ஸ்ரீ மத் ரஹஸ்ய த்ரய சாரம் –சம்பிரதாய ப்ரக்ரியா பாகம் –அதிகாரம் -31–ஸ்ரீ வேதாந்த தேசிகன் ஸ்வாமி–

ஸ்ரீ மான் வேங்கட நாதார்ய கவிதார்க்கிக கேசரீ
வேதாந்தாசார்ய வர்யோமே சந்நிதத்தாம் சதா ஹ்ருதி —

சீரொன்று தூப்புல் திருவேங்கடமுடையான்
பாரொன்றச் சொன்ன பழ மொழியில் ஓரொன்று
தானே அமையாதோ தாரணியில் வாழ்வார்க்கு
வானேறப் போமளவும் வாழ்வு –

—————————————————————————

அஸிதில குரு பக்தி தத் ப்ரஸம்சாதி சீல
பிரசுர பஹு மதி தத் வஸ்து வாஸ்து ஆதிகே அபி
குணவதி விநி யோக்தும் கோபயந் சம்ப்ரதாயம்
க்ருதவித் அநக வ்ருத்தி கிம் ச விந்தேத் நிதாநம்

இவ்வர்த்தங்களை எல்லாம் மிடியனுக்கு அகத்துக்குள்ளே மஹா நிதியைக் காட்டிக் கொடுக்குமா போலே
வெளியிடுகையாலே மஹா உபகாரகனான ஆச்சார்யன் திறத்தில் சிஷ்யன்

க்ருதஞ்ஞனாய் இருக்க வேண்டும் என்றும் -த்ரோஹம் பண்ணாது ஒழிய வேண்டும் என்றும் –
சாஸ்திரங்கள் சொன்ன இடம் -இரண்டு விபூதியும் விபூதி மானும் இவனைச் சீச் சீ என்னும் படியுமாய் –
ஹிதம் சொன்ன ப்ரஹ்லாத விபீஷணாதிகளுக்குப் பிரதிகூலரான ஹிரண்ய ராவணாதிகளோடே துல்யனுமாய்
வித்யா சோரோ குருத்ரோஹீ வேதேஸ்வர விதூஷக –த ஏதே பஹு பாப்மாந -சத்யோ தண்டயோ இதி சுருதி –என்கிறபடியே
தண்டியனும் ஆகாமைக்காக அத்தனை –பிரதியுபகாரம் சொன்னபடி அன்று

சரீரம் அர்த்தம் பிராணம் ச ஸத் குருப்யோ நிவேதயத் –விஹஹேச்வர சம்ஹிதை –என்றும்
சர்வஸ்வம் வா ததர்த்தம் வா ததர்த் தார்த்தார்த்தம் ஏவ வா டு குரவே தக்ஷிணாம் தத்யாத் யதா சக்த்யபி வா புந –என்றும்
இப்புடைகளில் சொல்லுகிறவையும்
பிரணிபாத அபிவாத நாதிகளைப் போலே இவனுக்கு சில கர்த்தவ்யங்களைச் சொல்லிற்று அத்தனை போக்கி
க்ருபயா நிஸ்ப்ருஹோ வதேத்—சாண்டில்ய ஸ்ம்ருதி -1-115-என்னும்படி இருக்கிற
அநந்ய ப்ரயோஜனனான ஆச்சார்யனுக்குப் பிரதியுபகாரம் சொன்னபடி அன்று

பகவான் பக்கல் போலே ஆச்சார்யன் பக்கலிலே வர்த்திப்பான் என்றும் அவனுக்கு நல்லன் ஆனால் போலே
ஆச்சார்யனுக்கும் நல்லனாய் இருப்பான் என்றும் வேதாந்தங்களில் சொன்னதும்
ந பிரமாத்யேத் குரவ் சிஷ்யோ வாங் மன காயா கர்மபி டு அபி பஜ்யாத்மநா ஆச்சார்யம் வர்த்ததே அஸ்மின் யதா அச்யுதே
தேவ மிவாசார்யம் உபாஸீத -என்று சாண்டில்ய ஆபஸ்தம்பாதிகள் சொன்னதாவும் ஆச்சார்யனுக்கு பிரதியுபகாரம் சொன்னபடி அன்று
ஸாஸ்த்ர சஷுஸ் ஸான இவன் விழி கண் குருடன் ஆகாமைக்கும் பகவத் அனுபவம் போலே
விலக்ஷணமான இவ்வனுபவத்தை ஜென்ம பிஷுவான இவன் இழவாமைக்கும் சொல்லிற்று அத்தனை

இப்படி இவ்விஷயத்தில் பிரதியுபகாரம் இல்லை என்னும் இடத்தை
ப்ரஹ்ம வித்யா பிரதாநஸ்ய தேவைரபி ந சக்யதே -பிரதி பிரதானம் அபி வா தத்யாத் சக்தித ஆதாராத் -1-117–என்று
சாண்டில்ய பகவான் அருளிச் செய்தான் –
இதில் யதா சக்தி தாநம்–சொன்னதுவும் தன் ஆதாரத்துக்குப் போக்கு வீடாகச் சொன்னது அத்தனை
இவ்வளவைக் கொண்டு பிரதியுபகாரம் பண்ணினானாகத் தன்னை நினைத்து இருக்கப் பெறான்

இவன் உபதேசித்த அர்த்தங்களை
கபாலஸ்தம் யதா தோயம் ஸ்வ த்ருதவ் ச யதா பயஸ் த்ருஷ்டம் ஸ்யாத் ஸ்தாந தோஷேண
வ்ருத்தி ஹீநே ததா ஸ்ருதம் –சாந்தி பர்வம் -35-42-மண்டை ஓட்டில் தண்ணீரும் நாய் தோலால் செய்யப்பட பையில்
உள்ள பாலும் உள்ள இடங்கள் காரணமாக தோஷம் ஆவது போலே ஒழுக்கம் இல்லாவனுக்கு உபதேசமும் -என்கிறபடியே
தன் விபரீத அனுஷ்டானங்களாலே கபாலஸ்த தோயாதிகளைப் போலே அனுப ஜீவ்யம் ஆக்காது ஒழியவும்

யச்ச் ருதம் ந விராகாய ந தர்மாய ந சாந்தயே -ஸூ பத்தமபி சப்தேந காகவசிதமேவ தத் –எந்த கல்வியானது
வைராக்யம் தர்மம் அடக்கம் ஆகியவற்றை அளிக்க வில்லையோ அது காக்கையின் ஒலி போலே பயன் அற்றதே ஆகும் –
என்கிறபடியே கற்றதே பிரயோஜனம் ஆகாது ஒழியவும்
இவற்றைக் கொண்டு–கக்கியதை உண்பவது போலே – வாந்தாசியாகாது ஒழியவும்-வியாபாரம் ஆக்குதல் கூடாது
இவற்றை எல்லாம்
பண்டிதை ரர்த்த கார்பண்யாத் பண்ய ஸ்த்ரீபிரிவ ஸ்வயம் -ஆத்மா சம்ஸ்க்ருத்ய சம்ஸ்க்ருத்ய பரோபகரணீ க்ருத —
விலைமாதர்கள் உடம்பைக் கொடுத்து பணம் பெறுவது போலே -கல்வியை பொருளாசைக்கு பயன் படுத்துவது போலே —
இத்யாதிகளில் பரிகசிக்கும் படி
கணிக அலங்காரம் ஆக்குதல் -விலைச் சாந்தம் ஆக்குதல் -அம்பலத்தில் அவல் பொறி ஆக்குதல் –
குரங்கின் கையில் பூ மாலை ஆக்குதல் செய்யாது ஒழியவும்

அடியிலே வித்யை தான் சேவதிஷ்டே அஸ்மி ரக்ஷ மாம் –மனு ஸ்ம்ருதி -2-114-நான் உனக்கு சேம நிதியாகவே
எப்போதும் இருப்பேன் -என்னை நீ காப்பாயாக – என்று ப்ராஹ்மணனை அபேக்ஷித்த படியே முன்பே
அஸூயாதிகளைக் கைப்பிடித்து வைப்பார் கையில் காட்டிக் கொடுக்காதே ரக்ஷித்துக் கொள்ளவும்

பிறவிக் குருடனான தன்னை அயர்வறும் அமரர்கள் பரிஷத்துக்கு அர்ஹனமாம் படி திருத்தின மஹா உபாகாரகனுக்குச்
செய்யலாம் பிரதியுபகாரம் இல்லை என்னும் இடத்தை தெளிந்து
ஏகாந்தீ வ்யபதேஷ்டவ்யோ நைவ க்ராம குலாதிபி -விஷ்ணு நா வ்யபதேஷ்டவ்ய தஸ்ய சர்வம் ச ஏவ ஹி —
ஸ்ரீ விஷ்வக் சேந சம்ஹிதை —என்கிற நிலையிலும் காட்டில்
வசிஷ்ட வ்யபதேசிந –பால காண்டம் -19-2-வசிஷ்டரைக் கொண்டு உன்னை கூறிக் கொள்கின்ற – என்கிறபடியே
சரண்யனான பெருமாள் வம்ச க்ரமா கதமாகப் பிறந்து படைத்துக் கைக்கொண்ட நிலை இந் நிலை–
ஆச்சார்யரைக் கொண்டே அடையாளப்படுத்தி கொள்வது என்று பரிக்ரஹித்து
என்னைத் தீ மனம் கெடுத்தாய் உனக்கு என் செய்கேன் –திருவாய் -6-7-8-என்று இருக்கவும் பிராப்தம்

தான் இப்படிப் பெற்ற ரஹஸ்யத்ரய சாரார்த்தமான மஹா தனத்தை முன்னில் அதிகாரத்தில் சொன்னபடியே
உசித ஸ்தானம் அறிந்து சமர்ப்பிக்கும் போது
கதயாமி யதா பூர்வ தஷாத்யைர் முனி சத்தமை–ப்ருஷ்ட ப்ரவோச பகவான் அப்ஜயோநி விதாமஹ சைத்தோக்தம்
புருகுத்ஸாய பூபுஷே நர்மதாதடே -ஸாரஸ்வதாய தே நாபி மம சாரஸ்வ தேந ச -ஸ்ரீ விஷ்ணு புராணம் 1-2-8-/-9—
முன்பு தாமரையில் உதித்த நான்முகன் தக்ஷர் போன்ற முனிவர்களால் கேட்கப்பட்டு அவர்களுக்கு உரைக்க –
அவர்களால் நர்மதையின் கரையில் புருகுத்சன் என்ற அரசனுக்கு உபதேசிக்க -அந்த அரசன் ஸாரஸ்வதனுக்கு உபதேசிக்க –
அதனை நான் உனக்குக் கூறுகிறேன் – என்று ஸ்ரீ பராசர ப்ரஹ்மரிஷி மைத்ரேய பகவானுக்கு அருளிச் செய்தது போலே
குரு பரம்பரையைப் பிரகாசிப்பித்துக் கொண்டு தன் க்ருதஜ்ஞதையும் அர்த்தத்தை சீர்மையும் தோற்ற உபதேசிக்க வேண்டும் –

அத்யாத்ம ரஹஸ்யங்களைச் சொல்லுமவன் சம்ப்ரதாயம் இன்றிக்கே இருக்க -ஏடு பார்த்தாதல் -சுவர் ஏறிக் கேட்டதாதல் –
சொல்லுமாகில் -களவு கொண்டு ஆபரணம் பூண்டால் போலே கண்டார்க்கு எல்லாம் தான் அஞ்ச வேண்டும்படியாம்
யத்ருச்சயா ஸ்ருதோ மந்த்ரஸ் சந்நே நாதச் சலேந வா பத்ரேஷிதோ வா வ்யர்த்த –
ஸ்யாத் ப்ரத்யுதா நார்த்ததோ பவேத் —பாத்ம சம்ஹிதை –இத்யாதிகளில் படியே ப்ரத்யவாய பர்யந்தமுமாம்
கேட்டுச் சொல்லச் செய்தே –தத் வித்தி ப்ரணி பாதேந பரிப்ரச்நேந சேவயா–ஸ்ரீ கீதை -4-34-
ப்ரணிபத்யாபி வாத்ய ச –ஸ்ரீ விஷ்ணு புராணம் -1-1-1-இத்யாதிகளில் சொல்லுகிற முறை ஒழியக் கேட்டுச் சொல்லுமாகில்
காலன் கொண்டு ஆபரணம் பூண்டால் போலே
கண்டார் எல்லாரும் தன்னை அருவருக்கும் படியும்
யச் சா தர்மேண விப்ரூதே யச்சாதர்மேண ப்ருச்சதி தயோர் அந்யதரஸ் ப்ரைதி வித்வேஷம் வா
அதி கச்சதி -சாந்தி பர்வம் -335-51–என்கிறபடியே அநர்த்தவஹமுமாம் –

யதா நியாயம் கேட்டுச் சொல்லச் செய்தே சொல்லும் போது குருவைப் பிரகாசிப்பியாது ஒழியுமாகில்
இவன் சொல்லுகிற அர்த்தங்கள் வேர் இல்லாக் கொற்றான் போலே அடி அற்றவையோ என்று
சிஷ்யனுக்கு அதி சங்கை பிறக்கும்படியாய் அநாதர விஷயமுமாம்
ஸ்வ குரூணாம் ஸ்வ சிஷ்யேப்யஸ் க்யாபநம் சாக்ருதம் ததா-என்று த்வாத்ரிம்சத் அபசார வர்க்கத்தில்
குருவைப் பிரகாசிப்பியாது ஒழிகையும் படிக்கப்பட்டது
அப்போதும் குரும் பிரகாச யேத்தீமாந் மந்த்ரம் யத்நேந கோபயேத் -அப்ரகாச ப்ரகாசாப்யாம் ஷீயேதே சம்பதாயுஷீ —
குருவை வெளிப்படுத்த வேண்டும் -மந்த்ரத்தை மறைக்க வேண்டும் -குருவை வெளிப்படுத்தாமல் மந்த்ரத்தை
மறைக்காமல் இருந்தால் ஞானமும் நிஷ்டையும் தேயும் -என்கிறபடியே
ஞான வைஸத்ய பூர்வகமான பகவத் அனுபவ சம்பத்தும் ஆத்மாவுக்கு சத்தா அனுவ்ருத்தி ஹேதுவான
சேஷத்வ அனுசந்தான பூர்வக ஸ்வ நிஷ்டையும் குலையும்படியாம்
குருவைப் பிரகாசிப்பியா நிற்கச் செய்தே அவன் பண்ணின சாஸ்த்ரீய உபதேசத்துக்கு விருத்தம் சொல்லுமாகில்
விப்ரலம்பகன் என்று பேருமாய்
ஜ்யோதிஷாம் வ்யவஹாரம் ச பிராயச்சித்தம் சிகித்சனம் –விநா ஸாஸ்த்ரேண யோ ப்ரூயாத் தமாஹுர் ப்ரஹ்ம காதகம் —
ஜ்யோதிடம் நீதி பிராயச்சித்தம் வைத்தியம் ஆகியவற்றுக்கு ஸாஸ்த்ர முரணாக பொருள் உறைபவன்
ப்ரஹ்மஹத்தி செய்தவனே –என்கிறபடியே பாபிஷ்டனுமாம்

ஸச் சிஷ்யனுக்கு ப்ராப்த தசையில் உபதேசத்தைத் தவிருமாகில் லுப்தன் என்று பேருமாய்
பாத்ரஸ்தம் ஆத்ம ஞானம் ச க்ருத்வா பிண்டம் சமுத் ஸ்ருஜேத் –நாந்தர் தாயநம் ஸ்வயம் யதா யாதி
ஜகத் பீஜம் அபீ ஜக்ருத் –தான் அறிந்த ஆத்ம ஞானத்தைத் தகுந்த சிஷ்யனுக்கு உபதேசித்த பின்னர் இறக்க வேண்டும் –
இந்த உலகின் விதை போன்ற ஆத்ம ஞானத்தை தகுந்த இடத்தில் விதைத்த பின்பே இறக்க வேண்டும் –
அவ்விதம் செய்யாமல் செல்லக் கூடாது என்கிற பகவத் ஆஜ்ஜையும் — பகவத் நியோகத்தையும் கடந்தானாம்

ஆகையால் விளக்கு பிடிக்குமவன் -தன்னை ராஜா ஒரு காரியத்துக்குப் போகச் சொன்னால் தன் கையில்
விளக்கு அதுக்கு பிராப்தரானவர் கையிலே கொடுத்துப் போமா போலே
சத் பாத்ரமானவர்க்கு தான் சொல்லும் போது தமக்கு உபதேசித்த ஆச்சார்யனை முற்பட வெளியிட்டு பின்பு
தனக்கு உபதிஷ்டமான அர்த்தங்களையே சொல்லவும் –
சில காரணங்களாலே திவ்ய சஷுஸ் ஸ்ரோத்ரங்கள் பெற்றுத் தான் இவற்றால் அறிந்து சொல்லுமவற்றையும்
வ்யாஸ பிரஸாதாத் ஸ்ருதவாந் ஏதத் குஹ்யமஹம் பரம் -யோகம் யோகேஸ்வராத் கிருஷ்ணாத் சாஷாத்
கதயதஸ் ஸ்வயம் –ஸ்ரீ கீதை -18-75-சஞ்சயன் கூற்று -ஸ்ரீ வ்யாஸ பகவான் அருளால் தெய்விகமான பார்வை பெற்ற
நான் நேராக இந்த ரஹஸ்யத்தை ஸ்ரீ கிருஷ்ண பகவான் இடம் கேட்டேன் –என்கிறபடியே
சதாசார்யர் பிரசாதம் அடியாக இவ்வர்த்தம் அறிந்தேன் என் கை மிடுக்காலே அறிந்து சொல்லுகிறேன் அல்லேன் என்ற
இவ் உண்மையை வெளியிட்டுக் கொண்டு சொல்லவும் பெறில்
இவன் சொல்லும் அர்த்தங்கள் எல்லாம் சர்வர்க்கும் ஆதரயணீயங்களுமாய்
இவன் க்ருதஞ்ஞனாய் இருந்தான் என்று சாத்விகரும் ப்ரஸம்ஸித்துப் பிரசாதிக்கும் படியாய் சத்யவாதியாய் இருந்தான்
என்று உபநிஷத்துக்களும் உபநிஷத் ப்ரதிபாத்யனான பரம புருஷனும் தங்களோடு ஓக்க
இவனைப் பிராமண பூதன் என்று ஆதரிக்கும் படியுமாம் –
இப்படி க்ருதஞ்ஞனாய் அவஹிதனான சிஷ்யனைப் பற்ற நாம் செய்த கிருஷி பலித்தது என்று
ஆச்சார்யனும் க்ருதார்த்தனாய் இருக்கும்

சாஷாந் முக்தே ரூபாயாந் யோ வித்யா பேதாநுபாதிசத்
கத்யதே மோக்ஷ சாஸ்த்ரேஷு ச து ஸ்ரேஷ்ட தமோ குரு

மோக்ஷத்துக்கு நேரடியான உபாயங்களாக வித்யைகளை உபதேசிக்கும் ஆச்சார்யனே மோக்ஷம் குறித்த
சாஸ்த்ரங்களால் மிகச் சிறந்த ஆச்சார்யன் -என்று கொண்டாடப்படுகிறார்

ஆசார்ய வத்தயா மோக்ஷம் ஆமநந்தி ஸ்மரந்தி ச
இஹா முத்ர ச தத் பாதவ் சரணம் தேசிகா விது

ஆச்சார்யரை அடைவதன் மூலம் மோக்ஷம் கிட்டுவதாக உபநிஷத்துக்கள் கூறுகின்றன
இந்த உலகிலும் மோக்ஷம் பெற்ற பின்னரும் ஆச்சார்யருடைய திருவடிகளே தஞ்சம் என்று ஆச்சார்யர்கள் அறிந்தார்கள்

ஏற்றி மனத்து எழில் ஞான விளக்கை இருள் அனைத்தும்
மாற்றினவருக்கு ஒரு கைம்மாறு மாயனும் காண கில்லான்
போற்றி உகப்பதும் புந்தியில் கொள்வதும் பொங்கு புகழ்
சாற்றி வளர்ப்பதும் கற்றல்லவோ முன்னம் பெற்றதற்கே

நாம் செய்யும் அனைத்தும் அவர் உபகாரத்தைக் காணும் போது அற்பமே

அத்யா சீன துரங்க வக்த்ர விலஸத் ஜிஹ்வா அக்ர ஸிம்ஹாஸனாத்
ஆசார்யாத் இஹ தேவதாம் சமாதிகாம் அந்யாம் ந மந்யாமஹே
யஸ்ய அசவ் பஜேத கதாசித் அஜஹத் பூமா ஸ்வயம் பூமிகாம்
மக்நாநாம் பவிநாம் பவார்ணவ சமுத்தாராய நாராயண

சம்சார கரையைத் தாண்டுவிக்கவே பகவான் தனது மேன்மையைக் கைவிடாமல் ஆச்சார்ய பதம் வகிக்கிறான்
ஆச்சார்யர் நாக்கு நுனி ஸ்ரீ ஹயக்ரீவ பகவானது ஸிம்ஹாஸனமாகும்
அவரைக் காட்டிலும் எந்த தேவதையையும் நாம் உயர்ந்ததாக எண்ண வில்லை –

——————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ தேசிகன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பிள்ளை லோகாச்சார்யர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: