ஸ்ரீ விஷ்ணு சகஸ்ர நாமம்–4-ஸ்ரீ கிருஷ்ணாவதார திரு நாமங்கள் -697-786–

மநோஜவஸ் தீர்த்தகரோ வஸூ ரேதா வஸூப்ரத
வஸூப்ரதோ வாஸூதேவோ வஸூர் வஸூமநா ஹவி -74-
சத்கதிஸ் சத்க்ருதிஸ் சத்தா சத்பூதிஸ் சத்பராயண
ஸூரசேனோ யது ஸ்ரேஷ்டஸ் சந்நி வாஸஸ் ஸூ யா முன –75
பூதா வாஸா வாஸூதேவஸ் சர்வா ஸூ நிலயோ அநல
தர்ப்பஹா தர்ப்பதோத்ருப்தோ துர்த்தரோ தாபாராஜித –76
விஸ்வமூர்த்திர் மஹா மூர்த்திர் தீப்த மூர்த்திர் அமூர்த்தி மான்
அநேக மூர்த்திர் அவ்யக்தஸ் சதமூர்த்திஸ் சதாநன–77
ஏகோ நைகஸ் சவ க கிம் யத்தத்த் பதம நுத்தமம்
லோக பந்துர் லோக நாதோ மாதவோ பக்தவத்சல
ஸூ வர்ண வர்ணோ ஹே மாங்கோ வராங்கஸ் சந்த நாங்கதீ
வீரஹா விஷமஸ் ஸூ ந்யோ க்ருதாஸீ ரசலஸ் சல –79-
ஸூ மேதா மேதஜோ தன்யஸ் சத்யமேதா தராதர –80-
தேஜோ வ்ருஷோ த்யுதி தரஸ் சர்வ சஸ்திர ப்ருதாம்வர
ப்ரக்ரஹோ நிக்ரஹோ வ்யக்ரோ நைகஸ்ருங்கோ கதாக்ரஜ–81
சதுர்மூர்த்தி சதுர்பாஹூஸ் சதுர்யூஹஸ் சதுர்கதி
சதுராத்மா சதுர்பாவஸ் சதுர்வேத விதேகபாத் –82-
சமா வரத்தோ நிவ்ருத்தாத்மா துர்ஜயோ துரதிக்ரம
துர்லபோ துர்கமோ துர்கோ துராவாசோ துராரிஹா–83-

———–

4-ஸ் ரீகிருஷ்ணாவதார திரு நாமங்கள் -697-786

———————————————————————————

697-வஸூரேதா
தேஜஸ் ஸே கர்ப்பம் ஆனவன் -வ ஸூ =எம்பெருமான் தேஜஸ்
தேவகி பூர்வ சந்த்யாயாம் ஆவிர்பூதம் மஹாத்மனா
ஜன்ம கர்ம மே திவ்யம்
ஆதி அம் சோதி யுருவை அங்கு வைத்து இங்கு பிறந்த வேத முதல்வன் -3-5-5-
அவதார ரகசியம் அறிந்தால் மோஷம் சித்தம் ஸ்ரீ கீதாசார்யன் திரு வாக்கு

ஸ்ரீ கிருஷ்ணாவதாரம் -தம் திவ்ய தேஜச்சையே திரு அவதாரத்திற்குக் காரணமாக யுடையவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

உஜ்ஜஹார ஆத்மந கேஸோ சித க்ருஷ்ணவ் மஹா முநே –ஸ்ரீ விஷ்ணு புராணம் -5-1-60 —
மம தே கேச சஞ்ஜிதா –சாந்தி பர்வம்

ஸூவர்ணமாகிய வீர்யத்தை யுடையவர் -ஸ்ரீ சங்கரர் –

தண்ணீரில் ஒளியை யுடையவர் -ஸ்ரீ சத்ய சந்தர் –

——————

698- வஸூ ப்ரத –
நிதியான தன்னைத் தருபவன் -வ ஸூ =நிதி
வாசுதேவ தேவகிகளுக்கு தானே புத்ரனாக உபகரித்தான்
நந்த கோபன் யசோதை களுக்கும் இந்த நிதியை ஆக்கி வைத்தான்
எடுத்த பேராளன் நந்த கோபன் தன் இன்னுயிர் சிறுவனே -8-1-3-
எனக்கு தன்னைத் தந்த கற்பகம் –

சிறந்த நிதியாகிய தம்மை தேவகிக்கும் வஸூ தேவருக்கும் கொடுத்தவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

செல்வத்தை மிகுதியாகக் கொடுப்பவர் -குபேரனுக்கும் செல்வம் கொடுப்பவர் -ஸ்ரீ சங்கரர் –

செல்வம் ரத்தினங்கள் இவற்றை பக்தர்களுக்கு மிகுதியாகக் கொடுப்பவர் -ஸ்ரீ சத்ய சந்தர் –

—————-

699- வஸூ ப்ரத
பெரும் புகழைத் தந்தவன் -வஸூ தேஜஸ்
தன் பிரஜைகளில் ஒருவரை தனக்கு பிதாவாகக் கொண்டு தான் தகப்பன் உடையவன் ஆகிறான்
எல்லையில் சீர்த் தசரதன் தன் மகனாய்த் தோன்றினான் -பெருமாள் திரு-10-11-

உலகிற்குத் தந்தை யாகிய தமக்கும் பெற்றோர்கள் ஆகும்படி பெரிய பெருமையை
தேவகி வஸூ தேவர்களுக்கு அளித்தவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

பக்தர்களுக்கு உயர்ந்த பலனாகிய மோஷத்தை அளிப்பவர்
தேவர்களின் விரோதிகளான அசுரர்களின் செல்வங்களை அழிப்பவர் -ஸ்ரீ சங்கரர் –

அர்ஜூனனுக்காக வஸூ அவதாரம் ஆகிய பீஷ்மனை நன்கு அலஷ்யம் செய்தவர் -ஸ்ரீ சத்ய சந்தர் –

—————-

700- வாஸூ தேவ
வஸூதேவ புத்திரன் -பிறந்து பெற்ற பெயர் -தாசரதி போலே
எங்கும் உளன் கண்ணன் -வ்யாப்தியை
மல் பொரு தோளுடை வாசுதேவா -பெருமாள் திரு-6-6-
முன்பே 333 பார்த்தோம்–ஸ்ரீ பராசர பட்டர் –

வஸூ தேவருக்குப் புத்திரர் –-ஸ்ரீ சங்கரர் –

வஸூ தேவருக்குப் புத்திரர் –-ஸ்ரீ சத்ய சந்தர் –

வஸூக்களில் சிறந்த பீஷ்மருக்குத் தலைவர் -தேவர்களால் -அல்லது ஞானம் முதலியவற்றால் பிரகாசிப்பவர் என்ற
பொருள் கொண்ட வஸூ தேவ சப்தத்தினால் சொல்லப்படும் ப்ரஹ்ம சரீரத்தினால் அறியப்படுபவர் –
ப்ரஹ்ம சரீரத்துக்கு ஆதாரமாக இருப்பவர் – -ஸ்ரீ சத்ய சந்தர் –

————–

701-வஸூ
வசிப்பவன் -லோக ஹிததுக்காக ஷீராப்தி
பாற்கடலில் பையத் துயின்ற பரமன்
பயிலவிநிய நம் பாற்கடல் சேர்ந்த பரமன் -3-7-1
ஏஷ நாராயண ஸ்ரீ மான் ஷீரார்ணவ நிகேதன நாக பர்யங்க முத்ஸ்ருஜ்ய ஹ்யாகதோ மதுராம் புரீம் -ஹரி வம்சம் –
முன்பே 105/271 பார்த்தோம்

திரு வவதாரத்திற்குக் காரணமாகிய திருப் பாற் கடலில் வசிப்பவர் -ஸ்ரீ பராசர பட்டர்-

ச லோகா நாம் ஹிதார்த்தாய ஷீரோதே வசதி பிரபு –சபா பர்வம் -47-26-
ஏஷ நாராயண ஸ்ரீ மான் ஷீரார்ணவ நிகேதந –ஸ்ரீ ஹரி வம்சம் -113-62-

எல்லாம் தம்மிடம் வசிக்கப் பெற்றவர் -தாம் எல்லாவற்றிலும் வசிப்பவர் -ஸ்ரீ சங்கரர் –

எங்கும் வசிப்பவர் -ஸ்ரீ சத்ய சந்தர் –

—————-

702-வஸூ மநா-
வசுதேவர் இடத்தில் மனம் வைத்தவன்
முன்பே 106 பார்த்தோம்

ஸ்ரீ லஷ்மி பிறந்தவிடமான பாற் கடலில் வாசம் செய்தும் வஸூ தேவரிடம் மனம் வைத்தவர் -ஸ்ரீ பராசர பட்டர் –
தேவதத்தனை தத்தன் என்றும் சத்யபாமாவை பாமா என்பது போலே வஸூ தேவனை வஸூ என்கிறார் –

எல்லாவற்றிலும் வசிக்கும் மனம் உள்ளவர் -ஸ்ரீ சங்கரர் –

ச்யமந்தக மணியில் அல்லது பக்தர்கள் அளிக்கும் தீர்த்தத்தில் மனம் உள்ளவர் -வஸூ என்ற பெயருள்ள
அரசனுடைய அல்லது அஷ்ட வஸூக்களின் மனத்தைத் தம்மிடம் கொண்டவர் -ஸ்ரீ சத்ய சந்தர் –

————-

703-ஹவி –
கொடுக்கப் பட்டவன் -விருந்து -நந்த கோபர் இடம் –
வேண்டித் தேவர் இரக்க வந்து பிறந்து –அன்று அன்னை புலம்பப் போய் அங்கு ஓர் ஆய்க்குலம் புக்கான் -6-4-5
மகா ஹவி -683 பார்த்தோம்-

தேவகி வஸூதேவர்களிடம் வசிக்க விருப்பம் உள்ளவரானபோதும் -அவர்கள் கம்சனால் தீங்கு வரும் என்று அஞ்சியதால்
நந்த கோப யசோ தைகள் இடம் வளர்ப்பதற்குக் கொடுக்கப்பட்டவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

ப்ரஹ்மமே ஹவிஸ் -என்று ஸ்ரீ கீதை-4-24–சொல்லியபடி ஹவிஸ்ஸாக இருப்பவர் -ஸ்ரீ சங்கரர் –

ஹோமம் செய்யப்படுபவர் -ஸ்ரீ சத்ய சந்தர் –

———–

சத்கதிஸ் சத்க்ருதிஸ் சத்தா சத்பூதிஸ் சத்பராயண
ஸூரசேனோ யது ஸ்ரேஷ்டஸ் சந்நி வாஸஸ் ஸூ யா முன –75

—————–

704-சத்கதி
சத்துக்களுக்கு புகல்-இடையர்களுக்கு -தந்தை கால் விலங்கற-
சம்சார பந்தம் முடிக்க
பற்றிலார் பற்ற நின்றான் -7-2-7-நிவாச வ்ருஷஸ் சாதுநாம் ஆபன்னாம் பராகதி

திரு வவதரிக்கும் போதே அசுரர்களால் விளையும் ஆபத்துக்களை அழித்து சாதுக்களைக் காப்பவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

சந்தஸ் சந்தோஷம் அதிகம் பிரசமம் சண்ட மாருதா–ஸ்ரீ விஷ்ணு புராணம் -5-3-4-

ப்ரஹ்ம ஞானிகளான சத்துக்களால் அடையப் பெறுபவர் -உயர்ந்த ஞானம் உள்ளவர் -ஸ்ரீ சங்கரர் –

சத்தையை -இருப்பை அளிப்பவர் -நஷத்ரங்களுக்கு வழியாக இருப்பவர் -நல்லோர்களுக்கு அடையும் இடமாக இருப்பவர் -ஸ்ரீ சத்ய சந்தர் –

—————–

705-சத் க்ருதி –
ஆச்சர்யமான செயல்களை செய்பவன் -ஜன்ம கர்ம மே திவ்யம்
குரவை ஆய்ச்சியரொடு கோத்ததும் குன்றம் ஓன்று ஏந்தியதும் உறவு நீர்ப் பொய்கை நாகம் காய்ந்ததும் உட்பட மற்றும் பல -6-4-1-
மண் மிசை பெரும்பாரம் நீங்க ஓர் பாரத மா பெரும் போர் பண்ணி மாயங்கள் செய்து -6-4-10-
இந்த சேஷ்டிதங்களை- சொல்லியும் நினைந்தும் மோஷம் பெறுவார்

தயிர் வெண்ணெய் களவு செய்தது -உரலில் கட்டுண்டு தவழ்ந்தது -ராசக்ரீடை செய்தது முதலிய செய்கைகளும்
சம்சார விலங்குகள் எல்லாவற்றையும் போக்குபவைகளாகச் சிறந்து இருப்பவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

ஜென்ம கர்ம ச மே திவ்யம் –ஸ்ரீ கீதை 4-9-

ஸ்ருஷ்டி முதலிய சிறந்த செயல்களை உடையவர் -ஸ்ரீ சங்கரர் –

சிறந்த முயற்சி உள்ளவர் -க்ருதி என்னும் தேவியைப் பிரத்யும்னன் முதலிய ரூபத்தில் அடைந்தவர் -ஸ்ரீ சத்ய சந்தர் –

———–

706-சத்தா –
உலகின் இருப்புக்கு காரணமாய் உள்ளவன்
நன்றாக நான் உன்னை அன்றி இலேன் கண்டாய் -நாராயணனே நீ என்னை அன்றி இல்லை -நான் முகன் -7-
என் விளக்கு என் ஆவி -1-7-5-

தாமே சாதுக்களுக்கு இருப்பாக உள்ளவர் -அவரின்றி எதுவும் இல்லை யன்றோ -ஸ்ரீ பராசர பட்டர் –

ந ததஸ்தி விநா யத் ஸ்யாத் மயா –ஸ்ரீ கீதை -10-39-

எவ்வித பேதமும் இல்லாத ஞானமாய் இருப்பவர் -ஸ்ரீ சங்கரர் –

ஆனந்தத்தின் இருப்பிடம் -ஆனந்தத்தை யுண்டாக்குபவர்-எப்போதும் இருப்பவர் -ஸ்ரீ சத்ய சந்தர் –

————–

707-சத்பூதி
சாதுக்களின் ஐஸ்வர்யம் -பூதி விபூதி நிதி ஐஸ்வர்யம்
நந்தகோபன் குமரன் -அர்ஜுனன் தோழன் -பாண்டவ தூதன் -குந்திக்கு பந்து -அஹம்வோ பாந்தவவோ ஜாத-
வைத்த மா நிதி -6-7-1-
எய்ப்பினில் வைப்பினை காசினை மணியை -7-10-4-
சேலேய் கண்ணியரும் பெரும் செல்வமும் நன்மக்களும் அவரே இனி ஆவார் -5-1-8-

சாதுக்களுக்கு மகன் -நண்பன் -உறவினன் -தூதன் தேரோட்டி முதலிய எல்லா வகைகளாகவும்
தாமேயாக இருப்பவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

சத்தாக இருந்தே பல பல பொருள்களாகத் தோற்றுகிறவர் -ஸ்ரீ சங்கரர் –

நல்லோர்க்குச் செல்வம் அளிப்பவர் -சிறந்த செல்வம் யுடையவர் -ஸ்ரீ சத்ய சந்தர் –

————–

708-சத் பராயண –
சத்துக்களுக்கு புகலாய்-அயநம் ஆஸ்ரயம்
கிருஷ்ணாஸ்ரய கிருஷ்ண பலா கிருஷ்ண நாதாச்ச –
புகல் ஒன்றில்லா அடியேன் உன்னடிக் கீழ் அமர்ந்து புகுந்தேனே -6-10-10-
அடிக்கீழ் அமர்ந்து புகுந்து அடியீர் வாழ்மின் என்று அருள் கொடுக்கும் பெருமான் -6-10-1-
நன்றாக நான் உன்னை அன்றி இலேன் கண்டாய் நாரணனே -நான் முகன் -7-
மம ப்ராணாஹி பாண்டவா –ஜ்க்னானீது ஆத்மைவ மே மதம்
நாரணனே நீ என்னை அன்றி இல்லை -நான் முகன் -7-

சத் பராயணம் -சாதுக்கள் முடிவாகச் சேரும் இடமாக இருப்பவர் –
சத் பாராயண -சாதுக்களைத் தமக்கு ஆதாரமாக யுடையவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

கிருஷ்ண ஆஸ்ரயா கிருஷ்ண பலா கிருஷ்ண நாதாச்ச பாண்டவா கிருஷ்ண பாராயணம் தேஷாம் –த்ரோண பர்வம்
மாமேவைஷ்யஸி –ஸ்ரீ கீதை -18-65-
சத்துக்களை இவன் கதி -சத்துக்களையே இவனும் கதியாக திரு உள்ளம் பற்றி இருப்பானே
மம பிராணா ஹி பாண்டவ –உத்யோக பர்வம்
பாண்டவா நாம் பவாந் நாதோ பவந்தம் ச ஸ்ரிதா வயம்
ஞானீ த்வாத் மைவ மே மதம் –ஸ்ரீ கீதை -7-18-

தத்துவ ஞானிகளுக்கு அடையும் இடமாக இருப்பவர் -சத்பராயணம் -எனபது பாடம் -ஸ்ரீ சங்கரர் –

சத் பராயண -நல்லோர்களுக்குப் புகலிடமாக இருப்பவர் -வாயு தேவனிடம் பற்றுள்ளவர்களுக்குப்
புகலிடமாக இருப்பவர் -ஸ்ரீ சத்ய சந்தர் –

——————-

709-சூரா சேன –
சூரர்களை சேனையாக உடையவன்
ஒரு பாரத மா பெரும் போர் பண்ணி சேனையைப் பாழ் பட நூற்றிட்ட சோதி நாதன் -6-4-7-

பூ பாரம் தீர்ப்பதற்காக திருவவதரித்த செயலில் யாதவர் பாண்டவர் முதலிய சூரர்களை துணையான
சேனையாகக் கொண்டவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

ஹனுமான் முதலிய சூரர்களை சேனையாக உடையவர் -ஸ்ரீ சங்கரர் –

சூரர்களான ஜராசந்தன் முதளியவருடைய சேனைகளைத் தோற்ப்பித்தவர்-
சூர்யனாகிய தலைவனுடன் கூடியவர்கள் எனப்படுகின்ற சூரர்களை யுடையவர் -ஸ்ரீ சத்ய சந்தர் –

————–

710-யதுஸ்ரேஷ்ட-
ஆயர் குலத்தை வீடுய்யத் தோன்றிய கரு மாணிக்கச் சுடர் -6-2-10-

முழுகிப் போன யது வம்சத்தை உயர வைத்ததனால் யதுக்களில் சிறந்தவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

அயம் ச கத்யதே பிராஜ்ஜை புராணார்த்த விசாரதை கோபாலோ யாதவம் வம்சம் மக்ந மப்
யுத்தரிஷ்யதி –ஸ்ரீ விஷ்ணு புராணம் 5-20-49-

யதுக்களில் சிறந்தவர் -ஸ்ரீ சங்கரர்

எல்லோரைக் காட்டிலும் மேம்பட்ட ரமாதேவியைக் காட்டிலும் மேம்பட்டவர் –
யது குலத்தவர்களில் உயர்ந்தவர் -ஸ்ரீ சத்ய சந்தர் –

—————–

711-சந்நிவாச –
சத்துக்களுக்கு வாசஸ் ஸ்தானம் -ஆபன்னாம் பராகதி
ஆயர் புத்திரன் அல்லன் அரும் தெய்வம் -பெரியாழ்வார் -1-1-7-
சிவன் அயன் இந்திரன் இவர் முதல் அனைத்தோர் தெய்வக் குழாங்கள் கை தொழக் கிடந்த
தாமரை யுந்தியான் -திருவாசிரியம்

மானிட தர்மத்தை உடையவராக இருந்த போதும் சனகர் முதலியோர் வந்து இளைப்பாறும் இடமாக இருப்பவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

ச நந்த நாத்யைர் முனிபிஸ் சித்த யோகைரகல்பஷை சஞ்சித்யமானம் தத்ரஸ்த்தை
நா சாக்ர ந்யஸ்த லோசநை –ஸ்ரீ விஷ்ணு புராணம் -5-18-42

வித்வான்களுக்கு ஆதாரமாக இருப்பவர் -ஸ்ரீ சங்கரர் –

நற்குணங்கள் நிறைந்தவர் -நல்லோர்க்கு இடமாக இருப்பவர் -ஸ்ரீ சத்ய சந்தர் –

———————

712-ஸூயாமுந-
யமுனைத் துறையில் விளையாட்டுகளில் ஈடு பட்டவன் ஸூ -சோபனம் பாவனம்
தூய பெரு நீர் யமுனைத் துறைவன்

இனிமையானதும் பாவங்களைப் போக்குவதுமாய் யமுனையில் செய்த ஜலக்ரீடை ராசக்ரீடை முதலிய
செய்கைகளை யுடையவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

சுபமானவர்களும் யமுனைக் கரையில் வசிப்பவர்களுமான நந்த கோபர் யசோதை பலராமன் சுபத்ரை
முதலியோரால் சூழப் பெற்றவர் -ஸ்ரீ சங்கரர் –

காளியனை வெளியேற்றி யமுனையைச் சுத்தமாக்கி மங்களம் உள்ளதாகச் செய்தவர் –
ஸ்ரீ கிருஷ்ணாவதாரத்தில் யமுனைக் கரையில்
வந்திருந்த மங்களத்தைத் தருபவரான பிரம்மா முதலியவர்களால் சூழப் பெற்றவர் -ஸ்ரீ சத்ய சந்தர் –

———-

பூதா வாஸா வாஸூதேவஸ் சர்வா ஸூநிலயோ அநல
தர்ப்பஹா தர்ப்பதோத்ருப்தோ துர்த்தரோ தாபாராஜித –76

—————–

713-பூதா வாஸ –
பூ சத்தாயாம் -பூதா நாம் ஆதார
பஸ்யாமி தேவாம் ஸ்தவ தேவ தேஹே சர்வாம்ச்ததா பூத விசேஷ சங்கான் -ஸ்ரீ கீதை 11-15-
மயி சர்வமிதம் ப்ரோதம் ஸூத்ரே மணிகணா இவ -ஸ்ரீ கீதை -7-7-
உயிர்கள் எல்லா உலகும் உடையவன் -3-2-1-

ஸ்ரீ கிருஷ்ணனாகத் தம் பரத்வத்தை மறைத்து எல்லாப் பிராணிகளுக்கும் தங்கும் இடமாக இருப்பவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

வசந்தி த்வயா பூதாநி பூதா வாசஸ்ததோ ஹரே

பிராணிகள் தம் அருட்பார்வையில் வசிக்கும்படி இருப்பவர் -ஸ்ரீ சங்கரர் –

பூதங்களைக் காத்து எங்கும் சஞ்சரிப்பவர் -ஸ்ரீ சத்ய சந்தர் –

————-

714-வாஸூதேவ –
வாசுதேவ புத்திரன் -த்வாதச மந்திர ப்ரவர்த்தித்தவன்
கம்சாதிகளுக்கு ம்ருத்யு -மதுரா நகர் பெண்களுக்கு மன்மதன் -வசுதேவாதிகள் குழந்தை யோகிகளுக்கு பரதத்வம்
கூசி நடுங்கி யமுனை யாற்றில் நின்றேன் வாசுதேவா உன் வரவு பார்த்தே -பெருமாள் திரு -6-1-
முன்பே 334-700 பார்த்தோம்

வசுதேவர் பிள்ளையாக பன்னிரண்டு எழுத்துக்களை உடைய வாஸூ தேவ மந்திரத்தை வெளியிட்டவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

மாதுராத அத்புத மாயாய -மதுரையில் ஜனித்த பல அத்புதங்களுடன் கூடியவன்

மாயையினால் உலகத்தை மறைக்கும் தேவராக இருப்பவர் -ஸ்ரீ சங்கரர் –

வாயுவிற்கு தேவன் –அறிவிற்காகப் பிறக்கும் பிராண தேவனை யுண்டாக்கியவர்-
அவாஸூதேவ -என்று ஸ்ருகால வாஸூ தேவனை அழித்தவர் – ஸ்ரீ சத்ய சந்தர் –

———–

715-சர்வாஸூ நிலய –
சர்வ வஸ்து தாரகன் -ஐந்தும் ஐந்தும் ஐந்துமாகி நின்ற ஆதி தேவனே -திருச்சந்த -3-
பார் உருவில் நீர் எரி கால் விசும்பாகிப் பல்வேறு சமயமுமாய்ப் பரந்து நின்ற எம்மடிகள் -திருநெடு -2-

எல்லோருடைய பிராணங்களுக்கும் இருப்பிடமானவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

விநா கிருஷ்னேந கோ வ்ரஜா-ஸ்ரீ கிருஷ்ணன் இல்லாமல் பசுக்கள் தரிக்காவே கோகுலத்தில்
அ ஸூர்யம் இவ சூர்யேண நிவாதம் இவ வாயுநா கிருஷ்னேந சமுபேதேந ஜஹ்ருஷே பாரதம் புரம்

எல்லா பிராணன்களும் லயமடையும் ஆத்மாவாக இருப்பவர் -ஸ்ரீ சங்கரர் –

எல்லாப் பிராணிகளுக்கும் தஞ்சமாக இருப்பவர் -ஸ்ரீ சத்ய சந்தர் –

—————-

716-அநல-
திருப்தி பெறாதவன் -உன் அடியார்க்கு என் செய்வன் என்றே இருத்தி நீ -பெரிய திரு-53-

அடியவர்களுக்கு எல்லாம் செய்தாலும் திருப்தி அடையாமல் ஒன்றும் செய்ய வில்லையே என்று இருப்பவர் –
அடியவரிடம் பிறர் செய்யும் பிழையைப் பொறுக்காதவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

ருணம் ப்ரவ்ருத்தம் இவ மே ஹ்ருதயாந் நாபசர்பதி
த்வவ் து மே வதகால அஸ்மிந்ந ஷந்த்வ்யவ் கதஞ்சன யஜ்ஞ விந்தகரம் ஹந்யாம் பாண்டவா நாம் ச துர்ஹ்ருதம் —

தம்முடைய சக்திக்கு அளவில்லாதவர் -ஸ்ரீ சங்கரர் –

பக்தர்களுக்கு வேண்டியவற்றைத் தருவதில் போதும் என்ற எண்ணமே இல்லாதவர் -ஸ்ரீ சத்ய சந்தர் –

—————-

717-தர்ப்பஹா –
கர்வத்தை அடக்குபவன் -இந்த்ரன் -வாணாசுரன்
கார்திகையானும் –வாணன் ஆயிரம் தோள் துணித்தவன்

கோவர்த்தன மலை எடுத்தது -பாரி ஜாதத்தை கவர்ந்தது -பாணாசூரன் தோள்களைத் துணித்தது முதலியன செய்த போதும்
தேவர்களின் உயிர்களைக் கவராமல் கர்வத்தை மட்டும் போக்கியவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

தர்மத்திற்கு விரோதமான வழியில் செல்பவர்களுடைய கர்வத்தைப் போக்குபவர் -ஸ்ரீ சங்கரர் –

அசுரர்களின் அஹங்காரத்தை அழிப்பவர்-ஸ்ரீ சத்ய சந்தர்-

————-

718-தர்ப்பத
மதம் தருமவன்
யாதவர்களை த்வாரகையில் வைத்து காத்து ஐஸ்வர்யம் தந்து மதம் ஏற்றி
இதனால் தங்களையே அழித்துக் கொண்டனர்

யாதவர்களுக்கு மதுபானம் முதலியவற்றால் மதத்தைக் கொடுத்தவர் –
விரோதிகளை அழித்தும் வெல்ல முடியாத த்வாரகையை யுண்டாக்கியும் சங்க பத்ம நிதிகள் பாரிஜாத மரம் –
தேவர்களின் மண்டபமான ஸூ தர்மா ஆகியவற்றைக் கொண்டு வந்து கொடுத்தான்
யாதவர்களுக்கு கொடுத்தவர் – ஸ்ரீ பராசர பட்டர் –

தர்ம மார்க்கத்தில் இருப்பவர்களுக்குப் பெரிய கர்வத்தை அளிப்பவர் -ஸ்ரீ சங்கரர் –

அயோக்யர்களுக்கு அஹங்காரத்தை உண்டு பண்ணுபவர் -கர்வமுள்ளவர்களை அழிப்பவர் -ஸ்ரீ சத்ய சந்தர் –

—————————-

719-அத்ருப்த –
கர்வம் அற்றவன் -நந்த கோபன் குமரன் -த்ருப்த -யசோதை இளம் சிங்கம் மேனாணிப்பு
நந்த கோபன் தன் இன்னுயிர்ச் சிறுவன் அசோதைக்கு அடுத்து பேரின்பக் குல விளம் களிறு -8-1-7-

அத்ருப்த -தாம் சிறிதும் கர்வம் அடையாதவர் –
த்ருப்த-யசோதை நந்த கோபரால் சீராட்டப் பெற்று மகிழ்பவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

ஏவம் விதாநி கர்மாணி க்ருத்வா கருட வாஹன ந விஸ்மய முபாகச்சத் பாரமேஷ்ட்யேந தேஜஸா –

ஆத்மானந்த அனுபவத்தினால் எப்போதும் மகிழ்ந்து இருப்பவர் -த்ருப்த -என்ற பாடம் -ஸ்ரீ சங்கரர் –

செருக்குள்ளவர் -ஸ்ரீ சத்ய சந்தர் –

————

720-துர்த்தர –
அடக்க முடியாதவன்
யசோதைக்கு இளம் சிங்கம்
கறந்த நல் பாலும் –பெற்று அறியேன்
நின் திறத்தேன் அல்லேன் நம்பி

குழந்தை விளையாட்டுக்களிலும் குறும்பு செய்யும் பிள்ளையாக மத யானை போலேப் பெற்றோர்களால் அடக்க முடியாதவர் –
தீயவர்களால் பிடிக்க முடியாதவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

யதி சக்நோபி கச்ச த்வமதி சஞ்சல சேஷ்டித
இமம் ஹி புண்டரீகாக்ஷம் ஜித்ருஷந்தி அல்பமேதச படே நாக்நிம் ப்ரஜ்வலிதம் யதா பாலோ யதா அபலா
துர்க்க்ரஹ பாணிநா வாயு துர் ஸ்பர்ச பாணி நா ஸசீ துர்த்தரா ப்ருத்வீ ஸூர்த்தநா துர்க்ரஹ கேசவா பலாத்

நிர்க்குணர் ஆகையால் த்யானம் முதலியவற்றால் மனத்தில் நிறுத்த முடியாதவர் ஆயினும் -பல பிறவிகளில் விடாமல் பாவனை செய்து
அவர் அருள் பெற்ற சிலரால் மட்டும் மிக்க சிரமத்தினால் மனத்தில் நிறுத்தக் கூடியவர் -ஸ்ரீ சங்கரர் –

சுமக்க முடியாதவர் -ஸ்ரீ சத்ய சந்தர் –

————–

721-அபராஜித –
வெல்ல முடியாதவன்
பற்ப நாதன் உயர்வற யுயரும் பெரும் திறலோன் -2-7-11-
யத்ர யோகேஸ்வர கிருஷ்ண தத்ர ஸ்ரீர் விஜயோ பூதி -ஸ்ரீ கீதை
அன்று ஐவரை வெல்வித்த மாயப் போர்த் தேர்ப் பாகனார் -4-6-1-

பாரதப் போரில் பாண்டவர் வேறு சகாயம் இல்லாமல் இருந்தபோதும் தம் சகாயத்தால் துர்யோதனாதியர் நூற்றுவராலும்
வெல்லப் படாதபடி செய்தவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

ஏகம் ஹனிஷ்யஸி ரிபும் கர்ஜந்தம் தம் மஹாம்ருத ந து தம் பிரார்த்த யஸ்யேகம் ரஷ்யதே ச மஹாத்மநா–உத்தியோகபர்வம்
யமா ஹுர் வேத விதுஷோ வராஹம் அஜிதம் ஹரிம் நாராயணம் அசிந்த்யம் ச தேந கிருஷ்னேந ரஷ்யதே -வனபர்வம்
அஜயாம்ச் சாபி அவத்யாம்ச் ச தாரயிஷ்யஸி தாந் யூதி ருதே அர்ஜுனம் மஹா பாஹும் தேவைரபி துராசதம்
யமாஹு அமுதம் தேவம் சங்கு சக்ர கதா தரம் பிரதான சோஸ்த்ரா விதூஷாம் தேந கிருஷ்னேந ரஷ்யதே –வனபர்வம்
யஸ்ய த்வம் புருஷ வ்யாக்ர சாரத்யம் உப ஜெக்மி வாந் ஸ்ருதம் ஏவ ஜயஸ்தஸ்ய ந தஸ்யாஸ்தி பராஜய -உத்யோக பர்வம்
சவதோஹம் தனுஷைகேந நிஹந்தும் சர்வ பாண்டவாந் யத் யேஷாம் ந பவேத் கோப்தா விஷ்ணு காரண பூருஷ
துருவம் வை ப்ராஹ்மணே சத்யம் த்ரவா சாது ஷு சந் நாதி ஸ்ரீர்த்ருவா சாபி தஷேஷு த்ருவோ நாராயணே ஐயா –யுத்த காண்டம்
அஜய்ய சாஸ்வதோ த்ருவ–யுத்த காண்டம்
அஜித கட்க த்ருக்–யுத்த காண்டம்
யத க்ருஷ்ணஸ் ததோ ஜய–உத்யோக பர்வம்
யத்ர யோகேஸ்வர கிருஷ்ண –ஸ்ரீ கீதை –18-78-
யதாஹம் நாபி ஜாநாமி வாஸூ தேவ பராஜயம் மாதுச்ச பாணி கிரஹணம் சமுத்ரஸ்ய ச சோஷணம்
ஏதேந சத்ய வாக்யேந சிஞ்சயதாம் அகதோ ஹ்யம்
ரத்நாகரம் இவா ஷோப்யோ ஹிமவா நிவ சாசல ஜாத தேவ இவா த்ருஷ்யோ நாராயண இவா ஐயா–வைதரேண சம்ஹிதை

காம க்ரோதங்கள் முதலிய உட் பகைகளாலும் அசுரர்கள் முதலிய வெளிப் பகைவர்களாலும் வெல்ல முடியாதவர் -ஸ்ரீ சங்கரர் –

பிறரால் தோற்கடிக்கப் படாதவர் -ஸ்ரீ சத்ய சந்தர் –

———–

விஸ்வமூர்த்திர் மஹா மூர்த்திர் தீப்த மூர்த்திர் அமூர்த்தி மான்
அநேக மூர்த்திர் அவ்யக்தஸ் சதமூர்த்திஸ் சதாநன–77

————-

722-விஸ்வ மூர்த்தி –
ஜகத்தை சரீரமாக யுடையவன் –
அஹமாத்மா குடாகேச சர்வ பூதா சயஸ்தித-ஸ்ரீ கீதை -10-19-
உலகமாய் உலகுக்கே ஓர் உயிர் ஆனாய் -6-9-7-
முன்பே 697 வஸூரேதா பார்த்தோம்

எல்லாம் தமது உடலாக இருத்தலின் தம் உடல் தமக்கு அநிஷ்டம் செய்யாமையால்
பலவான்களும் துர்பலர்களை வெல்ல முடியாமல் செய்பவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

அஹமாத்மா குடாகேசா சர்வ பூயோ சயஸ்தித–ஸ்ரீ கீதை -10-20-

உலகமே தமக்கு உடலாக உள்ளவர் -ஸ்ரீ சங்கரர் –

வாயுதேவனைச் சரீரமாக யுடையவர் -அனைத்துமே தம் வடிவானவர் -எண்ணற்ற வடிவங்கள் உள்ளவர் -ஸ்ரீ சத்ய சந்தர் –

—————

723-மஹா மூர்த்தி –
பெரிய திரு வுருவம் படைத்தவன்
வையம் ஏழும் கண்டாள் பிள்ளை வாயுளே -ஆயர் புத்தரன் இல்லை அரும் தெய்வம் –
ஸ்வரூபம் சங்கல்ப ஞானம் திரு மேனி -மூன்றாலும் பெரியவன்
நந்தா விளக்கே அளத்தற்கு அரியாய் -பெரிய திரு மொழி -3-8-1-

உலகங்கள் அனைத்தையும் தம் திரு மேனியில் யுடையவர் -ஸ்ரீ பராசர பட்டர்

இஹைகஸ்தம் ஜகத் க்ருத்ஸ்னம் பஸ்யாத்ய ச சராசரம் மம தேஹே குடாகேச யச்சாந் யத் த்ரஷ்டும் இச்சசி –ஸ்ரீ கீதை -11-7-

ஆதிசேஷன் மேல் சயனித்த பெரிய உருவமுடையவர் -ஸ்ரீ சங்கரர் –

மிகப் பெரிய ரூபத்தை யுடையவர் -ஸ்ரீ சத்ய சந்தர் –

—————

724-தீப்த மூர்த்தி –
தேஜோ மயமான வுருவு படைத்தவன்
நந்தாத தொழும் சுடரே எங்கள் நம்பீ -பெரிய திருமொழி -1-10-9-
ஒளி மணி வண்ணன் -3-4-7-

சிறந்த குணங்களால் விளங்கும் பொருள் அனைத்தும் தம் உடலாக யுடையவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

யத்யத் விபூதிமத் சத்வம் ஸ்ரீ மதுர்ஜிதமேவ வா -ஸ்ரீ கீதை -10-41-

ஞான மயமாக ஒளிரும் ரூபமுள்ளவர் -தம் விருப்பத்தால் ஒளியுருக் கொண்டவர் -ஸ்ரீ சங்கரர் –

ஒளிரும் ரூபம் யுடையவர் -ஸ்ரீ சத்ய சந்தர் –

—————

725-அமூர்த்திமான் –
சூஷ்மமான உருவை உடையவன்
திசை பத்தாய் அருவேயோ -6-9-7-
தொல்லை நன்னூலில் சொன்ன உருவும் அருவும் நீ -7-8-10-
ஒன்றலா உருவாய் அருவாய நின் மாயங்கள் -5-10-6-

உருவமற்ற மூல பிரகிருதி ஜீவாத்மா முதலியவற்றையும் தம் சொத்தாக இருப்பவர் –
இதற்கு முன்னும் பின்னும் பகவானுக்கு உருவம் யுண்டு என்பதாலும்
அமூர்த்தி மான் -மதுப் பொருள் அற்றதாகி விடக் கூடாதே என்பதாலும்
உருவமற்றவர் என்ற பொருள் கொள்ள முடியாது -ஸ்ரீ பராசர பட்டர் –

பூமிர் ஆப அநலோ வாயு –ஸ்ரீ கீதை -7-4-
அபரேயமி தஸ்து அந்யாம் ப்ரக்ருதிம் –ஸ்ரீ கீதை -7-5-
யஸ்ய அவ்யக்த சரீரம் –ஸூபால
யஸ்ய ஆத்மா சரீரம் -சதபத ப்ராஹ்மணம்
இதற்கு முன்னும் பின்னும் மூர்த்தி இருப்பதால் அமூர்த்தி மூர்த்தி இல்லாதவன் என்பது சேராதே

கர்மத்தினால் ஏற்பட்ட உருவம் இல்லாதவர் -ஸ்ரீ சங்கரர் –

பிராக்ருதமான உருவம் இல்லாதவர் -ஸ்ரீ சத்ய சந்தர் –

—————–

726-அநேக மூர்த்தி
பல வுருவங்களை யுடையவன் –பேரும் பல பலவே -பல பலவே சோதி வடிவு -2-5-6-
கோபிகள் ராசக் கிரீடை -அங்கனாம்

ஸ்ரீ கிருஷ்ணாவதாரத்தில் வாஸூ தேவ சங்கர்ஷண பலராம பிரத்யும்ன அநிருத்தர்களாகப் பல வடிவுகள் கொண்டவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

ஷோடச ஸ்த்ரீ சஹஸ்த்ராணி சதமேகம் ததோதிகம் தாவந்தி சக்ரே ரூபாணி பகவான் தேவகி ஸூத–ஸ்ரீ விஷ்ணு புராணம் -5-31-18-

அவதாரங்களில் தம் விருப்பத்தினால் உலகுக்கு உபகாரமாகப் பல திரு மேனிகளைக் கொள்பவர் -ஸ்ரீ சங்கரர் –

பல அவதாரங்களில் அநேகம் ரூபங்களைக் கொண்டவர் -ஸ்ரீ சத்ய சந்தர் –

—————-

727-அவ்யக்த –
காண முடியாதவன் –
காணலும் ஆகான் -கருத்தின் கண் பெரியன் -சிந்தைக்கும் கோசரம் அல்லன் -1-9-6-
பிறர்களுக்கு அரிய வித்தகன் –
யாரும் ஓர் நிலைமையன் என அறி வரிய எம்பெருமான் -1-3-4-

மனுஷ்யவதாரத்தால் தம் பெருமை மறைக்கப் பெற்றவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

நாஹம் பிரகாச ஸர்வஸ்ய –ஸ்ரீ கீதை -7-25-
நாஹம் வேதைர்நா தபஸா –ஸ்ரீ கீதை -11-53-

இப்படிப் பட்டவர் என்று எவராலும் அறிய முடியாதவர் -ஸ்ரீ சங்கரர் –

தம் அருள் இன்றி அறிய முடியாதவர் -விசேஷமாகப் புலப்படாதவர் -தோஷங்களால் தெளிவாகாதவர் -ஸ்ரீ சத்ய சந்தர் –

—————–

728-சத மூர்த்தி
எண்ணிலா உருவங்களை யுடையவன்
பஸ்யமே பார்த்த ரூபாணி சதசோத சஹச்ரச -ஸ்ரீ கீதை -11-5-
ஏக மூர்த்தி இரு மூர்த்தி மூன்று மூர்த்தி பல மூர்த்தி யாகிய நாராயணன் -4-3-3-

தன்னைக் காண விரும்பிய அர்ஜூனனுக்கு தம் விஸ்வரூபம் காட்டியவர் -ஸ்ரீ பராசர பட்டர்

பஸ்ய மே பார்த்த ரூபாணி சதசோத சஹச்ரச–ஸ்ரீ கீதை -11-5-

ஞான ரூபியாய் இருந்தும் மாயையினால் பல உருவங்களாகத் தோன்றுபவர் -ஸ்ரீ சங்கரர் –

நூற்றுக் கணக்கான வடிவங்களை யுடையவர் -ஸ்ரீ சத்ய சந்தர் –

————

729-சதா நன-
அநேக திரு முகங்கள்
தோள்கள் ஆயிரத்தாய் முடிகள் ஆயிரத்தாய் -துணை மலர்க் கண்கள் ஆயிரத்தாய்
தாள்கள் ஆயிரத்தாய் பேர்கள் ஆயிரத்தாய் தமியனேன் -பெரிய வப்பனே -8-1-10-

அர்ஜூனன் கூறியபடி அநேக முகங்களும் கண்களும் யுடையவர் -ஸ்ரீ பராசர பட்டர் —

அநேக வக்த்ர நயனம் –ஸ்ரீ கீதை -11-20-

பல உருவங்கள் உள்ள படியால் பல முகங்கள் யுடையவர் –ஸ்ரீ சங்கரர் –

நூற்றுக் கணக்கான முகங்கள் யுடையவர் -ஸ்ரீ சத்ய சந்தர் –

———-

ஏகோ நைகஸ் சவ க கிம் யத்தத்த் பதம நுத்தமம்
லோக பந்துர் லோக நாதோ மாதவோ பக்தவத்சல

—————

730-ஏக –
ஒருவன் -அத்விதீயம் –
அரக்கரை உருக்கேட வாளி பொழிந்த ஒருவனே -8-6-2-
அந் நலனுடை யொருவன் -1-1-3-
எந்தை ஏக மூர்த்தி
ஒண் சங்கதை வாள் ஆழியான் ஒருவன் -8-8-1-

இப்படிப்பட்ட மஹிமையினால் தமக்கு ஒப்பாக ஒருவரும் இல்லாத ஒருவர் -அத்விதீயர் -என்றபடி -ஸ்ரீ பராசர பட்டர் –

உண்மையில் எந்தவித பேதமும் இல்லாமையினால் ஒருவரே சத்தியமாய் இருப்பவர் -ஸ்ரீ சங்கரர் –

ஒரே கர்த்தாவாக இருப்பவர் -ஸ்ரீ சத்ய சந்தர் –

—————-

731-நைக-
பலவாக -தீயாய் நீராய் நிலனாய் காலாய் நெடு வானாய் சீரார் சுடர்கள் இரண்டாய் சிவனாய் அயனானாய் -6-9-1
நா சந்தோஸ்தி மம திவ்யாநாம் விபூதிநாம் பரந்தப-

தமது விபூதிகளில் எல்லையற்றும் இருப்பவர் -இங்கு ஏகம் என்றது ப்ரஹ்மத்தைத் தவிர ஒன்றும் இல்லை என்றோ
அல்லது எல்லாம் அவனுடைய விகாரமே என்றோ சொல்வது அல்ல -ஸ்ரீ பராசர பட்டர் –

நாந்தோஸ்தி மம திவ்யாநாம் விபூதி நாம் பரந்தப –திவ்ய ரூபங்களுக்கு எல்லை இல்லையே

மாயையினால் பல ரூபங்களை யுடையவர் -ஸ்ரீ சங்கரர் –

பல ரூபங்கள் யுடையவர் -ஸ்ரீ சத்ய சந்தர் –

——————-

732-ஸ-
அவன் -ஞானத்தை உண்டு பண்ணுமவன்-
அவனே யவனும் அவனும் அவனும் அவனே மற்று எல்லாமும் அறிந்தனமே -9-3-2-

ஸ்ரீ கிருஷ்ணாவதாரத்தில் சிறுவர் முதல் யாவருக்கும் தம்மைப் பற்றிய ஞானத்தை உண்டாக்குபவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

சோமயாக ரூபியாக இருப்பவர் -ஸவ-என்று ஒரே திரு நாமம் -ஸ்ரீ சங்கரர் –

தமக்காக எல்லாம் யுன்டாக்கப் பெற்றவர் -ஜ்ஞானம் யுடையவர் -ஸவ-என்று ஒரே திரு நாமம் -ஸ்ரீ சத்ய சந்தர் –

————–

733-வ
வசிப்பவன் -எங்கும் உளன் கண்ணன் -2-8-9-
ஒளி வரும் இயல்வினன் -1-3-2-
கரந்த சில் இடம் தொறும் இடம் திகழ் பொருள் தொறும் கரந்து எங்கும் பரந்து உளன் -1-1-10-

எல்லாம் தம்மிடம் வசிக்கும்படி இருப்பவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

வசந்தி தத்ர ச ச பூதேஷ் வஸேஷேஷு வகாரார்த்தஸ்ததோ முநே –ஸ்ரீ விஷ்ணு புராணம் -6-5-6-

————-

734-க –
பிரகாசிப்பவன் -அந்தராத்மாவாக இருந்தாலும் தோஷம் தட்டாமல்

அழுக்கான வற்றில் வசித்தாலும் பிரகாசிப்பவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

சுகம் எனப் பொருள்படும் க என்ற சொல்லால் துதிக்கப் படுபவர் -ஸ்ரீ சங்கரர் –

பிரகாசம் யுடையவர் -ஸ்ரீ சத்ய சந்தர் –

————-

735-கிம் –
எது -பரம் பொருள் -விசாரிக்கத் தக்கவன் –
கற்கும் கல்விச் சாரமும் யானே -5-6-2-

தத்தம் விருப்பங்களை அடைவதற்கு யாவரும் தெரிந்து கொள்ள விரும்பும்படி இருப்பவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

சோந் வேஷ்டவ்ய ச விஜிஞ்ஜாசிதவ்ய –சாந்தோக்யம்

உயர்ந்த பயனாதலின் எது என்று விசாரிக்கப் படும் பிரமமாக இருப்பவர் -ஸ்ரீ சங்கரர் –

புராணச் சொற்களைப் படைத்தவர் -அனைத்து வேதங்களின் விசாரத்துக்கும் விஷயமாக யுள்ளவர் -ஸ்ரீசத்ய சந்தர் –

—————

736-யத் –
யத்னம் பண்ணுபவன் -அஹம் ஸ்மராமி மத் பக்தம் நயாமி பரமாம் கதிம்
இசைவித்து என்னை யுன் தாளிணைக் கீழ் இருத்தும் அம்மானே -5-8-9-

அடியவர்களைக் காப்பதற்கு முயல்பவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

கிருஷ்ண கிருஷ்னேதி கிருஷ்னேதி யோ மாம் ஸ்மரதி நித்ய ச -ஜலம் பித்வா யதா பத்மம் -நரகாத் உத்தராம் யஹம்
அஹம் ஸ்மராமி மத் பக்தம் நயாமி பரமாம் கதிம்

யத் என்ற சொல்லால் கூறப்படும் ப்ரஹ்மமாக உள்ளவர் -ஸ்ரீ சங்கரர் –

எல்லாவற்றையும் அறிபவர் -ஸ்ரீ சத்ய சந்தர் –

————-

737-தத் –
தூண்டி அதிகப் படுத்துபவன் –ஞான சக்திகளை விஸ்தரிக்க பண்ணுபவன்
ஓம் -தத் -சத் -ப்ரஹ்ம லஷணம்-தத் சவிதுர் வரேண்யம் –
செய்வார்களைச் செய்வேனும் யானே -5-6-4-

அடியவர்களுக்குத் தம்மைப் பற்றிய ஞானமும் பக்தியும் தருபவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

தத் ஸவிதுர் வரேண்யம்
ஓம் தத் சத் இதி நிர்தேச

எல்லாவற்றையும் படைக்கும் ப்ரஹ்மம் -ஸ்ரீ சங்கரர் –

வேதங்களில் உள்ளவர் -குணங்கள் யுடையவர் -ஸ்ரீ சத்ய சந்தர் –

————–

738-பதம் அநுத்தமம்-
மேலான ப்ராப்யம்
நின் செம்மா பாத பற்புத் தலை சேர்த்து ஒல்லை அம்மா அடியேன் வேண்டுவது ஈதே -2-9-1-
அளிக்கும் பரமன் கண்ணன் ஆழிப் பிரான் -3-7-6-

அடியவர்களால் அடையப்படும் மிக உயர்ந்த பயனாக இருப்பவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

முமுஷூக்களால் அடையப்படும் மிக உயர்ந்த பயனாக இருப்பவர்-ஸ்ரீ சங்கரர் –

அடியவர்களால் அடையப் படும் மிக உயர்ந்த பயனாக இருப்பவர் -ஸ்ரீ சத்ய சந்தர் –

————–

739-லோக பந்து
சமோஹம் சர்வ பூதேஷு –
உன் தன்னோடு உறவேல் நமக்கு இங்கு ஒழிக்க ஒழியாது
நான் உன்னை அன்றி இலேன் கண்டாய் நாரணனே நீ என்னை அன்றி இல்லை
என்னைப் பெற்ற அத்தாயாய்த் தந்தையாய் அறியாதன அறிவித்த அத்தா -2-3-2-
தாயாய்த் தந்தையாய் மக்களாய் மற்றுமாய் முற்றுமாய் நீயாய் நீ நின்ற மாயன் -7-8-1-
மாதா பிதா ப்ராதா நிவாஸ சரணம் கதி -ஸூ பால உபநிஷத்-

வேறுபாடின்றி எல்லோருக்கும் அருள்வதால் உலகத்தவர் யாவருக்கும் விட முடியாத உறவாக இருப்பவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

மாதா பிதா பிராதா நிவாஸ சரணம் ஸூஹ்ருத் கதிர் நாராயண —ஸூபால
பிதா அஹம் அஸ்ய ஜகத் –ஸ்ரீ கீதை -9-17-

உலகம் எல்லாம் தம்மிடம் கட்டப் பட்டு இருக்கும்படி ஆதாரமாக இருப்பவர் –சிருஷ்டித்து தந்தை போன்றவர் –
நன்மை தீமைகளை உபதேசிக்க வேதங்கள் தர்ம சாஸ்திரங்கள் முதலியவற்றைக் கொடுத்தவர் -ஸ்ரீ சங்கரர் –

அனைத்து உலகிற்கும் பந்துவானவர் -ஸ்ரீ சத்ய சந்தர் –

————–

740-லோக நாத
சர்வ ஸ்வாமி -ரஷகன் –
இவ் வேழ் உலகை இன்பம் பயக்க இனிதுடன் வீற்று இருந்து ஆள்கின்ற எங்கள் பிரான் -7-10-1-
ஞாலத்தூடே நடந்தும் நின்றும் கிடந்தும் இருந்தும் சாலப் பல நாள் உகந்து ஓர் உயிர் காப்பான் -6-9-3-
உலகம் மூன்று உடையாய் என்னை ஆள்வானே -6-10-10-

இந்த ஸ்வா பாவிக உறவால் உலகோர் அனைவருக்கும் ஸ்வாமியாய் இருப்பவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

உலகங்களால் யாசிக்கப் படுபவர் – உலகங்களை பிரகாசிக்கச் செய்பவர் -ஆசீர்வதிப்பவர் -உலகங்களுக்கு ஈஸ்வரர் -ஸ்ரீ சங்கரர் –

அனைத்து உலகிற்கும் நாதரானவர் -அறிவின் வடிவமாக வேண்டப் படுபவர் -ஸ்ரீ சத்ய சந்தர் –

—————

741-மாதவ
லஷ்மி வல்லபன் -மலர்மகளுக்கு அன்பன் -திரு மகளார் தனிக் கேள்வன் -வங்கக் கடல் கடைந்த மாதவனை கேசவனை –
அகலகில்லேன் இறையும் என்று அலர் மேல் மங்கை உறை மார்பன்
ம் -மௌநம் –த-த்யானம் –வ -யோகம் -இவற்றால் சாஷாத் கரிக்கப் படுமவன்

உலகங்களுக்கு லஷ்மி தாயும் தாம் தந்தையுமான உறவாக இருப்பவர் -மது குலத்தில் பிறந்தவர் –
மௌனம் த்யானம் யோகம் ஆகியவற்றை உடையவர் மாதவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

மவ்நாத் த்யாநாச் ச யோகாச்ச வித்தி பாரத மாதவம் -உத்யோக பர்வம் -71-4-மவ்னம் த்யானம் யோகம் கொண்டதால் மாதவன்

யாதவ -மது -குலத்தில் பிறந்தவர் -ஸ்ரீ சங்கரர்-

மதுவின் புத்திரர் -சுகத்தைத் தருபவர் -ஸ்ரீ சத்ய சந்தர் –

———–

742-பக்த வத்சல-
நிகரில் புகழாய்-6-10-10-வாத்சல்யம்

அடியவர்களைப் பெற்ற பரபரப்பில் மற்ற எல்லா வற்றையும் மறந்தவர் -தம்மை ஸ்வாமி – பந்துவாகவும் உணர்ந்து
பக்தி பண்ணுபவர்களின் சிறப்பு கூறப்படுகிறது – ஸ்ரீ பராசர பட்டர் –

பக்தர்களிடம் அன்பு யுடையவர் -ஸ்ரீ சங்கரர் –

பக்தர்களாகிய கன்றுகளைக் காப்பவர் -அன்பு யுடையவர் —
அன்னத்தை உடையவர்களான அந்தணர்கள் இடம் செல்பவர் ஸ்ரீ சத்ய சந்தர் –

———-

ஸூ வர்ண வர்ணோ ஹே மாங்கோ வராங்கஸ் சந்த நாங்கதீ
வீரஹா விஷமஸ் ஸூ ந்யோ க்ருதாஸீ ரசலஸ் சல –79-

—————

743-ஸூ வர்ண வர்ண –
பொன் வண்ணன்
இன்பப் பாவினைப் பச்சைத் தேனைப் பைம் பொன்னை அமரர் சென்னிப் பூவினை -திருக் குறும் -6-
மற்று ஒப்பாரில்லா ஆணிப் பொன்னே -திரு விருத்தம் -85-
பொன்னின் வண்ணம் மணியின் வண்ணம் புரையும் திரு மேனி -பெரிய திரு மொழி -4-9-8-

மாற்று ஏறின தங்கம் போல் குற்றம் இன்றி விளங்கும் திவ்ய வர்ணம் உள்ளவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

யதா பஸ்ய பச்யதே ருக்ம வர்ணம் –முண்டக -3-3-
ருக்மாபம் ஸ்வப்னதீ காப்பியம் -மனு ஸ்ம்ருதி -12-122-
ஆதித்ய வர்ணம் -புருஷ ஸூக்தம்
ஹிரண்மய புருஷ –சர்வ ஏவ ஸூவர்ண –சாந்தோக்யம் -1-6-6-

தங்கத்தின் நிறம் போன்ற நிறம் யுடையவர் -ஸ்ரீ சங்கரர் –

பொன் போன்ற நிறம் யுடையவர் -ஸ்ரீ சத்ய சந்தர் –

———–

744- ஹேமாங்க-
பொன் மேனியன் -சுத்த சத்வமயம் ஹிரண்மய புருஷ
பொன்னானாய் இமையோர்க்கு என்றும் முதலானாய் -திரு நெடும் -10-

பொன் நிறமான சுத்த சத்வ மயமான அங்கத்தை யுடையவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

ஹிரண்மய புருஷ த்ருச்யதே

பொன் போன்ற திருமேனி யுடையவர் -ஸ்ரீ சங்கரர் –

பொன் மயமான அங்கங்கள் உடையவர் -ஸ்ரீசத்ய சந்தர் –

—————————

745-வராங்க
விலஷணமான திரு மேனி –
கை வண்ணம் தாமரை வாய் கமலம் போலும் கண்ணினையும் அரவிந்தம் அடியும் அகத்தே -திரு நெடு -21-
கண் கை கால் தூய செய்ய மலர்களாச் சோதி செவ்வாய் முகிழதா சாயல் திரு மேனி
தண் பாசடையா தாமரை நீள் வாசத் தடம் -8-5-1-
கொண்டல் வண்ணன் சுடர் முடியன் நான்கு தோளன் -8-8-1-

தேவகியின் பிரீதிக்காக மறைக்காமல் அவதரித்த உப நிஷத்தில் கூறப்பட்ட திவ்ய மங்கள
விக்ரஹத்தை உடையவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

புல்லேந் தீவர பத்ராபம் சதுர் பாஹும் நிரீஷ்ய தம் ஸ்ரீ வத்ஸ வக்ஷஸம் ஜாதம் துஷ்டாவ
ஆநக துந்துபி –ஸ்ரீ விஷ்ணு புராணம் -5-3-8-

சிறந்த அழகிய அங்கங்கள் உடையவர் -ஸ்ரீ சங்கரர் –

வராங்க -உத்தமமான அங்கங்களை யுடையவர் -அவராங்க -ஸ்ரீ ரெங்கத்தை அடைந்தவர் -ஸ்ரீ சத்ய சந்தர் –

———————-

746-சந்த நாங்கதீ-
அழகிய திவ்ய பூஷணங்கள் அணிந்தவன்
தயரதன் பெற்ற மரகத மணித்தடம் -ஆபரணங்களுக்கு அழகூட்டும் பெருமாள்
பல பலவே ஆபரணம் -2-5-9’கண்கள் சிவந்து –சுடர் இலகு விலகு மகர குண்டலத்தன் -8-8-1-

மகிழ்ச்சி அளிக்கும் தோள் வளை முதலிய திவ்ய ஆபரணங்களை மிகுதியாக அணிந்து இருப்பவர் –
திருமேனியே திரு ஆபரணம் -அழகிய வஸ்துக்கள் திவ்ய ஆபரணமாக இவரால் ஆகும் –
கேயூரம் முதலிய திவ்ய ஆபரணங்களைக் கொண்டவர் என்றுமாம் -ஸ்ரீ பராசர பட்டர் –

மகிழ்ச்சி தரும் தோள்வளைகளை அணிந்தவர் -ஸ்ரீ சங்கரர் –

சந்தனத்துடன் கூடிய தோள் ஆபரங்களை யுடையவர் -சந்தனம் போன்ற பூஜைக்கு உரிய பொருள்கள் யுடையவர் –
வாலியின் மைந்தன் அங்கதனை பக்தனாக உடையவர் -ஸ்ரீ சத்ய சந்தர் –

————

747-வீரஹா
வீரர்களை மாய்த்த வீரன்
பேய் முலை உண்டு களிறட்ட தூ முறுவல் பிரான் -5-3-8-
வெந்திறல் வீரரின் வீரர் ஒப்பார் -பெரிய திருமொழி -2-8-2-

முலைப் பால் உண்ணும் சிறு பருவத்திலும் பூதனை சகடாசுரன் இரட்டை மருதமரங்கள் போன்ற அசுரர்களை
வேரோடு களைந்தவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

தர்மத்தைக் காப்பாற்றும் பொருட்டு வீரர்களான அசுரர்களை அழிப்பவர்-ஸ்ரீ சங்கரர் –

வீரர்களை அழிப்பவர் -முக்ய பிராணன் அற்றவரை அழிப்பவர் -ஸ்ரீ சத்ய சந்தர் –

—————-

748-விஷம
வேறுபட்ட செயல்களை செய்பவன்
பவித்ராணாம் இத்யாதி
என் பொல்லாத் திருக் குறளா செய்குந்தா வரும் தீமை உன்னடியார்க்குத் தீர்த்து அசுரர்க்கு தீமைகள் செய்குந்தா -3-6-1-

நல்லவர்க்கு நன்மையையும் தீயவருக்கு பயத்தையும் தருவதனால் வேற்றுமை உள்ளவர் -ஸ்ரீ பராசர பட்டர்

அனைவரையும் காட்டிலும் வேறுபட்டவர் ஆதலின் தமக்கு ஒப்பு இல்லாதவர் -ஸ்ரீ சங்கரர் –

சிவனால் அருந்தப் பட்ட விஷத்தின் துன்பத்தையும் நாம ஸ்மரணத்தாலே போக்கியவர் -ஒப்பற்றவர் –
அவிஷம -என்ற பாடத்தில் பாரபஷம் இல்லாதவர் என்றுமாம் -ஸ்ரீ சத்ய சந்தர் –

—————

749-சூன்ய
தோஷம் அற்றவன்
தீதில் சீர் திரு வேங்கடத்தான் -3-3-5-
துயரமில் சீர் கண்ணன் மாயன் -3-10-6-

மனிதராக திரு வவதரித்த போதிலும் குற்றங்கள் ஏதும் இல்லாதவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

எவ்வித விசேஷணமும் அற்றவர் ஆதலின் சூன்யம் போல் இருப்பவர் -ஸ்ரீ சங்கரர் –

பிரளய காலத்தில் எல்லாப் பொருள்களையும் இல்லாமல் செய்பவர் -தீயவர்களின் சுகத்தை அழிப்பவர் -ஸ்ரீ சத்ய சந்தர்-

————

750-க்ருதாசீ
எல்லாரையும் உகப்பிப்பவன்
க்ருதம்- நெய்
நெய் யுண் வார்த்தையுள் –எண்ணும் தோறும என் நெஞ்சு எரி வாய் மெழுகு ஒக்கும் -5-10-3/5-

ஆயர் இல்லங்களில் உள்ள வெண்ணெய் நெய் இவற்றில் ஆசை உள்ளவர் –
தமது திருக் கல்யாண குணங்களாலே உலகை வாழ்விப்பவர் என்றுமாம் –ஸ்ரீ பராசர பட்டர் –

ஆசைகள் அற்றவர் -ஸ்ரீ சங்கரர் –

ஹவிஸ்ஸின் ரூபத்தில் உள்ள நெய்யில் ஆசை உள்ளவர் -ஸ்ரீ சத்ய சந்தர் –

—————

751-அசல –
அசைக்க முடியாத ஸ்த்திரமானவன்
நீர்மையில் நூற்றுவர் வீய ஐவர்க்கு அருள் செய்ய நின்று பார் மல்கு சேனையை அவித்த பரஞ்சுடர் -3-5-7-

துர்யோதனன் முதலிய துஷ்டர்களால் அசைக்க முடியாதவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

ஸ்வரூபம் சக்தி ஞானம் முதலிய குணங்கள் எப்போதும் மாறாதவர் -ஸ்ரீ சங்கரர் –

அசையாதவர் -ஸ்ரீ சத்ய சந்தர் –

———–

752-சல
மாறுபவன் -ஆஸ்ரிதர்க்கு தன்னைத் தருபவன் ஆஸ்ரித பஷ பாதி -ஆயுதம் எடேன்
மாறு சேர் படை நூற்றுவர் மங்க ஓர் ஐவர்க்காய் அன்று மாயப்போர் பண்ணி நீறு செய்த எந்தை -5-7-4-

அடியவர்களான பாண்டவர் முதலியோருக்காக தம் உறுதியையும் விட்டு விலகுபவர் -ஆயுதம் எடுப்பது இல்லை
என்ற பிரதிஜ்ஞை செய்து இருந்தும் சக்ராயுதத்தால் பீஷ்மரை தாக்கச் சென்றவர் அன்றோ – -ஸ்ரீ பராசர பட்டர் –

தமாத்த சக்ரம் ப்ரணதந்த முச்சை ருத்தம் மஹேந்த்ரா வரஜம் சமீஷ்ய ஸர்வாணி பூதாநி பும்ஸம் விநேது ஷயம்
குரூணாமிதி சிந்தயித்வா –பீஷ்ம பர்வம்
ச வாஸூதேவ ப்ரக்ருஹீத சக்ர சம்வர்த்த யிஷ்யந்நிவ அப்யுத்பதந் லோக குருபபாசே பூதாநீ தஷ்யன்னிவ தூமகேது

வாயு ரூபத்தினால் சஞ்சரிப்பவர் -ஸ்ரீ சங்கரர்-

அசைபவர் -ஸ்ரீ சத்ய சந்தர் –

———-

அமாநீ மாநதோ மான்யோ லோக ஸ்வாமீ த்ரிலோகத்ருத்
ஸூ மேதா மேதஜோ தன்யஸ் சத்யமேதா தராதர –80-

———–

753-அமாநீ–
மானம் இல்லாதவன் -ஸ்வ அபிமானம் என்ற கர்வம் அற்றவன் —
மாசுடம்பில் நீர் வாரா மானமிலா பன்றியாம் தேசுடைய தேவர் திருவரங்கச் செல்வனார் -நாச் -11-8-
கழுத்தில் ஓலை கட்டித் தூது போனவன் –
அவன் பின்னோர் தூது ஆதி மன்னவர்க்காகி பெரு நிலத்தார் இன்னார் தூதன் என நின்றான் -பெரிய திரு மொழி -2-2-3-
பற்றலர் வீயக் கோல் கையில் கொண்டு பார்த்தன் தன் தேர் முன் நின்றான் -2-3-1-
நாடுடை மன்னர்க்குத் தூது செல் நம்பி -6-6-4-

பக்தர்கள் விஷயத்தில் தம் உயர்வை நினையாதவர் -அதனால் அன்றோ தயக்கமின்றித் தூது சென்றது -ஸ்ரீ பராசர பட்டர் –

ஆத்மா அல்லாதவற்றை ஆத்மாவாக நினையாதவர் -ஸ்ரீ சங்கரர் –

விஷயங்களில் பற்று இல்லாதவர் -ஸ்ரீ சத்ய சந்தர் –

————-

754-மாநன –
கௌரவம் அளிப்பவன் –
எடுத்த பேராளன் நந்த கோபன் தன் இன்னுயிர் சிறுவன் -8-1-3-
என் நெஞ்சு நிறையக் கை கூப்பி நின்றார் -பெரிய திருமொழி -7-5-8-

அர்ஜூனன் உக்ரசேனன் யுதிஷ்ட்ரன் முதலியோர்க்கு தாம் கீழ்ப் பட்டு இருந்து கௌரவத்தை அளித்தவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

தம் மாயையினால் எல்லோருக்கும் ஆத்மா அல்லாதவற்றை ஆத்மாவாக நினைக்கும்படி செய்பவர் -பக்தர்களுக்கு கௌரவம் தருபவர் –
அதர்மம் செய்தவர்களின் கர்வத்தை அழிப்பவர்-தத்தம் அறிந்தவர்களுக்கு ஆத்மா அல்லாதவற்றை
ஆத்மாவாக நினைக்கும் மயக்கத்தைப் போக்குபவர் – ஸ்ரீ சங்கரர் –

ஸ்ரீ லஷ்மிக்கு வாயுவைப் பிள்ளையாகத் தந்தவர் -கட்டுப் பாட்டை ஏற்படுத்தியவர் -ஸ்ரீ சத்ய சந்தர் –

——————

755-மான்ய –
வெகுமானிக்கத் தக்கவன்
பக்தர்களைக் கை விடாதவன்

அடியவர்களுக்கு கீழ்ப் பட்டு இருப்பதையே தம் பெருமையாக கொள்பவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

ந சாரதேஸ் ஸாத்வத கௌரவாணாம் க்ருத்தஸ்ய முச்யதே ரணேத்ய கச்சித்

சர்வேஸ்வரர் ஆதலின் எல்லோராலும் பூஜிக்கப் பெறுபவர் -ஸ்ரீ சங்கரர் –

ஸ்ரீ லஷ்மி மற்றும் ஜீவ ராசிகள் இடமிருந்து வேறுபட்டவர் -அசைக்க முடியாதவர் -ஸ்ரீ லஷ்மி தேவியைத் தூண்டுபவர் -ஸ்ரீ சத்ய சந்தர் –

—————

756- லோக ஸ்வாமி –
கண்ட வாற்றால் தனதே உலகு என நின்றான் –
மூ உலகாளி-7-2-10-
ஒத்தாரும் மிக்கார்களும் தனக்கின்றி நின்றான் -எல்லா உலகும் உடையான் -4-5-7-

இப்படிச் செய்பவர் யார் என்னில் உலகுக்கு எல்லாம் தலைவர் -ஸ்ரீ பராசர பட்டர்

பதினான்கு உலகங்களுக்கு எல்லாம் ஈஸ்வரர் –

ஸ்ரீ வைகுண்டம் முதலிய உலகங்களில் உள்ளவர்க்குத் தலைவர் -ஸ்ரீ சத்ய சந்தர் –

————-

757- த்ரி லோகத்ருத்-
மூ உலகங்களையும் தரிப்பவன்
நீயே உலகு எல்லாம் நின்னருளே நிற்பனவும் -நான் முகன் -29-

அனைவரையும் தரித்து வளர்த்துக் காப்பவர் -மிகவும் உயர்ந்தவர் தாழ்ந்தவர்களுடன் இதனாலே சேர்ந்தார் -ஸ்ரீ பராசர பட்டர் –

மூ வுலகங்களையும் தரிப்பவர் -ஸ்ரீ சங்கரர் –

மூ வுலகங்களையும் சுமப்பவர் -ஸ்ரீ சத்ய சந்தர் –

————–

758-ஸூ மேதா –
நல் எண்ணம் உடையவன்
அருத்தித்துப் பல நாள் அழைத்தேற்கு–என் தன் கருத்தை யுற வீற்று இருந்தான் -8-7-1-

தம்மை ஆராதிப்பவர்களுக்கு நன்மை தருபவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

சிறந்த ஞானம் உள்ளவர் -ஸ்ரீ சங்கரர் –

சிறந்த ஞானம் உள்ளவர் -ஸ்ரீ சத்ய சந்தர் –

————

759-மேதஜ-
வ்ரதத்தின் பயனாகப் பிறப்பவன்
அதிதி பயோவ்ரதம் அனுஷ்டித்து வாமனன்
தசரதன் புத்திர காமேஷ்டி -பெருமாள்
எல்லையில் சீர் தயரதன் தன் மகனாய்த் தோன்றிற்று -பெருமாள் திரு -11-10-

தேவகியின் யாகத்தின் பயனாகத் திரு வவதரித்தவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

ஸ்து தோஹம் யத் த்வயா பூர்வம் புத்ரார்த்திந்யா ததத்ய தே சபலம் தேவி சஞ்ஜாதம் ஜாதோஹம் யத் தவோதராத் —
சம்ய காராதிதே நோக்தம் யத் பிரசந்நேந தே சுபே தத் க்ருதம் சபலம் தேவி

யாகத்தில் யுண்டாகுபவர் -ஸ்ரீ சங்கரர் –

யாகத்தில் யுண்டாகுபவர் -ஸ்ரீ சத்ய சந்தர் –

————–

760-தன்ய
சம்பத்து உள்ளவன் –
செப்பில மென்முலைத் தேவகி நங்கைக்கு சொப்படத் தோன்றிய -பெரியாழ்வார் -2-1-6-

இப்படி திருவவதரிப்பதை தன் லாபமாக நினைப்பவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

எல்லாவற்றையும் பெற்று இருப்பவர் -ஸ்ரீ சங்கரர் –

புண்ய சாலிகள் யுடையவர் -ஸ்ரீ சத்ய சந்தர்

———

761-சத்ய மேதா –
உண்மையான எண்ணம் உடையவன்
ஆத்மானம் மானுஷம் மன்யே ராமம் தசரதாத்மஜம் –

ஆயர்கள் வஸூதேவர் முதலி யோரைச் சேர்ந்தவர் தாம் எனபது வெறும் நடிப்பாக அல்லாமல் உண்மையாக இருப்பவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

அஹம் வோ பாந்தவோ ஜாத –ஸ்ரீ விஷ்ணு புராணம் -5-13-14-
யதி வோஸ்தி மயி ப்ரீதி ஸ்லாக்யோஹம் பவதாம் யதி ததாத்மா புத்தி சத்ருசீ புத்திர்வ கிரியதாம் மயி –ஸ்ரீ விஷ்ணு புராணம் -5-13 -1-
நாஹம் தேவோ ந கந்தர்வோ ந யஷோ ந ச மா நவ அஹம் வோ பாந்தவோ ஜாத ந வச்சிந்த்யம் அதோந்யதா -ஸ்ரீ விஷ்ணு புராணம் -5-13 -11-

உண்மையான ஞானம் உள்ளவர் -ஸ்ரீ சங்கரர் –

உண்மையான உலகின் விஷயத்தில் ஞானம் உள்ளவர் -உண்மையான ஞானம் உள்ளவர் -ஸ்ரீ சத்ய சந்தர் –

———–

762-தராதர –
குன்றம் ஏந்தியவன் -6-4-3-
கல்லெடுத்துக் கல்மாரி காத்தான் -திரு நெடும் -13-
திறம்பாமல் மலை எடுத்தேனே -5-6-5
கடுங்கல் மாரி கல்லே பொழிய நெடும் காற்குன்றம் குடை ஓன்று ஏந்தி நிறையைக் காத்தான் -பெரிய திருமொழி -6-10-8-
பெரியாழ்வார் திருமொழி 3-5-

ஸ்ரீ கோவர்த்தன மலையை தரித்தவர் -ஸ்ரீ பராசர பட்டர்-

ததே ததகிலம் கோஷ்டம் த்ராதவ்யமது நா மயா இமமத்ரிமஹம் தைர்யாத் உத்பாத்யாசு சிலா தநம்
தாரயிஷ்யாமி கோஷ்டஸ்ய ப்ருதச் சத்ரமிவா பரம் –ஸ்ரீ விஷ்ணு புராணம் -5-13-13-

ஸ்ரீ ஆதிசேஷன் முதலிய தன் அம்சங்களால் பூமி முழுவதும் தாங்குபவர் -ஸ்ரீ சங்கரர் –

பூமியைத் தாங்குபவர் –மேரு மந்த்ரம் முதலிய மலைகளை நன்கு தாங்கும்படி செய்பவர் -ஸ்ரீ சத்ய சந்தர் –

————–

தேஜோ வ்ருஷோ த்யுதி தரஸ் சர்வ சஸ்திர ப்ருதாம்வர
ப்ரக்ரஹோ நிக்ரஹோ வ்யக்ரோ நைகஸ்ருங்கோ கதாக்ரஜ–81

————–

763-தோஜோவ்ருஷ-
தேஜஸ்சை வர்ஷிப்பவன்
வளரொளி ஈசன் கிளரொளி மாயன் கண்ணன் -3-10-10-
புகர் கொள் சோதிப் பிரான் -6-4-3-

இப்படி அடியவரைக் காப்பதில் தம் சக்தியைப் பொழிபவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

ஸூர்ய ரூபியாக ஜலத்தை ஒளியைப் பொழிபவர் -ஸ்ரீ சங்கரர் –

ஒளி மயமான சூரியன் முதலியவர்களில் சிறந்தவர் —
தேஜஸ்சை யுடைய ஸூர்யனைக் கொண்டு மழை பொழியச் செய்பவர்-ஸ்ரீ சத்ய சந்தரர் –

—————–

764-த்யுதிதர
அதி மானுஷமான திவ்ய சக்தி யுடையவன்
மாயக் கோலப் பிரான் -6-4-1
கண்டவாற்றால் தனதே உலகு என நின்றான்

ஸ்ரீ கிருஷ்ணாவதாரத்தில் இளமையிலும் இந்திரனைத் தோற்கச் செய்யும் அதி மானுஷ சக்தியை உடையவர் -ஸ்ரீ பராசர பட்டர்-

தேக ஒளியை தரிப்பவர் -ஸ்ரீ சங்கரர்-

ஒளியைத் தாங்குபவர் -ஸ்ரீ சத்ய சந்தர் –

—————–

765-சர்வ சஸ்திர ப்ருதாம் வர –
ஆயுத பாணிகளில் தலை சிறந்தவன்
தடவரைத் தோள் சக்கரபாணி சாரங்க வில் சேவகனே –நேமி நெடியவனெ -பெரியாழ்வார் -5-4-5-
பொங்கேறு நீள் சோதி பொன்னாழி தன்னோடும் சங்கேறு கோலத் தடக்கைப் பெருமான் -பெரிய திருமொழி -6-8-9-
கொடு வினைப் படைகள் வல்லவன் -9-2-10-

நரகன் ஜராசந்தன் ஆகியோருடனான போரில் அஸ்தரம் பிடித்த எல்லோரிலும் சிறந்து விளங்கியவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

மனுஷ்ய தர்ம லீலஸ்ய லீலா சா ஜகத்பதே அஸ்த் ராண்யநேக ரூணாபி யத் அராதிஷு முஞ்சதி –ஸ்ரீ விஷ்ணு புராணம் -5-33-14-

ஆயுதம் தரித்தவர் -ஸ்ரீ சங்கரர் –

அனைத்து ஆயுதங்களைப் போலுள்ளவர் -ஆகாயத்தைத் தாங்குபவர் -சர்வ சஸ்திர ப்ருதம்பர -என்று பாடம் -ஸ்ரீ சத்ய சந்தர்-

—————-

766-ப்ரக்ரஹ
அடக்கி நடத்துபவன்
கொல்லா மாக்கோல் கொலை செய்து பாரதப் போர் எல்லாச் சேனையும் இரு நிலத்தவித்த எந்தை -3-2-3-

தாம் சாரதியாக இருந்து கொண்டு அர்ஜூனனைக் கடிவாளம் போல் இழுத்துப் பிடித்துத் தம் சொற்படி
அவனை நடத்தியவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

பக்தர்களால் சமர்ப்பிக்கப்படும் இலை பூ முதலியவற்றை ஏற்றுக் கொள்பவர் –விஷயங்கள் என்னும் காடுகளில் ஓடும்
இந்த்ரியங்கள் ஆகிற குதிரைகளைக் கடிவாளம் பிடித்து இழுப்பது போல் அடக்குபவர் -ஸ்ரீ சங்கரர் –

சிறந்த நவ க்ரஹங்களை உடையவர் -சிறந்த சோம பாத்ரங்கள் உள்ளவர் -சிறந்தவர்களை ஏற்றுக் கொள்பவர் -ஸ்ரீ சத்ய சந்தர் –

————–

767-நிக்ரஹ
எதிரிகளை வீயச் செய்தவன்
போர்ப்பாகு தான் செய்து அன்று ஐவரை வெல்வித்த மாயப் போர்த் தேர்ப் பாகனார் -4-6-1-
சித்திரத் தேர் வலவன் -7-8-3-

அர்ஜூனனது வீரத்தை எதிர்பாராமல் தாம் செய்த சாரத்யத்தினாலேயே எதிரிகளை அடக்கியவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

எல்லாவற்றையும் தம் வசத்தில் அடக்கி வைத்து இருப்பவர் -ஸ்ரீ சங்கரர் –

அசுரர்களை அழிப்பவர்-ஸ்ரீ சத்ய சந்தர் –

—————-

வ்யக்ர –
யுத்தம் செய்யும் செயலைப் பொறுத்துக் கொள்ளாதவன் -தான் ஒருவனாக இருந்தே இப்போதே இவர்களை அழிக்கிறேன்-என்றான்

யே யாந்தி யாந்த்யேவ சினிப்ர வீரி யே அவஸ்திதா ஸத்வரம் தே அபி யாந்தி பீஷ்மம் ரதான் பஸ்யத்
பாத்யமாநம் த்ரோணம் ச சங்க்யே ச கணம் மயா அத

————

768-நைகச்ருங்க-
அநேக உபாயங்களால் பகைவரை மாய்த்தவன்
பகலை இரவாக்கி -ஆயுதம் எடேன் –
மாயங்கள் செய்து சேனையைப் பாழ் பட நூற்றிட்டு -உபாயங்கள் செய்து

புத்தியினால் வழி சொல்வது -சாரதியாக இருப்பது -ஆயுதம் எடுப்பது இல்லை என்று சொல்லி எடுப்பது -முதலிய பல
வழிகளால் பகைவர்களுக்குப் பல துன்பங்களை ஏற்படுத்தியவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

நான்கு வேதங்களைக் கொம்பாக உடையவர் -ஸ்ரீ சங்கரர் –

ஸ்ரீ வ்ருஷ ரூபத்தில் அநேக கொம்புகள் உள்ளவர் –
ஸ்ரீ வராஹ திருவவதாரத்தில் ஒரே கொம்புள்ள பரம புருஷனாக இருந்தவர் -ஸ்ரீ சத்ய சந்தர் –

——————-

770-கதாக்ரஜ
கதனுக்கு முன் பிறந்தவன்
கதன் -வாசுதேவன் மனைவி ஸூ நாமை -கண்ணனுக்கு இளையவனாக பிறந்தவன்

கதன் என்பவனுக்கு முன் பிறந்தவர் -கண்ணன் -ஸ்ரீ பராசர பட்டர் –

மந்த்ரத்தினால் முன்னே ஆவிர்ப்பவிப்பவர் —
நிகதம் -மந்த்ரங்களை விளக்கமாக ஓதுவது -நி கேட்டு கத அக்ரஜர்-மந்த்ரத்தினால் முன்னே ஆவிர்ப்பவிப்பவர் – -ஸ்ரீ சங்கரர் –

ஸ்ரீ கிருஷ்ணாவதாரத்தில் கதன் என்பவனுக்கு முன் பிறந்தவர் —
அகதாக்ராஜா -என்று அந்தணர்களுக்கு ரோகம் இல்லாமல் செய்பவர் -ஸ்ரீ சத்ய சந்தர் –

————-

சதுர்மூர்த்தி சதுர்பாஹூஸ் சதுர்யூஹஸ் சதுர்கதி
சதுராத்மா சதுர்பாவஸ் சதுர்வேத விதேகபாத் –82-

—————

771-சதுர்மூர்த்தி –
பலபத்திரன் வாசுதேவன் பிரத்யும்னன் அநிருத்தன்
ராமன் லஷ்மணன் பரதன் சத்ருனன்
ஏக மூர்த்தி இரு மூர்த்தி மூன்று மூர்த்தி பல மூர்த்தி யானவன் -4-3-3-

பலராமன் -வஸூ தேவன் பிரத்யும்னன் அநிருத்தன் என்று யதுகுலத்திலும் நான்கு மூர்த்திகளை உடையவர்
ஸ்ரீ கண்ணனாகிய விபவத்திலும் அதற்கு மூலமான வ்யூஹத்தை நினைவு ஊட்டுகிறார்- ஸ்ரீ பராசர பட்டர் –

வெண்மை செம்மை பசுமை கருமை ஆகிய நான்கு நிறங்களோடு கூடிய மூர்த்திகள் உள்ளவர் -விராட்
ஸ்வரூபம் ஸூ த்ராத்மா -அவ்யாக்ருதம் துரீயம் என்கிற நான்கு உருவங்களுடன் இருப்பவர் -ஸ்ரீ சங்கரர் –

விஸ்வ தைச்ச ப்ராஜ்ஞ திரிய என்னும் நான்கு ரூபங்கள் உள்ளவர் -ஸ்ரீ சத்ய சந்தர் –

——————-

772-சதுர் பாஹூ-
நான்கு தோளன் -8-8-1-
உபசம்ஹர சர்வாத்மன் ரூபமேதத் சதுர்புஜம் -தேவகி
தமேவ ரூபேண சதுர்புஜேன -அர்ஜுனன்
ஈரிரண்டு மால் வரைத் தோள்
அப்பூச்சி காட்டுகின்றான் ஐதிகம்
மலை இலங்கு தோள் நான்கே மற்று அவனுக்கே எற்றே காண் -பெரிய திருமொழி -8-1-1- எற்றே -ஆச்சர்யம்

வ்யூஹத்திற்கு மூலமான பர ஸ்வரூபம் ஆகிய நான்கு திருக் கைகளோடு தேவகியிடம் பிறந்தவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

உப ஸம்ஹர சர்வாத்மந் ரூபமேதத் சதுர்புஜம் ஜாநாது மா அவதாரம் தே கம்ச அயம் திதி ஜன்மஜ –ஸ்ரீ விஷ்ணு புராணம் -5-3-13-

நான்கு கைகள் உள்ளவர் -என்ற திரு நாமம் வாஸூ தேவருக்கே உரியது-ஸ்ரீ சங்கரர் –

நான்கு தோள்கள் உள்ளவர் -முக்தி அடைந்தவர்களை நான்கு தோள்கள் உள்ளவர்களாகச் செய்பவர் -ஸ்ரீ சத்ய சந்தர்-

——————

773-சதுர் வ்யூஹ
வ்யூஹங்கள் போலே குண பூரணன் இவன்
பல ராமன் பிரத்யும்னன் அநிருத்தன் -இரண்டு இரண்டு குணங்கள் பிரதானம்

விபவத்திலும் வ்யூஹத்தில் போலே ஆறு குணங்களும் நிரம்பியவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

நான்கு பிரிவுகளை உடைய வ்யூஹத்தை உடையவர் -ஸ்ரீ சங்கரர் –

நான்கு வித வ்யூஹங்கள் உள்ளவர் -கேசவன் முதலிய இருபத்து நான்கு ரூபங்களுள் கேசவன் முதலிய ஆறு –
த்ரிவிக்ரமன் முதலிய ஆறு -சங்கர்ஷணன் முதலிய ஆறு -நரசிம்ஹன் முதலிய ஆறு ஆக நான்கு வகை வ்யூஹங்கள் கொண்டவர் –
சதுர் பாஹூச் சதுர் வ்யூஹ -என்ற ஒரே திருநாமம் என்றும் சொல்லுவர் – -ஸ்ரீ சத்ய சந்தர் –

—————

774-சதுர் கதி –
நான்கு வித புருஷார்த்தங்கள் -தர்மம் அர்த்தம் காமம் மோஷம்
உபாசகன் -இந்திர ப்ரஹ்ம கைவல்யம் மோஷம்
கதி நடையுமாம்
ரிஷபம் வீர்யம் –மத்த கஜம் -மதிப்பு
புலி சிவிட்குடைமையால் வந்த உறட்டல்
சிம்ஹம் மேணாணிப்பு -பராபிவனம்
இவை எல்லாம் நமக்கு நம் பெருமாள் நடை அழகிலே காணலாம்
கஜ சிம்ஹ கதி வீரௌ சார்த்தூல வ்ருஷ போப மௌ

உபாசிப்பவர்கள் செய்யும் பக்தியின் ஏற்றத் தாழ்வுகளுக்கு ஏற்ப நான்கு வகை பயன்களைக் கொடுப்பவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

நான்கு வர்ணங்களுக்கும் நான்கு ஆச்ரமங்களுக்கும் ஆதாரமாக இருப்பவர் -ஸ்ரீ சங்கரர் –

ஆர்த்தன் -ஜிஜ்ஞாஸூ -அர்த்தார்த்தி -ஞானி -என்ற நான்கு வகை அதிகாரிகளால் பற்றப் பெறுபவர் -ஸ்ரீ சத்ய சந்தர்-

—————–

775-சதுராத்மா –
தன்னை நாலு விதமாக காட்டுபவன்-
ஜாக்ரத -விழிப்பு -ஸ்வப்ன அரைத் தூக்கம் ஸூ ஷுப்தி ஆழ்ந்த நித்ரை துரீயம் இவைகளுக்கு மேலான
முன்பே -139 பார்த்தோம்

உபாசகர்களின் ஏற்றத் தாழ்வுகளுக்கு ஏற்ப ஜாக்ரத் ஸ்வப்ன ஸூஷுப்தி துரீயம் என்னும் நான்கு நிலைகளிலும்
நான்கு உருவங்களாக ஸ்தூலமாகவும் ஸூஷ்மமாகவும் விளங்குபவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

ஆசை வெறுப்பு முதலியவை இல்லாமையினால் சிறந்த மனம் உள்ளவர் –
மனம் புத்தி அஹங்காரம் சித்தம் ஆகிய நான்கு உருவங்களாக இருப்பவர் -ஸ்ரீ சங்கரர் –

ஜீவர்கள் அவரவர் யோக்யதைக்கு ஏற்றபடி தர்ம அர்த்த காம மோஷங்களில் மனம் செல்லும்படி தூண்டுபவர் -ஸ்ரீ சத்ய சந்தர் –

————–

777-சதுர்பாவன்
நான்கு செய்கைகள்
லோக சிருஷ்டி ஸ்திதி ரஷணம் சாஸ்திர பிரதானம்

இந் நான்கு வ்யூஹங்களிலும் உலகத்திற்கு பிரயோஜனமான நான்கு செய்கைகள் உள்ளவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

தர்மம் அர்த்தம் காமம் மோஷம் என்னும் நான்கு புருஷார்த்தங்களுக்கும் காரணமாக இருப்பவர் -ஸ்ரீ சங்கரர் –

பிராமணர் ஷத்ரியர் வைஸ்யர் சூத்ரர் ஆகிய நான்கு வர்ணங்களை உண்டாக்குபவர் -ஸ்ரீ சத்ய சந்தர் —

—————-

778-சதுர்வேதவித் –
நான்கு வேதங்களையும் அறிந்தவர்கள் -ஞான விஷயம்
மறையாய நால் வேதத்துள் நின்ற மலர்ச் சுடர் -3-1-10-
வேதைஸ் சர்வை ரஹ மேவ வேத்ய

நான்கு வேதங்களை அறிந்தவர்களுக்கும் தம் மகிமை என்னும் பெரும் கடலில் ஒரு துளி அளவே தெரியும்படி இருப்பவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

நான்கு வேதங்களின் பொருள்களை உள்ளபடி அறிந்தவர்-ஸ்ரீ சங்கரர் –

நான்கு வேதங்களை அறிந்தவர் -ஸ்ரீ சத்ய சந்தர் –

————-

779-ஏகபாத்-
ஒரு பகுதியாக அவதரித்தவன்

இந்த யதுகுலத்தில் பிறந்த கண்ணன் பகவானின் ஓர் அம்சத்தின் அவதாரம் -என்றபடி
ஒரு பாகத்தினால் திருவவதரித்து இருப்பவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

அம்ச அவதாரோ ப்ரஹ்மர்ஷே யோயம் யது குலோத்பவ –ஸ்ரீ விஷ்ணு புராணம்
அம்சாசேந அவதீர்ய உர்வ்யாம்-ஸ்ரீ விஷ்ணு புராணம்
விஷ்ணோர் பாகம் அமீமாம்ஸ்யம்
சாஷாத் விஷ்ணோ சதுர் பாக–பாலகாண்டம் –

உலகனைத்தும் தம் ஒரு பாகத்தில் அடங்கி இருக்கப் பெற்றவர் -ஸ்ரீ சங்கரர் –

பிரதான ரஷகனாய் எப்போதும் அசைவுள்ளவர்-
அனைத்து பூதங்களையும் தம்மில் ஒரு அம்சமாகக் கொண்டவர் என்றும் கூறுவார் -ஸ்ரீ சத்ய சந்தர் –

————-

சமா வர்த்தோ நிவ்ருத்தாத்மா துர்ஜயோ துரதிக்ரம
துர்லபோ துர்கமோ துர்கோ துராவாசோ துராரிஹா–83-

———–

779-சமாவர்த்த –
மீண்டும் மீண்டும் வருமவன்
பிறப்பில் பல் பிறவிப் பெருமான் -2-9-5-
என் நின்ற யோநியுமாய்ப் பிறந்தாய் இமையோர் தலைவா -திரு விருத்தம் -1-

வ்யூஹ அவதாரங்களாகவும் விபவ அவதாரங்களாகவும் பலமுறை திரும்பி வந்து கொண்டு இருப்பவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

சம்சார சக்கரத்தை நன்கு சுழற்றுபவர் -ஸ்ரீ சங்கரர் –

எல்லா இடத்திலும் சமமாக இருப்பவர் -ஸ்ரீ சத்ய சந்தர் –

—————–

780-நிவ்ருத்தாத்மா
திருப்பப்பட்ட மனதை உடையவன்
அவாகீ அநாதர
வரம்பிலாத மாயை மாய வரம்பிலாத கீர்த்தியாய் -திருச்சந்த

கிருபையினால் இப்படி உலகோடு சேர்ந்து இருந்தாலும் இயற்கையில் எதிலும் சேராத தனித்த மனமுடையவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

அவாகீ அநாதர –சாந்தோக்யம் -3-14-

அநிவ்ருத்தாத்மா -எங்கும் நிறைந்து இருப்பவர் ஆதலின் ஒர் இடத்திலும் இல்லாமல் போகாதவர் –
நிவ்ருத்தாத்மா -விஷயங்களில் இருந்து திருப்பட்ட மனமுடையவர் -ஸ்ரீ சங்கரர் –

அநிவ்ருத்தாத்மா -அழியாத தேஹம் உள்ளவர் -அயோக்யர் செய்யும் யஜ்ஞங்களில் இருந்து விலகிய மனமுடையவர் —
நிவ்ருத்தாத்மா -அனைத்து விஷயங்களிலும் மனத்தைச் செலுத்துபவர் — ஸ்ரீ சத்ய சந்தர் –

—————

781-துர்ஜய
ஜெயிக்க முடியாதவன்
அபராஜித 716 போலே
அயோத்தி என்னும் அணி நகரத்து உலகு அனைத்தும் விளக்கும் சோதி
விண் முழுதும் உய்யக் கொண்ட வீரன் -பெருமாள் திரு -10-1-

தேவரும் மனிதரும் தம் சாமர்த்தியத்தினால் வசப்படுத்த முடியாதவர் –துர்லபமாய் இருத்தல் -ஸ்ரீ பராசர பட்டர்-

யந்ந தர்சிதவாந் ஏஷ கஸ்த தந்வேஷ்துமர்ஹதி –சாந்தோக்யம் -3-15-

வெல்லப்பட முடியாதவர் -ஸ்ரீ சங்கரர் –

வெல்ல முடியாதவர் -துக்கத்தை வெல்ல அருள் புரிபவர் -ஸ்ரீ சத்ய சந்தர் –

—————–

782-துரதிக்ரம
மீற முடியாதவன்
ஆத்தன் தாமரை அடி அன்றி மற்றிலம் அரணே -10-1-6-
காள மேகத்தை அன்றி மற்றிலம் கதியே -10-1-1-

அவருடைய திருவடிகள் அன்றி வேறு கதி இல்லாமையினால் யாருக்கும் தாண்டிப் போக முடியாதவர்-ஸ்ரீ பராசர பட்டர் –

யதா சர்மவதாகாசம் வேஷ்ட யிஷ்யந்தி மாநவா ததா தேவம் அவ்விஞ்ஞாய துக்கஸ் யாந்தம் நிகச்சதி
வாஸூ தேவம் அநாராத்ய கோ மோக்ஷம் சமாவாப்னுயாத்
ந ஹி விஷ்ணும்ருதே காசித் கதிர் அந்யா விதீயதே இத்யேவம் சததம் வேதா காயந்தே நாத்ர சம்சய

பயம் காரணமாக சூரியன் முதலியோர் தம் கட்டளையை மீற முடியாதபடி இருப்பவர் -ஸ்ரீ சங்கரர் –

துக்கத்தைத் தாண்ட உதவுபவர் -ஸ்ரீ சத்ய சந்தர் –

—————–

783-துர்லப
அண்ட அரியன் -பிறர்களுக்கு அறிய வித்தகன்

வேறு ஒன்றில் மனம் வைத்தவனுக்கு ஜனார்த்தனர் கிடைப்பது அரிது -என்றபடி கிடைப்பதற்கு அரியவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

அப்ராப்ய கேசவோ ராஜன் இந்த்ரியை ரஜிதை நிரூணாம் –உத்யோக பர்வம் 78-21–

கிடைக்க வரிதான பக்தியால் அடையப் பெறுவர்-ஸ்ரீ சங்கரர் –

சிரமப்பட்டு அடைய வேண்டியவர் -ஸ்ரீ சத்ய சந்தர் –

————–

784-துர்கம
கிட்ட முடியாதவன்
காணலும் ஆகான்

கண்ணில் குறை உள்ளவர்கள் மத்யான்ன சூர்யனைக் கண் கொண்டு பார்க்க முடியாதது போல் அடைவதற்கு அரியவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

சிரமப்பட்டு அறியப் பெறுபவர் -ஸ்ரீ சங்கரர் –

துர்கம -அடைவதற்கு அரியவர் -அதுர்கம -தமோ குணம் அற்றவர்களால் அறியப் பெறுபவர் -ஸ்ரீ சத்ய சந்தர் –

—————-

785-துர்கா
அடைய முடியாதவன்
புகழும் அரியன் பொறு வல்லன் எம்மான்-

அவித்யை முதலிய மறைவுகள் கோட்டை போலே மூடிக் கொண்டு இருப்பதனால் பிரவேசிக்க முடியாதவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

பல இடையூறுகள் இருப்பதால் அடைவதற்குக் கடினமாக இருப்பவர் -ஸ்ரீ சங்கரர் –

அசுரர்களுக்குத் துன்பத்தை அளிப்பவர்-ஸ்ரீ சத்ய சந்தர் –

————–

786-துராவாச
கிட்ட முடியாத வாச ஸ்தானம் உடையவன்
தெய்வம் அல்லால் செல்ல ஒண்ணாச் சிங்க வேள் குன்றமே
சென்று காண்டற்கு அரிய கோயில் -பெரிய திரு மொழி -7-1-4-

அவித்யை முதலியவற்றின் மறைவினால் தம் இருப்பிடம் யாருக்கும் எட்டாதாக இருப்பவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

யோகிகளால் யோகத்தில் மிகவும் சிரமத்தோடு மனத்தில் தரிக்கப் பெறுபவர் -ஸ்ரீ சங்கரர் –

தீய ஒலி உள்ளவர்களை இருட்டில் தள்ளுபவர் -ஸ்ரீ சத்ய சந்தரர் –

————————————————————————————–

ஸ்ரீ கிருஷ்ண அவதாரம் —

697-வசூரேதா-தன் பிறப்புக்கு காரணமான திவ்யமான ஒளி யானவர் –
698-வசூப்ரத -தேவகிக்கும் வசூதேவர்க்கும் தன்னையே செல்வமாகக் கொடுப்பவர் –
699-வசூப்ரத -தன்னைப் பெற்ற படியால் தேவகிக்கும் வசூதேவர்க்கும் புகழ்ச் செல்வத்தைக் கொடுத்தவர்
700-வசூதேவ -வசூதேவரின் மைந்தர் –

701-வசூ -பாற் கடலில் வசித்து வடமதுரையில் கண்ணனாகப் பிறந்தவர் –
702-வசூ மநா –வசூதேவர் இடத்தில் மனம் வைத்தவர் –
703-ஹவி -கம்சனுக்கு அஞ்சி வசூதேவரால் நந்த கோபனிடம் வளர்ப்பதர்க்காகக் கொடுக்கப் பட்டவர் –
704-சத்கதி -பிறக்கும் போதே அசூரர்களை அழித்து பக்தர்களைக் காப்பவர் –
705-சத்க்ருதி -சம்சார விலங்கை அறுக்கும் சிறு விளையாட்டுகளை -வெண்ணெய் திருடியது -கட்டுண்டது -உடையவர் –
706-சத்தா -அனைவருக்கும் இருப்பதற்கே ஆதாரமானவர் –
707-சத்பூதி -சாதுக்களுக்கு அனைத்து உறவாகவும் செல்வகமாகவும் இருப்பவர் –
708-சத் பராயண -பாண்டவர்கள் போன்ற சாதுக்களுக்கு அடையும் இடமாக இருப்பவர் –
709-சூர சேன-யாதவர்கள் பாண்டவர்கள் போன்றோரை தீயவரை ஒழிக்கும் செயலுக்கும் சேனையாகக் கொண்டவர் –
710- யது ஸ்ரேஷ்ட -பட்டாபிஷேகம் இழந்த யது குலத்தை உயர்தினபடியால் யது குலத்தை உயர்த்தினவர் –

711-சந்நிவாச -நைகர் முதலான சான்றோர்களுக்கு இருப்பிடமானவர் –
712-ஸூ யமுன -தூய பெரு நீர் யமுனை யாற்றின் கரையில் ஜலக்ரீடை பூக் கொய்தல் போன்ற விளையாட்டுக்களைச் செய்தவர்
713- பூதா வாஸ -எல்லா ஜீவ ராசிகளுக்கும் தங்கும் இடம் ஆனவர்
714-வாஸூ தேவ -பன்னிரண்டு எழுத்துக்கள் கொண்ட வாஸூ தேவ மந்தரத்தால் கூறப்படுபவர் –
715-சர்வா ஸூ நிலய -அனைத்து ஜீவர்களுக்கும் இருப்பிடம் -இவன் இன்றி இன்பம் இல்லையே –
716-அ நல -அடியார்களுக்கு எத்தனை செய்தாலும் போதும் என்ற மனம் இல்லாதவர் –
திரௌபதிக்கு அத்தனை செய்தும் ஒன்றும் செய்ய வில்லையே என்று ஏங்கியவர்
717-தர்பஹா -கோவர்த்தன மலையை தூக்கியது போன்ற செயல்களால் தேவர்களின் கர்வத்தை அடக்கியவர் –
718-தர்பத-தன் வீரச் செயல்களை கண்ட யாதவர்களுக்கு செருக்கை ஊட்டியவர் –
719-அத்ருப்த -நிகர் அற்ற தன் பெருமையாலும் செருக்குக் கொள்ளாதவர் –
720-துர்தர -சிறு பிராயத்து விளையாட்டுக்களிலும் தன் பெற்றோரால் பிடிக்க முடியாதவர் -தீயவர்களாலும் பிடிக்க முடியாதவர் –

721-அபராஜித -வெல்லப்பட முடியாதவர் -பக்தர்களான பாண்டவர்களையும் வெல்லப்பட முடியாதவர்களாக செய்தவர் –
722-விஸ்வ மூர்த்தி -உலகையே தன் திருமேனியாகக் கொண்டவர் –ஆகையால் எந்த உறுப்பையும் வீணாக விட மாட்டார் –
723-மஹா மூர்த்தி -உலகமே தன்னுள் அடங்கும் பெறும் திருமேனி உடையவர் –
724-தீப்த மூர்த்தி -உலகில் ஒளி படைத்த எதையும் தன் திருமேனியில் அம்சமாகக் கொண்டவர் –
725-அமூர்த்தி மான் -பெயர் உருவ வேறுபாடு இன்றி சூஷ்ம நிலையில் இருக்கும் பிரகிருதி ஜீவர்கள் ஆகியோருக்கு ஸ்வாமி யானவர் –
726- அநேக மூர்த்தி -கண்ணனாகப் பிறந்த போதும் தானே வாஸூ தேவன் -பல ராமனே சங்கர்ஷணன் –
மகனே பிரத்யும்னன் -பேரனே அநிருத்தன் -என பல உருவங்கள் கொண்டவன்
727-அவ்யக்த -மனித உருவில் பிறந்த படியால் மேற்கண்ட பெருமை எல்லாம் மறைந்து இருப்பவர் –
728-சத மூர்த்தி -விஸ்வரூபத்தின் போது அர்ஜுனனுக்கு காட்டப்பட்ட பல நூறு உருவங்களை கொண்டவர் –
729-சதாநந -அப்போதே பல நூறு முகங்கள் கொண்டவர் –
730-ஏக -தன் பெருமையில் தன்னிகர் அற்ற படியால் ஒருவரானவர்

731-நைக-அவன் உடைமைகளுக்கு முடிவு இல்லாத படியால் ஒன்றாய் இல்லாமல் பலவானவர்
732-ஸ -கிருஷ்ண அவதாரத்தில் தன்னைப் பற்றிய உறுதியான அறிவை சிறுவர்களுக்கும் விளைத்தவர் –
733-வ-அனைத்தும் தன்னிடத்தில் வசிப்பவர் -தான் அனைத்திலும் வசிப்பவர் –
734-க -சேற்றில் விழுந்த மாணிக்கம் ஒளி விடாது -ஆனால் பகவான் சம்சாரத்தில் பிறந்தாலும் ஒளி குறையாதவர் –
735-கிம் -அனைவராலும் எப்படிப்பட்டவரோ என்று அறியத் தேடப் படுபவர் –
736-யத் -தன்னைத் தேடும் அடியார்களைக் காக்க எப்போதும் முயற்சி செய்பவர் –
737-தத் -அடியார்களுக்குத் தன்னைப் பற்றிய அறிவையும் பக்தியையும் வளர்ப்பவர் –
738-பதமநுத்தமம் -தனக்கு மேலானது இல்லாத சிறந்த அடையும் இடமானவர் –
739-லோக பந்து -உலகத்தார் அனைவரோடும் அறுக்க முடியாத உறவு கொண்டவர் –
740-லோக நாத -உலகுக்கே தலைவர் -ஆகையால் அனைவருக்கும் உறவானவர் –

741-மாதவ -ஸ்ரீ யபதி -இருவருமாக நமக்குத் தாயும் தந்தையுமாக உறவை உடையவர்கள் –
742-பக்தவத்சல -தன்னை உறவாக எண்ணும் பக்தர்கள் இடம் சிறந்த அன்புள்ளவர் –
743-சூவர்ண வர்ண -தங்கம் போன்ற நிறமும் மென்மையும் உடையவர் –
744-ஹேமாங்க -பொன்னிறமான அங்கங்கள் உடையவர் –
745-வராங்க -உபநிஷத்துக்களில் பேசப்படும் சிறந்த அடையாளங்களை மறைக்காமலேயே தேவகியின் விருப்பப்படியே பிறந்தவர் –
746-சங்க நாங்கதீ -மகிழ்ச்சியைக் கொடுக்கும் தோள் வளைகள் முதலான ஆபரணங்களை அணிந்து இருப்பவர் –
747-வீரஹா -பால் குடிக்கும் சிறு குழந்தைப் பருவத்திலும் பூதனை சகடாசூரன் முதலிய அசூரர்களை ஒழித்தவன் –
748-விஷம -சாதுக்களுக்கு நன்மையையும் தீயவர்களுக்கு பயத்தையும் கொடுப்பதால் வேற்றுமை உள்ளவர் –
749-சூந்ய-மனிதனாகப் பிறந்த போதும் எக்குற்றமும் அற்றவர் –
750-க்ருதாசீ-தமது நற்பண்புகளை தெளிந்து உலகை வாழ்விப்பவர் –

751-அசல -துரியோதனன் முதலான தீயவர்களால் அசைக்க முடியாதவன் –
752-சல -தன் அடியவரின் சொல்லை மெய்யாக்க தன் சொல்லப் பொய்யாக்கவும் தயங்காதவன் -பீஷ்மருக்காக ஆயுதம் எடுத்தவர்
753-அமா நீ -பக்தர்கள் விஷயத்தில் தன் மேன்மையைப் பார்க்காதவர் -பாண்டவர்களுக்காத் தூது சென்றார் –
754-மா நத-பக்தர்களுக்கு கௌரவம் கொடுப்பவர் –
755-மான்ய -பக்தர்களுக்கு கீழ்ப்படிந்து அவர்களுக்கு மேன்மை தருபவர் –
756-லோக ஸ்வாமீ-தன்னைத் தாழ்த்திக் கொண்டாலும் எப்போதுமே உலகங்களுக்கு எல்லாம் தலைவர் –
757-த்ரிலோகத்ருத் -மூன்று உலகங்களையும் தாங்குபவர் -ஆகையால் உலகத்தார்க்குத் தலைவர் –
758-சூமேதா -தம்மைப் பூசிப்பவர்களுக்கு நன்மையைத் தரும் நல் எண்ணம் உடையவர் –
759-மேதஜ–முன் ஜன்மத்தில் தேவகி செய்த தவத்தின் பயனாக அவதரித்தவர் –
760-தன்ய-அடியார்களின் பிரார்தனைக்காகப் பிறந்ததை தனக்குப் பெறும் பேறாக கருதுபவர் –

761- சத்யா மேத -யாதவர்களில் ஒருத்தனாக மெய்யாக நினைத்து வெளிக் காட்டியவர்
762- தராதர -ஏழு வயசுச் சிறுவனாக தன் சுண்டு விரலாலே கோவர்த்தன மலையைத் தூக்கி ஏழு நாட்கள் குடையாக பிடித்தவர் –
763-தேஜோவ்ருஷ -அன்பர்களைக் காப்பதில் தன் சக்தியை பொழிபவர் –
764-த்யுதிரத -சிறு கண்ணனாக இந்த்ரனையும் அடக்கும் திவ்ய சக்தி உள்ளவர்
765- சர்வ சஸ்திர ப்ருதாம் வர -ஆயுதங்களை தரிப்பவர்களுக்குள் சிறந்தவர் –
766-ப்ரக்ரஹ -தான் தேரோட்டியாக இருந்து கடிவாளத்தால் குதிரைகளைக் கட்டுப் படுத்தியவர் –
தன் சொல்லால் அர்ஜுனனைக் கட்டுப் படுத்தியவர் –
767-நிக்ரஹ -அர்ஜுனனின் வல்லமையை எதிர்பார்க்காமல் தன் தேரோட்டும் திறனாலேயே பகைவர்களை அடக்கியவர் –
768-வ்யக்ர-அர்ஜுனனை வெல்லும் வரை பொறுமை இல்லாமல் பகைவர்களை தாமே அழிக்கப் பரபரத்தவர் –
769-நைகஸ்ருங்க -எதிரிகளை வெல்ல பல வழி முறைகளைக் கையாண்டவர் –
770-கதாக்ரஜ-வாசூதேவரின் மனைவியான சூ நாமை என்பவரின் மகனான கதனுக்கு முன் பிறந்தவர் –

——————————————————————

அவதாரத்துக்கு காரணமான ஸ்ரீ வ்யூஹம் –

771-சதுர் மூர்த்தி -கண்ணனான போதும் வ்யூஹத்தைப் போலே வாசூதேவன் பலராமன் பிரத்யும்னன் அநிருத்தன்
என்ற நான்கு வடிவங்கள் உடையவர் –
772-சதுர் பாஹூ–தேவகியின் கர்ப்பத்தில் இருந்து பிறந்த போதே நான்கு கைகள் உடையவர் –
773-சதுர்வ்யூஹ-வ்யூஹத்தைப் போலவே நான்கு வடிவங்களிலும் ஜ்ஞானம் பலம் முதலான குணங்களை முறையே உடையவர் –
774-சதுர்கதி -பூஜையின் ஏற்றத் தாழ்வுகளுக்கு இணங்க இந்திர லோகம் கைவல்யம் ப்ரஹ்ம பதம் மோஷம் –
என்கிற நான்கையும் கொடுப்பவர் –
775-சதுராத்மா -அடியார்களின் ஏற்றத் தாழ்வுகளுக்கு இணங்க விழிப்பு கனவு ஆழ் நிலை உறக்கம் முழு உணர்தல்
ஆகிய நான்கு நிலைகளிலும் விளங்குபவர்
776-சதுர்பாவ -மேல் சொன்ன நான்கு நிலைகளிலும் நான்கு நான்காகப் பிரிந்து பதினாறு செயல்களைப் புரிபவர் –
777-சதுர் வேத வித் -நான்கு வேதங்களை அறிந்தவர்களுக்கும் தம் பெரு மென்மையின் சிறு துளியே அறியும் படி இருப்பவர் –
778-ஏகபாத்-ஸ்ரீ மன் நாராயணனான தன் பெருமையில் ஒரு பகுதியாலே கண்ணனாகப் பிறந்தவர் –
779-சமாவர்த்த -இப்படி வ்யூஹத்திலும் அவதாரங்களிலும் திரும்பப் திரும்பப் பிறந்தவர்
780-நிவ்ருத்தாத்மா -தன் கருணையாலேயே உலகத்தைச் செயல் படுத்தினாலும் ஏதோடும் ஒட்டு உறவு இல்லாதவர் –

781-துர்ஜய -தானே வெளிப்பட்டால் ஒழிய நம் முயற்சியால் மட்டும் தெரிந்து கொள்ள முடியாதவர் –
782-துரதிக்ரமே தன் திருவடியே புகலானபடியால் யாராலும் அதைத் தாண்டிப் போக முடியாதவர் –
783-துர்லப -புலன்களை அடக்காதவர்களால் அடைய அரியவர்
784-துர்கம -வலிமையற்ற மனதுடையவர்களால் அடைய முடியாதவர்
785-துர்க-அறிவின்மை யாகிய மதிள் மூடுவதால் உள்ளே பிரவேசிக்க முடியாதவர் –
786-துராவாச -அவித்யை மறைக்கிற படியால் பரமபதத்தில் வாசத்தை எளிதாகக் கொடுக்காதவர் –

—————————————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பராசர பட்டர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பீஷ்மர் திருவடிகளிலே சரணம்
ஸ்ரீ வியாச பகவான் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: