ஸ்ரீ விஷ்ணு சகஸ்ர நாமம்–6-முக்தனுக்கு மோஷானந்தம் தரும் ஸ்ரீ வைகுண்ட நாதன் பரமான திரு நாமங்கள் -892-911-/7-கஜேந்திர மோஷ பரமான திவ்ய நாமங்கள் -912-945-/

அநந்த ஹூத புக்போக்தா ஸூ கதோ நைகதோ அக்ரஜ
அநிர்விண்ணஸ் சதா மர்ஷீ லோகாதிஷ்டான மத்புத –95
சநாத் சநாத நதம கபில கபிரவ்யயஸ்வஸ்தி தஸ்
ஸ்வ ஸ்திக்ருத் ஸ்வஸ்தி ஸ்வஸ்தி புக் ஸ்வஸ்தி தஷிண –96
அரௌத்ர குண்டலீ சக்ரீ விக்ரம் யூர்ஜித தசாசன
சப்தாதிகஸ் சப்தசஹஸ் சிசிரஸ் சர்வரீகர –97
அக்ரூர பேசலோ தஷோ தஷிண ஷமிணாம் வர
வித்வத்தமோ வீதபய புண்ய ஸ்ரவண கீர்த்தன–98
உத்தாரணோ துஷ்க்ருதஹா புண்யோ புண்யது ஸ்வப்ன நாசன
வீரஹா ரஷணஸ் சந்தோ ஜீவன பர்யவச்தித–99
அநந்த ரூபோ அநந்த ஸ்ரீர் ஜிதமன்யூர் பயபஹ
சதுரஸ்ரோ கபீராத்மா விதிஸோ வ்யாதிசோ திஸ–100-
அநாதிர் பூர்ப்புவோ லஷ்மீஸ் ஸூ வீரோ ருசிராங்கத
ஜநாநோ ஜனஜன்மாதிர் பீமோ பீமபராக்ரம–101-

———————————————————————————

6-முக்தனுக்கு மோஷானந்தம் தரும் ஸ்ரீ வைகுண்ட நாதன் பரமான திரு நாமங்கள் -892-911-
7-கஜேந்திர மோஷ பரமான திவ்ய நாமங்கள் -912-945-

அஷ்ட சித்திகள் -838-870—33 திரு நாமங்கள்
மோஷ ப்ரதத்வம்-871-911—41 திரு நாமங்கள்
ஸ்ரீ கஜேந்திர வரதன் —-912-945—-34 திரு நாமங்கள்
ஜகத் வியாபாரம் ——–946-992—-47 திரு நாமங்கள்

—————–

6-முக்தனுக்கு மோஷானந்தம் தரும் ஸ்ரீ வைகுண்ட நாதன் பரமான திரு நாமங்கள் -892-911-

——–

அநந்த ஹூத புக்போக்தா ஸூ கதோ நைகதோ அக்ரஜ
அநிர்விண்ணஸ் சதா மர்ஷீ லோகாதிஷ்டான மத்புத –95

————–

892-அக்ரஜ
முன்னே விளங்குபவன் -பர்யங்க வித்யை
தேவிமாராவார் திரு மகள் பூமி ஏவ மற்று அமரர் ஆட்செய்வார் –வான் உயரின்பம் மன்னி வீற்று இருந்தாய் -8-1-11-

இப்படி வந்தடைந்த முக்தர்கள் அனுபவித்து மகிழும்படி பர்யங்க வித்தையில் கூறியது போல் எல்லாச் செல்வங்களும் நிரம்பி
மிக ஸூக கரமாகப் பிரகாசிப்பவர் -ஸ்ரீ பராசர பட்டர்-

ச ஆகச்சதி அபிதவ் ஜசம் பர்யங்கம் -கௌஷீதகீ -1-5-
உப ஸ்ரீ ரூப ப்ரும்ஹணம் தஸ்மிந் ப்ரஹ்மாஸ்தே தமித்தம்வித் போதேநைவ அக்ரே ஆரோஹதி
தம் ப்ரஹமாஹ கோ அஸி இதி –கௌஷீதகீ -1-5-
யா யா ப்ரஹ்மணி சிதி யா வயஷ்டி தம் சிதிம் ஜயதி தாம் வயஷ்டி வ்யச்னுதே இதி –கௌஷீதகீ -1-6-

எல்லாவற்றிற்கும் முன்னே இருப்பவர் -ஸ்ரீ சங்கரர்-

படிப்பதற்கு முன்னர் தோன்றுபவர் -ஸ்ரீ சத்ய சந்தர் –

——————

893-அநிர் விண்ண-
துயர் அற்றவன் -துயர் அறு சுடர் அடி தொழுது எழு -1-1-1-
சோம்பாது இப் பல்லுலகை எல்லாம் படைவித்த வித்தா -முன்பே 436-பார்த்தோம்
சேதனனை துயர் அறச் செய்வதில் சதா முயற்சி யுடையவன்

இப்படித் தம்மை அடைந்தவனை சம்சாரம் என்னும் படு குழியில் இருந்து கரையேற்றிய பிறகு
அவனைப் பற்றிய கவலை யற்று இருப்பவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

க்ருதக்ருத்யஸ்ததா ராமோ விஜ்வர

விரும்பியவை எல்லாம் நிரம்பி இருப்பதாலும் ஒன்றும் கிடைக்காமல் இருக்கக் காரணம் இல்லாமையாலும்
வருத்தம் அற்று இருப்பவர் -ஸ்ரீ சங்கரர் –

துன்பம் அடையாதவர் -உலகப் படைப்பு முதலிய செயல்களில் சலிப்பு அடையாதவர் -ஸ்ரீ சத்ய சந்தர் –

—————–

894-சதா மர்ஷீ
பொறுமை உள்ளவன் -எல்லா கைங்கர்யங்களையும் முக்தன் பாரிப்பு எல்லாம் அடங்க செய்வதை பொறுமை உடன் ஏற்றுக் கொள்பவன்
உற்றேன் உகந்து பணி செய்து உனபாதம் பெற்றேன் ஈதே இன்னம் வேண்டுவது எந்தாய் -10-8-10-

அது முதல் எல்லாக் காலத்திலும் முக்தன் செய்யும் கைங்கர்யங்களை பொறுத்துக் கொண்டும்
நிறைவேற்றிக் கொண்டும் இருப்பவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

சோஸ்நுதே சர்வான் காமான் ஸஹ ப்ரஹ்மணா விபச்சிதா –தைத்ரியம் 1-2-

நற் காரியங்கள் செய்து அநு கூலமாக இருப்பவர்களின் குற்றங்களைப் பொறுப்பவர் -ஸ்ரீ சங்கரர் –

அசுரர்களிடம் எப்போதும் கோபம் உள்ளவர் -நல்லோர்கள் விஷயத்தில் மன்னிக்கும் தன்மை உள்ளவர் –
ஸ்ரீ நந்தகோபனைக் காக்க வருணனிடன் சென்றவன் –ஸ்ரீ சத்ய சந்தர் –

—————————

895-லோகாதிஷ்டானம்-
உலகங்களுக்கு ஆஸ்ரயமாய் இருப்பவன் -இவற்றைத் தாங்குபவன் -இங்கு நித்ய விபூதியை குறிப்பிடுகிறது –
வானவர் நாட்டையும் நீ கண்டு கொள் என்று வீடு தரும் ஆழிப் பிரான்-3-9-9-

முக்தர்களினால் எப்போதும் பற்றப்படுபவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

அநு த்தமேஷு உத்தமேஷு லோகேஷு

மூன்று உலகங்களுக்கும் ஆதாரமானவர் -ஸ்ரீ சங்கரர் –

உலகிற்குப் புகலாக இருப்பவர் -ஸ்ரீ சத்ய சந்தர் –

————–

896-அத்புத –
அத்புதமாய் உள்ளவன் -அத்புதம் -என்றும் பாடம்
அப் பொழுதைக்கு அப்பொழுது என் ஆரா அமுதமே –
சதா பஸ்யந்தி சூரய –
பண்டு இவரைக் கண்டு அறிவது எவ் ஊரில் யாம் -பெரிய திரு மொழி -8-1-9-
கண்டவர் தம் மனம் வழங்கும் கண்ண புரத் தம்மான்
இன்னார் என்று அறியேன் அன்னே ஆழியோடும் பொன்னார் சார்ங்கம் உடைய அடிகளை
இன்னார் என்று அறியேன் -பெரிய திரு மொழி -10-10-9-
அற்புதன் நாராயணன் -8-6-10-

எக்காலமும் எல்லோராலும் எல்லா வகைகளாலும் அனுபவிக்கப் பட்டு இருந்தும் ஆச்சர்யப் படத் தக்கவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

தம் உருவம் சக்தி செய்கை ஆகியவற்றால் அற்புதமானவர் -ஸ்ரீ சங்கரர் –

ஆச்ச்சர்யமான உருவம் உடையவர் -ஸ்ரீ சத்ய சந்தர் –

—————–

சநாத் சநாத நதம கபில கபிரவ்யயஸ்வஸ்தி தஸ்
ஸ்வ ஸ்திக்ருத் ஸ்வஸ்தி ஸ்வஸ்தி புக் ஸ்வஸ்தி தஷிண –96

————-

897-சநாத்-
அனுபவிக்கப் படுபவன் -அஹம் அந்நாத-
விழுமிய முனிவர் விழுங்கும் கோதிலின் கனி -2-3-2-
எனக்கு ஆராமுதானாய் -10-10-5-

முக்தர்களால் பங்கு போட்டுக் கொண்டு அனுபவிக்கப் படுபவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

அநாதியான கால ரூபியாக இருப்பவர் -ஸ்ரீ சங்கரர் –

லாபத்தை அடையும்படி செய்பவர் -ஸ்ரீ சத்ய சந்தர் –

—————-

898-சநாதநதம –
மிகப் பழைமை யானவன்
ஆண்டு ஊழி ஊழி தோறும் அப்பொழுதைக்கு அப்பொழுது என்னாரா வமுதமே-2-5-4-
வைகல் தோறும் என் அமுதாய வானேறே -2-6-1-

மிகத் தொன்மையான வராயினும் அப்போது தான் புதிதாகக் கிடைத்தவர் போல் அனுபவிக்கத் தக்கவர் -ஸ்ரீ பராசர பட்டர்-

எல்லோருக்கும் காரணம் ஆகையால் பிரமன் முதலியோருக்கும் பழைமையாக இருப்பவர் -ஸ்ரீ சங்கரர் –

மிகவும் தொன்மையானவர் -லாபத்தைக் கொடுப்பவளான லஷ்மி தேவியைத் தம்மிடம் உடையவர் -ஸ்ரீ சத்ய சந்தர் –

————–

899-கபில –
விளக்கமுற்றவன் -காள மேகம் மின்னல் போலே பிராட்டி உடன் -ஒளி மயமான பரம பதத்தில் –
கோட்டிய வில்லோடு மின்னு மேகக் குழாம் -9-5-7-

சுற்றிலும் மின்னிக் கொண்டு இருக்கும் மின்னலின் நடுவில் உள்ள மேகம் போல் நிறமுடையவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

கபில நிறமுள்ள வடவாக்னியாக கடலில் இருப்பவர் -ஸ்ரீ சங்கரர் –

ஸ்ரீ அனுமனை ஏற்றுக் கொண்டவர் -ஸ்ரீ சத்ய சந்தர் –

—————–

900-கபிரவ்யய –
அழிவில்லா ஆனந்தம் அனுபவிப்பவன்
பெரிய சுடர் ஞான இன்பம் -10-10-10-

மாறுதல் அற்ற நித்ய ஸூகத்தைக் காப்பாற்றி அனுபவிப்பவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

கபி -சூரியன் வராஹம் அப்யய -பிரளயத்தில் உலகம் அடங்கும் இடமாக இருப்பவர் -இரண்டு திரு நாமங்கள் -ஸ்ரீ சங்கரர் –

கபி சுகத்தைப் பருகுபவர் -அப்யய -பிரளயத்தில் உலகம் லயிக்கும் இடமாக இருப்பவர் -இரண்டு திரு நாமங்கள் –
அவ்யய-என்ற பாடத்தில் காக்கப் பட வேண்டியவர்களிடம் செல்பவர் என்றுமாம் – -ஸ்ரீ சத்ய சந்தர் –

————–

901-ஸ்வஸ்தித –
மஹா மங்களங்களைக் கொடுப்பவன்
ஸ்ரீ பாஷ்யம் -சம்ஸார அக்நி விதிப நவ்ய பஹத ப்ராணாத்ம சஞ்சீவிநீ -ப்ரஹ்ம ஞானம் உள்ளவனே சத் -என்பர்
அசந்நேவச பவதி -அசத் ப்ரஹ்மேதி வேத சேத் அஸ்தி ப்ரஹ்மேதி சேத் வேத -சந்த மேநம் ததோ விது-தைத்ரியம்
இந்த மெய் ஞானம் அருளி பரம பதம் பேற்றையும் அளிப்பவன்
உயர் வினையே தரும் ஒண் சுடர்- 1-7-4-
பீதக வாடைப் பிரானார் பிரம குருவாகி வந்து போதில் கமல வன்னெஞ்சம் புகுந்தான் -பெரியாழ்வார் -5-2-8-

இப்படி மங்களத்தைக் கொடுப்பவர் -ஸ்ரீ பரசார பட்டர் –

பக்தர்களுக்கு மங்களத்தை அளிப்பவர் -ஸ்ரீ சங்கரர் –

பக்தர்களுக்கு மங்களத்தை அருள்பவர் –ஸ்ரீ சத்ய சந்தர் –

——————

902-ஸ்வஸ் திக்ருத் –
மஹா மங்களத்தை செய்பவன் –
ஸோஅஸ்நுதே சர்வான் காமான் சஹ ப்ரஹ்மணா விபச்சித –
முக்தர்களுக்கு போக மகிழ்ச்சி அளிப்பவன்
முட்டில் போகத்தொரு தனி நாயகன் -3-10-3-

தம்மைக் குணங்களுடன் அனுபவிக்கும் படி முக்தர்களை ஆசீர்வதிப்பவர் –ஸ்ரீ பராசர பட்டர் –

மங்களத்தை செய்பவர் -ஸ்ரீ சங்கரர் –

நல்லதை உண்டு பண்ணுபவர் –ஸ்ரீ சத்ய சந்தர் –

———————–

903-ஸ்வஸ்தி –
தானே மங்கள ரூபமாக இருப்பவன் –
என் அமுதினைக் கண்ட கண்கள் மற்று ஒன்றினைக் காணாவே
செங்கனி வாய் செய்ய தாமரைக் கண்ணன் கொங்கலர் தண் அம் துழாய் முடியன் -6-6-2-
மாண் குறள் கோலப் பிரான் -5-9-6-

தாமே மஹா மங்கள மூர்த்தி -ஸ்ரீ பராசர பட்டர் –

பரமானந்த ரூபமான மங்கள ஸ்வரூபி –ஸ்ரீ சங்கரர் –

எல்லா இடம் காலங்களிலும் சுகமாக இருப்பவர் -ஸ்ரீ சத்ய சந்தர் –

—————-

904-ஸ்வஸ்திபுக் –
மங்களத்தை பரிபாலிப்பவன் –
அடியேன் மேவி அமர்கின்ற அமுதே இமையோர் அதிபதியே -6-10-7-

எல்லா மங்களங்களையும் அழியாமல் காப்பவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

பக்தர்கள் மங்களத்தை அனுபவிக்கும்படி செய்பவர் -மங்களத்தை அனுபவிப்பவர் -ஸ்ரீ சங்கரர் –

சுகத்தை அனுபவிக்கும்படி செய்பவர் -ஸ்ரீ சத்ய சந்தர் –

—————-

905 -ஸ்வஸ்தி தஷிண –
மங்களத்தை யாக தஷிணையாக தருபவன் -தீர்க்க சத்திர யாகம் -செய்து தன்னை அளிக்கிறான்
எனக்கே தன்னைத் தந்த கற்பகம்
வானவர் போகம் –வானவர் முற்றும் ஒளி வண்ணன் -3-4-7-

தம் அடியார்களுக்குத் தமக்குக் கைங்கர்யம் செய்யத் தகுதியாக திவ்ய சரீரம் சக்தி முதலிய பல நன்மைகளை
தஷிணையாக அளிப்பவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

மங்கள ரூபமாக விருத்தி அடைபவர் -மங்களத்தைக் கொடுக்கும் திறமை உடையவர் –
தஷிண -விரைவு பொருளில் மங்களத்தை மிக விரைவாக அளிப்பதில் வல்லவர் -என்றுமாம் ஸ்ரீ சங்கரர் –

தஷிண -வலது பாகத்தை அலங்கரித்து இருப்பதால் தஷிணா என்று பெயருள்ள ஸ்ரீ லஷ்மியை அடைந்து இருப்பவர் –
மங்களத்தைச் செய்வதில் திறமை உடையவர் -ஸ்ரீ சத்ய சந்தர் –

————-

அரௌத்ர குண்டலீ சக்ரீ விக்ரம் யூர்ஜித தசாசன
சப்தாதிகஸ் சப்தசஹஸ் சிசிரஸ் சர்வரீகர –97

————-

906-அரௌத்ர-
கடுமை இல்லாமல் குளிர்ந்து இருப்பவன்
நலம் கடல் அமுதம் –அச்சுவைக் கட்டி -3-4-5-

எல்லாவற்றிற்கும் மேலான செல்வம் இருந்தாலும் திவ்ய கல்யாண குணக் குளிர்ச்சியால் குளிர்ந்து இருப்பவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

எல்லாம் அடைந்து இருப்பவர் -ஆதலின் ஆசை வெறுப்பு முதலியவை இல்லாதவர் -கொடிய செய்கை காமம் கோபம் ஆகிய
மூன்று கொடுமைகளும் இல்லாதவர் -ஸ்ரீ சங்கரர் –

கொடியவர் அல்லாதவர் -ஸ்ரீ சத்ய சந்தர் –

—————

907-குண்டலீ-
காதணிகளை அணிந்து இருப்பவன்
இலகு விலகு மகர குண்டலத்தன் -8-8-1-
மகர நெடும் குழைக்காதன் மாயன் -7-3-10-
மகரம் சேர் குழை இரு பாடு இலங்கி யாட -திரு நெடும் தாண்ட -21-

தம் திருமேனிக்குத் தகுதியான குண்டலம் முதலிய திவ்ய பூஷணங்களை உடையவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

ஆதி சேஷ ரூபி -சூர்யன் போலே பிரகாசிக்கும் குண்டலங்கள் உடையவர் –
சாங்க்யம் யோகம் ஆகிய இரண்டு மகர குண்டலங்களை உடையவர் – ஸ்ரீ சங்கரர் –

மகர குண்டலம் உடையவர் -ஸ்ரீ சத்ய சந்தர் –

—————–

908-சக்ரீ-
எப்போதும் கை கழலா நேமியான் நம் மேல் வினை கடிவான் -பெரிய திருவந்தாதி -87-
திவ்ய ஆபரணமாயும் ரஷையாயும்
ஆழியும் சங்கும் சுமப்பார் தாம் -8-3-3-
கூராழி வெண் சங்கு ஏந்தி கொடியேன் பால் வாராய் –ஒருநாள் காண வாராயே -6-9-1-
குனி சார்ங்கன் ஒண் சங்கதை வாள் ஆழியான் ஒருவன் -8-8-1-

அதே போலே ஸ்ரீ சக்கரத் ஆழ்வான் முதலிய திவ்ய ஆயுதங்களை உடையவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

உலகைக் காப்பதற்காக மனஸ் தத்வ ரூபமான ஸ்ரீ ஸூதர்சன சக்ரத்தை தரித்து இருப்பவர் -ஸ்ரீ சங்கரர் –

ஸ்ரீ சுதர்சனம் என்னும் சக்கரத்தை உடையவர் -ஸ்ரீ சத்ய சந்தர் –

——————-

909-விக்ரமீ-
பராக்கிரமம் உள்ளவன் –
உன்னுடைய விக்கிரமம் ஓன்று ஒழியாமல் எல்லாம் என்னுடைய நெஞ்சகம் பால்
எழுதிக் கொண்டேன் இராம நம்பீ-பெரியாழ்வார் -5-4-6-
சமுத்திர இவ காம்பீர்ய
முன்பே 76-பார்த்தோம்

தம் பெருமைக்கு உரிய திவ்ய சேஷ்டிதங்களை உடையவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

சிறந்த நடை உள்ளவர் -சிறந்த பராக்கிரமம் உடையவர் -ஸ்ரீ சங்கரர் –

பராக்கிரமம் உடையவர் -ஸ்ரீ சத்ய சந்தர் –

—————–

910-ஊர்ஜித சாசன-
பிறர் கடக்க முடியாத உறுதியான கட்டளை பிறப்பிப்பவன்-
திவ்ய ஆஞ்ஞை
ஆணை மெய் பெற நடாய தெய்வம் மூவரில் முதல்வன் -திரு வாசிரியம் -3
சர்வேச்வரேச்வரன்

பிரமன் இந்திரன் முதலானவர்களாலும் கடக்க முடியாத உறுதியான கட்டளையை உடையவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

வேதம் தர்ம சாஸ்திரம் ஆகியவைகள் ஆகிய உறுதியான கட்டளைகளை உடையவர் -ஸ்ரீ சங்கரர் –

உறுதியான ஆணை உடையவர் -ஸ்ரீ சத்ய சந்தர் –

——————–

911-சப்தாதிக –
சொல்லுக்கு எட்டாதவன்
தன் முடிவு ஓன்று இல்லாத தண் துழாய் மாலையானை –சொல் முடிவு காணேன் நான் சொல்லுவது என் சொல்லீரே -2-5-8-
யதோ வாசோ நிவர்த்தந்தே
தேநீர் கமலக் கண்களும் வந்து என் சிந்தை நிறைந்தவா
தூ நீர்க்கடலுள் துயில்வானே எந்தாய் சொல்ல மாட்டேனே -8-5-4-

ஆதி சேஷனுடைய அநேக நாவாலும் வேதங்களின் அநேக கிளைகளாலும் சரஸ்வதியினாலும் சொல்ல முடியாத
மகிமை உடையவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

சப்தத்தினால் சொல்வதற்கு உரிய ஜாதி முதலியவை இல்லாதபடியால் சப்தத்தைக் கடந்தவர் -ஸ்ரீ சங்கரர் –

சப்தத்தைக் கடந்து இருப்பவர் -ஸ்ரீ சத்ய சந்தர் –

——————————————————————-

7-கஜேந்திர மோஷ பரமான திவ்ய நாமங்கள் -912-945-

912-சப்த சஹ –
ஆர்த்த நாத கூப்பீட்டை சுமப்பவன்
ஆனைக்கு அன்று அருளை ஈந்த கண்ணன் -திருமாலை -44-
கைம்மா துன்பம் கடிந்த பிரான் -2-9-1-

கஜேந்திர மோஷம் -விலங்குகளின் தெளிவற்ற சப்தத்தையும் பெரிய பாரம் போலே பொறுப்பவர் -ஸ்ரீபராசர பட்டர் –

பக்திம் தஸ்ய அநு சஞ்சிந்த்ய

எல்லா வேதங்களாலும் தாத்பர்யமாகச் சொல்லப் படுவதனால் எல்லா சப்தங்களையும் தாங்குபவர் -ஸ்ரீ சங்கரர்-

பிருகு முனி முதலிய பக்தர்களின் மிரட்டல் ஒலி மற்றும் உதைத்தல் முதலியவற்றைப் பொறுப்பவர் -ஸ்ரீ சத்ய சந்தர் –

—————-

913-சிசிர –
வேகமாகச் செல்பவன் -பகவதஸ் த்வராயை நம-
ஆனையின் துயரம் தீரப் புள்ளூர்ந்து சென்று ஆழி தொட்டான் -பெரிய திரு மொழி -2-3-9-
போரானை பொய்கை வாய்க் கோட்பாட்டு நின்றவறி–நீரார் மலர்க்கமலம் கொண்டோர் நெடும் கையால்
நாராயணா ஒ மணி வண்ணா நாகணையாய் வாராய் என்னாரிடரை நீக்காய் -என வெகுண்டு தீராத சீற்றத்தால்
சென்றிரண்டு கூறாக ஈராவதனை இடற் கடிந்தான் எம்பெருமான் பேராயிரம் உடையான் -சிறிய திரு மடல்-

துன்பத்தில் இருப்பவரின் கூக்குரல் கேட்டதும் விரைந்து செல்பவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

ச்ருத்வா சக்ர கதாதர

தாப த்ரயங்களால் வருந்துபவர்க்குக் குளிர்ந்த இடமாக இருப்பவர் -ஸ்ரீ சங்கரர் –

மிகவும் சுகத்தை அனுபவிப்பவர் விஷயத்தில் மகிழ்பவர் -பக்தர்கள் தம்மிடம் ஓடிவரும்படி இருப்பவர் –
என்ற பாடமானால் -சந்த்ரனிடம் மகிழ்பவர் என்று பொருள் -அசுரர்களை அழிப்பவர் – -ஸ்ரீ சத்ய சந்தர் –

—————

914-சர்வரீகர –
பிளக்கும் திவ்ய ஆயுதங்களை கையில் ஏந்தியவன் -சென்று இரண்டு கூறாக
பஞ்ச திவ்ய ஆயுதங்களை -குனி சார்ங்கன் ஒண் சங்கதை வாள் ஆழியான் ஒருவன் -8-8-1-
908 சக்ரீ முன்பே பார்த்தோம்

அப்போது பகைவரைப் பிளக்கும் பஞ்சாயுதங்களையும் கையில் கொள்பவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

சம்சாரிகளுக்கு இரவாகிய ஆத்ம ஸ்வரூபத்தையும் ஞானிகளுக்கு இரவைப் போலே சம்சாரத்தையும் செய்பவர் -ஸ்ரீ சங்கரர் –

இரவில் சந்த்ரனுக்கு உள்ளிருப்பவராய்க் கிரணங்களைப் பரப்புபவர் -இரவை உண்டாக்குபவர் -ஸ்ரீ சத்ய சந்தர் –

———-

அக்ரூர பேசலோ தஷோ தஷிண ஷமிணாம் வர
வித்வத்தமோ வீதபய புண்ய ஸ்ரவண கீர்த்தன–98

—————

915-அக்ரூர –
க்ரூரம் இல்லாதவன் -முதலையை உடனே கொல்ல மனஸ் இல்லாமல் ஆழி தொட வில்லை
கானமர் வேழம் கை எடுத்து அலர கரா அதன் காலினைக் கதுவ ஆனையின் துயரம் தீரப்
புள்ளூர்ந்து சென்று நின்று ஆழி தொட்டானை-பெரிய திரு மொழி -2-3-9-
ஆயர் கோபிகள் அகரூர் கண்ணனை கூட்டி சென்றதால் க்ரூர ஹ்ருதயர் -எனப்பட்டார்

யானையைக் காக்கும் பொருட்டு கையில் ஆயுதங்களை எடுத்தும் முதலையையும் கொல்ல மனமில்லாமல்
பொறுத்து இருந்தவர் -ஸ்ரீபராசர பட்டர் –

க்ரஹாபிரஸ்தம் கஜேந்த்ரம் ச தம் க்ராஹம் ச ஜலாசயாத் உஜ்ஜஹார அப்ரமேயாத்மா தரஸா மது ஸூதந

கோபம் இல்லாதவர்–க்ரௌர்யம்-உள் தாபம் -மநோ தர்மம் -அவாப்த சமஸ்த காமர் என்பதால்
காமம் கோபம் இல்லாதவர் ஸ்ரீ சங்கரர் –

குரூரத் தன்மை இல்லாதவர் -அக்ரூரருக்குப் பிரியமானவர் -ஸ்ரீ சத்ய சந்தர் –

——————–

916-பேசல –
அழகன் -அலைய குலைய ஓடி வந்ததால் வஸ்த்ரம் மாலை திரு ஆபரணங்கள் கலைந்து இருந்தும்
அழகில் குறை இல்லாமல்
பருந்தாட் களிற்றுக்கு அருள் செய்த பரமன் -நாச் திரு -14-10-

கஜேந்த்ரனைக் காப்பாற்றுவதில் உள்ள வேகத்தினால் கலைந்த ஆடை ஆபரணங்களினால் அழகாகத் தோன்றியவர் -ஸ்ரீபராசர பட்டர் –

செய்கையிலும் மனத்திலும் வாக்கிலும் வடிவத்திலும் அழகாக இருப்பவர் -ஸ்ரீ சங்கரர் –

மனத்தைக் கவர்பவர்-ருத்ரனை பக்தனாக ஏற்றுக் காப்பாற்றுபவர் -ஸ்ரீ சத்ய சந்தர் –

——————

917-தஷ –
வேகம் உள்ளவன் -முன்பே 913 சிசிர பார்த்தோம் இந்த பொருளில் -முன்பே 424 பார்த்தோம்

விரைவாக வந்தவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

முழுமை சக்தி விரைவாக செயல்படுதல் ஆகிய மூன்றும் உள்ளவர் -ஸ்ரீ சங்கரர் –

சாமர்த்தியம் உள்ளவர் -விரைவில் சென்று விரோதிகளை அழிப்பவர் -ஸ்ரீ சத்ய சந்தர் –

—————–

918-தஷிண –
இனிய இயல்பு உடையவன் -முன்பே வந்து யானைக்கு உதவப் பெற்றிலோமே-
சாந்தவனை கஜேந்த்ரஷ்ய அனுகூல தஷிண -சொல்லி ஆஸ்வாசம் செய்து அருளினான்
தொழும் காதல் களிறு அளிப்பான் புள்ளூர்ந்து தோன்றினான் -3-1-9-

அப்படி வேகமாக வந்தும் ஐயோ உனக்கு தூரத்தில் இருந்தேனே -என்று தேற்றி கஜேந்த்ரனிடம்
அன்பு பாராட்டியவர் -ஸ்ரீ பராசர பட்டர்-

ப்ரீதி மாந் புண்டரீகாக்ஷ சரணாகத வத்சல பஜந்தம் கஜ ராஜாநாம் மதுரம் மது ஸூதந

செல்பவர் அல்லது அழிப்பவர் -ஸ்ரீ சங்கரர் –

திறமை உள்ளவர் -உதார குணம் உள்ளவர் மூத்தவர் -ஸ்ரீ சத்ய சந்தர் –

————-

919-ஷமிணாம் வர
பொறுமை உள்ளவரில் சிறந்தவன் -அபவத்தத்ர தேவேச
கைம்மா துன்பம் கடிந்த பிரான் -2-9-1-

ஸ்ரீ கஜேந்த்ரனைக் கண்ட பின்பே தம் இருப்புப் பெற்றவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

அபவத் தத்ர தேவேச –தேவாதி தேவன் தன் ஆற்றாமை தீர நின்றான்

எல்லாவற்றையும் பொறுக்கும் யோகிகளையும் பூமி முதலியோரையும் காட்டிலும் மிக உயர்ந்தவர் -உலகம் அனைத்தும் தாங்கியும்
பூமியைப் போலே பாரத்தினால் சிரமம் அடையாமல் மிக உயர்ந்தவர் -சக்தி உள்ளவர்கள் அனைவரிலும் சிறந்தவர் -ஸ்ரீ சங்கரர் –

பொறுப்பவர்களில் சிறந்தவர் -ஸ்ரீ சத்ய சந்தர் –

—————-

920-வித்வத்தம –
அறிவில் சிறந்தவன் -யானையின் ரணத்தை ஆறச் செய்த சிறந்த வைத்தியன்
உத்தரீயம் வாயில் வைத்து ஊதி உஷ்ணப்படுத்தி -புண்ணில் வைத்து வேது கொண்டவன் –
மருத்துவனாய் நின்ற மா மணி வண்ணன் –

ஸ்ரீ கஜேந்த்ரனுக்கு சிகித்ஸை அளிக்கத் தெரிந்தவர்-ஸ்ரீ பராசர பட்டர் –

ஏவமுக்த்வா குரு ஸ்ரேஷ்ட கஜேந்த்ரம் மது ஸூதந ஸ்பர்சயாமாச ஹஸ்தேந

பிறருக்கு இல்லாதன எல்லாவற்றையும் எப்போதும் அறியும் மிக உயர்ந்த ஞானம் உடையவர் -ஸ்ரீ சங்கரர் –

மிக்க ஞானம் உள்ளவர் -ஸ்ரீ சத்ய சந்தர் –

—————-

921-வீத பய
யானையின் பயத்தை போக்குபவன் -அவன் வந்த வேகம் கண்டதுமே எல்லா பயங்களும் போந்தன

தாம் வந்த வேகத்தைக் கண்டதாலேயே ஸ்ரீ கஜேந்த்ரனுக்கு பயத்தை நீக்கியவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

சம்சாரம் ஆகிய பயம் அற்றவர் -ஸ்ரீ சங்கரர் –

அச்சம் அற்றவர் -ஸ்ரீ சத்ய சந்தர் –

—————

922-புண்ய ஸ்ரவண கீர்த்தன –
கஜேந்திர சரிதம் கேட்பதை மிக்க புண்ணியமாம் படி அனுக்ரஹித்தவன் -சொல்பவர் கேட்பவர் -யாவர்க்கும் பாபங்கள் போகும்
யானையின் இடர் கடிந்த புணர்ப்பே –முதலாம் -2-8-2–கைக்குமதல் புண்ணியம்

ஸ்ரீ கஜேந்திர மோஷத்தைக் கேட்டல் நினைத்தல் உரைத்தலால் எல்லாப் பாவங்களையும் நீக்குபவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

ஸ்ருதேந ஹி குரு ஸ்ரேஷ்ட ஸ்ம்ருதேந கதிதேந வா கஜேந்திர மோஷேந நைவ சத்யஸ் பாபாத் ப்ரமுச்யதே

தம்மைப் பற்றிக் கேட்பதும் உரைப்பதும் புண்ணியம் தருவதாக இருப்பவர் -ஸ்ரீ சங்கரர் –

தம்மைப் பற்றிக் கேட்பதும் பாடுவதும் புண்ணியம் தருவதாக இருப்பவர் -ஸ்ரீ சத்ய சந்தர்-

—————

உத்தாரணோ துஷ்க்ருதஹா புண்யோ புண்யது ஸ்வப்ன நாசன
வீரஹா ரஷணஸ் சந்தோ ஜீவன பர்யவச்தித–99

—————-

923-உத்தாரண
கரை ஏற்றுமவன்-யானையையும் முதலையையும் ஒக்க கரை ஏற்று சாபம் விமோசனம் அடையச் செய்து அருளி
கம்ப மா கரி கோள் விடுத்தான் -பெரியாழ்வார் -5-1-9-

யானையையும் முதலையையும் குளத்தில் இருந்து கரையேற்றியவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

உலக வாழ்க்கையாகிய கடலில் இருந்து கரையேற்றுபவர் -ஸ்ரீ சங்கரர் –

மேம்படுத்துபவர் -துறவிகளுக்குச் சுகம் தருபவர் -ஸ்ரீ சத்ய சந்தர் –

—————-

924-துஷ்க்ருதிஹா –
தீங்கு செய்பவரைத் தொலைப்பவன்
பொல்லா அரக்கரைக் கிள்ளிக் களைந்தானை
வேழம் மூவாமை நல்கி முதலை துணித்தான் -பெரிய திருமொழி -6-8-3-

துஷ்டமான முதலையைக் கொன்றவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

ஸ்தலஸ்தம் தாரயாமாச க்ராஹம் சக்ரேந மாதவ –ஸ்ரீ விஷ்ணு தர்மம்

பாவங்களைப் போக்குபவர் -ஸ்ரீ சங்கரர் –

பாபிகளை அழிப்பவர் -ஸ்ரீ சத்ய சந்தர் –

——————

925-புண்ய
பாபங்களைப் போக்கடிப்பவன்
அனந்தன் மேல் கிடந்த எம் புண்ணியன் -திருச்சந்த -45-
அடியேன் மனம் புகுந்த புண்ணியனே -பெரிய திருமொழி -3-5-7-
முன்பே 692 பார்த்தோம்

இப்புண்ணிய சரித்திரத்தினால் நம்மைப் போன்றவர்களின் பாவங்களைப் போக்குபவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

தம்மை நினைப்பது முதலியன செய்பவர்களுக்குப் புண்ணியத்தைத் தருபவர்–
ஸ்ருதி ஸ்ம்ருதிகளால் எல்லோருக்கும் புண்யத்தையே கூறுபவர் – ஸ்ரீ சங்கரர் –

புண்ணியத்தைத் தருபவர் -ஸ்ரீ சத்ய சந்தர் –

——————-

926-துஸ் ஸ்வப்ன நாசன
கெட்ட கனவுகளை போக்குபவன்
இந்த சரித்ரம் கெட்ட கனவுகளைப் போக்கும்
எல்லா பகவ திரு நாமங்களுக்கும் இந்த மகிமை உண்டே

என்னையும் உன்னையும் இத் தடாகத்தையும் நினைப்பவர்க்குக் கெட்ட கனவு நீங்கும் -என்று கூறி உள்ளதால்
கெட்ட கனவை நீக்குபவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

யே மாம் த்வாம் ச சரஸ்சைவ
துஸ் ஸ்வப்நோ நச்யதே தேஷாம்
துஸ் ஸ்வப்நோப சாமாயாலம்

தம் தியாகம் துதி பேர் சொல்லுதல் பூஜித்தல் ஆகிய வற்றால் கெடுதலுக்கு அறிகுறியான கெட்ட கனவுகளைப்
பயன் அற்றதாக்குபவர் -ஸ்ரீ சங்கரர் –

கெட்ட கனவுகளை அழிப்பவர் –கெட்ட கனவுகளின் தீய பலன்கள் நிகழாமல் தடுப்பவர் -ஸ்ரீ சத்ய சந்தர் –

——————–

927-வீரஹா –
பாசங்களை விடுவிப்பவன் -யானையை முதலை இடம் இருந்தும் -யம பாசத்தின் நின்றும் விடுவிப்பவன்
முன்பே 168/747 பார்த்தோம்
எம்பிரான் ஏழையேன் இடரைக் களையாயே-பெரியாழ்வார் -5-1-9-
அண்ணா அடியேன் இடரைக் களையாயே -பெரிய திருமொழி -1-10-1-

யானைக்கு விரோதியைப் போக்கியவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

மோக்ஷ மா மாச நகேந்த்ரம் பா சேப்யஸ் சரணாகதம்

பலவிதமான சம்சார கதிகளைக் கெடுத்து முக்தி அழிப்பவர் -ஸ்ரீ சங்கரர் –

லிக மது அருந்துபவரை அழிப்பவர் -ஸ்ரீ சத்ய சந்தர் –

—————-

928-ரஷண-
காப்பாற்றுபவன்
ஸ்பர்சம் -அணைத்தல் – இனிய பேச்சு -மூலம் யானையைக் காப்பாற்றி அருளினவன்
நன்மையே அருள் செய்யும் பிரான் -பெரியாழ்வார் -5-1-8-

தொட்டும் தழுவியும் தேற்றியும் கஜேந்த்ரனைக் காத்தவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

சத்வ குணத்தை மேற்கொண்டு மூவுலகங்களைக் காப்பவர் -ஸ்ரீ சங்கரர் –

காப்பவர் –அரஷண-அதிகமான உத்சவங்களை உடையவர் -ஸ்ரீ சத்ய சந்தர் —

—————-

929-சந்த
வளரச் செய்பவன் -ஆஸ்ரிதர்களுக்காகவே இருப்பவன் -பக்தாநாம் -ஜிதந்தே –
சநோதி-வாரிக் கொடுப்பவன் -வள்ளல் மணி வண்ணன்

இப்படி அடியவர்களை வளர்ப்பவர் -அவர்களிடம் இருப்பவர் -அவர்களுக்கு வேண்டியதைக் கொடுப்பவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

நல் ஒழுக்கம் உடைய சாதுக்களின் உருவமாக கல்வியையும் பணிவையும் வளர்ப்பவர் -ஸ்ரீ சங்கரர்-

நல்லவர் -எங்கும் உள்ளவர் -ஸ்ரீ சத்ய சந்தர் –

————–

930-ஜீவன
உயிர் அளிப்பவன் -திரு விருத்தம் 1-
தொழும் காதல் களிறு அளிப்பான் – 3-1-9-
முதலைக்கும் உயிர் அளித்தான்
தேவலர் முனிவர் சாபத்தால் ஹூ ஹூ என்ற கந்தர்வன் முதலை ஆனான் -ஜீவனம் -என்றும் பாடம்

தம் திருக் கையால் கொல்லப் பட்டதால் முதலையையும் கந்தர்வனாக்கி ஜீவிக்கச் செய்தவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

ச ஹி தேவல சாபேந ஹு ஹு கந்தர்வ சத்தம க்ராஹத்வமகமத் க்ருஷ்ணாத் வதம் ப்ராப்ய விதம் கத –ஸ்ரீ விஷ்ணு தர்மம்

பிராண வாயு வடிவில் அனைவரையும் வாழச் செய்பவர் -ஸ்ரீ சங்கரர் –

வாழ்விப்பவர் -ஸ்ரீ சத்ய சந்தர் –

—————

931-பர்யவச்தித –
சுற்றும் நின்றவன்
வாத்சல்யம் மிக்கு
அவா வறச் சூழ் அரி-10-10-11-
திரு நீல மணியார் மேனியோடு என் மனம் சூழ வருவாரே -8-3-6-

அன்பின் காரணமாக கஜேந்த்ரனைச் சுற்றிச் சுற்றி வந்தவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

ப்ரீதிமாந் புண்டரீகாக்ஷ சரணாகத வத்சலா

உலகம் முதுவதும் வியாபித்து இருப்பவர் -ஸ்ரீ சங்கரர் –

காப்பதற்காக எல்லாப் பக்கமும் இருப்பவர் -ஸ்ரீ சத்ய சந்தர் –

—————–

932-அநந்த ரூப-
எண்ணிறந்த ரூபங்களை உடையவன் -ஆஸ்ரித ரஷண அர்த்தமாக
வரம்பில பல பிறப்பாய் ஒளி வரு முழு நலம் -1-3-2-
பல பலவே சோதி வடிவு -2-5-6-

இப்படி பக்தர்களைக் காக்க அப்போதைக்கு அப்போது எண்ணிறந்த உருவங்களைக் கொள்பவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

உலகம் முதலிய எண்ணற்ற உருவங்களாக இருப்பவர் -ஸ்ரீ சங்கரர் –

அளவற்ற அழிவற்ற உருவங்களை உடையவர் -ஸ்ரீ சத்ய சந்தர் –

————–

அநந்த ரூபோ அநந்த ஸ்ரீர் ஜிதமன்யூர் பயபஹ
சதுரஸ்ரோ கபீராத்மா விதிஸோ வ்யாதிசோ திஸ–100-

——————

933-அநந்த ஸ்ரீ
அளவற்ற செல்வம் உடையவன் -உபய விபூதி நாதன் -எல்லாம் பக்தாநாம்
செல்வர் பெரியர் -நாச்சியார் -10-10-
செல்வத்தினால் வளர் பிள்ளை -பெரியாழ்வார் -2-8-8-

பக்தர்களுக்குக் கொடுப்பதற்காக தம்மை அடைவது வரை எண்ணற்ற செல்வங்களை உடையவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

ததோ திவ்ய வபுர் பூத்வா ஹஸ்தி ராட் பரமம் பதம் ஜகாம–ஸ்ரீ விஷ்ணு தர்மம் -ஸ்ரீ கஜேந்திராழ்வான் பரம பதம் சென்றான்

அளவற்ற சக்திகளை உடையவர் -ஸ்ரீ சங்கரர் –

அழிவில்லாத தன்மை கொண்ட லஷ்மியாகிய ஸ்ரீ யை உடையவர் -ஸ்ரீ சத்ய சந்தர் –

—————

934-ஜிதமன்யு –
கோபத்தை வென்றவன் –
சரணாகதனான கஜேந்த்ரனுக்கு இன்னல் விளைவித்த நீர் புழுவை கோபியாமல் நல் வாழ்வு அளித்தவன்
குட்டத்துக் கோள் முதலை துஞ்சக் குறித்து எறிந்த சக்கரத்தான் -மூன்றாம் திரு -99-

சரணா கதனான ஸ்ரீ கஜேந்த்ரனுக்கு விரோதியான முதலைக்கும் நற்கதி அளித்து கோபத்தை வென்றவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

கோபத்தை வென்றவர் -ஸ்ரீ சங்கரர் –

அசுரர்கள் விஷயத்தில் கோபம் அடைபவர் -யஜ்ஞங்களை உண்டாக்குபவர் -ஸ்ரீ சத்ய சந்தர் –

—————

935-பயாபஹ
ஆஸ்ரிதர் பயத்தை போக்குபவன் –
பய நாசன -838-முன்பே பார்த்தோம்
நம்பனை நரசிங்கனை -பெரியாழ்வார் -4-4-8-
நம்பனே ஆழி முன் ஏந்தி கம்ப மா கரி கோள் விடுத்தானே -பெரியாழ்வார் -5-1-9-
ஆர்த்தா விஷண்ணா சிதிலாச் ச பீதா கோரேஷூ ச வ்யாதிஷூ வர்த்தமானா
சந்கீர்த்ய நாராயண சப்த மாத்ரம் விமுக்த துக்காஸ் ஸூகி நோ பவந்து-

தம் வாத்சல்யத்தினால் நம் போன்றவர்க்கும் நாதன் இல்லை என்ற பயத்தைப் போக்குபவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

பயே மஹதி மக்நாம்ச் ச த்ராதி நித்யம் ஜனார்த்தன

பக்தர்களுக்கு சம்சார பயத்தை போக்குபவர் -ஸ்ரீ சங்கரர் –

பயங்களைப் போக்குபவர் -ஸ்ரீ சத்ய சந்தர் –

——————

936-சதுரச்ர-
ஆஸ்ரிதர் -கார்யம் உடனே செய்து முடிக்கும் -சதுரன் -சமர்த்தன்
ஆதி மூலமே -தொழும் காதல் களிறு அளிப்பான் புள்ளூர்ந்து தோன்றினையே-3-1-9-
வந்தருளி என் நெஞ்சு இடம் கொண்ட வானவர் கொழுந்து -5-7-7-

தம் பெருமைக்குத் தக்க கூக்குரல் இட்ட யானைக்காக ஆடை ஆபரணங்களும் பூ மாலைகளும் கலையும்படி சென்றும் –
முதலையின் மேல் கோபம் கொண்டு இருந்தும் அந்தப் பரபரப்பிலும் செய்ய வேண்டிய செயல்களைப்
பழுது இல்லாமல் செய்தவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

அவரவர் வினைகளுக்கு ஏற்ப -தர்ம அர்த்த காம மோஷங்கள் ஆகிய நான்கு வித பலன்களைக்
கொடுக்கின்ற படியால் நியாயத்தோடு கூடியவர் -ஸ்ரீ சங்கரர் –

திறமையுடன் செல்பவர் -ஸ்ரீ சத்ய சந்தர் –

—————

937-கபீராத்மா –
ஆழம் கண்டு அறிய முடியாதவன் -சமுத்திர இவ காம்பீர்யே
பிரமன் சிவன் இந்திரன் என்று இவர்க்கும் கட்கரிய கண்ணன் -7-7-11-
நான்முகன் செஞ்சடையான் என்று இவர்கள் எம்பெருமான் தன்மையை யார் அறிகிற்பர்-8-3-9-
பேராழியான் தன் பெருமையை கார் செறிந்த கண்டத்தான் எண் கண்ணான் காணான் -நான்முகன் திருவந்தாதி -73-

பிரமன் முதலியோர்க்கும் ஆழம் காண முடியாத ஸ்வரூபம் உள்ளவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

அளவிட முடியாத ஆழமான ஸ்வரூபம் உள்ளவர் -ஸ்ரீ சங்கரர் –

ஆழம் காண முடியாத மனம் உள்ளவர் –அகபீராத்மா -மழையினால் ஏற்பட்ட பயத்தை கோவர்த்தன மலையை எடுத்துப் போக்கியவர் –
யமளார்ஜூன மரங்களுக்கு பயத்தை உண்டாக்கியவர் -ஆத்மா வாக இருப்பவர் -ஸ்ரீ சத்ய சந்தர் –

—————–

938-விதிச –
எல்லாருக்கும் மேலாய் இருப்பவன் -பிரமன் சிவன் இவர்கள் ஸ்துதிக்கு அப்பால் பட்டவன்
நாத்தழும்ப நான்முகனும் ஈசனுமாய் முறையால் ஏத்த -பெரிய திருமொழி-1-7-8-
திருமால் என்னை ஆளுமால் சிவனும் பிரமனும் காணாது அருமா வெய்தி அடி பரவ அருளை ஈந்த அம்மான் -10-7-6-
சிவர்க்கும் திசை முகற்கும் ஆமோ தரமறிய எம்மானை -2-7-12-
தானே வந்து யானைக்கு அருள் செய்த கபீராத்மா விதிச-

அவர்கள் வணங்கித் தழு தழுத்து மெய்ம்மறந்து செய்யும் துதிகளுக்கும் எட்டாத மகிமை உடையவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

அந்தந்த அதிகாரிகளுக்குத் தகுந்த விதவிதமான பலன்களைக் கொடுப்பவர் -ஸ்ரீ சங்கரர் –

ஞானிகளுக்கு ஸூகத்தைத் தருபவர் -ஆச்சர்யப் பட வைப்பவர் -ஸ்ரீ சத்ய சந்தர் –

——————

939-வ்யாதிச
பதவிகளைத் தருமவன் –
நிறுத்தினான் தெய்வங்களாக அத் தெய்வ நாயகன் தானே -5-2-8-

அவர்கள் விரும்பும் பலன்களை உண்டாக்கித் தருபவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

இந்திரன் முதலியவர்களையும் பலவித அதிகாரங்களில் நியமிப்பவர் -ஸ்ரீ சங்கரர்-

கருடன் முதலியவர்களுக்கு ஸூகத்தை தருபவர் -விசேஷமாகக் கட்டளை இடுபவர் -ஸ்ரீ சத்ய சந்தர் –

—————–

940-திச-
நியமிப்பவன்
இருக்கும் இறை இறுத்து உண்ண எவ்வுலகுக்கும் தன் மூர்த்தி நிறுத்தினான் தெய்வங்களாக -5-2-8-
ராஜாக்கள் ஊர் தோறும் கூறு செய்வார்களை வைக்குமா போலே

ஸ்ரீ கஜேந்த்ரனைப் போல் அவர்களை அந்தரங்கனாகக் கொள்ளாமல் அவரவர் செயல்களில் ஆணையிடுபவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

கஜேந்திர மோக்ஷணம் த்ருஷ்ட்வா ஸர்வேந்த்ர புரோகமா ப்ராஹ்மணம் அக்ரத க்ருத்வா தேவா ப்ராஞ்ஜலயஸ்ததா
வவந்திரே மஹாத்மானம் ப்ரபும் நாராயணம் ஹரீம் விஸ்மயோத் புல்ல நயநா பிரஜாபதி புரஸ் சரா

வேதங்களில் கூறப்பட்டபடி அனைவர்க்கும் பலன்களைத் தருபவர் -ஸ்ரீ சங்கரர் –

தர்மம் முதலியவற்றில் கொடுப்பவர் -ஸ்ரீ சத்ய சந்தர் –

—————

அநாதிர் பூர்ப்புவோ லஷ்மீஸ் ஸூ வீரோ ருசிராங்கத
ஜநாநோ ஜனஜன்மாதிர் பீமோ பீமபராக்ரம–101-

—————-

941-அநாதி
ஈச்வரோஹம் என்று இருப்பாரால் அறியப்படாதவன்
அருளை ஈ என் அம்மானே என்னும் முக்கண் அம்மானும் பிரமன் அம்மானும் தேவர் கோனும் தேவரும் ஏத்தும் அம்மான் -10-7-7-

இப்படி விலங்கான கஜேந்த்ரனுக்கும் வசப்பட்டு பிரம்மாதிகளுக்கும் அற்ப பலன்களையே கொடுப்பவர்
வேறு பலன்களை விரும்பும் அவர்களால் ஸ்வாமியாக அறியப் படாதவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

எல்லாவற்றிற்கும் தாம் காரணமாக இருப்பதால் தமக்கொரு காரணம் இல்லாதவர் -ஸ்ரீ சங்கரர் –

முக்ய பிராணனை உயர்ந்த பக்தனாகக் கொண்டவர் -ஸ்ரீ சத்ய சந்தர் –

—————

942-பூர்புவ
உண்மையில் வாழ்பவருக்கு இருப்பிடம்
அஸ்தி ப்ரஹ்மேதி சேத் வேத சந்த மேநம்ததோ வித்து
அவனை சேஷி ஸ்வாமி அறிந்தவன் பூ -இருப்பவன்
கடல் வண்ணன் பூதங்கள் -5-2-1-
ஸ்வரூப ஞானம் உள்ளவனுக்கு புவ இருப்பிடம்
உன்னைக் கொண்டு என்னுள் வைத்தேன் என்னையும் உன்னில் இட்டேன் -பெரியாழ்வார் -5-4-5-
முன்பே 430 பார்த்தோம்

பகவானுக்கு அடிமைப் பட்டவன் என்ற ஞானம் உடைய பக்தனுக்குத் தாமே இருப்பிடமாக இருப்பவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

நிவஸிஷ்யஸி மந்யேவ அத குருர்த்வம் ந சம்சய

எல்லாவற்றிற்கும் ஆதாரமான பூமிக்கும் ஆதாரமானவர் -ஸ்ரீ சங்கரர் –

பூ -நிறைவானவர் -புவ -உலகத்திற்குக் காரணம் ஆனவர் -இரண்டு திரு நாமங்கள் –

—————-

943-லஷ்மீ
தானே எல்லா வித செல்வமாய் உள்ளவன்
பெரும் செல்வமும் நன் மக்களும் –அவரே இனி யாவரே -5-1-8-
பவத்கதம் மே ராஜ்ஜியம் ச ஜீவிதம் ச ஸூகாநிச -யுத்தம் -19-6-
கிருஷ்ணாஸ்ரைய கிருஷ்ணபல கிருஷ்ண நாத –

தம்மைச் சேர்ந்தவர்களுக்கு எல்லாச் செல்வங்களும் தாமேயாக இருப்பவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

பவத் கதம் மே ராஜ்யம் ச ஜீவிதம் ச ஸூகாநி ச –யுத்த -19-6-
கிருஷ்ண ஆஸ்ரய கிருஷ்ண பலா கிருஷ்ண நாதாச் ச பாண்டவா கிருஷ்ண பாராயணம் தேஷாம்
ஜ்யோதிஷாம் இவ சந்த்ரமா –துரோணபர்வம் -183-24-

உலகத்திற்கு ஆதாரமாக மட்டும் அல்லாமல் சோபையாகவும் இருப்பவர் -அல்லது -பூ புவ லஷ்மீ -என்று
பூ லோகம் புவர் லோகம் ஆத்மவித்யை யாகவும் இருப்பவர் –
அல்லது பூர் புவோ லஷ்மீ -என்று பூமிக்கும் ஆகாயத்திற்கும் சோபையாக இருப்பவர் -ஸ்ரீ சங்கரர் –

புண்யம் செய்தவர்களைப் பார்ப்பவர் -புண்யம் செய்தவர்களால் பார்க்கப் படுபவர் -ஸ்ரீ சத்ய சந்தர் –

—————-

944-ஸூ வீர
சிறந்த வீர்யம் உள்ளவன்
கொல்லா மாக்கோல் கொலை செய்து பாரதப் போர் எல்லாச் சேனையும் இரு நிலத்து அவித்த எந்தாய் -3-2-3-

அந்த பக்தர்களுக்கு அபாயத்தை போக்குபவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

பலவகை நல்ல கதிகளைக் கொடுப்பவர் –பலவகையாக செயல் படுபவர் -ஸ்ரீ சங்கரர் –

முக்ய பிராணனைச் சிறந்ததாக ஆக்குபவர் -ஸ்ரீ சத்ய சந்தர் –

————-

945-ருசிராங்கத-
அழகான திவ்ய மேனியை அடியார்கள் அனுபவிக்க தருமவன்
கண்கள் சிவந்து வாயும் சிவந்து கனிந்து –நான்கு தோளன் ஒருவன் அடியேன் உள்ளானே -8-8-1
வெண் பல் சுடர் செவ்வாய் முறுவலோடு என்னுள்ளத்து இருந்தான் -8-7-7-
பக்தாநாம் பிரகாசயே -ஜிதந்தே-

அவர்கள் தமது திவ்ய மங்களத் திரு மேனியைக் கண்டு களித்து அனுபவிக்கும் படி செய்பவர் -ஸ்ரீ பராசர பட்டர்-

ந தே ரூபம் -ஜிதந்தே

அழகிய தோள் வளைகள் உடையவர் -ஸ்ரீ சங்கரர் –

அழகான தன்மை கொண்ட உடலை அளிப்பவர்-அழகிய தோள்வளைகளை உடையவர் –
அருசிராங்கத-அழகற்ற மனத்தைக் கவராத லிங்க தேகத்தை அழிப்பவர்-ஸ்ரீ சத்ய சந்தர் –

————————————————————————

நலம் அந்தமில்லாத நாடு –

892-அக்ரஜ-முக்தி அடைந்தவர் அனுபவிக்கும் படி கம்பீரமாக அவன் முன்னே தோன்றுபவர் –
893-அ நிர் விண்ண -ஜீவனை சம்சாரத்தில் இருந்து அவனைப் பற்றிய கவலை இல்லாதவர் –
894-சதா மர்ஷீ -முக்தன் செய்யும் தொண்டுகளைப் பெருமையோடு ஏற்பவர் –
895-லோகா திஷ்டா நம்-முக்தர்கள் இன்பம் துய்க்கும் உலகத்திற்கு ஆதாரம் ஆனவர் –
896-அத்புத -முக்தர்கள் எக்காலத்திலும் அனுபவித்தாலும் காணாதது கண்டால் போலே வியப்பாக இருப்பவர் –
897-ஸ நாத் -முக்தர்களால் பங்கிட்டு போற்றி அனுபவிக்கப் படுபவர் –
898-ஸநாதநதம -பழையவராயினும் புதியதாகக் கிடைத்தவர் போல் ஈடுபடத் தக்கவர் –
899-கபில -பளிச்சிடும் மின்னலுக்கு இடையே கரு மேகத்தைப் போலே இருப்பவர் –
வைகுந்தம் -மஹா லஷ்மி மின்னல் பகவான் -மேகம்
900-கபிரவ்யய -குறைவற்ற மகிழ்ச்சியை அனுபவிப்பவர்

901-ஸ்வஸ்தித -மங்களங்களைக் கொடுப்பவர் –
902-ஸ்வஸ்திக்ருத் -தன் மங்கள மான குணங்களை அனுபவிக்கக் கொடுப்பவர் –
903-ஸ்வஸ்தி -தானே மங்கள வடிவமாக இருப்பவர் –
904-ஸ்வஸ்தி புக் -மங்களங்களின் ஊற்றுவாயைக் காப்பவர்
905-ஸ்வஸ்தி தஷிண -தமக்குத் தொண்டு புரியும் முக்தர்களுக்கு திவ்யமான திருமேனி சக்தி ஆகியவற்றை தஷிணையாக அளிப்பவர் –
906-அ ரௌத்ர-கல்யாண குணங்களின் குளிர்ச்சியால் கடுமை இல்லாமல் இருப்பவர் –
907-குண்டலீ-தன் திரு மேனி அழகுக்கு ஏற்ற குண்டலங்களை-காதணிகளை -அணிந்தவர்
908-சக்ரீ-சுதர்சன சக்கரத்தை ஆயூததை ஏந்தியவர் –
909-விக்ரமீ-கம்பீரமான இனிய விளையாட்டுக்கள் கொண்டவர் –
910-ஊர்ஜித சாசன -நான்முகன் இந்த்ரன் முதலியோரால் மீற முடியாத கட்டளை படைத்தவர் –
911-சப்தாதிக -ஆயிரம் நாக்கு உடைய ஆதி சேஷன் போன்றவர்களாலும் பேச முடியாத மகிமை உடையவர்

——————————————————————–

ஸ்ரீ கஜேந்திர மோஷம் –

912-சப்த சஹ -தெளிவில்லாத சொற்கள் பேசும் பிராணிகளின் வேண்டுதல் ஒலியையும் ஏற்பவர்
913-சிசிர -கஜேந்த்ரனின் கூக்குரல் கேட்டவுடன் மிக விரைவாகச் சென்றவர்
914-சர்வரீகர -பகைவர்களை அழிக்கும் ஐந்து ஆயுதங்களை ஏந்திக் கொண்டு விரைந்தவர் –
915-அக்ரூர -கையில் ஆயுதங்கள் இருந்தும் உடனே முதலையைக் கொல்லும் கடிமை இல்லாதவர்
916-பேசல -கருடன் மேல் விரைந்த போது ஆடையும் ஆபரணமும் கலைந்ததே பேர் அழகாக விளங்கியவர் –
917-தஷ -ஆனையைக் காக்க மடுக்கரைக்கு விரைந்தவர்
918-தஷிண -விரைந்து வந்து இருந்தும் -நான் தள்ளி இருந்து நேரம் கடத்தி விட்டேனே வெட்கப்படுகிறேன் என்று அன்புடன் மொழிந்தவர்
919-ஷமிணாம் வர -பொறுமை உள்ளவர்களில் சிறந்தவர் -யானையைக் கண்ட பின்பே பதட்டம் நீங்கி பொறுமை அடைந்தவர் –
920-வித்வத்தம -சிறந்த அறிவாளி -யானையின் துன்பத்தை தன் கைகளால் தடவிக் கொடுத்து போக்கத் தெரிந்தவர் –

921-வீதபய -தன் வேகத்தாலேயே கஜேந்த்ரனனின் பயத்தைப் போக்கியவர்
922-புண்ய ஸ்ரவண கீர்த்தன -கஜேந்திர கடாஷத்தைக் கேட்டாலும் சொன்னாலும் பாவங்களை நீக்குபவர் –
923-உத்தாரண -யானையையும் முதலையையும் குளத்தில் இருந்து கரை ஏற்றியவர் –
924-துஷ்க்ருதிஹா -தீயதான முதலை கரை ஏறிய பின்பு அதை அழித்தவர் –
925-புண்ய -இந்த புண்ணிய கதையைப் பாடும் நம்மைத் தூய்மை படுத்தியவர் –
926-துஸ் ஸ்வப்ன நாசன -இதைக் கேட்டவர்களுக்கு கெட்ட கனவைப் போக்குபவர்
927-வீரஹா -கஜேந்த்ரனின் பகைவனை -முதலை ம்ருத்யு -அழித்தவர் –
928-ரஷண-இன் சொற்களாலும் தொட்டும் தழுவியும் கஜேந்த்ரனைக் காத்தவர் –
929-சந்த-இப்படி தன் அடியார்களுக்காக இருப்பவர் -அவர்கள் விருப்பத்தை நிறைவேற்றி பக்தியை வளர்ப்பவர் –
930-ஜீவன -ஹூ ஹூ என்னும் கந்தர்வன் -தேவல முனிவர் -சாபத்தால் முதலையாக வர -அத்தை கந்தர்வனாக்கி வாழ்வித்தவர் –

931-பர்ய வச்தித -தன் அன்பினால் ஸ்ரீ கஜேந்த்ரனைச் சூழ்ந்தவர்
932-அநந்த ரூப-பக்தர்களைக் காக்க பல வடிவங்களை எடுப்பவர் –
933-அநந்த ஸ்ரீ -தன் பக்தர்களுக்கு அளிக்க உலக இன்பம் முதல் தன்னை அடைவது வரை அனைத்துச் செல்வங்களும் உடையவர் –
934-ஜித மன்யு -கோபத்தை வென்றவர் -முதலைக்கும் நற்கதி அளிப்பவர் –
935-பயாபஹா -இந்த வரலாற்றைக் கேட்டவர்களுக்கு என்னைக் காக்கத் தலைவன் இல்லையே என்ற பயத்தை போக்குபவர் –
936-சதுரஸ்ர -பக்தர்களுக்காகப் பதறினாலும் அதன் வேண்டுகோளைத் திறமையுடன் முடித்தவர் –
937-கபீராத்மா -தேவர்களும் அறிய ஒண்ணாத -ஆழமான தன்மை கொண்டவர் –
938-விதிச -தேவர் முதலானோரின் தழு தழுத்த ஸ்துதிக்கும் எட்டாத மகிமை உள்ளவர்
939-வ்யாதிச -அந்தந்த தேவர்களுக்கு உரிய பதவியைக் கொடுத்து கடமை யாற்றச் செய்பவர் –
940-திஸ-தேவர்களுக்கு ஈசனானவர் -யானையிடம் பாசம் வைத்தவர் –

941-அநாதி -விலங்கான யானைக்கு தம்மையே தந்தவர் -ஆனால் தேவர்களுக்கு தாழ்ந்த பலனைக் கொடுப்பவர் –
942-பூர்புவ -பகவானுக்கு அடியவன் நான் என்று உணர்ந்த தூயவனுக்கு சிறந்த அடையும் இடம் ஆனவர் –
943-லஷ்மீ -பக்தர்களுக்குச் செல்வமாக இருப்பவர் –
944-ஸூ வீர -பக்தர்களின் ஆபத்தைப் போக்கும் சிறந்த சக்தி உடையவர் –
945-ருசி ராங்கத-அடியார்கள் கண்டு களிக்கத் தன் அழகான திருமேனியைக் கொடுப்பவர் –

—————————————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பராசர பட்டர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பீஷ்மர் திருவடிகளிலே சரணம்
ஸ்ரீ வியாச பகவான் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: