ஸ்ரீ விஷ்ணு சகஸ்ர நாமம்-3-12-விஸ்வ ரூபம் —272-300-திரு நாமங்கள் /3-13-ஆலிலை மேல் துயின்ற –வட பத்ர சாயி -301-313-திரு நாமங்கள்/3-14-ஸ்ரீ பரசுராம -ஆவேச சக்தி -அவதாரம் -314-321-/3-15-ஸ்ரீ கூர்மாவதாரம் -322-332-திரு நாமங்கள்

ஸூ புஜோ துர்த்தரோ வாக்மீ மஹேந்த்ரோ வஸூதோ வஸூ
நைகரூபோ ப்ரருஹத்ரூபஸ் சிபிவிஷ்ட ப்ரகாசன–29-
ஒஜச்தேஜோ த்யுதிதர பிரகாசாத்மா பிரதாபன
ரித்தஸ் ஸபஷ்டாஷரோ மந்த்ரஸ் ந்த்ராம்ஸூர் பாஸ்கரத்யுதி–30
அம்ருதாம் ஸூத்பவோ பாநுஸ் சசபிந்துஸ் ஸூ ரேச்வர
ஔஷதம் ஜகதஸ் சேதுஸ் சத்ய தர்ம பராக்ரம –31
பூத பவ்ய பவன்னாத பவன பாவநோ அநல
காமகா காமக்ருத் காந்த காம காமப்ரத ப்ரபு–32-
யுகதிக்ருத் யுகாவர்த்த நைகமாயோ மஹாஸந
அத்ருச்யோ வ்யக்த ரூபஸ்ஸ சஹஸ்ரஜித நந்தஜித் –33
இஷ்டோ விசிஷ்டஸ் சிஷ்டேஷ் டஸ் சிகண்டீ நஹூ ஷோ வ்ருஷ
க்ரோதஹா க்ரோதக்ருத் கர்த்தா விஸ்வ பாஹூர் மஹீ தர -34
அச்யுத ப்ரதித ப்ராண பிராணதோ வாசவா நுஜ
அபான் நிதிரஷ்டா நம் அப்ரமத்த ப்ரதிஷ்டித –35
ஸ்கந்தஸ் ச்கந்ததரோ துர்யோ வரதோ வாயுவாஹன
வாஸூதேவோ ப்ருஹத்பாநு ராதிதேவ புரந்தர -36

———–

3-1-பிரதம அவதாரம் விஷ்ணு -147-152- திரு நாமங்கள்–6 -திரு நாமங்கள்
3-2-வாமன அவதார பரமான -153-164 திரு நாமங்கள் —12-திரு நாமங்கள்
3-3- துஷ்ட நிக்ரஹ இஷ்ட பரிபாலநம் -165-170-திரு நாமங்கள்–6-திரு நாமங்கள்
3-4-ஜ்ஞானாதி பகவத் குணங்கள் கொண்டவன் -171-181- திரு நாமங்கள்-11-திரு நாமங்கள்
3-5-குணங்களுக்கு ஏற்ற அவதார செயல்கள் -182-186-திரு நாமங்கள்–5 திரு நாமங்கள்
3-6-ஹம்ஸாவதாரம் -187-194-திரு நாமங்கள்-7 திரு நாமங்கள்
3-7-பத்மநாபாவதாரம்-195-199-திரு நாமங்கள்-5 திரு நாமங்கள்
3-8-நரசிம்ஹ அவதாரம் ——200-210—திரு நாமங்கள்—11 திரு நாமங்கள்
3-9-மத்ஸ்ய அவதார -211-225- திரு நாமங்கள் –15-திரு நாமங்கள்
3-10- புருஷ ஸூக்த உபநிஷத் ப்ரதிபாதித விராட் ஸ்வரூப—226-247- திரு நாமங்கள் -22-திரு நாமங்கள்
3-11–சித் அசித் -இவைகளாலான -ஐஸ்வர்ய -பூர்த்தி -248-271-திரு நாமங்கள் -23-திரு நாமங்கள்
3-12-விஸ்வ ரூபம் —272-300-திரு நாமங்கள் -29-திரு நாமங்கள்
3-13-ஆலிலை மேல் துயின்ற –வட பத்ர சாயி -301-313-திரு நாமங்கள்–14-திரு நாமங்கள்
3-14-ஸ்ரீ பரசுராம -ஆவேச சக்தி -அவதாரம் -314-321-திரு நாமங்கள்–8-திரு நாமங்கள்
3-15-ஸ்ரீ கூர்மாவதாரம் -322-332-திரு நாமங்கள்–11-திரு நாமங்கள்

—————–

ஸூ புஜோ துர்த்தரோ வாக்மீ மஹேந்த்ரோ வஸூதோ வஸூ
நைகரூபோ ப்ரருஹத்ரூபஸ் சிபிவிஷ்ட ப்ரகாசன–29-

———

3-12-விஸ்வ ரூபம் -திரு நாமங்கள் 272-300

272-நைக ரூப –
பல உருவங்களை உடையவன் -பஸ்யாமி த்வாம் சர்வதோ அநந்த ரூபம் –
ஏக மூர்த்தி இரு மூர்த்தி பல மூர்த்தியாகி -4-3-3-
ஏக மூர்த்தி நன்மை சேர் எண்ணில் மூர்த்தியாய் -திருச்சந்த -17-

பலவகையினருக்காகப் பல உருவங்கள் கொள்பவர் –
இனி கீழே கூறப் பட்டதற்கு ஏற்ப எம்பெருமானுடைய விஸ்வரூபம் கூறப்படுகிறது –ஸ்ரீ பராசர பட்டர் –

விஸ்வ ரூபாய–அனைத்தையும் தனது ரூபமாகக் கொண்டவன்
பச்யாமி த்வா ஸர்வதா அநந்த ரூபம் –ஸ்ரீ கீதை

ஒரே ரூபம் இல்லாதவர் -அநேக ரூபம் யுடையவர் –ஸ்ரீ சங்கரர் –

அநேக உருவங்கள் உள்ளவர் –ஸ்ரீ சத்ய சந்தர்-

———————-

273-ப்ருஹத் ரூப
பெரிய உருவம் -அனந்தனை எண்ணுமாறு அறிய மாட்டேன் யாவையும் யாவரும் தானே -3-4-9-
பெரு மா மேனி யண்ட மூடுருவப் பெரும் திசை யடங்கிட நிமிர்ந்தோன் -பெரிய திரு மொழி -9-1-8-
சிலம்பினிடை சிறு பரல் போல் பெரிய மேரு திருக் குழம்பில் கண கணப்ப திரு வகாரம் -பெரிய திரு மொழி -4-4-8-

அவ் வுருவங்கள் ஒவ்வொன்றும் எல்லாத் திசைகளையும் மேலுலகங்களையும் -இடை வெளியையும்
வியாபிக்கும்படி பெரியவராய் இருப்பவர் –ஸ்ரீ பராசர பட்டர் –

த்யாவா ப்ருதிவ்யோ இதம் அந்தரம் ஹி வ்யாப்தம் த்வயா ஏகேந திகச்ச சர்வா -ஸ்ரீ கீதை -11-20–

பூமியைத் தாங்கும் பெரிய வராஹம் உள்ளவர் –ஸ்ரீ சங்கரர் –

பெரிய உருவம் உள்ளவர் -ஸ்ரீ சத்ய சந்தர்-

—————–

274-சிபிவிஷ்ட –
ஒளிக் கிரணங்களாலும் வியாபகம் சிபி ரஸ்மி கிரணம்
வந்தாய் என் மனம் புகுந்தாய் மன்னி நின்றாய் நந்தாத கொழும் சுடரே -பெரிய திருமொழி -1-10-9-
திகழும் ஆகாசம் என்கோ நீள் சுடர் இரண்டும் என்கோ ஒளி மணி வண்ணனையே -3-4-1-

கிரணங்களுள் பிரவேசித்து வியாபிப்பவர் –ஸ்ரீ பராசர பட்டர் –

சிபயஸ் ரஸ்மயஸ் உச்யந்தே தை ஆவிஷ்ட
சிபிவிஷ்ட இதி யச்ச அஸ்ய பீதம் ரோம ச யத் பவேத் தேந அபி விஷ்டம் யத் கிஞ்சித் சிபிவிஷ்டம் ஹி தத் ஸ்ம்ருதம் –சாந்தி பர்வம்
உலகம் அனைத்தும் அவன் திரு மேனியால் வியாபிக்கப்பட்டுள்ளன
ரோம கூபேஷூ ச ததா ஸூர்யஸ்ய இவ மரீசய–என்று
ஸூர்ய கிரணங்கள் எங்கும் பரவி இருப்பது போலே அவன் எங்கும் பிரவேசித்துள்ளான்
தேஜோபி ஆ பூர்ய ஜகத் சமஸ்தம் பாச தவ உக்ரா பிரதபந்தி விஷ்ணோ –ஸ்ரீ கீதை -11-30-

யாக பசுக்கள் இடத்தில் யாக ரூபியாக இருப்பவர் -கிரணங்களுக்குள் இருப்பவர் –ஸ்ரீ சங்கரர் –

மறக்கட்டைக்குள் அக்னியாய் இருப்பவர் -ஸ்ரீ சத்ய சந்தர்-

——————

275-பிரகாசன
விளங்கச் செய்பவன் -திவ்ய சஷூஸ் கொடுத்து அர்ஜுனனுக்கு காட்டி அருளி
நந்தா விளக்கே அளத்தற்கு அரியாய் -பெரிய திருமொழி -3-8-1-

இத் திவ்ய ரூபத்தைக் காணக் கருதும் அர்ச்சுனன் முதலியோர்க்கு காட்டுபவர் –ஸ்ரீ பராசர பட்டர் –

பிரதர்சன -பாட பேதம்
திவ்யம் ததாமி தே ச ஷூ பஸ்ய மே யோகம் ஐஸ்வர்யம் -11-8-
ஸூ துர் தர்ஷம் இதம் ரூபம் த்ருஷ்டவான் அஸி யந மம -11-52-

எல்லாவற்றையும் பிரகாசிக்கச் செய்பவர் –ஸ்ரீ சங்கரர் –

பிரகாசப்படுத்துபவர் -சுகத்தை நன்கு அனுபவிப்பவர் -சூரியன் முதலியோர்க்கு பிரகாசத்தைக் கொடுப்பவர் – ஸ்ரீ சத்ய சந்தர்-

———-

ஒஜச்தேஜோ த்யுதிதர பிரகாசாத்மா பிரதாபன
ரித்தஸ் ஸபஷ்டாஷரோ மந்த்ரஸ் ந்த்ராம்ஸூர் பாஸ்கரத்யுதி–30-

—————-

276-ஓஜஸ் தேஜோ த்யுதிதர
பலம் பராக்கிரமம் தேஜஸ் -எல்லாம் ஓஜஸ் -பலம் தேஜஸ் தேசு த்யதி பிரகாசம் ஒளி
குன்றம் ஓன்று ஏந்தியதும் நிகரில் மல்லரை செற்றதும் நிரை மேய்த்தத்வும்
நீள் நெடும் கை சிகர மா களிறு அட்டதும் இவை போல்வனவும் பிறவும்
புகர் கொள் சோதிப் பிரான் செய்கை -6-4-3
திவி ஸூ ரய சஹச்ரச்ய பவேத் யுக துத்திதா -சஞ்சயன் ஆயிரம் சூர்யன் போன்ற கிருஷ்ணன் பிரகாசம்

பலம் பராக்கிரமம் கீர்த்தி ஒளி ஆகியவற்றை யுடையவர் –ஸ்ரீ பராசர பட்டர் –

ஓஜஸ் தேஜஸ் த்யுதிர –பலம் வெல்லும் திறன் கீர்த்தி காந்தி இவற்றைத் தரிப்பவன்
யதா ப்ரதீப்தம் ஜ்வலநம் பாதங்கா விசாந்தி நாசாய சஸ்ருத வேகா -11-29-
ஸ்தானே ஹ்ருஷீகேச தவ ப்ரகீர்த்தயா -11-36-
திவி ஸூர்ய சஹஸ்த்ரஸ்ய பவேத் யுகபத் யுதிதா-11-12-

பலம் பராக்கிரமம் ஒளி ஆகியவற்றை யுடையவர் -ஓஜ-தேஜ இரண்டு திருநாமங்களாக கொண்டு ஞானத்தின்
அடையாளமான ஒளியைத் தரிப்பவர் -ஆதலால் த்யுதி தரர் –ஸ்ரீ சங்கரர் –

பராக்கிரமம் பிரதாபம் பிரகாசம் ஆகியவற்றை யுடையவர்-ஸ்ரீ சத்ய சந்தர்-

—————-

277-பிரகாசாத்மா
ஒளி படைத்தவன் –ஒளி மணி வண்ணன் -3-4-8
மனிசர் பிறவியில் தோன்றிக் கண் காண வந்து துயரங்கள் செய்து நன் தெய்வ நிலை யுலகில் புக உய்க்கும் அம்மான் -3-10-6-

மூடர்களுக்கும் வெளிப்படையாகத் தெரியும் சிறந்த பிரபாவம் உடையவர் –ஸ்ரீ பராசர பட்டர் –

த்வமேவ புண்டரீகாக்ஷ ஸர்வஸ்ய ஜகத் பிரபு தஸ்மாத் மே யாதவ ஸ்ரேஷ்ட பிரசாதம் கர்த்தும் அர்ஹதி-த்ருதராஷ்ட்ரன்

பிரகாசமான ஸ்வரூபம் யுடையவர் –ஸ்ரீ சங்கரர் –

நன்றாக சுகத்தை அனுபவிக்கும் ஆத்மாவாக இருப்பவர் -ஸ்ரீ சத்ய சந்தர்-

——————-

278-பிரதாபன
தபிக்கச் செய்பவன் -பகைவர்களை
தானே எரி சுடரும் மால் வரையும் எண் திசையும் அண்டத் திரு சுடருமாய இறை -மூன்றாம் திரு -39-
பொன் பெயரோன் ஆகத்தை கூரார்ந்த வள்ளுகிரால் கீண்டு ஆரா வெழுந்தான் அரி உருவாய் -சிறிய திரு மடல்

எல்லாவற்றையும் தபிக்கும்படி செய்பவர் –ஸ்ரீ பராசர பட்டர் –

சூரியன் முதலியவற்றால் தகிக்கும்படி செய்பவர் –ஸ்ரீ சங்கரர் –

நன்கு பரவி இருப்பவர் -ஜலத்தைத் தூண்டுபவர் -சூரியன் முதலானோரில் நின்று நன்கு தஹிப்பவர் -ஸ்ரீ சத்ய சந்தர்-

——————–

279-ருத்த
சம்பத்தால் பூரணன்
நாகணை மிசை நம்பரர் செல்வர் பெரியர் நாச் திரு -10-10-

பருவ காலங்களில் கரை புரளும் கடல் போல எப்போதும் நிரம்பி இருப்பவர் –ஸ்ரீ பராசர பட்டர் –

தத ச புருஷ வ்யாக்ர சம் ஜகாத புந ஸ்வயம் தாம் திவ்யம் அப்துதா சித்ராம் ருத்தமத்தாம் அரிந்தம –உத்யோக பர்வம்
புருஷோத்தமன் திவ்யமான திருவாய் மலர்ந்து அருள -திவ்யமாக ஆச்சர்யமாக விசித்திரமாக பூர்ணமாக இருந்ததே அவன் திருவாய் மொழிகள்

தர்மம் ஞானம் வைராக்யம் முதலிய குணங்கள் நிரம்பியவர் –ஸ்ரீ சங்கரர் –

இயற்கையாக முழுமையானவர் –
ருத்தஸ் பஷ்டாஷர-என்ற பாடத்தில் ஓம் நமோ நாராயணாய -எட்டு அக்ஷரங்களை உடையவர் -என்றுமாம் – ஸ்ரீ சத்ய சந்தர்-

————

280-ஸ்பஷ்டாஷர –
ஸ்பஷ்டமான அஷரங்கள்-வேத அஷர ராசி -சுடர் மிகு ஸ்ருதி

தமது பெருமையைத் தெளிவாகக் கூறும் வேத அஷரங்களை வெளியிட்டவர் –ஸ்ரீ பராசர பட்டர் –

ஓங்காரம் என்னும் அஷரத்தினால் வெளிப்படும் மகிமை உள்ளவர் –ஸ்ரீ சங்கரர் –

ஸ்பஷ்டமான வேத சாஸ்திர எழுத்துக்களால் அறியப்படுபவர் – ஸ்ரீ சத்ய சந்தர்-

——————-

281-மந்திர –
மந்தாரம் த்ராயத இதி மந்திர
அந்தணர் மாட்டு அந்தி வைத்த மந்திரத்தை மந்திரத்தால் மறவாது என்றும்
வாழுதியேல் வாழலாம் மட நெஞ்சமே -திரு நெடு -4-

தம்மை த்யானம் செய்பவர்களைக் காப்பவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

பிராண ப்ரயானே க ஸ்மர்த்தம் சக்த ஸ்யாத் மது ஸூதந –நாரதர் கேள்விக்கு
த்ருஷ்ணா தோய சமாகீர்னாத் கோராத் சம்சார சாகராத் அபராத் பாரம் ஆப்னோதி யோமாம் ஸ்மரதி நித்யச -என்று
பேராசை நிரம்பி கரை காண இயலாத சம்சார கடலை என்னையே த்யானம் செய்து இருப்பவன் தாண்டுகிறான் என்று ப்ரஹ்ம புராணத்திலும்
ஸ்திதே மனசே ஸூஸ் வஸ்தே கோராத் சம்சார சாகராத் தாது சாம்யே ஸ்திதே ஸ்மர்த்தோ விஸ்வரூபம் ச மாம் அஜ
ததஸ்தம் ப்ரியமாணம் து காஷ்டா பாஷாண ஸந்நிபம் அஹம் ஸ்மராமி மத் பக்தம் நயாமி பரமாம் கதிம் –ஸ்ரீ வராஹ சரம ஸ்லோகம்

ருக் யஜூஸ் சாம வேத மந்த்ர ரூபமாய் இருப்பவர் -மந்தரத்தால் தெரிவிக்கப் படுபவர் –ஸ்ரீ சங்கரர் –

அறிவைத் தந்து காப்பவர் -தம்மை மனநம் செய்யும்படி செய்பவர் — ஸ்ரீ சத்ய சந்தர்-

———————

282-சந்த்ராம்சு
குளிர்ந்த தேஜஸ்
திங்களும் ஆதித்யனும் எழுந்தால் போல்

த்யானிப்பவர்களுக்கு களைப்பை நீக்கி செழிப்பை யுண்டாக்குவதால் சந்தரன் போன்ற ஒளி யுள்ளவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

தே சம் சோமம் இவ உத்யந்தம் த்ருஷ்ட்வா வை தர்ம சாரிண–ஆரண்ய காண்டம்

சம்சார தாபத்தினால் வருந்தியவர்க்கு சந்திர கிரணம் போல் மகிழ்ச்சி அளிப்பவர் –ஸ்ரீ சங்கரர் –

சந்த்ரனுக்கு ஒளியை அளிப்பவர் -சந்திர கிரணம் போலே குளிர்ச்சி தருபவர் — ஸ்ரீ சத்ய சந்தர்-

—————-

283-பாஸ்கரத்யுதி-
சூர்யன் போன்ற தேஜஸ்
கதிர் மதியம் போல் முகத்தான்
சீரார் சுடர்கள் இரண்டாய் -6-9-1-

பகைவரை விரட்டும் பெருமை யுள்ளவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

ரஷாம்சி பீதாநி திசோ த்ரவந்தி -11-36-
சர ஜால அம்சுமான் சூர கபே ராம திவாகர சத்ரு ரஷோ மயம் தாயம் உப சோஷம் நயிஷ்யதி–ஸூந்தர காண்டம்
ஏவம் ஏஷ அசுரானாம் ச சூரானாம் ச ஏவ ஸர்வஸ பயாபயகர கிருஷ்ண சர்வ லோகேஸ்வர பிரபு –சபா பர்வம்

சூரியனது ஒளியைப் போலே ஒளி யுள்ளவர் –ஸ்ரீ சங்கரர் –

சூரியனுக்கு ஒளியை அளிப்பவர் — ஸ்ரீ சத்ய சந்தர்-

———–

அம்ருதாம் ஸூத்பவோ பாநுஸ் சசபிந்துஸ் ஸூ ரேச்வர
ஔஷதம் ஜகதஸ் சேதுஸ் சத்ய தர்ம பராக்ரம –31-

—————

284-அம்ருதாம்சூத்பவ –
அம்ருத அம்சு உத்பவ -சந்த்ராம்சு தோற்றுவாய்

அமுதக் கிரணங்களை யுடைய சந்திரனும் தம் மனத்தில் தோன்றப் பெற்றவர் -ஸ்ரீ பராசர பட்டர் –
சந்த்ரமா மனசோ ஜாத -புருஷ ஸூக்தம்

பாற்கடல் கடைந்த போது அமுதக் கிரணமுடைய சந்தரன் தோன்றக் காரணம் ஆனவர் –ஸ்ரீ சங்கரர் –

அமுத கிரணங்களை யுடைய சந்திரனுக்குக் காரணம் ஆனவர் -தன்வந்தரி ரூபத்தில் அமுதக் கிரணங்களை யுடையவர் -மற்றும்
உலகில் இருந்து மேம்பட்டவர் அல்லது ருத்ரன் இந்திரன் முதலானோரைக் காட்டிலும் மேம்பட்டவர் — ஸ்ரீ சத்ய சந்தர்-

—————–

285-பாநு-
வெய்ய கதிரோன் பீஷோதேதி சூர்யா
ஞானமாகி ஞாயிறாகி ஞாலம் முற்றும் ஏனமாய் யிடந்த மூர்த்தி -திருச்சந்த -114
திங்களும் ஞாயிருமாய்ச் செழும் பல் சுடராய் மாயா -7-8-2

மிக்க ஒளியை யுள்ள சூரியனுக்கும் ஒளியை அளிப்பவர் -ஸ்ரீ பராசர பட்டர் –
யஸ்ய ஆதித்யோ பாம் உபயுஜ்ய பாதி

பிரகாசிப்பவர் –ஸ்ரீ சங்கரர் –

பிரகாசிப்பவர் — ஸ்ரீ சத்ய சந்தர்-

—————–

286-சசபிந்து
துஷ்டர்களை அளிப்பவன் -கூடாரை வெல்லும் சீர் கோவிந்தன்
சசம் -என்றால் குடிலமதி- வக்கிரமான செயல் உடைமை பிந்து இதை அறிந்து மாற்றுபவன்
பானு கெட்ட செயலை எரிப்பவன்

தீய வழிகளில் செல்பவரை அழிப்பவர் -ஸ்ரீ பராசர பட்டர் –
சச -தீய நெறி / பிந்து -பீதி -விரும்பாத -தீய வழியில் நடப்பவர்களை விரும்பாதவன்

முயல் போல் அடையாளம் யுடைய சந்த்ரனாய் இருப்பவர் -சந்தரனைப் போலே பிரஜைகளைப் போஷிப்பவர் –ஸ்ரீ சங்கரர் –

மிகவும் சுக ரூபம் உடைய ஞானியாக இருப்பவர் -வேட்டையில் தீயவரை அழிப்பவர் — ஸ்ரீ சத்ய சந்தர்-

—————

287-ஸூ ரேச்வர
தேவர்க்கும் தேவர் -இமையோர் தலைவன் வானோர் கோமான் அமரர்கள் அதிபதி
மனிசர்க்குத் தேவர் போலத் தேவர்க்கும் தேவாவோ -8-1-5-

நல்வழியில் செல்பவரை உயர்கதிக்குச் செலுத்துபவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

சர்வம் ஜிஹ்மம் ம்ருத்யு பதம் ஆர்ஜவம் ப்ரஹ்மண பதம் –சாந்தி பர்வம்
ஒழுக்கம் இல்லாதவை ம்ருத்யு -மரணத்துடன் சேர்ந்த சம்சாரத்தில் சேர்க்கும் –
ஒழுக்கத்துடன் கூடிய அனைத்தும் ப்ரஹ்மத்துடன் சேர்க்கும்

தேவர்களுக்கும் நன்மை தருபவர்களுக்கும் ஈஸ்வரர் –ஸ்ரீ சங்கரர் –

தேவர்களுக்குத் தலைவர் -நன்கு பிரகாசிப்பவர் -மற்றும் அனைவருக்கும் தலைவர் – ஸ்ரீ சத்ய சந்தர்-

——————

288- ஔஷதம் –
சம்சாரம் தீர்க்கும் மருந்து
மருந்தும் பொருளும் அமுதமும் தானே
செடியார் வினை தீர் மருந்து
மருந்தே நாங்கள் போக மகிழ்ச்சிக்கு

உலக வாழ்க்கை என்னும் கொடிய விஷத்தைப் போக்கும் மருந்தாக இருப்பவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

தேவா தேவர்ஷயச்சைவ யாம் விது துக்க பேஷஜம் –சம்சாரம் தீர்க்கும் மருந்தாக தேவர்களும் ரிஷிகளும் யாரை அறிகிறார்களோ
ஏகாக்ரதா மூல்ய பலேந லப்யம் பவ்ஷதம் த்வன் பகவன் கிலைக –நின்றவா நில்லா நெஞ்சை ஒருநிலைப்படுத்தி
சத் விஷய தியானமே சம்சாரத்துக்கு மருந்து -அந்த மருந்தும் நீயே யாவாய்

உலக வாழ்க்கையாகிய கொடிய நோய்க்கு மருந்தாக இருப்பவர் –ஸ்ரீ சங்கரர் –

தாப த்ரயத்தினால் வருந்தியவர்க்கு தஞ்சமான மருந்தாக இருப்பவர் – ஸ்ரீ சத்ய சந்தர்-

—————–

289-ஜகத் சேது –
அணை-அணையாய் பரிபாலனம் -திரு வெக்கா –
வேகா சேது அன்று வெக்கணைக் கிடந்தது என்னிலாத முன்னெலாம் -திருச்சந்த -64-

உலகில் நல்லவை தீயவைகளைப் பிரிக்கும் அணையாக இருப்பவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

ஏஷ சேது விதரண யேஷாம் லோகா நாம் அசம்போதய –பிருஹத்- 6-4-22–
யதா தேனு ஸஹஸ்ரேஷு வத்ஸூ விந்ததி மாதரம் ததா பூர்வ க்ருதம் கர்ம கர்த்தாரம் அநு விந்ததி –என்று
கன்றுக்குட்டி ஆயிரம் பசுக்களில் தனது தாய் இடமே பால் அருந்துவது போலே பூர்வ கர்ம பலன்கள்
ஜீவனை சரியாக அடைந்து பலன்களை கொடுக்கும்
சுப க்ருத் சுபம் ஆப்னோதி பாபக்ருத் பாபம் அஸ்நுதே –யுத்த -114-25-

உலகைக் கரையேற்றும் அணையாக இருப்பவர் –ஸ்ரீ சங்கரர் –

உலகிற்கு அணையாக ஆஸ்ரயம் அளிப்பவர் -வர்ணாஸ்ரம தர்மங்களை குழப்பம் இல்லாமல் நிலை நிறுத்துபவர் –

——————–

290-சத்ய தர்ம பராக்கிரம –
வார் கடா வருவி யானை மா மலையின் மருப்பினைக்குவடி இறுத்திட்டு —கஞ்சனைத் தகர்த்த சீர் கொள் சிற்றாயன் -8-4-1-
மாறில் போர் அரக்கன் மதிள் நீர் எழச் செற்று உகந்த ஏறு சேவகனார் -6-1-10-

தர்மங்கள் எனப்படும் தம் கல்யாண குணங்களும் பராக்ரமங்கள் எனப்படும் தம் திவ்ய சேஷ்டிதங்களும்
பழுது படாமல் உலகை உய்விப்பவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

தர்மா -திருக்கல்யாண குணங்கள் / பராக்ரமா -நற் செயல்கள் -இவற்றை உண்மையாக கொண்டதால் இத்திரு நாமம்
சர்வம் ஏதத் ருதம் மந்யே யந் மாம் வதசி கேசவ –ஸ்ரீ கீதை -10-14-
விஷ்ணு ஸத்ய பராக்கிரம -ஸ்ரீ ராமாயணம்
யம் வாகேஷு அநு வாகேஷு ச நிஷத்ஸூ உப நிஷத்ஸூ ச க்ருணந்தி தஸ்ய கர்மாணம் சத்யம் சத்யேஷு சாமஸூ -என்று
அனைத்தும் அவன் மங்களகரமான குணங்களைக் கொண்டவன் -ஆராதிக்கத் தக்கவன் என்றே கூறும்

ஞானம் முதலிய குணங்களும் பராக்ரமமும் வீணாகாமல் இருப்பவர் -ஸ்ரீ சங்கரர் –

தன்னுடைய தர்ம பராக்ரமங்கள் வீணாகாதவர்- ஸ்ரீ சத்ய சந்தர்-

———-

பூத பவ்ய பவன்னாத பவன பாவநோ அநல
காமகா காமக்ருத் காந்த காம காமப்ரத ப்ரபு–32-

———-

291-
பூத பவ்ய பவன் நாத –
போகின்ற காலங்கள் போய காலங்கள் போகு காலங்கள் தாய் தந்தை யுயிர் ஆகின்றாய்
மூ வுலகுக்கும் நாதனே பரமா -2-6-10-

இப் பெருமைகள் இக் காலத்தில் மட்டும் இல்லாமல் முக் காலங்களிலும் உள்ளவர்-ஸ்ரீ பராசர பட்டர் –

பூத பவ்ய பவந் நாத கேசவ கேசி ஸூதந பிரகாரா சர்வ வ்ருஷ்ணீ நாம் ஆபத் ஸூ அபயதோ அரிஹா –சபா பர்வம்

முக் காலங்களிலும் உள்ளவர்களால் யாசிக்கப் படுபவர் அவர்களைக் கட்டுப் படுத்துபவர் -ஆசீர்வதிப்பவர் –ஆள்பவர்-ஸ்ரீ சங்கரர் –

நித்ய சம்சாரிகள் -அறிவீனர்கள் -பக்தர்கள் இவர்களால் வேண்டப்படுபவர் – ஸ்ரீ சத்ய சந்தர்-

——————

292-பவந-
சஞ்சரிப்பவன் -காற்று போலே
காண்கின்ற இக் காற்று எல்லாம் நானே என்னும் -5-6-3-
மீண்டும் 817-தானே வந்து பாபம் தாபம் தீர்த்து அருளி
வந்தாய் என் மனம் புகுந்தாய் மன்னி நின்றாய் -பெரிய திருமொழி -1-10-9-
வந்து அருளி என் நெஞ்சு இடம் கொண்ட வானவர் கொழுந்து -5-7-7-
அமலங்களாக விளிக்கும் கமலக் கண்ணன் -1-9-9-

எல்லா காலங்களிலும் எல்லா இடங்களிலும் இயற்கையாகவே செல்பவர் —
அனைத்தையும் தூய்மையாக்கும் இக் குணத்தின் லேசம் இருப்பதால் தான்-பவன எனப்படும்
காற்றும் எங்கும் சஞ்சரிக்கின்ற்றது-ஸ்ரீ பராசர பட்டர் –

பரிசுத்தப் படுத்துபவர் -ஸ்ரீ சங்கரர் –

அரசர்களுக்கு மகிழ்ச்சியைத் தந்து காப்பவர்- ஸ்ரீ சத்ய சந்தர்-

———————–

293-பாவநா-
தூய்மை அளிப்பவன் -பவித்ராணாம் பவித்ரம் யோ மங்களாநாம் ச மங்களம் –
தேவாதி தேவ பெருமான் என் தீர்த்தனே -2-8-5-
திரு வாறன் விளை யுறை தீர்த்தன் -7-10-10
கரம் நான்குடையான் பேரோதி தீர்த்த கரராமின் -இரண்டாம் திரு -14-

உலகைத் தூய்மை யாக்கும் கங்கை முதலியவற்றுக்கும் அத் தூய்மை தம் தொடர்பால் உண்டாகும்படி இருப்பவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

பாவந சர்வ லோகா நாம் த்வமேவ ரகு நந்தன -உத்தர -32-9-அகஸ்தியர்

காற்றை வீசும்படி செய்பவர் –ஸ்ரீ சங்கரர் –

அரசர்கள் காப்பதற்கு காரணமாக இருப்பவர் – ஸ்ரீ சத்ய சந்தர்-

——————————-

294-அநல-
திருப்தி பிறவாதவன்
உன் அடியார்க்கு என் செய்வன் என்றே இருத்தி -பெரிய திருவந்தாதி -53
ருணம் ப்ரவ்ருத்த மிவமே ஹ்ருதயான் நாப சர்ப்பதி-

பல வகைகளால் அடியவர்க்கு அனுக்ரஹித்தும் அது போதாது என்று நினைப்பவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

அநல் -நெருப்பு -அவன் அனைத்தும் செய்து அளித்தாலும் போதாது என்று இருக்குமா போலே
அவன் சம்பந்தத்தால் நெருப்புக்கு இந்த பெயர்
ஹவிஷா க்ருஷ்ண வர்த்மா பூய ஏவ அபி வர்த்ததே -ஸ்ரீ விஷ்ணு புராணம் -4-10-3-

அனம் எனப்படும் பிராணனை அலங்கரிக்கும் ஜீவாத்மாவே இருப்பவர் -அளவிட முடியாதவர் –ஸ்ரீ சங்கரர் –

தடுக்க முடியாதவர் -முக்ய பிராணனை பக்தனாகக் கொண்டவர் -உலகப் படைப்பு முதலியவகைகளில்
போதும் என்ற நினைவு இல்லாதவர் – ஸ்ரீ சத்ய சந்தர்-

————–

295-காமஹா-
ஆசைகளைக் களைபவன்
ந காம கலுஷம் சித்தம் மம தே பாதயோ ஸ்திதம் -ஜிதந்தே
சோலை மலை இனக் குறவர்கள் புது ஆவி காட்டி நின் பொன்னடி வாழி -என்ன வைப்பான்

தம் குணங்களில் ஈடுபட்டவர்க்குப் பிற விஷயங்களில் ஆசையைத் தவிர்ப்பவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

ந காம கலுஷம் சித்தம் மம தே பாதயோ ஸ்திதம் –ஜிதந்தே -13-உன் திருவடிகளில் ஈடுபட்ட மனஸ் அலைபாயாமல் உள்ளது
ஸ்ரேரத்ரி யஸ்ய ச அகாமஹதஸ்ய –தைத்ரியம் -சிற்றின்பத்தால் கவரப்படாமல் முக்தன் அனுபவிக்கும் ஆனந்தம் அடைகிறான்
யதிச்சந்தோ ப்ரஹ்மசர்யம் சரந்தி –கடவல்லி -2-15- அடையப்பட வேண்டிய வஸ்து குறித்து ப்ரஹ்மசர்யம் கைக் கொள்கின்றனர்

மோஷத்தை விரும்பும் பக்தர்களுக்கு பிற விஷயங்களில் ஆசையைத் தவிர்ப்பவர் -விரோதிகளை அழிப்பவர் –ஸ்ரீ சங்கரர்-

காமத்தை அழிப்பவர் -நல்லோர்களின் ரோகங்களைப் போக்குபவர்-ஸ்ரீ சத்ய சந்தர்-

—————-

296-காமக்ருத்
விரும்பக் கூடியவைகளை உண்டாக்குபவன்
காதல் கடல் புரைய விளைவித்த காரமர் மேனி நம் கண்ணன் -5-3-3- –

அவரவர் விருப்பப்படி போகம் மோஷம் முதலியவற்றைத் தருபவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

சாதுக்கள் விரும்பியவற்றைக் கொடுப்பவர் -பிரத்யும்னனாகப் பிறந்த மன்மதனின் தந்தையே கண்ணபிரான் -ஸ்ரீ சங்கரர் –

பக்தர்கள் விரும்பியவற்றைக் கொடுப்பவர் -ஸ்ரீ சத்ய சந்தர்-

—————

297-காந்த
விரும்பப் படுபவன்
எந்தாய் கொடியேன் பருகும் இன்னமுதே -7-1-7-

தமது அழகு மேன்மை முதலிய குணங்களால் யாவராலும் விரும்பப் படுபவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

மிகவும் அழகியவர் -ஸ்ரீ சங்கரர் –

பிரம்மாதிகளுக்கு சுகத்தைக் கொடுப்பவர் -அசுரர்களின் சுகத்தை அழிப்பவர் –
ஸ்ரீ ராமாவதாரத்தில் அணை கட்டியவர்-ஸ்ரீ சத்ய சந்தர்-

————————

298-காம –
ஆசைப் படத் தகுந்தவன்
காமனைப் பயந்த காளை
பேய்ச்சி முலை சுவைத்தார்க்கு என் பெண் கொடி ஏறிய பித்தே -4-4-5

சீலம் ஔதார்யம் தயை முதலிய குணங்களாலும் யாவராலும் விரும்பப் படுபவர் –
இதன் லவலேசம் உள்ளதால் மன்மதனும் -காமனும் -உலகை மயக்குகிறான் -ஸ்ரீ பராசர பட்டர் –

புருஷார்த்தங்களை விரும்புபவர்களால் விரும்பப் பட்டவர் -ஸ்ரீ சங்கரர் –

ஜனங்களால் விரும்பப் படுபவர் -ஸ்ரீ சத்ய சந்தர்-

—————-

299-காம ப்ரத-
இஷ்டங்களைக் கொடுப்பவன் –
எனக்கே தன்னைத் தந்த கற்பகம்
வஸூ ப்ரத -698-699-தன்னை தேவகிக்கு பிள்ளையாக அளித்து வாசு தேவனுக்கு கண்ணன் தந்தை பெருமை அளித்தவன்
எல்லாம் தெய்வ நங்கை யசோதை பெற்றாளே –
முழுதும் வெண்ணெய் அளைந்து–தொல்லை இன்பத்து இறுதி கண்டாளே-

தம்மை விரும்புபவர்க்கும் தாழ்ந்த பயன்களை விரும்புபவர்க்கும் அவரவர் விரும்பியபடி கொடுப்பவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

பக்தர்கள் விரும்பியவற்றை விசேஷமாகக் கொடுப்பவர்-ஸ்ரீ சங்கரர் –

பக்தர்கள் விரும்புவற்றை நன்கு கொடுப்பவர் -ஸ்ரீ சத்ய சந்தர்-

—————-

300-பிரபு –
ஈசன் மாயன் என் நெஞ்சில் உள்ளான் -என் நெற்றி யுளானே நெற்றியுள் நின்று என்னை ஆளும் நிறை மலர்ப் பாதங்கள் -1-9-10
ராம கமல பத்ராஷ சர்வ சத்வ மநோ ஹர –

இக் குணங்களினால் அனைவருடைய மனங்களையும் கவரும் சக்தியுடையவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

ராம கமல பத்ராஷ சர்வ சத்வ மநோ ஹர–ஸூந்தர-35-8-

உயர்ந்தவராக இருப்பவர் -ஸ்ரீ சங்கரர் –

உயர்ந்தவராக இருப்பவர் -ஸ்ரீ சத்ய சந்தர்-

————-

யுகதிக்ருத் யுகாவர்த்த நைகமாயோ மஹாஸந
அத்ருச்யோ வ்யக்த ரூபஸ்ஸ சஹஸ்ரஜித நந்தஜித் –33-

————

3-13-ஆலிலை மேல் துயின்ற –வட பத்ர சாயி -301-313-திரு நாமங்கள்

301-யுகாதிக்ருத் –
யுக ஆரம்ப சிருஷ்டி கர்த்தா –
பாலன் தனதுருவாய் ஏழு உலகுண்டு ஆலிலையின் மேல் அன்று நீ வளர்ந்த மெய் என்பர் -ஆல் அன்று
வேலை நீருள்ளதோ விண்ணதோ மண்ணதோ சோலை சூழ் குன்று எடுத்தாய் சொல்லு -முதல் திரு -69

அகடிதகடந சாமர்த்யம் -உள்ளவன் -உதாரணம் -ஆலினிலைப் பள்ளியானாகவும் -பிரளயத்தின் போதும் யுகங்களுக்கு
ஆதியான சிருஷ்டியைச் செய்தவர் –ஸ்ரீ பராசர பட்டர் –
யுக ஆதி க்ருத் -யுக ஆரம்பத்தில் செய்த க்ருத்யம்

யுகம் முதலிய கால பேதங்களைத் தொடங்குபவர் -ஸ்ரீ சங்கரர் –

யுகங்கள் முதலிய கால வேறுபாடுகளைப் படைப்பவர் -ஸ்ரீ சத்ய சந்தர் –

—————

302-யுகாவர்த்த –
யுகங்களை திரும்பச் செய்பவன் -சம்பவாமி யுகே யுகே
சாலப் பல நாள் உகந்து ஓர் உயிர் காப்பானே -6-9-3
கிருத த்ரேத துவாபர கலி யுகம் நான்கும் ஆனாய் -பெரிய திருமொழி -7-7-6-

நான்கு யுகங்களையும் அவற்றின் தர்மங்களோடு மீண்டும் மீண்டும் படைப்பவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

கால ரூபியாக யுகங்களைத் திருப்புபவர் -ஸ்ரீ சங்கரர் –

கிருத யுகம் முதலியவற்றை மீண்டும் சுழற்றுபவர் –ஸ்ரீ சத்ய சந்தர் –

————–

303-நைகமாய –
பல மாயங்களை உடையவன் -மாயம் ஆச்சர்யம் ஞானம் சங்கல்பம் -சம்பவாம் யாத்ம மாயயா –

சிறு குழந்தையாக உலகங்களை விழுங்குவது -ஒரே நீரில் பிடிப்பில்லாத ஆலிலையிலே படுப்பது முதலிய
அகடிகடிதந செயல்களை உடையவர் -மாயா என்று பொய் எனபது இல்லை -உண்மையான விஷயங்களிலும் மாயா என்ற சொல்
அதிகமாகப் பயன்படுத்தப் பட்டுள்ளதால் -ஸ்ரீ பராசர பட்டர் –

மாயம் து பிரக்ருதிம் வித்யாத் -ஸ்வேதாஸ்வரம்
மாயா வயுனும் ஞானம் –மூன்றும் அறிவு என்னும் பொருள்
சங்க்யாதா தேவ மாயயா
விஸ்வாநி தேவ வயுநாநி வித்வான் -ஈசாவாஸ்ய
தேந மாயா சஹஸ்ரம் தத் சம்பரஸ்ய ஆசுகாமிநா பாலஸ்ய ரக்ஷதா தேகம் ஏகை கஸ்யேந ஸூதிதிம் –ஸ்ரீ விஷ்ணு புராணம் -1-9-20-
சாம்பன் அசுரன் ஆயிரக்கணக்கான ஆயுதம் பிரயோகம் செய்ய சக்கரத்தாழ்வான் அவற்றைத் தூளாக்கி ரஷித்தது
மேகோதய சாகர சந் நிவ்ருத்தி இந்தோர் விபாக ஸ்புரிதாநி வாயோ வித்யுத் விபங்க கதிர் உஷ்ண ரஸ்மே விஷ்ணோர்
விசித்ரா ப்ரபவந்தி மாயா –வராஹ புராணம் -மாயா ஆச்சர்ய செயல்கள்
ததோ மே ப்ருத்வீ பால விஸ்மய ஸூகஹாந் அபூத் த்ருஷ்ட்வா லோகம் சமஸ்தம் ச –இத் யுக்த்வா அந்தர் ஹித தாத ச தேவ
பரமாத்புத ஆச்சர்ய பரத ஸ்ரேஷ்ட –ஆரண்ய பர்வம் -மார்க்கண்டேய மஹ ரிஷி தர்மபுத்ரன் இடம்
ஆலிலை கண் வளர்ந்தவன் திரு வயிற்றிலே கண்டதை சொல்வது

பெரு மாயை அல்லாமல் பல மாயைகளைத் தரிப்பவர் -ஸ்ரீ சங்கரர்-

பலவிதமான இச்சைகள் உள்ளவர்–ஸ்ரீ சத்ய சந்தர் –

——————

304-மகாசந –
பெரும் வயிற்றன்-உலகம் உண்ட பெரு வாயன்
கார் யெழ் கடல் யெழ் மலை யெழ் உலகுண்டும் ஆரா வயிற்றான் -10-8-2-

உலகு அனைத்தையும் விழுங்கியவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

யச்ச கிஞ்சித் மயா லோகே த்ருஷ்டம் ஸ்தாவர ஜங்கமம் தத பஸ்யன் அஹம் சர்வம் தஸ்ய குஷவ்
மஹாத்மந –வனபர்வம் -191-122-மார்க்கண்டேயர் திரு வயிற்றில் அனைத்தையும் கண்டத்தை சொல்கிறார்

கல்பத்தின் முடிவில் எல்லாவற்றையும் உண்பவர் -ஸ்ரீ சங்கரர்-

மிக அதிகமான உணவு உண்பவர் -அதிக உணவில் ஆசையுள்ள துர்வாச முனிவருக்கு உணவு அளித்தவர் –
யஜ்ஞத்தில் ஆசை உள்ளவர்–ஸ்ரீ சத்ய சந்தர் –

——————-

305-அத்ருஷ்ய –
காண முடியாதவன்-கட்கிலி உன்னைக் காணுமாறு அருளாய் காகுத்தா கண்ணனே -7-2-3-

நினைவிற்கு எட்டாத செய்கை உடையவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

கதம் நு அயம் சிசு சேதே லோகே நாசு முபாகதே தபஸா சிந்த யம்ச்சாபி தம் சிசும் நோப லக்ஷயே -வனபர்வம் -191-94-
குழந்தையின் ஸ்வரூபம் எனது தப வலிமையாலும் அறிய முடியவில்லை -என்றார் மார்க்கண்டேயர்

எல்லோருடையவும் புத்தி இந்த்ரியங்களுக்கு புலப்படாதவர் -ஸ்ரீ சங்கரர்-

தம் தயை இன்றிக் காண முடியாதவர்–ஸ்ரீ சத்ய சந்தர் –

——————

306-வ்யக்த ரூப-
தெளிவாகத் தெரியும் திருமேனி உடையவன்
பக்தாநாம் த்வம் பிரகாசசே-பூவைப் பூ வண்ணன்-சேவடி என் சென்னிக்கு அணி ஆக்கினான் –

தம்மை அடைந்த மார்க்கண்டேயர் முதலிய வர்களுக்குத் தெளிவாகக் காட்டிய திரு மேனி யுடையவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

அதஸீ புஷ்ப ஸங்காச ஸ்ரீ வத்ஸ க்ருத லக்ஷண சாஷாத் லஷ்ம்யா இவ ஆவாஸ ச சதா ப்ரதிபாதி மே –வன பர்வம் -191-96-
கண்ட காட்சியை மார்க்கண்டேயர்
தஸ்ய தாம்ரதலவ் தாத சரணவ் ஸூ பிரதிஷ்டதோ ஸூ ஜாத ம்ருத்ரு ரக்தாபி அங்குலீபி அலங்குருதவ் பிரணதேந மயா மூர்த்நா
க்ருஹீத்வா ஹி அபி வந்திதவ்–வனபர்வம் -191-13- எம்பெருமான் திருவடிகள் மனசில் நிலையாக நின்றன –
எனது தலையால் வாங்கப்பட்டன -என்கிறார் மார்க்கண்டேயர்

கண்ணுக்குப் புலப்படும் பிரபஞ்ச ரூபம் யுடையவர் -ஸ்வயம் பிரகாசமானவர் -யோகிகளுக்கு பிரகாசிப்பவர் -ஸ்ரீ சங்கரர் –

தம் தயை இன்றி காண முடியா உருவம் உடையவர் -அவ்யக்த ரூபம் -என்ற பாடம் –ஸ்ரீ சத்ய சந்தர் –

—————-

307-சஹச்ரஜித் –
காலங்களை ஜெயிப்பவன் -பல பல சதுர் யுகங்களை யோகத்தால் ஜெயிப்பவன்

ஆயிரம் யுகங்களாக எண்ணப்படும் பிரளய காலத்தை சயனித்துக் கொண்டே வெல்பவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

யாவத் யுகா நாம் விப்ரர்ஷே சஹஸ்ரம் பரிவர்த்ததே தாவத் ஸ்வபிமி –வன பர்வம் -192-40-ஆயிரம் யுகங்களின் காலம்
யோக நித்திரையில் இருந்தேன் என்று எம்பெருமான் மார்க்கண்டேயர் இடம் சொன்னதையும் தர்ம புத்திரனுக்கு சொல்கிறார்

ஆயிரக் கணக்கான அசுரர்களை வெல்பவர் –ஸ்ரீ சங்கரர் –

ஆயிரக் கணக்கான அசுரர்களை வெல்பவர் —ஸ்ரீ சத்ய சந்தர் –

————

308-அநந்த ஜித்
எல்லை காண முடியாத திருமேனி -மார்கண்டேயர் வசனம்

சிறு குழந்தையாக இருக்கின்ற போதும் யாரும் எப்போதும் எப்படியும் தமது மகிமையை அறிய முடியாதபடி இருப்பவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

அந்தச்சரீரே தஸ்யாஹம் வர்ஷானாம் அதிகம் சதம் ந ஹி பச்யாமி தஸ்யாஹம் அந்தம் தேவஸ்ய கர்ஹிசித் ஆஸாதயாமி
நைவாந்தம் தஸ்ய ராஜன் மஹாத்மந–வனபர்வம் -192-25- திருவயிற்றிலே நூறு ஆண்டுகள் இருந்தாலும்
அவனது மேன்மையின் எல்லையை காண இயலா வில்லை

தம் அளப்பரிய சக்தியினால் எல்லோரையும் போர் முதலியவற்றில் வெல்பவர் –ஸ்ரீ சங்கரர் –

எண்ணற்ற பொருள்களை அடைந்து இருப்பவர் —ஸ்ரீ சத்ய சந்தர் –

——–

இஷ்டோ விசிஷ்டஸ் சிஷ்டேஷ் டஸ் சிகண்டீ நஹூ ஷோ வ்ருஷ
க்ரோதஹா க்ரோதக்ருத் கர்த்தா விஸ்வ பாஹூர் மஹீ தர -34-

—————

309-இஷ்ட அவிசிஷ்ட –
வேறுபாடு எதுவும் இன்றி விரும்பப் படுவர்
உலகுக்கொர் முந்தை தாய் தந்தையே முழு ஏழு உலகுண்டாய் -5-7-7-

தம் வயிற்றில் தாங்கப்பட்ட யாவராலும் வேறுபாடு இன்றி தாய் போலே விரும்பும் படி இருப்பவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

இஷ்ட -ஆனந்த ரூபியாதலால் விரும்பப்படுபவர் –
அவிசிஷ்ட -அனைவருக்கும் அந்தர்யாமி -இரண்டு திரு நாமங்கள் -யஜ்ஞங்களால் பூஜிக்கப் படுபவர் –ஸ்ரீ சங்கரர் –

இஷ்ட -யஜ்ஞத்தால் பூஜிக்கப் படுவதால் அனைவருக்கும் பிரியமானவர் -விசிஷ்ட -பிரளயத்தில் விசேஷமாக மிஞ்சி
இருப்பவர் -இரண்டு திரு நாமங்கள் -பிரியமானவர் -சிஷ்டர்களை –நல்லோர்களை -படைப்பவர் —ஸ்ரீ சத்ய சந்தர் –

—————–

310-சிஷ்டேஷ்ட-
மார்க்கண்டேயர் முதலிய பெரியோர்களால் உயர்ந்த பயனாக விரும்பப் படுபவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

சத்வஸ்தா நிர் அஹங்காரா நித்யம் அத்யாத்ம கோவிதா மாமேவ சததம் விப்ரா சிந்தயந்த உபாசத–வனபர்வம் -192-16-
எப்போதும் என்னையே எண்ணியபடி த்யானம் செய்கின்றனர் என்கிறார் மார்க்கண்டேயர்

ஞானிகளுக்குப் பிரியமானவர் -ஞானிகளால் பூஜிக்கப் படுபவர் –ஸ்ரீ சங்கரர் –

நல்லோரால் பூஜிக்கப் படுபவர் -பிரளய காலத்தில் அழியாத லஷ்மி யுடையவர் —ஸ்ரீ சத்ய சந்தர் –

——————-

311-சிகண்டீ-
சிறந்த தலை அணி உடையவன் -நின்றிலங்கு முடியினாய் -6-2-10
முடியானே மூ வுலகும் தொழுது ஏத்தும் சீர் அடியானே -3-8
கிரீட மகுட சூடாவதம்ச –
பாரளந்த பேரரசே எம் விசும்பரசே ஓரரசே -திருவிருத்தம் -50

யாராலும் வெல்ல முடியாத மகிமையையே சிரோபூஷணமாக உடையவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

ஆஸீ நம் தம் நர வ்யாக்ரம் பச்யாமி அமிதா தேஜஸம்–வனபர்வம் -191-129-எல்லை அற்ற
மேன்மை சிகண்டீ ஐஸ்வர்யம் இருந்த புருஷோத்தமனைக் கண்டேன் –

மயிலின் தோகையை அணிந்த கோபாலன் –ஸ்ரீ சங்கரர் –

உலக சுகங்களில் ஈடுபடுபவர்களைக் கண்டிப்பவர் –
ஸ்ரீ கிருஷ்ணாவதாரத்தில் சிறுவனாக மயில் பீலியைத் திரு முடியில் அணிந்தவர் – –ஸ்ரீ சத்ய சந்தர் –

———————-

312-நஹூஷ
கட்டுபவன்
காயமும் சீவனுமாய் களிவாய்ப் பிறப்பாய் -நீ மாயங்கள் செய்து வைத்தி -7-8-7-

தமது மாயையினால் ஜீவர்களைக் கட்டுபவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

தஸ்மிந் ச அந்ய மாயயா சன்னிருத்த–ஸ்வேதாஸ்வரம் -4-9-ஜீவன் இந்த மாயை மூலம் கட்டுப்பட்டுள்ளான்

தமது மாயையினால் பிராணிகளைக் கட்டுபவர் –ஸ்ரீ சங்கரர் –

அசுரர்களைக் கட்டுபவர் – –ஸ்ரீ சத்ய சந்தர் –

————-

313-வ்ருஷ
வர்ஷிப்பவன் -நனைப்பதில் நோக்கு
நாதனை அவரவராகி அவர்க்கு அருளும் அம்மான் -8-4-10-

கடலில் அலைந்து வருந்தும் மார்க்கண்டேயரை அமுதம் போன்ற தேக ஒளியினாலும்
இன்சொல்லாலும் நனைப்பவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

ததோ மாம் அப்ரவீத் பால ச பத்ம நிப லோசந ஸ்ரீ வத்ஸ தாரீ த்யுதிமான் வாக்யம் சுருதி ஸூகா வஹம் ஜாநாமி
த்வாம் பரிஸ் ராந்தம் ததா விஸ்ராம காங்ஷிணம்-191-97-/98-என்னை நோக்கி எங்கும் அலைந்து களைப்புற்ற நீ
ஒய்வு எடுக்க விரும்புவதை அறிவேன் -என்றான்

விரும்புவற்றைத் தருபவர் –ஸ்ரீ சங்கரர் –

பக்தர்களுக்கு விருப்பமானவற்றைத் தந்து உதவுபவர் —ஸ்ரீ சத்ய சந்தர் –

———————————————————————-

ஸ்ரீ பரசுராம -ஆவேச சக்தி -அவதாரம் -314-321-

314-க்ரோதாஹா –
கோபத்தை ஒழித்தவன் –
கோக்குல மன்னரை மூ வெழு கால் ஓர் கூர்ம மழுவால் போக்கிய தேவன்
மழுவினால் அவனியரசை மூ வெழு கால் மணி முடி பொடி படுத்து உதிரக் குலுவார் புனலில் குளித்து
வெம் கோபம் தவிர்ந்தவன் -பெரிய திரு -8-1-6
ஜிதக்ரோத -463-கோபத்தை மறக்கப் பண்ணுபவன்

ஷத்ரியர்களை இருப்பத்தொரு தலைமுறை வதம் செய்த பிறகு காச்யபர் வேண்டியவுடன் அந்தக் கோபம் தணிந்தவர் –
பார்கவ பரசு ராமனைப் பற்றி கூறத் தொடங்குகிறார் –ஸ்ரீ பராசர பட்டர் –

நல்லோர்களுக்குக் கோபத்தை அழிப்பவர் –ஸ்ரீ சங்கரர் –

கோபமே வடிவெடுத்த அசுரர்களை அழிப்பவர் -பொறுமை நிறைந்தவர் ஆதலால் கோபத்தை அடக்கியவர் —ஸ்ரீ சத்ய சந்தர் –

—————-

315-குரோதக்ருத்-
கோபம் உள்ளவன்
வற்புடைய வரை நெடும் தோள் மன்னர் மாள வடிவாய மழு ஏந்தியவன் -திரு நெடு -7

அதற்கு முன் ஷத்ரியர் மீது கோபம் கொண்டவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

தீயவர்கள் மீது கோபத்தைக் கொள்பவர் —ஸ்ரீ சங்கரர் –

தீயவரிடம் கோபம் கொள்பவர் -கோபத்தை ஒழித்தவர்—ஸ்ரீ சத்ய சந்தர் –

——————

316-கர்த்தா –
வெட்டுபவன்
தெழித்திட்டு எழுந்தே எதிர் நின்ற மன்னன் சினத்தோள் அவை ஆயிரம் முன் மழுவால்
அழித்திட்டவன்-பெரிய திருமொழி -10-6-6-

தம் கோபத்திற்குக் காரணமான கார்த்த வீர்யனை அழித்தவர்-ஸ்ரீ பராசர பட்டர் –

நிஸ் க்ஷத்ரியாம் யஸ்ய சாகர மேதி நீம் -ஸ்ரீ விஷ்ணு தர்மம் -43-37-

உலகைப் படைப்பவர் -குரோதமுள்ள அசுரர்களை அழிப்பவர் –
க்ரோத க்ருத்கர்த்தா-என்று ஒரே திருநாமமாகக் கொள்ளலாம் –ஸ்ரீ சங்கரர் –

சுதந்தரத் தன்மை யுடையவர் —ஸ்ரீ சத்ய சந்தர் –

———————–

317-விஸ்வ பாஹூ
நன்மைக்கான புஜ பலம் உடையவன் –
இருபத்தொரு கால் அசுரர்களைக் கட்ட வென்றி நீண் மழுவா -6-2-10-

விரோதிகளை அழிப்பதால் உலகுக்கு நன்மை செய்யும் கரங்கள் யுடையவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

உலகங்களுக்கு எல்லாம் ஆதரவான கைகள் யுடையவர் –ஸ்ரீ சங்கரர் –

வாயுதேவனுக்கு ஆதாரமான கைகளை யுடையவர் —ஸ்ரீ சத்ய சந்தர் –

——————-

318-மஹீதர
பூமியைத் தாங்கி நிற்பவன்
வென்றி நீண் மழுவா வியன் ஞாலம் முன் படைத்தாய் -6-2-10-

இப்படி துஷ்டர்களை அளித்தது பூமியைத் தாங்குபவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

பூமியை அல்லது பூஜையைத் தாங்குபவர் –ஸ்ரீ சங்கரர் –

பூமியைத் தாங்குபவர் —ஸ்ரீ சத்ய சந்தர் –

———–

அச்யுத ப்ரதித ப்ராண பிராணதோ வாசவா நுஜ
அபான் நிதிரஷ்டா நம் அப்ரமத்த ப்ரதிஷ்டித –35

————-

319-அச்யுத –
நழுவாதவன்
அச்சுதா அமரர் ஏறே ஆயர் தம் கொழுந்தே -திரு மாலை 2
முன்பே 101-பார்த்தோம் -மீண்டும் 557-வரும்

பிரமன் முதலியவர்க்கு சமமாக அவதரித்த போதும் தம் இறைமை குன்றாதவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

ஆறுவித விகாரங்கள் அற்றவர் –ஸ்ரீ சங்கரர் –

தேசம் காலம் குணம் முதலியவற்றில் நழுவுதல் இல்லாதவர் —ஸ்ரீ சத்ய சந்தர் –

————–

320-பிரதித –
புகழ் பெற்றவன் -பெருமை யுடைய பிரானார் -1-6-9-
அஷய்ய கீர்த்தி -நிகரில் புகழாய் -6-10-10-

அத் தன்மையால் புகழ் பெற்றவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

தஸ்ய நாம மஹத் யஸ–தைத்ரியம் -புகழ் பெற்றவன்
யசசஸ்ய ஏக பாஜநம்-கிஷ்கிந்தா -15-19-பெருமைகளுக்கு ஒரே இடம்

உலகப் படைப்பு முதலிய செயல்களால் புகழ் பெற்றவர் –ஸ்ரீ சங்கரர் –

பிரசித்தமானவர் —ஸ்ரீ சத்ய சந்தர் –

—————

321-பிராண
உயிர் ஆனவன் -அடியார்க்கு ஜீவநாடி
உலகுக்கே ஒரு உயிருமானாய் -6-9-7-

தன்னை அண்டிய ஜீவர்களுக்கு உயிரானவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

பிராணா அஸ்மி பிரஞ்ஞாத்மா தம் மாம் ஆயுஸ் அம்ருதம் இதி உபாஸ் ஸ்வ –கௌஷீதகீ -இப்படி பிராணனாக
உள்ள நான் ஆயுஸ் என்றும் அமிர்தம் என்றும் உபாசிக்கப்படுகிறேன்
அம்ருதம் தேவாநாம் ஆயுஸ் பிரஜாநாம்
பிராணா ததா அநு கமாத்-1-1-9-

வாயு ரூபியாக பிராணிகளைப் பிழைப்பிப்பவர்–ஸ்ரீ சங்கரர் –

பக்தர்களை மோஷ லோகம் அழைத்துச் செல்பவர் -சரஸ்வதியைக் காட்டிலும் மிகவும் மேம்பட்டவர் —ஸ்ரீ சத்ய சந்தர் –

——————————————————————–

3-15-ஸ்ரீ கூர்மாவதாரம் -322-332-திரு நாமங்கள்

322-பிராணத
உயிர் அளிப்பான் -பலம் உள்ளவன் -அநந்த பல சக்த்யே -மந்தர பர்வதம் தாங்கி
அமரர்கட்கு அன்று ஆரமுதூட்டிய அப்பன் -3-7-5- -முன்பே 66- பார்த்தோம் -மேலும் -409-956 பார்ப்போம் –

ஸ்ரீ கூர்மமாக தேவர்களுக்குக் கடல் கடைவதற்கு உரிய பலத்தைக் கொடுப்பவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

தேவர்களுக்கு பலம் கொடுப்பவர் -அசுரர்களுக்கு பலத்தைக் கெடுப்பவர் –ஸ்ரீ சங்கரர் –

பிராணனை அழிப்பவர்—ஸ்ரீ சத்ய சந்தர் –

————–

323-வாசவாநுஜ-
இந்த்ரன் பின் பிறந்தவன்

அமுதம் வேண்டிய இந்திரனுக்கு அளிப்பதற்காகப் பின் பிறந்தவர் -ஸ்ரீ பராசர பட்டர் –
வாசவாந் -இந்திரன் -அதனை அவனுக்கு அளிக்க தம்பியாக அவதரித்தவர் வாசவ அநுஜன் –

காச்யபருக்கு அதிதியினிடம் இந்திரனுடைய தம்பியாகப் பிறந்தவர் –ஸ்ரீ சங்கரர் –

இந்த்ரனுக்குத் தம்பியாக அவதரித்தவர் -வசுதேவருக்கு மகனாக அவதரித்தவர் –
செல்வங்கள் ரத்னங்கள் யுடையவர் -அசுரர்களின் இருப்பிடங்களை நாசம் செய்பவர்—ஸ்ரீ சத்ய சந்தர் –

————-

324-அபாம் நிதி –
கடல்களுக்கு ஆதாரம் ஆனவன் –
அப்பனே ஆழ கடலைக் கடைந்த துப்பனே -4-7-5-

கடல் கடைந்த போது அக் கடலைத் தாங்கியவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

நீர் நிரம்பும் கடலாக இருப்பவர் –ஸ்ரீ சங்கரர் –

தேவர்களுக்குத் தஞ்சமாக இருப்பவர் —ஸ்ரீ சத்ய சந்தர் –

————–

325-அதிஷ்டாநம் –
ஆசனமாய் இருந்தவன்
மலை முகடு மேல் வைத்து அன்று கடல் கடைந்தான் -பிண்டமாய் நின்ற பிரான் -மூன்றாம் திரு -46-

கடல் கடைந்த போது மந்திர மலையைத் தாங்கியவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

மந்தராத்ரே அதிஷ்டானம் ப்ரமத அபூத் மஹா முநே –ஸ்ரீ விஷ்ணு புராணம் -1-9-98-
மந்த்ரமலைக்கு ஆதாரம் எனவே அதிஷ்டானம்

பிராணிகளுக்கு எல்லாம் உபாதான காரணமானவர் –ஸ்ரீ சங்கரர் –

இங்கு ஆதாரமாக இருப்பவர் —ஸ்ரீ சத்ய சந்தர் –

—————-

326-அப்ரமத்த –
ஊக்கம் உடையவன் -விழிப்பு உடையவன் –
மலக்கம் எய்த மா கடல் தன்னைக் கடைந்தான் -8-3-1-

இப்படி அடியவர்களைக் காப்பதில் மிகவும் ஊக்கம் கொண்டவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

அவரவர் கர்மங்களுக்குத் தக்க பலன்களைத் தருவதில் தவறாதவர் –ஸ்ரீ சங்கரர் –

சிறிதும் செருக்கு இல்லாதவர் —ஸ்ரீ சத்ய சந்தர் –

————-

327-ப்ரதிஷ்டித
நிலை பெற்றவன் -ஸ்வே மஹிம்நி ப்ரதிஷ்டித -தனக்கு வேறு ஆதாரம் வேண்டாத படி –

பிறரை எதிர்பாராமல் தம் மகிமையில் நிலைத்து இருப்பவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

ச பகவ க்வ ப்ரதிஷ்டித இதி ஸ்வே மஹிம்நி –சாந்தோக்யம் -7-24-1-தனது மகிமையே தனக்கு ஆதாரம்
ஸ்வே மஹிம்நி ஸ்திதம் தேவம் –ஸ்ரீ விஷ்ணு தர்மம் -72-2-

தமது மகிமையில் நிலைத்து இருப்பவர் –ஸ்ரீ சங்கரர் –

நிலைத்து இருக்கும் தன்மை யுடையவர்—-ஸ்ரீ சத்ய சந்தர் –

————-

ஸ்கந்தஸ் ச்கந்ததரோ துர்யோ வரதோ வாயுவாஹன
வாஸூதேவோ ப்ருஹத்பாநு ராதிதேவ புரந்தர -36

————-

328-ஸ்கந்த –
வற்றச் செய்பவன் -அழிப்பவன் –
கூடி நீரைக் கடைந்தவாறும் அமுதம் தேவர் உண்ண அசுரரை வீடும் வண்ணங்களே செய்து போன வித்தகமும் -5-10-10-

அசுரர் முதலியவர்களை அழிப்பவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

அமுதமாகப் பெருகுபவர் –ஸ்ரீ சங்கரர் –

பெருகுபவர் அல்லது வளர்பவர் —-ஸ்ரீ சத்ய சந்தர் –

—————-

329-
ஸ்கந்தர –
ஸ்கந்தனைத்-தேவ சேனாபதியை – தாங்குபவன்
சேனாநீநாம் அஹம் ஸ்கந்த -ஸ்ரீ கீதை

தேவ சேனாதிபதியான குமாரனைத் தாங்குபவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

சேநா நீநாம் அஹம் ஸ்கந்த –ஸ்ரீ கீதை -10-24-

தர்ம மார்க்கத்தைத் தாங்குபவர் –ஸ்ரீ சங்கரர் –

ஷண்முகனைத் தரிப்பவர்—-ஸ்ரீ சத்ய சந்தர் –

———————-

330-துர்யா
தாங்குபவன் -புனப்ருதே-ப்ப்ரு117 முன்பு பார்த்தோம்

உலகங்களைத் தாங்குபவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

சர்வ பிராணிகளின் உத்பத்திகளைத் தாங்குபவர் –ஸ்ரீ சங்கரர் –

பாரங்களைத் தாங்குபவர் —-ஸ்ரீ சத்ய சந்தர் –

————–

331-வரத-
வரங்களை தருபவன் -தேவர்களுக்கு லோக வியாபார சாமர்த்தியம் வரம் அளிப்பவன்
வரம் தரும் மா மணி வண்ணன்

உலக பாரங்களை வகிக்கும் தேவர்களுக்கும் அந்தந்த சாமர்த்யமாகிய வரங்களை அளிப்பவர்-ஸ்ரீ பராசர பட்டர் –

விரும்பிய வரங்களைக் கொடுப்பவர் -யஜமான ரூபியாக தஷிணைகளைக் கொடுப்பவர் –ஸ்ரீ சங்கரர் –

மோஷம் அளிப்பவர் ருத்ரன் முதலிய வர்களால் கொடுக்கப்பட்ட வரங்களை அழிப்பவர்-
கணவன் அற்ற சூர்பணகையின் மூக்கை அறுத்தவர் –
அவரதர் -என்ற பாடத்தில் அசுரர்களை ஹிம்சிப்பவர் என்றுமாம் —–ஸ்ரீ சத்ய சந்தர் –

—————

332-வாயு வாஹந –
வாயுவை நடத்துபவன்
மேதகும் ஐம் பெரும் பூதமும் நீயே -திரு வெழு கூற்று –

உலகத்திற்குப் பிராணனான வாயுவை நடத்துபவர்-ஸ்ரீ பராசர பட்டர்-

ஏழு மருத்துக்களை நடத்துபவர் -ஸ்ரீ சங்கரர் –

மூச்சுக் காற்றைத் தாங்கி இருக்கும் ஜீவர்களை நடத்துபவர் – —ஸ்ரீ சத்ய சந்தர் –

——————————————————–

பெருமைகளை வெளிப்படுத்தும் விஸ்வரூபம் –

272-நைக ரூப -பல உருவங்களை உடையவர் –
273-ப்ருஹத் ரூப -ஒவ்வொரு உருவமும் பிரபஞ்சத்தையே வியாபிக்கும் பெரியோனாய் இருப்பவர் –
274-சிபிவிஷ்ட -ஒளிக் கீற்றுக்குள் நுழைந்து அனைத்தையும் வ்யாபிப்பவர் -சூரிய ஒளியைப் போலே உடலில் நுழைபவர்
275-பிரகாசன -காணக் கருதும் பக்தர்களுக்கு தன்னைக் காட்டுபவர் –
276-ஓஜஸ் தேஜோத் யுதிதர -வலிமை சக்தி ஒளி ஆகியவற்றை உடையவர் –
277-பிரகாசாத்மா -அறிவு இழந்தவர்களுக்கும் தனித்தன்மையோடு புலப்படும் தன்மை உடையவர் –
278-பிரதாபன -பகைவர்களுக்கு வெப்பத்தை உண்டாக்குபவர் –
279-ருத்த -பௌர்ணமிக் கடல் போலே எப்போதும் நிறைந்து இருப்பவர் –
280-ஸ்பஷ்டாஷ-தன் பெருமையை வெளிப்படுத்தும் வேதச் சொற்களை உடையவர் –

281-மந்திர -தன்னை நினைப்பவரைக் காப்பவர் –
282-சந்த்ராம்சூ -த்யானிப்பவரின் களைப்பை ஒழிக்கும் நிலவின் குளிர்ந்த ஒளியை உடையவர் –
283-பாஸ்கரத்யுதி–பகைவர்களை ஓட்டும் சூர்யனைப் போன்ற ஒளி படைத்தவர் –
284-அம்ருதாம் சூத்பவ -குளிர்ந்த நிலவின் ஒளிக்குப் பிறப்பிடமானவர்-
285-பானு -சூரியனுக்கே ஓளியை அருளும் பிரகாசம் உடையவர் –
286-சசபிந்து -தீயோர்களை எளிதில் நீக்குபவர்
287-சூரேச்வர–நல் வழிச் செல்பவர்களே தேவர்கள் -அவர்களுக்குத் தலைவர் –
288-ஔஷதம் -சம்சாரம் என்னும் -கொடிய நோயைத் தீர்க்கும் மருந்து –
289-ஜகதஸ் சேது -உலகில் நல்லவைகள் தீயவைகளை பிரிக்கும் அணை போன்றவர் –
290-சத்ய தர்ம பராக்கிரம -உலகை வாழ்விக்கும் தர்மத்தை -திருவிளையாடல் -பண்புகள் உடையவர் –

291-பூத பவ்ய பவன் நாத –மேற்கண்ட பெருமையை முக்காலத்திலும் உடையவர் –
292-பவன -காற்று போலே எங்கும் செல்பவர் –
293-பாவன -தூய்மை அளிக்கும் கங்கைக்கும் தூய்மை அளிப்பவர் –
294-அநல -தன் அடியார்க்கு எத்தனை கொடுத்தாலும் போதும் என்ற மனம் இல்லாதவர் –
295-காமஹா -தன்னையே வேண்டுபவர்களுக்கு உலக இன்ப ஆசையை ஒழிப்பவர் –
296-காமக்ருத்-அவரவர் விருப்பப்பட்ட பலனைக் கொடுப்பவர் –
297-காந்த -தன் மென்மையான திருமேனி அழகாலே காண்பவரை ஈர்ப்பவர் –
298-காம -வண்மை எளிமை ஆகிய குணங்களால் அனைவராலும் விரும்பப் படுவார்
299-காமப்ரத -நிலையற்ற செல்வத்தையும் நிலையான தன்னையும் வேண்டியவற்றை அளிப்பவர் –
300-ப்ரபு -மேற்சொன்ன சிறப்புகளால் காண்பவர்களின் கண்ணையும் மனத்தையும் பறிப்பவர் –

—————————————————————————

ஆலமா மரத்தின் இலை மேல் ஒரு பாலகன் –

301-யுகாதிக்ருத் -பிரளயத்தின் போது உலகத்தை தன் வயிற்றில் வைத்துக் காத்து பின் யுகங்களுக்குத் தொடக்கமான சிருஷ்டியைச் செய்பவர் –
302-யுகாவர்க்த -நான்கு யுகங்களையும் அதன் அதன் தர்மங்களோடு திரும்ப திரும்ப வரச் செய்பவர் –
303-நைக மாய -சிறு குழந்தையாக உலகை விழுங்குவது -ஆலிலையில் துயில்வது முதலான பல வியப்புகளை உடையவர் –
304-மஹாசன-உலகையே விழுங்கும் பெரும் தீனி உள்ளவர்
305-அத்ருச்ய-மார்கண்டேயர் முதலிய ரிஷிகளுக்கும் எட்டாதவர்
306-வ்யக்தரூப -ஆனால் மார்க்கண்டேயர் வேண்டிய போது தன் திருமேனியைப் புலப்படுத்துபவர் –
307-சஹஸ்ரஜித் -ஆயிரம் யுகங்கள் உள்ள பிரளயத்தை யோக உறக்கத்தாலே ஜெயிப்பவர்
308-அனந்தஜித் -தன் பெருமையின் எல்லையை யாராலும் காண முடியாதவர் –
309-இஷ்ட –310-அவிசிஷ்ட -தன் வயிற்றில் இருக்கும் அனைவராலும் தாய் போலே விரும்பப் படுபவர்
311-சிஷ்டேஷ்ட-சான்றோர்களால் அடையப்படும் பொருளாக விரும்பப் படுபவர் –
312-சிகண்டீ-தன் மகிமையை தனக்கு ஆபரணமாக உள்ளவர் –
313- ந ஹூஷ-தமது மாயையினால் ஜீவர்களை கட்டுப் படுத்துபவர் –
314-வ்ருஷ-அடியார்களை அமுதம் போன்ற திருமேனி ஒளியாலும் சிறப்பாலும் மகிழ்விப்பவர் –

——————————————————–

பரசுராமரா -அல்லது கோபத்தின் உருவமா –

315-க்ரோதஹா-ஷத்ரியர்களை 21 தலைமுறைகளை அழித்த பின் கோபத்தை ஒழித்தவர்-
316-க்ரோதக்ருத்-முதலில் ஷத்ரியர்கள் இடம் கோபம் கொண்டவர் –
317-க்ருதா -தன் கோபத்தைத் தூண்டிய கார்த்த வீர்யனை ஜெயித்தவர் –
318-விஸ்வ பாஹூ-தீயோர்களை அழிப்பதால் உலகுக்கு நன்மை செய்யும் கைகளை உடையவர் –
319-மஹீதர-சுமையாக இருக்கும் தீயவர்களை ஒழித்து பூமியைத் தாங்குபவர் –
320-அச்யுத -பிறக்கும் போதும் ஏனைய தேவர்களைப் போலே தன் மேன்மை நிலையில் இருந்து இறங்காதவர் –
321-பிரதித -பெரும் புகழாளர் –
322-பிராண -அனைத்து ஜீவர்களுக்கும் மூச்சுக் காற்றானாவர்

——————————————————

அனைத்தையும் தாங்கும் ஆமை –

323-பிராணத -பாற் கடல் கடைந்த போது தேவர்களுக்கு வலிமை கொடுத்தவர் –
324-வாசவாநுஜ-விரும்பிய அமுதைப் பெற இந்தரனுக்கு தம்பியாகப் பிறந்தவர் –
325-அபாம் நிதி – கடல் கடையப்பட்ட போது அதற்கு ஆதாரமாகத் தாங்குபவர் –
326-அதிஷ்டானம்-அப்போதே மத்தான மந்திர மலையை மூழ்காமல் தாங்கியவர் –
327-அப்ரமத்த-அடியார்களைக் காப்பதில் விழிப்புடன் இருப்பவர் –
328-ப்ரதிஷ்டித -வேறு ஆதாரம் வேண்டாத படி தன்னிடத்திலேயே நிலை பெற்று இருப்பவர் –
329-ஸ்கந்த -அசூரர்களையும் தீயவர்களையும் வற்றச் செய்பவர் –
330-ஸ்கந்த தர -தேவ சேனாதிபதியான சூப்ரஹமண்யனையும் தாங்குபவர் –
331-துர்ய -உலகு அனைத்தையும் தாங்குபவர் –
332-வரத -தேவர்களுக்கு வரங்களை அருளுபவர் –
333-வாயு வாஹன -பிராணனான காற்றையும் நடத்துபவர் –

————————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பராசர பட்டர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பீஷ்மர் திருவடிகளிலே சரணம்
ஸ்ரீ வியாச பகவான் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: