ஸ்ரீ விஷ்ணு சகஸ்ர நாமம்–3-1- பிரதம அவதாரம் விஷ்ணு -147-152- திரு நாமங்கள் / 3-2-ஸ்ரீ வாமன அவதார பரமான திரு நாமங்கள் -153-164-

ப்ராஜிஷ்ணுர் போஜனம் போக்தா சாஹிஷ்ணுர் ஜகதாதிஜ
அனகோ விஜயோ ஜேதா விச்வயோனி புனர்வஸூ –16-
உபேந்த்ரோ வாமன ப்ராம் ஸூ ர மோகஸ் ஸூ சி ரூர்ஜித
அதீந்த்ரஸ் சங்க்ரஹச் சர்கோ த்ருதாத்மா நியமோ யம –17

————–

3-1- பிரதம அவதாரம் விஷ்ணு -147-152- திரு நாமங்கள்
மத்யே விரிஞ்ச கிரீசம் பிரதம அவதாரம்

———–

147-ஜகதாதிஜா –
ஜகத்தின் ஆரம்பத்தில் உண்டானவன்
முதலாம் திரு உருவம் மூன்று ஒன்றே முதலாகும் மூன்றுக்கும் -பெரிய திரு -72-என்று சொல்லி முதல்வா -என்கிறார் ஆழ்வார்
முதலாவார் மூவரே அம் மூவர் உள்ளும் முதலாவான் மூரி நீர் வண்ணன் -பொய்கையார் -15
முதல் தனி வித்தேயோ முழு மூவுலகாதிக்கு எல்லாம்-10-10-9-

உலகங்களுக்கு முதல் பொருளாகிய மும்மூர்த்திகளுள் ஒருவராக திருவவதரித்தவர் –
விபவங்களில் விஷ்ணு திருவவதாரம் கூறப்படுகிறது —ஸ்ரீ பராசர பட்டர்–
ஜகதாதிஜா -ஜகதாதி பூதாஸூ த்ரிமூர்த்திஸூ அன்யத் மத்வேன ஜாதமிதி

யஸ்ய ப்ரஸாதாத் அஹம் அச்யுதஸ்ய பூத பிரஜா சர்க்கரோ அந்தகாரீ- க்ரோதாச்ச ருத்ரஸ் ஸ்திதி ஹேது பூதோ
யஸ்மாச்ச மத்யே புருஷஸ் பரஸ்மாத் -ஸ்ரீ விஷ்ணு புராணம் -4-1-39-
கதிச்ச நஸ்த்வம் தேவேஷு பூர்வஜோ ஜகத் பிரபு ரஷார்த்தம் சர்வ பூதானாம் விஷ்ணத்வம் உபஜக்மிவாந் –உத்யோக பர்வம்

உலகம் உண்டாவதற்கு முன் ஹிரண்ய கர்ப்ப ரூபியாகத் தோன்றியவர் –ஸ்ரீ சங்கரர் —

உலகைப் படைக்கும் பிரமனுக்கு காரணம் ஆனவர் -கதன் என்பவனுக்கு முன் பிறந்தவர் -ஸ்ரீ சத்ய சந்தர்-

ஓம் ஜகதாதிஜாய நம

——————–

148-அநக-
தோஷம் அற்றவன் -அமலன் -அகில ஹேய ப்ரத்ய நீகன்
குறை ஒன்றும் இல்லாத கோவிந்தன்
குற்றமில் சீர் கற்று -7-1-1-
மீண்டும் -835 -வரும்
தீதில் சீர் திருவேங்கடத்தான்
பூதங்கள் ஐந்து –இருள் சுடர் -கிளர் ஒளி மாயன் கண்ணன் -3-10-10-

அப்படி திருவவதரித்தும் பாபத்தின் தொடர்பு சிறிதும் இல்லாதவர் -ஸ்ரீ பராசர பட்டர்–
ஏவம் ஜன்ம சம்சார மத்யே ஜநித்வாஅபி அநக பாப பிரதி ஸ்பர்சி

குற்றம் இல்லாதவர் –ஸ்ரீ சங்கரர் —

பாவங்களுக்குக் காரணமான தோஷங்கள் அற்றவர் –ஸ்ரீ சத்ய சந்தர்-

ஓம் அநகாய நம
வியாப்ய கத தோஷமோ -அவதரித்ததும் சம்சார தோஷமும் தட்டாதவன்

——————-

149-விஜய
வெற்றி -வெற்றியை அருளுபவன்
ப்ரஹ்மன் சிவன் -தங்கள் செயல்களை வெற்றிகரமாக நடத்த அருளுபவன்
மூவராகிய மூர்த்தியை முதல் மூவர்க்கும் முதல்வன் தன்னை சாவமுள்ளன நீக்குவானை -3-6-2- சாவம் -கேடு தடை

பிரமன் சிவன் இருவரும் சிருஷ்டி சம்ஹாரம் ஆகிய செயல்களை வெற்றி பெறும்படி செய்பவர் -ஸ்ரீ பராசர பட்டர்–
மூர்த்யந்தியோர் அபி -சிருஷ்டி சம்ஹார பிர் ஜகத் விஜய யஸ்மாதி இதி விஜய

ததா அதர்சித பந்நாநவ் ஸ்ருஷ்ட்டி சம்ஹார காரகவ் –இவன் காண்பித்த வழியால் ஸ்ருஷ்ட்டி சம்ஹாரம் செய்கின்றனர்

ஞானம் வைராக்யம் ஐஸ்வர்யம் முதலிய குணங்களால் எல்லாவற்றையும் வெல்பவர் –ஸ்ரீ சங்கரர் —

விசேஷமான வெற்றி யுடையவர் -கருடனுக்கு வெற்றியைத் தருபவர்–ஸ்ரீ சத்ய சந்தர்-

ஓம் -விஜயாய நம
அனைவரையும் நியமிப்பவன் -ஐயமே வடிவானவன் -ப்ரஹ்மாதிகளை அதிகார புருஷர்களாக ஆக்கி ஆளுபவன்

—————–

150-ஜேதா-
ஜெயிப்பவன்
ப்ரஹ்ம சிவன் முதலான தேவர்களை அடக்கி ஆள்பவன்
நிறுத்தினான் தெய்வங்களாக அத் தெய்வ நாயகன் தானே -5-2-8-
இறைவ என்று வெள்ளேறன் நான்முகன் இந்திரன் வானவர் புள்ளூர்தி கழல் பணிந்து எத்துவரே -2-2-10-

அவர்களைத் தம் நினைவின்படி நிற்கும்படி வென்றவர் -ஸ்ரீ பராசர பட்டர்–

எல்லா பிராணிகளையும் வென்றவர் –ஸ்ரீ சங்கரர் —

வெற்றியை யுடையவர் –ஸ்ரீ சத்ய சந்தர்-

ஓம் ஜேத்ரே நம
சங்கல்ப லேசத்தாலே ப்ரஹ்மாதிகளையும் அடக்கி ஆள்பவன்

——————-

151-விச்வயோநி –
ஜகத் காரணன் –
தேவர் நடுவா மற்று எப்பொருட்கும் வேர் முதல் வித்தாய் -2-8-10
கள்வா எம்மையும் ஏழுலகும் நின்னுள்ளே தோற்றிய இறைவ -2-2-10-
தெய்வக் குழாங்கள் கை தொழக் கிடந்த தாமரை யுந்தி தனிப் பெரு நாயகன் -திரு வாசி -1
முன்பே 118 இதே திரு நாமம் பார்த்தோம் -தன்னை கிட்டியவரை சேர்த்துக் கொள்பவன்

அந்த இருவரையும் கொண்டு நடத்தப்படும் காரிய உலகு அனைத்துக்கும் காரணமாக இருப்பவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

உலகத்தை ஆதாரமாக உடையவர் -உலக ரூபியாகவும் காரண ரூபியாகவும் இருப்பவர் -ஸ்ரீ சங்கரர் –

கருடன் மீது அமர்ந்து சஞ்சரிப்பவர் -காரணம் அற்றவர்-ஸ்ரீ சத்ய சந்த தீர்த்தர் –

ஓம் விச்வயோநி யே நம
அகில அத்புத காரண கர்த்தா -இச்சா க்ருஹீத அவதாரம்

—————–

152-புநர் வஸூ-
வசிப்பவன்
அந்தராத்மாவாக இருந்து ப்ரஹ்ம சிவன் முதலாக ஜகத் நிர்வாஹம்
ச ப்ரஹ்ம ச சிவ சேந்திர ஸோ அஷர பரம ஸ்வராட்
அவனே அவனும் அவனும் அவனும் அவனே மற்று எல்லாம் -9-3-2-

அந்த தேவர்கள் இடத்தில் அந்தர்யாமியாக வசிப்பவர் –ஸ்ரீ பராசர பட்டர் –

தேவாநாம் பந்து நிஹிதம் குஹாசி –மோக்ஷ பர்வம்
தத் அந்தராத்மா மம ச யே சாந்யே தேஹி சஞ்சிதா

உடல்களில் மாறி மாறி ஜீவாத்மாவாக வசிப்பவர் -ஸ்ரீ சங்கரர் –

மீண்டும் மீண்டும் செல்வம் அளிபபவர் -ஸ்ரீ சத்ய சந்த தீர்த்தர் –

ஓம் புநர் வஸூ நம
அனைவருக்கும் அந்தராத்மா –
பிரளயத்தில் உண்டு பின்பு உமிழ்ந்து ஸ்ருஷ்டி செய்து அருளுபவர்

——————————————————————————————————

உபேந்த்ரோ வாமன ப்ராம் ஸூர மோகஸ் ஸூசி ரூர்ஜித
அதீந்த்ரஸ் சங்க்ரஹச் சர்கோ த்ருதாத்மா நியமோ யம –17

————

3-2-வாமன அவதார பரமான திரு நாமங்கள் -153-164-

153-உபேந்திர
கஸ்யபர் அதிதி – 12 ஆவது பிள்ளை –இந்த்ரன் தம்பி -குறள் மாணி –

பன்னிரண்டு ஆதித்யர்களில் இந்தரனுக்கு இளையவராக திருவவதரித்தவர் –ஸ்ரீ பராசர பட்டர் –

ஜெகன்யஜ் ச ஸர்வேஷாம் ஆதித்யா நாம் குணாதிக த்வாதசைவ அதிதே புத்ரா சக்ரமுக்யா நராதிப தேஷாம்
அவரஷோ விஷ்ணு யத்ர லோகா ப்ரதிஷ்டித–லோகங்களுக்கு ஆதாரமாக உள்ள பூமி போன்ற விஷ்ணுவே இறுதியாக பிறந்தவன்
விஷ்ணு இந்த்ராமுஜோ அபவத் –இந்திரனின் இளைய தம்பி

இந்த்ரனுக்குத் தம்பியாக இருந்தவர் -அல்லது -இந்தரனுக்கு மேற்பட்டவர் –ஸ்ரீ சங்கரர் –

இந்த்ரனுக்குத் தம்பியாக அவதரித்தவர்-ஸ்ரீ சத்ய சந்த தீர்த்தர் –

ஓம் உபேந்த்ராய நம

—————–

154-வாமந-
குள்ளன் -வாமானி ஸூகாணி நயதி
சீரால் பிறந்து சிறப்பால் வளராது பேர் வாமனாகாக்கால் பேராளா -பெரிய திரு -16-என்று வயிறு பிடிக்குபடி –

இந்த்ரனைக் காக்க மகாபலியின் யாகத்தில் வாமனனாய்ச் சென்றவர் –ஸ்ரீ பராசர பட்டர் –

த்ரஷ்ட்ட்ருன் ஸ்வ காந்த்யா வாமாநி ஸூகாநி நயாதி–காண்பவர்களுக்கு தேஜஸ்ஸாலே ஸூகம் அளிப்பவன்
ச வாமாநி திவ்ய சரீர த்ருக

மகாபலியிடம் யாசகனாய்ச் சென்றவர் -நன்கு துதிக்கத் தக்கவர் –ஸ்ரீ சங்கரர் –

பகைவர்களை நரகத்திற்கு அனுப்புவர் -அழகிய வஸ்துக்களை அருள்பவர் -ஸ்ரீ சத்ய சந்த தீர்த்தர் –

ஓம் வாமனாய நம

——————–

155-
ப்ராம்ஸூ –
உயர்ந்தவன் -த்ரி விக்கிரமனைச் சொல்கிறது -சர்வ வ்யாபினே
ஓங்கி உலகளந்த உத்தமன் –அம்பர மூடறுத்து ஓங்கி உலகளந்த -அன்று இவ்வுலகம் அளந்தாய் அடி போற்றி
தீர்த்தன் உலகளந்த சேவடி
உலகம் அளந்த பொன்னடியே யடைந்து உய்ந்தேன் -பெரிய திருமொழி -5-8-9-

திரிவிக்ரம திருவவதாரம் செய்த போது எங்கும் பரந்தவர்–ஸ்ரீ பராசர பட்டர் –

தோயே து பதிதே ஹஸ்தே வாமநோ பூத வாமந தஸ்யா விக்ரமதோ பூமிம் சந்த்ர ஆதித்யவ் ஸ்தநாந்தரே நமஸ் பிரக்ரம
மாணாஸ்ய நாப்யாம் தவ் சமாவஸ்திதவ் –ஸ்ரீ விஷ்ணு தர்மம் -79-52–நீர் கையிலே விழுந்த நொடியிலே ஓங்கி உயர்ந்து
அனைத்தையும் ஆக்ரமித்ததால் சந்திரனும் சூரியனும் அவன் திரு மார்பிலே விளங்கினார்கள்
வாமனோ ரக்ஷது சதா பவந்தம் ய க்ஷணாத பூத் த்ரிவிக்ரம க்ரமாக்ராந்த த்ரை லோக்ய ஸ்புரதாயுத –ஸ்ரீ விஷ்ணு புராணம் -5-5-17-
இதம் விஷ்ணுர் விசக்ரமே –உலகை விஷ்ணு அளந்தான்
த்ரீணி பதா விசக்ரமே விஷ்ணு -மூன்று அடியால் அளந்தான்
விசக்ரமே ப்ருதிவீ மேஷ ஏதாம் ஷேத்ராய விஷ்ணு -இந்திரனுக்காக பூமியைப் பெற அளந்தான்
த்ரிர் தேவ ப்ருதிவீம் –மூன்று அடிகளால் தேவாதி தேவன் அளந்தான்
ப்ரவிஷ்ணு–அவனே உயர்ந்த விஷ்ணு

மூ உலகங்களையும் அளந்த பொழுது உயர்ந்தவர் –ஸ்ரீ சங்கரர் –

திருவிக்ரம ரூபத்தில் உயர்ந்தவராக இருப்பவர் -உயர்ந்த பிரகாசம் யுடையவர் – ஸ்ரீ சத்ய சந்த தீர்த்தர் –

ஓம் ப்ராம்ஸூ நம

———————

156-அமோக –
பழுது படாதவன் -வாட்டமில் புகழ் வாமனன் -2-4-1-
மோகம் வ்யர்த்தம் அமோகம் அது இல்லாமை
இந்த்ரன் ஐஸ்வர்யம் பெற்றான் -மகா பலி ஔதார்யன் பட்டம் பெற்றான் –
தன் சம்பந்தம் வீண் போகாதவன்

இந்த்ரன் மகாபலி ஆகிய இருவருக்கும் பழுது படாத அனுக்ரஹம் செய்தவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

அபரிமித பிரபாவாய–அவனது மந்த்ர வர்ணம்
அனுக்ரஹம் சாபி பலேரதுத்தமம் சகார யச்சேந்த்ர பதேபமம் க்ஷணாத் துராச்ச யஜ்ஜாம் சுபுஜஸ் –ஸ்ரீ விஷ்ணு தர்மம் -43-35-
யார் ஒருவன் நொடிப்பொழுதில் பலிக்கு இந்திர பதவிக்கு சமமான பதவி அளித்து தேவர்களையும் அவிர்பாகம் புஜிக்கும் படி செய்தானோ
யத்ராம்பு விந்யஸ்ய பலிர் மனோஜ்ஞாம் அவாப போக்யாந் வஸூதா தலஸ்த ததா அமரத்வம் த்ரிதசாதி பத்யம்
மன்வந்த்ரம் பூர்ணமபேத சத்ரு– ஸ்ரீ விஷ்ணு தர்மம் -5-7-30-மஹாபலி தேவர்களுக்கு நிகரான அந்தஸ்தை பெற்றான்

வீண் போகாத செய்கைகளை யுடையவர் –ஸ்ரீ சங்கரர் –

வீணாகாத சங்கல்பத்தை -அல்லது -வார்த்தையை -யுடையவர் — ஸ்ரீ சத்ய சந்த தீர்த்தர் –

ஓம் அமோகாய நம

—————

157-சுசி –
தூயவன் -பிரதிபலன் எதிர்பாராமல் –
தீர்த்தனுக்கே தீர்த்த மனத்தனாகி -7-10-11-
அமலனாதி பிரான்
அந்தணன் -மீண்டும் 252-வரும்

இப்படிப் பட்ட உபகாரங்களுக்கு பிரதி உபகாரம் எதிர்பாராத சுத்தி யுடையவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

தம்மை த்யானிப்பவர் -துதிப்பவர் -அர்ச்சிப்பவர்களை பரிசுத்தர் ஆக்குபவர் –ஸ்ரீ சங்கரர் –

பரிசுத்தமானவர் – ஸ்ரீ சத்ய சந்த தீர்த்தர் –

ஓம் சுசி நம
அடியார்களை சுத்த ஸ்வ பாவன் ஆக்குபவன்

—————-

158-ஊர்ஜித –
பலவான் -நமுசியை சுழற்றிய பலம்

நமுசி முதலிய பகைவர்களை அடக்கத் தக்க வலிமை உடையவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

மிக்க வலிமை யுடையவர் –ஸ்ரீ சங்கரர் –

ஆஹாரம் கொடுப்பவர்களுக்கு அது வியாபிக்க அருள் புரிபவர் – ஸ்ரீ சத்ய சந்த தீர்த்தர் –

ஓம் ஊர்ஜிதாய நம

——————

159-அதீந்த்ர –
இந்தரனுக்கு மேம்பட்டவன் -தேஜஸ் செயல்களால்
இந்திரற்கும் பிரமற்கும் முதலானவன் -திரு நெடு -4-

இந்த்ரனுக்குத் தம்பியாக இருந்த போதும் ஆளுமையினாலும் அதற்குரிய செயல்களாலும் அவனுக்கு மேற்பட்டவர் –ஸ்ரீ பராசர பட்டர் –

அ விதித விபவாய –மேன்மையை அறிய இயலாதே
அதி வாரித வந்த்ர கர்மாணம் -வாயு இந்திரன் செயல்களை விஞ்சி இருப்பவன்

இயற்கையாகவே ஞான பல ஐஸ்வர்யங்களை உடைமையால் இந்தரனுக்கு மேற்பட்டவர் –ஸ்ரீ சங்கரர் –

இந்திரனைக் காட்டிலும் மேம்பட்டவர் — ஸ்ரீ சத்ய சந்த தீர்த்தர் –

ஓம் அதீந்த்ராய நம
இந்திரனுக்கும் மேம்பட்டவன் -கோவிந்த பட்டாபிஷேகம் -கோவர்த்தன கிரி குன்று எடுத்து ரஷித்த வ்ருத்தாந்தம்

—————–

160- சங்க்ரஹ –
எளிதில் க்ரஹிக்கப் படுபவன் -ஆஸ்ரித ஸூலபன்
பத்துடை அடியவர்க்கு எளியவன் -எளிவரும் இயல்வினன்-
இரந்தும் தேவர்களை ரஷித்தவன்-

பக்தர்களால் எளிதில் அடையப் பெறுபவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

பிரளய காலத்தில் அனைவரையும் அழிப்பவர்–ஸ்ரீ சங்கரர் –

பக்தர்களை ஏற்றுக் கொள்கிறவர் -சத்பாத்ரங்களை உண்டாக்குபவர் -சிம்சுமார ரூபத்தில் சூரியன் முதலிய கிரஹங்களுக்கு
அடையும் இடமாக இருப்பவர் — ஸ்ரீ சத்ய சந்த தீர்த்தர் –

ஓம் சங்க்ரஹ நம

——————

161-ஸர்க –
சிருஷ்டிக்கப் படுபவன் -இச்சை அடியாக ஆஸ்ரிதர்க்காக தானே -பிறப்பித்துக் கொள்பவன்
உயர் அளிப்பான் என் நின்ற யோநியுமாய்ப் பிறந்தாய் இமையோர் தலைவா -திரு விருத்தம் -1-

திரிவிக்ரமாவதாரத்தில் தம் திருவடித் தாமரைகளை எளிதில் பற்றும்படி தாமே அளிபபவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

நிஸ்ருஷ்டாத்மா ஸூஹ்ருத் சி ச –யுத்த -17-36–ஆஸ்ரிதர்களுக்காக தன்னையே தானே படைத்துக் கொள்கிறான்

சிருஷ்டிக்கப் பட்ட பிரபஞ்ச ரூபத்தை உடையவர் -அல்லது சிருஷ்டி கர்த்தா –ஸ்ரீ சங்கரர் –

படைப்பவர் — ஸ்ரீ சத்ய சந்த தீர்த்தர் –

ஓம் ஸர்காய நம
ஆக்கியும் ஆகியும் -கடல் ஞாலம் செய்தேனும் யானே உண்டேனும் யானே

—————–

162-த்ருதாத்மா –
ஆத்மாக்களை தரிப்பவன் -அதிதி கஸ்யபர் -தன்னை முற்றூட்டாக கொடுத்து தரிக்கப் பண்ணுமவன்-
காராயின காள நன் மேனியினன் –நாராயணன் நாங்கள் பிரான் அவனே
அவனே அஃது உண்டு உமிழ்ந்தான் அளந்தான் -9-3-1-

இப்படி தன்னைத் தருவதனால் ஆத்மாக்களை உய்விப்பவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

பிறப்பு முதலிய மாறுபாடு இன்றி இருப்பவர் –ஸ்ரீ சங்கரர் –

தைர்யமான மனம் உள்ளவர் -ஆத்மாக்களைத் தரிப்பவர் –
ரிஷிகளின் மனங்களுக்கு ஆதாரமாக இருப்பவர் — ஸ்ரீ சத்ய சந்த தீர்த்தர் –

ஓம் திருதாத்மா நம

——————-

163-நியம –
அடக்குமவன் -ஆஸ்ரித விரோதிகளை அடக்கி
சூழல் பல பல வல்லான் –உலகை கேழல் ஒன்றாகி யிடந்த கேசவன் –வேழ மருப்பை யொசித்தான் -1-9-2-
மீண்டும் -869-வரும் நிச்சயிப்பவன் -தேவதைகள் மூலம் பூஜா பலன் அளிப்பவன்

பகைவர்களான பலி முதலியவர்களை அடக்குபவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

அவரவர்க்கு உரிய அதிகாரங்களில் நியமிப்பவர் –ஸ்ரீ சங்கரர் –

நியமிப்பவர் — ஸ்ரீ சத்ய சந்த தீர்த்தர் –

ஓம் நியமாய நம

——————

164-யம –
ஆள்பவன் -அந்தர்யாமியாய் இருந்து நடத்துபவன் -யமனையும் நியமிப்பவன்
வீற்று இருந்து ஏழு உலகும் தனிக் கோல் செல்ல வீவில் சீர் ஆற்றல் மிக்காளும் அம்மானை -4-5-1-
பொங்கோதம் சூழ்ந்த புவனியும் விண்ணுலகும் அங்காதும் சோராமே ஆள்கின்ற எம்பெருமான் –நாச் -11-3-
மீண்டும் -870-வரும்-

அந்தர்யாமியாக இருந்து எல்லாவற்றையும் நடத்துபவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

ய ப்ருதிவீம் அந்தரோ மயதி–ய ஆத்மாநம் அந்தரோ யமயதி–பிருஹத்
யமோ வைவஸ்வதா ராஜா யஸ் தவ ஏஷ ஹ்ருதி ஸ்தித தேந சேத் அவிவாத தே மா காங்காம் மா குரூந் கம -மனு ஸ்ம்ருதி 8-92-
அனைவரையும் நியமிப்பவன் இடம் அத்வேஷ மாத்ரத்தால் -விரோதம் பார்க்காமல் இருந்தாலே புண்யம் தேட
கங்கை தீர்த்த யாத்ரையோ குரு க்ஷேத்ர யாத்ரையோ வேண்டாம்

உள்ளே இருந்து அடக்குபவர் –ஸ்ரீ சங்கரர் –

தனக்குக் கட்டளை இடுபவர் இல்லாதவர் –
அயமா என்று பாடம் கொண்டால் சுபங்களைத் தரும் விதிகளை அறிபவர் — ஸ்ரீ சத்ய சந்த தீர்த்தர் –

ஓம் யமாயா நம
அந்தர்யாமியாய் இருந்து நியமிப்பவர்

———————————————————–

3-1-ஸ்ரீ மஹா விஷ்ணு -முதல் அவதாரம் -முதலாம் திரு உருவம் –முதலாவான் ஒருவனே –

147-ஜகதாதிஜா -மும் மூர்த்திகளில் நடுவான ஸ்ரீ மஹா விஷ்ணுவாகப் பிறப்பவர் –
ஜகதாதிஜா -ஜகதாதி பூதாஸூ த்ரிமூர்த்திஸூ அன்யத் மத்வேன ஜாதமிதி
148-அநக -சம்சாரத்தில் பிறந்தாலும் குற்றம் அற்றவர் -ஏவம் ஜன்ம சம்சார மத்யே ஜநித்வாஅபி அநக பாப பிரதி ஸ்பர்சி
149-விஜய -வெற்றியே உருவானவர் -மற்ற இரண்டு மூர்த்திகளும் தம் தம் செயல்களில் வெற்றி பெறச் செய்பவர்
மூர்த்யந்தியோர் அபி -சிருஷ்டி சம்ஹார பிர் ஜகத் விஜய யஸ்மாதி இதி விஜய
150-ஜேதா-மற்ற இருவரையும் தன் நினைவின் படி நிறுத்துபவர் –
151-விஸ்வ யோனி -படைத்தல் காத்தல் அழித்தல் -ஆகிய முத்தொழில் களாலும் உலகுக்குக் காரணமாக இருப்பவர் –
152-புனர்வசூ -நான்முகன் முதலான தேவர்கள் இடம் அந்தர்யாமியாக வசிப்பவர் –

—————————————————————–

3-2-ஸ்ரீ வாமன அவதாரம் –

153-உபேந்திர -இந்த்ரனுக்குத் தம்பி -அதிதி தேவியின் பன்னிரண்டாவது மகன்
154-வாமன -குள்ளமானவர் -தன்னை தர்சிப்பவர்களுக்கு தன் திருமேனி அழகால் சுகம் அளிப்பவர் –
155-ப்ராம்சூ -உயரமானவர் -உடனே வளர்ந்து -த்ரிவிக்ரமனாக உலகையே அளந்தவர் –
157-சூசி -தூய்மை யானவர் -தான் செய்யும் உதவிகளுக்கு பதில் உதவி பாராதவர் –
158-வூர்ஜித -மஹா பலியின் மகனான நமுசி என்பானை அடக்கிய சக்தி படைத்தவன் –
159-அதீந்திர -இந்தரனுக்கு இளையவன் ஆனாலும் தன் செயல்களால் அனைத்துக்கும் மேம்பட்டவர் –
160-சங்க்ரஹ – மெய்யன்பர்களால் எளிதில் அறியப் படுபவர்
161-சர்க – -த்ரிவிக்ரம அவதாரம் செய்து தன் திருவடியை அடியார்களுக்காகப் பிறப்பித்தவர் –
162-த்ருதாத்மா -தன்னையே கொடுத்து அடியார்களைத் தாங்குபவர் –
163-நியம -தன் அடியார்களின் பகைவர்களை அடக்குபவர் –
164-யம -தன் அடியார்களின் இடையூறுகளை விலக்கி அருளுபவர் -அந்தர்யாமியாக இருப்பவர் –

———————————————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பராசர பட்டர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பீஷ்மர் திருவடிகளிலே சரணம்
ஸ்ரீ வியாச பகவான் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: