ஸ்ரீ கூரத்தாழ்வான் அருளிச் செய்த ஸ்ரீ அதி மானுஷ ஸ்தவம் -ஸ்லோகங்கள்—31-40-ஸ்ரீ காஞ்சி ஸ்வாமிகள் உரை –

யே தர்ம ம் ஆசரிதம் அப்யஸிதும் ச யோகம் போத்துஞ் ச கிஞ்சன ந ஜாது அதிகாரபாஜ
தேபி த்வதா சரித பூதல பந்த கந்தாத் பந்தாதிகா பரகதிம் கமிதாஸ் த்ருணாத்யா –31-

யே த்ருணாத்யா –யாவை சில த்ருணாதிகள்
தர்மம் ஆசரிதம் –கர்ம யோகத்தை அனுஷ்டிப்பதற்கும்
அப்யஸிதும் ச யோகம் –யோகாப்யாஸம் பண்ணுவதற்கும்
போத்துஞ் ச கிஞ்சன –ஏதேனும் ஒன்றை அறிவதற்கும்
ஜாது–ஒரு காலும்
ந அதிகாரபாஜ –அநதிகாரிகளாய் இருந்தனவோ
தேபி –அந்த த்ருணாதிகளும்
த்வதா சரித பூதல பந்த கந்தாத் –நீ சஞ்சரித்த பிரதேசங்களின் சம்பந்த வாசனையால்
பந்தாதிகாஸ் சந்த –கர்ம பந்தத்தைக் கடந்து
பரகதிம் கமிதாஸ் –உத்க்ருஷ்ட கதியை அடைவிக்கப் பட்டன –

—————-

தாத்ருக் குணோ ந நு பபூவித ராகவத்வே யஸ் தாவகம் சரிதம் அந்வஹம் அந்வ புங்க்த
ச அத்ரைவ ஹந்த ஹனுமான் பரமாம் விமுக்திம் புத்த்யா அவதூய சரிதம் தவ சேவதே அசவ் –32-

ஹே தேவ
ராகவத்வே–ஸ்ரீ ராம அவதாரத்தில்
தாத்ருக் குணோ ந நு பபூவித –அப்படிப்பட்ட கல்யாண குணங்களை யுடையையாய் இருந்தாய் இறே
அதை விவரிக்கிறார் மேலே
யஸ் ஹனுமான் தாவகம் சரிதம் –யாவன் ஒரு திருவடி உனது சரித்திரத்தை
அந்வஹம் அந்வ புங்க்த –நித்யம் அனுபவித்தானோ
ச அசவ் –அந்த ஹனுமான்
அத்ரைவ பரமாம் விமுக்திம் –இவ்விடத்தில் இருந்து கொண்டே ஸ்லாக்யமான மோஷத்தையும்
புத்த்யா அவதூய –ஸ்வ புத்தியால் திரஸ்கரித்து
சரிதம் தவ சேவதே –உன் சரிதையையே அனுபவித்துக் கொண்டு இருந்தான்

பாவோ நாந் யத்ர கச்சதி –பராதவ பேர் சொல்லுகையும் அஸஹ்யமாய் —
அந்யத்ர –உன்னை அல்லது ஒன்றையும் அறியாது இருந்தானே
பஹவோ ந்ரூப கல்யாண குணா புத்ரஸ்ய சாந்தி தே –சக்ரவர்த்தீ உனது திருமகனுக்கு குணங்கள்
பல உள என்று பவ்ர ஜனங்கள் சொன்னது கிடக்கட்டும்
திருவடியை ஈடுபத்திய குணங்களை ஏன் சொல்வோம்

——————————-

யத் த்வம் க்ருத ஆகசமபி ப்ரணதி ப்ரஸக்தம் தம் வாயசம் பரமயா தயயா அஷமிஷ்டா
தேநைவ மாத்ருஸ ஜனஸ்ய மஹா கசோபி யுக்தம் சமாஸ் வசனம் ஈத் உபதாரயாமி –33-

க்ருத ஆகசமபி–ஆர்த்த அபராதியாய் இருக்கச் செய்தேயும்
ப்ரணதி ப்ரஸக்தம்–ப்ரணாமத்திலே உத்யுக்தனாய்
தம் வாயசம்–அந்த காகாசூரனை
பரமயா தயயா–பேர் அருளாலே
யத் த்வம் அஷமிஷ்டா –நீ க்ஷமித்தாய் என்பது யாது ஓன்று உண்டோ
தேநைவ –அது கொண்டே
மஹா கச-தீரக் கழியக் குற்றம் செய்து இருக்கிற
மாத்ருஸ ஜனஸ்யபி -என்னைப் போன்றவர்களுக்கும்
யுக்தம் சமாஸ் வசனம் ஈத் உபதாரயாமி –அச்சம் கெட்டு தேறி இருக்கை கூடும் என்று விஸ்வசித்து இருக்கிறேன்

அஷமிஷ்டா –கிருபா காரியமே பலித்து விட்டது பிராட்டி சந்நிதியாலே

————

இதுவரை ஸ்ரீ ராமாவதார அனுபவம் -மேல் -25-ஸ்லோகன்களால் ஸ்ரீ கிருஷ்ணாவதார அனுபவம்

சா பூதநா சகடம் அர்ஜுனயோச் ச யுக்மம் பால்ய உசித அந்ய பர சேஷ்டித விஷ் புலிங்கே
யஸ்ய அலபந்த சல பத்வ மஹோ நிகூடஸ் ச த்வம் வ்ரஜே வவ்ருதிஷே கில கம்ச பீத்யா–33-

யஸ்ய தவ –யாவன் ஒரு உன்னுடைய
பால்ய உசித அந்ய பர சேஷ்டித விஷ் புலிங்கே–பால்ய உசிதமாயும்-அந்யார்த்தமாயும் இருக்கிற
சேஷ்டைகளாகிற நெருப்புப் பொறியிலே
சா பூதநா சகடம் அர்ஜுனயோச் ச யுக்மம்–அந்த பூதனையும்-சகடாசூரனும் -யாமலார்ஜுனனும்
அலபந்த சல பத்வம் ச த்வம் –வீட்டில் பூச்சி போல் ஒழிந்தனவோ-அப்படிப்பட்ட விக்ரமசாலியான நீ
கம்ச பீத்யா–கம்ச பயத்தால்
நிகூடஸ் ச ந் வ்ரஜே-மறைந்து கொண்டு திருவாய்ப்பாடியிலே
வவ்ருதிஷே கில அஹோ –வளர்ந்தாய் அன்றோ -அந்தோ

பூத நாதி நிராசனம் போலே கம்ச நிரசனத்தையும் சைசைவத்திலே அவலீலையாக செய்ய வல்ல நீ
அஞ்சி ஒளித்து வளர்ந்தது என்னோ

———————–

பஸ்யத் ஸூ ஸூரிஷு சதா பரமம் பதம் தே தேவ்யா ஸ்ரியா ஸஹ வசந் பரயா விபூத்யா
யோகேந யோக நிரதைஸ் பரிம் ருக்யமாண கிம் த்வம் வ்ரஜேஷு நவநீத மஹோ வ்யமுஷ்ணா–35-

ஹே கிருஷ்ண
தே பரமம் பதம்–உன்னுடைய பரம பதத்தை
ஸூரிஷு-நித்ய ஸூரி கள்
பஸ்யத் ஸூ சதா –சதா தர்சனம் பண்ணா நிற்க
பரயா விபூத்யா உப லஷிதஸ் சந் –சிறந்த செல்வத்தோடு கூடினவனாய்
தேவ்யா ஸ்ரியா ஸஹ வசந் –ஸ்ரீ தேவியோடு கூடி வாழ்பவனாய்
யோக நிரதைஸ்-யோகாப்யாஸ நிஷ்டர்களாலே
யோகேந பரிம் ருக்யமாண –தியாக மார்க்கத்தாலே தேடப்படா நிற்பவனுமாய்
த்வம் -நீ
வ்ரஜேஷு நவநீதம் –ஆயர் மனைகளில் வெண்ணெயை
கிம் த்வம் வ்யமுஷ்ணா–ஏன் களவு கண்டாய் —
அஹோ –ஆச்சர்யம் –

பொங்கோதம் சூழ்ந்த புவனியும் விண்ணுலகும் அங்காதும் சோராமே ஆள்கின்ற எம்பெருமான்
ஒண் டொடி யாள் திரு மகளும் நீயுமே நிலா நிற்ப இருந்தும்
ஆயர் மனைகளில் புகுந்து வெண்ணெய் களவு கண்டாயே
அது என்ன பரத்வம் -இது என்ன ஸுவ்லப்யம்
எங்கானும் இது ஒப்ப தோர் மாயம் உண்டோ –பெரிய திருமொழி

———————

யம் துர்க்கரஹம் ஸூ மநசோ மநசாபி நித்யம் பந்தச் சிதம் பரமம் ஈசம் உதார கந்தி
தாம்நா நிபந்த இதி சுச்ரும தம் பவந்தம் ந அலம் பபூவித பத ஸ்லதநாய தஸ்ய –36-

யம் பவந்தம்–யாவன் ஒரு உன்னை
ஸூ மநசோ மநசாபி நித்யம் துர்க்கரஹம் –பரிசுத்த அந்தக்கரணனாவனுடைய மனஸ்ஸாலும் ஒரு காலும்
க்ரஹிக்கக் கூடாதவனாகவும்
பந்தச் சிதம் –சாம்சாரிக கர்ம பந்தங்களை அறுக்க வல்லவனாகவும்
பரமம் ஈசம் –பரமேஸ்வரனாகவும்
உதாஹரந்தி –வைதிகர்கள் சொல்லுகிறார்களோ
தம் பவந்தம்–அப்படிப்பட்ட உன்னை
தாம்நா நிபந்த இதி சுச்ரும –தாம்பினால் கட்டுப்பட்டவன் என்று கேள்விப் பட்டோம்
தஸ்ய ஸ்லதநாய –அந்த பந்தத்தை அவிழ்த்துக் கொள்ள
அலம் ந பபூவித பத –அசமர்த்தனானாய் –என்ன ஆச்சர்யம்

ஆச்சர்ய தமம் அன்றோ தாம பந்த வ்ருத்தாந்தம் –
கண்ணி நுண் சிறுதாம்பினால் கட்டுண்ணப் பண்ணிய பெரு மாயன் அன்றோ –

—————

ஐஸம் ஹி சைஸவம் அபி வ்யதிலேவ கேலம் யத் பூதநா சகடம் அர்ஜுனயோச் ச யுக்மம்
பால்ய உசித அந்ய பர சாசி விசேஷ்டிதேந ஹந்த அலபந்த சலபாயிதம் ஓஜஸஸ் தே –37-

யத் –யாவன் ஒரு காரணத்தால்
பூதநா சகடம் அர்ஜுனயோச் ச யுக்மஞ்ச –பூதனையையும் -சகடாசூரனையும் இரட்டை மருதங்களையும் -உன்னுடைய
ஐஸம் ஹி சைஸவம் அபி வ்யதிலேவ கேலம் யத்
பால்ய உசித அந்ய பர சாசி விசேஷ்டிதேந– பால்ய உசிதமாயும் அந்யார்த்தமாயும் இருக்கிற யாத்ருச்சிக சேஷ்டையினாலே
தே ஓஜஸஸ் சலபாயிதம் –உன்னுடைய பிரதாப அக்னிக்கு –வீட்டில் பூச்சியாய் இருக்கையை
அலபந்த –அடைந்தனவோ
ஆகையினாலே
வ்யதிலேவ கேலம் ஹி –அளவற்ற திரு விளையாடல்களை யுடையது இறே
பரம புருஷனுடைய சைசைவமும் பரம போக்யமாய் இருக்குமே என்று அனுசந்திக்கிறார்
சாசி விசேஷ்டிதம் –என்றது யாத்ருச்சிக சேஷ்டை

———————

சத்யேவ கவ்ய நிவஹே நிஜ தாம்நி பூம்நா பர்யந்த சத்மஸூ கிமர்த்தம் அஸூசுரஸ் த்வம்
முஷ்ணம்ச் ச கிம் வ்யஜ கடோ கடசேஷம் அக்ரே கோபீ ஜனஸ்ய பரிஹாஸபதம் கிம் ஆஸீ —38-

நிஜ தாம்நி –ஸ்வ க்ருஹத்திலே
கவ்ய நிவஹே –நவநீதாதி த்ரவ்ய ராசியானது
பூம்நா –அதிகமாக
சத்யேவ –இருக்கச் செய்தேயும்
பர்யந்த சத்மஸூ –அண்டை வீடுகளில்
த்வம் கிமர்த்தம் அஸூசுரஸ் — நீ ஏன் திருடினாய்
முஷ்ணம்ச் ச –திருடினாயாகிலும் ஆகிறாய்
கடசேஷம்-புக்த சேஷமான பாத்திரத்தை
அக்ரே-கண் முன்னே
கிம் வ்யஜ கடோ –ஏன் உடைத்தாய்
கோபீ ஜனஸ்ய –ஆய்ச்சிகளுக்கு
பரிஹாஸபதம் கிம் ஆஸீ —ஏச்சுக்கு இடமாக ஏன் ஆனாய்

அம்பரமே தண்ணீரே சோறே அறம் செய்யும் எம்பெருமான் திரு மாளிகையில் பிறந்து வைத்து
அங்கெ கவ்யங்களுக்குக் குறை உண்டாய் பிறர் மனையில் புக்கு களவாட வேணுமோ –
வைத்த நெய்யும் காய்ந்த பாலும் வடி தயிரும் நறு வெண்ணெயும் இத்தனையும் பெற்று அறியேன் எம்பிரான்
நீ பிறந்த பின்னை –என்று சொல்லும்படி க்ருஹத்திலே உள்ளவை அடங்கலும் புஜித்தும்
பர்யாப்தி பிறவாதே களவு செய்தது ஏனோ
வெண்ணெய் விழுங்கி வெறும் கலத்தை வெற்பிடை இட்டு –மோரார் குடம் உருட்டி –
பானையில் பாலைப் பருகிப் பற்றாதார் எல்லாம் சிரிப்ப
வேயின் அன்ன தோள் மடவார் வெண்ணெய் உண்டான் இவன் என்று ஏச நின்ற எம்பெருமான்
இவ்வாறு செய்தது எல்லாம் கேவல லீலையே பிரயோஜனம்
ஆஸ்ரிதருடைய ஹஸ்த ஸ்பர்ச த்ரவ்யமே தாரகம்-போக்யம்-என்றாய்த்து செய்து அருளிற்று

———————

யத் நாம நாத நவநீதம் அஸூசுரஸ் த்வம் தச் சாதனாய யதி தே மதிர் ஆவீராசித்
கிம் முக்த்த திக்க்தம் அமுதா கா பல்லவம் தே காத்ரே ப்ரம்ருஜ்ய திரகாஸ் கில நிர்விசங்கஸ் –39-

ஹே நாத-கண்ணபிரானே
த்வம் யத் நவநீதம் அஸூசுரஸ் –நீ யாதொரு வெண்ணெயை களவு கண்டாயோ
தச் சாதனாய –அத்தை மறைப்பதற்கு
யதி தே மதிர் ஆவீராசித் –உனக்கு எண்ணம் உண்டானால்
ஹே முக்த்த –மறைக்கும் வழி தெரியாத முக்த்தனே
அமுதா –இந்த திருடின வெண்ணெயாலே
திக்க்தம் கா பல்லவம் –பூசப்பட்டு இருந்த தளிர் போன்ற கையை
தே காத்ரே ப்ரம்ருஜ்ய –உன்னுடைய உடம்பிலே தடவிக்கொண்டு
திரகாஸ் கில நிர்விசங்கஸ் –நிர்ப்பயனாய்க் கொண்டு வெளிப்புறப்பாய் அன்றோ
கிம் -இது என்னோ

வாயிலோ கையிலோ வெண்ணெய் இருந்தால் தானே களவு கண்டாய் என்று அன்றோ உடம்பில் பூசிக்க கொண்டாய்
முக்த்த சேஷ்டிதத்தை அனுசந்தித்து-இது வஸ்த்துத மௌக்யமா –மௌக்கிய பாவனையா -என்கிறார் போலும்

————————

த்வாம் அந்ய கோப க்ருஹே கவ்ய முஷம் யசோதா குர்வீ த்வதீய அவமானம் அம்ருஷ்யமாணா
ப்ரேம்ணா த தாம பரிணாம ஜூஷா பபந்த தாத்ருக் ந தே சரிதம் ஆர்ய ஜநாஸ் சஹந்தே –40-

யசோதா குர்வீ–பெரு மதிப்பை உடையவளான யசோதையானவள்
த்வதீய அவமானம் அம்ருஷ்யமாணா –உன்னுடைய பார்ப்வத்தைப் பொறாதவளாய்
த்வாம் அந்ய கோப க்ருஹே கவ்ய முஷம் –வேறு இடையர்கள் மனைகளில் உள்ள கவ்யங்களைத் திருடின உன்னை
அத -பிறகு
தாம பரிணாம ஜூஷா–தாம்பாய் பரிணமித்த
ப்ரேம்ணா பபந்த –பிறேமத்தாள் கட்டினாள்
தாத்ருக் தே சரிதம் –அப்படி நீ கட்டுண்டாய் என்கிற செய்தியை
ஆர்ய ஜநாஸ் ந சஹந்தே –ஆழ்வார் போல்வார் சகிக்க மாட்டுகின்றிலர்

மத்துறு கடை வெண்ணெய் களவினில் உரவிடை ஆப்புண்டு எத்திறம் உரலினோடு இணைந்து இருந்து ஏங்கிய எளிவே —
எத்திறம் என்று ஆறு மாசம் மோஹிப்பாரே
குர்வீ–மானமுடைத்து எங்கள் ஆயர் குலம்-என்னும்படியான அபிமானம் உடையவள்
த்வதீய அவமானம் அம்ருஷ்யமாணா-இப்பழி கெட்டேன் வாழ்வில்லை என்னுமவன்
ப்ரேம்ணா த தாம பரிணாம ஜூஷா–அன்புற்று நோக்கி அடித்தும் பிடித்தும் –தாம பந்தகம் ப்ரேம கார்யம்

————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ காஞ்சி ஸ்வாமிகள் திரு வடிகளே சரணம்.
ஸ்ரீ கூரத்தாழ்வான் ஸ்வாமிகள் திரு வடிகளே சரணம்.
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திரு வடிகளே சரணம்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: