ஸ்ரீ விஷ்ணு சகஸ்ர நாமம்–1-10-பரத்வம்-ஆஸ்ரித வத்சலன் -101-122-திரு நாமங்கள்–

ஸ்ரீ விஷ்ணு சகஸ்ர நாமம்

ஸ்ரீ பராசுர பட்டர் –
1-122-பரத்வம் சொல்லும் திரு நாமங்கள்
1-1- வ்யாப்தி -சர்வேஸ்வரத்வம்—முதல் நான்கு திரு நாமங்கள்
1-2-சர்வ சேஷித்வம் -சிருஷ்டி ஸ்திதி சம்ஹாரம் நிர்வஹிக்கை -5-9 -ஸ்வாமித்வம் – சொல்லும் திரு நாமங்கள்
1-3–தோஷம் தட்டாத பரமாத்மா -10/11-திருநாமங்கள்
1-4-முக்தர்களுக்கு மேலான கதியாய் உள்ளவன் -12-17 திரு நாமங்கள்-
1-5- முக்திக்கு உபாயமாய் உள்ளவை -18/19 –திரு நாமங்கள்
1-6-நியாமகன்-20-திரு நாமம்
1-7- சமஸ்த இதர விலஷணன் -21-65- திருநாமங்கள் –
1-8-த்ரிவித சேதன வ்யதிரிக்த -நியாமகன் -66-88-திரு நாமங்கள்
1-9-உபாய ஸ்வரூபி -உபேய ஸூக ஸ்வரூபி –89-100 திரு நாமங்கள் –
1-10-ஆஸ்ரித வத்சலன் -101-122-திரு நாமங்கள்

—————

அஜஸ் சர்வேச்வரஸ் சித்தஸ் சித்திஸ் சர்வாதிரச்யுத
வ்ருஷாகபிரமேயாத்மா சர்வயோகவி நிஸ் ஸ்ருத –11-
வஸூர் வஸூம நாஸ் சமாதமா சம்மிதஸ் சம
அமோக புண்டரீகாஷோ வ்ருஷகர்மா வ்ருஷாக்ருதி –12
ருத்ரோ பஹூஸிரா பப்ரூர் விஸ்வ யோநிஸ் ஸூ சிஸ் ரவா
அம்ருதஸ் சாஸ்வத ஸ்தாணுர் வரா ரோஹோ மஹாதபா –13

——

அஜஸ் சர்வேச்வரஸ் சித்தஸ் சித்திஸ் சர்வாதிரச்யுத
வ்ருஷாகபிரமேயாத்மா சர்வயோகவி நிஸ் ஸ்ருத –11-

————-

101-அச்யுத
தன்னைப் பற்றினாரை நழுவ விடாதவன் –
ஆபிமுக்யம் மாத்ரம் இருந்தாலும் அறிந்து -மித்ர பாவேன-சம்ப்ராப்தம் நத்யஜேயம் -கதஞ்சன -தோஷோ யத்யபி தஸ்ய ஸ்யாத் –
கார்திகையானும் –முதுகிட்டு -பாணனை நிர்கதியாக விட்டு ஓடிப் போனவர்கள் போலே அன்று
அச்சுதன் -அமலன் -என்கோ -3-4-5-

தம்மை அடைந்தவரை விட்டு நீங்காதவர் -ஸ்ரீ பராசர பட்டர்

யஸ்மாத் ந ச்யுத பூர்வ அஹம் அச்யுத தேந கர்மணா
தஸ்ய அஹம் ந ப்ரணஸ்யாமி –ஸ்ரீ கீதை-6-30-
நத்யஜேயம் கதஞ்சன –யுத்த -18-3-

தம் ஸ்வரூப மகிமை முக்காலத்திலும் நீங்காதவர் -ஸ்ரீ சங்கரர்

தேச கால குணங்களால் வீழ்ச்சி இல்லாதவர் -ஸ்ரீ சத்ய சந்தர்

ஓம் அச்சுதாய நம
அடியார்களை விடாதவன் –மீண்டும் -320-/-557-நாமாவளி வரும்

————–

102-வ்ருஷாகபி –
கபி -வராஹம் -வராஹமாக தானே தோன்றி ரஷித்து அருளுபவன் -பரத்வ பரமான திரு நாமம் –
கோல வராகம் ஒன்றாய் நிலம் கோட்டிடைக் கொண்ட எந்தை -10-10-7-

தர்மமே வடிவெடுத்த வராஹாவதாரம் செய்தவர் -ஸ்ரீ பராசர பட்டர்
தர்ம ரூபியாகவும் வராஹ ரூபியாகவும் இருப்பவர் -எல்லா விருப்பங்களையும் வர்ஷிப்பதால் தர்மம் வ்ருஷம் எனப்படும் –

கபி வராஹ ஸ்ரேஷ்ட ச தர்ம ச வ்ருஷ உச்யதே தஸ்மாத் வ்ருஷாகபிம் பிராஹா காஸ்யபோ மாம் ப்ரஜபேதி

கம் -நீர் -அதில் இருந்த எடுத்தவர் ஆகையால் கபி -வராஹர் -வ்ருஷாகபி -தர்ம ஸ்வரூபரான வராஹர் -ஸ்ரீ சங்கரர்

தர்மத்தால் துன்பங்களைப் போக்குபவர் -அருளை வருஷிப்பவராய் -சுகத்தைப் பருகுபவர் -ஸ்ரீ சத்ய சந்தர்

ஓம் வ்ருஷாகபி நம
ஸ்ரீ வராஹ நாயனாராக பூமி உத்தாரணம் செய்து அருளினார்

———————–

103- அமேயாத்மா –
அறிய முடியாதவன் -அப்ரமேய -46-போலே -அனுக்ரஹ வெள்ளம் அளவிட முடியாதது
பற்றுடை அடியவர்க்கு எளியவன் -1-3-1–எளிவரும் இயல்வினன் பிறர்களுக்கு அறிய வித்தகன் –

அடியவர்களுக்கு அருளும் திறத்தில் இவ்வளவு என்று அளவிட முடியாதவர் -ஸ்ரீ பராசர பட்டர்

அதோ ஜ்யாயாந் ச புருஷ -புருஷ ஸூக்தம்
பூயான் ச அத ஜனார்த்தன

இவ்வளவு என்று அளவிடமுடியாத ஸ்வரூபத்தை யுடையவர் -ஸ்ரீ சங்கரர்

முழுமையாக அறிய முடியாத ஸ்வரூபத்தை யுடையவர் -ஸ்ரீ சத்ய சந்தர்-

ஓம் அமேயாத்மாய நம
அபரிச்சேத்யன் -யாரும் ஒரு நிலையன் என அறிய அரிய எம்பெருமான்

———————

104-சர்வ யோக விநிஸ்ருத –
எல்லா உபாயங்களாலும் அடையப் படுபவன் -எந்த தசையிலும் ஆத்மாவுக்கு தஞ்சம் -நம்பத் தக்கவன்
நம்பனை ஞாலம் படைத்தவனை -3-7-8-

எல்லா உபாயங்களிளாலும் எளிதில் அடையத் தக்கவர் -ஸ்ரீ பராசர பட்டர்-

ஸ்வ புத்தி மாத்ர நிர்ஜ்ஞாத பரமாத்மா ஜகத் பிரபு ஸ்வ ஐஸ்வர்ய அனுபவ ப்ரீத ஞாதாரம் அநு சேவதே
யஸ்மாத் சத் பக்தி யுக்தா நாம் ப்ரபந்நா நாம் க்ரமம் விநா பிரசாதம் ஏதி மந்திரேச து அசிராத் பாவிதாத்மநாம்
கிம் புநர்வை க்ரியா ஞான சம்பூர்ணா நாம் து பவ்ஷ்கர ஸ்ரத்தா பக்தி பரானாம்ச போதிதா நாம் ச தேசிகை–பவ்ஷ்கர சம்ஹிதை
சாஸ்திரங்களில் கூறப்பட்ட விதி முறைகளை அறியாமல் தூய பக்தி கொண்டு சரணம் அடைந்து அன்புடன் த்யானிப்பவர்கள்
மேலே ப்ரீதியுடன் எம்பெருமான் அன்பு கொள்கிறான் என்றால்
ஆச்சார்ய உபதேசம் பெற்று சிறந்த ஞானம் அனுஷ்டானத்துடன் த்யானத்தில் ஆர்வமும் பக்தியும் உள்ளோர் இடம்
அதிகமான ப்ரேமம் கொள்கிறான் என்று சொல்லவும் வேண்டுமோ

நியுக்த மனசா வாபி யதி க்ருஷ்ணாதி மாதவ கிம் னு நோத் மூலிதம் துக்கம் ஏதாவத் இதி நிச்சித
திருமால் இடம் மனசை வைத்த நொடியிலே ஏற்றுக் கொள்ளுபவன் அவன் பெருமைகளை முற்றும் உணர்ந்து
தியானித்தால் பிரதிபந்தகங்கள் வேரோடு நீக்கப்படும் என்று கூறவும் வேண்டுமோ

எல்லாப் பற்றுக்களில் இருந்தும் வெளிப்பட்டவர் -சாஸ்த்ரங்களில் சொல்லும் பல யோகங்களால் அறியப் படுபவர் -ஸ்ரீ சங்கரர்-

எல்லா யோகங்களும் வெளிவரக் காரணமாக இருப்பவர் -சாஸ்த்ரங்களில் சொல்லும்-உபாயங்களாலும்-
அவரவர்களுக்கு தோன்றும் உபாயங்களாலும் அறியப் படுபவர் -எளிதில் அடையக் கூடியவர் -ஸ்ரீ சத்ய சந்தர்-

ஓம் சர்வ யோக விநிஸ்ருதாய நம
யாரும் ஒரு நிலையன் என அறிய எளிய எம்பெருமான்

———————–

வஸூர் வஸூம நாஸ் சமாதமா சம்மிதஸ் சம
அமோக புண்டரீகாஷோ வ்ருஷகர்மா வ்ருஷாக்ருதி –12-

—————

105-வஸூ-
ஆஸ்ரிதர் இடம் வசிப்பவன் –
எண்ணிலும் வருவான் -என் ஊரைச் சொன்னாய் –
மீண்டும் 271/701 வரும்

அடியவர்களிடம் மிக்க அன்புடன் வசிப்பவர் -ஸ்ரீ பராசர பட்டர்-

எல்லாம் தம்மிடம் வசிக்கும்படி இருப்பவர் -தாமும் அவற்றில் வசிப்பவர் –
வசுக்களில் அக்னியாக இருக்கிறேன் -ஸ்ரீ கீதை -ஸ்ரீ சங்கரர்-

எங்கும் வசிப்பவர் -ஞானத்தை வளர்ப்பவர் -ஸ்ரீ சத்ய சந்தர்-

ஓம் வஸூ-நம
மனத்துள்ளான்–மீண்டும் –271-/-701-நாமாவளி வரும்

———————-

106-வஸூமநா –
ஆஸ்ரிதரை நிதியாக நினைப்பவன்
துயரறு சுடர் அடி -1-1-1- தனது துயர் போய் சுடர் விட்டு பிரகாசிக்கும் திருவடிகள் ஆஸ்ரிதர் ஒருவனை பெற்றால் –
ச மகாத்மா ஸூ துர்லப -என்று எண்ணுமவன்-
தளிர் புரையும் திருவடி என் தலை மேலவே -திரு நெடும் -1
கருகி வாடி இருந்தவை தளிர் விட்டனவே ஆழ்வார் தலை மேல் ஸ்பர்சத்தால்

அடியவர்களை நிதி போல் நினைப்பவர் -ஸ்ரீ பராசர பட்டர்-
ச மஹாத்மா ஸூ துர்லப –ஸ்ரீ கீதை -7-19-

சிறந்த மனம் உள்ளவர் -விருப்பு வெறுப்பு இன்பம் துன்பம் போன்றவற்றால் கலக்க முடியாதவர் -ஸ்ரீ சங்கரர்-

அடியவர்கள் அளிக்கும் நீரையும் ஸ்ய மந்தக மணியையும் சமமாக கருதுபவர் -ஸ்ரீ சத்ய சந்தர்-

ஓம் வஸூமநா நம
ஆஸ்ரிதர்களை நிதியாக திரு உள்ளம் கொண்டவன் -ஆத்மாவாக கொள்ளுபவன்

———————-

107 ஸத்ய –
சத்துக்களுக்கு அனுகூலன்
அவர்கள் நினைத்ததை தலைக் கட்டி வைப்பவன்

அடியவர்களின் விருப்பங்களை நிறைவேற்றுபவர் -ஸ்ரீ பராசர பட்டர்-
அசத்தியத்திற்கு மாறானவர் -உருவத்துடனும் அருவத்துடனும் கூடியவர்

-213–873-மீண்டும் வரும்

சத் -பிராணம் -தீ -அன்னம் -யம்-சூர்யம் -பிராணன் அன்னம் சூர்யன் ஆகிய ரூபம் உள்ளவர் -சாதுவானவர் -ஸ்ரீ சங்கரர்-

உலகங்களைப் படைப்பவர் -இருப்பை யுண்டாக்குபவர்-ஸ்ரீ சத்ய சந்தர்-

ஓம் சத்யாய நம

————————-

108-ஸமாதமா –
ஆஸ்ரிதர்களை சமமாக எண்ணுபவன் –
வேடன் வேடுவச்சி வசிஷ்டன் குரங்கு -வாசி இன்றி
ஈடும் எடுப்புமில் ஈசன் -1-6-3-
பொது நின்ற பொன் அம் கழல் –

அடியவர்களிடம் ஏற்றத் தாழ்வுகள் பாராமல் அனைவரையும் சமமாகக் கருதுபவர் -ஸ்ரீ பராசர பட்டர்-
விருப்பு வெறுப்பு முதலியவற்றால் மாறாத மனம் உள்ளவர் –

சமோஹம் சர்வ பூதேஷு –ஸ்ரீ கீதை -9-29-

எல்லா பூதங்களிடமும் சமமாக ஒரே ஆத்மாவாக இருப்பவர் -ஸ்ரீ சங்கரர்-

ஞானிகளுக்கு ஆத்மாவாக இருப்பவர் -லஷ்மி பிரம்மா யுடன் கூடியவர்
சாரமாய் லஷ்மியிடம் மனம் வைத்து இருப்பவர் -லஷ்மியின் மனத்தை தம்மிடம் வைத்து இருப்பவர் -ஸ்ரீ சத்ய சந்தர்

ஓம் ஸமாதமா நம
நித்ய சம்சாரிகளையம் நித்ய ஸூரிகளுக்கு ஓக்க திரு உள்ளம் பற்றுபவன்

————————-

109-ஸம்மித –
அடங்கிய பொருளாய் இருப்பவன்
உன்னை நான் பிடித்தேன் கொள் சிக்கனவே-
மே ராம -என்று தசரதன் சொல்லும் படி
கண்ணி நுண் சிறுத் தாம்பினால் கட்டுண்ணப் பண்ணிய பெரு மாயன் –

அடியவர்களுக்கு அடங்கி இருப்பவர் -ஸ்ரீ பராசர பட்டர்-

நம்முடைய கைகளுக்கு எட்டுபவன் என்று உணர வைப்பவன்
ஊன ஷோடச வர்ஷோ மே ராமோ ராஜீவலோசந –பால -20-2-
மம அயம் தநயோ நிஜ –ஸ்ரீ விஷ்ணு புராணம் -5-5-5-இந்தக் கண்ணன் எனக்கு அடங்கிய புத்ரன்

எல்லாராலும் அளவுபடுத்தப் படுபவர் -அளவிடப் படாதவர் -அசம்மித -என்றும் பாடம் -ஸ்ரீ சங்கரர்-

பிரமாணங்களால் நன்கு அறியப் படுபவர் -மூ உலகங்களையும் அளந்தவர்
அசம்மித -என்ற பாடம் கொண்டு முழுமையாக எவராலும் அளவிட முடியாதவர் என்னவுமாம் -ஸ்ரீ சத்ய சந்தர்-

ஓம் ஸம்மிதாய நம
தேவகி யசோதா கௌசல்யாதிகளுக்கு தன்னை அடக்கி வைப்பவன்

——————-

110-ஸம –
எல்லார் இடமும் சமமாய் இருப்பவன்
அன்பனாகும் தான தாள் அடைந்தார்க்கு எல்லாம்
சமோஹம் சர்வ பூதேஷு –

அடியவர்களில் பழகினவர் -பழகாதவர் – ஆவல் அதிகம் உள்ளவர் – குறைவாக உள்ளவர்
போன்ற வேறுபாடுகளைப் பாராமல் ஒரே விதமான கௌரவம் வைப்பவர் -ஸ்ரீ பராசர பட்டர்-

எல்லாக் காலங்களிலும் விகாரமற்று இருப்பவர் -அல்லது லஷ்மியோடே கூடி இருப்பவர் -ஸ்ரீ சங்கரர்-

லஷ்மீ வேதங்கள் பிரமாணங்கள் இவைகளுடன் சேர்ந்து இருப்பவர்
அவர்களுக்குத் தகுதியான பலன்களைத் தருபவர் –
எல்லா இடங்களிலும் எல்லா உருவங்களிலும் சமமாக இருப்பவர் -ஸ்ரீ சத்ய சந்தர்-

ஓம் -ஸமாய நம
ஆஸ்ரிதர்களுக்குள் வாசி பார்க்காதவன்

————————-

111-அமோக –
உறவு வீண் போகாதவன்
உன் தன்னோடு உறவேல் நமக்கு இங்கு ஒழிக்க ஒழியாது -திருப்பாவை -28-

தமது சம்பந்தம் வீண் போகாதவர் -ஸ்ரீ பராசர பட்டர்-

அமோகம் தர்சனம் ராம ந ச மோக தவ ஸ்தவ அமோகாஸ்தே பவிஷ்யந்தி பக்திமந்த ச யே நர –யுத்த -120-31-
ஸ்ரீ ராமா உனது தர்சனம் என்றுமே பயன் அற்றுப் போவதில்லை

பூசிப்பவர் துதிப்பவர் நினைப்பவர்க்கு வீண் போகாமல் எல்லாப் பலன்களையும் தருபவர் -ஸ்ரீ சங்கரர்-

படைப்பு முதலியவை வீண் போகாதவர் -ஸ்ரீ சத்ய சந்தர்-

ஓம் அமோகாய நம
தன்னையே பலமாக ஆஸ்ரிதர்களுக்கு கொடுப்பவன்

————————

112-புண்டரீ காஷ –
விண்ணோர்க்கு கண்ணாவான்
கண்ணாவான் என்றும் மண்ணோர் விண்ணோர்க்கு -1-8-3-
திவீவ சஷூராததம் –
கண்ணாரக் கண்டு கழிவதோர் காதல் உற்றார்க்கு உண்டோ கண்கள் துஞ்சுதலே-திரு விருத்தம் -97
புஷ்கராஷ தாமரைக் கண்ணன் -40 திரு நாமம் –

புண்டரீகம் எனப்படும் பரமபதத்தில் உள்ளவர்களுக்குக் கண் போன்றவர் -ஸ்ரீ பராசர பட்டர்-

புண்டரீகம் பரம் தாம நித்யம் அக்ஷரம் அவ்யயம் தத் பவாந் புண்டரீகாஷா -உத்யோக பர்வம்
திவி இவ சஷு –புருஷ ஸூக்தம் -பரமபதத்தில் உள்ளவர்களின் கண் போன்றவன்

தாமரை போன்ற இரு கண்களை யுடையவர் -ஹ்ருதய புண்டரீகத்தில் பரவியிருப்பவர் –
அல்லது அங்கு பார்க்கப்படுபவர் –ஸ்ரீ சங்கரர்-

நரசிம்ஹ அவதாரத்தில் அக்னியை மூன்றாம் கண்ணாக யுடையவர் -தாமரை போன்ற
இரு கண்களை யுடையவர் -புண்டரீக முனிவருக்கு அருள் புரிந்தவர் -ஸ்ரீ சத்ய சந்தர்-

ஓம் புண்டரீ காஷாய நம
கண்ணாவான்

————————

113-வ்ருஷ கர்மா –
நற் செயலை செய்பவன் -தாப த்ரயத்தையும் குளிரச் செய்பவன்
வ்ருஷ -ஸ்ரேஷ்ட தர்மம்
ஜன்ம கர்ம மே திவ்யம் –

நம் போன்றவர்களுக்கும் பெரும் பேற்றை அளிப்பதால் தர்ம ரூபமான செய்கையை யுடையவர் -ஸ்ரீ பராசர பட்டர்-

தர்ம ரூபமான செய்கையை யுடையவர் –ஸ்ரீ சங்கரர்-

புண்ய கர்மங்களை யுடையவர் -ஸ்ரீ கிருஷ்ணனாய் எருதுகளை அடக்கியவர் -ஸ்ரீ சத்ய சந்தர்-

ஓம் -வ்ருஷ கர்மாய நம
தர்ம சமஸ்தானம் செய்பவன்

—————————

114-வ்ருஷா க்ருதி-
தர்மமே உருவானவன் -குளிர்ந்த திருமேனி உடையவன்
அறவனை ஆழிப்படை அந்தணனை -1-7-1-
தாமரை நீள் வாசத் தடம் போல் வருவானே -8-5-1-

தாபத் த்ரயங்களைப் போக்கி அமுதம் பொழிவது போன்ற குளிர்ந்த திவ்ய ரூபம் யுடையவர் –
திரு மேனியும் தர்ம ரூபமாய் இருக்கும் -ஸ்ரீ பராசர பட்டர்-

குளிர்ந்த செயல்கள் -அழகான ரூபம் -என்பதால் வ்ருஷ கர்மா வ்ருஷ க்ருதி
வ்ருஷ -பெயர்ச் சொல்லாக தர்மம் -வினைச்சொல்லாக பொழிதல்
விஸ்வம் ஆப்யாயயன் காந்த்யா பூர்ணேந்த்வயுத துல்யயா –ஆயிரக்கணக்கான பூர்ண சந்த்ர தேஜஸ் உடையவன்
வபுஷா ஸூந்தரேண ஏவ திவ்யேன அவிக்ருதேந ச முஞ்சந்தம் அநிசம் தேகாத் ஆலோகம் ஞான லக்ஷணம்
பூர்வ கர்மாந லார்த்தாநாம் த்யாயினாம் கேத காந்தயே வதநேந்து சயோத்தேன ஹ்லாதயந் கோகணேந து —
குளிர்ந்த கிரணங்களால் மகிழ்வு ஊட்டுகிறான்
ததோ மஹதி பர்யங்கே மணி காஞ்சன சித்ரிதே ததர்ச கிருஷ்ணம் ஆஸீநம் நீலம் மேரவ் இவ அம்புதம்–ராஜ தர்மம்
மேரு மலையில் நீல மேகம் போன்று கண்டனர்

தர்மத்தை நிலைநாட்ட அவதாரம் செய்து உருவம் யுடையவர் –ஸ்ரீ சங்கரர்-

எருதைப் போலே திடமான உடல் உள்ளவர் -ஸ்ரீ சத்ய சந்தர்-

ஓம் வ்ருஷ க்ருத்யே நம
தர்மமே வடிவானவன்

———————-

ருத்ரோ பஹூஸிரா பப்ரூர் விஸ்வ யோநிஸ் ஸூ சிஸ் ரவா
அம்ருதஸ் சாஸ்வத ஸ்தாணுர் வரா ரோஹோ மஹாதபா –13-

————

115-ருத்ர –
ஆனந்த கண்ணீர் விடச் செய்பவன் -திவ்ய ரூபம் சேஷ்டிதங்கள் இவற்றால் உருகச் செய்பவன்
கங்குலும் பகலும் கண் துயில் அறியாள் கண்ண நீர் கைகளால் இறைக்கும் -7-2-1-
வன் பொன்னிப் பேராறு போல் வரும் கண்ண நீர் கொண்டு அரங்கன் கோயில் திரு முற்றம்
சேறு செய் தொண்டர் -பெருமாள் திரு -2-3-
ஆஹ்லாத சீத நேத்ராம்பு புல கீக்ருத காத்ரவான் சதா பரகுணா விஸ்ட –
தாய் எடுத்த சிறு கோலுக்கு அஞ்சி அழுகையும் அஞ்சி நோக்கும் அந்நோக்கும்
அணி கொள் செஞ்சிறுவாய் நெளிப்பதுவும் தொழுகையும் இவை கண்ட வசோதை தொல்லை
இன்பத்து இறுதி கண்டாளே -பெருமாள் திரு -7-8-

இப்படிப்பட்ட திவ்ய ரூபத்தாலும் செயல்களாலும் பக்தர்களை நெஞ்சுருகி ஆனந்தக் கண்ணீர்
பெருக்கி அழச் செய்பவர் –ஸ்ரீ பராசர பட்டர்-

ஆஹ்லாத சீத நேத்ராம்பு புல கீக்ருத காத்ரவான் சதா பரகுணா விஸ்ட –த்ரஷ்டவ்ய சர்வ தேஹிபி -ஸ்ரீ விஷ்ணு தத்வம்

சம்ஹார காலத்தில் பிரஜைகளை அழித்து அழச் செய்பவர் -நன்மையைத் தருபவர் –
துன்பங்களையும் அவற்றின் காரணங்களையும் அழிப்பவர்-ஸ்ரீ சங்கரர்-

நோய் தீர்ப்பவர் -அழ வைப்பவர் -பறை முதலியவற்றிற்கு ஒலியைக் கொடுப்பவர் –
அடியவர்கள் செய்யும் துதிகளால் மகிழ்பவர் –ஸ்ரீ சத்ய சந்தர்-

ஓம் ருத்ரய்யா நம
அடியார்களுக்கு ஆனந்த கண்ணீர் பொழிய வைப்பவன்

————————

116-பஹூ சிரா
பல தலைகளை உடையவன்
சஹச்ர சீர்ஷா புருஷ -ஆதி சேஷனாய் பூமியைத் தாங்குபவன்
தோள்கள் ஆயிரத்தாய் முடிகள் ஆயிரத்தாய் தாள்கள் ஆயிரத்தாய் துணை மலர்க் கண்கள் ஆயிரத்தாய் -8-1-10-

ஆயிரம் தலையையுடைய ஆதி சேஷனாக இருப்பவர் –ஸ்ரீ பராசர பட்டர்-

பல தலைகளை யுடையவர் -ஸ்ரீ சங்கரர்-

எண்ணற்ற நாடிகளில் வசிப்பவர் -பல தலைகளை யுடையவர் –ஸ்ரீ சத்ய சந்தர்-

ஓம் பஹு சிரஸாய நம
சஹஸ்ர சீர்ஷா இத்யாதி

—————–

117-பப்ரு –
பரிப்பவன் -தாங்குபவன் சர்வ பூதானி மத் ஸ்தானி
நாகமேந்து மண்ணினை காத்து ஏகமேந்தி நின்ற நீர்மை -திருச் சந்த -6-

ஆதி சேஷனாக இருந்து கொண்டு உலகத்தை தாங்குபவர் –ஸ்ரீ பராசர பட்டர்-

யஸ்ய சா சகலா ப்ருத்வீ பணா மணி சிகாருணா–ஸ்ரீ விஷ்ணு புராணம் -யாருடைய தலையில் உள்ள ரத்னங்களின்
தேஜஸ் மூலம் உலகம் மலர் மாலை போலே உள்ளதோ
பிபர்த்தி மாலாம் லோகா நாம் -ஸ்ரீ விஷ்ணு புராணம் -உலகம் ஆதிசேஷனால் தாங்கப்படுகிறது
யோ அநந்த ப்ருதிவீம் தத்தே சேகர ஸ்திதி ஸம்ஸ்திதாம் -ஸ்ரீ விஷ்ணு புராணம் –
மலர்மாலை போன்று உலகத்தை தாங்குகிறான்

உலகங்களைத் தாங்குபவர் -ஸ்ரீ சங்கரர்-

உலகங்களைத் தரித்து இருப்பவர் –ஸ்ரீ சத்ய சந்தர்-

ஓம் -பப்ருவே நம
ஆதி கூர்மம் -ஆதி வராஹம் -தாங்கி அருளுபவர்

——————

118-விஸ்வ யோநி-
அனைத்து உலகத்தவருடன் தொடர்பு கொண்டவன்
சரணமாகும் தன தாள் அடைந்தார்க்கு எல்லாம்
அன்பனாகும் தன தாள் அடைந்தார்க்கு எல்லாம்
மெய்யனாகும் விரும்பித் தொழுவார்க்கு எல்லாம்
அணியனாகும் தன தாள் அடைந்தார்க்கு எல்லாம்—9-9-10-6/7/8/
சரணம் -ரஷகன் அன்பன் -தோஷம் காணாதவன் மெய்யன் -வேண்டியது கொடுப்பவன் அணியன் சுலபன்-

அடைந்தவர்கள் எல்லாரையும் தம்மோடு ஒன்றாகக் கொள்பவர் -திரு வநந்த ஆழ்வான் திரு மேனியோடு சமமாக
பக்தர்களோடு கூடி இருப்பதற்காக எல்லாருக்கும் பொதுவாக இருக்கும் படியைச் சொல்லுகிறது -ஸ்ரீ பராசர பட்டர்-

தாங்குவது கீழே சாதாரணம் இங்கு அண்டின அடியவர்களை அணைத்துக் கொள்கிறான் என்கிறது

உலகங்களுக்குக் காரணமாக இருப்பவர் -ஸ்ரீ சங்கரர்-

உலகுக்கு அல்லது வாயு தேவனுக்கு காரணமாக இருப்பவர் – -ஸ்ரீ சத்ய சந்தர்-

ஓம் விஸ்வ யோநியே நம
ஸ்ருஷ்டித்த பின்பு ஸ்திதி பாலனம் செய்து அருளுபவர்

———————-

119-சுசிச்ரவா
நல் வார்த்தைகளைக் கேட்பவன் -சுசி -தூய்மை பெற்றது
மடி தடவாத சோறு -மகா மதி விதுர –
இன் கவி பாடும் பரம கவிகளான ஆழ்வார்களின் ஈரச் சொற்களை உகந்து கேட்பவன்
வண் தமிழ் நூற்க நோற்றேன் அடியார்க்கு இன்ப மாரியே-4-5-10
இன்ப மாரி -இன்பம் பயக்கும் மேகம் -இன்பப் பாக்களை வர்ஷிக்கும் -அடியாருக்கும் சர்வேஸ்வரனுக்கும் இன்பம் பயக்கும்
நின் தனக்கும் குறிப்பாகில் கற்கலாம் கவியின் பொருள் தானே -பெரிய திரு மொழி -6-10-10-
மா முனிகள் வாயிலாக ஓர் ஆண்டு ஈடு கேட்டருளினானே-

அடியார்களின் இன் சொற்களைக் கேட்பவர் -ஸ்ரீ பராசர பட்டர்-

சுசீநி ஸ்ரவாணீயாநீ ஸ்ருணோமீஹ தனஞ்சய ந ச பாபாநி கிருஷ்ணாமி ததாஹம் வை ஸுசீஸ்ரவா–சாந்தி பர்வம்
அடியார்களின் இனிய சொற்களை கேட்பதாலேயே-ஸுசீஸ்ரவா- என்ற திரு நாமம் கொண்டேன்
விதுராந்நாநி புபுஜே சுசீநி குணவந்தி ச -உத்யோக பர்வம்
தர்ம்யா ரம்யா ச அர்த்தவதீ விசித்ரார்த்த பத அக்ஷரா ஸ்ருண்வதோ விவிதா வாசஸ் விதுரஸ்ய மஹாத்மன
அகாமஸ்யைவ க்ருஷ்ணஸ்ய சா வ்யதீயாய சர்வரீ-உத்யோக பர்வம்

பரிசுத்தமான நாமங்களை யுடையவர் –ஸ்ரீ சங்கரர்-

புனிதமான புகழை யுடையவர் -செவிக்கு இனிய சொற்கள் யுடையவர் –ஸ்ரீ சத்ய சந்தர்-

ஓம் சுசிச்ரவாய நம
பாவனமான ஆஸ்ரிதர்களின் இனிய வாக்குகளைக் கேட்டு அருளுபவர் –

———————–

120- அம்ருத –
ஆராவமுதன் -தேனும் பாலும் கன்னலும் அமுதுமாகித் தித்திக்கும் விஷயம்
காணத் தெவிட்டாத ஆரா அமுதம்
எப்பொழுதும் நாள் திங்கள் ஆண்டு ஊழி ஊழி தொறும் அப்பொழுதைக்கு அப்பொழுது என் ஆரா அமுதமே -2-5-4
ஆரா வமுதே அடியேனாவி அகமே தித்திப்பாய் -5-8-10-

எக்காலமும் சேவித்தாலும் ஆராவமுதம் -சம்சாரம் கழித்து நித்ய அனுபவம் அளிப்பவன் -ஸ்ரீ பராசர பட்டர்-

அம்ருதஸ்ய இவ ந அத்ருப்யன் ப்ரேஷமானா ஜனார்த்தனம் -ஆரா வமுதம் போன்றவனை
சதா பஸ்யந்தி பண்ணிக் கொண்டு இருந்தார்கள்

அழிவில்லாதவர் -ஸ்ரீ சங்கரர்-

அளவற்ற சாஸ்த்ரங்களுக்கு விஷயமாக இருப்பவர் -அனந்த சயனத்தில் இருபபவர்-அழிவில்லாதவர்–ஸ்ரீ சத்ய சந்தர்-

ஓம் அம்ருதாய நம
ஆராவமுதாய் ஆஸ்ரிதர்களுக்கு அமைத்துக் கொள்பவன்

———————

121–சாஸ்வத ஸ்தாணு –
என்றும் நிலைத்து இருப்பவன் –
தேவர் அமிர்தம் போலே பிறர் கடத்திக் கொண்டு போகாதபடி நிலைத்து இருந்து தன்னை அனுபவிக்கக் கொடுப்பவன்
தேவ லோக அமர்த்தம் ஒரு தடவையே பானம்
இது சதா பச்யந்தி அம்ருதம்
தன்னையே அருளுமவன்
எனக்கு தேனே பாலே கன்னலே அமுதே -10-7-2-
இருப்பேன் என்று என் நெஞ்சு நிறையப் புகுந்தான் -அமுதம் உண்டு களித்தேனே -10-8-6-

தேவ அமர்த்தம் போலே அன்றி நித்யமாகவும் அபகரிக்க முடியாதவராகவும் அடியவர்களிடம் நிலையாகவும் இருபபவர் –
இந்த ஆராவமுதம் கொண்டு நீ வேண்டாம் -உப்புச் சாறு அமையும் -ஒரு முறை உண்ணக் கூடியது -அநித்தியம் -ஸ்ரீ பராசர பட்டர்-

அழிவில்லாமல் நிலையாக இருபபவர் -ஸ்ரீ சங்கரர்-

முக்தர்களுக்கு ஸ்வாமியாகவும் சேரும் இடமாகவும் இருபபவர் –ஸ்ரீ சத்ய சந்தர்-

ஓம் சாஸ்வத ஸ்தாணுவே நம
ஆச்ரித ரக்ஷண தீக்ஷை -அசைக்க ஒண்ணாத விரதம் கொண்டவன்
மீண்டும் –57-/-28-நாமாவளி வரும் –

——————–

122-வராரோஹா –
வரம் -மிக உயர்ந்த –
ஆரோஹணம் -பகவத் பிராப்தி
மேலான அடையத் தக்கவன் -பரம பத நாதன் -பர வாசுதேவன்
விண்ணவர்க்கு நற்பொருள் தான் நாராயணன் -நான் திரு -13-

தன்னை வந்தடைவதே சிறந்த புருஷார்த்தம் -மற்றவை அனைத்தும் தாழ்ந்த புருஷார்த்தங்கள் –
இங்கு தொடர்ந்து பரத்வம் விபவம் வியூஹம் ஆகியவை விரித்துக் கூறப் பட்டுள்ளது -இதுவரை பெரும்பாலும் பரத்வம் கூறப்பட்டது
கிமேகம் தைவதம் லோகே -என்று கேட்க்கப் பட்ட கேள்விகளுக்கும் அவற்றின் பதில்களும் பெரும்பாலும் இதில் முடிகின்றன
இனி ஸ்துவந்த கம் -எனபது முதலாக உபாய விஷயமாக கேட்ட கேள்விகளுக்கும் பதில்களுக்கும் விஷயமாக வ்யூஹம் சொல்லப் படுகிறது –
அதில் வாசுதேவன் என்ற திரு நாமம் பரத்வத்தில் வியாக்யானம் செய்யப்பட்டது –
இப்பொழுது சங்கர்ஷணன் விஷயம் சொல்லப் படுகிறது -ஸ்ரீ பராசர பட்டர்-

வரம் ஆரோஹணம்–பரம புருஷார்த்தம் என்றவாறு
ஏதே வை நிரயாஸ் தாத ஸ்தானஸ்ய பரமாத்மந –சாந்தி பர்வம்
ஷாட் குண்ய விக்ரஹம் தேவம் பாஸ்வஜ்ஜ்வலன தேஜஸம் ஸர்வத பாணி பாதம் தத் இத உபக்ரம்ய பரம ஏதத் சாமாக்யாதம்
ஏகம் சர்வ ஆஸ்ரயம் விபும் ஏதத் பூர்வம் ய த்ரயம் ச அந்யத் ஞானாத்யை பேதிதம் குணை நாநா க்ருதி
ச தத் வித்தி விபவம் புக்தி முக்திதம் –சாத்துவத சம்ஹிதை
வ்யூஹமும் விபவமும் அர்ச்சையும் பற்றி சொல்லும்
முக்கிய விபவமும் சக்தி ஆவேச அவதாரங்களும் உண்டே
சர்வம் கலு இதம் ப்ரஹ்ம -சாந்தோக்யம் -புல் முதல் நான்முகன் வரை ஸ்ருஷ்டிக்கப்பட்டவர்கள்
ஞான உபதேஷ்டா பகவான் கபிலாஷஸ்து அதோஷஜ வித்யா பூர்த்தி சதுர் வக்த்ரோ ப்ரஹ்மா வை லோக பூஜித
தத் அம்சு பூதோ வை யஸ்ய விஸ்வ வ்யஞ்ஜன லக்ஷண
அம்சோ நாநா வியபதேயத்–ஸ்ரீப்ரஹ்ம ஸூத்ரம் –2-3-42-
யுகாந்தரேஷு ச சம்ஹாரம் ய கரோதி ச ஸர்வதா சங்கர ஆக்யோ மஹா ருத்ர ப்ராதுர் பாவாந்த்ரம் ஹி தத்
தேவஸ்ய அலைசாயே வை ஸர்வாத சமஸ்தி தஸ்ய ச
ப்ராதுர் பாவாந்த்ரம்-சிறிய அம்சமாகவே உள்ளவை
ஸ்வ பாவம் அஜஹத் சஸ்வத் ஆகாராந்தரம் ஆக்ருதே யத் தத்வம் அம்ச ஸம்பூதம் ப்ராதுர் பாவாந்தரம் து தத்
முமுஷுக்கள் ப்ராதுபாவத்தையே உபாஸிக்க வேண்டும் -ப்ராதுர் பாவாந்தரத்தை உபாஸிக்கக் கூடாது

தம்மிடம் ஏறுவது எல்லாவற்றிலும் சிறந்ததாக இருப்பவர்-அடையும் உயர்ந்த இடம் -அடைந்தவர்களுக்கு மீட்சி இல்லை -ஸ்ரீ சங்கரர்-

சிறந்த வாகனத்தில் ஏறுபவர் -அரங்களை-ஆயுதங்களை உடையவர்களைக் காட்டிலும் உயர்ந்த தீயவர்களை அழிப்பவர்-

ஓம் வராரோஹாய நம
பரம புருஷார்த்தமாக இருப்பவன்

———————————————————

101-அச்யுத -சரண் அடைந்தோர்களை விட்டு நீங்காதவன்
102-வ்ருஷாகபி -தர்மத்தின் உருவமாக ஸ்ரீ வராஹமாக பிறந்தவர்
103-அமேயாத்மா -தன் அடியார்களுக்கு எவ்வளவு செய்தார் என்று அளவிட முடியாதவர்
104-சர்வயோக விநிஸ்ருத -அனைத்து உபாயங்களாலும் அடையப் படுபவர்
105-வசூ-சிறிது அன்பு காட்டுபவன் இடம் வசிப்பவர் –
106-வசூ மநா-பக்தர்களை விலை மதிப்பில்லாத செல்வமாகக் கொள்பவர் –
107-சத்ய -தன் அடியார்களின் விருப்பத்தை நிறைவேற்றுபவர் –
108-சமாதமா -ஏற்றத் தாழ்வு இல்லாமல் அனைவரையும் சமமாகக் கருதுபவர் –
109-சம்மித -அடியார்களுக்கு அடங்கியவர் –
110-சம -சரணம் அடைந்தவர்களுள் புதியவர் பழையவர் என்று வேறுபாடு பார்க்காதவர் –

111-அமோக -தன்னுடைய தொடர்பு வீணாகாதவன்-பக்தி வீணாவது இல்லை –
112-புண்டரீகாஷ – புண்டரீகம் என்னும் வைகுந்தத்தில் உள்ளோர்க்குக் கண் போன்றவர் –
113-வ்ருஷகர்மா -நம்மை நன்னெறிப் படுத்தும் தர்மமான செயல்களை உடையவர் –
114-வ்ருஷாக்ருதி -தர்மமே உருவானவர் -அமிர்தம் போன்ற குளிர்ந்த உரு உடையவர் –
115-ருத்ர -பக்தர்களை நெஞ்சு உருக்கி ஆனந்த கண்ணீர் விட வைப்பவர் –
116-பஹூ சிரா –ஆதி சேஷனைப் போலே எண்ணிறந்த தலைகளை உடையவர் –
117-பப்ரு -ஆதி சேஷ உருவில் உலகைத் தாங்குபவர் –
118-விஸ்வ யோனி -தம்மை அடைந்தவர்களை நெருக்கமாக கூட்டிக் கொள்பவர் —
119-சூசி ஸ்ரவா -தன் பக்தர்களின் இனிய தூய்மையான சொற்களைக் கேட்பவர் –
120-அம்ருத -முக்தி அளிக்கும் ஆராவமுதானவர் –
121-சாஸ்வதஸ் தாணு -தேவ லோகத்து அமுதம் போல அல்லாமல் நிலையானவர் –
122-வராரோஹா -மிகச் சிறந்த அடையும் பொருளாக இருப்பவர் –

———————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பராசர பட்டர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பீஷ்மர் திருவடிகளிலே சரணம்
ஸ்ரீ வியாச பகவான் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: