ஸ்ரீ விஷ்ணு சகஸ்ர நாமம்–3-22-ஸ்ரீ ராம அவதார திரு நாமங்கள் -390-421-/3-23-கல்கி அவதார திரு நாமங்கள் -422-436-/3-24-ஜ்யோதிர் மண்டலத்துக்கு ஆதாரம் -437-445-திரு நாமங்கள் –/3-25-யஞ்ஞ ஸ்வரூப திரு நாமங்கள் -446-450-/3-26 நிவ்ருத்தி தர்ம ப்ரவர்தக திரு நாமங்கள் -451-457-/3-27-அலை கடல் கடைந்து அமுதம் கொண்டவன் -458-470-திரு நாமங்கள்

வ்யவசாயோ வ்யவஸ்தாநஸ் சமஸ்தான ஸ்தா நதோ த்ருவ
பரர்த்தி பரம ஸ்பஷ்ட ஸ்துஷ்ட புஷ்டஸ் ஸூ பேஷண–42-
ராமோ விராமோ விரதோ மார்கோ நேயோ நயோ அநய
வீரஸ் சக்தி மதாம் ஸ்ரேஷ்டோ தரமோ தர்ம விதுத்தம –43-
வைகுண்ட புருஷ ப்ராண பிராணத பிரணம ப்ருது
ஹிரண்ய கர்ப்பஸ் சத்ருக்நோ வ்யாப்தோ வாயுரதோஷஜ-44
ருதுஸ் ஸூ தர்சன கால ப்ரமேஷ்டீ பரிக்ரஹ
உக்ரஸ் சம்வத்ஸ்ரோ தஷோ விஸ்ராமோ விஸ்வ தஷிண –45
விஸ்தார ஸ்தாவர ஸ்தாணு பிரமாணம் பீஜமவ்யயம்
அர்த்தோ அநர்த்தோ மஹா கோஸோ மஹா போகோ மஹா தன-46-
அநிர்விண்ண ஸ்தவிஷ்டோ பூர்தர்மயூபோ மஹா மக
நஷத்ர நேமிர் நஷ்திரீ ஷம ஷாமஸ் சமீஹன–47
யஜ்ஞ இஜ்யோ மஹேஜ்யஸ்ஸ க்ரதுஸ் சத்ரம் சதாம்கதி
சர்வ தர்சீ நிவ்ருத்தாத்மா சர்வஜ்ஞோ ஜ்ஞானமுத்தமம் -48-
ஸூவ்ரதஸ் ஸூ முகஸ் ஸூ ஷ்மஸ் ஸூ கோஷஸ் ஸூ கதஸ் ஸூ ஹ்ருத்
மநோஹரோ ஜிதக்ரோதோ வீர பாஹூர் விதாரண –49
ஸ்வாபன ஸ்வ வஸோ வியாபி நைகாத்மா நைக கர்மக்ருத்
வத்சரோ வத்சலோ வத்சீ ரத்னா கர்ப்போ தனேஸ்வர –50

———–

3-1-பிரதம அவதாரம் விஷ்ணு -147-152- திரு நாமங்கள்–6 -திரு நாமங்கள்
3-2-வாமன அவதார பரமான -153-164 திரு நாமங்கள் —12-திரு நாமங்கள்
3-3- துஷ்ட நிக்ரஹ இஷ்ட பரிபாலநம் -165-170-திரு நாமங்கள்–6-திரு நாமங்கள்
3-4-ஜ்ஞானாதி பகவத் குணங்கள் கொண்டவன் -171-181- திரு நாமங்கள்-11-திரு நாமங்கள்
3-5-குணங்களுக்கு ஏற்ற அவதார செயல்கள் -182-186-திரு நாமங்கள்–5 திரு நாமங்கள்
3-6-ஹம்ஸாவதாரம் -187-194-திரு நாமங்கள்-7 திரு நாமங்கள்
3-7-பத்மநாபாவதாரம்-195-199-திரு நாமங்கள்-5 திரு நாமங்கள்
3-8-நரசிம்ஹ அவதாரம் ——200-210—திரு நாமங்கள்—11 திரு நாமங்கள்
3-9-மத்ஸ்ய அவதார -211-225- திரு நாமங்கள் –15-திரு நாமங்கள்
3-10- புருஷ ஸூக்த உபநிஷத் ப்ரதிபாதித விராட் ஸ்வரூப—226-247- திரு நாமங்கள் -22-திரு நாமங்கள்
3-11–சித் அசித் -இவைகளாலான -ஐஸ்வர்ய -பூர்த்தி -248-271-திரு நாமங்கள் -23-திரு நாமங்கள்
3-12-விஸ்வ ரூபம் —272-300-திரு நாமங்கள் -29-திரு நாமங்கள்
3-13-ஆலிலை மேல் துயின்ற –வட பத்ர சாயி -301-313-திரு நாமங்கள்–14-திரு நாமங்கள்
3-14-ஸ்ரீ பரசுராம -ஆவேச சக்தி -அவதாரம் -314-321-திரு நாமங்கள்–8-திரு நாமங்கள்
3-15-ஸ்ரீ கூர்மாவதாரம் -322-332-திரு நாமங்கள்–11-திரு நாமங்கள்

3-16- பர வாசுதேவன் குண வாசகம் -333-344-திரு நாமங்கள்-12 திரு நாமங்கள்
3-17-பர வாசுதேவன் ரூப குண வாசகம் -345-350 திரு நாமங்கள்-6 திரு நாமங்கள்
3-18-ஐஸ்வர்ய வாசக -351-360-திரு நாமங்கள்-11-திரு நாமங்கள்
3-19-ஸ்ரீ லஷ்மி சம்பந்தம் -361-379-திரு நாமங்கள்–19-திரு நாமங்கள்
3-20-சேதனர்கள் உடன் இணைந்து இருக்கும் ஒட்டின்மை -380-384-திரு நாமங்கள்-5 திரு நாமங்கள்
3-21-த்ருவ–385-389-திரு நாமங்கள்-5 திரு நாமங்கள்

3-22-ஸ்ரீ ராம அவதார -390-421-திரு நாமங்கள்–32-திரு நாமங்கள்-
3-23-கல்கி அவதார -422-436-திரு நாமங்கள்–15-திரு நாமங்கள்
3-24-ஜ்யோதிர் மண்டலத்துக்கு ஆதாரம் -437-445-திரு நாமங்கள் –8-திரு நாமங்கள்
3-25-யஞ்ஞ ஸ்வரூப -446-450-திரு நாமங்கள்–15-திரு நாமங்கள்
3-26 நிவ்ருத்தி தர்ம ப்ரவர்தக -451-457-திரு நாமங்கள்–6-திரு நாமங்கள்
3-27-அலை கடல் கடைந்து அமுதம் கொண்டவன் -458-470-திரு நாமங்கள்-12-திரு நாமங்கள்

———————————————————————————-

வ்யவசாயோ வ்யவஸ்தாநஸ் சமஸ்தான ஸ்தா நதோ த்ருவ
பரர்த்தி பரம ஸ்பஷ்ட ஸ்துஷ்ட புஷ்டஸ் ஸூ பேஷண–42-
———–

3-22-ஸ்ரீ ராம அவதார திரு நாமங்கள் -390-421-

ம்ருத சஞ்சீவினி –
கற்பார் ராமபிரானை அல்லால் மற்றும் கற்பரோ -7-5-1
தயரதற்கு மகன் தன்னை யன்றி மற்றிலேன் தஞ்சமாகவே -3-6-8-
தென்னிலங்கை கோமானைச் செற்ற மனத்துக்கு இனியான் -திருப்பாவை
தேவை இடாதார் –
கண்ணன் நாமமே குழறிக் கொன்றீர் -9-5-8

390-பரர்த்தி –
மேலான குண பூர்த்தி உள்ளவன்
விபீஷணனை அங்கீ கரித்த பின்பு க்ருதக்ருத்ய ததா ராம

சர்வேச்வரத் தன்மைக்கும் மேம்பட்ட திருக் கல்யாண குணங்களால் நிறைந்தவர் –
இனி மிருத சஞ்சீவினியான ராம சரிதம் கூறப்படுகிறது —
அதனாலேயே அவர் எல்லாருக்கும் மேம்பட்டவராயினும் சோமன் -சந்தரன் -முதலிய
தாழ்ந்த தேவதைகளோடும் ஒப்பிடப் படுகிறார் –ஸ்ரீ பராசர பட்டர் –

பரமர்த்தி -பாட பேதம்
விஷ்ணு நாம் சத்ருஸோ வீரயே சோமவத் ப்ரிய தர்சன–பால காண்டம்
ஏதத் தத் யுக்தம் அவ்யக்தம் அக்ஷரம் ப்ரஹ்ம சம்மிதம் தேவா நாம் ஹ்ருதயம் ஸுவ்ம்ய க்ருஹ்யம் ராம பரந்தப–யுத்த காண்டம்
பஹவோ ந்ருப கல்யாண குணா புத்ரஸ்ய சந்தி தே –அயோத்யா காண்டம்

சிறந்த ஐஸ்வர்யம் உடையவர் –ஸ்ரீ சங்கரர் –

பிறருடைய வளர்ச்சிக்குக் காரணமானவர் –ஸ்ரீ சத்ய சந்தர் –

——————-

391-பரம ஸ்பஷ்ட
வெளிக் காணும் மேன்மை உடையவன் -பரத்வம் தலை நீட்டிக் காட்டும்
கட்கிலீ உன்னைக் காணுமாறு அருளாய் -காகுத்தா
பும்ஸாம் திருஷ்டி சித்த அபஹாரிணம்

தம் மகிமையை யாவரும் வெளிப்படையாகக் காணும்படி திருவவதரித்து இருப்பவர் –ஸ்ரீ பராசர பட்டர் –

வ்யக்தமேஷ மஹா யோகோ பரமாத்மனா சநாதன–யுத்த காண்டம் மண்டோதரி
ஸூர்யஸ்யாபி பவேத் ஸூர்ய-அயோத்யா காண்டம்

வேறு ஒன்றின் உதவி இல்லாமல் ஞான ஸ்வரூபியாக பிரகாசிப்பவர் –ஸ்ரீ சங்கரர் –

மேன்மை கொண்ட தம்மைத் தாமே வெளிப்படுத்துபவர் -மிகவும் உயர்ந்தவராய் -அறிய ஒண்ணாதவர் –ஸ்ரீ சத்ய சந்தர் –

—————

392- துஷ்ட
மகிழ்ச்சி நிறைந்தவர் -பிரமுதோஹா
கௌசலை தன் மணி வயிறு வாய்த்தவனே மைதிலி தன் மணவாளா சனகன் திரு மருகா தாசரதி
தயரதன் குல முதலாய் –பெருமாள் திரு -8-

உயர்ந்தவர் மட்டுமே அறிவதற்கு உரிய பரத்வத்தில் காட்டிலும் மனிதர் முதலிய யாவரும் அறியும்படி தசரதன் மகனாக
திருவவதரித்து அரசாண்டது முதலியவற்றால் மகிழ்ந்தவர் –ஸ்ரீ பராசர பட்டர் –

பிதராம் ரோசயாமாச சதா தசரதன் ந்ருபம்–பால
குலோசிதமதி ஷாத்ரம் தர்மம் ஸ்வம் பஹு மந்யதே -அயோத்யா
ஆத்மா நம் மானுஷம் மந்யே ராமம் தசரதாத்மஜம் -யுத்த

பேரானந்த வடிவமாக இருப்பவர் –ஸ்ரீ சங்கரர் –

அடியவர்கள் செய்யும் தொண்டினால் மகிழ்பவர்–ஸ்ரீ சத்ய சந்தர் –

—————-

393-புஷ்ட
நிரம்பியவன் –மகா குணங்களால்

இவ்வாறு மஹா குணங்களால் நிறைந்தவர் -ஸ்ரீ பராசர பட்டர்

தமேவம் குண சம்பந்தம் -பால

எல்லாவற்றாலும் நிறைந்து இருப்பவர் -ஸ்ரீ சங்கரர்

பக்தர்களை போஷிப்பவர் -வளர்ப்பவர் -ஸ்ரீ சத்ய சந்தர்

————-

394-சுபேஷண-
சோபனமான பார்வை யுடையவர்
முன்பு 346 பத்ம நிபேஷன –348-அரவிந்தாஷ
செக்கமலத் தவர் போலும் கண் கை கால் செங்கனி வாய் அக்கமலத் திலை போலும் திருமேனி யடிகளுக்கே -9-7-3-

தாம் கடாஷிப்பதும் தம்மைப் பிறர் காண்பதும் மங்கள கரமாக இருப்பவர் –
குளிர்ந்த நீண்ட பெரிய தாமரை கண்கள் -பரத்வ லஷணம்-ஸ்ரீ பராசர பட்டர்

ஸூ ப்ரூஸ் ஆயத தாம்ராக்ஷ சாஷாத் விஷ்ணுரிவ ஸ்வயம் –அயோத்யா
யச்ச ராமம் ந பஸ்யேத்து யம் ச ராமோ ந பஸ்யதி -அயோத்யா

மங்கள கரமான கடாஷம் யுடையவர் -மோஷம் ஐஹிக ஆமுஷ்கிக இன்பம் பாவனத்வம் அளித்தும் -ஐயங்களைப் போக்கியும்
ஹிருதயத்தின் முடிச்சையும் கர்மங்கள் அவித்யை போக்கி அருளியும் செய்யும் கடாஷம்-ஸ்ரீ சங்கரர்

தாம் காண்பதும் தம்மைப் பிறர் காண்பதும் மங்கள கரமாக இருப்பவர் -மங்கள கரமான இரண்டு கண்கள் யுடையவர் -ஸ்ரீ சத்ய சந்தர்

———-

ராமோ விராமோ விரதோ மார்கோ நேயோ நயோ அநய
வீரஸ் சக்தி மதாம் ஸ்ரேஷ்டோ தரமோ தர்ம விதுத்தம –43-

——–

395-ராம –
யாவரும் மகிழும்படி இருப்பவன்
ரம்யதே அஸ்மின் சதா சர்வை குணரூப வசீக்ருதை
மனத்துக்கு இனியான்
தயரதன் பெற்ற மரகத மணித்தடம் -10-1-8
சேண சுடர்க் குன்று அன்ன செஞ்சுடர் மூர்த்தி காண் பெரும் தோற்றத்து என் காகுத்த நம்பி -6-6-9-

குணங்களாலும் அழகாலும் யாவரும் தம்மிடம் மகிழும்படி இருப்பவர் -ஸ்ரீ பராசர பட்டர்

ரம்யதே அஸ்மின் சதா சர்வை குண ரூப வசீக்ருதை—-ராமோ ரம்யதாம் ஸ்ரேஷ்ட அயோத்யா -53-1-
குணாபிராமம் ராமம் ச -சபா பர்வம் -58-42-
ஸ்யாமோ யுவா லோஹிதாஷோ மாதங்கா நாம் இவ ரிஷப
ததா சர்வ பிரஜா காந்தை ப்ரீதி சஞ்ஜநனை பிது குணைர் விருருசே ராமோ தீப்த ஸூர்ய இவாம் சுபிர் –அயோத்யா -1-33-
சரத் இந்தீவரத்விஷே அபி ராம சரீராய

நித்ய ஆனந்த ரூபியான தம்மிடம் யோகிகள் மகிழும் படி இருப்பவர் –
தம் இச்சையால் மிகவும் அழகிய திருமேனியைக் கைக் கொண்டவர் -ஸ்ரீ சங்கரர்

ஸ்ரீ லஷ்மீ தேவியின் மணவாளர் -யோகிகள் மகிழும்படி இருப்பவர் -மகிழ்பவர் –
அளவிடமுடியாதவர் -லீலை புரிபவர் -பூர்ணர் -ஆனந்த ரூபம் -ஸ்ரீ சத்ய சந்தர்

—————

396-விராம –
பிறரை ஓயச் செய்பவன்

வரங்களை அளிக்கும் பிரம்மாதி தேவர்களும் -அந்த வரங்களும் -அவற்றைப் பெற்ற ராவணாதிகளும்
தம்மிடம் ஓய்ந்து போகும்படி இருப்பவர் -ஸ்ரீ பராசர பட்டர்

ப்ரஹ்மா ஸ்வயம்பூ சதுரா நநோ வா –ஸூந்தர–51-45-படைக்கப்படாமல் தானாகவே தோன்றும் நான்முகனாக இருந்தாலும்
ராமன் ஒருவனை அழிக்கும் பொழுது காப்பாற்ற இயலாது

அனைத்துப் பிராணிகளும் முடிவில் அடையும் இடமாய் இருப்பவர் -ஸ்ரீ சங்கரர்

மேன்மையுடைய லஷ்மியை உடையவர் -கோபிகைகள் பலரை யுடையவர் –
பிரளயத்தில் ஜனங்களை முழுகச் செய்பவர் -ஸ்ரீ சத்ய சந்தர்

——————

397-விரத –
ஆசையை ஒழித்து இருப்பவன்
பாராளும் படர் செல்வம் பரத தம்பிக்கே யருளி அரும் கானம் அடைந்தவன் -பெருமாள் திரு 8-5
இரு நிலத்தை வேண்டாதே விரைந்து வென்றி மைவாய களிறு ஒழிந்து தேர் ஒழிந்து மா ஒழிந்து
வனமே மேவிய யெம்மிராமன் எம்பெருமான் -பெருமாள் திரு -9-2-

ராஜ்யம் முதலியவற்றில் ஆசையற்று இருப்பவர் -ஸ்ரீ பராசர பட்டர்

விஷய ஸூகங்களில் ஆசையில்லாதவர் -ஸ்ரீ சங்கரர்

தோஷங்கள் அற்றவர் -விரஜ -என்ற பாடம்-ஸ்ரீ சத்ய சந்தர்

—————-

398-மார்க்க
தேடப்படுபவன் -நற்பால் அயோத்தியில் வாழும் சராசரம் முற்றவும் உய்த்தனன்

பரத்வாஜர் முதலிய முனிவர்களால் தேடப்படுபவர் –
விரஜோ மார்க்க -ஒரே திரு நாமமாக கொண்டு தோஷம் அற்ற வழியைக் காட்டுபவர் -ஸ்ரீ பராசர பட்டர்

ந ச அஸ்ய மஹதீம் லஷ்மீம் ராஜ்ய நாச அபகர்ஷதி லோக காந்தஸ்ய காந்தத்வாத் சீத ரஸ்மே இவ ஷபா–அயோத்யா -19-32-
ச பிதுர் வசனம் ஸ்ரீ மாந் அபிஷேகாத் பரம் பிரியம்
தர்ம உபதேசாத் த்யஜதச்ச ராஜ்யம் மாம் சாப்யரண்யம் நயத பித்தாதிம் –ஸூந்தர-36-29–
பரத்வாஜாதிகளால் ஆரவத்துடன் நாடப்பட்டவன் -ஆகையால் மார்க்க
விரஜோ மார்க்க -ஒரே திரு நாமமாக கொண்டு –சரணம் அடைந்தவர்களுக்கு மோக்ஷம் அற்ற புருஷார்த்தங்களையும்
மோக்ஷத்தையும் அளிப்பவன்
யா கதிர் யஜ்ஜ சீலா நாம் ஆஹிதாக் நேச்ச யா கதி
ஆவஹத் பரமாம் கதிம் –ஸூந்தர-17-8-ஜடாயுவுக்கு பரம கதி

தம்மை அறிவதே முக்திக்கு வழியாக இருப்பவர் -ஸ்ரீ சங்கரர்

ஸ்ரீ நரசிம்ஹம்-திருவவதரித்து சிங்க திரு முகம் யுடையவர் -ஸ்ரீ சத்ய சந்தர்

—————

399-நேய
நியாம்யன் -கட்டளை இடப் பெறுபவன்
கூன் உருவில் கொடும் தொழுததை சொல் கேட்ட கொடியவள் தன் சொல் கொண்டு கானகமே சென்றவன் -பெருமாள் திரு -9-1-
சிற்றவை பணியால் முடி துறந்தான் -பெரிய திரு மொழி -2-3-1-

தம்மிடத்தில் அன்பு உடையவர்களால் கட்டளை இடப்படுபவர் -ஸ்ரீ பராசர பட்டர்

ஆஞ்ஞாய அஹம் தபஸ்வி நாம் –ஆரண்ய -முனிவர்களே ஆணை இடுங்கள்
ஆவாசம் து அஹம் இச்சாமி பிரதிஷ்டம் இஹ காநேந -ஆரண்யம் -இந்த தண்டகாரண்யத்திலே தங்க வேண்டிய இடத்தை கூறுங்கோள்
ஸூஹ்ருதாம் சர்வ க்ருஸ்ரேஷு யுக்தம் புத்திமதா சதா சமர்த்த நாபி சந்தேஷ்டும் ஸாஸ்வதீம் பூதிமிச்சதா –யுத்த
யஐஸ்வ அபீப்சிதம் யஜ்ஜம் மயி ஸ்ரேயசி அவஸ்திதே நியுங்ஷ்வச அபி மாம் க்ருத்யே சர்வம் கர்த்தாஸ்மி தே வச–சபா பர்வம் –
உங்கள் சொற்களைக் கேட்டு அப்படியே செய்கிறேன் -கிருஷ்ணன் தர்மர் இடம்
அயமஸ்மி மஹா பாஹோ வ்ரூஹி யத் தே விவஷிதம் கரிஷ்யாமீஹ தத் சர்வ யத் த்வம் வஷ்யஸி பாரத –உத்யோக பர்வம் —
உன்னுடைய கட்டளைகளை ஏற்கிறேன் தர்மர் கிருஷ்ணன் இடம்
வாயு ஸூநோ ஸூஹ்ருத்வேந பக்த்யா பரமயா ச ச சத்ரூணாம் அப்ரகம்பிய அபி லகுத்வம் அகமத் கபே –யுத்தகாண்டம்

தத்வ ஞானத்தினால் ஜீவனைப் பரமாத்மா ஆக்குபவர் -ஸ்ரீ சங்கரர்

சிஷ்யர்களில் உபதேசத்தால் நடத்தத் தகுதியானவர் -ஸ்ரீ சத்ய சந்தர்

—————————

400-நய –
நடத்துமவன் நயாமி பரமாம் கதிம்
சராசரங்களை வைகுந்தத்து ஏற்றி –

அந்த ரிஷிகளையும் காப்பவர் –ஸ்ரீ பராசர பட்டர் –

ரஷிதவ்யா த்வயா சஸ்வத் கர்யபூதா தபோதனா –ஆரண்ய -ரிஷிகள் வயிற்றில் உள்ள சிசு போலே ரக்ஷிக்கப்பட வேண்டியவர்கள்
பாண்டவானாம் பவாந் நாதோ பவந்தம் ச ஆஸ்ரிதா வயம் -சபா பர்வம்

எல்லாவற்றையும் நடத்துபவர் -வழி-நடத்தப் படுபவர் -நடத்துபவர் ஆகிய மூன்று ரூபங்களில் அறியப் படுபவர் –ஸ்ரீ சங்கரர் –

மேலான இடத்திற்கு நடத்துபவர் -ஸ்ரீ சத்ய சந்தர்

——————

401-அநய –
ப்ரதிகூலர் அணுக முடியாதவன்

விரோதிகளால் நடத்தப்பட முடியாதவர் -உலகிற்கு நன்மை செய்பவர் தம்மைத் தவிர வேறு எவரும் இல்லாதவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

ஹிமவான் மந்தரோ மேரு த்ரை லோக்யம் வா சஹாமரை சக்யம் புஜாப்யாம் உத்தர்த்தும் ந சங்க்யே பரதானுஜ–யுத்த
அய சுபாவஹோ விதி -அய -ஸூபத்தைக் கொண்டு வரும் வஸ்து – அவனைத்தவிர வேறு யாராலும்
ஸூபம் கொண்டு வர இயலாது -என்பதை -அநப -சொல்லும்
ஏதே வயம் சேர்வை சம்ருத்த காமா யேஷாமயம் நோ பவிதா ப்ரஸாஸ்தா –அயோத்யா

தாம் யாவராலும் நடத்தப் படாதவர் -ஸ்ரீ சங்கரர் –

முக்கிய பிராணனை பூமிக்கு அனுப்பி வைப்பவர் -தாமே மிக உயர்ந்தவர் –
தம்மை நடத்தும் மற்று ஒருவர் இல்லாதவர் -ஸ்ரீ சத்ய சந்தர் –

————–

402-வீர –
எதிரிகளை பயத்தால் நடுங்க செய்பவன்
வீர சூர பராக்கிரமம் -ஜெயா ஜெயா மகா வீர
அன்று இலங்கை நீறு செய்து சென்று கொன்று வென்றி கொண்ட வீரனார் -திருச்சந்த -116
வேந்தர் பகை தடிந்த வீரன் -பெருமாள் திரு -10-3
பொல்லா அரக்கனை கிள்ளிக் களைந்தானை
வெந்நரகம் சேரா வகையே சிலை குனித்தான்
மீண்டும் 664 வரும்

அரக்கர்களை மிகவும் பயத்தினால் நடுங்கும்படி செய்பவர் –ஸ்ரீ பராசர பட்டர் –

ப்ரஹ்ம தண்ட ப்ரகாசானாம் வித்யுத் சத்ருச வர்சஸாம் ஸ்மரன் ராகவ பாணானாம் திவ்யதே ராஷசேஸ்வர–யுத்த -60-3-
மாதங்க இவ ஸிம்ஹேன கருடேநேவ பந்நக அபிபுத அபவத் ராஜா ராகவேணா மஹாத்மநா –யுத்த -60-2-
வ்ருஷே வ்ருஷே ச பச்யாமி சீர க்ருஷ்ணாஜி தாம்பரம் க்ருஹீத தனுஷும் ராமம் பாஸஹஸ்தமிவ அந்தரங்கம் –ஆரண்ய -39-14-மாரீசன்

பராக்கிரமம் உள்ளவர் –ஸ்ரீ சங்கரர் –

ஞானத்தால் மகிழ்பவர் -விளையாடுபவர் –ஸ்ரீ சத்ய சந்தர் –

——————

403-சக்தி மதாம் ஸ்ரேஷ்ட
பரசுராமர் -வென்றவன் -மலையால் அரிகுலம் பணி கொண்டு அலை கடல் அடைத்தான் -பெரிய திருமொழி -5-7-7-

சக்தியுடைய தேவர்கள் முதலியோர்க்கும் சிறந்தவர் –ஸ்ரீ பராசர பட்டர் –

அக்ஷய்யம் மது ஹந்தாரம் ஜானாமி த்வாம் ஸூ ரேஸ்வரம் –பால -76-17-பரசுராமனின் புகழ்ச்சி
கதம் தேவ கண ஸ்ரேஷ்ட நாத்மநம் அவபுத்யஸே –யுத்த -120-6-நான்முகன் ராமன் இடம் உன் பெருமையை
நீயே என் தெரிந்து கொள்ளவில்லை
தேவாச்சா தைத்யாச்ச நிசாச ரேந்த்ர கந்தர்வ வித்யாதர நாகயஸா ராமஸ்ய லோக த்ரய நாயகஸ்ய
ஸ்தாதும் ந சக்தா சமரேஷு சர்வே –ஸூந்தர-51-44-
சர்வான் லோகான் ச ஸம்ஹ்ருத்ய ஸம்ஹ்ருதான் ச சராசரான் புனரேவ ததா ஸ்ரஷ்டும் சக்தோ
ராமோ மஹா சரை–ஸூந்தர-51-40-

சக்தியுள்ள பிரம்மாதி தேவர்களைக் காட்டிலும் சக்தி யுள்ளவர் –ஸ்ரீ சங்கரர் –

சக்தியுடையவர்களில் மேன்மையுள்ளவர் –ஸ்ரீ சத்ய சந்தர் –

————–

404 -தர்ம –
தர்மமே வடிவு எடுத்தவன்
கருமமும் கரும பலனுமாகிய காரணன் -3-5-10-
கண்ணன் தர்மம் அறியாக் குறும்பன் -நாச் 11-6-

செல்வத்தையும் மோஷத்தையும் கொடுத்து ஜீவர்களைத் தாமே நேரில் தாங்குபவர் –ஸ்ரீ பராசர பட்டர் –

தமேவ ப்ரஹ்ம ப்ரஹ்மவிதாம் வர –லோகாநாம் த்வாம் பரோ தர்ம –நான்முகன் இவனது கீர்த்தி
தர்மாத்மா ஸத்ய சந்தச்ச ராமோ தாசாரதிர் யதி பவ்ருஷே ச அப்ரதித்வந்த்வ சரைநம் ஜஹி ராவணிம்–யுத்த -120-14-
யே ச வேத வேதோ விப்ரா யே ச அத்யாத்ம விதோ ஜனா தே வதந்தி மஹாத்மாநம் கிருஷ்ணம் தர்ம சனாதனம் –ஆரண்ய -88-25-
புண்யா த்வாரவதீ தத்ர யத்ராஸ்தே மது ஸூதந –வன பர்வம் -88-24-
சாஷாத் தேவ புராண அசவ் ச ஹி தர்ம சனாதன –ஆரண்ய -88-24-
சாஷாத் ராமாத் வி நிர்வ்ருத்த தர்மச்சாபி ஸ்ரியா ஸஹ –அயோத்யா -2-29-

எல்லாவற்றையும் தாங்குபவர் –ஸ்ரீ சங்கரர் –

எல்லாவற்றையும் தாங்குபவர் -அடையப்படும் தர்மமாக இருப்பவர் –ஸ்ரீ சத்ய சந்தர்

—————–

405-தர்ம விதுத்தம –
தர்மம் அறிந்தவரில் முதல்வன் -தர்மஜ்ஞ்ஞஸ் சத்யசந்தச்ச

தர்மம் அறிந்தவர்களில் சிறந்தவர் வசிஷ்டர் வாம தேவர் மார்க்கண்டேயர் முதலியவர்களின் சிஷ்யராக இருந்தும்
அவர்களுக்கும் தர்மம் தெளிவிப்பவர் –ஸ்ரீ பராசர பட்டர் –

யதா ஸர்வதா அபிகத சத்தி சமுத்திர இவ ஸிந்துபி–பால -1-56-கடல் -நதிகளால் சூழப்பட்டு
அண்டப்பட்டுள்ளது போலே பெரியோர்களால் சூழப்பட்ட ராமன்
தர்மஞ்ஞ ஸத்யஸந்தம்ச –பால -1-12-
வேத வித்பி ஸூ பூஜித –ஸூந்தர-35-14-
யதாவத் ச அங்க வேதவித் –அயோத்யா –1-20-
த்வம் அப்ரமேயச்ச துராசதச்ச ஜிதேந்த்ரியச்ச உத்தம தார்மிகச்ச அக்ஷய்ய கீர்த்தீச்ச விசஷணச்ச
ஷிதி ஷமாவான் ஷத ஷோபமாஷா –கிஷ்கிந்தா –24-31-தாரை

வேதங்களும் தர்ம சாஸ்திரங்களும் அவரது கட்டளையாக இருப்பதால் தர்மம் அறிந்தவர்களில் சிறந்தவர் –ஸ்ரீ சங்கரர் –

தர்மம் அறிந்தவர்களில் மேலானவர் -தர்மமான தன்னை அறிந்தவர்களை உயர்ந்தவர்களாகச் செய்பவர் -ஸ்ரீ சத்ய சந்தர்-

————-

வைகுண்ட புருஷ ப்ராண பிராணத பிரணம ப்ருது
ஹிரண்ய கர்ப்பஸ் சத்ருக்நோ வ்யாப்தோ வாயுரதோஷஜ-44

—————-

406-வைகுண்ட –
குடி தடை இத்தை போக்குபவன்
தேவ தேவனை தென்னிலங்கை எரி எழச் செற்ற வில்லியை பாவ நாசனை பங்கயத் தடம் கண்ணனை -3-6-2
வைகுந்தா மணி வண்ணனே செய்குந்தா வரும் தீமை உன் அடியார்க்குத் தீர்த்து அசுரர்க்கு தீமை செய்குந்தா -2-6-1

தம்மை அடைவதற்கு உள்ள தடைகளை நீக்கித் தம்மிடம் சேர்த்துக் கொள்பவர் –
குடி என்ற தாது -வினையடி –வழியைத் தடை செய்தல் -பகவானோடு கூடும் வழியைத்-தடையை -நீங்கியவர்கள் விகுண்டா –
அவர்களை யுடையவன் பகவான் என்பதால் வைகுண்ட எனப்படுகிறான் –ஸ்ரீ பராசர பட்டர் –

மயா ஸம்ஸ்லேஷிதா பூமி அத்பி வ்யோம ச வாயுநா தேஜஸா சார்த்த வைகுண்டத்வம் ததோ மம –சாந்தி பர்வம் -343-50-
ராமமேவ அநு பஸ்யந்தீ நாப்ய ஹிம்ஸன் பரஸ்பரம் ததஸ் நிதவ் பரஸ்பர நிர் வ்யபேஷா ஹி
தத்ரத்யா யதா ஆஹு பவ்ர்ய பதீன் –அயோத்யா -48-5-
ராகவம் வா அநு கச்சத்வம் அஸ்ருதிம் வா அபி கச்சத வ்யஸ்ருஜன் கபலான் நாகா காவோ வத்ஸான் ந பாயயன்
நஷ்டம் த்ருஷ்வான் நாப்ய நந்தத் விபுலம் வா தநா கமம் புத்ரம் பிரதமஜம் லப்தவா ஜநநீ நாப்ய நந்ததா
ஸ்தந் யார்த்திந ஸூதா ஸ்த்ரீனாம் பர்த்தாரோ ப்ராதரஸ் ததா சர்வம் சர்வே பரித்யஜ்ய ராமமேவ அந்வ யுஸ் ததா

பஞ்ச பூதங்களை ஓன்று சேர்த்து சிருஷ்டியில் பயன்படுத்துபவர் அவற்றின் செயல்களைக் கட்டுப் படுத்துபவர் –ஸ்ரீ சங்கரர் –

விகுண்டா என்பவளின் மகனாக திரு அவதரித்தவர் -ஸ்ரீ வைகுண்டத்தில் இருப்பவர்–ஸ்ரீ சத்ய சந்தர் –

——————

407-புருஷ –
தூய்மை அளிப்பவன்
சபரி -பாவனா சர்வ லோகானாம் த்வமேவ ரகு நந்தன -அகஸ்தியர்

புனிதத் தன்மை யுள்ளவர் –ஸ்ரீ பராசர பட்டர் –

ச யத் பூர்வ அஸ்மாத் சர்வ ஸ்மாத் பாப்மன ஒஷஸ் தஸ்மாத் புருஷ —
பாவன சர்வ லோகாநாம் த்வமேவ ரகு நந்தன
தவாஹம் சஷுஷா ஸுவ்மய பூதா ஸுவ்மயேந மாநந –சபரி வார்த்தை
ச ஹி ராம ஸர்வதா புருஷ இஷ்யதி
ராகவம் சோபயந்யேத ஷட் குணா புருஷோத்தமம்
சார்ங்க தந்வா ஹ்ருஷீகேச புருஷ புருஷோத்தம

பாவங்களை எரிப்பவர் -எல்லோர்க்கும் முற்பட்டவர் -சரீரம் -புரம் -அதில் வசிப்பவர் –ஸ்ரீ சங்கரர் –

பூர்ணர் -காப்பவர் -எல்லோருக்கும் முன்னவர் -எல்லா தோஷங்களை அளிப்பவர் -எல்லா சரீரங்களில் வசிப்பவர்–ஸ்ரீ சத்ய சந்தர் –

——————–

408-பிராண –
பிராணனாய் இருப்பவன் -என் ஆவியை நடுவே வந்து உய்யக் கொள்கின்ற நாதனை -1-7-5
சராசரம் முற்றவும் நற்பாலுக்கு உய்த்தனன் -7-5-1–முன்பே 57 321 பார்த்தோம்-

எல்லாவற்றையும் உய்விப்பவர் –ஸ்ரீ பராசர பட்டர் –

ஜீவ ரூபியாய் இருப்பவர் -பிராணனாக இருந்து செயல் படுத்துபவர் –ஸ்ரீ சங்கரர் –

முக்தர்களைக் காட்டிலும் மேலானவர் -உயர்ந்த பெயர்களைக் கொண்டவராக செயல்படுபவர் –ஸ்ரீ சத்ய சந்தர் –

————-

409-பிராணத
உயிர் அளிப்பவன் -அகாலபலி நோ வ்ருஷா –
உலகங்கள் உய்ய செருவிலே அரக்கர் கோனைச் செற்ற நம் சேவகனார் -திரு மாலை -11
முன்பே 66-322 பார்த்தோம் -மேலும் 956 பார்ப்போம் –

பிரசித்தமான பிராணனை எல்லோருக்கும் தருபவர் –ஸ்ரீ பராசர பட்டர் –

அபி வ்ருஷா பரிம் லாநா ச புஷ்ப அங்குர கோரகா –அயோத்யா
பரிசுஷ்க பலாசாநி வநாந் யுபவ நாநி ச –அயோத்யா

சிருஷ்டியில் பிராணிகளுக்கு அந்தர்யாமியாகி உயிரைக்கொடுப்பவர் –
பிரளய காலத்தில் பிராணிகளின் பிராணன்களை நீக்குபவர் –ஸ்ரீ சங்கரர் –

துன்பத்தை அழிப்பவர்-பக்தர்களுக்கு முக்ய பிராணனைக் கொடுப்பவர் –ஸ்ரீ சத்ய சந்தர் –

—————

410-ப்ரணம –
வணக்கத்துக்கு உரியவன்
இலை துணை மற்று என் நெஞ்சே இலங்கையை ஈடழித்த கூரம்பன் அல்லால் குறை -நான்முகன் திரு -8
பிரணவ -957-சேஷி -வணங்கத் தக்கவன்

தம் குணங்களினால் சராசரங்கள் அனைத்தும் தம்மை வணங்கும்படி இருப்பவர் –ஸ்ரீ பராசர பட்டர் –

ஹ்ருதயாநி அமமந்தே ஜனஸ்ய குணவத்தயா –அயோத்யா

தேவர்களால் வணங்கப் படுபவர் -பிரணவ என்ற பாடம் -புகழப் படுபவர் –ஸ்ரீ சங்கரர் –

நன்றாகத் தூண்டுபவர் -பிரணவ என்று பாடம் -தம்மைத் தாமே புகழ்ந்து கொள்பவர் –
மிகவும் புதியவர் -நன்றாக வணங்கப் படுபவர்–ஸ்ரீ சத்ய சந்தர் –

——————

411-ப்ருது-
பிரசித்தன் பெரும் புகழான் -நிகரில் புகழாய்
இஷ்வாகு வம்ஸ ப்ரபவோ ராமோ நாம ஜனை ஸ்ருத யசஸ் வீ ஜ்ஞாநாசம் பந்ந –

மிகவும் விரிந்த புகழை யுடையவர் –ஸ்ரீ பராசர பட்டர் –

ப்ருது ஸ்ரீ பார்த்திவாத்மஜ –பால
ராமோ நாம ஜனை ஸ்ருத–பால
தேஷா மதியசா லோகே ராம –பால
யசஸச்ச ஏக பாஜநம் -கிஷ்கிந்தா

பிரபஞ்ச ரூபமாகத் தாமே விரிந்து இருப்பவர் —ஸ்ரீ சங்கரர் –

பிரசித்தமாக இருப்பவர் –ஸ்ரீ சத்ய சந்தர் –

————–

412-ஹிரண்ய கர்ப்ப –
பொன் புதையல் போன்றவன்
தானே விஷயம்– கற்பார் ராம பிரானை அல்லால் மற்றும் கற்பரோ
சிந்தனைக்கு இனியாய் திருவே என்னார் உயிரே -பெரிய திருமொழி -3-5-1-

தமக்கு ஹிதமாகவும் -இனிமையாகவும் உள்ள தியானிப்பவர் மனங்களினால் அமுதம் போலே அனுபவிக்கப் பெறுபவர் –
பொற் புதையல் போல் போன்றவர் -அவதார காலத்திற்குப் பிறபட்டவர்களுக்கும் அவர்கள் செய்யும் தியானம் முதலியவற்றால்
உபகாரம் செய்வது கூறப்படுகிறது –ஸ்ரீ பராசர பட்டர் –

த்யேய ச விச்வாத்ம -அவனே அனைத்து ஆத்மா -த்யானிக்கத் தக்கவன்

பிரம்மாவின் உற்பத்திக்குக் காரணமான பொன் அண்டத்தைத் தம்முள் வைத்து இருப்பவர் —ஸ்ரீ சங்கரர் –

பொன் மயமான பிரம்மாண்டத்தைத் தன் வயிற்றிலே தரித்தவர் –ஸ்ரீ சத்ய சந்தர் –

——————

413-சத்ருக்ந –
சத்ருக்களை முடிப்பவன் –
வல்லரக்கர் உயிர் உண்ட மைந்தன் -பெருமாள் திரு -10-2
மாறில் போரரக்கன் மதிள் நீறு எழச் செற்று உகந்த ஏறு சேவகனார் -6-1-10-
பற்றலர் வீயக் கோல் கையில் கொண்டான் -பெரிய திரு மொழி -2-3-1-

விஷயங்களில் ஈடுபடுவதால் ராவணன் போலப் பகைகளாக உள்ள இந்த்ரியங்களை விவேகம் என்னும்
அம்பினால் அழிப்பவர்–ஸ்ரீ பராசர பட்டர் –

தச இந்த்ரியனானாம் கோரம் யோ மநோ ரஜனீசரம் விவேக சரஜாலேந சமம் நயதி யோகிநாம் –ஈஸ்வர சம்ஹிதை

தேவர்களின் எதிரிகளை அழிப்பவர் —ஸ்ரீ சங்கரர் –

விரோதிகளை அழிப்பவர் –ஸ்ரீ சத்ய சந்தர் –

—————-

414-வ்யாப்த –
நிரம்பியவன் -ரிபூணாமபி வத்சல-

தியானிப்பவர்களிடம்-இளையவன் முதியவன் தலைவன் அடிமை பகைவன் நண்பன் முதலிய வேறுபாடு இல்லாமல்
ஒரே விதமான அன்பால் நிரம்பி இருப்பவர் –ஸ்ரீ பராசர பட்டர் –

பவ்ரான் ஸ்வ ஜனவத் நித்யம் குசலம் பரப்ருச்சதி புத்ரேஷ் வக்நிஷு தாரேஷு ப்ரேஷ்ய சிஷ்ய கணேஷு
ச நிகிலேந ஆநு பூர்வ்யாச்ச பிதா புத்ரா நிவ ஓவ்ரசாந் –அயோத்யா —
ரிபூணாம் அபி வத்ஸல

காரணமாதலால் எல்லாக் காரியங்களிலும் வியாபித்து இருப்பவர் —ஸ்ரீ சங்கரர் –

பிரம்மா முதலிய தேவர்களுக்கு வேண்டியவர் -கருடனுக்கு வேண்டியவர் –ஸ்ரீ சத்ய சந்தர் –

—————–

415–வாயு
செல்பவன் -அடியார் உள்ள இடம் தானே -குகன் பரத்வாஜர் சபரி
சென்று அங்குத் தென்னிலங்கை செற்றாய் திறல் போற்றி
சென்று நின்று ஆழி தொட்டான் –

தம்மைத் தியானிப்பவர் இருக்குமிடம் தேடி ஆங்காங்கு செல்பவர் –ஸ்ரீ பராசர பட்டர் –

சோபியகச்சத் மஹா தேஜா சபரீம் சத்ரு ஸூதந –
பரத்வாஜ ஆஸ்ரமம் கத்வா
குஹம் ஆஸாத்ய தர்மாத்மா

நல்ல மனத்தை உண்டாக்குபவர் —ஸ்ரீ சங்கரர் –

உயிரைத் தாங்கக் காரணமாக இருப்பவர் -வலிமை கொண்டவராய் சஞ்சரிப்பவர் -எல்லாவற்றையும் அறிபவர் –
பரவுபவர் -விரும்பப் படுபவர் -எல்லாரும் இயங்கக் காரணமானவர் -உயர்ந்தவர் -சம்சாரத்தில் கட்டுபவர் –
சம்சாரத்தில் இருந்து விடுவிப்பவர் –ஸ்ரீ சத்ய சந்தர் –

——————-

416-அதோஷஜ-
குறையாதவன் -அமுதக் கடல் போன்று –
யானும் ஏத்தி மூவுலகும் முற்றும் ஏத்தி பின்னையும் தானும் ஏத்திலும் தன்னை ஏத்த ஏத்த எங்கு எய்தும்
தேனும் பாலும் கன்னலும் அமுதுமாகித் தித்திப்பா -4-3-10-

யாவரும் அனுபவித்து உபயோகித்தாலும் அமுதக் கடல் போலே ஒரு காலும் வற்றிக் கீழே போகாமல் இருப்பவர் –ஸ்ரீ பராசர பட்டர் –

அதோ ந ஷீயதே ஜாது யஸ்மாத் தஸ்மாத் அதோஷஜ –உத்யோக பர்வம் சற்றும் குறையாமல் இருப்பதால் -அதோஷஜ-
அக்ஷய்யம் மது ஹந்தாரம் ஜானாமி த்வாம் ஸூ ரோத்தமம் –பால -பரசுராமன் கூற்று
அக்ஷய்ய கீர்த்திச்ச–கிஷ்கிந்தா –24-31-தாரை வார்த்தை

மேல் உலகத்திற்கும் பூமிக்கும் இடையில் விராட் ரூபத்துடன் வியாபிப்பவர் –
ஒருபோதும் தாழ்ந்து அழியாதவர் ஆதலின் அதோஷஜர் எனபது உத்யோகபர்வம் —ஸ்ரீ சங்கரர் –

இந்த்ரியங்களை அடக்கிய வஸூ தேவர் முதலியோர்க்கு மகனாக திரு வவதரித்தவர் –
அஷகுமாரனை வென்ற ஹனுமானால் தெரியப் படுத்தப் பெற்றவர் –
தம்மைத் தாழ விட்டு அனைவருக்கும் காட்டியவர்–ஸ்ரீ சத்ய சந்தர் –

———-

ருதுஸ் ஸூ தர்சன கால ப்ரமேஷ்டீ பரிக்ரஹ
உக்ரஸ் சம்வத்ஸ்ரோ தஷோ விஸ்ராமோ விஸ்வ தஷிண –45

———-

417-ருது –
அணுகுபவன் -வந்து அருளி என் நெஞ்சு இடம் கொண்ட வானவர் கொழுந்து -5-7-7
வந்தாய் என் மனம் புகுந்தாய் நந்தாத கொழும் சுடரே எங்கள் நம்பீ -பெரிய திருமொழி -1-10-9-

எப்போதும் புதிதாகத் தோன்றி உகப்பிக்க வல்ல திருக் குணங்கள் ஒன்றுக்கு மேல் ஓன்று விசேஷமாக வளரும்படி பக்தர்களின்
உள்ளங்களில் செல்பவர் -இதே குணம் இருப்பதால் அன்றோ வசந்த ருது சிசிரருது முதலியவைகளும்
ருதுக்கள் என்று கூறப் படுகின்றன –ஸ்ரீ பராசர பட்டர் –

கர்மாபி தப்தா பர்ஜன்யம் ஹ்லாத யந்தமிவ பிரஜா –அயோத்யா -3-29 –

ருது என்னும் காலச் சொல்லால் கூறப்படுபவர் —ஸ்ரீ சங்கரர் –

மோஷத்திற்கு சாதனமாக இருப்பவர் -தம் ஸ்வரூபத்தை தாமே தெரிவிப்பவர் –ஸ்ரீ சத்ய சந்தர் –

————–

418-ஸூ தர்சந –
பார்வைக்கு இனியவன் -சந்திர காந்தா நனம் ராமம் பிரிய தர்சனம் -பும்ஸாம் திருஷ்டி சித்த அபஹாரி
காண் பெரும் கோலத்து என் காகுத்த நம்பி -6-6-9-
கண்டவர் தம் மனம் வழங்கும் கணபுரத்து என் கருமணி -ராகவனே -பெருமாள் திரு -8-2-

குணங்களின் பெருமை அறியாதவர்களும் பார்த்தவுடன் நன்மை பெறும்படி அழகிய திருமேனியுடையவர் –ஸ்ரீ பராசர பட்டர் –

சோமவத் பிரிய தர்சன –பால -1-18-
சதைக பிரிய தர்சன –பால -1-16-

தாமரை இதழ் போல் நீண்டு அழகிய இரு கண்கள் யுடையவர் -பக்தர்களால் சுகமாகக் காணப்படுபவர் –
தம்மைப் பற்றிய ஞானமானது மோஷ பலம் தருவதாக இருப்பவர் —ஸ்ரீ சங்கரர் –

ஸூதர்சனம் என்னும் சக்கராயுதத்தை யுடையவர் -நல்ல தரிசனத்தைத் தருபவர் –
அழகிய கண்கள் யுடையவர் -நன்கு பார்ப்பவர் –ஸ்ரீ சத்ய சந்தர் –

—————

419-கால
தன்னிடம் ஈர்ப்பவன் -குணங்கள் அழகாலும் சரங்களாலும்
தயரதற்கு மகன் தன்னை அன்றி மற்றிலேன் தஞ்சமாகவே -1-6-8-

இப்படிப்பட்ட குண விசேஷங்களினால் சராசரங்களைத் தம்மிடம் சேர்த்துக் கொள்பவர் –ஸ்ரீ பராசர பட்டர் –

எல்லாவற்றையும் எண்ணுபவர் —ஸ்ரீ சங்கரர் –

அவரவர் தகுதிக்கு ஏற்ற சுகத்தை அழிப்பவர் -உலகைக் காலத்தினால் கட்டுப்படுத்துவதனாலும் பிரிப்பதனாலும் அறிவதனாலும்
காலமாக இருப்பவர் -சுகத்தை முழுமையாக தருபவர் –ஸ்ரீ சத்ய சந்தர் –

—————

420-பரமேஷ்டீ-
மிக உன்னதமான பரம பதத்தில் உள்ளவன்
மாயங்கள் செய்து சேனையைப் பாழ்பட விற்றிட்டுப் போய் விண் மிசைத் ததாமமே புக மேவிய சோதி -6-4-10-
விண் முழுதும் எதிர் வரத் தன் தாமமேவி சென்று இனிது வீற்றிருந்த அம்மான் -பெருமாள் திரு -10-10
பல்லாண்டு என்று பவித்ரனைப் பரமேட்டியை சார்ங்கம் என்னும் வில்லாண்டான் தன்னை –

இப்படி அரக்கர்களை வேட்டையாடியும் உலகைக் காத்தும் விளையாடிய பின்பு உயர்ந்த ஸ்தானமான
பரமபதத்தில் இருப்பவர் –ஸ்ரீ பராசர பட்டர் –

விவேச வைஷ்ணவம் தேஜஸ் ச சரீரஸ் ஸஹ அநுக –உத்தர -110-12-விஷ்ணு லோகத்துக்கு சரீர பூதங்களான அனைவருடன் அடைந்தான்
ஏவமேஷ மஹா பாஹு இஷுவாகு குல வர்த்தன ராவணம் ச கணம் ஹத்வா திவம் ஆக்ரமிதா பிரபு –சபா பர்வம் -55-47-

தமது சிறந்த சக்தியில் ஹ்ருதயாகாசத்தில் இருப்பவர் —ஸ்ரீ சங்கரர் –

உயர்ந்ததான ஹ்ருதயத்தில் இருப்பவர் –ஸ்ரீ சத்ய சந்தர் –

——————

421-பரிக்ரஹ –
சௌசீல்யமே ஸ்ரீ ராமாவதார முக்கிய குணம் –
யாவற்றையும் தன்னுடன் சேர்த்து கொள்பவன்
புற்பா முதலா புல்லெரும்பாதி ஓன்று இன்றியே
நற்பால் அயோத்தியில் வாழும் சராசரம் முற்றவும்
நற்பாலுக்கு உய்த்தனன் நான்முகனார் பெற்ற நாட்டுளே -7-5-1-

நகர மக்கள் தேச மக்கள் அவர்களுடைய சுற்றத்தார் அவர்களுடைய தேவதைகள் தோட்டத்தில் உள்ள மரம் புல்
முதலியவற்றையும் பரமபதம் சேரும்படி அங்கீ கரித்தவர் –ஸ்ரீ பராசர பட்டர் –

யே ஹி பாகவதம் சேஷு அநு ராகின–சராசரங்களையும் கூட்டிச் சென்ற ஸுவ்லப்யம்

சரணம் அடைபவர்களால் எல்லாவகைகளாலும் கொள்ளப் படுபவர் -பல வழிகளால் அறியப் பெறுபவர் –
அடியவர் சமர்ப்பிக்கும் இலை பூ முதலியவற்றை ஏற்பவர் –ஸ்ரீ சங்கரர் –

பக்தர்களை அனுக்ரஹித்து ஏற்றுக் கொள்பவர் –ஸ்ரீ சத்ய சந்தர் –

————

3-23-கல்கி அவதார திரு நாமங்கள் -422-436-

422-உக்ர
கொடியவன் -கூடாரை வெல்லும் சீர்மையாலும் வெல்ல முடியாத துஷ்டர்கள் சம்ஹரிக்கும் அவதாரம்
கற்கியாம் இன்னம் கார் வண்ணனே -5-1-10-

யுகத்தின் முடிவில் அதிக பாவம் செய்தவர்கள் விஷயத்திலும் வர்ணாஸ்ரம கலப்பு விஷயத்திலும் கொடியவராக இருப்பவர் –
இனி -தம்முடைய சீலத்தால் வெல்ல முடியாத தீயவர்களை அழிப்பதும் பாதாளத்தில் சயனித்து இருப்பதுமான
ஸ்ரீ கல்கி திருவவதாரமானது கூறப்படுகிறது –ஸ்ரீ பராசர பட்டர் –

சம்ஹார மூர்த்தயே கால வைச்வா நரார்சிஷே –மந்த்ர வர்ணம்
கல்கீ ச விஷ்ணு பகவான் நஷ்ட தர்ம அவதார க்ருத் உர்வ்யாம் மிலேச்ச கணம் ஹத்வா
அவஸ்திதோ ய கலவ் யுகே –பவ்ஷ்கர சம்ஹிதை

சூரியன் முதலியவர்களும் தம்மிடம் பயப்படும்படி இருப்பவர் –ஸ்ரீ சங்கரர் –

ருத்ரனை அழிப்பவர் -உயர்ந்த பிரம்மா முதலியவர்களை மகிழ்விப்பவர் என்றும் கூறுவர்–ஸ்ரீ சத்ய சந்தர் –

——————

423-சம்வத்சர
பொருந்தி வசிப்பவன் -காலத்தை நோக்கி திரு வநந்த ஆழ்வான் மேல் கண் வளர்ந்து இருப்பான் –
அரவணை மேல் பள்ளி கொண்ட முகில் வண்ணன்
முன்பே -92-பார்த்தோம்

சம்சாரத்துக்கு உரிய கருவிகளுடன் காலத்தை எதிர்பார்த்து பாதாள லோகத்தில் ஆதிசேஷன் மீது
சயனித்து இருப்பவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

அநந்த சயநா ரூடம்
சக்ராத்யாயுத வ்ருந்தேந மூர்த்தேந பரிவாரிதம் –திவ்யாயுதங்கள் அவனது ஆணைக்காகாவே உருவானவை என்று த்யானம்

எல்லாப் பொருள்களும் தம்மிடம் நன்கு வசிக்கும்படி இருப்பவர் –ஸ்ரீ சங்கரர் –

ஸ்ரீ கிருஷ்ணாவதாரத்தில் கன்றுக் குட்டிகளிடம் நன்கு விளையாடியவர் –
தம் குழந்தைகள் போன்ற பிரம்மா முதலியவர்களை மகிழ்விப்பவர் –
ஸ்வாமி புஷ்கரிணி -திருமலை -முதலிய இடங்களை யுடையவர் -வருடங்களை நடத்துபவர் –ஸ்ரீ சத்ய சந்தர் –

—————-

424-தஷ –
விரைவில் முடிப்பவன் -குதிரை மேல் வாள் ஏந்தி
குலங்குலமா அசுரர்களை நீறாகும் படியாக நிருமித்துப் படை தொட்ட மாறாளன் -4-8-1-

மிலேச்சர்களை விரைவில் வதம் செய்பவர் –ஸ்ரீ பராசர பட்டர் –

கல்கி சரிஷ்யதி மஹீம் சதா தஸ் யுவதே ரத ஆக்ரோஸமாநாந் ஸூ ப்ருசம் தஸ்யூந் நேஷ்யதி சம்ஷயம்–வனபர்வம் -191-15-
தக்ஷ வ்ருத்தை சீக்ர அர்த்தே ச –விரைவாக என்றும் வளரும்படி என்றும்
ஷிப்ரகாரீ ஜனார்த்தன -சபா பர்வம் -வேகமாகச் செயல் புரிபவன் –

பல உலக வடிவங்களாக விருத்தி அடைபவர் –ஸ்ரீ சங்கரர் –

தொல்லை தருபவரை அழிப்பவர் –ஸ்ரீ சத்ய சந்தர் –

————–

425-விஸ்ராம
ஒய்வு எடுக்கும் இடமாய் இருப்பவன்
ஜனங்களுக்கு ஹிதம் பண்ணுபவன்

பாவங்களும் அவற்றின் பயன்களும் அதிகமாக வருத்துவதனால் களைப்பு அடைந்தவர்களுக்கு
இளைப்பாறும் இடமாக இருப்பவர் –ஸ்ரீ பராசர பட்டர் –

தர்மஸ்ய ச விவ்ருத்யர்த்தம் விப்ராணாம் ஹித காம்யயா -சபா பர்வம் 54-56-தர்ம சமஸ்தானம் அந்தணர் ரக்ஷணம் -அவதார ஹேது

பிறவிக்கடல் பசி தாகம் முதலியவைகளால் அலைப்புண்டு இளைப்பாற விரும்புவர்க்கு மோஷம் கொடுப்பவர் –
ஆறு வகைகளான சம்சாரக் கடலின் அலைகளாலும்
அவித்யை முதலிய பெரும் துன்பங்களாலும் மதம் முதலிய துன்பங்களாலும் அலைப்புண்டவர்களுக்குமாம் –ஸ்ரீ சங்கரர் –

களைப்பு அற்றவர் -பக்தர்கள் சிரமம் அற்று இருக்கும்படி செய்பவர் –ஸ்ரீ சத்ய சந்தர் –

————–

426-விஸ்வ தஷிண –
எல்லார்க்கும் நல்லான் -அரண்ய பர்வதம் பாரதம் -கொள்ளைக்காரர்களை கல்கி பகவான் அழித்து –
உலகத்தையே அஸ்வமேத யாகத்தில் பிராமணருக்கு தஷிணை யாகத் தருவான் –

நல்லவர்க்கும் தீயவர்க்கும் நன்மையை அளிபபவர்-அபகாரம் செய்பவர்களையும் பொறுத்தல் அன்றோ தாஷிண்யம் –
அன்றிக்கே -ஸ்ரீ ராமபிரான் செய்த அஸ்வமேத யாகத்தில் பூமி முழுவதையும் தஷிணயாகக் கொடுத்தவர் –ஸ்ரீ பராசர பட்டர் –

ச இமம் சகலம் லோகம் ப்ரஸாதன் உபநேஷ்யதி-வனபர்வம் -190-96-உலகம் முழுமைக்கும் அருளை அளிப்பவன் –
அபராதங்களை பொறுப்பதே தாக்ஷிண்யம்
ததஸ் ஸோர க்ஷய க்ருத்வா த்விஜேப்ய பிருதிவீ மாம் வாஜிமேத மஹா யஜ்ஜே விதித்வா கல்பயிஷ்யதி –வனபர்வம் -191-1-
அஸ்வமேதயாகம் இயற்றிய அந்தணர்களுக்கு தக்ஷிணையாக பூமியை அளித்தான்

எல்லாவற்றையும் காட்டிலும் அதிக சக்தி யுள்ளவர் -எல்லாச் செயல்களிலும் மேம்பட்டவர் –ஸ்ரீ சங்கரர் –

உலகப் படைப்பு முதலிய செயல்களில் திறமை யுள்ளவர் -வாயுவிற்குக் காரணம் ஆனவர் –ஸ்ரீ சத்ய சந்தர் –

————-

விஸ்தார ஸ்தாவர ஸ்தாணு பிரமாணம் பீஜமவ்யயம்
அர்த்தோ அநர்த்தோ மஹா கோஸோ மஹா போகோ மஹா தன-46-

—————–

427-விஸ்தார –
விஸ்தாரம் உடையவன் -கலி விரோதம் ஒழித்து க்ருத யுகம் புகுவித்து வேத விதிகளை பரவச் செய்பவன்
கலியும் கெடும் கண்டு கொண்மின் திரியும் கலியுகம் நீங்கித் தேவர்கள் தாமும் புகுந்து
பெரிய கிதயுகம் பற்றிப் பேர் இன்ப வெள்ளம் பெருக -5-2-12-

கலியை அழித்து கிருதயுகத்தை உண்டாக்குவதால் வேதக் கட்டளையை வெளிப்படுத்துபவர் –ஸ்ரீ பராசர பட்டர் –

தத அதர்ம விநாஸோ வை தர்ம விருத்திச்ச பாரத பவிஷ்யதி க்ருதே ப்ராப்தே கிரியாவாந் ச ஜனஸ் ததா –வனபர்வம் -191-7-
கிருதயுகம் தோன்றி கலி அழிகிறது-தர்மம் செழித்து அதர்மம் சாய்கிறது -மக்கள் தர்மம் கைக்கொள்ளுகிறார்கள்

உலகங்கள் அனைத்தும் தம்மை ஆதாரமாகக் கொண்டு விரிவாகும்படி இருப்பவர் –ஸ்ரீ சங்கரர் –

உலகம் விரிவடையக் காரணமானவர் –ஸ்ரீ சத்ய சந்தர் –

——————–

428-ஸ்தாவரஸ் தாணு –
ஆறி இருப்பவன் -அதர்மத்தை ஒழித்து தர்ம சம்ஸ்தாபனம் பண்ணி மனஸ் சாந்தி அடைபவன்
வன்மை யுடைய வரக்கர் அசுரரை மாளப் படை பொருத நன்மை யுடையவன் -3-10-1-

இப்படி தர்மம் நிலை நிறுத்தப் பட்ட பிறகு ஓய்வாக இருப்பவர் –ஸ்ரீ பராசர பட்டர் –

ஸ்தாபயித்வா சமர்யாதாம் ஸ்வயம் பூவிஹிதாம் சுபாம் –தன்னால் படைக்கப்பட்ட நான்முகனால் உலகில்
தர்மத்தை நிலை நாட்டிய பின்பு சாந்தமாக உள்ளான்

தாம் நிலை பெற்றவராகவும் பூமி முதலியவை தம்மிடம் நிலை நிற்கும்படியாகவும் இருப்பவர் –ஸ்ரீ சங்கரர் –

சத்ய லோகத்தில் இருக்கும் பிரமன் முதலியவர்களை விட மேம்பட்டவர் –
ருத்ரனுக்கு அந்தர்யாமியாக இருப்பவர் -இரண்டு திரு நாமங்கள் –ஸ்ரீ சத்ய சந்தர் –

————-

429-பிரமாணம் –
பிரமாணமாய் இருப்பவன் -த்யாஜ்ய உத்தேசம் காட்ட -மேலும் 959 -வரும்

நான்கு யுகத்தில் யுகத்தில் உள்ளவர்களுக்கு நன்மை தீமைகளைப் பகுத்து அறிவிப்பவர்-அவனது இந்த சக்தியின்
லவலேசத்தால் பிரத்யஷம் முதலியவைகளும் பிரமாணங்கள் ஆகின்றன –ஸ்ரீ பராசர பட்டர் –

தச்சீலம் அநு வர்த்தந்தே மனுஷ்யா லோக வாசிந -அவனது செய்கைகளையே சான்றாக மக்கள் எடுத்துக் கொண்டனர்

ஞான ரூபியாக பிரமாணமாக இருப்பவர் –ஸ்ரீ சங்கரர் –

சிறந்த வேதங்களைப் பிரமாணமாக யுடையவர் -த்ரிவிக்ரம ரூபத்தில் சிறந்த திருமேனி வளர்ச்சி யுடையவர் –
உயர்ந்த இருவித சுகத்தை யுடையவர் –ஸ்ரீ சத்ய சந்தர் –

——————

430-பீஜமவ்யயம் –
அழியாத வித்தாய் இருப்பவன்
தான் ஓர் உருவே தனி வித்தாய் -வானோர் பெருமான் மா மாயன் -1-5-4-

கலியின் இறுதியில் மீண்டும் மீண்டும் தர்மத்தை முளைக்கச் செய்வதால் அழியாத விதையாக இருப்பவர் –ஸ்ரீ பராசர பட்டர் –

சிருஷ்டியில் முன் போலவே இருந்து கார்யங்களை உண்டாக்கும் காரணமாக இருப்பவர் –ஸ்ரீ சங்கரர் –

வ்யாசாதி உருவத்துடன் அழியாத அறிவை யுண்டாக்குபவர்-ஞானிகளால் அடையப் படுபவர் -அழிவில்லாதவர் –
குறைவற்றவர் –இரு திரு நாமங்கள் – -ஸ்ரீ சத்ய சந்தர் –

—————-

431-அர்த்த –
ப்ராப்யமான பயனாய் இருப்பவன் –
உன்னை அர்த்தித்து வந்தோம்

செம்மையாக அறிந்து தம்மிடம் உறுதியாக பக்தி செய்யும் அதிகாரிக்குத் தாமே பயனாக இருப்பவர் –ஸ்ரீ பராசர பட்டர் –

ஞானவான் மாம் பிரபத்யந்தே வாஸூ தேவம் சர்வம் –ஸ்ரீ கீதை -7-19-

சுக ரூபியாதலால் யாவராலும் விரும்பப் படுபவர்–ஸ்ரீ சங்கரர் –

பக்தர்களால் அறியப் பெறுபவர் -பூரணமான அன்னம் உள்ளவர் -பக்தர்களால் பிரார்த்திக்கப் படுபவர் –ஸ்ரீ சத்ய சந்தர் –

———————

432- அநர்த்த –
வேண்டிய அல்ப பயனாய் இல்லாதவன்
உன்னால் அல்லால் யாவராலும் ஒன்றும் குறை வேண்டேன் போல் அல்லாதார்க்கு

அற்ப பயன்களை விரும்பும் பாக்ய ஹீனர்களால் வேண்டப் படாதவர் –ஸ்ரீ பராசர பட்டர் –

அர்த்தம் ஏக பிங்க–ஸ்ரீ விஷ்ணு தர்மம் -48-47-ஒரு கண்ணைக் கொண்ட குபேரன் பொருளுக்காக மட்டும் என்னை நாடுகிறான்
யே ச சிஷ்டா த்ரயோ பக்தா பல காமா ஹி தே மதா –சாந்தி பர்வம் -342-35-இழந்த பொருள் அடையவும்
புதிதாக பொருளை பெறவும் கைவல்யம் வேண்டும் மூன்று வித பக்தர்கள்

எல்லா வற்றையும் அடைந்து இருப்பதால் தாம் விரும்பத் தக்கது எதுவும் இல்லாதவர் –ஸ்ரீ சங்கரர் –

அயோக்யர்களுக்கு அனர்த்தத்தை -அழிவைக் -கொடுப்பவர் -முக்ய பிராணனை யுடையவர் –
முக்ய பிராணனால் பிரார்த்திக்கப் படுபவர்–ஸ்ரீ சத்ய சந்தர் –

—————-

433-மஹா கோச –
வைத்த மா நிதி -ஒரு நாயகமாய் ஓட வுலகுடன் ஆண்டவர்
இம்மையிலே பிச்சை தாம் கொள்வர் -4-1-1-
வள்ளல் மணி வண்ணன் -ஊனமில் செல்வன் என்கோ- 3-4-7-

வேண்டுபவர்களுக்கு எல்லாம் எக்காலமும் எல்லா வகைகளாலும் தானம் செய்தாலும் அழியாதவைகளான
சங்கநிதி -பத்மநிதி -ரத்னாகரம் -ரோஹண் மலை முதலியவை பொக்கிஷங்களாக இருக்கப்பெற்றவர் –ஸ்ரீ பராசர பட்டர் –
நவ நிதிகள் -சங்கம் பத்மம் மஹா பத்மம் மகரம் கச்சபம் முகுந்தம் குந்தம் நீலம் கர்வசுல்வரம்

அன்னமய பிராணமய மனோமய விஜ்ஞானமய ஆனந்தமய கோசங்களினால் மறைக்கப்படுபவர் –ஸ்ரீ சங்கரர் –

மிக்க சுகத்துடன் விளங்கும் ஸ்ரீ லஷ்மி தேவியால் விரும்பப் பெறுபவர் -பிரம்மாவின் சிறந்த சுகத்திற்கு காரணம் ஆனவர் –
மிகவும் உயர்ந்த பொக்கிஷமாக உள்ளவர் –ஸ்ரீ சத்ய சந்தர் –

—————–

434-மஹா போக –
முட்டில் போகத்தொரு தனி நாயகன் -3-10-3-

செல்வத்தால் பெரும் இன்பங்களையும் தருபவர் –ஸ்ரீ பராசர பட்டர் –

லபதே ச தத் காமாந் மயைவ விஹிதான் ஹிதான் –ஸ்ரீ கீதை -7-22-செல்வத்துக்கு தேவதைகளை
ஆராதிக்குமவர்களுக்கு நானே பலன் அளிக்கிறேன்

சிறந்த ஸூக ரூபமாக இருப்பவர் –ஸ்ரீ சங்கரர் –

நிறைந்த ஆனந்தம் யுடையவர் –ஸ்ரீ சத்ய சந்தர் –

———————-

435-மஹா தந –
அளவற்ற தனம் உடையவன் -செல்வ நாராணன்

மிக்க ஏழைகளுக்கு எண்ணாமல் கொடுக்கத் தக்க அளவற்ற செல்வம் யுடையவர் –ஸ்ரீ பராசர பட்டர் –

மரீசி மித்ரை தஷேன ததைவ அந்யை அநந்தத தர்ம ப்ராப்த ததா ச அந்யை அர்த்த காம ததா பரை–ஸ்ரீ விஷ்ணு புராணம் -1-18-23-
அவன் இடம் இருந்து மரீசி தக்ஷர் போன்றவர் தர்மம் பெற -சிலர் செல்வம் பெற –
சிலர் வேறே அபீஷ்டங்கள் பெற -நிரவதிக ஐஸ்வர்யம் அவனது

போகத்திற்கு சாதனமான செல்வங்களை யுடையவர் –ஸ்ரீ சங்கரர் –

மிகுந்த செல்வத்தை யுடையவர் -தம்மை நன்கு பூஜிப்பவருக்கு உயர்ந்த செல்வத்தை அளிப்பவர் –ஸ்ரீ சத்ய சந்தர் –

————

அநிர்விண்ண ஸ்தவிஷ்டோ பூர்தர்மயூபோ மஹா மக
நஷத்ர நேமிர் நஷ்திரீ ஷம ஷாமஸ் சமீஹன–47

————–

436-அநிர்விண்ண-
சோம்பல் இல்லாதவன்
சோம்பாது இப்பல் உருவை எல்லாம் படர்வித்த வித்தா -பெரிய திரு -18-
பக்தி உழவன் -நான்முகன் திரு -23-

உலகைப் படைத்தும் அவரவர் வேண்டியவற்றை அடிக்கடி கொடுத்தும் கூட உலக விஷயங்களில் பித்துப் பிடித்துத்
தம்மை அணுகாமல் பயனற்றவர்களை மீண்டும் வசப்படுத்த பெரு முயற்சி செய்வதில் சிறிதும் சோர்வு அற்றவர் –
அதனாலன்றோ தொடக்கமும் முடிவும் இல்லாமல் படைத்தலைச் செய்கிறார் –ஸ்ரீ பராசர பட்டர் –

அவ்யுச் சிந்நா ததஸ் த்வேன சர்க ஸ்தித் யந்த ஸம்யமா –ஸ்ரீ விஷ்ணு புராணம் -1-2-26-ஸ்ருஷ்ட்டி ஸ்திதி சம்ஹாரம்
அனைத்தையும் தடை இன்றி செய்தபடியே உள்ளான்

எல்லாவற்றையும் அடைந்து இருப்பவராதலின் துன்பமில்லாதவர் –ஸ்ரீ சங்கரர் –

களைப்பு வேதனை இல்லாதவர் -ஞானம் சுகம் இவற்றில் இருந்து ஒய்வு பெறாதவர் –
அவற்றை எப்போதும் யுடையவர் –ஸ்ரீ சத்ய சந்தர் –

————————————————————–

3-24-ஜ்யோதிர் மண்டலத்துக்கு ஆதாரம் -437-445-திரு நாமங்கள் –

437-ஸ்தவிஷ்ட-
பெரும் தவத்தான் -ஸ்தூல ரூபி -செல்வர் பெரியர்
சிம்சுமார சக்ர ரூபமாய் பகவானே -இருப்பதாக ஸ்ரீ விஷ்ணு புராணம்

நஷத்ர மண்டலமாகிய சிம்சுமார சக்ர ரூபியாக மிக விரிவாக இருப்பார் -இனி துன்பமற்று இருப்பதற்கு உதாரணமாக
உத்தம அனுவாகமான ஸ்வாத் யாய ப்ராஹ்மண்யத்திலும் ஸ்ரீ விஷ்ணு புராணத்திலும் கூறப்பட்ட பிரசித்தமான
சிம்சுமார நஷத்ர மண்டல ரூபம் கூறப்படுகிறது –ஸ்ரீ பராசர பட்டர் –

தாராமயம் பகவத் சிம்சுமாரா க்ருதி ப்ரபோ –ஸ்ரீ விஷ்ணு புராணம் 2-9-1-பெரிய நக்ஷத்ரக் கூட்ட சிம்சுமாரம் போன்றவன்

விராட் ரூபியாக மிக விரிவாக இருப்பவர் –ஸ்ரீ சங்கரர் –

பருத்து இருப்பவர் –ஸ்ரீ சத்ய சந்தர் –

————–

438-பூ –
அனைத்தையும் தாங்குமவன் –
சிம்சுமாரத்தில் வால் பக்கம் த்ருவ நஷத்ரம் ஸ்வரூபி பகவான் -அனைத்துக்கும் ஆதாரமாய் இருப்பவன்
திறம்பாமல் மண காக்கின்றேன் யானே -5-6-5-
நாகமேந்து மண்ணினை –காத்து ஏகமேந்தும் –

த்ருவ நஷத்த்ரத்தில் சேர்ந்து அனைத்தையும் தாங்குபவர் –ஸ்ரீ பராசர பட்டர் –

தஸ்ய ப்ருஸ்சே த்ருவ ஸ்தித –ஸ்ரீ விஷ்ணு புராணம் -4-9-4-சிம்சுமாரம் முதலை வடிவில் உள்ள பிரபஞ்சத்தின்
வால் போன்ற பகுதியில் த்ருவனாக தாங்குகிறான்

அபூ -பிறப்பில்லாதவர் –பூ -பூமி ரூபியாக இருப்பவர் –ஸ்ரீ சங்கரர் –

அபூ -ஆதாரம் அற்றவர் தமக்கோர் இருப்பிடம் இல்லாதவர் -பூ -எல்லா வற்றாலும் நிறைந்தவர் -எல்லோரையும் படைப்பவர் –
எல்லோரும் தம்மை அடையும்படி இருப்பவர் –ஸ்ரீ சத்ய சந்தர் –

—————-

439-தர்ம யூப –
தர்மத்தை தலையாக யுடையவன் –

தர்மத்தைத் தலைமையாக வைத்து இருப்பவர் –ஸ்ரீ பராசர பட்டர் –

தர்மா மூர்த்தானம் ஆஸ்ரித–ஸ்ரீ விஷ்ணு புராணம்-தர்மங்களை அண்டி அவற்றையே திரு மேனியாகக் கொண்டவன்
தச்சிரோ தர்ம -அவனது தலையாக தர்மமே உள்ளது –

யூப ஸ்தம்பத்தில் பசுவைப் போலே தர்மங்கள் தம்மிடம் கட்டப் பெற்றவர் –ஸ்ரீ சங்கரர் –

தர்ம சாதனமான யூப ஸ்தம்பத்தைத் தருபவர் -எல்லாவற்றிற்கும் ஆதாரமாக இருப்பவராய்-பக்தர்கள் மனம்
தம்மிடம் லயித்து இருக்கும்படி செய்பவர் –ஸ்ரீ சத்ய சந்தர் –

—————-

440-மஹா மக –
யஞ்ஞ ஸ்வரூபன்
செய்கின்ற கிதி எல்லாம் யானே செய்கை பயன் உண்பேனும் யானே

தர்மத்தை சரீரமாக யுடையவர் ஆதலின் யாகத்தை அவயவமாக யுடையவர் –ஸ்ரீ பராசர பட்டர் –

யஜ்ஜோ தர்மச்ச விஜ்ஜேய –யஜ்ஜம் என்பதையே தர்மமாக எடுக்க வேண்டும்

தமக்கு அர்ப்பணம் செய்யப் படுவதால் யாகங்களைச் சிறப்பிப்பவர் –ஸ்ரீ சங்கரர் –

மேன்மை கொண்ட யாகங்களைத் தம் விஷயமாக யுடையவர் -துன்பம் அற்றவர் -மிக உயர்ந்தவர் –ஸ்ரீ சத்ய சந்தர் –

—————

441-நஷத்ர நேமி
நஷத்ரங்களை நடத்துபவன் –

நஷத்ரங்கள் எனப்படும் ஜ்யோதிச் சக்கரத்தை நடத்துபவர் –ஸ்ரீ பராசர பட்டர் –

அலாத சக்ரவத் யாந்தி வாத சக்ரேரிதாநி து யஸ்மாத் ஜ்யோதீம்ஷி வஹதி ப்ரவஹஸ்தேந ச ஸ்ம்ருத –ஸ்ரீ விஷ்ணு புராணம் 2-12-28-
நக்ஷத்ர கூட்டங்களைத் தாங்கி சுழலும்படி செய்பவன் என்பதால் ப்ரவஹன் என்பர் –
ஏவம் பிரமன் பிராமயதி சந்த்ர ஆதித்யகாந் க்ரஹான் பிரமந்த மனு தம் யாந்தி நக்ஷத்ராணி ச சக்ரவத் –ஸ்ரீ விஷ்ணு புராணம் -2-9-2-
சூர்யன் சந்திரன் க்ரஹங்களை தன்னுடன் சுழலும்படி செய்கிறான் -நக்ஷத்ரங்களும் அதே பாதையில் அவனைப் பின் தொடர்ந்து செல்லும்

சிம்சுமாரசக்ரம் என்னும் ஜ்யோதிச் சக்கரத்தை நடத்துபவர் –ஸ்ரீ சங்கரர் –

ஷத்ரியர்களைக் காட்டிலும் வேற்பட்ட அந்தணர்களுக்கு ஆதாரமானவர் -சிம்சுமார ரூபத்தில் ஜ்யோதிச் சக்கரத்திற்கு
ஆதாரமாக இருப்பவர் –ஸ்ரீ சத்ய சந்தர் –

—————-

442-நஷதிரீ –
அவைகளுக்கு நஷத்ரங்களுக்கு ஆதாரமாக இருப்பவர் —ஸ்ரீ பராசர பட்டர் –

நாராயணோ நயன் தாம்நா தஸ்யா தாரஸ் ஸ்வயம் ஹ்ருதி –ஸ்ரீ விஷ்ணு புராணம் -4-9-4-

நஷத்ரங்களுக்குத் தலைவனான சந்திரனாக இருப்பவர் –ஸ்ரீ சங்கரர் –

நஷத்ரங்களை நியமிப்பவராக இருப்பவர் -பரசுராம ரூபத்தில் ஷத்ரியர்களைக் கொன்றதால்
ஷத்ரியர்களுடன் சேராது இருப்பவர்–ஸ்ரீ சத்ய சந்தர் –

————

443-ஷம –
பொறுமை யுடையவன் -வஹிப்பவன்
ஆதிசேஷன் பூமியை தாங்க
மற்று எல்லாவற்றையும் இவனே தாங்குகிறான்

இப்படி எல்லா உலகங்களின் பாரங்களையும் எளிதில் சுமப்பவர் –ஸ்ரீ பராசர பட்டர் –

யஸ்மாத் ஜ்யோதீம்ஷி வஹதி ப்ரவஹஸ் தேந ச ஸ்ம்ருத -ஸ்ரீ விஷ்ணு புராணம் -2-12-28-நக்ஷத்ரங்களைத் தங்குவதால் ப்ரவஹன்

எல்லாச் செயல்களிலும் திறமையுள்ளவர் -பொறுமை யுள்ளவர் என்றுமாம் –ஸ்ரீ சங்கரர் –

அழியாப் பொருள்களின் அழிவைத் தவிர்ப்பவர் -துஷ்டர்களை நரகத்தில் கட்டுப்படுத்துபவர் –
எல்லாக் காரியங்களையும் செய்வதில் சமர்த்தர் –ஸ்ரீ சத்ய சந்தர் –

—————-

444-ஷாம
குறைவாளன்-
அவாந்தர பிரளயம் நஷத்ரங்கள் இல்லாமல் பகவான் ஒருவனே

அவாந்தர பிரளயத்தில் நான்கு நட்சத்திரங்களோடு இளைத்து இருப்பவர் –ஸ்ரீ பராசர பட்டர் –

தாரகா சிசுமாரஸ்ய ந அஸ்தமேதி சதுஷ்டயம் –ஸ்ரீ விஷ்ணு புராணம் -2-9-5-சிம்சுமாரத்தில் நான்கு நக்ஷத்திரங்கள்
மட்டும் பிரளய காலத்தில் மறைவது இல்லை
யாவன் மாத்ரோ பிரதேச து மைத்ரேய அவஸ்திதோ த்ருவ ஷயம் ஆயாந்தி தாவத் து பூமே
ஆபூத சம்பலவே -ஸ்ரீ விஷ்ணு புராணம் -2-8-97-பிரளயத்தில் துருவ நக்ஷத்ரம் உள்ள பிரதேசம் முடிய உள்ள அனைத்தும் அழிய –
துருவன் மட்டும் தனது இடத்தில் ஒளி விட்டு இருந்ததே

எல்லாம் அழிந்த போது தாம் மட்டும் தனித்து இருப்பவர் –ஸ்ரீ சங்கரர் –

ஸ்ரீ வராஹ ரூபத்தால் பூமியைத் தாங்கியவர் -வாமன ரூபத்தில் பூமியை யாசித்து பெற்றவர் –ஸ்ரீ சத்ய சந்தர் –

—————

445-சமீஹன
பிறரை இயங்கச் செய்பவன்
தெய்வங்களாக நிறுத்தினான் அத் தேவ நாயகன் தானே -5-2-8-

படைக்கும் காலத்தில் எல்லாரையும் அவரவர் அதிகாரங்களில் செயல்படச் செய்பவர் –ஸ்ரீ பராசர பட்டர் –

த்வாம் பூதாநி உப பர்யாவர் தந்தே –தைத்ரியம் -அனைத்து உயிர்களும் அவனையே சுற்றி வந்தன
பிருதிவீம் சாந்தரிக்ஷம் ச துவம் ச புருஷோத்தம விசேஷ்டயதி பூதாநி கிரீடந் நிவ ஜனார்த்தன -உத்யோக -67-10-

படைப்பு முதலிய செயல்களைச் செய்வதற்காக நன்றாகச் செயல்படுபவர் –ஸ்ரீ சங்கரர் –

பகவத் பூஜை முதலிய நற்செயலை புரிவோரை ஸ்ரீ வைகுண்டத்திற்கு அழைத்துச் செல்பவர் –
எல்லாவிடத்திலும் சமமான ரூபம் உள்ளவராய் எல்லோரையும் செயல்கள் புரியும்படி செய்பவர்–ஸ்ரீ சத்ய சந்தர் –

—————————————————

யஜ்ஞ இஜ்யோ மஹேஜ்யஸ்ஸ க்ரதுஸ் சத்ரம் சதாம்கதி
சர்வ தர்சீ நிவ்ருத்தாத்மா சர்வஜ்ஞோ ஜ்ஞானமுத்தமம் -48-

———–

3-25-யஞ்ஞ ஸ்வரூப திரு நாமங்கள் -446-450-

446-
யஞ்ஞ -யாகமாய் உள்ளவன்
வேதமும் வேள்வியும் ஆதியும் ஆனான் -பெரிய திருமொழி -9-4-9-
வேள்வியாய் தக்கணையாய் தானுமானான் -பெரிய திருமொழி -4-9-5
பண்டை நான் மறையும் வேள்வியும் தானே நின்ற எம்பெருமான் -பெரிய திருமொழி -7-10-9
மேலே 971 -யஞ்ஞ – 682- மகா யஞ்ஞ வரும்

யஜ்ஞம் அதன் சாதனம் அதன் பலன் எல்லாம் தாமேயாய் இருப்பவர் –ஸ்ரீ பராசர பட்டர் –

த்ருவோ யத்ர ப்ரதிஷ்டித ஏதத் விஷ்ணுபதம் திவ்யம் த்ருதீயம் வ்யோம்நி பாஸ்வரம் –ஸ்ரீ விஷ்ணு புராணம் -2-8-98-
இஜ்யா பலஸ்ய பூரேஷா இஜ்யா சத்ர ப்ரதிஷ்டிதா
ததச்ச ஆஜ்யா ஹுதி த்வாரா போஷி தாஸ்தே ஹவிர்புஜ –ஸ்ரீ விஷ்ணு புராணம் 4-8-106–
யஜ்ஜோ வை விஷ்ணு

யஜ்ஞ ஸ்வரூபியாக இருப்பவர் –ஸ்ரீ சங்கரர் –

அனைத்து யஜ்ஞங்களிலும் பலன் பெறுபவர் ஸ்ரீ கிருஷ்ண ரூபத்தில் தம்மைக் குறித்துத் தாமே யஜிப்பவர்-
ஸ்ரீ ராமாவதாரத்தில் அஹல்யையை கௌதமரோடு சேர்ப்பித்தவர் –ஸ்ரீ சத்ய சந்தர் –

————–

447-இஜ்ய-
யாகத்தால் ஆராதிக்கப் படுபவன் -அந்தர்யாமியாய் இவனே
இவன் ஒருவனே பூஜிக்கத் தக்கவன் என்பதால் இஜ்ய
ஐந்தும் ஐந்துமாய் ஆய மாயனே -தேவ யஞ்ஞம் முதலான ஐந்து ஆஹூதிகள் –
கார்ஹ பத்யம் முதலான பஞ்ச அக்நிகளையும்-சரீரமாக உடையவன் –

காம்ய பலன்களைக் கருதுபவர்களால் இந்த்ரன் முதலிய தேவதா ரூபியாக ஆராதிக்கப் படுபவர் –ஸ்ரீ பராசர பட்டர் –

யே யஜந்தி பித்ருன் தேவன் ப்ராஹ்மணான் ச ஹுதாச நாந் சர்வ பூத அந்தராத்மாநம்
விஷ்ணு மேவ யஜந்தி தே –சாந்தி பர்வம் -346-29-
யே அபயந்ய தேவதா பக்தா –ஸ்ரீ கீதை -9-23-
வர்ணாஸ்ரம ஆசாரவதா –ஸ்ரீ விஷ்ணு புராணம் 3-8-9-

யஜ்ஞங்களினால் ஆராதிக்கப் பெறுபவர் –ஸ்ரீ சங்கரர் –

பூஜையை யுடையவர் –ஸ்ரீ சத்ய சந்தர் –

—————

448- மஹேஜ்ய –
சிறந்த பூஜையை ஏற்பவன்
இவனே பரம புருஷன்

மற்றப் பலன்களை விரும்பாதவர்கள் தம்மையே ஆராதிப்பதைச் சிறந்த ஆராதனமாக யுடையவர் –ஸ்ரீ பராசர பட்டர் –

யே து சர்வாணி கர்மாணி –ஸ்ரீ கீதை -12 –6-
மயி சர்வாணி கர்மாணி –ஸ்ரீ கீதை -3-30–

தம்மைக் குறித்துச் செய்யும் யாகமே மோஷத்தைத் தருவதால் அந்த யாகமே சிறந்ததாக இருப்பவர் –ஸ்ரீ சங்கரர் –

ஸ்ரீ சீதா பிராட்டிக்காக வில்லில் நாண் ஏற்றியவர் -உயர்ந்த யஜ்ஞங்களில் ஆராதிக்கப் பெறுபவர் –
ஸ்ரீ தேவி பூமி தேவி சமேதன்–ஸ்ரீ சத்ய சந்தர் –

——————

447-க்ரது-
எல்லா கர்மங்களாலும் ஆராதிக்கப் படுபவன் –
ஆறும் ஆறும் ஆறுமாய் ஆய மாயன் –

பஞ்ச மகா யஜ்ஞங்கள் -ஔபாசனம் முதலிய ஏழு பாக யஜ்ஞங்கள் -ச்ரௌத்ராக்னி ஹோத்ரம் முதலிய ஏழு ஹவிர் யஜ்ஞங்கள் –
யஜ்ஞபதத்தால் கூறப்படும் அக்னிஷ்டோமம் முதலிய ஏழு சோம யாகங்கள் இவற்றால் ஆராதிக்கப் படுபவர் –ஸ்ரீ பராசர பட்டர் –

ப்ரஹ்ம யஜ்ஜம் -வேதம் ஓதுதல்/ பித்ரு யஜ்ஜம்-தேவ ரிஷிகள் பித்ரு தர்ப்பணம் /தேவ யஜ்ஜம்-தேவர்களைக் குறித்து
பூத யஜ்ஜம்-பிராணிகளுக்கு அளிக்கப்படும் அரிசிகள் /மனுஷ்ய யஜ்ஜம்-அதிதிகளுக்கு அளித்தல்

யூபஸ்தம்பம் நாட்டிச் செய்யப்படும் யஜ்ஞமாக இருப்பவர் –ஸ்ரீ சங்கரர் –

படைத்தல் முதலிய செயல்களைச் செய்பவர் -தன்மையாக யுடையவர் -ஞானரூபியானவர்–ஸ்ரீ சத்ய சந்தர் –

—————–

448-சத்ரம் –
ஸ்த்ர ரூபியாய் ஸத்ர யாகம்
அந்தணர் தம் ஓமமாகி ஊழி யாகி -பெரிய திரு மொழி -8-6-5-
நான்மறையாய் தக்கணையாய் தானுமானான் -பெரியாழ்வார் திரு -4-9-8-

சத்ரம் என்னும் யாகத்தால் ஆராதிக்கப் படுபவர்
பல யஜமானர்களால் நீண்ட காலம் செய்யப்படும் யாகம் சத்ரம் –ஸ்ரீ பராசர பட்டர் –

சாதுக்களைத் திரட்டிச் செய்யும் சத்ரயாகமாக இருப்பவர் -சாதுக்களைக் காப்பவர் -என்றுமாம் –ஸ்ரீ சங்கரர் –

நல்லோர்களைக் காப்பவர் -நல்லோர்களை மகிழ்விப்பவர் –ஸ்ரீ சத்ய சந்தர் –

—————————————————————

3-26 நிவ்ருத்தி தர்ம ப்ரவர்தக திரு நாமங்கள் -451-457-

451- சதாம் கதி –
சத்துக்களுக்கு அவனே கதி
உன்னால் அல்லால் யாவராலும் ஒன்றும் குறை வேண்டேன் -5-8-3-
மேவு நான்மறை வாணர் ஐவகை கேள்வி ஆறு அங்கம் வல்லவர் தொழும் தேவ தேவ பிரான் -பெரிய திருமொழி -6-10-9-

இந்த்ரியங்களை வென்றவர்களான சாதுக்கள் சேருமிடமாக இருப்பவர் –
இதுவரை பிரவ்ருத்தி தர்ம நிஷ்டர்களுடைய நிலை கூறப்பட்டது -இனி சாதுக்கள் நிலை -ஸ்ரீ பராசர பட்டர் –

நிர் தூத தோஷ பங்கா நாம் யதீ நாம் சம்யதாத்மநாம் ஸ்தானம் தத் பரமம் விப்ர புண்ய பரிஷயே –ஸ்ரீ விஷ்ணு புராணம் 2-8-99-

மோஷம் விரும்புவகளுக்கு அடையும் இடமாக இருப்பவர் -ஸ்ரீ சங்கரர் –

நல்லோர்களால் அடையைப் பெறுபவர் -நஷத்ரங்களை நடத்துபவர் -ஸ்ரீ சத்ய சந்தர் –

————–

452-சர்வ தர்சி

இருவகை பிரவ்ருத்தி நிவ்ருத்தி தர்மங்களைக் கண் கூடாகக் காண்பவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

எல்லா பிராணிகளின் நல்வினை தீவினைகளை இயற்கையாக அறிபவர் –ஸ்ரீ சங்கரர் –

தர்சம் முதலிய யஜ்ஞ விசேஷங்களை யுடையவர் -எல்லாவற்றையும் பார்ப்பவர் -ஸ்ரீ சத்ய சந்தர் –

—————-

453-நிவ்ருத்தாத்மா
விஷயங்களைத் துரந்த மனம் உடையவன்
நர நாராயணராக அவதரித்தவன் -திருமந்தரம் உபதேசித்து அருள
நந்தா விளக்கே அளத்தற்கு அரியாய் நர நாராயணனே -பெரிய திரு -3-8-1-
எங்கானும் ஈதொப்பதோர் மாயம் உண்டோ நர நாரணனாய் சிங்காமை விரித்தவன் எம்பெருமான் -பெரிய திரு மொழி -10-6-1-
நாமம் ஆயிரம் ஏத்த நின்ற நாராயணா நரனே -நாச் திரு -2-1-

நிவ்ருத்தி தர்மத்தை உபதேசிப்பதற்காகவும் சிறந்த வைராக்யத்தை அனுஷ்டானத்தினால் வெளிப்படுத்துவதற்காகவும்
நர நாராயண அவதாரம் எடுத்து சப்தாதி விஷயங்களை மனத்தினால் துறந்தவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

அந்தர் நிவிஷ்ட பாவம் ச -த்யானத்தில் மனசை அடக்கி
ஆத்ம த்யான பராயணாய -ஆத்ம த்யானத்தில் ஊக்கம் கொண்டு
ஹ்ருத் பத்மார்பித மாநசம் –ஹ்ருதய கமலத்தில் மனதை நிலை நிறுத்தி

இயற்கையாகவே எல்லாப் பற்றுகளையும் விட்ட ஆத்மாவாகவே இருப்பவர் -சம்சாரத்தில் இருந்து விடுபட்ட
ஆத்மா என்றுமாம் -விமுக்தாத்மா -என்ற பாடம் –ஸ்ரீ சங்கரர் –

ஜீவாத்மாக்களை முக்தி அடையும்படி அனுக்ரஹிப்பவர் -விசேஷமாக முக்தர்களுக்கு தலைவராக இருப்பவர் –
விமுக்தாத்மா என்ற பாடம்-ஸ்ரீ சத்ய சந்தர் –

—————–

454-சர்வஞ்ஞ-
எல்லாமாகத் தன்னை அறிந்தவன்
கலைப் பல் ஞானத்து என் கண்ணன் -2-2-10-
நிறைந்த ஞான மூர்த்தி
மீண்டும் 821 வரும்

தம்மை சர்வ அந்தர்யாமி என்று அறிந்து இருப்பவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

யுஞ்ஞானாம் ச ஸ்வமாத்மானம் பரஸ்மின் அவ்யயே பதே –

எல்லாமாகவும் ஞானமாகவும் இருப்பவர் –ஸ்ரீ சங்கரர் –

எல்லோரையும் அறிபவர் -எல்லாம் அறிந்த ஜீவர்களை யுண்டாக்கியவர்–ஸ்ரீ சத்ய சந்தர் –

—————

455-ஜ்ஞாநமுத்தமம்-
மேலான ஞானமாய் இருப்பவன் -திரு மந்த்ரத்தை உபதேசித்து –
இவனே பகவச் சாஸ்திரம் ஸ்ரீ பாஞ்சராத்ரத்தை வெளியிட்டான்
மிக்க ஞான மூர்த்தியாய் வேத விளக்கு -4-7-10-

எல்லாவற்றிலும் சிறந்த ஸ்ரீ வைஷ்ணவ தர்மத்தை யாவரும் தெரிந்து கொள்ளக் காரணமாக இருப்பவர் –ஸ்ரீ பராசர பட்டர் –

படந்தம் அநிசம் சாஸ்திரம் பாஞ்சராத்ர புரஸ்சரம் –

நித்யமும் அளவுபடாததும் எல்லாப் பயன்களையும் சாதிப்பதுமாகிய சிறந்த ஞானமாக இருப்பவர் –ஸ்ரீ சங்கரர் –

தன்னைப் பற்றிய அறிவால் பெருமையுடன் மிக மகிழ்பவர் – -ஸ்ரீ சத்ய சந்தர் –

————–

ஸூவ்ரதஸ் ஸூ முகஸ் ஸூ ஷ்மஸ் ஸூ கோஷஸ் ஸூ கதஸ் ஸூ ஹ்ருத்
மநோஹரோ ஜிதக்ரோதோ வீர பாஹூர் விதாரண –49

————–

456-ஸூ வ்ரத-
தர்மத்தை விடாமல் அனுஷ்டிப்பவன்
பூரணன் என்றாலும் அவதாரங்களில் தர்மம் விடாமல் –
மேலும் -824 வரும் -ரஷணத்தில் ஊற்றம்

தம்மைப் பார்த்து மற்றவர்கள் பயன் பெறுவதற்காகவே தாம் தர்மங்களை விடாமல் பற்றுபவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

ந மே பார்த்த அஸ்த கர்த்தவ்யம் –ஸ்ரீ கீதை -3-22-தனக்கு கர்மம் இல்லை என்றாலும்
மற்றவர்களுக்காக கர்மம் செய்ய விரதம் பூண்டுள்ளான்
ஏக பாதேந திஷ்டந்தம் ஆஹரந்தம் ச மாருதம் பக்ஷ மாச உபவாசம்ஸ் ச திசாந்தம் அநு சிந்தயேத் —
அவன் இவ்வாறு கர்மம் செய்வதாக த்யானம்

அடியவர்களைக் காக்கும் சிறந்த விரதம் யுடையவர் –ஸ்ரீ சங்கரர் –

உலகைக் காத்தல் முதலிய மங்களமான விரதத்தை யுடையவர் –
தம்மைக் குறித்த மங்களகரமான வ்ரதமுடையவர்-ஸ்ரீ சத்ய சந்தர் –

——————-

457-ஸூ முக –
மலர்ந்த திரு முகம் உடையவன்
எங்களை மையல் ஏற்றி மயக்க உன் முகம் மாய மந்த்ரம் தான் கொலோ -நாச் திரு -2-4-
செய்ய வாய் ஐயோ என்னைச் சிந்தை கவர்ந்ததுவே
அப்பெரியவாய கண்கள் என்னைப் பேதைமை செய்தனவே
செய்ய தாமரைக் கண்ணினாய்
காண் தகு தாமரைக் கண்ணன் கள்வன் -8-2-2-

ஜபம் முதலியவற்றால் யுண்டாகும் வருத்தம் இல்லாத மலர்ந்த முகமுடையவர் –
457-463- நர நாராயண வ்ருத்தாந்தம் –கடல் கடைந்த சரித்ரம் என்கிற இரண்டு நிர்வாகம் -ஸ்ரீ பராசர பட்டர் –

ஓம் கார லக்ஷணம் மந்த்ரம் ஜபந் ஆந்திர லஷிதம்
கிருஷ்ணாய கமல தல அமல நேத்ராய

ஆனந்தமும் அமுதமும் நிறைந்ததாய் சந்தரன் போலே பிரகாசிப்பதாய் கையிலே வைத்து இருக்கும்
கலசம் போன்றதாயத் திகழ்ந்தவர் -அழகிய திரு முகம் –ஸ்ரீ சங்கரர் –

அழகிய முகம் உள்ளவர் -தசரத ராமனாக வன வாசத்தில் மகிழ்ந்தவர் -எல்லா வித்யைகளையும் அளித்து மகிழ்பவர் –
மங்களகரமான முகம் யுடையவர் -ஸ்ரீ சத்ய சந்தர் –

——————————————————————-

3-27-அலை கடல் கடைந்து அமுதம் கொண்டவன் -458-470-திரு நாமங்கள்

458-ஸூஷ்ம –
நுண்ணிதான ஸ்வரூபம் -அணோர் அணீயான்
எண்ணில் நுண் பொருள் தானே -10-8-8-

ஸ்வயம் பிரயோஜனமாகச் செய்யப்படும் தியானத்தால் மட்டும் புலப்படும் முக நுட்பமான ஸ்வரூபம் யுடையவர் –
அசுரர்கள் அறியா வண்ணம் மறைத்த எண்ணத்தை யுடையவர் –ஸ்ரீ பராசர பட்டர் –

சர்வே ப்ரஹ்ம பராயணா

சப்தம் முதலிய ஸ்தூல காரணங்கள் போல் அல்லாமல் -ஆகாசம் முதலிய வற்றிற்கு காரணமானவை –
அப்படி அல்லாதவர் —சூஷ்ம காரணமாக இருப்பவர் –ஸ்ரீ சங்கரர் –

ஸூஷ்ம ரூபம் யுடையவர் -மங்களமும் மேன்மையும் கொண்ட பூமி தேவியை யுடையவர் -ஸ்ரீ சத்ய சந்தர் –

————–

459-ஸூகோஷ –
வேதத்தின் குரல் –வேதங்களாலும் உபநிஷத்களாலும் கோஷிக்கப் படுபவன்
நாரணன் முழு ஏழ் உலகுக்கும் நாதன் வேத மயன் -2-4-2
அம்ருத மதனம் -செய்து அருளியதால் தேவர்களால் கோஷிக்கப் படுபவன்

அழகிய உபநிஷத் முதலிய வேதங்களினால் முழங்கப் பெறுபவர் –
தேவாசுரர்களின் கோஷத்தோடு கடைகிற கோஷமும் கூடி அற்புதமான கோஷமுடையவர்-ஸ்ரீ பராசர பட்டர் –

சோபனமான வேத கோஷத்தை யுடையவர் -மேகம் போன்ற குரலுடையவர் –ஸ்ரீ சங்கரர் –

மங்கள வேத ரூபமான பாஞ்சஜன்யம் என்ற சங்கின் ஒலியுள்ளவர்-ஸ்ரீ சத்ய சந்தர் –

—————-

460-ஸூகத
மேலான இன்ப பயன் அளிப்பவன் -அம்ர்தம் தேவர்களுக்கு தந்து பெண் அமுதம் கொண்ட பிரான்
இன்பம் பயக்க இனிதுடன் வீற்று இருந்து இவ் ஏழ் உலகை ஆள்கின்ற எங்கள் பிரான் -7-10-1-

சதாசாரங்களையும் தானங்களையும் அனுஷ்டிப்பவர்களுக்கு பரம சுகமாகிய பலம் தருபவர் –
தேவர்களுக்கு அமுதம் அளித்து சுகத்தைக் கொடுப்பவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

நல்லோர்களுக்கு சுகத்தைக் கொடுப்பவர் -அல்லது தீயவர்களுக்கு சுகத்தைக் கெடுப்பவர்–ஸ்ரீ சங்கரர் –

முக்தி சுகத்தை அளிப்பவர் -அல்லது -அயோக்யரின் சுகத்தை அழிப்பவர்-ஸ்ரீ சத்ய சந்தர் –

—————-

461- ஸூஹ்ருத் –
சிறந்த நண்பன் -என் துணைவன் -திரு நெடும் -27
தாள் அடைந்தார்க்கு எல்லாம் தானே வழித் துணையாம்

தமக்கு உபகாரம் செய்யாதவனுக்கும் இவனுக்கு நான் என்ன செய்வேன் என்று நன்மையே கருதும் சிறந்த மனமுள்ளவர் –
அதற்குக் காரணமான அன்பை யுடையவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

கைம்மாறு எதிர்பாராமல் உபகாரம் செய்பவர் –ஸ்ரீ சங்கரர் –

மங்களமான இதயம் உள்ளவர் -பக்தர்கள் செய்யும் மங்களமான கர்மங்களின் பயன்களைப் பெற்றுக் கொள்பவர் –
பயன் எதிர்பாராமல் உதவுபவர் -ஸ்ரீ சத்ய சந்தர் –

—————-

462-மநோ ஹர –
மனத்தைக் கவர்பவன் -மையல் செய்து என்னை மனம் கவர்ந்தானே -7-2-6

இந்த இயற்கையான அன்பினால் அவர்களின் மனங்களைக் கவர்பவர் –
அசுரர்களின் மனங்களை மயக்கிய உருவமுடையவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

எல்லையற்ற ஆனந்த ஸ்வரூபியாகையால் மனங்களைக் கவர்பவர் –ஸ்ரீ சங்கரர் –

பக்தர்களுடைய மனங்களினால் கவரப் படுகிறவர்-ஸ்ரீ சத்ய சந்தர் –

—————

463-ஜிதக்ரோத –
கோபத்தை வென்றவன்

அவர்களுடைய க்ரோதங்கள் முதலியவற்றைப் போக்குபவர் -இவருடைய அழகிய உருவைக் கண்டு மயங்கிக் குழம்பும்படி அசுரர்களைச்
செய்து அசுரர்களுக்கு தேவர்கள் இடமிருந்த க்ரோதத்தை வென்றவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

கோபத்தை வென்றவர் -கோபத்தினால் அல்லாமல் வேத மரியாதையைக் காப்பதற்கே அசுரர்களை அழிப்பவர் –ஸ்ரீ சங்கரர் –

கோபத்தை வென்றவர் -கோபத்தின் உருவான அசுரர்களை அழித்தவர்-ஸ்ரீ சத்ய சந்தர் –

——————

457-463-நாராயண அவதாரம் பற்றி பாஷ்யம் இட்டு மீண்டும் அம்ருத மதனம் விஷயமாக வியாக்யானம்

457-ஸூமுக
கையில் உள்ள அம்ருதம் போல் முகமும் அமுத பானம் போலே களிப்பூட்டுவது மதிமுக மடந்தை போன்றது
புருவம் கரும் குழல் நெற்றி பொலிந்த முகில் கன்று போலே உருவம் அழகிய நம்பி -பெரியாழ்வார் -2-7-3-

458-ஸூஷ்ம
நுண்ணியவன் -அசுரர்களால் இவன் எண்ணத்தை கண்டு கொள்ள முடிய வில்லை

457-ஸூகோஷ
தேவர்கள் அசுரர்கள் உரக்க போற்றி

460-ஸூகத
அம்ர்தம் தேவர்களுக்கு கொடுத்து இன்பம் அளித்தவன்
அஞ்சுவை அமுதம் அன்று அளித்தான் -பெரிய துருமொழி -2-3-3-

461-ஸூஹ்ருத்
நண்பன் -அசுரர்களுக்கு அமிர்தம் அளிக்காததும் ஹித பரமான செயல்

462- மநோஹர –
வ்யாமோஹம் உண்டாக்கும் கண் கவரும் உருவம்
நீல மேனியும் நான்கு தோளும் என் நெஞ்சம் நிறைந்தனவே -5-5-6

463-ஜிதக்ரோத –
கோபம் மறக்கப் பண்ணுமவன்
அசுரர்கள் இவன் திரு முகம் கண்டு கோபம் மறந்து
அடியார் அல்லல் தீர்த்தவன்

—————

464-வீர பாஹூ
சேயிரு விசும்பும் திங்களும் சுடரும் தேவரும் தாமுடன் திசைப்ப
ஆயிரம் தோளால் அலை கடல் கடைந்தான் அரங்க மா நகர் அமர்ந்தானே -பெரிய திருமொழி -5-7-4-
மல்லாண்ட திண் தோள் மணி வண்ணன்
ஈரிரண்டு மால் வரைத் தோள்

வளை தோள்வளை மாலை முதலியவற்றால் அலங்கரிக்கப் பட்டுக் கடல் கடையும் காலத்தில் நான் நான் என்று
ஒன்றன்பின் ஒன்றாக முன்வரும் ஆயிரம் தோள்களை யுடையவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

தேவர்களின் விரோதிகளை அழித்து வேத மரியாதையை நிலை நாட்டும் பராக்ரமுடைய கைகளை யுடையவர் –ஸ்ரீ சங்கரர் –

வீரர்களான ஷத்ரியர்கள் தோன்றிய தோள்களை யுடையவர் -ஸ்ரீ சத்ய சந்தர் –

—————-

465-விதாரண
வெட்டுபவன் -ராஹூவை திவ்ய ஆயுதத்தால்
அடியார்கள் வினைத் தொடரை தன்னருள் என்னும் ஒள் வாள் உருவி வெட்டிக் களைபவன்
நின்று அசுரரைத் தகர்க்கும் தோளும் நான்கு உடையவன் -10-1-1-
செம்பொன் ஆகத்து அவுணன் உடல் கீண்டவன் -9-10-6-

திவ்ய ஆயுதங்களால் ராகு முதலியவர்களைச் சிதைத்தவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

சம க்ரோக்ர பய விதாரணாய –அடியார்களின் பயன்களை ஒழிப்பவன்

அதர்மம் புரிபவர்களை அழிப்பவர் –ஸ்ரீ சங்கரர் –

விசேஷமாக பத்னிகளான கோபிகைகளுக்கு சுகத்தை தருபவர் -ஸ்ரீ நரசிம்ஹ திருவவதாரத்தில் இரணியனைப் பிளந்தவர் –
ஞானிகளான வித்வான்களால் அடையப் பெறுபவர் -எல்லாம் அறிபவர் -ஜராசந்தன் முதலியவர்களுடன் போர் புரிந்தவர் –
அரணிக் கட்டையில் அக்னிரூபத்தில் இருப்பவர் -ஞானத்தால் மகிழ்பவர் –
மனைவி அற்ற சன்யாசிகளுக்கு ஸூகம் தருபவர்-ஸ்ரீ சத்ய சந்தர் –

————-

ஸ்வாபன ஸ்வ வஸோ வியாபி நைகாத்மா நைக கர்மக்ருத்
வத்சரோ வத்சலோ வத்சீ ரத்ன கர்ப்போ தனேஸ்வர –50-

—————

466-ஸ்வாபன-
தூங்க வைப்பவன்
என்னை யுன் செய்கை நைவிக்கும் முதுவைய முதல்வா -5-10-2-
அசுரரை வீடும் வண்ணங்களே செய்து போன வித்தகன் -5-10-1-

மற்றவர்களை அழகிய புன்சிரிப்பு இனிய நோக்கு புருவ நெறிப்பு இவற்றால் வசீகரித்து மயக்குபவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

மத விஹ்வல நேத்ரம் ச தேவம் உத்பிந்ந யவ்வனம்

பிராணிகளை மாயையினால் ஆத்ம ஜ்ஞானம் இன்றித் தூங்கச் செய்பவர் –ஸ்ரீ சங்கரர் –

கனவு நிலையைத் தருபவர் -அல்லது தூங்கும் படி செய்பவர் -தண்ணீரை நன்கு நடத்துபவர் -ஸ்ரீ சத்ய சந்தர் –

————–

467-ஸ்வ வாச
எப்போதும் தான் தன் வசத்தில் இருப்பவன்
சர்வேஸ்வரன்

அவர்கள் மயங்கிய போது தம் அடியார்களுடன் விருப்பப்படி கூடி மகிழ்ந்தவர் –ஸ்ரீ பராசர பட்டர் –

உலகைப் படைத்தல் காத்தல் அழித்தல் இவற்றில் ஸ்வ தந்தரமாக இருப்பவர் —ஸ்ரீ சங்கரர்-

செல்வத்தைத் தம் வசத்தில் கொண்டவர் -பிரளய காலத்தில் தம் வயிற்றில் வைத்து சுகத்தை தருபவர்–ஸ்ரீ சத்ய சந்தர் –

—————–

468-வ்யாபீ –
எங்கும் பரந்து இருப்பவன்
மந்தர மலை வாசுகி தேவர்கள் அசுரர்கள் -வியாபித்து
பரந்த தண் பரவையுள் நீர் தோறும் பரந்துளன் -1-1-10-

தேவர் அசுரர் மந்தரமலை வாசுகி நாகம் -போன்றவர்கள் இடம் வியாபித்து கடல் கடைய வலிமை கொடுத்தவர்–ஸ்ரீ பராசர பட்டர் –

ஆகாசத்தைப் போலே எங்கும் பரந்து -காரணமாக -எல்லா வற்றிலும் பரவி இருப்பவர் —ஸ்ரீ சங்கரர்-

எங்கும் எல்லா வற்றிலும் பரவி இருப்பவர் –ஸ்ரீ சத்ய சந்தர் –

——————

469-நைகாத்மா –
அநேக உருவங்களில் இருப்பவன்
மலையை தாங்க ஆமை -மலையை அழுத்த விஷ்ணு
மோகினி
ஆயிரம் தோளால் அலைகடல் கடைந்தான்
பெண்ணுருவாகி அஞ்சுவை அமுதம் அன்று அளித்தான்

அப்போது விஷ்ணு ஆமை மோஹிநீ முதலிய பல உருக் கொண்டவர் –ஸ்ரீ பராசர பட்டர் –

சிருஷ்டி முதலிய வற்றிற்காக பல சக்திகள் பல உருவங்கள் கொண்டவர் —ஸ்ரீ சங்கரர்-

கணக்கற்ற உருவம் யுடையவர் -கணக்கற்ற ஜீவர்களுக்குத் தலைவர் –ஸ்ரீ சத்ய சந்தர் –

—————–

470-நைகர்ம க்ருத் –
அநேகம் செயல்களை செய்தவன் –
கூடி நீரைக் கடைந்த வாறும் அமுதம் தேவர் உண்ண அசுரரை வீடும் வண்ணங்களே செய்து போன வித்தகமும்
மலையாமை மேல் வைத்து வாசுகியை சுற்றி தலையாமை தான் ஒரு கைப் பற்றி
அலையாமல் பெறக் கடைந்த பெருமான் -நான்முகன் திரு -49
அன்று கடல் கடைந்தான் -மூன்றாம் திரு -46-

கடைவது-மலையைத் தாங்குவது -பகைவரை அழிப்பது -அமுதம் அளிப்பது-முதலிய பல செயல்களைச் செய்தவர் –ஸ்ரீ பராசர பட்டர் –

உலகைப் படைத்தல் -காத்தல் -அழித்தல்-முதலிய பல செயல்களைச் செய்பவர் —ஸ்ரீ சங்கரர்-

படைத்தல் -காத்தல் முதலிய பல செயல்களைச் செய்பவர் –ஸ்ரீ சத்ய சந்தர் –

———————————————————–

மாண்டவரையும் உயிர்ப்பிக்கும் ஸ்ரீ இராமன் –

392-பரம ஸ்பஷ்ட -தமது மேன்மையை வெளிப்படை யாக்கினவர் –
393-துஷ்ட -தன் மேன்மையை விட தயரதனுக்கு மகனாகப் பிறந்த எளிமையில் திருப்தி கொண்டவர் –
394-புஷ்ட -நற்பண்புகளின் நிறைவான இருப்பிடமானவர் –
395-சூபேஷண- மங்களத்தை நல்கும் பார்வை உடையவர் —
எவன் இராமனைப் பார்க்க வில்லையோ -எவனை இராமன் பார்க்க வில்லையோ அவர் இருவருமே இகழத் தக்கோர் –
396-ராம -தன் குணங்களாலும் திருமேனி அழகாலும் அனைவரையும் மகிழ்விப்பவர் –
397-விராம -தான் செயல் படும் போது வரம் கொடுத்த தேவர்கள் -வரம் பெற்ற இராவணன் -கொடுக்கப் பட்ட சாகா வரம்
ஆகிய அனைத்தும் ஓயுந்து போகும்படி செய்தவர்
398-விரத -அரசில் பற்று இல்லாதவன்
மார்க -பரத்வாஜர் முதலான முனிவர்களால் தேடப்படுபவன்
விராதோமார்க–ஒரே நாமமான போது -குற்றம் இல்லாத வழியைக் காட்டுபவர்
399-நேய -அன்பு கொண்ட ரிஷிகள் கட்டளை இடும்படி அடங்கி இருப்பவர்
400-நய -ரிஷிகளைக் கர்ப்பத்தைப் போலே பாதுகாப்பவர் –

401-அ நய -பகைவர்களால் நடத்தப்பட முடியாதவர் –
402-வீர -ராஷசர்களை அச்சத்தில் நடுங்க வைப்பவர் –
403-சக்திமதாம் ஸ்ரேஷ்ட –வலிமை மிக்க தேவர்களை விட சிறந்தவர் –
404-தர்ம -தர்மத்தின் உருவானவர் -இவ்வுலக அவ்வுலக பேற்றைக் கொடுத்து ஜீவர்களை தாமே தாங்குபவர் –
405-தர்ம விதுத்தம -தர்மம் அறிந்தவர்கலான ரிஷிகளை விடச் சிறந்தவர் –
406-வைகுண்ட -பக்தர்களை விலகாமல் தம்மிடம் சேர்த்துக் கொண்டவர் –
407-புருஷ -பாவச் சுமையை எரிப்பவர் -சராசரங்களுக்கு முன் செல்பவர் –
408-பிராண அனைவரையும் உய்விக்கும் மூச்சுக் காற்றானவர் –
409-ப்ரணத-உயிர் அளிப்பவர்-இராமன் வனம் சென்ற போது மரங்களும் வாடிப் போயின –

410-பிரணவ -அனைவரும் தம்மை வணங்கும் படி இருப்பவர் –
411-ப்ருது-பெரும் புகழாளர் –
412-ஹிரண்ய கர்ப -அவதாரங்களின் பிற்பட்டவர்களின் உள்ளங்களிலும் பொன் போலே வசிப்பவர் –
413-சத்ருகன -தன்னை த்யாநிப்பவர்களின் தறி கெட்டோடும் புலன்களை பகுத்தறிவை அருளி அடக்குபவர் –
414-வ்யாப்த -பக்தர்கள் இடம் ஏற்றத் தாழ்வு பார்க்காமல் விரயமான அன்பு காட்டுபவர் –
415-வாயு -சபரி குஹன் பரத்வாஜர் போன்ற அன்பர்களின் இருப்பிடத்துக்கு தேடிச் செல்லும் காற்று போன்றவர் –
416-அதோஜஷ – யாவரும் அனுபவித்து பயன்படுத்தினாலும் கடல் போன்று பெருமை குறையாதவர் –
417-ருது -பக்தர்களை வளர்க்கும் கிளர்ந்து வரும் குண வரிசைகளை உடையவர் –
418-சூதர்சன-இராமனின் பெருமை அறியாதவரும் அவன் திரு மேனியைக் கண்டவுடன் ஈடுபடும் அழகு உடையவர்
419-கால -தன் நற்பண்புகளால் அனைவரையும் தம்மிடம் இழுத்துக் கொள்பவர் –
420-பரமேஷ்டீ-இராமாவதாரம் முடிந்த பின்பு திரும்பவும் வைகுந்தத்தில் இருப்பவர் –
421-பரிக்ரஹ -இராமன் இவ்வுலகை விட்டு வைகுந்தம் சொல்லும் போது அயோத்தி மக்களையும் மரங்களையும் எங்கும் ஏற்றுக் கொண்டவர் –

———————————————————————————

ஸ்ரீ கல்கி அவதாரம் –

422-உக்ர -தர்மத்தின் பகைவர்கள் இடத்தில் கொடியவரை இருப்பவர் –
423-சம்வத்சர -அழிப்பதற்கு உரிய கருவிகள் உடன் பாதாள உலகில் ஆதி சேஷன் மேல் காத்து இருப்பவர் –
424-தஷ -கலி யுக இறுதியில் திரிந்து கொண்டு இருக்கும் தீயவர்களை விரைவிலே அழிப்பவர்-
425- விஸ்ராம -தீய வினைகளின் பயனாக களைத்தவர்களுக்கு இளைப்பாறும் இடம் –
426-விஸ்வ தஷிண -நல்லார் தீயார் என்ற வேற்றுமை இன்றி அன்பைக் காட்டுபவர் –
427-விஸ்தார -அதர்மமான கலியுகத்தை அழித்து க்ருத யுக தர்மத்தை வெளிப்படுத்துமவர்-
428-ஸ்தாவரஸ் தாணு -கல்கியாய் தர்மத்தை நிலை நிறுத்தி பின் சாந்தமாக இருப்பவர் –
429-பிரமாணம் -தர்மத்தை க்ருத யுகத்தில் உள்ளோர் கடைப்பிடிக்க அறிவின் ஊற்றமாக இருப்பவர் –
430-பீஜமவ்யயம் -க்ருத யுகம் வளர்வதற்கு அழிவில்லாத விதை போன்றவர் –

431-அர்த-அவன் இடத்திலேயே லயித்த பக்தர்களால் பயனாக வேண்டப்படுபவர் –
432-அ நர்த -தாழ்ந்த பயன்களை விரும்புவர்களால் வேண்டப்படாதவர் –
433-மஹா கோச -பக்தர்களுக்குக் கொடுக்க குறைவற்ற நவ நிதிகளை -சங்க பத்ம -மஹா பத்ம மகர கச்சாப -முகுந்த குந்த நீல கர்வ -உடையவர் –
434-மஹா போக -செல்வத்தால் சாதிக்கப்படும் சிறந்த இன்பத்தைத் தருபவர் –
435-மஹா தன -வாரி இறைத்தாலும் அழியாத செல்வம் உடையவர் –

—————————————————————–

நஷத்ரங்களும் சிம்சூமார சக்கரமும் –

436-அநிர்விண்ண-மக்கள் தாழ்ந்த செல்வத்தையே தன்னிடம் வேண்டினாலும் அவர்களை திருத்துவதில் சோர்வில்லாதவர்-
437-ஸ்தவிஷ்ட -நஷத்ர மண்டலம் ஆகிய சிம்சூமார சக்கரமாக விரிந்து இருப்பவர்
438-பூ -த்ருவ பதவியில் இருந்து பூமியையும் ஆகாயத்தையும் தாங்குபவர் –
439-தர்மயூப -தர்மத்தைத் தலை போலே முக்கியமாகத் தன்னிடம் சேர்த்துக் கொண்டவர் –
440-மஹா மக -தர்மத்தை வளர்க்கும் யாகங்களை தனக்கு உடல் உறுப்பாகக் கொண்டவர் –
441-நஷத்ர நேமி -நஷத்ரங்களைச் சுற்றி வரச் செய்பவர் –
442-நஷத்ரீ-நஷத்ரங்களுக்கு உள்ளே இருக்கும் ஆதாரம் ஆனவர் –
443-ஷம-பிரபஞ்சகச் சுமையை எளிதில் தூங்குபவர் –
444-ஷாம -பிரமனின் இரவுப் பொழுது பிரளயத்தின் போது ஏனைய நஷத்ரங்கள் அழிந்து த்ருவனோடு
நான்கு நஷத்ரங்களே இருக்கிறபடியால் குறைவு பட்டு இருப்பவர் –
445-சமீ ஹன-சிருஷ்டி தொடங்கியவுடன் மக்களை தம் தம் தர்மத்தில் ஈடுபடுத்துபவர் –

————————————————————

யஜ்ஞ ஸ்வரூபி –

446-யஜ்ஞ- யாக யஜ்ஞ வடிவமானவர் –
447-இஜ்ய -உலகச் செல்வத்தை வேண்டுபவர்களால் இந்த்ரன் முதலான தேவர்கள் உருவில் பூசிக்கப் படுபவர் –
448-மஹேஜ்ய-அவனையே விரும்புவர்களால் நேரே பூசிக்கப் படுபவர் –
449-க்ரது-பஞ்ச மஹா யஜ்ஞம் முதலியவற்றால் பூசிக்கப் படுபவர் –
450-சத்தரம் -பலரால் நீண்ட காலம் செய்யப்படும் சத்திர யாகத்தில் பூசிக்கப் படுபவர்

———————————-

ஸ்ரீ நர ஸ்ரீ நாராயண அவதாரம் –

451-சதாம் கதி -புலன்களை அடக்கிய பற்று அற்றவர்களுக்கு சேரும் இடமாய் இருப்பவர் –
452-சர்வ தர்சீ-பற்றுடன் செய்யும் தர்மம் -பற்று அற்று நீங்கும் தர்மம் -ப்ரவ்ருத்தி நிவ்ருத்தி தர்மங்கள் -ஆகிய இரண்டையும் நேரே காண்பவர் –
453-நிவ்ருதாத்மா -வைராக்யத்தை உபதேசிப்பதற்க்காக நாராயண அவதாரம் எடுத்து பற்று அற்று இருந்தவர் –
454-சர்வஜ்ஞ -குறைவற்ற தன் மேன்மையை முற்றும் அறிந்தவர் –
455-ஜ்ஞானமுத்தமம் -பாஞ்சராத்ர ஆகமத்தின் மூலம் ஸ்ரீ வைஷ்ணவ தர்மத்தை அனைவரும் அறியக் காரணம் ஆனவர்
456-சூவ்ரத -கர்மம் தீண்டப் பெறாதவராய் இருந்தும் பிறருக்கு முன் மாதிரியாய் ஆவதற்காக தர்மங்களைச் செய்ய உறுதி கொண்டவர் –

————————————————————–

அலைகடல் கடைந்த ஆரமுதம் –

457-சூமுக-அமுதம் கொடுக்கும் போது களைப்பில்லாத இன்முகம் கொண்டவர் –
458-சூஷ்ம -ஆழ்ந்த த்யானத்தினால் மட்டும் அறியப்படும் நுண்ணிய தன்மை கொண்டவர்
அமுதம் கொடுத்த போது அவர் நினைவை அசூரர்களால் அறிய முடிய வில்லையே —
459-சூகோஷ -உபநிஷத்துக்களின் சிறந்த ஒலியால் போற்றப் படுபவர் –தேவர்களாலும் அசூரர்களாலும் போற்றப்படுபவர் –
460-சூக்த -த்யான மார்க்கத்தவர்களுக்கு நிலை நின்ற இன்பத்தை தருபவர் –

461-சூஹ்ருத் -தன்னை சிந்தியாதவர்களையும் என் செய்து திருத்துவோம் -என்ற நல் எண்ணம் உடையவர் –
462- மநோ ஹர -மோகினியாய் அசூரர்களையும் மயக்கும் பேர் அழகு உடையவர் –
463-ஜிதக்ரோத -அடியவர்களின் ஆசையையும் கோபத்தையும் போக்குகிறார் -மோகினியிடம் மயங்கி அசூரர்கள் கோபத்தை மறந்தனர் –
464-வீர பாஹூ -கடல் கடைந்த போது ஆபரணங்கள் பூண்ட ஆயிரம் கைகள் கொண்டவர் –
465-விதாரண -தன் ஆயுதத்தினால் ராஹூ முதலானோரை வெட்டியவர்
466-ஸ்வா பன-அழியாமல் மீதம் இருந்தவர்களை புன்சிரிப்பாலும் இனிய நோக்காலும் தூங்க வைத்தவர் –
467-ஸ்வ வஸ-அசூரர்களைத் தூங்க வைத்த உடன் -தன் வசத்தில் இருக்கும் தேவர்களோடு மகிழ்பவர் –
468-வ்யாபீ-கடல் கடைய சக்தியை வளர்ப்பதற்காக மந்த்ரம் வாசூகி ஆகிய அனைத்திலும் வ்யாபித்தவர்
469-நைகாத்மா -கடல் கடையும் விஷ்ணுவாக -ஆமையாக -மோஹினியாக பல உருவங்களை எடுத்தவர் –
470-நைக கர்மக்ருத் -கடல் கடைவது , மலையைத் தாங்குவது -அமுதம் அளிப்பது -முதலிய பல செயல்களைக் கொண்டவர் –

————————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பராசர பட்டர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பீஷ்மர் திருவடிகளிலே சரணம்
ஸ்ரீ வியாச பகவான் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: