நமோ நமோ வாங் மனஸாதி பூமயே
நமோ நமோ வாங் மனசைக பூமயே
நமோ நமோ அநந்த மஹா விபூதயே
நமோ நமோ அநந்த தயைக சிந்தவே—-21-
வாங் மனஸாதி பூமயே-ஸ்வ தந்த்ரர்களுடைய வாக்குக்கும் மனஸுக்கும் எட்டாதவனான உன் பொருட்டு
நமோ நமோ –நமஸ்காரம் -நமஸ்காரம்
வாங் மனசைக பூமயே-தன்னுடைய நிர்ஹேதுக விஷயீ காரத்துக்கு பாத்திரமாய் இருக்கிற-அந்தரங்கர்களுடைய
வாக்குக்கும் மனஸுக்குமே விஷயமாய் இருக்கிற உன் பொருட்டு
நமோ நமோ -நமஸ்காரம் -நமஸ்காரம் –
அநந்த மஹா விபூதயே– வேத வேதாந்தங்களிலும் எல்லையில்லாத பெரிய ஐஸ்வர்யங்களை உடைய உனக்கு
நமோ நமோ -நமஸ்காரம் -நமஸ்காரம் –
அநந்த தயைக சிந்தவே—எல்லையில்லாத கருணைக்கே கடலாய் இருக்கின்ற உனக்கு
தயை -என்றது வாத்சல்யம் ஸுவ்சீல்யம் ஸுவ்லப்யம் -போன்ற பல கல்யாண குணங்களுக்கும் உப லக்ஷணம்
நமோ நமோ -நமஸ்காரம் -நமஸ்காரம் —
எம்பெருமானுடைய பெருமையை பரக்கப் பேசின பின்பு அந்தப் பெருமைக்குத் தோற்றுத் தொழுகின்றார் –
ஏக கிருஷ்ணோ நமஸ்கார முக்தி தீரஸ்ய தேசிக -ஸக்ருத் நமஸ்காரம் –
ப்ரஸம்சாயம் ப்ரதிஞ்ஞாயம் ப்ரலாபே தர்ஜ நேபிச பயேச விஜயே சைவ பவ்ந புந்யம் அலங்க்ருதி -என்று
பிரதிஜ்ஜை செய்யும் பொழுதும் -அழும் பொழுதும் -வெருட்டும் பொழுதும் -அச்சம் தோற்றச் சொல்லும் பொழுதும்
வெற்றி தோற்றச் சொல்லும் பொழுதும் ஒரு சொல்லையே அடுத்து அடுத்துச் சொல்வதானது அலங்காரம் ஆகும்
பாம்பு பாம்பு பாம்பு என்று அஞ்சிச் சொல்வது உண்டே
தண்டவத் நிபபாத -தண்டனை சமர்ப்பித்தல் -வேர் அற்ற மரம் போலே விழுந்து இருக்க
ஸக்ருத் நமஸ்காரத்துக்கு மேல் வேண்டாமே
ஸ்ரீ வைகுண்ட கத்யம் -பிரணம்ய உத்தாய உத்தாய புந புந பிரணம்ய-என்றது எம்பெருமானைக் கிட்டும் அளவும்
காலால் நடந்து செல்லாமல் தண்டனை இட்டுக் கொண்டு செல்வதையே அருளிச் செய்கிறார்
கணக்கு எண்ணி சேவிப்பதை விட பக்தி பாரவஸ்யத்தாலே மெய் மறந்து –
அத்யந்த பக்தி யுக்தா நாம் ந ஸாஸ்த்ரம் நைவ ச க்ரம
———–
ந தர்ம நிஷ்ட்டோஸ்மி ந சாத்ம வேதீ
ந பக்திமாம் ஸ்தவச சரணாரவிந்தே
அகிஞ்சநோ அநந்ய கதிஸ் சரண்ய
த்வத் பாத மூலம் சரணம் ப்ரபத்யே–22-
சரண்ய-சர்வ ரக்ஷகனே
ந தர்ம நிஷ்ட்டோஸ்மி -அடியேன் கர்ம யோகத்தில் நிலை நின்றவன் அல்லேன்
ந சாத்ம வேதீ அஸ்மி –ஆத்ம ஞானமும் உடையேன் அல்லேன்
ந பக்திமாம் ஸ்தவச சரணாரவிந்தே-உனது திருவடித் தாமரைகளில் பக்தியையும் உடையேன் அல்லேன்
அகிஞ்சநோ அநந்ய கதிஸ் -ஒரு சாதனமும் இல்லாதவனாய் வேறு புகல் அற்றவனுமான அடியேன்
த்வத் பாத மூலம் சரணம் ப்ரபத்யே–உனது திருவடித் தாமரையை சரணமாக அடைகிறேன்
நோற்ற நோன்பு இலேன் நுண் அறிவு இலேன்
குளித்து மூன்று அனலை ஓம்பும் குறி கொள் அந்தணமை தன்னை ஒளித்திட்டேன் என் கண் இலை
நின் கணும் பக்தனும் அல்லேன்
புகல் ஓன்று இல்லா அடியேன் உன் அடிக்கீழ் அமர்ந்து புகுந்தேனே -இத்யாதிகளைத்
திரு உள்ளத்தில் கொண்டு அருளிச் செய்த படி
பகவத் சந்நிதியில் எம்பெருமானை சேவிக்கும் பொழுதில் இந்த ஸ்லோகம் அனுசந்தித்துக் கொண்டு
தண்டம் சமர்ப்பித்து நம் சம்ப்ரதாயம்
இந்த ஸ்லோகத்தாலே-அதிகாரி ஸ்வரூபமும்-சரணாகதி பிரயோகமும்-சொல்லிற்று –
—————
ந நிந்திதம் கர்ம ததஸ்தி லோகே
சஹஸ்ரசோ யன்ன மயா வ்யதாயி
ஸோ அஹம் விபாகா வஸ்ரே முகுந்த
க்ரந்தாமி ஸம்ப்ரத்ய கதிஸ் தவாக்ரே —23-
முகுந்த–பகவானே
யத் நிந்திதம் கர்ம –யாதொரு சாஸ்த்ரங்களாலும் சிஷ்டர்களாலும் நிந்திக்கப்பட்ட பாப க்ருத்யமானது
மயா சஹஸ்ரச–அடியேனால் பல்லாயிரம் தடவை
ந வ்யதாயி- செய்யப்பட வில்லையோ
தத் லோகே நாஸ்தி -அப்படிப்பட்ட தீவினை உலகத்திலேயே இல்லையே
ஸோ அஹம் –அப்படிப்பட்ட கடு வினைகளைச் செய்தவனான அடியேன்
விபாகா வஸ்ரே ஸம்ப்ரத்ய-அக் கடு வினைகள் பலன் கொடுக்கும் தருணமாகிய இப்போது
அகதிஸ்–வேறு கதி அற்றவனாய்
க்ரந்தாமி தவாக்ரே —உன் முன்னிலையில் காத்திருக்கின்றேன்
பிரதிபந்தக சாமாக்ரிகள் என்னிடத்தில் அளவற்றவை உண்டு என்கிறார்
நான் செய்யாத இழி தொழிலே உலகிலே இல்லையே -ஒப்பற்ற பாபாத்மா
லோகே -சாஸ்திரத்தில் -என்பதே மிக பொருந்தும்
ஆயிரம் மடங்கு என்னால் பண்ணப் படாதது
யாதொரு நிந்தித்த கர்மம் உண்டு
அதி பாதக மஹா பாதகாதிகள்
அது சாஸ்த்ரத்தில் இல்லை
அனுஷ்டாதாக்கள் பக்கல் இல்லாத நிஷித்தங்களும்
சாஸ்த்ரத்திலே காணலாம் இறே-
இது ஒரு சமத்காரச் சொல்லாகும்
பாபங்களை அதிகமாகச் செய்தாலும் பின்பு அஞ்சி அனுதாபமோ வெட்கமோ படாமலும்
பிராயச்சித்தமோ செய்யாமல் துன்பங்களை அனுபவிக்க முடியாமல் கதறுகின்றேன்
முகுந்த-முக்தி பூமி பரத
இத் துர்தசையை ப்ராப்தனானவனுக்கும் தேவரே உஜ்ஜீவன ஹேது என்னும்
இத்தையே புத்தி பண்ணி கதறுகின்றேன்
கார் ஒளி வண்ணனே கண்ணனே கதறுகின்றேன் ஆர் உளர் களை கண் அம்மா
அரங்க மா நகர் உளானே –திருமாலை -போலே
கோவிந்தா என்று திரௌபதி கதறினது உன் திரு உள்ளத்தை புண் படுத்திற்றே
இப்பொழுது என் கதறுதலுக்கு பரிஹாரம் செய்யா விடில் அது வெளி வேஷம் என்று
நிச்சயிக்கலாமே என்பது உள்ளுறைப் பொருள் –
—————–
நி மஜ்ஜதோ அநந்த பவ அர்ணவ அந்தஸ்
சிராய மே கூலம் இவ அஸி லப்த
த்வயாபி லப்தம் பகவந் நிதா நீம்
அநுத்தமம் பாத்ரம் இதம் தயாயா—24-
ஹே அநந்த-எல்லை அற்ற குண விபூதியை உடைய பெருமானே
பவ அர்ணவ அந்தஸ்-சம்சாரமாகிற கடலினுள்ளே
அநந்த பவ அர்ணவ அந்தஸ்-சேர்த்தும் -கரை காண ஒண்ணாத சம்சாரக் கடலினுள்ளே என்றுமாம்
நி மஜ்ஜதோ மே -மூழ்கிக் கொண்டே இருக்கிற அடியேனுக்கு
சிராய கூலம் இவ அஸி லப்த–நெடு நாள் களித்து கரை போலே நீ கிடைத்தாய்
ஆவாரார் துணை என்று அலை நீர் கடலுள் அழுந்தும் நாவாய் போல் பிறவிக் கடலுள் நின்று
நான் துளங்க-என்பதை அடி ஒற்றி அருளிச் செய்தபடி
சனகாதிகளைப் போலே கண் பற்றிலே இருந்தேனோ –
த்வயாபி பகவந் –பகவானே உன்னாலும்
தயாயா- அநுத்தமம் பாத்ரம் இதம் இதா நீம் லப்தம்-உனது அருளுக்கு சிறந்த பாத்ரமாகிய
இந்த வஸ்து-நான் -அடையப் பெற்றது –
எதிர் சூழல் புக்கு எனைத்தோர் பிறப்பும் எனக்கே அருள்கள் செய்ய -உன்னுடைய கிருஷியும் பலித்ததே
என்பதை நீ நோக்கி அருள வேணும்
ஆகவே ரஷ்யனான எனக்கும் ரக்ஷகனான உனக்கும் லாபம் கிடைக்க நேர்ந்த இப்பொழுது இழக்கலாமா
என்று அற்றோ கதறுகின்றேன்
என்னிடத்தில் யோக்யதைக் கண்டு நீ கைக் கொள்ள விஷயம் இல்லாவிடினும்
உன்னுடைய நிருஹேதுக கிருபையினால் கைக் கொண்டே தீர வேண்டிய நிலை யுண்டே என்று விஞ்ஞாபித்தபடி
உன் பேர் அருளால் இக்கரை ஏறி -பெரியாழ்வார் திருமொழி -5-3-7-என்னும்படி
அழுந்துகிற இடத்தில் கரை கிட்டினால் போலே லப்தனாகா நின்றாய்
அநுத்தமம்-ந வித்யதே உத்தமம் யஸ்மாத் தத் -வ்யுத்பத்தி —
இதற்கு மேல் சிறந்தது இல்லை என்னும்படி லோக உத்தமமானது என்றபடி –
—————–
அபூத பூர்வம் மம பாவி கிம் வா
சர்வம் சஹே மே சஹஜம் ஹி துக்கம்
கிந்து த்வதக்ரே சரணாக தா நாம்
பராபவோ நாத ந தே அநுரூப—–25-
ஹே நாத-
அபூத பூர்வம் மம -அடியேனுக்கு இதற்கு முன்பு உண்டாகாத
கிம் வா துக்கம்-பாவி –என்ன துக்கம் புதிதாக உண்டாகப் போகிறது -ஒன்றுமே இல்லையே
துக்கம் மே சஹஜம் ஹி -துக்கம் என்பது என்னுடன் கூடவே பிறந்தது அன்றோ
சர்வம் சஹே -எல்லாத் துயரங்களையும் பொறுத்துக் கொண்டே இருக்கிறேன்
தனது காய்களைப் பொறாத கொம்பு உலகில் உண்டோ
கிந்து -ஆனால்
த்வதக்ரே சரண ஆகதாநாம்–உன் எதிரிலே வந்து சரணம் புகுந்தவர்களுக்கு
பராபவோ ந தே அநுரூப—-ஒரு அவமானம் உண்டாவது உனக்குத் தகுதி அல்லவே
சர்வ ரக்ஷகன் சர்வ சக்தன் சரணாகத ரக்ஷகன் என்று எல்லாம் சொல்லப்படும் பேற்றை அன்றோ நீ இழக்க இருக்கிறாய்
நமது ஸ்வாமிக்கு அபவாதம் ஏற்படுகிறதே என்கிற பெரிய துக்கத்தைப் பொறுக்க ஒண்ணாதே
இதற்காக அன்றோ இப்பொழுது கதறுகின்றேன்
எங்கனம் தேறுவர் உமர் -திருவாய் மொழி -8-1-3-என்கிறபடியே
உனக்குக் கை புகுந்தவர்களும் உன்னுடைய ரஷணத்தில் அதி சங்கை பண்ணுவார்கள் -என்கை –
ஆஸ்ரிதர்க்கு விஷயங்களால் வரும் பரிபவம் ரஷகரான தேவருக்கு தேஜோ ஹாநி -என்று
அத்தைப் பரிஹரிக்கச் சொல்லுகிறேன் என்கிறார்-
என்னத்த தவறாமல் ரஷித்தே தீர வேண்டும் -என்கிற பிராத்தனையில் விசித்திரமான முறை அன்றோ இது
—————-
நிராஸ கஸ்ய அபி ந தவ உத்ஸஹே
மஹேஸ ஹாதும் தவ பாத பங்கஜம்
ருஷா நிரஸ்தோ அபி ஸிஸூ ஸ்தநந்தயோ
ந ஜாது மாதுஸ் சரனௌ ஜிஹாஸதி—26–
மஹேஸ-ஸர்வேஸ்வரனே
நிராஸ கஸ்ய அபி – என்னை நீ துரத்தித் தள்ளினாலும்
தவ பாத பங்கஜம் ஹாதும் -உன்னுடைய திருவடித் தாமரையை விடுவதற்கு
ந உத்ஸஹே தாவத் –அடியேன் துணிய மாட்டேன் காண்
ஸ்தநந்தயோ ஸிஸூ–முலைப்பால் குடிக்கும் பருவமுள்ள குழந்தை
ருஷா நிரஸ்தோ அபி –கோபத்தினால் தள்ளப்பட்டாலும்
கையாலே தள்ளுகை அன்றிக்கே-காலாலே தள்ளிலும் அந்தக் காலைக் கட்டிக் கொள்ளும் அத்தனை ஒழிய
புறம்பு போகப் பாராதாப் போலே-
மாதுஸ் சரனௌ -ஜாது -ந ஜிஹாஸதி—தாயாருடைய கால்களை ஒரு போதும் விடுவதற்கு விரும்ப மாட்டாது அன்றோ
ரஷகமுமாய்
ப்ராப்தமமுமாய்
போக்யமுமான
திருவடிகளை முந்துற முன்னம் விட்டு ஜீவிக்க ஸ்ரத்தை பண்ணு கிறிலேன்-
கண்டார் இகழ்வனவே காதலன் தான் செய்திடினும் கொண்டானை அல்லால் அறியாக் குலமகள் போல் -என்று
தேவர் ரஷகர் அன்றியிலே ஒழிந்தாலும் புறம்பு போக்கில்லை -என்கை –
இவ்வ்வாத்ம வஸ்து ஈஸ்வர ஏக ரஷ்யமாய் நித்ய ஸ்தனந்த்யமாய் இறே இருப்பது
தரு துயரம் தடாயேல் உன் சரண் அல்லால் சரண் இல்லை –அரி சினத்தால் ஈன்ற தாய் அகற்றிடினும் மற்றவள் தன்
அருள் நினைந்ததே அழும் குழவி அதுவே போன்று இருந்தேனே -பாசுரம் தழுவிய ஸ்லோகம்
ஈன்ற தாய் -என்றும் -அரி சினம் -என்றும் விருத்த தர்மம் – ஏக ஆஸ்ரயத்தில் சம்பவியாது என்கை
பிதாவுக்கு ஹிதார்த்தமாக குரோதம் சம்பவித்தாலும் மாத்ரு விஷயத்தில் சம்பாவனை இல்லை இறே –
நீ நெறி காட்டி நீக்கப் பார்த்தாலும் நான் உன்னுடைய தின் கழலை விட்டு நீங்குவேன் அல்லேன் -என்கிற
திட அத்யாவசாயத்தை வெளியிட்டு அருளுகிறார்
————–
தவாம்ருதஸ் யந்தி நி பாத பங்கஜே
நிவேஸி தாத்மா கத மந்யதிச் சதி
ஸ்திதே அரவிந்தே மகரந்த நிர்ப்பரே
மது வ்ரதோ நே ஷூ ரகம் ஹி வீஷதே–27-
அம்ருதஸ் யந்திநி –அம்ருதத்தைப் பெருக்குகின்ற -மோக்ஷத்தை அளிக்கின்ற
தவ பாத பங்கஜே–உன்னுடைய திருவடித் தாமரையில்
நிவேஸி தாத்மா –வைக்கப்பட்ட மனமானது
கதம் அந்யத் இச்சதி-வேறு ஒன்றை எப்படி விரும்பும்
மகரந்த நிர்ப்பரே-அரவிந்தே -ஸ்திதே -சதி–தேன் நிறைந்த தாமரைப் பூவானது இருக்கும் பொழுது
மது வ்ரதோ இஷூரகம் ந வீஷதே–ஹி–வந்து முள்ளிப் பூவைக் கண் எடுத்தும் பார்க்க மாட்டாது அன்றோ
இஷூரகம் -முள்ளிப் பூவை
உனது திருவடித் தாமரையின் போக்யதையை நோக்கும் இடத்தில் வேறு ஒன்றினில் நெஞ்சு செல்லுமோ
உன் தேனே மலரும் திருப்பாதம்
அம்ருதம் -தேன் என்றும் மோக்ஷம் என்றும் –
சப்த சக்தியால் மோக்ஷ பிரதத்வத்தையும் கொள்ளலாம் என்று ஸ்ரீ தேசிகர் திரு உள்ளம்
நிவேஸி தாத்மா-தேவர் உடைய நிர்ஹேதுகமான ப்ரசாதத்தாலே
நிவேசிக்கப் பட்ட மனஸ் ஸானது-அபோக்யமுமாய் அப்ராப்தமுமான ஹேய விஷயங்களிலே
பழகிப் போந்த மனஸ்ஸூ
ஸூரி போக்யமான தேவர் திருவடிகளிலே அவகாஹிக்கும் போது தேவர் ப்ரசாதமே வேண்டாவோ –
நிவேசித ஆத்மா யஸ்ய ச -பஹு வ்ரீஹி சமாசம் -ஸ்தாபிக்கப்பட்ட மனம் -என்பது
ஸ்ரீ தேசிகர் ஸ்ரீ ஸூக்தி விருத்தமாகும் -அஸ்வரஸமும் ஆகும் –
ஹி
இது உபதேசிக்க வேண்டுமோ — தேவருக்கு சம்ப்ரதிபன்னம் அன்றோ
எங்குப் போய் உய்கேன் உன் இணை யடியே யடையல் அல்லால் –பெருமாள் திருமொழி -5-5-என்று இராதோ-
———————
த்வத் அங்க்ரிம் உத்திஸ்ய கதா அபி கேநசித்
யதா ததா வா அபி சத்ருக் ருத்தோ அஞ்ஜலி
ததைவ முஷ்ணாத்ய ஸூ பான்யசேஷ தஸ்
ஸூ பானி புஷ்ணாதி ந ஜாது ஹீயதே—28-
த்வத் அங்க்ரிம் உத்திஸ்ய -உனது திருவடியை நோக்கி -பிராப்யமுமாய் -பிராபகமுமாய் –ப்ராப்தமுமாய் –
இருக்கிறபடியைச் சொல்லுகிறது
கதா அபி கேநசித்–எப்பொழுதாவது -எவனாலாவது –
யதா ததா வா அபி –எவ்விதமாகவாவது
சத்ருக் ருத்தோ அஞ்ஜலி–ஒரு தடவை பண்ணப்பட்ட கை கூப்புதலானது
ததைவ முஷ்ணாத்ய அஸூபாந அசேஷ தஸ்-அப்பொழுதே பாபங்களை மிகுதி இல்லாமல் போக்கி விடுகின்றது
ஸூ பானி புஷ்ணாதி –நன்மைகளை வளரச் செய்கின்றது
விரோதியைப் போக்கி விடும் அளவு அன்றிக்கே அபிமதங்களாலே பூர்ணமாக்கும் –
பஹூ வசனத்தாலே-பர பக்தி பரஜ்ஞானம் பரம பக்தி
தேச விசேஷ பிராப்தி பகவல் லாபம் ,ப்ராப்தி பலமான கைங்கர்யம் -இவற்றைச் சொல்லுகிறது
இத்தால் ஸ்வர்க்காதி களான ஒரோ பலங்களிலே நியதமான கர்மங்களில் வ்யாவருத்தி
ந ஜாது ஹீயதே—ஒரு போதும் குறைவது இல்லையே
அஞ்சலி வைபவம் அருளிச் செய்கிறார்
கீழ் இரண்டு ஸ்லோகங்களையும் சேர்த்து -வேறு புகல் இல்லாமை -போக்யதையின் மிகுதி –
உபாயத்தை ஸுவ்கர்யம்-மூன்றாலும் உன்னை விட முடியாது என்கிறார்
கதா அபி கேநசித் யதா ததா வா அபி சத்ருக் -நான்காலும் –கால நியமன இல்லை -அதிகாரி நியமம் இல்லை –
கோணலாக கூப்பினாலும் -வாயினால் மொழிந்தாலும் நெஞ்சால் நினைத்தாலும் போதும் என்கிறது
அஞ்சலி -அம் ஜலயத்தி -அவனை நீர்ப்பண்டமாக உருக்குமே
அநந்ய பிரயோஜனராய்க் கொண்டு பண்ணின அஞ்சலி ஆகையாலே
பிரசன்னனான ஈஸ்வரன் எல்லாம் செய்தாலும் ஒன்றும் செய்யாதானாய் இருக்கையாலே
ருணம் ப்ரவ்ருத்தம் இவ மே ஹ்ருதயான் நாப சர்ப்பதி
உன் அடியார்க்கு என் செய்வன் என்றே இருத்தி நீ -பெரிய திருவந்தாதி -58-என்னக் கடவது இ றே-
ந ஜாது ஹீயதே-அஞ்சலி செய்த பின்பு அனுக்ரஹம் அவனைச் சேர்ந்தவர்களுக்கும் செல்லும் என்றுமாம்
எப்போதும் அனுவர்த்தித்திக் கொண்டே இருக்கும்
பலன் கை புகுந்த பின்பும் அஞ்சலியை போது போக்காய் இருக்குமே
மநோ வாக் காயங்கள் மூன்றாலும் பண்ணின பிரபத்தி எல்லாம் வேண்டுமோ –
பத்தாஞ்சலி புடம் தீநம் யாசந்தம் சரணாகதம் -என்கிற
காயிகமான அஞ்சலி ஒன்றுமே அமையாதோ -என்கிறார் இதில்–
ஸ்ரீ ஈட்டு ஸ்ரீ ஸூ க்திகள் –1-6-பரிவதில் ஈசனை பிரவேசம் –
உன்னுடைய திருவடிகளைக் குறித்து ஒரு காலத்தில் ஒருவன் எவ்விதத்திலாயினும் ஒரு முறை அஞ்சலி செய்ய
முயற்சி செய்வானேயாயின், செய்யப்படும் அவ்வஞ்சலியினால், அப்பொழுதே பாவங்கள் அனைத்தும் அடியோடே ஓடிவிடுகின்றன;
மேலும், அவ்வஞ்சலியானது, புண்ணியங்களைக் கொடுத்துப் போஷித்துத் தானும் அழியாமல் இருக்கின்றது,’ என்பது ஸ்தோத்திர ரத்தினம்.
த்வத் அங்கரி முத்திச்ச்ய – உன்னுடைய திருவடிகள்’ என்றதனால், மற்றைத் தேவர்களைக் காட்டிலும்
இறைவனுக்கு உண்டான வ்யாவ்ருத்தியும் வேற்றுமையும்,
இறைவனிடத்தில் அடியார்கள் இழியுந்துறை திருவடிகள் என்னுமிடமும் அருளிச் செய்தாராவார்.
மேலும், கதா அபி ‘ஒரு காலத்தில்’ என்றதனால்,
இன்ன காலத்தில் இன்ன காரியங்களைச் செய்யவேண்டும் என்று விதிக்கிற விதியினின்று வேறுபடுத்தியும்,
கேநசித் ‘ஒருவன்’ என்றதனால், இந்தத் தகுதிகளையுடையவனே இக்காரியத்தை மேற்கோடல் வேண்டும்
என்று விதிக்கிற விதியினின்று வேறுபடுத்தியும்,
யதா ததா‘எவ்விதத்தாலாயினும்’ என்றதனால், இன்ன முறையில் இக்காரியத்தைச் செய்தல் வேண்டும் என்று
விதிக்கிற விதியினின்று வேறு படுத்தியும்,
ஸக்ருத் ‘ஒரு முறை’ என்றதனால், பல வருடங்கள் செய்ய வேண்டும் என்று விதிக்கிற தீர்க்க சத்திரம்
முதலான யாகங்களினின்று வேறுபடுத்தியும்,
‘அஞ்சலி’என்றதனால், மிக்க பொருட் செலவினாலும் சரீரத்தின் பிரயாசை முதலியவற்றாலும் செய்யப்படுகின்ற
அஸ்வமேதயாகம் முதலியவற்றினின்று வேறுபடுத்தியும்,
அசுபானி ‘பாவங்கள்’ என்ற பன்மையால், ஒரு தர்மம் ஒரு பாவத்தையே போக்கும் என்று கூறப்படுகிற
தர்மங்களினின்று வேறுபடுத்தியும்,
அசேஷத ‘அடியோடே’ என்றதனால், வாசனை கிடக்கப்போக்கும் கர்மங்களினின்று வேறுபடுத்தியும்,
சுபானி ‘புண்ணியங்களை’ என்ற பன்மையால் ஒரு தர்மம் ஒரு பலனையே கொடுக்கும் என்று கூறப்படுகிற
தர்மங்களினின்று வேறுபடுத்தியும்,
நஜாது ஹீயதே ‘அழியாமலிருக்கின்றது’என்றதனால், பலன்களைக் கொடுத்துத் தாம் அழிந்து போகிற
தர்மங்களினின்று வேறுபடுத்தியும்
அருளிச் செய்திருத்தல் நோக்கல் தகும்.
மற்றும்,முஷ்ணாதி ‘ஓடிவிடுகின்றன’ என்றதனால், சும் எனாதே கைவிட்டு ஓடித் தூறுகள் பாய்ந்தனவே’ என்கிறபடியே,
பாவங்கள், இவன் தான் தொடர்ந்து பிடிப்பான் என்று நினைத்து இவனை அறியாமலே போய் விடும் என்பதனையும்,
புஷ்ணாதி ‘கொடுத்துப் போஷிக்கிறது’ என்றதனால், தீவினைகளைப் போக்குதலேயன்றி,
அது போன இடம் எங்கும் நன்மையினையே நிறையச்செய்யும் என்பதனையும் தெரிவித்தவராவர்-
பத்ரம் புஷ்பம் இத்யாதி -பச்சிலை மலர் பழம் நீர் ஆகிய இவற்றை எவன் ஒருவன் அன்போடு கொடுக்கின்றானோ,
தூய மனத்தினனான அவனால் பத்தியோடு கொடுக்கப்பட்ட அவற்றை நான் உண்கிறேன்,’ என்பது ஸ்ரீ கீதை.
இதனால், பொருள்களின் உயர்வு தாழ்வு பார்க்கின்றான் இல்லை; இடுகிறவன் நெஞ்சில் ஈரமே பார்க்கிறான்;
அஸ்னாமி- இப்படித் தரப்பட்டவற்றை மனோரத பதத்துக்கும் அவ்வருகானவை கைப்புகுந்தாற்போன்று நினைக்கிறான்;
அல்லது, அவன் அன்பினால் கலங்கித் தருமாறு போன்று, இறைவனும் கலங்கி அடைவு கெட
விநியோகம் கொள்ளுகிறான் என்பன விளங்குதல் காண்க.
அந்யாத் பூர்ணாதபாம் கும்பாத் இத்யாதி ‘ஸ்ரீகிருஷ்ணனானவன், பூர்ண கும்பத்தைக் காட்டிலும் வேறு ஒன்றையும் விரும்பான்;
அவனுடைய திருவடிகளைக் கழுவுதலே சாலும்; அதனைத் தவிர வேறு ஒன்றனையும் விரும்பான்,’
என்பது மகாபாரதத்தில் சஞ்சயன் கூற்று.
நச்சேதி- இதனால், ஒருவன் இறைவனை ஆராதனை புரிதல் வேண்டும் என்று முயன்ற அளவிலேயே
அவனுக்கு வயிறு நிறையும் என்பது பெறுதும்.
ஏகாந்தகத புத்திபி ‘இறைவனாகிய தன்னை அன்றி வேறு ஒரு பலனையும் விரும்பாத பெரியோர்களால்
தூய்மையான மனத்துடன் செய்யப்படும் காரியங்கள் எல்லாவற்றையும்,
சிரஸா பிரதி க்ருஹ்ணாதி-தேவ தேவனாகிய பகவான் தானே தலையால் ஏற்றுக் கொள்ளுகிறான்,’ என்பது மோக்ஷ தர்மம்.
இதனால், தூய்மையான மனம் ஒன்றுமே வேண்டுவது என்பதும், அவன் செய்யும் காரியங்கள் அனைத்தும் யா க்ரியாஸ்
ஸம்ப்ரயுக்தாஸ் ஸ்யு -அபிமத விஷயத்தின் பரிமாற்றம் போலே உத்தேஸ்யமாய்த் தோற்றும் என்பதும்,
அவற்றில் ஒன்றையும் விடான் என்பதும், எல்லாருடைய தொழில்களையும் காலாலே கொள்ளப் பிறந்தவன்,
இவன் காலாலே போகட்டவற்றையும் அவன் தலையாலே சுமப்பான் என்பதும்,
ஸ்வயம் -செவ்வக் கிடப்பு உண்டாயினும் மஹிஷீ ஸ்வேதத்துக்கு ஆள் இட ஒண்ணாதது போன்று,
அவ் வேலைகளைத் தானே செய்வான் என்பதும் போதருதல் காண்க.
இவற்றால், இறைவனை அடைதல் எளிது என்பது போதரும்.
ஆக, இப்படிகளாலே, இறைவன் எளிதில் ஆராதிக்கத் தக்கவன் என்பதனை அருளிச் செய்கிறார் இத்திருவாய்மொழியில்.
————
உதீர்ண சம்சார தவ ஆஸூஸூ ஷணிம்
ஷாணோத நிர்வாப்ய பராம் ஸ நிர்வ்ருதிம்
ப்ரயச்சதி தவச் சரணா ருணாம் புஜ
த்வய அநு ராக அம்ருத ஸிந்து ஸீகர–29-
தவச் சரணா ருணாம் புஜ
த்வய அநு ராக அம்ருத ஸிந்து ஸீகர–உனது செந்தாமரை திருவடியை இணையைப் பற்றின
அன்பாகிய அமுதக்கடலின் ஒரு திவலையானது
உதீர்ண சம்சார தவ ஆஸூஸூ ஷணிம்–மேன்மேலும் ஜ்வலிக்கின்ற சம்சாரம் ஆகிய காட்டுத்தீயை
ஷாணோத நிர்வாப்ய –ஒரே நொடிப் பொழுதில் தனித்து விட்டு
பராம் ஸ நிர்வ்ருதிம் ப்ரயச்சதி –மேலான இன்பத்தையும் தருகின்றது
அநுராக-
திருவடிகளில் அத்யவஸா யாத்மகமான ருசி -என்னுதல்
பிரபத்தி பலமாய் கைங்கர்ய உபகரணமான பக்தி -என்னுதல்
ப்ரீதி காரிதம் இறே கைங்கர்யம்
பிரபத்தி தான் வேணுமோ -அஞ்சலியே போதும் என்றார் கீழ் –
அதுவும் வேணுமோ நெஞ்சிலே சிறிது ஆசை இருந்தாலே போதுமே என்கிறார் இதில்
தீயை அணைக்கத் தண்ணீர் வேண்டுமே –
சம்சார காட்டுத்தீயை ஒரு நொடிப்பொழுதில் அணைக்க அம்ருத சாகர திவலையே போதும் என்கிறார்
அவ்வதிகாரிக்கு பலத்துக்கு விளம்பம் இல்லை என்கிறார்
ஆஸூஸூ ஷணி-என்று அக்னிக்குப் பெயர்
அநந்ய ப்ரயோஜன பக்தி கேசம் உண்டானால் -அது பரம பக்தி தசையை அடைந்து –
சம்சார விமோசனத்தைப் பிறப்பித்து நித்ய கைங்கர்யச் செல்வத்தையும் அளித்திடும் –
ந தர்ம நிஷ்ட்டோஸ்மி -என்கிற இது வாசிக ப்ரபத்தியாய்
த்வத் அங்க்ரி உத்திஸ்ய -என்றது காயிக ப்ரபத்தியாய்
இதில் மானசமான பிரபத்தி -என்னவுமாம்
————–
விலாஸ விக்ராந்த பர அவர ஆலயம்
நமஸ் யதார்த்தி ஷபணே க்ருத ஷணம்
தனம் மதீயம் தவ பாத பங்கஜம்
கதா நு சாஷாத் கரவாணி சஷூஷா—30-
விலாஸ விக்ராந்த பர அவர ஆலயம்–விளையாட்டாகவே அளக்கப்பட்ட மேல் உலகங்களையும்
கீழ் உலகங்களையும் உடையதும்
பரர் ஆலயம் -ப்ரஹ்மாதிகள் லோகம் -மேல் லோகம் -அவர லோகம் -மனுஷ்ய லோகம் -கீழ் உலகம்
நமஸ் யதார்த்தி ஷபணே-சேவிப்பவர்களின் துன்பங்களைத் தொலைப்பதில்
க்ருத ஷணம்-போது போக்கு உடையதும்
ஆஸ்ரித ரக்ஷணத்துக்காகவே கை ஒழிந்து இருக்கும் திருவடிகள் அன்றோ
தனம் மதீயம் தவ பாத பங்கஜம்-எனது செல்வமுமாய் உள்ள உனது திருவடித் தாமரையை
வைத்த மா நிதி -திருவாய் மொழி -6-7-11-என்கிறபடியே
எனக்கு ப்ராப்யமுமாய் பிராபகமுமாய் உள்ளத்தை-சர்வ ஸூ லபமுமாய் ஆஸ்ரித வத்ஸ்லமுமாய்
நிரதிசய போக்யமுமான திருவடிகளை
கதா நு சாஷாத் கரவாணி சஷூஷா–எப்பொழுது கண்ணால் சேவிக்கப் போகிறேன்
சஷூஷா-திருநாட்டில் சதா பஸ்யந்தி சொல்லுகிறார் இல்லை –
திவ்ய சஷூஸ் -அர்ஜுனனுக்குத் தந்து அருளினது போலே தமக்கும் வேண்டும் என்கிறார்
நெஞ்சு என்னும் உள் கண்ணால் காண விரும்புகிறார்
பரமபத பிராப்தியும் சொல்லுகிறார் என்னவுமாம்
அவனைக் கிட்டும் வழியின் ஸுவ்கர்யத்தை அருளிச் செய்து இது முதல்
அடுத்த -17-ஸ்லோகங்களால் வைலக்ஷண்யத்தை பரக்க அருளிச் செய்கிறார் –
இதுவரை ஸ்ரீ மந்த்ர ரத்ன பூர்வ கண்டம் -மேல் ஸ்ரீ த்வயத்தின் உத்தர கண்டம்
இதிலும் அடுத்த ஸ்லோகத்திலும் திருவடியை சேவிப்பதில் கரை புரண்டு ஓடும் தமது த்வராதிசயத்தை அருளிச் செய்கிறார்
தாவி வையம் கொண்ட தடம் தாமரைகட்கே கூவிக் கொள்ளும் காலம் இன்னம் குறுகாதோ
அன்று தேர் கடாவிய பெருமான் கனை கழல் காண்பது என்று கொலோ கண்களே
சாஷாத்காரத்தில் த்வரை மிக்கு பதறி அருளிச் செய்கிறார்
ஆஸ்ரித ஆர்த்தியை அடியோடு அகற்ற வியாபாரிக்கும் -பரம புருஷார்த்தமாயும் இருக்கும் திருவடிகள் அன்றோ
—————————————-
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ காஞ்சி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ ஆளவந்தார் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –
Leave a Reply