ஸ்ரீ விஷ்ணு சகஸ்ர நாமம்-3-30-ஸ்ரீ சம்பந்த -பரத்வ-பரமான திவ்ய நாமங்கள் -607-625-/ 3-31-/ ஸ்ரீ சம்பந்தத்தால் வந்த குண யோகம் -626-629 – /3-32-அர்ச்சாவதாரம் பரமான திரு நாமங்கள் -630-660- /3-33-சக்தீசம் அவதார திரு நாமங்கள் 661-664–

அனுவர்த்தீ நிவ்ருத்தாத்மா சம்ஷேப்தா ஷேமக்ருச்சிவ
ஸ்ரீவத்சவ ஷாச் ஸ்ரீ வாசச் ஸ்ரீ பதிச் ஸ்ரீ மதாம் வர –64-
ஸ்ரீதச் ஸ்ரீ சஸ் ஸ்ரீ நிவாசஸ் ஸ்ரீ நிதிஸ் ஸ்ரீ விபாவன
ஸ்ரீ தரஸ் ஸ்ரீ கரஸ் ஸ்ரேயஸ் ஸ்ரீ மான் லோகத்ரயாஸ்ரய–65
ஸ்வ ஷஸ் ஸ்வங்கஸ் சதா நந்தோ நந்திர் ஜ்யோதிர் கணேஸ்வர
விஜிதாத்மா விதேயாத்மா சத்கீர்த்திஸ் சின்ன சம்சய –66
உதீர்ணஸ் சர்வதஸ் சஷூர நீஸஸ் சாச்வத்தஸ் ஸ்திர
பூசயோ பூஷணோ பூதி ரசோகஸ் சோக நாசன–67
அர்ச்சிஷ் மா நர்ச்சித கும்போ விஸூத்தாத்மா விசோததந
அநிருத்தோ அப்ரதிரத பிரத்யும்னோ அமிதவிக்ரம–68
கால நேமி நிஹா சௌரிச் ஸூரஸ் ஸூர ஜநேச்வர
த்ரிலோகாத்மா த்ரிலோகேச கேசவ கேசி கேசிஹா ஹரி –69-
காம தேவ காம பால காமி காந்த க்ருதாகம
அநிர்தேச்யவபுர் விஷ்ணுர் வீரோ அனந்தோ தனஞ்சய –70-

———–

3-1-பிரதம அவதாரம் விஷ்ணு -147-152- திரு நாமங்கள்–6 -திரு நாமங்கள்
3-2-வாமன அவதார பரமான -153-164 திரு நாமங்கள் —12-திரு நாமங்கள்
3-3- துஷ்ட நிக்ரஹ இஷ்ட பரிபாலநம் -165-170-திரு நாமங்கள்–6-திரு நாமங்கள்
3-4-ஜ்ஞானாதி பகவத் குணங்கள் கொண்டவன் -171-181- திரு நாமங்கள்-11-திரு நாமங்கள்
3-5-குணங்களுக்கு ஏற்ற அவதார செயல்கள் -182-186-திரு நாமங்கள்–5 திரு நாமங்கள்
3-6-ஹம்ஸாவதாரம் -187-194-திரு நாமங்கள்-7 திரு நாமங்கள்
3-7-பத்மநாபாவதாரம்-195-199-திரு நாமங்கள்-5 திரு நாமங்கள்
3-8-நரசிம்ஹ அவதாரம் ——200-210—திரு நாமங்கள்—11 திரு நாமங்கள்
3-9-மத்ஸ்ய அவதார -211-225- திரு நாமங்கள் –15-திரு நாமங்கள்
3-10- புருஷ ஸூக்த உபநிஷத் ப்ரதிபாதித விராட் ஸ்வரூப—226-247- திரு நாமங்கள் -22-திரு நாமங்கள்
3-11–சித் அசித் -இவைகளாலான -ஐஸ்வர்ய -பூர்த்தி -248-271-திரு நாமங்கள் -23-திரு நாமங்கள்
3-12-விஸ்வ ரூபம் —272-300-திரு நாமங்கள் -29-திரு நாமங்கள்
3-13-ஆலிலை மேல் துயின்ற –வட பத்ர சாயி -301-313-திரு நாமங்கள்–14-திரு நாமங்கள்
3-14-ஸ்ரீ பரசுராம -ஆவேச சக்தி -அவதாரம் -314-321-திரு நாமங்கள்–8-திரு நாமங்கள்
3-15-ஸ்ரீ கூர்மாவதாரம் -322-332-திரு நாமங்கள்–11-திரு நாமங்கள்

3-16- பர வாசுதேவன் குண வாசகம் -333-344-திரு நாமங்கள்-12 திரு நாமங்கள்
3-17-பர வாசுதேவன் ரூப குண வாசகம் -345-350 திரு நாமங்கள்-6 திரு நாமங்கள்
3-18-ஐஸ்வர்ய வாசக -351-360-திரு நாமங்கள்-11-திரு நாமங்கள்
3-19-ஸ்ரீ லஷ்மி சம்பந்தம் -361-379-திரு நாமங்கள்–19-திரு நாமங்கள்
3-20-சேதனர்கள் உடன் இணைந்து இருக்கும் ஒட்டின்மை -380-384-திரு நாமங்கள்-5 திரு நாமங்கள்
3-21-த்ருவ–385-389-திரு நாமங்கள்-5 திரு நாமங்கள்

3-22-ஸ்ரீ ராம அவதார -390-421-திரு நாமங்கள்–32-திரு நாமங்கள்-
3-23-கல்கி அவதார -422-436-திரு நாமங்கள்–15-திரு நாமங்கள்
3-24-ஜ்யோதிர் மண்டலத்துக்கு ஆதாரம் -437-445-திரு நாமங்கள் –8-திரு நாமங்கள்
3-25-யஞ்ஞ ஸ்வரூப -446-450-திரு நாமங்கள்–15-திரு நாமங்கள்
3-26 நிவ்ருத்தி தர்ம ப்ரவர்தக -451-457-திரு நாமங்கள்–6-திரு நாமங்கள்
3-27-அலை கடல் கடைந்து அமுதம் கொண்டவன் -458-470-திரு நாமங்கள்-12-திரு நாமங்கள்

3-28-தர்ம ஸ்வரூபி -471-502-திரு நாமங்கள்–31-திரு நாமங்கள்
3-29-ஸ்ரீ ராமனாய் தர்ம ரஷகத்வம் -503-513-திரு நாமங்கள்–14 திரு நாமங்கள்
3-30-பாகவத ரஷகன் திரு நாமங்கள் -514-519–6 திரு நாமங்கள்
3-31-ஸ்ரீ கூர்ம ரூபி -520/521 திரு நாமங்கள்–2 திரு நாமங்கள்
3-32-ஸ்ரீ அநந்த சாயி -522/523 திரு நாமங்கள்–2-திரு நாமங்கள்
3-33-பிரணவ ஸ்வரூபி -524-528-திரு நாமங்கள்–5-திரு நாமங்கள்
3-34–ஸ்ரீ கபில அவதாரமாய் ரஷணம் -529-538 திருநாமங்கள் –9-திரு நாமங்கள்
3-35-வராஹ அவதார -539-543-திரு நாமங்கள்–4-திரு நாமங்கள்
3-36- சுத்த ஸ்வரூபி -544-568-திரு நாமங்கள் –24-திரு நாமங்கள்
3-37-நாராயண அவதார விஷய 569-574 திரு நாமங்கள்–5-திரு நாமங்கள்
3-28-ஸ்ரீ வேத வியாச பகவான் -திரு அவதார -575-589-திரு நாமங்கள்-14-திரு நாமங்கள்
3-29-தர்மம் படி பலன் அளிப்பவன் –590-606-திரு நாமங்கள்–16-திரு நாமங்கள்

3-30-ஸ்ரீ சம்பந்த -பரத்வ-பரமான திவ்ய நாமங்கள் -607-625-
3-31-ஸ்ரீ சம்பந்தத்தால் வந்த குண யோகம் -626-629 –
3-32-அர்ச்சாவதாரம் பரமான திரு நாமங்கள் -630-660-
3-33-சக்தீசம் அவதார திரு நாமங்கள் 661-664-பல மந்த்ரங்கள் வெளி இட்ட அவதாரம்

———————————————————————————

அனுவர்த்தீ நிவ்ருத்தாத்மா சம்ஷேப்தா ஷேமக்ருச் சிவ
ஸ்ரீவத்சவ ஷாச் ஸ்ரீ வாசச் ஸ்ரீ பதிச் ஸ்ரீ மதாம் வர –64-

———-

3-30-ஸ்ரீ சம்பந்த -பரத்வ-பரமான திவ்ய நாமங்கள் -607-625-

607-சிவ –
மங்கள ப்ரதன்
அருளோடு பெரு நிலம் அளிக்கும் நாரணன் -பெரிய திரு மொழி-1-1-9-
செடியார் ஆக்கை அடியாரைச் சேர்த்தல் தீர்க்கும் திரு மால் -1-5-7-

இப்படி எல்லா முமுஷூக்களுக்கும் புபுஷூக்களுக்கும் அவரவர்க்கு உரிய நன்மைகள் செய்பவர் –ஸ்ரீ பராசர பட்டர்-

சம்சார மோக்ஷ ஸ்திதி பந்த ஹேது –ஸ்ரீ விஷ்ணு புராணம் -6-7-72-
பித்ரு லோகேவ் ராஜ்யம் அநு சாஸ்தி தேவ
சிவஸ் சிவா நாம் அசிவஸ் அசிவா நாம் — உத்யோக பர்வம்

தம்முடைய நாமத்தை நினைத்த மாத்திரத்தில் பாவத்தைப் போக்குபவர் –ஸ்ரீ சங்கரர் –

சுகமே வடிவானவர் -மங்களத் தன்மை உள்ளவர் -முக்தர்களைப் போஷிப்பவர் –ஸ்ரீ சத்ய சந்தர் –

————–

608-ஸ்ரீ வத்ஸ வஷா-
திரு மறு மார்பன் -திருமாலை -40-
என் திரு மகள் சேர் மார்பன் -7-2-9-
ஸ்ரீ வத்ஸ வஷா நித்ய ஸ்ரீ -யுத்தம் -114-15-

தம்மால் நியமிக்கப்படுபவைகள் இடமிருந்து தம்மை வேறு படுத்திக் காட்டும் –
திருமகள் கேள்வன் -அடையாளமான ஸ்ரீ வத்சம்-மார்பில் யுடையவர் –ஸ்ரீ பராசர பட்டர்-

தமது மார்பில் ஸ்ரீ வத்சம் என்னும் சின்னத்தை யுடையவர் –ஸ்ரீ சங்கரர் –

மஹத்வ லஷணமான திருமகளுடன் கூடிய வெள்ளை நிறத்தின் சுருள் முடி மச்சத்தை யுடையவர் –ஸ்ரீ சத்ய சந்தர் –

————–

609-ஸ்ரீ வாஸ-
திருமகள் எப்போதும் விரும்பி விளையாடுவதற்கு உரிய கற்பக வனமாக விளங்குபவர் –ஸ்ரீ பராசர பட்டர்-

ஸ்ரீ வத்ஸ வஷா–யுத்த -114-15-

திரு மார்பில் திருமகள் அகலாமல் வசிக்கப் பெற்றவர் –ஸ்ரீ சங்கரர் –

திருமகள் வசிக்கப் பெற்றவர் –ஸ்ரீ சத்ய சந்தர் –

—————

610-ஸ்ரீ வாஸ –
திரு மகளுக்கு உறைவிடம் -நித்யைவைஷா -அகலகில்லேன் இறையும்-என்று அலர் மேல் மங்கை யுறை மார்பன்

திருமகள் தனக்குத் தகுந்த கணவர் என்று ஸ்வயம் வரம் செய்யும் பதியாக இருப்பவர் –ஸ்ரீ பராசர பட்டர்-

நித்ய ஸ்ரீ–யுத்த -114-15-

அமுதம் கடைந்த போது தேவாசுரர்களை ஒதுக்கி லஷ்மியால் வரிக்கப் பட்டவர் –ஸ்ரீ சங்கரர் –

திருமகள் கேள்வர் -உயர்ந்த சக்தியான ஸ்ரீ லஷ்மி தேவிக்கு பதி–ஸ்ரீ சத்ய சந்தர் –

—————–

611-ஸ்ரீ பதி
திருமகள் கேள்வன் -திருமகள் கொழுநன் -திருவின் மணாளன் -1-9-1-
திருவுக்கும் திருவாகிய செல்வன் -7-7-1-
ராகவோரஹதி வைதேஹீம் தஞ்சேய மஸி தேஷணா –
ஹரீச்சதே லஷ்மீச்ச பத்ன்யௌ
கோல மலர்ப் பாவைக்கு அன்பாகிய என் அன்பு -10-10-7-

திரு மகளின் சிறிது கடாஷம் பெற்ற பிரமன் முதலிய மற்ற தேவர்கள் போல் அன்றி
அவளுடைய பூர்ண கடாஷம் பெற்றவர் –ஸ்ரீ பராசர பட்டர்-

துல்ய சீல வயோ வ்ருத்தாம் –ஸூந்தர -16-5-
ஹ்ரீச்சா தே லஷ்மீச் ச பத்ந்யவ்
அஸ்யசாநா ஜகதோ விஷ்ணு பத்னீ –

ருக் யஜூஸ் சாமம் -என்னும் செல்வம் பொருந்திய பிரம்மாதிகளிலும் முதன்மையானவர் –ஸ்ரீ சங்கரர் –

ஸ்ரீ சரஸ்வதி தேவி போன்றவர்களைப் பெற்ற பிரமன் முதலானவர்களைக் காட்டிலும் மேன்மை
யுள்ளவர் -திருமகளுக்கு விருப்பமான ஆகாசத்திற்கும் ஆதாரமாக யுள்ளவர்–ஸ்ரீ சத்ய சந்தர் –

—————

612-ஸ்ரீ மதாம் வர –
செல்வர்களுள் சிறந்தவன்
நாகணை மிசை நம் பரர் செல்வர் பெரியர் -நாச் -10-10-
தாமரை உந்தி தனிப் பெரும் நாயகன் -திரு வாசிரியம் -1-

எப்போதும் புதிதாகத் தோன்றும் காரணம் அற்ற அன்பை ஸ்ரீக்கு அளிப்பவர்-அவளுடைய உயிராக இருப்பவர் –
அவரை ஆஸ்ரயித்ததால் அன்றோ ஸ்ரீ எனப்படுகிறாள் –ஸ்ரீ பராசர பட்டர்-

சுக்ல மால்யாம் வரதரா ஸ்நாதா பூஷண பூஷிதா பச்யதாம் சர்வ தேவாநாம் யயவ் வக்ஷஸ்தலம் ஹரே
தயா அவ லோகிதா தேவா ஹரி வக்ஷஸ் தலஸ் ததா லஷ்ம்யா மைத்ரேய ஸஹஸா பராம் நிவ்ருத்தி மா கதா –ஸ்ரீ விஷ்ணு புராணம் –

பக்தர்களுக்கு செல்வத்தைக் கொடுப்பவர் –ஸ்ரீ சங்கரர் –

செல்வத்தைத் தருபவர் -ருக்மிணிக்கு பிரத்யும்னனைப் பிள்ளையாகத் தந்தவர்–ஸ்ரீ சத்ய சந்தர் –

———-

ஸ்ரீதச் ஸ்ரீ சஸ் ஸ்ரீ நிவாசஸ் ஸ்ரீ நிதிஸ் ஸ்ரீ விபாவன
ஸ்ரீ தரஸ் ஸ்ரீ கரஸ் ஸ்ரேயஸ் ஸ்ரீ மான் லோகத்ரயாஸ்ரய–65

———-

613-ஸ்ரீ த –
ஸ்ரீ யைக் கொடுப்பவன் -ஸ்ரீ யசஸ் சௌந்தர்யம்
நித்ய நூதன நிர்வ்யாஜ ப்ரணய ரசஸ்ரீயம் தஸ்யை ததாதி -பட்டர் ஸ்ரீ பாஷ்யம்
அநந்ய ராகவேணாஹம்-அனந்யா ஹி மயா ஸீதா

ஸ்ரீ க்கும் அவ்வளவு பெருமைகள் வந்ததற்குக் காரணமானவர் –
எல்லா நிலைகளிலும் ஸ்ரீ யை தமக்கு ஈஸ்வரியாக வைப்பவர் –ஸ்ரீ பராசர பட்டர்-

ந ச சீதா த்வயா ஹீநா நஸாஹம் அபி ராகவ முஹூர்த்தம் அபி ஜீவாவஸ் ஜலாத் மத்ஸ்யா
விவா உத்ருதவ் –அயோத்யா -53-31-
விஷ்ணோரேஷா அநபாயிநீ –ஸ்ரீ விஷ்ணு புராணம் -1-9-144-
அநந்யா ஹி மயா சீதா பாஸ்கரேண பிரபா யதா –யுத்த -121-19-
அநந்யா ராகவேணாஹம்–ஸூந்தர -21–15

திரு மகளுக்கு நாயகர் –ஸ்ரீ சங்கரர் –

திருமகளுக்கு சுகத்தைக் கொடுப்பவர் –ஸ்ரீ சத்ய சந்தர் –

—————

613-ஸ்ரீ சஸ்

ஸ்ரீ க்கும் அவ்வளவு பெருமைகள் வந்ததற்குக் காரணமானவர் –
எல்லா நிலைகளிலும் ஸ்ரீ யை தமக்கு ஈஸ்வரியாக வைப்பவர் –ஸ்ரீ பராசர பட்டர்-

ஸ்ரீ யஸ் ஸ்ரீச் ச பவேதக்ர்யா
ஆதாவாத்மகுணத்வேந போக்ய ரூபேண விக்ரஹே ஆதாரக ஸ்வரூபேண தாசீ பாவேந வா சதா
பும் பிரதான ஈஸ்வர ஈஸ்வரீ

திரு மகளுக்கு நாயகர் –ஸ்ரீ சங்கரர் –

திருமகளுக்கு சுகத்தைக் கொடுப்பவர் –ஸ்ரீ சத்ய சந்தர் –

——————-

614-ஸ்ரீ நிவாஸ –
பிராட்டியை தரிப்பவன் -கொள் கொம்பு போல் –
திரு மங்கை தங்கிய சீர் மார்பன்

கொடிக்குக் கற்பக மரம் போலே பிராட்டிக்குக் கொழு கொம்பாக இருப்பவர் –ஸ்ரீ பராசர பட்டர்-

செல்வம் யுடையவர்களிடம் நித்யமாக வசிப்பவர் –ஸ்ரீ சங்கரர் –

திரு மகளுக்கு அந்தர்யாமியாக வசிப்பவர் -லஷ்மியை நடத்துபவர் –
ஜீவன்கள் தம்மிடம் வசிக்கும்படி இருப்பவர் –ஸ்ரீ சத்ய சந்தர் –

————

615-ஸ்ரீ நிதி –
ஸ்ரீ என்ற நிதியை உடையவன் –
பூவின் மிசை நங்கைக்கு அன்பன் ஞாலத்தவர்க்கும் பெருமான் -4-5-8-

ரத்னத்திற்குப் பேழை போலே பிராட்டி தங்கும் இடமாக இருப்பவர் –ஸ்ரீ பராசர பட்டர்-

எல்லா சக்திகளும் வைக்கப்படும் இடமாய் இருப்பவர் –ஸ்ரீ சங்கரர் –

அனைத்து ஒளிகளுக்கும் புகலிடமாக இருப்பவர் –ஸ்ரீ சத்ய சந்தர் –

—————–

616-ஸ்ரீ விபாவன –
பிராட்டியால் புகழ் பெற்றவன் -ஸீதா ராமன் தேஜஸ் அப்ரமேயம்-நப்பின்னை கண்ணன் புகர் ஆண்டாள் அறிந்து
உண்ணாது உறங்காது ஒலி கடலை யூடறுத்து பெண்ணாக்கை யாப்புண்ட செல்வனார் -நாச்-11-6-

பிராட்டியாலேயே தமக்குப் புகழும் மகிமையும் யுண்டாக்கப் பட்டு இருப்பவர் –ஸ்ரீ பராசர பட்டர்-

அப்ரமேயம் ஹி தத் தேஜ யஸ்ய சா ஜனகாத்மஜா –ஆரண்ய -37-18-

எல்லாப் பிராணிகளுக்கும் பல செல்வங்கள் அளிப்பவர் –ஸ்ரீ சங்கரர் –

ஸ்ரீ லஷ்மியின் எண்ணங்களை விசேஷமாகத் தூண்டுபவர் -சிறந்த பிரகாசத்தை யுடைய சீதையுடன் ரமித்தவர் –
செல்வத்தைப் பலவகைகளால் வளர்ப்பவர் –ஸ்ரீ சத்ய சந்தர் –

—————-

617-ஸ்ரீ தர –
பிராட்டியை உடையவன்
திரு விளையாடு திண் தோள் நம்பி -நாச் -9-3-செல்வ நாரணன் -1-10-8–செல்வர் பெரியார் -நாச்
ஸ்ரியம் லோகே தேவ ஜூஷ்டா முதாரம் -ஸ்ரீ ஸூ கதம்

மணிக்கு ஒளி போலேவும் மலருக்கு மணம் போலவும் அமுததிற்குச் சுவை போலேவும் இயற்கையாக
உள்ள தொடர்பினால் தமக்கு லஷ்மியின் சேர்த்தியை யுடையவர்–ஸ்ரீ பராசர பட்டர்-

ந ஹி ஹாதுமியம் சக்யா கீர்த்தி ராத்மவதோ யதா –அயோத்யா -3-29-

உலக மாதாவான ஸ்ரீ லஷ்மியைத் திரு மார்வில் தரிப்பவர் –ஸ்ரீ சங்கரர் –

ஸ்ரீ தேவியைத் தரிப்பவர்–ஸ்ரீ சத்ய சந்தர் –

————–

618-ஸ்ரீ கர –
பரத்வத்தில் போல் வியூகத்திலும் அவதாரங்களிலும் தமக்கு ஏற்றபடி ஸ்ரீ லஷ்மியை திரு வவதரிக்கச் செய்பவர் –ஸ்ரீ பராசர பட்டர்-

தேவத்வே தேவ தேஹேயம்–ஸ்ரீ விஷ்ணு புராணம் -1-9-145-

தம்மை தியானித்து துதித்து அர்ச்சிக்கும் பக்தர்களுக்கு செல்வங்கள் அனைத்தையும் அளிப்பவர் –ஸ்ரீ சங்கரர் –

ஸ்ரீ தேவியைத் தம் வசத்தில் யுடையவர் -செல்வத்தை அளிக்கும் திருக் கைகளை யுடையவர் —ஸ்ரீ சத்ய சந்தர் –

—————-

619-ஸ்ரேய ஸ்ரீ மான் –
எல்லாப் பயன்களுக்காகவும் எல்லாராலும் பற்றப்படும் பிராட்டி தம்மிடம் எப்போதும் சேர்ந்து இருக்கப் பெற்றவர் –ஸ்ரீ பராசர பட்டர்-

பிரணிபாத பிரசன்னா ஹி மைதிலீ ஜனகாத்மஜா அலமேஷா பரித்ராதும் ராக்ஷஸ்யோ மஹதோ பயாத்–ஸூந்தர -த்ரிஜடை வார்த்தை
சரீர ஆரோக்யம் ஐஸ்வர்யம் அரிபஷ க்ஷய ஸூகம் –வி முக்தி பலதாயி நீ —-ஸ்ரீ விஷ்ணு புராணம் 1-9-120-/125-
யஸ்யாம் ஹிரண்யம் விந்தேயம் காம் அஸ்வம் புருஷாநஹம்–ஸ்ரியம் லோகே தேவ ஜுஷ்டம் உதாராம்–ஸ்ரீ ஸூக்தம்

ஸ்ரேய -நித்ய ஸூ கமான பிரம்மானந்த ரூபமாக இருப்பவர் –
ஸ்ரீமான் -எல்லாச் சிறப்புக்களும் தம்மிடம் பொருந்தி இருக்கப் பெற்றவர் -இரண்டு திரு நாமங்கள் –ஸ்ரீ சங்கரர் –

ஸ்ரேய -மிகவும் உயர்ந்தவர் -ஸ்ரீ மான் -செல்வத்தை அளிப்பவர் -இரண்டு திரு நாமங்கள் –ஸ்ரீ சத்ய சந்தர் –

————

620-லோக த்ரயாச்ரய –
மூ உலகத்தாருக்கும் புகலிடம்
உலகம் மூன்று உடையாய் என்னை ஆள்வானே -6-10-10-
த்வம் மாதா சர்வ லோகா நாம் தேவ தேவோ ஹரி பிதா

உலகத் தாயான பிராட்டியும் தாமுமாக தாய் தந்தை போல் எல்லா உலகிற்கும் ஆதரவாக இருப்பவர் –ஸ்ரீ பராசர பட்டர்-

த்வம் மாதா சர்வ லோகா நாம் தேவ தேவோ ஹரி பிதா –ஸ்ரீ விஷ்ணு புராணம் 1-9-126-

மூவுலகங்களுக்கும் ஆதாரமாக இருப்பவர் –ஸ்ரீ சங்கரர் –

உலகங்களைக் காப்பவராயும் ஸ்ரீ தேவிக்கு புகலிடமாயும் இருப்பவர் -மூ வுலகங்களுக்கும் புகலிடமாக இருப்பவர் –
லிங்க அநிருத்த ஸ்தூல தேகங்களில் அபிமானம் கொண்ட ஜீவர்களுக்குத் தஞ்சமாக இருப்பவர் –ஸ்ரீ சத்ய சந்தர் –

———-

ஸ்வ ஷஸ் ஸ்வங்கஸ் சதா நந்தோ நந்திர் ஜ்யோதிர் கணேஸ்வர
விஜிதாத்மா விதேயாத்மா சத்கீர்த்திஸ் சின்ன சம்சய –66-

————-

621-ஸ்வஷ-
அழகிய கண்களை யுடையவன்
செந்தாமாரை கண் கை கமலம் திரு விடமே மார்பம் -2-5-2-

அவள் வடிவு அழகு என்னும் அமுதக் கடலில் கரை கண்ட திருக் கண்கள் முதலிய திவ்ய இந்த்ரியங்கள் உள்ளவர் –ஸ்ரீ பராசர பட்டர்-

தாமரை போன்ற அழகிய இரு திருக் கண்களை யுடையவர் –ஸ்ரீ சங்கரர் –

மங்களகரமான இந்த்ரியங்கள் யுள்ளவர் -அர்ஜூனனுக்கு தமது விஸ்வரூபம் காண திவ்ய சஷூஸ் கொடுத்தவர்–ஸ்ரீ சத்ய சந்தர் –

——————-

622-ஸ்வங்க-
சோபனமான திரு மேனியை யுடையவன் –
மலர்மகள் விரும்பும் நம் அரும் பெறல் அடிகள் –திரு உடம்பு வான் சுடர் பிரான் -2-5-2-

அவளாலும் ஆசைப் படத் தக்க திவ்யமான திருமேனி யுடையவர் –ஸ்ரீ பராசர பட்டர்-

மிகவும் அழகிய அங்கங்கள் யுடையவர் –ஸ்ரீ சங்கரர் –

அழகிய அங்கங்கள் யுள்ளவர் -பக்தர்களைத் தம்மை அடையச் செய்பவர் –ஸ்ரீ சத்ய சந்தர் –

————

623-சதா நந்த –
அபரிமிதமான ஆனந்தம் உடையவன்
நமக்கும் பூவின் மிசை நங்கைக்கும் இன்பன் -4-5-8-

ஒருவர் மீது ஒருவர் கொண்டுள்ள அன்பின் மிகுதியால் அளவற்ற ஆனந்தம் யுடையவர் –ஸ்ரீ பராசர பட்டர்-

ஒரே ஆனந்தம் பல காரணங்களால் பல வகைகளாய்ப் பிரிந்து இருப்பதால் அநேக ஆனந்தம் யுடையவர் –ஸ்ரீ சங்கரர் –

எல்லையற்ற ஆனந்தம் யுடையவர் -நான்முகனுக்கு ஆனந்தத்தை அளிப்பவர் –ஸ்ரீ சத்ய சந்தர் –

————-

624-நந்தி –
ஆனந்திப்பவன்
இன்பம் பயக்க எழில் மாதரும் தானும் இவ் ஏழ் உலகை இன்பம் பயக்க இனிதுடன் ஆள்கின்ற பிரான் -7-10-1-

இவ்வாறு எல்லா இடங்களிலும் எல்லாக் காலங்களிலும் எல்லா வகைகளிலும் லஷ்மி நிறைந்து இருப்பவர் –ஸ்ரீ பராசர பட்டர்-

பரமானந்த வடிவாக இருப்பவர் –ஸ்ரீ சங்கரர் –

ஆனந்தம் யுடையவர் -ஆனந்தத்தைத் தருபவர் –ஸ்ரீ சத்ய சந்தர் –

————

625-ஜ்யோதிர் கணேஸ்வர
அயர்வறும் அமரர்கள் அதிபதி –கூட்டமாய் இருந்து -நித்ய சமூஹம் ப்ரஹர்ஷயிஷ்யாமி-என்றபடி -கைங்கர்யம் செய்ய –
திகழ்கின்ற திரு மார்பில் திரு மங்கை தன்னோடும் திகழ்கின்ற திரு மாலார் -10-6-9-

இருவர்க்கும் அனுகூலர்களும் ஒளியுருவம் உள்ளவர்களுமான ஆதிசேஷன் விஸ்வக்சேனர்
முதலியோர் எப்போதும் திருவடி பணிந்து தொண்டு செய்யப் பெற்றவர் –ஸ்ரீ பராசர பட்டர்-

மரீசீ நாம் பதம் இச்சந்தி வேதச —
ஸாத்ய சந்தி தேவா
ஜ்யோதி –புருஷ ஸூக்தத்திலும் நித்ய ஸூரிகளைக் காட்டும்

சூரியன் முதலிய ஒளிப் பொருள்கள் அனைத்திற்கும் தலைவராக இருப்பவர் –ஸ்ரீ சங்கரர் –

சூரியன் முதலியவர்களுக்குத் தலைவர் -உண்டாக்கிய பூதங்கள் அனைத்திற்கும் காரணமானவர் –
பிரகாசம் யுடையவர் -தேவர்களுக்கும் தலைவர் –ஸ்ரீ சத்ய சந்தர் –

————————————————————————

3-31-ஸ்ரீ சம்பந்தத்தால் வந்த குண யோகம் -626-629

626-விஜிதாத்மா –
பக்தர்களால் ஜெயிக்கப் பட்ட ஆத்ம ஸ்வரூபத்தை உடையவன் –
பத்துடை அடியவர்க்கு எளியவன் -எத்திறம் என்று மோஹிக்க வைக்கும்
சீலாத் ஜடீ பூயதே -பட்டர் -உன் எளிமை கண்டு பக்தர்கள் ஜடப் பொருள்கள் போலே ஆகிறார்கள்
எளிவரும் இயல்வினன்-1-3-2- இது ரகஸ்ய அர்த்தம்
நீர்மையால் நெஞ்சம் புகுந்து என் உயிர் உண்டான் -9-6-3-
ஆய்ச்சி கண்ணிக் கயிற்றினால் கட்டக் கட்டுண்டு இருந்தான் –

பிராட்டியும் விரும்பும் செல்வம் யுடையவராயினும் திருவடி பணிந்து இருப்பவர்களுக்கு தாழ்ந்து இருப்பவர் -பரத்வத்தில்
எல்லை இது வரை சொல்லி சௌலப்யத்தின் எல்லையாக ரஹச்யம் கூறப்படுகிறது –ஸ்ரீ பராசர பட்டர்-

மனத்தை அடக்கியவர்–ஸ்ரீ சங்கரர் –

ஜீவர்களின் மனத்தை வெல்பவர் -கருடனால் அடியைப் பெற்ற திரு மேனி யுடையவர் –ஸ்ரீ சத்ய சந்தர் –

—————–

627-விதேயாத்மா –
கட்டுப்பட்டவன் -விதேயன் —
ஆய்ச்சியால் மொத்துண்டு கண்ணிக் குறும் கயிற்றால் கட்டுண்டான் -பெரிய திரு மொழி -11-5-5-
வா போ மீண்டும் ஒரு கால் வந்து போ -தசரதன் நியமிக்க நடப்பார் பெருமாள்
பூசூடவா நீராடவா -அம்மம் உண்ண வா -பெரியாழ்வார் அழைக்கும் படி இருப்பான் கண்ணன்
விட்டு சித்தர் தங்கள் தேவரை வல்ல பரிசு வருவிப்பார் -ஆண்டாள்
ப்ரஹ்மாவாய் இழந்து போதல் இடைச்சியாய் பெற்றுப் போதல்-அர்ஜுனன் இரண்டு சேனைகள் நடுவே நிறுத்து என்ன செய்தல்
இந்த்ரன் சிறுவன் தேர் முன் நின்றான் -பெரிய திரு மொழி -2-3-
நந்த கோபன் தன் இன்னுயிர்ச் சிறுவன் -8-1-3-

அடியவர்கள் இங்கு வா இங்கு நில் இங்கு அமர் இங்கு உண் என்று கட்டளை இடுவதற்கு உரிய தன்மை யுடையவர் –ஸ்ரீ பராசர பட்டர்-

யாருக்கும் அடிமைப் படாத தன்மை யுள்ளவர் -அவிதேயாத்மா -என்று பாடம் –ஸ்ரீ சங்கரர் –

ஸ்நானம் தானம் முதலிய விதிகள் விஷயங்களில் மனமுள்ளவர் –ஸ்ரீ சத்ய சந்தர் –

—————–

628-சத்கீர்த்தி –
உண்மையான புகழ் படைத்தவன் -யதார்த்தமான புகழ் இது
புகழு நல் ஒருவன் -3-4-1
நிகரில் புகழாய் -6-10-10-

இப்படிப் பட்ட சௌலப்யம் இருப்பதாலேயே உண்மைப் புகழுடையவர்–ஸ்ரீ பராசர பட்டர்-

யதா சர்வேஸ்வர க்ருஷ்ண ப்ரோச்யதே சர்வ பண்டிதை சதா அபி ஸ்வல்பமேவோக்தம் பூதார்த்தம் கதமா ஸ்துதி –ஸ்ரீ விஷ்ணு தர்மம் -75-44-
ஸ்தானே ஹ்ருஷீகேச தவ ப்ரகீர்த்தியா –ஸ்ரீ கீதை -11-36-

உண்மையான புகழ் யுடையவர் –ஸ்ரீ சங்கரர் –

உண்மையான புகழ் யுடையவர் -வாமன திருவவதாரத்தில் கீர்த்தி என்ற மனைவியைப் பெற்றவர் –ஸ்ரீ சத்ய சந்தர் –

————-

629-சின்ன சம்சய –
சம்சயங்களை ஒழிப்பவன் –
நான் கண்டு கொண்டேன் இனி அறிந்தேன் -என்பர் ஆழ்வார்கள்
பார்த்தம் ரதி நம் ஆத்மாநம் சாரதி நம் சர்வ லோக சாஷிகம் சகார -என்பர் எம்பெருமானார்
மாம் -கையும் உளவு கோலும் பிடித்த சிறுவாய்க் கயிறும் சேனா தூளி தூ சரிதமான திருக் குழலும்
தேருக்குக் கீழே நாட்டின திருவடிகளுமாய் இருக்கும் சாரத்திய வேஷம் -இத்தை காட்டி சம்சயங்களை தீர்த்து அருளுகிறான்

இந்த எளிமை பற்றிய புகழினாலேயே -இவரை அறியக் கூடுமோ கூடாதோ -வசப்படுவாரோ வசப்படாரோ –
ஸூ லபரா துர்லபரா-என்பவை முதலிய சந்தேஹங்களை அறுப்பவர் –ஸ்ரீ பராசர பட்டர்-

தம் ஹ தேவம் ஆத்மபுத்தி ப்ரசாதனம் –ஸ்வேதாஸ்வரம் -5-18-
த்வத் அந்ய சம்சயஸ் யாஸ்யா சேத்தா ந ஹி உபபத்யதே –ஸ்ரீ கீதை -6-36-

எல்லாவற்றையும் உள்ளங்கை நெல்லிக்கனி போல் பார்ப்பவர் ஆதலால் சந்தேகம் அற்றவர் –ஸ்ரீ சங்கரர் –

எல்லா ஐயங்களையும் போக்குபவர் –ஸ்ரீ சத்ய சந்தர் –

———————————————————————–

உதீர்ணஸ் சர்வதஸ் சஷூர நீஸஸ் சாச்வத்தஸ் ஸ்திர
பூசயோ பூஷணோ பூதி ரசோகஸ் சோக நாசன–67

————–

3-32-அர்ச்சாவதாரம் பரமான திரு நாமங்கள் -630-660-

630-உதீர்ண-
நன்றாக விளங்குபவன் –
கட்கிலீ உன்னைக் காணுமாறு அருளாய் -என்ன காட்டவே கண்டு வாழும் -என்று –
சீலத்தால் –அவதாரங்களால் -தன் திருமேனியைக் காணும்படி விளங்குபவன் –
காட்டித் தன் கனை கழல்கள் கடு நரகம் புகல் ஒழித்த எம்பெருமான் -10-6-1-

வெளிக் கண்ணாலும் காணும்படி வெளிப்படையாக திருவவதரிப்பவர் –ஸ்ரீ பராசர பட்டர்-

எல்லாப் பிராணிகளுக்கும் மேலானவர் –ஸ்ரீ சங்கரர் –

பிரளய காலத்தில் ருத்ரனை சம்ஹரிப்பவர் -உயர்ந்தவர் –ஸ்ரீ சத்ய சந்தர் –

—————

631-சர்வதச்சஷூ –
யாவரும் தம் கண்ணால் காணும்படி–இருப்பவன்
குளிரக் கடாஷிப்பவன் என்னவுமாம்
எங்கும் தானாய நாங்கள் நாதன் -1-8-9-

நம்முடைய கண்களுக்குப் புலப்படுபவர் -ஐயம் அற்றபடி கூறுகிறது –
தெளிவாய் பிரத்யஷமான விஷயத்தில் சந்தேஹம் இல்லை அன்றோ –ஸ்ரீ பராசர பட்டர்-

தமது ஞானத்தினால் எல்லாவற்றையும் பார்ப்பவர் –ஸ்ரீ சங்கரர் –

முழுமையான கண்கள் யுடையவர் -எல்லா இடங்களிலும் கண்கள் உள்ளவர் –ஸ்ரீ சத்ய சந்தர் –

—————-

632-அநீச-
ஈசனாய் இல்லாதவன்
தன்னை பக்த பரதந்த்ரனாய் ஆக்கிக் கொண்டு -ஸ்நானம் செய்விக்கவும் பிறர் கையை எதிர் பார்த்து இருப்பவன் –
ஆய்ச்சியாகிய அன்னையால் அன்று வெண்ணெய் வார்த்தையுள் சீற்றமுண்டு அழு கூத்த வப்பன் -6-2-1-

ஸ்நானம் அலங்காரம் கோஷ்டி முதலிய எல்லாவற்றிலும் அடியவர்களுக்கு ஆட்பட்டு இருப்பதால்
சுதந்தரம் இல்லை –ஸ்ரீ பராசர பட்டர்-

தமக்கு மேல் ஈசன் இல்லாதவர்–ஸ்ரீ சங்கரர் –

தமக்கு ஈசன் இல்லாதவர் -பிராணிகளுக்கு ஈஸ்வரர் –ஸ்ரீ சத்ய சந்தர் –

————-

633-சாஸ்வத ஸ்திர-
நிலையாய் நிற்பவன் -நின்ற ஆதிப்பிரான் -4-10-1-
சம்சாரம் கிழங்கு அறும் வரையில் நிலை பெயராமல் நிற்பவன் -எம்பெருமான் –
தீர்த்தம் பிரசாதிக்காமல் –

பலவிதமான அர்ச்சா ரூபங்களை எடுத்து அடியவர்கள் எக்காலமும் சேவிக்கும்படி இருப்பதால் எக்காலமும் நீங்காதவர் –ஸ்ரீ பராசர பட்டர்-

பிம்பா க்ருத்யா ஆத்மநா பிம்பே சமாகம்யாவ திஷ்டதி –ஸாத்வத சம்ஹிதை

எல்லாக் காலங்களிலும் இருப்பவராயினும் எந்த வித மாறுதலும் இல்லாதவர் என்று ஒரே திரு நாமம் –ஸ்ரீ சங்கரர் –

எப்போதும் ஒரே நிலையில் இருப்பவர் —ஸ்ரீ சத்ய சந்தர் –

————–

634-பூசய –
தல சயனத்து உறைவான் –
கடல் மல்லைத் தல சயனத்தான் -ஆஸ்ரித ரஷண அர்த்தமாக நின்றான் இருந்தான் கிடந்தான் என்னும்படி

பக்தர்கள் அர்ச்சா விக்ரஹங்களில் எழுந்து அருளும்படி பிரார்த்திப்பதை ஏற்றுக் கொண்டு அவர்களால் காண்பிக்கப் பட்ட
ஸ்வயம் வ்யக்தம் சித்தம் மானுஷம் முதலிய திருத் தலங்களில் அவர்களை அனுக்ரஹிக்க சுகமாக எழுந்து அருளி இருப்பவர் –ஸ்ரீ பராசர பட்டர்-

ஸ்ரீ ராமாவதாரத்தில் சேது பந்தனத்திற்காக கடல்கரையில் தர்ப்ப சயனத்தில் சயநித்தவர் –ஸ்ரீ சங்கரர் –

பூமியைக் கையிலே உள்ளவர் -பூ ரூபியான ஸ்ரீ லஷ்மியுடன் சயநிப்பவர் -பூமியில் சயனித்து இருப்பவர் –ஸ்ரீ சத்ய சந்தர் –

—————–

635-பூஷண-
அலங்காரமாய் விளங்குபவன் -சௌசீல்யம் பரிமாற்றம் பூஷணம்
எம் அழகனார் அணி யாய்ச்சியர் சிந்தையுள் குழகனார் -நாச் -4-10-
குழைந்து இருப்பான் -குழகன்
பல பலவே ஆபரணம் பேரும் பல பலவே –
கிரீட மகுட சூடாவதம்ச க்ரைவேயக ஹார கேயூர கடக
ஸ்ரீ வத்ஸ கௌச்துப முக்தாதாம உதர பந்தன பீதாம்பர காஞ்சி குண நூபுராதி அபரிமித திவ்ய பூஷண-

இப்படி யாவர்க்கும் அனுகூலமான எளிமைக் குணத்தால் ஸ்ரீ யபதியான தம்மை அலங்கரிப்பவர் –
செல்வந்தர்களாக இருப்பவர்கள் ஏழைகளின் இல்லத்திற்கு விருந்தாளியாக வந்து அவர்கள் தரும் உணவை உண்டு
அவர்களோடு சமமாக இருத்தல் என்பது அவர்களுக்குப் பழி யாகாது -மாறாக புகழே யாகும் –ஸ்ரீ பராசர பட்டர்-

தம் இச்சையினால் மேற்கொள்ளும் அவதாரங்களில் பூமியை அலங்கரிப்பவர் –ஸ்ரீ சங்கரர் –

அலங்கரிப்பவர் -பூரணமான செயல்களையும் ஆனந்தத்தையும் யுடையவர் -ஆபரணங்களை யுடையவர் –ஸ்ரீ சத்ய சந்தர் –

——————

636-பூதி –
செல்வமாய் உள்ளவன்
சேலேய் கண்ணியரும் பெரும் செல்வமும் நன் மக்களும் மேலாத் தாய் தந்தையும் அவரே -5-1-8-
தனம் மதீயம் த்வ பாத பங்கஜம் –

வெளி உபாயங்கள் ஆகிய செல்வம் உள் உபாயங்கள் ஆகிய பக்தி இவை இல்லாதவர்களுக்கு அவற்றை நிரப்பும் செல்வமாக இருப்பவர் –
அவர்களுக்கு பிள்ளை கறவைப் பசு நண்பர்கள் போன்ற செல்வமாக இருப்பவர் –ஸ்ரீ பராசர பட்டர்-

இருப்பு அல்லது செல்வமாக இருப்பவர் -எல்லாச் செல்வங்களுக்கும் காரணம் ஆனவர் –ஸ்ரீ சங்கரர் –

ஐஸ்வர்ய ரூபமாக இருப்பவர் –ஸ்ரீ சத்ய சந்தர் –

————–

637-அசோகா -விசோக
சோகம் அற்றவன்
துயரமில் சீர்க் கண்ணன் மாயன் -துக்கமில் ஞானச் சுடர் ஒளி மூர்த்தி -3-10-6/8

நாதன் அற்றவன் எவனையும் காப்பாற்றாது விடாமையினால் அவன் விஷயமாகப் பின்னர் சோகப் படாதவர் –ஸ்ரீ பராசர பட்டர்-

ஆனந்த ரூபி யாதலின் சோகம் இல்லாதவர் -விசோக என்பது பாடம் –ஸ்ரீ சங்கரர் –

சோகம் இல்லாதவர் -விசோக -என்பது பாடம் –
அசோக -விசேஷமான சுகமுள்ள ஸ்ரீ வைகுண்டம் முதலியவற்றை இருப்பிடமாக யுடையவர் –ஸ்ரீ சத்ய சந்தர் –

——————

638-சோக நாசன –
சோகத்தை ஒழிப்பவன் -ஒரு நாள் காண வாராயே -ஏங்கினால்
முத்தனார் முகுந்தனார் புகுந்து நம்முள் மேவினார்
எத்தினால் இடர்க் கடல் கிடத்தி ஏழை நெஞ்சமே -திருச்சந்த -115-
என்னுள் இருள் தான் அற வீற்று இருந்தான் -8-7-3-

அவர்களுக்குத் தம் சம்பந்தம் இல்லாமையால் வரும் துன்பத்தைப் போக்குபவர் –ஸ்ரீ பராசர பட்டர்-

ஸ்ருதம் ஹி ஏவ மே பகவத் ருசேப்ய தரதி சோகம் ஆத்ம விதிதி ஸோஹம் பகவ சோசாமி தம் மா பகவான்
சோகஸ்ய பாரம் தாரயத் –சாந்தோக்யம் 7-1-3-நீ என் சோகத்தின் கரைக்குச் சேர்க்க வேண்டும்

தம்மை நினைத்தவுடன் பக்தர்களின் துன்பத்தைப் போக்குபவர் –ஸ்ரீ சங்கரர் –

துன்பங்கள் அழியப் பெற்ற முக்தர்களை நடத்துபவர் -சோகத்தை அழிப்பவர்–ஸ்ரீ சத்ய சந்தர் –

————

அர்ச்சிஷ் மா நர்ச்சித கும்போ விஸூத்தாத்மா விசோததந
அநிருத்தோ அப்ரதிரத பிரத்யும்னோ அமிதவிக்ரம–68

————–

639-அர்ச்சிஷ்மான்
பேர் ஒளி உடையவன் -திவ்ய சஷூஸ் கொடுத்து காட்ட கொடுப்பான் -அர்ச்சை தேஜஸ் சொல்லவுமாம்
மாயப்பிரான் என் மாணிக்கச் சோதி
செம்பொனே திகழும் திரு மூர்த்தி உம்பர் வானவர் ஆதி அம் சோதி -1-10-9-

பக்தர்களுக்கு மறைந்து இருக்கும் தம் பெருமையை அறியும்படி அவர்கள் உட் கண்களையும் வெளிக் கண்களையும்
திறக்கும் திறமை உள்ள பேரொளி யுடையவர் –ஸ்ரீ பராசர பட்டர்-

ஒளியுள்ள சந்திர சூரியர்களுக்கும் ஒளி கொடுக்கும் சிறந்த ஒளி யுள்ளவர் –ஸ்ரீ சங்கரர் –

ஒளிக் கதிர்கள் யுள்ளவர் –ஸ்ரீ சத்ய சந்தர் –

————-

640-அர்ச்சித்த –
அர்ச்சிக்கப் படுபவன் -அர்ச்ச்சா ரூபியாக திவ்ய தேசங்கள் க்ருஹங்களில் சேவை –
தமர் உகந்த எவ்வுருவம் அவ்வுருவம் தானே
நெஞ்சினால் நினைப்பான் யவன் அவனாகும் நீள் கடல் வண்ணனே -3-6-9-
தமர் உகந்து எவ்வண்ணம் சிந்தித்து இமையாது இருப்பரே அவ்வண்ணம் ஆழியான் ஆம் -முதல் திருவந்தாதி -44-
செய்ய பரத்துவமாய் சீரார் வியூகமாய் துய்ய விபவமாய் தோன்றி அவற்றுள்
எய்தும் அவர்க்கு இந்நிலத்தில் அர்ச்சாவதாரம் எளிது -திருவாய் நூற்று -26-

எக்காலமும் எல்லாப் புண்ய ஷேத்ரங்களிலும் உள்ள கோவில்களிலும் வீடுகளிலும் பக்தர்கள் கண்ணால் கண்டு பூஜிப்பதற்கு எளிய
அர்ச்ச்சாவதாரம் செய்து இருப்பவர் -பரத்வம் போலே தூர தேசம் இல்லை -விபவம் போலே காலாந்தரம் இல்லை -பாஞ்சராத்ரம்
போதாயன ஸ்ம்ருதி ஸ்ரீ வைஷ்ணவ புராணம் முதலியவற்றால் அர்ச்சாவதார தத்வ ரகச்யம் அறியப் பட வேண்டியதாகும் –ஸ்ரீ பராசர பட்டர்-

ஸூ ரூபாம் ப்ரதிமாம் விஷ்ணோ பிரசன்ன வதநே ஷனாம் க்ருத்வா ஆத்மந ப்ரீதி கரீம் ஸூவர்ண ரஜாதிபி –ஸ்ரீ விஷ்ணு தர்மம் -103-19-
தாம் அர்ச்சயேத் தாம் பிரணமேத் தாம் யஜேத் தாம் விசிந்தயேத் விஸத்ய பாஸ்த தோஷஸ்து தாமேவ ப்ரஹ்ம ரூபிணீம் –ஸ்ரீ விஷ்ணு தர்மம் -103-28-

எல்லோராலும் பூஜிக்கப் படும் பிரம்மா முதலான தேவர்களாலும் பூஜிக்கப் படுபவர் –ஸ்ரீ சங்கரர் –

பிரம்மா முதலானவர்களால் அர்ச்சிக்கப் படுபவர் –ஸ்ரீ சத்ய சந்தர் –

—————–

641-கும்ப
திவ்ய தேசங்களில் விளங்குபவன் -விரும்பப் படுகிறவன்
அச்சோ ஒருவர் அழகிய வா -பெரிய திருமொழி -9-2-1-
என் அமுதினைக் கண்ட கண்கள் மற்று ஒன்றினைக் காணாவே
போதரே என்று சொல்லித் தன் பால் ஆதாரம் பெருக வைத்த அழகனூர் அரங்கம் அன்றே -திருமாலை
நின்ற ஆதிப் பிரான் நிற்க –

அவரவர் கண்ணால் கண்டு பழகிய உருவங்களுக்கு ஒப்பான வடிவழகு முதலியவற்றால் பக்தர்களால் விரும்பப் படுபவர் –
கு -எனப்படும் பூமியாகிய ஷேத்ரங்கள் கோயில்கள் முதலியவற்றில் த்யானம் ஆராதனம் முதலியவற்றுக்கு விஷயமாகும்படி பிரகாசிப்பவர் –
பிறப்பு இறப்புகளினால் சம்பந்தம் உள்ள பூமியில் யமபடர்களால் ஏற்படும் பயங்களைப் போக்கும்
மகா பிரபாவத்துடன் பிரகாசிப்பவர் –ஸ்ரீ பராசர பட்டர்-

ஆமா சயதி பூ பாகம் பரிதஸ் தத்வ தேவ ஹி ஸ்வ க்ஷேத்ர
யஸ்மாத் தேவ லயோத் தேஸாத் ஸூத் மாத ஜலஜஸ்ய ச பவேத் சப்தா நிவேதச்ச தாவத் க்ஷேத்ரம் ததுஸ்யதே
ஐஹிக ஆமுஷ்முகீ யத்ர ஸித்திர்பவதி தேஹி நாம் அணிமாத் யஷ்ட கோபேதா ஸ்வ சக்த்யா ஸ்வாத்மநா து வை
அத்வாவநிஷு சர்வாசூ நித்யம் குர்வதி சந்நிதிம் முக்த்யே சர்வ பூதா நாம் விசேஷேண து வை புவி

த்ராஹித்யுக்த்வா ஜெகந்நாதம் க்ஷிப்ரம் ஸ்த்ரீ பால பூர்வகை ஞாத்வா விமுக்த தேகம் து ஹை புர்யஷ்ட கேந து
மஹதா தூர்ய கோஷேண க்ருத்வா ரதவரே து வை ஜித்வா அந்தக படாந் ரௌத்ராந் பலாந் க்ஷேத்ரே ச
கிங்கரா ஆநீ ய க்ஷேத்ர நாதஸ்ய அபிதஸ் க்யாபயந்தி ச தேவ க்ஷேத்ரே த்வதீய அஸ்தே விமுக்தம் பாஞ்ச பவ்திகம்
சரீரமத்யா நாதஸ்ய குரு சஸ்வத் யதோசிதம் க்ஷேத்ர நாதஸ்து தத் வாக்யம் சமா கர்ண்ய கனோரிதம் குருணாநுக
தேனைவ தந் நிரீஷ்ய து சஷுஷா –அர்ச்சாவதாரமாக உள்ள புண்ய ஷேத்ரத்தில் உயிர் விட்டால் பூர்வ வினைகள்
அனைத்தும் கழிந்து சர்வேஸ்வரனைச் சேரப் பெறுகிறான் –

உடலை விட்டவர்களுக்கு அவர்களுடைய புன்யங்களுக்கு ஏற்ப பகவானுக்குக் கைங்கர்யம் செய்வதால் அல்லது
புண்ணியப் பிறவிகளில் பிறப்பதனால் பகவானை அடைவது தெரிவிக்கப் படுகிறது –ஸ்ரீ சங்கரர் –

குடம் போலே எல்லாம் தம்மிடத்தில் வைக்கப் பட்டவர் -ஆதாரமாக இருப்பவர் –
பூமியைப் பிரகாசமாக விளங்கும்படி செய்பவர் –ஸ்ரீ சத்ய சந்தர் –

—————–

642-விசுத்தாத்மா
தன்னையே ஒக்க அருள் புரிபவன்
தம்மையே நாளும் வணங்கித் தொழுவார்க்குத் தம்மையே ஒக்க அருள் செய்வர் -பெரிய திரு மொழி -11-3-5-

தமது வைபவத்தை எல்லாம் பக்தர்களுக்கே வழங்கி இருப்பவர் –ஸ்ரீ பராசர பட்டர்-

முக் குணங்களையும் கடந்த பரிசுத்த ஸ்வரூபம் யுடையவர் –ஸ்ரீ சங்கரர் –

தெளிவான தன்மை யுடையவர் –ஸ்ரீ சத்ய சந்தர் –

—————-

643-விசோதன –
அமலன் -சுத்தியைத் தருபவன்
என் பாவம் தன்னையும் பாறக் கைத்து தன்னை மேவும் தன்மையும் ஆக்கினான் எம்பிரான் விட்டு -2-7-4-

திவ்ய ஷேத்ரங்களில் உடலை விட்டவர்கள் தம்மை அடைவதற்குத் தகுதி உடையவர்களாகும் படி பரிசுத்தராக ஆக்குபவர் –ஸ்ரீ பராசர பட்டர்-

தம்மை நினைத்த மாத்திரத்தில் பாவங்களைப் போக்குபவர் –ஸ்ரீ சங்கரர் –

வேதங்களை விசேஷமாகச் சோதிப்பவர் –ஸ்ரீ சத்ய சந்தர் –

————-

644- அநிருத்த-
வ்யூஹ மூர்த்தி வாஸூ பாண்டம் என்ற ஷேத்ரத்தில் வ்யூஹ வாசுதேவன் சேவை -முன்பே 187 பார்த்தோம்
விண் மீது இருப்பாய் மலை மேல் நிற்பாய் கடல் சேர்ப்பாய் -6-9-5-
திரு வல்லிக் கேணி -வேங்கட கிருஷ்ணன் தன் திருக் குமாரன் அநிருத்தன் உடன் சேவை சாதிக்கிறான் –

ஜனார்த்தனர் என்னும் பெயருடன் பூமியில் வஸூ பாண்டம் என்னும் ஷேத்ரத்தில் அநிருத்தர் நித்யமாக இருக்கிறார் என்றபடி
அநிருத்தராக இருப்பவர் -பிறகு சில ஷேத்ரங்களில் முன் சொன்ன வ்யூஹ அவதாரங்களிலும் விபவ அவதாரங்களிலும்
சில இருப்பதைக் கூறுகிறது –ஸ்ரீ பராசர பட்டர்-

வ்யூஹங்களில் நான்காமவரான அநிருத்தர் –ஸ்ரீ சங்கரர் –

தடையற்றவர் -சம்சாரத்தில் இருந்து விடுபட்டவர்களை-முக்தர்களை தரிப்பவர் -போஷிப்பவர் –
தள்ளப்படாதராதலால் உத் என்னும் பெயர் யுடையவர் –ஸ்ரீ சத்ய சந்தர் –

—————

645-அப்ரதிரத –
ஒப்பில்லாதவன் -ஜனார்த்தனன் –
ஒத்தார் மிக்காரை இலையாய மாயன் -2-3-2-

ஜனார்த்தனர் என்னும் பெயருக்குத் தக்கபடி விரோதிகளை அழிப்பதில் தடுப்பவர் யாரும் இல்லாதவர் –ஸ்ரீ பராசர பட்டர்-

எதிரிகள் எவரும் இல்லாதவர் –ஸ்ரீ சங்கரர் –

எதிரிகள் அற்றவர் –ஸ்ரீ சத்ய சந்தர் –

—————–

646-பிரத்யும்ன –
தன்னை பிரகாசிப்பிக்குமவன் -கிட்டினாரை விளங்கச் செய்பவன் –
உலகனைத்தும் விளங்கும் சோதி-பெருமாள் திரு 10-1-
திரு வல்லிக் கேணி -ஸ்ரீ வேங்கட கிருஷ்ணன் தன் பௌதரன் பிரத்யும்னன் உடன் சேவை சாதிக்கிறான் –

சிறந்த ஆத்ம ப்ரகாசம் உள்ளவர் –ஸ்ரீ பராசர பட்டர்-

பிரத்யும்னன் என்னும் வ்யூஹமாக இருப்பவர் -சிறந்த செல்வம் உள்ளவர்–ஸ்ரீ சங்கரர் –

உயர்ந்த புகழ் யுடையவர் –ஸ்ரீ சத்ய சந்தர் –

———-

647-அமித விக்கிரம
அளவற்ற அடிகளை உடையவன்
தாள்கள் ஆயிரத்தாய் ..பெரிய அப்பனே -8-1-10-
முன்பே 519 பார்த்தோம் -அளவற்ற தேஜஸ் என்னவுமாம்

த்ரிவிக்ரம திரு வவதாரத்தில் மூவுலகங்களிலும் தமது திருவடிப் பதிப்பு அடங்காதவர் –ஸ்ரீ பராசர பட்டர்-

யாமுநம் ஜலம் ஆஸ்ரித்ய தேவ தேவஸ் த்ரிவிக்ரம ஸ்தித கமல ஸம்பூதா ந்ருணாம் ச ஸூபதி ப்ரத–
யமுனைக்கரையில் நிலையாக நின்று அனைத்து புருஷார்த்தங்களையும் அளிக்கிறான்

அளவற்ற மகிமை யுடையவர் -யாராலும் பீடிக்கப் படாத பராக்கிரமம் உள்ளவர் –ஸ்ரீ சங்கரர் –

எல்லையற்ற வீரம் யுடையவர் –ஸ்ரீ சத்ய சந்தர் –

———-

கால நேமி நிஹா சௌரிச் ஸூ ரஸ் ஸூ ர ஜநேச்வர
த்ரிலோகாத்மா த்ரிலோகேச கேசவ கேசி கேசிஹா ஹரி –69-

—————-

648-கால நேமி நிஹா –
அவித்யை அளிக்கும் கலி தோஷம் கால சக்கரம் வட்டம் உருவகம்

கலியின் கொடுமையை அழிப்பதற்காக திவ்ய ஷேத்ரங்களில் இருப்பவர் –ஸ்ரீ பராசர பட்டர்-

அவித்யாக்யா ச யா நேமி கால சக்ரஸ்ய துர்தரா ச மயீயம் ஸமாச்ரித்ய விக்ரஹம் விதுநவ்தி ச
த்யாயேத் தத் பிரசரத்னம் ச தேவம்

கால நேமி என்னும் அசுரனை அழித்தவர் –ஸ்ரீ சங்கரர் –

காலநேமியை அழித்தவர்–ஸ்ரீ சத்ய சந்தர் –

—————–

649-சௌரி
ஸ்ரீ சௌரி பெருமாள் -உத்பதாவதகத்தில் -திருக் கண்ண புரம் சேவை
உத்பலா வதகே திவே விமானே புஷ்கரேஷணம் -சௌரி ராஜம் அஹம் வந்தே சதா சர்வாங்க ஸூந்தரம்
மாலை நண்ணித் தொழுது எழுமினோ வினை கெட –திருக் கண்ண புரத்து
ஆலின் மேலால் அமர்ந்தான் அடி இணைகளே-9-10-1
திருக் கண்ண புரத் தரசே – பெருமாள் திருமொழி –
முன்பே 342 பார்த்தோம்

உத்பால வர்த்தகம் -திருக் கண்ணபுரம் -என்னும் ஸ்தலத்தில் சௌரி என்னும் திரு நாமத்துடன் எழுந்து அருளி இருப்பவர் —
சூரர் என்னும் வசுதேவருடைய மகன் –ஸ்ரீ பராசர பட்டர்-

சூர குலத்தில் பிறந்த ஸ்ரீ கிருஷ்ணனாக இருப்பவர் –ஸ்ரீ சங்கரர் –

சூர குலத்தில் பிறந்த ஸ்ரீ கிருஷ்ணனாக இருப்பவர் –ஸ்ரீ சத்ய சந்தர் –

————-

650-சூர-
எதிரிகளை அழிப்பவர்-
திருச் சித்திர கூடம் தன்னுள் எவ்வரி வெஞ்சிலைத் தடக்கை பிராமன் -பெருமாள் திரு -10-3-முன்பே 341 பார்த்தோம்

சித்ர கூட மலையில் ராஷசர்களை அழிப்பவரும் தாமரை இதழ் போன்ற நீண்ட கண்களை யுடையவருமான
ஸ்ரீ ராமபிரான் இருக்கிறார் -என்றபடி சூரரான ஸ்ரீ ராமபிரானாக இருப்பவர் –ஸ்ரீ பராசர பட்டர்-

தராதரே சித்ரா கூடே ரக்ஷ ஷயகரோ மஹாந் சம்ஸ்தி தச்ச பரோ ராம பத்ம பத்ராய தேஷண

வீரராக இருப்பவர் -வீர -என்பது பாடம் –ஸ்ரீ சங்கரர் –

மேன்மை யுள்ளவரை நோக்கிச் செல்பவர் -வீர என்பது பாடம் –ஸ்ரீ சத்ய சந்தர் –

——————-

651-சூர ஜநேச்வர-
சூரர்களின் தலைவன்
திறல் விளங்கு மாருதியோடு அமர்ந்தான் -பெருமாள் திரு -10-10-

அவரே -ஸூக்ரீவன் அனுமான் முதலிய சூர ஜனங்களுக்கு ஈஸ்வரர் -ஸ்ரீ பராசர பட்டர் –

சூரர்களான இந்திரன் முதலியவர்களுக்கும் ஈஸ்வரர் -ஸ்ரீ சங்கரர் –

சூர குலத்தில் உதித்தவர் -மற்றும் தமக்கு ஒரு ஈஸ்வரன் இல்லாதவர் -ஸ்ரீ சத்ய சந்தர் –

———–

652-த்ரிலோகாத்மா –
மூ உலகங்களிலும் சஞ்சரிப்பவன்
விண் மீது இருப்பாய் எண் மீதியன்ற புற வண்டத்தாய் -6-10-5-
மகத தேசத்தில் மஹா போதம் என்னும் மலையில் தேவ தேவனான ஜனார்தனன் லோக நாதன் என்னும்
திரு நாமம் தாங்கி சேவை சாதிக்கிறான்
மலை மேல் நிற்பாய் –

மகத தேசத்தில் த்ரிலோக நாதன் என்று பிரசித்தமாக எழுந்து அருளி யுள்ளவர் –
பக்தர்களை அனுக்ரஹிக்க அடிக்கடி மூவுலகும் செல்பவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

மகதா மண்டலே விப்ர மஹா போத தரார்ச்சித ஸம்ஸ்திதோ லோக நாதாத்மா தேவ தேவோ ஜனார்த்தன —
மதக மண்டலத்தில் எழுந்து அருளி உள்ளான்
அடியார்களுக்கு அனுக்ரஹிக்க மூன்று உலகங்களிலும் ஒட்டியபடி உள்ளவன்

மூன்று உலகங்களுக்கும் அந்தர்யாமியாக இருப்பவர் -மூ வுலகங்களும் தம்மைக் காட்டிலும் வேறு படாதவர் –ஸ்ரீ சங்கரர் –

மூ வுலகங்களுக்கும் உயிராக இருப்பவர் – -ஸ்ரீ சத்ய சந்தர் –

—————–

653-த்ரிலோகேச –
உலகம் மூன்று உடையாய்
ப்ராக் ஜோதிஷ புரம் -என்கிற இடத்தில் விஸ்வேஸ்வரன் திருநாமத்துடன் சேவை

ப்ராக்ஜ்யோதிஷ புரத்தில் விஸ்வேஸ்வரன் என்ற திரு நாமத்துடன் எழுந்து அருளி யுள்ளவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

சுபமா ஸாத்ய பூ பாகம் ப்ராக் ஜ்யோதிஷ் புரே ததா தேவம் விஸ்வேஸ்வராக்யம் து ஸ்திதமேத்ய ஸ்வ கோசராத்–
ப்ராக் ஜ்யோதிஷ் புரத்திலே விஸ்வேஸ்வரன் திரு நாமம் கொண்டு எழுந்து அருளி உள்ளான்

மூ வுலகங்களையும் தம் தம் கருமங்களில் ஈடுபடுத்துபவர் –ஸ்ரீ சங்கரர் –

மூ வுலகங்களுக்கும் ஈசன் – -ஸ்ரீ சத்ய சந்தர் –

————

654-கேசவ —
துக்கங்களை அழிப்பவன்
வினையேன் வினை தீர் மருந்தானாய் விண்ணோர் தலைவா கேசவா -1-5-6-
கேசவ கேசிஹா லோக -கேசவ க்லேச நாசன
வடமதுரை -வாரணாசி பிந்து மாதவ -கோயில் கொண்டு இருப்பவன்
கேசியைக் கொன்றவன்
முன்பு -23-பார்த்தோம் –

மதுரா நகரத்திலும் வாரணாசியிலும் கேசவன் என்னும் திருநாமத்துடன் எழுந்து அருளி இருப்பவன் -ஸ்ரீ பராசர பட்டர் –

கேசவ கேஸிஹா லோகே த்வை ரூப்யேன ஷிதவ் ஸ்திதஸ் மதுராக்ய மஹா க்ஷேத்ரே வாரணாஸ்யாம் அபி த்விஜ
மதுராவிலும் காசியிலும் கேசவன் இரண்டு விதமாக எழுந்து அருளி உள்ளான் –

க இதி ப்ரஹ்மணோ நாம ஈஸோஹம் சர்வதேஹி நாம் ஆவாம் தவாங்கே ஸம்பூதவ் தஸ்மாத் கேசவ நாமவான் –ஸ்ரீ ஹரி வம்சம் 279-47-

க-என்று பிரமனுக்கு பெயர் எல்லாப் பிராணிகளுக்கும் ஈசன் நான் -நாங்கள் இருவரும் உமது அம்சத்தில் யுண்டானவர்கள்-
ஆகையால் நீர் கேசவன் என்ற பெயருடையவன் -சிவன் சொல்வதாக ஹரி வம்சம் சொல்லும் –
சூர்யன் முதலியவர்களுடைய கிரணங்களுக்கு உரியவர் – க -அ-ஈச -எனப்படும் பிரம்மா -விஷ்ணு -சிவ சக்திகள்
மூன்றுக்கும் இருப்பிடமானவர் –ஸ்ரீ சங்கரர் –

வெள்ளை மற்றும் கருப்பு முடிகளை பூமியில் ஸ்ரீ பலராமன் மற்றும் ஸ்ரீ கிருஷ்ணன் ரூபத்தில் வைத்துக் கொண்டு இருந்தவர் –
ஸ்ரீ கிருஷ்ண கேச ரூபத்தால் அசுரர்களை அழிப்பவர் – -ஸ்ரீ சத்ய சந்தர் –

—————-

655-கேசிஹா
கேசியை மாய்த்தவன் -குதிரை வடிவில்
மாவாய் பிளந்தானை -கேசவம் கேசி ஹந்தாரம் வியாசர் திரு வாக்கு
கூந்தல் வாய் கீண்டான் -இரண்டாம் திரு -93 லஷணையாகக் கேசியைச் சொல்லிற்று

கேசி என்னும் அசுரனை அழித்தவர் -என்று வியாசரே கூறியபடி கேசியை அழித்தவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

கேசி என்னும் அசுரனைக் கொன்றவர் –ஸ்ரீ சங்கரர் –

திரௌபதியின் கூந்தலை இழுத்தவனான துச்சாசனனை-பீமனைக் கொண்டு அழித்தவர் –
கேசி என்னும் அசுரனை அழித்தவர் – -ஸ்ரீ சத்ய சந்தர் –

————–

656-ஹரி –
பச்சை வண்ணன் –
பச்சை மா மலை போல் மேனி பவள வாய் கமலச் செங்கண் அச்சுதன் -திருமாலை -2-
ஹரி-பச்சை நிறம் -பாபங்களை போக்குபவன் யாகங்களில் ஹவிர் பாகம் பெற்று கொள்பவன்
கோவர்த்தன மலை மேல் ஹரி திரு நாமம் உடன் சேவை

கோவர்த்தன மலையில் ஹரி என்னும் திரு நாமத்துடன் எழுந்து அருளி இருப்பவர் -வீடுகளில் யாகம் செய்து கொடுக்கப்படும்
ஹவிர்பாகத்தை நான் ஏற்றுக் கொள்கிறேன் -என் நிறமும் உயர்ந்த பச்சை நிறம் –
ஆகையால் நான் ஹரி என்று சொல்லப் படுகிறேன் -மஹா பாரதம் -ஸ்ரீ பராசர பட்டர் –

கிரோ கோவர்த்தநாக்யே து தேவ சர்வேஸ்வரோ ஹரி ஸம்ஸ்தித பூஜித ஸ்தானே
இடோ பஹுதம் கேஹேஷு ஹரே பாகம் ருதுஷ் வஹம் வர்ணச்ச மே ஹரி ஸ்ரேஷ்ட தஸ்மாத் ஹரி இதி ஸ்ம்ருத–சாந்தி பர்வம் -343-39-

சம்சாரத்தை அதன் காரணத்தோடு போக்குபவர் –ஸ்ரீ சங்கரர் –

பாவங்களைப் போக்குபவர் – -ஸ்ரீ சத்ய சந்தர் –

————

காம தேவ காம பால காமி காந்த க்ருதாகம
அநிர்தேச்யவபுர் விஷ்ணுர் வீரோ அனந்தோ தனஞ்சய –70

————–

657-காம தேவ –
விரும்பிய வற்றை எல்லாம் அளிப்பவன்
தேவ -தீவ்யாதி -தானத்தைக் குறிக்கும்
இமய மலையில் -சங்கராலயம் ஷேத்ரத்தில் காம தேவன் -என்ற பெயர் உடன் சேவை -அனைத்தையும் கொடுக்கக வல்லன்
சகல பல ப்ரதோஹி விஷ்ணு
எல்லியும் காலையும் தன்னை நினைந்து எழ நல்ல வருள்கள் நமக்கே தந்து அருள் செய்வான் -8-6-1-
கற்பகம் -2-7-11-

எல்லோருக்கும் விரும்பியவற்றைக் கொடுப்பவராய் சங்கராலய ஷேத்ரத்தில் காமதேவன்
என்னும் பெயர் பூண்டு அப்சரஸ்ஸூக்களால் பூஜிக்கப் பட்டு விளங்குபவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

நான்கு புருஷார்த்தங்களை விரும்புவர்களால் விரும்பப்படும் ஈஸ்வரர் –ஸ்ரீ சங்கரர் –

மன்மதனைப் போல் பிரகாசிப்பவர் – -ஸ்ரீ சத்ய சந்தர் –

——————–

658-காம பால
கொடுத்ததை காப்பவன் -பரிபாலிப்பவன்

அவரே தாம் கொடுத்த பலன்களைக் காப்பாற்றுபவர் –ஸ்ரீ பராசர பட்டர் –

விரும்பியவர்களின் விருப்பங்களைக் காப்பவர் -ஸ்ரீ சங்கரர் –

பக்தர்களின் ஆசைகளைக் காப்பவர் -நான்முகனால் அல்லது வாயுவினால் அடையப்படுபவர் –
மற்றும் ஜனங்களைக் காப்பவர் -ஸ்ரீ சத்ய சந்தர் –

——————

659-காமீ-
விரும்பத் தக்கவை யாவையும் நிறைந்தவன் –

கொடுப்பதற்குக் குறைவற்ற பலன்கள் யுடையவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

விரும்பினவை எல்லாம் நிரம்பி இருப்பவர் -ஸ்ரீ சங்கரர்-

உலகைக் காத்தல் முதலியவற்றை விரும்புவர் -ஸ்ரீ சத்ய சந்தர் –

————-

660-காந்த
யாவராலும் விரும்பப் படுபவன்
கண்டவர் தம் மனம் வழங்கும் என் கரு மணி -பெருமாள் திரு -8-2-முன்பே 297 பார்த்தோம்-

யாவராலும் விரும்பத் தக்கவர் –அதனாலேயே அப்சரஸ்ஸூக்களால் அர்ச்சிக்கப் படுபவர் –
திருநாமங்களின் அர்த்தங்களைக் கொண்டு அந்தந்த ஷேத்ரங்களை ஊஹித்துக் கொள்ள வேண்டும் – ஸ்ரீ பராசர பட்டர் –

அழகான உடல் உள்ளவர் -த்விபரார்த்தத்தின் முடிவில் பிரமனுக்கும் முடிவைச் செய்பவர் -ஸ்ரீ சங்கரர்-

மனத்தைக் கவரும் அழகுடையவர் -ஸ்ரீ சத்ய சந்தர் –

—————-

3-33-சக்தீசம் அவதார திரு நாமங்கள் 661-664-
பல மந்த்ரங்கள் வெளி இட்ட அவதாரம்

661-க்ருதாகம
ஆகமங்களை உண்டு பண்ணியவன்
சமய நீது நூல் என்கோ -3-6-6-
மீண்டும் 795 வரும்

இனி சக்தீசாவதாரம் -நிர்மல மனம் உள்ளவர்களுக்கு அநேக மந்த்ரங்கள் அடங்கிய
சாஸ்த்ரங்களை வெளியிட்டவர் — ஸ்ரீ பராசர பட்டர் –

சுருதி ஸ்ம்ருதி முதலிய சாஸ்த்ரங்களை வெளியிட்டவர் –ஸ்ரீ சங்கரர்-

புராணங்கள் முதலிய ஆகமங்களை யுண்டாக்கியவர்-கர்மங்களால் அடைய முடியாதவர் –
ஸ்ரீ கிருஷ்ணாவதாரத்தில் யமள அர்ஜூன மரங்களை அழித்தவர்-
பாரிஜாத மரத்தை பூமிக்குக் கொணர்ந்த ஸ்ரீ சத்யபாமா தேவியை யுடையவன்–ஸ்ரீ சத்ய சந்தர் –

—————

662-அநிர்தேச்யவபு –
சொல்லித் தலைக் கட்ட முடியாத அநேக திருமேனிகள் கொண்டவன்
திரு வுருவில் கரு நெடுமால் ரேயன் என்றும்
திரேதைக் கண் வளை யுருவாய் திகழ்ந்தான் என்றும்
பெரு வடிவில் கடல் அமுதம் கொண்ட காலம் பெருமானைக் கரு நீல வண்ணன் தன்னை
ஒரு வடிவத் தொரு உரு என்று உணரலாகா -திரு நெடும் -4-

அந்தந்த யுகங்களின் குணங்களை அபிவருத்தி செய்யும் பல ரூபங்களை யுடையவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

இன்னது இப்படிப்பட்டது என்று நிரூபிக்க முடியாத ரூபம் உள்ளவர் -ஸ்ரீசங்கரர் –

இப்படிப் பட்டது என்று வர்ணிக்க முடியாத திரு மேனி உடையவர் -ஸ்ரீ சத்ய சந்தர் –

——————

663-விஷ்ணு –
எங்கும் வியாபித்து இருப்பவன்
சிருஷ்டி -அந்தர் பிரவேசம் -வ்யாப்தி -நியமனம் -நான்கும் உள்ள சகதீசன் -சர்வ சகத் யாத்மனே
என்னைக் கொண்டு என் பாவம் தன்னையும் பாறக் கைத்து —எம்பிரான் விட்டுவே -2-7-4-
முன்பே 2-259-பார்த்தோம் –

ஸ்வரூபத்தினாலும் நடத்துவது முதலிய சக்தியினாலும் எல்லாவற்றையும் வியாபித்து இருப்பவர் –ஸ்ரீ பராசர பட்டர் –

சர்வ சக்த்யாத்மநே
யஸ்மாத் விஷ்டமிதம் சர்வம் தஸ்ய சக்த்யா மஹாத்மந தஸ்மாத் ச ப்ரோச்யதே பிரவேச நாத்
விஷ்ணுர் விக்ரமனாத் –உத்யோகபர்வம்

எல்லா வற்றையும் வியாபித்துள்ள மிக்க ஒளியையுடையவர் –ஸ்ரீசங்கரர் –

எங்கும் பரவியிருப்பவர் -எல்லையற்றவர் -என்றபடி -பலவகையாக விஷ்ணு சப்தம் விளக்கப் படும் -ஸ்ரீ சத்ய சந்தர் –

—————-

664-வீர
வீரன்
வெங்கதிரோன் -குலத்துக்கு ஓர் விளக்காய் தோன்றி
விண் முழுதும் உய்யக் கொண்ட -வீரன் -பெருமாள் திரு -10-9-
சங்கோடு சக்கரம் உலக்கை ஒள் வாள் தண்டு கொண்டு புள்ளூர்ந்து உலகில்
வன்மையுடைய அரக்கர் அசுரரை மாளப் படை பொறுத்த நன்மை உடையவன் -3-10-1-
அன்று இலங்கை நீறு செய்து சென்று கொன்று வென்றி கொண்ட வீரனார் -திருச் -116-

தமது கட்டளையை எதிர்பார்த்து இருக்கும் கதை சக்கரம் மூலமாக விரைவில் நல்லோர்களை துன்புறுத்தும்
துஷ்டர்களை அழிப்பவர்-வீரமுடையவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

ஆஞ்ஞாத ப்ரவீஷ கேனைவ கதா சக்ர த்வயேன து ப்ரேரிதேந ஹிநஸ்த்யாசு சாது சந்தாபக காரிண

கதி படைப்பு ஒளி இருப்பிடம் போஜனம் இவற்றை உடையவர் -ஸ்ரீ சங்கரர் –

தம்முடைய நினைவுக்கு ஏற்றபடி சுகம் உடையவர் -அல்லது சாமர்த்தியம் உடையவர் -ஸ்ரீ சத்ய சந்தர் –

—————————————————————-

ஸ்ரீ யபதியே ஸ்ரீ பர ப்ரஹ்மம்-

607-ஸிவ-இவ்வுலக போகத்தையும் முக்தியையும் விரும்பும் யாவர்க்கும் தக்க நன்மைகளைச் செய்பவர் —
608-ஸ்ரீ வத்ஸ வஷா-ஸ்ரீ வத்சவம் என்னும் மருவை தன் மார்பில் அடையாளமாகக் கொண்டவர் –
-இந்த மருவைப் பீடமாகக் கொண்டே ஸ்ரீ மஹா லஷ்மி வீற்று இருக்கிறாள் –
609-ஸ்ரீ வாஸ-ஸ்ரீ தேவி விளையாடி இன்புறும் தோட்டமான மார்பை உடையவர் –
610-ஸ்ரீ பதி-ஸ்ரீ தேவிக்குத் தகுந்த கணவர் –

611-ஸ்ரீ மதாம் வர -ஸ்ரீ லஷ்மீ கடாஷம் உடைய நான்முகன் முதலான அனைவரையும் விடச் சிறந்தவர் –
612-ஸ்ரீத-அப் பொழுதைக்கு அப் பொழுது புதியதான அன்பை திரு மகளுக்கு அளிப்பவர்
613-ஸ்ரீ ச -பிராட்டியின் பெருமைக்கே காரணமானவர் -திருவுக்கும் திரு –
614-ஸ்ரீ நிவாச -கற்பகக் கொடி மரத்தைச் சார்ந்து இருப்பது போலே பிராட்டிக்கு கொழு கொம்பாக இருப்பவர் –
615-ஸ்ரீ பதி -ரத்னத்துக்கு பேழை போலே பிராட்டியைத் திருமார்பில் கொண்டவர் –
616-ஸ்ரீ விபாவன -பிராட்டியின் தொடர்பால் பெருமையால் வளர்பவர் –
617-ஸ்ரீ தர -மாணிக்கம் ஒளியையும் பூ மணத்தையும் பிரியாதாப் போலே பிராட்டியைப் பிரியாதவர் –
618-ஸ்ரீ கர -பர ரூபத்தைப் போலே வ்யூஹத்திலும் பிராட்டியைப் பிரியாமல் இருப்பவர் –
619-ஸ்ரேய ஸ்ரீ மான் -பக்தர்கள் தங்கள் பயன்களுக்காக வேண்டிக் கொள்ளும் பிராட்டிக்கே ஸ்வாமி –
620-லோகத்ர ஆஸ்ரய -ஜகன் மாதாவான பிராட்டியோடு கூடி மூ உலகங்களுக்கும் தந்தையாய் இருப்பவர் –

621-ஸ்வஷ–பிராட்டியின் அழகைப் பருகும் திருக் கண்களை உடையவர் –
622-ஸ்வங்க-பிராட்டியே ஆசைப்படும் திருமேனி அழகு உடையவர் –
623-சதா நந்த -இருவருக்கு உள்ளும் வளரும் அன்பினால் எல்லையில்லா ஆனந்தம் உடையவர் –
624-நந்தி -எங்கும் எப்போதும் எல்லா வகைகளிலும் அவளோடு ஆனந்தப் படுபவர் –
625-ஜ்யோதிர் கணேஸ்வர -தங்கள் இருவருக்கும் விஷ்வக் சேனர் ஆதி சேஷன் முதலானாரோல் தொண்டு செய்யப் பெற்றவர் –
626-விஜிதாத்மா -திரு மகளைப் பிரியாத போதும் பக்தர்கள் இடத்திலே உள்ளத்தை வைப்பவர் –
627-விதேயாத்மா -இங்கு வா அங்கு நில் இங்கு உட்கார் இதை உண் என்று பக்தர்கள் கட்டளை இடும்படி அடங்கி இருப்பவர் –
628-சத்கீர்த்தி -இப்படிப் பட்ட எளிமையினால் தூய புகழ் படைத்தவர் –
629-சின்ன சம்சய -இவரை அறிய முடியுமா முடியாதா -பெரியவரா எளியவரா -என்ற ஐயங்களை அறிபவர் –

—————————————————————-

ஸ்ரீ அர்ச்சாவதாரம் -கண்களுக்கு புலப்படும் சௌலப்யம் –

630-உதீர்ண-அனைவரும் கண்ணால் காணும்படி அவதரிப்பவர் –
631-சர்வதஸ் சஷூ -அவதாரத்துக்கு பிற்பட்டவர்களுக்கும் அர்ச்சை விக்ரஹ உருவில் கோயில் கொண்டு அனைவராலும் தர்சிக்கப் படுபவர் –
632-அ நீஸ–நீராடவும் உண்ணவும் பிறரை எதிர் பார்க்கிறபடியால் அர்ச்சையில் சுதந்தரமாக இல்லாதவர் –
633-சாச்வதஸ்திர -அவதாரங்களைப் போலே முடிந்து போகாமல் அர்ச்சையில் பல வடிவங்களில் எக்காலமும் இருப்பவர் –
634-பூசய–கோயில்களில் பக்தர்கள் வேண்டுகோளுக்கு இணங்க பூமியிலே சயனித்தவர்-
635-பூஷண-எளிமை குணத்தால் அலங்கரிக்கப் பட்டவர் –
636-பூதி -தன் பக்தர்களுக்கு உலகச் செல்வம் மற்றும் பக்திச் செல்வம் ஆகிய அனைத்துமாய் இருப்பவர் –
637-அஸோக-தன் அடியார்களைக் காக்கிற படியால் சோகம் துன்பம் அற்று இருப்பவர்
638-சோக நாசன –இவனைப் பிரிவதே துன்பம் என்று இருக்கும் பக்தர்கள் நடுவே இருந்து அந்த துன்பத்தைப் போக்குபவர்
639-அர்ச்சிஷ்மான் -பக்தர்களின் உட் கண்ணையும் வெளிக் கண்ணையும் திறக்கும் ஒளி படைத்தவர் –
640-அர்ச்சித-புண்ய ஷேத்ரங்களிலும் வீடுகளிலும் கண்ணால் காணும் படி அர்ச்சை வடிவைக் கண்டவர் –

641-கும்ப -அடியார்களுக்கு பழகின வடிவத்தில் ஒளி விடுபவர் –
642-விசூத்தாத்மா -தன்னிடம் பக்தர்கள் அனைவரும் அனைத்தையும் அனுபவிக்கும் படி பாகுபாடில்லாத தூய உள்ளம் உடையவர் –
643-விசோதன -புண்ய ஷேத்ரங்களில் உடலை விட்டவர்களின் வினையை முடித்து தூய்மை படுத்துபவர் –
644-அநிருத்த–அநிருத்தனான தான் வசூ பாண்டம் என்னும் ஷேத்ரத்தில் ஜனார்தனன் வடிவில் இருப்பவர் –
645-அப்ரதிதர -ஜனார்த்தனராய் தீயவர்களை அழிப்பதில் தந் நிகர் அற்றவர் –
646-பிரத்யும்ன -தானே ஒளிவிடும் புருஷோத்தமனாய் இருப்பவர் -பூரி ஜகன்னாத ஷேத்ரம்
647-அமிதவிக்கிரம -எல்லை இல்லாத த்ரிவிக்ரம அவதாரம் எடுத்தவர் -யமுனைக்கரை ஷேத்ரம் –
648-காலநேமி நிஹா -கால சக்ரத்தின் நேமியாகிய அறிவின்மையை ஒழிப்பவர்-
649-சௌரி-சௌரி என்ற பெயர் பெற்ற வசூ தேவரின் மகன் -திருக்கண்ண புரம் சௌரி ராஜ பெருமாள் –
650-சூர -அரக்கர்களை அளிக்கும் சூரனான இராமன் -சித்ர கூடம்

651-சூர ஜநேச்வர -சூரர்களுக்கு எல்லாம் தலைவர்
652-த்ரிலோகாத்மா -தெய்வங்களுக்கு எல்லாம் தலைவர் -மகத தேசத்தில் மஹா போதம் -என்னும் கயா ஷேத்ரத்தில் இருப்பவர் –
653-த்ரி லோகேச-மூன்று உலகங்களுக்கு தலைவர் -ப்ராக்ஜ்யோதி ஷபுரம் என்னும் இடத்தில் விஸ்வேஸ்வரன் என்னும் பெயரோடு கோயில் கொண்டவர் –
654-கேசவ -க்லேசங்களை-துன்பங்களைப் போக்குபவர் –பிரம்மா ருத்ராதிகளுக்கு தலைவர் -வடமதுரை வாரணாசி திவ்ய தேசங்களில் இருப்பவர் –
655-கேசிஹா -கேசி என்னும் அசுரனை அழித்தவர்
656-ஹரி- பாபங்களைப் போக்குபவர் -பச்சை நிறமானவர் -கோவர்த்தன மலையில் இருப்பவர்-
657-காம தேவ -ஹிமாசலத்தில் சங்கராலயத்தில் அப்சரஸ்ஸூக்களால் வணங்கப் படும் பேர் அழகு படைத்தவர் –
658-காம பால -தன் அடியார்களுக்கு கொடுத்த பலன்களைக் காப்பவர் –
659-காமீ -அனைவராலும் விரும்பப் படுபவர் –
660-காந்த -தன் அழகாலே காந்தம் போலே அனைவரையும் ஈர்ப்பவர் –

———————————————————————————–

சக்தீச அவதாரம் –

661-க்ருதாகம -வேத ஆகம மந்த்ரங்களில் மறைந்து இருக்கும் தம்மை வெளிப்படுத்துமவர் –
662-அநிர்தேச்யவபு -இப்படி எனும் சொல்ல முடியாத திவ்ய வடிவை உடையவர் –
663-விஷ்ணு -எங்கும் நிறைந்து இருத்தல் -ஆணை செலுத்துதல் ஆகிய சக்தியால் உலகம் முழுதும் விரிந்து இருப்பவர் –
664-வீர -துஷ்டர்களை அழிக்கும் வீரம் உடையவர் –

—————————————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பராசர பட்டர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பீஷ்மர் திருவடிகளிலே சரணம்
ஸ்ரீ வியாச பகவான் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: