ஸ்ரீ விஷ்ணு சகஸ்ர நாமம்–3-16- பர வாசுதேவன் குண வாசகம் -333-344-திரு நாமங்கள் / 3-17-பர வாசுதேவன் ரூப குண வாசகம் -345-350 திரு நாமங்கள் /3-18-ஐஸ்வர்ய வாசக திரு நாமங்கள் -351-360 / 3-19-ஸ்ரீ லஷ்மி சம்பந்தம் திரு நாமங்கள் -361-379-/ 3-20-சேதனர்கள் உடன் இணைந்து இருக்கும் ஒட்டின்மை -380-384–/ 3-21-த்ருவ-திரு நாமங்கள் -385-389–

ஸ்கந்தஸ் ஸ்கந்ததரோ துர்யோ வரதோ வாயுவாஹன
வாஸூதேவோ ப்ருஹத்பாநு ராதிதேவ புரந்தர -36
அசோகஸ் தாரணஸ் தாரஸ் ஸூ ரஸ் சௌரிர் ஜநேச்வர
அநு கூலஸ் சதாவர்த்த பத்மீ பத்ம நிபேஷண –37
பத்ம நாபோ அரவிந்தாஷ பத்ம கர்ப்பஸ் சரீரப்ருத்
மஹர்த்திர்ருத்தோ வ்ருத்தாத்மா மஹாஷோ கருடத்வஜ –38-
அதுலஸ் சரபோ பீமஸ் சமயஜ்ஞோ ஹவிர்ஹரி
சர்வ லஷண லஷண்யோ லஷ்மீ வான் சமிதிஜ்ஞய –39
விஷரோ ரோஹிதோ மார்கோ ஹேதுர் தாமோதரஸ் சஹ
மஹீதரோ மஹா பாகோ வேகவா நமிதாசன –40
உத்பவ ஷோபணோ தேவாஸ் ஸ்ரீ கர்ப்ப பரமேஸ்வர
கரணம் காரணம் கர்த்தா விகாரத்தா கஹநோ குஹ –41
வ்யவசாயோ வ்யவஸ்தாநஸ் சமஸ்தான ஸ்தா நதோ த்ருவ
பரர்த்தி பரம ஸ்பஷ்ட ஸ்துஷ்ட புஷ்டஸ் ஸூ பேஷண–42

———–

3-1-பிரதம அவதாரம் விஷ்ணு -147-152- திரு நாமங்கள்–6 -திரு நாமங்கள்
3-2-வாமன அவதார பரமான -153-164 திரு நாமங்கள் —12-திரு நாமங்கள்
3-3- துஷ்ட நிக்ரஹ இஷ்ட பரிபாலநம் -165-170-திரு நாமங்கள்–6-திரு நாமங்கள்
3-4-ஜ்ஞானாதி பகவத் குணங்கள் கொண்டவன் -171-181- திரு நாமங்கள்-11-திரு நாமங்கள்
3-5-குணங்களுக்கு ஏற்ற அவதார செயல்கள் -182-186-திரு நாமங்கள்–5 திரு நாமங்கள்
3-6-ஹம்ஸாவதாரம் -187-194-திரு நாமங்கள்-7 திரு நாமங்கள்
3-7-பத்மநாபாவதாரம்-195-199-திரு நாமங்கள்-5 திரு நாமங்கள்
3-8-நரசிம்ஹ அவதாரம் ——200-210—திரு நாமங்கள்—11 திரு நாமங்கள்
3-9-மத்ஸ்ய அவதார -211-225- திரு நாமங்கள் –15-திரு நாமங்கள்
3-10- புருஷ ஸூக்த உபநிஷத் ப்ரதிபாதித விராட் ஸ்வரூப—226-247- திரு நாமங்கள் -22-திரு நாமங்கள்
3-11–சித் அசித் -இவைகளாலான -ஐஸ்வர்ய -பூர்த்தி -248-271-திரு நாமங்கள் -23-திரு நாமங்கள்
3-12-விஸ்வ ரூபம் —272-300-திரு நாமங்கள் -29-திரு நாமங்கள்
3-13-ஆலிலை மேல் துயின்ற –வட பத்ர சாயி -301-313-திரு நாமங்கள்–14-திரு நாமங்கள்
3-14-ஸ்ரீ பரசுராம -ஆவேச சக்தி -அவதாரம் -314-321-திரு நாமங்கள்–8-திரு நாமங்கள்
3-15-ஸ்ரீ கூர்மாவதாரம் -322-332-திரு நாமங்கள்–11-திரு நாமங்கள்

3-16- பர வாசுதேவன் குண வாசகம் -333-344-திரு நாமங்கள்
3-17-பர வாசுதேவன் ரூப குண வாசகம் -345-350 திரு நாமங்கள்
3-18-ஐஸ்வர்ய வாசக திரு நாமங்கள் -351-360
3-19-ஸ்ரீ லஷ்மி சம்பந்தம் திரு நாமங்கள் -361-379-
3-20-சேதனர்கள் உடன் இணைந்து இருக்கும் ஒட்டின்மை -380-384-
3-21-த்ருவ-திரு நாமங்கள் -385-389

———————————————————————————-

ஸ்கந்தஸ் ஸ்கந்ததரோ துர்யோ வரதோ வாயுவாஹன
வாஸூதேவோ ப்ருஹத்பாநு ராதிதேவ புரந்தர -36

———–

3-16- பர வாசுதேவன் குண வாசகம் -333-344-திரு நாமங்கள் –

333-வாஸூ தேவ-
சர்வம் வசதி –சர்வத்ர வசதி -த்வாதச அஷரி
ஆர்ந்த ஞானச் சுடராகி அகலம் கீழ் மேல் அளவிறந்து நேர்ந்த வுருவாய் அருவாகும் இவற்றின் உயிராம் நெடுமாலே -1-5-10
உன் தன பொய் கேட்டு நின்றேன் வாசு தேவா உன் வரவு பார்த்தே -பெருமாள் திரு -6-1
மீண்டும் 701 வரும்

பறவைகள் குஞ்சுக்களை சிறகினால் அணைத்துக் காப்பது போலே உலகங்களைத் தமக்குள்ள வைத்துக் காத்தும் –
அவற்றில் தாமந்தர்யாமியாக இருப்பதாலும் வாஸூ என்றும்
இதை விளையாட்டாகச் செய்வது ஆகியவற்றால் தேவ -என்றும் கூறப் பெறுபவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

ஸாதயாமி ஜகத் சர்வம் பூத்வா ஸூர்யா இவ அம்சுபி சர்வ பூதாநி வாசச்ச வாஸூ தேவ தத ஸ்ம்ருத –மஹா பாரதம் –
சூர்ய கதிர்கள் போலே எங்கும் வியாபித்து -தூங்குகிறேன்
வஸனாத் சர்வ பூதா நாம் வஸூத் வாத் தேவ யோநித வாஸூ தேவஸ் ததோ ஜ்ஜே ய ஸர்வேஷாம் அபி பச்யதே-மஹா பாரதம்
ஸர்வத்ர அசவ் சமஸ்தம் ச வஸத்யத் ரேதி வை யதஸ் தத ச வாஸூ தேவேதி வித்வத்பிஸ் பரி பட்யதே –ஸ்ரீ விஷ்ணு புராணம் -1-2-12-

எல்லாவற்றிலும் வசித்தும் -எல்லாவற்றையும் தம்மிடம் வைத்தும் -மறைத்தும் இருப்பதனால் வாஸூ என்றும்
விளையாடுவது வெல்வது பிரவ்ருத்தி நிவ்ருத்திகள் உண்டாக்குவது பிரகாசிப்பது
துதிக்கப் பெறுவது முதலிய வற்றால் தேவ என்றும் கூறப் பெறுபவர் -ஸ்ரீ சங்கரர் –

வாஸூ தேவ புத்திரர் -எல்லா இடங்களிலும் வசிப்பதனாலும் எல்லாவற்றையும் வசிக்கச் செய்வதனாலும் –
எல்லாவற்றின் வாசத்திற்கும் ஆதாரமாக இருப்பதாலும் வாஸூ என்றும் –
பிரகாசிப்பதனால் தேவ என்றும் கூறப் பெறுபவதனால் வாஸூ தேவர் என்று போற்றப் பெறுபவர் —-ஸ்ரீ சத்ய சந்தர் –

—————-

334-ப்ருஹத்பாநு-
அதி பிரகாசம் ஆனவன் -ப்ருஹத் மிகப் பெரிய -பானவ கிரணங்கள்
கண்டவாற்றால் தனதே உலகு என நின்றான் –
பர நன் மலர்ச் சோதி -10-10-10-

பிரகாசிக்கும் கிரணங்களை யுடையவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

சந்திர சூரியர்களினால் உலகங்களைப் பிரகாசிக்கச் செய்பவர் -ஸ்ரீ சங்கரர் –

மேன்மையான ஒளி யுள்ளவர் —-ஸ்ரீ சத்ய சந்தர் –

——————-

335-ஆதி தேவ
ஊழி முதல்வன் -அகில புவன ஜன்ம ச்தேம பங்காதி லீலே –

உலகைப் படைப்பை விளையாட்டாக உடையவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

சம் ப்ரயோஜ்ய வியோஜ்யாயம் காமகாரகர பிரபு க்ரீடதே பகவான்
அப்ரமேயோ அநியோஜ்யச்ச யத்ர காம கமோ வசீ மோததே பகவான் விஷ்ணு பால கிரீட நகைரிவ —
குழந்தை போலே அலகிலா விளையாட்டு உடையவன்

உலகத்திற்குக் காரணமான தேவர் -தானம் -பிரகாசித்தல் முதலிய குணங்களை உடையவர் -ஸ்ரீ சங்கரர் –

எல்லாவற்றிற்கும் காரணமான தேவர் —-ஸ்ரீ சத்ய சந்தர் –

—————-

336-புரந்தர –
பட்டணங்களை பிழைப்பவன் -துஷ்க்ருத் விநாசம் -ஆதி தைவிக தாபம் போக்கி அருளி
புரம் ஒரு மூன்று எரித்து உலகு அழித்து அமைத்துளன் -1-1-8-

அசுரர்களின் பட்டணங்களைப் பிளப்பவர் -இனி நான்கு திரு நாமங்களில் துஷ்டர்களால் ஏற்படும் துன்பங்களை விலக்குதலும் –
அசுரர்கள் பிசாசங்கள் இடி சாபம் முதலிய ஆதிதைவிகங்களில் இருந்து காத்தல் கூறப்படுகிறது -ஸ்ரீ பராசர பட்டர் –

அசுரர்களின் பட்டணங்களைப் பிளந்தவர் -ஸ்ரீ சங்கரர் –

அசுரர்களின் புரங்களைப் பிளப்பவர் —-ஸ்ரீ சத்ய சந்தர் –

——-

அசோகஸ் தாரணஸ் தாரஸ் ஸூ ரஸ் சௌரிர் ஜநேச்வர
அநு கூலஸ் சதாவர்த்த பத்மீ பத்ம நிபேஷண –37

————-

337-அசோகா –
துன்பங்களை அழிப்பவன் -ஆத்யாத்மிக தாபம் போக்கி அருளி
ஓயும் மூப்புப் பிறப்பு இறப்பு பிணி வீயுமாறு செய்வான் -3-3-9-

ஆத்யாத்மிகங்களான சோகம் மோஹம் முதலிய துன்பங்களைப் போக்குபவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

சோகம் முதலிய ஆறு ஊர்மிகள் அற்றவர்-ஸ்ரீ சங்கரர் –

சோகம் இல்லாதவர் —-ஸ்ரீ சத்ய சந்தர் –

———–

338-தாரண
பயங்களைப் போக்கி கரை சேர்ப்பவன் -ஆதி பௌதிக தாபம் போக்கி அருளி

ஆதி பௌதிகங்களான பகைவர் கள்வர் பிணிகள் முதலியவற்றைப் போக்குபவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

சம்சாரக் கடலைத் தாண்டுவிப்பவர் –
சூர்ய மண்டலத்தின் நடுவில் இருப்பவர் -சூர்ய குலத்தில் உதித்தவர் –சம்சாரத்தைத் தாண்டுவிப்பவர்-ஸ்ரீ சங்கரர் –

தார என்னும் ஓங்காரத்தின் மூலமாய் சுகம் தருபவர் —-ஸ்ரீ சத்ய சந்தர் –

————–

339-தார –
காப்பவன்
நந்தா நரகத்து அழுந்தா வகை நாளும் தொண்டர் ஆனவருக்கு இன்னருள் செய்வான் -பெரிய திரு மொழி -11-8-10-

உலக வாழ்க்கை யாகிய பயத்தை தாண்டுவிப்பவர் –ஸ்ரீ பராசர பட்டர் –

கர்ப்ப ஜென்ம மரண சம்சார சாகர மஹா பயாத் தாரய நீதி தஸ்மாத் உச்யதே தார–அதர்வ சிரஸ் -வெளியேற்றுபவன் தாரயந்
அபஹத பாப்மா விஜாரோ விம்ருத்யு –சாந்தோக்யம் -8-1-5-

கர்ப்பம் பிறப்பு மூப்பு மரணம் முதலிய பயங்களில் இருந்து கரை ஏற்றுபவர் -ஸ்ரீ சங்கரர் –

சம்சாரத்தில் இருந்து தாண்டச் செய்பவர் —ஸ்ரீ சத்ய சந்தர் –

——————-

340-சூர-
சமர்த்தன் -சென்று அங்குத் தென்னிலங்கை செற்றான்
அன்று நேர்ந்த நிசாசரரை வெந்நரகம் சேரா வகையே சிலை குனிந்தான் –
சென்று அங்கு வாணனை ஆயிரம் தோளும் தென்றித் திரை திசை விழச் செற்றாய் -பெரிய திரு மொழி -5-3-4-

வெற்றியை உடையவர் –ஸ்ரீ பராசர பட்டர் –

பராக்கிரமம் உடையவர் -ஸ்ரீ சங்கரர் –

பயந்தவர்களால் அடையப்படுபவர் -போருக்குச் செல்பவர் -சுகத்தைத் தருபவர் —ஸ்ரீ சத்ய சந்தர் –

—————

341- சௌரி –
சூரனான வாஸு தேவர் பிள்ளை -ஓடாத தோள் வலியன் நந்த கோபன் குமரன் –
மன் உலகத் தேவர் வாழ் முதல் -பெரிய திருமொழி -6-8-10
தயரதற்கு மகனாய் தோன்றி கொல்லியலும் படைத்தான் -பெருமாள் திரு -10-10-

சூரர் எனப்படும் வாசுதேவனுடைய புத்திரர் -அடியவர்கள் இடம் செல்லும் விசேஷ குணமானது கூறப் படுகிறது –ஸ்ரீ பராசர பட்டர் –

சூரா குலத்தில் பிறந்தவர் -ஸ்ரீ சங்கரர் –

சூரா ராஜனின் கோத்திரத்தில் பிறந்தவர் —ஸ்ரீ சத்ய சந்தர் –

——————–

342-ஜநேச்வர-
உயிர்கள் எல்லா யுலகும் உடையான் -3-2-1

பிறந்தவர் யாவர்க்கும் ஈஸ்வரராக இருப்பவர் –ஸ்ரீ பராசர பட்டர் –

பிராணிகளுக்கு ஈஸ்வரர் -ஸ்ரீ சங்கரர் –

பிறப்பற்றவர்-ஸ்ரீ லஷ்மி தேவிக்கு நாதர்-ஜனங்களுக்கு ஈஸ்வரர் —ஸ்ரீ சத்ய சந்தர் –

—————–

343-அநுகூல-
வரம்பினுள் நிற்பவன் கூலம் -கரை
ஆய்ச்சி கண்ணிக் கயிற்றினால் கட்டத்தான் கட்டுண்டு இருந்தான் -மூன்றாம் திரு -91

இயற்கையான பெருமை இருப்பதால் அதைப் பற்ற வியப்பு கர்வம் அற்றவர் -கரை கடவாதவர் –ஸ்ரீ பராசர பட்டர் –

வீர்யாத் ந ச வீர்யேண மஹதா ஸ்வேந விஸ்மித பவத பவ்யோ வா அநு கூல–அயோத்யா -1-13-
ஹஸ்தாவலம்பநோ ஹ்யேகோ பக்தி க்ரீதோ ஜனார்த்தன –ஸ்ரீ விஷ்ணு தர்மம் 3-23-
யதி சக்நோஷி கச்ச த்வம் அதி சஞ்சல சேஷ்டித–ஸ்ரீ விஷ்ணு புராணம் -5-6-15-முடிந்தால் இந்த கட்டை அவிழ்த்துக் கொள் என்றாள்

ஆத்மாவாதலால் யாவர்க்கும் அநு கூலராக இருப்பவர் -தமக்குப் பிரதிகூலமானதைத் தாமே செய்யார் -ஸ்ரீ சங்கரர் –

பக்தர்களுக்கு நன்மையைச் செய்பவர் —ஸ்ரீ சத்ய சந்தர் –

————

344-சதாவர்த்த –
பல சூழல்களை உடையவன் -ஐஸ்வர்ய பெருக்கை சௌலப்ய சௌசீல்யங்கள் கட்டுப் படுத்துவதால்

அளவற்ற ஐஸ்வர்ய பெருக்காகிய சூழல்களை உடையவர் -அளவற்ற ஐஸ்வர்யம் உடையவராயினும் கரை கடந்து
பெருகாதவராய் அணுகுவதற்கு எளிதாக -நதியின் சுழல் சிறிய
இடைவெளியின் மூலம் வெளிவருவது போலே விளங்கும் –ஸ்ரீ பராசர பட்டர் –

சாந்தோதித விஞ்ஞான ப்ராணாயா–சலனம் அற்ற நிலையும்-ஓங்கும் ஞானமும் பிராணனும் அவனுக்கே

தர்மத்தைக் காக்கும் பொருட்டு அநேக அவதாரங்களைச் செய்பவர் -நூறு நாடிகளில் பிராண ரூபத்தில் இருப்பவர் -ஸ்ரீ சங்கரர் –

எல்லோரையும் தேவர் முதலான ரூபங்களில் நடத்துபவர் -படைப்பவர் —ஸ்ரீ சத்ய சந்தர் –

————————————————————–

3-17-பர வாசுதேவன் ரூப குண வாசகம் -345-350 திரு நாமங்கள்

345-பத்மீ-
தாமரையைக் கையில் கொண்டவன்
கை வண்ணம் தாமரை வாய் கமலம் போலும்

விளையாட்டுத் தாமரை மலரை எப்போதும் யுடையவர் -இப்படி வாஸூதேவனுடைய குணங்களை வர்ணித்த பின்பு
அவனுடைய திவ்ய ரூபத்தை விளக்குகிறார் –ஸ்ரீ பராசர பட்டர் –

கையில் தாமரையை யுடையவர் –ஸ்ரீ சங்கரர் –

நாபியில் தாமரையை யுடையவர் -நான் முகனைப் பிள்ளையாக யுடையவர் –ஸ்ரீ சத்ய சந்தர் –

————–

346-பத்ம நிபேஷண –
இனிய பார்வை யுடையவன்
உன் முகம் மையல் ஏற்றி மயக்கும் மாய மந்த்ரம் தான் கொலோ
செய்ய தாமரைக் கண்ணினாய்
உகவையால் நெஞ்சம் உள்ளுருகி உன் தாமரைக் கண் விழிகளின் அகவலைப் படுப்பான் -வலையுள் அகப்படுத்துவான் -6-2-7-
சரமணீ விதுர ரிஷி பத்நிகளைப் பூதராக்கின புண்டரீ காஷன் நெடு நோக்கு

தாமரை போலே மலர்ந்து அழகிய சிரமத்தைப் போக்கும் கடாஷம் யுள்ளவர் –ஸ்ரீ பராசர பட்டர் –

தாமரை போன்ற இரண்டு திருக் கண்களை யுடையவர் –ஸ்ரீ சங்கரர் –

தாமரை போன்ற திருக் கண்களை யுடையவர் -தாமரைகளுக்கு நண்பனான சூரியன் ஒளியுள்ள சந்திரன்
ஆகியவர்களைக் கண்களாக யுடையவர் –ஸ்ரீ சத்ய சந்தர் –

———

பத்ம நாபோ அரவிந்தாஷ பத்ம கர்ப்பஸ் சரீரப்ருத்
மஹர்த்திர்ருத்தோ வ்ருத்தாத்மா மஹாஷோ கருடத்வஜ –38-

————-

347-பத்ம நாப –
தாமரை உந்தி தனிப் பெரும் நாயகா
அயனைப் படைத்த எழில் உந்தி
கொப்பூழில் எழு கமலப் பூ வழகன்

தாமரை போன்ற நாபியை யுடையவன் –ஸ்ரீ பராசர பட்டர் –

தாமரையின் நாபியாகிய உள்காயில் இருப்பவர் –ஸ்ரீ சங்கரர் –

தாமரையை மலர்த்தும் சூரியன் போன்ற ஒளியுள்ளவர்–ஸ்ரீ சத்ய சந்தர் –

——————-

348-அரவிந்தாஷ
செந்தாமரைக் கண்ணன்
அனைத்து உலகும் உடைய அரவிந்த லோசனன்
இழை கொள் சோதிச் செந்தாமரைக் கண்ணபிரான் -6-5-5-
செவ்வரி யோடி நீண்ட வப் பெரியவாய கண்கள்
ராம கமல பத்ராஷ
தஸ்யதா கப்யாசம் புண்டரீக மேவம் அஷிணீ –முன்பே 112 பார்த்தோம்

தாமரை போல் அழகிய இரு திருக் கண்களை யுடையவர் –ஸ்ரீ பராசர பட்டர் –

தாமரை போல் அழகிய இரு திருக் கண்களை யுடையவர் –ஸ்ரீ சங்கரர் –

தாமரை போல் அழகிய இரு திருக் கண்களை யுடையவர் –
ஞானாத்மகமான திருக் கண்களை யுடையவர் –ஸ்ரீ சத்ய சந்தர் –

————-

349-பத்ம கர்ப்ப –
தாமரையை ஆசனமாக உடையவன் –
ஹிருதய கமலம்
தஹரம் விபாப்மம் பிரவேசமா பூதம் யத் புண்டரீகம்
தண் தாமரை சுமக்கும் பாதப் பெருமான் -4-5-8′
அடிச் சோதி நீ நின்ற தாமரையாய் அலர்ந்ததுவோ -3-1-1-

தமக்குத் தகுதியான மனமும் மென்மையும் உள்ள பத்மாசனத்தில் இருப்பவர் –ஸ்ரீ பராசர பட்டர் –

தஹரம் விபாப்மம் பரவேசம பூதம் யத் புண்டரீகம்
தஹரம் புண்டரீகம் வேஸ்ம
சரஸிஜாசன சந்நிவிஷ்ட

இதயமாகிய தாமரையில் உபாசிக்கப் படுபவர் –ஸ்ரீ சங்கரர் –

நாபியில் கமலம் யுடையவர் -நான் முகனை பிரளயத்தில் உண்பவர் –ஸ்ரீ சத்ய சந்தர் –

—————-

350-சரீர ப்ருத்
சரீரத்தை தாங்குபவன் –தேகமும் ஆத்மாவும் இவன் சரீரங்கள் -ஞாநி து ஆத்மைவ மே மதம் -ஜகத் சர்வம் சரீரம் தே
திசை மண் நீர் எரி முதலா உருவாய் நின்றவன் -பெரிய திரு மொழி -7-6-7-

உபாசகனுடைய இதயத்தில் இருந்து கொண்டு அவனைப் போஷிப்பவர் –
பரம புருஷனுடைய குணங்களே அன்றோ உபாசகனுக்குப் போஷணம் –
உபாசகன் தான் அவனுக்கு ஆத்மாவும் உடலும் போன்றவன் அன்றோ –ஸ்ரீ பராசர பட்டர் –

வசதி ஹ்ருதி ஸநாதனே ச தஸ்மிந் பவதி புமாந் ஜகதஸ்ய ஸுவ்ம்ய ரூப –ஸ்ரீ விஷ்ணு புராணம் -3-7-24-
ப்ரஹ்ம வித இவ ஸோம்ய தே முகம் பாதி –சாந்தோக்யம் –உனது சிஷ்யன் முகம் ப்ரஹ்மத்தைக் கண்டவன் போல் ஜ்வலிக்கிறது
ரக்ஷதே பகவான் விஷ்ணு பக்தான் ஆத்ம சரீரவத்

தமது மாயையினால் சரீரங்களைக் கொள்பவர் –
அன்ன ரூபத்தால் பிராண ரூபத்தால் சரீரங்களை போஷித்து தரிப்பவர் –ஸ்ரீ சங்கரர் –

சரீரமாகிய உலகத்தைத் தாங்குபவர் –ஸ்ரீ சத்ய சந்தர் –

————————————————————

3-18-ஐஸ்வர்ய வாசக திரு நாமங்கள் -351-360

351-மஹர்தி –
உபய விபூதி ஐஸ்வர்யம் -சொல்கிறது
வீற்று இருந்து எஏழு உலகும் தனிக் கோல் செல்ல ஆளும் அம்மான் -4-5-1-
நாகணை மிசை நம்பரர் செல்வர் பெரியார் -நாச் -10-10-

பக்தர்களின் யோக ஷேமங்களைக் குறைவின்றி நடத்தும் அளவற்ற செல்வம் யுடையவர் –
இனி அவனுடைய செல்வத்தை விளக்குகின்றார் -ஸ்ரீ பராசர பட்டர் –

பெரும் செல்வத்தை யுடையவர் -ஸ்ரீ சங்கரர் –

மிகுந்த செல்வம் யுடையவர் -யஜ்ஞம் முதலியவற்றால் நிறைவான செல்வம் யுடையவர் –
மகாபலி யஜ்ஞத்தில் த்ரிவிக்ரம ரூபத்துடன் வளர்ச்சி பெற்றவர் -ஸ்ரீ சத்ய சந்தர் –

——————

352-ருத்த
வ்ருத்தியை உடையவன்
பெருக்குவார் இன்றியே பெருக்கம் எய்தி –
விஜ்ஜுரக விபீஷணனை அங்கீ கரித்த பின்பு

பக்தர்களின் சம்ருத்தியால்- நிறைவால் -தாமும் சம்ருத்தி அடைபவர் –ஸ்ரீ பராசர பட்டர் –
அபி ஷிஸ்ய ச லங்காயாம் –விஜூர

பிரபஞ்ச ரூபமாக விரிவடைந்தவர் – -ஸ்ரீ சங்கரர் –

ஞானம் ஆனந்தம் முதலிய குணங்களால் மிக்கவர் –ஸ்ரீ சத்ய சந்தர் –

——————

353-வ்ருத்தாத்மா
நிறைவுற்ற ஆத்ம ஸ்வரூபன் –
அதனில் பெரிய அவா -ஸ்நேஹோ மே பரம

இவ்வளவு மகிமைகளும் உள்ளங்கையில் அடங்கியது போல் தோன்றும்படி பெரிய ஸ்வரூபம் உடையவர் –ஸ்ரீ பராசர பட்டர் –

மிகவும் தொன்மையான ஆத்மாவாக இருப்பவர் – -ஸ்ரீ சங்கரர் –

மிக வளர்ந்த தேகம் உள்ளவர் -மிக்க குணங்களுடைய பிரம்மா முதலியவர்களுக்கு அந்தர்யாமியாக இருப்பவர் –ஸ்ரீ சத்ய சந்தர் –

—————-

354-மஹாஷ-
அஹாம் தேர் சக்கரம் தாங்கும் அச்சு -வேதாத்மா விஹகேச்வர -வாஹனம்
நால் திசை நடுங்க அஞ்சிறைப் பறவை ஏறி -திரு வெழு கூற்று –
மீளியம் புள்ளைக் கடாய் -7-6-8-
இந்திரன் வானவர் புள்ளூர்த்தி கழல் பணிந்து ஏத்துவர் -2-2-10-

யாவராலும் பூஜிக்கப் படும் கருடனை வாகனமாக யுடையவர் -வகிக்கும் தன்மை கொண்டு தேரின் அவயவத்தை
ஒத்து இருப்பதால் அஷம் என்று வேத மயமான கருடனைக் கூறி அவனை வாகனமாக யுடையவர் –ஸ்ரீ பராசர பட்டர் –

பெரிய இரு கண்களை அல்லது சிறந்த புலன்களை யுடையவர் – -ஸ்ரீ சங்கரர் –

மகிமை உள்ள இரு கண்களை யுடையவர் –ஸ்ரீ சத்ய சந்தர் –

—————-

355-கருடத்வஜ –
கருளப் புட்கொடி சக்கரப் படை வான நாட -3-5-7-

அந்தக் கருடனையே கொடியாக உடையவர் -அதுவே பரம் பொருளின் அசாதாராண -தனிப்பட்ட அடையாளம் –ஸ்ரீ பராசர பட்டர் –

கருடனை அடையாளைமாக வுடைய கொடியுள்ளவர்- -ஸ்ரீ சங்கரர் –

கருடனைக் கொடியாக யுடையவர் –ஸ்ரீ சத்ய சந்தர் –

———–

அதுலஸ் சரபோ பீமஸ் சமயஜ்ஞோ ஹவிர்ஹரி
சர்வ லஷண லஷண்யோ லஷ்மீ வான் சமிதிஜ்ஞய –39

—————-

356-அதுல –
ஒப்பில்லாதவன் -தன் ஒப்பார் இல்லப்பன் -6-3-9-
ஒத்தாரும் மிக்காரும் இல்லாத மா மாயன் -3-2-2-

இவ்வாறு ஒப்பற்றவர் –ஸ்ரீ பராசர பட்டர் –

உவமை இல்லாதவர் – -ஸ்ரீ சங்கரர் –

ஒப்பற்றவர்–ஸ்ரீ சத்ய சந்தர் –

————–

357-சரப
அழிப்பவன்
மாறில் போர் அரக்கர் மதிள் நீர் எழச் செற்று உகந்த ஏறு சேவகனார் -6-1-10
பின்னும் ஆள் உயர் குன்றங்கள் பெய்து அடர்த்தான் -7-6-8-

வரம்பு மீறுபவர்களை அழிப்பவர்–ஸ்ரீ பராசர பட்டர் –

அழியும் உடல்கள் தோறும் ஆத்மாவாகப் பிரகாசிப்பவர் – -ஸ்ரீ சங்கரர் –

பிரளய ஜலத்தில் பிரகாசிப்பவர் -முப்புரம் எரித்த அம்பில் பிரகாசிப்பவர் என்றும் கூறுவர் –ஸ்ரீ சத்ய சந்தர் –

——————

358-பீமா –
பயமூட்டுபவன்
அரி கான் நரியாய் அரக்கர் ஊளை இட்டு அன்று இலங்கை கடந்து பிலம்புக்கு ஒளிப்ப -7-6-8
அத்த எம்பெருமான் எம்மைக் கொள்ளேல் அஞ்சினோம் -பெரிய திருமொழி -10-2-2-
பீஷாச்மாத்வத பவதே பீஷோ தேதி சூர்ய –

வரம்பு மீறுபவர்க்கு பயத்தைக் கொடுப்பவர் -இவரிடத்தில் பயத்தால் அன்றோ வாயு முதலிய தேவர்கள்
தம் தம் அதிகாரங்களை மீறாது இருக்கிறார்கள் –ஸ்ரீ பராசர பட்டர் –

பீஷா அஸ்மாத் வாத பவதே –தைத்ரியம்
யதிதம் கிஞ்ச ஜகத் சர்வம் பிராண ஏஜதி நிஸ் ஸ்ருதம் மஹத் பயம் வஜ்ரம் உத்யதம்–கட 2-6-2-
பயாத் ஏவ அக்னி ஸ்தபதி பயாத் தபதி ஸூர்ய பயாத் இந்த்ரச்ச வாயுச்ச ம்ருத்யுர் தாவதி பஞ்சம –கட
கம்ப நாத் —ஸ்ரீ ப்ரஹ்ம ஸூத்ரம் -1-3-40-

எல்லோரும் பயப்படும்படி இருப்பவர் -நல்வழியில் செல்பவர்களுக்கு பயப்பட வேண்டாதவர் – -ஸ்ரீ சங்கரர் –

பக்தர்களுடைய பயங்களைப் போக்குபவர் -வியாசர் முதலான ரூபங்களில் பிரமாணங்களைத் தரித்து இருப்பவர் –
தம்மிடம் ஜனங்கள் அச்சம் கொள்ளும்படி இருப்பவர் —ஸ்ரீ சத்ய சந்தர் –

—————–

359-சமயஜ்ஞ-
காலம் அறிந்தவன்
இரணியன் தூண் புடைப்ப அங்கு அப்பொழுதே அவன் வீயத் தோன்றிய என் சிங்கப் பிரான் -2-8-9-
அபயம் சர்வ பூதேப்யோ ததாமி –ஏதத் வரதம் மம -அளித்த அபயத்தை மறவாதவன் –

பக்தர்களுக்குத் தம்மைத் தவறாமல் தரும் காலம் அறிபவர் -நெருப்பு முதலியவை மேல் நோக்கியே எரிய
வேண்டும் எனபது போன்ற அதிகார நியமத்தைக் கண்டறிந்தவர் –ஸ்ரீ பராசர பட்டர் –

ஸூர்ய சந்த்ரமசவ் தாதா யதா பூர்வம் அகல்பயத் –மீண்டும் ஸ்ருஷ்டிக்கும் பொழுது முன்பு இருந்த ஒளியுடனே ஸ்ருஷ்ட்டித்தான்
சரணாகத ரக்ஷண விரதம் பூண்டவன்
ஆஸ்ரிதற்குத் தன்னையே கொடுக்கும் சங்கல்பம் கொண்டவன்

சிருஷ்டி ஸ்திதி சம்ஹார காலங்களை அறிபவர் -ஆறு சமயங்களை அறிந்தவர் -எல்லா பூதங்களிலும்
சமமாக இருத்தலையே யஜ்ஞமாக உடையவர் – -ஸ்ரீ சங்கரர் –

பக்தர்களுக்கு சுபம் தரும் முறையை அறிந்தவர் – ஸ்ரீ லஷ்மியுடன் சேர்ந்து இருப்பவராய் எல்லாம் அறிந்தவர் -பக்தர்கள்
வேண்டுமவற்றைக் கொடுப்பதற்கு உரிய காலம் அறிந்தவர் -சாஸ்த்ரங்களை அறிந்தவர் –ஸ்ரீ சத்ய சந்தர் –

———————

360-ஹவிர்ஹரி –
ஹவிஸ் ஹரிப்பவன்
அடியார்களை தான் அனுபவிக்கிறான் -தன்னை அடியார்கள் அனுபவிக்கும் படி கொடுக்கிறான்
மரணமானால் வைகுந்தம் தரும் பிரான் -9-10-5
கொடிய வினை தீர்ப்பேனும் நானே என்னும் -5-6-9-

பக்தர்களுக்குத் தம்மைக் கொடுப்பவர் -அதற்குள்ள தடைகளைப் போக்குபவர் –ஸ்ரீ பராசர பட்டர் –

தஸ்ய தாவத் ஏவ சிரம் யாவந்ந விமோஷ்யே அத சம்பத்ஸ்யே –சாந்தோக்யம் -6-14-2-
ஹரி-பாபங்களை அகற்றி அருளுபவர்
ஹரீர் ஹரதி பாபாநி த்ருஷ்ட சித்ரைபி ஸ்ம்ருதா அனிச்சயா அபி ஸம்ஸபிருஷ்டோ தஹத்யேவ ஹி பாவக
இட அப ஹுதம் கேஹேஷு ஹரே பாகம் க்ரதுஷு அஹம் வர்ணச்ச மே ஹரி ஸ்ரஷ்ட தஸ்மாத் ஹரி அஹம் ஸ்ம்ருத –சாந்தி பர்வம் –
இட மந்த்ரத்தை உச்சரித்து ஹோமம் -ஹவிர்பாகம் தனக்கு அளிக்கப் பட்டதாகவே ஹரி கொள்கிறான் –
ஹரி -அக்ஷரங்கள் எனக்கு பிரியமானவை

யஜ்ஞத்தில் ஹவிர் பாகத்தைப் பெறுபவர் -ஹவிஸினால் ஹோமம் செய்யப் படுபவர் -தம்மை நினைத்த மாத்ரத்தில் அனைவருடைய
பாவங்கள் அவித்யை அதன் கார்யமான சம்சாரம் ஆகியவற்றைப் போக்குபவர் -மஞ்சள் நிறம் உள்ளவர் – -ஸ்ரீ சங்கரர் –

யஜ்ஞத்தில் வழங்கப்படும் ஹவிஸ்சைப் பெறுபவர் –ஸ்ரீ சத்ய சந்தர் –

—————————————

3-19-ஸ்ரீ லஷ்மி சம்பந்தம் திரு நாமங்கள் -361-379-

361-சர்வ லஷண லஷண்ய –
திருமகள் கேள்வன் -திருவின் மணாளன் -1-9-1

திருமகள் எப்போதும் ஆலிங்கனம் செய்யும் சௌபாக்யத்திற்கான எல்லா லஷணங்களும் உடையவர் –ஸ்ரீ பராசர பட்டர் –

த்யாயேத் கமல கர்ப்பாபம் தேவம் லஷ்மீ பதிம் தத கமலாலய ஹேதீச விபூஷித கரத்வயம் –
தந் மநவ் ச புண்டரீகாக்ஷ சகல ஸூக ஸுவ்பாக்ய வாரிதே

எல்லாப் பிரமாணங்களாலும் அறியப் படுபவர் -அவர் ஒருவரே உண்மைப் பொருள் – -ஸ்ரீ சங்கரர் –

உலகப் படைப்பிற்கும் காரணம் முதலிய எல்லா வித லஷணங்களும் பொருந்தியவர் –
மிகச் சிறந்தவர் -என்று அறியத் தக்கவர் –ஸ்ரீ சத்ய சந்தர் –

——————

362-லஷ்மி வாந-
ஸ்ரீ மான் -பூ மகளார் தனிக் கேள்வன் -1-9-3-
மலர்மகள் விரும்பும் நம் அரும் பெறல் அடிகள் -1-3-1-

எப்போதும் திருமகளுடன் கூடி இருப்பவர் –ஸ்ரீ பராசர பட்டர் –

த்வயம் தேவீ பரிணயோ லீலயைவ சமர்ப்பயன் ப்ரகாஸயன் அநாதித்வம் ஆத்மநா ப்ரக்ருதே ஸஹ
மத்கரை அநு வித்தேயம் ப்ரக்ருதி பிராக்ருதே அஹம் யத அம் ஆஸ்ரிதச்ச அஸ்யா மூர்த்தி மயி யேதத்தாத் மிகா —
திருக் கல்யாணம் செய்து ஆத்மா பிரகிருதி தத்வங்கள் அந்தாதி அந்தம் இல்லாதவை என்ற ரஹஸ்யத்தை வெளியிட்டு அருளினான்

எப்போதும் திருமகள் மார்வில் தங்கப் பெற்றவர் – -ஸ்ரீ சங்கரர் –

பக்தர்களை நன்கு பார்ப்பவர் -லஷ்மீ செல்வம் பிரகாசம் ஆகியவற்றை யுடையவர் –ஸ்ரீ சத்ய சந்தர் –

——————-

363-சமித்ஜ்ஞய-
விஷய ஸ்ரீ யை உடையவன் -அகில துக்க ஜெய
என்னைத் தீ மனம் கெடுத்தாய் –மருவித் தொழும் மனமே தந்தாய் –

பிதாவான தமக்கு அடிமை செய்வதில் விவாதம் செய்யும் ஜீவர்களை தாயான லஷ்மியைக் கொண்டு வசப்படுத்துபவர் –ஸ்ரீ பராசர பட்டர் –

அகில துக்க ஜய –துயரங்களை விலக்கி ஜெயசீலனாக விளங்குகிறான்

போர்களில் வெல்பவர் – -ஸ்ரீ சங்கரர் –

போர்களில் வெல்பவர் –ஸ்ரீ சத்ய சந்தர் –

————–

விஷரோ ரோஹிதோ மார்கோ ஹேதுர் தாமோதரஸ் சஹ
மஹீதரோ மஹா பாகோ வேகவா நமிதாசன –40

————-

364-விஷர-
குறைவற்றவன் -நீங்காத அன்பு உள்ளவன்
அருகலிலாய பெரும் சீர் அமரர்கள் ஆதி முதல்வன் -1-9-10-

அடியவர்களிடம் நீங்காத அன்புடையவர் –ஸ்ரீ பராசர பட்டர் –

அழிவு இல்லாதவர் – -ஸ்ரீ சங்கரர் –

பக்தர்கள் வேண்டுவதை விசேஷமாக கொடுப்பவர் -அழிவற்றவர்–ஸ்ரீ சத்ய சந்தர் –

—————-

365-ரோஹித
சிவந்தவன் –
திருச் செய்ய –கமலக் கண்ணும் செவ்வாயும் செவ்வடியும் செய்ய கையும்
திருச் செய்ய கமல வுந்தியும் செய்ய கமல மார்வும் திகழ என் சிந்தை யுளானே -8-4-7-

தாமரையின் உட்புறம் போல் சிவந்தவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

தம் விருப்பத்தினால் சிவந்த மத்ஸ்ய மீன் வடிவைக் கொண்டவர் –ஸ்ரீ சங்கரர் –

சிவந்த நிறம் உள்ளவர் –ஸ்ரீ சத்ய சந்தர் –

——————

366-மார்க்க
தேடப்படுபவன் –
திரு மோகூர் காள மேகத்தை அன்றி மற்று ஓன்று இலம் கதியே -10-1-1-
தாள் அடைந்தார் தங்கட்கு தானே வழித் துணையாம் காளமேகம்

உபாசகர்களால் தேடப் பெறுபவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

வாஞ்சித சித்தி பிரத–அடியார்களின் அபீஷ்டங்களை உடனே அளிப்பவன்

மோஷத்தை விரும்புவர்களால் தேடப்படுபவர் -பரமானந்தத்தை அடைவதற்கு வழியாக இருப்பவர் –ஸ்ரீ சங்கரர் –

ஞானிகளால் சாஸ்திர விசாரங்களில் தேடப்படுபவர் -லிங்க சரீரத்தை அழித்து மோஷம் தருபவர் என்றும் கூறுவர்–ஸ்ரீ சத்ய சந்தர் –

———————-

367-ஹேது
காரணம் -அடியார் ஆசைகள் நிறைவு பெற காரணன்
ஏன்றேன் அடிமை இழிந்தேன் பிறப்பு இடும்பை ஆன்றேன் -நான் திரு -95-

பக்தர்களுக்குப் பயன் கிடைக்கக் காரணம் ஆனவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

உபாதான நிமித்த காரணங்களாக இருப்பவர் –ஸ்ரீ சங்கரர் –

உலகிற்குக் காரணமாக இருப்பவர் –ஸ்ரீ சத்ய சந்தர் –

————————

368-தாமோதர –
தாமம் -உலகம் கயிறு உலகங்களை வயிற்றில் தாங்குபவன்
வெண்ணெய் விழுங்க வெகுண்டு ஆய்ச்சி கண்ணிக் கயிற்றினால் கட்டத் தான் கட்டுண்டு இருந்தான் -மூன்றாம் திரு
மலர்மகள் விரும்பும் நம் அரும் பெறல் அடிகள் மத்துறு கடை வெண்ணெய் களவினில்
உரவிடை யாப்புண்டு உரலினோடு இணைந்து இருந்தான் –

யசோதை கட்டிய கயிற்றை வயிற்றிலுடையவர்-எம்பெருமானுடைய சாதுர்யமானது லஷ்மியாலும் கொண்டாடப் படுவதாக இருந்த போதிலும்
யசோதையினால் உரலில் கட்டப் பட்ட போது-அவள் மீது உள்ள அன்பால் கட்டை அவிழ்த்துக் கொள்ளாமல்
கண்ணீர் விட்டு அழுது கொண்டு நின்றானே -ஸ்ரீ பராசர பட்டர் –

தாமாநி லோக நாமாநி பந்தி யஸ்ய உதராந்தரே தேந தாமோதரோ தேவ
தேவாநாம் ஸூக ஸம்ஸித்வாத் தாமாத் தாமோதரம் விது –உத்யோக பர்வம் -தேவர்களுக்கு தாம -ஸூகம் அளிப்பதால் தாமோதரன்
தத ச தாமோதரதாம் ப்ரயயவ் தாம பந்த நாத் -ஸ்ரீ விஷ்ணு புராணம் -5-6-20-

உயர்ந்த மதியினால் அறியப் படுபவர் -யசோதையினால் வயிற்றில் கயிற்றினால் கட்டப் பெற்றவர் -தாம -என்று
கூறப்படும் உலகங்களை தம் வயிற்றிலே கொண்டவர் -என்று வியாசர் கூறின படியால் தாமோதரர் –ஸ்ரீ சங்கரர் –

வள்ளல்களுக்கு மகிழ்ச்சியை அளிப்பவர்-பிரளய ஜலத்தில் விளையாடி மகிழ்பவர் -இந்த்ரியங்களை அடக்கிய முனிவர்களிடம் மகிழ்பவர் –
துன்பத்தை விளைக்கும் அசுரர்களுக்குத் துன்பம் தருபவர் -கிருஷ்ணாவதாரத்தில் யசோதை வயிற்றில்
கட்டிய கயிற்றை யுடையவர் -பொறுமை யுள்ள ஜீவர்களிடம் மகிழ்பவர் –ஸ்ரீ சத்ய சந்தர் –

——————–

369-சஹ
பொறுமை உள்ளவன் -எத்திறம் உரலினோடு இணைந்து இருந்து ஏங்கிய எளிவே -1-3-9-

இப்படிக் கட்டுவது -மிரட்டுவது அடிப்பது முதலிய வற்றைப் பொறுத்துக் கொள்பவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

எல்லா வற்றையும் வெல்பவர் –ஸ்ரீ சங்கரர் –

எல்லா வற்றையும் பொறுத்துக் கொள்பவர் –ஸ்ரீ சத்ய சந்தர் –

—————–

370-மஹீதர –
பூமியைத் தாங்குபவன்
எயிற்று இடை மண் கொண்ட வெந்தை –

அவரே பூமியைத் தாங்குபவராக இருப்பவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

பூமியை மலை வடிவில் தாங்குபவர் –ஸ்ரீ சங்கரர் –

பூமியைத் தாங்குபவர்–ஸ்ரீ சத்ய சந்தர் –

——————

371-மஹா பாக
மகா பாக்கியம் உடையவன் மலர்மகள் ஆயர் மடமகள் 16000 மகிஷிமார்கள் விரும்பி ஏற்ற சௌபாக்யம்
வடிவிணை இல்லா மலர் மகள் மற்றும் மண் மகள் பிடிக்கும் மெல்லடியான் -9-2-10-

ஆயர்குலப் பெண்கள் -பதினாறாயிரம் பெண்கள் நப்பின்னை ருக்மிணி சத்யபாமை ஜாம்பவதீ முதலியோர்
தாமே விரும்பி வந்து அடையும் வடிவழகு யுடையவர் –ஸ்ரீ பராசர பட்டர் –

தமக்கு விருப்பமான உடலைக் கொண்டு உயர்ந்த உணவுகளை உண்பவர் –
அவதாரங்களில் சிறந்த போகங்களை அனுபவிப்பவர் —ஸ்ரீ சங்கரர் –

யஜ்ஞங்களில் உயர்ந்த ஹவிர்ப்பாகம் உள்ளவர் -உயர்ந்த ஒளியுள்ள கோவர்த்தன மந்தர மலைகள் உடையவர் –
ஐஸ்வர்யம் முதலிய ஆறு குணங்களுக்கு ஆதாரமாக உள்ளவர் –ஸ்ரீ சத்ய சந்தர் –

—————

372-வேகவான்
வேகம் உள்ளவன் –
குரவை யாய்ச்சியர் யெழ கோத்தததும் குன்றம் ஓன்று ஏந்தியதும் –இவை போல்வனவும்
பிறவும் –என்னப்பன் தன் மாயங்கள் –

மனிதக் குழந்தையாக விளையாடும் போதும் தமது பரமேஸ்வர சக்தியின் வேகம் குறையாதவர் –ஸ்ரீ பராசர பட்டர் –

வேகத்தை யுடையவர் —ஸ்ரீ சங்கரர் –

கஜேந்த்திரன் முதலிய பக்தர்களைக் காப்பதில் வேகம் உள்ளவர் –ஸ்ரீ சத்ய சந்தர் –

—————–

373-அமிதாசன
பெரும் தீனி உண்பவன்
வயிற்றினொடு ஆற்றா மகன் -மூன்றாம் திரு -91
அட்டுக்குவி சோற்றுப் பருப்பதமும் தயிர் வாவியும் நெய்யளரும் அடங்கப் பொட்டத் துற்று -பெரியாழ்வார் -3-5-1
கார் ஏழ் கடல் ஏழ் மலை ஏழ் உலகுண்டும் ஆரா வயிற்றான் -10-9-2–முன்பே 304 பார்த்தோம்-

ஆயர்கள் இந்திரனுக்கு என்று வைத்து இருந்த அளவற்ற சோற்றை உண்டவர் –ஸ்ரீ பராசர பட்டர் –

தேவோ வா தானவோ வா த்வம் –அஹம் வோ பாந்தவ ஜாத –ஸ்ரீ விஷ்ணு புராணம்

சம்ஹார காலத்தில் அளவற்ற உலகங்களை உண்பவர் —ஸ்ரீ சங்கரர் –

அளவுபட்ட மகிழ்ச்சியை அனுபவிக்கும் ஜீவர்களைக் காட்டிலும் மாறுபட்டவர் –
பிரளயத்தில் அளவில்லாமல் உண்பவர் –ஸ்ரீ சத்ய சந்தர் –

———

உத்பவ ஷோபணோ தேவாஸ் ஸ்ரீ கர்ப்ப பரமேஸ்வர
கரணம் காரணம் கர்த்தா விகரத்தா கஹநோ குஹ –41

—————-

374-உத்பவ
கட்டை விலக்குமவன்
தாமோதரம் பந்த தரம்

கயிற்றினால் கட்டப்பட்ட அவரை தியானிப்பவர்களுக்கு உலக வாழ்க்கை யாகிய கட்டைப் போக்குபவர் –ஸ்ரீ பராசர பட்டர் –

தாமோதரம் பந்தஹரம் -கட்டுப்பட்டதை அனுசந்திக்க நம் சம்சாரக் கட்டு அவிழும்

உலகிற்கு உபாதான காரணமாக இருப்பவர் -சம்சாரத்திற்கு அப்பால் பட்டவர் —ஸ்ரீ சங்கரர் –

உயர்ந்தவர்களாகச் சொல்லப்படும் பார்வதியின் பதியான ருத்ரன் முதலியவர்களைப் படைத்தவர் –
சம்சாரத்தைத் தாண்டுவிப்பவர் -சம்சாரத்தைக் கடந்தவர் –ஸ்ரீ சத்ய சந்தர் –

——————-

375-ஷோபண-
கலக்குகிறவன் -பிரதி கூலரை

கட்டுப் படுவதற்கு உரிய பிற ஜீவர்களையும் உலகையும் கலக்குபவர் –ஸ்ரீ பராசர பட்டர் –

சிருஷ்டி காலத்தில் ஜீவனையும் மாயையும் பிரவேசித்துக் கலக்குபவர் —ஸ்ரீ சங்கரர் –

பிரகிருதி புருஷர்களைக் கலங்கும்படி செய்பவர் –ஸ்ரீ சத்ய சந்தர் –

—————

376-தேவ –
விளையாடுபவன்
பல பல மாய மயக்குகளால் இன்புறும் இவ்விளையாட்டு உடையானே -3-10-7
நஹூஷ -312 முன்பு பார்த்தோம் -ஆதிதேவ -335-முன்பு பார்த்தோம்

புலி பன்றி முதலியவற்றைக் கட்டி விளையாடுவது போலே ஜீவர்களை மாயை என்னும்
கயிற்றினால் கட்டி விளையாடுபவர் –ஸ்ரீ பராசர பட்டர் –

சிருஷ்டி முதலிய செயல்களால் விளையாடுதல் முதலிய செயல்களைச் செய்பவர் -தேவர்களின் விரோதிகளை வெல்பவர் –
எல்லா பூதங்களிலும் செயல்படுபவர் -ஆத்மாவாக பிரகாசிப்பவர் -ஸ்தோத்ரங்களால் துதிக்கப் படுபவர் –
எல்லா இடங்களிலும் செல்பவர் —ஸ்ரீ சங்கரர் –

விளையாடுபவர் -போற்றப் படுபவர் -அடையப் படுபவர் –ஸ்ரீ சத்ய சந்தர் –

—————–

377-ஸ்ரீ கர்ப்ப –
திரு மகளைப் பிரியாதவன் -கர்ப்ப -வளரும் இடம்
கோல மலர்ப் பாவைக்கு அன்பாகிய என்னன்பன்-

இவ் வகைகளான விளையாட்டுகளிலும் அகலாமல் இருக்கும் திருமகளை கர்ப்பத்தைப் போல் காப்பவர் –ஸ்ரீ பராசர பட்டர் –
போக க்ரீடா சாஹித்யேன வர்த்த நீயா அஸ்ய ஸ்ரீ -பட்டர்-

விஷ்ணோ ஏஷ அநபாயினீ

தமது செல்வமாகிய உலகம் அனைத்தையும் வயிற்றில் வைத்து இருப்பவர் —ஸ்ரீ சங்கரர் –

லஷ்மீ தேவியின் கர்ப்பத்திற்குக் காரணம் ஆனவர் –ஸ்ரீ சத்ய சந்தர் –

———————–

378-பரமேஸ்வர –
திருவுக்கும் திருவாகிய செல்வா தெய்வத்துக்கு அரசே -பெரிய திருமொழி -7-7-1

இப்படித் திரு மகளே விரும்பும்படி இருப்பதால் தம் மேன்மை பயன் பட்டு இருப்பவர் –ஸ்ரீ பராசர பட்டர் –

அதீவ ராம சுசுப அபி ராமயா விபு ஸ்ரீ யா விஷ்ணு ரிவாமரேஸ்வர–பால -77-33-

எல்லா வற்றிற்கும் மேலான ஈஸ்வரர் —ஸ்ரீ சங்கரர் –

உலகத்தைக் காப்பவராகவும் ஸ்ரீ லஷ்மி தேவிக்கு பதியாகவும் இருப்பவர் –
தமக்கு மேம்பட்டவர் இல்லாத ஈஸ்வரர் –ஸ்ரீ சத்ய சந்தர் –

——————–

379-கரணம்
உபாயமாய் இருப்பவன்
என் இருடீகேசனே இருடீகேசன் எம்பிரான் -2-7-9-

தம்மை அடைவதற்குத் தாமே சிறந்த கருவியாக இருப்பவர் -ஞான இந்த்ரியங்களான காது கண் முதலியன
கர்ம இந்த்ரியங்களான கை கால் முதலியன ஆகிய இவைகளும் எம்பெருமானுடைய இச் சக்தியில் லவலேசம் இருப்பதால்
கரணங்கள் எனப் படுகின்றன –ஸ்ரீ பராசர பட்டர் –

சஷுச் ச த்ரஷ்டவ்யம் ச நாராயண ஸ்ரோத்ரம் ச ஸ்ரோதவ்யம் ச நாராயண -ஸூபால உபநிஷத்

உலகின் உற்பத்திக்கு முழு முதல் கருவியாக இருப்பவர் —ஸ்ரீ சங்கரர் –

சுகம் அல்லது பலம் தரும் கை உள்ளவர் –ஸ்ரீ சத்ய சந்தர் –

———————————————————————–

3-20-சேதனர்கள் உடன் இணைந்து இருக்கும் ஒட்டின்மை -380-384-

380-காரணம் –
இயக்குபவன் -காரணம் கிரிசை கருமம் இவை முதல்வன் -2-7-2-

அந்தந்த இந்த்ரியங்களால் ஜீவர்களுக்கு எல்லா அறிவையும் கொடுப்பவர் –ஸ்ரீ பராசர பட்டர் –

உபாதான நிமித்த காரணமாக இருப்பவர் —ஸ்ரீ சங்கரர் –

வாயுவுக்கும் நான்முகனுக்கும் புகலிடமானவர்- உலகைப் படைத்தவர் -ஜலத்தை இருப்பிடமாக உடையவர் –ஸ்ரீ சத்ய சந்தர் –

—————-

381-கர்த்தா
செயல்படுபவன் –அனைத்தும் அவன் அதீனம்
செய்கின்ற கிரியை எல்லாம் நானே என்னும் –செய்வார்களைச் செய்வேனும் யானே என்னும்
செய்கைப் பயன் உண்பேனும் யானே என்னும்

அப்படிச் செய்விப்பதில் தாமே சுதந்திரராக இருப்பவர் -ஒரு செயலைச் செய்யும் அதிகாரியான ஜீவன் அதற்குரிய பலனை
புஜிக்கும் ஜீவன் எப்படித் தனது இன்ப துன்பங்களுக்கு அபிமானியாக இருக்கிறானோ அப்படியே எம்பெருமானும் அந்த ஜீவர்களை விட
அதிகமாக அவர்களுடைய இன்ப துன்பங்களுக்குத் தான் அபிமானியாக இருக்கின்றார் –ஸ்ரீ பராசர பட்டர் –

வியசனேஷு மனுஷ்யானாம் ப்ருசம் பவதி துக்கித உத்சவேஷு ச சர்வேஷு பிதேவ பரிதுஷ்யதி–அயோத்யா -2-40-
பஹு ஸ்யாம் ப்ரஜாயேய –தைத்ரியம்

சுதந்திரமானவர் –ஸ்ரீ சங்கரர் –

அனைத்தையும் நடத்துபவர் -பந்தத்தை அழிப்பவர்- -ஸ்ரீ சத்ய சந்தர் –

——————

382-விகாரத்தா
மாறுதல் அடைபவன்
பிறர் சுகம் துக்கம் தன்னதாக

பிறருடைய இன்ப துன்பங்களைத் தாமும் அடைந்து மாறுகிறவர் -இது குற்றம் ஆகாது –
பரதுக்க துக்கித்வம் கல்யாண குணமே –ஸ்ரீ பராசர பட்டர் –

விசித்திரமான உலகங்களைப் படைத்தவர் —ஸ்ரீ சங்கரர் –

பலவிதமான செய்கைகள் உடையவர் -தனக்கு ஒரு கர்த்தா இல்லாதவர் –ஸ்ரீ சத்ய சந்தர் –

——————

383-கஹன –
அறிவுக்கு எட்டாதவன்
விண்ணவர்க்கு எண்ணல் அரியான்-சிந்திக்கும் கோசரம் அல்லன் -1-9-2/6

இப்படி ஜீவர்களுடைய இன்ப துன்பங்களைத் தம்முடையவையாக நினைப்பதாகிய
மஹா குணத்தில் கரை கடந்தவர் –ஸ்ரீ பராசர பட்டர் –

சஹைவ சந்தம் ந விஜா நந்தி தேவா –தைத்ரியம் 3-2-4-
ய ப்ருதிவ்யாம் திஷ்டன் –இத்யாதி
சஷுச் த்ரஷ்டவ்யம் ச நாராயண
அதிஷ்டானம் ததா கர்த்தா கரணம் ச ப்ருதக் விதம் விவிதா ச ப்ருதக் சேஷ்டா தைவம் சைவாத்ர பஞ்சமம் –ஸ்ரீ கீதை 18-14–

தம்முடைய தன்மை சக்தி செயல்களை ஒருவரும் அறிய முடியாதவர் —ஸ்ரீ சங்கரர் –

அறிந்து கொள்ள முடியாதவர் – -ஸ்ரீ சத்ய சந்தர் –

—————–

384-குஹ-
ரஷகன் காக்கும் இயல்வினன் கண்ண பெருமான் -2-2-9-

இவ்வாறு எல்லோரையும் காப்பவர் –ஸ்ரீ பராசர பட்டர் –

மாயையினால் தம் ஸ்வரூபத்தை மறைப்பவர் —ஸ்ரீ சங்கரர் –

தன் ஸ்வரூபத்தை மறைப்பவர் –ஸ்ரீ சத்ய சந்தர் –

———————————————————————————-

வ்யவசாயோ வ்யவஸ்தாநஸ் சமஸ்தான ஸ்தா நதோ த்ருவ
பரர்த்தி பரம ஸ்பஷ்ட ஸ்துஷ்ட புஷ்டஸ் ஸூ பேஷண–42

————

3-21-த்ருவ-திரு நாமங்கள் -385-389

385-வ்யவஸாய
நஷத்ரங்களுக்கு ஆதாரமாய் இருப்பவன்
விளங்கு தாரகை எங்கோ -3-4-2-

நஷத்ரங்கள் முதலியன தம்மிடம் கட்டுப் பட்டு இருக்கப் பெற்றவர் –ஸ்ரீ பராசர பட்டர் –

ககந மூர்த்தயே
பல சக்ர ப்ருதம் தேவம்

ஞான ஸ்வரூபியாக இருப்பவர் —ஸ்ரீ சங்கரர் –

உறுதியான தன்மை அல்லது வடிவம் உடையவர் –ஸ்ரீ சத்ய சந்தர் –

—————

386-வ்யவஸ்தான-
காலம் ஜ்யோதிஷ பதார்த்தங்கள் கதி நிர்ணயம்
ஆதியான வானவாணர் அந்த கால நீ யுரைத்தி ஆதியான கால நின்னை யாவர் காண வல்லரே -திருச்சந்த -34

கலை முஹூர்த்தம் முதலிய காலப் பிரிவுகளின் நிலைக்குக் காரணம் ஆனவர் –ஸ்ரீ பராசர பட்டர் –

கலை-2-நிமிஷம் / முஹூர்த்தம் –2-மணி -48-நிமிஷங்கள்/
க்ருத -1728000- / த்ரேதா -1296000-/த்வாபர -864000-/கலி யுகம் -432000-வருஷங்கள்

எல்லா வற்றுக்கும் ஆதாரமாக இருப்பவர் -லோகபாலர்களுடைய அதிகார் வ்யவஸ்தை-கர்ப்பத்திலிருந்து பிறப்பவைகள் முட்டையில்
இருந்து பிறப்பவைகள் -வியர்வையில் இருந்து பிறப்பவைகள் -பூமியில் இருந்து பிறப்பவைகள் ஆகியோருடைய
ஜன்ம வ்யவஸ்தை பிராமணர்கள் ஷத்ரியர்கள் வைச்யர்கள் சூத்ரர்கள் கலப்பினங்கள் ஆகியோருடைய ஜாதி வ்யவஸ்தை
ப்ரம்மசர்ய கார்ஹச்த்ய வானப்ரஸ்த சன்யாச ஆகிய ஆஸ்ரம வ்யவஸ்தை அவற்றின் தர்ம வ்யவச்தைகள்
ஆகிய வியவஸ்தைகளை-கட்டுப்பாடுகளை பகுத்து ஏற்படுத்தியவர் —ஸ்ரீ சங்கரர் –

அசுரர்களுக்கு விரோதமாக இருப்பவர் -விழிப்பு கனவு துக்கம் முதலிய நிலைகளை நடத்துபவர் –
தேவர்களுக்கு அனுக்ரஹம் செய்பவர் –ஸ்ரீ சத்ய சந்தர் –

————-

387-சம்ஸ்தான
அந்தம் -அனைத்தையும் ஒரு கால விசேஷத்தில் முடிவு அடையச் செய்கிறான்

எல்லாம் தம்மிடத்தில் முடிவு பெறும்படி இருப்பவர் –ஸ்ரீ பராசர பட்டர் –

சிறந்த ஸ்தானத்தை உடையவர் -பிரளயத்தில் பூதங்கள் அடையுமிடமாக இருப்பவர் –ஸ்ரீ சங்கரர் –

வாயுக்கள் நிலை பெற்று இருக்கச் செய்பவர் –ஸ்ரீ சத்ய சந்தர் –

—————-

388-ஸ்தாநத –
மேலான ஸ்தானம் அளிப்பவன்-
அன்று சராசரங்களை வைகுந்தத்து ஏற்றி -பெருமாள் திரு -10-1-

உயர்ந்த ஸ்தானத்தைக் கொடுப்பவர் –ஸ்ரீ பராசர பட்டர் –

த்ருவன் முதலியவர்க்கு அவரவர் கருமத்திற்கு ஏற்ற ஸ்தானத்தைக் கொடுப்பவர் –ஸ்ரீ சங்கரர் –

பக்தர்க்கு வைகுண்டம் முதலிய ஸ்தானம் தருபவர் -அயோக்யர்களின் இருப்பிடத்தை அழிப்பவர் – -ஸ்ரீ சத்ய சந்தர் –

—————–

389-த்ருவ
நிலைத்து இருப்பவன்

கீழ்ப்பட்டவனான த்ருவனுக்கும் அழியாத உயர்ந்த நிலை கொடுத்தவர் –ஸ்ரீ பராசர பட்டர் –

அழியாதவர் –ஸ்ரீ சங்கரர் –

அழிவில்லாதவர்–ஸ்ரீ சத்ய சந்தர் –

————–

ஸ்ரீ பர வாசூதேவனின் குணங்கள் –

334-வாஸூ தேவ -அனைத்துள்ளும் வசிப்பவர் -சூர்யன் தன் ஒளியால் உலகமூடுவது போலே உலகையே அணைத்தவர்
335-ப்ருஹத்பாநு -பல்லாயிரம் சூர்யர்களின் ஓளியை உடையவர் –
336-ஆதிதேவ -உலகிற்கு முதல் காரணமாய் இருந்து படைப்பை விளையாட்டாகக் கொண்டவன் –
337-புரந்தர -அசூரர்களின் பட்டணங்களை அழிப்பவர்
338-அசோகா -பசி மயக்கம் முதலிய துன்பங்களைப் போக்குபவர் –
339-தாரண -திருடர் பகைவர் முதலான பயன்களைத் தாண்டுபவர் –
340-தார -பிறப்பு இறப்பு கர்ப்ப வாசம் முதலிய அச்சங்களைத் தாண்டுவிப்பவர் –

341-சூர -மேற்கண்டவைகளில் எப்போதும் வெற்றி திறல் உடையவர் –
342-சௌரி-சூரன் என்னும் வசூதேவரின் மகன் –
343-ஜ நேஸ்வர-பிறப்புடைய மக்களுக்கு எல்லாம் தலைவர் –
344-அனுகூல -தன் மேன்மை பாராமல் அடியார்களால் எளிதில் அடையப் படுபவர் –
345-சதாவர்த -அடங்காமல் வளர்ந்து வரும் செல்வச் சூழல்களை உடையவர் –

———————————————————-

ஸ்ரீ பர வாசூதேவனின் திருமேனி –

346-பத்மீ-கையிலே விளையாட்டுத் தாமரையை பிடித்து இருப்பவர் –
347-பத்ம நிபேஷண-தாமரை போல் மலர்ந்த கண்களால் அருளுபவர் –
348-பத்ம நாப – தன் உந்தியில் மலர்ந்த தாமரையை உடையவர்
349-அரவிந்தாஷ–கமலம் போன்ற கண்கள் உடையவர் –
350-பத்ம கர்ப -அடியார்களின் தாமரை போன்ற இதய ஆசனத்திலே வீற்று இருப்பவர் –
351-சரீரப்ருத் -தமக்கு உடல் போன்ற பக்தர்களைப் பேணுபவர் –

—————————————————————-

ஸ்ரீ பர வாசூதேவனின் – செல்வம் –

352-மஹர்த்தி -பக்தர்களைப் பேணுவதற்காகப் பெரும் செல்வம் உடையவர் –
353-ருத்த -பக்தர்கள் வளர்வதைக் கண்டு தான் செழிப்பவர்-விபீஷணனுக்கு முடி சூடி தான் ஜூரம் தவிர்ந்து மகிழ்ந்தார் பெருமாள் –
354-வ்ருத்தாத்மா -மேற்கண்ட பெருமைகளை உள்ளங்கையிலே அடக்கம் அளவிற்கு ஸ்வரூப மேன்மை பெற்றவர் –
355-மஹாஷ-வேத வடிவரான கருடனை வாகனமாகக் கொண்டவர் –
356-கருடத்வஜ -பரம் பொருளுக்கு அடையாளமாய் கருடனையே கொடியாகக் கொண்டவர் –
357-அதுல -நிகர் அற்றவர் ஒப்பிலியப்பன் –
358-சரப -வேத வரம்புகளை மீறினவர்களை அழிப்பவர் –
359-பீம-ஆணையை மீறுபவர்களுக்கு பயத்தைக் கொடுப்பவர் -தேவர்களும் பெருமானின் ஆணைக்கு உட்பட்டே கடைமையை ஆற்றுபவர் –
360-சமயஜ்ஞ- பக்தர்களைக் காப்பதற்கு வேண்டிய தக்க தருணத்தை உடையவர் –
361-ஹவிர்ஹரி -யாகங்களில் கொடுக்கப் படும் ஹவிர்பாகத்தைப் பெற்றுக் கொள்பவர் –
பக்தர்களுக்குத் தன்னையே கொடுப்பவர் -அடியார்களின் பாபத்தை போக்குபவர்

—————————————–

ஸ்ரீ பர வாசூதேவன் -ஸ்ரீ யபதி -திருமகள் கேள்வன் –

362-சர்வ லஷண லஷண்ய-திருமகள் நாதனான படியால் மஹா புருஷன் லஷணம் பொருந்தியவன் –
363-லஷ்மீ வான் -விட்டுப் பிரியாத திருமகளை உடையவன் –
364-சமிதிஜ்ஞய -அடியார்களின் குழப்பத்தை வென்று தெளிவு கொடுப்பவர் –
365-விஷர-தன்னை அடைந்தவர்கள் இடம் குறையாத அன்புடையவர் –
366-ரோஹித -தான் கறுத்தவர் –ஆனால் தாமரையின் உட்புறம் போன்ற சிவந்த கண் கை கால் உடையவர் –
மேகத்தைப் போல் பகவான் -அதில் மின்னலைப் போல் மஹா லஷ்மீ –
367-மார்க-பக்தர்களால் எப்போதும் தேடப்படுபவர் –
368-ஹேது -பக்தர்களின் வேண்டுகோள்கள் பயன் பெறக் காரணமாய் இருப்பவர் –
369-தாமோதர -தாமம் என்று பெயர் பெற்ற உலகங்களை வயற்றில் கொண்டவர் -யசோதையின் தாம்பினால் கட்டுண்டவர் –
370-சஹ -திருமகள் கேள்வனாக இருந்தாலும் அவதாரத்தில் கட்டுண்டு எளிமையைக் காட்டுபவர் –

371-மஹீதர -பூமியின் சுமையைத் தாங்குபவர் –
372-மஹாபாக -கோபிகள் மற்றும் ருக்மணீ சத்யபாமா ஆகியோரால் விரும்பப்படும் பெருமையை உடையவர் –
373-வேகவான் -மனிதக் குழந்தையாக விளையாடும் போதும் பரம் பொருளான வேகம் குறையாதவர் –
374-அமிதாசன -ஆயர்கள் இந்தரனுக்கு படைத்த அட்டுக்குவி சோற்றை விழுங்கியவர் –
375-உத்பவ -தாம் கட்டுண்டதை நினைப்பவரின் சம்சாரக் கட்டை விலக்குபவர் –
376-ஷோபண-சம்சாரத்தில் கட்டும் பிரக்ருதியையும் கட்டுப்படும் ஜீவர்களையும் சிருஷ்டியின் போது கலக்கி உண்டாக்குபவர் –
377-தேவ -ஜீவர்களை விளையாடச் செய்து தானும் விளையாடுபவர் –
378- ஸ்ரீ கர்ப-நீக்கமில்லாத திருமகளோடு இன்புறுமவர்-
379-பரமேஸ்வர -நீக்கமில்லாத் திருமகள் தொடர்போடு அனைத்தையும் ஆட்சி செய்பவர் –
380-கரணம் -காணுதல் கேட்டல் முதலான செயல்களுக்கு கருவியாக இருப்பவர்
381- காரணம் -புலன்கள் செயல்படுவதற்குக் காரணம் ஆனவர் –

—————————————————-

கருவியும் காரணமும் இயக்குமவனும் செய்பவனும் அவனே-

382-கர்த்தா -ஜீவர்களின் இன்ப துன்பங்களைத் தன்னதாக கொண்டு
383-விகாரத்தா -அடியார்களின் இன்ப துன்பங்களில் பங்கு கொண்டாலும் தான் இன்ப துன்பங்களால் மாறுபடாதவர்-
பிறருக்காக துக்கப்படுதல் குற்றம் அல்லவே
384-கஹன-ஜீவர்களின் இன்ப துன்பங்களை தன்னதாக நினைப்பதில் ஆழம் காண முடியாதவர் –
385-குஹ -மேல் சொன்ன வகைகளில் அடியார்களைக் காப்பவர்

——————————————————–

ஸ்ரீ த்ருவனும் நஷத்ர மண்டலமும் –

386-வ்யவசாய-அனைத்து க்ரஹங்களும் நஷத்ரங்களும் உறுதியாக தன்னிடம் பிணைக்கப் பட்டு இருக்கிறவர் –
387-வ்யவஸ்தான-காலத்தின் பிரிவுகளான -கலை நாழிகை முஹூர்த்தம் -ஆகியவற்றுக்கு அடிப்படையானவர் –
388-சமஸ்தான -அனைத்தும் இறுதியில் தம்மிடம் முடியும்படி இருப்பவர் –
389-ஸ்தா நத-த்ருவனுக்கு அழியாத உயர்ந்த ஸ்தானத்தைக் கொடுத்தவர் –
390-த்ருவ -அழியாதவர் -த்ருவனுக்குப் பதவி கொடுத்து அழியாப் புகழ் கொடுத்தவர் –

————————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பராசர பட்டர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பீஷ்மர் திருவடிகளிலே சரணம்
ஸ்ரீ வியாச பகவான் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: