ஸ்ரீ விஷ்ணு சகஸ்ர நாமம்–3-8-நரசிம்ஹ அவதார -200-210 –திரு நாமங்கள் / 3-9-மத்ஸ்ய அவதார -211-225- திரு நாமங்கள்

அம்ருத்யுஸ் சர்வத்ருக் சிம்ஹஸ் சந்தாதா சந்திமான் ஸ்திர
அஜோ துர்மர்ஷணஸ் சாஸ்தா விஸ்ருதாத்மா ஸூராரிஹா –22-
குரூர் குருதமோ தாம சத்யஸ் சத்ய பராக்ரம
நிமிஷோ அநிமிஷஸ் ஸ்ரக்வீ வாசஸ்பதி ருதாரதீ -23
அக்ரணீர் க்ராமணீஸ் ஸ்ரீமான் நயாயோ நேதா ச்மரணீ
சஹச்ர மூர்த்தா விச்வாத்மா சஹச்ர ராஷஸ் சஹச்ர பாத் –24

———–

3-1-பிரதம அவதாரம் விஷ்ணு -147-152- திரு நாமங்கள்
3-2-வாமன அவதார பரமான திரு நாமங்கள் -153-164-
3-3- துஷ்ட நிக்ரஹ இஷ்ட பரிபாலநம் -165-170-திரு நாமங்கள்
3-4-ஜ்ஞானாதி பகவத் குணங்கள் கொண்டவன் -171-181- திரு நாமங்கள்
3-5-குணங்களுக்கு ஏற்ற அவதார செயல்கள் -182-186-திரு நாமங்கள்
3-6-ஹம்ஸாவதாரம் -187-194-திரு நாமங்கள்-7 திரு நாமங்கள்
3-7-பத்மநாபாவதாரம்-195-199-திரு நாமங்கள்-5 திரு நாமங்கள்
3-8-நரசிம்ஹ அவதாரம் ——200-210—திரு நாமங்கள்—11 திரு நாமங்கள்
3-9-மத்ஸ்ய அவதார -211-225- திரு நாமங்கள் –15-திரு நாமங்கள்

———————————————————————————-

அம்ருத்யுஸ் சர்வத்ருக் சிம்ஹஸ் சந்தாதா சந்திமான் ஸ்திர
அஜோ துர்மர்ஷண்ஸ் சாஸ்தா விஸ்ருதாத்மா ஸூராரிஹா –22-

———-

3-8-நரசிம்ஹ அவதார -200-210 திரு நாமங்கள் -11–திரு நாமங்கள்

200-அம்ருத்யு
ம்ருத்யு வின் விரோதி -பிரகலாதனை மிருத்யு விடம் இருந்து ரஷித்து அருளி
நமன் சூழ் நரகத்து நம்மை நணுகாமல் காப்பான் -மூன்றாம் திரு -98-

நரசிம்ஹ அவதாரத்தில் ம்ருத்யுவுக்கும் ம்ருத்யுவானவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

அழிவோ அதற்குக் காரணமோ இல்லாதவர் -ஸ்ரீ சங்கரர்

அழிவில்லாதவர்-அழிவைத் தராதவர் -ஸ்ரீ சத்ய சந்த தீர்த்தர்-

———————-

201- சர்வ த்ருக் –
யாவரையும் பார்ப்பவன் -நியமிப்பவன்
இவையா எரி வட்டக் கண்கள் -நான் முகன் -21
பார்த்தான் அறு சமயங்கள் பதைப்ப -பிரமாணங்கள் பார்த்து அருளிய நம் ராமானுசன்

நண்பர் பகைவர் நடுநிலையாளர் ஆகியோரை அவரவர்க்கு உரிய முறையில் நடத்துதல் பொருட்டு
உள்ளபடி பார்த்து அறிபவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

பிராணிகளின் புண்ய பாவங்கள் எல்லாவற்றையும் இயற்கையான அறிவினால் எப்போதும் பார்ப்பவர் -ஸ்ரீ சங்கரர் –

எல்லாவற்றையும் உள்ளபடி பார்ப்பவர் -ஸ்ரீ சத்ய சந்தர்-

—————-

202- சிம்ஹ
சிங்கப் பிரான்
இமையோர் பெருமான் அரி பொங்கக் காட்டும் அழகன் -நான் முகன் -21
அழகியான் தானே அரி யுருவன் தானே -நான் முகன் திரு -22
அசோதை இளம் சிங்கம்
மீண்டும் வரும் -489-தண்டிப்பவன்

மஹா நரசிம்ஹ ஸ்வரூபி -ஸ்ரீ பராசர பட்டர் –

நினைத்த மாத்திரத்தில் பாவங்களைப் போக்குபவர் -ஸ்ரீ சங்கரர் –

அருளைப் பொழிபவர் -சம்ஹரிப்பவர் -ஸ்ரீ சத்ய சந்தர்-

——————

203-சந்தாதா –
பக்தர்களை தன்னிடம் சேர்த்து கொள்பவன்
யானையின் மஸ்தகத்தை பிளக்கும் சிங்கம் – குட்டிக்கு பால் கொடுக்கும்

பிரகலாதன் முதலிய பக்தர்களைத் தம்மிடம் சேர்த்துக் கொள்பவர் –
ஸ்ரீ ராமாவதாரத்தில் அஹல்யையை கௌதமரோடு சேர்த்து வைத்தவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

பிராணிகளை வினைப் பயங்களுடன் சேர்ப்பவர் -ஸ்ரீ சங்கரர் –

பிரஜைகளை நன்றாகத் தரிப்பவர் -போஷிப்பவர் – ஸ்ரீ சத்ய சந்தர்-

——————-

204-சந்திமான் –
சந்தி சேர்க்கை நித்யமாக பண்ணுபவன் -மான் -மதுப் -நித்ய யோகம் -ஸ்ரீ மான் போலே
ஆஸ்ரிதர் தவறு செய்தாலும் என் அடியார் –செய்தாரேல் நன்று செய்தார் -என்பவன்

அவர்களுக்குத் தமது சேர்க்கை எக்காலமும் நீங்காமல் இருக்கச் செய்பவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

வினைப்பயன்களை அனுபவிப்பவரும் தாமாகவே இருப்பவர் –ஸ்ரீ சங்கரர் –

ஸூக்ரீவன் விபீஷணன் -முதலியவர்களுடன் உடன்பட்டவர் — ஸ்ரீ சத்ய சந்தர்-

——————

205-ஸ்திர –
நிலையாய் நிற்பவன் -சலனம் அற்றவன்
நிலை பேரான் என் நெஞ்சத்து எம்பெருமான் எப்பொழுதும் -10-6-6-
நாம் பெற்ற நன்மையையும் அருள் நீர்மை தந்த அருள் -இரண்டாம் திரு -58-
அருளுகையே இயல்பாக உடையவன் –

கூடியிருக்கையில் அபசாரங்கள் செய்தாலும் அன்பு மாறாமல் இருப்பவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

எப்போதும் ஒரே தன்மையுடன் மாறுபாடு இல்லாமல் இருப்பவர் –ஸ்ரீ சங்கரர் –

எப்பொழுதும் நிலையாக உள்ளவர் — ஸ்ரீ சத்ய சந்தர்-

——————

206-அஜ –
பிறப்பிலி -ஸ்தம்பம் -நம் போல் பிறவாதவன் –
அளந்திட்ட தூணை அவன் தட்ட ஆங்கே வளர்ந்திட்டு வாள் உகிர்ச் சிங்க யுவே -பெரியாழ்வார் -1-6-9
இரணியன் தூண் புடைப்ப அங்கு அப்பொழுதே அவன் வீயத் தோன்றிய சிங்கப் பிரான் -2-8-9-
அஜன் -யாவரையும் வெற்றி கொள்பவன் அகார வாச்யன் 96/514-

தூணில் தோன்றியதால் பிறரைப் போல் பிறவாதவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

வ்யாபிப்பவர் -நடத்துபவர் –ஸ்ரீ சங்கரர் –

பிறப்பில்லாதவர்– ஸ்ரீ சத்ய சந்தர்-

——————–

207-துர்மர்ஷண-
எதிரிகளால் தாங்க முடியாத தேஜஸ் -ஹிரண்யன் பொன் உருகுமா போலே உருக்கிய தேஜஸ்
இவையா பிலவாய் இவையா எரி பொங்கிக் காட்டும் இமையோர் பெருமான் அரி பொங்கிக் காட்டும் அழகு -நான் திரு -21
பொன் பெயரோன் ஆகத்தை கூரார்ந்த வள்ளுகிரால் கீண்டு
குடல் மாலை சீரார் திரு மார்பின் மேல் கட்டி ஆரா வெழுந்தான் அரி யுருவாய் -சிறிய திருமடல்
செம் பொன் ஆகத்து அவுணன் உடல் கீண்டவன் -9-10-6-

பகைவர்களால் தாங்க முடியாதவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

ரதாங்க சங்க தாதாரம் ப்ருஹ்ம மூர்த்திம் ஸூ பீஷணம் –த்யான ஸ்லோகம்

அசுரர்களால் அடக்குவதற்கு முடியாதவர் –ஸ்ரீ சங்கரர் –

எதிர்க்க முடியாதவர் — ஸ்ரீ சத்ய சந்தர்-

——————

208-சாஸ்தா –
சாசனம் பண்ணுமவன்
ஒரு மூ யுலகாளி -9-8-9-
சிம்ஹ கர்ஜனையால் சிஷிப்பவன் -இகலிடத்து அசுரர்கள் கூற்றம் -9-2-2-

இப்படி விரோதிகளை நன்கு தண்டித்தவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

நிநாத வித்ராசித தானவ -ஸ்ரீ விஷ்ணு தர்மம் –கர்ஜனை மூலம் அசுரர்களை நடுங்க வைப்பவன்
த்ரவந்தி தைத்யா -ஸ்ரீ விஷ்ணு தர்மம் -திரு நாமத்தை உச்சரித்த உடன் அசுரர்கள் ஓடிச் செல்கின்றனர்

வேதம் முதலியவற்றால் கட்டளையிட்டு நடத்துபவர் –ஸ்ரீ சங்கரர் –

உலகிற்குக் கட்டளை இடுபவர் — ஸ்ரீ சத்ய சந்தர்-

——————-

209-விஸ்ருதாத்மா –
வியந்து கேட்கப்படும் சரித்ரம்
என் சிங்கப் பிரான் பெருமை ஆராயும் சீர்மைத்தே -2-8-9-

யாவராலும் வியந்து கேட்க்கத் தக்க ஸ்ரீ நரசிம்ஹ திருவவதார சரித்ரத்தை யுடையவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

அசேஷ தேவேச நரேஸ்வர ஈஸ்வரை -ஸ்ரீ விஷ்ணு தர்மம் -திவ்ய சரிதம் அனைவராலும் கேட்கப்படும்

வேதத்தில் விசேஷமாகக் கூறப்பட்ட சத்யம் ஞானம் முதலிய லஷணம் யுடையவர் –ஸ்ரீ சங்கரர் –

புகழ் பெற்ற ஸ்வரூபம் யுடையவர் — ஸ்ரீ சத்ய சந்தர்-

—————–

210- ஸூராரிஹா –
தேவர்கள் எதிரிகளை முடிப்பவன்
அமரர் தம் அமுதே அசுரர்கள் நஞ்சே -8-1-4-
ஆங்கே வளர்ந்திட்டு வாள் உகிர்ச் சிங்க யுருவாய்
உளம் தொட்டு இரணியன் ஒண் மார்வகலம் பிளந்திட்ட கையன் -பெரியாழ்வார் -1-6-9-

தேவர்களுக்கு விரோதியான ஹிரண்யன் மார்பைப் பிளந்து கொன்றவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

சத் சத்த்வ கரஜ ஸ்ரேணி தீப்தேந உபய பாணிநா சமயச்சத யதா சம்யக் பயாநாம் ச அபயம் பரம் -த்யான ஸ்லோகம் –
திரு நகங்களின் தேஜஸ்ஸாலே சம்சார பயத்தை போக்கி அபயம் அளிக்கிறார்

தேவர்களுக்கு விரோதிகளை அழிப்பவர் –ஸ்ரீ சங்கரர் –

தேவர்களின் பகைவர்களான அசுரர்களை அழிப்பவர் — ஸ்ரீ சத்ய சந்தர்-

——————————————————————

குரூர் குருதமோ தாம சத்யஸ் சத்ய பராக்ரம
நிமிஷோ அநிமிஷஸ் ஸ்ரக்வீ வாசஸ்பதி ருதாரதீ -23-

——–

3-9-மத்ஸ்ய அவதார -211-225- திரு நாமங்கள் –15-திரு நாமங்கள்

211- குரூர் குரு தம
குரு தம குரு -பரமாச்சார்யன் –
அறியாக் காலத்துள்ளே அறியாதன அறிவித்த அத்தா -2-3-2-
பிதா மகராண ப்ரஹ்மனுக்கும் வேதங்கள் வெளிட்டு உபதேசித்து அருளினவன்
பீதக வாடைப் பிரானார் பிரம குருவாகி வந்து -பெரியாழ்வார் -5-2-8-

மத்ச்யாவதாரத்தில் எல்லா வித்யைகளையும் பிரமன் முதலியவர்களுக்கு உபதேசித்தமையால்
ஆசார்யர்களுக்கும் ஆசார்யர் -ஸ்ரீ பராசர பட்டர் –

ச பூர்வேஷாம் அபி குரு இதி ஹிரண்ய கர்ப்ப
பூஜ்ய ச குரு கரீயாந் –ஸ்ரீ கீதை -11-43-

குரு-எல்லோரையும் படைத்தவர் -எல்லா வித்யைகளையும் உபதேசித்தவர் –குருதம -பிரமன் முதலியவர்க்கும்
ப்ரஹ்ம வித்யையைக் கொடுத்தவர் -இரண்டு திரு நாமங்கள் –ஸ்ரீ சங்கரர் –

குரு -கற்பிப்பவர் -குருதம -மேலான ஆசார்யன் -இரண்டு திரு நாமங்கள் -பிரம்மா முதலியவர்களால்
விரும்பப் படுபவர் -பிருஹஸ்பதிக்கு ஞானம் அளித்தவர் — ஸ்ரீ சத்ய சந்தர்-

———————

212-தாம –
இருப்பிடம் – மநு என்கிற பக்தன் இடம் அனைத்தையும் தன் கொம்பில் கட்டி விட சொல்லி ரஷித்தவன்-
மீனாய் ஆமையுமாய்-2-1-10-
மீனோடு ஆமை கேழல் அரி குறளாய் -பெரிய திருமொழி -8-8-10-
தேவுடை மீனாய் ஆமையாய் -பெரியாழ்வார் -4-9-9-
முன்பு 62 த்ரிககுத்தாம பார்த்தோம்

பிரளயத்தில் அழிந்த சராசரங்களின் வித்துக்களுக்கு ஆதாரமான பூமி என்னும்
கப்பலைத் தாங்கி நடத்துபவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

ஜ்யோதிஸ் ரூபமானவர் -எல்லா விருப்பங்களுக்கும் இருப்பிடமானவர் –ஸ்ரீ சங்கரர் –

ஒளிவடிவானவர் — ஸ்ரீ சத்ய சந்தர்-

————————

213-சத்ய
நல்லவன் மநு போன்ற பக்தர்களுக்கு நல்லவன் -107-871-
நாளும் தன் மெய்யர்க்கு மெய்யனே மெய்யனாகும் விரும்பித் தொழுவார்க்கு எல்லாம் -9-10-6/7

பிரளய காலத்தில் தம்மை அடைந்த மனு முதலிய சத்துக்களுக்கு உபகரித்தவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

சத்திய வசனம் என்னும் தர்ம ஸ்வரூபியாக இருப்பவர் -சத்யத்தின் சத்யமானவர் –ஸ்ரீ சங்கரர் –
உலகைப் படைப்பவர் -நற் கதியைத் தருபவர்– ஸ்ரீ சத்ய சந்தர்-

——————–

214-சத்ய பராக்கிரம
வஞ்சனை அற்ற ஆற்றல்
தீய புந்திக் கஞ்சனை வஞ்சனை செய்தவன்
கஞ்சனைத் துஞ்ச வஞ்சித்த வஞ்சன் -பெரிய திருமொழி -7-10-8-

மனு முதலியவர்கள் விஷயத்தில் தம் சக்தியை வீண் போகாமல் செய்தவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

பழுது படாத பராக்ரமத்தை உடையவர் –ஸ்ரீ சங்கரர் –

உண்மையான பராக்கிரமம் உள்ளவர் -சத்திய வசனம் உள்ள பலிச் சக்ரவர்த்தியின் மீது திருவடிகளை
நன்றாக வைத்தவர் –வாயு பிரமன் சூர்யன் ஆகியோருக்கும் பராக்கிரமம் அருள்பவர் — ஸ்ரீ சத்ய சந்தர்-

———————

215-நிமிஷ –
கண் மூடி -அநாஸ்ரிதரை கடாஷியாதவன்
சந்தமர் குழலாள் அலக்கண் நூற்றுவர் தம் பெண்டிரும் எய்தி நூல் இழப்ப இந்திரன் சிறுவன் தேர் முன்
நின்றான் -பெரிய திரு மொழி -2-3-6-

சாதுக்களுக்கு விரோதிகளை கடாஷியாதவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

யோக நித்ரையினால் மூடிய இரு கண்கள் யுடையவர் -ஸ்ரீ சங்கரர் –

நிமி என்ற அரசனுக்கு பலம் அளித்தவர் -நிமிஷம் என்னும் காலத்தை நியமித்து நடத்துபவர் –
அசுரர்களை எதிர்ப்பவர் — ஸ்ரீ சத்ய சந்தர்-

———————

216-அநிமிஷா –
மீன் பார்வையாலே முட்டைகளை வளரச் செய்யும்
ஆஸ்ரிதர்களை குளிரக் கடாஷித்து அருளி
மீனாய் வந்து வியந்து உய்யக் கொண்ட தண் தாமரைக் கண்ணன் -பெரிய திருமொழி -8-8-1-

சாதுக்களை இடைவிடாமல் கடாஷிப்பவர் -இமை கொட்டாத மீன் உருக் கொண்டவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

எப்போதும் விழித்து இருக்கும் ஆத்ம ஸ்வரூபம் உடையவர் மீன் உருவில் அல்லது ஆத்ம ரூபத்தில்
இமையாதவர் -கண் மூடாதவர் -ஸ்ரீ சங்கரர் –

வாயு பக்தர்களுக்கு அருகில் இருப்பவர் -பக்தர்களை எப்போதும் தயையுடன் பார்ப்பவர் — ஸ்ரீ சத்ய சந்தர்-

—————————–

217-ஸ்ரக்வீ
பரத்வ ஸூ சகமான மாலை அணிந்தவன் -வைரம் முத்து ஐந்து வித வைஜயந்தி மாலை
கணங்களோடு மின் மேகம் கலந்தால் போலே வனமாலை மினுங்க நின்று விளையாட -நாச் -14-2-
திருத் துழாய் மாலையைச் சொல்லிற்றாகவுமாம்
தோளிணை மேலும் புனைந்த தண் அம் துழாய் உடைய அம்மான் -1-9-7-

மீன் வடிவிலும் பரத்வ அடையாளமாக வைஜயந்தி மாலையை யுடையவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

பூத தந்மாத்ரா ரூபமான வைஜயந்தி என்னும் மாலையை எப்போதும் தரித்தவர் -ஸ்ரீ சங்கரர் –

மாலை அணிந்தவர் — ஸ்ரீ சத்ய சந்தர்-

—————–

218-வாசஸ்பதி –
சொல்லுக்கு அதிபதி
சொல்லினால் படைக்க நீ படைக்க வந்து தோன்றினார் சொல்ல வல்லரே -திருச்சந்த -118-

மத்ஸ்ய புராணத்தில் வேதார்த்தத்தை வெளியிட்டவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

வேத வாக்யங்களுக்குப் பதியாய் இருப்பவர் — ஸ்ரீ சத்ய சந்தர்-

———————

219-
உதாரதீ
சிறந்த ஞானம் உடையவன் -சர்வஞ்ஞன் -எல்லையில் ஞானத்தன் -கம்பீர ஸ்வபாவன்
ஞானம் அக்தே கொண்டு எல்லா கருமங்களும் செய் எல்லையில் மாயன் -3-10-9-

யாவரும் ஆஸ்ரயிக்கத் தக்க ஞானம் உள்ளவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

வித்யைகளுக்கும் அதிபதி -எல்லாவற்றையும் அறியும் ஞானம் உள்ளவர் –
வாசஸ்பதிருதாரதீ-என்று ஒரே திரு நாமம் –ஸ்ரீ சங்கரர் –

உயர்ந்த தேவியான லஷ்மிக்கு ஞானம் அருள்பவர் –
உதாரமாய் -தோஷமற்ற ஞானம் உடையவர் — ஸ்ரீ சத்ய சந்தர்-

———

அக்ரணீர் க்ராமணீஸ் ஸ்ரீ மான் ந்யாயோ நேதா ச்மரணீ
சஹச்ர மூர்த்தா விச்வாத்மா சஹச்ர ராஷஸ் சஹச்ர பாத் –24

——-

220-அக்ரணீ
மேலே நடத்துமவன் -ஞான உபதேசம் செய்து ப்ரஹ்மத்தை அடைய
அறியாக் காலத்து உள்ளே அடிமைக் கண் அன்பு செய்வித்து அறியாதன அறிவித்த அத்தா -2-3-3/5

பக்தர்களை உயர் பதம் ஆகிய மோஷத்திற்கு அழைத்துச் செல்பவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

முமுஷூக்களை மேலான பதத்துக்கு நடத்துபவர் –ஸ்ரீ சங்கரர் –

முதலில் நடத்துபவர்– ஸ்ரீ சத்ய சந்தர்-

——————

221-க்ராமணீ –
தலைவன் -அயர்வறும் அமரர்கள் அதிபதி -இமையோர் தலைவன் -தேவாதி தேவப் பெருமான் -2-8-5
எம்மான் அமரர் பெம்மான் -2-7-10–

அந்த பரமபதத்தில் நித்ய ஸூரிகள் கூட்டத்தை நடத்துபவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

பிராணிகள் கூட்டத்தை -சமூஹத்தை நடத்துபவர் –ஸ்ரீ சங்கரர் –

உயிரினங்களின் கூட்டத்தை நடத்த்பவர்– ஸ்ரீ சத்ய சந்தர்-

—————–

222–ஸ்ரீ மான் –
சிறப்புடையவன் -மத்ஸ்ய கமல லோஷண
மீனாய் ஆமையுமாய் –கார் வண்ணனே
கார் வண்ணன் கமலத் தடம் கண்ணன் -5-1-11
மீனாகி மானிடமாம் தேவாதி தேவபெருமான் என் தீர்த்தன் -2-8-5-
முன்பே 22/180 பார்த்தோம்

பரத்வ சின்னமான தாமரைக் கண்களை மத்ஸ்ய திருவவதாரத்திலும் உடையவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

எல்லாவற்றிற்கும் மேம்பட்ட ஒளியுள்ளவர்–ஸ்ரீ சங்கரர் –

எப்போதும் ஸ்ரீ லஷ்மியுடன் கூடியிருப்பவர் — ஸ்ரீ சத்ய சந்தர்-

——————-

223-நியாய –
நீதிமான்
செய்குந்தா வரும் தீமை உன்னடியார்க்குத் தீர்த்து அசுரர்க்குத் தீமைகள் செய்குந்தா -2-6-1-

பக்தர்களுக்குத் தவறு வாராமல் இருக்கும்படி பொருத்தமாக இருப்பதைச் செய்பவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

பிரமாணங்களுக்கு உதவியான தர்க்கமாக இருப்பவர் -ஸ்ரீ சங்கரர் –

நிறைந்த லாபம் உள்ளவர் – ஸ்ரீ சத்ய சந்தர்-

——————

224-நேதா –
கரை சேர்ப்பவன் -ஆஸ்ரிதர்கள்
அடியார்களைக் கொண்டு போய் தன்மை பெறுத்தித் தன் தாளிணைக் கீழ்க் கொள்ளும் அப்பன் -3-7-7-
பெரும் துன்பம் வேரற நீக்கித் தன் தாளின் கீழ்ச் சேர்த்து -7-5-10-

பக்தர்கள் இட்ட வேலையைச் செய்பவர் -நிர்வகிக்கும் குணமுடையவர் –
கடலில் மூழ்கி மஹாத்மாக்களை மீட்பவர் எனபது பொருத்தமே அன்றோ -ஸ்ரீ பராசர பட்டர் –

உலக யந்திரத்தை நடத்துபவர் -ஸ்ரீ சங்கரர் –

அவரவர்க்கு உரிய பலன்களைத் தருபவர் – ஸ்ரீ சத்ய சந்தர்-

—————–

225-சமீரண-
திவ்ய சேஷ்டிதங்கள்-
மீன் உருவில் ரஸாதல லோகம் சென்று வேதங்களை மீட்டு வெளிப்படுத்தி பிரமனுக்கு அளித்தவன்
ஆதி முதல்வனே பிரமனுக்கு வேதம் ஈந்தவன் –
அன்னமும் கேழலும் மீனுமாய் ஆதி -பெரிய திருமொழி -9-2-10-
மத்ஸ்ய மூர்த்தியே ப்ரஹ்ம வித்யா ப்ரவர்தகன்

பக்தர்கள் விரும்பத்தக்க செயல்களை உடையவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

க்ருத்வா மீனமயீம் ஸத்ய பிரவிலேச ரஸாதலம் வேத மூர்த்தி ததோ வேதான் ஆநிந்யே ப்ரஹ்மனோ அந்திகம் –என்று
மத்ஸ்ய அவதாரம் எடுத்து நீருக்கு அடியில் ரஸாதலம் லோகம் சென்று அசுரர்களை கொன்று
வேதங்களை மீட்டு நான்முகன் இடம் கொடுத்தான்
ஞாநாநி குண பிருந்தேந பக்ஷ பூதேந பூஷிதம் ஸ்வோத்த ப்ரஹ்ம மதம் ஸ்ருங்க நிஸ் ஸ்ருதேந விராஜிதம் —
பர ப்ரஹ்ம மேன்மை யுடன் இருந்தான்
கல்ப அவசாந சமய வஹந்தம் சைவ சிந்தயேத் நவ் ரூபாம் வித்ததாம் சோனீம் பிரஜாபதி குணாந் விதாம்–என்று
திவ்ய திரு மேனி -கல்பத்தின் இறுதியில் -படகு போன்ற -இந்த பூமியை இழுத்துச் செல்லும் மத்ஸ்ய மூர்த்தியை த்யானம்
முக்தா பல நிபேஷைவ வபுஷா நிர்மலேஷ ச அநி மீலித நேத்ர ச மீனாத்மா யாதாவாக் ததா –என்று
முத்து போன்ற களங்கம் அற்ற திரு மேனி -இமைக்காத கண்கள் -மூடிய திருவாய்

வாயு ரூபியாக அனைத்தையும் அசைவிப்பவர் –ஸ்ரீ சங்கரர் –

வாயுவிற்கு ஸூகத்தைத் தருபவர் -ஸ்ரீ லஷ்மி தேவையைப் போற்றும் சப்தத்திற்கு விஷயமாக இருப்பவர் –
அனைத்தையும் நன்றாகத் தூண்டுபவர்- ஸ்ரீ சத்ய சந்தர்-

————————————————————-

ஸ்ரீ நரசிம்ஹ அவதாரம் –

200-அம்ருத்யு -ம்ருத்யு தெய்வத்துக்கே பகைவர் -மரணத்தை ஒத்த ஹிரண்யனுக்கு விரோதி –
201–சர்வத்ருத் -நண்பர்கள் பகைவர்கள் நடு நிலையாளர் ஆகிய அனைவரையும் சமமாகப் பார்ப்பவர் –
202-சிம்ஹ -பெரிய நரசிம்ஹ வடிவம் உடையவர் –
203-சந்தாதா -ஹிரண்யனை அழிக்கும் காலத்திலேயே பக்த பிரகலாதனை சேர்த்துக் கொண்டவர் –
204-சந்திமான் -தன் அடியவர்களோடு தன் சேர்க்கை நீங்காமல் இருப்பவர் –
205-ஸ்திர-பக்தர்கள் இடம் வைத்த அன்பில் அவர்கள் குற்றத்தையும் பொறுத்து விலகாமல் இருப்பவர் –
206-அஜ -தூணில் பிறந்த படியால் இயற்கையான பிறப்பு இல்லாதவர் –
207-துர்மர்ஷண-பகைவர்களால் தன் பார்வையைத் தாங்க முடியாமல் இருப்பவர் –
208-சாஸ்தா -தீயவர்களைத் தண்டிப்பவர் –
209-விஸ்ருதாத்மா -வியந்து கேட்கத்தக்க நரசிம்ஹ அவதார திரு விளையாட்டுகளை உடையவர் –
219-சூராரிஹா -தேவர்களின் பகைவரான ஹிரண்யனை அழித்தவர் –

———————————————————–

ஸ்ரீ மத்ஸயவதாரம் –

211-குருர் குருதம -பிரமனுக்கே உபதேசித்த படியாலே ஆசார்யனுக்கே ஆசார்யனானவர் –
212-தாம -சராசரங்களின் வித்துக்களை படகில் தாண்டி -தாங்கி -நடத்தியவர் -சித் அசிதுக்களுக்கு இருப்பிடம் –
213-சத்ய -பிரளயத்தில் தன்னைச் சரண் அடைந்த மனு முதலானவர்களுக்கு உண்மையானவர் –
214-சத்ய பராக்கிரம -மனுவின் இடத்தில் தன் பராக்கிரமத்தைக் காட்டினவர் –
215-நிமிஷ -பகைவர்க்கு அருள் புரியாமல் கண்களை மூடி இருப்பவர் –
216-அ நிமிஷ -தன் அடியார்களைக் கடாஷிக்க எப்போதும் கண் திறந்து இருப்பவர் –
217-ஸ்ரகவீ-வைரம் முத்து முதலான த்வ்யமான ஐந்து மணிகளால் ஆன வைஜயந்தீ எனும் மாலையை அணிந்தவர் –
218-வாசஸ்பதீ-வேதத்தின் பொருளை மத்ஸ்ய புராணத்தில் கூறியபடியால் பேச்சுக்கே தலைவர் –
219-உதாரதீ -அனைவரும் உய்வடைவதற்கான அறிவை உடையவர் –
220-அக்ரணீ–பக்தர்களை பரமபத்துக்கு நடத்திச் செல்பவர் –

221-க்ராமணி-பக்தர்களை வைகுந்தத்தில் இருக்கும் நித்யர்கள் இடமும் முக்தர்கள் இடமும் அழைத்துச் செல்பவர் –
222-ஸ்ரீ மான் -தாமரைக் கண்களையே செல்வமாக உடையவர் -மீன் தன் குட்டிகளை கண்களாலே பார்த்து வளர்க்கும் –
223-நியாய -தன் பக்தர்களுக்கு எது சரியோ அத்தைச் செய்பவர்
224-நேதா -பக்தர்களின் கார்யங்களை நடத்துபவர் -தான் மீனாகி கடலுள் புகுந்து அடியார்களைக் கரை ஏற்றியவர் –
225-சமீரண- பக்தர்களுக்கு இனிமையான திரு விளையாடல்களை உடையவர் –

————————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பராசர பட்டர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பீஷ்மர் திருவடிகளிலே சரணம்
ஸ்ரீ வியாச பகவான் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: