பல திருக்கோயில் ப்ரஸித்த உத்சவங்கள் —

ஸ்ரீ மேல்கோட்டை அஷ்ட தீர்த்த உத்சவம்
ஸ்ரீ சாலை கிணறு உத்சவம்
ஸ்ரீ நம்பெருமாள் ஜீய புரம் புறப்பாடு —
ஸ்ரீ நம்பெருமாள் கைசிக உத்சவம் –
ஸ்ரீ வைகுண்ட ஏகாதசி மஹா உத்சவம் -ஸ்ரீ திருவல்லிக்கேணி திருக் கோலங்கள் விவரணம்
ஸ்ரீ நம்பெருமாள் அத்யயன ஸ்ரீ வைகுண்ட ஏகாதசி மஹா உத்சவம் -பெரிய திருநாள் உத்சவம் –
ஸ்ரீ ரதசப்தமி உத்சவம்–

————-

ஸ்ரீ மேல்கோட்டை அஷ்ட தீர்த்த உத்சவம்

கார்த்திகை தசமி ஸ்ரீ சடாரி எழுந்து அருளப்பண்ணி வேத கோஷத்துடன் வலம் வந்து அவபிரத தீர்த்தம்
தனுஷ்கோடி தீர்த்தம் -ஸ்ரீ ஸீதா ஸமேத ராமர்
வேத தீர்த்தம் –இங்கு தான் ஸந்யாஸ ஸ்வீகாரம் தத்தாத்ரேயர் முன்பும் பின்பு
ஸ்ரீ ராமானுஜர் தொடக்கமாக அனைத்து ஜீயர்களும் ஸந்யாஸ ஸ்வீ காரம்
யாதவா தீர்த்தம்
தர்ப்பை தீர்த்தம்
பலாச தீர்த்தம் -விசுவாமித்திரர் சாபம் தீர்ந்த இடம்
பத்ம தீர்த்தம் -சனத்குமாரர்
மைத்ரேய தீர்த்தம் -விஷ்ணு புராணம் -பராசரர் உபதேசம் இங்கு மைத்ரேயர்
நாராயண தீர்த்தம் – ஸ்ரீ வைகுண்ட கங்கா பிரவாகம் அருகில்

சப்த க்ஷேத்ரம் -கல்யாணி தீர்த்தம் சுற்றி ஸ்ரீ வராஹ க்ஷேத்ரம் இத்யாதி

———–

ஸ்ரீ சாலை கிணறு உத்சவம்

ஸ்ரீ காஞ்சிபுரத்தில் அத்யயன உத்சவம் இயற்பா சாத்து முறைக்கு அடுத்த நாள்
ஸ்ரீ தேவ பெருமாள் உபய நாச்சியார்களுடனும் ஸ்ரீ பாஷ்யகாரருடனும்
ஸ்ரீ சாலைக்கிணறு -அனுஷ்டான திருக்குளத்துக்கு எழுந்து அருளி உத்சவம் கண்டு அருளுகிறார்
ஆறு கிலோ மீட்டர் தூரம் உள்ளது

வருடந்தோறும் அத்யயன உற்சவத்தில் இயற்பா சாற்றுமறைக்கு மறுதினம் (தேசிகப்ரபந்தம் சாற்றுமறை தினத்தில்)
வரதன் சாலைக்கிணற்றுக்கு எழுந்தருளி அனுஷ்டான குள உத்ஸவம் கண்டருளுகிறான்.
அதவது கோவிலிலிருந்து பெருமாள், உபயநாச்சியார் ஸ்ரீபாஷ்யகாரருடன் மதியம் சுமார் பன்னிரெண்டு மணிக்கு
அனுஷ்டான குளம் எழுந்தருளுகிறான் வரதன். இவ்விடம் செவிலிமேடு எனும் க்ராமத்தில் அமைந்துள்ளது.
இங்கு ஒரு கிணறும், தூர்ந்துபோன அனுஷ்டான குளமும் அதன் எதிரில் ஸ்ரீபாஷ்யகாரர் சன்னதியும் அமைந்துள்ளது.
பெருமாள் இம்மண்டபத்திற்கு எழுந்தருளியவுடன் ஸ்ரீ பாஷ்யகாரர் சாலைக்கிணற்றுக்குச் சென்று தண்ணீர் கொண்டு வருகிறார்.
சாலைக்கிணற்றின் தண்ணீரால் (தீர்த்தத்தால்) பெருமாளுக்கு அத்யாச்சர்யமானதொரு திருமஞ்ஜனம் நடைபெறுகிறது.
பின்னர் பெருமாள் சார்ங்க தந்வாவாக (வில்லை சாற்றிக் கொண்டு வேடுவகோலத்துடன்) ஸ்ரீ பாஷ்யகாரருடன் தூப்புல் எழுந்தருளுகிறார்.

ஸ்ரீபாஷ்யகாரரின் திவ்ய சரித்ரத்தையும், தேவாதிராஜனின் திவ்ய சௌந்தர்யத்தையும், அபார கருணைதனையும்,
தேசிகோத்தமனின் ஆசார்ய பக்திதனையும் ஒன்றாக அனுபவித்திட வாய்த்திடும் உத்ஸவமிது.

—————–

பொன்னேரி -ஸ்ரீ கூரத்தாழ்வான் பொன் வட்டில் தூக்கி எறிந்த இடம்

ஸ்ரீ காஞ்சியில் இன்றும் ஒரே மேளம் தான் -ஒன்றை ஸ்ரீ ராமானுஜர் உடன் ஸ்ரீ ரெங்கத்துக்கு அனுப்பியதாகில் என்பர்

மாதுறு மயில் சேர் திரு மாலிருஞ்சோலை -ஸ்ரீ கூரத்தாழ்வானும் அவர் தேவிமாரான ஸ்ரீ ஆண்டாளும் சேர்ந்து
இந்த திவ்விய தேசத்தில் இருந்து மங்களாசானனம் பண்ணுவதை-ஸ்ரீ ஸூந்தராஜ ஸ்தவம் – ஸூசகம்
மயில் -துஷ்ட பாம்புகள் போல்வானை விரட்டி தொகை விரித்து -ஆனந்தம் வெளிப்படுத்துவது போலே
ஆச்சார்யர்கள் நமது அனிஷ்டங்களை நிவ்ருத்தி செய்து போத யந்த பரஸ்பரம் –
ஞான அனுஷ்டானம் -தோகைகளை விகசித்து -ஆனந்த வேகமாக விரித்து ஆடுவது போலே

—————-

ஸ்ரீ நம்பெருமாள் ஜீய புரம் புறப்பாடு —

பங்குனி மாதம் ஆதி பிரம்மோற்சவம் மூன்றாம் நாள் ஸ்ரீ நம்பெருமாள் ஜீய புரம் செல்வார்.
எதற்காக செல்கிறார்? ஒரு பக்தையின் குரலுக்கு ஓடி அங்கு அருள்பாலிக்க செல்கிறார்! அதனைப் பற்றிய தகவல்கள்:
ஸ்ரீ ரங்கராஜன் செல்லும் பாதை மொத்தம் 35 கிலோமீட்டர்
செல்லும் போது 20 கிலோ மீட்டரும் திரும்பி வரும்போது 15 கிலோமீட்டர்.
இந்த இந்தப் பாதையில் மேலூர், திருச்செந்தூரை, அம்மங்குடி மற்றும் அந்தநல்லூர் ஆகிய நான்கு கிராமங்களின்
மக்களுக்கு அருள்பாலித்து சென்று வருகிறார்.
இந்த 35 கிலோமீட்டர் பெருமாளை சுமந்து செல்லும் அடியார்கள் / தொண்டர்கள்

நேர்பட்ட நிறை மூவுலகுக்கும் நாயகன் தன்னடிமை
நேர்பட்ட தொண்டர் தொண்டர் தொண்டர் தொண்டன் சடகோபன் சொல்
நேர்பட்ட தமிழ்மாலை ஆயிரத்துள் இவைபத்தும்
நெடுமாற்கு அடிமை செய்யவே!!–திருவாய்மொழி (8-9-11): சாரமான கைங்கரியத்தை வாய்க்கப் பெற்றவர்கள்.

இவர்களுக்கு ஒரே ஒரு குறிக்கோள் தங்களுக்கு கைங்கரியம் கிட்ட வேண்டும் என்பதே!
நேர்பட்ட தொண்டர்(1) தொண்டர்(2) தொண்டர்(3) தொண்டன் சடகோபன்!!
தொண்டர்(1) – அரங்கனை தாங்கி செல்லும் அடியார்கள் (வேற்றாள்)
தொண்டர்(2) – அடியார்களுக்கு பாதை சரிசெய்து, உணவு வழங்கி, வாகனம் முதலான ஏற்பாடுகள் செய்து தருபவர்கள்
தொண்டர்(3) – பாதை வேலை செய்பவர்கள், சமையல் செய்பவர்கள், வேன் ஓட்டுனர்கள்
இந்த மூன்றாம் நிலை தொண்டர்(1) தொண்டர்(2) தொண்டருக்கு(3) தான் தொண்டன் என ஸ்ரீ நம்மாழ்வார் குறிப்பிடுகிறா

ஸ்ரீ திருவரங்கத்தில் இவர்களுக்கு சொல்லப்படும் பெயர் “வேற்றாள்” அதாவது கோவில் ஊழியர்கள் இல்லை.
சுமார் 150 பேர் இந்த முறை ஜீயபுரம் புறப்பாடு கைங்கரியத்திற்கு வந்திருந்தனர்
ஸ்ரீ திருவரங்கம் கோவிலில் இருந்து கிளம்பி பாதி வீதி வலம் வந்து வடக்கு வாசல் வழியாக மேலூர் கிராமம் சென்றடைவார் ஸ்ரீ அரங்கன்.
வழியில் சில உபயங்கள் கண்டருளி பின்னர், புன்னாக தீர்த்தம் அடைந்து அங்கு தீர்த்தவாரி கண்டு அருள்வார்.
இரவு 9 மணிக்கு கிளம்பிய ஸ்ரீ பெருமாள் மேல் ஊரை கடக்கும்போது 12 மணி ஆகிறது

அரங்கன் காவிரியில் இறங்கி மணலில் ஆனந்தமாக ஓடம் கேட்டு
(ஓடம் என்பது ஒருவிதமான காலத்தில் நாதஸ்வரம் தவில் மற்றும் கோவில் மேளம் ஒருசேர இசைக்கப்படும் முறை)
அடியார்கள் நடுவே சென்றார். அரங்கனுடன் பல பக்தர்களும் நடந்து வருவார்கள்.
இவர்கள் அரங்கனின் இந்த பயண அனுபவம் பெற வேண்டும் என்ற ஆசையுடன் ஒரு சேனை போல முன்னே செல்வார்கள்

ஸ்ரீ நம்பெருமாள் அதிகாலை 3 மணி அளவில் ஜீயபுரம் மண்டபம் அப்பம் அருகே 40 அடி உயரமான மேட்டில் ஒய்யாரமாக ஏறி
ஆஸ்தான மண்டபம் முன்னே சென்று சேர்ந்தார்
காலை 5.45 மணிக்கு அரங்கன் எதற்காக இந்த ஜீயபுரம் வந்தாரோ அந்த நிகழ்வு நடைபெற்றது.

ஜீயபரத்தில் ஒரு அம்மையார் வாழ்ந்து வந்தார். அந்த பாட்டி அரங்கன் மீது அளவுகடந்த பக்தி கொண்ட காரணத்தால்
தன் பேரனுக்கு ரங்கன் என பெயரிட்டாள்.
அந்த பேரனுக்கு தயிர் சாதமும், அரக்கீரை மற்றும் பாவக்காய் கலந்த சுண்டல் மிகவும் பிடிக்கும்.
ஒருமுறை அந்த பேரன் தான் முடிதிருத்தி பின்னர் காவிரியில் குளித்து வருகிறேன் என்றும்
பாட்டியை தனக்கு பிடித்த தயிர் சாதமும், அரக்கீரை மற்றும் பாவக்காய் கலந்த சுண்டல் செய்து வைக்கும் படி சொன்னான்.
அவன் காவிரியாற்றின் வேகத்தால் அடித்து செல்லப்பட்டான்.
பாட்டியும் தளிகை செய்து வைத்து காத்துக் கொண்டே இருக்க பேரன் வரவில்லை.
இதனால் “ரங்கா ரங்கா” என அழைத்துக்கொண்டு அரங்கனை வேண்டினால்.
அரங்கநாதன் இந்த பக்திக்கு அடிபணிந்தார்:கஜேந்திரனுக்கு சேவை அளித்த்து போல், திருப்பாணாழ்வாருக்கு சேவை அளித்தது போலும்
இந்த அம்மையாருக்கும் அவள் பேரனாக நேரே சென்று சேவை சாதிக்கின்றார்.
பாட்டியின் உணவை உண்டு அவள் மனதை குளிர்விக்க அருள் புரிகிறார்.
சற்று நேரம் கழிந்தது காவிரியில் குளித்த பேரன் திரும்ப அப்போது பாட்டிக்கு அரங்கநாதன் தான் வந்தது என்பது புரிந்து கொள்ள
பெருமாளிடம் சரணாகதி அடைந்தால்.
இந்த நிகழ்வை நடத்திக்காட்ட பெருமாள் இரண்டாம் திருநாள் கருட மண்டபத்தில் முடிதிருத்த்தும் விழா நடத்தப்படும்.
மூன்றாம் திருநாள் பெருமாள் ஜீயபுரம் சென்று
அம்மையார் தண்ணீர் பந்தலில் தயிர் சாதமும், அரக்கீரை மற்றும் பாவக்காய் கலந்த சுண்டல் பிரசாதம் அமுது செய்வார்.

அம்மையார் தண்ணீர்ப்பந்தல் – தயிர் சாதம், அரக்கீரை, பாகற்காய் மற்றும் மாங்காய் கலந்த பிரசாதம் அமுது செய்தார்
காலை 6 மணிக்கு புறப்பட்டு அருகே இருக்கும் திருச்செந்துரை, அம்மங்குடி, அந்தநல்லூர் ஆகிய பகுதிகளுக்கு சென்று
பல பக்தர்களுக்கு அருள்பாலித்தார். கடைசியாக 11 மணி அளவில் “பலாச தீர்த்தத்தில்” தீர்த்தவாரி கண்டருளி
ஆஸ்தான மண்டபம் சேர்த்தார். மொத்த தூரம் 20 கிலோமீட்டர்
பின்னர் பெருமாளை தாங்கி செல்லும் அடியார்கள் அனைவரும் அல்லூர் ஸ்ரீராம் ஏற்பாடு செய்திருந்த வாகனம் மூலம்
அருகே இருக்கும் கிராமத்தில் கல்யாண மண்டபத்திற்கு சென்றனர். அங்கு குளித்து, மதிய உணவு உண்டு,
சற்று இளைப்பாறி மீண்டும் மாலை 6 மணி புறப்பாட்டிற்கு வந்தனர்.
இந்த பக்தர்கள் அரங்கனுக்கு ஒரு மதில் போல வருவார்கள் எத்தனை காவலர்கள் வந்தாலும் பக்தர்கள் தான் அரங்கன் போல்.
மாலை 6 மணிக்கு கிளம்பிய பெருமாள் காவிரியில் இறங்கி மீண்டும் மணக்கரை கிராமத்தில் மேலே ஏறினார்.
மேலூர் கிராமத்தில் 5 உபயங்கள் முடித்து சற்றே மெதுவாக வடக்கு வாசல் வழியாக இரவு 11 மணிக்கு வந்து சேர்ந்தார்.

——————–

திருக்கண்ணங்குடி -8-நாள் விபூதி தரித்து ஸ்ரீ வைஷ்ணவர்கள் -ருத்ரனாக பெருமாள்
திருக்கண்ண மங்கை -பிரதக்ஷிணம் புத்தர் சிலை -இருக்கும்

—————

ஆடி ஸ்வாதி பக்ஷிராஜன்-திரு மஞ்சனம் -அம்ருத கலசம் பிரசாதம் ஆழ்வார் திருநகரி

கும்ப மேளா -12-வருஷம் ஒரு தடவை –அம்ருதம் சிந்திய இடம் -இடத்தை பொறுத்து
மஹா கும்ப மேளா-144-வருஷம் ஒரு தடவை -அர்த்த கும்ப மேளா -6-வருஷம்
புஷ்கரம் நதிக்கு முழுவதும் -கரைகளில் எல்லாம் கொண்டாட்டம்

————

வைகாசி ஆனி ஆடி மூன்று கருட சேவை ஸ்ரீ காஞ்சிபுரத்தில்

———-

மானஸ திருவாராதனம் -கோவை வாயாள்-திருவாய் மொழி

——————-

சாதுர் மாசம் -ஜீயர் நான்கு பக்ஷங்களுக்கு-கோயிலுக்கும் உண்டு -ஆகமம் -கைசிக உத்சவம் –
பனிக்காலம் தொடங்கும் உத்ஸான ஏகாதசி -ஆனி சுக்ல ஏகாதசை -ஐப்பசி சுக்ல பாஷ ஏகாதசி -சயனம்
ஆவணி மாத சுக்ல பாஷா ஏகாதசி பரிவர்த்தன ஏகாதசி -வலது பக்கம் திரும்பி -பவித்ர உத்சவம் அப்பொழுது தொடங்கும் –
கார்த்திகை சுக்ல பக்ஷ-ப்ரபோத ஏகாதசி -உத்தான ஏகாதசி -ஷீராப்தி நாத பூஜை -துளசி தேவியுடன் கல்யாணம் வடக்கே நடக்கும் இன்று
தசமி -சாயங்காலம் அங்குரார்ப்பணம் -திரு முளைச்சாத்து
ஏகாதசி காலை -திரு மஞ்சனம்
மாலை ஐந்து மணிக்கே உள்ளே எழுந்து -சீக்கிரம் -இரவில் பத்து மணிக்கே திருக்கதவு திறக்கும்
புறப்பாடு -கிளி மண்டபம் -பகல் பத்து மண்டபம் -துலுக்க நாச்சியாருக்கு ஒய்யார நடை சேவை சாதித்து -சிம்ஹாசனத்தில் எழுந்து அருளி
-360-பச்சை வடம் சாத்தி -தாம்பூலம் அடைக்காய் அமுது ஒவ் ஒன்றுக்கும் –
ஒவ் ஒன்றுக்கும் அருளப்பாடு -உண்டு
அடைக்காயிலும் பச்சை கற்பூரம் வைத்துள்ளார்
அரையர் ஸ்வாமி பட்டை அடித்து -கூப்பிட்டு -மாத்வ சம்ப்ரதாயம் -கோயில் மஹா ஜனத்துக்கு இந்த கைங்கர்யம்
ஸ்தலக்காரர் மணியக்காரர் கோயில் அண்ணன் பட்டர் ஸ்வாமி கூப்பிட்டு வர கைங்கர்யம் இவர்களுக்கு
அக்கும்–பக்கம் நிற்பார் திருக்குறுங்குடி -பத்தும் -முதல் பாசுர வியாக்யானம் அபிநயம் உண்டு -அரையர் சேவை

திரை சேர்த்து வடை பருப்பு சமர்ப்பித்து –
எங்கனேயோ -நம்மாழ்வார் -முதல் பாசுரம் -வியாக்யானமும் உண்டு
இவர் சேவையும் பச்சை வடமும் ஒரே சமயத்தில் நடக்கும்
பட்டர் கூப்பிட்டு
அழகிய மணவாளன் சந்நிதியில் காத்து -இருப்பார்
புராணம் -ஓலை சுவடி வைத்து இருப்பார் -ஸ்தானிகர் கையில் கொடுத்து -நம் பெருமாள் திருவடியில் சமர்ப்பித்து
இது காலை மூன்று மணி வரை நடக்கும்
கும்ப ஹாரம் -கட தீபம் காட்டுவார் -த்ருஷ்ட்டி வராமல் இருக்க –
கண்ணாடி அரைக்கு எழுந்து அருளி –
தொங்கு கபாய் குல்லாய் சாத்தி பட்டர்
நம் பெருமாள் -நீல நாயக கௌஸ்துபம் மட்டும் சாத்தி மற்றவை களைந்து நல்ல சேவை பட்டருக்கு –
இருவரும் மேலப்படி ஏறுவார்
விஜயநகர சொக்க நாதன் –
புஷபம் பச்சை கற்பூரம் தூவி
ஹாரத்தி காட்டி உள்ளே
மாலை களைந்து -பட்டருக்கு சமர்ப்பித்து
ஆர்ய பட்டர் வாசலில் ப்ரஹ்ம ரதம்-மரியாதை உடன் திரு மாளிகைக்கு –
வீதியாரப் புறப்பட்டு –பிராட்டி கூரத்தாழ்வான் இவர்களது பிரசாதம் வாங்கிச் செல்வர்
ஆகமத்தில் உள்ளவற்றையும் இந்த ஐதீகத்தையும் சேர்த்து உத்சவம்

——————-

திருவல்லிக்கேணி பகல் பத்து உத்சவம் – 27/12/2019 to 05/01//2020 – திருக்கோலங்கள் விவரணம்

முதல் நாள் – Dec 27 – வெள்ளிக்கிழமை –ஸ்ரீ வேங்கட கிருஷ்ணன் திருக்கோலம் –
இரண்டாம் நாள் – Dec 28 – சனிக்கிழமை – ஸ்ரீ வேணு கோபாலன் திருக்கோலம் –
மூன்றாம் நாள் – Dec 29 – ஞாயிறு ஸ்ரீ காளிங்க நர்த்தன திருக்கோலம்
நான்காம் நாள் – Dec 30 – திங்கள் – ஸ்ரீ சக்ரவர்த்தி திருமகன் திருக்கோலம் –
ஐந்தாம் நாள் – Dec 31 – செவ்வாய் – ஸ்ரீ ஏணிக் கண்ணன் திருக்கோலம் –
ஆறாம் நாள் – Jan 01- புதன் – ஸ்ரீ பரமபத நாதன் திருக்கோலம்
ஏழாம் நாள் Jan 02 – வியாழன் – ஸ்ரீ பகாஸூர வத திருக்கோலம்
எட்டாம் நாள் – Jan 03 – வெள்ளி– ஸ்ரீ ராம பட்டாபிஷேக திருக்கோலம்
ஒன்பதாம் நாள் – Jan 04 – சனி — ஸ்ரீ முரளி கண்ணன் திருக்கோலம்
பத்தாம் நாள் Jan 05 – ஞாயிறு – ஸ்ரீ நாச்சியார் திருக்கோலம்

பகல் பத்து சாத்து முறை

இராப்பத்து உத்சவம் — 06.01.20 – 15.01.20-

முதல் நாள் – Jan 06 – திங்கள் – ஸ்ரீ வைகுண்ட ஏகாதசி –
இரண்டாம் நாள் – Jan 07 -செவ்வாய் – ஸ்ரீ வேணு கோபாலன் திருக்கோலம் -ஸ்ரீ பவள விமானம்
ஆறாம் நாள் – Jan 11 – சனி – ஸ்ரீ திருவேங்கடமுடையான் திருக்கோலம்
ஏழாம் நாள் – Jan 12- ஞாயிறு – ஸ்ரீ பெருமாள் முத்தங்கி சேவை -நம்மாழ்வார் -பராங்குச நாயகி திருக்கோலம்
எட்டாம் நாள் – Jan 13 -திங்கள் -– ஸ்ரீ ராமானுஜர் திருக்கோலம்
ஒன்பதாம் நாள் – Jan 14- செவ்வாய் – ஸ்ரீ கோவர்த்தன கிரி தாரி திருக்கோலம் -போக்கி -திருக்கல்யாணம்
பத்தாம் நாள் – Jan 15 – புதன் – ஸ்ரீ நம்மாழ்வார் திருவடி தொழுதல் -ஸ்ரீ சங்கராந்தி -பொங்கல் திரு நாள்

இராப்பத்து சாத்துமுறை – Jan 16 – வியாழன் -ஸ்ரீ கூரத்தாழ்வான் வருஷ சாத்து முறை –

ஸ்ரீ ஆண்டாள் நீராட்டு உத்சவம் –– 06.01.20 to 14.01.20 –

————

ஸ்ரீ நம்பெருமாள் அத்யயன ஸ்ரீ வைகுண்ட ஏகாதசி மஹா உத்சவம் -பெரிய திருநாள் உத்சவம்

ஸ்ரீ நம்பெருமாள் ரத்னாங்கி சேவை -ஸ்ரீ வைகுண்ட ஏகாதசி அன்று

சப்த பிரகார மத்யே சரஜித முகுளோத் பாசமாநே விமாநே
காவேரீ மத்ய தேசே ம்ருதுதர பணிராட் போக பர்யங்கே பாகே
நித்ரா முத்ராபி ராமம் கடி நிகட ஸிரஸ் பார்ஸ்வ விந்யஸ்த ஹஸ்தம்
பத்மாதாத்ரீ கராப்யாம் பரிசத சரணம் ரங்கராஜன் பஜே அஹம்–ஸ்ரீ ரெங்க நாத ஸ்தோத்ரம் -ஸ்ரீ பராசர பட்டர்

திரு நெடும் தாண்டகத்தை தேவகானத்தில் திருமங்கை மன்னன் இசைத்துப் பாட
திரு உள்ளம் உகந்த பெரிய பெருமாள் வேண்டிய வரம் பெற்றுக் கொள்ள சாதிக்க –
திருவாய் மொழியை செவி சாதித்து அருள பிரார்த்திக்க –
திரு மங்கை மன்னன் அர்ச்சாரூபியான பராங்குசரை எழுந்து அருளப் பண்ணி
ஸ்ரீ வைகுண்ட ஏகாதசி தொடக்கமாக மஹா உத்சவம் தொடக்கம்

ஸ்ரீ மந் நாதமுனிகள் -மீண்டும் முன்பு போலே அத்யயன உத்சவம் நடத்த ஏற்பாடு செய்து அருளினார்
பகல் பத்து இராப்பத்து இயற்ப்பா ஒரு நாள் ஆக -21-நாள்கள் ஆனது –
ஸ்ரீ பட்டர் காலத்தில் முதல் நாள் திரு நெடும் தாண்டகம் உத்சவம் நடந்து -ஸ்ரீ ரெங்கத்தில் மட்டும் -22-நாள்கள்

திரு நெடும் தாண்டகம் –
கர்ப்ப க்ருஹத்தில் தொடக்கம்
சந்தனு மண்டபத்தில் -மின்னுருவாய் முன்னுருவில் பாசுர அபிநயம் -தம்பிரான்படி வியாக்யானம்

பகல் பத்து -திரு மொழித் திருநாள் -அர்ஜுனன் மண்டபம்

முதல் நாள் –
திருப்பல்லாண்டு பாசுரம் அபிநயம் வியாக்யானம் -பெரியாழ்வார் திருமொழி -190-பாசுரங்கள்

இரண்டாம் நாள் —
ஆற்றிலிருந்து -2-10-1–
தன்னேராயிரம் பிள்ளைகளோடு -3-1-1-பாசுரங்கள் -அபிநயம் -வியாக்யானம் –
பெரியாழ்வார் திருமொழி -230-பாசுரங்கள்

மூன்றாம் நாள் –
சென்னியோங்கு -5-4-1-பாசுரம் அபிநயம் வியாக்யானம் -திருப் பொலிந்த சேவடி -7-பாசுரம் வரை அபிநயம்
அரையர் ஸ்ரீ சடகோபம் சாதித்தல்
திருப்பாவை -மார்கழி திங்கள் பாசுரம் அபிநயம் வியாக்யானம்
நாச்சியார் திருமொழி -120-பாசுரங்கள்

நாலாம் நாள் –
கண்ணன் என்னும் கரும் தெய்வம் -13-1-
இருளிரியச் சுடர் மணிகள் -பெருமாள் திருமொழி -1-1-பாசுரங்கள் அபிநயம் வியாக்யானம்
பெருமாள் திருமொழி -திருச்சந்த விருத்தம் -பாசுரங்கள்
இரண்டாம் அரையர் சேவை -கம்ச வதம்

ஐந்தாம் திரு நாள் –
திருமாலை -காவலில் புலனை வைத்து முதல் பாசுரம் அபிநயம் வியாக்யானம்
அரங்கனார்க்கு ஆட் செய்யாதே -6-பாசுரம் அபிநயம் வியாக்யானம் –
திருமாலை -திருப்பள்ளி எழுச்சி -பாசுரங்கள்
அமலனாதி பிரான் முதல் பாசுரம் அபிநயம் வியாக்யானம் -பாசுரங்கள்

ஆறாம் நாள்
கண்ணி நுண் சிறுத் தாம்பு -முதல் பாசுரம்
வாடினேன் வாடி -பெரிய திரு மொழி முதல் பாசுரம் -அபிநயம் -வியாக்யானம்
பெரிய திருமொழி -250-பாசுரங்கள்

ஏழாம் திருநாள் –
தூ விரிய மலர் உழக்கி-3-6-1-பாசுரம் அபிநயம் வியாக்யானம்
பெரிய திருமொழி -210-பாசுரங்கள்
இரண்டாம் அரையர் சேவை -வாமன அவதாரம்

எட்டாம் திரு நாள்
பண்டை நான் மறையும் -பெரிய திருமொழி -5-7-1-பாசுரம் -அபிநயம் -வியாக்யானம்
பெரிய திருமொழி -250-பாசுரங்கள்
இரண்டாம் அரையர் சேவை -அம்ருத மதனம்

ஒன்பதாம் திருநாள் –
தெள்ளியீர் தேவர்க்கும் தேவர் திருத்தக்கீர் -பெரிய திரு மொழி -8-2-1-பாசுரம் -அபிநயம் -வியாக்யானம்
பெரிய திருமொழி -200-பாசுரங்கள்
இரண்டாம் அரையர் சேவை -முத்துக்குறி -வியாக்யானம்
மின்னுருவாய் பின்னுருவில் -திரு நெடும் தாண்டகம் -முதல் பாசுரம் -அபிநயம் -வியாக்யானம்
அரையர் தீர்த்தம் சடகோபர் சாதித்தல்

பத்தாம் நாள்
நம்பெருமாளுக்கு நாச்சியார் திருக்கோலம்
இரக்கமின்றி எங்கோன் செய்த தீமை–பெரிய திரு மொழி -10-2-1– அபிநயம் வியாக்யானம்
பெரிய திருமொழி -170-பாசுரங்கள்
திருக் குறும் தாண்டகம் -20-பாசுரங்கள்
திரு நெடும் தாண்டகம் -30-பாசுரங்கள்
இரண்டாம் அரையர் சேவை -இராவண வதம்
பெரிய திருமொழி சாற்றுமுறை
அரையர் தீர்த்தம் சடகோபன் சாதித்தல்
ஆழ்வார்கள் ஆச்சார்யர்கள் கருட மண்டபத்தில் நடை பெறும்

இராப்பத்து -திருவாய் மொழித் திரு நாள் திரு மா மணி மண்டபம் – ஆயிரம் கால் மண்டபம்

முதல் திரு நாள் -ஸ்ரீ வைகுண்ட ஏகாதசி -ஸ்ரீ நம் பெருமாள் ரத்னாங்கி சேவை –
ஸ்ரீ பெரிய பெருமாள் முத்தங்கி சேவை -இராப்பத்து முதல் ஏழு நாள்கள்
உயர்வற உயர்நலம் உடையவன் -திருவாய் மொழி பாசுரம் -அபிநயம் வியாக்யானம்
முதல் திருவாய் மொழி -100-பாசுரங்கள்

இரண்டாம் திருநாள் -கிளர் ஒளி இளமை -2-10-1- அபிநயம் வியாக்யானம் —
இரண்டாம் திருவாய் மொழி -100-பாசுரங்கள்

மூன்றாம் திரு நாள்
ஒழிவில் காலம் -3-3-1-அபிநயம் -வியாக்யானம்
மூன்றாம் திருவாய் மொழி -100-பாசுரங்கள்

நான்காம் திரு நாள்
ஒன்றும் தேவும் -4-10-1-அபிநயம் வியாக்யானம்
நான்காம் திருவாய் மொழி -100-பாசுரங்கள்

ஐந்தாம் திரு நாள்
ஆராவமுதே -5-8-1-அபிநயம் வியாக்யானம்
ஐந்தாம் திருவாய் மொழி -100-பாசுரங்கள்

ஆறாம் திரு நாள்
உலகம் உண்ட பெரு வாயா -6-10-1-அபிநயம் வியாக்யானம்
ஆறாம் திருவாய் மொழி -100-பாசுரங்கள்

ஏழாம் திரு நாள்
ஸ்ரீ நம் பெருமாள் திருக் கைத்தல சேவை
கங்குலும் பகலும் -7-2-1-அபிநயம் வியாக்யானம்
ஏழாம் திருவாய் மொழி -100-பாசுரங்கள்
ஹிரண்ய வதம்
அரையர் தீர்த்தம் சடகோபன் சாதித்தல்

எட்டாம் திரு நாள்
மாலை திரு மங்கை மன்னன் வேடுபறி-ஸ்ரீ நம் பெருமாள் குதிரை வாகனத்தில் வையாளி –
வாடினேன் வாடி பதிகம் -அரையர் சேவித்தல்
இரவில் நெடுமாற்கு அடிமை -8-10-1-அபிநயம் வியாக்யானம்
எட்டாம் திருவாய் மொழி -100-பாசுரங்கள்

ஒன்பதாம் திரு நாள்
மாலை நண்ணி -9-10 -1-அபிநயம் வியாக்யானம்
எட்டாம் திரு வாய் மொழி -100-பாசுரங்கள்

பத்தாம் திரு நாள்
ஸ்ரீ நம்மாழ்வார் மோக்ஷம் -திருவாய் மொழித் திரு நாள் சாற்று முறை –
காலை -தீர்த்தவாரி
இரவு -தாள தாமரை -10-10-1-அபிநயம் -வியாக்யானம்
பத்தாம் திருவாய் மொழி -100-பாசுரங்கள் –
திருவாய் மொழி சாற்று முறை

ஸ்ரீ நம்மாழ்வார் மோக்ஷம் -பதினொன்றாம் திரு நாள் அதிகாலை நடைபெறும்
அரையர் தீர்த்தம் ஸ்ரீ சடகோபம் சாதித்தல்
ஆழ்வார்கள் ஆச்சார்யர்கள் மரியாதை

பதினொன்றாம் திரு நாள்
இயற்பா சாற்று முறை –
இரவு கர்ப்ப க்ருஹத்தில் இயற்பா தொடக்கம்
சந்தன மண்டபத்தில் இயற்பா பாசுரங்கள் முழுவதும் அனுசந்தானம்
மறு நாள் அதிகாலை மூல ஸ்தானத்தில் இயற்பா சாற்றுமுறை
திருத்துழாய் தீர்த்த விநியோக கோஷ்டி

—————-

தேர் கடாக்ஷ உத்சவம் -வையாளி -குதிரை வாஹனம் ஏசல் தேர் பக்கம் நடைபெறும் –

ஸ்ரீ லஷ்மீ சரண லாச ஷாங்க ச சஷாஸ் ஸ்ரீ வத்ஸ வத்ஸஷே
சேஷ மங்கராய ஸர்வேஷாம் ஸ்ரீ ரெங்கேசாய மங்களம்

————————

ஸ்ரீ ரதசப்தமி உத்சவம்–

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ரதசப்தமி விழா கொண்டாடப்படுகிறது.
இங்கு ஏழு மலைகள் இருப்பதால் அவற்றை ஏழு குதிரை களாக பாவிக்கிறார்கள்.
திருமலையில் காலை 4.30 மணி முதல் 11.30 மணி வரை ஏழு வாகனங்களில் மலையப்பன் வலம் வருவார்.
பிரம்மோற்சவத்தின் போது ஏழுமலையான் தினமும் ஒவ்வொரு வாகனத்தில்தான் வலம் வருவார்.
ஆனால் ரத சப்தமியன்று ஒரே நேரத்தில் ஏழு வாகனங்களில் ஏழுமலையான் வலம் வருவதை அர்த்த பிரம்மோற்சவம் என்பார்கள்.
காலை 6 மணிக்கு சூரியப்பிரபை முதல் வாகன சேவையாகவும் அடுத்தடுத்து கருடன், ஹம்ஸம், யாளி, குதிரை, சிம்மம் சந்திரபிரபை
என்று வீதிவலத்தில் வெவ்வேறு வாகன சேவையும் சாதித்து கோயிலுக்குத் திரும்புவார்

‘ஓம் அஸ்வத் வஜாய வித்மஹே பத்ம ஹஸ்தாய தீமஹி தன்னோ, சூரிய பிரசோதயாத்’
என்ற சூரிய காயத்ரி மந்திரத்தை 108 தடவை சொல்லலாம்.

கீழ்காணும் துதியை ரதஸப்தமி தினத்தன்று பாராயணம் செய்யலாம்.

ஸப்த ஸப்திப்ரியே தேவி ஸப்த லோகைக பூஜிதே
ஸப்த ஜன்ம க்ருதம் பாபம் ஹர ஸப்தமி ஸத்வரம்
யத் யத் ஜன்மக்ருதம் பாபம் மயாஸப்தஸு ஜன்மஸு
தன்மே ரோகம் ச ஸோகம் ச மாகரீ ஹந்து ஸப்தமீ
நௌமி ஸப்தமி தேவி த்வாம் ஸப்த லோகைகமாதரம்
ஸப்தார்க்க பத்ர ஸ்னானேன மம பாபம் வ்யபோஹய!
ஸப்த ஸப்தி ரதாரூட ஸப்தலோக ப்ரகாஸக!
திவாகர! க்ருஹாணார்க்யம் ஸப்தம்யாம் ஜ்யோ திஷாம் பதே! திவாகராய நம:

—————-

கருடனின் மணைவியான கருடி எனப் பெயர்
நாகை அழகியார் கோவில் தாயாருக்கு பெண் கருட ( கருடி) வாஹனம் உண்டு
இந்த கருடி வாஹனத்தில் தாயார் பவனி வருவது சிறப்பு
பல கோவில்களில் தாயார் கோவிலை விட்டு வெளியே வரமாட்டார்.( படி தாண்டா பத்தினி என பெயர் உண்டு)
நாகை அழகியார் கோவிலில்
பெருமாள் கருட வாஹனத்திலும்-தாயார் கருடி வாஹனத்திலும்
ஜோடியாக வருவது கண் கொள்ளா காட்சியாகும்

————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: