ஸ்ரீ ஸ்தோத்ர ரத்னம்–ஸ்லோகம் –31-32-33-34-35-36-37-38-39-40-41-42-43-44-45-46—ஸ்ரீ காஞ்சி ஸ்வாமிகளின் ஸ்ரீ ரத்ன பிரபா வியாக்யானம்

கதா புநஸ் சங்க ரதாங்க கல்பக
த்வஜார விந்த அங்குஸ வஜ்ர லாஞ்சநம்
த்ரிவிக்ரம த்வச் சரணாம் புஜத்வயம்
மதிய மூர்த்தாநம் அலங்கரிஷ்யதி—31-

த்ரிவிக்ரம–மூவடி நிமிர்த்தி மூ வுலகு அளந்த பெருமானே
சங்க ரதாங்க கல்பக த்வஜார விந்த அங்குஸ வஜ்ர லாஞ்சநம்-சங்கு சக்கரம் கற்பக வ்ருக்ஷம் கொடி
தாமரைப்பூ மாவட்டி வஜ்ராயுதம் இவற்றை அடையாளமாக உடைய
த்வச் சரணாம் புஜத்வயம்-உனது திருவடித் தாமரை இணைகள்
மதிய மூர்த்தாநம் -கதா புநஸ் -அலங்கரிஷ்யதி—எனது தலையை எப்போது அலங்கரிக்கப் போகிறது

கீழே திருவடித் தாமரைகளைக் கண்ணாலே எப்போது காணப் போகிறோம் என்றார் –
அவ்வளவில் திருப்தி பெறாதே
நீ ஒரு நாள் படிக்களவாக நிமிர்த்த நின் பாத பங்கயமே தலைக்கு அணியாய்
கோலமாம் என் சென்னிக்கு கமலம் அன்ன குரை கழலே
அடிச்சியாம் தலை மிசை நீ அணியாய் ஆழி யம் கண்ணா உன் கோலப் பாதம்
ஸ்ரீ பரதாழ்வானுக்கு கிட்டிய பேறு பாவியேனுக்கும் கிடைக்க வழி யுண்டோ என்கிறார்
இந்த விபூதியிலேயே பிரார்த்தனை என்றும்
பர வாஸூதேவனுடைய பாதாரவிந்தங்களை அங்கு ஸீரோ பூஷணமாகப் பெறப் போவது என்றோ என்கிறார் என்றுமாம்
அவனுக்கு ஐஸ்வர்ய ஸூசகமாய் ஆகர்ஷகமுமாய் –
திருவடிகளோட்டை சம்பந்தத்தாலே இவர் தலைக்கு
சேஷத்வ லஷணமுமாய் ஆபரணமுமாய் இறே இருப்பது –

——————–

விராஜமானே உஜ்ஜ்வல பீதவாஸஸம்
ஸ்மித அதஸீ ஸூந அமலச்சவிம்
நிமக்ன நாபிம் தநு மத்யம் உந்நதம்
விஸால வஷச் ஸ்தல ஸோபி லஷணம்–32-

விராஜமானே உஜ்ஜ்வல பீதவாஸஸம்–விளங்கிக் கொண்டு இருக்கிற மிகவும் பிரகாசமான
பீதாம்பரத்தை யுடையவனாயும்
உடையார்ந்த ஆடை -திருவாய்மொழி -3-7-4-என்று-திருவரை பூத்தால் போலே இருக்கிற திருப் பீதாம்பரம்
விராஜமானே உஜ்ஜ்வல-இரண்டு விசேஷணங்கள்-இயற்கையான சோபா பிரகாசமும் –
நீல நிற திவ்ய மங்கள விக்ரஹ சேர்த்தியால் உண்டான பர பாக சோபையும்
ஸ்மித அதஸீ ஸூந அமலச்சவிம–மலர்ந்த காயாம்பூப் போன்ற நிர்மலமான ஒளியை உடையவனாயும்
காயம் மலர் நிறவா
பூவைப்பூ வண்ணா

நிமக்ன நாபிம் -ஆழ்ந்த திரு நாபியை உடையவனாயும் –
ஸுவ்ந்தர்ய அமுத வெள்ளம் நான்கு புறமும் ஓடி வந்து இங்கு சுழித்துக் கிடக்குமே-
தநு மத்யம் -நுட்பமான இடையை உடையவனாயும்
அனைத்து உலகுக்கும் இருப்பிடமாய் இருக்கும் உதரம் க்ருசமாய் இருக்கின்றதே என்று ஆச்சர்யப்பட வைக்குமே

உந்நதம்-உயர்ந்தவனையும் –இவ்வடிவாலும்-உடையாலும்
அழகாலும்-சர்வாதிகன் என்று தொடரும்படி திவ்ய மங்கள விக்ரஹ விசிஷ்டன்
விஸால வஷச் ஸ்தல ஸோபி லஷணம்–விசாலமான திரு மார்பிலே விளங்குகின்ற
ஸ்ரீ வத்சம் என்கிற மறுவை உடையவனாயும் இருக்கிற
திரு மறு மார்பன் –
இப்படி உள்ள உன்னை என்று நான் அனுபவிக்கப் போகிறேன் –

கீழ் இரண்டு ஸ்லோகங்களிலும் பிரார்த்தித்தபடி சாஷாத்காரமும் ஸம்ஸ்லேஷமும் வாய்த்த பின்பு
விளையும் கைங்கர்யத்துக்கு உத்தேச்யனான எம்பெருமானை -திவ்ய அவயவங்கள் -திவ்ய மங்கள விக்ரஹம் –
திவ்ய ஆயுதங்கள் -திவ்ய பிராட்டிமார்கள் -திவ்ய பரிஜன வர்க்கங்கள் –
கூடியவனாக -14-ஸ்லோகங்களால் விசதமாக அனுசந்திக்கிறார்
இவற்றில் விசேஷங்கள் மாத்திரம் -விசேஷ்ய பதம் கிரியா பதம் –
பவந்தமே அநு சரந் –நித்ய கிங்கர ப்ரஹர்ஷயிஷ்யாமி ஸநாத ஜீவித–என்று அணுகி -46-ஸ்லோகத்தில் –
இவை குளகம்
இப்படி அனுபவித்துக் கொண்டு கைங்கர்யங்களைச் செய்து உன்னை உகப்பிப்பது என்றைக்கோ –
என்று தலைக் கட்டுகிறபடி –

—————-

சகாஸதம் ஜ்யாகிண கர்க்கசைஸ் ஸூபைஸ்
சதுர்ப்பிர் ஆஜாநு விளம்பிபிர் புஜை
ப்ரியாவதம் ஸோத் பல கர்ண பூஷண
ஸ்லதாலகா பந்த விமர்த்த ஸம ஸிபி–33-

ஆஜாநு விளம்பிபிர் –திரு முழந்தாள் வரை தொங்குகின்றவைகளாயும்
ஜ்யாகிண கர்க்கசைஸ்–நாண் தழும்பு ஏறிக் கரடுமுரடாய் இருப்பவைகளாயும்
வீரச் செயலின் பெருமையை -தழும்பு இருந்த சார்ங்க நாண் தோய்ந்தவா மங்கை –
விபவத்தில் பெற்ற தழும்புடன் பர வாஸூ தேவன் இடமும் விளங்குவதாக அனுசந்திக்கிறார்

ப்ரியாவதம் ஸோத் பல கர்ண பூஷண ஸ்லதாலகா பந்த விமர்த்த ஸம ஸிபி–பிராட்டிமார்களுக்குக் கரண அலங்காரமான
கரு நெய்தல் மலர் என்ன-கரண பூஷணங்கள் என்ன -அலைந்த திருக்குழல் கற்றை என்ன -ஆகிய இவை
பிராட்டி அணைக்கும் பொழுது அழுந்தி இருக்கிற படியைத் தெரிவிக்கின்றவைகளாயும்
ஆஸ்ரித ரஷணமே யாத்ரையாம்படி சொல்லிற்று -கீழ்
அதுவே பச்சையாக பிராட்டி அணைக்கும் படி சொல்லுகிறது இங்கு
ப்ரணய சிஹனங்களும்-ரஷண சிஹனங்களும் இறே திருத் தோள்களுக்கு மாங்கள்யம்

ஸூபைஸ்-அழகியவைகளாயும் -ஓவ்தார்யம் வீர்யம் ஸுவ்ந்தர்யம்-எல்லாம் அமைந்து உள்ளவை
சகாஸதம் சதுர்ப்பி ராபுஜை–நான்கு புஜங்களோடே பிரகாசியா நிற்கிற
பர வாஸூ தேவனுக்கும் சதுர் புஜத்வம் பிராமண சித்தம்

திருப் பீதாம்பரத்தைப் பிடித்து திரு மார்பு அளவும் வந்தார் கீழ் –
திரு மார்பில் இருந்து திருத் தோள் அழகில் -ஐஸ்வர்ய வீர்யங்களையும் அழகையும் அனுபவித்துப் பேசுகிறார்
இப்படித் திகழும் உன்னை என்று அனுபவிக்கப் போகிறேன் –

——————–

உதக்ர பீன அம்ஸ விலம்பி குண்டல
அலக ஆவளீ பந்துர கம்பு கந்தரம்
முக ஸ்ரீ யா ந்யக்ருத பூர்ண நிர்மலா
அம்ருதாம் ஸூ பிம்பாம்புருஹ உஜ்ஜ்வல ஸ்ரீயம்–34-

உதக்ர பீன அம்ஸ விலம்பி குண்டல-அலக ஆவளீ பந்துர கம்பு கந்தரம்-உயர்ந்தும் பருத்தும் இருக்கிற
திருத் தோள்கள் வரையில் தொங்குகின்ற திருக் குண்டலங்களாலும் திருக் குழல் கற்றைகளாலும்
அழகு பெற்றுச் சங்கு போல் விளங்குகின்ற திருக் கழுத்தை உடையவனாய்
முக ஸ்ரீ யா –திரு முகத்தின் காந்தியினால்
ந்யக்ருத பூர்ண நிர்மலா அம்ருதாம் ஸூ பிம்பாம்புருஹ உஜ்ஜ்வல ஸ்ரீயம்–பூர்ணமாய் நிர்மலமான
சந்த்ர மண்டலத்தையும் அப்போது அலர்ந்த செந்தாமரைப் பூவையையும் திரஸ்கரித்து மிக விளங்கா நிற்கிற –
எத்தனை செய்யிலும் என் மகன் முகம் நேர் ஒவ்வாய் -பெரியாழ்வார் திருமொழி -1-4-3-என்று
அது தன்னைத் தாழ விட்ட இடத்திலே யாயிற்று ஒவ்வாது ஒழிவது
திருத் தோள்களில் இருந்தும் திருக் கழுத்தைப் பற்றுகிறார்
கழுத்தில் மூன்று ரேகைகள் இருப்பது புருஷோத்தம லக்ஷணம் -எனவே சங்கு உவமை–
சங்குக்கு வட மொழி -சொல் -கம்பு —
கம்பு க்ரீவா -மூன்று ரேகைகள் அமைந்த கழுத்து –

————-

ப்ரபுத்த முக்தாம்புஜ சாரு லோசனம்
ஸவிப்ரமப் ரூலத முஜ்ஜ்வலாதரம்
ஸூ சிஸ்மிதம் கோமள கண்ட முந்நஸ்ம்
லலாட பர்யந்த விலம்பி தாலகம்–35-

ப்ரபுத்த முக்தாம்புஜ சாரு லோசனம்–அப்போது அலர்ந்த தாமரைப் பூ போன்று அழகிய
திருக் கண்களை உடையனாய்
முக்த -அழகிய என்றும் புதிதான என்றும்
ஸவிப்ரம ப்ரூலதம் –விலாசத்தோடு கூடினதாய்-கொடி போன்றதான திருப் புருவங்களை
யுடையனாய்
உஜ்ஜ்வலாதரம்–பிரகாசிக்கின்ற திரு அதரத்தை உடையனாய்
ஸூ சிஸ்மிதம் –கபடம் அற்ற புன் சிரிப்பை உடையனாய்
ஸூசி -வெளுத்த என்றுமாம் –ருஜு வான அபிப்ராயத்துடன் சிரிக்கிறபடி
கோமள கண்டம் -அழகிய கபோலங்களை உடையனாய்
உந்நஸ்ம்–உயர்ந்த திரு மூக்கை உடையனாய்
லலாட பர்யந்த விலம்பித அலகம்—திரு நெற்றி அளவும் தொங்குகின்ற முன்னுச்சி
மயிர்களை உடையனாய் இருக்கிற

கீழே பின் தொங்கும் திருக்குழல் அனுபவம் -இதில் முன் நெற்றியில் தொங்கும் அழகு
களி வண்டு எங்கும் கலந்தால் போலே கமழ் பூம் குழல்கள் தடம் தோள் மேல்
மிளிர நின்று விளையாட -நாச் -14–8-
செங்கமலப் பூவில் தேன் உண்ணும் வண்டே போல் –பங்கிகள் வந்து உன் பவள வாய்
மொய்ப்ப –பெரியாழ்வார் -1–8–2—பங்கி -மயிர் )

—————–

ஸ்புரத் கிரீ டாங்க தா ஹார கண்டிகா
மணீந்த்ர காஞ்சீ குண நூபுராதி பி
ரதாங்க சங்க அஸி கதா த நுர்வரை
லஸ்த் துளஸ்யா வனமாலய உஜ்ஜ்வலம்–36-

ஸ்புரத் கிரீ டாங்க தா ஹார கண்டிகாமணீந்த்ர காஞ்சீ குண நூபுராதிபி–விளங்குகின்ற திரு அபிஷேகம் –
திருத் தோள் வளை-முக்தாஹாரம் -திருக் கழுத்து அணி -குரு மா மணிப் பூண்-ஸ்ரீ கௌஸ்துபம் -திருவரை நாண் –
திருப் பாடகம் முதலிய திரு ஆபரணங்களாலும்
ஆதி -சப்தத்தாலே
பல பலவே ஆபரணம் -என்றும்
அபரிமித திவ்ய பூஷண – என்றும் சொல்லுகிறபடியே அசங்க்யாதம் என்கை –
ரதாங்க சங்க அஸி கதா த நுர்வரை–சக்கரம் சங்கு வாள் கதை சார்ங்கம் என்கிற பஞ்சாயுதங்களாலும்
லஸ்த் துளஸ்யா வனமாலய -ஒளி விடுகின்ற திருத் துழாய் மாலையை உடைய வனமாலையினாலும்
உஜ்ஜ்வலம்–பிரகாசித்துக் கொண்டு இருக்கிற
கதிராயிர மிரவி கலந்து எரித்தால் ஒத்த நீண் முடி -பெரியாழ்வார் திருமொழி -4-1-1-இறே –
பொன்னின் மா மணி யார மணியாகத் திலங்கு மால் –பெரியாழ்வார் திருமொழி -8-1-3–என்றும்

—————

சகரத்த யஸ்யா பவனம் புஜாந்தரம்
தவ ப்ரியம் தாம யதி யஜன்மபூ
ஜகத் சமஸ்தம் யத் அபாங்க சம்ச்ராயம்
யதர்த்த மம்போதிர மந்தய பந்தி ச–37-

தவ புஜாந்தரம்-உன்னுடைய திரு மார்பை
சகரத்த யஸ்யா பவனம் –யாவள் ஒரு பிராட்டிக்கு இருப்பிடமாக பண்ணி அருளினாயோ
யதிய ஜன்மபூ–யாவள் ஒரு பிராட்டியின் பிறந்தகமான திருப் பாற் கடல்
தவ ப்ரியம தாம–உனக்கு இனிதான இருப்பிடம் ஆயிற்றோ
ஜகத் சமஸ்தம் –உலகம் எல்லாம்
யத் அபாங்க சம்ச்ராயம்–யாவள் ஒரு பிராட்டியின் கடாக்ஷத்தைப் பற்றி இருக்கிறதோ
யதர்த்தம் அம்போதிர் அமந்தி அபந்தி ச–யாவள் ஒரு பிராட்டிக்காக கடலானது கடையவும் அணை கட்டவும் பட்டதோ –

கீழே -திவ்ய அவயவ திவ்ய ஆபரண சோபை எவ்வளவு இருந்தாலும்
திவ்ய பிராட்டி உடன் சேர்த்தி இல்லாத போது நிறம் பெறாதே
இது முதல் மூன்று ஸ்லோகங்களாலும் ஸ்ரீ யபதித்தவம்
யஸ்யா -என்கிறது இதில் உண்டான பிரமாண பிரசித்தியாலே-
நின் வல மார்பினில் வாழ்கின்ற மங்கை –
திகழ்கின்ற திரு மார்பில் திரு மங்கை தன்னோடும் திகழ்கின்ற திரு மாலார் -திருவாய் மொழி -10-6-9
என் திருமகள் சேர் மார்பன் -திருவாய் மொழி -7-2-9-
மைய கண்ணாள் மலர் மேல் உறைவாள் உறை மார்பினன் -திருவாய்மொழி -4-5-2-
அலர்மேல் மங்கை யுறை மார்பா -திருவாய்மொழி -610-10-
மார்வத்து மாலை -திருவாய்மொழி -10-10-2-
செய்யாள் திரு மார்பினில் சேர் திருமால் -திருவாய் மொழி -9-4-1-
விண்ணவர் அமுது உண்ண அமுதில் வரும் பெண்ணமுது உண்ட எம்பெருமான் -பெரிய திருமொழி -6-1-2-
உன்மூல்யாஹர மந்தராத்ரி மஹிநா பலேக்ரஹிர் ஹி கமல ஆலாபேந சரவச்சிரம -உத்தர சதகம் –

————–

ஸ்வ வைஸ்வ ரூப்யேண் சதா அநு பூதா அப்
யா பூர்வவத் விஸ்மயம் ஆகததாநயா
குணேந ரூபேண விலாஸ சேஷ்டி தைஸ்
சதா தவை வோ சிதயா தவ ஸ்ரீ யா–38–

ஸ்வ வைஸ்வ ரூப்யேண் சதா அநு பூதா அபி -தனது விஸ்வரூப நிலைமையைக் கொண்டு
எப்போதும் அனுபவிக்கப் பட்டாலும்
அபூர்வவத் –புதிய புதிய வஸ்து போலே
விஸ்மயம் ஆகததாநயா–ஆச்சர்யத்தை விளைவிப்பவளாய்
குணேந ரூபேண விலாஸ சேஷ்டிதைஸ்–குணங்களாலும் வடிவு அழகாலும் விலாச சேஷ்டைகளாலும்
சதா -பரம் வ்யூஹம் முதலிய எல்லா நிலைமைகளிலும்
தவ ஏவ உசிதயா –உனக்கே ஏற்றவளாய்
தவ ஸ்ரீ யா–உனக்கு செல்வமாய் இருப்பவளான

பண்டு இவரைக் கண்டு அறிவது எவ் ஊரில் -பெரிய திருமொழி -8-1-9- என்றும்
அப்பொழுதைக்கு அப்பொழுது என் ஆராவமுதம் -திருவாய் மொழி -2-6-6- என்றும் ஆழ்வார்களும்
சதா பஸ்யந்தி -என்று நித்ய ஸூரிகளும்
நித்ய அபூர்வதையாலே தேவர் திறத்தில் படுமது எல்லாம்
தேவர் படும்படி இறே பிராட்டி போக்யதை இருப்பது –

அவன் ஸ்வரூபத்தாலே அபரிச்சின்னன்
இவள் போக்யதையாலே அபரிச்சின்னை
உனக்கு ஏற்கும் கோல மலர்ப்பாவை -என்றும் சொல்லுகிறபடியே
தேவர் தமக்குத் தகுதியாய் இருக்குமவள் –
தோள்கள் ஆயிரத்தாய் முடிகள் ஆயிரத்தாய் துணை மலர்க் கண்கள் ஆயிரத்தாய் தாள்கள் ஆயிரத்தாய் –
கொண்டு அனுபவித்தாலும் -அப்பொழுதைக்கு அப்பொழுது ஆராவமுதாகும் விலக்ஷண வஸ்து –
தவைவ உசிதயா ஸ்ரீரியா –என்னும் அளவே போதுமாய் இருக்க -தவ ஸ்ரீயா -என்றது
பிராட்டியின் அநந்யார்ஹத்வத்தை நிலை நாட்டி அருளவே –

—————-

தயா ஸஹா ஸீ நம நந்த போகி நி
ப்ரக்ருஷ்ட விஜ்ஞான பலை கதா மநி
பணா மணி வ்ராதம யூக மண்டல
பிரகாஸ மாநோதர திவ்யதா மநி–39-

நிவாஸ ஸய்யா ஆஸன பாதுகா அமஸூக
உப தான வர்ஷா தபவாரணாதிபி
சரீர பேதைஸ் தவ சேஷதாம் கதைர்
யதோ சிதம் சேஷ இதீரிதே ஜனை–40-

தயா ஸஹா -அப்படிப்பட்ட பிராட்டியோடே கூட
ப்ரக்ருஷ்ட விஜ்ஞான பலை கதா மநி-சிறந்த ஞான சக்திகளுக்கு முக்கியமான இருப்பிடமானவனும்
பணா மணி வ்ராதம யூக மண்டல பிரகாஸ மாநோதர திவ்ய தாமநி–தனது பண மணிகளின் ஸமூஹங்களினுடைய
கிரண ராசிகளாலே பள பள என்று விளங்கா நின்ற மத்ய பிரதேசத்தை எம்பெருமானுக்குத் திருக் கோயிலாக யுடையவனும்
மணி விளக்காம் -முதல் திருவந்தாதி -53 என்கிறபடியே
திவ்ய அந்தப்புரத்துக்கு மங்கள தீபமாய் இறே இருப்பது –

நிவாஸ ஸய்யா ஆஸன பாதுகா அமஸூக
உப தான வர்ஷா தபவாரணாதிபி–எம்பெருமானுக்கு எழுந்து அருளி இருக்கிற திரு மாளிகையாகவும்
திருக்கண் வளர்ந்து அருளும் இடமாகவும் சிங்காசனமாகவும் பாதுகையாகவும் திருப்பரி யட்டமாயும்
அணையாகவும் குடையாகவும் மற்றும் பலவிதமாகவும் ஆவதற்கு உரியவைகளாய்
யதோ சிதம்- தவ சேஷதாம் கதைர்-சரீர பேதைஸ்–உசிதமானபடி உனக்கு அடிமைப்பட்டவைகளான
பல பல வடிவங்களாலே
சேஷ இதீரிதே ஜனை–சேஷன் என்று ஜனங்களால் சொல்லப்படுபவனுமான
பரகத அதிசய அதான இச்சா உபாதேயதவ மேவ யஸ்ய ஸ்வரூபம் ஸ சேஷ -பரஸ் சேஷி –
என்கிற சேஷத்வத்தின் படியே

அநந்த போகிநி -ஆஸீ நம-திருவனந்த ஆழ்வான் இடத்தில் எழுந்து அருளி இருக்கின்ற
உன்னை எப்போது சேவிக்கப் பெறுவேன் -என்று -46-ஸ்லோகத்தில் சேர்ந்து முடிகிறது

மன்னிய பல் பொறி சேர் ஆயிரவாய் வாள் அரவின் சென்னி மணிக் குடுமித் தெய்வச் சுடர் நடுவுள் மன்னிய
நாகத்தணை மேல் -ஸ்ரீ பெரிய திருமடல் பாசுரம் படியே – பணா மணி வ்ராத-
சென்றால் குடையாம் இருந்தால் சிங்காசனமாம் நின்றால் மரவடியாம் நீள் கடலுள் என்றும் புணையாம் அணி விளக்காம்
பூம் பட்டாம் புல்கும் அணையாம் திருமாற்கு அரவு -முதல் திருவந்தாதி பாசுரம் அடி ஒற்றியே இந்த ஸ்லோகம் –
வர்ஷாத பவாரண–வெய்யில் மழை இரண்டாலும் காக்கும் குடை என்றவாறு

—————-

தாஸஸ் ஸகா வாஹநம் ஆஸனம் த்வஜோ
யஸ்தே விதாநம் வ்யஜனம் த்ரயீமய
உபஸ்திதம் தேன புரோ கருத்மதா
த்வத் அங்க்ரி சம்மர்த்த கிண அங்க ஸோபிநா–41–

த்ரயீமய யா -வேத மூர்த்தியான யாவன் ஒரு பெரிய திருவடி
தே சாசஸ் ஸகா வாஹநம் ஆஸனம் த்வஜோ விதாநம் வ்யஜனம் –உனக்கு அடியவனாயும் தோழனாயும்
வாஹனமாயும் ஆசனமாயும் கொடியையும் மேற்கட்டியாயும் விசிறியாயும் இருக்கிறானோ
தேன-அப்படிப்பட்ட
த்வத் அங்க்ரி சம்மர்த்த கிண அங்க ஸோபிநா–உன்னுடைய திருவடி நெருக்கின தழும்பை
அடையாளமாகக் கொண்டு விளங்குகிற
ஈஸ்வரனுக்கு ஸ்ரீ கௌஸ்துபம் லஷணம் ஆனால் போலே
இவனுக்கும் அது தாஸ்ய சிஹ்னமாய் இருக்கும்-
கருத்மதா-பெரிய திருவடியால்
உபஸ்திதம் புரோ –திரு முன்பே சேவிக்கப்பட்டு இருக்கிற

ஸூபர்னோ அஸீ கருத்மான் த்ரிவ்ருத் தே ஸிர காயத்ரம் சஷூ -என்கிறபடியே
வேதங்களை அவயவங்களாக உடையனாய் இருக்கை –
வேதாத்மா விஹகேஸ்வர -சதுஸ் ஸ்லோகி
பொன் மலையின் மீமிசைக் கார்முகில் போலே -திருவாய் மொழி -9-2-6–என்றும்
புள்ளூர் கொடியான் -திருவாய்மொழி -3-8-1-என்றும் உண்டான பிரசித்தியைச் சொல்லுகிறது

—————-

த்வதீய புக்த உஜ்ஜீத சேஷ போஜிநா
த்வயா நிச் ருஷ்டாத்ம பரேண யத் யதா
பிரியேண  சேநாபதிநா ந்யவேதி தத்
ததா அநு ஜாநந்த முதார வீஷணை–42-

த்வதீய புக்த உஜ்ஜீத சேஷ போஜிநா-உனது போனகம் செய்த சேஷத்தை உண்பவனும்
த்வயா நிச் ருஷ்டாத்ம பரேண -உன்னாலே வைக்கப்பட்ட உபய விபூதி நிர்வாக பாரத்தை உடையவனும்
பிரியேண  சேநாபதிநா-உனக்கு அன்பனுமான சேனாபதி ஆழ்வானாலே
அனைவரும் பிரியமானவர்களே அங்கே -இங்கு விசேஷித்து அருளியது இவருக்கு அசாதாரண பிரியம் –
ஆகவே இத்தத்துவம் சேனாபதி ஆழ்வான் பிரம்பின் கீழே வளருவது என்றார் பட்டர்
யத் யதா–யாதொரு விஷயம் யாது ஒரு படியாக
ந்யவேதி தத்-விண்ணப்பம் செய்யப் பட்டதோ அந்த விஷயத்தை
ததா அநு ஜாநந்த முதார வீஷணை–அப்படியே செய்வது என்று அழகிய கடாக்ஷங்களாலே நியமித்து அருளா நிற்கிற

உயிர்க்கு எல்லாம் தாயாய் அளிக்கின்ற தண் தாமரைக் கண்ணன் -பெரிய திருமொழி -7-1-9-என்றும்
சொல்லுகிறபடியே
அநவதிக தயா சௌஹார்த்த அநு ராக கர்ப்பமான இக் கடாஷங்களாலே யாயிற்று –
இவன் இப்படிச் செய்வது -என்று நினைப்பிடுவது –

———————-

ஹத அகில க்லேஸ் மலை ஸ்வ பாவாத
ஸ்தா ஆநு கூல்யை கரசைஸ் தவ உசித
க்ருஹீத தத் தத் பரிசார சாதநை
நிஷேவ்ய மாணம் ஸ சிவைர் யதோ சிதம்–43-

ஸ்வ பாவாத-இயற்கையாகவே
ஹத அகில க்லேஸ் மலை –வருத்தங்களும் மலர்களும் எல்லாம் அற்ற வர்களாயும்
அவித்யை அஹங்காரம் ராகம் த்வேஷம் அபிநிவேசம் ஐந்து கிலேசங்கள்
பிரகிருதி சம்பந்தமாகிய மலம் -இவை இல்லாதவர்கள்
இவற்றை இயற்கையாக உள்ள நித்ய ஸூரிகளைச் சொல்கிறது
தவ ஆநு கூல்ய ஏக ரசைஸ்-உனது கைங்கர்யம் ஒன்றையே போகமாக உடையவர்களாயும்
தவ உசித–உனக்கு ஏற்றவர்களாயும் -ஸ்வரூப ரூப குணங்களால் உன்னோடே ஒத்து இருப்பவர்களாயும்
க்ருஹீத தத் தத் பரிசார சாதநை–அந்த அந்த கைங்கர்யங்களுக்கு உபகரணங்களான
குடை சாமரம் முதலியவற்றை கையிலே ஏந்தி இருப்பவர்களையும் உள்ள
ஸ சிவைர்-மந்திரிகள் போன்ற நித்ய ஸூரி களாலே

வாத்சல்யத்தாலே அவன் முறை அழியப் பரிமாற்ற நினைத்தாலும்
அவனை முறை உணர்த்தி அடிமை செய்யுமவர்கள்
நீதி வானவர் -அமலனாதி -1- இறே
ஆஸ்ரித ரஷணத்தில் தேவரை பிரேரிக்கும் அவர்கள் இறே
நிஷேவ்ய மாணம் யதோ சிதம்–தகுதியாக சேவிக்கப் படா நிற்கிற
யாதோசிதம் நிஷேவ்ய மாணம் –அவரவர்கள் அதிகாரத்துக்கு தக்கபடியும் –
அவன் திரு உள்ளத்துக்கு தக்கபடியும் -சமயங்களுக்கு தக்க படியும் கைங்கர்யம்

——————-

அபூர்வ நாநா ரஸ்பாவ நிர்ப்பர
ப்ரபத்தயா முக்த விதக்த லீலயா
ஷணாணுவத் ஷிப்த பராதி காலயா
ப்ரஹர்ஷ யந்தம் மஹி ஷீம் மஹா புஜம் –44-

அபூர்வ நாநா ரஸ்பாவ நிர்ப்பர ப்ரபத்தயா–விலக்ஷணங்களான பலவகை ரசங்களாலும் பாவங்களாலும்
நெருக்குண்டு இடைவிடாது தொடர்ந்து நடப்பதாய்
ஷணாணுவத் ஷிப்த பராதி காலயா–ஒரு க்ஷணப் பொழுதிலே ஏக தேசம் போலே விரைவாகக்
கழிக்கப் பட்ட காலங்களை யுடையதான
முக்த விதக்த லீலயா–மிகவும் அழகிய லீலையினாலே
ப்ரஹர்ஷ யந்தம் மஹி ஷீம் மஹா புஜம் -பெரிய பிராட்டியாரை சந்தோஷப்படுத்தா நிற்கிற
விசாலமான புஜங்களை யுடையனாய் இருக்கிற

கீழே -37-/38-/39–பாசுரங்களில் பிராட்டி சேத்தி அழகு அனுபவம் –
இதில் பிராட்டியை உகப்பிக்கும் பரிசு சொல்லுகிறது –
காந்தர்வ வேதத்தில் உள்ள வீரம் சிருங்கார ரசங்களும் உத்ஸாஹம் போன்ற பாவங்களும் புதிது புதிதாக
தொடர்ந்து செல்லும் லீலைகளை அனுபவிக்கிறார்
பராதி காலயா -பிரமன் காலம் பரம் -அதில் பாதி பரார்த்தம் -அது கூட க்ஷணம் பொழுதில்
அவலீலையாக கழிகின்றனவாம்
அவிதித கதயாமா ராத்ரிரேவ வயரம்ஸீத-உத்தர ஸ்ரீ ராமாயணம்-
மஹா புஜம் –
கீழ் சொன்ன லீலா ரசத்தாலே உகப்பிக்கும் அவனோபாதி யன்று
அணி மானத் தட வரைத் தோளாலே -திருவாய் -4-8-2- அணைத்து உகப்பிக்கும் என்றும்
ஸ்வரூப குணங்களைக் காட்டில் ரூப குணம் இறே இனிதாய் இருப்பது –
ப்ரஹர்ஷ யந்தம் -என்கையாலே -இவ் உகப்பு நித்யம் -என்கை –

———————

அசிந்த்ய திவ்ய அத்புத நித்ய யௌவன
ஸ்வ பாவ லாவண்யமய அம்ருதோதிதம்
ஸ்ரீய ஸ்ரீயம் பக்த ஜனைக ஜீவிதம்
ஸ்மர்த்த மாபத்ஸ்க மர்த்தி கல்பகம்-45-

அசிந்த்ய திவ்ய அத்புத நித்ய யௌவன ஸ்வ பாவ லாவண்யமய அம்ருதோதிதம்–சிந்தைக்கு எட்டாததாய் –
ஆச்சர்யமாய் –நித்தியமாய் –இருக்கிற யவ்வனத்தை ஸ்வ பாவமாக யுடைய
லாவண்யம் நிறைந்த அமுதக்கடலாய்
ஸ்ரீய ஸ்ரீயம் –திருவுக்கும் திருவாய்
பக்த ஜனைக ஜீவிதம்–பக்த ஜனங்களுக்கு நற் சீவனாய்
உண்ணும் சோறு பருகும் நீர் தின்னும் வெற்றிலை எல்லாம் கண்ணன் என்று இருப்பார்க்கு
இவன் ஜீவன் –சாத்மிக்க போக ப்ரதன் –
பக்த ஜனங்களையே தனக்கு தாரகமாய் -உயிர் நிலையாக -உடையவன் -என்றுமாம் –
மம ப்ராணா ஹி பாண்டவா –

ஸ்மர்த்தம-சர்வ சக்தனாய் –ஆற்ற நல்ல வகை காட்டும் அம்மான்
ஆபத்ஸ்கம –ஆபத்துக்களிலே வந்து உதவுமவனாய் –
காண வாராய் என்று கண்ணும் வாயும் துவர்ந்த அளவிலே -8-5-2-
உதவும் ஸ்வ பாவனான உன்னை –

அர்த்தி கல்பகம்-யாசிப்பவர்களுக்கு கற்பக வ்ருக்ஷம் என்னத் தகுந்தவனாய் இருக்கிற
என்னை ஆக்கிக் கொண்டு எனக்கே தன்னைத் தந்த கற்பகம் -2-7-11-
என்கிறபடியே தன்னை ஔதார்யம் பண்ணுமவனை-

விசேஷண சங்கீர்த்தனம் -32-ஸ்லோகம் தொடங்கி இது வரை தனித்தனியே பிரஸ்தாபிக்கப் பட்ட
திவ்ய மங்கள விக்ரஹ குணம் திவ்ய ஆத்ம குணம் எல்லாவற்றையும் ஓன்று சேர்த்து அனுபவிக்கிறார் இதில்
லாவண்யமய அம்ருதோதிதம்-விசேஷமாகக் கொண்டு யௌவன
ஸ்வ பாவத்தை அதுக்கு விசேஷணமாக உரைத்து அருளினார் தூப்புல் அம்மான்
லாவண்யம் -சமுதாய சோபை -நீரோட்டம் -மிருதுவாயும் கண்களுக்கு ஆனந்தத்தைக் கொடுக்கும் தேஜஸ்ஸூ
குழுமித் தேவர் குழாங்கள் கை தொழச் சோதி வெள்ளத்தின் உள்ளே எழுவதோர் உரு
அடியேனை அனுபவிக்கப்ப் பண்ணுவது என்றோ -என்று கீழ் உடன் அன்வயம் –

———–

பவந்தமேவா நுசரன் நிரந்தரம்
ப்ரசாந்த நிஸ் சேஷ மநோ ரதாந்த்ர
கதா அஹ மை காந்திக நித்ய கிங்கர
ப்ரஹர்ஷயிஷ்யாமி ஸநாத ஜீவித–46-

பவந்தமேவ அஹம் அநுசரன் நிரந்தரம்-உன்னையே நான் இடைவிடாமல் பின் தொடர்ந்து கொண்டு
ப்ரசாந்த நிஸ் சேஷ மநோ ரதாந்த்ர–வேறே எவ்விதமான இதர ஆசையும் அற்றவனாய்
ஐகாந்திக நித்ய கிங்கர–நித்ய நியதி கைங்கர்யத்தை யுடையவனாய்
ஸநாத ஜீவித–நாதனோடு கூடிய உயிரை யுடையவனாய்
கதா ப்ரஹர்ஷயிஷ்யாமி –எப்போது திரு உள்ளத்தை உகப்பிக்கப் போகிறேன்

நிரந்தரம் அநு சரன் -சென்றால் குடையாம் இத்யாதி சகல வித கைங்கர்யங்களும்
ஒழிவில் காலம் எல்லாம் உடனாய் மன்னி வழுவிலா அடிமை செய்ய வேண்டும்
எற்றைக்கும் ஏழு ஏழு பிறவிக்கும் உன் தன்னோடு உற்றோமே ஆவோம் உனக்கே நாம் ஆட் செய்வோம் –
மற்றை நம் காமங்கள் மாற்று -ஐகாந்திக நித்ய கிங்கர –
சேதன லாபம் எம்பெருமானுக்கே புருஷார்த்தம் –
ப்ரஹர்ஷயிஷ்யாமி -எப்பொழுது உன்னை ஸந்துஷ்டனாக செய்யப் போகிறேன் என்றபடி

இந்நிலத்திலும் நீயே நாதனாக இருந்தாலும் உபேக்ஷிக்கப்பட்டு அநாதன் போலே தீனனாய் அன்றோ இருக்கின்றேன்
நித்ய கைங்கர்யம் செய்வேனாக என்னை ஆக்கி அருளினால் ஒழிய என்னுடைய சத்தை பயன் பெறாதே
என்பதையே சநாத ஜீவித -என்று அருளிச் செய்கிறார்

—————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ காஞ்சி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ ஆளவந்தார் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: