Archive for December, 2019

பல திருக்கோயில் ப்ரஸித்த உத்சவங்கள் —

December 22, 2019

ஸ்ரீ மேல்கோட்டை அஷ்ட தீர்த்த உத்சவம்
ஸ்ரீ சாலை கிணறு உத்சவம்
ஸ்ரீ நம்பெருமாள் ஜீய புரம் புறப்பாடு —
ஸ்ரீ நம்பெருமாள் கைசிக உத்சவம் –
ஸ்ரீ வைகுண்ட ஏகாதசி மஹா உத்சவம் -ஸ்ரீ திருவல்லிக்கேணி திருக் கோலங்கள் விவரணம்
ஸ்ரீ நம்பெருமாள் அத்யயன ஸ்ரீ வைகுண்ட ஏகாதசி மஹா உத்சவம் -பெரிய திருநாள் உத்சவம் –
ஸ்ரீ ரதசப்தமி உத்சவம்–

————-

ஸ்ரீ மேல்கோட்டை அஷ்ட தீர்த்த உத்சவம்

கார்த்திகை தசமி ஸ்ரீ சடாரி எழுந்து அருளப்பண்ணி வேத கோஷத்துடன் வலம் வந்து அவபிரத தீர்த்தம்
தனுஷ்கோடி தீர்த்தம் -ஸ்ரீ ஸீதா ஸமேத ராமர்
வேத தீர்த்தம் –இங்கு தான் ஸந்யாஸ ஸ்வீகாரம் தத்தாத்ரேயர் முன்பும் பின்பு
ஸ்ரீ ராமானுஜர் தொடக்கமாக அனைத்து ஜீயர்களும் ஸந்யாஸ ஸ்வீ காரம்
யாதவா தீர்த்தம்
தர்ப்பை தீர்த்தம்
பலாச தீர்த்தம் -விசுவாமித்திரர் சாபம் தீர்ந்த இடம்
பத்ம தீர்த்தம் -சனத்குமாரர்
மைத்ரேய தீர்த்தம் -விஷ்ணு புராணம் -பராசரர் உபதேசம் இங்கு மைத்ரேயர்
நாராயண தீர்த்தம் – ஸ்ரீ வைகுண்ட கங்கா பிரவாகம் அருகில்

சப்த க்ஷேத்ரம் -கல்யாணி தீர்த்தம் சுற்றி ஸ்ரீ வராஹ க்ஷேத்ரம் இத்யாதி

———–

ஸ்ரீ சாலை கிணறு உத்சவம்

ஸ்ரீ காஞ்சிபுரத்தில் அத்யயன உத்சவம் இயற்பா சாத்து முறைக்கு அடுத்த நாள்
ஸ்ரீ தேவ பெருமாள் உபய நாச்சியார்களுடனும் ஸ்ரீ பாஷ்யகாரருடனும்
ஸ்ரீ சாலைக்கிணறு -அனுஷ்டான திருக்குளத்துக்கு எழுந்து அருளி உத்சவம் கண்டு அருளுகிறார்
ஆறு கிலோ மீட்டர் தூரம் உள்ளது

வருடந்தோறும் அத்யயன உற்சவத்தில் இயற்பா சாற்றுமறைக்கு மறுதினம் (தேசிகப்ரபந்தம் சாற்றுமறை தினத்தில்)
வரதன் சாலைக்கிணற்றுக்கு எழுந்தருளி அனுஷ்டான குள உத்ஸவம் கண்டருளுகிறான்.
அதவது கோவிலிலிருந்து பெருமாள், உபயநாச்சியார் ஸ்ரீபாஷ்யகாரருடன் மதியம் சுமார் பன்னிரெண்டு மணிக்கு
அனுஷ்டான குளம் எழுந்தருளுகிறான் வரதன். இவ்விடம் செவிலிமேடு எனும் க்ராமத்தில் அமைந்துள்ளது.
இங்கு ஒரு கிணறும், தூர்ந்துபோன அனுஷ்டான குளமும் அதன் எதிரில் ஸ்ரீபாஷ்யகாரர் சன்னதியும் அமைந்துள்ளது.
பெருமாள் இம்மண்டபத்திற்கு எழுந்தருளியவுடன் ஸ்ரீ பாஷ்யகாரர் சாலைக்கிணற்றுக்குச் சென்று தண்ணீர் கொண்டு வருகிறார்.
சாலைக்கிணற்றின் தண்ணீரால் (தீர்த்தத்தால்) பெருமாளுக்கு அத்யாச்சர்யமானதொரு திருமஞ்ஜனம் நடைபெறுகிறது.
பின்னர் பெருமாள் சார்ங்க தந்வாவாக (வில்லை சாற்றிக் கொண்டு வேடுவகோலத்துடன்) ஸ்ரீ பாஷ்யகாரருடன் தூப்புல் எழுந்தருளுகிறார்.

ஸ்ரீபாஷ்யகாரரின் திவ்ய சரித்ரத்தையும், தேவாதிராஜனின் திவ்ய சௌந்தர்யத்தையும், அபார கருணைதனையும்,
தேசிகோத்தமனின் ஆசார்ய பக்திதனையும் ஒன்றாக அனுபவித்திட வாய்த்திடும் உத்ஸவமிது.

—————–

பொன்னேரி -ஸ்ரீ கூரத்தாழ்வான் பொன் வட்டில் தூக்கி எறிந்த இடம்

ஸ்ரீ காஞ்சியில் இன்றும் ஒரே மேளம் தான் -ஒன்றை ஸ்ரீ ராமானுஜர் உடன் ஸ்ரீ ரெங்கத்துக்கு அனுப்பியதாகில் என்பர்

மாதுறு மயில் சேர் திரு மாலிருஞ்சோலை -ஸ்ரீ கூரத்தாழ்வானும் அவர் தேவிமாரான ஸ்ரீ ஆண்டாளும் சேர்ந்து
இந்த திவ்விய தேசத்தில் இருந்து மங்களாசானனம் பண்ணுவதை-ஸ்ரீ ஸூந்தராஜ ஸ்தவம் – ஸூசகம்
மயில் -துஷ்ட பாம்புகள் போல்வானை விரட்டி தொகை விரித்து -ஆனந்தம் வெளிப்படுத்துவது போலே
ஆச்சார்யர்கள் நமது அனிஷ்டங்களை நிவ்ருத்தி செய்து போத யந்த பரஸ்பரம் –
ஞான அனுஷ்டானம் -தோகைகளை விகசித்து -ஆனந்த வேகமாக விரித்து ஆடுவது போலே

—————-

ஸ்ரீ நம்பெருமாள் ஜீய புரம் புறப்பாடு —

பங்குனி மாதம் ஆதி பிரம்மோற்சவம் மூன்றாம் நாள் ஸ்ரீ நம்பெருமாள் ஜீய புரம் செல்வார்.
எதற்காக செல்கிறார்? ஒரு பக்தையின் குரலுக்கு ஓடி அங்கு அருள்பாலிக்க செல்கிறார்! அதனைப் பற்றிய தகவல்கள்:
ஸ்ரீ ரங்கராஜன் செல்லும் பாதை மொத்தம் 35 கிலோமீட்டர்
செல்லும் போது 20 கிலோ மீட்டரும் திரும்பி வரும்போது 15 கிலோமீட்டர்.
இந்த இந்தப் பாதையில் மேலூர், திருச்செந்தூரை, அம்மங்குடி மற்றும் அந்தநல்லூர் ஆகிய நான்கு கிராமங்களின்
மக்களுக்கு அருள்பாலித்து சென்று வருகிறார்.
இந்த 35 கிலோமீட்டர் பெருமாளை சுமந்து செல்லும் அடியார்கள் / தொண்டர்கள்

நேர்பட்ட நிறை மூவுலகுக்கும் நாயகன் தன்னடிமை
நேர்பட்ட தொண்டர் தொண்டர் தொண்டர் தொண்டன் சடகோபன் சொல்
நேர்பட்ட தமிழ்மாலை ஆயிரத்துள் இவைபத்தும்
நெடுமாற்கு அடிமை செய்யவே!!–திருவாய்மொழி (8-9-11): சாரமான கைங்கரியத்தை வாய்க்கப் பெற்றவர்கள்.

இவர்களுக்கு ஒரே ஒரு குறிக்கோள் தங்களுக்கு கைங்கரியம் கிட்ட வேண்டும் என்பதே!
நேர்பட்ட தொண்டர்(1) தொண்டர்(2) தொண்டர்(3) தொண்டன் சடகோபன்!!
தொண்டர்(1) – அரங்கனை தாங்கி செல்லும் அடியார்கள் (வேற்றாள்)
தொண்டர்(2) – அடியார்களுக்கு பாதை சரிசெய்து, உணவு வழங்கி, வாகனம் முதலான ஏற்பாடுகள் செய்து தருபவர்கள்
தொண்டர்(3) – பாதை வேலை செய்பவர்கள், சமையல் செய்பவர்கள், வேன் ஓட்டுனர்கள்
இந்த மூன்றாம் நிலை தொண்டர்(1) தொண்டர்(2) தொண்டருக்கு(3) தான் தொண்டன் என ஸ்ரீ நம்மாழ்வார் குறிப்பிடுகிறா

ஸ்ரீ திருவரங்கத்தில் இவர்களுக்கு சொல்லப்படும் பெயர் “வேற்றாள்” அதாவது கோவில் ஊழியர்கள் இல்லை.
சுமார் 150 பேர் இந்த முறை ஜீயபுரம் புறப்பாடு கைங்கரியத்திற்கு வந்திருந்தனர்
ஸ்ரீ திருவரங்கம் கோவிலில் இருந்து கிளம்பி பாதி வீதி வலம் வந்து வடக்கு வாசல் வழியாக மேலூர் கிராமம் சென்றடைவார் ஸ்ரீ அரங்கன்.
வழியில் சில உபயங்கள் கண்டருளி பின்னர், புன்னாக தீர்த்தம் அடைந்து அங்கு தீர்த்தவாரி கண்டு அருள்வார்.
இரவு 9 மணிக்கு கிளம்பிய ஸ்ரீ பெருமாள் மேல் ஊரை கடக்கும்போது 12 மணி ஆகிறது

அரங்கன் காவிரியில் இறங்கி மணலில் ஆனந்தமாக ஓடம் கேட்டு
(ஓடம் என்பது ஒருவிதமான காலத்தில் நாதஸ்வரம் தவில் மற்றும் கோவில் மேளம் ஒருசேர இசைக்கப்படும் முறை)
அடியார்கள் நடுவே சென்றார். அரங்கனுடன் பல பக்தர்களும் நடந்து வருவார்கள்.
இவர்கள் அரங்கனின் இந்த பயண அனுபவம் பெற வேண்டும் என்ற ஆசையுடன் ஒரு சேனை போல முன்னே செல்வார்கள்

ஸ்ரீ நம்பெருமாள் அதிகாலை 3 மணி அளவில் ஜீயபுரம் மண்டபம் அப்பம் அருகே 40 அடி உயரமான மேட்டில் ஒய்யாரமாக ஏறி
ஆஸ்தான மண்டபம் முன்னே சென்று சேர்ந்தார்
காலை 5.45 மணிக்கு அரங்கன் எதற்காக இந்த ஜீயபுரம் வந்தாரோ அந்த நிகழ்வு நடைபெற்றது.

ஜீயபரத்தில் ஒரு அம்மையார் வாழ்ந்து வந்தார். அந்த பாட்டி அரங்கன் மீது அளவுகடந்த பக்தி கொண்ட காரணத்தால்
தன் பேரனுக்கு ரங்கன் என பெயரிட்டாள்.
அந்த பேரனுக்கு தயிர் சாதமும், அரக்கீரை மற்றும் பாவக்காய் கலந்த சுண்டல் மிகவும் பிடிக்கும்.
ஒருமுறை அந்த பேரன் தான் முடிதிருத்தி பின்னர் காவிரியில் குளித்து வருகிறேன் என்றும்
பாட்டியை தனக்கு பிடித்த தயிர் சாதமும், அரக்கீரை மற்றும் பாவக்காய் கலந்த சுண்டல் செய்து வைக்கும் படி சொன்னான்.
அவன் காவிரியாற்றின் வேகத்தால் அடித்து செல்லப்பட்டான்.
பாட்டியும் தளிகை செய்து வைத்து காத்துக் கொண்டே இருக்க பேரன் வரவில்லை.
இதனால் “ரங்கா ரங்கா” என அழைத்துக்கொண்டு அரங்கனை வேண்டினால்.
அரங்கநாதன் இந்த பக்திக்கு அடிபணிந்தார்:கஜேந்திரனுக்கு சேவை அளித்த்து போல், திருப்பாணாழ்வாருக்கு சேவை அளித்தது போலும்
இந்த அம்மையாருக்கும் அவள் பேரனாக நேரே சென்று சேவை சாதிக்கின்றார்.
பாட்டியின் உணவை உண்டு அவள் மனதை குளிர்விக்க அருள் புரிகிறார்.
சற்று நேரம் கழிந்தது காவிரியில் குளித்த பேரன் திரும்ப அப்போது பாட்டிக்கு அரங்கநாதன் தான் வந்தது என்பது புரிந்து கொள்ள
பெருமாளிடம் சரணாகதி அடைந்தால்.
இந்த நிகழ்வை நடத்திக்காட்ட பெருமாள் இரண்டாம் திருநாள் கருட மண்டபத்தில் முடிதிருத்த்தும் விழா நடத்தப்படும்.
மூன்றாம் திருநாள் பெருமாள் ஜீயபுரம் சென்று
அம்மையார் தண்ணீர் பந்தலில் தயிர் சாதமும், அரக்கீரை மற்றும் பாவக்காய் கலந்த சுண்டல் பிரசாதம் அமுது செய்வார்.

அம்மையார் தண்ணீர்ப்பந்தல் – தயிர் சாதம், அரக்கீரை, பாகற்காய் மற்றும் மாங்காய் கலந்த பிரசாதம் அமுது செய்தார்
காலை 6 மணிக்கு புறப்பட்டு அருகே இருக்கும் திருச்செந்துரை, அம்மங்குடி, அந்தநல்லூர் ஆகிய பகுதிகளுக்கு சென்று
பல பக்தர்களுக்கு அருள்பாலித்தார். கடைசியாக 11 மணி அளவில் “பலாச தீர்த்தத்தில்” தீர்த்தவாரி கண்டருளி
ஆஸ்தான மண்டபம் சேர்த்தார். மொத்த தூரம் 20 கிலோமீட்டர்
பின்னர் பெருமாளை தாங்கி செல்லும் அடியார்கள் அனைவரும் அல்லூர் ஸ்ரீராம் ஏற்பாடு செய்திருந்த வாகனம் மூலம்
அருகே இருக்கும் கிராமத்தில் கல்யாண மண்டபத்திற்கு சென்றனர். அங்கு குளித்து, மதிய உணவு உண்டு,
சற்று இளைப்பாறி மீண்டும் மாலை 6 மணி புறப்பாட்டிற்கு வந்தனர்.
இந்த பக்தர்கள் அரங்கனுக்கு ஒரு மதில் போல வருவார்கள் எத்தனை காவலர்கள் வந்தாலும் பக்தர்கள் தான் அரங்கன் போல்.
மாலை 6 மணிக்கு கிளம்பிய பெருமாள் காவிரியில் இறங்கி மீண்டும் மணக்கரை கிராமத்தில் மேலே ஏறினார்.
மேலூர் கிராமத்தில் 5 உபயங்கள் முடித்து சற்றே மெதுவாக வடக்கு வாசல் வழியாக இரவு 11 மணிக்கு வந்து சேர்ந்தார்.

——————–

திருக்கண்ணங்குடி -8-நாள் விபூதி தரித்து ஸ்ரீ வைஷ்ணவர்கள் -ருத்ரனாக பெருமாள்
திருக்கண்ண மங்கை -பிரதக்ஷிணம் புத்தர் சிலை -இருக்கும்

—————

ஆடி ஸ்வாதி பக்ஷிராஜன்-திரு மஞ்சனம் -அம்ருத கலசம் பிரசாதம் ஆழ்வார் திருநகரி

கும்ப மேளா -12-வருஷம் ஒரு தடவை –அம்ருதம் சிந்திய இடம் -இடத்தை பொறுத்து
மஹா கும்ப மேளா-144-வருஷம் ஒரு தடவை -அர்த்த கும்ப மேளா -6-வருஷம்
புஷ்கரம் நதிக்கு முழுவதும் -கரைகளில் எல்லாம் கொண்டாட்டம்

————

வைகாசி ஆனி ஆடி மூன்று கருட சேவை ஸ்ரீ காஞ்சிபுரத்தில்

———-

மானஸ திருவாராதனம் -கோவை வாயாள்-திருவாய் மொழி

——————-

சாதுர் மாசம் -ஜீயர் நான்கு பக்ஷங்களுக்கு-கோயிலுக்கும் உண்டு -ஆகமம் -கைசிக உத்சவம் –
பனிக்காலம் தொடங்கும் உத்ஸான ஏகாதசி -ஆனி சுக்ல ஏகாதசை -ஐப்பசி சுக்ல பாஷ ஏகாதசி -சயனம்
ஆவணி மாத சுக்ல பாஷா ஏகாதசி பரிவர்த்தன ஏகாதசி -வலது பக்கம் திரும்பி -பவித்ர உத்சவம் அப்பொழுது தொடங்கும் –
கார்த்திகை சுக்ல பக்ஷ-ப்ரபோத ஏகாதசி -உத்தான ஏகாதசி -ஷீராப்தி நாத பூஜை -துளசி தேவியுடன் கல்யாணம் வடக்கே நடக்கும் இன்று
தசமி -சாயங்காலம் அங்குரார்ப்பணம் -திரு முளைச்சாத்து
ஏகாதசி காலை -திரு மஞ்சனம்
மாலை ஐந்து மணிக்கே உள்ளே எழுந்து -சீக்கிரம் -இரவில் பத்து மணிக்கே திருக்கதவு திறக்கும்
புறப்பாடு -கிளி மண்டபம் -பகல் பத்து மண்டபம் -துலுக்க நாச்சியாருக்கு ஒய்யார நடை சேவை சாதித்து -சிம்ஹாசனத்தில் எழுந்து அருளி
-360-பச்சை வடம் சாத்தி -தாம்பூலம் அடைக்காய் அமுது ஒவ் ஒன்றுக்கும் –
ஒவ் ஒன்றுக்கும் அருளப்பாடு -உண்டு
அடைக்காயிலும் பச்சை கற்பூரம் வைத்துள்ளார்
அரையர் ஸ்வாமி பட்டை அடித்து -கூப்பிட்டு -மாத்வ சம்ப்ரதாயம் -கோயில் மஹா ஜனத்துக்கு இந்த கைங்கர்யம்
ஸ்தலக்காரர் மணியக்காரர் கோயில் அண்ணன் பட்டர் ஸ்வாமி கூப்பிட்டு வர கைங்கர்யம் இவர்களுக்கு
அக்கும்–பக்கம் நிற்பார் திருக்குறுங்குடி -பத்தும் -முதல் பாசுர வியாக்யானம் அபிநயம் உண்டு -அரையர் சேவை

திரை சேர்த்து வடை பருப்பு சமர்ப்பித்து –
எங்கனேயோ -நம்மாழ்வார் -முதல் பாசுரம் -வியாக்யானமும் உண்டு
இவர் சேவையும் பச்சை வடமும் ஒரே சமயத்தில் நடக்கும்
பட்டர் கூப்பிட்டு
அழகிய மணவாளன் சந்நிதியில் காத்து -இருப்பார்
புராணம் -ஓலை சுவடி வைத்து இருப்பார் -ஸ்தானிகர் கையில் கொடுத்து -நம் பெருமாள் திருவடியில் சமர்ப்பித்து
இது காலை மூன்று மணி வரை நடக்கும்
கும்ப ஹாரம் -கட தீபம் காட்டுவார் -த்ருஷ்ட்டி வராமல் இருக்க –
கண்ணாடி அரைக்கு எழுந்து அருளி –
தொங்கு கபாய் குல்லாய் சாத்தி பட்டர்
நம் பெருமாள் -நீல நாயக கௌஸ்துபம் மட்டும் சாத்தி மற்றவை களைந்து நல்ல சேவை பட்டருக்கு –
இருவரும் மேலப்படி ஏறுவார்
விஜயநகர சொக்க நாதன் –
புஷபம் பச்சை கற்பூரம் தூவி
ஹாரத்தி காட்டி உள்ளே
மாலை களைந்து -பட்டருக்கு சமர்ப்பித்து
ஆர்ய பட்டர் வாசலில் ப்ரஹ்ம ரதம்-மரியாதை உடன் திரு மாளிகைக்கு –
வீதியாரப் புறப்பட்டு –பிராட்டி கூரத்தாழ்வான் இவர்களது பிரசாதம் வாங்கிச் செல்வர்
ஆகமத்தில் உள்ளவற்றையும் இந்த ஐதீகத்தையும் சேர்த்து உத்சவம்

——————-

திருவல்லிக்கேணி பகல் பத்து உத்சவம் – 27/12/2019 to 05/01//2020 – திருக்கோலங்கள் விவரணம்

முதல் நாள் – Dec 27 – வெள்ளிக்கிழமை –ஸ்ரீ வேங்கட கிருஷ்ணன் திருக்கோலம் –
இரண்டாம் நாள் – Dec 28 – சனிக்கிழமை – ஸ்ரீ வேணு கோபாலன் திருக்கோலம் –
மூன்றாம் நாள் – Dec 29 – ஞாயிறு ஸ்ரீ காளிங்க நர்த்தன திருக்கோலம்
நான்காம் நாள் – Dec 30 – திங்கள் – ஸ்ரீ சக்ரவர்த்தி திருமகன் திருக்கோலம் –
ஐந்தாம் நாள் – Dec 31 – செவ்வாய் – ஸ்ரீ ஏணிக் கண்ணன் திருக்கோலம் –
ஆறாம் நாள் – Jan 01- புதன் – ஸ்ரீ பரமபத நாதன் திருக்கோலம்
ஏழாம் நாள் Jan 02 – வியாழன் – ஸ்ரீ பகாஸூர வத திருக்கோலம்
எட்டாம் நாள் – Jan 03 – வெள்ளி– ஸ்ரீ ராம பட்டாபிஷேக திருக்கோலம்
ஒன்பதாம் நாள் – Jan 04 – சனி — ஸ்ரீ முரளி கண்ணன் திருக்கோலம்
பத்தாம் நாள் Jan 05 – ஞாயிறு – ஸ்ரீ நாச்சியார் திருக்கோலம்

பகல் பத்து சாத்து முறை

இராப்பத்து உத்சவம் — 06.01.20 – 15.01.20-

முதல் நாள் – Jan 06 – திங்கள் – ஸ்ரீ வைகுண்ட ஏகாதசி –
இரண்டாம் நாள் – Jan 07 -செவ்வாய் – ஸ்ரீ வேணு கோபாலன் திருக்கோலம் -ஸ்ரீ பவள விமானம்
ஆறாம் நாள் – Jan 11 – சனி – ஸ்ரீ திருவேங்கடமுடையான் திருக்கோலம்
ஏழாம் நாள் – Jan 12- ஞாயிறு – ஸ்ரீ பெருமாள் முத்தங்கி சேவை -நம்மாழ்வார் -பராங்குச நாயகி திருக்கோலம்
எட்டாம் நாள் – Jan 13 -திங்கள் -– ஸ்ரீ ராமானுஜர் திருக்கோலம்
ஒன்பதாம் நாள் – Jan 14- செவ்வாய் – ஸ்ரீ கோவர்த்தன கிரி தாரி திருக்கோலம் -போக்கி -திருக்கல்யாணம்
பத்தாம் நாள் – Jan 15 – புதன் – ஸ்ரீ நம்மாழ்வார் திருவடி தொழுதல் -ஸ்ரீ சங்கராந்தி -பொங்கல் திரு நாள்

இராப்பத்து சாத்துமுறை – Jan 16 – வியாழன் -ஸ்ரீ கூரத்தாழ்வான் வருஷ சாத்து முறை –

ஸ்ரீ ஆண்டாள் நீராட்டு உத்சவம் –– 06.01.20 to 14.01.20 –

————

ஸ்ரீ நம்பெருமாள் அத்யயன ஸ்ரீ வைகுண்ட ஏகாதசி மஹா உத்சவம் -பெரிய திருநாள் உத்சவம்

ஸ்ரீ நம்பெருமாள் ரத்னாங்கி சேவை -ஸ்ரீ வைகுண்ட ஏகாதசி அன்று

சப்த பிரகார மத்யே சரஜித முகுளோத் பாசமாநே விமாநே
காவேரீ மத்ய தேசே ம்ருதுதர பணிராட் போக பர்யங்கே பாகே
நித்ரா முத்ராபி ராமம் கடி நிகட ஸிரஸ் பார்ஸ்வ விந்யஸ்த ஹஸ்தம்
பத்மாதாத்ரீ கராப்யாம் பரிசத சரணம் ரங்கராஜன் பஜே அஹம்–ஸ்ரீ ரெங்க நாத ஸ்தோத்ரம் -ஸ்ரீ பராசர பட்டர்

திரு நெடும் தாண்டகத்தை தேவகானத்தில் திருமங்கை மன்னன் இசைத்துப் பாட
திரு உள்ளம் உகந்த பெரிய பெருமாள் வேண்டிய வரம் பெற்றுக் கொள்ள சாதிக்க –
திருவாய் மொழியை செவி சாதித்து அருள பிரார்த்திக்க –
திரு மங்கை மன்னன் அர்ச்சாரூபியான பராங்குசரை எழுந்து அருளப் பண்ணி
ஸ்ரீ வைகுண்ட ஏகாதசி தொடக்கமாக மஹா உத்சவம் தொடக்கம்

ஸ்ரீ மந் நாதமுனிகள் -மீண்டும் முன்பு போலே அத்யயன உத்சவம் நடத்த ஏற்பாடு செய்து அருளினார்
பகல் பத்து இராப்பத்து இயற்ப்பா ஒரு நாள் ஆக -21-நாள்கள் ஆனது –
ஸ்ரீ பட்டர் காலத்தில் முதல் நாள் திரு நெடும் தாண்டகம் உத்சவம் நடந்து -ஸ்ரீ ரெங்கத்தில் மட்டும் -22-நாள்கள்

திரு நெடும் தாண்டகம் –
கர்ப்ப க்ருஹத்தில் தொடக்கம்
சந்தனு மண்டபத்தில் -மின்னுருவாய் முன்னுருவில் பாசுர அபிநயம் -தம்பிரான்படி வியாக்யானம்

பகல் பத்து -திரு மொழித் திருநாள் -அர்ஜுனன் மண்டபம்

முதல் நாள் –
திருப்பல்லாண்டு பாசுரம் அபிநயம் வியாக்யானம் -பெரியாழ்வார் திருமொழி -190-பாசுரங்கள்

இரண்டாம் நாள் —
ஆற்றிலிருந்து -2-10-1–
தன்னேராயிரம் பிள்ளைகளோடு -3-1-1-பாசுரங்கள் -அபிநயம் -வியாக்யானம் –
பெரியாழ்வார் திருமொழி -230-பாசுரங்கள்

மூன்றாம் நாள் –
சென்னியோங்கு -5-4-1-பாசுரம் அபிநயம் வியாக்யானம் -திருப் பொலிந்த சேவடி -7-பாசுரம் வரை அபிநயம்
அரையர் ஸ்ரீ சடகோபம் சாதித்தல்
திருப்பாவை -மார்கழி திங்கள் பாசுரம் அபிநயம் வியாக்யானம்
நாச்சியார் திருமொழி -120-பாசுரங்கள்

நாலாம் நாள் –
கண்ணன் என்னும் கரும் தெய்வம் -13-1-
இருளிரியச் சுடர் மணிகள் -பெருமாள் திருமொழி -1-1-பாசுரங்கள் அபிநயம் வியாக்யானம்
பெருமாள் திருமொழி -திருச்சந்த விருத்தம் -பாசுரங்கள்
இரண்டாம் அரையர் சேவை -கம்ச வதம்

ஐந்தாம் திரு நாள் –
திருமாலை -காவலில் புலனை வைத்து முதல் பாசுரம் அபிநயம் வியாக்யானம்
அரங்கனார்க்கு ஆட் செய்யாதே -6-பாசுரம் அபிநயம் வியாக்யானம் –
திருமாலை -திருப்பள்ளி எழுச்சி -பாசுரங்கள்
அமலனாதி பிரான் முதல் பாசுரம் அபிநயம் வியாக்யானம் -பாசுரங்கள்

ஆறாம் நாள்
கண்ணி நுண் சிறுத் தாம்பு -முதல் பாசுரம்
வாடினேன் வாடி -பெரிய திரு மொழி முதல் பாசுரம் -அபிநயம் -வியாக்யானம்
பெரிய திருமொழி -250-பாசுரங்கள்

ஏழாம் திருநாள் –
தூ விரிய மலர் உழக்கி-3-6-1-பாசுரம் அபிநயம் வியாக்யானம்
பெரிய திருமொழி -210-பாசுரங்கள்
இரண்டாம் அரையர் சேவை -வாமன அவதாரம்

எட்டாம் திரு நாள்
பண்டை நான் மறையும் -பெரிய திருமொழி -5-7-1-பாசுரம் -அபிநயம் -வியாக்யானம்
பெரிய திருமொழி -250-பாசுரங்கள்
இரண்டாம் அரையர் சேவை -அம்ருத மதனம்

ஒன்பதாம் திருநாள் –
தெள்ளியீர் தேவர்க்கும் தேவர் திருத்தக்கீர் -பெரிய திரு மொழி -8-2-1-பாசுரம் -அபிநயம் -வியாக்யானம்
பெரிய திருமொழி -200-பாசுரங்கள்
இரண்டாம் அரையர் சேவை -முத்துக்குறி -வியாக்யானம்
மின்னுருவாய் பின்னுருவில் -திரு நெடும் தாண்டகம் -முதல் பாசுரம் -அபிநயம் -வியாக்யானம்
அரையர் தீர்த்தம் சடகோபர் சாதித்தல்

பத்தாம் நாள்
நம்பெருமாளுக்கு நாச்சியார் திருக்கோலம்
இரக்கமின்றி எங்கோன் செய்த தீமை–பெரிய திரு மொழி -10-2-1– அபிநயம் வியாக்யானம்
பெரிய திருமொழி -170-பாசுரங்கள்
திருக் குறும் தாண்டகம் -20-பாசுரங்கள்
திரு நெடும் தாண்டகம் -30-பாசுரங்கள்
இரண்டாம் அரையர் சேவை -இராவண வதம்
பெரிய திருமொழி சாற்றுமுறை
அரையர் தீர்த்தம் சடகோபன் சாதித்தல்
ஆழ்வார்கள் ஆச்சார்யர்கள் கருட மண்டபத்தில் நடை பெறும்

இராப்பத்து -திருவாய் மொழித் திரு நாள் திரு மா மணி மண்டபம் – ஆயிரம் கால் மண்டபம்

முதல் திரு நாள் -ஸ்ரீ வைகுண்ட ஏகாதசி -ஸ்ரீ நம் பெருமாள் ரத்னாங்கி சேவை –
ஸ்ரீ பெரிய பெருமாள் முத்தங்கி சேவை -இராப்பத்து முதல் ஏழு நாள்கள்
உயர்வற உயர்நலம் உடையவன் -திருவாய் மொழி பாசுரம் -அபிநயம் வியாக்யானம்
முதல் திருவாய் மொழி -100-பாசுரங்கள்

இரண்டாம் திருநாள் -கிளர் ஒளி இளமை -2-10-1- அபிநயம் வியாக்யானம் —
இரண்டாம் திருவாய் மொழி -100-பாசுரங்கள்

மூன்றாம் திரு நாள்
ஒழிவில் காலம் -3-3-1-அபிநயம் -வியாக்யானம்
மூன்றாம் திருவாய் மொழி -100-பாசுரங்கள்

நான்காம் திரு நாள்
ஒன்றும் தேவும் -4-10-1-அபிநயம் வியாக்யானம்
நான்காம் திருவாய் மொழி -100-பாசுரங்கள்

ஐந்தாம் திரு நாள்
ஆராவமுதே -5-8-1-அபிநயம் வியாக்யானம்
ஐந்தாம் திருவாய் மொழி -100-பாசுரங்கள்

ஆறாம் திரு நாள்
உலகம் உண்ட பெரு வாயா -6-10-1-அபிநயம் வியாக்யானம்
ஆறாம் திருவாய் மொழி -100-பாசுரங்கள்

ஏழாம் திரு நாள்
ஸ்ரீ நம் பெருமாள் திருக் கைத்தல சேவை
கங்குலும் பகலும் -7-2-1-அபிநயம் வியாக்யானம்
ஏழாம் திருவாய் மொழி -100-பாசுரங்கள்
ஹிரண்ய வதம்
அரையர் தீர்த்தம் சடகோபன் சாதித்தல்

எட்டாம் திரு நாள்
மாலை திரு மங்கை மன்னன் வேடுபறி-ஸ்ரீ நம் பெருமாள் குதிரை வாகனத்தில் வையாளி –
வாடினேன் வாடி பதிகம் -அரையர் சேவித்தல்
இரவில் நெடுமாற்கு அடிமை -8-10-1-அபிநயம் வியாக்யானம்
எட்டாம் திருவாய் மொழி -100-பாசுரங்கள்

ஒன்பதாம் திரு நாள்
மாலை நண்ணி -9-10 -1-அபிநயம் வியாக்யானம்
எட்டாம் திரு வாய் மொழி -100-பாசுரங்கள்

பத்தாம் திரு நாள்
ஸ்ரீ நம்மாழ்வார் மோக்ஷம் -திருவாய் மொழித் திரு நாள் சாற்று முறை –
காலை -தீர்த்தவாரி
இரவு -தாள தாமரை -10-10-1-அபிநயம் -வியாக்யானம்
பத்தாம் திருவாய் மொழி -100-பாசுரங்கள் –
திருவாய் மொழி சாற்று முறை

ஸ்ரீ நம்மாழ்வார் மோக்ஷம் -பதினொன்றாம் திரு நாள் அதிகாலை நடைபெறும்
அரையர் தீர்த்தம் ஸ்ரீ சடகோபம் சாதித்தல்
ஆழ்வார்கள் ஆச்சார்யர்கள் மரியாதை

பதினொன்றாம் திரு நாள்
இயற்பா சாற்று முறை –
இரவு கர்ப்ப க்ருஹத்தில் இயற்பா தொடக்கம்
சந்தன மண்டபத்தில் இயற்பா பாசுரங்கள் முழுவதும் அனுசந்தானம்
மறு நாள் அதிகாலை மூல ஸ்தானத்தில் இயற்பா சாற்றுமுறை
திருத்துழாய் தீர்த்த விநியோக கோஷ்டி

—————-

தேர் கடாக்ஷ உத்சவம் -வையாளி -குதிரை வாஹனம் ஏசல் தேர் பக்கம் நடைபெறும் –

ஸ்ரீ லஷ்மீ சரண லாச ஷாங்க ச சஷாஸ் ஸ்ரீ வத்ஸ வத்ஸஷே
சேஷ மங்கராய ஸர்வேஷாம் ஸ்ரீ ரெங்கேசாய மங்களம்

————————

ஸ்ரீ ரதசப்தமி உத்சவம்–

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ரதசப்தமி விழா கொண்டாடப்படுகிறது.
இங்கு ஏழு மலைகள் இருப்பதால் அவற்றை ஏழு குதிரை களாக பாவிக்கிறார்கள்.
திருமலையில் காலை 4.30 மணி முதல் 11.30 மணி வரை ஏழு வாகனங்களில் மலையப்பன் வலம் வருவார்.
பிரம்மோற்சவத்தின் போது ஏழுமலையான் தினமும் ஒவ்வொரு வாகனத்தில்தான் வலம் வருவார்.
ஆனால் ரத சப்தமியன்று ஒரே நேரத்தில் ஏழு வாகனங்களில் ஏழுமலையான் வலம் வருவதை அர்த்த பிரம்மோற்சவம் என்பார்கள்.
காலை 6 மணிக்கு சூரியப்பிரபை முதல் வாகன சேவையாகவும் அடுத்தடுத்து கருடன், ஹம்ஸம், யாளி, குதிரை, சிம்மம் சந்திரபிரபை
என்று வீதிவலத்தில் வெவ்வேறு வாகன சேவையும் சாதித்து கோயிலுக்குத் திரும்புவார்

‘ஓம் அஸ்வத் வஜாய வித்மஹே பத்ம ஹஸ்தாய தீமஹி தன்னோ, சூரிய பிரசோதயாத்’
என்ற சூரிய காயத்ரி மந்திரத்தை 108 தடவை சொல்லலாம்.

கீழ்காணும் துதியை ரதஸப்தமி தினத்தன்று பாராயணம் செய்யலாம்.

ஸப்த ஸப்திப்ரியே தேவி ஸப்த லோகைக பூஜிதே
ஸப்த ஜன்ம க்ருதம் பாபம் ஹர ஸப்தமி ஸத்வரம்
யத் யத் ஜன்மக்ருதம் பாபம் மயாஸப்தஸு ஜன்மஸு
தன்மே ரோகம் ச ஸோகம் ச மாகரீ ஹந்து ஸப்தமீ
நௌமி ஸப்தமி தேவி த்வாம் ஸப்த லோகைகமாதரம்
ஸப்தார்க்க பத்ர ஸ்னானேன மம பாபம் வ்யபோஹய!
ஸப்த ஸப்தி ரதாரூட ஸப்தலோக ப்ரகாஸக!
திவாகர! க்ருஹாணார்க்யம் ஸப்தம்யாம் ஜ்யோ திஷாம் பதே! திவாகராய நம:

—————-

கருடனின் மணைவியான கருடி எனப் பெயர்
நாகை அழகியார் கோவில் தாயாருக்கு பெண் கருட ( கருடி) வாஹனம் உண்டு
இந்த கருடி வாஹனத்தில் தாயார் பவனி வருவது சிறப்பு
பல கோவில்களில் தாயார் கோவிலை விட்டு வெளியே வரமாட்டார்.( படி தாண்டா பத்தினி என பெயர் உண்டு)
நாகை அழகியார் கோவிலில்
பெருமாள் கருட வாஹனத்திலும்-தாயார் கருடி வாஹனத்திலும்
ஜோடியாக வருவது கண் கொள்ளா காட்சியாகும்

————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

ஸ்ரீ திருப்பாவையில் – முதல் ஐந்து பாசுரங்கள்- உபன்யாசம் –ஸ்ரீ உ .வே . வேளுக்குடி ஸ்வாமிகள் / ஸ்ரீ உ .வே. வெங்கடேஷ் ஸ்வாமிகள்

December 18, 2019

இன்றோ திரு ஆடி பூரம் எமக்காக
அன்றோ இங்கு ஆண்டாள் அவதரித்தாள் –குன்றாத
வாழ்வான வைகுண்ட வான் போகம் தன்னை இகழ்ந்து
ஆழ்வார் திரு மகளாராய்-22

அஞ்சு குடிக்கு ஒரு சந்ததியாய் ஆழ்வார்கள்
தம் செயலை விஞ்சி நிற்கும் தன்மையளாய் -பிஞ்சாய்
பழுத்தாளை ஆண்டாளை பத்தி உடன் நாளும்
வழுத்தாய் மனமே ! மகிழ்ந்து -24

———————

வேதங்கள் கொடுத்து -கரண களேபரங்கள் கொடுத்தும் அவதரித்ததும் பலன் அளிக்காமல் –
ஆழ்வார்களையும் அனுப்பி
சங்கு-பொய்கையார் -வேத பிரகிரியையில் முதல் திருவந்தாதி
கேடயம்-கதை -பூதத்தாழ்வார் -உள்ளத்தில் உள்ள அன்பே தகளியாக இரண்டாம் திருவந்தாதி –
கட்கம்–வாள் -அஞ்ஞானம் போக்கி ஞானம் -திருக்கண்டேன் —
சக்ரம் –திருமழிசை -பிரதிபந்தகங்கள் போக்கி –
விஷ்வக் சேனர்-அம்சம் -நம்மாழ்வார்
குமுதன்-மதுர கவி ஆழ்வார்
கௌஸ்துபன் -நெஞ்சுக்கு இனியன் -மனத்துக்கு இனிய பெருமாள் திரு மொழி
கருடன் -பெரியாழ்வார்
வனமாலை –தொண்டர் அடிப் பொடி ஆழ்வார் –
ஸ்ரீ வத்சம் மறு-திருப்பாண் ஆழ்வார்
சார்ங்கம் -திரு மழிசை ஆழ்வார்
பிராட்டி பார்க்க –
பெண்கள் இல்லையே என்று

பெண் புத்தி பின் புத்தி-long time vision – பின் போன்ற கூர்மை -பின் வருமவற்றை சொல்லுபவள்
பிராட்டி -சீதா ருக்மிணி -பிறந்து பட்டது எல்லாம் போதும்-
பிரிந்ததும் -சிசுபாலன் கண்ணாலம் கொடுத்து இருந்த விருத்தாந்தம் – மீண்டும் வராமல்
சாஷாத் ஷமாம் -கோதா-தானே -ஆழ்வார் கோஷ்ட்டிக்குள்ளும் -எமக்காக அன்றோ -வைகுந்தம் இகழ்ந்து –
வால்மீகி -புற்று -பூமிக்கு காது–நீயோ பூமா தேவி –
நாச்சியார் திரு மொழி-143-I LOVE YOU-இயற்கையாக பெண் -வாக்கு வன்மை –

1–சாஷாத் பூமி தேவி
2–இயற்கையாக பெண் -பள்ள மடை
3–வாக்கு வன்மை -வால்மீகி புற்று -இவளோ பூமா தேவி
4–ஐந்து குடிக்கு ஒரே சந்ததி
5 -பெரியாழ்வார் பட்டமும் இவளால் தேசிகன் – மஹத் -472-பா மாலையால் யுகக்காமல்-
மௌலி கந்த ஸூகம் – கோதை கொடுத்ததால் –குருவை விஞ்சிய சிஷ்யை
6–பெருமாளுக்கே ஆச்சார்யர் -அத்யாபயந்தி
7–அயோநி -கர்ப்ப வாசம் இல்லாமல்

சீதா -கர்ம யோக நிஷ்டரான ஜனகர் -யாக சாலையில் –
இவளோ துளசி-கைங்கர்ய உபகரணம் ஸ்ரேஷிடம் -சரணாகதி நிஷ்டர் –
மேகம் அசேதனம் தூது-அவள் திருவடி தூது –
ஜனக குலப் பெருமைக்கு அவள் -இவளோ ஐந்து குடிக்கு பெருமை சேர்க்க –
சீதா பெருமாள் -இவளோ -பெருமாள் ஆராதித்த பெரிய பெருமாள்
சீதா விபவம்-இவளோ அர்ச்சையில்
சீதா பிரதம பர்வம் -இவளோ சரம பர்வம்
சீதா அவனால் மதிநலம் -அவனுக்கு மதி நலம் அருளியவள்
சீதா நாண் ஒலி மட்டும் -ருக்மிணி சங்கு ஒலி மட்டும் -இவளுக்கோ இரண்டும் வேண்டும் –
இப்படி பலவும் உண்டே

பாவை -விக்ரஹம் பொம்மை -/ நோன்பு /பெண் -அழகிய பெண்கள் கூடி /மதிள் சுவர் -அரணாக வேதத்துக்கு /
கண்ணுக்குள் உள்ள pupil / இஞ்சி /இப்படி பல அர்த்தங்கள்
திருப்பு ஆவை -ஆ பசு மாடு –புத்தி கன்றுக்குட்டி போலே ஓட -நம்மை சிந்தனை திருப்புவதற்காக –
முத்தமிழ் உள்ள -இயல் இசை நாடகம் –
ஆறு காட்சிகள் -ஆறு ஐந்து -நேயமுடன் திருப்பாவை ஆறு ஐந்தும் -தேசிகன்
ஆரஞ்சு பழம்-11-சுளை -சுவை ஒவ் ஒன்றிலும் -சாஷாத் கமலா -கமலா ஆரஞ்சு
ஆண்டாள் தமிழை- அரங்கனை -அடியவர் உள்ளம் -ஆண்டாள்
ஸ்வ பாவதேசங்கள் நிறைந்த

மார் தட்டும் அஹங்காரம் கழியும் -அது தான் மதி நிறைந்த நன்னாள்
ராமானுஜரை எதிலும் சொல்வது போலவும் உண்டே
பத்து ஆழ்வார்களை -திவ்ய தேச பெருமாள்களை -திவ்ய தேச பிராட்டி -திருவடி பரமான வியாக்யானமும் உண்டே
ஓங்கி உலகு அளந்த -உயரம் -சடக்கென -மத்ஸ்ய அவதார பரம்-dolphin -வேதம் பிரதத்வம்
சங்க தமிழ் மாலை –கூட்டமாக அனுபவிக்கும் பிரபந்தம் –
கோ மங்களகரமான -கோதா -பூமி செல்வம் ஞானம் -தெற்கு நோக்கி பள்ளி கொள்வதும் இவளுக்காக
செளத் திருமாலால் எங்கும் திரு வருள் பெற்று இன்புறுவோமே
மா -பெரிய பிராட்டி உடன் தொடங்கி —அநுகார பிரபந்தம் —

விஷய வைலக்ஷண்யம்
வேதம் அனைத்துக்கும் வித்து-பலம் -மாங் கொட்டைக்குள் பல மாம்பழங்கள்
திருப்பாவை ஜீயர் -கோதா உபநிஷத்
சரணாகதி -நாராயணனே நமக்கே பறை தருவான் -செல்வச் சிறுமீர்காள் -ததீய சேஷத்வம் –முதலிலேயே sixer-
ரஹஸ்ய த்ரயம் -மாலே -சரம -சிற்றம் -திருமந்த்ரம் -கறவை த்வயம்
அர்த்த பஞ்சகமும் எங்கும் உண்டே
திருவாராதன கரமும் உண்டு -மந்த்ராஸனம் -நீராடுவான் -அலங்காராசனம் -போஜ்யாசனம்
புனர் மந்த்ராஸனம் -பர்யங்காசனம் -மாதவன் -சயனிக்க
பாகவத சேஷத்வம் காட்டி -திருப்பள்ளி எழுச்சி
ஆறு போற்றி -பொங்கும் பரிவுக்கும் மேலே -விஞ்சி –

மூன்றையும் மூன்று தனியங்கள் சொல்லும்
வக்த்ரு வை லக்ஷண்யம் –நீளா
பிரபந்த -வை லக்ஷண்யம் அன்ன வயல் -பரம ஹம்சம் -ஆச்சார்யர் – எங்கும்-பன்னி பன்னி எழுதிய பல் பதியம்
விஷய வைலக்ஷண்யம் -பாரதந்தர்யம் -சூடிக் கொடுத்த -அவனுக்கே விதி -சரணாகதி

——————

மார்கழித் திங்கள் மதி நிறைந்த நன்னாளால்
நீராடப் போதுவீர் போதுமினோ நேரிழையீர்
சீர்மல்கு ஆய்ப்பாடி செல்வச் சிறுமீர்காள்
கூர் வேல் கொடும் தொழிலன் நந்தகோபன் குமரன்
ஏரார்ந்த கண்ணி யசோதை இளஞ் சிங்கம்
கார்மேனிச் செங்கண் கதிர் மதியம் போல் முகத்தான்
நாராயணனே நமக்கே பறை தருவான்
பாரோர் புகழப் படிந்தேலோர எம்பாவாய்–1-

நிலவறையில்-under–ground -கோபியை அடைத்து வைக்க -பஞ்சம் ஏற்படும் படி அறிகுறிகள் -லீலா ரசம் –
அவன் திருவடி இருக்க பஞ்சம் வராதே –
கர்காச்சார்யார் உள்ளே புகுந்து -ஆலமரத்தடியில் பஞ்சாயத்து -ஐந்து லக்ஷம் பெண்களையும் காத்யாயயினி விரதம் –
ஆறு காட்சிகள் -ஒவ் ஒன்றிலும் ஐந்து பாசுரங்கள் –
கேசவ மாதம் -மார்கழி -தேவர்களுக்கு -ப்ரஹ்ம முகூர்த்தம் -north pole -ஆறு மாதங்கள் பகலாக இருக்குமே –
எனவே தேவர் ஒரு நாள் நமக்கு ஒரு ஆண்டு –
ப்ரஹ்ம முகூர்த்தம் தேவர்களும் இடைஞ்சல் பண்ண மாட்டார்களே -சாந்தோக்யம் –
தங்கப் புதையல் உணராமல் பிச்சை -தஹராகாசம் -தூங்கும் பொழுது ஒன்றி இருக்கிறோம் –
எனவே சாத்விக குணம் அப்பொழுது -தேவர்களுக்கும் சத்வ குணம் இருக்குமே -நிர்விக்னமாக நடக்கும் –
ஊரில் முதியவர் இடைஞ்சலும் இல்லை –
சித்திரையிலும் உயர்ந்தது -ஆதி-நாராயண மாதம் -புண்ய மாதம் -செடிகள் பூ கிரீடம் -இந்த மாதம் –
அதே மாதம் பட்டாபிஷேகம் பின்பு –
தொண்டர் -அயோத்யா வாசி -பெருமாளுக்கு
இது பெருமாளுக்கு அடியார் -கிடைத்த மாதம் -எனவே ஏற்றம்
சீதா -மெலிந்த நிலை -பிரமையில் தொடங்கி படித்த கல்வி போலே -திருவடி –
நன்னாளால் -ஆல் -அசை போட்டு மகிழ்ச்சி
சீதா பிரிந்த சோகம் காட்டுத்தீ -வாயு குமாரன் -வர -அணைக்க -திருவடி கிடைத்த மகிழ்ச்சி
இல்லையேல் துன்பம் –இன்பமும் எய்திற்று -அதே போலே மார்கழி மதி பார்த்த மகிழ்ச்சி இவர்களுக்கு

காலம் -அங்கம் -அதிகாரிகள் –யாரைக் குறித்து -நோன்பு இப்படி நான்கையும்
நீராடுதல் -அங்கம் -குணக்கடலில் ஆழ்ந்து -போதுவீர்-போதுமின் -வர வேண்டும் ஆசை உள்ளவர்கள் வரலாம் -விருப்பமே தகுதி –
ஆசை உடையவர்கள் எல்லாம் பேசி வரம்பு அறுத்தார் -இதுவே பீஜம் ராமானுஜருக்கு
ந தானம் ந யாகம்-மோக்ஷ உபாயங்கள் -ந்யாஸம் -சன் ந்யாஸம் -நன்கு சமர்ப்பித்தல் மோக்ஷ உபாயம் -வேதமும் சொல்லுமே –
ஸ்வாமி சொத்து பாவம் அறிந்து பொறுப்பை துறப்பதே சன்யாசம்-இதனாலே வேதம் அனைத்துக்கும் வித்து
நேர் இழையீர்-புன்னகை -கிருஷ்ண அனுபவம் கேள்விப்பட்டதும் பெற்ற ஆனந்தம் –
ஆத்ம குண ஆபரணம் –
இவர்களே ஆபரணங்கள் -ஆயர்பாடி உலகத்து அணி -அதுக்கு இவர்கள் அணி
நில மடந்தை – திலகம் -போலே தமிழ் தாய் வாழ்த்து -இதுக்கும் இதுவே பீஜம் –
திருக்குடந்தை வெங்கடேஷ் -zero முன்பு numbar
சீர் மல்கும் ஆய்ப்பாடி இங்கும் –

அயோத்தியை வேதம் கமழும் இங்கு வெண்ணெய் கமழும் -கண்ணனை வளர்த்த இடம் –
கோவர்த்தன கொடை இங்கு வெண் கொற்றக் கொடை அங்கு -முனிவர் கூட்டம் -கோபிகள் கூட்டம் -சீர் மல்கும் இங்கே
சிறுமீர்காள் -அனுபவ ஹர்ஷத்தால் அனைவரும் –
செல்வ சிறுமீர்காள்-தண்ட காரண்ய ரிஷிகள் இழந்த செல்வம் இவர்கள் பெற்றார்கள் –
அங்கங்கள் அழகு மாறி -ஆபரணங்கள் களைந்து அழகு மிக்கு சென்றான்–
ஆலிங்கனம் -பண்ண -பும்ஸாம் த்ருஷ்ட்டி சித்த அபகாரம் -அடுத்த அவதாரம்
சரணாகதி பண்ண எண்ணம் வந்து காலடி வைத்தாலே எனது சிஷ்யர் ஆவார் -முக்கூர் ஸ்வாமி

யாரைக் குறித்து -நோன்பு-நேராக நாராயணைக் குறித்தால் என்றால் ஒத்துக் கொள்ள மாட்டார்கள் –
கருடனை விட்டு ஆஞ்சநேயர் கூப்பிட -கண்ணன் -ராமனாக மாறி இவரது பெருமை காட்டி அருளினார் –
அதுக்கு கைம்மாறாக பஞ்ச முக ஆஞ்சநேயர் வாஹனம் -ஸ்ரீ வித்யா மன்னார் குடி ராஜ கோபாலன் ஸ்வாமிக்கு -இன்றும் உண்டே
பறை தருவான் -இங்கு தந்து அனுக்ரஹிக்க வந்து நம்மிடையே இருக்கும்

சங்க -மரபு முதல் பாட்டில் சூர்ய சந்திரனை சொல்லும் முறை உண்டு
ஞாயிறு போற்றுதும் திங்களை போற்றுதும் -சிலப்பதிகாரம்
கதிர்மதி முகத்தான் –
அம் போல் முகத்தான் -இவன் முகத்துக்கு-தெரிந்த விஷயத்தை காட்ட –
கண்ணனுக்கு முகம் உவமை வேறு ஒன்றையும் சொல்ல முடியாதே
கண்ணன் அடி இணை நமக்குக் காட்டும் வெற்பு –
சாதன நைரபேஷ்யம்-நாராயணனே நமக்கே பறை தருவான் -சமிதை பாதி ஸாவித்ரீ பாதி -போல் அன்றி –

ஏழு -நூறு -எழுந்து இருந்து சண்டை போட அங்கு –
இங்கு முதலிலே -தருவான் –
எப்படி செய்தாலும் தருவான் -எனிலும் நமது சத்தைக்காக -படிந்து -பாரோர் புகழ –
அவன் தருவான் என்ற எண்ணத்தில் ஊன்றி நாம் செய்ய வேண்டும்
அன்றிக்கே
உலகத்தோர் மெச்சும் படி-பாரோர் புகழ – நாராயணன் படிந்து தருவான்
அது நமது விதி வகையே அருள் தருவான் அமைகின்றான்-

ஆச்சார்ய பாரமாக –
மார் தட்டும் அஹங்காரம் கழிய
ஞானம் மலர -அதுவே நன்னாள் –
நீராட -ஆச்சார்யர் குணங்களில்
இங்கும் ஆசை உடையோர் -போதுவீர் போதுமினோ
நேர் இழையீர் -பக்தி ஞானம் வைராக்யம் ஆத்ம குணம்
சிஷ்யன் சிறுமி போலே அவர் கையையே எதிர்பார்த்து இருக்க வேண்டும்
கூர் வேல் -கோயில் பொறி இடுவார்
நந்த கோபன் -பெருமாள் தியானத்தால் ஆனந்தம்
குமரன் -ஆச்சார்யர் இளைமையாகவும் -மூப்பு தீண்டாதே –
யசோதை -திரு மந்த்ரம் -நாராயணனை கருவில் கொண்டு உள்ளதே
அவனை போலே கார் மேனி செங்கண் -ஆ முதல்வன் என்று கடாக்ஷிக்க
ஸ்ரீ பாஷ்யம் -கம்பீரம் சூர்யன் திருவாய் மொழி சந்திரன் போலே
நாராயணனே -ஸாஸ்த்ர பாணி சஸ்த்ர பாணி
உறங்கும் பெருமாளே உபதேசிக்கும் ஆச்சார்யர்
கைப்பாவை யாக நாம் இருந்தாலே போதும் -திருவடி கமலத்தில் ஒதுங்கினால் தானே வைகுந்தம் கொடுக்கும்

—————

வையத்து வாழ்வீர்காள் நாமும் நம் பாவைக்கு
செய்யும் கிரிசைகள் கேளீரோ பாற் கடலுள்
பையத் துயின்ற பரமன் அடி பாடி
நெய்யுண்ணோம் பாலுண்ணோம் நாட்காலே நீராடி
மை இட்டு எழுதோம் மலரிட்டு நாம் முடியோம்
செய்யாதன செய்யோம் தீக்குறளை சென்று ஓதோம்
ஐயமும் பிச்சையும் ஆந்தனையும் கை காட்டி
உய்யுமாறு எண்ணி உகந்தேலோர் எம்பாவாய்–2-

க்ருத்ய அக்ருத்ய -புருஷார்த்த பெருமைகளை முதலில் அருளிச் செய்த பின்பே அருள வேண்டுமே –
கார் மேனி -செங்கண் -கதிர்மதியம் போல் முகத்தான் -அம் முகத்தான் -நாராயணன் -இவ்வளவு சொல்லி
அவர்கள் இவற்றைப் பெற என்ன செய்ய வேண்டும் என்று ஆசையுடன் பிரார்த்திக்க அருளிச் செய்கிறார் இதில்
வாழ்வீர்காள் -உண்ணும் சோறு எல்லாம் கண்ணன் -என்று இருப்பவர் –
பாரத பூமி -கொண்டாட்டம் -ஸ்ரீ விஷ்ணு புராணம் -பாக்கியவான்கள் என்று ஸ்வர்க்க வாசிகள் -கர்ம பூமி –
மோக்ஷ ஸ்வர்க்க வாசல் -2-3-24-மூன்றாம் அத்யாயம் முழுவதும் பாரத தேச பெருமை
அதிலும் ஆயர் பாடி -ஸ்த்ரீ -இளம் பெண்கள் -சமகாலம் -கூட்டமாகவும்-இப்படி உயர்த்தி
தாழ்ச்சி மாற்று எங்கும் தவிர்ந்து உன் தாள் இணைக் கீழ் வாழ்ச்சி-

நாமும் -நம் பாவைக்கு –நாம் சொன்னாலே போதும் -உம்மைத் தொகை –நாம் கூட -என்ற அர்த்தம் –
நாராயணனே நமக்கே பறை தருவான் -சரணாகதர்களான நாம் கூட -நம் பாவைக்கு –
ஆஞ்ஞா ரூபம் -அன்பினால் -பிரீதி காரியமாக செய்ய வேண்டியவையும் செய்ய வேண்டியாதவையும்

நம் பாவை -மம சுதா –அபிமானம் -பெருமையான நோன்பு சீதா பிராட்டி -நம்மாள் தலை டோனி ஆடுகிறார் போலே
இந்திரஜித் மஹா பாலி அதிதிதி தசரதன் யாகம் போலே இல்லையே இந்த பாவைக்கு ஈடு ஒன்றும் இல்லையே

ஆறு -கர்தவ்யங்களும்- செய்யும் கிரிசைகளையும் –செய்யாதவை வற்றை ஆறையும்
பாற் கடலுள் பையத் துயின்ற பரமன் அடி பாடி –ஜவுளிக்கடல் -ஆயர் பாடி பால் கடல் -என்றும் கொள்ளலாம் -முக்கூர் ஸ்வாமிகள்
எங்கும் வியாபகம் -அவன் அனைவருக்கும் எங்கும் கெடுப்பான் -அவன் கேட்டதை நாம் அறிந்து கொள்ள வேண்டுமே -அதற்காகவே
தேஷாம் சதத யுக்தாமாம் பஜதாம் பிரீதி பூர்வகம் ததாமி புத்தி யோகம் -அதனால் என்னை அடைகிறார்கள்
பிரீதி பூர்வகம் அந்வயிக்கும் இடம் -முன்னும் பின்னும் -பின் வைப்பதே ஸ்ரேஷ்ட அர்த்தம் ஸ்ரீ ராமானுஜர்
வழிபாடே அன்பு பிரீதி சேர்ந்தே தான் வரும் –
வந்தவர் எதிர் கொள்ள மா மணி மண்டபத்து -வந்து -அவர் எதிர் கொள்ள –
அவர் வந்து -நாராயணனே எழுந்து வந்து -ப்ரீதியுடன் –

மாமனார் வீடு பாற் கடல் -வீட்டோடு மாப்பிள்ளை -இதில் –
ஹே நாத -மேதினி -சதா துளஸீ வானம் வாசம் குரு -இங்கு தங்க -மாமனார் வீடு –
கிண்டல் பண்ணுவார் -உப்பை விட்டு திருவாராதனம் என்றாளாம்
கோபம் வராமல் அனுக்ரஹம் செய்ய உப்பு இல்லாமல் –
அவமானம் பொறுத்து தேவர்களுக்கு அருள் புரிய இங்கே சயனித்த படி
விஷயாந்தர ப்ரவணர்களுக்காகவே இப்படி இருப்பவன் -நமக்கு -எவ்வளவு பண்ணுவான் –
உனக்கே நாம் ஆட் செய்வோம் என்று இருக்கிறோமே

பைய–கவனமாக -பிராட்டி இடமும் பேசாமல் -அபயக் குரலை கேட்க வேண்டுமே -தயார் நிலையில்
பாட்டு கேட்க்கும் இடம் -கூப்பிடு கேட்க்கும் இடம் -குதித்த இடம் -ஊட்டும் இடம் வளைத்த இடம் -ஐந்து நிலைகள்
பரமன் -பரமோ யஸ்து பரமன் -மறைத்து -code-
அடி பாடி -திரு மேனிக்கு உப லக்ஷணம் -ஸ்தநந்ய பிரஜை –
திரு நாம சங்கீர்த்தம் செய்யும் கிரிசைகள்
பிரயோஜனாந்த பரர்கள் போலே இல்லாமல் – நெய் உண்ணோம் பால் உண்ணோம் -போக பொருள்கள்
உண்டவர் மீண்டும் உண்ண வேண்டாமே
பாதேயம் புண்டரீகாக்ஷம் நாம சங்கீர்த்தன அமிர்தம்-
இடையர் மெய்ப்பாடு -நெய் உண்ணோம் -கோபிகள் அறியார்கள் அன்றோ
நாட்காலே நீராடி -அவனுக்கு உகப்புக்காக – பக்தன் அலங்காரம் அவனுக்காகவே -பட்டர் அலங்கரித்துச் சொன்ன ஐதிக்யம் –
உத்சவத்தில் தூண் தரை அலங்கரிப்பது போலே –

மை இட்டு எழுதும் -மைய கண்ணாள் -துக்கம் போனதும் -சுப ஸ்வீகாரம் -மை இட்டு -மங்களகரம் –
உன்னை அடையும் வரை இட மாட்டோம்
முன் ஜென்மத்தில் பூவால் அர்ச்சித்த கோபியை கூட்டிச் சென்று பூச் சூட்டிய விருத்தாந்தம்
நாம் முடியோம் -பூ சூட்டி வைக்க சூடுவோம் -ஸ்ரீ விஷ்ணு புராணம் ராஸலீலை -அஹங்காரம் குறைக்க லீலை
முன்னோர்கள் செய்யாதன செய்யோம் -தொல் பாவை -கூட்டம் கூட்டமாகவே நோன்பு
தீ குறளை சென்று ஓதோம் -தீ குறளைச் சென்று ஓதோம் -தப்பு -குறளை -வம்பு பேச்சு –
மஹான் விட்டு மானை பிடித்து ஹா ராமா ஹா லஷ்மணா புலம்ப நேர்ந்ததே
ந கச்சின் ந அபராதி -தப்பு பண்ணாதவர் யார் -என்ன தப்பு வம்புக்கு ஆசைப்பட்ட திருவடி தப்பு
கை காட்டி -இஞ்சி மேட்டு அழகிய சிங்கர் கதை -ராம ஸ்வாமி ஸ்ரீ நிவாசன் -பணக்காரன் கருமி -கை காட்டி ஸ்வப்னம்
யமன் கையை தவிர எண்ணெயில் வாட்ட -அடுத்து சாஷ்டாங்க பிரமாணம் பண்ணி அவர் வீட்டைக் காட்டினான்

உய்யும் ஆறு எண்ணி–ஆறும் பேறும் -ஆறு -வழியை எண்ணி -கதி சிந்தனம் -ஆறும் அவனே பேறும் அவனே –
சின் முத்திரையால் இத்தையே நம் ஆச்சார்யர்கள் காட்டி அருளுகிறார்
அடி பாடி -நீராடி -ஐயமும் -large-scale-தானம் -பிச்சையும்-small scale தானம் -ஆறு எண்ணி -உகந்து -செய்யும் கிரி
நெய் உண்ணோம் பால் உண்ணோம் -மை இட்டு எழுதும் -மலர் இட்டு நாம் முடியோம் செய்யாதன செய்யும் தீ குறளை சென்று ஓதோம்
இரண்டு -sixes-இதில்

ஆச்சார்யர்
நாமும் -ஆச்சார்ய நிஷ்டர்களான நாமும் -மதுர கவி
பாவை -கண் கண்ட ப்ரத்யக்ஷ தெய்வம் ஆச்சார்யர்
கைம்மாறு -இங்கும் அங்கும் இல்லை -மாயனும் காணகிலான்-இரண்டு உபயவிபூதி நாதனும் நான்கு விபூதிகளும் வேணுமே
போற்றி உகப்பதும் -புந்தியில் கொள்வதும் -பொங்கு புகழ் சாற்றி வளர்ப்பதும் சற்று அல்லவோ உன்னைப் பெற்றதுக்கு
அடி பாடி -திருவடி ஸ்தானீயம் தனியன்
நெய் -ஜீவாத்மா -கைவல்யம் ஆசை கொள்ளலாம்
பால் -சிற்றின்பம் ஆசைகளை விட்டு
நீராடுதல் -குண அனுபவம்
மை இட்டு -ஞான யோகம் வேண்டாம்
மலர் இட்டு -கர்ம பக்தி யோகம்
நாம் முடியோம் -சரணாகதிக்கும் அசக்தர்
ஆச்சார்ய அபிமானம் உத்தாராகம்
செய்யாதன செய்யோம் -பாகவத அபசாராதிகள் கூடாதே
திமிலிங்கம் -திமி கில-கிலம் -பாபங்கள் மூட்டை சரணாகதி விழுங்கும் -அத்தை பாகவத அபசாரம் விழுங்கும் -தேசிகன் –
ஐயம் -கால ஷேபம் –காலம் பொழுது போக்கி பத வ்யாக்யானம் -மோக்ஷம் ஆச்சார்யர் கடாக்ஷம்
பிச்சை -உபன்யாசம் -உப ந்யாஸம் -அருகில் சமர்ப்பித்தல் -அவன் அருகில் கூட்டிச் செல்லுதல்
ஆறு -த்வயம் ஆறு வார்த்தை -எண்ணி -பாற் கடலில் -பிராட்டிக்கு உபதேசம் –
உகந்து -ஆச்சார்யருக்கு கைங்கர்யம் –

————-

ஓங்கி உலகளந்த உத்தமன் பேர் பாடி
நாங்கள் நம் பாவைக்கு சாற்றி நீராடினால்
தீங்கின்றி நாடெல்லாம் திங்கள் மும்மாரி பெய்து
ஓங்கு பெரும் செந்நெலூடு கயலுகளப்
பூங்குவளைப் போதில் பொறி வண்டு கண் படுப்பத
தேங்காதே புக்கிருந்து தீர்த்த முலை பற்றி
வாங்கக் குடம் நிறைக்கும் வள்ளல் பெரும் பசுக்கள்
நீங்காத செல்வம் நிறைந்தேலோ ரெம்பாவாய் –3-

ஒன்றை அறிந்தால் அனைத்தையும் அறியலாம் -ப்ரஹ்ம ஞானம் இருப்பதாலே -இயற்கை வர்ணனை -விஷயாந்தர பயன்கள் போல்வன –
அவனுக்கு பிடித்த இடங்கள் -தேவகி ஜடரம் -வடதளம்- கமலாஸ்தான -சடகோப வாக் வபுஷி –
வேதாந்தம் -ஹஸ்திகிரி-ஸூர்ய மண்டல மத்யவர்த்தி -பக்தானாம் யத் வபுஷி தகரம் ஹ்ருதய புண்டரீகம் –
உள்ளத்தே உறையும் மால் -தஹர வித்யை
பூம் குவளை -மலரில் -பொறி வண்டு -கண் படுப்ப -மானஸ பத்மம் -நாயனார் –
ராஜ ஹம்சம் –
பொன்னி -கோலார் வழி வருவதால் -பொன் முத்து ஹாரம்-அரி உகிரும் யானைத் தந்தமும் -மடியில் சீர் கொண்டு –
வண்டினம் முரலும் சோலை -மயிலினம் ஆலும் சோலை -கொண்டல் மீது அணவும் சோலை -குயில் இனம் கூவும் சோலை –
கூஜந்தம் -வால்மீகி கோகுலம் -தெளிவாக இது மட்டும் -மற்றவை மால் -அண்டர் கோன் அமரும் சோலை –
பக்தர்கள் -வண்டினம் -மயிலினம் -பக்தர்களாக ஆட -மித்ர பாவனை -மேக வண்ணன் -வந்து சயனித்தார் -நடந்ததை ஆழ்வார்கள் பாட –
தீர்த்தம் ஸூந்தரி–பல கைங்கர்யம் –திருவீதி அலம்பி –சிப்பி விட்டு கோலம் —ஸ்நானம் பானம் தீர்த்தம் -காவேரி சிரிக்க –
கங்கையை வெல்லும் -தூக்கி காட்ட மணல் திட்டு -வேதத்தில் ரஹஸ்யம் –
கோதா பரளி-இரண்டு நதிகள் -திரு வாட்டாற்று -அங்கும் -மணி மாடத்து அரவணை
கோய் சாவதானா -தூக்கி உத்சவரை ஸேவை இத்தைப் பார்த்தே
பள்ளச் செருவில் கயல் உகள -புள்ளு பிள்ளைக்கு இரை தேடும்-சின் முத்திரை -சிஷ்யருக்கு ஏற்ற -உபதேசம்
ப்ராத சிஷ்ய தாஸ்ய பிரசாதம் -பரதன் -நான் கண்ட நல்லது -அருள் கொண்டு ஆயிரம் இந்த தமிழ் பாடி –
படுவாய் கமலம்-அலவன் -நள்ளி ஊடும் நறையூர் -இங்கு ஊடல்
திருவாணை நின்னாணை-பிடி களிறு -ஆண் யானையை சேர்த்துக் கொண்டது இங்கு
மத வேழம் மா பிடிக்கு முன் நின்று -திரு வேங்கடத்து யானை -இரு கண் இள மூங்கில் வாங்கி -அருகு இருந்த தேன் கலந்து நீட்டும் –
த்வயம் -திரு மந்த்ரம் -சரம ஸ்லோகம் -கலந்து -/ கடக ஸ்ருதி -பேத ஸ்ருதி அபேத ஸ்ருதி –
சிலா தலத்து மேல் இருந்த மந்தி -மதி தவழ் குடுமி மாலிருஞ்சோலை –கண்ணாடி -பாகவத கர ஸ்பர்சம் பெற்ற உகப்பு
போது அறிந்து பூம் சுனை புக்கு –
கொண்டை–கூனி -நண்டை உண்டு நாரை பேர வாளை பாய -நீலம் அண்டை கொண்ட கெண்டை –
நாரை -அஹங்காரம் /-நண்டு-விஷயாந்தரம் உண்டு -/ உபாசகரர்-வாளை ஸூய பிரயத்தனம் -நம்மிடமும் அஹங்காரம் –
கெண்டை -பிரபன்னன் -நிர்ப்பரம்-நிர்ப்பயம் -நீல மேக ஸ்யாமளன் –

——

கால த்ரயம் -கரண த்ரயம் -ரஹஸ்ய த்ரயம் -தத்வ த்ரயம் -குண த்ரயம் -அக்ஷர த்ரயம் -பத த்ரயம் –
மூன்று வேதம் த்ரயீ -தாப த்ரயம் -மூன்றுக்கு முக்கியம் –
மூன்றாம் பாசுரம் -மூன்றாம் வேதம் சாம வேதம் முக்கியம் போலே-
நோன்பின் பிரயோஜனம் -ஊராருக்கு மழை -நமக்கு கிருஷ்ண சம்ச்லேஷம் –
மனசில் ஒன்றும் வாயால் ஒன்றும் கொண்டால் எது நடக்கும் -சங்கை –
இந்திரன் -ப்ருஹஸ்பதி அபசாரம் -கார்க்காச்சார்யார் -வேத கதை -அசுரர் வெல்ல -தோல்விக்கு காரணம் –
ஆச்சார்ய அபசாரம் காரணம் -ஆச்சார்ய பக்தியால் அசுரர்கள் வென்றார் –
த்வஷ்டா மகன் விஸ்வரூபன் -குருவாக -நாராயண பதக்கம் மந்த்ர ஜபம் -வென்றான் –
வென்றதும் யாகம் -நமக்கு -paarty-கொண்டாட -விஸ்வரூபன் ஹவிர்பாகம் கொடுக்க -வயிறு ரொம்ப வில்லை
விஸ்வரூபன் -அம்மா ரசனா -அசுரர் சகோதரி -தாய் மாமா -வாயால் ஆஹுதி -மனசில் அசுரர் பேரை நினைத்து -அவர்களுக்கு போனதே –
ஊரார்-நம்மை ஏமாற்றி என்று அறிந்து -நிலவறையில் அடைப்பார்களே
நிரந்தரமாக விஸ்லேஷம் ஆகுமே –
இதுக்கு பதில் -இரண்டும் கிடைக்கும் -இஹ பர ஸூகம் இரண்டும் திரு நாமங்கள் கொடுக்கும் -shopping complex maal போலே –
அல்பம்-முதல் அனைத்தும் கொடுப்பான் -திரு மால் -தன்னையும் தருவான் -மழையும் தருவான் –

ஓங்கி -வளர்ந்த -வாமனனாக வந்து -திருவிக்ரமனாக -நர்மதா நதிக்கரையில் மஹா பாலி யாகம் –
கச்வம் ப்ராஹ்மணனே -யார் -அபூர்வ -நாராயணன் பூர்வம் பார்த்து இருக்க முடியாதா –
கொசதக உலகமே ஊர் –அநாதக–நைவ தாதா-உலகுக்கோர் தாய் தந்தை -த்ரிபத -என் காலால் மூன்று அடி -அதியல்பம் -ஓங்கி –
ஓங்கி -எழுந்து -அர்த்தம் -பையத் துயின்ற பரமனாக இருந்தவர் -அளந்தவர்
ஓங்கி -மகிழ்ந்து -வலது திருவடி -மண்ணுலகம் -இடது திருவடி -உயர -கங்கை –
திருப் பொலிந்த ஸேவடி என் சென்னியில் மேல் பொறித்தாய் -உள்ளே இருந்து தங்கி-ஜீவனம் –
ஜனகர் யாகம் -பண்ண -சதஸ் -ப்ரஹ்ம ஞானி -500-பசுமாடு -தங்க குப்பி ஒவ் ஒரு கொம்பிலும்
யாஜ்ஜ வர்க்யர்-சிஷ்யரை கூட்டிப் போக சொல்ல -உத்தாலகர் -அனைத்தையும் உள்ளிருந்து தங்கி இயக்குமவன் யார்
அந்தர்யாமி ப்ராஹ்மணம் பிருஹதாரண்யம் உபநிஷத்
யத் ப்ருதிவியான் த்ருஷ்டன் –ஆகாயம் -உடம் தெரியாது இல்லா விட்டால் -நெருப்பு இயங்காது -இருட்டு இப்படி –
இறுதியில் ஆத்மா ஏஷ ஆத்மா அந்தர்யாமி அமிருதம் -சரீராத்மா பாவம் இதில் இருந்தே –
சத்தை கொடுக்க -உள்ளே இருந்து -அருவமாக ஜீவனம்
உஜ்ஜீவனத்துக்கு -காருண்யம் -உருவமாக வந்து பக்தியாதிகளை வளர்த்து -வலது திருவடி பதித்து –
சடாரி முதலில் தானே சாதித்து -இதனால் மகிழ்ந்தான் -உவந்த உள்ளத்தனாய் -தாய் -குழந்தை -பாவம்
கட்டிப்பிடி வைத்தியம் -போலே இது-அதனால் தான் திருப்பாவை இன்று கோஷ்டியாக அனுபவம் –
கதா புனா சங்க –திரு விக்ரம –மதீயம் மூர்த்தம் அலங்கரிஷ்யதி –

வளர்ந்து -எழுந்து -மகிழ்ந்து -மூன்று அர்த்தங்கள் -ஓங்கி -சப்தம்
வேகமாக -நாலாவது அர்த்தம் –கிண்டி வைத்து -சேஷமாக ஆகாதே -inlet-பெரிதாக –outlet-சிறியதாக-கமண்டலம் –
ஆண்டாள் தமிழை ஆண்டாள் -நாராயணன் -பரமன் -உத்தமன் –
பரத்வம் -வ்யூஹம் -விபவம் –
தஸ்ய உத் நாம-ஸ்ரீ வைகுண்ட -உத்தப்பா பெயர் -ஸ்ரீ வைஷ்ணவமே
உத்தர-தேவர்களுக்கு கருணையால் -வீட்டு மாப்பிள்ளை அவமானம் பொறுத்த உயர்ந்தவன் –
உத்தமன் -விபவம் -உலகு அளந்த -அனைத்து ஜீவ ராசிகளில் தலையிலும் திருவடி ஸ்பர்சம்

அதம அதமன் -பிறரைக் கெடுத்து தான் வாழ -அதமன் -மத்யமன் -தியாக உள்ளத்துடன் -உத்தமன் –
தன்னை அழிய மாறி உபகரித்தவன் –
மஹா பலிக்கும் நன்மை -அடுத்த இந்திரன் -தானே காவல் காப்பானாக
நாமும் கெட்டு பிறரை கெடுப்பவன்-நம் போல்வாரை இந்த நாலிலும் இல்லை
பக்தானாம் பிரசாத -ஜிதந்தே -ந தே ரூபம் -ந ச ஆகாரா -ந ஆயுதாநி ந ஆஸ்பதம் –
ஷேமகாரி சதகம் -கல் கருடனைப் பற்றி -இரண்டு திருக் கரங்கள் -தாயார் கேட்க -வஞ்சுள வல்லி –
பக்தன் -வாகனம் -கல் கருடனுக்கு இரண்டு இருக்க எனக்கு போதுமே என்றானாம்
காஞ்சி தியாகராஜன் -தியாக மண்டபம் —

பேர் பாடி -அவனை விட -நின் நாமம் கற்ற ஆவலிப்பு கண்டாய் -சுக்ரீவன் -நாமி பலன் -வாலி எதிர்க்க -இங்கு யமனை
கட்டிப்பொன்-பணிப்பொன்-போலே -பேர் பாட நியமங்கள் இல்லை
முதல் பாசுரம் -முழுவதாக -நாராயணன்
அடுத்து -பரமன் அடி திருவடி -இங்கு பேர் -பாடி
ஓங்கி -உலகு அளந்த உத்தமன் பேரை ஓங்கி பாட வேண்டும் -ஐந்தாவது அர்த்தம் -சத்தமாகப் பாட வேண்டும்
இங்கே நாங்கள் -கீழே நாமும் -நமக்கே
நாம சங்கீர்த்தனம் -ஸ்வயம் பிரயோஜனம் -இனிமை அனுபவிக்க சொல்கிறோம் –
மூச்சு விடுவது போலே -இது இல்லாவிட்டால் தரியோம்
நம் பாவைக்கு -சாற்றி -பறை சாற்றி -மழைக்கு நோன்பு -உள்ளே அவனை ஸம்ஸ்லேஷிக்க –
இரண்டும் கிட்டும் –

கண்ணன் உத்தேச்யமாக இருக்க -உத்தமன் பேர் பாட –
வாமனன் கிருஷ்ணன் சாம்யம் -கருணை மிக்கு / ஏற்றத்தாழ்வு பாராமல் -/ சிசுபாலனுக்கும் / இருவரும் அழகு /
அதி மானுஷ சேஷ்டிதங்கள் இருவருக்கும் /
வைதிக கார்யம் செய்யும் பொழுது இரண்டாவது காரணம் -நடுவில் பேசக் கூடாது -பிராயச்சித்தம் –
இதம் விஷ்ணு விசக்ரமே த்ரேதா -இப்படி விஷ்ணு மூன்று அடிகளால் அளந்தான் -சொல்ல வேண்டும் –
வாமனன் பெயர் சொல்வதே பிராயச்சித்தம் -வேதமும் இப்படியே சொல்லும்
மூன்றாவது காரணம் -சஞ்சீவி மந்த்ரம் கொண்டு உயிர் பிழைப்பித்தார் சுக்ராச்சாரியார் மஹா பலியை-
அதிதி தேவி பிரார்த்திக்க -கஸ்யபர் -பயோ விரதம் -பால் மட்டும் உண்டு -12-நாள் விரதம் –
ஒருத்தி -12-நாள் விரதத்துக்கு செய்தவன் -500000-கோபிகள் -30-நாள்கள் -அவனையே கேட்டு விரதம்
அடுத்து காரணம் -வாமன புராணம் -மழை பொழிய –
வண்டு-போலே சுக்ராச்சாரியார் -சுரும்பால் கிளறிய -மேக மழை தடையும் நீக்கி பொழிவார்-
ஆக நான்கு காரணங்கள் –
அடுத்து -உலகு -சாஸ்திரம் -எதைக்கொண்டு பார்க்கிறோம் -look-லோகனம்-புருஷோத்தம யோகம் –
லோகத்திலும் வேதத்திலும் நான் புருஷோத்தமன் இங்கும் சாஸ்திரம் அர்த்தம் -கீதையில்
ஓங்கி -விஸ்வரூபம் -எடுத்து ஸ்ரீ கீதா சாஸ்திரம் -அளந்து வழங்கினான்
அடுத்து -மத்ஸ்ய அவதாரம் -சாஸ்திரங்களை -காத்து -க்ருதமாலா வைகை நதியில் -சத்யவ்ரத பாண்டியன் –
மீன் கொடியில்-அதனால் -ஆண்டாள் -அதே பாண்டிய தேசம்
பேசும் மீன் -dolphin-தமிழ் பெயர் -ஓங்கி –
உலகம் -சாஸ்திரம் -அளந்த-காப்பாற்றிய –உத்தமன் -மத்ஸ்யவதாரம்
இல்லவே இல்லை என்பது இல்லை -பக்தர்களுக்காகவே –

நீர் வளம் அதனாலே -நில வளம் -அதனாலே -பால் வளம் -மூன்றும் –
வேதம் ஓதியருக்கு ஓர் மழை –மன்னருக்கு ஒரு மழை -கற்புடை மகளிருக்கு ஒரு மழை -மும்மாரி –
ஓங்கு பெறும் செந்நெல் -புஷ்டியாக -flat-idea-
கயல் நேராக போக இடம் இல்லாமல் யூடே உகள
பூங்குவளை- போதில் -வண்டு -பசி அடங்கி -உண்ட மயக்கம் -பூக்கள் தோறும் போக வேண்டாம்
தேங்காதே புக்கு -அசராமல் -இடை விடாமல் -தீர்த்த முலை -தொட்டாலே கறக்கும்
பொங்கி -மகிழ்ச்சியால் பொங்கும் படி –
வள்ளல் பெறும் பசுக்கள் -கண்ணன் போலே வள்ளல் -சத்ருஞ்ஞான்-ராமனது யானை போலே
ஐஞ்சுக்கும் இரண்டு பழுது இல்லை என்று இராமல் -கோ மூத்திரம் கோ மயம் சாணி -பால் தயிர் நெய்
இது வரை நீங்கும் செல்வம் -செல்வோம் என்று செல்லுமே
நமக்கு நீங்காத செல்வம் -தனம் மதீயம் பாத பங்கஜம் –ஆபத்தில் உதவுவது உனது திருவடியே
அஸ்தி மே ஹஸ்தி சைலே -பிதாமகர் தனம்

ஆச்சார்யர் பரம்
ஓங்கி -வாதம் -ஓங்கி அடித்து பேசி -ஸாஸ்த்ர விசுவாசம் நிறைந்து –
யஞ்ஞ மூர்த்தி தோற்றதும் பிரசாரம் பண்ண மாட்டேன் -எனது மேல் தப்பு -சம்ப்ரதாயம் மேல் இல்லை
உலகு அளந்த -சாஸ்திரம் அளந்து -சின் மாத்திரை -உபநிஷத் அருளிச் செயல் ஆச்சார்ய ஸ்ரீ ஸூக்தி
பிள்ளைக்கு தகுந்த படி எடுத்து அளந்து கொடுப்பார்
உத்தமன் -கண்ணாலே காணலாம்
பேர் பாடி -ப்ரத்யஷே குரு –பேராக புகழ்ந்து -உறவினர் நண்பர் இல்லாத இடம் –
வேலைக்காரன் -செய்த பின்பு -பிள்ளையை புகழ கூடாதே
நாங்கள் -சிஷ்யர்
நம் பாவை -வாழ்க்கையே நோன்பு
சாற்ற அர்ப்பணித்து
நீராடி –
தீங்கு இன்றி -தேகாத்ம அபிமானம் -body-என்ற எண்ணம் வேண்டுமே-
மும்மாரி -ரஹஸ்ய த்ரயம் அருளி -பிரதிபலன் எதிர்பாராமல்
செந்நெல் -பக்தி வளர
கயல் உகள -கண்கள் ஆனந்தம் -பகவான் பிரீதி
குவளை மலர் -ஹ்ருத்பத்மம்
வண்டு -தெய்வ வண்டு -சாரம் பருகி -தாமரையாள் விரும்பி -வேத கிளைகள் சாகைகள் –
ரீங்காரம் புல்லாங்குழல் -வண்டினம் -சோலை திருமாலிருஞ்சோலை
ஆறு கால் -ஆறு குணங்கள்
வள்ளல் -பெறும் பசுக்கள் -சிஷ்யன் கன்றுக்குட்டி -அறிவாகிய குடம் பொங்கி வழியும் -14-உலகம் காம தேனு -வித்யா ஸ்தானம்
பரிசுத்தம் -பவித்ரம்
மலம் மூத்திரம் பாவனத்வம் -வசவும் தீமை செய்யாது
நான்கு காம்புகள் -நான்கு வேதம் -நாலாயிரம் கிரந்த சதுஷ்ட்யம்
எதை உண்டாலும் வெளியில் பால் அமுதம்
காண்டற்கு -ஸத்பாத்ரம் இருக்க உபதேசம்
பஞ்சகவ்யம் தூய்மை -பஞ்ச சம்ஸ்காரம் தூய்மை
ஞானத்தால் மனத்தை நிறைப்பார்கள் –
நீங்காத செல்வம் -ஞானம் -கல்வி என்னும் பொருள் இருக்க எங்கே அலைவது -சர்வ தான பிரசாதம்
ராஜாவோ வரி போட முடியாது -திருட முடியாது கொடுக்க கொடுக்க பரிமளிக்கும்
பக்தி ரூபா பன்ன ஞானம் –
கற்றதால் என்ன பயன் -தொழா விட்டால் வள்ளுவர்

——————–

ஆழி மழைக் கண்ணா ஓன்று நீ கை கரவேல்
ஆழி யுட்புக்கு முகந்து கொடு ஆர்த்தேறி
ஊழி முதல்வன் உருவம் போல் மெய் கறுத்துப்
பாழியம் தோளுடைப் பற்பநாபன் கையில்
ஆழி போல் மின்னி வலம் புரி போல் நின்று அதிர்ந்து
தாழாதே சார்ங்கம் உதைத்த சர மழை போல்
வாழ உலகினில் பெய்திடாய் நாங்களும்
மார்கழி நீராட மகிழ்ந்தேலோ ரெம்பாவாய்–4-

நான்கு -பல விதம் -வேதம் -பக்தர் வகைகள் -வர்ணங்கள் -ஆசிரமங்கள் -புருஷார்த்தங்கள் -யுகங்கள் –
வ்யூஹ வடிவங்கள் -சதுர் புஜம் -யுக்திகள் -சாமம் தானம் -பேதம் -தண்டம் –
நான்கு ராமர் -மணக்கால் நம்பி ராம மிஸ்ரர் -/நான்கு ஆயிரம் /சதுரா சதுர் அக்ஷரம் -நாராயண -ராமானுஜ -/
கிரந்த சதுஷ்ட்யம் ஸ்ரீ பாஷ்யம் கீதா பாஷ்யம் திருவாயமொழி வியாக்கியானங்கள் ரஹஸ்ய த்ரயம்
நக்ஷத்ரம் -ஹஸ்தம் -அத்தி வரதர் பரமாக வியாக்யானம் –

பெருமாள் கோயிலில் நவகிரகம் -சந்நிதி –கூடல் அழகர் கோயில் மட்டும் –
ராமர் கோயில் -டில்லி -சன் மஹாராஜர் -நவ க்ரஹம் சந்நிதி வந்ததும் கூட்டம் இதற்கு
தர்பாரண்ய சிவன் -திரு நள்ளாறு -முதலில் வந்தவரை மீறி சனி பகவானுக்கு பிரதானம் –
லவ தேசம் -இவன் அருளால் இவர்கள் பலம் அருளுகிறார் –
ஞான சம்பந்தர் – வேயிரு தோளி பங்கன் -ஞாயிறு –நல்ல-பாடலும் உண்டே
ஆழி மழைக் கண்ணா -பர்ஜன்ய தேவனுக்கு கட்டளை இதில்
வருண பகவான் -மழைக் கடவுள் -கைங்கர்யத்துக்கு கட்டளை இட்டு அருள பிரார்த்திக்க –
மந்தஸ்மித ராமாயணம் -புன்னகை ராமாயணம் -திருவடி -அக்னி -இலங்கை சுட -சீதா -நான்கு பூத வடிவமாக –
பூமியில் -தோன்றி -ஆகாசம் -space –தஹராகாசம் -ஸூஷ்மம் -இடை அப்படி இருக்கும் –
சந்தேகம் -இடுப்பு சம்ஸ்க்ருதம்
காற்று -வாசனை திரு மேனி -தண்ணீர் சுவை திரு மேனியில் உண்டே -சர்வ ரஸ சர்வ கந்த -அக்னி கைங்கர்யம் செய்ய
வடுவூர் ராமர் நம்மை காக்கட்டும் –

ஆழி -வட்டம் -நீராழி வண்ணன்-கடல் வண்ணன் / பாலாழி நாதன் நின்மலனை
சீராழி வளையல் / கூராழி மாயன்-சக்கரம்
மா அலங்காரானை ஓராழி தேரை மறைத்தான் – பிள்ளைப் பெருமாள் ஐயங்கார்
சுற்று சுற்றி பொழியும் கம்பீர மழை -ஆழி மழை -கண்ணா -கண் போன்றவன் -அண்ணா -ஸ்வாமி என்றுமாம்
கணவன் கண்ணாளன் சொல்வது போலே
கை கரத்தல்- ஒளித்து வைப்பது –புற நானூறு -கொள் என கொடுத்தல் -தன் மானம் நிறைந்தவன் கை மேலே இருக்கும் –
ஈயேன் என்பவன் கை கீழே இருக்கும்
கொடுப்பவன் கொள்ளுபவன் இவர்களை விட
ஸ்ரத்தாயா தேயம் -அஸ்ரத்தாயா அதேயம் அஸ்ரத்தாயா தேயம் என்றும் கொண்டு –
சிரத்தை உடன் தானம் -சிரத்தை இல்லாமலும் -பொருளில் ஈடுபாடு இல்லாமலும் –
அதே போலே இங்கும் தண்ணீரில் அபிமானம் இல்லாமல் –

கர்மாதீனம் –பாராமல் உன் பெருமையைப் பார்த்து பொழிய வேண்டும் -மேகம் போலே
பாரி பாரி -ஒருவனும் இல்லை மாரியும் உண்டே -நாராயணன் அப்படி அருளுவான்
மானம் இலா பன்றி -அபிமானம் -உவமானம் -அளவு சமஸ்க்ருதம் / சிலம்பிடை மேரு பரல் போலே மஹா வராஹம் –
தயா சதகம் -பாபங்களை பிரசாதம் -சரணாகதி துணி மூடி -செய்தாலும் ரக்ஷணம்
பக்கத்து வீடு -கார் கப்யூட்டர் யானை -இல்லாத -பணம் பிடிக்காத ஆசாமிக்காக தேவை இல்லாத ஒன்றை வாங்காதே –
ஸூத்தாந்த சித்தாந்தம் -அந்தப்புர வாசிகள் கோபிகள் -தேசிகன் —

ஆழி உள் புக்கு -நடுப்பகுதியில் -முகர்ந்து கொடு -மணல் மட்டும் மீதும் படி –
தேவர் அசுரர் -சண்டையில் -கடலுக்குள் அசுரர்கள் ஒளிய-அகஸ்தியர்-குறு முனிவர் கீர்த்தி பெரியவர் –
ஆசமனம் அச்யுத நம -உறிஞ்சி -அடுத்து நீர் இல்லையே அனந்த கோவிந்தா -சாஸ்திரம் -ஏழு கடல் நீரையும் –
அமுதம் பொழிய -ஆராவமுதம் -குடம் -தாய் இடம் கொடுக்க -குட மூக்கு வெளிய -ஆராவமுதன் –
ஆர்த்து -ஒலி எழுப்பி -தொடை தட்டி திருவடி திரும்பி வர -முதலிகள் உணர்ந்தார்கள்
ஏறி -நீ பொழிவதை அறியும் படி -அவனைப் போலே இரா மடம் ஊட்டுவானைப் போலே இல்லாமல்
உப்பு -போலே பெருமையைக் காட்டிக் கொள்ளாத திருவடி -சீதா பிராட்டி தானே பார்த்ததையும் கேட்டதையும் சொல்ல
சத்ய சதம் அர்த்தம் -352-தாய் அழ-கைகேயி சேர்த்து -353-வடுவூர் சென்று சொல்கிறேன் -கூட்டிச் சென்றாள்-
புன்னகை அதனால் -அதே போலே இல்லாமல் நீ தான் பொழிகிறாய் -என்று தெரியும் படி

ஊழி முதல்வன் -பிரளய காலத்தில் முதல்வன் -சதேவ சோம்ய இதம் அக்ர ஆஸீத் ஏக மேவ அத்விதீயம் -சாந்தோக்யம் –
நாம ரூப விபாகம் இல்லாமல் ஸூஷ்ம அவஸ்தையில் -சேதன அசேதனங்கள் இருக்க
ஸ்தூல அவஸ்தையில் -பண்ணி -இதுவே ஸ்ருஷ்ட்டி –matter can never be created nor destroyed
அகர முதல எழுத்து எல்லாம் ஆதி பகவான் முதற்றே உலகு –
உருவம் போல் மெய் கறுத்து-தத்வ முக்த கலாபகம் முதல் ஸ்லோகம் -அரங்கனுக்கு முத்தும் ரத்னமும் -த்ரவிட உபநிஷத் ரத்னாவளி
படைத்த ஸந்தோஷம்–இயற்க்கை கறுப்பு -லஷ்மீ தேவை பார்த்து -அதுக்கு மேலே -உந்தி தாமரை மது உண்ட வண்டுகளால் –
துளசி கறுப்பு -யமுனை கறுப்பு-படைத்த ஸந்தோஷம் கறுப்பு -அவன் நம்மை ரக்ஷிக்கட்டும்
உருவம் -விசேஷணம் -நாச்சியார் விழி விழிக்க ஒண்ணாதே அவனுக்கு அதே போலே இங்கும்

பாழி அம் பத்ம நாபன் ஆழி போல் மின்னி -வலம் புரி போல் நின்று அதிர்ந்து
பாழி அம் -வலிமையான -அழகான தோள்கள் –முதுகில் புண் -சீதா கூந்தல் சிதறிய புஷ்பங்களால் கன்னி இருந்ததாம் –
சர்வேஸ்வரன் -பத்ம நாபன் -முதல் குழந்தை -பிறந்ததை ஆழி சங்கம் ஜொலித்து கொண்டாடும் -அதே போலே
மின்னல் மின்னினால் தாழம்பூ பூக்கும் நெஞ்சிலே வாழைப்பூ கொண்டையில் தாழம் பூ -கோதை அன்றோ
நின்று அதிர்ந்து -தொடர்ச்சியாக அதிர வேண்டும்
தாழாதே –காலம் தாழ்த்தாதே
சார்ங்கம் -தள்ளப்பட்ட அம்பு மழை போலே -சாரங்க பாணி பெருமாள் –
சாரங்க பாணி திருவடி -சார்ங்கம் தொட்டு இருக்கும் -இத்தை அழுத்தினால் போதுமே
ஆகவே இங்கே அவனைச் சொன்னபடி
ஆனை ஆயிரம் இத்யாதி –முண்டங்கள் ஆடும் –ஏழரை நாழிகை ஒலித்தது –
வாழ -அம்பு உதாரணம் போல் இல்லை –
நாங்களும் மகிழ்ந்து -மார்கழி நீராட மகிழ்ந்து -கிருஷ்ணனை அனுபவிக்க வேண்டும் –
மின்னல் இடி சொல்லும் பொழுதும் பகவத் சம்பந்தம் வைத்தே பேசுவார்கள்

ஆச்சார்ய பரம்
கார்பண்ய தோஷோபஹத ஸ்வபாவம் -ப்ருச்சாமி த்வாம் தர்ம ஸம் மூடசேதா–
யச்ச்ரேய ஸ்யாந் நிஸ்சதம் ப்ரூஹி தந்மே—ஷிஷ்யஸ்தேஹம் ஷாதி மாம் த்வாம் ப்ரபந்நம்—–ஸ்ரீ கீதை-৷৷2.7৷৷
ஸ்லோகம் சொல்ல வேண்டும் -ஸமாச்ரயணம் செய்து கொள்ள –
மனஸ் தான் குரு க்ஷேத்ரம் -கீதாச்சார்யர் போலே நம் ஆச்சார்யர் -சிஷ்யன் தாசன் –
தமிழ் ஆக்கி இங்கு ஆண்டாள்
ஆனந்த அனுபவ கண்ணீர் -ஆழி மழை கண்ணா
மேகம் போலே -வேதக்கடல் -அர்த்தங்களை -உபதேச மழை
உப்பு நீரை அமிர்தமாக்கும் -கஷ்ட விஷயங்களை எளியதாக
தீர்த்தகரராக சென்று உபதேசிப்பார்
பள்ளம் நிரப்பும் -தாழ்ந்து உள்ள சிஷ்யருக்கு ஞானம்
காலத்தில் மழை -உபதேசம் உஜ்ஜீவனம்
மும்மாரி -தத்வ த்ரயம் ரஹஸ்ய த்ரயம்
உபதேசம் மேலும் மேலும்
பிரதி யுபகாரம் எதிர்பார்க்காமல்
சின்ன ஸ்லோகம் முதல் ஸ்ரீ பாஷ்யம் வரை
முத்து சிப்பி -போலே ஸச் சிஷ்யரை ஆச்சார்யராக ஆக்குவார்
கை கரவேல் -தண்டித்து –
லஷ்மீ நாதாஸ்ய சிந்தவ் –நம்மாழ்வார் -மேகம் -நாத முனிகள் மழை –
ஆளவந்தார் காட்டாறு -எம்பெருமானார் ஏரி-
சாரம் உபதேசித்து –
கருணை மழை பொழிந்து
தேஜஸ் -ஆழி போலே –சங்க நாதம் போலே கம்பீரமாக -சார்ங்கம் -மடை திறந்த வெள்ள உபதேசம்
மார்க்க சீர்ஷம் -ஆச்சார்ய அபிமானம் -மார்க்கங்களுக்குள் ஸ்ரேஷ்டம்-ஸமாச்ரயண பிரார்த்தனை

அத்தி வரதர்
கண்களால் -கருணை -பொழிவார்-முத்தி மழை பொழியும் முகில் வந்தனர் வந்தார்
ஹதீஸ த்ருஷ்ட்டி அமுத மழையால் என்னை நனைக்க வேண்டும் கூரத்தாழ்வான்
பேர் அருளாளன் -கை கரவாமல் -வரம் தருபவரில் ராஜா
பொய்கையில் புக்கு -அத்தி வரதர் -யாக வேள்வியில் —
அந்த களேபரம் ஸூசிரம் ஸூஷ்மம் -இருப்பு ஆனந்தம் கொடுக்கும் -பாசி தூர்ந்த -மானமிலா தேஜஸ் கொண்டவன்
ஆழி உள் புக்கு -40-வருஷம் ஒரு தடவை -ஒரு யுகத்தில் உள்ளவரை -12-வருஷம் இல்லை -என்றால் சாந்நித்யம் போகும் என்பர்
இவரோ சதுர்யுகம் -48-வருஷத்துக்குள் வருவேன்
ஆர்த்து ஏரி –ஆரவாரம் அறிவோம் –2019- ஒரு கோடி ஜனங்களுக்கு அருள் மழை பொழிந்தார்
முகில் வண்ணன் -மெய் கறுத்து –
அது திகிரி வரதர் -இவர் சங்கு சக்கரம் மிக்க தேஜஸ்
அருள் மழை மட்டும் இல்லை -உள்ளே போகும் பொழுதும் மழை -1979–2019-
மார்கழி -மார்க்க சீர்ஷம் -ஆச்சார்ய நிஷ்டை -ஆறு வார்த்தை -பூர்ணாச்சார்யரை காட்டிக் கொடுத்தவர்

நாளை வாயினால் பாடி அப்புறம் மனஸினால் சிந்திக்க கிராமம் மாறி

————

மாயனை -மன்னு வட மதுரை மைந்தனை-
தூய பெருநீர் யமுனைத் துறைவனை –
ஆயர் குலத்தினில் தோன்றும் அணி விளக்கை
தாயைக் குடல் விளக்கம் செய்த தாமோதரனை –
தூயோமாய் வந்து நாம் தூ மலர் தூவித் தொழுது
வாயினால் பாடி மனத்தினால் சிந்திக்கப்
போய பிழையும் புகுதருவான் நின்றனவும்
தீயினில் தூசாகும் செப்பேலோர் எம்பாவாய்–5-

தூயோமாய் -ஒரே விசேஷணம்
மாயன் -போன்ற பல விசேஷங்கள் அவனுக்கு -என்ன மாயங்கள் பட்டியல் மேலே –
மன்னு வடமதுரை மைந்தன் -யுகம் -அவன் மேவி மன்னி உறை கோயில்
மைந்து -மிடுக்கு
தூய யமுனைத் துறைவனை -இரண்டாவது தூய்மை இங்கு -வாய் கொப்பளித்த தூய்மை
ஆயர் குலத்தினில் தோன்றும் அணி விளக்கு -வெங்கதிரோன் குலத்துக்கு விளக்கு
ராம சந்திரன் -கோபால ரத்னம் -கதிர்மதியம் போல் இருவரும் -விளங்கும் –
தாயைக் குடல் விளக்கம் செய்த தாமோதரன் -கௌசல்ய ஸூ ப்ரஜாகா–தமிழ் ஆக்கம்
பன்னிரு திங்கள் –மனுஷர் படாதன பட சங்கல்பிக்கிறான் முதலிலே –
மாயனை தொடங்கி-தாமோதரனை -நிகமனம்-
மேலே தூ மலர் -மூன்றாவது தூய்மை ஒரே பாசுரத்தில் -உடம்பு மனஸ் ஆத்ம சுத்தி மூன்று தீர்த்தம் அச்யுத -அனந்த -கோவிந்த

ஐந்திலும் ஒற்றுமை -நீராட்டம்-அனைத்திலும் உண்டு –
தூய பெரு நீர் யமுனைத் துறைவனை -இதில் –
நாராயணன் -பாற் கடலில் பையத் துயின்ற பரமன் -உலகு அளந்த உத்தமன் –
சார்ங்கம் உதைத்த -ராமாவதாரம் -வட மதுரை மைந்தனை
நமக்கே -பிரிவினை -அகங்கார த்வனி –
நாமும் நம் பாவைக்கு -மாறி அடுத்து -சேர்த்து பணிவுடன்
நாங்கள் நம் பாவைக்கு -அடுத்து
நாங்களும் -அடுத்து
நாம் -ஐந்தாம் பாசுரத்தில்
ஜிதந்தே -புண்டரீகாக்ஷ -நமஸ்தே விஸ்வ பாவன -ரிஷிகேசா மஹா புருஷ பூர்வஜா
ந தே ரூபம் -ந ச ஆகாரக -ந ஆயுதாநி பக்தானாம்
சமோஹம் சர்வ பூதானாம் -சொல்லியும் ஆஸ்ரித பக்ஷபாதம்
நமக்கே -நமக்குள் பாகுபாடு இல்லை-அவன் அருளாலே பேறு என்று இருக்கும் நமக்கே –

யுக பத்யம் யுக பத் ஒரே சமயத்தில் அனுக்ரஹ கார்யம் ஊழி முதல்வன் -அனைவரையும் பொதுவாக படைக்கிறவன்
பொது படைப்பு -சிறப்பு படைப்பு -நாலாயிரம் படி ஆய் ஸ்வாமி அருளுகிறார் -ஸ்ருஷ்டித்த பின்பு –
இவை கர்ம அனுகுணத்துக்கு தக்கபடி -வேறு பாடு -விசேஷ படைப்பு –
மழை -ஊழி முதல்வன் உருவம் போல் மெய் கறுத்து -முதல் படைப்பு போலே பொழிய வேண்டும்
சமஷ்டி ஸ்ருஷ்ட்டி பொதுவானதே -காருண்யம் கிருபா தயா தூண்ட இது -வியஷ்டி ஸ்ருஷ்ட்டி விசேஷம் -கர்ம அனுகுணம் –
இதில் உயர்வு தாழ்வு தோஷம் பார்க்கக் கூடாதே –
சாஸ்திரங்களை படைத்த பயன் இழக்கலாகாதே-
நன்மை தீமை பார்த்து பொழியாமல் -என்று பர்ஜன்ய தேவதைக்கு ஆணை இடுகிறாள் –

தண் துழாய் நமக்கு அன்றி நல்கான் -நம்மாழ்வார் -பக்தி இல்லாதவன் கேட்கவே மாட்டானே
அபக்தர்க்கு இல்லை போலே இங்கும் -அனைவரும் பக்தராக்கவே இவர்கள் முயல்கிறார்கள்
இன்று பக்தன் நாளை பக்தன் என்ற இரு வர்க்கமே உண்டு -பக்தி என்றுமே இல்லாதவர் என்று இல்லையே –

நமஸ் சப்த விளக்கமே திருப்பாவை -முதலிலே பார்த்தோம் -உனக்கு உரியவன் –
ததீய சேஷத்வம் ஆந்தரார்த்தம் -தத் இதீயர் பாகவதர் -பொது தொண்டு –

முதல் பாசுரம் -பஞ்ச நாராயணன் பிரதிஷ்டை பார்த்தோம் -பரத்வம்
மாயனை -பஞ்ச தாமோதரன் இதில் -எல்லாம் இரண்டாம் வேற்றுமை -ஸுவலப்யம்
புள்ளின்–வித்து ஒரே சொல் -காரணம்
பெத்த மனம் பித்து -எளிமை காட்ட வேண்டுமே -இது தான் சங்கதி –
ஜகத் காரணத்வம் -பரத்வத்துக்கும் எளிமைக்கும் நிதானம்
நமக்கு காரணம் இரங்கி அவதாரம் பெற்றபடியால் -லோகத்தை பெற்றதால் பரத்வம் -என்னைய் பெற்றதால் எளிமை
தத் தவம் அஸி
ஏகத் ஆத்மா -எல்லாமும் அவனை அந்தராத்மாவாகக் கொள்ளும் சாம்யம் அனைத்துக்கும் உண்டே -ஐ தாதாத்யம் இதம் சர்வம்

அப்பன் கோயில் -அவதாரம் -நம்மாழ்வார் -சங்கு பால் -அமுது செய்கிறார் –
வெண்ணெய்க்கு ஆடும் பிள்ளை நவநீத கிருஷ்ணன் திருக்கோலம் சாத்துவார் -க்ருஷ்ண த்ருஷ்ணா தத்வம் –
தவழ்ந்து வந்து -திருப்புளி மரத்து அடியில் –
யது குலத்தில் பிறந்து -ஆயர் குலத்தில் தோன்றும் அணி விளக்கு
குறையல் பிரான் அடிக்கீழ் –திருக்குறையலூர் -திருவாலி திரு நகரி
குறையில் பிரான் அடிக்கீழ் -பாட பேதம்
திரு மழிசை-ஒரு பிறவியிலே இரு பிறவி ஆனார் -பார்க்கவ பிருகு குலம் –
திருவாளர் பங்கயச் செல்வி பிரம்பு அறுத்தவர் வளர்க்க

ருக்மிணி தேவி -நப்பின்னை தேவி -இருவரை மணம் புரிய -கும்பன்
குல்யதே-பந்து வர்க்கத்தை உறுதி படுத்தும் -குலம்
வம்சம் -சூர்ய -சந்த்ர
வேயர் குலம் -பெரியாழ்வாரும் ஆண்டாளும்
சொட்டைக் குலம் -நாத முனி வம்சம்
அண்டக்குலத்து அதிபதி -சமூகம் அர்த்தம் இதில்
இண்டக் குலத்தை -அசுரர் குலம் நெருக்கமான அர்த்தம்
தொண்டைக் குலம்–கைங்கர்ய நிஷ்டர்
குல பதேர் வகுளாபிராமம் -பிரபன்ன குலம் –
பிறப்பால் இல்லை -கொள்கையால் -குலம்
குலத்தொழில் -பகவத் பாகவத கைங்கர்யம்-

அஜோபிசன் -ஈஸ்வரனாக இருந்தே பிறக்கிறேன் – என்கிறான் -அடங்காதவன் -அடங்குவோம் என்று முடிவு எடுத்து பிறக்கிறான்
அணி -மணி -விளக்கு -அதுஜ்ஜ்வலம் -அந்தகாரத்தில் தீபம் போலே
அச்யுத பானு -கிழக்கு சூர்யன் -சம்பந்தம் இல்லாமல் தேவகி கர்ப்பம் -ஆவிர்பாவம்

வெம் கதிரோன் குலத்துக்கு ஓர் விளக்கு நான் முகன் மரீசி கஸ்யபர் சூர்யன் -விவஸ்மான்-இவரே –
யமுனா எம தர்ம ராஜன் சனி-மனு இவர் புதல்வர் –
மனுவுக்கு இஷுவாகு அம்பரீஷன் கட்டுவாங்கன்–மனு குலம் -மனு குலா மஹீ பாக்க திநகர் குலம்
ரகு குல திலகம் -ராகவன் -காகுஸ்தன் -தராசரத தாசாரதி =மூதாதையர் பேரைச் சொன்னால்
சர்வ லோக சரண்யாய ராகவாயா -விபீஷணன் -சரணாகத ரக்ஷகத்வம் மூதாதையர்
ராமன் திருவடியைப் பற்ற சீதை சொல்லுவாள் –
தசரத நாட்டுப்பெண் சொல்லிக் கொள்ளுவதில்
ஜனக குலம் -சூதா இல்லை -ஜனக வம்சம் -ஒரே கோஷ்ட்டி
யதி
அத்ரி -தத்த்ரேயன் -துர்வாசர் ருத்ர அம்சம் -சந்திரன் ப்ரம்மா அம்சம்
சந்திரன் -புதன் புரூரவஸ் -ஆயு -மதுரா நகர் புனர் நிர்மாணம் செய்தான் -நகுஷன் -யயாதி -யது -புரு இரண்டு பிள்ளைகள் இவனுக்கு
சுக்ராச்சாரியார் சாபம் இளமை போக சாபம் -தர்மிஷ்டய் மூத்த பிள்ளை யது -பட்டாபிஷேகம் கிடையாது
புரு துஷ்யந்தன் பரதன் -பாண்டவர் -யது மூலம் கண்ணனுக்கு வந்து இருக்க வேண்டும் –

குடியாம் எங்கள் கோக்குலமே -ராமானுஜர் அடியார் குழாம் நாம்
இழந்த -குலம் வம்ச பூமிகளை -உத்தரிக்க கீழ் குலம் புக்கார்

————-

ஐந்து -சிறப்பு -பஞ்ச பூதங்கள் -கர்ம ஞான இந்திரியங்கள் -பஞ்ச மஹா யஜ்ஞங்கள் –
பஞ்சமோ வேதமும்-பரத்வாதி நிலைகள் ஐந்து –
பஞ்ச கிருஷ்ண ஷேத்ரங்கள் – பஞ்ச ரெங்கம் -ஆதி மத்ய அப்பால சாரங்கபாணி பரிமள ரெங்கன் –
பஞ்சாயுதங்கள் -பாஞ்சராத்ரம் -ஐந்து பேருக்கு ஐவருக்கு உபதேசம்
பஞ்ச சம்ஸ்காரம் -அர்த்த பஞ்சகம் -பஞ்ச கவ்யம் –

ஸ்ரீ வராஹ நாயனார் -பூ மாலை நாரில் தொடுத்து -வெள்ளை -வாசனை மாலை –
பா மாலை பாடி சமர்ப்பிக்க –music-festival–மார்கழி மாசம் இதனாலே –
சரம ஸ்லோகம் –
இந்த ரஹஸ்யம் வெளியிடவே ஆண்டாள் திருவவதாரம் -தூயோமாய் வந்து தூ மலர் தூவித் தொழுது –
வாயினால் பாட -அருளிச் செய்கிறார்
முதல் காட்சி இத்துடன் முடிவு –

ராமன் பட்டாபிஷேகம் -அடியார்களுக்கு செய்த பின்பே -பாதுகைக்கும்-பரதனுக்கும் -குகனுக்கும்- சுக்ரீவனுக்கும் –
விபீஷணனுக்கும் -இதுவே தான் முதலில் செய்து கொள்ள வில்லை –
சின்ன பலனைக் கொடுத்து தன்னைக் கொடுக்காமல் கிருஷ்ணன் செய்தால் என்ன -சங்கை -இது போலே முன்பு
உதங்கர் -ராஜஸ்தானில் தபஸ் -சம்வாதம் -வரம் -பாலைவனம் -கிருஷ்ணா சொன்னால் தீர்த்தம் வரும் –
வேடன் -தர -மறுத்து -த்வாரகாய் -ஏலா பொய்கள் உரைப்பான்
இந்திரன் அமுதம் கொண்டு வேடனாக வந்தானே -கர்மாதீனம் இழந்தீர்-
இதுக்கும் இந்த பாசுரம் பதில் அளிக்கும் -திரு நாம சங்கீர்த்தனம் அநிஷ்டங்களைப் போக்கி இஷ்டங்களை அளிக்கும்
அதிருஷ்டம் தது -அநிஷ்ட ஜனகம் பாபம்
இஷ்ட ஜனகம் புண்யம் -ஸ்ரீ பாஷ்யம் –

மாயனை –
ஆச்சர்ய சக்தன் -வியப்புக்கே வியப்பு தரும் மெய் ஞான வேதியன் –
கூடவே இருந்தும் அறிய முடியாதே -அவன் அனைத்தையும் அறிவான் –
அசுத்தம் -சுத்தம் -கலக்க -அசுத்தம் போக்கி -அமலன் -தோஷம் போக்கி சாம்யா பத்தி
மாயா ஜாலம் கெட்ட மாயை –உதங்கருக்கு தத்வம் புரிய வைக்க செய்த மாயை
அக்ஷய பாத்திரம் -திரௌபதி உண்ணும் வரை தீராது -சூர்யன் வரம் -தர்மருக்கு -ரிஷிகளும் கூடவே வந்ததால் –
துரியோதனன் ராஜ்யத்தில் இருப்பதை விட உன்னுடனே வருவதே சிறந்தது –
பீமன் -நான் உண்ட பின்பு மீதியிருப்பது அவமானம் என்றானாம்
அதிதி உபசாரம் விஷயம் துரியோதனனுக்கு அறிந்து கோபம் பொறாமை –
துர்வாசர் -கோபம் பட்டு சாபம் கொடுக்க தபஸ் வீர்யம் ஏறும் இவருக்கு மட்டும்
கிருஷ்ணன் உண்டு -சரீரம் தானே இவர்கள் -இவ்வாறு மாயம்
அகத்தி கீரை -உதவி -வரம் -அடியார் -உபவாசம் அப்புறம் -பாராயணம் செய்ய துவாதசி -அடியார்களை ரக்ஷிப்பதால் -மோக்ஷம் –
வேதாந்த தேசிகன் -அகத்தி கீரை -கருணை கொண்டு சரணாகதி -இதுக்கு செய்து மோக்ஷம் அடைந்ததாம்

மாயமான அவதாரங்கள் –
ஸ்ரீ விஷ்ணு புராணம் -பிரகலாதன் சரித்திரம் -மலையுடன் சமுத்திரத்தில் தள்ளி-பக்தியால் -கரை ஏற –
ஏகாந்த பக்தி வரம் -இல்லா ஒன்றையே வரம் கேட்க வேண்டும் -1-20-ஹிரண்யகசிபு பக்தனாக மாற —
அப்புறம் -நரஸிம்ஹர் தோன்றி -வதம் -பெருமாளே ஹிரண்யகசிபாக அவதரித்து அவனை மகிழ்வித்தார் -இப்படி மாயம் உண்டே

சூட்டு நன் மாலை படியே -ஆங்கு ஓர் மாயையினால் -இங்கும் மாயம் உண்டே –

பரிபாடல் -மாயோயே மாயோயே –கறுப்பு நிறத்தை சொல்லும் -ஸ்வா பாவிக்க வர்ணம்
மாயம் -ஒரு மாதம் உபன்யாசம் -திருக்குடந்தை ஆண்டவன் -பங்குனி உத்தரம் திருக்கல்யாணம் செய்வாராம்

மன்னு வடமதுரை மைந்தனை –
அர்ச்சாவதார நிலை இதில் -பரத்வம் வியூகம் வைபவம் அந்தர்யாமி கீழே நாலிலும்
ஆயர்பாடியில் -இருந்து -அநு காரம் -தெற்கே தானே மதுரா இதுக்கு -பாவத்தில் கொத்தையா
இருக்கும் இடத்தை வைத்து இல்லை -பாரதத்தில் உள்ள இரண்டு மதுரைக்கும் வாசி சொல்ல
வட-ஆல மரம் -மன்னு -ஆல மரம் வேர் வழியாக பூமிக்கு சம்பந்தம் ஸ்திரமாக இருப்பது போலே
ஜயந்தீ சம்பவ -ஆவணி கிருஷ்ண பக்ஷ -அஷ்டமி -ரோகிணி சேர்ந்தால் தான் ஸ்ரீ ஜயந்தீ –
அத்புதம் பாலகம் -அம்புஜ ஈஷணம்-சதுர்புஜம் -சங்கு கதாதரம் -கிலு கிலுப்பை
ஸ்ரீ வத்ஸம்-லஷ்மீ -பத்னியுடன் -பீதாம்பரம் -குண்டலாதிகள் -உடன் ஆவிர்பாவம் –
வஸூ தேவர் பார்த்தார் ஸூகர் பார்க்க வில்லையே -பொறாமை
பாலம் -சொல்லாமல் பாலகம் –ககாரம் -க நான்முகன் உடன் –பிள்ளை உடன் பிறந்தான்
கன்யா கன்யகா –
ராமன் லஷ்மணன் இரண்டாம் நாள் -கௌசல்யை அழும் படி வந்தேன் –
அடுத்த பிறவியில் அம்மா பேச்சு கேட்பேன் என்றானாம் -மைந்தன்

உள்ளம் கவர் கள்வன் -இவன் கள்ளத்தனம் வஸூ தேவருக்கும் பிறந்த அன்றே வந்ததே –
ஆதி சேஷன் குடை பிடிக்க -திக் தேவர் வழி காட்ட -பாணா மணிகள் தீபம் –
வேத பாராயணம் -கருடன் பறந்து இறக்கைகள் -பண் கொண்ட புள்ளின் சிறகு ஒலி-பின்னே செல்ல –
யாதவாப்கீதம் -22-சர்க்கங்கள் -திருவடி தீண்டி வற்றியது -என்றால் —
யமுனா நதி திரும்பி இமயமலைக்கு போனால் தான் நீ வெல்வாய் -கும்பகர்ணன்

துறைவன் -புஜங்க சயனே மஹா புஜங்கன் -கோபிகள் உள்ளம் கவர்ந்து பழகி ஸ்ரீ ரெங்கம் வந்து நம் மனசை கவர
-தேசிகன்
யது குலத்தில்–ஆயர் குலத்தில் -வள்ளல் ராமன் உன் மைந்தன் ஆணை -தசரதன் கைகேயி –
பாசம் வைத்து இவளது செல்லப் பிள்ளை
ஈன்றவள் சொல்ல காட்டுக்கு ஏகினேன்-என்று ராமரும் -அதே போலே இங்கும் ஆயர் குலத்தில்
அத்தை இங்கு நதி திரும்ப அந்த பாதையால் கடந்தாராம்
இரண்டு அங்குலம் இடை வெளி -இருந்ததே -கட்டுண்ணப் பண்ணிய –
வந்து -கோபிகள் இடம் தூயோமாய் சென்று -சொல்ல வேண்டாமோ -மனசில் அங்கு -இருக்கிறார்கள் -உடம்பும் வரட்டும்
தூவி -முறை அறியாமல் தூவினாலும் -மனசில் உண்மையான பக்தி
உக்ரம் -வீரம் -happy-வீரம் சொன்னாலும் கொள்ளுவான் பிள்ளை பக்தியுடன் சொன்னால் போதும்

மனம் பூர்வ வாய் உத்தரம் வேண்டாவோ என்னில் -சிந்தனை இல்லாமல் பாட
அழகு -மனஸ் சிந்திப்பதற்கு முன்பு வாய் பாடும் மனோ வேகம் விட
மனஸ் சிந்திக்காமல் வாய் வார்த்தையாகவாவது பாடினால் பின்பு மனாஸ் சிந்திக்கும்
மார்கழி திங்கள் மடி நிறைய பொங்கல் என்றாலும் சிறிது சிறிதாக பக்குவம் வரும்
வட மதுரை மைந்தன் -காவல் தெய்வம் ஸ்ரீ வராஹ நாயனார் –
ஆயர் குலத்தில் அணி விளக்கை தோன்ற இவர் அனுக்ரஹம் -தேவகி பிரார்த்திக்க -உனது பெயரை வைப்பேன் என்றாளாம்
யமுனை ஆற்றங்கரையில் கோயில் கொண்டு இருக்க -வரகனான கிருஷ்ணனால் பூமா தேவி தூக்கப்பட்டாள்
தாயாகிய தேவகி குடல் விளங்கும் படி செய்தார்
அவர் சொன்னபடி பூ மாலை பா மாலை இரண்டையும்

செப்பு -சொல்லு –
இருட்டறையில் விளக்கு ஏற்றிய அடுத்த நொடியே வெளிச்சம் வருவது போலே வினைகள் தீருமே –
நமக்கு வேண்டிய ஸ்ரீ கிருஷ்ண அனுபவம் கிட்டும்
நோன்பு விளக்க கூட்டம் நிறைவு

ஆச்சார்ய பரம்
நம்மையே திருத்தி பணி கொள்ளும் -பிள்ளை உறங்கா வல்லி தாசர் பொன்னாச்சி குடை -கண் அழகுக்கு அடிமை –
திவ்ய தேசங்களில் கைங்கர்யத்துக்கு இருப்பார்
இருப்பிடம் வைகுந்தம் -இவர் இருக்கும் இடமே திவ்ய தேசம்
புண்ய தீர்த்தம் விட -பெருமாளை விடவும்–பார்வையாலே திருத்தி -பாவனத்வம்
கிருபா சமுத்திரம் அருள் மா கடல்
யாமுனாச்சார்யர் -யமுனைத்துறைவன் -போன்றவர்
ஆயர் -ஆரியர் வம்சம் -குரு பரம்பரையில் வந்தவர்
ஞான தீபம்
தாய் -திருமந்திரம் -நாராயணனை கருவில் கொண்டதால்
உள் பொருள்களை -விளக்கும்
தாம் ஒது அதரன்–தான் ஓதியும் ஓதுவித்தும் -ஜபித்து உபதேசம்
3000-தடவையாவது காயத்ரி ஜபம் ஓதி இருந்தால் தான் பிள்ளைக்கு செய்யலாம்
அஹிம்சா பிரதமம் புஷ்பம் -இந்திரிய நிக்ரஹ -சர்வ பூதா தயா -ஷமா -சமம் -தமம் –
த்யானம் -சத்யம் -நன்மை செய்யும் உண்மை -தூ மலர் தூவி தொழுது –
மனம் மொழி மெய் -முக் கரணங்களாலும் செய்ய வேண்டும்

நாளை பெரியாழ்வார் பரம் -ஸ்வாதி -பிராட்டி பாரமாகவும் உண்டு

————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம்
ஸ்ரீ உ .வே. வெங்கடேஷ் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ உ .வே . வேளுக்குடி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ தொட்டாசார்யர் சுவாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ ஆயி சுவாமிகள் திருவடிகளே சரணம் சரணம்
ஸ்ரீ அழகிய மணவாள பெருமாள் நாயனார் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பூர்வாசார்யர்கள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ ஆழ்வார்கள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ ஆழ்வார் ஆச்சார்யர்கள் திருவவதார சம்வத்சரங்கள் -.ஸ்ரீ கோயில் கந்தாடை அண்ணன் /ஸ்ரீ:கோயில் கந்தாடை அப்பன்

December 16, 2019

ஸ்ரீ பொய்கையாழ்வார்
த்வாபரயுகம்-8,60,900, ஸித்தார்த்தி௵, ஐப்பசி௴, திருவோணம்
6202 – 3077-BCE
3125–சம்வத்சரங்கள்

ஸ்ரீ பூதத்தாழ்வார்
த்வாபரயுகம்-8,61,902, ஸித்தார்த்தி௵, ஐப்பசி௴, அவிட்டம்
6202 – 3077-BCE
3125
———-
ஸ்ரீ பேயாழ்வார்
த்வாபரயுகம்-8,61,902, ஸித்தார்த்தி௵, ஐப்பசி௴, சதயம்
6202 – 3077-BCE
3125
————
ஸ்ரீ திருமழிசையாழ்வார்
த்வாபரயுகம்-8,61,902, ஸித்தார்த்தி௵, தை௴, மகம்
5200 – 2900 BCE
2300
——————-
ஸ்ரீ நம்மாழ்வார்
1-ப்ரமாதி௵, வைகாசி௴, விசாகம்
3102 – 3067 BCE
35
————–
ஸ்ரீ மதுரகவியாழ்வார்
த்வாபரயுகம்-8,63,100 விக்ரம௵, சித்திரை௴, சித்திரை
4002 – 3187 BCE
815
————–
ஸ்ரீ குலஶேகராழ்வார்
28-ப்ரபாவ௵, மாசி௴, புனர்பூஶம்
3074 – 3007 BCE
67
————–
ஸ்ரீ பெரியாழ்வார்
47-க்ரோதன௵, ஆனி௴, ஸ்வாதி
3055 – 2970 BCE
85
————-
ஸ்ரீ ஆண்டாள்
97-ஆடி௴, பூரம்
3005 – 2999 BCE
6
————
ஸ்ரீ தொண்டரடிப்பொடியாழ்வார்
108-ப்ரபவ௵, மார்கழி௴, கேட்டை
2994 – 2889 BCE
105
—————
ஸ்ரீ திருப்பாணாழ்வார்
120-துர்மதி௵, கார்த்திகை௴, ரோஹிணி
2982 – 2932 BCE
50
—————
ஸ்ரீ திருமங்கையாழ்வார்
207-நள௵, கார்த்திகை௴, கார்த்திகை
2985 – 2880 BCE
105
——————-

ஸ்ரீ முதலாழ்வார்கள் மூவர் மற்றும் ஸ்ரீ திருமழிசையாழ்வார் யுகாந்தரத்தில் அவதரித்தவர்கள் என்பது ஜகத் ப்ரஸித்₃த₄ம்.
அவர்கள் யோக மஹிமையினால் நெடுங்காலம் வாழ்ந்தார்கள் என்றறிக.

——————-

ஓராண் வழி ஆசார்யர்களும், ஆசார்ய ஶ்ரேஷ்டர்களும்

ஶ்ரீ மந் நாதமுனிகள்:
3124–கலியுக வருஷம்-சோபக்ருது௵, ஆனி௴, அநுஷம்
823 – 917–ஆங்கில வருடம் AC
93
————-
ஶ்ரீ உய்யக்கொண்டார்
3027-ப்ரபாவ௵, சித்திரை௴, கார்த்திகை
886 – 975
89
————–
ஶ்ரீ குருகைகாவலப்பன்
தை௴, விசாகம்

151
————
ஶ்ரீ மணக்கால்நம்பிகள்
3900-விரோதி௵, மாசி௴, மகம்
929 – 1006
77
—————-
ஶ்ரீ ஆளவந்தார்
4007-தாது௵, ஆடி௴, உத்திராடம்
916 – 1042
66
—————
ஶ்ரீ பெரிய நம்பிகள்
ஹேவிளம்பி௵, மார்கழி௴, கேட்டை
997 – 1087
90
——————
ஶ்ரீ பெரிய திருமலை நம்பிகள்
சித்திரை௴, ஸ்வாதி
——————
ஶ்ரீ திருக்கோட்டியூர் நம்பிகள்
ஸர்வஜித்௵, வைகாசி௴, ரோஹிணி
987 – 1077
90
—————
ஶ்ரீ திருமாலையாண்டான்
ஸர்வதாரி௵, மாசி௴, மகம்
988 – 1078
90
————–
ஶ்ரீ திருவரங்கப்பெருமாள் அரையர்
பிங்கள௵, வைகாசி௴, கேட்டை
1017 – 1097
80
—————–
ஶ்ரீ மாறனேர் நம்பிகள்
ஆடி௴, ஆயில்யம்
—————
ஶ்ரீ திருக்கச்சி நம்பிகள்
ஶோபக்ருத்௵, மாசி௴, மிருகசீர்ஷம்
1009 – 1100
91
—————-
ஶ்ரீ எம்பெருமானார்
4119-பிங்கள௵, சித்திரை௴, திருவாதிரை
1017– 1137
120
————-
ஶ்ரீ கூரத்தாழ்வான்
ஸௌம்ய௵, தை௴, ஹஸ்தம்
1009 – 1127
118
————-
ஶ்ரீ முதலியாண்டான்
ப்ரபவ௵, சித்திரை௴, புனர்பூசம்
1027– 1132
105
————–
ஶ்ரீ எம்பார்
துர்மதி௵, தை௴, புனர்பூசம்
1021 – 1140
119
————–
ஶ்ரீ கந்தாடையாண்டான்
ஸ்வபானு௵, மாசி௴, புனர்பூசம்
1104 – 1209
105
——————–
ஶ்ரீ திருவரங்கத்தமுதனார்
பங்குனி௴, ஹஸ்தம்
————
ஶ்ரீ பராசரபட்டர்
சுபக்ருத்௵, வைகாசி௴, அநுஷம்
1122 – 1174
52
————–
ஶ்ரீ நஞ்சீயர்
விஜய௵, பங்குனி௴, உத்தரம்
1113 – 1208
95
————–
ஶ்ரீ நம்பிள்ளை
ப்ரபவ௵, கார்த்திகை௴, கார்த்திகை
1147 – 1252
105
———-
ஶ்ரீ வடக்குத் திருவீதிப்பிள்ளை
ஸர்வஜித்௵, ஆனி௴, ஸ்வாதி
1167 – 1264
97
————–
ஶ்ரீ பெரியவாச்சான் பிள்ளை
ஸர்வஜித்௵, ஆவணி௴, ரோஹிணி
1167 – 1262
95
————-
ஶ்ரீ பிள்ளை லோகாசார்யர்
க்ரோதன௵, ஐப்பசி௴, திருவோணம்
1205 – 1311
106
————-
ஶ்ரீ அழகிய மணவாளப் பெருமாள் நாயனார்
மார்கழி௴, அவிட்டம்
1207 – 1309
102
———–
ஶ்ரீ நாயனாராச்சான்பிள்ளை
ஆவணி௴, ரோஹிணி
1227 – 1327
100
—————–
ஶ்ரீ வாதிகேஸரி அழகிய மணவாள ஜீயர்
ஆனி௴, ஸ்வாதி
1242 – 1350
108
————-
ஶ்ரீ கூர குலோத்தம தாஸர்
ஐப்பசி௴, திருவாதிரை
1265 – 1365
100
——————-
ஶ்ரீ வேதாந்த தேசிகர்
விபவ௵, புரட்டாசி௴, திருவோணம்
1268 – 1369
101
—————-
ஶ்ரீ திருவாய்மொழிப் பிள்ளை
விக்ருதி௵, வைகாசி௴, விசாகம்
1290 – 1410
120
————–
ஶ்ரீ மணவாள மா முனிகள்
4371-ஸாதாரண௵, ஐப்பசி௴, திருமூலம்
1370 – 1443
73
——————-
ஶ்ரீ பொன்னடிக்கால் ஜீயர்
ரக்தாக்ஷி௵, புரட்டாசி௴, புனர்பூசம்
1384 – 1482
98
———————
ஶ்ரீ ஏட்டூர் சிங்கராசார்யர் (பெரிய ஜீயரின் சிஷ்யர்)
ஆடி௴, உத்திரட்டாதி
——————
ஶ்ரீ திருக்கோவலூர் ஒன்றான ஶ்ரீமத் எம்பெருமானார் ஜீயர்
ஶ்ரீமுக௵, தை௴, மிருகசீரிஷம்
1452 – 1569
116
——————-
ஶ்ரீமத் பிள்ளைலோகம் சீயர்
சித்திரை௴, திருவோணம்
1550 – 1650
100
—————-
ஶ்ரீ திருழிசை உ.வே. ஶ்ரீஅண்ணாவப்பங்கார் ஸ்வாமி
வ்யயநாம௵, ஆனி௴, அவிட்டம்
1766 – 1817
51
—————
ஶ்ரீமத் பரமஹம்ஸேத்யாதி ஶ்ரீபெரும்பூதூர் எம்பார் ஜீயர்
ஜய௵, ஆவணி௴, ரோஹிணி
1834 – 1893
59
—————-
ஶ்ரீ காஞ்சீ உ.வே. ப்ரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசார்ய ஸ்வாமி
விக்ருதி௵, பங்குனி௴, விசாகம்
1891 – 1983
93
————-

கோயில் கந்தாடை அண்ணன் – ஸ்ரீரங்கம் அண்ணன் திருமாளிகை

திருநக்ஷத்ரம்: புரட்டாசி பூரட்டாதி

ஆசார்யன்: மணவாள மாமுனிகள்

அவதார ஸ்தலம்: ஸ்ரீரங்கம்

சிஷ்யர்கள்: கந்தாடை அண்ணன் (திருமகனார்), கந்தாடை இராமாநுஜ ஐயங்கார் மற்றும் பலர்

அருளிச்செயல்கள்: ஸ்ரீ பராங்குச பஞ்ச விம்சதி, வரவரமுனி அஷ்டகம், மாமுனிகள் கண்ணிநுண்சிறுத்தாம்பு

உயர்ந்ததான யதிராஜ பாதுகை என்று அழைக்கப்பட்ட முதலியாண்டான் திருவம்சத்தில்,
தேவராஜ தோழப்பர் என்பாருடைய திருமகனாராக அவதரித்தார்.
இவருடைய திரு அண்ணனார் கோயில் கந்தாடை அண்ணன் என்பார்.
இவருக்கு பெற்றோர் சாற்றிய பெயர் “வரதநாராயணன்”.
இந்த ஸ்வாமியே பிற்காலத்தில் மணவாள மாமுனிகளுடைய ப்ரதான சிஷ்யர்களில் ஒருவரும்,
அஷ்ட திக் கஜங்களில் ஒருவருமாக விளங்கும்படித் திகழ்ந்தார்.

கோயில் அண்ணன் (ப்ராபல்யமாக விளங்கும் திருநாமம்) தன் சிஷ்யர்களோடு ஸ்ரீரங்கத்தில் வாழ்ந்து வந்தார்.
அப்போது, அழகிய மணவாளப் பெருமாள் நாயனார் (மாமுனிகளின் க்ருஹஸ்தாஸ்ரமம்) ஸ்ரீரங்கம் வந்து வந்தடைந்தார்.
அவரை ஸ்ரீரங்கநாதனும், கைங்கர்ய பரர்களும் விமர்சையாக வரவேற்றனர்.
சில காலம் கழிந்து நாயனார் சந்யாஸ்ரமம் ஏற்றார்.
அவருக்கு ஸ்ரீரங்கநாதன் அழகிய மணவாள மாமுனிகள் என்று திருநாமம் சாற்றினார்
(தன்னுடைய விசேஷ திருநாமமான அழகிய மணவாளன் என்னும் திருநாமத்தையே சாத்தி அருளுதல்).
எம்பெருமான் மணவாளமாமுனிகளை பல்லவராயன் மடத்தை (ராமாநுஜர் தங்கியிருந்த ப்ராசீனமான மடம்) ஏற்கச் செய்து
ராமாநுஜரைப் போலே பரம பதம் அடையும் வரை அங்கேயே ஸ்ரீரங்கத்தில் தங்கப் பணித்தார்.

மாமுனிகள் பொன்னடிக்கால் ஜீயர் முதற்கொண்டு தன் சிஷ்யர்களை மடத்தைப் புதுப்பிக்கும் படி ஆணையிட்டு,
மண்டபத்தை தன் நித்ய காலக்ஷேபதிற்காக உபயோகித்தார்.
மடத்தைப் புதுப்பிக்கும் போது பிள்ளைலோகாசார்யரின் திருமாளிகயிலிருந்து ஸ்ரீ பாததூளி (பிள்ளைலோகாசார்யர் திருப்பாதம் பட்ட மண்)
சேகரித்து அதனைக் கொண்டு கட்டினார் (பிள்ளைலோகாசார்யர் சம்ப்ரதாயதிற்கான அஷ்டாதச ரஹச்யங்களை அருளிச்செய்தார்).
ஸ்ரீரங்கத்தில் படையெடுப்பின்போது பாதிக்கப்பட்டிருந்த சத் சம்ப்ரதாயத்தையும், திருவோலக்கங்கங்களயும், ஸ்ரீ கோசங்களயும்
மீண்டும் நிர்மாணம் செய்வதற்காகவே தன் திருநக்ஷத்ரங்கள் (வாழ்நாள்) முழுவதையும் சமர்ப்பித்தார்.
இந்த காருண்யத்தைக் கேள்வியுற்ற மக்கள் பலரும் அவரை அடைந்து சிஷ்யர்களாயினர்.

திருமஞ்சனம் அப்பா என்பாருடைய திருமகளார் ஆய்ச்சியார் ஒருமுறை மாமுனிகளிடம் ஆசீர்வாதம் பெற்றுக்கொண்டார்.
ஆய்ச்சியார் மாமுனிகளிடம் பக்தி மிகுந்தமையால் தன்னை சிஷ்யையாக ஏற்றுக் கொள்ளும்படி கேட்டுக்கொண்டார்.
மாமுனிகள் முதலில் மறுத்து பின்னர் ஆய்ச்சியாருடைய பக்தியைக் கண்டு சிஷ்யையாக ஏற்றார்.
இந்த விஷயத்தை தன் பர்த்தா (கணவன்) கந்தாடை சிற்றண்ணர் முதற்கொண்டு யாரிடமும் ஆய்ச்சியார் தெரிவிக்கவில்லை.
அப்போது கோயில் அண்ணனுடைய திருத் தகப்பனாருக்கு ச்ரார்த்தம் நடக்கையில் ஆய்ச்சியார் தளிகை செய்யும் கைங்கர்யமேற்று
மிக பக்தி ச்ரத்தையுடன் செய்து முடிக்கிறார். ச்ரார்த்தம் முடிந்தவுடன் அனைவரும் மடத்தின் வாயிலருகே சயனிக்கலாயினர்.

அந்த சமயம் ஒரு ஸ்ரீவைஷ்ணவர் பெரிய ஜீயர் மடத்தை விட்டு வெளியில் வருவதைக் கோயில் அண்ணன் கண்டார்.
உடனே அந்த ஸ்ரீவைஷ்ணவரை அங்கு எழுந்தருளியதன் காரணத்தை வினவினார்.
அதற்க்கு அந்த ஸ்ரீவைஷ்ணவர் தன் திருநாமம் சிங்கரைய்யர் என்றும்
தான் வள்ளுவ ராஜேந்திரம் கிராமத்திலிருந்து வருவதாகவும்,
பெரிய ஜீயரிடதில் சிஷ்யராக விருப்பம் என்றும் ஆனால் இதுவரை அந்த ஆசை நிறைவேறவில்லை என்றும் தெரிவித்தார்.
அண்ணன் அதற்கு ஸ்ரீரங்கத்தில் பல ஆசார்யர்கள் இருக்கிறார்கள், தேவரீர் அவர்களில் யாருக்கும் சிஷ்யராகலாம் என்று தெரிவித்தார்.
அதற்கு அந்த ஸ்ரீவைஷ்ணவர் , தாம் மாமுனிகளிடம் சிஷ்யராக வேண்டும் என்பது பகவானின் திருவுள்ளம் என்று சாதித்தார்.
அண்ணன் ப்ரமித்துப் போய் மேற்கொண்டு விஷயத்தை அறிய வினவினார்.
ஆனால் அந்த ஸ்ரீவைஷ்ணவர் விஷயம் மிகவும் ரஹஸ்யம் என்றும் மேற்கொண்டு கூற இயலாதென்றும் கூறினார்.
அண்ணன் சிங்கரைய்யரை உள்ளே அழைத்து பிரசாதமும் தாம்பூலமும் அளித்து அன்றிரவு அங்கேயே சயனிக்கும்படி செய்தார்.
இரவுப்போதில் அண்ணன் மற்றும் அவரது திருத் தம்பியார் வெளியே உறங்க, உள்ளே இருந்த ஆய்ச்சியார் சயனிக்க முற்பட்டு ,
“ஜீயர் திருவடிகளே சரணம், பிள்ளை திருவடிகளே சரணம், வாழி உலகாசிரியன்” என்று சாதித்தார்.
அதை அண்ணனும், திருத் தம்பியாரும் கேட்டு ஒருவர் உள்ளே செல்ல முற்பட, அண்ணன் காலையில் பார்த்துக் கொள்ளலாம் என்று தடுத்தார்.

அண்ணன் மாமுனிகள் மீது பயபக்தி மிகுந்து அன்றிரவு உறக்கம் வரவில்லை.
ஆகவே இரவுப் போதானாலும் சிங்கரைய்யரை மீண்டும் சந்தித்து வினவினார்.
சிங்கரைய்யர் ஒரு பெரிய சம்பவத்தை விண்ணப்பித்தார்.
“அடியேன் வழக்கமாக காய்கறிகள் முதலியவைகளை அடியேன் கிராமத்திலிருந்து சேகரித்தது
ஸ்ரீரங்கத்திலுள்ள மடங்களுக்கும் திருமாளிகைகளுக்கும் வழங்கி வருகிறேன்.
ஒரு சமயம் ஒரு ஸ்ரீவைஷ்ணவர் அடியேனை பெரிய ஜீயர் மடத்திற்கு வழங்கும் படி சொன்னார்.
அதனை சிரமேற்கொண்டு பெரிய ஜீயர் மடத்திற்கு காய்கறிகளோடு சென்றேன். ஜீயர் அடியேனை பல கேள்விகள் கேட்டார் –
“எங்கே இந்த காய்கறிகள் விளைகின்றன? யார் இவைகளுக்கு தண்ணீர் பாய்ச்சுகின்றனர்? “எனப் பல கேள்விகள் கேட்டார்.
“இவைகள் சுத்தமான பகுதியிலிருந்து விளைகின்றன,
இவைகளுக்குத் தண்ணீர் பாய்ச்சுவது தங்கள் சிஷ்யர்கள் தான்” என்று பவ்யமாக சாதித்தேன்.
பெரிய ஜீயர் அகமகிழ்ந்து காய்கறிகளை ஏற்றார்.
மேலும் மாமுனிகள் அடியேனை ஊர் திரும்பு முன் பெரியபெருமாளை சேவித்துச் செல்லச் சொன்னார்.

அர்ச்சகர் என்னை இந்த முறை யாருக்கு வினியோகித்தீர் என வினவினார்.
அடியேன் இந்த முறை பெரியஜீயர் மடத்திற்கு சமர்பித்ததைச் சொன்னேன்.
அர்ச்சகர் இதைக் கேட்டதும் மிகவும் மகிழ்ந்து போய் இனி உமக்கு ஆசார்ய ஸம்பந்தம் கிட்டிவிடும் என சாதித்தார்.
அடியேனுக்கு தீர்த்தம் (சரணாம்ருதம்), ஸ்ரீசடகோபம், மாலை, அபயஹஸ்தம் முதலியன சாதித்தார்.
அதனால் அடியேன் எம்பெருமான் அருளுக்கு மிகவும் பாத்திரமானேன்.
அடியேன் மீண்டும் ஜீயரிடம் சென்று தங்கள் கிருபையால் பெரியபெருமாள் அனுக்ரஹத்திற்கு பாத்திரமானேன் என்று சொல்லி
ஊர் திரும்ப நியமனம் பெற்றேன். மடத்திலிருந்த கைங்கர்ய பரர்கள் அடியேனுக்கு பிரசாதம் அழித்து வழியனுப்பி வைத்தனர்.
செல்லும் வழியில் அடியேன் பிரசாதத்தை ஸ்வீகரித்தேன். அதனால் அடியேன் ஆத்மா சுத்தி அடைத்தது”.
அன்றிரவு ச்வப்னம் ஒன்று கண்டேன். அடியேன் பெரிய பெருமாள் சந்நிதியில் இருந்தேன்.
பெரிய பெருமாள் ஆதிசேஷனை நோக்கிக் காட்டினார் “அழகிய மணவாள ஜீயர் ஆதிசேஷனுக்குச் சமம்.
நீர் அவருடைய சிஷ்யனாகக் கடவது”.
அந்த நேரம் முதல் மாமுனிகளுடய சிஷ்யனாகக் காத்துக் கொண்டிருக்கிறேன்” – என்று முடித்தார் சிங்கரைய்யர்.
இதைக்கேட்ட அண்ணன் ஆழ்ந்து சிந்தித்து சயநித்தார்.

அண்ணன் கண்மலர்ந்து ஒரு ச்வப்னம் கண்டார்.
ஒரு ஸ்ரீவைஷ்ணவர் மச்சில் (மாடி) படிகளிலிருந்து இறங்கிவந்து சவுக்கினால் அண்ணனை அடிக்கத் தொடங்கினார்.
அண்ணனால் அதைத் தடுக்க முடியும் ஆயினும் தான் ஏதோ தவறு செய்ததாக எண்ணித் தடுக்கவில்லை.
பிறகு அந்த சவுக்கு உடைந்து விடுகிறது.
அந்த ஸ்ரீவைஷ்ணவர் படிகளின் வழியாக அண்ணனை ஒரு சன்யாசியிடம் அழைத்துச் செல்கிறார்.
அந்த சன்யாசி மிகவும் கோபமாகக் காணப் படுகிறார். மேலும் அவரும் ஒரு சவுக்கைக் கொண்டு அண்ணனை அடிக்கிறார்.
சவுக்கு உடைந்து விழுகிறது. உடனே அந்த ஸ்ரீவைஷ்ணவர் சன்யாசியை நோக்கி
“இவர் ஒரு சிறு பிள்ளை. தான் செய்வதறியாது செய்து விட்டார்” என்று தெரிவிக்கிறார்.
சன்னியாசியும் சாந்தமடைந்து அண்ணனைத் தன் திருமடியின் மீது அமரச் செய்து
“நீயும் உத்தம நம்பியும் தவறு செய்திருக்கிறீர்கள்” என்று சாதித்தார்.
“மணவாள மாமுனிகளின் பெருமை அறியாது, குழப்பமடைந்து தவறிழைத்து விட்டேன். என்னை மன்னியுங்கள்” என்று
அண்ணன் தன் கலக்கத்தை தெரிவித்தார்.
அன்போடு அந்த சன்யாசி “நான் பாஷ்யகாரர் (ஸ்ரீ ராமாநுஜர்), இந்த ஸ்ரீவைஷ்ணவர் முதலியாண்டான்.
நான் ஆதிசேஷன். இங்கு மாமுனிகளாக அவதாரம் செய்திருக்கிறேன்.
நீரும் உமது சொந்தங்களும் சிஷ்யர்களாக அடைந்து உய்யப் பாருங்கள்” என்று சொன்னார்.
உடனே அண்ணனுக்கு ச்வப்னம் கலைந்து திடுக்கிட்டு விழிக்கிறார்.

மிகுந்த பூரிப்புடன் தன் சகோதரர்களிடம் இதைத் தெரிவிக்கிறார்.
உறங்கிக் கொண்டிருந்த ஆய்ச்சியாரை எழுப்பி ச்வப்னத்தில் கண்டதைச் சொல்கிறார்.
ஆய்ச்சியாரும் மாமுனிகள் தன்னை உய்வித்ததாகவும், ஆசீர்வதித்ததாகவும் அருளினார்.
அண்ணன் அதைக் கேட்டு மிகவும் அக மகிழ்ந்தார். உடனே சிங்கரையரிடமும் சென்று ச்வப்னம் பற்றிக் கூறினார்.
பிறகு காவிரிக்குச் சென்று தன் நித்ய அனுஷ்டானங்களைச் செய்கிறார்.
அடுத்து அண்ணன் தன திருமாளிகை அடைந்து, உத்தம நம்பி மற்றும் கந்தாடை திருமேனி சம்பந்திகளை அழைக்கிறார்.
பலர் அண்ணன் திருமாளிகையை அடைந்து இதே போல் தங்களுக்கும் அதே ச்வப்னம் வந்ததைச் சொல்லி ஆச்சர்யமடைந்தனர்.
எல்லோரும் எம்பா (ஆசார்யர் லக்ஷ்மணாசார் என்பாருடைய திருப் பேரனார்) என்னும் ஆசார்ய ச்ரேஷ்டரை அடைந்து விவரத்தை சொல்ல,
எம்பா மிகவும் சீற்றமுற்றார். இன்னொரு ஜீயரிடம் தஞ்சம் புகுதல் நம் குடும்பத்திற்கு எந்த நன்மையும் செய்யது என்றார்.
இதையே அங்கு பலரும் வழிமொழிந்தனர்.

கந்தாடை திருமேனி சம்பந்திகளோடே அண்ணனும் ஜீயர் மடத்தை அடைந்து ஜீயரோடே தஞ்சம் புகுந்தனர்.
அண்ணன் தன்னுடைய சிஷ்யரான திருவாழியண்ணன் மற்றும் மாமுனிகளுடைய நெருங்கிய சிஷ்யரான
சுத்த சத்வம் அண்ணனையும் மாமுனிகளை அடைய உடன் கூட்டிச்சென்றார்.
சுத்த சத்வம் அண்ணன் சதா மாமுனிகளுடய வைபவங்களை அண்ணனுக்கு சொல்லி வந்தார்.
ஆகவே அதுவே அண்ணனுக்கு சுத்த சத்வம் அண்ணாவின் உதவியை நாடக் காரணமாய் அமைந்தது.
கோயில் அண்ணன் அடுத்து தன் திருமேனி சம்பந்திகளோடே மாமுனிகள் மடத்தை அடைந்தனர்.
அந்த சமயம் மாமுனிகள் திருமலை ஆழ்வார் மண்டபத்தில் காலக்ஷேபம் செய்து கொண்டிருந்தார்.
அண்ணன் குறுக்கிட விரும்பாமல், ஆய்ச்சியாரிடம் விஷயத்தைத் தெரிவிக்க,
ஆய்ச்சியார் ஒரு ஸ்ரீவைஷ்ணவரை அனுப்பி மாமுனிகளிடம் சென்று விஷயத்தை தெரிவிக்கச் சொன்னார்.

அந்த ஸ்ரீவைஷ்ணவர் இதைத் தவறாகப் புரிந்துகொண்டு மாமுனிகளிடம் தவறான செய்தியைச் சொன்னார்
(அதாவது மாமுனிகளிடம் வாக்குவாதம் செய்வதற்காக வந்துள்ளனர் என்று சொல்லி விட்டார்).
மாமுனிகள் குழப்பத்தைத் தவிர்க்க மடத்தின் புழைக்கடைக்கு சென்றார்.
இந்த சமயம் அண்ணனும், திருமேனி சம்பந்திகளும் வானமாமலை ஜீயரை அடைந்து தண்டன் சமர்ப்பித்தனர்.
ஆய்ச்சியார் அந்த ஸ்ரீவைஷ்ணவரைத் தேடி விஷயத்தை வினவி பிறகு உண்மையான விஷயத்தை மாமுனிகளிடம் தெரிவித்தார்.
மாமுனிகள் அந்த ஸ்ரீவைஷ்ணவரைத் திருத்திப் பணி கொண்டு, அண்ணனையும் அவர் திருமேனி சம்பந்திகளையும் வெகுவாக வரவேற்றார்.
கோயில் அண்ணனும் திருமேனி சம்பந்திகளும் ஜீயருடைய பாத கமலங்களில் விழுந்து வணங்கி பழங்கள், பூ முதலியவைகளை சமர்ப்பித்தனர்.
மாமுனிகள் “திருப்பல்லாண்டு” மற்றும் நம்மாழ்வாருடைய “பொலிக! பொலிக! பொலிக!” என்னும் திருவாய்மொழிப் பதிகத்துக்கும்
சுருங்க விவரணம் அளித்தார்.
அண்ணன் பொன்னடிக்கால் ஜீயர் வாயிலாக தம்மையும் தம் குடும்பத்தினரையும் ஆச்ரயித்து ஜீயரின் சிஷ்யராக ஏற்கும்படி கேட்டுக்கொண்டார்.
மாமுனிகள் தனித்ததோர் ஒரு இடத்திற்கு சென்று அண்ணனை பொன்னடிக்கால் ஜீயர் வாயிலாக அழைத்தார்.
மாமுனிகள் அண்ணனிடம் “நீர் ஏற்கனவே வாதூல குலத்தில் பிறந்திருக்கிறீர் (முதலியாண்டான் திருவம்சத்தார்).
இதுவே பெரிய திருவம்சமும், திருமாளிகையும் ஆகும். இப்படியிருக்க ஏன் தம்மிடம் தஞ்சம் புக விரும்புகிறீர்?” என வினவினார்.
அண்ணன் மிகவும் வற்புறுத்தி, இதற்கு முன்னால் ஜீயருடைய வைபவம் அறியாது தவறிழைத்தமைக்கு வருந்தி,
தன ச்வப்ன விஷயங்களையும் தெரிவித்தார்.
மாமுனிகள் அதனை ஏற்று ஒரு சிலரே எம்பெருமான் கிருபையால் ச்வப்னத்தில் கண்டருளி ஆணையிடுவான் என்று சொல்லி,
மூன்று நாட்களுக்குப் பின்னே ஸமாச்ரயணம் பெற வரச் சொன்னார்.
அண்ணன் அகமகிழ்ந்து ஏற்று குடும்பத்தோடு மடத்தை விட்டுக் கிளம்பினார்.

எம்பெருமான் பலர் ச்வப்னத்திலும் தன் அர்ச்சா சமாதியை
(தன்னுடைய சங்கல்பமான அர்ச்சா திருமேனியில் யாரோடும் தொடர்பு கொள்வதில்லை என்பதை மீறி) விடுத்துத் தோன்றி,
மாமுனிகளுக்கும் எனக்கும் வேறுபாடில்லை, எல்லோரும் உய்வு பெற அவருடைய திருப்பாத கமலங்களில் தஞ்சம் புகுவீர் என்று உரைத்தான்.
மூன்று நாட்களுக்குப் பிறகு எல்லோரும் பெரிய ஜீயர் மடத்தில் ஒன்று கூடினர்.
தன் குலப்பெருமைகளை நினைத்து செருக்குக் கொள்ளாமல் மாமுனிகளிடம் தஞ்சம் புக நினைத்த அண்ணன் மாமுனிகளை நெருங்கி,
தனக்கும் உடனுள்ள மற்றையெல்லோருக்கும் பஞ்ச ஸம்ஸ்காரம் செய்து அருளுமாறு பிரார்த்தித்தார்.
மாமுனிகள் வானமாமலை (பொன்னடிக்கால்) ஜீயரிடம் ஏற்பாடுகளை செய்யச் சொல்லி ஆணையிட்டு,
பஞ்ச ஸம்ஸ்காரம் (தாபம் – தோள்களில் திருச்சங்கு/திருச்சக்கரம் பொரித்தல், புண்டரம் – ஊர்த்வ புண்டரம்,
நாம – தாஸ நாமம் தரித்தல், மந்த்ரம் – ரஹஸ்ய த்ரய மந்த்ரங்கள், யாகம் – திருவாரதன க்ரமம்) செய்துவித்தார்.

உடனே மாமுனிகளுக்குப் பொன்னடிக்கால் ஜீயர் நினைவு தோன்றி,
அந்த பெரிய சபை முன்பே பொன்னடிக்கால் ஜீயரைக் காட்டி
“பொன்னடிக்கால் ஜீயர் அடியேனுடைய பிராண ஸுஹ்ருது மற்றும் நலம் விரும்பி.
தமக்கிருக்கும் அத்துணை பெருமைகளும் அவருக்கும் கிடைக்க வேண்டும்” என்று அறிவித்தார்.
அண்ணனுக்கு மாமுனிகளின் உள்ளம் புரிந்து “தாங்கள் எங்களை பொன்னடிக்கால் ஜீயருக்கு சிஷ்யராக்கி இருக்கலாம்” என்று கூறினார்.
மாமுனிகள் அக மகிழ்ந்து “தான் எப்படி எம்பெருமானின் ஆணையை மீற முடியும்?” என்று கேட்டார்.
ஆய்ச்சியாருடய திருமகனாரான அப்பாச்சியாரண்ணா உடனே எழுந்து,
தன்னை பொன்னடிக்கால் ஜீயரின் சிஷ்யராக ஏற்கச் செய்யுமாறு பிரார்த்தித்தார்.
மாமுனிகள் மிகவும் அகமகிழ்ந்து அவரை “நம் அப்பாச்சியாரண்ணாவோ?” எனப் புகழ்ந்தார்.
மாமுனிகள் தன் சிம்மாசனத்தில் வற்புறுத்தலாகப் பொன்னடிக்கால் ஜீயரை எழுந்தருளச் செய்து ,
சங்க-சக்கரங்களைத் தந்து அப்பாசியாரண்ணாவிற்கு பஞ்ச ஸம்ஸ்காரம் செய்துவிக்கச் செய்தார்.
முதலில் மறுத்த பொன்னடிக்கால் ஜீயர் பிறகு மாமுனிகள் தனக்கு உள்ளம் குளிரும் எனக்கூற ஆணையை ஏற்றார்.
அப்பாசியாரண்ணாவுடனே அவரது திருச் சகோதரரான தாசரதியும் பஞ்ச ஸம்ஸ்காரம் பெற்றார்.
பொன்னடிக்கால் ஜீயர் சிம்மாசனத்தை விட்டுப் பணிவுடன் எழுந்து,
மாமுனிகளுக்கு வெகு மரியாதையுடன் தன் ப்ரணாமங்களைத் தெரிவிக்கிறார்.
இதற்குப் பிறகு அண்ணனுடைய திருத்தம்பியாரான கந்தாடை அப்பன் என்பாரும்,
உடனிருந்த பலரும் மாமுனிகளிடம் பஞ்ச ஸம்ஸ்காரம் பெற்றனர்.
அந்த சமயம், பெரிய பெருமாளின் ப்ரசாதம் வந்து சேருகிறது. மாமுனிகள் பிரசாதத்தை பெருமதிப்புடன் ஸ்வீகரித்தார்.
பிறகு எல்லோரும் சந்நிதிக்குச் சென்று மங்களாசாசனம் செய்து, மடத்திற்குத் திரும்பி,
ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும் விசேஷ ததியாரதனையை ஸ்வீகரிக்கின்றனர்.

ஒரு தினம் மாமுனிகள் சுத்த சத்வம் அண்ணா கோயில் அண்ணனோடு இருக்கும் பற்றுதலைப் புகழ்ந்தார்.
அதனாலே ஆண்ட பெருமாள் (கொமாண்டூர் இளையவில்லியாச்சானின் வழித்தோன்றலில் இருந்த பேரறிஞர்) என்பாரை
அண்ணனுடைய சிஷ்யராகும்படியும், முழுமையாக அண்ணனுடைய சத் சம்ப்ரதாயத்தைப் பரப்பும் கைங்கர்யத்தில் ஈடுபடும்படியும் நியமித்தார்.
கோயில் அண்ணனின் திருமேனி சம்பந்தியான எறும்பி அப்பா அண்ணனின் புருஷகாரத்தில் மாமுனிகளை அடைந்து நெருங்கிய சிஷ்யரானார்.
அண்ணனின் திருக்குமாரரான கந்தாடை நாயன் சிறுவயதிலேயே அறிவில் சிறந்து விளங்கினார்.
ஒருசமயம் மாமுனிகள் திவ்யப் பிரபந்தத்தில் சில விஷயங்களை விளக்க, நாயன் அதற்கு விசேஷ குறிப்புகளை நல்கினார்.
இது கண்டு பூரிப்படைந்த மாமுனிகள் கந்தாடை நாயனைத் தன் திருமடியில் அமரச் செய்து, புகழ்ந்து,
சம்ப்ரதாயத்திற்குத் தலைவராய் விளங்க ஆசீர்வதித்தார்.
கந்தாடை நாயன் “பெரிய திருமுடி அடைவு” என்னும் சிறந்த கிரந்தத்தை அருளிச் செய்கிறார்.

பிரதிவாதி பயங்கரம் அண்ணன் மாமுனிகளை அடைந்து சிஷ்யராகிறார்.
அவரும் முதலில் அண்ணனின் திருமாளிகையைத்தான் அடைந்தார்,
பிறகு இருவருக்கும் இடையே மிகுந்த மரியாதையான தொடர்பு நீடித்தது.

கோயில் அண்ணனை மாமுனிகள் பகவத் விஷயத்தை
(நம்மாழ்வாரின் ஸ்ரீசூக்தியான திருவாய்மொழி மற்றும் அதன் வ்யாக்யானங்கள்)
கந்தாடை அப்பன், திருக்கோபுரத்து நாயனார் பட்டர், சுத்த சத்வம் அண்ணன், ஆண்ட பெருமாள் நாயனார் மற்றும்
அய்யனப்பா ஆகியோருக்கு உபதேசிக்குமாறு பணித்து, அண்ணனுக்கு “பகவத் சம்பந்த ஆசார்யர்” என்னும் பட்டம் சாற்றி,
அண்ணனை முக்கியமான பகவத் விஷய ஆசார்யனாக நியமிக்கிறார்.
ஒருமுறை கந்தாடை நாயனும் (அண்ணனின் திருக்குமாரர்) ஜீயர் நாயனாரும் (மாமுனிகளுடைய பூர்வாச்ரமத் திருப்பேரனார்)
பகவத் விஷயத்தை விஸ்தரமாக விவாதிப்பதைக் கண்ட மாமுனிகள்,
இருவரையும் ஸம்ஸ்க்ருதத்தில் ஈடு வ்யாக்யானத்திற்கு அரும்பதம் அருளுமாறு பணித்தார்.
மாமுனிகள் ஸ்ரீரங்கத்தில் ஸ்ரீ ரங்கநாதன் முன்னிலையில் பகவத் விஷயத்தை கால க்ஷேபம் செய்ய,
மாமுனிகள் முன்பு ஒரு ஆணி-திருமூலத்தன்று ஸ்ரீ ரங்கநாதன் தோன்றி “ஸ்ரீசைலேச தயாபாத்ரம்” என்ற ஆச்சர்ய தனியன் சாதித்து
மாமுனிகளைத் தன் ஆசார்யனாக ஏற்கிறார்.
உடனே இந்தத் தனியனை எல்லா திவ்ய தேசங்களிலும் நித்யப்படித் தொடக்கமாகவும்
சாற்றுமுறையின்போதும் சேவிக்கக் கடவது என்று எம்பெருமானே சாதிக்கிறான்.
அதே சமயம் அண்ணன் திருமாளிகையில் அண்ணனின் தேவியாரும் மற்ற ஸ்ரீவைஷ்ணவர்களும்
மாமுனிகளின் வைபவத்தை பற்றிப் பேசிக் கொண்டிருந்தனர்.
அச்சமயம் ஒரு சிறு குழந்தை அங்கு தோன்றி சிறியதான அதே தனியன் குறிக்கப்பட்ட திருவோலையைச் சமர்ப்பித்து மறைந்து போகிறது.

ஒருமுறை மாமுனிகள் அண்ணனிடம் திருவேங்கடமுடையானுக்கு மங்களாசாசனம் செய்யும் விருப்பமா என்று கேட்டார்.
அச்சமயம் அப்பிள்ளை அண்ணனை “காவேரி கடவாத கந்தாடை அண்ணனாரோ” என்று பெருமிதமாய் புகழ்ந்தார்.
ஆனால் மாமுனிகள் ஸ்ரீரங்கநாதன் திருவேங்கடத்தில் நித்யசூரிகள் சந்தி செய்ய நின்றிருப்பதை சுட்டிக்காட்டினார்.
அண்ணன் அகமகிழ்ந்து மாமுனிகளிடம் திருவேங்கட யாத்திரைக்கு உத்தரவு பெற்றுக்கொண்டார்.
மாமுனிகள் அண்ணனை பெரியபெருமாள் சந்நிதிக்கு அழைத்துச் சென்று திருவேங்கட யாத்திரைக்கு
பெருமானின் அனுமதியையும் ஆசீர்வாதத்தையும் பெற்று அருளி,
உத்தம நம்பியையும் (பெரிய பெருமாளின் அந்தரங்க கைங்கர்ய பரர்) உடன் அனுப்பி அருளினார்.
அண்ணனுடன் பல ஸ்ரீவைஷ்ணவர்கள் சேர்ந்து கொண்டனர்.
அப்போது அண்ணனுக்கு பல்லக்கு அளித்ததை அண்ணன் மறுத்து ஸ்ரீவைஷ்ணவர்களுடன் சேர்ந்து வரவே விருப்பம் தெரிவித்தார்.
இது அண்ணனின் பணிவை விளம்பிற்று.

அண்ணன் திருமலையின் அடிவாரத்தை அடைந்தவுடன் அனந்தாழ்வான்
(திருமலை அனந்தாழ்வானின் திருவம்சம்சதில் அப்போதிருந்து திருமலையில் கைங்கர்யம் செய்தவர்),
பெரிய கேள்வி ஜீயர், ஆசார்ய புருஷர்கள், மற்றும் பல ஸ்ரீவைஷ்ணவர்கள் ஆடம்பரமாக வரவேற்றனர்.
அண்ணன் ரதோத்சவத்தில் கலந்து கொண்டு எம்பெருமானுக்கு மங்களாசாசனம் செய்தார்.
அண்ணன் ஸ்ரீபதரீகாச்ரமத்தில் கைங்கர்யம் செய்யும் அயோத்யா ராமானுஜ ஐய்யங்காரை தண்டன் சமர்ப்பித்தார்.
அயோத்யா ராமானுஜ ஐய்யங்கார் மாமுனிகளை தஞ்சம்புக எண்ணினார்,
ஆனால் அனந்தாழ்வான் அண்ணனை ஆச்ரயித்தால் மாமுனிகள் மிகவும் அகமகிழ்வார் எனக் கூறினார்.
ஐய்யங்கார் மிகுந்த பூரிப்புடன் தன்னை ஆசிர்வதிக்குமாறு அண்ணனை வேண்ட,
அவ்வாறே அண்ணன் பஞ்ச ஸம்ஸ்காரம் செய்தருளினார்.
திருவேங்கடமுடையானும் ஐயங்காரின் அண்ணன் சம்பந்தத்தை ஆமோதித்து “கந்தாடை ராமானுஜ ஐயங்கார்” என்று
ஐயங்காருக்கு பட்டம் சாற்றியருளினார். கந்தாடை ராமானுஜ ஐயங்கார் குறிப்படத்தக்க பல கைங்கர்யங்களைச் செய்கிறார்.

அண்ணன் திருவரங்கம் திரும்ப முடிவுசெய்து திருவேங்கடமுடையானின் ஆணையைப் பெற்றார்.
அப்போது எம்பெருமான் தன்னுடைய வஸ்த்ரத்தை அண்ணனுக்கு அருளினார், அண்ணன் மிகவும் மகிழ்ந்து அதையேற்றார்.
எம்பெருமான், ஐயங்கார் அண்ணனுக்குப் பல்லக்கு சமர்ப்பித்ததை ஏற்கச் செய்து, அதிலேயே அண்ணன் ஸ்ரீரங்கம் வந்தடைந்தார்.
வரும் வழியில் பல திவ்ய தேசத்தில் மங்களாசாசனம் செய்து, எறும்பியப்பாவையும் அவரது மூத்தோரையும் எறும்பி என்னும் இடத்தில் சந்தித்தார்.
காஞ்சிபுரத்தில் அண்ணன் சாலைக் கிணற்றிலிருந்து (எம்பெருமானார் தேவப்பெருமாளுக்கு தீர்த்த கைங்கர்யம் செய்ய உபயோகித்த கிணறு)
தீர்த்தம் பூரிக்க விரும்பினார். அண்ணன் மகிழ்ச்சியுடன் இந்த கைங்கர்யத்தைச் செய்து,
அப்பாசியாரண்ணாவை இந்த கைங்கர்யத்தைத் தொடருமாறு நியமித்தார்.

அண்ணன் காஞ்சீபுரத்திலிருந்து புறப்பட்டு ஸ்ரீபெரும்புதூர் மற்றும் அதனருகே உள்ள திவ்யதேசங்களுக்கு சென்றுவர உத்தேசமானார்.
தேவப்பெருமாளின் நியமனதைக் கேட்டறிந்தார். அந்த சமயம் தேவப்பெருமாள் திருவாராதனம் கண்டருளிக் கொண்டிருந்தான்.
தளிகை (போகம்) சமர்ப்பித்த பிறகு தேவப் பெருமாள் அண்ணனை முன்னே யழைத்து தான் சாற்றியிருந்த
வஸ்த்ரம், புஷ்பமாலை, சந்தனம், மற்றும் பூண் (வாசனை த்ரவ்யம்) முதலியவற்றை அண்ணனிடம் தந்தருளி
மாமுனிகளிடம் சமர்ப்பிக்குமாறு அருளினான். அண்ணனுக்கு விசேஷமாக வழியனுப்பி வைக்கப்பட்டது.
அண்ணன் விடைபெற்று கச்சிக்கு வைத்தான் மண்டபத்தில் எழுந்தருளி மாமுனிகள் வைபவத்தை காலக்ஷேபம் செய்தார்.
அங்கிருந்த பெரியோர்கள் தேவப் பெருமாள் மாமுனிகளை
“அண்ணன் ஜீயர்” (கோயில் அண்ணனின் ஆசார்யன் மாமுனிகள்) என்று பிரமிப்புடன் அருளுவதைக் கூறினர்.
அதே போல் பெரிய பெருமாளும் “ஜீயர் அண்ணன்” (பெரிய ஜீயரின் சிஷ்யர் கோயில் அண்ணன்) என்று அருளுவதையும்
அச்சமயம் மாமுனிகள் காலம் கடந்ததால் ஸ்ரீரங்கம் திரும்புமாறு அண்ணனுக்கு செய்தி அனுப்பினார்.
அண்ணன் ஆணையை சிரமேற்கொண்டு, ஸ்ரீபெரும்பூதூரையும், மற்ற திவ்யதேசங்களயும் நோக்கி வணங்கி, ஸ்ரீரங்கம் வந்தடைந்தார்.

பெரிய ஜீயர் அண்ணனின் திருமாளிகை வந்து சேர்கிறார்,
அப்போது திருமாலை தந்த பெருமாள் பட்டர் மற்றும் கோயில் கைங்கர்ய பரர்கள்
பெரிய பெருமாளின் ப்ரசாதமும் மாலையும் கொண்டு வருகின்றனர். எல்லோரும் அண்ணனை வெகுவாக வரவேற்கின்றனர்.
மாமுனிகள் அண்ணனை ஆசீர்வதித்தார்.
அங்கிருந்த ஸ்ரீவைஷ்ணவர்கள் தேவப்பெருமாள் அண்ணனை “அண்ணன் ஜீயர்” என்று அருளியதைக் கூறினர்.
மாமுனிகள் இதனைக் கேட்டு பூரிப்படைந்து தனக்கு அண்ணன் சிஷ்யராக வாய்த்ததை நினைத்து அகமகிழ்ந்தார்.
ப்ரதிவாதி பயங்கரம் அண்ணன் “அண்ணன் ஜீயர்’ என்பது “ஸ்ரீய:பதி” (எம்பெருமான் பிராட்டி போன்று)
சப்தத்திற்கு நிகராய் இருப்பதைக் குறிப்பிடுகின்றார்.
எம்பெருமான் பிராட்டி போன்று ஜீயரும் அண்ணனும் அவரவர் ப்ரபாவங்களை புகழுமாறு உள்ளனர்.

மாமுனிகள் அந்திம காலத்தில் ஆசார்ய ஹ்ருதயத்திற்குத் தன் தள்ளாமையையும் பொருட்படுத்தாமல்
வியாக்யானம் அருளிக் கொண்டிருந்தார். ஏன் இவ்வளவு ச்ரமதோடு இதைச் செய்ய வேண்டும் என்று அண்ணன் வினவ,
“இதை உமது புத்ர பௌத்ரர்களுக்காக எழுதுகிறேன்” என்று பெரும் கருணையுடன் கூறினார்.
படையெடுப்பின் போது கோயில் அண்ணன் இழந்த முறைகள் மற்றும் பஹுமானங்களயும்
மீட்டுக் கொடுத்து மாமுனிகள் பேருபகாரம் செய்தார்.

ஸ்ரீ கோயில் கந்தாடை அண்ணன் ஸ்வாமிகள் தனியன்

சகல வேதாந்த சாரார்த்த பூர்ணாசயம்
விபுல வாதூல கோத்ர உத்பவானாம் வரம்
ருசிர ஜாமாத்ரு யோகீந்த்ர பாத ஆஸ்ரயம்
வரத நாராயணம் மத் குரும் ஸமாஸ்ரயே

—————-

ஸ்ரீ:கோயில் கந்தாடை அப்பன்

திருநக்ஷத்திரம்: புரட்டாசி (கன்னி) மகம்

தீர்த்தம்: கார்த்திகை சுக்ல பஞ்சமி

அவதார திருத்தலம்: ஸ்ரீ ரங்கம்

ஆசாரியன்: மணவாளமாமுநிகள்

பிரபந்தம் : வரவரமுநி வைபவ விஜயம்

ஸ்ரீ யதிராஜ பாதுகை (ஸ்ரீ எம்பெருமானாரின் திருவடிகள்) என்று போற்றப்பட்ட ஸ்ரீ முதலியாண்டானின் திருவம்சத்தில்
ஸ்ரீ தேவராஜ தோழப்பரின் திருக் குமாரராகவும் , ஸ்ரீ கோயில் கந்தாடை அண்ணனின் திருத்தம்பியாராகவும் ,
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் அவதரித்தார்.
பெற்றோர்களால் ஸ்ரீநிவாசன் என்று பெயரிடப்பட்ட இவரே பிற்காலத்தில் ஸ்ரீ மணவாளமாமுநிகளின் ப்ரிய சிஷ்யரானார் .

ஸ்ரீ மணவாளமாமுநிகள் ஆழ்வார் திருநகரியிலிருந்து திருவரங்கம் எழுந்தருளிய பொழுது,
ஸ்ரீ பெரியபெருமாள் (ஸ்ரீ ரங்கநாதன்) அவரை சத் சம்பிரதாயத்தின் தலை நகரமான ஸ்ரீ திருவரங்கத்திலேயே இருந்து
சத் சம்பிரதாயத்தை வளர்த்து வரும் படி பணித்தார்.
பின் ஸ்ரீ மணவாளமாமுநிகள் பூர்வாசார்ய கிரந்தங்களை திரட்டி , அவற்றை ஓலையிட்டு கொண்டு
கிரந்த காலக்ஷேபங்கள் செய்து வந்திருந்தார் .
அந்தமில் சீர் ஸ்ரீ மணவாளமுநிப்பரரின் பெருமைகளையெல்லாம் கேட்டறிந்த பல பெரியவர்கள் மற்றும் ஆசார்ய புருஷர்கள்
இவர் திருவடிகளையே தஞ்சமாய் பற்ற வந்த வண்ணம் இருந்தனர் .

ஸ்ரீ எம்பெருமானின் திருவுள்ளத்தால், ஸ்ரீ முதலியாண்டான் திருவம்சத்தில் தோன்றிய ஆசார்யவரரான
ஸ்ரீ கோயில் கந்தாடை அண்ணன் , ஸ்ரீ மணவாள மாமுநிகளின் சிஷ்யரானார்.
இவர், பின்னர் ஸ்ரீ மணவாள மாமுநிகளால் சத் சம்பிரதாய ப்ரவர்த்தனத்திற்காக நியமிக்கப்பட்ட அட்ட திக்கஜங்ளிலே ஒருவர் ஆனார்.
இவர் ஸ்ரீ மணவாளமாமுநிகளின் திருவடித் தாமரைகளைத் தஞ்சமாய் பற்ற வரும் வேளையிலே
தம்மோடு தம்மை சேர்ந்தவர்களையும் அழைத்துக் கொண்டார் .
இவ்வாறு ஸ்ரீ கோயில் கந்தாடை அண்ணனோடு வந்தவர்களில் ஒருவர் தான் ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் .

“வரவர முநிவர்ய கனக்ருபா பாத்ரம்” என்று இவரை கொண்டாடும் தனியனிலிருந்தும் ,
“மணவாளமாமுநிகள் மலரடியோன் வாழியே ” என்று பல்லாண்டு பாடும் இவர் வாழித் திருநாமத்தினிருந்தும்,
இவர் எப்பொழுதுமே சரம பர்வ நிஷ்டையிலே (ஆசார்யனுக்கும் அடியார்களுக்கும் தொண்டு புரிதலிலே)
ஆழ்ந்து எழுந்தருளியிருந்தார் என்று நாம் அறிந்து கொள்ளலாம் .

ஸ்ரீ மணவாளமாமுநிகளின் மற்றுமோர் சிஷ்யரான ஸ்ரீ எறும்பியப்பா ஸ்ரீ மணவாளமாமுநிகளின் அன்றாட வழக்கங்களைக்
கொண்டாடும் தனது பூர்வ தினசர்யையில் கீழ்க்கண்டவாறு மிகவும் அழகாக சாதிக்கிறார் ,

பார்ச்வத: பாணி பத்மாப்யாம் பரிக்ருஹ்ய பவத்ப்ரியௌ
விந்யஸ்யந்தம் சநைர் அங்க்ரீ ம்ருதுலௌ மேதிநீதலே (பூர்வ தினசர்யை – 4 )

இந்த சுலோகத்தில் ஸ்ரீ எறும்பியப்பா ஸ்ரீ மணவாளமாமுநிகளை பார்த்து இவ்வாறாகக் கூறுகிறார் ,
“தேவரீரின் அபிமான சிஷ்யர்களை (ஸ்ரீ கோயில் அண்ணன் மற்றும் ஸ்ரீ கோயில் அப்பன் ) இருபுறங்களிலும்
தேவரீரின் திருக் கரங்களான தாமரைகளாலே பிடித்து, தேவரீரின் திருவடித் தாமரைகளை
மேதினியில் மெல்ல மெல்ல ஊன்றி எழுந்தருளுகிறீர் “.
தினசர்யைக்கான தனது வியாக்யானத்தில், ஸ்ரீ திருமழிசை அண்ணாவப்பங்கார்
ஸ்ரீ கோயில் அண்ணனையும் ஸ்ரீ கோயில் அப்பனையும் குறிப்பிடுகிறார்”, என்று கோடிட்டு காட்டுகிறார் .

ஸ்ரீ பாஞ்சராத்திர தத்வ சம்ஹிதை, “ஒரு சந்நியாசி எப்பொழுதும் தனது த்ரி தண்டத்தை பிடித்துக் கொண்டே இருக்கவேண்டும் ” என்று கூறுகிறது.
“இவ்வாறு இருக்க , ஸ்ரீ மணவாளமாமுநிகள் த்ரிதண்டம் இன்றி எழுந்தருளி இருக்கலாமோ ?” என்ற கேள்வி எழுமின் ,
அதற்கு ஸ்ரீ திருமழிசை அண்ணாவப்பங்கார் கீழ்க்கண்டவாறு சமாதானங்கள் அளிக்கிறார் :
முற்றிலும் உணர்ந்ததோர் சந்நியாசி த்ரிதண்டம் இன்றி இருத்தல் ஓர் குறை அல்ல .
எப்பொழுதும் பகவத் த்யானத்தில் ஈடுபட்டிருப்பவராய் , நன் நடத்தை உடையவராய், தன் ஆசாரியனிடமிருந்து அனைத்து
சாத்திரங்களையும் கற்றவராய் , பகவத் விஷயத்தில் அறிவுமிக்கவராய் , புலன்களையும் சுற்றங்களையும் வென்றவராய்
எழுந்தருளி இருக்கக்கூடிய ஒரு சந்நியாசிக்கு த்ரிதண்டம் உள்ளிட்டவையோடு இருத்தல் கட்டாயம் அல்ல.
ஸ்ரீ எம்பெருமான் முன்னிலையில் தெண்டன் இடும் வேளையில் த்ரிதண்டம் அதற்கு இடையூறாக இருக்கக் கூடும் .
அதனால் ஸ்ரீ பெரிய ஜீயர் த்ரிதண்டம் இன்றி எழுந்தருளியிருக்கலாம் .

ஸ்ரீ கோயில் அண்ணனின் பெருமைகள் எல்லாம் அறிந்த பலர் , அவரிடத்திலே தஞ்சம் அடைய விரும்பினர்.
“காவேரி தாண்டா அண்ணனாய் ” ,ஸ்ரீ கோயில் அண்ணன் எழுந்தருளி இருந்ததால் ,
அவர் தனது திருத் தம்பியாரான ஸ்ரீ கோயில் அப்பனை , பல இடங்களுக்கு சென்று அனைவரையும் திருத்தி பணி கொள்ள நியமித்தார்.
இதனை சிரமேற்கொண்டு ஸ்ரீ கோயில் அப்பன் தானும் ஸ்ரீ திருவரங்கத்திலிருந்து பல இடங்களுக்கு சென்று பலரை பணி கொண்டார்.

நாமும் இவரின் ஆசார்ய அபிமானத்தில் சிறிதேனும் பெற இவர் திருவடிகளை வணங்குவோம் !!

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் சுவாமியின் தனியன்:

வரதகுரு சரணம் சரணம் வரவர முநிவர்ய கண க்ருபா பாத்ரம் |
ப்ரவ குண ரத்ண ஜலதிம் ப்ரநமாமி ஸ்ரீநிவாஸ குரு வர்யம் ||
தேசிகம் ஸ்ரீநிவாஸாக்யம் தேவராஜ குரோஸ்ஸுதம் |
பூஷிதம் ஸத் குணைர் வந்தே ஜீவிதம் மம ஸர்வதா||

————–

திரு முடி வர்க்கம்
1-எம்பெருமானார் -திரு நக்ஷத்ரம் – சித்திரை திருவாதிரை
2-முதலியாண்டான் -திரு நக்ஷத்ரம் – சித்திரை -புனர்வசு –
3-கந்தாடையாண்டான் -திரு நக்ஷத்ரம் -மாசி புனர்வசு –
4-துன்னு புகழ் கந்தாடைத் தோழப்பர்–திரு நக்ஷத்ரம் -ஆடி பூரட்டாதி
5-ஈயான் ராமானுஜாச்சார்யார் -திரு நக்ஷத்ரம் -புரட்டாசி -திருவோணம்
6-திருக்கோபுரத்து நாயனார் -திரு நக்ஷத்ரம் -மாசி -கேட்டை
7-தெய்வங்கள் பெருமாள் -திரு நக்ஷத்ரம் -ஆவணி -திருவோணம்
8-தேவராஜ தோழப்பர் -திரு நக்ஷத்ரம் –சித்திரை- ஹஸ்தம்
9-பெரிய கோயில் கந்தாடை அண்ணன்-திரு நக்ஷத்ரம் -புரட்டாசி -பூரட்டாதி

10-பெரிய கோயில் கந்தாடை அப்பன் -திரு நக்ஷத்ரம் -புரட்டாசி மகம்
தீர்த்தம் -கார்த்திகை சுக்ல பஞ்சமி

11-அப்பு வய்ங்கார் -திரு நக்ஷத்ரம் -வைகாசி -திருவோணம்
தீர்த்தம் -மார்கழி கிருஷ்ணாஷ்டமி
12-அப்பூவின் அண்ணன் வரதாச்சார்யர் -திரு நக்ஷத்ரம் -சித்திரை – மூலம்
தீர்த்தம் –மாசி -கிருஷ்ண பக்ஷ த்ருதீயை
13-அப்பூவின் அண்ணன் வேங்கடாச்சார்யார்-திரு நக்ஷத்ரம் -சித்திரை -விசாகம் –
14-சாரீரிக தர்ப்பணம் அண்ணன் வரதாச்சார்யர் -திரு நக்ஷத்ரம் -ஆனி -ஸ்வாதி –
15-பிரணதார்த்தி ஹராச்சார்யர் –
16-வேங்கடாச்சார்யார் –
17-அப்பூர்ண அப்பங்கார் வேங்கடாச்சார்யார் -திரு நக்ஷத்ரம் -ஆனி -அனுஷம்
18-அப்பூர்ண அப்பங்கார் வரதாச்சார்யர் –
19-பிரணதார்த்தி ஹராச்சார்யர் -திரு நக்ஷத்ரம் -ஸ்வாதி –
20-வரதாச்சார்யர்

22-வேங்கடாச்சார்யார்
23-வரதாச்சார்யர்
24-பிரணதார்த்தி ஹராச்சார்யர்
25-பெரிய அப்பன் வேங்கடாச்சார்யார் -திரு நக்ஷத்ரம் -சித்திரை -கார்த்திகை –
26-பெரிய அப் பூர்ண அப்பயங்கார் வரதாச்சார்யர் -திரு நக்ஷத்ரம் -ஆடி -விசாகம்
27-வேங்கடாச்சார்யார் –
28-பிரணதார்த்தி ஹராச்சார்யர் -பங்குனி மகம்
29-பெரிய ஸ்வாமி வேங்கடாச்சார்யார் -ஆனி ரோஹிணி
30-பிரணதார்த்தி ஹராச்சார்யர் -திரு நக்ஷத்ரம் -ஆவணி -உத்திரட்டாதி
தீர்த்தம் -மார்கழி சுக்ல பக்ஷ பிரதமை

31-வரதாச்சார்யர் -திரு நக்ஷத்ரம் -மாசி -மூலம்
தீர்த்தம் -புரட்டாசி -சிக்கலை பக்ஷ தசமி
32-அப்பன் ராமானுஜாசார்யார்–திரு நக்ஷத்ரம்-மார்கழி மூலம்

அவதார ஸ்லோகம்
ஸ்ரீ மத் கைரவணீ சரோ வரதடே ஸ்ரீ பார்த்த ஸூத உஜ்ஜ்வல
ஸ்ரீ லஷ்ம்யாம் யுவவத்சரே சுப தனுர் மூலே வதீர்ணம் புவி
ஸ்ரீ வாதூல ரமா நிவாஸ ஸூகுரோ ராமாநுஜாக்யம் குணை
ப்ராஜிஷ்ணும் வரதார்ய சத் தனய தாம் பிராப்தம் பஜே சத் குரும்

ஸ்வாமி தனியன் –
வாதூல அந்வய வார்தீந்தும் ராமானுஜ குரோ ஸூதம்
தத் ப்ராப்த உபாய வேதாந்தம் ப்ரணதார்த்தி ஹரம் பஜே

ஸ்ரீ மத் வாதூல வரதார்ய குரோஸ் தனூஜம்
ஸ்ரீ வாஸ ஸூரி பத பங்கஜ ராஜ ஹம்ஸம்
ஸ்ரீ மந் நதார்த்தி ஹாரா தேசிக பவுத்ர ரத்னம்
ராமானுஜம் குரு வரம் சரணம் ப்ரபத்யே

ஸ்வாமி வாழித் திரு நாமம்
சீர் புகழும் பாஷியத்தின் சிறப்புரைப்போன் வாழியே
செய்ய பகவத் கீதை திறன் உரைப்பான் வாழியே
பேர் திகழும் ஈடு நலம் பேசிடுவோன் வாழியே
பெற்ற அணி பூதூருள் பிறங்கிடுவோன் வாழியே
பார் புகழும் எட்டு எழுத்தின் பண்பு உரைத்தோன் வாழியே
பண்பு மிகு மூலச் சீர் பரவ வந்தோன் வாழியே
ஆர்வமுடன் சீடர்க்கே அருள் புரிவோன் வாழியே
அன்பு மிகு ராமானுஜர் அடியிணைகள் வாழியே

ஸ்வாமி நாள் பாட்டு –

பூ மகளின் நாதன் அருள் பொங்கி மிக வளர்ந்திடும் நாள்
பூதூர் எதிராசா முனி போத மொழி பொலிந்திடு நாள்
நேம மிகு சிட்டர் இனம் நேர்த்தியாய்த் திகழ்ந்திடு நாள்
நீள் நிலத்துள் வேத நெறி நீடூழி தழைத்திடு நாள்
பா மனம் சூழ் மாறன் எழில் பாடல் இங்கு முழங்கிடு நாள்
பார் புகழும் வயிணவத்தின் பண்பு நிதம் கொழித்திடு நாள்
சேம மிகு ராமானுஜர் தேசிகர் இவண் உதித்த
செய்ய தனுர் மதி மூலம் சேர்ந்த திரு நன்னாளே —

ஸ்வாமி திருக்குமாரர்கள் மூவர்
33-ஜ்யேஷ்ட திருக்குமாரர் -பிரணதார்த்தி ஹராச்சார்யர் –திரு நக்ஷத்ரம் -மார்கழி -விசாகம் –

——————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ கோயில் கந்தாடை அண்ணன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ காஞ்சீ ஸ்வாமிகள் –நற் போது போக்கு –

December 16, 2019

ஸ்ரீ காப்பு
ஸ்ரீ வரவர முனி யடி வணங்கும் வைதிகர்
திருவடி யிணைகள் என் சிரமேல் சேர்கவே

வட மொழியில் வழங்கும் காலக்ஷேப மென்கிற சொல்லுக்குத் தமிழில் போதுபோக்கென்று பெயர்.
ஸ்ரீபாஷ்யம் ஸேவித்தல், பகவத்விஷயம் ஸேவித்தல் என்று சொல்லவேண்டிய ஸ்தானத்தில்
ஸ்ரீபாஷ்ய காலக்ஷேபம் பகவத்விஷய காலக்ஷேபம் என்றே தொன்று தொட்டுப் பெரியார்கள் வழங்கிவருகிறார்கள்.
காலக்ஷேப மென்கிற சொல்லுக்கு ‘ஸேவிப்பது’ என்கிற பொருள் எப்படி கூடுமென்றும்
இந்த ப்ரயோகம் எப்படி பொருந்துமென்றும் சில வ்யுத்பந்நர்கள் விமர்சிப்பதுண்டு.
ஸ்ரீ ராமாயண காலக்ஷேபம் ஸ்ரீ வசனபூஷண காலக்ஷேபம் இத்யாதிகளான ஸகல வ்யவஹாரங்களுக்கும் இது தான் பொருள்.

இப்படி வ்யவஹரிக்கத் தொடங்கின பெரியார்களின் திருவுள்ளம் யாதெனில்,
விஷயங்களை க்ரஹிக்கிறோமோ இல்லையோ அது எப்படியாயினுமாகுக;
நல்ல படியாகப் போதைப் போக்கினால் போதும் – என்பதேயாம்!
ஆர்த்தியில் “முன்னவராம் நம் குரவர் மொழிகளுள்ளப் பெற்றோம் முழுது நமக்கவை பொழுது போக்காகப் பெற்றோம்” என்று
ஸ்ரீ மணவாளமாமுனிகள் பணித்தபடியே பெரியோர்களுடைய ஸ்ரீஸூக்திகளைக் கொண்டு போது போக்குவதென்பது ஜன்மாந்தர ஸஹஸ்ர நற்றவப்பயன்.

*காவ்ய சாஸ்த்ர விநோதேந காலோ கச்சதி தீமதாம்,
அந்யேஷாம் து மநுஷ்யாணாம் நித்ரயா கலஹே ந வா* என்கிற ஸ்லோகமொன்று யாவருமறிந்ததே.
ஆங்காங்கு அவரவர்கள் தம்தம் போதுகளை எப்படி போக்கி வருகிறார்களென்று நாற்புறமும் பார்ப்போமாயின்,
உத்யோகஸ்தர்கள், வியாபாரிகள், பயிர்த் தொழிலாளர்கள், வக்கீல்கள் முதலானாருடைய போது போக்குகள் ஒருவிதமாக நிகழ்ந்து வருகின்றன.
சிலபேர்கள் தேச வ்ருத்தாந்தப் பத்திரிக்கைகளைப் படித்தல், நாவல்களைப் படித்தல், சூது சதுரங்கமாடுதல் ….
முதலிய காரியங்களிலே காலத்தைச் செலவிடுகிறார்கள்.
இதுதவிர, நால்வர் எண்மர் பதின்மராகக் கூடி ஒரு காசுக்குமுதவாத வம்பு வார்த்தைகளை வெகு அட்டஹாஸங்களுடன் பேசிக்கொண்டும்,
தங்கள் திரளிலே அந்வயிக்கப் பெறாமல் சுவடிகளிலும் பகவத் பாகவத பரிசர்யைகளிலும் போது போக்கி வரும் மஹான்களைப் பற்றி
ஏதேனும் பறை சாற்றிக் கொண்டும் பத்துமணி காலத்தைப் பத்து நிமிஷமாகக் கழிக்கின்றவர்கள்
சிறிய கிராமம் முதல் பெரிய நகரம் வரையில் எங்குமுள்ளார்கள். அன்னவர்கள் பெறுமானந்தம் அளவு கடந்தது.

ஆழ்வார்களுள் இரண்டு ஆழ்வார்கள் போதுபோக்கைப் பற்றி வெகு இன்பமாகப் பேசியுள்ளார்கள்.
திருமழிசையாழ்வாரும் நம்மாழ்வாரும். இவ்விருவருடைய இரண்டு பாசுரங்களை எடுத்துக்காட்டுகிறோம் காண்மின்.
திருமழிசையாழ்வார் நான்முகன் திருவந்தாதியில் (63)
*தரித்திருந்தேனாகவே …. தெரித்தெழுதி வாசித்துங் கேட்டும் வணங்கி வழிபட்டும் பூசித்தும் போக்கினேன் போது* என்றருளிய
பாசுரம் ஒவ்வொருவரும் நிச்சலும் நினைக்கத்தக்கது.
போதுபோக்கும் விதத்தை இவரைப் போல் எடுத்துரைத்தவர் மற்று யாருமில்லை.
தெரித்தல் எழுதுதல் வாசித்தல் கேட்டல் வணங்குதல் வழிபடல் பூசித்தல் ஆகிய இவற்றினாலேயே தாம் போதைப் போக்கினதாகவும்
இவையில்லையாயின் தம்மால் உயிர் தரிக்க முடியாததாகவும் வ்யக்தமாக விளம்பியுள்ளார்.

நம்மாழ்வார் அருளிச்செய்வதோ இதனிலும் விலக்ஷணமானது.
அதாவது பெரிய திருவந்தாதியின் முடிவில் (பா. 86)
*கார் கலந்த மேனியான் கை கலந்த வாழியான், பார் கலந்த வல் வயிற்றான் பாம்பணையான் –
சீர்கலந்த சொல் நினைந்து போக்காரேல் சூழ்வினையினாழ்துயரை, என்னினைந்து போக்குவரிப்போது,* என்றுள்ள பாசுரம்
சுவைமிக்க பொருளுடைத்து. அப்பொருளைச் சிறிது விவரிக்கிறோம்;
எம்பெருமானுடைய திருக்குணங்கள் நிரம்பிய ஸ்ரீ ஸூக்திகளை யநுஸந்தித்தால்
பாவங்களும் துன்பங்களும் தொலையுமென்று சில பெரியார் நினைப்பதும் சொல்லுவதுமுண்டு;
ஆழ்வார் என்ன சொல்லுகிறாரென்றால், பாவங்களும் துன்பங்களும் தொலைந்தால் தொலையட்டும் வளர்ந்தாலும் வளரட்டும்,
அதைப் பற்றி என்ன கவலை? இவ்வுலகில் நாம் வாழ்கிற வரையில் நம்முடைய போது போக வேண்டுமே;
போதை எப்படி போக்குவது? பகவத் குணங்கள் மலிந்த ஸ்ரீ ஸூக்திகளைக் கொண்டு தானே போதைப் போக்கவேண்டும்;
வேறு எதைக் கொண்டு போதைப் போக்குவது! ஒவ்வொருவனும் போதைப் போக்கியாக வேண்டுமே,
குணாநுபவம் தவிர வேறு எந்தக்காரியஞ் செய்தால் போது போகும்? வேறொன்றாலும் போது போக்க வரிதன்றோ.
சீர் கலந்த சொல் நினைந்து சூழ்வினையினாழ்துயரைப் போக்காரேல் போக்கா தொழிக;
இப்போதை என்னினைந்து போக்குவர்! என்று அருளிச் செய்கிற அழகு என்னே!
உலகத்தில் ஒவ்வொருவனும் பகவத்குணாநுபவம் பண்ணியா போதைப் போக்குகிறான்? இல்லையே.
சூதுசதுரங்கமாடியும் உண்டியே உடையே உகந்தோடியும் மாரனார் வரிவெஞ்சிலைக்கு ஆட்செய்தும்
மற்றும் பல பல செய்துமன்றோ அவரவர்கள் போது போக்கி வருவது.
குணாநுபவத்தால் போது போக்குவாராக ஒருவரையுங் கண்டிலோமே;
“ஸாக்ஷாத்க்ருத ஸ்வபரவ்ருத்தாந்தர்க்கு” என்று ஆசார்ய ஹ்ருதயத்தி லருளிச் செய்கிறபடி
உலகியற்கை ஒன்றுதப்பாம லுணர்ந்தவரான ஆழ்வார் “என்னினைந்து போக்குவரிப்போது” என்று
குணாநுபவத்தாலன்றி போதுபோக்க முடியாதென்று ஏன் சொல்லுகிறார்? என்று அடியேன் ஒருநாள் ஜீயர் ஸ்வாமியைக் கேட்டேன்;
அதற்கு இரண்டு கதைகள் ஸாதிக்கலாயிற்று.

(1) கள்ளங்கவடறியாத ஒரு ஸ்வாமி தம் திருமாளிகை வாசலில் தென்னை மரம் வளர்த்திருந்தார்;
அதில் காய்கள் நிறையக் காய்த்திருந்தன. ஒரு நாளிரவு திருடன் மரத்தின் மீதேறிக் காய்கள் பறிப்பதாக அவர் அறிந்து கொண்டு
இரண்டு மைல் தூரத்திலுள்ள டாணாவுக்குச் சென்று போலீஸ் சேவகனை யழைத்துக்கொண்டு வர எண்ணினார்.
அங்குப் போய்வர ஒரு நாழிகை ஆகுமாதலால் அதற்குள் கள்ளன் இறங்கி ஓடிப்போய்விட்டால் என்ன செய்வதென்றும் ஆலோசித்தார்;
ஒரு உபாயம் தோன்றி அப்படியே செய்தார். உள்ளிருந்து பெருமாள் திருவாராதனத் தீர்த்தத்தைக் கொணர்ந்து மரத்தின் கீழே
நிறையத் தெளித்துவிட்டு ‘இது பெருமாள் தீர்த்தமாகையாலே இதை யாரும் மிதிக்கலாகாது’ என்று
உரக்கச் சொல்லிவிட்டு உடனே டாணாவுக்குச் சென்றார்.
‘தேங்காய்க் கள்ளனைக் கையும் பிடியுமாகப் பிடிக்கவேணும், கையோடு வாருங்கள்’ என்று சேவகனை யழைத்தார்!
அதற்கு அவன் ‘ஸ்வாமீ! கள்ளன் இன்னுமா மரத்தின்மேலேயே இருப்பான்? இதுவரையில் அவன் வீடுபோய்ச் சேர்ந்திருப்பனே’ என்றான்.
அதற்கு இவர் சொல்லுகிறார் – அம்மரத்தின் கீழ்ப்பாகம் முழுதும் பெருமாள் தீர்த்தத்தை தெளித்துவிட்டு
கள்ளன் காதிலும் கேட்கும்படி அதை உரக்கச்சொல்லிவிட்டன்றோ நான் வந்திருக்கிறேன்;
பரிசுத்தமான அவ்விடத்தை மிதித்துப் போக முடியாதாகையாலே அவன் மரத்தின் மீதுதான் இருப்பன், வாருங்கள் என்றார்.
தம்மையே யொப்பப் பிறரையும் நினைக்கிறபடி யன்றோவிது.

(2) பரமை காந்தியாய்ப் பரம வைதிகரான வொரு ஸ்வாமி இரவில் சயனிக்கும் போது தம் தேவியை யழைத்து
‘அடீ! சொம்பில் ஜலம் வைக்காதே; கவிழ்த்து வை’ என்று கட்டளையிடுவராம். இவரது கருத்து என்னென்னில்;
இரவிலே கள்ளன் வந்தால் சொம்பைக் கொள்ளை கொள்ள நினைத்து அதனருகேவந்து அதை யெடுக்கப் பார்க்கும்போது,
கையலம்பாமல் சொம்பைத் தொடலாகாதென்று தீர்த்தம் தேடுவனாம்; தீர்த்தம் கிடைத்தால் கையை யலம்பிக்கொண்டு
சொம்பைக் கவர்ந்து கொண்டு செல்வனாம்; தீர்த்தம் கிடையாவிடின் அசுத்தமான கையாலே சொம்பை எப்படி எடுப்பதென்று கூசி
சொம்பைத் தொடாமலே போய்விடுவனாம்; இதற்காகவே “சொம்பில் ஜலமின்றிக் கவிழ்த்துவை” என்று தேவிக்குக் கட்டளையிடுவதாம்.

இதெல்லாம் ப்ராசீன ப்ராமாணிகர்களின் சரிதைகள். தங்களுடைய ஆசாரமே கள்ளர்க்கும் உள்ளதாக அவர்கள் நினைப்பது போல்
ஆழ்வாரும் பகவத் குணாநுபவத்தாலன்றி மற்றெதனாலும் தமக்குப் போது போக்க அரிதாயிருக்கு மியல்வையே
உலகில் எல்லாருக்குமுள்ளதாக நினைத்து “சீர் கலந்த சொல் நினைந்து போக்காரேல் சூழ்வினையினாழ்துயரை,
என்னினைந்து போக்குவர் இப்போது” என்று உள்ளமுருக வருளிச் செய்கிறார்.
ஸ்ரீராமாயண பாரதாதி இதிஹாஸங்களைக் கொண்டும் ஸ்ரீவிஷ்ணுபுராணம் முதலிய புராணங்களைக் கொண்டும்
அருளிச் செயல்களைக் கொண்டும் பாவத்தைப் போக்கிக் கொள்ளார்களாகில் அதுபற்றி விசாரமில்லை;
போதை போக்குவதற்கு இவை யொழிய வேறு என்ன ஸாதனமுள்ளது! என்று கூறின ஆழ்வாரை வழிபடுகின்ற நாம்
நம்முடைய போதை எப்படி போக்க ஆசைப்படவேணுமென்று இன்னமும் விவரிக்கவேணுமோ?

————-

இரண்டாம் அதிகாரம்

*நலத்தால் மிக்கார் என்றும்
*கலையிலங்கு மொழியாளர் என்றுமுள்ள ஸ்ரீ ஸூக்திகளுக்கு லக்ஷ்யபூதர்களாய் விளங்கும் மஹநீயர்களைக் குறித்து
*அசக்தாஸ் தத்பதம் கந்தும் ததோ நிந்தாம் ப்ரகுர்வதே* எங்கிறபடியே நிந்தனை மொழிகளைப் பலவகைகளாலும் பரவச் செய்து கொண்டு
அதுவே போது போக்காக இருப்பவர்களைக் குறித்து இங்கு நாம் விஜ்ஞாபிக்க வேண்டிய தொன்றுமில்லை.
ஈச்வரனுடைய ஜகத் ஸ்ருஷ்டியானது மிக விசித்திரமானது.
பொய் சொல்வது களவு செய்வது வஞ்சனை பண்ணுவது முதலான தீய குணங்களையும்,
அஹிம்ஸை இந்த்ரிய நிக்ரஹம் க்ஷமை ஸத்யம் முதலிய நற்குணங்களையும் ஒவ்வொரு க்ராமத்திலும் ஒவ்வொரு நகரத்திலும் பார்த்து வருகிறோம்.
நற்குணங்களோ, தீயகுணங்களோ அவரவர்கட்கு இயற்கையாக அமைகின்றனவென்பதே பெரும்பான்மையான கொள்கை.
வேம்புக்குள்‍ள கசப்பும், மாதுளைக்குள்ள புளிப்பும், கரும்புக்குள்‍ள தித்திப்பும் முதலியன எப்படி ஒரு நாளும் மாறுவதில்லையோ
அப்படியே மனிதர்களுக்கும் ஜன்ம ஸித்தங்களான குணங்கள் (நல்லவையோ தீயவையோ) பேர்க்கவும் பேரா என்றே பெரியார் கூறுவர்.
இளமையில் பொய் சொல்லியும் களவாடியும் வழக்கம் பெற்றவர்கள் அந்த வழக்கத்தை ஒரு நாளும் விடமுடிகிறதில்லை யென்பதையும்,
இயற்கையாகவே ஸத்யம் முதலிய நல்ல குணங்கள் அமையப் பெற்‍றவர்கள் ஒரு நாளும் அஸத்யவழியில் செல்கின்றிலர் என்பதையும்
எந்தவூரிலும் எந்த ஜாதியிலும் எக்காலத்திலும் பார்க்கலாம்.

ஆகவே *பச்யதி பரேஷு தோஷாந் அஸதோபி, ஸதோபி நைவ குணாத்,
விபரீதமிதம் ஸ்வ ஸ்மிந், மஹிமா மோஹாஞ்ஜநஸ்யைஷ:* என்று தேசிகன் ஸாதித்தபடி
பிறரிடத்தில் இல்லாத தோஷங்களை இருப்பனவாகக் காண்பதும் இருக்கின்ற குணங்களை இல்லை செய்வதும்,
தம்மிடத்தில் உள்ள தோஷங்களைக் காணாமல் இல்லாத குற்றங்களை இருப்பனவாக ப்ரமிக்கையுமாகிற இந்த மஹா ஸம்பத்தை
மோஹாஞ்ஜந மஹிமையினால் சிலர் இயற்கையாகவே பெற்று வாழ்கின்றார்களென்றும் அதற்குத் தகுந்தபடி அமையக் கூடிய
அவர்களது போது போக்கை மாறுபடுத்த மாதவனாலுமாகாதென்றும் இதையும் நாம் எங்கும் அநுபவத்திற் காணா நின்றோம்.

ஆனால் இங்கு நாம் தெரிவிக்க விரும்புகின்றதென்ன வென்றால், கேண்மின்.
யானையும், குதிரையும் பெருமாள் புறப்பாட்டுக்கு கம்பீரமாக உபயோகப்படுவது போல
மற்‍ற ஜந்துக்கள் ஏன் உபயோகப் படுவதில்லை யென்று ஒருவர் கேட்டால் இதற்கு என்ன பதில் சொல்லுவது?
யோக்யதைக்குத் தகுந்தபடி உபயோகம் நேர்கின்றது என்றிவ் வளவே சொல்ல முடியும்.
நல்ல வழிகளில் போது போக்க யோக்யதை யற்‍றவர்கள் ஏதோவொரு வழியில் தங்கள் போதைப் போக்கித் தானே யாகவேண்டும்.
குயிலும் காக்கையும் பெரும்பாலும் வடிவில் ஒத்திருக்கச் செய்தேயும் செய்கையில் ஏன் ஒத்திருக்கவில்லை யென்று யாரை யார் கேட்பது?
அதுபோல, சிலர் சீர் கலந்த சொல் நினைந்து போது போக்காதே தங்களுக்கு ஸுலப ஸாத்யமான வகையில் போது போக்கி
வருகின்றார்களென்றால் இதில் வியப்பு ஒன்றுமில்லையே.
ஸத்துக்களையும் ஸாதுக்களையும் நிஷ்காரணமாகப் பழிப்பதையே போது போக்காகக் கொண்டவர்கள்
சிறிது விவேகிகளாயிருந்தால் ஒன்று ஆலோசிக்கவேண்டும்;
மஹான்களைப் பற்றித் தாங்கள் செய்யும் நிந்தைகளினால் தங்களுக்கு ஜன்ம ஸாபல்யமாகிற வொரு லாபம் ஸித்தித்தாலும்
அந்த மஹான்களுக்கு என்ன நஷ்டமுண்டாகு மென்பதை மாத்திரம் சற்று விமர்சிக்க வேணுமவர்கள்.

——————

மூன்றாம் அதிகாரம்

திருவாய்மொழியில் நம்மாழ்வார் அற்புதமாக ஒரு பாசுரம் அருளிச் செய்கிறார்;
அதாவது (5-3-5) *கடியன் கொடியன் நெடிய மால் உலகங்கொண்ட வடியன், அறிவருமேனி மாயத்தன்* இத்யாதி.
இதன் பொருளின்பத்தைச் சிறிது விவரித்து அடியேனும் ஆனந்தித்து பக்தர்களையும் ஆனந்திக்கச் செய்கிறேன்.
ஆழ்வார் ஆண்மை தவிர்ந்து பெண்மையடைந்து பேசும் பாசுரமிது. பராங்குசநாயகி யென்று இப்போது ஆழ்வார்க்குத் திருநாமம்.
இப்பெண் பிள்ளைக்கும் தோழிக்கும் பேச்சு நடந்து வருகிறது. தோழியானவள் இப்பெண்மணியை நோக்கி
“பேதாய்! நீ பகவான் பகவானென்று எப்போதும் வாய் வெருவி வீணாக வருந்துகிறாயே; இந்த கஷ்டம் உனக்கு ஏதுக்காக?
அவன் குணசாலியாயிருந்தால் அவனிடத்தில் நீ எவ்வளவும் ஈடுபடலாம்; குண ஹீநனான அவனிடத்தில் நீ வீணாக
ஆசை வைத்துத் தவிப்பது வேண்டாமே” என்று கூறினளாக, அதற்குப் பராங்குச நாயகி மறுமொழி கூறுகின்றாளிப்பாட்டினால்.

“தோழீ! எம்பெருமானை நான் மஹா குணசாலி யென்கிறேன், நீயோ அவனை குணஹீநனென்கிறாய்.
நான் சொல்லுகிறபடி யன்றிக்கே நீ சொல்லுகிறபடியே குணஹீநனானாலும் என் நெஞ்சம் அவனையல்லது அறியாது,
அவனிடத்தில் நின்றும் என்னை மீட்பதற்காக வன்றோ நீ அவனை குணஹீநனென்பது. மிகவும் ஸந்தோஷம்.
குணஹீநனென்பதுபற்றியே அவனை நான் மேல் விழுந்து விரும்புகிறேனென்று திண்ணமாகக் கொள்ள வேணும் நீ!
அவனிடத்தில் குணமில்லையென்பதைச் சொல்ல வேண்டுமானாலும் தோழீ! நான் சொல்லவேணுமேயல்லது நீ சொல்லலாகுமோ?
அவனையும் என்னையும் கூட்டிவைத்தது மாத்திரமே யன்றோ உன் காரியம்;
அவனோடு உள்கலந்து பரிமாறினவள் நானேயல்லது நீயல்லையே;
அவனிடத்திலுள்ளது தோஷமோ குணமோ எதுவானாலும் எனக்குத் தெரிந்தவளவு உனக்குத் தெரிய ப்ரஸக்தி யில்லையே.
ஆகையாலே குணமில்லாமையையும் தோஷமுடைமையையும் என் வாயால் நான் சொல்ல நீ கேளாய் என்று பீடிகை போட்டுக்கொண்டு
*கடியன் கொடியனென்று தொடங்கி இரண்டடிகளாலே அவனுடைய குணக் கேட்டைச் சொல்லுகிறாள் பராங்குச நாயகி (ஆழ்வார்).
சொல்லுகிற குணக்கேடுகள் எவை யென்னில்; கேண்மின்;-

[கடியன்] தன் காரியத்தை ஸாதித்துக் கொள்ளுவதில் கனவேகமுடையவன்.
அதாவது, தனக்கு விருப்பமுண்டானால் தானே வந்து மேல் விழுந்து விரைந்து கலக்குமவன் என்கை.
[கொடியன்] எதிர்த் தலைபடுகிற கஷ்டம் பாராதே கல் நெஞ்சனாய்ப் பிரிந்து போமவன்.
[நெடியமால்] மிகவும் பெரியவன் என்பது இச் சொல்லின் பொருள். இதன் கருத்தாவது,
மேல் விழுந்து கலக்கும் போது பிரியவேணுமென்று நினைப்பன். அப்படி அவன் நினைத்ததை யறிந்து
‘என்னாயனே! பிரியலாகாது பிரியலாகாது’ என்று கால் கட்டி விலக்கப் பார்க்கலாமே,
அப்படி விலக்குவதற்குக் கூசி நடுங்கி அஞ்சியிருக்க வேண்டும்படி திடீரென்று பரத்துவம் பாராட்டி நிற்பவனென்கை.
[உலகங் கொண்ட வடியன்] பிறருடைமையைத் தனக்காக்கிக் கொள்ள நினைத்தால் பின்னை அவர்களுக்கு ஒன்றும்
மிச்சப்படாதபடி பண்ணி அவர்களைப் பாதாளத்திலே தள்ளுமவன்.
[அறிவருமேனி மாயத்தன்] வடிவைக்கண்டால் ஸர்வ ஸ்வதானம் பண்ண விருக்கிறானோ?
அன்றி ஸர்வஸ்வமும் கொள்ளை கொள்ள விருக்கிறானோவென்று தெரிந்து கொள்ள முடியாதபடி ஆச்சரியமான தன்மையையுடையவன்.
அடியேன் குடியேனென்று சில சொல்லி மயக்கிக் கண்ணிலே மணலைத் தூவி யோடிப் போமவன்.
இப்படிப்பட்ட குணக் கேடுகளைக் கோடிக் கணக்காகச் சொல்லவேணுமானாலும் நானன்றோ சொல்லவேணும்,
எனக்கன்றோ மருமம் தெரியும். தோழீ! இவை உன்னாலும் சொல்ல முடியாது,
இதற்கென்றே இட்டுப்பிறந்த சிசுபாலாதிகளாலும் சொல்ல முடியாது.
இவ்வளவு குணக் கேடுகளையும் நான் அறிந்துவத்தே யன்றோ இவ்விஷயத்தி லீடுபட்டுக் கிடக்கிறது.
இவை தோஷங்களேயானாலும் அவனுடைய தோஷங்களாகை யாலே அவன் ஸம்பந்தத்தையிட்டு இவை நமக்கு
உபாதேயங்களேயென்று என்னெஞ்சு கொள்ளுகின்றது;
(அல்லது) கீழ்ச்சொன்ன விசேஷண பூதங்களான குணக்கேடுகளில் நோக்கு இல்லாமே
விசேஷ்ய பூதனான அவனை மாத்திரமே என்னெஞ்சு பற்றி யிருக்கின்றது.
மாயாவாதிகள் “நிர் விசேஷ சிந் மாத்ரம் ப்ரஹ்ம” என்று விசேஷண ஸம்பந்த கந்தமுமற்ற விசேஷ்ய அம்சத்தை மாத்திரமே
அங்கீகரிக்கிறாப்போலே குணமோ குணக்கேடோ ஆகிய விசேஷணாம்சத்தில் கண் செலுத்தாமல்
வெறும் விசேஷ்யமான அவனளவில் மாத்திரமே என்னெஞ்சு ஊன்றியிருக்கின்றது என்பதாக
[ஆகிலுங் கொடியவென்னெஞ்சம் அவனென்றே கிடக்குமெல்லே] என்கிற மூன்றாமடி அமைந்தது.

உலகர்களே! இது எம்பெருமான் விஷயத்தில் மாத்திரமன்று,
அன்பு உள்ள விடங்களிலெல்லாம் இப்படித்தான் பரிமாற்றமுள்ளது.
அன்பு வைத்திருப்பாருடைய அன்பைக் குலைக்க வேணுமென்று நினைத்து எவ்வளவு தோஷங்களை நிரூபணம் செய்தாலும்
“ஊரவர் கவ்வை யெருவிட்டு” என்ற கணக்கிலே மெய்யன்பருடைய அன்பு மேன்மேலும் பெருகுவதற்கு ஹேதுவாகுமே யல்லது
தோஷ நிரூபணங்களினால் அபூர்வமாக எதுவும் ஸித்திக்கமாட்டா தென்பது திண்ணம்.

இவ்வுலகில் பிறக்கின்றவர்கள் யாவரும் தோஷமே நிரம்பியவர்கள் என்றாவது,
குணமே நிரம்பியவர்கள் என்றாவது யாரும் சொல்லமுடியாது.
உயர்ந்த பதவியில் இருக்கின்ற மஹான்கள் முதற்கொண்டு மிகவும் தாழ்ந்திருப்பவர்கள் வரையில்
யாரை யெடுத்துக் கொண்டாலும் ஒவ்வொருவரிடத்திலும் குணங்களும் தோஷங்களும் கலந்திருக்குமே யல்லது
பரிபூர்ண குணசாலியாகவும் பரிபூர்ண துஷ்டனாகவும் ஒரு மனிதனையும் காட்டமுடியாது.

எவரும் அயலாரை வஞ்சித்து விடலாமானாலும் தம்முடைய ஆத்துமாவைத் தாம் வஞ்சித்து விடமுடியாதாதலால்
தம் தம்மிடத்திலுள்ள குண தோஷங்களை உள்ளபடி அவரவர்கள் கட்டாயம் அறிந்தே யிருப்பார்கள்.
அப்படியறிந்திருந்தும், உள்ள குணங்களை மிகவும் அதிகப்படுத்திக் காட்டுவதற்கும்,
உள்ள தோஷங்களை அடியோடு மறைத்துக் கொள்வதற்குமே ஒவ்வொருவரும் முயற்சி செய்வது வழக்கம்.
அதில் ஸாமான்ய ஜனங்கள் ஏமாந்து போய் விடுவதும் நிபுணர்கள் உண்மையை அறிந்து கொள்வதும் உண்டு.

பொதுவில் ஒவ்வொருவருடைய நோக்கமும் எப்படிப்பட்டதென்றால்
‘நம்மிடத்தில் எல்லாருக்கும் நல்ல மதிப்பு உண்டாக வேணும்;
நம்மை நல்ல குணசாலி யென்றே எல்லாரும் கொள்ள வேண்டும்;
நம்மிடத்தில் தீமை யிருப்பதாக யாரும் கருதக் கூடாது’ என்றே ஆசை கொண்டு அதற்கு ஏற்றாற்போல் நடந்து கொள்வதிலேயே
பெரும்பாலும் ஜனங்களின் நோக்கம் காண்கிறது.
ஞானம், செல்வம், அழகு முதலானவை மிகச் சிறிதளவு இருந்தாலும் அவற்றை மிகவும் அதிகமாகவே
காட்டிக் கொள்ள விரும்புவாரும் உண்டு. அவை அதிகமாகவே யிருந்து அவற்றை டம்பமாகக் காட்டிக் கொள்ள விரும்பாமல்
வெகு அடக்கத்தோடு இருப்பவர்களும் உண்டு. சில பேர்கள் தங்களுடைய நிலைமையை நன்றாகத் தெரிந்துகொண்டு
‘நாம் எப்படி குற்றங்களுக்குக் கொள்கலமாக இருக்கிறோமோ இப்படித் தான் உலகில் பலரும் இருக்க நேரிடும்;
இவ் வுலகுக்கு இது ஆச்சரியமன்று; ஆதலால் பிறருடைய குற்றங்களைப் பற்றி நாம் கவனிப்பது வேண்டா’ என்று கொண்டு
பிறரது குற்றங்களில் சிறிதும் புத்தியைச் செலுத்தாமல் தங்கள் காரியத்தோடே நிற்பர்கள்.
இப்படிப்பட்ட அதிகாரிகள் அதிகமாகத் தேற மாட்டார்கள். நூற்றில் ஒருவர் தேறினால் விசேஷம்.
தொண்ணூற்றொன்பது பேர்களின் இயல்வு எப்படிப்பட்டதென்றால் தம்முடைய நிலைமையைத் தாம் அடியோடு மறந்து
எப்போதும் பிறரைப் பற்றிய பழிப்புரையே போது போக்காக இருப்பதாம் –
அன்னவர்கள் வாய் கொண்டு பேசத் தொடங்கினாலும் கை கொண்டு எழுதத் தொடங்கினாலும்,
இன்னாரைப் பற்றி இன்ன விதமாகத் தான் பேசுவார்கள் எழுதுவார்கள் என்கிற வரம்பு சிறிதும் இராது.
ஒன்றுமறியாத மூடர்களை உயரத் தூக்கி வைத்திடவும்
புகழ்பெற்ற பெரியோர்களைப் பாதாளத்திலே தள்ளி விடவும் அவர்கள் வல்லமை வாய்ந்தவர்கள்.
இந்த இயல்வு நேற்று இன்று ஏற்பட்டதன்று.
ஸ்ரீ ராமக்ருஷ்ணாதி அவதார காலங்களிலும், ஸ்ரீமந் நாதயாமுந யதிவராதி ஆசாரியர்களின் காலங்களிலுமே
இப்படிப் பட்ட அதிகாரிகள் மிகவும் மலிந்திருந்தார்களென்றால் இக்காலத்தில் இருக்கக் கேட்கவேணுமோ?
இப்படிப் பட்டவர்கள் நிறைந்திருப்பது இந்த லீலா விபூதிக்கே ஒரு அழகு. அவர்கள் விஷயத்தில் யாரும் வெறுப்புக் கொள்ளலாகாது.
உலகுக்கு மாஹோபகாரம் செய்பவர்களாகவே அவர்களைக் கருதுதல் வேண்டும்.

—————

நான்காம் அதிகாரம்

‘நம்மை யாரும் பூஷிக்க வேணுமே தவிர ஒருவரும் நம்மை தூஷிக்கக் கூடாது’ என்று விரும்பி,
பூஷணைகளையே ஆவலுடன் எதிர்பார்ப்பதும் தூஷணைகள் வருங்கால் மிகவும் வருந்துவதும் சிலருடைய இயல்வாதலால்
அதைப் பற்றியும் இங்கு நாம் முக்கியமாகச் சில சொல்ல விரும்புகிறோம்.
தூஷிக்கவேண்டிய காரணம் பூர்த்தியாக இருந்தாலுங் கூட தூஷிக்கும் வழியைக் கனவிலுமறியாமல் பூஷிப்பதே செய்வார் சிலர்.
பூஷிக்கவேண்டிய காரணம் பூர்த்தியாக இருந்தாலுங் கூட தூஷிப்பதையே தொழிலாகக் கொள்வர் பலர்;
எங்கும் தூஷிப்பவர்கள், பலபல மஹான்களால் கொண்டாடப் படுகின்றவர்களைத் தான் தூஷிப்பார்கள்.
யோக்யதை யில்லாதவர்களை தூஷிப்பதனால் எப்படி த்ருப்தி யுண்டாகும்? அதை யார் கவனிப்பார்கள்?
அது பயனற்ற பணியாகுமே. நிறையப் பழங்கள் பழுத்துத் தொங்கப் பெற்ற மரங்களின் மீது கல்லடி தடியடி விழுமே யல்லது
மொட்டை மரத்தையும் மலட்டு மரத்தையும் அடிப்பாரார்?
அது போல், ஞானானுட்டானங்கள் நிரம்பியும், பல வகைகளில் புகழ் பெற்றும், பலரால் வணங்கப்பட்டும் விளங்குகின்ற மஹான்கள்
பேரில் தான் தூஷணைகள் ஏற்படுமே யல்லது, ‘யாரோ வழிப் போக்கன்’ என்னும்படியான ஸாமான்ய ஜனத்தின் மீது
பைத்தியக்காரன் கூட தூஷணைகள் செய்ய மனங் கொள்ள மாட்டான்.

ஆகவே, எந்த நபரின்மீது விசேஷ தூஷணைகள் ஏற்படுகின்றனவோ அதுவே காரணமாக அந்த நபர் மிக்க பெருமை வாய்ந்தவர்
என்பது உறுதியாகும். உண்மையில் அவர் பெருமை வாய்ந்தவராக இல்லா விடினும், தூஷணைகள் ஏற்படுவது காரணமாகவே
அவர்க்குச் சிறந்த பெருமை அவசியம் ஒப்புக் கொள்ள வேண்டியதே.
அமுதனார் அருளிய இராமானுச நூற்றந்தாதியில் “பழிக்கில் புகழ்” என்றொரு வாசகம் இருப்பது பிரசித்தமே.
அதன் பொருளையே இங்கு நாம் விவரித்தோம்.

மஹான்களைப் பிறர் தூஷிப்பதானது உண்மையில் பூஷிப்பதாகவே முடிவு பெறும்.
அவர்களுடைய கீர்த்தி எங்கும் நன்றாகப் பரவுவதற்கு தூஷணைகளே பெரிய கருவியாகும்.
பூஷிப்பது ஒரு மூலையில் அடங்கிப் போகும். தூஷிப்பது தான் உலக மெல்லாம் பரவும்.
பாகவத தூஷணையாக ஒரு புத்தகம் வெளிவந்தால் அது எத்தனை பக்கமாயிருந்தாலும் எவ்வளவு வேலையிருந்தாலும் விட்டிட்டு
வெகு ரஸமாக வாசிக்க ருசியுண்டாகும்.
‘மெய்ஞ்ஞான விளக்கம்’ என்று ஒன்று வெளிவந்தால் அது நாலே பக்கமாயிருந்தாலும் வாசிக்கத் தொடங்கும் போதே
கண்ணுறக்கமதாகும். உலகப்போக்கு இது. ஓரிடத்தில் இருவர் கூடி ஒரு மஹானைப் பற்றிப் புகழ்ந்து பேசிக் கொண்டிருந்தால்
அங்கு மூன்றாவது நபர் வந்து சேருவது மிகவும் அரிது. அதுவே ஒரு மஹானைப் பற்றி தூஷிக்குமிடமாயிருந்தால்
நாலு நிமிஷத்தில் நானூறு பேர்கள் கூடிப் பிரளயமாகும். இயற்கையாகவே ஸகல ஜனங்களுக்கும் பர தூஷணைகள் செய்வதிலும்
அவற்றை ஆதரவோடு கேட்பதிலுமே விருப்பம் செல்லும். இவ் வியல்வுக்குத் தப்பிப் பிழைப்பவர் யாரோ சிலர்.
ஸ்ரீராமாயண கதைகளில் ஒரு சிறிதும் தெரிந்து கொள்ளாதவர்களும் ‘ராமன் வாலி வதம் செய்தது மிகவும் தப்புத் தான்’ என்று
தூஷியாமலிருப்பதில்லை.
ஸ்ரீபாகவதம் ஸ்ரீ விஷ்ணு புராணம் ஹரி வம்சம் முதலானவற்றில் ஒருவரியும் காணாதவர்களும் கேளாதவர்களுங்கூட
‘கிருஷ்ணன் கோபியர்களோடு விளையாடினது மிகவும் பிசகுதான்’ என்று தாராளமாகத் தூஷித்தே தீருவர்கள்.
[அங்ஙனம் தூஷிப்பவர்களிடத்தில்தான் பகவானுக்கு மிகவும் உகப்பு என்று நூல்கள் முறையிடுகின்றன.]

ஸ்ரீ ராம பிரானுடைய பெருமைகளை விளக்கினது யார்? என்று கேட்டால், இராவணன் என்று தான் விடை கூறுவார்கள்.
ஸ்ரீ கண்ணபிரானுடைய பெருமைகளை விலக்கினது யார்? என்று கேட்டால் கம்ஸன், சிசுபாலன் என்றுதான் விடை கூறுவார்கள்.
இத்தகைய பெரும் பாக்கியம் ராவண சிசுபாலாதிகளுக்குத் தவிர லக்ஷ்மணன், மாருதி, விபீஷணன் போல்வாருக்கும் நேரவில்லை.
இவ்வுலகம் நீடூழி வாழ்வதற்கே ராவண சிசுபாலாதிகள் காரணமாயினர்.
ஸ்ரீ கூரத்தாழ்வானுக்குப் பெருமை விளைத்தவர் நாலூரான்.
ஸ்ரீ நம்பிள்ளைக்குப் பெருமை விளைத்தவர் ஸ்ரீ துன்னு புகழ்க் கந்தாடைத் தோழப்பர்.
இப்படியே ஒவ்வொரு மஹானுடைய பெருமையையும் விளக்குதற்கு அவ் வக் காலங்களில் பல பல பெருந்தகையாளர்
தோன்றிக் கொண்டே வருகின்றனர்.
அவர்கள் செய்யும் தூஷணைப் பிரசாரங்களைக் கண்டு சில பேர்கள் வெறுப்பதும் வருந்துவதும் மிகவும் பிசகு.
எந்த மஹானைப் பற்றித் தூஷணைகள் ஏற்படுகின்றனவோ, அந்த மஹான் சிறிதும் வருந்த மாட்டார். வெறுக்க மாட்டார்.
ஆனந்தம்! பரமானந்தம்!! என்றே உண்மையாக உள்ளங்கனிந்திருப்பர்.

சொல்லுகின்ற (அல்லது) எழுதுகின்ற நிந்தனைகள் யாவும் இவ் வுலகத்தவர்க்கு ஸம்பாவிதமே யல்லது அஸம்பாவிதமல்லவே.
உள்ள தோஷங்களை யெடுத்துக் கூறுவார்களே யல்லது இல்லாத தோஷங்களை ஒரு நாளும் ஒருவரும் எடுத்துக் கூறார்.
ஐயோ! நம்முடைய தோஷங்கள் பிறர்க்குத் தெரிந்து விட்டனவே! என்று வருந்தலாகாது.
‘நாம் மறந்தும் மறைத்தும் இருந்த தோஷங்களை தெய்வாதீனமாக வெளிப்படுத்தி நமக்கு நன்மை யுண்டாகும்படி
மஹோபகாரம் செய்தார்களே!’ என்று உள்ளூறக் களிக்க வேணும்.

————————

ஐந்தாம் அதிகாரம்

நாம் நம்முடைய தோஷங்களையே எப்போது அநுஸந்தானம் செய்து கொண்டிருக்க வேணுமென்று பெரியாரிடம் கேட்டு
அறிந்திருந்தும் அதை மறந்து, நம்மிடத்தில் இல்லாத குணங்களையே நாம் வெளியிட்டுக் கொண்டும் குற்றங்கலை மறைத்துக் கொண்டும்
தவறுதலாகப் போது போக்கி வருகிறோம். இந் நிலைமையில், நமது குற்றங்குறைகளை உண்மையாகச் சிலர் எடுத்து வெளியிட்டால்
இதனில் விஞ்சிய மஹோபகாரம் வேறு என்ன வுளது?
அவர்கட்கு *பொன்னுலகாளீரோ புவனி முழு தாளீரோ* என்று உபய விபூதியையும் பரிசளித்தாலும் போதாதே.
சிகித்ஸை செய்பவர்கள் தற்காலத்தில் நமக்கு எவ்வளவோ கொடுமையை விளைத்தாலும் அதை நாம் நன்மையாகவே கொண்டு
நூறுமாயிரமும் பரிசளிப்பது போலவே இந்த நிந்தனை நிபுணர்களுக்கும் வாஸ்தவமாய் எவ்வளவோ பரிசளிக்கவேண்டுமே.

“யதாசக்தி நிக்ருஹ்ணீயாத் தேவதா குரு நிந்தகாந்” என்றதும் ஸாமாந்ய சாஸ்த்ரமே.
விசேஷ சாஸ்திரங்களின் உபதேசம் எப்படிப்பட்டதெனில்; நிந்தனை செய்வாரை நிச்சலும் பூஜிக்க வேணுமென்பதேயாம்.
பூஜிக்க ஸௌகரியப் படாவிடினும், அவர்கள் செய்யும் நிந்தனைப் பிரசாரங்கலைத் தீமையாகக் கொள்ளாமல்
நன்மையாகக் கொண்டு நெஞ்சில் உபகாரஸ்மிருதி நடந்தால் அவ்வளவே போதுமானது.
நம்மைப்பற்றிப் பிறர் செய்வது தூஷணையே யானாலும் அது நமக்கு எவ்வளவு நன்மை பயக்கின்ற தென்பதை ஊன்றி கவனிக்க வேணும்.
ஒரு மூலையிலிருக்கின்ற நம்மைப் பல பேர்கள் திருவுள்ளத்திற் கொள்ளும்படி செய்கிறார்களே யென்று மகிழ வேண்டும்.
வாயால் தூஷித்து விடுவதோடு நில்லாமல் பத்திரிகைகள் மூலமாகவும் நிந்தனைகளைப் பரவச் செய்பவர்கள் பக்கலில்
நாம் வஹிக்க வேண்டிய உபகார ஸ்மிருதிக்கு அளவே கிடையாது.

‘வஸிஷ்டஸ் ஸமாநாநாம் பவதி’ என்று வேத புருஷன் அநுக்ரஹித்த கட்டளையிலே சிலர்
ஸஜாதீயர்களுக்குள்ளே மேம்பட்டு யாவரும் வந்தடி வணங்கி நிற்க நேர்ந்தால் அது கண்டு பொறுத்திருப்பதென்பது எளிதான காரியமோ?
எப்படி பொறுத்திருக்க முடியும்? ஒரு நாளும் பொறுத்திருக்க முடியாது.
*பரகீய யசோக்நிதஹ்யமாநா* என்கிற ச்லோகம் ப்ரஸித்தமன்றோ.
பிறர்க்கு ஒரு கீர்த்தியுண்டானால் அது பெரிய காட்டுத் தீயன்றோ; அதனால் கதுவப்படாமல் யாரால் வாழமுடியும்.
இதையெழுதுகிற நம்மோடு பிறரோடு வாசியற உலகம் முழுவதும் பெரும்பாலும் பொறாமைக்கு இருப்பிடமே.
ஸ் ரீபெரும்பூதூரில் கீர்த்தி மூர்த்தியான குண்டலம் ஸ்வாமி யென்றும் மற்றொரு ஊரில் மற்றொரு ஸ்வாமி யென்றும்
சொல்லப்படுகிற யாரோ சில மஹான்கள் இந் நிலத்தில் தப்பிப் பிறந்தவர்கள்.
நம் போன்ற பூரியர், ‘பக்கத்தகத்துக்காரர் வாழ்ந்தால் பத்து பட்டினி’ எங்கிற பழ மொழியின்படி யன்றோ பொறாமையே
வடிவெடுத்துப் பிறந்திருப்பது. பெருமை பெற்றவர்களென்று விளங்கும் பெரியாருடைய பெருமைகட்குக் குறைபாடு விளைக்க
வேணுமென்று கருதியும், இன்னம் எவ்வளவோ ஆச்சரியமான எண்ணங்கள் கொண்டும், ஸதாகாலமும் இதுவே ஞாபகமாய்,
இரவும் பகலும் வேறொரு வேலையுமின்றிக்கே, பெரிய கோட்டை பிடிப்பவராகவும், உலகையே தம் கைப் படுத்துவாராகவும்,
ஸகலஸித்தியும் பெறுவாராகவும் எண்ணி, நித்தியமும் வீதிகள் தோறும் திண்ணைகள் தோறும் குழாங்கூடி தூஷணைகள் வழங்கி
வருகிறார்களல்லவா? இக் காரியத்தை அவர்கள் எந்த எண்ணத்தோடு செய்கிறார்களென்பதைப் பற்றி நாம் கவனிக்கத் தேவையில்லை.
அவர்களது எண்ணம் எதுவாயினுமாகுக. இக்காரியம் அவர்களுக்குச் சிறந்த நன்மையையே தரக்கூடிய தென்பதில் சந்தேகமில்லை.
மேன்மேலும் அவர்கள் இதில் நல்ல உற்சாகத்தோடும் விடாமுயற்சி யோடும் இருந்து வரும்படிக்குப்
பக்த வர்க்கங்கள் யாவரும் காப்பிடக் கடமைப்பட்டவர்கள்.

ஐயோ! அவர்கள் செய்வது தூஷணை யல்லவோ என்று யாரும் நினைக்கலாகாது, இகழலாகாது, வருந்தலாகாது,
பிரதி செய்ய நினைக்கலாகாது. நாம் நூற்றுக்கணக்காகப் பணம் கொடுத்துச் சேவகர்களை நியமித்தாலும்
இவ்வளவு நலமான காரியம் நடைபெறாது. ஒரு வ்யக்தியின் திரு நாமத்தை ஆங்காங்கு மூலை முடுக்குகளிலுள்ளவர்களும்
பல பேர்களாகக் குழாங்கூடிச் சிந்தனை செய்யும் படியாகப் பெரு முயற்சி செய்து வருகின்ற பேரியார்கட்கு
நித்ய ஸ்ரீர் நித்ய மங்களமென்று பல்லாண்டு பாடுவதே பாங்காகும்.

ஸங்கல்ப ஸூர்யோத என்கிற நாடகம் தேசிகர் பணித்ததென்று ப்ரஸித்தமே.
அதில் ஐந்தாவது அங்கத்தில் அஸூயா தேவி யென்பவள் வந்து கூறுகிற வார்த்தையை ஆசிரியர் அழகாக எடுத்து இயம்பி யுள்ளார்.
விவேக சக்ரவர்த்திக்கு மஹா மோஹ மஹாராஜன் பகைவன்; இவனுடைய மனைவிக்கு துர்மதி யென்று பெயர்;
அவளுடைய தோழி தான் அஸுயை யென்பவள். அவள் கூறுகின்றாள் –
*மயி தத்தாவதாநாயாம் விச்வதோஷாபஹாரிணா, ந சக்ய மீச்வரேணாபி நிரவத்யேந வர்த்திதும்* என்று. (இதன் பொருள்)
{‘அஸூயை யென்கிற) நான் உஷாராக இருந்தேனாகில் ஒன்றான ஸர்வாஶ்வரனாலும் குற்றங்களிலிருந்து தப்பிப் பிழைக்க முடியாது என்பதாம்.
இதற்கு மேல் “நிரவதி குணக்ராமே ராமே” என்று தொடங்கி அருமையான் ஶ்லோகமொன்று அந்த அஸூயா தேவியினால் சொல்லப்பட்டுள்ளது:
(அதன் கருத்து) குற்‍றம் என்பது லவ லேசமும் காண முடியாமலும், அநந்த கல்யாண குண ஸமூஹமே வடிவெடுத்துமிருந்த
ஸ்ரீ ராமபிரானிடத்திலும் நாளைக்கும் பலவகைக் குற்‍றங்களைக் கூசாமல் கூறி வருகின்ற இவ் வுலகத்தவர்,
மற்‍றையோரிடத்தில் எப்படி வெறுமனே யிருப்பார்கள்? குணக் கடலான எம்பெருமானே படுகிறபாடு அதுவானால்
ஏதோ ஒன்றிரண்டு குணங்களையும் பல்லாயிரக்கணக்கான குற்‍றங்களை யுமுடைய மற்‍றையோர் எப்பாடுபடவேண்டும்! – என்பதாம்.

ஸ்ரீ வசனபூஷணத்தில் அருளிச் செய்திருப்பவைகளும் ப்ரஸித்தம்.
(குற்‍றம் செய்தவர்கள் பக்கல் பொறையும், க்ருபையும், சிரிப்பும், உகப்பும், உபகார ஸ்ம்ருதியும் நடக்க வேணும்; முதலியவை.)
மஹான்களின் இத்தகைய அமுத மொழிகள் நம் போல்வாரான புல்லியர்களின் அனுஷ்டானத்திற்கு வருவது மிகவும் அரிது.
ச்ரமப்பட்டு அனுட்டானத்திற்குக் கொண்டு வந்து விட்டால் ஆனந்தம் பரமானந்தமே.
பிறர் செய்யும் தூஷணைகளினால் யார்க்கு என்ன நஷ்டமுண்டாகுமென்ப தொன்றையே விவேகிகள் கவனிக்க வேண்டும்.
ஆமுஷ்மிகத்தில் எவ்வித நஷ்டத்தையும் இவர்களால் உண்டு பண்‍ண முடியாது.
ஐஹிகத்தில் ஏதேனும் சிறிது நஷ்டம் உண்டு பண்‍ண முடியும் என்றே வைத்துக் கொண்டாலும்
அந்த நஷ்டத்தையே பரமலாபமாக நினைப்பது எவ்வளவோ நன்மை.
இதைத் தான் ஸ் ரீவசனபூஷண வியாக்கியானத்தில் மணவாளமாமுனிகள் வெகு அழகாக நிரூபித்தருளுகிறார்.
அந்த ஆசாரியர்களை நாம் உள்‍ளபடி வழிபடுகின்றவர்களாக இருப்போமானால், அவர்களுடைய உபதேச மொழிகளை
மெய்யன்புடன் நாம் அனுட்டானத்திற் கொண்டுவர அசக்தர்களாயினும் “பொய்யே கைம்மை சொல்லி” என்று ஆழ்வார் அருளிச் செய்த
வழியில் கபடமாக வாகிலும் அநுசரிக்க ஆசைப்படுவோமானால் “மெய்யே பெற்‍றொழிந்தேன்” என்னும்படியாக
உண்மையான பலனைப் பெற்‍றே தீருவோம்.

—————-

ஆறாம் அதிகாரம்

நாம் பெருமாள் ஸன்னிதிக்குச் சென்று பெருமாளைப் பரம பக்தியுடன் ஸேவிப்பது தியானிப்பது கைங்கரியங்கள் செய்வதாகிய
இவை யெல்லாம் எதனால் நடக்கிற தென்றால் அந்தப் பெருமாள் நம் கண்ணுக்குப் புலப்படாமலும் பேசாமலும்
நாமிட்டது சட்டமாக இருப்பதனாலேயே. அவர் விபவாவதாரங்களில்போலே கண் காண நின்று காதாரப் பேசித் தம்முடைய
ஜ்ஞான சக்திகளைக் காட்டிக் கொண்டிருந்தாராகில் அவரையும் நாம் தூஷிக்கவே தலைப் படுவோம். இதில் ஸந்தேஹமுண்டோ?
இதைத் தான் ஸ்ரீ வசநபூஷணத்தில் “கண் காண நிற்கில் ஆணையிட்டு விலக்குவர்களென்று கண்ணுக்குத் தோற்றாதபடி நின்று”
என்கிற அத்புத ஸூக்தியினால் அருளிச் செய்தார்.

சிலர் ராமானுஜர் ராமானுஜர் என்றும், சிலர் நம்பிள்ளை நம்பிள்ளை யென்றும், சிலர் தேசிகன் தேசிகனென்றும்,
சிலர் மணவாளமாமுனிகள் மணவாளமாமுனிக ளென்றும் இப்படி வாய் வெருவுவதெல்லாம் தெய்வாதீனமாய்
அவ்வாசாரியர்கள் இந்நிலத்தை விட்டுத் திருநாடு சென்று சேர்ந்தபடியாலே – என்பதையும் திண்ணமாக உணரவேண்டும்.
அவ்வாசாரியர்கள் ஜீவித்திருந்த காலத்தில் இந்த நாமும் பிறந்துதானிருந்தோம்;
அப்போது அவர்களை தூஷித்துக் கொண்டும் பலவாறு பரிபவித்துக் கொண்டும் போதைப் போக்கினோம்.
அந்த நாமே இப்போது ஸ்வாமி ஸ்வாமியென்று குழைவதற்கு என்ன காரணமென்றால் –
அவர்களுடைய உண்மையான அப்ரதிம யோக்யதைகளை யறிந்து நெஞ்சு கனிந்திருப்பார் யாரோ சில மஹான்கள்
இந்தளத்திலே தாமரை பூத்தாற் போன்றவர்கள் இருக்கட்டும். பெரும்பான்மையோர்கள் அவர்களைப் போற்றுவதெல்லாம்
“அவர்கள் எப்றைக்கோ மறைந்து போனவர்கள் தானே; அவர்களைக் கொண்டாடுவதனால் நமக்கென்ன நஷ்டம்” என்கிற
இந்த ஒரே யெண்ணங் கொண்டு தான்.
யோக்யதையை யறிந்து உகப்பவர்களாயும் பொறாமையற்றவர்களாயு மிருந்தால் அவர்களுடைய போது போக்கு
எப்படி யிருக்குமென்பதை நாம் சொல்ல வேணுமோ?
“பிறர்மினுக்கம் பொறாமையில்லாப் பெருமையும் பெற்றோமே” என்றருளிச் செய்தவர்
மணவாளமாமுனிகளொருவரே யல்லாது மற்றொருவருமல்லரே.

முமுக்ஷுப்படியில் த்வய ப்ரகரணத் தொடக்கத்தில்
“புறம்புண்டான பற்றுக்களை யடைய வாஸனையோடே விடுகையும்” என்று ஆரம்பித்து
வைஷ்ணவாதிகாரிக்கு அவஶ்யாபேக்ஷிதங்களான பத்து விஷயங்களைப் பிள்ளை லோகாசாரியர் அருளிச் செய்கிறார்.
அவற்றுள் “இப்படி யிருக்கும் ஸ்ரீவைஷ்ணவர்களேற்ற மறிந்து உகந்திருக் கையும்” என்பதுமொன்றுள்ளது.
அங்கு வியாக்கியான மருளிச் செய்யா நின்ற மணவாளமாமுனிகள் – இது ஒன்று தவிர மற்றதெல்லாம் எளிதாக
உண்டானாலு முண்டாகக் கூடும்; இது ஒன்று இந் நிலத்தில் உண்டாவது அரிதே – என்று கண்ணீர்ப் பெருக்குடன்
அருளிச் செய்திருக்கக் காண்கிறோம். மூலத்திற்கு வியாக்கியான மருள்வதற்கு மேற்பட ஒரு அக்ஷரமும் எழுதுகிற
வழக்கமில்லாத மாமுனிகளன்றோ பரவசமாக இங்கு இங்ஙனமெழுத நேர்ந்தது.
பரமாசார்யர்கள் அவதரித்திருந்த நல்லடிக் காலமாகிய அக்காலத்திலே, இப்படி எழுதியருள நேர்ந்ததென்றால்
இக்காலத்திற்குச் சொல்லவேணுமோ?

அஸூயையை வெல்வதென்பது ஆராலுமாகாது.
“மற்றுமொருத்தருமிப் பிறவியென்னும் நோய்க்கு மருந்தறிவாருமில்லை” என்று பெரியாழ்வார் ஸாதித்தார்;
அந்த மருந்து அறிவார் இருந்தாலும் இருக்கக்கூடும்; பொறாமை யென்னும் நோய்க்கு மருந்தறிவாராருமில்லை யென்பதே ஸத்யம்.
யோக்யதை யுண்டாவதென்பது தனிப்பட்ட ஒரு அத்ருஷ்ட விசேஷம். அஃதில்லாதவர்கள் அஃதுடையாரிடத்திலே
பொறாமைப் பட்டுத் தீர வேண்டியது தலை விதியாகிறது. ஒரு சிறு விஷயம் பாருங்கள்;
ஒரு ஸன்னதியில் வெள்ளிக்கிழமை தோறும் தாயார் புறப்பாடு நடக்கிறது. அப்போது தவறாமல் சிறிய திரு மடல் ஸேவையாகிறது.
அந்த கோஷ்டியில் ஐம்பது அறுபது வருஷகாலமாகச் சிலர் தவறாது முன்னணியில் நின்று கம்பீரமாகக் காட்சி தருகிறார்கள்.
கோஷ்டீ நிர்வாஹ பாவனையும் கொள்ளுகிறார்கள். “கம்பன் வீட்டுக் கட்டுத் தறியும் கவி சொல்லும்” என்ற கணக்கிலே
மதிளும் மரமுங்கூட அந்தத் திரு மடலைச் சொல்லி விடக் கூடும்; ஆனால் முன் சொன்ன கம்பீர ஸ்வாமிகளின் திரு வாக்கிலோ
ஒரு அக்ஷரமும் வரமாட்டேனென்கிறது.
குதிரை புரீஷவிஸர்ஜனம் செய்யும் போது அதன் ஆஸனம் படுகிற பாடு படுகிறதாயிற்று அவர்களின் சோதிவாய்.
அப்படிப்பட்டவர்கள் பல கலைகளிலும் ஒப்புமுயர்வுமற்ற யோக்யதை பெற்ற பாக்யசாலிகளைக் கண்டால்
“என்ன நோன்பு நோற்றாள் கொலோ! இவரைப் பெற்ற வயிறுடையாள்” என்று கொண்டாட மனமில்லையானாலும்
அரிய பெரிய யோக்யதை பெற்ற மஹான்களென்று மனத்திற்குள்ளேயாவது மகிழ்ந்திருக்க முடியாமற் போனாலும்
அவர்களைப் பற்றி ஒன்றும் நினையாதே – உகப்பு வெறுப்பு இரண்டுமின்றிக்கே உதாஸீநபாவமாவது வஹிக்கலாமே;
அந்தோ! தமக்குள்ள சக்தி முழுவதையும் அப் பெரியார்களுடைய நிந்தையாகிற அஸஹ்யாபராதத்திலேயே செலுத்தி
எற்றைக்கும் ஏழேழ் பிறவிக்கும் இப்படியே நிரக்ஷரகுக்ஷிகளாய் ஜனிக்கவே க்ருஷி பண்ணிப் போருகிறார்களே! என்று
ப்ராதஸ் ஸ்மரணீய திவ்ய கீர்த்தி மூர்த்தியான அஸ்மதுபாத்யாய சரண ஸ்ரீமாம்பள்ளம் ஸ்வாமி அடிக்கடி ஸாதிக்கக் கேட்டதுண்டு.
*ஸ்வபாவோதுரதிக்ரம:* என்று கொண்டு இப்படிப்பட்ட அஸஹ்யாபசாரிகளை நெஞ்சாலும் இட்டெண்ணாமலிருக்க வேண்டுமே தவிர
நொந்து பயனில்லை யென்பர் சில மஹான்கள்.

“தண்டேன் நுகரா மண்டூகம் தண்டாமரையினுடன் பிறந்தே, வண்டே கானத்திடைப் பிறந்தும் வந்தே கமலமது வுண்ணும்,
அண்டே பழகியிருந்தாலும் அறியார் பொல்லோர் நல்லோரைக், கண்டே களிப்பருறவாடிக் கற்றோர் நல்லோர் பெற்றக்கால்” என்கிற
செய்யுளொன்றையாவது சிந்தனை செய்து போது போக்கலாம் அவர்கள்; எவர்கள்?
நல்ல வழியில் போதுபோக்க யோக்யதை ஸம்பாதிக்க பாக்கியமற்றவர்கள்.

————-

உபஸம்ஹாரம்

நமது போது நல்ல போதாகக் கழியவேணுமென்கிற நினைவுடையவர்கள் கீழ்க்கண்ட பத்து விஷயங்களை
அடிக்கடி சிந்திக்கவேணும்; கூடியவரையில் அனுஷ்டானத்தில் கொண்டுவர முயலவேண்டும்.
1. அஹங்காரம் எல்லாப் படியாலும் ஸ்வரூபத்தைக் கெடுக்க வல்லதாகையாலே அது கழியும் வழி யென்ன வென்று சிந்திக்கவேணும்.
2. அந்த அஹங்காரத்தை வளரச்செய்கிற தீயாரோடு ஸஹ வாஸத்தை யொழிக்க வேணும்.
3. அஹங்காரம் முதலிய பல குற்றங்களை உபதேசம் முதலியவற்றால் போக்க வல்லவர்களான மஹான்களை தேஹ பந்துக்களாகவும்
ஆத்மபந்துக்க ளாகவும் ஸகலவித பந்துக்களாகவும் நினைத்து அவர்களையே உசாத்துணை யாகக் கொள்ள வேணும்.
4. ஞான பக்தி விரக்திகள் மலிந்த மஹான்களைக் கண்டால் நிலாத் தென்றல் சந்தனம் புஷ்பம் முதலியன கண்டாற்போலே நெஞ்சு குளிர்ந்திருக்க வேணும்.
5. அஹங்காரத்தினுடையவும், அர்த்த காமங்களினுடையவும் கெடுதல்களை அநவரதம் சிந்திக்க வேணும். சமதமாதி குணங்கள் வளரும்வழி பார்க்க வேணும்.
6. பகவத்குணாநுபவத்திலும் பூர்வாசார்ய ப்ரபாவ அநுஸந்தானத்திலுமே அதிக காலம் கழியும்படி நோக்க வேணும்.
7. விலக்ஷணர்களுடைய ஞானமும் அனுட்டானமும் நமக்கு உண்டாகவேணு மென்று ஆசைப்படவேணும்.
8. ஜ்ஞானுஷ்டானங்களை வளர்க்கவல்ல ஸத்துக்களை ஒரு நொடிப் பொழுதும் விட்டுப் பிரியாமலும், ஸ்வரூபத்தைக் கெடுக்க வல்ல நீசர்களைக்
கண்ணெடுத்துப் பாராமலும் இருக்குமிருப்பை அருள வேணு மென்று அநவரதம் பகவானைப் பிரார்த்திக்க வேணும்.
9. பிறரிடத்தில் மலைமலையான தோஷங்களிருந்தாலும் அவற்றில் கண் செலுத்தாமலும் குண லேசங்களையே மலையாகக் கொண்டு
உகந்திருப்பதும், தோஷங்களே வடிவெடுத்திருக்கின்ற நமக்கு ஒரு குணமுமில்லையே யென்று நொந்திருப்பதும் நித்யமாகச் செல்ல வேணும்.
10. பிறரிடத்தில் தோஷங்களைப் பேசுவதானது நிர்மலமான ஆகாசத்திலே சேற்றை வாரி யெறியுமவன் செய்கை போலே யாகுமத்தனை யென்று
திண்ணமாகக் கொண்டு, அஸூயையையும் அஹங்காரத்தையும் அறவே யொழித்தாலன்றி நாம் உய்ய விரகில்லை யென்று துணிந்திருக்க வேணும்.

ஆக இவ் விஷயங்களை நிச்சலும் நெஞ்சிற் கொண்டிருப்பார்க்கு இங்கும் அங்கும் எங்கும் இன்பமாகுமே.
சேமம் செங்கோனருளே.

ஸ்ரீ காஞ்சீ பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியர் எழுதிய நற் போது போக்கு முற்றிற்று

———————————————————————————–

ஸ்ரீ கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ காஞ்சீ பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ பராசர பட்டர் அருளிச் செய்த அஷ்ட ஶ்லோகீ –ஶ்ரீகாஞ்சீ ஸ்வாமி இயற்றிய ஸாரார்த்த தீபிகையில் பதவுரையுடன்–

December 16, 2019

ஸ்ரீ பராசார பட்டார்யா ஸ்ரீ ரெங்கேச புரோகித
ஸ்ரீ வத்சாங்க சுத ஸ்ரீ மான் ஸ்ரேயசே மேஸ்து பூயசே

ஸ்ரீ யபதி ஸ்வரூபம் முதலான அர்த்த பஞ்சக ஞானம் -விவரணமே -ரகஸ்ய த்ரய ஞானம் –
அதன் முதல் விவரணம் ஸ்ரீ பராசர பட்டர் அருளிச் செய்த ஸ்ரீ அஷ்ட ஸ்லோகி
முதல் நான்கும் ஸ்ரீ திருமந்தரம் விவரணம்
மேல் இரண்டு ஸ்லோகங்கள் ஸ்ரீ த்வயம் விவரணம்
அடுத்த இரண்டும் ஸ்ரீ சரம ஸ்லோக விவரணம் –

பெரிய கனக வரையை சிறிய கடுகினில் அடைத்து வைப்பன் -ஸ்ரீ திருவரங்கக் கலம்பகம் –
ஸூர்ய உதயம் –ஸூர்யோதயம் -போலே ஓங்காரம் -அகாரம் உகாரம் மகாரம் -என்று பிரியும் –
தேகம் ஸ்வரூபம் — ஞானம் ஸ்வரூபம் – சேஷத்வம் ஸ்வரூபம் மூன்று வகை –
அடிமையான ஆத்மா ஞானவானாகவும் உள்ளான் -அடியேன் உள்ளான் –
ஐஸ்வர்யம் -கைவல்யம் -தாண்டி ப்ரீதி காரித பகவத் பாகவத ஆச்சார்ய கைங்கர்யமே பரம புருஷார்த்தம்-
சகல சேதன உஜ்ஜீவானார்த்தம் -பரம காருணிகரான ஸ்ரீ பராசர பட்டர் -அபீஷ்ட உபாயம் அறிந்து பிரவர்த்தி செய்ய –
ஸ்வரூப ஞானம் பூர்வகத்வாத் –
சகல சாஸ்த்ர ருசி பரிக்ரீஹீதம் -திருமந்திரம் –
ஆச்சார்யர் ருசி பரிக்ரீஹீதம் த்வயம் -விளக்கம் –
அவன் ருசி பரிக்ரீஹீதம் சரம ஸ்லோகம் -இதன் விளக்கம் -தானே –
ஸ்வரூப அனுரூப -உபாய புருஷார்த்த பரம் மந்த்ர ரத்னம் –
பிரகர்ஷனே -நன்கு பகவான் ஸ்தூலதே அநேக -அநேகம் ஸ்துதிக்கப்படுகிறான் -பிரணவம் –
ஓங்காரா பிரபவா வேதா -சுரம் சர்வம் -ஜகத் ஸ்தாவர ஜங்கமம்
த்ரை அக்ஷரா –அனைத்தும் இங்கேயே லீலயை -பிரகிருதி -ஓங்காரம் -அதுக்கு அகாரம் –

———————————————————————————————–

ஸ்லோகம் -1-
அகாரத்தோ விஷ்ணுர் ஜகத் உதய ரக்ஷா பிரளய க்ருத்
மகார்த்தோ ஜீவஸ் ததுபகரணம் வைஷ்ணவமிதம்
உகாரோ நந்யார்ஹம் நியமயதி சம்பந்த மநயோ
த்ரயீ சாரஸ் த்ரயாத்மா பிரணவ இமமர்த்தம் சமதிசத்-

ஜகத் உதய ரக்ஷா ப்ரளய க்ருத் – ஸகல லோகங்களுக்கும் ஸ்ருஷ்டி ஸ்திதி ஸம்ஹாரங்களைச் செய்தருள்பவனான,
விஷ்ணு: – ஸர்வவ்யாபக ஸர்வேஶ்வரன்,
அகாரார்த்த: – (ப்ரணவத்திலுள்ள) அகாரத்தின் பொருள்;
ஜீவ: – (ஞானத்தை வடிவாகவுடைய) ஜீவாத்மா,
மகாரார்த்த: – மகாரத்தின் பொருள்;
தத் இதம் – மேற்சொன்ன இந்த ஜீவாத்ம வஸ்துவானது,
வைஷ்ணவம் உபகரணம் – எம்பெருமானுக்கே உரித்தான ஶேஷவஸ்து (என்பது லுப்த சதுர்த்தியின் பொருள்),
உகார: – (ப்ரணவத்தின் இடையிலுள்ள) உகாரமானது,
அநயோ: – இந்த ஜீவாத்ம பரமாத்மாக்களுக்குண்டான,
ஸம்பந்தம் – ஸம்பந்தத்தை,
அநந்யார்ஹம் நியமயதி – பதீபத்நீபாவமாகிற ஸம்பந்தம் போல் ஐகாந்திகமாகக் கட்டுப் படுத்துகின்றது,
இமம் அர்த்தம் – ஆக இங்ஙனே விவரிக்கப்பட்ட பொருளை,
த்ரயீஸார: – மூன்று வேதங்களினுடையவும் ஸாரபூதமாயும்,
த்ரி ஆத்மா – மூன்று அக்ஷரமாயும் முன்று பதமாயு மிரா நின்ற,
ப்ரணவ: – ஓங்காரமானது,
ஸமதிசத் – தெரிவித்தது.

அகாரத்தோ விஷ்ணுர் ஜகத் உதய ரக்ஷா பிரளய க்ருத்-பிரணவத்தில் உள்ள அகாரத்தின் பொருள்
சர்வ வ்யாபக சர்வேஸ்வரன்-சகல லோகங்களுக்கும் சிருஷ்டி ஸ்திதி சம்ஹாரங்களை செய்து அருளுபவன் –

மகார்த்தோ ஜீவஸ் ததுபகரணம் வைஷ்ணவமிதம்–மகார்த்தோ தத் இதம் -மகாரத்தின் பொருள்
மேற்சொன்ன இந்த ஜீவாத்மா வஸ்துவானது
தத் இதம் -ந பும்சக லிங்கம் -அசேதன நிர்விசேஷமாக இருந்து சேஷப் படக் கடவது என்று காட்ட –
வைஷ்ணவம் உபகரணம் -எம்பெருமானுக்கே உரித்தான சேஷ வஸ்து -என்பதே லுப்த சதுர்த்தியின் பொருள் –

உகாரோ நந்யார்ஹம் நியமயதி சம்பந்த மநயோ-உகார -பிரணவத்தில் இடையில் உள்ள யுகாரமானது
பிரணவத்தில் இடையில் யுள்ள உகாரமானது சம்பந்த மநயோ-இந்த ஜீவாத்மா பரமாத்மாக்களுக்கும் யுண்டான சம்பந்தத்தை
அநந்யார்ஹம் நியமயதி–பதி பத்நீ பாவம் ஆகிற சம்பந்தம் போல் ஐகாந்திகமாக கட்டுப்படுத்து கின்றது-

த்ரயீ சாரஸ் த்ரயாத்மா பிரணவ இமமர்த்தம் சமாதிசத்- இமமர்த்தம் -ஆக இங்கனே விவரிக்கப் பட்ட பொருளை
த்ரயீ சாரஸ்-மூன்று வேதங்களின் யுடைய சாரபூதமாயும் – த்ரயாத்மா-மூன்று அஷரமும் மூன்று பதமுமாய் இரா நின்ற
ஓங்காரம் சமதிசத்–தெரிவித்தது –

—————-

ஸ்லோகம் -2-
மந்திர ப்ரஹ்மணி மத்யமேன நமஸா பும்ஸ ஸ்வரூபம் கதிர்
கம்யம் சிக்ஷிதமீ க்ஷிதேன புரத பச்சாதபி ஸ்தானத
ஸ்வா தந்த்ர்யம் நிஜ ரக்ஷணம் சமுசித வ்ர்த்திச்ச நாநியோசித
தச்யைவேதி ஹரேர் விவிச்ய கதிதம் ச்வாச்யபி நார்ஹம் தத-2-

மந்த்ர ப்ரஹ்மணி – மிகச் சிறந்த மந்த்ரமாகிய திருவஷ்டாக்ஷரத்தில்,
மத்யமேந – இடையிலுள்ளதாய்,
புரதஸ் ஈக்ஷிதேந நமஸா – முன்னேயுள்ள ப்ரணவத்தை நோக்கி அத்தோடு சேர்ந்ததான நமஸ்ஸினால்,
பும்ஸஸ் – ஜீவாத்மாவினுடைய,
ஸ்வரூபம் – ஸ்வரூபமானது,
சிக்ஷிதம் – சிக்ஷிக்கப்பட்டது;
ஸ்தாநதஸ் ஈக்ஷிதேந நமஸா – ஸ்வ ஸ்தானத்திலேயே ஆவ்ருத்தி பெற்ற நமஸ்ஸினால்,
கதிஸ் சிக்ஷிதா – உபாயம் சிக்ஷிக்கப்பட்டது;
பஶ்சாத் அபி ஈக்ஷிதேந நமஸா – பின்னேயுள்ள நாராயணாய பதத்தோடு சேர்ந்த நமஸ்ஸினால்,
கம்யம் சிக்ஷிதம் – உபேயம் (பலன்) சிக்ஷிக்கப்பட்டது.
இப்படி சிக்ஷிக்கப் பட்டதனால் தேறின பொருள்கள் எவை யென்னில்,
ஸ்வாதந்த்ர்யம் – ஸ்வதந்த்ரமாயிருக்குந் தன்மை யென்ன,
நிஜ ரக்ஷணம் – ஸ்வ ரக்ஷணமென்ன,
ஸமுசிதா வ்ருத்திஸ் ச – சேஷத்வத்துக்கு இணங்கின கைங்கர்ய வ்ருத்தி யென்ன ஆகிய இவை,
தஸ்ய ஹரேஸ் ஏவ – அந்த எம்பெருமானுக்கே உரியவை;
அந்யோசிதா ந- ­— மற்றையோர்க்கு உரியவை யல்ல;
இதி – என்று இவ் வண்ணமாக,
விவிச்ய கதிதம் – வகுத்துக் கூறப்பட்டதாயிற்று;
ததஸ் – ஆதலால்,
ஸ்வஸ்ய அபி அர்ஹம் ந – கீழ்ச்சொன்ன மூன்றும் அந்யருள் அந்ய தமனான தனக்கும் சேர்ந்தவையல்ல (என்பது தேறிற்று.)

மற்றை நம் காமங்கள் மாற்று –
படியாய் கிடந்தது தானே பவள வாய் காண வேண்டும்
அஹம் அன்னம் -அஹம் அந்நாத–உண்டிட்டாய் இனி உண்டு ஒழியாய் –வாரிக் கொண்டு என்னை விழுங்குவான்
அவன் ஆனந்தத்தை அன்னமாக கொண்டு ஆனந்தப்படும் சேஷ பூதன்-பிரதான ஆனந்தம் அவனுக்கே
கொண்டு கூட்டு பொருள் சித்திக்கும்
ஸூ பிரவிருத்தி நிவ்ருத்தி பாரதந்தர்ய பலம் -நம ஸ்வ ரக்ஷண ஸ்வ அந்வபயம் இல்லாமை
ஈஸ்வர ப்ரவ்ருத்தி -ஸூ ப்ரவ்ருத்தி நிவ்ருத்தி -பிரபத்தி இதுவே -தத் ஏக உபாயத்வம் -பாகவத சேஷத்வம் -ததீய சேஷத்வம்
லுப்த சதுர்த்தி தாதார்த்தாயாம் சதுர்த்தி -அவனையே பிரயோஜனமாக கொண்ட -ஆய -பிரார்த்தனாயாம் சதுர்த்தி

———————

ஸ்லோகம் -3
அகாரத்தாயைவ ஸ்வ மஹ மத மஹ்யம் ந நிவஹா
நராணாம் நித்யா நாமய நமிதி நாராயண பதம்
யமா ஹாஸ்மை காலம் சகலமபி சர்வத்ர சகலாஸூ
அவஸ்தா ஸ்வாவிஸ் ஸ்யுர் மம சஹஜ கைங்கர்ய விதய

அஹம் அகாரார்த்தாய ஏவ ஸ்வம் – மகார வாச்யனான நான் அகார வாச்யனான நாராயணனுக்கே
ஶேஷ பூதன் (என்று ப்ரணவார்த்தத்தை அனுவதித்தபடி),
அத – அதற்கு மேல்,
அஹம் மஹ்யம் ந – நான் எனக்கு உரியேனல்லேன் (என்று நமஸ் பதார்த்தத்தை அநுவதித்தபடி),
நாராயண பதம் – நாராயண பதமானது,
நராணாம் – நித்யாநாம் நிவஹாஸ் (தேஷாம்) அய நம் இதி – நித்ய வஸ்துக்களினுடைய திரள்களுக்கு ஆதார பூதன்
நாராயணன் (என்று தத் புருஷ ஸமாஸத்தாலும்),
நராணாம் நித்யாநாம் நிவஹாঃ (யஸ்ய) அயநம் – நித்ய வஸ்துக்களினுடைய திரள்களை ஆதாரமாக வுடையவன்
நாராயணன் (என்று பஹுவ்ரீஹி ஸமாஸத்தாலும்),
யம் ஆஹ – யாவனொரு எம்பெருமானைச் சொல்லுகிறதோ,
அஸ்மை – அந்த எம்பெருமானுக்கு,
காலம் ஸகலம் அபி – எல்லாக் காலங்களிலும்,
ஸர்வத்ர – எல்லா விடங்களிலும்,
ஸகலாஸு அவஸ்தாஸு – எல்லா அவஸ்தைகளிலும்,
மம – என்னுடைய,
ஸஹஜ கைங்கர்ய விதயঃ – இயற்கையான அடிமைத் தொழில்கள்,
ஆவிஸ்ஸ்யுঃ – விளையக் கடவன; (என்று சரம பதத்தின் அர்த்தத்தை அநுவதித்தபடி).

———————–

ஸ்லோகம் -4
தேக ஆசக்த ஆத்மபுத்திர் யதி பவதி பதம் சாது வித்யாத் த்ருதீயம்
ஸ்வாதந்த்ர்ய அந்தோ யதி ஸ்யாத் ப்ரதம மிதர சேஷத்வதீச் சேத த்வதீயம்
ஆத்மத்ராண உந்முகச் சேத நம இதி ச பதம் பாந்தவா பாசலோலா
சப்தம் நாரயணாக்க்யம் விஷய சபலதீச் சேத சதுர்தீம் ப்ரபன்ன-4-

தேஹ ஆஸக்த ஆத்ம புத்திஸ் பவதி யதி – தேஹத்திலே யூன்றின ஆத்ம புத்தியை யுடையவனாகில் [தேஹாத்ம ப்ரமமுடையவனாகில்],
த்ருதீயம் பதம் ஸாது வித்யாத் – ப்ரணவத்தில் மூன்றாவது பதமான மகாரத்தை நன்கு நோக்கக் கடவன்;
ஸ்வாதந்த்ர்ய அந்தஸ் ஸ்யாத் யதி – ஸ்வத்ந்த்ராத்ம ப்ரமமுடையவனாகில்,
ப்ரதமம் பதம் வித்யாத் – முதல் பதமான (லுப்த சதுர்த்தியோடு கூடின) அகாரத்தை நோக்கக் கடவன்;
இதர ஶேஷத்வதீஸ் சேத் – அந்ய சேஷத்வ ஜ்ஞானமுடையவனாகில்,
த்விதீயம் பதம் வித்யாத் – இரண்டவது பதமான உகாரத்தை நோக்கக் கடவன்;
ஆத்ம த்ராண உந்முகஸ் சேத் – ஸ்வ ரக்ஷணத்தில் ஊக்கமுடையவனாகில்,
நமஸ் இதி பதம் வித்யாத் – நமஸ் என்கிற நடுப் பதத்தை நோக்கக் கடவன்;
பாந்தவாபாஸ லோலஸ் – ஆபாஸ பந்துக்களிடத்தில் ஆஸக்தி யுடையவன்,
நாராயணாக்க்யம் சப்தம் வித்யாத் – நாராயண பதத்தை நோக்கக் கடவன்;
விஷய சபலதீஸ் சேத் – சப்தாதி விஷயங்களில் ஊன்றின புத்தியை யுடையவனாகில்,
சதுர்த்தீம் வித்யாத் – நாராயண பதத்தின் மேலுள்ள வ்யக்த சதுர்த்தியை நோக்கக் கடவன்.
(இப்படி யெல்லாம் நோக்க வேண்டிய அதிகாரி யாவனென்னில்)
ப்ரபந்நঃ – ப்ரபந்நாதிகாரி.

முமுஷூப்படி – –எம்பிரான் எந்தை என்னுடைச் சுற்றம் –என்னுடை வாணாள் -திருமங்கை ஆழ்வார் –
என்கையாலே நான் பிறர்க்கான அன்றும் அவன் நமக்காக இருக்கும் –
இரா மடமூட்டுவாரைப் போலே உள்ளே பதி கிடந்தது சத்தையே பிடித்து நோக்கிக் கொண்டு போரும் –

அர்த்த பஞ்சக அர்த்தமும் திரு மந்திரத்தில் உண்டு –
பிரணவத்தால் ஜீவ ஸ்வரூபம்
நாராயண -பர ஸ்வரூபம்
அகண்ட நமஸ் சப்தம் உபாய ஸ்வரூபம் –
சகண்ட நமஸ் -பிரிந்த நமஸ் -ம ந -ம விரோதி ஸ்வரூபம்
ஆய -பிரார்த்தனாயாம் சதுர்த்தி பிராப்ய ஸ்வரூபம்

நவ வித சம்பந்த அர்த்தமும் இதில் உண்டு
ரமா பதி-பர்த்தா பிதா இத்யாதி -தத்வ த்ரயம் -மூன்றும் ஐந்தும் ஒன்பதும் எட்டு எழுத்திலே உண்டே
காரணத்வ வாசி அகாரம் பிதா -பித்ரு
ரக்ஷகத்வம் வாசி அகாரம் -ரக்ஷகம் ரஷ்ய –
லுப்த சதுர்த்தி சேஷ சேஷி
உகாரம் பர்த்தா பார்யா
மகாரம் ஜேயம் ஞாதா
நாராயணா -மூன்று தொடர்பு -வேற்றுமை தொகை அன்மொழி தொகை -இரண்டு சமாசங்கள்
ஸ்வாமி சொத்து -ஆதார ஆதேய
நாரங்களை இருப்பிடமாக கொண்டவன் அந்தராத்மா சரீர ஆத்மா
ஆய -போக்த்ரு போக்ய சம்பந்தம் -அவன் உகப்பே பிரயோஜனம்

—————————

ஸ்லோகம் -5

நேத்ருத்வம் நித்யயோகம் சமுசித குணஜாதம் தநுக்யாப நம் ச
உபாயம் கர்த்தவ்யபாகம் த்வத மிதுநபரம் ப்ராப்யமேவம் ப்ரசித்தம்
ஸ்வாமித்வம் ப்ரார்த்த நாஞ்ச பிரபலதர விரோதி ப்ரஹாணம் தசைதான்
மந்தாரம் த்ராயதே சேத்ய திகைத நிகமஷ் ஷட்பதோயம் த்விகண்ட-5-

நேத்ருத்வம் – புருஷகாரத்வத்தையும்,
நித்ய யோகம் – ஒரு நொடிப் பொழுதும் விட்டுப் பிரியாத நித்ய ஸம்ஶ்லேஷத்தையும்,
ஸமுசித குண ஜாதம் – இன்றியமையாத திருக் குணங்களின் திரளையும்,
தநுக் க்யாபநம் ச – திருமேனியைக் காட்டுதலையும்,
உபாயம் – உபாயத்தையும்,
கர்த்தவ்ய பாகம் – சேதநன் செய்ய வேண்டியதான அத்யவ ஸாயத்தையும்,
மிதுந பரம் ப்ராப்யம் – இருவருமான சேர்த்தியை விஷயீகரித்ததான கைங்கர்யத்தையும்,
ஸ்வாமித்வம் – ஸர்வ ஶேஷித்வத்தையும்,
ப்ரார்த்தநாம் ச – கைங்கர்ய ப்ரார்த்தநையையும்,
ப்ரபல தர விரோதி ப்ரஹாணம் – மிகவும் பிரபலமான உபேய விரோதியைக் கழிப்பதையும்,
அதிகத நிகமஸ் – வேத ப்ரதீதமாயும்,
த்வி கண்டஸ் – இரண்டு கண்டங்களை யுடையதாயும்,
ஷட்பதஸ் – ஆறு பதங்களை யுடையதாயு மிருக்கிற,
அயம் – இந்த த்வய மந்த்ரமானது,
ஏதாந்தச – ஆகிய இந்த பத்து அர்த்தங்களையும்,
மந்தாரம் – மனனஞ் செய்கிற உத்தமாதிகாரியை,
த்ராயதே இதி – காப்பாற்றுகின்ற தென்று,
ஏவம் ப்ரஸித்தம் – இங்ஙனே ப்ரஸித்தமாயிரா நின்றது.

1-ஸ்ரீ –நேத்ருத்வம் -ஸ்ரீயதே -ஸ்ரேயதே -ச்ருணோதி -ச்ராவயதி -ஸ்ருணாதி -ச்ரீணாதி
2-மத்-நித்ய யோகத்வம்
3-நாராயண -வாத்சல்யம் ஸ்வாமித்வம் சௌசீல்யம் சௌசீல்யம் ஜ்ஞானம் சக்தி-சமுசித குண ஜாதம்
4-சரனௌ-திவ்ய மங்கள விக்ரஹம் -த நுக்யாபனம் –
5-சரணம் -உபாயம் இஷ்ட பிராப்திக்கும் அநிஷ்ட நிவ்ருத்திக்கும்
6-பிரபத்யே -கர்த்தவ்யபாகம் -வாசிக காயிக மானசீகங்கள் -கர்த்தவ்யம் புத்யர்த்தம்
7-ஸ்ரீ மதே-மிதுன பரம் பிராப்யம் -கைங்கர்ய பிரதி சம்பந்த தத்வேன அன்வயம்
8-நாராயண -ஸ்வாமித்வம்
9-ஆய -ப்ரார்த்த நாஞ்ச -கைங்கர்ய பிரார்த்தனையையும் –
10-நம-பிரபலதர விரோதி ப்ரஹாணம் -மிகவும் பிரபலமான உபேய விரோதியை கழிக்கைக்கும்-

கடகவல்லி நிகமத்தில் வேதபாகத்தில் உள்ளதே -அதிகத நிகம-
மந்த்ர ரகஸ்யம் திரு மந்த்ரம் -விதி ரகஸ்யம் சரம ஸ்லோகம் -அனுஷ்டான ரகஸ்யம் த்வயம் –
அனுசந்தான ரஹஸ்யம் இனிமையாலே எப்போதும் -இங்கும் அங்கும்
மந்த்ர ராஜா -திருமந்திரம் -மந்த்ர ரத்னம் -ராஜா தானே ரத்னம் தேடி வர வேண்டும் –

ஆச்சார்யர் பிரமாதா -பிரமேயம் அர்ச்சை–பிரமாணம் த்வயம் -ஸ்ரீ உய்யக்கொண்டார் -ஸ்ரீ ஸூக்தி
சம்சார பாம்புக்கு சிறந்த ஒளஷதம்–ஸ்ரீ வாது-த்வயம் -ஸ்ரீ மணக்கால் நம்பி
அதனனுக்கு பெரிய நிதி -பெரிய முதலியார்
பசி தாகத்துக்கு அம்ருத பானம் -திருமாலை ஆண்டான்
ஸ்தன்யம் போலே திருக் கோஷ்ட்டியூர்
ராஜ குமாரனுக்கு முடியும் மாலையும் போலே -பாஷ்யகாரர் -உரிமைக்கும் அனுபவத்துக்கும் –
சம்சார இரு விலங்கு -பெருமை -பாப புண்யம் -அறுத்து தலையிலே முடி -எம்பார்
பெறு மிடுக்கனுக்கு சிந்தாமணி போலே- பிள்ளை உறங்கா வல்லி தாசர்
எலுமிச்சம் பழம் கொண்டு ராஜ்ஜியம் பிள்ளான்
வாஸ்யம் -எம்பெருமான் வாசகம் த்வயம் அவ்வருகு இல்லை நஞ்சீயர் –
மாதவன் என்று சொல்ல வல்லீரேல் ஒத்தின் சுருக்கு இதுவே
கற்பூர நிகரம் போலே -நம்பிள்ளை

———————-

ஸ்லோகம் –6

ஈசாநாம் ஜகதாம் அதீச தயிதாம் நித்ய அநபாயாம் ச்ரியம்
சம்ச்ரித்ய ஆஸ்ரயணோசித அகில குணச்ய அங்க்ரீ ஹரே ஆஸ்ரயே
இஷ்ட உபாயதயா ச்ரியா ச சஹிதாய ஆத்மேச்வராய அர்த்தயே
கர்த்தும் தாஸ்யம் அசேஷம் அப்ரதிஹதம் நித்யம் த்வஹம் நிர்மம-6-

ஜகதாம் ஈஶாநாம் – உலகங்களுக்குத் தலைவியாய்,
அதீச தயிநாம் – ஸர்வேஶ்வர னுக்கு ப்ராண வல்லபையாய்,
நித்யாநபாயாம் – ஒருபோதும் விட்டுப் பிரியாதவளயிருக்கின்ற,
ஶ்ரியம் – பெரிய பிராட்டியாரை,
ஸம்ஶ்ரித்ய – புருஷகாரமாகப் பற்றி,
ஆஶ்ரயணோசித அகில குணஸ்ய – சரண வரணத்திற்குப் பாங்கான ஸகல குணங்களையு முடைய,
ஹரேஶ் – எம்பெருமானுடைய,
அங்க்ரீ – திருவடிகளை,
இஷ்ட உபாய தயா ஆஶ்ரயே – இஷ்ட ஸாதநமாகப் பற்றுகிறேன்.
(ஆக பூர்வ கண்டார்த்தத்தை அநுஸந்தித்தபடி.)

ஶ்ரியா சஸ ஹிதாய ஆத்மேஶ்வராய – பெரிய பிராட்டியாரோடு கூடி யிருந்துள்ள ஸர்வ ஶேஷியான நாராயணனுக்கு,
நிர்மமஶ் அஹம் – கைங்கர்யத்தில் களையான மமகாரம் சிறிதுமில்லாத அடியேன்,
அஶேஷம் தாஸ்யம் – ஸகல வித கைங்கரியத்தையும்,
அப்ரதிஹதம் – இடையூறின்றி,
நித்யம் – இடைவீடின்றி,
கர்த்தும் – செய்யும் பொருட்டு,
அர்த்தயே – ப்ரார்த்திக்கிறேன்.
(இது உத்தர கண்டார்த்தத்தை அநுஸந்தித்தபடி.)

கீழ் பதார்த்த விவரண ஸ்லோஹம்
இது வாக்யார்த்த பிரதிபாதாக ஸ்லோஹம்
சர்வலோக ஈஸ்வரி -பித்தர் பனிமலர் பாவைக்கு -கால நியமம் வேண்டாம் ருசி ஒன்றே வேண்டுவது -மூன்று விசேஷணங்கள்
அபராத பயத்தாலே பிராட்டியை முன்னிட்டே பற்ற வேண்டுமே
ஆஸ்ரயண சௌகர்ய ஆபாதக குணங்கள்
ஆஸ்ரய கார்ய ஆபாத குணங்கள்
சத் சம்ப்ரதாய சாராம்சம் –

————————-

ஸ்லோகம் –7

மத் ப்ராப்தி அர்த்த தயா மயா உக்தம் அகிலம் சம்த்யஜ்ய தர்மம் புந
மாம் ஏகம் மநவாப்தயே சரணம் இத்யார்த்தோ வஸாயம் குரு
த்வாம் ஏவம் வ்யவசாய யுக்தம் அகில ஞானாதி பூர்ணோ ஹ்யஹம்
மத் ப்ராப்தி ப்ரதிபந்த கைர் விரஹிதம் குர்யாம் சுசம் மா க்ருதா-

மத் ப்ராப்தி அர்த்ததயா – என்னைப் பெறுகைக்கு உபாயமாக,
மயா உக்தம் – (உனது மனத்தை சோதிப்பதற்காக) என்னாலே சொல்லப்பட்ட,
அகிலம் தர்மம் ஸம்த்யஜ்ய – ஸகல தர்மங்களையும் விட்டு,
மாம் ஏகம் புநஸ் ஆர்த்த – என்னொருவனையே குறித்து ஆர்த்தி மிகுந்தவனாய்,
மதவாப்தயே சரணம் இதி அவஸாயம் – என்னைப் பெறுகைக்கு நானே உபாயமென்கிற அத்யவஸாயத்தை,
குரு – செய்வாயாக;
ஏவம் வ்யவஸாய யுக்தம் த்வாம் – இத்தகைய அத்யவஸாயத்தோடு கூடிய உன்னை,
ஜ்ஞானாநி பூர்ண: அஹம் – ஞானம் முதலிய குணங்கள் நிறைந்த நான்,
மத் ப்ராப்தி ப்ரதிபந்தகை: விரஹிதம் குர்யாம் – என்னைப் பெறுகைக்கு இடையூறாயுள்ள பாபங்கள் அற்றவனாகச் செய்யக் கடவேன்;
சுசம் மா க்ருதா: – துக்கங் கொள்ளாதே.

சரண்யன் ருசி பரிக்ருஹீதம் சரம ஸ்லோகம்
அசக்தியால் விடக் கூடாது- பிராப்தி இல்லை என்றே விட வேண்டும் -ராக பிராப்தத்துக்கு விதி வாக்கியமும் கிட்டியதே
தர்ம சம் ஸ்தபனரார்த்தமாக திரு அவதாரம் -சாஷாத் தர்மம் அன்றோ அவன்
அதிகாரி கிருத்யம் முன் வாக்கியம் சொல்லும்
சரணாகதன் கிருத்யம் பின் வாக்கியம் சொல்லும்
முன் வாக்கியம் ஆறு சப்தங்கள் -பின் வாக்கியம் ஐந்து சப்தங்கள் –
உக்ரம் வீரம் -ஸ்ரீ நரஸிம்ஹ–ஐந்தும் ஆறும் முன் பின் வாக்கியங்கள்

——————-

ஸ்லோகம் –8

நிச்சித்ய த்வத் அதீந தாம் மயி சதா கர்மாதி உபாயான் ஹரே
கர்த்தும் த்யக்தும் அபி பிரபத்தும் அநலம் ஸீதாமி துக்காகுல
ஏதத் ஞானம் உபேயுஷே மம புநஸ் சர்வ அபராத ஷயம்
கர்த்தா ஸீதி த்ருடோச்மி தே து சரமம் வாக்யம் ஸ்மரன் சாரதே-8-

ஹே ஹரே! – எம்பெருமானே!,
மயி ஸதா த்வத் அதீந்த்ரம் நிஶ்சித்ய – அடியேன் எப்போதும் தேவரீருக்கே அதீனமான
ஸ்வரூப ஸ்திதி ப்ரவ்ருத்திகளை யுடையவ னென்பதை நிஶ்சயித்து,
கர்மாதி உபாயாந் – கரும யோகம் முதலிய உபாயங்களை,
கர்த்தும் – செய்வதற்கும்,
த்யக்தும் அபி – விடுவதற்கும்,
ப்ரபத்தும் – ப்ரபத்தி பண்ணுவதற்கும்,
அநலம் – அஸமர்த்தனாய்,
து:க்காகுல: ஸீதாமி – மிகவும் துக்கப்படா நின்றேன்;
ஸாரதே: தே – பார்த்தஸாரதியாய் நின்ற தேவரீருடைய,
சரமம் வாக்யம் – கடைசியான வாக்யத்தை,
ஸ்மரந் – ஸ்மரித்தவனாய்க் கொண்டு,
ஏதத் ஜ்ஞாநம் உபேயுஷ: மம – பகவானே உபாயமென்று துணிந்திருக்கையாகிற இந்த அத்யவஸாயத்தைப் பெற்றிருக்கு மடியேனுக்கு,
ஸர்வ அபராத க்ஷயம் கர்த்தாஸி இதி – ஸகல பாப நிவ்ருத்தியையும் தேவரீரே பண்ணித்தர வல்லீரென்று கொண்டு,
த்ருடஸ் அஸ்மி – துக்கமற்று நிர்ப்பரனாயிருக்கின்றேன்.

நெறி காட்டி நீக்குதியோ நின்பால்
மார்விலே கை வைத்து உறங்க பிராப்தம்
பிரபத்தும் அபி அநலம்-
ஸ்வரூப அனுரூபத்வம்
சுக ரூபத்வம்
நிரபாயத்வம்
சித்தத்வம்
ச்வத பல சாதனத்வம்
நிரபேஷத்வம்
அவிளம்பித பலபிரதத்வம்
ஏகத்வம்
முதலானவற்றாலே ஸூகரமாய் இரா நின்ற உபாயமானது
சோக நிவ்ருத்திக்கு சொல்லப் பட்டு இருந்தாலும்
அதற்கு அங்கமாக விதிக்கப்பட்ட சர்வ தர்ம த்யாகம் பண்ணப் போகாமையாலும்
ஆர்த்தி இல்லாமையாலும்
ஆகிஞ்சன்யம் இல்லாமையாலும்
மகா விசுவாசம் இல்லாமையாலும்
சர்வதர்ம த்யாகத்தை அங்கமாக யுடைய பிரபத்தியையும் செய்ய அசக்தனாய்-அசமர்த்தனாய் -இருக்கிற நான் –
துக்காகுல சீதாமி –
சோக விசிஷ்டனாய் தளரா நின்றேன்-

ஒன்பது ஹேதுக்கள்– ஸ்வரூப விருத்தம் –துஷ்க்கரத்வாத்-துக்க பஹுலத்வாத்–சாபாயத்வாத் -அபாயம் நிறைந்த
பல அஸாதநத்வாத் -அசேதனம் ஈஸ்வரத்துவாராவாகவே பலம்-
சா பேஷத்வாத் -மோக்ஷ பூமி பிரதன்-திருக்கண்ண பிரான் -உத்பலம் மாம்ச ஆசை அறுத்து -பக்தி உபாயம் பலத்துக்கு சமீபம் கொண்டு விடும்
விளம்பிய பல ப்ரதத்வாத் -பிராரப்த கர்மம் தொலைய வேண்டுமே – சிரகால சாத்யத்வாத் –
அநேகத்வாத் அஷ்ட விதம் நவ விதம் -சிரவணம் கீர்த்தனம் இத்யாதி நவ லக்ஷணம்
அதே ஒன்பது காரணங்கள் விட ஒண்ணாமைக்கு -ஸ்வரூப அனுரூபம் -ஸூ கரத்வாத்-இத்யாதி-

நஞ்சீயர் அந்திம காலத்துக்கு தஞ்சமான -பற்றினத்தாலும் விட்டதாலும் இல்லை விடுவித்து பற்றுவித்த அவனே உபாயம்
திரு மந்திரத்தால் ஞானம் பெற்று த்வயத்தாலே கால ஷேபம்-கைங்கர்யம் சித்திக்க -சரணாகதி அனுஷ்டானம் – –
வேத ஸீரோ பூஷணம் சாரதியால் தொடுக்கப்பட்ட ஸ்ரீ கீதாசாரமான சரம ஸ்லோகத்தில் விசுவாசம் கொண்டு வாழ வேண்டும் –
திருட அத்யாவசியம் அருளிச் செய்து நிகமிக்கிறார் –

கர்மம் கைங்கர்யத்தில் புகும்–
ஞானம் ஸ்வரூப பிரகாசத்தித்தில் புகும் –
பக்தி பிராப்ய ருசியில் புகும் –
பிரபத்தி பிராப்ய யாதாம்யத்தில் புகும்

——————-

ஶாகா நாமுபரி ஸ்திஸ்தேந மநுநா மூலேந லப்தாத்மக:
ஸத்தா ஹேது ஸக்ருஸ் ஜ்ஜபேந ஸகலம் காலம் த்வயேந க்ஷிபந் ।
வேதோஸ்த் தம்ஸ விஹார ஸாரதி தஸ்யாகும்பேந விஸ்த்ரம்பித:
ஸாரஜ்ஞோ யதிஸ் கஶ்சிதஸ்தி புவநே நாதஸ் ஸ யூதஸ்ய ந: ॥ 9॥

———————————————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஶ்ரீகாஞ்சீ ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பராசர பட்டர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பிள்ளை லோகாச்சார்யர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ முகுந்த மாலை-ஸ்லோகங்கள்-1-40- ஸ்ரீ காஞ்சி ஸ்வாமிகள் இயற்றிய உரை–

December 16, 2019

ஸ்ரீ குலசேகரர் -தலை சிறந்த பூஷணர்-சேகரர்–கொல்லி காவலன் கூடல் நாயகன் கோழியர் கோன்
ஸ்ரீ கௌஸ்துபம் அம்சம்-

குஹ்யதே யஸ்ய நகரே ரங்க யாத்ரே திநே திநே
தமஹம் சிரஸா வந்தே ராஜா நாம் குல சேகரம்-

குஹ்யதே –-ஜனங்களால் கோஷிக்கப் படுகிறதோ –
திருவரங்கன் சர்வ வித அனுபவமும் என்று கிட்டுமோ என்று தாம் பிரார்த்தித்த படி
நாட்டையும் உலகத்தையும் தம்மைப் போல் ஆக்கி –
அனைவைரையும் -ஸ்ரீ ரெங்க யாத்திரை ஸ்ரீ ரெங்க யாத்திரை என்று வாய் வெருவும் படி
செய்து அருளிய ஸ்ரீ வைஷ்ணவ சிகாமணியான ஸ்ரீ குல சேகர பெருமாளை வணங்குகிறேன் -என்றவாறு –

ஶ்ரீ முகுந்தனுக்கு சாத்த பட்ட மாலை
முகுந்தன் திரு நாமங்களையே பூ மாலையாக தொடுத்த ஸ்தோத்ர மாலை –
வேதார்த்த அர்த்தம் மட்டும் இல்லை
திரு நாம சங்கீர்த்தனமே வழி.–முகுந்த சப்தம் – மு கு தா -மோஷம் பூமியை கொடுப்பவன்.
சரணம் ஆகும் தனது தாள் அடைந்தார்க்கு எல்லாம் மரணம் ஆனால் வைகுந்தம் கொடுக்கும் பிரான்.
தனி மா தெய்வம்-ஓர் ஆல் இலை செல்வன் -மார்கண்டேயனும் கரியே-மோஷ பிரதன் இவன் ஒருவனே –

வந்தே முகுந்தம் அரவிந்தளாய தக்ஷம் ,
குந்தேந்து ஸந்கத் தசனம் சிஷு கோப வேஷம் ,
இந்திராதி தேவ கண வந்தித பாத பீடம்
விருந்தாவனாலயம் காம் வா ஸூ தேவ ஸூநம் –

——–

ஸ்ரீ வல்ல பேதி வர தேதி தயா பரேதி பக்தப் ப்ரியேதி பவலுண்ட ந கோவிதேதி
நா தேதி நாக சயநேதி ஜெகன் நிவாஸே த்யாலாபநம் பிரதிபதம் குரு மே முகுந்த –1-

ஸ்ரீ வல்ல பேதி -ஸ்ரீ யபதி என்றும்
வர தேதி -ஆஸ்ரிதர்களுக்கு அனைத்தையும் அளிப்பவன் என்றும்
தயா பரேதி -ஆஸ்ரிதர் படும் துக்கங்களை பொறுக்க மாட்டாத ஸ்வபாவனாயும்
பக்தப் ப்ரியேதி -ஆஸ்ரிதர்கள் மேல் வ்யாமோஹம் கொண்ட அன்பனே என்றும்
பவலுண்ட ந கோவிதேதி -சம்சாரத்தை தொலைக்க வல்லவனே என்றும்
நா தேதி -எனது ஸ்வாமியே என்றும் –
நாக சயநேதி -அரவணை மேல் பள்ளி கொள்பவனே என்றும் –
ஜெகன் நிவாஸே -உலகம் அனைத்தையும் தன் திரு வயிற்றிலே இடமாகக் கொண்டு அவற்றை நோக்கி ரக்ஷிப்பவனே என்றும்
த்யாலாபநம் பிரதிபதம்-அடிக்கடி சொல்லுமவனாக
குரு மே -அடியேனை செய்து அருள வேண்டும் –
முகுந்த –உபய விபூதியையும் அளிக்க வல்ல எம்பெருமானே –
லுண்டனம் -களவாடுகை -அபஹரிக்கை
கோவிந்தா -வல்லவன்
ஜெகன் நிவாஸ -சர்வ லோக வியாபகன்- பஹு வரீகி சமாகத்தால்
பிரளய காலத்தில் திரு வயிற்றிலே வைத்து ரஷிப்பவன் – தத் புருஷ சமாஹம் –
மாம் ஆலாபினம் குரு -பகவத் கிருபையே சாதனம் -என்றவாறு

ஹே முகுந்த! – உபய விபூதியை அளிக்க வல்ல எம்பெருமானே!,
ஸ்ரீ வல்லப! இதி -ஶ்ரிய:பதி என்றும், வரத! இதி – (அடியார்க்கு) அபேஷிதங்களை அளிப்பவனே! என்றும்,
தயாபர! இதி – அடியார் படும் துக்கங்களைப் பொறுக்கமாட்டாத ஸ்வபாவமுடை யவனே! என்றும்,
பக்தப்ரிய! இதி – அடியார்கட்கு அன்பனே! என்றும்,
பவலுண்டந கோவித! இதி – ஸம்ஸாரத்தைத் தொலைக்க வல்லவனே! என்றும்,
நாத! இதி – ஸர்வஸ்வாமிந்! என்றும்,
நாகசயந! இதி – அரவணைமேல் பள்ளி கொள்பவனே! என்றும்,
ஜகந் நிவாஸ! இதி – திருவயிற்றை இருப்பிடமாக்கி அவற்றை நோக்குமவனே! என்றும்,
ப்ரதிபதம் – அடிக்கடி, ஆலாபிநம் – சொல்லுமவனாக, மாம் – அடியேனை, குரு – செய்தருளாய்.

——————–

ஜெயது ஜெயது தேவோ தேவகீ நந்தநோயம்
ஜெயது ஜெயது கிருஷ்ணோ வ்ருஷ்ணீ வம்ச ப்ரதீப
ஜெயது ஜெயது மேக ஸ்யாமள கோமலாங்கோ
ஜெயது ஜெயது ப்ருத்வீ பாரா நாஸோ முகுந்த —2-

ஜெயது ஜெயது தேவோ தேவகீ நந்தநோயம்-தேவகி மைந்தனான இந்த தேவனான கண்ணபிரான் வாழ்க வாழ்க –
தேவோ -ஸ்வ இச்சையாக லீலார்த்தமாக -அஜாயமானோ பஹுதா விஜாயதே
ஜெயது ஜெயது கிருஷ்ணோ வ்ருஷ்ணீ வம்ச ப்ரதீப-வ்ருஷ்ணீ அரச குலத்துக்கு விளக்காய் தோன்றின கண்ணபிரான் வாழ்க வாழ்க
தஸ்யாபி வ்ருஷ்ணீ பிரமுகம் புத்ர சதமாஸீத் –யாதோ வ்ருஷ்ணீ ச்மஞ்ஞா மேதத் கோதரமவாப -ஸ்ரீ விஷ்ணு புராணம் –
ஜெயது ஜெயது மேக ஸ்யாமள கோமலாங்கோ-காள மேகம் போன்ற கரிய பிரானாய்-அழகிய திருமேனியை யுடைய கண்ணபிரான் வாழ்க வாழ்க
ஜெயது ஜெயது ப்ருத்வீ பாரா நாஸோ முகுந்த -பூமிக்கு சுமையான துர்ஜனங்களை ஒழிக்குமவனான கண்ணபிரான் வாழ்க வாழ்க

அயம் – இந்த, தேவ: – தேவனான, தேவகீ நந்தந: – தேவகியின் மகனான கண்ணபிரான், – வாழ்க! வாழ்க!!,
வ்ருஷ்ணி வம்சப்ரதீப: – வ்ருஷ்ணி என்னும் அரசனுடைய குலத்துக்கு விளக்காய்த் தோன்றிய கண்ணன், ஜயது ஜயது-;
மேகச்யாமல: – காளமேகம் போற் கரியபிரானாய், கோமள அங்க: – அழகிய திருமேனியை யுடையனான் கண்ணபிரான், ஜயது ஜயது-;
ப்ருத்வீபார நாச: – பூமிக்குச் சுமையான துர்ஜநங்களை ஒழிக்குமவனான, முகுந்த: – கண்ணபிரான், ஜயது ஜயது – வாழ்க! வாழ்க!!

————

முகுந்த மூர்த்நா பிராணிபத்ய யாசே பவந்த மேகாந்த மியந்த மர்த்தம்
அவி ஸ்ம்ருதி ஸ்தவச் சரணார விந்தே பவே பவே மே அஸ்து பவத் ப்ரஸாதாத் –3-

முகுந்த-புக்தி முக்திகளைத் தர வல்ல கண்ண பிரான்
மூர்த்நா பிராணிபத்ய யாசே -தலையால் சேவித்து -யாசிக்கிறேன்
பவந்தம்-தேவரீரை
ஏகாந்தம் இயந்தம் அர்த்தம்-இவ்வளவு பொருளை மாத்திரம் யாசிக்கிறேன்
அவி ஸ்ம்ருதி ஸ்த்வச் சரணாரவிந்தே அஸ்து -தேவரீருடைய திருவடித் தாமரைகளில் மறப்பு இல்லாமை இருக்க வேணும் –
ஜென்மம் களைந்து மோக்ஷம் அருள வேணும் என்று கேட்க வில்லை –
பவே பவே மே பவத் ப்ரஸாதாத் -எனக்கு பிறவி தோறும் தேவரீருடைய அனுக்ரஹத்தினால்
பிறப்பின்மை பெற்று அடிக் கீழ் குற்றேவல் மறைப்பின்மை யான் வேண்டும் மாடு -பெரிய திருவந்தாதி பாசுரம் –
நினைமின் நெடியான்-நீண்ட காலத்துக்கு நினைவில் கொள்வான்..சரண் என்று நெடியானே வேங்கடவா -பாசுரம்-
உன் மனத்தால் என் நினைந்து இருந்தாய் உன் ஆதீனம் தான் .
நினைவும் ஞானமும் மறதியும் அவன் ஆதீனம்

முகுந்த – புக்தீ முக்திகளைத் தர வல்ல கண்ண பிரானே!,
பவந்தம் – தேவரீரை, மூர்த்நா – தலையாலே, ப்ரணிபத்ய – ஸேவித்து,
இயந்தம் அர்த்தம் ஏகாந்தம் – இவ்வளவு பொருளை மாத்திரம், யாசே – யாசிக்கின்றேன்!
(அஃது என்? எனில்),
மே – எனக்கு, பவே பவே – பிறவி தோறும், பவத் ப்ரஸாதாத் – தேவரீருடைய அநுக்ரஹத்தினால்,
த்வத் சரணாரவிந்தே – தேவரீருடைய திருவடித் தாமரை விஷயத்தில்,
அவிஸ்ம்ருதி: – மறப்பு இல்லாமை, அஸ்து – இருக்க வேணும்.

————-

நாஹம் வந்தே தவ சரண யோர்த்வந்த்வ மத் வந்த்வஹேதோ –
கும்பீ பாகம் குருமபி ஹரே நாரகம் நாப நேதும் –
ரம்யா ராமா ம்ருதுதநுலதா நந்தநே நாபி ரந்தும்
பாவே பாவே ஹ்ருதய பவநே பாவயேயம் பவந்தம் -4-

நாஹம் வந்தே தவ சரண யோர்த்வந்த்வ மத் வந்த்வஹேதோ –அடியேன் தேவரீருடைய திருவடி இணையை
ஸூக துக்க நிவ்ருத்தியின் பொருட்டு சேவிக்கிறேன் அல்லேன்
கும்பீ பாகம் குருமபி நாரகம் நாப நேதும் -கும்பீ பாகம் என்னும் பெயரை யுடைய பெருத்த கொடி தான்
நரகத்தை போக்கடிப்பதற்காகவும் சேவிக்கிறேன் அல்லேன்
ரம்யா ராமா ம்ருது தநு லதா நந்தநே நாபி ரந்தும்-அழகாயும்-ஸூகுமாரமான கொடி போன்ற சரீரத்தை யுடைய
அப்சரஸ் ஸூக்களை இந்திரனது நந்தவனத்தில் அனுபவிப்பதற்காகவும் சேவிக்கிறேன் அல்லேன்
ஹே ஹரே-அடியார்களின் துன்பத்தை போக்குமவனே
பாவே பாவே ஹ்ருதய பவநே பாவயேயம் பவந்தம் -பிறவி தோறும் ஹிருதயம் ஆகிற மாளிகையில் தேவரீரை
த்யானம் பண்ணைக் கடவேன் –
இப்பேறு பெறுகைக்காகத் தான் சேவிக்கிறேன் -என்று சேஷ பூர்ணம்

அஹம் – அடியேன், தவ – தேவரீருடைய, சரணயோ:த்வந்த்வம் – திருவடியிணையை,
அத்வந்த்வஹேதோ: – ஸுக துக்க நிவ்ருத்தியின் பொருட்டு, ந வந்தே – ஸேவிக்கிறேனல்லேன்.;
கும்பீபாகம் – கும்பீபாகமென்னும் பெயரையுடைய,
குரும் – பெருத்த [கொடிதான], நாரகம் – நரகத்தை, அபநேதும் அபி – போக்கடிப்பதற்காகவும்,
ந வந்தே – ஸேவிக்கிறேனல்லேன்;
ரம்யா: – அழகாயும், ம்ருது தநு லதா: – ஸுகுமாரமாய்க் கொடி போன்ற சரீரத்தை யுடையவர்களுமான,
ராமா: – பெண்களை [அப்ஸரஸ்ஸுக்களை], நந்தநே – (இந்திரனது) நந்தநவநத்தில்,
ரந்தும் அபி – அநுபவிப்பதற்காகவும், ந வந்தே – ஸேவிக்கிறேனல்லேன்;
(பின்னை எதுக்காக ஸேவிக்கிறீரென்றால்;),
ஹே ஹரே! – அடியார்களின் துயரத்தைப் போக்குமவனே!, பாவே பாவே – பிறவிதோறும்,
ஹ்ருதய பவநே – ஹ்ருதயமாகிற மாளிகையில், பவந்தம் – தேவரீரை, பாவயேயம் – த்யாநம் பண்ணக் கடவேன்.
(இப்பேறு பெறுகைக்காகத்தான் ஸேவிக்கிறேனென்று சேஷபூரணம்.)

—————-

நாஸ்தா தர்மே ந வஸூ நிசயே நைவ காமோ பபோகே –
யத்யத் பவ்யம் பவது பகவன் பூர்வ கர்மாநுரூபம்
ஏதத் பிரார்த்த்யம் மம பஹு மதம் ஜென்ம ஜன்மாந்தரே அபி
த்வத் பாதாம் போருஹ யுககதா நிஸ்ஸலா பக்தி ரஸ்து ––5-

நாஸ்தா தர்மே-ஆமுஷ்மிக சாதனமான தர்மத்தில் ஆசையில்லை
ந வஸூ நிசயே ஆஸ்தா–ஐஹிக சாதனமான பணக் குவியிலிலும் ஆசை இல்லை
நைவ காமோ பபோகே -விஷய போகத்திலும் ஆசையில்லை
தர்ம அர்த்த காமம் புருஷார்த்தங்கள் வேண்டாம் என்றவாறு
யத்யத் பவ்யம் பவது -யது யது உண்டாகக் கடவதோ அது உண்டாகட்டும்
பகவன்-ஷாட் குண்ய பூர்ணனான எம்பெருமானே
பூர்வ கர்மாநுரூபம் ஏதத் பிரார்த்த்யம்-இதுவே பிரார்த்திக்கத் தக்கதாய் இருக்கும்
மம-அடியேனுக்கு
பஹு மதம் ஜென்ம ஜன்மாந்தரே அபி-ஜென்ம ஜன்மாந்தரங்களிலும் -எனக்கு இஷ்டமாய்
த்வத் பாதாம் போருஹ யுககதா நிஸ்ஸலா பக்தி ரஸ்து -தேவரீருடைய திருவடித் தாமரை இணையில்
பதிந்து இருக்கிற பக்தியானது -அசையாமல் இருக்க வேண்டும்
என்னுடைய ஆவல் உன் திருவடியில் சேர்ந்ததாகி -ஜென்மங்கள் தோறும் நிலைத்து இருக்க வேணும் என்கை –

ஹே பகவந் – ஷாட்குண்ய பூர்ணனான எம்பெருமானே!, மம – அடியேனுக்கு,
தர்மே! – (ஆமுஷ்மிக ஸாதனமான) தர்மத்தில், ஆஸ்தா ந – ஆசையில்லை;
வஸுநிசயே – (ஐஹிகஸாதநமான) பணக்குவியலிலும், ஆஸ்தா ந – ஆசையில்லை;
காம உபபோகே – விஷயபோகத்திலும், ஆஸ்தா ந ஏவ – ஆசை இல்லவே யில்லை;
பூர்வகர்ம அநுரூபம் – ஊழ் வினைக்குத் தக்கபடி, யத் யத் பவ்யம் – எது எது உண்டாகக் கடவதோ,
(தத் – அது) பவது – உண்டாகட்டும்;
(ஆனால்) த்வத் பாத அம்போ ருஹ யுக கதா – தேவரீருடைய திருவடித் தாமரையிணையிற் பதிந்திருக்கிற,
பக்தி: – பக்தியானது, ஜந்மஜந்மாந்தரே அபி – ஜன்ம ஜன்மாந்தரங்களிலும், நிஶ்சலா – அசையாமல்,
அஸ்து – இருக்கவேண்டும்;
(இதி யத் – என்பது யாதொன்று) ஏதத் – இதுவே,
மம பஹுமதம் – எனக்கு இஷ்டமாய், ப்ரார்த்யம் -ப்ரார்த்திக்கத் தக்கதுமாயிருக்கிறது.

பிரகலாதனும் -எத்தனை ஜன்மம் எடுத்தாலும் வரம் கேட்காத வரம்
என்பிலாதா இழி பிறவி எய்தினும் நின் கண் பக்தி வேணும்
அப்படி நிலையான பக்தி இருந்தால் கர்மங்கள் தானாகவே தொலையும்

—————–

திவி வா புவி வா மமஸ்து வாஸோ நரகே வா நரகாந்தக பிரகாமம்
அவதீரிதா சாரதார விந்தவ் சரணவ் தே மரணே அபி சிந்தயாமி –

திவி வா புவி வா மமஸ்து வாஸோ நரகே வா -ஸ்வர்க்கத்திலாவது பூமியிலாவது -நரகத்திலாவது எனக்கு
நரகாந்தக பிரகாமம் -நரகா நாசனே உனது இஷ்டப்படி ஆகட்டும்
புண்ய பலனை அனுபவிக்க ஸ்வர்க்கமோ-பாப பலனை அனுபவிக்க நரகமோ –
இரண்டையும் அனுபவிக்கும் பூமியிலோ வாசம் கிடைக்கட்டும் -அதில் அடியேனுக்கு ஆனந்தமோ துக்கமோ இல்லை
அவதீரிதா சாரதார விந்தவ் -திரஸ்கரிக்கப் பட்ட சரத் கால-தாமரை யுடைய -சரத் கால தாமரையை விட மேம்பட்ட
சரணவ் தே மரணே அபி சிந்தயாமி -தேவரீருடைய திருவடிகளை -சகல கரணங்களும் ஓய்ந்து இருக்கும்
மரண அவஸ்தையிலும் சிந்திக்கக் கட வேன் –

ஹே நரக அந்தக – வாராய் நரகநாசனே!, மம – எனக்கு,
தீவி வா –ஸ்வர்க்கத்தி லாவது, புவி வா – பூமியிலாவது, நரகே வா – நரகத்திலாவது,
பரகாமம் – (உனது) இஷ்டப்படி, வாஸ: – வாஸமானது, அஸ்து – நேரட்டும்,
அவதீரிதசாரத அரவிந்தெள – திரஸ்கரிக்கப்பட்ட சரத் காலத் தாமரையை யுடைய
[சரத்காலத் தாமரையிற் காட்டிலும் மேற்பட்ட],
தே சரணெள – தேவரீருடைய திருவடிகளை,
மரணே அபி – (ஸகல கரணங்களும் ஓய்ந்திருக்கும்படியான) மரணகாலத்திலும்,
சிந்தயாமி – சிந்திக்கக் கடவேன்.

பாவி நீ என்று ஓன்று நீ சொல்லாய் பாவியேன் காண வந்தே
நரகமே ஸ்வர்கம் ஆகும் நாமங்கள் உடைய நம்பி.

———————

கிருஷ்ண த்வதீய பாத பங்கஜ பஞ்ஜ ராந்தம்
அத்யைவ மே விசது மாநச ராஜ ஹம்ஸ
பிராண பிரயாண ஸமயே கப வாத பித்தை
கண்டா வரோதநவி தவ் ஸ்மரணம் குதஸ்தே –7

கிருஷ்ண-கண்ண பிரானே
த்வதீய பாத பங்கஜ பஞ்ஜ ராந்தம்-தேவரீருடைய திருவடி தாமரை களாகிய கூட்டினுள்ளே
அத்யைவ மே விசது மாநச ராஜ ஹம்ஸ-என்னுடைய மனசான ராஜ அம்சமானது -இப்பொழுதே நுழையக் கடவது –
அப்போதைக்கு இப்போதே சொல்லி வைத்தேன் போலே
பிராண பிரயாண ஸமயே-உயிர் போகும் போது
கப வாத பித்தை -கோழை வாயு பித்தம் இவற்றால்
கண்டா வரோதநவி தவ் -கண்டமானது அடைபட்ட அளவிலே
ஸ்மரணம் குதஸ்தே ––தேவரீருடைய ஸ்மரணம் எப்படி வரும்

ஸ்திதே மனசி ஸூஸ்வஸ்தே சரீரே சதி யோ நர –தாது சாம்யே ஸ்திதே ஸ்மர்த்தா விஸ்வரூபமஞ்ச மாமஜம்
ததஸ்தம் ம்ரிய மாணாந்து காஷ்ட பாஷாணா ஸந்நிபம் அஹம் ஸ்மராமி மத்பக்தம் நயாமி பரமாம்கதம்

கிருஷ்ண! – கண்ணபிரானே!, ப்ராண ப்ரயாண ஸமயே – உயிர்ப் போகும் போது,
கப வாத பித்தை: – கோழை, வாயு, பித்தம் இவற்றால்,
கண்டாவரோதந விதெள – கண்டமானது அடைபட்டவளவில், தே – தேவரீருடைய, ஸ்மரணம் – நினைவானது,
குத: – எப்படி உண்டாகும்?, (உண்டாகமாட்டாதாகையால்)
மே – என்னுடைய, மாநஸ ராஜ ஹம்ஸ: – மநஸ்ஸாகிற உயர்ந்த ஹம்ஸமானது,
த்வதீய பத பங்கஜ பஞ்சர அந்த: – தேவரீருடையதான திருவடித் தாமரைகளாகிற கூட்டினுள்ளே,
அத்ய ஏவ – இப்பொழுதே, விசது – நுழையக்கடவது.

அப் பொழுதைக்கு இப் பொழுதே சொல்லி வைத்தேன்
ஸ்ரீ ரெங்க ராஜ சரணாம்புக ராஜ ஹம்சம் மா முநிகளும் அருளி இருக்கிறார்

——————

சிந்தயாமி ஹரி மேவ சந்ததம் மந்த மந்த ஹசிதா நநாம் புஜம்
நந்த கோப தநயம் பராத்பரம் நாரதாதி முனி ப்ருந்த வந்திதம் —8-

சிந்தயாமி ஹரி மேவ சந்ததம் -பாபங்களை போக்குமவனாய் இருப்பவனை எப்பொழுதும் சிந்திக்கிறேன் –
த்யானம் செய்யக் கடவேன் -என்றவாறு
துக்க சாகரத்தில் ஆழ்ந்தவர்களும் கண்டு களிக்கும் படி
மந்த மந்த ஹசிதா நநாம் புஜம் –புன் முறுவல் செய்யும் தாமரை மலர் போன்ற திரு முகத்தை யுடையவனாய்
நந்த கோப தநயம் பராத்பரம் -நந்த கோபன் குமாரனான கண்ண பிரானையே
ஸுலப்யம் குணம் விளங்கும் படி கட்டவும் அடிக்கவும் எளியனாம் படி நின்றவனாய் –
பரத்வத்தில் வந்தால் ஓத்தார் மிக்கார் இலையாய மா மாயனுமாய்
நாரதாதி முனி ப்ருந்த வந்திதம் -நாரதர் முதலான முனிவர் கணங்களால் தொழப் பட்டவனாய்

மந்த மந்த ஹஸித ஆநந அம்புஜம் – புன் முறுவல் செய்கின்ற தாமரை மலர் போன்ற திரு முகத்தை யுடையனாய்,
நாரத ஆதி முநிப்ருந்த வந்திதம் – நாரதர் முதலிய முனிவர் கணங்களால் தொழப்பட்டவனாய்,
பராத் பரம் – உயர்ந்தவர்களிற் காட்டிலும் மேலான உயர்ந்தவனாய், ஹரிம் – பாவங்களைப் போக்குமவனாய்,
நந்தகோப தநயம் ஏவ – நந்தகோபன் குமாரனான கண்ணபிரானையே, ஸந்ததம் – எப்போதும், சிந்தயாமி – சிந்திக்கின்றேன்.

கையிலே பிடித்த திவ்ய ஆயுதங்களும் -வைத்த அஞ்சேல் என்ற கையும்–
கவித்த முடியும் -முகமும் முறுவலும் -ஆசன பத்மத்தில் அழுத்திய திரு அடிகளும்
குற்றம் கண்டு பயப் படாமல் இருக்க -காரியம் செய்ய ஸ்வாமித்வம்.
கண்டு பற்றுகைக்கு திருவடிகள்..பொன் அடியே அடைந்து –

—————

கர சரண ஸரோஜே காந்தி மந்நேத்ர மீ நே
ஸ்ரம முஷி புஜ வீசிவ்யாகுலே அகதா மார்க்கே
ஹரி ஸரஸி விகாஹ்யா பீய தேஜோ ஜெலவ்கம்
பவமரூ பரிசின்ன கேத மத்ய த்யாஜாமி–9-

கர சரண ஸரோஜே-திருக் கைகள் திருவடிகள் ஆகிற தாமரைகளை யுடையதாய் -கை வண்ணம் தாமரை அடியும் அஃதே
காந்தி மந்நேத்ர -மீ நே- அழகிய திருக் கண்கள் ஆகிற கயல்களை யுடையதாய்
ஸ்ரம முஷி -விடாயைத் தீர்க்குமதாய்
புஜ வீசிவ்யாகுலே -திருத் தோள்கள் ஆகிற அலைகளால் நிறைந்ததாய்
அகதா மார்க்கே-எம்பெருமான் ஆகிற தடாகத்தில்
விகாஹ்ய -குடைந்து நீராடி -க்ரீஷ்மே சீதமிவஹ் ரதம்–தயரதன் பெற்ற மரகத மணித் தடாகம் –
குளம் ஆழமான வழியை யுடைத்தாய் இருக்குமே -இவனும் கர்ம ஞான பக்தி பிரபத்தி கம்பீரமான உபாயமாக இருப்பான்
குளம் என்றால் தாமரை -மீன்கள் -அலைகள் உண்டே -நீர் நிரம்பி விடாய் தீர்க்கும் படி இருக்குமே
ஆபீய -பானம் பண்ணி
தேஜோ ஜெலவ்கம் -திருமேனியில் விளங்கும் தேஜஸ் ஆகிற ஜல சமூகத்தை
பவமரூ பரிசின்ன -சம்சாரம் ஆகிற பாலை வனத்தில் மிகவும் வருந்திக் கிடந்த அடியேன்
கேத மத்ய த்யாஜாமி -அந்த சம்சார துக்கத்தை இப்போது விடுகிறேன் -தாப த்ரயம் போக்கப் பெற்றேன்

கர சரண ஸரோஜே – திருக் கைகள் திருவடிகளாகிற தாமரைகளை யுடையதாய்,
காந்திமந் நேத்ரமீநே – அழகிய திருக் கண்களாகிற கயல்களை யுடையதாய்,
ச்ரமமுஷி – விடாயைத் தீர்க்குமதாய், புஜவீசிவ்யாகுலே – திருத்தோள்களாகிற அலைகளால் நிறைந்ததாய்,
அகாத மார்க்கே – மிகவும் ஆழமான, ஹரி ஸரஸி – எம்பெருமானாகிற தடாகத்தில், விகாஹ்ய – குடைந்து நீராடி,
தேஜோ ஜல ஓகம் – (திருமேனியில் விளங்குகின்ற) தேஜஸ்ஸாகிற ஜல ஸமூஹத்தை, ஆபீய – பாநம் பண்ணி,
பவ மரு பரிகிந்ந – ஸம்ஸாரமாகிற பாலை நிலத்திலே மிகவும் வருந்திக் கிடந்த அடியேன்,
கேதம் – அந்த ஸாம்ஸாரிக துக்கத்தை, அத்ய – இப்போது, த்யஜாமி – விடுகின்றேன்.

——————–

சரஸிஜ நயனே ச சங்க சக்ரே முரபிதி மா விரமஸ்வ சித்த ரந்தும்
ஸூக தரம பரம் நாஜாது ஜாநே ஹரி சரண ஸ்மரணாம் ருதேன துல்யம்–10-

சரஸிஜ நயனே-தாமரை போன்ற கண்களை யுடையவனாய்
ச சங்க சக்ரே-திரு வாழி திருச் சங்குகளை யுடையவனாய்
முரபிதி -முராசூரனைக் கொன்றவனான கண்ண பிரானிடத்து
மா விரமஸ்வ சித்த ரந்தும் -எனக்கு செல்வமான நெஞ்சே -க்ஷணமும் விட்டு ஒழியாமல் ரமிப்பதற்கு
ஸூக தரம பரம் நாஜாது ஜாநே -மிகவும் ஸூகமாய் இருப்பதான வேறு ஒன்றையும் அறிகின்றிலேன்
ஹரி சரண ஸ்மரணாம் ருதேன துல்யம் -எம்பெருமானது திருவடிகளை சிந்திக்கும் அம்ருதத்தோடு-
வலக்கை ஆழி இடக்கை சங்குடைய தாமரைக்கு கண்ணன் இடம் இடைவிடாத நெஞ்சை செலுத்துவதே
ஸ்வரூப அனுரூபமான இன்பம்

ஸ்வ சித்த – எனக்குச் செல்வமான நெஞ்சே!,
ஸரஸிஜ நயநே – தாமரை போன்ற கண்களையுடையனாய்,
ஸ சங்க சக்ரே – திருவாழி திருச்சங்குகளோடு கூடினவனாய்,
முரபிதி – முராஸுரனைக் கொன்றவனான கண்ணபிரானிடத்து,
ரந்தும் – ரமிப்பதற்கு,
மா விரம – க்ஷணமும் விட்டு ஒழியாதே;
ஹரி சரண ஸ்மரண அம்ருதேந – எம்பெருமானது திருவடிகளைச் சிந்திப்பதாகிற அம்ருதத்தோடு,
துல்யம் – ஒத்ததாய்,
ஸுகதரம் – மிகவும் ஸுக கரமாயிருப்பதான,
அபரம் – வேறொன்றையும்,
ஜாது – ஒருகாலும்,
ந ஜாநே – நான் அறிகின்றிலேன்.

அமுதினை கண்ட கண்கள் மற்று ஒன்றை காணாவே..
நெஞ்சே நல்லை நல்லை.. துஞ்சும் போது விடாய் கொண்டாய்..
சங்கோடு சக்கரம் பங்கய கண்ணன்/ வெள்ளை சுரி சங்கோடு ஆழி ஏந்தி தாமரை கண்ணன்
நம்பியை -அச் செம் பொன்னே திகழும் திரு மூர்த்தியை-உம்பர் வானவர் ஆதி அம் ஜோதியை
எம்பிரானை–என் சொல்லி மறப்பனோ
ஐயப் பாடு அறுத்து தோன்றும் அழகன்- ஞானம் வளர்க்க திரு மேனி..
தன் பால் ஆதாரம் பெருக வைத்த அழகன் ஆசையும் வளர்க்கும்-
வைஷ்ணவ வாமனத்தில் பூர்ணம் லாவண்யம்-திரு குறுங்குடி சௌந்தர்யம்-
திரு நாகை அழகனார்- அச்சோ ஒருவர் அழகிய வா –

————————-

மாபீர் மந்த மநோ விசிந்த்ய பஹுதா யாமீஸ் சிரம் யாதநா-
நாமீ ந ப்ரபவந்தி பாப ரிபவஸ் ஸ்வாமீ நநு ஸ்ரீதர
ஆலஸ்யம் வ்யப நீய பக்தி ஸூலபம் த்யா யஸ்வ நாராயணம்
லோகஸ்ய வ்யாஸ நா பநோத நகரோ தாஸஸ்ய கிம் ந ஷம–11-

மாபீர் மந்த மநோ விசிந்த்ய பஹுதா யாமீஸ் சிரம் யாதநா-ஓ அற்பமான நெஞ்சே யமனுடைய தண்டனைகளை வெகு காலம்
பல சித்தமாக சிந்தித்து உனக்கு பயம் உண்டாக வேண்டா –
தே -உனக்கு / பீ -பயமானது / மா பூத் -உண்டாக வேண்டாம் -என்றவாறு
நாமீ ந ப்ரபவந்தி பாப ரிபவஸ் -இந்த பாபங்கள் ஆகிற சத்ருக்கள் நமக்கு செங்கோல் செலுத்துமவை அல்ல
ஸ்வாமீ நநு ஸ்ரீதர –பின்னையோ என்றால் திருமால் அன்றோ நமக்கு ஸ்வாமியாய் இருக்கிறார்
ஆலஸ்யம் வ்யப நீய -சோம்பலை தொலைத்து
பக்தி ஸூலபம் த்யா யஸ்வ நாராயணம் -பக்திக்கு ஸூலபனான ஸ்ரீ மன் நாராயணனை த்யானம் பண்ணு
பத்துடை அடியவர்க்கு எளியவன் அன்றோ
லோகஸ்ய வ்யாஸநா பநோத நகரோ -உலகத்துக்கு எல்லாம் துன்பத்தைப் போக்குகின்ற அவர்
தாஸஸ்ய கிம் ந ஷம-அவருக்கே அடிமைப் பட்டு இருக்கும் அடியேனுக்கு பாபத்தைப் போக்க மாட்டாதவரோ
அஞ்ஞாத ஸூ ஹ்ருதம் யாதிருச்சிக்க ஸூ ஹ்ருதம் போன்றவற்றை மடி மாங்காய் இட்டு
லோகத்தார் துன்பம் போக்குபவன் அன்றோ
உனக்கே நாம் ஆட் செய்வோம் என்று இசைந்து வந்து அடிமைப் பட்ட நம்மை ரஷியாது ஒழிவானோ

ஹே! மந்தமந:! – ஓ அற்பமான நெஞ்சே!,
யாமீ: – யமனுடையதான,
யாதநா: – தண்டனைகளை,
சிரம் – வெகுகாலம்,
பஹுத: – பலவிதமாக,
விசிந்த்ய – சிந்தித்து (உனக்கு),
பீ: மா(ஸ்து) – பயமுண்டாகவேண்டாம்;
அமீ – இந்த,
பாபரிபவ: – பாவங்களாகிற சத்ருக்கள் நமக்கு,
ந ப்ரபவந்தி – செங்கோல் செலுத்து மவையல்ல;
நநு – பின்னையோ வென்றால்,
ஸ்ரீ தர: – திருமால்,
நம்:ஸ்வாமி – நமக்கு ஸ்வாமி யாயிருக்கிறார்,
ஆலஸ்யம் – சோம்பலை,
வ்யபநீய – தொலைத்து,
பக்தி ஸுலபம் – பக்திக்கு எளியனான,
நாராயணம் – ஸ்ரீமந் நாராயணனை,
த்யாயஸ்வ -த்யாநம் பண்ணு;
லோகஸ்ய – உலகத்துக்கு எல்லாம்,
வ்யஸந அபநோதநகர: – துன்பத்தைப் போக்குகின்ற அவர்,
தாஸஸ்ய – அவர்க்கே அடிமைப்பட்டிருக்கும் எனக்கு,
ந க்ஷம: கிம் – (பாபத்தைப் போக்க) மாட்டாதவரோ?

——————

பவ ஜலதி கதா நாம் த்வந்த்வ வாத ஹதா நாம்
ஸூ தது ஹித்ரு களத்ர த்ராண பாரார்த்திதநாம்
விஷம விஷய தோ யே மஜ்ஜ தாமப் லவா நாம்
பவது சரண மேகோ விஷ்ணு போதோ நராணாம் –12-

பவ ஜலதி கதா நாம்-சம்சார சாகரத்தில் விழுந்தவர்களாயும்
த்வந்த்வ வாத ஹதா நாம் -ஸூக துக்கங்கள் ஆகிற பெரும் காற்றினால் அடி பட்டவர்களாயும்
ஸூ தது ஹித்ரு களத்ர த்ராண பாரார்த்திதநாம் -மகன் மகள் மனைவி இவர்களைக் காப்பாற்றுவதாகிற பாரத்தால் பீடிக்கப் பட்டவர்களாயும்
விஷம விஷய தோயே மஜ்ஜ தாம் -குரூரமான சப்தாதி விஷயங்கள் ஆகி-இப்படிப்பட்ட சம்சார சாகரம் கடக்க ஓடம் அற்றவர்களாயும்
பவது சரண மேகோ விஷ்ணு போதோ நராணாம் –மனிதர்களுக்கு விஷ்ணு ஆகிற ஓடம் ஒன்றே ரக்ஷகமாக ஆகக் கடவது –
துன்பக் கடல் புக்கு வைகுந்தன் என்பதோர் தோணி பெறாது உழல்கின்றேன் –

பவ ஜலதி கதாநாம் – ஸம்ஸார ஸாகரத்தில் வீழ்ந்தவர்களாயும்,
த்வந்த்வ வாத ஆஹதாநாம் – ஸுக துக்கங்களாகிற பெருங்காற்றினால் அடிபட்டவர்களாயும்,
ஸுத-துஹித்ரு களத்ரத்ராண
பார-அர்த்திதாநாம் – மகன், மகள், மனைவி, இவர்களைக் காப்பாற்றுவதாகிற பாரத்தால் பீடிக்கப்பட்டவர்களாயும்,
விஷம விஷய தோயே -க்ரூரமான சப்தாதி விஷயங்களாகிற ஜலத்தில்,
மஜ்ஜதாம் – மூழ்கினவர்களாயும்,
அப்லவாநாம் – (இப்படிப்பட்ட ஸம்ஸார ஸாகரத்தைக் கடத்துதற்கு உரிய) ஓடமற்றவர்களாயுமிருக்கிற,
நாரணாம் – மனிதர்களுக்கு,
விஷ்ணு போத: ஏக: – விஷ்ணுவாகிற ஓடம் ஒன்றே,
சரணம் – ரக்ஷகமாக, பவது – ஆகக்கடவது.

———————–

பவ ஜலதிம் அகாதம் துஸ்தரம் நிஸ்தரேயம்
கதம் அஹம் இதி சேதோ மாஸ் மகா காதரத்வம்
ஸரஸி ஜத்ருசி தேவே தாவகீ பக்தி ரேகா
நரகபிதி நிஷண்ணா தாரவிஷ்யத் யவஸ்யம்–13-

பவ ஜலதிம் அகாதம் துஸ்தரம் நிஸ்தரேயம் -கதம் அஹம் இதி சேதோ–வாராய் மனமே -ஆழமானதும் ஸூய யத்னத்தால்
தாண்ட முடியாதுமான சம்சார சாகரத்தை நான் எப்படி தாண்டுவேன் –
மாஸ் மகா காதரத்வம் -என்று அஞ்சி இருக்கும் நிலையை அடையாமல் -அஞ்சாதே இருக்க -என்றபடி
ஸரஸி ஜத்ருசி தேவே தாவகீ -நிஷண்ணா–பக்தி ரேகா -தாமரை போன்ற திருக் கண்களை யுடைய எம்பெருமான்
இடத்தில் பற்றி இருக்கும் உன்னுடைய பக்தி ஒன்றே
நரகபிதி தாரவிஷ்யத் யவஸ்யம்-நரகாசூரனைக் கொன்றவன் அன்றோ -நிஸ் சம்சயமாக தாண்டி வைக்கும்-

ஹே சேத:! – வாராய் மனமே!,
அகாதம் – ஆழமானதும்,
துஸ்தரம் – தன் முயற்சியால் தாண்டக் கூடாததுமான,
பவ ஜலதிம் – ஸம்ஸார ஸாகரத்தை,
அஹம் – நான்,
கதம் – எப்படி,
நிஸ்தரேயம் – தாண்டுவேன்?,
இதி – என்று,
காதரத்வம் – அஞ்சியிருப்பதை,
மாஸ்ம கா: – அடையாதே; [அஞ்சாதே என்றபடி],
நரகபிதி – நரகாஸுரனைக் கொன்றவனும்,
ஸரஸிஜத்ருசி – தாமரை போன்ற திருக் கண்களை யுடையனுமான,
தேவே – எம்பெருமானிடத்தில்,
நிஷண்ணா – பற்றியிருக்கிற,
தாவகீ – உன்னுடையதான,
பக்தி: ஏகா – பக்தியொன்றே,
அவஶ்யம் – நிஸ் ஸம்சயமாக,
தாரயிஷ்யதி – தாண்டி வைக்கும்.

———————–

த்ருஷ்ணா தோயே மதன பவ நோத்தூத மோஹோர் மிமாலே
தாரா வர்த்தே தனய ஸஹஜ க்ராஹ சங்கா குலே ச
ஸம்சாராக்யே மஹதி ஜலதவ் மஜ்ஜதாம் நஸ்திரிதாமன்
பாதாம் போஜே வரத பவதோ பக்தி நாவம் ப்ரயச்ச–14-

த்ருஷ்ணா தோயே-ஆசை யாகிற ஜலத்தை யுடையதும்
மதன பவ நோத்தூத மோஹோர் மிமாலே-மதன பவன உத்தூத மோஹ ஊர்மி மாலே -மன்மதன் ஆகிற வாயுவினால்
கிளப்பட்ட மோஹம் ஆகிற அலைகளின் வரிசைகளை யுடையதும்
தாரா வர்த்தே –தார ஆவர்த்தே -மனைவி ஆகிற சுழிகளை யுடையதும்
தனய ஸஹஜ க்ராஹ சங்கா குலே ச -மக்கள் -உடன் பிறந்தவர்கள் -இவர்கள் ஆகிற
முதலைக் கூட்டங்களால் கலங்கியும் இருக்கிற
ஸம்சாராக்யே மஹதி ஜலதபெரிய கடலில்
மஜ்ஜதாம் நஸ்–மூழ்கிக் கிடக்கிற அடியோங்களுக்கு
த்ரி தாமன் –மூன்று இடங்களில் எழுந்து அருளி இருக்கிற
விண் மீது இருப்பாய் மலை மேல் நிற்பாய் கடல் சேர்ப்பாய் -அம்பஸ்ய பாரே புவனஸ்ய மத்யே நாகஸ்ய ப்ருஷ்டே –
சர்வ வியாபகத்துவத்துக்கும் உப லக்ஷணம் –
வரத -ஹே வரதனே-வாராய்
பாதாம் போஜே– பவதோ பக்தி நாவம் ப்ரயச்ச -தேவரீருடைய திருவடித் தாமரையில் பக்தியாகிற ஓடத்தை தந்து அருள வேணும்
காம்பினார் திருவேங்கடப் பொருப்ப நின் காதலை அருள் எனக்கு -கலியன் –
பக்தி -பல பக்தியை சொன்னவாறு -சாதனா பக்தியை அன்று-

த்ரிதாமந் – மூன்று இடங்களில் எழுந்தருளியிருக்கிற,
ஹே வரத! – வாராய் வரதனே!,
த்ருஷ்ணா தோயே – ஆசையாகிற ஜலத்தை யுடையதும்,
மதந பவந உத்தூத மோஹ ஊர்மி மாலே – மந்மதனாகிற வாயுவினால் கிளப்பப்பட்ட மோஹமாகிற
அலைகளின் வரிசைகளை யுடையதும்,
தார ஆவர்த்தே – மனைவி யாகிற சுழிகளை யுடையதும்,
தநய ஸஹ ஜக்ராஹ ஸங்க ஆகுலே ச – மக்கள் உடன் பிறந்தவர்கள் இவர்களாகிற
முதலைக் கூட்டங்களால் கலங்கியுமிருக்கிற,
ஸம்ஸார ஆக்க்யே – ஸம்ஸார மென்கிற பெயரை யுடைய,
மஹதி – பெரிதான,
ஜலதெள – கடலில்,
மஜ்ஜதாம் ந: – மூழ்கிக் கிடக்கிற அடியோங்களுக்கு,
பவத: – தேவரீருடைய,
பாத அம்போஜே – திருவடித் தாமரையில்,
பக்திநாவம் – பக்தியாகிற ஓடத்தை,
ப்ரயச்ச – தந்தருள வேணும்.

———————-

மாத்ராக்ஷம் ஷீண புண்யான் ஷணமபி பவதோ பக்தி ஹீநாத் பதாப்ஜே
மாஸ் ரவ்ஷம் ஸ்ராவ்ய பந்தம் தவ சரிதம் அபாஸ்ய அந்யதாக்யா நஜாதம்
மாஸ் மார்ஷம் மாதவ த்வாமபி புவனபதே சேதஸா அபஹ் நுவாநான்
மா பூவம் த்வத் ச பர்யா வ்யதிகர ரஹிதோ ஜென்ம ஜன்மாந்தரேபி–15-

மாத்ராக்ஷம் -நான் கண்ணுற்று நோக்க மாட்டேன்
ஷீண புண்யான்-துர்பாக்கிய சாலிகளை
ஷணமபி பவதோ பக்தி ஹீநாத்- பதாப்ஜே-தேவரீருடைய திருவடித் தாமரைகளில் க்ஷண காலமும் பக்தி அற்றவர்களாக
மாஸ் ரவ்ஷம்-காத்து கொடுத்து கேட்க மாட்டேன்
ஸ்ராவ்ய பந்தம் -செவிக்கு இனிய சேர்க்கையை யுடைய
தவ சரிதம் அபாஸ்ய அந்யதாக்யா நஜாதம் -தேவரீருடைய சரிதங்களை விட்டு வேறான பிரபந்தங்களை –
சேதஸா மாஸ் மார்ஷம்–மனசால் -நினைக்க மாட்டேன்
மாதவ த்வாமபி -திருமாலே தேவரீரை
புவனபதே -வாராய் லோகாதிபதயே
அபஹ் நுவாநான் -திரஸ்கரிக்குமவர்களை
மா பூவம் த்வத் ச பர்யா வ்யதிகர ரஹிதோ ஜென்ம ஜன்மாந்தரேபி -ஜென்ம ஜன்மாந்தரங்களிலும் தேவரீருடைய
திருவாராதனம் இல்லாதவனாக இருக்க மாட்டேன் –
தம்முடைய திருட அத்யவசாயத்தை அருளிச் செய்கிறார்

குணம் இல்லை விக்ரஹம் இல்லை விபூதி இல்லை என்பார்களான பாவிகளை நெஞ்சாலும் நினைக்க மாட்டேன்
கண்ணாளன் கண்ண மங்கை நகராளன் கழல் சூடி அவனை உள்ளத்து எண்ணாத மானுடத்தை எண்ணாத போது எல்லாம் இனியவாறே
இவ்வாறு இருக்குமாறு அருள வேணும் என்று பிரார்த்திக்கிறார் –

ஹே புவந பதே! – வாராய் லோகாதிபதியே!,
பவத: – தேவரீருடைய,
பத அப்ஜே – திருவடித் தாமரையில்,
க்ஷணம் அபி – க்ஷண காலமும்,
பக்தி ஹீநாந் – பக்தியற்றவர் களான,
க்ஷீண புண்யாந் – தெளர்ப்பாக்யசாலிகளை,
மாத்ராக்ஷம் – நான் கண்ணுற்று நோக்க மாட்டேன்;
ச்ராவ்ய பந்தம் – செவிக்கு இனிய சேர்க்கையை யுடைய,
தவ சரிதம் – தேவரீருடைய சரித்திரத்தை,
அபாஸ்ய – விட்டு,
அந்யத் – வேறான,
ஆக்க்யாந ஜாதம் – பிரபந்தங்களை,
மாச்ரெளஷம் – காது கொடுத்துக் கேட்க மாட்டேன்;
ஹே மாதவ – திருமாலே!,
த்வாம் – தேவரீரை,
அபஹ்நுவாநாந் – திரஸ்கரிக்குமவர்களை,
சேதஸா – நெஞ்சால்,
மாஸ்மார்ஷம் – நினைக்க மாட்டேன்,
ஜன்ம ஜன்மாந்தரே அபி – ஜன்ம ஜன்மாந்தரங்களிலும்,
த்வத் ஸபர்யாவ்யதிகா ரஹித: – தேவரீருடைய திருவாராதன மில்லாதவனாக,
மாபூவம் – இருக்கமாட்டேன்.

———————–

ஜிஹ்வே ! கீர்த்ய கேசவம் முரரிபும்-சேதோ பஜ ஸ்ரீ தரம்-
பாணித்வந்தவ ! சமர்ச்ச யச்யுதகதா-ச்ரோத்ரத்வயா !த்வம் ஸ்ருனு !
க்ருஷ்ணம் லோகைய லோசனத்வய !ஹரேர்க்ச்சாங்க்ரி யுக்மாலயம்
ஜிக்ர க்ராண !முகுந்த பாத துலசீம்-மூர்த்தன் நமா தோஷஜம்–.16th-உயிரான ஸ்லோகம்-

ஜிஹ்வே ! கீர்த்ய கேசவம் -வாராய் நாக்கே -கேசியைக் கொன்ற கண்ணபிரானையே ஸ்தோத்ரம் செய் –
ப்ரஹ்ம ருத்ரர்களுக்கும் ஈசன் -கேச பாசம் யுடையவன் –
முரரிபும்-சேதோ பஜ -வாராய் நெஞ்சே முராசூரனைக் கொன்ற கண்ணபிரானையே பற்று
ஸ்ரீ தரம்-பாணித்வந்தவ ! -சமர்ச்ச -இரண்டு கைகளாலும் திருமாலையே ஆராதியுங்கோள்
யச்யுதகதா-ச்ரோத்ரத்வயா !த்வம் ஸ்ருனு !-இரண்டு காதுகள் -அடியாரைக் கை விடாத எம்பெருமான் சரித்ரங்களையே கேளுங்கோள்
க்ருஷ்ணம் லோகைய லோசனத்வய -இரண்டு கண்களே கண்ணபிரானையே சேவியுங்கோள்
ஹரேர்க்ச்சாங்க்ரி யுக்மாலயம் –இரண்டு கால்களே எம்பெருமானுடைய சந்நிதியையே குறித்து போங்கோள் –
ஜிக்ர க்ராண !முகுந்த பாத துலசீம்-வாராய் மூக்கே ஸ்ரீ கிருஷ்ணன் திருவடித் தாமரைகளில் சாத்தின திருத் துழாய் கந்தத்தையே அனுபவி
மூர்த்தன் நம அதோஷஜம்-வாராய் தலையே எம்பெருமானையே வணங்கு-

ஹே ஜிஹ்வே! – வாராய் நாக்கே!,
கேசவம் – கேசியைக் கொன்ற கண்ணபிரானை,
கீர்த்தய – ஸ்தோத்ரம் செய்;
ஹே சேத: – வாராய் நெஞ்சே!,
முரரிபும் – முராஸுரனைக் கொன்ற கண்ணபிரானை,
பஜ – பற்று;
பாணித்வந்த்வ – இரண்டு கைகளே!,
ஸ்ரீதரம் – திருமாலை,
ஸமர்ச்சய – ஆராதியுங்கள்;
ச்ரோத்ரத்வய! – இரண்டு காதுகளே!,
அச்யுத கதா: – அடியாரைக் கைவிடாதவனான எம்பெருமானுடைய சரித்ரங்களை,
த்வம்ச்ருணு – கேளுங்கள்;
லோசநத்வய – இரண்டு கண்களே!,
க்ருஷ்ணம் – கண்ணபிரானை,
லோகய – ஸேவியுங்கள்;
அங்க்ரியுக்ம – இரண்டு கால்களே!,
ஹரே: – எம்பெருமானுடைய,
ஆலயம் – ஸந்நிதியைக் குறித்து,
கச்ச – போங்கள்;
ஹே க்ராண! – வாராய் மூக்கே!,
முகுந்த பாத துளஸீம் – ஸ்ரீக்ருஷ்ணனது திருவடிகளிற் சாத்திய திருத்துழாயை,
ஜிக்ர – அநுபவி;
ஹே மூர்த்தந்! – வாராய் தலையே!,
அதோக்ஷஜம் – எம்பெருமானை,
நம – வணங்கு.

கேளா செவிகள் செவி அல்ல/உள்ளாதார்உள்ளத்தை உள்ளமாக கொள்ளோமே
வாசா யதீந்திர மனசா வபுஷா கூராதி நாதா -மா முனிகள்
சிந்தையாலும் சொல்லாலும் செயலாலும் தேவ பிரானையே
வாயினால் பாடி மனத்தினால் சிந்திக்க தூ மலர் தூவி தொழுது -ஆண்டாள்.

———————————–

ஹே லோகாஸ் ஸ்ருணத ப்ரஸூதி மரண வ்யாதேஸ் சிகித்சாமி மாம்
யோகஜ் ஞாஸ் சமுதா ஹரந்தி முநயோ யாம் யாஜ்ஞவல்க்யாதய
அந்தரஜ்யோதி ரமேய மேகமம்ருதம் க்ருஷ்ணாக்ய மாபீ யதாம்
தத் பீதம் பரம ஒளஷதம் வித நுதே நிர்வாண மாத் யந்திகம் -17-

ஹே லோகாஸ் ப்ரஸூதி மரண வ்யாதேஸ் சிகித்சாமி மாம் -ஜனங்களே -பிறப்பி இறப்பு யாகிய வியாதிக்கு பரிஹாரமாக-
யோகஜ் ஞாஸ் சமுதா ஹரந்தி முநயோ யாஜ்ஞவல்க்யாதய-யோக முறையை அறிந்தவர்களான
யாஜ்ஞ வல்க்யர் முதலிய ரிஷிகள் யாதொன்றை கூறுகின்றார்களோ
இமாம் ஸ்ருணத -இந்த சிகித்சய்யை கேளுங்கோள்
அந்தரஜ்யோதி ரமேய மேகமம்ருதம் க்ருஷ்ணாக்ய மாபீ யதாம் -உள்ளே தேஜோ ராசியையும் -அளவிட முடியாததையும்
ஸ்ரீ கிருஷ்ணன் என்னும் பெயரை யுடையதாயும் உள்ள
அம்ருதம் ஏகம் ஆபீயதாம் -அம்ருதம் ஒன்றே உங்களால் பானம் பண்ணப் படட்டும்
தத் பீதம் பரம ஒளஷதம் வித நுதே நிர்வாண மாத் யந்திகம் – இந்த சிறந்த மருந்தானது பானம் பண்ணப் பட்டதாய்க் கொண்டு
சாஸ்வதமான ஸுக்யத்தை உண்டு பண்ணுகிறது –இதுவே பரம போக்யமான ஒளஷதம்
சோதி வெள்ளத்தின் உள்ளே எழுவதொரு -தேஜஸ் புஞ்சமாய் இருக்கும்
எழுமைப் பிறப்புக்கும் சேமம் இந் நோய்க்கும் ஈதே மருந்து ஊழ்மையில் கண்ணபிரான் கழல் வாழ்த்துமின் உன்னித்தே -திருவாய்மொழி –

ஹே லோகா: – ஜநங்களே!,
யோகஜ்ஞா: – யோக முறையை அறிந்தவர்களான,
யாஜ்ஞவல்க்ய ஆதய: – யாஜ்ஞவல்க்யர் முதலிய,
முநய – ரிஷிகள்,
யாம் – யாதொன்றை,
ப்ரஸூதி மரண வ்யாதே: – பிறப்பு இறப்பாகிற வ்யாதிக்கு,
சிகித்ஸாம் – பரிஹாரமாக,
ஸமுதாஹரந்தி – கூறுகின்றார்களோ,
இமாம் – இந்த சிகித்ஸையை,
ச்ருணுத – கேளுங்கள்;
அந்தர்ஜ்யோதி: – உள்ளே தேஜோ ராசியாயும்,
அமேயம் – அளவிடக் கூடாததாயும்,
க்ருஷ்ண ஆக்க்யம் – ஸ்ரீக்ருஷ்ணனென்னும் பெயரை யுடையதாயுமுள்ள,
அம்ருதம் ஏகம் – அம்ருதமொன்றே,
ஆரியதாம் – (உங்களால்) பாநம் பண்ணப்படட்டும்;
தத் பரம ஒளஷதம் – அந்தச் சிறந்த மருந்தானது,
பீதம் ஸத் – பானம் பண்ணப் பட்டதாய்க் கொண்டு,
ஆத்யந்திகம் – சாச்வதமான,
நிர்வாணம் – ஸெளக்கியத்தை,
விதநுதே – உண்டு பண்ணுகிறது.

மருத்துவனாய் நின்ற மா மணி வண்ணன்.
ஆரா அமுதே ..சீரார் திரு குடந்தை. தீரா வினைகள் தீர்ப்பான்..
கலியும் கெடும் கண்டு கொண்மின்..
விசாதி பகை .நின்று இவ் உலகில் கடிவான் ..
பிணி பசி மூப்பு துன்பம் ..களிப்பும் கவரும் அற்று பிணி மூப்பு இல்லா பிறப்பு அற்று

——————-

ஹே மர்த்த்யா பரமம் ஹிதம் ஸ்ருணத வோ வஹ்யாமி சங்ஷேபதே
சம்சார ஆர்ணவ மாபதூர்மி பஹூளம் சம்யக் ப்ரவிஸ்ய ஸ்திதா
நாநாஜ்ஞான மபாஸ்ய சேதஸி நமோ நாராயணா யேத்யமும்
மந்த்ரம் ச பிரணவம் ப்ரணாம ஸஹிதம் ப்ரா வர்த்தயத்தவம் முஹு –18-

ஹே மர்த்த்யா-வாரீர் மநுஷ்யர்களே
பரமம் ஹிதம் ஸ்ருணத வோ வஹ்யாமி சங்ஷேபதே -உங்களுக்கு மேலான ஹிதத்தை சுருக்கமாக இதோ சொல்லப் போகிறேன் கேளுங்கோள்
சம்சார ஆர்ணவ மாபதூர்மி பஹூளம் -ஆபத்துக்கள் ஆகிற அலைகளால் மிகுந்த சம்சாரம் ஆகிற கடலினுள்ளே
சம்யக் ப்ரவிஸ்ய ஸ்திதா -ஆழ அழுந்திக் கிடக்கிற
நாநாஜ்ஞான மபாஸ்ய-பல வித அஞ்ஞானங்களை விலக்கி
சேதஸி நமோ நாராயணா யேத்யமும்-மந்த்ரம் ச பிரணவம்-ஓங்காரத்தோடே கூடிய நமோ நாராயணாய என்கிற இது திரு மந்த்ரத்தை மனசிலே
ப்ரணாம ஸஹிதம் ப்ரா வர்த்தயத்தவம் முஹு –– அடிக்கடி வணக்கத்தோடு கூடிக் கொண்டு இருக்கும் படி அநுஸந்தியுங்கோள் –
அல்ப அஸ்திர விஷய போகங்களை விருப்புவதை விட்டு அஞ்ஞானத்தை தொலைத்து -எப்பொழுதும்
திரு அஷ்டாக்ஷரத்தை அனுசந்திப்பதே ஹிதம் -இத்தையே வ்ரதமாகக் கொள்ள வேணும் –

ஆபத் ஊர்மி பஹுளம் – ஆபத்துக்களாகிற அலைகளால் மிகுந்த,
ஸம்ஸார அர்ணவம் – ஸம்ஸாரமாகிற கடலினுள்ளே,
ஸம்யக் ப்ரவிஶ்ய ஸ்திதா: – ஆழ அழுந்திக் கிடக்கிற,
ஹே மர்த்யா: – வாரீர் மனிதர்களே!,
வ: பரமம் ஹிதம் – உங்களுக்கு மேலான ஹிதத்தை,
ஸம்க்ஷேபத: – சுருக்கமாக,
வக்ஷ்யாமி – (இதோ) சொல்லப்போகிறேன்;
ச்ருணுத – கேளுங்கள்;
(என்னவென்றால்),
நாநா அஜ்ஞாநம் – பலவிதமான அஜ்ஞானங்களை,
அபாஸ்ய – விலக்கி;
ஸ ப்ரணவம் – ஓங்காரத்தோடு கூடிய,
“நமோ நாராயணாய” இதி அமும்மந்த்ரம் – ‘நமோ நாராயணாய’ என்கிற இத் திரு மந்த்ரத்தை,
சேதஸி – மனதில்,
முஹு: – அடிக்கடி,
ப்ரணாம ஸஹிதம் (யதாததா) – வணக்கத்தோடு கூடிக் கொண்டிருக்கும் படி,
ப்ராவர்த்தயத்வம் – அநுஸந்தியுங்கள்.

———————-

ப்ருத்வீ ரேணு ரணு பயாம்சி கணிகா பல்குஸ் புலிங்கோ அனல
தேஜோ நிஸ் வசனம் மருத் தநுதரம் ரந்தரம் ஸூ ஸூஷ்மம் நப
ஷூத்ரா ருத்ர பிதா மஹ ப்ரப்ருத்ய -கீடாஸ் சமஸ்தாஸ் ஸூ ரா
த்ருஷ்டே யத்ர ச தாவகோ விஜயதே பூமா வதூதாவதி–19

ப்ருத்வீ ரேணு ரணு -பூமியானது ஸூஷ்மமான துகளாகவும்
பயாம்சி கணிகா பல்குஸ் -ஜல தத்வமானது சிறிய திவலைகளாகவும்
புலிங்கோ அனல தேஜோ -தேஜஸ் தத்வமானது அதி ஷூத்தரமான நெருப்புப் பொறியாகவும்
நிஸ் வசனம் மருத் தநுதரம்-வாயு தத்வம் மிக அற்பமான மூச்சுக்கு காற்றாகவும்
ரந்தரம் ஸூ ஸூஷ்மம் நப -ஆகாச தத்வம் ஸூஷ்மமான த்வாரமாகவும்
ஷூத்ரா ருத்ர பிதா மஹ ப்ரப்ருத்ய -கீடாஸ் சமஸ்தாஸ் ஸூ ரா -சிவன் ப்ரஹ்மாதி தேவர்கள் எல்லாம் அற்பமான புழுக்களாகவும்
த்ருஷ்டே யத்ர ச தாவகோ விஜயதே பூமா வதூதாவதி -அப்படிப் பட்ட எல்லை இல்லாத யாதொரு உம்முடைய மஹிமையானது
மேன்மையுற்று விளங்குகிறது – ஆலஷ்யந்தே -தோன்றுகிறது என்ற கிரியை வருவித்து கொள்ள வேண்டும் –

யத்ர – யாதொரு மஹிமையானது,
த்ருஷ்டே ஸதி – காணப்பட்டவளவில்,
ப்ருத்வீ – பூமியானது,
அணு: -ஸ்வல்பமான,
ரேணு: – துகளாகவும்,
பயாம்ஸி – ஜல தத்வமானது,
பல்கு: கணிகா – சிறு திவலையாகவும்,
தேஜ: – தேஜஸ்த்தவமானது,
லகு: – அதிக்ஷூத்ரமான,
ஸ்புலிங்க: – நெருப்புப் பொறியாகவும்,
மருத் – வாயு தத்வமானது,
தநுதரம் – மிகவும் அற்பமான,
நிஶ்வஸநம் – மூச்சுக் காற்றாகவும்,
நப: – ஆகாச தத்துவமானது,
ஸு ஸூக்ஷ்மம் – மிகவும் ஸூக்ஷ்மமான,
ரந்த்ரம் – த்வாரகமாகவும்,
ருத்ர பீதாமஹ ப்ரப்ருதய: – சிவன், பிரமன் முதலிய,
ஸமஸ்தா: ஸுரா: – தேவர்களெல்லோரும்,
க்ஷுத்ரா: கீடா: – அற்பமான புழுக்களாகவும் (ஆலக்ஷ்யந்தே) – தோன்றுகிறார்களோ,
ஸ: – அப்படிப்பட்டதாய்,
அவதூத அவதி: – எல்லையில்லாத தாய்,
தாவக: – உம்முடையதான,
பூமா – மஹிமையானது,
விஜயதே – மேன்மையுற்று விளங்குகின்றது.

நளிர் மதி சடையனும்… யாவரும் அகப்பட ..ஓர் ஆல் இலை மாயனை ..ஒரு பொருள் புறப்பாடு இன்றி முழுவதும் அகப்பட கரந்து

———————-

பத்தேன அஞ்சலினா நதேன சிரஸா-காத்ரைஸ் : சரோமோத்கமை :
கண்டே ந ச்வரகத் கதேந நயனே நோத் கீர்ண பாஷ்பாம்புனா!
நித்யம் தவச் சரணார விந்த யுகள த்யானாம்ருதா ச்வாதினாம்
அஸ்மாகம் சரசீருஹாஷா !சத்தம் சம்பத் யதாம் ஜீவிதம்…-20

பத்தேன அஞ்சலினா-சேர்க்கப் பட்ட அஞ்சலி முத்ரையாலும்
நதேன சிரஸா-வணங்கிய தலையினாலும்
காத்ரைஸ் : சரோமோத்கமை :-மயிர்க் கூச்சு எறிதலோடு கூடிய அவயவங்களினாலும்
கண்டே ந ச்வரகத் கதேந-தழு தழுத்த ஸ்வரத்தோடு கூடிய கண்டத்தினாலும்
நயனே நோத் கீர்ண பாஷ்பாம்புனா!-சொரிகிற கண்ணீரை யுடைய நேத்ரத்தினாலும்
நித்யம் தவச் சரணார விந்த யுகள த்யானாம்ருதா ச்வாதினாம்-எப்பொழுதும் தேவரீருடைய இரண்டு திருவடித் தாமரைகள் ஆகிற
சிந்திப்பதாகிற அமுதத்தை அருந்துகின்ற
சரசீருஹாஷா !–தாமரை போன்ற திருக் கண்களை யுடைய பெருமானே
அஸ்மாகம் சத்தம் சம்பத் யதாம் ஜீவிதம்.–அடியோங்களுக்கு ஜீவனமானது எக்காலத்திலும் குறையற்று இருக்க வேண்டும் –

உண்ணா நாள் பசி யாவது ஓன்று இல்லை -இச் சிந்தனையே அம்ருத பானம்
காலும் எழா கண்ண நீரும் நில்லா உடல் சோர்ந்து நடுங்கி குரல் மேலும் எழா மயிர் கூச்சம் அற என தோள்களும் வீழ் ஒழியா
தாழ்ச்சி மாற்று எங்கும் தவிர்ந்து நின் தாளிணைக் கீழ் வாழ்ச்சி யான் சேரும் வகை அருளாய் வந்தே –என்று வேண்டினார் நம்மாழ்வாரும் –
இரும்பு போல் வலிய நெஞ்சம் உருகும் வண்ணம் அவன் நீர்மை
அனைத்தும் சோறும் நீரும் வெற்றிலையே -என்றே என்றே கண்ணில் நீர் மல்கி ..தன் ஜீவனத்தை தேடி போனால்..
என் ஜீவனத்தை எடுத்து கொண்டு போக வேண்டுமோ ..அவளை பார்த்து கொண்டு இருப்பதே இவள் ஜீவனம்..
பெருமாளே என்று இருக்கும் அடியார் உடன் இருப்பதே ஜீவனம் என்று இருக்கும் ஸ்ரீ வைஷ்ணவர் ஏற்றம் அறிந்து
உகந்து இருக்கையே ஸ்ரீ வைஷ்ணவ லக்ஷணம்

ஹே ஸரஸீருஹாக்ஷ! – தாமரை போன்ற திருக் கண்களையுடைய பெருமானே!,
பத்தோ – சேர்க்கப்பட்ட,
அஞ்சலிநா – அஞ்சலி முத்ரையாலும்,
நதேந – வணங்கிய,
சிரஸா – தலையினாலும்,
ஸரோம உத்கமை: – மயிற்கூச்செறிதலோடு கூடிய,
காத்ரை: – அவயவங்களினாலும்,
ஸ்வரகத்கதேந – தழுதழுத்த ஸ்வரத்தோடு கூடிய,
கண்டேந – கண்டத்தினாலும்,
உத்கீர்ண பாஷ்ப அம்புநா – சொரிகிற கண்ணீரையுடைய,
நயநேந – நேத்திரத்தினாலும்,
நித்யம் – எப்போதும்,
த்வத் சரண அரவிந்த யுகளத்யாந அம்ருத ஆஸ்வாதிநாம் – தேவரீருடைய இரண்டு திருவடித் தாமரைகளைச்
சிந்திப்பதாகிற அமுதத்தை அருந்துகின்ற,
அஸ்மாகம் – அடியோங்களுக்கு,
ஜீவிதம் – ஜீவநமானது,
ஸததம் – எக்காலத்திலும்,
ஸம்பத்யதாம் – குறையற்றிருக்க வேண்டும்.

———————-

ஹே கோபாலக! ஹே க்ருபா ஜலநிதே! ஹே சிந்து கன்யாபதே!
ஹே கம்சாந்தக! ஹே கஜேந்திர கருணா!பாரீண ஹே மாதவ!
ஹே ராமானுஜ! ஹே ஜகத்ரய குரோ!ஹே புண்டரீகாஷா! மாம்
ஹே கோபி ஜன நாத! பாலய பரம் ஜானாமி நத்வாம் வினா–21..

ஹே கோபாலக! -ஆ நிரை காத்து அருளினவனே -குன்று எடுத்து கோ நிரை காத்து அருளினவனே –
ஹே க்ருபா ஜலநிதே!-கருணைக் கடலே
ஹே சிந்து கன்யாபதே!-திருப் பாற் கடல் திரு மகளான பெரிய பிராட்டியாருக்கு கணவனே
ஹே கம்சாந்தக! -கொடிய கம்சனை ஒழித்தவனே
ஹே கஜேந்திர கருணா!பாரீண -ஸ்ரீ கஜேந்திர ஆழ்வானுக்கு அருளை பொழிய வல்லவனே
ஹே மாதவ!-ஸ்ரீ யபதியே –ஹே சிந்து கன்யாபதே-போலே -திரு நாம சங்கீர்த்தனம் விவஷிதம் என்பதால் புனர் யுக்தி தோஷம் வாராது –
ஹே ராமானுஜா– தம்பி மூத்த பிரானுக்கு பின் பிறந்தவனே
ஹே ஜகத்ரய குரோ! -மூ உலகுகட்க்கும்-அனைத்து -உலகுகட்க்கும் – தலைவனே
ஹே புண்டரீகாஷா! -தாமரைக் கண்ணனே
ஹே கோபி ஜன நாத! -இடைச்சிகளுக்கு இறைவனே
மாம்- பாலய பரம் ஜானாமி நத்வாம் வினா–அடியேனை ரஷித்து அருள வேணும் -.
உன்னைத் தவிர வேறு ஒரு புகல் அறிகிறேன் அல்லேன்

ஹே கோபாலக! – ஆநிரை காத்தவனே!,
ஹே க்ருபாஜலநிதே! – கருணைக்கடலே!,
ஹே ஸிந்து கந்யாபதே! – பாற்கடல் மகளான பிராட்டியின் கணவனே!,
ஹே கம்ஸ அந்தக! – கம்ஸனை யொழித்தவனே!,
ஹே கஜேந்த்ர கருணாபாரீண! – கஜேந்திராழ்வானுக்கு அருள் புரிய வல்லவனே!,
ஹே மாதவ! – மாதவனே!,
ஹே ராமாநுஜ – பலராமானுக்குப் பின் பிறந்தவனே!,
ஹே ஜகத்த்ரயகுரோ! – மூவுலகங்கட்கும் தலைவனே!,
ஹே புண்டரீகாக்ஷ! – தாமரைக் கண்ணனே!,
ஹே கோபீஜந நாத! – இடைச்சியர்க்கு இறைவனே!,
மாம் – அடியேனை,
பாலய – ரக்ஷித்தருள வேணும்;
த்வாம் விநா – உன்னைத் தவிர,
பரம் – வேறொரு புகலை,
ந ஜாநாமி – அறிகிறேனில்லை.

அதிகாரம் ஆசை மட்டுமே.. ஆசை உடையோர்க்கு எல்லாம்.. பேசி வரம்பு அறுத்தார்..
அதிகாரம் வேறு ஒன்றும் இல்லாதது தான் அதிகாரம்..
ஹே ராமானுஜ !ஜகதாச்சர்யாராய் சகாயமாய் கொண்டாயே -பல ராமனுக்கு தம்பி ஆதிசேஷனே சகாயம்..
அண்ணல் இராமனுசன் வந்து தோன்றிய அப் பொழுதே நாரணர்க்கு ஆனார்களே..
அநந்ய கதித்வம் வெளி இட்ட ஸ்லோகம்.. பதிகம் முழுவதும் பெருமாள் திரு மொழியில் இவரே அருளியது போல
தரு துயரம்-குழவி அது போல் இருந்தேனே ..
கொண்டானை அல்லால் அறியா குல மகள் போல்..
மருத்துவன் பால் மாளாத காதல் நோயாளன் போல்.

——————–

இவனை மணி மந்த்ரம் மருந்து மூன்றும் மூன்று ஸ்லோகங்களால் அருளுகிறார்-

பக்த அபாய புஜங்க கருட மணி:-த்ரை லோக்ய ரஷா மணி:
கோபீ லோசன சாதக அம்புத மணி:சௌந்தர்யம் முத்ரா மணி:
ய: காந்தா மணி ருக்மிணீ கனகுச-துவந்த்வைக பூஷாமணி:
ஸ்ரேயோ தேவசிகா மணிர் திசதுனோ-கோபால சூடாமணி–22-

பக்த அபாய புஜங்க கருட மணி:-அடியார்களின் ஆபத்துக்கள் ஆகிற சர்ப்பத்துக்கு கருட மணியாயும்
த்ரை லோக்ய ரஷா மணி:-மூ உலகுகட்க்கும் -எல்லா உலகுகட்க்கும் ரக்ஷனார்த்த மணியாயும்
கோபீ லோசன சாதக அம்புத மணி:-ஆய்ச்சிகளின் கண்கள் ஆகிற சாதகப் பறவைகளுக்கு மேக ரத்னமாயும்
சௌந்தர்யம் முத்ரா மணி:-ஸுந்தர்யத்துக்கு முத்ரா மணியாயும் -அழகு எல்லாம் திரட்டி முத்திரை இட்ட பரம ஸூந்தரானாயும்
ய: காந்தா மணி ருக்மிணீ கனகுச-துவந்த்வைக பூஷாமணி:-மாதர்க்களுக்குள் சிறந்த ஸ்ரீ ருக்மிணிப் பிராட்டியின் நெருங்கிய
இரண்டு ஸ்தனங்களுக்கு முக்கியமான அலங்கார மணியாயும்
தேவசிகா மணிர்-தேவர்களுக்கு ஸீரோ பூஷணமான மணியாயும்
கோபால சூடாமணி-இடக்கை வலக்கை அறியாத -இடையர்களுக்குத் தலைவராயும் இருப்பவர்
ஸ்ரேயோ திசதுனோ-யாவர் ஒருவரோ அந்த ஸ்ரீ கிருஷ்ணன் நமக்கு நன்மையை அருள வேணும்

பக்த அபாய புஜங்க காரூடமணி: – அடியார்களின் ஆபத்துக்களாகிற ஸர்ப்பத்துக்கு கருடமணியாயும்,
த்ரைலோக்ய ரக்ஷாமணி: மூவுலகங்கட்கும் ரக்ஷணார்த்தமான மணியாயும்,
கோபீ லோசநசாதக அம்புதமணி: – ஆய்ச்சிகளின் கண்களாகிற சாதகப் பறவைகளுக்கு மேக ரத்நமாயும்,
ஸெளந்தர்ய முத்ராமணி: – ஸெளந்தர்யத்துக்கு முத்ராமணியாயும்,
காந்தாமணி ருக்மணீ கநகுசத்வந்த்வ ஏக பூஷாமணி: – மாதர்களுக்குள் சிறந்தவளான ருக்மணிப் பிராட்டியின் நெருங்கிய
இரண்டு ஸ்தநங்களுக்கு முக்கியமான அலங்கார மணியாயும்,
தேவ சிகாமணி – தேவர்களுக்குச் சிரோபூஷணமான மணியாயும்,
கோபால சூடாமணி: – இடையர்களுக்குத் தலைவராயுமிருப்பவர்,
ய: – யாவரொருவரோ,
(ஸ:) – அந்த ஸ்ரீக்ருஷ்ணன்,
ந: – நமக்கு,
ச்ரேய: – நன்மையை,
திசது – அருளவேணும்.

முன் எனக்கு என்றார் இப் பொழுது கூட்டமாக –
கோபால சூடா மணி எங்கள் அனைவருக்கும் கொடுக்கட்டும்
எந்தாய் சிந்தா மணியே வந்து நின்றாய் மன்னி நின்றாய்
மாலே மணி வண்ணா -ஆண்டாள் இத்தால் அருளினாள்- நீரோட்டம் தெரியும் மணிக்குள் -கருணையே
விஸ் லேஷம் பொறுக்க முடியாது முந்தானையில் வைத்து ஆளலாம் படி இவன்-

————————

அடுத்த ஸ்லோகத்தால் மந்த்ரமாக அருளுகிறார்-வாக்கை அழைத்து சொல்கிறார் அடுத்து மனசுக்கு…
அமுதத்திலும் இனியன் –ஜன்ம பலனுக்கு கிருஷ்ண மந்த்ரம் ..பகவத் அனுபவ ப்ரீதி கார்ய கைங்கர்யம்-

சத்ருஸ் சேதைக மந்த்ரம் சகலம் உபநிஷத் வாக்ய சம் பூஜ்ய மந்த்ரம்
சம்சார உத்தார மந்த்ரம் சமுசித-தமஸ் சங்க நிர்யாண மந்த்ரம்
சர்வைஸ் ஐஸ்வர்ய ஏக மந்த்ரம் வ்யசன புஜக-சந்தஷ்ட சந்த்ராண மந்த்ரம்
ஜிக்வே ஸ்ரீ கிருஷ்ண மந்த்ரம் ஜப ஜப-சத்தம் ஜன்ம சாபல்ய மந்த்ரம் —-23-

சத்ருஸ் சேதைக மந்த்ரம் -சத்ருக்களின் நாசத்துக்கு ஒரே மந்திரமாய்
உபநிஷத் வாக்ய சம் பூஜ்ய மந்த்ரம்-வைதிக வாக்யங்களால் மிகவும் பூஜ்யமாகச் சொல்லப் பட்ட மத்ரமுமாய்
சம்சார உத்தார மந்த்ரம்-சம்சாரத்தில் நின்றும் கரை ஏற்ற வல்ல மந்த்ரமுமாய்
சமுசித-தமஸ் சங்க நிர்யாண மந்த்ரம்-மிகவும் வளர்ந்து இருக்கும் அஞ்ஞான இருளைப் போக்க வல்ல மந்த்ரமுமாய்
சர்வைஸ் ஐஸ்வர்ய ஏக மந்த்ரம்-சர்வவித ஐஸ்வர்யங்களையும் கொடுக்க வல்ல முக்கிய மந்த்ரமுமாய்
வ்யசன புஜக-சந்தஷ்ட சந்த்ராண மந்த்ரம்-துன்பங்கள் ஆகிற சர்ப்பங்களால் கடிக்கப் பட்டவர்களைக் காக்கும் மந்தரமுமாய்
ஜன்ம சாபல்ய மந்த்ரம் –ஜன்மத்துக்கு பயன் தர வல்ல மந்த்ரமுமாய்
சகலம் ஸ்ரீ கிருஷ்ண மந்த்ரம்–ஸமஸ்தமான ஸ்ரீ கிருஷ்ண மந்திரத்தையும்
ஹே ஜிக்வே ஜப ஜப-சத்தம்–வாராய் நாக்கே எப்போதும் இடை விடாமல் ஜபம் பண்ணுவாய் -என்று தம் திரு நாவுக்கு உபதேசிக்கிறார் –

ஶத்ருச் சேத ஏக மந்த்ரம் – சத்ருக்களின் நாசத்திற்கு மந்த்ரமாய்,
உபநிஷத் வாக்ய ஸம்பூஜ்ய மந்த்ரம் – வைதிக வாக்கியங்களால் மிகவும் பூஜ்யமாகச் சொல்லப்பட்ட மந்த்ரமாய்,
ஸர்வ ஐச்வர்ய ஏக மந்த்ரம் – துன்பங்களாகிற ஸர்ப்பத்தினால் கடிக்கப்பட்டவர்களைக் காப்பாற்றும் மந்த்ரமாய்,
ஸம்ஸார உத்கார மந்த்ரம் – ஸம்ஸாரத்தில் நின்றும் கரையேற்ற வல்ல மந்த்ரமாய்,
ஸமுபசிததமஸ் ஸங்க நிர்யாண மந்த்ரம் – மிகவும் வளர்ந்திருக்கிற அஜ்ஞாந விருளைப் போக்க வல்ல மந்த்ரமாய்,
ஜந்ம ஸாபல்ய மந்த்ரம் – ஜந்மத்திற்குப் பயன் தரவல்ல மந்த்ரமாயிருக்கிற,
ஸகலம் ஸ்ரீ க்ருஷ்ண மந்த்ரம் – ஸமஸ்தமான ஸ்ரீ க்ருஷ்ண மந்த்ரத்தையும்,
ஹே ஜிஹ்வே – வாராய் நாக்கே,
ஸததம் – எப்போதும்,
ஜப ஜப – இடைவிடாமல் ஜபம் பண்ணு.

——————

வ்யாமோஹ பிரசம ஒளஷதம் முநிமனோ-வ்ருத்தி பிரவ்ருத்தி ஒளஷதம்
தைத்யேந்திர ஆர்த்தி கர ஒளஷதம் த்ரி ஜெகதாம் சஞ்சீவன ஏக ஒளஷதம்
பக்தாத்யந்த ஹித ஒளஷதம் பவபய பிரத்வம்சந ஏக ஒளஷதம்
ஸ்ரயே ப்ராப்தி கர ஒளஷதம் பிப மன ஸ்ரீ கிருஷ்ண திவ்ய ஒளஷதம் –24-

வ்யாமோஹ பிரசம ஒளஷதம்-விஷயாந்தரங்களில் உள்ள மோஹத்தை போக்க வல்ல மருந்தாயும்
முநிமனோ-வ்ருத்தி பிரவ்ருத்தி ஒளஷதம் -முனிவர்கள் மனசை தன்னிடத்தில் செலுத்திக் கொள்ள வல்ல மருந்தாயும்
தைத்யேந்திர ஆர்த்தி கர ஒளஷதம் -அசுரர்களில் தலைவனான கால நேமி முதலானவர்களை தீராத துன்பத்தை தரும் மருந்தாயும்
த்ரி ஜெகதாம் சஞ்சீவன ஏக ஒளஷதம் -மூ உலகோர்க்கும் -எல்லா உலகோர்க்கும் -உஜ்ஜீவனத்துக்கு உரிய முக்கிய மருந்தாயும் –
பக்தாத்யந்த ஹித ஒளஷதம்-– அடியவர்களுக்கு மிகவும் ஹிதத்தை செய்யும் மருந்தாயும் –
பவபய பிரத்வம்சந ஏக ஒளஷதம் -சம்சார பயத்தை போக்குவதில் முக்கிய மருந்தாயும்
ஸ்ரயே ப்ராப்தி கர ஒளஷதம் -நன்மையை அடைவிக்கும் மருந்தாயும் உள்ள –
அடியார் குழாங்களை உடன் கூடுவதாகிய நன்மையைப் பயக்கும் மருந்து என்றபடி
ஸ்ரீ கிருஷ்ண திவ்ய ஒளஷதம் —ஸ்ரீ கண்ணபிரான் ஆகிய அருமையான மருந்தை
மருத்துவனாய் நின்ற மா மணி வண்ணா -மருந்தே நாங்கள் போக மகிழ்ச்சிக்கு –
ஹே மன -வாராய் மனசே
பிப -உட் கொள்ளாய் -தம் திரு உள்ளத்தைக் குறித்து உபதேசிக்கிறார் –
கண்ணபிரானை சேவிக்க எல்லா வித நன்மைகளும் மல்கித் தீமைகள் எல்லாம் தொலையும் என்றபடி –
மருந்தே நாங்கள் போக மகிழ்ச்சிக்கே ..மருந்தும் விருந்தும் அவனே தான்.

ஹே மந: – வாராய் மனதே!,
வ்யாமோஹ ப்ரசம ஒளஷகம் – (விஷயாந்தரங்களிலுள்ள) மோஹத்தைப் போக்க வல்ல மருந்தாயும்,
முநி மநோ வ்ருத்தி ப்ரவ்ருத்தி ஒளஷதம் – முனிவர்களின் மனதைத் தன்னிடத்திற் செலுத்திக் கொள்ளவல்ல மருந்தாயும்,
தைத்யேந்த்ர ஆர்த்தி கர ஒளஷதம் – அஸுரர்களில் தலைவரான காலநேமி முதலியவர்களுக்குத் தீராத துன்பத்தைத் தரும் மருந்தாயும்,
த்ரி ஜகதாம் – மூவுலகத்தவர்க்கும்,
ஸஞ்சீவந ஏந ஒளஷதம் – உஜ்ஜீவனத்துக்குரிய முக்கியமான மருந்தாயும்,
பக்த அத்யந்த ஹித ஒளஷதம் – அடியவர்கட்கு மிகவும் ஹிதத்தைச் செய்கிற ஒளஷதமாயும்,
பவ பயப்ரத் வம்ஸந ஏக ஒளஷதம் – ஸம்ஸார பயத்தைப் போக்குவதில் முக்கியமான மருந்தாயும்,
ச்ரேய:ப்ராப்திகா
ஒளஷதம் – கண்ண பிரானாகிற அருமையான மருந்தை,
பிப – உட்கொள்ளாய்.

——————

ஆம்னாய அப்யாசனாநி அரண்ய ருதிதம்–வேத வ்ரதான் யன்வஹம்
மேதச் சேத பலானி பூர்த்த விதயஸ்-சர்வே ஹூதம் பஸ்மநி
தீர்த்தாநா மவகாஹனானிச-கஜஸ்நா னம் விநாயத்பத
த்வன் த்வாம் போருஹ சம்ச்ம்ருதீர்-விஜயதே தேவஸ் ஸ நாராயணா–25-

விநாயத்பத த்வன் த்வாம் போருஹ சம்ச்ம்ருதீர்–யாவனொரு ஸ்ரீ கிருஷ்ணனுடைய திருவடித் தாமரை இணைகளில் சிந்தனை இல்லாமல் போனால் –
ஆம்னாய அப்யாசனாநி -வேத அத்யயனங்கள்
அரண்ய ருதிதம்–காட்டில் அழுவது போல் வீணோ -காப்பார் இல்லாத இடத்தில் அழுவது போலே என்றவாறு
வேத வ்ரதான் யன்வஹம்-நாள் தோறும் செய்கிற வேதங்களில் சொன்ன உபவாசம் முதலிய விரதங்கள்
மேதச் சேத பலானி -மாம்ச சோஷணத்தையே பலனாக உடையனவோ
பூர்த்த விதயஸ்–சர்வே -குளம் வெட்டுதல் -சத்திரம் கட்டுதல் முதலிய தர்ம கார்யங்கள் யாவும்
ஹூதம் பஸ்மநி -சாம்பலில் செய்த ஹோமம் போல் வியர்த்தமோ
தீர்த்தாநா மவகாஹனானிச-கஜஸ்நா னம் -கங்கை முதலிய புண்ய தீர்த்தங்களில் நீராடுவதும் யானை முழுகுவது போல் வியர்த்தமோ
நாராயணன் ஸ்மரணம் இல்லாமல் செய்யப் பட்டால் எல்லாமே பழுதாம் –
விஜயதே தேவஸ் ஸ நாராயணா-அப்படிப்பட்ட தேவனான நாராயணன் அனைவரிலும் மேம்பட்டு விளங்குகிறார்

திரு ஆராதனம் -கர்ம பாகம் ஞான பாகம் இரண்டிலும் ஞான பாகம் உயர்ந்தது அவனுக்கு அடிமை என்ற உணர்வு.

யத்பதத்வந்த்வ அம்போருஹ ஸம்ஸ்ருதீ: விநா – யாவனொரு ஸ்ரீக்ருஷ்ணனுடைய திருவடித் தாமரை யிணைகளின்
சிந்தனையில்லாமற் போனால்,
ஆம்நாய அப்யஸநாநி – வேதாத்யயநங்கள்,
அரண்ய ருதிதம் – காட்டில் அழுதது போல் வீணோ;
அந்வஹம் – நாள்தோறும் (செய்கிற),
வேத வ்ரதாநி – வேதத்திற் சொன்ன (உபவாஸம் முதலிய) வ்ரதங்கள்,
மேதச் சேத பலாநி – மாம்ஸ சோஷணத்தையே பலனாக உடையனவோ,
ஸர்வே பூர்த்த வீதய: – குளம் வெட்டுதல், சத்திரம் கட்டுதல் முதலிய தர்ம காரியங்கள் யாவும்,
பஸ்மநி ஹுதம் – சாம்பலில் செய்த ஹோமம் போல் வ்யர்த்தமோ,
தீர்த்தாநாம் – கங்கை முதலிய புண்ய தீர்த்தங்களில்,
அவகாஹநாநி ச – நீராடுவதும்,
கஜ ஸ்நாநம் – யானை முழுகுவதுபோல் வ்யர்த்தமோ,
ஸ: தேவ: நாராயண: – அப்படிப்பட்ட தேவனான நாராயணன்,
விஜயதே – அனைவரினும் மேம்பட்டு விளங்குகின்றார்.

ஓதி உரு என்னும் ஆம் பயன் என் கொல்
கங்கை உள்ளே மீன் சம்பந்தம் இருந்தாலும் இழந் தது .
மனு- ஞானம் இல்லாதவன் தீர்த்தம் ஆட வேண்டாம்.. ஞானம் உள்ளவனும் தீர்த்தம் ஆட வேண்டாம்-

————————

திரு நாம வைபவம் அடுத்த ஸ்லோகத்தில் சொல்கிறார்-

ஸ்ரீ மன் நாம ப்ரோச்ய நாராயண ஆக்க்யம்
கே ந ப்ராபுர் வாஞ்சி தம் பாபி நோபி
ஹா ந பூர்வம் வாக் ப்ரவ்ருத்தா ந தஸ்மின்
தேன ப்ராப்தம் கர்ப்ப வாஸாதி துக்கம்–26-

ஸ்ரீ மன் நாம ப்ரோச்ய நாராயண ஆக்க்யம்–ஸ்ரீ மன் நாராயணன் என்கிற திரு மாலின் திரு நாமத்தைச் சொல்லி
கே ந ப்ராபுர் வாஞ்சி தம் பாபி நோபி-எந்த பாபம் செய்தவர்களானாலும் தம் இஷ்டத்தை அடைய வில்லை
ஹா ந பூர்வம் வாக் ப்ரவ்ருத்தா ந தஸ்மின்-நம் வாக்கானது முன்னே அந்த நாராயண நாம உச்சாரணத்தில் செல்ல வில்லை
தேன ப்ராப்தம் கர்ப்ப வாஸாதி துக்கம் .—-அந்தோ அதனால் கர்ப்ப வாசம் முதலான துக்கம் நேர்ந்தது

வைது நின்னை வல்லவா பழித்தவர்க்கும்-மாறில் போர் செய்து நின்ன செற்றத் தீயில் வெந்தவர்க்கும்
வந்து உன்னை எய்தலாகும் என்பர் -திருச் சந்தவிருத்தம் –
மொய்த்த வல் வினையுள் நின்று மூன்று எழுத்துடைய பேரால் கத்திர பந்தும் அன்றே பராங்கதி கண்டு கொண்டான் -திருமாலை –
நா வாயில் உண்டே நமோ நாரணா வென்று ஓவாது உரைக்கும் உரை உண்டே –
மூவாத மாக்கதிக் கட் செல்லும் வகை யுண்டே -என்னொருவர் தீக்கதி கட்ச் செல்லும் திறம் –
பித்தனை பெற்றும் அந்தோ பிறவியுள் இருக்கிறோம்-
நமனும் முத்கலனும் பேச -நரகமே ஸ்வர்கம் ஆகும்
அவனது ஊர் அரங்கம் என்னாது அயர்த்து வீழ்ந்து ..அதற்கே கவல்கின்றேனே ..
நா வாயில் உண்டே . மா வழி செல்லும் வழி உண்டே தீ கதி கண் செல்கின்றார்
மாதவன் பேர் சொன்னால் ….தீது ஒன்றும் சாரா ..
திரு மறு மார்பன் நின்னை சிந்தையுள் திகழ வைத்து மருவிய மனத்தார் ஆகில் வினையர் யேலும் அரு வினை பயனை உய்யார் ..
கெடும் இடர் ஆயின எல்லாம் கேசவா என்ன ..
நின் நாமம் கற்ற ஆவலிப்பு உடமை கண்ட.
அறிவிலா மனிசர் எல்லாம் அரங்கா என்று அழைப்பர் ஆகில் .பொறியில் வாழ் நரகம் எல்லாம் புல் எழுந்து ஒழியும் அன்றோ..

நாராயண ஆக்க்யம் – நாராயணென்கிற,
ஸ்ரீமந் நாம – திருமாலின் திருநாமத்தை,
ப்ரோச்ய – சொல்லி,
கே பாபிந: அபி – எந்த பாபிகளானவர்களுந்தான்,
வாஞ்சிதம் – இஷ்டத்தை,
ந ப்ராபு: – அடையவில்லை;
ந: வாக் – நம்முடைய வாக்கானது,
பூர்வம் – முன்னே,
தஸ்மிந் நப்ரவ்ருத்தா – அந்த நாராயண நாமோச்சாரணத்தில் செல்ல வில்லை;
தேந – அதனால்,
கர்ப்ப வாஸ ஆதி து:க்கம் – கர்ப்பவாஸம் முதலான துக்கமானது,
ஹா! ப்ராப்தம் – அந்தோ! நேர்ந்தது.

—————–

மஜ்ஜன்மன பலமிதம் மதுகைடபாரே
மத் ப்ரார்த்த நீய மத நுக்ரஹ ஏஷ ஏவ
த்வத் ப்ருத்ய ப்ருத்ய பரிசாரக ப்ருத்ய ப்ருத்ய
ப்ருத்யஸ்ய ப்ருத்ய இதி மாம் ஸ்மர லோக நாத.….27

மஜ்ஜன்மன பலமிதம் மதுகைடபாரே-மது கைடபர்களை நிரசித்தவனே -அடியேனுடைய ஜன்மத்துக்கு இதுவே பலம் –
மத் ப்ரார்த்த நீய மத நுக்ரஹ ஏஷ ஏவ-என்னால் பிரார்த்திக்க தக்கதாய் என் விஷயத்தில் நீ செய்ய வேண்டியதான அனுக்ரஹம் இதுவே தான் –
ஏது என்னில் –
த்வத் ப்ருத்ய ப்ருத்ய பரிசாரக ப்ருத்ய ப்ருத்ய-ப்ருத்யஸ்ய ப்ருத்ய இதி மாம் ஸ்மர லோக நாத…வாராய் லோக நாதனே -அடியேனை
உனக்கு சரமாவதி தாசனாக திரு உள்ளம் பற்றி அருள வேணும் –

யஸ் சப்த பர்வ வியவதான துங்காம் சேஷத்வ காஷ்டாமபஜன் முராரே -தேசிகன்
அடியார் அடியார் தம் அடியார் அடியார் தமக்கு அடியார் அடியார் தம் அடியார் அடியோங்களே –
இங்கனம் தேவரீர் திரு உள்ளம் பற்றினால் தான் அடியேன் ஜென்மம் சபலமாகும்
பயிலும் திரு உடையார் எவேரேலும் என்னை ஆளும் பரமரே ….
நின் திரு எட்டு எழுத்தும் கற்று உற்றதும் உன் அடியார்க்கு அடிமை ..
நம் பிள்ளை நஞ்சீயர் சம்வாதம்.8-10-11- அல்லி கமல கண்ணன்.. தன் பிரபாவம் கேட்டால்
கண்ணன் அடியார் பிரபாவம் கேட்டால் அல்லி கமல கண்ணன்.

ஹே மதுகைடப அரே! – மதுகைடபர்களை அழித்தவனே!,
மத் ஜந்மந: – அடியேனுடைய ஜன்மத்திற்கு,
இதம் பலம் – இதுதான் பலன்;
மத் ப்ரார்த்தநீய மதநுக்ரஹ: ஏஷ: ஏவ – என்னால் ப்ரார்த்திக்கத் தக்கதாய் என் விஷயத்தில் நீ செய்ய வேண்டியதான
அநுக்ரஹம் இதுவே தான்; (எது? என்னில்;)
ஹே லோக நாத! – வாராய் லோக நாதனே!,
மாம் – அடியேனை,
த்வத் ப்ருத்ய ப்ருத்ய பரிசாரக ப்ருத்ய ப்ருத்ய ப்ருத்யஸ்ய ப்ருத்ய: இதி – உனக்குச் சரமாவதி தாஸனாக, திருவுள்ளம் பற்ற வேணும்.

———————

நாதே ந புருஷோத்தமே த்ரிஜகதா-மேகாதி பே சேதசா
சேவ்யே ஸ்வஸ்ய பதஸ்யா தாதரி ஸூரே நாராயணே-திஷ்டதி
யம் கஞ்சித் புருஷாதமம் கதிபய க்ராமேச மல்பார்த்ததம்
சேவாயை ம்ருக யாமஹே நரமஹோ-மூகா வராகா வயம்––28-

புருஷோத்தமே-புருஷோத்தமனாயும்
த்ரிஜகதா-மேகாதி -மூன்று லோகத்தார்க்கும் -எல்லா லோகத்தார்க்கும் -ஒரே கடவுளாயும்
சேதசா சேவ்யே -நெஞ்சினால் நினைக்கத் தக்கவனாயும்
ஸ்வஸ்ய பதஸ்யா தாதரி -தனது இருப்பிடமான பரம பதத்தையும் அளிப்பவனாயும் உள்ள
ஸூரே நாராயணே–ஸ்ரீ மன் நாராயணனே தேவன்
நாதே ந திஷ்டதி சதி –நமக்கு நாதனாய் இருக்கும் அளவில் -அவனைப் பற்றாமல்
யம் கஞ்சித் நரம் புருஷாதமம் -யாதொரு மனிதனை புருஷர்களின் அதமனாயும் இருக்கிற
கதிபய க்ராமேச மல்பார்த்ததம்-சில கிராமங்களுக்கு கடவனாயும் -ஸ்வல்ப தனத்தை கொடுப்பவனாயும்
சேவாயை ம்ருக யாமஹே -சேவிப்பதற்குத் தேடுகிறோம்
அஹோ-மூகா வராகா வயம்—-ஆச்சர்யம் -இப்படிப்பட்ட நாம் ஊமைகளாயும் உபயோகம் அற்றவர்களாயும் இரா நின்றோம்
வயம் ம்ருக யாமஹே -என்று உத்தம -தன்மையாக -அருளிச் செய்தாலும் நீங்கள் இப்படி ஓடித் திரிகிறீர்களே -என்று பிறரை அதி ஷேபிக்கிறார்

புருஷ உத்தமே – புருஷர்களில் தலைவனாயும்,
த்ரிஜகதாம் ஏக அதிபே – மூன்று லோகங்களுக்கும் ஒரே கடவுளாயும்,
சேதஸா ஸேவ்யே – நெஞ்சினால் நினைக்கத்தக்கவனாயும்,
ஸ்வஸ்ய பதஸ்ய தாதரி – தன் இருப்பிடமான பரம பதத்தை அளிப்பவனாயுமுள்ள,
நாராயணே ஸுரே – ஸ்ரீமந் நாராயணனான தேவன்,
ந: நாதே திஷ்டதி ஸதி – நமக்கு நாதனாயிருக்குமளவில் (அவனைப் பற்றாமல்),
கதிபயக்ராம ஈசம் – சில க்ராமங்களுக்குக் கடவனாயும்,
அல்ப அர்த்ததம் – ஸ்வல்ப தநத்தைக் கொடுப்பவனாயும்,
புருஷ அதமம் – புருஷர்களில் கடை கெட்டவனாயுமிருக்கிற,
யம்கஞ்சித் நரம் – யாரோவொரு மனிதனை,
ஸேவாயைம்ருகயா மஹே – ஸேவிப்பதற்குத் தேடுகிறோம்;
அஹோ! – ஆச்சரியம்!,
வயம் மூகா: வராகா: – இப்படிப்பட்ட நாம் ஊமைகளாயும் உபயோகமற்றவர்களாயுமிரா நின்றோம்.

ஆதி பிரான் நிற்க- பொலிந்து நின்ற பிரான் கருட வாகனும் நிற்க –
கபால நன் மோகத்த்தில் கண்டு கொள்மின்-
சேட்டை தன் மடி அகத்து செல்வம் பார்த்து இருக்கின்றீரே

—————————-

மதன பரிஹர ஸ்திதம் மதீயே
மனசி முகுந்த பாதார விந்ததாம்னி
ஹர நயன க்ருசாநுநா க்ருசோஸி
ஸ்மரசி ந சக்ர பராக்கிரமம் முராரே-—29-

மதன -வாராய் மன்மதனே
பரிஹர ஸ்திதம் மதீயே–மனசி முகுந்த பாதார விந்ததாம்னி-ஸ்ரீ கிருஷ்ணனுடைய திருவடித் தாமரைகளுக்கு
இருப்பிடமான என் நெஞ்சில் இருப்பை விட்டிட்டு
ஹர நயன க்ருசாநுநா க்ருசோஸி-சிவனுடைய நெற்றிக் கண்ணில் நின்றும் உண்டான நெருப்பினால் முன்னமே சரீரம் அற்றவனாக இருக்கிறாய் –
ஸ்மரசி ந சக்ர பராக்கிரமம் முராரே—-ஸ்ரீ கண்ணபிரானுடைய திரு ஆழி ஆழ்வானது பராக்கிரமத்தை நீ நினைக்க வில்லையோ

எம்பெருமானை அண்டை கொண்ட பலன் என் உள்ளத்தில் உள்ளது கிடாய் –
அம்பரீஷ உபாக்யானம் முதலியவற்றில் கேட்டு அறியாயோ

ஹே மதந! – வாராய் மன்மதனே!,
முகுந்த பதாரவிந்ததாம்நி – ஸ்ரீ க்ருஷ்ணனுடைய திருவடித் தாமரைகட்கு இருப்பிடமான,
மதீயே மநஸி – எனது நெஞ்சில்,
ஸ்திதிம் பரிஹர – இருப்பை விட்டிடு;
ஹர நயநக்ருசாதுநா – சிவனின் நெற்றிக் கண்ணில் நின்றுமுண்டான நெருப்பினால்,
க்ருச: அஸி – (முன்னமே) சரீரமற்றவனாக இருக்கிறாய்;
முராரே! – கண்ணபிரானுடைய,
சக்ர பராக்ரமம் – திருவாழியாழ்வானது பராக்கிரமத்தை,
நஸ்மரஸி? – நீ நினைக்கவில்லையோ?

வந்து உன் அடியேன் மனம் புகுந்தாய் சிந்தனைக்கு இனியாய் புகுந்ததிர் பின் வணங்கும்
வந்து அருளி என் நெஞ்சு இடம் கொண்ட வானவர் கொழுந்தே
உள்ளுவார் உள்ளத்தே உறைகின்றாய் -வெள்கி நான் விலவர சிரித்திட்டேனே
கெட்டியாய் பிடித்தானே உருளும் பொழுது பிரகலாதன்
நெஞ்சமே நீள் நகராக
விஷ்ணு சித்தன் மனத்தே கோவில் கொண்ட
மறக்கும் என்று செந்தாமரை கண்ணோடு மறப்பற என் உள்ளே மன்னினான் தன்னை..
தனி கடலே தனி உலகே தனி சுடரே -இவை எல்லாம் விட்டு வந்தான் ..

——————-

தத்தவம் ப்ருவாணாநி பரம் பரஸ்மாத்
மது ஷரந்தீவ சதாம் பலானி
ப்ராவர்த்தய ப்ராஞ்சலி ரச்மி ஜிஹ்வே
நாமாநி நாராயண கோ சராணி-–30-

தத்தவம் ப்ருவாணாநி -தத்துவத்தை சொல்லுகின்றனவாய்
பரம் பரஸ்மாத்-மேலானவற்றிலும் மிகவும் மேலான
மது ஷரந்தீவ சதாம் -சத்துக்களுக்கு மதுவை பெருக்கும்
பலானி இவ-பழங்களைப் போன்றனவாய்
ஜிஹ்வே-வாராய் நாக்கே
நாமாநி நாராயண கோ சராணி-ஸ்ரீ மன் நாராயணன் விஷயமான திரு நாமங்களை
ப்ராவர்த்தய -அடிக்கடி அனுசந்தானம் செய்
ப்ராஞ்சலி ரச்மி-அப்படி செய்வதால் உன்னை கை கூப்பி நிற்கின்றேன்

ஹே ஜிஹ்வே! – வாராய் நாக்கே!,
பரஸ்மாத் பரம் – மேலானதிற் காட்டிலும் மேலானதாகிய [மிகவுஞ் சிறந்த],
தத்வம் – தத்துவத்தை,
ப்ருவாணாநி – சொல்லுகின்றனவாய்,
ஸதாம் மது க்ஷரந்தி – ஸத்துக்களுக்கு மதுவைப் பெருக்குகிற,
பலாநி இவ – பழங்களைப் போன்றனவாய்,
நாராயண கோசராணி – ஸ்ரீமந் நாராயணன் விஷயமான,
நாமாநி – திருநாமங்களை,
ப்ராவர்த்தய – அடிக்கடி அநுஸந்தானம் செய்; [ஜபஞ்செய்.]
ப்ராஞ்ஜலி: அஸ்மி – (நீ அப்படி செய்வதற்காக உனக்குக்) கைகூப்பி நிற்கின்றேன்.

உயர்வற உயர் நலம் உடையவன்..
நாராயண பர ப்ரஹ்ம நாராயண பரஞ்சோதி நாராயண பர தத்தவம்
எண் பெரும் அந் நலத்து ஒண் புகழ் ஈறில வண் புகழ் நாரணன் திண் கழல் சேரே –

—————-

இதம் சரீரம் பரிணாம பேசலம்
பதத்ய வசியம் சலத ஸந்தி ஜர்ஜரம்
கிம் ஒளஷதை க்லிச்யசி மூட துர்மதே
நிராமயம் கிருஷ்ண ரசாயனம் பிப–31-

இதம் சரீரம் பரிணாம பேசலம்–பதத்ய வசியம் சலத ஸந்தி ஜர்ஜரம்–இந்த சரீரமானது -நாளடைவில் துவண்டும் –
தளர்ந்த கட்டுக்களை யுடையதாய்க் கொண்டு சிதிலமாயும் அவசியம் நசிக்கப் போகிறது
கிம் ஒளஷதை க்லிச்யசி மூட துர்மதே-நிராமயம் கிருஷ்ண ரசாயனம் பிப-–வாராய் -அஞ்ஞானியே -கெட்ட மதி யுடையவனே –
மருந்துகளால் என் வருந்துகிறாய் -சம்சாரம் ஆகிய வியாதியைப் போக்குவதான ஸ்ரீ கிருஷ்ணன் ஆகிற ரசாயனத்தை பானம் பண்ணு

இதம் சரீரம் – இந்த சரீரமானது,
பரிணாம பேஷலம் – நாளடைவில் துவண்டும்,
ச்லத ஸந்தி ஜர்ஜரம் – தளர்ந்த கட்டுக்களை யுடையதாய்க்கொண்டு சிதலமாயும்,
அவச்யம் பததி – அவச்யம் நசிக்கப் போகிறது;
ஹே மூட! துர்மதே – வாராய் அஜ்ஞாநியே! கெட்ட புத்தியை யுடையவனே!,
ஒளஷதை: – மருந்துகளினால்,
கிம் க்லிஶ்யஸி – ஏன் வருந்துகிறாய்?,
நிராமயம் – (ஸம்ஸாரமாகிற) வியாதியைப் போக்குமதான,
க்ருஷ்ண ரஸாயநம் – ஸ்ரீக்ருஷ்ணனாகிற ரஸாயநத்தை,
பிப – பாநம் பண்ணு.

மரம் சுவர் மதிள் எடுத்து மருமைக்கே வெறுமை பூண்டு -புறம் சுவர் ஓட்டை மாடம்.புரளும் போது அறிய மாட்டீர் .
புள் கவ்வ
மின் நின் நிலையின மன் உயர் ஆக்கைகள்
மின் உருவாய் பின் உருவாய் பொன் உருவாய்-மூன்று தத்தவம்–
அவன் நித்யம் ஸ்வரூபம் ஸ்பாவ விகாரம் இன்றி – ஜீவாத்ம ஸ்பாவம் மாறும் – அசித் ஸ்வரூபமே மாறும்..
அவிகாராய ..சதைக ரூபா ரூபாய

———————-

தாரா வாரா கர வர ஸுதா-தே தநுஜோ விரிஞ்ச
ஸ்தோதா வேத ஸ்தவ ஸூரகணோ-ப்ருத்ய வர்க்க ப்ரசாத
முக்திர்மாயா ஜகத விகலம்-தாவகீ தேவகீதே
மாதா மித்ரம் வலரி புஸுதஸ் -த்வய்யதோக்யன் நஜானே -32-

தாரா வாரா கர வர ஸுதா-தேவரீருக்கு மனைவி திருப் பாற் கடல் மகளான பெரிய பிராட்டியார்
தே தநுஜோ விரிஞ்ச-மகனோ சதுர் முகன்
ஸ்தோதா வேத -ஸ்துதி பாடகனோ வேதம்
ஸ்தவ ஸூர கணோ-ப்ருத்ய வர்க்க -வேலைக்காரர்களோ தேவதைகள்
தவ ப்ரசாத முக்திர் -மோக்ஷம் தேவரீருடைய அனுக்ரஹம்
மாயா ஜகத விகலம்-தாவகீ -சகல லோகமும் தேவரீருடைய பிரகிருதி
தேவகீதே மாதா-தேவரீருக்குத் திருத் தாயார் தேவகிப் பிராட்டி
மித்ரம் வலரி புஸுதஸ் -தோழன் இந்திரன் மகனான அர்ஜுனன்
த்வய்யதோக்யன் ந ஜானே -அத அந்யத் த்வயி நஜானே -அதைக் காட்டிலும் வேறானவற்றை நான் அறிகிறேன் இல்லை –

தே தாரா: – தேவரீருக்கு மனைவி,
வாராகரவர ஸுதா – திருப்பாற்கடலின் மகளான பிராட்டி,
தநுஜ: விரிஞ்ச: – மகனோ சதுர்முகன்;
ஸ்தோதா வேத: துதிபாடகனோ வேதம்;
ப்ருத்யவர்க்க: ஸுரகண: – வேலைக்காரர்களோ தேவதைகள்;
முக்தி: தவப்ரஸாத: – மோக்ஷம் தேவரீருடைய அநுக்ரஹம்;
அவிகலம் ஜகத் – ஸகல லோகமும்,
தாவகீ மாயா – தேவரீருடைய ப்ரக்ருதி;
தே மாதா தேவகீ – தேவரீருக்குத் தாய் தேவகிப் பிராட்டி;
மித்ரம் வலரிபுஸுத: – தோழன் இந்திரன் மகனான அர்ஜுனன்;
அத: அந்யத் – அதைக் காட்டிலும் வேறானவற்றை,
த்வயி ந ஜாநே – உன்னிடத்தில் நான் அறிகிறேனில்லை.

——————-

கிருஷ்ணோ ரஷது நோ ஜகத் த்ரய குரு-
கிருஷ்ணம் நமச்யாம் யஹம்
கிருஷ்ணே நாமர சத்ரவோ விநிஹதா
கிருஷ்ணாய தஸ்மை நம
கிருஷ்ணா தேவ சமுத்திதம் ஜகதிதம்
கிருஷ்ணச்ய தாசோ சம்யஹம்
கிருஷ்ணே திஷ்டத சர்வ மேத்யதகிலம்
ஹே கிருஷ்ண சம்ரஷஸ்வ மாம் –-33-

கிருஷ்ணோ ரஷது நோ ஜகத் த்ரய குரு-மூன்று -எல்லா லோகத்தார்க்கும் தலைவனான ஸ்ரீ கிருஷ்ணன் நம்மைக் காக்கட்டும்
கிருஷ்ணம் நமச்யாம் யஹம்-நான் ஸ்ரீ கிருஷ்ணனை வணங்குகிறேன்
கிருஷ்ணே நாமர சத்ரவோ விநிஹதா-கிருஷ்ணாய தஸ்மை நம-யாவனொரு கிருஷ்ணனால் அசுரர்கள் கொல்லப் பட்டார்களோ அந்த கிருஷ்ணனுக்கு நமஸ்காரம்
கிருஷ்ணா தேவ சமுத்திதம் ஜகதிதம்-இந்த உலகம் கண்ணன் இடம் இருந்து உண்டா-நான் கண்ணனுக்கு அடியேனாய் இருக்கிறேன்
கிருஷ்ணே திஷ்டத சர்வ மேத்யதகிலம்-இந்த ஸமஸ்த பிரபஞ்சமும் கண்ணன் இடத்தில் நிலை பெற்று இருக்கிறது
ஹே கிருஷ்ண சம்ரஷஸ்வ மாம் –ஸ்ரீ கிருஷ்ணனே அடியேனைக் காத்து அருள வேணும் –

பிரதமை முதல் எட்டு விபக்திகளும் இந்த ஸ்லோகத்தில் அமைத்து அருளி உள்ளார்-எட்டு வேற்றுமை உருபுகளும் அமைந்த ஸ்லோகம்

ஜகத்த்ரய குரு: – மூன்று லோகங்களுக்கும் தலைவனான்,
கிருஷ்ண: ந: ரக்ஷது -கிருஷ்ணன் நம்மைக் காப்பாற்றுக;
அஹம் கிருஷ்ணம் நமஸ்யாமி – நான் கிருஷ்ணனை வணங்குகிறேன்;
யேந கிருஷ்ணேந – யாவனொரு கிருஷ்ணனால்,
அமரசத்ரவ: விநிஹ தா: – அஸுரர்கள் கொல்லப்பட்டார்களோ,
தஸ்மை கிருஷ்ணாய நம: – அந்த கிருஷ்ணனுக்கு நமஸ்காரம்;
இதம் ஜகத் – இவ்வுலகமானது,
கிருஷ்ணாத் ஏவ – கண்ணனிடமிருந்தே,
ஸமுத்திதம் – உண்டாயிற்று; (ஆகையால்)
அஹம் கிருஷ்ணஸ்ய தாஸ: அஸ்மி – நான் கண்ணனுக்கு அடியனாயிருக்கிறேன்;
ஏதத் ஸர்வம் அகிலம் – இந்த ஸமஸ்த பிரபஞ்சமும்,
கிருஷ்ணே திஷ்டதி – கண்ணனிடத்தில் நிலைபெற்றிருக்கிறது.
ஹே கிருஷ்ண! – ஸ்ரீ கிருஷ்ணனே!,
மாம் ஸம்ரக்ஷ – அடியேனைக் காத்தருள வேணும்.

ஆயர் புத்திரன் இல்லை அரும் தெய்வம்–ஆதி அம் ஜோதி உருவை அங்கு வைத்து வந்த பராத் பரன்

————————-

தத் தவம் ப்ரசீத பகவன்! குரு மய்யநாதே,
விஷ்ணோ க்ருபாம் பரம காருணிக: கில த்வம்
சம்சார சாகர நிமக்ந மநந்த!தீனம்
உத்தரத்து மர்ஹசி ஹரே புருஷோத்தமோசி-—34-

தத் தவம் -வேத பிரசித்தனான நீ
ப்ரசீத -குளிர்ந்த திருமுகனாய் இருக்க வேணும்
பகவன்! -ஷாட் குண்ய பரிபூர்ணனே
க்ருபாம் குரு -அருள் புரிய வேணும் –
மய்யநாதே,—அநாதே மயி -வேறு புகலற்ற என் மீது
விஷ்ணோ -எங்கும் வியாபித்து இருப்பவனே
பரம காருணிக: கில த்வம்-நீ பேர் அருளாளன் அன்றோ
சம்சார சாகர நிமக்ந -சம்சாரக் கடலில் மூழ்கினவனாய்
தீனம்-அலைந்து கொண்டு இருக்கும் அடியேனை
அநந்த!-தேச கால வஸ்து -த்ரிவித அபரிச்சேத்யன் ஆனவனே
உத்தரத்து மர்ஹசி –கரை ஏற்றக் கடவை
ஹரே-அடியார் துயரை தீர்ப்பவனே
புருஷோத்தமோசி-—புருஷோத்தமனாய் இருக்கிறாயே –

ஹே பகவந்! – ஷாட்குண்ய பரிபூர்ணனே!,
விஷ்ணோ! – எங்கும் வ்யாபித்திருப்பவனே!,
ஸ:த்வம் – வேத ப்ரஸித்தனான நீ,
அநாதே மயி – வேறு புகலற்ற என் மீது,
க்ருபாம் குரு – அருள் புரிய வேணும்;
ப்ரஸீத – குளிர்ந்த முகமாயிருக்க வேணும்;
ஹே ஹரே! – அடியார் துயரைத் தீர்ப்பவனே!,
அநந்த! – இன்ன காலத்திலிருப்பவன், இன்ன தேசத்திலிருப் பவன், இன்ன வஸ்துவைப் போலிருப்பவன் என்று
துணிந்து சொல்லமுடியாதபடி மூன்று வித பரிச்சேதங்களுமில்லாதவனே!,
த்வம் பரம காருணிக: கில – நீ பேரருளாளனன்றோ?,
ஸம்ஸார ஸாகர நிமக்நம் – ஸம்ஸாரக் கடலில் மூழ்கினவனாய்,
தீநம் – அலைந்து கொண்டிருக்கிற அடியேனை,
உத்தர்த்தும் அர்ஹஸி – கரையேற்றக் கடவை;
புருஷோத்தம: அஸி – புருஷர்களிற் சிறந்தவனாயிருக்கிறாய்.

உன் மனத்தால் என் நினைந்து இருந்தாய் -பேற்றுக்கு உபாயம் அவன் நினைவு

———————–

நமாமி நாராயண பாத பங்கஜம்
கரோமி நாராயண பூஜனம் சதா ,
வதாமி நாராயண நாம நிர்மலம்
ஸ்மராமி நாராயண தத்வ மவ்யயம்––35-

நமாமி நாராயண பாத பங்கஜம்-ஸ்ரீ மன் நாராயணனுடைய திருவடித் தாமரையை சேவிக்கின்றேன்
கரோமி நாராயண பூஜனம் சதா ,-எம்பெருமான் உடைய திருவாராதனத்தை இடை விடாமல் எப்பொழுதும் பண்ணுகிறேன்
வதாமி நாராயண நாம நிர்மலம்-குற்றம் அற்ற ஸ்ரீ மன் நாராயணன் உடைய திரு நாமங்களை சங்கீர்த்தனம் பண்ணுகிறேன்
ஸ்மராமி நாராயண தத்வ மவ்யயம்—-அழிவற்ற பர தத்துவமான ஸ்ரீ மன் நாராயணனை சிந்திக்கிறேன்
தம்முடைய மநோ வாக் காயங்கள் மூன்று கரணங்களும் ஸ்ரீ மன் நாராயணன் இடம் ஆழம் கால் பட்டமையை அருளிச் செய்கிறார்

நாராயண பாத பங்கஜம் – ஸ்ரீமந் நாராயணனுடைய திருவடித் தாமரையை,
நமாமி – ஸேவிக்கிறேன்;
நாராயண பூஜநம் – எம்பெருமானுடைய திருவாராதநத்தை,
ஸதா கரோமி – எப்போதும் பண்ணுகிறேன்;
நிர்மலம் – குற்றமற்ற,
நாராயண நாம – ஸ்ரீமந் நாராயண நாமத்தை,
வதாமி – உச்சரிக்கிறேன்;
அவ்யயம் நாராயண தத்வம் – அழிவற்ற பர தத்வமான நாராயணனை,
ஸ்மராமி – சிந்திக்கிறேன்.

நாலு தடவை நாராயண நாமம்
சிந்தையாலும் சொல்லாலும் செய்கையாலும் தேவ பிரானையே தந்தை தாய் -அரவிந்த லோசனன்.
தொலை வில்லி மங்கலம்-கேட்கையால் உற்றதுண்டு
வாக்கினால் கருமம் தன்னால் மனத்தினால் சரத்தை தன்னால் –
வாயினால் பாடி மனத்தினால் சிந்திக்க தூ மலர் தூவி தொழுது…
செல்வ நாரணன் சொல் கேட்டு நல்கி என்னை விடான்.

—————————————-

ஸ்ரீ நாத நாராயண வாசு தேவ
ஸ்ரீ கிருஷ்ண பக்த பிரியா சக்ர பாணே
ஸ்ரீ பத்ம நாபா அச்யுத கைடபாரே
ஸ்ரீ ராம பத்மாஷ ஹரே முராரே !—-36-

அநந்த வைகுண்ட முகுந்த கிருஷ்ண
கோவிந்த தாமோதர மாதவேதி
வக்தும் சமர்த்தோபி ந வக்தி கச்சித்
அஹோ ஜநாநாம் வயசநாபி முக்யம்-–37-

ஸ்ரீ நாத நாராயண வாசு தேவ–ஹே ஸ்ரீ லஷ்மி பதியே -நாராயணனே -வா ஸூ தேவனே –
ஸ்ரீ கிருஷ்ண பக்த பிரியா சக்ர பாணே-ஸ்ரீ கிருஷ்ணனே -பக்த வத்சலனே -திருக் -சக்கரக் கையனே
ஸ்ரீ பத்ம நாபா அச்யுத கைடபாரே-ஹே ஸ்ரீ பத்ம நாதனே -அடியாரை ஒரு காலும் நழுவ விடாதவனே –
கைடபன் என்னும் அசுரனை நிரசித்து அருளினவனே
ஸ்ரீ ராம பத்மாஷ ஹரே முராரே !—-சக்கரவர்த்தி திரு மகனே -புண்டரீ காஷனே-
பாபங்களை அபஹரித்து அருளுபவனே -முராசுரனை நிரசித்து அருளினவனே

அநந்த -முடிவில்லாதவனே –
வைகுண்ட -ஸ்ரீ வைகுண்ட நாதனே
முகுந்த -ஸ்ரீ முகுந்தனே
கிருஷ்ண-ஸ்ரீ கண்ணபிரானே
கோவிந்த -கோவிந்தனே
தாமோதர -தாமோதரனே
மாதவேதி–ஸ்ரீ மாதவன் –என்று இப்படி ஸ்ரீ பகவான் திரு நாமங்களை
வக்தும் சமர்த்தோபி ந வக்தி கச்சித்-சொல்லுவதற்கு சமர்த்தனாக இருந்தாலும் ஒருவனும் சொல்லுவது இல்லை –
அஹோ ஜநாநாம் வயசநாபி முக்யம்—இவ்வுலகோர் விஷயாந்தரங்களிலே மண்டி துன்பப பருவத்திலேயே நோக்கமாய் இருக்கும் தன்மை ஆச்சர்யம்
இது என்ன கொடுமை என்று பர அனர்த்தத்தை சிந்தனையால் பரிதபிக்கிறார்

ஸ்ரீநாத! – ஹே லக்ஷ்மீபதியே!,
நாராயண – நாராயணனே!,
வாஸுதேவ – வாஸுதேவனே!,
ஸ்ரீ கிருஷ்ண – ஸ்ரீ கிருஷ்ணனே!,
பக்த ப்ரிய – பக்த வத்ஸலனே!,
சக்ர பாணே – சக்கரக் கையனே!,
ஸ்ரீ பத்மநாப – ஹே பத்ம நாபனே!,
அச்யுத – அடியாரை ஒரு காலும் நழுவ விடாதவனே!,
கைடப அரே! – கைடபனென்னும் அசுரனைக் கொன்றவனே!,
ஸ்ரீராம – சக்ரவர்த்தி திருமகனே!,
பத்மாக்ஷ – புண்டரீகாக்ஷனே!,
ஹரே! – பாபங்களைப் போக்குமவனே!,
முராரே – முராசுரனைக் கொன்றவனே!,
அநந்த – முடிவில்லாதவனே!,
வைகுண்ட – வைகுண்டனே!,
முகுந்த – முகுந்தனே!,
கிருஷ்ண – கண்ண பிரானே!,
கோவிந்த – கோவிந்தனே!,
தாமோதர – தாமோதரனே!,
மாதவ! இதி – மாதவனே என்றிப்படி (பகவந் நாமங்களை),
வக்தும் – சொல்லுவதற்கு,
ஸமர்த்த: அபி – ஸமர்த்தனாயினும்,
கச்சித் ந வக்தி – ஒருவனும் சொல்லுகிறதில்லை,
ஜநாநாம் – இவ் வுலகத்தவர்களுக்கு,
வ்யஸந ஆபிமுக்யம் – (விஷயாந்தரங்களில் மண்டித்) துன்பப்படுவதிலேயே நோக்கமாயிருக்குந் தன்மை,
அஹோ! – ஆச்சரியம்!

இருபது திரு நாமங்களை சொல்ல சாமர்த்தியம் இருந்தாலும் சொல்ல வில்லை
போது எல்லாம் போது கொண்டு உன் திரு நாமம் செப்ப மாட்டேன் -ஆசை மட்டும் போக வில்லை
கதறுகின்றேன் -இது மட்டும் தெரியும் அளித்து அரங்க மா நகர் உள்ளானே
அதுவும் அவனது இன் அருளே-

3/4/5 சுலோகங்களால் மறவாமல் இருக்கணும்..நினைவு முக்கியம்
4 என் மனசில் நீ நீங்காமல் இருக்கணும் அசையாத பக்தி வேணும்
6 ஸ்லோகம் 27 ஸ்லோகத்தால் திரு நாம சந்கீர்தனத்தால் அடியார் அடியார் ..நினைவு மாறாமல் மதுர கவி ஆழ்வார் நிலை
விரோதிகள் சம்சாரம் கர்மா போல்வன ..12/ 13/ 14/ 34/ 35 சுலோகங்களால் அருளினார்
சரீரம் வைத்து காலம் கழிக்கணும் ஒரே மருந்து மணி மந்த்ரம் எல்லாம் அவன் தானே
17-பரம மருந்து அவன் திரு நாம சங்கீர்த்தனம் 18/ 22/ 23/ 24 /31 கண்ணன் என்னும் மருந்தை குடிப்பாய்
5- திரு வடி தாமரைகள் நினைவு இன்றி யாகம் யஜ்ஞம் வீண்/
28- அவன் காத்து இருக்க மூடர்கள் வேறு எங்கோ போனோமே சம்பந்தம் மாதா பிதா ஜகத் காரண பூதன் வெளி இடுகிறார்-..
33-ஸ்லோகத்தால் கிருஷ்ணனே ஜகத் காரணம்/8th விஷயம் இது

——————–

த்யாயந்தி யே விஷ்ணும் அநந்தம் அவ்யயம்-
ஹ்ருத் பத்ம மத்யே சததம் வ்யவஸ்திதம்
சமாஹிதாநாம் சததாப யப்ரதம்
தே யாந்தி ஸித்திம் பரமாம் ச வைஷ்ணவீம்-38-

த்யாயந்தி யே விஷ்ணும் அநந்தம் அவ்யயம்-அபரிச்சின்னமாய் உள்ள -அழியாமல் நித்தியமாய் உள்ள –
ஸ்ரீ மஹா விஷ்ணுவை எவர் த்யானம் பண்ணுகிறார்களோ
ஹ்ருத் பத்ம மத்யே சததம் வ்யவஸ்திதம்-ஹிருதய கமலத்தின் நடுவில் எப்பொழுதும் வீற்று இருந்து அருளுபவரும் –
அடியார் விலக்காமை கிடைத்ததும் சடக்கென அருள் புரிய –
சமாஹிதாநாம் சததாப யப்ரதம்–விஷயாந்தர பற்று அற்று -சமாதியில் ஊன்றி இருக்கும் யோகிகளுக்கு
சர்வ காலத்திலும் அஞ்சேல் என்று அபாய பிரதானம் பண்ணி அருளுபவரும்
தே யாந்தி ஸித்திம் பரமாம் ச வைஷ்ணவீம்-–அவர்கள் சிறந்த ஸ்ரீ வைஷ்ணவ சித்தியை அடைகிறார்கள்-

ஹ்ருத் பத்ம மத்யே – ஹ்ருதய கமலத்தின் நடுவில்,
ஸததம் வ்யவஸ்திதம் – எப்போதும் வீற்றிருப்பவரும்,
ஸமாஹிதாநாம் – ஸமாதியிலே ஊன்றியிருக்கும் யோகிகளுக்கு,
ஸதத அபயப்ரதம் – ஸர்வ காலத்திலும் ‘அஞ்சேல்’ என்று அபய ப்ரதாநம் பண்ணுமவரும்,
அவ்யயம் – ஒருநாளும் அழியாதவரும்,
அநந்தம் – அபரிச்சிந்நராயு முள்ள,
விஷ்ணும் – ஸ்ரீமஹாவிஷ்ணுவை,
யேத்யாயந்தி – எவர் த்யானம் செய்கிறார்களோ,
தே – அவர்கள்,
பரமாம் வைஷ்ணவீம் ஸித்திம் – சிறந்த வைஷ்ணவ ஸித்தியை,
யாந்தி – அடைகின்றார்கள்.

—————————–

ஷீர ஸாகர தரங்க சீகரா
சார தாரகித சாரு மூர்த்தயே
போகி போக சய நீய சாயீநே
மாதவாய மது வித் விஷே நம—39-

ஷீர ஸாகர தரங்க சீகரா-சார தாரகித சாரு மூர்த்தயே–திருப் பாற் கடலில் நக்ஷத்திரங்கள் படிந்தால் போலே
அழகிய திரு மேனியை யுடையராய்
போகி போக சய நீய சாயீநே-மாதவாய மது வித் விஷே நம-–திரு வனந்த ஆழ்வான் உடைய திரு மேனி ஆகிற
திருப் படுக்கையிலே கண் வளர்ந்து அருளுபவராய் -மது என்ற அசுரனை நிரசித்து அருளிய திரு மாலுக்கு நமஸ்காரம் –

க்ஷீரஸாகர தரங்க சீகர ஆஸார தாரகிதசாரு மூர்த்தயே – திருப்பாற்கடலில் அலைகளின் சிறு திவலைகளின் பெருக்கினால்
நக்ஷத்திரம் படிந்தாற் போன்று அழகிய திருமேனியை யுடையராய்,
போகி போக சயநீய சாயிநே – திருவனந்தாழ்வானுடைய திருமேனியாகிற திருப் படுக்கையில் கண்வளருமவராய்,
மதுவித்விஷே – மதுவென்கிற அசுரனைக் கொன்றவரான,
மாதவாய – திருமாலுக்கு,
நம: – நமஸ்காரம்.

————————–

யஸ்ய ப்ரியவ் சுருதி தரவ் கவி லோக வீரவ்
மித்ரே த்விஜன்மவர பத்ம சரவ் பூதாம்
நேதாம் புஜாஷ சரணாம் புஜ ஷட்பதேன
ராஜ்ஞா க்ருதா க்ருதிரியம் குலசேகரேண–40-

யஸ்ய ப்ரியவ் சுருதி தரவ் கவி லோக வீரவ்-யாவர் ஒரு ஸ்ரீ குல சேகர பெருமாளுக்கு -வேத வித்துக்களாயும் -கவிகளுக்கும் சிறந்தவர்களாயும் –
மித்ரே த்விஜன்மவர பத்ம சரவ் பூதாம்-ப்ராஹ்மண ஸ்ரேஷ்டர்களாயும் உள்ள -பத்மன் -சரன் -என்னும் இருவர்கள் ஆப்த மித்ரர்களாய் இருந்தார்களோ
அம்புஜாஷ சரணாம் புஜ ஷட்பதேன-தாமரைக் கண்ணனான எம்பெருமானுடைய திருவடித் தாமரைகளுக்கு-வந்து -போல் அந்தரங்கரான
தேன-அந்த
ராஜ்ஞா க்ருதா க்ருதிரியம் குலசேகரேண–ஸ்ரீ குல சேகர மஹா ராஜராலே இந்த ஸ்தோத்ர கிரந்தம் அருளிச் செய்யப் பட்டது –

த்விஜன்மவர பத்மசரவ் –த்வஜன்மவரன் -பத்ம சரன் -என்றும் சொல்வர்
ஜாதி ஏக வசனமாகக் கொண்டு ப்ராஹ்மணர்களும் ஷத்ரியர்களும் இஷ்டர்கள் -என்பாரும் உண்டு –
ப்ராஹ்மண ஸ்ரேஷ்டரான ஸ்ரீ பெரியாழ்வாரையும் -ஸ்ரீ நம்மாழ்வாரையும் சொன்னதாகவும் -கொள்ளலாம் –

யஸ்ய – யாவரொரு குலசேகரர்க்கு,
ச்ருதிதரெள – வேத வித்துக்களாயும்,
கவி லோக வீரெள – கவிகளுக்குள் சிறந்தவர்களயும்,
த்விஜந்மவர பத்மசரெள – ப்ராஹ்மண ச்ரேஷ்டர்களாயுமுள்ள ‘பத்மன்’ ‘சரண்’ என்னும் இருவர்கள்,
ப்ரியெள மித்ரே அபூதாம் – ஆப்த மித்திரர்களாக இருந்தார்களோ,
அம்புஜாக்ஷ சரணாம்புஜ ஷட்பதேந – தாமரைக் கண்ணனான எம்பெருமானுடைய திருவடித் தாமரைகளுக்கு வண்டு போல் அந்தரங்கரான,
தேந – அந்த,
குலசேகரேணராஜ்ஞா – குலசேகர மஹாராஜராலே,
இயம் க்ருதி: க்ருதா – இந்த ஸ்தோத்ர க்ரந்தம் செய்யப்பட்டது.

சேர்பார்களை பஷிகள் ஆக்கி ..-ஆச்சார்யர்-ஆறு கால் அவரின் திருவடி புத்திரன் பத்னி திரு அடிகள்..
நாமும் பெரிய பெருமாளின் திரு வடிகளில் பிரவகிக்கிற மது உண்ணும் வண்டு போல ஆவோம் என்று பல சுருதி.

————————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ காஞ்சி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ குலேசேகர ஆழ்வார் திருவடிகளே சரணம்.
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

ஸ்ரீ திருப்பாவை ஸாரார்த்தம்–

December 15, 2019

இன்றோ திரு ஆடிப் பூரம் எமக்காக
அன்றோ இங்கு ஆண்டாள் அவதரித்தாள் –குன்றாத
வாழ்வான வைகுண்ட வான் போகம் தன்னை இகழ்ந்து
ஆழ்வார் திரு மகளாராய்-22

அஞ்சு குடிக்கு ஒரு சந்ததியாய் ஆழ்வார்கள்
தம் செயலை விஞ்சி நிற்கும் தன்மையளாய் -பிஞ்சாய்
பழுத்தாளை ஆண்டாளை பத்தி உடன் நாளும்
வழுத்தாய் மனமே ! மகிழ்ந்து -24

———————

1-மார்கழித்திங்கள்
ப்ராப்ய ப்ராபக ஸங்க்ரஹம் (அதிகாரி ஸ்வரூபம்)
(பகவத் ஸம்ஶ்லேஷமே ப்ராப்யம்; அநந்ய ஸாத்யமான இதுக்கு ஸாதநமும் அவனே.
அந்த ஸாதநத்திலே அந்வயிக்கைக்கு அதிகாரிகளும் அந்த ப்ராப்யத்தில் இச்சையுடை யவர்களே.)
பரத்வம் – உபய விபூதி யோகம்.
பாவனத்வமும் போக்யத்வமும் -மார்கழி திங்களும் மதி நிறைந்த நல் நாளும் –
நமக்கே -அதிகாரி ஸ்வரூபம்-நம -அர்த்தமே பாட்டுக்கள் தோறும் -நமக்கே -முதலில் –
கண்ணனை தூது போக சொல்லி -இழந்தார்கள் -தேரில் அருகே இருந்தாலும் -அர்ஜுனன் இழந்தான் –
பறை தரும் நாராயணனுக்கு -பல விசேஷணங்கள் -இதில் -கூர் வேல் -மங்களாஸாசனமே அவனுக்கு அரண்
பஞ்ச நாராயணன் இதில் உண்டே-நந்த கோப குமரன் -ஆச்சார்யருக்கு பவ்யன் -மந்திரத்தில் உள்ளான் -அவனை எடுத்துக் கொடுப்பார்

2-வையத்து வாழ்வீர்காள்
க்ருத்யா க்ருத்ய விவேகம் (அதிகாரி நிஷ்டாக்ரமம்)
(குர்வத்ரூபமான [ப்ரவ்ருத்தி ஶீலங்களான] கரணங்களுக்கு வகுத்த வ்யாபார விஷயங்களைக் காட்டிக் கொடுக்க வேண்டுகையாலும்,
கால க்ஷேபத்துக்காகவும், ராக ப்ரேரிதமாக அநுஷ்டேயமான கர்த்தவ்யம்)
வ்யூஹம் – பாற்கடலுள் பையத் துயின்ற பரமன்
உய்யுமாறு எண்ணி உகந்து-ஸ்ரீ கோதா உபநிஷத் -30-பாசுரங்கள் -இஷ்ட பிராப்தி –
மாஸூச அநிஷ்ட நிவ்ருத்திக்கு –ஸ்ரீ கீதா உபநிஷத் -700-ஸ்லோகங்கள்

3-ஓங்கி உலகளந்த
அபிமத ஸித்தி – (ஆசார்யர்களின் ஸம்பத்து பரிபூர்ணம்.)
[பகவதநுபவ ஸஹகாரிகள் பக்கல் உபகார ஸ்ம்ருத்யதிஶயத்தாலே அவர்களுக்கு அபேக்ஷிதங்கள் யாவை,
அந்த ஸம்ருத்திகளடைய அபேக்ஷிக்கக் கடவது.]
விபவம் – ஸ்ரீ வாமனன் (க்ருத யுகம்)

4-ஆழிமழைக் கண்‍ணா
அதிகாரி உத்கர்ஷம் – பாகவத ப்ரபாவம்
[தேவதாந்தர ஸ்பர்ஶ ரஹிதராய், இப்படி அநந்ய ப்ரயோஜநராய், பகவதேக ப்ரவணராய், பகவதநுபவோபகரணமானவற்றிலே
இழிந்தவர்களுக்கு அந்த தேவதாந்தரங்களும் ஏவல் செய்யும்.] (பகவத் பாகவத இஷ்டத்வேந நித்ய நைமித்திகாதி தர்மங்களை
யதாவாக அநுஷ்டிக்கை, ப்ரபந்நாதிகாரிகளுக்கு ஆவஶ்யகம்.)
விபவம் – ஸ்ரீ சக்ரவர்த்தித் திருமகன் (த்ரேதா யுகம்)

5-மாயனை மன்னு
வித்யா ப்ரபாவம்
(பகவதநுபவத்திலிழிந்தவர்களுக்கு வரும் அநுபவ விரோதிகளை அவ் வநுபவம் தானே நிரோதிக்குமென்னுமிடம்)
விபவம் – ஸ்ரீ கிருஷ்ணன் (த்வாபர யுகம்)
இப்படி கீழ் அஞ்சுபாட்டாலே ப்ராப்யமான ஸ்ரீ கிருஷ்ணாநுபவத்துக்கு ஏகாந்தமான உபகரணங்களைச் சொல்லி,
அநந்தரம் மேல் பத்துப் பாட்டாலே அந்த உபகரணங்களைக்கொண்டு அநுபவிக்குமவர்களை எழுப்புகிறது.

6-புள்‍ளும் சிலம்பின
அர்ச்சாவதாரம். பிள்ளாயெழுந்திராய் –ஸ்ரீ பொய்கையாழ்வார்
(ஸ்ரீ கிருஷ்ண ஸம்ஶ்லேஷத்தில் புதியாளொருத்தியை [தத் விஷயத்திலும் ததீய விஷயம் நன்றென்றறியாதவளை] எழுப்புகிறார்கள்.)
பகவதேக போகரான ஸ்ரீ வைஷ்ணவர்கள் அநந்ய ப்ரயோஜநராய் இவ் விஷயத்தில் தேஶிகரன்றிக்கே இருக்கிறவர்களை,
அவர்களிடத்தில் பரிவாலே தேஶிகராக்குகை தங்களுக்கு க்ருத்யம் என்றிருக்கையாகிற ஸ்ரீ வைஷ்ணவத்வ ஸ்வபாவம்.

7-கீசுகீசென்றெங்கும்
ஶேஷத்வம். பேய்ப் பெண்-ஸ்ரீ பேயாழ்வார்
(பகவத் விஷயத்திலும், பாகவத விஷயம் நன்று என்று தெரிந்தும் மறந்திருப்பாளொருத்தியை எழுப்புகிறார்கள்.)
பகவத் விஷயத்திலே ஜ்ஞாதமான அர்த்தம் ஒருவனுக்கு விஸ்ம்ருதமானால் தங்கள் படியாலே ‘போதயந்த: பரஸ்பரம்’ பண்ணி
ஸ்ம்ருதி விஷயமாம்படி அறிவிக்கை ஸ்ரீ வைஷ்ணவர்களுக்கு ஸ்வபாவம்.

8-கீழ் வானம் வெள்‍ளென்று
பாகவத பாரதந்த்ர்யம். கோதுகலமுடையாய்-ஸ்ரீ பூதத்தாழ்வார்
(பாகவத ஶேஷத்வ பர்யந்தமான பகவச் சேஷத்வமுடையளாகையாலே பகவ தபிமதரானவரை
(ஸ்ரீ கிருஷ்ணனுக்கு வேண்டற்பாடுடை [வால்லப்யம்] யளாயிருப்பாளொருத்தியை) எழுப்புகிறார்கள்.)
பகவத் விஷயத்தில் ப்ரத்யா ஸந்நராயிருப்பார் திறத்தில் ஸா பேக்ஷரா யிருக்கையும்,
அவர்களை முன்னிட்டு ஈஶ்வரனைக் கிட்டுகையும் ஸ்ரீ வைஷ்ணவர்களுக்கு ஸ்வரூபம்.

9–தூ மணி மாடத்து
பகவத் பாரதந்த்ர்யம். மாமான் மகள்-ஸ்ரீ திருமழிசையாழ்வார்.
(ஸ்ரீ கிருஷ்ணன் வந்தபோது வருகிறான் என்றிருக்குமவளை யெழுப்புகிறார்கள்.)
“தத் தஸ்ய ஸத்ருஶம் பவேத்” என்று பூர்வார் நிஷ்டராயிருப்பாரை, பகவத் ப்ரேமாதி ஶயத்தாலே
தத் ஏக பரராயிருக்குமவர்கள் பிரீதி பூர்மாக ப்ரேரிக்கை.
ஸ்வார்த்த ப்ரவ்ருத்தி ஸாமாந்யமும் உபாய விரோதி; பரார்த்த ப்ரவ்ருத்தி ஸாமாந்யமும்
உபாய பலமாயும், உபாயாநுகூலமாயுமிருக்குமென்று அறிவித்து, உபாய அத்வஸாய நிஷ்டரை எழுப்பீரோ!

10-நோற்‍றுச்சுவர்க்கம்
ஸித்த தர்மம். அம்மனாய்-ஸ்ரீ குலஶேகராழ்வார்.
(ஸ்ரீ கிருஷ்ண ஸம்ஶ்லேஷத்தில் விதேதையாய் யிருப்பாளை எழுப்புகிறார்கள்.)
உபாய நிஷ்டரை எழுப்புதல். “தேற்றமாய் வந்து திற” – லோகார்ஹை வாராமல் லௌகிகாநு வர்த்தநம் கார்ய மென்றதாய்த்து.
“ஜ்ஞாநீ த்வாத்மைவ மே மதம்” என்றும், “அஹம் ஸ ச மம ப்ரிய:” என்றும்
அவன் பக்ஷபதித்திருப்பார் திறத்தில் நித்யஸாபேக்ஷராயிருக்கை ஸ்ரீ வைஷ்ணவர்களுக்கு ஸ்வரூபம்.

11-கற்‍றுக் கறவை
அனுஷ்டானம் – ஸாமாந்ய தர்மம். கோவலர் தம் பொற் கொடியே-ஸ்ரீ பெரியாழ்வார்.
(எல்லாவற்றாலும் ஸ்ரீ கிருஷ்ணனுக்கு ஒப்பான ஆபி ஜாதையாயிருப்பா ளொருத்தியை எழுப்புகிறார்கள்.)
கற்‍றுக் கறவை கணங்கள் பல கறந்து குற்ற மொன்றில்லாத – ஜாத் யுசிதமான கர்மத்தை
சாதனமாக வன்றிக்கே கைங்கர்ய புத்யா அநுஷ்டித்தால் குற்றமில்லை.
[பகவத் ஸம்பந்தம் விச்சேதியாதே போந்த ஆசார்ய ஸந்தாந ப்ரஸூதர் நமக்குப் பூஜ்யர்.
அவர்களடியாக பகவத் ஸமாஶ்ரயணம் பண்ணுகை ஸ்வரூபம்.]

12-கனைத்திளம்
அநனுஷ்டானம் – விஶேஷ தர்மம். நற் செல்வன் தங்காய் -ஸ்ரீ தொண்டரடிப் பொடி யாழ்வார்.
(ஸ்ரீ கிருஷ்ணனைப் பிரியாதே இளைய பெருமாளைப் போலே யிருப்பானொருவன் தங்கையாகை யாலே
ஶ்லாக்யையாயிருப்பா ளொருத்தியை யெழுப்புகிறார்கள்.)
அநுஜ்ஞா கைங்கர்ய நிஷ்டனுக்கு ஆஜ்ஞா கைங்கர்ய ஹாநி ஸ்வரூப விரோத மன்றென்கிறது.
பகவத் விஶ்லேஷம் அஸஹ்யமாம்படி அவகாஹித்தவர்கள் தங்களுக்கு ஸ்ரீ வைஷ்ணவர்கள் உத்தேஶ்யரா மளவன்றிக்கே
தத் ஸம்பந்தி ஸம்பந்திகளும் உத்தேஶ்ய ரென்றிருக்கை ஸ்வரூபம்.

13-புள்‍ளின் வாய்
அஹங்கார மமகாரங்கள் ஒழிதல். போதரிக் கண்ணினாய்-ஸ்ரீ திருப்பாணாழ்வார்.
(நம் கண்ணழகு உண்டாகில் தானே வருகிறானென்று கிடக்கிறாளொருத்தியை யெழுப்புகிறார்கள்.
நமக்கு ஸ்வரூப ஜ்ஞாநமுண்டாகில், அவன் தானே வருகிறானென்று நிர்ப்பரரா யிருக்குமவரை எழுப்புகிறார்கள்.
ஈஶ்வரனும் ஈஶ்வர விபூதியும் ஸ்வாபிமாந விஷயமாய்த் தோன்றுகை – அஹங்காரத்துக்கு நன்மையாவது.
பகவதநுபவ பரிகரமான ஜ்ஞான வைராக்ய பக்திகளாலே பரிபூர்ணராயிருக்கு மவர்கள் திறத்தில்
ததர்த்தமாக ஸ்ரீ வைஷ்ணவர்கள் ஸாபேக்ஷரா யிருக்கை ஸ்வரூபம்.

14-உங்கள் புழைக்கடை–
எங்களை முன்னமெழுப்புவான் வாய்பேசும் நங்காய்-ஸ்ரீ நம்மாழ்வார்.
(இவை யெல்லாவற்றுக்கும் தானே கடவளாய், எல்லாரையும் தானே எழுப்பக் கடவதாகச் சொல்லி வைத்து,
அது செய்யாதே உறங்குகிறாளொருத்தியை எழுப்புகிறார்கள்.)
பாகவத ஸமுதாயத்துக்கெல்லாம் தாமே கடவராய், இவர்களுக்கெல்லாம் பகவத் ஸம்பந்த கடகர் தாமேயாம்படி
ஜ்ஞாந பக்தி வைராக்யங்களாலே பூர்ணரான பாகவதரை யெழுப்புகிறார்கள்.
பகவத் விஷயத்திலே மூட்டுகையிலே அதிகரித்த நிர்வாஹகர் முன்பாக பகவதநுபவம் பண்ணுகை ஸ்வரூபம்.

15-எல்லே இளங்கிளியே–
உத்தம பாகவத லக்ஷணம். எல்லே யிளங்கிளியே-ஸ்ரீ திருமங்கையாழ்வார்.
(எல்லாருடைய திரட்சியும் காண வேண்டி யிருப்பாளொருத்தியை எழுப்புகிறார்கள்.)
பாகவத சேஷத்வம் ஸ்வரூபமானால் அவர்களிடும்பழியும் தம் மேலேறிட்டுக் கொள்ளுகை ஸ்வரூபம்.
ஸ்வ யத்நத்தால் கடக்க அரிதாய், ப்ராயஶ் சித்த விநாஶ்யமுமின்றிக்கே யிருக்கிற அஹங்கார நிவர்த்தகனாய்
மற்றுமுள்ள காம க்ரோதாதிகளுக்கும் நிவாரகன் எம்பெருமான்.
திருப்பாவை யாகிறது இப் பாட்டிறே. பகவத் விஷயத்திலிருக்கும்படி யெல்லாம் சிற்றஞ்சிறுகாலையிலே சொல்லுகிறது;
பாகவத விஷயத்திலிருக்கும்படி யெல்லாம் இப் பாட்டிலே சொல்லுகிறது.
ஸ்ரீ வைஷ்ணவர்கள் ஸமவாய தர்ஶநம் அபிமதமாயிருக்கு மவர்களைக் கண்டக்கால் அந்த ஸமூஹமாக அவர்களை உகக்கை ஸ்வரூபம்.

16-நாயகனாய் நின்ற
ஆசார்ய வைபவம்
அவனைப்பெறுமிடத்தில் ததீயர் முன்னாகப் பெறவேணும். ஆசார்ய ஸம்பந்த கடகரை முன்னிட்டு
ஆசார்யனைத் தொழுகையும் பெரியோர் செயலிறே.
இவனுக்குப் பிறக்கும் அத்யவஸாயமும் போட்கனாகையாலே, மெய்யான வ்யவஸாயமுடையாரை
முன்னிட்டாலல்லது கார்ய கரமாகாதென்று முன்னிடுகிறது.

17-அம்பரமே தண்‍ணீரே
பரகத ஸ்வீகாரம் (ஏவகாரச் சீமாட்டி)
பகவத் விஷயத்தைக் கிட்டுவார் தத் ப்ரத்யாஸந்நரை புருஷகாரமாகக் கொண்டு புகுருகை ஸ்வரூபம்.

18-உந்து மதகளிற்‍றன்
புருஷகாரம்
பகவத் விஷயீகாரம் பிராட்டி புருஷகார ஸாபேக்ஷம்.

19-குத்து விளக்கெரிய
புருஷகாரம்
பிராட்டியைப் புருஷகாரமாக வரித்தால், அவனும் இவளும் இசலி இசலிப் பரியும் பரிவைச் சொல்லுகிறது.

20-முப்பத்துமூவர்
ப்ராப்யம்-பிராட்டிக்கும் அடிமை
அடிமை செய்யுமிடத்தில் இருவரும் சேர்ந்த சேர்த்தியிலே அடிமை செய்வதே முறை.

21-ஏற்‍ற கலங்கள்
ஸ்வரூபக்ருத தாஸ்யம் – அபிமான ஶூன்யம்.
ப்ரபுத்தனாய் தங்கள் கார்யம் செய்கைக்கு “ஏத்த வேழுலகம் கொண்ட” என்கிறபடியே, ஆஶ்ரிதரானவர்களுக்கு
நிர் மமராய்க் கொண்டு அவன் குண கீர்த்தனம் பண்ணுகை கர்த்தவ்ய மென்கிறது.

22-அங்கண்மாஞாலம்
அநந்யார்ஹஶேஷத்வம்
தேஹாத்மாபிமானத்தை நீக்கி, அதுக்கு இசைந்தவாறே
ஸ்வ ஸ்வாதந்த்ரியாபிமானத்தை நீக்கி,
அதுக்கு இசைந்தவாறே ஶேஷத்வத்தை யறிவித்து,
அதுக்கு இசைந்தவாறே அந்ய ஶேஷத்வ நிவ்ருத்தியை யுண்டாம்படி பண்ணி,
அதுக்கு இசைந்தவாறே ஜ்ஞாத்ருத்வ ப்ரயுக்தமான ஸ்வ ஸ்மிந் ஸ்வ ஶேஷத்வ நிவ்ருத்தியை யுண்டாக்கி,
அதுக்கு இசைந்தவாறே ஸ்வ ரக்ஷணே ஸ்வாந்வயத்தை நிவர்த்திப்பித்து,
அதுக்கு இசைந்தவாறே உபாயாந்தரங்களை விடுவித்து,
அதுக்கு இசைந்தவாறே ததேகோபாயனாம்படி பண்ணி,
அதுக்கு இசைந்தவாறே ஸ்வ வ்யாபாரத்தில் ஸ்வாதீந கர்த்ருத்வ நிவ்ருத்தியைப் பண்ணுவித்து,
அதுக்கு இசைந்தவாறே பாரதந்த்ரிய ப்ரதிபத்தியைப் பிறப்பித்து,
அதுக்கு இசைந்தவாறே ஸமஸ்த கல்யாண பரிபூர்ணனான தன்னை அநுபவிப்பித்து,
அநுபவ ஜநித ப்ரீதி காரித கைங்கர்யத்தை யுண்டாக்கி,
அக் கைங்கர்யத்தில் ஸ்வ போக்த்ருத்வ புத்தியைத் தவிர்ப்பிக்கை.

23-மாரிமழைமுழைஞ்சில்
இச்சா, க்ருபா ப்ரபாவம்.
பெண்களை ஸாந்த்வநம் பண்ணி யருளினான்;
அவ்வளவிலே, ‘நாங்கள் வந்த காரியத்தைக் கேட்டருள வேணும்’ என்கிறார்கள்.

24 அன்றிவ்வுலக மளந்தாய்
மங்களாஶாஸனம்
திருப்பள்ளி யறையில் நின்றும் திவ்ய ஸிம்ஹாஸநத்தளவும் நடக்கிற போதை
நடை யழகுக்குத் திருப் பல்லாண்டு பாடுகிறார்கள்.

25-ஒருத்தி மகனாய்
பகவல் லாப ப்ரார்த்தனை
“உங்களுக்கு வேண்டுவதென்?” என்ன, “ஏதேனும் ப்ரதி பந்தகம் உண்டேயாகிலும், நீயே போக்கி
எங்கள் து:க்கமெல்லாம் கெட விஷயீகரிக்க வேணும்” என்கிறார்கள்.

26-மாலே! மணிவண்‍ணா!
முக்தாத்மாவின் பகவத் ஸாம்யம்
பகவத் ஸம்ஶ்லேஷத்துக்கு வேண்டும் உபகரணங்களை வேண்டிக் கொள்ளுகிறார்கள்.
ஸத் ஸஹவாஸமும், பகவத் பாகவத பாரதந்த்ர்ய ஜ்ஞாநமும், கைங்கர்யமும்,
அக் கைங்கர்யத்தில் போக்த்ருத்வநிவ்ருத்தியும் வேணும்.

27-கூடாரைவெல்லும்
அநந்யபோக்யத்வம்
நோற்றால் பெறக் கடவ பேறு – விஶ்லேஷ வ்யஸநம் பிறவாத கூட்டரவாக வேணும்.
தோடே, செவிப்பூவே, பாடகமே; திரு மந்த்ரம் – ஆத்ம ஸ்வரூப யாதாத்ம்ய ஜ்ஞாந பரமாகையாலும்,
த்வயம் – உத்தர கண்டத்திற் சொல்லுகிற கைங்கர்யத்துக்குப் பூர்வ பாவியான பக்தி ப்ரதாநமாகையாலும்,
சரம ஶ்லோகம் – த்யாஜ்யாம்ஶத்தில் வைராக்ய ப்ரதாநமாகையாலும்,
ஜ்ஞாந பக்தி வைராக்யங்களைச் சொல்லுகிறது.

28-கறவைகள்பின்சென்று
உபாயம்
தங்களுடைய ஆகிஞ்சந்யத்தையும், அயோக்யதையையும் ஆவிஷ்கரித்து,
உபாய பூர்த்தியையும் தங்கள் ப்ராப்தியையும் முன்னிட்டு,
கீழ்ச் சொன்னவற்றுக்கெல்லாம் அநுதபித்து க்ஷமை கொண்டு,
எங்கள் ப்ராப்ய ஸித்திக்கு நீயே உபாயமாக வேணும் என்று அபேக்ஷிக்கிறார்கள்.

29-சிற்‍றஞ்சிறுகாலே
உபேயம்
ப்ராப்ய ருசியையும், ப்ராப்யந்தான் இன்னதென்னு மிடத்தையும்,
அத்தை அவனே தர வேணுமென்னு மிடத்தையும்
தங்கள் ப்ராப்ய த்வரையையும் அறிவிக்கிறார்கள்.
கைங்கர்யந் தானும் மங்களாஶாஸந ரூபமானபடியாலே மங்களா ஶாஸநத்துக்குப் பலமாக
அவன் கொடுக்க வேண்டியதும் இவர்கள் கொள்ள வேண்டியதும் மங்களாஶாஸநமே யென்றதாய்த்து.
ரஜஸ் தமஸ்ஸுக்களாலே கலங்கி தேஹாநுபந்திகளான த்ருஷ்ட பலங்களை அடியோங்கள் அபேக்ஷித்தாலும்
ஹித பரனான நீ கேள்வி கொள்ளவும் கடவை யல்லை, கொடுக்கக் கடவையுமல்லை என்றதாய்த்து.

30-வங்கக் கடல்கடைந்த
பலன்
இப் ப்ரபந்தம் கற்றார், பிராட்டியாலும், எம்பெருமானாலும் ஸர்வ காலமும் விஷயீ கரிக்கப் படுவர்கள் என்கிறார்கள்;
ஶ்ரிய:பதியாலே த்ருஷ்டாத்ருஷ்டங்களிரண்டிலும் பிறந்த ஜ்ஞாநத்துக்கு விச்சேதம் வாராதபடி
க்ருபையை லபித்து ஆநந்த நிர்ப்பரராயிருப்பர்கள்.

ஸ்ரீ மத்யை விஷ்ணு சித்தார்ய மநோ நந்தன ஹேதவே
நந்த நந்தன ஸூந்தர்யை கோதாயை நித்ய மங்களம் —

——————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம்
ஸ்ரீ தொட்டாசார்யர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ ஒண்ணான வான மா மலை ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ ஆயி சுவாமிகள் திருவடிகளே சரணம் சரணம்
ஸ்ரீ அழகிய மணவாள பெருமாள் நாயனார் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பூர்வாசார்யர்கள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ ஆழ்வார்கள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ விஷ்ணு புராணம் முதல் அத்யாயம் -9-அம்சத்தில் ஸ்ரீ இந்திர க்ருத ஸ்ரீ லஷ்மீ ஸ்தோத்ர-17-ஸ்லோகங்கள் –

December 14, 2019

இந்திர க்ருத ஸ்ரீ லஷ்மீ ஸ்தோத்ர ஸ்லோகம் -17-ஸ்லோகங்கள் –
நமாமி சர்வ லோகாநாம் ஜநநீ–தர்மபூத ஞானத்தை ஊட்டி வளர்ப்பவள்-ஞானப்பால் கொடுப்பவள் -என்றவாறு –
எற்றைக்கும் ஏழு ஏழு பிறவிக்கும் தாய் அன்றோ -ஆத்மா நித்யம் அன்றோ
அப்தி சம்பவாம்–பாற் கடலில் தோன்றி –
ஸ்ரீ யம்-பிராட்டியை -ஆறு வ்யுத்பத்தி உண்டே
உன்னித்ர பத்மாக்ஷிம் விஷ்ணு வக்ஷஸ்த்தலாம்
ஸ்ரீ ஸ்தவம் இதை ஒட்டியே தேசிகன்

பத்மாலயாம் -இருப்பிடம் -தாமரையில் -மார்த்வம்
பத்ம கராம் –திருக்கைகளில் தாமரை -அவனுக்கோ திவ்ய ஆயுதங்கள் தண்டிக்கவும் வேண்டுமே -நித்யம் அஞ்ஞாதே நிக்ரஹம்
பத்ம பத்ம நிபேஷனாம் -திருக் கண்களும் -தாமரை -துல்ய சீல வாயோ வ்ருத்தம் –
தாமரைக் கண்கள் பரம புருஷ லக்ஷணம் -பிராட்டியை சதா பஸ்யந்தி என்பதால் –

வந்தே பத்ம முகிம் திரு முகமும் தாமரை
தேவி -விளையாட்டுக்கு துணை -லோகமே லீலாவத்–பந்தார் விரலி -இன்புறும் இவ்விளையாட்டு உடையவன் ஒரு கையிலும்
பத்ம நாப பிரியாம் அஹம் —

த்வம் சித்தி -வெற்றிகளும் விஜய லஷ்மி
த்வம் ஸ்வதா -சக்தியும் நீயே வீர லஷ்மி ஸ்ரத்தையா தேவம் தேவயா அஸ்நுதே-
அப்ரமேயம் தத் தேஜா யஸ்ய யா ஜனகாத்மஜா — மாரீசனை விதைத்து -ராமாயணம் வளர்த்து –
த்வம் ஸ்வாஹா -உள் உணர்வும் இவளே தண்டிக்க வரும் பொழுது -பஞ்ச சரம் -மன்மத பானமாக மயக்கி-
அனுக்ரஹிக்க வரும் பொழுது பாரிஜாதம் போன்ற ஐந்தாகி வர்த்திப்பவள்
த்வம் ஸூதா பெண்ணமுது
த்வம் லோக பாவனை
த்வம் சந்த்யா ராத்ரி பிரபா –காலங்கள் உனது அதீனம்
த்வம் பூதாஹி தன லஷ்மி
நேதா
ஸ்ரத்தா -நம்பிக்கை -நாச்சியார் வஞ்சுளவல்லி தாயார்
த்வம் ஸரஸ்வதீ –ஞானம் லஷ்மீ வனஸ்பதி ப்ருஹஸ்பதி -பகவதி தாசீ -தேவ தேவ மஹிஷி

யஜ்ஜா வித்யை
மஹா வித்யை
குஹ்ய வித்யை
ஆத்ம வித்யை

இந்த்ரன் இழந்தவற்றை பெற்று 17 ஸ்லோகங்களால் ஸ்துதி செய்ய -இத்தை நம் பூர்வர்கள் நித்ய அனுசந்தானம்

இந்திர உவாச
நமச்யே சர்வ லோகானாம் ஜனனீம் அப்ஜ சம்பவாம்
ஸ்ரியம் உந் நிதர பத்மாஷீம் விஷ்ணு வஷஸ் ஸ்தல ஸ்திதாம் —1-19-117-

பத்மாலயாம் பத்மகராம் பத்மபத்ர நிபேஷணாம்
வந்தே பத்ம முகீம் தேவீம் பத்ம நாப ப்ரியாமஹம் –1-9-118-

த்வம் சித்திஸ் த்வம் ஸ்வதா ஸ்வாஹா ஸூ தா த்வம் லோக பாவனீ]
சாந்த்தா ராத்திரி பிரபா பூதிர்மேதா ஸ்ரத்தா சரஸ்வதீ–1-9-119-

யக்ஜ்ஞ வித்யா மஹா வித்யா குஹ்ய வித்யா ச சோபனே
ஆத்ம வித்யா ச தேவி தவம் விமுக்தி பலதாயினி –1-9-120-

ஆன்வீஷிகீ த்ரியிவர்த்தா தண்ட நீதிச் த்வமேவ ச
சௌம்ய சௌம்யர் ஜகத் ரூபைஸ் த்வயைத் தத் தேவி பூரிதம் –1-9-121-

கா த்வன்ய த்வாம்ருதே தேவி சர்வ யக்ஞமயம் வபு
அதா யாஸ்தே தேவ தேவஸ்ய யோகி சிந்த்யம் கதாம்ருத –1-9-122-

த்வயா தேவி பரித்யக்தம் சகலம் புவனத்ரயம்
வி நஷ்ட ப்ராயமபவத் த்வதே தா நீம் சமேதிதம் –1-9-123-

தாரா புத்ராஸ் ததாகார ஸூஹ்ருத் தான்ய தநாதிகம்
பவத் ஏதன் மஹா பாகோ நித்யம் த்வத் வீஷணா ந்ரூணாம் –1-9-124-

சரீர ஆரோக்யம் ஐஸ்வர்யம் அரிபஷ ஷய ஸூ கம்
தேவி த்வத் அத்ருஷ்டானாம் புருஷாணாம் ந துர்லபம் –1-9-125-

தவம் மாதா சர்வ லோகானாம் தேவ தேவோ ஹரி பிதா
த்வயை தத் விஷ்ணுனா சாம்ப ஜகத் வ்யாப்தம் சராசரம் –1-9-126

மா ந கோசம் ததா கோஷ்டம் மா க்ருஹம் பரிச்சதம்
மா சரீரம் களத்ரம் ச த்யஜேதா சர்வ பாவினி –1-9-127-

மா புத்ரான்மா ஸூ ஹ்ருத்வர்க்கம் மா பஸூன்மா விபூஷணம்
த்யஜேதா மம தேவஸ்ய விஷ்ணோர் வஷச்தல ஆலயே–1-9-128-

சத்வேன சத்ய சௌசாப்யாம் ததா சீலாதிபிர் குணை
த்யஜ்யந்தே தே நரா சத்ய சந்த்யத்தா யே த்வயாமலே –1-9-129-

த்வயா விலோகிதா சத்ய சீலாத் யௌர் அகிலைர் குணை
குலைஸ் வர்யைச்ச யுஜ்யந்தே புருஷா நிர்குணா அபி –1-9-130-

ச ஸ்லாக்ய ச குணீ தன்ய ச குலீனா ச புத்திமான்
ச ஸூ ர ச ச விக்ராந்தோ யஸ்த்வயா தேவி வீஷித–1-9-131-

சதௌ வைகுண்யம் ஆயாந்தி சீலாத்யா சகலா குணா
பராங்முகீ ஜகத்தாத்ரீ யஸ்ய தவம் விஷ்ணு வல்லபே –1-9-132-

ந தே வர்ணயிதம் சக்தா குணாஞ் ஜிஹ்வாபி வேதச
ப்ரசீத தேவி பத்மாஷி மாசாம்ஸ்த்யாஜீ கதாசன –1-9-133-

கஸ்யப பிரஜாபதி அதிதி -வாமனன் திருவவதரித்த பொழுது இவள் பதுமை
பரசுராமனுக்கு -தரணி
ஸ்ரீ தசரத சக்ரவர்த்தி -ஸ்ரீ சீதா பிராட்டி
ஸ்ரீ கிருஷ்ணன் -ஸ்ரீ ருக்மிணி பிராட்டி –

இதி சகல விபூத்யவாப்தி ஹேது ஸ்துதிரியம் இந்திர முகோத் கதா ஹி லஷ்ம்யா
அநு தினம் இஹ பட்யதேநருபிர்யைர் வசதி நே தேஷு கதாசித் அபய லஷ்மீ–

ஏவம் யதா ஜகத் ஸ்வாமீ தேவ தேவோ ஜனார்த்தனா
அவதாரம் கரோத்யேஷா ததா ஸ்ரீ ஸ் தத் சகாயி நீ
ராகவத்யே அபவத் சீதா ருக்மிணீ கிருஷ்ண ஜன்மனி
அன்யேஷூ சாவதாரேஷூ விஷ்ணோ ரேஷா சகாயி நீ
தேவத்வே தேவ தேஹேயம் மனுஷ்யத்வே ச மானுஷீ விஷ்ணோர்
தேஹானுரூபாம் வை கரோத்யேஷாத் மனச் தானும் –ஸ்ரீ விஷ்ணு புராணம் –1-9-140–142–143-

ஸ்ரீ நரசிம்ஹ அவதாரத்தில் பாதுகையாக ஸ்ரீ மகா லஷ்மி திருவவதரித்தாள்
இன்றும் மாலோல நரசிம்ஹன் திருவடிகளில் ஒரே பாதுகை தான் உண்டு
அநுரூப ரூப விபவை-விஷ்ணோ தேக அனுரூபாம்
இங்கும் அங்கும் திருமால் அன்றி இன்மை கண்டு -பிராப்ய தசையிலும் உபாய தசையிலும் மிதுனம் உண்டே
சம்ஸ்ரித்த ரஷணம்-சஹ தர்ம சாரிணி -சஹ தர்ம சரீ தவ
ஆகாரத் த்ரய சம்பன்னாம் -காரணமாம் உயிராகி அனைத்தும் காக்கும் கருணை முகில் கமலை உடன் இலங்குமாறும்-தேசிகன்

அஜ்ஞ்ஞாத நிக்ரஹை
நான் முன் சொன்னவன் தொட்ட தொட்ட இடம் இடம் தோன்றினான்
ஆயின் என் உயிர் நானே மாய்ப்பன் பின்பு வாழ்வு உகப்பன் என்னில்
அன்னவர்க்கு அடியேன் அல்லேன் என்றான் அறிவில் மிக்கான் -கம்பர்

————————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பராசர பகவான் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திரு வடிகளே சரணம்

ஸ்ரீ கீதா பாஷ்யம் -தமிழ் மொழி பெயர்ப்பு – -3-கர்ம யோகம் –

December 14, 2019

ஸ்ரீ மந் நாராயணன்
ஸ்வரூபம் -சத்யம் ஞானம் அநந்தம் ப்ரஹ்ம – ஆனந்தமயம் -ஸ்வாவாவிகம் -ஞானமயம் –
சதா ஏக ரூபம் -அவிகாராய ரூபாயா -ஸ்வரூப ஸ்வ பாவ விகாரங்கள் இல்லாமல் –
ஸ்வ இதர ஸமஸ்த வஸ்து விலக்ஷணன்
அகில ஹேய ப்ரத்யநீக-கல்யாணைக ஸ்வரூபன்
ரூபம் -திவ்ய மங்கள விக்ரஹம் –

ஸ்வ தர்ம ஜ்ஞ்ஞான வைராக்ய சாத்ய பக்த்யேக கோசர
நாராயண பரம் ப்ரஹ்ம கீதா சாஸ்திரே சமீரித– -1-

ஜீவனுக்கு உரிய தர்ம-கர்ம – ஞானங்களால் -மற்றும் வேறு விஷயங்களில் பற்று இல்லாத நிலையாலும்
பக்தி யோகம் கை கூடும் –
இப்படி பக்தி யோகத்துக்கு மட்டும் இலக்காகும் பர ப்ரஹ்மம் ஸ்ரீ மன் நாராயணன்
ஸ்ரீ பகவத் கீதையில் நன்றாக அருளிச் செய்யப் பட்டுள்ளன –

———————————-

ஜ்ஞான கர்மாத்மிகே நிஷ்டே யோக லஷ்யே ஸூ ஸம்ஸ்க்ருதே
ஆத்மாநுபூதி சித்த் யர்த்தே பூர்வ ஷட்கே ந சோதிதே — –2-

ஜீவாத்ம சாஷாத்காரம் -யோகத்தை அடையும் விதத்தையும் -ஆத்ம அனுபவத்தை அடையும் விதத்தையும்-
பகவத் விஷய ஞானம்-இதர விஷய வைராக்யம் -இவற்றால் அலங்கரிக்கப் பட்ட ஞான கர்ம யோகங்கள்
முதல் ஆறு அத்தியாயங்களில் அருளிச் செய்யப் பட்டன

———————————————————

அசக்த்யா லோக ரஷாயை குணேஷ் வாரோப்ய கர்த்ருதாம்
சர்வேஸ்வரே வா ந்யஸ் யோகதா த்ருதீயே கர்ம கார்யதா –ஸ்ரீ கீதார்த்த சங்க்ரஹம்–7-

உலகோரை ரஷிக்கும் பொருட்டு (3-26-வரை)-முக்குணங்களால் தூண்டப பட்டு செய்கிறோம் என்ற எண்ணத்துடன் –
பகவான் நியமிக்க -இவை தூண்ட
அடுத்த நிலை –பற்று அற்ற கர்ம யோகம் செய்பவன் -கர்ம யோகம் நேராக சாஷாத்காரம் கொடுக்கும் என்றவாறு –
லோக ரக்ஷணத்துக்காக -இந்திரியங்களை அடக்க முடியாதவர்க்கு கர்ம யோகம் -என்றவாறு –
பழகியது -சுலபம் -நழுவாதது -ஞான யோகியும் கர்ம யோகம் சரீரம் நிலைக்க -பல காரணங்கள் சொல்லி —

————–

அர்ஜுந உவாச
ஜ்யாயஸீ சேத்கர்மணஸ்தே மதா புத்திர் ஜநார்தந.–
தத்கிம் கர்மணி கோரே மாம் நியோஜயஸி கேஷவ—৷৷3.1৷-

அர்ஜுந உவாச = அர்ஜுன் கேட்கிறான்
ஜ்யாயஸீ = உயர்ந்தவனே
சேத் = அப்படியானால்
கர்மணா = காரியம் செய்வதுதான்
தே = உன்
மத = எண்ணம் என்றால்
புத்தி = புத்தி, ஞானம், அறிவு
ஜனார்த்தன = ஜனார்தனனே
தத் = அது
கிம் = ஏன்
கர்மணி = கர்மம் செய்வதில்
கோரே = கோரமான
மாம் = நீ
நியோஜயஸி =என்னை ஈடுபடுத்துகிறாய்
கேஸ²வ = கேசவா

ஞான யோகம் கர்ம யோகம் விட உயர்ந்தது என்பாய் ஆனால் -கோரமான கர்ம யோகத்தில் எதற்கு தள்ளுகிறாய் –
அவனுக்கு யுத்தம் தானே ஷத்ரியன்-அந்தணர் பஞ்ச கால பராயணர் -போலே –
ஜனார்த்தனன் -கேசவன் -இரண்டு திரு நாமங்கள் -ஜனங்களுக்கு நல்லதே செய்பவன் -பிறப்பை அறுத்து –
கேசவன் -ப்ரஹ்மாதிகள் ஸ்வாமி -சிலர் வாழ சிலர் தாழ -சிலர் மடிய காரணம் தள்ளலாமோ –
அணுவிலும் அணு-பரமாத்மா -ஸ்தூலா நியாயம் -அருந்ததி -சரீரம் சொல்லி -ஜீவாத்மா சொல்லி -பரமாத்மாவை காட்டி –

வ்யாமிஷ்ரேணேவ வாக்யேந புத்திம் மோஹயஸீவ மே—
ததேகம் வத நிஷ்சத்ய யேந ஷ்ரேயோஹமாப்நுயாம்—৷৷3.2৷৷

புத்தி குழம்பி -ஏத்தி –ஸ்ரேயஸ் கொடுக்குமோ அத்தை சொல்லு

சாங்க்ய யோகம் —அத்யாயம் -2-ஸ்லோகம் -49- சில நினைவுகள் உடன் கூடிய கர்ம யோகமே சிறந்தது என்றதே
தூரேண ஹ்யவரம் கர்ம புத்தியோகாத் தநஞ்ஜய.–
புத்தௌ ஷரணமந்விச்ச கரிபணா பலஹேதவ—৷৷2.49৷৷
தரித்ரர்கள் -தாழ்ந்த பலத்துக்காக பண்ணுபவர்கள் –
தியாக புத்தி உடன் செய்யும் கர்ம யோகமே உயர்ந்தது என்றவாறு –
புத்தியில் புகலிடமாக ஆஸ்ரயிப்பாய் -புத்தியை முதலில் சம்பாதித்து கொள் என்றவாறு

கர்மங்களைச் சொன்னபடி செய்தால் ஆத்மாவின் நினைவு நிலையாய் வரும் -அதனால் ஆத்ம சாஷாத்காரம் கிட்டும்
இடைவிடாத நினைவே சாஷாத்காரத்துக்கு உதவுமே
இடைவிடாமல் ஆத்மாவை நினைக்கும் காலத்தில் வேறு விஷயம் தோன்றாதே –
ஒரு விஷயமும் தோன்றாமல் இருந்தால் தானே ஆத்ம சாஷாத்காரம் கிட்டும் –
எல்லா விஷயங்களையும் கவனித்தால் தானே கர்மம் செய்ய முடியும்
ஒன்றையும் கவனியாமல் இருந்தால் சாஷாத்காரத்துக்கு உதவும் படி எப்படி கர்மங்களைச் செய்ய முடியும்
எல்லா இந்திரியங்களுக்கு வேலை கொடுக்கும் கர்மங்களைச் செய்வது ஆத்மாவை சாஷாத்காரத்துக்கு இடைஞ்சலாக அன்றோ இருக்கும்
நீர் குழம்பும் படி அருளிச் செய்ய மாட்டீர் எனது புத்தி குறைவால் நான் குழம்பி உள்ளேன்
சந்தேகம் தீர்ந்து தெளிவு பெற -இது தான் நீ செய்ய வேண்டியது -செய்து க்ஷேமம் அடைவாய் –
என்று அருளிச் செய்ய வேண்டும் என்கிறான்

——

ஸ்ரீ பகவாநுவாச-
லோகேஸ்மிந்த்விவிதா நிஷ்டா புரா ப்ரோக்தா மயாநக—
ஜ்ஞாநயோகேந ஸாம் க்யாநாம் கர்மயோகேந யோகிநாம்—৷৷3.3৷৷

இரண்டு பாதைகள் -முன்னாடியே சொல்லி உள்ளேன் -கர்ம யோகம் அநாதி -சாஸ்த்ர ஸம்மதம் –
மயா -தன் திரு மார்பை தொட்டு -அருளிச் செய்கிறான்
சர்வஞ்ஞன் -சர்வ சக்தன் பிராப்தன் பூர்ணன் -கருணையால் சொன்னேன் -லோகே –லோகோ பின்ன ருசி –
கர்ம யோகத்தால் பலன் -ஞான யோகத்தை விடலாம்
இந்திரியங்களை அடக்க முடியாதவனுக்கு கர்ம யோகம் -என்றும் -அடக்கியவனுக்கு ஞான யோகமும்

நான் முன்பு சொன்னதை நீ கவனிக்க வில்லை -இங்கு அனைவரும் ஓன்று போலே சக்தி உள்ளவர்கள் இல்லையே
மோக்ஷத்தில் ஆசை வந்த உடனே ஞான யோகம் செய்ய முடியாதே –
கர்மங்களை -அவற்றின் பலன் இல்லாமல் -பகவத் பிரீதி யர்த்தத்துக்காகவே செய்யவே அவன் திரு உள்ளம் புகுந்து –
ரஜஸ்ஸு தமஸ்ஸுக்களைப் போக்கி -இந்திரியங்களை மற்ற விஷயங்களில் போகாமல் அடக்கி
ஆத்மாவின் நினைவு நிலையாய் நிற்கும்படி செய்வான்
இப்படி மனஸு அடங்கின பின்பு தான் ஆத்மாவை நினைத்து -இடைவிடாமல் நினைத்து இருந்து
பின்பு – சாஷாத்காரம் கிட்டும்
ஆகையால் இந்திரியங்கள் அடங்கினவர்களுக்கு ஞான யோகமும் –
அடங்காதவர்களுக்கு கர்ம யோகமும் என்று பிரித்தே முன்பு சொன்னேன்
இந்திரியங்களை அடக்க அவை உதவும் -இடைஞ்சல் அல்ல -நீ கர்மங்களைச் செய்யா விடில் மனஸு அடங்காது –
ஞான யோகம் உன்னால் செய்ய முடியாது –
பலன்களில் ஆசை இல்லாமல் -பகவத் ப்ரீத்யர்த்தத்துக்காகவே என்று எண்ணி செய்வதால் திரு உள்ளம் உகந்து
மனசின் கலக்கத்தை போக்கி அருளுவார் என்று -2-47-என்றும் மீண்டும் -18-46-என்று அருளி மேலே -2-55-தொடங்கி
நான்கு ஸ்லோகங்களால் -ஞானயோகத்தை செய்வதை அருளிச் செய்கிறான் –

கர்மண்யேவாதிகாரஸ்தே மா பலேஷு கதாசந.–
மா கர்மபல ஹேதுர் பூர்மா தே ஸங்கோஸ்த்வ கர்மணி—৷৷2.47৷৷

அகர்மா -பண்ணாமல் இருப்பது –சங்கம் -கூட்டு -நினைக்காதே -செய்தே ஆக வேன்டும் –கர்மா பண்ணுவதில் தான் யோக்யதை —
பலம் எதிர்பார்க்காமல் -ஸ்வர்க்காதி பலன்களில் கண் வைக்காமல் -பலன் கிடைப்பது நம்மால் இல்லை -கார்ய காரண பாவ விசாரம் –
பஞ்ச பிராணன் இந்திரியங்கள் மனஸ் தேகம் ஆத்மா பரமாத்மா -ஐந்தும் சேர்ந்தே -காரியம் –
காரணம் நாமே என்ற நினைவு கூடாதே –
அகர்த்ருத்வ அனுசந்தானாம் -கர்த்ருத்வ -மமதா -பல -தியாகம் மூன்றும் வேண்டுமே-
பல தியாகம் – தாழ்ந்த பலன்களில் கண் வைக்காமல் – மமதா -என்னுடையது -கர்த்ருத்வம் -நான் பண்ணுவது-

ஸ்ரீ பகவாநுவாச–
ப்ரஜஹாதி யதா காமாந் ஸர்வாந் பார்த மநோ கதாந்.–
ஆத்மந்யேவாத்மநா துஷ்ட ஸ்தித ப்ரஜ்ஞஸ்த தோச்யதே—৷৷2.55৷৷

வசீகரம் -கடைசி நிலை -சர்வ ஆசைகளையும் விட்டு -ஆத்ம சாஷாத்காரம் தவிர –
மனசால் ஆத்மா இடமே செலுத்தி ஸந்தோஷம் அடைகிறான்

துகேஷ்வநுத் விக்நமநா ஸுகேஷு விகதஸ்பரிஹ-
வீத ராக பய க்ரோத ஸ்திததீர் முநிருச்யதே–৷৷2.56৷৷

ஏகேந்த்ரம் -மனன சீலன் முனி -ஆத்மா இடமே மனசை செலுத்தி -துக்கம் வந்தால் கலங்காமல் -சுகம் வந்தால் மகிழாமல் —
கீழே சுகம் துக்கம் -இங்கு சுக காரணம் -துக்க காரணம் –
ராகம் பயம் க்ரோதம் மூன்றையும் விட்டு –
அநாகதேஷூ ஸ்ப்ருஹ ராகம் -வர போகும் நல்லது பற்றி இனம் புரியாத ஆசை வருமே அது தான் ராகம்
பிரிய விஸ்லேஷம் அப்ரிய ஆகாத —பயம் முதல் நிலை -அப்புறம் துக்கம் –எதிர்பார்க்கும் நிலையில் –
க்ரோதம் -பயம் -வந்து -செய்யும் செயல்கள் தானே -ஆசை மாறி கோபம் -ஆசை இருந்தால் தானே கோபம் வரும் –

ய ஸர்வத்ராநபிஸ்நேஹஸ் தத்தத் ப்ராப்ய ஷுபாஷுபம்.–
நாபிநந்ததி ந த்வேஷ்டி தஸ்ய ப்ரஜ்ஞா ப்ரதிஷ்டிதா—–৷৷2.57৷

வ்யதிரேகம் -ஆசையை திருப்புவது –இவன் தான் ஞான யோகி -எங்கும் இருந்து -ஆசை காட்டாமல் உதாசீனனாக -பற்று அற்று –
ஸூபம் அஸூபம் -இன்பமோ துன்பமோ படாமல் -பக்குவப்பட்டு -புகழுவதும் இகழுவதும் இல்லாமல்

யதா ஸம் ஹரதே சாயம் கூர்மோங்காநீவ ஸர்வஷ–
இந்த்ரியாணீந் த்ரியார்தேப் யஸ்தஸ்ய ப்ரஜ்ஞா ப்ரதிஷ்டிதா—-৷৷2.58৷৷

தஸ்ய ப்ரஜ்ஞா ப்ரதிஷ்டிதா–அவனுடைய ஞானம் நிலை பெற்றது -மீண்டும் மீண்டும் வரும் –
ஆமை -போலே சுருக்கிக் கொண்டு -விஷயங்களில் இருந்து
இந்திரியங்களை இழுத்து –பகவத் விஷயம் மட்டுமே -கண்டு பேசி கேட்டு -சப்த்தாதிகளில் இருந்து இழுத்து –
அப்பொழுது தான் மனசை ஆத்மா இடம் செலுத்த முடியும் —

விஷயா விநிவர்தந்தே நிராஹாரஸ்ய தேஹிந–.
ரஸ வர்ஜம் ரஸோப்யஸ்ய பரம் தரிஷ்ட்வா நிவர்ததே–৷৷2.59৷৷

ஆத்ம தரிசனத்தால் இந்திரியங்கள் அடக்கலாம் -ஏக ஆஸ்ரய தோஷம் -ரசம் ஆசை தவிர விஷயங்கள் –
சாப்பாட்டை விலக்கி -ஆசை தவிர எல்லாம் போகும் -ஆசை கூட ஆத்மா சாஷாத்காரம் வந்தால் போகும் –
விஷயங்கள் ஆசையை தவிர விலகி போகும் -அதுவும் போகும்

———–

ந கர்மணாமநாரம்பாந்நைஷ்கர்ம்யம் புருஷோஷ்நுதே—-
ந ச ஸம் ந்யஸநாதேவ ஸம்த்திம் ஸமதிகச்சதி—৷৷3.4৷৷

நேராக ஞான யோகம் போக முடியாது -தொடங்கி பாதியில் விட்டாலும் ஞான யோகம் சித்திக்காது –
யுத்தம் -நேராக சொல்லாமல் கர்ம யோகம் –
நைஷ்கர்ம்யம் -செய்யாமல் இருக்கும் ஞான யோகம் -சன்யாசம் -விடுவது -அர்த்தித்தவம் ஆசை -வேன்டும் –
ஆசை இருந்தாலும் சக்தியும் வேன்டும் -வஸ்துவை அடைய ஆசையும் சக்தியும் வேண்டுமே –

மோக்ஷ ஆசை வந்த உடனே கர்மயோகம் பண்ணாமல் ஞான யோகம் பண்ண முடியாதே –
ஸாஸ்த்ர யுக்தமான கர்மங்களைச் செய்யாமலும் ஆரம்பித்த கர்மங்களை நிறுத்தியும் ஞான யோகம் செய்ய முடியாதே
பகவத் ப்ரீத்யர்த்தம் ஒன்றையே குறித்து கர்மங்களைச் செய்து அவனை சந்தோஷப்படுத்தா விடில்
நெடுநாளாக ஆர்ஜித்த பாப சமூகங்கள் போகாதே -போனால் ஒழிய ஆத்மா நினைவு வராதே
ஆகையால் கர்மயோகம் செய்யாவிடில் மனம் தெரியாது ஞான யோகம் பண்ண முடியாதே

———–

ந ஹி கஷ்சத் க்ஷணமபி ஜாது திஷ்டத்ய கர்மகரித்—
கார்யதே ஹ்யவஷ- கர்ம ஸர்வ-ப்ரகரிதிஜைர் குணை—৷৷3.5৷৷

ஓர் வினாடி யாவது கர்ம யோகம் இல்லாமல் சம்சாரி வாழவே முடியாதே -தூங்குபவனும் –தூங்குவதும் கர்மா தான் –
தூங்கினால் தான் புத்தி கூர்மை
இந்திரியங்கள் பின்பு – பிராணன் உண்டே தூங்கும் பொழுதும் -தெரியாமல் கார்யம் தானே நடந்து கொண்டே இருக்கும் –
கர்ம யோகம் தான் பழகி-பிறந்த குழந்தை அழுகிறதே -சன்யாசிகளும் விடாமல் செய்கிறார்கள் –
முக்குண வஸ்யர் -சத்வம் வெளுப்பு -ரஜஸ் தமஸ்–

முக்குணங்களும் இவனை இழுத்துக் கொண்டு போய் தங்கள் தங்கள் கார்யங்களைச் செய்யத் தூண்டும்
எனவே கர்மங்களை செய்து நெடுநாள் வருகிற பாபங்களைப் போக்கி குணங்களை வசப்படுத்திக் கொண்டு
மனசு தெளிந்தவனுக்குத் தான் ஞான யோகம் செய்ய முடியும் –

————

கர்மேந்த்ரியாணி ஸம் யம்ய ய ஆஸ்தே மநஸா ஸ்மரந்—
இந்த்ரியார்தாந் விமூடாத்மா மித்யாசார ஸ உச்யதே–৷৷3.6৷৷

நிந்தை -மனசை அடக்காமல் -இந்திரியங்களை மட்டும் அடக்கி பொய் ஆசாரம் -மூன்றும் –
சாஸ்த்ர ஸம்மதம் -படி இருக்க வேன்டும் -ஆர்ஜவ குணம்

அவிநிஷ்ட பாபதயா-பூர்வ ஜென்ம பாபங்கள் -அஜித பாஹ்ய அந்தக்கரண —
உள் இந்திரியங்களும் வெளி இந்திரியங்களும் வெல்லப்படாமல் இருக்குமே

கர்ம யோகத்தைச் செய்யாமல் -ஞான யோகம் செய்ய வேணும் என்று ஆரம்பித்தவன் அந்த எண்ணத்துக்குத் தப்பாக நடக்கிறான்
கர்மயோகம் செய்யாமல் பாபங்கள் போகாது -பாபங்கள் போகாமல் இந்திரியங்கள் அடங்காது -இந்திரியங்கள் விஷயங்களில் போகும் –
ஆகையால் அப்படிப்பட்டவன் ஆத்மாவை நினைக்க ஆரம்பித்தால்-மனசு நெடுநாளாக விஷயங்களிலேயே
ஆழ்ந்து இருக்கிறபடியால் ஆத்மாவில் செல்லாமல் விஷயங்களையே நினைத்துக் கொண்டு இருப்பன்
ஆத்மாவை நினைக்க ஆரம்பித்து விஷயங்களை நினைக்கிறபடியால் எண்ணத்துக்கு விரோதமாக நடக்கிறான்
நினைத்தது ஓன்று செய்கிறது ஓன்று -இப்படி இருப்பதும் கூட அறியாமல் ஆத்ம சாஷாத்காரத்துக்கு
இடைஞ்சலாக வேலையைச் செய்வதால் ஆசைப்பட்ட பிரயோஜனத்தை அடைய மாட்டான்

—————–

யஸ்த்விந்த்ரியாணி மநஸா நியம்யாரபதேர்ஜுந.–
கர்மேந்த்ரியை கர்மயோகமஸக்த ஸ விஷிஷ்யதே–৷৷3.7৷৷

புத்தி சாரதி – மனஸ் கடிவாளம் -அடங்கினால் தானே -இந்திரியங்கள் அடங்கும் –
கர்ம யோகம் ஆரம்பித்து -பற்று இல்லாமல் தொடங்கினால்-ஞான யோகி விட சிறந்தவன் –
பள்ள மடை -இதுவே -போகும் வழியில் போனால் திரும்ப கொண்டு வரலாமே -கண் பார்க்கட்டும் -வரையறைக்கு உள்பட்டு
பல காரணங்கள் -பழக்கம் சுலபம் ஞான யோகிக்கும் விட முடியாதே –
பல சொல்லி -மேலே கேட்ட கேள்விக்கு பதில் அடுத்து -நேராக அருளிச் செய்கிறான்

இந்திரியங்களுக்கு விஷயங்களில் போவதே வழக்கம் -அத்தை திடீர் என்று நிறுத்த முடியாதே –
அவைகள் இயற்கையாகவே வேலைகளில் படிந்து இருக்கின்றன -அவைகளை முன் செய்து பழகின வேலைகள் போன்ற
ஸாஸ்த்ர யுக்த கர்மங்களிலே செலுத்தி -ஆத்ம சாஷாத்காரத்தில் உள்ள ஆசையுடன் உள்ள மனசோடு –
கெட்ட கர்மங்களில் போகாமல் தடுத்து கீழே சொன்னபடி பலன்களில் ஆசை இல்லாமல் கர்ம யோகம்
செய்ய ஆரம்பிக்கிறவனுக்கு ஒரு கெடுதியும் நேராது -ஆரம்பித்த கர்மமும் ஒரு நாளும் நிற்காது –
ஆகையால் ஞான யோகம் செய்பவனைக் காட்டிலும் அவன் உயர்ந்தவன்
இரு கரையும் ஒத்துப் போகிற வெள்ளத்தில் நீந்தி அக்கரை போகிறவன் போலே ஞான யோகம் செய்பவன்
பாலம் சுற்றிப் போகிறவன் போலே கர்ம யோகம் செய்கிறவன்
நீந்துகிறவன் நடுவில் கை சளைத்தால் தொந்தரவு -மற்றவனுக்கு அது இல்லையே

———————–

நியதம் குரு கர்ம த்வம் கர்ம ஜ்யாயோ ஹ்யகர்மண–.
ஷரீரயாத்ராபி ச தே ந ப்ரஸித்த்யேத கர்மண—-৷৷3.8৷৷

கர்மத்தை நியதமாக செய் – உயர்ந்தது ஞான யோகத்தை விட -கேள்வியில் உள்ள சப்தம் ஜ்யாயோக –
சக்தி இருந்தாலும் கர்ம யோகம் அனுஷ்ட்டிக்க வேன்டும் –
நழுவவே நழுவாது கர்ம யோகம் – விட்ட இடத்தில் இருந்து தொடரலாம் அடுத்த ஜன்மாவில் –
ஞான யோகம் அப்படி இல்லை -சரீர யாத்ரைக்கும் இது வேன்டும்
சரீரம் தேகம் வாசி உண்டே – இளைத்து கொண்டு போவது சரீரம் –வளரும் உடம்பு தேகம்
இங்கு சரீர யாத்திரை -இளைத்து போகும் சந்யாசிக்கும் கர்ம யோகம் விட முடியாதே -என்கிறான்
சாதனத்தால் தான் ஆத்ம சாஷாத்காரம் –பிராணன் போனால் கிடைக்காது -அடுத்த ஜன்மா தான் கிடைக்கும்
சரீர யாத்திரை நம் கையில் இல்லையே -நின்றனர் இருந்தனர் –இத்யாதி எல்லாம் அவன் அதீனம் தானே
நியத கர்மா ஒரு வகை –அநியத கர்மா வேறு வகை
அவன் தூண்ட நாம் செய்கிறோம் என்ற நினைவால் செய்ய வேன்டும் -விநயம் உடன் இருக்க வேன்டும் –

முதலில் ஞான யோகம் செய்ய முடியாது -கர்ம யோகம் தான் செய்ய முடியும் என்றும்
கர்ம யோகத்தில் கெடுதி கிடையாது என்றும் சொல்லப்பட்டது –
இப்போது ஞான யோகம் செய்யத் தகுந்தவனும் -கர்ம யோகம் செய்வது லகுவாய் இருப்பதாலும் –
கெடுதி இல்லாமையாலும் -அவனுக்கு கர்மங்களை விட முடியாதாகையாலும் -கர்ம யோகத்தையே செய்ய வேணும் என்கிறார் –
உடம்போடு கூடி இருப்பவனுக்கு வேலை செய்வது வழக்கம் -பந்து அடிப்பதும் யாகம் செய்வதும் இந்திரியங்கள் வேலை –
அத்தை லகுவாக செய்யலாம் -நிற்காமல் நடக்கும்
த்யானம் -பழக்கம் இல்லை -செய்வது வருத்தம் -முழுக்க நடக்காது -எனவே தியானத்தை விட கர்மமே உயர்ந்தது —
கர்மத்தையே நீ செய் –கர்மங்களைச் செய்யும் போது ஆத்மாவை உள்ளபடி அறிந்து செய்ய வேண்டியதால்
நான் செய்யவில்லை என்கிற எண்ணம் இருக்க வேணும் என்று மேலே சொல்லப்படுகிறது –
அதாவது ஸம்ஸாரிகளின் வேலைகளைச் செய்வது ஆத்மாவுக்கு ஸ்வபாவம் இல்லை
உடம்போடு சேர்ந்து இருப்பதாலே செய்கிறான் -இப்படி நினைப்பதால் ஆத்மாவின் நினைவும் கர்மத்தில் அடங்கி இருக்கிறது –

பரம புருஷ ஆராதன விஷயஸ்ய கர்மண -ஸ்ரீ ராமானுஜர் -கடமைகளை செய்வதே ஆராதனம் -duty is worship

இந்த காரணத்தாலும் கர்ம யோகமே சிறந்தது -இதற்கு இன்னும் ஒரு காரணமும் உள்ளது –
உடம்பை வைத்துக் கொண்டு தானே ஞான யோகமும் செய்ய வேண்டும் -சாப்பிட்டால் தானே உடம்பு நிற்கும் –
ப்ரஹ்ம யஜ்ஜம் தேவ யஜ்ஜம் பித்ரு யஜ்ஜம் மனுஷ்ய யஜ்ஜம் பூத யஜ்ஜம் செய்து மிகுதியாக உள்ளவற்றை
உண்ண வேண்டும் -ஆகாரம் கெட்டுப் போனால் மனமும் கெட்டப் போகும் -மனசு கெட்டால் நல்ல நினைவும் வராது
மஹா யஜ்ஜ்ங்களைப் பண்ணாமல் உண்டால் பாபங்களை சாப்பிடுகிறான் என்று மேலே சொல்லப்படும்
ஆகையால் ஞான யோகம் செய்பவனுக்கு கர்மங்களை விட முடியாது –
ஆகையால் ஞான யோகம் செய்யத் தகுந்தவனும் இந்தக் காரணங்களால் கர்ம யோகத்தைச் செய்ய வேண்டும் –

—————————

யஜ்ஞார்தாத் கர்மணோந்யத்ர லோகோயம் கர்ம பந்தந–
ததர்தம் கர்ம கௌந்தேய முக்த சங்க ஸமாசர—৷৷3.9৷৷

கர்மா செய்ய செய்ய பாபங்களும் வருமே என்ன –
யஞ்ஞார்த்தமாக -ஆத்ம சாஷாத்காரம் -பற்று அற்ற கர்மா செய்தால் -பாபங்கள் கிட்டாது –
இதை தவிர மற்ற கர்மாக்கள் தாழ்வு -என்றவாறு -பலத்தை பொறுத்தே -உயர்ந்த அல்லது தாழ்ந்த கர்மா ஆகும்
வர்ணாஸ்ரம தர்மம் -சாஸ்த்ர சம்மத கர்மாக்கள் – பற்று அற்ற -சாஷாத்காரம் பலன் என்ற எண்ணம் வேன்டும் –

கர்மங்களைச் செய்ய வேணுமானால் பணம் சம்பாதிப்பது போன்றவற்றைச் செய்ய வேணுமே –
நான் கெட்டிக்காரன் பணம் என்னுடையது போன்ற கெட்ட எண்ணங்கள் வருமே -அதனால் மனம் கலங்குமே –
மோக்ஷம் வேணும் என்ற ஆசைப் பட்டவனுக்கும் கர்மங்களினுடைய வாசனையினாலே மேன்மேலும் சம்சாரம் தொடர்ந்து வருமே –
முன்னால் உண்டான வாசனை ஒழியாதே- இப்போது செய்கிற செயல்களால் அது வலுப்படும் என்றால்
யஜ்ஜாதி ஸாஸ்த்ர உசித கர்மங்களுக்கு பணம் சம்பாதிப்பது போன்ற செயல்களைச் செய்தால் புது வாசனை உண்டாகாது –
முன் வாசனையும் வலுப்படாது
பகவான் திரு உள்ள உகப்பே ஸூகத்துக்கு காரணம் -இந்த வேலைகள் அவன் திரு உள்ளத்தில் உகப்பை ஏற்படுத்துவதால்
எல்லையற்ற ஸூகத்தைக் கொடுக்கும் ஒழிய கெட்ட வாசனைகளை உண்டாக்காதே
விஷயாந்தரங்களுக்காக பணம் சம்பாதித்தால் தான் கெடுதி உண்டாக்கும்
ஆகையால் யஜ்ஜ்ங்களுக்காக வேலைகளைச் செய் -செய்யும் போது பகவத் பிரீதி உண்டாகும் –
அந்த வேலைகளே இதுக்கு பிரயோஜனம் -எனக்கு அல்ல என்ற எண்ணத்துடன் செய்
இதனால் அவன் ப்ரீதி அடைந்து -நீண்ட நாளாக உள்ள கர்ம வாசனையைப் போக்கி உன்னை
ஆத்மாவை உள்ளபடி பார்க்கும்படி செய்வான் –

————–

ஸஹயஜ்ஞா ப்ரஜா ஸரிஷ்ட்வா புரோவாச ப்ரஜாபதி–
அநேந ப்ரஸவிஷ்யத்வமேஷ வோஸ்த்விஷ்ட காமதுக்—-৷৷3.10৷৷

ஸஹயஜ்ஞா: = வேள்வியுடன்
ப்ரஜா: = மனித குலம்
ஸ்ருஷ்ட்வா = வெளிப்பட்டு
புரோ = முன்பு
உவாச = கூறினான்
ப்ரஜாபதி:| = பிரமன்
அநேந = இதன் மூலம்
ப்ரஸவிஷ்யத்வம் = நீங்கள் பெருகி வளர வேண்டும்
இஷா = அது
வ = உங்கள்
அஸ்து = இருக்க வேண்டும்
இஷ்டகாமதுக்= உங்களுக்கு வேண்டியதை எல்லாம் தரும் காமதேனுவாய் இருக்கும்

மேலே எழு ஸ்லோகங்களில் -யஞ்ஞத்துக்கு சொல்லி வைத்த கர்மங்கள்
பிரஜாபதி -பர ப்ரஹ்மம் -என்றவாறு இங்கு பொருள் என்று இவ்வுலகம் படைத்து -சோம்பாது –
இதுவே பயன் -அதே பயனுக்கு வாழ்தல் சிரமம் இருக்காதே -ஒரே கோணம் ஆகுமே
யாகங்கள் செய்து இஷ்டமான காமங்கள் பெற்று கொள்ளலாம் –
தேவர்கள் உதவுவார் -வருண ஜபம் விராட பர்வம் வாசித்தால் மழை பெய்யும் -என்பர் –சகல வேத அந்தராத்மா பர ப்ரஹ்மம்
ஆனந்தம் பட்டு பலன் -இதை நினைத்து பண்ணினால் கர்ம யோகம் ஆகும்

எந்த புருஷார்த்தத்தை விரும்புகிறவனும் மஹா யஜ்ஜ்ங்களை செய்து மிகுந்த ஆஹாரத்தையே தான் சாப்பிட வேணும்
அப்படிச் செய்யாமல் சாப்பிட்டு உடம்பை வளர்க்கிறவனுக்கு தோஷம் தான் உண்டு –
பிராகிருத பிரளயத்தில் நாம ரூப விபாகம் இல்லாமல் -சேதன அசேதன வாசி இல்லாமல்
ஸூஷ்மமாக அவன் இடம் ஒட்டிக் கொண்டு இருக்கும்
ஜீவாத்மாவுக்கு -கர்மங்கள் இருக்கும் வரையில் ஞானம் இந்த்ரியத்வாரா சென்று வஸ்துக்களை அறிகிறான்
கர்மங்கள் அடியோடு விட்டு மோக்ஷ தசையில் தான் இந்திரியங்கள் இல்லாமலே விஷயங்களில் பரவும்
பரம காருணிகன் ஆகையால் கரண களேபரங்களைக் கொடுத்து அருளி -தனது ப்ரீத்யர்த்தமாக யஜ்ஜாதிகளைப் பண்ணி
இந்த கர்மங்களால் நீங்கள் மோக்ஷம் அடையலாம் –
இந்த யஜ்ஜ்ங்கள் மோக்ஷத்தையும் அதுக்கு உதவியாக வஸ்துக்களையும் வேண்டியபடி கொடுக்கும் –
எல்லா தேவதைகளையும் உள்ளிருந்து நியமிப்பவன் தானே என்று –
பரம ஹம்ஸ விஞ்ஞான யோகம் —-7-20-ஸ்லோகம் தொடங்கி
நான்கு ஸ்லோகங்களில் மேலே அருளிச் செய்கிறான்

காமைஸ் தைஸ்தைர் ஹ்ருதஜ்ஞாநா: ப்ரபத்ந்தேந்ய தே₃வதா:|–
தம் தம் நியமமாஸ்தா₂யா-ப்ரக்ருத்யா நியதா: ஸ்வயா ॥—20-

ஸ்வயா ப்ரக்ருத்யா – தமது (முக் குணமயப் பொருள்கள் விஷயமான) அநாதி வாஸனையாலே,
நியதா: – எப்போதும் சேர்ந்திருக்கப் பெற்றவர்களாய்
தை தை: – (தம் வாஸநாகுணமான) அந்த அந்த
காமை: – (முக்குணமயமான) விரும்பப்படும் பொருள்களாலே
ஹ்ருதஜ்ஞாநா: – அபஹரிக்கப்பெற்ற (என் ஸ்வரூப விஷயமான) அறிவையுடையவர்களாய்
(அந்த அந்த பொருள்கள் கிடைப்பதற்காக)
அந்யதே₃வதா: – என்னைக் காட்டிலும் வேறுபட்ட தெய்வங்களை
தம் தம் நியமமாஸ்தா₂யா – அந்த அந்த தேவதைகளையே உகப்பிப்பதற்கு உறுப்பான நியமங்களைக் கைக்கொண்டு)
ப்ரபத்ந்தே – அவர்களையே ஆஶ்ரயித்து ஆராதிக்கிறார்கள்.
ஆரோக்யம் பாஸ்கரன் -ஞானம் ருத்ரன் -மோக்ஷம் ஜனார்த்தனன் –
மந்தி பாய் – கங்கா தீரத்தில் இருந்தும் தாகத்துக்கு கிணறு வெட்டுவாரைப் போலே –

யோ யோ யாம் யாம் தநும் ப₄க்த: ஶ்ரத்த₄யார்ச்சிது மிச்ச₂தி ।–
தஸ்ய தஸ்யாசலாம் ஶ்ரத்தா₄ம் தாமேவ வித₃த₃தா₄ம்யஹம் ॥—21-

ய: ய: ப₄க்த: – எந்த எந்த தே₃வதாந்த்ர பக்தன்
யாம் யாம் தநும்- (எனது) ஶரீரமான எந்த எந்த தேவதையை
ஶ்ரத்த₄யா – விஸ்வாஸத்தோடுஅர்ச்சிதும் – ஆராதிப்பதற்கு
இச்ச₂தி – விரும்புகிறானோ
தஸ்ய தஸ்ய – அந்த அந்த பக்தனுக்கு
தாம் ஏவ ஶ்ரத்தா₄ம் – அந்த (தேவதா விஷயமான) விஶ்வாஸத்தையே
அசலாம் – (இடையூறுகளால்) அசையாததாய்
அஹம் – நான்-
அந்தர்யாமி நான் என்ற ஞானத்துடன் ஆச்ரயிப்பவர் சீக்கிரம் விட்டு என்னையே கேட்டு வருவான் –
அப்படி இல்லாதவர்க்கும் – அசைக்க முடியாத ஸ்ரத்தையை நானே உண்டாக்குகிறேன் –
நாஸ்திகன் ஆக்க கூடாதே –கிரமத்தில் வருவார்களே – -கொண்டி மாட்டுக்கு தடி கட்டுவாரைப் போலே
நாட்டினான் தெய்வம் எங்கும் –சேட்டை தன் மடி அகத்து செல்வம் பார்த்து இருக்கின்றார்களே –

ஸ தயா ஷ்ரத்தயா யுக்தஸ் தஸ்யாராதந மீஹதே.—
லபதே ச தத காமாந் மயைவ விஹிதாந் ஹி தாந்৷৷—7.22৷৷

என்னை உள்ளபடி அறியாமல் தேவதாந்த்ர பஜனம் -செய்பவருக்கும் பலனை நானே அளிக்கிறேன் –
என் சரீரத்தை தானே ஆஸ்ரயிக்கிறான் என்று நான் அறிவேன் —
கொடியை பந்தலில் ஏற்றுவது போலே -குச்சியில் ஏற்றி – துளி பக்தி பிறந்ததும் -இவர்களை ஆஸ்ரயித்து
சில சில பலங்களை கொடுத்து –
அவரவர் இறையவர் குறையிலர் -அவரவர் -விதி வழி அடைய நின்றனர் –
அந்தர்யாமியாய் புகுந்து -மஹா க்ரமம்-அவன் திரு நாமம் –
சர்வ தேவதா நமஸ்காரம் கேசவம் பிரதி கச்சதி –ஆகாசம் நீர் கடலுக்கு போவது போலே –

அந்தவத்து ப₄லம் தேஷாம் தத்ப₄வத் யல்பமேத₄ஸாம் |–
தே₃வாந் தே₃வயஜோ யாந்தி மத் ப₄க்தா யாந்தி மாமபி॥—23-

யல்பமேத₄ஸாம் – புல்லறிவாளர்களான அவர்களுக்கு
அந்தவத்து ப₄லம் – அவ்வாராதன பலன் அல்பமாகவும் முடிவுடையதாகவும் ஆகிறது. ஏனெனில்
தே₃வயஜ: தே₃வாந் யாந்தி – தேவர்களை ஆராதிப்பவர்கள் தேவர்களையே அடைகிறார்கள்
மத்ப₄க்தா அபி மாம் யாந்தி – என்னுடைய பக்தர்களும் என்னையே அடைகினறனர்.-
என்னை பிரார்த்தித்து என்னையும் அடைகிறார்கள்
உம்மை தொகையால் -கீழ் அவர்கள் ஒன்றையே அடைகிறார்கள் -அபி சப்தம் -இத்தையே காட்டும் –
மோக்ஷம் பெற்றால் ஆரோக்யம் செல்வம் ஞானம் எல்லாமே கிடைத்ததாகுமே –
அவகாத ஸ்வேதம் போலே -நெல்லு குத்த வியர்வை தானே வருமே –
ஸூ ஆராதன் இவன் -அவர்கள் துராராதர்கள் -இந்திரன் -ஆத்ம ப்ரச்னம் -தலை குப்புற தள்ளி விட இவன்
ஐஸ்வர்யம் அக்ஷரம் பரமபதமும் கொடுத்தும்-வெட்க்கி இருந்து – அடியார்க்கு என் செய்வான் என்றே இருப்பவன் –
பெத்த பாவிக்கு விடப் போமோ –
என்னையும் –அடைந்து திரும்பாமல் பேரின்பம் பெறுகிறார்கள் –கீழே அடி பட்ட பந்து போலே திரும்ப வேண்டுமே —

————

தேவாந் பாவயதாநேந தே தேவா பாவயந்து வ–
பரஸ்பரம் பாவயந்த ஷ்ரேய பரமவாப்ஸ்யத—৷৷3.11৷৷

தேவாந் = தேவர்கள் , தெய்வீகத் தன்மை
பாவயதா = வெளிப்படும்படி
அநேந = அதன் மூலம்
தே = அவர்கள்
தேவா = தேவர்கள், தெய்வீக தன்மை
பாவயந்து = செயல் பட்டு
வ: = உங்களுக்கு
பரஸ்பரம் = ஒருவர்க்கு ஒருவர்
பாவயந்த: = உதவி
ஸ்ரேய: = உயர்நிலை, சிறப்பு நிலை
பரம = இறுதி நிலை, உன்னத நிலை
வாப்ஸ்யத = வாய்க்கப் பெறுவீர்கள்

தேவர்கள் -மழை கொடுப்பர் –ஹவிஸ் வாங்கி –பர்ஜன்ய தேவதை –
பரஸ்பரம் நல்லது செய்து கொண்டு ஸ்ரேயஸ் அடையலாம் –
தானே செய்ததாக சொல்லாமல் பிரஜாபதி -என்கிறான் –
ஆட்டு வாணியன் இல்லையே -சேதனன் சாஸ்திரம் அறிந்து செய்வான் –

யஜ்ஜம் -செய்தது வேறு காலத்தில் எப்படி பலனைக் கொடுக்கும் -ஞானத்தால் மோக்ஷம் என்பதால் –
ஸ்வர்க்காதிகளைக் கொடுக்கும் யஜ்ஜ்ங்களால் எப்படி மோக்ஷம் பெறலாம் –
சம்சாரிகள் வேண்டுகிற மோக்ஷ வ்யதிரிக்த பலங்களால் எவ்வாறு மோக்ஷம் பெறலாம் –
இவைகள் இடைஞ்சல்கள் அன்றோ -இவற்றுக்குப் பதில் இதில்
எனக்கு உடம்பாக தேவதைகளை இந்த யஜ்ஜ்ங்களினால் மகிழ்விக்க —
அவர்கள் மேலும் மகிழ வேண்டிய எல்லாவற்றையும் உங்களுக்கு கொடுப்பார்கள் –
இப்படி ஒருவருக்கு ஒருவர் உதவி செய்து கொண்டு மோக்ஷமாகிற உயர்ந்த புருஷார்த்தை பெறுங்கோள்

—————-

இஷ்டாந் போகாந்ஹி வோ தேவா தாஸ்யந்தே யஜ்ஞ பாவிதா–
தைர்தத்தாந ப்ரதாயைப்யோ யோ புங்க்தே ஸ்தேந ஏவ ஸ—৷৷3.12৷৷

இஷ்டாந் = வணங்கத்தக்க
போகாந் = போகங்களை
ஹி = அதனால்
வோ = உங்களுக்கு
தேவா = தேவர்கள்
தாஸ்யந்தே = தருவார்கள்
யஜ்ஞபாவிதா = யாகத்தில்
தைஹ் = அவர்களால்
தத்தா = தரப்பட்டவை
அப்ரதாயை = தராமல்
ப்யோ = அவர்களுக்கு
யோ = எவன்
புங்க்தே = அனுபவிக்கிறானோ
ஸ்தேந = திருடன்
ஏவ = நிச்சயமாக
ஸ: = அவன்

தனக்காக பயன் படுத்தி -தேவர்களுக்கு கொடுக்காமல் -இவன் தான் பெரிய திருடன் –

திருடு என்பது -ஒருவன் உடையதாய் -அவனது சுகத்துக்காகவே ஏற்பட்ட வஸ்துவை –
யாதொரு சம்பந்தம் இல்லாத இன்னொருவன் தன்னுடையது என்று எண்ணி உபயோகப்படுத்திக் கொள்வது போலே –
கீழ்ச் சொன்னபடி எனது உடம்பாக தேவதைகளை சந்தோஷப்படுத்தாமல் இருந்தால்
மோக்ஷம் ஸித்திக்காது மட்டும் இல்லை நரகம் ஸித்திக்கும்

—————–

யஜ்ஞ ஷிஷ்டாஷிந ஸந்தோ முச்யந்தே ஸர்வ கில்பிஷை-.
புஞ்ஜதே தே த்வகம் பாபாயே பசந்த்யாத்ம காரணாத்—৷৷3.13৷৷

யஜ்ஞஸிஷ்டாஸிந: = யாகத்தின் மீதியை
ஸந்தோ முச்யந்தே = உண்மையான, சந்யாசிகள்
ஸர்வகில்பிஷை:= அனைத்து பாவங்களிலும் இருந்து
புஞ்ஜதே = உண்கிறார்கள்
தே = அவர்கள்
து = அப்புறம்
அகஹம் = பாவம், துன்பம்
பாபா = பாவம் செய்பவர்கள்
யே = அவர்கள்
பசந்த்தி = அவர்கள் சமைக்கிறார்கள்
அத்மகாரணாத் = தங்களுக்காக

திருவாராதனம் பண்ணி -சேஷம் உண்பவன் -பாபம் போக்கி -இல்லாமல் இருந்தால் -உண்பது பாபங்களையே
இந்திராதி ஆத்மனா அவஸ்திதா பரம புருஷ ஆராதனம் –
அத்தையே விவரிக்கிறார் -இந்திராதி தேவதைகளுக்கு ஆத்மாவாய் இருக்கும் பகவத் ப்ரீத்யர்த்தமாகவே த்ரவ்யங்களை
அடைந்து சமைத்து கண்டு அருளிப் பண்ணி மிச்சம் உண்டு உடம்பை வளர்ப்பவர்களுக்கு
ஆத்ம சாஷாத்கார பிரதிபந்தங்களைப் போக்கி அருளுகிறார்
தங்கள் சுகத்துக்காகவே என்று சமைத்து உண்ணுவார்கள் பாபத்தையே உண்கிறார்கள் —
ஆத்ம சாஷாத்காரம் பற்றி யார் உபதேசித்தாலும் அவர்கள் மேல் கோபிப்பார்கள் –
நரகம் போவதற்காகவே இருக்கிறார்கள்

—————–

அந்நாத்பவந்தி பூதாநி பர்ஜந்யாதந்நஸம்பவ–
யஜ்ஞாத்பவதி பர்ஜந்யோ யஜ்ஞ கர்மஸமுத்பவ—৷৷3.14৷৷

அந்நாத் = உணவு
பவந்தி = இருக்கிறது
பூதாநி = உயிர்களுக்கு
பர்ஜந் = மழையின் மூலம்
அதந்நஸம்பவ: = உணவு சம்பவிக்கிறது; உருவாகிறது
யஜ்ஞாத் = வேள்வியினால்
பவதி = இருக்கிறது
பர்ஜந்யோ = மழையின்ய மூலம்
யாங்கய = வேள்வியின் மூலம்
கர்மஸமுத்பவ: = கர்மத்தை செய்வதால் உண்டாகிறது

அன்னத்தால் பூதங்கள் வாழலாம் -இங்கு சுழல் ஒன்றை அருளிச் செய்கிறான் –
பர்ஜன்யம் தேவதை அன்னத்துக்கு மழை
யாகங்கள் செய்தால் மழை -கர்மா தான் யாகம் -கர்மம் பண்ண சரீரம் -ஜீவாத்மா உள்ளே புகுந்து உடல் –
என்றவாறு -சக்கரம்

கர்ம ப்ரஹ்மோத்பவம் வித்தி ப்ரஹ்மாக்ஷரஸமுத்பவம்–
தஸ்மாத்ஸர்வகதம் ப்ரஹ்ம நித்யம் யஜ்ஞே ப்ரதிஷ்டிதம்—৷৷3.15৷৷

கர்ம = செயல்கள்
ப்ரஹ்மோத்பவம் = பிரம்மத்தில் இருந்து வருவது
வித்தி = என்று உணர்
ப்ரஹ்மம் = ப்ரம்மம்
அக்ஷர = அழியாத (க்ஷர என்றால் அழியக் கூடிய) =
ஸமுத்பவம்| = வெளிப்படுகிறது
தஸ்மாத் = எனவே
ஸர்வகதம் = எங்கும் நிறைந்த
ப்ரஹ்ம = பிரமம்
நித்யம் = நிரந்தரமாக இருக்கும்
யஜ்ஞே = யாகத்தில்
ப்ரதிஷ்டிதம் = நிலைத்து நிற்கிறது

சரீரம் எல்லாம் கர்மா எதிர்பார்த்து இருக்கும்

ஏவம் ப்ரவர்திதம் சக்ரம் நாநுவர்தயதீஹ ய–
அகாயுரிந்த்ரியாராமோ மோகம் பார்த ஸ ஜீவதி—৷৷3.16৷৷

ஏவம் = எனவே
ப்ரவர்திதம் சக்ரம்= ஒரு சுழற்சியில் இருக்கும்
நா = இல்லை
அனுவர்தயதி = நடக்கச் செய்தல்
இஹ = இங்கு
ய: = எவன்
அகாயு = பாவம் நிறைந்த
இந்ரிந்த்ரியாராமோ = இந்திரிய சுகங்களில்
மோகம் = ஆசை கொண்டு
பார்த = பார்த்தனே
ஸ = அவன்
ஜீவதி = வாழ்கிறான்

சக்கரம் அனுவர்த்தனம் பண்ண வேன்டும் -இல்லாதவன் வாழ்வது பாபம் -அவன் இந்த்ரியராமன் -ஆவான் –
மேலே மூன்று ஸ்லோகங்களால் கைவல்யார்த்தி பற்றி –

மறுபடியும் லோக அனுபவத்தாலும் -சாஸ்திரத்தாலும் எல்லாம் யஜ்ஜ்ங்களாலே வருகின்றன என்பதைக் காண்பித்துக் கொண்டு
யஜ்ஜ்ங்களைக் கட்டாயம் பண்ண வேண்டும் என்றும் பண்ணாவிட்டால் கெடுத்து உண்டாகும் என்றும் அருளிச் செய்கிறார்
உலகில் பிராணிகள் ஆஹாரத்தாலே தானே வளர்கின்றன -ஆஹார விருத்திக்கு மழை வேணுமே -இது ப்ரத்யக்ஷம் –
யஜ்ஜ்ங்களால் மழை என்று சாஸ்திரம் சொல்லும் -யஜ்ஜ்ங்கள் பணம் சம்பாதிப்பது போன்ற வேலைகளால் உண்டாகிறது –
அந்த வேலை உடம்பால் உண்டாகிறது -உடம்பு இல்லாவிடில் வேலையைச் செய்ய முடியாதே-
உடம்பு உண்டு தண்ணீரை குடித்து யஜ்ஜம் செய்ய ஆத்மாவுக்கு உதவிக்கிறதே –
எல்லா உடல்களும் யஜ்ஜ்ங்களால் உண்டாகின்றன -இப்படி ஒன்றால் ஓன்று சக்கரம் –
ஆத்மாவைப் பார்த்து சுகப்படாமல் இந்த்ரியங்களைப் பார்த்து சுகப்படுபவன் ரஜோ குணம் தமோ குணம் மேலிட்டு –
ஆத்மாவைப் பற்றிய பேச்சால் அலுப்பு உண்டாகி விஷயாந்தர சுகங்களையே அனுபவிக்கிறான்
ஆகையால் ஞானயோகம் முதலியவைகளை ஆரம்பித்தாலும் முறைப்படி செய்யாமல் பிரயத்தனம் வீணாகும் –
அவன் இருந்தும் பிரயோஜனம் இல்லை –

————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ ஆளவந்தார் அருளிச் செய்த ஸ்ரீ கீதார்த்த ஸங்க்ரஹம் ஸ்லோகங்கள் /ஸ்ரீ வாதிகேஸரி அழகியமணவாளச் சீயர் அருளிச் செய்த “பகவத் கீதை வெண்பா”/ ஸ்ரீ கீதாஶ்லோகார்த்த ஸாரம் —

December 14, 2019

ஸ்ரீ: எம்பெருமானாரருளிச் செய்த ஸ்ரீ: ஆளவந்தார் தனியன்

யத் பதாம்போருஹ த்யாந வித்வஸ்தா ஶேஷ கல்மஷ:
வஸ்துதா முபயாதோஹம் யாமுநேயம் நமாமிதம்

1. கண்ணாநீ பார்த்தர்க்குக் காத்தற் கினிதுரைத்த
திண்ணார் திறபருளுஞ் சீர்கீதை – யெண்ணாரு
நன்பொருளை யெங்கட்கு நாதா வருளுதலாற்
புன்பொருளிற் போகா புலன்.

2. மாதவன் மாமாது மாறனும்வண் பூதூர்வாழ்
போதமுனி யுந்தந்தம் பொன்னடிக்ண் – மீதருள
வுச்சிமேற் கொண்டே யுயர்கீதை மெய்ப்பொருளை
நச்சிமேற் கொண்டுரைப்பன் னான்.

3. நாத னருள்புரியு நற்கீ தைன்படியை
வேதம் வகுத்த வியன்முனிவன் – பூதலத்துப்
பாரதத்தே காட்டும் பதினெட்டோத் தும்பகர்வன்
சீர்த்தழைத்த வெண்பாத் தெரிந்து.

4. வேதப் பொருளை விசயர்க்குத் தேர்மீது
போதப் புயன்ற புகழ்மாயன் – கீதைப்
பொருள்விரித்த பூதூர்மன் பொன்னருளால் வந்த
தெருள்விரிப்ப னந்தமிழாற் றேர்ந்து.

5. தேயத்தோ ருய்யத் திருமா லருள்கீதை
நேயத்தோ ரெண்ணெய் நிறைவித்துத் – தூய
தெருணூல தேபெரிய தீபத்தை நெஞ்சி
லிருணூற வேற்றுகேன் யான்.

———————

ஸ்ரீமத்பகவத்கீதா ஸாரம்:
கீதாஸாரம்:
1) ஸ்வதர்ம ஜ்ஞாந வைராக்ய ஸாத்ய பக்த்யேக கோசர:
நாராயண: பரம் ப்ரஹ்ம கீதாஶாஸ்த்ரே ஸமீரித:

ஸ்வதர்மஜ்ஞாந வைராக்ய ஸாத்ய பக்த்யேக கோசர: –
தன் (வர்ணாச்ரம) தர்மரூபமாயிருக்கும் கர்மயோகத்தாலும், ஞானயோகத்தாலும்,
இதரவிஷயங்களில் பற்றின்மையாலும் உண்டாகும் பக்தியொன்றுக்கே விஷயமாகுமவனாய்
பரம்ப்ரஹ்ம – பரப்ரஹ்மமான, நாராயண: – நாராயணன்,
கீதாஶாஸ்த்ரே – கீதையாகிற ஶாஸ்திரத்தில்,
ஸமீரித: – அறிவிக்கப்பட்டுள்ளான

6. சுத்தியாற் னெஞ்சிற்றந் தொல்கரும ஞானத்தா
லத்தியா தொன்றை யறந்துறந்தோர் – பத்தியா
னண்ணும் பரமனா நாரணனே நற்கீதைக்
கெண்ணும் பொருளா மிசைந்து.

தொல் கரும ஞானத்தால் – பழமையான உபாயங்களான கர்ம யோகத்தாலும், ஞான யோகத்தாலும்,
சுத்தி ஆர் தம் நெஞ்சில் – பரிசுத்தி யடைந்த தம் நெஞ்சில், ஒன்றை அ(ர்)த்தியாது –
(பகவத் கைங்கர்யம் தவிர) வேறொன்றை விரும்பாது,
அறத்துறந்தோர் – மிகவும் வைராக்யமுடையவர்கள்,
பத்தியால் – (முற்கூறிய கர்மஜ்ஞாநவைராக்யங்களாலே உண்டான) பக்தியோகத்தாலே,
நண்ணும் – அடையும்,
பரமன் – பரப்ரஹ்மமாகிற, நாரணனே – நாராயணனே,
நற்கீதைக்கு – மிகச் சிறந்த பகவத் கீதைக்கு,
இசைந்து – (அறிவாளிகள் அனைவரும்) அங்கீகரித்து,
எண்ணும் பொருளாம் – நினைக்கும் பொருளாவான்.

————————–

பூர்வ ஷட்கம்:

2) ஜ்ஞாந கர்மாத்மிகே நிஷ்டே யோக லக்ஷ்யே ஸுஸம்ஸ்க்ருதே
ஆத்மாநுபூதி ஸித்த்யர்த்தே பூர்வஷட்கேந சோதிதே

ஸுஸம்ஸ்க்ருதே – (சேஷத்வஜ்ஞாநம், இதரவிஷயங்களில் பற்றின்மை முதலான புத்திவிஶேஷங்களாலே)
நன்கு அலங்கரிக்கப்பட்ட,
ஜ்ஞாநகர்மாத்மிகே நிஷ்டே – ஞானயோகமும், கர்மயோகமும்,
யோகலக்ஷ்யே – (ஆத்மஸாக்ஷாத்காரமாகிற) யோகத்தை அடையும் பொருட்டு்ம்,
ஆத்மாநுபூதி ஸித்த்யர்த்தே – (அதற்குப்பின்) ஆத்மாநுபவத்தை அடையும் பொருட்டும்,
பூர்வஷட்கேந – (கீதையின்) முதல் ஆறு அத்தியாயங்களாலும், சோதிதே – விதிக்கப்பட்டன.

7. ஞானங் கரும நலஞ்சேர் நிலையதனை
யான மனயோகத் தாராய்ந்திங் – கூனமறத்
தன்னா ருயிருணருந் தன்மையினை நற்கீதை
முன்னாறோத் தோதும் முயன்று.

ஞானம் கரும நலம் சேர் நிலையதனை – ஞானயோகத்தையும், கர்மயோகத்தையும்,
ஆன மனயோகத்து – (அவற்றின் காரியம்) ஆன மானஸ ஸாக்ஷாத்காரத்தின் பொருட்டு,
ஆராய்ந்து – எண்ணி அநுஷ்டித்து,
இங்கு – இவ்வுலகிலேயே,
ஊனம் அற – குறைவில்லாமல்,
தன் ஆர் உயிர் உணரும் தன்மையினை – தன் ஆத்மாவை அநுபவிக்கும் தன்மையை,
நற்கீதை – மிகச்சிறந்த கீதையின்,
முன் ஆறு ஓத்து – முற்பட்ட ஆறு அத்தியாயங்கள்,
முயன்று ஓதும் – உறுதியுடன் ஓதும்.

மத்யம ஷட்கம்:
3) மத்யமே பகவத்தத்த்வ யாதாத்ம்யாவாப்தி ஸித்தயே
ஜ்ஞாநகர்மாபி நிர்வர்த்யோ பக்தியோக:ப்ரகீர்த்தித:

மத்யமே – நடு ஆறு அத்தியாயங்களில்,
பகவத் தத்வ யாதாத்ம்ய அவாப்தி ஸித்தயே – பகவானாகிற பரதத்துவத்தின் உண்மையான அநுபவம் உண்டாவதன் பொருட்டு,
ஜ்ஞாந கர்ம அபிநிர்வர்த்ய: – ஜ்ஞாநத்தோடு கூடிய கர்ம யோகத்தாலே உண்டாகும்,
பக்தியோக: – பக்தியோகம்,
ப்ரகீர்த்தித: – சொல்லப்படுகிறது.

8. உள்ளபடி யிறையை யுற்றெய்த முற்றறஞ்சேர்
தெள்ளறிவில் வந்து திகழ் பத்தி – வெள்ள
நடையாடும் யோகத்தை நாதனருள் கீதை
யிடையாறோத் தோது மெடுத்து.

உள்ளபடி இறையை உற்று எய்த – பகவானை யுள்ளபடி அறிந்து அநுபவிப்பதன் பொருட்டு,
முற்று அறம் சேர் தெள் அறிவில் வந்து திகழ் – பரிபூர்ணமான கர்மயோகத்தோடு கூடிய தெளிந்த ஞானத்தால் உண்டாகும்,
பத்திவெள்ளம் நடையாடும் யோகத்தை – பக்திவெள்ளம் பெருகி வரும் பக்தியோகத்தை,
நாதன் அருள் கீதை – ஸர்வ ஸ்வாமியான பகவான் அருளும் கீதையின்,
இடை ஆறு ஓத்து – இடையிலுள்ள ஆறு அத்தியாயங்கள்,
எடுத்து ஓதும் – அறியும்படி ஓதும்.

அந்திம ஷட்கம்:
4) ப்ரதாந புருஷ வ்யக்த ஸர்வேஶ்வர விவேசநம்
கர்ம தீர் பக்தி ரித்யாதி: பூர்வ ஶேஷோந்தி மோதித:

ப்ரதாந புருஷவ்யக்த ஸர்வேஶ்வர விவேசநம் – ஸுக்ஷ்மமான மூலப்ரக்ருதி, ஜீவன், ஸ்தூலமான அசேதனம்,
ஸர்வேஶ்வரன் ஆகியவற்றைப் பற்றிய விளக்கமும்,
கர்ம: – கர்மயோகமும்,
தீ: – ஜ்ஞாநயோகமும்,
பக்தி: – பக்தியோகமும்,
இத்யாதி: – இவற்றை அநுஷ்டிக்கும் முறை முதலானவையும், (ஆகிய இவற்றில்)
பூர்வஶேஷ: – முன் அத்தியாயங்களில் சொல்லாமல் விடப்பட்டவை,
அந்திமோதித: – கடைசி ஆறு அத்தியாயங்களிலும் சொல்லப்பட்டன.

9. கருமமறி வன்பிவற்றின் கண்ணார் தெளிவில்
வருஞ்சித் தசிதிறையோன் மாட்சி – யருமையற
வென்னாதன் றந்த வெழிற்கீதை வேதாந்தப்
பின்னாறோத் தோதும் பெயர்ந்து.

கருமம் அறிவு அன்பு இவற்றின் கண் ஆர் தெளிவில் வரும் – கர்மயோகம், ஞானயோகம், பக்தியோகம் ஆகிய
இவற்றினால் வரும் தெளிவினாலே அறியப்படும்,
சித்து அசித்து இறையோன் மாட்சி – சேதனம், (ஸூக்ஷ்ம,ஸ்தூலரூபமான) அசேதனம், ஸர்வேச்வரன் ஆகியவற்றின் பெருமையை,
அருமை அற – சிரமம் இல்லாமல்,
என் நாதன் தந்த எழில் கீதை வேதாந்த – என் ஸ்வாமியான கண்ணன் அருளிய அழகிய கீதையாகிற உபநிஷத்தின்,
பின் ஆறு ஓத்து – பின் ஆறு அத்தியாயங்களும், பெயர்ந்து ஓதும் – (முன் சொல்லப்படாத அம்சங்களை) மறுபடியும் ஓதும்.

10. தானமுடன் றீர்த்தந் தவம்பிரித லைவேள்வி
யனமுத லாறு மறமிறைவற் – கேநயந்த
தன்மையாற் றன்னகத்தைச் சங்கமபயன்றுறத்தல்
கன்மயோ கத்தின் கணக்கு.

தானமுடன் தீர்த்தம் தவம் புரிதல் ஐவேள்வி ஆன்முதல் ஆறும் அறம் – தானமளித்தல், தீர்த்தமாடுதல், தவம் செய்தல்,
பஞ்ச மஹா யஜ்ஞங்களை அநுஷ்டித்தல் முதலான ஸாதனங்கள் கர்மம் எனப்படுகின்றன.
இறைவற்கே நயந்த தன்மையால் – (இக்கர்மங்களை) ஸர்வேச்வரனுக்குக் கைங்கர்யமாகவே செய்யும் தன்மையால்,
சங்கம பயன் துறத்தல் – (இவற்றில்) பற்றையும், பலனையும் விடுவது,
கன்ம யோகத்தின் கணக்கு – கர்மயோகத்தின் ஸ்வரூபமாகும்.

11. அற்ற முரைக்கி லதுகேண்மி னம்புயத்தாள்
கொற்றவனை நெஞ்சிற் குடியிருத்தி – மற்றொன்றை
யத்தியா தொன்று மவன்பா னலம்புனைதல்
பத்தியோ கத்தின் படி.

அற்றம் உரைக்கில் – உண்மையை உரக்கச் சொன்னால்,
அது கேண்மின் – அதைச் சொல்லுகிறேன் கேளுங்கள்;
அம்புயத்தாள் கொற்றவனை – லக்ஷ்மீ நாதனை,
நெஞ்சில் குடியிருத்தி – நெஞ்சில் அமைத்து,
மற்றொன்றை அ(ர்)த்தியாது – வேறு பலன்களை விரும்பாமல்,
ஒன்றும் அவன் பால் – நம்மிடம் பொருந்தும் அவனிடம்,
நலம் புனைதல் – தியானம், அர்ச்சனம் முதலானவற்றைச் செய்வது,
பத்தியோகத்தின் படி – பக்தியோகத்தின் ஸ்வரூபமாகும்.

12. புலன் பொறியை நீக்கித்தம் புத்தியினிற் செம்மை
யலம்புரிவார்க் குற்றவுயிர் மாட்சி – நலம்புனைந்து
மானயோ கத்திறையை மன்னுநிலை காண்பதே
ஞானயோ கத்தி னலம்.

புலன் பொறியை நீக்கி – விஷயங்களில் மேயாதபடி இந்திரியங்களைத் தவிர்த்து,
தம் புத்தியினில் – தம் நெஞ்சில்,
செம்மை அலம்புரிவார்க்கு – நேர்மைக் குணத்தை மிகுதியாக உடையவர்களுக்கு,
உற்ற – தோன்றும்,
உயிர் மாட்சி நலம் புனைந்து – உயிரின் பெருமையிலே நன்றாக வூன்றி,
மான யோகத்து – யோகமுறைகளினாலே,
இறையை – (தேஹத்துக்கு) ஈச்வரனான ஜீவனுடைய,
மன்னு நிலை – நிலைக்கும் நிலையை,
காண்பதே – அனுபவித்தலே,
ஞான யோகத்தின் நலம் – ஞான யோகத்தின் ஸ்வரூபமாகும்.

13. இந்த வகை யமைந்த யோகங்க ளிம்மூன்றுந்
தந்த மிடையிற் றனித்தனிசே – ரந்தமிலா
வானந்த வின்பத் தணையநெறி யாகுமே
மானந் தருமியல்பால் வாய்ந்து.

ஆய்ந்து மானம் தரும் இயல்வால் – ஆராய்ந்து பார்த்த பிரமாணங்கள் சொல்லுகிறபடி,
இந்த வகை அமைந்த யோகங்கள் இம்மூன்றும் – இப்படிப்பட்ட தன்மைகளையுடைய இந்த மூன்று யோகங்களும்,
தந்தம் இடையே தனித்தனிசேர் – ஒவ்வொரு யோகமும் மற்ற இரு யோகங்களோடு தனித்தனியாகச் சேர்ந்திருப்பதன் மூலம்,
அந்தம் இலா ஆனந்த இன்பத்து அணைய நெறி ஆகுமே – அந்தமில் பேரின்பத்தை அடைய உபாயங்களாகும்.

———————————-

1: அர்ஜுன விஷாத யோகம்:

5) அஸ்தாந ஸ்நேஹ காருண்ய தர்மாதர்மதியாகுலம்
பார்த்தம்ப்ரபந்நமுத்திஶ்ய ஶாஸ்த்ராவதரணம்க்ருதம்

அஸ்தாந ஸ்நேஹ காருண்ய தர்மாதர்மதியா – தகாத பந்துக்களிடம் பற்றினாலும், கருணையினாலும்,
உண்டான தர்மத்தில் அதர்ம புத்தியாலே,
ஆகுலம் – கலங்கி நிற்பவனாய்,
ப்ரபந்நம் – சரணமடைந்தவனான,
பார்த்தம் உத்திஶ்ய – அர்ஜுனனைக் குறித்து,
ஶாஸ்த்ராவதரணம்க்ருதம் – கீதாசாஸ்த்ரம் (முதலத்தியாயத்தில்) சொல்லப்பட்டது.

வேண்டிடத்தி லன்றி வெறுத்து நலமிரக்கம்
பூண்டவற்றைப் பொல்லாப் புலமென்று – மீன்டகன்று
சுற்றமது நோக்கியே சோகித்த தேர்விச
னுற்றமயல் சொல்லுமுத லோத்து.

வேண்டிடத்தில் அன்றி – தகாத இடத்தில்,
நலம் இரக்கம் பூண்டு – அன்பையையும் கருணையையும் கொண்டு,
வெறுத்து – (யுத்தம் முதலான ஸ்வதர்மங்களை) வெறுத்து,
அவற்றை – அந்த ஸ்வதர்மங்களை,
பொல்லா புலம் என்று – தர்மம் அல்லாதவை என்று கூறி,
மீண்டு அகன்று – (யுத்தத்திலிருந்து) மீண்டு விலகிப்போய்,
சுற்றம் அது நோக்கியே – (பற்று வைக்கத் தகாத) அந்த உறவினர்களைப் பார்த்து,
சோகித்த – வருத்தமுற்ற,
தேர் விசயன் – தேரிலுள்ள அர்ஜுனன்,
உற்ற – அடைந்த,
மயல் – மயக்கத்தை,
முதல் ஓத்து சொல்லும் – முதல் அத்தியாயம் உரைக்கும்.

————-

2: ஸாங்க்ய யோகம்:

6) நித்யாத்மாஸங்ககர்மேஹாகோசரா ஸாங்க்யயோகதீ:
த்விதீயேஸ்திததீலக்ஷாப்ரோக்தா தந்மோஹஶாந்தயே

நித்ய ஆத்ம அஸங்க கர்ம ஈஹா கோசரா – நித்யமான ஆத்ம தத்துவமென்ன, பற்றற்ற கர்மாநுஷ்டானமென்ன
இவற்றை விஷயமாகக் கொண்டதாய்,
ஸ்திததீ லக்ஷா – ஸ்திதப்ரஜ்ஞ தசையை லக்ஷியமாகக் கொண்டதான,
ஸாங்க்ய யோகதீ – ஆத்மஜ்ஞானமும், கர்மயோகத்தைப் பற்றிய அறிவும்,
தந் மோஹ ஶாந்தயே – அர்ஜுனனின் மயக்கம் நீங்குவதற்காக,
த்விதீயே – இரண்டாம் அத்தியாயத்தில்,
ப்ரோக்தா – உபதேசிக்கப்படுகிறது.

மேலிரண்டா மோத்தால் விசயன் வெறுப்பகற்றக்
கோலி யுயிருடலின் கூற்றிவைகள் – காலியுடன்
போமாயன் மன்னுயிர்கள் பொன்றாமை முன்னகமா
மாமாயன் சொன்னான் மகிழ்ந்து.

காலியுடன் போம் ஆயன் – பசுக்களின் பின் போகும் இடையனும்,
மா மாயன் – பேராச்சிரியமான ஸ்வரூப ரூப குண விபூதிகளை யுடையவனுமான கண்ணன்,
விசயன் வெறுப்பு அகற்றக் கோலி – அர்ஜுனனுக்கு (யுத்தத்தினாலுண்டான) வெறுப்பை நீக்க நினைத்து,
மன் உயிரின் பொன்றாமை முன்னகமா – நிலை நிற்கும் ஆத்மாவின் ஆத்மாவின் அழியாமையை முன்னிட்டுக் கொண்டு,
உயிர் உடலின் கூற்றிவைகள் – உயிரினுடையவும், உடலினுடையவும் (அழியாமை, அழியும் தன்மை முதலான) இத்தன்மைகளை,
மேல் இரண்டாம் ஓத்தால் – அடுத்ததான இரண்டாமத்தியாயத் தால், மகிழ்ந்து சொன்னான் – மகிழ்ச்சியுடன் உபதேசித்தான்.

கீதாஶ்லோகார்த்தச் சுருக்கம்:
முதலத்தியாயமும், இரண்டாமத்தியாயத்தில் பத்து ஶ்லோகங்கள் முடியவும்
சாஸ்திரம் அவதரித்த சந்தர்ப்பத்தைக் கூறும் அவதாரிகை யாகிறது.

11-13: ப்ராப்யமான ஆத்மா நித்யமானது; ப்ராப்தி விரோதியான சரீரம் அநித்யமானது.
14-15: ப்ராப்திக்கு உபாயமான யுத்தம் முதலான கர்மங்களை அநுஷ்டிப்பதால் ஏற்படும் இன்ப துன்பம் முதலானவற்றைப்
பொறுத்துக் கொள்ளுகிறவனே மோக்ஷமடையலாம்.
16-25: உத்பத்தி, விநாஶம், பரிணாமம் முதலான தன்மைகள் எல்லாம் தேஹத்தினுடையவையே; ஆத்மாவுக்கு இவை கிடையாது.
26-28: தேஹத்தைக் காட்டிலும் வேறான ஆத்மா இல்லை என்று நினைத்தாலும், நேர்ந்தே தீர வேண்டிய ஜந்ம மரணங்களைக் குறித்து வருந்த இடமில்லை.
29: ஆத்ம நித்யத்வ ப்ரஸம்ஸை.
30: ஆத்ம நித்யத்வம் எல்லா ஆத்மாக்களுக்கும் பொதுவானது.
31-34: யுத்தம் இம்மை மறுமைகளில் நன்மையை விளைக்கும் தர்மமே யொழிய அதர்மமாகாது.
35-37: உறவினர் முதலான தகாதவிட அன்பாலே போர் புரியாமலிருப்பது தவறு.
(இதுவரையில் அஸ்தான ஸ்நேஹ காருண்யமும், தர்மத்தை அதர்மமென மயங்குவதும் போக்கடிக்கப்பட்டது.
இனி, தர்மவிஷயமான உபதேசம்.)

38: மோக்ஷமடைய விரும்பும் க்ஷத்ரியன் இன்ப துன்பங்கள் முதலானவற்றில் ஸம புத்தியுடன் போரிட வேண்டும்.
39-52: பலனில் பற்றற்று, அகர்த்ருத்வாநுஸந்தானத்துடன் (கர்த்ருத்வ, மமதா, பல த்யாகங்கள்) தனக்குரிய கர்மங்களை
அநுஷ்டிப்பதாகிற கர்ம யோகம் மோக் ஷஸாதனமாகும்; பலனில் பற்றுடன் அனுஷ்டிக்கும் கர்மம் தாழ்ந்தது.
53: முற்கூறிய கர்ம யோகத்தின் பலம் ஞான யோகம். ஞான யோகத்தின் பலம் யோகம் எனப்படும் ஆத்ம ஸாக்ஷாத்காரம்.
54-58: ஸ்தித ப்ரஜ்ஞநிலை எனப்படும் ஜ்ஞான யோகத்தின் நான்கு நிலைகளின் விவரணம்.
59-68: ஞானயோகம் அடைய அரியது. திவ்ய மங்கள விக்ரஹத்தோடு கூடிய பரம புருஷனிடம் நெஞ்சு செலுத்துகிறவனுக்கே
அது ஸித்திக்கும். அப்படிச் செலுத்தாதவனுக்கு ஸித்திக்காது.
69-71: ஞான யோகத்தின் பலமான ஆத்ம தர்சனத்தின் பெருமையும், அதை அடையும் மூன்று விதமான அதிகாரிகளும்.
72: அத்தியாயத்தின் ஸாரார்த்தம்.

—————

3: கர்ம யோகம்:

7) அஸக்த்யா லோக ரக்ஷாயை குணேஷ் வாரோப்ய கர்த்ருதாம்
ஸர்வேஶ்வரே வாந்யஸ்யோக்தாத்ருதீயே கர்மகார்யதா

லோகரக்ஷாயை – (ஜ்ஞாநயோகத்தில் அதிகாரமில்லாத) ஜனங்களைக் காப்பதற்காக,
குணேஷு – ஸத்வ ரஜஸ் தமோ குணங்களில்,
கர்த்ருதாம் ஆரோப்ய – தன்னிடமுள்ள கர்த்ருத்வத்தை அநுஸந்தித்து,
ஸர்வேஶ்வரே வாந்யஸ்ய – அந்த குணங்கள் முதலான அனைத்துக்கும் ஈஶ்வரனான பகவானிடத்தில்
அக் கர்த்ருத்வத்தைச் சேர்த்து விட்டு,
அஸக்த்யா – மோக்ஷம் தவிர்ந்த மற்ற பலன்களில் பற்றில்லாமல்,
கர்ம கார்யதா – கர்மங்களைச் செய்யவேண்டுமென்பது,
த்ருதீயே உக்தா – மூன்றாமத்தியாயத்தில் கூறப்பட்டது.

மூன்றாமோத் தாகுமிது முன்னுரைத்த புந்தியினும்
ஏன்றா வதுகரும மென்பதனா – லான்றமைந்து
தன்கருமஞ் செய்யுமதே தக்கதென மிக்குரைக்கும்
வன்கருமந் தீரும் வகை.

முன் உரைத்த புந்தியினும் –
முன் அத்தியாயத்தில் கூறப்பட்ட ஞானயோகத்தைக் காட்டிலும்,
ஏன்று ஆவது கருமம் – (அனைவரும்) ஏற்றுக் கொள்ளத் தக்கதாயிருப்பது கரும யோகமே,
என்பதனால் – என்னும் காரணத்தினால்,
ஆன்று அமைந்து – மற்ற பலன்களில் பற்றில்லாமல் இருந்து கொண்டு, கர்த்ருத்வ த்யாகத்தையும் செய்து கொண்டு,
தன் கருமம் செய்யுமதே – தன்னுடைய வர்ணாச்ரம தர்மங்களைச் செய்வதே,
வன் கருமம் தீரும் வகை – வலியதான புண்ய பாப ரூபமான கர்மங்களைப் போக்கும் வழிகளுள்,
தக்கது – (அனைவருக்கும்) தக்கது,
என – என்று,
மூன்றாம் ஓத்தாகும் இது – இந்த மூன்றாம் அத்தியாயம்,
மிக்கு உரைக்கும் – உறுதியுடன் கூறும்.

1-2 ப்ரவ்ருத்தி மார்க்கமான கர்ம யோகம் ஆத்ம தர்ஶனத்துக்கு நேரே காரணமன்று;
நிவ்ருத்தி மார்க்கமான ஜ்ஞாந யோகமே அதற்கு நேரே காரணம்.
இப்படி ஞான யோகமே சிறந்ததாயிருக்க கர்ம யோகத்தில் ஏன் என்னை ஏவுகிறாய் என்று அர்ஜுனன் கேட்கிறான்.
3-8 எளிதாகச் செய்யத் தக்கதாயிருக்கை, நழுவ இடமில்லாததாயிருக்கை, விட முடியாததாயிருக்கை
முதலான காரணங்களால் கர்ம யோகம் ஜ்ஞாந யோகத்தைக் காட்டிலும் சிறந்தது.
9-16 பகவதாரதனமான யஜ்ஞத்திற்கு உறுப்பாகாத கர்மங்களே இவனை ஸம்ஸாரத்தில் கட்டுப்படுத்தும்;
அதற்கு உறுப்பான கர்மங்கள் புருஷார்த்த ஸாதனமாகுமே யொழிய இவனைக் கட்டுப்படுத்தாது.
17-19 ஆத்ம தர்ஶனம் கைவரப் பெற்ற முக்தனான கைவல்ய நிஷ்டனே வர்ணாஶ்ரம தர்மங்களைச் செய்யாமலிருக்கலாமாகையால்,
அப்படி முக்தனல்லாத நீ கர்மயோகத்தை அனுஷ்டித்தே ஆத்ம தர்ஶனத்தைப் பெற வேணும்.
20 ஜனகர் முதலானோர் கர்ம யோகத்தாலேயே ஆத்ம தர்ஶனத்தைப் பெற்றனர்.
20-26 சான்றோனாகப் புகழ் பெற்றவன், தான் ஜ்ஞான யோகாதிகாரி யாயினும் அதில் அதில் அதிகாரமில்லாதவர்களை
ரக்ஷிப்பதற்காகவும், அவர்களைக் கலக்குவதன் மூலம் தனக்குண்டாகும் அநர்த்தத்தைத் தவிர்ப்பதற்காகவும் கர்ம யோகத்தையே அநுஷ்டிக்க வேண்டும்.
27-30 ‘ஸர்வேஶ்வரனால் தூண்டப்பட்டு, ஸத்வாதி குணங்களுக்கு வசப்பட்டவனாகவே நான் கர்மம் செய்கிறேன்’ என்னும்
அகர்த்ருத்வாநுஸந்தானத்தோடு கூடவே கர்மங்களைச் செய்ய வேண்டும். இப்படி கர்ம யோகத்தில் ஞானம் கலந்திருக்கையால்,
ஞான யோகத்தை யிடையிடாமல் அதுவே நேரே ஆத்ம தர்ஶனத்துக்கு உபாயமாகும். ஆகையால் அது ஞான யோகத்தை விடத் தாழ்ந்ததல்ல.
31-32 கர்ம யோகத்தை அநுஷ்டிப்பாரின் சிறப்பு; அதை அநுஷ்டியாதாரின் தாழ்வு.
33-43 எத்தகைய சிறந்த ஞாந யோகாதிகாரியையும், அநாதி வாஸநையும் அது காரணமாக வரும்
காம க்ரோதங்களும் ஜ்ஞாந யோகத்தினின்றும் நழுவச் செய்துவிடும்.
அநாதி வாஸனை முதலானவற்றுக்கு அடியான பாபங்களைப் போக்கும் கர்மயோகத்தில் ஈடுபடுவதன் மூலமே இவற்றை வெல்ல முடியும்.
ஆகையால் நழுவுதற்கிடமுள்ளதாய், செயற்கரியதான ஜ்ஞான யோகத்தைக் காட்டிலும், நழுவுதற்கிடமற்றதாய்,
செயற்கெளியதான கர்ம யோகமே ஜ்ஞாந யோகாதிகாரியோடு, கர்ம யோகாதிகாரியோடு வாசியற அனைவராலும் கைக் கொள்ளத் தக்கது.

——————–

4: ஜ்ஞான யோகம்:

8) ப்ரஸங்காத் ஸ்வ ஸ்வபாவோக்தி: கர்மணோகர்மதாஸ்ய ச
பேதா:ஜ்ஞாநஸ்ய மாஹாத்ம்யம் சதுர்த்தாத்யாய உச்யதே

சதுர்த்தாத்யாயே – நான்காமத்தியாயத்தில்,
கர்மண: அகர்மதா உச்யதே – (ஞானமடங்கிய) கர்மயோகம் ஞானயோகமாகவேயிருத்தல் சொல்லப்படுகிறது;
அஸ்ய பேதா: ச (உச்யதே) – கர்மயோகத்தின் (ஸ்வரூபமும்) பிரிவுகளும் சொல்லப்படுகின்றன;
ஜ்ஞாநஸ்ய மாஹாத்ம்யம் (உச்யதே) – (கர்மயோகத்தில் அடங்கிய) ஞானபாகத்தின் பெருமையும் கூறப்படுகிறது;
ப்ரஸங்காத் – (தான் சொல்லுமர்த்தம் ப்ராமாணிகமானது என்று நிரூபிக்கவேண்டிய) ப்ரஸங்கம் ஏற்பட்டபடியாலே,
ஸ்வஸ்வபாவோக்தி: – (அவதார தசையிலும் மாறாத) தன் தன்மையைப் பற்றிய பேச்சும் (முதலில்) உள்ளது.

நாரா யணன்கீதை நாலாமோத் திற்றனது
சீரார் பிறவிச் சிறப்புடனே – யேராரும்
யோகத் துடன்கரும முற்றியலு மாறுரைக்கு
மேகப் பலபரிசா வேய்ந்து.

நாராயணன் – (கண்‍ணனாய் அவதரித்த) நாராயணன்,
கீதை நாலாமோத்தில் – கீதையின் நாலாம் அத்தியாயத்தில்,
தனது சீரார் பிறவிச் சிறப்புடனே – பெருமை மிகுந்த தன் அவதாரச் சிறப்போடு கூட,
ஏராரும் யோகத்துடன் – சிறப்புற்ற ஞானத்தோடு,
ஏகம் கருமம் – ஒன்றான கருமம்,
பலபரிசா ஏய்ந்து – பல வகைகளாக இருந்துகொண்டு,
முற்று இயலும் ஆறு – (ஜ்ஞான யோகத்தை இடையிடாமலே) பரிபூர்ண ஸாதனமாயிருக்கும் வகையை,
உரைக்கும் – உபதேசிக்கிறான்.

1-3: கர்மயோகம் ஶுத்தபரம்பராப்ராப்தம்.
4: அர்ஜுனனின் கேள்வி.
5-11: அவதார ரஹஸ்யம்.
12-24: கர்மயோகம்ஜ்ஞாநாகாரமாயிருப்பதை நிரூபிப்பது.
25-30: கர்மயோக வகைகள்.
30-32: கர்மயோகிகளுக்கு நித்யநைமித்திக கர்மங்கள் அநுஷ்டிக்க வேண்டியவையே. அவர்களிடையே பலபேதம் கிடையாது.
33-40: கர்மயோகத்தில் அடங்கியஜ்ஞாநாம்ஶத்தின்ப்ராதாந்யம்.
41-42: முடிவுரை.

5 – கர்ம ஸந்யாஸ யோகம்:

9) கர்மயோகஸ்ய ஸெளகர்யம் ஶைக்ர்யம் காஶ்சந தத்விதா:
ப்ரஹ்மஜ்ஞாநப்ரகாரஶ்ச பஞ்சமாத்யாய உச்யதே

கர்மயோகஸ்ய – கர்மயோகத்தினுடைய,
ஸெளகர்யம் – செயற்கெளிய தன்மையும்,
ஶைக்ர்யம் – விரைவில் பலனளிக்கும் தன்மையும்,
காஶ்சந தத்விதா: – அதற்குறுப்பான சில அங்கங்களும்,
ப்ரஹ்மஜ்ஞாநப்ரகார: ச – ஶுத்தாத்மாக்களைக் ஸமமாகக் காண்கைக்குறுப்பான நிலையும்,
பஞ்சமாத்யாயே – ஐந்தாமத்தியாயத்தில், உச்யதே – கூறப்படுகிறது.

அண்ண லருள்கீதை யஞ்சாமோத் துக்கருமந்
திண்ண முனர்வதனைச் சேர்ந்தமைந்த – வண்ணமது
சிந்தை தெளியத் தெளிவுற் றுரைக்குமதே
முந்தை மறைநெறியை மூண்டு.

அண்ணல் -ஸ்வாமியாகிற கண்ணன்,
அருள் – அருளிச் செய்த,
கீதை – கீதாஶாஸ்திரத்தின்,
அஞ்சாம் ஓத்து – ஐந்தாம் அத்தியாயம்,
முந்தை மறை நெறியை மூண்டு – பழையதான வேதமார்க்கத்தைப் பின்பற்றி,
கருமம் – கர்ம யோகம்,
உணர்வு அதனை திண்ணம் சேர்ந்து அமைந்த வண்ணம் அது – “நான் கர்த்தாவல்லன்” என்னும் அறிவோடு
உறுதியாகச் சேர்ந்து பொருந்தியிருக்கும் தன்மையை,
சிந்தை தெளிய – (அர்ஜுனனுடைய) மனம் தெளிவடையும்படியாக, தெளிவுற்று உரைக்குமதே – மிக விளக்கமாகச் சொல்லுவதாகும்.

1 கர்மஜ்ஞானயோகங்களில் எது சிறந்தது? என்று அர்ஜுனன் கேள்வி.
2-7 செயற்கெளிமையாலும், விரைவில் பலனளிக்கும் தன்மையாலும் கர்மயோகமே ஜ்ஞான யோகத்தைக் காட்டிலும் சிறந்தது என்று கண்ணனின் பதில்.
8-11 அகர்த்ருத்வாநுஸந்தானத்தில் ஒரு வகை – இந்த்ரிய ப்ராணன்களில் கர்த்ருத்வத்தை அந்ஸந்திக்கை.
12 பல த்யாகம் மோக்ஷஹேது.
13 சரீரத்தில் கர்த்ருத்வத்தை அநுஸந்திக்கை. (அகர்த்வாநுஸந்தாதனத்தில் மற்றொரு வகை.)
14-15 ஆத்மாவுக்குக் கர்த்ருத்வமின்மை. ப்ரக்ருதி வாஸனையின் கர்த்ருத்வம். (அகர்த்வாநுஸந்தாதனத்தில் மற்றொரு வகை.)
16 அகர்த்ருதாநுஸந்தானத்தை உள்ளடக்கிய ஆத்மவிஷயஜ்ஞாநத்தின் பெருமை.
17 ஆத்மாநுபவமாகிற மாடத்திற்கு ஏறும் படிக்கட்டாயிருக்கும் அறிவின் படிகளின் வரிசை.
1. ஆத்மதர்ஶனம் வேண்டும் என்ற உறுதியுடையவர்கள்
2. ஆத்மதர்ஶனத்தை குறிக்கோளாகக் கொண்டிருப்பவர்கள்.
3. அதற்காக முயல்பவர்கள்
4. ஆத்மதர்ஶனமே வாழ்க்கையின் பயனாக நினைப்பவர்கள்.
இவர்கள் கர்மவாஸனை நீங்கப் பெற்று மேற்கூறியபடி ஆத்மதர்ஶனத்தைப் பெறுவர்.
18-19 ஆத்மாக்கள் அனைவரும்ஜ்ஞானைகாகாரத்தால் ஸமர் என்னும் அறிவு – ஆத்மஸாக்ஷாத்காரத்தை மறுமையில் விளைப்பது;
இம்மையிலும் மேலான துக்கநிவ்ருத்தியை அளிப்பது.
20-25 ஸம தர்ஶந நிலை ஏற்பட உதவும் ஆறு அநுஷ்டாந முறைகள்.
1. ஆசார்ய உபதேசத்தாலே, ஆத்மாவைப் பற்றியஜ்ஞானத்தைப் பெறுதல்.
2. சரீரத்தை வேறுபடுத்தி ஆத்மாவை எண்ணி மகிழ்தல்.
3. இன்பத்தில் மகிழாமலும் துன்பத்தில் வருத்தமுறாமலும்,

இவை ப்ரக்ருதியின் செயல்களென எண்ணி யிருத்தல்.
4. மனம்ப்ரக்ருதி விஷயங்களினின்றும் நீங்கப்பெற்று ஆத்மாவை அநுபவித்து மகிழ்தல்.
5. ப்ரக்ருதியினால் ஏற்படும் இன்பங்கள் நிலையற்றவையாதலால் துன்பத்திலேயே முடிவுறும்.
6. காமக்ரோதங்களை வென்றால் ஆத்மாநுபவம் இம்மையிலேயே சிறிது ஏற்படும். சரீரத்தை விட்டவுடன் முழுமை பெறும்.
26 ஆத்ம ஸமதர்ஶனம் கைவந்தோர் அனைத்துயிர்களிடமும் அன்பு பாராட்டி, அவற்றின் உஜ்ஜீவனத்துக்கு பாடுபடுவர்.
இத்தகைய ஸமதர்ஶனத்தால் ஆத்மாநுபவம் விரைவில் ஏற்படும்.
27-28 நித்ய நைமித்திக கர்மாநுஷ்டாநம் யோகத்தில் (த்யானத்தில்) நிறைவுறும்.
29 ஸர்வலோக ஸர்வேஶ்வரன் என்று கண்ணனை அறிந்து அவனுக்கு ஆராதனமாக கர்மயோகத்தை செய்வது எளிது.

——————–

6 – அத்யாத்ம யோகம்:

10) யோகாப்யாஸவிதிர் யோகீ சதுர்த்தா யோகஸாதநம்
யோகஸித்தி:ஸ்வயோகஸ்ய பாரம்யம் ஷஷ்ட்ட உச்யதே

யோகாப்யாஸவிதி: – (ஆத்ம ஸாக்ஷாத்காரமாகிற) யோகத்தைப் பழகும் முறையும்,
சதுர்த்தா யோகீ – நாலுவகைப்பட்ட யோகிகளும்,
யோக ஸாதநம் – (முற்கூறிய) யோகத்திற்கு ஸாதநமாகிய அப்யாஸம், வைராக்யம் முதலானவையும்,
யோக ஸித்தி: – (தொடங்கிய) யோகம் (இடையில் தடைபட்டாலும் காலக்ரமத்தில்) ஸித்தியடையும் என்பதும்,
ஸ்வ யோகஸ்ய பாரம்யம் – தன் விஷயமான பக்தியோகத்தின் உயர்வும்,
ஷஷ்ட்டே – ஆறாமத்தியாயத்தில்,
உச்யதே – கூறப்படுகிறது.

அத்த னருள்கீதை யாறாமோத் தாற்கருமத்
தொத்த தெளிவைத் தெரிந்துரைக்கு
— — — —
— — — — (லுப்தம்)

யோக விதியோகி யோகத்து நாலுவகை
யோகமது மேலா வுயர்நிலைமை – மேகநிக
ரண்ண லருள்கீதை யாறாமோத் தின்பொருளாத்
திண்ண முடிந்ததிது சேர்ந்து.

யோக விதி – யோகமாகிற ஆத்மஸாக்ஷாத்காரத்தைப் பழகும் முறையும்,
யோகி யோகத்து நாலு வகை – அதைப் பழகும் யோகியரிலும், அந்த யோகத்திலும் உள்ள நாலு பிரிவும்,
யோகம் அது – ஸு ப்ரஸித்தமான பக்தி யோகம்,
மேலா உயர் நிலைமை – எல்லா யோகங்களைக் காட்டிலும் மேலாக உயர்ந்து நிற்கும் நிலையும்,
இது சேர்ந்து – ஆகிய இவ்வர்த்தங்கள் சேர்ந்து,
மேகம் நிகர் அண்ணல் அருள் கீதை ஆறாம் ஓத்தின் பொருளா திண்ணம் முடிந்தது – மேகத்தை ஒத்த ஸ்வாமியான
கண்ணன் அருளிய கீதையின் ஆறாம் அத்தியாயத்தின் பொருளாக அறுதியிடப்பட்டு நிறைவடைந்தது.

1-6 ஆத்மஸாக்ஷாத்காரமாகிற யோகத்திற்கு, ஜ்ஞானத்தை உள்ளடக்கிய கர்மயோகமே காரணம் என்பதை உறுதிப்படுத்துவதற்காக, அக்கர்மயோகத்தை விவரித்தல்.
7-9 யோகாப்யாஸ விதியின் (யோகமாகிற ஆத்மஸாக்ஷாத்காரத்தை பழகும் முறையின்) தொடக்க நிலை.
10-28 யோகாப்யாஸவிதி விவரணம்.
10-12 பாஹ்ய உபகரண நியமம்.
13-14 அந்தரங்க உபகரணங்களான ஶரீர மநஸ்ஸுக்களின் நியமம்.
15 ஶுபாஶ்ரயமான பகவத் விக்ரஹத்தைச் சிந்திப்பது யோகோபகரணங்களில் முக்யமானது.
16-17 மற்றும் சில நியமங்கள் – உண்பது, உழைப்பு, தூக்கம் ஆகியவற்றில் அளவுடன் இருத்தல்.
18 யோகயோக்ய தஶையின் விளக்கம் – ஆத்மாஜ்ஞானத்தின் நன்மையை அறிந்ததால் ஏற்படும் மனவமைதி யோக்யதை.
20-23 யோகாப்யாஸம் மிகச் சிறந்த புருஷார்த்தம்.
24-27 யோகாப்யாஸத்திற்கு உறுப்பான மமகார பரித்யாகம் முதலானவை.
28 ஆத்மஸாக்ஷாத்காரமாகிற யோகத்தின் பலம்.

29-32 நாலுவகைப்பட்ட யோகிகள்.
1. எல்லா வுயிரிலும் ஆத்மாவைக் காணுதல்
2. எல்லாவற்றிலும் பகவானைக் காணுதல்
3. அந்தர்யாமியைக் காணுதல்
4. ஸுக துக்கங்களிலிருந்து விடுபடுதல்.

33-34 யோக ஸாதனமான அப்யாஸம் (ஆத்மசிந்தனம்), வைராக்யம் முதலானவற்றைத் தெளிவாக அறிவதற்காக அர்ஜுனனின் கேள்வி.
35-36 யோக ஸாதனம் – பகவதாராதனமான அகர்த்ருத்வாநுஸந்தாநத்துடன் கூடிய கர்மாநுஷ்டானத்தாலே மனஶ் ஶுத்தி ஏற்படும். அதன் பிறகு யோகம் ஸித்திக்கும்.
37-39 யோக மாஹாத்ம்யத்தை அறிவதற்காக ‘யோகப்ரஷ்டனுக்கு போகமோக்ஷங்கள் இரண்டுமே கிடைக்காதோ’ என்று அர்ஜுனனின் கேள்வி.
40-45 யோகப்ரஷ்டனுக்கு இரண்டுமே காலக்ரமத்தில் கிடைக்கும் என்று கண்ணனின் பதில். (யோகமாஹாத்ம்யம்)
46 தபஸ்விகள் முதலானோரைக்காட்டிலும் ஜீவாத்மயோகியின் சிறப்பு.
47 தபஸ்விகள் முதலானோர், ஜீவாத்மயோகி ஆகிய அனைவரைக் காட்டிலும் பரமாத்மோபாஸகனின் சிறப்பு (பக்தியோகமாஹாத்ம்யம்).

முதல் ஷட்கத்தின் ஸாரம்:
சோக முயிருணர்வு தொல்கருமச் செய்தியதி
லாகு மறிவுயர்த்தி யார்வகைகள் – யோகமுயிர்
காட்சி யிவற்றின் கருத்துமுத லாறோத்தின்
மாட்சிமை சொல்லும் வகை.

சோகம் – (அர்ஜுனனுடைய) சோகம்,
உயிர் உணர்வு – ஜீவாத்மதத்துவத்தைப் பற்றிய அறிவு,
தொல் கருமச் செய்தி – பழைமையான கர்மயோகாநுஷ்டானம்,
அதில் ஆகும் அறிவுயர்த்தி – அக்கர்மயோகத்தில் அடங்கிய அறிவின் சிறப்பு.
(அதில்) ஆர் வகைகள் – அக்கர்மயோகத்தில் உள்ள சில வகைகள்,
உயிர் காட்சி யோகம் – ஆத்மாவைக் காண்பதாகிற யோகம்,
இவற்றின் கருத்து – ஆகிய இவ்வாறு அர்த்தங்களின் விளக்கமும்,
முதல் ஆறு ஓத்தின் – (முறையே) முதல் ஆறு அத்தியாயங்களின்,
மாட்சிமை சொல்லும் வகை – முக்கியமான அர்த்தங்களைச் சொல்லும் வகையாகும்.

பூர்வமத்யமஷட்கார்த்த ஸங்கதி:
முன்னாறு நல்லுணர்வின் முற்றுங் கருமத்தாற்
றன்னா ருயிருணர்வு தானுரைத்துப் – பின்னார்வத்
தேறு மனத்தா லிறைவன்பா லன்புசெயல்
கூறு நடுவாறுங் கூர்ந்து

முதல் ஆறு – முதல் ஷட்கத்தினால் (ஆறு அத்தியாயங்களால்),
நல்லுணர்வின் முற்றும் கருமத்தால் – (ஆத்மாவைப் பற்றிய) உண்மையறிவினால் நிறைவடையும் கர்மயோகத்தால்,
தன் ஆர் உயிர் உணர்வு தான் உரைத்து – தனது அருமையான ஜீவாத்மஸ்வரூபத்தின் ஸாக்ஷாத்காரம் உண்டாவதாகக் கூறி,
ஆர்வம் தேறு மனத்தால் – அன்பு நிறைந்த நெஞ்சினால்,
இறைவன் பால் அன்பு செயல் – ஸர்வேஶ்வரனிடம் பக்தி செலுத்துவதாகிற பக்தி யோகத்தை,
நடு ஆறும் – (கீதையின்) நடுவிலுள்ள ஆறு அத்தியாயங்களும், கூர்ந்து கூறும் – விரிவாக விளக்கும்.

· அங்கம், ப்ராப்தா ஆகிய இரண்டையும் முதல் ஷட்கத்தில் கூறிய பின்
அங்கி, ப்ராப்யம் ஆகிய இரண்டையும் மத்யமஷட்கத்தில் கூறுகிறது.
· ஞானாம்ஶத்தை உள்ளடக்கிய கர்மயோகத்தை அங்கமாகக் கொண்டு பக்தியோகம் அங்கியாகிறது.
· ஜீவாத்மாவான ப்ராப்தாவுக்கு பரமாத்மா பரமப்ராப்யம்.

—————————–

7 – விஜ்ஞான யோகம்:
11) ஸ்வயாதாத்ம்யம்ப்ரக்ருத்யாஸ்ய திரோதி: ஶரணாகதி:
பக்தபேத:ப்ரபுத்தஸ்யஶ்ரைஷ்ட்யம் ஸப்தம உச்யதே

ஸப்தமே – ஏழாவது அத்தியாயத்தில்,
ஸ்வயாதாத்ம்யம் – (உபாஸிக்கப்படும்) பரமபுருஷனான தன்னைப் பற்றிய உண்மைநிலையும்,
ப்ரக்ருத்யா – மூலப்ரக்ருதியினாலே,
அஸ்யதிரோதி: – இந்நிலை (ஜீவனுக்கு) மறைக்கப் படுவதும்,
ஶரணாகதி: – (அம்மறைவைப் போக்கடிக்கும்) ஶரணாகதியும்,
பக்த பேத: – உபாஸகர்களில் (நாலு) வகையும்,
ப்ரபுத்தஸ்ய ஶ்ரைஷ்ட்யம் – (அந்நால்வரில்) ஞானியின் சிறப்பும்,
உச்யதே – கூறப்படுகிறது.

ஆங்குமுத லேழாமோத் தன்புக் கிலக்காகு
மோங்குமிறை மாயத் தொழிக்குமப் – பாங்கிற்
சரண நெறியடைந்தார் தம்பேத ஞானி
யரணுயர்வு சொல்லு மமைந்து.

ஆங்கு முதல் – அந்த மத்யமஷட்கத்தில் முதல் அத்தியாயமான,
ஏழாம் ஓத்து – ஏழாம் அத்தியாயம்,
அன்புக்கு இலக்காகும் ஓங்கும் இறை – பக்திக்கு விஷயமாகும் தலைசிறந்த ஸர்வேஶ்வரனையும்,
மாயம் – (அவனை ஜீவனுக்கு மறைக்கும்) ப்ரக்ருதியையும்,
ஒழிக்கும் அப்பாங்கில் சரண நெறி – (அம்மறைவைப்) போக்கடிக்கும் தன்மையையுடைய ஶரணாகதியையும்,
அடைந்தார் தம் பேதம் – உபாஸிப்பவர்களின் (நாலு வகையான) உட்பிரிவையும்,
ஞானி அரண் உயர்வு – (அந்நால்வரில்) ஞானி (எம்பெருமானுக்கே) தாரகனாயிருக்கும் சிறப்புற்றவன் என்பதையும்,
அமைந்து சொல்லும் – நன்றாகக் கூறும்.

I 1-12 ஸ்வயாதாத்ம்யம் – பரமபுருஷனைப் பற்றிய உண்மையறிவு.
1 உண்மையறிவைக் கூறுவதாக ப்ரதிஜ்ஞை
2 இவ்வறிவைப் பூர்ணமாகப் பெற்றால், அறியவேண்டியது வேறொன்றுமில்லை.
3 மோக்ஷ ஸித்தியின் பொருட்டுக் கடைசிவரை முயல்பவன் ஆயிரத்தில் ஒருவன்;
அவர்களிலும் ஆயிரத்தில் ஒருவன் பரமபுருஷனையே ப்ராப்யமாய் அறிபவன்.
அவர்களிலும் ஆயிரத்தில் ஒருவனே அவனை ப்ராபகமாகவும் அறிபவன்.
4 எட்டு விதமான அசேதன ஸமஷ்டிப் பொருளும் பரம புருஷ பர தந்த்ரமானது.
5 அசேதந ப்ரக்ருதிக்கு மேற்பட்ட சேதந ஸமஷ்டியும் பரமபுருஷ பரதந்த்ரமானது.
6 முற்கூறிய சேதநாசேதந ஸமஷ்டிகளைக் காரணமாகக் கொண்ட வ்யஷ்டிப் பொருள்களுக்கும் பரமபுருஷனே காரணமாகவும், ஶேஷியாகவுமிருப்பவன்.
7 கல்யாண குணங்களால் ஜீவர்களைக் காட்டிலும் மிகவுயர்ந்தவனும் பரமபுருஷனே.
7 அவனே அனைத்துக்கும் ஶரீரியாகவுமிருப்பவன். இக் காரணங்களால் அவனே இயற்கையான ப்ராப்ய ப்ராபகங்களா யிருப்பவன்.
8-11 சேதநாசேதநப் பொருள்களில் அவற்றின் ப்ராப்யத்வத்திற்கும், ப்ராபகத்வத்திற்கும் உறுப்பாக உள்ள சிறந்த பெருமைகள் பரமபுருஷாதீனமாய் வருபவையே.
12 ஸாத்விகர்களுக்கு ப்ராப்ய ப்ராபகங்களாயிருக்கும் முற்கூறியவை போலே,
ராஜஸ தாமஸர்களுக்கு ப்ராப்யமாகவும், ப்ராபகமாகவுமிருக்கும் பொருள்களின் தன்மைகளும்,
அவ் வப் பொருள்களும் பரமபுருஷாதீநமே; பரமபுருஷன் அவற்றுக்கு அதீனமானவனல்லன்.

II 13-14 பரமபுருஷனைப் பற்றிய முற்கூறிய உண்மை யறிவை – அவனுக்கு அதீனமான ப்ரக்ருதியின் ஸம்பந்தம் ஜீவனுக்கு மறைக்கிறது.

III 14 ஜீவனுக்குள்ள ப்ரக்ருதி ஸம்பந்தம் பரமபுருஷ ஶரணாகதியாலேயே நீங்குகிறது.
15 மேன்மேலே பாபிஷ்டர்களான நாலுவகைப்பட்ட பாபிகள் பரமபுருஷனை ஶரணமடைவதில்லை.

IV பக்தபேதம்
16 மேன்மேலே புண்ணியமிகுதியால் உண்டாகும் ப்ரபத்திச் சிறப்பாலே சிறப்புற்ற நாலு வகை பக்தர்கள் பரம புருஷனை ஶரணமடைகின்றனர்.
1) ஆர்த்தன், 2) அர்த்தார்த்தீ (இருவரும் சேர்ந்து ஐஶ்வர்யார்த்திகள்), 3) ஜிஜ்ஞாஸூ (கைவல்யார்த்தி), 4) ஜ்ஞாநி (பகவச் சரணார்த்தி)

V 17-27 ஞானியின் சிறப்பு
17 மூவரில், ஸாதனதஶையோடு ஸாத்யதஶையோடு வாசியற எப்போதும் எம்பெருமானுடன் சேர்ந்திருப்பவனாகையாலும்,
எம்பெருமான் ஒருவனிடமே அன்பு பூண்டவனாகையாலும் ஜ்ஞாநியானவன் – ஸாதநதஶையில் மாத்திரம் எம்பெருமானோடு
சேர்ந்திருப்பவர்களும், ஸ்வஸாத்யமான ஐஶ்வர்ய கைவல்யங்களிலும், அவற்றுக்கு ஸாதனமாக எம்பெருமானிடமும் அன்பு
பூண்டவர்களுமான ஐஶ்வர்ய கைவல்யார்த்திகளைக் காட்டிலும் சிறப்புற்றவன். எம்பெருமானிடம் பேரன்பு பூண்டவன்;
எம்பெருமானுக்கு மிகவினியவன்.
18 மூவருமே பகவான் ஒருவனையே பலப்ரதானமாகப் பற்றியவர்களாகையாலே உதாரர்கள்;
ஜ்ஞாநியோவெனில், எம்பெருமானையே பரமப்ராப்யமாகவும் பற்றியவனாகையாலே அவனுக்கே ஆத்மாவாய் (தாரகனாய்) இருப்பவன்.
19 பல ஜன்மங்கள் கழித்து உபாஸகஜ்ஞானிக்குப் பரமபுருஷனைப் பற்றிய உண்மையறிவை அநுஸந்திப்பதாலே ‘
அவனே ப்ராப்யனாகவும் ப்ராபகனாகவு மிருப்பவன்’ என்னும் அறிவு ஏற்பட்டு, அவனையே எல்லாமாகப் பற்றுகிறான்.
இவ்வறிவு ஏற்பட்ட ஜன்மமே இவனுக்குக் கடைசி ஜன்மம். இத்தகைய ஜ்ஞாநி மஹாத்மாவாவான். எம்பெருமானுக்கே கிடைத்தற்கரியவன் இவன்.
20 ராஜஸ தாமஸ நூல்களில் சொன்ன நியமங்களைப்பற்றி நின்று தாழ்ந்த பலன்களுக்காக மற்ற தெய்வங்களை வழிபடுகிறார்கள் பலர்.
21 அவர்களுக்கும் தனது ஶரீரமான அந்த தெய்வங்களிடம் பக்திஶ்ரத்தைகளை எம்பெருமானே ஏற்படுத்துகிறான்.
22 பக்தி ஶ்ரத்தைகளோடு அந்த தெய்வங்களை ஆராதிப்பவர்களுக்கு, அந்த தெய்வங்களுக்கு அந்தர்யாமியான எம்பெருமானே பலனளிக்கிறான்.
23 புல்லறிவாளர்களான அவர்களுக்குக் கிடைக்கும் பலன் அல்பமாகவும் அஸ்திரமாகவுமே இருக்கிறது. பகவத் பக்தர்கள் அநந்த ஸ்திரபலனையே எளிதில் பெறுகிறார்கள்.
24 முற்கூறியவர்களிலும் கீழ்ப்பட்ட அறிவிலிகள் பலர் பரமபுருஷனை ஸாமாந்ய ஜீவனாக நினைக்கிறார்கள்.
25 மனிதவுருக்கொண்டு அவதரித்திருக்கும் ஸர்வேஶ்வரனை இவ்வறிவிலிகள் அறிவதில்லை.
26 பரமபுருஷனை உள்ளபடியறிபவன் முக்காலத்திலும் ஒருவனுமேயில்லை.
27 இதற்குக் காரணம் – அநாதிகாலமாக ஜீவர்கள் ப்ரதமப்ரவ்ருத்தியில் ப்ராக்ருத விஷயமான ஜ்ஞாநேச்சாப்ரயத்னங்களையே செய்து
புண்ய பாப கர்மங்களைக் குவித்து வைத்திருப்பதால், பிறக்கும்போதே ப்ராக்ருத விஷயத்தில் நிற்கையேயாகும்.
VI முடிவுரை
28 இவர்களில் புண்யத்தாலே பாபம் சிறிதுசிறிதாக அழியப் பெற்றவர்கள், தத்தம் புண்ணியத்தின் ஏற்றத் தாழ்வுகள் ஏற்ப, ஐஶ்வர்யத்தையோ, கைவல்யத்தையோ,
பரமபுருஷனையோ பெற விரும்பி உறுதியுடன் பக்திசெய்கிறார்கள். புண்யபாப லக்ஷணம்.
29 கைவல்யார்த்திக்கு அறியவேண்டிய அர்த்த விஶேஷங்களும், கைவிடவேண்டி யதும் பற்றிய ப்ரஸ்தாவம்.
30 ஐஶ்வர்யார்த்திக்கு அறியவேண்டும் அர்த்தவிஶேஷங்களும் கைக்கொள்ள வேண்டியவையும், ஐஶ்வர்யகைவல்ய பகவச் சரணார்த்திகளான ப்ரவ்ருத்தி பரர் அனைவர்க்கும்
பொதுவாக அறிய வேண்டியவையும், கைக்கொள்ள வேண்டியவையும் பற்றிய ப்ரஸ்தாவம்.

——————————

8 – அப்யாஸ யோகம்:

12) ஐஶ்வர்யாக்ஷர யாதாத்ம்ய பகவச் சரணார்த்திணாம்
வேத்யோபாதேயபாவாநாம் அஷ்டமே பேத உச்யதே

ஐஶ்வர்ய அக்ஷர யாதாத்ம்ய பகவச் சரணார்த்திணாம் – (1) ஐஶ்வர்யார்த்தி, (2) ப்ரக்ருதியினின்று நீங்கிய ஆத்மஸ்வரூபத்தை
அநுபவிக்க விரும்பும் கைவல்யார்த்தி, (3) பகவானுடைய திருவடித்தாமரையைப் பெறவிரும்பும் ஞானி ஆகிய மூவர்க்கும்,
வேத்யோபாதேயபாவாநாம் – அறியவேண்டும் அர்த்த விஷேஷங்கள், கைக்கொள்ள (அநுஷ்டிக்க) வேண்டியவை ஆகியவற்றின்,
பேத: – வேறுபாடு,
அஷ்டமே – எட்டாம் அத்தியாயத்தில்,
உச்யதே – சொல்லப்படுகிறது.

போக முயிருண்மை பூமகள்கோனைப்பெறுதற்
காக முயல்வார்க் கறிவமர – மேகநிறத்
தெம்மா னருள்கீதை யெட்டாமோத் திற்பொருள்கள்
செய்ம்மா வகையுரைக்குஞ் சேர்ந்து.

போகம் – ஐஶ்வர்ய போகங்கள்,
உயிருண்மை – ப்ரக்ருதியினின்றும் நீங்கிய ஆத்மாநுபவம்,
பூமகள் கோனை – ஸ்ரீமந்நாராயணன் ஆகிய இம்மூன்று ப்ராப்யங்களில் ஒன்றை,
பெறுதற்காக – பெறுவதற்காக, முயல்வார்க்கு – முயற்சி செய்பவர்களுக்கு,
அறிவு அமர வகை – அறியவேண்டியவைகளையும்,
செய் மா வகை – அநுஷ்டிக்க வேண்டியவைகளையும்,
மேக நிறத்து எம்மான் அருள்கீதை எட்டாம் ஓத்தில் பொருள்கள் – மேகம் போன்ற நிறத்தையுடைய எம்பெருமானான
கண்ணன் அருளிய கீதையின் எட்டாம் அத்தியாயத்தின் ஶ்லோகங்கள், சேர்ந்து உரைக்கும் – ஒன்றுகூடிச் சொல்லும்.

1-2 1. கைவல்யார்த்திகள் அறியவேண்டிய ப்ரஹ்ம, அத்யாத்ம, கர்ம என்பவை யாவை?
2. ஐஶ்வர்யார்த்திகள் அறியவேண்டிய அதிபூதம், அதிதைவம் என்பவை யாவை?
3. மூவகை அதிகாரிகளும் அறியவேண்டிய அதியஜ்ஞம் என்பது யாது? அதற்கு அதியஜ்ஞத்தன்மை எப்படி வந்தது?
4. மூவருக்கும் அந்திம ஸ்ம்ருதி எத்தகையது? – என்று அர்ஜுனனின் கேள்விகள்.
3 முதற் கேள்விக்குக் கண்ணனின் பதில்.
4 முற்பாதியால் இரண்டாவது கேள்விக்கும், பிற்பாதியால் மூன்றாவது கேள்விக்கும் கண்ணனின் பதில்.
5 அந்திமஸ்ம்ருதி பற்றிய நாலாவது கேள்விக்குக் கண்ணனின் சுருக்கமான பதில் –
‘ஈஶ்வரன் விஷயமான அந்திமஸ்ம்ருதி அவரவர் விரும்பும் வகையில் ஈஶ்வரனோடு ஸாம்யத்தை விளைக்கும்’ என்று.
6 இது ஈஶ்வரவிஷயத்தில் மட்டுமல்ல. கடைசிக் காலத்தில் எந்த விஷயத்தை மனிதன் நினைத்தாலும் அந் நினைவுதானே
அடுத்த பிறப்பில் அவ்விஷயம் போன்ற ஒரு நிலையை அவனுக்கு விளைத்து விடும்.
7 ஆகையால் அர்ஜுனன் எப்போதும் தன்னைப்பற்றிய நினைவையும், அதை விளைக்கும் க்ஷத்ரிய தர்மமான யுத்தத்தையும்
செய்ய வேண்டும் என்று கண்ணன் நாலாவது கேள்விக்கு விளக்கமான பதில் கூறுகிறான்.
8-14 அவரவர்க்குரிய அந்திம ஸ்ம்ருதி ஏற்படுவதற்குறுப்பான உபாஸன பேதம்.
8-10 ஐஶ்வர்யார்த்திக்குரிய உபாஸன முறையும், அதையொட்டி ஏற்படும் அந்திம ஸ்ம்ருதியும்.
14 ஜ்ஞாநி பகவானை உபாஸிக்கும் முறையும், அடையும் முறையும்.
15-28 ஜ்ஞாநிக்கும், கைவல்யார்த்திக்கும் இந்த ஸம்ஸாரமண்டலத்திற்குத் திரும்பி வராமையை உடைய அழிவற்ற பலன்.
ஐஶ்வர்யார்த்திக்குக் கர்மபூமிக்கே திரும்பி வரும் அழிவுள்ள பலன்.
15 ஜ்ஞாநியடையும் பலனான பகவதநுபவம் நித்யமானது.
16 தன்னை ப்ராப்யமாயடைந்தவர்களுக்குக் கிடைக்கும் பலன் நித்யமாயிருப்ப தற்கும், ஐஶ்வர்யார்த்தியின் பலன் அநித்யமாயிருப்பதற்கும் காரணம்.
17-19 ப்ரஹ்மலோகம் ஈறாகவுள்ள உலகங்களுக்கும், அவற்றினுள்ளிருப்பவர் களுக்கும் உத்பத்தி விநாஶங்களின் காலவரம்பு இருக்கையாலே ஐஶ்வர்யம் அநித்யமே.
20-21 கைவல்யாநுபவத்திற்கும் அழிவு இல்லாமையால் அதிலிருந்து மற்றொரு அநுபவத்தை அடைவதாகிற புநராவ்ருத்தி இல்லை.
22 கைவல்யத்தை அடைந்தவனுக்கு ப்ரஹ்மாநுபவம் என்றுமே கிடையாதாகை யால், கேவலாத்மாநுபவமாகிற அவனுடைய அநுபவத்தைக் காட்டிலும்,
பரிபூர்ண ப்ரஹ்மாநுபவமாகிற ஜ்ஞாநியினுடைய அநுபவம் மிகவும் வேறுபட்டது.
23-24 பரமபுருஷ நிஷ்டனும், ப்ரஹ்மாத்மகமாகத் தன் ஆத்மாவை உபாஸிக்கும் பஞ்சாக்னி வித்யா நிஷ்டனுமான இருவகையான ஜ்ஞாநிகள்
ப்ரஹ்மத்தை அடைவதற்கு வழியான அர்ச்சிராதிகதியின் விவரணம்.
25 புண்ணியம் செய்த ஐஶ்வர்யார்த்திகள் ஸ்வர்க்கம் முதலான புண்ணிய லோகங்களுக்குச் செல்லும் வழியான தூமாதிமார்க்கத்தின் விவரணம்.
26 முற்கூறிய இரண்டு கதிகளும் ஶ்ருதிப்ரஸித்தமானவை. அர்ச்சிராதிகதியால் செல்பவன் திரும்பி வருதலில்லாத
பகவதநுபவத்தை அடைகிறான். தூமாதிகதியால் செல்பவன் கர்ம பூமிக்கே திரும்பி வருகிறான்.
27 அர்ச்சிராதிகதி சிந்தனம் தினந்தோறும் ஜ்ஞாநியால் செய்யப்படவேண்டும்.
28 ஏழு, எட்டு அத்தியாயங்களாகிற இரு அத்தியாயங்களில் சொல்லப்பட்ட -ப்ராப்யமாய், ப்ராபகமாய், ஶேஷியாய், காரணமாய்,
ஜ்ஞாநிக்கு தாரக போஷக போக்யமாயிருக்கும் கண்ணனின் பெருமையை அறிபவன் எல்லா ஸாதநாநுஷ்டானங்களைச் செய்தவர்கள்
அடையும் பலனைக் காட்டிலும் சிறந்த பலனை இவ்விபூதியிலேயே பெற்று, மறுமையில் பரமபதத்தையும் அடைகிறான் –
என்னும் அத்யாய த்வயார்த்த சிந்தன பலஶ்ருதி.

———————-

9 – ராஜவித்யா ராஜகுஹ்ய யோகம்:

13) ஸ்வ மாஹாத்ம்யம் மநுஷ்யத்வே பரத்வம் ச மஹாத்மநாம்
விஶேஷோ நவமே யோகோ பக்திரூப:ப்ரகீர்த்தித:

ஸ்வமாஹாத்ம்யம் – தன்னுடைய பெருமை,
மநுஷ்யத்வே பரத்வம் – மனிதனாய் அவதரிக்கும்போதும் மேன்மையையுடைத்தாயிருக்கை,
மஹாத்மநாம் விஶேஷ: -ஜ்ஞாநிகளுக்குள்ள சிறப்பு, (ஆகியவற்றோடு கூடிய),
பக்திரூப: யோக: ச – பக்தியோகம் எனப்படும் உபாஸனம்,
நவமே – ஒன்பதாவது அத்தியாயத்தில்,
ப்ரகீர்த்தித: – நன்றாகச் சொல்லப்பட்டது.

உன்னப் படும்பர னொண்சீர் மருவுயர்த்தி
மன்னப் பயில்ஞானி வாசிதான் – றன்னமர்ந்து
நின்றியலும் பத்தி நிகழ்ந்துரைத்த நற்கீதை
யொன்றியசீ ரொன்பதா மோத்து.

உன்னப்படும் – உபாஸிக்கப்படும்,
பரன் – பரமாத்மாவினுடைய,
ஒண்சீர் மருவு – ஸெளலப்ய ஸெளசீல்யங்களோடு கூடிய,
உயர்த்தி – மேன்மையை,
மன்னப் பயில்ஞானி வாசிதான் – எப்போதும் சிந்திக்கும் ஞானியின் சிறப்போடு,
தன்னமர்ந்து நின்றியலும் பத்தி – தன்னிடத்தில் பொருந்தி நிலையாக உபாஸிப்பதாகிற பக்தியோகத்தை,
நற்கீதை சீர் ஒன்றிய ஒன்பதா மோத்து – நல்ல கீதையின் சிறப்புப் பொருந்திய ஒன்பதாம் அத்தியாயம்,
நிகழ்ந்துரைத்த – நன்கு உரைத்தது.

1 வேதாந்த ரஹஸ்யமான ஸாதன பக்தியை உபதேசிப்பதாகக் கண்ணன் ப்ரதிஜ்ஞை செய்தல்.
2 கர்ம ஜ்ஞான யோகங்களைக் காட்டிலும் பக்தி யோகத்துக்குள்ள சிறப்பு.
3 ஶ்ரத்தை யின்மையால் பக்தி யோகத்தை அநுஷ்டிக்காதவர்கள் மோக்ஷமடையாமல் ஸம்ஸாரத்திலேயே உழல்கின்றனர்.
4-10 பக்தி யோகமாகிற உபாயத்தால் அடையப்படும் (ப்ராப்யமாகிற) எம்பெருமானின் பெருமை. மனிதனாகப் பிறந்த நிலையிலும் பரத்வம்.
4,5 பரம புருஷன் மற்ற பொருள்களால் அறியப்படாமல் அவற்றை ஸங்கல்ப மாத்ரத்தாலே தரிப்பவனாய், நியமிப்பவனாய்,
படைப்பவனாய், அனைத்துக்கும் ஶரீரியாய், ஶேஷியாய் இருப்பவன்.
6 எல்லாப் பொருள்களின் ஸ்திதிப்ரவ்ருத்திகளும் தனக்கு அதீனமானவை என்பதைக் கண்ணன் த்ருஷ்டாந்தம் காட்டி நிரூபித்தல்.
7 அவற்றின் உத்பத்தி ப்ரளயங்களும் தன் அதீனமே என்று கூறல்.
8 ஸமஷ்டி வ்யஷ்டி ரூபமாயுள்ள ஸ்ருஷ்டியின் முறையை விளக்குதல்.
9 கர்மானுகுணமாக ஸ்ருஷ்டிப்பதால் தனக்கு வைஷம்ய நைர்க்ருண்யங்கள் (பக்ஷபாதம், கருணையின்மை) விளையமாட்டா என்று நிரூபித்தல்.
10 தலைவனான தன்னால் தூண்டப்பட்டே மூலப்ரக்ருதி உலகனைத்தையும் படைக்கிறது எனல்.
11,12 ஆஸுர ஸ்வபாவமுள்ளவர்கள் முற்கூறிய தன் பெருமையை உணராத அறிவிலிகளாய் அழிந்து போகிறார்கள் என்று கூறல்.
13 ஸ்வயம் ப்ரயோஜன பக்தி நிஷ்டர்களான மஹாத்மாக்களின் பெருமை.
14,15 ஸாதந பக்தி நிஷ்டர்களான உபாஸக ஜ்ஞானிகளின் பெருமை.
16-19 உபாஸனத்துக்குறுப்பாக – ஒருவனான தானே கார்ய நிலையில் இவ்வுலகிலுள்ள பல பொருள்களை ஶரீரமாகக் கொண்டிருப்பதையும்,
அவற்றின் ஸத்தா ஸ்திதி ப்ரவ்ருத்திகள் தன்னதீனம் என்பதையும் நிரூபித்தல்.
20,21 ஜ்ஞாநிகளுக்கு நேர் எதிர்த் தட்டானவர்களாய், தாழ்ந்த பலன்களை விரும்பும் அறிவிலிகளின் தன்மைகளை விவரித்தல்.
22 தன்னை நினைப்பது தவிர வேறொன்றறியாத மஹாத்மாக்களின் யோக க்ஷேமங்களைத் தானே வஹிப்பதாகக் கூறுதல்.
23 வேதாந்த விதிப்படி மற்ற தேவதைகளுக்கு அந்தர்யாமியாகத் தன்னை அறியாமல் அவர்களிடம் பக்தி செலுத்துகிறவர்களுக்கு அதனாலேயே மோக்ஷம் கிடைப்பதில்லை.
24 தேவதைகளைக் குறித்த யாகங்கள் பரமபுருஷனுக்கே ஆராதனமாகின்றன என அறிந்தவர்களுக்கு மோக்ஷமும்,
அப்படி அறியாதவர்களுக்கு அல்பாஸ்திர பலன்களுக்குமே கிடைக்கும்.
25 முற்கூறியபடி பலனில் வேறுபாடு அவரவர்களின் ஸங்கல்பத்தின் வேறுபாட்டாலே விளைகிறது.
26 தான் ஆராதனைக்கு மிக எளியவன் என நிரூபித்தல்.
27 பக்தி யோகத்திற்கு அங்கமான அநுஸந்தானம் (பகவதர்ப்பணம்-ஶேஷத்வானுஸந்தானம்).
28 அவ்வநுஸந்தானத்தின் பலன் – தன்னை அடைதல்.
29,30 ஜன்மம், ஆகாரம், ஸ்வபாவம், ஜ்ஞாநம், ஒழுக்கம் ஆகியவற்றால் எத்தனை தாழ்ந்தவனாயினும் ஸ்வயம்ப்ரயோஜன பக்தியைச்
செய்தானாகில் அவனிடம் கண்ணனின் ஈடுபாடு.
31 ஒழுக்கத்தில் குறைந்தவனானாலும் பக்தி செய்தால் விரைவில் தர்மாத்மாவாகி நற்பேறு பெறுவான்.
32,33 முற்பிறப்புக்களில் செய்த பாப மிகுதியாலே தாழ்ந்த பிறவியை எடுத்தவர்களும் தன்னை ஆஶ்ரயிப்பதாலேயே மோக்ஷமடையும்போது,
உயற்பிறவியினர் தன்னை ஆஶ்ரயித்து மோக்ஷமடைவது நிச்சயம் என்று கூறி அர்ஜுனனை பக்தி செய்யும்படி விதித்தல்.
34 ஸாதனபக்தியின் தனித்தன்மைகளை விவரித்தல்.

——————-

10 – விபூதி யோகம்:

14) ஸ்வ கல்யாண குணாநந்த்ய க்ருத்ஸ்ந ஸ்வாதீநதாமதி:
பக்த்யுத்பத்தி விவ்ருத்த்யர்த்தா விஸ்தீர்ணா தஶமோதிதா

பக்த்யுத்பத்தி விவ்ருத்த்யர்த்தா – ஸாதநபக்தி உண்டாகி வளர்வதன் பொருட்டு,
ஸ்வ கல்யாணகுண அநந்த்ய க்ருத்ஸ்ந ஸ்வாதீநதா மதி: – தனது கல்யாணகுணங்களின் அளவின்மை பற்றியும்,
அனைத்தும் தனக்கு அதீனமாயிருப்பது பற்றியும் உள்ள அறிவு,
விஸ்தீர்ணா – விரிவாக,
தஶமோதிதா – பத்தாமத்தியாயத்தில் சொல்லப்பட்டது.

அண்ண லுலகி லனைத்துந்தா னாய்நின்ற
வண்ணம் விரித்துரைத்த வண்மையினைத் – திண்ணமாங்
கன்புறவே யோங்க வருள்கீதை பத்தாமோத்
தின்புறவே யோது மெடுத்து.

1-3 தன்னை தேவாதி தேவனாக அநுஸந்திப்பதால், பக்தி உண்டாவதற்குத் தடையான பாபங்கள் நீங்கி, பக்தியுண்டாகும் என்று கண்ணன் அர்ஜுனனுக்கு நிரூபித்தல்.
4-8 தனது ஐஶ்வர்யம், கல்யாணகுணங்கள் ஆகியவற்றை அநுஸந்திப்பதால் பக்தி வளரும் என்பதை கண்ணன் அர்ஜுனனுக்கு நிரூபித்தல்.
9-11 பக்தியின் உச்சநிலையை அடைந்த ஸ்வயம்ப்ரயோஜன பக்திநிஷ்டனின் பெருமையை விளக்குதல்.
12-18 கண்ணனுடைய கல்யாண குணச் சேர்த்தியையும், செல்வச் சிறப்பையும் சுருக்கமாகக் கேட்ட அர்ஜுனன் அதன் விரிவைக் கேட்க விரும்பி வார்த்தை சொல்லுதல்.
12-15 கண்ணன் முன் ஶ்லோகங்களில் சுருங்கச் சொன்ன அர்த்தங்களில் தனக்குள்ள நம்பிக்கையையும்,
அந்த நம்பிக்கையால் அதில் அஸூயை இல்லாமலிருப் பதையும் அர்ஜுனன் காட்டுதல்.
16-18 விபூதிகளை விரிவாகச் சொல்லவேண்டுமென்று அர்ஜுனன் கண்ணனை வினவுதல்.
19 கண்ணன் தனது விபூதிகளை ஒவ்வொன்றாக விரிவாக வர்ணிப்பதும், கேட்பதும் இயலாதாகையால் முக்யமானவற்றைச்
சுருக்கமாக வகைப்படுத்திக் கூறுவதாக ப்ரதிஜ்ஞை செய்தல்.
20 ஶ்லோகத்தின் முற்பாதியில் – தன்னைத் தன் விபூதியான மற்ற பொருள்களோடு அடுத்துள்ள ஶ்லோகங்களில் ஒரே வேற்றுமையில் படிப்பதற்குக் காரணம் –
அவை தனக்கு ஶரீரமாகவும் தான் அவற்றுக்கு ஆத்மாவாகவும் இருப்பதே என்று காட்டி, பிற்பாதியாலே – அனைத்தையும் படைத்தளித்தழிப்பவனா யிருக்கை
முதலான கல்யாண குணங்களே யோகஶப்தத்தால் சொல்லப்படு கின்றன என்றும், அடுத்துள்ள ஶ்லோகங்களாலில் தன்னை
மற்ற பொருள்களோடு ஒரே வேற்றுமையில் படிப்பதற்கு அவை கார்யப்பொருளாகவும், தான் அவற்றுக்குக் காரணமாகவுமிருப்பது
மற்றொரு ஹேதுவாகும் என்றும் கண்ணன் காட்டுதல்.
21-39 பற்பல பொருள்களோடு கண்ணன் தன்னை ஒரே வேற்றுமையில் படித்தல்.
39 தன்னைப் பற்பல பொருள்களோடு ஒரே வேற்றுமையில் படித்ததற்குத் தான் அனைத்துக்கும் அந்தர்யாமியாயிருப்ப்தே காரணம் என்று நிகமனம் செய்தல்.
40 தன் விபூதிகளுக்கு எல்லையில்லாமையால் ஓரளவுக்கே அவற்றைச் சொன்னேன் என்று கூறல்.
41 இது வரையில் சொல்லப்பட்ட விபூதிகள் – சொல்லப்படாதவையும் அவஶ்யம் சொல்லவேண்டியவையுமான மற்றும் பல முக்ய விபூதிகளுக்கு எடுத்துக்காட்டே என்று கூறி
ப்ரகரணத்தை நிறைவு படுத்தல்.
42 முக்யமானவை, அமுக்யமானவை என்னும் வாசியில்லாமல் பார்க்கும்போது, எல்லா உலகமும் தன்னுடைய ஸங்கல்பத்தின் ஒரு சிறு பகுதியாலே தரிக்கப்படும் விபூதியே
என்று கூறி அத்யாயத்தை முடித்தல்.

—————————

11 – விஶ்வரூப தர்சனம்:

15) ஏகாதஶே ஸ்வ யாதாத்ம்ய ஸாக்ஷாத்காரா வலோகநம்
தத்தமுக்தம் விதிப்ராப்த்யோர் பக்த்யேகோபாயதாததா

ஏகாதஶே – பதினோராமத்தியாயத்தில்,
ஸ்வ யாதாத்ம்ய ஸாக்ஷாத்கார அவலோகநம் – தன்னை உள்ளபடி காண்பதற்குரிய திவ்யமான கண்,
தத்தம் உக்தம் – (அர்ஜுனனுக்குக் கண்ணனால்) கொடுக்கப்பட்டதெனச் சொல்லப்பட்டது;
ததா – அவ்வண்ணமே,
விதி ப்ராப்த்யோ – (பரம்பொருளை) அறிவது, (காண்பது), அடைவது ஆகியவை,
பக்த்யேகோபாயதா – பக்தியொன்றையே காரணமாகக் கொண்டவை (என்றும்),
உக்தம் – சொல்லப்பட்டது.

பார்த்தனுக்கு மாயனருள் கீதைப் பதினொன்றா
மோத்திவ் வுலகெல்லா முடம்பதனிற் – கோத்தபடி
காட்டுமது தன்னறிவு கண்டடைத றன்பத்தி
கூட்டுமதுஞ் சொல்லுங் குறித்து.

பார்த்தனுக்கு – அர்ஜுனனுக்கு,
மாயன் அருள் – மாயப் பிரானாகிய கண்ணன் அருளிய,
கீதை பதினொன்றாம் ஓத்து – கீதையின் பதினொன்றாம் அத்தியாயம்,
இவ்வுலகெல்லாம் – இவ்வுலகனைத்தையும்,
உடம்பதனில் – தன் சரீரத்தில்,
கோத்தபடி காட்டுமது – (கண்ணனின் ஒரு பகுதியாகக்) கோத்துக் கொண்டிருக்கும் படியைக் காட்டுவதாகும்.
தன் அறிவு கண்டு அடைதல் – தன்னை அறிவதும், காண்பதும், அடைவதுமாகிற பயன்களை,
தன் பத்தி கூட்டுமதும் – தன் விஷயமான பக்தியோகம் கூட்டி வைப்பதையும்,
குறித்துச் சொல்லும் – குறிக்கொண்டு கூறும்.

1-3 அர்ஜுனன் தனது நன்றியையும் ஆஸ்திக்யத்தையும் க்ருஷ்ண பக்தியையும் காட்டுகிறான்.
4 விஶ்வரூபத்தைக் காட்டும்படி அர்ஜுனனுடைய ப்ரார்த்தனை.
5-8 திவ்ய சக்ஷுஸ்ஸை அர்ஜுனனுக்கு அளித்துத் தன் விஶ்வ ரூபத்தைக் கண்ண்னன் அவனுக்குக் காட்டுதல்.
9-13 விஶ்வரூப வர்ணனை.
14-30 அர்ஜுனன் விஶ்வரூபத்தின் பெருமைகளைக் கூறித் துதித்தல்.
31 அர்ஜுனனின் கேள்வி – (பயங்கர உருவத்தின் பயன்)
32-34 கண்ணனின் பதில் – (ஸ்வஸங்கல்ப ஶக்தியின் வீர்யம்)
35-46 அர்ஜுனனின் துதியும், மன்னிப்பு வேண்டுதலும், பிரார்த்தனையும்.
47-49 கண்ணனின் அபயப்ரதானம்.
50 கண்ணன் இயல்வான நான்கு தோள் திருமேனியை எடுத்துக்கொண்டு அர்ஜுனனைத் தேற்றியது.
51 அவ்வுருவைக் கண்ட அர்ஜுனன் தான் இன்புற்றுத் தன்னிலை பெற்றதைக் கூறுதல்.
52-55 கண்ணன் அர்ஜுனனுக்கு பக்தியோகத்தின் பெருமையையும் ஶுபாஶ்ரயமாயிருக்கும்
திருமேனியின் பெருமையையும் பேசுதல்.

———————–

12 – ஸ்ரீ பக்தி யோகம்:

16) பக்தே:ஶ்ரைஷ்ட்ய முபாயோக்தி ரஶக்தஸ் யாத்ம நிஷ்டதா
தத் ப்ரகாராஸ்த்வதிப்ரீதிர் பக்தேத்வாதஶ உச்யதே

பக்தே:ஶ்ரைஷ்ட்யம் – (ஆத்மோபாஸனத்தைக் காட்டிலும்) பகவதுபாஸனமாகிற பக்தியின் சிறப்பும்,
உபாயோக்தி: – அந்த பக்திக்கு உபாயத்தைத் தெரிவித்தலும்,
அஶக்தஸ்ய – பக்தியில் ஶக்தியில்லாதவனுக்கு,
ஆத்மநிஷ்டதா – ஆத்மோபாஸனமும்,
தத் ப்ரகாரா: – கர்ம யோகம் முதலானவற்றுக்கு வேண்டியவைகளான குணங்களின் வகைகளும்,
பக்தே அதிப்ரீதி: து – தன் பக்தனிடம் மிகுந்த ப்ரீதியும்,
த்வாதஶே – பன்னிரண்டாமத்தியாயத்தில்,
உச்யதே – கூறப்படுகிறது.

பத்தி யறிவாற் கடக்கும் பலவகையு
மத்தி லுகப்பி னதிசயமு – முத்தி தரும்
பண்பி னருள்கீதை பன்னிரண்டா மோத்துரைக்குந்
திண்பயிலுந் சொல்லாற் செறிந்து.

முத்திதரும் பண்பின் அருள் கீதை – வீடு பேற்றைத் தரும் இயல்பால் (கண்ணன்) அருளிய கீதையின்,
பன்னிரண்டாமோத்து – பன்னிரண்டாவது அத்தியாயம்,
பத்தி யறிவாற்கு – பக்தியோகத்தை அறிபவனுக்கு,
அடக்கும் பல வகையும் – கைக் கொள்ள வேண்டிய பல குணங்களும்,
அத்தில் – அந்த பக்தி யோகத்தில்,
உகப்பின் அதிசயமும் – (எம்பெருமானுக்குள்ள) அன்பின் மிகுதியும்,
திண் பயிலும் சொல்லால் செறிந்து உரைக்கும் – உறுதியானதாய் அனைவராலும் அனுஸந்திக்கத் தக்கதான
சொற்களால் நன்றாகக் கூறும்.

1 பகவதுபாஸகர்கள், ஆத்மோபாஸகர்கள் என்னுமிருவரில் எவர் தம் பயனை விரைவில் அடைவர்கள்?
என்னும் அர்ஜுனனின் கேள்வி.
2 “என்னையே ப்ராப்யமாக நினைத்து உபாஸிப்பவர்கள் ஆத்மோபாஸகர்களைக் காட்டிலும் சிறந்தவர்கள்’
என்னும் கண்ணனின் பதில்.
3-5 முற்கூறிய ஜ்ஞானியைக் காட்டிலும் கைவல்ய நிஷ்டனின் தாழ்வைக் கண்ணன் விளக்குதல்.
6-7 தன்னை உபாஸிப்பவர்கள் சிறந்தவர்கள் என்று முற்கூறியதைக் கண்ணன் மிகத் தெளிவாகக் கூறுதல்.
8 “நீ என்னிடம் பக்தி செய்வாய்” என்று அர்ஜுனனைக் குறித்து விதித்தல்.
9 “என்னிடம் உறுதியான நெஞ்சைச் செலுத்த இயலவில்லை யாகில் என் கல்யான குணங்களை
அனுஸந்திப்பதாகிற அப்யாஸ யோகத்தின் மூலம் பக்தியை யடையலாம்” என்று கூறல்.
10 “அப்யாஸ யோகத்தில் ஶக்தியில்லையாகில் என் விஷயமான கர்மங்களைச் செய்வதில் ஈடுபடுவதால்
விரைவில் அப்யாஸ யோகத்தைப் பெற்று பக்தியைச் செலுத்தி என்னை அடையலாம்” என்று கூறல்.
11 “பக்தி யோகத்தில் ஶக்தியில்லாதவன் அதை ஸாதித்துத் தரும் உபாய பரம்பரையில் எல்லை நிலமான
கர்ம யோகத்தை அநுஷ்டிக்க வேண்டும்” என்று கூறல்.
12 ஒன்பது, பத்து, பதினொன்று ஶ்லோகங்களை விளக்குதல்.
13-19 பலனில் விருப்பமற்றுச் செய்யப்படும் கர்மயோகத்தில் ஊன்றி நிற்பவன் கைக் கொள்ள வேண்டிய குணங்களை விவரித்தல்.
20 பக்திநிஷ்டன் தனக்கு மிகவினியவன் எனக்கூறல்.

மத்யம ஷட்கத்தின் ஸாரப்பொருள்:
பத்திவகை யாங்கறிந்து சேரப் பரன்பெருமை
யெத்தியலு மாய்நித் ததுவடிவி – லொத்தியலக்
காட்டியது பத்திநலங் கண்ணன் றருகீதை
மாட்டிடையா றொத்தின் வகை.

கண்ணன் தரு கீதை மாட்டு – கண்ணன் அருளிச் செய்த கீதையில்,
இடை ஆறு ஓத்தின் வகை – நடுவிலுள்ள ஆறு அத்தியாயங்கள்,
எத்தியலுமாய் – கர்ம யோகம் முழுவதையும் அநுஷ்டித்து,
நித்தது வடிவிலொத்தியல – நித்யமான ஆத்மஸ்வரூபத்தை நேரே காண்பது போன்ற காட்சியைக் கண்டு,
பத்தி வகை ஆந்கு அறிந்து – பக்தியோகத்தின் தன்மைகளை அதன்பின் அறிந்து,
பரன் பெருமை சேர – பரம்பொருளின் அனுபவத்தைப் பெறுவதற்காக,
பத்தி நலம் – பக்தி யோகத்தின் பெருமைகளை, காட்டியது – விளக்கிற்று.

மூன்று ஷட்கங்களின் ஸாரப் பொருள்:
கன்ம முயிருணர்வாற் கட்டவரு முன்னாறு
நன்மையிறை பத்தி நடுவாறு – தன்மையுடன்
காயமுயி ரீசன் கருமமறி வன்புவகை
யேயவமைந் தேலுமீ றாறு.

முன் ஆறு – முதல் ஆறு அத்தியாயங்கள்,
கட்டவரும் – முயற்சி செய்ய உண்டாகும்,
கன்மம் உயிருணர்வால் – கர்மஜ்ஞாந யோகங்களால்,
ஏய அமைந்து ஏலும் – பொருந்தி விளங்கி நிற்கும்,
நடு ஆறு – நடுவிலுள்ள ஆறு அத்தியாயங்கள்,
நன்மை இறை பத்தி – சிறப்புமிக்க பரமாத்ம பக்தியோகத்தால்,
ஏய அமைந்து ஏலும் – பொருந்தி விளங்கி நிற்கும்.
ஈறு ஆறு – கடைசியிலுள்ள ஆறு அத்தியாயங்கள்,
காயம் உயிர் ஈசன் கருமம் அறிவு அன்பு வகை – உடல், உயிர், ஈச்வரன், கர்ம ஜ்ஞான பக்தி யோகங்கள்,
தன்மையுடன் – இவற்றின் தன்மைகளோடு,
ஏய அமைந்து ஏலும் – பொருந்தி விளங்கி நிற்கும்.

———————

13 – ஸ்ரீ க்ஷேத்ர க்ஷேத்ரஜ்ஞ விபாக யோகம்:

17) தேஹ ஸ்வரூப மாத்மாப்தி ஹேது ஆத்ம விஶோதநம்
பந்த ஹேதுர் விவேகஶ் சத்ர யோதஶ உதீர்யதே

தேஹஸ்வரூபம் – தேஹத்தின் ஸ்வரூபமும்,
ஆத்மாப்திஹேது: – ஜீவாத்ம ஸ்வரூபத்தை அடைவதற்கு உபாயமும்,
ஆத்மவிஶோதநம் – ஆத்மாவை ஆராய்ந்தறிதலும்,
பந்தஹேது: – (ஆத்மாவுக்கு அசித்தோடு) தொடர்பு ஏற்படுவதற்குக் காரணமும்,
விவேக: ச – (ஆத்மாவை அசித்திலிருந்து) பிரித்தநுஸந்திக்கும் முறையும்,
த்ரயோதஶே – பதிமூன்றாவது அத்தியாயத்தில்,
உதீர்யதே – சொல்லப் படுகிறது.

ஈங்கு முதலாகி யேய்ந்தபதின் மூன்றாமோத்
தாங்குடல மாருயி ராப்புறுத – னீங்குநெறி
தன்மையுடன் மற்றுந் தகைமைபெறச் சோதித்து
நன்மையுடன் சொல்லு நயந்து.

ஈங்கு – இந்த கடைசி ஷட்கத்தில்,
முதல் ஆகி ஏய்ந்த பதிமூன்றாம் ஓத்து – முதலாவதாகப் பொருந்தியிருக்கும் பதிமூன்றாம் அத்தியாயம்,
ஆங்கு – இந்த ஸம்ஸாரத்தில்,
ஆர் உயிர் உடலம் ஆப்பு உறுதல் – ஜீவாத்மாவானது உடலிலே கட்டுப்படுவதையும்,
நீங்கு நெறி – அதிலிருந்து விடுபட வழியையும்,
தன்மையுடன் – அந்த தேஹாத்மாக்களின் ஸ்வரூபத்துடன்,
முற்றும் தகைமை பெற – மற்றுமுள்ள ஸ்வபாவங்களையும்,
சோதித்து – ஆராய்ந்து,
நன்மையுடன் நயந்து சொல்லும் – சிறப்பாக விருப்பத்தோடு கூறும்.

1 ஶரீரமே க்ஷேத்ரம் எனப்படும்; அதை அறியும் ஜீவனே க்ஷேத்ரஜ்ஞன் எனப் படுவான்.
2 இரண்டுமே ஸர்வேஶ்வரனுக்கு ஶேஷமானவை என அறிவதே உண்மை யறிவு.
3 இரண்டைப் பற்றியும் சுருக்கமாகச் சொல்லப் போவதாகப் ப்ரதிஜ்ஞை.
4 இவ் வறிவு ஸகல ப்ரமாண ஸித்தம்.
5,6 க்ஷேத்ரத்தைப் பற்றிய உண்மை யறிவைச் சுருங்கக் கூறல்.
7-11 ஆத்ம ஜ்ஞான ஸாதனமான அமாநித்வம் முதலான இருபது குணங்களைக் கூறுதல்.
இது க்ஷேத்ரத்தினால் விளையும் கார்யத்தின் விளக்கமுமாகும்.

அமாநித்வம் அதம்பித்வம் அஹிம்ஸா க்ஷாந்திரார்ஜவம்
ஆசார்யோபாஸநம் ஶெளசம்ஸ்தைர்ய மாத்மவிநிக்ரஹ:

இந்த்ரியார்த்தேஷு வைராக்யமநஹங்கார ஏவ ச
ஜன்மம்ருத்யுஜராவ்யாதி து:கதோஷாநுதர்ஶநம்

அஸக்திரநபிஷ்வங்க: புத்ரதாரக்ருஹாதிஷு
நித்யம் ச ஸமசித்தத்வம் இஷ்டாநிஷ்டோபபத்திஷு

மயி சாநந்யயோகேன பக்திரவ்யபிசாரிணீ
விவிக்ததேஶஸேவித்வம் அரதிர் ஜநஸம்ஸதி

அத்யாத்மஜ்ஞாநநித்யத்வம் தத்வஜ்ஞாநார்ததர்ஶநம்
ஏதத்ஜ்ஞாநமிதிப்ரோக்தம் அஜ்ஞாநம் யததோ (அ)ந்யதா

12-17 க்ஷேத்ரஜ்ஞன் எனப்படும் ஜீவ ஸ்வரூபத்தின் விளக்கம்.
18 கார்யத்தோடு கூடிய க்ஷேத்ரத்தையும், க்ஷேத்ரஜ்ஞனையும் அறிவதின் பலம்.
19-22 ஆத்மா ஶரீரத்தில் கட்டுப்பட்டிருப்பதற்குக் காரணம் ஸத்வாதி குணங்களால் உண்டாகும் இன்ப துன்பங்களில் பற்றே யாகும்.
23 ப்ரக்ருதி புருஷர்களைப் பிரித்தறியும் விவேக ஜ்ஞானத்தின் பலம் பிறவி நீங்குதலே.
24-25 பிரித்தறியும் விவேகிகளின் பல படிகள்.
26 தேஹமும் ஆத்மாவும் பிறவியிலிருந்தே அழுந்தக் கட்டப்பட்டிருப்பதால், அவற்றைப் பிரித்தறிவது அரிது.
27-33 தேஹாத்மாக்களைப் பிரித்தறியும் முறையாகிற விவேகத்தை விளக்குதல்.
34 க்ஷேத்ர க்ஷேத்ரஜ்ஞர்களைப் பிரித்தறியும் ஞானத்தின் பலம் ஆத்ம ப்ராப்தி எனக்கூறி அத்தியாயத்தை நிறைவுறுத்தல்.

—————————

14 – குண த்ரய விபாக யோகம்:

18) குண பந்தவிதா தேஷாம் கர்த்ருத்வம் தந் நிவர்த்தநம்
கதி த்ரயஸ்வ மூலத்வம் சதுர்த் தஶ உதீர்யதே

குணபந்தவிதா – (ஸத்வம் முதலான மூன்று குணங்கள்) ஸம்ஸார பந்தத்துக்குக் காரணமாகும் முறையும்,
தேஷாம் கர்த்ருத்வம் – அந்த குணங்கள் செயலுக்குக் காரணமாயிருக்கும் தன்மையும்,
தந் நிவர்த்தநம் – அந்த குணங்களை நீக்கும் முறையும்,
கதி த்ரயஸ்வ மூலத்வம் – (சிறந்த ஐஶ்வர்யம், கைவல்யம், பகவத்ப்ராப்தி என்னும்) மூன்று ப்ராப்யங்களும்
தன்னிடமிருந்தே கிடைக்கின்றன என்பதும்,
சதுர்த்தஶே – (கீதையின்) பதினாலாமத்தியாயத்தில்,
உதீர்யதே – சொல்லப்படுகிறது.

முக்குணங்கள் பந்தத்து மூட்டுகின்ற நேர்பதுவு
மக்குணங்க ணீங்குவிக்கு மவ்விரகு – மிக்குயர்ந்த
கீதை பதினாலா மோத்துக் கிளர்ந்துரைக்கும்
போதத் தியல்பாற் புரிந்து.

மிக்கு உயர்ந்த கீதை பதினாலாம் ஓத்து – மிகச் சிறந்த கீதையின் பதினாலாம் அத்தியாயம்,
முக்குணங்கள் பந்தத்து மூட்டுகின்ற நேர்பு அதுவும் – (ஸத்வம் முதலிய) மூன்று குணங்கள் ஸம்ஸார பந்தத்தில்
(தாமே செயலுக்குக் காரணமாயிருந்து) நன்றாகக் கட்டிவிடுகின்ற முறையும்,
அக்குணங்கள் நீங்குவிக்கும் அவ்விரகும் – அந்த குணங்களை நீங்கச் செய்யும் முறையையும்,
போதத்து இயல்பால் – அறிவிக்க வேண்டிய முறையில்,
புரிந்து – விருப்பத்தோடு,
கிளர்ந்து உரைக்கும் – உறுதியாகக் கூறும்.

1-2 இவ்வத்தியாயத்தில் கூறப்படும் அறிவைப் புகழ்தல்.
3-4 ஜீவனுக்கு ஶரீர ஸம்பந்தம் ஸ்ருஷ்டியின் தொடக்கத்திலும் அதற்குப் பின்பும்
தன்னாலேயே செய்யப்படுகிறது என்று கண்ணன் உரைத்தல்.
5 முக்குணங்களே பிறவிகள் தொடர்வதற்குக் காரணம்.
6-8 ஸத்வம், ரஜஸ், தமஸ் என்னும் மூன்று குணங்களின் தனித்தன்மையையும்
அவை ஜீவனைக் கட்டும் முறையையும் விளக்குதல்.
9 இக்குணங்கள் ஜீவனைக் கட்டுவதற்குக் காரணங்களில் முக்யமானதைக் காட்டுதல்.
10 ஒவ்வொரு ஶரீரத்தில் இக்குணங்களில் ஒவ்வொன்று மேலோங்கி யிருப்பதால் அதன் விளைவுகளே
அந்த உடலில் உண்டாகின்றன எனக் கூறல்.
11-13 முறையே முக்குணங்களும் மேலோங்கி நிற்பதை அவற்றின் கார்யங் கொண்டு அறியலாம் என்று விளக்குதல்.
14-15 முக்குணங்களில் ஒவ்வொன்று மேலோங்கி யிருக்கும் போது மரணமடைந்தால் உண்டாகும் பலம்.
16-18 மிகுதியான ஸத்வ குணம் முதலானவற்றாலே விளையும் பலன்களை விளக்குதல்.
(இதுவரை குணங்கள் ஜீவனைக் கட்டும் முறை விளக்கப்பட்டது)
19 குணங்களின் கர்த்ருத்வம் (செயல் புரியும் தன்மை) அவசியம் அறியத்தக்கது.
20 குணங்களைக் கடந்து நிற்பவன், மரணம், தோற்றம், வான்பிணி, மூப்பு முதலானவை நீங்கப் பெற்று,
மரணமற்ற தன் ஆத்மாவை அனுபவிக்கிறான்.
21 குணங்கடந்தவனுடைய உள் வெளி அடையாளங்களைப் பற்றியும், குணங்களைக் கடந்து நிற்பது எப்படி?
என்பது பற்றியும் அர்ஜுனனின் கேள்வி.
22-25 அந்தக் கேள்விக்குப் பதிலாக குணங்கடந்தவனின் உள் வெளி அடையாளங்களை விளக்குதல்.
26 குணங்கடந்த நிலைக்குத் தன்னிடம் செய்யப்படும் ஏகாந்த பக்தியே முக்ய காரணம் என்று விவரித்தல்.
27 ஐஶ்வர்ய கைவல்ய பகவத்ப்ராப்திகள் தன்னாலேயே விளைபவை என விவரித்தல்.

————————–

15 – ஸ்ரீ புருஷோத்தம யோகம்:

19) அசிந் மிஶ்ராத் விஶுத்தாச்ச சேதநாத் புருஷோத்தம:
வ்யாபநாத் பரணாத் ஸ்வாம்யாத் அந்ய: பஞ்சத ஶோதித:

அசிந்மிஶ்ராத் (சேதநாத்) – அசேதனமான ப்ராக்ருத ஶரீரத்தோடு சேர்ந்திருக்கும் பத்த ஜீவனைக் காட்டிலும்,
விஶுத்தாத் சேதநாத் ச – ப்ராக்ருத ஶரீரத்திலிருந்து விடுபட்டுப் பரிஶுத்தியடைந்த முக்த ஜீவனைக் காட்டிலும்,
வ்யாபநாத் – (அவர்களை) வ்யாபித்திருக்கையாலும்,
பரணாத் – (அவர்களைத்) தாங்குகையாலும்,
ஸ்வாம்யாத் – (அவர்களை) உடையவனாயிருக்கையாலும்,
அந்ய: – வேறுபட்டவனான,
புருஷோத்தம: – புருஷோத்தமனான ஸ்ரீமந் நாராயணன்,
பஞ்சதஶோதித: – பதினைந்தாவது அத்தியாயத் தில் சொல்லப்பட்டான்.

மன்னும் அசித்தின் மருவி அமர் சித்தினும்
மாறு உன்னும் உயிர் வகையில் – உத்தமனா மன்னி அவை
மீது உள் பரந்து பரித்து இறையாய் மேவினனை
யோதும் பதினைந்தா மோத்து.

மன்னும் அசித்தின் மருவி அமர் சித்தினும் – அனாதி காலமாகச் சேர்ந்திருக்கும் அசேதனமான ப்ராக்ருத சரீரத்தோடு
கூடிய பத்த ஜீவனைக்காட்டிலும்,
மாறு உன்னும் உயிர் வகையில் – அவ்வசித்தை விட்டு நீங்கியதாக அறியப்படும் முக்தாத்மாவைக் காட்டிலும்,
உத்தமனா மன்னி – மேற்பட்டவனாக விளங்கி,
அவை மீது உள் பரந்து – அவ்விரண்டையும் வ்யாபித்து,
பரித்து – அவற்றைத் தாங்கி,
இறையாய் – அவற்றை உடையவனாய்,
மேவினனை – பொருந்தியிருக்கும் புருஷோத்தமனான நாராயணனை,
பதினைந்தாம் ஓத்து – (கீதையின்) பதினைந்தாம் அத்யாயம்,
ஓதும் – கூறும்.

1 ஸம்ஸாரம் ஓர் அரசமரமாக உருவகப்படுத்தப்பட்டு அதை அறிந்தவனே வேதத்தை நன்கறிந்தவன் எனப்படுகிறது.
2 முற்கூறிய உருவகம் மேலும் நீட்டிக்கப்படுகிறது.
3 இந்த மரத்திற்கு குணங்களில் பற்றே காரணமென்றும் குணங்கடந்த நிலையாலேயே இது அழிகிறதென்றும்,
அஜ்ஞானமே இதற்கு ஆதாரமென்றும் ஸம்ஸாரிகளால் அறியப்படுவதில்லை.
3-4 நல்லறிவால் விளைந்த ‘குணங்களில் பற்றின்மை’யாகிற ஆயுதத்தாலே இம்மரத்தை வெட்டி,
ப்ராப்யமான ஆத்மா தேடத்தக்கது.
4 எம்பெருமானை ஶரணமடைவதன் மூலமே பற்றின்மையாகிற ஆயுதத்தைப் பெற்று
ஸம்ஸாரத்தை வெட்டி வீழ்த்தலாம்.
5 எம்பெருமானை ஶரணமடைந்தவர்களுக்கு தேஹாத்ம மயக்கம் நீங்குகை, குணங்களில் பற்றை வெல்லுகை,
ஆத்ம ஜ்ஞானத்தில் எப்போதும் ஈடுபட்டிருக்கை, மற்ற விஷயங்களில் விருப்பம் நீங்கப் பெற்றவர்களாகை,
இன்ப துன்பங்களாகிற இரட்டைகளிலிருந்து விடுபடுகை முதலானவை அனைத்தும் எளிதாகி
ஆத்மாநுபவமாகிற பலமும் ஸித்திக்கிறது.
6 பரிஶுத்தாத்ம ஸ்வரூபத்தின் பெருமை.
7 எம்பெருமானுடைய செல்வமாயிருக்கும் ஸம்ஸாரி ஜீவன் தான் சேர்த்து வைத்திருக்கும் புண்ய பாப ரூபமான
விலங்குகளாலே வலியக் கட்டப் பெற்று, தன் ஶரீரமாகிற சிறையிலே அடைபட்டிருக்கிறான்.
8 அவன் ஒரு ஶரீரத்திலிருந்து மற்றொரு ஶரீரத்தில் புகுவது முதலான துன்பங்களை அனுபவிக்கிறான்.
9 இந்த்ரியங்களைக் கொண்டு அவன் விஷம் கலந்த தேன் போன்ற ப்ராக்ருத விஷயங்களை அனுபவித்து உழலுகின்றான்.
10 இத் துன்பங்களை யெல்லாம் அவன் அனுபவிப்பதற்குக் காரணம் ஆத்மாபஹார மாகிற திருட்டே.
இவன் தன் ஸ்வரூபத்தை அறியாமைக்குக் காரணம் தேஹத்தையே ஆத்மா என்று மயங்குவதே.
இந்த மயக்கமில்லாமல் அறிவுக் கண்ணை யுடையவர்கள் ஆத்மாவை அறிவே வடிவெடுத்ததாகக் காண்கிறார்கள்.
11 முன் ஶ்லோகங்களின் விளக்கம்.
12-14 ஸூர்யன், சந்திரன், அக்னி முதலானவற்றுக்குள்ளதான பொருள்களைப் ப்ரகாஶிக்கச் செய்யும் ஶக்தியும்,
பூமியின் தாரண ஶக்தியும், சந்திரனின் போஷண ஶக்தியும் ஜாடராக்னியின் ஜீர்ணம் செய்யும் ஶக்தியும்
இது போல் உலகிலுள்ள எல்லாப் பொருள்களுக்குமுள்ளதான ஒவ்வொரு கார்யத்தைச் செய்யும் ஶக்திகளும்
எம்பெருமானுடையவையே. ஆகையால், ப்ராக்ருதப் பொருள்கள் எல்லாம் எம்பெருமானின் செல்வமே.
15 எல்லாப்பொருள்களையும் எம்பெருமானோடு ஒரே வேற்றுமையில் படிப்பதற்குக் காரணம் அவன்
அனைவருடைய ஹ்ருதயத்திலும் எழுந்தருளி நியமிப்பதே. வேதங்கள் இவ்வர்த்தத்தைச் சொல்லுகின்றன.
எல்லா வேத வாக்யங்களாலும் முக்கியமாக அறியப்படுபவனும் அவற்றில் சொல்லப்பட்ட
கர்மங்களுக்குப் பலம் அளிப்பவனும் எம்பெருமானே.
16 புருஷோத்தம வித்யையின் தொடக்கம்: க்ஷர புருஷனாகிற ஸம்ஸாரி ஜீவன் அக்ஷர புருஷனாகிற முக்தன்
என்று ஜீவர்கள் இருவகைப்படுவர்.
17 அசித், ஸம்ஸாரி ஜீவன், முக்தன் என்னும் மூன்று பொருளையும் வ்யாபித்து, தாங்கி நின்று,
நியமிக்கும் பரமாத்மாவாகிற உத்தம புருஷன் முற்கூறிய க்ஷராக்ஷர புருஷர்களைக் காட்டிலும் வேறுபட்டவன்.
18 ஸம்ஸாரி ஜீவனைக் கடந்து நிற்பதாலும் முக்தனைக் காட்டிலும் மேலானவனாயிருப்பதாலும் ஶ்ருதி ஸ்ம்ருதிகளில்
“புருஷோத்தமன்” என்று பெயர் பெற்றவன் எம்பெருமானே.
19 இந்தப் புருஷோத்தம வித்யையை அறிந்தவன் எல்லா மோக்ஷோபாயங்களையும் அறிந்தவனாகிறான்.
பக்தி வகைகள் அனைத்தாலும் பக்தியைச் செய்தவனாகிறான்.
20 “உன் தகுதியைப் பார்த்து இந்தப் பரமரஹஸ்யமான ஶாஸ்த்ரத்தை உனக்கு உபதேஶித்தேன்.
இதை அறிந்து அறிய வேண்டியதனைத்தையும் அறிந்தவனாகவும், செய்ய வேண்டியதனைத்தையும்
செய்தவனாகவும் ஆவாயாக” என்று அர்ஜுனனுக்குக் கண்ணன் உபதேஶித்து அத்தியாயத்தை நிறைவுபடுத்துகிறான்.

——————————-

16 – தேவாசுர ஸம்பத் விபாக யோகம்:

20) தேவாஸுர விபாகோக்தி பூர்விகா ஶாஸ்த்ர வஶ்யதா
தத்வாநுஷ்டாந விஜ்ஞாநஸ்தேம்நே ஷோடஶ உச்யதே

தத்வாநுஷ்டாந விஜ்ஞாநஸ்தேம்நே – (அடையத்தக்க) தத்துவத்தையும், (அதை அடைவிக்கும்) உபாயாநுஷ்டாநத்தையும்
பற்றிய அறிவை உறுதிப்படுத்துவதற்காக,
தேவாஸுர விபாக உக்திபூர்விகா – (மனிதர்க்குள்) தேவப் பிரிவு, அஸுரப் பிரிவு என்னும் இரு பிரிவுகள் இருப்பதை
முன்னிட்டுக்கொண்டு,
ஶாஸ்த்ர வஶ்யதா – (மனிதன்) சாஸ்த்ரத்திற்கு வசப்பட்டவன் எனும் உண்மை,
ஷோடஶே – (கீதையின்) பதினாறாம் அத்தியாயத்தில்,
உச்யதே – சொல்லப்படுகிறது.

தன்மையாற் றேவ ரசுரரெனச் சார்பிறவி
நன்மைசேர் சாத்திரத்தி னாடுதலும் – தொன்மை
யுரைக்கங் கறிவுரைப்புக் காட்டுதற்குக் கீதை
யுரைக்கும் பதினாறா மோத்து.

கீதை பதினாறாம் ஓத்து – கீதையின் பதினாறாம் அத்தியாயம்,
அங்கு தொன்மை உரைக்கு – அந்த கீதையில் இதுவரை (அடையத்தக்க) தத்துவத்தைப் பற்றியும்
அதை (அடைவிக்கும்) உபாயாநுஷ்டானத்தைப் பற்றியும் சொல்லப்பட்ட விஷயங்களின்,
அறிவு உரைப்பு காட்டுதற்கு – அறிவு உறுதிப்படுவதற்காக,
தன்மையால் தேவர் அசுரர் என சார்பிறவி – (மனிதர்கள்) தம் இயல்வால் தேவர் அசுரர் என இருவகை
பிறவிகளாகப் பிரிவுபட்டிருப்பதையும்,
நன்மை சேர் சாத்திரத்தின் நாடுதலும் – நன்மையை அடைவிக்கும் சாஸ்திரத்திற்கு வசப்பட்டிருக்கும்
தன்மையையும், உரைக்கும் – விளக்குகிறது.

1-3 தெய்வப்பிறவி வகுப்பில் சேர்ந்தவனுக்குரிய முக்கியமான குணங்கள்.
1. பயமின்மை,
2. மனத்தின் பரிசுத்தி,
3. (ப்ரக்ருதியினின்றும் நீங்கிய) ஆத்ம ஸ்வரூபத்தைச் சிந்தித்திருத்தல்,
4. நல்ல வழியில் தேடிய பொருளை நல்லோர்களுக்களித்தல்,
5. மனத்தை ஶப்தாதி விஷயங்களில் பாயாமல் தடுக்கப் பழகுதல்,
6. (பலனில் பற்றற்று பகவதாராதனமாகப்) பஞ்ச மஹா யஜ்ஞம் முதலானவற்றை அனுஷ்டித்தல்,
7. வேதாத்யயனத்தில் ஈடுபடுதல்,
8. ஏகாதசி உபவாஸம் முதலான தவங்களில் ஈடுபடுதல்,
9. மனம் மொழி மெய்களால் ஒருபடிப் பட்டிருத்தல்,
10. எந்த ஜீவராசியையும் துன்புறுத்தாமை,
11. ஜீவராசிகளுக்கு நன்மையான உண்மையையே உரைத்தல்,
12. பிறரைத் துன்புறுத்துவதில் மூட்டும் கோபம் இல்லாதவனாயிருக்கை,
13. தனக்கு நன்மையை விளைக்காத உடைமைகளைக் கை விடுதல்,
14. (மனம் தவிர்ந்த) இந்த்ரியங்களை ஶப்தாதி விஷயங்களில் பாயாமல் தடுக்கப் பழகுதல்,
15. (பிறர்க்குத் தீங்கு விளைக்கும்) கோட்சொல்லுதலைத் தவிர்த்தல்,
16. ஜீவராசிகளின் துன்பங் கண்டு பொறாமலிருத்தல்,
17. விஷயங்களில் பற்றின்மை,
18. (நல்லோர்கள் அணுகலாம்படி) மென்மையுடனிருக்கை,
19. தகாத செயல்களைச் செய்வதில் வெள்கி யிருத்தல்,
20. அருகிலிருக்கும் அழகிய பொருள்களையும் ஆசைப் படாமை,
21. (தீயவர்களால்) வெல்ல வொண்ணாமை,
22. (துன்புறுத்துபவர்களிடமும்) பொறுமை,
23. (பேராபத்து வந்தாலும்) செய்ய வேண்டியதில் உறுதியாயிருக்கை,
24. (மநோ வாக் காயங்களில் சாஸ்த்ரங்களில் சொல்லிய) பரிசுத்தி யாகிற அனுஷ்டானத்
தகுதியை உடையவனாயிருக்கை,
25. பிறர் நற் செயல்களைத் தடுக்காமை,
26. தகாத கர்வம் இன்மை ஆகிய இருபத்தாறு குணங்கள்.

4 அஸுரப் பிறவி வகுப்பில் சேர்ந்தவனுக்குரிய முக்கியமான குணங்கள்:
1. (தார்மிகன் என்னும்) புகழைப் பெற தர்மத்தை அநுஷ்டிப்பது,
2. (ஶப்தாதி விஷ்யங்களை அனுபவிப்பதனால் உண்டாகும்) செருக்கு,
3. அதிகமான கர்வம்,
4. (பிறரைத் துன்புறுத்தம்) கோபம்,
5. (நல்லோர்களை வெறுப்படையச் செய்யும்) கடுமை,
6. தத்வ விஷயத்திலும், செய்யத் தக்கது அல்லது தகாத விஷயத்திலும் அறிவின்மை ஆகிய ஆறு குணங்கள்.

5 எம்பெருமான் ஆணையைப் பின் செல்வதாகிற தேவர்களுக்குரிய செல்வம் ஸம்ஸார விடுதலைக்கும்,
எம்பெருமானுடைய ஆணையை மீறுவதாகிற அசுரர்க்குரிய செல்வம் தாழ்ந்த கதிகளை அடைவதற்கும் உறுப்பாகின்றன.
5* அர்ஜுனன் தேவர்க்குரிய செல்வத்தைப் பெற்றவனே என்று கூறி அவனது வருத்தத்தைப் போக்குதல்.
6 தேவர்க்குரிய ஆசாரம் கர்மஜ்ஞான பக்தியோகங்களைச் சொல்லும்போது விரிவாகக் கூறப்பட்டது.
அசுரர்க்குரிய ஆசாரம் மேலே (18-வது ஶ்லோகம் வரை) சொல்லப்படுகிறது.
7 1) அசுரப்பிறவிகள், ஐஶ்வர்ய ஸாதனமாகவும், மோக் ஷஸாதனமாகவும்
இருக்கும் வைதிக தர்மத்தை அறியமாட்டார்கள்,
2) அவர்களிடம் ஶுத்தி இருக்காது,
3) ஸந்த்யாவந்தனம் முதலான ஆசாரமும் அவர்களிடம் இருக்காது.
4) உண்மை உரைத்தலும் அவர்களிடம் இருக்காது.

8 1) அசுரர்கள் உலகம் ப்ரஹ்மாத்மகம், ப்ரஹ்மத்தில் நிலை நிற்பது,
ப்ரஹ்மத்தால் நியமிக்கப்படுவது என்று சொல்வதில்ல
2) ஆண், பெண் சேர்க்கையால் உண்டாகாதது எதுவுமில்லையாகையால் உலகனைத்தும்
காமத்தையே காரணமாகக் கொண்டது என்று கூறுகிறார்கள்.

9 அசுரர்கள் தேஹத்திலும் வேறுபட்ட ஆத்மாவை அறியாமல் கொடிய செயல்களைச் செய்பவர்களாய்,
உலகம் அழிவதற்குக் காரணமாகிறார்கள்.
10 அசுரர்கள் காமத்தை நிறைவேற்ற அநியாய வழியில் தேடப்பெற்ற பொருள்களைக் கொண்டு
சாஸ்த்ரத்திற்கு முரண்பட்ட விரதங்களைக் கொண்டவர்களாய், டம்பம், துரபிமானம், மதம்
ஆகியவற்றோடு கூடியவர்களாய்ச் செயல்படுகிறார்கள்.
11 அசுரர்கள் அளவிடவொண்ணாத கவலைகளை யுடையவர்களாய், காமாநுபவத்தையே
பரம புருஷார்த்தமாக நினைப்பவர்கள்.
12 1) அசுரர்கள் நூற்றுக்கணக்கான ஆஶாபாஶங்களால் கட்டப்பட்டவர்கள்.
2) காமத்திலும், கோபத்திலுமே ஊன்றி நிற்பவர்கள்.
12. காமாநுபவத்திற்குத் தவறான வழிகளில் பொருளை விரும்பித் தேடுகிறார்கள்.
13 அசுரர்கள் தங்களுடைய இஷ்டப்ராப்தி தம் திறமையாலேயேயொழிய முன்வினையால் அல்ல என்று மயங்கி, காமாநுபவத்தில் பெற்றதையும், பெறவேண்டியதையும் கணக்கிட்டுக் கொண்டிருக்கிறார்கள்.
*14 அசுரர்கள் ‘ஶத்ரு நிரஶனம்’ முதலான அநிஷ்ட நிவ்ருத்திகளும் தம் திறமையாலேயேயொழிய முன் வினையால் அல்ல என்று மயங்கியிருக்கிறார்கள்.
14*-15 அசுரர்கள் முற்கூறிய தம் திறமையும், மற்றும் பல திறமைகளும் தமக்கு இயல்பாக உள்ளதேயொழிய, புண்யத்தால் உண்டானதன்று என்று மயங்கியிருக்கிறார்கள்.
16 அசுரர்கள் பல கவலைகளையும், மயக்கங்களையும், புலனின்பங்களில் ஈடுபாட்டையும் உடையவர்களாயிருக்கையாலே அசுத்தமான நரகத்தில் விழுகிறார்கள்.
17 1) அசுரர்கள் தம்மைத்தாமே பெருமைபேசிக் கொள்பவர்கள்.
2) பணிவில்லாமல் நிமிர்ந்து நிற்பவர்கள்.
3) பணத்தினாலும் (கல்வி, குடிப்பிறப்பு ஆகியவற்றால் உண்டான)

அபிமானத்தாலும் விளையும் கர்வத்தை உடையவர்கள்.
4) புகழையே பயனாகக் கொண்டு சாஸ்த்ர விதிக்கு முரணாக டம்பத்திற்காக

யாகம் செய்கிறார்கள்.
18 அசுரர்கள் அஹங்காரத்தையும், தன் பலத்தையும், கர்வத்தையும் கோபத்தையும் பற்றி நிற்பவர்களாய், அனைத்தையும் செய்விக்கும் பகவானிடத்தில் பொறாமையுடையவர்களாய் யாகம் செய்கிறார்கள்.
19 பகவானைத்வேஷிப்பவர்களாய், கொடியவர்களாய், மனிதர்களில் கடையானவர்களாய், அமங்களாமானவர்களான அவ்வசுரர்களை எம்பெருமான் பிறவிகளில், அதிலும் ஆஸுரப் பிறவிகளிலேயே தள்ளுகிறான்.
20 முற்கூறியபடி ஆஸுரப்பிறவிகளடைந்த அசுரர்கள் விபரீதஜ்ஞானம் வளரப் பெற்றவர்களாய், மேன்மேலும் தாழ்ந்த கதிகளையே அடைகிறார்கள்.
21 ஆஸுரத்தன்மைக்கு நுழைவாயிலாயிருக்கும் காமம், க்ரோதம், லோபம் என்னும் மூன்றையும் நல்லவர்கள் அவசியம் கைவிடவேண்டும்.
22 இம்மூன்றையும் கைவிடுபவன் தனது நன்மைக்கு முயற்சி செய்து பகவானையே அடைகிறான்.
23 ஆஸுரத்தன்மைக்கு மூலகாரணமான முற்கூறிய மூன்றைக்காட்டிலும் முக்கியமான காரணம் சாஸ்திர நம்பிக்கையின்மையே; சாஸ்திர விதியைக் கைவிடுபவன் இம்மை மறுமைப் பயன்களையும், மேலான கதியையும் அடையவே மாட்டான்.
24 ஆகையால், கைக்கொள்ளத்தக்கதையும் தகாததையும் நிர்ணயிப்பதில் சாஸ்த்ரமே (வேதமே) ப்ரமாணம். ஆகையால் வேதத்தில் சொல்லப்பட்ட புருஷோத்தமனாகிற தத்துவத்தையும், அவனை அடைய உபாயமான தர்மத்தையும் கைக்கொள்ள வேண்டும்.

——————–

17 – ஸ்ரீ ஶ்ரத்தா த்ரய விபாக யோகம்:

21) அஶாஸ்த்ரமாஸுரம்க்ருத்ஸ்நம் ஶாஸ்த்ரீயம் குணத: ப்ருதக்
லக்ஷணம் ஶாஸ்த்ரஸித்தஸ்யத்ரிதா ஸப்ததஶோதிதம்

க்ருத்ஸ்நம் அஶாஸ்த்ரம் – ஶாஸ்த்ரத்தில் விதிக்கப்படாத கர்மம் அனைத்தும்,
ஆஸுரம் – அஸுரர்க்குரியது (ஆகையாலே பயனற்றது என்றும்),
ஶாஸ்த்ரீயம் – சாஸ்த்ரத்தில் விதிக்கப்பட்ட கர்மம்,
குணத: – (ஸத்வரஜஸ்தமோ) குணங்கள் மூன்றையிட்டு,
ப்ருதக் – மூன்று விதமாயிருப்பது என்றும்,
ஶாஸ்த்ர ஸித்தஸ்ய – சாஸ்த்ரத்தில் விதிக்கப்பட்ட யாகம் முதலான் கர்மங்களுக்கு,
த்ரிதா லக்ஷணம் – “ஓம் தத் ஸத்” என்னும் மூன்று பதங்கள்
(தாம் சேர்வதன் மூலம் அவற்றை மற்ற கர்மங்களினின்றும் வேறுபடுத்தும்) லக்ஷணமாகின்றன (என்னும் விஷயமும்),
ஸப்ததஶோதிதம் – பதினேழாம் அத்தியாயத்தில் சொல்லப்பட்டது.

ஆசுரமா மின்மை சாத்திரந்தான் சாத்திரத்திற்
றேசுடைய கன்மஞ் செறிகுணத்தாற் – பேசு நெறி
சேர்ந்தேயிம் முக்குணங்கள் செப்புமே மூவகையா
வோர்ந்தே பதினேழா மோத்து.

சாத்திரந்தான் இன்மை – சாஸ்திரத்தில் விதிக்கப்படாத கர்மம் அனைத்தும்,
ஆசுரம் ஆம் – அசுரர்க்குரியதாகும்;
சாத்திரத்தில் தேசுடைய கன்மம் – சாத்திரத்தில் விதிக்கப்பட்டிருக்கையாகிற சிறப்புடைய கர்மங்கள்,
செறி குணத்தால் மூவகையா – (தேஹத்தோடு) சேர்ந்திருக்கும் ஸத்வம், ரஜஸ், தமஸ் என்னும்
மூன்று குணங்களை யிட்டு மூவகையாகவும்,
பேசு நெறி இம்முக்குணங்கள் சேர்ந்தே மூவகையா – (சாஸ்த்ரங்களில் புகழப்படும் ஓம் தத் ஸத் என்னும்)
இந்த மூன்று பதங்களின் சேர்த்தியினால் (மற்ற கர்மங்களைக் காட்டிலும்) மூன்று வகையில் வேறுபட்டிருப்பதாகவும்,
பதினேழாம் ஓத்து – பதினேழாம் அத்தியாயம்,
ஓர்ந்தே செப்புமே – ஆராய்ந்து கூறும்.

1 ஶாஸ்த்ரவிதி இல்லாமற் போனாலும் ஶ்ரத்தையோடு செய்யப்படும் கர்மங்களைப் பற்றி அர்ஜுனனின் கேள்வி.
2 ஶாஸ்த்ரங்களை ஒட்டியிருக்கும் ஶ்ரத்தை குணங்களையிட்டு கர்மம் மூவகைப்படுகிறது.
3 ஶ்ரத்தை எப்படிப்பட்டதோ அதற்குத்தக்க பலனே கிடைக்கும்.
4 ஸத்விக ராஜஸ தாமஸர்களால் ஆராதிக்கப்படுபவர்கள்.
5-6 ஶாஸ்த்ர விதிக்கு முரணான கர்மங்கள் பகவதாஜ்ஞையை மீறுவதால் எப் பயனையும் விளைப்பதில்லை
என்பதோடல்லாமல் அனர்த்தத்தையும் விளைக்கின்றன.
7 ஸத்வ ரஜஸ் தமோ குணங்களையிட்டு ஆஹாரமும், தவமும், தானமும் மூவகைப்பட்டிருக்கும் என்று கூறுதல்.
8 ஸாத்விக ஆஹாரத்தின் விளக்கம்.
9 ராஜஸ ஆஹாரத்தின் விளக்கம்.
10 தாமஸ ஆஹார விளக்கம்.
11 ஸாத்விக யாக விளக்கம்.
12 ராஜஸ யாக விளக்கம்.
13 தாமஸ யாக விளக்கம்.
14 உடலால் செய்யப்படும் தவத்தின் விளக்கம்.
15 வாக்கால் செய்யப்படும் தவத்தின் விளக்கம்.
16 மனத்தால் செய்யப்படும் தவத்தின் விளக்கம்.
17 ஸாத்விக தவத்தின் விளக்கம்.
18 ராஜஸ தவத்தின் விளக்கம்.
19 தாமஸ தவத்தின் விளக்கம்.
20 ஸாத்விக தானத்தின் விளக்கம்.
21 ராஜாஸ தானத்தின் விளக்கம்.
22 தாமஸ தானத்தின் விளக்கம்.
23 வைதிக கர்மங்கள் “ஓம் தத் ஸத்” என்னும் மூன்று ஶப்தங்களோடு இணைந்திருக்க வேண்டு
என்னும் வைதிக கர்ம லக்ஷணம்.
24 மூன்று ஶப்தங்களில் முதலாவதான ப்ரணவம் வைதிக கர்மங்களோடும், வேதங்களொடும்,
மூவர்ணத்தவர்களோடும் சேர்ந்திருக்கும் முறை.
25 வைதிக கர்மம் முதலான மூன்றுக்கும், “தத்” என்னும் ஶப்தத்தோடு சேர்த்தி;
மோக்ஷ ஸாதனமான கர்மங்களுக்கு “தத்” என்னும் ஶப்தத்தோடு சேர்த்திருக்கை லக்ஷணம்.
26 “ஸத்” என்னும் சொல்லின் வழக்குகள் (ப்ரயோகங்கள்).
27 வைதிக கர்மங்கள் முதலான மூன்றுக்கும் “ஸத்” என்னும் ஶப்தத்தோடு சேர்த்தி;
ப்ராக்ருத பல ஸாதனங்களுக்கு “ஸத்” என்னும் ஶப்தத்தோடு சேர்ந்திருக்கை லக்ஷணம்.
28 ஶாஸ்த்ரத்தை யொட்டிச் செய்யப்படுவதானாலும் ஶ்ரத்தையில்லாமல் செய்யப்படும் கர்மம்
“அஸத்” என்று சொல்லப்படும். அதனால் எப்பலனும் இல்லை.

——————–

18 -ஸ்ரீ மோக்ஷ உபதேச யோகம்:

22) ஈஶ்வரே கர்த்ருதா புத்திஸ் ஸத்வோபாதேயதாந்திமே
ஸ்வ கர்ம பரிணாமஶ்ச ஶாஸ்த்ர ஸாரார்த்த உச்யதே

ஈஶ்வரே கர்த்ருதாபுத்தி: – கர்மங்களைச் செய்பவன் ஈஶ்வரனே என்னும் நினைவும்,
ஸத்வ உபாதேயதா – ஸத்வ குணம் கைக்கொள்ளத் தக்கது என்னும் விஷயமும்,
ஸ்வ கர்மபரிணாம: – (முற்கூறிய நினைவுடன் அநுஷ்டிக்கப்படும்) ஸாத்விக கர்மத்தின் பலன் முக்தி என்பதும்,
ஶாஸ்த்ரஸாரார்த்த ச – இந்த கீதா ஶாஸ்த்ரத்தின் ஸாரார்த்தமான பக்தி ப்ரபத்திகளும்,
அந்திமே – கீதையின் கடைசியான பதினெட்டாம் அத்தியாயத்தில்,
உச்யதே – சொல்லப்படுகிறது.

செய்கருமத் தீசனே கர்த்தாவாச் சிந்திப்பு(ம்)
மெய்கருதுஞ் சத்துவத்தின் மெய்ப்பாடு – முய்கருமஞ்
சாருங்க் கதியுமிச் சாரத்தின் சாரமுமுற்
றோரும் பதினெட்டா மோத்து.

செய் கருமத்து ஈசனே கர்த்தாவா சிந்திப்பும் – அநுஷ்டிக்கப்படும் கர்மத்திற்கு ஸர்வேஶ்வரனே கர்த்தா என்னும் நினைவையும்,
மெய் கருதும் சத்துவத்தின் மெய்ப்பாடும் – உண்மையான ஜ்ஞானத்திற்குக் காரணமான ஸத்வகுணம் கைக்கொள்ளத்தக்கது என்பதையும்,
உய்கருமம் சாரும் கதியும் – முற்கூறிய நினைவுடன் அநுஷ்டிக்கப்படும் ஸாத்விக கர்மத்தின் பலன் முக்தி என்பதையும்,
இச்சாரத்தின் சாரமும் – ஶாஸ்த்ரங்களின் ஸாரமான இந்த கீதையின் ஸாரம் பக்திப்ரபத்திகளே என்பதையும்,
பதினெட்டாம் ஓத்து – (கீதையின்) பதினெட்டாம் அத்தியாயம்,
உற்று ஓரும் – நன்கு ஆராய்ந்துரைக்கும்.

1 ஸந்யாஸ த்யாகங்கள் ஒன்றா வெவ்வேறா, அவற்றின் ஸ்வரூபம் என்ன என்று அறிவதற்காக அர்ஜுனனின் கேள்வி.
2, 3 ஸந்யாஸ த்யாகங்களைப் பற்றிய அறிவாளிகளின் கருத்துக்கள்;
4-6 த்யாகம், ஸந்யாஸம் எனும் இரண்டும் ஒன்றே; கர்மங்களினுடைய ஸ்வரூபத்யாகம் தவறானது. ஸங்கல்பத்தையும் (கர்மம் என்னுடையது என்னும் எண்ணத்தையும்), பலனில் விருப்பத்தையும் விட்டு, கர்மங்கள் அனுஷ்டிக்கப்பட வேண்டியவையே.
7 கர்மஸ்வருபத்யாகம் தாமஸத்யாகம் (தமோகுணத்தால் விளைவது)
8 உடலுக்கு வருத்தம் விளையும் என்னும் அச்சத்தால் கர்மத்தை விடுவது ராஜஸத்யாகம். அதற்குப் பலனில்லை.
9 பலஸங்கங்களை மட்டும் விட்டு நித்யநைமித்திக கர்மங்களை அனுஷ்டிப்பது ஸாத்விகத்யாகமாகும்.
10 ஸாத்விகத்யாகத்தோடு கூடியவனுடைய ஆத்மகுணங்கள்.
11,12 கர்மபலத்யாகமே உண்மையான த்யாகமாகும். அத்தகையவனிடம் கர்மத்தின் பலன் ஒட்டாது. (இதுவரை அர்ஜுனனின் கேள்விக்குப் பதில் உரைக்கப்பட்டது.)
13-15 கர்த்ருத்வத்யாகத்தை ப்ரஸ்தாபித்தல், கர்மங்களுக்கு ஐந்து காரணங்களைக் காட்டுதல், ஐந்தாவது காரணமான பரமாத்மாவே ப்ரதான காரணம் என்று கூறுதல். (பராயத்தாதிகரணம்)
16,17 கர்த்ருத்வத்யாகத்தை விளக்குதல். (இந்தஶ்லோகம் வரை ‘கர்மங்களைச் செய்பவன் ஈஶ்வரனே’ என்னும் அறிவு விளக்கப்படுகிறது – கீதார்த்த ஸங்க்ரஹம்)
18 கர்மங்களைப் பற்றிய வேதவிதி -ஜ்ஞாநம், ஜ்ஞேயம், ஜ்ஞாதா என்னும் மூன்றுடன் கூடியது. கர்மத்தின் வகை கரணம், கர்மா, கர்த்தா என்று மூன்று.
19 ஜ்ஞாநம் (கர்மத்தைப் பற்றிய அறிவு), கர்மம் (செய்யப்படும் கர்மம்), கர்த்தா (கர்மத்தைச் செய்பவன்) ஆகிய ஒவ்வொன்றும் முக்குணங்களையிட்டு மூன்றாகப் பிரிக்கப்படுகின்றன.
20 ஸாத்விக ஜ்ஞாநத்தின் விளக்கம்.
21 ராஜஸ ஜ்ஞாநத்தின் விளக்கம்.
22 தாமஸ ஜ்ஞாநத்தின் விளக்கம்.
23 ஸாத்விக கர்மத்தின் விளக்கம்.
24 ராஜஸ கர்மத்தின் விளக்கம்.
25 தாமஸ கர்மத்தின் விளக்கம்.
26 ஸாத்விக கர்த்தாவின் விளக்கம்.
27 ராஜஸ கர்த்தாவின் விளக்கம்.
28 தாமஸ கர்த்தாவின் விளக்கம்.
29 புத்தி, த்ருதி ஆகியவை குணத்தையிட்டு மூவகைப்படும் என்று கூறுதல்.
30 ஸாத்விக புத்தியின் விளக்கம்.
31 ராஜஸ புத்தியின் விளக்கம்.
32 தாமஸ புத்தியின் விளக்கம்.
33 ஸாத்விக த்ருதியின் விளக்கம்.
34 ராஜஸ த்ருதியின் விளக்கம்.
35 தாமஸ த்ருதியின் விளக்கம்.
36,37 ஸுகம் குணத்தையிட்டு மூவகைப்படுவதை விளக்கத் தொடங்கி ஸாத்விக ஸுகத்தின் விளக்கம்.
38 ராஜஸ ஸுகத்தின் விளக்கம்.
39 தாமஸ ஸுகத்தின் விளக்கம்.
(ஶ்லோக 18 முதல் 39 வரையில் ஸத்வகுணமே கைக்கொள்ளத்தக்கது என்னும் விஷயம் விளக்கப்படுகிறது – கீதார்த்த ஸங்க்ரஹம்).
40 பத்த ஜீவர்களில் இந்த முக்குணங்களிலிருந்து விடுபட்டவன் எவனுமில்லை.
41 நாலு வர்ணத்தவர்களுக்கும் அவரவர் குலத்துக்கேற்றபடி தொழில்களையும், ஜீவனோபாயங்களையும் விளக்கத் தொடங்குதல்.
42 ப்ராம்மணருக்குரிய செயல்கள்.
43 க்ஷத்ரியருக்குரிய செயல்கள்.
44 வைசிய, சூத்ரர்களுக்குரிய செயல்கள்.
45 அவனவன் வர்ணத்துக்குரிய கர்மங்களில் நிலைநிற்பதால் மோக்ஷத்தையே அடையலாம் என்று விளக்கத் தொடங்குகிறான்.
46 அந்தந்த வர்ணத்துக்குரிய கர்மம் பரமாத்மாவுக்கு ஆராதனமாகையால் மோக்ஷகாரணமாகும்.
47 கர்மயோகமே ஜ்ஞானயோகத்தைக் காட்டிலும் சிறந்தது. அதை அநுஷ்டிப்பவன் ஸம்ஸாரத்தை அடையமாட்டான்.
48 ஜ்ஞானயோகத்தைச் செய்யத் தகுதியுள்ளவனுக்கும் கர்மயோகத்தை அநுஷ்டிப்பதே சிறந்தது.
49 கர்மயோகத்தை அனுஷ்டிப்பதாலேயே ஜ்ஞாநயோகத்தின் பலனாகிய தியான நிஷ்டையை அடையலாம்.
50 இந்தத் தியான நிஷ்டையால் ஆத்மதரிசனத்தைப் பெறும் வழியைக் கூறத் தொடங்குதல்.
51-53 ஆத்ம தரிசனத்தைப் பெறும் வழியைச் சுருக்கமாக விளக்குதல்.
54 ஆத்ம ஸாக்ஷாத்காரத்தாலே பரமபுருஷன் விஷயத்தில் பரபக்தி விளையும்.
55 பரபக்தியாலே பரமபுருஷனை உள்ளபடி அறிகையாகிற பரஜ்ஞாநத்தைப் பெற்று, அதற்குப் பின் அந்தப் பரபக்தியின் முற்றிய நிலையான பரமபக்தியாலே முக்தி நிலையில் பரமபுருஷனோடு ஸாயுஜ்யம் பெறுகிறான் ஜீவன்.
56 காம்யகர்மங்களையும் முற்கூறியபடி மூன்று வகைப்பட்ட பரித்யாகத்தோடு அனுஷ்டித்தால் மோக்ஷபலனை அடையலாம்.
57 ‘மூவகைப்பட்ட பரித்யாகங்களோடு என்னிடம் நெஞ்சை வைத்து உனக்குரிய யுத்தம் முதலான கர்மங்களைச் செய்வாயாக’ என்று அர்ஜுனனை நியமிக்கிறான்.
58 ‘முற்கூறியபடி கர்மங்களைச் செய்தால் ஸம்ஸாரத் துன்பங்களைத் தாண்டலாம், செய்யாவிட்டால் ஆத்மநாசத்தையே அடைவாய்’ என்கிறான்.
59 எப்படியாயினும் நீ போர் புரிவதைத் தவிர்க்க முடியாது என்கிறான்.
60 நீ போர் புரிய மாட்டேன் என்று உறுதிகொண்டாலும் உன் சரீரம் உன்னைப் போர் புரியும்படி நியமித்துவிடும் என்கிறான்.
(இதுவரையில் தனக்குரிய கர்மத்தால் மோக்ஷத்தையே அடையலாம் என்னும் விஷயம் விளக்கப்படுகிறது – கீதார்த்த ஸங்க்ரஹம்.)
61 எல்லா உயிர்களும் ஸர்வேஶ்வரனான என்னால் ஹ்ருதயத்திலிருந்து பூர்வகர்மங்களை அநுஸரித்து சரீரத்தின் வழியில் செல்லும்படி நியமிக்கப்படு கிறார்கள் என்கிறான்.
62 அந்தப் பரமாத்மாவான என்னையே எல்லாவகையாலும் சரணமடைவாய். என் அருளாலே எல்லாக்கர்மங்களிலிருந்தும் விடுபட்டுப் பரமபதத்தையும் அடைவாய் என்கிறான்.
63 நான் இதுவரையில் மோக்ஷஸாதனமாகச் சொன்னவைகளில் உன் தகுதிக்கும் விருப்பத்திற்கும் ஏற்றதை நீ கைக்கொள்வாய் என்கிறான்.
64,65 – 62வது ஶ்லோகத்தில் சொல்லப்பட்ட சரணாகதியை உடனே அர்ஜுனன் ஏற்றுக்கொள்ளாமையால் ப்ரவ்ருத்திபரனான அவனுக்கு பக்தியோகத்தை விதிக்கிறான்.
66 சென்ற ஶ்லோகத்தில் விதிக்கப்பட்ட பக்தியோகத்திற்கு அங்கமாக சரணாகதி சொல்லப்படுகிறது.

(இதுவரை கீதாபாஷ்யத்தையொட்டி 62வது ஶ்லோகம் முதல் 66வது ஶ்லோகம் வரை சுருக்கம் சொல்லப்பட்டது. கத்யங்களில் எம்பெருமானார் திருவுள்ளம் பற்றியபடி அவற்றின் சுருக்கம் பின்வருமாறு.)

62. ஸர்வேஶ்வரனை ஜீவன் பற்றும் பற்றாகிற ஸ்வகத ஸ்வீகாரம் விதிக்கப்படுகிறது.
63. கர்மஜ்ஞானபக்தி யோகங்கள், தான் பற்றும் பற்றில் உபாய புத்தியுடன் ஈஶ்வரனைச் சரணமடைவது ஆகிய இந்த மோக்ஷோபாயங்களில் ஏதாவதொன்றைக் கைக்கொள்வாய் என்கிறான்.
64,65. அர்ஜுனன் வாளாவிருந்ததைக் கண்டு பக்தியோகமே அவனுக்குத் தக்கது என்று நினைத்து பக்தியோகத்தை அவனுக்கு விதிக்கிறான்.
66. “ஸர்வஸ்வாமியாய், அனைவரையும் நியமிக்கும் எம்பெருமான் அவனுக்கு அத்யந்த பரதந்த்ரனான என்னிடம் என்னை ரக்ஷித்துக்கொள்ளும் பொறுப்பை விட்டுவிட்டானே’ என்று கலங்கிய அர்ஜுனனுக்கு ‘இந்த எல்லா உபாயங்களிலும் உபாயபுத்தியை வைக்காமல் என்னைச் சரணடைந்தால், நான் உன்னை எல்லாப் பாபங்களினின்றும் விடுவிக்கிறேன்” என்கிறான்.
(கீதார்த்த ஸங்க்ரஹத்தில் இதுவே ஶாஸ்த்ரார்த்தம் எனப்பட்டது.)

67 ‘நீ இவ்வர்த்தத்தை தகுதியில்லாதவர்களுக்கு உபதேசிக்காதே’ என்று கூறுகிறான்.
68 ‘தகுதியுள்ளவர்களுக்கு இந்த ஶாஸ்த்ரத்தை அவசியம் பொருளுடன் உபதேசிக்க வேண்டும்’ என்றும், ‘அப்படி உபதேசிப்பவனுக்கு மோக்ஷபலனே ஸித்திக்கும்’ என்றும் கூறுகிறான்.
69 ‘இந்த ஶாஸ்த்ரத்தை வ்யாக்யானம் செய்பவன் என்னிடம் பரமபக்தியை அடைந்து என்னையே அடைவான் என்று கூறியது பொருந்துமோ’ என்னும் ஐயம் எழ, ‘இந்த ஶாஸ்த்ரத்தை பக்தர்களுக்குத் தெரிவிப்பதாலேயே ஒரு மஹாத்மாவான ஜ்ஞாநியின் மனநிலையை பெற்றுவிடும் அந்த உபந்யாஸகனைக் காட்டிலும் எனக்கு இனியது செய்பவனோ இனியவனோ முக்காலத்திலும் வேறொருவன் இல்லையாகையாலே இது பொருந்தியதே” என்று சென்ற ஶ்லோகத்தை விளக்குகிறான்.
70 “ஓர் ஆசார்யனிடமிருந்து இந்த ஶாஸ்த்ரத்தை அர்த்தத்தோடு கேட்பவன் உபாஸகஜ்ஞானியை ஒத்தவனாகிறான்” என்று கூறுகிறான்.
71 “இந்த ஶாஸ்த்ரத்தை ஓர் ஆசார்யனிடமிருந்து (மூலத்தைக்) கேட்பதை மட்டும் செய்பவன் என்னிடம் பக்திக்குத் தடையான பாபங்கள் நீங்கப் பெற்று இதன் பொருளையும் உணரலாம்படி பக்தர்களின் கூட்டத்தில் சேரப்பெறுகிறான்” என்கிறான்.
72 “இந்த ஶாஸ்த்ரத்தை ஒருமுகப்பட்ட மனத்தோடு கேட்டாயா? அறிவின்மையால் உனக்கு விளைந்த மயக்கம் தீர்ந்ததா?” என்று கண்ணன் அர்ஜுனனைக் கேட்கிறான்.
73 “உன்னருளால் என்னுடைய விபரீதஜ்ஞாநம் அழிந்தது. உண்மையறிவை அடைந்து ஐயம் நீங்கப்பெற்று நிலைநின்றவனானேன். உன் வார்த்தைப்படி போர் புரிகிறேன்” என்று அர்ஜுனன் கூறுகிறான்.
74-78 ஸஞ்ஜயன் திருதிராஷ்டிரனுக்கு “கண்ணனும் அர்ஜுனனும் இருக்குமிடத்தில்தான் வெற்றி” என்னும் தன்னுடைய அபிப்ராயத்தைக் கூறுகிறான்.
கீதாஶ்லோகார்த்தச் சுருக்கம் நிறைவுற்றது.

———–

த்ருதீய ஷட்கத்தின் ஸாரப் பொருள்:

உடலுயிரின் றன்மை யுறுகுணத்தின் பன்மை
யிடரிலெழி லீசன்ற னேற்றந் திடவசுரர்
தேவ ரியல்வுகுணஞ் சேர்க்கருமண்ய் சார்ந்தமர்வு
மாவனபின் னாறோத் தமர்ந்து.

உடல் உயிரின் தன்மை – உடல் உயிர் ஆகியவற்றின் தன்மைகள்,
உறு குணத்தின் பன்மை – உடலில் சேர்ந்திருக்கும் குணங்கள் மூன்றாயிருக்கை,
இடரில் எழில் ஈசன் தன் ஏற்றம் – குற்றமற்ற நன்மைகளையுடைய ஈசனுடைய பெருமைகள்,
திட அசுரர் தேவர் இயல்வு – (ஒவ்வொரு மனிதனை) உறுதியாகப் பற்றிநிற்கும் அசுரத்தன்மையும் தேவத்தன்மையும்,
குணம் சேர் கருமம் சார்ந்து அமர்வும் ஆவன – குணத்துக்குத் தக்க கருமமுடைய நாலுவர்ணமும் ஆகியவற்றை,
பின் ஆறு ஓத்து அமர்ந்து – கடைசியாக ஆறு அத்தியாயங்கள் கொண்ட த்ருதீய ஷட்கம் கூறுகிறது.

23) கர்ம யோகஸ் தபஸ் தீர்த்த தாந யஜ்ஞாதி ஸேவநம்
ஜ்ஞாந யோகோ ஜிதஸ்வாந்தை: பரிஶுத்தாத்மநி ஸ்திதி:

கர்மயோக: – கர்மயோகமாவது,
தபஸ் தீர்த்த தாந யஜ்ஞாதி ஸேவநம் – தவம், தீர்த்த யாத்திரை, தானம், யஜ்ஞம் (யாகம்) முதலானவற்றில்
இடைவிடாது ஈடுபடுதலே யாகும்.
ஜ்ஞாந யோக: – ஜ்ஞாந யோகமாவது,
ஜிதஸ்வாந்தை: – தனது மனத்தை வென்றவர்களால்,
பரிஶுத்தாத்மநி ஸ்திதி: – ஶரீரத்தோடு தொடர்பற்ற தம் ஆத்மாவில் (இடைவிடாமல் சிந்திப்பதன் மூலம்) நிலைநிற்றலே யாகும்.

24) பக்தியோக: பரைகாந்த ப்ரீத்யாத்யாநாதி ஷூஸ்திதி:
த்ரயாணாமபி யோகாநாம் த்ரிபி: அந்யோந்ய ஸங்கம:

பக்தியோக: – பக்தியோகமாவது,
பரைகாந்த ப்ரீத்யா – பரமாத்மாவான ஸ்ரீமந் நாராயணனிடமே செலுத்தப்பட்ட அன்போடு கூட,
த்யாநாதிஷூ ஸ்திதி: – தியானித்தல், அர்ச்சனம் செய்தல், வணங்குதல் முதலானவற்றில் நிலைநிற்றலே யாகும்.
த்ரயாணாமபி யோகாநாம் – கர்மம், ஜ்ஞாநம், பக்தி எனப்படும் மூன்று யோகங்களில்,
த்ரிபி: அந்யோந்ய ஸங்கம: – ஒவ்வொரு யோகத்திலும் மற்ற இரண்டும் சேர்ந்திருக்கின்றன.

25) நித்ய நைமித்திகாநாம் ச பராராதந ரூபிணாம்
ஆத்ம த்ருஷ்டேஸ்த்ர யோப்யேதே யோக த்வாரேண ஸாதகா:

பராராதந ரூபிணாம் – பரமபுருஷனுக்கு ஆராதனமாயிருக்கும்,
நித்ய நைமித்திகாநாம் ச – நித்ய நைமித்திக கர்மங்களுக்கும்,
(த்ரிபி: ஸங்கம: – மூன்று யோகங்களிலும் சேர்த்தியுண்டு),
ஏதேத்ரய: அபி – இந்த மூன்று யோகங்களும்,
யோக த்வாரேண – (மனம் ஒருமுகப்பட்டிருக்கையாகிற) ஸமாதி நிலையை விளைப்பதன் மூலம்,
ஆத்ம த்ருஷ்டே – ஆத்ம ஸாக்ஷாத்காரத்திற்கு,
ஸாதகா: – உபாயங்களாகின்றன.

26) நிரஸ்த நிகிலாஜ்ஞாநோத்ருஷ்ட்வாத்மாநம் பராநுகம்
ப்ரதிலப்ய பராம் பக்திம் தயைவாப்நோதி தத்பதம்

நிரஸ்த நிகில அஜ்ஞாந: – (உபாயத்திற்குத் தடையான) எல்லா அஜ்ஞானங்களும் நீங்கப் பெற்றவனாய்,
பராநுகம் – பரம புருஷனுக்கு அடிமைப் பட்டிருக்கும்,
ஆத்மாநம் – தன் ஸ்வரூபத்தை,
த்ருஷ்ட்வா – கண்டு (அதன் விளைவாக),
பராம் பக்திம் – பரபக்தியை,
ப்ரதிலப்ய – அடைந்து,
தயா ஏவ – அந்த மேலான பக்தியாலேயே,
தத் பதம் – அந்த எம்பெருமானுடைய திருவடிகளை,
ஆப்நோதி – அடைகிறான்.

27) பக்தி யோகஸ் ததர்த்தீசேத் ஸமக்ரைஶ்வர்ய ஸாதக:
ஆத்மார்த்தீ சேத்த்ர யோப்யேதே தத் கைவல்யஸ்ய ஸாதகா:

பக்தியோக: – பக்தியோகமானது,
ததர்த்தீசேத் – மிகச் சிறந்த செல்வத்தை விரும்பினவனாகில்,
ஸமக்ரைஶ்வர்ய ஸாதக: – மிகச் சிறந்த செல்வத்தையளிக்கும்.
ஏதேத்ரய: அபி – இந்த மூன்று யோகங்களுமே,
ஆத்மார்த்தீசேத் – ஆத்மஸ்வரூபத்தை அநுபவிக்க விரும்பினானாகில்,
தத்கைவல்யஸ்ய ஸாதகா: – ஆத்மமாத்ர அநுபவத்தை அளிக்கக் கூடியவை.

28) ஐகாந்த்யம் பகவத் யேஷாம் ஸமாநமதி காரிணாம்
யாவத் ப்ராப்தி பரார்த்தீசேத் ததே வாத்யந்தமஶ்நுதே

ஏஷாம் அதிகாரிணாம் – இந்த மூன்று வகைப்பட்ட அதிகாரிகளுக்கும்,
பகவதி – எம்பெருமானிடம்,
ஐகாந்த்யம் – மற்ற தெய்வங்களைத் தொழாமல் அவன் ஒருவனையே தொழுமவர்களாயிருக்கும் பக்தி,
ஸமாநம் – பொதுவானது;
யாவத் ப்ராப்தி – பலனை அடைவதற்குள்,
பரார்த்தீசேத் – (ஐஶ்வர்யார்த்தியும், கைவல்யார்த்தியும்) பரம ப்ராப்யமான பரம புருஷனின் திருவடிகளை
அடைய விரும்பினானாகில்,
தத் ஏவ – அந்தத் திருவடியையே,
அத்யந்தம் – எப்போதும்,
அஶ்நுதே – அடைகிறான்.
(உபாஸக ஜ்ஞானி பலனை அடையும் வரையில் எம்பெருமானையே விரும்பினானாகில்,
அவன் திருவடியையே என்றும் அடைகிறான்.)

29) ஜ்ஞாநீ து பரமைகாந்தீ ததாயத்தாத்ம ஜீவந:
தத் ஸம்ஶ்லேஷ வியோகைக ஸுக து:க்கஸ் ததேகதீ:

பரமைகாந்தீ ஜ்ஞாநீ து – பரமைகாந்தியான ஜ்ஞாநியோவெனில்,
ததாயத்தாத்ம ஜீவந: – எம்பெருமானையே பற்றி நிற்கும் தன் வாழ்வை யுடையவனாய்,
தத் ஸம்ஶ்லேஷ வியோகைக ஸுக து:க்க: – அந்த எம்பெருமானோடு சேர்ந்தால் இன்பத்தையும்,
அவனைப் பிரிந்தால் துன்பத்தையும் அடைபவனாய்,
ததேகதீ: – அவன் ஒருவனிடமே தன் அறிவை வைத்தவனாய் இருப்பவன்.

——————-

30) பகவத் த்யாந யோகோக்தி வந்தந ஸ்துதி கீர்த்தநை:
லப்தாத்மா தத் கத ப்ராண மநோ புத்தீந்த்ரிய க்ரிய:

பகவத்த்யாந யோக உக்தி வந்தந ஸ்துதி கீர்த்தநை: – எம்பெருமானைத் தியானிப்பது, காண்பது, அவனைப் பற்றிப் பேசுவது,
அவனை வணங்குவது, துதிப்பது, திரு நாம ஸங்கீர்த்தனம் செய்வது ஆகியவற்றால்,
லப்தாத்மா தத்கதப்ராண மநோபுத்தி இந்த்ரியக்ரிய: – எம்பெருமானிடம் ஈடுபட்ட ப்ராணன், மனம், புத்தி, இந்த்ரியங்கள்
ஆகியவற்றின் செயல்களை உடையவன்.

——————

31) நிஜ கர்மாதி பக்த்யந்தம் குர்யாத் ப்ரீத்யைவ காரித:
உபாயதாம் பரித்யஜ்ய ந்யஸ்யேத் தேவே து தாமபீ:

நிஜகர்மாதி – தனது வர்ணாஶ்ரமங்களுக்குரிய கர்மம் தொடக்கமாக,
பக்த்யந்தம் – பக்தி ஈறாகவுள்ள அனைத்தையும்,
உபாயதாம் பரித்யஜ்ய – இவை ‘உபாயம்’ என்னும் எண்ணத்தைக் கைவிட்டு,
ப்ரீத்யா ஏவ காரித: – (வகுத்த ஸ்வாமியைப் பற்றியவை என்னும்) அன்பாலே தூண்டப்பட்டவனாய்,
குர்யாத் – (பரமைகாந்தியான ஜ்ஞாநி) செய்யக்கடவன்;
அபீ: – பயமற்றவனாய்,
தாம் – அந்த உபாயத்வத்தை,
தேவே து – எம்பெருமானிடமே,
ந்யஸ்யேத் – அநுஸந்திக்க வேண்டும்.

————

அத்தியாயங்களின் ஸாரப் பொருள்:

1-2.9 உறவினர்களிடம் தகாத அன்பினாலும், கருணையினாலும், தனக்கு தர்மமான யுத்தத்தை அதர்மம் என
நினைத்துக் கலங்கிச் சரண் அடைந்த அர்ஜுனனைக் குறித்து அவனது மயக்கம் தெளிவடைவதற்காக
ஸ்ரீ கீதா ஶாஸ்த்ரம் தொடங்கப்பட்டது.

2 ஆத்ம தத்துவத்தைப் பற்றிய அறிவுடையவனாய், கர்ம யோகத்தை அநுஷ்டிப்பவனுக்கு ஸ்திதப்ரஜ்ஞ நிலை எனப்படும்
ஜ்ஞாந யோகம் ஏற்பட்டு, அது நிறைவடைந்தால் ஆத்மா (மனத்தால்) நேரே காணப் படுகிறது.

3 ஜ்ஞாந யோகத்தை அநுஷ்டிக்க ஶக்தி யில்லாதவனும், ஶக்தி யிருந்த போதிலும் சான்றோனாகப் புகழ் பெற்றவனும்,
தன்னிடமுள்ள கர்த்ருத்வத்தை (செயல் புரியும் தன்மையை) குணங்களிலோ, ஸர்வேஶ்வரனிடமோ சேர்ப்பதாகிற
கர்த்ருத்வ த்யாகத்தைச் செய்து, மோக்ஷம் தவிர்ந்த மற்ற பலன்களில் பற்றில்லாமல் கர்மங்களைச் செய்வதாகிற
(ஞானத்தோடு கூடிய) கர்ம யோகத்தை அநுஷ்டிப்பதாலேயே ஆத்ம ஸாக்ஷாத்காரத்தை அடையலாம்.

4 1.அவதார ரஹஸ்யஜ்ஞானம்.
2. ஞானத்தை உள்ளடக்கிய கர்மயோகம் ஞான யோகமாகவே யுள்ளது.
3. கர்ம யோக ஸ்வரூபம்.
4. அதன் வகைகள்.

5 1.கர்மயோகம் செய்வதற்கு எளியது; ஜ்ஞாநயோகத்தைக் காட்டிலும் விரைவில் ஆத்மஸாக்ஷாத்காரமாகிற பலனை அளிப்பது.
2. அந்த கர்மயோகத்தின் அங்கங்கள்.
3. ஶுத்தமான (ஶரீர ஸம்பந்தமற்ற) ஆத்மாக்கள் அனைவரும் ஸமமாயிருப்பவர்கள் என்று காண்பதற்கு உறுப்பான கர்ம யோகியின் நிலை.

6 1-ஆத்மஸாக்ஷாத்காரமாகிற யோகத்தைப் பழகும் முறை.
2.ஆத்ம ஸாக்ஷாத்காரம் செய்யும் யோகிகளில் நாலு வகை.
3. அவ் வாத்ம ஸாக்ஷாத்காரத்திற்கு ஸாதனமாயிருக்கும் அப்யாஸம்(சிந்தநம்), வைராக்யம் முதலானவை.
4. தொடங்கிய யோகம் இடையில் தடைப் பட்டாலும், அடியோடு அழிந்து விடாமல் கால க்ரமத்தில் ஸித்தி யடையும்.
5. ஸர்வேஶ்வரனை விஷயமாகக் கொண்ட பக்தி யோகம் முற்கூறிய ஆத்ம ஸாக்ஷாத்காரமாகிற யோகத்தைக் காட்டிலும் சிறப்புற்றது.

7 -1. பரமபுருஷனைப் பற்றிய உண்மையறிவு.
2.அது ப்ரக்ருதி ஸம்பந்தத்தால் ஜீவர்களுக்கு மறைக்கப் பட்டுள்ளது.
3.பரம புருஷனை ஶரணமடைவதால் அம் மறைவு நீங்கும்.
4.பக்தர்களில் நாலு வகை.
5.இந் நால்வரில் ஞானியின் சிறப்பு.

8 -ஐஶ்வர்யத்தை அல்லது கைவல்யத்தை அல்லது பரம புருஷனை அடைய விரும்புகிறவர்கள் அறிய வேண்டியவைகளும்,
கைக் கொள்ள வேண்டியவைகளும் யாவை என்பதன் விளக்கம்.
(பரமபுருஷனே ப்ராப்யம், ப்ராபகம், தாரக போஷக போக்யங்கள் முதலான எல்லாமாயிருப்பவன் என்று உணர்ந்த ஞானிக்கு
உபாயாநுஷ்டாநம் எதையும் எதிர்ப்பாராமல் எம்பெருமானுடைய நிர்ஹேதுக க்ருபையாலேயே
மோக்ஷம் கிடைக்கிறது என்பது 7-8 அத்தியாயங்களின் பரம ஸாரம்.)

9 (1) எம்பெருமானுடைய பெருமை, (2) மனிதனாயிருக்கும்போதே மேன்மையுடையவனாயிருக்கை,
(3) ஜ்ஞானிகளுக்குள்ள சிறப்பு, (4) பக்தியோக மெனப்படும் உபாஸனம் ஆகியவை விளக்கப்பட்டது.

10 ஸாதந பக்தி உண்டாகி வளர்வதற்காக, தனது கல்யாண குணங்கள் அளவற்றவை என்றும்,
எல்லாப் பொருள்களும் தனக்கு வசப்பட்டவை என்றும் விரிவாக உபதேசிக்கப்பட்டது.

11 (1) தன்னை உள்ளபடி காண்பதற்குரிய திவ்யமான கண் அர்ஜுனனுக்குக் கண்ணனால் கொடுக்கப்பட்டது.
(2) பரம்பொருளை அறிவது, காண்பது, அடைவது ஆகியவை பக்தி ஒன்றையே காரணமாகக் கொண்டவை என்று சொல்லப்பட்டது.

12 (1) ஆத்மாவைப் ப்ராப்யமாக நினைத்து உபாஸிப்பதை காட்டிலும், பகவானை ப்ராப்யமாக நினைத்து உபாஸிக்கிற பக்தியின் சிறப்பு.
(2) இந்த பக்திக்கு உபாயத்தைத் தெரிவித்தல்.
(3) பக்தியில் சக்தியில்லாதவன் ஆத்மாவையே உபாஸிக்க வேண்டும்.
(4) கர்மயோகம் அனுஷ்டிப்பவர்கள் கைக்கொள்ள வேண்டிய ஆத்மகுணங்கள்.

13 (1) தேஹத்தின் ஸ்வரூபம், (2) ஜீவாத்மஸ்வரூபத்தை அடைவதற்கு உபாயம், (3) ஆத்மாவை ஆராய்ந்து அறிதல்,
(4) ஆத்மாவுக்கு அசித்தோடு தொடர்பு ஏற்படுவதற்குக் காரணம், (5) ஆத்மாவை அசித்திலிருந்து பிரித்து அனுஸந்திக்கும் முறை.

14 (1) ஸத்வம் முதலான மூன்று குணங்கள் ஸம்ஸார பந்தத்திற்குக் காரணமாகும் முறை.
(2) அந்த குணங்கள் செயலுக்குக் காரணமாயிருக்கும் தன்மை.
(3) அந்த குணங்களை நீக்கும் முறை.
(4) ஐஶ்வர்யம், கைவல்யம், பகவத் ப்ராப்தி என்னும் மூன்று பலன்களும் எம்பெருமானிடமிருந்தே கிடைக்கின்றன.

15 அசேதனமான ப்ராக்ருத ஶரீரத்தோடு சேர்ந்திருக்கும் பத்தஜீவனைக் காட்டிலும், ப்ராக்ருத ஶரீரத்திலிருந்து விடுபட்டுப்
பரிஶுத்தியடைந்த முக்த ஜீவனைக் காட்டிலும், (அவர்களை) வ்யாபித்திருக்கையாலும், (அவர்களைத்) தாங்குகையாலும்,
(அவர்களை) உடையவனாயிருக்கையாலும் வேறுபட்டவன் புருஷோத்தமனான நாராயணன்.

16 (அடையத்தக்க) தத்துவத்தையும், (அதை அடைவிக்கும்) உபாயாநுஷ்டா நத்தையும் பற்றிய அறிவு உறுதிப்படுவதற்காக,
(மனிதர்களுக்குள்) தேவப்பிரிவு, அஸுரப்பிரிவு என்னும் இருபிரிவுகள் இருப்பதை விளக்கிய பின்
மனிதன் சாஸ்த்ரத்திற்கு வசப்பட்டவன் எனும் உண்மையை விளக்குதல்.

17 (1) ஶாஸ்த்ரத்தில் விதிக்கப்படாத கர்மம் அனைத்தும் அஸுரர்க்குரியது; ஆகையால் பயனற்றது.
(2) ஶாஸ்த்ரத்தில் விதிக்கப்பட்ட கர்மம் ஸத்வரஜஸ்தமோ குணங்கள் மூன்றையிட்டு மூன்றுவிதமாய் இருப்பது.
(3) “ஓம் தத் ஸத்” என்னும் மூன்று பதங்கள் ஶாஸ்த்ர விஹித கர்மங்களோடு சேர்வதன் மூலம்
(அவற்றை மற்ற கர்மங்களினின்று வேறுபடுத்தும்) லக்ஷணமாகின்றன.

18 (1) கர்மங்களைச் செய்பவன் ஈஶ்வரனே என்னும் நினைவு அவசியம்.
(2) ஸத்வகுணம் கைக் கொள்ளத் தக்கது.
(3) முற்கூறிய நினைவுடன் அனுஷ்டிக்கப்படும் ஸாத்விக கர்மத்தின் பலன் மோக்ஷமாகும்.
(4) இந்த ஸ்ரீ கீதா ஶாஸ்த்ரத்தின் ஸாரார்த்தமான பக்தி ப்ரபத்திகள்.

————————-

ஸ்ரீ கீதை பதினெட்டு அத்தியாயங்களின் பரம ஸாரப்பொருள்:

32) ஏகாத்யாத்யந்த தாஸ்யைக ரதிஸ் தத் பதமாப்நுயாத்
தத் ப்ரதாநமிதம் ஶாஸ்த்ரமிதி கீதார்த்த ஸங்க்ரஹ:

ஏகாத்யாத்யந்த தாஸ்யைக ரதி – எம்பெருமானுடைய முகமலர்த்தியையே பயனாகக் கொண்டதாய்,
எல்லாக் காலத்திலும் செய்யப்படுவதான அடிமையையே விரும்புகின்ற பரமைகாந்தி,
தத் பதம் – (அவ்வடிமைக்குறுப்பாக) எம்பெருமானுடைய திருவடிகளை,
ஆப்நுயாத் – அடைவான்;
இதம் ஶாஸ்த்ரம் – இந்த கீதா ஶாஸ்த்ரம்,
தத் ப்ரதாநம் – சேதனனைப் பரமை காந்தி யாக்குவதை முக்கியமான குறிக்கோளாகக் கொண்டது.
இதி – இவ்வண்ணமாக,
கீதார்த்த ஸங்க்ரஹ: – கீதையின் பொருளை சுருக்கிக் கூறும் ‘கீதார்த்த ஸங்க்ரஹம்’ என்னும் நூல் நிறைவு பெறுகிறது.

————–

ஸ்ரீ எம்பெருமானே ப்ராப்யம் ப்ராபகம் முதலான அனைத்தும் என்னும் உறுதியுடன்,
அவனிடம் ஸ்வயம் ப்ரயோஜன பக்தி செய்யும் பரமை காந்திக்கு எம்பெருமான் பரம மோக்ஷத்தை நிர் ஹேதுகமாக அருளுகிறான்;
கர்ம யோகம் முதலான உபாயங்கள் அனைத்தும் இத்தகைய பரமை காந்திகளை உருவாக்கும் வழிகளே.

ஸ்ரீ கீதை அத்யாய ஸாரார்த்தம் நிறைவுற்றது.

——————-

ஸ்ரீ கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ தேசிகன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ வாதி கேசரி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ ஆளவந்தார் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-