ஸ்ரீ திருப்பாவை ஸாரார்த்தம்–

இன்றோ திரு ஆடிப் பூரம் எமக்காக
அன்றோ இங்கு ஆண்டாள் அவதரித்தாள் –குன்றாத
வாழ்வான வைகுண்ட வான் போகம் தன்னை இகழ்ந்து
ஆழ்வார் திரு மகளாராய்-22

அஞ்சு குடிக்கு ஒரு சந்ததியாய் ஆழ்வார்கள்
தம் செயலை விஞ்சி நிற்கும் தன்மையளாய் -பிஞ்சாய்
பழுத்தாளை ஆண்டாளை பத்தி உடன் நாளும்
வழுத்தாய் மனமே ! மகிழ்ந்து -24

———————

1-மார்கழித்திங்கள்
ப்ராப்ய ப்ராபக ஸங்க்ரஹம் (அதிகாரி ஸ்வரூபம்)
(பகவத் ஸம்ஶ்லேஷமே ப்ராப்யம்; அநந்ய ஸாத்யமான இதுக்கு ஸாதநமும் அவனே.
அந்த ஸாதநத்திலே அந்வயிக்கைக்கு அதிகாரிகளும் அந்த ப்ராப்யத்தில் இச்சையுடை யவர்களே.)
பரத்வம் – உபய விபூதி யோகம்.
பாவனத்வமும் போக்யத்வமும் -மார்கழி திங்களும் மதி நிறைந்த நல் நாளும் –
நமக்கே -அதிகாரி ஸ்வரூபம்-நம -அர்த்தமே பாட்டுக்கள் தோறும் -நமக்கே -முதலில் –
கண்ணனை தூது போக சொல்லி -இழந்தார்கள் -தேரில் அருகே இருந்தாலும் -அர்ஜுனன் இழந்தான் –
பறை தரும் நாராயணனுக்கு -பல விசேஷணங்கள் -இதில் -கூர் வேல் -மங்களாஸாசனமே அவனுக்கு அரண்
பஞ்ச நாராயணன் இதில் உண்டே-நந்த கோப குமரன் -ஆச்சார்யருக்கு பவ்யன் -மந்திரத்தில் உள்ளான் -அவனை எடுத்துக் கொடுப்பார்

2-வையத்து வாழ்வீர்காள்
க்ருத்யா க்ருத்ய விவேகம் (அதிகாரி நிஷ்டாக்ரமம்)
(குர்வத்ரூபமான [ப்ரவ்ருத்தி ஶீலங்களான] கரணங்களுக்கு வகுத்த வ்யாபார விஷயங்களைக் காட்டிக் கொடுக்க வேண்டுகையாலும்,
கால க்ஷேபத்துக்காகவும், ராக ப்ரேரிதமாக அநுஷ்டேயமான கர்த்தவ்யம்)
வ்யூஹம் – பாற்கடலுள் பையத் துயின்ற பரமன்
உய்யுமாறு எண்ணி உகந்து-ஸ்ரீ கோதா உபநிஷத் -30-பாசுரங்கள் -இஷ்ட பிராப்தி –
மாஸூச அநிஷ்ட நிவ்ருத்திக்கு –ஸ்ரீ கீதா உபநிஷத் -700-ஸ்லோகங்கள்

3-ஓங்கி உலகளந்த
அபிமத ஸித்தி – (ஆசார்யர்களின் ஸம்பத்து பரிபூர்ணம்.)
[பகவதநுபவ ஸஹகாரிகள் பக்கல் உபகார ஸ்ம்ருத்யதிஶயத்தாலே அவர்களுக்கு அபேக்ஷிதங்கள் யாவை,
அந்த ஸம்ருத்திகளடைய அபேக்ஷிக்கக் கடவது.]
விபவம் – ஸ்ரீ வாமனன் (க்ருத யுகம்)

4-ஆழிமழைக் கண்‍ணா
அதிகாரி உத்கர்ஷம் – பாகவத ப்ரபாவம்
[தேவதாந்தர ஸ்பர்ஶ ரஹிதராய், இப்படி அநந்ய ப்ரயோஜநராய், பகவதேக ப்ரவணராய், பகவதநுபவோபகரணமானவற்றிலே
இழிந்தவர்களுக்கு அந்த தேவதாந்தரங்களும் ஏவல் செய்யும்.] (பகவத் பாகவத இஷ்டத்வேந நித்ய நைமித்திகாதி தர்மங்களை
யதாவாக அநுஷ்டிக்கை, ப்ரபந்நாதிகாரிகளுக்கு ஆவஶ்யகம்.)
விபவம் – ஸ்ரீ சக்ரவர்த்தித் திருமகன் (த்ரேதா யுகம்)

5-மாயனை மன்னு
வித்யா ப்ரபாவம்
(பகவதநுபவத்திலிழிந்தவர்களுக்கு வரும் அநுபவ விரோதிகளை அவ் வநுபவம் தானே நிரோதிக்குமென்னுமிடம்)
விபவம் – ஸ்ரீ கிருஷ்ணன் (த்வாபர யுகம்)
இப்படி கீழ் அஞ்சுபாட்டாலே ப்ராப்யமான ஸ்ரீ கிருஷ்ணாநுபவத்துக்கு ஏகாந்தமான உபகரணங்களைச் சொல்லி,
அநந்தரம் மேல் பத்துப் பாட்டாலே அந்த உபகரணங்களைக்கொண்டு அநுபவிக்குமவர்களை எழுப்புகிறது.

6-புள்‍ளும் சிலம்பின
அர்ச்சாவதாரம். பிள்ளாயெழுந்திராய் –ஸ்ரீ பொய்கையாழ்வார்
(ஸ்ரீ கிருஷ்ண ஸம்ஶ்லேஷத்தில் புதியாளொருத்தியை [தத் விஷயத்திலும் ததீய விஷயம் நன்றென்றறியாதவளை] எழுப்புகிறார்கள்.)
பகவதேக போகரான ஸ்ரீ வைஷ்ணவர்கள் அநந்ய ப்ரயோஜநராய் இவ் விஷயத்தில் தேஶிகரன்றிக்கே இருக்கிறவர்களை,
அவர்களிடத்தில் பரிவாலே தேஶிகராக்குகை தங்களுக்கு க்ருத்யம் என்றிருக்கையாகிற ஸ்ரீ வைஷ்ணவத்வ ஸ்வபாவம்.

7-கீசுகீசென்றெங்கும்
ஶேஷத்வம். பேய்ப் பெண்-ஸ்ரீ பேயாழ்வார்
(பகவத் விஷயத்திலும், பாகவத விஷயம் நன்று என்று தெரிந்தும் மறந்திருப்பாளொருத்தியை எழுப்புகிறார்கள்.)
பகவத் விஷயத்திலே ஜ்ஞாதமான அர்த்தம் ஒருவனுக்கு விஸ்ம்ருதமானால் தங்கள் படியாலே ‘போதயந்த: பரஸ்பரம்’ பண்ணி
ஸ்ம்ருதி விஷயமாம்படி அறிவிக்கை ஸ்ரீ வைஷ்ணவர்களுக்கு ஸ்வபாவம்.

8-கீழ் வானம் வெள்‍ளென்று
பாகவத பாரதந்த்ர்யம். கோதுகலமுடையாய்-ஸ்ரீ பூதத்தாழ்வார்
(பாகவத ஶேஷத்வ பர்யந்தமான பகவச் சேஷத்வமுடையளாகையாலே பகவ தபிமதரானவரை
(ஸ்ரீ கிருஷ்ணனுக்கு வேண்டற்பாடுடை [வால்லப்யம்] யளாயிருப்பாளொருத்தியை) எழுப்புகிறார்கள்.)
பகவத் விஷயத்தில் ப்ரத்யா ஸந்நராயிருப்பார் திறத்தில் ஸா பேக்ஷரா யிருக்கையும்,
அவர்களை முன்னிட்டு ஈஶ்வரனைக் கிட்டுகையும் ஸ்ரீ வைஷ்ணவர்களுக்கு ஸ்வரூபம்.

9–தூ மணி மாடத்து
பகவத் பாரதந்த்ர்யம். மாமான் மகள்-ஸ்ரீ திருமழிசையாழ்வார்.
(ஸ்ரீ கிருஷ்ணன் வந்தபோது வருகிறான் என்றிருக்குமவளை யெழுப்புகிறார்கள்.)
“தத் தஸ்ய ஸத்ருஶம் பவேத்” என்று பூர்வார் நிஷ்டராயிருப்பாரை, பகவத் ப்ரேமாதி ஶயத்தாலே
தத் ஏக பரராயிருக்குமவர்கள் பிரீதி பூர்மாக ப்ரேரிக்கை.
ஸ்வார்த்த ப்ரவ்ருத்தி ஸாமாந்யமும் உபாய விரோதி; பரார்த்த ப்ரவ்ருத்தி ஸாமாந்யமும்
உபாய பலமாயும், உபாயாநுகூலமாயுமிருக்குமென்று அறிவித்து, உபாய அத்வஸாய நிஷ்டரை எழுப்பீரோ!

10-நோற்‍றுச்சுவர்க்கம்
ஸித்த தர்மம். அம்மனாய்-ஸ்ரீ குலஶேகராழ்வார்.
(ஸ்ரீ கிருஷ்ண ஸம்ஶ்லேஷத்தில் விதேதையாய் யிருப்பாளை எழுப்புகிறார்கள்.)
உபாய நிஷ்டரை எழுப்புதல். “தேற்றமாய் வந்து திற” – லோகார்ஹை வாராமல் லௌகிகாநு வர்த்தநம் கார்ய மென்றதாய்த்து.
“ஜ்ஞாநீ த்வாத்மைவ மே மதம்” என்றும், “அஹம் ஸ ச மம ப்ரிய:” என்றும்
அவன் பக்ஷபதித்திருப்பார் திறத்தில் நித்யஸாபேக்ஷராயிருக்கை ஸ்ரீ வைஷ்ணவர்களுக்கு ஸ்வரூபம்.

11-கற்‍றுக் கறவை
அனுஷ்டானம் – ஸாமாந்ய தர்மம். கோவலர் தம் பொற் கொடியே-ஸ்ரீ பெரியாழ்வார்.
(எல்லாவற்றாலும் ஸ்ரீ கிருஷ்ணனுக்கு ஒப்பான ஆபி ஜாதையாயிருப்பா ளொருத்தியை எழுப்புகிறார்கள்.)
கற்‍றுக் கறவை கணங்கள் பல கறந்து குற்ற மொன்றில்லாத – ஜாத் யுசிதமான கர்மத்தை
சாதனமாக வன்றிக்கே கைங்கர்ய புத்யா அநுஷ்டித்தால் குற்றமில்லை.
[பகவத் ஸம்பந்தம் விச்சேதியாதே போந்த ஆசார்ய ஸந்தாந ப்ரஸூதர் நமக்குப் பூஜ்யர்.
அவர்களடியாக பகவத் ஸமாஶ்ரயணம் பண்ணுகை ஸ்வரூபம்.]

12-கனைத்திளம்
அநனுஷ்டானம் – விஶேஷ தர்மம். நற் செல்வன் தங்காய் -ஸ்ரீ தொண்டரடிப் பொடி யாழ்வார்.
(ஸ்ரீ கிருஷ்ணனைப் பிரியாதே இளைய பெருமாளைப் போலே யிருப்பானொருவன் தங்கையாகை யாலே
ஶ்லாக்யையாயிருப்பா ளொருத்தியை யெழுப்புகிறார்கள்.)
அநுஜ்ஞா கைங்கர்ய நிஷ்டனுக்கு ஆஜ்ஞா கைங்கர்ய ஹாநி ஸ்வரூப விரோத மன்றென்கிறது.
பகவத் விஶ்லேஷம் அஸஹ்யமாம்படி அவகாஹித்தவர்கள் தங்களுக்கு ஸ்ரீ வைஷ்ணவர்கள் உத்தேஶ்யரா மளவன்றிக்கே
தத் ஸம்பந்தி ஸம்பந்திகளும் உத்தேஶ்ய ரென்றிருக்கை ஸ்வரூபம்.

13-புள்‍ளின் வாய்
அஹங்கார மமகாரங்கள் ஒழிதல். போதரிக் கண்ணினாய்-ஸ்ரீ திருப்பாணாழ்வார்.
(நம் கண்ணழகு உண்டாகில் தானே வருகிறானென்று கிடக்கிறாளொருத்தியை யெழுப்புகிறார்கள்.
நமக்கு ஸ்வரூப ஜ்ஞாநமுண்டாகில், அவன் தானே வருகிறானென்று நிர்ப்பரரா யிருக்குமவரை எழுப்புகிறார்கள்.
ஈஶ்வரனும் ஈஶ்வர விபூதியும் ஸ்வாபிமாந விஷயமாய்த் தோன்றுகை – அஹங்காரத்துக்கு நன்மையாவது.
பகவதநுபவ பரிகரமான ஜ்ஞான வைராக்ய பக்திகளாலே பரிபூர்ணராயிருக்கு மவர்கள் திறத்தில்
ததர்த்தமாக ஸ்ரீ வைஷ்ணவர்கள் ஸாபேக்ஷரா யிருக்கை ஸ்வரூபம்.

14-உங்கள் புழைக்கடை–
எங்களை முன்னமெழுப்புவான் வாய்பேசும் நங்காய்-ஸ்ரீ நம்மாழ்வார்.
(இவை யெல்லாவற்றுக்கும் தானே கடவளாய், எல்லாரையும் தானே எழுப்பக் கடவதாகச் சொல்லி வைத்து,
அது செய்யாதே உறங்குகிறாளொருத்தியை எழுப்புகிறார்கள்.)
பாகவத ஸமுதாயத்துக்கெல்லாம் தாமே கடவராய், இவர்களுக்கெல்லாம் பகவத் ஸம்பந்த கடகர் தாமேயாம்படி
ஜ்ஞாந பக்தி வைராக்யங்களாலே பூர்ணரான பாகவதரை யெழுப்புகிறார்கள்.
பகவத் விஷயத்திலே மூட்டுகையிலே அதிகரித்த நிர்வாஹகர் முன்பாக பகவதநுபவம் பண்ணுகை ஸ்வரூபம்.

15-எல்லே இளங்கிளியே–
உத்தம பாகவத லக்ஷணம். எல்லே யிளங்கிளியே-ஸ்ரீ திருமங்கையாழ்வார்.
(எல்லாருடைய திரட்சியும் காண வேண்டி யிருப்பாளொருத்தியை எழுப்புகிறார்கள்.)
பாகவத சேஷத்வம் ஸ்வரூபமானால் அவர்களிடும்பழியும் தம் மேலேறிட்டுக் கொள்ளுகை ஸ்வரூபம்.
ஸ்வ யத்நத்தால் கடக்க அரிதாய், ப்ராயஶ் சித்த விநாஶ்யமுமின்றிக்கே யிருக்கிற அஹங்கார நிவர்த்தகனாய்
மற்றுமுள்ள காம க்ரோதாதிகளுக்கும் நிவாரகன் எம்பெருமான்.
திருப்பாவை யாகிறது இப் பாட்டிறே. பகவத் விஷயத்திலிருக்கும்படி யெல்லாம் சிற்றஞ்சிறுகாலையிலே சொல்லுகிறது;
பாகவத விஷயத்திலிருக்கும்படி யெல்லாம் இப் பாட்டிலே சொல்லுகிறது.
ஸ்ரீ வைஷ்ணவர்கள் ஸமவாய தர்ஶநம் அபிமதமாயிருக்கு மவர்களைக் கண்டக்கால் அந்த ஸமூஹமாக அவர்களை உகக்கை ஸ்வரூபம்.

16-நாயகனாய் நின்ற
ஆசார்ய வைபவம்
அவனைப்பெறுமிடத்தில் ததீயர் முன்னாகப் பெறவேணும். ஆசார்ய ஸம்பந்த கடகரை முன்னிட்டு
ஆசார்யனைத் தொழுகையும் பெரியோர் செயலிறே.
இவனுக்குப் பிறக்கும் அத்யவஸாயமும் போட்கனாகையாலே, மெய்யான வ்யவஸாயமுடையாரை
முன்னிட்டாலல்லது கார்ய கரமாகாதென்று முன்னிடுகிறது.

17-அம்பரமே தண்‍ணீரே
பரகத ஸ்வீகாரம் (ஏவகாரச் சீமாட்டி)
பகவத் விஷயத்தைக் கிட்டுவார் தத் ப்ரத்யாஸந்நரை புருஷகாரமாகக் கொண்டு புகுருகை ஸ்வரூபம்.

18-உந்து மதகளிற்‍றன்
புருஷகாரம்
பகவத் விஷயீகாரம் பிராட்டி புருஷகார ஸாபேக்ஷம்.

19-குத்து விளக்கெரிய
புருஷகாரம்
பிராட்டியைப் புருஷகாரமாக வரித்தால், அவனும் இவளும் இசலி இசலிப் பரியும் பரிவைச் சொல்லுகிறது.

20-முப்பத்துமூவர்
ப்ராப்யம்-பிராட்டிக்கும் அடிமை
அடிமை செய்யுமிடத்தில் இருவரும் சேர்ந்த சேர்த்தியிலே அடிமை செய்வதே முறை.

21-ஏற்‍ற கலங்கள்
ஸ்வரூபக்ருத தாஸ்யம் – அபிமான ஶூன்யம்.
ப்ரபுத்தனாய் தங்கள் கார்யம் செய்கைக்கு “ஏத்த வேழுலகம் கொண்ட” என்கிறபடியே, ஆஶ்ரிதரானவர்களுக்கு
நிர் மமராய்க் கொண்டு அவன் குண கீர்த்தனம் பண்ணுகை கர்த்தவ்ய மென்கிறது.

22-அங்கண்மாஞாலம்
அநந்யார்ஹஶேஷத்வம்
தேஹாத்மாபிமானத்தை நீக்கி, அதுக்கு இசைந்தவாறே
ஸ்வ ஸ்வாதந்த்ரியாபிமானத்தை நீக்கி,
அதுக்கு இசைந்தவாறே ஶேஷத்வத்தை யறிவித்து,
அதுக்கு இசைந்தவாறே அந்ய ஶேஷத்வ நிவ்ருத்தியை யுண்டாம்படி பண்ணி,
அதுக்கு இசைந்தவாறே ஜ்ஞாத்ருத்வ ப்ரயுக்தமான ஸ்வ ஸ்மிந் ஸ்வ ஶேஷத்வ நிவ்ருத்தியை யுண்டாக்கி,
அதுக்கு இசைந்தவாறே ஸ்வ ரக்ஷணே ஸ்வாந்வயத்தை நிவர்த்திப்பித்து,
அதுக்கு இசைந்தவாறே உபாயாந்தரங்களை விடுவித்து,
அதுக்கு இசைந்தவாறே ததேகோபாயனாம்படி பண்ணி,
அதுக்கு இசைந்தவாறே ஸ்வ வ்யாபாரத்தில் ஸ்வாதீந கர்த்ருத்வ நிவ்ருத்தியைப் பண்ணுவித்து,
அதுக்கு இசைந்தவாறே பாரதந்த்ரிய ப்ரதிபத்தியைப் பிறப்பித்து,
அதுக்கு இசைந்தவாறே ஸமஸ்த கல்யாண பரிபூர்ணனான தன்னை அநுபவிப்பித்து,
அநுபவ ஜநித ப்ரீதி காரித கைங்கர்யத்தை யுண்டாக்கி,
அக் கைங்கர்யத்தில் ஸ்வ போக்த்ருத்வ புத்தியைத் தவிர்ப்பிக்கை.

23-மாரிமழைமுழைஞ்சில்
இச்சா, க்ருபா ப்ரபாவம்.
பெண்களை ஸாந்த்வநம் பண்ணி யருளினான்;
அவ்வளவிலே, ‘நாங்கள் வந்த காரியத்தைக் கேட்டருள வேணும்’ என்கிறார்கள்.

24 அன்றிவ்வுலக மளந்தாய்
மங்களாஶாஸனம்
திருப்பள்ளி யறையில் நின்றும் திவ்ய ஸிம்ஹாஸநத்தளவும் நடக்கிற போதை
நடை யழகுக்குத் திருப் பல்லாண்டு பாடுகிறார்கள்.

25-ஒருத்தி மகனாய்
பகவல் லாப ப்ரார்த்தனை
“உங்களுக்கு வேண்டுவதென்?” என்ன, “ஏதேனும் ப்ரதி பந்தகம் உண்டேயாகிலும், நீயே போக்கி
எங்கள் து:க்கமெல்லாம் கெட விஷயீகரிக்க வேணும்” என்கிறார்கள்.

26-மாலே! மணிவண்‍ணா!
முக்தாத்மாவின் பகவத் ஸாம்யம்
பகவத் ஸம்ஶ்லேஷத்துக்கு வேண்டும் உபகரணங்களை வேண்டிக் கொள்ளுகிறார்கள்.
ஸத் ஸஹவாஸமும், பகவத் பாகவத பாரதந்த்ர்ய ஜ்ஞாநமும், கைங்கர்யமும்,
அக் கைங்கர்யத்தில் போக்த்ருத்வநிவ்ருத்தியும் வேணும்.

27-கூடாரைவெல்லும்
அநந்யபோக்யத்வம்
நோற்றால் பெறக் கடவ பேறு – விஶ்லேஷ வ்யஸநம் பிறவாத கூட்டரவாக வேணும்.
தோடே, செவிப்பூவே, பாடகமே; திரு மந்த்ரம் – ஆத்ம ஸ்வரூப யாதாத்ம்ய ஜ்ஞாந பரமாகையாலும்,
த்வயம் – உத்தர கண்டத்திற் சொல்லுகிற கைங்கர்யத்துக்குப் பூர்வ பாவியான பக்தி ப்ரதாநமாகையாலும்,
சரம ஶ்லோகம் – த்யாஜ்யாம்ஶத்தில் வைராக்ய ப்ரதாநமாகையாலும்,
ஜ்ஞாந பக்தி வைராக்யங்களைச் சொல்லுகிறது.

28-கறவைகள்பின்சென்று
உபாயம்
தங்களுடைய ஆகிஞ்சந்யத்தையும், அயோக்யதையையும் ஆவிஷ்கரித்து,
உபாய பூர்த்தியையும் தங்கள் ப்ராப்தியையும் முன்னிட்டு,
கீழ்ச் சொன்னவற்றுக்கெல்லாம் அநுதபித்து க்ஷமை கொண்டு,
எங்கள் ப்ராப்ய ஸித்திக்கு நீயே உபாயமாக வேணும் என்று அபேக்ஷிக்கிறார்கள்.

29-சிற்‍றஞ்சிறுகாலே
உபேயம்
ப்ராப்ய ருசியையும், ப்ராப்யந்தான் இன்னதென்னு மிடத்தையும்,
அத்தை அவனே தர வேணுமென்னு மிடத்தையும்
தங்கள் ப்ராப்ய த்வரையையும் அறிவிக்கிறார்கள்.
கைங்கர்யந் தானும் மங்களாஶாஸந ரூபமானபடியாலே மங்களா ஶாஸநத்துக்குப் பலமாக
அவன் கொடுக்க வேண்டியதும் இவர்கள் கொள்ள வேண்டியதும் மங்களாஶாஸநமே யென்றதாய்த்து.
ரஜஸ் தமஸ்ஸுக்களாலே கலங்கி தேஹாநுபந்திகளான த்ருஷ்ட பலங்களை அடியோங்கள் அபேக்ஷித்தாலும்
ஹித பரனான நீ கேள்வி கொள்ளவும் கடவை யல்லை, கொடுக்கக் கடவையுமல்லை என்றதாய்த்து.

30-வங்கக் கடல்கடைந்த
பலன்
இப் ப்ரபந்தம் கற்றார், பிராட்டியாலும், எம்பெருமானாலும் ஸர்வ காலமும் விஷயீ கரிக்கப் படுவர்கள் என்கிறார்கள்;
ஶ்ரிய:பதியாலே த்ருஷ்டாத்ருஷ்டங்களிரண்டிலும் பிறந்த ஜ்ஞாநத்துக்கு விச்சேதம் வாராதபடி
க்ருபையை லபித்து ஆநந்த நிர்ப்பரராயிருப்பர்கள்.

ஸ்ரீ மத்யை விஷ்ணு சித்தார்ய மநோ நந்தன ஹேதவே
நந்த நந்தன ஸூந்தர்யை கோதாயை நித்ய மங்களம் —

——————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம்
ஸ்ரீ தொட்டாசார்யர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ ஒண்ணான வான மா மலை ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ ஆயி சுவாமிகள் திருவடிகளே சரணம் சரணம்
ஸ்ரீ அழகிய மணவாள பெருமாள் நாயனார் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பூர்வாசார்யர்கள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ ஆழ்வார்கள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: