ஸ்ரீ விஷ்ணு சகஸ்ர நாமம்–5-1-நித்யர்களை ஆளும் இமையோர் தலைவன் -849/850-/5-2-யோகியர் தலைவன் -பரமான திரு நாமங்கள் -851-854-/5-3-யோகத்தில் இருந்து நழுவியவரை உத்தரிப்பவன் -பரமான திரு நாமங்கள் -855-861-/5-4-துஷ்டர்களை நிக்ரஹிப்பவன் -பரமான திரு நாமங்கள் -862-870-/5.5-சத்வ குணம் வளர்க்கும் -சாத்விகர் தலைவன் பரமான திரு நாமங்கள் -871-880-/5-6-அர்ச்சிராதி மார்க்கம் மூலம் முக்தனை வழி நடத்தும் பரமன் பரமான திரு நாமங்கள் -881-891—

அணுர் ப்ருஹத் க்ருசஸ் ச்தூலோ குணப்ருன் நிர்குணோ மஹான்
அத்ருதஸ் ஸ்வ த்ருதஸ் ஸ்வாஸ்ய ப்ராக்வம்சோ வம்சவர்த்தன –90 –
பாரப்ருத் கதிதோ யோகீ யோகீசஸ் சர்வ காமத
ஆஸ்ரமஸ் ஸ்ரமண ஷாமஸ் ஸூபர்ணோ வாயு வாகன –91-
தநுர்த்தரோ தநுர்வேதோ தண்டோ தமயிதா தம
அபராஜிதஸ் சர்வ சஹோ நியந்தா நியமோ யம –92
சத்வவான் சாத்விகஸ் சத்யஸ் சத்ய தர்ம பராயண
அபிப்ராய ப்ரியார்ஹோ அர்ஹ ப்ரியக்ருத் ப்ரீதிவர்த்தன –93
விஹாயசகதிர் ஜ்யோதிஸ் ஸூ ருசிர் ஹூ தபுக்விபு
ரவிர் விரோச ஸூர்யஸ் சவிதா ரவிலோசன –94
அநந்த ஹூத புக்போக்தா ஸூ கதோ நைகதோ அக்ரஜ
அநிர்விண்ணஸ் சதா மர்ஷீ லோகாதிஷ்டான மத்புத –95

———————————————————————————

5-1-நித்யர்களை ஆளும் இமையோர் தலைவன் -849/850-
5-2-யோகியர் தலைவன் -பரமான திரு நாமங்கள் -851-854-
5-3-யோகத்தில் இருந்து நழுவியவரை உத்தரிப்பவன் -பரமான திரு நாமங்கள் -855-861-
5-4-துஷ்டர்களை நிக்ரஹிப்பவன் -பரமான திரு நாமங்கள் -862-870-
5.5-சத்வ குணம் வளர்க்கும் -சாத்விகர் தலைவன் பரமான திரு நாமங்கள் -871-880-
5-6-அர்ச்சிராதி மார்க்கம் மூலம் முக்தனை வழி நடத்தும் பரமன் பரமான திரு நாமங்கள் -881-891-

அஷ்ட சித்திகள் -838-870—33 திரு நாமங்கள்
மோஷ ப்ரதத்வம்-871-911—41 திரு நாமங்கள்

—————–

5-1-நித்யர்களை ஆளும் இமையோர் தலைவன் -849/850-

அணுர் ப்ருஹத் க்ருசஸ் ச்தூலோ குணப்ருன் நிர்குணோ மஹான்
அத்ருதஸ் ஸ்வ த்ருதஸ் ஸ்வாஸ்ய ப்ராக்வம்சோ வம்சவர்த்தன –90 –

849-ப்ராக்வம்ச
நித்யர்களுக்கு வம்ச மூலமாய் உள்ளவன்
அயர்வறும் அமரர்கள் அதிபதி
யத்ர பூர்வே சாத்யாஸ் சந்தி தேவா -இவன் சங்கல்பத்தால் நித்யர் நித்ய ஐஸ்வர்யம்

அநாதி முக்தர்களான நித்யர்களின் ஆவிர்பாவத்தைத் தம் இச்சையினால் உடையவர் —
பிறகு நித்யர்களுடைய ஐஸ்வர்யம் -எல்லாம் எல்லா விதத்தாலும்
அவனுடைய விருப்பத்தைப் பின் செல்வதாக இருப்பது என்பதில் எந்த விவாதமும் இல்லையே -ஸ்ரீ பராசர பட்டர் –

ததா அஷ்ட குண ஐஸ்வர்யம் நாத ஸ்வா பாவிகம் பரம் நிரஸ்தாதிசயம் யஸ்ய ததஸ் தோப்யாமி கிம் த்வஹம் —

தம் வம்சமான உலகம் பிற்பட்டதாகாமல் முற்பட்டதாக உடையவர் -ஸ்ரீ சங்கரர் –

அநாதி காலமாக முது எலும்பு போலே ஆதாரமாக உள்ளவர் -ஸ்ரீ சத்ய சந்தர் –

—————

850-வம்ச வர்த்தன
நித்யர்களை வ்ருத்தி பண்ணுமவன்
கைங்கர்யம் மேன் மேலும் தந்து போக மகிழ்ச்சியைப் பெருக்கி –
பெரும் தேவர் குழாங்கள் பிதற்றும் பிரான் -9-3-4-
மருந்தே நாங்கள் போக மகிழ்ச்சிக்கு

வம்சம் எனப்படும் நித்ய ஸூரி வர்க்கத்தை -கைங்கர்ய ரசத்தைப் பெருகச் செய்து -வளர்ப்பவர் –
நித்ய ஸூரிகளைக் காட்டிலும் இவனுக்கு உண்டான ஏற்றத்தின் காரணம் சொல்கிறது -ஸ்ரீ பராசர பட்டர் –

ப்ரணத அஸ்மி அநந்த சந்தானம் –அடியார்கள் சூழ அவனை வணங்குகிறேன்

வம்சம் என்னும் பிரபஞ்சத்தை பெருகச் செய்பவர் -அல்லது அழியச் செய்பவர் -ஸ்ரீ சங்கரர் –

பரீஷித்தைப் பிழைப்பித்ததனால் பாண்டவர்களின் வம்சத்தை வளர்த்தவர் -ஸ்ரீ சத்ய சந்தர் –

———————————————

5-2-யோகியர் தலைவன் -பரமான திரு நாமங்கள் -851-854-

———

பாரப்ருத் கதிதோ யோகீ யோகீசஸ் சர்வ காமத
ஆஸ்ரமஸ் ஸ்ரமண ஷாமஸ் ஸூபர்ணோ வாயு வாகன –91-

—–

851-பாரப்ருத்-
சுமை தாங்குபவன் -சுமை யாவது -யோக ஷேமம் வஹாம் யஹம் –
வேங்கடத்து உறைவார்க்கு நம வென்னலாம் கடமை அது சுமந்தார்கட்கே -3-3-6-
அஞ்சலி பரம் வஹதே-பூரி ஜகன்னாதன் -இட்ட பூவை சுமக்க முடியாமல்

ஆத்மாக்களுக்கு சம்சார விலங்கை அறுத்து அவர்கள் அவர்கள் தம் ஸ்வரூபம் விளங்கித்
தம்மைச் சேரும் பொறுப்பைத் தாங்குபவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

ஆதி சேஷன் முதலிய உருவங்களினால் உலக பாரத்தைத் தாங்குபவர் -ஸ்ரீ சங்கரர் –

பாரமானதான பிரம்மாண்டத்தை ஸ்ரீ கூர்ம ரூபியாகத் தாங்குபவர் -ஸ்ரீ சத்ய சந்தர் –

—————-

852-கதித –
சொல்லப்பட்டவன் -வேதங்களினால்
சொல்லினால் தொடர்ச்சி நீ -சொலப்படும் பொருளும் நீ -சொல்லினால் சொலப்படாது தோன்றுகின்ற சோதி நீ
சொல்லினால் படைக்க நீ படைக்க வந்து தோன்றினார் -சொல்லினால் சுருங்க நின் குணங்கள் சொல்ல வல்லரே -திருச்சந்த -11-
வசஸாம் வாச்ய முத்தமம் -ஜிதந்தா -1-7-
மறையாய நால் வேதத்துள் நின்ற மலர்ச் சுடர் -3-1-10-

சொல்லப்பட்ட சொல்லப் படுகின்ற குணங்கள் நிரம்பியவராக எல்லாச் சாஸ்திரங்களிலும் கூறப்பட்ட்டவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

வேதேஷு ச புராணே ஷு ஸ அங்க உபாங்கே ஷு கீயஸே
வேதி ராமாயனே புண்யே பாரதே பரதர்ஷப ஆதவ் மத்யே ததாந்தே ச விஷ்ணு ஸர்வத்ர கீயதே -ஜிதந்தே

வேதம் முதலியவற்றில் தாம் ஒருவரே பரம் பொருளாகக் கூறப் பெற்றவர் —
வேதங்கள் அனைத்தாலும் கூறப் படுபவர்-ஸ்ரீ சங்கரர் –

நல்ல ஆகமங்களால் -வேதங்களால் -நிலை நாட்டப் பெறுபவர் -ஸ்ரீ சத்ய சந்தர் –

—————–

853-யோகீ-
அகடிதகட நா சாமர்த்தியம் –
திவ்யம் ததாமிதே சஷூ பஸ்ய மே யோகமைச்வரம்-11-8-
ஆலினிலையாய் அருள் –
மாயா வாமனனே மது சூதா மாயங்கள் செய்து வைத்தி இவை என்ன மயக்குகளே -7-8-1/5-

கூடாதவற்றையும் கூட்டுவதாகிய சிறந்த பெருமை எப்போதும் உள்ளவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

பஸ்ய மே யோகம் ஐஸ்வர்யம் -11-2-
யோகேஸ்வர கிருஷ்ண 18-78-
யோக
மஹா யோகேஸ்வரோ ஹரி –11-9-

யோகம் எனப்படும் தத்வ ஜ்ஞானத்தினாலேயே அடையப் பெறுபவர் –
தம் ஆத்ம ஸ்வரூபத்தை எப்போதும் பார்த்துக் கொண்டு இருப்பவர் -ஸ்ரீ சங்கரர்-

உபாயம் உள்ளவர் -ஸ்ரீ சத்ய சந்தர் –

————-

854-யோகீச –
யோகியர் தலைவன் -சனகாதி முனிவர்கள்
கலக்கமில்லா நல் தவ முனிவர் கரை கண்டோர் துளக்கம் இல்லா வானவர் எல்லாம் தொழுவார்கள் -8-3-10-

சம்சாரிகளுள் யோகிகளுக்கும் சனகர் முதலிய யோகிகளுக்கும் யோகத்தை நிறைவேற்றுபவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

சனந்த நாதீந் அபகல்மஷாந் முனீந் சகார பூயஸ் அதி பவித்ரிதம் பதம் -ஸ்ரீ விஷ்ணு புராணம்

மற்ற யோகிகளைப் போல் இடையூறுகளால் தடைப் படாமையால் யோகிகளுக்குத் தலைவர் -ஸ்ரீ சங்கரர்-

யோகிகளுக்கும் ஸ்ரீ லஷ்மி தேவிக்கும் சுகத்தை அளிப்பவர் -ஸ்ரீ சத்ய சந்தர் –

——————————————————————————-

5-3-யோகத்தில் இருந்து நழுவியவரை உத்தரிப்பவன் -பரமான திரு நாமங்கள் -855-861-

855-சர்வ காமாத –
எல்லா விருப்பங்களையும் தருபவன் -ஐஸ்வர்ய காமர்களுக்கும் இவனே பலன் அளிப்பவன்

யோகத்தில் தவறியவர்களுக்கும் அணிமா முதலிய பலன்களை மேன்மேல் யோகத்திற்கு இடையூறான
பலன்களாகக் கொடுப்பவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

ப்ராப்ய புண்ய க்ருதாம் லோகாந் உஷித்வா ஸாஸ்வதீ சமா –ஸ்ரீ கீதை -6-41-

எல்லாப் பலன்களையும் கொடுப்பவர் -ஸ்ரீ சங்கரர் –

பக்தர்களின் எல்லா விருப்பங்களையும் நிறைவேற்றுபவர் -மன்மதனை அழிக்க சிவனுக்கு அருள் புரிந்தவர் -ஸ்ரீ சத்ய சந்தர்

——————

856-ஆச்ரம —
இலம் நலன் கழல் அவனடி நிழல் தடம் அன்றியாமே -10-1-3-
யோகப்ரஷ்டன் மறு பிறவி எடுக்கும் போது தூயவர்களும் பகவத் பக்தி உள்ளவருமான ஸ்ரீ வைஷ்ணவ
குடும்பத்தில் வந்து பிறக்கிறான் -ஸ்ரீ கீதை -6-1-

அப்படி திரும்பி வந்தவர்களை ஸ்ரீ வைஷ்ணவ குலத்தில் பிறப்பித்து அவர்கள் சிரமத்தை ஆற்றுபவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

சுசீ நாம் ஸ்ரீ மதாம் கேஹே யோக பிரஷ்ட அபி ஜாயதே –ஸ்ரீ கீதை –6-41-

சம்சாரம் என்னும் காட்டில் திரிபவர்களுக்கு ஆஸ்ரமம் போலே இளைப்பாறும் இடமாக இருப்பவர் -ஸ்ரீ சங்கரர் –

துன்பம் அற்றவர்களான முக்தர்களுக்குத் தலைவர் -ஸ்ரீ சத்ய சந்தர் –

—————–

857-ச்ரமண-
தொடர்ந்து செய்ய உதவுமவன் –
செய்வார்களைச் செய்வேனும் யானே -5-6-4-

முற் பிறவியில் தொட்ட யோகத்தை மறு பிறவியில் எளிதாக அப்யசிக்கும்படி செய்பவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

தத்ர தம் புத்தி சம்யோகம் லபதே பவ்ரவதேகிகம்

விவேகம் இல்லாதவர்களை வருத்துபவர் -ஸ்ரீ சங்கரர் –

சன்யாசிகளை தமக்கு தாசர்களாக உடையவர் -விரதங்களால் சுகம் கிட்டும்படி செய்பவர் —
விரோதிகளுக்கு சிரமத்தை உண்டாக்கி அடியவர்களுக்கு சிரமத்தைப் போக்குபவர் -ஸ்ரீ சத்ய சந்தர் –

————-

858-ஷாம
திறமை உள்ளவனாக செய்பவன்
புணைவனாம் பிறவிக்கடலை நீந்துவார்க்கே-2-8-1-

யோகத்தில் தவறியவர்களும் தம்மை தியானம் செய்யத் தொடங்கியவுடன் அவர்கள் முக்தராகும்படி செய்பவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

ந ஹி கல்யாண க்ருத் கச்சித் துர்கதிம் தாத கச்சதி

எல்லா பிரஜைகளையும் சம்ஹார காலத்தில் அழிப்பவர்-ஸ்ரீ சங்கரர் –

எதையும் தாங்கும் சக்திக்கு ஆதாரமாக இருப்பவர் -பிரளய காலத்தில் எல்லாவற்றையும் அழிப்பவர் -ஸ்ரீ சத்ய சந்தர் –

—————–

859-ஸூ பர்ண-
தாண்ட உதவுமவன் -ஸூ பர்ண -கருடன் -அழகிய சிறகுகளை உடையவன் -சம்சாரம் கரை தாண்ட
தெய்வப் புள்ளேறி வருவான் -பெரிய திருமொழி -3-3-6-
புள்ளைக் கடாகின்ற தாமரைக் கண்ணன் -7-3-1-

சமாதியை அனுஷ்டிப்பவர்களை சம்சாரக் கடலின் கரை சேர்ப்பவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

ஸ்வ பாரம் பகவான் நயதி
அநேக ஜென்ம சம்சித்த ததோ யாதி பராம் கதிம் –ஸ்ரீ கீதை -6-45-

சம்சார -மாற ரூபமான தாம் வேதங்களாகிய அழகிய இலைகளை உடையவர் -ஸ்ரீ சங்கரர் –

அழகிய ஆலிலையைப் படுக்கையாக உடையவர் -பறவை உருவத்தில் இருப்பவர் -ஸ்ரீ சத்ய சந்தர் –

————–

860-வாயு வாகன –
மேல் எழச் செய்பவன்
வாயு -கருடனை சொல்கிறது -கருட வாகனன் புள்ளை ஊர்வான் -முன்பே 332 பார்த்தோம்

அவர்கள் கீழே விழுந்தாலும் வாயு வேகம் உள்ள கருடனைக் கொண்டு அவர்களைத் தூக்கி விடுபவர் –
பரம பாகவதரான வஸூ என்பவர் -பரம ரிஷி சாபத்தால் தாழ்ந்து போக நேரிட கருடனைக் கொண்டு மீண்டும்
அவர் உயர்ந்த நிலையை அடையும்படி செய்தார் -ஸ்ரீ பராசர பட்டர் –

அதவா பக்ஷி ராட் தூர்ணம் ஆகத்ய சுவாமிநஸ் பதம் நேஷ்யதி–ஸ்ரீ விஷ்ணு தத்வம்

காற்றும் தம்மிடம் அச்சத்தினால் அனைத்து உயிர்களையும் தாங்கும்படி இருப்பவர் -ஸ்ரீ சங்கரர் –

வாயுவைத் தூண்டுபவர் -மேலானவர் -ஜீவனின் உடலை விட்டுப் போகும் போது வாயுவை வாகனமாக உடையவர் -ஸ்ரீ சத்ய சந்தர் –

———-

தநுர்த்தரோ தநுர்வேதோ தண்டோ தமயிதா தம
அபராஜிதஸ் சர்வ சஹோ நியந்தா நியமோ யம –92

————-

861-தநுர்த்தர –
சாரங்கபாணி
திவ்ய தனுஸ்
காய்ச்சின வில் தண்டேந்தி எம்மிடர் கடிவான் -9-2-6-
நான்கு தோளன் குனி சாரங்கன் -8-8-1-

தம்மை உபாசிப்பவர்களுக்கு இடையூறுகளை ஒழிப்பதற்காக எப்போதும் வில்லைத் தாமே உடையவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

ஏதத்தர்த்தம் ஹி லோகே அஸ்மின் க்ஷத்ரியைர் தார்யதே தநு
தார்யதே க்ஷத்ரியைர் சாபோ நார்த்த சப் தோ பவேதிதி

ஸ்ரீ ராமாவதாரத்தில் வில்லை தரித்து இருப்பவர் -ஸ்ரீ சங்கரர் –

வில்லைத் தாங்குபவர் -ஸ்ரீ சத்ய சந்தர் –

—————————————————————

5-4-துஷ்டர்களை நிக்ரஹிப்பவன் -பரமான திரு நாமங்கள் -862-870-

862-தநூர் வேத –
வில் வித்தையை கற்பிப்பவன்

இந்திரன் அரசர் முதலியவர்களும் வில் வித்தை முதலியவற்றைத் தம்மிடம் உபதேசம் பெறும்படி
எல்லாச் சாஸ்திரங்களையும் வெளிப்படுத்தியவர் -ஸ்ரீ பராசர பட்டர்-

அந்த ஸ்ரீ ராமபிரானாகவே தனுர் வேதத்தை அறிந்து இருப்பவர் -ஸ்ரீ சங்கரர் –

அகஸ்த்யர் முனிவர் மூலம் இந்திரனுடைய வில்லை ஸ்ரீ ராமாவதாரத்தில் பெற்றவர் -ஸ்ரீ சத்ய சந்தர்-

——————

863-தண்ட-
துஷ்டர்களைத் தண்டிப்பவன்
அசுரர் மேல் தீ வாய் வாளி மழை பொழிந்த சிலையா -6-10-4-

அரசர்களைக் கொண்டு தண்டனையைச் செய்து துஷ்டர்களை அடக்குபவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

துஷ்டர்களை அடக்கும் தண்டமாக இருப்பவர் -ஸ்ரீ சங்கரர்-

தண்ட -அசுரர்களை தண்டிப்பவர் -அதண்ட -பிறரால் சிஷிக்கப் பெறாதவர் -ஸ்ரீ சத்ய சந்தர் –

—————

864-தமயிதா-
அடக்குபவன் -தானே நேராக அவதரித்து –
நாட்டை நலியும் அரக்கரை நாடித் தடிந்திட்டவன் -7-5-2-

தாமே நேராகவும் ராவணன் போன்றவர்களை அடக்குபவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

வைவஸ்வத மனு முதலிய அரசர்களாக இருந்து பிரஜைகளை அடக்குபவர் -ஸ்ரீ சங்கரர் –

அசுரர்களை அடக்குபவர் -ஸ்ரீ சத்ய சந்தர் –

———–

865-அதம –
யாராலும் அடக்கப்படாதவன் –

தாம் யாராலும் அடக்கப் படாதவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

பஸ்ம குர்யாத் ஜகத் சர்வம் மனசைவ ஜனார்த்தன ந து க்ருத்ஸ்னம் ஜகத் சக்ரம் கிஞ்சித் கருத்தும் ஜனார்த்தனே–உத்யோக பர்வம்

தண்டத்தினால் உண்டாகும் அடக்கமாகவும் இருப்பவர் -தம என்ற பாடம் -ஸ்ரீ சங்கரர் –

தானம் செய்பவருக்கு செல்வத்தை அளிப்பவர் -ஆத்ம -என்ற பாடம் —
அதம என்ற பாடத்தில் ஸ்ரீ கிருஷ்ணாவதாரத்தில் புலன் அடக்காதவர் போலே தோற்றம் அளித்தவர் என்றுமாம் -ஸ்ரீ சத்ய சந்தர் –

———————

866-அபராஜித –
வெல்ல முடியாதவன் -முன்பே 721-பார்த்தோம்

எங்கும் உள்ள எல்லாவற்றையும் நடத்தும் தம் கட்டளை எக் காலத்திலும் எங்கும் எதனாலும் தடை படாதவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

தாஸார்ஹம் அபராஜிதம்
யஸ்ய மந்த்ரீ ச கோப்தா ச ஸூஹ்ருச்சைவ ஜனார்த்தன ஹரி த்ரிலோக்ய நாதா சந் கிம் நு யஸ்ய ந நிர்ஜிதம்

பகைவர்களால் வெல்லப் படாதவர் -ஸ்ரீ சங்கரர் –

தம்மைக் காட்டிலும் மேம்பட்டவர் இல்லாதவர் -எவராலும் தோற்கடிக்கப் படாதவர் –
மற்றவர்களால் காக்கப் படாதவர் -ஒளியுடன் திகழ்பவர் -ஸ்ரீ சத்ய சந்தர் –

—————–

867-சர்வ சஹ
யாரையும் தாங்குபவன்
இறுக்கும் இறை இறுத்து உண்ண எவ்வுலகும் தன் மூர்த்தி நிறுத்தினான் தெய்வங்களாக அத் தெய்வ நாயகன் தானே -5-2-8-

குறைந்த அறிவு உள்ளவர்கள் ஆராதிக்கும் மற்ற தேவதைகளையும் தாமே தாங்குபவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

எல்லாக் காரியங்களிலும் சமர்த்தர் -எல்லாப் பகைவர்களையும் தாங்கும் திறமை உள்ளவர் –
பூமி முதலிய உருவங்களினால் எல்லாவற்றையும் தாங்குபவர் -ஸ்ரீ சங்கரர் –

எல்லாவற்றையும் பொறுப்பவர் -ஸ்ரீ சத்ய சந்தர் –

—————-

868-நியந்தா –
நியமித்து நடத்துமவன்
அவரவர் தமதமது அறிவறி வகை வகை அவரவர் இறையவர் என அடியடைவர்கள்
இறையவர் அவரவர் விதி வழி அடைய நின்றனரே -1-1-5-

பல தேவதைகளுடம் பக்தி வைத்து இருக்கும் பலரை அவரவர் விருப்பப்படி தாமே நடத்துபவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

யோ யோ யாம் யாம் தநும் பக்தா ஸ்ரத்தாயா அர்ச்சிதும் இச்சதி –ஸ்ரீ கீதை -7-21-

எல்லோரையும் தத்தம் கார்யங்களில் நிலை நிறுத்துபவர் -ஸ்ரீ சங்கரர் –

கட்டளையிடுபவர் -ஸ்ரீ சத்ய சந்தரர் —

—————-

869-நியம –
நிச்சயிப்பவன் -தேவர்கள் மூலம் பலன்களை அளிப்பவன்
முக்கண் ஈசனோடு தேவு பல நுதலி மாயக் கடவுள் -திருவாசிரியம் -4-

அவர்களுக்குப் பலனாக உயர் குலம் ஆயுள் போகம் முதலியவற்றை அத்தேவதைகள் மூலமாகவே வழங்குபவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

லபதே ச ததஸ் காமான் மயைவ விஹிதான் ஹி தான் ஸ்ரீ கீதை -7-22-

அநியம-என்ற பாடம் -தம்மை அடக்குபவர் -யாரும் இல்லாதவர் –
யம நியம -என்று கொண்டு யோகத்திற்கு அங்கங்களான யம நியமங்களால் அடையப்படுபவர் -ஸ்ரீ சங்கரர் –

நன்றாகக் கட்டளை இடுபவர் -ஸ்ரீ சத்ய சந்தர் –

————-

870-யம –
நடத்துமவன்
மார்க்கண்டேயன் அவனை நக்க பிரானும் அன்று உய்யக் கொண்டது நாராயணன் அருளே -4-10-8-

விரும்பிய வரங்களைக் கொடுக்கும் தேவதைகளையும் நடத்துபவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

பிரபவதி சம்யமநே மாம் அபி விஷ்ணு –ஸ்ரீ விஷ்ணு புராணம் -3-7-13-

மரணம் இல்லாதவர் -அயம-என்ற பாடம் -ஸ்ரீ சங்கரர் –

பிரளய காலத்தில் எல்லாவற்றையும் அழிப்பவர்-ஸ்ரீ சத்ய சந்தர் –

———————————————————————–

5.5-சத்வ குணம் வளர்க்கும் -சாத்விகர் தலைவன் பரமான திரு நாமங்கள் -871-880-

———

சத்வவான் சாத்விகஸ் சத்யஸ் சத்ய தர்ம பராயண
அபிப்ராய ப்ரியார்ஹோ அர்ஹ ப்ரியக்ருத் ப்ரீதிவர்த்தன –93

——–

871-சத்வவான் –
சுத்த சத்வ மயமாய் இருப்பவன் –
சரணமாகும் தன தாள் அடைந்தார்க்கு எல்லாம் –வைகுந்தம் கொடுக்கும் பிரான் -9-10-5-

மோஷத்திற்கு காரணமான சுத்த சத்வத்தை அடைந்து இருப்பவர் -இவ்வாறு ரஜஸ் தமஸ்ஸூக்கள்
அடைக்கியதை கூறப் பட்டது -இனி சத்வத்தை வளர்க்கும் அடி கூறுகிறது – -ஸ்ரீ பராசர பட்டர் –

மஹாந் ப்ரபூர்வை புருஷ சத்வஸ்யைஷ ப்ரவர்த்தக –ஸ்ரீ விஷ்ணு புராணம் 3-7-13-
சத்வேந முச்யதே ஐந்து சத்வம் நாராயணாத் மகம் ரஜஸா சத்வ யுக்தேந பவேத் ஸ்ரீ மான் யசோதிக–ஸ்ரீ வராஹ புராணம்
தஜ்வ பைதாமஹம் வ்ருத்தம் சர்வ சாஸ்த்ரேஷு பட்யதே யத் ரஜஸ் தமஸோ பேத ஸோஹம் நாஸ்த்யத்ர சம்சய

சௌர்யம் வீர்யம் முதலிய பராக்கிரமம் உள்ளவர்-ஸ்ரீ சங்கரர் –

ஜீவன் பலம் நல்ல தன்மை இவற்றை உடையவர் -ஸ்ரீ சத்ய சந்தர் –

—————-

872-சாத்விக
சத்வ குணம் உடையவன் -ருத்ரன் பிரமன் ரஜோ தமஸ் குணம் –

தர்ம ஞான வைராக்யத்தாலும் ஐஸ்வர்யம் ஆகிய பல நியமனத்தாலும் சத்வ குணமே குடி கொண்டு இருப்பவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

சத்வ குணத்தை பிரதானமாக உடையவர் -ஸ்ரீ சங்கரர் –

தூய நற் குணத்தை உடைய நான்முகனை அடியவனாக உடையவர் -ஸ்ரீ சத்ய சந்தர் —

—————

873-சத்ய –
உண்மை -மெய்யன்
மெய்யனாகும் விரும்பித் தொழுவார்க்கு எல்லாம் –நாளும் தன் மெய்யர்க்கு மெய்யனே -9-10-7/6-
திரு மெய் மலையாளா -பெரிய திரு மொழி -3-6-9-
மெய் வண்ணம் நினைந்தவர்க்கு மெய்ந்நின்ற வித்தகன் -பெரிய திரு மொழி -5-6-9-

சாத்விக சாஸ்த்ரங்களில் சொல்லப்படுவதால் உண்மையான பெருமை உடையவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

சத்யே ப்ரதிஷ்டித க்ருஷ்ண சத்யமஸ்மின் ப்ரதிஷ்டிதம் சத்தா சத்தே ச கோவிந்த தஸ்மாத்
சத்ய சதாம் மத –உத்யோக பர்வம் 69-12-13-

சாதுக்களுக்கு உபகாரம் செய்பவர் -ஸ்ரீ சங்கரர் –

சுதந்திரமானவர் -அழியாத நற்குணங்களால் பரவியிருப்பவர் -ஸ்ரீ சத்ய சந்தர் –

—————-

874-சத்ய தர்ம பராயண –
உண்மையான தர்ம அனுஷ்டானத்தாலே மகிழ்பவன்
ஸ்ரீ பகவத் ஆஞ்ஞயா பகவத் கைங்கர்ய ரூபம்
ஸ்ருதி ஸ்ம்ருதி மம ஆஞ்ஞா

வேறு காரணம் இல்லாமல் சாஸ்திர விதி ஒன்றாலேயே சாத்விகர்கள் செய்யும் உத்தமமான நிவ்ருத்தி தர்மத்தை
மிகப் பிரியமாக அங்கீ கரிப்பவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

சத்ய வாக்யத்தையும் சாஸ்த்ரங்களால் விதிக்கப் பட்ட தர்மத்தையும் முக்கியமாக உடையவர் -ஸ்ரீ சங்கரர் –

சத்யமாகிய தர்மத்தில் நிலை

—————-

875-அபிப்ராய –
பரம உத்தேச்யம் ஆனவன்
விழுமிய அமரர் முனிவர் விழுங்கும் கன்னற் கனி -3-6-7-
விழுமிய முனிவர் விழுங்கும் கோதிலின் கனி -பெரிய திரு மொழி -2-3-2-

சாத்விக தர்மத்தை அனுஷ்டிக்கும் அடியார்களால் வேறு பலன்களை விரும்பாமல்
தாமே பலனாக விரும்பப் படுபவர் -ஸ்ரீ பராசர பட்டர்-

புருஷார்த்தங்களை விரும்புபவர்களால் பிரார்த்திக்கப் படுபவர் –
சம்ஹார காலத்தில் உலகம் அனைத்தும் தம்மிடம் வந்தடையும் படி இருப்பவர் -ஸ்ரீ சங்கரர் –

விருப்பங்களை நிறைவேற்றும் திருமகளை மகிழ்விப்பவர் -ஸ்ரீ சத்ய சந்தர் –

——————

876-ப்ரியார்ஹ –
பிரியத்துக்கு உரியவன்
தெளிவுற்று வீவின்றி நின்றவர்க்கு இன்பக் கவி செய்யும் கண்ணன் -7-5-1-
நித்ய யுக்த ஏக பக்தி

இப்படி அநந்ய பக்தியுடன் வந்தடையும் ஞானியை அனுக்ரஹிப்பதற்கு உரியவர் —
அநந்ய பக்தர்கள் இடம் ஸ்வாபாவிக பிரியம் கொள்கிறான்
ஐஸ்வர்யார்த்தி கைவல்யார்த்தி போன்றார்களுக்கும் அவற்றைத் தந்து வலிந்து அன்பைக் கொள்கிறான் – ஸ்ரீ பராசர பட்டர் –

தேஷாம் ஞானீ நித்ய யுக்த ஏக பக்திர் விசிஷ்யதே -7-17-
உதாரா சர்வை ஏவைத -7-18-

மனிதர்கள் தமக்கு விருப்பமான பொருள்களை சமர்ப்பிபதற்கு உரியவர் -ஸ்ரீ சங்கரர் –

விசேஷமான சுகத்திற்கு உரியவர் -ஸ்ரீ சத்ய சந்தர் –

—————

877-அர்ஹ
ப்ரீதி செய்யத் தக்கவன் -அநந்ய பிரயோஜனருக்கு-உன்னை அர்த்தித்து வந்தோம்
முனிவர்க்கு உரிய அப்பன் –அமரரப்பன் –உலகுக்கோர் தனி அப்பன் –8-1-11-
ஆஸ்திதஸ் சஹி யுக்தாத்மா மாமேவ நுத்தமாம் கதிம் -ஸ்ரீ கீதை -7-18-

வேறு ஒன்றிலும் விருப்பம் இல்லாத பக்தர்களுக்குத் தாமே விரும்பத் தகுதி உள்ளவராக இருப்பவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

ஆஸ்திதஸ் ச ஹி யுக்தாத்மா மாமேவ அநுத்தமாம் கதிம் 7-18-

நல் வரவு ஆசனம் புகழ்தல் அர்க்யம் பாத்யம் துதி நமஸ்காரம் முதலியவற்றால் பூஜிக்கத் தக்கவர் -ஸ்ரீ சங்கரர் –

பூஜைக்கு உரியவர் -ஸ்ரீ சத்ய சந்தர் –

—————–

878-ப்ரியக்ருத் –
பிரியத்தைச் செய்பவன்
பிரயோஜனாந்த பரருக்கும் பக்தி ஒன்றையே கணிசித்து வேண்டியதை அருளி அநந்ய பிரயோஜனராக ஆக்கி அருளுபவன்
உன் அடியார்க்கு என் செய்வன் என்றே இருத்தி நீ -பெரிய திருவந்தாதி -53-

வேறு பயன்களைக் கருதும் அன்பர்களுக்கும் அவரவர் விருப்பங்களை நிறைவேற்றித்
தம்மையே விரும்பும்படி செய்பவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

நிராஸீ கர்ம சம்யுக்தானாம் ஸாத்வதாம்ச் சாபி அகல்பயம்

பூஜிப்பதற்கு உரியவராக இருப்பது மட்டும் அல்லாமல் தம்மை பஜிப்பவர்களுக்கு விருப்பத்தைச் செய்பவர் -ஸ்ரீ சங்கரர் –

விசேஷமான சுகத்தை தருபவர் -ஸ்ரீ சத்ய சந்தர் –

————-

879-ப்ரீதி வர்த்தந-
பக்தியை வளர்ப்பவன் -பக்தி உழவன் -நான்காம் திரு -23-
பஜதாம் ப்ரீதி பூர்வகம் ததாமி புத்தி யோகம் தம் யேன மாம் உபயாந்திதே-ஸ்ரீ கீதை -10-10-
சௌந்தர்ய சௌசீல்ய ஆவிஷ்காரேண அக்ரூர மாலாகார தீன் பரம பாகவதான் க்ருத்வா -ஸ்ரீ கீதா பாஷ்யம்
மறக்கும் என்று செந்தாமரைக் கண்ணோடு மறப்பற என்னுள்ளே மன்னினான் -1-10-10-

பக்தர்களுக்குத் தம் குணங்களை மேன்மேலும் வெளியிடுவதால் அவர்களுடைய பக்தியை
மேலும் மேலும் அதிகப் படுத்துபவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

பக்தர்களுக்குத் தம்மிடத்தில் அன்பை வளரச் செய்பவர் -ஸ்ரீ சங்கரர் –

பக்தர்கள் இடத்தில் அன்பை வளர்ப்பவர் -பக்தர்களை அன்புடன் வளர்ப்பவர் -ஸ்ரீ சத்ய சந்தர் –

———

விஹாயசகதிர் ஜ்யோதிஸ் ஸூ ருசிர் ஹூ தபுக்விபு
ரவிர் விரோச ஸூர்யஸ் சவிதா ரவிலோசன –94

————

880-விஹாயசகதி
பரம பதத்தை அடைவிப்பவன் -விஹாயசம் -பரம பதம்
இங்கு ஒழிந்து போகம் நீ எய்திப் பின்னும் நம்மிடைக்கே போதுவாய் என்ற பொன்னருள் -பெரிய திரு மொழி -5-8-5-
வானேற வழி தந்த வாட்டாற்றான் விண்ணுலகம் தருவானாய் விரைகின்றான் -3-6-3-
தத் ஏக அதிகரணம் -ப்ரஹ்ம சூத்ரம் -4-2-16-

இப்படி பகதியினுடைய முடிவான நிலையில் ஏறப் பெற்றவர்கள் பரமபதம் செல்வதற்கும் தாமே உபாயமாக இருப்பவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

முக்த்வா ச விபுலாந் போகாந் த்வமந்தே மத் ப்ரசாததஸ் மாம் அநு ஸ்மரணம் ப்ராப்ய
மம லோகே நிவத்ஸ்யஸி –ஸ்ரீ விஷ்ணு புராணம்-5-19 -26—
ததோ கோக்ரஜ்வலனம் தத் பிரகாசி தத்வாரோ வித்யா சாமர்த்யாத் தத் சேஷ கத் யனுஸ்ம்ருதி யோகாச்ச
ஹார்த்த அநு க்ருஹீத சத்தாதி கயா -ஸ்ரீ ப்ரஹ்ம ஸூத்ரம்-4-4-16-

ஆகாயத்தில் அதாவது ஸ்ரீ விஷ்ணு பதத்தில் இருப்பவர் -அல்லது ஆகாயத்தில் இருக்கும் சூரியனாக இருப்பவர் -ஸ்ரீ சங்கரர் –

கருடன் மீது அமர்ந்து செல்பவர் -ஸ்ரீ சத்ய சந்தர் –

———————————————————————–

5-6-அர்ச்சிராதி மார்க்கம் மூலம் முக்தனை வழி நடத்தும் பரமன் பரமான திரு நாமங்கள் -881-891-

881-ஜ்யோதி –
ஒளியாய் இருப்பவன் -அர்ச்சி ஜ்யோதி –
எழுமின் என்று இரு மருங்கு இசைத்தனர் முனிவர்கள் வழி இது வைகுந்ததற்கு என்று வந்து எதிர் எதிரே -10-9-3-
எதிர் எதிர் இமையவர் இருப்பிடம் வகுத்தனர் கதிரவர் அவர் கைந்நிரை காட்டினர் -10-9-4-
மாதவன் தமர் என்று வாசலில் வானவர் போதுமின் எமதிடம் புகுதுக என்றனர் -10-9-5-
ஆண்மின்கள் வானகம் ஆழியான் தமர் என்று வாள் ஒண் கண் மடந்தையர் வாழ்த்தினர் மகிழ்ந்தே -10-9-6-
அர்ச்சிராத்யாதி கரணம் -ப்ரஹ்ம சூத்ரம் -4-3-1-
அதிவாஹிகாதி கரணம் -ப்ரஹ்ம சூத்ரம் -4-3-4
தே அர்ச்சிஷம் அபி சம்பவந்தி –சாந்தோக்யம்
அக்நிர் ஜ்யோதி ரஹச்சுக்ல ஷண்மாச உத்தராயணம் தாத்ரா பிராதா கச்சந்தி ப்ரஹ்ம ப்ரஹ்ம விதோஜநா-ஸ்ரீ கீதை -8-24
பன்னிருவர் அபிமானி தேவதைகள்
அர்ச்சி ,அஹஸ் -பகல் ,சுக்ல பஷம் ,உத்தராயாணம்,சம்வத்சரம் ,வாயு ,சூர்யன் , சந்தரன்
வித்யுத்,வருணன்,இந்த்ரன்,பிரமன் –
இவர்களை சொல்லும் திரு நாமங்கள் -பட்டர் நிர்வாஹம்

பக்தர்கள் பரமபதத்தில் ஏறுவதற்கு அர்ச்சிராதி மார்க்கத்தில் முதற்படியான ஒளியாக இருப்பவர் -உபாசகனை
ஆதி வாஹிகர்களை நியமித்து அர்ச்சிராதி மார்க்கத்தில் அழைத்துக் கொண்டு செல்ல நியமிக்கிறான்-ஸ்ரீ பராசர பட்டர் –

தே அர்ச்சிஷம் அபி சம்பவந்தி –சாந்தோக்யம் -5-10-1-
அர்ச்சிராதி நா தத் பிரதிதே
ஆதி வாஹிகாஸ் தல் லிங்காத்

ஸ்வயமாகவே பிரகாசிப்பவர் -ஸ்ரீ சங்கரர் –

ஒளியுள்ளவர்-ஸ்ரீ சத்ய சந்தர் –

———–

882-ஸூருசி –
அழகாக பிரகாசிப்பவன் -இரண்டாம் படி பகல் -தேவதையை சொல்லும் -அர்ச்சி ஷோ அஹ -சாந்தோக்யம்
ஒண் சுடரே -5-10-6-

ஸூர்யோதத்தினால் பிரகாசிப்பதாகிய இரண்டாம் படியான சிறந்த பகலை நடத்துபவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

சிறந்த ஒளி உள்ளவர் -சிறந்த சங்கல்பம் உள்ளவர் -ஸ்ரீ சங்கரர் –

மங்களகரமான விருப்பம் உள்ளவர் -ஸ்ரீ சத்ய சந்தர் –

—————-

883-ஹூத புக் விபு –
சுக்ல பஷமாய் இருப்பவன் -ஹூத புக் அக்னியில் அவியாக சேர்க்கப் பட்டதை உண்பவன் சந்தரன்
அது இவனிடம் அமிர்தமயமாகி இவனை வளரச் செய்கிறது
அஹ்ன ஆபூர்யமாண பஷம் -சாந்தோக்யம்
முன்பே 241 -விச்வபுக் விபு பார்த்தோம்

அமுதமாகப் பரிணமிக்கும் சந்தரன் வளர்வதான வளர் பிறையாக -மூன்றாம் படியாக இருப்பவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

ஹூத புக் -எல்லாத் தேவதைகளைக் குறித்தும் செய்யப்படும் ஹோமங்களைப் புசிப்பவர் –
விபு -எங்கும் நிரம்பி இருப்பவர் -இரண்டு திரு நாமங்கள் -ஸ்ரீ சங்கரர் –

ஹோமம் செய்பவைகளை உண்பவர் -பக்தர்களை மேன்மை கொண்டவர்களாக ஆக்குபவர் -இரண்டு திரு நாமங்கள் -ஸ்ரீ சத்ய சந்தர் –

————-

884-ரவி
உத்தராயணமாக கொண்டாடப்படும் சூர்யன்
ஆபூர்யமாண பஷாத்யான் ஷடுதன்நேதி மாசான் -சாந்தோக்யம்

மேல் ஏறிப் பிரகாசிப்பதனால் உயர்ந்த உத்தராயணமாக நான்காம் படியாக இருப்பவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

ஆ பூர்யமான பஷாத் யாந் ஷட் உத்தங்கேதி மாஸாத் -சாந்தோக்யம்

சூர்யனாக இருப்பவர் -ஸ்ரீ சங்கரர் –

தன்னைத் தானே அறிந்து கொள்பவர் -ஸ்ரீ சத்ய சந்தர் –

—————-

885-விரோசன –
ஒளி தருபவன் -ஒளி மணி வண்ணன் -4-4-4-

இரண்டு அயனங்களில் ரதம் செல்லும் சம்வத்சரமாக ஐந்தாம் படியாக இருப்பவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

மா சேப்யஸ் சம்வத்சரம் –சாந்தோக்யம் 5-10-2-

பல விதமாகப் பிரகாசிப்பவர் -ஸ்ரீ சங்கரர் –

விலோசன -அர்ஜூனனுக்கு திவ்ய சஷூஸ் ஸைத் தந்தவர் -விரோசன -சூரியனுக்கு ஒளியைத் தருபவர் -ஸ்ரீ சத்ய சந்தர் –

————

886-ஸூர்ய-
வாயு லோகமாக -வாயு இவன் இடம் இருந்து எப்போதும் வீசுவதால் இவன் ஸூர்யன் எனப்படுகிறான்

எப்போதும் சஞ்சரிக்கும் வாயுவாக ஆறாம்படியாக இருப்பவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

எல்லாவற்றையும் உண்டாக்குபவர் -செல்வத்தைக் கொடுப்பவர் -ஸ்ரீ சங்கரர் –

அசைபவர் -உலகங்களைச் செயல்களில் தூண்டுபவர் -ஸூ ரிகளால் அடையப் பெறுபவர் -ஸ்ரீ சத்ய சந்தர் –

——————

887-சவிதா
உண்டாக்குபவன் -மழை பொழிவித்து பயிர் பச்சைகள் உண்டாக்கி வளரச் செய்கிறான் -ஏழாம் படி
மீண்டும் 969-வரும்

ஏழாம் படியான சூரியனால் மழை பயிர் முதலியவற்றை உண்டாக்குபவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

சம்வத்சராத் ஆதித்யம் –சாந்தோக்யம் 5-10-2-
வாயுமப்தாத் அவிசேஷ விசேஷாப்யாம் –ஸ்ரீ ப்ரஹ்ம ஸூத்ரம் 4-3-2-

உலகங்கள் அனைத்தையும் உண்டாக்குபவர் -ஸ்ரீ சங்கரர் –

படைப்பவர் -ஸ்ரீ சத்ய சந்தர் –

————-

888-ரவிலோசன-
சூர்ய கிரணங்கள் மூலம் சந்தரன் -மின்னல் போன்ற தேஜஸ் பதார்த்தங்களை பிரகாசிக்கச் செய்பவன்
சீரார் சுடர்கள் இரண்டானாய் -6-9-1-
சந்தரன் மின்னல் வருணன் -8/9/10 படிகள்
ஆதித்யாத் சந்த்ரமசம் சந்திர மசோ வித்யுதம் ச வருண லோகம் -உபநிஷத்

சூர்ய கிரணங்களால் -எட்டு ஒன்பது பத்தாம் படிகளான சந்திரன் மின்னல் வருணன் ஆகியோரைப்
பிரகாசிக்கச் செய்பவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

ஆதித்யாத் சந்த்ரமசம் சந்த்ரமசவ் வித்யுதம் –சாந்தோக்யம் 5-10-2-
ச வருண லோகான் -கௌஷீதகீ

சூரியனைக் கண்ணாக உடையவர் -ஸ்ரீ சங்கரர் –

சூரியனைக் கண்ணாக உடையவர் -அரவிந்த லோசன என்று கொண்டு நரசிம்ஹ அவதாரத்தில்
குகையுடன் சம்பந்தம் உள்ளவர் -என்றுமாம் -ஸ்ரீ சத்ய சந்தர் –

————-

அநந்த ஹூத புக் போக்தா ஸூ கதோ நைகதோ அக்ரஜ
அநிர்விண்ணஸ் சதா மர்ஷீ லோகாதிஷ்டான மத்புத –95

————-

889-அநந்த ஹூத புக் போக்தா –
மிக்க மகிமை யுள்ள இந்த்ரனையும் பிரமனையும் உடையவன்
யாகங்களில் அக்னியில் சேர்க்கப்படுமவைகளை புசிப்பதால் இந்த்ரன் ஹூத புக் –
பிரஜைகளைக் காப்பாற்றுவதால் பிரமனுக்கு போக்தா
11/12 படிகள்

யாகங்களில் ஹோமம் செய்வதை உண்பவனான -பதினோராம்படி -இந்த்ரனையும் பிரஜைகளைக்
காப்பவனான -பன்னிரண்டாம் படி -பிரமனையும் உடையவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

ச இந்திரலோகம் ச பிரஜாபதி லோகம்

அனந்த -தேச கால வஸ்து பேதங்களால் அளவுபடாதவர் –
ஹூதபுக் -ஹோமம் செய்வதை உண்பவர் –
போக்தா -பிரகிருதியை அனுபவிப்பவர் -உலகைக் காப்பவர் -மூன்று திரு நாமங்கள் -ஸ்ரீ சங்கரர் –

அனந்த -பந்தம் இல்லாதவர் -முடிவில்லாதவர் –
ஹூதபுக் -ஆஹூதியை நன்கு உண்பவர் –
போக்தா-உண்பவர்-மூன்று திரு நாமங்கள் -ஸ்ரீ சத்ய சந்தர் –

———

890-ஸூகத
ஸூகம் அளிப்பவன்
அமானவன் திவ்ய புருஷன் கை கொடுத்து
பொன்னடியாம் செங்கமலப் போதுகளை உன்னிச் சிரத்தாலே தீண்டின்
அமானவனும் நம்மைக் கரத்தால் தீண்டல் கடன் -உபதேச ரத்னமாலை –
முன்பே 461 பார்த்தோம்-

பதிமூன்றாம் படியான அமானவ திவ்ய புருஷனாக ஸ்பர்சித்து சம்சார வாசனைகளை ஒழித்துத் தம்மை
அடைவதாகிய சுகத்தைத் தருபவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

தத் புருஷ மாணவ ச யேநாந் ப்ரஹ்ம கமயதி–சாந்தோக்யம் -5-10-3-

ஸூ கத -பக்தர்களுக்கு மோஷ ஸூ கத்தைக் கொடுப்பவர் -அல்லது -அஸூ கத -துக்கங்களைப் போக்குபவர் -ஸ்ரீ சங்கரர் –

சுகத்தைத் தருபவர் -மங்களகரமான இந்த்ரியங்களைத் தருபவர் -ஸ்ரீ சத்ய சந்தர் –

————–

891-நை கத
ஒன்றை கொடாதவன் -பலவற்றை தருமவன்
புஷ்ப மாலைகள் வஸ்தரங்கள் -அப்சரஸ்கள் அலங்காரம் சதம் மாலா ஹஸ்தா -கௌஷீதகி உபநிஷத்
வள்ளல் மணி வண்ணன் –

எண்ணற்ற பூ மாலை மை ஆடை முதலிய பிரஹ்ம அலங்காரங்களைக் கொடுத்து இந்த முக்தனை தம்மிடம்
சேர்ப்பிக்கும் அப்சரஸ் ஸூ க்களை உடையவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

ச பஞ்ச சதாந் யப்சரச உபதா வந்தி சத்தம் மாலா ஹஸ்தா சத்தம் அஞ்சன ஹஸ்தா -கௌஷீதகீ -1-4-
தம் ப்ரஹ்ம அலங்காரேன அலங்குர்வந்தி

தர்மத்தைக் காப்பதற்காகப் பல அவதாரங்களை எடுப்பவர் -நை கஜ -எனபது பாடம் -ஸ்ரீ சங்கரர் –

தாமரையில் உதித்த ஸ்ரீ லஷ்மிக்கு மணவாளர் -தாமரை அடர்ந்து இருக்கும் வனத்தில் தோன்றியவர் –
எவரிடமிருந்தும் பிறவாதவர் -நைகஜ எனபது பாடம் -ஸ்ரீ சத்ய சந்தர்-

————————————————————————————–

ஜீவர்களை ஆளுபவன் –

849-ப்ராக்வம்ஸ- என்றுமே முக்தியிலே இருக்கும் நித்ய ஸூரிகளுக்கும் ஆதாரம் ஆனவர் —
இவர் நினைவாலேயே அவர்கள் நித்யர்களாக உள்ளார்கள் –
850-வம்ச வர்த்தன -நித்ய ஸூரிகள் என்னும் வம்சத்தை வளர்ப்பவர் –
851-பாரப்ருத்-ஜீவர்கள் தன்னைச் சேரும் வரை அவர்களின் பொறுப்பை தாங்குபவர் –
852-கதித-முன்னால் சொல்லப்பட்டவை -இனி சொல்லப் படுபவை ஆகிய அனைத்து மங்களமான குணங்களும்
பொருந்தியவராய் சாஸ்த்ரங்களில் போற்றப்படுபவர்
853-யோகீ–சேராதவையையும் சேர்க்கும் -நடக்காதவையையும் நடத்தும் பெருமை கொண்டவர் –
854-யோகீஸ-யோகிகளுக்குத் தலைவர் -யோகத்தை நிறைவேற்றுபவர் –
855-சர்வகாமத -யோகத்தில் நடுவே தவறினவர்களுக்கும் தகுந்த பலனைக் கொடுக்கும் –
856-ஆஸ்ரம -யோகத்தில் தவறியவர்களுக்கு திரும்பவும் அதைத் தொடரத் தகுதியான ஒய்விடத்தைக் கொடுப்பவர்
857-ஸ்ரமண-யோகத்தை தொடர உதவி செய்து சம்சாரத்தில் இருந்து கரை சேர்ப்பவர் –
858-ஷாம -யோகத்தை தொடர விருப்பம் உற்றவர்களுக்கும் சம்சாரக் கடலைத் தாண்டும் வலிமை கொடுப்பவர் –
859-ஸூ பர்ண-யோகத்தை தொடர உதவி செய்து சம்சாரத்தில் இருந்து கரை சேர்ப்பவர்
860–வாயு வாஹன -பலமான காரணங்களால் யோகத்தில் இருந்து நழுவினாலும் அவர்களை
வேகமுள்ள கருடனைக் கொண்டு தூக்கிச் செல்பவர் –
861-தநுர்தர-பக்தர்களின் எதிரிகளை ஒழிக்க வில் எடுத்து இருப்பவர் –
862-தநுர்வேத-பக்தர்களின் எதிரிகளை ஒழிக்க வில் எடுத்து இருப்பவர் –

———————————————————-

தீயவர்களுக்கு யமன்

863-தண்ட -தகுதியான அரசர்களைக் கண்டு தீயவர்களைத் தண்டித்து தர்மத்தை நிலை நிறுத்துபவர் –
864-தமயிதா-தானே நேராகவும் இராவணன் முதலானோரை அடக்குமவர் –
865-அதம -தான் யாராலும் அடக்கப் படாதவர் –
866-அபராஜித -யாராலும் எப்போதும் எங்கும் எதனாலும் வெல்லப் படாதவர் –
867-சர்வசஹ-சிறு பலன்களுக்காக வேறு தேவதைகளைத் தொழுபவர்களையும் பொறுப்பவர் –
868-நியந்தா -மற்ற தேவர்களைத் தொழு பவர்களையும் ஊக்குவித்து இறுதியில் அவர்கள் தம்மை அடையக் காத்து இருப்பவர் –
869-நியம -வேறு தேவதைகள் இடம் நீண்ட ஆயுள் ஆகியவற்றை வேண்டினாலும் அந்த தேவதைகளுக்கு
அந்தராத்மாவாக இருந்து பலனைத் தானே கொடுப்பவர் –
870-யம -தேவர்களுக்கு வரம் அளிக்கும் வலிமையைத் தந்து நடத்துபவர்

———————————————-

சத்வ குணத்தை வளர்ப்பவன் –

871-சத்வவான் -கலப்பில்லாத ஸூத்த சத்வ குணத்தை உடையவர் –
872-சாத்விக -சத்வ குணத்தின் பலமான ஆறாம் அறிவு பற்றின்மை செல்வம் ஆகியவற்றின் உருவகமாகவே இருப்பவர் –
873-சத்ய – சாத்விகமான சாஸ்த்ரங்களால் போற்றப்படும் உண்மையான புகழாளர் –
874-சத்ய தர்ம பராயண -சாத்விகமான தர்மத்தை நாம் அனுஷ்டிப்பதனால் மகிழ்பவர் –
875-அபிப்ராய -சாத்விக தர்மங்களை கடைப் பிடிப்பவர்களால் விரும்பப் படுபவர்
876-ப்ரியார்ஹ -தன்னையே விரும்புவர்கள் இடம் பேரன்பு கொண்டவர் –
877-அர்ஹ-தன்னையே அடைய விரும்பும் பக்தர்களுக்கு தகுந்தவர் –
878-ப்ரியக்ருத் -வேறு பயன்களை விரும்புவோருக்கு அவற்றைக் கொடுத்து இறுதியில் தம்மிடத்தில் விருப்பத்தை வளர்ப்பவர் –
879-ப்ரீதி வர்தன -தன்னுடைய இனிமையான குணங்களால் பக்தியை வளர்த்து தம்மிடம் ஈடுபடுத்துபவர் –
880-விஹாயசகதி -பக்தர்கள் பரமபதத்தை அடைவதற்கு தாமே வழியாக இருப்பவர் –

—————————————————————————–

நெடும் கால ஆசை அர்ச்சிராதி மார்க்கம் –

881-ஜ்யோதி -மீளுதல் இல்லாத வைகுந்ததுக்குச் செல்லும் அர்ச்சிராதி மார்க்கத்தில் முதல் படியான ஒளியாய் இருப்பவர் –
882-ஸூ ருசி -ஸூ ர்ய ஒளியால் பிரகாசிக்கும் பகலாக இருப்பவர் -இரண்டாம் படி –
883- ஹூத புக் விபு -ஹோமப் பொருட்கள் உண்ணும் சந்த்ரனனின் வளர் பிறையாய் இருப்பவர் -மூன்றாம் படி –
884-ரவி -ஸூ ர்யன் பிரகாசிப்பதால் சிறந்ததான உத்தராயணமாக இருப்பவர் -நான்காம் படி –
885-விரோசன -கதிரவன் உத்தராயணம் தஷிணாயாணம் ஆகிய வற்றால் பிரகாசிக்கும் சம்வத்சரமாக -ஆண்டாக இருப்பவர் -ஐந்தாம் படி –
886-ஸூ ர்ய -மழையையும் பயிரையும் வளர்க்கும் ஸூ ர்யனாகவும் இருப்பவர் –ஆறாம் படி
887-சவிதா -எங்கும் வீசும் காற்றாக இருப்பவர் -ஏழாம் படி
888-ரவி லோசன -சந்தரன் மின்னல் வருணன் ஆகியவர்களுக்கு ஒளி யூட்டுபவர் –8-9-10-படிகள் –
889-அநந்த ஹூத புக் போக்தா -யாகத்தில் சமர்ப்பிக்கப் படுவதை ஏற்கும் இந்த்ரனாகவும்
ஜீவர்களைக் காக்கும் நான்முகனாகவும் இருப்பவர் -11-12-படிகள் –
890-ஸூ கத -அமானவனால் தீண்டப்பட்டு சம்சாரம் ஒழிந்து தம்மை அடையும் ஜீவனுக்கு இன்பத்தை அளிப்பவர் –
891- நைகத–பல அப்சரஸ் ஸூ க்கள் இந்த முகத்தனை அலங்கரித்து தம்மிடம் சேர்க்கும் படி செய்பவர்

—————————————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பராசர பட்டர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பீஷ்மர் திருவடிகளிலே சரணம்
ஸ்ரீ வியாச பகவான் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: