ஸ்ரீ விஷ்ணு சகஸ்ர நாமம்-3-34-எல்லை அற்ற குண விபூதிமான் -பரமான – திரு நாமங்கள் -மனத்தாலும் செயலாலும் ஆராதிக்கப் படுக்கை-665-683 / 3-35-வாத்சல்ய குண பெருக்கு-வாக்காலே ஆராதிக்கப் படுக்கை -684-696-திரு நாமங்கள்–

காம தேவ காம பால காமி காந்த க்ருதாகம
அநிர்தேச்யவபுர் விஷ்ணுர் வீரோ அனந்தோ தனஞ்சய –70-
ப்ரஹ்மண்யோ ப்ரஹ்மக்ருத் ப்ரஹ்மா ப்ரஹ்ம ப்ரஹ்ம விவர்த்தன
ப்ரஹ்ம வித் ப்ரஹ்மணோ ப்ரஹ்மீ ப்ரஹ்மஜ்ஞோ ப்ராஹ்மண ப்ரிய–71
மஹாக்ரமோ மஹாகர்மா மஹா தேஜா மஹோரக
மஹாக்ரதுர் மஹாயஜ்வா மஹாயஜ்ஞோ மஹாஹவி–72
ஸ்தவ்யஸ் ஸ்தவ ப்ரியஸ் ஸ்தோத்ரம் ஸ்துதஸ் ஸ்தோதா ரணப்ரிய
பூர்ண பூரயிதா புண்ய புன்யகீர்த்தி ரநாமய –73-
மநோஜவஸ் தீர்த்தகரோ வஸூ ரேதா வஸூப்ரத
வ ஸூப்ரதோ வா ஸூதேவோ வஸூர் வஸூமநா ஹவி -74-

———–

3-1-பிரதம அவதாரம் விஷ்ணு -147-152- திரு நாமங்கள்–6 -திரு நாமங்கள்
3-2-வாமன அவதார பரமான -153-164 திரு நாமங்கள் —12-திரு நாமங்கள்
3-3- துஷ்ட நிக்ரஹ இஷ்ட பரிபாலநம் -165-170-திரு நாமங்கள்–6-திரு நாமங்கள்
3-4-ஜ்ஞானாதி பகவத் குணங்கள் கொண்டவன் -171-181- திரு நாமங்கள்-11-திரு நாமங்கள்
3-5-குணங்களுக்கு ஏற்ற அவதார செயல்கள் -182-186-திரு நாமங்கள்–5 திரு நாமங்கள்
3-6-ஹம்ஸாவதாரம் -187-194-திரு நாமங்கள்-7 திரு நாமங்கள்
3-7-பத்மநாபாவதாரம்-195-199-திரு நாமங்கள்-5 திரு நாமங்கள்
3-8-நரசிம்ஹ அவதாரம் ——200-210—திரு நாமங்கள்—11 திரு நாமங்கள்
3-9-மத்ஸ்ய அவதார -211-225- திரு நாமங்கள் –15-திரு நாமங்கள்
3-10- புருஷ ஸூக்த உபநிஷத் ப்ரதிபாதித விராட் ஸ்வரூப—226-247- திரு நாமங்கள் -22-திரு நாமங்கள்
3-11–சித் அசித் -இவைகளாலான -ஐஸ்வர்ய -பூர்த்தி -248-271-திரு நாமங்கள் -23-திரு நாமங்கள்
3-12-விஸ்வ ரூபம் —272-300-திரு நாமங்கள் -29-திரு நாமங்கள்
3-13-ஆலிலை மேல் துயின்ற –வட பத்ர சாயி -301-313-திரு நாமங்கள்–14-திரு நாமங்கள்
3-14-ஸ்ரீ பரசுராம -ஆவேச சக்தி -அவதாரம் -314-321-திரு நாமங்கள்–8-திரு நாமங்கள்
3-15-ஸ்ரீ கூர்மாவதாரம் -322-332-திரு நாமங்கள்–11-திரு நாமங்கள்

3-16- பர வாசுதேவன் குண வாசகம் -333-344-திரு நாமங்கள்-12 திரு நாமங்கள்
3-17-பர வாசுதேவன் ரூப குண வாசகம் -345-350 திரு நாமங்கள்-6 திரு நாமங்கள்
3-18-ஐஸ்வர்ய வாசக -351-360-திரு நாமங்கள்-11-திரு நாமங்கள்
3-19-ஸ்ரீ லஷ்மி சம்பந்தம் -361-379-திரு நாமங்கள்–19-திரு நாமங்கள்
3-20-சேதனர்கள் உடன் இணைந்து இருக்கும் ஒட்டின்மை -380-384-திரு நாமங்கள்-5 திரு நாமங்கள்
3-21-த்ருவ–385-389-திரு நாமங்கள்-5 திரு நாமங்கள்

3-22-ஸ்ரீ ராம அவதார -390-421-திரு நாமங்கள்–32-திரு நாமங்கள்-
3-23-கல்கி அவதார -422-436-திரு நாமங்கள்–15-திரு நாமங்கள்
3-24-ஜ்யோதிர் மண்டலத்துக்கு ஆதாரம் -437-445-திரு நாமங்கள் –8-திரு நாமங்கள்
3-25-யஞ்ஞ ஸ்வரூப -446-450-திரு நாமங்கள்–15-திரு நாமங்கள்
3-26 நிவ்ருத்தி தர்ம ப்ரவர்தக -451-457-திரு நாமங்கள்–6-திரு நாமங்கள்
3-27-அலை கடல் கடைந்து அமுதம் கொண்டவன் -458-470-திரு நாமங்கள்-12-திரு நாமங்கள்

3-28-தர்ம ஸ்வரூபி -471-502-திரு நாமங்கள்–31-திரு நாமங்கள்
3-29-ஸ்ரீ ராமனாய் தர்ம ரஷகத்வம் -503-513-திரு நாமங்கள்–14 திரு நாமங்கள்
3-30-பாகவத ரஷகன் திரு நாமங்கள் -514-519–6 திரு நாமங்கள்
3-31-ஸ்ரீ கூர்ம ரூபி -520/521 திரு நாமங்கள்–2 திரு நாமங்கள்
3-32-ஸ்ரீ அநந்த சாயி -522/523 திரு நாமங்கள்–2-திரு நாமங்கள்
3-33-பிரணவ ஸ்வரூபி -524-528-திரு நாமங்கள்–5-திரு நாமங்கள்
3-34–ஸ்ரீ கபில அவதாரமாய் ரஷணம் -529-538 திருநாமங்கள் –9-திரு நாமங்கள்
3-35-வராஹ அவதார -539-543-திரு நாமங்கள்–4-திரு நாமங்கள்
3-36- சுத்த ஸ்வரூபி -544-568-திரு நாமங்கள் –24-திரு நாமங்கள்
3-37-நாராயண அவதார விஷய 569-574 திரு நாமங்கள்–5-திரு நாமங்கள்
3-28-ஸ்ரீ வேத வியாச பகவான் -திரு அவதார -575-589-திரு நாமங்கள்-14-திரு நாமங்கள்
3-29-தர்மம் படி பலன் அளிப்பவன் –590-606-திரு நாமங்கள்–16-திரு நாமங்கள்

3-30-ஸ்ரீ சம்பந்த -பரத்வ-பரமான திவ்ய நாமங்கள் -607-625-
3-31-ஸ்ரீ சம்பந்தத்தால் வந்த குண யோகம் -626-629 –
3-32-அர்ச்சாவதாரம் பரமான திரு நாமங்கள் -630-660-
3-33-சக்தீசம் அவதார திரு நாமங்கள் 661-664-பல மந்த்ரங்கள் வெளி இட்ட அவதாரம்

3-34-எல்லை அற்ற குண விபூதிமான் -பரமான – திரு நாமங்கள் -மனத்தாலும் செயலாலும் ஆராதிக்கப் படுக்கை-665-683
3-35-வாத்சல்ய குண பெருக்கு-வாக்காலே ஆராதிக்கப் படுக்கை -684-696-திரு நாமங்கள்

———————————————————————————

3-34-எல்லை அற்ற குண விபூதிமான் -பரமான – திரு நாமங்கள் -மனத்தாலும் செயலாலும் ஆராதிக்கப் படுக்கை-665-683


காம தேவ காம பால காமி காந்த க்ருதாகம
அநிர்தேச்யவபுர் விஷ்ணுர் வீரோ அனந்தோ தனஞ்சய –70-

665-அநந்த –
எல்லை அற்றவன் -தேச கால வஸ்து பரிச்சேதம் இல்லாமல்
சத்யம் ஞானம் அநந்தம் ப்ரஹ்ம-
இன்பம் அளவிறந்து எங்கும் அழகு அமர் சூழ் ஒளியன்-3-10-8-
அந்தமில் புகல் அநந்த புர நகராதி -10-2-7-
கணக்கறு நலத்தனன் அந்தமில் ஆதி அம் பகவன் -1-3-5-
முன்பே -402-பார்த்தோம்-

தேசம் காலம் வஸ்து இவற்றால் அளவுபடாதவர் -எப்பொழுதும் எங்கும் எல்லா வழிகளிலும் செயல்படுபவர் –
வஸ்து பரிச்சேதம் இல்லாதவர் என்று வஸ்துவிற்கும் அவருக்கும் பேதம் இல்லை என்ற பொருளில் இல்லை -ஸ்ரீ பராசர பட்டர் –

அனந்த மூர்த்தயே
நாஸ்த்யந்தோ விஸ்தரஸ்ய மே –ஸ்ரீ கீதை -10-19-
அதைதஸ்யைவ அந்தோ நாஸ்தி யத் ப்ரஹ்ம –தைத்ரியம்
சத்யம் ஞானம் அநந்தம் ப்ரஹ்மம் –தைத்ரியம்

தேசம் காலம் வஸ்து இவற்றால் அளவுபடாதவர் –குணங்களுக்கு எல்லை இல்லாதவர் –
ஆதலால் அனந்தர் அழிவில்லாதவர் -ஸ்ரீ விஷ்ணு பிராணம் -ஸ்ரீ சங்கரர் –

அழிவற்றவர் -ஸ்ரீ சத்ய சந்தர் –

—————–

666-தனஞ்ஜய –
உலக ஐஸ்வர்யங்களுக்கு மேலானவன் -யாவும் புல் எனத் தோற்றும்
எனக்கு தேனே பாலே கன்னலே அமுதே -சர்வ ரச- சர்வ கந்த
கோலமே தாமரைக் கண்ணது ஓர் அஞ்சன நீலமே நின்று யெனதாவியை ஈர்க்கின்ற சீலமே
உன்னை மெய் கொள்ளக் காண விரும்பும் எண் கண்களே -3-8-4-

பொன் ரத்தினம் இவற்றையும் வெறுத்து பெறுவதற்கும் அனுபவிப்பதற்கும் மிக விரும்பத் தக்கவராக இருப்பவர் –
எல்லையற்ற குணம் செல்வம் யுடையவன் -ஸ்ரீ பராசர பட்டர் –

திக் விஜயம் செய்து பெரும் செல்வத்தை வென்ற அர்ஜூனனாக இருப்பவர் -ஸ்ரீ சங்கரர் –

செல்வத்தை வென்றவர் -ஸ்ரீ சத்ய சந்தர் –

————–

ப்ரஹ்மண்யோ ப்ரஹ்மக்ருத் ப்ரஹ்மா ப்ரஹ்ம ப்ரஹ்ம விவர்த்தன
ப்ரஹ்ம வித் ப்ரஹ்மணோ ப்ரஹ்மீ ப்ரஹ்மஜ்ஞோ ப்ராஹ்மண ப்ரிய–71

———

667-ப்ரஹ்மண்ய-
பெரியவைகளுக்கு காரணன் -அனுகூலன் -செல்வர் பெரியர்

ப்ரஹ்மம் எனப்படும் சேதனங்களுக்கு இருப்பு சுகம் முதலிய எல்லாவற்றுக்கும் காரணமாக இருப்பவர் –
ப்ரஹ்மம் -பெரியன -எல்லாவற்றையும் அனுபவிக்கும் போக்தாவாகையால் சேதனங்களும் -அனுபவிக்கும் அசேதனங்களும் –
ப்ரஹ்மம் -எனப்பட்டன -ஸ்ரீ பராசர பட்டர் –

தத் ஞானம் ப்ரஹ்ம சம்ஹிதம்
நிரதோஷம் ஹி சமம் ப்ரஹ்ம –ஸ்ரீ கீதை 5-19-
மம யோநிர் மஹத் ப்ரஹ்ம –ஸ்ரீ கீதை -14-3-

தவம் வேதம் சத்யம் ஞானம் ஆகிய இவற்றை அறிபவர் -ஸ்ரீ சங்கரர் –

பிரஹ்மணர்களுக்குப் பிரியமானவர் -முக்தர்களின் மகிழ்ச்சியைப் பெருக்குபவர் -ஸ்ரீ சத்ய சந்தர் –

—————–

668-ப்ரஹ்மக்ருத் ப்ரஹ்மா –
பிரமனைப் படைக்கும் பெரியோன்
தேவும் எப்பொருளும் படைக்க பூவில் நான் முகனைப் படைத்த தேவன் எம்பெருமான்-2-2-1-

பிரம்மாவும் எல்லா விதங்களாலும் தம்மால் நியமிக்கும்படி நடக்கும்படி செய்பவர் —
பிரக்ருதியினால் யுண்டாகும் மஹத் அஹங்காரம் உலகைப் படைப்பவர்- ஸ்ரீ பராசர பட்டர் –

தஸ்மாத் ஏதத் ப்ரஹ்ம நாம ரூபம் அன்னம் நியாம்ய–முண்டக -1-1-

ப்ரஹ்மக்ருத் -தவம் முதலியவற்றை ஏற்படுத்துபவர் -பிரம்மா -பிரமனாக உலகைப் படைப்பவர் –
இரண்டு திரு நாமங்கள் -ஸ்ரீ சங்கரர் –

ஆலோசனையுடன் கூடிய தவம் புரிபவர் -பக்தர்களைப் பெருக்குபவர் -இரண்டு திருநாமங்கள் —
அப்ரஹ்மக்ருத்-என்று பிரித்து -ஷத்ரியர்களை அழித்த பரசுராமர் –
நிரீச்வரவாதிகளை அழித்தவர் -என்றுமாம் -ஸ்ரீ சத்ய சந்தர்

—————–

669-ப்ரஹ்ம
பரமாத்மா –
தானே எங்கும் உளன் -தன் குணங்களால் எங்கும் உளன் –
தன் சங்கல்பத்தால் மற்ற பொருள்களை பெருமை உடையவனாக பண்ணும்
ஸ்வரூப ரூப குண விபூதி சேஷ்டிதங்களால் பெரியவன்
எங்கும் உளன் கண்ணன் -ஆற்றல் மிக்கான் பெரிய பரம் சோதி புக்க அரி -7-6-10-

சேதனர்கள் எல்லாரையும் ஒப்புயர்வற்ற தமது திருக் கல்யாண குணங்களினால் மேன்மேலும் அபிவருத்தி செய்து தமது
ஸ்வரூபமும் குணங்களும் விபவங்களும் மேலும் அபிவ்ருத்தியாகி நிரம்பியிருப்பதும்
ஸ்வ தந்த்ரமானதும் வேதாந்தங்களில் அறியப் படுவதுமாகிய பரப்ரஹ்மம் -ஸ்ரீ பராசார பட்டர் –

பெரிதாக இருப்பதாலும் பெருக்கச் செய்வதாலும் ப்ரஹ்மம் எனப்படுபவர் -ஸ்ரீ சங்கரர் –

அனைத்தும் பூரணமாக நிறைந்தவர் -நிறைப்பவர் -ஸ்ரீ சத்ய சந்தர்-

—————–

670-ப்ரஹ்ம விவர்த்தன –
தர்மத்தை வளரச் செய்பவன்
சிந்தனையை தவ நெறியை திருமாலை அந்தணனை -பெரிய திருமொழி -5-6-7-

தவம் முதலிய தர்மங்களை வளர்ப்பவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

தவம் முதலியவற்றை விருத்தி செய்பவர் -ஸ்ரீ சங்கரர் –

வியாச ரூபத்தினால் வேதத்தைப் பெருக்கியவர் -ஸ்ரீ சத்ய சந்தர் –

——————–

671- ப்ரஹ்ம வித்
வேதங்களை உள்ளபடி அறிந்தவன் -அனந்தாவை வேதா
பண்டைய வேதங்கள் நான்கும் கண்டான் -பெரிய திருமொழி -2-5-9-
பண்டை நான் மறையும் வேள்வியும் கேள்விப் பதங்களும் பதங்களின் பொருளும்
தானே நின்ற எம்பெருமான் -பெரிய திரு மொழி -5-7-1-

முடிவில்லாத வேதங்களின் முடிவை அறிந்தவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

ப்ரஹ்ம அதயேஷமான
அநந்தா வா வேதா
அநாதி நிதானம் ப்ரஹ்ம ந தேவா நர்ஷியோ ஏகஸ் தத்வேந பகவான் ததா நாராயணா ஸ்வயம்

வேதத்தையும் அதன் பொருளையும் உள்ளபடி அறிந்தவர் -ஸ்ரீ சங்கரர் –

வேதங்களை அறிந்தவர் -தம் ஸ்வரூபத்தை அறிந்தவர் -ஸ்ரீ கீதையில் ப்ரஹ்ம சப்தம் ஸ்ரீ லஷ்மியை குறிப்பதால்
ஸ்ரீ லஷ்மியை அடைந்தவர் என்றுமாம் -ஸ்ரீ சத்ய சந்தர் –

————–

672-ப்ராஹ்மண-
வேதத்தை கற்ப்பிப்பவன்
கலைகளும் வேதமும் நீதி நூலும் கற்பமும் சொற் பொருள் தானும்
வானவர்க்கும் பிறர்க்கும் நீர்மையினால் அருள் செய்தான் -பெரிய திருமொழி -2-8-5-

வேதார்த்தத்தை நிலை நாட்டுவதற்காக பிராம்மண குலத்தில் தத்தாத்ரேயராக திருவவதரித்தவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

பிராம்மண ரூபியாக உலகு அனைத்திற்கும் வேதத்தை இறை வசனம் செய்வித்தவர் -ஸ்ரீ சங்கரர் –

வேதங்களால் அறியப் பெறுபவர் -ஸ்ரீ சத்ய சந்தர் –

——————-

673-ப்ரஹ்மீ-
பிரமாண பிரமேயங்களை உடையவன் -சர்வம் ப்ரஹ்ம மயே ஹரி –
பொழில் வேங்கட வேதியன் -பெரிய திருமொழி -1-10-10-

ப்ரஹ்மம் எனப்படும் பிரமாண பிரமேயங்கள் அனைத்தையும் யுடையவர் –ஸ்ரீ பராசர பட்டர் –

சர்வ ப்ரஹ்ம் மயோ ஹரீ

ப்ரஹ்மம் என்று கூறப்பட்டவைகளை தமக்கு உட் பட்டவையாக யுடையவர் – -ஸ்ரீ சங்கரர் –

ஜீவர்களை யுடையவர் –ஸ்ரீ சத்ய சந்தர் –

—————-

674-ப்ரஹ்மஜ்ஞ்-
வேதங்களை அறிந்தவன்
சந்தோகா பௌழியா சாமவேதி
உளன் சுடர் மிகு சுருதியுள்
இவர் வாயில் நல வேதம் ஓதும் வேதியர் வானவர் ஆவர் -பெரிய திருமொழி -9-2-1-

வேதங்களை அவற்றின் உட்பொருளுடன் அறிபவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

வேத விதேவ சாஹம் –ஸ்ரீ கீதை -15-15-

வேதங்களைத் தம் ஸ்வரூபமாக அறிந்தவர் -ஸ்ரீ சங்கரர் –

அறிவாளியான பிரம்மாவாக இருப்பவர் -ஸ்ரீ சத்ய சந்தர் –

—————

675-ப்ராஹ்மண ப்ரிய
வேதம் வல்லார்களான பிராமணர்களை நேசிப்பவன்
அந்தணர் தம் சிந்தையான் -திரு நெடு -14-

வேத அதிகாரிகளான ப்ராஹ்மணர்களைத் தமக்கு அன்பர்களாக யுடையவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

க்நந்தம் சபந்தம் புருஷம் வேதாந்தம் யோ ப்ராஹ்மணம் ந பிரணமேத் யதாகம்
யே து தர்ம்யாம் ருதமிதம் யதோக்தம் பர்ய பாஸதே ஸ்ரத்தா நாநா மத பரமா பக்தாஸ் தே தீவ மே ப்ரியா –ஸ்ரீ கீதை -12-20-
யத் ப்ராஹ்மணஸ்ய முகத
விப்ர ப்ரஸாதாத் அஸூராந் ஜயாமி –ஸ்ரீ விஷ்ணு தர்மம்
கிம் புந ப்ராஹ்மணா புண்ய –ஸ்ரீ கீதை -9-33-
மஹதோ மஹீயான்
பராத் பரம் யந் மஹதோ மஹாந்தம்
மஹாந்தம் விபு மாத்மாநம்
மஹத பரமோ மஹான்

பிராஹ்மணர்களுக்குப் பிரியமானவர் -ப்ராஹ்மணர்களிடம் பிரியம் யுள்ளவர் -ஸ்ரீ சங்கரர் –

பிரஹ்மத்தை அறிந்த ஞானிகளுக்குப் பிரியமானவர் -முக்தர்களுக்கு பிரியமானவர் -ஸ்ரீ சத்ய சந்தர் –

——————

இது வரை ப்ரஹ்ம சப்த வாக்ய பெருமை பேசப் பட்டது
மேல் மஹதோ மஹீயான் -பராத்பரம் யன் மஹதோ மஹாந்தம் –
மஹத பரமோ மஹான் -சுருதி வாக்யங்களில்-சொல்லும் பெருமை பேசப்படும்

————

மஹாக்ரமோ மஹாகர்மா மஹா தேஜா மஹோரக
மஹாக்ரதுர் மஹாயஜ்வா மஹாயஜ்ஞோ மஹாஹவி–72

————–

676-மஹாக்ரம –
சேதனரை படிப்படியாக உஜ்ஜீவிப்பவன் –
ஆற்ற நல் வகை காட்டும் அம்மான் -4-5-5-
நெறி வாசல் தானேயாய் நின்றான் -கிருஷி பலமாக அருளுகிறான்

பரமதுங்கம் ஆத்மாநம் பரம நிம்ந பவ பாதாளாத் ஜீவன் ஆரோஹயத-மஹதீ ஆரோஹண சோபாந
பர்வ ஆநு பூர்வீ அஸ்ய இதி மஹா க்ரம
யதா ஜன நீ ஸ்தநந்த்யம் ஆதவ் ஸ்தன்யம் தாபயதி அத துக்தம் அத ஆஹாரம் அத போகான்
கமயதி ஏவமயம்
ஸூக்ருதிநம்
அத்வேஷ ஆஸ்திக்ய ஆபிமுக்ய அனுவர்த்தன ஞான பக்தி விஸ்ரம்ப க்ரமேணைவ ப்ராப்யதி
அப்யுத்தா நார்த்தம் சந்த அனுவர்த்த நார்த்தம் ச -என்ற ஸ்ரீ பராசர பட்டர் பாஷ்யம் –

மிக்க ஆழமான உலக வாழ்க்கை என்னும் பாதாளத்தில் அமிழ்ந்து கிடக்கும் சேதனர் மிக உயர்ந்தவரான தம்மிடத்தில்
சேர்வதற்குப் பற்பல படிகளை யுடையவர் –
தாய் முலையூட்டி பால் புகட்டி உணவு கொடுப்பது போலே விலக்காமை-முதலில் யுண்டாக்கி
தம்மை நோக்கி பின்பற்றி ஞானம் பக்தி வைராக்கியம் மன யுறுதி கொண்டு உயர்த்துபவர் – ஸ்ரீ பராசர பட்டர் –

பந்தாயைவம் பவத்யேஷா அவித்யா ஹ்யக்ரமோஜ்ஜிதா
ஜன்மாந்தர ஸஹஸ்ரேஷு தபோ த்யான சமாதிபி நரணாம் ஷீன பாபா நாம் கிருஷ்னே பக்தி பிரஜாயதே
பஹுனாம் ஜென்ம நாமந்தி ஞானவான் மாம் பிரபத்யே –ஸ்ரீ கீதை 7-19-
அப்யாஸ யோகேந ததோ மாம் இச்சாப்தும் தனஞ்சய –ஸ்ரீ கீதை -8-8-

மிகப் பெரிய காலடிகளை யுடையவர்-ஸ்ரீ சங்கரர் –

அக்னிமீளே -போன்ற வேத க்ரமத்தைத் தம் புத்தியில் யுடையவர் -ஸ்ரீ சத்ய சந்தர் –

—————

677-மஹா கர்மா –
சிறந்த செயல்களை உடையவன் -மாயன்
சராசரம் முற்றவும் நற்பாலுக்கு உய்த்தனன் -7-5-1-
மேலும் -793 வரும்

————–

678-மஹா தேஜ –
மேலான தேஜஸ் உடையவன் -நாராயண பரஞ்சோதி
வீழ்விலாத போக மிக்க சோதி -சோதியாத சோதி நீ -திருச்சந்த -18/34-

—————-

679-மஹோரக –
உட் புகும் பெரியோன்
எண்ணம் புகுந்து தித்திக்கும் அமுதே இமையோர் அதிபதியே -6-10-3-
வந்தாய் என் மனம் புகுந்தாய் மன்னி நின்றாய் நந்தாத கொழும் சுடரே எங்கள் நம்பி -பெரிய திருமொழி -1-10-9-
முத்தனார் முகுந்தனார் புகுந்து தம்முள் மேவினார் எத்தினால் இடர்க்கடல் கிடத்தி ஏழை நெஞ்சமே -திருச்சந்த -15-
வந்து அருளி என் நெஞ்சு இடம் கொண்ட வானவர் கொழுந்தே -5-7-7-

தாம் மிகப் பெரியவராக இருந்தும் மிக்க அற்பர்களுக்கு அந்தர்யாமியாக இதயத்தினுள் பிரவேசித்து இருப்பவர் –ஸ்ரீ பராசர பட்டர் –

மகா சர்ப்பமாக இருப்பவர் -ஸ்ரீ சங்கரர் –

ஆதிசேஷன் காளியன் முதலிய பாம்புகளை தமக்கு அடியவர்களாக யுடையவர் -ஸ்ரீ சத்ய சந்தர் –

—————–

680-மஹாக்ரது
ஆராதனைக்கு எளியவன்
பத்துடை அடியவர்க்கு எளியவன்
எளிவரும் இயல்வினன் -1-3-1-
ஈசனைப் பாடி நன்னீர் தூய புரிவதும் புகை பூவே -1-6-1-

சிறந்த எளிய ஆராதனங்களை யுடையவர் -எல்லா செயல்களும் அவனுக்கே அர்ப்பணம் என்பதால்
அனைத்தும் இனிய சுவை யுள்ளன என்பதால் ஆராதனைக்கு எளியவன் -ஸ்ரீ பராசர பட்டர் –

யத் கரோஷி –ஸ்ரீ கீதை 9-27-
யோ ந வித்தைர் ந விபவை ந வாசோபிர் ந பூஷணை தோஷ்யதே ஹ்ருதயேநைவ
கஸ்தமீசம் ந தோஷயத் –ஸ்ரீ விஷ்ணு தர்மம் -90-69-

சிறந்த க்ரதுவாக -அஸ்வமேத யாகமாக இருப்பவர் -ஸ்ரீ சங்கரர் –

சிறந்த ஞான ரூபமான க்ரதுவாக இருப்பவர் -ஸ்ரீ சத்ய சந்தர் —

—————

681-மஹா யஜ்வா
ஆராதிப்பவர்களை சிறப்பூட்டுபவன்
வந்தனை செய்து ஐந்து வளர் வேள்வி நான் மறைகள் மூன்று தீயும் சிந்தனை
செய்திரு பொழுதும் ஒன்றும் -பெரிய திருமொழி -2-10-2-

பிற தேவதைகளைப் பூஜிப்பவர்களைக் காட்டிலும் தம்மைப் பூஜிப்பவர்கள் சிறந்தவர்களாக இருப்பவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

தேஷாம் ஏகாந்திந ஸ்ரேஷ்டா தே சைவ அநந்ய தேவதா

யாகமுறையை உலகிற்கு அறிவிப்பதற்காக சிறந்த யாகம் செய்பவராக இருப்பவர் -ஸ்ரீ சங்கரர் –

பிரம்மா முதலியவர்களால்

—————–

682-மஹா யஜ்ஞ-
உயர்ந்த பூஜைக்கு உரியவன்
செய்த வேள்வியர் வையத் தேவரான சிரீவர மங்கல நகர் கை தொழ விருந்தான் -5-7-5-

தம்மை ஆராதிப்பது அஷ்டாங்க பூஜை முதலியவற்றைக் காட்டிலும் மேம்பட்டதாக இருப்பவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

ஸர்வேஷாம் கில தர்மானாம் உத்தமோ வைஷ்ணவோ விதி ரக்ஷதே பகவான் விஷ்ணு பக்தன் ஆத்ம சரீரவத்
யா கிரியா ஸம்ப்ரயுக்தா ஸ்யு ஏகாந்த கதயுத்திபிஸ் தா சர்வா சிரஸா தேவா பிரதி க்ருஹணாதி வை ஸ்வயம்
அஹோ ஹ்யே காந்திந சர்வான் ப்ரீணாதி பகவான் ஹரி விதி ப்ரயுக்தம் பூஜாம் ச க்ருஹணாதி சிரஸா ஸ்வயம்

சிறந்த ஜப யஜ்ஞ்மாக இருப்பவர் -ஸ்ரீ சங்கரர் –

அஸ்வ மேதம் முதலிய சிறந்த யஜ்ஞங்கள் தம்மைக் குறித்துச் செய்யப்படுபவர் —
மஹா -அயஜ்ஞ-சுபத்தை உண்டு பண்ணும் விதியைத் தெரிந்த மஹான்-என்றும்
அமஹா-அயஜ்ஞ – என்ற பாடத்தில் நோய்களை அழிக்கக் கூடியவர் மற்றும்
சுபத்தை உண்டு பண்ணும் விதியைத் தெரிந்தவர் – ஸ்ரீ சத்ய சந்தர் –

————–

683-மஹா ஹவி
சிறந்த ஹவிசை பெறுபவன் -ஆத்ம சமர்ப்பணம்
எனதாவி தந்து ஒழிந்தேன் -எனதாவி ஆர் யானார் தந்த நீ கொண்டாக்கினையே -2-3-4-
அஹம் அதைவ மயா சமர்ப்பித -ஆளவந்தார்

ஹிம்சை யற்ற சாத்விக உபநிஷத்துக்களை ஹவிஸ்ஸாக யுடையவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

ந தத்ர பசு காதோ அபூத் ஆரண்ய கபதோ கீதா பாகாஸ் தத்ர அநுர் வணிதா
ப்ரஹ்ம அர்ப்பணம் ப்ரஹ்ம ஹவிஸ்
ஞான யஜ்ஜேந
யோ அஹமஸ்மி ச சந் யஜே யஸ்யாஸ்மி ந தமந்தரேமி
இதம் அஹம் மாம் அம்ருதயோநவ் ஸூர்யே ஜ்யோதிஷி ஜூஹோமி
அஹமேவாஹம் மாம் ஜூஹோமி
ஆத்மா ராஜ்யம் தனம் சைவ களத்ரம் வாஹாநாநி ச ஏதத் பகவதே சர்வம் இதி தத் ப்ரேஷிதம் சதா
ஸ்ரேயான் த்ரவ்யமயாத் யஞ்ஞாத் ஞான யஜ்ஜ பரந்தப

தம்மிடம் ஹோமம் செய்யப்பட உலகம் என்னும் பெரிய ஹவிஸ்ஸாக இருப்பவர் —
மஹா க்ரதுக்கள் -680-மஹா யஜ்வாக்கள் -681-மஹா யஜ்ஞங்கள் -682-மஹா ஹவிச்சூக்கள் -683- ஆகியவற்றால்
ஆராதிக்கப் படுபவர் என்று பஹூவ்ரீஹி சமாசத்திலும் அன்மொழித் தொகையிலும் பொருள் கொள்ளலாம் -ஸ்ரீ சங்கரர் –

உத்சவங்களில் கருடனை வாகனமாக கொண்டு இருப்பவர் -சிறந்த ஹவிஸ்ஸாக இருப்பவர் -ஸ்ரீ சத்ய சந்தர் –

——————————————

3-35-வாத்சல்ய குண பெருக்கு-வாக்காலே ஆராதிக்கப் படுகை -684-696-திரு நாமங்கள்

——–

ஸ்தவ்யஸ் ஸ்தவ ப்ரியஸ் ஸ்தோத்ரம் ஸ்துதஸ் ஸ்தோதா ரணப்ரிய
பூர்ண பூரயிதா புண்ய புண்யகீர்த்தி ரநாமய –73-

————

684-ஸ்தவ்ய –
துதிக்கத் தக்கவன் -குற்றம் அற்றவன் -குண பூரணன்
நித்யம் நிரவதிகம் நிரவத்யம்
சிந்தையினால் சொல்லினால் செய்கையால் நிலத் தேவர் குழு வணங்கும் தீர்த்தன் -7-10-10-

வாக்கினால் துதி -துதிக்கப் படுவதிற்கு உரியவராக இருப்பவர் -பகவான் ஒருவரே- மங்களம் -நித்யம் –
எல்லையற்ற -தோஷங்கள் அற்ற -கல்யாண குணங்களை யுடையவர்
ஆகையால் அவர் ஒருவரே ஆயிரம் திரு நாமங்களால் துதிக்கப் பட உரியவர் –
பிற தெய்வங்கள் எதிர் தட்டு -ஆகையால் துதிக்க உரியர் அல்லர் – ஸ்ரீ பராசர பட்டர் –

ஆதரேண யதா ஸ்தவ்தி தனவந்தம் தநேசசயா ஏவம் சேத் விஸ்வ கர்த்தாரம் கோ ந முச்யதே பந்தநாத்
இதீதம் கீர்த்த நீயஸ்ய

எல்லோராலும் துதிக்கப் பட்டு யாரையும் தாம் துதிக்காதவர் -ஸ்ரீ சங்கரர் –

துதிக்கப் படுவதற்கு உரியவர் -ஸ்ரீ சத்ய சந்தர்-

—————

685-ஸ்தவ ப்ரிய –
ஸ்துதியை பிரியத்துடன் ஏற்பவன் -சிசுபாலன் -கண்டா கர்ணன்
எங்கனே சொல்லிலும் இன்பம் பயக்குமே -7-9-11-
கன்றிழந்த தலை நாகு தோற் கன்றுக்கும் இரங்குமா போலே –
கையார் சக்கரத்து என் கரு மாணிக்கமே என்று என்றே பொய்யே கைம்மை சொல்லி மெய்யே பெற்று ஒழிந்தேன் -5-1-1-

எவராலும் எந்த மொழியாலும் எவ்வகையாலும் செய்யப்படும் துதிகளை சொற் பிழை பொருட் பிழை இருந்தாலும்
அன்புடன் அங்கீ கரிப்பவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

அதனாலேயே துதியில் விருப்பமுள்ளவர் -ஸ்ரீ சங்கரர் –

ஸ்துதியில் விருப்பம் உள்ளவர் -ஸ்ரீ சத்ய சந்தர் –

—————-

686-ஸ்தோத்ரம் –
ஸ்துதி யாய் இருப்பவன் -ஸ்தோத்ரமும் அவன் அருளால்
பண்ணார் பாடலின் கவிகள் யானாய்த் தன்னைத் தான் பாடினான் -10-7-5-
என் நா முதல் வந்து புகுந்து நல் கவி சொன்ன என் வாய் முதல் அப்பன் -7-3-4-

தம்மைத் துதிப்பதும் தம் அனுக்ரஹத்தாலேயே ஆகையினால் தாமே ஸ்தோத்ரமாக இருப்பவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

குண சங்கீர்த்தனமான ஸ்தோத்ரமும் தானேயாக இருப்பவர் -ஸ்ரீ சங்கரர் –

துதிக்கப் படுபவர் -ஸ்ரீ சத்ய சந்தர் –

——————–

687-ஸ்துத
துதிக்கப் படுபவன்
சோதியாகி எல்லா உலகும் தொழும் ஆதி மூர்த்தி -3-3-5-

அநந்தன்-கருடன் முதலிய நித்ய சூரிகளாலும் பிரமன் முதலிய தேவர்களாலும் நம் போன்ற மனிதர்களாலும்
அவரவர் தங்கள் விருப்பம் நிறைவேற எப்போதும் துதிக்கப் பெறுபவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

அசேஷ தேவ ச நரேஸ்வரேஸ்வரை சதா ஸ்துதம் யச் சரிதம் மஹ அத்புதம் –ஸ்ரீ விஷ்ணு தர்மம் -43-27-
தாதா புரஸ்தாத் யமுதா ஜஹார சக்ர பிரவித்வான் பிரதிசச்ச தஸ்த்ர–புருஷ ஸூக்தம்

ஸ்துதி -துதிக்கும் செய்கையும் தாமேயாக இருப்பவர் –
ஸ்துத -என்ற பாடத்தில் துதிக்குத் தாமே விஷயமாக இருப்பவர் -ஸ்ரீ சங்கரர் –

ஜீவன் செய்யும் ஸ்தோத்ரத்திற்கு கட்டளை இடுபவர் -ஸ்துதி -என்று பாடம் -ஸ்ரீ சத்ய சந்தர் –

—————

688-ஸ்தோதா
தன்னை துதிப்பாரை புகழ்பவன்
நாத்தழும்ப நான் முகனும் ஈசனும் முறையால் ஏத்த
நமோ கண்டாய கரணாய நாம கட படா யச -ஸ்தோத்ரம் பண்ணி அறியாத வாயானவாறே மீன் துடிக்கிற படி பாராய் -ஈடு

தம்மைத் துதிப்பவரை தாம் துதிக்கும் தன்மை உள்ளவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

யம் ஸ்துவந் ஸ்தவ்யதாமேதி வந்தமா நச்ச வந்த்யதாம்–ஸ்ரீ விஷ்ணு தர்மம் 75-55-

எல்லோருக்கும் ஆத்மா ஆகையால் துதிப்பவரும் தாமேயாக இருப்பவர் -ஸ்ரீ சங்கரர் –

ஸ்தோத்ரத்தை செய்விப்பவர் -ஸ்ரீ சத்ய சந்தர் –

—————–

689-ரணப்ரிய
ஆஸ்ரித விரோதிகளை யுத்தம் செய்து முடித்து மகிழ்விப்பவன்
கொள்ளா மாக்கோல் கொலை செய்து -பார்த்தன் தன் தேர் முன் நின்றான்

ஸ்ரீ மத் ராமாயணம் மஹா பாரதம் முதலியவற்றால் கூறியபடி தம் அன்பர்களுக்காக
யுத்தம் முதலியன செய்பவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

ததஸ் ச காமம் ஸூக் ரீவம் அங்கதம் ச மஹா பலம் சகார ராகவ ப்ரீதோ ஹத்வா ராவணமாஹவே –யுத்த –111-31-

உலகைக் காப்பதற்காக பஞ்ச ஆயுதங்களை தரிப்பதால் யுத்தத்தில் விருப்பம் யுள்ளவர் -ஸ்ரீ சங்கரர் –

யுத்தத்தில் விருப்பம் யுள்ளவர் -வேதாத்மகமான சப்தங்களில் பிரியம் உள்ளவர் -ஸ்ரீ சத்ய சந்தர் –

—————

690-பூர்ண
நிறைந்தவன் -அவாப்த சமஸ்த காமன்
கண்டவாற்றால் தனதே உலகு என நின்றான் -4-5-10-
என்றும் ஒன்றாகி ஒத்தாரும் மிக்காரும் தனக்கன்றி நின்றான்
எல்லா உலகும் உடையான் -4-5-7-

அதிகப் பொருளினாலும் உடல் சிரமத்தினாலும் செய்யப்படும் ஆராதனங்கள் தேவைப்படாமல்
ஸ்தோத்ரத்தினாலேயே வசப்ப்படும்படி எல்லாம் நிரம்பி இருப்பவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

எல்லாப் பலன்களும் எல்லா சக்திகளும் நிறைந்தவர் -ஸ்ரீ சங்கரர் –

குணங்களால் நிறைந்தவர் -ஸ்ரீ சத்ய சந்தர் –

—————–

691-பூரயிதா
நிறைந்தவன்
எனக்கே தன்னைத் தந்த கற்பகம்

தாம் பூர்ணராயின் துதிகளை எதிர்பார்ப்பது ஏன் என்னில் தம்மைத் துதிக்க வேண்டும் என்று விரும்பும் அடியவர்களின்
விருப்பத்தை நிறைவேற்றுபவர் -ஸ்ரீ பராசர பட்டர் —

எல்லாம் நிறைந்தவராக இருப்பதோடு அல்லாமல் பக்தர்களுக்காக எல்லா செல்வங்களையும் நிறைப்பவர் -ஸ்ரீ சங்கரர் –

அவரவர் தகுதிக்குத் தகுந்தவாறு பூர்த்தி செய்பவர் -ஸ்ரீ சத்ய சந்தர் –

————–

692-புண்ய
புண்ணியன் புனிதம் ஆக்குபவன்
உன் தன்னைப் பிறவி பெரும் தனிப் புண்ணியம் யாம் உடையோம்
யாவர்க்கும் புண்ணியம் -6-3-3-
அநந்தன் மேல் கிடந்த புண்ணியா -திருச்சந்த -45-
மேலும் 925 வரும்

தாம் பூர்ணராயின் துதிகளை எதிர்பார்ப்பது ஏன் என்னில் தம்மைத் துதிக்க வேண்டும் என்று விரும்பும் அடியவர்களின்
விருப்பத்தை நிறைவேற்றுபவர் -ஸ்ரீ பராசர பட்டர் —

எல்லாம் நிறைந்தவராக இருப்பதோடு அல்லாமல் பக்தர்களுக்காக எல்லா செல்வங்களையும் நிறைப்பவர் -ஸ்ரீ சங்கரர் –

அவரவர் தகுதிக்குத் தகுந்தவாறு பூர்த்தி செய்பவர் -ஸ்ரீ சத்ய சந்தர் –

————–

693-புண்ய கீர்த்தி
புண்யமான கீர்த்தனை உடையவன்
மாயனை தாமோதரனை வாயினால் பாட போய பிழையும் புகு தருவான் நின்றனவும் தீயினில் தூசாகும்

தமது திரு நாம சங்கீர்த்தனம் செய்பவருடைய பாவங்களைப் போக்குபவர் –
இதனாலே அவரைப் பற்றிய ஸூக்தங்கள் பாவனமானவை என்று வேதம் புகழும் -ஸ்ரீ பராசர பட்டர் –

நாம சங்கீர்த்தனம் பும்ஸாம் விலாயந முத்தமம் மைத்ரேய அசேஷ பாபா நாம் தாதூனாம் இவ பாவக –ஸ்ரீ விஷ்ணு புராணம் -6-8-20-
அவசேநாபி யந் நாம்நி கீர்த்திதே சர்வாபதகை புமாந் விமுச்யதே சத்யஸ் ஸிம்ஹத் ரஸ்தை ம்ருகைர் இவ ஸ்ரீ விஷ்ணு புராணம் -6-8-19-
கலவ் சங்கீர்த்தய கேசவம்-ஸ்ரீ விஷ்ணு புராணம் -6-2-17-

மனிதர்களுக்குப் புண்ணியம் தரும் புகழ் உள்ளவர் -ஸ்ரீ சங்கரர் –

புண்ணியத்தை உண்டாக்கும் புகழ் உடையவர் -ஸ்ரீ சத்ய சந்தர் –

————

694-அநாமய
பெரும் பிணியைப் போக்குமவன்
ஆமயம் =வியாதி ரோகம்
நண்ணியும் நண்ண கில்லேன் நடுவே யோர் உடம்பிலிட்டு-வினை தீர் மருந்து -7-1-4-

தன்னோடு தொடர்பு உடையவர்களுக்கு சம்சாரம் ஆகிய பெரும் பிணியைப் போக்குபவர் –
பகவத் அனுபவத் தடை என்பதால் உலக வாழ்க்கை வியாதி அன்றோ -ஸ்ரீ பராசர பட்டர் –

வ்யாதிபி பரிபூர்ணோ அஸ்மி –சாந்தோக்யம் -4-10-3-சம்சாரத்தை நன்றாக அறிந்தவர்கள்
நான் பூரணமான வியாதி கொண்டவன் என்பர்

கர்மங்களினால் உண்டாகும் மன நோய்களினாலும் வெளி நோய்களாலும் பீடிக்கப் படாதவர் -ஸ்ரீ சங்கரர் –

நோயற்றவர் -முக்கியப் பிராணனால் அடைய முடிந்தததை கிடைக்கச் செய்பவர் -ஸ்ரீ சத்ய சந்தர் –

————–

மநோஜவஸ் தீர்த்தகரோ வஸூ ரேதா வஸூப்ரத
வ ஸூப்ரதோ வா ஸூதேவோ வஸூர் வஸூமநா ஹவி -74-

—————-

695-மநோ ஜவ
மநோ வேகத்தில் செயல் -பகவத் ஸ்த்வராயை நம
கடிவார் தீய வினைகள் நொடியாரும் அளவைக் கண் –மாதவனாரே-1-6-10-

மேற் சொல்லியவற்றை விரைவாகச் செய்பவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

க்ஷிப்ரம் பவதி தர்மாத்மா –ஸ்ரீ கீதை -9-31-
சப்த ஜென்ம க்ருதம் பாபம் ஸ்வல்பம் வா யதி பஹு விஷ்ணோர் ஆலய விந்யாச பிராரம்பாதேவ –ஸ்ரீ விஷ்ணு தர்மம் -83-20-

எங்கும் பரவியிருப்பதால் மனத்தின் வேகத்தை ஒத்த வேகமுடையவர் -ஸ்ரீ சங்கரர்-

மனத்திற்கு வேகத்தை அளிப்பவர் -ஸ்ரீ சத்ய சங்கரர் –

————-

696-தீர்த்தகர
தூய்மைப் படுத்துமவன்-
கரம் நான்கு உடையான் பேரோதிப் பேதைகாள் தீர்த்த கரராமின் திரிந்து -இரண்டாம் திரு -14-
தீர்த்தங்கள் ஆயிரத்துள் இவை பத்தும் வல்லார்களை தேவர் வைகல்
தீர்த்தங்களே என்று பூசித்து நல்கி யுரைப்பார் -7-9-11-
தீர்த்தன் உலகு அளந்த சேவடி -2-8-6-

தம்மைப் போலவே நினைப்பது சொல்வது முதலிய செய்தவுடன் எல்லாப் பாவங்களையும் போக்கும்
கங்கை புஷ்கரம் முதலிய தீர்த்தங்களை உண்டாக்கியவர் -சுருதி ஸ்ம்ருதி முதலிய சத் சம்ப்ரதாயங்களை ஏற்படுத்தியவர் –
கடல் போலே இறங்க முடியாத தம்மிடம் பக்தர்கள் இறங்கும்படி படிகளை ஏற்படுத்தியவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

யோகீ ஞானம் ததா சாங்க்யம்–யோகம் ஞானம் சாங்க்யம் அனைத்தும் அவன் இடமே உண்டாயின

பதினான்கு வித்யைகளையும் -அசுரர்களை வஞ்சிக்க வேதத்திற்கு புறம்பான வித்யைகளையும் உண்டாக்கி வெளியிட்டவர் –
ஹயக்ரீவ ரூபியாக மது கைடவர்களைக் கொன்று பிரமனுக்கு உபதேசித்து -அசுரர்களை வஞ்சிக்க வேதத்திற்கு
புறம்பான மதங்களையும் உபதேசித்தவர் -ஸ்ரீ சங்கரர் –

சாஸ்த்ரங்களை கையில் யுடையவர் -சாஸ்த்ரங்களை படைப்பவர் –ஸ்ரீ சத்ய சங்கரர் –

————————————————————-

ஸ்ரீ பர ப்ரஹ்மம் பூஜிக்கத் தக்க நற் பண்புகளை உடையவர் –

665-அநந்த-முடிவில்லாதவர் -இடத்தாலும் காலத்தாலும் பொருளாலும் முடிவில்லாதவர் –
666-தனஞ்சய -செல்வத்தில் உள்ள ஆசையை ஜெயித்து அவனையே விரும்பும் படி இருப்பவர் –
667-ப்ரஹ்மண்ய-சித்துக்களும் அசித்துக்களும் இருப்பதற்கு காரணமாக இருப்பவர் –
668-ப்ரஹ்மக்ருத் ப்ரஹ்மா-பெருத்த உலகைப் படைக்கும் நான்முகனையும் செலுத்துபவர் –
669-ப்ரஹ்ம-மிகப் பெரியவர் -தன்னை அண்டியவரையும் பெரியவராக ஆக்குபவர் –
670-ப்ரஹ்ம விவர்த்தன -தர்மத்தின் வகையான தவத்தை வளர்ப்பவர் –

671-ப்ரஹ்மவித்-எண்ணிறந்த வேதங்களின் ஆழ் பொருளை அறிபவர் –
672-ப்ரஹ்மண-வேதங்களைப் பிரசாரம் செய்ய அத்ரி கோத்ரத்தில் தத்தாத்ரேயர் என்னும் அந்தணனாகப் பிறந்தவர் –
673-ப்ரஹ்மீ–வேதம் ஆகிய பிரமாணத்தையும் அவை உரைக்கும் பொருளாகிய ப்ரமேயத்தையும் உடையவர் –
674-ப்ரஹ்மஜ்ஞ- வேதங்களையும் வேதப் பொருள்களையும் அறிபவர் –
675-ப்ரஹ்மண ப்ரிய-வேதம் ஓதும் அந்தணர்கள் இடம் அன்பு காட்டுபவன் –
676-மஹாக்ரம-ஜீவர்கள் தன்னை அடைவதற்கு அறிவிலும் பக்தியிலும் படிப்படியாக ஏற வழி வைத்து இருப்பவர் –
677-மஹாகர்மா-புழு பூச்சிகளையும் அடுத்தடுத்த பிறவிகளில் உயர்ந்து தன்னையே அனுபவிக்க ஆசைப்பட வைக்கும் செயல்களை உடையவர் –
678-மஹா தேஜ-தமோ குணத்தால் பிறவிச் சுழலில் சிக்கி இருக்கும் மனிசர்களின் அறிவின்மை யாகிய இருளை ஒழிக்கும் ஒளி உள்ளவர் –
679-மஹோரக-தான் மஹானாக இருந்தும் தாழ்ந்த பிறவிகளின் இதயத்திலும் அவர்களை உயர்த்துவதற்க்காக நுழைந்து இருப்பவர் –
680-மஹாக்ரது- பூஜிக்க எளியவர் -செல்வத்தைப் பாராமல் தூய பக்தியை நோக்குபவர் –
681-மஹா யஜ்வா -தன்னையே பூஜிப்பவர்களை உயர்த்துபவர் –
682-மஹா யஜ்ஞ -திருப்பள்ளி எழுச்சி நீராட்டம் அலங்காரம் நைவேத்யம் ஆகியவற்றை மிகுதியாக உடையவர் –
683-மஹா ஹவி -மனம் புத்தி புலன் ஆத்மா ஆகியவற்றையே சமர்ப்பணமாக சாத்விகர்கள் இடம் ஏற்றுக் கொள்பவர் –
மற்ற பலிகளை ஏற்காதவர் –

———————————————————————-

ஸ்தோத்ரத்தை ஏற்கும் தகுதி உடையவன் –

684-ஸ்தவ்ய-ஸ்தோத்ரம் செய்ய தகுதி ஆனவர் –
685-ஸ்தவப்ரிய -யார் எந்த மொழியால் ஸ்தோத்ரம் செய்தாலும் பிழை இருந்தாலும் அன்புடன் ஏற்பவர் –
686-ஸ்தோத்ரம் -அவர் அருளாலேயே ஸ்துதிப்பதால் ஸ்துதியாகவும் இருப்பவர் –
687-ஸ்துத-ஆதிசேஷன் கருடன் முதலிய நித்யர்களாலும் பிரமன் முதலான தேவர்களாலும்
நம் போன்ற மக்களாலும் அவரவர் தகுதிக்கு ஏற்ப ஸ்துதிக்கப் படுபவர் –
688-ஸ்தோதா-தம்மை ஸ்துதிப்பாரை தாமே ஸ்துதிப்பிபவர் –
689–ரணப்ரிய -தன் அடியார்களைக் காக்க விருப்பத்தோடு சண்டையிடுபவர் –
690-பூர்ண -எந்த விருப்பமும் இன்றி நிறைவானவர் -ஆகையால் ஸ்துதிக்கே மகிழ்பவர்-

691-பூரயிதா -தன்னைத் ஸ்துதிப்பவர்களின் விருப்பங்களை நிறைவேற்றுபவர் –
நமக்கு பயன் அளிக்கவே ஸ்துதியை ஏற்றுக் கொள்பவர் -ஸ்துதிக்கு மயங்குபவர் அல்ல –
692-புண்ய -மஹா பாபிகளையும் தூய்மைப் படுத்தி தம்மை ஸ்துதிக்க வைப்பவர் –
693-புண்ய கீர்த்தி -பாபங்களைத் தொலைக்க ஸ்துதியே போதும் என்னும் புகழ் பெற்றவர் –
694-அநாமய-சம்சாரம் என்னும் நோய்க்குப் பகைவர் -ஆரோக்கியம் அருள்பவர் –
695-மநோஜவ-மேற்கூறிய செயலை மிக விரைவில் செய்பவர் –
696-தீர்த்தகர -பாவங்களைப் போக்கும் கங்கை புஷ்கரம் ஆகிய புண்ய தீர்த்தங்களை உருவாக்குபவர் –

—————————————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பராசர பட்டர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பீஷ்மர் திருவடிகளிலே சரணம்
ஸ்ரீ வியாச பகவான் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: