ஸ்ரீ விஷ்ணு சகஸ்ர நாமம்–3-3- துஷ்ட நிக்ரஹ இஷ்ட பரிபாலநம் -165-170-திரு நாமங்கள் /3-4-ஜ்ஞானாதி பகவத் குணங்கள் கொண்டவன் -171-181- திரு நாமங்கள் / 3-5-குணங்களுக்கு ஏற்ற அவதார செயல்கள் -182-186-திரு நாமங்கள் /3-6- ஹம்ஸாவதாரம் -187-194-திரு நாமங்கள் / 3-7- பத்மநாபாவதாரம்-195-199-திரு நாமங்கள்

வேத்யோ வைத்யஸ் சதாயோகீ வீரஹா மாதவோ மது
அதீந்த்ரியோ மஹா மாயோ மஹோத் சாஹோ மஹா பல –18
மஹா புத்திர் மஹா வீர்யோ மஹா சக்திர் மஹாத் யுதி
அநிர்தேச்யவபுஸ் ஸ்ரீ மான் அமேயாத்மா மஹாத்ரித்ருத்–19
மஹேஷ் வாஸோ மஹீ பர்த்தா ஸ்ரீ நிவாசஸ் சதாம்கதி
அநிருத்தஸ் ஸூராநந்தோ கோவிந்தோ கோவிதாம்பதி–20-
மரீசிர் தமநோ ஹம்சஸ் ஸூபர்ணோ புஜகோத்தம
ஹிரண்ய நாபஸ் ஸூதபா பத்ம நாப ப்ரஜாபதி–21

—————

3-1-பிரதம அவதாரம் விஷ்ணு -147-152- திரு நாமங்கள்
3-2-வாமன அவதார பரமான திரு நாமங்கள் -153-164-
3-3- துஷ்ட நிக்ரஹ இஷ்ட பரிபாலநம் -165-170-திரு நாமங்கள்
3-4-ஜ்ஞானாதி பகவத் குணங்கள் கொண்டவன் -171-181- திரு நாமங்கள்
3-5-குணங்களுக்கு ஏற்ற அவதார செயல்கள் -182-186-திரு நாமங்கள்
3-6-ஹம்ஸாவதாரம் -187-194-திரு நாமங்கள்-7 திரு நாமங்கள்
3-7-பத்மநாபாவதாரம்-195-199-திரு நாமங்கள்-5 திரு நாமங்கள்
3-8-நரசிம்ஹ அவதாரம் ——200-210—திரு நாமங்கள்—11 திரு நாமங்கள்

————-

3-3- துஷ்ட நிக்ரஹ இஷ்ட பரிபாலநம் -165-170

165-வேத்ய –
அறியக் கூடியவன் -யாவராலும் அறிய எளியவன்
யாருமோர் நிலைமையன் என அறிவு எளிய எம்பெருமான் -1-3-4-
இடைசிகள் குரங்குகள்
நமோ நமோ வாங்மனசைக பூமயே –

இப்படி திருவவதரித்து புலன்களுக்கு எட்டாத மகிமைகளை எல்லாரும் எளிதில் அறியும்படி இருப்பவர் –ஸ்ரீ பராசர பட்டர் –

மோஷத்தை விரும்புகிறவர்களால் அறியத் தக்கவர் –ஸ்ரீ சங்கரர் –

அறியப்படுபவர் — ஸ்ரீ சத்ய சந்த தீர்த்தர் –

ஓம் வேத்ய நம

——————–

166-வைத்திய –
வித்யைகளை கற்று அறிந்தவன் –
பிறவி நோய்க்கு மருந்து அறிந்தவன் -மருந்தாய் இருப்பவன்
பேஷஜம் -585-பிஷக் -586-பின்னர் வரும்
மூப்புப் பிறப்பு இறப்புப் பிணி வீயுமாறு செய்வான் -3-3-9-
கெடுமிடராய வெல்லாம் கேசவா -என்ன -10-2-1-
மருத்துவனாய் நின்ற மா மணி வண்ணன்
ஔ ஷதம் ஜாஹ்நவீ தோயம் வைத்யோ நாராயணோ ஹரி

தம்மைச் சிந்திப்பவர்க்கு பிறப்பு இறப்பு முதலியவற்றைப் போக்கும் வகை யறிந்தவர் –ஸ்ரீ பராசர பட்டர் –

மேரு மந்த்ர மாத்ரோபி–மேரு மலை போன்ற பாபங்கள் இருந்தாலும் கெடும் இடராய
எல்லாம் கேசவா என்ன -ஸ்ரீ விஷ்ணு தர்மம் -68-110-

எல்லா வித்யைகளையும் அறிந்தவர் –ஸ்ரீ சங்கரர் –

உலக வாழ்வு என்னும் நோயைத் தவிர்ப்பவர் –அனைத்து வித்யைகளாலும் அறியப்படுபவர் — ஸ்ரீ சத்ய சந்த தீர்த்தர் –

—————-

167-ஸதா யோகி-
எப்பொழுதும் விழித்து இருப்பவன் –
முனியே உறங்குவான் போல் யோகு செய்த பெருமான் -5-4-10

இப்படி பக்தர்களுடைய பிறப்பு இறப்பு அறுப்பதில் எப்போதும் ஊக்கம் உடையவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

ய ஏஷ ஸூப்தேஷு ஜாகர்த்தி –கட -5-8-அனைவரும் தூங்கும் போதும் விழித்து இருப்பவன்

எப்போதும் பிரகாசிக்கும் ஸ்வரூபம் உடையவர் -ஸ்ரீ சங்கரர் –

கபிலர் முதலிய ரூபங்களினால் எப்போதும் யோகத்தில் இருப்பவர் -ஸ்ரீ சத்ய சந்த தீர்த்தர் –

——————-

168-வீரஹா –
வீரர்களை கொள்பவன் -பாஹ்ய குத்ருஷ்டிகளை-தர்க்க சூரரை
சிறு பிள்ளையாய் பூதனை போன்ற அசுரர்களை வென்றவன் -மீண்டும் 747-927 வரும்

குதர்க்க வாதங்களால் பரமாத்ம ஞானத்தைக் கெடுக்கும் துர்வாதிகளை அழிப்பவர்-ஸ்ரீ பராசர பட்டர் –

தாநஹம் த்விஷத க்ரூராந்ஸம் ஸாரேஷு நராதமாந்–க்ஷிபாம்யஜஸ்ரமஷுபாநாஸுரீஷ்வேவ யோநிஷு–৷৷16.19৷৷
என்னை த்வேஷிக்கும் -க்ரூர ஸ்வபாவம் உள்ளவர்களை மறு படியும் அசூப அசுர யோனிகளில் பிடித்து தள்ளி விடுகிறேன்

தர்மத்தைக் காப்பதற்காக அசுர வீரர்களை அழிப்பவர் -ஸ்ரீ சங்கரர் –

கருடனிலும் வாயுவிலும் செல்பவர் -முக்ய பிராணனின் பகைவர்களை அழிப்பவர் -ஸ்ரீ சத்ய சந்த தீர்த்தர் –

—————–

169-மாதவ –
ஞான ப்ரதன்-வித்யைக்கு ஈசன்
கற்கும் கல்வி நாதன் -5-6-2-
அறியாதன அறிவித்த அத்தா -2-3-2-
மா -மௌநம் –த -த்யானம் –வ -யோகம் -இவற்றுடன் கூடியவன்
மீண்டும் 73-741- லஷ்மி பதித்வம் யது குலத்தில் ஆவிர்பவித்தவன்

மா -எனப்படும் பரமாத்ம ஞானத்தைக் கொடுப்பவர் -மா -மௌனம் /த-த்யானம் -வ -யோகம் –
இவற்றுடன் கூடினவர் -ஸ்ரீ பராசர பட்டர் —

மா வித்யா சா ஹரே ப்ரோக்தா தஸ்யா ஈசோ யதோ பவாந் தஸ்மாத் மாதவ நாமா அஸீ தவ ஸ்வாமீ இதி சப்தித–
மவ்நாத் த்யாநாத் ச யோகாச்ச வித்தி பாரத மாதவம் –உத்யோக பர்வம்

வித்யைக்குத் தலைவர் –ஸ்ரீ சங்கரர் –

அசைவற்றவர் -ஸ்ரீ சத்ய சந்த தீர்த்தர் –

—————

170-மது –
தேனிலும் இனியவன்
தேனில் இனிய பிரானே -பெரிய திருமொழி -2-7-1-
தேனே மலரும் திருப் பாதன்
எனக்குத் தேனே பாலே கன்னலே அமுதே -10-7-2-
அமுதூரும் என் நாவுக்கே -மதுரகவி ஆழ்வார்
போந்தது என் நெஞ்சு என்னும் பொன் வண்டு உனதடிப் போதில்
ஒண் சீராம் தெளி தேன் உண்டு அமர்ந்திட வேண்டி -அமுதனார்

பக்தர்களுக்குத் தேன் போல் இனியவர் -ஸ்ரீ பராசர பட்டர் —

மத்வ உத்ஸா -ஸ்ரீ விஷ்ணு ஸூக்தம்
ப்ரியோ ஹி ஞாநிநோ அத்யர்த்தம் –ஸ்ரீ கீதை -7-17-

தேன் போல் ப்ரீதியை உண்டாக்குபவர் -ஸ்ரீ சங்கரர் –

சுக வடிவாய் இருப்பவர் –ஸ்ரீ சத்ய சந்த தீர்த்தர் –

——————————————————

3-4-ஜ்ஞானாதி பகவத் குணங்கள் கொண்டவன் -171-181- திரு நாமங்கள்

171-அதீந்த்ரிய
புலன்களுக்கு எட்டாதவன்
காணலுமாகான் உளன் அல்லன் இல்லை யல்லன் -2-5-10-
விண்ணவர்க்கு எண்ணல் அரியான் -சிந்தைக்கும் கோசரம் அல்லன்

புலன்களுக்கு எட்டாதவர் -இனி பரம் வ்யூஹம் விபவம் மூன்று வகை நிலைகளுக்கும் முக்யமான
ஆறு குணங்களைக் கூறுவதற்காக தேன் கடல் போன்ற பரமாத்ம ஸ்வரூபம் தெளிவிக்கப் படுகிறது -ஸ்ரீ பராசர பட்டர் —
ஞான இந்திரியங்களுக்கு அப்பால் பட்டவன்

சப்தம் முதலிய குணங்கள் இல்லாமையால் புலன்களுக்கு எட்டாதவர் -ஸ்ரீ சங்கரர் –

இந்திரியங்களுக்கு எட்டாதவர் -பல இந்திரியங்களின் சக்தியுடையவர் –ஸ்ரீ சத்ய சந்த தீர்த்தர் –

—————

172-மஹா மாய –
ஆச்சர்ய சக்தி படைத்தவன் -பெரு மாயன்
மாயனை மன்னு வடமதுரை மைந்தனை
மா மாயனே மாதவா -1-5-6-
எல்லையில் மாயன் -3-10-8-

தன்னைச் சரணம் அடையாதவர்களுக்கு திரை போல் ஸ்வரூபத்தை மறைக்கும் மாயையை உடையவர் -ஸ்ரீ பராசர பட்டர் —

குண மாயா சமாவ்ருத -ஜிதந்தா

மாயை செய்பவர்களுக்கும் மாயையை உண்டாக்குவதால் யாராலும் கடக்க முடியாத மாயை உடையவர் –ஸ்ரீ சங்கரர் –

உயர்ந்தவளான லஷ்மியின் மணவாளன் -உயர்ந்த ஞானிகளால் பிரார்த்திக்கப் படுபவர் –
கபடம் இல்லாதவர் -உயர்ந்த இச்சை உடையவர் -ஸ்ரீ சத்ய சந்த தீர்த்தர் –

—————–

173-மஹோத்ஸாஹ-
மிக்க ஊக்கம் உடையவன் -சங்கல்ப மாதரம் -எல்லாம் அவன் அதீனம்
செய்வார்களைச் செய்வேனும் யானே -என்னும் -5-6-4-
மன் பல் உயிர் களுமாகிப் பல பல மாய மயக்குகளால் இன்புறும் இவ் விளையாட்டு உடையான் -3-10-8

எல்லாவற்றையும் படைப்பதாகிய ஈஸ்வர சக்தி மிகப் பெரிதாக இருப்பவர் -ஞான மயமாக இருந்த போதிலும் செயல் படாதவராய்-
சோம்பலினால் உதாசீனராய் இருப்பவர் என்று சாங்க்ய மதத்தில் கூறப்பட்ட ஈஸ்வரனை நிரசித்து ஐஸ்வர்யம் குணம் கூறப்படுகிறது –
ஸ்வா தந்த்ர்ய ரூபமான இந்த செயலால் -ஒருவரால் ஏவுதல் இல்லாமல் -தடையில்லாத சங்கல்ப்பத்தால் –
அதில் ஏக தேசத்தில் போகமாகவும் சாதனமாகவும் பலவித உலகங்களை செய்ய வல்ல சக்தனாக இருந்தாலும்
முன் போலவே ஸ்வ பாவ நியமத்தையே மேற் கொள்கிறான் -அவனது இந்த சக்தியின் சிறிது அளவு மாத்ராமான அணிமை முதலிய
ஐஸ்வர்யமே பிரம்மா முதலியவர்களுக்கு அளவற்ற பெருமையை உண்டாக்கிக் கொண்டு விளங்குகிறது -ஸ்ரீ பராசர பட்டர் —

சாங்க்ய மதம் -ப்ரஹ்மம் ஞானமயன் என்றாலும் செயல்களை செய்வது இல்லை -என்பர் –
அத்தை நிரசனம் செய்யும் இந்த திரு நாமம்

உலகைப் படைத்தல் -காத்தல் -அழித்தல்-முதலியவற்றில் ஊக்கத்தோடு இருப்பவர் –ஸ்ரீ சங்கரர் –

யஜ்ஞம் முதலியவைகளில் உத்சாஹம் உள்ளவர்
உலகைப் படைத்தல் முதலிய வற்றில் அதிக மகிழ்ச்சி உள்ளவர் -ஸ்ரீ சத்ய சந்த தீர்த்தர் –

—————

174-மஹாபல-
மிக்க வலிமை உடையவன் –
திறம்பாமல் மண் காக்கின்றேன் யானே திறம்பாமல் மலை எடுத்தேன் திறம்பாமல் அசுரரைக் கொன்றேன் -5-6-5-

வேறோர் உதவியை எதிர்பாராமல் எல்லாவற்றையும் நடத்தும் ஆற்றல் உடையவர் -அநாயாசேன செய்ய முடியாத
செயல்களைச் செய்து எல்லாவற்றையும் உடல் போலே தாங்குகின்றான் –
இந்த பலத்தின் சிறிது அளவே-நீரிலும் காற்றிலும் மலைகளிலும் பூமியிலும் இருக்கின்றது -ஸ்ரீ பராசர பட்டர்

பலமுடையவர்களுக்கும் மிகுந்த பலமுடையவர் -ஸ்ரீ சங்கரர் –

மிகவும் பலமுள்ளவர் -உயர்ந்தவளான லஷ்மியை உடையவர் -பலன் என்ற அசுரனுக்கு விரோதியான இந்த்ரனை –
அபலனைப் படைத்தவர்-ஸ்ரீ சத்ய சந்த தீர்த்தர் –

———–

மஹா புத்திர் மஹா வீர்யோ மஹா சக்திர் மஹாத் யுதி
அநிர்தேச்யவபுஸ் ஸ்ரீ மான் அமேயாத்மா மஹாத்ரித்ருத்–19

—————-

175-மஹா புத்தி –
எல்லையில் ஞானத்தன் -சர்வஞ்ஞன் –
பச்யத்ய சஷூ சஸ்ருணோதி அகர்ண-
யோ வேத்தி யுகபத் சர்வம் பிரத்யஷேண சதா ச்வத-
பயின்று உரைப்பார் நூல் கடலான் நுண் அறிவினான் -மூன்றாம் திரு -11
வின் கடந்த சோதியாய் விளங்கு ஞான மூர்த்தியாய் -திருச் சந்த -29
ஞாலம் உண்டாய் ஞான மூர்த்தி -4-7-1-

எக்காலமும் எல்லா இடங்களிலும் உள்ள எல்லாப் பொருள்களையும் உள்ளபடி அறியும்படியாக மிகுந்த ஞானம் உள்ளவர் -சர்வஜ்ஞத்வம்
இல்லை என்றும் சொல்லுகிற மதத்தைக் கண்டிக்கிறது -ஸ்வா பாவிக நித்தியமான இந்திரியங்களை எதிர்பாராத ஞானம் உள்ளவன்
புண்டரீகாஷன் -சுசிஸ்ரவஸ்-கையிலங்கு நெல்லிக்கனி போலே தெளிவாகக் காணும் -அமோகமா இருக்கும் ஞானம் அனைத்தையும் நிர்வகிக்கும் –
இந்த ஞானத்தின் அற்ப அம்சம் தான் பத்தர் முக்தர் நித்யர் என்கிறவர்கள் இடத்தில் விளங்கும் –ஸ்ரீ பராசர பட்டர்-

விஸ்வதஸ் சஷு உத விஸ்வதோ முக –தைத்ரியம் -1-12-அவன் கண்களையும் முகத்தையும் எங்கும் கொண்டவன்
பச்யதி அசஷு ச ஸ்ருனோதி அ கர்ண–ஸ்வேதாஸ்வரா -3-19- கண்கள் உதவி இன்று காண்கிறான் -காதுகள் உதவி இன்றி கேட்கிறான்
ஸர்வதா அஷி ஸீரோ முகம் –ஸ்ரீ கீதை -13-13-எங்கும் கண்களும் தலையும் முகமும்
யோ வேத்தி யுகபத் சர்வம் ப்ரத்யஷேண சதா ஸ்வத –நியாய தத்வம் -ஸ்ரீ நாதமுனிகள்
ஸ்ரீ ஹரி அனைத்தையும் பிரத்யக்ஷமாக தனது ஸ்வ பாவம் மூலம் அறிகிறான் –
நாகங்கள் கண்களாலே கேட்டு -காகம் ஒரே கண்ணால் காண்பது -ஆந்தை இரவில் காண்பது -கழுகு தூரத்தில் இருப்பதை காண்பது
நித்யர்களுக்கு உள்ள ஞானமும் இவனது ஞானத்தில் ஒரு அணு அளவே

ஞானிகள் எல்லோரைக் காட்டிலும் ஞானம் உள்ளவர் -ஸ்ரீ சங்கரர் –

உயர்ந்த ஞானம் உள்ளவர் -ஸ்ரீ சத்ய சந்த தீர்த்தர் –

———————

176- மஹா வீர்ய –
மிக்க வீர்யம் உடையவன் -மாறுதல் அற்று இருப்பவன்
ஸ்வரூப விகாரம் இல்லாதவன்
அஷோப்ய-807-கலக்கம் அடையாதவன்

பால் தயிராக மாறுவது போலே விகாரப் படுவதற்குக் காரணங்கள் இருப்பினும் தம் இயற்கை மாறுபடாதவர் –
அகில் கஸ்தூரி புஷ்பம் போன்றவற்றின் வாசனை போலே தம் சந்நிதி மாத்ரத்தால் அளவற்ற செயல்களைச் செய்பவன் –
இந்த வீர்யத்தில் அற்பாம்சமே யோகீச்வரர்கள் போன்றவர்கள் இடம் நிகரற்று விளங்குகிறது -ஸ்ரீ பராசர பட்டர்-

தஸ்ய சந்நிதி மாத்ரேண கந்த ஷோபாய ஜாயதே மனசோ ந உப கர்த்ருத்வாத் ததா அசவ் பரமேஸ்வர —
சங்கல்பத்தாலே செயல் புரியுமவன்

உலகத்தை உண்டாக்கும் காரணமாகிய அவித்யை என்னும் கரணத்தை உடையவர் -ஸ்ரீ சங்கரர் –

மிகுந்த திறமை உடையவர் -ஸ்ரீ சத்ய சந்த தீர்த்தர் –

—————–

177-மஹா சக்தி –
மிகுந்த திறமை-உபாதான நிமித்த சக காரி மூன்று வித காரணம் –
கடல் ஞாலம் செய்வேனும் யானே என்னும் -கடல் ஞாலம் ஆவேனும் யானே -என்னும் -5-6-1-

தமது சரீரத்தின் ஏக தேசம் ஆகிய பிரக்ருதியின் பரிணாமத்தினால் உலகைப் படைக்கும் திறமை யுள்ளவர் -இந்த
சக்தியானது சாதன சமூஹங்களை விநியோகப் படுத்துவதாய் அவனுடைய சரீரத்தில் ஏக தேசமான பிரகிருதியை
பரிணமிப்பித்துக் கொண்டு சாமக்ரி இருந்தாலும் இல்லாவிட்டாலும் எல்லாவற்றையும் சம்பாதிக்கும் படி இருக்கும்
சிலந்திப் பூச்சி வாயில் இருக்கும் பொருளைக் கொண்டே வலை பின்னி நிமித்தமாயும் உபாதானமாகவும் இருக்கின்ற போது
சர்வஜ்ஞனான பகவானுக்கு இது கூடாததாகுமோ -இந்த சக்தியின் சிறிது அளவே பிரதானம் என்கிற பிரக்ருதியிலும்
தயிர் பால் போன்ற விகாரம் அடையும் பொருள்களிலும் காண்கிறது -ஸ்ரீ பராசர பட்டர் –

மிகவும் பெரிய சாமர்த்தியம் உள்ளவர் -ஸ்ரீ சங்கரர் –

மிக்க சக்தி உள்ளவர் -நிக்ரஹத்தையோ அருளையோ பொழியும் சக்தி யுள்ளவர்-ஸ்ரீ சத்ய சந்த தீர்த்தர் –

—————-

178-மஹா த்யுதி –
மிக்க ஒளி தேஜஸ் ஞானம் ஆகிற தேஜஸ் கொண்டே ஜகத் வியாபாரம்
சோதியாய சோதி நீ அதுண்மையில் விளங்கினாய் -திருச்சந்த -34
பெரிய பர நன் மலர்ச் சோதி -10-10-10-

படைத்தலில் தனக்கு வேறோர் துணை வேண்டாத தேஜஸ்சை உடையவர் –
சூர்யன் போன்றார்க்க்கு அனுகூலமாயும் எதிரிகளுக்கு பயங்கரமாயும் இருக்கும்
இதனுடைய அற்பாம்சமே சூரியன் சந்திரன் மாணிக்கம் முதலியவைகளில் பிரகாசித்து வருகிறது
இந்த ஆறு திரு நாமங்களிலும் மஹத்-விசேஷணம்-சமுத்ரத்தில் பெரு வெள்ளம் போலே அநந்த ரூபமான அவனிடம் நிறைந்த இதுவே
பகவத் சாஸ்த்ரங்களின் விஷயமாகும் -சௌசீல்யம் வாத்சல்யம் என்ற இரண்டு குணங்களும் சில பயன்களுக்காக
இதற்குள்ளே அடங்குகின்றன –ஸ்ரீ பராசர பட்டர் –

பரா அஸ்ய சக்தி விவிதைவ ஸ்ரூயதே ஸ்வாபாவிகீ ஞான பல கிரியா ச –ஸ்வேதாஸ்வர
தேஜோ பல ஐஸ்வர்ய மஹாவபோத ஸூ வீர்ய சக்தியாதி குணைக ராசி –ஸ்ரீ விஷ்ணு புராணம் -6-5-85-
ஞான சக்தி பல ஐஸ்வர்ய வீர்ய தேஜாம்சி அசேஷத பகவச் சப்த வாஸ்யாநி விநா ஹேயை குணாதி பி –ஸ்ரீ விஷ்ணு புராணம் -6-5-79-

உள்ளும் புறமும் ஒளி வடிவானவர் –ஸ்ரீ சங்கரர் –

மிகுந்த ஒளியை சூரியனுக்குத் தருபவர் -மிகுந்த ஒளி யுள்ளவர் -ஸ்ரீ சத்ய சந்த தீர்த்தர் —

———————

179-அநிர்தேச்ய வபு –
ஒப்பிட்டுச் சொல்ல முடியாத திரு மேனி –
ஞான பல சக்தி ஐஸ்வர்யம் வீர்யம் தேஜஸ் பூரணன்
ஈடும் எடுப்பும் இல் ஈசன் -1-6-3-
படியே இது என்று உரைக்கலாம் படியன் அல்லன் பரம் பரன் –8-8-2-
ஒருவரையும் நின் ஒப்பார் இலா என்னப்பா -பெரிய திரு மொழி -8-1-2-

மேற் சொன்ன ஆறு குணங்களை உடையவர் ஆதலால் தமது திருமேனிக்கு உவமை இல்லாதவர் –ஸ்ரீ பராசர பட்டர் –

மீண்டும் -662-வரும்
ஷாட் குண்ய விக்ரஹம் தேவம் பாஸ்வஜ் ஜ்வலந தேஜஸம்
புத்தி மனஸ் அங்க பர்யங்க வத்தாம் பகவதி லக்ஷயா மஹே சாஸ்த்ர சப்தேப்யோ புத்திமாந் அங்க ப்ரத்யங்கவாந்
இவனது திவ்ய மங்கள விக்ரஹம் பஞ்ச உபநிஷத் மயம் -சுத்த சத்வ மயேன ஹி அநேந கநக தலேந இவ ரத்னம்
உந்மீல்யதே ஷட் குணீ ச து த்ரி குண மயேந இவ நிமீல்யதே
ரூப வர்ணாதி நிர்தேச விசேஷண விவர்ஜித–ஸ்ரீ விஷ்ணு புராணம் -1-2-10-

தனக்குத் தானே பிரகாசிப்பதால் இது இப்படி என்று சுட்டிக் காட்ட முடியாத ஸ்வரூபம் உடையவர் –ஸ்ரீ சங்கரர் –

இப்படிப்பட்டது என்று வர்ணிக்க முடியாத திருமேனி உடையவர் -பூத சம்பந்தம் இல்லாத திரு மேனி -உபமானம் இல்லாதவர் –
மன்மதனை உண்டாக்கியவர்-ஸ்ரீ சத்ய சந்த தீர்த்தர் —

———————

180- ஸ்ரீ மான் –
திவ்ய ஆபரணங்களால்-திவ்ய ஆயுதங்கள் -ஸ்ரீ வத்ஸ வஷஸ் நித்ய ஸ்ரீ –
உள்ளே வெண் பல் இலகு சுடர் இலகு விலகு மகர குண்டலத்தன்
கொண்டல் வண்ணன் சுடர் முடியன் நான்கு தோளன் குனி சாரங்கன் ஒண் சங்கதை வாள் ஆழியான் ஒருவன் -8-8-1-

அந்த திரு மேனிக்குத் தகுந்த திவ்ய ஆபரணங்கள் உடையவர் –ஸ்ரீ பராசர பட்டர் –

-22-/ -222-நாமாவளி மீண்டும் உண்டே

பரிபூரணமான ஐஸ்வர்யம் ஆகிற ஸ்ரீ யை உடையவர் –ஸ்ரீ சங்கரர் –

ஸ்ரீ லஷ்மீ தேவியோடு கூடி இருப்பவர் -ஸ்ரீ சத்ய சந்த தீர்த்தர் —

—————-

181-அமேயாத்மா –
அளவிட்டு அறிய முடியாதவன் –முன் 103-அப்ரமேய -46
அளத்தற்கு அரியாய் ஆதிப் பெரு மூர்த்தி எம்பெருமானை ஆரே அறிவார்
கடிக் கமலத்துள் இருந்தும் காண்கிலான் கண்ணன் அடிக்கமலம் தன்னை அயன் -முதல் திரு -56

இவ்வாறு பல்வகைக் குணங்கள் நிரம்பிக் கடல் போல் இருப்பதால் அளவிட முடியாதவர் –ஸ்ரீ பராசர பட்டர் –

எவராலும் அறிய முடியாத ஞானம் உடையவர் -ஸ்ரீ சங்கரர் –

முழுமையாக அறிய முடியாத ஸ்வரூபம் உடையவர் -லஷ்மியால் அளவிடப்படும் ஆத்மாவை உடையவர் -என்பதனால் –
ஸ்ரீ மாநமேயாத்மா -என்று ஒரு திரு நாமமாகவும் கூறுவர்-ஸ்ரீ சத்ய சந்த தீர்த்தர் –

————————————————————————–

3-5-குணங்களுக்கு ஏற்ற அவதார செயல்கள் -182-186-

182-மஹாத்ரி த்ருத் –
பெரு மலையைத் தாங்குமவன்-
மஹா கூர்மமாய் -மந்தர மலை –ஒரு சுண்டு விரலால் கோவர்த்தன மலை
மலை ஏந்திக் கல் மாரி தன்னைக் காத்த எம் கூத்தாவோ -7-6-3
குன்று எடுத்து பாயும் பனி மறைத்த பண்பாளன் -முதல் திரு -86–

பாற் கடல் கடைந்த போது மந்தர மலையைத் தாங்கியவர் –
அதற்குத் தகுதியாகத் தம் விருப்பப்படி செயல்படுபவர் –ஸ்ரீ பராசர பட்டர் –

மந்தர கோவர்த்தன மலைகளைத் தாங்கியவர் -ஸ்ரீ சங்கரர் –

மந்தர கோவர்த்தன மலைகளைத் தாங்கியவர் -ஸ்ரீ சத்ய சந்த தீர்த்தர் –

—————

மஹேஷ் வாஸோ மஹீ பர்த்தா ஸ்ரீ நிவாசஸ் சதாம்கதி
அநிருத்தஸ் ஸூராநந்தோ கோவிந்தோ கோவிதாம்பதி–20-

——-

183-மகேஷ் வாஸ –
சர மழை பொழிபவன் -வில்லாளி
தீவாய் வாளி மழை பொழிந்த சிலையா -6-10-4
சார்ங்கம் உதைத்த சர மழை -திருப்பாவை -4-

சேது பந்தனம் ராவண வதம் போன்றவைகளில் மனம் கவரும் வகையில் பாணங்களை எய்தவர் –ஸ்ரீ பராசர பட்டர் –

மிகப் பெரிய வில்லை உடையவர் -ஸ்ரீ சங்கரர் –

மிகப் பெரிய வில்லை உடையவர் -உயர்ந்த இச்சையை உடையவர் –
எங்கும் நிறைந்து இருப்பவர்-ஸ்ரீ சத்ய சந்த தீர்த்தர் –

——————-

184-மஹீ பர்த்தா-
பூமியைத் தரிப்பவன் -ஆதி கூர்மமாக -வராஹ பிரானாய்-
எயிற்றிடை மண் கொண்ட வெந்தை -பெரியாழ்வார்
நாகமேந்து மண்ணினைக் காத்து ஏகமேந்தி நின்ற நீர்மை -திருச் சந்த -6-

மிகவும் எளிதாக பூமியைத் தாங்குபவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

கடலில் முழுகிய பூமி தேவியைத் தாங்கியவர் -ஸ்ரீ சங்கரர் –

பூமி தேவிக்குக் கணவர் -விழாக்களுக்குத் தலைவர் -ஸ்ரீ லஷ்மி தேவிக்கும் மன்மதனுக்கும் பிரபு-ஸ்ரீ சத்ய சந்த தீர்த்தர் –

————–

185-ஸ்ரீ நிவாஸ-
அலர் மேல் மங்கை உறை மார்பன் -6-10-10
என் திரு வாழ் மார்வர் -8-3-7-
மலிந்து திருவிருந்த மார்பன் -மூன்றாம் திரு -57
பஸ்யதாம் சர்வ தேவாநாம் யாயௌ வஷ ஸ்தலம் ஹரே -ஸ்ரீ விஷ்ணு புராணம்

பாற் கடல் கடைந்து பெற்ற ஸ்ரீ லஷ்மியை மார்பில் வைத்துச் சிறப்பித்தார் -ஸ்ரீ பராசர பட்டர் –

திரு மார்பில்,லஷ்மி எப்போதும் பிரியாமல் வசிக்கப் பெற்றவர் -ஸ்ரீ சங்கரர் –

தம்மிடத்தில் ஸ்ரீ லஷ்மி வசிக்கப் பெற்றவர் -லஷ்மியை நடத்துபவர் -எல்லா இடத்திலும் வசிப்பவர் –
அனைத்தையும் மறைப்பவர் -தம் உடையாகக் கொள்பவர் -ஸ்ரீ சத்ய சந்த தீர்த்தர் –

——————-

186 ஸதாங்கதி –
பக்தர்களுக்கு புகலாய் உள்ளவன் –
புகல் ஓன்று இல்லா அடியேன் உன்னடிக் கீழ் அமர்ந்து புகுந்தேனே -6-10-10-
மீண்டும் -451- பற்றிலார் பற்ற நின்றவன்

தமது விளையாட்டுச் செயல்களாலும் பக்தர்க்கு நன்மையே செய்பவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

வைதிகர்களான சாதுக்களுக்குப் புருஷார்த்த கிடைக்க சாதனம் ஆனவர் -ஸ்ரீ சங்கரர் –

ஆனந்தத்தோடு கூடிய முக்தர்களுக்கு புகலிடமாக இருப்பவர் –
துயரப்படுபவர்களும் ஞானிகளுக்கும் புகலிடம்-ஸ்ரீ சத்ய சந்த தீர்த்தர் –

—————————————————————-

3-6- ஹம்ஸாவதாரம் -187-194-திரு நாமங்கள்

187- அநிருத்த-
ஒருவராலும் தடை செய்ய முடியாதவன் –
விபவ அவதார கிழங்கு – பாற்கடலில் துயிலும் -அநிருத்த பகவான்–நினைவூட்டும்
அநிருத்தன் நின்றும் அவதரிக்கும் ஹம்ச ரூபியைச் சொல்லும்
ஏழு உலகும் ஆற்றல் மிக்கு ஆளும் அம்மான் -4-5-1-
மீண்டும் -644-

அளவற்ற ஜீவ ராசிகளைக் காப்பாற்றுவதில் தடையற்ற திவ்ய சேஷ்டிதமுடையவர்–ஸ்ரீ பராசர பட்டர் –

அவதாரங்களிலும் எவராலும் தடுக்கப் படாதவர் –ஸ்ரீ சங்கரர் –

எவராலும் தடுக்கப்பட முடியாதவர் -ஞானிகளுக்குத் தடையில்லாதவர் -முக்ய பிராணனின் பக்தர்களால் தத்தம் இதயத்தில்
கட்டுப்படுபவர் -வேதத்துக்கு விரோதமான ஆசாரம் உடையவர்களை அழிப்பவர்-ஸ்ரீ சத்ய சந்த தீர்த்தர் –

——————

188-ஸூராநந்த –
அமரர்களை களிப்பூட்டும் பெருமான் -ரஷிப்பவன்
நினைந்து நைந்து உள் கரைந்து உருகி இமையோர் பலரும் முனிவரும் வணங்கி -1-5-2-

ஆபத்தில் உதவி செய்து தேவர்களை மகிழ்விப்பவர் -திருவவதாரங்களுக்கு மூலமான அநிருத்தருடைய
ஹம்சாவதாரம் கூறப்படுகிறது –ஸ்ரீ பராசர பட்டர் –

தேவர்களை மகிழ்விப்பவர் –ஸ்ரீ சங்கரர் –

நல்ல ஞானத்தைக் கொடுப்பவர் -ஸ்ரீ சத்ய சந்த தீர்த்தர் –

——————

189-கோவிந்த –
தேவர்களால் துதிக்கப் படுபவன்
கோ -சொல் -ஏத்தும் சொல் மாலைகளைப் பெறுபவன்
மீண்டும் 543-பூமியை மீட்பவன் ரஷிப்பவன்
மேலாத் தேவர்களும் நிலத்தேவரும் விரும்பித் தொழும் மாலார் -5-1-8-
கூடாரை வெல்லும் சீர்க் கோவிந்தா -உன் தன்னைப் பாடிப் பறை கொண்டு -திருப்பாவை -27-

அத் தேவர்களின் துதி ஆகிய வாக்குகளைப் பெறுபவர் –ஸ்ரீ பராசர பட்டர் –

மறைந்து போன பூமியை எடுத்தவர் –ஸ்ரீ சங்கரர் –

பூமி வில் பசு ஸ்வர்க்கம் வேதம் ஆகியவற்றை அடைந்தவர் -ஸ்ரீ சத்ய சந்த தீர்த்தர் –

——————–

190-கோவிதாம் பதி
சொல் அறிபவர்களுக்கு ஸ்வாமி –வேத வாக்குகள் அறிந்தவர் கோ விதா
யஞ்ஞத்தால் ஆராதிக்கப் படுமவன்
வேத நாவர் விரும்பும் திருக் கண்ண புரத்தாதியான் -9-10-9-
செய்த வேள்வியர் வையத்தேவர் அறாச் சிரீ வர மங்கல நகர் கை தொழ விருந்தாய் -5-7-5-

வேதங்களை அறிந்த ஞானிகளால் ஞானம் என்னும் யஜ்ஞத்தினால் ஆராதிக்கப் பெற்று அவர்களைக் காப்பவர் –ஸ்ரீ பராசர பட்டர் –

காவ -என்று வேதங்களின் சொற்கள் / த்விதாம் என்று அவற்றை நன்கு அறிந்தவர்களின் ஞானம் என்கிற
யஜ்ஜம் மூலம் ஆராதிக்கப்படுபவன்
ஹம்ஸ மூர்த்திம் அத ஆத்மாநம் ஞான யஜ்ஜ புஜம் ஸ்மரேத்

வாக்குகளை அறிந்தவர்களுக்கு விசேஷமாகத் தலைவர் –ஸ்ரீ சங்கரர் –

வேதங்களை அறிந்தவர்களுக்கு பத்தி -நீர் வாழ்வானவற்றுக்குத் தலைவன் -ஸ்ரீ சத்ய சந்த தீர்த்தர் –

———

மரீசிர் தமநோ ஹம்சஸ் ஸூ பர்ணோ புஜகோத்தம
ஹிரண்ய நாபஸ் ஸூ தபா பத்ம நாப ப்ரஜாபதி–21-

——–

191-மரீசி-
கிரணமானவன் -ஒளியைச் சொல்கிறது
குந்த மலர் குருக்கத்தி போலவும் நிறை மா மதி போலவும்
ஆதி அம் சோதி என்கோ வானவர் போகம் என்கோ ஒளி மணி வண்ணனையே -3-4-4-

மூடர்களுக்கும் தமது மாசற்ற ரூபத்தைக் காட்டுபவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

குந்தேந்து ஸ்நிக்த காந்திச்ச–குருக்கத்தி மலர் சந்த்ரம் போன்று கதிர் பொருக்கி உபமானம் சொல்லத் தேடலாம்

ஒளி உள்ளவர்களுக்கும் ஒளியாக இருப்பவர் –ஸ்ரீ சங்கரர் –

இருளை அழியச் செய்பவர் -நீருள்ள மேகங்களை அசையச் செய்பவர் –ஸ்ரீ சத்ய சந்த தீர்த்தர் –

——————-

192-தமந-
அடங்கச் செய்பவன் -தமயதி இதி தமந -சம்சார தாபத்தை அடங்கச் செய்பவன் போக்குமவன்
உயர் வினையே தரும் ஒண் சுடர்க் கற்றை -1-3-4-
திகழும் பவளத் தொளி யப்பன்–பெரிய திரு மொழி -7-10-6-

திவ்ய தேஹ ஒளியினால் சம்சார தாபத்தை அடக்குபவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

தம் கடைமைகளில் தவறுபவர்களை தண்டிக்கும் மனுவாக இருப்பவர் –ஸ்ரீ சங்கரர் –

இந்திரியக் கட்டுப்பாடு உள்ளவர்களை நடத்துபவர் -தமனாசுரனை அழித்தவர்-புலன்களை
அடக்கியவர்களுக்கு இனியவர் -விருப்பத்தை நிறைவேற்றும் மனமுடையவர் –ஸ்ரீ சத்ய சந்த தீர்த்தர் –

——————–

193-ஹம்ஸ-
ஹம்சாவதாரம் பண்ணுமவன்
ஹம்ஸ -அழகிய நடை -மோஹனமான புன் முறுவல்
அன்னமாய் முனிவரோடு அமரர் ஏத்த அருமறையை வெளிப் படுத்த வம்மான் -திரு நெடு -30
சுத்த சத்வ -சுபாஸ்ரய –பரம ஹம்ஸாய த்யான ஸ்லோகம்
அச்சுதன் அமலன் என்கோ கனி என்கோ பால் என்கோ -3-4-5-
பால் -சுத்த சத்வம் -அமலன் -சுத்தன் –

அழகாக நடப்பவர் – அழகிய புன்சிரிப்புள்ளவர்-ஸ்ரீ பராசர பட்டர் –

ஹந்தா சங்காநாம் –பந்தங்களை அழிப்பவன்
ஹம்ஸ –மநோ ஹரம்–அழகு -ஹந்தி -கச்சதி -நடப்பவன் -ஸ்ம்யதே -புன்னகை
சத் சத்த்வ சுப ஆஸ்ரய பரம ஹம்ஸாய –

நானே அவன் என்று பாவிப்பவர்களுக்கு சம்சார பயத்தை அழிப்பவர் -எல்லா உடல்களிலும் செல்பவர் –ஸ்ரீ சங்கரர் –

தோஷங்கள் அற்றவன் -சாரமானவர் –ஸ்ரீ சத்ய சந்த தீர்த்தர் –

—————–

194- ஸூபர்ண-
அழகிய சிறகுகளை யுடையவன்
ஸூபர்ணோ ஹி கருத்மான்
சம்சார கடலை கடக்க
தவா ஸூபர்ணா-இரண்டு பறவைகள் மரத்தில் ஸ்ருதி
வினதை சிறுவன் சிறகு என்னும் மேலாப்பின் கீழே வருவான் -நாச் -14-3
மீண்டும் -859-தாண்ட உதவுமவன் -தெய்வப் புள்ளேறி வருவான் -பெரிய திருமொழி -3-3-6
புள்ளைக் கடாகின்ற தாமரைக் கண்ணன் -7-3-1-

ஹம்சாவதாரத்தில் அழகிய சிறகுகளை உடையவர் -சம்சாரக் கடலினின்றும் கரை சேர்ப்பவர் -ஸ்ரீ பராசர பட்டர் –
-859-மீண்டும் வரும்

அழகிய சிறகுகளை உடையவர் –ஸ்ரீ சங்கரர் –

உயர்ந்த ஆனந்தத்தை ஸ்வரூபமாக உடையவர் –ஸ்ரீ சத்ய சந்த தீர்த்தர் –

————————————————————

3-7- பத்ம நாபா வதாரம்-195-199-

195-புஜகோத்தம –
திரு அநந்த ஆழ்வானுக்கு ஸ்வாமி -புஜகம் -ஆதி சேஷன் -தஸ்ய உத்தம -சேஷி
அனந்தன் மேல் கிடந்த புண்ணியன் -திருச்சந்த -45
அரவணை மேல் பள்ளி கொண்ட முகில் வண்ணன் -திரு விருத்தம் -62-

ஆதிசேஷனுக்கும் மேற்பட்ட தலைவராய் அவன் மீது சயனித்து இருப்பவர் –
பத்மநாப–48- அமரப்ரபு–49–என்று வ்யூஹத்தில் கடைசி அனிருத்தனான பத்ம நாபன் கூறப்பட்டார் –
இங்கு அவதாரத்தில் முதல்வரான பத்ம நாபர் கூறப்படுகிறார் புஜகோத்தமர் என்று -ஸ்ரீ பராசர பட்டர் –

புஜகஸ்ய -ஆதி சேஷன் / உத்தம -மேம்பட்டவன் -சேஷனுக்கு சேஷி
மாநசே அநந்த சயநே திவ்ய போத தநு விபூ
ஸூஷ்வாப பகவான் விஷ்ணு அப் ஸய்யாம் ஏக ஏவ ஹி நகஸ்ய போகே மஹதி சேஷஸ்ய அபித தேஜச-என்றும்
போகி சய்யா கத சேத த்ரை லோக்ய க்ராஸ ப்ரும்ஹித–ஸ்ரீ விஷ்ணு புராணம்

பாம்புகளில் சிறந்தவர் -ஸ்ரீ சங்கரர் –

உயர்ந்த பாம்பாகிய ஆதி சேஷனைப் படுக்கையாக உடையவர் -ஸ்ரீ சத்ய சந்த தீர்த்தர் –

——————-

196-ஹிரன்ய நாப –
எழில் உந்தியான் –
கொப்பூழில் எழு கமலப் பூவழகன் -நாச்-11-2
தாமரை யுந்தி தனிப் பெரு நாயகன் -திரு வாசி -1-

அவரே அழகான நாபியை யுடையவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

தங்கம் போலே அழகிய நாபியை உடையவர் -ஸ்ரீ சங்கரர் –

ஹிரண்யாஸூரனை அழித்தவர் -ஸ்ரீ சத்ய சந்த தீர்த்தர் –

—————–

197-ஸூதபா
சிறந்த ஞானம் உள்ளவன்
நெறி எல்லாம் எடுத்துரைத்த நிறை ஞானத் தொரு மூர்த்தி -4-8-6-

திவ்ய ஞானம் உள்ளவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

நர நாராயண ரூபத்துடன் பத்ரிகாஸ்ரமத்தில் சிறந்த தவம் புரிபவர் -ஸ்ரீ சங்கரர் –

நான்முகனாகிய பிள்ளையைக் காப்பவர் -மங்களகரமான ஞானம் உடையவர் –
விருப்பமான சோம ரசத்தைப் பருகுபவர் -ஸ்ரீ சத்ய சந்த தீர்த்தர்-

—————-

198-பத்ம நாபன் –
கீழே 48 அநிருத்தன் பேசப் பட்டது இங்கு பத்ம நாப அவதாரம் -மீண்டும் 347-

நாபியில் பத்மத்தை யுடையவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

கதாசித் தஸ்ய ஸூப்தஸ்ய நாப்யாம் காமாத் அஜாயத திவ்யம் அஷ்ட தளம் பூரி பங்கஜம் பார்த்திவம் மஹத்
யஸ்ய ஹேம மயீ திவ்யா கர்ணிகா மேரு உத்யதே –ப்ரஹ்ம புராணம் —
திரு நாபி கமலத்தின் தங்கமயமாக காயே மேரு

தாமரை போல் வட்டமான நாபியை யுடையவர் -ஸ்ரீ சங்கரர் –

பக்தர்களுக்கு நன்கு பிரகாசிப்பவர் -பிரமனைத் தம் நாபியில் உடையவர் -ஸ்ரீ சத்ய சந்த தீர்த்தர்-

—————-

199-பிரஜாபதி –
பிரஜைகளுக்கு ஸ்வாமி
தேவர்களுக்கு எல்லாம் தேவன்
சிவன் அயன் இந்திரன் இவர் முதல் அனைத்தோர் தெய்வக் குழாங்கள்
கை தொழக் கிடந்த தாமரை யுந்தி தனிப் பெரு நாயகன் -திருவாசிரியம்
உலகும் உயிரும் ஒன்றும் இல்லா வன்று நான் முகன் தன்னோடு தேவர் உலகோடு உயிர் படைத்தான் -4-10-1-

நாபிக் கமலத்தில் பிறந்த பிரமன் முதலியவர்களுக்குத் தலைவர் –
இதை நைமித்திக சிருஷ்டி நைமித்திக பிரளயம் இவற்றைக் குறித்ததாகக் கொள்க -ஸ்ரீ பராசர பட்டர் –

பிரஜைகளுக்குத் தந்தையானவர் -ஸ்ரீ சங்கரர் –

தன்னைத் துதிப்பவர்களை மகிழ்விப்பவர் -பிரஜைகளுக்குத் தலைவர்-ஸ்ரீ சத்ய சந்த தீர்த்தர்

———————-

அவதரித்துக் காப்பவன் -இனியவன் –

165-வேத்ய -எளியவனாக பிறக்கிறபடியால் அனைவரின் புலன்களாலும் அறியக் கூடியவர் –
166-வைத்ய-அடியார்களுக்கு பிறவியை போக்கும் வித்தையை அறிந்தவர் –
167-சதாயோகீ–அடியார்களைக் காக்க எப்போதும் விழித்து இருப்பவர் –
168-வீரஹா -தீய வாதங்களால் மக்களை பகவான் இடத்தில் இருந்து பிரிக்கும் வலிமையை உடையவர்களை ஒழிப்பவர்
169-மாதவ -பரமாத்ம ஞானத்தைக் கொடுப்பவர் –
170-மது -மெய்யடியார்களுக்கு தேன் போன்று இனிமையானவர்

———————————————————————-

பொதுவான கல்யாண குணங்கள் –

171-அதீந்த்ரிய -அறிவை அளிக்கும் புலன்களுக்கு எட்டாதவர் –
172-மஹா மாய -தன்னை சரணம் அடையாதவர்களுக்கு அறிய ஒண்ணாத மாயையை உடையவர் –
173-மஹோத்சாஹ-மிக்க ஊக்கம் உடையவர் –
174-மஹா பல-வேறு உதவியை நாடாத வலிமை உள்ளவர் –
175-மஹா புத்தி -எப்போதும் எங்கும் அனைத்தையும் ஒரே சமயத்தில் அறிபவர் –
176-மஹா வீர்ய -விகாரம் இல்லாதவர் –
177-மஹா சக்தி -தன் சரீரத்தின் ஒரு பகுதியான பிரக்ருதியை மாற்றி உலகத்தை படைக்கும் திறன் உள்ளவர் –
சிலந்தி தன் உடலில் இருந்தே நூலை வெளியேற்றி மறுபடியும் உள்ளே இழுப்பது போலே –
178-மஹாத் யுதி -சூர்ய ஒளி சிறிது என்னும் அளவிற்குப் பிரகாசம் ஆனவர் –
179-அநிர்தேஸ்ய வபு -நிகரற்ற விளக்க ஒண்ணாத திருமேனியை உடையவர் –
180-ஸ்ரீ மான் -தன் திருமேனிக்குத் தகுந்த ஆபரணச் செல்வத்தை உடையவர் –
181-அமேயாத்மா -கடலைப் போலே ஆழமாய் அளவிட முடியாதவர் –

——————————————————————————————

குணங்களுக்கு ஏற்ற அவதாரச் செயல்கள் –

182-மஹாத்ரி த்ருத் -பாற் கடலைக் கடையும் போது மந்த்ரம் என்னும் பெரிய மலையைத் தாங்கினவர் –
183-மகேஷ்வாச -சார்ங்கத்தைத் தாங்கி சிறந்த பாணங்களை எய்பவர் –
184-மஹீபர்த்தா -பூமியை எளிதில் தாங்குபவர் –
185-ஸ்ரீ நிவாச -பாற் கடலில் இருந்து வெளிப்பட்ட திருவைத் தன் திருமார்பில் ஏந்துபவர் –
186-சதாம் கதி -பக்தர்களான சாதுக்களுக்கு கதியானவர் –
187-அநிருத்த-அடியார்களைக் காக்கும் போது இடையூறுகளால் தடுக்க முடியாதவர் –

—————————————————

ஹம்சாவதாரம் –

188-சூரா நந்தா -தேவர்களின் ஆபத்தை போக்கி மகிழ்ச்சியை கொடுப்பவர் –
189-கோவிந்த -தேவர்கள் செய்யும் ஸ்துதிகளை பெறுபவர் –
190-கோவிதாம் பதி – வேத வாக்குகளை அறிந்தவர்களுக்கு தலைவர் –
191-மரீசி -கண் இழந்தோர்க்கும் தன்னை வெளிப்படுத்தும் ஓளிக்கீற்று ஆனவர் –
192-தமன -தன் ஒளியினால் சம்சார வெப்பத்தை அடக்குபவர் –
193-ஹம்ஸ-தூய அன்னமாக அவதரித்தவர் –
194-சூபர்ண–சம்சாரக் கடலில் இருந்து கரை சேர்க்கும் அழகிய சிறகுகளை உடையவர் –

————————————————-

பந்த நாப அவதாரம் -உந்தித் தாமரை யான் –

195-புஜ கோத்தம-பாம்புகளுக்குள் சிறந்தவர் -ஆதி சேஷனுக்குத் தலைவர் –
196-ஹிரண்ய நாப -பொன் போன்ற உந்தியை உடையவர் –
197-சூதபா–தன்னிடத்தில் க்ரஹிக்கப்பட்ட அனைத்தையும் அறிபவர்
198-பத்ம நாப -உந்தியில் எட்டு இதழ்களோடு கூடிய தாமரையை உடையவர் –
199-பிரஜாபதி -பிரமன் முதலிய அனைவர்க்கும் தலைவர் –

———————————————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பராசர பட்டர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பீஷ்மர் திருவடிகளிலே சரணம்
ஸ்ரீ வியாச பகவான் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: