ஸ்ரீ பராசர பட்டர் அருளிச் செய்த அஷ்ட ஶ்லோகீ –ஶ்ரீகாஞ்சீ ஸ்வாமி இயற்றிய ஸாரார்த்த தீபிகையில் பதவுரையுடன்–

ஸ்ரீ பராசார பட்டார்யா ஸ்ரீ ரெங்கேச புரோகித
ஸ்ரீ வத்சாங்க சுத ஸ்ரீ மான் ஸ்ரேயசே மேஸ்து பூயசே

ஸ்ரீ யபதி ஸ்வரூபம் முதலான அர்த்த பஞ்சக ஞானம் -விவரணமே -ரகஸ்ய த்ரய ஞானம் –
அதன் முதல் விவரணம் ஸ்ரீ பராசர பட்டர் அருளிச் செய்த ஸ்ரீ அஷ்ட ஸ்லோகி
முதல் நான்கும் ஸ்ரீ திருமந்தரம் விவரணம்
மேல் இரண்டு ஸ்லோகங்கள் ஸ்ரீ த்வயம் விவரணம்
அடுத்த இரண்டும் ஸ்ரீ சரம ஸ்லோக விவரணம் –

பெரிய கனக வரையை சிறிய கடுகினில் அடைத்து வைப்பன் -ஸ்ரீ திருவரங்கக் கலம்பகம் –
ஸூர்ய உதயம் –ஸூர்யோதயம் -போலே ஓங்காரம் -அகாரம் உகாரம் மகாரம் -என்று பிரியும் –
தேகம் ஸ்வரூபம் — ஞானம் ஸ்வரூபம் – சேஷத்வம் ஸ்வரூபம் மூன்று வகை –
அடிமையான ஆத்மா ஞானவானாகவும் உள்ளான் -அடியேன் உள்ளான் –
ஐஸ்வர்யம் -கைவல்யம் -தாண்டி ப்ரீதி காரித பகவத் பாகவத ஆச்சார்ய கைங்கர்யமே பரம புருஷார்த்தம்-
சகல சேதன உஜ்ஜீவானார்த்தம் -பரம காருணிகரான ஸ்ரீ பராசர பட்டர் -அபீஷ்ட உபாயம் அறிந்து பிரவர்த்தி செய்ய –
ஸ்வரூப ஞானம் பூர்வகத்வாத் –
சகல சாஸ்த்ர ருசி பரிக்ரீஹீதம் -திருமந்திரம் –
ஆச்சார்யர் ருசி பரிக்ரீஹீதம் த்வயம் -விளக்கம் –
அவன் ருசி பரிக்ரீஹீதம் சரம ஸ்லோகம் -இதன் விளக்கம் -தானே –
ஸ்வரூப அனுரூப -உபாய புருஷார்த்த பரம் மந்த்ர ரத்னம் –
பிரகர்ஷனே -நன்கு பகவான் ஸ்தூலதே அநேக -அநேகம் ஸ்துதிக்கப்படுகிறான் -பிரணவம் –
ஓங்காரா பிரபவா வேதா -சுரம் சர்வம் -ஜகத் ஸ்தாவர ஜங்கமம்
த்ரை அக்ஷரா –அனைத்தும் இங்கேயே லீலயை -பிரகிருதி -ஓங்காரம் -அதுக்கு அகாரம் –

———————————————————————————————–

ஸ்லோகம் -1-
அகாரத்தோ விஷ்ணுர் ஜகத் உதய ரக்ஷா பிரளய க்ருத்
மகார்த்தோ ஜீவஸ் ததுபகரணம் வைஷ்ணவமிதம்
உகாரோ நந்யார்ஹம் நியமயதி சம்பந்த மநயோ
த்ரயீ சாரஸ் த்ரயாத்மா பிரணவ இமமர்த்தம் சமதிசத்-

ஜகத் உதய ரக்ஷா ப்ரளய க்ருத் – ஸகல லோகங்களுக்கும் ஸ்ருஷ்டி ஸ்திதி ஸம்ஹாரங்களைச் செய்தருள்பவனான,
விஷ்ணு: – ஸர்வவ்யாபக ஸர்வேஶ்வரன்,
அகாரார்த்த: – (ப்ரணவத்திலுள்ள) அகாரத்தின் பொருள்;
ஜீவ: – (ஞானத்தை வடிவாகவுடைய) ஜீவாத்மா,
மகாரார்த்த: – மகாரத்தின் பொருள்;
தத் இதம் – மேற்சொன்ன இந்த ஜீவாத்ம வஸ்துவானது,
வைஷ்ணவம் உபகரணம் – எம்பெருமானுக்கே உரித்தான ஶேஷவஸ்து (என்பது லுப்த சதுர்த்தியின் பொருள்),
உகார: – (ப்ரணவத்தின் இடையிலுள்ள) உகாரமானது,
அநயோ: – இந்த ஜீவாத்ம பரமாத்மாக்களுக்குண்டான,
ஸம்பந்தம் – ஸம்பந்தத்தை,
அநந்யார்ஹம் நியமயதி – பதீபத்நீபாவமாகிற ஸம்பந்தம் போல் ஐகாந்திகமாகக் கட்டுப் படுத்துகின்றது,
இமம் அர்த்தம் – ஆக இங்ஙனே விவரிக்கப்பட்ட பொருளை,
த்ரயீஸார: – மூன்று வேதங்களினுடையவும் ஸாரபூதமாயும்,
த்ரி ஆத்மா – மூன்று அக்ஷரமாயும் முன்று பதமாயு மிரா நின்ற,
ப்ரணவ: – ஓங்காரமானது,
ஸமதிசத் – தெரிவித்தது.

அகாரத்தோ விஷ்ணுர் ஜகத் உதய ரக்ஷா பிரளய க்ருத்-பிரணவத்தில் உள்ள அகாரத்தின் பொருள்
சர்வ வ்யாபக சர்வேஸ்வரன்-சகல லோகங்களுக்கும் சிருஷ்டி ஸ்திதி சம்ஹாரங்களை செய்து அருளுபவன் –

மகார்த்தோ ஜீவஸ் ததுபகரணம் வைஷ்ணவமிதம்–மகார்த்தோ தத் இதம் -மகாரத்தின் பொருள்
மேற்சொன்ன இந்த ஜீவாத்மா வஸ்துவானது
தத் இதம் -ந பும்சக லிங்கம் -அசேதன நிர்விசேஷமாக இருந்து சேஷப் படக் கடவது என்று காட்ட –
வைஷ்ணவம் உபகரணம் -எம்பெருமானுக்கே உரித்தான சேஷ வஸ்து -என்பதே லுப்த சதுர்த்தியின் பொருள் –

உகாரோ நந்யார்ஹம் நியமயதி சம்பந்த மநயோ-உகார -பிரணவத்தில் இடையில் உள்ள யுகாரமானது
பிரணவத்தில் இடையில் யுள்ள உகாரமானது சம்பந்த மநயோ-இந்த ஜீவாத்மா பரமாத்மாக்களுக்கும் யுண்டான சம்பந்தத்தை
அநந்யார்ஹம் நியமயதி–பதி பத்நீ பாவம் ஆகிற சம்பந்தம் போல் ஐகாந்திகமாக கட்டுப்படுத்து கின்றது-

த்ரயீ சாரஸ் த்ரயாத்மா பிரணவ இமமர்த்தம் சமாதிசத்- இமமர்த்தம் -ஆக இங்கனே விவரிக்கப் பட்ட பொருளை
த்ரயீ சாரஸ்-மூன்று வேதங்களின் யுடைய சாரபூதமாயும் – த்ரயாத்மா-மூன்று அஷரமும் மூன்று பதமுமாய் இரா நின்ற
ஓங்காரம் சமதிசத்–தெரிவித்தது –

—————-

ஸ்லோகம் -2-
மந்திர ப்ரஹ்மணி மத்யமேன நமஸா பும்ஸ ஸ்வரூபம் கதிர்
கம்யம் சிக்ஷிதமீ க்ஷிதேன புரத பச்சாதபி ஸ்தானத
ஸ்வா தந்த்ர்யம் நிஜ ரக்ஷணம் சமுசித வ்ர்த்திச்ச நாநியோசித
தச்யைவேதி ஹரேர் விவிச்ய கதிதம் ச்வாச்யபி நார்ஹம் தத-2-

மந்த்ர ப்ரஹ்மணி – மிகச் சிறந்த மந்த்ரமாகிய திருவஷ்டாக்ஷரத்தில்,
மத்யமேந – இடையிலுள்ளதாய்,
புரதஸ் ஈக்ஷிதேந நமஸா – முன்னேயுள்ள ப்ரணவத்தை நோக்கி அத்தோடு சேர்ந்ததான நமஸ்ஸினால்,
பும்ஸஸ் – ஜீவாத்மாவினுடைய,
ஸ்வரூபம் – ஸ்வரூபமானது,
சிக்ஷிதம் – சிக்ஷிக்கப்பட்டது;
ஸ்தாநதஸ் ஈக்ஷிதேந நமஸா – ஸ்வ ஸ்தானத்திலேயே ஆவ்ருத்தி பெற்ற நமஸ்ஸினால்,
கதிஸ் சிக்ஷிதா – உபாயம் சிக்ஷிக்கப்பட்டது;
பஶ்சாத் அபி ஈக்ஷிதேந நமஸா – பின்னேயுள்ள நாராயணாய பதத்தோடு சேர்ந்த நமஸ்ஸினால்,
கம்யம் சிக்ஷிதம் – உபேயம் (பலன்) சிக்ஷிக்கப்பட்டது.
இப்படி சிக்ஷிக்கப் பட்டதனால் தேறின பொருள்கள் எவை யென்னில்,
ஸ்வாதந்த்ர்யம் – ஸ்வதந்த்ரமாயிருக்குந் தன்மை யென்ன,
நிஜ ரக்ஷணம் – ஸ்வ ரக்ஷணமென்ன,
ஸமுசிதா வ்ருத்திஸ் ச – சேஷத்வத்துக்கு இணங்கின கைங்கர்ய வ்ருத்தி யென்ன ஆகிய இவை,
தஸ்ய ஹரேஸ் ஏவ – அந்த எம்பெருமானுக்கே உரியவை;
அந்யோசிதா ந- ­— மற்றையோர்க்கு உரியவை யல்ல;
இதி – என்று இவ் வண்ணமாக,
விவிச்ய கதிதம் – வகுத்துக் கூறப்பட்டதாயிற்று;
ததஸ் – ஆதலால்,
ஸ்வஸ்ய அபி அர்ஹம் ந – கீழ்ச்சொன்ன மூன்றும் அந்யருள் அந்ய தமனான தனக்கும் சேர்ந்தவையல்ல (என்பது தேறிற்று.)

மற்றை நம் காமங்கள் மாற்று –
படியாய் கிடந்தது தானே பவள வாய் காண வேண்டும்
அஹம் அன்னம் -அஹம் அந்நாத–உண்டிட்டாய் இனி உண்டு ஒழியாய் –வாரிக் கொண்டு என்னை விழுங்குவான்
அவன் ஆனந்தத்தை அன்னமாக கொண்டு ஆனந்தப்படும் சேஷ பூதன்-பிரதான ஆனந்தம் அவனுக்கே
கொண்டு கூட்டு பொருள் சித்திக்கும்
ஸூ பிரவிருத்தி நிவ்ருத்தி பாரதந்தர்ய பலம் -நம ஸ்வ ரக்ஷண ஸ்வ அந்வபயம் இல்லாமை
ஈஸ்வர ப்ரவ்ருத்தி -ஸூ ப்ரவ்ருத்தி நிவ்ருத்தி -பிரபத்தி இதுவே -தத் ஏக உபாயத்வம் -பாகவத சேஷத்வம் -ததீய சேஷத்வம்
லுப்த சதுர்த்தி தாதார்த்தாயாம் சதுர்த்தி -அவனையே பிரயோஜனமாக கொண்ட -ஆய -பிரார்த்தனாயாம் சதுர்த்தி

———————

ஸ்லோகம் -3
அகாரத்தாயைவ ஸ்வ மஹ மத மஹ்யம் ந நிவஹா
நராணாம் நித்யா நாமய நமிதி நாராயண பதம்
யமா ஹாஸ்மை காலம் சகலமபி சர்வத்ர சகலாஸூ
அவஸ்தா ஸ்வாவிஸ் ஸ்யுர் மம சஹஜ கைங்கர்ய விதய

அஹம் அகாரார்த்தாய ஏவ ஸ்வம் – மகார வாச்யனான நான் அகார வாச்யனான நாராயணனுக்கே
ஶேஷ பூதன் (என்று ப்ரணவார்த்தத்தை அனுவதித்தபடி),
அத – அதற்கு மேல்,
அஹம் மஹ்யம் ந – நான் எனக்கு உரியேனல்லேன் (என்று நமஸ் பதார்த்தத்தை அநுவதித்தபடி),
நாராயண பதம் – நாராயண பதமானது,
நராணாம் – நித்யாநாம் நிவஹாஸ் (தேஷாம்) அய நம் இதி – நித்ய வஸ்துக்களினுடைய திரள்களுக்கு ஆதார பூதன்
நாராயணன் (என்று தத் புருஷ ஸமாஸத்தாலும்),
நராணாம் நித்யாநாம் நிவஹாঃ (யஸ்ய) அயநம் – நித்ய வஸ்துக்களினுடைய திரள்களை ஆதாரமாக வுடையவன்
நாராயணன் (என்று பஹுவ்ரீஹி ஸமாஸத்தாலும்),
யம் ஆஹ – யாவனொரு எம்பெருமானைச் சொல்லுகிறதோ,
அஸ்மை – அந்த எம்பெருமானுக்கு,
காலம் ஸகலம் அபி – எல்லாக் காலங்களிலும்,
ஸர்வத்ர – எல்லா விடங்களிலும்,
ஸகலாஸு அவஸ்தாஸு – எல்லா அவஸ்தைகளிலும்,
மம – என்னுடைய,
ஸஹஜ கைங்கர்ய விதயঃ – இயற்கையான அடிமைத் தொழில்கள்,
ஆவிஸ்ஸ்யுঃ – விளையக் கடவன; (என்று சரம பதத்தின் அர்த்தத்தை அநுவதித்தபடி).

———————–

ஸ்லோகம் -4
தேக ஆசக்த ஆத்மபுத்திர் யதி பவதி பதம் சாது வித்யாத் த்ருதீயம்
ஸ்வாதந்த்ர்ய அந்தோ யதி ஸ்யாத் ப்ரதம மிதர சேஷத்வதீச் சேத த்வதீயம்
ஆத்மத்ராண உந்முகச் சேத நம இதி ச பதம் பாந்தவா பாசலோலா
சப்தம் நாரயணாக்க்யம் விஷய சபலதீச் சேத சதுர்தீம் ப்ரபன்ன-4-

தேஹ ஆஸக்த ஆத்ம புத்திஸ் பவதி யதி – தேஹத்திலே யூன்றின ஆத்ம புத்தியை யுடையவனாகில் [தேஹாத்ம ப்ரமமுடையவனாகில்],
த்ருதீயம் பதம் ஸாது வித்யாத் – ப்ரணவத்தில் மூன்றாவது பதமான மகாரத்தை நன்கு நோக்கக் கடவன்;
ஸ்வாதந்த்ர்ய அந்தஸ் ஸ்யாத் யதி – ஸ்வத்ந்த்ராத்ம ப்ரமமுடையவனாகில்,
ப்ரதமம் பதம் வித்யாத் – முதல் பதமான (லுப்த சதுர்த்தியோடு கூடின) அகாரத்தை நோக்கக் கடவன்;
இதர ஶேஷத்வதீஸ் சேத் – அந்ய சேஷத்வ ஜ்ஞானமுடையவனாகில்,
த்விதீயம் பதம் வித்யாத் – இரண்டவது பதமான உகாரத்தை நோக்கக் கடவன்;
ஆத்ம த்ராண உந்முகஸ் சேத் – ஸ்வ ரக்ஷணத்தில் ஊக்கமுடையவனாகில்,
நமஸ் இதி பதம் வித்யாத் – நமஸ் என்கிற நடுப் பதத்தை நோக்கக் கடவன்;
பாந்தவாபாஸ லோலஸ் – ஆபாஸ பந்துக்களிடத்தில் ஆஸக்தி யுடையவன்,
நாராயணாக்க்யம் சப்தம் வித்யாத் – நாராயண பதத்தை நோக்கக் கடவன்;
விஷய சபலதீஸ் சேத் – சப்தாதி விஷயங்களில் ஊன்றின புத்தியை யுடையவனாகில்,
சதுர்த்தீம் வித்யாத் – நாராயண பதத்தின் மேலுள்ள வ்யக்த சதுர்த்தியை நோக்கக் கடவன்.
(இப்படி யெல்லாம் நோக்க வேண்டிய அதிகாரி யாவனென்னில்)
ப்ரபந்நঃ – ப்ரபந்நாதிகாரி.

முமுஷூப்படி – –எம்பிரான் எந்தை என்னுடைச் சுற்றம் –என்னுடை வாணாள் -திருமங்கை ஆழ்வார் –
என்கையாலே நான் பிறர்க்கான அன்றும் அவன் நமக்காக இருக்கும் –
இரா மடமூட்டுவாரைப் போலே உள்ளே பதி கிடந்தது சத்தையே பிடித்து நோக்கிக் கொண்டு போரும் –

அர்த்த பஞ்சக அர்த்தமும் திரு மந்திரத்தில் உண்டு –
பிரணவத்தால் ஜீவ ஸ்வரூபம்
நாராயண -பர ஸ்வரூபம்
அகண்ட நமஸ் சப்தம் உபாய ஸ்வரூபம் –
சகண்ட நமஸ் -பிரிந்த நமஸ் -ம ந -ம விரோதி ஸ்வரூபம்
ஆய -பிரார்த்தனாயாம் சதுர்த்தி பிராப்ய ஸ்வரூபம்

நவ வித சம்பந்த அர்த்தமும் இதில் உண்டு
ரமா பதி-பர்த்தா பிதா இத்யாதி -தத்வ த்ரயம் -மூன்றும் ஐந்தும் ஒன்பதும் எட்டு எழுத்திலே உண்டே
காரணத்வ வாசி அகாரம் பிதா -பித்ரு
ரக்ஷகத்வம் வாசி அகாரம் -ரக்ஷகம் ரஷ்ய –
லுப்த சதுர்த்தி சேஷ சேஷி
உகாரம் பர்த்தா பார்யா
மகாரம் ஜேயம் ஞாதா
நாராயணா -மூன்று தொடர்பு -வேற்றுமை தொகை அன்மொழி தொகை -இரண்டு சமாசங்கள்
ஸ்வாமி சொத்து -ஆதார ஆதேய
நாரங்களை இருப்பிடமாக கொண்டவன் அந்தராத்மா சரீர ஆத்மா
ஆய -போக்த்ரு போக்ய சம்பந்தம் -அவன் உகப்பே பிரயோஜனம்

—————————

ஸ்லோகம் -5

நேத்ருத்வம் நித்யயோகம் சமுசித குணஜாதம் தநுக்யாப நம் ச
உபாயம் கர்த்தவ்யபாகம் த்வத மிதுநபரம் ப்ராப்யமேவம் ப்ரசித்தம்
ஸ்வாமித்வம் ப்ரார்த்த நாஞ்ச பிரபலதர விரோதி ப்ரஹாணம் தசைதான்
மந்தாரம் த்ராயதே சேத்ய திகைத நிகமஷ் ஷட்பதோயம் த்விகண்ட-5-

நேத்ருத்வம் – புருஷகாரத்வத்தையும்,
நித்ய யோகம் – ஒரு நொடிப் பொழுதும் விட்டுப் பிரியாத நித்ய ஸம்ஶ்லேஷத்தையும்,
ஸமுசித குண ஜாதம் – இன்றியமையாத திருக் குணங்களின் திரளையும்,
தநுக் க்யாபநம் ச – திருமேனியைக் காட்டுதலையும்,
உபாயம் – உபாயத்தையும்,
கர்த்தவ்ய பாகம் – சேதநன் செய்ய வேண்டியதான அத்யவ ஸாயத்தையும்,
மிதுந பரம் ப்ராப்யம் – இருவருமான சேர்த்தியை விஷயீகரித்ததான கைங்கர்யத்தையும்,
ஸ்வாமித்வம் – ஸர்வ ஶேஷித்வத்தையும்,
ப்ரார்த்தநாம் ச – கைங்கர்ய ப்ரார்த்தநையையும்,
ப்ரபல தர விரோதி ப்ரஹாணம் – மிகவும் பிரபலமான உபேய விரோதியைக் கழிப்பதையும்,
அதிகத நிகமஸ் – வேத ப்ரதீதமாயும்,
த்வி கண்டஸ் – இரண்டு கண்டங்களை யுடையதாயும்,
ஷட்பதஸ் – ஆறு பதங்களை யுடையதாயு மிருக்கிற,
அயம் – இந்த த்வய மந்த்ரமானது,
ஏதாந்தச – ஆகிய இந்த பத்து அர்த்தங்களையும்,
மந்தாரம் – மனனஞ் செய்கிற உத்தமாதிகாரியை,
த்ராயதே இதி – காப்பாற்றுகின்ற தென்று,
ஏவம் ப்ரஸித்தம் – இங்ஙனே ப்ரஸித்தமாயிரா நின்றது.

1-ஸ்ரீ –நேத்ருத்வம் -ஸ்ரீயதே -ஸ்ரேயதே -ச்ருணோதி -ச்ராவயதி -ஸ்ருணாதி -ச்ரீணாதி
2-மத்-நித்ய யோகத்வம்
3-நாராயண -வாத்சல்யம் ஸ்வாமித்வம் சௌசீல்யம் சௌசீல்யம் ஜ்ஞானம் சக்தி-சமுசித குண ஜாதம்
4-சரனௌ-திவ்ய மங்கள விக்ரஹம் -த நுக்யாபனம் –
5-சரணம் -உபாயம் இஷ்ட பிராப்திக்கும் அநிஷ்ட நிவ்ருத்திக்கும்
6-பிரபத்யே -கர்த்தவ்யபாகம் -வாசிக காயிக மானசீகங்கள் -கர்த்தவ்யம் புத்யர்த்தம்
7-ஸ்ரீ மதே-மிதுன பரம் பிராப்யம் -கைங்கர்ய பிரதி சம்பந்த தத்வேன அன்வயம்
8-நாராயண -ஸ்வாமித்வம்
9-ஆய -ப்ரார்த்த நாஞ்ச -கைங்கர்ய பிரார்த்தனையையும் –
10-நம-பிரபலதர விரோதி ப்ரஹாணம் -மிகவும் பிரபலமான உபேய விரோதியை கழிக்கைக்கும்-

கடகவல்லி நிகமத்தில் வேதபாகத்தில் உள்ளதே -அதிகத நிகம-
மந்த்ர ரகஸ்யம் திரு மந்த்ரம் -விதி ரகஸ்யம் சரம ஸ்லோகம் -அனுஷ்டான ரகஸ்யம் த்வயம் –
அனுசந்தான ரஹஸ்யம் இனிமையாலே எப்போதும் -இங்கும் அங்கும்
மந்த்ர ராஜா -திருமந்திரம் -மந்த்ர ரத்னம் -ராஜா தானே ரத்னம் தேடி வர வேண்டும் –

ஆச்சார்யர் பிரமாதா -பிரமேயம் அர்ச்சை–பிரமாணம் த்வயம் -ஸ்ரீ உய்யக்கொண்டார் -ஸ்ரீ ஸூக்தி
சம்சார பாம்புக்கு சிறந்த ஒளஷதம்–ஸ்ரீ வாது-த்வயம் -ஸ்ரீ மணக்கால் நம்பி
அதனனுக்கு பெரிய நிதி -பெரிய முதலியார்
பசி தாகத்துக்கு அம்ருத பானம் -திருமாலை ஆண்டான்
ஸ்தன்யம் போலே திருக் கோஷ்ட்டியூர்
ராஜ குமாரனுக்கு முடியும் மாலையும் போலே -பாஷ்யகாரர் -உரிமைக்கும் அனுபவத்துக்கும் –
சம்சார இரு விலங்கு -பெருமை -பாப புண்யம் -அறுத்து தலையிலே முடி -எம்பார்
பெறு மிடுக்கனுக்கு சிந்தாமணி போலே- பிள்ளை உறங்கா வல்லி தாசர்
எலுமிச்சம் பழம் கொண்டு ராஜ்ஜியம் பிள்ளான்
வாஸ்யம் -எம்பெருமான் வாசகம் த்வயம் அவ்வருகு இல்லை நஞ்சீயர் –
மாதவன் என்று சொல்ல வல்லீரேல் ஒத்தின் சுருக்கு இதுவே
கற்பூர நிகரம் போலே -நம்பிள்ளை

———————-

ஸ்லோகம் –6

ஈசாநாம் ஜகதாம் அதீச தயிதாம் நித்ய அநபாயாம் ச்ரியம்
சம்ச்ரித்ய ஆஸ்ரயணோசித அகில குணச்ய அங்க்ரீ ஹரே ஆஸ்ரயே
இஷ்ட உபாயதயா ச்ரியா ச சஹிதாய ஆத்மேச்வராய அர்த்தயே
கர்த்தும் தாஸ்யம் அசேஷம் அப்ரதிஹதம் நித்யம் த்வஹம் நிர்மம-6-

ஜகதாம் ஈஶாநாம் – உலகங்களுக்குத் தலைவியாய்,
அதீச தயிநாம் – ஸர்வேஶ்வர னுக்கு ப்ராண வல்லபையாய்,
நித்யாநபாயாம் – ஒருபோதும் விட்டுப் பிரியாதவளயிருக்கின்ற,
ஶ்ரியம் – பெரிய பிராட்டியாரை,
ஸம்ஶ்ரித்ய – புருஷகாரமாகப் பற்றி,
ஆஶ்ரயணோசித அகில குணஸ்ய – சரண வரணத்திற்குப் பாங்கான ஸகல குணங்களையு முடைய,
ஹரேஶ் – எம்பெருமானுடைய,
அங்க்ரீ – திருவடிகளை,
இஷ்ட உபாய தயா ஆஶ்ரயே – இஷ்ட ஸாதநமாகப் பற்றுகிறேன்.
(ஆக பூர்வ கண்டார்த்தத்தை அநுஸந்தித்தபடி.)

ஶ்ரியா சஸ ஹிதாய ஆத்மேஶ்வராய – பெரிய பிராட்டியாரோடு கூடி யிருந்துள்ள ஸர்வ ஶேஷியான நாராயணனுக்கு,
நிர்மமஶ் அஹம் – கைங்கர்யத்தில் களையான மமகாரம் சிறிதுமில்லாத அடியேன்,
அஶேஷம் தாஸ்யம் – ஸகல வித கைங்கரியத்தையும்,
அப்ரதிஹதம் – இடையூறின்றி,
நித்யம் – இடைவீடின்றி,
கர்த்தும் – செய்யும் பொருட்டு,
அர்த்தயே – ப்ரார்த்திக்கிறேன்.
(இது உத்தர கண்டார்த்தத்தை அநுஸந்தித்தபடி.)

கீழ் பதார்த்த விவரண ஸ்லோஹம்
இது வாக்யார்த்த பிரதிபாதாக ஸ்லோஹம்
சர்வலோக ஈஸ்வரி -பித்தர் பனிமலர் பாவைக்கு -கால நியமம் வேண்டாம் ருசி ஒன்றே வேண்டுவது -மூன்று விசேஷணங்கள்
அபராத பயத்தாலே பிராட்டியை முன்னிட்டே பற்ற வேண்டுமே
ஆஸ்ரயண சௌகர்ய ஆபாதக குணங்கள்
ஆஸ்ரய கார்ய ஆபாத குணங்கள்
சத் சம்ப்ரதாய சாராம்சம் –

————————-

ஸ்லோகம் –7

மத் ப்ராப்தி அர்த்த தயா மயா உக்தம் அகிலம் சம்த்யஜ்ய தர்மம் புந
மாம் ஏகம் மநவாப்தயே சரணம் இத்யார்த்தோ வஸாயம் குரு
த்வாம் ஏவம் வ்யவசாய யுக்தம் அகில ஞானாதி பூர்ணோ ஹ்யஹம்
மத் ப்ராப்தி ப்ரதிபந்த கைர் விரஹிதம் குர்யாம் சுசம் மா க்ருதா-

மத் ப்ராப்தி அர்த்ததயா – என்னைப் பெறுகைக்கு உபாயமாக,
மயா உக்தம் – (உனது மனத்தை சோதிப்பதற்காக) என்னாலே சொல்லப்பட்ட,
அகிலம் தர்மம் ஸம்த்யஜ்ய – ஸகல தர்மங்களையும் விட்டு,
மாம் ஏகம் புநஸ் ஆர்த்த – என்னொருவனையே குறித்து ஆர்த்தி மிகுந்தவனாய்,
மதவாப்தயே சரணம் இதி அவஸாயம் – என்னைப் பெறுகைக்கு நானே உபாயமென்கிற அத்யவஸாயத்தை,
குரு – செய்வாயாக;
ஏவம் வ்யவஸாய யுக்தம் த்வாம் – இத்தகைய அத்யவஸாயத்தோடு கூடிய உன்னை,
ஜ்ஞானாநி பூர்ண: அஹம் – ஞானம் முதலிய குணங்கள் நிறைந்த நான்,
மத் ப்ராப்தி ப்ரதிபந்தகை: விரஹிதம் குர்யாம் – என்னைப் பெறுகைக்கு இடையூறாயுள்ள பாபங்கள் அற்றவனாகச் செய்யக் கடவேன்;
சுசம் மா க்ருதா: – துக்கங் கொள்ளாதே.

சரண்யன் ருசி பரிக்ருஹீதம் சரம ஸ்லோகம்
அசக்தியால் விடக் கூடாது- பிராப்தி இல்லை என்றே விட வேண்டும் -ராக பிராப்தத்துக்கு விதி வாக்கியமும் கிட்டியதே
தர்ம சம் ஸ்தபனரார்த்தமாக திரு அவதாரம் -சாஷாத் தர்மம் அன்றோ அவன்
அதிகாரி கிருத்யம் முன் வாக்கியம் சொல்லும்
சரணாகதன் கிருத்யம் பின் வாக்கியம் சொல்லும்
முன் வாக்கியம் ஆறு சப்தங்கள் -பின் வாக்கியம் ஐந்து சப்தங்கள் –
உக்ரம் வீரம் -ஸ்ரீ நரஸிம்ஹ–ஐந்தும் ஆறும் முன் பின் வாக்கியங்கள்

——————-

ஸ்லோகம் –8

நிச்சித்ய த்வத் அதீந தாம் மயி சதா கர்மாதி உபாயான் ஹரே
கர்த்தும் த்யக்தும் அபி பிரபத்தும் அநலம் ஸீதாமி துக்காகுல
ஏதத் ஞானம் உபேயுஷே மம புநஸ் சர்வ அபராத ஷயம்
கர்த்தா ஸீதி த்ருடோச்மி தே து சரமம் வாக்யம் ஸ்மரன் சாரதே-8-

ஹே ஹரே! – எம்பெருமானே!,
மயி ஸதா த்வத் அதீந்த்ரம் நிஶ்சித்ய – அடியேன் எப்போதும் தேவரீருக்கே அதீனமான
ஸ்வரூப ஸ்திதி ப்ரவ்ருத்திகளை யுடையவ னென்பதை நிஶ்சயித்து,
கர்மாதி உபாயாந் – கரும யோகம் முதலிய உபாயங்களை,
கர்த்தும் – செய்வதற்கும்,
த்யக்தும் அபி – விடுவதற்கும்,
ப்ரபத்தும் – ப்ரபத்தி பண்ணுவதற்கும்,
அநலம் – அஸமர்த்தனாய்,
து:க்காகுல: ஸீதாமி – மிகவும் துக்கப்படா நின்றேன்;
ஸாரதே: தே – பார்த்தஸாரதியாய் நின்ற தேவரீருடைய,
சரமம் வாக்யம் – கடைசியான வாக்யத்தை,
ஸ்மரந் – ஸ்மரித்தவனாய்க் கொண்டு,
ஏதத் ஜ்ஞாநம் உபேயுஷ: மம – பகவானே உபாயமென்று துணிந்திருக்கையாகிற இந்த அத்யவஸாயத்தைப் பெற்றிருக்கு மடியேனுக்கு,
ஸர்வ அபராத க்ஷயம் கர்த்தாஸி இதி – ஸகல பாப நிவ்ருத்தியையும் தேவரீரே பண்ணித்தர வல்லீரென்று கொண்டு,
த்ருடஸ் அஸ்மி – துக்கமற்று நிர்ப்பரனாயிருக்கின்றேன்.

நெறி காட்டி நீக்குதியோ நின்பால்
மார்விலே கை வைத்து உறங்க பிராப்தம்
பிரபத்தும் அபி அநலம்-
ஸ்வரூப அனுரூபத்வம்
சுக ரூபத்வம்
நிரபாயத்வம்
சித்தத்வம்
ச்வத பல சாதனத்வம்
நிரபேஷத்வம்
அவிளம்பித பலபிரதத்வம்
ஏகத்வம்
முதலானவற்றாலே ஸூகரமாய் இரா நின்ற உபாயமானது
சோக நிவ்ருத்திக்கு சொல்லப் பட்டு இருந்தாலும்
அதற்கு அங்கமாக விதிக்கப்பட்ட சர்வ தர்ம த்யாகம் பண்ணப் போகாமையாலும்
ஆர்த்தி இல்லாமையாலும்
ஆகிஞ்சன்யம் இல்லாமையாலும்
மகா விசுவாசம் இல்லாமையாலும்
சர்வதர்ம த்யாகத்தை அங்கமாக யுடைய பிரபத்தியையும் செய்ய அசக்தனாய்-அசமர்த்தனாய் -இருக்கிற நான் –
துக்காகுல சீதாமி –
சோக விசிஷ்டனாய் தளரா நின்றேன்-

ஒன்பது ஹேதுக்கள்– ஸ்வரூப விருத்தம் –துஷ்க்கரத்வாத்-துக்க பஹுலத்வாத்–சாபாயத்வாத் -அபாயம் நிறைந்த
பல அஸாதநத்வாத் -அசேதனம் ஈஸ்வரத்துவாராவாகவே பலம்-
சா பேஷத்வாத் -மோக்ஷ பூமி பிரதன்-திருக்கண்ண பிரான் -உத்பலம் மாம்ச ஆசை அறுத்து -பக்தி உபாயம் பலத்துக்கு சமீபம் கொண்டு விடும்
விளம்பிய பல ப்ரதத்வாத் -பிராரப்த கர்மம் தொலைய வேண்டுமே – சிரகால சாத்யத்வாத் –
அநேகத்வாத் அஷ்ட விதம் நவ விதம் -சிரவணம் கீர்த்தனம் இத்யாதி நவ லக்ஷணம்
அதே ஒன்பது காரணங்கள் விட ஒண்ணாமைக்கு -ஸ்வரூப அனுரூபம் -ஸூ கரத்வாத்-இத்யாதி-

நஞ்சீயர் அந்திம காலத்துக்கு தஞ்சமான -பற்றினத்தாலும் விட்டதாலும் இல்லை விடுவித்து பற்றுவித்த அவனே உபாயம்
திரு மந்திரத்தால் ஞானம் பெற்று த்வயத்தாலே கால ஷேபம்-கைங்கர்யம் சித்திக்க -சரணாகதி அனுஷ்டானம் – –
வேத ஸீரோ பூஷணம் சாரதியால் தொடுக்கப்பட்ட ஸ்ரீ கீதாசாரமான சரம ஸ்லோகத்தில் விசுவாசம் கொண்டு வாழ வேண்டும் –
திருட அத்யாவசியம் அருளிச் செய்து நிகமிக்கிறார் –

கர்மம் கைங்கர்யத்தில் புகும்–
ஞானம் ஸ்வரூப பிரகாசத்தித்தில் புகும் –
பக்தி பிராப்ய ருசியில் புகும் –
பிரபத்தி பிராப்ய யாதாம்யத்தில் புகும்

——————-

ஶாகா நாமுபரி ஸ்திஸ்தேந மநுநா மூலேந லப்தாத்மக:
ஸத்தா ஹேது ஸக்ருஸ் ஜ்ஜபேந ஸகலம் காலம் த்வயேந க்ஷிபந் ।
வேதோஸ்த் தம்ஸ விஹார ஸாரதி தஸ்யாகும்பேந விஸ்த்ரம்பித:
ஸாரஜ்ஞோ யதிஸ் கஶ்சிதஸ்தி புவநே நாதஸ் ஸ யூதஸ்ய ந: ॥ 9॥

———————————————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஶ்ரீகாஞ்சீ ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பராசர பட்டர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பிள்ளை லோகாச்சார்யர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: