ஸ்ரீ ஸ்தோத்ர ரத்னம்–ஸ்லோகம் -10-11-12-13-14–ஸ்ரீ காஞ்சி ஸ்வாமிகளின் ஸ்ரீ ரத்ன பிரபா வியாக்யானம்

ந அவேஷசே யதி ததோ புவ நான்ய மூநி
நாலாம் ப்ரபோ பவிது மேவ குத ப்ரவ்ருத்தி
ஏவம் நி சரக்க ஸூ ஹ்ருதி த்வயி சர்வ ஜந்தோ
ஸ்வாமின் ந சித்ர மித மாஸ்ரித வத்ஸ்லத்வம்–10-

ப்ரபோ-பகவானே
ந அவேஷசே யதி –நீ கடாக்ஷித்து அருளா விட்டால்
ததோ புவ நான்ய மூநி நாலாம் -ததஸ் அமூநி புவநாநி பவிதும் ஏவ ந அலம்-அப்போது இவ்வுலகங்கள் உண்டாகவே மாட்டா
குத ப்ரவ்ருத்தி–ஒரு காரியமும் செய்ய மாட்டா என்பதைச் சொல்லவும் வேணுமோ
ஸ்வாமின்-இப்படியே
ஏவம் சர்வ ஜந்தோ-இப்படி எல்லா உயிர்கட்க்கும்
நி சரக்க ஸூ ஹ்ருதி -இயற்கையாகவே ஸூஹ்ருதம்-நன்மை -விரும்புவானான
த்வயி -உன்னிடத்தில்
ந சித்ர மித மாஸ்ரித வத்ஸ்லத்வம்–ஆஸ்ரித வாத்சல்யமான இந்தக் குணமானது ஆச்சர்யமே இல்லையே

ஸ்தோத்ரம் பண்ணுவதற்கு அதிகாரம் உண்டு என்று ஸ்தாபித்த பின்பு ஸ்தோத்ரம் பண்ணத் தொடங்குகிறார் இது முதல்
அப்ஜ நேத்ர-என்று கீழே சம்போதித்த உடனே தண் தாமரைக் கண்களால் கடாக்ஷித்து அருளி அனுக்ரஹித்தான்
தத் ஐஷத பஹு ஸ்யாம் ப்ரஜாயேயேதி –ஸ்ருதி அடி ஒற்றி இவரும் அவேஷசே -என்று அருளிச் செய்கிறார்
ஈஷணம்-அனுக்ரஹத்தோடு கூடிய சங்கல்பம்
ஸ்வாபாவிக ஸூஹ்ருத்தாய் எல்லார் விஷயத்திலும் இருக்கும் நீ
என் விஷயத்திலும் -ப்ரீதி விசேஷமான வாத்சல்யம் காட்டி அருளுவது ஆச்சர்யமே இல்லையே –

ஜகத் காரணத் வத்தாலே -சர்வ உத்க்ருஷ்டன் என்றும்
காரணம் து த்யேய-என்கையாலே சர்வ சமாஸ்ரயணீயன் என்றும்
ஏஷ ஹ்யேவா நந்தயாதி -என்கையாலே ப்ராப்யன் என்றும்
ஸ்ருஷ்ட்யாதிகளை தன் பேறாகப் பண்ணுகையாலே சர்வ ஸ்வாமி என்றும்
தாம் ஸ்தோத்ரத்தில் மூளும் படி முகம் காட்டுகையாலே ஆஸ்ரித வத்சலத்வமும் –சொல்லிற்று ஆயிற்று –

———-

ஸ்வா பாவிக அநவதிக அதிசய ஈசித்ருத்வம்
நாராயண த்வயி ந ம்ருஷ்யதி வைதிக க
ப்ரஹ்மா சிவச் சதமக பரம ஸ்வ ராடித்
யேதே அபி யஸ்ய மஹிமார்ணவ விப்ருஷஸதே–11-

நாராயண-நாராயணனே
ப்ரஹ்மா சிவச் சதமக பரம ஸ்வராட் -பிரமன் சிவன் இந்திரன் -இவர்களை விட சிறந்த முக்தாத்மா
இதி ஏத அபி -என்கிற இவர்கள் எல்லாரும்
யஸ்ய தே மஹிமார்ணவ விப்ருஷஸதே-யாதொரு உன்னுடைய பெருமையாகிற கடலிலே திவலையாக ஆகின்றனரோ
( தஸ்மிந் ) த்வயி-அப்படிப்பட்ட உன்னிடத்தில்
ஸ்வா பாவிக அநவதிக அதிசய ஈசித்ருத்வம்-இயற்கையான உயர்வற்ற அதிசய ஐஸ்வர்யத்தை
க வைதிக ந ம்ருஷ்யதி –எந்த வைதிகன் ஸஹிக்க மாட்டான் –சஹியாதவன் அவைதிகன் ஆவான் என்கை

ஸ்ரீ மன் நாராயணனே சர்வ ஸ்மாத் பரன்-என்பதை ஸ்தாபித்து அருளுகிறார் –
நாராயண அநுவாகத்திலே சொல்லிற்றே-
ச ப்ரஹ்மா ச சிவஸ் சேந்தரஸ் ச அக்ஷரஸ் பரம ஸ்வராட் -முக்தர்கள் கர்ம வஸ்யர்கள் என்றதே
நிரஞ்சன பரமம் சாம்யம் உபைதி -ஜகத் வியாபார வர்ஜனம் -அவனுக்கு பரதந்த்ரர்களே
ப்ரஹ்மாதிகளுக்கு சொல்லப்படும் ஏற்றம் எல்லாம் உனது பெருமையின் சிறு திவலையே
அவர்களது ஈஸ்வரத்தன்மை ஸ்வாபாவிகமும் இல்லை -அநவதிக அதிசயமும் இல்லையே –
கர்ம வஸ்யர்கள் அன்றோ –
ஸ்வாபாவிக –
இத்தால் கர்ம உபாதிகமாய் -அத்தாலே
அநித்யமாய் துக்க மிஸ்ரமான ப்ரஹ்மாதிகள் ஐஸ்வர்யத்தை வ்யாவர்த்திக்கிறது –
அநவதிக அதிசய-
இத்தால் நித்யரையும் முக்தரையும் வ்யாவர்த்திக்கிறது –
ஸ்ரீ மன் நாராயணனுடைய ஜகத் காரணத்வம்-சர்வ ஸ்வாமித்வம் -ஐஸ்வர்யம் பொறாதவர்கள்
வேத பாஹ்யர்களே அன்றோ –

——————–

கஸ்ஸ்ரீ ஸ்ரீய பரம சத்த்வ சமாஸ்ரய க
க  புண்டரீக நயன புருஷோத்தம க
கஸ்யா யுத அயுத சதா ஏக கலா அம்சக அம்சே
விச்வம் விசித்திர சித் அசித் ப்ரவிபாக வ்ருத்தம்—12-

கஸ்ஸ்ரீ ஸ்ரீய -திருவுக்கும் திருவாகிய செல்வன் யார்
பரம சத்த்வ சமாஸ்ரய க-சிறந்த சுத்த சத்வ குணத்துக்கு இருப்பிடம் யார்
பிரமன் ரஜோகுண அதிகன் -ருத்ரன் தமோகுண அதிகன் அன்றோ
க  புண்டரீக நயன -செங்கண் மால் யார்
உயிர்களுக்கு எல்லாம் தாயாய் அளிக்கிற தண் தாமரைக் கண்ணன் யார்
தஸ்ய யதா கப்யாசம் புண்டரீகம் ஏவம் அக்ஷிணீ
புருஷோத்தம க–புருஷோத்தமன் எனப்படுபவன் யார்
கஸ்யா யுத அயுத சதா ஏக கலா அம்சக அம்சே-எவனுடைய அநேகம் ஆயிரம் கோடி பாகங்களின் ஒரு பகுதியில்
விச்வம் விசித்திர சித் அசித் ப்ரவிபாக வ்ருத்தம்—இப்பிரபஞ்சம் முழுவதும் விசித்திரமான
சேதந அசேதன பிரிவுகளை உடையதாக இருக்கின்றது
அவனுடைய ஸ்வரூப ஏக தேசத்தில் சகல கார்ய வர்க்கங்களும் அடங்கும்

யஸ்யாயுதா யுதாம் சாம்சே விஸ்வ சக்திரியம் ஸ்திதா
மேரோரிவாணுர் யஸ்ய தத் ப்ரஹ்மாண்ட அகிலம் முநே –இத்யாதி பிரமாணங்கள்
அவனே சர்வ வியாபகன்-ப்ரஹ்மாதிகள் இவனுடைய ஏகதேசத்தில் அடங்கி உள்ளார்கள் என்பதை பறை சாற்றும்
ஸ்ரீ கீதையில் விஸ்வரூப அத்தியாயத்தில் அர்ஜுனன் வியந்து நின்றானே
அயுதம் -பதினாயிரம் கலா என்றும்
அம்சம் -ஏக தேசம் என்றும் காட்டும்

இவனே சர்வ ஸ்மாத் பரன் என்பதை த்ருடப்படுத்தி அருளுகிறார்
வேதாந்தாஸ் தத்வ சிந்தாம் முரபிதுரசி யத் பாத சிஹ்னைஸ் தரந்தி–ஸ்ரீ குணரத்னகோசம்
விசித்திரம் -தேவ மனுஷ்யாதி ரூபா பேதம்
போக்ய போக உபகரணங்கள் போக ஸ்தானங்கள் -என்கிற விபாகன்கள்
வ்ருத்தம் -நிலை நிற்கிற படியைச் சொல்லும்
இதிலும் அடுத்த இரண்டு ஸ்லோகங்களிலும் கேள்விகள்
14-ஸ்லோகத்தில் த்வத் அந்ய க –உன்னைத் தவிர வேறே யார் -ஸ்பஷ்டமாக இருக்கும்
ஆகவே நீயே பரம் பொருள் என்று விஞ்ஞாபித்து அருளுகிறார் –

———–

வேத அபஹார குரு பாதக தைத்ய பீடாத்
யாபத் விமோசன மஹிஷ்ட்ட பலப்ரதானை
கோ அந்ய ப்ரஜா பஸூ பதி பரிபாதி கஸ்ய
பாதோ தகேந ச சிவஸ் ஸ்வ சிரோத்ருதேந–13-

வேத அபஹார குரு பாதக தைத்ய பீடாத்
யாபத் விமோசன மஹிஷ்ட்ட பலப்ரதானை–இவை போன்ற இவர்கள் ஆபத்துக்களை விடுவிப்பதானாலும்
உயர்ந்த பலன்களை அளித்து அருளுவதாலும்
ஸ்ரீ ஹயக்ரீவ அவதாரம் எடுத்து -மது கைடபர்களை அழித்து வேதங்களை மீட்டு அருளி
சோமுகன் அசுரன் இடம் இருந்து ஸ்ரீ மத்ஸ்ய அவதாரம் எடுத்து அருளி
ஹம்ஸாவதாரத்தாலும் வேதங்களை அருளி
குரு பாதகம் -குரு விஷயமான மஹா பாதகம்
தைய பீடை -அந்தகாசுரன் –வ்ருகாசூரன்-ஹிரண்ய ராவணாதிகள்
ஆதி -இவை முதலாக பல ஆபத்துக்களையும் போக்கி ரஷித்து அருளினவன்
ரக்ஷணம் -அநிஷ்ட நிவ்ருத்தியும் இஷ்ட பிராப்தியும்
மஹிஷ்ட்ட பலப்ரதானை-சாமான்ய ஜீவர்களை ஈஸ்வரர் என்று கொண்டாடும் படி ஆக்கி அருளினவன்
யுக கோடி சஹஸ்ராணி விஷ்ணும் ஆராத்ய பத்ம பூ -புநஸ் தரை லோக்ய தாத்ருத்வம் ப்ராப்தவா நிதி சுச்ரும -என்றும்
ப்ரஹ்மாதயஸ் ஸூராஸ் சர்வே விஷ்ணும் ஆராத்ய தே புரா ஸ்வம் ஸ்வம் பதம் அநு பிரதா-என்றும்
கேசவஸ்ய ப்ரசாததஸ் –என்றும் பிரமாணங்கள் உண்டே
கோ அந்ய -உன்னைத்தவிர வேறே யார்
ப்ரஜா பஸூ பதி பரிபாதி கஸ்ய-பிரஜாபதியான பிராமனையும் பசுபதியான சிவனையும் ரஷிப்பார் யார்
பாதோ தகேந ச சிவஸ் ஸ்வ சிரோத்ருதேந–அந்த சிவனானவன் தனது தலையிலே தரிக்கப்பட்ட
யாருடைய ஸ்ரீ பாத தீர்த்தத்தால் பரிசுத்தனானான்
சதுமுகன் கையில் சதுப்புயன் தாளில் சங்கரன் சடையினில் தங்கிக் கதிர் முக மணி கொண்டு
இழி புனல் கங்கை –பெரியாழ்வார்
ததம்பு பரயா பக்த்யா ததார சிரஸா ஹரஸ் பாவனார்த்தம் ஜடா மத்யே –ஈஸ்வர சம்ஹிதை
யஸ் ஸுவ்சனிஸ் ஸ்ருத சரித் ப்ரவரோதகேந தீர்த்தேன மூர்த்நீ விக்ருதேன சிவச் சிவோ பூத் –ஸ்ரீ மத் பாகவதம்

இதிஹாச புராண விருத்தங்களாலே இவனே சர்வ ஸ்மாத் பரன் என்று அருளிச் செய்கிறார்

ஸ்ரீ பிள்ளைப் பெருமாள் ஐயங்கார்
மங்கை பாகன் சடையினில் வைத்த கங்கை யார் பாதத்து நீர் வனசமேவு முனிவனுக்கு மைந்தனானது இல்லையோ
செங்கையால் இரந்தவன் கபாலம் யார் அகற்றினார் -செய்ய தாளின் மலரான் சிரத்திலானது இல்லையோ
வெங்கண் வேழம் மூலம் என்ன வந்தது உங்கள் தேவனோ -வீறு வாணன் அமரில் அன்று விறல் அழிந்தது இல்லையோ
அங்கண் ஞானம் உண்ட போது வெள்ளி வெற்பு அகன்றதோ -ஆதலால் அரங்கன் அன்றி வேறு தெய்வம் இல்லையே

————

கஸ்யோ தர ரே ஹர விரிஞ்சி முக ப்ரபஞ்ச
கோ ரஷதீ மமஜ நிஷ்ட ச கஸ்ய நாபே
க்ரந்த்வா நிகீர்ய புனருத் கீரதி தவ தன்ய
க கேன வைஷ பரவாநிதி சக்ய சங்க—14-

ஹர விரிஞ்சி முக ப்ரபஞ்ச -சிவன் பிரமன் முதலான உலகம்
கஸ்ய உதரே–யாருடைய வயிற்றில் இருக்கிறது
உதரே–பிரளய காலத்தில் ப்ரஹ்மத்திடம் அனைத்தும் உள்ளனவே
நின்னுள்ளே பிறந்து இறந்து நிற்பவும் திரிபவும் நின்னுள்ளே அடங்குகின்ற -என்பதால்
திரு வயிற்றின் உள்ளே என்றது தன்னுள்ளே என்றபடி
நாராயணே பிரலீ யந்தே
லீயதே பரமாத்மனி
கோ ரஷதீ இமம் –இந்த பிரபஞ்சத்தை யார் காப்பாற்றுகிறார் –
காக்கும் இயல்பினன் கண்ணபிரான் –
(ப்ரபஞ்ச )அஜநிஷ்ட ச கஸ்ய நாபே-எவருடைய உந்தியில் நின்றும் இவ்வுலகம் உண்டாயிற்று
உய்ய உலகு படைக்க வேண்டி உந்தியில் தோற்றினாய் நான்முகனை
திரு நாபிக் கமலத்திலே நாராயணன் நான்முகனைப் படைக்க -நான்முகனும் சங்கரனைப் படைக்க
திரு நாபிக் கமலம் முதல் கிழங்காம்
த்வத் அந்ய க –உம்மை விட வேறு யார்
(இமம ) க்ரந்த்வா -இவ்வுலகத்தை ஒரு கால் அளந்தும்
க்ரந்த்வா -உள்ளும் புறமும் உறைந்து வியாபித்து நியமிக்கும் படி -சர்வ அந்தர்யாமித்வத்தை சொல்லும் என்றுமாம்
நிகீர்ய –அவாந்தர பிரளயங்களிலே -ஒருகால் விழுங்கியும்
புனருத் கீரதி -மறுபடியும் வெளி நாடு காண உமிழ்கிறான்
பாரை உண்டு பார் உமிழ்ந்து பார் அளந்து பாரை ஆண்ட பேராளன்
கேன வைஷ -இவ்வுலகம் வேறு எவனால்
பரவாநிதி சக்ய சங்க—தலைவனை உடையது என்று சங்கிப்பதற்கும் கூடியது

ராஜஸ தாமச புராணங்களிலும் கூட ப்ரஹ்மாதிகள் ஸ்ருஷ்டிக்கப்படுபவர்கள் என்றும் கர்ம வஸ்யர்கள் என்றும் உள்ளனவே
அன்று எல்லாரும் யார்யாரோ இவர்கள் எம்பெருமான் உண்டு உமிழ்ந்த எச்சில் தேவர்கள் என்று
சர்வ ஆதார -சர்வ நியாமகன்-சர்வ சேஷி நீ ஒருவனே -உனக்கே பரத்வம் பொலிகிற படியால்
வேறே சங்கைக்கும் இடம் இல்லை -என்று நிகமிக்கிறார்

ஒருவன் ஜனகனாய் -ஒருவன் ஜன்யனாய்
ஒருவன் சேஷியாய் -ஒருவன் சேஷனாய்
ஒருவன் ஸ்ரீ ய பதியாய் ஒருவன் உமாபதியாய்
ஒருவன் புண்டரீ காஷனாய் ஒருவன் விரூ பாஷனாய்
ஒருவன் கருட வாஹனாய் ஒருவன் வ்ருஷப வாகனனாய்
ஒருவன் பாதகியாய் ஒருவன் சோதகனாய்
ஒருவன் புருஷோத்தமனாய் ஒருவன் புருஷனாய்
ஒருவன் சிரஸ் ஸ்தித பாத பங்கஜனாய்-ஒருவன் பாத பாம்ஸூ மாத்ரமாய்
ஒருவன் ஸூரி த்ருச்யனாய் -ஒருவன் வேதாள த்ருச்யனாய்
இப்படி தம பரகாசங்கள் போலே
ருத்ரனுக்கும் சர்வேஸ்வரனுக்கும் நெடு வாசி உண்டு ஆகையாலே
ருத்ரனுக்கு அஸ்மத் யாதிகளோபதி ஷேத்ரஜ்ஞதையாலே
ஈஸ்வரத்வ சங்கை இல்லை
பிரம்மாவுக்கும் சமான ந்யாயத்தாலே ஈஸ்வரத்வ சங்கை இல்லை –
என்றது ஆயிற்று –

—————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ காஞ்சி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ ஆளவந்தார் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: