ஸ்ரீ விஷ்ணு சகஸ்ர நாமம்–4-2-புத்த அவதாரம் -பரமான திரு நாமங்கள் -787-810-/4-3-தைவத் சம்பத் உள்ள சிஷ்ட பரிபாலனம் பரமான திரு நாமங்கள் -811-825-/4-4-அனு ப்ரேவேசித்து ரஷணம் பரமான திரு நாமங்கள் -826-838-/4-5-அஷ்ட ஐஸ்வர்யங்களை உடையவன் பரமான திரு நாமங்கள் -839-848-

சமா வரத்தோ நிவ்ருத்தாத்மா துர்ஜயோ துரதிக்ரம
துர்லபோ துர்கமோ துர்கோ துராவாசோ துராரிஹா–83-
ஸூ பாங்கோ லோக சாரங்கஸ் ஸூ தந்துஸ் தந்து வர்த்தன
இந்த்ரகர்மா மஹா கர்மா க்ருதகர்மா க்ருதாகம –84
உத்பவஸ் ஸூ ந்தரஸ் ஸூ ந்தோ ரத்ன நாபஸ் ஸூ லோசன
அரக்கோ வாஜஸ நிஸ் ஸருங்கீ ஜயந்தஸ் சர்வ விஜ்ஜயீ–85-
ஸூ வர்ண பிந்து ரஷோப்யஸ் சர்வ வாகீஸ் வரேஸ்வர
மஹா ஹ்ரதோ மஹா கர்த்தோ மஹா பூதோ மஹா நிதி –86-
குமுத குந்தர குந்த பர்ஜன்ய பாவனோ அநல
அம்ருதாசோ அம்ருதவபுஸ் சர்வஜ்ஞஸ் சர்வதோமுக –87
ஸூ லபஸ் ஸூ வ்ரதஸ் சித்தஸ் சத்ருஜித் சத்ரூதாபன
ந்யக்ரதோ அதும்பரோஸ் வத்தஸ் சானூரார்ந்த நிஷூதன -88
சஹாரார்ச்சிஸ் சப்த ஜிஹ்வஸ் சல்தைதாஸ் சப்த வாஹன
அமூர்த்தி ர நகோ அசிந்த்யோ பயக்றுத் பய நாசன –89
அணுர் ப்ருஹத் க்ருசஸ் ச்தூலோ குணப்ருன் நிர்குணோ மஹான்
அத்ருதஸ் ஸ்வ த்ருதஸ் ஸ்வாஸ்ய ப்ராக்வம்சோ வம்சவர்த்தன –90 –

———————————————————————————

4-1-கிருஷ்ணாவதார திரு நாமங்கள் -697-786
4-2-புத்த அவதாரம் -பரமான திரு நாமங்கள் -787-810-
4-3-தைவத் சம்பத் உள்ள சிஷ்ட பரிபாலனம் பரமான திரு நாமங்கள் -811-825-
4-4-அனு ப்ரேவேசித்து ரஷணம் பரமான திரு நாமங்கள் -826-838-
4-5-அஷ்ட ஐஸ்வர்யங்களை உடையவன் பரமான திரு நாமங்கள் -839-848-

—————–

சமா வரத்தோ நிவ்ருத்தாத்மா துர்ஜயோ துரதிக்ரம
துர்லபோ துர்கமோ துர்கோ துராவாசோ துராரிஹா–83-

————-

787-துராரிஹா-
தீயவரை விலக்குமவன் –
தீய புத்தி உடையவரைத் தன்னை அடைய ஒட்டாதபடி விலக்க புத்தாவதாரமாக எடுத்தவன் –
கள்ள வேடத்தை கொண்டு போய்ப் புறம் புக்கவாறும் கலந்த அசுரரை உள்ளம் பேதம் செய்திட்டு உயிர் உண்ட உபாயங்கள் -5-10-4-
புரம் ஒரு மூன்று எரித்த -1-1-8-த்ரி புரம் எரித்த விருத்தாந்தம் -வேதோக்த கர்ம அனுஷ்டானம் செய்த அசுரர்கள் ஸ்ரத்தை குறைத்து –
அம்பின் நுனி இருந்து வென்றவன் –

புத்தாவதாரம் -கெட்ட வழியில் செல்பவர்களை வேத மார்க்கத்தில் செல்லாமல் தடுப்பது முதலிய வழிகளால் கெடுத்தவர் –
இவனை அடைய வேண்டும் என்ற எண்ணம் இல்லாத பாவிகள் விஷயத்தில் என்பதை தெரிவிக்க புத்தாவதாரம் -ஸ்ரீ பராசர பட்டர் –

மாயா மோஹேந தே தைத்யா பிரகாரை பஹுபிஸ் ததா வ்யுத்தபிதா யதா நைஷாம் த்ரயீம் கச்சித் அரோசயத்
ஹதாச்ச தே அஸூரா தேவை சந் மார்க்க பரி பந்திந –ஸ்ரீ விஷ்ணு புராணம் -3-18-34-

கெட்ட வழியில் செல்லும் அசுரர் முதலியவர்களை அழிப்பவர்-ஸ்ரீ சங்கரர் –

தீய பகைவர்களை நன்கு அழிப்பவர் -ஸ்ரீ சத்ய சந்தர் –

————

ஸூ பாங்கோ லோக சாரங்கஸ் ஸூ தந்துஸ் தந்து வர்த்தன
இந்த்ரகர்மா மஹா கர்மா க்ருதகர்மா க்ருதாகம –84-

————-

788-சுபாங்க –
மங்களகரமான அழகிய உடலுடன் உடையவன் -கள்ள வேடம் -வஸ்தரேன வபுஷா வாசா -உடல் உடை பேச்சு அழகு
பொன்னின் வண்ணம் மணியின் வண்ணம் புரையும் திருமேனி -4-9-8-

இவர் நம்பத் தகுந்தவர் என்று அசுரர்கள் ஏமாறுவதற்காக மயக்கும் அழகிய உருவம் கொண்டவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

அழகிய அங்கங்கள் உடையவராக தியானிக்கப் பெறுபவர் -ஸ்ரீ சங்கரர் –

மங்களகரமான அங்கங்கள் உள்ளவர் -ஸ்ரீ சத்ய சந்தர் –

————–

789-லோக சாரங்க –
உலகத்தில் சாரமான பொருளைப் பேசுபவன் –
மெய் போலும் பொய் வல்லன் -இவன் பேசுவது எல்லாம் கள்ளப் பேச்சாம் –
வணங்கும் துறைகள் பல பல வாக்கி -மதி விகற்பால் பிணங்கும் சமயம் பலபலவாக்கி வைத்தான் -திரு விருத்தம் -96-

உலகோர் கொண்டாடும் வகையில் போகம் மோஷம் ஆகிய இரண்டு வழிகளையும் அறிந்து உபதேசம் செய்பவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

குருத்வம் மம வாக்யாநி யதி முக்தி மபீத் ஸத–ஸ்ரீ விஷ்ணு புராணம்

உலகங்களிலுள்ள சாராம்சங்களை க்ரஹிப்பவர்-ஸ்ரீ சங்கரர் –

ஸ்ரீ வைகுண்டம் முதலிய உலகங்களை அளிப்பவர் -அறிவாளிகள் விளையாடும் இடமாக இருப்பவர் –
லோக சாரமான தன்னைக் கொடுப்பவர் -ஸ்ரீ சத்ய சந்தர் –

——————-

790-ஸூ தந்து
கெட்டியான நூல் வலையை உடையவன் -தந்து -நூல்
சாந்தமான வேஷத்தைக் காட்டி அசுரர் மனம் கவர்ந்தான் -கெட்டியான வலை –

சாந்த வேஷத்தை ஏறிட்டுக் காண்பிப்பதாகிய அசுரர்களைக் கவரும் வலையை யாரும் தாண்ட முடியாத
உறுதி யுள்ளதாக வைத்து இருப்பவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

விஸ்தாரமான உலகத்தை உடையவர் -ஸ்ரீ சங்கரர் –

நான்முகன் முதலான மங்கள கரமான சந்ததி உள்ளவர் -ஸ்ரீ சத்ய சந்தர் –

—————–

791-தந்து வர்த்தன –
நூலைப் பெருகச் செய்தவன் –சம்சாரமான பந்தமே அந்த நூல்
நான் அவர்களை கொடிய அசுரத் தன்மை உள்ள வர்களை கொடிய சம்சாரத்தில் அசுர யோனியில் தள்ளுவேன் –
அகப்பட்டேன் மணி வண்ணன் வாசுதேவன் வலையுளே-5-3-6-

இப்படிப் பாவப் பற்றுகள் என்னும் சிறு நூல் இழைகளினால் சம்சாரம் என்னும் கயிற்றைப் பெருகச் செய்பவர்-ஸ்ரீ பராசர பட்டர் –

தாநஹம் த்விஷத க்ரூராந் சம்ஸாரேஷூ நராதமாந் –ஸ்ரீ கீதை -16-19-
த்ரயீ மார்க்க சமுத்சர்க்கம் மாயா மோஹேந தே அஸூரா காரிதாஸ் தந்மயா ஹ்யாசாந் ததா அந்யே தத் ப்ரசோதிதா
தைரப்யந்யே அபரே தைச்ச தேரப்யந்தே பரே ச தை –ஸ்ரீ விஷ்ணு புராணம் 3-18-32-

பிரபஞ்சத்தை விருத்தி செய்பவர் -அழிப்பவர்-ஸ்ரீ சங்கரர் –

த்ரௌபதிக்காக நூல் இழைகளாலான வஸ்த்ரத்தைப் பெருகச் செய்தவர் -ஸ்ரீ சத்ய சந்தர் –

——————-

792-இந்திர கர்மா –
இந்த்ரனுக்காக செயல் பட்டவன் –
தேவர்களுக்காக கள்ள வேடம் புக்கவன்-

சரண் அடைந்த இந்திரன் முதலியோருக்காக இச் செயல்களைச் செய்தவர் -ஸ்ரீ பராசர பட்டர்-

தமூசு சகலா தேவா பிராணிபாத புரஸ் சரம் ப்ரஸீத நாத தைத்யேப்ய த்ராஹீதி சரணார்த்திந –ஸ்ரீ விஷ்ணு புராணம் 3-17-36-

இந்திரனைப் போன்ற செய்கையை உடையவர் -உலகங்களுக்கு ஈஸ்வரர் -ஸ்ரீ சங்கரர் –

விருத்திரனை அழித்தது-முதலிய இந்திரனுடைய செயல்களுக்குக் காரணமானவர் -ஸ்ரீ சத்ய சந்தர் –

——————

793-மஹா கர்மா –
சிறப்பான செயல் உடையவன் -பவித்ராணாம் சாதூநாம் -இத்யாதி –
கிரித்ரிமங்கள்-செய்து தன்னைச் சரணம் பற்றிய தேவர்களை ரஷிக்க-
மாயர் கொல் -மாயம் அறிய மாட்டேன் -பெரிய திருமொழி -9-2-9
இந்திரற்கும் பிரமற்கும் முதல்வன் -திரு நெடும் -4-

சரண் அடைந்தவர்களைக் காப்பதற்கும் துஷ்டர்களைத் தண்டிப்பதற்கும் பரம காருணிகரான தாம் இப்படிச்
செய்ததனால் இம் மோஹச் செயல்களும் சிறந்தவைகளாக இருப்பவர் -ஸ்ரீ பராசர பட்டர்

ஆகாயம் முதலிய மஹா பூதங்களைப் படைப்பவர் -ஸ்ரீ சங்கரர் –

உலகப் படைப்பு முதலிய பெரிய செயல்களை உடையவர் -ஜீவனாக இல்லாதவர் -விதிக்கு வசம் ஆகாதவர் -ஸ்ரீ சத்ய சந்தர் –

—————–

794-க்ருதகர்மா –
செயல்பட்டவன் -அஹிம்சா பரமோ தர்ம -என்பதை மட்டும் வலி உறுத்தி –
மயில் தோகையால் வழியைப் பெருக்குவது -வேதோகதமான யாகங்களை செய்யக் கூடாது -போல்வன-
கொடிய வினை செய்வேனும் யானே -கொடிய வினை யாவேனும் யானே -5-6-6-

அசுரர்கள் ஏமாறுவதற்காக அவர்களுடைய நாஸ்திக ஆசாரங்களைத் தாமும் அனுஷ்டித்தவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

செய்ய வேண்டியதைச் செய்து முடித்தவராதலின் ஆக வேண்டுவது ஒன்றும் இல்லாதவர் –
தர்மம் என்னும் கர்மத்தைச் செய்தவர் -ஸ்ரீ சங்கரர் –

பூரணமான செயல் உள்ளவர் -ஸ்ரீ சத்ய சந்தர் –

—————–

795-க்ருத ஆகம –
சைவ ஆகமங்களை பொய் நூல் எனபது போலே -மனத்தை கவரும் படி மோகனமான ஆகம நூல்களை வெளியிட்டவன் –

அந்தச் செயல்களை ஸ்திரப் படுத்துவதற்க்காக புத்தாகமம் ஜைனாகமம் முதலிய சமய நூல்களைச் செய்தவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

வேதத்தை வெளிப்படுத்தியவர் -ஸ்ரீ சங்கரர் –

வேதங்களைப் படைத்தவர் -ஸ்ரீ சத்ய சந்தர் –

————-

உத்பவஸ் ஸூ ந்தரஸ் ஸூ ந்தோ ரத்ன நாபஸ் ஸூ லோசன
அரக்கோ வாஜஸ நிஸ் ஸருங்கீ ஜயந்தஸ் சர்வ விஜ்ஜயீ–85-

—————–

796-உத்பவ –
உயர்ந்தவன் -மோஷ மார்க்கத்தை உபதேசிப்பதாக காட்டிக் கொண்டு சம்சாரிகளை விட உயர்ந்த –
மோஷ சாதனத்தை அடைந்து விட்டது போலே தோற்றம் கொடுக்கும் உயர்ந்தவன்-

மோஷத்தை உபதேசம் செய்பவர் போல் காட்டிக் கொண்டதால் உலகைக் கடந்தது போல் இருப்பவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

சிறந்ததான அவதாரங்களைத் தமது விருப்பத்தினால் செய்பவர் –எல்லாவற்றுக்கும் காரணம் ஆதலால் பிறப்பு இல்லாதவர் -ஸ்ரீ சங்கரர் –

சம்சாரத்தை அல்லது படைப்பைத் தாண்டியவர் -ஸ்ரீ சத்ய சந்தர் –

—————

797-ஸூந்தர
அழகியான் –
அம் பவளத் திரளேயும் ஒப்பர் அச்சோ ஒருவர் அழகிய வா -பெரிய திருமொழி -9-2-4-
அழகியான் தானே -நான்முகன் திருவந்தாதி -22-

அதற்காக கண்ணைக் கவரும் அழகுடையவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

எல்லோரைக் காட்டிலும் பேர் அழகு உள்ளவர் -ஸ்ரீ சங்கரர் –

அழகு உள்ளவர் -அழகிய சங்கு உள்ளவர்
ஸூந்தன் என்னும் அசுரனை உபஸூந்தன் என்பனைக் கொண்டு அழித்தவர் -ஸ்ரீ சத்ய சந்தர் –

—————-

798-ஸூந்த –
உருக்குபபவன்
தன் வடிவு அழகு காட்டி -அன்பு உண்டாகும்படி செய்து
அணி கெழு மா முகிலே ஒப்பர் அச்சோ ஒருவர் அழகிய வா -9-2-7-

அவ்வடிவு அழகினால் அசுரர்களுடைய மனங்களை நன்கு மெதுப்படுத்துபவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

ஈரம் தயை உள்ளவர் -ஸ்ரீ சங்கரர் –

சுகத்தைக் கொடுப்பவர் -ஸ்ரீ சத்ய சந்தரர் –

——————-

799-ரத்ன நாப –
ரத்னம் போலே அழகிய நாபியை உடையவன்

புலமையை நடிப்பதற்காக திரண்ட வயிறும் ரத்தினம் போலே அழகிய நாபியும் யுடையவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

ரத்னம் போல் அழகிய நாபி உள்ளவர் -ஸ்ரீ சங்கரர் –

ரத்ன நாப -புருஷ ரத்னமான பிரமனை நாபியிலே உடையவர் –
அரத்ன நாப -பகைவரான அசுரர்களை துன்புறுத்துபவர் -ஸ்ரீ சத்ய சந்தர்-

————–

800-ஸூ லோசன –
அழகிய பார்வை உடையவன் -சிவந்த உடை அணிந்து கண் அழகைக் காட்டி மாயையால் மனசைக் கலங்கப் பண்ணுபவன்
குழல் அழகர் வாய் அழகர் –கண் அழகர் -நாச் திரு -11-2-

இதயத்தை மயக்கும் அழகிய திருக் கண்கள் உள்ளவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

ததோ திகம்பரோ முண்ட –ஸ்ரீ விஷ்ணு புராணம் 3-18-2-
புநச் ச ரக்தாம்பரத்ருக் மாயா மோஹாஸ் அஜி தேஷண –ஸ்ரீ விஷ்ணு புராணம் -3-18-16-

அழகிய கண் அல்லது ஞானம் உள்ளவர்-ஸ்ரீ சங்கரர் –

அழகிய இரு கண்கள் உடையவர் –மேன்மையான பார்வை யுள்ளவர் -ஸ்ரீ சத்ய சந்தர் –

—————

801-அர்க்க –
துதிக்கப் படுமவன் -அஹோ மஹாத்மா அதிகார்மிக -மஹாத்மா பர தார்மிஷ்டன் ஆக கொண்டாடப் பட்டு பிரகாசித்தவன்
ஏத்துகின்றோம் நாத்தழும்ப -பெரிய துருமொழி -10-3-1-
நல்ல மேல் மக்கள் ஏத்த நானும் ஏத்தினேன் -4-3-9-

மஹாத்மா என்றும் மிக்க தர்மிஷ்டர் என்றும் அவ்வசுரர்களால் புத்தாவதாரத்தில் துதிக்கப் பெறுபவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

பூஜிக்கத் தக்கவர்களான பிரமன் முதலியோரால் துதிக்கப் பெறுபவர் -ஸ்ரீ சங்கரர்

மிகுந்த ஸூக ரூபமான ஸ்வரூபம் உடையவர் -பூஜிக்கப் படுபவர் -ஸ்ரீ சத்ய சந்தர் –

—————

802-வாஜஸநி –
நிறைய சாப்பிட வேணும் -என்று போதித்தவன் -கடன் வாங்கியாகிலும் நெய் உண்பாய் -சார்வாகக் கொள்கை பரப்பி
ஷபண கவ்ர்தம் -காலம் தோறும் பல கவளங்கள் தயிர் உண்ணு-உபதேசித்து
பொருள் ஈட்டி வாழ்க்கையை அனுபவிக்க -வாஜ -அன்னம் -சத்
அட்டுகுக் குவிச் சோற்று பருப்பதமும் தயிர் வாவியும் நெய் அளறும் அடங்கப் பொட்டத் துற்றியவன் –
பொட்டத் துற்றியவன் விரைவாய உண்டவன்

நாத்திக வாதம் செய்து இம்மைக்கு உரிய சோறு முதலியவற்றையே பெரிதாக அடைந்து அனுபவிப்பவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

அவர்கள் விரதமே காலையில் தயிரும் சோறும் கலந்து உண்பதே

அன்னம் வேண்டியவர்களுக்கு அன்னத்தைக் கொடுப்பவர் -வாஜஸந-என்ற பாடம் -ஸ்ரீ சங்கரர் –

உணவைத் திரட்டுபவர் -வாஜஸந-என்ற பாடம் -ஸ்ரீ சத்ய சந்தர் –

———-

803-சுருங்கீ-
கொம்பை உடையவன் -கையால் சொரிவது அஹிம்சா தர்மத்து சேராது என்று மயில் தோகை கற்றையை கொம்பாக உடையவன்
பர்ஹீ பத்ரதர -ஸ்ரீ விஷ்ணு புராணம்

அஹிம்சையைக் காட்டுவதற்காக மயில் இறகைக் கையில் கொம்பு போல் வைத்து இருப்பவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

பஹி பத்ர தரஸ் –ஸ்ரீ விஷ்ணு புராணம்

பிரளயக் கடலில் மீனாக அவதாரம் எடுத்தவர் -ஸ்ரீ சங்கரர் –

கோவர்த்தன மலைச் சிகரங்களை உடையவர் -ஸ்ரீ சத்ய சந்தர் –

——–

804-ஜயந்த –
ஜெயித்தவன் -கள்ளப் பேச்சாலும் மாயா வாதத்தினாலும்
உள்ளம் பேதம் செய்திட்டவன் -8-10-4-

ஞானமே ஆத்மா என்றும் உலகம் பொய் என்றும் வீண் வாதம் செய்து ஆத்திகர்களை வெல்பவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

பகைவர்களை நன்கு வாழ்பவர் -அல்லது வாழ்வதற்கு காரணம் ஆனவர் -ஸ்ரீ சங்கரர் –

வெற்றி பெறுபவர் -ஸ்ரீ சத்ய சந்தர் –

—————

805-சர்வ விஜ்ஜயீ
இனிய சொற்களாலும் உக்தி வாதங்களாலும் நிறைந்த அறிவாளிகளையும் மயங்கச் செய்து -தன் சொற்படி நடக்க செய்தவன் –

எப்படிப் பிரமாணங்களுக்கு விரோதமான வாதங்களால் நம்ப வைக்கக் கூடும் என்னில்
எல்லாம் அறிந்தவர்களையும் வெல்லும் திறமை யுள்ளவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

எல்லாம் அறிந்தவரும் காமம் முதலிய உட்பகைகளையும் ஹிரண்யாஷன் முதலிய வெளிப்பகைகளையும் வெல்பவருமானவர்-ஸ்ரீ சங்கரர் –

எல்லாம் அறிந்தவராகவும் வெற்றியை அடைபவராகவும் உள்ளவர் -ஸ்ரீ சத்ய சந்தர் –

—————-

ஸூ வர்ண பிந்து ரஷோப்யஸ் சர்வ வாகீஸ் வரேஸ்வர
மஹா ஹ்ரதோ மஹா கர்த்தோ மஹா பூதோ மஹா நிதி –86-

————

806-ஸூ வர்ண பிந்து –
கேட்பவர் மயங்கும்படி இனிமையாகப் பேசுபவன் -பிது-என்னும் தாது மயக்கத்தை குறிக்கும்
இப்படி இனிய பேச்சுக்களால் அசுரர் ஆஸ்திக்யத்தை அழியச் செய்தவன்

எல்லாம் வல்லவராதலின் எழுத்து சொற்சுத்தம் உள்ள பேச்சு ஆகியவற்றினால் நாஸ்திகர்களைக் கண்டிப்பவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

பொன் போன்ற அவயவங்களை யுடையவர் –
நல்ல அஷரமும் பிந்து என்னும் அநு ஸ்வரமும் கூடிய பிரணவ மந்த்ரமாக இருப்பவர் -ஸ்ரீ சங்கரர் –

மங்களகரமான புகழ் உள்ள வேதங்களை அறிந்தவர் -ஸ்ரீ சத்ய சந்தர் –

————–

807- அஷோப்ய-
கலக்க முடியாதவன்
கலக்கமிலா நல தவ முனிவர்-8-4-10-

ஆழ்ந்த கருத்துள்ளவர் ஆதலால் யாராலும் கலக்க முடியாதவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

காமம் முதலியவற்றாலும் சப்தாதி விஷயங்களாலும் -அசுரர்களாலும் -கலக்க முடியாதவர் -ஸ்ரீ சங்கரர் –

கலக்க முடியாதவர் -பொன் புள்ளிகளை உடைய மாயமானாக வந்த மாரீசனை பயப்படும்படி செய்தவர் -ஸ்ரீ சத்ய சந்தர் –

————–

808-சர்வ வாகீச்வரேச்வர-
சிறந்த பேச்சு திறமை உள்ளவர்கள் எல்லாருக்கும் மேலானவன் -வாசஸ்பதி என்று ப்ருஹஸ்பதியை சொல்வார்கள்

வாதம் செய்யும் திறமை உள்ளவர்களுக்கு எல்லாம் மேலானவர் -ஸ்ரீ பராசர பட்டர்-

உத்தர யுத்தர யுக்தவ் ச வக்தா வாசஸ்பதிர் யதா –அயோத்யா -1-14-

வாகீச்வரர்களான பிரம்மா முதலியவர்களுக்கும் ஈஸ்வரர் -ஸ்ரீ சங்கரர் –

வாக்குக்களுக்கு எல்லாம் ஈச்வரனான ருத்ரனுக்கும் ஈஸ்வரர் -ஸ்ரீ சத்ய சந்தர் –

————

809-மஹா ஹர்த
ஆழ்ந்த மடுவாய் இருப்பவன் -அகப்பட்டுக் கொண்டால் தப்ப முடியாதவன்
ஷிபாம் யஜச்ரம் அசுபான் ஆ ஸூ ரீஸ்ரேவ யோநிஷூ -ஸ்ரீ கீதை 16-9-
பொற்றாமரைக் கயம் நீராடப் போனாள் பொருவற்றாள் என் மகள் -திரு நெடும் தாண்டகம் -19-
தாமரை நீள் வாசத் தடம் போல் ஒரு நாள் காண வாராயே
ஏஷ ப்ரஹ்ம ப்ரவிஷ்டோச்மி க்ரீஷ்மே சீத மிவ ஹ்ரதம் -மஹா பாரதம்

பாவம் செய்தவர்கள் மேற் கிளம்பாமல் அமிழ்ந்து போகும்படியும் புண்யம் செய்தவர்கள் அடிக்கடி ஆழ்ந்தும்
போதும் என்று தோன்றாமல் இருக்கும்படியும் பெருமடுவாக இருப்பவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

ஷிபாம் யஜஸ்ரம் அசுபாம் ஆஸூரீஷ்வேவ யோநி ஷு –ஸ்ரீ கீதை-16-19-

யோகிகள் முழுகி இளைப்பாறி சுகமாகத் தங்கி இருக்கும் ஆனந்த வெள்ளம் நிரம்பிய மடுவாக இருப்பவர் -ஸ்ரீ சங்கரர் –

காளிய மர்த்தன காலத்தில் அல்லது சமுத்ரத்தில் சயனித்து இருந்த போது பெரிய நீர் நிலை ஜலம் உள்ளவர் -ஸ்ரீ சத்ய சந்தர் –

————-

810-மஹா கர்த்த
படு குழியாய் இருப்பவன் –
பாஹ்ய குத்ருஷ்டிகள்-நரகமான படுகுழியில் விழச் செய்பவன் -அநாஸ்ரிதர்களை நசிக்கச் செய்யவே புத்த அவதாரம்
கோலமில் நரகமும் யானே -5-6-10-

இப்படி நாத்திக வாதங்களால் கெட்டுப் போனவர்களை ரௌரவம் முதலிய நரகக் குழிகளில் தள்ளுபவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

அஸ்ரத்த தாநா புருஷா தர்மஸ் யாஸ்ய பரந்தப அப்ராப்ய மாம் நிவர்த்தந்தே ம்ருத்யு சம்சார வர்த்தமனி –ஸ்ரீ கீதை 9-3-

கடக்க முடியாத மாயை என்னும் படு குழியை வைத்து இருப்பவர் -அல்லது மஹா ரதர் -ஸ்ரீ சங்கரர் –

சேஷாசலம் முதலிய பெரிய மலைகளில் இருப்பவர் -இதய குஹையில் இருப்பவர் -ஸ்ரீ சத்ய சந்தர் —

———————————————————————–

4-3-தைவத் சம்பத் உள்ள சிஷ்ட பரிபாலனம் பரமான திரு நாமங்கள் -811-825-

811-மஹா பூத
மகான்களைத் தன்னவராகக் கொண்டவன் -ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர்களை அன்பராகக் கொண்டவன்
கிடாம்பி ஆச்சான் -திருமால் இரும் சோலை அழகர்-அகதிம் சரணா கதம் ஹரே -ஸ்லோகம் கேட்டு அருளி –
நம் இராமானுசனை அடைந்து வைத்து அகதி என்னப் பெறுவதோ
மன் மநாபவ-ஸ்ரீ கீதை 9-13-
தீர்ந்தார் தம் மனத்து பிரியாது அவர் உயிரைச் சோர்ந்தே போகல கொடாச் சுடர் -2-3-6-

மேலானவர்களை தம் அடியாராகக் கொண்டவர் -சாஸ்த்ரங்களை மீறும் அசுரர்களை நிக்ரஹிப்பத்து கூறப் பட்டது –
இனி சாஸ்த்ரங்களை பின்பற்றும் தைவச் செல்வம் உள்ளவர்களை அனுக்ரஹிப்பது கூறப்படுகிறது -ஸ்ரீ பராசர பட்டர்-

மஹாத்மா நஸ்து மாம் பார்த்த -9-13-

முக்காலத்திலும் அளவிட முடியாத ஸ்வரூபம் உள்ளவர் -ஸ்ரீ சங்கரர் –

ஆகாயம் முதலிய பூதங்களை உண்டாக்குபவர் -ஸ்ரீ சத்ய சந்தர் –

————-

812-மஹா நிதி
மகான்களை பெரு நிதியாக உடையவன் -ஆதரம் பிரீதி கொண்டவன்
திருமால் இரும் சோலை மலையே திருப்பாற் கடலே என் தலையே
திருமால் வைகுந்தமே தண் திரு வேங்கடமே எனது உடலே -10-7-8-
மகான்களுக்கு நிதியாய் இருப்பவன் -வைத்த மா நிதியாம் மது சூதனன் -6-8-11-
நிதியினைப் பவளத் தூணை -திருக் குருந்தாண்டகம் -1-
எனக்கு நிதியே பதியே கதியே -பெரிய திருமொழி -7-1-7-

அவ்வடியவர்களை நிதி போலே அன்புடன் கருதுபவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

யே து தர்ம்யாம்ருதமிதம்-12-20-

எல்லாப் பொருளும் தம்மிடம் தங்கும்படி பெரிய ஆதாரமாக இருப்பவர்-ஸ்ரீ சங்கரர்-

தம்மை அடைவது நிதியை அடைந்தது போலே மகிழ்ச்சியை உண்டாக்குபவர்–ஸ்ரீ சத்ய சந்தர் –

————–

குமுத குந்தர குந்த பர்ஜன்ய பாவனோ அநல
அம்ருதாசோ அம்ருதவபுஸ் சர்வஜ்ஞஸ் சர்வதோமுக –87

————–

813-குமுத –
பூ மண்டலத்தின் ஆனந்தமாய் இருப்பவன்
நாட்டில் பிறந்து படாதன பட்டு -லோகத்தில் பிறந்தும் பரத்வாஜர் அத்ரி வசிஷ்டர் ஜடாயு -அகஸ்த்யர்
ஆஸ்ரமங்களில் ஆனந்தமாக பெருமாள்
வைகுந்தா மணி வண்ணனே என்னுள் மன்னி வைகும் வைகல் தோறும் அமுதாயா வானேறே -2-6-1-
ஓர் இடம் ஓன்று இன்றி என்னுள் கலந்தான் -2-5-3-

இவ் வுலகிலேயே அவர்களுடன் சேர்ந்து மகிழ்பவர் –ஸ்ரீ பராசர பட்டர் –

பூமியின் பாரத்தை ஒழித்து பூமியை மகிழ்விப்பவர் -ஸ்ரீ சங்கரர் –

உலகில் மகிழ்பவர் -ஸ்ரீ சத்ய சந்தர் –

————-

814-குந்தர –
ஞான ப்ரதன்-அறியாதன அறிவித்த அத்தா நீ செய்தன அடியேன் அறியேனே -2-3-2-
என்தன் மெய்வினை நோய் களைந்து நன் ஞானம் அளித்தவன் கையில் கனி என்னவே -ராமுனுச -103-
ததாமி புத்தியோகம் தம் யேநமாம் உபயாந்திதே-ஸ்ரீ கீதை -10-10-

பரமபதத்தை யளிப்பவர் -குந்தமலர் போல் அழகியவர் -பரதத்வ ஞானம் அளிப்பவர் –பாவங்களைப் பிளப்பவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

ததாமி புத்தி யோகம் தம் -10-10-

குருக்கத்தி மலர் போல் சுத்தமான தர்ம பலன்களைக் கொடுப்பவர் -பெறுபவர் என்றுமாம் –
ஸ்ரீ வராஹ ரூபத்தால் பூமியைக் குத்தியவர் -ஸ்ரீ சங்கரர் –

அடியவர்களால் சமர்ப்பிக்கப்படும் குந்த புஷ்பங்களால் மகிழ்பவர் -ஸ்ரீ சத்ய சந்தர் –

—————

815-குந்த –
பாபங்கள் போக்கி படிப் படியாக ஞானம் அளிப்பவன் -பர பக்தி பர ஞானம் பரம பக்தி -நிலைகள்
செய்குந்தா வரும் தீமை யுன்னடியார்க்குத் தீர்த்து அசுரர்க்குத் தீமைகள் செய் குந்தா -2-5-1-
குந்த என்று -வெண்மையான குருக்கத்தி மலரைச் சொல்லி -தூய இயல்பு உடையவன்
குந்தம் என்று ஆயுதம் சொல்லி -நின் கையில் வேல் போற்றி
கும் தாதி இதி குந்த -முக்த பூமியை தரும் மோஷ ப்ரதன்-

ஞான பக்தி வைராக்கியம் ஆகிய முதற்படி ஏறியவர்களுக்கு மேற் படிகளாகிய
பரபக்தி பரஜ்ஞான பரம பக்திகளைக் கொடுப்பவர் -சகல பாபங்களையும் பாவத்தைச் சோதிப்பவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

குந்தர -பாபங்களைப் பிளப்பவன்
குந்த -பிளந்த பாபங்களை சோதிப்பவன்

குந்த மலர் போல் அழகிய ஸ்படிகம் போல் தெளிவான அங்கம் உடையவர் -ஸ்ரீ பரசுராமாவதாரத்தில் பூமியை
கச்யபருக்குக் கொடுத்தவர் -பூமியை ஷத்ரியர்கள் இல்லாமல் போகும் படி கண்டித்தவர் – சங்கரர் –

ஒலியைச் செய்பவர் – பூமியை இந்த்ரனுக்குக் கொடுப்பவர் -கெட்டவற்றை அழிப்பவர்-ஸ்ரீ சத்ய சந்தர் –

——————

816-பர்ஜன்ய —
ஆத்யாத்மக -ஆதி பௌதிக -ஆதிதைவிக -தாபத் த்ரயங்கள் போக்கும் மேகமாக இருக்கிறவன் -மனத்தை குளிர வைப்பவன் –
மின்னு மா மழை தவழும் மேக வண்ணா -திரு நெடு -30-
வண்ணா வடிவையும் ஸ்வ பாவத்தையும் சொல்லும்
கரு மா முகில் உருவா புனல் உருவா -பெரிய திரு மொழி -7-9-9-

தம்முடைய ஸ்வரூபததைத் தெரிவித்து மூன்று தாபங்களைப் போக்குபவர் -ஸ்ரீ பாராசர பட்டர் –

விரும்பியவற்றைப் பொழிபவர் –மேகம் போலே ஆத்யாத்மிக தாப த்ரயத்தைப் போக்குபவர் -ஸ்ரீ சங்கரர் –

உயர்ந்தவைகளை உண்டாக்குபவர் -ஸ்ரீ சத்ய சந்தர் –

————–

817-பவன –
தானாக வந்து பக்தர்கள் தாபம் தீர்த்து அருளி
வந்தாய் என் மனம் புகுந்தாய் மன்னி நின்றாய் -பெரிய திரு மொழி -1-10-9-
வந்து அருளி என் நெஞ்சு இடம் கொண்ட வானவர் கொழுந்து -5-7-7-
பாவனா -பாடமாகில் பவித்ரம் -அமலங்களாக விழிக்கும் கமலக் கண்ணன் -1-9-9-

தாமே பக்தர்களிடம் செல்லுபவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

தம்மை நினைத்த மாத்திரத்திலே புனிதப் படுத்துபவர் -ஸ்ரீ சங்கரர் –

அரசர்களைக் காப்பவர் -புனிதப் படுத்துபவர் -வாயுவின் தந்தை -ஸ்ரீ சத்ய சந்தர் –

————–

818-அனில –
தானே கார்யம் செய்பவன் -ஸ்வா பாவிகமாக -தன் பேறாக
வெறிதே அருள் செய்வர் செய்வார்கட்கு உகந்து
இன்று தானே தடுமாற்ற வினைகள் தவிர்த்தான்–10-8-5-

பக்தர்களை அனுக்ரஹிப்பதற்குத் தம்மைத் தூண்டுபவர் வேண்டாதவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

ததப்ய பிரார்த்திதம் த்யாதோ ததாதி மது ஸூதநா

தமக்குக் கட்டளை இடுபவர் யாரும் இல்லாதவர் -எப்போதும் தூங்காத ஞான ஸ்வரூபி –
பக்தர்களுக்கு அடைவதற்கு எளியவர் -ஸ்ரீ சங்கரர் –

வாயு பக்தர்களை ஏற்பவர் -ஸ்ரீ சத்ய சந்தர் –

————–

819-அம்ருதாம்சு –
அமுதூட்டுபவன் – சோஸ்நுதே சர்வான் காமான் சஹ ப்ரஹ்மனா-
சீர் கலந்த சொல் நினைந்து போக்காரேல் என்னினைந்து போக்குவர் இப்போது -பெரிய திரு -86-
தேனும் பாலும் கன்னலும் அமுதுமாகித் தித்தித்து என் ஊன் உயிரில் உணர்வினில் நின்றான் -8-8-4-
எப்பொழுதும் நாள் திங்கள் ஆண்டு ஊழி ஊழி தொறும் அப்பொழுதைக்கு அப்பொழுது என் ஆராவமுதமே -2-5-4-

பக்தர்களுக்குத் தம் குணங்கள் என்னும் அமுதத்தை ஊட்டுபவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

ஆத்மானந்தம் என்னும் அமுதத்தை உண்பவர் -தேவர்களுக்கு அமுதம் அளித்து தாமும் உண்பவர் –
பலன் அழியாத ஆசை உள்ளவர் –ஸ்ரீ சங்கரர் –

முக்தர்களால் விரும்பப் படுபவர் -அம்ருதன் என்ற பெயருடைய வாயு தேவனுக்கு சுகத்தை உண்டாக்கும் பாரதீ தேவியை அளித்தவர்-
அம்ருதாம்ச என்ற பாடத்தில் அழியாத மிக்க புகழ் கொண்ட மத்ஸ்யாதி அவதாரங்களைக் கொண்டவர் -ஸ்ரீ சத்ய சந்தர் –

————-

820-அம்ருதவபு –
அமுதம் அன்ன திரு மேனியை யுடையவன் -ஆராவமுதன் -5-8-1-
அம்ருத சாகராந்தர் நிமக்ன சர்வாவயஸ் ஸூ க மாஸீத்-என்று முடித்தார்- எம்பெருமானாரும் ஸ்ரீ வைகுண்ட கத்யம் -6-
எனக்கு ஆராவமுதானாய் -10-10-5-

தமது திரு மேனியும் அமுதம் போன்று இனிமையாக இருப்பவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

அழியாத திருமேனி யுடையவர் -ஸ்ரீ சங்கரர் –

அமுதம் தருவதற்காக நாராயணீ அஜித தன்வந்தரி ரூபங்களைக் கொண்டவர் -ஸ்ரீ சத்ய சந்தர் –

—————

821- சர்வஜ்ஞ-
முற்றும் உணர்ந்தவன் –
எந்த வழியாகிலும்-அதையே வ்யாஜ்யமாகக் கொண்டு எளிதில் அடையும் படி இருப்பவன்
யேந கேநாபிப் காரேண த்வயவக்தா த்வம் கேவலம் மதீயயை வதயயா -சரணா கதி கத்யம் -17-
த்வய அனுசந்தானமே ஹேதுவாக இரு கரையும் அழியப் பெருக்கின அவன் கிருபை ஒன்றாலே விநஷ்டமான
பாபங்களை உடையீராய் –
ஆழியான் அருள் தருவான் அமைகின்றான் -10-6-1-

பக்தர்களின் சக்தி அசக்தியையும் அவர்களால் சாதிக்கக் கூடியது கூடாததையும் முற்றும் உணர்ந்தவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

எல்லாம் அறிந்தவர்-ஸ்ரீ சங்கரர் –

எல்லாவற்றையும் அறிந்தவர் -ஸ்ரீ சத்ய சந்தர் –

————–

822-சர்வதோமுக-
பக்தர்களுக்கு இன்ன வழியில் தான் அடையலாம் இன்ன வழியில் அடைய முடியாது என்ற நிர்ப்பந்தத்தைப் போக்கி
எவ்வழியாலும் எளிதில் அடையக் கூடியவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

ஆர்த்தோ வா யதி வா த்ருப்த பரேஷாம் சரணாகத

எங்கும் கண்களும் தலைகளும் முகங்களும் உள்ள ஸ்வரூபம் என்று
ஸ்ரீ கீதையில் சொல்லிய படி எங்கும் முகங்களுடையவர் -ஸ்ரீ சங்கரர் –

எல்லா திசைகளிலும் முகம் உள்ளவர் -எல்லா இடத்திலும் ஜலத்தைப் புகலிடமாகக் கொண்டவர் -ஸ்ரீ சத்ய சந்தர் –

—————

ஸூ லபஸ் ஸூ வ்ரதஸ் சித்தஸ் சத்ருஜித் சத்ரூதாபன
ந்யக்ரதோ அதும்பரோஸ் வத்தஸ் சானூரார்ந்த நிஷூதன -88

————–

823-ஸூலப-
பத்துடை அடியவர்க்கு எளியவன் -1-3-1-
எண்ணிலும் வரும் என் இனி வேண்டுவம் -1-10-2-
அணியனாகும் தான தாள் அடைந்தார்க்கு எல்லாம் -9-10-7-

விலையில்லாத உயர்ந்த பொருளாக இருந்தும் அற்பமான பொருள்களால் எளிதில் அடையக் கூடியவர் –
கூனி சந்தனம் கொடுத்து கண்ணனால் அருளப் பட்டாள்-ஸ்ரீ பராசர பட்டர் –

வஸ்த்ரே ப்ரக்ருஹ்ய கோவிந்தம் மம தேகம் வ்ரஜேதி வை

இலை பூ முதலியவற்றை பக்தியுடன் சமர்ப்பித்ததனால் மட்டுமே எளிதாக அடையப் படுபவர் -ஸ்ரீ சங்கரர் –

தேவதைகளில் பிரகாசிப்பவர் -எளிதில் அடையக் கூடியவர் -ஸ்ரீ சத்ய சந்தர் –

————-

824-ஸூ வ்ரத-
சோபனமான விரதம் உடையவன் -சங்கல்பம் -அபயம் சர்வ பூதேப்யோ ததாம் ஏதத் வ்ரதம் மம -பெருமாள்
ஓன்று பத்தாக நடத்திக் கொண்டு போகும் -ஸ்ரீ வசன பூஷணம் -81-
சரணமாகும் தான தாள் அடைந்தார்க்கு எல்லாம் -9-10-5-
இன்று வந்து இருப்பேன் என்று என் நெஞ்சு நிறையப் புகுந்தான் -10-8-6-

தம்மை அடைந்தவர்களை எவ்வகையாலும் காப்பாற்றும் உறுதியான வ்ரதமுடையவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

ஸக்ருத் ஏவ ப்ரபந்நாய-

சிறந்த போஜனம் உள்ளவர் -போஜனத்தில் இருந்து நிவர்த்திப்பவர் -ஸ்ரீ சங்கரர் –

தம்மை அடைவதற்கு மங்களமான விரதங்கள் உள்ளவர் -ஸ்ரீ சத்ய சந்தர் –

————-

825-சித்த –
சித்த தர்மமாய் உள்ளவன் -அவனே உபாயம் உபேயம்
ஆறு எனக்கு நின் பாதமே சரணாகத் தந்து ஒழிந்தாய்-5-8-10-
இன்று தானே தடுமாற்ற வினைகள் தவிர்த்தான்
விண்ணுலகம் தருவானாய் விரைகின்றான்-

தமது உண்மைத் தன்மையை அறிந்தவர்க்கு முயற்சி இல்லாமல் கிடைப்பவர் –
ஸ்வா பாவிக சர்வ ரஷகர் அன்றோ இவன் – ஸ்ரீ பராசர பட்டர் –

தமக்குக் காரணம் ஏதுமின்றி சித்தமாகவே இருப்பவர் -ஸ்ரீ சங்கரர் –

மங்களத்தை அல்லது சாஸ்த்ரத்தைத் தருபவர் -ஸ்ரீ சத்ய சந்தர் –

—————————————-

4-4-அனு ப்ரேவேசித்து ரஷணம் பரமான திரு நாமங்கள் -826-833-

826 -சத்ருஜித் சத்ருதாபன –
தனது திவ்ய சக்தியால் பூரிக்கப்பட்டு சத்ருக்களை ஜெயித்தவர் மூலம் பகைவர்களை வருத்துபவன் –
புரஞ்சயன் ஆவேசிக்கப் பட்டு இந்திரன் எருதுவாக -காகுஸ்தன் -அசுரர்களைக் கொன்றான்
புருகுஸ்தன் அரசன் தேஜஸ் மூலம் பாதாளம் துஷ்ட கந்தர்வர்களை நாசம் செய்தான்-

தம் திவ்ய சக்தியினால் பூரிக்கப்பட்டு விரோதிகளை வென்றவர்களான ககுத்ஸ்தர் புருகுத்சர் முதலியோரைக் கொண்டு
பகைவரை வருத்துபவர் –இதுவரை அவன் நேரில் காக்கும்படி கூறப் பட்டது –
இனி மறைந்து இருந்து காக்கும்படி கூறப் படுகிறது -ஸ்ரீ பராசர பட்டர் –

சதக்ரதோ வ்ருஷ ரூப தாரிண ககுத்ஸ்த அதிரோஷ சமன்வித பகவத சராசர குரோ அச்யுதஸ்ய தேஜஸா ஆப்யாயிதோ
தேவாஸூர சங்கராமே சமஸ்தாநேவ அஸூராந் நிஜகாந –ஸ்ரீ விஷ்ணு புராணம் -4-2-31-
புருகுத்ச ரஸாதல கதச்ச அசவ் பகவத் தேஜஸா ஆப்யாயித வீர்ய சகல கந்தர்வாந் ஜகாந் -ஸ்ரீ விஷ்ணு புராணம் -4-3-10-

சத்ருஜித் -தேவ சத்ருக்களான அசுரர்களை வெல்பவர் –
சத்ரு தாபன -சத்ருக்களைத் துன்புறுத்துபவர் -இரண்டு திரு நாமங்கள் -ஸ்ரீ சங்கரர் –

சத்ருஜித் -சத்ருக்களை வெல்பவர் –சூரியனுக்குள் இருப்பவர் –
சத்ருதாபன -சத்ருக்களை -அசுரர்களை தவிக்கும்படி அழியச் செய்பவர்-இரண்டு திரு நாமங்கள் –

—————-

827-ந்யக்ரோதோதும்பர –
அடியாருக்கு கட்டுப் படுபவன் -அஞ்சலி ஒன்றுக்கே உருகுபவன் –
அஞ்சலி பரமா முத்ரா ஷிப்ரம் தேவ ப்ரவசாதி நீ -ஸ்ரீ விஷ்ணு தர்மம்
கட்டுண்ணப் பண்ணிய பெரு மாயன்
சர்வ குண உத்கதம் அம்பரம் பரம் தாம -பட்டர் பாஷ்யம்
கார் ஏழு கடல் ஏழ் மலை ஏழ் உலகுண்டும் ஆரா வயிற்றானை அடங்கப் பிடித்தேனே -10-8-2-

மேலே தன் அங்கங்கள் போன்ற தேவர்கள் மூலம் பகவான் உலகு ஆள்வதை சொல்லும் திரு நாமங்கள்

கீழே நின்று வணங்குபவர்கள் -தங்களுக்கு அருளும்படி தடுத்து நிறுத்தப் படுபவராகவும் மிக உயர்ந்த பரமபதத்தையும் திருமகள்
முதலிய செல்வங்களையும் அடைந்தவராகவும் இருப்பவர் —
மிக உயர்ந்தவராயினும் மிகத் தாழ்ந்தவராலும் அணுகக் கூடியவர் – ஸ்ரீ பராசர பட்டர் –

அஞ்சலி பரமா முத்ரா க்ஷிப்ரம் தேவ ப்ரஸாதிநீ –ஸ்ரீ விஷ்ணு தர்மம் -33-105-
க்ருத அபராதஸ்ய ஹி தே நான்யத் பச்சாப் யஹம் ஷமம் அந்தரேன அஞ்சலிம் வக்த்வா லஷ்மணஸ்ய பிரசாத நாத் -கிஷ்கிந்தா -32-17-

ந்யக்ரோத -கீழே முளைப்பவர் -பிரபஞ்சத்திற்கு எல்லாம் மேல் இருப்பவர் —
எல்லாப் பிராணிகளையும் கீழ்ப்படுத்து தமது மாயையால் மறைப்பவர் –
உதும்பர -ஆகாயத்திற்கு மேற்பட்டவர் -எல்லா வற்றிற்கும் காரணம் ஆனவர் –
அன்னம் முதலியவற்றால் உலகைப் போஷிப்பவர் – இரண்டு திருநாமங்கள் -ஸ்ரீ சங்கரர் –

ந்யக்ரோத -எல்லோரையும் காட்டிலும் மேம்பட்டு வளர்பவர் -உதும்பர -ஆகாயத்தில் இருந்து மேலே எழுபவர் –
ஔ தும்பர -என்ற பாடமானால் -ஜீவர்களைத் தன பக்தர்களாக ஏற்கும் ஸ்ரீ லஷ்மி தேவிக்குத் தலைவர் –
இரண்டு திரு நாமங்கள் -ஸ்ரீ சத்ய சந்தர்

—————

828-அஸ்வத்த
தேவர்கள் மூலம் உலகங்களை நியமித்து ஆள்பவன்
அஸ்வ ச்த-நிலை யற்ற தேகம்
இருக்கும் இறை இறுத்து உண்ண -நிறுத்தினான் தெய்வங்களாக அத் தைவ நாயகன் தானே -5-2-8-

இன்றுள்ளது -நாளை இல்லை என்னும்படி அநித்யமான பதவிகள் பெற்ற இந்த்ரன் சூர்யன் முதலானவர்களுள் அனுப்ரவேசித்து
எல்லாவற்றையும் நடத்துபவர் –
பிறகு தமக்கு அங்கமாக உள்ள தேவதைகளால் உலகை நிர்வகிப்பது கூறப் படுகிறது -ஸ்ரீ பராசர பட்டர் –

மூர்த்திம் ரஜோ மாயம் ப்ராஹ்மிம் ஆஸ்ரித்ய ஸ்ருஜதி பிரஜா ஆஸ்ரித்ய பொவ்ருஷீம் சாத்விகீம் ய ச பாலயந்
காலாக்யாம் தாமஸீம் மூர்த்திம் ஆஸ்ரித்ய க்ரஸதே ஜகத் –ஸ்ரீ விஷ்ணு புராணம்

நாளை நில்லாத அநித்ய வஸ்துவாகவும் இருப்பவர் -அரசமரம் போல் இருப்பவர் -ஸ்ரீ சங்கரர் –

குதிரையைப் போல் இருப்பவர் -ஸ்ரீ சத்ய சந்தர் –

————-

829-சானூராந்த்ர நிஷூத-
இந்த்ரன் விரோதி -சானூரனைக் கொன்றவன்
கம்சன் மல்லர் பெயரும் சாணூரன்
கஞ்சனும் மல்லும் வேழமும் பாகனும் வீழச் செற்றவன் -பெரிய திரு மொழி -2-3-1-
அரங்கின் மல்லரைக் கொன்று –கஞ்சனைத் தகர்த்த சீர் கொள் சிற்றாயன் -8-4-1-

அவர்கள் விரோதியான சாணூரன் என்னும் மல்லனை அழித்தவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

சாணூரன் என்னும் அசுரனைக் கொன்றவர் -ஸ்ரீ சங்கரர் –

துர்யோதனன் முதலியவர்களையும் சாணூரனையும் அழித்தவர் -சாணூராந்த நி ஷூதன -என்று பாடம் -ஸ்ரீ சத்ய சந்தர் –

————-

சஹாரார்ச்சிஸ் சப்த ஜிஹ்வஸ் சப்தைதாஸ் சப்த வாஹன
அமூர்த்தி ர நகோ அசிந்த்யோ பயக்ருத் பய நாசன –89

———–

830-சஹச்ராச்சி –
ஆயிரக் கணக்கான கிரணங்கள் சூர்யனுக்கு கொடுத்து
பழுக்க உலர்த்த உஷ்ணம் தர
ஒளி மணி வண்ணன் -3-4-7-

உலகில் பொருள்களைப் பரிணாமம் செய்தல் -உலர்த்தல் உஷ்ணத்தையும் ஒளியையும் உண்டு பண்ணுதல்
முதலியவற்றைச் செய்யும் அநேக கிரணங்களை சூர்யனிடம் வைத்து இருப்பவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

அக்னீஷோமாத்ம சஞ்ஜஸ்ய தேவஸ்ய பரமாத்மந ஸூர்ய சந்த்ர மசவ் வித்தி சாகாரவ் லோசநேஸ்வரவ்
யத் ஆதித்ய கதம் தேஜோ ஜகத் பாசயதேகிலம் யத் சந்திரமசி யச்சாக்நவ் தத் தேஜோ வித்தி மகாமகம் —ஸ்ரீ கீதை -15-12-

அளவற்ற கிரணங்களை யுடையவர் -ஸ்ரீ சங்கரர் –

ஆயிரம் கிரணங்களை யுடையவர் -ஸ்ரீ சத்ய சந்தர் –

———-

831-சப்த ஜிஹ்வா
ஏழு நாக்குகளை உடையவன்
முண்டக உபநிஷத் அக்னி ஏழு நாக்குகள் –
காளி -கராளி -மநோஜவை -ஸூ லோஹிதை -ஸூ தூம்ர வர்ண -ஸ் புலிங்கிநி -விஸ்வரூபி
தீயாய்க் காலாய் நெடு வானாய் சீரார் சுடர்கள் இரண்டாய் ஆனான் -6-9-8-

தேவர்களை மகிழ்விக்கும் ஆஹூதிகளை காளீ கராளீ முதலிய ஏழு நாக்குகளை உடைய
அக்னியாய் இருப்பவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

தத் வக்த்ர தேவதா நாம் ச ஹுதபுக் பரமேஸ்வர மந்த்ர பூதம் யாதாதாய ஹுதமாஜ்ய புரஸ் சரம்
ப்ரஹ்மாண்ட புவனம் சர்வம் சந்தர்பயதி ஸர்வதா

ஏழு நாக்குகளை உடைய அக்னி ரூபியாக இருப்பவர் -ஸ்ரீ சங்கரர் –

ஏழு நாக்குகள் உள்ள அக்னியின் உள்ளிருப்பவர் -அல்லது ஜடைகளை உடைய
ஏழு ரிஷிகளைத் தமது நாக்காகயுடையவர் -ஸ்ரீ சத்ய சந்தர் –

————-

832-சப்தைதா
ஏழு வகை சமித்துக்களால் ஒளி விடுபவன்
அரசு அத்தி பலாச வன்னி விகங்கதம் அசநிஹதம் புஷகரபர்ணம்-ஏழு வகை சமித்துக்கள்
பாக யஞ்ஞம்-ஔ பாசனம் -வைஸ்வதேவம் -ஸ்தாலீபாகம் -அஷ்டைக மாசஸ்ரார்த்தம் -ஈசானபலி -சர்ப்ப பலி -எழு வகை ஹவிர் யஞ்ஞம்
அக்னி ஹோத்ரம் தார்ச பூர்ண மாசம் -பிண்ட பித்ரு யஞ்ஞம் -பசு பந்தம் ஆக்ரயணம் சாதுர்மாஸ்யம் -சௌத்ராமனி -என்பர்
அக்நிஷ்டோமம் அத்யக் நிஷ்டோமம் – சக்தியம் -ஷோடசம் -வாஜபேயம் -அதிராத்ரம் -அபதொர்யாமம் -ஏழு வகை யாகம்
வேதமும் வேள்வியும் விண்ணும் இரு சுடரும் ஆதியும் ஆனான் -9-4-9-

ஒவ் ஒன்றும் ஏழாக உள்ள விறகு பாகம் ஹவிஸ் சோமசம்ஸ்தை ஆகியவற்றை பிரகாசிக்கச் செய்யும் கிரியைகள்
எல்லாவற்றையும் அடைபவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

ஏழு ஜ்வாலைகள் உடைய அக்னியாக இருப்பவர் -ஸ்ரீ சங்கரர் –

ஏழு ரிஷிகளை வளரச் செய்பவர் -ஸ்ரீ சத்ய சந்தர் –

————–

833-சப்த வாஹன-
ஏழு வாகனங்களை உடையவன்
காரார் புரவி ஏழ் பூண்ட தனி ஆழி தேரார் நிறை கதிரோன் மண்டலத்தான் -சிறிய திரு மடல்
காயத்ரீ உஷ்ணிக் அனுஷ்டுப் ப்ருஹதீ பங்க்தி த்ருஷ்டுப் ஜகதீ -சந்தஸ் க்கள் உடைய வேத மந்த்ரங்களின்
அதிஷ்டான தேவதைகளே சூர்யனின் ஏழு குதிரைகள் -பரம புருஷனின் வாகனங்கள்
ஆவஹம் ப்ரவஹம் சம்வஹம் உத்வஹம் விவஹம் பரிவஹம் பராவஹம் ஆகிய ஏழு மண்டலங்கள் உடையவன் வாயு
இவனையும் வாகனமாக உடையவன் பகவான் வாயு வாஹன -332-திரு நாமம் முன்பே பார்த்தோம்-

காயத்ரீ முதலிய ஏழு சந்தஸ் ஸூக்களோடு கூடிய வேத மந்திரங்களுக்கு அதிஷ்டான தேவதைகளான சூர்யனுடைய
ஏழு குதிரைகளை வாகனமாக யுடையவர் -ஏழு வாயுச் கந்தர்களைத் தாங்குபவர் என்றுமாம் –ஸ்ரீ பராசர பட்டர் –

சப்த பிராணா ப்ரபவந்தி –தைத்ரீயம்
குஹசயா நிஹிதா சப்த
விஸ்வேச பிராணா ஸக்தேர்வை வாய்வாக்யம் அதி தைவதம் ஜகத் சந்தாரகம் சைவ நாநாஸ் கந்தாத்மநா
து வை ஏதே பகவத் ஆராமா திஷ்டன் யஸ்மின் ஜெகத்ரய

ஏழு குதிரைகளை உடைய அல்லது சக்த என்னும் ஒரு தேர்க் குதிரையை உடைய சூரியனாக இருப்பவர் -ஸ்ரீ சங்கரர் –

ஏழு குதிரைகளை யுடைய சூரியனை நடத்துபவர் -ஸ்ரீ சத்ய சந்தர் –

————–

834-அமூர்த்தி –
ப்ராக்ருத சரீரம் இல்லாதவன்

பஞ்ச பூதமான ரூபத்தைக் காட்டிலும் வேறுபட்ட ரூபமுடையவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

தேஹம் இல்லாதவர் –அசைவனவும் அசையாதவையுமான பொருள்களின் வடிவம் சரீரம் அது இல்லாதவர் -ஸ்ரீ சங்கரர் –

ப்ராக்ருதமான மேனி அற்றவர் -ஸ்ரீ சத்ய சந்தர் –

—————

835-அனக –
பாபம் அற்றவன் -பரி சுத்தன் -சுத்த சத்வ மயம்-
முன்பே 148 பார்த்தோம் தோஷங்கள் தீண்டா
பூதங்கள் ஐந்து –இருள் சுடர் –கிளரொளி மாயன் கண்ணன் -3-10-10-
தீதில் சீர் திருவேங்கடத்தான் -3-3-5
அமலன் –

கர்மத்திற்கு வசப் படாதவராதலின் கர்ம வசப் பட்ட ஜீவர்களைக் காட்டிலும் விலஷணமானவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

பாவமும் துக்கமும் இல்லாதவர் -ஸ்ரீ சங்கரர் –

பாவம் அற்றவர்-ஸ்ரீ சத்ய சந்தர் –

———–

836-அசிந்த்ய –
எண்ணத்துக்கு அப்பால் பட்டவன் –
கட்டுரைக்கில் தாமரை நின் கண் பாதம் கை ஒவ்வா கட்டுரைத்த நன் பொன் உன் திரு மேனி ஒளி ஒவ்வாது
ஒட்டுரைத்து இவ்வுலகு உன்னைப் புகழ்வெல்லாம் பெரும்பாலும் பட்டுரையாய்ப் புற்கென்றே காட்டுமால் பரஞ்சோதீ -3-1-2-
எம் பரஞ்சோதி கோவிந்தா பண்புரைக்க மாட்டேனே -3-1-3-
செவ்வே நெஞ்சால் நினைப்பரிதால் வெண்ணெய் உண்ணும்
சேயன் அணியன் யாவர்க்கும் சிந்தைக்கும் கோசரன் அல்லன் 1-9-6–

முக்தர்களை உவமையாகக் கொண்டும் நிரூபிக்க முடியாதவர் -ஸ்ரீ பராசர பட்டர்-

எல்லா வற்றுக்கும் சாஷி -ஆதலின் எப் பிரமாணங்களுக்கும் எட்டாதவர் -விலஷணர்-
இத்தகையவர் என்று நினைக்க ஒண்ணாதவர் – ஸ்ரீ சங்கரர் –

சிந்தைக்கு எட்டாதவர் -ஸ்ரீ சத்ய சந்தர் –

—————

837-பயக்ருத்

தம் கட்டளைகள் ஆகிற சாஸ்த்ரங்களை மீறுபவர்களுக்கு பயம் உண்டாக்குபவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

பக்தர்களுக்கு பயத்தைப் போக்குபவர் –தீய வழிகளில் நடப்பவர்களுக்கு பயத்தை ஏற்படுத்துபவர் -ஸ்ரீ சங்கரர் –

பக்தர்களுக்கு அபயம் அளிப்பவர் -அபயக்ருத் -என்பது பாடம் -ஸ்ரீ சத்ய சந்தர் –

—————

838-பய நாசன
பயத்தை உண்டு பண்ணுபவன் -போக்குமவன்
அசுரர்க்கு வெம் கூற்ற
எல்லையில் மாயனைக் கண்ணனை தாள் பற்றி யானோர் துக்கம் இலேனே -3-10-8-

தம் கட்டளைகள் ஆகிற சாஸ்திரங்களைப் பின்பற்றுபவர்களுக்கு பயத்தைப் போக்குபவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

பய அபயகர கிருஷ்ண

வர்ணாஸ்ரம தர்மத்தை பின்பற்றுபவர்களுடைய பயத்தைப் போக்குபவர் -ஸ்ரீ சங்கரர் –

அச்சத்தைப் போக்குபவர் -ஸ்ரீ சத்ய சந்தர் –

———————————————————

அஷ்ட ஐஸ்வர்யங்களை உடையவன் பரமான திரு நாமங்கள் -839-848-

———-

அணுர் ப்ருஹத் க்ருசஸ் ச்தூலோ குணப்ருன் நிர்குணோ மஹான்
அத்ருதஸ் ஸ்வ த்ருதஸ் ஸ்வாஸ்ய ப்ராக்வம்சோ வம்சவர்த்தன –90 –

———

839-அணு –
மிகவும் நுண்ணியன் -அணோராணீயான்
ஆவி சேர் உயிரின் உள்ளான் -3-4-10-
சிறியாய் ஒரு பிள்ளை -7-2-4-
அணிமா மஹிமா-போன்ற அஷ்ட ஐஸ்வர்யங்கள் ஸ்வா பாவிகமாக உள்ளவன் –

மிகவும் நுண்ணிய ஹ்ருதயாகசத்தில் அதிலும் நுண்ணிய ஜீவாத்மாவினுள் பிரவேசித்து இருக்கும் திறமையால்
அணிமா -உடையவர் -பிறகு அணிமை முதலிய வற்றின் அதிஷ்டானங்களான அஷ்டைச்வர்யம் கூறுகிறது – ஸ்ரீ பராசர பட்டர் –

அணீர் அணீயாந்
நிபுனோ அணீயாந் பிசோர்ணாயா–தாமரைத்தண்டை விட நுட்பமாயும் வலுவாயும்

மிக ஸூஷ்மமாக இருப்பவர் -ஸ்ரீ சங்கரர்-

அணுவான சிறிய வற்றிற்குத் தங்கும் இடமாக இருப்பவர் -ஸ்ரீ சத்ய சந்தர் –

——————-

840-ப்ருஹத்
பெரிதிலும் பெரியவன் -மஹதோ மஹீயான்
சபூமிம் விச்வதோவ்ருத்வா அத்ய திஷ்டத் தசாங்குலம்
பெரிய வப்பன் –உலகுக்கோர் தனி யப்பன்-8-1-11-
நந்தா விளக்கே அளத்தற்கு அரியாய் -பெரிய திருமொழி -3-8-1-

மிகப் பெரிய பரமபதத்தையும் உள்ளங்கையில் அடக்குவது போல் தமது ஏக தேசத்தில் அடக்க
வியாபித்து இருக்கும் மஹிமா உடையவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

ச பூமிம் விச்வதோ வ்ருத்வா அத்யதிஷ்டத் தசங்குலம் -புருஷ ஸூக்தம்
மஹதோ மஹீயாந்

பெரிதாயும் பெருமை உள்ளதையும் இருக்கும் ப்ரஹ்மமாயும் இருப்பவர் -ஸ்ரீ சங்கரர் –

குணங்களால் நிறைந்தவர் -ஸ்ரீ சத்ய சந்தர் –

——————

841-க்ருச-
மெல்லியவன் -லேசானவன்-லகிமா -யத்ர காமகத வசீ –
எண்ணில் நுண் பொருள் -10-8-8-

பஞ்சு காற்றினும் லேசானவராக எங்கும் தடை இன்றிச் செல்பவர் ஆதலின் லகிமா உடையவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

பார்க்க முடியாதவர் -ஸ்ரீ சங்கரர் –

அசுரர்களை அழிப்பவர்-ஸ்ரீ சத்ய சந்தர் –

————-

842-ஸ்தூல –
பருத்தவன் -ப்ராப்தி ஐஸ்வர்யம்
தாள் பரப்பி மண் தாவிய ஈசன் -1-3-10-
ஓங்கி உலகளந்த உத்தமன்-

ஓர் இடத்தில் இருந்தே எல்லாப் பொருளையும் நேரில் தொடும் திறமையால் பூமியில் இருந்தே சந்திரனைத் தொடும்
ப்ராப்தி என்னும் சக்தியை உடையவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

எல்லாமாக தாம் இருப்பதால் ஸ்தூல -பெரிய உருவம் உள்ளவர் -என்று உபசாரமாகக் கூறப் பெறுவார் -ஸ்ரீ சங்கரர் –

மிகப் பெரியவர் -ஸ்ரீ சத்ய சந்தர் –

—————

843-குணப்ருத்-
எல்லா பொருள்களையும் தனது குணம் போலே தரிப்பவன்
சர்வச்ய வசீ சர்வஸ் யேசான-ஈசித்ருத்வம் ஐஸ்வர்யம்
எப்பொருளும் தானே எல்லையில் சீர் எம்பெருமான் -2-5-4/10-

தம் சங்கல்ப்பத்தினாலே எல்லாப் பொருள்களையும் தமது குணம் போலே தம்மிடம் வைத்துத் தாங்கும்
ஈசித்வம் என்னும் சக்தி உடையவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

ஸர்வஸ்ய வசீ சர்வஸ்யேஸாந –

ஸ்ருஷ்டி ஸ்திதி சம்ஹாரங்களுக்குக் காரணங்கள் ஆகிய சத்வ ரஜஸ் தமோ குணங்களை வகிப்பவர் -ஸ்ரீ சங்கரர் –

ஆனந்தம் முதலிய குணங்களை உடையவர் –
அப்ரதாநர்களான-முக்கியம் அல்லாதவர்களான -ஜீவர்களைத் தாங்குபவர் -ஸ்ரீ சத்ய சந்தர் –

————–

844-நிர்க்குண
முக்குண கலப்பு அற்றவன்
வசித்வம் ஐஸ்வர்யம்
துக்கமில் சீர் கண்ணன்-

உலகியல் குணங்கள் ஒன்றும் தம்மிடம் ஒட்டாமல் இருக்கும் வசித்வம் என்னும் சக்தியோடு மிகச் சுதந்திரர் -ஸ்ரீ பராசர பட்டர் –

விஸ்வஸ்ய மிஷதோ வசீ
சத்த் வாதயோ ந சந்தீசே யத்ர ச ப்ரக்ருதா குணா –ஸ்ரீ விஷ்ணு புராணம்

உண்மையில் குணங்கள் அற்றவர் -ஸ்ரீ சங்கரர் –

சத்வம் முதலிய முக்குணங்கள் அற்றவர் -ஸ்ரீ சத்ய சந்தரர்-

———-

845-மஹான் –
மிகச் சிறந்தவன் -ப்ராகம்யம் ஐஸ்வர்யம்
நினைத்தை எல்லாம் தடை இன்றி நடத்த வல்ல சாமர்த்தியம்-

நீரில் போலே நிலத்திலும் முழுகுவது வெளிவருவது முதலிய நினைத்த வெல்லாம் தடையில்லாமல் செய்யும்
ப்ராகாம்யம் என்னும் சக்தியை யுடையவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

ஸம்ப்ரயோஜ்ய வியோஜ்யாயம் காமகாரகர பிரபு யத்யதிச்சேத அயம் ஸுவ்ரி-தத்தத் குர்யாத் அ யத்னத —

சப்தாதி குணங்கள் இல்லாமையாலும் மிக ஸூ ஷ்மமாக இருப்பதாலும் நித்யத்வம் -சுத்த சத்வம் -சர்வ கதத்வம் -ஆகிய
மூன்று தர்மங்களிலும் தடையில்லாதவர் -ஸ்ரீ சங்கரர் –

உயர்ந்தவர் -ஸ்ரீ சத்ய சந்தர் –

————–

846-அத்ருத –
அடக்க முடியாதவன் -நிரங்குச ஸ்வதந்த்ரன்
வேத வாய் மொழி அந்தணன் ஒருவன் –உன் மக்கள் மற்று இவர் என்று கொடுத்தாய் -பெரிய திருமொழி -5-8-7-
ப்ராப்தி என்னும் ஐஸ்வர்யம்-

இப்படிப்பட்ட விஸ்வரூபமாய் இருக்கும் மேன்மையினால் ஒன்றிலும் கட்டுப் படாதவர் –
பிறருடைய நிழலில் புகுந்து அவர் உள்ளத்தை வசீகரித்தல் -தன்னை தியானிப்பவர் உள்ளத்தில் இருத்தல் –
ஜீவனுடன் கூடினதும் ஜீவன் இல்லாததுமான உடலிலே பிரவேசித்தல் -இஷ்டாபூர்த்தம் என்னும் யாகத்தில் அதிஷ்டித்து இருத்தல் ஆகிய
நான்கு விதமான அவருடைய யாதொன்றிலும் கட்டுப் படாத தன்மை கூறப்படுகிறது —
இதனால் நினைத்த படி எல்லாம் செய்ய வல்ல அவனுடைய பெருமை கூறப்பட்டது –
பரம பதத்துக்குப் போகத் தகுதி இல்லாமல் இருந்தும் வைதிகன் பிள்ளைகளை பரம பதத்துக்குப் போக விட்டது மட்டும் அல்லாமல் –
திரும்பி வருதல் அல்லாத அவ்விடத்தில் இருந்தும் மறுபடியும் அவர்களை இந்த உலகிற்கு வரச் செய்தார் –
சித்தையும் அசித்தையும் அவற்றின் ஸ்வரூபத்தையும் கூட மாறுபடும்படி செய்ய வல்லவராக இருந்தும்
ஏதோ ஒரு காரணத்தால் அப்படி மாறுபடுத்துவது இல்லை -ஸ்ரீ பராசர பட்டர் –

எல்லா வற்றிற்கும் ஆதாரமான பூமி முதலிய வற்றையும் தாங்குவதால் ஒன்றாலும் தாங்கப் படாதவர் -ஸ்ரீ சங்கரர் –

எவராலும் தாங்கப் படாதவர் -ஸ்ரீ சத்ய சந்தர் –

————

847-ஸ்வ த்ருத-
தன்னைத் தானே தாங்குபவன்
மற்றவர்களை நிறுத்தினான் தெய்வங்களாக அத தெய்வ நாயகன் தானே -5-2-8-
பொருவில் தனி நாயகன் -5-10-8-

தம்மாலேயே தாம் தாங்கப்படும் தன்மை இயற்கையாக அமைந்தவர் –மந்த்ரம் ஓஷதி தவம் சமாதி இவைகள் சித்திக்கப் பெற்ற
பத்த சம்சாரிகளுடைய அணிமை முதலிய அஷ்ட ஐஸ்வர் யங்களைக் காட்டிலும்
இவருடைய ஐஸ்வர் யத்துக்கு உண்டான பெருமை கூறப் படுகிறது –
இந்த ஐஸ்வர் யங்கள் இவருக்கு சமாதி முதலிய காரணங்களால் வந்ததல்ல –
ஸ்வா பாவிகமாகவே உள்ளவைகள் ஆகும் – ஸ்ரீ பராசர பட்டர்-

தம்மாலேயே தரிக்கப் படுபவர் -ஸ்ரீ சங்கரர் –

தம்மாலேயே தாம் தாங்கப் பெறுபவர் -தனத்தைத் தாங்குபவர் -ஸ்ரீ சத்ய சந்தர் –

————–

848-ச்வாச்ய-
ஆசயம் நிலை ஆசனம்
அவனின் மேலான நிலை ஸ்வ சித்தம்

மிகச் சிறந்த இருப்பை யுடையவர் -முக்தர்களுடைய செல்வம் கூறப்படுகிறது –
அவித்யையினால் சம்சாரத்தில் ஐஸ்வர்யம் மறைக்கப் பட்டு இருக்கும் –
பகவானுடைய ஐஸ்வர்யம் எப்போதும் மறைக்கப் படாமல் உள்ளபடியால் வந்த ஏற்றம் சொல்கிறது -ஸ்ரீ பராசர பட்டர்-

தாமரை மலர் போலே அழகிய திரு முகம் உள்ளவர் –புருஷார்த்தங்களை உபதேசிக்கும் வேதம்
வெளிப்பட்ட திரு முகத்தை யுடையவர் ஸ்ரீ சங்கரர் –

மங்கலமான வேதங்களை வாயில் யுடையவர் -ஸ்ரீ சத்ய சந்தர் –

———————————————————–

ஸ்ரீ புத்த அவதாரம் -அசூர நிக்ரஹம் –

787-துராரிஹா -புத்தராக இருந்து தீயவர்களைக் கெடுத்தவர் –
788- சூபாங்க -அசூரர்க்கு மயங்கும் படி அழகிய உருவம் எடுத்தவர் –
789-லோக சாரங்க -அசூர உலகுக்கு தாழ்ந்த உலக இன்பங்களைப் பற்றியே உபதேசித்து பின்பற்றச் செய்பவர் –
790-சூதந்து -அசூரர்களால் தாண்ட முடியாதபடி வலிமையான பேச்சு வலையை உடையவர் –

791-தந்து வர்தன –அசூரர்களுக்கு சம்சாரம் என்னும் கயிற்றை வளர்த்தவர் –
792-இந்த்ரகர்மா -இந்திரனுக்கு தீங்கு செய்யும் அசூரர்களை அழித்தவர் –
793-மஹா கர்மா -அசூரர்களைத் தண்டித்து சாதுக்களைக் காக்கும் சிறந்த செயல்களை உடையவர் –
794- க்ருதகர்மா -அசூரர்களை ஏமாற்ற தானும் அவர்கள் உடைய பொய்யான செயல்களை உடையவர் –
795-க்ருதாகம -தான் செய்ததை மெய்யாக்க ஆகமங்களை ஏற்படுத்தியவர் –
796-உத்பவ -முக்தியைப் பற்றி உபதேசிப்பதால் சம்சாரக் கடலை தாண்டியவர் போல் தோற்றம் அளிப்பவர் –
797-ஸூந்தர-அசூரர்களைக் கவரும் அழகிய வடிவைக் கொண்டவர் –
798-ஸூந்த-தன் அழகால் அசூரர்களின் உள்ளத்தை மேன்மைப் படுத்தியவர் –
799-ரத்ன நாப -தான் மெத்தப் படித்தவன் என்பதைக் காட்டும் வயிற்றையும் ரத்னத்தைப் போன்ற உந்தியையும் உடையவர் –
800-ஸூ லோசன -மயக்கும் கண்களை உடையவர் –

801-அர்க்க -அசூரர்களால் மகாத்மா என்று துதிக்கப் பட்டவன் –
802-வாஜசநி-தன் நாஸ்திக உபதேசங்களால் அசூரர்களை உலக இன்பத்தில் ஈடுபடுத்தி அதிகமாக உண்ண வைத்தவர் –
803- ஸூருங்கி-அஹிம்சை வாதத்தை வலியுறுத்தி கையில் மயில் தோகை கட்டு வைத்து இருப்பவர் –
804-ஜயந்த -அறிவே ஆத்மா வென்னும் -உலகமே பொய் என்றும் -வீண் வாதம் செய்து ஆஸ்திகர்களை ஜெயித்தவர் –
805-சர்வ விஜ்ஜயீ – தன் இனிய வாதங்களால் வேதங்களை நன்கு கற்றவர்களையும் மயக்கி வெற்றி கொண்டவர் –
806-ஸூ வர்ணபிந்து -தன்னுடைய வாதத் திறமையினால் ஆஸ்திக வாதத்தை மறைத்தவர் –
807-அஷோப்ய-ஆழ்ந்த கருத்துக்கள் உள்ளவரான படியால் யாராலும் கலக்க முடியாதவர் –
808-சர்வ வாகீஸ் வரேஸ்வர-வாதத் திறமை படைத்த அனைவருக்கும் தலைவர் –
809-மஹாஹ்ரத -பாவம் செய்தவர் மூழ்கும் புண்யம் செய்தவர் மறுபடியும் நீராட விரும்பும் ஏரி போன்றவர்
810-மஹாகர்த -தன் உபதேசத்தினால் கெட்டுப் போனவர்களை தள்ளிவிடும் பெறும் குழி போன்றவர் –

——————————————————————————-

சாத்விகர்களுக்கு அருளுபவன் –

811-மஹா பூத -சான்றோர்களால் பெருமை அறிந்து வணங்கப் படுபவர் –
812-மஹா நிதி -பக்தர்களால் செல்வமாகக் கொள்ளப் படுபவர்
813-குமுத -இவ்வுலகத்திலும் அவ்வுலகத்திலும் பக்தர்களோடு சேர்ந்து மகிழ்பவர் –
814-குந்தர -பரத்வமான தன்னைப் பற்றிய அறிவை அளிப்பவர் -குருக்கத்தி மலர் போலே தூய்மையானவர் –
815-குந்த -அறிவு பற்றின்மை ஆகிய முன்படிகளில் ஏறியவர்களை பரபக்தி பரஜ்ஞானம் பரம பக்திகள் ஆகிற மேல் படிகளில் ஏற்று பவர் –
816-பர்ஜன்ய -ஆத்யாத்மிகம் ஆதிதைவிதம் ஆதி பௌதிகம் என்னும் மூன்று வெப்பங்களையும் தணிக்கும் மேகம் போன்றவர் –
817-பாவன-பக்தர்கள் இடம் காற்றைப் போல் செல்பவர் –
818-அ நில-பக்தர்களை தானே அருளுபவர் -யாரும் தூண்டத் தேவையில்லாதவர் –
819-அம்ருதாம் ஸூ -தன் குணம் என்னும் அமுதத்தை அடியார்களுக்கு ஊட்டுபவர்
820-அம்ருதவபு -அமுதத்தைப் போன்ற திருமேனி உடையவர் –

821-சர்வஜ்ஞ -தன் பக்தர்களின் திறமை திறமையின்மை சாதிக்க முடிந்தது முடியாதது அனைத்தையும் அறிந்தவர் –
822-சர்வதோமுக-இப்படித் தான் அடைய வேண்டும் என்று இல்லாமல் தன்னை அடைய பல வழிகள் உள்ளவர் –
823-ஸூ லப -விலை மதிப்பற்றவராக இருந்தும் அன்பு எனும் சிறு விலையால் வாங்கப் படுபவர் –
824-ஸூ வ்ரத-எவ்வழியில் தன்னை அடைந்தாலும் அவர்களைக் காக்க உறுதி கொண்டவர்
825-சித்த -வந்தேறியாக அல்லாமல் இயற்கையாகவே காக்கும் தன்மை அமைந்தவர்
826-சத்ருஜித் சத்ருதாபன -சத்ருக்களை ஜெயித்தவர்களில் தம் சக்தியைச் செலுத்தி பகைவர்களுக்கு வெப்பத்தைக் கொடுப்பவர் –
827-ந்யக்ரோதா தும்பர -வைகுந்ததுக்குத் தலைவரான பெருமை படைத்தவர் –கை கூப்புதலாயே எளியவர்க்கும் அருளுபவர்

————————————————–

எண்ணும் எழுத்தும் –

828-அஸ்வத்த -குறைவான காலத்துக்கு வாழும் இந்த்ரன் முதலான தேவர்கள் மூலம் உலகை நடத்துபவர் –
829-சாணூராந்தர நிஷூதன -பகைவரான சாணூரன் என்னும் மல்லரை முடித்தவர்
830-சஹஸ்ராச்சி-தன்னுடைய ஒளியை ஸூ ர்யனுக்குக் கொடுப்பவர் –
831-சப்தஜிஹ்வ-அக்னியாக ஏழு நாக்குகளை உடையவர் –
832-சப்தைதா -ஏழு விதமான விரகுகளால் செய்யப்படும் யாகங்களை ஏற்பவர் –
833-சப்த வாஹன – ஸூர்யனுடைய தேர்க் குதிரைகளான ஏழு சந்தஸ் ஸூக்களை தனக்கு வாகனமாக உடையவர் –
834-அமூர்த்தி -தம் பெருமைகளால் மேல் சொன்ன அனைத்தையும் விட மேம்பட்டவர் –
835-அ நக -கர்மங்கள் என்னும் குற்றம் தீண்டாதபடியால் ஜீவர்களைக் காட்டிலும் உயர்ந்தவர் –
836-அசிந்த்ய -முக்தர்களோடும் ஒப்பிட முடியாமல் உயர்ந்தவர் –
837-பயக்ருத்-தன் ஆணையை மதிக்காதவர்களுக்கு பயமூட்டுபவர் –
838-பய நாசன -ஆணையின் படி நடப்பவர்களுக்கு பயத்தை போக்குமவர் –

———————————————————————-

ஸ்ரீ அஷ்ட ஐஸ்வர்யங்களை அருளுபவன் –

839-அணு -மிக நுண்ணியவர் -அணிமா –
840-ப்ருஹத் -மிகப் பெரிதான ஸ்ரீ வைகுந்தத்தை விடப் பெரியவர் -மஹிமா-
841-க்ருஸ-எங்கும் தடையின்றி செல்லும்படி மிக லேசானவர் -லகிமா –
842-ஸ்தூல -ஓர் இடத்திலே இருந்தே எல்லாப் பொருள்களையும் தொடும் அளவிற்குப் பருத்து இருப்பவர் -கரிமா
843-குணப்ருத்-தன் நினைவாலேயே உலகையே தன் பண்பைப் போலே எளிதில் தாங்குபவர் -ஈசித்வம்
844-நிர்குண -சத்வம் ரஜஸ் தமஸ் ஆகிய முக்குணங்கள் அற்றவர் -வசித்வம்
845-மஹான்-நினைத்ததை இடையூடின்றி நடத்த வல்ல பெருமை உடையவர் –ப்ராகாம்யம் –
846-அத்ருத -தடங்கல் இல்லாதவர் -கட்டுப் படாதவர் -ப்ராப்தி –
847-ஸ்வ த்ருத-ஏனையோர் முயற்சி செய்து அடையும் மேல் சொன்ன எட்டு சித்திகளும் இயற்கையிலே அமையப் பெற்றவர் –
848-ஸ்வாஸ்ய-என்று என்றும் சிறந்த நிலையை உடையவர் –
இன்று சிறப்பு அடைந்த முக்தர்களை விட என்றுமே சிறப்பான நிலை உடையவர்

—————————————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பராசர பட்டர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பீஷ்மர் திருவடிகளிலே சரணம்
ஸ்ரீ வியாச பகவான் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: