ஸ்ரீ விஷ்ணு சகஸ்ரநாம உரை– நான்கு – தடவை வரும் திரு நாமங்கள் ..

நான்கு தடவை வரும் திரு நாமங்கள்

நிவ்ருத் தாத்மா–231/453/604/780

231-புருஷ ஸூக்த உபநிஷத் ப்ரதிபாதித விராட் ஸ்வரூப திரு நாமம்
453-நிவ்ருத்தி தர்ம ப்ரவர்தக திரு நாமம்
604-தர்மம் படி பலன் அழிப்பவன் திரு நாமம்
780-ஸ்ரீ கிருஷ்ணாவதார திரு நாமம்

————————-

பிராணத : -66/322/409/956-

66-பரத்வம்-த்ரிவித சேதன வ்யதிரிக்த -நியாமகன் திரு நாமம்
322-ஸ்ரீ கூர்மாவதாரம் திரு நாமம்
409-ஸ்ரீ ராம அவதார திரு நாமம்
956-ஸ்ரீ பகவான் செய்து அருளும் செயல்களின் பிரயோஜனம் சொல்லும் திரு நாமம்

————–

231-நிவ்ருத்தாத்மா –

புருஷ ஸூக்த உபநிஷத் ப்ரதிபாதித விராட் ஸ்வரூப திரு நாமம்

ப்ராக்ருதங்களுக்கு அப்பால் பட்டவன் -சர்வ உத்க்ருஷ்டன் -பராத்பரன் –
மீண்டும் 453–604–780-வரும்

ப்ரக்ருதிக்கு மூன்று மடங்கான நித்ய விபூதியில் இருப்பதாகிய தம் ஸ்வரூபம் பிரவ்ருதியை கடந்ததாக இருப்பவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

சம்சார பந்தம் இல்லாத ஸ்வரூபம் உடையவர் –ஸ்ரீ சங்கரர் –

பிரளயத்தில் ஆத்மாக்கள் திரும்பும்படி செய்பவர் -அநிவ்ருத்தாத்மா-அழியாத சரீரம் உடையவர் -என்றுமாம் – ஸ்ரீ சத்ய சந்தர்-

—————

453-நிவ்ருத்தாத்மா

நிவ்ருத்தி தர்ம ப்ரவர்தக திரு நாமம்

விஷயங்களைத் துரந்த மனம் உடையவன்
நர நாராயணராக அவதரித்தவன் -திருமந்தரம் உபதேசித்து அருள
நந்தா விளக்கே அளத்தற்கு அரியாய் நர நாராயணனே -பெரிய திரு -3-8-1-
எங்கானும் ஈதொப்பதோர் மாயம் உண்டோ நர நாரணனாய் சிங்காமை விரித்தவன் எம்பெருமான் -பெரிய திரு மொழி -10-6-1-
நாமம் ஆயிரம் ஏத்த நின்ற நாராயணா நரனே -நாச் திரு -2-1-

நிவ்ருத்தி தர்மத்தை உபதேசிப்பதற்காகவும் சிறந்த வைராக்யத்தை அனுஷ்டானத்தினால் வெளிப்படுத்துவதற்காகவும்
நர நாராயண அவதாரம் எடுத்து சப்தாதி விஷயங்களை மனத்தினால் துறந்தவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

அந்தர் நிவிஷ்ட பாவம் ச -த்யானத்தில் மனசை அடக்கி
ஆத்ம த்யான பராயணாய -ஆத்ம த்யானத்தில் ஊக்கம் கொண்டு
ஹ்ருத் பத்மார்பித மாநசம் –ஹ்ருதய கமலத்தில் மனதை நிலை நிறுத்தி

இயற்கையாகவே எல்லாப் பற்றுகளையும் விட்ட ஆத்மாவாகவே இருப்பவர் -சம்சாரத்தில் இருந்து விடுபட்ட
ஆத்மா என்றுமாம் -விமுக்தாத்மா -என்ற பாடம் –ஸ்ரீ சங்கரர் –

ஜீவாத்மாக்களை முக்தி அடையும்படி அனுக்ரஹிப்பவர் -விசேஷமாக முக்தர்களுக்கு தலைவராக இருப்பவர் –
விமுக்தாத்மா என்ற பாடம்-ஸ்ரீ சத்ய சந்தர் –

————-

604-நிவ்ருத்தாத்மா –

தர்மம் படி பலன் அழிப்பவன் திரு நாமம்

நிவ்ருத்தனுக்கு ஈஸ்வரன் ஸ்வாமி
ஆழியான் அருள் தருவான் விண்ணுலகம் தருவானாய் விரைகின்றான் -10-6-3-

நிவ்ருத்தி மார்க்கத்தில் இருப்பவர்களுக்கு ஈஸ்வரர் –ஸ்ரீ பராசர பட்டர்-

விஷயங்களில் செல்லாத மனத்தை யுடையவர் –ஸ்ரீ சங்கரர் –

பிரளயத்தில் ஜீவர்களை மோஷம் அடைவிப்பவர் -ஆத்மாவின் மனமானது எண்ண முடியாமல் பின் திரும்பும்படி
இருப்பவர் -மனத்தால் அளவிடமுடியாதவர் –ஸ்ரீ சத்ய சந்தர் –

——————–

780-நிவ்ருத்தாத்மா

ஸ்ரீ கிருஷ்ணாவதார திரு நாமம்

திருப்பப்பட்ட மனதை உடையவன்
அவாகீ அநாதர
வரம்பிலாத மாயை மாய வரம்பிலாத கீர்த்தியாய் -திருச்சந்த

கிருபையினால் இப்படி உலகோடு சேர்ந்து இருந்தாலும் இயற்கையில் எதிலும் சேராத தனித்த மனமுடையவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

அவாகீ அநாதர –சாந்தோக்யம் -3-14-

அநிவ்ருத்தாத்மா -எங்கும் நிறைந்து இருப்பவர் ஆதலின் ஒர் இடத்திலும் இல்லாமல் போகாதவர் –
நிவ்ருத்தாத்மா -விஷயங்களில் இருந்து திருப்பட்ட மனமுடையவர் -ஸ்ரீ சங்கரர் –

அநிவ்ருத்தாத்மா -அழியாத தேஹம் உள்ளவர் -அயோக்யர் செய்யும் யஜ்ஞங்களில் இருந்து விலகிய மனமுடையவர் —
நிவ்ருத்தாத்மா -அனைத்து விஷயங்களிலும் மனத்தைச் செலுத்துபவர் — ஸ்ரீ சத்ய சந்தர் –

————————————————–

பிராணத : -66/322/409/956-

66-பிராணத-

பரத்வம்-த்ரிவித சேதன வ்யதிரிக்த -நியாமகன் திரு நாமம்

பிராணனைக் கொடுப்பவன் –
தன்னை நித்ய அனுபவ சக்தி கொடுப்பவன்
தனியேன் ஆர் உயிரே-10-10-1-உன் சுவட்டை அறிவித்து
சுவட்டை சுவையை பிரித்தாளும் முடியாதபடி
குணாவிஷ்காரத்தாலே -தரிப்பித்தவனே –மேலும் -322-409-956 பார்ப்போம் –

எக்காலமும் தர்சித்து மகிழ்வுடன் நித்ய கைங்கர்யம் செய்யும் சக்தியை நித்ய ஸூரிகளுக்கு அளிப்பவர்-
இவனுடைய ஐஸ்வர்யங்களில் முதன்மையானது இது –ஸ்ரீ பராசர பட்டர் —
எஜமானன் என்கிற தன்மைக்கு முதன்மையான திரு நாமம்
நித்ய ஸூரிகளுக்கு உயிரும் வலிமையையும் அளித்து நித்ய கைங்கர்யத்தில் ஈடுபத்துபவன்
ய ஆத்மா தா பலதா–தைத்ரியம் -4-1-8-அவன் தன்னையே ஆத்மாவாகவும் வலிமையாகவும் அளிக்கிறான்
ச தை வ பிராண ஆவிசதி–பிருஹத் 3-5-20–அவனே பிராணனாக அனைத்து உயிர்களிலும் புகுகிறான்

உயிர்களை நடத்துபவர் -கால ரூபியாக உயிர்களைக் கண்டிப்பவர் -அழிப்பவர்-
பிராணன்களை சோதிப்பவர் -கண்டிப்பவர் –ஸ்ரீ சங்கரர் —

பிராணங்களைத் தருபவர் -விசேஷமாக சுகத்திற்கு எதிரான துக்கத்தை அழிப்பவர் -ஸ்ரீ சத்ய சந்த தீர்த்தர்-
ஓம் பிராணத நம
அனைவருக்கும் சத்தையை -உயிரை -அளிப்பவன் –
நித்ய கைங்கர்யம் செய்வதற்கு உரிய சக்தி நித்யர்களுக்கு கொடுப்பவன்

———————-

322-பிராணத

ஸ்ரீ கூர்மாவதாரம் திரு நாமம்

உயிர் அளிப்பான் -பலம் உள்ளவன் -அநந்த பல சக்த்யே -மந்தர பர்வதம் தாங்கி
அமரர்கட்கு அன்று ஆரமுதூட்டிய அப்பன் -3-7-5- -முன்பே 66- பார்த்தோம் -மேலும் -409-956 பார்ப்போம் –

ஸ்ரீ கூர்மமாக தேவர்களுக்குக் கடல் கடைவதற்கு உரிய பலத்தைக் கொடுப்பவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

தேவர்களுக்கு பலம் கொடுப்பவர் -அசுரர்களுக்கு பலத்தைக் கெடுப்பவர் –ஸ்ரீ சங்கரர் –

பிராணனை அழிப்பவர்—ஸ்ரீ சத்ய சந்தர் –

————-

409-பிராணத

ஸ்ரீ ராம அவதார திரு நாமம்

உயிர் அளிப்பவன் -அகாலபலி நோ வ்ருஷா –
உலகங்கள் உய்ய செருவிலே அரக்கர் கோனைச் செற்ற நம் சேவகனார் -திரு மாலை -11
முன்பே 66-322 பார்த்தோம் -மேலும் 956 பார்ப்போம் –

பிரசித்தமான பிராணனை எல்லோருக்கும் தருபவர் –ஸ்ரீ பராசர பட்டர் –

அபி வ்ருஷா பரிம் லாநா ச புஷ்ப அங்குர கோரகா –அயோத்யா
பரிசுஷ்க பலாசாநி வநாந் யுபவ நாநி ச –அயோத்யா

சிருஷ்டியில் பிராணிகளுக்கு அந்தர்யாமியாகி உயிரைக்கொடுப்பவர் –
பிரளய காலத்தில் பிராணிகளின் பிராணன்களை நீக்குபவர் –ஸ்ரீ சங்கரர் –

துன்பத்தை அழிப்பவர்-பக்தர்களுக்கு முக்ய பிராணனைக் கொடுப்பவர் –ஸ்ரீ சத்ய சந்தர் –

—————

956-பிராணத-

ஸ்ரீ பகவான் செய்து அருளும் செயல்களின் பிரயோஜனம் சொல்லும் திரு நாமம்

உயிர் அளிப்பவன்
நடுவே வந்து உய்யக் கொள்கின்ற நாதன் -1-7-5-

சப்தாதி விஷயங்களாகிய விஷம் தீண்டி மயங்கித் தம்மை மறந்து ஆத்மநாசம் அடைந்தவர்களுக்கு
ஆத்மா உய்வதாகிய உயிர் அளிப்பவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

இறந்து போன பரீஷித் போன்றவர்களைப் பிழைப்பிப்பவர்-ஸ்ரீ சங்கரர் –

உயர்ந்த கதியைக் கொடுப்பவர் -சப்த ரூபமான வேதங்களை நான்முகனுக்கு நன்கு கொடுப்பவர் -ஸ்ரீ சத்ய சந்தர் –

———————————————————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பராசர பட்டர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பீஷ்மர் திருவடிகளிலே சரணம்
ஸ்ரீ வியாச பகவான் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: