ஸ்ரீ சதுஸ் ஸ்லோகீ—ஸ்ரீ நிகமாந்த தேசிகன் ஸ்வாமிகள் அருளிச் செய்த வியாக்யானம் –

ஸ்ரீ மத் கிருஷ்ண சமாஹ்வாய நமோ யாமுன ஸூநவே
யத் கடாஷைக லஷ்யாணாம் ஸூலப ஸ்ரீ தரஸ் சதா –

—————-

ஸ்வ சேஷ சேஷார்த்தோ நிரவதிக நிரப்பாத மஹிமா
பலாநாம் ததா ய பலம் அபி ச சரீரகமித
ஸ்ரியம் தத் சத்நிஸீம் தத் உபசதந த்ராச சமநீம்
அபிஷ்டவ்தி ஸ்துத்யாம் அவிதத மதிர் யாமுந முனி –

ஸ்ரீ யபதி -சர்வேஸ்வரன் -ஓத்தார் மிக்கார் இலாய மா மாயன் -சர்வபல ப்ரதன்-தானே பலத்தை அனுபவிப்பவன் –
சரீர சாஸ்த்ரத்தால் பிரதி பாதிக்கப்படுபவன் -அவனை உபாசிப்பதில் அச்சத்தைப் போக்கி
அருளுபவளான ஸ்ரீ பெரிய பிராட்டியாரை -க ஸ்ரீ ஸ்ரீய -என்றபடி திருவுக்கும் திருவாகிய செல்வன் அன்றோ-
ஸ்ரீ ஆளவந்தார் ஸ்தோத்ரம் பண்ணி அருளுகிறார்

———————————————

காந்தஸ் தே புருஷோத்தம
பணி பதிஸ் சய்யா ஆசனம் வாஹனம்
வேதாத்மா விஹகேச்வரோ
யவ நிகா மாயா ஜகன் மோஹிநீ
ப்ரஹ்மே ஸாதி ஸூ ராவ் ரஜஸ்
சத யிதஸ் த்வத் தாஸ தாஸீ கண
ஸ்ரீரித் யேவ ச நாம தே பகவதி
ப்ரூம கதம் த்வாம் வயம்–1-

————————–

காந்தஸ் தே புருஷோத்தம—-
காந்தன் -அனைத்து விதத்திலும் சேரும்படி உள்ளவன் என்றபடி -பிரியமாக உள்ளவன் –
தே -அனைத்து மங்களுக்கும் காரணமாக
ப்ரமாணங்களிலே கூறப்படும் உனக்கு
காந்தஸ் தே -இரண்டாலும் தேவதேவ திவ்ய மஹிஷீம்-ஸ்ரீ சரணாகதி கத்யம் -என்றது கூறப்பட்டது

புருஷோத்தம –
த்வவ் இமவ் புருஷவ் லோகே –ஸ்ரீ கீதை -15-16-என்றபடி இதர ஸமஸ்த விலக்ஷணன் என்பதால்
இந்த திருநாம பிரயோகம் –இங்கு பல சமாசங்கள் கொண்டு விளக்கலாம்
அவதாரத்திலும் நாரீணாம் உத்தம –ஸ்ரீ பாலா -1-27-
இவ்வாறு அவனது சம்பந்தம் மூலமாகவே இவளுக்கு உத்க்ருஷ்டம்

பணி பதிஸ் சய்யா ஆசனம் வாஹனம் வேதாத்மா விஹகேச்வரோ
பணி பதிஸ் சய்யா–அவனுக்கு விபூதிகளால் வந்த மேன்மை இவளுக்கும் உண்டு என்பதால்
நித்ய ஸூரீகள் அனைவரும் இவளுக்கும் சேஷபூதர்கள் என்கிறார்
பணி பதி என்பதன் மூலம் நறுமணம் மேன்மை குளிர்ச்சி விசாலம் உயர்த்தி -தன்மைகளைச் சொல்லி

கல்பாந்தே யஸ்ய வக்த்ரேப்ய விஷ அநல ஸிக உஜ்ஜ்வல –சங்கர்ஷண ஆத்மகோ ருத்ரோ நிஷ்கர்ம்ய அத்தி ஜகத் த்ரயம் –
ஆஸ்தே பாதாள மூலஸ்த சேஷ அசேஷ ஸூரார்ஜித-தஸ்ய வீர்யம் பிரபாவம் ச ஸ்வரூபம் ரூபம் ஏவ ச –
ந ஹி வர்ணயிதும் சக்யம் ஞாதும் வா த்ரிதசை அபி -ஸ்ரீ விஷ்ணு புராணம் –2-5-21-

பிரளயத்தின் போது ஆதி சேஷன் வாயில் இருந்து விஷம் நிறைந்த அக்னி வெளிவர -அதன் ஜ்வாலையில் ஒளியில்
சங்கர்ஷண ரூபியான ருத்ரன் பிரகாசித்தபடி இருந்து மூன்று லோகங்களை விழுங்க –
இப்படி ஆதி சேஷன் பூ மண்டலங்களை சிரஸூக்கு அலங்காரமாக கொண்டு தேவர்கள் வணங்க பாதாளத்தின் அடியில் உள்ளான் –
அவனது வீர்யம் மேன்மை ஸ்வரூபம் ரூபம் இவற்றை தேவர்களால் அறிவதும் உரைப்பதும் அரிது என்றபடி

தயா ஸஹ ஆஸீநம் அநந்த போகிநீ -ஸ்ரீ ஸ்தோத்ர ரத்னம் -39-
ஆசனம் வாஹனம்-இத்தை காகாஷி நியாயம் போலே இரண்டு இடங்களிலும் சேர்த்துக் கொள்ள வேண்டும்
போக ப்ரியா போகவதீ போகீந்த்ர சயன ஆசன என்றும்
அஜிதா ஆகர்ஷனி நீதி கருடா கருடாஸனா -ஸ்ரீ லஷ்மீ சஹஸ்ர நாமம் -என்று யாராலும் வெல்லப்படாத பகவானை
தன் வசம் கொண்டவள் -கருடை என்னும் திரு நாமம் கொண்டவள் -கருடனை இருக்கையாகக் கொண்டவள் – என்றும் உண்டே

வேதாத்மா விஹகேச்வரோ-
வஹேயம் யஜ்ஜம் ப்ரவிசேயம் வேதாந் –என்கிறபடி
யஜ்ஜ்ங்களில் வஹித்து வேதங்களில் புகுந்து -வேதங்களுக்கு ஆதாரமாக -ஸ்வரூபமாக உள்ள திருவடி
இப்படி அனைத்து வேதங்களுக்கும் அபிமான தேவதை என்பதால் பெரிய திருவடியையே சர்வஞ்ஞன் –
அமிர்தத்தை கொண்டு வந்ததால் சர்வ சக்தி பலம் இத்யாதி குணங்கள் வெளிட்டு அருளினான்
விஹகேஸ்வர-என்றது
சத்ய ஸூபர்னோ கருட தார்க்ஷ யஸ்து விஹகேஸ்வர –ஸ்ரீ சாத்வத சம்ஹிதை -என்றபடி
பஞ்ச பிராணங்களுக்கும் அபிமான தேவதை -என்றவாறு

பணி பதி விஹகேஸ்வர
இத்தால் இருவரும் பரஸ்பர விரோதம் இல்லாமல் ஒரே நேரத்தில் வணங்கும்படி உள்ளவள்
கைமுதிக நியாயத்தால் இத்தால் முக்தர்களையும் சொல்லி அனைவரும் சாமரம் போன்று இருப்பார்கள் என்றதாயிற்று
சேஷ சேஷாசநாதி சர்வம் பரிஜனம் –ஸ்ரீ வைகுண்ட கத்யம் –
இத்தால் நித்ய விபூதி இவளுக்கு சேஷ பூதம் என்றதாயிற்று

யவ நிகா மாயா ஜகன் மோஹிநீ
லீலா விபூதியில் அசித் வர்க்கமும் இவளுக்கு சேஷ பூதம் என்றதாயிற்று
யவநிகா –திரை -பகவத் ஸ்வரூப திரேதாநகரீம் -ஸ்ரீ கத்யம் -திவ்ய தம்பதிகள் இருவரையும்
பிரகிருதி மறைத்து இருப்பத்தை அருளிச் செய்தபடி-
மாயா -என்றது
மாயாம் து ப்ரக்ருதிம் வித்யாத் –ஸ்வேதர -4-10-மாயை என்பதால் பிரக்ருதியைச் சொன்னவாறு
ஜகன் மோஹிநீ
பிரகிருதி பல விசித்திர ஸ்ருஷ்டிகளுக்கு சாதனமாக இருந்து வியக்க வைப்பதாலும்
ஜீவ பர தத்வம் பற்றி விபரீத ஞானத்துக்கு காரணம் என்பதும் சபித்தாதிகளால் விசித்திரமாக
போக்ய புத்தியைப் பிறப்பிப்பதாலும் இவ்வாறு கூறப்பட்டது
இப்படி பிரக்ருதியால் மயங்கி கர்ம வசப்பட்டு உள்ள அனைவரும் ஸ்ரீ மஹா லஷ்மிக்கு சேஷ பூதர்களே
கைமுதிக நியாயத்தாலே அனைவரும் சேஷ பூதர் என்றதாயிற்று

ப்ரஹ்மே ஸாதி ஸூ ராவ் ரஜஸ் சத யிதஸ் த்வத் தாஸ தாஸீ கண
ஏதவ் த்வவ் விபுதஸ்ரஷ்டவ் –சாந்தி பர்வம் 350-10-என்று இருவருமே அவனிடம் இருந்தே உண்டானார்கள்
இவர்களும் அக்னி இந்திரன் போன்றவர்களே என்று உணர்த்தவே வ்ரஜ -குண -போன்ற பாதங்கள் பிரயோகம்
சதயித-பத்னிகளுடன் என்று அருளிச் செய்தாலும்-தாஸீ -என்பதும் பத்தினிகள் என்றதே ஆகும் –
ஸ்ரீரித் யேவ ச நாம தே
இவை அனைத்தையும் உணர்த்த இவளுக்கே உரித்தான திரு நாமங்கள் போதும் என்றதாயிற்று
ஸ்ரயந்தீம் ஸ்ரியமாணாம் ச ஸ்ருண்வதீம்
பகவதி ஸ்ருணதீம் –ஸ்ரீ அஹிர்புத்ன்ய சம்ஹிதை -21-8-என்று தான் சென்று அடைந்துள்ள மற்றவர்களால்
அடையப்படுகின்றதும் கேட்கப்படுவதும் ஆகிய பாபங்களை விலக்குகின்ற என்றும்
ஸ்ருணாதி நிகிலம் தோஷம் ஸ் ரீணாதி ச குணை ஜகத் ஸ் ரீயதே ச அகிலை நித்யம்
ஸ்ரேயதே ச பரம் பதம் –அஹிர்புதன்ய சம்ஹிதை -51-62-என்று அனைத்து விதமான தோஷங்களையும் போக்குகிறாள் –
தனது கல்யாண குணங்களால் லோகத்தை நிரப்புகிறாள் -அனைவராலும் எப்போதும் அந்தப்படுகிறாள் –
எப்போதும் பகவானை அண்டி நிற்கிறாள் -என்னக் கடவது இறே-
நிஸ் சங்கல்பா நிராஸ்ரயா–ஸ்ரீ லஷ்மீ சஹஸ்ர நாமம் -18—சங்கல்பம் இல்லாதவள் -ஆதாரம் அற்றவள் போன்ற திரு நாமங்கள்
ஸ்ரயதே ச பரம் பதம் -அஹிர்புத்ந்ய சம்ஹிதை -51-62-என்று கூறப்பட்ட பிரமாணத்துக்கு விரோதம் ஏற்படாமல்
இருப்பதற்காக அர்த்தம் கொள்ளப்படுவதாகும்

அகலங்கா அம்ருத தாரா -17-களங்கம் அற்றவள் -பகவானை ஆதாரமாகக் கொண்டவள் –
அம்ருத என்று பகவானையே சொன்னவாறு
இதனாலே அவன் ஸ்ரீ நிவாஸன் என்று ஸ்ரீ தரன் என்றும் கொண்டாடப்படுகிறான்
யத அஹம் ஆஸ்ரய ச அஸ்யா மூர்த்தி மம ததாத் மிகா –ஸ்ரீ ஸாத்வத சம்ஹிதை -என்று எந்த ஒரு காரணத்தால்
நான் இவளுக்கு ஏற்ற இடமாக உள்ளேனோ அதன் விளைவாக எனது இந்த திருமேனி அவளையே
தனது ஸ்வரூபமாகக் கொண்டதாய் உள்ளது –
எந்த சொல்லைச் சேர்ப்பதன் மூலம் மற்ற அனைத்தைக் காட்டிலும் மிக உத்க்ருஷ்டமாக எண்ணுகிறோமோ
அந்தச் சொல்லே எனது திரு நாமம் ஆகும் -என்ற கருத்தே -ஸ்ரீ இதி -ஏவ -என்பதால் கூறப்பட்டது

பகவதி
எந்தவித தோஷங்களும் இல்லாமல் அனைத்து மங்களமான கல்யாண குணங்களுக்கு இருப்பிடம் என்பதை
உணர்த்தவே -பகவதே -என்று ஸ்லோகத்தில் கூறப்பட்டது –

ப்ரூம கதம் த்வாம் வயம்–
இவ்விதமாக பல மேன்மைகளைக் கொண்ட இவளை உள்ளது உள்ளபடி ஸ்துதிக்க இயலாது என்கிறார் –
த்வாம்
கீழே உரைத்த படி ஸ்ரீ மஹா விஷ்ணுவுக்கு பத்னியாகவும் அவனைத் தவிர உள்ள மற்ற அனைவருக்கும் ஸ்வாமிநி யாயும் –
அவற்றுக்கு ஏற்ற படியான திரு நாமங்களைக் கொண்டவளாயும் பிரசித்தி பெற்றவளாக
ந தே வர்ணயிதும் சக்தா குணாந் ஜிஹ்வாபி வேதச –ஸ்ரீ விஷ்ணு புராணம்- 1-9-133-என்று
நான்முகனுடைய வாக்குகள் கூட சக்தி அற்றவை
வயம்
அளவுபடுத்தப்பட்ட ஞானம் மற்றும் சக்தி கொண்டவர்கள் –
ப்ரஹ்மாத்யா சகலதேவா முந யச்ச தபோதனா த்வாம் ஸ்தோதும் அபி நேகாநா -த்வத் பிரசாத லபம் விநா —
உனது அனுக்ரஹம் இன்றி உன்னை ஸ்துதிக்க சக்தி அற்றவர்கள் –
தாமும் இந்த கோஷ்ட்டி என்று உணர்த்தவே பன்மை பத பிரயோகம்
கதம் ப்ரூம
உன்னை முழுமையாக வர்ணிப்பது இயலாது
அளவுபட்டு உரைப்பதும் சரி இல்லை -என்று பொருள்

தே –த்வாம்
ஒரு சிலர் அனைத்தையும் ஸ்ருஷ்டிப்பவனாகிய பகவானால் அதிஷ்டானம் செய்யப்படும் பிரக்ருதியே
ஸ்ரீ மஹா லஷ்மி ஆவாள் -என்று கூறுகிறார்கள் –
வேறு சிலர் பகவானுடைய -இருப்பு -அஹங்காரம் -பிரகாரம் -சக்தி -வித்யை -இச்சை-மற்றும் அனைத்தையும்
அனுபவிக்கும் தன்மை ஆகியவையே ஸ்ரீ மஹா லஷ்மீ என்று கூறுகிறார்கள்
ஸ்ரீ சாஸ்திரங்களில் -ஸ்ரீ அஹிர்புத்ந்ய சம்ஹிதை ஸ்ரீ லஷ்மீ தந்திரம் -இவற்றில் இவ்வாறு கூறப்படுவதாக கூறுகிறார்கள்
அந்த சாஸ்த்ரங்களே ஸ்ரீ மஹா லஷ்மி சேதன வஸ்து ஆவாள் என்று முரண்பாடு
இன்றி உரைக்கப் பட்டதால் அவர்களும் அவர்களுடைய கருத்துக்களும் தள்ளப்படுகின்றன
ஸ்ரீ மஹா லஷ்மீ சேதன வஸ்துவே என்று காட்டவே தே -உனக்கு என்றும் த்வாம் உன்னை என்றும் பதங்கள் பிரயோகம்
அவனுடைய இருப்பாகவே இவள் உள்ளாள் என்பது போன்ற கருத்துக்கள்
இவளிடம் அவனுக்கு அந்தரங்கமான விசேஷம் உண்டு என்றும் இவள் விசேஷமாக உள்ளாள் என்பதாலும் கூறப்படுகின்றன
தே -யவனிகா -உனக்குத் திரை
இவள் பிரக்ருதியைக் காட்டிலும் வேறு பட்டவள் -தே -யவனிகா -உனக்குத் திரை -என்பதன் மூலம் உணர்த்தப்பட்டது
பிரகிருதி என்ற சொல்லால் கூறப்பட்டாள்-என்பதால் மட்டுமே முக்குண பிரகிருதி இவளே ஆவாள் என்பது சரி இல்லை
வாஸூ தேவ பரா ப்ரக்ருதி -வாஸூ தேவனே உயர்ந்த பிரகிருதி என்றும்
ப்ரக்ருதிச் ச ப்ரதிஜ்ஞா த்ருஷ்டாந்த அநுப ரோதாத் –ஸ்ரீ ப்ரஹ்ம ஸூத்ரம் -1-4-23– ப்ரஹ்மமே உபாதான காரணம் போன்று
பகவானையே இவ்வாறு கூறப்பட வேண்டியதாகும் என்பதால் ஸ்ரீ மஹா லஷ்மியே பிரகிருதி என்பது பொருத்தம் அல்ல-

ஆகவே -ஜகத் உத்பாதிகா சக்தி தவ ப்ரக்ருதி இத்யாதே ச ஏவ நாம ஸஹஸ்ரைஸ் து லஷ்மீ
ஸ்ரீ இதி கீர்த்யதே–ஸ்ரீ ஸநத்குமார சம்ஹிதை -இந்த ஜகத்தை உத்பத்தி செய்யக் கூடிய உனது சக்தியே
இங்கு பிரகிருதி என்று கூறப்படுகிறது -ஆகவே பல நாமங்களாக ஸ்ரீ லஷ்மீ என்று கூறப்படுகிறது -என்றும்
மூல ப்ரக்ருதி ஈஸாநீ -ஸ்ரீ லஷ்மீ சஹஸ்ர நாமம் -55-அவளே மூல ப்ரக்ருதி அனைத்தையும் நியமிப்பவள் என்றும்
ப்ரக்ருதி புருஷாச்ச அந்ய த்ருதீயோ ந இவ வித்யதே –ஸ்ரீ ஸநத்குமார சம்ஹிதை -பிரகிருதி புருஷன் இருவரையும்
தவிர மூன்றாவது ஏதும் அறியப்பட வில்லை -என்றும் உள்ள நான்முகன் சொற்கள் அனைத்தும்
ஸ்ரீ மஹா லஷ்மீ மற்றும் ஸ்ரீ நாராயணன் இருவரும் பிரகிருதி மற்றும் புருஷன் என்பதான வெவ்வேறாக உள்ள
விபூதிகளுக்கு அபிமானி தேவதைகளாக உள்ளனர் என்கிற கருத்தில் சொல்லப்பட்டவை

ரஹஸ்ய ஆம்நயத்தில்-பிரகிருதி மற்றும் ஸ்ரீ லஷ்மீ ஆகிய இருவரிடம் வித்யா என்கிற பதம் பயன்படுத்தப் பட்டுள்ளது –
என்று கூறப்படுகிறது -இதன் பின்னரும் இந்த இருவருக்கும் ஸ்வரூப ஐக்கியம் உண்டு என்று கூறுதல் கூடாது –
அதாவது சத்வ குணம் நன்கு வளர்ந்து அதன் மூலமாக வித்யைக்கு காரணமான சூழல் ஏற்படுவதால்
ப்ரக்ருதியைக் குறித்து வித்யா என்ற சொல் கூறப்பட்டது –
ஆனால் ஸ்ரீ மஹா லஷ்மீ வித்யையை அளிப்பவள் என்பதால் அவள் விஷயத்தில் இந்த சொல் பயன்படுத்தப் படுகிறது-

ஒரு சிலர் இருப்பு முதலியவற்றுடன் கூடியுள்ள பகவானே ஸ்ரீ லஷ்மீ என்று கூறப்படுகிறான் என்றும் –
ஒரு சிலர் ஸ்திரீயாக உள்ள நித்தியமான ஒரு சரீரம் கொண்ட பலவான் ஸ்ரீ லஷ்மீ என்று கூறப்படுகிறான் என்றும்
ஒரு சிலர் அசுரர்களை மயக்குவதற்காக மோகினி ரூபம் எடுத்தது போன்று தனது இன்பத்திற்காக ஒரு சில நேரங்களில்
அவன் பெண் வடிவை ஏற்கிறான் -அந்த ரூபத்துடன் உள்ள பகவானே ஸ்ரீ மஹா லஷ்மீ ஆவாள் என்றும் கூறுகிறார்கள்
இந்தக்கருத்துக்கள் அனைத்தும் ஸ்ரீ மஹா லஷ்மீயைக் காட்டிலும் வேறாக உள்ள ஜீவாத்மாக்கள் என்று கூறும்
அந்த சாஸ்த்ரங்களாலே தள்ளப்படுகின்றன

உத்தர நாராயண அநுவாகத்தில்-ஹ்ரீச்ச தே லஷ்மீச்ச பத்ந்யவ் -என்று
ஸ்ரீ பூமா தேவியும் ஸ்ரீ மஹா லஷ்மீயும் பத்னிகள் ஆவார்கள் என்பதாகக் கூறும் சுருதிகள்
பர்த்தா மற்றும் பத்னி ஆகிய இவருடைய ஸ்வரூபமும் வெவ்வேறு என்று கூறுகின்றன –
இங்குள்ள -காந்த –தே -என்பதிலும் பிரித்தே கூறப்பட்டது காணலாம் –

ஒரு சிலர் பகவானுடைய ஸ்வரூபத்தில் உள்ள ஒரு பகுதியே பரஸ்பரம் இன்பத்தை அனுபவிக்கும் விதமாக
தனியான ஒரு பெண் பாகத்தை அடைகிறது -இதுவே ஸ்ரீ லஷ்மீ என்ற சொல்லிற்கான பொருள் ஆகும் –
இவ்விதம் கூறுவதின் மூலம் பேத அபேத ஸ்ருதிகளை சமன்வயப் படுத்துவர் –
இந்தக் கருத்து ப்ரஹ்ம ஸ்வரூபம் பிரிக்க இயலாது என்பதால் தள்ளப்படும்
ஆனால் ஸ்ரீ ப்ரஹ்ம புராணத்தில் -நர நாரீ மயன் ஹரி -என்று
ஸ்ரீ ஹரி புருஷனாகவும் ஸ்திரீயாகவும் உள்ளான் என்று உள்ளதே என்னில்
ஸ்ரீ ஸநத்குமார சம்ஹிதையில் -ஜ்யோத்ஸ்நேவ ஹிம தீதே -சந்திரனுக்கு நிலவு போன்றது -ப்ரகாசத்துக்கு ஆதாரமாக உள்ள
வஸ்துவை ப்ரகாசமயமாக உள்ளது என்னுமா போலே ஸ்வரூபங்களில் பேதம் கொள்ள இடம் அளிக்காமல் பொருள் கொள்ள வேண்டும்
இதன் மூலம் விதையாக உள்ளவற்றின் முளைக்கக் கூடிய பகுதிகள் தனியாக வளர்கின்றன –
இதே போன்று காரியப் பொருள்களாக பரிணாமம் அடைவதற்கு உபாதான காரணமாக உள்ள உபாதான காரணமாக உள்ள
ப்ரஹ்ம ரூபத்தின் ஒரு பகுதியே -தனது ஸ்வ பாவத்தால் தனியாகப் பிரிந்து ஸ்ரீ லஷ்மீ என்றதாகிறது
என்று கூறப்படும் கருத்தும் தள்ளப்படுகிறது –
மேலும் ப்ரஹ்ம ஸ்வரூபத்தில் மாற்றம் ஏற்படுவது இல்லை என்று
ஸ்ரீ ப்ரஹ்ம ஸ்வரூபத்தில் நிரூபிக்கப் பட்டதால் இந்தக்கருத்து நிராகரிக்கப் பட்டது

ஒரு சிலர் கூறுவது -வேறு ஒரு காரணப் பொருளுடன் சேர்ந்துள்ள ஒரு பாகமானது முற்றிலுமாக வேறுபட்டு நிற்கிறது -என்பதாகும் –
ஒரு நதியில் இருந்து குடத்தின் மூலமாக எடுக்கப்பட்ட நீரை வேறு ஒரு இடத்துக்குப் பிரிக்கப்பட்டு எடுத்துச் செல்ல இயலும் –
அதற்கு தனிப்பெயர் கூறப்படுவது இல்லை –
ஆனால் குடத்துக்குள் காணப்படும் ஆகாசத்துக்கு குடாகாசம் -என்று தனிப்பெயரே வழங்கப் படுகிறது
அதனைப் போன்றே சரீரம் முதலான உபாதிகள் உள்ள போது -அவயவங்கள் அற்றதான ப்ரஹ்மத்தின் ஸ்வரூபத்தில்
உபாதியுடன் சேர்ந்த பாகங்கள் அல்லாமல் -மற்ற பகுதிகளானவை அந்த உபாதிகளுடன் சேரும் போது
முன்பு இன்பங்களை அனுபவித்த பாகம் இருப்பது இல்லை –
ஆகவே முன்பு அனுபவிக்கப்பட்ட இன்பங்களை அந்த பாகங்கள் எண்ணி இருப்பது பொருந்தாது –
ஆனால் அந்த பாகங்கள் அனைத்தும் ஒரே ஜாதியைச் சேர்ந்த அம்சங்கள் என்பதால் ஓர் அம்சத்தால் அனுபவிக்கப்பட்ட அனைத்தும்
மற்ற அம்சங்களுக்கும் பொருந்தும் அல்லவோ என்ற கேள்வி எழலாம் –
இவ்விதம் கொண்டால் பவ்தர்களுடைய கருத்து தொனிக்கும் என்பதால் நித்தியமான ஜீவாத்மா என்பதை ஏற்க இயலாமல் போய் விடும் –
இது மட்டும் அல்லாமல் பகவானுடைய அவதாரம் என்று கூறுபவர்களும்
ஸ்வரூபத்தை மாறுதல்கள் யாகும் என்று கூறுபவர்களும்
ஸ்ரீ லஷ்மிக்கு நித்தியமான திருமேனி உள்ளது என்று உரைக்கும் பிரமாணங்களால் தள்ளப்படுகிறார்கள் –
இவை அனைத்தும் இந்த ஸ்லோகத்தில் பிரித்து குறைக்கப்பட்டு இருப்பதால் வெளிப்படு கிறது
ஸ்ரீ வாக்ச நாரீணாம் –ஸ்ரீ கீதை -11-34-பெண்களில் கீர்த்தியும் ஸ்ரீ மஹா லஷ்மியும் வாக்கும் நானே ஆவேன் -என்றுள்ள
இடங்களில் சேர்த்துக் கூறப்பட்டது காணலாம்
இங்கும் முன்பு கூறப்பட்டது போன்று ஸ்வரூபம் வெவ்வேறாக உள்ள போதிலும் –
சேஷன் -சேஷி -என்கிற சம்பந்தத்தைக் காரணமாக் கொண்டு உரைக்கப் பட்டது என்று கருத்து

விஷ்ணோர் ஸ்ரீ அநபாயிநீ–ஸ்ரீ விஷ்ணு புராணம் -1-8-17- என்றுள்ள வாக்கியங்கள் மூலம் பேதம் வெளிப்பட்டது
இப்படிச் சொல்லும் போது ஸ்ரீ மஹா லஷ்மியும் கர்மவசப்பட்டவள் ஆகிறாள் என்று ஆகுமே என்னில் அது அப்படி அல்ல
ஆதித்யாநாம் அஹம்—ஸ்ரீ கீதை -10-21-
வ்ருஷ்ணீநாம் வா ஸூ தேவ -10-37-
அநந்தா அஸ்மி நாகாநாம் வைநயேதச்ச பஷீணாம் -10-29–இவ்வாறு பிரித்து உரைக்கலாமே ஒரே ஜாதியாக இருந்தாலும்
இத்தால் ஸ்ரீ மஹா லஷ்மி நித்யருக்குள் அதிகர் என்றும் சர்வேஸ்வரன் ஸ்வரூபம் வேறு பட்டது என்றும் தெளிவாகும்
அவனது ரூபத்தில் பாதி இவளது என்பதும் உண்டே

அடுத்து ஸ்ரீ விஷ்ணு வைபவ அதிகாரத்தில்
த்வம் யாத்ருச அஸி கமலாம் அபி தாத்ருசம் தே தாரா -வதந்தி யுவயோ ந து பேத கந்த மாயா விபக்த யுவதீ தநும்
ஏகம் ஏவ த்வாம் மாதரம் ச பிதரம் ச யுவா நாம் ஆஹு –நீ எவ்வாறு ஆகிறாயோ அதே போலே ஸ்ரீ மஹா லஷ்மியும்
உனது பத்நியாக ஆகிறாள் என்று கூறுகிறார்கள் –
உங்களுக்கு பேத வாசனை என்பது இல்லை -மாயையால் பிரிந்துள்ள பெண் சரீரத்தைக் கொண்ட இளமையாக உள்ள உன்னையே
தாய் மற்றும் தந்தை என்றும் கூறுகிறார்கள் –என்று கூறப்பட்டுள்ளதே என்று கேட்பதும் சரியில்லை –
அவர்கள் இவருடைய விருப்பம் காரணமாகவே சரீரத்தை மட்டுமே ஒன்றாக சேர்த்தபடி உள்ளது பொருந்தும் என்பதாலும்
ஆகவே ஸ்வரூபத்தில் ஒற்றுமை இல்லை என்றாலும் இது பொருந்தும் என்பதால்
ஒரே சரீரமாக உள்ளது என்பது ஸ்ருதிகளுக்கு முரணாக உள்ளது என்பதும் பொருந்தாது
ஆனால் ஒரே பரமாத்மாவே அனைத்தையும் செய்ய இயலும் என்று உள்ள போது வேறு ஒரு ஆத்மா உள்ளது என்று
ஏற்பதால் என்ன பயன் உள்ளது -என்று கேட்பதும் சரியில்லை
ஸ்ரீ விஷ்ணு ஸ்ம்ருதியானது -99-6-
ஆஸ்ரம்ய ஸர்வாந்து யதா திரிவோகீம் திஷ்டத் வயம் தேவ வர அஸிதாஷீ ததா ஸ்திதா த்வம் வரதே தாதாபி –என்று
சர்வ வ்யாபியான அவனைப் போலே சர்வ அபீஷ்டங்களையும் கொடுக்கும் அஸீ தேக்ஷிணையாய் உள்ள நீயும் உள்ளாய் –
என்பது போன்றும் உள்ளவை காணலாம்
ஸ்ரீ விஷ்ணு புராணம் -1-8-35-ந அநயோ வித்யதே பரம் -என்றும்
அஹிர் புத்ன்ய சம்ஹிதை 3-26–ஏக தத்வம் இவ உதிதவ் –என்று ஸ்ரீ பகவத் சாஸ்திரமான ஸ்ரீ பாஞ்சராத்திலும்
இவர்களுடைய ஸ்வரூபம் ஒன்றே என்ற வாதம் தள்ளுபடியாகும்
வசனங்களை மட்டும் ஆதாரமாகக் கொண்டால் அனைத்து ஆத்மாக்களும் ஒன்றே எனக் கொள்ளலாம்
ஆனால் இவ்விதம் கொள்ளுதல் கூடாது அல்லவோ
ஜீவாத்மாக்கள் அனைவரும் வெவ்வேறு ஆனவர்களே ஆவர் என்பதை ஏற்காதவர்கள் ஸ்ரீ பாஷ்யாதிகளில் தள்ளப்பட்டனர்
இங்கும் திவ்ய தம்பதிகளுக்கும் ஒருவருக்கு ஒருவர் உள்ள பேதமும் நிலை நாட்டப்பட்டது –
இத்தால் லஷ்மி நாராயணன் இருவரும் ஒருவரே வாதமும் தள்ளப்பட்டது
பிராட்டி இடம் திருவடி சுக்ரீவனும் பெருமாளும் ஒன்றாகவே ஆனார் என்று சொல்லியது போலே உரைப்பர்
மேலும் நிர்விசேஷ சின் மாத்ர ப்ரஹ்மத்தின் ஸ்வரூபத்தை மறைத்துள்ள உண்மையற்ற மாயை என்பதான விசேஷத்தை
அடைந்ததாகவும் ப்ரஹ்மத்தின் பிரதிபிம்பத்தை கொண்டதாகவும் உள்ள வஸ்துவே லஷ்மி போன்ற வாதங்களும் தள்ளப்படும்

மேலும் நிர்விசேஷ சின்மாத்ர ப்ரஹ்மத்தின் ஸ்வரூபத்தை மறைத்துள்ள உண்மை அற்ற மாயை என்பதான
விசேஷத்தை அடைந்ததாகவும் ப்ரஹ்மத்தின் பிரதிபிம்பத்தைக் கொண்டதாகவும் உள்ள வஸ்துவே
லஷ்மீ என்று கூறப்படுகிறாள் என்பர் சிலர்
ஆனால் இப்படி மறைக்கப்பட்ட ஸ்வரூபம் கொண்ட ப்ரஹ்மம் -மற்றும் அதற்கு ஒரு மறைவு ஆகிய இரண்டுமே
தள்ளப்படுவதால் அந்தக்கருத்து நிரசனம்
மாயை மஹா லஷ்மி மற்றும் அவளுடைய நாயகன் இருவரையும் தவிர மற்ற அனைத்து லோகங்களையும்
மயக்கியபடி உள்ளது என்பதாலும் மேலே உள்ள கருத்து தள்ளப்பட்டது –

ஸ்ரீ மஹா லஷ்மியின் பார்வையை அவளுக்கு வசப்பட்ட செயல்களைக் கொண்ட ப்ரக்ருதி திரையைப் போலே
மறைக்கும் என்பது தப்பான வாதம் –
பாபங்கள் காரணமாகவே ஷேத்ரஞ்ஞர்கள் ப்ரக்ருதியான மாயையில் சிக்கி ஞான சுருக்கம் அடைகிறார்கள்
யுக கோடி சஹஸ்ராணி விஷ்ணும் ஆராத்ய பத்மபூ புந த்ரை லோக்ய தாத்ருத்வம் ப்ராப்த வாந் இதி சுச்ரும —
என்பதால் ப்ரஹ்மாதிகளும் கர்மவசப்பட்டவர்களே
அவர்கள் பத்னிகளும் கர்ம வசப்பட்டவர்கள் –
மஹா லஷ்மியும் அவர்களுடன் கூடி ஸஹ படிதமாக இருப்பதால் இவளுக்கும் ஞானம் சங்கோசம் என்பர் –
கீர் தேவதா இதி கருடத்வஜ வல்லப இதி –கனகதாரா ஸ்தோத்ரம் -10-என்று உள்ளதே –

இவ்வாறு கூறுவது பொருத்தம் அல்ல –
அவர்கள் மூவரையும் ஒன்றாகச் சேர்த்து சாமானாதி கரண்யமாகப் படித்தது ஏன் என்றால்
யத் தத் விபூதி சத்வம் –ஸ்ரீ கீதை -10-41-எது எது சிறப்பாக உள்ளதோ -விபூதி அத்தியாயத்தில் கூறப்பட்ட
நியாயம் மூலமே கொள்ள வேண்டும்
தாபநீய உபநிஷத்தில் க்ருத ஸூக்தத்தில் -மஹா லஷ்மியிடம் அந்த சொற்கள் அனைத்தும் அர்த்தத்தை
சிறப்புக்கள் மற்றும் அவற்றைத் தனது விபூதியாகக் கொண்டவன் என்ற காரணம் –
என்பதால் கூறப்பட்டதாக உரைக்கப் பட்டத்தைக் காணலாம்
காயத்ரீ கல்பத்தினைப் பொறுத்த வரை மஹா லஷ்மியின் செல்வமாகிய காயத்ரீ தேவதைக்கே
பல்வேறு ஸந்த்யைகளிலே வைஷ்ணவீ முதலானவர்களுக்குத் தகுந்த வாஹனம் ரூபம் போன்றவற்றை
ஏற்கும் சக்தி உள்ளது -என்று மேன்மையைக் கூறுவதில் கருத்து
த்ரு ஹிணாதிஷு கேஷாம் சித் ஈஸ்வர வ்யக்திதா பிரமாத் தத் பத்நீஷ்வபி லஷ்ம்யாம்ச வாதஸ் ஸ்ருத்யாதி பாதித–என்று
இவர்களே ஈஸ்வரர் என்ற பிரமம் உண்டாகி இவர்கள் பத்தினிகள் லஷ்மியின் அம்சம் உள்ளது –
இதனால் சுருதிகள் பாதிக்கப் படலாம் என்பதால் இக்கருத்தை சுருதிகள் தள்ளுகின்றன -என்ற கருத்து உண்டே
இவர்கள் இருவரும் மஹா லஷ்மிக்கு வசப்பட்டவர்களே

——————308

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ நிகமாந்த தேசிகன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ ஆச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ ஆளவந்தார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: