸ்ரீ ஆளவந்தார் அருளிச் செய்த ஆத்ம சித்தி கால ஷேபத்தில்
ஸ்ரீ திருவல்லிக்கேணியில் ஸ்ரீ ரெங்கராஜன் ஸ்வாமி உபன்யாச சுருக்கம்

யோ நித்ய அச்யுத பதாம் புஜ யுக்ம ருக்ம வ்யாஹாமோஹதஸ் ததிராணி த்ருணாய மேனே
அஸ்மத் குரோர் பகவதோஸ்ய தயைக சிந்தோ ராமானுஜஸ்ய சரனௌ சரணம் ப்ரபத்யே —

ஸ்ரீ பாஷ்ய மங்கள ஸ்லோகம்
அகில புவந ஜன்ம ஸ்தேம பங்காதி லீலே!(1)
விநத விவித பூத விராத ரக்ஷைக தீக்க்ஷே |(2)
ஸ்ருதி சிரஸி விதீப்தே!(3) பிரஹ்மணி! (4) ஸ்ரீநிவாஸே !
பவது மம பரஸ்மிந் சேமுஷி பக்தி ரூபா ||

இஷ்ட தேவதையான ஸ்ரீநிவாஸனுக்குச் செய்யப்பட மங்கள ஸ்லோகம் இது.
அகில புவன–ஆசீர் வசனம் ஆசீர்வாத ரூப -வஸ்து நிர்த்தேச-இரண்டும்
அசேஷ -விஷ்ணவே நம -நமஸ்கார ரூப
வஸ்து நிர்த்தேச மங்களா சாசனம் -இரண்டும்
ஆக மூன்று வகை

இரண்டாவது மங்கள ச்லோஹம்-
பாராசர்ய வசஸ் ஸுதாம் (1)
உபநிஷத் துத்தாப்தி மத்யோ திருதாம் (2)
ஸம்சாராக்நி விதீபன வியபகத பிராணாத்ம சஞ்சீவனீம் (3) |
பூர்வாசார்ய ஸுரக்ஷிதாம் (4)
பகுமதிம் வியாஸாத தூரஸ்திதாம் (5)
அநீதாந்து நிஜாக்ஷரைஹி மனஸோ பௌமாஸ்து பிபந்வஹம் ||

ஸ்ரீ வேதாந்த ஸங்க்ரஹ மங்கள ஸ்லோகம்
அசேஷ சித் அசித் வஸ்து சேஷினே –சேஷ ஸாயினே-
நிர்மல ஆனந்த கல்யாணைதயே -விஷ்ணவே நம –

பரம் ப்ரம்ஹைவாஞம் ப்ரம பரிகதம் ஸம் ஸ ரதி தத்
பரோபாத்ய லீடம் விவசம் அசுபஸ் யாஸ் பதமிதி
சுருதி ந்யாயா பேதம் ஜகதி வித்தம் மோஹனமிதம்
தமோ யே நா பாஸ்தம் சஹி விஜயதே யாமுன முனி —

ஸ்ரீ கீதா பாஷ்யத்தில் ஸ்ரீ ஸ்வாமி ஸ்ரீ ஆளவந்தாருக்கு அருளிச் செய்த தனியன்

யத்பதாம் போருஹ த்யாநா வித்வஸ்தா சேஷ கல்மஷ
வஸ்துதாம் உபயாதோஹம் யாமுநேயம் நமாமி தம் –

ஸ்ரீ ஆளவந்தார் உடைய இரண்டு திருவடிகளை மட்டும் உத்தேசிக்கப் படுகின்றன அல்ல
யதோதாம் போருஹ –ஆறு எழுத்துக்களுக்கு வர்ணக்ரமம் சொன்னால் 14 எழுத்துக்கள் தேறும்
யகார -அகார -தகார -பகார -அகார – ககார -ஆகார -மகார-மாகார ஓகார -ரெப -உகார -ஹகார -அகார
ஸ்ரீ நம் ஆழ்வார் -ஸ்ரீ ஆளவந்தார் -தம்முடைய பஞ்ச ஆச்சார்யர்கள் திருவடிகளை
யஸ்ய பதாம் போரு ஹி -சம்பந்த சாமானே ஷஷ்டி –
மாதா பிதா -வகுளாபிராமம் ஸ்ரீ மத் ததங்க்ரி யுகளம் ப்ரணமாமி மூர்த்த்னா
பத -ஸ்ரீ ஆளவந்தார் திருவடிகளை சொல்லி
அம்போருஹ-தாமரைக்கு வாசகமான -தம்முடைய பஞ்ச ஆச்சார்யர்களையும்
தாவி வையம் கொண்ட தடம் தாமரைகட்கே போலே
ஸ்ரீ பராங்குச தாசர் -பெரிய நம்பி–என்று ஸ்ரீ காஞ்சி ஸ்வாமிகள் காட்டி அருளுகிறார்

ஸ்ரீ கீதா பாஷ்யம் -தடங்கல் இல்லாமல் நிறைவு பெறவும் -உலகில் பரவவும் தமது ஆச்சார்யரை நமஸ்கரிக்கிறார்
ஸ்ரீ கீதார்த்த ஸங்க்ரஹம் அருளிச் செய்த ஸ்ரீ ஆளவந்தாரை ஸ்துதிக்கும் மங்கள ஸ்லோகம்

யத் -என்னும் பதம்
எந்த -என்று பிரசித்தமான -ஆச்சார்ய குண பூர்த்தி உள்ள மேன்மையைக் காட்டும்
பத -அம் போருஹ-
தாமரை மலர் போன்ற என்ற உதாஹரணம் -அந்த திருவடிகள் அனுபவிக்க வல்லவை
அந்த த்யானம் மகிழ்வோடு இணைந்து உள்ளதால் பக்தி என்றும் கூறப்படும்
த்யான
துரோணாச்சார்யாருக்கு ஏகலைவன் போலே தான் ஸ்ரீ ஆளவந்தாருக்கு என்றத்தைக் காட்டும்

த்யான வித்வஸ்த அசேஷ கல்மஷ
அழிக்கப்பட்ட அனைத்து பாபங்களையும் கொண்ட -என்பதால்
ஒரு முறை கடாக்ஷ லேசத்தாலே பலவிதமான பாபங்களும் அழிக்கப் பட்டன –
அதன் பின்னர் இடைவிடாமல் அந்த ஸ்ரீ ஆளவந்தாருடைய திருவடித் தாமரைகளையே எண்ணி இருப்பதால்
அவை வாசனையோடு முழுமையாக நீக்கப் பட்டன -என்றவாறு

வஸ்துதாம்
வஸ்துவாக இருத்தல் –
அஸ்தி ப்ரஹ்மேதி சேத் வேத சந்த மேநம் ததோ விது –தைத்ரியம் -2-6-1-ப்ரஹ்மத்தை அறிந்து கொண்டவன்
என்றால் அவனை இருக்கிறவனாக அறிகிறார்கள்
அஹம் வஸ்துதாம் உபயாத
நான் அடைந்துள்ளேனா -என்ற வியப்பால் அருளிச் செய்கிறார்
இப்படியாக தனது அநிஷ்டங்களும் அப்ராப்தங்களும் நீங்கப்பெற்று இஷ்டப் பிராப்தி அருளியதற்கு
மனம் வாக்கு காயம் -முக்கரணங்களாலும் ஏவப்பட்டு நமஸ்காரம் செய்கிறார்
இதைக் கேட்பவர்களுக்கும் அநேக மங்களங்களும் உண்டாகும்
இத்தால் ஆச்சார்ய வந்தனம் குரு பரம்பரயா த்யானம் பூர்வகமாக பக்தி செய்ய வேண்டும்
என்று உணர்த்தப்பட்டது

யதா பதாம் —அம்போருஹம் தாமரை திருவடிகளை தியானித்து
அசேஷ கல்மஷம்
வஸ்துத்வத்வம் அடைந்தேன் -இரண்டும்
த்யாநேன–கண்டு -இடைவிடாமல் நினைப்பதே-விமல சரீர சேவையால்
ஸ்ரீ ஆளவந்தாரை குறித்து மட்டும்

விஷயா விநிவர்தந்தே நிராஹாரஸ்ய தேஹிந–.
ரஸவர்ஜம் ரஸோப்யஸ்ய பரம் தரிஷ்ட்வா நிவர்ததே–৷৷2.59৷৷

விஷயங்களில் இருந்து இந்திரியங்களை இழுத்த ஜீவனுக்கு விஷயங்கள் நீங்குகின்றன
ஆனால் விஷயங்களில் ஆசை நீங்குவது இல்லை –
ஞான யோக நிஷ்டனுக்கு மேலான ஆத்ம ஸ்வரூபத்தைக் கண்டவுடன் இவ்வாசையும் நீங்குகிறது
ஆத்ம தரிசனத்தால் இந்திரியங்கள் அடக்கலாம் -ஏக ஆஸ்ரய தோஷம் –

ஆத்மாவை கண்டாலே போகும்
முயன்றாலும் -இந்திரியங்கள் மனத்தை இழுத்து செல்லும்
அன்யோன்ய ஆஸ்ரயம் வரும்
இத்தை போக்க அடுத்த ஸ்லோகம்

யததோ ஹ்யபி கௌந்தேய புருஷஸ்ய விபஷ்சத.–
இந்த்ரியாணி ப்ரமாதீநி ஹரந்தி ப்ரஸபம் மந—৷৷2.60৷৷

இந்திரியங்கள் அடக்கி ஆத்ம தர்சனம் -என்கிறான் –
பிரத்யனம் செய்தாலும் –இந்திரியங்கள் பலமானவை -மனசை பலாத்காரமாக இழுக்கும் –

இந்திரியங்களை விலக்கி என்னிடம் செலுத்து -த்யானம் பண்ண பண்ண சத்வ குணம் வளர்ந்து
ஸூபாஸ்ரயமான திவ்ய மங்கள விக்ரஹத்தை வைத்து
அதே போலே திருவடித் தாமரை த்யானம்
வஸ்துத்வம் அடைந்தது -அடுத்த நிலை
இருப்பு -தன்மையுடன் -ஸத்வித்யா பிரகரணம் -சங்கல்பித்து ஸ்ருஷ்ட்டி செய்தது -சங்காத்வம்-உள்ளே புகுந்து
தேறி இருத்தல் -சஸாபி ராம –பரிஷத் கத சனையி அனுபவிக்க ஆசை உடன் –
பூ சத்தாயாம் சத்தை பெற ஸ்ரீ ராமாயணம் கேட்க இறங்கி-

கீதா பாஷ்யத்தின் தொடக்கத்தில் உள்ள ஸ்வாமியின் ஆளவந்தார் பற்றிய தனியன்”

யத் பதாம்போருஹ-த்யான வித்வஸ்தாசேஷ-கல்மஷ
வஸ்துதாம்-உபயாதோ-ஹம் யாமுநேயம் நமாமி தம்–

“யத்பதாம்போருஹ ” எனும் சொல்
ய், அ, த், ப், அ, த், அ, ம், ப், ஒ, ர், உ, ஹ், அ எனப் பதிநான்கு பகுதிகளாலானது.
அதாவது ஏழு ஜோடித் திருவடிகளைக் குறிப்பதாகக் கொள்ளலாம்.
இந்த ஏழு இணைத் திருவடிகள் ஸ்வாமியின் ஐந்து ஆசார்யர்கள், ஸ்ரீ ஆழ்வார், ஸ்ரீ ஆளவந்தாரையே
குறிப்பனவாகக் கொள்ள வேணும்.

இதை வேறு விதமும் காணலாம்.
இந்த “யத்பதாம்போருஹ ” சப்தத்தை ஷஷ்டி தத்புருஷ ஸமாஸமாக எடுத்து,
யஸ்ய பதாம்போருஹே எனக் கொண்டு, யாவருடைய தாமரைத் திருவடிகளில் என விளக்கம் பெற்று,
மேலும் அதை இப்படி மூவகைகளில் நிர்வஹிக்கலாம்:

ஸ்ரீ ஆளவந்தாரின் திருவடித் தாமரைகள் அவரது திருமேனியிலே வணங்கப்படுகின்றன.
ஸ்ரீ ஆளவந்தாரின் திருவடிகள் – அவரால் தொழப்பட்ட ஸ்ரீ எம்பெருமான், ஸ்ரீ ஆழ்வார், ஸ்ரீ நாதமுனிகளின் திருவடிகள்,
ஸ்ரீ ஆளவந்தாரின் திருவடிகள் – அவர்தம் சிஷ்யர்கள், சிஷ்யர்களைத் திருவடிகளாகக் கூறுதல் மரபாதலால்.
ஆகவே அவர்தம் ஐந்து சிஷ்யர்களைக் குறிக்கும்.

ஸ்ரீ ஸ்வாமியின் இத்தனியன் “பதாம்போருஹ” என “ப” சப்தத்தோடு தொடங்குகிறது.
ஸ்ரீ பெரிய நம்பிகள் தாம் ஸ்வாமிக்குப் பஞ்ச சம்ஸ்காரங்கள் செய்து மந்த்ரோபதேசமும் அர்த்த உபதேசமும் செய்து வைத்தார்.
ஆகவே அவர்க்கு ஸ்ரீ ஸ்வாமியின் ஆசார்ய பரம்பரையில் விசேஷ இடமுண்டு.
அவர் திருநாமம் ஸ்ரீ பராங்குச தாசர் என்பது “ப”வில் தொடங்குவது.
ஸ்ரீ பராங்குசர் என்பது முதலிலேயே ஸ்ரீ நம்மாழ்வார் திருநாமம்.

இவ்வாறாக, ஸ்ரீ இராமாநுசர் தம் ஆசார்யன் தனியனில் குருபரம்பரை முழுமையையும் துதித்தாராயிற்று.
ஸ்ரீ ஆழ்வானின் சிஷ்யரும் ஸ்ரீ சுவாமியின் சமகாலத்தவருமான ஸ்ரீ அமுதனார் தம் க்ரந்தத்தில் ஸ்ரீ இராமானுசருக்கு
அவர் முன்னோருடனான தொடர்பையே விசேஷித்துப் பாடினார்.

இதுவே ஒரு பேரறிவாளனுக்கான அடையாளம். ஒரு சாதாரண வித்வான் சொல்லுக்கு, தானே உள்ள பொருளோடு நிற்பார்.
ஸ்ரீ சுவாமியின் ஈடு இணையற்ற மேதாவிலாசம் நமக்கு அவரது ஒரு சொல்லில் பல பொருள்களைக் காட்டுகிறது.
ஸ்ரீ எம்பெருமானாரின் க்ரந்தங்கள், சொற்கள் பழையதாகி வருகின்றன, ஆனால் பொருளோ தினமும் இளமையாய் உள்ளது.

பொருள் அல்லாத என்னை பொருள் ஆக்கி அடிமை கொண்டாய்
தமியேனுக்கு அருளாய் முந்திய பாசுரம்
அறிவித்து சத்தாக ஆக்கி
வஸ்துவை உருவாக்கி உஜ்ஜீவனமும் கொடுத்து
அசந்நேவ பவதி–
நான்கு நிலைகள் பார்த்தோம்
1-இருத்தல் 2-நிலை பெருத்து இருத்தல் -3-பகவத் ஞானம் -4-கைங்கர்யம்

என்னைப் புவியில் ஒரு பொருளாக்கி மருள் சுரந்த
முன்னைப் பழ வினை வேர் அறுத்து ஊழி முதல்வனையே
பன்னப் பணித்த இராமானுசன் பரன் பாதமும் என்
சென்னித் தரிக்க வைத்தான் எனக்கு ஏதும் சிதை வில்லையே ஸ்ரீ ராமானுஜ நூற்று அந்தாதி -4 –

மருள் சுரந்த முன்னை வினை -சூழலாக அஞ்ஞானம் கர்மா இரண்டும் உண்டே –
வேர் அறுத்து அசேஷ -சவாசனமாக ருசி யுடன் போக்கி
பன்ன பணித்த –ஆராய -பரன் பாதம் சென்னியில் தரிக்க வைத்தான்
பொருள் ஆக்குதல் இல்லை -ஒரு பொருள் -அத்விதீயமாய் -ஒருத்தி மகனாய் போலே
சேஷ பூதனாக அறிந்து அடிமை
ஆச்சார்ய நிஷ்டை ஸ்ரீ வடுக நம்பி நிலை
ஸ்ரீ அமுதனார் -அதுக்கும் மேலே -அன்பு செய்யும் சீரிய பேறுடையார் அடிக்கீழ் –
இந்த தனித்தன்மை ஒரு பொருள் பாகவத சேஷத்வம்

ஸ்ரீ ஸ்வாமி தனித்தன்மையுடன் அழகாக பிரமாணங்களைத் தொகுத்து அருளிச் செய்தார்
ஆச்சார்யர் கடாக்ஷத்தாலும் வாக் அம்ருத வர்ஷீயான இவர் பிதா மஹரின் ஆசீர்வாதத்தாலும்
இவர் பிதாவின் ஆசீர்வாதத்தாலும் ஸ்ரீ ஸ்வாமி நம்மை எல்லாம்
அமுத மொழிகளால் நீண்ட ஆண்டுகள் நனைக்கட்டும்

————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

ஸ்ரீ விஷ்ணு சகஸ்ரநாம உரை– இரண்டு – தடவை வரும் திரு நாமங்கள் ..

December 3, 2019

இரண்டு தடவை வரும் திரு நாமங்கள்..

1-அசோக :    -337/637
337-அசோக –பர வாசுதேவன் குண வாசக திரு நாமம்
637-அசோகா -விசோக–அர்ச்சாவதாரம் பரமான திரு நாமம்

337-அசோக –பர வாசுதேவன் குண வாசக திரு நாமம்

துன்பங்களை அழிப்பவன் -ஆத்யாத்மிக தாபம் போக்கி அருளி
ஓயும் மூப்புப் பிறப்பு இறப்பு பிணி வீயுமாறு செய்வான் -3-3-9-

ஆத்யாத்மிகங்களான சோகம் மோஹம் முதலிய துன்பங்களைப் போக்குபவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

சோகம் முதலிய ஆறு ஊர்மிகள் அற்றவர்-ஸ்ரீ சங்கரர் –

சோகம் இல்லாதவர் —-ஸ்ரீ சத்ய சந்தர் –

——-

637-அசோகா -விசோக–அர்ச்சாவதாரம் பரமான திரு நாமம்
சோகம் அற்றவன்
துயரமில் சீர்க் கண்ணன் மாயன் -துக்கமில் ஞானச் சுடர் ஒளி மூர்த்தி -3-10-6/8

நாதன் அற்றவன் எவனையும் காப்பாற்றாது விடாமையினால் அவன் விஷயமாகப் பின்னர் சோகப் படாதவர் –ஸ்ரீ பராசர பட்டர்-

ஆனந்த ரூபி யாதலின் சோகம் இல்லாதவர் -விசோக என்பது பாடம் –ஸ்ரீ சங்கரர் –

சோகம் இல்லாதவர் -விசோக -என்பது பாடம் –
அசோக -விசேஷமான சுகமுள்ள ஸ்ரீ வைகுண்டம் முதலியவற்றை இருப்பிடமாக யுடையவர் –ஸ்ரீ சத்ய சந்தர் –

—————-

2-அநக :         -148 /835
148-அநக-பிரதம அவதாரம் விஷ்ணு திரு நாமம்
835-அனக –அனு ப்ரேவேசித்து ரஷணம் பரமான திருநாமம்

148-அநக-பிரதம அவதாரம் விஷ்ணு திரு நாமம்
தோஷம் அற்றவன் -அமலன் -அகில ஹேய ப்ரத்ய நீகன்
குறை ஒன்றும் இல்லாத கோவிந்தன்
குற்றமில் சீர் கற்று -7-1-1-
மீண்டும் -835 -வரும்
தீதில் சீர் திருவேங்கடத்தான்
பூதங்கள் ஐந்து –இருள் சுடர் -கிளர் ஒளி மாயன் கண்ணன் -3-10-10-

அப்படி திருவவதரித்தும் பாபத்தின் தொடர்பு சிறிதும் இல்லாதவர் -ஸ்ரீ பராசர பட்டர்–
ஏவம் ஜன்ம சம்சார மத்யே ஜநித்வாஅபி அநக பாப பிரதி ஸ்பர்சி

குற்றம் இல்லாதவர் –ஸ்ரீ சங்கரர் —

பாவங்களுக்குக் காரணமான தோஷங்கள் அற்றவர் –ஸ்ரீ சத்ய சந்தர்-

ஓம் அநகாய நம
வியாப்ய கத தோஷமோ -அவதரித்ததும் சம்சார தோஷமும் தட்டாதவன்

——–

835-அனக –அனு ப்ரேவேசித்து ரஷணம் பரமான திருநாமம்
பாபம் அற்றவன் -பரி சுத்தன் -சுத்த சத்வ மயம்-
முன்பே 148 பார்த்தோம் தோஷங்கள் தீண்டா
பூதங்கள் ஐந்து –இருள் சுடர் –கிளரொளி மாயன் கண்ணன் -3-10-10-
தீதில் சீர் திருவேங்கடத்தான் -3-3-5
அமலன் –

கர்மத்திற்கு வசப் படாதவராதலின் கர்ம வசப் பட்ட ஜீவர்களைக் காட்டிலும் விலஷணமானவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

பாவமும் துக்கமும் இல்லாதவர் -ஸ்ரீ சங்கரர் –

பாவம் அற்றவர்-ஸ்ரீ சத்ய சந்தர் –

———–—————————————

3.அநந்த:     -665/889-
665-அநந்த –எல்லை அற்ற குண விபூதிமான் -பரமான – திரு நாமம் -மனத்தாலும் செயலாலும் ஆராதிக்கப்படுகை-
889-அநந்த ஹூத புக் போக்தா –மோஷ ப்ரதத்வம் திருநாமம்

665-அநந்த –எல்லை அற்ற குண விபூதிமான் -பரமான – திரு நாமம் -மனத்தாலும் செயலாலும் ஆராதிக்கப்படுகை-

எல்லை அற்றவன் -தேச கால வஸ்து பரிச்சேதம் இல்லாமல்
சத்யம் ஞானம் அநந்தம் ப்ரஹ்ம-
இன்பம் அளவிறந்து எங்கும் அழகு அமர் சூழ் ஒளியன்-3-10-8-
அந்தமில் புகல் அநந்த புர நகராதி -10-2-7-
கணக்கறு நலத்தனன் அந்தமில் ஆதி அம் பகவன் -1-3-5-
முன்பே -402-பார்த்தோம்-

தேசம் காலம் வஸ்து இவற்றால் அளவுபடாதவர் -எப்பொழுதும் எங்கும் எல்லா வழிகளிலும் செயல்படுபவர் –
வஸ்து பரிச்சேதம் இல்லாதவர் என்று வஸ்துவிற்கும் அவருக்கும் பேதம் இல்லை என்ற பொருளில் இல்லை -ஸ்ரீ பராசர பட்டர் –

அனந்த மூர்த்தயே
நாஸ்த்யந்தோ விஸ்தரஸ்ய மே –ஸ்ரீ கீதை -10-19-
அதைதஸ்யைவ அந்தோ நாஸ்தி யத் ப்ரஹ்ம –தைத்ரியம்
சத்யம் ஞானம் அநந்தம் ப்ரஹ்மம் –தைத்ரியம்

தேசம் காலம் வஸ்து இவற்றால் அளவுபடாதவர் –குணங்களுக்கு எல்லை இல்லாதவர் –
ஆதலால் அனந்தர் அழிவில்லாதவர் -ஸ்ரீ விஷ்ணு பிராணம் -ஸ்ரீ சங்கரர் –

அழிவற்றவர் -ஸ்ரீ சத்ய சந்தர் –

—————–

889-அநந்த ஹூத புக் போக்தா –மோஷ ப்ரதத்வம் திருநாமம்
மிக்க மகிமை யுள்ள இந்த்ரனையும் பிரமனையும் உடையவன்
யாகங்களில் அக்னியில் சேர்க்கப்படுமவைகளை புசிப்பதால் இந்த்ரன் ஹூத புக் –
பிரஜைகளைக் காப்பாற்றுவதால் பிரமனுக்கு போக்தா
11/12 படிகள்

யாகங்களில் ஹோமம் செய்வதை உண்பவனான -பதினோராம்படி -இந்த்ரனையும் பிரஜைகளைக்
காப்பவனான -பன்னிரண்டாம் படி -பிரமனையும் உடையவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

ச இந்திரலோகம் ச பிரஜாபதி லோகம்

அனந்த -தேச கால வஸ்து பேதங்களால் அளவுபடாதவர் –
ஹூதபுக் -ஹோமம் செய்வதை உண்பவர் –
போக்தா -பிரகிருதியை அனுபவிப்பவர் -உலகைக் காப்பவர் -மூன்று திரு நாமங்கள் -ஸ்ரீ சங்கரர் –

அனந்த -பந்தம் இல்லாதவர் -முடிவில்லாதவர் –
ஹூதபுக் -ஆஹூதியை நன்கு உண்பவர் –
போக்தா-உண்பவர்-மூன்று திரு நாமங்கள் -ஸ்ரீ சத்ய சந்தர் –

————————————–

4..அநல :   -294/716-
294-அநல—விஸ்வ ரூப திரு நாமம்
716-அநல-ஸ்ரீ கிருஷ்ணாவதார திரு நாமம்

294-அநல—விஸ்வ ரூப திரு நாமம்
திருப்தி பிறவாதவன்
உன் அடியார்க்கு என் செய்வன் என்றே இருத்தி -பெரிய திருவந்தாதி -53
ருணம் ப்ரவ்ருத்த மிவமே ஹ்ருதயான் நாப சர்ப்பதி-

பல வகைகளால் அடியவர்க்கு அனுக்ரஹித்தும் அது போதாது என்று நினைப்பவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

அநல் -நெருப்பு -அவன் அனைத்தும் செய்து அளித்தாலும் போதாது என்று இருக்குமா போலே
அவன் சம்பந்தத்தால் நெருப்புக்கு இந்த பெயர்
ஹவிஷா க்ருஷ்ண வர்த்மா பூய ஏவ அபி வர்த்ததே -ஸ்ரீ விஷ்ணு புராணம் -4-10-3-

அனம் எனப்படும் பிராணனை அலங்கரிக்கும் ஜீவாத்மாவே இருப்பவர் -அளவிட முடியாதவர் –ஸ்ரீ சங்கரர் –

தடுக்க முடியாதவர் -முக்ய பிராணனை பக்தனாகக் கொண்டவர் -உலகப் படைப்பு முதலியவகைகளில்
போதும் என்ற நினைவு இல்லாதவர் – ஸ்ரீ சத்ய சந்தர்-

————––

716-அநல-ஸ்ரீ கிருஷ்ணாவதார திரு நாமம்
திருப்தி பெறாதவன் -உன் அடியார்க்கு என் செய்வன் என்றே இருத்தி நீ -பெரிய திரு-53-

அடியவர்களுக்கு எல்லாம் செய்தாலும் திருப்தி அடையாமல் ஒன்றும் செய்ய வில்லையே என்று இருப்பவர் –
அடியவரிடம் பிறர் செய்யும் பிழையைப் பொறுக்காதவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

ருணம் ப்ரவ்ருத்தம் இவ மே ஹ்ருதயாந் நாபசர்பதி
த்வவ் து மே வதகால அஸ்மிந்ந ஷந்த்வ்யவ் கதஞ்சன யஜ்ஞ விந்தகரம் ஹந்யாம் பாண்டவா நாம் ச துர்ஹ்ருதம் —

தம்முடைய சக்திக்கு அளவில்லாதவர் -ஸ்ரீ சங்கரர் –

பக்தர்களுக்கு வேண்டியவற்றைத் தருவதில் போதும் என்ற எண்ணமே இல்லாதவர் -ஸ்ரீ சத்ய சந்தர் –

——————————————–

5- அநிர்தேச்யவபு : -179/662-
179-அநிர்தேச்ய வபு –ஜ்ஞானாதி பகவத் குணங்கள் கொண்டவன் திரு நாமம்
662-அநிர்தேச்யவபு –சக்தீசம் அவதார -பல மந்த்ரங்கள் வெளி இட்ட அவதார -திரு நாமம்

179-அநிர்தேச்ய வபு –ஜ்ஞானாதி பகவத் குணங்கள் கொண்டவன் திரு நாமம்
ஒப்பிட்டுச் சொல்ல முடியாத திரு மேனி –
ஞான பல சக்தி ஐஸ்வர்யம் வீர்யம் தேஜஸ் பூரணன்
ஈடும் எடுப்பும் இல் ஈசன் -1-6-3-
படியே இது என்று உரைக்கலாம் படியன் அல்லன் பரம் பரன் –8-8-2-
ஒருவரையும் நின் ஒப்பார் இலா என்னப்பா -பெரிய திரு மொழி -8-1-2-

மேற் சொன்ன ஆறு குணங்களை உடையவர் ஆதலால் தமது திருமேனிக்கு உவமை இல்லாதவர் –ஸ்ரீ பராசர பட்டர் –

மீண்டும் -662-வரும்
ஷாட் குண்ய விக்ரஹம் தேவம் பாஸ்வஜ் ஜ்வலந தேஜஸம்
புத்தி மனஸ் அங்க பர்யங்க வத்தாம் பகவதி லக்ஷயா மஹே சாஸ்த்ர சப்தேப்யோ புத்திமாந் அங்க ப்ரத்யங்கவாந்
இவனது திவ்ய மங்கள விக்ரஹம் பஞ்ச உபநிஷத் மயம் -சுத்த சத்வ மயேன ஹி அநேந கநக தலேந இவ ரத்னம்
உந்மீல்யதே ஷட் குணீ ச து த்ரி குண மயேந இவ நிமீல்யதே
ரூப வர்ணாதி நிர்தேச விசேஷண விவர்ஜித–ஸ்ரீ விஷ்ணு புராணம் -1-2-10-

தனக்குத் தானே பிரகாசிப்பதால் இது இப்படி என்று சுட்டிக் காட்ட முடியாத ஸ்வரூபம் உடையவர் –ஸ்ரீ சங்கரர் –

இப்படிப்பட்டது என்று வர்ணிக்க முடியாத திருமேனி உடையவர் -பூத சம்பந்தம் இல்லாத திரு மேனி -உபமானம் இல்லாதவர் –
மன்மதனை உண்டாக்கியவர்-ஸ்ரீ சத்ய சந்த தீர்த்தர் —

———-

662-அநிர்தேச்யவபு –சக்தீசம் அவதார -பல மந்த்ரங்கள் வெளி இட்ட அவதார -திரு நாமம்
சொல்லித் தலைக் கட்ட முடியாத அநேக திருமேனிகள் கொண்டவன்
திரு வுருவில் கரு நெடுமால் ரேயன் என்றும்
திரேதைக் கண் வளை யுருவாய் திகழ்ந்தான் என்றும்
பெரு வடிவில் கடல் அமுதம் கொண்ட காலம் பெருமானைக் கரு நீல வண்ணன் தன்னை
ஒரு வடிவத் தொரு உரு என்று உணரலாகா -திரு நெடும் -4-

அந்தந்த யுகங்களின் குணங்களை அபிவருத்தி செய்யும் பல ரூபங்களை யுடையவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

இன்னது இப்படிப்பட்டது என்று நிரூபிக்க முடியாத ரூபம் உள்ளவர் -ஸ்ரீசங்கரர் –

இப்படிப் பட்டது என்று வர்ணிக்க முடியாத திரு மேனி உடையவர் -ஸ்ரீ சத்ய சந்தர் –

————————————————————-

6.அநிர்விண்ண :   -436/893-
436-அநிர்விணண- ஸ்ரீ கல்கி அவதார திரு நாமம்
893-அநிர் விண்ண-முக்தனுக்கு மோஷானந்தம் தரும் ஸ்ரீ வைகுண்ட நாதன் பரமான திரு நாமம்

436-அநிர்விணண- ஸ்ரீ கல்கி அவதார திரு நாமம்
சோம்பல் இல்லாதவன்
சோம்பாது இப்பல் உருவை எல்லாம் படர்வித்த வித்தா -பெரிய திரு -18-
பக்தி உழவன் -நான்முகன் திரு -23-

உலகைப் படித்தும் அவரவர் வேண்டியவற்றை அடிக்கடி கொடுத்தும் கூட உலக விஷயங்களில் பித்துப் பிடித்துத்
தம்மை அணுகாமல் பயனற்றவர்களை மீண்டும் வசப்படுத்த பெரு முயற்சி செய்வதில் சிறிதும் சோர்வு அற்றவர் –
அதனாலன்றோ தொடக்கமும் முடிவும் இல்லாமல் படைத்தலைச் செய்கிறார் –ஸ்ரீ பராசர பட்டர் –

அவ்யுச் சிந்நா ததஸ் த்வேன சர்க ஸ்தித் யந்த ஸம்யமா –ஸ்ரீ விஷ்ணு புராணம் -1-2-26-ஸ்ருஷ்ட்டி ஸ்திதி சம்ஹாரம்
அனைத்தையும் தடை இன்றி செய்தபடியே உள்ளான்

எல்லாவற்றையும் அடைந்து இருப்பவராதலின் துன்பமில்லாதவர் –ஸ்ரீ சங்கரர் –

களைப்பு வேதனை இல்லாதவர் -ஞானம் சுகம் இவற்றில் இருந்து ஒய்வு பெறாதவர் –
அவற்றை எப்போதும் யுடையவர் –ஸ்ரீ சத்ய சந்தர் –

———

893-அநிர் விண்ண-முக்தனுக்கு மோஷானந்தம் தரும் ஸ்ரீ வைகுண்ட நாதன் பரமான திரு நாமம்
துயர் அற்றவன் -துயர் அறு சுடர் அடி தொழுது எழு -1-1-1-
சோம்பாது இப் பல்லுலகை எல்லாம் படைவித்த வித்தா -முன்பே 436-பார்த்தோம்
சேதனனை துயர் அறச் செய்வதில் சதா முயற்சி யுடையவன்

இப்படித் தம்மை அடைந்தவனை சம்சாரம் என்னும் படு குழியில் இருந்து கரையேற்றிய பிறகு
அவனைப் பற்றிய கவலை யற்று இருப்பவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

க்ருதக்ருத்யஸ்ததா ராமோ விஜ்வர

விரும்பியவை எல்லாம் நிரம்பி இருப்பதாலும் ஒன்றும் கிடைக்காமல் இருக்கக் காரணம் இல்லாமையாலும்
வருத்தம் அற்று இருப்பவர் -ஸ்ரீ சங்கரர் –

துன்பம் அடையாதவர் -உலகப் படைப்பு முதலிய செயல்களில் சலிப்பு அடையாதவர் -ஸ்ரீ சத்ய சந்தர் –

—————–————————————————————–

7.அநிருத்த:      -187/644-
187- அநிருத்த- ஸ்ரீ ஹம்ஸாவதார திரு நாமம்
644- அநிருத்த–அர்ச்சாவதாரம் பரமான திரு நாமம்

187- அநிருத்த- ஸ்ரீ ஹம்ஸாவதார திரு நாமம்
ஒருவராலும் தடை செய்ய முடியாதவன் –
விபவ அவதார கிழங்கு – பாற்கடலில் துயிலும் -அநிருத்த பகவான்–நினைவூட்டும்
அநிருத்தன் நின்றும் அவதரிக்கும் ஹம்ச ரூபியைச் சொல்லும்
ஏழு உலகும் ஆற்றல் மிக்கு ஆளும் அம்மான் -4-5-1-

அளவற்ற ஜீவ ராசிகளைக் காப்பாற்றுவதில் தடையற்ற திவ்ய சேஷ்டிதமுடையவர்–ஸ்ரீ பராசர பட்டர் –

அவதாரங்களிலும் எவராலும் தடுக்கப் படாதவர் –ஸ்ரீ சங்கரர் –

எவராலும் தடுக்கப்பட முடியாதவர் -ஞானிகளுக்குத் தடையில்லாதவர் -முக்ய பிராணனின் பக்தர்களால் தத்தம் இதயத்தில்
கட்டுப்படுபவர் -வேதத்துக்கு விரோதமான ஆசாரம் உடையவர்களை அழிப்பவர்-ஸ்ரீ சத்ய சந்த தீர்த்தர் –

——————

644- அநிருத்த–அர்ச்சாவதாரம் பரமான திரு நாமம்
வ்யூஹ மூர்த்தி வாஸூ பாண்டம் என்ற ஷேத்ரத்தில் வ்யூஹ வாசுதேவன் சேவை -முன்பே 187 பார்த்தோம்
விண் மீது இருப்பாய் மலை மேல் நிற்பாய் கடல் சேர்ப்பாய் -6-9-5-
திரு வல்லிக் கேணி -வேங்கட கிருஷ்ணன் தன திருக் குமாரன் அநிருத்தன் உடன் சேவை சாதிக்கிறான் –

ஜனார்த்தனர் என்னும் பெயருடன் பூமியில் வஸூ பாண்டம் என்னும் ஷேத்ரத்தில் அநிருத்தர் நித்யமாக இருக்கிறார் என்றபடி
அநிருத்தராக இருப்பவர் -பிறகு சில ஷேத்ரங்களில் முன் சொன்ன வ்யூஹ அவதாரங்களிலும் விபவ அவதாரங்களிலும்
சில இருப்பதைக் கூறுகிறது –ஸ்ரீ பராசர பட்டர்-

வ்யூஹங்களில் நான்காமவரான அநிருத்தர் –ஸ்ரீ சங்கரர் –

தடையற்றவர் -சம்சாரத்தில் இருந்து விடுபட்டவர்களை-முக்தர்களை தரிப்பவர் -போஷிப்பவர் –
தள்ளப்படாதராதலால் உத் என்னும் பெயர் யுடையவர் –ஸ்ரீ சத்ய சந்தர் –

———————————————

8.அநில:    -236/818-
236- அநில –ஸ்ரீ உபநிஷத் திரு நாமம்
818-அனில –தைவத் சம்பத் உள்ள சிஷ்ட பரிபாலனம் பரமான திரு நாமம் –

236- அநில –ஸ்ரீ உபநிஷத் திரு நாமம்
ஜீவிக்கச் செய்பவன் காற்று-அநிலம்-பிராண வாயு நம்மை ஜீவிக்க செய்வதால்
காண்கின்ற இக் காற்று எல்லாம் நானே என்னும் -5-6-3-
உலகு எல்லாம் ஊழி தோறும் தன்னுள்ளே படைத்து காத்து கெடுத்து உழலும் அம்மான் -10-8-1-

இப்படி யாவரையும் உய்விப்பவர் -இதனுடைய காலமாத்ரமே காற்று என்று பிரசித்தமானது -ஸ்ரீ பராசர பட்டர் –

அநாதி யானவர் -ஒன்றையும் ஆதாரமாகக் கொள்ளாதவர் -ஸ்ரீ சங்கரர் –

தனக்கு அடைக்கலம் ஒன்றும் தேவை இல்லாதவர் -தமக்கு பூமி ஆதாரமாக இல்லாமல் தாமே பூமிக்கு ஆதாரமானவர் – ஸ்ரீ சத்ய சந்தர்-

—————–———-

818-அனில –தைவத் சம்பத் உள்ள சிஷ்ட பரிபாலனம் பரமான திரு நாமம் –
தானே கார்யம் செய்பவன் -ஸ்வா பாவிகமாக -தன் பேறாக
வெறிதே அருள் செய்வர் செய்வார்கட்கு உகந்து
இன்று தானே தடுமாற்ற வினைகள் தவிர்த்தான்–10-8-5-

பக்தர்களை அனுக்ரஹிப்பதற்குத் தம்மைத் தூண்டுபவர் வேண்டாதவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

ததப்ய பிரார்த்திதம் த்யாதோ ததாதி மது ஸூதநா

தமக்குக் கட்டளை இடுபவர் யாரும் இல்லாதவர் -எப்போதும் தூங்காத ஞான ஸ்வரூபி –
பக்தர்களுக்கு அடைவதற்கு எளியவர் -ஸ்ரீ சங்கரர் –

வாயு பக்தர்களை ஏற்பவர் -ஸ்ரீ சத்ய சந்தர் –

————–——————————————–

9-அபராஜித :    -721/866-
721-அபராஜித – ஸ்ரீ கிருஷ்ணாவதார திரு நாமம்
866-அபராஜித –துஷ்டர்களை நிக்ரஹிப்பவன் -பரமான திரு நாமம்

721-அபராஜித – ஸ்ரீ கிருஷ்ணாவதார திரு நாமம்
வெல்ல முடியாதவன்
பற்ப நாதன் உயர்வற யுயரும் பெரும் திறலோன் -2-7-11-
யத்ர யோகேஸ்வர கிருஷ்ண தத்ர ஸ்ரீர் விஜயோ பூதி -ஸ்ரீ கீதை
அன்று ஐவரை வெல்வித்த மாயப் போர்த் தேர்ப் பாகனார் -4-6-1-

பாரதப் போரில் பாண்டவர் வேறு சகாயம் இல்லாமல் இருந்தபோதும் தம் சகாயத்தால் துர்யோதனாதியர் நூற்றுவராலும்
வெல்லப் படாதபடி செய்தவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

ஏகம் ஹனிஷ்யஸி ரிபும் கர்ஜந்தம் தம் மஹாம்ருத ந து தம் பிரார்த்த யஸ்யேகம் ரஷ்யதே ச மஹாத்மநா–உத்தியோகபர்வம்
யமா ஹுர் வேத விதுஷோ வராஹம் அஜிதம் ஹரிம் நாராயணம் அசிந்த்யம் ச தேந கிருஷ்னேந ரஷ்யதே -வனபர்வம்
அஜயாம்ச் சாபி அவத்யாம்ச் ச தாரயிஷ்யஸி தாந் யூதி ருதே அர்ஜுனம் மஹா பாஹும் தேவைரபி துராசதம்
யமாஹு அமுதம் தேவம் சங்கு சக்ர கதா தரம் பிரதான சோஸ்த்ரா விதூஷாம் தேந கிருஷ்னேந ரஷ்யதே –வனபர்வம்
யஸ்ய த்வம் புருஷ வ்யாக்ர சாரத்யம் உப ஜெக்மி வாந் ஸ்ருதம் ஏவ ஜயஸ்தஸ்ய ந தஸ்யாஸ்தி பராஜய -உத்யோக பர்வம்
சவதோஹம் தனுஷைகேந நிஹந்தும் சர்வ பாண்டவாந் யத் யேஷாம் ந பவேத் கோப்தா விஷ்ணு காரண பூருஷ
துருவம் வை ப்ராஹ்மணே சத்யம் த்ரவா சாது ஷு சந் நாதி ஸ்ரீர்த்ருவா சாபி தஷேஷு த்ருவோ நாராயணே ஐயா –யுத்த காண்டம்
அஜய்ய சாஸ்வதோ த்ருவ–யுத்த காண்டம்
அஜித கட்க த்ருக்–யுத்த காண்டம்
யத க்ருஷ்ணஸ் ததோ ஜய–உத்யோக பர்வம்
யத்ர யோகேஸ்வர கிருஷ்ண –ஸ்ரீ கீதை –18-78-
யதாஹம் நாபி ஜாநாமி வாஸூ தேவ பராஜயம் மாதுச்ச பாணி கிரஹணம் சமுத்ரஸ்ய ச சோஷணம்
ஏதேந சத்ய வாக்யேந சிஞ்சயதாம் அகதோ ஹ்யம்
ரத்நாகரம் இவா ஷோப்யோ ஹிமவா நிவ சாசல ஜாத தேவ இவா த்ருஷ்யோ நாராயண இவா ஐயா–வைதரேண சம்ஹிதை

காம க்ரோதங்கள் முதலிய உட் பகைகளாலும் அசுரர்கள் முதலிய வெளிப் பகைவர்களாலும் வெல்ல முடியாதவர் -ஸ்ரீ சங்கரர் –

பிறரால் தோற்கடிக்கப் படாதவர் -ஸ்ரீ சத்ய சந்தர் –

———–-

866-அபராஜித –துஷ்டர்களை நிக்ரஹிப்பவன் -பரமான திரு நாமம்
வெல்ல முடியாதவன் -முன்பே 721-பார்த்தோம்

எங்கும் உள்ள எல்லாவற்றையும் நடத்தும் தம் கட்டளை எக்காலத்திலும் எங்கும் எதனாலும் தடை படாதவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

தாஸார்ஹம் அபராஜிதம்
யஸ்ய மந்த்ரீ ச கோப்தா ச ஸூஹ்ருச்சைவ ஜனார்த்தன ஹரி த்ரிலோக்ய நாதா சந் கிம் நு யஸ்ய ந நிர்ஜிதம்

பகைவர்களால் வெள்ளப் படாதவர் -ஸ்ரீ சங்கரர் –

தம்மைக் காட்டிலும் மேம்பட்டவர் இல்லாதவர் -எவராலும் தோற்கடிக்கப் படாதவர் –
மற்றவர்களால் காக்கப் படாதவர் -ஒளியுடன் திகழ்பவர் -ஸ்ரீ சத்ய சந்தர் –

—————–————————————

10-அமித விக்ரம :   -519/647-
519-அமித விக்கிரம–பாகவத ரஷகன் திரு நாமம்
647-அமித விக்கிரம–அர்ச்சாவதாரம் பரமான திரு நாமம்

519-அமித விக்கிரம–பாகவத ரஷகன் திரு நாமம்
அளவற்ற சக்தியை உடையவன்
வற்றா முது நீரோடு மால் வரை ஏழும் துற்றாக முன் துற்றிய தோள் புகலொன் -பெரிய திருமொழி -7-1-2-

அவர்கள் தியானத்திலும் ஆராதனத்திலும் நினைக்கும் தத்வங்கள் எல்லாவற்றையும் தாங்கும் ஆதார சக்தியாக இருப்பவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

கால வைச்வா நர ஸாயீ நாநாத் வாதோ நிவாஸின ஆதார சக்தி சஞ்ஜஸ்ய ஹி அமூர்த்தஸ்ய ச வை விபோ
அபிமான தநுர்யோ வை நாநா பேதைச்ச வர்த்ததே –பவ்ஷ்கர சம்ஹிதை

திரிவிக்ரம அவதாரத்தில் அளவிட முடியாத மூன்று அடிகளை உடையவர் -அளவற்ற பராக்கிரமம் யுடையவர் –ஸ்ரீ சங்கரர் –

அளவிட முடியாத பராக்கிரமம் யுடையவர் -முழுவதுமாக அறியப்படாதவர் -கருடனைக் கொண்டு சஞ்சரிப்பவர் — ஸ்ரீ சத்ய சந்தர் –

——————–

647-அமித விக்கிரம–அர்ச்சாவதாரம் பரமான திரு நாமம்
அளவற்ற அடிகளை உடையவன்
தாள்கள் ஆயிரத்தாய் ..பெரிய அப்பனே -8-1-10-
முன்பே 519 பார்த்தோம் -அளவற்ற தேஜஸ் என்னவுமாம்

த்ரிவிக்ரம திரு வவதாரத்தில் மூவுலகங்களிலும் அமது திருவடிப் பதிப்பு அடங்காதவர் –ஸ்ரீ பராசர பட்டர்-

யாமுநம் ஜலம் ஆஸ்ரித்ய தேவ தேவஸ் த்ரிவிக்ரம ஸ்தித கமல ஸம்பூதா ந்ருணாம் ச ஸூபதி ப்ரத–
யமுனைக்கரையில் நிலையாக நின்று அனைத்து புருஷார்த்தங்களையும் அளிக்கிறான்

அளவற்ற மகிமை யுடையவர் -யாராலும் பீடிக்கப் படாத பராக்கிரமம் உள்ளவர் –ஸ்ரீ சங்கரர் –

எல்லையற்ற வீரம் யுடையவர் –ஸ்ரீ சத்ய சந்தர் –

———————————————-

11-அமேயாத்மா:      -103/481-

103- அமேயாத்மா –பரத்வம்-ஆஸ்ரித வத்சலன் திரு நாமம்

அறிய முடியாதவன் -அப்ரமேய -46-போலே -அனுக்ரஹ வெள்ளம் அளவிட முடியாதது
பற்றுடை அடியவர்க்கு எளியவன் -1-3-1–எளிவரும் இயல்வினன் பிறர்களுக்கு அறிய வித்தகன் –

அடியவர்களுக்கு அருளும் திறத்தில் இவ்வளவு என்று அளவிட முடியாதவர் -ஸ்ரீ பராசர பட்டர்

அதோ ஜ்யாயாந் ச புருஷ -புருஷ ஸூக்தம்
பூயான் ச அத ஜனார்த்தன

இவ்வளவு என்று அளவிடமுடியாத ஸ்வரூபத்தை யுடையவர் -ஸ்ரீ சங்கரர்

முழுமையாக அறிய முடியாத ஸ்வரூபத்தை யுடையவர் -ஸ்ரீ சத்ய சந்தர்-

ஓம் அமேயாத்மாய நம
அபரிச்சேத்யன் -யாரும் ஒரு நிலையன் என அறிய அரிய எம்பெருமான்

———————

12-அமோக :              -111/156-
111-அமோக –பரத்வம்-ஆஸ்ரித வத்சலன் திரு நாமம்
156-அமோக –ஸ்ரீ வாமன அவதார பரமான திரு நாமம்

111-அமோக –பரத்வம்-ஆஸ்ரித வத்சலன் திரு நாமம்
உறவு வீண் போகாதவன்
உன் தன்னோடு உறவேல் நமக்கு இங்கு ஒழிக்க ஒழியாது -திருப்பாவை -28-

தமது சம்பந்தம் வீண் போகாதவர் -ஸ்ரீ பராசர பட்டர்-

அமோகம் தர்சனம் ராம ந ச மோக தவ ஸ்தவ அமோகாஸ்தே பவிஷ்யந்தி பக்திமந்த ச யே நர –யுத்த -120-31-
ஸ்ரீ ராமா உனது தர்சனம் என்றுமே பயன் அற்றுப் போவதில்லை

பூசிப்பவர் துதிப்பவர் நினைப்பவர்க்கு வீண் போகாமல் எல்லாப் பலன்களையும் தருபவர் -ஸ்ரீ சங்கரர்-

படைப்பு முதலியவை வீண் போகாதவர் -ஸ்ரீ சத்ய சந்தர்-

ஓம் அமோகாய நம
தன்னையே பலமாக ஆஸ்ரிதர்களுக்கு கொடுப்பவன்

————————

156-அமோக –ஸ்ரீ வாமன அவதார பரமான திரு நாமம்
பழுது படாதவன் -வாட்டமில் புகழ் வாமனன் -2-4-1-
மோகம் வ்யர்த்தம் அமோகம் அது இல்லாமை
இந்த்ரன் ஐஸ்வர்யம் பெற்றான் -மகா பலி ஔதார்யன் பட்டம் பெற்றான் –
தன் சம்பந்தம் வீண் போகாதவன்

இந்த்ரன் மகாபலி ஆகிய இருவருக்கும் பழுது படாத அனுக்ரஹம் செய்தவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

அபரிமித பிரபாவாய–அவனது மந்த்ர வர்ணம்
அனுக்ரஹம் சாபி பலேரதுத்தமம் சகார யச்சேந்த்ர பதேபமம் க்ஷணாத் துராச்ச யஜ்ஜாம் சுபுஜஸ் –ஸ்ரீ விஷ்ணு தர்மம் -43-35-
யார் ஒருவன் நொடிப்பொழுதில் பலிக்கு இந்திர பதவிக்கு சமமான பதவி அளித்து தேவர்களையும் அவிர்பாகம் புஜிக்கும் படி செய்தானோ
யத்ராம்பு விந்யஸ்ய பலிர் மனோஜ்ஞாம் அவாப போக்யாந் வஸூதா தலஸ்த ததா அமரத்வம் த்ரிதசாதி பத்யம்
மன்வந்த்ரம் பூர்ணமபேத சத்ரு– ஸ்ரீ விஷ்ணு தர்மம் -5-7-30-மஹாபலி தேவர்களுக்கு நிகரான அந்தஸ்தை பெற்றான்

வீண் போகாத செய்கைகளை யுடையவர் –ஸ்ரீ சங்கரர் –

வீணாகாத சங்கல்பத்தை -அல்லது -வார்த்தையை -யுடையவர் — ஸ்ரீ சத்ய சந்த தீர்த்தர் –

ஓம் அமோகாய நம

———————————————

13-அவ்யய :            -13/900-
13-அவ்யய -விலக்காதவன் –பரத்வம்–முக்தர்களுக்கு மேலான கதியாய் உள்ளவன் திரு நாமம்
900-கபிரவ்யய –முக்தனுக்கு மோஷானந்தம் தரும் ஸ்ரீ வைகுண்ட நாதன் பரமான திரு நாமம்

13-அவ்யய -விலக்காதவன் –பரத்வம்–முக்தர்களுக்கு மேலான கதியாய் உள்ளவன் திரு நாமம்
நச புனராவர்த்தததே-நச புனராவர்த்தததே
அநாவ்ருத்திச்சப்தாத் -அநாவ்ருத்திச்சப்தாத் -ப்ரஹ்ம ஸூத்ரம்
திண்ணன் வீடு முதல் முழுதுமாய் –நம் கண்ணன் கண்ணல்லது இல்லையோர் கண்ணே -2-2-1-

அவ்யய-
தம்மை விட்டு ஒருவரும் அகலாமல் இருப்பவர் -சம்சார பெரும் கடலை கடந்து தன்னை அடைந்தார்
மீளாத படி அருளுபவர் -ஸ்ரீ பராசர பட்டர் —
ந ச புன ஆவர்த்ததே -ஸ்ரீ பாஷ்யம்-தன்னைப் போலே ஆக்கி பிரியாமல் வைத்து கொள்பவன் அன்றோ —
ந வீயதே ந வீயகம்யதே அஸ்மாத் இதி –

அவன் இடம் இருந்து யாரும் திரும்ப அனுப்படுவது இல்லை என்பதால் அவ்யய –
இதே போலே ப்ரத்யய -94-/ விநய -510-/ ஜய -511-திரு நாமங்களும் உண்டே
ஏதேந பிரதிபத்யமாநா இமம் மாநவம் ஆவர்த்த ந ஆவர்த்தந்தே –சாந்தோக்யம் –4-15-6-
ந ச புந ராவர்த்ததே -ந ச புந ராவர்த்ததே —சாந்தோக்யம் -8-15-1-
அநா வ்ருத்தி சப்தாத் அநா வ்ருத்தி சப்தாத் -4-4-4-
சத்வம் வஹதி ஸூஷ்மத்வாத் பரம் நாராயணம் ப்ரபும் பரமாத்மாநம் ஆ ஸாத்ய பரம் வைகுண்டம் ஈஸ்வரம்
அம்ருதத்வாய கல்பதே ந நிவர்த்ததே வை புந –எம ஸ்ம்ருதி
யதி தர்ம கதி சாந்த சர்வ பூத சமோ வசீ ப்ராப் நோதி பரமம்ஸ்தானம் யத் ப்ராப்ய ந நிவர்த்ததே

நாசம் அற்றவர் -விகாரம் அற்றவர் -ஸ்ரீ சங்கரர்–

சூர்யன் ஆகாயத்தில் சஞ்சரிக்க நியமனம் தந்தவர்-ஆட்டைப் போலே எதிரிகளை எதிர்க்கச் செல்பவர் -ஸ்ரீ சத்ய சந்த தீர்த்தர்-

ஓம் அவ்யய நம
நச புநராவ்ருத்தி லக்ஷணம் -யதா -நிகில ஹேய ப்ரத்ய நீக –கல்யாணை கதான–
ஜகஜ் ஜன்மாதிகாரணம் -சமஸ்த வஸ்து விலஷணம் — சர்வஜ்ஞ– சத்யசங்கல்ப –ஆஸ்ரித வாத்சல்யை கஜலதி–
நிரஸ்த சமாப்யதிக –சம்பாவன பரம காருணிக –பர ப்ரஹ்ம அபிதான –பரம புருஷ
அனாவ்ருத்திச் சப்தாத் அனாவ்ருத்திச் சப்தாத்
நச பரமபுருஷ சத்யசங்கல்ப அத்யர்த்தப்ரியம் ஜஞாநினம் லப்த்வா கதாசிதாவர்த்தயிஷ்யதி
சேதன லாபம் எம்பெருமானுக்கு பரம புருஷார்தம் அன்றோ
வாரிக் கொண்டு என்னை விழுங்குவன் காணில் என்று ஆர்வுற்ற என்னை ஒழிய என்னில் முன்னம்
பாரித்து தான் என்னை முற்றப் பருகினான் கார் ஒக்கும் காட்கரை யப்பான் கடியனே -9-6-10-

——————-

900-கபிரவ்யய –முக்தனுக்கு மோஷானந்தம் தரும் ஸ்ரீ வைகுண்ட நாதன் பரமான திரு நாமம்
அழிவில்லா ஆனந்தம் அனுபவிப்பவன்
பெரிய சுடர் ஞான இன்பம் -10-10-10-

மாறுதல் அற்ற நித்ய ஸூகத்தைக் காப்பாற்றி அனுபவிப்பவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

கபி -சூரியன் வராஹம் அப்யய -பிரளயத்தில் உலகம் அடங்கும் இடமாக இருப்பவர் -இரண்டு திரு நாமங்கள் -ஸ்ரீ சங்கரர் –

கபி சுகத்தைப் பருகுபவர் -அப்யய -பிரளயத்தில் உலகம் லயிக்கும் இடமாக இருப்பவர் -இரண்டு திரு நாமங்கள் –
அவ்யய-என்ற பாடத்தில் காக்கப் பட வேண்டியவர்களிடம் செல்பவர் என்றுமாம் – -ஸ்ரீ சத்ய சந்தர் –

————–————————————————

14-அஸ்த :             -479/481-
479-சத்–தர்ம ஸ்வரூபி திரு நாமம்
481-482-அசத் -ஷரம்–தர்ம ஸ்வரூபி திரு நாமம்

479-சத்–தர்ம ஸ்வரூபி திரு நாமம்
தர்ம ஸ்வரூபியாக இருப்பவன்
ஓம் தத் சத் -ப்ரஹ்மத்தையும் வேதத்தையும் குறிக்கும்
பக்திக்கு சுலபன் வசப்பட்டவன்
பத்துடை அடியவர்க்கு எளியவன்

சிறந்த வஸ்துவாகிய தர்மமே வடிவாக இருப்பவர் -இந்த தர்மத்தையே சத் என்று கொண்டாடுவது
இதனால் சாதிக்கப்படும் பகவான் சத்தாக இருப்பதாலேயே ஆகும் –
அவனுடைய சத்தாய் இருக்கும் தன்மை இயற்கையாகவே அமைந்துள்ளது –
எப்போதும் சத்தாய் இருப்பது –ஸ்ரீ பராசர பட்டர் –

பிரசஸ்தே கர்மணி ததா ஸச் சப்த பார்த்த யுஜ்யதே –ஸ்ரீ கீதை -17-27–உள்ளது நல்லது என்னும்
பொருளில் -சத் -மிகவும் உயர்ந்தவன்
ஸத்பாவே சாது பாவே ச சதித்யேதத் ப்ரயுஜ்யதே —-ஸ்ரீ கீதை -17-27-

சுத்த ப்ரஹ்மம் –ஸ்ரீ சங்கரர்-
அழிப்பவர் —ஸ்ரீ சத்ய சந்தர் –

——————-

481-482-அசத் -ஷரம்–தர்ம ஸ்வரூபி திரு நாமம்
துக்கத்தை தருபவன்
மெய்யர்க்கே மெய்யனாகும்
மெய்யனாகும் விரும்பித் தொழுவார்க்கு எல்லாம்

அசத்-
பாபிகளிடம் நில்லாமல் இருப்பவர் –ஸ்ரீ பராசர பட்டர் –

வேறு ப்ரஹ்மம் -பெயர் வடிவம் முதலிய அவித்யையோடு கூடிய ப்ரஹ்மம் –ஸ்ரீ சங்கரர்-

அழிவற்றவர் -அறிய முடியா ரூபத்தை யுடையவர் —ஸ்ரீ சத்ய சந்தர் –

அசத் ஷரம் –
பாபிகளுக்கு முடிவற்ற சம்சார துக்கத்தை கொடுப்பவர் –ஸ்ரீ பராசர பட்டர் –

ஏஷ ஏவ சாது கர்மா காரயதி தம் யமேப்யோ லோகேப்யஸ் உன்னி நீஷதி ஏஷ ஏவா சாது கர்ம காரயதி தம் யமதோ
நிநீஷதி–நல்லோர்களை நல்ல செயல்களை செய்விப்பவனும் அவனே தீயோர்களை தீய செயல்களை செய்விப்பவனும் அவனே
அசச்ச ஸச் சைவை ச யத் விஸ்வம் சத் அசத் பரம்

ஷரம் -அழியும் எல்லா பூதங்களுமாக இருப்பவர் –ஸ்ரீ சங்கரர்-

எப்போதும் கொடுப்பவர் -உலகை அழிப்பவர்—ஸ்ரீ சத்ய சந்தர் –

——————————————————

15-அஷோப்ய :      -807/999–
807- அஷோப்ய-புத்த அவதாரம் -பரமான திரு நாமம்
999-அஷோப்ய–திவ்ய ஆயுதமே திவ்ய ஆபரணம் -கண்ணுள் நின்று அகலாத திரு உருவம் திரு நாமம்

807- அஷோப்ய-புத்த அவதாரம் -பரமான திரு நாமம்
கலக்க முடியாதவன்
கலக்கமிலா நல தவ முனிவர்-8-4-10-

ஆழ்ந்த கருத்துள்ளவர் ஆதலால் யாராலும் கலக்க முடியாதவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

காமம் முதலியவற்றாலும் சப்தாதி விஷயங்களாலும் -அசுரர்களாலும் -கலக்க முடியாதவர் -ஸ்ரீ சங்கரர் –

கலக்க முடியாதவர் -பொன் புள்ளிகளை உடைய மாயமானாக வந்த மாரீசனை பயப்படும்படி செய்தவர் -ஸ்ரீ சத்ய சந்தர் –

————–———

999-அஷோப்ய–திவ்ய ஆயுதமே திவ்ய ஆபரணம் -கண்ணுள் நின்று அகலாத திரு உருவம் திரு நாமம்
அசைக்க முடியாதவன்
ப்ரபன்னாயா அபயம் சர்வ பூதேப்யோ ததாமி ஏதத் விரதம் மம-உறுதியான வ்ரதம் கொண்டவன்
தேசுடைய தேவனார் திருவரங்கச் செல்வனார் பேசி இருப்பனகள் பேர்க்கவும் பேராவே -நாச் திரு -11-5-
முன்பே 807 பார்த்தோம்

சரணம் அடைந்தவர்க்கு அபயம் கொடுப்பது என்ற உறுதியான விரதத்தில் இருந்து எப்போதும் அசைக்க முடியாதவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

இந்தச் சக்ராயுத உடைமையினால் யாராலும் கலக்க முடியாதவர் -ஸ்ரீ சங்கரர் –

கலக்க -துன்புறுத்த -முடியாதவர் -ஸ்ரீ சத்ய சந்தர் –

——————————————————-

16-ஆதித்ய :           -39/568-
39-ஆதித்ய–பரத்வம்-சமஸ்த இதர விலஷணன்-திரு நாமம்
568-ஆதித்ய–சுத்த ஸ்வரூபி-திரு நாமம் –

39-ஆதித்ய–பரத்வம்-சமஸ்த இதர விலஷணன்-திரு நாமம்
நீள் சுடர் இரண்டும் என்கோ -3-4-1-
ய ஏஷோ அந்தராதித்யே ஹிரண்மய புருஷ த்ருச்யதே தஸ்ய யதா கப்யாசம் புண்டரீக மேவ மஷிணீ —
தஸ்ய உதிதி நாமா -சாந்தோக்யம்
உத் -என்று அவன் திரு நாமம்
த்யேயஸ் சதா சவித்ரு மண்டல மத்ய வர்த்தி நாராயண –
568-ஆதித்ய-மீண்டும் வரும் தேவகி புத்திரன் –
அதிதியே தேவகியாக பிறந்தபடியால் அவள் கர்ப்பத்தில் உண்டானவனை ஆதித்யன்
ஆ- அஷரத்தினால் உபாசிக்கத் தகுந்தவன்
தேவகி தன் வயிற்றில் அத்தத்தின் பத்தா நாள் தோன்றிய அச்சுதன் -பெரியாழ்வார் -1-2-6
தேவகி சிங்கமே -பெரியாழ்வார் -1-3-4-

சூர்ய மண்டலத்தில் வசிப்பவர் -அவதாரங்களுக்கு எல்லாம் உதாரணமாக சூர்ய மண்டலத்தில் உள்ள
புருஷனைக் கூறுகிறார் -ஸ்ரீ பராசர பட்டர் —

அந்தஸ்த தர்ம உபதேசாத்-1-1-21-
ய ஏஷ அந்தராதித்யே ஹிரண்மய புருஷோ த்ருச்யதே –சாந்தோக்யம்
ச யச்சாயம் புருஷே யச்சா சா வாதித்யே ச ஏக –தைத்ரியம்
த்யேய யதா ஸவித்ரு மண்டல மத்ய வர்த்தீ
தஸ்ய யதா கப்யாசம் புண்டரீகம் ஏவம் அஷிணி–சாந்தோக்யம்
பக்தர்களுக்கு இன்பத்தைத் தருபவர் -ஸ்ரீ சங்கரர்—
சூர்ய மண்டலத்தில் இருப்பவர் -ஒரே சூர்யன் பிரதிபலிப்பது போலே பரமாத்மா ஒருவரே
பல உடல்களில் தோற்றுவதால் சூர்யன் போன்றவர் –
பன்னிரண்டு ஆதித்தியர்களில் விஷ்ணுவாக இருப்பவர் -அதிதியாகிய பூமிக்கு பதியாக இருப்பவர் -ஸ்ரீ சங்கரர்—

சூர்ய மண்டலத்தில் இருப்பவர் -அங்கே இருந்து கொண்டு பூமியின் நீரை ஆவியாக வற்றச் செய்பவர்-
உபேந்திர ரூபத்துடன் அதிதிக்கு மைந்தனாக அவதரித்தவர் -க்ரஹிப்பவர் -செல்பவர்-ஸ்ரீ சத்ய சந்த தீர்த்தர்—-

ஓம் ஆதித்யாய நம
ஸவித்ரு மண்டல மத்திய வர்த்தி

—————–

568-ஆதித்ய–சுத்த ஸ்வரூபி-திரு நாமம் –
தேவகி புத்திரன் -அதிதி தேவகியாக பிறந்ததால் தேவகி கர்ப்பத்தில் உண்டானவன் ஆதித்யன்
ஆ -சங்கர்ஷன பீஜாஷரம்
தேவகி தன் வயிற்றில் அத்தத்தின் பாத்தா நாள் தோன்றிய அச்சுதன் -பெரியாழ்வார் -1-2-6
தேவகி சிங்கமே -பெரியாழ்வார் -1-3-4-

முற்பிறவியில் அதிதியாக இருந்த தேவகியின் புதல்வர் -ஆகார எழுத்தினால் அடையத் தக்கவர் –
ஆகாரம் சங்கர்ஷண மந்திர பீஜ எழுத்து –ஸ்ரீ பராசர பட்டர் –

தாஷாயநீ த்வம் ஆதிதி ஸம்பூதா வஸூ தாதலே நித்யைவ த்வம் ஜகத்தாத்ரீ பிரசாதம் தே கரோம்யஹம்–ஸ்ரீ விஷ்ணு தர்மம் -93-44-

அதிதிக்கும் கச்யபருக்கும் மகனாக ஸ்ரீ வாமனனாகப் பிறந்தவர்–ஸ்ரீ சங்கரர் –

பிரஜைகளை உண்ணும் அசுரர்களைக் கை விடுபவர் -அநாதி காலமாகவே ஞான ஆனந்தங்களை யுடையவர் –ஸ்ரீ சத்ய சந்தர் –

——————————————————————————————————–

17-ஆதி தேவ  :      -335/491-
335-ஆதி தேவ–பர வாசுதேவன் குண வாசக திரு நாமம் –
491-ஆதி தேவ–தர்ம ஸ்வரூபி-திரு நாமம் –

335-ஆதி தேவ–பர வாசுதேவன் குண வாசக திரு நாமம் –
ஊழி முதல்வன் -அகில புவன ஜன்ம ச்தேம பங்காதி லீலே –

உலகைப் படைப்பை விளையாட்டாக உடையவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

சம் ப்ரயோஜ்ய வியோஜ்யாயம் காமகாரகர பிரபு க்ரீடதே பகவான்
அப்ரமேயோ அநியோஜ்யச்ச யத்ர காம கமோ வசீ மோததே பகவான் விஷ்ணு பால கிரீட நகைரிவ —
குழந்தை போலே அலகிலா விளையாட்டு உடையவன்

உலகத்திற்குக் காரணமான தேவர் -தானம் -பிரகாசித்தல் முதலிய குணங்களை உடையவர் -ஸ்ரீ சங்கரர் –

எல்லாவற்றிற்கும் காரணமான தேவர் —-ஸ்ரீ சத்ய சந்தர் –

——————

491-ஆதி தேவ–தர்ம ஸ்வரூபி-திரு நாமம் –
ஆதிப்பிரான்
பொலிந்து நின்ற பிரான் ஆதி யாவர்க்கும் முந்தியவன்
நான்முகன் தன்னோடு தேவர் உலகோடு உயிர் படைத்தான்

அவர்களுக்கும் காரணமாய் -பிரகாசிப்பவர் -ஸ்ரீ பராசர பட்டர்

பீஷ அஸ்மாத் வாத பவத–தைத்ரியம்

எல்லோரையும் தம்மிடம் சேர்த்துக் கொள்ளும் தேவதை -ஸ்ரீ சங்கரர்

பக்தர்களைத் தம்மிடம் சேர்த்துக் கொள்ளும் தேவதை -ஸ்ரீ சத்ய சந்தர்

——————————————————

18-ஈஸ்வர:            -36/75-
36-ஈஸ்வர –பரத்வம்-சமஸ்த இதர விலஷணன் திரு நாமம் –
75-ஈஸ்வர–த்ரிவித சேதன வ்யதிரிக்த -நியாமகன்-திரு நாமம்

36-ஈஸ்வர –பரத்வம்-சமஸ்த இதர விலஷணன் திரு நாமம் –
ஆளும் ஈசன் -பரமேஷ்டி -பரம பத நாதன் –
பல்லாண்டு என்று பவித்ரனைப் பரமேட்டியை –
அஜோபிசன் நவ்யயாத்மா பூதாநாம் ஈச்வரோபிசன் -ஸ்ரீ கீதை
தாள் பரப்பி மண் தாவிய ஈசன் -3-4-1- ‘
மீண்டும் 75-சர்வ ஸ்வாமி
எண்ணில் தொல் புகழ் வானவர் ஈசனே -3-3-3-
வானோர் பெருமான் மா மாயன் வைகுந்தன் எம்பெருமான் -1-5-4-

சுத்த ஸ்வரூபத்தில் இருப்பதைக் காட்டிலும் அவதாரங்களில் ஈஸ்வரத் தன்மை மிகவும்
பயன்படும் படி இருப்பவர் –ஸ்ரீ பராசர பட்டர் —
அதக ஜன்மசூ அதிகதம பிரயோஜன ஐஸ்வர் யாதி –

மானுஷீம் தனும் ஆஸ்ரிதம் பரம் பாவம் அஜா நந்த –ஸ்ரீ கீதை -9-11-
பூதா நாம் ஈஸ்வர அபி சந் –ஸ்ரீ கீதை -4-6-

இயற்கையான ஐஸ்வர்யம் உள்ளவர் -ஸ்ரீ சங்கரர்—-

கட்டளை இடுபவர் -ஈசர்களில் சிறந்தவர்-ஸ்ரீ சத்ய சந்த தீர்த்தர்—-

ஓம் ஈஸ்வரயா நம
அவதாரங்களில் ஈஸ்வரத் தன்மை குன்றாமல் ஆதி யம் சோதி உருவை அங்கு வைத்து இங்குப் பிறந்தவர்
சஹகாரி நிரபேஷமாக அனைவரையும் நியமிப்பவர்

————

75-ஈஸ்வர–த்ரிவித சேதன வ்யதிரிக்த -நியாமகன்-திரு நாமம்
சர்வ ஸ்வாமி -சர்வேஸ்வரேஸ்வரன்
சத்ய காம சத்ய சங்கல்ப -இச்சிப்பதும் நினைப்பதும் உண்மையாகும் -நடக்கும் –
எண்ணில் தொல் புகழ் வானவர் ஈசனே -3-3-3-
வானோர் பெருமான் மா மாயன் வைகுந்தன் எம்பெருமான் -1-5-4-

அளவில்லாத நித்ய விபூதியிலும் தடையில்லாத சங்கல்பம் உடையவர் -ஸ்ரீ பராசர பட்டர் —
ஸத்ய காம ஸத்ய ஸங்கல்ப –சாந்தோக்யம் -8-1-5
யத்ர காம அகமோ வசீ –எங்கும் செல்ல வல்லவன் -அனைத்தையும் தம் வசம் வைத்துள்ளவன்

எல்லாம் வல்லவர் ஆதலால் ஈஸ்வரர் -ஸ்ரீ சங்கரர் –

ஈச எனப்படும் பிரம்மா முதலியவர்களைக் காட்டிலும் மேம்பட்டவர் –
லஷ்மீ தேவியையும் வாயுவையும் பிரகாசிக்கச் செய்பவர்-ஸ்ரீ சத்ய சந்த தீர்த்தர்-

ஓம் ஈஸ்வராய நம
தனது சங்கல்பத்தாலே அனைத்தையும் ஆள்பவன்
கீழே -36-நாமாவளியாகவும் பார்த்தோம்
சர்வ சக்தன் -கிரியா இச்சா ஞான சக்திகளை ஆள்பவன்

——————–———————————

19-உத்பவ :         -374/796-
374-உத்பவ–ஸ்ரீ லஷ்மி சம்பந்த திரு நாமம்
796-உத்பவ –புத்த அவதாரம் -பரமான திரு நாமம்

374-உத்பவ–ஸ்ரீ லஷ்மி சம்பந்த திரு நாமம்
கட்டை விலக்குமவன்
தாமோதரம் பந்த தரம்

கயிற்றினால் கட்டப்பட்ட அவரை தியானிப்பவர்களுக்கு உலக வாழ்க்கை யாகிய
கட்டைப் போக்குபவர் –ஸ்ரீ பராசர பட்டர் –

தாமோதரம் பந்தஹரம் -கட்டுப்பட்டதை அனுசந்திக்க நம் சம்சாரக் கட்டு அவிழும்

உலகிற்கு உபாதான காரணமாக இருப்பவர் -சம்சாரத்திற்கு அப்பால் பட்டவர் —ஸ்ரீ சங்கரர் –

உயர்ந்தவர்களாகச் சொல்லப்படும் பார்வதியின் பதியான ருத்ரன் முதலியவர்களைப் படைத்தவர் –
சம்சாரத்தைத் தாண்டுவிப்பவர் -சம்சாரத்தைக் கடந்தவர் –ஸ்ரீ சத்ய சந்தர் –

——————-

796-உத்பவ –புத்த அவதாரம் -பரமான திரு நாமம்
உயர்ந்தவன் -மோஷ மார்க்கத்தை உபதேசிப்பதாக காட்டிக் கொண்டு சம்சாரிகளை விட உயர்ந்த –
மோஷ சாதனத்தை அடைந்து விட்டது போலே தோற்றம் கொடுக்கும் உயர்ந்தவன்-

மோஷத்தை உபதேசம் செய்பவர் போல் காட்டிக் கொண்டதால் உலகைக் கடந்தது போல் இருப்பவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

சிறந்ததான அவதாரங்களைத் தமது விருப்பத்தினால் செய்பவர் –எல்லாவற்றுக்கும் காரணம் ஆதலால் பிறப்பு இல்லாதவர் -ஸ்ரீ சங்கரர் –

சம்சாரத்தை அல்லது படைப்பைத் தாண்டியவர் -ஸ்ரீ சத்ய சந்தர் –

———————————————-

20-க்ருதஜ்ச :     -83/536-
83-க்ருதஜ்ஞ-பரத்வம்-த்ரிவித சேதன வ்யதிரிக்த -நியாமகன் திரு நாமம்
536-க்ருதஜ்ஞ-ஸ்ரீ கபில அவதாரமாய் ரஷணம் -திரு நாமம்

83-க்ருதஜ்ஞ-பரத்வம்-த்ரிவித சேதன வ்யதிரிக்த -நியாமகன் திரு நாமம்
செயல்களை அறிபவன்
தர்மஜ்ஞச்ச க்ருதஜ்ஞச்ச –
எண்ணிலும் வரும் -1-10-2-
உன் அடியார்க்கு என் செய்வன் என்றே இருத்தி நீ-பெரிய திருவந்தாதி -53–

ஆத்மாவிற்கு நிலை நின்ற ஸ்வரூபம் கைங்கர்யம் என்பதையும் தனக்கு என்று ஒன்றும் இல்லை எனபதையும் மறந்து
அவித்யையால் தங்களை ஸ்வதந்த்ரராக நினைத்து பிறப்பு இறப்புகளை யுடைய உலக வாழ்வில் அகப்பட்டு
உழலும் சம்சாரிகள் செய்யும் சிறிய உபசாரங்களையும் மறவாதவர் -ஸ்ரீ பராசர பட்டர் —

கோவிந்த இதி யத் ஆக்ரந்தத் கிருஷ்ணா மாம் தூர வாசினம் ருணம் ப்ரவ்ருத்தம் இவ மே ஹ்ருதயாத்
ந அபசர்ப்பதி–உத்யோக பர்வம் -3-58-22-

இலை பூ போன்ற எளியவற்றை அளிப்பவர்களுக்கும் மோஷம் தருபவர் –
பிரஜைகள் செய்யும் புண்ய பாப கர்மங்களை அறிபவர் -ஸ்ரீ சங்கரர் —

தனக்குச் செய்யப்பட்டு வழி பாட்டை நன்றியுடன் நினைப்பவர் -செய்யும் செயல்களை அறிபவர் –
எல்லா பொருள்களையும் அறிந்தவர் -ஜீவர்களை பிறப்பிப்பவர்-ஸ்ரீ சத்ய சந்த தீர்த்தர்-

ஓம் க்ருதஜ்ஞாய நம
சிறிது செய்தாலும் பெரியதாகவே கொள்பவன் -அனைத்தும் செய்தாலும் ஒன்றுமே செய்யயாதவன் போலே இருப்பவன்

—————–

536-க்ருதஜ்ஞ-ஸ்ரீ கபில அவதாரமாய் ரஷணம் -திரு நாமம்
நன்மை அறிந்தவன் -இஷ்வாகு வம்ச சகரன் -அஸ்வ மேத யாகம் -பிள்ளைகள் 60000 பேர் -குதிரையை
கபிலர் ஆஸ்ரமத்தில் கண்டு -எரிக்கப் பட்டனர் –
சாம்பல் ஆனார்கள் அம்சுமான் கபிலரை வணங்கி -அந்த சூக்ருதம் வணக்கத்தையே கண்டு அருள் புரிதார்
தெளிவுற்று வீவின்றி நின்று அவர்க்கு இன்பக் கதி செய்யும் கண்ணன் -7-5-11-

சகர புத்ரர்கள் அபராதம் செய்திருப்பினும் அம்சுமான் தன்னை வணங்கிய நல்வினையை
மட்டுமே அறிந்து இருப்பவர் –ஸ்ரீ பராசர பட்டர் –

கபிலமுப கம்ய பக்திநம் ரஸ்ததா துஷ்டாவ ச சைவம் பகவாநாஹ-அம்சுமான் கபிலரை வணங்கி ஸ்துதிக்க
அவர் உரைக்க தொடங்கினார்
வரம் வ்ருஷ்ணிவ -ஸ்ரீ விஷ்ணு புராணம் -வேண்டிய வரம் கேட்ப்பாயாக

கார்யமான உலகமாகவும் ஆத்மாவாகவும் இருப்பவர் –ஸ்ரீ சங்கரர் –

பக்தர்கள் செய்பவைகளை அறிபவர் — ஸ்ரீ சத்ய சந்தர் –

————–————————————–

21-க்ருதாகம :    -661/795-
661-க்ருதாகம–சக்தீசம் அவதார-பல மந்த்ரங்கள் வெளி இட்ட அவதார திரு நாமம்
795-க்ருத ஆகம –புத்த அவதாரம் -பரமான திரு நாமம்

661-க்ருதாகம–சக்தீசம் அவதார-பல மந்த்ரங்கள் வெளி இட்ட அவதார திரு நாமம்
ஆகமங்களை உண்டு பண்ணியவன்
சமய நீது நூல் என்கோ -3-6-6-
மீண்டும் 795 வரும்

இனி சக்தீசாவதாரம் -நிர்மல மனம் உள்ளவர்களுக்கு அநேக மந்த்ரங்கள் அடங்கிய
சாஸ்த்ரங்களை வெளியிட்டவர் — ஸ்ரீ பராசர பட்டர் –

சுருதி ஸ்ம்ருதி முதலிய சாஸ்த்ரங்களை வெளியிட்டவர் –ஸ்ரீ சங்கரர்-

புராணங்கள் முதலிய ஆகமங்களை யுண்டாக்கியவர்-கர்மங்களால் அடைய முடியாதவர் –
ஸ்ரீ கிருஷ்ணாவதாரத்தில் யமள அர்ஜூன மரங்களை அழித்தவர்-
பாரிஜாத மரத்தை பூமிக்குக் கொணர்ந்த ஸ்ரீ சத்யபாமா தேவியை யுடையவன்–ஸ்ரீ சத்ய சந்தர் –

—————-

795-க்ருத ஆகம –புத்த அவதாரம் -பரமான திரு நாமம்
சைவ ஆகமங்களை பொய் நூல் எனபது போலே -மனத்தை கவரும் படி மோகனமான ஆகம நூல்களை வெளியிட்டவன் –

அந்தச் செயல்களை ஸ்திரப் படுத்துவதற்க்காக புத்தாகமம் ஜைனாகமம் நுதலிய சமய நூல்களைச் செய்தவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

வேதத்தை வெளிப்படுத்தியவர் -ஸ்ரீ சங்கரர் –

வேதங்களைப் படைத்தவர் -ஸ்ரீ சத்ய சந்தர் –

———————————————

22-கிருஷ்ண :     -58/554-
58- கிருஷ்ண –பரத்வம்-சமஸ்த இதர விலஷணன்-திரு நாமம்
554-கிருஷ்ண –சுத்த ஸ்வரூபி-திரு நாமம்

58- கிருஷ்ண –பரத்வம்-சமஸ்த இதர விலஷணன்-திரு நாமம்

ஆனந்தம் அடைபவன் -சிருஷ்டி யாதிகளால்
இன்புறும் இவ்விளையாட்டு உடையானைப் பெற்று -3-10-9
கன்று மேய்த்து இனிது உகக்கும் காளை-

இந்த ஸ்ருஷ்டி முதலிய லீலைகளின் ரசத்தினால் எப்போதும் மகிழ்ந்து இருப்பவர் –ஸ்ரீ பராசர பட்டர் –

க்ருஷிணீ பூவாசக சப்த ணச்வ நிவ்ருத்தி வாசக க்ருஷ்ணஸ் தத் பாவ யோகாச்ச–உத்யோக பர்வம்

சச்சிதானந்த ரூபமாக இருப்பவர் -கருமை நிறம் உள்ளவர் -ஸ்ரீ சங்கரர் –

தனது கட்டளையிடும் சாமர்த்தியத்தினால் உலகை ஈர்ப்பவர்-ஸ்ரீ சத்ய சந்த தீர்த்தர்–

ஓம் க்ருஷ்ணா நம
கரியான் ஒரு காளை
ஆனந்தமயன் -நீல மேக ஸ்யாமளன்
லீலா ரசம் அனுபவிப்பவன் -கார் முகில் வண்ணன்

——————–

554-கிருஷ்ண –சுத்த ஸ்வரூபி-திரு நாமம்

கண்ணன் என்னும் கரும் தெய்வம்
கரியான் ஒரு காளை-பொதுவான திரு நாமம் –
காராயின காள நன் மேனியினன் நாராயணன் -9-3-1
கருவடிவில் செங்கண்ண வண்ணன்
ஆதி அஞ்சோதி உருவை அங்கு வைத்து இங்குப் பிறந்த வேத முதல்வன் -3-5-5-

கார் முகில் போல் அழகிய கருமை நிறம் உள்ளவர் –ஸ்ரீ பராசர பட்டர் –

க்ருஷாமி மேதிநீம் பார்த்த பூத்வா க்ருஷ்ணாயசோ மஹான் கிருஷ்ணோ வர்ணச்ச மே யஸ்மாத்
தேந கிருஷ்ணோஹம் அர்ஜுனன் -சாந்தி பூர்வம்
ஏகைவ பஞ்சதா பூதா பிராதான விக்ரஹாத்மிகா சர்வ சக்தி சமேதா அபி புருஷோ நியதீரிமா ந ஜஹாதி ஸ்வபாவோத்த
காருணியேந ஸமாச்ரித பரமேஷுடீ புமாந் விஸ்வோ நிவ்ருத்தி சர்வம் ஏவ ச பஞ்சைதா சக்த்ய ப்ரோக்தா
பரஸ்ய பரமாத்மந–ஸ்ரீ விஷ்ணு தத்வம்
மத்ஸ்ய கூர்ம வராஹானாம் ஆவிர்பவோ மஹாத்மந அநயைவ த்விஜ ஸ்ரேஷ்ட நாந் யதா தத் விரோததா

கிருஷ்ண த்வைபாயனர் என்னும் வியாச ரூபியானவர் –ஸ்ரீ சங்கரர் –

கரிய நிறமுடையவர் -அக்னி ரூபமாக இருப்பவர் –ஸ்ரீ சத்ய சந்தர் –

———————————————————-

23-  கர்த்தா            -316/381-
316-கர்த்தா –ஸ்ரீ பரசுராம -ஆவேச சக்தி -அவதார திரு நாமம்
381-கர்த்தா–சேதனர்கள் உடன் இணைந்து இருக்கும் ஒட்டின்மை திரு நாமம் –

316-கர்த்தா –ஸ்ரீ பரசுராம -ஆவேச சக்தி -அவதார திரு நாமம்

வெட்டுபவன்
தெழித்திட்டு எழுந்தே எதிர் நின்ற மன்னன் சினத்தோள் அவை ஆயிரம் முன் மழுவால்
அழித்திட்டவன்-பெரிய திருமொழி -10-6-6-

தம் கோபத்திற்குக் காரணமான கார்த்த வீர்யனை அழித்தவர்-ஸ்ரீ பராசர பட்டர் –

நிஸ் க்ஷத்ரியாம் யஸ்ய சாகர மேதி நீம் -ஸ்ரீ விஷ்ணு தர்மம் -43-37-

உலகைப் படைப்பவர் -குரோதமுள்ள அசுரர்களை அழிப்பவர் –
க்ரோத க்ருத்கர்த்தா-என்று ஒரே திருநாமமாகக் கொள்ளலாம் –ஸ்ரீ சங்கரர் –

சுதந்தரத் தன்மை யுடையவர் —ஸ்ரீ சத்ய சந்தர் –

———————–

381-கர்த்தா–சேதனர்கள் உடன் இணைந்து இருக்கும் ஒட்டின்மை திரு நாமம் –

செயல்படுபவன் –அனைத்தும் அவன் அதீனம்
செய்கின்ற கிரியை எல்லாம் நானே என்னும் –செய்வார்களைச் செய்வேனும் யானே என்னும்
செய்கைப் பயன் உண்பேனும் யானே என்னும்

அப்படிச் செய்விப்பதில் தாமே சுதந்திரராக இருப்பவர் -ஒரு செயலைச் செய்யும் அதிகாரியான ஜீவன் அதற்குரிய பலனை
புஜிக்கும் ஜீவன் எப்படித் தனது இன்ப துன்பங்களுக்கு அபிமானியாக இருக்கிறானோ அப்படியே எம்பெருமானும் அந்த ஜீவர்களை விட
அதிகமாக அவர்களுடைய இன்ப துன்பங்களுக்குத் தான் அபிமானியாக இருக்கின்றார் –ஸ்ரீ பராசர பட்டர் –

வியசனேஷு மனுஷ்யானாம் ப்ருசம் பவதி துக்கித உத்சவேஷு ச சர்வேஷு பிதேவ பரிதுஷ்யதி–அயோத்யா -2-40-
பஹு ஸ்யாம் ப்ரஜாயேய –தைத்ரியம்

சுதந்திரமானவர் –ஸ்ரீ சங்கரர் –

அனைத்தையும் நடத்துபவர் -பந்தத்தை அழிப்பவர்- -ஸ்ரீ சத்ய சந்தர் –

———————————————————

24-கஹந:           -383/548-
383-கஹன –சேதனர்கள் உடன் இணைந்து இருக்கும் ஒட்டின்மை திரு நாமம்
548-கஹந-சுத்த ஸ்வரூபி திரு நாமம்

383-கஹன –சேதனர்கள் உடன் இணைந்து இருக்கும் ஒட்டின்மை திரு நாமம்

அறிவுக்கு எட்டாதவன்
விண்ணவர்க்கு எண்ணல் அரியான்-சிந்திக்கும் கோசரம் அல்லன் -1-9-2/6

இப்படி ஜீவர்களுடைய இன்ப துன்பங்களைத் தம்முடையவையாக நினைப்பதாகிய
மஹா குணத்தில் கரை கடந்தவர் –ஸ்ரீ பராசர பட்டர் –

சஹைவ சந்தம் ந விஜா நந்தி தேவா –தைத்ரியம் 3-2-4-
ய ப்ருதிவ்யாம் திஷ்டன் –இத்யாதி
சஷுச் த்ரஷ்டவ்யம் ச நாராயண
அதிஷ்டானம் ததா கர்த்தா கரணம் ச ப்ருதக் விதம் விவிதா ச ப்ருதக் சேஷ்டா தைவம் சைவாத்ர பஞ்சமம் –ஸ்ரீ கீதை 18-14–

தம்முடைய தன்மை சக்தி செயல்களை ஒருவரும் அறிய முடியாதவர் —ஸ்ரீ சங்கரர் –

அறிந்து கொள்ள முடியாதவர் – -ஸ்ரீ சத்ய சந்தர் –

—————–—

548-கஹந-சுத்த ஸ்வரூபி திரு நாமம்

ஆழமானவன் -அளவற்ற பெருமை உடையவன்
தனக்கும் தன் தன்மை அறிவரியான்

உள்ளிருக்கும் பொருள் தெளிவாகத் தெரிந்தாலும் இறங்குவதற்கு அரிய கடல் போல அரியவர் -ஸ்ரீ பராசர பட்டர்

இறங்க முடியாதவர் -ஜாக்ரத் ஸ்வப்ன ஸூ ஷுப்தி நிலைகளில் இருக்கின்ற போதும்
இல்லாத போதும் சாஷியாக இருப்பவர் -ஸ்ரீ சங்கரர்

அறிய முடியாதவர் -அகஹன-பாடம் -மலைகளின் இறக்கைகளை வெட்டியா இந்திரனை நடத்துபவர் -ஸ்ரீ சத்ய சந்தர்

—————–————————————

25- காந்த:           -297/660-
297- விஸ்வ ரூபம் திரு நாமம்
660-அர்ச்சாவதாரம் பரமான திரு நாமம்

297-காந்த
விரும்பப் படுபவன்
எந்தாய் கொடியேன் பருகும் இன்னமுதே -7-1-7-

தமது அழகு மேன்மை முதலிய குணங்களால் யாவராலும் விரும்பப் படுபவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

மிகவும் அழகியவர் -ஸ்ரீ சங்கரர் –

பிரம்மாதிகளுக்கு சுகத்தைக் கொடுப்பவர் -அசுரர்களின் சுகத்தை அழிப்பவர் –
ஸ்ரீ ராமாவதாரத்தில் அணை கட்டியவர்-ஸ்ரீ சத்ய சந்தர்-

———–

660-காந்த
யாவராலும் விரும்பப் படுபவன்
கண்டவர் தம் மனம் வழங்கும் என் கரு மணி -பெருமாள் திரு -8-2-முன்பே 297 பார்த்தோம்-

யாவராலும் விரும்பத் தக்கவர் –அதனாலேயே அப்சரஸ்ஸூக்களால் அர்ச்சிக்கப் படுபவர் –
திருநாமங்களின் அர்த்தங்களைக் கொண்டு அந்தந்த ஷேத்ரங்களை ஊஹித்துக் கொள்ள வேண்டும் – ஸ்ரீ பராசர பட்டர் –

அழகான உடல் உள்ளவர் -த்விபரார்த்தத்தின் முடிவில் பிரமனுக்கும் முடிவைச் செய்பவர் -ஸ்ரீ சங்கரர்-

மனத்தைக் கவரும் அழகுடையவர் -ஸ்ரீ சத்ய சந்தர் –

—————–

26-குமுத ;         -596/813
596-குமுத –தர்மம் படி பலன் அளிப்பவன் திருநாமம்
813-குமுத –தைவத் சம்பத் உள்ள சிஷ்ட பரிபாலனம் பரமான திரு நாமம்

596-குமுத –தர்மம் படி பலன் அளிப்பவன் திருநாமம்
மகிழ்பவன் -அனஸ் நன்ன்னன்ய அபிசாக சீதி -மரம் இரண்டு பறவைகள்
கு பூ தத்வம் -போகம் விஷய அனுரூபம் -இன்புறும் இவ்விளையாட்டு உடையான் -3-10-7-
மேலும் 813 வரும்

கு எனப்படும் பிரகிருதி மண்டலத்தில் உள்ள சேதனர்களுக்கு போகங்களை அளித்து மகிழ்பவர் –
இப்படிப் படைக்கப் பட்ட பிரம்மா முதல் புல் வரை உள்ள ஏற்றத் தாழ்வுகளை யுடையதாய் -சப்தம் ஸ்பர்சம் முதலியவற்றை
அனுபவிக்கின்ற –சேதனர்களுக்கு போகங்களை அளித்து மகிழ்பவர் —ஸ்ரீ பராசர பட்டர் –

அநிசச் சாத்மா பத்யதே போக்த்ரு பாவாத்
ஞாஜவ் த்வா வஜா வீச நீசவ்

பூமியில் மகிழ்பவர் –ஸ்ரீ சங்கரர் –

பூமியில் மகிழ்பவர்-பூமியின் பாரத்தைத் தொலைத்து பூமிக்கு ஆனந்தத்தை அளிப்பவர் –ஸ்ரீ சத்ய சந்தர் –

—————-

813-குமுத –தைவத் சம்பத் உள்ள சிஷ்ட பரிபாலனம் பரமான திரு நாமம்

பூ மண்டலத்தின் ஆனந்தமாய் இருப்பவன்
நாட்டில் பிறந்து படாதன பட்டு -லோகத்தில் பிறந்தும் பரத்வாஜர் அத்ரி வசிஷ்டர் ஜடாயு -அகஸ்த்யர்
ஆஸ்ரமங்களில் ஆனந்தமாக பெருமாள்
வைகுந்தா மணி வண்ணனே என்னுள் மன்னி வைகும் வைகல் தோறும் அமுதாயா வானேறே -2-6-1-
ஓர் இடம் ஓன்று இன்றி என்னுள் கலந்தான் -2-5-3-

இவ் வுலகிலேயே அவர்களுடன் சேர்ந்து மகிழ்பவர் –ஸ்ரீ பராசர பட்டர் –

பூமியின் பாரத்தை ஒழித்து பூமியை மகிழ்விப்பவர் -ஸ்ரீ சங்கரர் –

உலகில் மகிழ்பவர் -ஸ்ரீ சத்ய சந்தர் –

——————————————————-

27-குரு :            -211/495-
211- குரூர் குரு தம–ஸ்ரீ மத்ஸ்ய அவதார திருநாமம்
495- குரு-தர்ம ஸ்வரூபி திருநாமம்

211- குரூர் குரு தம–ஸ்ரீ மத்ஸ்ய அவதார திருநாமம்
குரு தம குரு -பரமாச்சார்யன் –
அறியாக் காலத்துள்ளே அறியாதன அறிவித்த அத்தா -2-3-2-
பிதா மகராண ப்ரஹ்மனுக்கும் வேதங்கள் வெளிட்டு உபதேசித்து அருளினவன்
பீதக வாடைப் பிரானார் பிரம குருவாகி வந்து -பெரியாழ்வார் -5-2-8-

மத்ச்யாவதாரத்தில் எல்லா வித்யைகளையும் பிரமன் முதலியவர்களுக்கு உபதேசித்தமையால்
ஆசார்யர்களுக்கும் ஆசார்யர் -ஸ்ரீ பராசர பட்டர் –

ச பூர்வேஷாம் அபி குரு இதி ஹிரண்ய கர்ப்ப
பூஜ்ய ச குரு கரீயாந் –ஸ்ரீ கீதை -11-43-

குரு-எல்லோரையும் படைத்தவர் -எல்லா வித்யைகளையும் உபதேசித்தவர் –குருதம -பிரமன் முதலியவர்க்கும்
ப்ரஹ்ம வித்யையைக் கொடுத்தவர் -இரண்டு திரு நாமங்கள் –ஸ்ரீ சங்கரர் –

குரு -கற்பிப்பவர் -குருதம -மேலான ஆசார்யன் -இரண்டு திரு நாமங்கள் -பிரம்மா முதலியவர்களால்
விரும்பப் படுபவர் -பிருஹஸ்பதிக்கு ஞானம் அளித்தவர் — ஸ்ரீ சத்ய சந்தர்-

———————

495- குரு-தர்ம ஸ்வரூபி திருநாமம்
தேவர்களின் ஆசாரியன் -பிரதமாசாரியன்
பீதக வாடைப் பிரானார் பிரம குருவாகி வந்து
அறியாக் காலத்துள் அறியாதன அறிவித்த அத்தன் -2-3-2-
நர நாராயணனாய் யுலகத்து அற நூல் சிங்காமை விரித்தவன் எம்பெருமான் -பெரிய திரு மொழி -10-6-1-

யோ வை வேதாம்ஸ் ச ப்ரஹினோதி தஸ்மை –ஸ்வேதாஸ்வரம்
ஹரி குரு வசக அஸ்மி –ஸ்ரீ விஷ்ணு புராணம் -3-7-15-நான் ஆச்சார்யரான ஹரிக்கு அடக்கியவன் -நான்முகன்
அக்னி ஸ்வர்ணஸ்ய குரு -ஸ்ரீ விஷ்ணு புராணம் -3-7-15-தங்கத்தை தூய்மை செய்யும் அக்னி போலே ஹரியான குரு -யமன்
காலேந அநவச்சேதாத் இதம் குருத்வம் -ஹயசிர உபாக்யானம்
ஜக்ராஹ வேதான் அகிலான் ரஸாதல கதான் ஹரி ப்ராதாச்சம் ப்ராஹ்மணோ ராஜன் தத ஸ்வாம் பிரக்ருதிம் கத
ரசாதலாத் யேந பரா சமாஹருதோ ஸமஸ்த வேதா -ஸ்ரீ விஷ்ணு தர்மம் -43-36-

வேதங்களினால் அவரவர் அதிகாரங்களை உபதேசித்தமையால் அவர்களுக்கு குருவானவர் -ஸ்ரீ பராசர பட்டர்

———————–

28-கேசவ:         -23/654-
23-கேசவ –பரத்வம்-சமஸ்த இதர விலஷணன் திருநாமம்
654-கேசவ —சக்தீசம் அவதார -பல மந்த்ரங்கள் வெளி இட்ட அவதார திருநாமம்

23-கேசவ –பரத்வம்-சமஸ்த இதர விலஷணன் திருநாமம்
அழகிய கேசாபாசங்களை உடையவன் -இங்கு திரு மேனியின் அழகிலே நோக்கு
கொள்கின்ற கோளிருளைச் சுகிர்ந்திட்ட கொழும் சுருளின் உள் கொண்ட நீல நன்னூல் தழை கொல் அன்று மாயன் குழல் -7-7-9-
பிரமனுக்கும் ஈசனுக்கும் நிர்வாஹகன்
கேசி -அசுரனைக் கொன்றவன்
கேசவ -654- க்லேச நாசன -க்லேசங்களைப் போக்கும் கண்ணன்

கறுத்துச் சுருண்டு சேர்ந்து இணங்கி இருக்கும் கூந்தலை யுடையவர் –
இப்படிப்பட்ட அழகுக்கு யுரிய தனிப்பட்ட அடையாளம் -ஸ்ரீ பராசர பட்டர் –
பிரசஸ்த மிக நீள குடில குந்தள –

க-எனப்படும் பிரம்மா-அ எனப்படும் விஷ்ணு -ஈசன் எனப்படும் ருத்ரன் மூவரையும் தம் வசத்தில் யுடையவர் –
அழகிய கேசத்தை யுடையவர் -கேசியை வதம் செய்தவர் -ஸ்ரீ சங்கரர்—

பிரமன் ருத்ரன் ஆகியோரை படைத்தல் அழித்தல் செய்யும் படி தூண்டுபவர் –
அழகிய கேசங்களை யுடையவர் -கேசியை அழித்தவர் –
அம்சுமானாக இருப்பவர்–ஸ்ரீ சத்ய சந்த தீர்த்தர்—

ஓம் கேசவா நம
ப்ரசஸ்த கேச பாசன் -கேசி ஹந்தா

—————-

654-கேசவ —சக்தீசம் அவதார -பல மந்த்ரங்கள் வெளி இட்ட அவதார திருநாமம்
துக்கங்களை அழிப்பவன்
வினையேன் வினை தீர் மருந்தானாய் விண்ணோர் தலைவா கேசவா -1-5-6-
கேசவ கேசிஹா லோக -கேசவ க்லேச நாசன
வடமதுரை -வாரணாசி பிந்து மாதவ -கோயில் கொண்டு இருப்பவன்
கேசியைக் கொன்றவன்
முன்பு -23-பார்த்தோம் –

மதுரா நகரத்திலும் வாரணாசியிலும் கேசவன் என்னும் திருநாமத்துடன் எழுந்து அருளி இருப்பவன் -ஸ்ரீ பராசர பட்டர் –

கேசவ கேஸிஹா லோகே த்வை ரூப்யேன ஷிதவ் ஸ்திதஸ் மதுராக்ய மஹா க்ஷேத்ரே வாரணாஸ்யாம் அபி த்விஜ
மதுராவிலும் காசியிலும் கேசவன் இரண்டு விதமாக எழுந்து அருளி உள்ளான் –

க இதி ப்ரஹ்மணோ நாம ஈஸோஹம் சர்வதேஹி நாம் ஆவாம் தவாங்கே ஸம்பூதவ் தஸ்மாத் கேசவ நாமவான் –ஸ்ரீ ஹரி வம்சம் 279-47-

க-என்று பிரமனுக்கு பெயர் எல்லாப் பிராணிகளுக்கும் ஈசன் நான் -நாங்கள் இருவரும் உமது அம்சத்தில் யுண்டானவர்கள்-
ஆகையால் நீர் கேசவன் என்ற பெயருடையவன் -சிவன் சொல்வதாக ஹரி வம்சம் சொல்லும் –
சூர்யன் முதலியவர்களுடைய கிரணங்களுக்கு உரியவர் – க -அ-ஈச -எனப்படும் பிரம்மா -விஷ்ணு -சிவ சக்திகள்
மூன்றுக்கும் இருப்பிடமானவர் –ஸ்ரீ சங்கரர் –

வெள்ளை மற்றும் கருப்பு முடிகளை பூமியில் ஸ்ரீ பலராமன் மற்றும் ஸ்ரீ கிருஷ்ணன் ரூபத்தில் வைத்துக் கொண்டு இருந்தவர் –
ஸ்ரீ கிருஷ்ண கேச ரூபத்தால் அசுரர்களை அழிப்பவர் – -ஸ்ரீ சத்ய சந்தர் –

—————–

29-கோப்தா      -498/600-
498-கோப்தா –தர்ம ஸ்வரூபி திருநாமம்
600-கோப்தா–தர்மம் படி பலன் அழிப்பவன் திருநாமம்

498-கோப்தா –தர்ம ஸ்வரூபி திருநாமம்
வித்யா ரஷகன்
கற்கும் கல்வி செய்வான் கற்கும் கல்விச் சாரம் -5-6-2-

இப்படி எல்லா வித்யைகளையும் காப்பவர் -ஸ்ரீ பராசர பட்டர்

உலகங்கள் அனைத்தையும் காப்பவர்-ஸ்ரீ சங்கரர்

காப்பவர் -ஸ்ரீ சத்ய சந்தர்

—————

600-கோப்தா–தர்மம் படி பலன் அழிப்பவன் திருநாமம்
ரஷகன் -தேஜஸ் சொல்லும் திரு நாமம் –ஸூஷேன -544 போலே
சாலப் பல நாள் உகந்து ஓர் உயிர்கள் காப்பான் -6-9-3-

கர்மபலங்கள் அனைத்தையும் காப்பவர் —ஸ்ரீ பராசர பட்டர் –

தமது ஸ்வரூபத்தைத் தம் மாயையால் மறைப்பவர் -உலகைக் காப்பவர் –ஸ்ரீ சங்கரர் –

அனைவரையும் பாதுகாப்பவர் –ஸ்ரீ சத்ய சந்தர் –

—————

30-கோபதி        -497/599-
497-கோபதி-தர்ம ஸ்வரூபி திருநாமம்
599-கோபதி-தர்மம் படி பலன் அழிப்பவன் திருநாமம்

497-கோபதி-தர்ம ஸ்வரூபி திருநாமம்
சொற்களுக்கு ஸ்வாமி
நாவினுள் நின்று மலரும் ஞானக் கலைகளுக்கு எல்லாம் ஆவியும் ஆக்கையும் தானே யாவான் -1-9-8-

வேதங்களும் மொழிகளும் ஆகியவற்றை நடத்துபவர் -ஸ்ரீ பூமி தேவியின் கணவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

ஸ்ரீ கிருஷ்ணாவதாரத்தில் பசுக்களைக் காத்தவர் -ஸ்ரீ சங்கரர்

பூமி பசுக்கள் வாக்கு இவற்றைக் காப்பவர் -ஸ்ரீ சத்ய சந்தர்

—————

599-கோபதி-தர்மம் படி பலன் அழிப்பவன் திருநாமம்
போக பூமிக்கு ஸ்வாமி
கண்ணாவான் என்றும் மண்ணோர் விண்ணோர்க்கு
முன்பே 497 பார்த்தோம்

போக பூமியான ஸ்வர்க்கத்திற்கும் தலைவர் —ஸ்ரீ பராசர பட்டர் –

பூமிக்குத் தலைவர் –ஸ்ரீ சங்கரர் –

பசு -ஸ்வர்க்கம் -செல்வம் முதலியவற்றைக் காப்பவர்–ஸ்ரீ சத்ய சந்தர் –

—————–

31-கோவிந்த ;  -189/543-
189-கோவிந்த –ஸ்ரீ ஹம்ஸாவதார திருநாமம்
543-கோவிந்த-ஸ்ரீ வராஹ அவதார திருநாமம்

189-கோவிந்த –ஸ்ரீ ஹம்ஸாவதார திருநாமம்
தேவர்களால் துதிக்கப் படுபவன்
கோ -சொல் -ஏத்தும் சொல் மாலைகளைப் பெறுபவன்
மீண்டும் 543-பூமியை மீட்பவன் ரஷிப்பவன்
மேலாத் தேவர்களும் நிலத்தேவரும் விரும்பித் தொழும் மாலார் -5-1-8-
கூடாரை வெல்லும் சீர்க் கோவிந்தா -உன் தன்னைப் பாடிப் பறை கொண்டு -திருப்பாவை -27-

அத் தேவர்களின் துதி ஆகிய வாக்குகளைப் பெறுபவர் –ஸ்ரீ பராசர பட்டர் –

மறைந்து போன பூமியை எடுத்தவர் –ஸ்ரீ சங்கரர் –

பூமி வில் பசு ஸ்வர்க்கம் வேதம் ஆகியவற்றை அடைந்தவர் -ஸ்ரீ சத்ய சந்த தீர்த்தர் –

——————–

543-கோவிந்த-ஸ்ரீ வராஹ அவதார திருநாமம்
பூமியை உடையவன் கோ பூமி விந்த அடைபவன்
எம்மான் கோவிந்தனே
கோவிந்தன் குடக்கூத்தன் கோவலன் -2-7-4-

நஷ்டமாய்ப் போன பூமியை மீண்டும் அடைந்தவர் -ஸ்ரீ பராசர பட்டர்

நஷ்டாம் ச தரணீம் பூர்வமவிந்தம் ச குஹா கதாம் கோவிந்த இதி தே நாஹம் –சாந்தி பர்வம் –
ஸ்ரீ வராஹமாய் பூமியை மீட்டதால் எனக்கு கோவிந்தன்

வேதாந்த வாக்குகளால் அறியப் படுபவர் -ஸ்ரீ சங்கரர்

த்ருதராஷ்ரானுக்கு கண்களை அளித்தவர் -சமுத்திர ஜலத்தை அடைந்தவர் -ஸ்ரீ சத்ய சந்தர்

——————-

32-சக்ரீ           -908/885-
908-சக்ரீ-மோஷ ப்ரதத்வ திருநாமம்

908-சக்ரீ-மோஷ ப்ரதத்வ திருநாமம்
எப்போதும் கை கழலா நேமியான் நம் மேல் வினை கடிவான் -பெரிய திருவந்தாதி -87-
திவ்ய ஆபரணமாயும் ரஷையாயும்
ஆழியும் சங்கும் சுமப்பார் தாம் -8-3-3-
கூராழி வெண் சங்கு ஏந்தி கொடியேன் பால் வாராய் –ஒருநாள் காண வாராயே -6-9-1-
குனி சார்ங்கன் ஒண் சங்கதை வாள் ஆழியான் ஒருவன் -8-8-1-

அதே போலே ஸ்ரீ சக்கரத் ஆழ்வான் முதலிய திவ்ய ஆயுதங்களை உடையவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

உலகைக் காப்பதற்காக மனஸ் தத்வ ரூபமான ஸ்ரீ ஸூதர்சன சக்ரத்தை தரித்து இருப்பவர் -ஸ்ரீ சங்கரர் –

ஸ்ரீ சுதர்சனம் என்னும் சக்கரத்தை உடையவர் -ஸ்ரீ சத்ய சந்தர் –

——————-

———————

33-சதுர்வ்யூஹ :  -140/773-
140-சதுர்வ்யூஹ –வ்யூஹ நிலை திருநாமம்
773-சதுர் வ்யூஹ-ஸ்ரீ கிருஷ்ணாவதார திருநாமம்

140-சதுர்வ்யூஹ –வ்யூஹ நிலை திருநாமம்
நான்கு வ்யூஹ மூர்த்திகளாக
மீண்டும் 773–வாசுதேவ கிருஷ்ணன் -பலராமன் பிரத்யும்னன் அநிருத்தன்
த்யானத்துக்கு-ஏற்ப -உருவம் நிறம் திரு ஆபரணங்கள் வாஹனம் த்வஜம் வேறு பட்டு
அநிருத்தன் -ஜாக்ரத விளித்து கொண்டு இருக்கும் அவஸ்தை நிலை
பிரத்யும்னன் -ஸ்வப்ன -நிலை
சங்கர்ஷணன் ஆழ்ந்த தூக்கம் சூ ஷுப்தி
வாசுதேவன் துரீய அவஸ்தை மூச்சும் அடங்கி இருக்கும் நிலை

மேற்சொன்ன நான்கு மூர்த்திகளில் முறையே ஜாக்ரத் ஸ்வப்ன ஸூ ஷுப்தி துர்ய என்னும் நான்கு நிலைகளை உடையவர் -த்யானிக்க
வேண்டும் ஸ்வரூபம் இன்னது என்று தெரிவிக்க -ஆறு கல்யாண குணங்களைப் பிரித்தும் -அந்தந்த குணங்களுக்கு பிரகாசகமாக ஏற்பட்ட
அவயவம் வர்ணம் ஆபரணம் ஆயுதம் வாஹனம் கொடி முதலானவைகளோடும் கூடிய நான்கு நிலைகளை உடையவர் –ஸ்ரீ பராசர பட்டர்-

ஜாக்ரத் -விழிப்பு நிலை / ஸ்வப்னம் கனவு நிலை /ஸூஷூப்தி-ஆழ்ந்த நிலை உறக்கம் /தூரியம்-மயக்க நிலை -நான்கும்

வாஸூதேவ சங்கர்ஷண பிரத்யும்ன அநிருத்தர் என்ற நான்கு வியூஹங்களை உடையவர்–ஸ்ரீ சங்கரர் –

வாஸூதேவ சங்கர்ஷண பிரத்யும்ன அநிருத்தர்-என்னும் நான்கு வ்யூஹங்களை-அல்லது நான்கு வித ஆத்மாக்களை உடையவர் -ஸ்ரீ சத்ய சந்தர்-

ஓம் சதுர் வ்யூஹயா நம

——————-

773-சதுர் வ்யூஹ-ஸ்ரீ கிருஷ்ணாவதார திருநாமம்
வ்யூஹங்கள் போலே குண பூரணன் இவன்
பல ராமன் பிரத்யும்னன் அநிருத்தன் -இரண்டு இரண்டு குணங்கள் பிரதானம்

விபவத்திலும் வ்யூஹத்தில் போலே ஆறு குணங்களும் நிரம்பியவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

நான்கு பிரிவுகளை உடைய வ்யூஹத்தை உடையவர் -ஸ்ரீ சங்கரர் –

நான்கு வித வ்யூஹங்கள் உள்ளவர் -கேசவன் முதலிய இருபத்து நான்கு ரூபங்களுள் கேசவன் முதலிய ஆறு –
த்ரிவிக்ரமன் முதலிய ஆறு -சங்கர்ஷணன் முதலிய ஆறு -நரசிம்ஹன் முதலிய ஆறு ஆக நான்கு வகை வ்யூஹங்கள் கொண்டவர் –
சதுர் பாஹூச் சதுர் வ்யூஹ -என்ற ஒரே திருநாமம் என்றும் சொல்லுவர் – -ஸ்ரீ சத்ய சந்தர்

————————-

34-  சதுராத்மா     -139/775-
139-சதுராத்மா –வ்யூஹ நிலை திருநாமம்
775-சதுராத்மா –ஸ்ரீ கிருஷ்ணாவதார திருநாமம்

139-சதுராத்மா –வ்யூஹ நிலை திருநாமம்
நான்கு ரூபங்கள் -வாசுதேவன் -சங்கர்ஷணன் -பிரத்யும்னன் -அநிருத்தன் –
மீண்டும் -775-நாலு விதமாக -ஜாக்ரத -ஸ்வப்ன -ஸூ ஷுப்தி -துரீயம் -ஸ்தூலம் சூஷ்மாயும் விளங்குபவன்

வாஸூதேவன் -சங்கர்ஷணன் -பிரத்யும்னன் -அநிருத்தன் -என்னும் நான்கு மூர்த்திகளை உடையவர் –ஸ்ரீ பராசர பட்டர்-

சிருஷ்டி ஸ்திதி சம்ஹாரங்களில் நான்கு வகை சக்திகளை உடையவர் –ஸ்ரீ சங்கரர் –

பரவும் தன்மை யுடைய சாதுர்யமான ஆத்மாவாக இருப்பவர் -ஞானியான பிரமனைத் தோற்றுவித்தவர் -ஸ்ரீ சத்ய சந்தர்-

ஓம் சதுராத்மா நம

——————-

775-சதுராத்மா –ஸ்ரீ கிருஷ்ணாவதார திருநாமம்
தன்னை நாலு விதமாக காட்டுபவன்-
ஜாக்ரத -விழிப்பு -ஸ்வப்ன அரைத் தூக்கம் ஸூ ஷுப்தி ஆழ்ந்த நித்ரை துரீயம் இவைகளுக்கு மேலான
முன்பே -139 பார்த்தோம்

உபாசகர்களின் ஏற்றத் தாழ்வுகளுக்கு ஏற்ப ஜாக்ரத் ஸ்வப்ன ஸூஷுப்தி துரீயம் என்னும் நான்கு நிலைகளிலும்
நான்கு உருவங்களாக ஸ்தூலமாகவும் ஸூஷ்மமாகவும் விளங்குபவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

ஆசை வெறுப்பு முதலியவை இல்லாமையினால் சிறந்த மனம் உள்ளவர் –
மனம் புத்தி அஹங்காரம் சித்தம் ஆகிய நான்கு உருவங்களாக இருப்பவர் -ஸ்ரீ சங்கரர் –

ஜீவர்கள் அவரவர் யோக்யதைக்கு ஏற்றபடி தர்ம அர்த்த காம மோஷங்களில் மனம் செல்லும்படி தூண்டுபவர் -ஸ்ரீ சத்ய சந்தர் –

———————

35-சிவ :           -27/607-
27-சிவ- பரத்வம்-சமஸ்த இதர விலஷணன் திருநாமம்
607-சிவ –ஸ்ரீ சம்பந்த -பரத்வ-பரமான திருநாமம்

27-சிவ- பரத்வம்-சமஸ்த இதர விலஷணன் திருநாமம்
மங்களங்களை அளிப்பவன்-
ஞாலத்து உயிர்க்கு எல்லாம் அருள் செய்யும் -3-6-11
சாஸ்வதம் சிவம் அச்யுதம்
மங்களா நாஞ்ச மங்களம்
607–சிவ -மங்கள பரதன் மீண்டும் வரும் -சரீர சம்பந்தம் போக்கி –
அருளொடு பெரு நிலம் அளிக்கும் நாரணன் -பெரிய திரு மொழி -1-1-9-
செடியார் ஆக்கை அடியாரைச் சேர்த்தல் தீர்க்கும் திருமால் -1-5-7-

நன்மைகளைச் செய்பவர் -ஸ்ரீ பராசர பட்டர் –சுபாவஹா தத் சிவா –

சாஸ்வதம் சிவம் அச்யுதம்–தைத்ரியம்
ஸ்ம்ருதி சகல கல்யாண பாஜநம் –ஸ்ரீ விஷ்ணு தர்மம்
மங்களம் பகவான் விஷ்ணு
மங்களாய தநம் ஹரி
மங்களா நாஞ்ச மங்களம்-மஹா பாரதம்
மங்கல்யம் மங்களம் விஷ்ணு -ஸ்ரீ விஷ்ணு தர்மம்

முக் குணங்கள் இல்லாமையால் பரிசுத்தர் -சிவன் முதலிய நாமங்களாலும் விஷ்ணுவே ஸ்துதிக்கப் படுபவர் -ஸ்ரீ சங்கரர்—

மங்களமாக இருப்பவர் -மங்களைத்தையும் செய்பவர்-ஸ்ரீ சத்ய சந்த தீர்த்தர்—

ஓம் சிவா நம
அனைத்து மங்களங்களும் அளிப்பவர்

—————-

607-சிவ –ஸ்ரீ சம்பந்த -பரத்வ-பரமான திருநாமம்
மங்கள ப்ரதன்
அருளோடு பெரு நிலம் அளிக்கும் நாரணன் -பெரிய திரு மொழி-1-1-9-
செடியார் ஆக்கை அடியாரைச் சேர்த்தல் தீர்க்கும் திரு மால் -1-5-7-

இப்படி எல்லா முமுஷூக்களுக்கும் புபுஷூக்களுக்கும் அவரவர்க்கு உரிய நன்மைகள் செய்பவர் –ஸ்ரீ பராசர பட்டர்-

சம்சார மோக்ஷ ஸ்திதி பந்த ஹேது –ஸ்ரீ விஷ்ணு புராணம் -6-7-72-
பித்ரு லோகேவ் ராஜ்யம் அநு சாஸ்தி தேவ
சிவஸ் சிவா நாம் அசிவஸ் அசிவா நாம் — உத்யோக பர்வம்

தம்முடைய நாமத்தை நினைத்த மாத்திரத்தில் பாவத்தைப் போக்குபவர் –ஸ்ரீ சங்கரர் –

சுகமே வடிவானவர் -மங்களத் தன்மை உள்ளவர் -முக்தர்களைப் போஷிப்பவர் –ஸ்ரீ சத்ய சந்தர் –

—————-

36-சுசி :            -157/252-
157-சுசி –ஸ்ரீ வாமன அவதார பரமான திருநாமம்
252- சுசி –சித் அசித் -இவைகளாலான -ஐஸ்வர்ய -பூர்த்தி திருநாமம்

157-சுசி –ஸ்ரீ வாமன அவதார பரமான திருநாமம்
தூயவன் -பிரதிபலன் எதிர்பாராமல் –
தீர்த்தனுக்கே தீர்த்த மனத்தனாகி -7-10-11-
அமலனாதி பிரான்
அந்தணன் -மீண்டும் 252-வரும்

இப்படிப் பட்ட உபகாரங்களுக்கு பிரதி உபகாரம் எதிர்பாராத சுத்தி யுடையவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

தம்மை த்யானிப்பவர் -துதிப்பவர் -அர்ச்சிப்பவர்களை பரிசுத்தர் ஆக்குபவர் –ஸ்ரீ சங்கரர் –

பரிசுத்தமானவர் – ஸ்ரீ சத்ய சந்த தீர்த்தர் –

ஓம் சுசி நம
அடியார்களை சுத்த ஸ்வ பாவன் ஆக்குபவன்

—————-

252- சுசி –சித் அசித் -இவைகளாலான -ஐஸ்வர்ய -பூர்த்தி திருநாமம்
தூய்மை உடையவன் -தேஜஸ் -157 பார்த்தோம்
அரங்க மேய அந்தணனை அந்தணர் தம் சிந்தையானை –
தேவர்க்கும் அறியலாகா அந்தணனை

தமக்குத் தாமே தூய்மை பெற்றவர் -சிஷ்டக்ருத் ஸூசி -ஒரே திரு நாமம் -ஸ்ரீ பராசர பட்டர் –

மாயையாகிய குற்றம் அற்றவர் –ஸ்ரீ சங்கரர் –

தூய்மையானவர் -ஸ்ரீ சத்ய சந்தர்-

——————-

37-சுபாங்க :          -593/788-
593-சுபாங்க –தர்மம் படி பலன் அழிப்பவன் திருநாமம்
788-சுபாங்க –புத்த அவதாரம் -பரமான திருநாமம்

593-சுபாங்க –தர்மம் படி பலன் அழிப்பவன் திருநாமம்
யோகத்தின் எட்டு அங்கங்களையும் நிறைவேற்றித் தரும்
யமம் நியமம் ஆசனம் பிராணாயாமம் ப்ரத்யாஹாரம் தாரணம் த்யானம் சமாதி
மேலும் -788- வரும் -அழகிய அங்கங்களை உடையவன் –

யோகத்தின் அங்கங்களான யமம் முதல் சமாதி வரை நிறைவேற்றுபவர் —ஸ்ரீ பராசர பட்டர் –

அழகிய உருவத்தை தரிப்பவர் –ஸ்ரீ சங்கரர் –

மங்களமான அவயவங்கள் உள்ளவர் -மங்களத் திற்கான ஞானம் அளிப்பவர் –ஸ்ரீ சத்ய சந்தர் –

——————

788-சுபாங்க –புத்த அவதாரம் -பரமான திருநாமம்
மங்களகரமான அழகிய உடலுடன் உடையவன் -கள்ள வேடம் -வஸ்தரேன வபுஷா வாசா -உடல் உடை பேச்சு அழகு
பொன்னின் வண்ணம் மணியின் வண்ணம் புரையும் திருமேனி -4-9-8-

இவர் நம்பத் தகுந்தவர் என்று அசுரர்கள் ஏமாறுவதற்காக மயக்கும் அழகிய உருவம் கொண்டவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

அழகிய அங்கங்கள் உடையவராக தியானிக்கப் பெறுபவர் -ஸ்ரீ சங்கரர் –

மங்களகரமான அங்கங்கள் உள்ளவர் -ஸ்ரீ சத்ய சந்தர் –

——————

38-சூர :            -340/650-
340-சூர-ஸ்ரீ பர வாசுதேவன் குண வாசக திருநாமம்
650-சூர-அர்ச்சாவதாரம் பரமான திருநாமம்

340-சூர-ஸ்ரீ பர வாசுதேவன் குண வாசக திருநாமம்
சமர்த்தன் -சென்று அங்குத் தென்னிலங்கை செற்றான்
அன்று நேர்ந்த நிசாசரரை வெந்நரகம் சேரா வகையே சிலை குனிந்தான் –
சென்று அங்கு வாணனை ஆயிரம் தோளும் தென்றித் திரை திசை விழச் செற்றாய் -பெரிய திரு மொழி -5-3-4-

வெற்றியை உடையவர் –ஸ்ரீ பராசர பட்டர் –

பராக்கிரமம் உடையவர் -ஸ்ரீ சங்கரர் –

பயந்தவர்களால் அடையப்படுபவர் -போருக்குச் செல்பவர் -சுகத்தைத் தருபவர் —ஸ்ரீ சத்ய சந்தர் –

—————

650-சூர-அர்ச்சாவதாரம் பரமான திருநாமம்
எதிரிகளை அழிப்பவர்-
திருச் சித்திர கூடம் தன்னுள் எவ்வரி வெஞ்சிலைத் தடக்கை பிராமன் -பெருமாள் திரு -10-3-முன்பே 341 பார்த்தோம்

சித்ர கூட மலையில் ராஷசர்களை அழிப்பவரும் தாமரை இதழ் போன்ற நீண்ட கண்களை யுடையவருமான
ஸ்ரீ ராமபிரான் இருக்கிறார் -என்றபடி சூரரான ஸ்ரீ ராமபிரானாக இருப்பவர் –ஸ்ரீ பராசர பட்டர்-

தராதரே சித்ரா கூடே ரக்ஷ ஷயகரோ மஹாந் சம்ஸ்தி தச்ச பரோ ராம பத்ம பத்ராய தேஷண

வீரராக இருப்பவர் -வீர -என்பது பாடம் –ஸ்ரீ சங்கரர் –

மேன்மை யுள்ளவரை நோக்கிச் செல்பவர் -வீர என்பது பாடம் –ஸ்ரீ சத்ய சந்தர் –

——————–

39-த்யுதிதர:       -276/764-
276-ஓஜஸ் தேஜோ த்யுதிதர–விஸ்வ ரூபம் திருநாமம்
764-த்யுதிதர–ஸ்ரீ கிருஷ்ணாவதார திருநாமம்

276-ஓஜஸ் தேஜோ த்யுதிதர–விஸ்வ ரூபம் திருநாமம்
பலம் பராக்கிரமம் தேஜஸ் -எல்லாம் ஓஜஸ் -பலம் தேஜஸ் தேசு த்யதி பிரகாசம் ஒளி
குன்றம் ஓன்று ஏந்தியதும் நிகரில் மல்லரை செற்றதும் நிரை மேய்த்தத்வும்
நீள் நெடும் கை சிகர மா களிறு அட்டதும் இவை போல்வனவும் பிறவும்
புகர் கொள் சோதிப் பிரான் செய்கை -6-4-3
திவி ஸூ ரய சஹச்ரச்ய பவேத் யுக துத்திதா -சஞ்சயன் ஆயிரம் சூர்யன் போன்ற கிருஷ்ணன் பிரகாசம்

பலம் பராக்கிரமம் கீர்த்தி ஒளி ஆகியவற்றை யுடையவர் –ஸ்ரீ பராசர பட்டர் –

ஓஜஸ் தேஜஸ் த்யுதிர –பலம் வெல்லும் திறன் கீர்த்தி காந்தி இவற்றைத் தரிப்பவன்
யதா ப்ரதீப்தம் ஜ்வலநம் பாதங்கா விசாந்தி நாசாய சஸ்ருத வேகா -11-29-
ஸ்தானே ஹ்ருஷீகேச தவ ப்ரகீர்த்தயா -11-36-
திவி ஸூர்ய சஹஸ்த்ரஸ்ய பவேத் யுகபத் யுதிதா-11-12-

பலம் பராக்கிரமம் ஒளி ஆகியவற்றை யுடையவர் -ஓஜ-தேஜ இரண்டு திருநாமங்களாக கொண்டு ஞானத்தின்
அடையாளமான ஒளியைத் தரிப்பவர் -ஆதலால் த்யுதி தரர் –ஸ்ரீ சங்கரர் –

பராக்கிரமம் பிரதாபம் பிரகாசம் ஆகியவற்றை யுடையவர்-ஸ்ரீ சத்ய சந்தர்-

—————-

764-த்யுதிதர–ஸ்ரீ கிருஷ்ணாவதார திருநாமம்
அதி மானுஷமான திவ்ய சக்தி யுடையவன்
மாயக் கோலப் பிரான் -6-4-1
கண்டவாற்றால் தனதே உலகு என நின்றான்

ஸ்ரீ கிருஷ்ணாவதாரத்தில் இளமையிலும் இந்திரனைத் தோற்கச் செய்யும் அதி மானுஷ சக்தியை உடையவர் -ஸ்ரீ பராசர பட்டர்-

தேக ஒளியை தரிப்பவர் -ஸ்ரீ சங்கரர்-

ஒளியைத் தாங்குபவர் -ஸ்ரீ சத்ய சந்தர் –

————————–

40-த்ருவ :          -55/389-
55- த்ருவ-பரத்வம்-சமஸ்த இதர விலஷணன் திருநாமம்
389-த்ருவ–ஸ்ரீ த்ருவ திருநாமம்

55- த்ருவ-பரத்வம்-சமஸ்த இதர விலஷணன் திருநாமம்
மாறாமல் நிலை நிற்பவன் -ஸ்வரூபத்தில் நின்றும் நழுவாமல் –
அசையா சாஸ்வதோ த்ருவ –
அவிகாராய சுத்தாயா நித்யாய பரமாத்மனே
உள்ளூரும் சிந்தை நோய் எனக்கே தந்து -திரு நெடும் -23-பிரிவுத் துயரை எனக்கே தந்தாய்

இப்படிப் பலவகை உலகங்களாக மாறியும் ஸ்வரூபம் மாறாதவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

மாறாத ஸ்வரூபம் -அவதாரங்கள் எல்லை அற்று இருந்தாலும் மாறாமல் இருப்பவன்
அஜஸ்ய ஸாஸ்வதோ த்ருவ–யுத்த -114-15-
அதிகாராய ஸூத்தாய –
அபஷய விநாசாப்யாம்

நிலையானவர்—ஸ்ரீ சத்ய சந்த தீர்த்தர்–

ஓம் த்ருவாய நம
அவிகாராய -ஸ்வரூப ஸ்வ பாவங்கள் யுகங்கள் தோறும் கொண்டவன்-

—————-

389-த்ருவ–ஸ்ரீ த்ருவ திருநாமம்
நிலைத்து இருப்பவன்

கீழ்ப்பட்டவனான த்ருவனுக்கும் அழியாத உயர்ந்த நிலை கொடுத்தவர் –ஸ்ரீ பராசர பட்டர் –

அழியாதவர் –ஸ்ரீ சங்கரர் –

அழிவில்லாதவர்–ஸ்ரீ சத்ய சந்தர் –

—————

41-தஷ :             -424/917-
424-தஷ –கல்கி அவதார திருநாமம்
917-தஷ –ஸ்ரீ கஜேந்திர மோஷ பரமான திருநாமம்

424-தஷ –கல்கி அவதார திருநாமம்
விரைவில் முடிப்பவன் -குதிரை மேல் வாள் ஏந்தி
குலங்குலமா அசுரர்களை நீறாகும் படியாக நிருமித்துப் படை தொட்ட மாறாளன் -4-8-1-

மிலேச்சர்களை விரைவில் வதம் செய்பவர் –ஸ்ரீ பராசர பட்டர் –

கல்கி சரிஷ்யதி மஹீம் சதா தஸ் யுவதே ரத ஆக்ரோஸமாநாந் ஸூ ப்ருசம் தஸ்யூந் நேஷ்யதி சம்ஷயம்–வனபர்வம் -191-15-
தக்ஷ வ்ருத்தை சீக்ர அர்த்தே ச –விரைவாக என்றும் வளரும்படி என்றும்
ஷிப்ரகாரீ ஜனார்த்தன -சபா பர்வம் -வேகமாகச் செயல் புரிபவன் –

பல உலக வடிவங்களாக விருத்தி அடைபவர் –ஸ்ரீ சங்கரர் –

தொல்லை தருபவரை அழிப்பவர் –ஸ்ரீ சத்ய சந்தர் –

————–

917-தஷ –ஸ்ரீ கஜேந்திர மோஷ பரமான திருநாமம்
வேகம் உள்ளவன் -முன்பே 913 சிசிர பார்த்தோம் இந்த பொருளில் -முன்பே 424 பார்த்தோம்

விரைவாக வந்தவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

முழுமை சக்தி விரைவாக செயல்படுதல் ஆகிய மூன்றும் உள்ளவர் -ஸ்ரீ சங்கரர் –

சாமர்த்தியம் உள்ளவர் -விரைவில் சென்று விரோதிகளை அழிப்பவர் -ஸ்ரீ சத்ய சந்தர் –

————————

42-தாதா             -44/951-
44-தாதா –சமஸ்த இதர விலஷணன் -திருநாமம்
951-தாதா-ஜகத் வியாபாரம் திருநாமம்

44-தாதா –சமஸ்த இதர விலஷணன் -திருநாமம்
சிருஷ்டிப்பவன் –
ஒன்றும் தேவும் உலகும் உயிரும் மற்றும் யாதும் இல்லா வன்று நான் முகன் தன்னோடு
தேவர் உலகோடு உயிர் படைத்தான் -4-10-1
தஸ்மின் கர்பம் ததாம் யஹம் –
மீண்டும் -951-தாதா -தர்மத்தை உபதேசிப்பவன்
உலகத்து அற நூல் சிங்காமை விரித்தவன் எம்பெருமான் -பெரிய திருமொழி -10-6-1-

எல்லா அசேதனங்களின் தொகுதியும் -எல்லாவற்றுக்கும் விளைநிலமான மூல பிரக்ருதியில்
சேதனர்களின் தொகுதியாகிய பிரமன் எனும் கர்பத்தைத் தாங்குபவர் –
காரணமாக இருக்கும் போதும் பிரம்மா முதலியவர்களைக் காட்டிலும் வேறுபட்டவர் –ஸ்ரீ பராசர பட்டர் —-
அநிருத்த ஸ்வரூபேண் சர்வ யோனௌ அசித் சமஷ்டி பூதானாம் பிரக்ருதௌ சித் சமஷ்டி பூதம்
பீஞ்சாத்மகம் கர்ப்பம் ததாதி –
அநிருத்தன் வடிவு எடுக்கும் பகவான் நான்முகனை அனைத்துக்கும் இருப்பிடமான ப்ரக்ருதியில்
கருவாக விதைத்து அசேதனம் தோன்ற காரணம்
மம யோநி மஹத் ப்ரஹ்ம தஸ்மிந் கர்ப்பம் ததாம்யஹம் –ஸ்ரீ கீதை -14-3-
தாதா க்ஷேத்ரே கர்ம பீஜ பூதம் கர்ப்பம் ததாதி –மவ்ல சம்ஹிதை
அத ஏவ ச சர்ஜ ஆதவ் தாஸூ வீர்யம் அபாஸ்ருஜத் –மனு ஸ்ம்ருதி

ஆதிசேஷன் முதலிய உருவங்களால் உலகத் தாங்குபவர் -ஸ்ரீ சங்கரர்—
அனைத்து உலகங்களையும் தரித்துக் காப்பவர்-ஸ்ரீ சத்ய சந்த தீர்த்தர்—-

ஓம் தாதா நம
நான்முகனை சரீரமாகக் கொண்டவன்

—————————

951-தாதா-ஜகத் வியாபாரம் திருநாமம்
தர்மத்தை உபதேசிப்பவன் -உபதேசித்தும் அனுஷ்டித்தும் தாங்குபவன்
உலகத்தற நூல் சிங்காமை விரித்தவன் எம்பெருமான் -பெரிய திரு மொழி -10-6-1-

தாமே தர்மத்தை உபதேசித்தும் அனுஷ்டித்தும் உலகைத் தாங்குபவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

ந மே பார்த்த அஸ்தி கர்தவ்யம் –ஸ்ரீ கீதை -3-21-

அதாதா -தம்மைத் தவிர வேறு ஆதாரம் அற்றவர் -தாதா -சம்ஹார காலத்தில் எல்லா
பிராணிகளையும் விழுங்குபவர்-ஸ்ரீ சங்கரர் –

தாங்குவதும் போஷிப்பதும் செய்பவர் -ஸ்ரீ சத்ய சந்தர் –

——————

50- தார:            -339/968-
339-தார – ஸ்ரீ பர வாசுதேவன் குண வாசகம் திருநாமம்
968-தார –பகவான் செய்து அருளும் செயல்களின் பிரயோஜனம் சொல்லும் திருநாமம்

339-தார – ஸ்ரீ பர வாசுதேவன் குண வாசகம் திருநாமம்
காப்பவன்
நந்தா நரகத்து அழுந்தா வகை நாளும் தொண்டர் ஆனவருக்கு இன்னருள் செய்வான் -பெரிய திரு மொழி -11-8-10-

உலக வாழ்க்கை யாகிய பயத்தை தாண்டுவிப்பவர் –ஸ்ரீ பராசர பட்டர் –

கர்ப்ப ஜென்ம மரண சம்சார சாகர மஹா பயாத் தாரய நீதி தஸ்மாத் உச்யதே தார–அதர்வ சிரஸ் -வெளியேற்றுபவன் தாரயந்
அபஹத பாப்மா விஜாரோ விம்ருத்யு –சாந்தோக்யம் -8-1-5-

கர்ப்பம் பிறப்பு மூப்பு மரணம் முதலிய பயங்களில் இருந்து கரை ஏற்றுபவர் -ஸ்ரீ சங்கரர் –

சம்சாரத்தில் இருந்து தாண்டச் செய்பவர் —ஸ்ரீ சத்ய சந்தர் –

——————-

968-தார –பகவான் செய்து அருளும் செயல்களின் பிரயோஜனம் சொல்லும் திருநாமம்
திரு நாவாய் -சம்சாரம் கடலைத் தாண்டுவிக்கும் கப்பல்
விஷ்ணு போதம்
முன்பே 340 பார்த்தோம்
நாரணன் சேர் திரு நாவாய் -9-8-3-

அவர்கள் சம்சாரத்தைத் தாண்டும்படி செய்பவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

பிறவிக் கடலைத் தாண்டுவிப்பவர் -பிரணவ ரூபி -ஸ்ரீ சங்கரர் –

ஓங்காரமாக இருப்பவர் -அறியப்படுபவர் -ஸ்ரீ சத்ய சந்தர் –

——————-

51-துர்த்தர:       -267/720-
267-துர்த்தர –சித் அசித் -இவைகளாலான -ஐஸ்வர்ய -பூர்த்தி திருநாமம்
720-துர்த்தர –ஸ்ரீ கிருஷ்ணாவதார திருநாமம்

267-துர்த்தர –சித் அசித் -இவைகளாலான -ஐஸ்வர்ய -பூர்த்தி திருநாமம்
தடுக்க முடியாதவன்
வென்றி சேர் திண்மை விலங்கல் மா மேனி -பெரிய திருமொழி -9-1-4-

இச் சிறந்த கை வன்மையினால் -பிரளய சமுத்ரம் போல் வேகம் உடைமையினால் பிறர் சக்திகள் மணல் அணைகள்
போலத் தடுக்க மாட்டாமல் உடைந்து போம்படி இருப்பவர் –ஸ்ரீ பராசர பட்டர் –

மோஷத்தை விரும்புகிறவர்கள் தியானிக்கும் போது மனத்தில் நிறுத்துவதற்கு அரிதாக இருப்பவர் –
பூமி முதலிய எல்லாவற்றையும் தாங்குகின்ற தம்மைத் தாங்குபவர் இல்லாதவர் –ஸ்ரீ சங்கரர் –

பிறரால் தாங்க முடியாதவராக இருப்பவர் –ஸ்ரீ சத்ய சந்தர்-

—————–

720-துர்த்தர –ஸ்ரீ கிருஷ்ணாவதார திருநாமம்
அடக்க முடியாதவன்
யசோதைக்கு இளம் சிங்கம்
கறந்த நல் பாலும் –பெற்று அறியேன்
நின் திறத்தேன் அல்லேன் நம்பி

குழந்தை விளையாட்டுக்களிலும் குறும்பு செய்யும் பிள்ளையாக மதயானை போலேப் பெற்றோர்களால் அடக்க முடியாதவர் –
தீயவர்களால் பிடிக்க முடியாதவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

யதி சக்நோபி கச்ச த்வமதி சஞ்சல சேஷ்டித
இமம் ஹி புண்டரீகாக்ஷம் ஜித்ருஷந்தி அல்பமேதச படே நாக்நிம் ப்ரஜ்வலிதம் யதா பாலோ யதா அபலா
துர்க்க்ரஹ பாணிநா வாயு துர் ஸ்பர்ச பாணி நா ஸசீ துர்த்தரா ப்ருத்வீ ஸூர்த்தநா துர்க்ரஹ கேசவா பலாத்

நிர்க்குணர் ஆகையால் த்யானம் முதலியவற்றால் மனத்தில் நிறுத்த முடியாதவர் ஆயினும் -பல பிறவிகளில் விடாமல் பாவனை செய்து
அவர் அருள் பெற்ற சிலராக் மட்டும் மிக்க சிரமத்தினால் மனத்தில் நிறுத்தக் கூடியவர் -ஸ்ரீ சங்கரர் –

சுமக்க முடியாதவர் -ஸ்ரீ சத்ய சந்தர் –

——————-

52-நியம :        -163/869-
163-நியம –வாமன அவதார பரமான திருநாமம்
869-நியம –துஷ்டர்களை நிக்ரஹிப்பவன் -பரமான திருநாமம்

163-நியம –வாமன அவதார பரமான திருநாமம்
அடக்குமவன் -ஆஸ்ரித விரோதிகளை அடக்கி
சூழல் பல பல வல்லான் –உலகை கேழல் ஒன்றாகி யிடந்த கேசவன் –வேழ மருப்பை யொசித்தான் -1-9-2-
மீண்டும் -869-வரும் நிச்சயிப்பவன் -தேவதைகள் மூலம் பூஜா பலன் அளிப்பவன்

பகைவர்களான பலி முதலியவர்களை அடக்குபவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

அவரவர்க்கு உரிய அதிகாரங்களில் நியமிப்பவர் –ஸ்ரீ சங்கரர் –

நியமிப்பவர் — ஸ்ரீ சத்ய சந்த தீர்த்தர் –

ஓம் நியமாய நம

——————

869-நியம –துஷ்டர்களை நிக்ரஹிப்பவன் -பரமான திருநாமம்
நிச்சயிப்பவன் -தேவர்கள் மூலம் பலன்களை அளிப்பவன்
முக்கண் ஈசனோடு தேவு பல நுதலி மாயக் கடவுள் -திருவாசிரியம் -4-

அவர்களுக்குப் பலனாக உயர்குலம் ஆயுள் போகம் முதலியவற்றை அத்தேவதைகள் மூலமாகவே வழங்குபவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

லபதே ச ததஸ் காமான் மயைவ விஹிதான் ஹி தான் ஸ்ரீ கீதை -7-22-

அநியம-என்ற பாடம் -தம்மை அடக்குபவர் -யாரும் இல்லாதவர் –
யம நியம -என்று கொண்டு யோகத்திற்கு அங்கங்களான யம நியமங்களால் அடையபடுபவர் -ஸ்ரீ சங்கரர் –

நன்றாகக் கட்டளை இடுபவர் -ஸ்ரீ சத்ய சந்தர் –

——————–

53-பிரணவ :   -410/957-
410-ப்ரணம –ஸ்ரீ ராம அவதார திருநாமம்
957-பிரணவ –பகவான் செய்து அருளும் செயல்களின் பிரயோஜனம் சொல்லும் திருநாமம்

410-ப்ரணம –ஸ்ரீ ராம அவதார திருநாமம்
வணக்கத்துக்கு உரியவன்
இலை துணை மற்று என் நெஞ்சே இலங்கையை ஈடழித்த கூரம்பன் அல்லால் குறை -நான்முகன் திரு -8
பிரணவ -957-சேஷி -வணங்கத் தக்கவன்

தம் குணங்களினால் சராசரங்கள் அனைத்தும் தம்மை வணங்கும்படி இருப்பவர் –ஸ்ரீ பராசர பட்டர் –

ஹ்ருதயாநி அமமந்தே ஜனஸ்ய குணவத்தயா –அயோத்யா

தேவர்களால் வணங்கப் படுபவர் -பிரணவ என்ற பாடம் -புகழப் படுபவர் –ஸ்ரீ சங்கரர் –

நன்றாகத் தூண்டுபவர் -பிரணவ என்று பாடம் -தம்மைத் தாமே புகழ்ந்து கொள்பவர் –
மிகவும் புதியவர் -நன்றாக வணங்கப் படுபவர்–ஸ்ரீ சத்ய சந்தர் –

——————

957-பிரணவ –பகவான் செய்து அருளும் செயல்களின் பிரயோஜனம் சொல்லும் திருநாமம்
வணங்கச் செய்பவன் -பிரணவ அர்த்தம் உணர்த்தி -திருவடிகளைத் தொழுது எழச் செய்பவன்
மேலைத் தொண்டு உகளித்து அந்தி தொழும் சொல்லுப் பெற்றேன் -10-8-7-

தமக்கும் ஜீவன்களுக்கும் உள்ள தொடர்பை பிரணவத்தினால் அறிவித்து அவர்களைத் தமது
திருவடிகளில் வணங்கச் செய்பவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

மாம் நமஸ்குரு –ஸ்ரீ கீதை 18-65-
பிராணாந் சர்வாந் பரமாத்மனி பிராணாமயதி எதஸ்மாத் பிரணவ –அதர்வ சிரஸ்

ஓங்காரம் ஆகிய பிரணவ ரூபியாக இருப்பவர் -ஸ்ரீ சங்கரர் –

பிரணவம் விஷ்ணுவின் திரு நாமம் -விழித்து இருக்கும் நிலை முதலியவற்றைத் தருபவர் –
முக்தர்களை நடத்துபவர் -ஸ்ரீ சத்ய சந்தர் –

—————

54-  பிரபு :         -35/300-
35-பிரபு –சமஸ்த இதர விலஷணன் திருநாமம்
300-பிரபு –விஸ்வ ரூபம் திருநாமம்

35-பிரபு –சமஸ்த இதர விலஷணன் திருநாமம்
சமர்த்தன் –
தோஷம் தீண்டாமல் மேன்மை குறையாமல் -மோஷம் அளிக்க வல்ல சக்தி அவதரித்தும்
ஜடாயு மோஷம் -சிந்தயந்தி -சேட்பால் பழம் பகைவன் சிசுபாலனுக்கும் மோஷம் –
உயிர் அளிப்பான் என் நின்ற யோநியுமாய்ப் பிறந்தாய் இமையோர் தலைவா -திரு விருத்தம் -1-

மனிதன் போன்ற அவதாரங்களிலும் தேவர்களுக்கும் கிடைக்க அரிய போகம் மோஷம் முதலிய் சிறந்த பலன்களை அளிக்கும் ஆற்றல் பெற்றவர் –
சிந்தயந்தீ சிசுபாலன் முதலியவர்களுக்கு சாயுஜ்ய மோஷம் அளித்த விருத்தாந்தங்களில் இது மிகவும் ஸ்பஷ்டம் —ஸ்ரீ பராசர பட்டர் —-
ஏவம் மனுஷ்யாதி சாமான்ய அவதாராதி அபி பிரபு பவதி -தேவாதி சுகர போக அபவர்க்காதி பல சமர்ப்பண சமர்த்த-

எல்லா செய்கைகளிலும் மிக்க சாமர்த்தியம் உள்ளவர் -ஸ்ரீ சங்கரர்—-

எல்லாவற்றிலும் சிறந்தவராக உள்ளவர்-ஸ்ரீ சத்ய சந்த தீர்த்தர்—–

ஓம் பிரபுவே நம
சர்வசக்தன் -சர்வேஸ்வர ஈஸ்வரன் -பரமபதத்தை அருளுபவர்

—————–

300-பிரபு –விஸ்வ ரூபம் திருநாமம்
ஈசன் மாயன் என் நெஞ்சில் உள்ளான் -என் நெற்றி யுளானே நெற்றியுள் நின்று என்னை ஆளும் நிறை மலர்ப் பாதங்கள் -1-9-10
ராம கமல பத்ராஷ சர்வ சத்வ மநோ ஹர –

இக் குணங்களினால் அனைவருடைய மனங்களையும் கவரும் சக்தியுடையவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

ராம கமல பத்ராஷ சர்வ சத்வ மநோ ஹர–ஸூந்தர-35-8-

உயர்ந்தவராக இருப்பவர் -ஸ்ரீ சங்கரர் –

உயர்ந்தவராக இருப்பவர் -ஸ்ரீ சத்ய சந்தர்-

—————–

55-பிரமாணம் -429/959-
429-பிரமாணம் –கல்கி அவதார திருநாமம்
959-பிரமாணம்-ஜகத் வியாபாரம் திருநாமம்

429-பிரமாணம் –கல்கி அவதார திருநாமம்
பிரமாணமாய் இருப்பவன் -த்யாஜ்ய உத்தேசம் காட்ட -மேலும் 959 -வரும்

நான்கு யுகத்தில் யுகத்தில் உள்ளவர்களுக்கு நன்மை தீமைகளைப் பகுத்து அறிவிப்பவர்-அவனது இந்த சக்தியின்
லவலேசத்தால் பிரத்யஷம் முதலியவைகளும் பிரமாணங்கள் ஆகின்றன –ஸ்ரீ பராசர பட்டர் –

தச்சீலம் அநு வர்த்தந்தே மனுஷ்யா லோக வாசிந -அவனது செய்கைகளையே சான்றாக மக்கள் எடுத்துக் கொண்டனர்

ஞான ரூபியாக பிரமாணமாக இருப்பவர் –ஸ்ரீ சங்கரர் –

சிறந்த வேதங்களைப் பிரமாணமாக யுடையவர் -த்ரிவிக்ரம ரூபத்தில் சிறந்த திருமேனி வளர்ச்சி யுடையவர் –
உயர்ந்த இருவித சுகத்தை யுடையவர் –ஸ்ரீ சத்ய சந்தர் –

——————

959-பிரமாணம்-ஜகத் வியாபாரம் திருநாமம்
பிரமாணமாய் இருப்பவன்
அன்று கரு மாணியாய் இரந்த கள்வனே உன்னைப் பிரமாணித்தார் பெற்ற பேறு -இரண்டாம் திரு -61
வேதம் வேதத்தின் சுவைப் பயன் –என்னை யாளுடை யப்பன் -பெரிய திரு மொழி -2-3-2-
முன்பே 429 பார்த்தோம்-

வேதங்களின் ரஹச்யமாகிய தத்வார்த்தங்களை ஐயம் திரிபின்றி -ஸ்ரீ பராசர பட்டர் –

ஞான ரூபியாக இருப்பவர் -ஸ்ரீ சங்கரர் –

மேன்மையான அறிவி உடையவர் -ஸ்ரீ சத்ய சந்தர் –

—————–

56-  பிரஜாபதி     -70/199-
70-பிரஜாபதி –த்ரிவித சேதன வ்யதிரிக்த -நியாமகன் திருநாமம்
199-பிரஜாபதி –பத்மநாபாவதாரம் திருநாமம்

70-பிரஜாபதி –த்ரிவித சேதன வ்யதிரிக்த -நியாமகன் திருநாமம்
நித்ய ஸூரிகளுக்கு தலைவன் -அமரர்கள் அதிபதி -முனிவர்க்கு உரிய அப்பன் -8-11-11
அகில ஜகத் ஸ்வாமின் அஸ்மத் ஸ்வாமின் –

பக்த முக்தர்களைக் காட்டிலும் உயர்ந்தவர்களான நித்ய சூரிகளுக்குத் தலைவர் –
அவர்கள் யார் என்றும் அவர்களுக்கு உள்ள சம்பந்தமும் சொல்லுகிறது -ஸ்ரீ பராசர பட்டர் —

நித்ய ஸூரிகளின் தலைவனை அன்றோ இப்படி புகழ்கிறார்கள் –
அவர்களுக்கும் அவனுக்கும் உள்ள சம்பந்தம் சொல்லும் இத் திரு நாமம்
பக்தர் முக்தர் இவர்களைக் காட்டிலும் உயர்ந்த நித்யர்களை பிரஜா என்று சொல்லி –
அயர்வறும் அமரர்கள் அதிபதி இமையோர் தலைவனை பிரஜாபதி என்கிறது
அனைத்தையும் அறிந்த -எல்லை அற்ற காலம் பரம பதத்தில் வாசம் செய்பவர் நித்யர் -பிரஜா
ரஸ்மி ரஸ்மீ நாம் மத்யே தபந்தம் ருதஸ்ய பத்தே காவாயோ நிபந்த்தி –தேஜஸ் மிக்குள்ளார் நடுவில் அவர்களை விட
தேஜஸ்ஸூ விஞ்சி ஜ்யோதிஸ்ஸூ ஸ்வரூபமாகவும் ஸத்ய ஸ்வரூபனாகவும் உள்ள பரமாத்மாவின் திருவடிகளை
அனைத்தும் அறிந்த நித்யர்கள் வணங்குகிறார்கள்
யமந்த சமுத்ரே கவயோ வயந்தி ததஷரே பரமே பிரஜா -தைத்ரியம் நாராயண வல்லீ –3-அனைத்தையும் அறிந்த
நித்யர்கள் சமுத்திரத்தின் நடுவில் உள்ள சாஸ்வதமான பரம் பொருளை அறிகிறார்கள்
யஸ்மின் தேவா அதி விச்வே நிஷேது –தைத்ரியம் ஆனந்த வல்லீ -2-அனைத்து தேவர்களும் இவன் இடம் வாழ்கிறார்கள்
அதீயீஸ்வரே –அஷ்டாத்யாயீ
யஸ் மாதீகம் யஸ்ய ச ஈஸ்வரானாம் தத்ர சப்தமி –அஷ்டாத்யாயீ –யாருக்கு ஈஸ்வரத்தன்மை அதிகம் உள்ளதோ
யோ தேவேஷூ அதிதேவ ஏக ஆஸீத் –தைத்ரியம்
யத்ர பூர்வே ஸாத்யா சாந்தி தேவா
சதா பஸ்யந்தி ஸூரயா
யத்ர ருஷயோ பிரதமஜா ஏ புராணா-புருஷ ஸூக்தம்
மத்யே வாமநம் ஆஸினம் விஸ்வ தேவா உபாஸதே –கட–2-5-3– இதயத்தில் உள்ள பூஜிக்கத்தக்க பரம்பொருளை
சத்வ குணத்துடன் தேவர்கள் உபாசிக்கிறார்கள்

ஈஸ்வரர் என்பதனால் பிரஜைகளுக்கும் அதிபதி –ஸ்ரீ சங்கரர் —

பிரஜைகளைக் காப்பவர் -தனக்கு மேம்பட்ட பத்தி இல்லாதவராய் உலகை நன்கு படைப்பவர் –ஸ்ரீ சத்ய சந்த தீர்த்தர்-

ஓம் பிரஜாபதி நம
சர்வேஸ்வர ஈஸ்வரன்

—————————-

199-பிரஜாபதி –பத்மநாபாவதாரம் திருநாமம்
பிரஜைகளுக்கு ஸ்வாமி
தேவர்களுக்கு எல்லாம் தேவன்
சிவன் அயன் இந்திரன் இவர் முதல் அனைத்தோர் தெய்வக் குழாங்கள்
கை தொழக் கிடந்த தாமரை யுந்தி தனிப் பெரு நாயகன் -திருவாசிரியம்
உலகும் உயிரும் ஒன்றும் இல்லா வன்று நான் முகன் தன்னோடு தேவர் உலகோடு உயிர் படைத்தான் -4-10-1-

நாபிக் கமலத்தில் பிறந்த பிரமன் முதலியவர்களுக்குத் தலைவர் –
இதை நைமித்திக சிருஷ்டி நைமித்திக பிரளயம் இவற்றைக் குறித்ததாகக் கொள்க -ஸ்ரீ பராசர பட்டர் –

பிரஜைகளுக்குத் தந்தையானவர் -ஸ்ரீ சங்கரர் –

தன்னைத் துதிப்பவர்களை மகிழ்விப்பவர் -பிரஜைகளுக்குத் தலைவர்-ஸ்ரீ சத்ய சந்த தீர்த்தர்

———————-

57-பவந :              -292/817-
292-பவந-விஸ்வ ரூபம் திருநாமம்
817-பவன –தைவத் சம்பத் உள்ள சிஷ்ட பரிபாலனம் பரமான திருநாமம்

292-பவந-விஸ்வ ரூபம் திருநாமம்
சஞ்சரிப்பவன் -காற்று போலே
காண்கின்ற இக் காற்று எல்லாம் நானே என்னும் -5-6-3-
மீண்டும் 817-தானே வந்து பாபம் தாபம் தீர்த்து அருளி
வந்தாய் என் மனம் புகுந்தாய் மன்னி நின்றாய் -பெரிய திருமொழி -1-10-9-
வந்து அருளி என் நெஞ்சு இடம் கொண்ட வானவர் கொழுந்து -5-7-7-
அமலங்களாக விளிக்கும் கமலக் கண்ணன் -1-9-9-

எல்லா காலங்களிலும் எல்லா இடங்களிலும் இயற்கையாகவே செல்பவர் —
அனைத்தையும் தூய்மையாக்கும் இக் குணத்தின் லேசம் இருப்பதால் தான்-பவன எனப்படும்
காற்றும் எங்கும் சஞ்சரிக்கின்ற்றது-ஸ்ரீ பராசர பட்டர் –

பரிசுத்தப் படுத்துபவர் -ஸ்ரீ சங்கரர் –

அரசர்களுக்கு மகிழ்ச்சியைத் தந்து காப்பவர்- ஸ்ரீ சத்ய சந்தர்-

———————–

817-பவன –தைவத் சம்பத் உள்ள சிஷ்ட பரிபாலனம் பரமான திருநாமம்
தானாக வந்து பக்தர்கள் தாபம் தீர்த்து அருளி
வந்தாய் என் மனம் புகுந்தாய் மன்னி நின்றாய் -பெரிய திரு மொழி -1-10-9-
வந்து அருளி என் நெஞ்சு இடம் கொண்ட வானவர் கொழுந்து -5-7-7-
பாவனா -பாடமாகில் பவித்ரம் -அமலங்களாக விழிக்கும் கமலக் கண்ணன் -1-9-9-

தாமே பக்தர்களிடம் செல்லுபவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

தம்மை நினைத்த மாத்திரத்திலே புனிதப் படுத்துபவர் -ஸ்ரீ சங்கரர் –

அரசர்களைக் காப்பவர் -புனிதப் படுத்துபவர் -வாயுவின் தந்தை -ஸ்ரீ சத்ய சந்தர் –

——————————-

58-பாநு :             -126/285-
126-பாநு-வ்யூஹ நிலை திருநாமம்
285-பாநு-விஸ்வ ரூபம் திருநாமம்

126-பாநு-வ்யூஹ நிலை திருநாமம்
விளங்குபவன் -மாறுபடாமல் விளங்கும் வீர்ய குணம்
வீற்று இருந்து ஏழு உலகும் தனிக் கோல் செல்ல வீவில் சீர் ஆற்றல் மிக்காளும் அம்மான் -4-5-1-
பாநு -285-மீண்டும் -கிரணங்கள் உடைய ஆதித்யன்
செய்யதோர் ஞாயிற்றைக் காட்டி சிரீதரன் மூர்த்தி ஈது என்னும் -4-4-2-

எல்லாவற்றையும் படைத்து தாம் விகாரம் இல்லாமல் விளங்குபவர் -அவிகாரம் -என்கிற வீர்யம் -ஸ்ரீ பராசர பட்டர்-

பிரகாசிப்பவர் -ஸ்ரீ சத்ய சந்தர்-

ஓம் பானுவே நம

——————

285-பாநு-விஸ்வ ரூபம் திருநாமம்
வெய்ய கதிரோன் பீஷோதேதி சூர்யா
ஞானமாகி ஞாயிறாகி ஞாலம் முற்றும் ஏனமாய் யிடந்த மூர்த்தி -திருச்சந்த -114
திங்களும் ஞாயிருமாய்ச் செழும் பல் சுடராய் மாயா -7-8-2

மிக்க ஒளியை யுள்ள சூரியனுக்கும் ஒளியை அளிப்பவர் -ஸ்ரீ பராசர பட்டர் –
யஸ்ய ஆதித்யோ பாம் உபயுஜ்ய பாதி

பிரகாசிப்பவர் –ஸ்ரீ சங்கரர் –

பிரகாசிப்பவர் — ஸ்ரீ சத்ய சந்தர்-

———————

59-பீம :              -358/948-
358-பீமா –ஐஸ்வர்ய வாசக திருநாமம்
948-பீம –ஜகத் வியாபாரம் திருநாமம்

358-பீமா –ஐஸ்வர்ய வாசக திருநாமம்
பயமூட்டுபவன்
அரி கான் நரியாய் அரக்கர் ஊளை இட்டு அன்று இலங்கை கடந்து பிலம்புக்கு ஒளிப்ப -7-6-8
அத்த எம்பெருமான் எம்மைக் கொள்ளேல் அஞ்சினோம் -பெரிய திருமொழி -10-2-2-
பீஷாச்மாத்வத பவதே பீஷோ தேதி சூர்ய –

வரம்பு மீறுபவர்க்கு பயத்தைக் கொடுப்பவர் -இவரிடத்தில் பயத்தால் அன்றோ வாயு முதலிய தேவர்கள்
தம் தம் அதிகாரங்களை மீறாது இருக்கிறார்கள் –ஸ்ரீ பராசர பட்டர் –

பீஷா அஸ்மாத் வாத பவதே –தைத்ரியம்
யதிதம் கிஞ்ச ஜகத் சர்வம் பிராண ஏஜதி நிஸ் ஸ்ருதம் மஹத் பயம் வஜ்ரம் உத்யதம்–கட 2-6-2-
பயாத் ஏவ அக்னி ஸ்தபதி பயாத் தபதி ஸூர்ய பயாத் இந்த்ரச்ச வாயுச்ச ம்ருத்யுர் தாவதி பஞ்சம –கட
கம்ப நாத் —ஸ்ரீ ப்ரஹ்ம ஸூத்ரம் -1-3-40-

எல்லோரும் பயப்படும்படி இருப்பவர் -நல்வழியில் செல்பவர்களுக்கு பயப்பட வேண்டாதவர் – -ஸ்ரீ சங்கரர் –

பக்தர்களுடைய பயங்களைப் போக்குபவர் -வியாசர் முதலான ரூபங்களில் பிரமாணங்களைத் தரித்து இருப்பவர் –
தம்மிடம் ஜனங்கள் அச்சம் கொள்ளும்படி இருப்பவர் —ஸ்ரீ சத்ய சந்தர் –

—————–

948-பீம –ஜகத் வியாபாரம் திருநாமம்
பயங்கரன் -அசுரர்க்கு வெம் கூற்றம் -6-3-8-
ஷிபாமி -ந ஷமாமி -முன்பே 359 -பீம -பார்த்தோம்–837 பயக்ருத் பார்த்தோம்-

தம்முடைய இந்த அனுக்ரஹத்தை விரும்பாதவர்களுக்கு கர்ப்ப வாஸம் நரகம் முதலிய துன்பங்களைக் கொடுத்து பயமுறுத்துபவர்
தமக்கு அடிமையாகி உய்யாதவர்களை ஹித புத்தியின் காரணமாக விரோதிகளாக நினைக்கின்றவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

தாந் அஹம் த்விஷத–ஸ்ரீ கீதை -16-19-

பயத்திற்குக் காரணமானவர் -ஸ்ரீ சங்கரர் –

பயங்கரமானவர் -பிராணனுக்கு ஆதாரமானவர் -ஸ்ரீ சத்ய சந்தர் –

——————-

60-புண்ய :        -692/925-
692-புண்ய-வாத்சல்ய குண பெருக்கு-வாக்காலே ஆராதிக்கப் படுக்கை திருநாமம்
925-புண்ய-ஸ்ரீ கஜேந்திர வரதன் திருநாமம்

692-புண்ய-வாத்சல்ய குண பெருக்கு-வாக்காலே ஆராதிக்கப் படுக்கை திருநாமம்
புண்ணியன் புனிதம் ஆக்குபவன்
உன் தன்னைப் பிறவி பெரும் தனிப் புண்ணியம் யாம் உடையோம்
யாவர்க்கும் புண்ணியம் -6-3-3-
அநந்தன் மேல் கிடந்த புண்ணியா -திருச்சந்த -45-
மேலும் 925 வரும்

தாம் பூர்ணராயின் துதிகளை எதிர்பார்ப்பது ஏன் என்னில் தம்மைத் துதிக்க வேண்டும் என்று விரும்பும் அடியவர்களின்
விருப்பத்தை நிறைவேற்றுபவர் -ஸ்ரீ பராசர பட்டர் —

எல்லாம் நிறைந்தவராக இருப்பதோடு அல்லாமல் பக்தர்களுக்காக எல்லா செல்வங்களையும் நிறைப்பவர் -ஸ்ரீ சங்கரர் –

அவரவர் தகுதிக்குத் தகுந்தவாறு பூர்த்தி செய்பவர் -ஸ்ரீ சத்ய சந்தர் –

————–

925-புண்ய-ஸ்ரீ கஜேந்திர வரதன் திருநாமம்
பாபங்களைப் போக்கடிப்பவன்
அனந்தன் மேல் கிடந்த எம் புண்ணியன் -திருச்சந்த -45-
அடியேன் மனம் புகுந்த புண்ணியனே -பெரிய திருமொழி -3-5-7-
முன்பே 692 பார்த்தோம்

இப்புண்ணிய சரிதிரத்தினால் நம்மைப் போன்றவர்களின் பாவங்களைப் போக்குபவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

தம்மை நினைப்பது முதலியன செய்பவர்களுக்குப் புண்ணியத்தைத் தருபவர்–
ஸ்ருதி ஸ்ம்ருதி களால் எல்லோருக்கும் புண்யத்தையே கூறுபவர் – ஸ்ரீ சங்கரர் –

புண்ணியத்தைத் தருபவர் -ஸ்ரீ சத்ய சந்தர் –

——————–

61-புருஷ :        -14/407-
14-புருஷ -முக்தர்களுக்கு மேலான கதியாய் உள்ளவன் திருநாமம்
407-புருஷ –ஸ்ரீ ராம அவதார திருநாமம்

14-புருஷ -முக்தர்களுக்கு மேலான கதியாய் உள்ளவன் திருநாமம்
மிகுதியாக கொடுப்பவர்
வேண்டிற்று எல்லாம் தரும் என் வள்ளல் -3-9-5-
எனக்கே தன்னைத் தந்த கற்பகம் -2-7-1
தம்மையே ஒக்க அருள் செய்வர்
ஸோஅச்நுதே சர்வான் காமான் சஹ ப்ரஹ்மனா விபச்சிதா
ரசோவை ச ரசக்குஹ்யேவாயம் லப்த்வா ஆனந்தீ பவதி

புருஷ –
மிகுதியாகக் கொடுப்பவர் -முக்தர்களுக்கு தம் குண விபவ அனுபவங்களை கொடுப்பவர் -ஸ்ரீ பராசர பட்டர் —
தன்னையே தன் பக்தர்களுக்கு அர்ப்பணிப்பவன் -தன்னையே எனக்குத் தந்த கற்பகம் -செல்லப்பிள்ளை -வந்தானே –

புரு -மிகுதி / ஸநோதி–அளிக்கும் செயல்-முக்தர்கள் மீது தன்னை அனுபவிக்கும் ஆனந்தம் குணங்கள் மேன்மைகள்
அனைத்தும் நெஞ்சாலும் நினைக்க முடியாத அளவு வாரி வழங்குகிறான்
ஏஷ ப்ரஹ்ம ஏவ ஆனந்த்யாதி –தைத்ரியம் -1-2-
ஸோ அஸ்னுதே சர்வான் காமான் ஸஹ ப்ரஹ்மணா விபச்சிதா –சாந்தோக்யம்
திவ்யேந சஷுஷா மனசா ஏதாந் காமாந் பஸ்யன் ரமதே -சாந்தோக்யம்
ச தத்ர பர் யேதி ஐஷத் க்ரீடந் ரமமாணா –தைத்ரியம்
காமாந்தி காமரூபீ –தைத்ர்யம்
ரஸோ வை ச ஹி ஏவம் அயம் லப்தவா ஆனந்தீ பவதி –தைத்ரியம்
அஸ்மின் அஸ்ய ச தத் யோகம் அஸ்தி -4-4-12-
தத்தே து வ்யபதேசாத் ச -1-1-5-
புரம் என்னும் யுடலில் இருப்பவர் -உயர்ந்த பொருள்களில் இருப்பவர் -முன்பே இருந்தவர் –
பலன்களைக் கொடுப்பவர் -சர்வ வியாபி -சம்ஹாரம் செய்பவர் -ஸ்ரீ சங்கரர்–

மோஷ ரூபம் ஆகிய முழுப் பலத்தையும் பூர்ணனான தன்னைத் தருபவன் -முன்பே உள்ளவர் –
பல செயல்களை யுடையவர் -அசுரர்களை அழிப்பவர்-ஸ்ரீ சத்ய சந்த தீர்த்தர்-

ஓம் புருஷாய நம
முக்தர்களுக்கு நிரவதிக ஆனந்தம் -சாயுஜ்யம் அளிப்பவன் -எனக்கே தன்னைத் தந்த கற்பகம் –

———————-

407-புருஷ –ஸ்ரீ ராம அவதார திருநாமம்
தூய்மை அளிப்பவன்
சபரி -பாவனா சர்வ லோகானாம் த்வமேவ ரகு நந்தன -அகஸ்தியர்

புனிதத் தன்மை யுள்ளவர் –ஸ்ரீ பராசர பட்டர் –

ச யத் பூர்வ அஸ்மாத் சர்வ ஸ்மாத் பாப்மன ஒஷஸ் தஸ்மாத் புருஷ —
பாவன சர்வ லோகாநாம் த்வமேவ ரகு நந்தன
தவாஹம் சஷுஷா ஸுவ்மய பூதா ஸுவ்மயேந மாநந –சபரி வார்த்தை
ச ஹி ராம ஸர்வதா புருஷ இஷ்யதி
ராகவம் சோபயந்யேத ஷட் குணா புருஷோத்தமம்
சார்ங்க தந்வா ஹ்ருஷீகேச புருஷ புருஷோத்தம

பாவங்களை எரிப்பவர் -எல்லோர்க்கும் முற்பட்டவர் -சரீரம் -புரம் -அதில் வசிப்பவர் –ஸ்ரீ சங்கரர் –

பூர்ணர் -காப்பவர் -எல்லோருக்கும் முன்னவர் -எல்லா தோஷங்களை அளிப்பவர் -எல்லா சரீரங்களில் வசிப்பவர்–ஸ்ரீ சத்ய சந்தர் –

—————

62-புஷ்கராஷ :   -40/561-
40-புஷ்கராஷ –பரத்வம்-சமஸ்த இதர விலஷணன் -திருநாமம்
561-புஷ்கராஷ-சுத்த ஸ்வரூபி திருநாமம்

40-புஷ்கராஷ –பரத்வம்-சமஸ்த இதர விலஷணன் -திருநாமம்
தாமரைக் கண்ணன்
புருஷ -புஷ்கரேஷண-ராம கமல பத்ராஷ -மகா வராஹ ஸ்புட பத்ம லோசன –
பெரும் கேழலார் தன் பெரும் தண் மலர்ப் புண்டரீகம் -திரு விருத்தம் -45
கை வண்ணம் தாமரை வாய் கமலம் போலும் கண்ணினையும் அரவிந்தம் அடியும் அக்தே -திருநெடும் தாண்டகம் -21
மீண்டும் -561-வரும் புஷ்டி அளிக்கும் கண்ணை உடையவன்
அனுக்ரகம் வர்ஷிக்கும் கண்களை உடையவன் –
மீன் கண்ணாலே குஞ்சுகளை வளர்ப்பது போலே
அல்லிக் கமலக் கண்ணனை -8-10-11
செய்ய தாமரைக் கண்ணன் -3-6-

புஷ்கராஷா-
சர்வேஸ்வரனுக்கு உரிய இலக்கணமான தாமரை கண்களை உடையவர் -ஸ்ரீ பராசர பட்டர் —
சர்வ ஐஸ்வர்ய அசாதாராண லஷணம் புண்டரீகாஷத்வம் சங்கமயதி

தாமரையை ஒத்த திரு கண்களை யுடையவர் -ஸ்ரீ சங்கரர்—

தாமரை போன்ற இரு கண்களை யுடையவர் -எண்ணற்ற கண்களை யுடையவர் –
புஷ்டியைத் தருபவர் -அழிவில்லாதவர் -ஸ்ரீ சத்ய சந்த தீர்த்தர்—-

ஓம் புஷ்காராஷாய நம
செந்தாமரைக்கண்ணன்

—————

561-புஷ்கராஷ-சுத்த ஸ்வரூபி திருநாமம்
புஷ்டி அளிக்கும் கண் நோக்கு -மீன் கண்களாலே குட்டிகளை வளர்க்குமா போலே
அல்லிக் கமலக் கண்ணன் -8-10-11-
செய்ய தாமரைக் கண்ணன் -3-6-1-

கருணை பொழிந்து அடியவர்களைப் போஷிக்கும் இரு திருக் கண்களை யுடையவர் –ஸ்ரீ பராசர பட்டர் –

சிந்திப்பவர்களுக்கு ஹ்ருதய கமலத்தில் பிரகாசிப்பவர் –ஸ்ரீ சங்கரர் –

தாமரை போன்ற திருக் கண்களை யுடையவர் –ஸ்ரீ சத்ய சந்தர் –

—————–

63-பூ:              -438/942-
438-பூ –ஜ்யோதிர் மண்டலத்துக்கு ஆதாரம் திருநாமம்
942-பூர்புவ-கஜேந்திர மோஷ பரமான திருநாமம்-

438-பூ –ஜ்யோதிர் மண்டலத்துக்கு ஆதாரம் திருநாமம்
அனைத்தையும் தாங்குமவன் –
சிம்சுமாரத்தில் வால் பக்கம் த்ருவ நஷத்ரம் ஸ்வரூபி பகவான் -அனைத்துக்கும் ஆதாரமாய் இருப்பவன்
திறம்பாமல் மண காக்கின்றேன் யானே -5-6-5-
நாகமேந்து மண்ணினை –காத்து ஏகமேந்தும் –

த்ருவ நஷத்த்ரத்தில் சேர்ந்து அனைத்தையும் தாங்குபவர் –ஸ்ரீ பராசர பட்டர் –

தஸ்ய ப்ருஸ்சே த்ருவ ஸ்தித –ஸ்ரீ விஷ்ணு புராணம் -4-9-4-சிம்சுமாரம் முதலை வடிவில் உள்ள பிரபஞ்சத்தின்
வால் போன்ற பகுதியில் த்ருவனாக தாங்குகிறான்

அபூ -பிறப்பில்லாதவர் –பூ -பூமி ரூபியாக இருப்பவர் –ஸ்ரீ சங்கரர் –

அபூ -ஆதாரம் அற்றவர் தமக்கோர் இருப்பிடம் இல்லாதவர் -பூ -எல்லா வற்றாலும் நிறைந்தவர் -எல்லோரையும் படைப்பவர் –
எல்லோரும் தம்மை அடையும்படி இருப்பவர் –ஸ்ரீ சத்ய சந்தர் –

———-

942-பூர்புவ-கஜேந்திர மோஷ பரமான திருநாமம்-
உண்மையில் வாழ்பவருக்கு இருப்பிடம்
அஸ்தி ப்ரஹ்மேதி சேத் வேத சந்த மேநம்ததோ வித்து
அவனை சேஷி ஸ்வாமி அறிந்தவன் பூ -இருப்பவன்
கடல் வண்ணன் பூதங்கள் -5-2-1-
ஸ்வரூப ஞானம் உள்ளவனுக்கு புவ இருப்பிடம்
உன்னைக் கொண்டு என்னுள் வைத்தேன் என்னையும் உன்னில் இட்டேன் -பெரியாழ்வார் -5-4-5-

பகவானுக்கு அடிமைப் பட்டவன் என்ற ஞானம் உடைய பக்தனுக்குத் தாமே இருப்பிடமாக இருப்பவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

நிவஸிஷ்யஸி மந்யேவ அத குருர்த்வம் ந சம்சய

எல்லாவற்றிற்கும் ஆதாரமான பூமிக்கும் ஆதாரமானவர் -ஸ்ரீ சங்கரர் –

பூ -நிறைவானவர் -புவ -உலகத்திற்குக் காரணம் ஆனவர் -இரண்டு திரு நாமங்கள் –

——————-

64-பூதாத்மா  -8/10-
8-பூதாத்மா –பரத்வம் – சர்வ சேஷித்வம் -சிருஷ்டி ஸ்திதி சம்ஹாரம் நிர்வஹிக்கை –ஸ்வாமித்வம் -திருநாமம்
10-பூதாத்மா -பரிசுத்த ஸ்வாபம் உடையவன் –பரத்வம் – தோஷம் தட்டாத பரமாத்மா திருநாமம்-

8-பூதாத்மா –பரத்வம் – சர்வ சேஷித்வம் -சிருஷ்டி ஸ்திதி சம்ஹாரம் நிர்வஹிக்கை –ஸ்வாமித்வம் -திருநாமம்
உலகுக்கு உயிராய் இருப்பவன் –
யஸ்ய ப்ருதிவீ சரீரம் யஸ்ய ஆத்மா சரீரம்
ஏஷ சர்வ பூதாந்தராத்மா –
உலகுக்கே ஓர் உயிருமானாய் -6-9-7-
ஒத்தே எப்பொருட்கும் உயிராய் -2-3-2-

எல்லாப் பொருள்களுக்கும் ஆத்மாவாக இருப்பவர் -ஸ்வம்-ஸ்வாமி சம்பந்தம்
ஜீவாத்மா சரீரத்தை -வியாபித்து நியமித்து -பிரவ்ருத்தி நிவ்ருத்தி செய்வது போலேவும் அந்தரங்கமாகவும் இருப்பது போலே –
சரீர சரீரி பாவம் -ஸ்ரீ பராசர பட்டர் -பூ பாத யஸ்ய நாபி -அந்தஸ்தம் —
உலகமே உடம்பு சர்வேஷாம் பூதானாம் ஆத்மா -அந்தர்யாமி -அனைத்தைக்கும்

ய ப்ருதிவ்யாம் திஷ்டன் ய ஆத்மநி திஷ்டன் -யஸ்ய ப்ருத்வீ சரீரம் -யஸ்ய ஆத்மா சரீரம் –பிருஹத்
ஏஷ சர்வ பூத அந்தராத்மா ஸூபால
ஜகத் சர்வம் தே -யுத்த -120-25–
தாநி சர்வாணி தத் வபூ –ஸ்ரீ விஷ்ணு புராணம் –
தத் சர்வம் வை ஹரேஸ் தனு -ஸ்ரீ விஷ்ணு புராணம் —

பிராணங்களுக்கு அந்தர்யாமியாய் இருப்பவர் –ஸ்ரீ சங்கரர்-

பிராணிகளுக்கு கட்டளை இடுபவர் -உலகில் வியாபித்து ஆத்மாவாக இருப்பவர்-ஸ்ரீ சத்ய சந்த தீர்த்தர்-

————

10-பூதாத்மா -பரிசுத்த ஸ்வாபம் உடையவன் –பரத்வம் – தோஷம் தட்டாத பரமாத்மா திருநாமம்
பூதாத்மா–8 th -திரு நாமம் -அந்தர்யாமித்வம் சொல்லிற்று
அநச்நன் அந்ய அபிசாகதீதி -கனி புசிக்காமல் பிரகாசித்து கொண்டு இருக்கும் பறவை
ஏஷ சர்வ பூதாந்தராத்மா அபஹதபாப்மா –
அமலன் -ஆதிபிரான் –

தாம் ஆத்மாவாக இருந்தாலும் தோஷங்கள் தட்டாதவன் -பரிசுத்த ஸ்வ பாவம் யுடையவன் -ஜீவாத்மா மட்டும்
கர்ம பலன்களை அனுபவிப்பான் -கசை தொடர்பு ஆசிரியருக்கும் மாணவனுக்கும் யுண்டே -ஸ்ரீ பராசர பட்டர் —
உப்பில்லா பண்டமும் ஒப்பில்லாமல் ஆக்குமவன் -மட்டமான வஸ்துவையும் பெருமை படுத்துமவன்
ஆத்மீத்யவ சம்சாரித்வாதி அஸ்ய சரீரவத் -சித் அசித் சுத்த ஸ்வபாவ –

ஜஹாத் யேநாம் முக்த போகாம் அஜஸ் அந்யஸ் –தைத்ரிய நாராயண வல்லீ -10-5-பிறப்பற்ற ஜீவன் அனுபவித்து கிளம்ப
பரமாத்மா அனுபவிப்பதுடன் நிற்காமல் ஒளி வீசுகிறான்
அநஸ்நந் அந்யோ அபிசாக ஸீதி முண்டக -3-1-1-
ஏஷ சர்வ பூத அந்தராத்மா அபஹத பாப்மா –ஸூபால
ந மாம் கர்மாணி லிம்பந்தீ –ஸ்ரீ கீதை -4-11–
பஸ்ய தேவஸ்ய மஹாத்ம்யம் மஹிமாநம் ச நாரத சுப அசுபை கர்மபிரியோ ந லிப்யதே கதாசந –சாந்தி பர்வம் -340-26–
சம்போக பிராப்தி இதி சேத்ந வைசேஷ்யாத் –ஸ்ரீ ப்ரஹ்ம ஸூத்ரம் -1-2-8-அவன் இயல்பாகவே அனைவரையும் விட உயர்ந்தவன்

பரிசுத்தமான ஆத்மாவை யுடையவர் -நிர்குணர்-பூதக்ருத் போன்ற திரு நாமங்களால் சொன்ன குணங்கள்
இவன் இச்சையினால் கற்ப்பிக்கப் பட்டன -ஸ்ரீ சங்கரர்-
ஜீவாத்மாக்கள் பரிசுத்த தன்மை எவன் இடம் இருந்து பெறுகின்றனவோ அவன் பூதாத்மா –
புனிதமானவர்களின் ஆத்மா -புனித ஆத்மா-ஸ்ரீ சத்ய சந்த தீர்த்தர்-

ஓம் பூதாத்மா நம
பரிசுத்த ஆத்மா –வ்யாப்த கத தோஷம் தட்டாதவன்
உபாத்யார் கை பிரம்பு கொண்டு பிழையை திருத்துவது போலே
ஒரே சிறைக்குள்ளே கைதியும் தண்டிக்கும் அதிகாரியும் இருக்குமா போலே

——————

65- மஹா கர்மா–677/793-
677-மனத்தாலும் செயலாலும் ஆராதிக்கப் படுக்கை-எல்லை அற்ற குண விபூதிமான் -பரமான திருநாமம்
793-–புத்த அவதாரம் -பரமான திருநாமம்

677-மஹா கர்மா -மனத்தாலும் செயலாலும் ஆராதிக்கப் படுக்கை-எல்லை அற்ற குண விபூதிமான் -பரமான திருநாமம்
சிறந்த செயல்களை உடையவன் -மாயன்
சராசரம் முற்றவும் நற்பாளுக்கு உய்த்தனன் -7-5-1-

793-மஹா கர்மா –புத்த அவதாரம் -பரமான திருநாமம்
சிறப்பான செயல் உடையவன் -பவித்ராணாம் சாதூநாம் -இத்யாதி –
கிரித்ரிமங்கள்-செய்து தன்னைச் சரணம் பற்றிய தேவர்களை ரஷிக்க-
மாயர் கொல் -மாயம் அறிய மாட்டேன் -பெரிய திருமொழி -9-2-9
இந்திரற்கும் பிரமற்கும் முதல்வன் -திரு நெடும் -4-

சரண் அடைந்தவர்களைக் காப்பதற்கும் துஷ்டர்களைத் தண்டிப்பதற்கும் பரம காருணிகரான தாம் இப்படிச்
செய்ததனால் இம் மோசச் செயல்களும் சிறந்தவைகளாக இருப்பவர் -ஸ்ரீ பராசர பட்டர்

ஆகாயம் முதலிய மஹா பூதங்களைப் படைப்பவர் -ஸ்ரீ சங்கரர் –

உலகப் படைப்பு முதலிய பெரிய செயல்களை உடையவர் -ஜீவனாக இல்லாதவர் -விதிக்கு வசம் ஆகாதவர் -ஸ்ரீ சத்ய சந்தர் –

—————————-

66-மஹீதர :           -318/370-

318-மஹீதர-ஸ்ரீ பரசுராம -ஆவேச சக்தி -அவதார திரு நாமம்
370-மஹீதர –ஸ்ரீ லஷ்மி சம்பந்தம் திரு நாமம்

318-மஹீதர-ஸ்ரீ பரசுராம -ஆவேச சக்தி -அவதார திரு நாமம்
பூமியைத் தாங்கி நிற்பவன்
வென்றி நீண் மழுவா வியன் ஞாலம் முன் படைத்தாய் -6-2-10-

இப்படி துஷ்டர்களை அளித்தது பூமியைத் தாங்குபவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

பூமியை அல்லது பூஜையைத் தாங்குபவர் –ஸ்ரீ சங்கரர் –

பூமியைத் தாங்குபவர் —ஸ்ரீ சத்ய சந்தர் –

———–

370-மஹீதர –ஸ்ரீ லஷ்மி சம்பந்தம் திரு நாமம்
பூமியைத் தாங்குபவன்
எயிற்று இடை மண் கொண்ட வெந்தை –

அவரே பூமியைத் தாங்குபவராக இருப்பவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

பூமியை மலை வடிவில் தாங்குபவர் –ஸ்ரீ சங்கரர் –

பூமியைத் தாங்குபவர்–ஸ்ரீ சத்ய சந்தர் –

———————–

67-மார்க்க :           -366/398-

366-மார்க்க-ஸ்ரீ லஷ்மி சம்பந்த திரு நாமம்
398-மார்க்க-ஸ்ரீ ராம அவதார திரு நாமம்

366-மார்க்க-ஸ்ரீ லஷ்மி சம்பந்த திரு நாமம்
தேடப்படுபவன் –
திரு மோகூர் காள மேகத்தை அன்றி மற்று ஓன்று இலம் கதியே -10-1-1-
தாள் அடைந்தார் தங்கட்கு தானே வழித் துணையாம் காளமேகம்

உபாசகர்களால் தேடப் பெறுபவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

வாஞ்சித சித்தி பிரத–அடியார்களின் அபீஷ்டங்களை உடனே அளிப்பவன்

மோஷத்தை விரும்புவர்களால் தேடப்படுபவர் -பரமானந்தத்தை அடைவதற்கு வழியாக இருப்பவர் –ஸ்ரீ சங்கரர் –

ஞானிகளால் சாஸ்திர விசாரங்களில் தேடப்படுபவர் -லிங்க சரீரத்தை அழித்து மோஷம் தருபவர் என்றும் கூறுவர்–ஸ்ரீ சத்ய சந்தர் –

———————-

398-மார்க்க-ஸ்ரீ ராம அவதார திரு நாமம்
தேடப்படுபவன் -நற்பால் அயோத்தியில் வாழும் சராசரம் முற்றவும் உய்த்தனன்

பரத்வாஜர் முதலிய முனிவர்களால் தேடப்படுபவர் –
விரஜோ மார்க்க -ஒரே திரு நாமமாக கொண்டு தோஷம் அற்ற வழியைக் காட்டுபவர் -ஸ்ரீ பராசர பட்டர்

ந ச அஸ்ய மஹதீம் லஷ்மீம் ராஜ்ய நாச அபகர்ஷதி லோக காந்தஸ்ய காந்தத்வாத் சீத ரஸ்மே இவ ஷபா–அயோத்யா -19-32-
ச பிதுர் வசனம் ஸ்ரீ மாந் அபிஷேகாத் பரம் பிரியம்
தர்ம உபதேசாத் த்யஜதச்ச ராஜ்யம் மாம் சாப்யரண்யம் நயத பித்தாதிம் –ஸூந்தர-36-29–
பரத்வாஜாதிகளால் ஆரவத்துடன் நாடப்பட்டவன் -ஆகையால் மார்க்க
விரஜோ மார்க்க -ஒரே திரு நாமமாக கொண்டு –சரணம் அடைந்தவர்களுக்கு மோக்ஷம் அற்ற புருஷார்த்தங்களையும்
மோக்ஷத்தையும் அளிப்பவன்
யா கதிர் யஜ்ஜ சீலா நாம் ஆஹிதாக் நேச்ச யா கதி
ஆவஹத் பரமாம் கதிம் –ஸூந்தர-17-8-ஜடாயுவுக்கு பரம கதி

தம்மை அறிவதே முக்திக்கு வழியாக இருப்பவர் -ஸ்ரீ சங்கரர்

ஸ்ரீ நரசிம்ஹம்-திருவவதரித்து சிங்க திரு முகம் யுடையவர் -ஸ்ரீ சத்ய சந்தர்

——————–

68-யம :                   -164/870-

164-யம –ஸ்ரீ வாமன அவதார பரமான திரு நாமம்
870-யம –துஷ்டர்களை நிக்ரஹிப்பவன் -பரமான திரு நாமம்

164-யம –ஸ்ரீ வாமன அவதார பரமான திரு நாமம்
ஆள்பவன் -அந்தர்யாமியாய் இருந்து நடத்துபவன் -யமனையும் நியமிப்பவன்
வீற்று இருந்து ஏழு உலகும் தனிக் கோல் செல்ல வீவில் சீர் ஆற்றல் மிக்காளும் அம்மானை -4-5-1-
பொங்கோதம் சூழ்ந்த புவனியும் விண்ணுலகும் அங்காதும் சோராமே ஆள்கின்ற எம்பெருமான் –நாச் -11-3-
மீண்டும் -870-வரும்-

அந்தர்யாமியாக இருந்து எல்லாவற்றையும் நடத்துபவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

ய ப்ருதிவீம் அந்தரோ மயதி–ய ஆத்மாநம் அந்தரோ யமயதி–பிருஹத்
யமோ வைவஸ்வதா ராஜா யஸ் தவ ஏஷ ஹ்ருதி ஸ்தித தேந சேத் அவிவாத தே மா காங்காம் மா குரூந் கம -மனு ஸ்ம்ருதி 8-92-
அனைவரையும் நியமிப்பவன் இடம் அத்வேஷ மாத்ரத்தால் -விரோதம் பார்க்காமல் இருந்தாலே புண்யம் தேட
கங்கை தீர்த்த யாத்ரையோ குரு க்ஷேத்ர யாத்ரையோ வேண்டாம்

உள்ளே இருந்து அடக்குபவர் –ஸ்ரீ சங்கரர் –

தனக்குக் கட்டளை இடுபவர் இல்லாதவர் –
அயமா என்று பாடம் கொண்டால் சுபங்களைத் தரும் விதிகளை அறிபவர் — ஸ்ரீ சத்ய சந்த தீர்த்தர் –

ஓம் யமாயா நம
அந்தர்யாமியாய் இருந்து நியமிப்பவர்

———-

870-யம –துஷ்டர்களை நிக்ரஹிப்பவன் -பரமான திரு நாமம்
நடத்துமவன்
மார்க்கண்டேயன் அவனை நக்க பிரானும் அன்று உய்யக் கொண்டது நாராயணன் அருளே -4-10-8-

விரும்பிய வரங்களைக் கொடுக்கும் தேவதைகளையும் நடத்துபவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

பிரபவதி சம்யமநே மாம் அபி விஷ்ணு –ஸ்ரீ விஷ்ணு புராணம் -3-7-13-

மரணம் இல்லாதவர் -அயம-என்ற பாடம் -ஸ்ரீ சங்கரர் –

பிரளய காலத்தில் எல்லாவற்றையும் அழிப்பவர்-ஸ்ரீ சத்ய சந்தர் –

—————–

69-யஜ்ஞ :                -446/971-

446-யஞ்ஞ –யஞ்ஞ ஸ்வரூப திரு நாமம்
971-யஞ்ஞ-ஜகத் வியாபாரம் திரு நாமம்

446-யஞ்ஞ –யஞ்ஞ ஸ்வரூப திரு நாமம்
யாகமாய் உள்ளவன்
வேதமும் வேள்வியும் ஆதியும் ஆனான் -பெரிய திருமொழி -9-4-9-
வேள்வியாய் தக்கணையாய் தானுமானான் -பெரிய திருமொழி -4-9-5
பண்டை நான் மறையும் வேள்வியும் தானே நின்ற எம்பெருமான் -பெரிய திருமொழி -7-10-9
மேலே 971 -யஞ்ஞ – 682- மகா யஞ்ஞ வரும்

யஜ்ஞம் அதன் சாதனம் அதன் பலன் எல்லாம் தாமேயாய் இருப்பவர் –ஸ்ரீ பராசர பட்டர் –

த்ருவோ யத்ர ப்ரதிஷ்டித ஏதத் விஷ்ணுபதம் திவ்யம் த்ருதீயம் வ்யோம்நி பாஸ்வரம் –ஸ்ரீ விஷ்ணு புராணம் -2-8-98-
இஜ்யா பலஸ்ய பூரேஷா இஜ்யா சத்ர ப்ரதிஷ்டிதா
ததச்ச ஆஜ்யா ஹுதி த்வாரா போஷி தாஸ்தே ஹவிர்புஜ –ஸ்ரீ விஷ்ணு புராணம் 4-8-106–
யஜ்ஜோ வை விஷ்ணு

யஜ்ஞ ஸ்வரூபியாக இருப்பவர் –ஸ்ரீ சங்கரர் –

அனைத்து யஜ்ஞங்களிலும் பலன் பெறுபவர் ஸ்ரீ கிருஷ்ண ரூபத்தில் தம்மைக் குறித்துத் தாமே யஜிப்பவர்-
ஸ்ரீ ராமாவதாரத்தில் அஹல்யையை கௌதமரோடு சேர்ப்பித்தவர் –ஸ்ரீ சத்ய சந்தர் –

————–

971-யஞ்ஞ-ஜகத் வியாபாரம் திரு நாமம்
தானே யஞ்ஞமாய் உள்ளவன்
செய்கின்ற கிறி எல்லாம் நானே என்னும் -5-6-4-
ஜப யஞ்ஞ ரூபமாய் இருப்பவன்
முன்பே 446 பார்த்தோம்
அந்தணர் தம் ஓமமாகிய அம்மான் -பெரிய திரு மொழி -8-6-5-
பண்டை நான் மறையும் வேள்வியும் தானாய் நின்ற எம்பெருமான் -பெரிய திருமொழி -5-7-1-
மறையாய் வேள்வியாய் தக்கணையாய் -பெரியாழ்வார் -4-9-5-
முன்பே 446 பார்த்தோம்-

தம்மை ஆராதிப்பதற்கு உரிய புண்யம் இல்லாமல் தம்மை ஆராதிக்க விரும்புவர்களுக்கு
தாமே யஜ்ஞமாக இருப்பவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

யஜ்ஞ ஸ்வரூபி யானவர் -யாகம் செய்பவர்களுக்கு அதன் பலன்களைச் சேர்ப்பிப்பவர்-ஸ்ரீ சங்கரர் –

யஜ்ஞங்களை அனுபவிப்பவர் -அல்லது யஜ்ஞங்களுக்குத் தக்கவர் -ஸ்ரீ சத்ய சந்தர் –

————————

70-ருத்த :                -279/352-

279-ருத்த–விஸ்வ ரூபம் திரு நாமம்
352-ருத்த–ஐஸ்வர்ய வாசக திரு நாமம்

279-ருத்த–விஸ்வ ரூபம் திரு நாமம்
சம்பத்தால் பூரணன்
நாகணை மிசை நம்பரர் செல்வர் பெரியர் நாச் திரு -10-10-

பருவ காலங்களில் கரை புரளும் கடல் போல எப்போதும் நிரம்பி இருப்பவர் –ஸ்ரீ பராசர பட்டர் –

தத ச புருஷ வ்யாக்ர சம் ஜகாத புந ஸ்வயம் தாம் திவ்யம் அப்துதா சித்ராம் ருத்தமத்தாம் அரிந்தம –உத்யோக பர்வம்
புருஷோத்தமன் திவ்யமான திருவாய் மலர்ந்து அருள -திவ்யமாக ஆச்சர்யமாக விசித்திரமாக பூர்ணமாக இருந்ததே அவன் திருவாய் மொழிகள்

தர்மம் ஞானம் வைராக்யம் முதலிய குணங்கள் நிரம்பியவர் –ஸ்ரீ சங்கரர் –

இயற்கையாக முழுமையானவர் –
ருத்தஸ் பஷ்டாஷர-என்ற பாடத்தில் ஓம் நமோ நாராயணாய -எட்டு அக்ஷரங்களை உடையவர் -என்றுமாம் – ஸ்ரீ சத்ய சந்தர்-

————

352-ருத்த–ஐஸ்வர்ய வாசக திரு நாமம்
வ்ருத்தியை உடையவன்
பெருக்குவார் இன்றியே பெருக்கம் எய்தி –
விஜ்ஜுரக விபீஷணனை அங்கீ கரித்த பின்பு

பக்தர்களின் சம்ருத்தியால்- நிறைவால் -தாமும் சம்ருத்தி அடைபவர் –ஸ்ரீ பராசர பட்டர் –
அபி ஷிஸ்ய ச லங்காயாம் –விஜூர

பிரபஞ்ச ரூபமாக விரிவடைந்தவர் – -ஸ்ரீ சங்கரர் –

ஞானம் ஆனந்தம் முதலிய குணங்களால் மிக்கவர் –ஸ்ரீ சத்ய சந்தர் –

——————-

71-வசுபிரத :         -698/699-

698- வஸூ ப்ரத–ஸ்ரீ கிருஷ்ணாவதார திரு நாமம்
699- வஸூ ப்ரத–ஸ்ரீ கிருஷ்ணாவதார திரு நாமம்

698- வஸூ ப்ரத –ஸ்ரீ கிருஷ்ணாவதார திரு நாமம்
நிதியான தன்னைத் தருபவன் -வ ஸூ =நிதி
வாசுதேவ தேவகிகளுக்கு தானே புத்ரனாக உபகரித்தான்
நந்த கோபன் யசோதை களுக்கும் இந்த நிதியை ஆக்கி வைத்தான்
எடுத்த பேராளன் நந்த கோபன் தன இன்னுயிர் சிறுவனே -8-1-3-
எனக்கு தன்னைத் தந்த கற்பகம் –

சிறந்த நிதியாகிய தம்மை தேவகிக்கும் வஸூ தேவருக்கும் கொடுத்தவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

செல்வத்தை மிகுதியாகக் கொடுப்பவர் -குபேரனுக்கும் செல்வம் கொடுப்பவர் -ஸ்ரீ சங்கரர் –

செல்வம் ரத்தினங்கள் இவற்றை பக்தர்களுக்கு மிகுதியாகக் கொடுப்பவர் -ஸ்ரீ சத்ய சந்தர் –

—————-

699- வஸூ ப்ரத-ஸ்ரீ கிருஷ்ணாவதார திரு நாமம்
பெரும் புகழைத் தந்தவன் -வஸூ தேஜஸ்
தன் பிரஜைகளில் ஒருவரை தனக்கு பிதாவாகக் கொண்டு தான் தகப்பன் உடையவன் ஆகிறான்
எல்லையில் சீர்த் தசரதன் தன் மகனாய்த் தோன்றினான் -பெருமாள் திரு-10-11-

உலகிற்குத் தந்தை யாகிய தமக்கும் பெற்றோர்கள் ஆகும்படி பெரிய பெருமையை
தேவகி வஸூ தேவர்களுக்கு அளித்தவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

பக்தர்களுக்கு உயார்ந்த பலனாகிய மோஷத்தை அளிப்பவர்
தேவர்களின் விரோதிகளான அசுரர்களின் செல்வங்களை அழிப்பவர் -ஸ்ரீ சங்கரர் –

அர்ஜூனனுக்காக வஸூ அவதாரம் ஆகிய பீஷ்மனை நன்கு அலஷ்யம் செய்தவர் -ஸ்ரீ சத்ய சந்தர் –

——————

72-வசுமநா :        -106/702-
106-வஸூமநா –ஆஸ்ரித வத்சலன் திரு நாமம்
702-வ ஸூ மநா-ஸ்ரீ கிருஷ்ணாவதார திரு நாமம்

106-வஸூமநா –ஆஸ்ரித வத்சலன் திரு நாமம்
ஆஸ்ரிதரை நிதியாக நினைப்பவன்
துயரறு சுடர் அடி -1-1-1- தனது துயர் போய் சுடர் விட்டு பிரகாசிக்கும் திருவடிகள் ஆஸ்ரிதர் ஒருவனை பெற்றால் –
ச மகாத்மா ஸூ துர்லப -என்று எண்ணுமவன்-
தளிர் புரையும் திருவடி என் தலை மேலவே -திரு நெடும் -1
கருகி வாடி இருந்தவை தளிர் விட்டனவே ஆழ்வார் தலை மேல் ஸ்பர்சத்தால்

அடியவர்களை நிதி போல் நினைப்பவர் -ஸ்ரீ பராசர பட்டர்-
ச மஹாத்மா ஸூ துர்லப –ஸ்ரீ கீதை -7-19-

சிறந்த மனம் உள்ளவர் -விருப்பு வெறுப்பு இன்பம் துன்பம் போன்றவற்றால் கலக்க முடியாதவர் -ஸ்ரீ சங்கரர்-

அடியவர்கள் அளிக்கும் நீரையும் ஸ்ய மந்தக மணியையும் சமமாக கருதுபவர் -ஸ்ரீ சத்ய சந்தர்-

ஓம் வஸூமநா நம
ஆஸ்ரிதர்களை நிதியாக திரு உள்ளம் கொண்டவன் -ஆத்மாவாக கொள்ளுபவன்

———————-

702-வ ஸூ மநா-ஸ்ரீ கிருஷ்ணாவதார திரு நாமம்
வசுதேவர் இடத்தில் மனம் வைத்தவன்
முன்பே 106 பார்த்தோம்

ஸ்ரீ லஷ்மி பிறந்தவிடமான பாற் கடலில் வாசம் செய்தும் வஸூ தேவரிடம் மனம் வைத்தவர் -ஸ்ரீ பராசர பட்டர் –
தேவதத்தனை தத்தன் என்றும் சத்யபாமாவை பாமா என்பது போலே வஸூ தேவனை வஸூ என்கிறார் –

எல்லாவற்றிலும் வசிக்கும் மனம் உள்ளவர் -ஸ்ரீ சங்கரர் –

ச்யமந்தக மணியில் அல்லது பக்தர்கள் அளிக்கும் தீர்த்தத்தில் மனம் உள்ளவர் -வஸூ என்ற பெயருள்ள
அரசனுடைய அல்லது அஷ்ட வஸூக்களின் மனத்தைத் தம்மிடம் கொண்டவர் -ஸ்ரீ சத்ய சந்தர் –

————————

73  வாசஸ்பதி :    -218/579-

218-வாசஸ்பதி –ஸ்ரீ மத்ஸ்ய அவதார திரு நாமம்
579 -வாசஸ்பதி –ஸ்ரீ வேத வியாச பகவான் -திரு அவதார திரு நாமம்

218-வாசஸ்பதி –ஸ்ரீ மத்ஸ்ய அவதார திரு நாமம்
சொல்லுக்கு அதிபதி
சொல்லினால் படைக்க நீ படைக்க வந்து தோன்றினார் சொல்ல வல்லரே -திருச்சந்த -118-

மத்ஸ்ய புராணத்தில் வேதார்த்தத்தை வெளியிட்டவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

வேத வாக்யங்களுக்குப் பதியாய் இருப்பவர் — ஸ்ரீ சத்ய சந்தர்-

———————

579 -வாசஸ்பதி –ஸ்ரீ வேத வியாச பகவான் -திரு அவதார திரு நாமம்
வாக்குக்கு ஸ்வாமி -மகா பாரதம் -ப்ரஹ்ம சூத்ரம் -அருளினவர்
சமயங்ந்யாய கலா பேன மஹதா பாரதேனச உப ப்ரும்ஹித வேதாய நமோ வ்யாசாய விஷ்ணவே -வ்யாச ஸ்துதி
உரைக்கின்ற முனிவரும் யானே –உரைக்கின்ற முகில் வண்ணனும் யானே -5-6-8-

ஐந்தாம் வேதமாகிய மஹா பாரத வாக்குக்கு ஸ்வாமி—ஸ்ரீ பராசர பட்டர் –

வாசஸ்பதிர யோஜின-என்று ஒரு திரு நாமம் -வித்யைக்கு அதிபதியாகவும் கர்ப்பத்தில் பிறவாதவராகவும் இருப்பவர் -ஸ்ரீ சங்கரர் –

அனைத்து வாக்கு மனம் ஆகியவற்றின் தேவதைகளுக்குத் தலைவர்–ஸ்ரீ சத்ய சந்தர் –

————————

74-வாயு வாஹந :   -332/860-

332-வாயு வாஹந –ஸ்ரீ கூர்மாவதாரம் திரு நாமம்
860-வாயு வாகன –யோகத்தில் இருந்து நழுவியவரை உத்தரிப்பவன் -பரமான திரு நாமம்

332-வாயு வாஹந –ஸ்ரீ கூர்மாவதாரம் திரு நாமம்
வாயுவை நடத்துபவன்
மேதகும் ஐம் பெரும் பூதமும் நீயே -திரு வெழு கூற்று –

உலகத்திற்குப் பிராணனான வாயுவை நடத்துபவர்-ஸ்ரீ பராசர பட்டர்-

ஏழு மருத்துக்களை நடத்துபவர் -ஸ்ரீ சங்கரர் –

மூச்சுக் காற்றைத் தாங்கி இருக்கும் ஜீவர்களை நடத்துபவர் – —ஸ்ரீ சத்ய சந்தர் –

———

860-வாயு வாகன –யோகத்தில் இருந்து நழுவியவரை உத்தரிப்பவன் -பரமான திரு நாமம்
மேல் எழச் செய்பவன்
வாயு -கருடனை சொல்கிறது -கருட வாகனன் புள்ளை ஊர்வான் -முன்பே 332 பார்த்தோம்

அவர்கள் கீழே விழுந்தாலும் வாயு வேகம் உள்ள கருடனைக் கொண்டு அவர்களைத் தூக்கி விடுபவர் –
பரம பாகவதரான வஸூ என்பவர் -பரம ரிஷி சாபத்தால் தாழ்ந்து போக நேரிட கருடனைக் கொண்டு மீண்டும்
அவர் உயர்ந்த நிலையை அடையும்படி செய்தார் -ஸ்ரீ பராசர பட்டர் –

அதவா பக்ஷி ராட் தூர்ணம் ஆகத்ய சுவாமிநஸ் பதம் நேஷ்யதி–ஸ்ரீ விஷ்ணு தத்வம்

காற்றும் தம்மிடம் அச்சத்தினால் அனைத்து உயிர்களையும் தாங்கும்படி இருப்பவர் -ஸ்ரீ சங்கரர் –

வாயுவைத் தூண்டுபவர் -மேலானவர் -ஜீவனின் உடலை விட்டுப் போகும் போது வாயுவை வாகனமாக உடையவர் -ஸ்ரீ சத்ய சந்தர் –

———————

75-விக்ரமீ  :           -76/909-

76-விக்ரமீ –த்ரிவித சேதன வ்யதிரிக்த -நியாமகன் திரு நாமம்
909-விக்ரமீ-முக்தனுக்கு மோஷானந்தம் தரும் ஸ்ரீ வைகுண்ட நாதன் பரமான திரு நாமம்

76-விக்ரமீ –த்ரிவித சேதன வ்யதிரிக்த -நியாமகன் திரு நாமம்
பராக்கிரமம் உடையவன் –
நினைவாலே நடக்கும் -சுண்டு விரல் நுனியாலேயே நினைத்தால் முடித்து விடுவேன்
பிறந்தவாறும் வளர்ந்தவாறும் -5-10-திருவாய் மொழி முழுதும் அவன் விக்கிரமம் பேசும்

நினைத்தது தடைபடும் வாய்ப்பே இல்லாமல் நினைத்ததை முடிப்பவர் -ஸ்ரீ பராசர பட்டர் —

அனைவராலும் போற்றப்படும் விக்ரம் -நித்தியமாக இனி சேர்ந்து விக்ரமீ
மனசா ஏவ ஜகத் ஸ்ருஷ்டிம் சம்ஹாரம் கரோதி ய தஸ்ய அரி பக்ஷே ஷபணே கியாந் உத்யம விஸ்தர–ஸ்ரீ விஷ்ணு புராணம் -5-22-15-
சங்கல்பத்தாலே அனைத்தையும் செய்ய வல்லவன் விரோதிகளை நிரசிக்க என்ன முயற்சி செய்ய வேண்டும்

சௌர்யத்தை யுடையவர் -ஸ்ரீ சங்கரர் –

தனது அவதாரங்களில் ஏற்றத் தாழ்வு இல்லாதவர் -பராக்ரமத்தை யுடையவர்-ஸ்ரீ சத்ய சந்த தீர்த்தர்-

ஓம் விக்ரமீ நம
வீர தீர பராக்ரமங்களில் ஒப்பற்றவன்

—————

909-விக்ரமீ-முக்தனுக்கு மோஷானந்தம் தரும் ஸ்ரீ வைகுண்ட நாதன் பரமான திரு நாமம்
பராக்கிரமம் உள்ளவன் –
உன்னுடைய விக்கிரமம் ஓன்று ஒழியாமல் எல்லாம் என்னுடைய நெஞ்சகம் பால்
எழுதிக் கொண்டேன் இராம நம்பீ-பெரியாழ்வார் -5-4-6-
சமுத்திர இவ காம்பீர்ய
முன்பே 76-பார்த்தோம்

தம் பெருமைக்கு உரிய திவ்ய சேஷ்டிதங்களை உடையவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

சிறந்த நடை உள்ளவர் -சிறந்த பராக்கிரமம் உடையவர் -ஸ்ரீ சங்கரர் –

பராக்கிரமம் உடையவர் -ஸ்ரீ சத்ய சந்தர் –

———————-

76-விதாதா  :           -44/485-

44-விதாதா –பரத்வம்-சமஸ்த இதர விலஷணன் திரு நாமம்
485-விதாதா –தர்ம ஸ்வரூபி திரு நாமம்

44-விதாதா –பரத்வம்-சமஸ்த இதர விலஷணன் திரு நாமம்
கர்ப்பத்தை போஷித்து உற்பத்தி செய்பவன்
யோ ப்ரஹ்மாணம் விததாதி பூர்வம்
தஸ்மாத் விராட் அஜாயத
அந்தி போல் நிறத்தாடையும் அதன் மேல் அயனைப் படைத்த தோர் எழில் உந்தி
தாமரை யுந்தி தனிப் பெரு நாயக -திருவாசிரியம் -1
மீண்டும் -485-வரும் விதிப்பவன் -அடக்கி ஆள்பவன்
சாதுவராய்ப் போதுமின்கள் என் தான் நமனும் தந் தூதுவரைக் கூவிச் செவிக்கு -நான் முகன் -68
பரிஹர மது ஸூதன பிரபன்னான் பிரபுர ஹ மன்யன்ருணாம் ந வைஷ்ணவாநாம் –
எம் கோன் அவன் தமர் நமன் தமரால் ஆராயப் பட்டறியார் கண்டீர் –
நமன் தமர் பாசம் விட்டால் அலைப் பூண் உண்ணும் அவ்வவை எல்லாம் அகல கலைப் பல் ஞானத்து என் கண்ணன் -3-2-1-

அந்த கர்ப்பத்தை முதிர வைத்து உற்பத்தி செய்பவர் –ஸ்ரீ பராசர பட்டர் —-தம் கர்ப்பம் பரிணமய ஆவிபாவாவயதிச்ச –

யோ ப்ரஹ்மாணம் விததாதி பூர்வம் –ஸ்வேதாஸ்வர
அத புநரேவ நாராயண –தத்ர ப்ரஹ்மா சதுர்முகோ அஜாயத்–மஹா உபநிஷத்
ஹிரண்ய கர்ப்பம் பஸ்யத் ஜாய மானம்–தைத்ரியம்
தஸ்மாத் விராட் அஜாயத் -புருஷ ஸூக்தம்
தஸ்மிந் ஜஜ்ஜே ஸ்வயம் ப்ரஹ்மா சர்வ லோக பிதா மஹ–மனு ஸ்ம்ருதி
ஆதி சேஷன் முதலிய உருவங்களால் உலகத் தாங்குபவர் -ஸ்ரீ சங்கரர்—
கர்மங்களையும் அவற்றின் பலன்களையும் உண்டாக்குபவர் –
பூமியைத் தாங்கும் அனந்தன் முதலானோரையும் தாங்குபவர் -ஸ்ரீ சங்கரர்—

கருடனால் தரிக்கப்படுபவர் -தமக்கு ஒரு தாரக போஷகர்கள் இல்லாதவர் -முக்தர்களைத் தாங்குபவர்-ஸ்ரீ சத்ய சந்த தீர்த்தர்—-

ஓம் விதாதா நம
நான்முகனையும் படைத்து அவன் மூலம் உலகைப் படைத்தவன்

——————

485-விதாதா –தர்ம ஸ்வரூபி திரு நாமம்
விதிப்பவன் -அடக்கி ஆள்பவன்
சாதுவராய் போதுமின்கள் -நமன் தன் தமரிடம்
எங்கள் கோன் அவன் தமர் நமன் தமரால் ஆராயப் பட்டு அறியார் கண்டீர்
நமன் தமர் பாசம் விட்டால் அலைப் பூண் உண்ணும் அவ்வவை எல்லாம் அகல கலைப் பல் ஞானத்து என் கண்ணன் -3-2-10-

பாவங்களுக்குப் பலன் கொடுக்கும் யமனும் அவனுடைய தண்டனைகளும் தம் அடியவர்களைப் பாதிக்காமல் இருக்கும்படி நடத்துபவர் –
இங்கு ஸ்ரீ ப்ரஹ்ம புராணம் -ஸ்ரீ விஷ்ணு புராணம் -ஸ்ரீ வாமன புராணம் -ஸ்ரீ நரசிம்ஹ புராணம் -ஸ்ரீ லிங்க புராணம் –
ஸ்ரீ வைஷ்ணவ தர்மம் -ஸ்ரீ விஷ்ணு தத்வம் -ஸ்ரீ பாகவத புராணம் -முதலியவற்றில் யமனுக்கும் அவனுடைய கிங்கரனுக்கும் இடையே
நடைபெற்ற உரையாடல்கள் பார்க்கத் தக்கன -ஸ்ரீ பராசர பட்டர்

அஹம் அமர வரார்ச்சி தேந தாத்ரா சம இதி லோக ஹித அஹிதே நியுக்த –ஸ்ரீ விஷ்ணு புராணம் –
உலகின் நன்மை தீமைகளுக்காக என்னை நியமிக்கிறார் என்று யமன்

ஆதி சேஷன் திக் கஜங்கள் முதலியோர் பூமியைத் தாங்கும்படி செய்பவர் -ஸ்ரீ சங்கரர்

உலகைத் தாங்குபவர் -கருடனை விசேஷமாக வாகனமாகக் கொண்டவர் -ஸ்ரீ சத்ய சந்தர்

——————

77-விபு:               -241/883-

241- விச்வபுக் விபு –புருஷ ஸூக்த உபநிஷத் ப்ரதிபாதித விராட் ஸ்வரூப திரு நாமம்
883-ஹூத புக் விபு –அர்ச்சிராதி மார்க்கம் மூலம் முக்தனை வழி நடத்தும் பரமன் பரமான திரு நாமம்

241- விச்வபுக் விபு –புருஷ ஸூக்த உபநிஷத் ப்ரதிபாதித விராட் ஸ்வரூப திரு நாமம்
எங்கும் பரந்து இருந்து ரஷிப்பவன்
கறந்த பாலுள் நெய்யே போல் இவற்றுள் எங்கும் கண்டு கொள்
இருந்து நின்ற பெரு மாயா -8-5-10
தானேயாகி நிறைந்து எல்லா யுலகும் உயிரும் தானேயாய் -1-7-2-

உலகங்களை வியாபித்துக் காப்பவர் -ஒரே திரு நாமம் -ஸ்ரீ பராசர பட்டர் –

உலகை அழிக்கும் போது உண்பவர் -காப்பவர் –
ஹிரண்ய கர்ப்பர்-முதலிய பல உருவங்களாய் இருப்பவர் -இரண்டு திரு நாமங்கள் –ஸ்ரீ சங்கரர் –
உலகை அழிக்கும் போது உண்பவர் -காப்பவர் –
ஹிரண்ய கர்ப்பர்-முதலிய பல உருவங்களைக் கொண்டு -பரவி – இருப்பவர் -இரண்டு திரு நாமங்கள் -ஸ்ரீ சத்ய சந்தர்-

————

883-ஹூத புக் விபு –அர்ச்சிராதி மார்க்கம் மூலம் முக்தனை வழி நடத்தும் பரமன் பரமான திரு நாமம்
சுக்ல பஷமாய் இருப்பவன் -ஹூத புக் அக்னியில் அவியாக சேர்க்கப் பட்டதை உண்பவன் சந்தரன்
அது இவனிடம் அமிர்தமயமாகி இவனை வளரச் செய்கிறது
அஹ்ன ஆபூர்யமாண பஷம் -சாந்தோக்யம்
முன்பே 241 -விச்வபுக் விபு பார்த்தோம்

அமுதமாகப் பரிணமிக்கும் சந்தரன் வளர்வதான வளர் பிறையாக -மூன்றாம் படியாக இருப்பவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

ஹூத புக் -எல்லாத் தேவதைகளைக் குறித்தும் செய்யப்படும் ஹோமங்களைப் புசிப்பவர் –
விபு -எங்கும் நிரம்பி இருப்பவர் -இரண்டு திரு நாமங்கள் -ஸ்ரீ சங்கரர் –

ஹோமம் செய்பவைகளை உண்பவர் -பக்தர்களை மேன்மை கொண்டவர்களாக ஆக்குபவர் -இரண்டு திரு நாமங்கள் -ஸ்ரீ சத்ய சந்தர் –

———————

78-விஸ்வ யோநி    -118/151-

118-விஸ்வ யோநி-ஆஸ்ரித வத்சலன் திரு நாமம்
151-விச்வயோநி –பிரதம அவதாரம் விஷ்ணு திரு நாமம்

118-விஸ்வ யோநி-ஆஸ்ரித வத்சலன் திரு நாமம்
அனைத்து உலகத்தவருடன் தொடர்பு கொண்டவன்
சரணமாகும் தன தாள் அடைந்தார்க்கு எல்லாம்
அன்பனாகும் தன தாள் அடைந்தார்க்கு எல்லாம்
மெய்யனாகும் விரும்பித் தொழுவார்க்கு எல்லாம்
அணியனாகும் தன தாள் அடைந்தார்க்கு எல்லாம்—9-9-10-6/7/8/
சரணம் -ரஷகன் அன்பன் -தோஷம் காணாதவன் மெய்யன் -வேண்டியது கொடுப்பவன் அணியன் சுலபன்-

அடைந்தவர்கள் எல்லாரையும் தம்மோடு ஒன்றாகக் கொள்பவர் -திரு வநந்த ஆழ்வான் திரு மேனியோடு சமமாக
பக்தர்களோடு கூடி இருப்பதற்காக எல்லாருக்கும் பொதுவாக இருக்கும் படியைச் சொல்லுகிறது -ஸ்ரீ பராசர பட்டர்-

தாங்குவது கீழே சாதாரணம் இங்கு அண்டின அடியவர்களை அணைத்துக் கொள்கிறான் என்கிறது

உலகங்களுக்குக் காரணமாக இருப்பவர் -ஸ்ரீ சங்கரர்-

உலகுக்கு அல்லது வாயு தேவனுக்கு காரணமாக இருப்பவர் – -ஸ்ரீ சத்ய சந்தர்-

ஓம் விஸ்வ யோநியே நம
ஸ்ருஷ்டித்த பின்பு ஸ்திதி பாலனம் செய்து அருளுபவர்

———–

151-விச்வயோநி –பிரதம அவதாரம் விஷ்ணு திரு நாமம்
ஜகத் காரணன் –
தேவர் நடுவா மற்று எப்பொருட்கும் வேர் முதல் வித்தாய் -2-8-10
கள்வா எம்மையும் ஏழுலகும் நின்னுள்ளே தோற்றிய இறைவ -2-2-10-
தெய்வக் குழாங்கள் கை தொழக் கிடந்த தாமரை யுந்தி தனிப் பெரு நாயகன் -திரு வாசி -1
முன்பே 118 இதே திரு நாமம் பார்த்தோம் -தன்னை கிட்டியவரை சேர்த்துக் கொள்பவன்

அந்த இருவரையும் கொண்டு நடத்தப்படும் காரிய உலகு அனைத்துக்கும் காரணமாக இருப்பவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

உலகத்தை ஆதாரமாக உடையவர் -உலக ரூபியாகவும் காரண ரூபியாகவும் இருப்பவர் -ஸ்ரீ சங்கரர் –

கருடன் மீது அமர்ந்து சஞ்சரிப்பவர் -காரணம் அற்றவர்-ஸ்ரீ சத்ய சந்த தீர்த்தர் –

ஓம் விச்வயோநி யே நம
அகில அத்புத காரண கர்த்தா -இச்சா க்ருஹீத அவதாரம்

——————–

79-வேதவித  :          -130/133-

130-வேதவித் –வ்யூஹ நிலை திரு நாமம்
133-வேதவித் –வ்யூஹ நிலை திரு நாமம்

130-வேதவித் –வ்யூஹ நிலை திரு நாமம்
வேதங்களை அறிந்தவன்
அன்னமாய் முனிவரோடு அமரர் ஏத்த அருமறையை வெளிப்படுத்த அம்மான் தன்னை -திரு நெடு -30
புள்ளதாகி வேத நான்கும் ஓதினாய் -திருச்சந்த -9–

ஐயம் திரியின்றி வேதார்த்தங்களை அறிபவர் -ஸ்ரீ பராசர பட்டர்-

வேத விதேவ ச அஹம் -ஸ்ரீ கீதை –15-1-வேதங்களில் வல்லவன் நான்

வேதங்களையும் வேதார்த்தங்களையும் உள்ளபடி அறிபவர் –சங்கரர் –

வேதங்களை அறிந்தவர் –ஸ்ரீ சத்ய சந்தர்-

ஓம் வேத வித் நம

————

133-வேதவித் –வ்யூஹ நிலை திரு நாமம்
வேதார்த்தமான தர்மங்களை அறிந்தவன் -அவற்றை சாஸ்திர விஹித தர்மங்களை சேதனர்கள் அனுஷ்டிக்க செய்து -பிரத்யும்னன் –
சந்தோகா பௌழியா தைத்ரியா சாம வேதியனே நெடுமாலே -பெரிய திருமொழி -7-7-2-
இவற்றை நன்கு அறிந்தவன் -இவற்றால் அறியப் படுபவன் -இவற்றை நமக்கு அளிப்பவன் –

வேதங்களை விசாரிப்பவர் –
வேதங்களினால் அறியப்படும் தர்மத்தை அனுஷ்டிக்கும்படி செய்து -அதை ஆராதனமாகப் பெறுபவர் -எனவே இவரை தர்மம் என்றும்
பிரகாசப்படுத்துபவன் என்றும் ப்ரவர்த்திப்பவன் என்றும் கூறுகிறது -ஸ்ரீ பராசர பட்டர்-

வேதங்களை விசாரிப்பவர் -ஸ்ரீ சங்கரர் –

மத்ச்யாதி ரூபத்துடன் பிரமன் முதலியவர்களுக்கு வேதங்களைக் கிடைக்கச் செய்தவர் -ஸ்ரீ சத்ய சந்தர்-

ஓம் வேத வித் நம

———————-

80-ஸ்ரீநிவாஸ :         -185/614-

185-ஸ்ரீ நிவாஸ-குணங்களுக்கு ஏற்ற அவதார செயல்கள் திரு நாமம்
614-ஸ்ரீ நிவாஸ –ஸ்ரீ சம்பந்த -பரத்வ-பரமான திரு நாமம்

185-ஸ்ரீ நிவாஸ-குணங்களுக்கு ஏற்ற அவதார செயல்கள் திரு நாமம்
அலர் மேல் மங்கை உறை மார்பன் -6-10-10
என் திரு வாழ் மார்வர் -8-3-7-
மலிந்து திருவிருந்த மார்பன் -மூன்றாம் திரு -57
பஸ்யதாம் சர்வ தேவாநாம் யாயௌ வஷ ஸ்தலம் ஹரே -ஸ்ரீ விஷ்ணு புராணம்

பாற் கடல் கடைந்து பெற்ற ஸ்ரீ லஷ்மியை மார்பில் வைத்துச் சிறப்பித்தார் -ஸ்ரீ பராசர பட்டர் –

திரு மார்பில்,லஷ்மி எப்போதும் பிரியாமல் வசிக்கப் பெற்றவர் -ஸ்ரீ சங்கரர் –

தம்மிடத்தில் ஸ்ரீ லஷ்மி வசிக்கப் பெற்றவர் -லஷ்மியை நடத்துபவர் -எல்லா இடத்திலும் வசிப்பவர் –
அனைத்தையும் மறைப்பவர் -தம் உடையாகக் கொள்பவர் -ஸ்ரீ சத்ய சந்த தீர்த்தர் –

————-

614-ஸ்ரீ நிவாஸ –ஸ்ரீ சம்பந்த -பரத்வ-பரமான திரு நாமம்
பிராட்டியை தரிப்பவன் -கொள் கொம்பு போல் –
திரு மங்கை தங்கிய சீர் மார்பன்

கொடிக்குக் கற்பக மரம் போலே பிராட்டிக்குக் கொழு கொம்பாக இருப்பவர் –ஸ்ரீ பராசர பட்டர்-

செல்வம் யுடையவர்களிடம் நித்யமாக வசிப்பவர் –ஸ்ரீ சங்கரர் –

திரு மகளுக்கு அந்தர்யாமியாக வசிப்பவர் -லஷ்மியை நடத்துபவர் –
ஜீவன்கள் தம்மிடம் வசிக்கும்படி இருப்பவர் –ஸ்ரீ சத்ய சந்தர் –

————–

81-ஸ்தவிஷ்ட :       -53/437-

53-ஸ்தவிஷ்ட –பரத்வம்-சமஸ்த இதர விலஷணன் திரு நாமம்
437-ஸ்தவிஷ்ட-ஜ்யோதிர் மண்டலத்துக்கு ஆதாரம் திரு நாமம்

53-ஸ்தவிஷ்ட –பரத்வம்-சமஸ்த இதர விலஷணன் திரு நாமம்
மிகவும் ஸ்தூலமானவன் -பெரியவன் பரப்பு உடையவன்
சூஷ்ம சித் அசித் விசிஷ்ட ப்ரஹ்மம் -பஹூச்யாம் -சங்கல்பித்து
ஸ்தூல சித் அசித் விசிஷ்ட ப்ரஹ்மம் -பலவாக விரிந்து சிருஷ்டி
வேர் முதல் வித்தாய்ப் பரந்து தனி நின்ற -2-8-10
மீண்டும் -437-வரும் –
செல்வர் பெரியர் -நாச்சியார் -10-10-

மிக்க ஸ்தூலமாக இருப்பவர் -ஸ்தூல ரூபமாகக் காணும் பொருள்கள் எல்லாம் தாமாயிருப்பவர் –
பஹூச்யாம்-சங்கல்ப்பித்துக் கொண்டு -ஸூஷ்மமான அவயகதம் முதலிய க்ரமத்தாலே தேவாதி யோனிகள்
ஸ்பர்சாதி குணங்கள் ஈரேழு லோகங்கள் உட்கொண்ட பிரம்மாண்டம் அதற்கு ஆவரனமான ஸ்தூல வ்யக்தமான
வியஷ்டி கார்யம் என்று விஸ்தாரமாகப் பரந்தவன்-ஸ்ரீ பராசர பட்டர் –

தன்னைத் தானே வெளிப்படுத்திக் கொண்டான்
நாஸ்த்யந்தோ விஸ்தரஸ்ய மே –ஸ்ரீ கீதை 10-19–
வ்யோம அம்பு வாயு அக்னி மஹீ ஸ்வரூபை விஸ்தாரவாந்யோ அணுதாரா அணுபாவாத்–ஸ்ரீ விஷ்ணு தர்மம் -4-3-6-
விஸ்தார சர்வ பூதஸ்ய விஷ்ணோ சர்வம் இதம் ஜகத் –ஸ்ரீ விஷ்ணு புராணம் -1-7-84-
த்வத் விஸ்தாரோ யதோ தேவ

மிகப் பருத்தவர் -ஸ்ரீ சங்கரர் –

மிகவும் பருத்தவர் -ஸ்ரீ சத்ய சந்த தீர்த்தர்–

ஓம் ஸ்தவிஷ்டா நம
சங்கல்பத்தாலே ப்ரஹ்மாண்டங்களை -உருவாக்கியவன்
பஞ்ச பூதங்கள் -கர்ம ஞான இந்திரியங்கள் இத்யாதிகளை சதுர்வித லோகங்களையும்
சஹஸ்ர அண்டங்களையும் சதுர் முகங்களையும் சங்கல்பத்தால் ஸ்ருஷ்டித்தவன்

————-

437-ஸ்தவிஷ்ட-ஜ்யோதிர் மண்டலத்துக்கு ஆதாரம் திரு நாமம்
பெரும் தவத்தான் -ஸ்தூல ரூபி -செல்வர் பெரியர்
சிம்சுமார சக்ர ரூபமாய் பகவானே -இருப்பதாக ஸ்ரீ விஷ்ணு புராணம்

நஷத்ர மண்டலமாகிய சிம்சுமார சக்ர ரூபியாக மிக விரிவாக இருப்பார் -இனி துன்பமற்று இருப்பதற்கு உதாரணமாக
உத்தம அனுவாகமான ஸ்வாத் யாய ப்ராஹ்மண்யத்திலும் ஸ்ரீ விஷ்ணு புராணத்திலும் கூறப்பட்ட பிரசித்தமான
சிம்சுமார நஷத்ர மண்டல ரூபம் கூறப்படுகிறது –ஸ்ரீ பராசர பட்டர் –

தாராமயம் பகவத் சிம்சுமாரா க்ருதி ப்ரபோ –ஸ்ரீ விஷ்ணு புராணம் 2-9-1-பெரிய நக்ஷத்ரக் கூட்ட சிம்சுமாரம் போன்றவன்

விராட் ரூபியாக மிக விரிவாக இருப்பவர் –ஸ்ரீ சங்கரர் –

பருத்து இருப்பவர் –ஸ்ரீ சத்ய சந்தர் –

——————

82-ஸ்ரஷ்டா  :         -595/990-

595-ஸ்ரஷ்டா –தர்மம் படி பலன் அழிப்பவன் திரு நாமம்
990-ஸ்ரஷ்டா-ஜகத் வியாபாரம் திரு நாமம்

595-ஸ்ரஷ்டா –தர்மம் படி பலன் அழிப்பவன் திரு நாமம்
படைப்பவன் -கர்மங்களுக்கு சேர
துயரங்கள் செய்யும் கண்ணா சுடர் நீள் முடியாய் -7-8-7-
தோகை மா மயில் அன்னவர் இன்பம் துற்றிலாமையில் அத்த இங்கு ஒழிந்து போகம் நீ எய்தி
இன்னம் நம்மிடைக்கே போதுவாய் என்ற பொன்னருள் -பெரிய திரு மொழி -5-8-5-
மேலே தேவகி நந்தன ஸ்ரஷ்டா -989-990-வரும்

மோஷத்தில் ஆசை உள்ளவர்களை விடுவித்து உலக வாழ்க்கையில் ஆசை உள்ளவர்களை வெகு காலமாக
அவரவர் புண்ய பாபங்களுக்கு ஏற்பப் படைப்பவர் —ஸ்ரீ பராசர பட்டர் –

ஆதியில் எல்லாவற்றையும் படைத்தவர் –ஸ்ரீ சங்கரர் –

உலகைப் படைப்பவர் –ஸ்ரீ சத்ய சந்தர் –

—————-

990-ஸ்ரஷ்டா-ஜகத் வியாபாரம் திரு நாமம்
படைப்பவன் -பர வாசுதேவனும் கிருஷ்ணனே
கடல் ஞாலம் செய்வேனும் யானே -5-6-1-
அஹம் க்ருதஸ் நஸய ஜகத பிரபவ -ஸ்ரீ கீதை -7-6-
முந்நீர் ஞாலம் படைத்த எம் முகில் வண்ணன் -3-2-1-

ஸ்ரீ பர வாஸூதேவரும் தாமேயாக இருப்பவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

எல்லா உலகங்களையும் படைப்பவர் -ஸ்ரீ சங்கரர் –

படைப்பவர் -ஸ்ரீ சத்ய சந்தர் –

—————-

83-ஸதாம் கதி :        -186/451-

186 ஸதாங்கதி –குணங்களுக்கு ஏற்ற அவதார செயல்கள் திரு நாமம்
451- சதாம் கதி –நிவ்ருத்தி தர்ம ப்ரவர்தக திரு நாமம்

186 ஸதாங்கதி –குணங்களுக்கு ஏற்ற அவதார செயல்கள் திரு நாமம்
பக்தர்களுக்கு புகலாய் உள்ளவன் –
புகல் ஓன்று இல்லா அடியேன் உன்னடிக் கீழ் அமர்ந்து புகுந்தேனே -6-10-10-
மீண்டும் -451- பற்றிலார் பற்ற நின்றவன்

தமது விளையாட்டுச் செயல்களாலும் பக்தர்க்கு நன்மையே செய்பவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

வைதிகர்களான சாதுக்களுக்குப் புருஷார்த்த கிடைக்க சாதனம் ஆனவர் -ஸ்ரீ சங்கரர் –

ஆனந்தத்தோடு கூடிய முக்தர்களுக்கு புகலிடமாக இருப்பவர் –
துயரப்படுபவர்களும் ஞானிகளுக்கும் புகலிடம்-ஸ்ரீ சத்ய சந்த தீர்த்தர் –

————–

451- சதாம் கதி –நிவ்ருத்தி தர்ம ப்ரவர்தக திரு நாமம்
சத்துக்களுக்கு அவனே கதி
உன்னால் அல்லால் யாவராலும் ஒன்றும் குறை வேண்டேன் -5-8-3-
மேவு நான்மறை வாணர் ஐவகை கேள்வி ஆறு அங்கம் வல்லவர் தொழும் தேவ தேவ பிரான் -பெரிய திருமொழி -6-10-9-

இந்த்ரியங்களை வென்றவர்களான சாதுக்கள் சேருமிடமாக இருப்பவர் –
இதுவரை பிரவ்ருத்தி தர்ம நிஷ்டர்களுடைய நிலை கூறப்பட்டது -இனி சாதுக்கள் நிலை -ஸ்ரீ பராசர பட்டர் –

நிர் தூத தோஷ பங்கா நாம் யதீ நாம் சம்யதாத்மநாம் ஸ்தானம் தத் பரமம் விப்ர புண்ய பரிஷயே –ஸ்ரீ விஷ்ணு புராணம் 2-8-99-

மோஷம் விரும்புவகளுக்கு அடையும் இடமாக இருப்பவர் -ஸ்ரீ சங்கரர் –

நல்லோர்களால் அடையைப் பெறுபவர் -நஷத்ரங்களை நடத்துபவர் -ஸ்ரீ சத்ய சந்தர் –

———————–

84-ஸ்ம்வச்தர:         -92/423-

92-சம்வத்சர –பரத்வம்-உபாய ஸ்வரூபி -உபேய ஸூக ஸ்வரூபி திரு நாமம்
423-சம்வத்சர—-ஸ்ரீ கல்கி அவதார திரு நாமம்

92-சம்வத்சர –பரத்வம்-உபாய ஸ்வரூபி -உபேய ஸூக ஸ்வரூபி திரு நாமம்

92-சம்வத்சர –பரத்வம்-உபாய ஸ்வரூபி -உபேய ஸூக ஸ்வரூபி திரு நாமம்
சேதனர் இடம் நன்றாக வசிப்பவன்
என்னுடைச் சூழல் உளானே -1-9-1-ஆறுகள் இலானே -ஒழிவிலன் என்னுடன் உடனே -1-9-3
அல்லும் பகலும் இடைவீடு இன்றி மன்னி என்னை விடான் -நம்பி நம்பியே -1-10-8-
ததாமி புத்தி யோகம்
மீண்டும் 423-பொருந்தி வசிப்பவன்
கல்கியாக அவதரிக்கும் காலம் எதிர் நோக்கி திருவநந்த ஆழ்வான் மேலே கண் வளர்ந்து அருளி
அநந்த சயநாரூடம் -சாத்விஹ சம்ஹிதை
அரவணை மேல் பள்ளி கொண்ட முகில் வண்ணன்-

அப்படி எழுந்தவர்களின் அறிவில் சேர்ந்து வசிப்பவர் -ஸ்ரீ பராசர பட்டர் —

ததாமி புத்தி யோகம் தம் யேந மாம் உபயாந்தி தே –ஸ்ரீ கீதை -10-10-
தேஷாம் அஹம் சமுத்தர்த்தா –ஸ்ரீ கீதை –12-7-

கால ரூபியாய் இருத்தலால் வருடமாக இருப்பவர் -ஸ்ரீ சங்கரர் —

காலத்தை நியமிப்பவராக வருடத்தில் இருப்பவர் -ஸ்ரீ சத்ய சந்த தீர்த்தர்–

ஓம் சம்வத்சராய நம
அடியார்களை உஜ்ஜீவிப்பித்து அருளுபவர் –மீண்டும் -423-நாமாவளி வரும் -வருஷத்துக்கு இதே பெயர்

———-

423-சம்வத்சர—-ஸ்ரீ கல்கி அவதார திரு நாமம்
பொருந்தி வசிப்பவன் -காலத்தை நோக்கி திரு வநந்த ஆழ்வான் மேல் கண் வளர்ந்து இருப்பான் –
அரவணை மேல் பள்ளி கொண்ட முகில் வண்ணன்
முன்பே -92-பார்த்தோம்

சம்சாரத்துக்கு உரிய கருவிகளுடன் காலத்தை எதிர்பார்த்து பாதாள லோகத்தில் ஆதிசேஷன் மீது
சயனித்து இருப்பவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

அநந்த சயநா ரூடம்
சக்ராத்யாயுத வ்ருந்தேந மூர்த்தேந பரிவாரிதம் –திவ்யாயுதங்கள் அவனது ஆணைக்காகாவே உருவானவை என்று த்யானம்

எல்லாப் பொருள்களும் தம்மிடம் நன்கு வசிக்கும்படி இருப்பவர் –ஸ்ரீ சங்கரர் –

ஸ்ரீ கிருஷ்ணாவதாரத்தில் கன்றுக் குட்டிகளிடம் நன்கு விளையாடியவர் –
தம் குழந்தைகள் போன்ற பிரம்மா முதலியவர்களை மகிழ்விப்பவர் –
ஸ்வாமி புஷ்கரிணி -திருமலை -முதலிய இடங்களை யுடையவர் -வருடங்களை நடத்துபவர் –ஸ்ரீ சத்ய சந்தர் –

——————-

85-ஸ்ர்வத்ருக்          -201/577-

201- சர்வ த்ருக் –ஸ்ரீ நரசிம்ஹ அவதார திரு நாமம்
577-சர்வத்ருக்-ஸ்ரீ வேத வியாச பகவான் -திரு அவதார திரு நாமம்

201- சர்வ த்ருக் –ஸ்ரீ நரசிம்ஹ அவதார திரு நாமம்
யாவரையும் பார்ப்பவன் -நியமிப்பவன்
இவையா எரி வட்டக் கண்கள் -நான் முகன் -21
பார்த்தான் அறு சமயங்கள் பதைப்ப -பிரமாணங்கள் பார்த்து அருளிய நம் ராமானுசன்

நண்பர் பகைவர் நடுநிலையாளர் ஆகியோரை அவரவர்க்கு உரிய முறையில் நடத்துதல் பொருட்டு
உள்ளபடி பார்த்து அறிபவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

பிராணிகளின் புண்ய பாவங்கள் எல்லாவற்றையும் இயற்கையான அறிவினால் எப்போதும் பார்ப்பவர் -ஸ்ரீ சங்கரர் –

எல்லாவற்றையும் உள்ளபடி பார்ப்பவர் -ஸ்ரீ சத்ய சந்தர்-

———-

577-சர்வத்ருக்-ஸ்ரீ வேத வியாச பகவான் -திரு அவதார திரு நாமம்
எல்லாம் நேரில் கண்டவன் -விதுஷே
எங்கும் பரந்த தனி முதல் ஞானம் ஒன்றாம் அருவாகி நிற்கும் கிளர் ஒளி மாயன் கண்ணன் -3-10-10-

மற்றுமுள்ள மகிமைகள் அனைத்தையும் காண்பவர் —ஸ்ரீ பராசர பட்டர் –

எல்லாவற்றையும் அறிந்தவரும் -வேதங்கள் புராணங்கள் -முதலியவற்றை விஸ்தரித்தவருமான வியாசர் –
சர்வத்ருக் வியாச -என்று ஒரு திரு நாமம் -எல்லாமாகவும் கண்ணாகவும் எல்லா ஞானமாகவும் இருப்பவர் –
ருக்காதி வேதங்களை வகுத்தவர் -ருக்வேதம் -21 சாகைகள் -யஜூர் வேதம் -101 சாகைகள் –
சாம வேதம் -1000 சாகைகள் -அதர்வண வேதம் 9 சாகைகள் –
இப்படியே புராணங்கள் முதலியவற்றையும் பிரித்த ப்ரஹ்மாவாகவும் இருப்பவர் -ஸ்ரீ சங்கரர் –

அனைத்தையும் நேரடியாகக் காண்பவர் -எல்லோரைக் காட்டிலும் மேன்மை கொண்டவர் —
சர்வத்ருக் வியாச -என்று ஒரு திரு நாமம் –ஸ்ரீ சத்ய சந்தர் –

——————

86-ஸ்ர்வஜ்ஜ :         -454/821-

454-சர்வஞ்ஞ-நிவ்ருத்தி தர்ம ப்ரவர்தக திரு நாமம்
821- சர்வஜ்ஞ–தைவத் சம்பத் உள்ள சிஷ்ட பரிபாலனம் பரமான திரு நாமம்

454-சர்வஞ்ஞ-நிவ்ருத்தி தர்ம ப்ரவர்தக திரு நாமம்
எல்லாமாகத் தன்னை அறிந்தவன்
கலைப் பல் ஞானத்து என் கண்ணன் -2-2-10-
நிறைந்த ஞான மூர்த்தி
மீண்டும் 821 வரும்

தம்மை சர்வ அந்தர்யாமி என்று அறிந்து இருப்பவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

யுஞ்ஞானாம் ச ஸ்வமாத்மானம் பரஸ்மின் அவ்யயே பதே –

எல்லாமாகவும் ஞானமாகவும் இருப்பவர் –ஸ்ரீ சங்கரர் –

எல்லோரையும் அறிபவர் -எல்லாம் அறிந்த ஜீவர்களை யுண்டாக்கியவர்–ஸ்ரீ சத்ய சந்தர் –

———–

821- சர்வஜ்ஞ–தைவத் சம்பத் உள்ள சிஷ்ட பரிபாலனம் பரமான திரு நாமம்
முற்றும் உணர்ந்தவன் –
எந்த வழியாகிலும்-அதையே வ்யாஜ்யமாகக் கொண்டு எளிதில் அடையும் படி இருப்பவன்
யே நகேநாபிப் காரேண த்வயவக்தா த்வம் கேவலம் மதீயயை வதயயா -சரணா கதி கத்யம் -17-
த்வய அனுசந்தானமே ஹேதுவாக இரு கரையும் அழியப் பெருக்கின அவன் கிருபை ஒன்றாலே விநஷ்டமான
பாபங்களை உடையீராய் –
ஆழியான் அருள் தருவான் அமைகின்றான் -10-6-1-

பக்தர்களின் சக்தி அசக்தியையும் அவர்களால் சாதிக்கக் கூடியது கூடாததையும் முற்றும் உணர்ந்தவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

எல்லாம் அறிந்தவர்-ஸ்ரீ சங்கரர் –

எல்லாவற்றையும் அறிந்தவர் -ஸ்ரீ சத்ய சந்தர் –

————————-

87-  ஸ்வ :                 -732/733-

732–ஸ்ரீ கிருஷ்ணாவதார திரு நாமம்
733–ஸ்ரீ கிருஷ்ணாவதார திரு நாமம்

732-ஸவ–ஸ்ரீ கிருஷ்ணாவதார திரு நாமம்
அவன் -ஞானத்தை உண்டு பண்ணுமவன்-
அவனே யவனும் அவனும் அவனும் அவனே மற்று எல்லாமும் அறிந்தனமே -9-3-2-

ஸ்ரீ கிருஷ்ணாவதாரத்தில் சிறுவர் முதல் யாவருக்கும் தம்மைப் பற்றிய ஞானத்தை உண்டாக்குபவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

சோமயாக ரூபியாக இருப்பவர் -ஸவ-என்று ஒரே திரு நாமம் -ஸ்ரீ சங்கரர் –

தமக்காக எல்லாம் யுன்டாக்கப் பெற்றவர் -ஜ்ஞானம் யுடையவர் -ஸவ-என்று ஒரே திரு நாமம் -ஸ்ரீ சத்ய சந்தர் –

———–

733-ஸ்வ–ஸ்ரீ கிருஷ்ணாவதார திரு நாமம்
வசிப்பவன் -எங்கும் உளன் கண்ணன் -2-8-9-
ஒளி வரும் இயல்வினன் -1-3-2-
கரந்த சில் இடம் தொறும் இடம் திகழ் பொருள் தொறும் கரந்து எங்கும் பரந்து உளன் -1-1-10-

எல்லாம் தம்மிடம் வசிக்கும்படி இருப்பவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

வசந்தி தத்ர ச ச பூதேஷ் வஸேஷேஷு வகாரார்த்தஸ்ததோ முநே –ஸ்ரீ விஷ்ணு புராணம் -6-5-6-

——————————

88-ஸவிதா              -887/969-

887-சவிதா-மோஷ ப்ரதத்வம் திரு நாமம்
969-சவிதா –ஜகத் வியாபாரம் திரு நாமம்

887-சவிதா-மோஷ ப்ரதத்வம் திரு நாமம்
உண்டாக்குபவன் -மழை பொழிவித்து பயிர் பச்சைகள் உண்டாக்கி வளரச் செய்கிறான் -ஏழாம் படி
மீண்டும் 969-வரும்

ஏழாம் படியான சூரியனால் மழை பயிர் முதலியவற்றை உண்டாக்குபவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

சம்வத்சராத் ஆதித்யம் –சாந்தோக்யம் 5-10-2-
வாயுமப்தாத் அவிசேஷ விசேஷாப்யாம் –ஸ்ரீ ப்ரஹ்ம ஸூத்ரம் 4-3-2-

உலகங்கள் அனைத்தையும் உண்டாக்குபவர் -ஸ்ரீ சங்கரர் –

படைப்பவர் -ஸ்ரீ சத்ய சந்தர் –

—————

969-சவிதா –ஜகத் வியாபாரம் திரு நாமம்
உண்டாக்குமவன் -சாஷாத் ஜனிதா சவிதா-
சவிதா என்று சூரியனையும் சொல்லும்
முன்பே 887 பார்த்தோம்
வள வேழு உலகின் முதலாய வானோர் இறை -1-5-1-

எல்லாவற்றையும் தாமே உண்டாக்குபவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

எல்லாவற்றையும் உண்டாக்குபவர் -ஸ்ரீ சங்கரர் –

படைப்பவர் -ஸ்ரீ சத்ய சந்தர்

——————

89-ஸ்ஹிஷ்ணு  :   -146/570-

146- ஸஹிஷ்ணு –வ்யூஹ நிலை திரு நாமம்
570-ஸ ஹிஷ்ணு –ஸ்ரீ நாராயண அவதார விஷய திரு நாமம்

146- ஸஹிஷ்ணு –வ்யூஹ நிலை திரு நாமம்
ஷமிப்பவன் -சர்வான் அசேஷத ஷமஸ்வ
தன் அடியார் திறத்தகத்துத் தாமரையாள் ஆகிலும் -சிதகுரைக்கு மேல் என் அடியார் அது செய்யார்
செய்தாரேல் நன்று செய்தார் என்பர் போலும் -பெரியாழ்வார் -4-9-2-

தம்மிடத்திலும் தம் அடியார்கள் இடத்திலும் செய்யும் அபராதங்கள் அனைத்தையும் பொறுத்துக் கொள்பவர் –
போய பிழைகளையும் புகுதருவான் நின்றனவும் க்ருத அக்ருதங்களையும் அக்ருத க்ருதங்களையும்
அவமானங்கள் நிந்தனைகளையும் பகவத் அபசார பாகவத அபசார அசஹ்யாபசார -எண்ணற்ற
அபராதங்களையும் பொறுப்பவர் —-ஸ்ரீ பராசர பட்டர்-

ஹிரண்யாஷன் முதலிய விரோதிகளை அழிப்பவர்–ஸ்ரீ சங்கரர் —

அடியவர்களின் குற்றங்களைப் பொறுப்பவர் -ஸ்ரீ சத்ய சந்தர்-

ஓம் ச ஹிஷ்ணுவே நம

———–

570-ஸ ஹிஷ்ணு –ஸ்ரீ நாராயண அவதார விஷய திரு நாமம்
பொறுமை உள்ளவன்-அபராத சஹன் -பாணாசுரன் -இந்த்ரன் சிசுபாலன் பிழை பொறுத்து அருளி
கேட்பார் செவி சுடு கீழ்மை வசவுகளையே வையும்
சேட்பால் பழம் பகைவன் சிசுபாலன் தாட்பால் அடைந்த தன்மையன் -7-5-3-
பல பல நாழங்கள் சொல்லிப் பழித்த சிசுபாலன் தன்னை அலவலைமை தவிர்த்த அழகன் -பெரியாழ்வார் -4-3-5-
முன்பே 146-பார்த்தோம்

அபராதத்தைப் பொறுத்துக் கொள்பவர் –ஸ்ரீ பராசர பட்டர் –

பிரசாத யாமாச பவோ தேவம் நாராயணன் பிரபும் சரணம் ஜெகதாமாத்யம் வரேண்யம் வரதம் ஹரீம் ததைவ வரதோ தேவோ
ஜிதக்ரோதோ ஜிதேந்த்ரிய ப்ரீதிமாந பவத் தத்ர ருத்ரேண ஸஹ சங்கத–ருத்ரன் ஸ்ரீ மந் நாராயணனை வேண்டி நின்றான்

குளிர்ச்சி வெப்பம் முதலிய இரட்டைகளைச் சகித்துக் கொள்பவர் –ஸ்ரீ சங்கரர் –

அடியவர்கள் செய்யும் பிழைகளைப் பொறுப்பவர் –ஸ்ரீ சத்ய சந்தர் –

————————-

90-ஸாஷி :                 -15/517-

15-சாஷீ–பரத்வம் முக்தர்களுக்கு மேலான கதியாய் உள்ளவன் திரு நாமம்
517-சாஷி–பாகவத ரஷகன் திரு நாமம்

15-சாஷீ–பரத்வம் முக்தர்களுக்கு மேலான கதியாய் உள்ளவன் திரு நாமம்
பார்த்து இருப்பவன் –தனை அனுபவிப்பித்து மகிழும் முக்தர்களை பார்த்து மகிழுமவன்-
சர்வஞ்ஞன் –
அளிக்கின்ற மாயப் பிரான் அடியார் குழாங்களையே -2-3-10-

முக்தர்களை மகிழ்வித்து தாமும் மகிழ்ந்து பார்த்து இருப்பவர் -ஸ்ரீ பராசர பட்டர் —
ஏவம் தாநு ஆனந்தாயன்னு ஸ்வயம் அபி த்ருப்தாயன்னு சாஷாத் கரோதி –

முக்தர்கள் தன்னால் அளிக்கப்பட ஆனந்தத்தை அனுபவிப்பதை நேரடியாக காண்கிறான்
ப்ரஹ்மணா விபச்சிதா –ஆனந்த வல்லி –அனைத்தையும் ஒரே நேரத்தில் காண்கிறான்

சஹகாரி இல்லாமல் எல்லாவற்றையும் நேரில் பார்ப்பவர் -ஸ்ரீ சங்கரர்—

நேரில் பார்ப்பவர்-ஸ்ரீ சத்ய சந்த தீர்த்தர்–

ஓம் சாக்ஷி நம
சர்வஞ்ஞன்–முக்காலத்தில் நடப்பதை யுகபத் நேராக காண்பவன் அன்றோ -சர்வவித்
சூர்யன் தேஜஸ்ஸால் அனைத்தையும் காட்டி -எதனாலும் தான் பாதிக்காமல் இருப்பானே –
முக்தர் நித்யர் சதா பஸ்யந்தி காண்பதை காண்பவன்

—————

517-சாஷி–பாகவத ரஷகன் திரு நாமம்
பார்ப்பவன்
உள்ளுவார் உள்ளிற்று எல்லாம் உடன் இருந்து அறிதி -திருமாலை -34-

அதற்காக அவர்களுடைய ஒழுக்கங்களைப் பிரத்யஷமாகப் பார்ப்பவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

————————-

91-ஸித்த :              -98/825-

98-சித்த –பரத்வம் உபாய ஸ்வரூபி -உபேய ஸூக ஸ்வரூபி திரு நாமம்
825-சித்த –தைவத் சம்பத் உள்ள சிஷ்ட பரிபாலனம் பரமான திரு நாமம்

98-சித்த –பரத்வம் உபாய ஸ்வரூபி -உபேய ஸூக ஸ்வரூபி திரு நாமம்
சித்த தர்மம் -எப்போதும் உள்ளவன் –
புதையல் போலே எப்போதும் இருப்பவன்
ஆழியான் அருள் தருவான் அமைகின்றான் -10-6-1-

உபாயாந்தரங்களால் அன்றி தாமே சித்த உபாயமாய் இருப்பவர் -ஸ்ரீ பராசர பட்டர் –
ந்யாஸ இத்யாஹூ மநீஷினோ ப்ராஹ்மணம் –தைத்ர்யம் -புதையல் போன்று ப்ரஹ்மம்
உள்ளேயே இருப்பதாக ஞானிகள் கூறுகின்றனர்

என்றைக்கும் உள்ள தன்மையை யுடைய நித்யர் -ஸ்ரீ சங்கரர் —

அடையப் பெறுபவர் -எப்போதும் ஞான வடிவினர் -அடியவர்களில் காக்க சித்தமாக உள்ளவர் -ஸ்ரீ சத்ய சந்த தீர்த்தர்-

ஓம் சித்தாயா நம
அடியார்களுக்கு கை வசப்பட்டு இருப்பவன்

————–

825-சித்த –தைவத் சம்பத் உள்ள சிஷ்ட பரிபாலனம் பரமான திரு நாமம்
சித்த தர்மமாய் உள்ளவன் -அவனே உபாயம் உபேயம்
ஆறு எனக்கு நின் பாதமே சரணாகத் தந்து ஒலிந்தாய்-5-8-10-
இன்று தானே தடுமாற்ற வினைகள் தவிர்த்தான்
விண்ணுலகம் தருவானாய் விரைகின்றான்-

தமது உண்மைத் தன்மையை அறிந்தவர்க்கு முயற்சி இல்லாமல் கிடைப்பவர் –
ஸ்வா பாவிக சர்வ ரஷகர் அன்றோ இவன் – ஸ்ரீ பராசர பட்டர் –

தமக்குக் காரணம் ஏதுமின்றி சித்தமாகவே இருப்பவர் -ஸ்ரீ சங்கரர் –

மங்களத்தை அல்லது சாஸ்த்ரத்தைத் தருபவர் -ஸ்ரீ சத்ய சந்தர் –

————————

92-ஸிம்ம :             -202/489-

202- சிம்ஹ–நரசிம்ஹ அவதார திரு நாமம்
489-சிம்ஹ-தர்ம ஸ்வரூபி திரு நாமம்

202- சிம்ஹ–நரசிம்ஹ அவதார திரு நாமம்
சிங்கப் பிரான்
இமையோர் பெருமான் அரி பொங்கக் காட்டும் அழகன் -நான் முகன் -21
அழகியான் தானே அரி யுருவன் தானே -நான் முகன் திரு -22
அசோதை இளம் சிங்கம்
மீண்டும் வரும் -489-தண்டிப்பவன்

மஹா நரசிம்ஹ ஸ்வரூபி -ஸ்ரீ பராசர பட்டர் –

நினைத்த மாத்திரத்தில் பாவங்களைப் போக்குபவர் -ஸ்ரீ சங்கரர் –

அருளைப் பொழிபவர் -சம்ஹரிப்பவர் -ஸ்ரீ சத்ய சந்தர்

—————

489-சிம்ஹ-தர்ம ஸ்வரூபி திரு நாமம்
ஹிம்சிப்பவன் -ஆஸ்ரித விரோதிகளை
அவர் படக்கனன்று முன் நின்ற காய்சின வேந்தன் -9-2-6

பகவத் பக்தர்களையும் பிறரைப் போலே யமன் முதலியோர் துன்புறுத்துவராயின்
அவர்களை ஹிம்சிப்பவர் -ஸ்ரீ பராசர பட்டர்

பிரபவதி சம்ய மநே மமாபி விஷ்ணு –என்னை நியமிக்கிறார் ஸ்ரீ விஷ்ணு -யமன்
வாஸூ தேவ பரம் த்ருஷ்ட்வா வைஷ்ணவம் தக்த கில்பிஷம் தேவா விபீதா ஸம் யாந்தி பிரணிபத்ய யதாகதம் த்ருஷ்ட்வா யமம்
அபி வை பக்தம் வைஷ்ணவம் தக்த கில்பிஷம் உத்தாய ப்ராஞ்ஜலிர் பூத்வா நநாம ரவி நந்தன தஸ்மாத் ச பூஜயேத்
பக்த்யா வைஷ்ணவான் விஷ்ணுவத் நர ச யாதி விஷ்ணு சாயுஜ்யம் நாத்ர கார்யா விசாரணா–லிங்க புராணம்
கௌசிகாதீஸ் ததா த்ருஷ்ட்வா ப்ரஹ்மா லோக பிதாமகர் பிரத்யுதிகம்ய யதா நியாயம் ஸ்வாகதே நாப்ய பூஜயத் –லிங்க புராணம்
ஹரிபாத ப்ரபன்னானாம் தூரிபூத ஸ்வபாவத தேஷாம் து சர்வ பூதா நாம் ஹரிரேவ பதிர்யத வைஷ்ணவேப்ய
அபி பிப்யந்தி தேவா நரக ரஷா அவமான க்ரியா தேஷாம் ஸம்ஹரத் யகிலம் ஜகத் காலேந ஏதாவதா தேஷு நரகேஷு
ஹி கஞ்சன ந த்ருச்யதே மஹா வீர்ய பிரபாவாத் பரமேஷ்டிந –ஸ்ரீ விஷ்ணு தத்வம்
நரகே பஸ்யாமா நஸ்து யமேந பரிபாஷித கிம் த்வயா ந அர்சிதோ தேவ கேசவ கிலேச நாசன -ஸ்ரீ விஷ்ணு தர்மம்

பராக்ரமத்தில் சிம்மம் போன்றவர் -ஸ்ரீ நரசிம்ஹ திருவவதாரம் செய்தவர் -ஸ்ரீ சங்கரர்

உயர்ந்தவர் -ஸ்ரீ சத்ய சந்தர்

—————-

93-ஸு கத :             -460/890-

460-ஸூகத-அலை கடல் கடைந்து அமுதம் கொண்டவன் திரு நாமம்
890-ஸூகத-அர்ச்சிராதி மார்க்கம் மூலம் முக்தனை வழி நடத்தும் பரமன் பரமான திரு நாமம்

460-ஸூகத-அலை கடல் கடைந்து அமுதம் கொண்டவன் திரு நாமம்
மேலான இன்ப பயன் அளிப்பவன் -அம்ர்தம் தேவர்களுக்கு தந்து பெண் அமுதம் கொண்ட பிரான்
இன்பம் பயக்க இனிதுடன் வீற்று இருந்து இவ் ஏழ் உலகை ஆள்கின்ற எங்கள் பிரான் -7-10-1-

சதாசாரங்களையும் தானங்களையும் அனுஷ்டிப்பவர்களுக்கு பரம சுகமாகிய பலம் தருபவர் –
தேவர்களுக்கு அமுதம் அளித்து சுகத்தைக் கொடுப்பவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

நல்லோர்களுக்கு சுகத்தைக் கொடுப்பவர் -அல்லது தீயவர்களுக்கு சுகத்தைக் கெடுப்பவர்–ஸ்ரீ சங்கரர் –

முக்தி சுகத்தை அளிப்பவர் -அல்லது -அயோக்யரின் சுகத்தை அழிப்பவர்-ஸ்ரீ சத்ய சந்தர் –

—————

890-ஸூகத-அர்ச்சிராதி மார்க்கம் மூலம் முக்தனை வழி நடத்தும் பரமன் பரமான திரு நாமம்

890-ஸூகத-அர்ச்சிராதி மார்க்கம் மூலம் முக்தனை வழி நடத்தும் பரமன் பரமான திரு நாமம்
ஸூகம் அளிப்பவன்
அமானவன் திவ்ய புருஷன் கை கொடுத்து
பொன்னடியாம் செங்கமலப் போதுகளை உன்னிச் சிரத்தாலே தீண்டின்
அமானவனும் நம்மைக் கரத்தால் தீண்டல் கடன் -உபதேச ரத்னமாலை –
முன்பே 461 பார்த்தோம்-

பதிமூன்றாம் படியான அமானவ திவ்ய புருஷனாக ஸ்பர்சித்து சம்சார வாசனைகளை ஒழித்துத் தம்மை
அடைவதாகிய சுகத்தைத் தருபவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

தத் புருஷ மாணவ ச யேநாந் ப்ரஹ்ம கமயதி–சாந்தோக்யம் -5-10-3-

ஸூ கத -பக்தர்களுக்கு மோஷ ஸூ கத்தைக் கொடுப்பவர் -அல்லது -அஸூ கத -துக்கங்களைப் போக்குபவர் -ஸ்ரீ சங்கரர் –

சுகத்தைத் தருபவர் -மங்களகரமான இந்த்ரியங்களைத் தருபவர் -ஸ்ரீ சத்ய சந்தர் –

——————–

94-ஸுபர்ண :         -194/859-

194- ஸூபர்ண-ஹம்ஸாவதாரம்-திரு நாமம்
859-ஸூ பர்ண-யோகத்தில் இருந்து நழுவியவரை உத்தரிப்பவன் திரு நாமம்

194- ஸூபர்ண-ஹம்ஸாவதாரம்-திரு நாமம்
அழகிய சிறகுகளை யுடையவன்
ஸூபர்ணோ ஹி கருத்மான்
சம்சார கடலை கடக்க
தவா ஸூபர்ணா-இரண்டு பறவைகள் மரத்தில் ஸ்ருதி
வினதை சிறுவன் சிறகு என்னும் மேலாப்பின் கீழே வருவான் -நாச் -14-3
மீண்டும் -859-தாண்ட உதவுமவன் -தெய்வப் புள்ளேறி வருவான் -பெரிய திருமொழி -3-3-6
புள்ளைக் கடாகின்ற தாமரைக் கண்ணன் -7-3-1-

ஹம்சாவதாரத்தில் அழகிய சிறகுகளை உடையவர் -சம்சாரக் கடலினின்றும் கரை சேர்ப்பவர் -ஸ்ரீ பராசர பட்டர் –
-859-மீண்டும் வரும்

அழகிய சிறகுகளை உடையவர் –ஸ்ரீ சங்கரர் –

உயர்ந்த ஆனந்தத்தை ஸ்வரூபமாக உடையவர் –ஸ்ரீ சத்ய சந்த தீர்த்தர் –

————–

859-ஸூ பர்ண-யோகத்தில் இருந்து நழுவியவரை உத்தரிப்பவன் திரு நாமம்
தாண்ட உதவுமவன் -ஸூ பர்ண -கருடன் -அழகிய சிறகுகளை உடையவன் -சம்சாரம் கரை தாண்ட
தெய்வப் புள்ளேறி வருவான் -பெரிய திருமொழி -3-3-6-
புள்ளைக் கடாகின்ற தாமரைக் கண்ணன் -7-3-1-

சமாதியை அனுஷ்டிப்பவர்களை சம்சாரக் கடலின் கரை சேர்ப்பவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

ஸ்வ பாரம் பகவான் நயதி
அநேக ஜென்ம சம்சித்த ததோ யாதி பராம் கதிம் –ஸ்ரீ கீதை -6-45-

சம்சார -மாற ரூபமான தாம் வேதங்களாகிய அழகிய இலைகளை உடையவர் -ஸ்ரீ சங்கரர் –

அழகிய ஆலிலையைப் படுக்கையாக உடையவர் -பறவை உருவத்தில் இருப்பவர் -ஸ்ரீ சத்ய சந்தர் –

———————–

95-ஸுவர்த :         -456/824-

456-ஸூ வ்ரத-நிவ்ருத்தி தர்ம ப்ரவர்தக திரு நாமம்
824-ஸூ வ்ரத-தைவத் சம்பத் உள்ள சிஷ்ட பரிபாலனம் பரமான திரு நாமம்

456-ஸூ வ்ரத-நிவ்ருத்தி தர்ம ப்ரவர்தக திரு நாமம்
தர்மத்தை விடாமல் அனுஷ்டிப்பவன்
பூரணன் என்றாலும் அவதாரங்களில் தர்மம் விடாமல் –
மேலும் -824 வரும் -ரஷணத்தில் ஊற்றம்

தம்மைப் பார்த்து மற்றவர்கள் பயன் பெறுவதற்காகவே தாம் தர்மங்களை விடாமல் பற்றுபவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

ந மே பார்த்த அஸ்த கர்த்தவ்யம் –ஸ்ரீ கீதை -3-22-தனக்கு கர்மம் இல்லை என்றாலும்
மற்றவர்களுக்காக கர்மம் செய்ய விரதம் பூண்டுள்ளான்
ஏக பாதேந திஷ்டந்தம் ஆஹரந்தம் ச மாருதம் பக்ஷ மாச உபவாசம்ஸ் ச திசாந்தம் அநு சிந்தயேத் —
அவன் இவ்வாறு கர்மம் செய்வதாக த்யானம்

அடியவர்களைக் காக்கும் சிறந்த விரதம் யுடையவர் –ஸ்ரீ சங்கரர் –

உலகைக் காத்தல் முதலிய மங்களமான விரதத்தை யுடையவர் –
தம்மைக் குறித்த மங்களகரமான வ்ரதமுடையவர்-ஸ்ரீ சத்ய சந்தர் –

————–

824-ஸூ வ்ரத-தைவத் சம்பத் உள்ள சிஷ்ட பரிபாலனம் பரமான திரு நாமம்
சோபனமான விரதம் உடையவன் -சங்கல்பம் -அபயம் சர்வ பூதேப்யோ ததாம் ஏதத் வ்ரதம் மம -பெருமாள்
ஓன்று பத்தாக நடத்திக் கொண்டு போகும் -ஸ்ரீ வசன பூஷணம் -81-
சரணமாகும் தான தாள் அடைந்தார்க்கு எல்லாம் -9-10-5-
இன்று வந்து இருப்பேன் என்று என் நெஞ்சு நிறையப் புகுந்தான் -10-8-6-

தம்மை அடைந்தவர்களை எவ்வகையாலும் காப்பாற்றும் உறுதியான வ்ரதமுடையவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

ஸக்ருத் ஏவ ப்ரபந்நாய-

சிறந்த போஜனம் உள்ளவர் -போஜனத்தில் இருந்து நிவர்த்திப்பவர் -ஸ்ரீ சங்கரர் –

தம்மை அடைவதற்கு மங்களமான விரதங்கள் உள்ளவர் -ஸ்ரீ சத்ய சந்தர் –

———————-

96-ஹரி :                 -360/656-

360-ஹவிர்ஹரி –ஐஸ்வர்ய வாசக திரு நாமம்
656-ஹரி –அர்ச்சாவதாரம் பரமான திரு நாமம்

360-ஹவிர்ஹரி –ஐஸ்வர்ய வாசக திரு நாமம்
ஹவிஸ் ஹரிப்பவன்
அடியார்களை தான் அனுபவிக்கிறான் -தன்னை அடியார்கள் அனுபவிக்கும் படி கொடுக்கிறான்
மரணமானால் வைகுந்தம் தரும் பிரான் -9-10-5
கொடிய வினை தீர்ப்பேனும் நானே என்னும் -5-6-9-

பக்தர்களுக்குத் தம்மைக் கொடுப்பவர் -அதற்குள்ள தடைகளைப் போக்குபவர் –ஸ்ரீ பராசர பட்டர் –

தஸ்ய தாவத் ஏவ சிரம் யாவந்ந விமோஷ்யே அத சம்பத்ஸ்யே –சாந்தோக்யம் -6-14-2-
ஹரி-பாபங்களை அகற்றி அருளுபவர்
ஹரீர் ஹரதி பாபாநி த்ருஷ்ட சித்ரைபி ஸ்ம்ருதா அனிச்சயா அபி ஸம்ஸபிருஷ்டோ தஹத்யேவ ஹி பாவக
இட அப ஹுதம் கேஹேஷு ஹரே பாகம் க்ரதுஷு அஹம் வர்ணச்ச மே ஹரி ஸ்ரஷ்ட தஸ்மாத் ஹரி அஹம் ஸ்ம்ருத –சாந்தி பர்வம் –
இட மந்த்ரத்தை உச்சரித்து ஹோமம் -ஹவிர்பாகம் தனக்கு அளிக்கப் பட்டதாகவே ஹரி கொள்கிறான் –
ஹரி -அக்ஷரங்கள் எனக்கு பிரியமானவை

யஜ்ஞத்தில் ஹவிர் பாகத்தைப் பெறுபவர் -ஹவிஸினால் ஹோமம் செய்யப் படுபவர் -தம்மை நினைத்த மாத்ரத்தில் அனைவருடைய
பாவங்கள் அவித்யை அதன் கார்யமான சம்சாரம் ஆகியவற்றைப் போக்குபவர் -மஞ்சள் நிறம் உள்ளவர் – -ஸ்ரீ சங்கரர் –

யஜ்ஞத்தில் வழங்கப்படும் ஹவிஸ்சைப் பெறுபவர் –ஸ்ரீ சத்ய சந்தர் –

——–

656-ஹரி –அர்ச்சாவதாரம் பரமான திரு நாமம்
பச்சை வண்ணன் –
பச்சை மா மலை போல் மேனி பவள வாய் கமலச் செங்கண் அச்சுதன் -திருமாலை -2-
ஹரி-பச்சை நிறம் -பாபங்களை போக்குபவன் யாகங்களில் ஹவிர் பாகம் பெற்று கொள்பவன்
கோவர்த்தன மலை மேல் ஹரி திரு நாமம் உடன் சேவை

கோவர்த்தன மலையில் ஹரி என்னும் திரு நாமத்துடன் எழுந்து அருளி இருப்பவர் -வீடுகளில் யாகம் செய்து கொடுக்கப்படும்
ஹவிர்பாகத்தை நான் ஏற்றுக் கொள்கிறேன் -என் நிறமும் உயர்ந்த பச்சை நிறம் –
ஆகையால் நான் ஹரி என்று சொல்லப் படுகிறேன் -மஹா பாரதம் -ஸ்ரீ பராசர பட்டர் –

கிரோ கோவர்த்தநாக்யே து தேவ சர்வேஸ்வரோ ஹரி ஸம்ஸ்தித பூஜித ஸ்தானே
இடோ பஹுதம் கேஹேஷு ஹரே பாகம் ருதுஷ் வஹம் வர்ணச்ச மே ஹரி ஸ்ரேஷ்ட தஸ்மாத் ஹரி இதி ஸ்ம்ருத–சாந்தி பர்வம் -343-39-

சம்சாரத்தை அதன் காரணத்தோடு போக்குபவர் –ஸ்ரீ சங்கரர் –

பாவங்களைப் போக்குபவர் – -ஸ்ரீ சத்ய சந்தர் –

————————

97-ஹவி :               -360/703-

360-ஹவிர்ஹரி –ஐஸ்வர்ய வாசக திரு நாமம்
703-ஹவி –ஸ்ரீ கிருஷ்ணாவதார திரு நாமம்

360-ஹவிர்ஹரி –ஐஸ்வர்ய வாசக திரு நாமம்
ஹவிஸ் ஹரிப்பவன்
அடியார்களை தான் அனுபவிக்கிறான் -தன்னை அடியார்கள் அனுபவிக்கும் படி கொடுக்கிறான்
மரணமானால் வைகுந்தம் தரும் பிரான் -9-10-5
கொடிய வினை தீர்ப்பேனும் நானே என்னும் -5-6-9-

பக்தர்களுக்குத் தம்மைக் கொடுப்பவர் -அதற்குள்ள தடைகளைப் போக்குபவர் –ஸ்ரீ பராசர பட்டர் –

தஸ்ய தாவத் ஏவ சிரம் யாவந்ந விமோஷ்யே அத சம்பத்ஸ்யே –சாந்தோக்யம் -6-14-2-
ஹரி-பாபங்களை அகற்றி அருளுபவர்
ஹரீர் ஹரதி பாபாநி த்ருஷ்ட சித்ரைபி ஸ்ம்ருதா அனிச்சயா அபி ஸம்ஸபிருஷ்டோ தஹத்யேவ ஹி பாவக
இட அப ஹுதம் கேஹேஷு ஹரே பாகம் க்ரதுஷு அஹம் வர்ணச்ச மே ஹரி ஸ்ரஷ்ட தஸ்மாத் ஹரி அஹம் ஸ்ம்ருத –சாந்தி பர்வம் –
இட மந்த்ரத்தை உச்சரித்து ஹோமம் -ஹவிர்பாகம் தனக்கு அளிக்கப் பட்டதாகவே ஹரி கொள்கிறான் –
ஹரி -அக்ஷரங்கள் எனக்கு பிரியமானவை

யஜ்ஞத்தில் ஹவிர் பாகத்தைப் பெறுபவர் -ஹவிஸினால் ஹோமம் செய்யப் படுபவர் -தம்மை நினைத்த மாத்ரத்தில் அனைவருடைய
பாவங்கள் அவித்யை அதன் கார்யமான சம்சாரம் ஆகியவற்றைப் போக்குபவர் -மஞ்சள் நிறம் உள்ளவர் – -ஸ்ரீ சங்கரர் –

யஜ்ஞத்தில் வழங்கப்படும் ஹவிஸ்சைப் பெறுபவர் –ஸ்ரீ சத்ய சந்தர் –

————

703-ஹவி –ஸ்ரீ கிருஷ்ணாவதார திரு நாமம்
கொடுக்கப் பட்டவன் -விருந்து -நந்த கோபர் இடம் –
வேண்டித் தேவர் இரக்க வந்து பிறந்து –அன்று அன்னை புலம்பப் போய் அங்கு ஓர் ஆய்க்குலம் புக்கான் -6-4-5
மகா ஹவி -683 பார்த்தோம்-

தேவகி வஸூதேவர்களிடம் வசிக்க விருப்பம் உள்ளவரானபோதும் -அவர்கள் கம்சனால் தீங்கு வரும் என்று அஞ்சியதால்
நந்த கோப யசோ தைகள் இடம் வளர்ப்பதற்குக் கொடுக்கப்பட்டவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

ப்ரஹ்மமே ஹவிஸ் -என்று ஸ்ரீ கீதை-4-24–சொல்லியபடி ஹவிஸ்ஸாக இருப்பவர் -ஸ்ரீ சங்கரர் –

ஹோமம் செய்யப்படுபவர் -ஸ்ரீ சத்ய சந்தர் –

——————

98-ஹிரண்ய கர்ப்ப :  -71/412-

71-ஹிரண்ய கர்ப்ப —பரத்வம் த்ரிவித சேதன வ்யதிரிக்த -நியாமகன்-திரு நாமம்
412-ஹிரண்ய கர்ப்ப –ஸ்ரீ ராம அவதார திரு நாமம்

71-ஹிரண்ய கர்ப்ப —பரத்வம் த்ரிவித சேதன வ்யதிரிக்த -நியாமகன்-திரு நாமம்
மிகவும் விரும்பத் தக்க -பரிசுத்தமான -பரம பதத்தில் இருப்பவன்
தொண்டர் ஆள்வது சூழ் பொன் விசும்பே பொன்னுலகு -10-8-1-
பொன்னுலகு ஆளீரோ புவனி முழுதாளீரோ -9-8-1-

இதமாகவும் மகிழ்ச்சியைத் தருவதாகவும் உள்ளதனால் ஹிரண்யம் எனப்படும் பரம பதத்தில் நித்யமாக வசிப்பவர் –
இப்படி அனுபவிக்கும் தேச விசேஷம் கூறப்படுகிறது –
தோஷம் அற்றதாய் -நித்யமாய் -பரம சத்வ மயமாகத் தங்கம் போலே இருப்பதால் -ஸ்ரீ பராசர பட்டர் —

சுத்த சத்வமயம் -தோஷங்கள் அற்ற -நித்தியமான -தங்கம் போன்ற மேம்பட்டது -ஹிரண்யம் ஹிதம் ரமணீயம் –
அவனை கர்ப்பத்தில் கொண்டுள்ளதால் ஹிரண்ய கர்ப்பம் பரமபதம் ஆகும்
ஹிரண்மயே பரே லோகே விரஜம் ப்ரஹ்ம நிஷ்கலம் தத் சுப்ரம் ஜ்யோதிஷம் ஜ்யோதி தத்யத் ஆத்மவிதோ விது
ந தத்ர ஸூர்யோ பாதி -முண்டக –2-2-10-அவன் முன்னே சூர்யன் போன்றவை பிரகாசிப்பது இல்லையே
தேவாநாம் பூ அயோத்யா தஸ்யாம் ஹிரண்மய கோசபுரம் ஹிரண்மயீம் ப்ரஹ்ம விவேச அபராதிஜா –யஜுர் ஆரண்யகம்

பொன் மயமான அண்டத்தில் உள்ள பிரமனுக்கு ஆத்மாவானவர் –ஸ்ரீ சங்கரர் —

பொன்னிறம் கொண்ட பிரம்மாண்டத்தை கர்ப்பத்தில் உடையவர் -ஸ்ரீ சத்ய சந்த தீர்த்தர்-

ஓம் ஹிரண்ய கர்ப்பாய
பரமபதத்தில் இருப்பவன்

———

412-ஹிரண்ய கர்ப்ப –ஸ்ரீ ராம அவதார திரு நாமம்

பொன் புதையல் போன்றவன்
தானே விஷயம்– கற்பார் ராம பிரானை அல்லால் மற்றும் கற்பரோ
சிந்தனைக்கு இனியாய் திருவே என்னார் உயிரே -பெரிய திருமொழி -3-5-1-

தமக்கு ஹிதமாகவும் -இனிமையாகவும் உள்ள தியானிப்பவர் மனங்களினால் அமுதம் போலே அனுபவிக்கப் பெறுபவர் –
பொற் புதையல் போல் போன்றவர் -அவதார காலத்திற்குப் பிறபட்டவர்களுக்கும் அவர்கள் செய்யும் தியானம் முதலியவற்றால்
உபகாரம் செய்வது கூறப்படுகிறது –ஸ்ரீ பராசர பட்டர் –

த்யேய ச விச்வாத்ம -அவனே அனைத்து ஆத்மா -த்யானிக்கத் தக்கவன்

பிரம்மாவின் உற்பத்திக்குக் காரணமான பொன் அண்டத்தைத் தம்முள் வைத்து இருப்பவர் —ஸ்ரீ சங்கரர் –

பொன் மயமான பிரம்மாண்டத்தைத் தன் வயிற்றிலே தரித்தவர் –ஸ்ரீ சத்ய சந்தர் –

————————

99-ஹுதபுக் :             -883/889-

883-அநந்த ஹூத புக் போக்தா –அர்ச்சிராதி மார்க்கம் மூலம் முக்தனை வழி நடத்தும் பரமன் பரமான திரு நாமம்
889-அநந்த ஹூத புக் போக்தா –அர்ச்சிராதி மார்க்கம் மூலம் முக்தனை வழி நடத்தும் பரமன் பரமான திரு நாமம்

883-ஹூத புக் விபு –-அர்ச்சிராதி மார்க்கம் மூலம் முக்தனை வழி நடத்தும் பரமன் பரமான திரு நாமம்

சுக்ல பஷமாய் இருப்பவன் -ஹூத புக் அக்னியில் அவியாக சேர்க்கப் பட்டதை உண்பவன் சந்தரன்
அது இவனிடம் அமிர்தமயமாகி இவனை வளரச் செய்கிறது
அஹ்ன ஆபூர்யமாண பஷம் -சாந்தோக்யம்
முன்பே 241 -விச்வபுக் விபு பார்த்தோம்

அமுதமாகப் பரிணமிக்கும் சந்தரன் வளர்வதான வளர் பிறையாக -மூன்றாம் படியாக இருப்பவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

ஹூத புக் -எல்லாத் தேவதைகளைக் குறித்தும் செய்யப்படும் ஹோமங்களைப் புசிப்பவர் –
விபு -எங்கும் நிரம்பி இருப்பவர் -இரண்டு திரு நாமங்கள் -ஸ்ரீ சங்கரர் –

ஹோமம் செய்பவைகளை உண்பவர் -பக்தர்களை மேன்மை கொண்டவர்களாக ஆக்குபவர் –
இரண்டு திரு நாமங்கள் -ஸ்ரீ சத்ய சந்தர் –

———–

889-அநந்த ஹூத புக் போக்தா –அர்ச்சிராதி மார்க்கம் மூலம் முக்தனை வழி நடத்தும் பரமன் பரமான திரு நாமம்

மிக்க மகிமை யுள்ள இந்த்ரனையும் பிரமனையும் உடையவன்
யாகங்களில் அக்னியில் சேர்க்கப்படுமவைகளை புசிப்பதால் இந்த்ரன் ஹூத புக் –
பிரஜைகளைக் காப்பாற்றுவதால் பிரமனுக்கு போக்தா
11/12 படிகள்

யாகங்களில் ஹோமம் செய்வதை உண்பவனான -பதினோராம்படி -இந்த்ரனையும் பிரஜைகளைக்
காப்பவனான -பன்னிரண்டாம் படி -பிரமனையும் உடையவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

ச இந்திரலோகம் ச பிரஜாபதி லோகம்

அனந்த -தேச கால வஸ்து பேதங்களால் அளவுபடாதவர் –
ஹூதபுக் -ஹோமம் செய்வதை உண்பவர் –
போக்தா -பிரகிருதியை அனுபவிப்பவர் -உலகைக் காப்பவர் -மூன்று திரு நாமங்கள் -ஸ்ரீ சங்கரர் –

அனந்த -பந்தம் இல்லாதவர் -முடிவில்லாதவர் –
ஹூதபுக் -ஆஹூதியை நன்கு உண்பவர் –
போக்தா-உண்பவர்-மூன்று திரு நாமங்கள் -ஸ்ரீ சத்ய சந்தர் –

—————

100-க்ஷாம :             -444/758-

444-ஷாம—ஜ்யோதிர் மண்டலத்துக்கு ஆதாரம் திரு நாமம்

444-ஷாம—ஜ்யோதிர் மண்டலத்துக்கு ஆதாரம் திரு நாமம்
குறைவாளன்-
அவாந்தர பிரளயம் நஷத்ரங்கள் இல்லாமல் பகவான் ஒருவனே

அவாந்தர பிரளயத்தில் நான்கு நட்சத்திரங்களோடு இளைத்து இருப்பவர் –ஸ்ரீ பராசர பட்டர் –

தாரகா சிசுமாரஸ்ய ந அஸ்தமேதி சதுஷ்டயம் –ஸ்ரீ விஷ்ணு புராணம் -2-9-5-சிம்சுமாரத்தில் நான்கு நக்ஷத்திரங்கள்
மட்டும் பிரளய காலத்தில் மறைவது இல்லை
யாவன் மாத்ரோ பிரதேச து மைத்ரேய அவஸ்திதோ த்ருவ ஷயம் ஆயாந்தி தாவத் து பூமே
ஆபூத சம்பலவே -ஸ்ரீ விஷ்ணு புராணம் -2-8-97-பிரளயத்தில் துருவ நக்ஷத்ரம் உள்ள பிரதேசம் முடிய உள்ள அனைத்தும் அழிய –
துருவன் மட்டும் தனது இடத்தில் ஒளி விட்டு இருந்ததே

எல்லாம் அழிந்த போது தாம் மட்டும் தனித்து இருப்பவர் –ஸ்ரீ சங்கரர் –

ஸ்ரீ வராஹ ரூபத்தால் பூமியைத் தாங்கியவர் -வாமன ரூபத்தில் பூமியை யாசித்து பெற்றவர் –ஸ்ரீ சத்ய சந்தர் –

—————————–———————————————————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பராசர பட்டர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பீஷ்மர் திருவடிகளிலே சரணம்
ஸ்ரீ வியாச பகவான் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

திவ்ய தேசங்களில் வர்த்திக்கும் திர்யக்குகள் தான் திரு நாமங்களைச் சொல்ல வற்றாய் இறே இருப்பது-

December 2, 2019

திவ்ய தேசங்களில் வர்த்திக்கும் திர்யக்குகள் தான் திரு நாமங்களைச் சொல்ல வற்றாய் இறே இருப்பது –
ஆகையால் –
சகு நா நூதித ப்ர்ஹ்ம கோஷம் -என்றும்
பூ மருவி புள்ளினங்கள் புள்ளரையன் புகழ் குளறும் புனல் அரங்கமே -பெரிய ஆழ்வார் திரு மொழி  4-9-5–என்றும்
அறுகால் வரி வண்டுகள் ஆயிர நாமம் சொல்லி சிறுகாலைப் பாடும் -பெரிய ஆழ்வார் திரு மொழி-4-2-8-என்றும்
எல்லியம் போது இரு சிறை வண்டு எம்பெருமான் குணம் பாடி -பெரிய ஆழ்வார் திரு மொழி  -4-8-8-என்றும்
அல்லியம் பொழில் வாயிருந்து வாழ் குயில்கள் அரியரி என்று அவை அழைப்ப -என்றும்
செவ்வாய்க் கிளி நான் மறை பாடும் -என்றும் –

காலை எழுந்து கரிய குருவிக் கணங்கள் மாலின் வரவு சொல்லிக் மருள் பாடுதல் மெய்ம்மை கொலோ
சோலை மலைப் பெருமான் துவராபதி எம்பெருமான் ஆலினிலைப் பெருமான்
அவன் வார்த்தை வுரைக்கின்றவே-நாச்சியார் திரு மொழி –9-8-என்றும்

கூட்டில் இருந்து கிளி எப்போதும் கோவிந்தா கோவிந்தா என்று அழைக்கும்
ஊட்டுக் கொடாது செறுப்பனாகில் உலகளந்தான் என்று உயரக் கூவும்
நாட்டில் தலைப் பழி எய்தி உங்கள் நன்மை இழந்து தலையிடாதே
சூட்டுயர் மாடங்கள் தோன்றும் துவாராபதிக்கு என்னை யுய்த்திடுமின்–12-9-என்றும் சொல்லுகையாலே

————–

சிறு விரல்கள் தடவி பரிமாற செம்கண் கோட செய்ய வாய் கொப்பளிக்க
குறு வெயர்ப்புருவம் கூடலிப்ப கோவிந்தன் குழல் கொடூதின போது
பறைவையின் கணங்கள் கூடு துறந்து வந்து சூழ்ந்து படு காடு கிடப்ப
கறைவையின் கணங்கள் கால் பரப்பி இட்டுக் கவிழ்ந்து இறங்கி செவி ஆட்டகில்லாவே -3 6-8 – –

திரண்டு எழு தழை முகில் வண்ணன் செங்கமல மலர் சூழ் வண்டினம் போலே
சுருண்டு இருண்ட குழல் தாழ்ந்த முகத்தால் ஊதுகின்ற குழலோசை வழியே
மருண்டு மான் கணங்கள் மேய்கை மறந்து மேய்ந்த புல்லும் கடை வாய் வழி சோர
இரண்டு பாடும் துலுங்கா புடை பெயரா வெழுது சித்திரங்கள் போலே நின்றனவே -3-6 9- –

கரும் கண் தோகை மயில் பீலி அணிந்து கட்டி நன்கு உடுத்த பீதகவாடை
அரும் கல வுருவின் ஆயர்பெருமான் அவன் ஒருவன் குழலூதின போது
மரங்கள் நின்று மது தாரைகள் பாயும் மலர்கள் வீழும் வளர் கொம்புகள் தாழும்
இரங்கும் கூம்பும் திருமால் நின்ற நின்ற பக்கம் நோக்கி யவை செய்யும் குணமே -3 6-10 –

குறுகாத மன்னரை கூடு கலக்கி வெம் கானிடை
சிறு கால் நெறியே போக்குவிக்கும் செல்வன் பொன் மலை
அறுகால் வரி வண்டுகள் ஆயிர நாமம் சொல்லி
சிறுகாலை பாடும் தென் திரு மால் இரும் சோலையே – 4-2 8-

பெருவரங்கள் அவை பற்றி பிழக்கு உடை இராவணனை
உருவரங்க பொருது அழித்து இவ்வுலகினை கண் பெறுத்தானூர்
குருவு அரும்ப கொங்கு அலற குயில் கூவும் குளிர் பொழில் சூழ்
திருவரங்கம் என்பதுவே என் திரு மால் சேர்விடமே – 4-8 5- –

கீழ் உலகில் அசுரர்களை கிழங்கு இருந்து கிளராமே
ஆழி விடுத்தவருடைய கருவழித்த வழிப்பனூர்
தாழை மடலூடு உரிஞ்சித் தவள வண்ண பொடி அணிந்து
யாழினிசை வண்டினங்கள் ஆளம் வைக்கும் அரங்கமே – 4-8 6-

வல் எயிற்று கேழலுமாய் வாள் எயிற்று சீயமுமாய்
எல்லை இல்லாத் தரணியையும் அவுணனையும் இடந்தானூர்
எல்லியம்போது இரும் சிறை வண்டு எம்பெருமான் குணம் பாடி
மல்லிகை வெண் சங்கூதும் மதிள் அரங்கம் என்பதுவே – 4-8 8-

———————–

புள்ளும் சிலம்பின காண் புள்ளரையன் கோயிலில்
வெள்ளை விளி சங்கின் பேரரவம் கேட்டிலையோ
பிள்ளாய் எழுந்திராய் பேய் முலை நஞ்சுண்டு
கள்ளச் சகடம் கலக்கழிய காலோச்சி
வெள்ளத் தரவில் துயிலமர்ந்த வித்தினை
உள்ளத்துக் கொண்டு முனிவர்களும் யோகிகளும்
மெள்ள எழுந்து அரி என்ற பேரரவம்
உள்ளம் புகுந்து குளிர்ந்தேலோ ரெம்பாவாய்––திருப்பாவை-6-

கீசுகீசு என்று எங்கும் ஆனைச் சாத்தன் கலந்து
பேசின பேச்சரவம் கேட்டிலையோ பேய்ப் பெண்ணே
காசும் பிறப்பும் கலகலப்ப கை பேர்த்து
வாச நறும் குழல் ஆய்ச்சியர் மத்தினால்
ஓசைப் படுத்த தயிர் அரவம் கேட்டிலையோ
நாயகப் பெண் பிள்ளாய் நாராயணன் மூர்த்தி
கேசவனைப் பாடவும் கேட்டே கிடத்தியோ
தேசமுடையாய் திறவேலோ ரெம்பாவாய்-7-

புள்ளின் வாய் கீண்டானை பொல்லா அரக்கனைக்
கிள்ளிக் களைந்தானைக் கீர்த்திமை பாடிப் போய்
பிள்ளைகள் எல்லோரும் பாவைக் களம் புக்கார்
வெள்ளி எழுந்து வியாழம் உறங்கிற்றுப்
புள்ளும் சிலம்பின காண் போதரிக் கண்ணினாய்
குள்ளக் குளிரக் குடைந்து நீராடாதே
பள்ளிக் கிடத்தியோ பாவாய் நீ நன்னாளால்
கள்ளந்தவிர்ந்து கலந்தேலோ ரெம்பாவாய்–13-

—————

மன்னு பெரும் புகழ் மாதவன் மா மணி வண்ணன் மணி முடி மைந்தன்
தன்னை உகந்தது காரணமாக என் சங்கு இழக்கும் வழக்குண்டே
புன்னை குருக்கத்தி நாழல் செருந்திப் பொதும்பினில் வாழும் குயிலே
பன்னி எப்போதும் இருந்து விரைந்து என் பவளவாயன் வரக் கூவாய்––நாச்சியார் திரு மொழி–5-1-

வெள்ளை விளி சங்கு இடம் கையில் கொண்ட விமலன் எனக்கு உருக் காட்டான்
உள்ளம் புகுந்து என்னை நைவித்து நாளும் உயிர்ப்பெய்து கூத்தாட்டுக் காணும்
கள்ள விழ் செண்பகப் பூ மலர்க் கோதிக் களித்து இசை பாடும் குயிலே
மெள்ள இருந்து மிழற்றி மிழற்றாது என் வேங்கடவன் வரக் கூவாய்–5-2-

மாதலி தேர் முன்பு கோல் கொள்ள மாயன் இராவணன் மேல் சரமாரி
தாய் தலை யற்று யற்று வீழத் தொடுத்த தலைவன் வர எங்கும் காணேன்
போதலர் காவில் புதுமணம் நாறப் பொறி வண்டின் காமரம் கேட்டு உன்
காதலியோடு உடன் வாழ் குயிலே என் கரு மாணிக்கம் வரக் கூவாய் —5-3-

என்புருகி இனவேல் நெடும் கண்கள் இமை பொருந்தா பல நாளும்
துன்பக் கடல் புக்கு வைகுந்தன் என்பதோர் தோணி பெறாது உழல்கின்றேன்
அன்புடையாரைப் பிரிவுறு நோயது நீயுமறிதி குயிலே
பொன்புரை மேனிக் கருளக் கொடி யுடைப் புண்ணியனை வரக் கூவாய்–5-4-

மென்னடை அன்னம் பரந்து விளையாடும் வில்லி புத்தூர் உறைவான் தன்
பொன்னடி காண்பதோர் ஆசையினால் என் பொரு கயல் கண் இணை துஞ்சா
இன்னடிசிலொடு பாலமுதூட்டி எடுத்த வென் கோலக் கிளியை
உன்னோடு தோழமைக் கொள்ளுவன் குயிலே உலகளந்தான் வரக் கூவாய்–5-5-

எத்திசையும் அமரர் பணிந்து ஏத்தும் இருடீகேசன் வலி செய்ய
முத்தன்ன வெண் முறுவல் செய்ய வாயும் முலையும் அழகு அழிந்தேன் நான்
கொத்தலர் காவில் மணித் தடம் கண் படை கொள்ளும் இளங்குயிலே
என் தத்துவனை வரக் கூகிற்றி யாகிற்றிலை யல்லால் கைம்மாறு இலேனே –5-6-

பொங்கிய பாற்கடல் பள்ளி கொள்வானைப் புணர்வதோர் ஆசையினால் என்
கொங்கை கிளர்ந்து குமைத்துக் குதுகலித்து ஆவியை ஆகுலம் செய்யும்
அங்குயிலே உனக்கு என்ன மறைந்து உறவு ஆழியும் சங்கும் ஒண் தண்டும்
தங்கிய கையவனை வரக் கூவில் நீ சாலத் தருமம் பெறுதி–5-7-

சார்ங்கம் வளைய வலிக்கும் தடக்கைச் சதுரன் பொருத்தமுடையன்
நாங்கள் எம்மில் இருந்தொட்டிய கச் சங்கம் நானும் அவனும் அறிதும்
தேன்கனி மாம் பொழில் செந்தளிர் கோதும் சிறு குயிலே திருமாலை
ஆங்கு விரைந்து ஒல்லைக் கூகிற்று யாகில் அவனை நான் செய்வன காணே–5-8-

பைங்கிளி வண்ணன் சிரீதரன் என்பதோர் பாசத்தகப் பட்டிருந்தேன்
பொங்கொளி வண்டிரைக்கும் பொழில் வாழ் குயிலே குறிக் கொண்டிது நீ கேள்
சங்கோடு சக்கரத்தான் வரக் கூவுதல் பொன்வளை கொண்டு தருதல்
இங்குள்ள காவினில் வாழக் கருத்தில் இரண்டைத் தொன்றேல் திண்ணம் வேண்டும்–5-9-

அன்று உலகம் அளந்தானை யுகந்து அடிமைக் கண் அவன் வலி செய்ய
தென்றலும் திங்களும் ஊடறுத்து என்னை நலியும் முறைமை அறியேன்
என்றும் இக்காவில் இருந்து இருந்து என்னைத் ததைத்தாதே நீயும் குயிலே
இன்று நாராயணனை வரக் கூவாயேல் இங்குத்தை நின்றும் துரப்பன்–—-5-10-

விண்ணுற நீண்டடி தாவிய மைந்தனை வேல் கண் மடந்தை விரும்பி
கண்ணுற வென் கடல் வண்ணனைக் கூவு கரும் குயிலே என்ற மாற்றம்
பண்ணு நான் மறையோர் புதுவை மன்னன் பட்டர் பிரான் கோதை சொன்ன
நண்ணுற வாசக மாலை வல்லார் நமோ நாராயணாய என்பாரே–——————5-11-

விண்ணீல மேலாப்பு விரித்தால் போல் மேகங்காள்
தெண்ணீர் பாய் வேங்கடத்து என் திரு மாலும் போந்தானே
கண்ணீர்கள் முலைக் குவட்டில் துளி சோரச் சோர்வேனை
பெண்ணீர்மை ஈடழிக்குமிது தமக்கோர் பெருமையே –8-1-

மா முத்த நிதி சொரியும் மா முகில்காள் வேங்கடத்துச்
சாமத்தின் நிறம் கொண்ட தாளாளன் வார்த்தை என்னே
காமத் தீயுள் புகுந்து கதுவப் பட்டிடைக் கங்குல்
ஏமத்தோர் தென்றலுக்கு இங்கு இலக்காய் நான் இருப்பேனே—8-2-

ஒளி வண்ணம் வளை சிந்தை உறக்கத்தோடு இவை எல்லாம்
எளிமையால் விட்டு என்னை ஈடு அழியப் போயினவால்
குளிர் அருவி வேங்கடத்து என் கோவிந்தன் குணம் பாடி
அளியத்த மேகங்காள் ஆவி காத்து இருப்பேனே—-8-3-

மின்னாகத் தெழுகின்ற மேகங்காள் வேங்கடத்துத்
தன்னாகத் திருமங்கை தங்கிய சீர் மார்வற்கு
என்னகத் திளம் கொங்கை விரும்பித் தாம் நாடோறும்
பொன்னகம் புல்குதற்கு என்புரிவுடைமை செப்புமினே –8-4-

வான் கொண்டு கிளர்ந்து எழுந்த மா முகில்காள் வேங்கடத்துத்
தேன் கொண்ட மலர் சிதறத் திரண்டு ஏறப் பொழிவீர் காள்
ஊன் கொண்ட வள்ளுகிரால் இரணியனை யுடலிடந்தான்
தான் கொண்ட சரி வளைகள் தருமாகில் சாற்றுமினே–8-5-

சலம் கொண்டு கிளர்ந்து எழுந்த தண் முகில்காள் மாவலியை
நிலம் கொண்டான் வேங்கடத்தே நிரந்து ஏறிப் பொழிவீர் காள்
உலங்கு உண்ட விளங்கனி போல் உள் மெலியப் புகுந்து என்னை
நலம் கொண்ட நாரணற்கு என் நடலை நோய் செப்புமினே–8-6-

சங்க மா கடல் கடைந்தான் தண் முகில்காள் வேங்கடத்துச்
செங்கண் மால் சேவடிக் கீழ் அடி வீழ்ச்சி விண்ணப்பம்
கொங்கை மேல் குங்குமத்தின் குழம்பு அழியப் புகுந்து ஒரு நாள்
தங்கு மேல் என்னாவி தங்கும் என்றும் உரையீரே–8-7-

கார் காலத்து எழுகின்ற கார் முகில் காள் வேங்கடத்துப்
போர் காலத்து எழுந்து அருளிப் பொருதவனார் பேர் சொல்லி
நீர் காலத் தெருக்கில் அம்பழ விலை போல் வீழ்வேனை
வார் காலத்தொரு நாள் தம் வாசகம் தந்து அருளாரே –8-8-

மத யானை போல் எழுந்த மா முகில்காள் வேங்கடத்தைப்
பதியாக வாழ்வீர்காள் பாம்பணையான் வார்த்தை என்னே
கதி என்றும் தானாவான் கருதாது ஓர் பெண் கொடியை
வதை செய்தான் என்னும் சொல் வையகத்தார் மதியாரே–8-9-

நாகத்தின் அணையானை நன்னுதலாள் நயந்து உரை செய்
மேகத்தை வேங்கடக் கோன் விடு தூதில் விண்ணப்பம்
போகத்தில் வழுவாத புதுவையர் கோன் கோதை தமிழ்
ஆகத்து வைத்துரைப்பார் அவர் அடியார் ஆகுவரே–8-10-

சிந்துரச் செம்பொடிப் போல் திரு மால் இருஞ்சோலை எங்கும்
இந்திர கோபங்களே எழுந்தும் பரந்திட்டனவால்
மந்திரம் நாட்டி யன்று மதுரக் கொழுஞ்சாறு கொண்ட
சுந்தரத் தோளுடையான் சுழலையில் நின்றுய்தும் கொலோ–9-1-

போர்க் களிறு பொரும் மாலிரும் சோலை யம்பூம் புறவில்
தார்க் கொடி முல்லைகளும் தவள நகை காட்டுகின்ற
கார்க்கொள் படாக்கள் நின்று கழறிச் சிரிக்கத் தரியேன்
ஆர்க்கிடுகோ தோழீ அவன் தார் செய்த பூசலையே–9-2

கருவிளை யொண் மலர்காள் காயா மலர்காள் திருமால்
உரு வொளி காட்டுகின்றீர் யெனக்குய் வழக்கொன்று உரையீர்
திரு விளையாடு திண் தோள் திருமால் இரும் சோலை நம்பி
வரி வளையில் புகுந்து வந்தி பற்றும் வழக்குளதே –9-3-

பைம் பொழில் வாழ் குயில்காள் மயில்காள் ஒண் கரு விளைகாள்
வம்பக் களங்கனிகாள் வண்ணப்பூவை நறும் மலர்காள்
ஐம் பெரும் பாதகர்காள் அணி மால் இரும் சோலை நின்ற
எம்பெருமான் உடைய நிறம் உங்களுக்கு என் செய்வதே —9-4-

துங்க மலர்ப் பொழில் சூழ் திருமால் இருஞ்சோலை நின்ற
செங்கட் கருமுகிலின் திருவுருப் போல் மலர் மேல்
தொங்கிய வண்டினங்காள் தொகு பூஞ்சுனைகாள் சுனையில்
தங்கு செந்தாமரைகாள் எனக்கோர் சரண் சாற்றுமினே–9-5-

காலை எழுந்து கரிய குருவிக் கணங்கள்
மாலின் வரவு சொல்லிக் மருள் பாடுதல் மெய்ம்மை கொலோ
சோலை மலைப் பெருமான் துவராபதி எம்பெருமான்
ஆலினிலைப் பெருமான் அவன் வார்த்தை வுரைக்கின்றவே –9-8-

பாடும் குயில்காள் ஈதென்ன பாடல் நல்வேங்கட
நாடர் நமக்கு ஒரு வாழ்வு தந்தால் வந்து பாடுமின்
ஆடும் கருளக் கொடி யுடையார் வந்து அருள் செய்து
கூடுவர் ஆயிடில் கூவி நும் பாட்டுக்கள் கேட்டுமே –10-5-

கூட்டில் இருந்து கிளி எப்போதும் கோவிந்தா கோவிந்தா என்று அழைக்கும்
ஊட்டுக் கொடாது செறுப்பனாகில் உலகளந்தான் என்று உயரக் கூவும்
நாட்டில் தலைப் பழி எய்தி உங்கள் நன்மை இழந்து தலையிடாதே
சூட்டுயர் மாடங்கள் தோன்றும் துவாராபதிக்கு என்னை யுய்த்திடுமின்–12-9-

———————–

ஊனேறு செல்வத்து உடன் பிறவி யான் வேண்டேன்
ஆன் ஏறு ஏழ் வென்றான் அடிமை திறம் அல்லாமல்
கூனேறு சங்கம் இடத்தான் தன் வேங்கடத்து
கோனேரி வாழும் குருகாய் பிறப்பேனே ––பெருமாள் திருமொழி–4-1-

ஆனாத செல்வத்து அரம்பையர்கள் தற் சூழ
வானாளும் செல்வமும் மண் அரசும் யான் வேண்டேன்
தேனார் பூம் சோலை திரு வேங்கட சுனையில்
மீனாய் பிறக்கும் விதி வுடையேன் ஆவேனே— 4-2-

ஒண் பவள வேலை வுலவு தண் பாற் கடலுள்
கண் துயிலும் மாயோன் கழல் இணைகள் காண்பதற்கு
பண் பகரும் வண்டினங்கள் பண் பாடும் வேம்கடத்து
செண்பகமாய் நிற்கும் திரு உடையன் ஆவேனே –4-4-

கம்ப மத யானை கழுத்தகத்தின் மேல் இருந்து
இன்ப மரும் செல்வமும் இவ் அரசும் யான் வேண்டேன்
எம்பெருமான் ஈசன் எழில் வேம்கட மலை மேல்
தம்பகமாய் நிற்கும் தவம் உடையன் ஆவேனே –4-5-

மின் அனைய நுண்ணி இடையார் உருப்பசியும் மேனகையும்
அன்னவர் தம் பாடலொடும் ஆடல் அவை ஆதரியேன்
தென்னவென வண்டு இனங்கள் பண் பாடும் வேங்கடத்துள்
அன்னனைய பொற் குவடாம் அரும் தவததேன் ஆவேனே –4-6-

வான் ஆளும் மா மதி போல் வெண் குடை கீழ் மன்னவர் தம்
கோனாகி வீற்று இருந்து கொண்டாடும் செல்வறியேன்
தேனார் பூம் சோலை திரு வேங்கட மலை மேல்
கானாறாய் பாயும் கருத்துடையன் ஆவேனே– 4-7-

பிறையேறு சடையானும் பிரமனும் இந்திரனும்
முறையாய பெரு வேள்வி குறை முடிப்பான் மறை யானான்
வெறியார் தண்சோலை திருவேங்கட மலை மேல்
நெறியாய் கிடக்கும் நிலை வுடையேன் ஆவேனே– 4-8-

செடியாய வல் வினைகள் தீர்க்கும் திரு மாலே!
நெடியானே! வேம்கடவா! நின் கோயிலின் வாசல்
அடியாரும் வானவரும் அரம்பையரும் கிடந்தது இயங்கும்
படியாய் கிடந்தது உன் பவள வாய் காண்பேன –4-9-

உம்பர் உலகாண்டு ஒரு குடை கீழ் உருப்பசி தன்
அம் பொற் கலை அல்குல் பெற்றாலும் ஆதரியேன்
செம் பவள வாயான் திரு வேம்கடம் என்னும்
எம்பெருமான் பொன் மலை மேல் ஏதேனும் ஆவேனே –4-10–

மீன் நோக்கும் நீள் வயல் சூழ் வித்துவ கோட்டு அம்மா ! என்
பால் நோக்காய் ஆகிலும் உன் பற்று அல்லால் பற்றி இலேன்
தான் நோக்காது எத் துயரம் செய்திடினும் தார் வேந்தன்
கோல் நோக்கி வாழும் குடி போன்று இருந்தேனே— 5-3-

————————-

நாகம் ஏந்து மேரு வெற்பை நாகம் ஏந்து மண்ணினை
நாகம் ஏந்து மாகம் மாகம் ஏந்து வார் புனல்
மாகம் ஏந்து மங்குல் தீ ஓர் வாயு ஐந்து அமைந்து காத்து
ஏகம் ஏந்தி நின்ற நீர்மை நின் கணேயியன்றதே -திருச்சந்த விருத்தம்–6-

குரக்கினப் படை கொடு குரை கடலின் மீது போய்
அரக்கர் அரங்க வெஞ்சரம் துரந்த வாதி நீ
இரக்க மண் கொடுத்து அவற்கு இரக்கம் ஒன்றும் இன்றியே
பரக்க வைத்து அளந்து கொண்ட பற்ப நாபன் அல்லையே –32-

———————

வண்டினம் முரலும் சோலை மயிலினம் ஆலும் சோலை
கொண்டல் மீது அணவும் சோலை குயிலினம் கூவும் சோலை
அண்டர் கோன் அமரும் சோலை அணி திருவரங்கம் என்னா
மிண்டர் பாய்ந்து உண்ணும் சோற்றை விலக்கி நாய்க்கு இடுமின் நீரே–திருமாலை–14-

குரங்குகள் மலையை நூக்கக் குளித்து தாம் புரண்டிட்டு ஓடித்
தரங்க நீர் அடிக்கல் உற்ற சலமிலா வணிலம் போலேன்
மரங்கள் போல் வலிய நெஞ்சம் வஞ்சனேன் நெஞ்சு தன்னால்
அரங்கனார்கு ஆட்செய்யாதே அளியத்தேன் அயர்க்கின்றேனே ––27-

ஆர்த்து வண்டு அலம்பும் சோலை அணி திருவரங்கம் தன்னுள்
கார்த்திரள் அனைய மேனிக் கண்ணனே உன்னைக் காணும்
மார்க்கம் ஒன்றும் அறிய மாட்டா மனிசரில் துரிசனாய
மூர்க்கனேன் வந்து நின்றேன் மூர்க்கனேன் மூர்க்கனேனே–32-

——————————————————

பணங்கள் ஆயிரம் உடைய நல் அரவணைப் பள்ளிகொள் பரமா வென்று
இணங்கி வானவர் மணி முடி பணி தர இருந்த நல் இமயத்து
மணம் கொள் மாதவி நெடும் கொடி விசும்புற நிமிர்ந்தவை முகில் பற்ற
பிணங்கு பூம் பொழில் நுழைந்து வண்டிசை சொலும் பிரிதி சென்று அடை நெஞ்சே –1-2-6-

ஊரான் குடந்தை யுத்தமன் ஒரு கால் இரு கால் சிலை வளைய
தேரா வரக்கர் தேர் வெள்ளம் செற்றான் வற்றா வரு புனல் சூழ்
பேரான் பேர் ஆயிரம் உடையான் பிறங்கு சிறை வண்டறைகின்ற
தாரான் தாரா வயல் சூழ்ந்த சாளக்கிராமம் அடை நெஞ்சே–1-5-4-

அங்கண் ஞாலம் அஞ்ச அங்கோராளரியாய் அவுணன்
பொங்காவாகம் வள்ளு கிரால் போழ்ந்த புனிதன் இடம்
பைம் கணானைக் கொம்பு கொண்டு பத்திமையால் அடிக்கீழ்
செங்கணாளி யிட்டு இறைஞ்சும் சிங்க வேள் குன்றமே–1-7-1-

செங்கணாளி யிட்டிறைஞ்சும் சிங்க வேள் குன்றுடைய
எங்கள் ஈசன் எம்பிரானை இரும் தமிழ் நூல் புலவன்
மங்கை யாளன் மன்னு தொல் சீர் வண்டறை தார்க் கலியன்
செங்கை யாளன் செஞ்சொல் மாலை வல்லவர் தீதிலரே-1-7-10-

உறவு சுற்றம் என்று ஓன்று இலா ஒருவன் உகந்தவர் தம்மை
மண் மிசைப் பிறவியே கெடுப்பான் அது கண்டு என்நெஞ்சம் என்பாய்
குறவர் மாதர்களோடு வண்டு குறிஞ்சி மருள் இசை பாடும் வேங்கடத்து
அறவனாயாக்ற்கு இன்று அடிமைத் தொழில் பூண்டாயே—2-1-2-

இண்டை யாயின கொண்டு தொண்டர்கள் ஏத்துவார் உறவோடும் வானிடைக்
கொண்டு போயிடவும் அது கண்டு என்னெஞ்சம் என்பாய்
வண்டு வாழ் வட வேங்கடமலை கோயில் கொண்டு அதனோடும் மீமிசை
அண்டம் ஆண்டு இருப்பாற்கு அடிமைத் தொழில் பூண்டாயே–2-1-3-

துவரி யாடையர் மட்டையர் சமண் தொண்டர்கள் நந்தி யுண்டு பின்னரும்
தமரும் தாங்களுமே தடிக்க என்னெஞ்சம் என்பாய்
கவரி மாக் கணம் சேரும் வேங்கடம் கோயில் கொண்ட கண்ணார் விசும்பிடை
அமர நாயகற்கு இன்று அடிமைத் தொழில் பூண்டாயே—2-1-6-

தருக்கினால் சமண் செய்து சோறு தண் தயிரினால் திரளை மிடற்றிடை
நெருக்குவாரலக்கண் அது கண்டு என்னெஞ்சம் என்பாய்
மருட்கள் வண்டுகள் பாடும் வேங்கடம் கோயில் கொண்டதனோடும் வானிடை
அருக்கன் மேவி நிற்பாற்கு அடிமைத் தொழில் பூண்டாயே—2-1-7-

இண்டை கொண்டு தொண்டர் ஏத்த எவ்வுள் கிடந்தானை
வண்டு பாடும் பைம் புறவில் மங்கையர் கோன் கலியன்
கொண்ட சீரால் தண் தமிழ் செய் மாலை ஈரைந்தும் வல்லார்
அண்டமாள்வதாணை அன்றேலாள் வர மருலகே—2-2-10-

தாங்கரும் போர் மாலி படப்பறவை யூர்ந்து தாரலத்தோர் குறை முடித்த தன்மையானை
ஆங்கு அரும்பிக் கண்ணீர் சோர்ந்து அன்பு கூறும் அடியவர்கட்கு ஆரமுதமானான் தன்னை
கோங்கரும் புசுர புன்னை குரவர் சோலைக் குழா வரி வண்டு இசைபாடும் பாடல் கேட்டு
தீங்கரும்பு கண் வளரும் கழனி சூழ்ந்த திருக் கோவலூர் அதனுள் கண்டேன் நானே–2-10-4-

நெய் வாயழ்லம்பு துரந்து முந்நீர் துணியப் பணி கொண்டு அணி யார்ந்து இலங்கு
மையார் மணி வண்ணன் எண்ணி நுந்தம் மனத்தே இருத்தும்படி வாழ வல்லீர்
அவ்வாய் இள மங்கையர் பேசவும் தான் அருமா மறை யந்தணர் சிந்தை புக
செவ்வாய்க் கிளி நான் மறை பாடு தில்லைத் திருச் சித்ரகூடம் சென்று சேர்மின்களே–3-2-6-

பிறை தங்கு சடையானை வலத்தே வைத்து பிரமனை தன் உந்தியிலே தோற்றுவித்து
கறை தங்கு வேல் தடம் கண் திருவை மார்பில் கலந்தவன் தாள் அணைகிற்பீர் கழி நீர் கூடி
துறை தங்கு கமலத்துயின்று கைதைத் தோடாரும் பொதி சோற்றுச் சுண்ணம் நண்ணிச்
சிறை வண்டு களி பாடும் வயல் சூழ் காசிச் சீராம விண்ணகரம் சேர்மின் நீரே——3-4-9-

தூவிரிய மலர் உழக்கித் துணையோடும் பிரியாதே
பூவிரிய மது நுகரும் பொறி வரிய சிறு வண்டே
தீ விரிய மறை வளர்க்கும் புகழாளர் திருவாலி
ஏவரி வெஞ்சிலை யானுக்கு என் நிலைமை உரையாயே–3-6-1-

பிணியவிழும் நறு நீல மலர்கிழியப் பெடையொடும்
அணி மலர் மேல் மது நுகரும் அறுகால சிறு வண்டே
மணி கெழு நீர் மருங்கலரும் வயலாலி மணவாளன்
பணி யறியேன் நீ சென்று என் பயலை நோய் உரையாயே–3-6-2-

நீர் வானம் மண் எரி காலாய் நின்ற நெடுமால் தன்
தாராய நறும் துளவம் பெருந்தகையேற்கு அருளானே
சீராரும் வளர் பொழில் சூழ் திருவாலி வயல் சூழும்
கூர்வாய சிறு குருகே குறிப்பறிந்து கூறாயே–3-6-3-

தானாக நினையானேல் தன் நினைந்து நைவேற்கு ஓர்
மீனாய கொடி நெடு வேள் வலி செய்ய மெலிவேனோ
தேன் வாய வரி வண்டே திருவாலி நகராளும்
ஆனாயற்கு என்னுறு நோய் அறியச் சென்று உரையாயே–3-6-4-

முற்றிலும் பைங்கிளியும் பந்தும் ஊசலும் பேசுகின்ற
சிற்றில் மென் பூவையும் விட்டகன்ற செழும் கோதை தன்னைப்
பெற்றிலேன் முற்றிழையை பிறப்பிலி பின்னே நடந்து
மற்றெல்லாம் கை தொழப் போய் வயலாலி புகுவர் கொலோ ?–3-7-8-

துளையார் கரு மென் குழல் ஆய்ச்சியர் தம் துகில் வாரியும் சிற்றில் சிதைத்தும் முற்றா
இளையார் விளையாட்டோடு காதல் வெள்ளம் விளைவித்த அம்மானிடம் வேல் நெடுங்கண்
முளை வாள் எயிற்று மடவார் பயிற்று மொழி கேட்டிருந்து முதிராத இன் சொல்
வளைவாய கிள்ளை மறைபாடு நாங்கூர் மணி மாடக் கோயில் வணங்கு என் மனனே–3-8-8-

அண்டமும் இவ் வலை கடலும் அவனிகளும் எல்லாம்
அமுது செய்த திரு வயிற்றன் அரன் கொண்டு திரியும்
முண்ட மது நிறைத்து அவன் கண் சாபமது நீக்கும்
முதல்வனவன் மகிழ்ந்து இனிது மருவி யுறை கோயில்
எண் திசையும் பெரும் செந்நெல் இளம் தெங்கு கதலி
இலைக் கொடி ஒண் குலைக் கமுகோடு இசலி வளம் சொரிய
வண்டு பல இசை பாட மயில் ஆலு நாங்கூர்
வைகுந்த விண்ணகரம் வணங்கு மட நெஞ்சே–3-9-3-

கன்றதனால் விளவெறிந்து கனி யுதிர்த்த காளை
காமரு சீர் முகில் வண்ணன் காலிகள் முன் காப்பான்
குன்றதனால் மழை தடுத்துக் குடமாடு கூத்தன்
குலவும் இடம் கொடி மதிள்கள் மாளிகை கோபுரங்கள்
துன்று மணி மண்டபங்கள் சாலைகள் தூ மறையோர்
தொக்கு ஈண்டித் தொழுதி யொடு மிகப் பயிலும் சோலை
அன்று அலர் வாய் மது வுண்டு அங்கு அளி முரலும் நாங்கூர்
அரிமேய விண்ணகரம் வணங்கு மட நெஞ்சே–3-10-8-

போதலர்ந்த பொழில் சோலைப் புறம் எங்கும் பொரு திரைகள்
தாதுதிர வந்தலைக்கும் தடமண்ணித் தென் கரை மேல்
மாதவன் தான் உறையுமிடம் வயல் நாங்கை வரி வண்டு
தேதென என்று இசை பாடும் திருத் தேவனார் தொகையே–4-1-1-

அண்டரானவர் வானவர் கோனுக்கு என்று அமைத்த சோறது எல்லாம்
உண்டு கோனிரை மேய்த்தவை காத்தவன் உகந்து இனிது உறை கோயில்
கொண்டலார் முழவில் குளிர் வார் பொழில் குல மயில் நடமாட
வண்டு தான் இசை பாடிடு நாங்கூர் வண் புருடோத்தமமே–4-2-3-

பாரினை யுண்டு பாரினை யுமிழ்ந்து பாரதம் கை எறிந்து ஒரு கால்
தேரினை யூர்ந்து தேரினைத் துரந்த செங்கண் மால் சென்றுறை கோயில்
ஏர் நிறை வயலுள் வாளைகள் மறுகி எமக்கு இடம் அன்று இது என்று எண்ணிச்
சீர்மலி பொய்கை சென்று அணைகின்ற திருவெள்ளியங்குடி யதுவே —4-10-5-

ஒள்ளிய கருமம் செய்வன் என்று உணர்ந்த மாவலி வேள்வியில் புக்குத்
தெள்ளிய குறளாய் மூவடி கொண்டு திக்குற வளர்ந்தவன் கோயில்
அள்ளியம் பொழில் வாய் இருந்து வாழ் குயில்கள் அரி அரி என்று அவை அழைப்ப
வெள்ளியார் வணங்க விரைந்து அருள் செய்வான் திருவெள்ளியங்குடி யதுவே–4-10-7-

அறிவது அரியான் அனைத்து உலகும் உடையான் என்னை யாளுடையான்
குறிய மாண் உருவாகிய கூத்தன் மன்னி யமரும் இடம்
நறிய மலர் மேல் சுரும்பார்க்க எழிலார் மஞ்ஞை நடமாடப்
பொறி கொள் சிறை வண்டிசை பாடும் புள்ளம் பூதங்குடி தானே –5-1-1-

மின்னின் அன்ன நுண் மருங்குல் வேயேய் தடந்தோள் மெல்லியற்காய்
மன்னு சினத்த மழம் விடைகள் ஏழு அன்று அடர்த்த மாலதிடம்
மன்னு முதுநீர் அரவிந்த மலர் மேல் வரி வண்டு இசை பாட
புன்னை பொன்னேய் தாது உதிர்க்கும் புள்ளம் பூதங்குடி தானே —5-1-6-

செறும் திண் திமில் ஏறு உடைய பின்னை
பெறும் தண் கோலம் பெற்றாரூர் போல்
நறும் தண் தீன் தேனுண்ட வண்டு
குறிஞ்சி பாடும் கூடலூரே—-5-2-2-

முன் இவ் யெழ் உலகு உணர்வு இன்றி இருள் மிகு யும்பர்கள் தொழுது ஏத்த
அன்னமாகி அன்று அருமறை பயந்தவனே எனக்கு அருள் புரியே
மன்னு கேதகை சூதகம் என்று இவை வனத்திடை சுரும்பு இனங்கள்
தென்ன வென்று வண்டு இன்னிசை முரல் திரு வெள்ளறை நின்றானே –5-3-8-

ஆங்கு மாவலி வேள்வியில் இரந்து சென்று அகலிடம் முழுதினையும்
பாங்கினில் கொண்ட பரம நின் பணிந்து எழுவன் எனக்கு அருள் புரியே
ஓங்கு பிண்டியின் செம்மலர் ஏறி வண்டுழி தர மா வேறித்
தீங்குயில் மிழற்றும் படைப்பைத் திரு வெள்ளறை நின்றானே—5-3-9-

உய்யும் வகை யுண்டு சொன செய்யில் உலகு ஏழும் ஒழியாமை முன நாள்
மெய்யின் அளவே யமுது செய்ய வல ஐயன் வான் மேவு நகர் தான்
மைய வரி வண்டு மதுவுண்டு கிளையோடு மலர் கிண்டி யதன் மேல்
நைவளம் நவிற்று பொழில் நந்தி புர விண்ணகரம் நண்ணு மனமே —5-10-2-

முனையார் சீயமாகி யவுணன் முரண் மார்வம்
புனை வாள் உகிரால் போழ்பட வீர்ந்த புனிதனூர்
சினையார் தேமாம் செந்தளிர் கோதிக் குயில் கூவும்
நனையார் சோலை சூழ்ந்து அழகாய நறையூரே –6-5-2-

உண்ணாது வெங்கூற்றம் ஓவாத பாவங்கள் சேரா மேலை
விண்ணோரும் மண்ணோரும் வந்து இறைஞ்சும் மென் தளிர் போல் அடியினானைப்
பண்ணாரா வண்டு இயம்பும் பைம் பொழில் சூழ் தண் சேறை யம்மான் தன்னைக்
கண்ணாரக் கண்டு உருகி கையார தொழுவாரைக் கருதும் காலே -7-4-8-

என் ஐம் புலனும் எழிலும் கொண்டு இங்கே நெருநல் எழுந்து அருளிப்
பொன்னங்கலைகள் மெலிவெய்தப் போன புனிதரூர் போலும்
மன்னு முது நீர் அரவிந்த மலர் மேல் வரி வண்டு இசை பாட
அன்னம் பெடையோடு உடனாடும் அணியார் வயல் சூழ் அழுந்தூரே –7-5-9-

காலையும் மாலை யொத்துண்டு கங்குல் நாழிகை யூழியின் நீண்டுலாவும்
போல்வதோர் தன்மை புகுந்து நிற்கும் பொங்கழலே யொக்கும் வாடை சொல்லில்
மாலவன் மா மணி வண்ணன் மாயம் மற்றுளவை வந்திடா முன்
கோல மயில் பயிலும் புறவில் குறுங்குடிக்கே யென்னை உய்த்திடுமின் —9-5-3-

நின்ற வினையும் துயரும் கெட மா மலரேந்திச்
சென்று பணிமின் எழுமின் தொழுமின் தொண்டீர்காள்
என்றும் இரவும் பகலும் வரி வண்டு இசை பாடக்
குன்றின் முல்லை மன்றிடை நாறும் குறுங்குடியே —9-6-9-

கரையாய் காக்கைப் பிள்ளாய்
கருமா முகில் போல் நிறத்தன்
உரையார் தொல் புகழ் உத்தமனை வரக்
கரையாய் காக்கைப் பிள்ளாய் –10-10-2-

கூவாய் பூங்குயிலே
குளிர்மாரி தடுத்துகந்த
மாவாய் கீண்ட மணி வண்ணனை வரக்
கூவாய் பூங்குயிலே —10-10-3-

கொட்டாய் பல்லிக் குட்டி
குடமாடி உலகளந்த
மட்டார் பூங்குழல் மாதவனை வரக்
கொட்டாய் பல்லிக் குட்டி—10-10-4-

சொல்லாய் பைங்கிளியே
சுடராழி வலனுயர்த்த
மல்லார் தோள் வட வேங்கடவனை வரச்
சொல்லாய் பைங்கிளியே –10-10-5-

கோழி கூவென்னுமால்
தோழி நான் என் செய்கேன்
ஆழி வண்ணர் வரும் பொழுதாயிற்றுக்
கோழி கூவென்னுமால் –10-10-6-

தேனோடு வண்டாலும் திருமால் இருஞ்சோலை
தானிடமாக்கிக் கொண்டான் தட மலர்க் கண்ணிக்காய்
ஆன் விடை ஏழ் அன்று அடர்த்தார்க்கு ஆளானார் அல்லாத
மானிடவர் அல்லர் என்று என் மனத்தே வைத்தேனே –11-7-9-

——

காவியை வென்ற கண்ணார் கலவியே கருதி நாளும்
பாவியேனாக எண்ணி அதனுள்ளே பழுத்து ஒழிந்தேன்
தூவி சேர் அன்னம் மன்னும் சூழ் புனல் குடந்தையானை
பாவியேன் பாவியாது பாவியேன் ஆயினேனே –திருக் குறும் தாண்டகம் –14-

————

முளைக் கதிரைக் குறும் குடியுள் முகிலை
மூவா மூ வுலகும் கடந்து அப்பால் முதலாய் நின்ற
அளப்பரிய ஆராமுதை யரங்கமேய யந்தணனை
யந்தணர் தம் சிந்தையானை
விளக்கொளியை மரகதத்தைத் திருத் தண் காவில்
வெக்காவில் திருமாலைப் பாடக் கேட்டு
வளர்த்ததனால் பயன் பெற்றேன் வருக வென்று
மடக்கிளியைக் கை கூப்பி வணங்கினாளே –திரு நெடும் தாண்டகம்–14-

தேமருவு பொழிலிடத்து மலர்ந்த போதைத்
தேனதனை வாய் மடுத்து உன் பெடையும் நீயும்
பூ மருவி யினிதமர்ந்து பொறியிலார்ந்த
அறுகால சிறுவண்டே தொழுதேன் உன்னை
ஆ மருவி நிரை மேய்த்த யமரர் கோமான்
அணியழுந்தூர் நின்றானுக்கு இன்றே சென்று
நீ மருவி அஞ்சாதே நின்றோர் மாது
நின்னயந்தாள் என்று இறையே இயம்பிக் காணே -26-

செங்கால மட நாராய் இன்றே சென்று
திருக் கண்ணபுரம் புக்கு என் செங்கண் மாலுக்கு
என் காதல் என் துணைவர்க்கு உரைத்தி யாகில்
இது வொப்பது எமக்கு இன்பம் இல்லை நாளும்
பைம் கானம் ஈதெல்லாம் உனதே யாகப்
பழன மீன் கவர்ந்து உண்ணத் தருவன் தந்தால்
இங்கே வந்து இனிது இருந்து உன் பெடையும் நீயும்
இரு நிலத்தில் இனிது இன்பம் எய்தலாமே–27-

———————————————————

ஊரும் வரியரவ மொண் குறவர் மால் யானை
பேர வெறிந்த பெரு மணியை காருடைய
மின்னென்று புற்றடையும் வேங்கடமே மேலசுரர்
எம்மென்னு மால திடம் ——முதல் திருவந்தாதி–38-

பெருவில் பகழிக் குறவர் கைச் செந்தீ
வெருவிப் புனந்துறந்த வேழம் இரு விசும்பில்
மீன் வீழக் கண்டஞ்சும் வேங்கடமே மேலசுரர்
கோன் வீழக் கண்டுகந்தான் குன்று —–40—

இடரார் படுவார் எழு நெஞ்சே வேழம்
தொடர்வான் கொடு முதலை சூழ்ந்த படமுடைய
பைந்நாகப் பள்ளியான் பாதமே கை தொழுதும்
கொய்ந்நாகப் பூம் போது கொண்டு —–78-

————————

தொடரெடுத்த மால் யானை சூழ் கயம் புக்கு அஞ்சி
படரெடுத்த பைங்கமலம் கொண்டு -அன்று இடர் அடுக்க
ஆழியான் பாதம் பணிந்து அன்றே வானவர் கோன்
பாழி தான் எய்திற்றுப பண்டு—–இரண்டாம் திருவந்தாதி–13-

போதறிந்து வானரங்கள் பூஞ்சுனை புக்கு ஆங்கு அலர்ந்த
போதரிந்து கொண்டேத்தும் போது உள்ளம் -போது
மணி வேங்கடவன் மலரடிக்கே செல்ல
அணி வேங்கடவன் பேராய்ந்து-72-

ஆய்ந்து உரைப்பன் ஆயிரம் பேர் ஆதி நடு அந்திவாய்
வாய்ந்த மலர் தூவி வைகலும் -ஏய்ந்த
பிறை கோட்டுச் செங்கண் கரி விடுத்த பெம்மான்
இறைக்கு ஆட்பட துணிந்த யான் –73-

பெருகு மத வேழம் மாப்பிடிக்கு முன்னின்று
இரு கண் இள மூங்கில் வாங்கி -அருகிருந்த
தேன் கலந்து நீட்டும் திருவேங்கடம் கண்டீர்
வான் கலந்த வண்ணன் வரை-75-

———————-

வந்துதித்த வெண் திரைகள் செம்பவள வெண் முத்தம்
அந்தி விளக்காம் மணி விளக்காம் -எந்தை
ஒரு வல்லித் தாமரையாள் ஒன்றிய சீர் மார்வன்
திருவல்லிக் கேணியான் சென்று -மூன்றாம் திருவந்தாதி —-16–

விரும்பி விண் மண்ணளந்த அஞ்சிறைய வண்டார்
சுரும்புதுளையில் சென்றூத -அரும்பும்
புனந்துழாய் மாலையான் பொன்னங்கழற்கே
மனந்துழாய் மாலாய் வரும் —23-

புரிந்து மத வேழம் மாப் பிடியோடூடித்
திரிந்து சினத்தால் பொருது -விரிந்த சீர்
வெண் கோட்டு முத்து உதிர்க்கும் வேங்கடமே மேலொரு நாள்
மண் கோட்டுக் கொண்டான் மலை ——–45-

தெளிந்த சிலா தலத்தின் மேலிருந்த மந்தி
அளிந்த கடுவனையே நோக்கி -விளங்கிய
வெண் மதியம் தா வென்னும் வேங்கடமே மேலோருநாள்
மண் மதியில் கொண்டுகந்தான் வாழ்வு ——-58-

குன்று ஒன்றினாய குற மகளிர் கோல்வளைக்கை
சென்று விளையாடும் திங்கழை போய் -வென்று
விளங்குமதி கோள் விடுக்கும் வேங்கடமே மேலை
இளங்குமரர் கோமான் இடம் —–72-

—————–

வைப்பன் மணி விளக்காம் மா மதியை மாலுக்கு என்று
எப்பொழுதும் கை நீட்டும் யானையை -எப்பாடும்
வேடு வளைக்கக் குறவர் வில் எடுக்கும் வேங்கடமே
நாடு வளைத்தாடுது மேல் நன்று -நான்முகன் திருவந்தாதி –46-

நன் மணி வண்ணனூர் ஆளியும் கோளரியும்
பொன் மணியும் முத்தமும் பூ மரமும் -பன் மணி நீர்
ஓடு பொருதுருளும் கானமும் வானரமும்
வேடுமுடை வேங்கடம் -47-

—————-

மாயோன் வட திருவேங்கட நாட வல்லிக் கொடிகாள்
நோயோ யுரைக்கிலும் கேட்கின்றிலீர் உரையீர் நுமது
வாயோ அதுவன்றி வல்வினையேனும் கிளியும் எள்கும்
ஆயோ ஆடும் தொண்டையோ அறையோ விதறிவரிதே—–திரு விருத்தம் -10-

அன்னம் செல்வீரும் வண்டானம் செல்வீரும் தொழுது இரந்தேன்
முன்னம் செல்வீர்கள் மறவேல்மினோ,கண்ணன் வைகுந்தனோடு
என் நெஞ்சினாரை கண்டால் என்னை சொல்லி அவர் இடை நீர்
இன்னும் செல்லீரோ இதுவோ தகவு என்று இசைமின்களே –30-

மேகங்களோ உரையீர் திருமால் திருமேனி யொக்கும்
யோகங்கள் உங்களுக்கு எவ்வாறு பெற்றீர் உயிர் அளிப்பான்
மாகங்கள் எல்லாம் திரிந்து நன்னீர் சுமந்து நுந்தம்
ஆகங்கள் நோவ வருந்துத்தவ மா மருள் பெற்றதே –32-

வீசும் சிறகால் பறத்தீர் விண்ணாடு நுங்கட்கு எளிது
பேசும்படி யன்ன பேசியும் போவது நெய் தொடு வுண்
டேசும்படி யன்ன செய்யும் எம்மீசர் விண்ணோர் பிரானார்
மாசின் மலரடிக் கீழ் எம்மை சேர்விக்கும் வண்டுகளே -54 –

வண்டுகளோ வம்மின் நீர்ப் பூ நிலப் பூ மரத்தில் ஒண் பூ
உண்டு களித் துழல் வீரக்கு ஓன்று உரைக்கியம் ஏனம் ஒன்றாய்
மண்டுகளாடி வைகுந்த மன்னாள் குழல்வாய் விரை போல்
விண்டுகள் வாரும் மலருளவோ நும்வியலிடத்தே–55-

—————————————————————–

அஞ்சிறைய மடநாராய்! அளியத்தாய்! நீயும் நின்
அஞ்சிறைய சேவலுமாய் ஆ ஆ என்று எனக்கு அருளி
வெஞ் சிறைப் புள் உயர்த்தாற்கு என் விடு தூதாய்ச் சென்றக்கால்
வன் சிறையில் அவன் வைக்கில் வைப்புண்டால் என் செயுமோ––திருவாய் மொழி –1-4-1-

என் செய்ய தாமரைக் கண் பெருமானார்க்கு என் தூதாய்
என் செய்யும் உரைத்தக்கால் இனக் குயில்காள்! நீரலிரே
முன் செய்த முழு வினையால் திருவடிக் கீழ்க் குற்றேவல்
முன் செய்ய முயலாதேன் அகல்வதுவோ விதியினமே?–1-4-2-

விதியினால் பெடை மணக்கும் மென்னடைய அன்னங்காள்!
மதியினால் குறள் மாணாய் உலகு இரந்த கள்வர்க்கு
மதியிலேன் வல்வினையே மாளாதோ என்று ஒருத்தி
மதி எல்லாம் உள் கலங்கி மயங்குமால் என்னீரே–1-4-3-

என் நீர்மை கண்டு இரங்கி இது தகாது என்னாத
என் நீல முகில் வண்ணர்க்கு என் சொல்லி யான் சொல்லுகேனோ
நன்னீர்மை இனி யவர் கண் தங்காது என் றொரு வாய் சொல்
நன்னீல மகன்றில்காள்! நல்குதிரோ நல்கீரோ?–1-4-4-

நல்கித்தான் காத்தளிக்கும் பொழில் ஏழும் வினையேற்கே
நல்கத்தான் ஆகாதோ நாரணனைக் கண்டக்கால்
மல்கு நீர்ப் புனல் படப்பை இரை தேர் வண் சிறு குருகே!
மல்கு நீர்க் கண்ணேற்கு ஓர் வாசகங் கொண்டருளாயே–1-4-5-

அருளாத நீர் அருளி அவர் ஆவி துவரா முன்
அருள் ஆழிப் புட் கடவீர் அவர் வீதி ஒரு நாள் என்று
அருள் ஆழி அம்மானைக் கண்டக்கால் இது சொல்லி
யருள் ஆழி வரி வண்டே! யாமும் என் பிழைத்தோமே–1-4-6-

என்பு இழை கோப்பது போலப் பனி வாடை ஈர்கின்ற
என் பிழையே நினைந் தருளி அருளாத திருமாலார்க்கு
என் பிழைத்தாள் திருவடியின் தகவினுக் கென்று ஒரு வாய் சொல்
என் பிழைக்கும் இளங்கிளியே! யான் வளர்த்த நீ யலையே?–1-4-7-

நீ யலையே சிறு பூவாய்! நெடுமாலார்க்கு என் தூதாய்
நோய் எனது நுவல் என்ன நுவலாதே இருந்தொழிந்தாய்
சாயலொடு மணிமாமை தளர்ந்தேன் நான் இனி உன்து
வாய் அலகில் இன் அடிசில் வைப்பாரை நாடாயே–1-4-8-

வாயும் திரை உகளும் கானல் மடநாராய்!
ஆயும் அமர் உலகும் துஞ்சிலும் நீ துஞ்சாயால்
நோயும் பயலைமையும் மீதூர எம்மே போல்
நீயும் திருமாலால் நெஞ்சம் கோட் பட்டாயே?–2-1-1-

கோட் பட்ட சிந்தையையாய்க் கூர் வாய அன்றிலே!
சேட் பட்ட யாமங்கள் சேராது இரங்குதியால்
ஆட் பட்ட எம்மே போல் நீயும் அரவணையான்
தாட் பட்ட தண் துழாய்த் தாமம் காமுற்றாயே?–2-1-2-

கிறி என நினைமின் கீழ்மை செய்யாதே
உறி அமர் வெண்ணெய் உண்டவன் கோயில்
மறி யொடு பிணை சேர் மாலிருஞ் சோலை
நெறி பட அதுவே நினைவது நலமே–2-10-6-

வழக்கு என நினைமின் வல் வினை மூழ்காது
அழக்கொடி அட்டான் அமர் பெருங் கோயில்
மழக் களிற்று இனம் சேர் மாலிருஞ் சோலை
தொழக் கருதுவதே துணிவது சூதே–2-10-9-

மழுங்காத வைந்நுதிய சக்கர நல் வலத்தையாய்த்
தொழுங்காதல் களிறு அளிப்பான் புள் ஊர்ந்து தோன்றினையே!
மழுங்காத ஞானமே படையாக மலர் உலகில்
தொழும்பாயார்க்கு அளித்தால் உன் சுடர்ச்சோதி மறையாதே?–3-1-9-

வைகல் பூங்கழி வாய் வந்து மேயும் குருகினங்காள்!
செய் கொள் செந் நெல் உயர் திரு வண் வண்டூ ருறையும்
கை கொள் சக்கரத் தென் கனி வாய்ப் பெருமானைக் கண்டு
கைகள் கூப்பிச் சொல்லீர் வினையாட்டியேன் காதன்மையே–6-1-1-

காதல் மென் பெடையோடு உடன் மேயுங் கருநாராய்!
வேத வேள்வி ஒலி முழங்கும் தண் திரு வண் வண்டூர்
நாதன் ஞாலமெல்லாம் உண்ட நம் பெருமானைக் கண்டு
பாதம் கை தொழுது பணியீர் அடியேன் திறமே–6-1-2-

திறங்களாகி எங்கும் செய்களூடுழல் புள்ளினங்காள்!
சிறந்த செல்வ மல்கு திரு வண் வண்டூ ருறையும்
கறங்கு சக்கரக் கைக் கனி வாய்ப் பெருமானைக் கண்டு
இறங்கி நீர் தொழுது பணியீர் அடியேன் இடரே–6-1-3-

இடரில் போகம் மூழ்கி இணைந்தாடும் மட அன்னங்காள்?
விடலில் வேத ஒலி முழங்கும் தண் திரு வண் வண்டூர்
கடலின் மேனிப் பிரான் கண்ணனை நெடுமாலைக் கண்டு
உடலம் நைந்து ஒருத்தி உருகும் என்று உணர்த்துமினே–6-1-4-

உணர்த்தல் ஊடல் உணர்ந்து உடன் மேயும் மட வன்னங்காள்!
திணர்த்த வண்டல்கள் மேல் சங்கு சேரும் திரு வண் வண்டூர்
புணர்த்த பூந் தண் துழாய் முடி நம் பெருமானைக் கண்டு
புணர்த்த கையினராய் அடியேனுக்கும் போற்றுமினே–6-1-5-

போற்றி யான் இரந்தேன் புன்னை மேலுறை பூங் குயில்காள்!
சேற்றில் வாளை துள்ளும் திரு வண் வண்டூ ருறையும்
ஆற்றல் ஆழி யங்கை அமரர் பெருமானைக் கண்டு
மாற்றம் கொண் டருளீர் மையல் தீர்வதொரு வண்ணமே–6-1-6-

ஒரு வண்ணம் சென்று புக்கு எனக்கொன்றுரை; ஒண்கிளியே!
செரு ஒண் பூம் பொழில் சூழ் செக்கர் வேலைத் திருவண்வண்டூர்
கரு வண்ணம் செய்ய வாய் செய்ய கண் செய்ய கை செய்ய கால்
செரு ஒண் சக்கரம் சங்கு அடையாளம் திருந்தக் கண்டே–6-1-7-

திருந்தக் கண்டு எனக்கு ஒன்றுரையாய்; ஒண் சிறு பூவாய!
செருத்தி ஞாழல் மகிழ் புன்னை சூழ் தண் திருவண் வண்டூர்
பெருந் தண் தாமரைக் கண் பெரு நீண் முடி நாற்றடந்தோள்
கருந் திண் மா முகில் போல் திருமேனி அடிகளையே–6-1-8-

அடிகள் கை தொழுது, அலர் மேல் அசையும் அன்னங்காள்!
விடிவை சங்கொலிக்கும் திருவண் வண்டூ ருறையும்
கடிய மாயன் தனைக் கண்ணனை நெடுமாலைக் கண்டு
கொடிய வல் வினையேன் திறம் கூறுமின்; வேறு கொண்டே–6-1-9-

வேறு கொண்டு உம்மை யான் இரந்தேன்; வெறி வண்டினங்காள்!
தேறு நீர்ப் பம்பை வட பாலைத் திருவண் வண்டூர்
மாறில் போர் அரக்கன் மதிள் நீறு எழச் செற்றுகந்த
ஏறு சேவகனார்க்கு என்னையும் உளள் என்மின்களே–6-1-10-

நிழல் வெய்யில் சிறுமை பெருமை குறுமை நெடுமையுமாய்ச்
சுழல்வன நிற்பன மற்றுமாய் அவை அல்லனுமாய்
மழலை வாய் வண்டு வாழ் திருவிண்ணகர் மன்னு பிரான்
கழல்கள் அன்றி மற்றோர் களை கண் இலம்; காண்மின்களே–6-3-10-

பூவை பைங்கிளிகள் பந்து தூதை பூம்புட்டில்கள்
யாவையும் திருமால் திரு நாமங்களே கூவி எழும் என்
பாவை போய் இனித் தண் பழனத் திருக் கோளூர்க்கே
கோவைவாய் துடிப்ப மழைக் கண்ணொடு என் செய்யுங்கொலோ?–6-7-3-

பொன் னுல காளீரோ? புவனி முழு தாளீரோ?
நன்னலப் புள்ளினங்காள்! வினை யாட்டியேன் நான் இரந்தேன்
முன் னுலகங்க ளெல்லாம் படைத்த முகில் வண்ணன் கண்ணன்
என் னலங் கொண்ட பிரான் தனக்கு என் நிலைமை உரைத்தே–6-8-1-

மையமர் வாள் நெடுங்கண் மங்கைமார் முன்பு என் கை இருந்து
நெய்யமர் இன்னடிசில் நிச்சல் பாலொடு மேவீரோ?
கையமர் சக்கரத்து என் கனி வாய்ப் பெருமானைக் கண்டு
மெய்யமர் காதல் சொல்லிக் கிளி காள்! விரைந்தோடி வந்தே–6-8-2-

ஓடி வந்து என் குழல் மேல் ஒளி மா மலர் ஊதிரோ?
கூடிய வண்டினங்காள்! குரு நாடுடை ஐவர்கட்காய்
ஆடிய மா நெடுந் தேர்ப் படை நீறு எழச் செற்ற பிரான்
சூடிய தண் துளபம் உண்ட தூ மது வாய்கள் கொண்டே–6-8-3-

தூ மது வாய்கள் கொண்டு வந்து, என் முல்லைகள் மேல் தும்பிகாள்!
பூ மது உண்ணச் செல்லில் வினையேனைப் பொய் செய்தகன்ற
மா மது வார் தண் துழாய் முடி வானவர் கோனைக் கண்டு
தாம் இதுவோ தக்கவாறு என்ன வேண்டும் கண்டீர் நுங்கட்கே–6-8-4-

நுங்கட்கு யான் உரைக்கேன் வம்மின் யான் வளர்த்த கிளிகாள்!
வெங்கட் புள்ளூர்ந்து வந்து வினையேனை நெஞ்சம் கவர்ந்த
செங்கட் கருமுகிலைச் செய்ய வாய்ச் செழுங் கற்பகத்தை
எங்குச் சென்றாகிலும் கண்டு இதுவோ தக்கவாறு என்மினே!-6-8-5-

என் மின்னு நூல் மார்வன் என் கரும் பெருமான் என் கண்ணன்
தன் மன்னு நீள் கழல் மேல் தண் துழாய் நமக்கன்றி நல்கான்
கன்மின்கள் என்று உம்மை யான் கற்பியா வைத்த மாற்றம் சொல்லிச்
சென்மின்கள் தீ வினையேன் வளர்த்த சிறு பூவைகளே!–6-8-6-

பூவைகள் போல் நிறத்தன் புண்டரீகங்கள் போலும் கண்ணன்
யாவையும் யாவருமாய் நின்ற மாயன் என்னாழிப் பிரான்
மாவை வல் வாய பிளந்த மதுசூதற்கு என் மாற்றம் சொல்லிப்
பாவைகள்! தீர்க்கிற்றிரே வினையாட்டியேன் பாசறவே–6-8-7-

பாசற வெய்தி இன்னே வினையேன் எனை ஊழி நைவேன்?
ஆசறு தூவி வெள்ளைக் குருகே! அருள் செய்தொரு நாள்
மாசறு நீலச் சுடர் முடி வானவர் கோனைக் கண்டு
ஏசறும் நும்மை அல்லால் மறு நோக்கிலள் பேர்த்து மற்றே–6-8-8-

பேர்த்து மற்றோர் களை கண் வினையாட்டியேன் நான் ஒன்றிலேன்
நீர்த் திரை மேல் உலவி இரை தேரும் புதா இனங்காள்!
கார்த் திரள் மா முகில் போல் கண்ணன் விண்ணவர் கோனைக் கண்டு
வார்த்தைகள் கொண்டருளி யுரையீர் வைகல் வந்திருந்தே–6-8-9-

வந்திருந்து உம்முடைய மணிச் சேவலும் நீருமெல்லாம்
அந்தரம் ஒன்றுமின்றி அலர் மேல் அசையும் அன்னங்காள்!
என் திரு மார்வற்கு என்னை இன்னவா றிவள் காண்மின் என்று
மந்திரத் தொன் றுணர்த்தி உரையீர் மறு மாற்றங்களே–6-8-10-

அன்றி மற்று ஒன்று இலம் நின் சரணே என்று அகலிரும் பொய்கையின் வாய்
நின்று தன் நீள் கழல் ஏத்திய ஆனையின் நெஞ்சிடர் தீர்த்த பிரான்
சென்று அங்கு இனி துறைகின்ற செழும் பொழில் சூழ் திரு வாறன் விளை
ஒன்றி வலஞ்செய ஒன்றுமோ? தீ வினை உள்ளத்தின் சார் வல்லவே–7-10-8-

திருவருள் மூழ்கி வைகலும் செழு நீர் கண்ண பிரான்
திருவருள்களும் சேர்ந்தமைக்கு அடையாளம் திருந்த உள
திருவருள் அருளால் அவன் சென்று சேர் தண் திருப் புலியூர்
திருவருள் கமுகு ஒண் பழத்தது மெல்லியல் செவ்விதழே–8-9-6-

இன்னுயிர்ச் சேவலும் நீரும் கூவிக் கொண்டு இங்கு எத்தனை
என்னுயிர் நோவ மிழற்றேன்மின் குயில் பேடைகாள்
என்னுயிர்க் கண்ண பிரானை நீர் வரக் கூவ கிலீர்
என்னுயிர் கூவிக் கொடுப்பார்க்கும் இத்தனை வேண்டுமோ–9-5-1-

இத்தனை வேண்டுவது அன்று அந்தோ அன்றில் பேடைகாள்
எத்தனை நீரும் உன் சேவலும் கரைந்து ஏங்குதீர்
வித்தகன் கோவிந்தன் மெய்யன் அல்லன் ஒருவர்க்கும்
அத்தனை ஆம் இனி என் உயிர் அவன் கையதே–9-5-2-

அவன் கையதே என் ஆர் உயிர் அன்றில் பேடைகாள்
எவன் சொல்லி நீர் குடைந்து ஆடுதிர் புடை சூழவே
தவம் செய்தில்லா வினையாட்டியேன் உயிர் இங்கு உண்டோ
எவன் சொல்லி நிற்றும் நும் ஏங்கு கூக்குரல் கேட்டுமே–9-5-3-

கூக்குரல் கேட்டும் நம் கண்ணன் மாயன் வெளிப்படான்
மேற் கிளை கொள்ளேன் மின் நீரும் சேவலும் கோழி காள்
வாக்கும் மனமும் கருமமும் நமக்கு ஆங்கு அதே
ஆக்கையும் ஆவியும் அந்தரம் நின்று உழலுமே–9-5-4-

அந்தரம் நின்று உழல்கின்ற யானுடைப் பூவைகாள்
நும் திறத்து ஏதும் இடை இல்லை குழறேன்மினோ
இந்திர ஞாலங்கள் காட்டி இவ் ஏழ் உலகும் கொண்ட
நம் திரு மார்வன் நம் ஆவி உண்ண நன்கு எண்ணினான்–9-5-5-

நன்கு எண்ணி நான் வளர்த்த சிறு கிளிப் பைதலே
இன் குரல் நீ மிழற்றேல் என் ஆர் உயிர்க் காகுத்தன்
நின் செய்ய வாய் ஒக்கும் வாயன் கண்ணன் கை காலினன்
நின் பசுஞ்சாம நிறத்தன் கூட்டு உண்டு நீங்கினான்–9-5-6-

கூட்டுண்டு நீங்கிய கோலத் தாமரைக் கண் செவ்வாய்
வாட்டமில் என் கரு மாணிக்கம் கண்ணன் மாயன் போல்
கோட்டிய வில்லோடு மின்னும் மேகக் குழாங்கள் காள்
காட்டேன்மின் நும் உரு என் உயிர்க்கு அது காலனே–9-5-7-

உயிர்க்கு அது காலன் என்று உம்மை யான் இரந்தேற்கு நீர்
குயிற் பைதல் காள் கண்ணன் நாமமே குழறிக் கொன்றீர்
தயிர் பழம் சோற்றோடு பால் அடிசிலும் தந்து சொல்
பயிற்றிய நல் வளம் ஊட்டினீர் பண்பு உடையீரே –9-5-8-

பண்புடை வண்டொடு தும்பிகாள் பண் மிழற்றேன்மின்
புண்புரை வேல்கொடு குத்தால் ஒக்கும் நும் இன் குரல்
தண் பெரு நீர்த் தடம் தாமரை மலர்ந்தால் ஒக்கும்
கண் பெரும் கண்ணன் நம் ஆவி உண்டு எழ நண்ணினான்–9-5-9-

எழ நண்ணி நாமும் நம் வான நாடனோடு ஒன்றினோம்
பழன நல் நாரைக் குழாங்கள் காள் பயின்று என் இனி
இழை நல்ல ஆக்கையும் பையவே புயக்கு அற்றது
தழை நல்ல இன்பம் தலைப் பெய்து எங்கும் தழைக்கவே–9-5-10-

எம் கானல் அகம் கழிவாய் இரை தேர்ந்து இங்கு இனிது அமரும்
செங்கால மட நாராய் திரு மூழிக் களத்து உறையும்
கொங்கார் பூம் துழாய் முடி எம் குடக் கூத்தர்க்கு என் தூதாய்
நும் கால்கள் என் தலை மேல் கெழுமீரோ நுமரோடே—9-7-1-

நுமரோடும் பிரியாதே நீரும் நும் சேவலுமாய்
அமர் காதல் குருகினங்காள் அணி மூழிக் களத்து உறையும்
எமராலும் பழிப்புண்டு இங்கு என் தம்மா விழிப்புண்டு
தமரோடு அங்கு உறைவார்கு தக்கிலமே கேளீரே –-9-7-2-

தக்கிலமே கேளீர்கள் தடம் புனல் வாய் இரை தேரும்
கொக்கினங்காள் குருகினங்காள் குளிர் மூழிக் களத்து உறையும்
செக்கமலத்து அலர்போலும் கண் கை கால் செங்கனி வாய்
அக்கமலத்து இலைபோலும் திரு மேனி அடிகளுக்கே–9-7-3-

திருமேனி அடிகளுக்குத் தீ வினையேன் விடு தூதாய்
திரு மூழிக் களம் என்னும் செழு நகர் வாய் அணி முகில்காள்
திரு மேனி அவட்கு அருளீர் என்றக்கால் உம்மைத்தன்
திருமேனி ஒளி அகற்றித் தெளி விசும்பு கடியுமே–9-7-4-

தெளி விசும்பு கடித்து ஓடித் தீ வளைத்து மின் இலகும்
ஒளி முகில்காள் திரு மூழிக் களத்து உறையும் ஒண் சுடர்குத்
தெளிவிசும்பு திரு நாடாத் தீ வினையேன் மனத்து உறையும்
துளிவார்கள் குழலார்க்கு என் தூதுரைத்தல் செப்புமினே–9-7-5-

தூதுரைத்தல் செப்புமின்கள் தூ மொழி வாய் வண்டினங்காள்
போதிரைத்து மது நுகரும் பொழில் மூழிக் களத்து உறையும்
மாதரைத் தம் மார்பகத்தே வைத்தார்க்கு என் வாய் மாற்றம்
தூதுரைத்தல் செப்புதிரேல் சுடர் வளையும் கலையுமே–9-7-6-

சுடர் வளையும் கலையும் கொண்டு அரு வினையேன் தோள் துறந்த
படர் புகழான் திரு மூழிக் களத்து உறையும் பங்கயக் கண்
சுடர் பவள வாயனைக் கண்டு ஒரு நாள் ஒரு தூய் மாற்றம்
படர் பொழில் வாய்க் குறுகினங்காள் எனக்கு ஓன்று பணியீரே–9-7-7-

எனக்கு ஓன்று பணியீர்காள் இரும் பொழில் வாய் இரை தேர்ந்து
மனக்கு இன்பம் பட மேவும் வண்டினங்காள் தும்பிகாள்
கனக் கொள் திண் மதிள் புடை சூழ் திரு மூழிக் களத்து உறையும்
புனக் கொள் காயா மேனிப் பூந்துழாய் முடியார்க்கே–9-7-8-

பூந்துழாய் முடியார்க்கு பொன் ஆழிக் கையார்க்கு
ஏந்து நீர் இளங்குருகே திரு மூழிக் களத்தார்க்கு
ஏந்து பூண் முலை பயந்து என் இணை மலர்க் கண் நீர் ததும்ப
தாம் தம்மைக் கொண்டதனால் தகவன்று என்று உரையீரே–9-7-9-

தகவன்று என்று உரையீர்கள் தடம் புனல் வாய் இரை தேர்ந்து
மிக வின்பம் பட மேவும் மெல் நடைய அன்னங்காள்
மிக மேனி மெலிவு எய்தி மேகலையும் ஈடு அழிந்து என்
அகமேனி ஒழியாமே திரு மூழிக் களத்தார்க்கே–9-7-10-

வேய் மரு தோளிணை மெலியும் ஆலோ
மெலிவும் என் தனிமையும் யாதும் நோக்காக்
காமரு குயில்களும் கூவும் ஆலோ
கண மயில் அவை கலந்து ஆலும் ஆலோ
ஆ மருவு இன நிரை மேய்க்க நீ போக்கு
ஒரு பகல் ஆயிரம் ஊழி ஆலோ
தாமரைக் கண்கள் கொண்டு ஈர்தி ஆலோ
தகவிலை தகவிலையே நீ கண்ணா–10-3-1-

சூழ் விசும்பு அணி முகில் தூரியம் முழக்கின
ஆழ்கடல் அலைதிரைக் கை எடுத்து ஆடின
ஏழ் பொழிலும் வளம் ஏந்திய என் அப்பன்
வாழ் புகழ் நாரணன் தாமரைக் கண்டு உகந்தே ––10-9-1-

நாரணன் தாமரைக் கண்டு உகந்து நன்னீர் முகில்
பூரண பொற் குடம் பூரித்தது உயர் விண்ணில்
நீரணி கடல்கள் நின்றார்த்தன நெடுவரைத்
தோரணம் நிரைத்து எங்கும் தொழுதனர் உலகே–10-9-2-

————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ ஆழ்வார்கள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ ராமானுஜன் பத்ரிகையில் விருந்து -ஸ்ரீ காஞ்சி ஸ்வாமிகள் -ஸ்ரீ எம்பெருமானரும் ஸ்ரீ மா முனிகளும்-

December 1, 2019

ஸ்ரீ மா முனிகள் யதிவர புநர் அவதாரம் என்பது பிரசித்தம்
ஏராரும் எதிராசன் என யுதித்தான் வாழியே -நித்ய அனுசந்தானம்

1-வ்யாக்யாத கிரந்த தாநாத்
2-பரிவதந கதா கந்த வைதேசிகத்வாத்
3-நாநா சாஸ்த்ரார்த்த ப்ருந்த ப்ரசுர பணிதிபிஸ் பிராஞ்ஞ ஹ்ருத் ரஞ்சகத்வாத்
4-பூர்வாச்சார்ய யுக்தி ராகாத்
5-சடரிபு முநி ராட் ஸூக்தி சம்வர்த்தகத்வாத்
6-பீடாதி ச ப்ரதிஷ்டாபந க்ருதி கரணாத்
7-திவ்ய தேச அபிமாநாத்
8-பணி ராஜ அவதாரத்வாத்
9-ஸ்ரீ ரெங்க ஸ்ரீ விவர்த்த நாத்
யதீந்த்ர ப்ரவணஸ் சாஷாத் யதீந்த்ரோ பாஷ்ய க்ருத த்ருவம்

1-வ்யாக்யாத கிரந்த தாநாத் –
வியாக்கியானங்கள் அருளிச் செய்வதில் ஆர்வம்
வேர்காந்த தீப சாரங்கள் ஸ்ரீ பாஷ்யம் ஸ்ரீ கீதா பாஷ்யம் -வியாக்யானங்களும்
வேதார்த்த ஸங்க்ரஹம் கத்யத்ரயம் மூலம்
மா முலைகளின் வியாக்கியான கிரந்தங்கள் பிரசித்தம் யதிராஜா விம்சதி உபதேச ரத்னமாலை
ஆர்த்தி பிரபந்தம் திருவாய் மொழி நூற்று அந்தாதி மூலம்

2-பரிவதந கதா கந்த வைதேசிகத்வாத்-நிந்தையோ பரிகாசமோ
அணு அளவும் இல்லாமல்
பரம பவித்ரமான ஸ்ரீ ஸூக்திகள் இருவர் உடையவும்

3-நாநா சாஸ்த்ரார்த்த ப்ருந்த ப்ரசுர பணிதிபிஸ் பிராஞ்ஞ ஹ்ருத் ரஞ்சகத்வாத் —
தொட்ட இடங்கள் எல்லாம்
சாஸ்த்ரார்த்த திரள்களே மலிந்த ஸ்ரீ ஸூக்திகள் படிப்பவர் உள்ளத்தை உகப்பிக்குமே

4-பூர்வாச்சார்ய யுக்தி ராகாத் —
பகவத் போதாயந க்ருதாம் விஸ்தீர்ணாம் ப்ரஹ்ம ஸூத்ர வ்ருத்திம்
பூர்வாச்சார்யாஸ் சஞ்சிஷிபூ தந் மத அநு சாரேண ஸூத்ர அக்ஷராணி வ்யாக்யாஸ் யந்தே–என்று
தமக்கு உள்ள அபி நிவேசத்தை காட்டி அருளியது போலே
முன்னோர் மொழிந்த முறை தப்பாமல் கேட்டு என்றும்
முன்னவராம் நம் குரவர் மொழிகள் உள்ளப் பெற்றோம்
முழுதும் நமக்கு அவை பொழுது போக்காகப் பெற்றோம் -என்றும் அருளிச் செய்கிறார்
தம்முடைய வியாக்கியான கிரந்தங்களில் பூர்வர் ஸ்ரீ ஸூக்தி மயமாகவே அவதரிப்பித்து அருளுகிறார்

5-சடரிபு முநி ராட் ஸூக்தி சம்வர்த்தகத்வாத்–
மாறன் உரை செய்த தமிழ் மறை வளர்த்தோன் வாழியே
ஆய்ந்த பெரும் சீரார் சடகோபன் செந்தமிழ் வேதம் தரிக்கும் பெறாத உள்ளம் பெற —
ஏய்ந்த பெரும் கீர்த்தி ராமானுஜ முனி தன் வாய்ந்த மலர்ப்பாதம் வணங்குகின்றேன்
சேற்றுக் கமல வயல் சூழ் அரங்கர் தம் சீர் தலைப்பை
போற்றித் தொழு நல் அந்தணர் வாழ இந்த பூதலத்தே
மாற்றற்ற செம் பொன் மணவாள மா முனி வந்திலனேல்
ஆற்றில் கரைத்த புளி அல்லவோ தமிழ் ஆரணமே

6-பீடாதி ச ப்ரதிஷ்டாபந க்ருதி கரணாத்
ஸ்வாமி -74-சிம்ஹாசனாதிபதிகளை நியமித்து தரிசன நிர்வாகம்
லஷ்மி நாதாக்க்ய சிந்தவ் சடரிபுஜலத –இத்யாதி ஸ்லோக ரத்னம்
மா முனிகளும் திறமாக திக் கஜங்கள் இட்டு அருளும் பெருமாள் –
அஷ்ட திக் கஜச்சார்யர்களை நியமித்து தரிசன நிர்வாகம்

7-திவ்ய தேச அபிமாநாத்
மன்னிய தென் அரங்கா புரி மா மலை மற்றும் உவந்திடும் நாள்
ஸ்ரீ ரெங்கம் கரி சைலம் அஞ்சன கிரிம் தார்ஷ்யாத்ரி சிம்ஹாசலவ் —
சாளக்ராம கிரிம் நிஷேவ்ய ரமதே ராமாநுஜோயம் முநி -அபிமானம் காட்டி அருளியவர் ஸ்வாமி
ஸ்ரீ மா முனிகளும் -அடைவுடனே திருப்பதிகள் நடந்த வேர்வை ஆறவோ
மற்றும் ஸ்வாமி ஸ்ரீ திரு நாராயண புரத்துக்கு ஒரு நாயகமாய் பாசுரத்தையும்
ஸ்ரீ மா முனிகள் தீர்ப்பாரை யாம் இனி பாசுரத்தை ஸ்ரீ மன்னார் குடி ஸ்ரீ ராஜ மன்னார்
சந்நிதிக்கு சமர்ப்பித்து அபிமானம் காட்டி அருளியதும் உண்டே

8-பணி ராஜ அவதாரத்வாத்
இருவரும் சேஷ அவதாரம் ஸூ பிரசித்தம்

9-ஸ்ரீ ரெங்க ஸ்ரீ விவர்த்த நாத்
தென் அரங்கம் செல்வம் முற்றும் திருத்தி வைத்தான் வாழியே
அரங்க நகர் வாழ இன்னும் ஒரு நூற்று ஆண்டு இரும்
ஸ்ரீ ரெங்க ஸ்ரீ வளர்த்து அருளினவர்கள் அன்றோ

யதீந்த்ர ப்ரவணஸ் சாஷாத் யதீந்த்ரோ பாஷ்ய க்ருத த்ருவம்
இவற்றால் ஸ்ரீ யதீந்த்ர பிரவணர் சாஷாத் யதிராசரே என்றதாயிற்று

——————

தீ பக்த்யாதி குண ஆர்ணவம்
ஆதி -சப்தம் வைராக்கியத்தைச் சொல்லும்
பக்தி ஞான வைராக்யங்கள் ஆகிற முக்கடல்
நமோ சிந்தயாத் அத்புத அக்லிஷ்ட்ட ஞான வைராக்ய ராசயே நாதாய முநயே ஆகாத பகவத் பக்தி சிந்தவே –
பக்தியே ஞானத்தையும் வைராக்யத்தையும் வளர்க்கும்
பக்த்யா சாஸ்த்ராத் வேத்மி ஜனார்த்தனம்
மால் பால் மனம் சுழிப்ப மங்கையர் தோள் கை விட்டு
பரமாத்மநி யோ ரக்த விரக்தோ அபரமாத்மநி
மா முனிகளுக்கும் கடலுக்கும் உள்ள சாம்யம் பல உண்டே

1-சைலேந்திராத் யுஷீதா
2-மணீந்திர பரிதரே
3-சத்தாபச அந்தர்க்கதா
4-மத்ஸ்யாத்மா ஆஸ்ரித வர்க்க சேவித பத
5-காம்பீர்ய ஸீம்நி ஸ்திதா
6-காலுஷ் யஸ்ய கதா பிரசங்க ரஹிதா
7-வேலாந் அதீத
8-த்ருவ
சோயம் ஸுவ்ம்ய வ்யோபயந்த்ருயமிராட் சாஷாத் விபாசார்வை

1-சைலேந்திராத் யுஷீதா
மலைகளை சிறகுதான் பறக்க இந்திரன் வஜ்ராயுதத்தால் துணித்துக் கொண்டு வர
மலைகள் கடலுக்குள் ஒழிந்து கொண்டது பிரசித்தம்
மைனாக ஹனுமத் சம்வாதம் உண்டே
நீண்ட மலைகளும் மா மணியும் மலர் மேல் மங்கையும் சங்கமும் தங்குகின்ற
அலை கடல் போன்று இவர் அட்டபுயகரத்தானே
கடலுக்கும் கடல் வண்ணனுக்கும் சாம்யம்
எனவே கடலுக்கு சைலேந்திர அத் யுஷீதா—பொருந்தும் –கர்மணி ப்ரயுக்தம்
மா முனிகள் ஸ்ரீ சைலேசர் பக்கல் குருகுல வாசம் செய்து -சைலேந்திரம் அத் யுஷீதா–கர்த்தரி-ப்ரயுக்தம்

2-மணீந்திர பரிதரே
கடல் ரத்நாகாரம் -மணிகள் நிறைந்தவை
பணா மணி மண்டிதர் தானே திருவனந்த ஆழ்வானும் -அபார அவதாரம் தானே நம் மா முனிகளும்
முன்னவராம் நம் குரவர் மொழிகள் உள்ளப் பெற்றோம் –
பூர்வாச்சார்யர்களது ஸ்ரீ ஸூக்திகளாகிற ரத்தினங்கள் நிரம்பப் பெற்றவர்
ஸ்ரீ புராண ரத்னம் -ஸ்ரீ ஸ்தோத்ர ரத்னம் -ஸ்ரீ மந்த்ர ரத்னம் -இவற்றின்
பூர்ண அர்த்தங்கள் நிறைம்பப் பெற்றவர்

3-சத்தாபச அந்தர்க்கதா
சத்தாபச -முனி சிரேஷ்டர் -அகஸ்தியர் கடலைப் பருகியது பிரசித்தம்
இனி மா முனிகள் திறத்தில்
தபஸ் விசாரம் தைத்ரிய உபநிஷத் பண்ணும் இடத்தில்
சத்யம் இதி சத்ய வசாராதீத -தப இதி தபோ நித்யஸ் பவ்ருசிஷ்ட்டி–
ஸ்வாத்யாய ப்ரவசனே ஏவேதி நாகோ மவ்த்கல்ய –என்று ஸ்வாத்யாய ப்ரவசனங்கள் தபஸ் என்று
மவ்த்கல்ய பக்ஷமாகச் சொல்லி
தந்தி தபஸ் தந்தி தபஸ் -என்று வேத புருஷன் அத்தையே சித்தாந்தமாக அருளுகிறார்
தேஷாம் அந்தரக்கத -அப்படிப்பட்டவர்கள் உள்ளத்துக்குள்ளே உறைபவர் என்றும்
அப்படிப்பட்டவர் என்றும் மா முனிகள் உண்டே
பண்டு பல ஆரியரும் பார் உலகோர் உய்யப் பரிவுடனே பணித்து அருளும் பல கலைகள் தம்மைக் கண்டு
அது எல்லாம் எழுதி அவை கற்று உணர்ந்தும் பிறருக்கு காதலுடன் கற்பித்தும்
காலத்தைக் கழித்தேன்-என்று தாமே அருளிச் செய்கிறார்

4-மத்ஸ்யாத்மா ஆஸ்ரித வர்க்க சேவித பத
ஸ்ரீ மத்ஸ்ய மூர்த்தி -அவதார கந்தம் கடல் -ஆஸ்ரிதர் கூக்குரல் இடும் ஸ்தானம்
ஆச்சார்யன் செய்த உபகாரம் தூய்தாக நெஞ்சு தன்னில் தோன்றுமேல் –தேசாந்தரத்தில் இருக்க
மனம் தான் பொருந்த மாட்டாதே
ஆச்சார்யானை பிரிந்தால் அக்குளத்து மீன் போலே துடிக்குமவர்களான
அஷ்ட திக் கஜங்கள் -சிஷ்ய வர்க்க கூட்டங்களால் அடி பணியப் பெற்றவர்

5-காம்பீர்ய ஸீம்நி ஸ்திதா
சமுத்திர இவ காம்பீர்ய
ஆழ நெடும் கடல் சேர்ந்தான்
பாஷ்யஞ் சேத் வ்ய வ்ருணோத் ஸ்வயம் யதி பதிர் வ்யாக்யாயநவாசரம் தாத்தா காம்பீர்யாத்–ஸ்ரீ ஸூதர்சன பட்டர்
அந்த காம்பீர்யத்தையும் விஞ்சி அதிசயித்த காம்பீர்யத்தை உடையவர் மா முனிகள்
ஸூராஹாராசாரீ –யத் ஸூக்தி லஹரி கரீயஸ்தாம் ஸ்தோதும் பிரபவதி ந வாசஸ்பதிர் அபி —
ஸ்ரீ வரவர முனி சதகம் போன்றவை பறை சாற்றும்

6-காலுஷ் யஸ்ய கதா பிரசங்க ரஹிதா
கடல் கலங்க பிரசக்தியே இல்லை என்பது பிரசித்தம்
கலங்க முந்நீர் கடைந்து அமுதம் கொண்டு -என்றது ஓவ்பாதிகம்
மா முனிகளும்
செம் தமிழ் வேதியர் சிந்தை தெளிந்து சிறந்து மகிழ்ந்திடு நாள் –ஐப்பசியில் திரு மூலம் என்னும் நாளே
ரஹஸ்ய வியாக்யானங்களில் மா முனிகள் சர்ச்சித்து நிஷ்கர்ஷித்து அருளின அர்த்தங்களை தனிப்பட்ட ஏற்றம் உண்டே –

7-வேலாந் அதீத
கடல் கரையைக் கடக்காதே -ஆறு குளம் ஏரி போன்றவை அல்லவே
ராஜ்யஞ்ச தவ ரஷேயம் அஹம் வே லேவ சாகரம் –
மா முனிகளும்
முன்னோர் மொழிந்த முறை தப்பாமல் கேட்டுப் பின் ஓர்ந்து தாம் அவற்றைப் பேசுபவர்
பொய்யிலாத மணவாள மா முனி புந்தி வாழி

8-த்ருவ
எஞ்ஞான்றும் உள்ளது கடல் -உலகம் அழிந்தாலும் அழியாதது அன்றோ
பார் எல்லாம் நெடும் கடலே யான காலம் அடியார்கள் வாழ அரங்க நகர் வாழ —
கடல் சூழ்ந்த மண்ணுலகம் வாழ -மணவாள மா முனியே இன்னும் ஒரு நூற்று ஆண்டு இரும் என்னும்படி
கார் உள்ளளவும் கடல் நீர் உள்ளளவும் வேதம் உள்ளளவும் வேத கீதன் உள்ளளவும்
நித்ய ஸ்ரீர் நித்ய மங்களமாக விளங்கி இருப்பவர் அன்றோ –

ஸ்ரீ மதே ரம்யா ஜாமாத்ரு முநீந்த்ராய மஹாத்மநே
ஸ்ரீ ரெங்க வாசிநே பூயாத் நித்ய ஸ்ரீ நித்ய மங்களம்

———————————————————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ காஞ்சி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

ஸ்ரீ ராமானுஜன் பத்ரிகையில் விருந்து -ஸ்ரீ காஞ்சி ஸ்வாமிகள் -அரிய பெரிய விருந்து —

December 1, 2019

1-ஸ்ரீ பர ப்ரஹ்மமே ஆத்ம வைத்தியன் -ஆஞ்ஞா ரூபமாக சாஸ்திரங்களை முன்பே வெளியிட்டு அருளி உள்ளான்
2-மருத்துவனாய் நின்ற மா மணி வண்ணன்
வைத்தியோ நாராயண ஹரி
நிர்வாணம் பேஷஜம் பிஷக்
மருந்தும் பொருளும் அமுதமும் தானே
மருந்தே நாங்கள் போக மகிழ்ச்சிக்கு என்று பெரும் தேவர் பிதற்றும் பிரான்

3-நம்மாழ்வார் கை கால் முளைத்த மருந்தே வேண்டும் சுடர் ஆழி சங்கு ஏந்தி இருக்கும் மருந்தையே –
ஆர் மருந்து இனி ஆகுவர் -7-1-5-
பீதகவாடைப் பிரானார் பிரம குருவாக வந்தவரே -சம்சாரம் தீர்க்க மருந்து

4-எருத்துக் கொடி யுடையானும் இந்திரனும் பிரமனும்
மற்று ஒருத்தரும் இப்பிறவி என்னும் நோய்க்கு மருந்து அறிவாரும் இல்லை
மருத்துவனாய் நின்ற மா மணி வண்ணா மறு பிறவி தவிரத்
திருத்தி உன் கோயில் கடைப்புகப் பெய் திருமாலிருஞ்சோலை எந்தாய் –பெரியாழ்வார் -4-3-6-
அஞ்சேல் என்று கை கவியாய் -4-3-7-
போர்த்த பிறப்போடு நோயோடு மூப்பொடு இறப்பிவை பேர்த்துப் பெரும் துன்பம்
வேரற நீக்கித் தன் தாளிணைக் கீழ் சேர்த்து அவன் செய்யும் சேமத்தை எண்ணுவார் இல்லையே

5-மருந்தே இல்லாததொரு மஹா வியாதியே அஸூயை –பொறாமை

6-மருத்துவரும் -மருந்தும் வேண்டாதபடியான உபதேசம் –
தினம் இரண்டு -வாரம் இரண்டு -பக்ஷம் இரண்டு -மாசம் இரண்டு -ருது இரண்டு -அயனம் இரண்டு -வருஷம் இரண்டு
இடைப்பலகாரம் கடைப்பலகாரம் இல்லாமல் மந்த்ரம் ஓதின இரண்டு வேளை மட்டும் போஜனம் –
போஜனமும் நித்திரையும் இரண்டும் வியவஸ்திதமாக இருக்க வேண்டும்
வாரத்தில் இரண்டு நாளாவது கோயிலுக்குச் சென்று கைங்கர்யம்
பக்ஷம் இரண்டு என்றது வாரம் தோறும் எண்ணெய் தேய்த்துக் குளிப்பது
மாசம் இரண்டு என்றது ஏகாதசி தோறும் உபவாசம்
ருது இரண்டு மாதத்துக்கு ஒரு முறை திவ்ய தேச யாத்திரை
அயனம் இரண்டு -மூன்று மாதங்களுக்கு ஒரு முறை திருக்கோயில்களில் ததீயாராதனை சமர்ப்பித்தல்
சம்வத்சரம் இரண்டு -ஆறு மாதங்களுக்கு ஒரு முறை தீர்த்த யாத்திரை புண்ய நீராடுதல்

7-அஹங்காரம் அக்னி ஸ்பர்சம் போலே-நைச்யம் -அடியார்களுக்கும் பரஸ்பர நீச பாவம் -பாவிக்க வேண்டும்

8-சம்சர்க்கஜா தோஷ குணா பவந்தி–சேர் இடம் அறிந்து சேர் -ஸஹவாஸ தோஷம் தவிர்க்க வேண்டுமே

9-நீராட்டம் -ஸ்ரீ கிருஷ்ண சம்ச்லேஷம் -ஈஷா ப்ரஹ்ம ப்ரவிஷ்டோஸ்மி க்ரீஷ்மே சீதமிவ ஹ்ரதம்-சுனை நீராடல் –
விரக தாபம் -பகவத் அவகாஹமே தீர்க்கும்
தாமரை நீள் வாசத்தடம் போல் வருவானே
வல்லரக்கர் புக்கு அழுந்தத் தயரதன் பெற்ற மரகத மணித்தடம்
பிப நயன புரஸ்தே ரெங்க துர்யாபிதாநம் ஸ்திதமிவ பரி புல்லத் புண்டரீகம் தடாகம் –
காலை நன் ஞானத்துறை படிந்தாடிக் கண் போது செய்து
நான் அடிமை செய்ய விடாய் நானானேன் எம்பெருமான்
தான் அடிமை கொள்ள விடாய் தானானான் -ஆனதற்பின்
வெள்ளக்குளத்தே விடாய் இருவரும் தணிந்தோம்
உள்ளக்குளத்தெனை ஒத்து –பிள்ளைப்பெருமாள் ஐயங்கார் –
திரு வெள்ளக்குளம் ஊருக்கும் புஷ்கரணிக்கும் அவனுக்கும் பெயர் அண்ணன் கோயில்
ஹரி ஸரஸி விஹாகனமே நீராட்டம்

10-ஏக ஸ்வாது ந புஞ்ஜீத புஞ்ஜீத தசபிஸ் தஹ
ஆழியான் என்னும் மாழ மோழையில் -அகாத பிரவாகத்தில் அழுந்த பலரும் துணை வேண்டுமே
அடியார்கள் உடன் இருப்பதே பரம புருஷார்த்தம் அன்றோ

11-காயத்ரீம் சந்தஸாம் மாதா -தாயைக் குடல் விளக்கம் செய்வது-
குடல் -நடுப்பாகம் -அதாவது -பர்க்கோ தேவஸ்ய தீமஹீ -ப்ரஹ்ம வர்ச்சஸ்ஸூ அதிகரிக்கச் செய்வது
பெற்ற தாயினும் ஆயின செய்யும் திரு மந்த்ரமும் தாய் -தேவகியை விட தெய்வ நங்கை யசோதை எல்லாம் பெற்றாளே-
காயத்ரியை விட திருமந்த்ரத்துக்கு ஏற்றம் போலே
சந்தஸ்ஸாம் மாதாவாலும் அதுக்குத் தாயாய் தாயினுமாயின செய்யுமத்தாலும் பிறப்பிக்குமது இருவருக்கும் ஸ்ரேஷ்ட ஜென்மம்
அதுக்கு நடுப்பாகம் நமஸ்ஸூ -அத்தை விளக்கம் செய்வது –
ஸ்வரூப விரோதி உபாய விரோதி ப்ராப்ய விரோதி மூன்றும் கழிந்து உஜ்ஜவலமாக இருப்பதே
தாம பந்தம் தேஜஸ்கரமாய் இருப்பது போலே ஆச்சார்யர்களும் பத்த சம்சாரிகளுக்குள் கோவையாய் இருப்பது பகவத் இச்சையால் அன்றோ
ஆகவே ஆச்சார்யனே தாமோதரன் -அவரே நமது குடல் விளக்கம் செய்து -விரோதி த்ரயங்களையும் கழிக்க வைத்து அருள்கிறார்

12-லஷ்மீ நாதாக்க்ய சிந்தவ்-சடரிபூஜலத -ப்ராப்ய காருண்ய நீரம்
நாத அத்ரவ் அப்யஷிஞ்சத் -தத் அநு ரகுவராம்போஜ சஷுர்ஜ்ஜராப்யாம்
கத்வா தாம் யாமுனாக்க்யாம் சரிதம் அத யதீந்த்ராக்க்ய பத்மகரேந்த்ரம்
சம்பூர்ய பிராணிச சயே ப்ரவஹதி சததம் தேசிகேந்த்ர ப்ரமவ்கை

ஸ்ரீ நம்மாழ்வாரை -ஆழி மழைக்கண்ணா-என்று விளித்து–ஆச்சார்ய பரம்பரையில் பிராப்தமான அர்த்தங்களை
உள் புக்கு முகந்து கொண்டு தேவபிரானுடைய கரிய கோலத்திரு உருவை உள்ளே விளங்கும்படி காட்டி அருளி–
திரு ஆழி ஆழ்வானைப் போலே விரோதி நிராசனம் செய்து கொண்டும் –
ஸ்ரீ பாஞ்ச ஜன்ய ஆழ்வானைப் போலே கம்பீரமான மிடற்று ஓசையைக் காட்டிக் கொண்டு
ஸ்ரீ ஸூக்திகளைப் பெய்து உஜ்ஜீவிப்பிக்க பிரார்த்தனை

13-ஆழி மழைக் கண்ணா –ஆச்சார்ய ஸ்ரேஷ்டர்-மேகத்துக்கும் ஆச்சார்யருக்கும் ஒப்புமை
1–உப்புக்கடல் நீரை முகந்து மதுரமான மழை -நால் வேதக்கடலுள் அபோக்ய அர்த்தங்களைத் தள்ளி
திரு நா வீறு கொண்டு பரம போக்யமாக உபகரிப்பார்

2–உயிர் அளிப்பான் மாகங்கள் எல்லாம் திரிந்து -லோக ரக்ஷண அர்த்தமாக தெரியுமா போலே
பண்டிப்பெரும் பதியை யாக்கி பழி பாவம்
கொண்டிங்கு வாழ்வாரைக் கூறாதே எண்டிசையும்
பேர்த்த கர நான்குடையான் பேரோதிப் பேதைகாள்
தீர்த்த கரராமின் திரிந்து—இரண்டாம் திருவந்தாதி 14-

எண்டிசையும் பேர்த்த கர நான்குடையான் பேரோதிப் –
திருக்கைகள் எட்டுத் திக்கிலும் போய் வியாபித்து விம்ம வளர்ந்த படி –
திக்குகளானவை அழித்துப் பண்ண வேண்டும்படியாய் வந்து விழுந்தது ஆய்த்து
இப்படி ஜகத் ரஷண அர்த்தமாக திரு வுலகு அளந்து அருளினவனுடைய திரு நாமத்தைச் சொல்லி –
தீர்த்த கரராமின் திரிந்து-
ஜகத்துக்கு அடங்க ஸூபாவஹமாய்க் கொண்டு திரியுங்கோள் –
திரிதலால் தவமுடைத்து இத் தரணி தானே -பெருமாள் திருமொழி -10-5
தீதில் நன்னெறி காட்டி எங்கும் திரிந்து -பெருமாள் திருமொழி -2-6-
அவனாலும் செல்லாத -திருத்த முடியாத -நிலத்தை அவன் பேரைக் கொண்டு செலுத்திடு கோள்-
அவர்கள் தாங்களும் கெட்டு பிறரையும் கெடுக்குமா போலே இவர்கள் தாங்களும்
க்ருதார்த்தராய் நாட்டையும் க்ருதார்த்தம் ஆக்குகிறபடி –
யமோ வைவஸ்வதோ ராஜா யஸ்தவைவ ஹ்ருதி ஸ்தித தேந சேத விவாத ஸ்தே மா கங்காம் மா குரூன் க ம -மனு -8-92-
திரிந்து தீர்த்தக்காரர் ஆமின் –
உங்களுடைய சஞ்சாரத்தாலே லோகத்தை பாவனம் ஆக்குங்கோள்-
ஸ்ரீ பிள்ளானுக்கு மூத்த ஸ்ரீ தேவப்பிள்ளை ஸ்ரீ பட்டரைக் கண்டு -பந்துக்களான நீங்கள் இங்கே இருக்க
ஆர் முகத்திலே விழிக்க மேனாட்டுக்குப் போகிறேன் -என்று அழ –
ஸ்ரீ பட்டர் -த்ருணத்துக்கும் அகப்பட பரமபதம் கொடுத்த ஸ்ரீ சக்கரவர்த்தி திருமகனுக்கு பிள்ளைகளுக்கு -ஸ்ரீ குசலவர்களுக்கு –
ஸ்ரீ திரு நாடு கொடுக்கையில் அருமை இல்லை இறே
ஜகத்தை ரஷிப்பிக்கைக்கு அன்றோ பிள்ளைகளை வைத்துப் போயிற்று –
அப்படி அத்தேசத்துக்கு ஒருவர் இல்லையே -என்று அருளிச் செய்து அருளினார் –
ஸ்ரீ ரெங்கம் கரி சைலம் அஞ்சன கிரீம் –சாளக்கிராமம் நிஷேவ்ய ரமதே ராமாநுஜோயம் முனி —
ஆத்ம உஜ்ஜீவன அர்த்தமாக அர்த்தங்களைப் பொழிவர்

3–மேகம் மழை பெய்து பள்ளமான இடங்களையும் நிரப்புமா போலே நீசர்களையும் சத் உபதேசங்களால் உத்துங்கர் ஆக்குவார்கள்

4–எப்போதும் வர்ஷிக்காது -கால விசேஷங்களில் தானே -அதே போலே கால விசேஷங்களைக் குறித்துக் கொண்டு சத்விஷய உபதேசம்

5–பிராப்த காலத்தில் மழை இல்லாமல் பீடைகள் மலியுமா போலே சத் விஷய உபதேசங்களை அருளா விடில்
தேகாத்ம பிரமம் -ஸ்வ ஸ்வாதந்த்ர்ய பிரமம் -அந்ய சேஷத்வ பிரமம் -ஸ்வ ரக்ஷண ஸ்வ அந்வய யோக்யதா பிரமம் –
பாந்தவ ஆபாச லோலத்வம் -விஷயாந்தர சங்கம் போன்ற பீடைகள் மலியுமே

6–எவ்வளவு வர்ஷித்தாலும் திருப்தி அடையாது -கைமாறும் எதிர்பாராதே

7–சில காலத்தில் சில துளிகள் பெய்யும் -பின்பு போதும் போதும் என்னும்படி அபரிமிதமாய் வர்ஷிக்கும்
இவர்களும் சில காலம் மந்த்ர உபதேசமும் மற்றொரு காலத்தில் கால ஷேப கிரந்த பிரவசனம் மூலம்
சுருதி ஸ்ம்ருதி இதிஹாச புராண உபய வேதார்த்த ரஹஸ்ய சாரார்த்தங்களை அபரிமிதமாக பொழிந்து
இது என்ன அதிருஷ்ட்டி என்று வியப்புறச் செய்வர்கள்

8–சிப்பிக்களில் பெய்து முத்துக்களையும் உண்டாக்கும் -ஊஷரங்களில் வர்ஷித்து நிஷ் பலமாகவும் ஆகும்
இவர்கள் உபதேசத்தால் ஸ்ரீ வசன பூஷணம் உபதேச ரத்ன மாலை போன்ற ஆத்மாலங்கார ரத்னங்களுக்கு ஹேதுவாகும்
பலர் இடம் அநவதானத்தாலும் விஸ்மரணத்தாலும் அப்ரயோஜனம் ஆகின்றன

9–நதிகளில் கிணறுகளில் தடாகங்களில் பெய்து -தேக்கி பெருகி – சர்வ உஜ்ஜீவன ஹேது வாகும்

10–எத்தனையோ வான் மறந்த காலத்தும் பைம் கூழ்கள் மாய்த்து எழுந்த மா முகிலே பார்த்து இருக்கும் —
அநந்ய கதிகளால் உபகாரமாகவும் -குதூஹலத்தோடே எதிர்பார்க்கப்படும் இருக்கும்
நீர் காலத்து எருக்கிலம் பழ இலை போல் வீழ்வேனை -என்றபடி சாறுவாக மத நீறு பெய்து
சமணச் செடிக்கனல் கொளுத்தியே சாக்கியக்கடலை வற்றுவித்து மிகு சாங்கியக்கிரி முறித்திட –என்கிறபடி
அநர்த்த ஹேதுக்களாய் முடியும்
ஸத்பாத்ரங்களில் வர்ஷிக்கும் அர்த்த விசேஷங்கள் குரு பரம்பரையாக கிரஹித்து உஜ்ஜீவன ஹேது ஆகும்

11-நான்கு வேதங்களையும் நான்கு முகங்களாக நான்முகன் வெளியிட்டு அருளியது போலே
ஸ்ரீ நம்மாழ்வாரும் தாமான -73-பதிகங்கள் -தாய் 7-பதிகங்கள் -மகள்-17-பதிகங்கள் தோழி-3-பதிகங்கள்
போன்ற நான்கு முகங்களால் வெளியிட்டு அருளினார்

12-நான்கு நிலைகளிலும் மல்கு நீர் கண்ணராய்
என்று என்று ஏங்கி அழுதக்கால்
ஆகாசத்தை நோக்கி அழுவன் தொழுவனே–என்று தாமான தன்மையிலும்
கண்ணீர் மிகக் கலங்கி
கண்ணநீர் கைகளால் இறைக்கும் -என்று திருத்தாயார் பேச்சாலே தம்முடைய அழுகையையும்
எம்மாற்றாமை சொல்லி அழுவோமை
மல்கு நீர் கண்ணேற்கு–இத்யாதியால் தம் பேச்சாலும்
குவளை ஒண் மலர்க் கண்கள் நீர் மல்க
மழை பெய்தால் ஒக்கும் கண்ண நீரினொடு–இத்யாதிகளால் தோழி பேச்சாலும்
பகவத் விஸ்லேஷத்தாலே -இவரது அழுகை-
அழு நீர் துளும்ப இவர் அலமாப்பு அவர்களுக்கு புத்ர வியோகத்திலே

13-பக்தாம்ருதம் நமாம்யஹம் திராவிட வேத சாகரம் –ஸ்ரீமந் நாதமுனிகள் திருவாய் மொழியைக் கடலாகவும்
ஜியாத் பராங்குச பயோதி-என்று ஸ்ரீ கூரத்தாழ்வான் ஆழ்வாரைக் கடலாகவும் சாதிக்கிறார்கள்
வேதார்த்த ரத்ன நிதி பொதிந்து அன்றி இந்த இரண்டு கடல்களும்

13-எம்பெருமானுடைய ஸ்வாமித்வம் நமக்கு ஸ்வத்தைக் கொடுக்கும்
ஆத்மத்வம் சரீரத்தைக் கொடுக்கும்
சேஷத்வம் சேஷத்வத்தைக் கொடுக்கும்
புருஷோத்தமத்வம் ஸ்த்ரீத்வத்தைக் கொடுக்கும்

14-ஆழ்வார் திரு நகரியில் நித்ய திரு மஞ்சனம் ஆழ்வாருக்கு –
ஸ்ரீ அண்ணாவியார் -ஸ்ரீ மதுரகவி வம்சத்தார் -கட்டியம் சேவிப்பார்
திரு நக்ஷத்ரப்படி -27-நாள்களுக்கு நாலாயிரமும் உபதேசரத்னமாலை -திருவாய் மொழி நூற்று அந்தாதியும் உட்பட
திருச் செவி சாத்தி அருளுகிறார் –
அரையர் தொடக்கமும் சாற்றும் தேவ கானத்தில் சாதிக்கிறார்
பிரசாத லப்த பரம ப்ராப்ய கைங்கர்ய சாலிநே-ஸ்ரீ திருவாய் மொழிப்பிள்ளை வம்சத்தவர் அனுபவித்து வரும்
கைங்கர்யத்துக்கு ஈடு எங்கும் இல்லையே

15-வையம் மன்னி வீற்று இருந்து விண்ணும் ஆழ்வார் மண்ணூடே -4-3-11-
இங்கு இருந்து கொண்டே ஸ்ரீ வைகுண்டம் இவர்கள் சிறு முறிப் படி
ஆண்மின்கள் வணக்கம் என்று அங்கு சென்று ஆளுவது இன்றிக்கே
ஆழ்வார் திரு முன்பே இங்கேயே -ஊற்றின் கண் நுண் மணல் போல் உருகா நிற்பார் நீராயே–
ஒன்பதோடு ஒன்றுக்கும் மூவுலகும் உருகுமே –
தாங்களும் உருகி கேட்ப்பாரையும் உருகச் செய்வது விண் ஆள்வதுக்கும் மேற்பட்ட ஓன்று அன்றோ
திருவாய் மொழியையே ஓவாத ஊணாக உண்டு கொண்டு இருப்பவர்கள் அன்றோ –
சதா பஸ்யந்திக்கு மேற்பட்ட நிலை அன்றோ
தொடர்க்கு அமுது உண்ணச் சொன்ன சொல்மாலைகள் அன்றோ -பக்தாம்ருதம் அன்றோ

16-திருக்குறுங்குடிப் பதிகம் -5-5-வானமாமலைப் பதிகம் -5-7-இடையிலே -5-6-கடல் ஞாலம் செய்தெனும் யானே என்னும்
இப்படி பலகால் பத்தும் பத்தாக யானே என்னும் யானே என்னும் –
நாமே வந்து உமக்கு புதல்வராகப் பிறப்போம் என்று திருவாய் சோதி அருளிச் செய்தத்தை ஸூசிப்ப்பிக்கவே
அரு வினையேன் நெடும் காலமும் கண்ணன் நீள் மலர்ப்பாதம் பரவிப்பெற்ற தொடும் கால் ஓசியும் இடை –திரு விருத்தம்

17-கூஹித ஸ்வ மஹிமாபி ஸூந்தர த்வம் வ்ரஜே கிமிதி சக்ரம் ஆக்ரமீ
சப்த ராத்ர மததாச்ச கிம் கிரிம் ப்ருச்ச தச்ச ஸூஹ்ருத கிம் அக்ருத -ஸ்ரீ ஸூந்தர பாஹு ஸ்தவம் –111-
இதில் மூன்றுகேள்விகள்
தேவதாந்த்ர சமாராதனையைத் தடுத்தது ஏன்-தான் வளருகின்ற ஊரில் தேவதாந்தரத்துக்கு ஆராதனை எதற்கு -விடை-
இந்திரன் பொறுக்க ஒண்ணாத தீங்கை விளைக்க அவனை தலை எரித்து
பொகடாமல் ஏழு நாள்கள் மலையைக் குடையாக எடுத்தது ஏன்
அவன் உணவைக் கொண்ட நாம் உயிரையும் கொள்ள வேணுமோ -மழையே ரக்ஷகம் என்ற வார்த்தையை மெய்ப்பிக்க வேணுமே
ஆந்ரு சம்சயம் கொண்டாடி அவன் கை சலித்தவாறே தானே ஓய்ந்து நிற்கிறான் என்று அன்றோ செய்தாய்
மூன்றாவது கேள்வி ஆயர்கள் கேட்டதற்கு சீற்றம் கொண்டது பரத்வத்திலே வெறுப்புக் கொண்டு
மனுஷ்ய சஜாதீயனாய் -அதிலும் கடை கேட்ட இடையனாய் ஆசையுடன் பிறந்து இருக்க வேறாக சங்கித்து கேட்டது –
தேவத்வமும் நிந்தையானவனுக்கு –என்றபடி நிந்தா ரூபமாக தோற்றுகையாலே சீற்றம் கொண்டான்
ஆக மூன்று கேள்விகளாலும் சமாதானங்களாலும் விலக்ஷண குண அனுபவம் செய்து அருளினார்-

18-மச் சித்தா மத் கத ப்ராணா போதயந்த பரஸ்பரம்.–
கதயந்தஷ்ச மாம் நித்யம் துஷ்யந்தி ச ரமந்தி ச৷৷10.9৷৷

துஷ்யந்தி ச ரமந்தி ச
வக்தாரஸ் தத் வசநேந அநந்ய ப்ரயோஜநேந துஷ்யந்தி
ஸ்ரோதாரச் ச தத் ஸ்ரவணேந அநவதிக அதிசய ப்ரியேண ரமந்திதே –ஸ்ரீ கீதா பாஷ்யம்
என்னையே சிந்தனம் -பிராணன் போலே -பிரிந்தால் தரிக்க மாட்டார்களே -பரஸ்பரம் திவ்ய குண சேஷ்டிதங்களை பேசி —
பேசும் கேட்க்கும் இரண்டு வர்க்க ஹர்ஷங்கள்-பெற்று இருப்பார்கள் –
உன் செய்கை என்னை நைவிக்கும் -அது இது உது எல்லாம் —
பிராணனை அவன் இடம் -தாரகம் என்று உணர்ந்து -மனஸ் நெஞ்சு அவன் இடம் முழுவதும் –
சென்னிக்கு அணியும் சேறு -அடியார் -ஆஹ்லாத சீத நேத்ராம்பு –

மச்சித்தா முதல்-10 பாசுரம் திரு நெடும் தாண்டகம்
மத்கதப்ராணா-அடுத்த பத்தும் –
போதயந்த பரஸ்பரம்-இறுதி பத்தும் –
கொடுக்க- கொள்ள- குறையாத அவன் குணங்கள் -ஞானம் மட்டும் பகிர்ந்து கொண்டால் பெருகும் குறையாது –

தெரித்து எழுத்து வாசித்துக் கேட்டும் வணங்கி வழிபட்டும் பூசித்தும் போக்கினேன் போது –
இந்த ஸ்லோகத்தை ஆதி ஒற்றி அமைந்தது
வைக்கும் சிந்தையிலும் பெரிதோ நீ அளிக்கும் வைகுந்தம் –

19-அஹிம்ஸா ஸமதா துஷ்டிஸ்தபோ தாநம் யஷோயஷ—
பவந்தி பாவா பூதாநாம் மத்த ஏவ பரிதக்விதா—–৷৷10.5৷৷

சமதா–ஆத்மநி ஸூஹ்ருத் ஸூ விபஷேஷு ச சமமதித்வம்–ஸ்ரீ கீதா பாஷ்யம்
ந சலதி நிஜ வர்ண தர்மதோ யஸ் சம மதிர் ஆத்ம ஸூஹ்ருத் விபஷ பஷே நஹரதி ந ச ஹந்தி
கிஞ்சி துச்சைஸ் சித மனசம் தமவேஹ விஷ்ணு பக்தம்–ஸ்ரீ விஷ்ணு பிராண ஸ்லோகம் -3-7-20–
சம மதிர் ஆத்ம ஸூஹ்ருத் விபஷ பஷே –இதி பகவத் பராசர வசனம் இஹ தத்தத் பதைஸ் ஸ்மாரிதம் –ஸ்ரீ தாத்பர்ய சந்திரிகை

சமதா -ஒன்றாக நினைப்பது -நமக்கு வந்தால் போலே பிறருக்கு வந்தால் சுக துக்கம் படுவது என்பது இல்லை –
ஒன்றை தொலைக்கவே முடியாதே -நஷ்டம் வரும் பொழுதும் வருத்தப் படாமல் சுகம் வந்தாலும் இன்பப் படாமல் –
இவை நமக்கும் பிறருக்கும் -என்றபடி –
இப்படி இருப்பதே சமதா –
துஷ்டி-ஸந்தோஷம் / தபஸ் / தனம் யசஸ் / அயசஸ் -ஜீவ ராசிகளுக்கு இவன் சங்கல்பத்தாலே ஏற்படும் –
புரியும் பொழுதே பக்தி விதைக்கப் பட்டதாகும் –
நின்றனர் இருந்தனர் –நின்றிலர் இருந்திலர் இத்யாதி

20-சதுர்த்தச வித்யா பாரங்கதர்கள்–நான்கு வேதங்கள் ஆறு அங்கங்கள் எட்டு உப அங்கங்கள்
நான்கோடு கூடிய பத்து என்று கொள்ளாமல் –
சதஸ்ரோ தசாஸ் யாசாம் தாஸ் வித்யாஸ் சதுர்த்தச வித்யாஸ்-நான்கு அவஸ்தையுள்ள வித்யைகள்
வாசித்து-குரு முகமாக கேட்பது -உணர்ந்து அறிந்து -தானும் அனுஷ்ட்டித்து பிறரையும் அனுஷ்ட்டிக்கச் செய்வது

21-சீர்த் தொடை ஆயிரம் –பகவத் குணங்களால் தொடுத்த திருவாய் மொழி —
சீர் கலந்த சொல் நினைந்து போக்காரேல் சூழ் வினையின் ஆழ் துயரை என் நினைந்து போக்குவர் இப்போது
1-தெரித்து 2-எழுத்து 3-வாசித்துக் 4-கேட்டும் 5-வணங்கி 6-வழிபட்டும் 7-பூசித்தும் போக்கினேன் போது –இதில் ஏழு விதம்
போது போக்குகள் இருந்தாலும் அவை எல்லாம் குண அனுபவ ரூபமாகவும்
குண அனுபவம் பொங்கி வழிந்த செயல்களாகவுமே இருக்கும்

த்வாம் சீல ரூப சரிதை பரம ப்ரக்ருஷ்ட
சத்த் வேன சாத்த்விகதயா ப்ரபலைச்ச சாஸ்த்ரை
பரக்யாத தைவ பரமார்த்த விதாம் மதைச்ச
நைவாஸூர ப்ரக்ருதய ப்ரபவந்தி போத்தும்-ஸ்தோத்ர ரத்னம் -15-
இதில் ஆறும் -அதாவது –
1-சீலம் -2- ரூபம் –3-சரிதம் -4-பரம சாத்விக தன்மை -5-சாத்விக சாஸ்திரங்கள் -6-தத்வ வித்துக்களின் சித்தாந்தம்
எம்பெருமானைப் பற்றி அறியும் வழிகளில் ஆறு இங்கே அருளிச் செய்கிறார்
வேடன் வேடுவிச்சி குரங்கு இடைச்சிக்கள் முதலானோர் ஒரு நீராகக் கலந்த ஸுவ்சீல்யம்
பஹுஸ்யாம்-என்று சங்கல்பித்த சீர்மை
திவ்ய மங்கள விக்ரஹ வை லக்ஷண்யம்
வேத அபஹாராதி நிரசனாதிகள் -க்ரந்தவா நிகிய புனர் உதக்ரதி போன்ற சேஷ்டிதங்கள் –
ஆலிலை துயின்ற மற்றும் பல அதி மானுஷ சேஷ்டிதங்கள்
அப்ராக்ருத சுத்த சத்வமயத்வம் –
பரக்யாத தைவ பரமார்த்த விதாம் மதைச்ச–இதில் பரக்யாத-என்ற விசேஷணம் தைவத்துக்கும்
தைவ பரமார்த்த வித்துக்களுக்கும் –
நாராயண அநு வாக்கம் -ஸூ பால உபநிஷத் -அந்தர்யாமி பிராமணம் இத்யாதிகளில் பிரசித்தமான தைவத்தை
வியாசர் பராசர வால்மீகி மனு ஆஞ்ஞவல்கர் ஸுவ்நகர் ஆபஸ்தம்பர் ஆழ்வார்கள் போன்றவர்களை
பரமார்த்த வித்துக்கள் என்கிறார்
பாக்யசாலிகளே நன்கு அறிந்து உஜ்ஜீவிக்கிறார்கள் என்றதாயிற்று
மூடர்கள் இழந்தே போகிறார்களே என்று பரிதவிக்கிறார்

22-யத் கோ சஹஸ்ரம் அபஹந்தி தாமாம்சி பும்ஸாம் —
நாராணனோ வசதி யத்ரஸ் சங்கு சக்ர
யன் மண்டலம் ஸ்ருதிகதம் பிரணமந்தி விப்ரா
தஸ்மை நமோ வகுல பூஷண பாஸ்கராய –ஸ்ரீ மன் நாத முனிகள் –
நாள் கமழ் மகிழ் மாலை மார்பினன் மாறன் சடகோபன் -தாமே அருளிச் செய்கிறார்
யத் கோ சஹஸ்ரம் அபஹந்தி தாமாம்சி-
ஸூ ர்யனை – சஹஸ்ராம்சூ -சஹஸ்ர கிரண -சஹஸ்ர பானு
இங்கு கோ -சப்தம் கிரணங்களை வாக்குக்களையும் சொல்லும்
நாராணனோ வசதி யத்ரஸ் சங்கு சக்ர–
த்யேயஸ் சதா ஸவித்ரு மண்டல மத்ய வர்த்தீ நாராயணஸ் சரசீ ஜாஸன சந்நிவிஷ்ட கேயூரவான்
மகர குண்டலவான் க்ரீடி ஹாரீ ஹிரண்மய வபுர் த்ருத சங்கு சக்ர –
இங்கும் கண்கள் சிவந்து பெரியவாய் -வாயும் சிவந்து கனிந்து உள்ளே வெண் பல் இலகு
மகர குண்டலத்தன் கொண்டல் வண்ணன் சுடர் முடியன் நான்கு தோளன் குனி சார்ங்கன்
ஒண் சங்கதை வாள் ஆழியான் ஒருவன் அடியேன் உளானே
யன் மண்டலம் ஸ்ருதிகதம் பிரணமந்தி விப்ரா
ஸூர்ய பக்ஷத்தில் ஸ்ருதி -வேதம் / மண்டலம் -வட்டம்
ஆழ்வார் பக்ஷத்தில் -ஸ்ருதி -காது / மண்டலம் -தேசம்
குருகூர் சடகோபன் வார்த்தை செவியில் பட்டதும் அஞ்சலி
ஜாதி விப்ரர் மட்டும் இல்லாமல் ந சூத்ரா பகவந் பக்தா விப்ரா பாகவதாஸ் ஸ்ம்ருதா-என்று
பாகவத உத்தமர்களை சொன்னவாறு
ஆக மூன்று பாதங்களால் சாம்யத்தை உபபாதித்து
தஸ்மை நமோ வகுல பூஷண பாஸ்கராய–என்று தலைக்கட்டிற்று

33-சேமம் குருகையோ செய்ய திருப்பாற் கடலோ
நாமம் பராங்குசமோ நாரணமோ
தாமம் துளவமோ வகுளமோ
தோள் இரண்டோ நான்கு உளவோ பெருமான் உனக்கு

34-நமஸ்தே ஹஸ்தி சைலேச -ஸ்ரீ மந் அம்புஜ லோசன-
சரணம் த்வாம் ப்ரபந்நோஸ்மி ப்ரணதார்த்தி ஹர அச்யுத–ஸ்ரீ திருக்கச்சி நம்பி –
ஸ்ரீ தேவ ராஜ அஷ்டகத்தில் முதல் ஸ்லோகம் -பரத்வாதி பஞ்ச பிரகாரங்களும்
வின் மீது இருப்பாய் மலை மேல் நிற்பாய் கடல் சேர்ப்பாய் மண் மீது உழல்வாய்
இவற்றுள் எங்கும் மறைந்து உறைவாய்-போலே இங்கும்
ஹஸ்தி சைலேச -அர்ச்சாவதாரம்
ஸ்ரீ மந் –பரத்வம் –
வைகுண்டே து பரே லோகே ஸ்ரீயா சார்த்தம் ஜகத் பதி ஆஸ்தே விஷ்ணுர் சிந்த்யாத்ம பக்தைர் பாகவதஸ் ஸஹ
ஒண் டொடியாள் திரு மகளும் நீயுமே நிலா நிற்பக் கண்டா சதிர் கண்டு ஒழிந்தேன்
அம்புஜ லோசன-விபவம்-சஷுஷா தவ ஸூவ்ம்யேந பூதாஸ்மி ரகு நந்தன -கிமர்த்தம் புண்டரீகாக்ஷ –
அவயவ ஸுவ்ந்தர்யம் அர்ச்சையிலே அன்றோ என்னில்-பெருக்காறு போலே விபவம் அதிலே தேங்கின மடுக்களே அர்ச்சை –
அவதார குணங்கள் எல்லாம் அர்ச்சா ஸ்தலங்களில் பரிபூரணம் –
அவதார விக்ரஹங்களை அர்ச்சா ரூபேண பல இடங்களிலும் பரிக்ரஹித்துக் கொண்டு இருக்கையாலும்
அதிலே தேங்கின மடுக்களே -என்கிறது
ப்ரணதார்த்தி ஹர–ஆஸ்ரித கூப்பாட்டைக் கேட்க்கும் இடம் அன்றோ வ்யூஹம்
அச்யுத-ஓர் இடத்தையும் விட்டு நழுவாதவர் -எங்ஙஞான்றும் எங்கும் ஒழிவில்லாமல் நிறைந்து நிற்கும் அந்தர்யாமி
ந வித்யதே குத்ராபி ஸ்யுதம் யஸ்ய ச -அச்யுத-வ்யுத்பத்தி

35-சேவா ச்வ வ்ருத்தி –பிறருக்கு உழைப்பது நாய் வேலை –
ஸ்வரூப ப்ரயுக்தம் –உரிய விஷய தொண்டு பழிக்கப்படாதது
ச்வ வ்ருத்தியை மாற்று ஸ்வ விருத்தியில் மூட்டுகிறார் மூன்றாம் பத்தில்
வேதார்த்த ஸங்க்ரஹத்தின் முடிவில் -ந நு ச அத்யந்த சேஷதைவ ஆத்மந அநவதிக அதிசயம் ஸூகம்
இதி யுக்தம் தத்தத்தைத் சர்வ லோக விருத்தம் –என்று தொடங்கி
சர்வம் பரவசம் துக்கம் -சேவா ச்வ வ்ருத்தி -இத்யாதிகளை உத்க்ஷேபித்து ஒருங்க விட்டு அருளி உள்ளார்
இதுவே -உகந்த விஷயத்தில் சேஷமாய் இருக்கும் இருப்பு ஸூகமாகக் காண்கிறோம் -முமுஷுப்படி
துஷ்யந்த சக்ரவர்த்தி கணவர் மஹரிஷியின் ஆஸ்ரமம் சென்று அங்கு சகுந்தலைக்கு அடிமை செய்தானே
ஸ்ரீ ப்ரஹ்லாதாழ்வான் -யா ப்ரீதிர் அவிவிவேகா நாம் விஷயேஷு அநபாயினீ த்வாம் அநு ஸ்மரதஸ்
ச மே ஹ்ருதயான் மாபஸர்ப்பது –என்று அவிவேகிகள் விஷயாந்தர ப்ரேமம் கொண்டது போலே
உன் விஷயத்தில் காதல் கொழுந்து விட்டு வளர வேணும் -என்கிறான்
தனத்தினால் செய்யும் கைங்கர்யத்தை விட உடலினால் செய்யும் கைங்கர்யமே உத்க்ருஷ்டம் –

வாழாட்பட்டு நின்றீர் உள்ளீரேல் வந்து மண்ணும் மணமும் கொண்மின் –
உத்சவங்களிலே உடலை சிரமப்பட்டு செய்யும் கைங்கர்யம் மண் கொள்ளுகை
இது இடையூறு இன்றி நடை பெற வேணும் என்று அபிமானிக்கை மனம் கொள்ளுகை –

ஏகஸ்மிந் நப் யதி க்ராந்தே முஹுர்த்தே த்யான வர்ஜிதே
தஸ்யுபிர் முஷிதேநேவ யுக்த மா க்ரந்திதும் ந்ருணாம் –என்று
ஒரு க்ஷணம் காலமும் வீணாகக் கழிந்தாலும் கள்ளர்கள் சர்வ சொத்தையும் கொள்ளை கொண்டால் போலே கதறி அழ வேணும்
த்யான வர்ஜிதே -எம்பெருமான் சிந்தனை இல்லாமல் –மானசீகமான சிந்தனை மட்டும் இல்லை –
தெரித்து எழுதி வாசித்துக் கேட்டும் வணங்கி வழி பட்டும் பூசித்தும் –இவற்றுக்கு எல்லாம் உப லக்ஷணம்

36-மறை பாற் கடலைத் திரு நாவின் மந்திரத்தால் கடைந்து
துறைப் பால் படுத்தித் தமிழ் ஆயிரத்தில் சுவை அமிர்தம்
கறைப் பாம்பணைப் பள்ளியான் அன்பர் ஈட்டம் களித்து அருந்த
நிறைப்பான் கழல் அன்றிச் ஜன்மம் விடாய்க்கு நிழல் இல்லையே –திருவரங்கக் கலம்பகம்

37-ஆழ்வார்கள் கண்ட அமுதர்- ஆராவமுதம்
சீரார் செந்நெல் கவரி வீசும் செழு நீர்த் திருக்குடந்தையில் ஆராவமுதை நம்மாழ்வார் கண்டார்
அடியேன் மேவி அமர்கின்ற அமுதே —திரு வேங்கடத்து எம்பெருமானே -நம்மாழ்வார்
எனக்குத் தேனே பாலே கன்னலே அமுதே திருமாலிருஞ்சோலைக் கோனே -நம்மாழ்வார்
ஆயர் கொழுந்தாய் அவரால் புடையுண்ணும் மாயப்பிரானை என் மாணிக்கச் சோதியை
தூய வமுதைப் பருகிப் பருகி என் மாயப் பிறவி மயர்வறுத்தேனே-நம்மாழ்வார்
வாராவருவாய் வருமென் மாயா மாயா மூர்த்தியாய் ஆராவமுதாய் அடியேனாவி அகமே தித்திப்பாய்
தண் திருவல்ல வாழ கன்னலம் கட்டி தன்னைக் கனியை இன்னமுதம் தன்னை
என்னலம் கொள் சுடரை என்று கொல் கண்கள் காண்பதுவே
தீர இரும்புண்ட நீரது போலே என்னாருயிரை
ஆரப் பருக எனக்கே ஆராவமுதானாயே
எனக்கு ஆராவமுதாய் எனதாவியை இன்னுயிரை
மனக்காராமை மன்னி யுண்டிட்டாய் இனி யுண்டு ஒழியாய்

கொண்டல் வண்ணன் கோவலனாய் வெண்ணெய் உண்ட வாயன் என் உள்ளம் கவர்ந்தான்
அண்டர் கோன் அணி அரங்கன் என் அமுது -என்கிறார் திருப்பாண் ஆழ்வார்
மன்னு குறுங்குடியாய் வெள்ளறையாய் மதிள் சூழ் சோலைமலைக்கு அரசே கண்ண புரத்து அமுதே –பெரியாழ்வார்
எழிலுடைய அம்மனைமீர் என் அரங்கத்தின் இன்னமுதர் குழல் அழகர் வாயழகர் கண்ணழகர் கொப்பூழில்
எழு கமலப் பூ வழகர் எம்மானார்–ஆண்டாள்
தாவி யன்று உலகம் எல்லாம் தலை விழாக் கொண்ட வெந்தாய் சேவியேன் உன்னை யல்லால் சிக்கெனச் செங்கண் மாலே
ஆவியே அமுதே–தொண்டர் அடிப் பொடி ஆழ்வார்

தென் குருகூர் நம்பி என்றக்கால் அண்ணிக்கும் அமுதூரும் என்னாவுக்கே –மதுரகவி ஆழ்வார்
நீரார் கடலும் நிலனும் முழுதுண்டு –சீரார் திருவேங்கட மா மலை மேய ஆராவமுதே
அடியேற்கு அருளாயே–திருமங்கை ஆழ்வார்
ஆதியை அமுதை என்னை யாளுடை யப்பனை ஒப்பவர் இல்லா மாதர்கள் வாழும் மாட மா மயிலைத்
திரு வல்லிக் கேணி கண்டேனே-திருமங்கை ஆழ்வார்
பாராயது உண்டு உமிழ்ந்த பவளத் தூணைப் படுகடலில் அமுதத்தைப் பரிவாய் கீண்ட சீரானை எம்மானை —
கண்டது நான் கடல் மல்லைத் தல சயனத்தே–திருமங்கை ஆழ்வார்
வேலை யாலிலைப் பள்ளி விரும்பிய பாலை யாரமுதத்தினைப் பைந்துழாய் மாலை ஆலியில்
கண்டு மகிழ்ந்து போய் ஞான முன்னியைக் காண்டும் நாங்கூரிலே – திருமங்கை ஆழ்வார்
மஞ்சுலா மணி மாடங்கள் சூழ் திரு வெள்ளறை யதன்மேய அஞ்சனம் புரையும் திருவுருவனை
ஆதியை அமுதத்தை -திருமங்கை ஆழ்வார்
முளைக் கதிரைக் குறுங்குடியுள் முகிலை மூவா மூ வுலகும் கடந்து அப்பால் முதலாய் நின்ற அளப்பரிய ஆரமுதை
அரங்கம் மேய அந்தணனை–திருமங்கை ஆழ்வார்

மருந்தும் பொருளும் அமுதமும் தானே
அன்பாவாய் ஆராமுதமாவாய் அடியேனுக்கு இன்பாவாய் எல்லாமும் நீ யாவாய்
திரு மெய்யத்து இன்னமுத வெள்ளத்தை இந்தளூர் அந்தணனை

நெறி தரும் செந்தமிழ் ஆரணமே என்று இந் நீணிலத்தோர்
அறிதற நின்ற இராமானுசன் எனக்காரமுதே
அடியார்க்கு அமுதம் இராமானுசன் என்னை யாள வந்து இப்
படியில் பிறந்தது மற்றில்லை காரணம் பார்த்திடிலே

37-மகன் ஒருவருக்கு அல்லாத மா மேனி மாயன் —காரணத்வமாகிற பெருமை கார்யத்வமாகிற சிறுமை யாயிற்றே
காப்பாறும் இல்லை கடல் வண்ணா யுன்னை -ரக்ஷகத்வத்துக்கு மாறான ரஷ்யத்வம் -ப்ரேம தசையில் தட்டுமாறிக் கிடக்குமே
முனி சார்தூல கிங்கரவ் –சேஷித்வம் சேஷத்வமானதே
கணி கண்ணன் போகின்றான் நீ கிடக்க வேண்டா பை நாகப்பாயைச் சுருட்டிக் கொள் —
போக்கு ஒழிந்தான் —விரித்துக் கொள் –நியாமகத்வம் மாறி நியாம்யத்வமாயிற்றே
ஸ்வ ஸ்வாமித்வத்தை மாறாடி அன்றோ அர்ச்சாவதாரம்
ஞாநீ து ஆத்மைவ மே மதம் –ஆத்மவத்துக்கு மாறான சரீரத்வம்
என்னில் முன்னம் பாரித்து என்னை முற்றும் பருகினான் -போக்யதைக்கு மாறான போக்த்ருத்வம்

38-இமான் லோகான் காமான்நீ காம ரூப்ய அநு ஸஞ்சரன்–தைத்ரியம்
ச ஸ்வராட் பவதி தஸ்ய சர்வேஷு லோகேஷு காமஸாரோ பவதி –சாந்தோக்யம்
மீட்சி இன்றி வைகுண்ட மா நகர் என்று இருக்க இவை பொருந்துமாறு எப்படி
கர்ம அநு குணமாக வருவது இல்லை -அவன் நியமனப்படி அவனைப் பின் தொடர்ந்து வரலாம்
காமான்நீ-இங்கு காம சப்தம் சோஸ்நுதே சர்வான் காமான் ஸஹ ப்ரஹ்மண விபச்சிதா -போலே
கல்யாண குண வாசகமாய் குண அனுபவத்தையே ஊணாகக் கொண்டவன் என்றபடி
காம ரூப்ய-ஸ்வ அபிமதமான உருவத்தை பரிக்ரஹித்தவன்
ஆஞ்ஞாம் அநு ஸ்ருத்ய ஸஞ்சரன் -என்றபடி

39-நால்வர் கூடி நால்வரைப் பெற்றது ஸ்ரீ ராம பாரத லஷ்மண சத்ருகனன் –
நால்வர் கூடி ஒருவரைப் பெற்றது ஸ்ரீ கிருஷ்ண ஆவிர்பாவம்
அறுவர் கூடி ஆயிரம் ஆயிரமாகப் பெற்றது ஞான பல ஐஸ்வர்ய வீர்ய சக்தி தேஜஸ்ஸூக்களே
அனந்த கல்யாண குண கணங்களுக்கு ஊற்றுவாய்
ப்ரவர குண ஷட்கம் பிரதமஜம் குணாநாம் நிஸ் ஸீம்நாம் கணந வி குணாநாம் பிரசவபூ–ஸ்ரீ வரதராஜ ஸ்தவம்

40-ஆதி கூறுதும் அனந்த்ரம் கூறுமின் அண்டம் என்மின் எந்தை பாடுதும் தீ யுடுத்து எந்நாள் கூறுதும் நெய்யும் அல்லும் கூறுவனே–
திருப்பல்லாண்டு முடிவுச் சொல்லை நினைவு கொள்ள இந்த பாடலும் சந்தையில் உள்ளது
ஆதி கூறுதும் முதன் முதலிலே ஆதி மூலப் பொருளைச் சொல்ல வேண்டும்
அனந்த்ரம் கூறுமின் -மீண்டும் அவன் திரு நாமத்தையே சொல்லுமின்
எந்தை பாடுதும் -இந்த அர்த்தங்கள் ஸ்பிரிக்கும்படி அருளிய எந்தையைப் பாடுமின்
தீ யுடுத்து எந்நாள் கூறுதும் –கூவிக்கொள்ளும் காலம் எந்நாள் என்போம்
நெய்யும் அல்லும் கூறுவனே–ஆத்மசமர்ப்பன ஹோமத்துக்கு நெய்யும் சக்தியும் அருள வேண்டும் என்பீர்

41-இஹ சந்தோ ந வா சந்தி சதோ வா நாநு வர்த்தசே ததாஹி விபரீதா தே புத்திர ஆசார வர்ஜிதா
இஹ சந்தோ ந வா சந்தி -ராவணா இங்கே சத்துக்களே இல்லையா -என்று சொல்ல வந்தவள்
அகம்பணன் மால்யவான் மாரீசன் விபீஷணன் போல்வாரது உபதேசம் உண்டே -நன்றாக உண்டே என்கிறாள்
சதோ வாநாநு வர்த்தசே —அவர்கள் இருப்பும் கார்யகரமாக வில்லையே –
நம்மாழ்வார் எம்பெருமானார் போல்வார் அல்லவே -சத்துக்களை அனுவர்த்தித்து அன்றோ உபதேசம் –
அந்தோ அது செய்ய மாட்டிற்று இல்லையே

41-கலியனும் கண்ணனும்
1–தத் அகில ஜகத் பத்ம போதாய அச்யுத பாநுநா தேவகீ பூர்வ ஸந்த்யாயாம் ஆவிர்ப்பூதம் மஹாத்மநா
கலயாமி கலித்வம்சம் கவிம் லோக திவாகரம் -இருவரும் ஸூர்யர்கள்
2–இருவர் அவதாரங்களும் முன்பே ஸூசகம் -அவன் கம்ச வதம் செய்ய வந்தவன் -இவர் கலி புருஷ வதம் செய்ய வந்தவர்
3–இருவர் களவும் பிரசித்தம்
4–இருவரும் கட்டுண்டு இருந்தவர்கள்
5–உய்யும் வகை உணர்த்திய சாம்யம்
அறிவினால் குறைவில்லா அகல் ஞாலத்தவர் அறிய நெறி எல்லாம் எடுத்து உரைத்த நிறை ஞானத்து ஒரு மூர்த்தி
அவன் ஸ்ரீ கீதா சாஸ்திரம் உபதேசித்து அருளினான்
நெஞ்சுக்கு இருள் கடி தீபம் அடங்கா நெடும் பிறவி நஞ்சுக்கு நல்லமுதம் தமிழ் நன்னூல் துறைகள்
அஞ்சுக்கு இலக்கியம் ஆரண சாரம் பரசமயப் பஞ்சுக்கனலின் பொறி பரகாலன் பனுவல்களே
6–தமக்கு ஏற்ற துணைவர்கள் இருவருக்கும் உண்டே
தன் நேர் ஆயிரம் பிள்ளைகள் உண்டு அவனுக்கு
நீர் மேல் நடப்பான் நிழலில் ஒதுங்குவான் தாளூதுவான் தோலா வழக்கன்–நால்வரும் உண்டே இவருக்கு
7–திரு நாம சாம்யம்
கண்ணன் என்னும் கரும் தெய்வம் அவன் -இவர் நீலன்
8–நீதி நெறி வழுவினமையில் சாம்யம்
நிச்சலும் தீமைகள் செய்வான் அவன்
நாகப்பட்டன புத்த விக்ரஹ விருத்தாந்தம்
9–விரோதி நிரசன சாம்யம்
பலர் குலைய நூற்றுவரும் பட்டு அழியச் செய்தான்
காட்டை நாடித் தேனுகனும் களிறும் புள்ளும் உடன் மடிய வேட்டையாடி வருவான்
அருள் மாரி அரட்ட முக்கி அடையார் சீயம்
ஒன்றலர் தங்களை வெல்லும் ஆடல் மா வலவன் கலிகன்றி
10–சரம அவதார சாம்யம்

42-எம்பெருமான் எங்கு இருக்கிறான் -இடங்களைப் பெயர்த்துக் கொண்டு எங்கே போனான் –
எம்பெருமானார் எங்கு எங்கு இருக்கிறார்
இருப்பிடம் வைகுந்தம் வேங்கடம் மாலிருஞ்சோலை
அவை தன்னோடும் வந்து இருப்பிடம் மாயன் இராமானுசன் மனத்து
இன்று அவன் வந்து இருப்பிடம் என் தன் இதயத்துள்ளே
இராமானுசன் என் குலக் கொழுந்து உணர்ந்த மெய் ஞானியர் யோகம் தொறும் திருவாய் மொழியின் மணம் தரும்
இன்னிசை மன்னும் இடம் தொறும் மா மலராள் புணர்ந்த போன் மார்பன் பொருந்தும் பதி தொறும் புக்கு நிற்பர்

நெஞ்சே பார்த்தாயா கேட்டாயா
கண்டாயே நெஞ்சே கருமங்கள் வாய்க்கின்று ஓர் எண் தானும் இன்றியே வந்து இயலுமாறு -என்று
முதல் பத்தில் பகவத் நிர்ஹேதுக கிருபைக்கு உகந்து
வாட்டாற்றான் அடி வணங்கி மா ஞாலப் பிறப்பு அறுப்பான் கேட்டாயே மட நெஞ்சே –என்று
பத்தாம் பத்தில் நாம் ஒன்றை அபேக்ஷிக்க அவன் பலவும் அபகரித்த பெருமை
இங்கு ஈட்டு ஸ்ரீ ஸூக்திகள் கல் நெஞ்சினைரையும் உருக்குமே

———————————————————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ காஞ்சி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்