த்வாம் சீல ரூப சரிதை பரம ப்ரக்ருஷ்ட
சத்த் வேன சாத்த்விகதயா ப்ரபலைச்ச சாஸ்த்ரை
பரக்யாத தைவ பரமார்த்த விதாம் மதைச்ச
நைவாஸூர ப்ரக்ருதய ப்ரபவந்தி போத்தும்-15-
த்வாம் -இப்படிப்பட்ட உன்னை
சீல ரூப சரிதை –குண ரூப சரிதைகளாலும்
பரம ப்ரக்ருஷ்ட சத்த் வேன –மிகச் சிறந்த சத்வ குணத்தினாலும்
சாத்த்விகதயா ப்ரபலைச்ச சாஸ்த்ரை–சாத்வீகங்கள் என்பதினாலேயே பிரபலமான சாஸ்த்ரங்களினாலும்
பரக்யாத தைவ பரமார்த்த விதாம் மதைச்ச–பிரசித்தர்களாய் தெய்வத்தின் உண்மையை அறிந்த
மஹான்களினுடைய மதங்களினாலும்
நைவாஸூர ப்ரக்ருதய ப்ரபவந்தி போத்தும்-அஸூரத் தன்மை பொருந்திய நீசர்னல் அறிவதற்கு வல்லர் அல்லர்
எம்பெருமானைப் பற்றி அறியும் வழிகளில் ஐந்து ஆறு இங்கே அருளிச் செய்கிறார்
வேடன் வேடுவிச்சி குரங்கு இடைச்சிக்கள் முதலானோர் ஒரு நீராகக் கலந்த ஸுவ்சீல்யம்
பஹுஸ்யாம்-என்று சங்கல்பித்த சீர்மை
திவ்ய மங்கள விக்ரஹ வை லக்ஷண்யம்
வேத அபஹாராதி நிரசனாதிகள் -க்ரந்தவா நிகிய புனர் உதக்ரதி போன்ற சேஷ்டிதங்கள் –
ஆலிலை துயின்ற மற்றும் பல அதி மானுஷ சேஷ்டிதங்கள்
அப்ராக்ருத சுத்த சத்வமயத்வம் –
பரக்யாத தைவ பரமார்த்த விதாம் மதைச்ச–இதில் பரக்யாத-என்ற விசேஷணம் தைவத்துக்கும்
தைவ பரமார்த்த வித்துக்களுக்கும் –
நாராயண அநு வாக்கம் -ஸூ பால உபநிஷத் -அந்தர்யாமி பிராமணம் இத்யாதிகளில் பிரசித்தமான தைவத்தை
வியாசர் பராசர வால்மீகி மனு ஆஞ்ஞவல்கர் ஸுவ்நகர் ஆபஸ்தம்பர் ஆழ்வார்கள் போன்றவர்களை
பரமார்த்த வித்துக்கள் என்கிறார்
பாக்யசாலிகளே நன்கு அறிந்து உஜ்ஜீவிக்கிறார்கள் என்றதாயிற்று
மூடர்கள் இழந்தே போகிறார்களே என்று பரிதவிக்கிறார்
விலக்ஷண பகவத் விஷயம் இவர்கள் கண்ணில் படாமல் போனதே என்று மகிழ்கிறார் என்னவுமாம்
இவர்களைப்போலே நாம் இழந்தே போகாமல் பகவத் பரத்வத்தை அனுபவிக்கப் பெற்றோமே என்ற
உகப்பு உள்ளுறைப் பொருளாகும்
————-
உல்லங்கித த்ரிவித சீம சமாதி சாயி
சம்பாவனம் தவ பரிப்ரடிம ஸ்வ பாவம்
மாயா பலே ந பவதா அபி நிகூஹ்ய மாநம்
பஸ்யந்தி கேசித் அநிஸம் த்வத் அநன்ய பாவா–16-
உல்லங்கித த்ரிவித சீம சம அதிசாயி சம்பாவனம் –த்ரிவித அபரிச்சேதனானோ –
ஓத்தார் மிக்கார் இலையாய மா மாயவனோ என்று எல்லாம் சங்கிப்பதற்கும் கூடாததுமான
விபுத்வாத் தேச பரிச்சேத ரஹித
நித்யத்வாத் கால பரிச்சேத ரஹித
சர்வ பிரகாரித்வேன ப்ருதக் ஸ்திதி யோக்ய அவஸ்த அந்தராபாவத் வஸ்து பரிச்சேத ரஹித –
சீமை -எல்லை –
உல்லங்கித-விசேஷணம் சம அதிசாயி சம்பாவனம் -என்பதிலும் அந்வயிக்கும்
சமம் -துல்யம் அதிசாயி -மேம்பட்ட வஸ்து
தவ பரிப்ரடிம ஸ்வ பாவம்-உன்னுடைய பரத்வமாகிற ஸ்வ பாவத்தை
மாயா பலே ந பவதா அபி நிகூஹ்ய மாநம்–நீ மாயையினால் மறைத்த போதிலும்
மாயா பலம் -குணமயமான பிரகிருதியின் சாமர்த்தியம்
திவ்ய விக்ரஹத்தை இதர சஜாதீயம் ஆக்கும் ஆச்சர்ய சக்தி யோகத்தாலே -என்னுதல்
த்வத் அநன்ய பாவா–உன்னிடத்திலேயே மனம் பொருந்தி உள்ளவர்களான
பஸ்யந்தி கேசித் அநிஸம் –சில மஹான்கள் எப்போதும் சாஷாத்கரிக்கிறார்கள்
அவர்களின் திவ்ய சஷுஸ் களை பிரகிருதி மறைக்க மாட்டாதே
ஸ்ரீ மந் நாராயணனுடைய பரத்வம் சாஸ்த்ரங்களால் மட்டும் அறிந்து கொள்ளலாம் என்று இல்லாமல்
நேராக சாஷாத்கரிக்கும் மகான்களும் உண்டே
பஸ்யந்தி-பார்க்கிறார்கள் -முதலில் சாஸ்த்ரத்தால் பார்த்து அறிந்து யோக பலத்தால் சாஷாத்கரிக்கிறார்கள்
சரபங்க மகரிஷி -ததி பாண்டன் போல்வார் அறிந்து கொண்டார்களே அவதார தசையில்
அநிஸம் பஸ்யந்தி என்றும் அநிஸம் த்வத் அநன்ய பாவா -என்றும் கொள்ளலாம்
உன்னை ஒழிய வேறு நினைவு-விஷயம் – இல்லாதவர்கள் -என்னுதல்
அநிஸம்-எப்பொழுதும்
அநன்ய பாவா
உன்னை ஒழிய உபாயாந்தரம் அறியாதவர்கள் என்னுதல்
உன்னை ஒழிய வேறு பரதவ புத்தி இல்லாதவர்கள் -என்னுதல்-
—————–
யத் அண்டம் அண்டாந்தர கோ சரஞ்ச யத்
தச உத்தராணி ஆவரணாநி யாநி ஸ
குணா பிரதானம் புருஷ பரம் பதம்
பராத்பரம் ப்ரஹ்ம ச தே விபூ தய—17-
யத் அண்டம் அண்டாந்தர கோ சரஞ்ச யத்-எந்த ப்ரஹ்மாண்டமோ அண்டங்களுக்குள் இருக்கக் கூடியது எதுவோ
தச உத்தராணி ஆவரணாநி யாநி -ஒன்றுக்கு ஓன்று பத்து மடங்கு மேற்பட்டுச் சொல்லுகின்ற
அண்டங்களின் ஆவரணங்களும் எவையோ
அண்டம் -ஏக வசனமாக இருந்தாலும் சமுதாயத்தைச் சொல்லும்
ஸ குணா –சத்வம் ரஜஸ் தமஸ் என்னும் குணங்களும்
பிரதானம் புருஷ பரம் பதம்-ப்ரக்ருதியும் ஜீவாத்ம வர்க்கமும் ஸ்ரீ வைகுண்டமும்
பராத்பரம் –அசேதனங்களில் காட்டில் சிறந்த சேதன வர்க்கங்களுள் சிறந்த முக்தாத்ம நித்யாத்ம வர்க்கமும்
ப்ரஹ்ம ச –திவ்ய மங்கள விக்ரஹமும்
தே விபூ தய—உமக்கு சேஷப்பட்டவை
கீழே அருளிச் செய்த சர்வேஸ்வரத்தை த்ருடப்படுத்தி அருளுகிறார் –
அசாதாரண உபய விபூதி உக்தன் அன்றோ
ஒவ் ஒரு அண்டத்திலும் அண்டாதிபதி -சர்வ வித ஜந்துக்கள் போக்ய போக உபகரண பதார்த்தங்கள்
எல்லை அற்று இருக்குமே -இவற்றையே அண்டாந்தர கோசாரம் எனப்படுகிறது
அனைத்துக்கும் ஆதாரகன் நியாமகன் சேஷி இவனே
பிரகிருதி த்ரிவித குணங்களும் அவன் இட்ட வழக்கு
பிரதானம் -விகாரம் அற்று இருக்கும் மூலப்பிரக்ருதி
குணங்களைத் தனிப்பட பிரித்து அருளிச் செய்தது ஸாம்யாவஸ்தமான குண த்ரயமே பிரகிருதி-
குணங்களை ஜகத் காரணமாகச் சொன்ன என்னும் சாங்க்ய மத நிரசனத்துக்காக
புருஷ -பிரக்ருதியை வியாபித்து இருக்கும் ஷேத்ரஞ்ஞ சமுதாயம்
கோட்டைக்குள் நெருப்பு போலவும் எள்ளுக்குள் எண்ணெய் போலவும் பிரதானத்தில் உறைந்து இருக்குமே
அண்டாந்தர கோசரம் என்று வ்யஷ்டியைச் சொல்லுகையாலே-இது சமஷ்டி விஷயம்
ப்ரஹ்ம -ஸ்வரூபத்தை குறிக்கும் யாகிலும் இங்கே அனைத்தும் உன் விபூதிகள் என்று முடிப்பதால்
இங்கு திவ்ய மங்கள விக்ரஹமே
வ்-இவை அனைத்தும் உனக்கு ஆதேயங்கள் -நியாம்யங்கள் -சேஷங்கள்-என்றபடி –
—————
வஸீ வதாந்யோ குணவான் ருஜூஸ் ஸூசிர்
ம்ருதுர் தயாளூர் மது ரஸ் ஸ்திரஸ் ஸம
க்ருதீ க்ருதஜ்ஞஸ் த்வமஸி ஸ்வ பாவதஸ்
சமஸ்த கல்யாண குணாம்ருதோ ததி—18–
ஸ்வ பாவதஸ்–இயற்கையாகவே –இது அனைத்துக் குணங்களிலும் அந்வயம்
1-வஸீ –பிரபுவாய் -அல்லது ஆஸ்ரித பரதந்த்ரனாய் -தூது போனமை கட்டுண்ணப் பண்ணிக் கொண்டமை –
ஸ்வ இச்சையால் வந்த பாரதந்தர்யம் -கர்மம் அடியாக இல்லவே -இத்தைக் காட்டவே ஸ்வ பாவதஸ்-விசேஷணம் –
2-வதாந்யோ –உதாரனாய்–தன்னையும் தனது உடைமையையும் ஆஸ்ரிதற்கு அளிப்பவன்
3-குணவான் –ஸுவ்சீல்ய குணசாலியாய்–குண பிரகரணத்தில் குணவான் என்றாலே ஸுவ்சீல்யமே
கோன்வஸ்மின் சாம்ப்ரதம் லோகே குணவான் -என்று தொடங்கி
இஷ்வாகு வம்ச பிரபவ -பபூவ குணவத்தர ச ஹி தேவைருதீர்ண்ஸ்ய -என்கிறபடியே
சீல கார்யம் அவதாரம் -என்கை
4-ருஜூஸ் –த்ரி கரணங்களினாலும் கபடம் அற்றுச் செவ்வியனாய்
ருஜு புத்திதயா சர்வம் ஆக்யாதும் உபசக்ரமே -வால்மீகி -பெருமாள் சூர்பணை இடம்
5-ஸூசிர்–பரிசுத்தனாய் -அபிப்ராய சுத்தியும் சரீர சுத்தியும் –
நித்ய சம்சாரிகளை நித்ய சூரிகளோடே ஓக்க அருளுமவன் என்றுமாம்
6-ம்ருதுர் -ஸூ குமாரனாய் –திவ்ய மங்கள விக்ரஹ குணமும் ஆத்ம குணமும் –
மஹாத்மாக்களை க்ஷணம் நேர விஸ்லேஷம் அஸஹிஷ்ணு -பொறாதவன்
இங்கு ஆத்ம குணத்தை குறிப்பதே உசிதம்
7-தயாளூர் –இரக்கமுடையவனாய்-பிறர் துக்கம் கண்டு தானும் துக்கப்படுபவன்
வ்யசநேஷூ மனுஷ்யாணாம்
அவிகாரஸ்வபாவனாவனுக்கு பிறர் துக்கம் போக்க நினைக்கும் கருணையே என்று ஸ்ரீ தேசிகர் திரு உள்ளம்
8-மது ரஸ் –ச ரசனாய் -மதுரமான வாக் சாமர்த்தியம் -என்றும்
எனக்கு தேனே பாலே கன்னலே அமுதே திருமாலிருஞ்சோலைக் கோனே -என்னும்படி திவ்ய மங்கள விக்ரஹம் என்றுமாம் –
ரஸோ வை ச –சர்வ ரஸா –
9-ஸ்திரஸ் –ஒருவராலும் அசைக்க முடியாதவனாய் –ஆஸ்ரிதர் அபராதங்களைக் கண்டு திரு உள்ளம் சீறிக் கை விடாதவன்
தன் அடியார் திறத்தகத்து தாமரையாள் ஆகிலும் சிதகுரைக்குமேல் என் அடியார் அது செய்யார்
செய்தாரேல் நன்றே செய்தார் என்னுமவன்
10-ஸம-அனைவருடன் வாசி இன்றி ஒத்துப் பரிமாறுபவனாய் -பரம பவித்ரன் என்றவாறு
ஜாதி குண வ்ருத்தங்களைப் பாராதவன் -சமோஹம் சர்வ பூதானாம் -விஷம ஸ்ருஷ்ட்டி கர்மங்கள் அடியாகவே –
ஈடும் எடுப்புமில் ஈசன் –திருவாய் மொழி -1-6-3-
கொள்கை கொளாமை இலாதான் -திருவாய் மொழி -1-6-5-
11-க்ருதீ -நன்றி புரியுபவனாய் –தனக்கு செய்ய வேண்டிய க்ருத்யம் ஒன்றும் இல்லாதவனாய்
ஆஸ்ரித ரக்ஷணமே விரதமாகக் கொண்டவன்
ஆஸ்ரிதர் தன்னை லபித்தால் இழந்தவர்கள் பெற்றாராய் இருக்குமது அன்றிக்கே -தன் பேறாய் இருக்கை –
அபி ஷிச்ய ஸ
12-க்ருதஜ்ஞஸ் -ஆஸ்ரிதர் செய்யும் ஸ்வல்ப அனுகூல்யத்தையும் பெருக்க மதிப்பவனாய்
என் ஊரைச் சொன்னாய் –இத்யாதிகளால் மடி மாங்காய் இட்டு ஸூஹ்ருதங்களை ஓன்று பத்தாக்கிக் கொண்டு போருபவன்
ருணம் ப்ரவ்ருத்த மிவ மே ஹ்ருதயானநாப ஸ்ர்ப்பத்தி -என்று இருக்குமவன் –
சிரஸா யாசத்
அடியார்க்கு என் செய்வன் என்றே இருத்தி
தவம் சமஸ்த கல்யாண குணாம்ருதோ ததி–அஸி -நீ கல்யாண குணங்கள் எல்லாவற்றுக்கும் அமுதக் கடலாய் இராநின்றாய்
அனைத்தையும் சொல்ல சந்தஸிசில் இடம் இல்லாமையால் ஒரு பன்னிரண்டு குணங்களை எடுத்துக் காட்டி அனுபவிக்கிறார்
———–
உபர்யுபர்யப் ஜபு வோ அபி பூருஷான்
பிரகல்ப்ய தே யே சதா மித்ய நுக்ரமாத்
கிரஸ் த்வதே கைக குணாவதீ ப்ஸயா
ஸதா ஸ்திதா நோத் யமதோ அதி ஸேரதே–19-
கிரஸ்-வேத வாக்யங்களானவை
உபர்யுபர் -மேன்மேலும்
யப்ஜபு வோ அபி பூருஷான் பிரகல்ப்ய –ப்ரஹ்மாக்களையும் மநுஷ்யர்களாகக் கற்பனை செய்து
தே யே சதா மித்ய நுக்ரமாத்-தே யே சதம் தே யே சதம் என்று ஓயாமல் சொல்லிக் கொண்டே போவதானால்
த்வத் ஏகைக குண அவதீ ப்ஸயா-உன்னுடைய ஒவ் ஒரு குணத்தின் எல்லையைக் கண்டு பிடிக்க வேண்டும்
என்கிற விருப்பத்தோடு
ஸதா ஸ்திதா –எப்போதும் இருக்கின்றன -ஆகையினால்
நோத் யமதோ அதி ஸேரதே—ஆரம்ப தசையைக் கடந்து அப்பால் சொல்லவில்லையே
குணங்கள் கணக்கில்லாதவை என்பது மட்டும் இல்லை –
ஒவ் ஒரு குணமும் எல்லை காண ஒண்ணாத படி அநவதிகமாய் இருக்குமே –
ஆனந்த வல்லீ -நூறு நூறு என்று திரும்பிக் கொண்டே இருக்குமா -வர்த்தமான பிரயோகம் –
ப்ரஹ்ம ஆநந்தத்தின் அத்யந்த அபரிச்சேத் யத்தை சொன்னவாறு
ப்ரஹ்மாக்களை மனுஷ்ய ஸ்தானத்தில் வைத்து வைத்து மேலே மேலே ஓயாமல் கற்பனைகள்
நிகழ்நின்றனவே ஒழிய முடிந்த பாடு இல்லையே
அநுக்ரமம்–ஒன்றின் பின் ஒன்றாக சொல்லிக் கொண்டே போகை
கிர-வாக்குகள் அர்த்தமானாலும் இங்கு வேத வாக்குகள் –
சதா ஸ்திதா -எப்பொழுதும் உள்ள வேத வாக்குகள் என்றும் கொள்ளலாம்
யுவா ஸ்வாத் என்று உபக்ரமித்து யவ்வனம் உபதேசிகத்வம் ஆசிஷ்டத்வம் த்ரடிஷ்டத்வம் பலிஷ்டத்வம்
சர்வ பிருத்வீ பதித்வம் குணங்களும் கூறப்பட்டமையால் இவற்றின் எல்லை இல்லாதத் தன்மைகளையும் சொன்னவாறு
ஆனந்த வல்லீ தவ குண நிவஹம் யவ்வன ஆனந்த பூர்வம் -ஸ்ரீ பட்டர்
அத்யாயக இதி ஜ்ஞானம்
ஆசிஷ்ட்ட இதி சக்தி
த்ரடிஷ்ட்ட இதி வீர்யம்
பலிஷ்ட்ட இதி பலம்
தஸ்யேயம் -இதி ஐஸ்வர்யம்
குணங்களின் எல்லையைக் காணத் தொடக்கி இருக்கின்ற வேதம் என்கிற வார்த்தையே
என்றைக்கும் நிகழ்வதே அன்றி எல்லை கண்டு முடித்தது என்பதற்கு அவகாசம் இல்லையே
உயர்வரஉயர் நலம் உடையவன் என்று சொல்லத் தெரியாமல்
நான்மறைகள் தேடி என்றும் காண மாட்டாச் செல்வன் என்று திருமங்கை ஆழ்வார் அருளிச் செய்யும் படி இருப்பானே
இஸ் ஸ்லோகார்த்தம் களங்கம் இல்லாமல் அறிய ஆச்சார்யர் பாக்கள் அடி பணிந்து முயல வேண்டும்
வேதாந்த விழுப் பொருள் அன்றோ அவன் –
———-
த்வத் ஆஸ்ரிதா நாம் ஜகத் உத்பப ஸ்திதி
பிரணாச சம்சார விமோசன ஆதய
பவந்தி லீலா வித யஸ்ஸ வைதிகாஸ்
த்வதீய கம்பீர மநோ நுசாரிண–20-
த்வத் ஆஸ்ரிதா நாம் ஜகத் உத்பப ஸ்திதி பிரணாச சம்சார விமோசன ஆதயபவந்தி லீலா –உலகத்தைப் படைப்பது
காப்பது அழிப்பது மோக்ஷம் அளிப்பது-முதலிய விளையாடல்கள் உனது அடியவர்களுக்காக ஆகின்றன
வித யஸ்ஸ வைதிகாஸ்த்வதீய கம்பீர மநோ நுசாரிண–வேத விதிகளும் உன்னுடைய பக்தர்களின் கம்பீரமான
திரு உள்ளத்தைப் பின் செல்பவைகளாக இருக்கின்றன
காட்டில் எரியும் நிலா போலே இல்லாமல் உன்னுடைய அபரிமித குண மகிமைகளை அனுபவிக்க பலரும் உண்டே –
குண விபூதிகள் லீலைக்கு மட்டும் அல்ல -ஆஸ்ரிதர் ஆனந்தத்துக்காகவே
ஜகத் உத்பப ஸ்திதி பிரணாச சம்சார விமோசன ஆதய -தவ -லீலா –த்வதீய கம்பீர மநோ நுசாரிண-
தவ வைதிகாஸ்-வித யஸ்ஸ -த்வத் ஆஸ்ரிதா நாம்-பவந்தி-என்று அந்வயித்து
படைத்தல் அளித்தல் அழித்தல் மோக்ஷம் அளித்தல்-மற்றும் உனது லீலைகளை -பரமைகாந்திகளின்
திரு உள்ளத்தைப் பின் செல்லும்
ஸாஸ்த்ர விதிகளும் -எல்லாமே உன்னுடைய ஆஸ்ரிதர்களுக்கு ஆகவே ஆகின்றன
அவாப்த ஸமஸ்த காமன்
நின்று நின்று பல நாள் உய்க்கும் இவ்வுடல் நீங்கிப் போய்ச் சென்று சென்று ஆகிலும் ஜன்மம் கழிப்பான்
எண்ணி ஒன்றி ஒன்றி உலகம் படைத்தான் –
அனைத்தும் ஒரு சேதனன் நமக்கு அகப்படுவான் என்ற திரு உள்ளத்தால் அன்றோ
ஜகத் உத்பப ஸ்திதி பிரணாச சம்சார விமோசன ஆதய–த்வத் ஆஸ்ரிதா நாம்-லீலா — வைதிகாஸ்-வித யஸ்ஸ-
த்வதீய கம்பீர மநோ நுசாரிண–பவந்தி -என்றும் அன்வயித்து
உனது அடியவர்களான ப்ரஹ்மாதிகளுக்கு விளையாட்டாய் -உன்னுடைய கிருபாதிகளால் அவலீலையாகச் செய்யும் படி இருக்கும்
அப்படியே ஸாஸ்த்ர விதிகளும் உன்னை அடி பணிந்தவர்களுடைய ஆழ்ந்த திரு உள்ளத்தை அனுசரிக்கின்றன
சிஷ்டாசாரத்தை முதன்மையான பிரதானமாகச் சொல்லி
அதற்கு பிந்தின பிரமாணமாக வேதங்களைச் சொல்ல வேணும்
உனது ஆஸ்ரிதர்களின் பெருமை அப்படியானால் உனது பெருமையின் அளவை எண்ணவும் முடியுமோ –என்றவாறு
ப்ரஹ்ம வாதினோ வதந்தி -மனு மகரிஷி சொன்னது எல்லாம் மருந்து –
—————————————-
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ காஞ்சி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ ஆளவந்தார் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –
Leave a Reply