ஸ்ரீ விஷ்ணு சகஸ்ர நாமம்–3-28-தர்ம ஸ்வரூபி -471-502-திரு நாமங்கள் /3-29-ஸ்ரீ ராமனாய் தர்ம ரஷகத்வம் -503-513-திரு நாமங்கள்/ 3-30-பாகவத ரஷகன் திரு நாமங்கள் -514-519/3-31-ஸ்ரீ கூர்ம ரூபி -520/521 திரு நாமங்கள்/3-32-ஸ்ரீ அநந்த சாயி -522/523 திரு நாமங்கள் / 3-33-பிரணவ ஸ்வரூபி -524-528-திரு நாமங்கள் / 3-34–ஸ்ரீ கபில அவதாரமாய் ரஷணம் -529-538 திருநாமங்கள் –/ 3-35-வராஹ அவதார திரு நாமங்கள் -539-543-/ 3-36- சுத்த ஸ்வரூபி -544-568-திரு நாமங்கள் –/ 3-37-நாராயண அவதார விஷய திரு நாமங்கள் 569-574 / 3-28-ஸ்ரீ வேத வியாச பகவான் -திரு அவதார திரு நாமங்கள் -575-589- / 3-29-தர்மம் படி பலன் அளிப்பவன் -திரு நாமங்கள் -590-606-

ஸ்வாபன ஸ்வ வஸோ வியாபி நைகாத்மா நைக கர்மக்ருத்
வத்சரோ வத்சலோ வத்சீ ரத்ன கர்ப்போ தனேஸ்வர –50
தர்மகுப் தர்மக்ருத் தர்மீ சதஷரம சத்ஷரம்
அவிஜ்ஞாதா சஹஸ்ராம் ஸூர் விதாதா க்ருதலஷண–51
கபஸ்தி நேமிஸ் சத்வஸ்தஸ் சிம்ஹோ பூத மகேஸ்வர
ஆதிதேவோ மஹாதேவோ தேவேசோ தேவப்ருத்குரு–52
உத்தரோ கோபதிர் கோப்தா ஜ்ஞானகம்ய புராதன
சரீர பூதப்ருத் போக்தா கபீந்த்ரோ பூரி தஷிண –53-
சோமப அம்ருதபஸ் சோம புருஜித் புருசத்தம
விநயோ ஜயஸ சத்ய சந்தோ தாசார்ஹஸ் சாத்வதாம் பதி—54

ஜீவோ விநயிதா சாஷி முகுந்தோ அமிதவிக்ரம
அம்போ நிதி ர நந்தாத்மா மகோததிச யோந்தக –55
அஜோ மகார்ஹஸ் ஸ்வா பாவ்யோ ஜிதாமித்ர ப்ரமோதன
ஆனந்தோ நந்தநோ நந்தச் சத்ய தர்மா த்ரிவிக்ரம ——–56
மஹர்ஷி கபிலாசார்யா க்ருதஜ்ஞோ மேதிநீ பதி
த்ரிபதஸ் த்ரிதசாத்யஷோ மகாஸ்ருங்க க்ருதாந்தக்ருத் –57
மஹா வராஹோ கோவிந்தஸ் ஸூ ஷேண கனகாங்கதீ
குஹ்யோ கபீரோ கஹநோ குப்தஸ் சக்ர கதாதர –58-

வேதாஸ் ச்வாங்கோ சித க்ருஷ்னோ த்ருடஸ் சங்கர்ஷண அச்யுத
வருணோ வாருணோ வ்ருஷ புஷ்கராஷோ மஹா மன —59-
பகவான் பகஹா நந்தி வன மாலீ ஹலாயுத
ஆதித்யோ ஜ்யோதியஸ் சாஹிஷ்ணுர் கதி சத்தம–60-
ஸூதந்வா கண்ட பர ஸூர் தாருணோ த்ரவிண ப்ரத
திவிஸ் ப்ருக் சர்வத்ருக் வாசோ வாசஸ்பதி ரயோ நிஜ -61
த்ரிசாமா சாமகஸ் சாம நிர்வாணம் பேஷஜம் பிஷக்
சந்யா சக்ருச் சமஸ் சாந்தோ நிஷ்டா சாந்தி பராயணம் –62
ஸூபாங்கஸ் சாந்திதஸ் ஸ்ரஷ்டா குமுத குவலேசய
கோஹிதோ கோபதிர் கோப்தா வ்ருஷபாஷோ வ்ருஷப்ரிய —63-
அனுவர்த்தீ நிவ்ருத்தாத்மா சம்ஷேப்தா ஷேமக்ருச்சிவ
ஸ்ரீவத்ச வஷாச் ஸ்ரீ வாசச் ஸ்ரீ பதிச் ஸ்ரீ மதாம் வர –64

———–

3-1-பிரதம அவதாரம் விஷ்ணு -147-152- திரு நாமங்கள்–6 -திரு நாமங்கள்
3-2-வாமன அவதார பரமான -153-164 திரு நாமங்கள் —12-திரு நாமங்கள்
3-3- துஷ்ட நிக்ரஹ இஷ்ட பரிபாலநம் -165-170-திரு நாமங்கள்–6-திரு நாமங்கள்
3-4-ஜ்ஞானாதி பகவத் குணங்கள் கொண்டவன் -171-181- திரு நாமங்கள்-11-திரு நாமங்கள்
3-5-குணங்களுக்கு ஏற்ற அவதார செயல்கள் -182-186-திரு நாமங்கள்–5 திரு நாமங்கள்
3-6-ஹம்ஸாவதாரம் -187-194-திரு நாமங்கள்-7 திரு நாமங்கள்
3-7-பத்மநாபாவதாரம்-195-199-திரு நாமங்கள்-5 திரு நாமங்கள்
3-8-நரசிம்ஹ அவதாரம் ——200-210—திரு நாமங்கள்—11 திரு நாமங்கள்
3-9-மத்ஸ்ய அவதார -211-225- திரு நாமங்கள் –15-திரு நாமங்கள்
3-10- புருஷ ஸூக்த உபநிஷத் ப்ரதிபாதித விராட் ஸ்வரூப—226-247- திரு நாமங்கள் -22-திரு நாமங்கள்
3-11–சித் அசித் -இவைகளாலான -ஐஸ்வர்ய -பூர்த்தி -248-271-திரு நாமங்கள் -23-திரு நாமங்கள்
3-12-விஸ்வ ரூபம் —272-300-திரு நாமங்கள் -29-திரு நாமங்கள்
3-13-ஆலிலை மேல் துயின்ற –வட பத்ர சாயி -301-313-திரு நாமங்கள்–14-திரு நாமங்கள்
3-14-ஸ்ரீ பரசுராம -ஆவேச சக்தி -அவதாரம் -314-321-திரு நாமங்கள்–8-திரு நாமங்கள்
3-15-ஸ்ரீ கூர்மாவதாரம் -322-332-திரு நாமங்கள்–11-திரு நாமங்கள்

3-16- பர வாசுதேவன் குண வாசகம் -333-344-திரு நாமங்கள்-12 திரு நாமங்கள்
3-17-பர வாசுதேவன் ரூப குண வாசகம் -345-350 திரு நாமங்கள்-6 திரு நாமங்கள்
3-18-ஐஸ்வர்ய வாசக -351-360-திரு நாமங்கள்-11-திரு நாமங்கள்
3-19-ஸ்ரீ லஷ்மி சம்பந்தம் -361-379-திரு நாமங்கள்–19-திரு நாமங்கள்
3-20-சேதனர்கள் உடன் இணைந்து இருக்கும் ஒட்டின்மை -380-384-திரு நாமங்கள்-5 திரு நாமங்கள்
3-21-த்ருவ–385-389-திரு நாமங்கள்-5 திரு நாமங்கள்

3-22-ஸ்ரீ ராம அவதார -390-421-திரு நாமங்கள்–32-திரு நாமங்கள்-
3-23-கல்கி அவதார -422-436-திரு நாமங்கள்–15-திரு நாமங்கள்
3-24-ஜ்யோதிர் மண்டலத்துக்கு ஆதாரம் -437-445-திரு நாமங்கள் –8-திரு நாமங்கள்
3-25-யஞ்ஞ ஸ்வரூப -446-450-திரு நாமங்கள்–15-திரு நாமங்கள்
3-26 நிவ்ருத்தி தர்ம ப்ரவர்தக -451-457-திரு நாமங்கள்–6-திரு நாமங்கள்
3-27-அலை கடல் கடைந்து அமுதம் கொண்டவன் -458-470-திரு நாமங்கள்-12-திரு நாமங்கள்

3-28-தர்ம ஸ்வரூபி -471-502-திரு நாமங்கள்–31-திரு நாமங்கள்
3-29-ஸ்ரீ ராமனாய் தர்ம ரஷகத்வம் -503-513-திரு நாமங்கள்–14 திரு நாமங்கள்
3-30-பாகவத ரஷகன் திரு நாமங்கள் -514-519–6 திரு நாமங்கள்
3-31-ஸ்ரீ கூர்ம ரூபி -520/521 திரு நாமங்கள்–2 திரு நாமங்கள்
3-32-ஸ்ரீ அநந்த சாயி -522/523 திரு நாமங்கள்–2-திரு நாமங்கள்
3-33-பிரணவ ஸ்வரூபி -524-528-திரு நாமங்கள்–5-திரு நாமங்கள்
3-34–ஸ்ரீ கபில அவதாரமாய் ரஷணம் -529-538 திருநாமங்கள் –9-திரு நாமங்கள்
3-35-வராஹ அவதார -539-543-திரு நாமங்கள்–4-திரு நாமங்கள்
3-36- சுத்த ஸ்வரூபி -544-568-திரு நாமங்கள் –24-திரு நாமங்கள்
3-37-நாராயண அவதார விஷய 569-574 திரு நாமங்கள்–5-திரு நாமங்கள்
3-28-ஸ்ரீ வேத வியாச பகவான் -திரு அவதார -575-589-திரு நாமங்கள்-14-திரு நாமங்கள்
3-29-தர்மம் படி பலன் அளிப்பவன் –590-606-திரு நாமங்கள்–16-திரு நாமங்கள்

———————————————————————————-

ஸ்வாபன ஸ்வ வஸோ வியாபி நைகாத்மா நைக கர்மக்ருத்
வத்சரோ வத்சலோ வத்சீ ரத்ன கர்ப்போ தனேஸ்வர –50

—–

3-28-தர்ம ஸ்வரூபி -471-502-திரு நாமங்கள்

471-வத்சர –
எதிலும் யாவரிலும் உள்ளுறைபவன்
உள்ளுவார் உள்ளிற்று எல்லாம் உடன் இருந்து அறிதி -திருமாலை -34-

தர்மாத்மா -அவரவர் வேண்டியவற்றைக் கொடுப்பதற்காக எல்லாரிடமும் அந்தர்யாமியாக இருப்பவர் –ஸ்ரீ பராசர பட்டர் –

சர்வ அந்தரச் சாரிணே தர்மாத்மநே

எல்லாவற்றிற்கும் தாமே இருப்பிடமானவர் —ஸ்ரீ சங்கரர்-

ஸ்ரீ கிருஷ்ணாவதாரத்தில் கன்றுகளுடன் சேர்ந்து மகிழ்பவர் -வத்சாசூரனை அழித்தவர்–ஸ்ரீ சத்ய சந்தர் –

—————-

472-வத்சல –
அன்புடையவன் -சரணாகதி வத்சல்யன்
தன் அன்பர்க்கு அன்பாகுமே –
அன்பனாகும் தன தாள் அடைந்தார்க்கு எல்லாம்

நெடுநாள் தம்மைப் பற்றி இருப்பவர்களிடத்தில் காட்டிலும் அப்போதே தம்மைச் சரணம் அடைந்தவர் விஷயத்தில் பசுக்கள் அன்று
ஈன்ற கன்றை நினைத்துக் கனைத்துக் குமுறி முலை கடுத்துப் பாலைச் சொரிந்து என் செய்வது என்று படுவது போலே இருப்பவர் –
அடியவர்களைக் காப்பதற்காக பகவான் இக் குணத்தை உப கரணமாகக் கொண்ட படியால் அன்றோ
இக் குணம் மிகவும் புகழை அடைந்தது –ஸ்ரீ பராசர பட்டர் –

விவித ச ஹி தர்மஜ்ஜ சரணாகத வத்சல–ஸூந்தர 21-20-

பக்தர்கள் இடத்தில் அன்பு யுடையவர் —ஸ்ரீ சங்கரர்-

அடியவர்கள் இடத்தில் தயை யுள்ளவர்–ஸ்ரீ சத்ய சந்தர் –

———————-

473-வத்சீ-
குழந்தைகளை உடையவன்
கன்று மேய்த்து இனிது உகந்த காளாய்
திவத்திலும் பசு நிரை மேய்ப்பு உவத்தி
இப்படி எல்லாக் காலமும் தம்மால் போஷிக்கப் படத் தக்க ஆத்மாக்களை மிகுதியாக யுடையவர் –ஸ்ரீ பராசர பட்டர் –

மக்களைக் காப்பவர் -உலகிற்குத் தந்தையாதலால் உலகத்தவர்களைக் குழந்தைகளாக யுடையவர் –ஸ்ரீ சங்கரர்-

ஸ்ரீ வத்சத்தை -மருவை -யுடையவர் —ஸ்ரீ சத்ய சந்தர் –

——————-

474-ரத்ன கர்ப்ப –
வைத்த மா நிதியம் மது சூதனன் -6-7-11

அவர்களில் செல்வம் வேண்டுபவர்களுக்குக் கொடுக்கத் தக்க செல்வம் மிகுதியாக யுடையவர் –ஸ்ரீ பராசர பட்டர் –

காமார்த்தை உத்வ ஹந்தம் ச சங்கு சக்ரஸ் சலேந து –ஆஸ்ரிதற்கு வழங்க செல்வங்களாக சங்கு சக்கரங்கள் தரித்துள்ளான்

ரத்னங்களைக் கொண்ட கடலாக இருப்பவர் –ஸ்ரீ சங்கரர்-

வயிற்றிலே ரத்னங்களை யுடையவர் —ஸ்ரீ சத்ய சந்தர் –

——————-

475-தநேச்வர-
ஐஸ்வர்யம் உடனே அளிப்பவன்
வள்ளல் மணி வண்ணன்
சேரும் கொடை புகழ் எல்லை இலான் -3-9-7-

அவரவர் விரும்பிய செல்வத்தை உடனே தருபவர் –ஸ்ரீ பராசர பட்டர் –

செல்வங்களுக்கு அதிபதி –ஸ்ரீ சங்கரர்-

செல்வங்களுக்குப் பிரபுவாக இருப்பவர் —ஸ்ரீ சத்ய சந்தர் –

——-

தர்மகுப் தர்மக்ருத் தர்மீ சதஷரம சத்ஷரம்
அவிஜ்ஞாதா சஹஸ்ராம் ஸூர் விதாதா க்ருதலஷண–51

——————–

476-தர்மகுப் –
தர்மத்தை ரஷிப்பவன்-ராமோ விக்ரஹவான் தர்ம
அறம் சுவராகி நின்ற அரங்கனார் -திருமாலை -6-

தம்மால் அளிக்கப்பட அர்த்த கர்மங்களை தீய வழிகளில் செல்லாமல் தடுத்து தர்மத்தைக் காப்பவர் –ஸ்ரீ பராசர பட்டர் –

சாது மார்க்க ஸ்திதா நாம் ச சமயச்சந்தம் தியா ச தவ் –தர்ம வழியில் உள்ளாருக்கு
நிலையான செல்வங்களையும் விருப்பங்களையும் அளிக்கிறான்

தர்மங்களைக் காப்பவர் –ஸ்ரீ சங்கரர்-

தர்மபுத்ரரை -அல்லது புண்யத்தைக் காப்பவர் -தர்ம சாதனங்களான வேத வாக்குகளைக் காப்பவர் —ஸ்ரீ சத்ய சந்தர் –

—————-

477-தர்மக்ருத் –
தர்மத்தை அனுஷ்டிப்பவன்
அந்தராத்மாவாக இருந்து செய்விப்பவனும் அவனே
செய்வார்களைச் செய்வேனும் யானே -5-6-4-

காரணம் அற்ற அருளால் எல்லோரையும் தருமத்தைப் பின்பற்றும்படி செய்பவர் –ஸ்ரீ பராசர பட்டர் –

தர்மம் சாமான்யம் அமலம் அநாதி நிதனம் விபும் துர்லபம் யத் ப்ரபுத்தா நாம் தத் ப்ரசாததியா விநா –அவன் கிருபை
இல்லாமல் ஞானவான்களாலும் தோஷம் அற்ற தர்மங்களை அடைய முடியாதே

தர்ம அதர்மங்கள் அற்றவர் ஆயினும் தர்மத்தைக் காப்பதற்காக அதை அனுஷ்டிப்பவர் –ஸ்ரீ சங்கரர்-

தர்மத்தைச் செய்பவர் -பக்தர் அல்லாதோரின் தர்மத்தை அழிப்பவர்—ஸ்ரீ சத்ய சந்தர் –

————–

478-தார்மீ
தர்மத்தை யுடையவன்
நெறி எல்லாம் எடுத்து உரைத்த நிறை ஞானத்து ஒரு மூர்த்தி -4-8-6-

எல்லாவற்றையும் காப்பதற்கு தர்மத்தையே உபகரணமாகக் கொண்டவர் –ஸ்ரீ பராசர பட்டர் –

தர்மங்களைத் தாங்குபவர் –ஸ்ரீ சங்கரர்-

யமதர்மனை நியமிப்பவர் —ஸ்ரீ சத்ய சந்தர் –

—————

479-சத்
தர்ம ஸ்வரூபியாக இருப்பவன்
ஓம் தத் சத் -ப்ரஹ்மத்தையும் வேதத்தையும் குறிக்கும்
பக்திக்கு சுலபன் வசப்பட்டவன்
பத்துடை அடியவர்க்கு எளியவன்

சிறந்த வஸ்துவாகிய தர்மமே வடிவாக இருப்பவர் -இந்த தர்மத்தையே சத் என்று கொண்டாடுவது
இதனால் சாதிக்கப்படும் பகவான் சத்தாக இருப்பதாலேயே ஆகும் –
அவனுடைய சத்தாய் இருக்கும் தன்மை இயற்கையாகவே அமைந்துள்ளது –
எப்போதும் சத்தாய் இருப்பது –ஸ்ரீ பராசர பட்டர் –

பிரசஸ்தே கர்மணி ததா ஸச் சப்த பார்த்த யுஜ்யதே –ஸ்ரீ கீதை -17-27–உள்ளது நல்லது என்னும்
பொருளில் -சத் -மிகவும் உயர்ந்தவன்
ஸத்பாவே சாது பாவே ச சதித்யேதத் ப்ரயுஜ்யதே —-ஸ்ரீ கீதை -17-27-

சுத்த ப்ரஹ்மம் –ஸ்ரீ சங்கரர்-
அழிப்பவர் —ஸ்ரீ சத்ய சந்தர் –

——————-

480-சதஷரம்
அஷரம் சத் குறைவில்லாத நித்யன் நிருபாதிகன்
அருகலிலாய பெரும் சீர் அமரர்கள் ஆதி முதல்வன் -1-9-3-
வான் உயர் இன்பம் மன்னி வீற்று இருந்தான் -8-1-9-

இப்படி எல்லாக் காலத்திலும் குணங்களும் ஸ்வரூபமும் குறைவுபடாது இருப்பவர் -அஷரம் என்றது சத் என்பதற்கு அடை மொழி –
அழியாத சத் -எனபது பொருள் -ஷரம் எனபது ஏதோ ஒரு காலத்தில் அல்லது தேசத்தில் அழிவதைக் குறிக்கும் –ஸ்ரீ பராசர பட்டர் –

அபஷய விநாசாப்யாம் பரிணாமர்த்தி ஜந்மபி வர்ஜித சக்யதே வக்தும் ய சதா அஸ்தீதி கேவலம் -ஸ்ரீ விஷ்ணு புராணம் -1-2-21-
சதேவ சோம்ய இதம் அக்ர ஆஸீத் –சாந்தோக்யம் 6-2-1-

அழியாத ப்ரஹ்மம் –ஸ்ரீ சங்கரர்-
அழியாத ஸ்ரீ வைகுண்டம் முதலிய இடங்களில் மகிழ்பவர் -அழிவற்றவர் —ஸ்ரீ சத்ய சந்தர் –

—————-

481-482-அசத் -ஷரம்-
துக்கத்தை தருபவன்
மெய்யர்க்கே மெய்யனாகும்
மெய்யனாகும் விரும்பித் தொழுவார்க்கு எல்லாம்

அசத்-
பாபிகளிடம் நில்லாமல் இருப்பவர் –ஸ்ரீ பராசர பட்டர் –

வேறு ப்ரஹ்மம் -பெயர் வடிவம் முதலிய அவித்யையோடு கூடிய ப்ரஹ்மம் –ஸ்ரீ சங்கரர்-

அழிவற்றவர் -அறிய
முடியா ரூபத்தை யுடையவர் —ஸ்ரீ சத்ய சந்தர் –

அசத் ஷரம் –
பாபிகளுக்கு முடிவற்ற சம்சார துக்கத்தை கொடுப்பவர் –ஸ்ரீ பராசர பட்டர் –

ஏஷ ஏவ சாது கர்மா காரயதி தம் யமேப்யோ லோகேப்யஸ் உன்னி நீஷதி ஏஷ ஏவா சாது கர்ம காரயதி தம் யமதோ நிநீஷதி–
நல்லோர்களை நல்ல செயல்களை செய்விப்பவனும் அவனே தீயோர்களை தீய செயல்களை செய்விப்பவனும் அவனே
அசச்ச ஸச் சைவை ச யத் விஸ்வம் சத் அசத் பரம்

ஷரம் -அழியும் எல்லா பூதங்களுமாக இருப்பவர் –ஸ்ரீ சங்கரர்-

எப்போதும் கொடுப்பவர் -உலகை அழிப்பவர்—ஸ்ரீ சத்ய சந்தர் –

——————

483-அவிஜ்ஞ்ஞாதா –
அறியாதவன்
அடியார்கள் தோஷங்களை காணாக் கண் இட்டு
என் அடியார் அது செய்யார்

அடியவர்கள் செய்யும் குற்றங்களைக் கண்டும் தண்டியாதவர் மட்டும் அல்லாமல் குற்றங்களையே அறியாதவர் -ஸ்ரீ பராசர பட்டர்

உச்யமாநோபி பருஷம் நோத்தரம் பிரதிபத்யதே –ஸ்ரீ ராமாயணம் -தாழ்வான சொற்களை உரைப்பார்க்கு ராமன் பதில் சொல்லுவது இல்லை
ப்ரபந்ந அபராத அபரிகணநம் து குண ஏவ அதோ ஹி தாதபாதா சர்வஞ்ஞதாம் ஏவம் உபாலபாமஹே
த்வம் ஹி அஞ்ஞ ஏவ ஆஸ்ரித தோஷ சோஷண–ஸ்ரீ கூரத்தாழ்வான்

எவர்கள் ப்ரஹ்மாமானது ஞான மாத்ரமே என்று கூறி அது ஞானம் என்ற குணத்தைக் கொண்டதன்று என்று கூறுகிறார்களோ –
வேதங்களின் பொருள் ஆசார்யர்களுடைய முடிவுகள் நியாயம் ஆகிய விஷயங்களில் செவிடர்களாகவே உள்ள அவர்கள்
பகவானுடைய இந்த உயர்ந்த குணங்களை அறிந்து கொள்ள வில்லையே என்று
வருந்தத் தக்கவர்களே அன்றி கண்டிக்கத் தகுதி யுள்ளவர்கள் அல்லர் -ஸ்ரீ சங்கரர்

ஆத்மாவில் செயல் உண்டு என்று தவறாக அறிபவன் ஜீவன் -அவ்வாறு தவறாக அறியாதவர் விஷ்ணு –
முழுவதுமாக அறியப் படாதவர் -ஸ்ரீ சத்ய சந்தர்

—————

484-சஹஸ்ராம்சு-
எல்லையில் ஞானத்தன்
மிக்க ஞான மூர்த்தியாய் வேத விளக்கு -4-7-10-

அடியவர்கள் குற்றங்களைத் தவிர மற்று எல்லாவற்றையும் அறியும் அளவற்ற ஞானங்களை யுடையவர் –
சர்வஜ்ஞ்ஞன் என்பதும் அடியவர்களின் தோஷங்களை அறியாதவன் என்பதும் முரண்பட்டது அல்ல –
அபராதங்களை ஒரு பொருட்டாக நினையாமல் அவற்றை உபேஷித்து கண்டு கொள்ளாமல் விடுதலேயாகும் -ஸ்ரீ பராசர பட்டர்

தோஷோ யத்யாபி தஸ்ய ஸ்யாத் –அயோத்யா -28-3-
அபி சேத ஸூ துராசாரோ பஜதே மாம் அந்ய பாக் –ஸ்ரீ கீதை -9-30-

சூரிய கிரணங்களைத் தம் உடையவையாக யுடையவர் -ஸ்ரீ சங்கரர்

ஆயிரம் கிரணங்கள் உள்ள சூரியனில் இருப்பவர் -ஸ்ரீ சத்ய சந்தர்

——————

485-விதாதா –
விதிப்பவன் -அடக்கி ஆள்பவன்
சாதுவராய் போதுமின்கள் -நமன் தன் தமரிடம்
எங்கள் கோன் அவன் தமர் நமன் தமரால் ஆராயப் பட்டு அறியார் கண்டீர்
நமன் தமர் பாசம் விட்டால் அலைப் பூண் உண்ணும் அவ்வவை எல்லாம் அகல கலைப் பல் ஞானத்து என் கண்ணன் -3-2-10-

பாவங்களுக்குப் பலன் கொடுக்கும் யமனும் அவனுடைய தண்டனைகளும் தம் அடியவர்களைப் பாதிக்காமல் இருக்கும்படி நடத்துபவர் –
இங்கு ஸ்ரீ ப்ரஹ்ம புராணம் -ஸ்ரீ விஷ்ணு புராணம் -ஸ்ரீ வாமன புராணம் -ஸ்ரீ நரசிம்ஹ புராணம் -ஸ்ரீ லிங்க புராணம் –
ஸ்ரீ வைஷ்ணவ தர்மம் -ஸ்ரீ விஷ்ணு தத்வம் -ஸ்ரீ பாகவத புராணம் -முதலியவற்றில் யமனுக்கும் அவனுடைய கிங்கரனுக்கும் இடையே
நடைபெற்ற உரையாடல்கள் பார்க்கத் தக்கன -ஸ்ரீ பராசர பட்டர்

அஹம் அமர வரார்ச்சி தேந தாத்ரா சம இதி லோக ஹித அஹிதே நியுக்த –ஸ்ரீ விஷ்ணு புராணம் –
உலகின் நன்மை தீமைகளுக்காக என்னை நியமிக்கிறார் என்று யமன்

ஆதி சேஷன் திக் கஜங்கள் முதலியோர் பூமியைத் தாங்கும்படி செய்பவர் -ஸ்ரீ சங்கரர்

உலகைத் தாங்குபவர் -கருடனை விசேஷமாக வாகனமாகக் கொண்டவர் -ஸ்ரீ சத்ய சந்தர்

——————

486-க்ருத லஷண –
அடையாளம் இட்டு இருப்பவன்
தீயில் பொலிகின்ற செஞ்சுடர் ஆழி திகழ் திருச் சக்கரத்தின் கோயில் பொறியால் ஒற்று உண்டு
நின்று குடி குடி ஆட் செய்கின்றோம்
மற்றும் புறம் தொழா மாந்தர் முக்கிய லஷணம்

தம்மை அடையக் கூடிய அடியார்களுக்குத் தகுந்த அடையாளம் செய்து இருப்பவர் -தோஷங்களைப் பொறுத்துக் கொள்ள
தீயவர்கள் இடம் இருந்து நல்லவர்களை வேறுபடுத்தி அவர் அறிவது இதனால் -ஸ்ரீ பராசர பட்டர்

மித்ரா பாவேந ஸம்ப்ராப்தம் –யுத்த -28-3-
சம்யக் வ்யவசிதோ ஹி ச –ஸ்ரீ கீதை -9-30-
சக்ர அங்கிதா பிரவேஷ்டவ்ய யாவதா கமநம் மம நாமுத்ரிதா பிரவேஷ்டவ்யா யா தத்ராகமநம் மம –ஸ்ரீ ஹரி வம்சம் –27-24-
சங்கு சக்ர பொறி ஒற்றுக் கொண்டவர்கள் என் அருகில் சேர்க்கப்படுகிறார்கள்
பவதாம் ப்ரமதாமத்ர விஷ்ணு ஸம்ஸ்ரய முத்ரயா விநா ஆஜ்ஞா பங்க க்ருந் நைவ பவிஷ்யதி நர க்வசித் –ஸ்ரீ விஷ்ணு தர்மம் –
சங்கு சக்கரம் பொறித்துக் கொள்ளாதவன் எனது ஆணையை மீறினவர்களில் முதன்மை
சக்ராதி தாரணம் பும்ஸாம் பர சம்வந்த வேதனம் பதிவிரதா நிமித்தம் ஹி வலயாதி விபூஷணம் –ஸ்ரீ விஷ்ணு புராணம்

தம் மார்பில் ஸ்ரீ வத்சம் என்னும் அடையாளம் யுடையவர் -நித்ய சைதன்ய ரூபியாக இருப்பவர் –
லஷணங்கள் ஆகிய சாஸ்த்ரங்களை செய்தவர் -எல்லா வஸ்துக்களும் ஒன்றோடு ஓன்று வேறு பட்டவைகளாக
இருக்கும் இலக்கணங்களைச் செய்தவர் -ஸ்ரீ சங்கரர்

முழுமையான லஷணங்கள் உள்ளவர் -பக்தர்கள் செய்த கர்மங்களைப் பெறுவதில் மகிழ்ச்சி
உள்ளவர் -பூரணமான -இயல்பான -லஷணங்கள் உடைய சுகத்தை யுடையவர் -ஸ்ரீ சத்ய சந்தர்

———–

கபஸ்தி நேமிஸ் சத்வஸ்தஸ் சிம்ஹோ பூத மகேஸ்வர
ஆதிதேவோ மஹாதேவோ தேவேசோ தேவப்ருத்குரு–52

——————-

487-கபஸ்தி நேமி
மிகவும் பிரகாசமான திருச் சக்கரம்
தீயில் பொலிகின்ற செஞ்சுடர் ஆழி திகழ திருச் சக்கரத்தன்
சுடராழி சங்கு ஏந்தி அளிக்கின்ற மாயப் பிரான்
நிமிர் சுடர் ஆழி நெடுமால் -1-6-6

கிரணங்களால் பிரகாசிக்கும் ஆயிரம் முனைகளோடு கூடிய சக்கரம் உடையவர் -இப்படிப்பட்ட அடையாளங்கள் உள்ளவர்களை
ஆயிரம் ஆரங்களுடைய சக்ராயுதத்தை ஏந்தியுள்ள பகவான் காக்கின்ற படியால்
யமனும் அவனுடைய கிங்கரர்களும் நெருங்க முடியாது -ஸ்ரீ பராசர பட்டர்

யதா வசதி மனசி யஸ்ய சோ அவ்யயாத்மா புருஷ வரஸ்ய ந தஸ்ய த்ருஷ்ட்டி பாதே தத்ர கதி-
அதவா மமாஸ்தி சக்ர ப்ரதிஹத வீர்ய பலஸ்ய சோ அந்ய லோக்ய –ஸ்ரீ விஷ்ணு புராணம் -3-7-35-

வட்டமான கிரணங்களின் நடுவில் ஸூர்ய ரூபமாக இருப்பவர் -ஸ்ரீ சங்கரர்

சக்கரத்தின் நேமியில் உள்ளது போல் வட்டமான ஒளியை உடையவர்-ஸ்ரீ சத்ய சந்தர்

—————–

488-சத் வஸத-
ஆஸ்ரிதர் நெஞ்சில் குடி இருப்பவன்
பேரேன் என்று என் நெஞ்சு நிறையப் புகுந்தான் -10-8-2-
வந்து அருளி என் நெஞ்சு இடம் கொண்ட -5-6-7-
வந்தாய் என் மனம் புகுந்தாய் மன்னி நின்றாய் -பெரிய திருமொழி -1-10-9

பக்தர்களின் இதயத்தில் இருப்பவர் -யமனும் கிங்கரர்களும் நெருங்காமல் இருக்க காரணம் அவர்கள் இடம்
பாவங்கள் இல்லாததே யாகும் -அவ்வடியவர்கள் மட்டும் கர்மங்கள் இல்லாதவர்களாக இருப்பதற்குக் காரணம்
பகவான் அவர்களிடம் எழுந்து அருளி இருப்பதே காரணம் -ஸ்ரீ பராசர பட்டர்

ஹ்ருதி யதி பகவான் அநாதி ராஸ்தே ஹரிரபி சக்ர கதாதர அவ்யயாத்மா ததகம் அகவிகாத கர்த்ரு பின்னம் பவதி
கதம் சதி சாந்தகாரம் அர்கே –ஸ்ரீ விஷ்ணு புராணம் -3-7-25 –
ஸ்படிகமணி சிலாமல க்வ விஷ்ணு மனசி ந்ருணாம் க்வ மத் சராதி தோஷ -ஸ்ரீ விஷ்ணு புராணம்-
கிங்கரா தண்ட பாசவ் வா ந யமோ ந ச யாதநா சமர்த்தா தஸ்ய யஸ்யாத்மா கேசவா லம்பன சதா –ஸ்ரீ விஷ்ணு தர்மம் 2-2-18-
ததா அந்ய துக்தம் நரசத்த மேந இஷ்வாஹுனம் பக்தி யுதேந நூநம் யே விஷ்ணு பக்தா புருஷா ப்ருதிவ்யாம்
யமஸ்த தே நிர்விஷயா பவந்தி–ஸ்ரீ வாமன புராணம்

எல்லா பிராணிகள் இடத்திலும் இருப்பவர் –
எல்லாவற்றையும் பிரகாசிக்கச் செய்யும் சத்வ குணத்தை முக்யமாகக் கொண்டவர் -ஸ்ரீ சங்கரர்

வலிமையுடன் திகழ்பவர் -ஜீவனுக்குள் அந்தர்யாமியாக இருப்பவர் -சத்வம் உள்ளவர் -ஸ்ரீ சத்ய சந்தர்

——————

489-சிம்ஹ
ஹிம்சிப்பவன் -ஆஸ்ரித விரோதிகளை
அவர் படக்கனன்று முன் நின்ற காய்சின வேந்தன் -9-2-6

பகவத் பக்தர்களையும் பிறரைப் போலே யமன் முதலியோர் துன்புறுத்துவராயின்
அவர்களை ஹிம்சிப்பவர் -ஸ்ரீ பராசர பட்டர்

பிரபவதி சம்ய மநே மமாபி விஷ்ணு –என்னை நியமிக்கிறார் ஸ்ரீ விஷ்ணு -யமன்
வாஸூ தேவ பரம் த்ருஷ்ட்வா வைஷ்ணவம் தக்த கில்பிஷம் தேவா விபீதா ஸம் யாந்தி பிரணிபத்ய யதாகதம் த்ருஷ்ட்வா யமம்
அபி வை பக்தம் வைஷ்ணவம் தக்த கில்பிஷம் உத்தாய ப்ராஞ்ஜலிர் பூத்வா நநாம ரவி நந்தன தஸ்மாத் ச பூஜயேத்
பக்த்யா வைஷ்ணவான் விஷ்ணுவத் நர ச யாதி விஷ்ணு சாயுஜ்யம் நாத்ர கார்யா விசாரணா–லிங்க புராணம்
கௌசிகாதீஸ் ததா த்ருஷ்ட்வா ப்ரஹ்மா லோக பிதாமகர் பிரத்யுதிகம்ய யதா நியாயம் ஸ்வாகதே நாப்ய பூஜயத் –லிங்க புராணம்
ஹரிபாத ப்ரபன்னானாம் தூரிபூத ஸ்வபாவத தேஷாம் து சர்வ பூதா நாம் ஹரிரேவ பதிர்யத வைஷ்ணவேப்ய
அபி பிப்யந்தி தேவா நரக ரஷா அவமான க்ரியா தேஷாம் ஸம்ஹரத் யகிலம் ஜகத் காலேந ஏதாவதா தேஷு நரகேஷு
ஹி கஞ்சன ந த்ருச்யதே மஹா வீர்ய பிரபாவாத் பரமேஷ்டிந –ஸ்ரீ விஷ்ணு தத்வம்
நரகே பஸ்யாமா நஸ்து யமேந பரிபாஷித கிம் த்வயா ந அர்சிதோ தேவ கேசவ கிலேச நாசன -ஸ்ரீ விஷ்ணு தர்மம்

பராக்ரமத்தில் சிம்மம் போன்றவர் -ஸ்ரீ நரசிம்ஹ திருவவதாரம் செய்தவர் -ஸ்ரீ சங்கரர்

உயர்ந்தவர் -ஸ்ரீ சத்ய சந்தர்

————–

490-பூத மகேஸ்வர
மனிசர்க்குத் தேவர் போலே தேவர்க்கும் தேவன்
நிறுத்தினான் தெய்வங்களாக அத் தெய்வ நாயகன் தானே -5-2-8
மூவர் முதல்வன் ஒரு மூவுலகாளி -9-8-9
உலக்குகோர் தனி யப்பன் -8-1-1-

எல்லாரையும் நடத்தும் பிரமன் யமன் முதலியவர்களையும் நடத்துபவர் –
இதுவே கீழ்ச் சொன்ன விஷயங்களில் சமர்த்தராக இருப்பதற்குக் காரணம் -ஸ்ரீ பராசர பட்டர்

உண்மையில் பரமாத்மாவும் பெரிய ஈஸ்வரும் தாமே யானவர் -பிராணிகளுக்கு பெரிய ஈஸ்வரர் -ஸ்ரீ சங்கரர்

பிராணிகளுக்கு ஈஸ்வரர் -மிக அதிகமான உத்சவங்களை உடையவராய் –
ஸ்ரீ லஷ்மீ ஸ்ரீ வாயுதேவன் ஆகியோருடன் மகிழ்பவர் -ஸ்ரீ சத்ய சந்தர்

—————–

491-ஆதி தேவ
ஆதிப்பிரான்
பொலிந்து நின்ற பிரான் ஆதி யாவர்க்கும் முந்தியவன்
நான்முகன் தன்னோடு தேவர் உலகோடு உயிர் படைத்தான்

அவர்களுக்கும் காரணமாய் -பிரகாசிப்பவர் -ஸ்ரீ பராசர பட்டர்

பீஷ அஸ்மாத் வாத பவத–தைத்ரியம்

எல்லோரையும் தம்மிடம் சேர்த்துக் கொள்ளும் தேவதை -ஸ்ரீ சங்கரர்

பக்தர்களைத் தம்மிடம் சேர்த்துக் கொள்ளும் தேவதை -ஸ்ரீ சத்ய சந்தர்

————

492-மஹா தேவ –
விளையாடும் மஹா தேவன்
இன்புறும் இவ்விளையாட்டு உடையான் -3-10-7-

அவர்களைப் பந்து முதலிய விளையாட்டுக் கருவிகளைப் போலே வைத்து விளையாடுபவர் -ஸ்ரீ பராசர பட்டர்

ஞான ஸ்வரூபமாக உள்ள பெரிய தேவதை -ஸ்ரீ சங்கரர்

நன்கு உண்பவர் -லஷ்மியை வழி நடத்துபவர் -ஸ்ரீ சத்ய சந்தர்

——————-

493-தேவேச
தேவர்களுக்கு ஈசன் -சர்வ ஸ்வாமி
வானோர் பெருமான் மா மாயன் வைகுந்தன் எம்பெருமான் -1-5-4-

அவர்களுக்குத் தலைவராக இருப்பவர் -ஸ்ரீ பராசர பட்டர்

தேவர்களுக்குத் தலைவர் -ஸ்ரீ சங்கரர்

தேவர்களுக்குத் தலைவர் -தேவர்களுக்கும் லஷ்மி தேவிக்கும் சுகம் அளிப்பவர்-ஸ்ரீ சத்ய சந்தர்

——————

494-தேவ ப்ருத்-
தேவர்களைத் தாங்குபவன்
மனிதர்க்குத் தேவர் போலத் தேவர்க்கும் தேவன் -8-1-5-

அவர்களுக்குத் தம் விருப்பப்படி நடத்துபவரே -அவர்களைத் தாங்குபவர் -தேவர்களைத் தாங்குபவர் –
எல்லா வித்யைகளையும் உபதேசிப்பவர் -ஸ்ரீ பராசர பட்டர்

தேவர்களைக் காக்கும் இந்திரனையும் நியமிப்பவர் -தேவப்ருத் குரு -என்று ஒரே திரு நாமம் -ஸ்ரீ சங்கரர்

தேவர்களைக் காக்கும் பிரமனுக்கும் உபதேசிக்கும் குருவானவர் –
தேவப்ருத் குரு -என்று ஒரே திரு நாமம் -ஸ்ரீ சத்ய சந்தர்

————

495- குரு-
தேவர்களின் ஆசாரியன் -பிரதமாசாரியன்
பீதக வாடைப் பிரானார் பிரம குருவாகி வந்து
அறியாக் காலத்துள் அறியாதன அறிவித்த அத்தன் -2-3-2-
நர நாராயணனாய் யுலகத்து அற நூல் சிங்காமை விரித்தவன் எம்பெருமான் -பெரிய திரு மொழி -10-6-1-

யோ வை வேதாம்ஸ் ச ப்ரஹினோதி தஸ்மை –ஸ்வேதாஸ்வரம்
ஹரி குரு வசக அஸ்மி –ஸ்ரீ விஷ்ணு புராணம் -3-7-15-நான் ஆச்சார்யரான ஹரிக்கு அடக்கியவன் -நான்முகன்
அக்னி ஸ்வர்ணஸ்ய குரு -ஸ்ரீ விஷ்ணு புராணம் -3-7-15-தங்கத்தை தூய்மை செய்யும் அக்னி போலே ஹரியான குரு -யமன்
காலேந அநவச்சேதாத் இதம் குருத்வம் -ஹயசிர உபாக்யானம்
ஜக்ராஹ வேதான் அகிலான் ரஸாதல கதான் ஹரி ப்ராதாச்சம் ப்ராஹ்மணோ ராஜன் தத ஸ்வாம் பிரக்ருதிம் கத
ரசாதலாத் யேந பரா சமாஹருதோ ஸமஸ்த வேதா -ஸ்ரீ விஷ்ணு தர்மம் -43-36-

வேதங்களினால் அவரவர் அதிகாரங்களை உபதேசித்தமையால் அவர்களுக்கு குருவானவர் -ஸ்ரீ பராசர பட்டர்

————

உத்தரோ கோபதிர் கோப்தா ஜ்ஞானகம்ய புராதன
சரீர பூதப்ருத் போக்தா கபீந்த்ரோ பூரி தஷிண –53-

————

496-உத்தர –
கரை ஏற்றுபவன்
தேவாசுரம் செற்றவனே -8-1-4-
திரு நாவாய் என் தேவே -9-8-8-

அசுரர்களால் உண்டான ஆபத்தில் இருந்து பிரம்மாதிகளைக் கரை ஏற்றுபவர் -ஸ்ரீ பராசர பட்டர்

ஏவம் ஸ்துத ச பகவான் புருஷ சர்வதோமுக ஜஹவ் நித்ராமத ததா தேவ கார்யர்த்தம் உத்யத -சாந்தி பர்வம் —
அனைத்து திசைகளிலும் திரு முகம் கொண்ட பகவான் தேவ கார்யம் செய்ய நித்திரையை விட்டு எழுந்தான்

சம்சாரக் கடலில் இருந்து கரை ஏற்றுபவர் -மிக உயர்ந்தவர் –ஸ்ரீ சங்கரர்

உயர்ந்த தகுதி உள்ளவர்களை சம்சாரத்தில் இருந்து கரை ஏற்றுபவர் -மிகவும் உயர்ந்தவர் -ஸ்ரீ சத்ய சந்தர்

——————

497-கோபதி
சொற்களுக்கு ஸ்வாமி
நாவினுள் நின்று மலரும் ஞானக் கலைகளுக்கு எல்லாம் ஆவியும் ஆக்கையும் தானே யாவான் -1-9-8-

வேதங்களும் மொழிகளும் ஆகியவற்றை நடத்துபவர் -ஸ்ரீ பூமி தேவியின் கணவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

ஸ்ரீ கிருஷ்ணாவதாரத்தில் பசுக்களைக் காத்தவர் -ஸ்ரீ சங்கரர்

பூமி பசுக்கள் வாக்கு இவற்றைக் காப்பவர் -ஸ்ரீ சத்ய சந்தர்

—————

498-கோப்தா –
வித்யா ரஷகன்
கற்கும் கல்வி செய்வான் கற்கும் கல்விச் சாரம் -5-6-2-

இப்படி எல்லா வித்யைகளையும் காப்பவர் -ஸ்ரீ பராசர பட்டர்

உலகங்கள் அனைத்தையும் காப்பவர்-ஸ்ரீ சங்கரர்

காப்பவர் -ஸ்ரீ சத்ய சந்தர்

—————

499-ஜ்ஞான கம்ய
அறிவினால் அடையப் படுபவன்
கற்கும் கல்விப் பயன் -5-6-2-

பரவித்யை யாகிற சமாதி ஞானத்தால் அறியத் தக்கவர் -ஸ்ரீ பராசர பட்டர்

வரவாஜி முகம் த்யாயேத் அத வாகீஸ்வரம் ப்ரபும்–வாக்கின் நாயகன் ஸ்ரீ ஹயக்ரீவரை தியானிப்போம்

கர்மத்தால் ஞான கர்மங்களால் அன்றி ஞானத்தால் மட்டுமே அடையத் தக்கவர் -ஸ்ரீ சங்கரர்

ஞானத்தாலும் ஞானிகளாலும் அடையைப் பெறுபவர்-ஸ்ரீ சத்ய சந்தர்

——————-

500-புராதன
மிகப் பழையவன்
ஊழி தோறு ஊழி வையம் காக்கும் ஆழி நீர் வண்ணன் -7-3-11-

முந்தைய கல்பங்களிலும் இப்படியே வித்யைகளை வெளிப்படுத்தியவர் -ஸ்ரீ பராசர பட்டர்

கால வரையரை யில்லாமல் முந்தியும் இருப்பவர் -ஸ்ரீ சங்கரர்

தேஹத்தில் அல்லது ஸ்ரீ வைகுண்டம் முதலிய இடங்களில் வசிப்பவர் -தொன்மையானவர் -ஸ்ரீ சத்ய சந்தர் –

————–

501-சரீர பூத ப்ருத்
தத்தவங்களை சரீரமாகக் கொண்டு தாங்குமவன்
தானேயாகி நிறைந்து எல்லா வுலகும் உயிரும் தானேயாய் நின்று ஒழிந்தான் –10-7-2-

தம் சரீரமாக உள்ள பிரகிருதி முதலிய தத்துவங்களைத் தாங்குபவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

யஜுர் தஸ் சிரஸ்
தஸ்ய மூர்த்தா சமபவத் த்யை ச நக்ஷத்ர தேவதா இதி –ஏதத் ஹய சிரஸ் க்ருத்வா நாநா மூர்த்திபி ஆவ்ருதம் இத்யந்தம்–சாந்தி பர்வம்

சரீரத்திற்குக் காரணமான பஞ்ச பூதங்களை பிராண ரூபியாகத் தாங்குபவர் -ஸ்ரீ சங்கரர் –

சரீரங்களையும் பூதங்களையும் தாங்குபவர் -பிரளயத்தின் போது-தம்முடைய சரீரத்தில் பூதங்களைத் தரித்தவர் –
சரீர பூதப்ருத் என்ற பாடத்தில் சரீரம் உடையவர் -பூதங்களைத் தரிப்பவர் -என்று இரண்டு திரு நாமங்கள் –
அல்லது தம்முடைய சரீரங்களாக அந்தர்யாமி பிராமணத்தில் பிருத்வி முதலிய சப்தங்களால் கூறப் பட்ட
ஸ்ரீ கருடன் முதலியோரை தரிப்பவர்– ஸ்ரீ சத்ய சந்தர் –

—————

502-போக்தா
உண்பவன் –
செய்கைப் பயன் உண்பேனும் யானே
முன்பே 145 பார்த்தோம்

ஹய சிரஸ் ரூபமாக ஹவ்ய கவ்யங்களை புஜிப்பவர் – ஸ்ரீ பராசர பட்டர் –

யத்து தத்கதிதம் பூர்வம் த்வயா ஹய ஸீரோ மஹத் ஹவ்ய கவ்ய பூஜோ விஷ்ணோ உதக் பூர்வே மஹோததவ் –சாந்திபர்வம்
ஹவ்யம்-தேவர்களைக் குறித்து / கவ்யம் -பித்ருக்களைக் குறித்து கொடுப்பது –

காப்பவர் -தம்முடைய ஸ்வரூபம் ஆகிய ஆனந்தத்தை அனுபவிப்பவர் – -ஸ்ரீ சங்கரர் –

எல்லாவற்றையும் உண்பவர் — ஸ்ரீ சத்ய சந்தர் –

——————-

3-29-ஸ்ரீ ராமனாய் தர்ம ரஷகத்வம் -503-513-திரு நாமங்கள்

503-கபீந்த்ர –
குரங்குகளுக்கு ஸ்வாமி
தானும் தர்மம் அனுஷ்டித்து -தேவதைகளாக குரங்குகளாக பிறக்கப் பண்ணி ஸ்வாமியாக-லோக நன்மைக்கு
குரக்கரசாவது அறிந்தோம் -நாச் திரு -3-4-இலங்கை செற்றவனே -2-4-4-

வானர உருவத்தை எடுத்துக் கொண்ட தேவர்களுக்குத் தலைவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

சர்வ லோகேஸ்வர சாஷாத் லோகாநாம் ஹித காம்யயா சர்வை பரிவ்ருதோ தேவை வானரத்வம் உபாகதை–யுத்த காண்டம்

வானரர்களுக்குத் தலைவராகிய ஸ்ரீ ராமனாக திரு வவதரித்தவர் – -ஸ்ரீ சங்கரர் –

வானரனான வாலியின் செல்வத்தை அழித்தவர் — ஸ்ரீ சத்ய சந்தர் –

————–

504-பூரி தஷிண –
அதிகமான தஷிணைகளை வழங்குபவன்
நான்மறையாய் வேள்வியாய் தக்கணையாய் தானுமானான் -பெரியாழ்வார் -4-9-2

உலகில் ஆசாரத்தை நிலை நாட்டுவதற்காகச் செய்யப்பட அஸ்வமேதம் முதலிய யாகங்களில் தஷிணைகள் அளித்தவர்-ஸ்ரீ பராசர பட்டர் –

அஸ்வமேத சதை இஷ்ட்வா -பாலகண்டம்

தர்மத்தை நிலை நிறுத்தும் பொருட்டு யாகம் செய்து மிகுந்த தஷிணைகள் தருபவர் – -ஸ்ரீ சங்கரர் –

பூரி தானத்திற்கு அபிமானியான ஸ்ரீ லஷ்மீ தேவியைத் தம் வலது பக்கத்தில் உடையவர் -தங்கத்தை தஷிணையாக உடையவர் –
மிகுதியாகக் கொடுப்பவர் -மிகுந்த சாமர்த்தியம் உடையவர் -எஜமானர்கள் பலரை உடைய சத்ர யாகத்தினால் சுகமுள்ளவர்– ஸ்ரீ சத்ய சந்தர் –

—————-

சோமப அம்ருதபஸ் சோம புருஜித் புருசத்தம
விநயோ ஜயஸ சத்ய சந்தோ தாசார்ஹஸ் சாத்வதாம் பதி—54

————–

505-சோமப
சோம ரச பானம் பண்ணுபவன் –

அந்த யாகங்களில் சோம பானம் செய்தவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

எல்லா யாகங்களிலும் அந்தந்த தேவதா ரூபியாக -தர்மத்தைத் தெரிவிப்பதற்காக –
யாகங்களின் எஜமானனாக -சோமபானம் செய்பவர் – -ஸ்ரீ சங்கரர் –
உமையுடன் கூடிய ருத்ரனைக் காப்பவர் -சோம ரசத்தைப் பருகுபவர் -சந்திர கிரணத்தைப் பருகுபவர் — ஸ்ரீ சத்ய சந்தர் –

—————–

506-அம்ருதப –
அம்ருததைப் பானம் பண்ணுமவன்
ஆராவமுதே
எனக்கு ஆராவமுதாய் யெனதாவியை இன்னுயிரை மனக்காராமை மன்னி யுண்டிட்டாய் -10-10-6

தம் அனுஷ்டானத்தைப் பின்பற்றுபவர்க்குத் தம்மை பரம பதத்தில் அனுபவிப்பதாகிய அமுதத்தைத் தருபவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

யத் கிஞ்சித் ஹுயதே வஹ்நவ் ஹவிர் மந்த்ரை விதானத தத் சர்வம் அம்ருதம் க்ருத்வா விஷ்ணவே சம்பிரயச்சதி–
எந்த ஹவிர்பாகம் அளிக்கப்பட்டாலும் அதை அக்னிதேவன் அமிர்தமாக மாற்றி மஹா விஷ்ணுவுக்கு அளிக்கிறான்
அஹம் ஹி சர்வ யஜ்ஞா நாம் போக்தா ச பிரபுரேவ ச –ஸ்ரீ கீதை -9-24-
யத்ர தேவா அம்ருதம் ஆநசாநா த்ருதீயே தாமாந் யப்யைர யந்த இதி
அம்ருதஸ்ய ஏஷ சேது
யஸ்ய சாயா அம்ருதம்

ஆத்மானந்தமாகிய அமுதத்தைப் பருகுபவர் -அசுரர்களால் அபகரிக்கப் பட்ட அமுதத்தைக் காத்து
அவ்வமுதத்தை தேவர்கள் பருகும்படி செய்து தாமும் பருகியவர் – -ஸ்ரீ சங்கரர் –

அமுதத்தைப் பருகுபவர் -அமுதத்தை அசுரர்கள் இடம் இருந்து காப்பவர் –
அமுதமாகப் பரிணமித்த ஹவிஸ்ஸைத் தாமே உண்பவர் — ஸ்ரீ சத்ய சந்தர் –

————–

507-சோம
அமுதிலும் இனியன்-ஆரா வமுதன் -மனத்துக்கு இனியான் –
எனக்கு தேனே பாலே கன்னலே அமுதே திருமால் இரும் சோலை கோனே -10-7-3-
எப்பொழுதும் –அப்பொழுதைக்கு அப்பொழுது என் ஆரா வமுதமே -2-5-4-

தம்மை அனுபவிப்பவர்களுக்குத் தாமே அமுதமாக இருப்பவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

த்ருதீயஸ் யாமிதோ திவி ஸோம ஆஸீத்
ச கலு அம்ருத உபம
மஹதா தபஸா ராம மஹதா சாபி கர்மணா ராஜா தசரதே நாசி லப்தோ அம்ருதமிவ அமரை — ஆரண்ய
அம்ருதஸ் ஏவ நாத்ருப்யந் ப்ரேஷமானா ஜனார்த்தனம்
சாந்தி சம்ருத்தம் அமிர்தம் -தைத்ரியம்

சந்தரன் வடிவில் ஔஷாதிகளை வளரும்படி செய்பவர்-உமையோடு கூடிய சிவன் – -ஸ்ரீ சங்கரர் –

ஸ்ரீ லஷ்மியோடும் ருத்ரனோடும் சேர்ந்து இருப்பவர் -சௌம்யமானவர்-அளவிட முடியாத சாரமாக இருப்பவர் –
உயர்ந்த ஆனந்தத்தை யுடையவர் — ஸ்ரீ சத்ய சந்தர் –

——————

508-புருஜித்
யாவரையும் ஜெயித்து வசப்படுத்துமவன்
கூடாரை வெல்லும் சீர் படைத்தவன் ஸ்ரீ ராமன்
ராவணனை வீரத்தாலும் சூர்பணகையை அழகாலும் விபீஷணனை சீலத்தாலும் வென்றவன்
தீ மனத்தரக்கர் திரள் அளித்தவனே -பெரிய திரு மொழி -4-3-5
இலங்கைப் பதிக்கு அன்று இறையாய் அரக்கர் குலம் கெட்டு அவர் மாள கொடிப் புள் திரித்தாய் -பெரிய திரு மொழி -1-10-2-

பலரையும் வென்றவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

சத்யேன லோகான் ஜயதி தீநாந் தாநேந ராகவ குரூன் சுச்ருஷயா வீரோ தனுஷா யதி சாத்ரவான் –அயோத்யா -12-19-

பலரை வென்றவர் – -ஸ்ரீ சங்கரர் –

பகைவர் பலரை வென்றவர் -பல பொருள்களை குணங்களை வெல்பவர் -அடைபவர் — ஸ்ரீ சத்ய சந்தர் –

—————–

509-புருசத்தம
பெரியோர்கள் இடம் நிலைத்து இருப்பவன்
பாவோ நான்யத்ர கச்சதி
சிந்தை தன்னுள் நீங்காது இருந்த திருவே மருவினிய மைந்தா அம் தண் ஆலி மாலே -பெரிய திருமொழி -4-9-2-

தமது குணங்களாகிய அமுதக் கடலைப் பருக விரும்பும் அனுமன் முதலிய பெரியவர்களிடம்
நிலைத்து இருப்பவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

ஸ்நேஹோ மே பரமோ ராஜன் த்வயி நித்யம் ப்ரதிஷ்டித பக்திச்ச நியதா தீர பாவோ நான்யத்ர கச்சதி –உத்தர -40-15-
யாவத் ராமகதா வீர –உத்தர -40-16-

விச்வ ரூபியாகவும் மிக உயர்ந்தவராகவும் இருப்பவர் – -ஸ்ரீ சங்கரர் –

பிரம்மா முதலியவர்களுக்கு அந்தர்யாமியாக உள்ளிருப்பவர் -உயர்ந்தவர் -பூர்ணர் -அழிவைப் போக்கடிப்பவர் –
உயர்ந்த ஸ்ரீ லஷ்மீ தேவியை யுடையவர்– ஸ்ரீ சத்ய சந்தர் –

————–

510-விநய
சிஷித்து திருத்துபவன் -ராஷசர்களைத் தண்டித்து –
செய்குந்தா வரும் தீமைகள் உன் அடியார்க்குத் தீர்த்து அசுரர்க்குத் தீமைகள் செய்குந்தா -2-6-1-

மாரீசன் முதலியவர்களையும் தம் பராக்ரமத்தினால் அடக்கியவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

துஷ்டர்களைத் தண்டிப்பவர் – -ஸ்ரீ சங்கரர் –

விநியோஜ்ய -ஒரே திரு நாமம் -கட்டளை இடப் படாதவர் -பலவித உலகை நியமிப்பவர் –
சிலர் விநய -தண்டிப்பவர் -ஜய -வெல்பவர் -என்று இரண்டு திரு நாமமாக கொண்டு பொருள் கூறுவர்– ஸ்ரீ சத்ய சந்தர் –

—————

511-ஜய –
ஜெயிக்கப் பட்டவன் அடியார்கள் இடம்
வசிஷ்டர் விஸ்வாமித்ரர்
விண்ணுலகம் தருவானாய் விரைகின்றான் விதி வகையே 10-4-3 ஆழ்வார் சொல்படியே

அடியவர்களால் ஏவப்படும்படி இருப்பவர் -ஸ்ரீ பராசர பட்டர்

ஆஜ்ஞாப் யோ அஹம் தபஸ்வி நாம் –ஆரண்ய
ததோ நாராயணோ விஷ்ணு நி யுக்த ஸூரா சத்தமை–பால காண்டம்

எல்லாப் பிராணிகளையும் வெல்பவர் –ஸ்ரீ சங்கரர் –

—————-

512-சத்ய சந்த
ஸ்திரமான பிரதிஞ்ஞை உடையவன் –
நாளும் தன் மெய்யர்க்கு மெய்யனே -9-10-6

அடியவர்கள் இடத்தில் சொன்ன சொல் தவறாதவர் -ஸ்ரீ பராசர பட்டர்

அப்யஹம் ஜீவிதம் ஜஹ்யாம் த்வாம் வா சீதே ச லஷ்மணாம் ந து ப்ரதிஞ்ஞாம் ஸம்ஸ்ருத்ய
ப்ராஹ்மணேப்யோ விசேஷத–ஆரண்ய -10-19-
சத்ய சந்தோ ஜிதேந்த்ரிய –பால-1-39-

தாம் சங்கல்பிப்பது தவறாதவர் –ஸ்ரீ சங்கரர் –

சத்யமான சப்தமுள்ளவர்-உண்மையைச் சேர்ப்பவர் — ஸ்ரீ சத்ய சந்தர் –

—————–

513-தாசார்ஹ
சமர்ப்பணைக்கு உரியவன்
எனதாவி உள் கலந்த பெரு நல் உதவிக் கைம்மாறா –எனதாவி தந்து ஒழிந்தேன் இனி மீள்வது எனபது உண்டே -2-3-4-

அடியவர்களுக்குத் தம்மையே தானமாகத் தருபவர் –
தாசர்ஹ-யாதவ -குலத்தில் ஸ்ரீ கிருஷ்ணனாக திருவவதரித்தவர் -ஸ்ரீ பராசர பட்டர்

தானத்திற்கு உரியவர் -தாசர்ஹ-யாதவ -குலத்தில் திருவவதரித்தவர் –ஸ்ரீ சங்கரர் –

தாசர்ஹ-யாதவ -குலத்தில் திருவவதரித்தவர் -தானத்திற்கு தகுதியானவர் –
தாசராஜன் மகள் -சத்யவதி -புத்ரனாக வியாசராக தோன்றியவர் — ஸ்ரீ சத்ய சந்தர் –

——————————————————————————————–

3-30-பாகவத ரஷகன் திரு நாமங்கள் -514-519

514-சாத்வதாம் பதி –
சாத்விகர்களுக்கு ஸ்வாமி
கண்ட சதிர் கண்டு ஒழிந்தேன் அடைந்தேன் உன் திருவடியே -4-9-10-
பதியே பரவித் தொழும் தொண்டர் தமக்குக் கதியே -7-1-7

ஸ்ரீ ப்ரஹ்மத்தை அறிந்த சாத்வதர்களான பாகவதர்களின் சாஸ்த்ரமான பாஞ்சராத்ரத்தைப் பின்பற்றுபவர்களுக்குத் தலைவர் –
யாதவர்களின் தலைவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

நிரசீ கர்ம சம்யுக்தான் ஸாத்வதாம் ச் சாப்ய கல்பயம் ஸாத்வத ஞான த்ருஷ்ட அஹம் ஸாத்வத ஸாத்வதீ பதே–பவ்ருஷ சம்ஹிதை
யாவதர்களும் ஸாத்வதர்கள் -அவர்களின் பதி-ஸாத்வதாம் பதி

சாத்வதம் என்னும் சாஸ்திரத்தைப் பின்பற்றுபவர்களுக்கு யோக ஷேமத்தை நடத்துபவர் –ஸ்ரீ சங்கரர் –

பக்தர்களைக் காப்பவர் -சாத்வதர்களான பாஞ்ச ராத்ரிகளுக்கும் ஸ்ரீ முதலிய நவ மூர்த்திகளுக்கும் பதி –
ஆதி மூர்த்தியானவர் — ஸ்ரீ சத்ய சந்தர் –

————

ஜீவோ விநயிதா சாஷி முகுந்தோ அமிதவிக்ரம
அம்போ நிதி ர நந்தாத்மா மகோததிச யோந்தக –55

———–

515-ஜீவ-வாழ வைப்பவன்
உலகு தன்னை வாழ நின்ற நம்பி -பெரியாழ்வார்-5-4-1-
எயிற்றிடை மண் கொண்ட எந்தை இராப்பகல் ஓதுவித்து யென்னைப் பயிற்றி பனி செய்யக் கொண்டான் -பெரியாழ்வார் 5-2-3-
குரங்குகள் மலையை நூக்கக் குளித்துத் தாம் புரண்டிட்டோடித் தரங்க நீர் அடிக்கல் உற்ற சலமிலா வணில் -திருமாலை -27

தமக்கு ஆராதனம் செய்யும் அந்த பாகவதர்களை ஆத்ம நாசத்தில் இருந்து காத்து உய்விப்பவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

ஆனந்த மூர்த்தி பகவான் ஹரி த்ரை லோக்ய பூஜித த்ரஷ்டும் ந சாஹதே தேவி க்லிஷ்டான் ஸ்வ பரிசாரகான்-

ஜீவ ரூபியாக எல்லா உயிர்களையும் தாங்குபவர் –ஸ்ரீ சங்கரர் –

ஜனங்களை ஜீவிக்கச் செய்பவர் — ஸ்ரீ சத்ய சந்தர் –

—————

516-விநயிதா-
ரஷிப்பவன்-
ஞாலத்தூடே நடந்தும் நின்றும் கிடந்தும் இருந்தும் சாலப் பல நாள் உகந்து ஓர் உயிர்கள் காப்பானே -6-9-3-
சுடர் மா மதி போலே உயிர்க்கு எல்லாம் தாயாய் அளிக்கின்ற தண் தாமரை கண்ணா -பெரிய திருமொழி -7-8-9-

அந்த பாகவதர்களை ராஜ குமாரர்களைப் போல் ஆதரித்துக் காப்பவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

ஜனங்களின் அடக்கத்தை நேரில் காண்பவர் -விநயிதா சாஷி என்று ஒரு திரு நாமம் –
எல்லாவற்றையும் நடத்துபவர் -தம்மைக் காட்டிலும் வேறு பொருளைப் பாராதவர் –ஸ்ரீ சங்கரர் –

ஜீவர்களின் பணிவு முதலியவற்றை நேராகக் காண்பவர் -விநயிதா சாஷி என்று ஒரு திருநாமம் — ஸ்ரீ சத்ய சந்தர் –

——————-

517-சாஷி
பார்ப்பவன்
உள்ளுவார் உள்ளிற்று எல்லாம் உடன் இருந்து அறிதி -திருமாலை -34-

அதற்காக அவர்களுடைய ஒழுக்கங்களைப் பிரத்யஷமாகப் பார்ப்பவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

————–

518-முகுந்த –
மோஷம் அளிப்பவன்
அன்று சராசரம் முற்றவும் வைகுந்தத்து ஏற்றி -பெருமாள் திருமொழி -10-10-
புல் எரும்பாதி ஓன்று இன்றியே நற் பாலுக்கு உய்த்தனன் -7-5-1-
விண்ணுலகம் தருவானாய் விரைகின்றான் -10-6-3-
நம்மை ஆள் கொள்வான் முத்தனார் முகுந்தனார் -திருச்சந்த -115-

அவர்களால் வேண்டப் பெற்றவராய் முக்தியைத் தருபவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

முக்தியைத் தருபவர் –ஸ்ரீ சங்கரர் –

முக்தியைத் தருபவர் — ஸ்ரீ சத்ய சந்தர் –

—————-

519-அமித விக்கிரம
அளவற்ற சக்தியை உடையவன்
வற்றா முது நீரோடு மால் வரை ஏழும் துற்றாக முன் துற்றிய தோள் புகலொன் -பெரிய திருமொழி -7-1-2-

அவர்கள் தியானத்திலும் ஆராதனத்திலும் நினைக்கும் தத்வங்கள் எல்லாவற்றையும் தாங்கும் ஆதார சக்தியாக இருப்பவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

கால வைச்வா நர ஸாயீ நாநாத் வாதோ நிவாஸின ஆதார சக்தி சஞ்ஜஸ்ய ஹி அமூர்த்தஸ்ய ச வை விபோ
அபிமான தநுர்யோ வை நாநா பேதைச்ச வர்த்ததே –பவ்ஷ்கர சம்ஹிதை

திரிவிக்ரம அவதாரத்தில் அளவிட முடியாத மூன்று அடிகளை உடையவர் -அளவற்ற பராக்கிரமம் யுடையவர் –ஸ்ரீ சங்கரர் –

அளவிட முடியாத பராக்கிரமம் யுடையவர் -முழுவதுமாக அறியப்படாதவர் -கருடனைக் கொண்டு சஞ்சரிப்பவர் — ஸ்ரீ சத்ய சந்தர் –

——————————————————————

3-31-ஸ்ரீ கூர்ம ரூபி -520/521 திரு நாமங்கள்

520-அம்போநிதி-
நீருக்குள் உள்ளவன் –அநந்த பல சக்தே புவன ப்ருதே கச்ச பாத்மநே -த்யான மந்த்ரம்
ஆமையான கேசவா -திருச்சந்த -20
ஆமையாய்க் கங்கையாய் ஆழ் கடலாய் ஆனான் -பெரியாழ்வார் -4-9-5-

பாதாளக் கடலில் எல்லா உலகங்களையும் தாங்கும் பீடம் போல் கூர்ம ரூபியாக இருப்பவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

அனந்த பல சக்த்யே புவன ப்ருதே கச்ச பாத்மநே –

அம்பஸ்ஸூக்களான தேவர் மக்கள் பித்ருக்கள் அசுரர்கள் ஆகியோரைத் தாங்குபவர் -கடல் போன்றவர் –ஸ்ரீ சங்கரர் –

ஸ்ரீ விஷ்ணு லோகமான பரம பதத்தைத் தம்மிடம் யுடையவர் –கடல் போன்றவர் — ஸ்ரீ சத்ய சந்தர் –

—————-

521-
ஆனந்தாத்மா
ஆனந்தத்தின் ஆத்மாவே உள்ளவன்
நாகமேந்து மண்ணினை –காத்து ஏகமேந்தி நின்றான் -திருச் சந்த -6-

ஸ்ரீ கூர்ம ரூபத்தின் மேல் உலகங்களுக்கு ஆதாரமான ஸ்தம்பம் போல் நிற்கும் ஆதி சேஷனுக்கு ஆதாரமாக இருப்பவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

அனந்தாத்மா-பாட பேதம்
ஆதார சக்தே ரூபரி விமலம் தீப்த விக்ரஹம் ஜ்வாலாசத சமாகீர்ணம் சங்க சக்ர கதாதரம் அனந்தேசம் ந்யசேத்–ஜெய சம்ஹிதை
சக்ர லாங்கல ஹஸ்தம் ச ப்ரணமந்தம் பராவரம்–சக்கரம் உழுகின்ற ஏர் கொண்டவனை த்யானம் –

தேசம் காலம் பொருள் இவற்றால் வரையரை யற்றவர் –ஸ்ரீ சங்கரர் –

எண்ணிக்கை இல்லாத அமுக்தர்களுக்கும் முக்தர்களுக்கும் தலைவர் -அளவற்ற உடல்களை உடையவர் -கட்டுப்படாதவராய்
ஆத்மாவாக இருப்பவர் -ஆதி சேஷன் மீது தம் திருமேனியை வைத்து இருப்பவர் — ஸ்ரீ சத்ய சந்தர்

——————————————————————————————-

3-32-ஸ்ரீ அநந்த சாயி -522/523 திரு நாமங்கள்

522-மஹோததிசய
மஹா சமுத்திரத்தின் மேலே சயனித்து இருப்பவன் –
வெள்ளை வெள்ளத்தின் மேல் ஒரு பாம்பை மெத்தையாக விரித்து அதன் மேலே கள்ள நித்திரை கொள்வான் -பெரியாழ்வார் -5-1-7-
அண்ணலை அச்சுதனை அனந்தனை அநந்தன் மேல் நண்ணி நன்கு உறைகின்றானை -3-4-9-

பிரளய காலத்தில் ஆதிசேஷன் ஆகிற சயனத்தில் பெரும் கடலில் சயனித்து இருப்பவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

அனைத்தையும் அழித்து பிரளய சமுத்ரத்தில் சயனித்து இருப்பவர் –ஸ்ரீ சங்கரர் –

மேன்மை கொண்ட ஸ்ரீ வாமன ஸ்ரீ கிருஷ்ண ரூபங்களில் கையிலே தயிரை உடையவர் -பெரிய கடலில்
சயனித்து இருப்பவர் -ப்ரஹ்மாதிகளைத் தம் வசத்தில் உடையவர்– ஸ்ரீ சத்ய சந்தர் –

————–

523-அந்தக –
அழிப்பவன்-
யாவரும் யாவையும் எல்லாப் பொருளும் கவர்வின்றித் தன்னுள் ஒடுங்க நின்ற ஆழி அம் பள்ளியார் -2-2-6-
அநந்தன் மேல் கிடந்த எம் புண்ணியன் -திருச்சந்த -45-

பிரளய காலத்தில் எல்லாவற்றையும் அழிப்பவர்–ஸ்ரீ பராசர பட்டர் –

அந்தே ப்ருதிவ்யாம் சலிலே த்ருச்யதே த்வம் மஹோரக –யுத்த -120-33-உலகின் முடிவில் சமுத்திரத்தில் ஆதி சேஷன் மேல் காணப்படுகிறாய்
ஆஸ்தே பாதாள மூலஸ்த்தே சேஷ அசேஷ ஸூரார்ச்சித –ஸ்ரீ விஷ்ணு புராணம் -2-2-20-சேஷனாக சங்கர்ஷணனாக அர்ச்சிக்கப்படுகிறான்
யஸ்யைஷா சகலா ப்ருத்வீ பணாமணி சிகா ரூணா ஆஸ்தே குஸூம மாலேவ கஸ்தத் வீர்யம் வதிஷ்யதி ஸ்ரீ விஷ்ணு புராணம் -2-2-22-
கந்தர்வ அப்சரஸ் சித்தா ச கின்னர மஹோரகா நாந்தம் குணா நாம் கச்சந்தி தேநா நந்த
தஸ்ய வீர்யம் பிரபாவம் ச ஸ்வரூபம் ரூபமேவ ச ந ஹி வர்ணயிதும் சக்யம் ஞாதும் வா த்ரிதசைரபி
கல்பாந்தே யஸ்ய வக்த்ரேப்யோ விஷா நல சிக்க உஜ்ஜ்வல சங்கர்ஷண ஆத்மகோ ருத்ரோ நிஷ்க்ரமய அத்தி ஜகத் த்ரயம்

பிராணிகளுக்கு முடிவைச் செய்பவர் –ஸ்ரீ சங்கரர் –

ஸ்ரீ ராமனாக சமுத்திர ஜலத்தை -அணை-கட்டியவர் -ஜராசந்தன் போன்ற அசுரர்களால் சிறைப் பட்ட அரசர்களுக்கு
விடுதலை அளித்து சுகம் அளித்தவர் -எல்லாவற்றையும் அழிப்பவர் — ஸ்ரீ சத்ய சந்தர் –

——————————————————————————–

அஜோ மகார்ஹஸ் ஸ்வா பாவ்யோ ஜிதாமித்ர ப்ரமோதன
ஆனந்தோ நந்த நோ நந்தச் சத்ய தர்மா த்ரிவிக்ரம ——–56

——-

3-33-பிரணவ ஸ்வரூபி -524-528-திரு நாமங்கள்

524-அஜ –
அகாரத்தால் பேசப்படும் நாராயணன் -அழிவற்ற -ஜகத் காரணன்
ஆதியாதி யாதி நீ சோதியாக சோதி நீ ஆதியாகி ஆயனாய மாயனே –திருச்சந்த -30-34-
முன்பே 96-206-பார்த்தோம்

பிரணவத்தின் முதலாகிய அகாரத்தின் பொருளாக எண்ணப் படுபவர் –ஸ்ரீ பராசர பட்டர் –

தஸ்ய ப்ரக்ருதி லீ நஸ்ய ய பர ச மஹேஸ்வர

அகாரப் பொருளாகிய ஸ்ரீ விஷ்ணுவிடம் பிறந்த மன்மதனாக இருப்பவர் –ஸ்ரீ சங்கரர் –

நான்முகனுக்குத் தந்தை — ஸ்ரீ சத்ய சந்தர் –

—————

525-மஹார்ஹ –
பூஜைக்கு மிக வுரியவன் -ஆத்ம சமர்ப்பணம் செய்யும் படி –
ப்ரஹ்மனேத்வா மஹச ஒமித்யாத்மாதம் யுஞ்ஜீத் –
தேவன் எம்பெருமானுக்கு அல்லால் பூவும் பூசனையும் தகுமே -2-2-4-

பிரணவத்தை உச்சரித்து ஆத்மாவைப் பரமாத்மாவிடம் ஒப்படைப்பதாகிய பூஜைக்கு உரியவர் –ஸ்ரீ பராசர பட்டர் –

ப்ரஹ்மணே த்வா மஹச ஓம் இத் யாத்மானம் யுஞ்ஜீத ஏதத்வை மஹா உபநிஷதம் தேவானாம் குஹ்யம்

பூஜைக்கு உரியவர் –ஸ்ரீ சங்கரர் –

பூஜை முதலிய உத்சவங்களுக்கு உரியவர் — ஸ்ரீ சத்ய சந்தர் –

—————-

526-ஸ்வாபாவய
த்யாநிக்கத் தக்கவன்
இறைவ என்று வெள்ளேறேன் நான்முகன் இந்திரன் வானவர் புள்ளூர்த்தி கழல் பணிந்து ஏத்துவர்-2-2-10-
வானே ஏத்தும் எம் வானவர் ஏறே -2-9-9-

தமது பொருள்களான ஜீவாத்மாக்கள் பிரணவத்தைச் சொல்லி ஸ்வாமி யாகத் தம்மை த்யானிப்பதற்கு உரியவர் –
ஸ்வாபாவிக நித்ய ஸ்வாமி-சொத்து -சம்பந்தம் இருப்பதால் ஜீவர்களால் எப்போதும் த்யானிக்கத் தக்கவராக இருப்பவர் –ஸ்ரீ பராசர பட்டர் –

ஸ்வ உஜ்ஜீவன இச்சா யதி தே ஸ்வ சத்தாயம் ஸ்ப்ருஹா யதி ஆத்ம தாஸ்யம் ஹரே ஸ்வாம்யம் ஸ்வ பாவம் ச சதா ஸ்மர–ஸ்ரீ விஷ்ணு தத்வம்
நாந்யோ ஹேதுர் வித்யதே ஈசனாய –ஸ்வேதாஸ்வரம் -6-17-

எப்போதும் ஒரே ஸ்வ பாவத்துடன் கூடியே இருப்பவர் –ஸ்ரீ சங்கரர் –

மங்களகரமான பொருள் அனைத்தையும் உடையவர் -சுதந்த்ரமானவர் – ஸ்வ தந்த்ரமானவர் -அவாப்த சமஸ்த காமர் -தம்மைப் போலவே
ஞான ஆனந்தங்கள் உடைய நல்ல ஜீவர்களைக் காப்பவர் -தாமாகவும் முழுவதும் அனுபவிக்கத் தக்கவர் — ஸ்ரீ சத்ய சந்தர் –

————–

527-ஜிதாமித்ர
பகைவர்களை ஜெயித்தவன்
என் பெருவினையைக் கிட்டிக் கிழங்கோடு தன் அருள் என்னும் ஒள் வாள் உருவி வெட்டிக் களைந்தவன்
செய்யேல் தீ வினை என்று அருள் செய்யும் கையார் சக்கரக் கண்ண பிரான் -2-9-3-
எந்தன் மெய் வினை நோய் களைந்து நன் ஞானம் அளித்தவன் –

தாம் ஸ்வாமியாக உள்ள ரஹச்யத்தைக் கண்டு அறிவதற்கு விரோதிகளான அஹங்காரம் மமகாரம் காமம் குரோதம்
முதலியவற்றை வென்றவர்–ஸ்ரீ பராசர பட்டர் –

காம ஏஷ க்ரோத ஏஷ ரஜோ குண ஸமுத்பவ –ஸ்ரீ கீதை -3-37-
ஜஹி ஸத்ரும் மஹோ பாஹோ காம ரூபம் துராசதம் –ஸ்ரீ கீதை -3-43-

உட் பகைகளான ஆசை வெறுப்பு போன்றவற்றையும் வெளிப் பகைவர்களான ராவண கும்பகர்ண
சிசுபாலாதிகளையும் வென்றவர் –ஸ்ரீ சங்கரர் –

விரோதிகளை வென்றவர் — ஸ்ரீ சத்ய சந்தர் –

————

528-பிரமோதன்
ஆனந்திப்பவன்-ஆனந்தம் அளிப்பவன்
கரும்பே கட்டித் தேனே அக்காரக் கனியே
மைய வண்ணா முத்தமே என தன்பு மாணிக்கமே மரகதமே
மற்று ஒப்பாரை இல்லா ஆணிப் பொன்னே அடியேன் உடை யாவி அடைக்கலமே -திரு விருத்தம் 84-85-

தம் மடியவர்கள் தம்மை தியானிக்க தொடங்கும் போதே மகிழ்விப்பவர் –ஸ்ரீ பராசர பட்டர் –

ஆத்மாவாகிய அமுத ரசத்தை அனுபவிப்பதனால் எப்போதும் மகிழ்ந்து இருப்பவர் –
தியானிப்பவர்களுக்கு தியானித்த அளவிலே மகிழ்ச்சி அளிப்பவர்–ஸ்ரீ சங்கரர் –

உயர்ந்த ஸ்ரீ லஷ்மியையும் உயர்ந்த வாயுவையும் உடையவர் -தாம் ஆனந்திப்பவர் –
ஜனங்களை ஆனந்தப் படுத்துபவர் -மகிழ்ச்சியை உண்டாக்குபவர் — ஸ்ரீ சத்ய சந்தர் –

———————————————–

3-34–ஸ்ரீ கபில அவதாரமாய் ரஷணம் -529-538 திருநாமங்கள் –

529-ஆநந்த –
அம்ச அவதாரம் -கபிலர் -பற்று அற்றவர் -என்பதால் ஆனந்தம் உடையவர்
உயர்வற உயர் நலம் உடையவன் –

உபநிஷத் -ஆனந்த வல்லியில் சொல்லியபடி வாக்குக்கும் மனத்துக்கும் எட்டாத ஆனந்தமுடையவர் –ஸ்ரீ பராசர பட்டர் –

ஆனந்த ஸ்வரூபமாக இருப்பவர் –ஸ்ரீ சங்கரர் –

ஆனந்த ஸ்வரூபம் யுடையவர் -ஆனந்திப்பவர் — ஸ்ரீ சத்ய சந்தர் –

————–

530-நந்தன –
ஆனந்தம் அழிப்பவன் -தன்னை ஒத்த ஆனந்தம் அழிப்பவன்
இன்பமாம் அதனை வுயர்த்தாய் செல்வத்தினால் வளர் பிள்ளாய் -பெரியாழ்வார் -2-8-8-

தம் பரமானந்தத்தை மோஷத்தில் அளித்து மகிழ்பவர் –ஸ்ரீ பராசர பட்டர் –

ஏஷ ஹி ஏவா நந்த யாதி –தைத்ரியம் ஆனந்த வல்லி -7-
ஏதஸ்யைவா நந்தஸ்ய அந்யாநி பூதாநீ மாத்ரம் உப ஜீவநதி –பிருஹத் 4-3-32-

பக்தர்களை மகிழ்விப்பவர் –ஸ்ரீ சங்கரர் –

மகிழ்விப்பவர்– ஸ்ரீ சத்ய சந்தர் –

————–

531-நந்த –
எல்லாம் நிரம்பி இருப்பவன் -பற்று அற்ற நிலை இருந்தால் எல்லாம் நிறைந்து இருக்கும்

அனுபவிப்பதற்கு உரிய பொருள்கள் கருவிகள் அனுபவங்கள் அனுபவிப்பவர்கள் தம்மிடம் நிரம்பியவர் –ஸ்ரீ பராசர பட்டர் –

வேண்டியவை எல்லாம் நிரம்பியவர் -அனந்த விஷய சுகங்களைக் கடந்தவர் –ஸ்ரீ சங்கரர் –

எல்லாம் நிறைந்து இருப்பவர் — ஸ்ரீ சத்ய சந்தர் –

————–

532-சத்ய தர்மா –
தர்மத்தை உண்மை உடன் நடத்துபவன் -தர்ம ஸ்வரூபி
எங்கும் தன் புகழாவிருந்து அரசாண்ட எம் புருஷோத்தமன் -பெரியாழ்வார் -4-7-1-

ஆரம்பம் முதல் தம்மை அடையும் வரை தம் தர்மத்தை தவறாது நடத்துபவர் –ஸ்ரீ பராசர பட்டர் –

உண்மையான ஞானம் முதலியவற்றை உடையவர் –ஸ்ரீ சங்கரர் –

உலகைத் தாங்குபவர் -உண்மையான ஞானம் முதலிய தர்மங்கள் யுடையவர் — ஸ்ரீ சத்ய சந்தர் –

————–

533-த்ரிவிக்ரம –
வேதங்களை வ்யாபித்தவன் -மூ உலகங்களையும் அளந்து கொண்டவன் வேதங்களில் நிறைந்தவன் –
அன்னமாய் முனிவரோடு அமரர் ஏத்த அரு மறையை வெளிப்படுத்த வம்மான் -திரு நெடு -30-

இச் சிறந்த மகிமையினால் மூன்று வேதங்களையும் வியாபித்து இருப்பவர் —ஸ்ரீ பராசர பட்டர் –

சர்வே வேதா யத்ரைகம் பவந்தி
நாராயண பரா தேவா –ஸ்ரீ மத் பாகவதம்

மூன்றடிகளால் மூன்று உலகங்களை வியாபித்தவர் -மூவுலகங்களையும் அளந்தவர் –ஸ்ரீ சங்கரர் –

மூன்று லோகங்களிலும் கருடன் மூலம் சஞ்சரிப்பவர் -திரி விக்ரம அவதாரத்தில் மூன்றடிகளை யுடையவர் –
மூன்று வேதங்கள் அல்லது முக்குணங்கள் அல்லது மூன்று உலகங்கள் அல்லது தேவர் மனிசர் அசுரர் ஆகிய மூவர்
அல்லது சேதனம் அசேதனம் இரண்டும் கலந்தது ஆகிய மூன்று ஆகியவற்றில் மூன்றடிகளை வைத்தவர் –
அத்ரி விக்ரம-என்று பாடம் கொண்டால் -அத்ரி மகரிஷியின் புதல்வரான தத்தாத்ரேயராக திருவவதரித்தவர் — ஸ்ரீ சத்ய சந்தர் –

———–

மஹர்ஷி கபிலாசார்யா க்ருதஜ்ஞோ மேதிநீ பதி
த்ரிபதஸ் த்ரிதசாத்யஷோ மகாஸ்ருங்க க்ருதாந்தக்ருத் –57

———–

534-மஹர்ஷி
பெரிய ஞானி
அங்கம் ஆறும் வேத நான்கும் ஆகி நின்று அவற்றுள்ளே தங்கு கின்ற தன்மையான் -திருச் சந்த -15
ருஷி பிர ஸூதம் கபிலம் மஹாந்தம்
மெய் ஞான வேதியன் -3-1-11-

வேதங்கள் அனைத்தையும் நேராகக் கண்ட கபில மகரிஷி –ஸ்ரீ பராசர பட்டர் –

ஸ்ருதீ ருகாத்யா வக்த்ரேப்ய ப்ரோத்கிரந்தமதா ஸ்மரேத்–கபில த்யான ஸ்லோகம்
ருஷிம் ப்ர ஸூதம் கபிலம் மஹாந்தம் –ஸ்வேதாஸ்வரம் -5-2-
சாங்க்யஸ்ய வக்தா கபில பரமர்ஷி ச உச்யதே

மகரிஷி -கபிலாசார்யா -என்று ஒரே திரு நாமம் -வேதத்தைப் பார்த்தவரான கபிலாசார்யராக இருப்பவர் –ஸ்ரீ சங்கரர் –

சிறந்த ரிஷி -சம்சார நடுக்கத்தை அழிப்பவர்-பிரமனையும் ருத்ரனையும் சீராட்டுபவர் –
மஹர்ஷி கபிலாசார்யா -ஒரே திரு நாமம் — ஸ்ரீ சத்ய சந்தர் –

————-

535-கபிலாசார்ய
கபில நிறம் உடையவன் -brown -கையில் சங்கு ஜெப மணி மாலை
சாங்க்ய தத்வம் வெளி இட்டு அருளி

கபிலர் என்னும் ஆச்சார்யராக இருப்பவர்–ஸ்ரீ பராசர பட்டர் –

நிர் தூ மாங்கார வர்ணாபம் சங்க பத்மாஷ ஸூத்ரினாம்
சம்வித் பிரகாச நாய –மந்தர வர்ணயம்

————-

536-க்ருதஜ்ஞ-
நன்மை அறிந்தவன் -இஷ்வாகு வம்ச சகரன் -அஸ்வ மேத யாகம் -பிள்ளைகள் 60000 பேர் -குதிரையை
கபிலர் ஆஸ்ரமத்தில் கண்டு -எரிக்கப் பட்டனர் –
சாம்பல் ஆனார்கள் அம்சுமான் கபிலரை வணங்கி -அந்த சூக்ருதம் வணக்கத்தையே கண்டு அருள் புரிந்தார்
தெளிவுற்று வீவின்றி நின்று அவர்க்கு இன்பக் கதி செய்யும் கண்ணன் -7-5-11-

சகர புத்ரர்கள் அபராதம் செய்திருப்பினும் அம்சுமான் தன்னை வணங்கிய நல்வினையை
மட்டுமே அறிந்து இருப்பவர் –ஸ்ரீ பராசர பட்டர் –

கபிலமுப கம்ய பக்திநம் ரஸ்ததா துஷ்டாவ ச சைவம் பகவாநாஹ-அம்சுமான் கபிலரை வணங்கி ஸ்துதிக்க
அவர் உரைக்க தொடங்கினார்
வரம் வ்ருஷ்ணிவ -ஸ்ரீ விஷ்ணு புராணம் -வேண்டிய வரம் கேட்ப்பாயாக

கார்யமான உலகமாகவும் ஆத்மாவாகவும் இருப்பவர் –ஸ்ரீ சங்கரர் –

பக்தர்கள் செய்பவைகளை அறிபவர் — ஸ்ரீ சத்ய சந்தர் –

————–

537-மேதிநீபதி –
பூமிக்கு அதிபதி -பெரிய வப்பன் -அமரர் அப்பன் உலகுக்கு ஓர் தனி அப்பன் -8-1-11-

பூமிக்கு நாதர் -இந்தப் பூமி முழுதும் எந்த வாசு தேவருடையதோ அவரே கபில மூர்த்தியாய் பூமியை எக்காலமும்
தாங்கிக் கொண்டு இருக்கிறார் –ஸ்ரீ பராசர பட்டர் –

யஸ்யேயம் வஸூதா சர்வா வாஸூ தேவஸ்ய தீமத கபிலம் ரூபமாஸ்தாய தாரயத்ய நிசம் தராம் –

பூமிக்கு நாதர் –ஸ்ரீ சங்கரர் –

பூமிக்குப் பதி– ஸ்ரீ சத்ய சந்தர் –

————–

538-த்ரிபத-
மூன்றை பிரகாசப் படுத்துபவன் -பிரணவம் –
போக்தா போக்கியம் ப்ரேரிதாரஞ்ச-மூன்று தத்தவங்களை அறிய –
கபிலர் -பிரஜா பதிக்கும் தேவ ஹூதிக்கும் -தாயாருக்கு உபதேசித்து அருளி
மூன்று எழுத்து அதனை மூன்று எழுத்து அதனால் மூன்று எழுத்தாக்கி
மூன்று அடி நிமிர்த்து மூன்றினில் தோன்றி மூன்றினில் மூன்று உருவானவன் -பெரியாழ்வார் -4-7-10-
மூன்று கொண்டைகள் முசுப்புக்களை உடைய வராஹரூபி -62-த்ரி ககுத்தாமா -முன்பு பார்த்தோம் –

போக்கியம் -அசேதனம் போக்தா -சேதனம் -நியந்தா -ஈஸ்வரன் -ஆகிய மூன்று தத்தவங்களை அறிவிப்பவர் –
மூன்று பதங்களை உடைய பிரணவம் ஆனது தம்மைக் குறிப்பதாக இருப்பவர் –
ஸ்ரீ வராஹாவதாரத்தில் மூன்று ககுத் திமில் முசுப்பு களை யுடையவர் –ஸ்ரீ பராசர பட்டர் –

சத்வாநாம் உகாராய பிரதானம் புருஷம் பரம் தர்சாயிஷ்யாபி லோகேஷு கபிலம் ரூபம் ஆஸ்தித –ஸ்ரீ விஷ்ணு தர்மம்
ததை வாசம் த்ரிக குதோ வாராஹம் ரூபம் ஆஸ்தித –மோக்ஷ பர்வம்

ஸ்ரீ வாமனாவதாரத்தில் மூன்றடிகளை உடையவர் –ஸ்ரீ சங்கரர் –

ஸ்ரீ வைகுண்டம் -அனந்தாசனம்-ச்வேதத்வீபம் -என்னும் மூன்று இடங்களை யுடையவர் -காயத்ரி மந்த்ரத்தின் மூன்று
பாதங்களாலும் தெரிவிக்கப் படுபவர் -மூன்று பாதங்களால் ஞானத்தை அருள்பவர் — ஸ்ரீ சத்ய சந்தர் –

————————————————————-

3-35-வராஹ அவதார திரு நாமங்கள் -539-543-

539-த்ரிதசாத்யஷ –
த்ரிதசம் முப்பத்து மூவர் -தேவர்களைக் காப்பாற்றியவன்
முப்பத்து மூவர் அமரர்க்கு முன் சென்று கப்பம் தவிர்க்கும் கலி -திருப்பாவை
எயிற்றிடை மண் கொண்ட எந்தையாக விளங்கியவன்
முதல் மூவர்க்கும் முதல்வன் -3-6-2-

பிரளய ஆபத்தில் பிரம்மா முதலியவர்களை உட்பட ஸ்ரீ பூமி தேவியை – ஸ்ரீ வராகமாய்
திருவவதரித்து காத்தவர் –ஸ்ரீ பராசர பட்டர் –

ஜாக்ரத் ஸ்வப்ன ஸூஷுப்தி என்னும் மூன்று நிலைகளையும் நடத்துபவர் –ஸ்ரீ சங்கரர் –

படைத்தல் காத்தல் அழித்தல் ஆகிய முத் தொழில்களுக்குத் தலைவர் -மூன்றடிகளை அளந்தவர் -மூன்றாவது
நிலையான யௌவன பருவத்தை எப்போதும் யுடைய தேவர்களுக்குத் தலைவர் — ஸ்ரீ சத்ய சந்தர் –

——————

540-மகாச்ருங்க-
பெரிய கொம்பு உடையவன் -கோரப் பற்களைச் சொல்லும்
கோல வராஹம் ஒன்றாய் நிலம் கோட்டிடை கொண்ட எந்தை -10-10-
கோடு -பெரும் பற்கள்

பூ மண்டலம் அனைத்தும் ஒரு மூலையில் ஒட்டிக் கொண்டு இருக்கும்படி பெரிய கோரைப் பல்லை யுடையவர் –ஸ்ரீ பராசர பட்டர் –

ஏகஸ் ஸ்ருங்கோ வராஹஸ் த்வம் –யுத்த -120-14-
தம்ஷ்ட்ர அக்ராவிந்யஸ்தம சேஷம் ஏதத் பூ மண்டலம் நாத விபாக்யதே தே விகாஹதே பத் பவநம்
விலக்நம் சரோஜிநீ பத்ர மிவோட பங்கம்

மத்ஸ்ய ரூபத்தில் பிரளய சமுத்ரத்தில் ஓடமாகிய பூமியைக் கட்டி விளையாடிய சிறந்த கொம்பு யுள்ளவர் –ஸ்ரீ சங்கரர் –

மிகுந்த ஞானம் உள்ளவர் -மிகவும் பிரதானமானவர் -மத்ஸ்ய திரு வவதாரத்தில் பெரிய கொம்பை யுடையவர் — ஸ்ரீ சத்ய சந்தர் –

—————-

541- க்ருதாந்தக்ருத் –
ஹிரண்யாக்ஷனைக் கொன்றவன்
ஞானத்தின் ஒளி உருவை நினைவார் என் நாயகரே –பெரிய திரு மொழி -2-6-3-
அஹம் ஸ்மராமி மத்பக்தம் நயாமி பரமாங்கதிம்
சிலம்பிடைச் சிறு பரல் போல் பெரிய மேரு திருக் குளம்பில் கணகணப்பப்
திருவாகாரம் குலுங்க நிலமடந்தை தனை இடந்து புல்கிக் கோட்டிடை வைத்து அருளிய எம் கோமான் -பெரிய திரு மொழி -4-4-8-

யமனைப் போன்ற ஹிரண்யாஷனை அழித்தவர்-ஸ்ரீ வராஹ ஸ்ம்ருதி புராணங்களில் தம்முடைய-
-சரண் அடைந்தவர்களை ரஷித்தே தீருவேன் -சித்தாந்தத்தை காட்டியவர் –ஸ்ரீ பராசர பட்டர் –

தம்மால் செய்யப்பட உலகைத் தாமே அழிப்பவர்-எமனை வெல்பவர்–ஸ்ரீ சங்கரர் –

தீய கர்மங்களை அழிப்பவர் -ஜீவர்கள் செய்த கர்மங்களின் பலன்களை நிர்ணயம் செய்பவர் -கர்ம பந்தங்களை
உண்டாக்குபவர் – ப்ரஹ்ம ஸூத்ரங்களை ஏற்படுத்தி சித்தாந்தம் செய்பவர் -மரணத்தை அழிப்பவர் — ஸ்ரீ சத்ய சந்தர் –

————-

மஹா வராஹோ கோவிந்தஸ் ஸூ ஷேண கனகாங்கதீ
குஹ்யோ கபீரோ கஹநோ குப்தஸ் சக்ர கதாதர –58-

—————

542-மஹா வராஹ
பெரும் கேழலார்-தன் பெரும் கண் மலர்ப் புண்டரீகம் நம் மேல் ஒருங்கே பிறழ வைத்தார் -திரு விருத்தம் -45-
சிலம்பிடை சிறு பரல் போல் பெரிய மேரு திருக் குளம்பில் கணகணப்ப -பெரிய திரு மொழி -4-4-8-
வளை மருப்பில் ஏரார் உருவத்து ஏனமாய் எடுத்த ஆற்றல் அம்மான் -பெரிய திரு மொழி -8-8-3-

மிகப் பெரிய ஸ்ரீ வராக ரூபம் எடுத்தவர் -புண்டரீகாஷனாயும் கரு நெய்தல் இதழ் போன்றவருமான ஸ்ரீ மஹா வராஹமானவர்
கோரப் பல்லினால் பூமியை ஏந்திக் கொண்டு பெரிய கருமலை போலே
பாதாளத்தில் இருந்து புறப்பட்டார் -ஸ்ரீ விஷ்ணு புராணம் –ஸ்ரீ பராசர பட்டர் –

தத சமுத் ஷிப்ய தராம் ஸ்வ தம்ஷ்ட்ரயா மஹா வராஹ ஸ்புட பத்ம லீசந் ரசாதலாத் உத்பல பத்ம ஸந்நிப
சமுத்திதோ நீல இவாசலோ மஹான் –ஸ்ரீ விஷ்ணு புராணம் -1-4-26-

பெரிய ஸ்ரீ வராஹ ரூபி –ஸ்ரீ சங்கரர் –

கொடிய அரக்கர்களை அழிப்பவர்-ஸ்ரீ ருக்மிணி தேவியின் ஸ்வயம் வரத்தில் சிசுபாலனை அடக்கியவர் -மிகச் சிறந்தவர்களால்
ஒதுக்கப் படாதவர் -மிகவும் தாழ்ந்த கலி புருஷன் போன்றவர்களை அடக்குபவர் — ஸ்ரீ சத்ய சந்தர் –

—————-

543-கோவிந்த
பூமியை உடையவன் கோ பூமி விந்த அடைபவன்
எம்மான் கோவிந்தனே
கோவிந்தன் குடக்கூத்தன் கோவலன் -2-7-4-

நஷ்டமாய்ப் போன பூமியை மீண்டும் அடைந்தவர் -ஸ்ரீ பராசர பட்டர்

நஷ்டாம் ச தரணீம் பூர்வமவிந்தம் ச குஹா கதாம் கோவிந்த இதி தே நாஹம் –சாந்தி பர்வம் –
ஸ்ரீ வராஹமாய் பூமியை மீட்டதால் எனக்கு கோவிந்தன்

வேதாந்த வாக்குகளால் அறியப் படுபவர் -ஸ்ரீ சங்கரர்

த்ருதராஷ்ரானுக்கு கண்களை அளித்தவர் -சமுத்திர ஜலத்தை அடைந்தவர் -ஸ்ரீ சத்ய சந்தர்

——————————————————————

3-36- சுத்த ஸ்வரூபி -544-568-திரு நாமங்கள் –
குஹ்யமான அர்த்தங்கள் சொல்லும் திரு நாமங்கள் -அஹம் வேத்மி -போலே

544-ஸூஷேண-
சதுரங்க பலம் உடையவன் -பஞ்ச உபநிஷத் மயமான திருமேனியே பெரும் சேனை –
மழுங்காத ஞானமே படையாக -3-1-9-
மாஸூணாச் சுடர் உடம்பன் -3-1-8-

பத்த முக்த நித்யர்களை வசப்படுத்துவதற்குச் சேனை போலச் சிறந்த கருவியான
பஞ்ச உபநிஷத்துக்களைத் திரு மேனியாக உடையவர் -ஸ்ரீ பராசர பட்டர்

தம் கணங்கள் ஆகிய சிறந்த சேனை உடையவர் -ஸ்ரீ சங்கரர்

நல்ல சேனையை உடையவர் -மிகவும் அதிகமாகக் கொடுப்பவர் -ஸ்ரீ சத்ய சந்தர்

——————

545-கநகாங்கதீ –
தங்கத் திரு ஆபரணம் அணிந்தவன் -அங்கதம் -தோள் வளை -அவனையே ஸ்வர்ண மயனாக சொல்லும்
அந்தராதித்யே ஹிரண்மய புருஷ த்ருச்யதே
மாணிக்கமே என் மரகத மற்று ஒப்பார் இல்லா ஆணிப் பொன்னே -திரு விருத்தம் -65-
பொன் முடி எம் போர் ஏறு நால் தடம் தோள் எம்மான்

அப்ராக்ருதமான தோள் வளை முதலிய திவ்ய ஆபரணங்களை எப்போதும் அணிந்து இருப்பவர்-
கனகம் -தங்கம் -பஞ்ச உபநிதத்துக்களைக் குறிக்கும் -ஸ்ரீ பராசர பட்டர்

பொன் மயமான தோள் வளைகளை உடையவர் -ஸ்ரீ சங்கரர்

பொன் மயமான தோள் வளைகளை உடையவர் -ஸ்ரீ சத்ய சந்தர்

————

546-குஹ்ய
மறைக்கப் பட்டவன் –
பரமேஷ்டி புமான் விசவா நிவ்ருத்த சர்வ -பஞ்ச -பஞ்ச சக்தி உபநிஷத் மயம்
ஞாலம் உண்டு உமிழ்ந்த மாலை எண்ணுமாறு அறிய மாட்டேன் -3-4-9-
சொல் முடிவு காணேன் நான் சொல்லுவது என் சொல்லீரே

வெளிப்படையாகப் புலப்படாத ரஹச்யமான பஞ்ச உபநிஷத் எனப்படும் திரு மேனியை உடையவர் -ஸ்ரீ பராசர பட்டர்

ரஹச்யமான உபநிஷத்தினால் அறியக் கூடியவர் -இதய குகையில் மறைந்து உள்ளவர் -ஸ்ரீ சங்கரர்

மறைந்து இருப்பவர் -குஹனால் அர்ச்சிக்கப் பட்டவர் -ஸ்ரீ சத்ய சந்தர்

————–

547-கபீர –
கம்பீர ஸ்வபாவன்-சமுத்திர இவ காம்பீர்யே
நீண்டாயை வானவர்கள் நினைத்து ஏத்திக் காண்பது அரிதால் ஆண்டாய -பெரிய திரு மொழி -7-2-5-
காட்டவே கண்ட பாதம்
கண்டவாற்றால் தனதே உலகம் என நின்றான்
த்வம் அப்ரமேயச்ச துராச தச்ச

யாருக்கும் புலப்படாத ஈஸ்வர மகிமை உடையவர் -கலங்கிய தண்ணீர் கதக விதையினோடு -தேற்றாங்க கொட்டையோடு –
சேர்ந்தால் சுத்தமாவது போலே-அநாதியான அவித்யை யாதியால் கலங்கிய ஜீவனும் பகவானுடன் சேர்ந்தால்
தெளிவை அடைகிறான் என்னும் போது ஸ்வாபாவிக பிரகாசத்வம் விளங்கும் -ஸ்ரீ பராசர பட்டர்

ஞானம் ஐஸ்வர்யம் பலம் முதலிய அளவற்ற குணங்களால் அகாதமாக இருப்பவர் -ஸ்ரீ சங்கரர்

ஸ்ரீ லஷ்மி தேவியுடன் ரமிப்பவர் -அசுரர்களுக்கு பயத்தை அளிப்பவ்வர் –
அகபீர -பாடம் -கோவர்த்தன மலை யால் மழை பயத்தை போக்கியவர் -ஸ்ரீ சத்ய சந்தர்

————–

548-கஹந-
ஆழமானவன் -அளவற்ற பெருமை உடையவன்
தனக்கும் தன் தன்மை அறிவரியான்

உள்ளிருக்கும் பொருள் தெளிவாகத் தெரிந்தாலும் இறங்குவதற்கு அரிய கடல் போல அரியவர் -ஸ்ரீ பராசர பட்டர்

இறங்க முடியாதவர் -ஜாக்ரத் ஸ்வப்ன ஸூ ஷுப்தி நிலைகளில் இருக்கின்ற போதும்
இல்லாத போதும் சாஷியாக இருப்பவர் -ஸ்ரீ சங்கரர்

அறிய முடியாதவர் -அகஹன-பாடம் -மலைகளின் இறக்கைகளை வெட்டிய இந்திரனை நடத்துபவர் -ஸ்ரீ சத்ய சந்தர்

—————–

549-குப்த –
ரக்ஷிக்கப் பட்டவன் -அவன் பெருமை அறிந்த -அஹம் வேத்மி மஹாத்மானம் -போல்வாரால்
ஆங்கு ஆராவாரம் அது கேட்டு அழல் உமிழும் பூங்காரரவணையான் பொன் மேனி -நான் முகன் -10-

இம் மகிமை அறிந்த பூர்வாச்சார்யர்களால் காக்கப் பட்டவர்-ஸ்ரீ பராசர பட்டர்

வாக்குக்கும் மனத்திற்கும் எட்டாமல் மறைந்து இருப்பவர் -ஸ்ரீ சங்கரர்

அயோக்யர்களால் அறிய முடியாதவர் -ஸ்ரீ சத்ய சந்தர்

—————

550-சக்ர கதாதர –
திவ்ய ஆயுதங்களை யுடையவன் -தமஸ பரமோ தாதா சங்க சக்ர கதாதர
நான்கு தோளன் குனி சாரங்கன் ஒண் சங்கதை வாள் ஆழியான் -8-8-1-

மேற் சொன்ன திவ்ய பூஷணங்களைப் போலே பஞ்ச உபநிஷத் மயமான
திவ்ய ஆயுதங்களை எப்போதும் உடையவர் -ஸ்ரீ பராசர பட்டர்

தமஸஸ் பரமோதாதா சங்க சக்ர கதாதரா–யுத்த -மண்டோதரி

மனஸ் தத்வமாகிய சக்ரத்தையும் புத்தி தத்வமாகிய கதையையும் உலகைக் காப்பதற்காக தரிப்பவர் -ஸ்ரீ சங்கரர்

சக்ரம் கதைகளைத் தரிப்பவர் -நரகாசுரனை அழித்தவர்-எவராலும் தாங்கப் படாதவர் –
எல்லோரையும் நன்கு தாங்குபவர் -ஸ்ரீ சத்ய சந்தர்

—————

வேதாஸ் ச்வாங்கோ சித்த க்ருஷ்னோ த்ருடஸ் சங்கர்ஷண அச்யுத
வருணோ வாருணோ வ்ருஷ புஷ்கராஷோ மஹா மன —59-

—————-

551-வேதா –
மங்கள கரன்
சென்று அடைந்தவர் தமக்கு தாய் மனத்து இரங்கி அருளினைக் கொடுக்கும் காமனைப் பயந்தான் -பெரிய திரு மொழி -4-3-5-

அளவற்ற மங்களமான பலவகைப்பட்ட பெருமைகளை பக்தர்களுக்கு எக்காலமும் வழங்குபவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

தமஸஸ் பரமோதாதா சங்க சக்ர கதாதரா–யுத்த -மண்டோதரி

படைப்பவர் -ஸ்ரீ சங்கரர் –

விசேஷமாகத் தாங்குபவர் -காப்பவர் -ஸ்ரீ சத்ய சந்தர் –

—————

552-ஸ்வாங்க –
அரசாங்கம் உடையவன்
வீற்று இருந்து ஏழு உலகமும் தனிக் கோல் செல்ல வீவில் சீர் ஆற்றல் மிக்கு ஆளும் அம்மான் -4-5-1-

தமது சர்வேஸ்வரத் தன்மைக்கு இலக்கணமாக குடை -சாமரம் முதலிய ராஜ்ய அங்கங்கள்
எப்போதும் உள்ளவர் –ஸ்ரீ பராசர பட்டர் –

தாமே காரணங்களின் சஹகாரியாகவும் இருப்பவர் –ஸ்ரீ சங்கரர் –

படைப்புக் காரியத்தில் தாமே அங்கமாக இருப்பவர் -தனக்கேற்ற அங்கங்களை உடையவர் –
சுதந்திரமான அங்கங்களை உடையவர் –ஸ்ரீ சத்ய சந்தர் –

————–

553-அஜித –
ஜெயிக்க முடியாதவன் -அபராஜிதா அயோத்யா பரமபதம் -அப்ராக்ருதமான தேச அதிபதி –
திண்ணன் வீடு முதல் முழுதுமாய் எண்ணின் மீதியான் எம்பெருமான் -2-2-1-

உற்பத்தி அழிவு முதலிய பிரகிருதி தர்மங்களால் வெல்லப்படாத அஜிதா என்னும்
ஸ்ரீ வைகுண்டத்துக்கு அதிபதி –ஸ்ரீ பராசர பட்டர் –

புரம் ஹிரண்மயீம் ப்ரஹ்ம விவேச அபராஜிதா

அவதாரங்களிலும் எவராலும் வெல்லப் படாதவர் –ஸ்ரீ சங்கரர் –

ஒருவராலும் வெல்லப் படாதவர் –ஸ்ரீ சத்ய சந்தர் –

—————-

554-கிருஷ்ண –
கண்ணன் என்னும் கரும் தெய்வம்
கரியான் ஒரு காளை-பொதுவான திரு நாமம் –
காராயின காள நன் மேனியினன் நாராயணன் -9-3-1
கருவடிவில் செங்கண்ண வண்ணன்
ஆதி அஞ்சோதி உருவை அங்கு வைத்து இங்குப் பிறந்த வேத முதல்வன் -3-5-5-

கார் முகில் போல் அழகிய கருமை நிறம் உள்ளவர் –ஸ்ரீ பராசர பட்டர் –

க்ருஷாமி மேதிநீம் பார்த்த பூத்வா க்ருஷ்ணாயசோ மஹான் கிருஷ்ணோ வர்ணச்ச மே யஸ்மாத்
தேந கிருஷ்ணோஹம் அர்ஜுனன் -சாந்தி பூர்வம்
ஏகைவ பஞ்சதா பூதா பிராதான விக்ரஹாத்மிகா சர்வ சக்தி சமேதா அபி புருஷோ நியதீரிமா ந ஜஹாதி ஸ்வபாவோத்த
காருணியேந ஸமாச்ரித பரமேஷுடீ புமாந் விஸ்வோ நிவ்ருத்தி சர்வம் ஏவ ச பஞ்சைதா சக்த்ய ப்ரோக்தா
பரஸ்ய பரமாத்மந–ஸ்ரீ விஷ்ணு தத்வம்
மத்ஸ்ய கூர்ம வராஹானாம் ஆவிர்பவோ மஹாத்மந அநயைவ த்விஜ ஸ்ரேஷ்ட நாந் யதா தத் விரோததா

கிருஷ்ண த்வைபாயனர் என்னும் வியாச ரூபியானவர் –ஸ்ரீ சங்கரர் –

கரிய நிறமுடையவர் -அக்னி ரூபமாக இருப்பவர் –ஸ்ரீ சத்ய சந்தர் –

——————

555-த்ருட-
ஸ்திரமானவர் -ஸ்தூல ரூபி -இதில் இருந்து வ்யூஹ மூர்த்தி சங்கர்ஷணர் பற்றிய திரு நாமங்கள்
திண்ணிய தோர் அரி உரு -3-9-2-

தம்மை உபாசிப்பவர்களை அனுரஹிப்பதற்காக வ்யூஹத்தில் ஸ்தூலமாக இருப்பவர் –ஸ்ரீ பராசர பட்டர் –

ஸ்வரூபத்தின் சக்தியால் தன்மை மாறாதவர் –ஸ்ரீ சங்கரர் –

உறுதியானவர் –ஸ்ரீ சத்ய சந்தர் –

—————

556-சங்கர்ஷண –
வ்யூஹ வாசுதேவன் –சித் அசித் வஸ்துக்களை தன் இடம் ஆகர்ஷிப்பவன்-ஈர்ப்பவன் -ஓன்று சேர்ப்பவன்

சேதன அசேதனங்களைத் தம்மிடத்தில் ஓன்று சேரும்படி ஆகர்ஷிப்பவர் –ஸ்ரீ பராசர பட்டர் –

சங்கர்ஷண -சம்ஹார காலத்தில் பிரஜைகளைச் சேர்த்து இழுப்பவர் -அச்யுத -தம் ஸ்வரூபத்தை விட்டுத் தவறாதவர் –
சங்கர்ஷணோச்யுத ஒரே திருநாமம் –ஸ்ரீ சங்கரர் –

எல்லோரையும் நன்றாக இழுத்துக் கொள்பவர் -அழிவற்றவர் –சங்கர்ஷணோச்யுத ஒரே திருநாமம் –ஸ்ரீ சத்ய சந்தர் –

————–

557-அச்யுத –
நித்ய ஈஸ்வரன்
வீவில் இன்பம் மிக எல்லை நிகழ்ந்த நம் அச்சுதன் -4-5-3-
அச்சுதன் அமலன் -3-4-5
முன்பே 101-320 பார்த்தோம்

வ்யூஹத்திலும் தமது ஸ்தானத்தில் இருந்து நழுவாதவர்–ஸ்ரீ பராசர பட்டர் –

ஸ்யவந உத்பத்தி யக்தஷு ப்ரஹ்ம இந்த்ர வருணாதிஷு யஸ்மாந்ந ஸ்யவசே ஸ்தாநாத் தஸ்மாத்
சங்கீர்த்தயசே அச்யுத–ப்ரஹ்மாதிகள் கர்ம வசப்பட்டவர்கள்

—————–

558-வருண –
மூடி மறைத்து -எங்கும் உள்ளவன் –
எதிர் சூழல் புக்கு எனக்கே அருள்கள் செய் அம்மான் -2-7-7-

பூமி ஆகாயம் முதலிய எல்லாவற்றையும் மறைத்துக் கொண்டு இருப்பவர் –ஸ்ரீ பராசர பட்டர் –

யேநாவ்ருத்தம் கம் ச திவம் மஹீம் ச –தேநதமா வ்ருதம் –யாரால் ஆகாசம் பூமி சுவர்க்கம் ஆகியவை
சூழப்பட்டுள்ளவையோ -வ்ருடம் வரணை–இதனால் வருணன் எனப்படுகிறான்

மாலையில் கிரணங்களை மறைத்துக் கொள்ளும் சூரியனாக இருப்பவர் –ஸ்ரீ சங்கரர் –

உத்தமமான ஜீவர்களை மேலே உயர்ந்த கதிக்கு அழைத்துச் செல்பவர் -தம்மை மறைப்பவர் -ஆனந்தம் உடையவர் பக்தர்களை
விரும்புபவர் -பக்தர்களால் விரும்பப் படுபவர் -அறிபவராய்-அருணா ரூபத்தில் உள்ளவர் –ஸ்ரீ சத்ய சந்தர் –

——————–

559-வாருண
ஆஸ்ரிதர் இடம் இருப்பவன் –
உன்னைக் கொண்டு என்னுள் வைத்தேன் -பெரியாழ்வார் -5-4-5-
வந்து என் மனம் புகுந்தாய் மன்னி நின்றாய் -பெரிய திரு மொழி -1-10-9-

தம்மை ஸ்வாமியாக வரிக்கும் பக்தர்களிடத்தில் இருப்பவர் –ஸ்ரீ பராசர பட்டர் –

தேஷு சாப்யஹம்–ஸ்ரீ கீதை -9-29-அவர்கள் இடம் நான் உள்ளேன்

வருண புத்திரரான வசிஷ்டர் அல்லது அகஸ்த்யராக இருப்பவர் –ஸ்ரீ சங்கரர் –

வருண புத்திரர் –வாரண -என்ற பாடமானால் பக்தர்களுக்கு வேண்டாதவற்றைத் தவிர்ப்பவர் –
சமுத்ரத்திற்கு சுகத்தை தருபவர் -உயர்ந்தவர்–ஸ்ரீ சத்ய சந்தர் –

——————-

560 வ்ருஷ –
மரம் போலே இருப்பிடம் -வாசுதேவ தருச் சாயா
தன் ஒப்பாரில் அப்பன் தந்தனன் தன தாள் நிழலாய் மன்னு பிரான் -6-4-10-

நிழலுள்ள மரம் போலே அடியவர்கள் வந்து அடைந்து எல்லாப் பலன்களையும் அனுபவிக்கும்படி இருப்பவர் –ஸ்ரீ பராசர பட்டர் –

நிவாஸா வ்ருஷா ஸாதூநாம் ஆபந்நாநாம் பரா கதி –கிஷ்கிந்தா -15-19-
வ்ருஷந் இவ ஸ்தப்தோ திவி திஷ்டத்யேக –தைத்ரியம் -11-20-
ஸமாச்ரிதாத் ப்ரஹ்ம தரோர நந்தாத் நிஸ் சம்சய பக்வ பல ப்ரபாத –ஸ்ரீ விஷ்ணு புராணம் -1-17-91-

மரம் போல் அசையாமல் இருப்பவர் –ஸ்ரீ சங்கரர் –

பக்தர்களுக்கு வேண்டியவற்றைக் கொடுப்பதில் கற்பக மரம் போன்றவர் -விரும்பப் படுபவர் –
அவ்ருஷ – என்று தம்மை வெட்டுபவர் இல்லாதவர்–ஸ்ரீ சத்ய சந்தர் –

—————-

561-புஷ்கராஷ
புஷ்டி அளிக்கும் கண் நோக்கு -மீன் கண்களாலே குட்டிகளை வளர்க்குமா போலே
அல்லிக் கமலக் கண்ணன் -8-10-11-
செய்ய தாமரைக் கண்ணன் -3-6-1-

கருணை பொழிந்து அடியவர்களைப் போஷிக்கும் இரு திருக் கண்களை யுடையவர் –ஸ்ரீ பராசர பட்டர் –

சிந்திப்பவர்களுக்கு ஹ்ருதய கமலத்தில் பிரகாசிப்பவர் –ஸ்ரீ சங்கரர் –

தாமரை போன்ற திருக் கண்களை யுடையவர் –ஸ்ரீ சத்ய சந்தர் –

————–

562-மஹாமநா
விசால இதயம் -உன் அடியார்க்கு என் செய்வன் என்றே இருத்தி நீ -பெரிய திரு -53-
அடியான் இவன் என்று எனக்கு ஆர் அருள் செய்யும் நெடியான் -9-4-10-

அடியவர்கள் திறத்தில் பெரிய மனம் உள்ளவர் –ஸ்ரீ பராசர பட்டர் –

சிருஷ்டி முதலியவற்றை நினைவினாலேயே செய்பவர் –ஸ்ரீ சங்கரர் –

மேன்மையான மனம் அல்லது ஞானம் உள்ளவர் –ஸ்ரீ சத்ய சந்தர் –

———–

பகவான் பகஹா நந்தி வன மாலீ ஹலாயுத
ஆதித்யோ ஜ்யோதித்யஸ் சாஹிஷ்ணுர் கதி சத்தம–60-

—————–

563-பகவான் –
பூஜைக்கு உரியவன் -உயர்வற உயர்நல உடையவன்
தீதில் சீர் நலம் திகழ் நாரணன்
கணக்கறு நலத்தனன் அந்தமிலாதியம் பகவன் -1-3-5-

குற்றங்கள் அனைத்தும் தவிர்ந்து கல்யாண குணங்களே நிரம்பியவர் ஆதலின் மிகவும் பூஜிக்கத் தக்கவர் –ஸ்ரீ பராசர பட்டர் –

ஐஸ்வர்யம் முதலிய ஆறு குணங்கள் யுடையவர் –ஸ்ரீ சங்கரர் –

ஐஸ்வர்யம் முதலிய ஆறு குணங்கள் உள்ளவர் –ஸ்ரீ சத்ய சந்தர் –

—————

564-பகஹா
நல்ல குணம் உடையவன் -குண பூரணன்
வண் புகழ் நாரணன் -1-2-10-

நிரம்பிய ஐஸ்வர்யம் வீர்யம் கீர்த்தி லஷ்மி ஞானம் வைராக்கியம் ஆகிய ஆறு குணங்கள் யுடையவர் –ஸ்ரீ பராசர பட்டர் –

ஐஸ்வர்யஸ்ய சமகர்ஸ்ய வீர்யஸ்ய யசசஸ் ஸ்ரீயஸ் ஞான வைராக்ய யோச்சைவ ஷஷ்ணாம் பக இதீரனா–ஸ்ரீ விஷ்ணு புராணம்

சம்ஹார காலத்தில் ஐஸ்வர்யம் முதலிய குணங்களை அழிப்பவர்–ஸ்ரீ சங்கரர் –

அசுரர்களுடைய ஐஸ்வர்யத்தை அழிப்பவர் -ஒளியுடைய சூரிய சந்திரர்களை நெருங்கும் ராகுவை அழிப்பவர்–ஸ்ரீ சத்ய சந்தர் –

——————

565-நந்தீ-
நந்த கோபன் திருக் குமரன்
நந்தனார் களிறு -நந்தன் மதலை-பெரிய திருமொழி -8-5-8-
பலராமன் -வெள்ளிப் பெருமழைக் குட்டன் -பெரியாழ்வார் -1-7-5-
எடுத்த பேராளன் நந்த கோபன் தன இன்னுயிர்ச் செல்வன் -8-1-3-

வ்யூஹத்தில் சங்கர்ஷணராக இருந்த தாமே பல ராமராக அவதரித்து நந்தகோபரைத் தந்தையாக அடைந்து இருப்பவர் –
மதுவைப் பருகியதாலும் கோபிகைகள் உடன் கூடியதாலும் மகிழ்ந்து இருப்பவர் –ஸ்ரீ பராசர பட்டர் –

ஸூக ரூபியாக இருப்பதால் -அல்லது -எல்லாச் செல்வங்களும் நிரம்பி இருப்பதால் ஆனந்திப்பவர் –
ஆநந்தீ -என்ற பாடம் –ஸ்ரீ சங்கரர் –

ஆநந்தீ -ஆனந்தம் யுடையவர் -நந்தீ -என்ற பாடத்திலும் அதுவே பொருள்–ஸ்ரீ சத்ய சந்தர் –

—————-

566-வனமாலீ –
வன மாலை -என்னும் திரு ஆபரணம் பூண்டவன் -வைஜயந்தீ
திரு ஆபரணங்கள் அசித் பதார்த்தம் இல்லை -வாசனைக்கு அபிமானியான தேவதையின் உருவம் வனமாலை
வனமாலீ கதி சார்ங்கி வாசுதேவா அபிரஷது

தம்மால் படைக்கப் பட்ட பஞ்ச பூதங்களில் உள்ள பரிமளங்களின் அபிமானி தேவதை யாகிய வைஜயந்தீ என்னும்
வனமாலையை எக்காலமும் அணிந்தவர் –ஸ்ரீ பராசர பட்டர் –

பஞ்சபூத தன் மாத்ரை ஸ்வரூபமான வைஜயந்தீ என்னும் வனமாலையை தரிப்பவர் –ஸ்ரீ சங்கரர் –

திருவடி வரை நீண்ட மாலையை அணிந்தவர் -ஸ்ரீ லஷ்மியைத் தோழியாக யுடையவர் –
தண்ணீர் அல்லது சோற்றைத் தாங்கும் சீலம் உள்ளவர் –ஸ்ரீ சத்ய சந்தர் –

————–

567-ஹலாயுத
கலப்பையை ஆயுதமாக உடையவன்
பக்தி உழவன் கார் மேகம் அன்ன கருமால் -நான் முகன் -23-

பஞ்ச பூதங்களை அபிவருத்தி செய்யும் உழவன் போல் கலப்பையை யுடையவர் –ஸ்ரீ பராசர பட்டர் –

பல பத்ரம் சம்ருத்யர்த்தம் சீர கர்மணி கீர்த்தயேத் –ஸ்ரீ விஷ்ணு தர்மம் -41-36-

பல ராமனாகக் கலப்பையை ஆயுதமாக யுடையவர் –ஸ்ரீ சங்கரர் –

திரி புரத்தை அழித்த போது சிவனுக்கு ஆயுதமாக இருந்தவர் -பல ராமனாகக் கலப்பையை ஆயுதமாக யுடையவர் –ஸ்ரீ சத்ய சந்தர் –

—————

568-ஆதித்ய
தேவகி புத்திரன் -அதிதி தேவகியாக பிறந்ததால் தேவகி கர்ப்பத்தில் உண்டானவன் ஆதித்யன்
ஆ -சங்கர்ஷன பீஜாஷரம்
தேவகி தன் வயிற்றில் அத்தத்தின் பத்தா நாள் தோன்றிய அச்சுதன் -பெரியாழ்வார் -1-2-6
தேவகி சிங்கமே -பெரியாழ்வார் -1-3-4-

முற்பிறவியில் அதிதியாக இருந்த தேவகியின் புதல்வர் -ஆகார எழுத்தினால் அடையத் தக்கவர் –
ஆகாரம் சங்கர்ஷண மந்திர பீஜ எழுத்து –ஸ்ரீ பராசர பட்டர் –

தாஷாயநீ த்வம் ஆதிதி ஸம்பூதா வஸூ தாதலே நித்யைவ த்வம் ஜகத்தாத்ரீ பிரசாதம் தே கரோம்யஹம்–ஸ்ரீ விஷ்ணு தர்மம் -93-44-

அதிதிக்கும் கச்யபருக்கும் மகனாக ஸ்ரீ வாமனனாகப் பிறந்தவர்–ஸ்ரீ சங்கரர் –

பிரஜைகளை உண்ணும் அசுரர்களைக் கை விடுபவர் -அநாதி காலமாகவே ஞான ஆனந்தங்களை யுடையவர் –ஸ்ரீ சத்ய சந்தர் –

——————————————————————————

3-37-நாராயண அவதார விஷய திரு நாமங்கள் 569-574

569-ஜ்யோதிராதித்ய –
ஜோதி ஸ்வரூபன் -ஸ்ரீ பத்ரியில் அவதாரம்
நந்தாத கொழும் சுடரே -1-10-9-
ஒண் சுடர்க் கற்றை உம்பர் வானவர் ஆதி அம் சோதி -1-10-9-

சூர்யன் இருள் அடைந்து போகும்படி அப்ராக்ருதமான ஆச்சர்ய தேஜோ மயமாய் பேரொளியான சூர்யன் –ஸ்ரீ பராசர பட்டர் –

நிஷ் பிரபாணி ச தேஜாம்சி ப்ரஹ்மா சைவ ஆசனாத் ச்யுத–ஸ்ரீ நாராயணீயம் -நரனும் நாராயணனும் யுத்தம்
செய்யும் பொழுது எழுந்த தேஜஸ்ஸூ அனைத்தையும் மங்கச் செய்தன –
நான்முகன் தனது ஆசனத்தில் இருந்து கழுவினான்

சூர்ய மண்டலத்தில் இருப்பவர் -பிரகாசிப்பவராயும் சூர்யனாகவும் இருப்பவர் –ஸ்ரீ சங்கரர் –

ஒளிகளில் முதல்வனான சூர்யனில் இருப்பவர் –ஸ்ரீ சத்ய சந்தர் –

—————–

570-ஸ ஹிஷ்ணு –
பொறுமை உள்ளவன்-அபராத சஹன் -பாணாசுரன் -இந்த்ரன் சிசுபாலன் பிழை பொறுத்து அருளி
கேட்பார் செவி சுடு கீழ்மை வசவுகளையே வையும்
சேட்பால் பழம் பகைவன் சிசுபாலன் தாட்பால் அடைந்த தன்மையன் -7-5-3-
பல பல நாழங்கள் சொல்லிப் பழித்த சிசுபாலன் தன்னை அலவலைமை தவிர்த்த அழகன் -பெரியாழ்வார் -4-3-5-
முன்பே 146-பார்த்தோம்

அபராதத்தைப் பொறுத்துக் கொள்பவர் –ஸ்ரீ பராசர பட்டர் –

பிரசாத யாமாச பவோ தேவம் நாராயணன் பிரபும் சரணம் ஜெகதாமாத்யம் வரேண்யம் வரதம் ஹரீம் ததைவ வரதோ தேவோ
ஜிதக்ரோதோ ஜிதேந்த்ரிய ப்ரீதிமாந பவத் தத்ர ருத்ரேண ஸஹ சங்கத–ருத்ரன் ஸ்ரீ மந் நாராயணனை வேண்டி நின்றான்

குளிர்ச்சி வெப்பம் முதலிய இரட்டைகளைச் சகித்துக் கொள்பவர் –ஸ்ரீ சங்கரர் –

அடியவர்கள் செய்யும் பிழைகளைப் பொறுப்பவர் –ஸ்ரீ சத்ய சந்தர் –

———–

571-கதி சத்தமா –
நல் வழி காட்டுபவன்
ஆற்ற நல் வகை காட்டும் அம்மான்
தாள் அடைந்தோர் தங்கட்குத் தானே வழித் துணையாம் –
நம்பனே நவின்று ஏத்த வல்லவர்கள் நாதனே -பெரியாழ்வார் -5-1-9-
நெறி வாசல் தானேயாய் நின்றான் -முதல் திரு -4-

தர்ம மார்க்க உபதேச விஷயத்தில் மிகச் சிறந்தவர் —ஸ்ரீ பராசர பட்டர் –
அஹோ ஹ்யு நுக்ருஹீத அத தர்ம ஜபி ஸூரைரிஹ –சாந்தி பர்வம் -342-17-நர நாராயணர் முன்னிலையில்
தேவர்களுக்கு தர்மம் உரைக்கப்பட்டது

அனைவருக்கும் கதியாயும் உயர்ந்தவராயும் இருப்பவர் -ஸ்ரீ சங்கரர் –

அறிவுடன் கூடிய நல்லோரால் வேண்டப்படுபவர் -அடையப் படுபவரே மிகவும் உயர்ந்தவர் –ஸ்ரீ சத்ய சந்தர் –

———

ஸூதந்வா கண்ட பர ஸூர் தாருணோ த்ரவிண ப்ரத
திவிஸ் ப்ருக் சர்வத்ருக் வாசோ வாசஸ்பதி ரயோ நிஜ -61

————-

572- ஸூ தந்தா
சிறந்த வில்லை உடையவன்
தடவரை தோள் சக்ரபாணி சாரங்க வில் சேவகனே -பெரியாழ்வார் -5-4-4-
பரமேட்டி பவித்ரன் சார்ங்கம் என்னும் வில்லாண்டான்

அமுதத்தைப் பற்றிய தேவாஸூரப் போரை முடித்த சிறந்த வில்லை யுடையவர் —ஸ்ரீ பராசர பட்டர் –

தத்ர திவ்யம் தநுர் த்ருஷ்ட்வா நரஸ்ய பகவாநபி –வில்லை
நரஸ் ததோ வரகட காக்ர்ய பூஷணை மஹோ ஷுபி பவந மிதம் சமா வ்ருணோத்-நரன் ஆகாசம் முழுவதும்
பாணங்களால் மறைத்தான்

இந்த்ரிய ரூபமான சார்ங்கம் என்னும் வில்லை யுடையவர் -ஸ்ரீ சங்கரர் –

அழகிய வில்லை யுடையவர் –ஸ்ரீ சத்ய சந்தர் –

————–

573-கண்ட பரசு
கோடாலியை ஆயுதமாக ஏந்தினவன்
கோக்குல மன்னரை மூ வெழுகால் ஓர் கூர் மழுவால் போக்கிய தேவன்
நின்று இலங்கிய முடியினாய் வென்றி நீள் மழுவா -6-2-10-

சிவனுடைய யுத்தத்தை முடித்த கோடாலி யுடையவர் —ஸ்ரீ பராசர பட்டர் –

அத ருத்ர விதார்த்தம் இஷீகாம் நர உத்தரன் மந்த்ரைச்சசம்யு யோஜாசு ச அபவத் பரசுர் மஹாந் ஷிப்தச்ச
ஸஹஸா ருத்ரே கண்டனம் ப்ராப்தவாம்ஸ்ததா தத அஹம் கண்ட பரசு தத பரசு கண்டநாத் —
நரனாகிய அர்ஜுனன் துரும்பை எடுத்து மந்த்ர பிரயோகம் செய்து ருத்ரன் மேல் விட கோடாலியாக மாறி
ருத்ரன் மீது ஏறிய அது துண்டிக்கப் பட்டதால் கண்ட பரசு ஆயிற்று

பரசுராம அவதாரத்தில் விரோதிகளை அழித்த கோடாலியை யுடையவர் –
அகண்ட பரசு -யாராலும் வெல்லப்படாத பரசுவை யுடையவர் -ஸ்ரீ சங்கரர் –

எதிரிகளைப் பிளக்கும் கோடாலி யுடையவர் –ஸ்ரீ சத்ய சந்தர் –

————-

574-தாருண
பகைவர்களை பிளப்பவன்
இகளிடதசுரர்கள் கூற்றம் -9-9-2-
அவட்கு மூத்தோனை வெந்நரகம் சேரா வகையே சிலை குனித்தான்

இப்படி வெளிப் பகைவர்களையும் உட் பகைவர்களையும் பிளப்பவர் —ஸ்ரீ பராசர பட்டர் –

நல் வழியைக் கெடுப்பவரை அழிப்பவர் -ஸ்ரீ சங்கரர் –

மரப் பொம்மை போல் ஸ்வ தந்த்ரம் இல்லாத உலகைத் தூண்டி நடத்துபவர் -எதிரிகளைப் பிளப்பவர் –ஸ்ரீ சத்ய சந்தர் –

——————————————————————

3-28-ஸ்ரீ வேத வியாச பகவான் -திரு அவதார திரு நாமங்கள் -575-589-

575-த்ரவிண ப்ரத
செல்வங்களைக் கொடுப்பவன் -சாஸ்திரம் ஆகிய செல்வம் ஹித பிரதனான ஆசார்யன் -சாஸ்திர பாணி
வேதம் பயந்த பரன் -6-6-5-

வியாசராக சாஸ்திரங்களும் அவற்றின் அர்த்தங்களும் ஆகிய செல்வத்தை மிகக் கொடுப்பவர் —ஸ்ரீ பராசர பட்டர் –

வஹந் வை வாம ஹஸ்தேந சர்வ சாஸ்த்ரார்த்த சம்சயம் தஷிணேந ச சாஸ்திரார்த்தாநாம் ஆதி சம்ச்ச யதாஸ்திதாந் -த்யான ஸ்லோகம்

பக்தர்களுக்கு விரும்பியவற்றைக் கொடுப்பவர் -ஸ்ரீ சங்கரர் –

கல்வி பணம் முதலிய செல்வங்களை வழங்குபவர் –
உருகிய சித்தம் கொண்ட ஹரி பக்தர்களுக்கு ஸ்வரூப ஸூ கத்தைத் தருபவர்–ஸ்ரீ சத்ய சந்தர் –

——————

576-த்விஸ்ப்ருக்
தனது பர வித்யையால் பரம பதத்தை தொட்டவன் -ஞான ப்ரதன்
மழுங்காத ஞானமே படையாக மலருலகில் தொழும்பாயார்க்கு அளித்தான் -3-1-8-

பர வித்தையினால் பரம பதத்தில் இருக்கும் ரகசியமான ஸ்வரூபத்தைத் தொடுபவர் —ஸ்ரீ பராசர பட்டர் –

விதித பரமார்த்தத–அவர் மந்த்ரம் -உண்மையை அறிந்தவர்

ஆகாசத்தைத் தொடுபவர் -திவ ஸ்ப்ருக்–என்று பாடம் -ஸ்ரீ சங்கரர் –

ச்வேதத்வீபம் அனந்த ஆசனம் ஸ்ரீ வைகுண்டம் ஆகிய இடங்களில் இருப்பவர் –
திவ ஸ்ப்ருக்-என்று பாடம் –ஸ்ரீ சத்ய சந்தர் –

————–

577-சர்வத்ருக்
எல்லாம் நேரில் கண்டவன் -விதுஷே
எங்கும் பரந்த தனி முதல் ஞானம் ஒன்றாம் அருவாகி நிற்கும் கிளர் ஒளி மாயன் கண்ணன் -3-10-10-

மற்றுமுள்ள மகிமைகள் அனைத்தையும் காண்பவர் —ஸ்ரீ பராசர பட்டர் –

எல்லாவற்றையும் அறிந்தவரும் -வேதங்கள் புராணங்கள் -முதலியவற்றை விஸ்தரித்தவருமான வியாசர் –
சர்வத்ருக் வியாச -என்று ஒரு திரு நாமம் -எல்லாமாகவும் கண்ணாகவும் எல்லா ஞானமாகவும் இருப்பவர் –
ருக்காதி வேதங்களை வகுத்தவர் -ருக்வேதம் -21 சாகைகள் -யஜூர் வேதம் -101 சாகைகள் –
சாம வேதம் -1000 சாகைகள் -அதர்வண வேதம் 9 சாகைகள் –
இப்படியே புராணங்கள் முதலியவற்றையும் பிரித்த ப்ரஹ்மாவாகவும் இருப்பவர் -ஸ்ரீ சங்கரர் –

அனைத்தையும் நேரடியாகக் காண்பவர் -எல்லோரைக் காட்டிலும் மேன்மை கொண்டவர் —
சர்வத்ருக் வியாச -என்று ஒரு திரு நாமம் –ஸ்ரீ சத்ய சந்தர் –

—————–

578-வ்யாஸ-
ஜைமினி போதாயனர் சிஷ்யர்கள்

வேதங்களை நான்காக வகுத்த வியாசர்—ஸ்ரீ பராசர பட்டர் –

—————

579 -வாசஸ்பதி –
வாக்குக்கு ஸ்வாமி -மகா பாரதம் -ப்ரஹ்ம சூத்ரம் -அருளினவர்
சமயங்ந்யாய கலா பேன மஹதா பாரதேனச உப ப்ரும்ஹித வேதாய நமோ வ்யாசாய விஷ்ணவே -வ்யாச ஸ்துதி
உரைக்கின்ற முனிவரும் யானே –உரைக்கின்ற முகில் வண்ணனும் யானே -5-6-8-

ஐந்தாம் வேதமாகிய மஹா பாரத வாக்குக்கு ஸ்வாமி—ஸ்ரீ பராசர பட்டர் –

வாசஸ்பதிர யோஜின-என்று ஒரு திரு நாமம் -வித்யைக்கு அதிபதியாகவும் கர்ப்பத்தில் பிறவாதவராகவும் இருப்பவர் -ஸ்ரீ சங்கரர் –

அனைத்து வாக்கு மனம் ஆகியவற்றின் தேவதைகளுக்குத் தலைவர்–ஸ்ரீ சத்ய சந்தர் –

—————

580-அயோநிஜ-
கர்ப்பத்தில் பிறவாதவன்
பிறப்போடு மூப்பு ஓன்று இல்லாதவன் -பெரிய திரு மொழி -4-3-2-

சாரஸ்வதர் என்னும் அவதாரத்தில் பகவானுடைய வாக்கில் இருந்து பிறந்தமையால் கர்ப்பத்தில் பிறவாதவர் —ஸ்ரீ பராசர பட்டர் –

அத பூயோ ஜகத் ஸ்ருஷ்ட்வா போ சப்தேந அநு வாதயந் ஸாரஸ்வதீம் உச்சசார தத்ர ஸாரஸ்வதஸ் அபவாத் –சாந்தி பர்வம் -350-37-

அடியவர் அல்லாதோரை சங்கிலி முதலியவைகளால் பிணைப்பவர்-கற்பத்தில் பிறவாதவர் -கம்பம் முதலியவற்றில் இருந்து
தோன்றியவர் -கர்ப்பத்தைக் காட்டிலும் வேறுபட்ட தம் நாபி கமலத்தில் இருந்து பிரமனை யுண்டாக்கியவர்—ஸ்ரீ சத்ய சந்தர் –

———-

த்ரிசாமா சாமகஸ் சாம நிர்வாணம் பேஷஜம் பிஷக்
சந்யா சக்ருச் சமஸ் சாந்தோ நிஷ்டா சாந்தி பராயணம் –62

—————-

581-த்ரிசாமா
சாமங்களினால் பாடப் படுபவன் -ப்ரஹத் ரதந்த்ரம் வாமதேவ்யம் மூன்று வகை சாம வேதம்
சந்தோகா பௌழியா சாம வேதியனே நெடுமாலே -பெரிய திருமொழி -7-7-2-

தம்மைப் பாடும் ப்ருஹத் -ரதந்த்ரம் -வாமதேவ்யம் -என்னும் மூன்று சாமங்களால் கானம் செய்யப் படுபவர் —ஸ்ரீ பராசர பட்டர் –

தேவ வ்ரதங்கள் என்றுபெயருள்ள மூன்று சாமங்களினால் துதிக்கப் படுபவர் –ஸ்ரீ சங்கரர் –

நிதன உத்கீத ப்ரதீஹார என்னும் மூன்று சாமங்களை யுடையவர் –ஸ்ரீ சத்ய சந்தர் –

———-

582-சாமக –
சாமத்தைப் பாடுபவன் -ஏதத் சாம காயன் நாஸ்தே –

தம்மைப் பாடுபவர்களின் பாவத்தை அழிப்பவர்—ஸ்ரீ பராசர பட்டர் –

ஏதத் சாம காயாந் நாஸ்தே–தைத்ரியம் -3-10-5-

வேதங்களில் சாமவேதம் ஆகிறேன் என்றபடி சாமவேதமாக இருப்பவர் –ஸ்ரீ சங்கரர் –

அனைத்துப் பூதங்களிலும் சமமாக இருப்பவர் –ஸ்ரீ சத்ய சந்தர் –

————-

583-நிர்வாணம் –
முக்தி ஸ்வரூபன் -முத்தனார் முகுந்தனார் -திருச் சந்த -115-

இப்படி பாவம் அற்றவர்களுக்கு பரம கதிக்குக் காரணம் ஆனவர் —ஸ்ரீ பராசர பட்டர் –

ஒரு துக்கமும் இல்லாத பரமானந்த ரூபமாக இருப்பவர் –ஸ்ரீ சங்கரர் –

திருப்பி யடிக்க முடியாத பாணங்களை யுடையவர் -ப்ராக்ருதமான உடல் இல்லாதவர் –ஸ்ரீ சத்ய சந்தர் –

————–

584-பேஷஜம்
வினையேன் வினை தீர் மருந்தானாய் விண்ணோர் தலைவா -1-5-6-
மருந்தும் பொருளும் அமுதமும் தானாவான் -மூன்றாம் திருவந்தாதி -4
நாங்கள் பிணிக்கு பெரு மருந்து -பெரிய திரு -62-

சிகிச்சை யளிக்க முடியாத சம்சாரம் ஆகிய வியாதிக்கு மருந்தானவர் —ஸ்ரீ பராசர பட்டர் –

நாராயணாத் ருஷி கணா ததா சித்தா மஹோரகா தேவா தேவர்ஷ யச்சைவ யம் விது துக்க பேஷஜம் –மஹா பாரதம்

பிறவி என்னும் நோய்க்கு மருந்தாக இருப்பவர் –ஸ்ரீ சங்கரர் –

பிறவி என்னும் நோய்க்கு மருந்தாக இருப்பவர் -நோய்களை வென்றவர் –ஸ்ரீ சத்ய சந்தர் –

——————-

586-பிஷக்
மருத்துவனாய் நின்ற மா மணி வண்ணா

வியாதியின் காரணம் அறிந்த மருத்துவர்—ஸ்ரீ பராசர பட்டர் –

வேதாந்த விஞ்ஞான ஸூ நிச்சிதார்த்தா-

சம்சார ரோகத்தை விடுவிக்கும் பரவித்யையை ஸ்ரீ கீதையில் உபதேசித்தவர் –ஸ்ரீ சங்கரர் –

சம்சாரம் ஆகிய நோய்க்கு மருத்துவர் -சிகிச்சை செய்பவர் –ஸ்ரீ சத்ய சந்தர் –

——————

587-சன்யாச க்ருத்
தியாகம் செய்து வைப்பவன் பிறவி என்னும் வியாதிக்கு சிகித்சை
வல்வினை தீர்க்கும் கண்ணன் -4-4-11-
ந்யாசம் -சந்யாசம் -பிறவிக்கு மருந்தே
பிணி வளர் ஆக்கை நீங்க அருளிய எம்மடிகள் -பெரிய திருமொழி -9-8-3-

பிறவி நோய் தீருவதற்குக் காரணமான சாத்விக தியாகத்தைச் செய்விப்பவர் —ஸ்ரீ பராசர பட்டர் –

மோஷத்திற்காக நான்காவதான சன்யாச ஆஸ்ரமத்தை ஏற்படுத்தியவர் –ஸ்ரீ சங்கரர் –

பலன்களில் ஆசையுடைய செயல்களை தியாகம் செய்விப்பவர் -நன்றாக தோஷங்களை விடுபவர் –
சம்ந்யாசக்ருத்-அசுரர்களை அழிப்பவர் –ஸ்ரீ சத்ய சந்தர் –

—————-

588-சம
உபதேசிப்பவன்
உலகத்து அற நூல் சிங்காமை விரித்தான் -பெரிய திரு மொழி -10-6-1-

காமம் குரோதம் பயம் முதலியவற்றை அடக்கும் உபாயத்தை உபதேசிப்பவர் —ஸ்ரீ பராசர பட்டர் –

சன்யாசிகளுக்கு சாந்தியை ஞான கரணம் என்று உபதேசிப்பவர் -எல்லா பிராணிகளையும் அடக்குபவர் –ஸ்ரீ சங்கரர் –

ஆனந்த ரூபர் -பிரம்மா முதலியவர்களின் சுகத்தை அறிபவர்–ஸ்ரீ சத்ய சந்தர் –

———–

589-சாந்த –
சாந்தி யுடையவன் -விலங்கினங்களுக்கும் சாந்தி உண்டு பண்ணுபவர் வியாசர்
மேவி நின்று தொழுவார் வினை போக மேவும் பிரான் -4-5-4-

தம் மகிமை பெருகியிருந்தும் அலையற்ற கடல் போலே அடங்கி இருப்பவர் —ஸ்ரீ பராசர பட்டர் –

தத் சந்நிதிவ் வைராத்யாக–பதஞ்சலி யோக சாஸ்திரம்
மதுரை ரவசாநி லம்பயன் அபி திர்யஞ்சி சமம் நிரீக்ஷிதை பரித படு விப்ர தேந சாம் தஹநம் தாம விலோகந ஷமம்

விஷய சுகங்களில் பற்றில்லாதவர் –ஸ்ரீ சங்கரர் –

அசுரர்கள் சுகத்திற்கு அழிவை உண்டாக்குபவர் -சுகத்திற்கு எல்லையானவர் –
தம்மைப் பற்றிய ஞானம் வரும் முன்னர் சுகம் கிட்டாமல் செய்பவர் –ஸ்ரீ சத்ய சந்தர் –

——————————————————————

3-29-தர்மம் படி பலன் அளிப்பவன் -திரு நாமங்கள் -590-606-

590-நிஷ்டா –
த்யானத்துக்கு விஷயமாய் இருப்பவன் -சுபாச்ராயம்
சிந்தை தன்னுள் நீங்காது இருந்த திரு –மருவினிய மைந்தன் -பெரிய திருமொழி 4-9-2-

மனத்தை அடக்கியவர் -நெஞ்சங்களில் நிலைத்து இருக்கும் திருமேனி யுடையவர் —ஸ்ரீ பராசர பட்டர் –

பிரளயத்தில் எல்லாப் பொருள்களும் ஒடுங்கும் இடமாக இருப்பவர் –ஸ்ரீ சங்கரர் –

நிலையான தன்மை யுடையவர் —ஸ்ரீ சத்ய சந்தர் –

————-

591-சாந்தி –
அமைதி -அவனை மட்டுமே கண்டு தன்னைப் பார்க்காமல்
இப்பால் கை வளையும் மேகலையும் காணேன் கண்டேன் கனமகரக் குழை இரண்டும் நான்கு தோளும் -திரு நெடு -22-

சமாதி நிலையில் எல்லாவற்றையும் மறந்து தம்மையே அனுபவித்துக் கொண்டு இருக்கச் செய்பவர் —ஸ்ரீ பராசர பட்டர் –

அனைத்து அவித்யைகளும் நீங்கிய பிரம்மமாக இருப்பவர் –ஸ்ரீ சங்கரர் –

உயர்ந்த சுகமானவர் -சுகத்தை யுடையவர் –

——————

592-பராயணம்
பரமமான ப்ராபகம் -நல் வினைக்கு இன்னமுதம் -திரு விருத்தம் -81-
மத்பக்திம் லபதே பராம் -இசைவித்து என்னை யுன் தாளிணைக் கீழ் இருத்தும் அம்மானே -5-8-9-

மோஷத்திற்குச் சிறந்த வழியான பக்தியைத் தாமே அளிப்பவர்—ஸ்ரீ பராசர பட்டர் –

நிர்மம சாந்த –ஸ்ரீ கீதை -18-53-
மத் பக்தே லபதே பராம் –ஸ்ரீ கீதை -18-54-
பக்த்யா த்வந் அந்யயா சகியா –ஸ்ரீ கீதை 11-54-

சம்சாரத்திற்குத் திரும்பாமல் இருக்கும் உயர்ந்த இடமாக இருப்பவர் –ஸ்ரீ சங்கரர் –

முக்தர்களால் அடையப் பெறுபவர் -உயர்ந்த அடைக்கலமாக இருப்பவர் –ஸ்ரீ சத்ய சந்தர் –

—————–

ஸூபாங்கஸ் சாந்திதஸ் ஸ்ரஷ்டா குமுத குவலேசய
கோஹிதோ கோபதிர் கோப்தா வ்ருஷபாஷோ வ்ருஷப்ரிய —63-

—————

593-சுபாங்க –
யோகத்தின் எட்டு அங்கங்களையும் நிறைவேற்றித் தரும்
யமம் நியமம் ஆசனம் பிராணாயாமம் ப்ரத்யாஹாரம் தாரணம் த்யானம் சமாதி
மேலும் -788- வரும் -அழகிய அங்கங்களை உடையவன் –

யோகத்தின் அங்கங்களான யமம் முதல் சமாதி வரை நிறைவேற்றுபவர் —ஸ்ரீ பராசர பட்டர் –

அழகிய உருவத்தை தரிப்பவர் –ஸ்ரீ சங்கரர் –

மங்களமான அவயவங்கள் உள்ளவர் -மங்களத் திற்கான ஞானம் அளிப்பவர் –ஸ்ரீ சத்ய சந்தர் –

——————

594-சாந்தித –
பூர்ண சாந்தியைத் தருமவன்-மோஷ ப்ரதன்
அடியார்களைக் கொண்டு போய் தன்மை பெறுத்தித் தன் தாளிணைக் கீழ்க் கொள்ளும் அப்பன் -3-7-7-

பக்தி யோகம் தலைக் கட்டியவர்களுக்கு சம்சாரத் துன்பங்களைக் களைந்து
தமது சாயுஜ்யமாகிய சாந்தியைக் கொடுப்பவர் —ஸ்ரீ பராசர பட்டர் –

விஸ்வஸ்யைகம் பரிவேஷ்ட்டி தாரம் ஞாத்வா சிவம் சாந்தி மத்யந்த மேதி –ஸ்வேதாஸ்வரம் -2-7-
மத் ப்ரஸாதாம் பராம் சாந்திம் ஸ்தானம் ப்ராப்யஸி சாஸ்வதம் –ஸ்ரீ கீதை -18-59-
தமீஸாநம் வரதம் தேவமீட்யம் நிசாய்யா ஆத்மாநம் சாந்தி மத்யந்த மேதி –

ஆசை வெறுப்பு முதலியவற்றில் இருந்து விடுவித்து சாந்தி அளிப்பவர் –ஸ்ரீ சங்கரர் –

மோஷத்தை அளிப்பவர் –ஸ்ரீ சத்ய சந்தர் –

—————-

595-ஸ்ரஷ்டா –
படைப்பவன் -கர்மங்களுக்கு சேர
துயரங்கள் செய்யும் கண்ணா சுடர் நீள் முடியாய் -7-8-7-
தோகை மா மயில் அன்னவர் இன்பம் துற்றிலாமையில் அத்த இங்கு ஒழிந்து போகம் நீ எய்தி
இன்னம் நம்மிடைக்கே போதுவாய் என்ற பொன்னருள் -பெரிய திரு மொழி -5-8-5-
மேலே தேவகி நந்தன ஸ்ரஷ்டா -989-990-வரும்

மோஷத்தில் ஆசை உள்ளவர்களை விடுவித்து உலக வாழ்க்கையில் ஆசை உள்ளவர்களை வெகு காலமாக
அவரவர் புண்ய பாபங்களுக்கு ஏற்பப் படைப்பவர் —ஸ்ரீ பராசர பட்டர் –

ஆதியில் எல்லாவற்றையும் படைத்தவர் –ஸ்ரீ சங்கரர் –

உலகைப் படைப்பவர் –ஸ்ரீ சத்ய சந்தர் –

—————–

596-குமுத –
மகிழ்பவன் -அனஸ் நன்ன்னன்ய அபிசாக சீதி -மரம் இரண்டு பறவைகள்
கு பூ தத்வம் -போகம் விஷய அனுரூபம் -இன்புறும் இவ்விளையாட்டு உடையான் -3-10-7-
மேலும் 813 வரும்

கு எனப்படும் பிரகிருதி மண்டலத்தில் உள்ள சேதனர்களுக்கு போகங்களை அளித்து மகிழ்பவர் –
இப்படிப் படைக்கப் பட்ட பிரம்மா முதல் புல் வரை உள்ள ஏற்றத் தாழ்வுகளை யுடையதாய் -சப்தம் ஸ்பர்சம் முதலியவற்றை
அனுபவிக்கின்ற –சேதனர்களுக்கு போகங்களை அளித்து மகிழ்பவர் —ஸ்ரீ பராசர பட்டர் –

அநிசச் சாத்மா பத்யதே போக்த்ரு பாவாத்
ஞாஜவ் த்வா வஜா வீச நீசவ்

பூமியில் மகிழ்பவர் –ஸ்ரீ சங்கரர் –

பூமியில் மகிழ்பவர்-பூமியின் பாரத்தைத் தொலைத்து பூமிக்கு ஆனந்தத்தை அளிப்பவர் –ஸ்ரீ சத்ய சந்தர் –

—————-

597-குவலேசய-
ஜீவர்களை அடக்கி ஆள்பவன் -அந்தராத்மாவாக
உலகம் மூன்று உடையாய் என்னை ஆள்வானே -6-10-10-

சம்சாரம் உள்ளவரை கு என்னும் பிரக்ருதியில் பிறந்து உழன்று -தம் உடல்களுக்கும் இந்த்ரியங்களுக்கும் தாமே தலைவர்கள் என்று
நினைத்து இருக்கும் சேதனர்களை அப்படியே நடத்தும் அந்தர்யாமியாக இருப்பவர் —ஸ்ரீ பராசர பட்டர் –

ஜலத்தில் சயனித்து இருப்பவர் -இலந்தைப் பழத்தின் நடுவில் சயனித்து இருக்கும் தஷகனை தனக்கு விபூதியாக யுடையவர் -அல்லது
ஆதி சேஷனுடைய மடியில் சயனித்து இருப்பவர் –ஸ்ரீ சங்கரர் –

பதரிகாஸ்ரமத்தில் சயனித்து இருப்பவர் -அல்லது பூமியின் பலத்திற்காக ஸ்வேத த்வீபத்தில் சயனித்து இருப்பவர் –
பூமியில் பலத்தின் வடிவமான ஹனுமானால் அடையப் பெறுபவர் –பூமியின் மாற்றத்தில் ஆசை யுள்ளவர் –
பூமியையும் சக்தியையும் கையில் பெற்று இருப்பவர் –ஸ்ரீ சத்ய சந்தர் –

—————–

588-கோஹித –
ஹிதத்தை உண்டு பண்ணுவன்
கொள்ள மாளா வின்ப வெள்ளம் கோதில தந்திடும் என் வள்ளல் -4-7-2-

சம்சாரம் ஆகிய வித்து விளையும் இடமான ப்ரக்ருதிக்கு நன்மை செய்பவர்—ஸ்ரீ பராசர பட்டர் –

யோ யோனிம் யோனிம் அதி திஷ்டத்யேகோ யஸ்மிந் நிதம் கம் ச விசைதி சர்வம் தமீஸாநம் –ஸ்வேதாஸ்வரம் -4-11-
கௌர நாத்யந்தவதீ சா ஜநித்ரீ பூத பாவிநீ–மந்த்ரீக உபநிஷத் -5-
ஸூயதே புருஷார்த்த ச தேநைவ அதிஷ்டிதா ஜகத் –மந்த்ரீக உபநிஷத் -4-

கோவர்த்தன மலையைத் தாங்கிப் பசுக்களைக் காத்தவர் -எல்லா பிராணிகளையும் அடக்குபவர் –
பூ பாரம் குறைக்க அவதரித்து அனுகூலித்தவர்–ஸ்ரீ சங்கரர் –

கண்ணுக்குள் ஜலத்தினுள் மறைந்து இருப்பவர்-பசுக்களுக்கும் வேத வாக்யங்களுக்கும் முறையே
ஸ்ரீ கிருஷ்ணனாகவும் வேத வியாசராகவும் நன்மை செய்பவர் –ஸ்ரீ சத்ய சந்தர் –

—————-

599-கோபதி
போக பூமிக்கு ஸ்வாமி
கண்ணாவான் என்றும் மண்ணோர் விண்ணோர்க்கு
முன்பே 497 பார்த்தோம்

போக பூமியான ஸ்வர்க்கத்திற்கும் தலைவர் —ஸ்ரீ பராசர பட்டர் –

பூமிக்குத் தலைவர் –ஸ்ரீ சங்கரர் –

பசு -ஸ்வர்க்கம் -செல்வம் முதலியவற்றைக் காப்பவர்–ஸ்ரீ சத்ய சந்தர் –

—————

600-கோப்தா
ரஷகன் -தேஜஸ் சொல்லும் திரு நாமம் –ஸூஷேன -544 போலே
சாலப் பல நாள் உகந்து ஓர் உயிர்கள் காப்பான் -6-9-3-

கர்மபலங்கள் அனைத்தையும் காப்பவர் —ஸ்ரீ பராசர பட்டர் –

தமது ஸ்வரூபத்தைத் தம் மாயையால் மறைப்பவர் -உலகைக் காப்பவர் –ஸ்ரீ சங்கரர் –

அனைவரையும் பாதுகாப்பவர் –ஸ்ரீ சத்ய சந்தர் –

—————-

601-வ்ருஷபாஷ
வருஷப -சப்தங்கள் தர்மம் சொல்லும் -அவற்றுக்கு அச்சாக இருப்பவன் -சம்சார சக்கரத்துக்கு ஆதாரம் என்றுமாம்
தனி முதலாய் மூ வுலகும் காவலோன் -2-8-5-

தர்மத்தின் வழியாகவே கர்ம பலன்களைக் காப்பவர் –
தர்மத்தின் அச்சாணியாக இருந்து தர்மத்துக்கு ஏற்ப பலனை அளிப்பவர் -ஸ்ரீ பராசர பட்டர்-

விரும்பியவற்றைப் பொழியும் இரு திருக் கண்கள் யுடையவர் -தர்மத்தைக் கண்ணாக யுடையவர் -ஸ்ரீ சங்கரர் –

எருதின் கண்களைப் போல் இரு திருக் கண்கள் யுடையவர் -தர்மத்தால் பிரகாசிக்கும் நல்லோரிடம் அருள் கடாஷம் அளித்து
பக்தர்கள் வேண்டுபவற்றை பொழிபவர் -அழிவற்றவர் -ஸ்ரீ சத்ய சந்தர் –

——————-

602-வருஷ ப்ரிய-
தர்மத்தில் அன்புள்ளவன்
தருமவரும் பயனைய திரு மகளார் தனிக் கேள்வன் -1-6-9-

ப்ரவ்ருத்தி நிவ்ருத்தி தர்மங்களில் அன்புடையவர் -அவனுக்கு இரண்டு தர்மங்களும் பிரியம் என்பதால்
தர்மங்கள் ஆகும் -விதிகளும் அவனுடைய பிரியத்தைத் தெரிவிப்பாவனவேயாகும்–ஸ்ரீ பராசர பட்டர்-

பலமத உபபத்தே -3-2-27-
பல சம்பிபத் சயா ஹி கர்ம பிராத்மாநம் பிப்ரீஷந்தி ச ப்ரீத அலம் பலாய இதி ஹி சாஸ்த்ரே மர்யாதா

தர்மத்தில் பற்றுள்ளவர் -தர்மமாகவும் பிரியமானவராகவும் இருப்பவர் –ஸ்ரீ சங்கரர் –

தர்மத்தில் பற்று உள்ளவர் –ஸ்ரீ சத்ய சந்தர் –

————

அனுவர்த்தீ நிவ்ருத்தாத்மா சம்ஷேப்தா ஷேமக்ருச்சிவ
ஸ்ரீவத்சவ ஷாச் ஸ்ரீ வாசச் ஸ்ரீ பதிச் ஸ்ரீ மதாம் வர –64

—————-

603-அநிவர்த்நீ –
சம்சார நிவ்ருதியைச் செய்யாதவன் -ப்ரவ்ருத்தி தர்ம நிஷ்டன்
ஓவாத் துயர் பிறவி உட்பட மற்று யெவ்வெவையும் மூவாத் தனி முதல் தேவாதி தேவன் -2-8-5-

பிரவ்ருத்தி தர்மத்தில் இருப்பவர்களை தூமாதி மார்க்கத்தினால் பித்ருலோகம் சேர்த்து மறுபடியும்
உலகில் பிறப்பதனால் உலகை விட்டு நீங்காமல் இருத்துபவர் –ஸ்ரீ பராசர பட்டர்-

தூமோ ராத்ரிஸ் ததா க்ருஷ்ண ஷன்மாசா தஷிணாயநம் தத்ர சாந்த்ர மசம் ஜ்யோதி யோகீ ப்ராப்ய நிவர்த்ததே –ஸ்ரீ கீதை -8-25-
க்ருதாத்யயே அநு சயவாந் -3-1-8-

தேவாசுர யுத்தங்களில் புறம் காட்டித் திரும்பாதவர் – தர்மத்தில் உள்ள ப்ரீதி காரணமாக அதிலிருந்து விலகாதவர் –ஸ்ரீ சங்கரர் –

ஒரு போதும் பின் வாங்காதவர் -முக்ய பிராணனின் அடியவர்களில் இருப்பவர் –ஸ்ரீ சத்ய சந்தர் –

——————

604-நிவ்ருத்தாத்மா –
நிவ்ருத்தனுக்கு ஈஸ்வரன் ஸ்வாமி
ஆழியான் அருள் தருவான் விண்ணுலகம் தருவானாய் விரைகின்றான் -10-6-3-

நிவ்ருத்தி மார்க்கத்தில் இருப்பவர்களுக்கு ஈஸ்வரர் –ஸ்ரீ பராசர பட்டர்-

விஷயங்களில் செல்லாத மனத்தை யுடையவர் –ஸ்ரீ சங்கரர் –

பிரளயத்தில் ஜீவர்களை மோஷம் அடைவிப்பவர் -ஆத்மாவின் மனமானது எண்ண முடியாமல் பின் திரும்பும்படி
இருப்பவர் -மனத்தால் அளவிடமுடியாதவர் –ஸ்ரீ சத்ய சந்தர் –

——————–

605-சம்ஷேப்தா
சுருங்கச் செய்பவன் -பிரவ்ருத்தி தர்ம -பொய் நின்ற ஞானம் -ஞான சங்கோசம் கர்ம அனுகுணமாக –

பிரவ்ருத்தி தர்மத்தில் இருப்பவர்களுடைய இயற்கையான ஞானத்தைக் குறுகும்படி செய்பவர் –ஸ்ரீ பராசர பட்டர்-

யதா ஷேத்ரஞ்ஞா சக்தி சா வேஷ்ட்டிதா நிரூப சர்வகா –ஸ்ரீ விஷ்ணு புராணம் 6-7-62-

பரந்த உலகை பிரளய காலத்தில் ஸூஷ்ம ரூபமாகக் குறுக்குபவர்–ஸ்ரீ சங்கரர் –

நன்கு காப்பவர் -கால் கட்டை விரலால் துந்துபியின் உடலை வெகுதூரம் தூக்கி எறிந்தவர் –
சிருஷ்டியில் விரிவாக்கிய ஜகத்தை பிரளயத்தில் சுருக்குபவர் –ஸ்ரீ சத்ய சந்தர் –

—————

606-ஷேமக்ருத்
ஷேமத்தைச் செய்பவன் -நிவ்ருத்தி தர்ம நிஷ்டனுக்கு
ஞான விகாசம்
பெரும் துன்பம் வேரற நீக்கித் தன தாளிணைக் கீழ்ச் சேர்க்கும் அவன் செய்யும் சேமம் -7-5-10-
அனைத்தும் பகவத் ஆராதனமாக செய்பவன் நிவ்ருத்த தர்ம நிஷ்டன் –

நிவ்ருத்தி தர்மத்தில் இருப்பவர்களுக்கு ஞானம் சுருங்காமல் விரிவாகும்படி ஷேமத்தைச் செய்பவர் –ஸ்ரீ பராசர பட்டர்-

தம்மால் ஏற்கப் பட்டவர்களுக்கு ஷேமத்தைச் செய்பவர் –ஸ்ரீ சங்கரர் –

ஷேமத்தைச் செய்பவர் -அஷேமக்ருத் -என்ற பாடத்தில் ஷேமம் இன்மையை அழிப்பவர்–ஸ்ரீ சத்ய சந்தர் –

———————————————————–

தர்மத்தின் வடிவம் –

471-வத்சர -இறுதிப் பயனை நிலை பெறச் செய்ய அனைவருக்கு உள்ளும் உறைபவர் –
472-வத்சல-தாய்பசு கன்றை நேசிப்பது போல் சரணா கதர்களின் இடம் பேரன்பு கொண்டவர் –
473-வத்சீ -தம்மால் பேணப்பட்ட ஜீவர்களை மிகுதியாக உடையவர் –
474-ரத்ன கர்ப -வேண்டுபவர்களுக்கு கொடுக்க ரத்னங்கள் ஆகிற சிறந்த செல்வத்தை உடையவர்
475-தனேச்வர -அவரவர் விரும்பிய செல்வதை உடனே அளிப்பவர்-
476-தர்மகுப் -தான் அளித்த பொருள் தீய வழியில் பயன்படாமல் தர்மத்தைக் காப்பவர் –
477-தர்மக்ருத் -தர்மத்தை செய்பவர்களுக்கே அருள் புரிபவர் -ஆதலால் அனைவரையும் தர்மத்தைச் செய்ய வைப்பவர் –
478-தார்மீ -அனைத்து செயல்களுக்கும் தர்மத்தைக் கருவியாகக் கொண்டவர் –
479-சத் -அழியாத் தன்மையும் மங்களமான குணங்களும் எப்போதும் பொருந்தி இருப்பவர் –
480-சதஷரம் -எப்போதும் எங்கும் தன் பண்புகளிலும் இயக்கத் தன்மையிலும் குறைவு படாதவர் –

481-அசத் -தீயவர்களுக்கு சம்சாரத் துன்பத்தைக் கொடுப்பதால் துன்ப வடிவானவர் –
482-அசத் -ஷரம்-அசூரர்களை எப்போதும் துன்பத்திலே வைத்து இருப்பவர் –
483-அவிஜ்ஞ்ஞாத –மெய்யன்பர்களின் குற்றங்களைக் காணாதவர் -அறியாதவர் –
484-சஹச்ராம்சூ –அளவற்ற அறிவை உடையவர் –
485-விதாதா -தன் அடியார்களை யமனும் கூட தண்டிக்காத படி நடத்துபவர் –
486-க்ருத லஷண -முக்தி யடையத் தக்கவர்களுக்கு தாமே சங்கு சக்கரப் பொறி அடையாளம் இட்டு இருப்பவர் –
487-கபஸ்தி நேமி -ஒளி உடைய ஆயிரம் முனைகளை உடைய சக்கரத்தை உடையவர் –
488- சத்வச்த -பக்தர்களின் இதயத்தில் இருந்து கொண்டு யமனிடத்தில் இருந்து காப்பவர் –
489-சிம்ஹ -இப்படி இருக்கும் பக்தர்களைத் துன்புறுத்தும் யமனையும் தண்டிப்பவர் –
490-பூத மகேஸ்வர -யமன் பிரமன் முதலானோர்க்கும் தலைவர் –

491-ஆதி தேவ -தேவர்களுக்கும் முந்தியவர் -பிரகாசிப்பவர் –
492-மஹா தேவ -தேவர்களை விளையாட்டுக் கருவிகளாக வைத்து லீலை புரிபவர் –
493-தேவேச –தேவர்களை அடக்கியாளும் சக்ரவர்த்தி
494-தேவப்ருத்-தேவர்களைத் தாங்கிக் காப்பாற்றுபவன் –
495-குரு -வேதத்தின் படி தேவர்களின் கடைமையை உபதேசிப்பவர் –
496-உத்தர -ஆபத்துக் கடலில் இருந்து தேவர்களைக் கரை ஏற்றுபவர் –
497-கோபதி -வேதங்கள் மொழிகள் ஆகிற பேச்சுக்குத் தலைவர் –
498-கோப்தா -அனைத்து வித்யைகளையும் காப்பவர் –
499–ஜ்ஞான கம்ய -சமாதி என்னும் த்யான நிலையால் -பர வித்யையால்-அறியப் படுபவர் –
500-புராதன -இப்படியே முன் கல்பங்களிலும் வித்யைகளை வெளியிட்டவர் –
501-சரீர பூதப்ருத்-தனக்கு உடலாக இருக்கும் பஞ்ச பூதங்களை தாங்குபவர் –
502-போக்தா -தேவர்களுக்குக் கொடுக்கப் படும் ஹவ்யத்தையும் பித்ருக்களுக்கு கொடுக்கப்படும் கவ்யத்தையும்
ஹயக்ரீவராக குதிரை முகத்தோடு உண்பவர்-

——————————————————————————————

தர்மத்தைக் காக்கும் ஸ்ரீ இராமன் –

503-கபீந்திர -இராமாவதாரத்தில் தனக்கு குரங்கு வடிவில் வந்த தேவர்களுக்குத் தலைவர் –
504-பூரி தஷிண -தான் முன் மாதிரியாக இருந்து யாகங்களை நடத்தி நிரம்ப தஷிணை கொடுத்தவர் –
505-சோமப -யாகங்களில் தூய சோம ரசத்தைப் பருகியவர்
506-அம்ருதப -யாகத்தில் அக்னி பகவானுக்குக் கொடுக்கப்பட்டது அமுதமாக மாறி விஷ்ணுவை அடையும் –அதை பருகியவர் –
507-சோம -தாழ்ந்த அமுதத்தைப் போல் அல்லாமல் தானே ஆராத அமுதமானவர் –
508- புருஜித் -சத்தியத்தினால் உலகங்களையும் -தானத்தினால் ஏழைகளையும் பணி விடையால் குருக்களையும் –
இப்படி அனைவரையும் பல வகைகளில் வென்றவர் –
509-புருசத்தம -ஹனுமான் போன்ற சான்றோர்களின் உள்ளத்தில் நிலையாக இருப்பவர் –
510-வி நய -மாரீசன் போன்றோரை அடக்கியவர் –
511-ஜய -தன் அடியார்களால் ஏவப்படும்படி இருப்பவர் -வெல்லப்படுபவர்-
512-சத்யசந்த -சீதையையும் இலக்குவனையும் விட்டாலும் சொன்ன சொல் விடாதவர் –
513-தாசார்ஹ -பக்தர்கள் தங்களையே சமர்ப்பிக்கும் போது அவர்களை ஏற்கத் தகுதி உள்ளவர்

————————————————————-

பாகவதர்களைக் காப்பவன் –

514-சாத்வதாம்பதி -சாத்வதர்கள் யாதவர்கள் -என்னும் பாகவதர்களுக்குத் தலைவர் –
515-ஜீவ -பாகவதர்களுக்கு உயிர் அழித்து உய்விப்பவர் –
516-விநயிதா-பாகவதர்களை ராஜ குமாரனைப் போலே காப்பவர்
517-சாஷீ -அதற்காக அவர்களின் வளர்ச்சியை நேரே காண்பவர் –
518-முகுந்த -பாகவதர்களால் பிரார்த்திக்கப் பட்டு முக்தியைக் கொடுப்பவர் –
519-அமித விக்ரம -அனைத்துத் தத்துவங்களையும் தாங்கும் அளவிட முடியாத சக்தியை உடையவர் –

————————————————————————–

ஸ்ரீ ஆதி சேஷமும் ஸ்ரீ கூர்மமும் –

520-அம்போ நிதி -கடலுக்கு அடியில் பாதாளத்தில் ஆமை உரு பீடமாகவே உலகையே தாங்குபவர் –
521-அநந்தாத்மா -ஆமையின் மேல் தூண் போன்ற ஆதி சேஷனுக்கு அந்தராமாத்மா வானவர் –
522-மஹோ தாதி சய -பிரளயத்தின் போது ஆதி சேஷப் படுக்கையில் படுப்பவர் –
523-அந்தக -பிரளயத்தின் போது இவர் வாயில் இருந்து தோன்றும் தீயில் பிறந்த ருத்ரராலே உலகையே விழுங்குபவர்

————————————————-

ஸ்ரீ பிரணவ ஓங்கார வடிவினன் –

524-அஜ -பிரணவத்தின் முதல் எழுத்தாகிய அகாரத்தால் த்யானிக்கப் படுபவர் –
525-மஹார்ஹ-பக்தர்கள் பிரணவத்தைக் கூறி தம்மையே சமர்ப்பிப்பதை ஏற்றுக் கொள்ளத் தகுதி உடையவர்
526-ஸ்வா பாவ்ய-அடியார்களால் ஸ்வாமியாக -உடையவனாக நினைக்கப் படுபவர் –
527-ஜிதாமித்ர -பிரணவத்தின் பொருளை உணர்த்தி அஹங்கார மமகாரங்களான பகைவர்களை ஜெயித்துக் கொடுப்பவர் –
528-ப்ரமோதன-தம் பக்தர்களை மகிழ்வித்து அத்தைக் கண்டு தானும் மகிழ்பவர்

———————————————————–

ஸ்ரீ கபில அவதாரம் –

529-ஆனந்த -தைத்ரிய உபநிஷத் கூறியபடி எல்லை யற்ற ஆனந்தமே உருவானாவர் –
530-நந்தன -தன் ஆனந்தத்தை முக்தி பெற்றவர்களுக்கு அளிப்பவர் –
531-நந்த -இன்பத்துக்கு உரிய பொருள்கள் இடங்கள் கருவிகள் மனிதர்கள் ஆகிய அனைத்தாலும் நிரம்பியவர் –
532-சத்யதர்மா -சரணாகதர்களைக் காக்கும் தன் தர்மத்தை நன்கு நடத்துபவர் –
தன் பெருமையால் மூன்று வேதங்களையும் வியாபித்து இருப்பவர் –
534-மஹர்ஷி -அனைத்து வேதங்களையும் நேராக அறிந்த கபில மூர்த்தியானவர் –
535-கபிலாசார்ய-கபிலாசார்யராக இருந்து சாங்க்ய முறைப்படி தத்தவங்களை விளக்கியவர் –
537-மேதிநீபதி -கபிலராக உலகத்தையே தாங்கியபடியால் பூமிக்குத் தலைவர் –
538-த்ரிபத -அனுபவிக்கப் படும் பொருளான அசித் -அனுபவிப்பவனான ஜீவன் –
இரண்டையும் ஆணை இடுபவரான பகவான் ஆகிய மூன்று தத்வங்களையும் அறிபவர்

—————————————————————————————

ஸ்ரீ வராஹ அவதாரம் –

539-த்ரித ஸாத் யாஷ -பிரளய ஆபத்தில் இருந்து முப்பத்து மூன்று தேவர்களையும் வராஹ உருவத்தில் ரஷித்து அருளிய ஸ்வாமி-
540-மஹா ஸ்ருங்கா -உலகமே சிறு பொருளாக ஒட்டிக் கொள்ளும்படி பெரும் கோரைப் பல்லை -தந்தத்தை உடையவர் –
541-க்ருதாந்தக்ருத் -யமனைப் போன்ற ஹிரண்யாஷனை ஒழித்தவர்-
542-மஹா வராஹ -தாமரைக் கண் உடைய பெரிய பன்றி உரு உடையவர் –
543-கோவிந்த -பூமியைத் திரும்பவும் அவளை அடைந்தவர் –

——————————————————

மேன்மை சொல்லும் ரஹஸ்யமான திரு நாமங்கள் –

544-சூஷேண- ஐந்து உபநிஷத் மந்த்ரங்களால் ஆன திருமேனியை சேனையாகக் கொண்டு அனைவரையும் தம் வசப்படுத்துபவர்
545-கனகாங்கதீ -திவ்யமான பொன் ஆபரணங்களால் அலங்கரிக்கப் பட்டவர் –
546-குஹ்ய -உபநிஷத்துக்களின் பொருளான தன் திருமேனியை மற்றவர்கள் இடத்தில் இருந்து மறைப்பவர் –
547-கபீர -ஆழமான பெருமை உடையவர் -தன் சேர்க்கையால் அனைவரின் அறிவின்மையையும் போக்குபவர் –
548-கஹன-நதியின் அடித்தளம் தெரிந்தாலும் ஆழம் தெரியாதா போலே தன குணங்கள் புலப்பட்டாலும் தான் அளவிறந்த ஆழம் உடையவர் –
549-குப்த-அவன் மாயை அறிந்த ஆசார்யர்களால் ரஹச்யமாகப் பாதுகாக்கப் படுபவர் –
550-சக்ர கதா தர -அவர் யார் என்னில் சங்கு சக்ரங்களை ஏந்தி இருப்பவர் –

551-வேதா -பலவகைப் பட்ட மங்களமான செயல்களை உடையவர் –
552-ஸ்வாங்க–பிரபஞ்சத்துக்கே சக்கரவர்த்தி என்பதற்கான அனைத்து அடையாளங்களையும் பொருந்தியவர்
553-அஜித -அஜீதை என்கிற ஸ்ரீ வைகுண்டத்துக்கு ஸ்வாமி
554-கிருஷ்ண -மேகம் போன்ற கறுத்த நிறம் உள்ளவர் –
555-த்ருட -வ்யூஹ ரூபத்திலும் அடியார்க்குக் காணப்படும் திவ்ய ரூபம் உடையவர்
556-சங்கர்ஷண –சித்துக்களையும் அசித்துக்களையும் சம்ஹாரத்தின் போது தம்மிடத்தில் லயிக்கச் செய்பவர் –
557-அச்யுத -பிரமன் முதலான தேவர்களைப் போல் அல்லாமல் வ்யூஹ நிலையில் சற்றும் நழுவுதல் இல்லாதவர் –
558-வருண -பூமியையும் ஆகாயத்தையும் மூடிக் கொண்டு இருப்பவர் –
559-வாருண–அவன் இடத்தில் லயிக்க விரும்பும் நினைவை உடைய அடியார்கள் உள்ளத்தில் இருப்பவர் –
560-வ்ருஷ-பெரும் மரத்தைப் போலே அடியார்களுக்கு நிழல் தருபவர் –

561-புஷ்கராஷ-தம் அருளாலே அடியார்களைப் பேணும் திருக் கண்களை உடையவர் –
562-மஹா மநா -அடியார்கள் இடம் நிறைந்த மனமும் வள்ளன்மையும் உடையவர் –
563-பகவான் -குற்றம் அற்றதாய் குணங்களே நிரம்பிய ஸ்வரூபம் ஆனதால் பூஜிக்கத் தக்கவர் –
564-பகஹா -முன்னால் கூறியபடி ஜ்ஞானம் முதலிய ஆறு குணங்களை உடையவர் –
565-நந்தீ-வ்யூஹத்தில் சங்கர்ஷணனாக இருந்தவர் –விபவத்தின் போது நந்தனின் மகனாக பலராமனாக அவதரித்தவர் –
566-வநமாலீ-பஞ்ச பூதங்களின் தேவதையான வைஜயந்தீ என்ற பெயர் பெற்ற வனமாலையை அணிந்தவர் –
567-ஹலாயுத -சித் அசித்துக்களை வளர்க்க உழும் கலப்பையை ஏந்தியவர் –
568-ஆ தித்தியா -ஆ என்னும் பீஜ மந்தரத்தால் அடையத் தக்கவர் –
569-ஜ்யோதிராதித்ய -ஒளி படைத்த சூரியனே ஆதித்யன் -அவனே இருண்டு போகும் சோதி யுருவம் கொண்ட நாராயணனாக பிறந்தவர் –
570–சஹிஷ்ணு -ருத்ரனுக்கும் நாராயணனுக்கும் சண்டை மூண்ட போது அதில் ஏற்பட்ட குற்றங்களைப் பொறுத்தவர்-

571-கதிசத்தம -ஆச்சார்யனாக இருந்து தர்ம மார்க்கத்தைக் காட்டுபவர் –
572- சூ தன்வா-அமிர்தத்தை பிரித்த போது தேவர்களுக்கும் அசுரர்களுக்கும் நடந்த சண்டையை தன் வில்லால் நிறுத்தியவர் –
573-கண்ட பரசூ -உடைந்த கோடாரியை ஆயுதமாகக் கொண்டவர் –
574-தாருண-உட்பகைவர்களையும் வெளிப்பகைவர்களையும் பிளப்பவர் –

——————————————————–

ஸ்ரீ வியாச அவதாரம்

575-த்ரவிண ப்ரத -சாஸ்திரம் ஆகிற செல்வத்தை நிரம்பக் கொடுப்பவர் –
576-த்விஸ் ப்ருக்-தன் சிறந்த அறிவினால் பரமபதத்தினில் இருக்கும் தன் ஸ்வ பாவிக தன்மையை தொடுபவர் அறிபவர் –
577-சர்வத்ருக்-அனைத்தையும் பார்த்து அறியக் கூடிய வித்வான் -முழுமையான அறிவுடையவர்
578-வியாச -வேதங்களைப் பிரித்துக் கொடுத்த வியாச உருவானவர் –
579-வாசஸ்பதி -ஐந்தாம் வேதமாகப் போற்றப்படும் மஹா பாரத்தில் உள்ள சொற்களுக்குத் தலைவர் –
580-அயோ நிஜ -சாரஸ்வத அவதாரத்தில் பெருமானின் பேச்சில் இருந்து பிறந்த படியால் கர்ப்பத்தில் இருந்து பிறவாதவர் –

581-த்ரிசாமா -ப்ருஹத் ரதந்த்ரம் வாமதேவ்யம் -என்னும் மூன்று சாமங்களால் பாடப்படுபவர் –
582-சாமக -மகிழ்ச்சியோடு அந்த சாமங்களை தானே பாடுவார் –
583-சாம -அவன் பெருமையை பாடுபவர்களுடைய வினைகளைப் போக்குபவர் –
584-நிர்வாணம் -பாவம் விலக்கியவர்களின் உயர் கதிக்கு காரணம் ஆனவர் –
585-பேஷஜம் -ஒழிக்க முடியாத சம்சாரம் ஆகிற நோய்க்குச் சிறந்த மருந்து –
586-பிஷக் -நோய் நாடி நோய் முதல் நாடும் அற்புத மருத்துவர்-
587-சன்யாச க்ருத்–சரணா கதர்களின் ரஜோ குணம் தமோ குணம் அறிந்து சிக்த்சை பண்ணும் மருத்துவர்
588-சம -ஆசை பயம் கோபம் ஆகியவற்றை அடக்க உபதேசிப்பவர் –
589-சாந்த -அலை போலே தன் பெருமை பொங்கினாலும் அலை இல்லாக் கடல் போலே சாந்தமாக இருப்பவர் –

——————————————————————————————

தர்மத்தின் படி பயன் அளிப்பவன் –

590-நிஷ்டா -தன்னிடம் ஒரு முகப்படுத்தப் பட்ட மனத்தைத் தன் திருமேனியில் நிலை நிறுத்துபவர்
591-சாந்தி -சமாதி நிலையில் ஏனைய தொழில்கள் மறந்து தன்னையே அனுபவிக்கச் செய்பவர் –
592-பராயணம் -முக்திக்கு நேர் வழியான சிறந்த பக்தியை தாமே அளிப்பவர் –
593-சூபாங்க -சமாதி நிலையில் ஏனைய தொழில்களை மறந்து தன்னையே அனுபவிக்கச் செய்பவர்
594-சாந்தித -அவர்களின் பிறவிச் சுழலை அறுத்து சாந்தியைக் கொடுப்பவர் –
595-ஸ்ரஷ்டா -முக்தி விரும்பியவர்களை சம்சாரத்தில் இருந்து விடுவிக்கும் போது ஏனையோரை கர்மத்தின் படி படைப்பவர்
596-குமுத -அடியார்களுக்கு காணுதல் கேட்டல் ஆகிய இவ்வுலக இன்பங்களை அளித்து மகிழ்பவர் –
597-குவலேசய-குவலர் எனப்படும் ஜீவர்களை ஆள்பவர் –
598-கோஹித -சம்சார விதையை விதைத்து இவ் வுலகை வளர்ப்பவர்
599-கோபதி -ஜீவர்கள் இன்பம் துய்க்கும் ஸ்வர்க்கத்துக்கும் ஸ்வாமி
600-கோப்தா -வினைகளின் பயன்களை கொடுத்துக் காப்பவர் –

601-வ்ருஷபாஷ-சம்சாரம் என்னும் சக்கரத்துக்கு தர்மம் என்னும் அச்சுப் போன்றவர் –
602-வ்ருஷப்ரிய -உலக வாழ்க்கையை நீடிக்கும் பிரவ்ருத்தி தர்மம் முடிக்கும் நிவ்ருத்தி தர்மம் ஆகிய இரண்டிலும் அன்பு செலுத்துபவர் –
603-அநீவர்த்தீ -பிரவ்ருத்தி தர்மத்தில் ஈடுபட்டவர்களை சம்சாரத்தை விட்டு விலக்காதவர் –
604-நிவ்ருதாத்மா -நிவ்ருத்தி தர்மத்தில் இருக்குமவர்களுக்கும் ஆத்மாவாக இருப்பவர் –
605-சங்ஷேப்தா -பிரவ்ருத்தி தர்மத்தில் இருக்குமவரின் அறிவைக் குறைப்பவர் –
606-ஷேமக்ருத் -நிவ்ருத்தி தர்மத்தில் இருப்பவர்களின் அறிவை விரிப்பவர் –

—————————————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பராசர பட்டர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பீஷ்மர் திருவடிகளிலே சரணம்
ஸ்ரீ வியாச பகவான் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: