ஸ்ரீ கூரத்தாழ்வான் அருளிச் செய்த ஸ்ரீ அதி மானுஷ ஸ்தவம் -ஸ்லோகங்கள்—11-20-ஸ்ரீ காஞ்சி ஸ்வாமிகள் உரை –

யம் பாதகாத் ஸூ மஹதோபி உததாராயஸ் த்வம் த்வத் பாத வாரி பரி பூத சிராச்ச யோ பூத்
தம் வந்தஸே கில ததச்ச வரம் வ்ருநீஷே கிரீடாவிதிர் பத விலக்ஷண லக்ஷண ஸ்தே –11-

ஹே தேவ
த்வம் -தேவரீர்
யம்–யாவன் ஒரு ருத்ரனை
பாதகாத் ஸூ மஹதோபி –மிகப் பெரிய பாவத்தில் நின்றும்
உததாராயஸ் –உத்தரித்து அருளிற்றோ
யச்ச –யாவன் ஒரு ருத்ரன்
த்வத் பாத வாரி பரி பூத சிராச்சய –தேவரீருடைய ஸ்ரீ பாத தீர்த்தத்தால் பரிசுத்தமான சிரஸ்ஸை உடையவனாக
அபூத் –ஆனானோ
தம் வந்தஸே –அப்படிப்பட்ட ருத்ரனை -தேவரீர் நமஸ்கரியா நின்றதே
தத –அவன் இடத்தில்
வரம் ச வ்ருநீஷே –வரமும் வேண்டிப் பேரா நின்றதே
தே கிரீடாவிதிர் –தேவரீருடைய லீலா வியாபாரமானது
விலக்ஷண லக்ஷணஸ் — விசித்திர ஸ்வரூபமாய் இரா நின்றது
பத –ஆச்சர்யம்

அந்த ஸுசீல்யம் அதி வேலமாய்ப் பெருகின படியை அனுசந்தித்து
மாயனே உன் ஸ்வ தந்த்ர லீலா பிரகாரங்கள் இருந்த படி என் என்று தலை சீய்க்கிறார்
அநுக்ரஹோ யதி ஸ்யாந் மே தேவ தேவ ஜகத் பதே -தாதும் அர்ஹஸி புத்ரம் த்வம் வீர்ய வந்தம் ஜனார்த்தன –
ஸ்ரீ மத் துவாரகையில் கண்ணபிரான் ருக்மிணி பிராட்டி உடன் பள்ளி கொண்டு அருளி வார்த்தையாடா நிற்கையில்
புத்ர தானம் தர கண்ணனை ருக்மிணி பிரார்த்திக்க -பரமசிவன் இடம் வரம் கேட்ட ஐதிக்யம்-
இன்புறும் இவ்விளையாட்டு உடையவன் அன்றோ -லீலா பரனாய்க் கொண்டு செய்யுமவற்றுக்கு ஓர் அடைவுண்டோ
கிரீடா விதிர் பத விலக்ஷண லக்ஷணஸ் தே -என்கிறார் –

————-

கிரீடா விதேஸ் பரிகரஸ் தவ யா து மாயா சா மோஹிநீ ந கதமஸ்ய து ஹந்த ஐந்தோ
ஹை மர்த்ய ஸிம்ஹவ புஷஸ் தவ தேஜஸ் சா அம்சே சம்புர் பவந் ஹி சரபச் சலபோ பபூவ –12-

ஹே தேவ
யா து மாயா –யாதொரு மாயையானது
தவ கிரீடா விதேஸ் –தேவரீருடைய லீலா வியாபாரத்துக்கு
பரிகரஸ் –ஸாமக்ரியையாய் இருக்கிறதோ
சா -அந்த மாயை யானது
கதமஸ்ய ஐந்தோ-எந்தப் பிராணிக்குத் தான்
ந மோஹிநீ –அவி விவேகத்தை உண்டு பண்ணுகிறது இல்லை
சரப பவந் சம்புர்–சரப உருக்கொண்ட சிவனானவன்
தவசா து ஹந்த
மர்த்ய ஸிம்ஹவ புஷஸ் –நரஸிம்ஹ வடிவு கொண்ட
தவ தேஜஸ் சா அம்சே –தேவரீருடைய தேஜஸ்ஸின் ஏக தேசத்திலே
சலபோ பபூவ-ஹி -ஹை –வீட்டில் பூச்சி போலே பட்டு ஒழிந்தான் இறே–என்ன ஆச்சர்யம் –

கேழ் கிளறும் அங்க வேள் குன்ற அழல் சரபத்தைப் பிளந்த சிங்க வெல்ல குன்றத்தினார் –பிள்ளைப் பெருமாள் ஐயங்கார்
துயக்கறு மதியின் நல் ஞானத்துள் அமரரைத் துயக்கும் மயக்குடை மாயைகள் வானிலும் பெரியன வல்லன்
ஸ்ரீ நரஸிம்ஹ பிரதாபா அக்னிஸ் புலிங்கத்திலே வீட்டில் பூச்சி பட்டது பட்டான் என்பது மாயையின் காரியமே
இரண்டு தலைகள் -சிறகுகள்-அதி தீக்ஷணம் உள்ள எட்டு கால்கள் -மேல் நோக்கிய கண்களை உடைய மிருக விசேஷம் சரபம் –
பிரதாப அக்னியில் சரபம் சபலமாயிற்று –

———————-

யஸ்ய ஆத்மதாம் திரிபுர பங்க விதா வதாஸ் த்வம் த்வச் சக்தி தேஜித சரஸ் விஜயீ ச யோ பூத்
தக்ஷ க்ரதவ் து கில தேந விநிர்ஜிதஸ் த்வம் யுக்தோ விதேய விஷயேஷு ஹி காம சாரா –13-

திரிபுர பங்க விதவ் –திரிபுர தஹன காரியத்தில்
யஸ்ய த்வம் ஆத்மதாம் அதாஸ்–யாவன் ஒரு ருத்ரனுக்கு தேவரீர் அந்தராத்மாவாய் இருக்கையை தரித்ததோ
யச்ச த்வச் சக்தி தேஜித சரஸ் சந்–தேவரீருடைய சக்தியாலே கூர்மை பெற்ற பாணத்தை உடையனாய்க் கொண்டு
விஜயீ ச ய அபூத் –ஜயசாலி யானானோ
தேந -அப்படிப்பட்ட ருத்ரனாலே
த்வம் -தேவரீர்
தக்ஷ க்ரதவ் –தக்ஷ யாகத்தில்
விநிர்ஜிதஸ்–வெல்லப்பட்டது
விதேய விஷயேஷு –வஸ்ய விஷயங்களில்
காம சாரா –மனம் போனபடி நடந்து கொள்கை
யுக்தோ ஹி –யுக்தமே அன்றோ –

அவனுடைய ஏறிட்டுக் கொண்ட பாரதந்தர்யம் தானும் ஸ்வா தந்தர்ய காஷ்டை-என்கிறார்
கிருபையால் வரும் பாரதந்தர்யத்தைக் காட்டில் ஸ்வா தந்தர்யத்தால் வரும் பாரதந்தர்யம் பிரபலம் -ஸ்ரீ வசன பூஷணம்
கிருபா பிரயுக்த பாரதந்தர்யம் -ப்ரேம பந்தம் வைத்துத் தன்னை அடியார்கள் இட்ட வழக்காய் -காண்பது பல இடங்களில் உண்டே
ஸ்வா தந்தர்ய ப்ரயுக்த பாரதந்தர்யம் காணலாவது க்வசித் க்வசித்தே யாம் -அது தன்னை ருத்ரன் அளவிலே காட்டின படியைப் பேசுகிறார் இங்கு –
விஷ்ணோர் ஆத்மா பகவதோ பவஸ்யாமித தேஜஸ் -தஸ்மாத் தனுர்ஜ்யா சம்ஸ்பர்சம் சா விஷே ஹே மஹேஸ்வர –கர்ணபர்வம் —
சத்தா நிர்வாஹமாய் சாமான்யமான அந்தப்பிரவேசமும் -ஜெயத்துக்கே ஐகாந்திகமாக விசேஷித்து அனுபிரவேசிப்பதும் உண்டே

த்வச் சக்தி தேஜித சரஸ்
சிந்தயித்வா ஹரீம் விஷ்ணும் அவ்யயம் யஜ்ஜ வாஹனம் சரம் சங்கல்ப யாஞ்ச சக்ரே –கர்ண பர்வம்
குழல் நிற வண்ணா நின் கூறு கொண்ட தழல் நிற வண்ணன் நண்ணார் நகரம் விழ நனி மலை சிலை வளைவு செய்து
அங்கழல் நிற வைப்பது வானவனே–பெரிய திருமொழி –6-1-3-
விஜயீ அபூத்–விஜயம் எம்பெருமானுக்கே ஆனாலும் -திரிபுரம் மூன்று எரித்தான்-என்றும்
புரங்கள் மூன்றும் ஓர் மாத்திரைப் போதில் பொங்கு எரிக்கு இரை கண்டவன் –என்றும் ருத்ரனுக்கு பிரசித்தி உண்டாம் படி செய்து அருளிற்று
தக்ஷ க்ரதவ் து கில தேந விநிர்ஜிதஸ் த்வம்–ருத்ரன் தக்ஷனின் தலையை அறுத்து தஷாத்வர த்வம்ஸீ-
தக்கன் வேள்வி தகர்த்த தலைவன் -பெயர் பெறும்படி பண்ணி அருளினான்
யஜ்ஜ துவம்சம் விளைந்தது -விஷ்ணு பராஜய பர்யாயம் தானே -யஜ்ஜோவை விஷ்ணு –
வேள்வியாய்த் தக்கணையாய் தானும் ஆனான் -அன்றோ
அவன் செய்த த்வம்ஸங்களுக்கு இசைந்து இருந்து ஸ்வ பராஜயத்தையும் தத் விஜயத்தையும் விளங்கக் காட்டி அருள
திரு உள்ளம் கொண்டு செய்த கார்யம் அன்றோ
யுக்தோ விதேய விஷயேஷு ஹி காம சாரா -புத்ர தாராதிகளை உச்சி மேல் அணிந்த போதொடும் உதைத்துத் தள்ளின போதொடும்
சேஷ சேஷி பாவம் வியவஸ்திதமாய் இருக்குமே
விதேய கோடியில் ஒருவனான ருத்ரன் அளவில் பரிமாற்றம் கேட்பார் அற்ற ஸ்வா தந்தர்யத்துக்கு சேர்ந்ததே –
ருத்ர பாராம்ய ஸ்தாபகம் ஆக மாட்டாதே

———–

முக்தச் சிசுர் வடதளே சயித அதி தந்வா தந்வா ஜகந்தி பிப்ருஷே சா விகாசமேவ
ஐஸீமிமாம் து தவ சக்திம் அதர்கிதவ்யாம் அவ்யாஜதஸ் ப்ரதயஸே கிம் இஹ அவதீர்ணஸ் –14-

வடதளே சயித–ஆலிலையில் பள்ளி கொண்ட
முக்தச் சிசுர் த்வம் –அதி பாலனான தேவரீர்
அதி தந்வா -அதி ஸூஷ்மமான
தந்வா –திரு மேனியாலே
ஜகந்தி ச விகாசமேவ பிப்ருஷே–உலகங்களை நிஸ் சங்கோசமாகவே தாங்கி அருளுகிறது
தவ ஐஸீம் -தேவரீருடைய ஸர்வேச்வரத்வ ஏகாந்தமும்
அதர்கிதவ்யாம் -அத ஏவ அசிந்த நீயமுமான
இமாம் சக்திம் –இந்த சக்தியை
இஹ அவதீர்ணஸ் –சந் –இந்த லோகத்தில் அவதரியா நின்று கொண்டு
அவ்யாஜதஸ் கிம் ப்ரதயஸே –நிர்ஹேதுகமாக என் பிரகாசிப்பித்து அருளுகிறது

தக்கன் வேள்வியைத் தகர்ப்பது போன்ற செயல்களால் ருத்ரன் பக்கல் பாரம்யம் கொள்வாரும் உண்டே
அன்று எல்லாரும் அறியாரோ எம்பெருமான் உண்டு உமிழ்ந்த எச்சில் தேவர் அல்லாதார் தாம் உளரே
திரு வயிற்றிலே புகுந்து பிழைத்த கதையை உணர்த்தினால் அந்த பேயர்களும் தெளிவார்களே
நளிர் மதிச் சடையினும் –ஒரு பொருள் புறப்பாடு இன்றி முழுவதும் அகப்படக் கரந்து ஓர் ஆலிலைச் சேர்ந்த
எம்பெருமானை அல்லது ஒரு மா தெய்வம் மற்று உடையமோ யாமே —

முக்தச் சிசுர் –படியாதுமில் குழவிப்படி-இது சாத்மிக்கும் இது சாத்மிக்காது என்று அறியாமல்
முன்பு தோன்றினதை வாயில் போட்டுக் கொள்ளும் பருவம்
ரஷக வஸ்துவினுடைய வியாபாரம் ஆகையால் இது ரக்ஷணமாகத் தலைக்கட்டினது அத்தனை
வடதளே சயித -அன்றே தோன்றிப் பால் மாறாதே இருந்த ஆலந்தளிரிலே யாயத்து கண் வளர்ந்து அருளிற்று
அதி தந்வா தந்வா -லோகத்தில் சிசுக்களுக்கு உள்ள வடிவம் இல்லை யாய்த்து-
ஆலிலையில் அடங்காத தக்க சிறிய வடிவம் பெற்ற படி
ஜகந்தி பிப்ருஷே –சிவனையும் திரு வயிற்றிலே கொண்டமை தனிப்படச் சொல்ல வேணுமோ
நெற்றி மேல் கண்ணானும் நிறை மொழி வாய் நான்முகனும் –கடல் அரையன் விழுங்காமல் தான் விழுங்கி
உய்யக் கொண்ட கொற்றப் போராழியான்–என்றும்
அங்கண் ஞாலம் உண்ட போது வேள்வி வெற்பு அகன்றதோ —
பிப்ருஷே–அவ்வபதானம் ஆழ்வானுக்கு கண் எதிரே தோன்றுகிறது போலும் -வர்த்தமாக நிர்த்தேசிக்கிறார்
பப்ருஷே –பாட பேதம் -பூத காலம்
சா விகாசமேவ –சிறிய திரு வயிற்றினுள்ளே -அண்டரண்ட பகிரண்டத்து ஓரு மா நிலம் எழுமால் வரை முற்றும்
நெருக்குப் படாமே தனித்தனியே இடம் வலம் கொள்ளப் பாங்காக வஹித்த படி
ஐஸீமிமாம் து தவ சக்திம் அதர்கிதவ்யாம் அவ்யாஜதஸ் –நெஞ்சால் நினைக்க ஒண்ணாத -அவதாரங்களில்
அசக்தியும் அத்புத சக்தியும் கலந்த கட்டியாய் அன்றோ இருப்பது
ஸுவ்லப்யம் ஸுவ்சீல்யம் காட்டி அருள அவதரித்த இடங்களிலும் ஸர்வேச்வரத்வ சக்தி விசேஷங்களையும்
கூடவே காட்டி அருளுவது எதுக்காக என்று ப்ரச்னம்
ப்ரதயஸே கிம் இஹ அவதீர்ணஸ்-வடதள சாயியாய்க் கொண்டு செய்த செயலை மனுஷ்ய சஜாத்திய
பாவனையோடு அவதரித்த இடத்திலும்
வையம் எழும் கண்டாள் பிள்ளை வாயுளே
வாயில் வையகம் கண்ட மட நல்லார்
பாலகன் என்று பரிபவம் செய்யேல் பண்டு ஒரு நாள் ஆலினிலை வளர்ந்த சிறுக்கன் இவன் -என்று அடி அறிந்து
சொல்லும்படி அமைத்துக் கொண்டது என்னோ பிரானே
அவ்யாஜதஸ் –ஒருவரும் அபேக்ஷியாது இருக்க ஸ்வயமேவ
ப்ரதயஸே கிம்-ப்ரஸ்னத்துடன் தலைக் கட்டுகிறார் -சமாதானத்தை வெளியிட மாட்டாமே ஆழ்வானது
திரு உள்ளம் உடைகுலைப் படுகிறபடி
ஆதி யம் சோதி உருவை அங்கு வைத்து இங்குப் பிறந்த –அஜஹத் ஸ்வ பாவனாய் அப்ராக்ருத திவ்ய சமஸ்தானத்தோடே
வந்து அவதரித்த படியால் திவ்ய சக்தி விசேஷங்கள் மறைக்க முடியாமல் வ்யக்தமாகின்றனவே காண் -என்பதாக திரு உள்ளம் –

———————

பிரஹ்மேச மத்ய கணநா கணநா அர்க்க பங்க்தவ் இந்த்ர அனுஜத்வம் அதிதேஸ் தந யத்வ யோகாத்
இஷுவாகு வம்ச யதுவம்ச ஜநிச்ச ஹந்த ஸ்லாக்யாநி அமூநி அநுபமஸ்ய பரஸ்ய தாம்ந –15-

அநுபமஸ்ய–ஒப்பற்ற
பரஸ்ய தாம்ந –பரஞ்சோதியாகிய எம்பெருமானுக்கு
பிரஹ்மேச மத்ய கணநா –ப்ரஹ்ம ருத்ரர்களின் நடுவே ஒருவனாக எண்ணப் பெறுகையும்
கணநா அர்க்க பங்க்தவ் –துவாதச ஆதித்யர்கள் திரளில் எண்ணப் பெறுகையும்
இந்த்ர அனுஜத்வம் அதிதேஸ் தந யத்வ யோகாத் -அதிதிக்குப் பிள்ளையாகப் பிறந்ததனால் உபேந்த்ரனாக ஆனதும்
இஷுவாகு வம்ச யதுவம்ச ஜநிச்ச –இஷுவாகு வம்சத்திலும் யதுவம்சத்திலும் அவதரித்ததும்
அமூநி -ஆகிய இவ்வாதாரங்கள் எல்லாம்
ஹந்த ஸ்லாக்யாநி –அதிசயாவஹங்கள் அன்றோ -ஆச்சர்யம்

பல பிறப்பாய் ஒளி வரும் முழு நலம்
கேவல பரத்வமும் கேவல ஸுவ்லபயமும் ஸ்லாக்யமாக மாட்டாவே
ஸுவ்லப்யம் பொலியும்படி பரத்வத்தை மறைத்து அருளி அவதரித்து ஒளி பெறுவதே
பிரஹ்மேச மத்ய கணநா –விஷ்ணுவாய் -நல்லரன் நாரணன் நான்முகனுக்கு –என்றபடி
கணநா அர்க்க பங்க்தவ் –ஆதித்யர் பன்னிருவரில் உயர்ந்த விஷ்ணு நான் -ஸ்ரீ கீதா
இந்த்ர அனுஜத்வம் அதிதேஸ் தந யத்வ யோகாத் -அதிதி காஸ்யபருக்கு -ஸ்ரீ வாமனனாய் –
இஷுவாகு வம்ச யதுவம்ச ஜநிச்ச ஹந்த ஸ்லாக்யாநி அமூநி அநுபமஸ்ய பரஸ்ய தாம்ந —
இவ்வவதாரங்கள் எல்லாம் இச்சா பரிக்ருஹீதம்–அதிசயவஹம் அன்றோ -என்றபடி
கீழே இஹ அவதீர்ண –என்றவாறே இவ்வவதாரங்களை அனுசந்தித்து அருளிய படி –

————–

த்வந் நிர்மிதா ஜடரகா சா தவ த்ரி லோகீ கிம் பிஷனாத் இயம் ருதே பவதோ துராபா
மத்யே கதா து ந விசக்ரமிஷே ஜகச்சேத் த்வத் விக்ரமை கதம் இவ ஸ்ருதிர் அஞ்சிதா ஸ்யாத்—16-

ஹே தேவ
த்வந் நிர்மிதா –தேவரீரால் படைக்கப் பட்டதும்
ஜடரகா சா தவ –ஒரு கால் தேவரீருடைய திரு வயிற்றிலே கிடந்து ரக்ஷை பெற்றதுமான
இயம் த்ரி லோகீ –இந்த மூ உலகும்
பிஷனாத் ருதே –மகா பலி இடத்தில் யாசிப்பது தவிர மற்ற உபாயத்தினால்
பவதோ துராபா கிம் –தேவரீருக்கு கிடைக்க அரிதோ
யாசித்துப் பெறாமல் ஸ்வா தந்த்ரியத்தினாலேயே பெற முடியாததோ
மத்யே கதா து -இடையில் ஒரு காலத்தில்
ந விசக்ரமிஷே ஜகச்சேத் த்வத் –இந்த உலகத்தை பிஷா வ்யாஜத்தினால் மூவடி கொண்டு அளந்து அருளா விடில்
விக்ரமை கதம் இவ ஸ்ருதிர் அஞ்சிதா ஸ்யாத்—வேதமானது தேவரீருடைய விக்ரமங்களினால்
எங்கனம் மேன்மை பெற்றதாகும்

ஆழ்வாரைப் போலே எம்பெருமானை மடி பிடித்துக் கேள்வி கேட்கிறார்
சீரால் பிறந்து சிறப்பால் வளராது பேர் வாமனாகாக்கால் பேராளா -மார்பாரப் புல்கி நீ உண்டு உமிழ்ந்த
பூமி நீர் ஏற்பது அரிதே சொல்லு நீ யாம் அறியச் சூழ்ந்து –பெரிய திருவந்தாதி
ஷிதி ரியம் ஜெனி ஸம்ஹ்ருதி பாலநை நிகிரண உத்கிரண உத்தரணைர் அபி -வந கிரீச தவைவ ஸதீ கதம் வரத
வாமன பிஷணம் அர்ஹதி –ஸ்ரீ ஸூந்தர பாஹு ஸ்தவம்
உபயோகம் அற்ற பல விஷயங்களையும் பரக்கப் பேசி எச்சில் வாயாய் ஒழிந்த வேதமானது
இதம் விஷ்ணுர் விசக்ரமே த்ரேதா நிதம் பதம் -என்றும்
த்ரீணி பதா விசக்ரமே விஷ்ணுர் கோபா அதாப்ய-என்றும்
விசக்ரமாணஸ் த்ரேதாருகாய –என்றும் பேசி பவித்ரமாகவே மூவடி அளந்து மூ வுலகு பெற்றாய்
வேதம் அபூதமாய்க் கிடக்க ஒண்ணாதே என்றே செய்து அருளிய திரு அவதாரம்

————–

இது தொடங்கி -33-ஸ்லோகம் வரை ஸ்ரீ ராமாவதார அனுசந்தானம் –
மத்யே -ஏதத் கதம் கதய யந் மதிதஸ் த்வயாசவ் -என்கிற ஸ்லோகம் ஒன்றும் ப்ராசங்கிகம்

ப்ருச்சாமி கிஞ்சன யதா கில ராகவத்வே மாயா ம்ருகஸ்ய வசகோ மனுஜத்வ மவ்க்த்யாத்
சீதா வ்யோக விவசோக சா தத்கதிஞ்ஞ பிராதாஸ் ததா பரகதிம் ஹி கதம் ககாய–17-

ஹே தேவ
ப்ருச்சாமி கிஞ்சன -தேவரீரை ஓன்று கேட்கிறேன்
ராகவத்வே–ஸ்ரீ ராமனாக திரு அவதரித்த காலத்தில்
யதா –யாதொரு சமயத்தில்
மனுஜத்வ மவ்க்த்யாத்-ஆத்மாநாம் மானுஷம் மந்யே -என்ற மனுஷ்யத்வ ப்ரயுக்தமான மோகத்தால்
மாயா ம்ருகஸ்ய வசகஸ் சந்–மாரீசனாகிய மாயமானுக்கு பரவசராகி
சீதா வ்யோக விவசோக –பிராட்டியைப் பிரிந்து வருந்தினீரோ
தத்கதிஞ்ஞச் ச ந அபூ -அவள் போன போக்கையும் அறியாதவராய் இருந்தீரோ
ததா ககாய–அப்படிப்பட்ட சமயத்தில் ஜடாயுவுக்கு
பரகதிம் ஹி கதம் பிராதாஸ் -பரமபத ப்ராப்தியை எப்படிப் பண்ணித் தந்தீர்

மனிச்சு தவிர்ந்து பரத்வம் குடி புகுந்து-மயா த்வம் சம நுஞ்ஜாதோ கச்ச லோகாந் அநுத்தமான்- —
எண்ண வேணுமோ
சத்யேந லோகான் ஜயதியைக் கொண்டு சமாதானம் அறிவது –

————————-

கீழ் ஸ்லோகார்த்தத்தை முக பேதத்தால் அனுசந்திக்கிறார் இதில்-
புநர் யுக்தி தோஷம் இல்லை
பெரிய பிராட்டியாருக்கு பரகதி அழித்த பெருமையில் ஈடுபட்டு கீழே
பிராட்டியைப் பிரிந்து வருந்திய எளிமையில் ஈடுபட்டு இங்கே

அஷூண்ண யோக பதம் அக்ர்ய ஹதம் ஜடாயும் த்ரியஞ்சம் ஏவ பத மோக்ஷ பதே நியோக்தும்
சக்நோஷி வேத்சி ச யதா ச ததா கதம் த்வம் தேவீம் அவாப்தம் அநலம் வ்யதிதோ விசிந்வந் –18-

ஹே தேவ -த்வம் –எம்பெருமானே தேவரீர்
அஷூண்ண யோக பதம் -யோகமார்க்கத்தை அப்யசியாதவரும்
அக்ர்ய ஹதம் -ப்ராஹ்மண ஜாதீயனான ராவணனால் கொலையுண்டவரும்
ஜடாயும் த்ரியஞ்சம் ஏவ-திர்யக் யோனியில் பிறந்தவருமான ஜடாயுவையும் கூட
பத மோக்ஷ -மோக்ஷ மார்க்கத்துக்குப் போகும்படி
நியோக்தும்-அனுமதி பண்ண
சக்நோஷி வேத்சி ச யதா –எப்போது அறிந்தீரோ -சக்தராகவும் ஆனீரோ –
ச ததா த்வம் -அப்போது அப்படிப்பட்ட தேவரீர்
தேவீம் விசிந்வந் –பிராட்டியைத் தெடிக் கொண்டு
அவாப்தம் அநலம் -அவளை பெறுவதற்கு அசமர்த்தராய்
வ்யதிதோ கதம் அபூ –வருந்தினீரோ -அது என் கொல்

பெரிய உடையார் மோக்ஷ ப்ராப்திக்கு அநர்ஹர் -என்பதை மூன்று விசேஷணங்களால் மூதலிக்கிறார்
அஷூண்ண யோக பதம் –நோற்ற நோன்பிலேன் -இடகிலேன் ஓன்று அட்டகில்லேன்
அஷூண்ண –அநப் யஸ்தஸ்–சாதன அனுஷ்டானம் ஒன்றும் செய்யாதவர்
த்ரியஞ்சம்-சாதன அனுஷ்டானத்துக்கு உரிய ஜென்மத்திலும் பிறந்திலர்
அக்ர்ய ஹதம் –அவ்வளவேயோ -பிரதிபந்தக அபாவமாவது இருக்கலாகாதா –
ப்ரஹ்ம வஷ்யனான ராவணனால் கொலையுண்டு பரகதி பிரதிபந்தகமும் வேறே உண்டே
ப்ரஹ்ம புத்திரரான புலஸ்தியருடைய வம்சத்தில் பிறந்தவன் ராவணன்

—————

சாலாந் ஹி சப்த ஸக்ரீந் சர சாதலான் யாந் ஏக இஷுமந்த ஜவதோ நிர்பத்ரயஸ் த்வம்
தேஷு ஏக விவ்யதந கிந்நபி ப்ரனுந்நம் சாகாம்ருகம் ம்ருகயஸேஸ்ம கதம் சகாயம் –19-

ஹே தேவ
யாந்-சப்த சாலாந் – ஸக்ரீந் –யாவை சில சப்த சால வ்ருக்ஷங்களைக் குல பர்வதங்களோடு கூடினவையாகவும்
சர சாதலான் –பாதாளங்களோடு கூடினவையாகவும்
ஏக இஷுமந்த ஜவதோ –ஒரு பணத்தில் ஸ்வல்ப வேகத்தினால்
நிர்பத்ரயஸ் த்வம் –தேவரீர் பேதித்து அருளிற்றோ
தேஷு -அந்த சால வருஷங்களில்
ஏக விவ்யதந கிந்நபி ப்ரனுந்நம் –ஒரு
மரத்தைப் பிளப்பதிலும் வருந்தி ஒழிந்த வாலியினாலே துரத்தி அடிக்கப் பட்ட
சாகாம்ருகம் -ஸூக்ரீவனை
ம்ருகயஸேஸ்ம கதம் சகாயம் -துணைவனாக எங்கே தேடிற்று

ஸூக் ரீவனை விரித்தது ஸஹாயத்துக்காக அல்லவே –
சரணாகத ரக்ஷணத்தை விரதமாகக் கொண்ட பெருமாளுக்கு கோல் விழுக்காட்டாலே அவனை ஸ்வீ கரிக்க நேர்ந்தது
சப்த சாகரங்களும் சப்த ரிஷிகளும் சூரியனுடைய சப்த ஆஸ்வங்களும்-அஞ்சி நடுங்குவதாக கம்பர்

—————-

தாஸஸ் சஹா சமபவத் தவ ய கபீந்த்ர தத்வித் விஷம் கபிம் அமர்ஷ்வசாத் ஜிகாம்ஸூ
த்வத் ஸ்நேஹ விக்லபதியம் தமிமம் கபீந்த்ரம் விஸ்ரம்பயந் சபதி சால கிரீந் அவித்ய–20-

ஹே தேவ
ய கபீந்த்ர -யாவன் ஒரு ஸூக் ரீவன்
தாஸஸ் சஹா சமபவத் தவ –தேவரீருக்கு அடியனாகவும் நண்பனாகவும் ஆனானோ
தத் வித்விஷம் கபிம் –அவனுக்கு விரோதியான வாலியை
த்வம் அமர்ஷ்வசாத் ஜிகாம்ஸூ –தேவரீர் கோப வசத்தால் கொல்ல விரும்பினவராய்
த்வத் ஸ்நேஹ விக்லபதியம் –தேவரீர் பக்கல் பிரேமத்தினால் கலங்கின புத்தியை உடையவனாக அந்த ஸூக் ரீவனை
விஸ்ரம்பயந் ஸந் -விஸ்வசிப்பியா நின்று கொண்டு
சபதி-அப்போதே
சால கிரீந் அவித்ய-மரா மரங்களையும் குல பர்வதங்களையும் தேவரீர் எய்து அருளிற்று

ஸூக்ரீவன் பெருமாள் சந்நிதியில் புகுந்து
ஸோஹம் த்ரஸ்த்தோ வநே பீதோ வசாம் யுத் பிராந்தா சேதன -வாலிநா நிக்ருதோ பிராத்ரா க்ருத வைரச் ஸ ராகவ
வாலிநோ மே மஹா பாகே பயார்த்தஸ்யா பயம் குரு -கர்த்தும் அர்ஹதி காகுத்ஸ பயம் மே ந பவேத் யதா —
என்று அபயம் வேண்டின அளவிலே
பெருமாளும் -வாலிநம் தம் வதிஷ்யாமி தவ பார்ய அபஹாரிணம்–என்று பெருமாள் அபயப்ரதானம் பண்ணி அருளினார்
அபயப்ரதானம் பழுது படாமைக்காக ஸூக்ரீவனை விஸ்ரப்தனாக்க வேண்டியது ஆவஸ்யமாக
சால பஞ்சனம் பிராப்தம் ஆயிற்று அத்தனை –என்று இந்த ஸ்லோகத்தால் அருளிச் செய்தார் ஆயிற்று –

————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ காஞ்சி ஸ்வாமிகள் திரு வடிகளே சரணம்.
ஸ்ரீ கூரத்தாழ்வான் ஸ்வாமிகள் திரு வடிகளே சரணம்.
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திரு வடிகளே சரணம்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: