ஸ்ரீ விஷ்ணு சகஸ்ர நாமம்-2-வ்யூஹ நிலை திரு நாமங்கள் -123-146-

ருத்ரோ பஹூஸிரா பப்ரூர் விஸ்வ யோநிஸ் ஸூ சிஸ் ரவா
அம்ருதஸ் சாஸ்வத ஸ்தாணுர் வரா ரோஹோ மஹாதபா –13-
சர்வகஸ் சர்வவித் பாநுர் விஷ்வக்சேநோ ஜனார்த்தன
வேதோ வேதவிதவ்யங்கோ வேதாங்கோ வேதவித் கவி –14
லோகாத்யஷஸ் ஸூ ராத்யஷோ தர்மாத்யஷ க்ருதாக்ருத
சதுராத்மா சதுர்வ்யூஹஸ் சதுர்தம்ஷ்ட்ரஸ் சதுப்புஜ–15
ப்ராஜிஷ்ணுர் போஜனம் போக்தா சாஹிஷ்ணுர் ஜகதாதிஜ
அனகோ விஜயோ ஜேதா விச்வயோனி புனர்வஸூ –16-

———————————————————-

இது வரை -கிமேகம் தைவதம் லோகே -கிம்வாப்யேகம் பராயணம் -கேள்விக்கு
பரத்வ பரமான திரு நாமங்கள் சொல்லி அருளி
மேலே ஸ்துவந்த கம் -யாரைத் துதிக்க -கேள்விக்கு உத்தரம் –
மோஷத்துக்கு உபாயமான திரு நாமங்கள் –

வ்யூஹ மூர்த்திகள் -நால்வர் -வாசுதேவன் -சங்கர்ஷணன் பிரத்யும்னன் அநிருத்தன்
பர வாசுதேவன் -பூர்ணம் பகவத் குணங்கள்
சங்கர்ஷணன் -ஜ்ஞானம் பலம் பிரகாசிக்கும் – -சம்ஹாரம்
பிரத்யும்னன் -ஐஸ்வர்யம் வீர்யம் -பிரகாசிக்கும் -சிருஷ்டிக்கு
அநிருத்தன் -சக்தி தேஜஸ் பிரகாசிக்கும் -ஸ்திதி -காத்தல்-

சங்கர்ஷணன் ——–123-124——–2 திரு நாமங்கள்
பிரத்யும்னன் ———125-126———2 திரு நாமங்கள்
அநிருத்தன் ———-127-146———20 திரு நாமங்கள்

———-

ருத்ரோ பஹூஸிரா பப்ரூர் விஸ்வ யோநிஸ் ஸூ சிஸ் ரவா
அம்ருதஸ் சாஸ்வத ஸ்தாணுர் வரா ரோஹோ மஹாதபா –13-

————

123-மஹா தபா –
சிறந்த ஞானம் உடையவன் -யஸ்ய ஜ்ஞான மயம் தப -முண்டகோ
ஞானத்தின் ஒளி யுரு -பெரிய திருமொழி -6-3-
ஞானமாகி ஞாயிறாகி-திருச் சந்த -114
ஞாலம் உண்டாய் ஞான மூர்த்தி நாராயணா -4-7-1
சங்கர்ஷணன் – சம்ஹார கர்த்தா -சங்கல்பத்தால் -செய்து அருளி -ஞானம் -உடையவன்

சிறந்த ஞானம் உள்ளவர் -ஞானம் பலம் சங்கர்ஷணனுக்கு யுரியவை –
அடியார் பிறவித் துயரை போக்கும் இச்சையே ஞானம் என்ற சொல் -ஸ்ரீ பராசர பட்டர்-

ஸ்ருஷ்டியைப் பற்றிய சிறந்த ஞானம் யுடையவர் -உயர்ந்த ஐஸ்வர்யம் பெருமை யுடையவர்–சங்கரர் –

சிறந்த ஞானம் உள்ளவர் கபிலராக தபச்வியானவர்–ஸ்ரீ சத்ய சந்தர்-

ஓம் மஹா தபஸே நம

————

சர்வகஸ் சர்வவித் பாநுர் விஷ்வக்சேநோ ஜனார்த்தன
வேதோ வேதவிதவ்யங்கோ வேதாங்கோ வேதவித் கவி –14

———–

124- ஸ்ர்வக –
எல்லாம் தன்னிடம் வைத்துக் கொள்பவன் -லயம் -பிரளயம் பொழுது
கார் யேழ் கடல் யேழ் மலை ஏழும் உண்டும் ஆரா வயிற்றான் -10-8-2–
தாரண சாமர்த்தியம் -பலம் -சங்கர்ஷணன் -556-
அனைத்தையும் தன்னிடம் இழுத்துப் பிடித்து வைத்து கொள்பவன் -ஞானத்துக்கு முக்கியமான அங்கம்
ஒன்றும் தேவும் உலகும் உயிரும் மற்றும் யாதுமில்லா அன்று உயிர் படைத்தான் -4-10-1-
தன்னுள் ஒன்ற வைத்து பின்னை வெளிக் காண படைத்தான் –

சம்ஹரிக்கப் பட்டவற்றை எல்லாம் தம் பலத்தினால் அடைந்து தரிப்பவர் –
சங்கர்ஷிப்பத்தால் -அழிப்பதால் சங்கர்ஷணன் –ஸ்ரீ பராசர பட்டர்-

ஆத்மவடிவில் அனைவரையும் சென்று அடைபவன்
சங்கர்ஷம-556-அவன் தன்னில் அனைவரையும் வரவழைக்கிறான் என்றபடி

காரணமாக எங்கும் பரவி இருப்பதால் எங்கும் செல்பவர் -சங்கரர் –

எங்கும் செல்பவர் -அல்லது எல்லாம் அறிபவர் -ஸ்ரீ சத்ய சந்தர்-

ஓம் சர்வகயா நம

————-

125- ஸ்ர்வ வித் –
எல்லாவற்றையும் அடைபவன் –
யஸ் சர்வஜ்ஞ சர்வ வித் -யஸ்ய ஜ்ஞான மயம் தப –
சர்வ வித் -ஞான பூர்த்தி
நிறை ஞானத்து ஒரு மூர்த்தி -4-8-6
பிரத்யும்னன் -நாம ரூபங்கள் கொடுத்து ஸ்ருஷ்டிப்பதை –
ஜகத் கிரியா உல்லாச ரூபமான ஐஸ்வர்யம்
முனிமாப்பிரம முதல் வித்தாய் உலகம் மூன்றும் முளைப்பித்த -8-10-7–

சம்ஹரிக்கப் பட்டவற்றை மறுபடி படைத்து அடைகிறார் -சிருஷ்டிக்கும் மூர்த்தி பிரத்யும்னன் –
கிரியாசக்தி உடைய விலாசமான ஐஸ்வர்யம் கூறபடுகிறது –ஸ்ரீ பராசர பட்டர்-

எல்லா இடத்திலும் உள்ள எல்லாவற்றையும் அறிந்து பிரகாசிப்பவர் -சர்வவித் பாநு -ஒரே திரு நாமம் -சங்கரர் –

அனைத்தும் அறிபவர் -எல்லாம் அடைந்தார் –ஸ்ரீ சத்ய சந்தர்-

ஓம் சர்வ வித் நம

——————-

126-பாநு-
விளங்குபவன் -மாறுபடாமல் விளங்கும் வீர்ய குணம்
வீற்று இருந்து ஏழு உலகும் தனிக் கோல் செல்ல வீவில் சீர் ஆற்றல் மிக்காளும் அம்மான் -4-5-1-
பாநு -285-மீண்டும் -கிரணங்கள் உடைய ஆதித்யன்
செய்யதோர் ஞாயிற்றைக் காட்டி சிரீதரன் மூர்த்தி ஈது என்னும் -4-4-2-

எல்லாவற்றையும் படைத்து தாம் விகாரம் இல்லாமல் விளங்குபவர் -அவிகாரம் -என்கிற வீர்யம் -ஸ்ரீ பராசர பட்டர்-

பிரகாசிப்பவர் -ஸ்ரீ சத்ய சந்தர்-

ஓம் பானுவே நம

——————

127-விஷ்வக்சேன
யாவரும் தன்னை ரஷகனாய் கொண்டு வாழும்படி செய்பவன்
ரஷிக்க சேனை உடையவன் –
அநிருத்த-வ்யூஹ மூர்த்தியைச் சொல்லும் திரு நாமம்
ரஷண சாமர்த்திய சக்தியைச் சொல்லும் திரு நாமம் –
அவன் நியமனப் படி நிர்வஹிக்கும் சேனை முதல்வருக்கும் இத் திரு நாமம் பெயர்
இவர் ரஷணத்தில் வாழ்பவன் வைகுந்த குட்டன் –

எல்லாரும் தம்மைக் கொண்டு ரஷகராகக் கொண்டு ஜீவிக்கும்படி இருப்பவர் –
ரஷிக்கும் அநிருத்தன் -யுடைய சக்தி -இங்கே கூறப்படுகிறது -ஸ்ரீ பராசர பட்டர்-

போர் செய்யத் தொடங்கிய யுடன் அசுரசேனை சிதறி ஓடும்படி செய்தவர் -சங்கரர் –

பிரமன் முதலிய அனைவரையும் சேனையாக உடையவர்-ஸ்ரீ சத்ய சந்தர்-

ஓம் விஷ்வக் ஸேனாய நம

—————

128-ஜனார்த்தன –
விரோதிகளை சம்ஹரிப்பவன் –
தன் சொத்தை ரஷிக்க சத்ருக்களை தானே அழித்து-தேஜஸ் விளங்கும் –
அநிருத்த பகவானே விபவ அவதாரங்களுக்கு மூலமாம்
செய்குந்தா வரும் தீமை உன் அடியார்க்குத் தீர்த்து அசுரர்க்குத் தீமைகள் செய்குந்தா -2-6-1-

ரஷிப்பதற்குத் தடையாக உள்ளவர்களை உதவி தேடாமல் அழிப்பவர்-அபேஷியாமல் ரஷிக்கும் தேஜஸ் -ஸ்ரீ பராசர பட்டர்-

தஸ்யு த்ராணாத் ஜனார்த்தன -உத்யோக பர்வம் -தீயவர்கள் இடம் ரக்ஷிப்பதால் ஜனார்த்தனன்
ஞாநேந ஐஸ்வர்யேன சக்த்யா இதி சர்வே பகவத அநூநா பூர்ணா –பூரணமான ஞானாதி குணங்கள் கொண்டவன்

மக்களால் மோஷம் செல்வம் முதலிய பயன்கள் வேண்டப்படுபவர் -தீயர்களை நரகத்தில் தள்ளுபவர் -சங்கரர் –

அடியவர்களின் பிறப்பை அறுப்பவர் -சமுத்ரத்தில் இருக்கும் ஜன என்னும் அசுரர்களை அழிப்பவர் -சம்சாரத்தை அழிப்பவர் –
ஜனங்களால் யாசிக்கப் படுபவர் -அடையப் படுபவர் -ஸ்ரீ சத்ய சந்தர்-

ஓம் ஜனார்த்தனாய நம

——————————————-

129-வேத –
வேத சாஸ்த்ரங்களை தருபவன் –
வேத நான்காய் விளக்கு ஒளியாய் -திருநெடு -1
சாஸ்திரங்கள் சாஸ்திர ஜன்ய ஞானத்தையும் தந்தவன்
இதுவும் சங்கர்ஷணன் மூர்த்தியைப் பற்றியது –சாஸ்திர ப்ரதன்
நேதா -நடத்துபவன் பந்தா மார்க்கம் ப்ரஹ்மன ஆசார்ய-அறிவிப்பான் போன்ற திரு நாமங்கள் இத்தாலே
வேதத்தை விழுமிய முனிவர் விழுங்கும் கோதிலின் கனியை -பெரிய திரு மொழி -2-3-2-
சுடர் போல் என் மனத்து இருந்த வேதா -பெரிய திருமொழி -6-2-9-

தம்மால் உடல்களையும் இந்த்ரியங்களையும் அடைந்து இருப்பவர்கள் -சாஸ்த்ரங்களை தம்மிடம் இருந்தே
அடையும் படி இருப்பவர் -மீண்டும் சங்கர்ஷணன் சாஸ்திரங்கள் அளிப்பதைக் கூறுகிறார் –ஸ்ரீ பராசர பட்டர்-

யோ வை வேதாம்ச்ச ப்ரஹினோதி தஸ்மை –ஸ்வேதாஸ்வர–நான்முகனுக்கு வேதங்களை உபதேசிப்பவன்

வேத ரூபி -எல்லாவற்றையும் தெரிவிப்பவர் -சங்கரர் –

எல்லாவற்றையும் தெரிவிப்பவர் –ஸ்ரீ சத்ய சந்தர்-

ஓம் வேதாய நம

——————

130-வேதவித் –
வேதங்களை அறிந்தவன்
அன்னமாய் முனிவரோடு அமரர் ஏத்த அருமறையை வெளிப்படுத்த அம்மான் தன்னை -திரு நெடு -30
புள்ளதாகி வேத நான்கும் ஓதினாய் -திருச்சந்த -9–

ஐயம் திரியின்றி வேதார்த்தங்களை அறிபவர் -ஸ்ரீ பராசர பட்டர்-

வேத விதேவ ச அஹம் -ஸ்ரீ கீதை –15-1-வேதங்களில் வல்லவன் நான்

வேதங்களையும் வேதார்த்தங்களையும் உள்ளபடி அறிபவர் –சங்கரர் –

வேதங்களை அறிந்தவர் –ஸ்ரீ சத்ய சந்தர்-

ஓம் வேத வித் நம

———————-

131-அவ்யங்க-
வேதாங்கங்கள் நிறைந்து இருப்பவன் சிஷை –வியாகரணம் சந்தஸ் -நிருக்தம் -கல்பம் -ஜோதிஷம்
இவர் வாயில் நல் வேதம் ஓதும் வேதியர் வானவராவர் -பெரிய திருமொழி -9-2-1-

சந்தஸ் -கல்பம் முதலிய ஆறு அங்கங்களும் தம்மிடம் குறைவின்றி நினைத்து இருப்பவர் -ஸ்ரீ பராசர பட்டர்-

ஞானம் முதலிய குணங்கள் நிறைந்தவர் -வ்யக்தமாக இல்லாதவர் -ஸ்ரீ சங்கரர் –

ஆதி சேஷனின் மேல் சயனித்துக் கொண்டு இருப்பவர் -சூர்யனைக் கண்ணாக யுடையவர் –
குறையில்லாத அங்கங்கள் உடையவர் -ஸ்ரீ சத்ய சந்தர்-

ஓம் அவ்யங்காய நம

——————–

132-வேதாங்க –
வேதங்களை சரீரமாக -அங்கங்களாக -உடையவன்
அவன் ஆஜ்ஞ்ஞா ரூபமே வேதம் -அதனால் அவன் சரீரம் போலே
சுருதி சம்ருதிர் மமை வாஜ்ஞா-
சந்தோகன் பௌழியன் ஐந்து அழல் ஓம்பு தைத்ரியன் சாமவேதி -பெரிய திரு மொழி -5-5-9-

வேதத்தைத் தமது சரீரமாக உடையவர் -ஸ்ரீ பராசர பட்டர்-

நா வேதவித் மனுதே தம் ப்ருஹந்தம் -வேதங்களை அறியாதவன் ப்ரஹ்மத்தை அறியாதவன்
விதூநுதே வேதமயம் சரீரம் –ஸ்ரீ விஷ்ணு புராணம் -1-4-29-வேதமயமான சரீரத்தை உதறுகிறான்
சுருதி ஸ்ம்ருதி மமைவ ஆஜ்ஜா–ஸ்ரீ விஷ்ணு தர்மம் -76-31-
தைவம் பித்ரயம் ச கர்தவ்யம்
இதி தஸ்ய அநு சாநம் -இது இவனது கட்டளை

வேதங்களை அங்கங்கங்களாக யுடையவர் -ஸ்ரீ சங்கரர் –

வேத அபிமானியான லஷ்மி தேவியை உடையவர் -வேதாங்களான பாரதம் போன்றவற்றை வெளியிட்டவர் -ஸ்ரீ சத்ய சந்தர்-

ஓம் வேதாங்காய நம

——————-

133-வேதவித் –
வேதார்த்தமான தர்மங்களை அறிந்தவன் -அவற்றை சாஸ்திர விஹித தர்மங்களை சேதனர்கள் அனுஷ்டிக்க செய்து -பிரத்யும்னன் –
சந்தோகா பௌழியா தைத்ரியா சாம வேதியனே நெடுமாலே -பெரிய திருமொழி -7-7-2-
இவற்றை நன்கு அறிந்தவன் -இவற்றால் அறியப் படுபவன் -இவற்றை நமக்கு அளிப்பவன் –

வேதங்களை விசாரிப்பவர் –
வேதங்களினால் அறியப்படும் தர்மத்தை அனுஷ்டிக்கும்படி செய்து -அதை ஆராதனமாகப் பெறுபவர் -எனவே இவரை தர்மம் என்றும்
பிரகாசப்படுத்துபவன் என்றும் ப்ரவர்த்திப்பவன் என்றும் கூறுகிறது -ஸ்ரீ பராசர பட்டர்-

வேதங்களை விசாரிப்பவர் -ஸ்ரீ சங்கரர் –

மத்ச்யாதி ரூபத்துடன் பிரமன் முதலியவர்களுக்கு வேதங்களைக் கிடைக்கச் செய்தவர் -ஸ்ரீ சத்ய சந்தர்-

ஓம் வேத வித் நம

———————

134-கவி -அநிருத்தன் பரமான திரு நாமம்
அதிக்ரமித்துப் பார்ப்பவன் -சர்வஞ்ஞன் -மேல் மூன்று திரு நாமங்களும் சர்வஞ்ஞதையையே பேசுகின்றன
என்னையும் நோக்கி என்னல்குலும் நோக்கி எனது இளம் கொங்கையும் நோக்குகின்றார் -பெரிய திரு மொழி -9-2-1-
ஞான பக்தி வைராக்யங்களை சொல்லும்

எல்லாவற்றையும் அறிபவர் –ஸ்ரீ பராசர பட்டர்-

எல்லாவற்றையும் பார்ப்பவர் –ஸ்ரீ சங்கரர் –

புகழப் படுபவர் -ஸ்ரீ சத்ய சந்தர்-

ஓம் கவயே நம

—————

லோகாத்யஷஸ் ஸூராத்யஷோ தர்மாத்யஷ க்ருதாக்ருத
சதுராத்மா சதுர்வ்யூஹஸ் சதுர்தம்ஷ்ட்ரஸ் சதுப்புஜ–15

——————

135-லோகாத் யஷ -அநிருத்தன் பரமான திரு நாமம்
உலகங்களை அறிந்தவன்
உலகம் மூன்று உடையாய் -6-10-10-

தர்ம அனுஷ்டானத்துக்கு தகுதி யுள்ளவர்களை ப்ரத்யஷமாக அறிபவர் –ஸ்ரீ பராசர பட்டர்-

அத்யக்ஷ -அதிருஷ்ட ஸ்தானத்தில் நின்று பலனை அளிக்கும் அநிருத்தனைச் சொல்லி
லோகம் என்று தர்ம அனுஷ்டானத்துக்கு தகுதியான அதிகாரிகளைச் சொல்லி
ஸூர என்று அவர்கள் ஆராதிக்கும் தேவதைகளைச் சொல்லி –
தர்ம என்று ஆராதிக்கும் வழி முறைகளைச் சொல்லி
இவன் தர்மஞ்ஞன்–தர்மங்களை அறிந்தவன் என்றும் -உபாயஞ்ஞன் -உபாயங்களை அறிந்தவன் என்றும் —
அத்யக்ஷன்-பிரதான தேவதை என்றும் -ஸத்யஸந்தன் -சத்யமயன் -ஞானம் அளிப்பவன் என்றதாயிற்று

உலகங்களை பிரத்யஷமாகக் காண்பவர் –ஸ்ரீ சங்கரர் –

பிரகாசமான ஸ்வரூபம் உடைய லோகாதிபதி -லோகங்களை விட மேன்மையானவர்-அழியாதவர் –
உலகிற்குத் தலைவர் -ஸ்ரீ சத்ய சந்தர்-

ஓம் லோகாத்யாஷாய நம

———————-

136- ஸூராத்யஷ -அநிருத்தன் பரமான திரு நாமம்
ஸூரர்களை அறிந்தவன்
அமரர்கள் அதிபதி -வானோர் தலைமகன்

அவர்களால் ஆராதிக்கப் படும் தேவதைகளைப் பிரத்யஷமாக அறிபவர் –ஸ்ரீ பராசர பட்டர்-

லோக பாலர்களான தேவர்களுக்குத் தலைவர் -ஸ்ரீ சங்கரர் –

தேவேந்த்ரனுடைய கண்களுக்கு விஷயமானவர் -நன்கு ஆராதிக்கப் படுபவராய் எல்லாவற்றுக்கும் ஆதாரமாய் உள்ளவர்-ஸ்ரீ சத்ய சந்தர்-

ஓம் ஸூராத்யஷாய நம

—————-

137-தர்மாத்யஷ -அநிருத்தன் பரமான திரு நாமம்
தர்மத்தை அறிந்தவன் –
வேதத்தின் சுவைப் பயன் -பெரிய திருமொழி -2-3-2-
தர்மங்கள் அனுஷ்டிப்பாருக்கு தக்க பலன் அளிப்பவன்
தருமம் அறியாக் குறும்பன் -நாச்-116-

அந்த தர்மத்திற்கு சாதனமாக விதிக்கப் பட்டவைகளை அறிபவர் -ப்ரத்யஷமாக அறிந்து தர்மம் செய்வாருக்கு பலன் கொடுக்கவும்
செய்யாதாருக்கு பலன் கொடுக்காமல் போகவும் அறிந்து இருப்பவர் அநிருத்தர் -ஆதலால்
தர்மத்தையும் -உபாயத்தையும் அறிந்தவர் -எல்லாவற்றையும் நடத்துபவர் -சொல் தவறாதவர் -ஞானம் அளிப்பவரும் இவரே -ஸ்ரீ பராசர பட்டர்-

தகுந்த பலன்களைக் கொடுப்பதற்காக தர்ம அதர்மங்களை நேராகக் காண்பவர் -ஸ்ரீ சங்கரர் –

தர்மத்தின் அதிபதி -தர்மத்தைப் பார்த்துக் கொண்டு இருப்பவர் -ஸ்ரீ சத்ய சந்தர்-

ஓம் தர்மாத்யஷாய நம

————————————————————————————–

138-க்ருதாக்ருத -அநிருத்தன் பரமான திரு நாமம்
இஹ பர பலங்களை அளிப்பவன் –
க்ருதம் பிரவ்ருத்தி தர்மம் அக்ருதம் நிவ்ருத்தி தர்மம் அறிந்து பலங்களை அளிப்பவன் –
கோலம் கொள் சுவர்க்கமும் யானே கோலமில் நரகமும் யானே கோலம் திகழ மோக்கமும் யானே -5-6-10-

அநித்திய பலன்களையும் நித்ய பலனையும் கொடுப்பவர் -சம்சாரத்தின் பிரவர்த்தகம் நிவர்த்தகம் ஆகிய
இரண்டு தர்மங்களை யுடையவர் -ஸ்ரீ பராசர பட்டர்-

க்ருத ப்ரவர்த்திக்க தர்மம்-அல்ப அஸ்திர பலன்களை கொடுக்கும் —
அக்ருத-நிவ்ருத்திக தர்மம் -மோக்ஷ பலன் -இரண்டுக்கும் பலன்களை அளிப்பவன்

கார்யமாகவும் காரணமாகவும் இருப்பவர் -ஸ்ரீ சங்கரர் –

கர்மங்களினால் அடையப் படாதவர் -அக்ருதம் என்னும் மோஷம் தருபவர்-ஸ்ரீ சத்ய சந்தர்-

ஓம் க்ருதக்ருத்யா நம
உபாய உபேய ஐக்கியம் அவனே

——————–

139-சதுராத்மா –
நான்கு ரூபங்கள் -வாசுதேவன் -சங்கர்ஷணன் -பிரத்யும்னன் -அநிருத்தன் –
மீண்டும் -775-நாலு விதமாக -ஜாக்ரத -ஸ்வப்ன -ஸூ ஷுப்தி -துரீயம் -ஸ்தூலம் சூஷ்மாயும் விளங்குபவன்

வாஸூதேவன் -சங்கர்ஷணன் -பிரத்யும்னன் -அநிருத்தன் -என்னும் நான்கு மூர்த்திகளை உடையவர் –ஸ்ரீ பராசர பட்டர்-

சிருஷ்டி ஸ்திதி சம்ஹாரங்களில் நான்கு வகை சக்திகளை உடையவர் –ஸ்ரீ சங்கரர் –

பரவும் தன்மை யுடைய சாதுர்யமான ஆத்மாவாக இருப்பவர் -ஞானியான பிரமனைத் தோற்றுவித்தவர் -ஸ்ரீ சத்ய சந்தர்-

ஓம் சதுராத்மா நம

——————-

140-சதுர்வ்யூஹ –
நான்கு வ்யூஹ மூர்த்திகளாக
மீண்டும் 773–வாசுதேவ கிருஷ்ணன் -பலராமன் பிரத்யும்னன் அநிருத்தன்
த்யானத்துக்கு-ஏற்ப -உருவம் நிறம் திரு ஆபரணங்கள் வாஹனம் த்வஜம் வேறு பட்டு
அநிருத்தன் -ஜாக்ரத விளித்து கொண்டு இருக்கும் அவஸ்தை நிலை
பிரத்யும்னன் -ஸ்வப்ன -நிலை
சங்கர்ஷணன் ஆழ்ந்த தூக்கம் சூ ஷுப்தி
வாசுதேவன் துரீய அவஸ்தை மூச்சும் அடங்கி இருக்கும் நிலை

மேற்சொன்ன நான்கு மூர்த்திகளில் முறையே ஜாக்ரத் ஸ்வப்ன ஸூ ஷுப்தி துர்ய என்னும் நான்கு நிலைகளை உடையவர் -த்யானிக்க
வேண்டும் ஸ்வரூபம் இன்னது என்று தெரிவிக்க -ஆறு கல்யாண குணங்களைப் பிரித்தும் -அந்தந்த குணங்களுக்கு பிரகாசகமாக ஏற்பட்ட
அவயவம் வர்ணம் ஆபரணம் ஆயுதம் வாஹனம் கொடி முதலானவைகளோடும் கூடிய நான்கு நிலைகளை உடையவர் –ஸ்ரீ பராசர பட்டர்-

ஜாக்ரத் -விழிப்பு நிலை / ஸ்வப்னம் கனவு நிலை /ஸூஷூப்தி-ஆழ்ந்த நிலை உறக்கம் /தூரியம்-மயக்க நிலை -நான்கும்

வாஸூதேவ சங்கர்ஷண பிரத்யும்ன அநிருத்தர் என்ற நான்கு வியூஹங்களை உடையவர்–ஸ்ரீ சங்கரர் –

வாஸூதேவ சங்கர்ஷண பிரத்யும்ன அநிருத்தர்-என்னும் நான்கு வ்யூஹங்களை-அல்லது நான்கு வித ஆத்மாக்களை உடையவர் -ஸ்ரீ சத்ய சந்தர்-

ஓம் சதுர் வ்யூஹயா நம

———————

141-சதுர்த்தம்ஷ்ட்ர-
நான்கு முன் பற்களை உடையவன் -முத்துக்கள் போலே

வ்யூஹங்களுக்கு மூலமான பர வாஸூ தேவ ரூபத்தில் நான்கு கோரைப் பற்களை உடையவர் —ஸ்ரீ பராசர பட்டர்-

சதுர்தச சம த்வந்த்வ சதுர் தம்ஷ்ட்ர சதுர் கதி –ஸூந்தர-35-19-
14-உறுப்புக்கள் -4-பற்கள் -4-நடைகள் கொண்டவன்
சிங்கம் புலி யானை காளை நடைகள் -சிம்ம கதி வ்யாக்ர கதி கஜ கதி ரிஷப கதி
14-உறுப்புக்கள் -புருவங்கள்- நாசி துவாரம் -கண்கள்- காதுகள்- உதடுகள் -திரு மார்புகள் -கை முஷ்டிகள்-
இரண்டு பட்ட இடுப்புக்கள் -கால் முஷ்டிகள் -மணிக்கட்டுகள்- திருக்கரங்கள் -திருவடிகள் -கால்கள் –

நரசிம்ஹ அவதாரத்தில் நான்கு கோரைப் பற்களை உடையவர் -அல்லது நான்கு கொம்புகளை உடையவர் –ஸ்ரீ சங்கரர் –

நான்கு கோரைப் பற்களை உடையவர்-ஸ்ரீ சத்ய சந்தர்-

ஓம் சதுர் தம்ஷ்ட்ராய நம

—————–

142-சதுர் புஜ –
நான்கு திருக்கைகள் உடையவன்
தமாசா பரமோ தாதா சங்க சக்ர கதாதர
ஈரிரண்டு மால் வரைத் தோள்
நான்கு தோளன் குனி சாரங்கன் ஒண் சங்கதை வாள் ஆழியான் ஒருவன் -8-8-1-

பர வாஸூ தேவ ரூபத்தில் நான்கு திருக் கைகள் உடையவர் —ஸ்ரீ பராசர பட்டர்-

சதுர் புஜம் உதாராங்கம் சக்ராத்யாயுத முஷ்ணம் –ஸ்ரீ விஷ்ணு புராணம்
தமச பரமோதாதா சங்க சக்ர கதா தர –யுத்த -114-15-
புஜைஸ் சதுர்பி சம்மதம் -மஹா பாரதம்

நான்கு திருக் கரங்கள் உடையவர் –ஸ்ரீ சங்கரர் –

தர்ம அர்த்த காம மோஷங்களைத் தருபவர் -நான்கு கைகளை உடையவர் -நான்கு வேதங்களினால் உண்டாகும் ஞானத்தால்
தம்மைக் காட்டித் தருபவர் –ஸ்ரீ சத்ய சந்தர்-

ஓம் சதுர் புஜாய நம
தாமரை -பரம புருஷார்த்தம்
நான்கு புருஷார்த்தங்கள் -அறம் பொருள் இன்பம் வீடு

————

ப்ராஜிஷ்ணுர் போஜனம் போக்தா சாஹிஷ்ணுர் ஜகதாதிஜ
அனகோ விஜயோ ஜேதா விச்வயோனி புனர்வஸூ –16-

————

143-ப்ரா ஜிஷ்ணு –
இந்த சதுர்புஜ ரூபத்துடன் பக்தர்களுக்கு தன்னை பிரகாசப் படுத்துபவன்
அர்ஜுனன் -தேனைவ ரூபேண சதுர்புஜேன சஹஸ்ரபாஹோ பவவிச்வமூர்த்தே -ஸ்ரீ கீதை -11-6-
கையினார் சுரி சங்கு அனல் ஆழியார்
அப்பூச்சி காட்டுகின்றான் ஐதிகம்
ஈரிரண்டு மால் வரைத் தோள் செங்கண் திரு முகத்துச் செல்வத் திருமாலால் -திருப்பாவை -30-

உபாசிப்பவர்களுக்கு இவ்வடிவைப் புலப்படுத்துபவர் —ஸ்ரீ பராசர பட்டர்-

ஒளி வடிவானவர் –ஸ்ரீ சங்கரர் –

பிரகாசம் உடையவர் –ஸ்ரீ சத்ய சந்தர்-

ஓம் ப்ரா ஜிஷ்ணுவே நம

—————–

144-போஜனம் –
அனுபவத்துக்கு விஷயம்
உண்ணும் சோறு பருகு நீர் தின்னும் வெற்றிலை எல்லாம் கண்ணன் -6-7-1-
விழுமிய அமரர் விழுங்கும் கோதிலின்கவி -நந்தனார் களிறு -பெரிய திருமொழி -2-3-2-

பக்தர்களால் உணவு போலே சுகமாக அனுபவிக்கப் படுபவர் —ஸ்ரீ பராசர பட்டர்-

அனுபவிக்கப் படுவதாகிய மாயை என்னும் பிரகிருதி வடிவமாக இருப்பவர் –ஸ்ரீ சங்கரர் –

எல்லாரும் பிழைக்கும்படி செய்பவர் -ஸ்ரீ சத்ய சந்தர்-

ஓம் போஜனாய நம

——————

145-போக்தா
அனுபவிப்பவன்
அஹம் அன்னம் அஹம் அந்நாத –
வாரிக் கொண்டு உன்னை விழுங்குவன் காணில்-9-6-10—என்னின் முன்னம் பாரித்து தான் என்னை முற்றப் பருகினான்
அவாவறச் சூழ் அரி -10-10-11
செய்கைப் பயன் உண்பேனும் யானே என்னும் -5-6-4-

பக்தர்களால் சமர்ப்பிக்கப் படும் ப்ராபணம் முதலியவற்றை அமுதம் போலே ஏற்றுக் கொள்பவர் —ஸ்ரீ பராசர பட்டர்-

அஸ்நாமி ப்ரயதாத்மந–தூய மனஸுடன் அளிப்பதை ஏற்றுக் கொள்கிறேன்
போக்தாரம் யஜ்ஜ தபஸாம் –ஏற்று மகிழ்கிறேன்

அந்தப் பிரக்ருதியை அனுபவிக்கும் புருஷனாக இருப்பவர் -ஸ்ரீ சங்கரர் –

அனைத்து சாரங்களையும் அனுபவிப்பவர்-ஸ்ரீ சத்ய சந்தர்-

ஓம் போக்தாய நம
பத்ரம் புஷ்பம் பலம் தோயம் –பக்தியையே பார்த்து ஸ்வீகாரம்

——————–

146- ஸஹிஷ்ணு –
ஷமிப்பவன் -சர்வான் அசேஷத ஷமஸ்வ
தன் அடியார் திறத்தகத்துத் தாமரையாள் ஆகிலும் -சிதகுரைக்கு மேல் என் அடியார் அது செய்யார்
செய்தாரேல் நன்று செய்தார் என்பர் போலும் -பெரியாழ்வார் -4-9-2-

தம்மிடத்திலும் தம் அடியார்கள் இடத்திலும் செய்யும் அபராதங்கள் அனைத்தையும் பொறுத்துக் கொள்பவர் –
போய பிழைகளையும் புகுதருவான் நின்றனவும் க்ருத அக்ருதங்களையும் அக்ருத க்ருதங்களையும்
அவமானங்கள் நிந்தனைகளையும் பகவத் அபசார பாகவத அபசார அசஹ்யாபசார -எண்ணற்ற
அபராதங்களையும் பொறுப்பவர் —-ஸ்ரீ பராசர பட்டர்-

ஹிரண்யாஷன் முதலிய விரோதிகளை அழிப்பவர்–ஸ்ரீ சங்கரர் —

அடியவர்களின் குற்றங்களைப் பொறுப்பவர் -ஸ்ரீ சத்ய சந்தர்-

ஓம் ச ஹிஷ்ணுவே நம

—————

ஆறு குணங்கள் –

123-மஹா தபா -அளவற்ற ஞானம் உடையவர் -1/6-
124-சர்வக -சம்ஹரிக்கப் பட்ட அனைத்தையும் தன்னிடம் தாங்கும் பலம் உடையவர் -2/6-
125-சர்வவித் -மறுபடியும் படைத்து பிரபஞ்சத்தையே அடையும் செல்வம் உடையவர் -3/6-
126-பாநு -உலகத்தை படைக்கும் போதும் விகாரம் இல்லாத வீர்யம் படைத்தவர் -4/6-
127-விஷ்வக்சேன -உலகையே காக்கும் சேனையை உடைய சக்தி படைத்தவர் -5/6-
128- ஜனார்த்தன -அடியார்களைக் காக்கும் போது எதிர்த்தவர்களை வேறு உதவி தேடாமல் அளிக்கும் தேஜஸ் உடையவர் -6/6-

———————————————–

மூவரின் முத் தொழில்கள் –

129-வேத -வேதங்களை அளிப்பவர்-
130-வேதவித் -வேதத்தின் ஆழ் பொருளை ஐயம் இன்றி அறிபவர் –
131-அவ்யங்க-சிஷை வியாகரணம் சந்தஸ் நிருத்தம் ஜ்யோதிஷம் கல்பம் என்கிற வேத ஆறு அங்கங்களால் குறைவற்றவர் –
132-வேதாங்க -வேதத்தை தனக்கு திருமேனியாக உடையவர் –
133-வேதவித் -வேதத்தைக் கொண்டு அறியப்படுபவர் -வேத தர்மங்களை கடைப்பிடிக்கச் செய்து அதனால் அடையப் படுபவர் –
134-கவி -அனைத்தையும் எதிர் காலச் சிந்தனையோடு பார்ப்பவர் –
135-லோகாத்யஷ-தர்மத்தைச் செய்யும் தகுதி உள்ள மனிதர்களை அறிபவர் –
136-சூ ராத்யஷ -அவர்களால் பூசிக்கப் படும் தேவர்களை அறிபவர் –
137-தர்மாத்யஷ-வழி முறைகளான தர்மங்களையும் அறிபவர் -அதற்கு உரிய பயனை அறிந்து கொள்பவன் –
138-க்ருதாக்ருத -இவ் உலக மற்றும் அவ் உலக பயன்களை அளிப்பவன் –

——————————————————

நால்வரின் நான்கு தன்மைகள் –

139-சதுராத்மா -வசூதேவ சங்கர்ஷண பிரத்யும்னன் அநிருத்தர் -என்று நான்கு உருவங்களை உடையவர் –
140-சதுர்வ்யூஹ-விழிப்பு கனவு நிலை ஆழ்ந்த உறக்கம் முழு உணர்தல் -ஆகிய நான்கு நிலைகளிலும் இருப்பவர் –
141-சதுர் தம்ஷ்ட்ர -பரவாசூ தேவ உருவத்தில் நான்கு கோரைப் பற்களை உடையவர் -இது மஹா புருஷ லஷணம்-
142-சதுர்புஜ -பர வாஸூ தேவ உருவத்தில் நான்கு கைகளை உடையவர் –
143-ப்ராஜிஷ்ணு -தன்னை உபாசிப்பவர்களுக்கு ஒளி விடுபவர் –
144-போஜனம் -பக்தர்களால் இனிய உணவாக இன்பமாக அனுபவிக்கப் படுபவர் –
145-போக்தா -பக்தர்கள் சமர்ப்பிக்கும் அமுதம் போன்ற பாயசம் முதலானவற்றை அன்போடு ஏற்று உண்பவர் –
146-சஹிஷ்ணு -தன் பக்தர்கள் அறிந்தும் அறியாமலும் செய்த குற்றங்களைப் பொறுப்பவர் –

———————————————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பராசர பட்டர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பீஷ்மர் திருவடிகளிலே சரணம்
ஸ்ரீ வியாச பகவான் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: