ஸ்ரீ விஷ்ணு சகஸ்ர நாமம்–1-9-பரத்வம்-உபாய ஸ்வரூபி -உபேய ஸூக ஸ்வரூபி –89-100 திரு நாமங்கள் –

ஸ்ரீ விஷ்ணு சகஸ்ர நாமம்

ஸ்ரீ பராசுர பட்டர் –
1-122-பரத்வம் சொல்லும் திரு நாமங்கள்
1-1- வ்யாப்தி -சர்வேஸ்வரத்வம்—முதல் நான்கு திரு நாமங்கள்
1-2-சர்வ சேஷித்வம் -சிருஷ்டி ஸ்திதி சம்ஹாரம் நிர்வஹிக்கை -5-9 -ஸ்வாமித்வம் – சொல்லும் திரு நாமங்கள்
1-3–தோஷம் தட்டாத பரமாத்மா -10/11-திருநாமங்கள்
1-4-முக்தர்களுக்கு மேலான கதியாய் உள்ளவன் -12-17 திரு நாமங்கள்-
1-5- முக்திக்கு உபாயமாய் உள்ளவை -18/19 –திரு நாமங்கள்
1-6-நியாமகன்-20-திரு நாமம்
1-7- சமஸ்த இதர விலஷணன் -21-65- திருநாமங்கள் –
1-8-த்ரிவித சேதன வ்யதிரிக்த -நியாமகன் -66-88-திரு நாமங்கள்
1-9-உபாய ஸ்வரூபி -உபேய ஸூக ஸ்வரூபி –89-100 திரு நாமங்கள் –
1-10-ஆஸ்ரித வத்சலன் -101-122-திரு நாமங்கள்

—————

ஸூரேசஸ் சரணம் சர்மா விஸ்வரேதா ப்ரஜாபவ
அஹஸ் சம்வத்சரோ வ்யாள பிரத்யயஸ் சர்வ தர்சன –10-
அஜஸ் சர்வேச்வரஸ் சித்தஸ் சித்திஸ் சர்வாதிரச்யுத
வ்ருஷாகபிரமேயாத்மா சர்வயோகவி நிஸ் ஸ்ருத –11-

—————

89-விச்வரேதோ –
அகில உலகங்களுக்கும் காரணம்
சரணம் சரம -திரு நாமங்களுக்கு தோற்றுவாய் இத் திரு நாமம்
ரேதஸ் -தன்னை அறிய ஞான இந்த்ரியங்களையும்
கைங்கர்யம் பண்ணி உஜ்ஜீவிக்கும் படி கர்மேந்த்ரியங்களையும்
உண்டாக்குகிறான்
விசித்ரா தேக சம்பத்தி ஈச்வராய நிவேதிதம்
கருமமும் கரும பலனுமாகிய காரணன் -3-5-10-
ஆற்ற நல் வகை காட்டும் அம்மான் -4-5-5-

உலகங்கட்கு எல்லாம் மூல காரணமாய் இருப்பவர் -அவனே உபாயமாகவும் உபேயமாகவும் இருப்பவர் –
தானே சர்வ காரணம் என்று அறிந்து தனது திருவடிகளிலே கைங்கர்யம் செய்யவே
ஞான கர்ம இந்த்ரியங்களை கொடுத்து அருளினவன் -ஸ்ரீ பராசர பட்டர் —

ஏதஸ்மாத் ஜாயதே ப்ரானோ மனஸ் சர்வ இந்திரியாணி ச கம் வாயு ஜ்யோதி ஆப பிருதிவோ விஸ்வஸ்ய தாரினோ–முண்டக -2-1-3-
சப்த பிராணா ப்ரபவந்தி தஸ்மாத் –முண்டக -2-1-8—இங்கு ஏழு என்றது -2-கண்கள் -2-காதுகள் -2-மூக்குத்துவாராம் -1-நாக்கு
பவந்தி பாவா பூதா நாம் மத்தஸ் ஏவ ப்ருதக் விதா–ஸ்ரீ கீதை -10-5-
விசித்ரா தேஹ சம்பந்தி ஈஸ்வராய நிவேதிதும் பூர்வமேவ க்ருதா ப்ரஹ்மந் ஹஸ்த பாதாதி –ஸ்ரீ விஷ்ணு தத்வம்

உலகங்கங்களுக்கு எல்லாம் காரணமாய் இருப்பவர் -ஸ்ரீ சங்கரர் –

உலகுக்குக் காரணமானவர் -வாயுவிற்கு காரணம் ஆனவர்-ஸ்ரீ சத்ய சந்த தீர்த்தர்–

ஓம் விச்வரேதோ நம
அனைத்துக்கும் விதை -காரணம் –
இதே நாமாவளி மீண்டும் -118-/151–இரண்டு தடவை மேலும் வரும்

————-

90-பிரஜாபவ –
பிரஜைகளுக்கு இடமாய் -உய்யும் படி அவைகளில் இருப்பவன்
ஆபிமுக்யம் உண்டாகி அவனை அடைய வழி ஏற்பட
பந்தம் அறுப்பதோர் மருந்தும் பான்மையும் பல் உயிர்க்கு எல்லாம் அந்தமும் வாழ்வுமாய எம்பெருமான் -பெரிய திருமொழி -5-7-2-

எல்லா பிரஜைகளும் தாம் கொடுத்த சாதனங்களைக் கொண்டே தம்மைச் சேரும்படி
அவைகளுக்கு இடமாக இருப்பவர் -ஸ்ரீ பராசர பட்டர் —

எல்லா பிரஜைகளின் உற்பத்திக்கும் காரணமாக இருப்பவர் –ஸ்ரீ சங்கரர் —

தம்மை நினைப்பூட்டும் ஞானிகளுக்கு ஸ்ரீ வைகுண்டம் முதலிய வற்றைத் தருபவர் -பிரஜைகளைப் படைப்பவர் –
பிரஜைகளையும் நஷத்ரங்களையும் நடத்துபவர்-ஸ்ரீ சத்ய சந்த தீர்த்தர்–

ஓம் பிரஜாபவாய நம
பிரஜைகளை உண்டாக்கியவன் -முதலில் தானே அஹங்காராதிகள் உண்டாக்கி நான்முகனை ஸ்ருஷ்டித்து
அவனுக்கு அந்தராத்மாவாக இருந்து மற்ற ஸ்ருஷ்ட்டி

————————-

91-அஹ –
பகல் போலே குறைவற்று விளங்குபவன்
பகல் கண்டேன் நாரணனைக் கண்டேன் -இரண்டாம் திரு -82
அல்லல் இன்பம் அளவிறந்து எங்கும் அழகு அமர் சூழ் ஒளியன்-3-10-8-

அநாதி மாயையினால் உறங்கி-அவித்யையில் இருந்து – எழுந்தவனுக்கு முதலில் தம் ஸ்வரூபத்தைக் காட்டுவதால்
பகல் போன்றவர் -ஸ்ரீ பராசர பட்டர் —

அஹ அஹீநம் –யாரையும் கை விடாதவன்
அஹ -பகல் போன்றவன்
ந ஹி கல்யாண க்ருத கச்சித் துர்கதிம் தாத கச்சதி –ஸ்ரீ கீதை -6-40-
தன்னைப் பற்றி ஞானம் அளித்து பகல் போல் நிற்கிறான் –

ஒளிமயமாய் இருப்பவர் -ஸ்ரீ சங்கரர் —

ஜீவனைக் காட்டிலும் வேறுபட்டவர் -விடத் தகாதவர்-ஸ்ரீ சத்ய சந்த தீர்த்தர்–

ஓம் அஹசாய நம
யாரையும் விட்டுக் கொடுக்காதவன்

——————

92-சம்வத்சர –
சேதனர் இடம் நன்றாக வசிப்பவன்
என்னுடைச் சூழல் உளானே -1-9-1-ஆறுகள் இலானே -ஒழிவிலன் என்னுடன் உடனே -1-9-3
அல்லும் பகலும் இடைவீடு இன்றி மன்னி என்னை விடான் -நம்பி நம்பியே -1-10-8-
ததாமி புத்தி யோகம்
மீண்டும் 423-பொருந்தி வசிப்பவன்
கல்கியாக அவதரிக்கும் காலம் எதிர் நோக்கி திருவநந்த ஆழ்வான் மேலே கண் வளர்ந்து அருளி
அநந்த சயநாரூடம் -சாத்விஹ சம்ஹிதை
அரவணை மேல் பள்ளி கொண்ட முகில் வண்ணன்-

அப்படி எழுந்தவர்களின் அறிவில் சேர்ந்து வசிப்பவர் -ஸ்ரீ பராசர பட்டர் —

ததாமி புத்தி யோகம் தம் யேந மாம் உபயாந்தி தே –ஸ்ரீ கீதை -10-10-
தேஷாம் அஹம் சமுத்தர்த்தா –ஸ்ரீ கீதை –12-7-

கால ரூபியாய் இருத்தலால் வருடமாக இருப்பவர் -ஸ்ரீ சங்கரர் —

காலத்தை நியமிப்பவராக வருடத்தில் இருப்பவர் -ஸ்ரீ சத்ய சந்த தீர்த்தர்–

ஓம் சம்வத்சராய நம
அடியார்களை உஜ்ஜீவிப்பித்து அருளுபவர் –மீண்டும் -423-நாமாவளி வரும் -வருஷத்துக்கு இதே பெயர்

———————-

93-வ்யால-
தன் வசம் ஆக்குமவன் -அங்கீ கரிப்பவன்
செல்வ விபீடணற்கு வேறாக நல்லானை -பெரிய திருமொழி -6-8-5-
இசைவித்து என்னை யுன் தாளிணைக் கீழ் இருத்தும் அம்மானே -5-8-9-

அவர்களை அங்கீ கரித்துத் தமக்கு உட்படுத்துபவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

ஆநய ஏனம் ஹரி ஸ்ரேஷ்ட தத்தம் அஸ்ய அபயம் மயா –யுத்தம் -18-34–
சரணம் அடைந்தவர்களை அணைத்துக் கொள்பவன்

பாம்பைப் போல் யானையைப் போல் எவராலும் பிடிக்க முடியாதவர் -ஸ்ரீ சங்கரர் —

கௌஸ்துபம் முதலிய விசேஷமான அணிகலன்களை யுடையவர் –
பக்தர்களுக்காகவே அனைத்தையும் அளிக்க முயல்பவர் –
ஸ்ருஷ்டியாதிகளுக்கு தாம் ஒருவரே -பகைவர்களை அழிப்பவர்-அனைத்து காரணமானவர் –
விசேஷமாக பிரகாசிப்பவர் -ஸ்ரீ சத்ய சந்த தீர்த்தர்–

ஓம் வ்யாலாய நம
சரணாகத வத்சலன் -சரணாகத ரக்ஷண தீக்ஷை கொண்டவன்

——————–

94-ப்ரத்யய –
நம்பிக்கை உண்டாக்குபவன்
நம்பனை நரசிங்கனை -பெரியாழ்வார் -4-4-9-

அவர்களுக்குத் தம்மிடத்தில் நம்பிக்கை யுண்டாக்குபவர்-ஸ்ரீ பராசர பட்டர் –

ரக்ஷகத்வ குணத்தைக் காட்டி விச்வாஸம் ஊட்டுபவன்
தம் தேவம் ஆத்ம புத்தி பிரசாதம் –ஸ்வேதாஸ்வர –தன்னைப் பற்றிய ஞானம் அளித்தவனை சரணம் அடைகிறேன்
பூயோ பூயோபி தே ப்ரஹ்மந் விஸ்வாஸ்ய புருஷோத்தம -ஸ்ரீ விஷ்ணு தத்வம்
யதி தே ஹ்ருதயம் வேத்தி யதி தே ப்ரத்யயோ மயி பீமஸேனோ அர்ஜுனவ் சீக்ரம் ந்யாஸ பூதவ் ப்ரயச்ச மே -சபா பர்வம்

ஞானமே வடிவானவர் -ஸ்ரீ சங்கரர் —

அனைத்தையும் அறிந்தவர் -ஸ்ரீ சத்ய சந்த தீர்த்தர்–

ஓம் ப்ரத்யயா நம
நம்பத்தக்கவன்

—————

95- சர்வ தர்சன –
தன் மகிமைகள் எல்லாம் பூரணமாக காட்டி அருளுபவன்
தச்யைஷ ஆத்மா விவ்ருனுதே தநூம் ஸ்வாம் -முண்டகோப
காட்டவே கண்ட பாதம் –
காட்டித் தன் கனை கழல்கள் கடு நரகம் புகல் ஒழித்த எம்பெருமான் -10-6-1-

அவர்கள் தம்மிடத்தில் உள்ளது எல்லாம் காணும்படி செய்பவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

தம் அக்ரதும் பச்யதி வீத சோக தாது ப்ரஸாதாத் மஹிமாநம் ஈஸாம்–ஸ்வேதாஸ்வரம்
தஸ்ய ஏஷா ஆத்மா விவ்ருணதே தநூம் ஸ்வாம் –முண்டகம்

எல்லாவற்றையும் கண்களாக யுடையவர்-எல்லாவற்றையும் அறிபவர் -ஸ்ரீ சங்கரர் —

சம்ஹாரம் செய்யும் ருத்ரனுக்கு ஞானத்தைக் கொடுப்பவர் -அனைத்தையும் பிரத்யஷமாக காண்பவர் –
எல்லா தர்ச புண்ய காலங்களிலும் அமாவாச்யைகளிலும் ஹவிஸ்சை எடுத்துச் செல்பவர்-ஸ்ரீ சத்ய சந்த தீர்த்தர்-

ஓம் சர்வ தர்சநாய நம
அடியாருக்கு சர்வ ஸ்வ தானம் பண்ணி அருளுபவர் –
அனைத்தையும் காண்பவர்

———————–

அஜஸ் சர்வேச்வரஸ் சித்தஸ் சித்திஸ் சர்வாதிரச்யுத
வ்ருஷாகபிரமேயாத்மா சர்வயோகவி நிஸ் ஸ்ருத –11-

————-

96-அஜ –
தடைகளை விலக்குபவன்-
அடியார்கள் வினைத் தொடரை அருள் என்னும் ஒள் வாள் உருவி வெட்டிக் களைபவன் –
என் தன் மெய் வினை நோய் களைந்து நல் ஞானம் அளித்தவன்
ஒ இறப்பிலி -அகாரத்தால் சொல்லப்படுபவன் -206-524- மீண்டும் வரும் –

அவர்கள் தம்மை அடைவதற்கு இடையூறுகளை தாமே விலக்குபவர்–ஸ்ரீ பராசர பட்டர் –

தேஷாம் ஏவ அநு கம்பார்த்தம் அஹம் அஞ்ஞானஜம் தமஸ் நாசயாமி ஆத்ம பாவஸ்த ஞான தீபேந பாஸ்வதா –ஸ்ரீ கீதை -10-11-
அஹம் த்வா சர்வ பாபேப்யோ மோக்ஷயிஷ்யாமி –ஸ்ரீ கீதை -18-66-

பிறப்பற்றவர்-ஸ்ரீ சங்கரர் —

பிறப்பற்றவர் -செல்பவர் – ஸ்ரீ சத்ய சந்த தீர்த்தர்

ஓம் அஜாய நம
தாமே பிரதிபந்தகங்களைப போக்கி தன்னிடம் சேர்த்துக் கொள்பவன்
மீண்டும் -206–524-நாமாவளி வரும்

——————-

97-சர்வேஸ்வர –
தானே அடியார் இடம் சென்று சேருபவன்
வந்து அருளி என் நெஞ்சு இடம் கொண்ட வானவர் கொழுந்தே -உலக்குக்கோர் முந்தை தாய் தந்தையே -5-7-7-

தன்னைச் சரணம் அடைந்தவர்களைத் தாமே விரைவாக அவர்களிடம் செல்பவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

ஈஸ்வரர்களுக்கு எல்லாம் ஈஸ்வரர் -ஸ்ரீ சங்கரர் —

விபீஷனேன ஆசு ஜகாம சங்கமம் –யுத்த -18-39–பெருமாள் விரைந்து சரணம் அடைந்த விபீஷணன் உடன் சேர்ந்தார்

எல்லோருக்கும் ஈஸ்வரர் -ஸ்ரீ சத்ய சந்த தீர்த்தர்-

ஓம் சர்வேஸ்வராய நம
திருவடி அடைய ஆசை உள்ளோர்க்கு தானே சென்று சேவை சாதிப்பவன்

——————

98-சித்த –
சித்த தர்மம் -எப்போதும் உள்ளவன் –
புதையல் போலே எப்போதும் இருப்பவன்
ஆழியான் அருள் தருவான் அமைகின்றான் -10-6-1-

உபாயாந்தரங்களால் அன்றி தாமே சித்த உபாயமாய் இருப்பவர் -ஸ்ரீ பராசர பட்டர் –
ந்யாஸ இத்யாஹூ மநீஷினோ ப்ராஹ்மணம் –தைத்ர்யம் -புதையல் போன்று ப்ரஹ்மம்
உள்ளேயே இருப்பதாக ஞானிகள் கூறுகின்றனர்

என்றைக்கும் உள்ள தன்மையை யுடைய நித்யர் -ஸ்ரீ சங்கரர் —

அடையப் பெறுபவர் -எப்போதும் ஞான வடிவினர் -அடியவர்களில் காக்க சித்தமாக உள்ளவர் -ஸ்ரீ சத்ய சந்த தீர்த்தர்-

ஓம் சித்தாயா நம
அடியார்களுக்கு கை வசப்பட்டு இருப்பவன்

—————-

99- சித்தி
பேறாய் இருப்பவன்
அடியை அடைந்து ஈறில் இன்பத்து இரு வெள்ளம் யான் மூழ்கினேன் -2-6-8-
உபாயாந்தரங்களுக்கும் பலன் அளிப்பவன் –

உபாயங்களினால் தேடப்படும் பலனுமானவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

யதிச்சந்தோ ப்ரஹ்ம சர்யம் சரந்தி–கட
யம் ப்ருதக் தர்ம சரணா ப்ருதக் தர்ம பலைஷிண -ப்ருதக் தர்மை சமர்ச்சந்தி தஸ்மை தர்மாத்மனே நம

எல்லாவற்றிலும் சிறந்த பயனாய் ஸ்ரீ சத்ய சந்த தீர்த்தர்-

ஓம் சித்தியே நம
அனைவருக்கும் அடையப்பட வேண்டியவன்

————-

100-சர்வாதி –
எல்லா புருஷார்த்தங்களுக்கும் மூல காரணம்
சர்வான் காமான் ப்ராப்னுவந்தே –கிருஷ்ண நாமாபிதாநாத்
சகல பல பிரதோ ஹி விஷ்ணு
அற முதல் நான்கவையாய் -திரு வெழு கூற்று இருக்கை-

உயர்வும் தாழ்வும் ஆகிற எல்லாப் பயங்களுக்கும் தாமே காரணமாய் இருப்பவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

யே த்வாம் தேவம் த்ருவம் பக்தா புராணம் புருஷோத்தமம் ப்ராப்னுவந்தி சதா காமாந் இஹ லோகே பரத்ர ச –யுத்த -120-31-
சர்வான் காமான் ப்ராப்னுவந்தே விசாலான் த்ரை லோக்யே அஸ்மின் க்ருஷ்ண நாமாபிதாநாத்

எல்லா பூதங்களுக்கும் காரணம் ஆனவர் -ஸ்ரீ சங்கரர் —

அனைத்திற்கும் காரணம் ஆனவர் -எல்லாராலும் ஏற்கப் பெறுபவர் -எல்லாம் உண்பவர் -ஸ்ரீ சத்ய சந்த தீர்த்தர்-

ஓம் சர்வாதியே நம
சகலத்துக்கும் சகல -த்ரிவித-காரணம் ஆனவன்

————————————————————–

ஆறும் பேறும் அவனே -மருந்தும் விருந்தும் அவனே –

87-சரணம் -அனைவருக்கும் உபாயம் –தன்னை அடைய தானே வழியாய் இருப்பவர் –
88-சர்ம -ஸுக ரூபமானவர் –
89-விச்வரேதா-பிரபஞ்சத்துக்கு முதல் காரணமாக இருப்பவர் -உடலையும் புலன்களையும் தன் தொண்டுக்காகவே படைப்பவர் –
90-பிரஜாபவ -அவர் கொடுத்த உடலையும் புலன்களையும் கருவிகளாகக் கொண்டு அவரைச் சேரும்படி இருப்பிடமானவர்
91-அஹ-அவர்கள் தன்னைக் கிட்டுவதற்காக இடையூறாக இருக்குமவற்றை தானே விலக்குபவர் –
92-சம்வத்சர-அடியார்களைக் கை தூக்கி விட அவர்கள் உள்ளத்திலேயே இருப்பவர்
97-சர்வேஸ்வர -சரணாகதர்களை தகுதி பார்க்காமல் தாமே சடக்கென அடைபவர்
98-சித்த –தன்னை அடைவதற்கு வேறு வழிகள் தேவை இல்லாமல் தானே தயாரான வழியானவர் –
99-சித்தி -அனைத்து தர்மங்களாலும் அனைவராலும் அடைய படும் பயனாக இருப்பவர் –
100-சர்வாதி -உயர்ந்த மற்றும் தாழ்ந்த அனைத்துப் பயன்களுக்கும் மூலமாக இருப்பவர் –

———-

முதல் சதகம் முடிந்தது-

———————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பராசர பட்டர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பீஷ்மர் திருவடிகளிலே சரணம்
ஸ்ரீ வியாச பகவான் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: