ஸ்ரீ விஷ்ணு சகஸ்ர நாமம்-3-10- புருஷ ஸூக்த உபநிஷத் ப்ரதிபாதித விராட் ஸ்வரூப திரு நாமங்கள் -226-247/3-11–சித் அசித் -இவைகளாலான -ஐஸ்வர்ய -பூர்த்தி -248-271—

அக்ரணீர் க்ராமணீஸ் ஸ்ரீமான் ந்யாயோ நேதா ச்மரணீ
சஹச்ர மூர்த்தா விச்வாத்மா சஹச்ர ராஷஸ் சஹச்ர பாத் –24-
ஆவர்த்தநோ நிவ்ருத்தாத்மா சம்வ்ருதஸ் சம்ப்ரமர்த்தன
அஹஸ் சம்வர்த்தோ வஹ்நி அநிலோ தரணீதர –25
ஸூ ப்ரசாத பிரசன்னாத்மா விஸ்வஸ்ருக் விஸ்வபுக் விபு
சத்கர்த்தா சத்க்ருதஸ் சத்தூர் ஜஹ்நுர் நாராயணோ நர –26
அசங்க்யேயோ அப்ரமேயாத்மா விசிஷ்ஸ் சிஷ்டக்ருச் சுசி
சித்தார்த்தஸ் சித்த சங்கல்பஸ் சித்திதஸ் சித்தி சாதன –27-
வ்ருஷாஹீ வ்ருஷபோ விஷ்ணுர் வ்ருஷபர்வா வ்ருஷோதர
வர்த்த நோ வர்த்தமா நச்ச விவிக்தஸ் ஸ்ருதிசாகர –28
ஸூ புஜோ துர்த்தரோ வாக்மீ மஹேந்த்ரோ வஸூதோ வஸூ
நைகரூபோ ப்ரருஹத்ரூபஸ் சிபிவிஷ்ட ப்ரகாசன–29

——————

3-1-பிரதம அவதாரம் விஷ்ணு -147-152- திரு நாமங்கள்–6 -திரு நாமங்கள்
3-2-வாமன அவதார பரமான -153-164 திரு நாமங்கள் —12-திரு நாமங்கள்
3-3- துஷ்ட நிக்ரஹ இஷ்ட பரிபாலநம் -165-170-திரு நாமங்கள்–6-திரு நாமங்கள்
3-4-ஜ்ஞானாதி பகவத் குணங்கள் கொண்டவன் -171-181- திரு நாமங்கள்-11-திரு நாமங்கள்
3-5-குணங்களுக்கு ஏற்ற அவதார செயல்கள் -182-186-திரு நாமங்கள்–5 திரு நாமங்கள்
3-6-ஹம்ஸாவதாரம் -187-194-திரு நாமங்கள்-7 திரு நாமங்கள்
3-7-பத்மநாபாவதாரம்-195-199-திரு நாமங்கள்-5 திரு நாமங்கள்
3-8-நரசிம்ஹ அவதாரம் ——200-210—திரு நாமங்கள்—11 திரு நாமங்கள்
3-9-மத்ஸ்ய அவதார -211-225- திரு நாமங்கள் –15-திரு நாமங்கள்
3-10- புருஷ ஸூக்த உபநிஷத் ப்ரதிபாதித விராட் ஸ்வரூப—226-247- திரு நாமங்கள் -22-திரு நாமங்கள்
3-11–சித் அசித் -இவைகளாலான -ஐஸ்வர்ய -பூர்த்தி -248-271-திரு நாமங்கள் -23-திரு நாமங்கள்
3-12-விஸ்வ ரூபம் —272-300-திரு நாமங்கள் -29-திரு நாமங்கள்

நரசிம்ஹ அவதாரம் ——–200-210——11 திரு நாமங்கள்
மத்ஸ்யாவதாரம் ———–211-225——15 திரு நாமங்கள்
உபநிஷத் திரு நாமங்கள் —226–246—–21 திரு நாமங்கள்
நாராயணன் ———————247–271—–25 திரு நாமங்கள் –
விஸ்வரூபன் ———————272–300—–29 திரு நாமங்கள் –

—————-

3-10- புருஷ ஸூக்த உபநிஷத் ப்ரதிபாதித விராட் ஸ்வரூப திரு நாமங்கள் -226-247-

அக்ரணீர் க்ராமணீஸ் ஸ்ரீமான் ந்யாயோ நேதா ச்மரணீ
சஹச்ர மூர்த்தா விச்வாத்மா சஹச்ர ராஷஸ் சஹச்ர பாத் –24-

226-ஸஹஸர மூர்தா –
தலைகள் பல பல – உடையவன் -தோள்கள் ஆயிரத்தாய்-முடிகள் ஆயிரத்தாய் -8-1-10-

ஆயிரக் கணக்கான தலைகளை உடையவர் -ஞானத்தின் வடிவமான மத்ஸ்யாவதாரத்தில் வெளிப்படுத்தப் பட்டவையும்
புருஷ ஸூக்தம் முதலிய பர வித்யைகளில் கூறப் பட்டவையுமான சஹஸ்ரமூர்த்தா முதலிய திரு நாமங்கள் கூறப் படுகின்றன –
ஆயிரம் தலைகளை உடையவர் -தலை என்பது கண் பாதம் ஞானம் செயல்கள் உபகரணங்கள் முதலிய வற்றையும் குறிக்கும் –
ஆயிரம் -எண்ணற்றவை என்ற பொருளில் -ஸ்ரீ பராசர பட்டர் –

ஆயிரம் தலைகளை உடையவர் –ஸ்ரீ சங்கரர் –

ஆயிரக் கணக்கான தலைகளை உடையவர் – ஸ்ரீ சத்ய சந்தர்-

——————–

227-விச்வாத்மா –
எங்கும் உள்ளவன் -ஞான சக்திகளால் வியாபித்து
உடன் மிசை உயிர் எனக் கரந்து எங்கும் பரந்துளன் -1-1-7-

ஞான சக்திகளினால் உலகு எங்கும் பரவி இருப்பவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

உலகிற்கு ஆத்மாவாக இருப்பவர் –ஸ்ரீ சங்கரர் –

உலகிற்குக் கட்டளை இடுபவர் – ஸ்ரீ சத்ய சந்தர்-

————–

228-ஸஹஸ்ராஷ-
துணை மலர்க் கண்கள் ஆயிரத்தாய் -8-1-10

ஆயிரக் கணக்கான கண்களை உடையவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

ஆயிரம் கண்களை உடையவர் –ஸ்ரீ சங்கரர் –

ஆயிரக் கணக்கான கண்கள் உள்ளவர் – ஸ்ரீ சத்ய சந்தர்-

—————-

229–ஸஹஸ்ரபாத்-
தாள்கள் ஆயிரத்தாய் -8-1-10-

ஆயிரக் கணக்கான பாதங்களை உடையவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

ஆயிரம் கால்களை உடையவர் –ஸ்ரீ சங்கரர் –

ஆயிரக் கணக்கான பாதங்களை உடையவர் –

—————

ஆவர்த்தநோ நிவ்ருத்தாத்மா சம்வ்ருதஸ் சம்ப்ரமர்த்தன
அஹஸ் சம்வர்த்தோ வஹ்நி அநிலோ தரணீதர –25-

————-

230-ஆவர்த்தன –
திருப்புவான் -சம்சார சுழலை சுழற்றுபவன் -கால சக்கரத்தான் -4-3-5-

ஏற்றச் சாலைப் போல் சாம்சாரத்தைத் திருப்புவர்-ஸ்ரீ பராசர பட்டர் –

சம்சார சக்ரத்தை திருப்பும் இயல்வுடையவர் –ஸ்ரீ சங்கரர் –

நதிகளில் உள்ள நீரில் சூழல்களை உண்டாக்குபவர் -எல்லா இடத்திலும் இருப்பவர் – ஸ்ரீ சத்ய சந்தர்-

—————-

231-நிவ்ருத்தாத்மா –
ப்ராக்ருதங்களுக்கு அப்பால் பட்டவன் -சர்வ உத்க்ருஷ்டன் -பராத்பரன் –
மீண்டும் 453–604–780-வரும்

ப்ரக்ருதிக்கு மூன்று மடங்கான நித்ய விபூதியில் இருப்பதாகிய தம் ஸ்வரூபம் பிரவ்ருதியை கடந்ததாக இருப்பவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

சம்சார பந்தம் இல்லாத ஸ்வரூபம் உடையவர் –ஸ்ரீ சங்கரர் –

பிரளயத்தில் ஆத்மாக்கள் திரும்பும்படி செய்பவர் -அநிவ்ருத்தாத்மா-அழியாத சரீரம் உடையவர் -என்றுமாம் – ஸ்ரீ சத்ய சந்தர்-

—————-

232-சம்வ்ருத
நன்கு மறைக்கப் பட்டவன் -அஹம் வேத்மி -விச்வாமித்ராதிகளுக்கு
உயர்வற உயர் நலம் உடையவன் -ஆழ்வார் உணர்ந்தார்
காணலுமாகான் உளன் அல்லன் இல்லை அல்லன் -2-5-10-

தாமஸ குணத்தினால் அறிவு மழுங்கிய வர்களுக்கு மறைந்து இருப்பவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

அவித்யையால் மறைக்கப் பட்டவர் –ஸ்ரீ சங்கரர் –

நற் குணங்களுடன் கூடியவர் -ஸ்ரீ சத்ய சந்தர்-

—————–

233-சம்ப்ரமர்த்தன –
நன்றாக அழிப்பவன்-அஞ்ஞானம் தமஸ் அழித்து-
உணர்விலும் உம்பர் ஒருவனை என் உணர்வின் உள்ளே இருத்தினேன் அதுவும் அவனது இன்னருளே -8-8-3-

தம்மை உபாசிப்பவர்களுக்கு மாயையை அழிப்பவர்-ஸ்ரீ பராசர பட்டர் –

பகலை நன்றாக உண்டாக்கும் சூர்யன் –ஸ்ரீ சங்கரர் –

அசுரர்களை நன்கு அழிப்பவர் – ஸ்ரீ சத்ய சந்தர்-

——————-

234-அஹஸ் சம்வர்த்தக –
பகலை காலத்தை நடத்துபவன் -கால சக்கரத்தாய் -7-2-7-காலம் அவன் அதீனம்

பகல் முதலிய கால சக்ரத்தை உருட்டுபவர் -முக் காலமானது லீலைக்கு உபகரணம் -ஷட்பாவ
விகாரம் -பிரகிருதி புருஷன் சேர்ந்து -உழன்று பிரிந்து -இருக்க காரணம் -ஸ்ரீ பராசர பட்டர் –

பகலை நன்றாக உண்டாக்கும் சூர்யன் –ஸ்ரீ சங்கரர் –

நாள்களை நடத்துபவர் -பக்தர்களை கைவிடாதவர் -உலகச் சுழற்சிக்கு முழு ஆதாரமாக இருப்பவர் -ஸ்ரீ சத்ய சந்தர்-

——————

235-வஹ்நி-
வஹிப்பவன் –
ஒரு மூ யுலகும் வயிற்றில் கொண்டு நின்ற வண்ணம் நின்ற மால் -10-8-9-

தேச வடிவில் உலகத் தாங்குபவர் -பரமபதம் -முதன்மை அதில் -லீலா விபூதி -அடுத்து –
இங்கே இது என்கிற ஞானத்திற்கு காரணம் -இவை பத்தர் முக்தர் நித்யர் மூவகைச் சேதனர்க்கும் அவன் தந்ததே -ஸ்ரீ பராசர பட்டர் –

ஹவிஸ் ஸூக்களைத் தாங்கும் அக்னியாக இருப்பவர் -ஸ்ரீ சங்கரர் –

உலகை நடத்துபவர் – ஸ்ரீ சத்ய சந்தர்-

—————

236- அநில –
ஜீவிக்கச் செய்பவன் காற்று-அநிலம்-பிராண வாயு நம்மை ஜீவிக்க செய்வதால்
காண்கின்ற இக் காற்று எல்லாம் நானே என்னும் -5-6-3-
உலகு எல்லாம் ஊழி தோறும் தன்னுள்ளே படைத்து காத்து கெடுத்து உழலும் அம்மான் -10-8-1-

இப்படி யாவரையும் உய்விப்பவர் -இதனுடைய காலமாத்ரமே காற்று என்று பிரசித்தமானது -ஸ்ரீ பராசர பட்டர் –

அநாதி யானவர் -ஒன்றையும் ஆதாரமாகக் கொள்ளாதவர் -ஸ்ரீ சங்கரர் –

தனக்கு அடைக்கலம் ஒன்றும் தேவை இல்லாதவர் -தமக்கு பூமி ஆதாரமாக இல்லாமல் தாமே பூமிக்கு ஆதாரமானவர் – ஸ்ரீ சத்ய சந்தர்-

—————–

237-தரணீதர-
தரிப்பவைகளையும் தரிப்பவன்
நாகமேந்து மண்ணினைக் காத்து ஏகமேந்தி நின்றவன் -திருச்சந்த -6-

அனைத்தையும் தாங்கும் பூமியையும் தாங்குபவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

ஆதிசேஷன் வடிவில் பூமியைத் தாங்குபவர் -ஸ்ரீ சங்கரர் –

பூமியைத் தாங்குபவர் -சிறந்த கோவர்த்தன மலையைத் தாங்குபவர் – ஸ்ரீ சத்ய சந்தர்-

——————-

ஸூ ப்ரசாத பிரசன்னாத்மா விஸ்வஸ்ருக் விஸ்வபுக் விபு
சத்கர்த்தா சத்க்ருதஸ் சாதூர் ஜஹ்நுர் நாராயணோ நர –26

——————–

238-ஸூப்ரஸாத –
மிக்க அருள் புரிபவன் -அக்ரூர் மாலா காரர் –ஈரம் கொல்லி
நல் அருள்கள் நமக்கே தந்து அருள் செய்வான் -8-6-1-

தம்மை அடைந்தவர்களுக்கு அருள் புரிபவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

அபகாரம் செய்த சிசுபாலன் முதலியோர்க்கும் மோஷம் அளிப்பவர் -மங்களகரமான அருளை உடையவர் -ஸ்ரீ சங்கரர்

மங்கள கரமான மோஷத்தை அளிப்பவர் -மங்கள கரமான அருள் புரிவர் – ஸ்ரீ சத்ய சந்தர்-

——————–

239-பிரசன்நாத்மா-
தெளிவுற்ற சிந்தையன் -7-5-22
சமோஹம் சர்வ பூதேஷு -இளையவர்கட்கு அருளுடையாய் இராகவனே -பெருமாள் திருமொழி -8-9-

அவாப்த சமஸ்த காமன் -விருப்பு வெறுப்புக்களால் கலக்கம் அற்ற தெளிந்த மனம் உடையவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

குறைவாளராயும் -கருமி யாவும் இருப்பவன் தானே ஆராதிப்பதற்கு அரியவன் –
ரஜோகுண தமோ குணங்களினால் கலங்காத மனம் உடையவர் –
அருளை ஸ்வபாவமாக உடையவர் -அவாப்த சமஸ்த காமன் – ஸ்ரீ சத்ய சங்கரர்-

தெளிந்த மனம் உள்ளவர் – ஸ்ரீ சத்ய சந்தர்-

—————–

240-விச்வருக்
அனைத்தையும் படைப்பவன்
பாமரு மூ வுலகும் படைத்த பற்ப நாபா -7-6-1
முந்நீர் ஞாலம் படைத்த எம் முகில் வண்ணனே -3-2-1-
யாதும் இல்லா வன்று நான் முகன் தன்னோடு தேவர் உலகோடு உயிர் படைத்தான் -4-10-1-
புவனி எல்லாம் படைத்தவனே -பெருமாள் திரு -8-2 –

குணம் குற்றம் பாராமல் உயிர்கள் உய்வதைக் கருதி உலகைப் படைப்பவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

உலகத் தாங்குபவர் -விஸ்வத்ருத்-என்ற பாடம் -ஸ்ரீ சங்கரர் –

உலகில் துணிவுள்ளவர் -விஸ்வத்ருத்-என்ற பாடம்- ஸ்ரீ சத்ய சந்தர்-

——————–

241- விச்வபுக் விபு –
எங்கும் பரந்து இருந்து ரஷிப்பவன்
கறந்த பாலுள் நெய்யே போல் இவற்றுள் எங்கும் கண்டு கொள்
இருந்து நின்ற பெரு மாயா -8-5-10
தானேயாகி நிறைந்து எல்லா யுலகும் உயிரும் தானேயாய் -1-7-2-

உலகங்களை வியாபித்துக் காப்பவர் -ஒரே திரு நாமம் -ஸ்ரீ பராசர பட்டர் –

உலகை அழிக்கும் போது உண்பவர் -காப்பவர் –
ஹிரண்ய கர்ப்பர்-முதலிய பல உருவங்களாய் இருப்பவர் -இரண்டு திரு நாமங்கள் –ஸ்ரீ சங்கரர் –
உலகை அழிக்கும் போது உண்பவர் -காப்பவர் –
ஹிரண்ய கர்ப்பர்-முதலிய பல உருவங்களைக் கொண்டு -பரவி – இருப்பவர் -இரண்டு திரு நாமங்கள் -ஸ்ரீ சத்ய சந்தர்-

——————

242-சத்கர்த்தா –
சத்துக்களை பஹூ மானிப்பவன்-தமர்கட்கு எளியான் -10-5-9-

சத் புருஷர்களைப் பூஜிப்பவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

சத்காரம் செய்பவர் -பூஜிப்பவர் –ஸ்ரீ சங்கரர் –

உண்மையான உலகுக்குக் கர்த்தா -துன்பம் முதலியன அற்றவன் -அனைத்து செயல்களையும் செய்பவன் –
அழிவில் விருப்பமுள்ள அசுரர்களை அழிப்பவன்-ஸ்ரீ சத்ய சந்தர்-

———————

243-சத்க்ருத –
சாதுக்களால் பூஜிக்கப் படுமவன்
செழு நிலத் தேவர் நான் மறையோர் திசை கை கூப்பி ஏத்தும் -8-4-8
உன் அடியார்க்கு என் செய்வன் என்றே இருத்தி நீ
சபரி மாலாகாரர் -போல்வார் இடம்-

ஈடுபாட்டுடன் கிஞ்சித் கரித்த சிறிய பொருள்களையும் தம் மகிமைக்குத் தக்கவற்றைப் போலே
ஏற்று மகிழ்பவர்–ஸ்ரீ பராசர பட்டர் –

பூஜிக்கப் படுபவர்களாலும் பூஜிக்கப் படுபவர் –ஸ்ரீ சங்கரர் –

உண்மையான செயல்களை உடையவர் -சத்க்ருதி -என்று பாடம் –
பிரத்யும்னனாக கருதி என்பவளை மனைவியாக அடைந்தவர் – ஸ்ரீ சத்ய சந்தர்-

——————

244-சாது –
ஆஸ்ரிதர் நியமனம் -தூது போதல்-தேரோட்டல்
இன்னார் தூதன் என நின்றான்
இந்த்ரன் சிறுவன் தேர் முன் நின்றான்

அடியவர் விரும்பியபடி தூது சென்றும் தேர் ஒட்டியும் போன்ற வற்றைச் செய்பவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

நியாமமாக நடப்பவர் -எல்லாவற்றையும் சாதிப்பவர் -சாதனம் எதுவும் இல்லாமல் சாதிப்பவர் –ஸ்ரீ சங்கரர் –

மற்றவர்களின் கார்யங்களை சாதித்துக் கொடுப்பவர்-ஸ்ரீ சத்ய சந்தர்-

—————–

245-ஜஹ்நு-
மறைப்பவன் -பிறர்களுக்கு அரிய வித்தகன் -1-3-1-

அடியவர் அல்லாதவர்க்கு தம் மகிமையை மறைப்பவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

சம்ஹார காலத்தில் எல்லாவற்றையும் மறைப்பவர் -பக்தர் அல்லாதவரைக் கை விடுபவர் –
பக்தர்களை உயர்ந்த கதிக்கு அழைத்துச் செல்பவர் –ஸ்ரீ சங்கரர் –

அயோக்யர்களைக் கைவிடுபவர் -ஸ்ரீ சத்ய சந்தர்-

————

246-நாராயண –
நாராயண பரம் ப்ரஹ்ம கீதா சாஸ்த்ரே சமீரித-ஆளவந்தார்
அந்தர் பஹிச்ச தத் சர்வம் வ்யாப்ய நாராயண ஸ்தித
எகோ ஹவை நாராயண ஆஸீத் ந ப்ரஹ்மா நேசான நே மே த்யாவா ப்ருதிவீ
வண் புகழ் நாரணன் -10-9-1
நாரணன் முழு வெழ் உலகுக்கும் நாதன் வேத முயன் -2-7-2
நாடு நகரமும் நன்கறிய நமோ நாராயணாய
நான் கண்டு கொண்டேன் நாராயணா என்னும் நாமம் -பெரிய திருமொழி -1-1-1-
நாராயணாவோ மணி வண்ணா நாகணையாய் -சிறிய திருமடல்
நானும் சொன்னேன் நமர்களும் உரைமின் நமோ நாரணமே -பெரிய திருமொழி -6-10-6-
நாராயணா என்று ஓதுவார் உரைக்கும் உரை உண்டே -முதல் திரு -95
பகல் கண்டேன் நாரணனைக் கண்டேன் -இரண்டாம் திருவந்தாதி -81
நாமம் பல சொல்லி நாராயணா -மூன்றாம் திரு -8
நலம் திகழ் நாரணன் -பெருமாள் திருமொழி -10-11
இன்னம் பல உண்டே –

உபநிஷத்துக்களில் சாகைகள் தோறும் ஒதப்படுகிற பரம்பொருளின் தனித் திரு நாமம் –
மிக ரஹசயமாகையால் விரித்துச் சொல்ல வில்லை -ஸ்ரீ பராசர பட்டர் –

நரர் -ஜீவர்களுக்கு பிரளயத்தில் ஆதாரமானவர் -நர -ஆத்மா -அதில் இருந்து உண்டான ஆகாசம் முதலியவை நாரங்கள் -அவற்றில் காரணமாக
வ்யாபிப்பவர் -அதனால் அவற்றைத் தமக்கு இருப்பிடமாக உடையவர் -பிரளய காலத்தில் ஜீவர்கள் சேருமிடமாய் இருப்பவர் -நரன் இடத்தில்
இருந்து யுண்டான தன்னார் -நாரம் -அத்தை இருப்பிடமாகக் கொண்டவர் நாராயணன் -மனு ஸ்ம்ருதி -நாராயணாய நம-
என்ற மந்த்ரமே கோரமான சம்சார விஷத்தை யுடனே போக்க வல்லது -இதை நான் மிக உயர்ந்த குரலில் கையைத் தூக்கிக்
கூறுகிறேன் -முனிவர்களே பணிவுடன் கேளுங்கள் -என்று ஸ்ரீ நரசிம்ஹ புராணத்தில் கூறப் பட்டுள்ளது – -ஸ்ரீ சங்கரர் –

குணங்களுக்கு இருப்பிடமானவர் -தோஷங்களுக்கு இருப்பிடம் அல்லாதவர் -அழிவற்றவர் -அனுபவிக்கத் தக்கவர் -தோஷங்கள் அற்ற
வேதங்களால் அறியப்படுபவர் -ஞானத்திற்குப் புகலிடமானவர் -முக்தர்கள் அடையும் இடமானவர் -நாரங்களின் கூட்டங்களுக்கு
வணங்கத் தக்க புகலிடமானவர் -முக்ய ப்ரானனான வாயு தேவருக்கு புகலிடமானவர்-
நாரம் என்னும் ஜகத்துக்கு ஆச்ரயமாக இருப்பவர் – ஸ்ரீ சத்ய சந்தர்-

—————–

247-நர –
அழியாதவன் -அழிவற்ற நித்ய வஸ்துக்கள்
நரனாக அவதரித்தவன் –
நாமம் ஆயிரம் ஏத்த நின்ற நாராயணனே நரனே -நாச் திரு -2-1-
நர நாராயணனாய் உலகத்தற நூல் சிங்காமை விரித்தவன் எம்பெருமான் -பெரிய திரு மொழி -10-6-1-

சேதன அசேதன விபூதிகள் அழியாமல் இருக்கப் பெற்றவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

எல்லாவற்றையும் நடத்துபவர் -ஸ்ரீ சங்கரர் –

மாறுதல் அற்றவர் -அழிவற்றவர் -ஸ்ரீ சத்ய சந்தர்-

———————————————————-

3-11–சித் அசித் -இவைகளாலான -ஐஸ்வர்ய -பூர்த்தி -248-271-

அசங்க்யேயோ அப்ரமேயாத்மா விசிஷ்ஸ் சிஷ்டக்ருச் சுசி
சித்தார்த்தஸ் சித்த சங்கல்பஸ் சித்திதஸ் சித்தி சாதன –27-

———

248-அசங்யேய-
எண்ணில் அடங்காதவன் -நித்ய வஸ்துக்களின் திரள் -சமூஹம் எண்ணிறந்தவை –
எண்ணில் தொல் புகழ் வானவர் ஈசன் -3-3-3-

எண்ணில் அடங்காத சேதன அசேதனங்களை உடையவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

அளவிடக் கூடிய நாம ரூப பேதங்கள் அற்றவர் -ஸ்ரீ சங்கரர் –

எண்ண முடியாத குணங்களை யுடையவர் -ஸ்ரீ சத்ய சந்தர்-

—————-

249-அப்ரமேயாத்மா –
அனைத்திலும் உள்ளும் புறமும் வியாபித்து
எங்கும் உளன் கண்ணன் -2-8-9
கரந்து எங்கும் பரந்து உளன் -1-1-10
பரந்து தனி நின்றவன் -2-8-10-

எண்ணில் அடங்காப் பொருள்கள் எல்லாவற்றிலும் உள்ளும் புறமும் பரவியவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

அளவிட்டறிய முடியாத ஸ்வரூபம் உடையவர் -ஸ்ரீ சங்கரர் –

அளவிட்டறிய முடியாத ஸ்வரூப தேக ஸ்வ பாவங்களை யுடையவர் -ஸ்ரீ சத்ய சந்தர்-

——————–

250-விசிஷ்ட –
தனிச் சிறப்பு யுடையவன் -ஸ்வாபாவிக பராத்பரன் –

அவை எல்லாவற்றையும் விடத் தனிச் சிறப்பு மிக்கவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

எல்லாவற்றிற்கும் மேலானவர் -ஸ்ரீ சங்கரர் –

பிரமன் முதலியவர்களுக்கும் காரணமானவர் -ஸ்ரீ சத்ய சந்தர்-

——————–

251-சிஷ்டக்ருத் –
பிறரை உயர்த்துபவன் -சிட்டன் ச்ரேஷ்டன்
சிட்டனே செழு நீர் திருவரங்கத்தாய் -7-2-4-
தம்மையே ஒத்த அருள் செய்வர் -செய்வார்கட்கு உகந்து

தமது சம்பந்தம் பெற்றவர்களைத் தம்மிடம் சேரத் தக்க கல்யாண குணங்கள் உள்ளவர்கள் ஆக்குபவராய் -ஸ்ரீ பராசர பட்டர் –

கட்டளை இடுபவர் -நல்லோர்களைக் காப்பவர் -ஸ்ரீ சங்கரர் –

திறமை உள்ளவர்கள் எல்லாரும் கூடிச் செய்ததை முடிக்க முடியாத போது அதை முழுமை செய்து முடிப்பவர் -ஸ்ரீ சத்ய சந்தர்-

——————–

252- சுசி –
தூய்மை உடையவன் -தேஜஸ் -157 பார்த்தோம்
அரங்க மேய அந்தணனை அந்தணர் தம் சிந்தையானை –
தேவர்க்கும் அறியலாகா அந்தணனை

தமக்குத் தாமே தூய்மை பெற்றவர் -சிஷ்டக்ருத் ஸூசி -ஒரே திரு நாமம் -ஸ்ரீ பராசர பட்டர் –

மாயையாகிய குற்றம் அற்றவர் –ஸ்ரீ சங்கரர் –

தூய்மையானவர் -ஸ்ரீ சத்ய சந்தர்-

——————

253-சித்தார்த்த –
எல்லாம் உடையவன் -அவாப்த சமஸ்த காமன்
நிகரில் புகழாய்- உலகம் மூன்று உடையாய் என்னை யாள்வானே -6-10-10-

வேண்டியவை தமக்குத் தாமே அடைந்து இருப்பவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

அடைய வேண்டியவை எல்லாம் அடைந்து இருப்பவர் –ஸ்ரீ சங்கரர் –

அடியவர் விருப்பங்களை வழங்க ஆயத்தமாக இருப்பவர் -சித்த புருஷர்களுக்குச் செல்வமாக இருப்பவர் –
அயோக்யர்களின் அழிவுக்கு காரணமானவர் -ஸ்ரீ சத்ய சந்தர்-

——————

254-சித்த சங்கல்ப –
நினைத்த படி நடத்த வல்ல சத்ய ஸங்கல்பன் –
எல்லையில் ஞானத்தன் –ஞானம் அக்தே கொண்டு எல்லாக் கருமங்களும் செய் எல்லையில் மாயன் -3-10-8
மழுங்காத ஞானமே படையாக உடையவன் -3-1-9-

நினைத்தவை நினைத்த மாத்திரத்தில் அடைந்து இருப்பவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

தம் சங்கல்பங்கள் நிறைவேறப் பெற்றவர் –ஸ்ரீ சங்கரர் –

அடியவர் விருப்பங்களைச் செயல்படுத்த முனைபவர் –ஸ்ரீ சத்ய சந்தர்-

—————-

255- சித்தித-
சித்திகளை அளிப்பவன் –
ஆய கொண்ட சீர் வள்ளல் ஆழிப்பிரான் -3-9-9-

அணிமா கரிமா முதலிய அஷ்ட சித்திகளைத் தருபவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

அவரவர் தகுதிப்படி கேட்ட பலன்களைத் தருபவர் –ஸ்ரீ சங்கரர் –

தகுதி யுள்ளவர்களுக்கு சித்தியைத் தருபவர் -அயோக்யர்களுக்கு சித்தியைத் தடுப்பவர் -ஸ்ரீ சத்ய சந்தர்-

——————-

256-சித்தி சாதந-
ஆறும் -உபாயமும் -இனிதாக உள்ளவன்
ஆறு எனக்கு நின் பாதமே சரணாகத் தந்து ஒழிந்தாய் -6-7-10-
தேனே மலரும் திருப்பாதம் இறே

தம்மை உபாசிப்பதும் பலன் போல் ஸூகமாகத் தோன்றும்படி இருப்பவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

சித்திகளை நிறைவேற்றுபவர் –ஸ்ரீ சங்கரர் –

மோஷ ரூபமான பலனை சாதிப்பவர் -ஸ்ரீ சத்ய சந்தர்-

——————

வ்ருஷாஹீ வ்ருஷபோ விஷ்ணுர் வ்ருஷபர்வா வ்ருஷோதர
வர்த்த நோ வர்த்தமா நச்ச விவிக்தஸ் ஸ்ருதிசாகர –28

——————-

257-வ்ருஷாஹீ
அடையும் நாள் நன்னாளாய் இருப்பவன்
அடியேன் அரு வாணாள் செந்நாள் எந்நாள் அந்நாள் உன்தாள் பிடித்தே செலக் காணே -5-8-3-
அக்ரூரர் பாரித்த படியே

தம்மை முதன் முதலில் அடையும் தினமே எல்லா மங்களங்களுக்கும் வித்திடும் நாள் போலே இருப்பதால் அந்த ஆரம்ப தினம்
சிறப்பாக இருக்கப் பெற்றவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

பகல் போலே பிரகாசிக்கும் தர்மங்களை உடையவர் -த்வாதசாஹம் முதலிய யஜ்ஞ விசேஷமாக இருப்பவர் –ஸ்ரீ சங்கரர் –

தர்மத்தின் மூலமாகப் பரவி இருப்பவர் -ஸ்ரீ சத்ய சந்தர்-

——————

258-வ்ருஷப –
அனுக்ரஹத்தை பொழிபவன்
எல்லியும் காலையும் தன்னை நினைந்து எழ நல்ல வருள்கள் நமக்கே தந்து அருள் செய்வான் -8-6-1-

சம்சாரத் தீயினால் தகிக்கப் பட்டுத் தம்மை வந்து அடைந்தவர் மீது அமுதமன்ன அருளைப் பொழிபவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

பக்தர்கள் விரும்பியவற்றை வர்ஷிப்பவர் –ஸ்ரீ சங்கரர் –

அருளைப் பொழிபவர் -தர்மத்தால் பிரகாசிப்பவர் -ஸ்ரீ சத்ய சந்தர்-

——————

259-விஷ்ணு
எங்கும் பரந்து கருணை மழை பொழிபவன்
எங்கும் தானாய நங்கள் நாதனே -1-9-9-
2–பார்த்தோம் -663 மீண்டும் வரும்

அப்படி அருளைப் பெற்றவர்களை விட்டு நீங்காதவர் -கடாஷத்தைப் பொழிந்ததும் மற்றும் பல உபகாரங்கள் செய்தும்
தமது உயர்வையும் தாழ்வையும் பாராமல் என்றும் அவர்களை விட்டுப் பிரியாமல் பரவி இருப்பவர் –
தார்க்கிகர்களின் வியாப்தியானது இங்கே கருதப்படுகிறது -ஸ்ரீ பராசர பட்டர் –

உலகங்களை வியாபித்தவர் –ஸ்ரீ சங்கரர் –

நதிகள் பாயும்படி செய்பவர் -காண முடியாதவர் -அறிய முடியாதவர் -ஸ்ரீ சத்ய சந்தர்-

—————–

260-வ்ருஷபர்வா -தர்மம் படிகளால் அடையப்படுபவன் வர்ணாஸ்ரம கர்ம யோகம்

தம்மை அடைவதற்கு வர்ணாஸ்ரம தர்மங்களைப் படிகளாக யுடையவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

தர்ம ரூபமான படிகளை யுடையவர் –ஸ்ரீ சங்கரர் –

புண்ய சாதனங்களான அமாவாஸ்யை முதலிய பர்வ தினங்களுக்கு யஜமானர் -ஸ்ரீ சத்ய சந்தர்-

—————-

261-வ்ருஷோதர –
தர்மமே உருவான திரு வயிற்றை உடையவன் -உதரம்
தாமோதரனை தனி முதல்வனை ஞாலம் உண்டவனை ஆமோ தரம் அறிய-2-7-12
ஆராத்ய ஸூலபன்

அடியவர் இடும் எளிய உணவையும் ஏற்பதனாலும்-பிரளயத்தில் துன்புற்றவர்களை வைத்துக் காப்பதனாலும்
தரும மயமான வயிறு யுள்ளவர் –ஸ்ரீ பராசர பட்டர் –

பிரஜைகளை வர்ஷிக்கும் -சிருஷ்டிக்கும் -வயிறு யுடையவர் –ஸ்ரீ சங்கரர் –

திரி விக்ரமாவதாரத்தில் கங்கை நீரை பிரம்மாண்டத்தில் உள்ளவர்களுக்குத் தந்தவர் –
புண்ணிய தீர்த்ததால் மகிழ்பவர்-அருளைப் பொழிபவர் –
மற்றும் தோஷங்களுக்குத் தொலைவில் இருப்பவர் – -ஸ்ரீ சத்ய சந்தர்-

——————–

262-வர்த்தன
வ்ருத்தி செய்பவன்

அவர்களைத் தாய் போல் வயிற்றில் வைத்து வளர்ப்பவர் –ஸ்ரீ பராசர பட்டர் –

அனைத்தையும் விருத்தி செய்பவர் -வளர்ப்பவர் –ஸ்ரீ சங்கரர் –

தன்னைச் சார்ந்தவரை வளரச் செய்பவர் -உயர்ந்த செல்வத்தை யுடையவர் –ஸ்ரீ சத்ய சந்தர்-

—————-

263-வர்த்தமான
வளர்ச்சி அடைபவன் -ஆஸ்ரிதர்களுக்கு உதவியதால் வந்த புகர்
திகழும் தன் திருவருள் செய்து என்னுள் திகழும் மணிக்குன்றம் என்றே ஒத்து நின்றான் -8-7-5-

அவர்களை வளர்ப்பதனாலேயே தாமும் வளர்பவர் –ஸ்ரீ பராசர பட்டர் –

உலக வடிவாக விருத்தி அடைபவர் –ஸ்ரீ சங்கரர் –

நாடோறும் விருத்தி ஆக்குபவர் – அல்லது இவ்வாறு அளவிட முடியாத சம்ருத்தியை யுடையவர் –ஸ்ரீ சத்ய சந்தர்-

—————

264-விவிக்த –
அத்விதீயன் -நிகரில் புகழாய் தன் ஒப்பார் இல் அப்பன் -6-3-9-

தமக்கே உரிய சிறந்த சரித்ரங்களை உடையவர் –ஸ்ரீ பராசர பட்டர் –

உலகவடிவாக இருந்தாலும் தனித்து நிற்பவர் –ஸ்ரீ சங்கரர் –

உலகைக் காட்டிலும் வேறுபட்டவர் –ஸ்ரீ சத்ய சந்தர்-

———————-

265-ஸ்ருதிசாகர
ஸ்ருதிகளுக்கு கொள்கலம் –
நாராயண பரா வேதா -வேதைச்ச சர்வை அஹமேவ வேத்ய
வேதத்தை வேதத்தின் சுவைப் பயனை -பெரிய திருமொழி -2-3-2-
வேதமும் வேள்வியும் விண்ணும் இரு சுடரும் ஆதியும் ஆனான் -பெரிய திரு மொழி -9-4-9-
நாரணன் வேதமயன் -2-7-2-

நதிகளுக்கு கடல் போலே இக்குணங்களை உரைக்கும் ஸ்ருதிகளுக்கு முடிவான இடமாக இருப்பவர் –ஸ்ரீ பராசர பட்டர் –

வேதங்களுக்குக் கடல் போலே இருப்பிடமானவர் –ஸ்ரீ சங்கரர் –

வேதங்களைக் கொடுப்பவர் -வேதங்களைத் தம்மிடம் வைத்துக் கொள்பவர் -வேதங்கள் ஆகிற கடலை வெளியிட்டவர் -வேதக்கடல்
மற்றும் கோவர்த்தன மலை முதலியன மூலம் மகிழ்பவர்–ஸ்ரீ சத்ய சந்தர்-

———————–

ஸூ புஜோ துர்த்தரோ வாக்மீ மஹேந்த்ரோ வஸூதோ வஸூ
நைகரூபோ ப்ரருஹத்ரூபஸ் சிபிவிஷ்ட ப்ரகாசன–29

————-

266-ஸூ புஜ –
அழகிய புஜங்களை உடையவன்
கற்பக காவென நற்பல தோளன் -6-6-6
ஈரிரண்டு மால் வரைத் தோள் செங்கண் திரு மால்

சரணம் அடைந்தவர்களின் பாரத்தைத் தாங்குவதால் விளங்கும் கைகள் யுடையவர் –ஸ்ரீ பராசர பட்டர் –

உலகைக் காக்கும் அழகிய புஜமுள்ளவர்–ஸ்ரீ சங்கரர் –

அழகிய தோள்கள் உள்ளவர் -இன்பத்தை அனுபவிக்கும்படி செய்பவர்–ஸ்ரீ சத்ய சந்தர்-

——————

267-துர்த்தர –
தடுக்க முடியாதவன்
வென்றி சேர் திண்மை விலங்கல் மா மேனி -பெரிய திருமொழி -9-1-4-

இச் சிறந்த கை வன்மையினால் -பிரளய சமுத்ரம் போல் வேகம் உடைமையினால் பிறர் சக்திகள் மணல் அணைகள்
போலத் தடுக்க மாட்டாமல் உடைந்து போம்படி இருப்பவர் –ஸ்ரீ பராசர பட்டர் –

மோஷத்தை விரும்புகிறவர்கள் தியானிக்கும் போது மனத்தில் நிறுத்துவதற்கு அரிதாக இருப்பவர் –
பூமி முதலிய எல்லாவற்றையும் தாங்குகின்ற தம்மைத் தாங்குபவர் இல்லாதவர் –ஸ்ரீ சங்கரர் –

பிறரால் தாங்க முடியாதவராக இருப்பவர் –ஸ்ரீ சத்ய சந்தர்-

—————–

268-வாக்மீ-
கொண்டாடும்படியான வாக்கை உடையவன்
வேதம் அவன் வாக்கு -கீதாம்ருதம் பொழிபவன்
தேசம் அறிய ஓர் சாரதியாய்ச் சென்று -நடந்த நல் வார்த்தை அறிந்துமே
வார்த்தை அறிபவர் மாயவர்க்கு ஆள் அன்றி யாவரோ -7-5-9
தேசுடைய தேவர் திரு வரங்க செல்வனார் பேசி இருப்பனகள் பேர்க்கவும் பேராவே -நாச் 11-8-

சிறந்த வாக்கை யுடையவர் -சிறப்பாவது வேதத்தில் கூறப் பட்டதாகவும் வெற்றியை யுடையதாகவும் இனிமையாகவும்
கம்பீரமாகவும் பிரியமாகவும் ஹிதமாகவும் இருப்பதாகும் –ஸ்ரீ பராசர பட்டர் –

வேத ரூபமான சிறந்த வாக்கை உடையவர் –ஸ்ரீ சங்கரர் –

வேத ரூபமான சிறந்த வாக்கை யுடையவர் –ஸ்ரீ சத்ய சந்தர்-

——————

269-மஹேந்திர
சிறந்த ஐஸ்வர்யம் உடையவன்
இந்திர – இதி பரம ஐஸ்வர்யே-
பொங்கோதம் சூழ்ந்த புவனியும் விண்ணுலகும் சோராமே ஆள்கின்ற எம்பெருமான்

யாவராலும் கொண்டாடப் படும் பரமேச்வரத் தன்மை யுடையவர் –ஸ்ரீ பராசர பட்டர் –

உயர்ந்த இந்திரர் ஈச்வரர்களுக்கும் ஈஸ்வரர் –ஸ்ரீ சங்கரர் –

விரும்பியவற்றைக் கொடுக்கும் மேன்மை யுடையவர் –ஸ்ரீ சத்ய சந்தர்-

———————-

270- வஸூத-
தன்னைக் கொடுப்பவன்
அம்பரமே தண்ணீரே சோறே அறம் செய்யும் எம்பெருமான்

தடையற்ற பெரும் செல்வம் இருந்தபோதும் பொருளை விரும்பும் சிறியோர்க்கும் அப் பொருளைக் கொடுப்பவர் –ஸ்ரீ பராசர பட்டர் –

செல்வத்தைக் கொடுப்பவர் –ஸ்ரீ சங்கரர் –

ஜனங்களை அவரவர்க்கு உரிய இடங்களில் வைப்பவர் -தம் ஸ்வரூபத்தை மறைப்பவர் –ஸ்ரீ சத்ய சந்தர்-

—————–

271-வஸூ –
தனமாய் உள்ளவன் வைத்த மா நிதி
உண்ணும் சோறு -வாசுதேவஸ் சர்வம்
தன்னைத் தந்த கற்பகம்
105 பார்த்தோம் மீண்டும் 701 வரும்-

உயர்ந்தவர்களுக்குத் தாமே செல்வமாக இருப்பவர் –ஸ்ரீ பராசர பட்டர் –

தம் ஸ்வரூபத்தை மாயையினால் மறைப்பவர் –ஸ்ரீ சங்கரர் –

எங்கும் வசிப்பவர் –ஸ்ரீ சத்ய சந்தர்-

——————————————-

புருஷ சூக்தத்தில் விளக்கப்பட்ட திரு நாமங்கள் –

226-சஹச்ர மூர்தா –ஆயிரம் -எண்ணற்ற -தலைகளை உடையவர் –
227-விச்வாத்மா – தன்னுடைய ஞான சக்திகளால் பிரபஞ்சம் முழுவதும் பரவியிருப்பவர் –
228-சஹஸ்ராஷ -எண்ணற்ற கண்களை உடையவர் –
229-சஹஸ்ரபாத் -எண்ணற்ற திருவடிகளை உடையவர் –
230-ஆவர்த்தன -சம்சாரச் சக்கரத்தை சுழற்றுபவர் -கால சக்ரம் -உலக சக்ரம் -யுக சக்ரம் -ஆகியவற்றை சுழற்றுபவர் –

231-நிவ்ருத்தாத்மா -பிரக்ருதியைக் காட்டிலும் மும்மடங்கு பெருத்த நித்ய மண்டலத்தை உடையவரானபடியால் மிகச் சிறந்த ஸ்வரூபம் உடையவர் –
232-சம்வ்ருத -பிரக்ருதியின் தமோ குணத்தால் அறிவு இழந்தவர்களுக்கு மறைந்து இருப்பவர் –
233-சம்ப்ரமர்த்தன -தன்னை உபாசிப்பவர்களுக்குத் தமோ குணமாகிய இருட்டை ஒழிப்பவர் –
234-அஹஸ் சம்வர்த்தக -நாள் பஷம் மாதம் முதலான பிரிவுகள் உடைய கால சக்கரத்தை சுழற்றுபவர் –
235-வஹ்நி- எங்கும் உள்ள பரம ஆகாச உருவத்தில் பிரபஞ்சத்தையே தாங்குபவர்
236-அநில- பிராண வாயுவாக இருந்து யாவரும் வாழும்படி செய்பவர் –
237-தரணீதர-தன் சங்கல்பத்தாலேயே பூமியைத் தாங்குபவர் –
238-சூப்ரசாத -தன்னை வேண்டியவர்களுக்காக அனைத்து பிரார்த்தனைகளையும் நிறைவேற்றுபவர்
239-பிரசன்னாத்மா -நிறைவேறாத ஆசையே இல்லாத படியால் நிறைந்த மனம் உள்ளவர் –
240-விஸ்வஸ்ருக் -ஜீவர்களின் குற்றம் பெறாமல் கருணையே காரணமாக உலகைப் படைப்பவர் –

241-விஸ்வ புக் விபு -ஒரே காப்பாளானாக உலகில் எங்கும் பரவி இருப்பவர் –
242-சத்கர்த்தா – மெய்யன்பர்களைப் பூசிப்பவர் –
243-சத்க்ருத -சபரி முதலான சாதுகளால் பூசிக்கப் படுபவர்
244-சாது -அடியார்கள் விரும்பிய படி தூது போவது தேர் ஓட்டுவது ஆகியவற்றைச் செய்பவர் –
245-ஜஹ்நு-பொறாமையும் பகைமையும் உள்ளோருக்குத் தன்னை மறைப்பவர் –
246-நாராயண -அழியாத நித்யமான சித் அசித் கூட்டத்துக்கு இருப்பிடம் ஆனவர் -அந்தர்யாமி யானவர் -‘
247-நர -தன் உடைமையாகிய சித் அசித்துக்களை அழியாமல் இருக்கப் பெற்றவர் –

——————————————————————

யானே நீ என்னுடைமையும் நீயே —

248-அசங்க்யேய-எண்ணிறந்தவர்-உடைமைகள் எண்ணிறந்தபடியால் –
249-அப்ரமேயாத்மா -எண்ணிறந்த பொருட்களின் உள்ளும் புறமும் வியாபிக்கிற படியால் அளவிட முடியாதவர் –
250-விசிஷ்ட -எதிலும் பற்று இல்லாதபடியால் -அனைத்தையும் விட உயர்ந்தவர் –
251-சிஷ்டக்ருத் -தன் அடியார்களை நற்பண்பு உடையவர்களாக ஆக்குபவர் –
252-சூசி -தானே தூய்மையாக இருந்தவர் -தன்னை அண்டியவர்களைத் தூய்மை யாக்குபவர் –
253-சித்தார்த்த -வேண்டியது எல்லாம் அமையப் பெற்றவர் –
254-சித்த சங்கல்ப -நினைத்தது எல்லாம் நடத்தி முடிக்கும் பெருமை உள்ளவர் –
255-சித்தித-எட்டு திக்குகளையும் யோகிகளுக்கு அருளுபவர்
256-சித்தி சாதன -இவரை அடைவிக்கும் வழியான பக்தியே இனிதாக உடையவர் –
257-வ்ருஷாஹீ -அவனை அடையும் நாளே நன்னாளான தர்மமாக இருப்பவர் –
258-வ்ருஷப – சம்சார தீயால் சுடப் பட்டவர்களுக்கு அருள் என்னும் அமுதைப் பொழிபவர் –
259-விஷ்ணு -அருள் மழையாலேயே எங்கும் இருப்பவர் –
260-வ்ருஷபர்வா -தன்னை அடைவதற்கு தர்மங்களைப் படிக்கட்டாக உடையவர் –
261-வ்ருஷோதர -தன் வயிறே தர்மமானவர் -அடியார்கள் அளிக்கும் நைவேத்யத்தால் வயிறு நிறைபவர் –
262-வர்தன -தாய் போலே தன் வயிற்றிலே வைத்து அடியார்களை வளர்ப்பவர் –
263-வர்த்தமான –அடியார்கள் வளரும் போது தானும் மகிழ்ந்து வளர்பவர் –
264-விவிக்த -மேற்கண்ட செயல்களால் தன்னிகர் அற்றவர் –
265-ஸ்ருதி சாகர -நதிகளுக்கு கடல் போலே -வேதங்களுக்கு இருப்பிடமானவர் –
266-சூபுஜ-அடியார்களின் சுமையைத் தாங்கும் மங்களமான தோள்கள் உடையவர் –
267-துர்தர -கடல் போலே தடுக்க முடியாத வேகம் உடையவர் –
268-வாக்மீ–வேத வடிவமான சிறந்த வாக்கை உடையவர் -வேதங்களால் துதிக்கப் படுபவர் -இனிமையாகப் பேசுபவர் –
269-மஹேந்திர-நிகரற்ற அளவிட முடியாத -அனைவரையும் ஆளும் செல்வம் உடையவர் –
270-வசூத-குபேரனைப் போலே பொருட்செல்வத்தை விரும்புவோருக்கு அதை அருளுபவர் –
271-வசூ -ஆழ்வார்கள் போன்றோர்களுக்கு தானே செல்வமாக இருப்பவர்

———————————————————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பராசர பட்டர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பீஷ்மர் திருவடிகளிலே சரணம்
ஸ்ரீ வியாச பகவான் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: