ஸ்ரீ திருப்பாவை அருளிச் செயல்களில் – திவ்ய நாமங்கள்–/ செல்வத் திருப்பாவை /ஸ்ரீ திருப்பாவையும் திவ்ய தேசங்களும் —-

ஸ்ரீ திருப்பாவை -அருளிச் செயல்களில் – திவ்ய நாமங்கள்-

1-நாராயணன்
2-நந்த கோபன் குமரன்
3-யசோதை இளம் சிங்கம்
4-பாற் கடலுள் பையத் துயின்ற பரமன்
5-ஓங்கி உலகம் அளந்த உத்தமன்

6-ஆழி மழை கண்ணா
7-ஊழி முதல்வன்
8-பத்ம நாபன்
9-மாயன்
10-வட மதுரை மைந்தன்

11-யமுனைத் துறைவன்
12-தாமோதரன்
13-புள் அரையன்
14-புள் அரையன் கோ
15-வெள்ளத்து அரவில் துயில் அமர்ந்த வித்து

16-அரி
17-மூர்த்தி
18-கேசவன்
19-மா வாயைப் பிளந்தான்
20-மல்லரை மாட்டியவன்

21-தேவாதி தேவன்
22-மா மாயன்
23-மாதவன்
24-வைகுந்தன்
25-நாற்றத் துழாய் முடி நாராயணன்

26-நம் மால்
27-பறை தரும் புண்ணியன்
28-முகில் வண்ணன்
29-மனத்துக்கு இனியான்
30-புள்ளின் வாய் கீண்டான்

31-பொல்லா அரக்கனைக் கிள்ளிக் களைந்தவன்
32-சங்கோடு சக்கரம் ஏந்தும் தடக் கையன்
33-பங்கயக் கண்ணன்
34-வல்லானை கொன்றான்
35-மாற்றாரை மாற்று அழிக்க வல்லான்

36-நாயகன்
37-மணி வண்ணன்
38-எம்பெருமான்
39-உலகு அளந்த உம்பர் கோமான்
40-செம் பொன் கழல் அடிச் செல்வன் பலதேவன்

41-பந்தார் விரலி நப்பின்னை மைத்துனன்
42-நப்பின்னை கொங்கை மேல் வைத்துக் கிடந்த மலர் மார்பா
43-மைத்தடம் கண்ணி நப்பின்னை மணாளன்
44-அமரர்க்கு முன் சென்று கப்பம் தவிர்க்கும் கலி
45-செப்பமுடையாய்

46-திறலுடையாய்
47-செற்றார்க்கு வெப்பம் கொடுக்கும் விமலன்
48-நப்பின்னை மணாளன்
49-வள்ளல் பெரும் பசுக்கள் ஆற்றப் படைத்தவனின் மகன்
50-ஊற்றம் உடையவன்

51-பெரியவன்
52-உலகினில் தோற்றமாய் நின்ற சுடர்
53-சீரிய சிங்கம்
54-பூவைப் பூ வண்ணா
55-தென் இலங்கை செற்றவன்

56-பொன்றச் சகடம் உதைத்தவன்
57-கன்று குணிலா எறிந்தவன்
58-குன்று குடையா எடுத்தவன்
59-கஞ்சன் வயிற்றில் நெருப்பாய் நின்ற நெடுமால்
60-மால்

61-ஆலின் இலையாய்
62-கோவிந்தா
63-இறைவன்
64-ஆயர் குலத்தில் தோன்றிய புண்ணியன்
65-பெற்றம் மேய்த்து உண்ணும் குலத்தில் பிறந்த கோவிந்தன்

66-மாதவன்
67-கேசவன்
68-செல்வத் திருமால்

————

செல்வத் திருப்பாவை

1-மார்கழி -செல்வச் சிறுமீர்காள்

2-வையத்து –வாழ்வதே செல்வம் -கேள்விச் செல்வம் –

3-ஓங்கி–பேர் பாடுவதே நீங்காத செல்வம்

4-ஆழி போல் மின்னி– பாகவத கைங்கர்ய செல்வம்

5-மாயனை -தூயோமாய் வந்து தூ மலர் தூவி வாயினால் பாடும் கைங்கர்யச் செல்வம்

6-புள்ளின்- பாபங்கள் போகுவதே செல்வம்

7-கீசு கீசு –உள் நாட்டு தேஜஸ் தான் செல்வம் -ப்ரஹ்ம நினைவால் ப்ரஹ்மமாகவே ஆவோம்

8-கீழ்வானம் –பகவத் குண அனுபவ யாத்திரையே செல்வம்

9-தூ மணி -அடியார்களின் தேக சம்பந்தமே செல்வம்

10-நோற்று -நிர்பரராய் நிர்ப்பயராய் தூங்குவதே செல்வம்

11-கற்றுக் கறவை -பகவத் ப்ரீதிக்காக வர்ணாஸ்ரமம் செய்வதே செல்வம்

12-கனைத்து இளம் -அத்தாணிச் சேவகமே பெரும் செல்வம்

13-புள்ளின் வாய்-வெள்ளி எழுந்து -ஞானம் பிறந்து வியாழன் உறங்க அஞ்ஞானம் போக -ததீய சேஷத்வ ஞானமே செல்வம்

14-உங்கள் புழைக்கடை-நாணாதாய் நாவுடையாய் சங்கோடு சக்கரம் ஏந்தும் தடக்கையன்
பங்கயக் கண்ணானைப் பாடேலோ ரெம்பாவாய்
கும்பிடு நாட்டமிட்டு வெட்கம் இல்லாமல் பகவத் குணங்களில் ஆழ்ந்து ஆடிப்பாடுவதே செல்வம்

15-எல்லே இளங்கிளியே-நானே தான் ஆயிடுக-எல்லாரும் போந்தாரோ போந்தார் போந்து எண்ணிக் கோள்-
பரஸ்பர ஸூவ நீச பாவம் -பாவித்து -பாகவத ஸ்பர்சமே சிறந்த செல்வம்

16-நாயகனாய் நின்ற-தூயோமாய் வந்தோம் துயில் எழப் பாடுவான்-
அநந்ய ப்ரயோஜனராய் ப்ரீதி காரித கைங்கர்யமே செல்வம்

17-அம்பரமே தண்ணீரே சோறே-பாகவத சேஷத்வ பர்யந்தமாக அநந்ய ப்ரயோஜனராக
வாஸூதேவம் சர்வம் -உண்ணும் சோறு பருகும் நீர் தின்னும் வெற்றிலை -என்று இருப்பதே செல்வம் –

18-உந்து மத களிற்றன்-புருஷகாரமாக பிராட்டியைப் பற்றி அவள் உகந்து
அவனும் இத்தால் உகந்து ஏவிப் பணி கொள்ள செய்வதே செல்வம் –

19-குத்து விளக்கு எரிய-மிதுனம் ஒருவருக்கு ஒருவர் முந்தி நம்மைக் கை கொண்டு அருளப் பெறுவதே செல்வம்

20-முப்பத்து மூவர் -உக்கமும் தட்டொளியும் தந்து உன் மணாளனை இப்போதே எம்மை நீராட்டேலோ ரெம்பாவாய்
அந்தரங்க பரிகரமாக தாயார் மடியிலே ஒதுங்குவதே நமக்கு செல்வம்

21-ஏற்ற கலங்கள்-குரு பரம்பரா அனுசந்தானம் பூர்வகமாக அஹங்காராதிகளான பிரதிபந்தகங்கள்
போக்கப் பெற்று கைங்கர்யம் செய்வதே செல்வம் –

22-அங்கண் மா ஞாலத்து–அஹங்காரம் அற்று அடி பணிந்த பின்பு புள்ளு பிள்ளைக்கு இறை தேடி ஊட்டுவது போலே
நம்மை கடாக்ஷித்து நமக்கு ஏற்றபடி சிறுது சிறிதாக ஞானம் பெறுவதே நமக்கு செல்வம்

23-மாரி மலை முழஞ்சில்-நடை அழகை சேவித்து புறப்பாடுகளில் அவனை அடியார்கள் உடன் சேர்ந்து அனுபவிப்பதே செல்வம்

24-அன்று இவ் வுலகம்-மங்களாசாசனம் பண்ணி போதயந்த பரஸ்பரம் பண்ணி கால ஷேபம் செய்வதே செல்வம் –

25-ஒருத்தி மகனாய் -பிறந்தவாறும் வளர்ந்தவாறும் நின்றவாறும் கிடந்தவாறும் நடந்தவாறும்
ஒருவருக்கு ஒருவர் சொல்லி கேட்டு ஆடிப் பாடி இடைவிடாமல் அனுபவிப்பதே செல்வம்

26-மாலே மணி வண்ணா-திவ்ய தேச உத்ஸவாதிகள் சிறப்பாக அமைய அவன் இரக்கமே உபாயம் –
நமக்கு இச்சையே வேண்டுவது –
கூடாதவர்களையும் சேர்ப்பித்து அனுபவிப்பிப்பான் என்று அறியும் இதுவே செல்வம் –

27-கூடாரை வெல்லும் சீர்–பாகவத சமாஹம் -கூடி இருந்து குளிர்ந்து இருப்பதே செல்வம்

28-கறவைகள் பின் சென்று-உறவேல் நமக்கு இங்கு ஒழிக்க ஒழியாது அறியாத பிள்ளைகளோம் அன்பினால்
உன் தன்னைச் சிறு பேர் அழைத்தனவோம் சீறி அருளாதே
சேஷத்வம் அறிந்த ஞானமே ஞானம் -ப்ரீதி காரித கைங்கர்யமே புருஷார்த்தம் -அவன் சீறுவதும் நம்மைத் திருத்திப்
பணி கொள்ளவே -என்று அறிந்து கைங்கர்யங்களில் இழிவதே செல்வம் –

29-சிற்றம் சிறுகாலே வந்து–உனக்கே நாம் ஆட்செய்வோம்-மற்றை நம் காமங்கள் மாற்றேலோ ரெம்பாவாய்
அவனுடைய ப்ரீதியே ப்ராதான்யம் -படியாய் கிடந்தது அவனது பவள வாய் கண்டு உகப்பதே செல்வம்

30-வங்கக் கடல் கடைந்த–முப்பதும் தப்பாமே இங்கு இப்பரிசு உரைப்பார்
திருப்பாவை முப்பதும் நித்ய அனுசந்தானமே செல்வம்
செங்கண் திரு முகத்து செல்வத் திருமாலால்-எங்கும் திருவருள்-நீங்காத கைங்கர்ய செல்வம் பெற்று இன்புறுவோம்-

————-

ஸ்ரீ திருப்பாவையும் திவ்ய தேசங்களும்

1-மார்கழி -நாராயணன்– -ஸ்ரீ பரமபதம் –

2-வையத்து -ஸ்ரீ திரு பாற் கடல் -அவதார கந்தம் -அரவத்து அமளியினோடும் அழகிய பாற் கடலோடும்

3-ஓங்கி –ஸ்ரீ திருக் கோவலூர் -மந்த்ரத்தை -ஒண் மிதியில் -பூம் கோவலூர் தொழுதும்

4-ஆழி மழை –ஸ்ரீ திரு அநந்த பூரம்-உலகு வாழ –கெடும் இடராய எல்லாம் கேசவா –என்ன கடு வினை களையலாம்

5-மாயனை -ஸ்ரீ வட மதுரை —

6-புள்ளும்–ஸ்ரீ திரு வண் வண்டு -விடிவை சங்கு ஒலிக்கும் திரு வண் வண்டு உறையும்-திருவாய் -9-1-9-
அரி என்ற பேர் அரவம் -உள்ளம் புகுந்து -முனிவர்களும் யோகிகளும் -என்று பிரணவமும் உண்டே இந்த பாசுரத்தில்

7-கீசு கீசு –திருவாய்ப்பாடி -காசும் பிறப்பும் கல கலப்ப-மத்தினால் ஓசைப்படுத்த தயிர் அரவம்
உத் காய தினாம் அரவிந்த லோசனம் வ்ரஜாங்கனானாம் திவம் அஸ்ப்ருஷத் த்வனி தத்நாச்ச நிர் மந்தந சப்த மிஸ்ரிதோ -ஸ்ரீ மத் பாகவதம்

8-கீழ்வானம் –ஸ்ரீ -திரு அத்தியூர் -தேவாதி தேவனைச் சென்று நாம் சேவித்தால் —
அமரர்கள் அதிபதி -இமையோர் தலைவன் -ஸ்ரீ நம்மாழ்வாரையும் திருப்பள்ளி எழுச்சி இதில் உண்டே

9-தூ மணி –தூ மணி மாடத்து சுற்றும் விளக்கு -ஸ்ரீ திருக்கடிகை -மிக்கானை மறையாய் விரிந்த விளக்கு -குன்றில் இட்ட விளக்கு –

10-நோற்று சுவர்க்கம் புகுகின்ற —ஸ்ரீ திரு காட்க் கரை -செய்த வேள்வியர் வையத்தேவர் -சித்த உபாய பரகத ஸ்வீகார நிஷ்டர் –
வாரிக்கொண்டு என்னை விழுங்குவன் காணில் என்று ஆர்வுற்ற என்னை ஒழிய என்னில் முன்னம் பாரித்து
தான் என்னை முற்றப் பருகினான் கார் ஒக்கும் காட்கரை அப்பன் கடியனே -9-6-10-
தெருவெல்லாம் காவி கமழும் -9-6-1-நாற்றத்துழாய் முடி

11-கற்றுக் கறவை –ஸ்ரீ திரு மோகூர் –
முகில் வண்ணன் பேர் பாட -காள மேகத்தை அன்றி மற்று ஓன்று இலம் கதியே
ந சவ் புருஷகாரேண ந ச உபாயேண ஹேதுந கேவலம் ஸ்வ இச்சையை வ அஹம் ப்ரேக்க்ஷே கஞ்சித் கதாசன-
மேகம் மின்னுவது ஒரு இடத்தில் பொழிவது ஓர் இடத்தில் -இவனும் வடமதுரையில் ஆவிர்பவித்து ஆயர்பாடியில் கருணை பொழிகிறான்

12-கனைத்து இல்லம் –ஸ்ரீ திருச் சித்ர கூடம்–
சினத்தினால் தென் இலங்கை கோமானைச் செற்ற -இலங்கை வேந்தன்
இன்னுயிர் கொண்ட -திரு மகளோடு இனிது அமர்ந்த செல்வன் -சினம் அடங்க மாருதியால் சுடுவித்தான் -ஸ்ரீ குலசேகரப் பெருமாள் –

13-புள்ளின் வாய் –ஸ்ரீ திருக்குடந்தை –
பள்ளிக் கிடத்தியோ -ஏரார் கோலம் திகழக் கிடந்தாய்-5-8-1- –
நாகணைக் குடந்தை -என்று முதலில் நான்முகன் திருவந்தாதி -36-

14-உங்கள் புழக்கடை -ஸ்ரீ தேரழுந்தூர் –
வாவியில் செங்கழுநீர் வாய் நெகிழ்ந்து ஆம்பல் வாய் கூம்பின காண்
நெல்லில் குவளைக் கண் காட்ட நீரில் குமுதம் வாய் காட்ட அல்லிக் கமலம் முகம் காட்டும் களனி அழுந்தூர் –பெரிய திரு மொழி -7-8-7-
சங்கோடு சக்கரம் ஏந்தும் தடக்கையன் –
நெய்யார் ஆழியும் சங்கமும் ஏந்தும் நீண்ட தோளுடையாய் -7-7-3-

15-எல்லே –ஸ்ரீ திருவல்லிக் கேணி –
வல்லானைக் கொன்றானை -மாற்றாரை மாற்று அழிக்க வல்லானை -மாயனை
விற் பெரு விழவும் கஞ்சனும் மல்லும் வேழமும் பாகனும் வீழ -நூற்றுவர் தம் பெண்டிரும் எய்தி நூல் இழப்ப–2-3-பதிகம்

16-நாயகனாய் –ஸ்ரீ திருக் குறுங்குடி
தூயோமாய் வந்தோம் துயில் எழப் பாடுவான் வாயால் மாற்றாதே அம்மா
பாடுவான் -நம் பாடுவான் -ப்ரஹ்ம ராக்ஷஸ்ஸை வாயால் முன்னம் முன்னம் மாற்றாதே என்றானே
நேச நிலைக் கதம் நீக்கு -என்று திருக் குறுங்குடி நம்பியை சேவித்து மீண்டான் –

17-அம்பரமே -ஸ்ரீ காழி ஸ்ரீ ராம விண்ணகரம்
அம்பரம் ஊடறுத்து ஓங்கி உலகு அளந்த உம்பர் கோமானே –
ஒரு குறளாய் இரு நில மூவடி -3-4-

18-உந்து மத களிற்றன் –ஸ்ரீ திரு நறையூர்
பந்தார் விரலி -பந்தார் விரலாள்-6-7-8-
மன்னு மறையோர் திரு நறையூர் மா மலை போல் பொன்னியலும் மாடக் கவாடம் கடந்து புக்கு என்னுடைய கண் களிப்ப
நோக்கினேன் -மன்னு மரகதக் குன்றின் மருங்கே ஓர் இந்நிலை வஞ்சிக்கொடி ஓன்று நின்றது தான் அன்னமாய்
மானாய் அணி மயிலாய் அங்கு இடையே மின்னாய் இள வேய் இரண்டாய் இணைச் செப்பாய் முன்னாய தொண்டையாய்க்
கெண்டைக் குலம் இரண்டாய் அன்ன திருவுருவம்
ஸ்ரீ வஞ்சுள வல்லித் தாயார் –ஸ்ரீபெரிய திருமடல்

19-குத்து விளக்கு –திருவிடை வெந்தை –
நப்பின்னை கொங்கை மேல் வைத்துக் கிடந்த –
திவளும் வெண் மதி போல் திரு முகத்தரிவை செழும் கடல் அமுதினில் பிறந்த அவளும்
நின் ஆகத்து இருப்பது அறிந்தும் -ஸ்ரீ பெரிய திரு மொழி -2-7-1–

20-முப்பத்து மூவர் –ஸ்ரீ திருப் பாடகம்
அமரர்க்கு முன் சென்று –பாண்டவ தூதனாக சென்றான் –
செற்றார்க்கு வெப்பம் கொடுக்கும் விமலா –
பெரிய மா மேனி அண்டமூடுருவப் பெரும் திசை அடங்கிட நிமிர்ந்தோன் -9-1-8-

21-ஏற்ற கலங்கள் –ஸ்ரீ திருக் கண்ண மங்கை -ஸ்ரீ திரு நாராயண புரம்-
பெரியாய்
பெரும் புறக் கடல் -7-10-பதிகம் -விண்ணில் விண்ணவராய் மகிழ்வு எய்துவர் பலன்
மாற்றார் உனக்கு வலி தொலைந்து
பற்றார் நடுங்க முன் பாஞ்ச ஜன்யத்தை வாய் வைத்த போர் ஏறே–வெண் சங்கம் ஓன்று ஏந்திய கண்ணா
பெரும் பசுக்கள் ஆற்றப் படைத்த மகனே –
யதிராஜ சம்பத் குமாரா –
உலகினில் தோற்றமாய் நின்ற சுடர் -ஸ்ரீ ராமானுஜரால் பிரதிஷ்டை செய்யப் பெற்றார் திரு நாராயணன் –

22-அம் கண் மா –ஸ்ரீ திருமால் இருஞ்சோலை
அபிமான பங்கமாய் வந்து –
கொன்னவில் கூர் வேல் கோன் நெடுமாறன் தென் கூடல் கோன் தென்னன்
கொண்டாடும் தென் திருமாலிருஞ்சோலையே –ஸ்ரீ பெரியாழ்வார் -4-2–7–
இதமிமே ஸ்ருணுமோ மலையத்வஜன் நிருபிமிஹ –ஸ்ரீ ஸூந்தரபாஹு ஸ்தவம் 128

23-மாரி மலை -ஸ்ரீ திருவரங்கம்
உன் கோயில் நின்று இங்கனே போந்து அருளி –
போதருமா போலே
நடை அழகு இங்கே பிரசித்தம் -ஞாலத்துள்ளே நடந்தும் நின்றும் –
திருக்கைத்தலை சேவை வட திக்கில் வந்த வித்வானுக்கு ஸ்ரீ நம் பெருமாள் நடந்து காட்டிய ஐதிக்யம்

24-அன்று இவ்வுலகம் –ஸ்ரீ கோவர்தனம்
குன்று குடையா எடுத்தாய் குணம் போற்றி
கொடி ஏறு செம்தாமரை கை விரல்கள் கோலமும் அழிந்தில வாடிற்று இல
வடிவேறு திரு உகிர் நொந்தும் இல மணிவண்ணன் மலையும் ஓர் சம்பிரதம்
முடியேறிய மா முகில் பல் கணங்கள் முன் நெற்றி நரைத்தன போலே எங்கும்
குடி யேறி இருந்து மழை பொழியும் கோவர்த்தனம் என்னும் கொற்றக் குடையே ஸ்ரீ பெரியாழ்வார் -3 5-10 –
யோ வை ஸ்வயம் தேவதாம் அதி யஜதே ப்ர ஸ்வாயை தேவதாயை ஷ்யாவதே ந பரம் ப்ராப்னோதி
பாப்லேயன் பவதி –ஸ்ரீ யஜுர் வேதம் -இரண்டாம் காண்டம் ஐந்தாம் ப்ரச்னம் வேத மந்த்ரம்

25-ஒருத்தி மகனாய் -ஸ்ரீ திருக் கண்ண புரம்
ஒருத்தி மகனாய் பிறந்ததை -தந்தை காலில் விலங்கு அற வந்து தோன்றிய தோன்றல் -8-5-1-
மாரி மாக் கடல் வளைவணற்கு இளையவன் இளையவன் -8-5-2-ஒருத்தி மகனாய் வளர்ந்ததை –
தாய் எடுத்த சிறு கோலுக்கு உளைந்து ஓடி தயிர் உண்ட வாய் துடைத்த மைந்தன் -8-3-5- போன்ற பலவும் உண்டே

26-மாலே மணி வண்ணா –ஸ்ரீ வில்லி புத்தூர்
ஆலின் இலையாய்
பாலன் என்று பரிபவம் செய்யேல் பண்டு ஒரு நாள் ஆலின் இல்லை வளர்ந்த சிறுக்கன் இவன் -ஸ்ரீ பெரியாழ்வார் –

27-கூடாரை -ஸ்ரீ திருவேங்கடம்
கூடாரை வெல்லும் சீர்
குறை ஒன்றும் இல்லா கோவிந்தா
கூடி இருந்து குளிர்ந்து
அப்பனுக்கு சங்கு ஆழி அளித்து அருளும் பெருமாள்
ஒழிவில் காலம் எல்லாம் உடனாய் மன்னி
குளிர் அருவி வேங்கடம் –

28-கறவைகள் -ஸ்ரீ பிருந்தாவனம்
கானம் சேர்ந்து உண்போம்
கானம் -வானம் என்றும் பாட்டு என்றும் உண்டே -வேணு கானம்

29-சிற்றம் சிறு காலே -ஸ்ரீ திருத் த்வாராபதி –
உனக்கே நாம் ஆட் செய்வோம்
பதினாறாம் ஆயிரவர் தேவிமார் பணி செய்யத் துவரை என்னும் அதில் நாயகராய் வீற்று இருந்த மணவாளர்
பல்லாயிரம் பெரும் தேவிமாரோடு பவ்வம் ஏறி த்வரை எல்லாரும் சூழ

30-வங்கக் கடல் –ஸ்ரீ வில்லிபுத்தூர்
கீழே மாலே மணி வண்ணா -ஆலின் இலையாய்
இதில் அணி புதுவை –

மின்னனைய நுண் இடையார் விரி குழல் மேல் நுழைந்த வண்டு
இன்னிசைக்கும் வில்லி புத்தூர் இனிது அமர்ந்தாய் உன்னைக் கண்டார்
என்ன நோன்பு நோற்றாள் கொலோ இவனைப் பெற்ற வயிறு உடையாள்
என்னும் வார்த்தை எய்து வித்த இருடீகேச முலை உணாயே -2 2-6 – –
மது பானத்தாலே செருக்கி இனிய இசைகளை பாடா நிற்கும் -ஸ்ரீ வில்லி புத்தூரிலே –
பரம பதத்திலும் காட்டில் இனிதாக பொருந்தி வர்த்திகிறவனே-தாழ்ந்தார்க்கு முகம் கொடுக்கும் தேசம் ஆகையாலே
திரு உள்ளம் பொருந்தி வர்த்திப்பது இங்கே இறே-
பரம சாம்யாபந்யருக்கு முகம் கொடுத்து கொண்டு இருக்கும் இத்தனை இறே பரம பதத்தில் –

மென்னடை அன்னம் பரந்து விளையாடும் வில்லி புத்தூர் உறைவான் தன்
பொன்னடி காண்பதோர் ஆசையினால் என் பொரு கயல் கண் இணை துஞ்சா
இன்னடிசிலொடு பாலமுதூட்டி எடுத்த வென் கோலக் கிளியை
உன்னோடு தோழமைக் கொள்ளுவன் குயிலே உலகளந்தான் வரக் கூவாய்–5-5-

ஊராக தன் இனமே பெருத்து இருக்குமாய்த்து –
பரமபதத்திலே நித்ய சூரிகள் ஓலக்கம் கொடுக்க இருக்கிறவன் அத்தை விட்டு
என்னோடு சஜாதீய பதார்த்தங்கள் கண்டு போது போக்கைக்காக வன்றோ இங்கே வந்து நிற்கிறது –

ஸ்ரீ பெரியாழ்வார் ஸ்ரீ ஆண்டாளையும் ஸ்ரீ ஆண்டாள் ஸ்ரீ பெரியாழ்வாரையும் அன்றோ
இங்கே காட்டி அருளுகிறார் -ஆகவே அணி புதுவை –

————-

ப்ருஹத்ஸாம ததா ஸாம்நாம் காயத்ரீ சந்தஸாமஹம்.–
மாஸாநாம் மார்கஸீர்ஷோஹம் ருதூநாம் குஸுமாகர—–ஸ்ரீ கீதை ৷৷10.35৷৷

அவ்வண்ணமே சாமங்களில் ப்ருஹத் சாமமும் நானே
சந்தஸ் ஸூக்களுக்குள் காயத்ரீ சந்தஸ் ஸூவும் நானே
மாதங்களுக்குள் மார்கழி நானே
ருதுக்களுக்குள் வசந்த ருது நானே

கானம் சேர்ந்து உண்போம் -ப்ரஹ்ம வனம்-ப்ரஹ்ம ச வ்ருஷ ஆஸீத் –
அஹம் அன்னம் அஹம் அன்னம் அஹம் அன்னம் அஹம் அந்நாத அஹம் அந்நாத அஹம் அந்நாத
சர்வ உபநிஷத் காவ தோக்தா கோபால நந்தன பார்த்தோ வத்சா சுதிர் போக்தா துக்தம் கீதாம்ருதம் மகத்
கீதையிலும் நாராயண சப்தமும் ஸ்ரீ மஹா லஷ்மி சப்தமும் இல்லை –
இவளோ முதலிலே நாராயணனே நமக்கே பறை தருவான் –

நாராயணனே பரமன் -உத்தமன் -பத்ம நாபன் -மாயன் -தாமோதரன் -மாதவன் –கேசவன் -திருமால் –
நாராயணனே பரமன் -பரோ மா யஸ்மாத் ஸ பரம -என்று வ்யத்புத்தி இவனில் மேம்பட்டவன் இல்லை –
என்று நாராயணனே சர்வ ஸ்மாத் பரன் -என்று பொருள் படும் –
நாராயணனே தாமோதரன் -மேன்மைக்கும் எளிமைக்கும்-பரதவ சௌலப் யங்களுக்கு எல்லை நிலம் அவனே

மாதவனை -செல்வத் திருமாலால் -திருவை விடாமல் அருளி -எங்கும் திருவருள் பெற்று இன்புறுவர் எம்பாவாய்-

ஓங்கார பிரபவ ஹ வேத ஹ
பிரணவ தனு ஹு ஸீரோ ஹ்யாத்ம ப்ரஹ்ம தலஷ்ய முக்யதே அப்ரமதேந வேதவ்யம் ஷ்ரவதான்மயோ பவேத்
பிரணவ தனு ஹு-ஓங்கார என்னும் தநுஸ்-
ஸீரோ ஹ்யாத்ம-ஜீவாத்மா -அம்பின் நுனி
ப்ரஹ்ம தலஷ்ய முக்யதே -ப்ரஹ்மாவை நோக்கி செலுத்த -நிரவதிக ஸூக ஏக பாவம்
அப்ரமதேந வேதவ்யம் – சிறிது நழுவினாலும் உச்சியில் இருந்து விழுவோமே
இதுவோ வேதம் அனைத்துக்கும் வித்து -எங்கனே சொல்லிலும் இன்பம் பயக்கும்

குடை இல்லாமல் வாமன் இல்லை -ஆதிசேஷன் விட்டுப் பிரியாமல் –
கை விளக்கு இல்லாமல் கூடாது –
அடியார்களை விட்டுப் பிரியாமல் சேஷி -இத்தை உணர்ந்தே பாகவதர்களை பள்ளி உணர்த்தும் பிரபந்தம் திருப்பாவை –
மாறாய தானவனை வள்ளுகிரால் மார்பிரண்டு
கூறாகக் கீறிய கோளரியை -வேறாக
ஏத்தி இருப்பாரை வெல்லுமே மற்று அவரைச்
சாத்தி இருப்பார் தவம்–-நான்முகன் திருவந்தாதி-18-

பகவத் சமாஸ்ரயணத்திலும் பாகவத சமாஸ்ரயணமே உத்க்ருஷ்டம் -என்கிறார்-

பாவைக் களம் -உலகு எங்கும் திருப்பாவை உத்சவங்கள் -சியம்-தாய்லந்தில் கூட உண்டே
ராஜாவின் பட்டாபிஷேகம் பொழுது இன்றும் திருப்பாவை சேவை அங்கு உண்டே

மார்கழி -என்று தொடங்கி -இன்புறுவர் -என்று முடித்து இருக்கும் அழகு பெரு விருந்து –
கேசவ நம்பியை கால் பிடிப்பாள் இவள் திரு நாமம்
பரமன் அடி பாடி தொடங்கி கேசவன்–பாதாதி கேசாந்தம் கிருஷ்ணன்–
திருப் பாத கேசத்தை தாய பிராப்தம் பரம்பரை சொத்து

ஆக –திருப்பாவையால் சொல்லிற்று ஆயிற்று
வேதார்த்தம் -அதாவது
1-திரு அவதாரமே சர்வ ஸமாஸ்ரயணீயம் -என்றும்
2-அவ தீர்ணனானவனுடைய வடிவழகே ருசி ஜனகம் -என்றும்
3-ருசியுடையார் ப்ராப்ய த்வரையாலே அவனை மேல் விழுந்து அபேக்ஷிக்கை பிராப்தம் -என்றும்
4-இவ்விஷயத்தில் இழிவார்க்கு ருசியுடையார் அடங்க உத்தேசியர் -என்றும்
5-ப்ராப்யமாகிறது -அனுபவ ஜெனித ப்ரீதி காரிதமாய் யாவதாத்மா பாவியான கைங்கர்யம் -என்றும்
6-தத் சாதனமும் அவன் திருவருளே என்று –
செல்வத் திருமாலால் எங்கும் திருவருள் பெற்று இன்புறும்படி -என்று சொல்லித் தலைக் கட்டிற்று

—————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: