ஸ்ரீ பெரிய திருவந்தாதி -வியாக்யானம் –தனியன்–ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் வியாக்யானம் —

ஸ்ரீ எம்பெருமானார் அருளிச் செய்த தனியன் –

முந்துற்ற நெஞ்சே முயற்றி தரித்து உரைத்து
வந்தித்து வாயார வாழ்த்திச் -சந்த
முருகூரும் சோலை சூழ் மொய் பூம் பொருநல்
குருகூரன் மாறன் பேர் கூறு –

முந்துற்ற நெஞ்சே -ஆழ்வாரை ஸமாஸ்ரயணம் செய்ய -என்னைக் காட்டியிலும் -முன் செல்லும் நெஞ்சே
முயற்றி -முயற்றி -என்று உபக்ரமித்து உள்ள இந்த திவ்ய பிரபந்தத்தை
தரித்து -புத்தியில் தரித்து
உரைத்து-வாயாலே சொல்லி
வந்தித்து -ஆழ்வாரை வணங்கி
வாயார வாழ்த்திச் -வாய் ஓயும் வரை மங்களா ஸாஸனம் பண்ணி
முருகூரும்-தேன் பெருகும்படியான
சந்த சோலை -சந்தன மரங்களை யுடைய சோலைகளாலே
சூழ் மொய் பூம் பொருநல்-சூழப்பட்டதாய் -சீர் நிறைந்த அழகிய தாமிரபரணி நதியை யுடைய
குருகூரன் மாறன் பேர் கூறு –திரு நகரிக்கு ஸ்வாமியான நம்மாழ்வாருடைய திரு நாமத்தை அனுசந்தித்துப் போரு

இது பெரிய திருவந்தாதி திவ்ய பிரபந்த தனியனாக பெரியோர்களால் அனுசந்தித்துக் கொண்டு போவதாய் இருக்கும்
முயற்றி சுமந்து எழுந்து -என்ற பாசுர ஸ்ரீ ஸூக்திகளே –
முந்துற்ற நெஞ்சே -முயற்றி தரித்து -என்று முன் பின்னாக இருக்கிறது

முந்துற்ற நெஞ்சே முயற்றி தரித்து உரைத்து
நல்ல விஷயங்களிலே-முற்பட்டு செல்லுகிற-ஒ மனமே
நான் இப்போது உனக்கு உரைக்கும் விஷயத்தில்
உத்சாகம் கொண்டு-என் நிலைமையை ஆழ்வார் இடம் விஞ்ஞாபித்து

முயற்றி தரித்து –
ஆழ்வார் அருளிச் செய்த இந்த பிரபந்தத்தை தரித்துக் கொண்டு என்றுமாம்
முயற்றி சுமந்து எழுந்து முந்துற்ற நெஞ்சே -என்றே தொடங்கும் பிரபந்தம் –

வந்தித்து வாயார வாழ்த்திச் –
தண்டன் சமர்ப்பித்து-வாய் படைத்தது சபலமாம் படி வாழ்த்தி
வாயார வாழ்த்தியே -வெண்டளை பிறழாத பாடம் –

முருகூரும் -சந்த சோலை சூழ் –
தேன் பெருகுகின்ற சந்தனச் சோலைகள் சூழ்ந்ததும்

மொய் பூம் பொருநல்-
நெருங்கிய-அழகிய-தாமர பரணியை உடையதுமான

குருகூரன் –
திரு நகருக்குத் தலைவரான

மாறன் பேர் கூறு –
நம் ஆழ்வார் உடைய திரு நாமங்களை நீ சொல்லு

முந்துற்ற நெஞ்சே-
ஸ்ரீ ஆழ்வார் திரு உள்ளம் ஸ்ரீ எம்பெருமான் விஷயத்தில் முன்புற்றது போலே
ஸ்ரீ எம்பெருமானாரது திரு உள்ளம் ஸ்ரீ ஆழ்வார் விஷயத்தில் முன்புற்றதே ஸ்ரீ மதுரகவி ஆழ்வாரைப் போலவே –

என்னெஞ்சென்னை நின்னிடையேன் அல்லேன் என்று நீங்கி — நாண் மலர்ப் பாத மடைந்ததுவே–ஸ்ரீ திருவாய் மொழி-8-2-10-

என் நெஞ்சினாரு மங்கே ஒழிந்தார்––ஸ்ரீ திருவாய் மொழி-7-3-4-

என் நெஞ்சினார் தாமே அணுக்கராய்ச் சார்ந்து ஒழிந்தார் -–-ஸ்ரீ பெரிய திருவந்தாதி-7-

காருருவம் காண்டோரும் நெஞ்சோடும் கண்ணனார் பேருரு என்று எம்மைப் பிரிந்து -ஸ்ரீ பெரிய திருவந்தாதி-–49-

தம்முடைய பின்னே திரிந்து உழலும் சிந்தனையார் –ஸ்ரீ பெரிய திருவந்தாதி–50-

என் நெஞ்சினாரை கண்டால் என்னை சொல்லி –-ஸ்ரீ திரு விருத்தம்-30-

முயற்றி தரித்து –
முயல்கிறேன் உன் தண் மொய் கழற்கு அன்பையே -ஸ்ரீ கண்ணி–என்கிறபடியே உத்ஸாஹத்தை யுடைத்தாய்
முயற்றி சுமந்து -என்ற ஸ்ரீ ஆழ்வார் ஸ்ரீ ஸூக்தி

முயற்றி தரித்து உரைத்து –
ஸ்ரீ பெரிய திருவந்தாதியை அருளிச் செய்ததை காட்டி அருளிய படி

அன்றிக்கே –
முயற்றி -என்கிற திவ்ய பிரபந்தத்தை புத்தி ஸ்திதமாம் படி தரித்து
பின்பு வாஸிகமாக அநு சந்தித்து -என்றுமாம்

உரைத்து –
என்னலங் கொண்ட பிரான் தனக்கு என் நிலைமை உரைத்தே––ஸ்ரீ திருவாய் மொழி-6-8-1-என்றபடி -ஸ்ரீ ஆழ்வார் போலவே
ஸ்ரீ ராமானுஜர் பிரிவாற்றாமையால் உரைத்தபடி

இட்ட மா மகிழ் மாலை தந்திடில் இந்த மாலையை எல்லாம் செம்பொத்த கொங்கை மேல் செழும்
சந்தனக் குழம்பு பொறுக்குமோ ஆழ்வாரே -என்றால் போலே என் தசையைச் சொல்லி

வந்தித்து
திருவடி தொழுது

முயற்றி தரித்து உரைத்து வந்தித்து
ஞான முத்திரை -திரு மார்பை சேவித்து –
சம்பந்த அனுசந்தானத்தோடே வந்தித்து
பிரபந்த வக்தாவானவை பிரணாமம் பண்ணி

கரு வண்ணம் முதலான அடையாளங்களைத் திருந்தக் கண்டு –

இறங்கி நீர் தொழுது பணியீர் அடியேன் இடரே––ஸ்ரீ திருவாய் மொழி-6-1-3–என்றால் போலே
சகல கலா பூர்ணமான சந்த்ர மண்டலம் போலே இருப்பதாய் –

ஒண் நுதல் -என்ற ஊர்த்வ புண்ட்ர மண்டிதமான -திரு முக மண்டலத்தையும்

கரு வண்ணம் செய்ய வாய் செய்ய கண் செய்ய கை செய்ய கால்
செரு ஒண் சக்கரம் சங்கு அடையாளம் திருந்தக் கண்டே––ஸ்ரீ திருவாய் மொழி-6-1-7-என்றால் போலே
அடையாளங்களைத் திருந்தக் கண்டு –

ஆட்செய்து ஆழிப் பிரானைச் சேர்ந்தவன், வண் குருகூர் நகரான்,
நாட்கமழ் மகிழ் மாலை மார்பினன் மாறன் சடகோபன்––ஸ்ரீ திருவாய் மொழி-4-10-11-என்றால் போலே

மகிழ் மாலை திரு மார்பையும்
ஞான முத்ரா முதரிதமான திருக் கை மலரையும்
பத்மாசன உபவிஷ்டமான பத யுகங்களை கண்டு தொழுது அநந்தரம் வாயார வாழ்த்தி

கண்ணன் தாள் வாழ்த்துவதே கண்டாய் வழக்கு––ஸ்ரீ பெரிய திருவந்தாதி-12-என்றால் போலேவும்

அவன் புகழே வாயுபகாரம் கொண்ட வாய்ப்பு –-ஸ்ரீ பெரிய திருவந்தாதி-39—என்றால் போலேவும்

வாழ்த்தி யவனடியைப் பூ புனைந்து நின் தலையைத் தாழ்த்தி இரு கை கூப்பு -ஸ்ரீ பெரிய திருவந்தாதி-84-என்றால் போலேவும்

புணர்த்த பூந் தண் துழாய் முடி நம் பெருமானைக் கண்டு
புணர்த்த கையினராய் அடியேனுக்கும் போற்றுமினே––ஸ்ரீ திருவாய் மொழி-6-1-5-என்றால் போலே
வாய் படைத்த பிரயோஜனம் பெற

நாவினால் நவிற்று இன்பம் எய்தினேன் -என்ற ஸ்ரீ மதுரகவி ஆழ்வாரைப் போலே
பிரத்யஷே குருவ ஸ்துதியா –என்று வாய் படைத்த பிரயோஜனம் பெற வேண்டுமே –

இனி அவ்வளவிலே நில்லாதே அவர் திருநாமத்தை இங்கே வந்து சொல்லுதல்
அவர் ஸந்நிதியில் சொல்லுதல் -என்னும்படியைச் சொல்லுகிறது

சந்த முருகூரும் சோலை சூழ்
முருகூரும் சந்த சோலை சூழ்
ஆரப் பொழில் தென் குருகை–ஸ்ரீ ராமானுஜ நூற்றந்தாதி –
என்கிறபடியே மகரந்த ப்ரவாஹத்தை யுடைய சந்தனச் சோலையாலே சூழப்பட்டு இருப்பதாய்

மொய் பூம் பொருநல் -என்கிறபடியே
மொய் பூம் பொருநல் ஆற்றை யுடைய

நல்லார் நவில் குருகூர் நகரான் திருமால் திருப்பேர் வல்லார் அடிக் கண்ணி சூடிய மாறன் –ஸ்ரீ திரு விருத்தம் -100-
வாரி மாறாத பைம் பூம் பொழில் சூழ் குருகூர் நகர்க் காரி மாறன் சடகோபன் –ஸ்ரீ திருவாய் மொழி -4-5-11-

சம்ருத்தமாய் -ஸ ரஸமான -நிர்மல சலிலத்தை யுடைய திருப் பொருநல் தீரமான
திரு நகரி ஆழ்வார் திரு நாமத்தை சத்தை பெறும்படி சொல்லு

சடகோபன் தெரிந்துரைத்த
குருகூர் சடகோபன் -2-5-11–
நான் கூறும் கூற்றாவது இத்தனையே –ஸ்ரீ பெரிய திருவந்தாதி –46-
நாமங்க ளாயிரத்துள் இவை பத்தும் திருவல்ல வாழ்––5-9-11–
நாராயணன் நாமங்களே–5-9-10-
நாமம் பராங்குசமோ –இத்யாதி போலே
நாமம் பராங்குசன் என்னும்படியாக நாமத்தைக் கூறு
நம் மாறன் -என்ற பாடமாகில் -நம்மாழ்வார் என்று கருத்து

குருகூரன் மாறன்
குருகூர் நம் மாறன்
நம்மாழ்வார் என்றபடி –

பேர் கூறு –-
பேர் என்னை மாயாதால் வல் வினையேன் பின் நின்றே–5-4-5–
குருகூர் சடகோபன் என்றதுமே கை கூப்பி வணங்குவோம்
எண்டிசையும் அறிய இயம்புகேன் –போலே
குரு பதாம்புஜம் த்யாயேத் குருர் நாம சதா ஜபேத் -குரு சேவாம் சதா குர்யாத் சோம்ருதத்வாய கல்பதே-ப்ரபஞ்சசாரம் –
ஆச்சார்யர் திருவடி தியானித்து –
ஆச்சார்ய திரு நாம சங்கீர்த்தனமும்
ஆச்சார்ய கைங்கர்யமும் செய்து முமுஷுத்வம் பெறுவோம்

ஆழ்வார் ப்ரபந்தத்துக்கு முன்னே
அவர் அபிமானம் அநு சந்தேயம் என்றதாயிற்று –

————————————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய வாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: